pm logo

சீர்காழி அருணாசலக் கவிராயர்
இயற்றிய "அநுமார் பிள்ளைத்தமிழ்"


anumAr piLLaittamiz
by cIrkAzi aruNAcalak kavirAyar
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சீர்காழி அருணாசலக் கவிராயர் இயற்றிய
அநுமார் பிள்ளைத்தமிழ்.

Source:
சீர்காழி அருணாசலக் கவிராயரவர்களால் இயற்றிய
அநுமார்பிள்ளைத்தமிழ்
இஃது கிடைத்த ஒரே பிரதிக்குத் தக்கபடி
புரசை பிரபந்த வித்வான் ஸ்ரீமான் கொ. பள்ளிகொண்டான்பிள்ளை அவர்களால்
பார்வையிடப்பட்டு, புரசைபாக்கம் ரொட்டிகிடங்கு சதுரங்கம் வேதாசல நாயகரவர்களால்
சென்னை: ஸ்டார் ஆப் இந்தியா பிரஸ்ஸில் பதிப்பிக்கப்பட்டது.
இதன் விலை அணா 2, 1899
Registered Copyright
--------------

அநுமார் பிள்ளைத்தமிழ்.


ஸ்ரீராம தூதாய நம:
காப்பு - வெண்பா.
நித்தன்மே லானதிரி நேத்ரவநு மந்தனெனுங்
கத்தன் மேற் பிள்ளைக் கவிபாட - வித்தை
வரக்கோட்டு மாமுனிபால் வைத்தான் முன்வந்த
கரக்கோட்டு மாமுனிதாள் காப்பு.

காப்புப்பருவம்.

கார்கொண்டசுரிகுழற்கௌரிதனபாரகனகாசலத்தருவியாடிக்
      கருணைபொழிமுக்கட்கரும்பினொருகைக்கனிகவாந்து செங்கதிரனேகஞ்
சூர்கொண்ட சேயொளிதுளும்புமணி வேணியஞ்சுடர்மதியையங்குசமெனாத்
        தூவுந் துளைக்கை கொடுவாவுங்களிற்றினிருதுணையடிகளைத் துதிப்பாம்
பார்கொண்ட பிரமனுஞ்சுரமனும்பரமனும்பங்கயசசெங்கணானும்
      பகிரண்டகோடியும் பல்லுயிர்ததொகையும் பரந்தெள்ளினெண்ணெயைப்போ
சீர்கொண்டமைந் துவளாதேவனையெவாக்குமுயர்தெய்வங்கண்மணவாளனைத்
        திரிநேத்ரவீரவநுமந்தனைப்பாடுமென் செந்தமிழ்க்கவிதழையவே.         (1)

சீர்பூத்ததெய்வப்பொலன்கிரிமுகட்டிலடர் திணியிருட்படலமோடச்
      செங்கதிர்பரப்பியெழுபலகோடி சூரியர்திரண்ட திருமுகவீரனைத்
தார்பூத்த புவனமொடுபுவனத்திலுள்ளுறை சராசரமனைத்தினுக்குந்
        தாய்க்குநிகரான திரிநேத்ரவ நுமந்தனைச் சந்ததமுகந்து காக்க
சூர் பூத்தநேமிப்பெரும்படை துலங்கச்சுராதிபர்கரங்குவிப்பத்
        தும்புருவுநாரதருமன்பின் வீணைப்பாண்டொடங்கி நல்லிசைகள் பாடப்
பார்பூத்தமுழுமணிப்பஃறலைப்பாந்தப்படுக்கையிற்பரிமளச்செம்
      பங்கயச்செல்வியிணையடிவருடவிழி வளர்பசும்பொற்கருங்கொண்டலே.         (2)

கானூறுகற்பகத்தருநிழலிருக்கின்ற கடவுளர் மடந்தையரெலாங்
      கட்டு பொற்றாலி நிலைவிட்டுவிட்டோடாது காத்தருளவாய்த்தமணியைத்
தானூறு மதிகொண்டுகலையெலாநிலைகண்டசதுரவிஞ்ஞான நிதியைத்
      தக்கவர் பணிந்தேத்துமுக்கணுடைய நுமந்தசாமியைத்தனி புரக்க
வானூறு நான்முகத்தொருவன் முதலாய் மறைவழங்கநின்றோர் யாவரும்
        வரிவிழிக்கடையினருள்வாரிபெறமுடிசாய்த்து வாய் கொண்டுவாழ்த்தெடுப்பத்
தேனூறுமெல்லிதழடுக்கணைதொறுந்தும்பி செவ்வழிப்பாடல் பாடச்
      செந்தாமரைப்பொகுட்டினிலாசிருக்கின்ற தெய்வச்செழுங்கமலையே.         (3)

வேறு.
திருகுகொற்றமலி பெருமதக்கரியினுரிவிரித்திருபு
        யங்களிற் போர்த்தவள்
திடமடுத்தமுதலையையடித்துமதகரிபிடித்ததுய
        ரந்தனைத் தீர்த்தவள்
சிவனளித்ததொருதவமிகுத்தகடகரிதனக்கிளமை
        கொண்டெடுத்தார்த்தவள்
தெறுசினத்தவள மதகரிப்பவனிதனை நடத்தியுல
        கந்தனைக்காத்தவள்

இருநிலத்தையடியொடு துளக்கிநவமணியெயிற்றினிடை
        வந்திடப்பேர்த்தவள்
இடியொலிக்குநிகரொலிபடைத்து மகிடனை
        முருக்கியம டங்கலுக்கேற்றவள்
எழுதுதற்கரிய சதுமறைப்பொருளையிவையெனத்தொகைவி
        ளங்கிடச்சேர்த்தவள்
இமையவர்க்குமுயர் நிலைமை பெற்ற விவரெழுவர்
        பத்மசர ணங்களைப் போற்றுதும்

ஒருபொருப்பைவரிசிலையெனக்கொளுவியெ திருமுப்புரரை
        யும்படத் தீர்த்தவன்
உலகனைத்துமணியுதரமத்தியினிலொளிவிரித்தமல
        ருந்தியிற் பூத்தவன்
ஒளிநறைக்கமலமலரணைத்தவிசிலுலகமுற்று முத
        வந்தனிப்பார்த்திவன்
உலவுமிப்பெரியதலைவர் நித்யவரமுதவும் விக்ரமது
        ரந்தனைப்பாக்யனை

வருகதிர்க்கிரணதருணரத்நமணிமகரமிட்டசிறு
        குண்டலத்தூக்கனை
மகரவட்டமெழுசிகரவட்டமொடுவளையவட்டமிடு
        மிண்டனைக்காற்றுடன்
மனமகிழ்ச்சி தருபுனிதலக்ஷணிகவனிதையர்க்குளுய
        ரஞ்சனைத்தாய்க்கொரு
மகனையுத்தமவைம்முகனையக்நிகரன்மகனை முக்கணநு
        மந்தனைக்காக்கவே.         (4)

ஒலிதிரைப்பேரோடைநடுவண்முழைவாய்
        திறந்தொருகாலை வவ்வியீர்ப்ப
உடனின்றபிடியலறமேலாதிமூலத்தி
        னொருவனேயென்று கதறிச்

சலிமதம் பொழிநீரும் விழி நீருமோடத்தளர்ந்த
        கரிதன்னையடு போர்
தருமுதலைவென்று தனதொருமுதலையடி
        தொழுதசக்கரக்கடவுள் காக்க

புலியடு தடக்கைமாவலி தனையிரந்துபின்
        போந்துபகிரண்டமெல்லாம்
பொதிர்ப்படைய வண்ணாந்தெழுந்த மணிவண்ணனைப்
        போலுமுயர்மேனியானைக்

கலியளிதுதைந்தபைந்துளவணிதடம்புயக்
        காவலனை மூவுலகமுங்
கைகுவித்திடுமுக்கண நுமந்தனைப்பரவுமென்கடவுட்
        பெருங்கவியையே.         (5)

சத்தலோக வனங்களைக்காட்டிய
        தக்கநான்முகனுளம் பெறச்சூட்டிய
நித்திலாரமது பண்புறப்பூட்டிய
        நித்யபாரதிபதங்களைப் போற்றுதும்
வெற்றிவீரவது மந்தனைச்சீர்பெறுவிக்கும்
        வீரவது மந்தனைக்கீர்த்திகொள்
முத்திவீரவ நுமந்தனைப்பேர்பெறுமுக்கண்
        வீரவ நுமந்தனைக் காக்கவே.         (6)

தவமிக்ககொடுவாளரக்கர் விடுபடையெலாஞ்சாடி
        முனைவாகை சூடிச்
சரமாரன் விடுபடைக்கு ரமீடழிந்து
        சிலதையலார் செய்யகனகக்

குவடிட்டமெனவேறு கடவுளரெலாந்தலை
        குனிப்பவில்வேளை வென்ற
கொற்றவனை முக்கண நுமந்தனைப்பாடுமென்கொழி
        தமிழ்க்கவிதைகாக்க

கவரிப்பெருங்குலக்கற்றையென நீடிரை
        கறங்குபாலாழி நடுவட்
கண்வளருமாதியிசைபண்வளருமேதகுகவித்
        தொடையலங்கலெனவே

விவரித்துரைக்கடங்காமலடி
        முடிநடுவிளங்காமலளவுகாணா
வேதங்களைத் தமிழ் தொகுத்தநம்மாழ்வார்
        விளங்குபொற்சரணங்களே.         (7)

வச்சிரக்கடவுளக்கினிக்கடவுள் தெற்கினிற்கடவுளங்
        கயற்காப்பவன் .
மைப்புனற்கடவுளப்புறக்கடவுள்வைப்புடைக்கடவுள்
        செஞ்சடைக்காட்டினில்

அச்சமற்றுலவுநச்செயிற்றரவு பிச்சிமொய்த்ததொரு
        கங்கையைச் சாத்திய
அத்தர்பத்தர் பணிபெற்ற முத்தர்முதலட்டதிக்கரசர்
        தங்களைப் போற்றுதும்

மெய்ச்சகத்ரபணகர்த்தனுக்குமுலவைப்பதிக்கு
        மொருசண்டைமுன்னாட்பட
விக்ரமித்துவட வெற்பை முட்டியதை
                வெட்டிவிட்டெறியவெண்டிரைக்காக்கடல்

வச்சிருக்கவொருதச்சனிச்சையில் வகுத்தமைத்ததொரி
        லங்கையிற்போயெரி
வைத்தவப்பனையெடுத்தவெற்பனை
        வளத்தமுக்கண நுமந்தனைக்காக்கவே.         (8)

காசமிடி தலைவலிகளீருள் குலைவலி பொருமல்
      காதுவலி நயனவலி வெப்புக்கள் மாறவும்
காடுபடுகரடி புலியாளியடலரிநரிகள் காயும்விடமொழுகு
      பணி பக்கிட்டுமீளவும்
காளிமுயலகனிருடிகூளிகுறளிகளலகைகாணுமுன
      மழுதுகத் றிக்கத்தியோடவும்
காரிகதிர்மதி புதன் வியாழமுதலிவர்கள்
      சுபகாலபலனுதவிமிக ரக்ஷித்து வாழவும்

வீசுரதகசதுரக் சேனை பொருகளரிமிசைவேண
        மருவலர்முடியை வெட்டிக்கையாறவும்
வேலைமிசைமலையின்மிசைஞாலமிசைக்கனமிசைமேரு-
      முதலுலவிவரு சித்துக்கள் கூடவும்
வேதகலைமிருதிகலைஞானகலைம நுகலைவியாகரணகலைகண்
      முதல் கற்றுச்சொல் பாடவும்
மேலமரர்குலமுமுனிவோர் குலமுநியதியொடுவேள்-
      விற்பதபமுறை வளர்த்துக்குலாவவும்

நீசநிருதர்கடமதுவாசமனைவியர் வயிறு
      நீறுபடவவரவர்ப தைத்தொக்கவாடவும்
நேடியுறைபல புவன கோடிகளுமுனதடியினீழலிடைவளாதுமென
      மெயப்பத்தி கூரவும்
நேமிமலைபரிதிமலைமேருமலையிமயமலை நீலமலை
      முதன்மலைய ணெட்டிட்டுவீறவும்
நீயதிகனெனவினவிவாயுமகபதிபுகழை நேரு
      மறுரிசையாக ரொத்துக்கை பேசவும்

