pm logo

படிக்காசுப்புலவர் இயற்றிய
தொண்டைமண்டல சதகம்
(பன்னிரு சதகத்திரட்டு - பாகம் 8)


tONTai maNTala catakam
of paTikkkAcup pulavar
(catakat tiraTTu - part 8)
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

படிக்காசுப்புலவர் இயற்றிய
தொண்டைமண்டல சதகம்
பன்னிரு சதகத்திரட்டு - பாகம் 8

Source:
பல வித்துவான்கள் இயற்றிய
பன்னிரு சதகத் திராட்டு
இதனுள் பன்னிரண்டு சதகங்கள் அடங்கியுள்ளன
வல்லை பாலசுப்ரமணியம் அவர்களால் பரிசோதிக்கப் பெற்றது
பதிப்பிடம் பி. இரத்தின நாயகர் அண்ட் ஸன்ஸ், சென்னை -1
பதிப்புரிமை, விலை ரூ. 6.00
முதல் பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1948
-----------
ஸ்ரீமத் உபசுப்பிரமணியர் மரபினராகிய
படிக்காசுப்புலவரவர்கள் இயற்றியருளிய
தொண்டைமண்டல சதகம்.
சென்னை : மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில்
பதிப்பிக்கப்பட்டது.
1913
விலை அணா 2
----------------
தொண்டைமண்டல சதகம்.

உ - சிவமயம்.
தொண்டைமண்டலம்.

'வேழமுடைத்து மலைநாடு மே தக்க
சோழவளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோ ருடைத்து."

என்று ஔவையாரால் புகழப்பட்ட இந்த நாடு கிழக்கே கடலும் மேற்கே பவள மலையும் வடக்கே வேங்கடமலையும் தெற்கே பிராகி நதியும் எல்லைகளாகவுடையது; இதற்கு இராஜதானி காஞ்சிபுரம்; இந்நாடு பூர்வகாலத்தில் சோழநாட்டைச்சேர்ந்தது; (கபட்டினத்துச் சோழன் நாகலோகஞ் சென்றகாலத்திலே நாககன்னிகையை மணம் புரிந்து அவள் வயிற்றிலே பிறக்கும் புத்திரனுக்குத் தனது நாட்டில் பாதி கொடுப்பதாக வாக்களித்து மீண்டான்; மீளும்போது நாககன்னிகை புத்திரனை யனுப்புவ தெவ்வாறென்று வினவ, அவன் தொண்டைக் சொடியை அடையாளமாகக் கட்டித் தெப்பத்தி லேற்றியனுப்பக் கடவை யென்றான்; அவ்வாறே அப்புதல்வன் தொண்டைத் தழை படுத்திக்கொண்டு அலைகளாற் செலுத்தப்பட்டு நாகப்பட்டினத் துறை பை யடைந்தான்; சோழன் அவினை வளர்த்து இச் நாட்டைப் பிரித்து அவனுக்குக் கொடுத்து தொண்டை பான் என்னும் பெயரும் முடி யும் சூட்டினான்; தொண்டைமான் ஆண்டமையால் இது தொண்டை மண்டலம் என்னும் பெயர்த்தாயிற்று; இது நெடுங்காலம் உபநாடாக வும் சிலகாலம் தனி நாடாகவுமிருந்து பெரும்புகழ் படைத்தது. இந் நாட்டிலே திருவள்ளுவர், கச்சியப்ப சிவாசாரியர், குகனேரியப்பர், க பர், பரிமேலழகர், ஒட்டக்கூத்தர், இராமாநுஜர், சேக்கிழார், இரட் டையர், அருணகிரிநாதர், பவணந்தி, படிக்காசுப்புலவர், அப்பைய தீக்ஷிதர் முதலிய வித்வசிகாமணிகளும், அதிகமான், கறுப்பன், சடை யப்பன், மணிகண்டன் முதலிய மஹாபிரபுக்களும், உத்தம குணத் தாற் சிறந்த அரசர்களும் இருந்து விளங்கினரென்றால், இதன் பெருமையை அளவிட்டுரைத்தல் கூடுமோ?; இத்தடைய இந்நாட்டின் பெரு மையைப் படிக்காசுப்புலவர் இத் தொன்டைமண்டல சதகத்தில் விரித் துப் பாடியிருக்கின்றனர்.
------------------
சிவமயம்.
இந்நூலாசிரியர் சரித்திரக்குறிப்பு.

இத்தொண்டைமண்டல சதகஞ் செய்த புலவர், ஸ்ரீமத் உபசுப்பிரமணிய சென்றும் சேனைத்தலைவ ரென்றும் சொல்லாநின்ற செங்குக் தர்மரபிற் றோன்றி, சிவானுக்கிரகத்தால் தமிழ்க்கலை முழுதும் பயின்று, தெய்வீகம் விளங்கிய நல்வாக்கினைப் பெற்று, சிதம்பரத்தில் ஸ்ரீ சபா நடேசர் பொற்பணம் ஐந்து பஞ்சாக்ஷரப்படியில் வைத்தருளக்கொண்டு, அதனால் படிக்காசுப்புலவரென்று பெயர் பெற்றவர்.
-------------

வழிபடு கடவுள் வணக்கம்.
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

கொண்டலை நிகர்க்கும் வேளாண் குடியொடு தழீஇய தொண்டை
மண்டல சதகந் தன்னை வளமையான் வகுப்பதற்குப்
புண்டா நுதலி ரண்டு புயமிசை யிருந்தி ரண்டு
குண்டல நிகரி ரண்டு குமாரை வணக்கஞ் செய்வாம்.

நூல்.
கட்டளைக்கலித்துறை.

சீர்கொண்ட கச்சித் திருவேகம் பத்தரன் செல்வமுக்கட்
கார்கொண்ட மும்மதத் தைங்கரந் தாங்கிக் கடவிகடப்
பேர்கொண்ட சக்கரப் பிள்ளையைத் தான் பெற்ற பேறதனால்
வார் கொண்ட கீர்த்திபடைத்ததன்றோ தொண்டைமண்டலமே. (1)
------
மேற்கோள். ஸ்காந்தம்.
கலிவிருத்தம்.

"திகட சக்கரச் செம்முக டைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயக
னகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கான் மெய்ப்பதம் போற்றுவாம்."

சேவடி செய்வ தறியாத மாவலி முன்புசென்று
மூவடி வேண்டுந் திருமான் மருகனிம் மூவுலகுங்
காவடி யாக வொருதலை மேவிய காஞ்சிபுர
மாவடி மேவும் பெருமான் பதிதொண்டை மண்டலமே (2)
----------------

மேற்கோள். ஸ்காந்தம்.
ஆசிரியவிருத்தம்.
“ழவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
யாவருந் துதிக்க நின்ற விராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேண் மலரடி போற்றி யன்னான்
சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி."

கயிலையுங் கச்சியும் விற்கோ லமுதற் கழுக்குன்றமும்
பயில்வலி தாயமும் பாசூரு மச்சிறு பாக்கமுநல்
லயிலையும் வல்லந் திருவொற்றி யூரு மரசிலியு
மயிலையு மீசன் மகிழ்ந்ததன் றோதொண்டை மண்டலமே. (3)
--------

மேற்கோள்.
கட்டளைக்கலித்துறை.
ஈணாட் டிரண்டு மலைநாட்டி லொன்று கொங் கேழுவையை
வாணாட்டீ ரேம்நடு நாட்டெழு மூன்றொன்றைந் தாம்வடக்கிற்
சோணாட் டொரு நூற்றுத் தொண்ணூறென் றோர்வர் துளுவத்தொன்று
நாணாட்டிய தொண்டை நன்னாட்டி லாறைத் திருநகரே."

திருப்பதிக்கோவை.
ஆசிரியவிருத்தம்.
"தண்ணார் தண் டலைப்பாதி ரிப்புலியூர் முண்டீச்
        சாம்புறவார் பனங்காட்டூர் திருவாமாத் தூரே
யெண்ணாரண் ணாமலையு நடுநாட்டி லிருபத்
        திரண்டாகு மிப்பாலே சம்பமேற் றளிவிண்
கண்ணோங்கு மதிலொண்காந் தன்றளியனேக
        தங்காவ தங்கச்சி நெறிக்காரைக் காடே
யுண்ணாடு குரங்கணிமுட் டந்திருமா கறலோத்
        தூர்வன் பார்த் தான் பனங்காட்டூர்வலமாற் பேறே."

இதுவுமது.

”ஊறலிலம் பையங்கோட்டூர் விற்கோல மாலங்கா
        இயர்பாசூர் வெண்பாக்கங் கள்ளில்காளத்தி
மாறிறிரு வொற்றியூர் வலிதாயம் பாலி
        வடமுல்லை வாயில் வேற்காடு திரு மயிலை
வீறிறிரு வான்மியூர் கச்சூரா லக்கோயி
        லிடைச்சரங்க ழுக்குன்ற மச்சிறுபாக் கம்மே
மாறிறிரு லக்கரையே யாசிலிதொல் லிரும்பை
மாகாளந் தொண்டை நன்னாட் டெண்ணின் முப்பா னிரண் டே."

இளைத்தெழு வெண்பிறை யார்கச்சி யேகம்ப ரின்னருளால்
விளைத்தெழு நாலி லொருமருந்தாலும் விலக்கரிதாய்
முளைத்தெழும் பொற்சிக ரம்போலு மம்மை முலைத்தழும்பும்
வளைத்தழும்பும் பெற்றிருப்பதன் றோ தொண்டை மண்டலமே. (4)
------------

மேற்கோள்.
காஞ்சிப்புராதன புராணம் : ஆசிரியவிருத்தம்.

”மங்கைநா யகி தன் வரிவளைத் தழும்பும்
        வளரிள முலைசெய்த சுவடும்
கொங்கைநா யகமுங் கண்டுகண் டுள்ளக்
        குறிப்புட னல்குவாய் கோவே
சிங்கநா யகமா யிருந்தநா ரணனைச்
        சிம்புளா யடர்த்தசே வகனே
கங்கைநா யகனே கம்பனே கச்சிக்
        கடவுளே காக்குநா யகனே”.

சேணார் கழுகு பழகுதெய் வீகச் சிறப்பு மன்றி
யேணாரும் பூதங் கொடுபோ வதுமன்றி யெண்ணிறொல்சீர்க்
காணாது காண்பது கச்சியி லேயென்று காசினியோர்
வாணா ளளவுந் துதிப்பதன் றோதொண்டை மண்டலமே. (5)
-----------

மேற்கோள் : திருவாசகம்.

