pm logo

இராமசுவாமி ஐயர் எழுதிய
மதுரை மீனாக்ஷி சுந்தரேசுவரர்
திருவிளையாடல் கோலாட்டக் கும்மி


mInATci cuntarEsvarar
tiruviLaiyATal kOlATTak kummi
of vaiyai irAmacAmi aiyar
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Roja Muthiah Research Library RMRL for providing a scanned PDF of this work.
We sincerely thank Dr. Meenakshi Balaganesh of Bangalorer, India for her assistance in the prepartion of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

வையை இராமசுவாமி ஐயர் எழுதிய
மீனாக்ஷி சுந்தரேசுவரர் திருவிளையாடல் கோலாட்டக் கும்மி


Source:
இராமசுவாமி ஐயர், வையை
மதுரை ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேசுவரர் திருவிளையாடல் கோலாட்டக் கும்மி
ஸ்ரீ சாரதவிலாஸ அச்சுக்கூடம், 1894
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் எண் # 012087, 046905
---------------
உ - சிவமயம்.
ஸ்ரீஆநந்தநடராஜர் துணை.
மதுரை ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேசுவார் திருவிளையாடல் கோலாட்டக் கும்மி.
இது திருவையாற்றிலிருக்கும் மகா வைத்தியநாதையர் அவர்கள் சகோதரர்
வையை இராமசுவாமி ஐயரவர்களால் இயற்றப்பட்டு திருவையாறு புஷ்யமண்டபத்
தெருவிலிருக்கும் ஏஜண்டு நா. வைத்தியநாதபாரதியாரவர்களால்
திருவையாறு “ஸ்ரீ சாரதாவிலாஸ் அச்சுக்கூடத்தில்” பதிப்பிக்கப்பட்டது.
இதன் விலை பைசா 6. 1894

ஸ்ரீஆனந்த நடராஜர் துணை.

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவரர்
திருவிளையாடல் கோலாட்டக் கும்மி.

இராகம் - குறிஞ்சி, ரூபக தாளம்.

கோலுகோலேனா கோலுகோலேனா கோலேன கோலே,
செங்-கோலுகோலேனா கோலுகோலேன கோலேன கோலே.

1 சீர்கொள்யானை முகனைக்குகனைச் சேவித்து நானே, புகழ் –
சேரறுபத்து நான்குலீலைப் பேரைச்சொல்வேனே. (கோலு)

2 தீர்த்தம் க்ஷேத்ரம் மூர்த்திவைபவம் சேர்ந்துமேன்மேலே, நல்ல –
கீர்த்திவிளங்கும் மதுரைவாழ் சொக்கேசர் செங்கோலே. (கோலு)

3 விருத்திரன் பழி இந்திரன் விட விலக்கும் செங்கோலே, முனி-
உரைத்தசாபம் வெள்ளையானைக் கொழித்த செங்கோலே. (கோலு)

4 கதம்பவனத்தை மதுரையாக்கும் கடவுள் செங்கோலே, தேவி
இதங்கொள் தடாதகையாயுதித்திடச் செய் செங்கோலே. (கோலு)

5 மலையத்துவச பாண்டியன் பெற்ற மங்கை செங்கோலே, செங்கோல்
உலகினில்மற்றை யாசர்பிடித்த தூன்றிடுங்கோலே. (கோலு)

6 மதுரைவாழ்த டா தகைப்பெருமாட்டி செங்கோலே, தேவர்
சிதறியோடத் திக்குவிஜயம் செய்த செங்கோலே (கோலு)

7 மூன்று தனத்தை இரண்டாக்கிய முதல்வர் செங்கோலே, நலம்
தோன்று தடாதகையை மணஞ்செய் சுந்தரர்செங்கோலே (கோலு)

8 கலியைவிலக்கும் சுந்தர பாண்டியன் கருணைச்செங்கோலே, பதம் –
சலிபுலிக்கு நர்த்தன தரிசனம், தந்த செங்கோலே. (கோலு)

9 குண்டோதரன் றனக்குவெம்பசி கொடுத்த செங்கோலே, செய்த –
பண்டமனைத்தும் வாரியுண்டிடப் பணித்த செங்கோலே. (கோலு)

10 அன்னக்குழியும் வையைநதியும் அழைத்த செங்கோலே, வாரித் –
தின்னக்குண்டோதரன் பெரும்பசி தீர்த்த செங்கோலே. (கோலு)

11 ஏழுகடலும், மதுரையில்வர, இயற்றுஞ்செங்கோலே விண்ணில்—
வாழும் மலையத்வசனைப்புவியில் வரச்செய் செங்கோலே, (கோலு)

