pm logo

மாரிமுத்துப்பிள்ளையவர்கள் இயற்றிய
புலியூர் வெண்பா
(சுப்பராய செட்டியார் உரையோடு)


puliyUr veNpA
by mArimuttuppiLLai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy and Shaivam.org for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of the soft
copy of this work for publication
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

மாரிமுத்துப்பிள்ளையவர்கள் இயற்றிய
புலியூர் வெண்பா
(சுப்பராய செட்டியார் உரையோடு)

Source:
தில்லைவிடங்கன் வித்துவான் மாரிமுத்துப்பிள்ளையவர்கள் இயற்றிய
புலியூர் வெண்பா.
சென்னைக் கவனர்மெண்டு நார்மல் பாடசாலைத் தமிழ்ப்புலவராயிருந்த
தி. க. சுப்பராய செட்டியாரால் தாம் இயற்றிய உரையோடு
சென்னை – சூளை திராவிடரத்நாகர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.
சர்வதாரி வரு. வைகாசி மா. இரண்டாம் பதிப்பு .
------------------------------------------------------------------

நன்கறிவுறுத்தல்.


குருவாழ்க.
உயிர்க்குறுதி பயக்கும் கல்விபயிலு மாணாக்கர்கள் எளிதினுணர இப்பிரபந்த மியற்றினவர் பௌத்திரர் தி. சு. வேலுசாமி பிள்ளையவர் வேண்டுகோளால் யாம் இயற்றிய புலியூர் வெண்பாவுரையையும் பிழை திருத்தத்தையும் பார்த்த புறத்தேசத்து வித்துவான்களிலொருவர், "உழுத நிலத்திற் பின்னுழுபவர் போல" பின்பு உரையெழுதி யச்சிட்டு வெளிப்படுத்திய பிரதியொன்றைப் பார்வையிட்டுச் சிற்சில இடங்களிற் குறியிட்டனுப்பினர், அப்பிரதியைப் பெற்று நோக்கும்போது உரை வரலாறென்று ஒன்று முன்னர்ப்புலப்பட்டது 'ஆடையிரவலாகப்பெற்ற வொருவன் முழம் போடத் தொடங்கியது போல’ அதிலளந்த பயனில் சொற்கள் பலவுண்டு. அவை அடியிற்காண்க.

மேற்படி வேலுசாமிபிள்ளையவர் சென்னைக்குவந்த காலையில் என்னைக்கண்டபோது மஹாகவிகள் ஐயா அவர்கள் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் மாணாக்கரென்று கூறினர். முன்பின் இவரையும் இவர் குணாதிசயங்களையும் அறியாதிருப்பினும் மேற்படி ஐயா அவர்கள் மாணாக்கர் என்றமையால் அவரோடளவளாவி உரையாட அன்றுமுதல் வந்துகொண்டிருந்தனர். 1889 வரு A B டெகஸ்டுக்கு வழக்கப்படி யாம் பொருளெழுதி வருங்கால் வந்தவர், யாழ்ப்பாணம். தமிழ்ப்பண்டிதரொருவர் தாம் புலியூர் வெண்பாவுக்கு உரையெழுதுகின்றோம் எனக்கூறியதற்கும், வெஸ்லி மிஷன் காலேஜ் தமிழ்ப்பண்டிதரொருவர் மேற்படி வெண்பாவிற்கு உரையெழுதுகின்றோம் அதற்கு உதவி செய்ய வேண்டுமென்றதற்கும் சுப்பராய செட்டியார் உரையெழுதப் போகின்றனர் என்று யான் மறுத்தேன், நீங்களதற்கு உரையெழுதவேண்டுமெனக்கூறித் தாம் மூலமாகப் பதிப்பித்த ஐந்தாம்பதிப்புப் புலியூர்வெண்பா ஒன்று தந்ததுமன்றி இரண்டாம் பதிப்பில் பாதிக்குக்கூடிய செலவுபெற்றுக்கொண்டு புத்தகங்கொடுக்க வேண்டுமென்று கேட்டபோது கேட்டிருந்தவர்களுஞ் சிலரிருக்கின்றனர், இந்த உண்மையைப், பிறவிக் குருடனுக்குக் கண்கொடுத்து நடராசப் பெருமானாரருளால் இப்பிரபந்தத்தைச் செய்து பெருமை வாய்ந்தோர் மரபில் வந்தவர் இது பொய்யெனத் துணிந்து கூறுவரா---கூறா? கூறார்? அவர் தாமெழுதி அச்சிடுவதாகச் சொன்னால் யாம் மறுப்போமா, உரையெழுதத் தெரிந்தவரானால் யாம் எழுதுவதற்கு முன்னரே எழுதியச்சிட்டிருக்க வேண்டும். “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்," என்றபடி பயன் வாய்த்தபோதாவது எழுதிமுடித் திருப்பாரல்லவா; 4, 12, 32, 34, 38 , 55 , 58, 68, 80, 1 அம் செய்யுளிலுள்ள தப்புகளை யாம் ஆசங்கித்து இவ்வாறிருக்க வேண்டுமென, தாம் உடம்பட்டதற்குப் பிறர் சாக்ஷியிருப்பதை மறுப்பினும் தம்மனஞ்சான்றாகுமல்லவா; - தாம் பிழையென உடம்பட்டவைகளும் அச்சிற்றவறியவற்றை யாம் எடுத்துக்காட்டிய பிழைதிருத்தத்தையுந் தவறுகளாகக் கொண்டு, என்ன விபரீதமோ, பித்தமோ, பிறவிக்குணமோ என இன்னம் பலபடப் பித்தர்போலப் பிதற்றுங் கவிகள் முன்னிருந்தனரென்றாவது, இன்றிருக்கின்றன ரென்றாவது விரன் முடக்க இவரையன்றிக்கூடுமா; - எந்தவகையிலும் அபராதியல்லாத எம்மைப் பழித்த இந்தப்பெரும்பாவத்தைப் போக்க எந்தமூர்த்தி, தலம், தீர்த்தங்களிற் சென்று போக்குவரோ யாம் அறியோம்? அறியோம். இது நிற்க. இவர் உரையெழுதிய நியாயத்தைச் சற்றுப்பார்ப்போமாக.

முற்காலத்தில் நச்சினார்க்கினியர் பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் நூலாசிரியர் கருத்தின்படி உள்ளவாறே உரையெழுதி மேம்பட்டனர் என்றெழுதி யிருக்கின்றனர், அதனைச் சுருக்கிக் கூறுகின்றோம்.

இளம்பூரணர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் “எல்லாவெழுத்தும்" "அஃதிவணுவலாது" எனவும் இரண்டு சூத்திரங்களாகப் புறனடைக்கமைத்தனர், நச்சினார்க்கினியர் ஒரு சூத்திரமாகக் கொண்டும், திருச்சிற்றம்பலக்கோவையாருள் “வரையன்றொருகால்" என்னும் பாசுரத்துள் “நிரைவன்றழலெழ”, என்னும் பாடத்தை ''நிரையன்றழலெழ" எனவும் "ஐயனைக்கண்ணிற் காண" என்னும் பாடத்தை "ஐயநிற்கண்ணிற் காண" எனவும் பாடங்கொண்டு பொருளெழுதியிருக்கின்றனர். திருக்குறளில் "மதினுட்ப நூலோடுடையார்க் கதினுட்பம்" என்னும் பாடத்தைப் பரிமேலழகர் ''அதிநுட்பம்" எனப்பாடங் கொண்டு பொருளெழுதி முன்னுள்ள பாடத்திற்குக் குற்றமுங் கூறினர், இஃதொன்றோ; - பல. சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, புலவராற்றுப்படை, கலித்தொகை, குறுந்தொகை, நெடுந்தொகை முதலிய மூலவிலக்கியங்கட்கும் அவ்வாறே. இவர்கள் காலத்தில் "இறைவன் தண்டசக்கரங்கள்” இருந்தனவல்லவா "குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டியன்" உண்டல்லவா இவர்களுக்கு வந்தன அழியாப் புகழும், அரசர் சன்மானமுமன்றி வேறியாவை. நெல்லை வெண்பா, சிவகிரிவெண்பா, திருவையாற்று வெண்பா, வேங்கடவெண்பா, கலசை வெண்பா, சிராமலைவெண்பா முதலிய வெண்பாக்களோடு புலியூர்வெண்பாவும் ஒன்றா, வேறாக இவ்வாறிருக்க இந்தச் சிறு பிரபந்தத்தை மூல இலக்கணத்தோடும் திருக்கோவையார் முதலிய இலக்கியங்களோடும் ஒன்றாகக்கருதியது அந்தோ பெரும்பாவம்? பெரும் பாவம்? தமக்குபகரிக்கும் ஆசிரியன் முதலிய பலரையுங் காணாவிடத்தில் நிந்தித்தொழுகுவோர்க்கு இஃதொருபெரும் பாவமாகத் தோன்றுமா இல்லை? இல்லை?

இக்காலத்தில் மகாவித்துவான்கள் சரவணப் பெருமாளையரவர்கள் ஆறுமுகநாவலரவர்கள் தொன்றுதொட்டு வழங்கிய பாடங்களை மாற்றி வேறுபாடங்கொண்டனரா என்றனர், அவருள் மேற்படி நாவலரவர்கள் நல்வழியில் "நண்டுசிப்பிவேய்கதலி நாசமுறுங்காலத்தில் - கொண்ட கருவழிக்குங்கொள்கை போல்’ என்னும் பாடத்தை "கருவளிக்கும்" எனப்பாடங்கொண்டு பொருளெழுதினார், எழுத்து மட்டுமா; - சொல்லும், அடியும், பாட்டுங்கூடவல்லவா; - மேற்படி ஐயரவர்களும் அப்படியே. இதனாலிவர்களுக்கு வந்தன புகழோ, வேறோ? வெள்ளிடை மலைபோல விளங்கிக்கிடக்கும் அவ்வவர் பாடபேதங்களினுண்மை இவர் மனக்கண்ணிற்குப் புலப்படாமை பெருமடமையே, அதைப் போக்குவது நம்மாலரிது, இறைவன் தண்டமே போக்கும்.
நாம் தப்பென்று அவர் முன்பாக மறுத்த பாடங்களுக்குப் பொருளமைதியை யாங்காங்குணர்க. அவற்றுள் புதைபொருளாகவும் புதையிலக்கணமாகவும் உள்ளனவற்றைச் சிறிது பார்ப்போம். 46-ம் செய்யுளில் ‘முதற்றேவர்’ என உள்ள பாடத்திற்கும், ‘முதறேவர்’ எனவுள்ள பாடத்திற்கும் விதி, போப்பையரிலக்கணத்தைக்காண பெரும் புலவர்க்கு விளங்குமா, நல்லாசிரியனை வழிபட்டு நன்னூலைப் பாடங்கேட்டு 14 -வருடம் சிந்தித்துப் பயின்றவர்க்கல்லவா புலப்படும்? 46-ம் செய்யுளில் ‘தனையை காமருகேசஞ் சரிப்பார்’ என்னும் பழம் பாடத்தைக் கொண்டு ‘தனையைக்கு ஆம்மருகேசம்’ எனச் சொல்வகை செய்தால் ‘மருக்கேசம்’ என ஒற்று மிகவேண்டுமே என்று ஆலோசிக்காது சொல்வகை செய்து பொருள் எழுதியிருக்கின்றனர், ஆதலால் யாம் அதுபோல் வழுத்தேடாது தனையை காமருகேசம் என இயல்பாகக் கொண்டு சொல்வகை செய்து பொருள் கொண்டாம்.

34-ம் செய்யுளில் ‘ஆணவமாம்’ என்னும் பழம் பாடங்கொண்டே மெய்யை நான் என்கிற காரியம், மறைக்கின்ற ஆணவத்தாலாகுமென்றல் உண்மையே, அப்பொருள் ‘ஆணவம் ஆம் மெய்’ என்ற சொல்வகையிலடங்குமா; உபசார வழக்கென்றல் அபசார வழக்காயன்றோ முடியும். ‘சொற்செறி வேதாந்தம்' என்னுஞ் செய்யுள் முதல் ‘ஏழுலகேத் தொன்பான்’ என்ற 50 - செய்யுள்காறும் அத்தலப் புராணங்களிற்கூறிய மான்மியங்களைச் சுருக்கியல்லவா கூறியிருக்கின்றன. 'உண்டுடுத்து, நிற்கின்றவன் மாகொண்டுவா" என்றால் சமையவாற்ற லுணராதவன் குதிரை கொண்டுவாராது உண்ண மாவைக்கொண்டு வந்ததுபோல; 32-ம் செய்யுளில் சோதிவரை என்றது புருவமத்தியம் எனவும், மும்மடி என்றது இடைகலை, பிங்கலை, சுழுமுனையெனவும், தோன்றாது என்றது இவற்றால் வரும் அவஸ்தைகளில்லையெனவும் பொருள் கூறுவார்களாகற்று வல்லோர்கள். மேற்படி மகாகவிகளிடத்திற் ……………… கற்றோர்பாற் கற்றோர்பாற் கற்றோரும் இது ஒரு பொருளென்று நன்குமதியார்களே தோன்றாது என்றதற்கு …………. மறைசெயவெனெச்சத்திரிபு என இலக்கணம் எழுதியிருக்கின்றது, அதனைச் சற்றுப்பார்ப்போம். தொல்காப்பியம் சொல் - வினையியல் 31-ம் சூத்திரம் உடன்பாட்டு வினைக்கும் எதிர்மறை வினைக்கும் பொதுவாக ஈறுபற்றி முடிபு கூறியதல்லது விதிப்பொருளனவாகிய வாய்பாடு பற்றிக் கூறியதல்லவே இதனையுணராது விதிவினைக்குக்கூறும் இலக்கணத்தையமைத்துத் தாம் கூறியது போல எந்த உரையாசரியர்களாவது; -- நூல்களி லிவ்வாறு வருமிடங்கள் பலவுளவாதலால், அவற்றிலொன்றுக்கேனும் இவ்வாறெழுதியது எங்கேனும் உண்டா, "கம்பாகும்பக்களிற்றினான்" கம்பத்திற் கட்டிய பெரிய மத்தகத்தையுடைய யானையை யுடையவன் எனக்கவிகள் உபநியாசஞ்செய்ய, மற்றொரு கவி கும்பத்திற்பெய்து கிளறியகம் …………….. களியைத் தின்னான் எனப் புதை பொருளமைந்த …………… உபநியாசஞ் செய்து தகரம் றகரமாக வந்தது. இந்நூலில் 'அடியாரெற்றினால்' என வந்தாற்போல …………. கெட்டி? கெட்டி? நன்றாயிருக்கின்றது என்று மெச்சும் புதுமை உலகிலுண்டா; -- பிறர்பாலிரந்த புதைபொருளையும் ……….. இலக்கணத்தையும் நம்பிப் பெரிய ஆரவாரம் செய்தது என்ன விபரீதம், என்னபித்தம், என்ன பிறவிக்குணம் அந்தோ அவருக்கு இரங்குகின்றோம்.

அருள்வாக்கெனப் பிறர் சொல்லக்கேளாது இவர் பதிப்பிற் கூறியதைக் காண வேண்டுமாதலால் அதைச் சற்று நோக்குவோமாக; இவர் சித்திரபானு வருஷம் பதிப்பித்த ஐந்தாம் பதிப்பில் "வில்லா – வணக்குஞ் ……. மாசுணக்குஞ்சமத்தினார்" என்பது பொருளமைதி பெறாதிருத்தலால் பொருளமைதி பெற ஒரு ரகரவொற்றைச் சேர்ப்பதற்கு "நூலுக்கு இருமரபிலுஞ் சுதந்தரமுடையவனாயிருக்க எவ்வளவோ யோசிக்கலாயினேன்" என்றவர் உரையோடு பதிப்பித்த ஆறாம் பதிப்பில் 4-ம் செய்யுளில் ஐந்தாம் பதிப்பிலுள்ள பொற்கொடையால் என்னும் பாடத்தைப் பொற்குடையால் எனவும், 18 - ம் செய்யுளில் புன்னாயர்க்கீயும் என்னும் பாடத்தைப் புன்னாயற்கீயும் எனவும், 58- ம் செய்யுளில் கொணர்வா என்னும் பாடத்தைக் கொணர்வாய் எனவும் 86 -ம் செய்யுளில் காற்காட்டி யாறுதலைகாட்டி என்னும் பாடத்தைக் காற்காட்டியாறுதலைக் காட்டி எனவுந் திருத்து தற்கு எத்தனை நாள் சென்றனவோ அந்தோ பெரும் பிரயாசை! பெரும்பிரயாசை! அருள்வாக்காயினும் சுதந்தரமுடையவராதலால் பதிக்குந்தோறெல்லா மாற்றலாம். மாசுணக்குஞ்சு, பாட்டு, முயல், மாட்டினார், குபேரனுக்கு முடம் எனவருதலால் இவற்றிற்கு நியாயங்கள் ‘அடியோரேற்றினான்' என்பதற்கு அநாமதேய நூலிலிருந்து மேற்கோள் காட்டியது போல, அவ்வவ்விடங்களிலருள் வாக்குளன் றோராட்சியைக் காட்டியிருப்பாரோ, அன்றிப்புதைபொருளும் புதையிலக்கணமும் எழுதிய இருப்பாரோ என்று பலதரந்திருப்பித் திருப்பிப்பார்ப்பினும் ஒன்றுங்காணோம். கண்டது, நாமெழுதியவுரையில் ஒவ்வோரிடங்களில் ஒரு சொல்லை மாற்றியும் கூட்டியும் அன்றிப் புதிதாக வேறுரையில்லாமையையே. இதனை நியாயத்தலத்திலறிவோம்.

மகாகவிகள் ஐயா அவர்கள் திருநாகைக்காரோணப்புராணம் அச்சிற் பதிப்பிக்க ஏவிய பணியைச் சிரமேற்கொண்டு பதிப்பித்து வரும்போது (2) பாரம் அவர்களனுஞையாலனுப்பக்க.... கடவுள் வாழ்த்தில் "கருந்தடங்கணம்மை "கழகவிடங்கரை" என்னும் (2) செய்யுள்களுக்கு யாம் உரையெழுதியிருத்தலை நோக்கி, ‘நீயெழுதியிருக்கும் உரையைக் கண்ணுற்றுப் பெருமகிழ்ச்சி கூர்ந்தோம், இப்புராணத்தில் நந்திநாதப்படலத்தில் வருஞ் சித்திரக்கவிகட்கும் காஞ்சிப்புராணத்தில் சுரகரீசப்படலத்தில் வருஞ்சித்திரக்கவிகட்கு உரை எழுதியது போல எழுதி முடிக்க வேண்டுமென'' சுக்கில வருடம் கட்டளையிட்டனர்கள். திருவாவடுதுறையாதீனம் மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ, சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் ''வித்துவசிகாமணியாகிய தாங்கள் காஞ்சிப்புராணம் அச்சிடத்தொட்டது முடிவுபெறாமலிருப்பதை இப்போது நிறைவேறும்படி பார்வையிட்டு உடனே முடித்தனுப்ப வேண்டுமென" தாது வருடம் கட்டளையிட்டருளினர்கள். இந்த மகான்கள் மதித்த ஆசிவசனம் எமக்கோர் பெரும் புகழ் விளைப்பதேயன்றிக், கற்றோர் போல நடிக்கு மற்றையோர் எமது உரையை நிந்தித்ததை யொருபொருளாகக்கொண்டு கவல்வோமா “தம்மையிகழ்ந்தமை தாம் பொறுப்பதன்றிமற் - றெம்மையிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை - எரிவாய் நிரையத்து வீழ்வர் கோலென்று - பரிவது உஞ்சான்றோர் கடன்" என்பதையன்றோ சிந்தித்தொழுகுவது எமது கடமை.
---------------------------------------------------------------------------------------

பரமபதிதுணை

புலியூர் வெண்பா

காப்பு
பொன்னாருந் தில்லைப் புலியூர் வெண்பாவுக்குப்
பன்னாளு மேத்திப் பணிகுவாம் - நன்னாரி
கக்குஞ் சரப்பூங் கடுக்கையா னீன்றகற்ப
கக்குஞ் சரப்பூங் கழல்.

காப்பு- காத்தல்; அது - இங்கு, காக்கின்ற கடவுள் விஷயமான வணக்கத்துக்குத் தொழிலாகுபெயர். ஆகவே, கவி தமக்கு நேரிடத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை முடிக்க வல்லதோர் பொருளின் விஷயமாகச் செய்யும் தோத்திரமென்பது கருத்து. தம்மைச் சரணமடைந்தவர் தொடங்கும் தொழில்களுக்கு வரும் விக்கினங்களை [இடையூறுகளை]ப் போக்குதலாலும், தம்மையடையாது அகங்கரித்தவர்களுக்கு விக்கினங்களை ஆக்குதலாலும் விக்கினேசுவரரென்னுந் திருநாமம் பெற்றுள்ள (பரமசிவனது மூத்த திருக்குமாரர் விநாயகமூர்த்தியைப் பற்றியதென அறிக. இக்காப்புச்செய்யுளில் வழிபடப்பட்டவர், சைவசம்பிரதாய முறைமைப்படி தலத்துக்குரிய கற்பக விநாயகரென்க.
(இ - ள்) பொன் ஆரும் - அழகு மிகுந்த, தில்லை - தில்லைவனத்திலுள்ள, புலியூர் - புலியூரென்னும் பையரையுடைய சிதம்பரத்தலத்தைப் பற்றிக் கூறுகிற, வெண்பாவுக்கு - வெண்பாவினாலான பிரபந்தம் தடையின்றி முடியும்பொருட்டு, நல் - சிறந்த, நாரிகக்கும் - தேனைச் சொரிகின்ற, சரம் - மாலையாகத் தொடுக்கப்படுகிற, பூங்கடுக்கையான்- பொலிவமைந்த கொன்றை மாலையையணிந்த சிவபிரான், ஈன்ற - பெற்றருளிய, கற்பகக்குஞ்சரம் - கற்பகவிநாயகரது, பூங்கழல் - தாமரைமலர் போன்ற அழகிய திருவடிகளை, பலநாளும் - பலநாளிலும் (தினந்தோறும்), ஏத்தி - துதித்து, பணிகுவாம் - (யாம்) வணங்குவோம்; (எ- று)

எல்லா நூல்களிலும் மங்கலமொழி முதல்வகுத்துக் கூறவேண்டுவது மரபாதலின், பொன் என்று தொடங்கினார். மேல் நூலின் முதலில் சொல் என்று தொடங்குவதும் இதுபற்றியே : திரு, யானை, தேர், பரி, கடல், மலை, மணி, பூ, புகழ், சீர், மதி, நீர், எழுத்து, பொன், ஆரணம், சொல், புயல், நிலம், கங்கை, உலகம், பரிதி, அமிழ்தம் இவையும், இவற்றின் பரியாயப்பெயர்களும், இவைபோன்ற இன்னுஞ்சிலவும் மங்களச்சொற்களாம். சிதம்பரத்தலமுள்ள இடம் தில்லையென்னுமமரமடர்ந்த காடாயிருந்தமையின், தில்லையென்றும் தில்லைவனமென்றும் பெயர்பெறும். பணிகுவாம், கு - சாரியை. இது, கடவுள் வணக்கமாதலால் "நான்முகற்றொழுது நன்கியம்புவன்”, ''அச்சுத னடிதொழு தறைகுவன்" "பந்த மடிதொடை பாவினங் கூறுவன்" என்றாற்போல ஒருமையாற்கூறித் தன்னைத்தாழ்த்தாமல் பன்மையாற்கூறித் தன்னை உயர்த்தியபின் இதில் வணக்கமென்னெனின்; தெய்வத்தன்மையது என்பார் நன்னார் இகக்கும் என்றார்.
அங்ஙனம் உயர்த்திக் கூறுதல் பிறவிடங்களில் உண்டெனினும் இவ்விடத்தில் உயர்த்தியதன்று; தானொருவன் கடவுளையறிந்து அன்புகூர்ந்து வணங்கி அப்பயனைத் தான் அடைதலினும் சிருஷ்டிதொடங்கித் தன் கோத்திரத்தாரையுந் தன்னோடு கூட்டிவணங்கி அவர்க்கும் அப்பயனை அடைவித்தலே சிறந்ததெனக் கருதிச் சான்றோரெ ல்லாம் தொன்றுதொட்டு இவ்வாறு கூறிவருவது மரபாமென்க. (மரபு- பழமை) என்னெனின்; 'ஏகதந்த னிணையடி ........ம்', 'ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே', ‘சரணவா ரிசமாக தலைக்கொள் வாமரோ', ‘மலரடி சென்னி வைப்பாம்’ என இவ்வாறு கூறியவை அளவில் லென்க. கழல் பணிகுவாமென இயைக்க; இதற்கு யாம் என்னுந் தோன்றா எழுவாய் வருவிக்க. நன்னார் இகக்கும் எனப்பிரித்தும் நல்லநாரை நீங்கின என்றுமுரைத்து, தெய்வத்தன்மையாலமைந்த கொன்றைப்பூமாலையென்று கருத்துக் கூறுவாருமுளர். கடுக்கையென்னும் கொன்றைமரத்தின் பெயர் அதன் மலருக்கு முதலாகு பெயர். சரப்பூங்கடுக்கையான் – கடுக்கைப்பூச்சாத்தானென் மாறுதமலுமாம். சரப்பூங்கடுக்கை - மாலையாகப் பூக்குங் கொன்றைமாலையான் ஈன்ற. ஈன் - பகுதி. கற்பகவிருட்சம்போல வேண்டுவோர் வேண்டும் பலாபலன்களை வேண்டியவாறு ஈந்தருளுந்தன்மையராதலின், சிதம்பரத்தலத்துப் பிள்ளையாருக்குக் கற்பகவிநாயகரென்று பெயர். எல்லா அவயவங்களினும் முதன்மையாய தலை யானைத்தலையாயிருத்தல்பற்றி, விநாயகக்கடவுளைக் குஞ்சரமென்றார்.
----------------------
நூல்

சொற்செறிவே தாந்தச் சுடர்த்தகர வித்தையதாம்
பொற்சபைநின் றோங்கும் புலியூரே - முற்சமனை
வீசுபதத் தானடித்தார் விற்கொண் டமர்விளைத்த
பாசுபதத் தானடித்தார் பற்று.    ,   (1)

இ-ள். சொல்செறி - உறுதிச்சொல் நிறைந்த, வேதம் அந்தம் - வேதத்தினிறுதியிலுள்ள, சுடர் - ஒளிமிகுந்த, தகர வித்தை ஆம் - தகரவித்தையாகிய , பொன்சபைநின்று - பொன்னம்பலம் நிலைபெறுதலால், ஓங்கும் - (எல்லாத்தலங்களிலும்) சிறந்தோங்கும், புலியூர் - புலியூரானது, முன் - முற்பொழுது, சமனை - இயமனை, வீசு - உதைத்த, பதத்து ஆன் - திருவடியால், நடித்தார் - நடனஞ்செய்தருளினவரும், வில்கொண்டு - வில்லையேந்தி, அமர்விளைத்த - போர்செய்த, பாசுபதத்தான் - தம்மால் பாசுபதம் பெற்ற அருச்சுனனால், அடித்தான் - அடிக்கப்பட்டவருமாகிய இறைவா, பற்று - அன்புகூர்ந்திருக்குமிடமாம்
புலியூர். எழுவாய், பற்றுபயனிலை. பற்று என்பதை எழுவாயாக்கிப் புலியூரைப் பயனிலையாகக் கொள்ளுதலும் அடங்கும். சாந்தோக்கிய உபநிடத்தில் கூறப்படுதலால் வேதாந்தம் எனவும், பிரமபுரமாகிய இச்சரீரத்திலிருக்கும் தகரமாகிய புண்டரீகமென்னும் வீட்டினுள்ளிக்கும் அகாயமாதலால் தகரவித்தையதாம் பொற்சபையெனவுங் கூறினார். இதனைச் சூசங்கிதையில் சாந்தோக்கிய உபநிடத்தாற்பரியத்தைப் பின்னும் உரைத்த அத்தியாயத்திற் காண்க. தம்மைச் சரணடைந்த மார்க்கண்டேயர் பொருட்டாக, அவருயிர் வாங்கவந்த இயமனைத் திருக்கடவூர் என்னுந் திருத்தலத்தில் உதைத்தருளுதல் காந்தப்புராணத்திலும், தம்மிடத்தில் பாசுபதம் பெறும் பொருட்டுத் தவஞ்செய்யும் அருச்சுநன் தவத்திற்கிரங்கி அவனைக் கொல்ல எழுந்த மூகாசுரனெனும் பன்றியையெய்து அருச்சுனனோடு பன்றியைக் குறித்து ஒரு திருவிளையாடலாகப் போர்செய்யுங்கால் அருச்சுநன் விற்கழுவாலடிபட்டது பாரதத்திலுங் காண்க. அது பகுதிப் பொருள் விகுதி. (1)
-----------------------

தங்கரும நீத்ததுன்ம தன்முனடங் காணநிரம்
புங்கதியைத் தந்த புலியூரே - கங்கையதி
மோகரத்தர் மாசடையார் மோதலையுப் பற்றவருட்
சாகரத்தர் மாசடையார் சார்பு.    ,   (2)