"பிட்டு நேர்பட மண்சு மந்த பெருந்து றைப்பெரும் பித்தனே
சட்ட னேர்பட வந்தி லாத சழக்க னேனுனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோகனே சிறு நாயி னுங்கடை யாயவெங்
கட்ட னேனையு மாட்கொள் வான்வந்து காட்டி னாய்கழுக் குன்றிலே.”

நீடார் துளப மணநாறு கச்சியி னீலமொன்றுங்
கோடா விளக்கொடு சேர்நீல மொன்றுங் குலவுபுக
ழேடார் சுனையின் மலர் நீல மொன்றுமற் றெப்பொழுதும்
வாடாமற் காட்டவும் வல்லதன் றோதொண்டை மண்டலமே. (6)
-------------

மேற்கோள் : நேரிசை வெண்பா .

”நீல மழைமுகிலோ நீலமணிக் குன்றமோ
கோல நிறைந்த குரைகடலோ சோலையிளங்
காயா வனமோ கழுநீரோ கண்ணமங்கை
மாயா வுன துவடிவம்."

காஞ்சிப்புராதன புராணம்.
"எந்நாளு மொருசுனையி லிந்திரநீ லேப்போது மலர்ந்தே தோன்றும்".

பூதவஞ் சூத முதலாக நின்ற பொதும்பிற்சந்த
பாதவம் போன் மிக்க வேளாளர் தங்கிய பான்மையினா
லா தவஞ் சூழ்தரு பல் கோடி தேச மனைத்தினுமா
மாதவஞ் செய்ததன் றோ தமிழ் சேர்தொண்டை மண்டலமே. (7)
----------

மேற்கோள் : பஃறொடை வெண்பா.

"வையக மெல்லாங் கழனியா வையகத்துச்
செய்யகமே நாற்றிசையுட் டேயங்கள் செய்யகத்து
வான் கரும்பே தொண்டை வளநாடு வான் கரும்பின்
சாறேயந் நாட்டுத் தலையூர்கள் சாறட்ட
கட்டியே கச்சிப் புறமெல்லாங் கட்டியுட்
டானேற்ற மான சருக்கரை மாமணியே
யானே ற்றான் கச்சி யகம்."

இன்னும் புகழ்கிற்க வோர்பழிக் காமற் றெழுபதின்மர்
துன்னுந் தழல்புக் கொளித்ததெல் லாஞ்சுரு திப்பொருளா
யுன்னும் புரிசைத் திருவாலங் காட்டி னுரைபதிக
மன்னுந் தமிழில் வகுத்ததன் றோதொண்டை மண்டலயே. (8)
------------

மேற்கோள் : திருக்கடைக் காப்பு.

"துஞ்ச வருவாருந் தொழுவிப் பாரும் வழுவிப்போய்
நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப் பாரு முனைநட்பாய்
வஞ்சம் படுத்தொருத்தி வாணாள் கொள்ளும் வகை கேட்
டஞ்சும் பழையனூ ராலங் காட்டெம் மடிகளே."

கண்ணூர் கருணைக் கடற்றொண்டை மான்கைக் கடாசல த்தைத்,
தண்ணூரு முல்லைக் கொடிதடுத் தாட்கொண்ட தன் மையெல்லாம்,
பண்ணூருஞ் செஞ்சொற் றிருமுல்லை வாயிற் பதிகஞ்சொல்ல,
மண்ணூழி காலமு நிற்பதன் றோதொண்டை மண்டலமே. (9)
--------------

மேற்கோள் : திருப்பாட்டு.

"சொல்லரும் புகழான் றொண்டைமான் களிற்றைச்
        சூழ்கொடி முல்லையாற் கட்டிட்
டெல்லையி லின்ப மவன்பெற வெளிப்பட் டருளிய
        விறைவனே யென்று
நல்லவர் பரவுந் திருமுல்லை வாயி னாதனே
        நரைவிடை யேறீ
பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
        பாசுபதாபரஞ் சுடரே."

இரட்டைப்புலவர்கள் பாடிய ஏகாம்பரநாதருலா.
"முல்லைக் கொடிதடுத்த மூதூரும்."

நன்கண்மை யாக வயாவுற்ற நோய்கண்டு நாடரிய
புன்கண்மை நோக்கியுஞ் சற்று மெண் ணாதொர் புலவனுக்காத்
தன்கண்மை சூலி முதுகினிற் சோறிட்ட தன்மையினால்
வன்கண்மை செய்யவும் வல்ல தன் றோதொண்டை மண்டலமே. (10)
----

மேற்கோள்.: இரட்டையாசிரிய விருத்தம்; மடக்கு.

"பன்றிகோடுழுத நந்திவெற்பனிரு,
        பாரவெற்பினை யடுக்கிலான்
    பாணன் வெம்பிண மெடுத்தவன் கொடிய
        பாணன் வெம்பிண மெடுக்கிலான்
சென்றுநன் முளையை வாரினோன் புதிய
        திங்கள் வெண் முளையை வாரிலான்
    செட்டி தன்பழி தவிர்த்தவன் பரிவு
        செய்து பெண்பழி தவிர்க்கிலான்
அன்று சூலிமுது கன்னமிட்டவனெ
        னன்னை கூன்முது களிக்கிலான்
    அங்கையாடரவின் வாயிலிட்டவனெ
        னல்குலாடாவு தீண்டலான்
வென்றி நிமேவுதொடை யாடை சீறினவ
        னேமியாடையது கீறிலான்
    வீறுலாவுதமி ழாறைமேவுபா
        மேஸ்வான் புதல்வ னெல்லனே,"

வீறா ரிசையு நசையும்வல் லோரிந்த மேன்மைசற்றுத்
தேறாத போதிது செப்புவ ரால்வரைத் திண்புயத்தே
பேறான பாணன் பிணஞ்சுமர் தேவரும் பெற்றிகொண்டே
மாறாத கீர்த்தி படைத்ததன் றோதொண்டை மண்டலமே. (11)

-------

மேற்கோள்.
”பாணன் வெம்பிண மெடுத்தவன்."
(இதனை மேற்காட்டிய பன்றிகோடுழுத வென்னும் பாடலிற் காண்க.)

கொங்கலர் மாலையுங் கல்லாய் விடுமன்பு கொண்டெறிந்தா
லிங்கல ராய்விடுங் கல்லா னதுமென்ப தின்றறிந்தோஞ்
செங்கலி னாலெறிந் தேசிவ னார்பதஞ் சேர்வர்சங்க
மங்கையின் மேவிய சாக்கிய னார்தொண்டை மண்டலமே. (12)
----

மேற்கோள் : திருத்தொண்டத்தொகை.

"மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கு மடியேன்."

புராண சாரம்.
ஆசிரியவிருந்தம்.

"சங்கமங்கை வருவேளாண் டலைவர்காஞ்சிச்
        சாக்கியரோ டியைந் தவர் தந் தவறுஞ் சைவத்
துங்கமலி பொருளுமுணர்ந் தந்த வேடந்
        துறவாதே சிவலிங்கந் தொழுவோர் கண்டோ
ரங்கமலர் திருமேனி யழுந்தச் சாத்தி
        யமருநாண் மறந்தொருநா ளருந்தா தோடிச்
செங்கலெறிந் திடுமளவின் மகிழ்ந்த நாதன்
        றிருவருளா லமருலகஞ் சேர்ந்து ளாரே."

தெள்ளத் தெளிந்தவா செய்தக்க தோர்முறை செய்யிலையா
வெள்ளத் தனைமலை யத்தனை யாமென்ப தின்றறிந்கோ
முள்ளற் கரிய தொடையாடை கீறிய தொன்றுமொரு
வள்ளற் றகைமையொ டொத்துள தாற்றொண்டை மண்டலமே. (13)
----------

மேற்கோள்.
”வென்றி மேவுதொடை யாடைகீறினவன்."
(இதனையும் மேற்காட்டிய பன்றி கோடுழுத வென்னும் பாடலிற் கணக.)

தாயினு நல்ல தயையுடை யோர்க டமதுடலம்
வீயினுஞ் செய்கை விடுவர் கொல்லோ தங்கண் மெய்ம்முழுதுந்
தீயினும் வீழ்வர் முதுகினுஞ் சோறிட்டுச் சீறரவின்
வாயினுங் கையிடு வாரவர் காண்டொண்டை மண்டலமே. (14)

மேற்கோள் : விருத்தம்.

"துளையிட்ட முள்ளெயிற் றாவின் வாய் முழையிற்
றுறுத்திட்டவநரத்தினால்."

கொச்சகக்கலிப்பா
"மாறே செய்மரவின் வாய் தீண்ட வும்பயந்து
பேறே மணியுதவப் பெற்றகுல மென்னாம
லூறே பரத்தையர்க ளுன் வாயில் வைத்த குறி
யாறேன் களந்தை யழகப் பெருமாளே."

மீனவர் நாட்டினுஞ் செம்பியர் நாட்டினும் வில்லவர் கோ
னானவ னாட்டினு மிக்கதென் பார்களதிசயமோ
கோனவ னாட்டிம் முளையமு தாகிற் குலவ முதார்
வானவர் நாட்டினு மிக்சன் றோ தொண்டை மண்டலமே. (15)
--------

மேற்கோள்.
புராண சாரம் : ஆசிரியவிருத்தம்.

"மன்னியவே ளாண் டொன்மை யிளசை மாறர்
        வறுமையா லுணவுமிக மறந்துவைகி
யுன்னருகள் ளிருண் மழையி லுண்டி வேண்டி
        யும்பர்பிரா னணையவய லுழுது வித்தஞ்
செந்நென்முளை யமுதுமனை யலகா லாக்கிச்
        சிறுபயிரின் கறியமுது திருந்தச் செய்து
பன்னலரு முணவருந்தற் கெழுந்த சோதிப்
        பரலோக முழுதாண்ட பான்மை யாரே."

சாய்த்திட் டவர்க்குத் திருமேனி முன்கையைச் சந்தனமாத்
தேய்த்திட் டவர்க்கெவர் நேரென்ப ராலங்கஞ் செந்தழலிற்
றோய்த்திட் டவருக்குச் சர்வாங்க முந்திரி தூள்படவே
மாய்த்திட் டவர்க்கரி தோவெளி தோதொண்டை மண்டலமே. (16)
--------

மேற்கோள்.
சேக்கிழார் புராணம் : ஆசிரியவிருத்தம்.