ஆசகலுமரமகளிர் சாமரைகள் வீசமுனையாழிவறை
      சிகழகு டப்பத்திவீசிட
ஆடவர்கள்பரவவிளையாடல்புரிபவனை யெனையாளுமொரு-
      தனிமுதலை வெற்றிப்பிரதாபனை
ஆசைகளையுதறிவிடுதேசிகனையழகு திரிலோசனனைய
      நமனைவ னப்புக்கோர்காவலர்
ஆறிருவர்பதினொருவர் நாலிருவரிருவரெனவாகவகை-
      யுளவமரர் முப்பத்து மூவரே. (9)

மருவார் நரம்புளர்ந்திசைமுரலவிரல் சென்று வரிசையினடாத்தவொலி சூழ்
      மணிநரம் பொடுதழுவுசுரிகிளர்ந்தமுதொழுகு மகதியா முண்ட செவிகள்
வெருவார்கருந்துளையநெரிதோல்பறந்தலையின் வேடர்வழிகளையிடு
      வெடிகுரற்பறைசீறுமிடி குரன் முழக்கினைமிசைந்ததுகடுக்குமந்தோ
ஒருபாணர் பூதர் பொய்கையர் பேயர்பரகாலருறு தொண்டர் காற்பொடியர்சீர்
      உற்றகுலசேகரர் மழிசையார்வில்லிபுத்தூர் நம்பாழ்வார்முதற்
றிருமேவுமாழ்வார்கள் பதின்மரும் வடித்துத்தெருட்டியரையிட்டமதுரச்
செந்தமிழ்த்தேனுண்டசிறிய திருவடிகளிருசெஞ்செவிக்கெனக வியரோ. (10)

காப்புப்பருவம் முற்றிற்று.
---------

செங்கீரைப்பருவம்.

மைவார்நறுங்கூந்தலஞ்சனையமைத்த திருமஞ்சனக்களபமாடி
வார்நறுஞ்சுண்ணந்திமிர்ந்து திருநெற்றிமிசைமணிநிலக்காப்புமிட்டுக்
கைவார்நறுங்குஞ்சி சூட்டியணி நூபுரக்காலணிகலன்கள் பூட்டிக்
        கைவிரல் சுவைத்தன்னைமெய்விரற்சிந்தூ ரகாந்தி கொளிரேகை தீட்டிப்
பெய்வார் நறுந்தேற்லொழுகவொழுகக்கால் பெயர்த்து முலையுண்டு விம்மிப்
பெருவிழிக்கடைசிவந்தங்காந்து குறுநகை பெருக்கி மணிமுத்தமாடிச்
செவ்வாய் திறந்துயலர் திராட்டவளர்குழவி செங்கீரையாடியருளே
      தீர திரிநேத்ரமுள வீரவ நுமந்தனே செங்கீரையாடியருளே. (1)

கார்வாய்கருங்கடலுடுத்தமாநிலமகள்கருந் துகில்கிழித்து நீக்கிக்
      கலைய கண்மணாளன்றிருக்கோயிலிமெணிக்கதவந்திறக்கும் வெய்யோன்
சூர்வாய்சுடர்ப்பிழர் பொடுவெளிவரக்கண்டுசு பெசிக்கிரையிது வெனாத்
தொழுதகையவன்னை புகன் மொழி வழியெழுந்ரா திண்டோளிணை புடைத்துவாவித்
தார்வாய்த் தபரியேழுமுலையவருணன்றழுதழுக்கவெறுவெளியிலொற்றைச்
      சகடநெரிதரவெதிர்குதித்தாயிரங்கார் தலைவனைக்கனிகொலென்னாக்
தேர்வாய்க்குளே விழுங்கிடவாய் திறந்தவன் செங்கீரையாடியருளே
      தீரதிரிநேத்ரமுளவீரவ காந்தனே செங்கரையாடியருளே. (2)

மாயா தபுவன கோடியு மண்டகோடியும் வழங்குபல்லுயிருக்கெலாம்
      மன்னுயிரெனப்பெற்றநின்னுயிர்த்தாதைதிரு மணியிடையிலேறியொருநாள்
காயாதபிலமிசை புகுந்தமையறிந்துமுக்கண்ணனொகெண்ணன்முதலோர்
      கருமங்களுஞ்சிதைந்தருமந்தபிரானார் கைவினையுமோய்ந்துவிடலால்
நீயா திமுதலென்னவலகமுன்போலோங்கரின்னிடந்தேடியருளால்
        நின்மனக்குறை தீரநன்முனிக்கணமெலா நீடூழி வாழியெனலாற்
றேயா தவலியொடுசிரஞ்சீவியானவன் செங்கரையாடியருளே
        தீரதிரிநேத்ரமுளவீரவ நுமந்தனே செங்கீரையாடியருளே. (3)

குருமுகப்படையினாலரிமுகப்படையினாற்குளிர் பிறைமுகப்படையினாற்
      கொழுந்தழற்படையினாலிந்திரப்படையினாற்கோவேறிவீசுமும்மை
தருமுகப்படையினாலெரிகதிர்ப்படையினாற்சக்ராயு கன்படையினாற்
        றருமன்விடுபடையினால் வருணன்விப்படையினாற் சரமதன்படையா தியா
யொருமுகப்படையாலுமணுகுதற்கரிதானவொளிபெற்ற திருமேனிமேல்
        ஒரு கோடிமாமுனிவரருகோடிவரர் வேண்ட வொருநான்முகத்தெம்பிரான்
திருமுகப்படையொன்றிலருண்முகமலர்ந்தவன் செங்கலரயாடியருளே
        நீரதிரிநேத்ரமுள வீரவ நாந்தனே செங்கீரையாடியருளே. (4)

காராடுசுரிகுழலரம்பையர்களாடவெங்கதிராடாதிய மாடக்
        கயிலேசனாடவி தியகிலேசனாட நீள் கருடகிம்புருடராடச்
சூராடு நேமியஞ்சுடராடு செங்கையச்சுதனாடவடிநிலமிசைத்
        தோயா தவிண்ணோர்களோயா துபாடிந்துதைந்தாடவானோர் பிரான்
நீராடுபிலமீதுவாதராசன் சமயநேரறிந்தெளியனைப்போல்
        நின்றாடவெல்லவருமன்றாடமறைநான்கு நீடூழி கூத்தாடவே
சீராடுதருமங்கணடமாடவளர் குழவிசெங்கீரையாடியருளே
        தீர திரிநேத்ரமுளவீரவ நுமந்தனே செங்கீலாயாடியருளே. (5)

வேறு.
பழகொளிபொங்கிய மணிமகரக்குழைபக்க மசைந்தாடப்
        பருவரையரை நூலரை மணியாடப்பத நூபுரமாடக்
கொழுமணியாரமிழைத்தபதக்கக்கோவை புரண்டாடக்
        கொவ்வைக்கனிநிகர்தெய்வக்கனிவாய்க்குறு நகைநிலவாடத்
தொழுதகுகந்தரமணிவடமாடத்தொந்தி தளர்ந்தாடத்
      தொல்லையரக்கர் தம்வல்லியர்வயிறெரி தூண்டமுழக்கியவா
அழகிய நிலையுமிழ்மழகதிர்மாமுகவாடுக்செங்கீரை
        அருள் பொழி திரிநேத்திரமுளமாருதியாடுக செங்கீரை. (6)

பாசிலைபொதுளுமுருக்கிலையன்னசுருக்கணிகோல்கொடுமுப்
      படிறுமுருக்குவதிட்டமகாமுனிபடிவர்கள் சாலைதொறுங்
கோசிகபடலங்குலைகுலையப்புனை நூல துகாலணையக்
        கொண்டு புலிச்சிறுகன்றையணைத்துங்கோளரிவன்பறழைத்
தேசிகசுரபியின்முலை நுகர்வித்துமிழைத்தகுறும்புகளாற்
        சீரறிவும் பொறையும் பெறுகென்றவர் செப்பியவாய்மொழி கொண்
டாசறு கல்வி மகோததிகண்டவவாடுகசெங்கீரை
        அருள் பொழி திரிநேத்திரமுள மாருதியாடுக செங்கீரை. (7)

செம்முகமாகியகருடமுகங்குடதிசையினிலிசைபுரியத்
        தென்றிசையினினரசிங்கமுகம்பலசெருநரையுயிர்பருகக்
கொம்மைதருங்கவி முகமது கீழ்திசைகொண்டுவரம்பொழியக்
        கோலவடக்குளகோலமுகம்பலகோடியிருட்களையப்
பெம்முகவுச்சியைநச்சியகுதிரைப் பெருமுகமருவலர்தம்
        பேரை விலக்கமுகந்தொறுமூவிழிபெற்று நலந்தரலால்
ஐம்முகமொருபதினைந்துகணுள்ளவவாடுகசெங்கினா
        அருள் பொழி திரிநேத்திரமுளமாருதியாடுகசெங்கீரை . (8)

முளை மதிபுனை நீர்ச்சடைமுடிவானவன் முன் பேயன்பேறி
        முதுவரைமுடிமேற்சிதறியதோர்பொறிகண்டேகொண்டோடித்
தளையவிழ் தாமரை மணமலர் மீதிலனம்போலுந்தேவி
        தருவயிறதுவாய்த் திடவருள்வாயுநெடும்பேருண்டாகக்
களிபடுகருமெய்க்கவசமுமா மகுடந்தானுஞ்சோதிக்
        கனகுழைகளுமாத்திருவுருவானகரும்பேவண்தேத்
தெளிபடுபசு நீர்த்துள வணிமார்பக்செங்கோசெங்கீரை
        திருவளர் திரிநேத்திரமுள மாருதிசெங்கோசெங்கீரை. (9)

இழைப்படுசிறு நூற்கொடிவழியேறியிறங்காநின்றாடி
      யிவர் தருசிறு பூச்சிகளெனவால்வழிவந்தேறுஞ்சேனை
அழகிய பெருநீர்ப்பிலமுள தூரமளந்தேகொண்டேகி
        அதிலொரு பெருமாட்டியையெதிர்பேசிமுனஞ்சாபந்தீரக்
குழைபடுகனிகாய்புனல்வயிறார நுகர்ந்தேபின்பூரைக்
        குவலயமதன் மேற்படவெளி வீசி நடந்தாகங்காரிற்
செழுநிறமுடையாற்கெளிவருதூதுவசெங்கோசெங்கீரை
        திருவளர் திரிநேத்திரமுளமாருதிசெங்கோசெங்கீரை. (10)

செங்கீரைப்பருவம் முற்றிற்று.
------

தாலப்பருவம்.