இ-ள். தன்கருமம் (அந்தணர்குலத்தில் பிறந்து) தான் செய்யுங் கருமத்தை, நீத்த - ஒழித்துப் பாவத்தை மேற்கொண்ட, துன்மதன் - துன்மதனானவன், முன் - முற்காலையில் (ஓர் நேரம்) நடம்காண - திருநடனத்தைக் காண, நிரம்பும் கதியை - இன்பம் நிறைந்த முத்தியை, தந்த - தந்தருளிய, புலியூர் - புலியூரானது, கங்கை - கங்காதேவியின் மேல், அதிமோகர் - மிக்கவிருப்பமுடையவரும், மோது அலை - கரையொடு மோதும் அலையினையும், உப்பு - உப்பையும், அற்ற - ஒழிந்த, அருள்சாகரத்தர் - கிருபாசமுத்திரமாயுள்ளவரும், மாசடையார் – பெரிய சடாபாரத்தையுடையவருமாகிய இறைவர், சார்பு - சார்ந்திருக்குமிடமாம்.
அந்தணர் குலத்திற்பிறந்த துன்மதனென்பவன், தன் தந்தை சொல்லையுங் கேளாது தன் குலத்துக்கியைந்த கருமங்களையுஞ் செய்யாது கொலைகளவாதிகளைச் செய்து பல இடங்களினுந் திரிந்தலைந்து தன் கூட்டத்தோடு சிதம்பரத்துக்கு அண்மையில் வருங்கால் அன்றுதனுரவியில் நிகழுந் திருவாதிரை நன்னாளாதலால் தரிசனத்துக்கு வந்த அடியவர் கூட்டங்களோடு கலந்து பொன்னம்பலத்தையடைந்து நடேசர் திருநடனத்தைக் கண்டு மீண்டுந் தன் கூட்டங்களோடுங்கூடிக் கொடுந்தொழிலைச் செய்து அலையும் போது பாம்பு தீண்டியுயிர்விட்டான், அப்பால் இயமன் தூதுவர்களால் கட்டியிழுக்கப்பட்டுச் சென்றனன், சிறிது நேரிட்ட சிவபுண்ணியத்தால் சிவகணங்களால் அவரினின்று மீட்கப்பட்டனன் என்பது புராணவரலாறு. (2)
----------------

பாதகஞ்செய் துற்சகனும் பண்டிறப்பக் கண்டுகதி
போதவுவந் திட்ட புலியூரே - வேதன்
சிரமதலை யக்கணித்தார் சேர்த்துநர சிங்கத்
துரமதலை யக்கணித்தா ரூர்.    ,   (3)

இ-ள். பாதகம்செய் (கொலை முதலிய) அதிபாதகத்தை செய்த, துற்சகன்உம் - துற்சகனென்னும் வேடனும், பண்டு - முற்காலையில், இறப்ப - (தன் எல்லையில்) உயிர்விட, கண்டு - பார்த்தருளி, கதி - சிவபுரத்தில், போத - செல்ல, உவந்து இட்ட - மகிழ்ந்து தந்த, புலியூர் - புலியூரானது, வேதன் - பிரமனுடைய, சிரம் - தலையையும், மதலை - கொன்றை மலர் மாலையினையும், அக்கு - சங்குமணியையும், அணி - அழகிய, தார் - மாலையாக, சேர்த்து - அணிந்து, நரசிங்கத்து - திருமால் கொண்டு நரசிம்ம மூர்த்தத்தின், உரம் - வலிமை , அலைய - கெட, கணித்தார்-- கடைக்கட்பார்வை செய்தவர், ஊர் – ஊராம்.
சையமலையிலுள்ள வேடர்குலத்திற் பிறந்து கொலைகள் முதலிய கொடும்பாதகங்கள் செய்து திரியுந் துற்சகனென்னும் ஓர்வேடன், வஞ்சிநாடாளுஞ் சேரர்குல தீபம் போன்றவதரித்த சேரர்குலாதிபதி யொருவர் சிதம்பரத்திற்சென்று நடராசர் திருநடனத்தைக் கண்டு தரிசிக்க வேண்டுமென்னும் விருப்பினராய்த் தமது நாட்டினின்று சிதம்பரத்திற்குச் செல்லுங்கால் அவரது பரிசநத்தினேவலால் பொற்கமையெடுத்து அவர் சேனையோடு சென்று சிதம்பரத்தையடைந்தபின், சுரநோயாற் கட்டுண்டு சிறிது நாட்சென்று இறந்தபின் சிவபரத்தையடைந்தனன் என்பதும், பிரமன் செருக்கடைந்து தலையிழந்தன னென்பதும், திருமால் இரணியனை வதைசெய்து இறுமாப்படைந்த கால த்தில் தேவர்கள் வேண்டுகோளால் அந்த நரசிங்கத்தை யொறுத்தனர் என்பதும் புராணவரலாறுகள். (3)
--------------

நற்கதியைத் துற்றெரிச னன்மறையோ னுட்களிப்பப்
பொற்குடையா நல்கும் புலியூரே - சொற்கிளர்நால்
ஆரணமா றங்கத்த ரம்பவள மேனியினோர்
நாரணமா றங்கத்தர் நாடு.    ,   (4)
   ,   இ-ள். நல்கதி ஐ - நல்ல சிவகதியை, துற்றெரிசனன் - துற்றெரிசனனென்னும் வேடன், மறையோன் - ஒரு அந்தணனுடைய, உள்களிப்ப - மனங்களிகூர (தந்த) பொன்குடை ஆல் - அழகிய குடையால், நல்கும் (அவ்வேடனுக்கு தந்தருளிய) புலியூர் - புலியூரானது, சொல்கிளர் - புகழால் விளங்கும், நால்ஆரணம் - நான்கு வேதங்களும், ஆறு அங்கத்தர் - ஆறங்கங்களுமாகிய இவைகளை (உயிர்கள் பொருட்டு) அருளினவரும், அம் - அழகிய, பவளம் - பவளத்தையொத்த, மேனியின் - திருமேனியில், நாரணன்மால் - நாரணனாகிய திருமால், தங்கு – தங்கி, ஓர் அத்தர் - ஓர்பாகத்தையுடையவருமாகிய இறைவர், நாடு - நாடாம்.
பொற்கொடையாலென்னும் பாடம் புராணத்திற்குப்பொருந்தாமை காண்க.
ஆரணம் முதனூல், ஆறங்கம் சார்பு நூல், ஆறங்கங்கள் ஆவன சிட்சை, வியாகரணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சந்தோவிசிதி. விந்தாரணியவேடர்களில் தலைமைபூண்டதும் றெரிசனனென்னும் வேடன் வழிப்பட்டவர்களைக் கொள்ளையாடிக் கொலைசெய்தொழுகு நாளில், ஒருநாள் விருத்தவேதியனொருவன் அவ்வழியில் வரக்கண்டு உன்னுயிரைக் கவர்வேன் உன்னிடத்துள்ள பொருள் முற்றுங் கொடுவெனக் கவர்ந்தனன், அவ்வந்தணனஞ்சி நான் விருத்தனாதலால் வெயில் வெப்பத்திற்கு ஆற்றேன் நீ கவர்ந்த குடையை மட்டும் கொடுக்கவென்றிரக்க, நல்வினைப் பயன் வந்துதவுதலால் அவ்வேடன் கொடுத்த அக்குடையைப் பெற்றுத் தில்லைக்கருகில் முறுகிய வெயில்வெப்பத்தால் வேசாறிய விருத்த வேதியன் வருதலையோரந்தணன் கண்டு முன்சென்று அக்குடையை வாங்கி நிழல் விரிக்க, அந்நிழலில் இளைப்பாறி நின்று சிவகங்கைத் தீர்த்தக்கரையை யடைந்தனன். அத்தீர்த்தக்கரையையடையக் குடையுதவிய சிவபுண்ணியத்தால் அவ்வேடன் சிறிது நாட்சென்று சிவபதத்தையடைந்தனன் என்பது புராணவரலாறு. (4)
----------------

தாண்டுபுலிக் கால்கையுகிர் தானோர் மழமுநிவன்
பூண்டிருந்தர்ச் சிக்கும் புலியூரே - பாண்டியற்காய்
மாணிக்கங் காட்டினார் மாமறைப்பா லன்பாலால்
வேணிக்கங் காட்டினார் வீடு.    ,   (5)

இ – ள். ஓர் மழமுநிவன் - ஒப்பில்லாத பாலமுநிவர் தாண்டு - தாண்டிச்செல்லும், புலிகால்கை - புலியினது கால்களிலும் கையிலுமுள்ள, உகிர்தான் பூண்டிருந்து – நகங்களைத் தமது கால்களிலும் கைகளிலும் பெற்றிருந்து, அர்ச்சிக்கும் - அருச்சனை செய்யும், புலியூர் - புலியூரானது, பாண்டியற்கு ஆய் – பாண்டியனுக்காக, மாணிக்கம் காட்டினார் - (வணிகவுருக்கொண்டுவந்து) மாணிக்கங்களைக் காட்டினவரும், மா - பெருமையமைந்த, மறைபாலன் - ஆதிசைவ மறையவர் குலத்திற் பிறந்த ஓர்சிறுவன், பால் ஆல் - ஆட்டியபாலால், அங்கு - அவ்விடத்தில், வேணிக்கு - தமது சடாபாரத்தில், ஆட்டினார் - ஆடியருளினவருமாகிய இறைவர் , வீடு – திருக்கோயிலாம்.
தமது பிதாவாகிய மத்தியந்தின முனிவருடைய அநுஞையால் சிதம்பரத்திற்குச் சென்று திருமூலட்டானேசுரரை வழிபட்டிருக்குநாளில் ஓர்நாள் அருச்சித்தற்கு விடிந்தபின் சென்று மலரெடுக்கலாமென்றால் வண்டூதும், விடியுமுன் எடுக்கலாமென்றால் வழிதெரியாது, மரங்களிலேறில் கைகால்கள் பனியினால் வழுக்கும் அதனால் பழுதில்லாத மலரைக் கொண்டு எவ்வாறருச்சிப்பேனென்று சோர்ந்திருக்கும்போது பெருமானார் காட்சிதந்து அம்மழமுனிவர் வேண்டுகோளின்படி, கைகால்களில் புலியின் நகங்களைப் போலக் கரிய நகங்கள் பெற்றனர் என்பதும், மதுரையில் வீரபாண்டியன் புத்திரனுக்கு மகுடஞ்சூட்ட மந்திரிகள் கருதிக் கருவூலத்திற் பார்க்க, அவ்வீரபாண்டியன் காமக்கிழ த்தியர் மக்கள் கவர்ந்து போனதால் காணாது யாது செய்வோமென்று திகைத்துச் சோமசுந்தரக்கடவுள் சந்நிதிக்குச்செல்ல, அப்பெருமானார் வணிகருக்கொண்டு எதிர்ப்பட்டு ஏன் வருந்துகின்றீர் என்னிடத்தில் நவமணிகளுமுள்ளனவெனக் காட்டினார் என்பதும், திருவிரிஞ்சிபுரத்தில் ஆதிசைவவேதியருள் தாதையிழந்த ஒரு சிறுவன் முறைவர, அந்நாள் மற்றையோர் உதவாமையால் அச்சிறுவனே சென்று பூசிக்கும்போது, சிவபெருமானிரங்கயச்சிறுவனுக்கு எட்டும்படி திருமுடி தாழ்ந்தனரென்பதும் புராணவரலாறுகள். (5)
------------------

தத்துதிரைப் பாலுததி தன்னையழும் வெம்புலியின்
புத்திரனுக் கீயும் புலியூரே - பத்தித்
தவந்தழைத்த சித்தனார் தாஞ்சமைத்த சேயை
உவந்தழைத் தசித்த னாரூர்.    ,   (6)

இ-ள். தத்துதிரை - தாவிவரும் அலைகளையுடைய, பால் உததிதன் ஐ - பாற்கடலை, அழும் - அழாநின்ற, வெம்புலிஇன் - வியாக்கிரபாதருடைய, புத்திரனுக்கு - புத்திரராகிய உபமன்னியு முனிவருக்கு, ஈயும் புலியூர் - கொடுத்தருளிய புலியூரானது, பத்தி - சிவநேசமாகிய, தவம்தழைத்த - தவம்நிரம்பிய, சித்தனார்தாம் - இதயத்தையுடைய சிறுத்தொண்டர் நாயனார், சமைத்த (தமக்காக) பாகஞ்செய்த, சேய்ஐ - (அவரது) புத் திரனை உவந்து விரும்பி, அழைத்த - (முன்போலுருக்கொண்டுவர) அழைத்தருளிய, சித்தனார் - சித்தருருக்கொண்டுவந்தவர், ஊர் - ஊராம்.
வியாக்கிரபாதமுனிவர் தமது தந்தையினனுஞையால் வசிட்ட முனிவர் தங்கையை மணம் புரிந்து உபமன்னியு முனிவரைப் பெற்றனர். வசிட்ட முனிவர் மனைவியாராகிய அருந்ததியார் அம்மகவைக் கொண்டு தம் பர்ணசாலைக்கு வந்து காமதேனுவின் பாலூட்டி வளர்த்தனர். ஓர்நாள் வியாக்கிரபாதமுனிவர் தம்பர் பர்ணசாலைக்குக் கொண்டு வந்து மாவை நீரிற் கரைத்தூட்ட உமிழ்ந்துவிட்டுக் காமதேனுவின் பாலை விரும்பியழுதனர். தந்தையார் நொந்து திருமூலட்டானர் சந்நிதியில் வளர்த்தப் பசியாற்றாதழுது இறைவரருளால் பாற்கடல் பெற்று உண்டு வளர்ந்தனர் என்பதும், திருச்செங்காட்டங்குடியில் வசிக்கும் அந்தணர்குலத்தில் அவதரித்த சிறுத்தொண்டர் நாயனார் அன்பினையுலகினுக்கு உணர்த்த சிவபெருமான் பைரவவேடத் திருவுருக்கொண்டு அவர் மனைக்கு வந்து தமது பிள்ளையையறுத்துக் கறிசெய்து அமுது படைப்போரில்லிலருந்துவோமென்று கூறத் தமது ஏகபுத்திரனாகிய சீராளனை யவ்வாறே செய்து பரிகலந்திருத்தியமுது படைக்கும்போது பிள்ளையில்லாதுண்ணோம், உமது பிள்ளையிருந்தாலழையுமென்ன, அதற்கு உடன்படுவார் போன்று புறத்து வந்து பள்ளியிலிருந்த பிள்ளையையழைப்பார் போல அழைக்க அப்பிள்ளை வந்ததென்பதும் புராணவரலாறுகள். புத் என்னும் நரகத்தை நீக்கி முத்தியைத் தருவோன் என்னும் பொருள்மேல் நிற்றலால் புத்திரன் காரணப்பெயர். (6)
------------------

மெய்திகழுஞ் சேடனுரு விட்டுப் பதஞ்சலியாய்ப்
பொய்சையுழி வந்த புலியூரே - வையை
வரம்புகட்டு வாரானார் மாமுநிக்குப் பாற்சா
கரம்புக்கட்டு வாரானார் காப்பு.    ,   (7)

இ-ள். மெய்திகழும் - வடிவால் விளங்கும், சேடன் - ஆதிசேடன், உருவிட்டு - தனதுருவையொழித்து, பதஞ்சலியாய் - (முன்கொண்ட) பதஞ்சலிவடிவமாய், பொய்கையில் - பிலத்துவாரத்தினிடமாக, வந்த - வந்தடைந்த புலியூரானது, வையை - வையைப்பெருக்கிற்கு, வரம்புக்கட்டுவார் – கரையணைக்க வந்தவரும், ஆனார்- இடபவாகனமுடையவரும், மாமுநிகு - பெருமைவாய்ந்த உபமன்னியுமுநிவர்க்கு, பால்சா கரம் - பாற்கடலை, புகட்டுவர் ஆனார் - ஊட்டியருளுவோருகமாகிய இறையர், காப்பு - காவலாயுள்ள விடமாம்.
ஓர் காலத்தில் திருமால் ஆதிசேஷசயனத்தில் அறிதுயிலொழிந்து சிரசின்மேற் கைகள் கூப்பிச் சிவாநந்தபரவசராயிருக்கக்கண்டு, அந்த ஆதிசேஷர் வணங்கி இவ்வாறிருந்தமை யென்னென்று வினவ, நேற்றுச் சிவபிரானார் பிக்ஷாடனத் திருக்கோ லங்கண்டு தேவதாருவனத்தில் திருநடனம் புரிந்தருளியதைத் தெரிசித்த ஆநந்தத்தினால் விழித்தனனென்று கூற அது கேட்டுத் தாமும் தெரிசிக்க விருப்பங்கொண்டு விடைபெற்றுத் திருக்கயிலையையடைந்து தவஞ்செய்ய, இறைவர் காட்சிதந்து இவ்வடி வத்தோடு சென்றால் உலகஞ்சும் ஆதலின், அத்திரிமுனிவனும் அனசூயையும் செய்த தவத்தால் அவ்வனசூயை இருதுமதியாய் நீராடி அவருடைய அஞ்சலியில் நீ ஐந்து தலையையுடைய சிறுபாம்பாய் அவள் பாதத்தில் விழுதலால் பதஞ்சலியெனப் பெற்ற பெயரோடு நாகலோகத்திற்சென்று அங்கே யொருபருவதமும் அதற்குத் தெற்கே ஒரு பிலத்துவாரமுமுண்டு, அப்பிலத்துவாரத்தின் முடிவே தில்லைவனமாதலால் அவ்வாயிலாகத் தில்லைவனத்திற்குச் செல்வாயென்றருள, அவ்வாறே வந்து பொ ய்கையினின்றெழுந்தனர் என்பதும், வாதவூரடிகளைப் பாண்டியன் வருத்திய காலத்திலிறைவரருளினால் வையைப்பெருக்கெடுத்து ஊழிவெள்ளம் போல்வர, அதை நகரிலுள்ளோரடைக்க அனுஞைசெய்தபோது, வந்திக்குக் கூலியாளாயிறைவர்வந்து அளந்துவிட்ட கரையினெல்லையை யடைத்தனர் என்பதும் புராணவரலாறுகள். அப்பொய்கைக்கு நாகசேரித்தீர்த்தம் என்பது திருநாமம். சாகரம் சகரரால் தோண்டப் பட்டது எனநிற்றலால் தத்திதாந்தபதம். (7)
----------------------

மாசிலா வம்புலிக்கு மாதுமைக்கு மாநடத்தைப்
பூசமதிற் காட்டும் புலியூரே - பேசரிய
வித்தகத்தார் கண்டிறந்தார் வீடுறச்செய் தங்கசற்கா
மத்தகத்தார் கண்டிறந்தார் வாழ்வு.    ,   (8)

(இ–ள்) மாசு இல்லாத - குற்றமில்லாத, அம்புலிக்கு உம் - அழகிய வியாக்கிரபாதருக்கும், மாது உமைக்கு உம் - உமாதேவியாருக்கும், மாநடத்தை - ஞானப்பெருமை வாய்ந்த திருநடத்தினை, பூசம் அது இல் - பூசத்திரு நக்ஷத்திரத்தில், கா ட்டும் திருநடத்தினைக் காட்டியருளிய, புலியூர் - புலியூரானது, பேசு அரிய - சொல்லுதற்கரிய, வித்தகத்தார் - மெய்ஞ்ஞானத்தையுடையவராகி, கண்டு (பாசவியல்பை) உணர்ந்து, இறந்தார் - கடந்த சநகர் முதலானவர்கள், வீடு உற - பரமுத்தியையடைய, செய்து - செய்தருளி, அங்கசற்கு ஆக - மன்மதனுக்கு ஆக, மத்தகத்து - நெற்றியில், ஆர் - பொருந்திய, கண்திறந்தார் - அனற்கண் திறந்தருளிய இறைவர், வாழ்வு - வாழுமிடமாம்.
சநகர் முதலிய நால்வர், சநகர், சநற்குமாரர், சநாதரர், சநந்தரர். வியாழக்கிழமையில் பூசநக்ஷத்திரத்தில் மத்தியானத்தில் வியாக்கிரபாதர் பதஞ்சலியாரிவர்கட்குத் திருநடனங்காட்டியருளினர் என்பதும். சநகர் முதலிய நால்வருக்கும் வீட்டியல்பு உணர்த்த, இறைவர் சிவயோகங்ககூடிய காலத்தில் போகத்தை இழந்து நின்ற, தேவர்களேவலால் மன்மதன் சென்று மலர்க்கணைதொடுக்க, இறைவர் நெற்றிக்கண் திறந்தனர் என்பதும் புராணவரலாறுகள். புலி என்னும் பொதுப்பெயர் மாசிலா என்னுங் குறிப்பால் புலியை ஒழித்து முநிவரை யுணர்த்தியது. வியாக்கிரபாதர் என்ற உபலக்கணத்தால் பதஞ்சலியாரையுங் கொள்ளப்பட்டது. “ஒருமொழியொழிதன்னினங்கொளற்குரித்தே" என்ற சூத்திரத்தால் அது பகுதிப்பொருள் விகுதி. (8)
------------------

முன்னாகச் சிங்கவன்மன் மூழ்கச் சிவதடத்தில்
பொன்னாக மாக்கும் புலியூரே - ஒன்னார்க்காக்
குன்றுவளை விற்போர் கொளவெடுப்போர் கூடறனிற்
சென்றுவளை விற்போர் செறிவு.    ,   (9)

இ-ள். சிங்கவன்மன் - சிங்கவன்மனென்பவன், முன் ஆக - முற்பட. சிவதடத்து இல் - சிவகங்கையில், மூழ்க - ஸ்நானஞ்செய்ய, பொன் ஆகம் ஆக்கும் - பொன்னிறம் வாய்ந்த உருவந்தந்த, புலியூர் - புலியூரானது, ஒன்னார்க்கு ஆக - பகைவர்க்காக, குன்று - மேருவை, வில்வளை - வில்லாக வளைத்து, போர்கொள்ள - போர்செய்ய, எடுப்பார் – எடுத்தவரும், கூடல் தன் இல் - மதுரையில், சென்று (வணிகவுக்கொண்டு) சென்று, விளைவிற்போர் – வளைவிற்றவருமாகிய விறைவர், செறிவு - நெருங்குமிடமாம்.
கௌடதேசத்தையாளும் ஐந்தாவது மனுவின் மனைவியரிருவருள் மூத்தவளுக்குப் பிறந்த, உடல் முழுதும் சிங்கம்போல வெண்ணிறமுடைய சிங்கவன்மரென்னும் பெயரையுடையவர் தம் தந்தையாரை நோக்கி மூர்த்திதலம் தீர்த்தங்கட்குக்செல்ல விடை கொடுமென்று அவர் அனுஞைப்பெற்று, பல இடங்களுக்குச் சென்று தெரிசித்து ஒரு வேடன் வழிகாட்டத் தில்லைவனம் அடைந்து வியாக்கிரபாதரையும், பதஞ்சலியாரையும் வணங்கியிறைவரருளால் சிவகங்கையில் மூழ்கிப் பொன்வடிவந்தாங்கிய காரணத்தால் இரணியவன்மர் எனப் பெயர்பெற்றனர் என்பதும், தாருவன முனிவர்கள் மனைவியர் கற்பினையளந்துகாட்ட இறைவர் பிக்ஷாடன மூர்த்தங்கொண்டு சென்றருளியகாலையில் அம்முனிவர் பன்னியர் கற்புநிலை கலங்கிநிற்குங்காலையில் முனிவர்கள் கண்டு மதுரையில் வணிகர் குலக்கன்னியர்களாய் அவதரியுங்களென்று சபிக்க, அச்சாபமேற்றபெண்கள் எப்போது ஒழியுமெனப் பணியும்போது, அம்மதுரையிலெழுந் தருளிய பரமசிவன் உங்கள் கையைப் பரிசிப்பர் அப்போது அகலும் என அனுக்கிரகஞ்செய்ய அவ்வாறேவந்து பிறந்தனர்கள், அவர்கள் சாபத்தை நீக்கி யருளுதற்குச் சோமசுந்தரக்கடவுள் வளைவணிகராய்வந்தனர் என்பதும் புராணவரலாறுகள். வளை என்னு முதனிலை, இறந்தகால வினையெச்சத்தில் வந்தது. (9)
---------------------

அள்ளியவா யோதனமொன் றந்தணன்வாய் வீழ்த்தகொடிப்
புள்ளருள்பெற் றுய்யும் புலியூரே - உள்ளமது
சோதிக் கவருவார் தொண்டாவோ டுன்வசமென்
றோதிக் கவருவா ரூர்.    ,   (10)

இ-ள். வாய் அள்ளிய – அலகாகிய வாயாலள்ளிய, ஒன்று ஒதனம் - ஓர் சோற்றவிழை, அந்தணன்வாய் - ஓர்மறையவன்வாயில், வீழ்த்த - வீழ்த்திய, கொடிப்புள் - காக்கையானது, அருள்பெற்று (இறைவர்) திருவருள் பெற்று, உய்யும் - பிறப்பொழிந்த, புலியூர் - புலியூரானது, உள்ளம் (திருநீலகண்ட நாயனாருடைய) மனநிலையை, சோதிக்க வருவார் - சோதிக்க வருமிறைவரும், தொண்டா - அடியவனே, ஒடு - பலியோடு, உன்வசம் என்று ஒதி - உன்வசமென்று கூறிக்கொடுத்து, கவருவார் - (பின்) அதனைக் கொள்ளைகொண்டவருமாகிய பரமனார், ஊர் - ஊராம்..
சிதம்பரந்தெரிசிக்கவந்த மறையவனொருவன் இளைப்பாலந்நகரிற் படுத்துறங்கும்போது, அன்னத்தைக் கவர்ந்துபோன காகத்தினலகினின்று ஓரவிழ்வீழ, நித்திரையாலதையறியாது அம்மறையவன் பருகினான். அந்தப்புண்ணியத்தாலக்காக்கை சிவகதியடைந்ததென்பதும், வேட்கோவர் குலத்திற்றிருவவதாரஞ் செய்த, திருநீலகண்ட நாயனார் மனைவியாரோடு சிவநேயம் பூண்டு சிவனடியார்களுக்குத் திருவோடுதரும் நியமம் பூண்டொழுகுநாளில், இவர்களன்பினை உலகத்தாரறிந்துய்யும் பொருட்டு இறைவர் ஓர் சிவயோகியாய்த் திருவுருக்கொண்டுவந்து தாம் கொண்டுவந்த திருவோட்டை அவர்கையிற்கொடுத்து இதனைச் சேமஞ்செய்துவையும் என்று கொடுத்து அதனைப்பின்பு மறைத்தருளினர் என்பதும் புராணவரலாறுகள். கொடிப்புள் பின் மொழியை விசேடித்து வந்த இருபெயரொட்டுப் பண்புத்தொகைநிலைத் தொடர். அது பகுதிப்பொருள் விகுதி. (10)
----------------------

சென்றே நலந்தீது செய்யிலொன்று கோடியதாய்ப்
பொன்றாது நீடும்புலியரே - நின்றாடும்
பொன்னம் பலவர் புகன்மறையி னாலுணரா
வன்னம் பலவர் மனை.    ,   (11)

இ-ள். சென்று - தில்லையிற் சென்று, நலம் - புண்ணியமாவது, தீது - பாவமாவது, செய்யில் - செய்தால், ஒன்று (அவற்றுள்) ஒன்று, கோடியது ஆய் - கோடியென்னும் இலக்கமுடையதாய், பொன்றாது - கெடாமல், நீடும் – விருத்தியாகும், புலியூர் - புலியூரானது, நின்று - அருளுருக்கொண்டுநின்று, ஆடும் - திருநடனம் செய்யும், பொன்னம்பலவர் - பொன்னம்பலத்தையுடையவரும், புகல் - கூறும், மறையின் ஆல் – வேத நூலளவையினால், உணராத - அறிதற்கரிய, வன்னம்பலவர் - பலநிறங்களையுடையவருமாகிய இறைவர், மனை - திருப்பதை வீடாம்.
சிதம்பரத்தில் நன்மையாவது தீமையாவது ஒருவன் செய்வானாயின் அது ஒன்று பலகோடியாகும் என்பது புராணவரலாறு. வேதமவிந்துசத்தியின் காரியப்பாடாதலால் மறையினாலுணரா எனவும், பஞ்சவன்னங்களுடையவராதலால் வன்னம்பலவர் எனவுங்கூறினார். (11)
------------------------

மாக்கள்வினை பால வயிரவன் கைச்சூலத்தாற்
போக்கிநலந் தந்தபுலியூரே - சாக்கியர்கல
மோதக் கனிவிருந்தார் முன்வணிக மாதளித்த
சூதக் கனிவிருந்தார் தோய்வு.    ,   (12)

இ-ள். மாக்கள் (அங்கு வசிக்கும்) மக்கள், வினை - (தாம் செய்யும்) தீவினைப் பயன்களை, பாலவயிரவன் - பாலவயிரவமூர்த்தி, கைசூலத்து ஆல - திருக்கரத்திலேந்திய சூலாயுதத்தினால், போக்கி - ஒழித்து, நலம் - முத்திப்பயனை, தந்த - கொடுத்தருளும், புலியூர் - புலியூரானது, சாக்கியர் - சாக்கிய நாயனார், கலமோத (அன்பால் மலரெனக்கருதி) கல்லெறிய, கனிவு இருந்தார் - மகிழ்கூர்ந்தவரும், முன் - முற்பொழுது, வணிகமாது - புனிதவதியார், அளித்த - கொடுத்த, சூதக்கனி - மாங்கனியாகிய, விருந்தார் - விருந்தினையுண்ட வருமாகிய இறைவர், தோய்வு - பொருந்துமிடமாம்.
சங்கமங்கையென்னும் பதியிற்பிறந்து முத்திபயக்கும் சமயம் எதுவென நாடிக்காஞ்சி நகரிற்சென்று பெளத்தர்கொள்கையிற்புகுந்து அது பயன்படாததென்று கழித்துச் சைவசமயமே முத்திபயக்குஞ் சமயமென்றெண்ணி யெவ்வேடம் பூண்டிருப் பினும் அன்புதான் காரணமென்று சிவநேயமிக்குடையவராய் ஒருநாள் வெள்ளிடையில் ஒரு சிவாலிங்கத் திருவுருவத்தை கண்டு மனங்கசிந்து ரோமம் புளகித்துப் பரவசத்தராய் அங்குள்ள ஓர் செங்கல்லையெடுத்தெறிய இறைவர் குழைந்தருளியேற்றனர் என்பதும், காரைக்காலில் வைசியர் குலத்திலவதரித்த புனிதவதியாரைப் பரமதத்த செட்டியார் மணம் புணர்ந்து இல்லறம் வழுவாதொழுகிச் சிவனடியாரை யுபசரித்து வாழுங்காலையில் ஓர் சிவனடியார் பசியிளைப்பால் வந்தடையக் கறியமுதுதவாமையால் அன்னம் படைத்துத் தங்கணவனுரப்பிய மாங்கனியிரண்டனுள் ஒன்றினை வைத்தருத்தினர் என்பதும், சிதம்ப ரத்தில் வசிப்போர் தீவினை செய்வாராயின் அத்தீவினைக்குத் தீர்வு வயிரவமூர்த்தி திருக்கரத்திலேந்திய சூலத்திற்கோத்துக் கழிந்தபின் சிவகதிபெறுவார் என்பதும் புராண வரலாறுகள். இயமன் கைப்பட்டு வருந்துதலில்லையென்பார் மாக்கள் வினை கைச்சூ லத்தாற்போக்கி என்றார். மக்கள் மாக்கள் நீட்டல்விகாரம். (12)
------------------