12 கந்தனை உக்ர, குமரனாக்கொள் கடவுள் செங்கோலே அந்த
மைந்தன்றனக்கு வேல்வளைசெண்டு வழங்கும் செங்கோலே. (கோலு)

13 கடல்வறண்டிட வேல்விடச்செய்த கருத்தர்செங்கோலே, இந்த்ரன்
அடல்கொள்முடியைவளை விட்டழித்த அமலர் செங்கோலே. (கோலு)

14 மேருவைச் செண்டாலடித் தருள்விமலர் செங்கோலே, வந்தோர்
யாருமறிய வேதப்பொருளை இசைத்தசெங் கோலே. (கோலு)

15 கருணை மிகுந்துமாணிக்கம் விற்ற ஒருவர் செங்கோலே, முன்பு
வருணன் விடுத்தகடல் சுவறச்செய் வரதர்செங்கோலே. (கோலு)

16 அதிரமுழங்கி மழை பொழிந்திடும் மளவி லன்பாலே திரு
மதுரையைநான் மாடக்கூடலாய் வகுத்தசெங்கோலே. (கோலு)

17 எல்லாம் வல்ல சித்தராய் வந்த வீசர் செங்கோலே, பெருங்
கல்லானையைக் கரும்பு தின்னச் செய்கர்த்தர் செங்கோலே. (கோலு)

18 திருத்தியருக ரேவுங்கஜத்தைச் சிதைத்த செங்கோலே, ஒரு
விருத்த குமரபாலராய்வந்த விமலர் செங்கோலே. (கோலு)

19 இறைவன் காண மாறியாடிய இறைவர் செங்கோலே ஒரு
மறையவனில்லா ளி றந்தகாரணம் வகுத்த செங்கோலே. (கோலு)

20 தாயைச் சேர்ந்து தந்தையைக் கொன்ற பழி தவிர்த்த செங்கோலே, குரு
நாயகியைத் தொட்டவனைவெட் டிய நாதர் செங்கோலே. (கோலு)

21 நாகத்தைக்கொன்று விஷத்தை யொழித்தநாதர் செங்கோலே, மிக
மோகித் தழிய மாயப் பசுவை முடித்தசெங்கோலே. (கோலு)

22 இறைவன் காணச் சேனைகாட்டு மீசர்செங்கோலே, என்றும் –
குறைவில்லாத பொன்கிழி தந்த குழகர்செங் கோலே. (கோலு)

23 இஷ்டமாக வளையல் விற்ற ஈசர் செங்கோலே, நல்ல -
அஷ்டமாசித்தியை யுரைத்தரு ளையர் செங்கோலே. (கோலு)

24 கதவில் விடபமுத்திரைவைத்தமுதல்வர் செங்கோலே, இன்பம் –
உதவு தண்ணீர்ப்பந்தர் வைத்த அதிபர் செங்கோலே. (கோலு)

25 குறைபடாத அரிசிக்கோட்டைகொடுத்தசெங்கோலே மாமன் –
முறைமை பேசிவழக்கிற் செயித்தமுதல்வர் செங்கோலே. (கோலு)

26 வரகுணன் சிவலோகம் காண வழங்கும் செங்கோலே, யாரும்
உருகப்பாடி விறகு விற்றருள் ஒருவர் செங்கோலே. (கோலு)

27 சித்திரமிகு திரு முகந்தந்த செல்வர் செங்கோலே, பாண -
பத்திரர்க்குப் பொன் பலகை கொடுத்த பரமர் செங்கோலே. (கோலு)

28 அன்றுபத்திரர் மனைவிக்குச் செயமளித்த செங்கோலே குட்டிப்-
பன்றிகளுக்குப்பால் கொடுத்தருள் பரமர்செங்கோலே. (கோலு)

29 அந்தப் பன்றிகளை மந்திரிக ளாக்கும் செங்கோலே, திரு-
மந்திரங் கரிக் குருவிக் குரைத்தவரதர் செங்கோலே. (கோலு)

30 முதிரும் நாரைக்கு முக்திகொடுத்த அதிபர் செங்கோலே, திரு
மதுராபுரிக் கெல்லைகாட்டிய சதுரர் செங் கோலே. (கோலு)

31 சுந்தரப்பே ரெழுதுங்கணையைத் தூண்டுஞ் செங்கோலே, கற்று -
வந்தவருக்குச் சங்கப்பலகை தந்த செங் கோலே. (கோலு)