"மாறுகொடு பழையனூர் நீலி செய்த
        வஞ்சனையால் வணிகனுயி ரிழப்பத் தாங்கள்
கூறிய சொற் பிழையாது துணிந்து செந்தீக்
        குழியிலெழு பதுபேரு மூழ்கிக் கங்கை
யாறணிசெஞ் சடைத்திருவா லங்சாட்டப்ப
        ரண்டமுற நிமிர்ந்தாடு மடியின் கீழ்மெய்ப்
பேறுபெறும் வேளாளர் பெருமை யெம்மாற்
        பிறித்தளவிட் டிவளவெனப் பேச லாமோ."

கேட்டாலு மின்பங் கிடைக்குங்கண் டீர்கொண்ட கீர்த்தியோடு,
பாட்டா லுயர்ந்த புகழேந்தி சொன்ன படியறிந்து,
பூட்டார் சிலைமன்னன் வையம் பெறினும் பொய் தானுரைக்க,
மாட்டா ரெனச்சொன்ன நாட்டார் திகழ்தொண்டை மண்டலமே. (17)
-------------

மேற்கோள் : ஆசிரியவிருத்தம்.

வையம் பெறினும் பொய்யுரைக்க மாட்டார் தொண்டை நாட்டாரென்
றையன் களத்தைப் புகழேந்தி பாண்டா ருரைக்கு மவரோநீ
செய்யுஞ் சிலைக்கை மதவேளே யெழுபார் புரக்கு மெங்கோவே
யையந் தவிர்த்த பெருமானே யாவோ மடியோ மாவோமே."

கையா றிரண்டுடைக் காளை தன் வாயிற் கவிதைகொண்ட
பொய்யா மொழிக்கும் புகலிட மானது பொய்கையெல்லாஞ்
செய்யார் கமல மலாவண் டானங்கள் சென்று திகழ்
மையார் குவளை வயல்புடை சூழ்தொண்டை மண்டல மே. (18 )
-----------

மேற்கோள் : நேரிசைவெண்பா.

"விழுந்ததுளி யந்தரத்தே வேமென்றும் வீழ்ந்தா
லெழுந்து சுடர்சுடுமென் றேங்கி-செழுங்கொண்டல்
பொய்யாத கானகத்தே பெய்வளையும் போயினளே
பொய்யா மொழிபகைஞர் போல்."

விண்ணிற் பிறக்கும் புகழ்க்குன்ற நாடன் விளங்குதமிழ்ப்
பண்ணிற் பிறக்கும் பெரிய புராணம் பகர்ந்தபிரா
னெண்ணிற் பிறக்கும் பததூளி யென்றலை பெய்தவந்த
மண்ணிற் பிறக்கவும் வைக்குங்கொ லோ தொண்டை மண்டலமே. (19)
----------

மேற்கோள்.
சேக்கிழார் புராணம் : ஆசிரியவிருத்தம்.

"சேக்கிழானமது தொண்டர்சீர்பரவ நாமகிழ்ர் துலக மென்றுநம்
வாக்கினாலடி யெடுத்துரைத்திட வரைந்து நூல் செய்து முடித்தனன்
காக்கும் வேல்வளவ நீயிதைக்கடிது கேளெனக்கனக வெளியிலே
யூக்கமான திரு வாக்கெழுந்தது திருச்சிலம்பொலியு முடனெழ."

நேரிசை வெண்பா.

"கொண்டறவழ் தண்டலை சூழ் குன்றநகர்ச் சேக்கிழா
ரொண்டாணி யோருய்ய வோதினார் - தண்டலில்சீ
ரேன்றபுகழ் நாலா யிரத்திருநூற் றெண்பத்து
மூன்று திரு விருத்த மும்."

தேமாம் பொழிறிகழ் சம்பந்தர் வாழுஞ் சிரபுரமபோற்
றாமா தவஞ் செய்த தெத்தனை யோதென் றமிழியல்சேர்
பாமாலை சூட மதுரநல் வாயிற் பதியுடனே
மாமா சிலாமணிச் சம்பந்தன் வாழ் தொண்டை மண்டலமே.(20)
-------------

மேற்கோள் : கட்டளைக்கலித்துறை..

"பொருமா கடலிடைத் தோன்றலல் லாது புணரிவெள்ளம்
தருமா மணியொன்று கண்டதண் டோவையந் தந்தவனுந்
திருமாலும் போற்றுந்தென் னாகரிற் சம்பந்த தேசிகனா
மொருமாசி லாமணி பேரின்ப வாரி யுதவியதே."

பொய்யக மாகிய மாயாப் பிரபஞ்சம் போக்குதற்குக்
கையக நெல்லிக் கனியதன் றோகச்சி யேபொதாய்
மெய்யக மேபுரி காரிகைப் பாட்டில் விளங்கவைத்த
வையக மென்னுந் தமிழே புனைதொண்டை மண்டலமே. (21)
----------

மேற்கோள்.

"வையக மெல்லாங் கழனியா வையகத்துச்
செய்யகழே நாற்றிசையுட்டேயங்கள் செய்யகத்து
வான்கரும்பே தொண்டை வளநாடு.
(இப்பாடலை யேழாவது பாட்டின் மேற்கோளிற் காண்க.)

அஞ்சொன் முதுதமிழ் நால்வேந்தர் வைகு மவையி லௌவை
செஞ்சொற் புனைகின்ற வேளாளர் வைகுஞ் சிறப்புடைத்தால்
விஞ்சிய வேழ முடைத்தென்னும் பாடல் விளம்பிப்பின்னும்
வஞ்சி வெளிய வெனும்பா மொழி தொண்டை மண்டலமே. (22)
----------

மேற்கோள் : நேரிசை வெண்பா.

"வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
றென்னாள் முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோ ருடைத்து."

இன்னிசை வெண்பா.
"வஞ்சி வெளிய குருகெல்லாம் பஞ்சவன்ற
னான்மாடக் கூடலிற் கல்வலிது
சோழ னுறைந்தைக் கரும்பினிது தொண்டைமான்
கச்சியிற் காக்கை கரிது."

படவேங் கடற்கட லன்னதொல் காப்பியப் பாயிரஞ்சொல்
லிடவேங் கடலின்றி யேபனம் பாரர்மற் றெல்லை சொல்லக்
கடவேங் கடலன்ன செந்தமிழ்க் கேயென்று காட்டுதற்கு
வடவேங் கடந்தென் குமரியென் றார் தொண்டை மண்டலமே. (23)
--------

மேற்கோள் : தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம்.

"வடவேங் கடந்தென் குமரி யாயிடைத்
தமழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி
னெழுத்துஞ் சொல்லும் பொருளு நாடிச்
செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட வெண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவ
னிலந்தரு திருவிற் பாண்டிய னவையத்
தறங்கரை நாவி னான்மறை முற்றிய
வதங்கோட் டாசாற் கரிறபத் தெரித்து
மயங்கா மாபி னெழுத்து முறை காட்டி
மல்குநீர் வரைப்பி னைந்திற நிறைந்த
தொல்காப் பியனெனத் தன் பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே."

இடஞ்சூழுங் காரிகை யாப்பிற் குதாரண மென்று கொண்டு
விடஞ்சூ ழாவென் றெழுவாயிற் றோற்றி வெறிகமழ்வேங்
கடஞ்சூழ் காடக் கடாக்களிற் றானியற் காளிம்பன் மேல்
வடஞ்சூ ழெனச்சொன்ன பாமாலை யுந்தொண்டை மண்டல மே. (24)
--------

மேற்கோள் : ஆசிரியவிருத்தம்.

வீடஞ்சூ ழாவினிடை நுடங்க வில்வாள் வீசி விரையார்வேல்
கடஞ்சூழ் நாடன் காளிம்பன் கதிர்வேல் பாடு மாதங்கி
படஞ்சூழ் கொங்கை மலை தாந்தாம் வடிக்க ணீல மலர் தாந்தாந்
தடந்தோளியண்டும் வேய்தாந்தாமென்னுந் தன்கைத் தண்ணுமையே."

படையிற் கொடையிற் பெரியோனை யக்கணம் பாடக்கம்பற்
கடையக் கொடுத் திட. வாங்கின னாலரு மந்த முத்தைக்
கடையிற் கடைசிபருப்பிற்கு மாறக் களகளென
மடையிற் றாலஞ் சொரிவபல சூழ் தொண்டை மண்டலமே. (25)
------------

மேற்கோள் : வெண்பா.

"புக்க விடைகழுவிக் கொடுழுத புண்களெல்லாம்
திக்கிலுயர் காளிம்பன் றேன் புழன்மா-னக்கணமே
தோள்வேது கொண்டிலனேற் சுந்தரப்பொற் றோன்றலுக்கு
வாழ்வேது கண்டிலேன் முற்று."

கிளப்பார் கிளப்ப வடி மடக்காகக் கெழுமிய சொல்
லளப்பா மதுரத் துடன் பூக் கமலமென் றாய்ந்தெடுத்த
களப்பாள னெற்குன்ற வாணனந் தாதிக் கலித்துறையே
வளப்பார் புகழை வளர்ப்பிக்கு மாற்றொண்டை மண்டலமே. (26)
----

மேற்கோள்.
திருப்புகலூரந்தாதி : கட்டளைக்கலித்துறை..

"பூக்கம லத்து விழிவளர் வானென்றும் போற்றியவூர்
மாக்கம லத்து மகிழ்கின்ற வூர்மது வானிறைந்த
தேக்கம லத்து வழியே பாக்குத் திருப்புகலூர்,
நோக்கம லத்துயர் சோதிநெஞ் சேநம்மை நோக்குதற்கே.'