சொல்லாச் சிவசன்மா சோமநா தற்குவினைப்
பொல்லாங் ககற்றும் புலியூரே - வில்லா
வணக்குஞ் சமர்த்தினார் மாமலைதோண் மேன்மா
சுணக்குஞ் சமர்த்தினார் தோய்வு.    ,   (13)

இ – ள்: சொல்லாத – (தானறிந்ததை) கூறாத, சிவசன்மா - சிவசன்மாவென்னும் அந்தணன், சோமநாதற்கு - சோமநாதரென்னும் திருப்பதியிலெழுந்தருளிய இறைவர்க்கு, வினைபொல்லாங்கு – (செய்த) தீவினைப்பயனை, அகற்றும் - ஒழிக்கும், புலியூர் - புலியூரானது, மாமலை - பெரியமேருவை, வில்ஆக வணக்கும் - வில்லாக வளைத்த, சமர்த்தினார் - சமர்த்துடையவரும், தோள்மேல் - திருத்தோளின் மேல், மாசுணம்குஞ்சு - பாம்பின்குட்டியை, அமர்த்தினார் - தங்கச்செய்தவருமாகிய இறைவர், தோய்வு - பொருந்துமிடமாம்.
சௌராட்டதேயத்திலுள்ள சோமநாதம் என்னும் ஆலயத்தில் கார்த்திகை மாசத்தில் கார்த்திகை நக்ஷத்திரத்தில் நடக்குந் திருவிழாச் சேவிக்கச் சென்றவர்களுள், சோமசன்மாவினுடைய சரீரம் உரிஞ்சுதலால் நெய்யகல் வீழ்ந்து திருவிளக்கு அணைந்தது. அவன் அருகில் நின்ற சிவசன்மா அதுகண்டும் ஒன்றும் பேசிலன். சிலநாள் சென்று இவர்களிறந்தபின் திருவிளக்கு நெய்கவிழ்த்த பாதகத்தால் சரீரம் எல்லாம் புழுக்குடையச் சோமசன்மாவும், திருவிளக்கு நெய்கவிழ்ந்தமை கண்டுஞ் சொல்லாத சிவசன்மா கண்கள் மலைபோல் வளர நாக்கு மூன்று கூப்பிடு தூரம் நீளவும் இவ்விருவரும் பேயுருக்கொண்டு விந்தாடவியிலலைந்தனர். இவர்கள் முன்னர்ச்செய்த சிவபூசனைப்பேற்றால் வாமதேவமுனிவரைக்கண்டு தரிசித்து அவரால் தங்களுக்கு வந்த பேய்ப்பிறப்பையுணர்ந்து சிவநேயம் பிறந்து கடைத்தேறினர் என்பது புராணவரலாறு. மாகணக்குஞ்சு என்றது மரபுவழு. (13)
----------------

ஆழ்ந்தகடற் செல்வற் கடர்பிரம கத்திதனைப்
போழ்ந்தறுத் தாளுந்தென் புலியூரே தாழ்ந்தவரை
துய்யகதி யேற்றினார் சோதிவெள்ளி வெற்பனைய
வெய்யகதி யேற்றினார் வீடு.    ,   (14)

இ – ள்: ஆழ்ந்த - ஆழமாயுள்ள, கடற்செல்வற்கு - சமுத்திரபதியாகிய வருணனுக்கு அடர் – நெருங்கிய, பிரமகத்திதனை - பிரமகத்தியை, போழ்ந்து அறுத்து - வேரோடு அறுத்துக்களைந்து, ஆளும் - அடிமைகொள்ளும், தென்புலியூர் - (இமயமலைக்குத் தென்பாலுள்ள புலியூரானது, தாழ்ந்தவரை - தன்லைவணங்கிய அடியவர்களை, துய்யகதி - என்றுமுள்ள சிவகதியில், ஏற்றினார் - செலுத்தினவரும், சோதி - விளக்கமைந்த, வெள்ளி வெற்பு - வெள்ளிமலையை, அனைய - ஒத்த, வெய்ய - விரைந்துசெல்லும், கதி - வேகத்தையுடைய, ஏற்றினார் - இடபவாகனத்தையடையவருமாகிய இறைவர், வீடு – திருப்படைவீடாம்.
தனக்குப் பகைஞனாயுள்ள ஓரசுரனை வருணன் கொல்ல அவனுக்குப் போர்செய்யும் உபாயத்தைக் கற்பித்தற்பொருட்டு அவன் ஆசிரியன் இருளில்வர, அவ்வாசிரியனைப் பகைவனென்று கருதிப் பாசத்தை விடுத்தனன். அதனால் ஆசிரியனிறக்க அக்கொலைப்பாதகம் காரணமாக ஓர் பிசாசுதோன்றிக் கால்களு ங்கைகளுங் கழுத்தோடு பொருந்தும்படி கட்டிக் கடலிற் போட்டது. நெடுநாள் கடலிலழுந்திக்கிடந்த அவ்வருணனுக்குச் சிவபெருமானார் எழுந்தருளி மாசிமகத்தில் காட்சிதந்து அப்பாசக் கட்டு அறும்படியருள்செய்தனர் என்பது புராண வரலாறு, அன்று முதல் அத்துறை பாசமறுத்த துறையெனப் பெயர் பூண்டது. (14)
--------------

வன்மதிநீ சன்கடனீர் மாசிமகத் தாடவவன்
புன்மைதவிர்த் தாளும் புலியூரே - தென்மதுரைக்
கற்களிறுக் கிக்களித்தார் கானவனெச் சிற்சுவைக்கப்
பற்களிறுக் கிக்களித்தார் பற்று.    ,   (15)

இ-ள். வன்மதி - கொலைகளவாதியின் முதிர்ந்த அறிவையுடைய , நீசன் - ஓர்புலையன், கடல்நீர் - கடலென்னுந்தீர்த்த நீரில், மாசிமகத்து ஆட - மாசிமாதத்தில் வரு மகநக்ஷத்திரத்தில் நீராட, அவன் புன்மைதவிர்த்து - அவனது மலப்பற்றை யொழித்து, ஆளும் புலியூர் - அடிமை கொண்ட புலியூரானது, தென்மதுரை - தென்றிசையிலுள்ள மதுரையில், கல்களிறு - கல்யானைக்கு, இக்கு அளித்தார் --- கரும்பினை யுண்பித்தவரும், கானவன் - வேடர்குலத்திற்றோன்றிய கண்ணப்பநாயனார், எச்சில் - எச்சில் செய்த தசையை, சுவைக்க - சுவைபார்த்தருள, பல்கள் இறுக்கி - பற்களாலிறுகமென்று, களித்தார் - களிகூர்ந்தவருமாகிய இறைவர், பற்று - அன்புகூர்ந்த இடமாம்.
பாசமறுத்த துறையென்னுங் கடற்றீர்த்தத்தில் மாசிமகத் திருநக்ஷத்திரத்தில் ஸ்நானஞ்செய்தவர் பிறப்பொழிந்து முத்தி பெறுவார். அதனையுணராத கொடிய நீசனொருவன் அத்திருநக்ஷத்திரத்தில் நீராடிப் பிறப்பொழிந்தானென்பதும், மதுரைத்திருப்பதியி லெழுந்தருளிய சோமசுந்தரக்கடவுள் தமதிச்சையால் எல்லாம்வல்ல சித்தராய்த் திருவிளையாடல் செய்தருளுங்காலையில் அக்காலத்தரசாண்ட அபிடேக பாண்டியன் கேள்வியுற்று அவரை வரும்படி சிலரையேவ, அரசனால் எமக்கு ஆகுங்காரியம் என்னவென்று மறுத்தருளுங்காலையில் ஓர் நாள், அப்பாண்டியன் திருக்கோயிலுக்குப் பரிசநத்தோடு வரும்போது அவனுக்குக் காட்சிதந்தருளத் திருவுளங்கொண்டெதிர்ப்பட்டருளினர். அப்பாண்டியனோக்கி யவரியல்பு தெரிந்து தன்னைக் காணவந்த ஒரு வேளாண்மகன் கையுறையாகக் கொடுத்த கரும்பினை நீர் எல்லாம்வல்ல சித்தராயின் இந்தக்கல்யானை தின்னக்கொடும் என்று நீட்டப் புன்னகையரும்பி யக்கல்யானைக்கு அருத்தினார் என்பதும், திருக்காளத்தியென்னுந் திருத்தலத்தினருகிலுள்ள உடுப்பூரில் வேடர்குலத்தலைவனாகிய நாகன் செய்த தபோபலத்தால் திருவவதாரஞ் செய்து திண்ணனார் எனத்திருநாமம் பூண்டருளிய கண்ணப்ப நாயனார் வெட்டஞ்செய்த மிருகத்தின் கொழுந்தசையை, அம்பாலரிந்தெடுத்து நெருப்பிற்பதமாகக் காய்ச்சி வாயிலிட்டுப் பக்குவம்பார்த்துச் சிறந்ததசையைக் கல்லையிலிட்டூட்ட உண்டனர் என்பதும் புராண வரலாறுகள் . (15)
------------------

மேவுநடுக் கங்கடமை வீட்டியெவர்க் குங்காயாம்
பூவணன்காக் குந்தென் புலியூரே - கோவணஞ்சீர்த்
தட்டிடவென் றொப்பினார் தம்பிறவி வல்லிருளை
அட்டிடவென் றொப்பினா ரார்வு.    ,   (16)

இ-ள். எவர்க்கும் - அடியார்களெவர்க்கும், மேவும் - பொருந்திய, நடுக்கங்கள் தம்ஐ - துன்பங்களை, வீட்டி - அழித்து, காயாம் பூவண்ணன் - காயாம்பூவைப்போலுங் கரியநிறத்தையுடைய திருமால், காக்கும் - அன்போடுகாக்கும், தென்புலியூர் -தென்பாலுள்ள புலியூரானது, கோவணம் - கோவணத்தை, சீர் - பொலிவமைந்த, தட்டு இட - தட்டிலிடக்கடவாய், என்று - என்றருள, ஒப்பினார்தம் - உடன்பட்ட அமர்நீதிநாயனாரது, பிறலிவல் இருள்ஐ - பிறவியென்னும் போக்குதற்கு அரிய இருளினை, அட்டிடவென்று - வேரோடறுக்கவென்று, ஓம்பினார் - பாதுகாத்த இறைவர், ஆர்வு - அன்புகூர்ந்திருக்கு மிடமாம்.
அட்டிட என்று ஒப்பினார் ஒழிக்கச் சூரியனுக்கொப்பா யுள்ளவரும் எனப்பொருள் கொள்ளுதலும் ஒன்று.
திருமால் திருக்கயிலையில் ஓர்நாள் இறைவரை வணங்கிச் சிற்சபையில் தேவரீர் திருநடனத்தினை யென்றுந்தரிசிக்க அருளாயென்று குறையிரக்க, மகமேருவின் கொடுமுடி மூன்றனுள் தென்பாற்சிகரம் கனகசபையாதலால் அம்மலையின் மேல்பாற் கொடுமுடியிலிருந்து தரிசித்து நமது அடியவருள் நீயுத்தமன் ஆதலால் அவர்களைப் பாதுகாத்து வருவாய் என்பதும், வணிகர் குலத்தில் திருவவதாரஞ் செய்த அமர்நீதி நாயனார் திருநல்லூரில் ஓர்திருமடம் கட்டுவித்துச் சிவனடியார்களைப் பாதுகாத்து வருகையில், இவர் சிவநேயத்தை யுலகினரறிந்துய்யப் பிரமசரியத் திருவருவங்கொண்டருளிவந்து தண்டிலிருந்த கோவணத்தை யவர்கையிற் கொடுத்து நீராடி வருகின்றோம் அதுகாறுமிதனைக் காப்பாயென்று கொடுத்து மழையில் நனைந்து வந்து நமது கோவணத்தைக் கொடுமென்று கேட்க, அவர்மாயையால் மறைந்த அக்கோவணத்தைத் தேடிக்காணாமையால் அஞ்சிநிற்க இறைவர்கண்டு வேறுள்ள இக்கோவணத்துக்கு நிகராகக்கொடுமென்றருளினார். துலைநாட்டி யோர்தட்டி லக்கோவணத்தையிட்டு மற்றோர்தட்டில் தம்மிடத்திலுள்ள ஆடை, பொன் முதலியவற்றையிட்டும் நிகரில்லாமையால் தாமும் ஏறிச்சிவபுரியை யடைந்தனர் என்பது புராணவரலாறுகள். (16)
---------------------

நேயமனை யாளுடனே நீலகண்ட னார்முதுமை
போயிளமை பெற்றபுலியூரே - தீயமலத்
தோடும்போ தங்கெட்டா ருள்ளத்தா ரன்றிருவர்
தேடும்போ தங்கெட்டார் சேர்வு.    ,   (17)

இ-ள். நேயம் - சிவநேயமிகுந்த, மனையாள் உடன் - தமது மனையாளோடு, நீலகண்டனார் - திருநீலகண்ட நாயனார், முதுமைபோய் - மூப்புப்பருவத்தினின்று நீங்கி, இளமைபெற்ற - இளமைப் பருவத்தையடைந்த, புலியூர் – புலியூரானது, தீயமலத்து - கொடிய ஆணவமலத்தில், ஓடும் போதம் கெட்டார் - செல்லும் தற்போதமிழந்த அடியவரது, உள்ளத்தார் - இதயத்திலுள்ளவரும், அன்று - அக்காலையில், இருவர் தேடும் போது - அரிபிரமர் தேடுங்காலையில், அங்கு - அவ்விடத்தில், எட்டார் - அடைதற்கரியவருமாகிய இறைவர், சேர்வு - வாசஞ் செய்யும் இடமாம்.
சிதம்பரத்தில் வாழும் வேட்கோவர் குலத்தில் திருவவதாரஞ்செய்து சிவநேசமுடையவராய்ச் சிவனடியார்களுக்குத் திருவோடுகொடுக்கும் தொண்டுபூண்டு இல்லறத்தில் வாழுங்காலையில், இன்பத்துறையில் இச்சைகொண்டிருத்தலை மனைவியார் அறிந்து, எம்மைத் தீண்டுவிராயின் திருநீலகண்டம் எனச்சபதங்கூற, அதுகேட்டு அஞ்சி உம்மையன்றி யெந்தமாதரையும் மனத்தாலும் தீண்டேனென்று அவ்வாறேயிருந்து முதுமையடைந்த காலத்தில் இவர்கள் அன்பினையுலகறிந்து கடைத்தேற நடராஜப்பெருமானார் ஒரு சிவயோகிபோல எழுந்தருளி அந்நாயனாரைக் கண்டு இத்திருவோட்டினை நாம் கேட்கும் போது கொடுக்கவேண்டும் என அவரிடம் வைத்து அது மறையச்செய்து மீண்டு சென்று கேட்கும்போது, அது அங்கில் லாமையால் மயங்கிப் பயந்து வந்து சொல்ல, அச்சிவயோகியார் நாம் நம்போம், உமது மனைவியார் கையைப் பற்றி இக்குளத்தில் மூழ்கிச் சொல்கென ஒரு தண்டத்தினிருதலையையு மனைவியாரும் தாமும் பற்றி அத்திருக்குளத்தில் இளமையோடு வந்தனர்கள் என்பது புராணவரலாறு. (17)
---------------------

அந்நாட் சிகைவிளக்கேற் றன்பினுக்கு முத்திகணம்
புன்னாயர்க் கீயும் புலியூரே --- எந்நாளும்
அன்பர் கருத்துடையா ரன்பரிடத் தன்பில்லா
வன்பர் கருத்துடையார் வாழ்வு.    ,   (18)

இ - ள். அ நாள் - அக்காலத்தில், சிகை - தமது சிகையினை, விளக்கு ஏற்று - திருவிளக்காக ஏற்றிய, அன்பினுக்கு -- அன்பின் பொருட்டு, முத்தி - மோக்ஷத்தை, கணம்புல்நாயர்க்கு - கணம்புல்லநாயனார்க்கு, ஈயும் -- கொடுத்தருளிய, புலியூர் - புலியூரானது, எ நாள் உம் - எக்காலத்திலும், அன்பர் - மெய்யன்பினையுடையவரது, கருத்து - மனத்தினை, உடையார் - திருக்கோயிலாக உடையவரும், அன்பர் இடத்து - தமது அடியவரிடத்து, அன்பு இல்லாத - அன்புபூண்டொழுகாத, வன்பர் - புறச்சமயிகளுடைய, கருத்துடையார் - பிறப்பினையொழிக்காதவரும் ஆகிய இறைவர், வாழ்வு – வாழுமிடமாம்.
இருக்குவேளுரில் திருவவதாரஞ் செய்து மெய்யன்பு பூண்டு செல்வத்தாலான பயன் திருவிளக்கிடுதலேயெனத் தெளிந்து அப்பணி பூண்டொழுகுநாளில், செல்வங் குறைவுபட்டுவருதலைக்கண்டு சிதம்பரத்திற்குவந்து அங்குள்ள திருப்புலீச்சரத்தில் தமது வீடுமுதலிய எல்லாப் பொருள்களையும் விற்று அத்திருப்பணியை வழுவாது நடத்தி வரும்போது, அதுவும் ஒழியக்கடன் வாக்குதற்கு அஞ்சிக் கணம்புல்லரிந்து விற்று அப்பொருளைக் கொண்டு அத்திருப்பணி நடத்திவந்தனர். ஒருநாள் சிவபெருமான் அருளால் அதுவும் விலைப்படாமையால் திருப்பணிக்கு முட்டுப்பாடுவாராமல் சந்நிதியிற் குவித்தெரிக்கத் தாம் குறித்த காலளவைக்குக் சரிவாராமையால் தமது சிகையைத் திரித்து எரித்துச் சிவகதி பெற்றனர் என்பது புராண வரலாறு. (18)
----------------

தாவோமத் தானீசந் தான்போய்க் கதிநாளைப்
போவோமென் பார்சேர் புலியூரே - மாவாகச்
சம்புவைச்செய் தேமுனிந்தார் தந்தவத்தி சாயவில்லில்
அம்புவைச்செய் தேமுனிந்தா ரார்வு.    ,   (19)

இ-ள்: தாவு ஓமத்து ஆல் - (தில்லைவாழந்தணர் வளர்த்த) வேள்வித்தீயினால், நீசம் தான் போய் - புலைத்தன்மை கழிந்து, நாளைப் போவோம் என்பார் - (சிதம்பரத்திற்கு) நாளைக்குச் செல்வோம் என்ற காரணத்தால் வந்த திருநாளைப்போவார் என்னுந் திருநாமமுடைய நாயனார், கதிசேர் - முத்தியடைதற்கு எல்லையாகிய, புலியூர் - புலியூரானது, சம்பு ஐ - நரியை, மா ஆக செய்து - குதிரைகளாகச் செய்து, முன் - முற்காலத்தில், ஈந்தார் – (அரிமருத்தனபாண்டியனுக்கு) தந்தவரும், தந்த (சமணர்கள்) ஏவிய, அத்திசாய - யானையிறக்க , வில் இல் - கோதண்டத்தில், அம்பு வைச்சு ஏவி - அம்பினை யேறிட்டுக் கோபித்தவருமாகிய இறைவர், ஆர்வு - தங்குமிடமாம்.
ஆதனூரில் புலைச்சேரியர் செய்ததவத்தால் திருவவதாரஞ்செய்த நந்தனார் என்பவர் சிவநேயமுடையவராய்ச் சிவாலயங்களிலிருக்கும் பேரிகைக்குத் தோலிட்டு வார்விசித்தல் முதலான திருப்பணிகளைச் செய்து சிதம்பரம் போய் நடேசரைத்தரிசனஞ் செய்ய வேண்டுமென்னும் ஆசைமுளைக்க, இரவெல்லாந்துயிலாது விடிந்தபின்பு, அவ்வெல்லையிற்போவது நமதுகுலத்துக்கு ஒவ்வாதாதலால் போகலாகாதென்று நின்றுவிடுதலும், நாளைப்போகலாமென்று சிந்தித்தலுமாயிருந்து, ஒருநாள் சென்று ஊரெல்லைக்குச் சமீபமாய்ப் போயங்கு நடக்கும் வேள்விகளை நோக்கி யினிப் போகலாகாதென்று இரவும் பகலும் அவ்வெல்லையைப் பிரதக்ஷிணஞ் செய்து நமக்கெப்போது தரிசனங் கிடைக்குமென்று தளர்ச்சியடையும் போது இறைவர் திருவுளம் இரங்கி அந்தணர்களுக்குக் கட்டளையிட, அவ்வந்தணர்கள் உபசாரத்துடனழைத்து தென்திருமதிலுக்குப் புறத்தில் நடேசர் சந்நிதிக்கு நேராகத் தீயமைக்க நாயனார் மூழ்கிச் சடைமுடி உபவீதம் விளங்கத் தவமுநிவராயெழுந்து சிற்சபைக்குச் சென்று தரிசித்து முத்தியடைந்தனர் என்பதும், அரிமருத்தனபாண்டியன் குதிரை வாங்கக் கொண்டு சென்று தனது பொருளையிறுக்க, வாதவூரடிகளைப் பொறுத்தந்திரங்கி நரிகளைக் குதிரைகளாக்கிக் கொடுத்தருளினர் என்பதும், விக்கிரம பாண்டியனோடு போர்செய்தற்கு அஞ்சிக் காஞ்சித்திருநகரையாளும் ஒரு சோழன், தனது ஆசிரியர்களாகிய சமணர்களை வருவித்து ஆபிசாரவேள்வியொன்று செய்து மதுரைத்திருநகரையழிக்க யானையொன்றையேவ, அதனையுணர்ந்து சிவபெருமானார் திருவடிகளை யப்பாண்டி யன் சரணடைந்தனன், அதற்கு இறைவர் வேடுவத் திருவுருவம் கொண்டு அந்த யானையை யெய்தனர் என்பதும் புராணவரலாறுகள். ஈந்தார் குறுக்கல் விகாரம். வைத்து வைச்சுமரூஉ) (19)
-----------------

சிற்ககனத் தற்சொருபச் சீரகத்தைச் சேந்தனுமுன்
புற்கையிட்டுப் பெற்ற புலியூரே - நற்கொடிக்கோர்
தாயுமா னார்கொடியார் தங்கள்வினைத் தீங்கொடியார்
பாயுமா னார்கொடியார் பற்று.   ,   (20)

இ - ள். சிற்க கனம் தற்சொருபம் --- ஞானாகாசமாகிய சொருபமாயுள்ள சிவத்தின் சீர் அகத்து - பொலிவமைந்த பரமுத்தியை, சேந்தன் உம் - சேந்தனாரும், முன் – முற்போழ்தில், புற்கை இட்டு - புல்லரிசியாலமைந்த கூழினையூட்டி, பெற்ற – (அதனால்) அடைந்த, புலியூர் - புலியூரானது, ஓர் நல்கொடிக்கு - அழகிய பூங்கொடி போன்ற ஒரு வணிககுலப்பெண்ணுக்கு, தாயும் ஆனார் - அன்னையுமாய் வந்தவரும், கொடியார் தங்கள் - கொடுமையாளரது, வனை தீங்கு ஒடியார் - தீவினையை யொழிக்காதவரும், பாயும் ஆன் ஆர் கொடியார் - பாய்ந்து செல்லும் இடபமெழுதிய கொடியையுடையவருமாகிய இறைவர், பற்று - அன்புகூர்ந்திருக்குமிடமாம்.
சேந்தனார் என்னுந் திருநாமமுடையவர் சிவநேயம் பூண்டு சிவனடியவர்க்கு உணவருத்தி யில்லறம் வழுவாது நடக்குங்காலையில் வறுமை மேலிட உணவில்லாது மக்கள் வாடுதலை மனைவியார் நோக்கி மங்கலநாணவிழ்த்து, இதனை விற்றாயினும் உணவிற்கு வேண்டும்பொருளைக் கொள்கவெனத் தமது நாயகன் கையிற்கொடுக்க, அச்சேந்தனாரும் அதுபெற்று மாறிப் புல்லரிசிகொண்டு தம்மனையாள் கையிற்கொடுத்தனர். அவர் அதுபெற்றுத் திருவமுது அமைத்துக் கணவர்க்குணர்த்தச் சிவபூசனை முடித்து வரும்போது நடராசர் ஓர் சிவனடியார் திருவுருக் கொண்டெழுந்தருளி யெமக்கு ஆற்றக்கூடாத பசி வந்தது, அதைத் தவிர்க்க வேண்டுமெனக்கூற, தமது மக்கள் பசியும் நோக்காது அவர் பசியாற்றக் கூழுணவை யூட்ட முற்றுமுண்டு அவர்கள் பசியையு மாற்றி முத்திதந்தனர் என்பதும், திரிசிரபுரத்தில் வாழும் தநகுத்தனென்னும் வணிகன், காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள அரதநகுத்தன் மகளை மணம் புரிந்து வாழுங்காலையில் அவன் மனைவியார் சிவநேயம்பூண்டு சிராமலைப் பெருமானாரை வழிபட்டொழுகு நாளில் கருப்பம் வாய்ந்தனர். இதனைக் கேள்வியுற்ற அரதநகுத்தன் மனைவி காயமுதலிய மருந்தும் சிற்றுணவுகளும் அமைத்துச் சிலதியர் தலையிலேற்றித் திரிசிரபுரத்திற்கு வரும்போது, பெருமழையால் காவிரிநதி பெருக்கெடுத்துக் கரைவழிந்து வழிமறிக்க அங்குத் தங்கினள். பேறுகாலங் கிட்டியதாதலால் இறைவர் அரதநகுத்தன் மனைவியைப் போலத் தமதிச்சையால் திருவருக்கொண்டு காயமுதலியவற்றைத் தோழியர் தலையிலேற்றித் தள்ளாடி வழிநடந்த பேரிளைப்புடையவர் போல வேசாறித் தம்மகளில்லத்திற்கு வந்து உச்சிமோந்து மனங்குளிரப்பேசி மருத்துவம் பார்த்தனர் என்பதும் புராண வரலாறுகள் தத் அது, சிற்கனமாகிய அது என்பது பொருள். தந்தையாதலுமன்றி யெனநிற்றலால் உம்மை இறந்தது தழீஇய உயர்வுசிறப்புப் பொருட்டு. (20)
----------------

விண்டலமே போற்றும் விராட்புருட னாரிதய
புண்டரிக மான புலியூரே - சண்டன்வலி
மைத்தாம் பொழிவித்தார் வத்தொடு மார்க்கண்டருக்கன்
பைத்தாம் பொழிவித்தார் பற்று.    ,   (21)

இ-ள். விண் தலம் போற்றும் விண்ணுலகம் வணங்கும், விராட்புருடனார் - விராட்புருடனாரது, இதயம் புண்டரிகம் ஆன - இதயதாமரையாயுள்ள, புலியூர் - புலியூரானது, சண்டன் - இயமன் (வீசிய) வலிமைதாம் பு- வலிய பாசத்தை ஒழிவித்து – (வீழாமல்) ஒழித்து, ஆர்வத்து ஒடு - விருப்பத்தோடு, மார்க்கண்டருக்கு - மார்க்கண்டேயருக்கு, அன்பு ஐ - அன்பினை, தாம்பொழிவித்தார் - தாம் செய்து காத்தருளிய இறைவர், பற்று - அன்புகூர்ந்திருக்குமிடமாம்.
அரைக்குமேல் ஏழுலகும் அரைக்குக் கீழ் ஏழுலகுந் திருவுருவமாகவுடைய விராட்புருடனார்க்குச் சிதம்பரம் அநாகதத்தானம் என்பதும், திருக்கடவூரில் தம்மை வழிபடும் மார்க்கண்டேயர்மேல் இயமன் கோபித்து வீசிய பாசத்தையொழித்து அவனை வதைத்து இவரைக் காத்தனர் என்பதும் புராணவரலாறுகள். அன்பு ஆசைக்குக் காரணமாதலால் ஆர்வத்தொடு என்றார். மிருக்கண்டூயர் புத்திரர் மார்க்கண்டேயர். இது தத்திதாந்தபதம். (21)
-----------

குஞ்சிதத்தாள் கண்டவரைக் கும்பிடப்பெற் றோர்கள்விரும்
புஞ்சிவவீ டெய்தும் புலியூரே - செஞ்சடையிற்
சின்ன விளம்பிறையார் தில்லைமறை யோருருநா
மென்ன விளம்பிறை யாரில்.   ,   (22)