கடிக்கும் பொறிவாயழற்சுடிகைக்கடவுளநந்தன்முடிய திரக்
        காழார்மணிச்சூட்டரவெட்டுங்களிறோரெட்டு முடைந்ததிரத்
துடிக்குங்கொடுந்தீவினைப்பகைஞரிடத்தோள திரப்பெருந்திரைநீர்
        துயிலாவாழிவயிறதிரத்தொல்லைக்கயிலைச்சிலம்பையகழ்ந்
திடிக்குஞ்சுடர்வேலரக்கன்மனமின்ன மதிரப்புருகூதன்
        இமையா நாட்டம்வலத்ததிரவெழிலியேற்றினிடிக்குரல்போல்
அடிக்கும் பெருமா மணியணிவாலழகாதாலோதாலேலோ
        அருள்சேர் திரிநேத்திரவீரவ நுமாதாலோதாலேலோ. (1)

பெருநீர்ப்படைகொண்டசுரரைவேர் பிடுங்கியெறிசெஞ்சுடர்ப்பருதிப்
        பெருமானிடத்தோர் முது நூலின் பெற்றியறியவெறுவெளிமேல்
ஒருநீர்ச்சகடுமேழ்பரியுமூனபாதத்தருணனும் பெற்
        றுடைய தடந்தேருனதுபொறைபொறுக்காமையைக்கண்டுயர்முகட்டுத்
தருநீரருவி தூங்கும்வடசயிலச்சிகரத்தொருதாளும்
        தடந்தேர்மிசைமற்றொருதாளுந்தாவியூன்றியவனுரைத்த
அருநூற்கல்வி முழுதுணர்ந்தவறிவாதாலோதாலேலோ அருள்சேர்
        திரிநேத்திரவீரவநுமாதாலோதாலேலோ (2)

விரைசேர்கனகாசலத்திமையோர்மிடைந்திந்திரனார் வாலியென்ன
      வெய்யோனவனுக்கிளவலென்ன வேதன்கரடி நாதெனென்ன
இரைசேரனலோனீலனென்னப்பணிசங்காழி துணைவரென்ன
        எம்மானரக்கர்செருக்கழிக்கவிசைந்தநாளிற்படைத்துணையா
யுரை சேர்பிரமன் முதலாகவெறும்பீறாகவுள்ள பல
        உயிருக்குயிராகியவாயுவொருத்தனிடத்திலுதித்தகுணத்
தரசேயமரர் பயந்தவிர்த்தவமுதேதாலோதாலேலோ
        அருள்சேர் திரிநேத்திரவீரவ நுமாதாலோ தாலேலோ. (3)

கழியாத்துணர்ப்பூந்தருவிலிளங்கால்வந்தசைப்பச்சோலைநறுங்
        கடிமா மணப்பந்தரினிருக்குங்காட்சியினிற்கல்லோச்சினார்க்குப்
பழிகால் வெகுளிபோலநறும்பழம் விட்டெறிந்து நெடும்பசியைப்
        பாழித்தடக்கைத்தன்கிளையோர்பாறத்துடைக்குந்தன்மையைப்போற்
கொழிதேன்பொழி தாரிந்திரன்கைக்குலிசப்படையால்வடுவாங்கிக்
        கொடுவாளரக்கர் குலந்துமித்துக்கொலையிந்திரசித்தழுத்தியதோள்
அழியாவடுவைத்துடைத்தகுணத்தபயா தாலோ தாலேலோ
        அருள்சேர் திரிநேத்திரவீரவநுமாதாலோ தாலேலோ. (4)

வலஞ்சேர் சூலமொருபெருங்கைவாளோர் செழுங்கைமரமொருகை
        மலையேந்துவதோர்மணிக்கை கட்டுவாங்கமொருகைதடியொருகை
பலஞ்சேர்முனையங்குசமொருகைபாசமொருகைதட்டொருகை
        பருத்த திணிதண்டமுமொருகைபடைத்தீரைந்து தடக்கைகளும்
பிலஞ்சேர்கனகத்துணைவிழியும்பீதாம்பரமுமேதாங்கிப்
        பிரேதாசனமேல் வீற்றிருந்துபிறங்குங்கருடதுரங்கமுள்ளோன்
அலங்காரமும் பெற்றுடைய குணத்தழகாதாலோதாலேலோ
      அருள்சேர் திரிநேத்திரவீரவ நுமாதாலோ தாலேலோ. (5)

வேறு.
இலகுமகாவுலகம்பதினாலிவைபதினாலையுமொன்றா
      யேற்றதோரண்டமவ்வண்டமொராயிரவெட்டுமுடற்பொறைமேற்
பலபலவகைதொறுமொய்ப்பவடுத்தபுறக்கடலின்புடையோர்
        பாசிலைமீதினிலே துயில்கின்றபசும் புயலென்டவனைக்
குலமணியொடு செந்திருவொடு புயமிசைகொண்டுகிளம்பியவன்
        குவலயமுருவிய திருவடியிணையைக் கோகனகம்பொருகைத்
தலமதிலேந்திவரும் பெரியோனேதாலோ தாலேலோ.
        தரைபுகழ் திரிநேத்திரமுள மாருதிதாலோ தாலேலோ. (6)

கருவினையொருவியபரமபதந்திருமாளிகையாவதிலே
        கருதருமறைநடுகாலா மற்றுளகலைபலவுங்கயி றாப்
பொருவருமழைநிறவண்ணனடித் துணைமேல்மணிவட்டமதாப்
        புண்ணிய பன்னிரு நாமமுமிருசெவிபோ தவயிற்றமுதா
அருள் செயெழுத்திருநாலுமிழற்றுபசுங்குதலைச்சொலவா
        அறிவினிலறியாவகையறியுஞ்சுகமான தலத் திடையே
தருசிறுதொட்டிலில்விழிவளா மகவேதாலோ தாலேலோ
        தரை புகழ்திரிநேத் திரமுள மாருதிதாலோ தாலேலோ. (7)

துங்கநெடுங்கிரியின் கண்முரண்படுதும்புருநாரதனார்
        சொல்லியவீணையின்வல்லபமோ தினாதொல்லையடைந்திடுநாள்
அங்கிசை பொங்கநயங்கொடுபாடிநெகிழ்ந்தகருங்கலிலே
        அமையவிருததியசமயமுமக்கிசையாலிருவீணையுநீர்
இங்கெடுமென்னமயங்கினர் பாடியெதெ திமொறிலாய்
        எந்தைபகர்ந்ததுசிந்தைய கந்தையிரங்கெனவாயிடையோர்
தங்கிசைபாடிநல்வீணையளித்தவதாலோதாலேலோ
        தரை புகழ்திரிநேத திரமுள மாருதிதாலோ தாலேலோ. (8)

மருமணமொழியாத்துளவணிதோளுடையானேவானோர்கள்
        மருவியதுயர் நீக்கியகருணாகரமாலேமேலோனே
பெருகியமனு நூற்கொருமணியாகியவாழ்வே தாழாத
        பிரளயவுத்திகுமுறிய பேரொலிபோலேபேரோதிக்
குருவெனநமனாட்டவர் தமைமேல்விடுகோவேமூவாத
        குணமுள திரிமூர்த்திகளருண்மேவிய கோமானே பூவார்
தருமடிதொழுவோர்க்கெளிவருகாரணதாலோதாலேலோ
        தரை புகழ்திரிநேத்திரமுள மாருதிதாலோ தாலேலோ (9)

கவடுடைமணியால் பொதுளிய பாசிலைதானாய் மாநாகக்
        கடுவுடையழல்வாய்ச்சுடிகையுமாய்வலியாலே சகுனேசன்
உவமையில் பிடராய்ச்சதுமுகனாவினிலோயாதேவாழ்சீர்
        உயர்மறைமுடிவாய்க்கௌசலைநாயகியார் நூலே போலத்
துவண்மணியிடையாய்ப்பரதர்கொள்பாதுகை நேராய் நீர் பாயுந்
        துணையடிபடலாற்றிருவுடையானடி சோராதாராயுந்
தவரிதயமுமாய்ப் பொலிபுயபூதரதாலோதாலேலோ
        தரை புகழ்திரிநேத்திரமுளமாருதிதாலோதாலேலோ (10)

தாலப்பருவம் முற்றிற்று.
----------

சப்பாணிப்பருவம்.


மின்புறத்திடுமணி நுசுப்புடைக்குவளை விழிமிதிலைப் பிராட்டி சிறைசேர்
        மிடி தீரமுனிவர்வயிறிடி தீரவெழுபரிவிமானமது தடை தீர நீள்
தென்புலத்தொருநமனரக்கருயிருண்டு பசி தீரவிடராழி தீரத்
        தெருமந்தவாலியாலருமந்த துணைவனார் திரிகின்ற கவலைதீரப்
பின்புறப்பொலிகின்ற விளையபெருமாளொடும் பெரிய பெருமாளும் வருநாட்
        பெரியதாபதரிவரையரசநீ தொழுகென்று பேசிக்கை கொட்டிய தெனத்
தன்புலன்றிரியரசைநிலைநிறுத்திய மதலைசப்பாணி கொட்டியருளே
      தக்ககதிதருகின்ற முக்கணுடைய நுமந்தசப்பாணி கொட்டியருளே. (1)

இருவரையுமொவ்வாத புயவரைகளுடன் மேவுமிருவரையுமெய்தநோக்கி
        இதுவரையுமறிகிலோமுதுவரையில் வாலிவிடவேறிவருகின்றவரெனா
அருவரையிலே நுழைந்தொருவரையுமறியாதடங்கு சுக்ரீவன் முதலாம
        அவரவரையஞ்சலென்றிவரையெவரெனயானறிந்து வருகின்றவரையும்
பருவரையிலிருமெனத்திருவரையிலுரியொடும் பருத்தவில் வரையினோடும்
        பகைவரையடர்க்கவருதலைவரையடுத்துப்பணிந்தவரையறிய வேண்டித்
தருவரையில் வேதியர்கள் சிறுவரை நிகர்த்தவன் சப்பாணி கொட்டியருளே
        தக்ககதிதருகின்ற முக்கணுடைய நுமந்தசப்பாணிகொட்டியருளே. (2)

கானின்றதலைவர் பகை மேனின்றசிலையார் முக்கடவுளரிலிவரிருவர் நாங்
        காணவருவாரல்லர்வேணதொரு பொருளினைக்கையினிலிழக்கவிட்டார்
போனின்றதென்ன குறைநானின்று கேட்பதிப் பொழுதென்று நணுகி நீர்தாம்
      புகுது மூர்யாது முனிருந்தவூர்யாது மது புகழ்நாமம்யாதெனமகிழ்ந்
தேநின்றவிளையவனுதித்தநாண்முதலுனையெதிர்த்தநாள்ளவுமிவையென்
        றெல்லாமுரைக்கமிக நல்லாரெனக்கண்டிராமனையுமிளையவனையுந்
தானின்று வழிபடுவிதந்தனைக்கேட்டவன் சப்பாணி கொட்டியருளே
        தக்ககதிதருகின்ற முக்கணுடைய நு மந்தசப்பாணி கொட்டியருளே. (3)

கரணந் துலங்கிய மறைச்சிறுவனானன்று கதிரவன் சிறுவனுக்கோர்
        காவல்புரிகவியிலொருகவி நானுமைக்கண்டுகருவிகரணாதியெல்லாம்
முரணின்றியுழல்வோனை வெருவாமலிருவெனமுழஞ்சில் வைத்தனனெனக்கே
        முன்னுருவமிதுவென்று விண்ணுலகுமண்ணுலகுமுட்டிய செயற்கை நோக்கி
கிரணம் படைத்த குண்டலவதன முங்கண்டு கிடையாதவிவனமதுபாற் [க்
        கிட்டவந்தது நல்லவிட்டமெனவுள மகிழ்கிளைத்தமன்னவரை முன் போய்ச்
சரணங்குனிந்து கும்பிடவந்தகைகளாற் சப்பாணிகொட்டியருளே
        தக்ககதிதருகின்ற முக்கணுடைய நுமந்தசப்பாணிகொட்டியருளே. (4)

வெருவாதபெருநன்மைவருநாளிலொருவர்பால்வினவிவாராதுபிறி தாய்
      மீள்கின்றநாளினுஞ்சொல்லி மீளாதி துவிதிக்கிழமையிளைய கோவே
வருநாளிலொரு பருதிமகனையெதிர் நாளுமறம் வளர் நாளுநிருதர்குடி போய்
        மாளுநாளுஞ்சனகிமீளுநாளும்பரதன் மகிழ்நாளுமிவன் வந்தநாள்
ஒருநாளிலெய்தினமெனக்களிதுளும்பநின்றுள்ள மகிழ்பூப்பவருள் பூத்
        தொழுகிடுமிராமனருளும் பொருளுநாடியென துறு கதிர்மகற்கரசுதான்
தருநாளிதோவென்ற பெருநாளுடைக்குரிசில் சப்பாணி கொட்டியருளே
        தக்ககதிதருகின்ற முக்கணுடைய நுமந்தசப்பாணி கொட்டியருளே. (5)

வேறு.
தேடியவொண்பொருணாடியடைந்தது போலவணைந்தனையாற்
        செங்கதிர்மைந்தனெவன் பெயரேதவை தெரிவுறவோதெனலும்
பாடியில் வாலிதனாலடியுண்டுதனோடியல்மங்கையொடும்
      பதியும் வளம் பெறுநிதியுமிழந்துப்பதைத் தன்னவன் முகமே
வாடிய செய்திதெரித்தனெனச்சொலி மற்றவரருள் கொடுபோய்
        வாலியுயிர்க்கொருகாலனடுத்தனன் மன்னவவென்னமிகக்
கூடி மகிழ்ந்துரையாடிய கோளரி கொட்டுகசப்பாணி
        குருகெழுதிரிநேத்திரமுள மாருதி கொட்டுகசப்பாணி. (6)

