ஆண். | சிந்தைக்கினியவளே சுந்தரலிங்க நாதரை - என் துதிகூற வேணுமடி - என் |
சீர்பொருந்தும் கண்ணாளே தங்கரத்தினமே பொன்னுரத்தினமே |
பெண். | ஆசைச்சிகாமணியே வாசலிங்கர் கோவிலுக்கு - என் வந்திடு வேனுங்கள் கூட - என் |
அருமையுள்ள நாயகரே வதன கம்பீரா மதன சிங்காரா |
ஆண். | காரிளையே நாம் வசிக்கும் மாரியம்மன் சன்னதியில் - என் மாதே துதித்திடுவாய் - என் |
காளாட்சிமா நகரில் மயிலே அஞ்சுகமே குயிலே ரஞ்சிதமே |
பெண். | ஆடையலங்கரித்து சோடாக போய் வருவோம் - என் துலங்க வளங்காட்டிடும் - பொன் |
ஆபரணந் தானணிந்து துரையே கண்ணாளா நிறையே குணாளா |
ஆண். | சங்கீதக்கச்சேரிகள் தாளஞ் இங்கீதமாய் நடக்கும் - என் இனிய கடை வீதியும் பார் - என் |
சுரக்கியான மெல்லாம் தங்கந்தில்லாலே பொன்னுந்தில்லாலே |
பெண். | சுந்தரலிங்கர் கோவில் எந்த வழிக் கேகிடலாம் - என் யியல் பானபாதை கூறும் |
தூரத்திலிருப்பதனால் யிலங்கும் நாயகனே என் துலங்கும் நாயகமே |
ஆண். | சின்னமனூர் பாதை சென்றால் மன்னர் குலபூமான் முன்னே - என் மானே விடைபெற்றிடலாம் - என் |
சீமான் பொன்னுச்சாமி யென்னும் மாதுளம் பழமே கோதில்லாவுளமே |
பெண். | ஆயுள் வரையும் நம்மை தூய குணப் பொன்னுச்சாமி துரையைக் கண்டு போனால் நலம் |
ஆதரிக்குந் தன்மை வாய்ந்த துலங்கும் பாக்கியமே யிலங்கும் யோக்கியமே |
ஆண். | தங்கமட மயிலே மங்கம்மாள் சாலை வழி-என மாமணியே சென்றால் மேன்மை |
தாளம்பூ வாசகமே மருவே மாமணமே திருவே பூமணமே |
பெண். | ராஜதுரை நாயகமே நேசவடிவழகா - என் நேர்த்தியான சோலைவளம் |
ரவிவர்மா வோவியமே நிறைந்தவுல்லாசமே சிறந்தசல்லாபமே |
ஆண். | அருமைச்சாலைப் புன் செய்களும் தருமக்கிணறும் பாரு-என் தாகந்தணிந்திடலாம் – என் |
அழகான கண்மாய்களும் சிங்காரச் சோடி தங்கம்மே வாடி |
பெண். | சித்திரைச் சாலைகளும் அத்துவான கானகத்தில்- என் அருமையானதர்மமையா- என் |
சிறந்தவளக் கண்மாய்களும் ஆசைக்குண வாளா நேசமணவாளா |
ஆண். | கன்னியே முல்லைக்காடும் சின்னமனூர் தன்னைச் சேர்ந்த சீர் கருங்கட்டாநகர்பார் |
கா. பி. சிறையும் சித்திரைச் சோதிகளே விஸ்திர வீதிகளே |
பெண். | ஜோறான வீடுகளும் நேரான வீதிகளும் - என் நேர்த்தியாக தோணுதையா- என் |
துலங்குங் கடைத்தெருவும் நேசவடி வழகா வாசமுடைய போகா |
ஆண். | ராஜ துரைப் பொன்னுச்சாமி தேசமெல்லாம் பேரு பெற்ற சீமான் வீட்டை பாரடி என |
ஞாய வழக்குத் தீர்த்து சிங்க லக்கணமே தங்க பொற்குணமே |
பெண். | பார்த்திபாயிச்சாமிதுரை தீர்த்து முடிவு செய்ய தீராதி தீரத்தன்மை |
பாரில் பெருவழக்கும் சிறந்தகோமானா நிறைந்த பூமானா |
ஆண். | பாண்டியன் பிரஞ்சுமேனும் வேண்டிப் பஸ்காருங்கொண்டு விரும்பியழைத்துப் போனார் |
பகைத்த பெருங்கேசுக்கு விளங்கும் பொன்மணியே வழங்கும் நன்மணியே |