இ-ள். குஞ்சிதம் தாள் கண்டவர் ஐ - மேலெடுத்தவளைந்த திருவடியைத் தரிசித்தவர்களை, கும்பிட பெற்றோர்கள் - வணங்கப்பெற்றவர், விரும்பும் சிவ வீடு - விரும்புஞ்சிவகதியை எய்தும் புலியூர் - அடைதற்கேதுவாயுள்ள, புலியூர் - புலியூரானது, செஞ்சடை இல் - செவந்த சடாபாரத்தில், சின்ன - உருவிற் சிறிய, இளம்பிறையார் – இளஞ்சந்திரனையணிந்தவரும், தில்லை மறையோர் - தில்லைவாழந்தணரது, உருநாம் என்ன - திருவுருவம் நாமென்று, விளம்பு இறையார் - கூறும் இறைவருமாகிய பெருமானார், இல் - வாழும் படை வீடாம்.
இரணியவன்மனார் வியாக்கிரபாதர் கட்டளையால் அந்தர்வேதியிலிருந்த திருவுடையந்தணாளர் மூவாயிரவரையும் வணங்கித் தேர்மேலேற்றிக்கொண்டு தில்லையையடைந்து அந்த வியாக்கிரபாதரையும் பதஞ்சலியாரையும் வணங்கித் தமதுகெளடதேசத்தில் நிகழ்ந்த செய்தியைக் கூறித் திருவுடை யந்தணாளர் வந்ததையுங் கூறினார். அம்முனிவரிருவரும் எதிர்கொள்ள, அவ்வந்தணர்கள் தேரினின்றிறங்கித் தங்களை யெண்ணிக்காட்ட மூவாயிரவர் என்னுந்தொகையில் ஒருவர் குறைந்தமையால் திகைத்து நிற்க, நடராசப்பெருமானார் இவ்வந்தணர்க ளெல்லாரும் நம்மையொப்பார், நாமிவரையொப்போம், ஆனால் நாமிவருள் ஒருவர் என அருளிச்செய்தனர் என்பது புராணவரலாறு. சின்ன - சிறுமையென்னும் பண்பின்றிரிபு. (22)
--------------

தேவமறை யாகமங்க டென்கயிலை யென்று தொழப்
பூவுலகி லோங்கும் புலியூரே - மூவுலகும்
வந்துதிக்கு முன்புணர்வார் வாழ்வருள வப்பர்தம்பா
தந்துதிக்கு முன்புணர்வார் சார்பு    ,   (23)

இ-ள். தேவமறை ஆகமங்கள் - தெய்வத்தன்மையையுடைய வேதங்களும் ஆகமங்களும், தென்கயிலை என்று தொழ - தென்கயிலையென்று வணங்க, பூ உலகு இல் - நிலவுலகில் ஓங்கும் புலியூர் - சிறந்து விளங்கும் புலியூரானது, மூ உலகு உம் - சுவர்க்கமத்திய பாதலம் என்னும் மூன்றுலகும், வந்து உதிக்கு முன்-- வந்து தோன்றுதற்கு முன்னே, புணர்வார் - தம்மோடு பேதமாயுள்ள, வார் வாழ்வு அருள் - எல்லையில்லாத பேரின்ப வாழ்வினையருள, அப்பர் - திருநாவுக்கரசுகள், தம்பாதம் - தமது திருவடிகளை, துதிக்குமுன்பு - துதித்தற்குமுன்னம், உணர்வார் - (அத்துதியைத் திருச்செவியில்) எற்ற இறைவர், சார்பு - சார்ந்து சிக்குமிடமாம்.
வேதங்களிலும் ஆகமங்களிலும் தில்லையைத் தென்கயிலையென்று கூறுதலால் தேவமறையாகமங்கள் தென்கயிலையென்றுதொழ எனவும், பேரின்பவாழ்வு தோற்றக் கேடுகளில்லாததாதலால் மூவுலகும் வந்துதிக்கு முன்புணர் எனவுங் கூறினார். அஃறிணையொருமையும்மைத் தொகையாதலால் மறையாகமங்கள் என இறுதியிற் பன்மையீறுபெற்று வந்தன. (23).
--------------

நன்மாத வத்தொருவ னாடும் படிக்கிரங்கிப்
பொன்மாரி பெய்யும் புலியூரே --முன்மார்பிற்
பன்னாகத் தந்தார் பகர்தமிழ்க்காச் செங்கறனைப்
பொன்னாகத் தந்தார் புரி.    ,   (24)

இ-ள். நல் மாதவத்து ஒருவன் - வழுவில்லாத பெரிய தவத்தைப்பூண்ட ஒரு முனிவன். நாடும்படிக்கு - தான் மேற்கொண்ட (திருப்பணியை) முட்டின்றி முடித்தற்கு, இரங்கி - கருணைகூர்ந்து, பொன்மாரி - பொன் வருஷத்தை. பெய்யும் - சொரியும், புலியூர் - புலியரானது, மார்பு இன்முன் - திருமார்பின் முன்னே, பல்நாகம் - பல சர்ப்பங்களாகிய, தந்தார் - உபவீதத்தையுடையவரும், பகர் தமிழ்க்கு ஆக - தம்மேற்பாடிய பாசுரங்களுக்காக, செங்கலதன் ஐ - செங்கல்லை, பொன் ஆகதந்தார் - பொற்கட்டிகளாகத் தந்தவருமாகிய இறைவர், புரி - வாசம் செய்யும் திருநகராம்.
ஒருமுனிவர் சிதம்பரத் திருப்பணியை மேற்கொண்டு முடித்தற்கு இடையில் பொருளில்லாமையால் வருந்துங்காலையில் இறைவர் திருவுளமிரங்கிப் பொன்வருஷஞ் சொரிவித்தார் என்பது ஓர் வரலாறு. திருவாரூரில் திருப்பங்குனி யுத்திரத்திருவிழாவிற்குப் பரவையார் குறைமுடிக்கத் திருப்புகலூர்க்குச் சென்றருளி யிறைவர் திருவடிவணங்கித் திருப்பதிகம் பாடித் தமது குறைமுடியாமையால் திருமடத்திற்குச் செல்லாது திருமுற்றத்தில் ஓரிடத்திருக்கும்போது, இறைவர் அருளால் சிறிது நித்திரைவர அங்குக் கோயிற்றிருப்பணிக்காகவந்த செங்கலைத் தலையணையாக அடுக்கி யுத்தரீயப்பட்டாடையை விரித்துத் திருக்கண்டுயிலும்போது அடியார்களுந் துயில் கொள்ளச் சிறிதுபோது சென்று துயிலுணர்ந்து, அவ்விறைவரருளால் செங்கல் பொன்னாக இருக்கக்கண்டு மகிழ்கூர்ந்தனர் என்பது புராணவரலாறு. தமிழ்க்காக ஆக என்பது இவ்வுருபின் மேல்வந்த நான்காம் வேற்றுமைச் சொல்லுருபு. நாடும்படிக்கு நாடற்கு எனக்கொள்க. (24)
---------------

நாமகடென் கீழ்த்திசை யினாட்டுங் குணதிசையிற்
பூமகளர்ச் சிக்கும் புலியூரே - தாமலதோ
ராதரவில் லார்வாழ்த் தடியர்தமக் கங்கையிற்பொற்
பூதரவில் லார்வாழ் புரம்.    ,   (25)

இ-ள். தென் கீழ் திசை இல் – தென்கிழக்குத்திசையில்; நாமகள் -- கலைமகளும், நாட்டும் --- எடுத்துக்கூறும், குணதிசை இல -- கீழ்த்திசையில், பூமகள் - திருமகளும், அர்ச்சிக்கும் - பூசித்துப் பேறுபெறும், புலியூர் - புலியூரானது, வாழ்த்தும் அடியார் தமக்கு – தம்மை வாழ்த்தும் அடியவர்களுக்கு, தாம் அல்லது - தாமல்லாமல், ஓர் ஆதரவு இல்லார் - ஓர் பற்றுக்கோடில்லாதவரும், அங்கை இல்--- தமது திருக்கரத்தில், பொன்பூதரம் வில்லார்.-- பொன்மலையை வில்லாக வுடையவருமாகிய இறைவர்; வாழபுரம் -- வாழுந்திருநகராம்.
தம்மை வாழ்த்தும் அடியார்களுக்குத் தாம் பற்றுக்கோடாயுள்ளார் என்பார் தாமலதோர் ஆதரவில்லார் என்றார். (25)
----------------

வாசனைசேர் மாமலரோன் மாமறைமூ வாயிரவர்
பூசனைசெய் தேத்தும் புலியூரே - யோசைதரு
பாற்சங் கரியார் பதுமத்திருக் கணிந்தோர்
பாற்சங் கரியார் பதி .    ,   (26)

இ-ள்; வாசனை சேர் -- வாசமிக்க, மாமலரோன் - பெருமையமைந்த தாமரைமலரில் வசிக்கும் பிரமனும், மா-- மகத்துவமுடைய, மறைமூவாயிரவர் - திருவுடையந்தணாளர் மூவாயிரவரும், பூசனை செய்து - பூசித்து, ஏத்தும் – வணங்கும்; புலியூர் -- புலியூரானது, ஓசைதரு -- கோஷிக்கும், பால்சங்கு – வெள்ளிய பாஞ்சசன்னியத்தையேந்திய, அரியார் - திருமால் (பேர்த்துச்சாத்திய) பதுமம் திருக்கு – திருத்தாமரையாகிய கண்ணினை, அணிந்து - தரித்து, ஓர்பால் - ஓரிடப்பாகத்தில், சங்கரியார் – உமாதேவியையுடையவர்; பதி - வாழுந் திருநகராம்.
பிரமன் அந்தாவேதியில் தாம்செய்யும் வேள்வியைத் திரு வுடையந்தணாளரைக்கொண்டு முடித்துப் பேறுபெற்றமையால் பிரமனொடு கட்டியெண்ணினார். சலந்தராசுரனை வகிர்ந்த சக்கரத்தை விரும்பித் திருமால் சிவபெருமானைப் பூசித்து வருங்கால் ஓர்நாள் அவரன்பைச் சோதித்தற் பொருட்டு அருச்சித்தற்குரிய ஆயிரந்தாமரையுள் ஒன்றை மறைத்தருள, அதற்குப் பிரதியாகத் தமது திருக்கண் இடந்து சாத்தினார் என்பது புராண வரலாறு. எண்ணும்மை தொகுத்தல். (26)
---------------

ஓதுபசி யாலெருவை யுண்ணவிறக் குங்கயற்கப்
போதுகதி நல்கும் புலியூரே - பூதிவெகு
வாயிடுமா கத்தனார் வன்கமர்வாய் மாவடுவை
வாயிடுமா கத்தனார் வாழ்வு.   ,   (27)

இ-ள். ஓது பசி ஆல் - சொல்லுந் தீப்பசியினால் எருவை உண்ண - பருந்து கவ்வியுண்ண, இறக்கும் கயல்கு - உயிர்விடுங் கயல்மீனுக்கு, அ போது - அக்காலையில், கதி நல்கும் - முத்திதரும், புலியூர் - புலியூரானது, பூதி - திருநீற்றை, வெகுவாய் இடும் - மிகவுஞ்சண்ணித்த, ஆகத்தனார் - திருமேனியையுடையவரும், வல் கமர் வாய் - வலிய கவரில், மாவடு ஐ - மாவின் வடுவினை, வாய் இடும் - திருவாயிலிட்டெழுந்த, மாகத்தனார் - பெரிய கடவுளரும் ஆகிய இறைவர்; வாழ்வு - வாழும் இடமாம்.
ஒருபருந்து பசியால் ஒரு கயல்மீனைக் கவ்வித் தில்லையினெல்லையில் வந்து தின்னும்போது, உயிர்விட்ட அக்கயல்மீனுக்கு நடராசப்பெருமானார் முத்தி தந்தருளினார் என்பதும், கணமங்கலமென்னுந் திருப்பதியில் வேளாளர் குலத்தில் திருவவதாரஞ் செய்து சிவநேயம் பூண்டொழுகும் அரிவாட்டாய நாயனார் இறைவருக்கு நைவேதனஞ் செய்யும்படி செந்நெல்லரிசி, செங்கீரை, மாம்பிஞ்சு இவைகளைத் திருக்கோயிலிற் கொண்டுபோய் க்கொடுக்கும் நியமம்பூண்டொழுகு நாளில், இவரன்பினை யுலகினரறிந்து உய்தற்பொருட்டுச் செல்வங்குன்றப் பெருமானார் கடைக்கணித்தலால், கூலிக்கு நெல்லரிந்து தாம் கொண்ட திருப்பணியைக் கைக்கொண்டொழுகும் நாளில், ஓர்நாள் அரிசி முதலியவற்றைத் திருக்கூடையிலெடுத்துக் கொண்டு சென்றருளும் போது காலிடறி நிலவெடிப்பில் யாவுங் கவிழ்ந்துவிட, மனம் வருந்தி அரிவாளினால் தமது கழுத்தை யரியத் தொடங்கும் போது, அவ்வெடிப்பின் வழியே திருவுளமிரங்கி யிறைவர் திருக்கர நீட்டி யவர்கையைப் பிடித்தருளியது மன்றிச் சிந்திய அப்பொருளினை நைவேதனங்கொண்டது தெரியும்படி மாம்பிஞ்சினைக் கடித்த ஓசையும் அவர் செவிக்குப் புலப்படுத்தியருளினார் என்பதும் புராணவரலாறுகள் . (27)
--------------

பத்தரைக்கொண் டேபேசாப் பாவைதனைப்பே சுவித்துப்
புத்தரையாட் கொள்ளும் புலியூரே - முத்திதரும்
பஞ்சாக் கரனார் பணிவார் வினையழன்முன்
பஞ்சாக் கரனார் பதி.    ,   (28)

இ - ள். பத்தர் ஐ கொண்டு - வாதவூரடிகளால், பேசாத பாவை தன் ஐ - மூங்கைப் பெண்ணினை, பேசுவித்து - பேசச் செய்வித்து, புத்தர் ஐ ஆட்கொள்ளும் – புத்தசமயிகளை யடிமை கொண்டருளிய, புலியூர் - புலியூரானது, முத்தி தரும் - (விதி வழி யுச்சரிப்பவர்களுக்கு) பரகதி தந்தருளிய, பஞ்சாக்கரனார் - ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை யுடையவரும், பணிவார் வினை - தம்மை வணங்கும் அடியவர் கன்மமலத்தினை, அழல் முன் பஞ்சு – தீயிலெதிர்ப்பட்ட பஞ்சுபோல, ஆக்கு அரனார் - செய்தருளுவோரும் ஆகிய இறைவர், பதி – திருநகராம்.
இலங்கையினின்றும் சிதம்பரத்தைப் புத்தபள்ளியாக்க வந்த புத்தர்கள் தில்லைவாழுந் திருவுடையர் தணாளரை வாதில் வெல்லவழைக்க, அவர்கள் நடராசப்பெருமான் கட்டளையின்படி வாதவூராளிகளுக்குக் குணர்த்தும்போது அவ்வாதவூரப் பெருமானார் அவர்களை வாதில் வெல்ல, அதனையுணர்ந்த சோழன் தன் புத்திரியின் மூங்கை நோயைத் தவிர்க்குஞ் சமயமே மெய்ச்சமயமென்றங்கு விடுக்க, அப்புத்தர்கள் மணிமந்திராதிகளால் தீர்க்க முயன்றுந் தீராதாக, அவ்வாதவூரடிகள் திருநீறு தந்தருளித் திருச்சாழலுக்கு அம்மூங்கைப்பெண் விடை தரும்படி செய்வித்தருளினார் என்பது புராண வரலாறு; பாவை உவமையாகு பெயர். (28)
-----------------

கண்ணுறுபோ தும்பவத்தைக் காய்ந்தருளு மீரைந்து
புண்ணியதீர்த் தஞ்சேர் புலியூரே – பெண்ணொருபா
கத்திருந்தார் கட்டரியார் கைகூப்பி நின்றுதுதிக்
கத்திருந்தார் கட்டரியார் காப்பு    ,   (29)

இ-ள். கண்ணுறுபோது உம் - ஆன்மாக்கள் கண்களாற் பரிசிக்கும் பொழுதிலும், பவத்து ஐ காய்ந்து - பிறப்பினையொழித்து, அருளும் - சிவபுரத்தைத் தந்தருளும், புண்ணியம் - புண்ணிய சொரூபமாகிய, ஈரைந்து தீர்த்தம்சேர் - பத்துத் திருத்தீர்த்தங்களமைந்த, புலியூர் - புலியூரானது, பெண் - உமாதேவியாரின், ஒருபாகத்து இருந்தார் - வலப்பாலிலமர்ந்தவரும், கட்டு அரியார் - பாசம் ஒழிந்த அடியவர்கள் கைகூப்பி நின்று துதிக்க - கைகுவித்து நின்று துதிக்க, திருந்தார்கண் தரியார் - புறச்சமயிகளிடத்தில் வசிக்காதவருமாகிய இறைவர் காப்பு - காவல் வாய்ந்த இடமாம்.
அடியவரிடத்து வசிப்பாரேயன்றி யல்லாரிடத்து வசியார் என்பார் திருந்தார் கட்டரியார் என்றார். கனகசபைக்கு வடக்கில் சிவகங்கையும், திருக்கோயிலுக்கு வட கிழக்கில் குய்ய தீர்த்தமும், திருக்கோயிலுக்குத் தெற்கில் புலிமடுத்தீர்த்தமும், திருப்புலீச்சரத்திற்கு முன் அனந்ததீர்த்தமும், திருவனந்தேச்சரத்திற்கு மேற்கில் நாகசேரித்தீர்த்தமும், திருக்காளாஞ்சேரியில் பிரமதீர்த்தமும், பிரமசாமுண்டி திருக்கோயிலிற்கு முன் சிவப்பிரியை தீர்த்தமும், சிவப்பிரியைக்குத் தென்கிழக்கில் திருப் பாற்கடலும், கனகசபைக்கு சிழக்கில் பரமானந்தக் கூபமும் இருத்தலால் ஈரைந்து புண்ணிய தீர்த்தஞ் சேர் என்றார். நீராடலும் பரிசித்தலும் அன்றியென நிற்றலால் உம்மை இறந்தது தழீஇய வுயாவு சிறப்புப்பொருட்டு அரியார் என்னும் குறிப்பு வினைமுற்றில் அருமை இல்லாமை மேல் நின்றது. கண்ணுறு போதே எனப்பாடமோதிப் பார்க்கும்போதே எனப்பொருள் கூறில் பார்த்தலொன்றேயமையும் அதலால் எச்சவும்மை தந்ததெனவுணர்க. (29)
--------------

முத்தீ யிடையினவி முந்தச் சொரிந்துமறைப்
புத்தேளோ மஞ்செய் புலியூரே - மெய்த்தோளின்
மாதுளவ னத்தன் வணங்குபத னாகத்தோர்
மாதுளவ னத்தன் மனை.   ,   (30)

இ-ள். முத்தீ இடையின் - வேள்வித்தீயில், அவி - அவிப்பாகத்தை, முந்த சொரிந்து - முற்படச் சொரிந்து, மறைப்புத்தேள் - பிரமன், ஓமம் செய்தற்கு ஏதுவாயிருந்த, புலியூர் - புலியூரானது, மெய்தோள் இல் - தோற்றத்தையுடைய புயத்தில், மாதுளவன் - பெருமையமைந்த துழாய்மாலையையுடையவனும், நந்தன் - பாஞ்சசன்யம் என்னுஞ் சங்கையேந்தினவமாகிய திருமால், வணங்குபதன் - வணங்குந்திருவடியை யுடையவனும், ஆகத்து - திருமேனியில், ஓர்மாது உள்ள - ஒப்பில்லாத உமாதேவியாரையுடைய, வன்னத்தன் - பஞ்சவன்னங்களையுடையவனுமாகிய இறைவன், மனை – வீடாம்.
முத்தி வேள்விக்குரிய மூன்றக்கினி. அவையாவன காரூகரத்தியம், தக்கணாக்கினியம், ஆகவனீயம். கங்கைக்கரையில் அந்தர்வேதியில் பிரமன் ஓர் யாகஞ்செய்யத் தொடங்கியதனை முடித்தற் பொருட்டுத் தில்லைவனம் அடைந்து சிவகங்கையில் ஸ்நானஞ்செய்து திருநடனத்தைத் தரிசித்துத் தில்லைவாழந்தணர்களையுந் தேவர்களையு முடன்படுத்தி வியாக்கிரபாதர் வாயிலாகக்கொண்டு சென்று வேள்விமுடித்தனன் என்பது புராணவரலாறு. சேர் என்னும் வினைத்தொகை காலங்கரந்த பெயரெச்சமாதலால் புலியூர் என்னுங் கருவிப்பொருள் கொண்டது. புத்தேள்புதுமை, அது புதுமையை விளைக்குந்தேவர் மேல் நிற்றலால் பண்பாகுபெயர், நத்தன் - வலித்தல் விகாரம். (30)
------------------

ஓர்கலையெங் கெங்கு முலாவியர்த்த யாமத்திற்
பூரணமா யொன்றும் புலியூரே--- காரணமாம்
பார்த்தாண் டவனார் பணிந்தாலு முள்ளன்பைப்
பார்த்தாண் டவனார் பதி.    ,   (31)

இ-ள். ஓர்கலை - ஒப்பில்லாத கலை, எங்கும் எங்கும் உலாவி – எந்தெந்தத் திருப்பதிகளிலும் உலவி, அத்தம் யாமத்து இல் - நடுராத்திரியில், பூரணம் ஆய் - நிறைவாய், ஒன்றும் - பொருந்தும், புலியூர் - புலியூரானது, காரணம் ஆம் - திருநடனஞ் செய்தருருளுதற்குக் காரணமாகிய, பார் – தில்லைவனத்தில்; தாண்டவன் - திருநடனத்தை யுடையவனும், ஆர் பணிந்தால் உம் – எவர் வணங்கினும் உள் அன்பு ஐ பார்த்து! - முறுகிய உள்ளன்பினை நோக்கி, ஆண்டவன் - அடிமை கொண்டவனுமாகிய இறைவன், ஆர் - எழுந்தருளும், பதி - திருநகராம்.
சிதம்பரத்தில் இறைவரருளுருவம் வசித்தருளு மற்றைத் தலங்கள்தோறும் அத்திருவுருவத்தின் கலைகளுலாவி அர்த்தயாமத்தில் அவ்வருளுருவத்தில் வந்தொடுங்குவதெனவும், தேவதாருவனம் திருநடனஞ் செய்தற்குப் பொறாமையால் பூமிக்கு நடுவாகிய தில்லை பொறுக்குந் தானமாயிருத்தலாலங்குத் திருநடனஞ் செய்தருளினார் என்பதும் புராண வரலாறுகள். ஒன்றும் என்னும் பெயரெச்சம் புலியூர் என்னும் நிலப்பொருள் கொளும். (31)
----------------

சோதிவரை மும்முடியாய்த் தோன்றா தெவர்க்குமனு
பூதிவெளி யாகும் புலியூரே - மாதொனவங்
கந்தரவல் லானாளுங் கைக்கொளப்பொற் றாளமிடுங்
கந்தரவல் லானாளுங் காப்பு.    ,   (32)

இ- ள். சோதி வரை - ஒளிவாய்ந்த மேருவின், மும்முடி ஆய - மூன்று சிகரமாய், எவர்க்கு உம் தோன்றாது - யாவர்க்கும் புலப்படாமல், அனுபூதி - சிவானுபூதியுடையவர்க்கே, வெளியாகும் - புலப்படத்தோன்றும், புலியூர் - புலியூரானது, அங்கம் - உக்கிய எலும்பினை, மாது என் - பெண்ணென்று சொல்ல, தரவல்லான் - படைக்கவல்ல ஆளுடைய பிள்ளையார், நாள் உம் - எந்நாளும், கைகொள - திருக்கரத்திற் கொண்டொத்தறுத்துப்பாட, பொன் தாளம் இடும் - பொன்னாலமைந்த தாளந் தந்தருளிய, கந்தரம் அல்லான் - திருமிடற்றில் விஷத்தின் கருநிறமுடைய இறைவர் , ஆளும் - உரிமையாகக் கொள்ளும் , காப்பு - காவலாகிய இடமாம்.
மேருவின் வடசிகரம் திருமூலட்டானமும், தென்சிகரம் கனகசபையும், மேலைச்சிகரம் சேவித்து வழிபடும் கந்திருவர் முதலியோரிடமுமாய் ஏனையோர் கண்களுக்குப் புலப்படாது சிவானுபூதியுடையவர்க்கே விளங்கும் என்பதும், திருமயிலையில் வாழுஞ் சிவநேசச் செட்டியார், கபாலீசர் திருவருளால் பிறந்த புத்திரி தோழிமாருடனே சென்று நந்தவனத்தில் மலர்கொய்யப் பாம்பு தீண்டியிறக்க, ஆளுடைய பிள்ளையார்க்கு உடைமையாகக் கருதியிருந்தமையால் தகனஞ்செய்த சாம்பலை யஸ்தி யோடு எடுத்துக் குடத்தில் வைத்து அந்தப் பெண்ணிருந்த கன்னியாமாடத்தில் வைத்து முன் போலுபசரித்து வரும்போது பிள்ளையா ரங்குவரத் தெரிசித்துப் பூசிக்க அக்குடத்தை வருவித்து அடைத்த எலும்பினைப் பெண்ணாக்கினார் என்பதும், அந்த ஆளுடைய பிள்ளையார் திருக்கோலக்காவென்னுந் திருத்தலத்திற்கு எழுந்தருளித் திருக்கரத்தா லொத்தறுத்துத் திருப்பதிகம் ஓதும்போது இறைவர் கருணை கூர்ந்து பொற்றாளம் அருளினர் என்பதும் புராண வரலாறுகள். (32)
----------------

வானவுல கேத்துதுரு வாசர்பசி யாறவுமை
போனக மளிக்கும் புலியூரே - ஆனசபை
நம்பத் துவிதத்தார் நாடரியார் மோனத்தார்
நம்பத் துவிதத்தார் நாடு.   ,   (33)

இ-ள். வான உலகு - விண்ணுலகம், ஏத்து - துதிக்கும், துருவாசர் - துருவாச முனிவர், பசி ஆற - பசி தீர்ந்திளைப்பாற, உமை - சிவகாமியம்மையார், போனகம் அளிக்கும் - திருவமுது தந்தருளிய, புலியூர் - புலியூரானது, ஆன - எடுத்த, சபை நம்பத்து விதத்தார் - பத்துவிதத் திருவவதாரமுடைய திருமால் நாடு அரியார் – வராகவுருக் கொண்டு கெடுதற்கு அரியவரும், மோனத்தார் – மௌனநிலையையுடைய சிவயோகிகள், நம்பு - விரும்பும், அத்துவிதத்தார் – அத்துவித வடிவானவருமாகிய இறைவர், நாடு - வாழும் நாடாம்.
துருவாச முனிவர் சிதம்பரந் தெரிசிக்கத் தில்லைக்கு வந்தபோது, வழிநடையிளைப்பால் பசியால் வருந்தித் தமக்கு அமுது எங்குங் கிடையாமையால் கவலையுற்று ‘எருக்கு முளைத்ததில்லை யீசனுமிங்கில்லை’ என வாயெழும்போது சிவகாமியார் ஒரு பார்ப்பனச்சிறுமித் திருவுருக்கொண்டு வந்தருளித் திருவமுது படைத்தவுடன் உண்டு பசியாறி ‘எருக்கு முளைத்தது இல்லை யீசனுமிங்குண்டு’ என்று பாடினர் என்பது ஓர்வரலாறு. சந்நம்பத்து மச்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனன், பரசுராமன், இராமன், பலபத்திரன், கண்ணன், கற்கி அத்துவிதம் ஆண்டான், அடிமையென்னும் இரண்டிகந்தது. வானமுலகு எனப்பாட மோதி வானமுநிலவுலகும் எனப் பொருள் கூறுவாருமுண்டு. (33)
--------------

வாணகையாற் றீபுரத்தின் வாழ்மூ வரைக்காவல்
பூணவளித் தாளும் புலியூரே - ஆணவத்தாம்
மெய்க்கருத்து வந்தனையான் மிக்குழலா மிக்கோர்கள்
மெய்க்கருத்து வந்தனையான் வீடு.    ,   (34)

இ-ள், வாள் - ஒள்ளிய, நகை ஆல் - புன்னகையால் மூட்டிய தீயினால், புரத்து இன் வாழ் மூவர் ஐ - திரிபுரத்தில் வாழு மூவரை காவல் பூண் - (திருவாயில்) காவல்பூண்டு நிற்க, அளித்து - கருணை செய்து, ஆளும் - அடிமைகொள்ளும், புலியூர் - புலியூரானது, ஆணவத்து ஆம் - ஆணவமலத்தால் வரும், மெய்கரு - சரீரத்தோற்றமாகிய, துவந்தனை ஆல் - பந்தத்தினால், மிக்கு உழலாமல் - கட்டுப்பட்டு மிகவும் சுழன்று வருந்தாமல், மிக்கோர்கள் - சிவஞானிகளுடைய, மெய்கருத்து - உண்மையமைந்த மனத்தினை, உவந்த - விரும்பிய, அன்னையான் - (அவர்களுக்கு) தாய்போலுள்ள இறைவன், வீடு - வாழுந் திருபடை வீடாம்.
பொன்வெள்ளி இரும்பால் பிரமன் வரத்தாலமைந்த திரிபுரங்களிலும் தாரகாக்கன், கமலாக்கன், வித்துன்மாலியென் னும் மூன்றசுரர்களும் அரசியல் செய்து சிவநேயமுடையவராய்த் தேவர்களுக்கு இடுக்கண் செய்து வாழுநாளில், தேவர்கள் வேண்டுகோளால் திருமால் புத்தவேடங்கொண்டு அப்புரத்தில் அம்மூவரையொழிய ஏனையோரையெல்லாம் மயக்கிச் சிவபெருமானாருக்குணர்த்த, அப்பெருமானார், அத்தேவர்களமைத்த தேரின்மேல் ஆரோகணித்து அப்புரத்தை நகைத்தெரித்துச் சிவநேயம் வழுவாது நின்ற அம்மூவரையும் திருவாயிற்காவலாளர் ஆகக்கொண்டருளினர் என்பது புராண வரலாறு. ஆணவமலம் கன்மமலத்துக்கு மூலமாதலால் ஆணவத்தாம் என்றார். ஆணவமாம் என்பதற்கு ஆணவத்தாலாகிய எனப்பொருள் கூறுவோர் வேற்றுமைவழியில் அத்துச்சாரியை வேறுதலைநோக்கிலர், ஆணவம், மா எனச்சொல் வகை செய்தலிங்கமையாதென்க. (34)
-------------

சம்பந்தர்க் கந்தணர்க டம்மைச் சிவகணமொப்
பும்பண்பைக் காட்டும் புலியூரே - அம்புலிவான்
எட்டாக மஞ்சார்ந்தா னேத்தமறை யோடிருபான்
எட்டாக மஞ்சார்ந்தா னில்.   ,   (35)