பருதிகுலத்திறை தசரதனுக்குள்பாலகர்நால்வரிலிப்
        பண்ணவரிருவரிராமரிலக்குவர்படாகள் செய்தாடகையைப்
பொரு திகழ்சிலையுயிர்செய்தொருசிலையைப் பொடி செய்துமனைவியுடன்
      பொன்னகர் நணுகியொரன்னை சொல்வனமிசைபோந்தொருமான்
பொருளாக் கருதிமடந்தையையொருநிருதன் கொளநின்றக வந்தனையுங்
        கன்றியொர் சபரி சொல் குன்றிடைவந்தனாகாணிவருன்பகையைக்
குருதியிலாட்டுவர்வருகெனுமந்திரி கொட்டுகசப்பாணி
        குருகெழுதிரிநேத்திரமுளமாருதி கொட்டுகசப்பாணி. (7)

ஆதவன்மைந்த விதோர்மொழியுங்கடவாது நடந்துகொணீ
        யண்ணலைமாமணிவண்ணனை நண்ணுதிய பயமெனக்கொடுபோய்ப்
பாதம் வணங்கி நீதந்தருளின்றிவன்மாது நெடும்புவியும்
        பாரினில் வாலிதனாருயிர்மாய்வதுபாரமராமரமேழ்
ஆதலமேலுருவும்படிக்கண்டவனாலெனவோதுமுனே
        யோருகிலையாகவன்வரிசிலையால் விடுபூமுகவாளிபடக்
கோதறுமாமரவீழ்தியறிந்தவகொட்டு கசப்பாணி
        குருகெழுதிரிநேத்திரமுளமாருதி கொட்டுகசப்பாணி. (8)

இதுபுனைபாடகமிதுசிறு சூடகமிதுவிரன் மோதிரமால்
        இவைபலதாழ்வடமிவைபலபூடணமெனவகை சேரவெடுத்
ததுமயமாய்மனமுருகுமிராமனையடிகளிதேது கொலாம்
        அரைநொடியாமுனமிதிலைநன்னாடியையணைகுதிநீயுமரோ
உதவுவல்யானெனவருகதிர்மாமகனுயர்முடிசூடிய நாள்
        உனதடியேவல் செய்திடமழை போனபினுதவுவனேகுகெனக்
கொதிசினவாலிதன் மதமுடிவித்தவகொட்டுகப்பாணி
        குருகெழுதிரிநேத்திரமுள மாருதி கொட்டுகசப்பாணி. (9)

காளவிடம் பொருமேக்குலஞ்செய்விகாரம் விளைந்தமையாற்
        கண்ணனருட்கொடுநண்ணியபின் கலிகாலம்விளைந்ததெனக்
கேளலறக்கிரிசாய மலைக்குல மீடழியப்பொருகிட்
        கிந்தைதளர்ந்திடவங்கதனெஞ்சுகிழிந்திடவானரர் போய்
ஊளையிடக்கதிர்மாமகனாவியுலைந்துலகாதியெலா
        முளறிட வெண்கரிபிளிறிட முன்மொழியோதிய நாளிலிளங்
கோளரி வந்ததை நாணியகேசரிகொட்டு கசப்பாணி
        குருகெழுதிரிநேத்திரமுள மாருதிகொட்டுகசப்பாணி. (10)

சப்பாணிப்பருவம் முற்றிற்று.
----------

முத்தப்பருவம்.


பெருமைத்துணை வேள் சினங்காட்டிப் பேசுமுனந்தாரையைக்காட்டிப்
        பிறகே நின்று முகங்காட்டிப் பெரியோயருளைப்பிழைத்தில்மென்
றிருமைப் பொருளுஞ்சொலிக்காட்டிச்சாம்பன்கவையன்கவையாக்கன்
        இடபன் சரபளைன் சேனாதிபன் சேடனன் கேசரிகுமுதன்
அருமைத் துரையங்கதன்மயிந்தன் துமிந்தன்வசந்தன் முதலெழுபான்
        அடல்வானரவாரு திநடுவேயரசன் செலச்சென்றண்ணலிரு
முருகிற்சி வந்தபதந்தொழுதமுதல்வாமுத்தந்தருகவே
        முக்கணழகாவ நுமந்த மூர்த்திமுததந்தருகவே. (1)

படிமீதினிற்றென்றிசையறிந்து பாய்ந்து மீளக்கடவனென்று
        பகவன் கொடுத்தவடையாளம் பரிந்து வாங்கிச் சுக்ரீவன்
நெடிதாம்வழி சொல்லியவாறே நேர்ந்து பல தேயமுங்கடந்து
        நிறைந்தசேனைநீர்வேட்டநிலைமையறிந்துநெடும்பிலத்தின்
அடிபோய்ச்சுயம்பிரபைதனைக்கண்டயர்வு நீங்கி மேலேறி
        யடற்சம்பாதி நெறியுரைக்கவறிந்து சிறந்தமகேந்திரத்தின்
முடிமேனின்றுங்கடல் பார்த்த முதல்வாமுத்தந்தருகவே
        முக்கணழகாவநுமந்தமூர்த்திமுத்தந்தருகவே. (2)

படியைக்கிழித்தமுதுவரை மேற்சாம்பனடிநாட்பிறப்புணர்த்தய
        பாவித்தெழுந்து தனி விசுவரூபத்துடனே பாய்ந்து கடல்
வடியக்கிழித்தமைந்தாகவரையைக்கிழித்துவளர் சுரசை
      வாயைக்கிழித்து வெளிகிழியவருமங்காரதாரையெனுங்
கொடியைக்கிழித்துத்தென்னிலங்கைக்கு வட்டைக்கிழித்துவடவாயிற்
        கோட்டைக்காவலிலங்கணிதன் குடலுமுடலுங்கிழியவள்
முடியைக்கிழித்தபெருந்தடக்கைமுதல்வாமுத்தந்தருகவே
        முக்கணழகாவ நுமந்தமூர்த்திமுத தந்தருகவே. (3)

தொடுக்குமெழில் சூழிலங்கைதனிற்சனகியிருக்கைதனையறியச்
        சுடர்ச்சூளிகைமாளிகைமேடைசோலைசாலைவனஞ்சதுக்கம்
அடுக்கல் மடமண்டபமொழுங்கையரணம்பலகோபுரந்தெருக்கள்
        அகழி மதில் மாடங்கூடமரசனிருக்கையமைச்சிருக்கை
படுக்கையிங்காவணந்தெற்றிபவனங்கவலையுத்யானம்
        பலவு நுழையக்குறுவடிவம்படைத்துப் பிரமனறியாத
முடுக்குந் திரிந்துவருமலர்த்தாண்முதல்வாமுததந்தருகவே
        முக்கணழகாவரு மந்தமூர்த்திமுத்தந்தருகவே. (4)

நகத்திண்புயத்திந்திரசித்தினகுங்கோயிலைக்கண்டகங்குலைந்து
      நாடற்குரிய வீடணன்வாழ்நன்மாளிகைகண்டகமகிழ்ந்து
பகைக்குங்கொடிமூக்கெரிவிழிக்கும்பகன்வாழ்மனையும் பார்த்தகன்று
        பலதன்கிளையுங்கொடு நிரயப்பயிராய்வளர்க்கும்படுபாவி
யகைக்குஞ்சுடர்வேலிராவணனாலயம் போய் மயன்பாவையை நோக்கி
        அன்னை தனைப்போலுன்னினன்யானந்தோவந்தோவென்று
செங்கை முகத்திலறைந்துவெளிபாய்ந்தமுதல்வாமுத்தந்தருகவே
      முக்கணழகாவதுமந்தமூர் த திமுத்தந்தருகவே. (5)

வேறு.
அரமிட்டசுடர்வேலிரக்கமிலாக்கனென தன்னையையெடுத்துவரிநீர்
      அலையிட்டனன் கொலொரு மலையிட்டனன்கொல்வா னகமிட்டனன்கொல் கொடியார்
புரமிட்டனன் கொலெவ்விடமிட்டனன் கொலென்றறிகிலே னென்று பொருமி
      புலமிட்டவுணர்வு சஞ்சலமிட்ட பொழுதிலொரு பொங்கரெதிரிட்டுநிலவக்ப்
கரமிட்ட புலிமுன்மான்கன்றிட்டதாமெனக்கவலையிட்டுருகுஞானக்
      கண்ணனையரக்கர் குலகாலனை யிராமனிருகண்மணியைவாழ்த்தி வாழ்த்தி
விரலிட்டவண்ணன் மோதிரமிட்ட தூதாளிமென்பவள முத்தமருளே
      மிக்ககதிதருகின்ற முக்கணுடைய நுமந்தமென்பவளமுததமருளே. (6)

படிப்பட்டவாறெலாமுறைபட்டவாறேபகர்ந்தொருமதிக்குமுன்னே
        பறைபட்ட புல்லரிசிறைவிட்டிடக்கடவை பண்ணவவெனக்கொடுத்த
முடிபட்டமணிகொண்டு நெறிபட்டமரமெலாமுறிபட்டிடக்காவலோர்
        முன்பட்டிடத்தலைவர்பின்பட்டிடப்பொருமுரட்சம்புமாலிநமன்வா
யடிபட்டிடச்சேனை பொடிப்பட்டிடத்தரையிலட்சயகுமாரனுடல் போய்
        அரைபட்டிடப்பிறகு நுதல் பட்ட பொட்டெனவணிந்ததையறிந்துசெவிபோய்
வெடிப்பட்டராவணன் கொடிப்பட்டமரமேறிமென்பவள முத்தமருளே
      மீக்ககதிதருகின்ற முக்கணுடைய நுமந்தமென்பவள முத்தமருளே. (7)

காலாலனே கரிருகையாலனே கர்பாய்கதியாலனேகர்வாகைக்
        கதையாலனேகர் காலுதையாலனேகர்வெங்கரிபரிகளைத் தூறுமோர்
வாலாலனே கரிருதோளாலனேகர் கடிவாயாலனேகரிடு போர்
        மல்லாலனேகரெறிகல்லாலனே கரிவ்வகையால் விரும்படையெலாம்
கோலாகலம் பெறக்கொன்று களமெங்குநரி கூத்தாடவோரிபாடக்
        குருதியாறோடவிந்திரவிரோதியுமுளங்குலையராவணனிடம் போய்
மேலாசனம் போலவாலாசனங்கோலிமேலினோய்முத்தமருளே
        மிக்ககதிதருகின்ற முக்கணுடைய நுமந்தமென்பவள முத்தமருளே. (8)

நீரெலா மனலுள்ள தேரெலா மனல்போனநெறியெலா மனல் மாதர்வாழ்
      நிலையெலாமனல் பெரியமலையெலாமனல்யானைநிரையெலாமனல்
காவலோர் தாரெலாமனல்சேனைமாரெலாமனல் கடைதலையெலாமனலரசர் சூழ்
        தடமெலாமனல் கோயிலிடமெலாமனால் படைத்தலைவரென்றுலைவிலாத
பேரெலாமனல் நடப்பாரெலா மனலெம்பிராட்டியுறைதரு நீங்கலாப்
        பெருகியவசோகவனதருவெலாமனலவைபிளந்து கீழோடுகின்ற
வேரெலாமூரெலாமனலூட்டுமடல்வீரமென்பவள முத்தமருளே
        மிக்ககதிதருகின்ற முக்கணுடைய நுமந்தமென்பவள முத்தமருளே. (9)

காலிட்ட கழனிருதனூருக்குவெந்தழல் கதிக்கக்கொடுத்தவனையா
      காயத்திலாறுநாகலையக்கொடுத்தன்னை கவலையின்மனங்கொடுத்து
வாலிட்டவங்கிதனைநீரிற்கொடுத்துமைநாகக்தைவிடை கொடுத்து
      வழிபார்த்த துணைவருக்கருளைக்கொடுரதந்தம் துவனத்திரை கொடுத்துப்
பாலிக்கும் வள்ளலுக்குயிரைக்கொடுத்தடிபதிக்கவிருதோள் கொடுத்துப்
      பன்னிருதொகைக்கடிகையளவினங்கதனோபொயந்து தென்றிசையில்லைநீர்
வேலிக்கண் வெள்ளமெழுபதையுங்கொடுத்த புயல் மென்பவள முத்தமருளே
      மிக்ககதிதருகின்ற முக்கணுடைய நுமந்தமென்பவள முத்தமருளே. (10)

முத்தப்பருவம் முற்றிற்று.
-----------

வருகைப் பருவம்.