"வளப்பா டிலாத வெருக்கு மிதழி மலருமன்ப
ருளப்பா டுறைபுக லூரருக் காதலி னோதிமிக்கோர்
தளப்பா டிதுதமிழ்க் கென்னினுஞ் சாற்றுவன் சந்திரன்சொற்
களப்பாள னெற்குன்றை வாணனந் தாதிக் கலித்துறையே.” (27)

போனத்தி னாலொர் புறவினை யேற்றவன் போலவுமோ
சேனத்தி னாலெதி ரேற்றவன் போலவு மேன்றுகொண்ட
மீனத்தி னான்மற் றொருகோடி செம்பொன் விலைகொடுத்த
மானத்தி னாலும் வலிய தன் றோதொண்டை மண்டலமே. (28)

கூட்டுங் கரந்தங் கொழுநர்க்கல் லாமற் கொடி வெருவ
வோட்டும் பொழுதுங் கரங்குவி யாரிமு தூட்டுதற்கு
மூட்டுந் தழற்கொரு முன்றினில் லார்கற்பு மூட்டியெரி
மாட்டுந் திறமனை தோறுமுண் டேதொண்டை மண்டலமே. (29)

பின் மோர் தமைக்கண்டு பாவித்த தோவன்றிப் பின்புவந்தோர்
தன்போ னடக்கப் பணிப்பித்த தோதமிழ்க் கேயிரங்கி
முன்போம் புலவற்குப் பின் போயி னானு முகுந்தனிது
வன்போ மனத்தினி லன்போ சொல் வீர்தொண்டை மண்டலமே. (30)
-----------

மேற்கோள் : நேரிசைவெண்பா.

”கணிகண்ணன் செல்கென்றான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா - துணிவுடைய
செந்தாப் புலவனுஞ் செல்கின்றே னீயுநின்
பைந்தாகப் பாய்சுருட்டிக் கொள்"

இதுவுமது.
"ழன்போம் புலவற்கு மூதறியாற் பாய்சுருட்டிப்
பின் போஞ் சவரிப் பெருமாளே- யன்பாகப்
பேய்முலைப்பா லுண்டவனே பேதையே னின்ன மொரு
தாய்முலைப்பா லுண்ணாமற் றா."

சென்னியிற் சென்ற துகிலோடு சென்று சிலரிழிந்தார்
பன்னியிற் சென்றது போலிழிந் தார்சிலர் பாங்குடனே
பொன்னியிற் ....யேறி னாரைப் புணர்ந்ததன்று
வன்னியிற் சென்று கரையேறி னார்தொண்டை மண்டலமே (31)

பொள்ளா நுழைவழி போய்த்தலை நீட்டும் புலவன் முன்னாள்
கள்ளாறு செஞ்சொற் கலம்பக மேகொண்டு காயம் விட்ட
தெள்ளாறை நந்தி பெனுந்தொண்டை மான்கலி தீர்ப்பதற்கு
வள்ளார் முரச மதிர்த்தாண் டதுந்தொண்டை மண்டலமே. (32)
------------

மேற்கோள் : விருத்தம்.

'துபிலுணந்து வெட்டுமெங்கள் தொண்டை வேந்தே’

நந்திக்கலம்பகம்...
ஆசிரியவிருத்தம்.

“வானுறு மதியை யடைந்ததுன் வதனம்
        வையக மடைந்த துன் கீர்த்தி
கானுறு புலியை யடைந்ததுன் வீரங்
        கற்பக மடைந்ததுன் காக்க
டேனுறு மலரா வரியிடஞ் சேந்தாள்
        செந்தழல் புகுந்ததுன் மேனி
யானுமென் கலியு மெவ்விடம் புகுவே
        மெந்தையே நந்திநா யகனே.”

நீளத் திரிந்தென்று வெண்பாவி னாலன்று நின்றையர்கோன்
காளத்தி வாணனைப் பாடிய பாடல் கருதுமண்ட
கோளத்தி னுஞ்சென்று பாதாளம் புக்குக் குலவுசக்ர
வாளத்தி னுஞ்சென்ற தாலெளி தோதொண்டை மண்டலமே. (33)
-----------

மேற்கோள் : நேரிசை வெண்பா.

"நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழற்போலு
நாளைக் கிருத்தியோ நல்குரவே - காளத்தி
நின்றைக்கே சென்றக்கா னீயெங்கே நானெங்கே
யென்றைக்குக் காண்போ னினி."

பாகொன்று சொல்லியைப் பார்த்தமையாலன்று பாண்டியன்மு
னோகின்ற சிற்றிடை வேழம்பக் கூத்தி நொடிவரையிற்
சாகின்ற போது தமிழ்சே ரயன்றைச் சடையன்றன் மேன்
மாகுன் றெனச்சொன்ன பாமாலை யுந்தொண்டை மண்டலமே. (34)
--------

மேற்கோள் : கட்டளைக்கலித்துறை,

மாகுன் றனையபொற் றோளான் வழுதிமன் வான்கரும்பின்
பாகொன்று சொல்லியைப் பார்த்தெனைப் பார்க்கிலன் பையப்பையப்
போகின்ற புள்ளினங் காளபுழற் கோட்டம் புகுதுவிரேற்
சாகின் நனளென்று சொல்வீ சயன்றைச் சடையனுக்கே."

ஆசிரியப்பா .

"இரவ லாளரே பெருந்திரு வுறுக
வரவுமிழ் மணியு மலைகட லமிர்துந்
திங்கட் சூழவியுஞ் சிங்கப் பாலுங்
குதிரை மருப்பு முதிரை வாலு
மீகென மொழியினு மில்லென மொழியான்
சடையனை யயன்றைத் தலைவனை நீர்போ
யுடையது கேளு முறுதியுள் ளோரே."

சொல்லை யிலாகச் சொரிகவி மாரி சுருதிவல்லான்
செல்லையில் சோலைக் குறுங்குடி வாழ்நம்பி சென்று கண்ட
வெல்லையி னீடுங் காடக் கடாக்களிறென்று சொன்ன
வல்லையிற் காளத்தி வாழ்வா னதுந்தொண்டை மண்டலமே. (35)
-------------

மேற்கோள் : கட்டளைக்கலித்துறை.

"பொரடக் கயம்பிடி யென்றான் மதனனிப் பூவையுமா
தரடக் கமுஞ்சற் றறிந்தில ளேதனைத் தாள்பணியா
முரடக் கவுடக் கெடிமண்ட லீடர் முடிபிடுங்குங்
கரடக் கடாக்களிற்றாய்வல்லை மாநகர்க் காளத்தியே."

நூலார் கலைவல்ல செம்பிபன் கேட்க நொடித்துமிக்க
போலா கலனொட்டக் கூத்தனை யன்றுதற் கோலியென்று
மேலார் கவி சொல்லி நெய்த்தானத்தேசென்று வென்று கொண்ட
மாலார் களந்தைப் புகழேந்தி யுந்தொண்டை மண்டலமே. (36)
-----------

மேற்கோள் : ஆசிரியவிருத்தம்.

"தற்கோ லிப்பூ தற்பா சந்த தப்பா மற்சா கைக்கே நிற்பீர்
முற்கோ லிக்கோ லிப்பூ சித்தே முட்டா மற்சே வித்தே நிற்பீர்
வற்றா கெட்டோ டைப்பா ரச்சேன் மைப்பூ கத்தே றித்தா விப்போய்
நெற்றா ளுற்ற லைப்பா கிற்சேர் நெய்த்தானத்தரனைச்சே வித்தே."

இதுவுமது.
"விக்கா வுக்கா வித்தா விப்போய் விட்டார் கட்டார் சுட்டூர்
புக்கா ரிக்கா யத்தாசைப்பா டுத்றே யிற்றே டிப்போய் வைப்பீர் நிற்பீ
ரக்கா டப்பேய் தொக்கா டச்சூ ழப்பாடத்தீ வெப்பா டப்பூ
ணெக்கா டக்கா னத்தாடப்போ நெய்த்தானத்தானைத்தியானித்தே.

ஏரி னியற்றுங் களைக் கோட்டை யீந்தன்ன மிட்டு நல்ல
பாரி பறித்தென்னும் பாடல்கொண் டோன்பண்பு சேர்பழய
னூரி லிருப்புவ னௌவை தன் பாடற் குவந்தபிரான்
மாரி யெனத்தரு கைக்காரி யுந்தொண்டை மண்டலமே. (37)
--------

மேற்கோள் : வெண்பா.

"பாரி பறித்த பறியும் பழையனூக்
காரி கொடுத்த களைக்கோடுஞ்- சேரமான்
வாரா யெனவழைத்த வாய்மையுயிம் மூன்று
நீலிச்சிற றாடைக்கு நேர்."

விழுவே னெனச்சென்று வீழ்ந்தாரி லோர்மைந்தன் வேறுபட
வுழு வேலி யிற்சென் றொரு நீலி முன்கை யுடையவற்குக்
கொழுவே படைக்கல மென்று சொல் லாமுனங் கூறிய சொல்
வழுவே யெனப்பொன் றுவல்லாளனுந்தொண்டை மண்டலமே. (38)
------------

மேற்கோள் : பழமொழி.

"முன்கையுடையார்க்குக்கொழுவேபடைக்கலம்."

வீறார் நெருப்பிடை வீழ்த்தவும் பாடி முன் வீழ்த்ததற்பி
னாறா நெருப்பினை யாறவும் பாடி யடியவரைச்
சீறாத தெய்வத் திருஞான சம்பந்தர் செய்ததமிழ்
மாறாது நிற்கப் படைத்ததென் பார் தொண்டை மண்டலமே.

ஏத்தளித் தாயிரம் பாடல்கொண் டேநிரை யீந்தெருமைப்
டோத்தளித் தாடையும் பூணா முந்தந்து போதரவாய்க்
காத்தளித் தாதரித் திட்டதல் லாமலுங் கம்பருக்கு
மாத்தளித் தாட்பட்டு வாழ்வதன் றோதொண்டை மண்டலமே.

புறவோ டுடற்றசை போக்கிய வேந்தன் புரிந்ததிலு
மறவோ கொடிது கொடிது கண் டீரற னன்று மற்றுப்
பிறவோ மறுத்துரை செய்யான் மிகச்சிரம் பேர்த்துவைத்த
மறவோனைத் தாங்கிய வையமன் றோதொண்டை மண்டலமே. (40)
-----------

மேற்கோள்.

"தலையிந் தாவெனு மைந்தா தாலோ தாலேலோ
தண்குன்றைப்பதி யெல்லா தாலோ தாலேலோ."

வெண்பா:
"ஆலெங்கே யங்கே யரும்பறவை யாற்றுயிலு
மாலெங்கே யங்கே மலர்மடைந்தை- சோலைதொறுஞ்
செங்கே திகைமணக்குஞ் செங்குன்றை யெல்லனெங்கே
யங்கே யிரவலரெல் லாம்."

வள்ளல் சிலைப்பெரு மாணச்சர் சாத்தர் வழுதிமுதற்
றள்ளுவனார்க்குத் தலைபான பேரையும் தன்னுரையை
விள்ளுவ னார்க்குந் திருக்காஞ்சி வாழ்பரிமேலழகன்
வள்ளுவ னார்க்கு வழிகாட்டினான் றொண்டை மண்டலமே. (41)
--------

மேற்கோள் : வெண்பா .