இ-ள். சம்பந்தர் கு - ஆளுடைய பிள்ளையார்க்கு, அந்தணர்கள் தம் ஐ – தில்லைவா ழந்தணர்களை, சிவகணம் ஒப்பும் பண்பு ஐ - சிவகணங்களொக்குந் தன்மையை, காட்டும் -- புலப்படுத்தியளும், புலியூர் - புலியூரானது, அம்புலி - சந்திரன் தவழும் என் எட்டு - ஆகாயத்தையளாவிய, ஆகம் - திருமேனி, மஞ்சார்ந்தான் - மேகத்தையொத்த திருமால், ஏத்த - துதிக்க, ஓடு - நான்கு வேதங்களோடு, இருபான் எட்டு ஆகமம் - இருபத்தெட்டாகமங்களின், சார்ந்தான் - உட்கிடையாயுள்ள இறைவன், இல் - வாழுந் திருப்படை வீடாம்.
ஆளுடைய பிள்ளையார் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாருடன் சிதம்பரத்திற்குச் சென்று நடராசப் பெருமானாரைத் தரிசித்து ஆநந்தபரவசத்தராய் அங்கிருத்தற்கஞ்சித் திருவேட்களத்தில் வசித்திருக்கும் நாளில், பெருமானாரை யருச்சிக்கத் தில்லை வாழந்தணர்கள் என்ன பேறுபெற்றார்களோ வென்னுங் கருத்துடையராய்ச் சிதம்பரத்திற்குச் சென்றருளுங் காலையில் அத்தில்லைவாழந்தணர்கள் அப்பெருமானார் திருவருளால் சிவகணங்களாகப் புலப்படத் தரிசித்தனர் என்பது புராணவரலாறு. இருபத்தெட்டாகமங்களாவன - காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கிநேயம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம். (35)
--------------

வைத்தவரு ளாற்கோவை வாதவூ ரன்புகலப்
புத்தகத்திற் றீட்டும் புலியூரே - துத்தியாரா
வானத் தமரிந்தார் மாமவுலி யாரெழுநா
வானத் தமரிந்தார் வாழ்வு.   ,   (36)

இ - ள். வைத்த அருள் ஆல் - தாம்வைத்த திருவருளால், கோவை – கோவைத் திருவாசகத்தினை, வாதவூரன் - திருவாதவூரடிகள், புகல - சொல்ல, புத்தகத்து இல் - தாம் சேர்த்த திருமுறையில், தீட்டும் - எழுதியருளிய, புலியூர் - புலியூரானது, துத்தி - படப்பொறியையுடைய, அரா - பாம்பும், வானத்து - ஆகாயத்தில், அமர் - பொருந்திய, இந்து - சந்திரனும், ஆர் - பொருந்திய, மா மவுலியார் - பெரியசடாமுடியையுடையவரும், எழுநா - ஏழுநாவையுடைய அக்கினிதேவனது; வான் அத்தம் – பெரிய கையினை, அரிந்தார் - தறித்தவருமாகிய இறைவர், வாழ்வு – வாழுமிடனாம்.
திருவாதவூரடிகள் திருத்தில்லைவனத்தி வெழுந்தருளி யிருக்குங் காலையில், நடராசப்பெருமானார் பாண்டி நாட்டில் அவரொடு முன்பழக்கமுள்ள ஒரு வேதியத்திருவுருவங் கொண்டுவந்து நிற்ப நீர் யார் என்று அடிகள் வினவியபோது நாம் பாண்டி நாட்டின் வாழவுடையோம், உமது தன்மையைக் கேட்டுக் காணவந்தோமென்று கூற, உபசரித்து இங்குவந்த காரணமென்னென்று கேட்டபோது நீர் பாடிய திருப்பாசுரங்களை யெழுதவேண்டுமென்னும் விருப்புடையோம் என்றவ்வாறே யெழுதிமுடித்தது, ஒரு கோவை சொல்லவேண்டுமென எழுதிமுடித்தனர் என்பதும், தம்மையவமதித்துத் திருமாலை, யாக பதியாகக்கொண்டு நடத்திய தக்கன் வேள்வியில் வந்த தேவகணங்களுள் தீக்கடவுளின் கையை வீரபத்திரக்கடவுளால் தறித்தார் என்பதும் புராண வரலாறுகள் எழுநா - ஏழுநாவையுடையோன் என நிற்றலால் பண்புத்தொகை நிலைத்தொடர். (36)
---------------

சீருற் றசரீரி சேக்கிழார்க் காதிமொழி
பூரித் துரைக்கும் புலியூரே - நீரைக்
கரந்துவைத்த வேணியார் காதினிற் றாவிக்கூய்க்
கரந்துவைத்த வேணியார் காப்பு.    ,   (37)

இ-ள். சேக்கிழார் கு - சேக்கிழார் நாயனாருக்கு, சீர் உற்ற - சிறப்புமிக்க, அசரீரி - அசரீரியாக, ஆதிமொழி - முதலடியை, பூரித்து – (திருத்தொண்டர் புராணத்தை) முடிக்க, உரைக்கும் - எடுத்துத்தந்தருளிய, புலியூர் - புலியூரானது, நீர் ஐ - கங்கையினை, கரந்து - (பனித்துளிபோல் அது) ஒளிக்க, வைத்த - வைத்தருளிய, வேணியார் - சடாபாரத்தையுடையவரும், காதின்இல் - திருச்செவியில், தாவிக்கூய் - தாவிக்கூவி, கரம் துவைத்த - திருக்கரத்தில் கோஷித்துக்கொண்டிருந்த, வேணியார் – மானையுடை யவருமாகிய இறைவர், காப்பு - காவலாயுள்ள இடமாம்.
சீவக சிந்தாமணிக் கதையை மெய்யென்று நம்பி வீணாள் போக்கி வந்த சோழன் கடைத்தேற, அடியர் வைபவச்சரிதையை யடைவுபடப் புராணஞ் செய்யத் திருவுளங் கொண்டு சிதம்பரத்திற்குச் சென்று நடராசப்பெருமானாரை வணங்கித் தமது குறைமுடிப்பான் வேண்ட, பெருமானார் 'உலகெலாம்’ என அடியெடுத்துத் தந்தருள அப்புராணமுடித்தனர் என்பதும், பகீரதன் தன் மூதாதையர்கள் சுவர்க்கமடையக் கங்கையேற்று விடுத்தருள வேண்டுமென்று குறையிரப்ப, அக்கங்கை தமது சடாடவியில் பனித்துளி போல மறைந்தொழிய வேற்றனர் என்பதும், தேவதாருவன முனிவர்களேவ அண்டங் கிழிபடக் கோஷித்து வந்த மானை நமது செவியருகிற் கூவு எனத் திருக்கரத்திற் பிடித்தனர் என்பதும் புராணவாலாறுகள். (37)
---------------

வாட்கையச வாணியன்சொன் மாநூ லினைப்படிக்கற்
பூட்கையெடுக் கக்கொள் புலியூரே - தாட்கமலப்
போதுள வனத்தன் புருகூதன் போற்றுமந்திப்
போதுள வனத்தன் புரி.    ,   (38)

இ-ள். வாள் கை - வாளையேந்திய கையையுடைய; அசவாணியர் - அசவாணியர்குலத்தில் திருவவதாரஞ்செய்த திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார், சொல் - கூறிய, மாநூலின் ஐ - மகத்துவமமைந்த சைவசித்தாந்த நூலினை, படி (சந்நிதானத்தின்) சோபானத்திலமைந்த, கல்பூட்கை – கல்யானையானது; எடுக்க - எடுத்துத்தர, கொள - அங்கீகரித்த, புலியூர் - புலியூரானது, தாள் – தண்டமைந்த; கமல போது உள்ளவன் - தாமரையில் வசிக்கும், பிரமனும், நத்தன் --- பாஞ்சசன்யம் ஏந்திய திருமாலும், புருகூதன் – இந்திரனும்; போற்றும் - துதிக்கும், அந்திப்போது - செக்கர்வானம் போல, உள்ள - இருக்கின்ற, வன்னத்தன் - செந்நிறம் வாய்ந்த இறைவர், புரி - வாழும் திருநகராம்.
திருப்பெரும்பற்றப் புலியூரிலெழுந்தருளியிருந்த திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் தமது ஞானாசிரியராகிய உய்யவந்த தேவநாயனாரருளிச் செய்த சைவசித்தாந்த நூல் பதினான்களுள் முற்பட்ட திருவுந்தியாரினுட்கிடையை விளங்கக்காட்ட இந்நூல் செய்தருளிச் சிதம்பரத்திற்குச் சென்று நடராசப் பெருமானார் சந்நிதியில் வாசிக்க முயலும்போது, தில்லைவாழந்தணர் முதலியோர் சந்நிதானத்தின் படியிலுள்ள கல்யானை இந்நூலை நடராசப்பெருமானார் திருவடிக்கீழ்வைத்தால் வாசிக்கலாமெனக்கூற அதற்குடம்பட்டு அக்கல்யானை மேல் வைத்தனர். அக்கல்யானை மதம் பொழிந்து செருக்குற்றெழுந்து தன்மேல்வைத்த அத்திருநூலினைத் துதிக்கையாலெடுத்து அப்பெருமானார் திருவடிக்கீழ் வைத்தலால் அந்நூலுக்குத் திருக்களிற்றுப்படியார் எனக் காரணப்பெயராய்த் திருநாமம் வந்தது. இந்நாயனார் தத்துவாயா மரபிற்றோன்றினவர் எனக்கேள்வி. பூட்கை துவாரத்தையுடைய கையையுடையதென நிற்றலால் இரண்டாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைநிலைத்தொடர். உய்யவந்த தேவநாயனார் சிவஞான செல்வம் பெற்றவர் ஆதலால் உயர்வு தோன்ற வாட்கையச வாணியர் என்றார். (38)
---------------

ஆசையெட் டினுக்கிறையு மாசையெட்டி யாசைவிடப்
பூசையிட்டுப் போற்றும் புலியூரே- பேசவெட்டா
வேதாந்த ரும்பரமர் விண்ணா டளந்தநெல்லை
வேதாந்த ரும்பரமர் வீடு.    ,   (39)

இ-ள். ஆசை எட்டினுக்கு உம் - எட்டுத்திசைகளுக்கும், இறையும் - இறைவர்களாகிய இந்திரன் முதலிய திக்கு பாலகர்களெண்மரும்; ஆசை எட்டி - அன்புபூண்டு, ஆசு ஐ விட - மலக்குற்றத்தையொழிய, பூசை இட்டு – பூசைசெய்து; போற்றும் - துதிக்கும். புலியூர் - புலியூரானது, பேசி எட்டா - பேசுதற்கரிய, வேதாந்தர் -வேதசிரசிலுள்ளவரும், உம்பரா அமர் - தேவர்கள் வசிக்கும், விண்நாடு - பொன்னுலகை, அளந்த - வரையறுத்துயர்ந்த, நெல்லை - திருநெல்வேலியென்னும் திருப்பதியில், வேதாம் – மூங்கில்; தருமபரமர் – பெற்ற பரமருமாகிய - இறைவரது, வீடு - திருவீடாம்.
அட்டதிக்குப் பாலகராவார் இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன். இவர்கள் கிழக்கு முதலிய எட்டுத்திசையிலுமுள்ளவர்கள். இவர்கள் தத்தம் திசையிற் றிருத்திலையிற் பூசித்துப் பேறுபெற்றனர் என்பது புராணவாலாறு. திருநெல்வேலியென்னுந் திருப்பதியில் சிவபெருமான் மூங்கிலின் கீழெருந்தருளி யிருத்தலால் வேதாந்த தரும பரமா என்றார். (39)
-------------------

சூரியனும் பச்சைத் துழாய்முகிலும் பூசனைதென்
பூருவதிக் கிற்செய் புலியூரே - கூறியவேல்
ஆறு முடிக்குமர னாலுபதே சம்பெறுவான்
ஆறு முடிக்குமர னார்வு.    ,   (40)

இ-ள். சூரியன் உம் - சூரியனும், பச்சை துழாய் - பசிய துழாய்மாலையை யணிந்த, முகில் உம் - மேகம் போன்ற திருமாலும், பூசனை - பூசையை, தென் பூருவதிக்கு இல் - தென்கிழக்குத் திசையில்; செய் - செய்யும், புலியூர் - புலியூரானது, கூரியவேல் - கூர்மைவாய்ந்த வேலேந்திய, ஆறுமுடி - ஆறு சிரசையுடைய, குமரன் ஆல் - முருகக் கடவுளால், உபதேசம் பெறுவான் - உபதேசம் பெற்றவரும், ஆறு - கங்கையை, முடிக்கும் சடையில் தரித்த, அரன் (அடைந்த மாயையை வேரோடு) அரிபவருமாகிய இறைவர், ஆர்வு - பொருந்துமிடமாம்.
பிரமன் செருக்கையொழிக்கப் பிரணவத்தின் பொருளை வினாவ, அது தெரியாது அவன் மயங்கும் காலையில் முருகக்கடவுள் அவனைச் சிறையிலிட்டனர். அப்போது தேவர்கள் வேண்டுகோளால் சிவபெருமானார் அச்சிறையில் நின்று நீக்கி, அம்முருகக்கடவுளைத் தமது திருத்தொடை மேல் வைத்தருளி அப்பிரணவத்தின் பொருள் கைவருமோவென்று திருச்செவி சாய்த்து வினவியருள அம்முருகக்கடவுள் திருவாய் மலர்ந்தருளினர் என்பது புராணவரலாறு. (40)
----------------

மேனிலத்தொப் பாலயங்கண் மெய்க்கவுடர் கோன்செழுஞ்சாம்
பூனதத்தாற் செய்யும் புலியூரே - ஞானமுற்ற
சம்பந் தரத்தர் தராதலமெ லாம்புணருஞ்
சம்பந்த ரத்தர் தலம்.    ,   (41)

இ-ள். மேல்நிலத்து ஒப்ப - பொன்னுலகத்தை யொத்துத் தோன்ற, ஆலயங்கள் - சிவாலயங்களை, மெய் - உண்மையையுடைய, கவுடர் கோன் - கவுடதேசத்தரசராகிய இரணிய வன்மனார், செழுமை - மாற்றுயர்ந்த, சாம்பூநதத்து ஆல் - சாம்பூநதமென்னும் பொன்னினால், செய்யும் – செய்தமைத்த; புலியூர் - புலியூரானது, ஞானம் உற்றசம்பந்தர் திருஞானசம்பந்தருக்கு, அத்தர் - பிதாவும், தராதலம் எல்லாம் - எல்லாவுலகங்களிலும், புணரும் - கலந்த, சம்பந்தர் - இயைபுடையவரும், அத்தர் - தலைவருமாகிய இறைவரது, தலம் - திருப்பதியாம்.
சூரியன் புத்திரனாகிய மனுமரபில் வந்த ஐந்தாமனுவின் புத்திரராகிய சிங்கவன்மா சிங்கம்போல வெண்ணிறம் வாய்ந்த தனது உடற்குற்றத்தை நோக்கி, அது தீரும்வண்ணம் தந்தையின் அநுஞைபெற்றுத் தமது நாடாகிய கௌடதேசத்தினின்று நீங்கிக் காசி முதலிய திருப்பதிகளையடைந்து சிவபெருமானாரை வணங்கித் திருத்தில்லையையடைந்து பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களை வணங்கி, அவர்களருளால் சிவகங்கையில் ஸ்நானஞ்செய்து உடற்குற்றமொழிந்து பொன்வடிவந் தாங்கி யிரணியவன்மனார் எனப்பெயர்பெற்றனர், பின்னர் அம்முனிவர்களால் ஸ்ரீபஞ்சாக்கர வுபதேசம் பெற்று நடராசப்பெருமானார் ஆநந்தத் திருநடனத்தைத் தரிசித்துத் தமதரசியலை வெறுத்து அம்முனிவர்களால் முடி சூட்டப் பெற்றுச் சோழநாட்டரசராய்த் திருவம்பல முதலிய திருப்பணிகளைச் செய்வித்தனர் என்பது புராண வரலாறு, ஆளுடையபிள்ளையாருக்குத் திருமுலைப்பாலூட்டி யருளினமையால் ஞானமுற்ற சம்பந்தரத்தர் எனவும் ஆன்மாக்களுக்குத் தோன்றாத்துணையா யுடனிற்றலால் தராதலமெலாம் புணருஞ் சம்பந்தர் எனவுங் கூறினார். சாம்பூகாம் சம்புநதியிற் பிறந்தது. இது நால்வகைப் பொன்னுள் ஒன்று. ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம். (41)
------------------

உக்கிரசா முண்டியும்பண் டூர்த்தநடத் தானாணம்
புக்குவந்தித் தேத்தும் புலியூரே - அக்கு
வலையங் கழுத்துளவன் வாரியின் மீனுக்கா
வலையங் கழுத்துளவன் வாழ்வு.    ,   (42)

இ-ள். உக்கிரம் - கோபமிக்க, சாமுண்டி உம் -- காளியும், பண்டு - முன்னாளில், ஊர்த்தநடத்து ஆல் - ஊர்த்த திருநடனத்தினால், நாணம்புக்கு - நாணங்கூர்ந்து, வந்தித்து -- வணங்கி, ஏத்தும் - துதிக்கும், புலியூர் - புலியூரானது, அக்குவலையம் - சங்குமணியாலமைந்த வட்டவடிவாகிய வடத்தை, கழுத்து உள்ளவன் - திருக்கழுத்திலுள்ளவனும், வாரிஇல் - கடலில், மீனுக்கு ஆக - மீனைப் பிடித்தற் பொருட்டாக, வலை - வலையினை, அங்கு - அக்கடலில், அழுத்து - அழுத்திய, உளவன் -உளவையுடையவனுமாகிய இறைவன், வாழ்வு - வாழுந் திருப்பதியாம்.
இறைவிக்கு இறைவர் ஓர்கால் உபதேசித்த காலையில் அவ்விறைவி பராமுகமாயிருக்க, அதுநோக்கி யவ்விறைவர் ஓர் திருவிளையாடலைக்கருதிச் சினங்கூர்ந்தவர் போல நாம் அருளியதைப் பராமுகஞ் செய்தமையால் பாண்டி நாட்டின் கீழைத்திசையிலுள்ள நெய்தனிலத்தலைவன் புத்திரியாகக் கடவாய். நாம் வந்து மணம்புரிவோமென்றருளி, தம்பாற் சாபமேற்ற நந்திநாயனார் சுறாமீன் வடிவாய்க் கடலையுழக்கி நிற்றலால் இம்மீனைப் பிடிப்போர்க்கு என் புத்திரியாரைத் தருவோமென்ற அந்நெய்தனிலத் தலைவன் சூளால் நெய்தனிலத் தலைவராய்ச் சென்று வலைவீசி மீன் பிடித்தனர் என்பது புராண வரலாறு. (42)
-----------------

மாதவத்து மாணிக்க வாசகர்மன் றுள்ளொளிக்குட்
பூதியத்தோ டொன்றும் புலியூரே - கேதகைப்பூந்
தாமங் கழித்தளிப்பார் தன்னொடண்ட மூழிதொறும்
தாமங் கழித்தளிப்பார் சார்பு.   ,   (43)

இ-ள். மாதவத்து – பெரிய சிவஞானத்தையுடைய; மாணிக்கவாசகர் - திருவாதவூரடிகள், மன்று உள் ஒளிக்கு உள் - சிற்சபையில் நடராசப்பெருமானார் திருவடிக்கீழ், பூதியத்து ஓடு – மானிடசரீரத்தோடு; ஒன்றும் - அடைந்த, புலியூர் - புலியூரானது, கேதகைபூ - தாழைமலராலாகிய, தாமம்கழித்து - மாலையைக்கழித்து, அளிப்பார் தன் ஒடு - குளிர்ந்த நிலவுலகோடு, அண்டம் – பல்லாயிர கோடியண்டங்களையும், ஊழிதொறும் - ஊழிகாலந்தோறும், தாம் அங்கு அழித்து - தாம் அவ்விடத்திலழித்து, அளிப்பார் - மீட்டுத் தந்தருளும் இறைவர், சார்பு - பொருந்துமிடமாம்.
இறைவர் திருக்கை தொட்டு வரைந்தருளித் திருவாயிற்படியில் வைத்த திருவாசகம், திருக்கோவையார் என்னுந் திருமுறையைத் திருவடையந்தணளர் கண்டு அருச்சித்து வாசித்து இறுதியில் இது வாதவூரடிகள் கூறினவை, இவையெழுதி முடித்தவர் அழகிய திருச்சிற்றம்பல முடையார் என வரைந்திருத்தலைப் பார்த்து ஆநந்த பரவசத்தராய்த், திருவாதவூரடிகளைத் தரிசித்து இத்திருமுறையிலடங்கிய பொருளைத் தெரித்தருள வேண்டுமென்றிரக்க, நாம் உணர்த்தியருளவோம் வாருமென்று வந்தவர்களோடு திருவம்பலஞ் சென்று, இங்கு நின்ற பெருமானாரே யிதற்குப் பொருளாவார் எனக்காட்டியாங்கு நின்றோர் யாவருங்காணத் திருவடி நிழற்கீழ்க் கலந்தனர் என்பதும், பிரமன் ஓர்காலத்தில் எல்லாவற்றையும் படைத்தலால் நானே யிறை வனென்று அகந்தை கொண்டு திருமாலோடு போர்செய்யுங் காலையில் அனைவரும் நடுக்கமுற, சிவபெருமானார் கருணைகூர்ந்து இருவருக்கும் இடையே ஓரக்கினி மலையாய் நின்றருளும்போது, அவ்விருவருங்கண்டு திகைத்து இதனடி முடிகளிரண்டனு ளொன்றையறிய வல்லவரே பெரியரென்று சூளுற்றுத் திருமுடி காண அன்னவடிவமாய்ச் சென்று அப்பிரமன் காணாதிளைத்து அத்திருமுடியினின்றும் வீழ்ந்த தாழைமலரைத் தான் கண்டதாகப் பொய்க்கரி கூறென்றிரக்க, அம்மலர் அவ்வாறு கூறினமையால் அத்தாழைமலரை யினியேற்கோமென்று கழித்தனர் என்பதும் புராணவரலாறுகள். பார்பரத்தலையுடையதென்னும் பொருள் மேல் நிற்றலால் முதனிலைத் தொழிலாகு பெயர் பரபகுதி, முதல் நீளுதல் விகாரம். அகரக்கேடு சந்தி. (43)
------------------

நாட்டமுறு மாசிமக நாள்வணிகன் பாசவினைப்
பூட்டறுத்தா ளுக்தென் புலியூரே - மாட்டில்
எழுதுங் கரப்பானா ரேடதனிற் கோவை
எழுதுங் கரப்பரனா ரில்.    ,   (44)

இ - ள். நாட்டம் உறும் (யாவரும்) ஆராயத்தக்க, மாசிமகம் நாள் - மாசியில் மகநக்ஷத்திரத்தில், வணிகன் - துர்க்கடன் என்னும் ஒரு வைசியனது, பாசம் வினை பூட்டு - பாச வினையின் கட்டை; அறுத்து ஆளும் - சேதித்து முத்தியிற் சேர்த்த, தென்புலியூர் - தென்திசையிலுள்ள புலியூரானது, மாடு இல் எழு - இடப ஊர்தியில் அடியார்க்கு அருள எழுந்தருளும்; துங்கர் – பெருமையுடையவரும், அப்பு - கங்கையை அணிந்த; அரனார் - அரன் என்னும் திருநாமத்தை உடையவரும், ஏடு அதன் இல் - ஏட்டில்; கோவை எழுதும்- திருக்கோவை எழுதிய; கரம் - திருக்கரத்தையுடைய; பரனார் - மேலானவருமாகிய இறைவரது; இல் - வீடாகும்.
பாதகனாகிய துர்க்கடன் எனும் ஒரு செட்டி, பலரோடும் படகில் ஏறிக்கொண்டு மாசிமகத்திலே பாசமறுத்த துறையில் வரும்போது படகோடு தாழ்ந்து முத்தி பெற்றானென்பதும், திருவாதவூரடிகள் தில்லையில் பன்னசாலையமைத்து எழுந்தருளியிருக்குங்காலையில் இறைவர் ஓரந்தணத் திருவுருக் கொண்டு வந்தருளி யாமிருப்பது பாண்டிநாடுந நீர் ஓதிய திருப்பாசுரங்களைக் கேட்க விருப்புற்று வந்தனமெனக் கூறியருள, அவரையமர்ந்திருக்கச் செய்து தாமருளிய திருப்பாசுரங்களைச் சொல்லியருளியபின், வந்தருளிய அந்தணாளர் நடராசப்பெருமானை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஒருகோவை கூறவேண்டுமென அதற்கு உவந்து அவ்வாறே கூறத் திருக்கை தொட்டெழுதினார் என்பதும் புராண வரலாறுகள். (44)
-------------

செப்புநடத் தைத்தே சிகநமசி வாயர்களிப்
புப்பெறக்காட் டுந்தென் புலியூரே -- யொப்பதிலா
ஓரேற்றி னான்மறையா னுள்ளத் திரங்குமடி
யோரேற்றி னான்மறை யானூர்.   ,   (45)

இ - ள். செப்பும் (அயன் முதலியோர்) புகழும், நடத்து ஐ - திருநடனத்தை, தேசிகநமசிவாயர் - குருநமசிவாயர், களிப்புபெற - பேராநந்தமடைய, காட்டும் - தெரித்தருளும், தென்புலியூர் - தென்றிசையிலுள்ள புலியூரானது, ஒப்பு அது இல்லாத - ஒப்பில்லாத, ஓர் ஏற்றினான் – ஓரிடபவூர்தியை யுடையவரும், மறையான் (குருபரம்பரை விளங்க) நான்கு வேதங்களையருளினவரும், உள்ளத்து (தமது) மனத்தில். இரங்கும் - அன்புகனிந்திரங்கும், அடியோர் ஏற்றின் ஆல் - அடியவர்கள் (தமது குறைகூறி) இரந்தால், மறையான் - ஒளிக்கா மலருள்பவருமாகிய இறைவரது, ஊர் - திருநகரமாம்.
ஒப்பது அது பகுதிப் பொருள் விகுதி. இல்லாத எதிர் மறைக்குறிப்புப் பெயரச்சத்தினீறு தொகுத்தல். குருநமசிவாயர் நடராசப்பெருமானை அனுஞையால் திருச்சிலம்பும் கிண்கிணியுஞ் செய்விக்கச் சிற்பிகளிடத்து வேண்டும் பொருள் தந்தனர். அது தெரிந்த தில்லையந்தணர்கள் அவற்றைத் தரித்தால் நமது பெருமானார் திருநடனஞ் செய்யப்போகிராறாவென்ற சொல்லைக் கேள்வியுற்று அவை வந்தபின் சாத்தித் தில்லையந்தணர்களை வருவித்து,
"அம்பலவா வொருகா லாடினாற் றாழ்வாமோ
உம்பரெலாங் கண்டதெனக் கொப்பாமோ- சம்புவே
வெற்றிப்ப தஞ்சலிக்கும் வெம்புலிக்குந் தித்தியென
ஒத்துப் பதஞ்ச லிக்குமோ"
எனக்கூற உடனே திருநடனஞ் செய்தருளினர் என்பது வரலாறு. (45)
-------------

நந்திமுதற் றேவர்பலர் ஞானமுனி வோர்பூசை
புந்திமகிழ்ந் தேத்தும் புலியூரே - தந்தனையைக்
காமருகே சஞ்சரிப்பா ரன்பினுக்கு முத்தியிட்டோர்
ஆமருகே சஞ்சரிப்பா ரார்வு.    ,   (46)

இ – ள்: நந்திமுதல் தேவர் - நந்திநாயனார் முதலிய தேவகணங்களும், பலர் ஞானம் முனிவோர் - சிவஞானம் பெற்ற பல முனிவர்களும், பூசை - பூசனையோடு, புந்தி மகிழ்ந்து - மனம் மகிழ்ந்து, ஏத்தும் - துதிக்கும், புலியூர் - புலியூரானது, தம் தனையை - தமது புத்திரியினது, காமமருவு - விருப்பஞ்செய்யும், கேசம் - கூந்தலை, சரிப்பார் – சரித்த மானக்கஞ்சாறநாயனாரது, அன்பினுக்கு - பத்திக்கு, முத்தி இட்டோர் - சிவகதியருளி, ஆம் அருகு எ - ஆகிய அவர்கள் பக்கலிலே, சஞ்சரிப்பார் - சஞ்சரிக்கும் இறைவர், ஆர்வு – பொருந்துமிடமாம்.
கஞ்சாறென்னுந் திருப்பதியில் வேளாள குலத்திற் அவதரித்துச் சிவநேசமுடையவராய்ச் சிவனடியார்களுக்கு வேண்டும் பொருளை இல்லையென்னாது கொடுத்தொழுகு நாளில், இவரன்பினை யுலகினரறிந்துய்ய இவர் புத்திரியின் திருமணத்திற்கு மாவிரதியர் வேடம் பூண்டு இறைவர் மணப்பந்தலிலெழுந்தருள, நாயனார் கண்டு அன்புமீதூர்ந்து வணங்கித் தமது மணக்கோலத்தையுடைய புத்திரியாரையும் வணங்கச்செய்து நின்றனர். அப்போது அவர் புத்திரியார் கூந்தலைப்பார்த்து இது பஞ்சவடிக்கு ஆமென உடனே கொய்துதரத் திருவுரு மறைந்தருளி இடபவாகனாரா யெழுந்தருளிக் காட்சி தந்தனர் என்பது புராண வரலாறு. காமமருவ காமரு எனத் தொக்கு நின்றது. (46)
--------------

வன்பர்புலை யோரெனினும் வாசஞ் செயிலவர்தம்
புன்பிறவி மாற்றும் புலியூரே -- அன்புதிகழ்
வத்திரங்க ளைந்தார் வனத்திருடி மாதரிடை
வத்திரங்க ளைந்தார் மனை.   ,   (47)