ஓராயிரங்கரத்தொரு துணிடந்தவுணனுதிரங்குடித்தமாலே
        யுன்னுயிரையுங்குடி குடிக்கவந்தனனெங்களுலகப்பிராட்டியை விடுத்
தீராயிரங்கோடி கால நீ வாழ்கெனவிரங்காவரக்கனை மறுத்
        தெந்தைநின் சரணடைய வந்தனனெனக்குயிரி வன்கொடுத்தனன் முன்னைநா
ஆராய வேறில்லை வீடணனிவன் பேதையன்னை தனதுயிர்புரப்பாள்
        அபயதானம்புரிதியெனமனோரதமுடித்தலையாழிமுதுகின் மீதே
வேரோடுமலைமலைகளாகக்கொடுத்தணைவிதித்த சேவகன்வருகவே
        மேருகிரிநிகர்காத்ரதீரமுள திரிநேத்ரவீரவநுமான் வருகவே. (1)

சோலைவாய்மணிவரையை நிரைநிரைபதித்தணை துலக்கிய நளன் செருக்கைச்
      சூழிட்டவரைகளோரேழிட்டடக்கித்தொடங்குமுதனாட்போரினிற்
காலைவாயவரவர் தனித்தனிகலப்பக்கலந்திராவணன் மயங்கக்
        கார்வரையெடுத்திரதசாரதியை மோதியொருகைக்குத்தினெக்குற்றிடப்
பாலைவாய்மணிமருமமுதிரவுதிரப்பெரும்பரவைபரவைக்குளோடப்
        பதைபட்டதுன்முகனுமுதைப்பட்டுமாளப்பரந்துளவரக்கர்தொகையோர்
மேலைவாயிலில் வெள்ளமிருநூற்றையுங்கொன்றுவிட்டசேவகன் வருகவே
        மேருகிரிநிகர்காத்ர தீரமுள திரிநேத்ரவீரவ நுயான்வருகவே. (2)

காலைப்புடைக்கவருபரியைப்புடைத்துமதகரியைப்புடைத்துவலிசால்
        கையைப்புடைத்தவுணர்மெய்யைப்புடைத்துக்கடற்படைக்கதிபரையெலாம்
சாலப்புடைத்துமுனைவாளைப்புடைத்துவருதாளைப்புடைத்துமருவார்
        தலைகளுஞ்சிலைகளுந்துவசமுங்கவசமுந் தவிடுபொடியாய்ப்புடைத்துக்
கோலைப்புடைத்தவுணன் வேலைப்பயப்பட்ட கோவைப்பிடித்தெடுத்துக்
        கொண்டோடியண்டர திபன் கொலுவிருத்திக்குலாவவைத்துயருநெடுவான்
மேலைப்புடைக்குமிருதோளைப்புடைத்தரணவீரகேசரிவருகவே
      மேருகிரிநிகர்காதர தீரமுள திரிநேத்ரவீரவநுமான்வருகவே. (3)

இசையிட்டவயிறத்தடந்தோளிராகவனை யேறிட்டுமாறிட்ட போர்
        எதிரிட்டராவணனைய திரிட்டிடத்தாக்கியெரிவிழிக்கும்பகருணன்
திசையெட்டும் விடுகின்றதேருக்குநிகரொத்ததேரொன்று நம்பியேறத்
        திண்டோளிடசாரிவலசாரிசுற்றி வெகுசேனையைத் தூளியாக்கிப்
பசையற்றகவிவீரர் நசையற்றப்படையினிற்பாரித்தசுக்ரீவன்மேற்
        பாவிவிடு சூலத்தைவாவியொருகையாற்பறித்து தறி வீசியப்பால்
விசையிட்டமலையொன்று தோளிலிட்ட திகாயன் மேற்சென்ற புயல் வருகவே
        மேருகிரிநிகர் காத்ரதீரமுள திரிநேத் ரவீரவ நுமான்வருகவே. (4)

கடியுண்டயானை சிலவொடியுண்டயானைசிலகளமுண்டயானையுயிர்போய்க்
      கதறுண்டயானை சிலவு தறுண்டயானைசிலகவிழ்கின்றயானைசிலவாத்
      துடியுண்டயானை
பலமடியுண்டயானை பலசுருள்கின்றயானை பலமேற்
      றுள்ளுவதுமதயானையள்ளுவதுமதயானை சுற்றுவதுமதயானையாய்ப்
படியுண்டவாலினுங்காலினுந்தோரினும்பல்லினும்படுகல்லினும்
      பற்றினும் பெரியகைக்குத்தினுமுருக்கியப்பாவிய திகாயன்விடுபோர்
வெடியுண்டவொருகோடியானையுஞ்சேனையும் விருந்துண்டகரன்வருகவே
        மேருகிரிநிகர்காத்ரதீரமுள திரிநேத்ரவீரவ நுமான்வருகவே. (5)

பாரோடுதேர்படத்தேரோடுகரிபடப்பரியோபெரியாள்படப்
        பாய்ந்து வருகின்ற தேவாந்தகன்சிலையைப்பறித்திரதசாரதியொடுந்
தேரோபெரியோடுமோ தியவனைக்கொன்று திரிசிரனையட்சயன்போற்
        றிருவடித்துணையாலரைத்தரைத்துக்கொன்று தீக்குநிகர் சுக்ரீவன்மேற்
போராடியங்கதக்குமரன் மேலோடி வருபொருசிலைநிகும்பனங்கைப்
      பொறியழற்சூலத்தைமுறிபடமுறித்தவன் புனை தேரிலேறியிருதோள்
வேரோடு சாயவிருகன்னத்திலுந்தாக்கிவென்ற சேவகன் வருகவே
        மேருகிரிநிகர்காத்ரதீரமுள திரிநேத்ரவீரவ நுமான் வருகவே. (6)

வேறு.
தடுக்கும் பிறைவாளெயிற்றவுணர்தலை மூளைகளே வெண்ணுரையாத்
        தடக்கைப் பலகைகமடமதாத்தரங்கஞ்சாதித்துரங்கம்தா
எடுக்கும்படைகண்மீன்கணமாவிரதம்பலவுமரக்கலமா
        வீர்க்குங்குருதிப்பெருங்கடலாலேழுகடலுமுடன் சிவக்கப்
படுக்கும் பகிரண்டமுஞ்சிவக்கப்பார்த்திந்திரசித்துளஞ்சிவக்கப்
        பருத்தவரக்கர் தொகுத்த பிணப்பரப்பிலேறிப்பதஞ்சி வந்து
வடுக்கண் சிவந்து காஞ்சி வந்துவாலுஞ்சிவந்தோன்வருகவே
        வளஞ்சேர் திரிநேத்திரவீரமலையே வருக வருகவே. (7)

உலவாக்கருங்கல்லெடுப்பவனீயொருவில்லெடுக்கவமைந்தவன்யான்
        உன்னோடமராடல்னெனக்காய்ந்தொறுத்திந்திரசித்தறைய வெகுண்
டலகார்வரிவில்லெடுப்பதற்கு மாற்றல் சிறியாய்வில்லெடுப்பான்
        அருமைப்பெருமான துநிற்கவளவில்கிளைஞரொடுநினது
குலமீடேறக்கல்லெடுக்கக்குறித்தானொருவீடணனெனப்போய்க்
        குதித்துப்பதினாயிரஞ்சாரிகொண்டிந்திரசித்தொரு தேர்முன்
மலர்த்தோளிளையானொடுஞ்சுழன்று வருந்தாளுடையான் வருகவே
        வளஞ்சேர் திரிநேத்திரவீரமலையேவருகவருகவே. (8)

எயிலைப் பொருத்தப்பிறைமௌலியிறை போற்பிறைவார்கணைவீசி
        கலிந்திரசித்தகமெலிய விளையான் பொரலுமிளையானாய்
வெயிலைப்பொருதகணை மழையால் வீசிப்பாசத்தாலிறுக்கி
        விலங்கலிலங்கைப்பதிபுகுந்து மீளுங்கொடியனாள் சாய
உயிரொப்புடைய புகைக்கண்ணனுயிர்போய்ச்சாயக்கரிபரிதேர்
        ஒன்றோடொன்று நிலஞ்சாயவொருகும்பகன் போரினிற் கிடந்த
வயிரத்தடியானமன் பசியின் வலியைச் சாய்த்தோன்வருகவே
        வளஞ்சேர் திரிநேத்திரவீரமலையே வருகவருகவே. (9)

பேயாட்டமராயிரங்கழுதைப் பெருந்தேரகம்பன் முகந்தேயப்
      பிடியாற்கடியாற் குறுந்தடியாற்பிசைந்துபெருஞ்சேனையைமிசைந்து
தீயான் விடு நான் முகன்பகழிசீறவிளங்கோளரியயர்ந்த
        செயலை நோக்கிக்கரம் பிசைந்து செழுநீர்க்கங்கைநாடர்பிரான்
காயாமலர் மேனியை நோக்கிக்கண்கள் பிசைந்து வீடணனாற்
        கடிந்தாருயிர் மீட்டிடுஞ்சூழ்ச்சி கழறக்கேட்டுச்சிறை புடைத்து
மாயா மருத்துமலைதேடிவாவிப்பறந்தோன் வருகவே
        வளஞ்சேர் திரிநேத்திரவீரமலையே வருக வருகவே. (10)

வருகைப் பருவம் முற்றிற்று.
----------

அம்புலிப் பருவம்.

தூற்றும்பசுந்திரைமுகட்டைக்கடக்கலாற்சோதிமுகம்வடுவுடைமையாற்
        றூயகலைபலவும்படைக்கையாலா திநாட்டொட்டுவருசாபத்தினால்
ஏற்றும்படிக்குடலம்வளரவுஞ்சிறுகவுமிருக்கையாற்பொறி சூழ்பணத்
      தெரிவிழியிராகுமேற்பாய்தலாற்கடவுளர்க்கெந்நாளுமுதவியிடலால்
ஊற்றுஞ்சுடர்ப்பருதிபாற்புகுதலாலிவனொடொக்கு நீயொக்குமாலே
        யுனைவரவெனப்பெரிதுமுறவழைத் தனனின்னொடொத்தவனிவன்பாயுநாள்
ஆற்றும் பெருங்கவலை நீயுமறிவாயிவனொடம்புலீயாடவாவே
        ஆரமணிதிரிநேத்ரவீரவ நுமந்தனுடனம்புலீயாடவாவே. (1)

கோளோடுகோளலையவண்டகோளகைமுகடுகுலையமா திரமுலைபடக்
        கொழுவால்புனைந்தபெருமணிகலன் கலனென்று குமுறி மாதிரமொலிப்பத்
தோளோடு தோளாயிரம் யோசனைக்களவு தூக்கி மணிமவுலியண்டச்
        சுவரளவுமேனோக்கிவாயிதழ்மடித்துத் துணைக்கரநிமிர்த்து நீட்டித
தாளோடு தாளுரைத்திருசிறையும் வீசித்தடங்கடலிலங்கையாழிச்
        சலதியுட்படுமரக்கலயெனச்சுழலிடத்தடவகியினொரு சுடிகைமேல்
ஆளோடுவானநாட்டளவோடுபாய்ந்தவனொடம்புலியாடவாவே
        ஆரமணிதிரிநேத்ரவீரவநுமந்தனுடனம்புலீயாடவாவே. (2)