"தருமர் மணக்குடையர் தாமத்தர் நச்சர்
பரிமே லழகர்பருதி- திருமலையர்,
மல்லர் கவிப்பெருமாள் காளிங்க ர்வள்ளுவர் நூற்
கெல்வையுரை செய்தா ரிவர்."

இதுவுமது.

"பாலெல்லா நல்லாவின் பாலாமோ பாரிலுள
நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ - நூலிற்
பரித்தவுரை யெல்லாம் பரிமே லழகர்
தெரித்த வுரை யாமோ தெளி."

கண்ணாலென் னெஞ்சத் தழுக்கறுத் தேசுடை யேன்றனையுந்
தண்ணாருங் கூலிக் கடிமை கொண் டே தடுத் தாண்டருளி
எண்ணாருங் காஞ்சித் திருக்குறிப்புத்தொண்ட ரென்னுந்தெய்வ
வண்ணார் வடிவு கொடுபோந் ததுந்தொண்டை மண்டலமே. (42)
------------

மேற்கோள் : திருத்தொண்டத்தொகை.

"திருக்குறிப்புத் தொண்டர்தம் மடியார்க்கு மடியேன்."

புராண சாரம்.
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

கொந்தலர்பூம் பொழிற்கச்சி நகரேகாலிக்
        குலத்தலைவர் தவர் குறிப்புக் குறித்து ளார்பால்
வந்திறைவர் நமக்கின் று தாரீ ராகில்
        வருந்துமுட லெனவாங்கி மாசு நீத்த
கந்தைபுல ராதொழிய மழையு மாலைக்
        கடும்பொழுது வரக்கண்டு கலங்கிக் கன்மேற்
சிந்தைமுடி டைப்பளவிற் றிருவே கம்பர்
        திருக்கை கொடு பிடித்து பர்வான் சேர்த்தி னாரே."

சயிலைத் திருமுலைப் பானாறு பட்டுண்ட தண்டமிழாற்
குயிலைப் பணிகொண்டு வெந்தற மாண்ட குடத்திலென்பை
யயிலைப் பொருகண் ணதிரூப மென்கிளி யாக்குவித்த
மயிலைப் பதியுஞ் சிவனேசருந்தொண்டை மண்டலமே. (43)
-------

மேற்கோள்:
பெரிய புராணம் : கலிநிலைத்துறை.

"தம்மை யுள்ளவா றறிந்தபின் சங்கரற் கடிமை
மெய்ம்மை பேசெயும் விருப்பினின் மிக்கதோ ரன்பாற்
பொய்ம்மை நீக்கிமெய்ப் பொருளிது வென கொளு முள்ளச்
செம்மை யேபுரி மனத்தினார் சிவநேச சென்பார்."

திருக்கடைக்காப்பு.
"மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சாமமர்ந்தா
னொட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்."

பிணிக்கோர் மருந்தனை யார்வாயி லாரன்று பிஞ்ஞகனார்
பணிக்கோர் குறைவின்றி யந்தரி யாகத்திற் பண்ணுவித்த
வணிக்கோ யிலும் பொற் சிகரமும் வீதியு மாடங்கு
மணிக்கோ புரமு முடைய தென் பார்தொண்டை மண்டலமே. (44)
-----------

மேற்கோள் : திருத்தொண்டத் தொகை.

"துறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்."

புராண சாரம்.
ஆசிரியவிருத்தம்.

“ஞாயிலார் மதிற்றொண்டை நாட்டு மேன்மை
        நண்ணு மயி வாபுரியின் வேளாண் டொன்மை
வாயிலார் மலை வில்லா னடியே போற்றி
        மறவாமை தலைநின்ற மனமே செம்பொற்
கோயிலா வுயர் ஞானம் விளக்கா நீராக்
        குலவியவா னந்தமன்பே யமுதாக் கொண்டு
தாயிலா னிருசாண நிகழ வேத்துந்
        தன்மையா ரருள் சேர்ந்த நன்மை யாரே."

பேணிய செந்தமிழ்த் தாதனுக் கேயன்பு பெற்றமைபா
னாணிய கம்பன் சிவிகையுந் தாங்கி நயந்த தமிழ்
பூணிய நின்றதும் பொச்சாப்பிலாது புகுந்து பின்னும்
வாணியத் தாதற்குத் தாதா னதுந்தொண்டை மண்டலமே.(45)
------------

மேற்கோள் : கட்டளைக்கலித்துறை.

"ஓங்கிய செந்தமிழ்த் தாதற் கடிமையவ் வூரதனா
னாங்கவி சொல்வது மில்லையென் றேகம்ப னாடன் சொல்ல
வாங்கவ னேறுஞ் சிவிகை சுமந்து மடைப்பையிட்டுந்
தாங்கவி கொண்டதுங் கூவந்தி யாக சமுத்திரமே."

பட்டா பிடேகம் பரிந்தார்க்குண் டோவிந்தப் பான்மை கெடக்
கெட்டார் கவிசொல்லி வந்தோர்க்கெல் லாம்பொற் கிழியனைத்துந்
தட்டா னுதவிடுங் கூவந்தி யாக சமுத்திரத்தின்
மட்டார் கவிகொண்டமண்டலங் காண்டொண்டை மண்டலமே. (46)
---------

மேற்கோள்.
கட்டளைக்கலித்துறை.

"மட்டாருஞ் செங்கழு நீர்மணி மார்பரை வாழ்த்துமந்தக்
கிட்டாத யாசகர் கிட்டிவந் தாலதைக் கேட்டு முன்னாட்
பட்டோலை வாசித்தவாவர்க் குள்ள பரிசிலெல்லாங்
தட்டா னளிப்பதுங் கூவந்தி யாக, சமுத்திரமே."

தன்னா லிசைபெறக் கூவந்தி யாக சமுத்திரமென்
றன்னா ளொருவ னெடுந்துண்டி. லிட்டிட வாங் கொருமீன்
பொன்னா லமைத்துப் பொருந்திடச் சேர்த்துப் புகழ் கொண்டதான்
மன்னா வுலகத்து மன்னிய சீர்த்தொண்டை மண்டலமே. (47)
--------------

மேற்கோள் : வெண்பா.

"இடுவார் சிலரு மிடாதார் பலரும்
வடுவிலா வயத் திருக்கப் படுபாவி
கூவத்து நாரணனைக் கொன்முயே கற்பகப்பூங்
காவெட்ட லாமோ கரிக்கு."

ஈட்டால மன்னவன் பின்னே யறிய வெனக்கெனமுன்
கேட்டா னதற்கு முன் சென்ற தவ் வாருயிர் கேட்டவர்க்கு
நீட்டா விடினுந் தனக்கெனக் கேட்பினு நெஞ்சமுய்ய
மாட்டா திரண்டுமுன் கற்றிய தோதொண்டை மண்டலமே. (48)

உளத்துத் தயையற்ற வோர்புவ வோனுக் குடையுதவிக்
குளத்துப் புனலை படுத்துகின் றேபின்பு கூவியவைக்
களத்துப் புகுதக் கலையுகத் தேகரை யேறிவந்த
வளத்துப் புகழ் பெற்ற வல்லாள னுந் தொண்டை மண்டல மே.

வில்லைச் செருப்பிட்ட காலா லுதைத்து வியனுலகிற்
சொல்லற் கரிய புகழ் கொடுத் தோன்றுட்ட வீரன் றன்னாற்
பல்லக்கி லேயன்றி மன்படு மோவெனும் பாடல் கொண்ட
வல்லப் பதிகச்சியப்பனும் வாழ் தொண்டைமன்டலமே (50)
-----------

மேற்கோள் : வெண்பா .

"மண்படுமோ வெய்யிலிலே வாடுமோ புல்லரிரு
கண்படுமோ வன்பாகக் கற்றவற்கு-மண்புகழ
மெச்சியப்பா லும்புகழும் வீறுவல்லை யாளவந்த
கச்சியப்ப னையுதைத்த கால்"

மிண்டரை வெல்லும் வளர்சிங்க ராயன் விலை கொடுப்பத்
தண்டமிழ் மேக முறத்தூரில் வேதிபன் றானும்விற்பக்
கொண்டவன் பின் சென்று மண்டலத் தேபுகழ் கொண்ட பிரான்
வண்டமிழ்க் கும்ப னனதாரி யுந்தொண்டை மண்டல மே.        (51)
-----------

மேற்கோள் : வெண்பா .

"கம்பனென்றுங் கும்பனென்றுங் காளியொட்டக் கூத்தனென்றுங்
கும்பமுனி யென்றும் பேர் கொள்வரே--யம்புவியின்
மன்னா வலர்புகழும் வாயிலன தாரியப்ப
னங்களிலேயிருந்தக் கால்."

கொல்லையிற் பாற்பசு மேய்ப் போன் கறப்பவன் கொண்டு சென்றே
யெல்லையிற் சேர்ப்பவன் பாலடு வோனிவை யித்தனையுஞ்
சொல்லையிற் பாவல னோரோர் கவி சொல்லச் சொல்ல நல்கும்
வல் லையிற் காளத்தி வாழ்வா னதுந் தொண்டை மண்டலமே. (52)
-----------

மேற்கோள் : வெண்பா.

"பள்ளமே செய்புட் பயிரையெல்லாங் கொள்ளுபடி
வெள்ளமே யும்மையகம் வென்சேமே-புள்ளலம்பும்
பொற்கா விவாவிவல்லைப் பூபதிகாளத்தியெனு
நற்கார் கெமுடியை கட்டு."

கட்டளைக்கலித்துறை.

“பெற்ற ளொரு பிள்ளை பென் மனை யாட்டியப் பிள்ளைக்குப்பால்
பற்றது கஞ்சி குடிக்குந் தரமன்று பாலிராகச்
சிற்றாரூமில்லை மற்றெல்லா வறுமையும் தீரவொரு
கற்ற தரவல்லையோ வல்லை மாநகர்க்காளத்தியே."

இதுவுமது.

"வழிமேல் விழிவைத்து வாடாம லென் மனையாளை மற்றோர்
பழியாமற் பிள்ளையும் பாலென் றழாமற் பகீசெனுஞ்சொன்
மொழியாம லென்னை வா விட்ட பாவி முசித்துச்சதை
கழியாமல வளித் தான் வல்ல மாநகர்க் காளத்தியே."

