சந்திரன் | இராகவன் |
1. எதிர்க்கின்ற புறத்திருளை ஒழிப்பவன்.
| அகத்திருளை ஒழிப்பவன், (அகம் - மனம்). |
2. நிலத்திலுள்ள பைங்கூழை (பசியபயிரை) வளர்ப்பவன்.
(சந்திரன் அமிர்தம் பயிரை வளர்க்கிறது.) | விளங்கும் உயிர்கள் பலவும் வளர்ப்பவன். |
3. மிக்க சினங்கொண்ட பணிக்குப் (கேது என்ற பாம்புக்குப்) பயப்படுபவன்.
| அத்தகைய பாம்பின் முதுகின் மேல் பள்ளி கொள்பவன். |
4. சிறப்புப் பொருந்திய பதினாறு கலைகளை உள்ளவன். (கலை-சந்திரனின் வளரும், தேயும் பாகம்) | அறுபத்து நாலு கலைகள் பெற் <றவன். |
பருதி - சூரியன்; மின்மினி - ஓர் பூச்சி; இது செடி கொடிகளின் மேல் இருந்து மினுக் மினுக்கென்று பிரகாசிக்கும் ஓர் பூச்சி; கடுத்திடாது - போன்றிராது; ஓர்ந்து - ஆராய்ந்து; கழல் தசரதற்கு இனிய மைந்தன் என்று பிரிக்க. (3)
சந்திரன் | இராகவன் |
1. மடமைக்குணம் கொண்ட சிறிய பேதைப் பருவப் பெண்கள் தன்னைத்தொழுமாறு அமைவான். | அறிவுடையோர்கள் வணங்க எளிதில் வாராது மறைவான். |
2. மதிக்கும் அத்திக்கும் மகன் நீ-எல்லோராலும் மதிக்கப்படும் அத்திரி என்ற முனிவனுக்கு நீ மகன். | மதிக்கும் அத்தியை அளித்தோன் - மதிக்கப்படும் கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றினவன். |
3. உடல் குறைதலும் வளர்தலும் உள்ளவன்.
| எப்பொழுதும் ஒரேதன்மை உடையவன். |
4. களங்கத்தோடு தங்குவான். | களங்கம் கொஞ்சமும் இல்லாதவன். |
5. இரவுக்காலத்தில் விளங்குவான். | எப்போதும் விளங்குவான். |