இ - ள். வன்பர் - மகாபாதகரும், புலையோர் எனினும் - நீசருமாயிருந்தாலும், வாசம் செயில் - வசிப்பார்களானால்; அவர்தம் - அவருடைய, புன்பிறவி – கொடிய பிறவியை, மாற்றும் – போக்கி முத்தியருளும், புலியூர் - புலியூரானது, அன்பு திகழ் (அடியவரிடத்து) பரிவுகூரும், வத்திரங்கள் ஐந்தார் - ஐந்து திருமுகங்களை யுடையவரும், வனத்து – தேவதாரு வனத்திலுள்ள, இருடி மாதர் - முனிவர் பன்னியர்கள், இடைவத்திரம் - இடையிலுடுத்த ஆடைகளை, களைந்தார் - களைந்தவருமாகிய இறைவரது, மனை - வீடாம்.
தேவதாருவனமுனிவர் பன்னியர் கற்பினிறு மாப்பினை யளந்து காட்ட, பிச்சாடன மூர்த்தமா யிறைவரெழுந்தருள, அது கண்டு அம்முனிவர் பன்னியர் கற்பினிலை குலைந்து கலைசோர நின்றனர் என்பது புராணவரலாறு, புன்பிறவி உரிச்சொற்றொடராதலால் பொதுவிதி பெறாது "இடையுரிவடசொலின்" என்ற புறனடைச் சூத்திரத்தால் ஈற்றுலகரம் னகரமெய்யாகத் திரிந்தது. (47)
-------------

சாதல்பிறப் பைப்புலைப்பெற் றானுக் குமாபதியால்
போதல்செய் வித்த புலியூரே - சோதிப்
பரசங் கரனார் பனிமதி சூடுந்தற்
பரசங் கரனார் பதி.    ,   (48)

இ-ள். சாதல் - இறத்தலையும், பிறப்பு - பிறத்தலையும், புலைபெற்றானுக்கு - புலையர் குலத்திற் றோன்றிய பெற்றனென்னுந் திருநாமத்தையுடைய சாம்பனார்க்கு, உமாபதி ஆல் - உமாபதி சிவாசாரியரால், போதல் செய்வித்த - ஒழித்தருளிய புலியூர் - புலியூரானது, சோதி - ஒளிவாய்ந்த, பரசு – மழுவாயுதத்தை யேந்திய, அம்கரனார் - அழகிய திருக்கரத்தையுடையவரும், பனி - குளிர்ந்து, மதிசூடும் - பிறைசூடிய, தற்பர சங்கரனார் - தற்பரராகிய சங்கரருமாகிய இறைவரது, பதி - திரும்பதியாம்.
பெற்றான் சாம்பனார் அதிதீவிர பக்குவமுடையவராய் ஞானோபதேசம் பெறும் பொருட்டுக் கொற்றவன் குடியிலெழுந்தருளிய உமாபதி சிவாசாரியர் திருமடத்திற்கு நாள்தோறும் விறகு கொண்டு போய்க்கொடுக்கும் பணிவிடை செய்துகொண்டு வந்தனர், இவ்வாறு பலநாள் கழிந்தமையால் தமது கருத்தை நடராசப் பெருமானார்க்கு உணர்த்த, அப்பெருமானார் "அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங் - குடியார்க் கெழுதிய கைத்திட்டுப் - படியின்மிசைப் - பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத்தீக்கை செய்து - முத்திகொடுக்க முறை' எனத் திருமுகமொன்றைத் திருச்சாளரத்தின் வழி நீட்டியருளப் பெற்றுக்கொண்டு நாடோறுஞ் செய்யும் பணியையன்று செய்து அங்கு நிற்க, பரிசநங்களு ளொருவர் கண்டு இங்கு ஏன் நிற்கின்றாயென வினவியபோது, இத்திருமுகத்தைச் சுவாமிகள் சந்ததியிற் சேர்ப்பிக்கவேண்டுமெனக் குறையிரக்க, அதனையேற்று அச்சந்நதியில் சேர்த்தினர். அதனை உமாபதி சிவாசாரியர் திருக்கண்ணால் நோக்கியச் சாம்பனாரை நீராடி வரச்செய்வித்து ஞானாக்கினி யோம்பி யதனுள்ளே புகச்செய்து முத்தி கொடுத்தனர், இதைக் கேள்வியுற்ற அவர்மனைவி தனது மடமையால் கூலி கேட்கச் சென்ற தன் புருடனை நெருப்பிற்றூக்கிப் போட்டுக் கொன்றனர் என அப்போதிருந்த அரசனிடத்தில் முறையிட, அவ்வரசன் அமைச்சர்களோடு ஆலோசித்துத் திருமடத்திற்குச் செல்ல, அக்குறிப்பையறிந்த அச்சிவாசாரியர் ஏவல் செய்வோரை நோக்கி நாடோறும் நமக்குப் பயன்படுவது இங்குண்டோவென வினவியருள, முள்ளிச்செடி யுண்டென்றமையால் அதனருகிற்சென்று ஞானோபதேசஞ் செய்த காலையில் அதுபற்றியெரிந்து முத்தியடைந்த தென்பது வரலாறு. (48)
-------------

நாட்டிலிறந் தோரான்மா நல்லென்பவ் வெல்லைதனிற்
போட்டிடவீ டெய்தும் புலியூரே - கோட்டிபமூர்
வாசவன சத்தினான் வாழ்த்தித் தொழுஞ்சரண
வாசவன சத்தினான் வாழ்வு .    ,   (49)

இ-ள். நாடுஇல் - புறநாட்டில், இறந்தோர் - இறந்தவரது, நல் என்பு - நல்ல எலும்பினை, அ எல்லைதன் இல் - அத்திருப்பதியினெல்லையில், போட்டிட - போட, ஆன்மா - அவர்களது ஆன்மா, வீடு எய்தும் - சிவகதியை யடைதற்குரிய, புலியூர் - புலியூரானது, கோடு – நான்கு கொம்புகளையடைய, இபம் - வெள்ளையானையை, ஊர் - செலுத்தும், வாசவன் - இந்திரனும், அசத்தினான் - ஆட்டுவாகனத்தையுடைய அக்கினிதேவனும், வாழ்த்தி தொழும் - வாழ்த்தி வணங்கும், சரணம் - திருவடியாகிய, வாசம் - வாசமமைந்த, வனசத்தினான் – தாமரைகளையுடைய; இறைவர் – வாழ்வு -வாழுமிடமாம்.
தில்லைப்பதியி னெல்லையிலிறந்தவர் என்பு கிடப்பினும் அவர் முத்தியடைவர் என்பதும், இந்திரனும் அக்கினித் தேவனும் பூசித்து வணங்கினர் என்பதும் புராண வரலாறுகள். (49)
-----------------

ஏழுலகேத்த தொன்பா னிலிங்கப் பிரதிட்டை
பூழியர்கோன் செய்த புலியூரே - வாழ்சிவலோ
கத்தர்கணிச் சிப்படையார் காதலித்துன் னாதநெஞ்ச
கத்தர்கணிச் சிப்படையார் காப்பு.    ,   (50)

இ - ள். ஏழுலகு – ஏழுலகங்களும்; ஏத்து – துதிக்கும்; ஒன்பான் இலிங்கம் பிரதிட்டை - ஒன்பது சிவலிங்கப் பிரதிஷ்டைகளை, பூழியர்கோன் – பாண்டியர் மரபில் வந்த அரசன், செய்த - செய்தமைத்த, புலியூர் - புலியூரானது, வாழ் - என்றும் நிலைபேறுடைய; சிவலோகத்தர் - சிவலோகத்தையுடையவரும், கணிச்சிபடையார் - மழுவாயுதத்தையுடையவரும், காதலித்து - விரும்பி, உன்னாத - சிந்தியாத, நெஞ்சகத்தர்கண் - இதயமுடையவரிடத்தில், இச்சிப்பு அடையார் - விருப்பமில்லாத வருமாகிய இறைவர், காப்பு - காவலாயுள்ள இடமாம்.
ஒன்பது சிவலிங்கப்பிரதட்டைகள் பாண்டியன் செய்து பேறுபெற்றனன் என்பது புராண வரலாறு. (50)
-------------------

ஆனபல சத்திரத்து மாழ்கமல வாவியினும்
போனகம்பா லிக்கும் புலியூரே - யானெனுந்தற்
போதமொழி வாயினார் புந்திச் சுடரொளியார்
வேதமொழி வாயினார் வீடு.    ,   (51)

இ - ள். ஆன – (சிற்பநூலின் வழி) அமைந்த, பல சத்திரத்து உம் - பல சத்திரங்களிலும், ஆழ் - ஆழ்ந்த, கமலம் - தாமரைகளையடைய, வாவியின் உம் – தடாகங்களிலும், போனகம் – அன்னத்தை, பாலிக்கும் (இரவலர்க்கு) கொடுத்து இரட்சிக் கும்) போன - சென்ற, கம்பு - சங்குகள், ஆலிக்கும் - ஒலிக்கும், புலியூர் - புலியூரானது, யான் என்னும் - நானென்னும் அகந்தையாகிய, தற்போதம் - சீவபோதம், ஒழிவாயினார் – ஒழிந்த சிவயோகிகளுடைய, புந்தி - இதயத்தில், சுடர் - ஒளியுள்ள சூரியசந்திரர்கள் நட்சத்திரங்களைப்போல, ஒளியார் - ஒளிவீசி விளங்குவோரும், வேதம் - நான்கு வேதங்களையும், மொழிவாயினார் - சொல்லியாளிய நான்கு திருமுகங்களிலுமுள்ள திருவாயினையடைய வருமாகிய விறைவரது, வீடு - திருவீடாம்.
நான்கு திருமுகங்களாவன ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம். இது பிரிமொழிச் சிலேடையணி யாதலால் (சத்திரத்தும் போனகம் பாலிக்கும்) எனவும் ஆழ்கமலவாவியினும் போனகம்பு ஆலிக்கும் எனவுங்கொள்க. பாலிக்கும் என்னும் பெயரெச்சம் புலியூர் என்னும் வினைமுதற்பொருளையும் ஆலிக்கும் என்னும் பெயரெச்சம் புலியூர் என்னும் எல்லைப் பொருளையுங் கொண்டன பாலி, ஆலிபகுதிகள் பின்வருவனவற்றிற்கும் இவ்வாறே கொள்க. (51)
---------------

ஓதிமமும் வேந்த ருலவுநெடு வீதிகளும்
போதகமே நிற்கும் புலியூரே - மாதவர்க்கு
வீடளித்தார் மாட்டினார் வேணிபுய மீதிதழி
யேடளித்தார் மாட்டினா ரில்.    ,  ,   (52)

இ – ள். ஓதிமம் உம் - அன்னங்களும், வேந்தர் உலவும் - அரசர்களுலாவும், நெடுவீதிகள் உம் - நெடிய வீதிகளும், போது அகம் ஏ - தாமரைமலரிடத்தே, நிற்கும் - நிலைபெறும்; போதகம் ஏ - யானைகளாலே, நிற்கும் – நிற்கப்படும், புலியூர் - புலியூரானது, மாதவர்க்கு - பெரிய தவத்தினையுடையவர்க்கு, வீடு அளித்தார் - முத்தியைத் தந்தருளினவரும், மாட்டினார் - இடபவாகனத்தையுடையவரும், ஆர் - ஆத்திமலரும், இதழி - கொன்றை மலருமாகிய இம்மலர்களின், ஏடு - இதழ்களாலமைந்த, அளி - வண்டுகள் நிறைந்த, தார் -மாலையை, வேணி மாட்டினார் - சடையினிடத்துள்ளவரும், புயத்து மாட்டினார் - புயத்தினிடத்துள்ள வருமாகிய இறைவரது, திருமனையாம்.
மாட்டுதல் என்னும் வினைக்கு அணிதல் பொருளின்மையால் “வேணியுய மிதிதழி - என்னும் பாடத்தை மாற்றுக் கூறும் இடம். அதனை இரண்டிடத்தும் கூட்டிப்பொருள் கொள்க. நிற்கும் செயப்படுபொருளில் வரும் படுவிகுதி குன்றிவந்ததாகிப்பாட்டு வினைமுற்றாய் நிற்றலால் யானைகளால் நிற்கப்படும் எனப்பொருள் கொள்க. (52)
---------------

மாத்தயங்கு சோலைகளும் வந்தவப்பர் தாமுமகிழ்
பூத்தழைக்கப் பாடும் புலியூரே - வாய்த்தபுலி
யோடப் பதஞ்சலியா ருண்மகிழ மன்றினட
மாடப் பதஞ்சலியா ரார்வு.    ,  ,   (53)

இ - ள். மா - வண்டுகளால், தயங்கு - விளங்காநின்ற, சோலைகள் உம் - சோலைகளும், வந்த - தரிசிக்க வந்த, அப்பர்தாம்உம் - ஆளுடையரசுகளும், மகிழ் - மகிழமரத்தின், பூதழை - பூவையுந் தழையையுமுடைய, கப்பு - கொம்புகளால், ஆடும் - ஆடாநிற்கும்) மகிழ்பூத்து - மகிழ்ச்சி கூர்ந்து, அழைக்க - அழைத்தருள் செய்ய, பாடும் - திருப்பாசுரங்கள் பாடாநிற்கும், புலியூர் -- புலியூரானது, வாய்ந்த புலி ஓடு. - சிவநேயம் பொருந்திய வியாக்கிரபாதரோடு, அபதஞ்சலியார் - அப்பதஞ்சலி முனிவரும், உள்மகிழ - மனமகிழ, மன்று இல் - பொன்னம்பலத்தில், நடம் ஆட – ஆநந்த நடனஞ்செய்ய, பதம்சலியார் - திருவடி சலியாத இறைவர், ஆர்வு - பொருந்துமிடமாம்.
வாய்த்த மலித்தல் விகாரம். (53)
---------------

கட்பங் கயமின்னார் கார்க்குழலி லந்தியினிற்
புட்பஞ் சரஞ்சேர் புலியூரே - நட்பினொடு
மெச்சிக்கும் பிட்டார் மெலிவொழிப்பார் வந்தியிட
விச்சிக்கும் பிட்டா ரிடம்.    ,  ,   (54)

இ - ள். பங்கயம் - தாமரை போன்ற, கண் - கண்களையுடைய, பின்னார் - மின்னலையொத்த பெண்களது, கார் - கரிய குழல் இல் - கூந்தலிலும், அந்தியின் இல் - அந்திக்காலத்திலும் (புட்பம் சரம் சேர் - மலராற்றொடுத்த சரம் சேரும்) புள் - பறவைகள், பஞ்சரம் - கூட்டில், சேர் - அடையும், புலியூர் – புலியூரானது, நட்பு இன் ஒடு - சிவநேய முதிர்ச்சியோடு, மெச்சி - புகழ்ந்து, கும்பிட்டார் - கும்பிடும் அடியாரது, மெலிவு ஒழிப்பார் - பிறவித் துன்பத்தை யொழிப்பவரும், வந்தி இட - வந்தியார் கொடுக்க. இச்சிக்கும் - விரும்பிய, பிட்டார் – பிட்டுணவையுமுடைய இறைவரது, இடம் - இடமாம்.
அரிமருத்தன பாண்டிய னேவலாளர் ஒறுக்கும் ஒறுப்பினை யாற்றாதிரங்கிய வாதவூரடிகள் முறையீட்டிற் கிரங்கிச் சிவபெருமான், வையை ஊழிவெள்ளம் போலப் பெருகிவரக் கட்டளையிட்டருளினர், அவ்வாறே பெருகிவரப் பாண்டியன் கண்டஞ்சி யடைக்கும்படி, தன்னாட்டிலுள்ளவர்க்கு அளந்துவிட, அவரவரடைக்குங்காலையில் பிட்டு விற்கும் வந்தியம்மை தனக்குக் கூலியாள் கிடையாது வருந்துங்காலையில் இறைவர் கூலியாளாய் எதிர்ப்பட்டுப் பிட்டைக் கூலியாகப் பெற்றுண்டு அவர்கள் அளந்தகரையையடைக்கத் தொடங்கினர் என்பது புராண வரலாறு. (54)
-------------

சாரொலிநீ டாவணமுந் தம்பதியை மாதருங்கற்
பூரமணந் துன்னும் புலியூரே - பாரினுட
னூதையங் கியம்புவா னுட்புறம்பான் மாதர்பக்கற்
றூதையங் கியம்புவான் றோய்வு.    ,  ,   (55)

இ - ள். ஒலிசார் - ஆரவாரம் பொருந்திய, நீடு ஆவண உம் - நெடியகடை வீதியும், தம்பதிஐ - தமது கணவரை, மாதர் உம் - கற்புடைய பெண்களும் (கற்பூரம்மணம் - கருப்பூரவாசனையால், துன்னும் - நெருங்கி மணம் வீசும்) கற்புஊர - கற்பு அதிகரிக்க, மணந்து - கலந்து, உன்னும் - கருதி வாழும், புலியூர் - புலியூரானது, பார்இன் உடன் - பிருதிவியோடு, ஊதை - வாயுவும், அங்க - தேயுவும், அம்பு - அப்பும், வான் - ஆகா யமுமாகிய பஞ்சபூதங்களின், உள்புறம்பான் - உள்ளும் புறம்பும் கலந்திருப்பவரும், மாதா பக்கல் - பரவையாரிடத்து, தூதுஐ (ஆளுடைநம்பிகள் பொருட்டு) தூது மொழிகளை, அங்கு இயம்புவான் - அவ்விடத்துக் கூறுகின்றவருமாகிய இறைவர், தோய்வு - பொருந்தும் இடமாம்.
பெருமாட்டியார் தோழியரிருவ ருளொருவராகிய கமலினியார் திருவாரூரில் உருத்திர கணிகைமார் மரபிற் பிறந்து பரவைநாச்சியாரெனத் திருப்பெயர் பூண்டு சிவநேசம் பூண்டொழுகுநாள், ஒருநாள் ஆளுடைய நம்பிகள் எதிர்ப்பட்டுப் பெருமானார் திருவருளால் திருமணஞ்செய்து சிலநாள் சென்றபின், திருவொற்றியூர்க் கெழுந்தருளிப் பெருமானாரைத் தரிசித்து அநிந்திதையார் வேளாளர் மரபிற் பிறந்து சங்கிலி நாச்சியாரெனத் திருப்பெயர் வாய்ந்து அத்திருவொற்றியூரில் திருப்பணி செய்தொழுகுவாரைக்கண்டு சிவபெருமானார் திருவருளால் திருமண முடித்திருத்தலை, அப்பரவை நாச்சியார் கேள்வியுற்றுப் பிணக்குற்றனர். அப்பிணக்குப் பிறர் மாற்றுதலரிதாதலால் அப்பெருமானாரே பிணக்கொழியத் தூது சென்றனர் என்பது புராணவரலாறு. ஊதையங் கிம்புவான் எண்ணும் மைத்தொகை
தாசிபக்கல் எனப்பாடம் உண்டு. புராணமுதலிய வற்றுள் பரவை நாச்சியாரிடத்துச் சிவபெருமானார் தூது சென்றருளினமையைக் கூறுமிடத்துத் தாசியென்றாயினும் அவர்கட்குரிய மற்றைப் பரியாய நாமங்களாலாயினு மறந்துங் கூறினவரில்லையாதலால் மாதர்பக்கல் எனப்பாடங் கொண்டாம். (55)
----------------

மீத்தா விமகரனை மீன்பாய்ந் தரம்பையினைப்
பூத்தா றுடைக்கும் புலியூரே - கூத்தாடிப்
பாதஞ் சிவந்தார் பழிக்கால வாயினிலோர்
போதஞ் சிவந்தார் புரி.    ,  ,   (56)

இ - ள். மீ - மேலே, தாவு - தாவிச்செல்லும், இமகரன்ஐ - சந்திரனை, மீன் பாய்ந்து - மீன்மேலே பாய்ந்து, அரம்பையின் ஐ - வாழையினை (பூத்த ஆல் - மலர்ந்த ஆலமரம், துடைக்கும் - களங்கம் போக்காநிற்கும்) பூ- பொலிவினையுடைய, தாறு - குலையினை, உடைக்கும் - உடைக்காநிற்கும், புலியூர் - புலியூரானது, கூத்தாடி - ஆநந்தநடனஞ்செய்து, பாதம்சிவந்தார் - திருவடி சிவந்தவரும், பழிக்கு - பழியின் பொருட்டு, ஆலவாயின் இல் - திருவாலவாயில், ஓர்போது - ஒருகாலையில், அஞ்சி வந்தார் - அஞ்சிவந்தவருமாகிய இறைவரது, பரி - திரு நகராம்.
ஒருமறையவன் திருப்புத்தூரிலிருந்து பிள்ளையோடு தன் மனைவியுடன் மாமன் வீட்டிற்குச் செல்ல மதுரையை நோக்கி வருங்கால், வழியில் வந்த வேசறவினால் தன் மனைவி நீர் வேட்கையளாய் மூர்ச்சித்திருத்தலைக் கண்டு அவ்வழியிவிருக்கும் ஓராலமரத்தின் கீழிருத்தித் தண்ணீர் கொண்டுவரச்சென்றனன், அப்போதவ ளாயுனாளுலந்தமையால் அம்மரத்திலேறுண்ட அம்பால் உயிரிழந்தனள், தண்ணீர் கொண்டு வரச்சென்ற அம்மறையவன் வந்து நோக்கி யென் மனைவியினுயிர் வாங்கிய பாவி யாரெனச் சுற்றிலும் பார்க்கும் போது வில்லில் அம்பேறிட்டு வழியில்வரு மிருகங்களைத் தேடி யம்மரத்தில் ஓர்பாலொதுங்கி நின்ற வேடனை நோக்கி இவன் தான் கொன்றனனென்று துணிந்து அவனைப் பிணித்து அப்போதுள்ள குலோத்துங்க பாண்டி யன் முன்னே கொண்டுவந்துவிட்டனன், அவன் மிகவும் ஒறுத்தும் தான் கொன்றவனல்லாமையால் உண்மைகூற அரசன் மனங்கலங்கி யிறைவர் சந்நிதிக்குச் சென்று குறை கூறுங்காலையில், அவர் திருவருளால் இந்நகர்க்குப் புறம்பிலுள்ள வணிகர் வீதியில் கலியாணம் நடக்கின்றது அங்கு இந்த அந்தணனோடு வருவாயாகில் உண்மை தெரிவிப்போமென்று ஓரசரீரியெழ, அதனைக் கேட்டு மகிழ்ந்து விடைபெற்று அவ்வணிகர் வீதியில் மணம் நடக்கும் வீட்டில் சென்று ஒருபாலிருக்குமிடத்து, மணவாளன் ஆயுள் முடிந்தமையால் இயமனாலேவப்பட்டு வந்த காலப்பட ரிருவரில் ஒருவன் இவன் மணவாளனாயிருப்பதாலிவனுயிர் வாங்குவது எவ்வாறென்று வினவ, மற்றொருவன் நேற்று நோயில்லாத ஒரு பார்ப்பனியை ஆலமரத்திலேறுண்ட அம்பினை வீழ்த்தி யெவ்வாறுயிர் கவர்ந்தேமோ. அப்படியே யிங்குள்ள பசுவா லிவனுயிரைக் கவர்வோமென்று பேசியது கேட்டு அவ்வேடனுக்கு மகிழ்ச்சி செய்தனுப்பினான் என்பது புராண வரலாறு. (56)
----------------

அற்பகற்சோட் டன்றிலன்பா லாந்தவத்தா லும்பருக்கும்
புற்பதிமே லாகும் புலியூரே - வெற்பினுரு
வந்தக் கழலொளியார் மன்றுளெவ ருக்குமர
விந்தக் கழலொளியார் வீடு.    ,  ,   (57)

இ-ள். அல்பகல் - இரவிலும் பகலிலும், சோடு அன்றில் - ஆணன்றிலும் பெண்ணன்றிலும், அன்பு ஆல் - அன்பினால், ஆம் - ஆகிய, தவத்து ஆல் - தவத்தினால் (உம்பர் - உக்கும் - தேவர்கள் மனதையும் உயர்ச்சியையுடைய, புற்பதிமேல் - பனை மரத்தின் மேல், ஆகும் - பிரியாது வசிக்கும்) உம்பருக்குஉம் - விண்ணுலகிற்கும், புல் -வியாக்கிரபாத முனிவர் வசிக்கும் - பதி - திருநகர், மேல் ஆகும் - மேற்பட்டு விளங்கும், புலியூர் - புலியூரானது, வெற்பின் உருவம் - மலைவடிவமாய், தக்க அழல் ஒளியார் – கனிந்த தீப்பிழம்பினொளி வாய்ந்தவரும், மன்று உள் - பொன்னம்பலத்தில், எவருக்கு உம் - யாவருக்கும், அரவிந்தம் - தாமரை மலர் போன்ற, கழல் - திருவடியை, ஒளியார் - கரவாதவருமாகிய இறைவரது, வீடு - திருமனையாம்.
வெற்பினுருவந்தக் கழலொளியார் என்பதை முன்பு காண்க. (57)
-----------------

மாவனஞ்சூழ் காவிடத்து மாலுறுமின் னாரிடத்தும்
பூவைவண்டூ துந்தென் புலியூரே - நாவளைந்து
பிட்டிரத மென்றார் பிரமப்பா காகொடுவா
கட்டிரத மென்றார் தலம்.    ,  ,   (58)

இ-ள். மாவனம் சூழ் - பெரிய காடுபோலச்சூழ்ந்த, கா இடத்து உம் - சோலையினிடத்திலும், மால்உறும் - காமமயக்கங்கொண்ட, மின்னார் இடத்து உம் - மின்னலையொத்த பெண்களிடத்தும் (பூ - பூவில், வை - வாய்வைத்து, வண்டு ஊதும் -வண்டுகளூதும்) பூவை - நாகணவாய்ப்புள், தூதுஉம் - தூதுமாகும், தென்புலியூர் - தென்பாலுள்ள புலியூரானது, நா அளைந்து - நாவிற்கலக்க, பிட்டு - பிட்டின், இரதம் - இரசத்தை, மென்றார் - சுவைத்தவரும், பிரமன்பாகா - பிரமனாகிய பாகனே, கொடுவா - கொண்டுவா, தட்டு - தட்டினையுடைய, இரதம் - தேரை, என்றார் - என்று திருவாய் மலர்ந்தவருமாகிய இறைவரது, தலம் - திருப்பதியாம்.
பிட்டிரதமென்றார் என்பதை முன்பு காண்க. திரிபுர தகனஞ் செய்தற்குப் பிரமன் சாரதியாயிருந்தமையால் பிரமப்பாகா கொடுவா தட்டிரதம் என்றார் என்றனர். ஆகும் என்னும் வினைமுற்றுச் சொல்லெச்சமாய் நின்றது, கொணர்வா என்று வழக்கின்மையால் கொடுவா எனப்பாடங்கொள்க. கொணா வினைப்பகுதி. கொண்டுவா எனப்பொருள். தொழிற்பெயர் முதலின் ஆகுமிடத்து ஈற்றயல் குறுகிரகர மெய்விரிந்து கொணர்தல், கொணர்ந்த, கொணர்ந்து, கொணர்பு, கொணரா, எனவருதலின் (58)
----------------

பண்டுதவஞ் செய்திடவும் பள்ளரலத் தாலுழவும்
புண்டரிக மலகும் புலியூரே - விண்டுமறை
வேந்துமறி யாரிருக்கு மேயறியார் தீயகலோ
டேந்துமறி யாரிருக்கு மில்.    ,  ,   (59)

இ - ள். பண்டு - முன்பு, தவம் செய்திட உம் - தவஞ்செய்யவும், பள்ளர் - பள்ளர்கள், அவத்து ஆல் - கலப்பையால், உழஉம் - உழுதொழில் செய்யவும் (புண்டரிகம் - வியாக்கிரபாதர், அல்கும் - தங்கும்) புண்டரிகம் - தாமரைமலர்கள், மல்கும் - நிறைந்து விளங்கும், புலியூர் - புலியூரானது, விண்டு உம் - திருமால்உம், மறைவேந்து உம் - பிரமனும் ஆகிய இவர்களால், அறியார் - அறியப்படாதவரும், இருக்கு – இருக்கு வேதத்தால், மேய் - பொருந்தி, அறியார் - அறியப்படாத வரும். தீ அகல்ஓடு - தியகலினோடு, ஏந்தும் மறியார் - மானை யேந்திய இடத்திருக்கரத்தையுடைய வருமாகிய இறைவர், இருக்கும் - எழுந்தருளியிருக்கும், இல் - திருமனையாம்.
விண்டு, இருக்கு இரண்டும் வட சொற்களாதலால் குற்றியலுகரங்கெடாது. அதனால் வேந்து என்பதின் இறுதியிலுள்ள உம்மையைவிண் என்பதனோடு கூட்டியும், மேய் எனப்பிரித்தும் பொருள் கொண்டாம். (59)
--------------

சாற்றுதிருத் தொண்டருஞ்செய்ச் சங்கினமு முந்துமதி
போற்றவள மிக்க புலியூரே - ஏற்றுருவாய்ச்
சங்கத் தரங்கத்தர் தாங்கமகிழ் வோருமையோர்
பங்கத் தரங்கத்தர் பற்று.    ,  ,   (60)

இ-ள். சாற்று - புகழும், திருத்தொண்டர் உம் - அடியாரும், செய் - வயல்களிலுள்ள, சங்கு இனம் உம் - சங்கின் கூட்டங்களும் (உந்து - தூண்டாநின்ற, மதி - பேரறிவால், போற்ற - துதிக்க, வளம்மிக்க - செழுமைமிகுந்த) முந்து - முற்பட்ட, மதிபோல் - சந்திரன் போல - தவளம் மிக்க - வெண்ணிறமிகுந்த, புலியூர் - புலியூரானது, ஏற்று உரு ஆய் - இ டபவடிவாய், சங்கம் - சங்குகளையுடைய, தரங்கத்தர் - அலை வாய்ந்த திருப்பாற்கடலையுடைய திருமால், தாங்க மகிழ்வோர் - விடையாய்ச் சுமக்க மகிழ்ச்சி கூருகின்றவரும், உமை - உமா தேவியாரை, ஓர்பங்கு - இடப்பாகத்திலுடைய, அத்தர் - தலைவரும், அங்கத்தர் - எலும்பாபரணத்தை யுடையவருமாகிய இறைவர், பற்று - அன்பு கூர்ந்திருக்குமிடமாம், (60)
-------------------