சீருறும் பாடல்பன் னீரா யிரமுஞ் செழுந்தமிழ்க்கு
வீராதஞ் சங்கப் பலகையி லேற்றிய வித்தகனார்
மாரதம் பாடும் பெருந்தேவர் வாழும் பழப்பதிகாண்
மாருதம் பூவின் மணம்வி சிடுந்தொண்டை மண்டலமே (53)
-------------------

மேற்கோள் : வெண்பா.

"கடக் கிழிய வோடுங் கலம்போல வொன்னா
ருடல்கிழிய லொள்வாள் விதிர்த்து - மடல்கிழியும்
பைம்பொற்றார் மன்னர் படைநடுவே யோடிற்றே
செம்பொற்றண் டேந்தினான் றேர் "
சொல்லாயு மௌவை பரிவாய்த் தனக்கிட்ட சோறுலக
மெல்லாம் பெறுமென்று பாட்டோதப் பெற்றவளின்னருளாற்
சல்லாரற் சுற்றிக் கிணறேறிப் பாயுங் கழனிபெற்றான்
வல்லாண்மை பூத மகிபால னுந்தொண்டை மண்டலமே. (54)
-----------

மேற்கோள் : வெண்பா.

"வாகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டு
முரமுாலு றும்புளித்த மோரும் - விரகுடனே
புள்ள லூர்ப் பூதன் புகழ்ந்து விருந்திட்டா
னெல்லா வுலகும் பெறும்."

ஆரான் முடியுமிக் காரியந் தோடவி ழாத்திமலர்த்
தாரானை வேம்பின் றொடையானைப் பெண்ணை பந் தாமனையும்
போராடிக் காவலில் வைத்தவப் பாட்டும் புனைந்த தன்றே
வாராரு மோட்டிளங் கொங்கைநல் லாய் தொண்டை மண்டலமே.

குழுவார் குடிமக்களானகண் ணாளர் குறும்படக்கி
யெழுவா யமைந்த மனு நீதி யாற்பதி னெண்மரபு
முழுவா னரித்துக் கிடந்து விடாம லுலகுக்கெல்லாம்
வழுவா தமைக்கவும் வல்லது நீடொண்டை மண்டமே. (56)

அழுவதுங் கொண்டு புலம்பாது நஞ்சுண்டதுமறைத்தேன்
செழுவதுங் கொண்டு புகழ்க்கம்ப நாடனெழுப்பவிசை
முழுவதுங் கொண்டொரு சொற்பேச நெய்யின் முழுகிக்கையி
மழுவதுங் கொண்டு புகழ் கொண்டதாற்றொண்டை மண்டலமே.
---------------

மேற்கோள் : வெண்பா.

'ஆழியான் பள்ளியணையே யவன்கடைந்த,
வாழி வரையின் மணித்தாம்பே-யூழியான்
பூணேயப் பணான் புரமெரித்த பொற்சிலையி .
னாணே யகல நட.

நேயத் துடன் பிறந் தோன்பிண மூடி நெருப்பவித்துத்
தாயொப் பெனவெதிர் கொண்டழைத் தேதன் னுடனேனவே
யாயத் தமிழ் கொண் டருங்கவி ராயனுக் கன்பு செய்த
வாயற் பதியில் வடுகனும் வாழ்தொண்டை மண்டலமே. (58)
-------

மேற்கோள் : கட்டளைக்கலித்துறை.

"தன்னுடன் கூடப் பிறந்த சகோதரத் தம்பியுயி
ரந்நிலை மாண்டது தோன்றாமன் மூடிவைத் தன்னமிட்டான்
மன்னவர் போற்றிட வாழ்செக் கலக்கை வடுகனுக்குக்
கன்னனுஞ் சோமனு மோவிணை யாகக் கழறுவதே."

நெடுக விரித்துப் பிணமூடினோன்மக னீயெனில்வா
கடுக வெனக்கு முன் முந்தவென் றேயொர் கவிதை சொல்ல
முடுக வழைப்ப மனையாள் பிணந்தனை மூடிச்சென்ற
வடுக னளித்த மகன் வாய லான்றொண்டை மண்டல மே. (59)
---------

மேற்கோள் : வெண்பா.

"ழந்தவிளை யோன் மாள முத்தமிழோற் கன்னமிட்ட
வந்த வடுகன் மகனாபின் - வந்தென்
றலைக்கலியா ணத்துக்கே தான் பிணத்தை மூடி
யிலக்கணமாச் செய்குவையே."

பயிரைப் பெரும்பன்றி தின்றதற் காகப் பரிசனத்தோ
ருயிரைப் பருகி யுடலவர்க் கீய வொருபுலவோன்
செயிரப் புடைத்ததுந் தானே பொறுத்தந்தச் செய்யு தவும்
வயிரப்ப னென்பவன் வாழ்வானது தொண்டை மண்டலமே. (60)

ஈரக் கருக்கரி வாள் கொண்டு போகையி லின்புலவோ
னேரொக்க வேதின்று வண்டோ லிடுமென நின்று தனஞ்
சேரக்கெடுப்பவொன் றில்லா மன் மன்னவன் செம்பொன்னெல்லாம்
வாரிக் கொடுக்கத் துணியவல் லான்றொண்டை மண்டல மே.(61)
----------

மேற்கோள் : வெண்பா.

"வண்டோ லிருந்தொண்டை மண்டலத்தானேதியாக
முண்டோ விலையோ.வுரை "

பண்டை நிகண்டு திவாகரம் பிங்கலம் பன்னுரிச்சொ
லெண்டிசையின் சொல் வடமொழி செய்யுளெல் லாமுணர்ந்தே
தண்டமிழ் கொண்டு நிகண்டுசூளாமணி தானுரைத்த
மண்டல வன்குடி கொண்டது நீடொண்டை மண்டல மே. (62)

காரார் களந்தைப் புகழேந்தி சொன்ன கலம்பகத்தி
னேரான நையும் படியென்ற பாடலை நேரியர் கோன்
சீராகச் செப்பிய நற்பாடல் கொண்டவன் செஞ்சியர்கோன்
மாசாபி ராமனங் கொற்றந்தை பூர்தொண்டை மண்டலமே. (63)
-----------

மேற்கோள் : விருத்தம்.

"நையும் படியே நாங்கொற்ற நங்கேநன் செஞ்சி வரைமீதே
பையம் பெறு நுண்ணிடைமடவா யகிலின் றூபமுகிலன்று
பெய்யுந் துளியோ மழையன்று பிரசத் துளியே பிழையாது
வையம் பெறினும் பொய் புரைக்க மாட்டார் தொண்டை பாட்டாரே."

தாறற்ற செந்தமி ழொப்பாரி யென்னுந் தமிழ்புனைந்தோன்
சேறைப் பதிசந்த்ர சேகர வாணன் முன் சென்றவந்தாள்
வீறுற் றனரென்று வேளாள ரைமன் விலங்கிலிட
மாறற் குவந்து முடிசூட்டி. னான்றொண்டை மண்டலமே. (64)
--------

மேற்கோள் : கட்டளைக் கலித்துறை.

"ஒப்பாரி யாய்நின் மகவைத் தெருவி லொருத்திகண்டே
யப்பா வொயெடுத்தாளணைத் தாளன்னை தானுமென்ற
டப்பா அன் மைந்தனென் றானங்க னே தலை சாய்த்து நின்றாள்
செப்பா யவளெவள் காண்சேறை வாழ்சந்த்ர சேகரனே."

தன்னூர்ச் சனகையிற் சன்மதி மாமுனி தந்தமைந்த
னன்னூ லுரைத்த பவணந்தி மாமுனி நற்பதியுஞ்
சின்னூ லுரைத்த குணவீர பண்டிதன் சேர்பதியு
மன்னூ புரத்திரு வன்னமின் னேதொண்டை மண்டலமே. (65)
----------

மேற்கோள் : அகவற்பா.

"மலர்தலை யுலகின் மல்கிரு ளகல; பவணந்தி
யென்னு காமத் திருந்தவத் தோனே."

வெண்பா.
"பண் பார் கவிஞர் வியந்தெடுத்த பாட்டியலை
வெண்பாவந் தாதி விளம்பினான் - மண்பரவும்
கோடாத சீர்த்திக் குணவீர பண்டிதனும்
பீடார் களத்தைப் பிரான்."

ஊரார் மலிபுலி யூர்க்கோட்ட நற்குன்றத் தூரிலுள்ள
தீரார் வளமலி பாக்கிழ வோன்புகழ்ச் சேக்கிழவோன்
காராளன் கூடற் கிழவோன் முதுமொழிக் காஞ்சி சொற்ற
வாரார் புரிசைக் கிழவோனும் வாழ்தொண்டை மண்டலமே.(66)

நீண்டார் வணங்குந் திருவாலங் காடற்கு நெல்லமுதே
வேண்டா வெனக்கிந்தக் கூழே யமைகென்று வேண்டிய கூ
மாண்டா சொருவ ரறுபத்து மூவரி லன்பு வைத்து
மாண்டா ரவர்க்கு வளநாடு நீடொண்டை மண்டலமே. (67)

நன்றாய் விளைந்ததை வேதிபற் கீந்தந்த நன்மையினாற்
பொன்றான் விளைந்திட நெற்போல வேயதைப் போரடித்துக்
குன்றாக் குவித்ததை நெற்பரி மாற்றர் கொடுத்தளித்தான்
மன்றார் களந்தைக் குடிதாங்கி யுந்தொண்டை மண்டலமே. (68)
--------

மேற்கோள் : வெண்பா.

பொன்னெல்லை யெல்லாம் பொதிப்பொதியாப் பூசுரற்குச்
செந்நெல்லே போலச் சிறந்தளித்தான்- பன்னகத்தின்
சீரார் மணியைவிலை செப்யானுஞ் செய்யகளத் "
தூரானுஞ் செய்கரும மொன்று."

வெங்கொலைக் கஞ்சி யடைக்கலந் தான்புக வேந்தன்மைந்த
னுங்கலை யாம லொளித்துவைத் தேதன் னொருமகவை
யிங்கிவன் றானவ னென்றே யடையலர்க கீந்து விட்டான்
மங்கலஞ் சேர்கிடங் கிற்பெரு மான் றொண்டை மண்டலமே. (69)
------------

மேற்கோள் : விருத்தம்.