பெண். | அப்படியா மன்னவனே செப்பி விடை பெற்றோமல்லோ சென்றிடுவோம் மோட்டாருக்கு |
அருமைப்பொன்னுச்சாமி செய்தி சீமைசித்திரமே நேமப்பத்திரமே |
ஆண். | கோமதி காரிலேறி கோதே தாமதமில்லாமல் போகும் - என் தையலே ஏறிக்கொள்ளடி என் |
நாமள் சென்றோமானால் தங்கரத்தினமே பொன்னுரத்தினமே |
பெண். | நாதாயிக்கார் தனிலே தோதாக வேறு மெட்டில் என் சொல்லி வளங்காட்டி வாரும் -என் |
நலமாக ஏறிக்கொண்டோம் தூயச்சிங் ……….. நேயக்கெம……… |
ஆண். | பொன்னேயிலங்குதடி சின்னமனூர் தனிலே என்ன உன்னதமடி சீலையம்பட்டி நன்னகர் காணுதடி |
பெண். | ஆகாயென்சொல்வேன் பொன் தேகாயிப்பாதைதனில் வாகான பூமரமும் தேனமிர்தான பாகான மாமரமும் |
ஆண். | நாட்டமாய் காருபோகும் ரோட்டிற்கு கீழ்புறத்தில் கோட்டு ரறிகு வாயடி கன்னல்புளியின் பாட்டந் தெரிகு வாயடி |
பெண். | ஊருமதர்க்கமைந்த பேருநற் சோலைகளின் சீரும் பெருகிடமெய்யா எதிர்த்தெதிர்த்து காரும் வருகிறதையா |
ஆண். | மாரியம்மன் வாழும் வீரபாண்டிதனில் ஆறோடும் தாவுசீரடி சன்னதிமுன்னே தேரோடும் கோவில் பாரடி |
பெண். | ஷோக்கு நவநீத வாக்குவழுவாத ஷேக்குத் தலையழகா துன்பங்கள் துயரம் போக்குந்தல போயூகா |
ஆண். | சித்தம் மகிழ்வாக உத்தமியே பாரு முத்தத் தேவம் பட்டியே தேனிநகரோ சுத்தத்தங்கக்கட்டியே |
பெண். | ரோட்டுத் தேனியில் காருஸ்டாண்டும் வீதிவொய்யார நீட்டும் சுத்தமாகுதே கிராம பொனின் பாட்டுச் சத்தங் கேட்குதே |
ஆண். | மயிலே ஹக்கீம் பிரசும் ஒயிலே மூணேஸ் கடையும் குயிலே சீனாகடை நேரே சந்தை கடந்தோம் ரெயிலேதான் ஜல்தியாய் ஏறே |
பெண். | மிஞ்சியேபுக ழோங்கிய அஞ்சுகரமிருவர் க்கொரு பெஞ்சியுமமைந் திலங்குது என்போலனேக வஞ்சியழகுந் துலங்குது |
ஆண். | சொர்னக்குயிலே நான் சொல்லுகிறேனடி தோகையேயுன் னேசன் வர்ணமயிலேபார் வந்திடும் கூட்டமே வள்ளல்நதி ஸ்டேஷன் (சொ) |
பெண். | கல்விக்கு ஆசாரக் கண்ணாளாயிப்படி கண்காக்ஷிகாணேனே சாமி செல்வமிது போலே சீமைகளெங்குமே சிறந்திருக்குமோ பூமி (க) |
ஆண். | பாண்டிப் பூமிவளம் பாரடி கண்மணி பாதை தோறும் வண்டி நாட்டம் ஆண்டிபட்டி ஸ்டேஷனழகென்ன சொல்ல அன்னமேபார்ஜனக் கூட்டம் (சொ) |
பெண். | புண்ணிய நேர்மை பொருந்துங்குணவாளா பூந்தி வடையென்னும் சத்தம் கண்ணியமாய்ச் சோடா கலர் என்னும் பால் காப்பி யென்பார்களோ நித்தம் (க) |
ஆண். | மானேயிரண்டு மலையைப் பிளந்துமே மாலாய்த் தண்டுவாளம் நாட்டி தானே றெயில் போகும் தன்மைக்குச் செய்திட்ட தைரிய மென்ன சீமாட்டி (சொ) |
பெண். | கோடித்திரவிய கோமானல்லாமல் யார் கொட்டிடுவார் பணம் கூறும் தேடியேயிப்படி செய்தாலே யேழு ஜென்மத்திலும் நீங்காப் பேரும் (க) |
ஆண். | பாரோங்கும் உசிலம் பட்டிதானிறங்கு பைங்கிளியே நாமள் சென்று சீரோங்கிடுஞ் செல்வச் சிங்கமுத்து மாலை சீமான் வீட்டிலன்னம் உண்டு (சொ) |