32 பொற்கிழி தரு மிக்குக்கொடுத்தபுனிதர் செங்கோலே நேர்ந்த-
நற்கீரனைக்கரையேற்றிய நாதர்செங்கோலே. (கோலு)

33 கீரன்றனக்குத்த மிழிலக்கணம் கிளத்து செங்கோலே, ஒன்றாய்ச்
சேரும் சங்கப் புலவர் கலகத் தீர்த்த செங் கோலே. (கோலு)

34 மாசறு மிடைக்காடர் கோபம் மாற்றுஞ்செங்கோலே, வலை-
வீசிவலையர்மகளை மணஞ்செய்ஈசர்செங்கோலே (கோலு)

35 பெருந்துறையினிற் குருந்த நிழலில் இருந் தருளாலே, மனம் –
திருந்தும் வாதவூரர்க்கருளுந்தேவர் செங்கோலே (கோலு).

36 நரிகளைப் பரியாக்கிக் கொணர்ந்த நாதர் செங்கோலே, அந்தப்-
பரிகளை நரியாக்கிவிடுத்த பரமர்செங்கோலே (கோலு)

37 பிட்டுக்கு மண் சுமந் தடிபட்ட பெரியர் செங்கோலே வெண்ணீ
றிட்டுப் பாண்டியன் சுரந் தீர்த்தருள் ஈசர் செங்கோலே. (கோலு)

38 துன்னியசமணரைக்கழுவிட்டுத் தொலைத்தசெங்கோலே, பின்பு-
வன்னி கிணறி லிங்கமழைத் தவரதர் செங்கோலே. (கோலு)

39. இப்படி விளையாடல் செய் சுந்தரேசர் செங்கோலே, துதி-
செப்பிடுங் குகதாசனுக் கருள் செய்யுஞ் செங்கோலே. (கோலு)

கோலுகோலேனா கோலுகோலேனா கோலேன கோலே செங்-
கோலுகோலேனா கோலுகோலேன கோலேன கோலே.
----------------

கும்மி நோட்டு.
தீரசங்கராபரணம் - ரூபக தாளம்.

1. அத்திமுகனைப் பத்தியொடுது தித்துக் கும்மிய டியுங்கடி
முத்தையனைநி னைத்திருகைகு வித்துக்கும்மி யடியுங்கடி

2. உம்பர் புகழ்சி தம்பரேசரை நம்பிக்கும்மியடி
அன்பருக்குருள ம்பிகையைவி ரும்பிக்கும்மியடி

3. வந்தருளுஞ் சம்பந்தரடிபணிந்து கும்மியடி
சுந்தரர் தமை வந்தணைசெய்தெ ழுந்து கும்மியடி

4. மாசிலப்பரைப் பூசைசெய்துகை வீசிக்கும் மியடி
நேசமாணிக்க வாசகர் துதி பேசிக்கும்மியடி

5. நித்தியமறு பத்துமூவரை நத்திக்கும்மியடி
உத்தமகுரு வைத்துதிசெய்து பத்திக்கும்மியடி

6. நாடிமிகக்கொண் டாடியெவரும் கூடிக்கும்மியடி
தோடிபைரவி பாடி குறிஞ்சி பாடிக்கும்மியடி

7. அசைவறுபுக ழிசைய நடித்து விசயக் கும்மியடி
திசையிலெவரும் நசைகொள்மாலை அசையக்கும்மியடி

8. சீர்த்திருமுகம் வேர்த்திடக்கரம் சேர்த்துக்கும்மியடி
கீர்த்தியாய்ச்சிலம் பார்த்திடவடி பேர்த்துக்கும்மியடி

9. செங்கைவளைச தங்கைதண்டைமு ழங்கக்கும்மியடி
கொங்கையிணைகு லுங்கநலம் வழங்கக்கும்மியடி

10. மாங்குயிற்குர லாங்கனிரசந் தேங்கக்கும்மியடி
ஓங்கு தனத்தை த்தாங்கியிடையு மேங்கக்கும்மியடி

11. அருகில் நின்றவ ரிருகண்களித்துள் ளுருகக்கும்மியடி
வருகுமரருக் கொருகணத்தின்பம் பெருகக்கும் மியடி

12. பூசுகளப வாசனையெங்கும் வீசக்கும்மியடி
மாசறுகுக தாசன்மகிழ நேசக்கும்மியடியுங்கடி.

திருவிளையாடல் கோலாட்டக் கும்மிமுற்றிற்று.
---------

This file was last updated on 26 Feb. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)