"வந்தவுயிர் தனையளித்தான் கிடங்கில் வேந்தன்
        வயலுழா னறமடங்கா தெனவு ரைத்தான்
செந்தமிழோர் கிளை வளர்த்தான் வேலூர் மன்னன்
        செம்பியன் முன் வயிறிடந்தான் பேரையூரா
னந்தமுள தாணளித்தான் வீடு ராதி
        யடையாத வாசலா னிடையா லத்தா
னந்தனுட னமுதுண்டான் பேராவூரா
        னடைப்பரியா யிரங்கொடுத்தா னாறை யானே."

எண்ணான் கறந்தொண்டை மண்டலத் தார்க்கன்றி யில்லையெ
தண்ணார் வயலுழன் றான் சொல வேந்தன் றலை தடிந்த னத்
தெண்ணாமன் மன்னனு மப்படி யேசொல விப்படியின்
மண்ணாளும் வேந்தன் வரிசைபெற்றான் றொண்டை மண்டலமே. (70)
------------

மேற்கோள்.
(வந்தவுயிர்தனை யென்னும்பாடலிற்காண்க.)

கோலூ ருழவுக் குடியா னவன்றன் குமிழம்பட்டு
வேலூர்க் கிழானொரு வேளாளன் பஞ்சம் விடியளவு
நாலூரிலுள்ள புலவோர்க்குந் தேசத்து நாவலர்க்கு
மாலூரு மன்னங் கொடுத்தளித் தான்றொண்டை மண்டலமே. (71)
-------------

மேற்கோள்.
(௸ பாடலிற் காண்க.)

நறுங்கூ ழெனையன்றி யுண்டனை யோவென நாணிவயி
அறுங்கூர் நுதிவடி வாளாற் பிளந்திட்டிருங்கானை
யுறுங்கூழ் புறத்தி லிருந்தானுக் குய்த்துப்பி லாதபுற்கை
வறுங்கூழ் சொரிந்திட்ட முற்றவுண் டான்றொண்டை மண்டலமே. (72)

-------------
மேற்கோள்.
(௸ பாடலிற் காண்க.)

போதாருந் தண்பொழில் வீடு ரதிபன் புலவர்க்கெல்லாந்
தாதா வெனக்கொடி கட்டுத லாலவன் றன் மனையை
நீதா வெனவொரு பாவாணன் கேட்பவர் நேரிழையை
மாதா வெனவழைத் தானென்கொ லாந்தொண்டை மண்டலமே. (73)
-----------

மேற்கோள்.
(௸ பாடலிற் காண்க.)

கடைவா யிலினின்றி யாசகர் கூப்பிடக் காதிலது
தடையா யவனும் பசியால் வருந்தத் தடைய கற்றி
யடையாத வாச லுடையா னெ னும்பெய ராதரித்தான்
எடையார் கழனி யிடையால்த் தான் றொண்டை மண்டலமே.(74)
------------

மேற்கோள்.
(௸ பாடலிற்காண்க.)

........ .... ர் மழையுந் தபனனும் போலத் தடையுமின்றி
.......... நீசனொ டுண்டமை யாலுமொ ரூனமின்றித்
திரையார் புவியிற் புகழே படைத்துத் தினந்தினமும்
வரையாது வள்ளன்மை நாட்டுவ தாற்றொண்டை மண்டல மே. (75)
---------------

மேற்கோள்.
(௸ பாடலிற் காண்க.)

கூற்றூர் புலவ னொருபரி சேட்டக் கொடை மதத்தி
லாற்றூர்க் கிழான்பரி யாயிர மீந்தன னாதலினால்
வேற்றூர் பலவிது நம்மூ ரெனும்படி வெம்பசியை
மாற்றூர் பலவுள மண்டலங் காண்டொண்டை மண்டலமே. (76)
---------

மேற்கோள்.
(௸ பாடலிற்காண்க.)

ஏதிலும் தொண்டர்க் கிசையா தன குற்ற மின்பஞ்செய்தார்
தீதிலு நன்மை பெறலா மெனவையந் தேறத்தெவ்வைச்
சூதிலும் வென்று புலனைந்தும் வென்றெம தூதரையும்
வாதிலும் வென்று வருமூர்க்க ருந்தொண்டை மண்டலமே.(77)
--------------

மேற்கோள் : திருத்தொண்டத்தொகை.

"நாட்டமிகு தண்டிக்கு மூர்க்கருக்கு மடியேன்."

புராண சாரம்.
விருத்தம்.
"தொண்டைவள நன்னாட்டு வேற்காட் ர்ேவாழ்
        தொல்லுழவர் நற்சூதர் சூதுவென்று
கொண்ட பொருள் கொண்டன்பர்க் கமுதளிக்கும்
        கொள்கையினாற் றிருக்கடதைக் குறுகி யுள்ளார்
மிண்டிசைவு குழறுமொழி வீணர் மாள
        வெகுண்டிலான் மூர்க்கரென விளம்பு நாம
மெண்டிசைபு மிகவுடையா ரண்ட ரேத்து
        மேழுலகு முடனாளு மியல்பி னாரே."

மெய்ப்பார் மனைவியைக் கொள்வாரு மற்று விளக்கு முட்டக்
கைப்பாணி கொண்டு கழுத்தீர்ந்து திரங் கலத்துளட்டி
பொய்ப்பார் புகழ வகல்விளக் கோடு புகழ்விளக்கு
வைப்பார் கலியர் திருவொற்றி யூர்தொண்டை மண்டலமே. (78)
-----------

மேற்கோள்.
புராண சாரம் : விருத்தம்.

"தடமலர்சூ ழொற்றியூர் நகருள் வாழுஞ்
        சக்கரப்பா டியர் குலமெய்த் தவமாயுள்ளார்
படர்புகழார் கலியனார் நலியுங் சு-ற்றைப்
        பாய்ந்தவற்கு விளக்கெரிக்கும் பரிவான் மற்றோ
ருடலிலராய்ச் செக்குழல்வார்க் கதுவு நேசா
        துயர்மனைவி யைக்கொள்வா ருளரு மின்றி
மிடறு திரங் கலனிறைய வரிய நாகன்
வியன் கைகொடு பிடிப்பவருண் மேவி னாரே.”

திருத்தொண்டத்தொகை.
(கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பற் கடியேன்."

கொத்தலர் கோரை வியன்பாண்டி மண்டலக் கொம்பை த்தம்பால்,
வைத்திருந்தாங்கவ டன் கேள்வன் றேடி வரவ வற்கே,
யுய்த்திரு வோர்க்கும் வரிசையு மாற்றி யுடனுஞ் சென்று,
மைத்துனக் கேண்மை படைத்ததன் றோதொண் டை மண்டலமே. (79)

மோதிச் சிவந்த கவிகாள மேக மொழிந்தவெண்பா
பாதிக்கு முந்திப் பரிசளித் தோன்களப் பாளனெனு
மாதிக்கம் பெற்றவ னாமூர் முதலி யரசிருப்பா
மாதிக்கெ லாம்புகல் கின்றதொல் சீர்த் தொண்டை மண்டலமே. (80)
-------

மேற்கோள் : வெண்பா.

”உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற வொரு கோடி
வெள்ளங்கா லந்திரிந்து விட்டோமே - தெள்ளுதமி
ழாமூர் முதலி யரசர்பிரா னிங்கிருக்கப்
போமூ ரறியாமற் போய்."

வேலி யழித்துக் கரும்பையெல் லாந்தின்ன விட்டிரவோர்
காலில் வணக்கமுஞ் செய்தேத்திப் பின்னுங் கரும்பு தின்னக்
கூலி யளந்துங் கொடுத்தானொருவன் குமணனைப் போல்
வாலிதின் மிக்க கொடையாள னுந்தொண்டை மண்டலமே. (81)

உணலைப் பசுட்பொன் முதலான வற்றை யு தவிப்பின் னுங்
குணலச்சை யுள்ளவர் கேட்கவுங் கூசுவர் கொல்லெனவே
யெணலைக் கருதி பெழுதிவைப் பீரென வின் மறைந்து
மணலைப் பரப்பிய முன்றிலுள் ளான்றொண்டை மண்டலமே. (82)

பன்னுந் தமிழ்க்கவன் மாமனை தாதி பரிசளிப்ப
முன்னம்பி காளிக்கு நெற்குன்ற வாகா முதலியென் போன்
பின்னுஞ் சிலபல பொன்னுங் கொடுத்துத்தன் பேர் நிறுத்த
மன்னுந் தமிழு முரைத்தான வன்றொண்டை மண்டலமே. (83)
---------

மேற்கோள் : கட்டளைக்கலித்துறை.

"கற்குங் கவீவல்லை யாதவர் கோனம் பி காளிக்கியாம்
விற்கும் பரிசன மாகிவிட்டோம்வட வேங்கடமும்
பொற்குன்ற மும்புகழ் கங்கா நதியும் பொதியமும்போ
னெற்குன் றமுகம், மரபுமெந் நாளு நிலைநிற்கவே."

சீரொன்று தேவர் முதலாத லாற்றில்லை வாழ்முதலி
யாரென்று நாமம் படைத்தது போன்மற் றவருமந்தப்
பேரொன்று பெற்றது வேளாண் முதன்மையைப் பெற்றல்லவோ
வாசொன்று பூண்முலை யாயெளிதோதொண்டை மண்டல மே. (84)

காட்டன் புடைய விராவணன் வீழக் கயிலையுறைந்
கசிட்டன் றிருவடித் தாமரைப் பூசிக்கச் சார்ந்தபசு
விசிட்டந் தருமுலைப் பாலாறு கொண்டு விருப்பமுடன்.
வசிட்டன் றவஞ்செய்த மண்டலங் காண் டொண்டை மண்டலமே (85)

---
மேற்கோள் : கலிநிலைத்துறை.

"கழிந்த பற்றுடை வசிட்டன திருக்கையாங் கவிஞர்
மொழிந்த நந்தியம் பெருவரை மொய்த்தசூன் முகில்கள்
பொழிந்த நீரது பொற்புறு தாழியிற் பொங்கி
வழிந்த பாலெனத் திசைதொறு மிழிந்தது மன்னோ ."

வெல்லாமல் வென்றுநற் சந்தனக் காட்டத்தின் மேலிருந்து
நல்லாறை நந்திக் கலம்பகங் கேட்டபினற்றுணைக்குக்
கொல்லா புரிசந்த்ரன் மாமுடிசூட்டக் குடைகவித்து
மல்லார்புரித்தொண்டைமானான துந்தொண்டை மண்டலமே. (86)
---------------

மேற்கோள் : கட்டளைக்கலித்துறை.