பெண். | மன்னவா சத்ரிய மகிபனில்லத்தில் மகிழ்ந்துண்டோம் நல்ல சீரே நன்னயமா யொரு நாகரீகமெட்டில் நாட்டி வழி கூறும் நேரே (க) |
ஆண். | பார்மயிலே யுசிலம் பட்டி தனிற் பிரிந்து. பாண்டியன் காத்தமுத்து வேள் காரு காரு இல்ல பாங்குட நேராகத்தாணிப் பாறைவரையும் போகும் பாவையே ஜல்தியாக யேறு யேறு |
பெண். | சீர்வொயில் மன்னாயிந்த சீமான் கார்மட்டுந்தானா செல்லு மிந்த வழிக்குக் கூறும் கூறும் நல்ல சிங்காரமாகப்பூமி சிறந்த வளங்களெல்லாம் சீறாளனே கூறியே வாரும் வாரும் |
ஆண். | கண்மணி குளக்கரையும் கடந்தோம் பாரடிசின்ன கட்டளைத்துரைச்சாமிவேள் புண்யன் புண்யன் யெந்தன் காதலிபார் சேடபட்டி காருண்யமங்கல்ரவும் கமழ் பெத்தணசாமியோ கண்யன் கண்யன் |
பெண். | நன்மணியே வொய்யார நாகரீகத்துரையே நன்செய் புன்செய் சிறந்த காடும் காடும் ஆசை நாயகரே வுயர்ந்த நல்ல கட்டடமோங்கி நகைக்கும் பதுமையுள்ள வீடும் வீடும் |
ஆண். | இன்பயிள வடிவே யிருபுரமுங்கடைகள் யிலங்கும் பேரை நகரோ ஜோரு ஜோரு யின்னும் இனிய தேவன் குரிக்ஷி யென்னுங்கல்பட்டியதோ இங்கித சுப்புலாபுரம் பாரு பாரு |
பெண். | அன்பு பெருகும் நேச அரசே பேரையூர் தனில் அம்சம் பொருந்துங்கடை வீதி வீதி அதில் அலங்கிர் தமிஞ்சும் மாதர் அருமை நடையழகை அன்னங்கண்டாலும் நாணும் ஜோதி ஜோதி |
ஆண். | தங்கமே தெரியுது பார் தானே ஸ்ரீ வில்லிபுத்தூர் தாவுங் கோபுரவானை யெட்டி யெட்டி எந்தன் தையலே வத்ராயிருப்பும் தாணிப் பாறை பாரிதில் தங்கிப் போவதற்கென்ன அட்டி அட்டி |
பெண். | சிங்கமே யிவ்வூரது போல் சிகரக் கோபுரமெந்த சீமையிலுங் கண்டதில்லை காட்சி காட்சி மிகும் சில்லென வத்ராயிருப்பும் சீலமிகுந்த நாடு சீர்தாணிப் பாறையென்ன மாட்சி மாட்சி |
ஆண். | மாணிக்கமே தோகை மாமயிலே --- ஆசை மாமயிலே மங்கையே தாணிப்பாறை கடந்தோம் ஏணிப்பாறைபாரு ஏந்திளையே என்ன அதிசய மின்னரசே |
பெண். | காந்த ரூபரா ஜ கற்பக மே --- நேச கற்பகமே கமழும் முல்லைவனப் பாதைதானா பாந்தமுடனந்த கோவில் வரை பாரமலை தானோ பார்த்திபனே |
ஆண். | பத்தினியே நேசப் பாக்கியமே --- ஆசைப் பாக்கியமே பாவையே தாகந் தணிப்பதற்கு அத்தியூத்துநல்ல நீர் குடித்து அழகுபசுக்கடை கண்டோமடி |
பெண். | தாமரை மாமலர்க்கண்ளைா --- சாமி கண்ணாளா தண்ணீர் குடித்துங் களையாகுதே காமதுரையே யடுத்து ஜலம் கண்டா லுரையுங் களஞ்சியமே |
ஆண். | உத்தமியே பாண்டிச்சத்திரியன் --- கண்ணேசத்திரியன் உயரும் மதுரையாம் நெய்க்கடையே ரத்தினசாமி மால் பானக்காரம் நாயகியே மனம்போல் குடிப்போம் |
பெண். | என்னரசே யிந்தக்தேனமிர்தம் --- சாமிதேனமிர்தம் எல்லாச்சனங்களி னாசை தீர நன்னயமாகக் கொடுப்பார்களா நாயகரே யிந்தக்கானகத்தில் |