பாயுமலைகடலைக் கடந்தியோசனைகளொன்பதினாயிரத்தினப்பாற்
        பனிதழுவுமிமயமொன்பதினாயிரத்தொடுபடர்ந்தேமகூடகிரியின்
சேயுயரமொன்பதாயிரமொன்பதாயிரஞ்செறிநிடதமேவியப்பாற்
        செப்பும்யோசனைகளொன்பதினாயிரத்தோடுசிகரமகமேருமீப்போய்
ஏயும் யோசனையொன்பதாயிரத்தொடு நீலமலையப்புறத்துநாலா
        யிரம்யோசனைக்குளுயர் சஞ்சீவி மலையடைந்தசனுறைகயிலைகும்பிட்
டாயுமறைபாடிநின்றாடி நாடினவனுடனம்புலியாடவாவே
        ஆரமணிதிரிநேத்ரவீரவ நுமந்தனுடனம்புலீயாடவாவே. (3)

முன்னையறி துயில்விட்டயோததியிலடைந்து தவமுனிசொலத்தாடகையின்மே
      முனிவெய்தியகலிகைக்கருள் செய்து சீதைமணமுற்றியொருபரசிராமன்
தன்னை வலி வென்று சிறு தாயருள்வனஞ்சென்று தகைமானையெய்து சனகனல்
      றருமானை விட்டுவானரவாரியோடு கடறாண்டியவ்விலங்கையீண்டித்
துன்னமர்விளைக்குமணிவண்ணனருளைக்கொண்டு சுதைமருந்தொன்று பார்க்குந்
      தூதனிவன்வாயுமகன நுமானரக்கரைத் துடைகாலனென்றுபுவனத்
தன்னையறியச்சம் புசொன்ன தனிமுதல்வனுடனம்புலீயாடவாவே
        ஆரமணிதிரிநேத்ரவீரவநுமந்தனுடனம்புலீயாடவாவே. (4)

புயல்வாய்கிழிக்குந்தடங்குடுமிமால்வரைப்புத்தேளெழுந்திறைஞ்சிப்
        பொருள் வினவவந்ததன் கருமநுதலிக்குறைபுகன்றதெனெடுஞ்சாரலிற்
செயல்வாய்கடுங்கணையரக்கரறுபதினாயிரங்கோடிதனையு நூறித்
      திண்புயவரைக்குளம் மணிவரையையேந்தித்திரும்பள வயோத்தியொருபால்
குயில்வாய்பொதும்பரிற்பரதனெழில் கண்டுகாகுத்தனிவனென்று வாழ்த்திக்
      குரைகடல் கடந்து வந்த மராடுகளமேற்குதித்திரண்டியாமத்துளே
அயல்வாய் மருத்துமலைதனை நட்டசேவகனோடம்புலீயாடவாவே
        ஆரமணி திரிநேத்ரவீரவ நுமந்தனுடனம்புலீயாடவாவே. (5)

கனைவாரளிக்குழற்சனகிகவலைக்கடல் கடந்துகரையேறவிண்ணோர்
        கடிநாறுகற்பகக்குடியேற வெழுபரிக்கடவுளுமிலங்கையேறப்
பனைபோலுமேனிமாலியவானுரங்கெடப்பருவால்விசைத்தவிசையிற்
        பாதாளகதியேறவளைவாயாக்கர் தம்படைகடென்றிசையிலேறத்
தனை நேரிளங்குமரனுயிரேறராகவன் சபதநிறைவேறவிடு போர்த்
        தடவலியரக்கருடல்கடலேறவானரக தலைவரொடும் வெள்ளமெழுபத்
தனைவோருமீடேறவுயிர் மருந்தேந்தினனோடம்புலீயாடவாவே
        ஆரமணிதிரிநேத்ரவீரவரு மந்தனுடனம்புலீயாடவாவே. (6)

பொன்னார் மணிக்கடவுண்மா மருந்து தவிய பொருப்பினையிருக்கை சேர்த்துப்
      பொருகளங்குறுகியிந்திரனெடும்பகைவன்புனைந்தமாயாசீதையால்
என்னாகுமென்னாகுமிவன் மற்றயோத்தி தனிலெய்தினாலையன்மீர்காள்
        என்றுளமிரங்களவில் வண்டுருவம் வீடணனிசைந்தனனி கும்பலை புகுந்
தொன்னாரிழைத்தகீழறைகளுமுயற்சியுமுபாயமுமுணர்ந்திறைவர் பால்
        ஓதுமுனமேதுபணியே துபணியென்றுள்ள மூசலாட்டாட வெளிமேல்
அன்னான் வருந்துணையும் வழிபார்த்துநின்றவனோடம்புலீயாடவாவே
      ஆரமணி திரிநேத்ரவீரவ நுமந்தனுடனம்புலீயாடவாவே. (7)

புலைவாளரக்கனீடலைசூழ்நிகும்பலைப்பு துயாகமதுகோலிடப்
        போனதையறிந்திளங்கோனொடு தொடர்ந்துபலபூரணகுடங்கள் சிதறக்
கலையாளர் சிதற மந்திர நூல்கள் சிதறம நுகலசங்களோடுசிதறக்
        கார்சிதறவிசைநெடுந்தேர்சிதறமுனையும் வெங்கரிபரிபதாதிசிதறச்
சிலைவீரனடுபுயமிருந்து கணைமழைகளாச்சிதறவிந்திரசித்தனார்
        சிரமுமுரமுஞ்சிதறவனுயிருநமனுலகு சென்று சிதறத்திவலையார்
அலையாழிவண்ணனுறுமிடர் சிதறுமெந்தையுடனம்புலீயாடவாவே
        ஆரமணி திரிநேத்ரவீரவனுமந்தனுடனம்புலீயாடவாவே. (8 )

எவ்வேலையுங்கால் புகுந்த வேலையில் வந்த விரைந்து நூறுவேலை
      யெனுமூல பலமதனையொருராமன் விடுப்படைக்கிரையாக விட்ட வேலை
மைவேலைநிகர் சேனையொடுராவணன் சீறி மயன் வேலைவிடவீடணன்
      மடிவேலையிதுவென்று நொடி வேலையிற்பாய்ந்து வடி வேலையேற்றவிளையோ
கைவேலைவிட்டாவிகரைகின்ற வேலையிக்கணம் வேலையைப் பாய்ந்து நான்
      கனமருந்து தவிடுவலெனவிரைந்தேகும் வழிகாலநேமியையறிகிலா ன்
தவ்வேலை முனிவனென்றவன் வேலை கேட்டவனோடம்புலீயாடவாவே
        ஆரமணிதிரிநேத்ரவீரவ நுமந்தனுடனம்புலீயாடவாவே. (9)

எண்ணில் பலபுவனங்கடந்துலைந்தீருமக்கிறைவராலேவ்வந்தீர்
        இறவாமருந்தொன்று பெறநாடினீரதுவுமிவ்விடத்தெய்தியிடநீர்
புண்ணியமளிக்கு மந்திரமொன்று கேளுமிப்புனலாடி மீளுமெனவே
        பொருமாயை பலவல்லவொருகாலநேமிமுனிபுகல்குளமிறங்கியாடித்
தண்ணிலவுமோடையிற்பிடி முதலையைக்கொன்று தள்ளவது தான்யமாலித்
        தையல்வடிவாய் வந்து வெய்ய தசமுகன் விடுசழக்கனிவனுயிர் பருகெனா
அண்ணியொருகுத்திலவனைச்சரிவட்டியவனோடம்புலீயாடவாவே
        ஆரமணிதிரிநேத்ரவீரவநுமந்தனுடனம்புலீயாடவாவே. (10)

அம்புலிப்பருவம் முற்றிற்று.
----------

சிறுபறைப்பருவம்.

தூமக்கருங்கொண்டல்விளையாடுதடமுடித்தொல்வரைகள் பலவு நீந்தித்
        தொன்னாளில் வைத்த பொருளிந்நாளெடுக்கத்தொடங்கினவர் போலமலைவாழ்
நேமிப்பெருங்கடவுள் வழி தர மருந்துறைநெடுங்கிரியையங்கையேந்தி
        நெறியே பறந்திரணகள் மேலிளங்குமரனிறையாவிகொண்டுவளரச்
சாமிக்குமுயிர் வளரவனைவர்க்கும் வானரத்தலைவர்க்குமா விவளரத்
        தருமமுந்தினம் வளரவளர்வித்து வாருதி தணப்பமலை கொண்டெழும்பிச்
சேமத்தலத்தின் முன்போல்வைத்தகைகளாற்சிறுபறைமுழக்கியருளே
      சீர்த்திபுனைகின்ற திரிநேத்ரவரு மந்தனேசிறுபறைமுழக்கியருளே. (1)

பெருமகனெடுத்தகோதண்டத்திலாயிரம் பெருமூல வெள்ள மடியப்
        பேதுறுமிராவணனுமையிராவணனுமிவர் பேசியிடு சூளுறவுகண்
டருமகனையுஞ்சுமித்திரை மகனையும் புரந்தருளுமகனஞ்சனைக்கோர்
        அருமைமகனாமென்று பிரமனருள் மகன்மகனளித்தமகன்வைக்கவெய்யோன்
மருமகன் முதற்சேனை காவலர் புறந்தரத் தடவால் பெருக்கியிந்தத்
        தரையுமிந்திரலோக வரையுமொருமதிலாச்சமைத்திமைக்கா மலந்தச்
செருமுகத்தினிலவுணர்வருமுகம்பார்த்தமுகில்சிறுபறைமுழக்கியருளே
        சீர்த்திபுனைகின்ற திரிநேத்ரவ நுமந்தனேசிறுபறை முழக்கியருளே. (2)

உறுசினம் பெறுகின்ற தந்தவத்திரனையுஞ்சி சுவத்திரனையு நீர் போய்
        ஒலிகடலிலங்கையிற் சமர்புரியிராமனையுமொருதம்பிதனையுமின்னே
பெறுமரைக்கணமதிற்கொணாதிரெனமையிராவணன் விடை கொடுப்பவந்தோர்
        பேரண்ட கூடமளவியவாலினாலிடு பெருங்கோட்டை தன்னை நோக்கிக்
கறுவுடைப்பெருமையைக்கண்டு முடியாதென்று மீண்டொருவனோடவலிசால்
        கல்லொத்தபல்லிற்கறிக்கத்தெறித்துக்கனங்குறைந்தொருவனோடச்
சிறு மயிர்க்கடையுமோடாவாலுமுடைய புலிசிறுபறைமுழக்கியருளே
      சீர்த்திபுனைகின்ற திரிநேத்ரவ நுமந்தனேசிறுபறை முழக்கியருளே. (3)

அடிநிலந்தோயாதவலகையுந்துயில் கூருமரையாமநேரமதிலே
        அணுகுவான்மையிராவணனுண்மையுண்மையிதடிக்கடியுறக்கமின்றிப்
படிபுகழுமிருவரையுநனிபுரந்தருளென்று பாரிவரும் வீடணன் போற்
      பாரித்தவால் பிரியுமோரத்தினிற் போந்து படுமாய நீறு வீசித்
துடியளவிலாழியந்துயில்விட்டுளானையுந்துயில்விட்டதம்பிதனையுந்
      துயில் கொளப்பேழையிற்கொடுபாதலஞ்சென்ற துட்டன்முடி தட்ட வேண்டிச்
செடிமயிர்த்திரள்படமுறுக்கிய தடக்கையாற்சிறுபறைமுழக்கியருளே
சீர்த்திபுனைகின்ற திரிநேத்ரவ நுமந்தனேசிறுபறைமுழக்கியருளே. (4)

மேருவரையைப் பொருவுமிமயவரை மாட்டொருவிரிந்த புட்கரணி நடுவண்
        விரியாயிரந்தோட்டுவனசநாளத்துளை விளங்கியபிலத்துவழிபோய்ச்
சாருநெறி வந்ததுர்த்தண்டி தண்ணீர் நிறை தசும்பினிற்றவளையுருவாய்த்
        தாட்டிகவிலங்கைபடுகோட்டையினுழைந்தொருதராசு மதிலைத் தகர்த்துப்
பேருருவின்றுபதாயிரகோடிபடையும் பிசைந்து முன் கடல்பாயுநாள்
        பில்கும்வேர்வைத்துளிவிழுங்கி மகரம் பெற்றபெருமச்சவல்லபனெனச்
சேருமகனைத்தழுவிவாரியதடக்கையாற்சிறுபறைமுழக்கியருளே
      சீரத்திபுனைகின்ற திரிநேத்ரவ நுமந்தனேசிறுபறை முழக்கியருளே. (5)