தெள்ளிமையோர் போற்றுதொறுந் தேம்பொழிறோ றுங்கனிச்செம்
புள்ளிவரு மால்சேர் புலியூரே – வெள்ளிச்
சயிலத் திருப்பார் சனிப்பிறப்பி லென்னைப்
பயிலத் திருப்பார் பதி.    ,  ,   (61)

இ-ள். தென் - மனத்தெளிவோடு, இமையோர் - தேவர்கள், போற்றுதொறும் - துதிக்குந்தோறும், தேம்பொழில் தோறும் - தேன் வாய்ந்த சோலைகள் தோறும் (கனி - கனிதலையுடைய, செம்புள் - கருடவூர்தியில், இவரும் - ஏறும், மால் சேர் - திருமால் சேரும்) கன்னி - கன்னி ராசியும், செம் - செம்மைவாய்ந்த புள்ளி - கற்கடகராசியும் வரும் - வந்து தங்கும், ஆல்சேர் - ஆலவிருட்சம் நெருங்கிய, புலியூர் - புலியூரானது, வெள்ளிசயிலத்து - வெள்ளிமலையில், இருப்பார் -- இருப்பவரும், சனி - சனித்தலாகிய, பிறப்பு இல் - சனனத்தில், என்ஐ பயில - என்னைப் பொருந்த, திருப்பார் - திருப்பாதவருமாகிய இறைவரது, பதி - திருத்தலமாம்.
கனி - பழங்களில், செம்புள்ளி - செவந்த புள்ளிகள், வரும் - பொருந்திய, ஆல் - ஆலவிருட்சங்கள் எனவும் ஒருபொருள். தோறும் என்னும் இடைச்சொற்கள். முன்னது தொழிற்பயில்வு பொருளிலும், பின்னது இடப்பன்மைப் பொருளிலும் வந்தன. கன்னி கனி. தொகுத்தல் விகாரம். (61)
---------------

தங்கவவை சேவிக்கத் தண்ணறைவண் டுண்ணவரும்
புங்கவரே சேரும் புலியூரே - அங்கைதனில்
ஏந்துதலை யோட்டினா ரேத்துமன்பர் தாய்முலைப்பால்
மாந்துதலை யோட்டினார் வாழ்வு.    ,  ,   (62)

இ - ள். தங்க அவை - பொன்னம்பலத்தை, சேவிக்க - துதிக்கவும், தண் - தண்ணிய, நறை - தேனை, வண்டு உண்ண - வண்டுகளுண்ணவும் (வரும் - வாராநின்ற, புங்கவர் ஏ - தேவர்களே, சேரும் - சேராநிற்கும்) அரும்பும் - முகிழ்க்கும், கவர் ஏ - மரக்கப்புகளே, சேரும் - நெருங்கிய, புலியூர் - புலியூரானது, அங்கைதன் இல் - அழகிய திருக்கரத்தில், ஏந்து - எந்திய, தலை ஓட்டினார் - பிரமகபாலத்தையுடையவரும், ஏத்தும் (தம்மை) துதிக்கும், அன்பர் - அடியார்கள், தாய்முலைப்பால் - தாய்மாரின் முலைப்பாலினை, மாந்துதல்ஐ - உண்ணுதலை, ஓட்டினார் - ஒழித்தவருமாகிய இறைவர், வாழ்வு - வாழ்ந்திருக்கும் இடமாம்.
அடியவர் பிறப்பினையொழிப்பவர் என்பார் தாய் முலைப்பால் மாந்து தலையோட்டினார் என்றார். (62)
----------------

முத்திதரும் பூசையென்று மூகைதனைப் பேசிடென்று
புத்தரவ மாற்றும் புலியூரே - சித்திமதி
நேமித்தா ரத்தனார் நித்தியகல் யாணிசிவ
காமித்தா ரத்தனார் காப்பு.    ,  ,   (63)

இ-ள். முத்திதரும் – மோட்சத்தைத் தாராநின்ற, பூசை - சிவபூசனையை, என்று உம் - எக்காலத்தும், மூகை தன்ஐ - ஊமைப் பெண்ணை, பேசிடு என்று - பேசாயென்று (புது -புதுமைவாய்ந்த, அரவம் - பாம்பாகிய பதஞ்சலியார், ஆற்றும் - செய்யும்) புத்தர் - புத்தர்களது, அவம் - பாவம் விளைக்கும் சமயவொழுக்கத்தை, மாற்றும் - போக்கும், புலியூர் - புலியூரானது, சித்தி - சித்திகளையும், மதி - புத்திகளையும், நேமித்தார் - நியமித்தவரும், அத்தனார் (அயன் முதலியோர்க்கு மூத்தவராயுள்ளவரும், நித்தியகல்யாணி - நித்தியகல்யாணியாகிய, சிவகாமி - சிவகாமியம்மையாரை, தாரத்தனார் – மனைவியராக வுடையவருமாகிய இறைவர், காப்பு - காவல்கொள்ளுமிடமாம்.
நியமித்தார் நேமித்தார் வடமொழித்திரிபு. புதுமை அரவம் ஈறுகெட்டுத்தான் னொற்றிரட்டித்துப் புத்தரவம் என நின்றது. (63)
-------------

சொற்பழுத்த மாமுநியுஞ் சூழுந் துறவினரும்
புற்பதத்தை யாரும் புலியூரே - உற்பவித்த
கஞ்சமனை வீட்டினார் கம்பறித்தார் செம்பதத்தால்
வெஞ்சமனை வீட்டினார் வீடு.    ,  ,   (64)

இ-ள். சொல்பழுத்த - புகழ்மிக்க, மாமுநி உம் - பெருமை வாய்ந்த வியாக்கிரபாத முநிவரும், சூழும் துறவினர்உம் - சூழ்ந்த துறவிகளும் (புல்பதத்துஐ - புலியின் காலினை, ஆரும் – பொருந்திய) புல்பதத்து ஐ - புல்லரிசியாலாகிய உணவினை, ஆரும் - உண்ணும், புலியூர் - புலியூரானது, உற்பவித்த - திருமாலுந்தியிற்றோன்றிய, கஞ்சம் - தாமரையாகிய, மனை வீட்டினார் – இல்லத்தையுடைய பிரமனது, கம்பறித்தார் - தலையைக் கொய்தவரும், செம்பதத்து ஆல் - செவந்த திருவடியினால், வெம்சமன் ஐ - கொடிய இயமனை, வீட்டினார் - உதைத்தருளினவருமாகிய இறைவரது, வீடு – திருமனையாம்.
யாவையும் படைத்தலால் நானேயிறைவனென் றகங்கரித்த பிரமனுக்கு நான்கு வேதங்களும் வந்து நீயிறைவனல்ல வெனக்கூறவு மயங்கியிறுமாந்திருத்தலால் வயிரவமூர்த்தி, அவன் செருக்கொழியச் சிரங்கொய்தனர் என்பதும், திருக்கடவூர் என்னுந் திருப்பதியில் சிவபெருமானை வழிபட்டுப் பூசித்து வந்த மார்க்கண்டேய முனிவர் வாழ்நாளுலந்தமையா லவருயிர் கவர வந்த இயமன் பாசம் வீசியபோது அவனை யுதைத்தனர் என்பதும் புராண வரலாறுகள். (64)
---------------

நன்குற்ற மாதருமந் நல்லார்கண் முன்றில்களும்
பொன்கற் படுக்கும் புலியூரே - மென்கட்
கமலவடி வந்தியார் கட்கருளார் ஞான
அமலவடி வந்தியா ரார்வு.    ,  ,   (65)

இ - ள். நன்கு உற்றமாதர் உம் - நன்மைமிக்க பெண்களும், அநல்லார்கள் - அப்பெண்களது, முன்றில்கள் உம் - முற்றங்களும் (பொன் - இலட்சுமியினது (கற்பையொத்த) கற்பு அடுக்கும் - கற்பினைப் பொருந்திய) பொன் - பொன்கட்டிகளை, கல்பதிக்கும் - கல்லாகப்படுத்த, புலியூர் - புலியூரானது, மெல் - மெல்லிய, கள் - தேன்வாய்ந்த, கமலம் – தாமரைமலர் போன்ற, அடி (தமது) திருவடியை, வந்தியார்கட்கு -வணங்காதவர்களுக்கு, அருளார் - அருள் செய்யாதவரும், அமலம் - மலரகிதமாகிய, ஞானம் வடிவு - அருள் வடிவம் - அந்தியார் - செவ்வான நிறத்தையொத்தவருமாகிய இறைவர், ஆர்வு - பொருந்தும் இடமாம். (65)
--------------

தேம்பொழின்மேற் சேல்பாயச் செங்கழையை மேதியுண்ணப்
பூம்பழனஞ் சாரும் புலியூரே - மேம்படுமெண்
டோளுக்கா சைப்பட்டார் தொண்டா மியற்பகையில்
லாளுக்கா சைப்பட்டா ரார்வு.    ,  ,   (66)

இ-ள். தேம் - தேன்பொருந்திய, பொழில்மேல் - சோலையின் மேல், சேல்பாய - சேல்கள் பாயவும், செங்கழை ஐ - செங்கரும்பினை, மேதி உண்ண - எருமைகளுண்ணவும் (பூ- பொலிவமைந்த, பழன் - பழங்கள், நஞ்சு - நைந்து வீழ்ந்து, ஆரும் - நிறைந்து கிடக்கும்) பூபழனம் - தாமரைமலர்களையுடைய வயல், சாரும் - சேர்ந்து சூழும், புலியூர் - புலியூரானது, மேம்படும் - மேம்பட்ட, எண்தோளுக்கு – எட்டுத் திருப்புயங்களுக்கும், ஆசைப்பட்டார் - திக்குகளையே பட்டுத்தரியமாக அணிந்தவரும், தொண்டு ஆம் - அடியவராகிய, இயற்பகை இல்லாளுக்கு - இயற்பகை நாயனார் மனையாள் பொருட்டு, ஆசைப்பட்டார் - விருப்பமுற்றவர் போல் நடித்தவருமாகிய இறைவர். ஆர்வு - பொருந்துமிடமாம்.
காவிரிப்பூம்பட்டினத்தில் வைசியர் குலத்தில் திருவவதாரஞ்செய்த இயற்பகை நாயனார் அடியார் திறத்து அன்புபூண்டொழுகு முறுதிப்பாட்டினை யாவருமுணர்ந்துய்ய, சிவபெருமானார் ஒரு தூர்த்த வேடமுடையவராயவரில்லத்திற்குச் சென்று, அவர் செய்யும் வழிபாட்டிற்கு மகிழ்ந்து உமது மனைவி வேண்டுமென, அதற்கிசைந்து கொடுக்கப் பெற்றுச் செல்லுங்கால், வழியிலந்நாயனார் சுற்றத்தார் இசையாது இறைவரைத் தடுக்க அவர்களைக் கண்டித்து வழிவிட்டுத் திரும்புகையில், ஓரிடையூறு வந்தது போல மீளவுங் கூவி ரிஷபவாகனாரூடராயவர் மனைவிக்கும் அவருக்கு முத்தி கொடுத்தார் என்பது புராண வரலாறு. (66)
----------------

கார்ப்புணர்ப்பிற் பொற்கலையைக் காமுகர்க்கா வேள்வரவைப்
போர்ப்பவனன் பார்க்கும் புலியூரே - பார்ப்பதியாம்
பெண்டனா கத்தடுத்தார் பேர்மணத்திற் சுந்தரனைத்
தொண்டனா கத்தடுத்தார் தோய்வு.    ,  ,   (67)

இ-ள். கார் - மேகம் போல நிறம் வாய்ந்த, புணர்ப்பு இல் - திருமேனியில், பொன்கலைஐ - பீதாம்பரத்தை, காமுகர்க்குஆக - காமிகளுக்காக, வேள்வரவுஐ - மன்மதனது வருகையை (போர்ப்பவன் - போர்க்குத் திருமால், அன்பு - அன்பினால், ஆர்க்கும் - பிணிக்கும்) போர் - போர்த்தொழிலையுடைய, பவனன் - வசந்தன், பார்க்கும் - பார்க்காநின்ற, புலியூர் - புலியூரானது, பார்ப்பதி ஆம் - பெருமாட்டியாராகிய, பெண் - மாதரசியை, தன் ஆகத்து அடுத்தார் - தமது திருமேனியில் ஓர்பால் வைத்தவரும், பேர்மணத்து இல் - பெரிய திருமணத்தில், சுந்தரன்ஐ - சுந்தரமூர்த்திநாயனாரை, தொண்டன் ஆக - அடிமையாக, தடுத்தார் - தடுத்து ஆண்டவருமாகிய இறைவர், தோய்வு - கலந்திருக்கும் இடமாம்.
திருக்கைலாயத்தில் சிவபெருமானார்க்குப் பூமாலை தொடுத்துச் சாத்தும் திருப்பணி பூண்டொழுகும் ஆலாலசுந்தரரென்னுந் திருநாமமுடையவர் ஒருநாள் மலர்கொய்யச் சோலைக்குச் சென்றகாலையில், அங்குவந்த உமையம்மையார் தோழியராகிய அநிந்திதை, கமலினியென்னுந் தோழியரிடத்துக் காதல் கொண்ட காரணத்தால் உன்னை யாம் வந்து தடுத்தாட்கொள்வோம் நிலவுலகில் மானிடப்பிறப்புற்று இவர்கள் பாலின்ப நுகர்வை யென்றிறைவர் கட்டளையிட்டருளினர், அக்கட்டளையை மேற்கொண்டு திருநாவலூரில் சடையனாரென்னுந் திருநாமமுடைய ஆதிசைவருக்கு இசைஞானியாரென்னும் அம்மையின் திருவயிற்றிலவதரித்துப் பருவம் வாய்ந்து அம்மறையவர் குலத்திலோர் பெண்ணைத் திருமணமுடிக்கும் போது, இறைவர் ஓர் விருத்த பிராமண வடிவங்கொண்டு எமக்கு நீயடிமையென்று வழக்கிட்டு நம்பியாரூ ரரைத் தடுத்தாட்கொண்டனர் என்பது புராணவரலாறு. (67)
---------------

தென்னார் பொழிலிடத்துஞ் செங்கனக மன்றிடத்தும்
புன்னாகத் தோடார் புலியூரே - நன்னீரை
விட்டுவிளக் கிட்டார் வினைதொலைத்தார் மாட்டினுமன்
பொட்டுவிளக் கிட்டா ருறைவு.    ,  ,   (68)

இ-ள், தென்ஆர் – வண்டுகளினிசை நிறைந்த, பொழில் இடத்துஉம் - சோலையினிடத்தும், செம் - செவந்த, கனகமன்று இடத்து உம் - பொன்னம்பலத்தினிடத்தும் (புன்னாகம் – புன்னாக மலரின், தோடு ஆர் - இதழ் நிறைந்த) புல் - வியாக்கிரபாதர், நாகத்து ஓடு - பதஞ்சலியாரோடு, ஆர் - பொருந்திய, புலியூர் - புலியூரானது, நல்நீர் ஐவிட்டு - நல்ல நீரை வார்த்து, விளக்கு இட்டார் – விளக்கெரித்த நமிநந்தியடிகள், வினைதொலைத்து - பிறவிக்குக் காரணமாகிய இருவினைகளைத் தொலைத்து, ஆர்மாடு இன்உம் - எவரிடத்தினும், அன்புஒட்டு - அன்பாகிய பற்று, விள்ள - நீங்கினால், கிட்டார் (அவர்களை அணுகாத இறைவர், உறைவு - தங்குமிடமாம்.
சோழநாட்டில் ஏமப்பேறூரென்னும் ஊரிலவதரித்த நமிநந்தியடிகள் சிவநேயமுடையவராய்த் திருத்தொண்டு பூண்டு திருவாரூர்க்கு நாள்தோறுஞ் சென்று புற்றிடங்கொண்ட பெருமானாரைத் தரிசனஞ் செய்தொழுகுநாளில் ஒருநாள், அந்த ஆலயத்தின் புறத்திலிருக்குந் திருவரனெறியப்பாரைச் சேவிக்கச்சென்றபோது திருவிளக்குக் குறைவாயிருக்கப் பார்த்து நெய்வாங்கக் கமலாலயமென்னும் திருக்குளத்தி னருகிருக்கும் ஒரு வீட்டிற்போய் நெய்கேட்டனர், அவன் சமணனாதலால் உங்கள் தேவன்கையில் அக்கினியிருக்க வேறு தீபமேன், வேண்டுமானால் இந்தக்குளத்து நீரை வார்த்து வையெனக் கேட்டுத், தளர்ந்திருக்கும்போது பெருமானார் திருவருளால் கமலாலய தீர்த்த நீரை வார்த்துத் தீபம் வையென ஓர்திருவாக்கெழக்கேட்டு அவ்வாறே வார்த்துத் திருவிளக்குவைத்துத் தரிசித்துவந்தனர் என்பது புராண வரலாறு. விள்ள என்னும் நிகழ்கால வினையெச்சத்த னது ளகரமெய் தொகுத்தல். (68)
---------------

பெட்பின்முகில் கண்டாற் பிறந்திறந்தா லெற்றோகைப்
புட்பரதங் காட்டும் புலியூரே - உட்பரிவாற்
கையார மாயுரைத்தார்க் காத்தாற்கீழ் நூனால்வர்க்
கொய்யார மாயுரைத்தா ரூர்.    ,  ,   (69)

இ-ள். பெட்பு இன் - விருப்பத்தோடு, முகில்கண்டால் - மேகத்தைக் காணில், பிறந்து இறந்தால் (தன்னிடத்து) பிறந்து இறக்கில் (எல் - விளக்கத்தையுடைய, தோகை - கலாபம் வாய்ந்த, புள் - மயில்கள், பரதம் காட்டும் – நடனஞ்செய்யும்) ஓகை - ஒழிதலை, எற்று – ஒழிந்த, புட்பம்ரதம் (அவ்வான்மாக்கள் சிவலோகஞ் செல்ல) புட்பரதத்தினை, காட்டும் - காட்டாநிற்கும், புலியூர் - புலியூரானது, உள்பரிவு ஆல் - மனத்தில் நிறைந்த அன்பால், கை (தமது) திருக்கையை, ஆரம் ஆக - சந்தனக் கட்டையாகக்கொண்டு உரைத்தார் - உரைத்த மூர்த்தி நாயனாரை, காத்து - பாதுகாத்து, ஆல்கீழ் - கல்லாலினிழலின்கீழ், நூல் – தர்மார்த்த காம மோட்சங்களை, நால்வர்க்கு உம் - சனகர் முதலிய நால்வருக்கும், ஒய்யாரம் ஆக - மகிழ்ச்சியாக, உரைத்தார் -சொல்லியருளினவருமாகிய இறைவரது, ஊர் - திருநகராம்.
பாண்டி நாட்டிற் சிறந்து விளங்கும் மதுரைத்திருப்பதியில் வணிகர் குலத்தில் திருவவதாரஞ் செய்து சிவநேயம் பூண்டு சொக்கநாதர்க்குச் சந்தனத்திருக்காப்புச் செய்தொழுகும் மூர்த்திநாயனார் ஓர்நாள், வடதேசத்திருந்து வந்து பாண்டியனோடு போர் செய்து வென்று அவனரசியலைக் கைகொண்டுசமணர்கள் வசப்பட்டிருக்குங்கரு நடராசன் தான்செய்யும் திருப்பணிக்கு முட்டுப்பாடு செய்ய, சந்தனக்கட்டை கிடையாமற் போனாலும் உரைக்குங்கைக்கு முட்டுப்பாடுண்டோவென்று முழங்கையை எலும்பு நரம்புந்தேயும்படி தேய்த்துப் பெருமானார் திருவருளாலரசுபெற்று முத்தியடைந்தனர் என்பது புராணவரலாறு, கையாரமாவுரைத்தார் எனப்பாடமுமுண்டு, இரண்டிடத்தும் ஆய் என்பது செயவெனெச்சத்திரிபாதலால் கையாரமா, ஒய்யாரமா என இயல்பாகப் பாடங்கொண்டாம். (69)
----------------

கட்டுறு கோட்டுப்பூக் கமலப்பூத் தேனூறிப்
புட்டரிக்க வீறும் புலியூரே - சிட்டர்தொழ
மின்னா டகத்தினான் மேய்ந்தமன்று ளானந்த
நன்னா டகத்தினா னாடு.    ,  ,   (70)

இ - ள். கட்டு உறு - முகிழ்த்த, கோட்டுப்பூ - கொம்பிலுள்ள மலரும், கமலப்பூ - தாமரைமலரும் (தேன் - வண்டுகள், நூறி - (கட்டினை) சிதைத்து, புட்டு - பிட்டு, அரிக்க (காலால்) அரிக்க, வீறும் - மலர்ந்து தோன்றும்) தேன் ஊறி - மதுவூறி, புள் தரிக்க - வண்டுகள் நிலைபெற்றிருக்க, வீறும் - பொலிவுபெற்று விளங்கும், புலியூர் - புலியூரானது, சிட்டர் தொழ - அயன் முதலிய மேலோர் வணங்க, மின் - விளங்கும், ஆடகத்து இன் ஆல் - மாற்றுயர்ந்த பொன்னால், மேய்ந்த - வேயப்பட்ட, மன்று உள் - பொன்னம்பலத்தில், நல் - நல்ல, ஆநந்த நாடகத்தினான் - ஆநந்த நிருத்தஞ்செய்யு மிறைவரது, நாடு - நாடாம்.
ஆடகம் நால்வகைப் பொன்னிலொன்று. பிட்டு எனற்பாலது புட்டு எனவந்தது மரூஉ. (70)
--------------

மேகம் பயில்குழலார் மென்களமுந் தண்பணையும்
பூகம் பொருவும் புலியூரே - மாகமொடு
தாலம் பணிந்திடுவார் தாழ்பவளக் கோடீர
மேலம் பணிந்திடுவார் வீடு.    ,  ,   (71)

இ-ள், மேகம் பயில் - மேகத்தையொத்த குழலார் - கூந்தலையுடைய பெண்களது, மென்களம் உப - மெல்லியகண்டமும், தண்பணை உம் - தண்ணியவயலும் (பூகம - கமுகமரத்தை, பொருவும் - ஒத்திருக்கும்) பூ - மலர்களையும், கம்பு - சங்கினையும், ஒருவும் - நீங்கிய, புலியூர் - புலியூரானது, மாகம் ஒடு - விண்ணுலகோடு, தாலம் - நிலவுலகத்தால், பணிந்திடுவார் - வணங்கப்பட்டவரும், தாழ் - தாழ்ந்த, பவளம் - பவளத்தையொத்த, கோடீரம்மேல் - சடாபாரத்தின் மேல், அம்பு அணிந்திடுவார் - கங்கையை யணிந்தவருமாகிய இறைவரது, வீடு - வீடாம்.
உழுதவயல் என்பார் மலரையும் சங்கையும் நீங்கிய என்றார். (71)
--------------

கங்குல்வாய்த் தீபங்க ளுக்கும்வெயி லுக்குமணிப்
பொங்கரா வீடாம் புலியூரே - சங்கரா
என்பா ரிடத்தினா னீமத் திடைநடித்த
வன்பா ரிடத்தினான் வாழ்வு.    ,  ,   (72)

இ-ள். கங்குல்வாய் - இரவிலுள்ள, தீபங்களுக்கு உம் - விளக்குகளுக்கும், வெயிலுக்கு உம் - சூரியனுக்கும் (மணி - மாணிக்கத்தைத் தலையிலுடைய, பொங்கு - விளங்காநின்ற, அரா - பாம்பு, ஈடு ஆம் - ஒக்கும்) அணி -அழகிய, பொங்கர் - சோலையிலுள்ள, - ஆச்சாமரம், வீடு ஆம் - வீடாகும், புலியூர் - புலியூரானது, சங்கரா என்பார் - சங்கரனேயென்று துதிக்கும் அடியவர்களது, இடத்தினான் - இடத்திலுள்ளவரும், ஈமத்து இடை - மயானத்தில், நடித்த - நடனஞ் செய்த, வன்பாரிடத் தினான் - வலிய பூதப்படையை யுடையவருமாகிய இறைவர், வாழ்வு – வாழுமிடமாம்.
சர்வ சங்கார காலத்தில் யாவும் மயானமாதலால் ஈமத்திடைநடித்த எனவும், தேவதாருவன முனிவர்கள் கொல்ல ஏவிய பூதங்களைத் தனக்குச் சேனையாகக் கொண்டருளினமையால் வன்பாரிடத்தினான் எனவுங்கூறினார். (72)
-------------

அல்லிச் சுனைகளினு மாலையினு நாரியே
புல்லிக் குடையும் புலியூரே - கல்லிற்
றலையைத்தா மோதினார் தம்மையாண் டெண்ணெண்
கலையைத்தா மோதினார் காப்பு.    ,  ,   (73)

இ-ள். அல்லி - ஆம்பல்களையுடைய, சுனைகள் இன்உம் - சுனைகளிடத்திலும், ஆலை இன் உம் - ஆலையினிடத்திலும் (நாரி ஏ பெண்களே, புல்லி - பொருந்தி, குடையும் - நீராடும்) நாரி (மன்மதனது) வண்டுநாணும், ஏ - மலரம்பும், புல் - தழுவிய, இக்கு - கரும்புகள், உடையும் - உடையாநிற்கும், புலியூர் - புலியூரானது, கல் இல் - பாறையில், தலை - தமது தலையை, தாம் - தாம், மோதினார்தம்ஐ - மோதிய திருக்குறிப்புத் தொண்டரை, ஆண்டு - அடிமைகொண்டு, எண்ணெண்கலை ஐ - அறுபத்து நான்கு கலைகளையும், தாம் ஓதினார் (ஆன்மாக்களின் பொருட்டுத் தாம்) ஓதியருளிய இறைவர், காப்பு - காவலாயுள்ள இடமாம்.
காஞ்சிபுரத்தில் ஏகாலியர் மரபில் திருவவதாரஞ்செய்து சிவநேயம் பூண்டு சிவனடியார் வஸ்திரங்களினழுக்குப் போக்கித் தூயதாக்கிக் கொடுத்தொழுகு நாளில் சிவ பெருமானாரிவர் முறுகிய அன்பினை யுலகரறிந்துய்ய, விருத்த வடிவங்கொண்டோர ழுக்குக் கந்தையைத் தாங்கிக் கொண்டவ் வடியவ ரில்லிற்கு எழுந்தருளக்கண்டு, வந்த அடியவரைத் தரிசித்துபசரித்து எமதையரே இக்கந்தையைக் கொடுத்தால் மாசு போக்கித் தருகின்றேனென, யாம் விருத்தராகையால் குளிருக்காற்றேம் இதைத்தவிர வேறுமில்லை விரைவிற்றருக வென்றருள, அவ்வாறே தருகின்றேனென வேற்று, மாசு போக்கத் தொடங்குங் காலையில் பெருமானாரருளால் மழை பெய்யத்தொடங்கினமையால், அடியவர்க்கிடையூறு செய்தோமே யாது செய்வோமெனத் தேம்பிப் பாறையில் தமது தலையை மோதியபோது சிவபெருமானார் காட்சி தந்தருளினரென்பது புராணவரலாறு. (73)
---------------

வெற்பிணைக்குங் கொங்கைமின்னார் வீடுஞ்செந் தாமரையும்
பொற்பளிக்குஞ் சாரும் புலியூரே - கற்புணையா
ஓதங் கடந்துவந்தா ரோதுதமிழ் கொண்டிருபொற்
பாதங் கடந்துவந்தார் பற்று.    ,  ,   (74)

இ - ள். வெற்பு - மலையோடு, இணைக்கும் - ஒப்புச்சொல்லத் தோன்றும், கொங்கை - தனத்தையுடைய, மின்னார் - மின்னல் போலும் இடையையுடைய பெண்களது, வீடுஉம் - இல்லமும், செந்தாமரை உம் - செந்தாமரைமலரும் (பொன் - பொன்னாலும், பளிக்கும் - பளிங்காலும் சாரும் - அமைந்த பொற்பு - அழகிய, அளிகுஞ்சு -- வண்டின்குஞ்சுகளால், ஆரும் - பொருந்தப்படும், புலியூர் - புலியூரானது, கல் - (சமணர்கள் பிணித்த) தூணை, புணை ஆக - தெப்பமாகக்கொண்டு, ஓதம் - கடலை, கடந்து வந்தார் - கடந்து வந்த திருநாவுக்கரசுகள், ஓது - ஓதிய, தமிழ் கொண்டு - திருப்பாசுரங்களைக் கைக்கொண்டு, இருபொன்பாதங்கள் - பொன் போலும் அரிய இரண்டு திருவடிகளையும், தந்து உவந்தார் - தந்து மகிழ்கூர்ந்த இறைவர், பற்று - அன்பு கூர்ந்திருக்குமிடமாம்.
திருமுனைப்பாடி நாட்டிற் சிறந்த திருவாமூரில் வேளாளர் குலத்தில் புகழனார் தவத்தால் திருவவதாரஞ் செய்து மருணீக்கியாரென்னும் பிள்ளைத் திருநாமம் வாய்ந்து பல நூல்களையுங் கற்றுணர்ந்து வினைவசத்தால் சமண்சமயம் புகுந்து அங்குத் தருமசேனர் என்னும் பெயர்பெற்றொழுகுநாளில், திருவதிகை வீரட்டானத்தில் திருத்தொண்டு செய்திருந்த அவர் தமக்கையார் திலகவதியார் கேள்வியுற்று வருந்திப் பெருமானாரை வேண்டிக் கொண்டமையால் அப்பெருமானார் திருவருளால் சூலைநோயிற் றொடக்குண்டு அச்சமணர்கள் மணிமந்திரங்களாற்றீராது தமது தமக்கையாரை வழிபட்டுச் சிவநேயம் பூண்டு சூலைநோய் தீர்ந்திருத்தலைச் சமணர்கள் கேள்வியுற்றுத் தமது சமயத்தொடக்கிற் கட்டுண்ட அரசனனுஞையால் திருநாவுக்கரசுகளை வருவித்து கற்றூணிற் கட்டி, நடுக்கடலிற் பிணித்துப் போட்டனர், ஸ்ரீபஞ்சாக்கரப் பதிகமோதிக் கட்டுண்ட கற்றூண் தெப்பமாக மிதந்து திருப்பாதிரிப் புலியூருக்கெழுந்தருளிப் பெருமானாரைத் தரிசித்துப் பதிக மோதினரென்பது புராண வரலாறு. இணைக்கும் பிறவினைப் பெயரெச்சம் இணைக்கு பிறவினைப் பகுதி, உகாககேடுசந்தி, உம் விகுதி (74)
--------------