ஆண். | ஏராளமாய் நூறு கோடி ஜனம் --- தங்கம் கோடிஜனம் எங்கெங்கிருந்துமே வந்தாலும் தாராளமாகவே செய்குவாரே தங்கமே மாபலிராஜன் போலே |
பெண். | நாதாயிவ்விதம் நடுக்காட்டில் --- மன்னா நடுக்காட்டில் நல்ல தர்மங்கள் செய்ததினால் தீதாகா தெந்தத்தல மறைக்கும் திவ்ய மதிமுகா செப்பும் நாதா |
ஆண். | அன்னமே பாரடி பாம்புக்கேணி --- கண்ணே பாம்புக்கே ஆசாரவாசப்பசுக்கடையும் பொன்னே பாரிங்கு யிருபுறமும் பொருந்துங் கடை காபி ஓட்டல்களும் |
பெண். | பாவலர் மெச்சும் சிகாமணியே --- ஆசைச்சிகாமணியே பந்தி பந்தியா யிருபுறமும் ஆவலுடன் கடை கொண்டு வந்து அமைத்திருப்ப ததிசயமே |
ஆண். | கண்ணேபார் சீனிப்பலாவடியான் --- வாசப்பலாவடியா கருப்பணசாமி கோவிலிதில் எண்ணடங்காக் கிடாய் வெட்டதினால் ஏரிபோல் ரத்தப்பெருக்கம் பாரு |
பெண். | செம்புச்சிலையா யென் சீராளனே --- மன்னாசீராளனே செப்ப வொண்ணாச் சேவல்தானறுப்பும் கொம்புக்கிடாய்த் தலை குவியல்களோ கோம்பை மலைபோல் இருக்கின்றதே |
ஆண். | பாக்கியமுள்ள பசுந்தேனே --- மாதேபசுந்தேனே பண்டித வள்ளல் மடமிதுதான் யோக்கிய மென்ன வுரைத்திடலாம் உல்லாசக்கண்ணே உயர்வளமே |
பெண். | பூமி புகழ்ந்திடும் பூமானே --- நேசப்பூமானே பொங்கல் மிகும் மகாலிங்கநாத சாமிக்கு அர்ச்சனை செய்கிறாரோ சாற்றும் எந்தன் யூகச்சங்கீதனே |
ஆண். | காதல் கடலே கனிரசமே --- ஆசக்கனிரசமே காணுது பார் திருக்கூட்டங்களே பூதலத்துள்ள பரங்களெல்லாம் புண்ணிய லிங்கரை போற்ற வந்தோர் |
பெண். | காயாசம் பூண்ட பரதேசிக்கு --- சாமி பரதேசிக்கு காசுகள் போடுறார் நாமுந்தந்தால் ஆயாசம் தீருமே ஆணழகா அன்பாக நாமும் கொடுத்திடுவோம் |
ஆண். | மா மகாலிங்கமே நல்ல மாற்றுயருந் தங்கமே மங்கைமார்கள் முதல் தங்கியாபேர்களும் மகிழுவாரே சங்கமே |
பெண். | அருமை நேசவுரையே யெந்தன் அழகு தங்க நிறையே அடிதொழுது பெண்கள் முடியுலர்த்திப் பொங்கும் அம்சமென்ன துரையே |
ஆண். | தேனே குயிலே வாடி நாமள் திவ்யமாக நாடி தேங்காய் பழங்கள் சூடம் பாங்காய் புட்பம் கொண்டு தெரிசிப்போமேகூடி |
பெண். | தேசம் புகழும் நாதா உயர் தேனாமிர்தப்போதா தேவையானதெல்லா மாவலாகவாங்கி சேவித்தோமே தோதா |
ஆண். | ஆசை ரூபமெல்லியே பார் அருளானந்த வல்லியே அன்பாய் கையதனை முன்பாய் வையே கூடும் ஆருள்ளத்திற் சொல்லியே |
பெண். | என்ன ஆச்சரியமே கையை இழுக்கின்ற மயமே எந்தப் பூவினுலும் இந்தக் கோவில் போன்ற தெங்குங்காணேன் நயமே |
ஆண். | ஏழுதினுசு யினமே உள்ள இலை மரத்தில் ஜனமே எந்த வயர்வலிக்கு மிந்தப்பட்டை தனை எடுத்து போவார் தினமே |
பெண். | சதுரகிரியை நாமே வருடந்தவறிடாது தாமே சங்கீதங்கள் பாடி யிங்கீதமாய்த் தேடி சாமி போற்றுவோமே |
ஆண். | எங்கும் புகழும் பூமியே எஸ் எஸ் முத்துச்சாமியே இயற்று மிந்த நூலை உயற்றியா தரிப்பீர் எல்லாக் கண்ய நேமியே |