துங்கவெண்பிறைவாயமைச்சர்நாலிருவரொடுதொல்படையைமடியவைத்து
        துலையரண்டழுவுபாதலவிலங்கைப்புரிசை தூளிபடமோ திவைத்துப்
பங்கியெரிமையிராவணனும்வண்டேழும்படப்படநொறுக்கிவைத்துப்
        பரவுதுர்த்தண்டிமகனீலமேகற்கரசபட்டமுங்கட்டிவைத்துத்
தங்குமொருகாளிபலியிடவைத்தவிருவரைத்தடமுடியில்வைத்தெழும்பிச்
        சார் தருபிலத்துவழியேறி வீடணன் முதற்றலைவர் வழிபார்த்திரங்கச்
செங்களந்தனில் முன்பு போல்வைத்தகைகளாற்சிறுபறைமுழக்கியருளே
      சீர்த்திபுனைகின்ற திரிநேத்ரவ நுமந்தனேசிறுபறைமுழக்கியருளே. (6)

விறல்சேரிலக்குவப்பிராணதாதாவமி தவிக்ரமன்பற்குனசகா
        விஜயராமேஷ்டன நுமான் மகாபிலனோடு விரிதசக்ரீவதற்பன்
துறவாதசீதைசந்தேசனுத்திக்ரமணன்வாயுபுத்திரனஞ்சனா
      சூநுவொடுபிங்காட்சனென்று முன்னான்குவகைசொன்ன மந்திர முன்னினோ
பிறவா தவின்பந்திளைப்பரெனவானரப்பெருவாரியேத்தெடுப்பப்
        பேராயிரங்கொண்ட பெருமாளையுந்துணைப்பெருமாளையும்பழிச்சித்
திறலார்கரங்குவித்தயனின்ற சேவகன் சிறுபறைமுழக்கியருளே
        சீர்த்திபுனைகின்ற திரிநேத்ரவ நுமந்தனேசிறுபறைமுழக்கியருளே. (7)

மையிராவணனகலவேறிராவணன்மீறிவரு போரிலிந்த்ரனருளால்
        வலிமாவிறுக்கிமாதலிதேர் விடுக்கமணிவண்ணனதைநண்ணியேறிச்
சயவீரமார்த்தாண்டசண்டப்ரசண்டகோதண்டத்தைவளைய வாங்கி
        தருகாலவீறுருத்திரரூபமாகிவிடுசரமெலாநெரியவீசி
அயன்வாளிகோலியெண்டிசையானையின் கோடறைந்தமணிமார்புருவவிட்
        டசுரேசனழியா தவுயிர்காவு கொண்டதையறிந்தமரரார்ப்பரிக்கச்
செயராம செயவென்று கொட்டிய தடக்கையாற்சிறுபறைமுழக்கியருளே
        சீர்த்திபுனைகின்ற திரிநேத்ரவ நுமந்தனேசிறுபறைமுழக்கியருளே. (8)

வாதையறவருணன்வழிவிட்டசோபனமணைவகுத்தசோபனமிலங்கா
        வாயிலைவளைத்தசோபனம்ராவணன்றோற்பவருகும்பன் விழுசோயனம்
பேதைய திகாயன்முதலிந்திரசித்துவுமிளையபெருமாள்கையொளிவாளியாற்
      பிறங்குயிரிழந்தசோபனம் வெள்ளமாயிரம்பெருமூலமடிசோபனம்
தாதைநான்முகன்வாளிவள்ளல் விடவீரைந்து தலையும்பனங்குலையெனத்
      தரை மீதுருண்டிராவணன்மாண்டசோபனஞ்சகலசோபனமுமோதிச்
சீதைசோபனநல்லசோபனமெனச்சொனோன்சிறுபறைமுழக்கியருளே
        சீர்த்திபுனைகின்ற திரிநேத்ரவ நுமந்தனேசிறுபறைமுழக்கியருளே. (9)

மாயிருஞ்சோகப்பெருஞ்சிறையரக்கியர்கள் வந்திடவிரக்கம் வந்து
      மணியணியலங்காரவகைவகைபுனைந்தன்னை வருகெனவிளம்பிவந்து
பாயிரும்பஃறொடியரம்பையர்பரிக்கும்பருஞ்சிவிகைகொண்டுவந்து
        பரிசிங்கவணைசுமித்திரைசிங்கமொடுபோய்ப்பதம்பெறவமைத்துவந்து
நாயகன் பேரளவும் வீடணனிலங்கைக்குநாதனெனவைத்துவந்து
        நங்கை திரிசடையாதிமங்கையர்குழாந்தொடரநாதனருண்மீதுவந்த
சேயிதழ்க்கமலப்பிராட்டியொடும்வந்தவன் சிறுபறைமுழக்கியருளே
        சீர்த்திபுனைகின்ற திரிநேத்ரவ நுமந்தனேசிறுபறைமுழக்கியருளே. (20)

பேரிரவிகுலராமன்விடுமோலைகண்டிடும்பிரயனிந்திரா தியறலிப்
        பெருமான் முதற்றேவரொருகும்பகர்ணன் பெரும்போரில்வந்தெதிர்த்துச்
சாருமோர்வசந்தனவருலகுளானெனிலவன்றன்னையஞ்சனையின் மகன்
        தன்வசத்தினில் விடுதிர்விடுதிரெனுமவாசகந்தந்தவத் திருமுகத்தைப்
பாரமுடி தனில் வைத்து வெற்பெட்டுமகிலப்பரப்புக்கு முட்டியெட்டிப்
        பாய்ந்துநமனுலகிலடிதோய்ந்துநரகத் துள்ள பலவருமருங்கதியினிற்
சேரவரிகரியென்றுரைத்தகுருநாதனேசிறுபறை முழக்கியருளே
        சீர்ததி புனைகின்ற திரிநேத்ரவ நுமந்தனேசிறுபறைமுழக்கியருளே. (11)

சிறுபறைப் பருவம் முற்றிற்று.
-----------

சிற்றிற்பருவம்.

தடிவேற்கரத்துச்சமனைவசந்தனைக்காட்டெனவாலினிற் சுருக்கித்
        தகையிந்திரனூர்தேடியவன்றனையுஞ்சமனோடுடன் சுருக்கிப்
படி நான் மறையோன் புவிதேடிச்சமனிந்திரனோடவனையுமப்
        படியே சுருக்கித் திருக்கேள்வன்பதத்துள்ளானையெதிர்ந்தேந்திக்
துடியே திரும்பியவரவரைத்தொல்லைப்பதியிலிருத்திமுன்னாட்
        சுடரிலெழுந்துவருஞ்சனகன்றோகை போலப்புட்பகத்தின்
அடியேவசந்தன்றனைக்கொணர்ந்தவரசேசிற்றில் சிதையேலே
        அனகா திரிநேத்திரவீரவநுமாசிற்றில்சிதையேலே. (1)

மதிவாணுதற்சானகியேறவள்ளலேறத்துணையேற
        வானரேசர் பலரேறவசந்தனுடனேயிசைந்தேறிக்
கதிர்மாமணிப்புட்பகத்தேறிக்கடன்மேலேறிக்கரையேறிக்
      கடவுளருளாலடலேறிக்கனை நீர்க்கங்கைக்கரையேறிப்
பதிவார்சடையாரணியமிசைப்பன் மாமணிச்சூட்டரவேறப்
        பகையாவகை நாண்மதியேறப்பரித்தவிசுவநாதனையோர்
அதிவேகத்திற்கொணர்ந்தேறுமரசேசிற்றில்சிதையேலே
        அனகாதிரிநேத்திரவீரவநுமாசிற்றில்சிதையேலே.(2)

நங்கைசனகிகைப்பிடித்தநாதனடித்தாமரைப்பிடித்து
        நகர்க்கு நடக்கும்வழிபிடித்துநலமேவியபுட்பகத்தேறி
மங்கைமகிழ்கிட்கிந்தைமலைமடவாரினஞ்சேரப்பிடித்து
        வரையுங்கரையுங்கடந்துவனவாசன்பரத்துவாசனிடஞ்
செங்கணெடுமாலமுது செயுந்திறத்திற்பரதனுயிர்நிறுத்தத்
        தேர்க்கு முன நம்மூர்க்கணுகித் திரும்பவேண்டுமெனப்பெருமாள்
அங்கை மணிமோதிரம் வாங்குமரசேசிற்றில் சிதையேலே
        அனகா திரிநேத்திரவீரவநுமாசிற்றில்சிதையேலே. (3)

கையிற் செபமாலிகையுமுரியுடையுஞ்சடையும் புறந்தாங்கிக்
        கண்ணனளித்த திருவடியைக்கரத்துஞ்சிரத்தும் பெறத்தாங்கி
மெய்யன் வருங்கொலிரவிகுலவேந்தன் வருங்கொலீரேழு
        விதித்தவருடஞ்செல்லுதற்குவேண்டியுளன் கொலிலக்குமன்போல்
மையிலடிமைபெற்றிலன்யானனல் வாய்மூழ்கக்கடவனென்று
        வலஞ்சூழ்பரதன் முன்னமலன்வந்தான்பெருமான்வந்தானென் ,
ஐயவெனப்போய்முழக்கியவாயழகாசிற்றில் சிதையேலே
        அனகாதிரிநேத்ரவீரவநுமாசிற்றில் சிதையேலே. (4)

கனைக்கும் புனற்சித்திரகூடங்கடந்துவனங்கள் பலகடந்து
        கலைமானெய்து குலமானைக்கள்ளவரக்கன் கொளக்கரைந்து
நினைத்தவழியிற்கவந்தனுயிர்கவர்ந்து சடாயுவினை முடித்து
        நீண்டகதிரோன் மகற்கரசுநிறுவியெழுபான்வெள்ளமுடன்
முனைக்கு மரக்கர் குலந்துமித்துச்சனகியுடனேபரத்துவனா
        முனிபாலணைந்தானெனக்குகனார் முன்னேயுரைத்தபடி பரதற்
கனைத்து முணர்த்தியுயிர்காத்தவமுதேசிற்றில் சிதையேலே
      அனகாதிரிநேத்ரவீரவநுமாசிற்றில் சிதையேலே. (5)

முகத்திற்கண்டுபரதனிடமணிமோதிரங்கொண்டண்டரண்ட
        முகடுகிழியவெழும்பியெம்மான் முதலோரமுதுசெயுமிடத்தில்
உகைத்துப்பாய்ந்துபரதனின்னமுளனென்றுரைத்து மணிவண்ணன்
        உதவுந்தெய்வப்பரிகலங்கொண்டுயர்கானகத்தோர்புடையேறிப்
புகழ்ச்சி பெறவுண்டிடப்பலவானரவீரரு மோரிலையிலையாப்
        பொருந்தி நுகரத்துவாதசியிற்புவியோருண்டு கதியடைய
அகத்தி தனக்குங்கதி கொடுத்தவறி வாசிற்றில் சிதையேலே
        அனகாதிரிநேத்திரவீரவ நுமாசிற்றில் சிதையேலே. (6)

வடித்தாய்முனிவன்பரத்துவனைவழிக்கொண்டொருகங்கையிற்குகனை
        வழிமேலெதிர்கொண்டயோத்திதனின்மணித்தேர்மிசைப்போய்பர தனுடன்
துடித்தேவருசத்துருக்கனையுந்தோளாலணைத்துத்தாய்மூவர்
      துணைத்தாமரைத்தாள் வணங்கி மன்னர் சூழப்பலபல்லிய முழங்கக்
கடிப்பூமலர்விண்ணவர் பொழியச்சனகியொடுவாளரியணை மேற்
        கதிர்மா மகுடம்புனைந்துலகைக்கனகபுயத்தேந்திய பெருமாள்
அடித்தாமரையேந்தியமதலாயடியேன் சிற்றில் சிதையேலே
      அனகாதிரிநேத்திரவீரவநுமாசிற்றில்சிதையேலே. (7)