“நேற்றினு மின்று மிகுந்தது காதனிலவெனுங்கூன்
கூற்றினு மன்னை கொடியள்கண் டாய்மள்ளர் கொன்றபழஞ்
சேற்றினு மேதிக் குளம்பா னெருக்குண்ட செங்கருப்பஞ்
சாற்றினுஞ் சங்கந் தவழுங்கொல் லாபுரி சந்திரனே."

அந்தப் புரமு மறுநான்கு கோட்டகத் தாருமொன்றாய்க்
கந்தப் புராணம்பன் னீராயிரஞ் சொன்ன கச்சியப்பர்
தந்தப்பல் லக்குச் சிவிகையுந் தாங்கியச் சந்நிதிக்கே
வந்தப் புராண மரங்கேற்றி னார்தொண்டை மண்டலமே.(87)

உறைவா ளரசனொறுப்பானென் றஞ்சி யொளித்ததுவும்
பிறவாமல் வைத்தவர் பேணுத லாலவர் பேர்புனைந்து
திறவா ணிபர் முதற் சாதியுள் ளோரன்று செய்தநன்றி
மறவாம லின்னமும் பாராட் டிடுந்தொண்டை மண்டலமே. (88)

மேதைப் புலவரெண் ணேகாம் பரசம்பு மெச்சநெடுங்
காதைப் புலவ ரிட்டையர் பாடுங் கலம்புகமு
மோதற் கரியால் லேகம்ப வாண ரூலாவுமந்த
மாதைப் பனுவலும் பாராட் டிடுந்தொண்டை மண்டலமே. (89)
------

மேற்கோள் : கட்டளைக்கலித்துறை.

“எறிக்கும் புகழ் கச்சி யேகாம் பாசம்ப னெண்டிசையும்
பொறிக்கும் புலிக்கொடி யான் புயம் வேட்டபின் பூவையன்னாள்
வெறிக்குங் குக்கொங்கை மீதே விழிசொரி வெள்ளந்துள்ளித்
தெறிக்குத் திவலை யழிக்குஞ்சித் தூரத் திலதத்தையே."

தாளாண்மை யுள்ள புகழ்கிருஷ்ண ராயன் சமுகத்திலே
வேளாண் மகளிரைப் போலே விநோதித்து வேடங்கொண்டு
கோளார் வயிரியர் கூத்தாட்த் தங்கள் குடிமையெண்ணி
வாளா லவனுயிர் மாய்த்ததன் றோதொண்டை மண்டலமே. (90)

தருவுற்ற காளத்தி கச்சியந் தாதியுந் தண்டமிழ்தேர்
திருவொற்றி யூரிற் குறுந்தொகை தானுந் திரைகடலைப்
பொருவுற்ற கச்சி மலிதே ரென்முன் புகல்கவியு
மருவுற்ற கூந்தன் மின் னேயுண்டு காண்டொண்டை மண்டலமே. (91)
--------

மேற்கோள்.

"காளத்தியுங் கயிலாயமு நேரென்பர்."
"அறந்தா னியற்று மவனிலுங் கோடி யதிகமில்லம்."
"ஒருங்கு கடலுடுத்த வொற்றியூரே."
"மலிதேரான் கச்சியு மாகடலுந் தம்மு
ளொலியும் பெருமையு மொக்கும்."

பண்டையொர் நாளையி லோரேழ் கலிங்கப் பரணிகொண்டு
செண்டையு மேருவிற் றீட்டுவித் தோன்கழற் செம்பியன் செய்
தொண்டைநன் னாடு புரக்கின்ற கோனந்தித் தோன்றலெங்கள்
வண்டையர் கோனங் கருணா கான்றொண்டை மண்டலமே. (92)
---------

மேற்கோள் : விருத்தம்.

"இறை மொழிந்தள வி லெழு கலிங்கமிவை
        யெறிவ னென்றுகழ றொழு தனன்
மறை மொழிந்தபடி மரபில் வந்தகுல
        திலகன் வண்டைநக ராசனே."

தேர்கொடுத் தோனும் பரிகொடுத் தோனுந் திருமனையிற்
றார் கொடுத் தோனுந் தலைகொடுத் தோனுந் தமிழினுக்கா
வூர்கொடுத் தோனு முயிர்கொடுத் தோனு முதை கொடுக்க
மார்கொடுத் தோனு மனைவோரு ளார் தொண்டை மண்டலமே. (93)

துரைத்தியாக ராயாமுன் சுந்தரர்க் சாவொரு தூது சென்ற
விரைத்தா மரைமணம் வீசுதல் போல்வீடப் பாய்சுருட்டித்
திரைத்தா வணத்தி லொருபுல வோன்பின்பு சென்ற செந்தா
மரைத்தாண் மணமின்ன நாறுங்கண் டீர்தொண்டை மண்டல மே. (94)

வானப்பிர காசப் புகழ்க்கிருஷ்ண ராயற்கு மஞ்சரிப்பா
கானப்பிர காசப் புகழாய்ந்து கச்சிக் கலம்பகஞ்செய்
ஞானப்பிரகாச குருராயன் வாழ்ந்து நலஞ்சிறந்த
மானப்பிரகாச முடையோர் வளர்தொண்டை மண்டலமே. (95)

மந்தா கினியிற் றிரிவேணி சங்கத்தின் மாண்டொருவன்
மந்தா கினியுற்ற பாதாளம் புக்கு வணங்கிநின்று
மந்தா கினிக்கு மகவாகக் கேட்ட வரங் சொடுப்ப
மந்தா கினிக்கு மரபான அந்தொண்டை மண்டலமே (96சு)

காவிய மாகிய காமீகங் கண்டுங்கங் காகுலத்தோ
சோவிய சூத்திர ராக விருபத்து நான்குயர்ந்த
றேவிய கோட்டத்தி லுங்கரி கால வளவன் மிக்க
வாவிய மேன்மை கொடுத்தளித் தான் றொண்டை மண்டலமே. (97)

யுகமேழு கோடியிருப திலக்க முள்ளமட்டுஞ்
சகமேழு மேழும் புகழே நிறுத்தித் தமிழ்புனைந்து
புகழ்மேழி வாகைப் பதாகையும் வீரப் புலிக்கொடியு
மகமேருவிற் சென்று தீட்டிய தாற்றொண்டை மண்டலமே. (98)

நாடான கோட்ட மிருபத்து நான்கினு ணற்றண்டகத்
தாடாத செக்கு மரையாத வம்மியு மாகிவளர்
பீடாதிபீடத் திருக்காமக் கோட்டம் பிறங்குகச்சி
மாடா திபரெனுங் காலாண்ட ருந்தொண்டை மண்டலமே (99)

இன்னவர் காலத்தி லெத்தனை பேர்மற் றிவர்களுக்கு
முன்னவர் காலத்தி லெத்தனை பேரிம் முதலிகடம்
பின்னவர் காலத்தி லெத்தனை போகள் பிறப்பவர் முன்
மன்னவர் காலத் தொடர்புடைத் தாற்றொண்டை மண்டலமே. (100)

நிலைவாழ்வு பெற்றிடும் வேளாளர் வாழிகன் னீருழவு
தலைவாழி பேகம்பர் சந்நிதி வாழிசங்காழி தண்டு
சிலைவாழி வாழி திருநெடு மாறிரு வேங்கடமா
மலைவாழி யெண்ணெண் கலைவாழி வாழ்தொண்டை மண்டல மே. (101)

தொண்டைமண்டல சதகம் முற்றிற்று.
--------------
சிவமயம்,
தனிக் கவிகள்.

கட்டளைக்கலித்துறை.
தகைவந்த சீர்த்தொண்டை மண்டலத் தார்தஞ் சரிதை யையித்,
தொகையென் றொருவர்க்குஞ் சொல்லப் படாது சொன் னாலுமிக்க,
நகைவந் திடுஞ்சொற் புலவோ ச பையினி னாமுநம்மால்,
வகைவந்த மாத்திரஞ் சொல்லிவைத் தோமிந்த மண்டலத்தே. (1)

விருத்தம்.
காவைவென் றிடுகத்தூரி கண்மணிக் கறுப்பனென்னு
மாவைரம் பதியான் றொண்டை மண்டல சதகங்கேட்டு
நாவலர் புகழ்ந்து மெச்ச நவநிதி பொழிந்து நன்றாப்
பூவுல கெங்கும் போற்றப் புகழ்நிலை நிறுத்தினான. (2)

வேறு.
கன்மாரி காத்தமுகிற் கத்தூரி யருண்மாவைக் கறுப்ப னென்னு,
மின்மாரி - தனதுகளை யத்தனையுஞ் சபைகூட்டி வியந்து கேட்டுச்,
சொன்மாரி பொழிந்திடுவே சிரகரகம் பிதஞ் செய்து சுருளுந் தந்து,
பொன்மாரி பொழிந்து தந்தப் பல்லக் குச் சுமந்துமிகு புகழ்பெற் றானே. (3)

ஓர்கறுப்பு மில்லாத தொண்டைவள நன்னாட்டி லுசித வேளைச்,
சீர்கறுப்பொன் றில்லாத கத்தூரி மன்னனருள் சேயைப் பார்மே,
லார்கறுப்ப னென்று சொல்லி யழைத்தாலு நாமவனை யன்பி னாலே,
பேர்கறுப்ப னிறஞ்சிவப்பன் கீர்த்தி யினால் வெளுப்பனெனப் பேசு வோமே. (4)

எல்லப்ப னம்மையப்பன் றருதிருவேங் கடநாத னெழிற் சிராமன்,
வல்லக்கொண் டையன்மாதை வேங்கடே சுரன் போல பரிசை செய்தான்,
செல்வத்தம் பியருடனே கத்தூரி மகன்கறுப்பன் றெருவீ திக்கே,
பல்லக்குத் தான் சுமந்தா னதுநமக்கோ ராயிரம் பொன் பரிசு தானே. (5)

கட்டளைக்கலித்துறை.
இந்தச் சதக மரங்கேற்று கைக்கிசைந் தேனெவரும்
வந்திக்கு மாவைக்கத் தூரிக் கறுப்பன் வளமைபெறு
புந்திக் குலாவுநள்ளாறர் தம் பாதம் பொருந்துமன்பன்
வந்துற் பவிக்க மகிழ்வா னதுந்தொண்டை மண்டலமே. (6)

தனிக்கவிகள் முற்றுப்பெற்றன.
---------

This file was last updated on 27 March 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)