இமைக்குமிரவிக்குலப்பெருமாளிளையபெருமாளிறைப்பெருமாள்
        இவருமெழுபதான வெள்ளத்தெவரும்புயத்திலேறிவரச்
சமைக்குமுவரிக்கடலாதிநான்கு கடலுந்தாண்டியந்தச்
        சதமாமுகராவணன் படைக்குச் சகலப்படையுநெரிந்தமையிற்
குமைக்குங்கணைகள் சீதைவிடவவனாருயிர் போய்ப்பிறக்கவந்தக்
        கொடியான் வாளியிறைவிமிசைக்குறு காதொரு கோட்டையை
விளைத்தாங் கமைக்கும் பெருவாற்பெருமானேயடியேன் சிற்றில் சிதையேலே
        அனகாதிரிநேத்திர வீரவ நுமாசிற்றில் சிதையேலே. (8)

வனஞ்சேரிராமன்றனைக்கண்டவழியிலொருவிச்சுவரூபம்
      மலைமேலேறிக்கடல் பாயவகுத்ததொருவிச்சுவரூபங்
கனஞ்சேர் சீதைக்கடையாளங்காட்டியொருவிச்சுவரூபங்
        காணாமருந்து மலைதேடிக்காணவொருவிச்சுவரூபம்
இனஞ்சேர்பாதாளத்தின் மகனெதிர்ந்ததொருவிச்சுவரூபம்
        ஈரைம்பதுவாயரக்கன்மிசையெதிர்த்தவிசுவரூபமுதல்
அனந்தவிசுவரூபமுளவ துலாசிற்றில் சிதையேலே
        அனகா திரிநேத்திரவீரவநுமாசிற்றில் சிதையேலே. (9)

சோதிப்பரமனருள்வித்தாய்த்து தியஞ்சனையாற்குறுமுளையாய்த்
      தொல்லை நிலமேந்தியதருவாய்ச்சுக்ரீவனுக்கு முழு நிழலாய்
நீதிப்பெருமானடித்துணை தோய் நீண்டகவடாய்ப்புகழ்வேத
        நெறிதேரனந்தசாகைகளாய் நிகழுந்தருமத்தரும்பினதாய்
ஓதித்தெருட்சி மலரினதாய்வீரச்செழுந்தேனொழுக்கினதாய்
        உலவாவடிமைப்புள்ளினங்களுண்ணவுண்ணவுவட்டாத
ஆதிப்பரமபதக்கனிதந்தருள்வாய்சிற்றில்சிதையேலே
        அனகாதிரிநேத்திரவீரவ நுமாசிற்றில் சிதையேலே. (10)

சிற்றிற் பருவம் முற்றிற்று.
----------

சிறுதேர்ப்பருவம்.

பைந்தோட்டு முகைவிரிபசுங்கொன்றை
        சூடிப்பரிக்குலமறைக்குலமதாப்
பாயொளிப்பரிதிமதிவண்டிலாமேருப்பருப்பதம்
        வரிச்சிலையதாக்
கொந்தேறுமழல் பூத்தகுடுமிப் பெரும்பகழி
        கொண்டல் மணிவண்ணனாச்செங்
கோகநகவாலயத்தேகனொருவலவனாக்
        கொளுவு நாண்வாசுகியதாப்
பிந்தாதபாரேழுநடுவணைப்பலகையாப்
        பேரண்ட கூட முகடகாப்
பேதித்தமுப்புரரைவாதிக்கவேண்டிப்
        பெருக்கப் பெருத்து நீண்ட
செந்தேருருட்டினோன்றந்த திருமைந்தனே
        சிறுதேருருட்டியருளே
திக்குளோர்பரவவருமுக்கண் மாருதியமல
        சிறுதேருருட்டியருளே.         (1)

இயல்பான நாதமாய் வேதமாய்மூலமா
        யெண்ணெண்கலைக்கா தியா
யெக்கடவுளுக்குமெக்கருமங்களுக்கு
        மெப்பொருளுக்கு முதன்மையாகிப்
புயலானகருடபூபதிகுலம் விளங்கவருபுத்
        தேளுமாகியொப்பம்
போடு தற்குங்கீர்த்திதேடுதற்குந்து
        திபுகழ்ந்து சொண்டாடுதற்குஞ்
சுயமான காலக்கணக்கெழுதுதற்குஞ்சுராதி
        பரையாள்வதற்குஞ்
சூத்திரதரனான திரிநேத்ரவ நுமானென்ற
        சொற்படி நடாத்து நெல்லைச்
செயராமலிங்கனுக்கமுதமாகிய
        குழவிசிறுதேருருட்டியருளே
திக்குளோர்பரவவருமுக்கண் மாருதிய
        மலசிறுதேருருட்டியருளே.         (2)

பாசிலையரம்பையம்பழுவத்துநாப்பட்
        பசுத்தநெட்டிலையகமுகம்
பாளைவாள் கைக்கொண்டுசிறுகுறுந்தோட்டுப்
        பலாக்கோடுசாய்வறுகால்
மூசு மதுவட்டமேபலகையாகக்கொண்டு
        மொய்த்தும்பையருவிசூடி
முன்னைப்படர்ந்த துணைவண்ணச்செழுஞ்சிறை
        முருக்கியபழிக்கு மீளக்
காசுதெறுகாந்தளந்துகில் வீக்கிவரையெலாங்
        கறுவியாகாயத்திலா
கண்டலன்பதிநோக்கிவிண்டலம்புகுவரை
        கடுப்பவளனொழுகுசாரல்
தேசுபெறு திருவஞ்சனாத்திரியில் வருகுழவி
        சிறுதேருருட்டியருளே
திக்குளோர்பரவவருமுக்கண் மாருதியமல
        சிறுதேருருட்டியருளே.         (3)

பாடேறுமொலி திரைப்பகுவாய மகரப்பணைக்கோடு
        போன்ற நெட்டைப்
பாசிலை -த்தாழைமலர் மலர்ந்து வரிப்
        பசும்புலானாற்றமாற்றக்
காடேறியாற்றாதயின்றதெள்ளமுதினைக்
        காலுவன போன்றெங்கணுங்
கடிநாறு புன்னையஞ்செடிதோறுமுத்தீன்று
        கடல்மேலிறைப்பவலைவாய்க்
கோடேறிமுத்தீன்றுகரை மேலிறைப்பக்கு
        இயவெண்சோதிமூடிக்
கொண்டநகரைக்கண்டு செஞ்சோதியாகக்
        குறித்துமுடிமணியிறைத்துச்
சேடேசன்வழிபடு மனந்தமங்கலவாண
        சிறுதேருருட்டியருளே
திக்குளோர்பரவவருமுக்கண்மாருதியமல
        சிறுதேருருட்டியருளே.         (4)

நீரழுங்காமலுலகன்னை பன்னாட்பெற
        நிரம்புசூன்முற்றியீன்ற
நீது லவளாகத்து மன்பதைகளெல்லா
        நெடும்பசிக்கனனோயினாற்
பாரவகாமற்சுரந்தொழுகுசையப்
        பருப்பதமுலைத்தடத்திற்
பாலாறெனப்பெருகுகாவேரியாறு
        பாய்பழனத்திலுழுநரீட்டங்
கூரழுங்காதகோட்டெருமையேறுழுபாடல்
      கொண்மூவிடைக்கரந்து
கோதில்யாழ்வல்லகந்திருவரமுதப்பாடல்
        கொள்வதுகடுக்குமேன்மை
தேரழுந்தூர் தனிலுமேயெழுந்தருள்
        குழவிசிறுதேருருட்டியருளே
திக்குளோர்பரவவருமுக்கண்மாருதிய
        மலசிறுதேருருட்டியருளே.       (5)

அஞ்சிறைத்தும் பிபாட்டயருந்துழாய்மௌலியண்ணலுமருச்சுனனுநீர்
      அணிதெண்டிரைப்புணரியாடி வருநாளிலங்காபுரிக்கணைவகுப்பு
மஞ்சிவருமேனியானோதச்சரக்கூடமாயணைவகுப்பனென்ன
        வாருதிக்கரைதொட்டிலங்கையளவுங்கட்டும் வாள் விசயன்மதமடக்கப்
பஞ்சவர் சகாயநினைநினையக்கணத்தினிற்பகிரண்ட கூடமட்டும்
        பாய்ந்து சரபஞ்சரம் பஞ்சு பஞ்சாய்த்துக்கள் படப்பட நொறுக்கி நீண்ட
செஞ்சிறைத்துணைகுவித்தயனின்ற சேவகன் சிறுதேருருட்டியருளே
        திக்குளோர்பரவவருமுக்கண்மாருதியமலசிறுதேருருட்டியருளே. (6)

இயல்குணத்த நுமனிவனொருவனிக்கவிவெள்ளமெழுபது மகித் தவனை நீ
        யென்னினைந்தென்செய்தாயேழாயெனக்குறிப்பாலிவைவிளம்பியின்னும்
பயனுறு சரக்கூடம்வனையென்னவனும் நீ பாய்ந்து பாரென்னவந்தப்
        பஞ்சரத்தினின்மாயனங்கொளித்திடமுன்படிக்குக்குதிசதெழுப்பிப்
புயன் முதுகுநெளியாமைகண்டுவில்லாளியுன் போலில்லையின்று முதலாய்
        பொருகளந்தொறும் வெற்றிபெறுகென்று கொடியொன்று புனைவி துவிசய னுக்குச்
செய்கவித்வசனெனும் பேருங்கொடுத்தவன் சிறுதேருருட்டியருளே
        திக்குளோர் பரவவருமுக்கண் மாருதியமலசிறுதேருருட்டியருளே. (7)

போராடிலங்கையிற்கடவுள்வாரானென்று பொருமுசானகியுயிரையும்
        பூவையவள் புக்கவழியெங்கவழியென்றேபுலம்பு பெருமானுயிரையும்
பேரா துறக்கமோடுணவு நீக்கியவிளையபெருமாளினாருயிரையும்
        பிறிதுக்கியிலையென்று மறுகிய டேணப்பெருமாளினாருயிரையும்
பாராளவைத்ததொருபரதனுயிரையுமேமுபாதுவெள்ளத் துயிரையும்
        பலபலதொகைப்படுசாரசரத்துயிரையும் பாதுகாத்தருளுமெங்கள்
சீராளனேமிக்கதாராளனேயழகுசிறுதேருருட்டியருளே
        திக்குளோர்பரவவருமுக்கண் மாருதியமலசிறுதேருருட்டியருளே. (8)

பொறிவழியிலேயுருத்திரமூர்த்தி பலகலன்புனைவழியிலா ரிமூர்த்தி
        புலனுதவு வழியிலம்புயமூர்த்தியோரைம்புலாதிகளடக்கினமையால்
சருவவழியிலுமிக்க முதலான மூாகதிநெறிதருமந்தரயந்தரங்களுட்
        டகுமோமீறீமுரும் அரிமர்க்கடாய வர தவமுள்ள மந்தரமூர்த்தி
குறி மகாதைரியவலங்காரகம் பீரகோரவு ததண்டமூர்த்தி
        கூறரிய தெய்வமனுவாறிரண்டையுமுளங்கொண்டவர்ககெளியமூர்த்தி
செறிவரிய தெய்வங்களுக்கெல முதன்மூர்த்திசிறுதேருருட்டியருளே
        திக்குளோர் பரவவருமுக்கண்மாருதிய மலசிறுதேருருட்டியருளே.       (9)

இழிமாலைமுடைநாறு தலைமாலையுள்விராமணன்
     வென்றிமாலைவிழுநாள்
இருண்மாலையைத் தள்ளியருண்மாலையைப்
     பூட்டுமீரந்துழாய்மாலையுடையான்
கொழுமாலைமேனி வெண்டலைமாலையான்
     மகிழ்குபேரன்மணிமாலை வாங்கிக
குளிர்மாலைமதிநுதலியெனையீன்ற சந்தரகுலகுணபாலை
      தன்னை நோக்கிப்
பொழிமாலைவார்குழலியோர் விசயமாலையிது
        புனையெனவளிப்பவாங்கிப்
போதுறை பிராட்டிய நுமான் வருகவருகநீ
      பூணெனவழங்குமுத்தின்
செழுமாலைபோலெனது மொழிமாலைகொண்டுளான
        சிறுதேருருட்டியருளே
திக்குளோர்பரவவருமுக்கண்மாருதியமல
     சிறுதேருருட்டியருளே.      (10)

சிறுதேர்ப்பருவம் முற்றிற்று.
அநுமார் பிள்ளைத்தமிழ் முற்றிற்று.


This file was last updated on 29 May 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)