மிக்ககதிர்த் தேர்விசும்பை மேலோர் தவத்தைவிருப்
புக்களவித் தாக்கும் புலியூரே - சக்கரத்தை
நந்தரிக்கிட் டன்புடையா னாளுஞ் சிவகாம
சுந்தரிக்கிட் டன்புடையான் தோய்வு.    ,  ,   (75)

இ-ள். மிக்க கதிர் - மிகுந்த ஒளிவாய்ந்த, தேர் - நிலைத்தேர்கள், விசும்பு ஐ - விண்ணுலகினை, மேலோர் - பெரியோர்கள், தவத்து ஐ - தவத்தினை (புக்கு - மேலே சென்று, அளவி - கலந்து, தாக்கும் - மோதும்) விருப்புக்கள் - ஆசைகளை, அவித்து - கெடுத்து - ஆக்கும் - செய்யும், புலியூர் - புலியூரானது, சக்கரத்து - சுதரிசனமென்னுஞ் சக்கரத்தை, நந்து - பாஞ்சசன்னியமென்னுஞ் சங்கத்தை யேந்திய, அரிகு - திருமாலுக்கு, இட்ட - கொடுத்தருளிய, அன்பு உடையான் - கருணையையுடையவரும், நாள் உம் - எந்நாளும், சிவகாம சுந்தரிக்ககு - சிவகாமசுந்தரியார்க்கு, இட்டன் - இஷ்டரும், புடையான் - ஓர்பாலுள்ளவருமாகிய இறைவர், தோய்வு – கலந்து வசிக்கும் இடமாம். (75)
----------------

மன்னுமலை தந்துவந்து மாக்களிற்றைப் பெற்றுமைநேர்
பொன்னிநதி சூழும் புலியூரே - சென்னிமதிப்
பெம்மா னிடக்கையான் பேரம் பலத்தாடுஞ்
செம்மா னிடக்கையான் சேர்வு.    ,  ,   (76)

இ-ள் (மன்னும் மிக்க. அலைதந்துவந்து - அலைகளை வீசிவந்து, மா - பெரிய, களிறுஐ பெற்று - யானைகளையடைந்து) மன்னும் - நிலை பெற்ற, மலைதந்து - இமயமலையால் தரப்பட்டு. உவந்து - சந்தோஷித்து, மாகளிறுஐ - பெருமை வாய்ந்த யானைமுகக் கடவுளாகிய மூத்த பிள்ளையாரை, பெற்ற - ஈன்ற, உமைநேர் - பார்வதிப் பெருமாட்டியாரையொத்த, பொன்னிநதி - காவிரிநதி. சூழும் - சூழ்ந்த, புலியூர் – புவியூரானது, சென்னி - சடாபாரத்தில், மதி - இளஞ்சந்திரனையணிந்த, பெம்மான் - பெருமானாரும், இடக்கையான் - தமருகத்தை யேந்தினவரும், பேர் அம்பலத்து ஆடும் -பெருமை வாய்ந்த பொன்னம்பலத்தில் நடனஞ்செய்யும், செம்மான் - செவந்தமானை, இடக்கையான் - இடத்திருக்கரத்திலணிந்தவருமாகிய இறைவர், சேர்பு - சாருமிடமாம்.
(76)
---------------

மேதகுவிண் டாவுறலான் மேலம் புலியுறலாற்
பூதரமொப் பாகும் புலியூரே - மோதிப்
பொருமாதங் கத்துரியார் போற்றுலகீ ரேழுந்
தருமாதங் கத்துரியார் சார்பு.    ,  ,   (77)

இ -ள். மேதகு - மேன்மைமிக்க, விண் - மேகம். தாவுறல் ஆல் - தவழ்தலாலும், மேல் - விண்ணிலுள்ள, அம்புவி உறல் ஆல் - சந்திரன் தவழ்தலாலும்) மேதகு - மேன்மைமிக்க விண் - ஆகாயத்தை, தாவுறல் ஆல் - அளாவுதலாலும், மேல் - தன் மேல், அம் - அழகிய, புலி உறல் ஆல் - புலிவசித்தலாலும், பூதரம் - மலையை, ஒப்பாகும் - ஒக்கும், புலியூர் - புலியூரானது, மோதி - தாக்கி, பொரும் - போர் செய்யும், மாதங்கத்து - யானையினது, உரியார் – தோற்போர்வையையுடையவரும், போற்று - துதிக்கும், ஈரேழுலகு உம் - பதினான்குலகத்தையும், தரும் - பெற்ற, மாது - பெருமாட்டியாரை, அங்கத்து உரியார் - தமது திருமேனியினிடப்பாலிற் பெற்றவருமாகிய இறைவர், சார்பு – சார்ந்திருக்குமிடமாம்.
பூதரம் உலகுதரிக்கச் செய்வது என்னும் பொருள்மேல் நிற்றலால் காரணப்பெயர்.
(77)
----------------

அங்காடி யாங்கம் பலைசங்கா ரஞ்செறிவாற்
பொங்காழி நேராம் புலியூரே - சங்காழி
மாலாஞ் சரத்தர் மணமலிசெம் பொன்மடலைப்
போலாஞ் சரத்தர் புரி.    ,  ,   (78)

இ - ள். அங்காடி - கடைகள்ந ஆம் - அமைந்த, கம்பலை - ஆரவாரத்தையும், சங்கு - வளையலையும், ஆரம் - முத்தையும், செறிவுஅல் - நெருங்கியிருத்தலால்) ஆம் - சலத்தையும், கம்பு - சங்கையும், அலை - அலையையும், சங்காரம் - அழித்தற்றொ ழிலையும், செறிவு ஆல - பொருந்தியிருத்தலாலும், பொங்கு பொங்கும், ஆழி - கடலை, நோ ஆம் - ஒக்கும், புலியூர் - புலியூரானது, சங்கு - சங்கினையும், ஆழி - சக்கரத்தையும் (ஏந்திய மால் ஆம் சரத்தர் - திருமாலாகிய அம்பினையுடையவரும், மணம் மலி - வாசமிக்க, செம்பொன்மடல் ஏ – செம்பொன்னாலாகிய மடலினை, போல் ஆம் - போல அமைந்த, சாத்தர் – கொன்றைமாலையை யணிந்தவருமாகிய இறைவர், புரி - திருநகராம்.
ஆம் முன்னது வினையிடைச்சொல். பின்னது இடையிலுயிர் மெய்கெட்டு நின்ற ஆகும் என்னும் பெயரெச்சம். செம்பொன்மடல் நிறம்பற்றி வந்தவுவமையணி. (78)
-----------------

வாய்ந்த வலம்புரிப்பூ மாத்தழுவி நந்தவனம்
பூந்துளவத் தோனாம் புலியூரே - ஆய்ந்தமலர்ச்
செங்கைக் குழையினார் திண்டோ டொடுங்காதிற்
சங்கைக் குழையினார் சார்பு.    ,  ,   (79)

இ-ள். (நந்தவனம் - நந்தவனமானது, வாய்ந்த - பொருந்திய, வலம்புரி -நந்தியாவட்ட மலரையும், மா - வண்டையும், தழுவி - பொருந்தி) வாய்ந்த - பொருந்திய, வலம்புரி - வலம்புரிச் சங்கையும், பூமா - தாமரையில் வசிக்கும் இலக்குமியையும், தழுவி - பூதுளவத்தோன் – பொலிவமைந்த துழாய் மாலையையணிந்த திருமாலை, ஆம் - ஒக்கும், புலியூர் - புலியூரானது, ஆய்ந்தமலர் - ஆராய்ந்த தாமரை மலரையொத்த, செம்கை கு -செவந்த திருக்கரத்தில், உழையினா - மானையேந்தினவரும், திண்தோள் - திண்ணிய தோளை, தொடும் - அளாவும், காது இல - திருச்செவியில், சங்கு, குழையினார் - சங்க குண்டலத்தையுடையவருமாகிய இறைவர், சார்பு - சார்ந்திருக்குமிடமாம்.
சங்கைஐ சாரியை ஏழனுருபு நிற்குமிடத்தில் நான்கனுருபு நிற்றலால் உருபுமயக்கம். தேவதாருவந முனிவர் கொல்லவேவிய மானைத் திருக்கரத்திலேந்தினார் என்பது புராண வரலாறு. (79)
----------------

தாலம் படைத்தலர்க்கட் டானொழுக லாற்பிரமன்
போலும் பொழில்சூழ் புலியூரே - ஆலம்
அருந்தக்கண் டங்கறுத்தா ரல்லல்வினை யன்பர்
வருந்தக்கண் டங்கறுத்தார் வாழ்வு.    ,  ,   (80)

இ-ள். (தாலம் படைத்து - கூந்தற்பனையைப் படைத்து, அலர் - மலரினின்று, கள் தான் ஒழுகல் ஆல் - மது ஒழுகப்பெறுதலால்) தாலம் படைத்து - உலகினைப்படைத்து, அலர்கண் தாமரைமலரில், தான் ஒழுகல் ஆல் - தான் வசித்தலால், பிரமன் போலும் - பிரமனையொக்கும், பொழில் சூழ் - சோலை சூழ்ந்த, புலியூர் - புலியூரானது, ஆலம் அருந்த - விஷத்தையுண்ணுதலால், கண்டம் கறுத்தார் - ஸ்ரீ கண்டங்கறுத்தவரும், அல்லல்வினை - பிறவித்துன்பத்தை விளைக்கும் இருவினைகளை, அன்பர் வருந்த - அடியவர் துதித்துவருந்த, கண்டு - நோக்கி, அங்கு அறுத்தார் - அப்பொழுது ஒழித்தவருமாகிய இறைவர் , வாழ்வு - வாழுமிடமாம்.
அமுதம் தோன்றத் திருப்பாற்கடலைப் பிரமன் முதலியோர் கடைந்த காலையில் விஷந்தோன்றியதனால் நிலைகுலைந்து அவர்கள் வேண்டுகோளுக்கருள் கூர்ந்து உண்டருளினர் என்பது புராணவரலாறு. கண்டங்கறுப்பார் என எதிர்காலம் படப் பாடம் ஒதுவாருமுண்டு. (80)
----------------

மின்னுமணி வேழத்தான் மேவரம்பை யால்வயல்கள்
பொன்னுலகுக் கொப்பாம் புலியூரே - உன்னியொரு
கானமா வென்றார் கருத்துற் றுருத்தெதிர்ந்த
தானமா வென்றார் தலம்.    ,  ,   (81)

இ - ள். (மின்னும் - விளங்காநின்ற, மணி - அழகிய, வேழத்து ஆல் - கரும்பினாலும், மேவு - பொருந்திய, அரம்பை ஆல் - வாழையாலும்) மணி - சிந்தாமணியாலும், வேழத்து ஆல் - வெள்ளையானையாலும், மேவு அரம்பை ஆல் - விரும்பும் அரம்பையர்களாலும், வயல்கள் - வயல்களானவை, பொன்னுலகுக்கு - பொன்னுலகத்துக்கு, ஒப்புஆம் - ஒப்பாகும், புலியூர் - புலியூரானது, உன்னி - தியானித்து, ஒருகால் - ஒருதரம், நமா என்றார் - நமா என்று சிந்திக்கும் அடியவரது, கருத்து - மனத்தில், உற்று - பொருந்தி, உருத்து எதிர்ந்த - கோபித்தெதிர்ந்த, தானம் - மதத்தையுடைய, மா- யானையை, வென்றார் - வென்றவராகிய இறைவரது, தலம் - திருப்பதியாம்.
கயமுகாசுரன் என்பவன் பிரமனிடத்துப் பல வரங்களையும் பெற்று இந்திரன் முதலியோரையெல்லாம் வென்று நிலவுலகில் வந்து காசியில் வசிக்கு முனிவர்களைக் கொல்லத் துரத்திய காலையில் விசுவநாதரை யடைந்தனர். அங்கும் அவன் சென்றமை யால் சிலபெருமானார் உக்கிரவடிவங்கொண்டுதோன்றச் சிறிதுமஞ்சாது போர் செய்யப் புகுந்தமையாவனை மிதித்துக்கொன்று தோலையுரித்துப் போர்த்தனர் என்பது புராணவரலாறு. (81)
-----------------

மாகமுறைந் தாமைவெள்ளை வாரணமூர்ந் தோட மகப்
போகிநிக ராகும் புலியூரே - தோகைமயிற்
புள்ளே றிவருவார் போதமழ லைக்குவந்தார்
வெள்ளே றி வருவார் வீடு.    ,  ,   (82)

இ-ள். (மா - பெரிய, கம் உறைந்த - நீர்ப்பெருக்கு அமைந்து, ஆமை - ஆமையும், வெள்ளைவாரணம் - வெள்ளிய சங்குகளும், ஊர்ந்து - தவழப்பெற்று) மாகம் உறைந்து - விண்ணுலகில் வசித்து, ஆம் - நீர் பருகிய) மை - மேகத்தையும், வெள்ளைவாரணம் - வெள்ளையானையையுநடத்தி, ஓடை - மலரோடையானது, மகம் - யாகத்தையுடைய, போகி - இந்திரனுக்கு, நிகர் ஆகும் - ஒக்கும், புலியூர் - புலியூரானது, தோகைமயில் புள் - கலாபத்தையுடைய மயிலின் மேல், ஏறிவருவார் - ஏறிவரு முருகக்கடவுளது, போதம் மழலைகு - உபதேசமாகிய மழலைக்கு, உவந்தார் - மகிழ்ந்தருளினவரும், வெள் - வெ ள்ளிய, ஏறு - இடபத்தில், இவருவார் - ஏறிவருவோருமாகிய இறைவரது, வீடு - திருமனையாம். (82)
-------------

தேன்றிகழு மாமலரேந் திப்பரவித் தாழ்ந்தடியார்
போன்றகழி சூழும் புலியூரே - ஊன்றி
உளத்தி னயனத்த னுவந்து தொழுதேத்தும்
குளத்தி னயனத்தன் குடி.    ,  ,   (83)

இ - ள். (தேன் - வண்டுகளையும், திகழும் - விளங்கும். மா- பெருமை பொருந்திய, மல்லர் - வீரரையும், ஏந்தி - பொருந்தி, பரவிதாழ்ந்து - அகன்று ஆழ்ந்து) தேன்திகழும் - தேன்பொருந்திய, மா - பெருமையமைந்த, மலர் ஏந்தி - மலர்களையேந்தி, பரவித்தாழ்ந்து - துதித்து வணங்கி, அடியார் போன்று - அடியவரையொத்து, அகழி சூழும் - அகழிசூழ்ந்த, புலியூர் - புலியூரானது, உளத்து இன் - மனத்தில், ஊன்றி - பதித்து, அயன் - பிரமனும், நத்தன் - பாஞ்சசன்னியமென்னுஞ் சங்கினையேந்திய திருமாலும், உவந்து - விரும்பி, தொழுது ஏத்தும் - தொழுது வணங்கும், குளத்து இல் - நெற்றியில், நயனத்தன் - அழற்கண்ணையுடைய இறைவர், குடி - குடியிருக்கும் ஊர். (83)
--------------

ஆசின்மதி னூலளவிட் டாங்குயர்ந்து நீறணிந்து
பூசுரர்போ லாகும் புலியூரே - மாசு
கழலாத வன்மதியார் கண்ணுறார் கண்ணாம்
அழலாத வன்மதியா ரார்வு.    ,  ,   (84)

இ-ள். ஆசுஇல் - குற்றமில்லாத, மதில் - மதிலானது (நூல் அளவு இட்டு - எற்று நூலாலளவிடப்பட்டு, ஆங்கு உயர்ந்து - அவ்விடத்திலுயர்ந்து, நீறு அணிந்து - சுண்ணத்தாற் பூசப்பட்டு) நூல் அளவிட்டு - வேதமுதலிய நூல்களை யளவுசெய்து, ஆங்கு - அப்பொழுதே, உயர்ந்து (அறிவால்) உயர்ந்து, நீறு அணிந்து - திருநீறணிந்து விளங்கும், பூசுரர்போல் ஆகும் - மறையவரையொத்த, புலியூர் - புலியூரானது, மாசு கழலாத - குற்றத்தினின்றும் நீங்காத, வல்மதியார்கண் - தற்போதமுடையவரிடத்து, உறார் - பொருந்தாதவரும், கண் - திருநேத்திரங்கள், ஆம் - அமைந்த, அழல் - அக்கினியும், ஆதவன் - சூரியனும், மதியார் - சந்திரனுமாகவுடையவருமாகிய இறைவர், ஆர்வு - பொருந்து மிடமாம்.
அழலாதவன் மதி உம்மைத் தொகை. (84)
--------------

எற்கோ வரையா கிவரலா லைங்கரனேர்
பொற்கோ புரஞ்சேர் புலியூரே - நற்காற்
கிசைக்குஞ் சிலம்பினா னீரைம் முகத்தான்
அசைக்குஞ் சிலம்பினா னார்வு.    ,  ,   (85)

இ-ள். (எலகு - சூரிய மண்டலத்துக்கோ, வரை ஆகி - ஓரளவாகி, வால் ஆல் - வருகையால்) எல் - விளக்கம் வாய்ந்த, கோ - அரசத்தன்மையையுடைய, வரை – மேருவையொத்த, ஆகு - பெருச்சாளியின்மேல், இவரல் ஆல் - ஏறுதலால் - ஐங்கரன் - ஐந்து திருக்கரங்களையுடைய மூத்த பிள்ளையாரை, நேர் - ஒக்கும், பொன் – பொன்னாலமைந்த, கோபுரம் சேர் - கோபுரமமைந்த, புலியூர் - புலியூரானது, நல்காற்கு - பொலிவமைந்த திருக்கால்களுக்கு, இசைக்கும் சிலம்பினான் - இசைந்த சிலம்பினையுடையவரும், ஈரைம் முகத்தான் - பத்து முகங்களையுடைய இராவணன், அசைக்கும் - அசைக்காநின்ற, சிலம்பினான் - கயிலைமலையை யுடையவருமாகிய இறைவர், ஆர்வு - பொருந்து மிடமாம்.
முனிவர்களோடு மாறுபட்டு பெருச்சாளி வடிவங்கொண்டு ஓரசுரன் என்றும் இடையூறவர்களுக்குச் செய்துவந்தமையால் முனிவர் வேண்டுகோளால் அவ்வசுரனை பாசாங்குசங்களாலடக்கித் தமக்கு வாகனமாகக் கொண்டார் என்பதும், இராவணன் இந்திரன் முதலிய தேவர்களோடு போர்செய்து செருக்குற்றுச் சிவபெருமான் திருக்கயிலைவழி வருங்காலையில் அவன் விமானஞ் செல்லாமையால் அத்திருமலையை எடுக்க முயன்ற னென்பதும் புராணவரலாறுகள். ஈரைந்து பண்புத்தொகை, (85)
--------------

காற்காட்டி யாறுதலைக் காட்டியடுத் தோர்க்கயில்வேள்
போற்கா வனஞ்சூழ் புலியூரே- பாற்கோலக்
குட்டிக்கங் கூட்டினார் கொச்சைமு க மாமனுக்கன்
றொட்டிக்கங் கூட்டினா ரூர்.    ,  ,   (86)

இ-ள். அடுத்தோர்க்கு – அடுத்தவர்களுக்கு; கால்காட்டி - தென்றற்காற்றைக் காட்டி;
ஆறுதலைக்காட்டி - இளைப்பாறுதலைக்காட்டி, அடுத்தோர்க்கு - தம்மை அடைந்த அடியவர்க்கு, கால்காட்டி – திருவடியைக்காட்டி, ....................- ஆறுதிருமுகங்களையுங் காட்டி, அயில் – வேலையேந்திய, வேள்போல் - முருகக்கடவுளைப் போல, காவனம்சூழ் - காடு வனங்கள் சூழ்ந்த, புலியூர் - புலியூரானது, பால் – பாலை, கோலம் குட்டிக்கு - பன்றிக் குட்டிக்கு, அங்கு ஊட்டினார் - அங்குத் தாயாய் வந்து ஊட்டினவரும், கொச்சைமுகம் - ஆட்டுமுகத்தை, மாமனுக்கு - தக்கனுக்கு, அன்று – அக்காலையில், ஒட்டி – சேர்த்து, கம்கூட்டினார் - தலையாகக் கூட்டினவருமாகிய இறைவரது, ஊர் - ஊராம்.
பாண்டி நாட்டிலுள்ள குருவிருந்த துறையென்னுமூரில் வாழுஞ் சுகலனென்னும் ஒரு வேளாளன் பெற்ற பன்னிரண்டு பிள்ளைகளும் தமது தந்தை தாயிறந்தபின் வேடரோடு கூடிக்காட்டில் வேட்டையாடுங் காலையில் அங்கிருந்து தவம் செய்த பிரகஸ்பதியின் தவங்குலைய, கல் முதலியவற்றை வாரிவீசினார்கள். அவர் சினங்கூர்ந்து நீங்கள் உழுதொழிலின ராதலால் மூக்காலுழும் பன்றியாகக்கடவீரென்று சபிக்க அன்றே அவ்வூரின் புறத்திலுள்ள நாட்டில் பன்றிகளாகப் பிறந்தார்கள், அக்காலத்திலுள்ள இராசராசபாண்டியன் வேட்டையாடுங் காலையிலவன்கையில் அவற்றின் தந்தை தாய்களகப்பட்டிறக்க அக்குட்டிகள் வருந்தும்போது சிவபெருமானா ரவற்றின் தாயாய் வந்து முலையூட்டினர் என்பதும் தம்மைப்பழித்த தக்கன் தலையை யாகசாலையிலறுத்து ஆட்டின் றலையை யிசைத்தனர் என்பதும் புராணவரலாறுகள். ஆறுதலைக்காட்டி இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வருமொழி வல்லெழுத்தியல் பாதலால் வலித்தல் விகாரம், (86)
----------------

மெய்ப்பவங்காய்ந் தங்கமல மிக்கசிவ கங்கையது
பொய்ப்பின்மறைக் கொப்பாம் புலியூரே - மைப்பனைபோற்
றொங்கத் தனுக்கையர் தூயநெடு மால்வரையார்
தங்கத் தனுக்கையர் சார்பு.    ,  ,   (87)

இ-ள். மெய்ப்பவங்காய்ந்து - தேகமெடுக்கும் பிறவியை யொழித்து; அங்கமலம் மிக்க - அழகிய தாமரைகள் மிகுந்த; மெய் - உண்மையான; பவம் காய்ந்து (ஆராய்வோர்க்கு) பாவத்தை நொந்தது; அங்கு அமலம் மிக்க - அங்குக் களங்கமில்லாமை மிகுந்த; சிவகங்கை அது - சிவகங்கையானது; பொய்ப்பு இல் - பொய்த்தலில்லா; மறைக்கு ஒப்பு ஆம் - வேதத்துக்கொத்த; புலியூர் - புலியூரானது; மை - கரிய; பனைபோல - பனையைப்போல; தொங்கு அத்தனுகு ஐயர் - தொங்கா நின்ற துதிக்கையையுடைய விநாயகக் கடவுளுக்குப் பிதாவாயுள்ளவரும், தூய - புனிதமாகிய; நெடு - நீண்ட, மால் வரை ஆம் - பெரிய மேருவாகிய, தங்கம் தனு - தங்கமலையை யேந்திய, கையர் – திருக்கரத்தை யுடையவருமாகிய இறைவர், சார்பு - பொருந்தும் இடமாம். (87)
---------------

காலா யிரத்தாற் கதிர்மணிச்சூட் டாற் சேடன்
போலா லயஞ்சேர் புலியூரே - பாலாழி
தந்தநஞ்சு மப்பார் தமையுங் களஞ்சடையிட்
டிந்தநஞ்சு மப்பா ரிடம்.    ,  ,   (88)

இ-ள். (கால் ஆயிரத்து அல் – ஆயிரங்கால்களாலும்; கதிர் - ஒளியையுடைய, மணி - இரத்தினங்களழுத்திய, சூட்டு ஆல் - கலசத்தாலும்) கால் ஆயிரத்து ஆல் – அளவில்லாத கால்களாலும், கதிர் - ஒளியமைந்த, சூட்டு ஆல் - உச்சிக்கொண்டையாலும், சேடன்போல் - ஆதிசேடனைப்போல், ஆலயம் சேர் - ஆலயம் நெருங்கிய, புலியூர் - புலியூரானது, பால் ஆழி – பாற்கடலானது; தந்த நஞ்சு உம் - தந்தநஞ்சினையும், அப்பு ஆர் தம் ஐ உம் - கங்கையையும் ஆத்திமாலையையும், களம் - ஸ்ரீ கண்டத்திலும், சடை - சடாபாரத்திலும், இட்டு - அணிந்து, இந்த நம் - விறகினை, சுமப்பார் – சுமந்தருளுமிறைவரது; இடம் – இடமாம்.
இசைப்பாணர் பகைவராகிய ஏமநாதனை வெல்ல மதுரைத்திருநகரில் விறகு சுமந்தருளினார் என்பது புராணவாலாறு. நஞ்சினைக் களத்திலும் அப்பு ஆர்தமமை சடையிலும் எனக் கொள்ள நிற்றலால் முறைநிரனிறைப்பொருள்கோளணி சூட்டு தொழிலாகு பெயராய் கலசத்தின்மேல் நின்றது. (88)
------------------

தக்க கலைதெரிய றன்னால்வி யாசரையொப்
புக்கொடிக்கம் பஞ்சேர் புலியூரே- யெக்கியத்திற்
பல்லுக்கெட் டாதவனார் பாறப் புடைத்துமறைச்
சொல்லுக்கெட் டாதவனார் தோய்வு.    ,  ,   (89)

இ-ள். தக்க - கலை (ஆகமவிதிப்படி) அமைந்த ஆடை; தெரியலதன் ஆல் – தெரிதலால்; தக்க – மேம்பட்ட; கலை - வேதமுதலிய நூல்களை, தெரியல் தன் ஆல் – ஆராய்தலால்; வியாசர் ஐ - வேதவியாசரை, ஒப்பு – ஒக்கும்; கொடி கம்பம் சேர் -துவசத்தம்பம் சேர்ந்த; புலியூர் - புலியூரானது, எக்கியத்து இல் - தக்கன் யாகத்தில், பல்லுகெட்டு – பல்லிழந்து; ஆதவனார் பாற – சூரியனோட; புடைத்து - தகர்த்து, மறைசொல்லுக்கு - வேதவாக்கியத்துக்கு, எட்டாதவனார் - எட்டாதவருமாகிய இறைவர், தோய்வு - பொருந்துமிடமாம்.
தக்கன் யாகத்தில் வீரபத்திரக்கடவுளால் சூரியன் பல்லையிழந்தான் என்பது புராணவரலாறு (89)
---------------------

பாடுமிசை யாற்றனக்கும் பத்தாற் சினகரம்வெண்
பூடணமின் னாளாம் புலியூரே- வேடன்
அடித்தரிக்கும் கோவா ரமரர்துய ராலங்
குடித்தரிக்கும் கோவார் குடி.    ,  ,   (90)

இ-ள். (பாடும் இசை ஆல் - பலரும் சொல்லும் புகழாலும், தனம்கும்பத்து ஆல் - பொன்னாற் செய்த கவசங்களாலும்), பாடும் - பாடாநின்ற, இசை ஆல் - இசையினாலும், தனம் கும்பத்து ஆல் - குடம் போன்ற தனத்தாலும், சி நகரம் - திருக்கோயிலானது, வெண் பூடணம் - வெள்ளிய ஆபரணத்தை யணிந்த, மின்னாள் ஆம் - நாமகளக்கு நிகராகும், புலியூர் - புலியூரானது, வேடன் - கண்ணப்பநாயனாரது, அடி - திருவடியை தரிக்கும் - தரித்த, கோவா - நேத்திரத்தையுடையவரும், அமரர் துயர் - தேவர்கள் துன்பத்தை, ஆலம் குடித்து - விஷத்தை உண்டு, அரிக்கும் - கெடுக்கும், கோவார் - தலைவருமாகிய இறைவர், குடி - குடியிருக்கும் ஊராம்.
தொண்டை நாட்டில் திருக்காளத்தியென்னுந் திருப்பதி யினருகிருக்கும் உடுப்பூரில் வாழும் வேடர்குலபதியாகிய நாகனென்பவன் தவபலத்தினால் திருவவதாரஞ்செய்து திண்ணனாரென்னும் பிள்ளைத் திருநாமம் பெற்று வில்வித்தையில் வல்லவராய் வேட்டையாடுங்காலையில், ஓர்பன்றியின் பின் தொடர்ந்து அதனைக் கொன்று பொன்முகலி யாற்றங்கரையிலிட்டு அங்கிருக்கும் குடுமித்தேவரைத் தரிசிக்கச் சென்றனர், அத்திருமலையிலேறும்பொழுது சத்திநிபாதம் வாய்ந்து முறுகிய அன்போடு பெருமானாரைத் தழுவித் தேவா பசித்திருக்கின்றீர் இறைச்சி கொண்டு வருகின்றேனென்று சென்று அப்பன்றியினிறைச்சியை தீயிற்காய்ச்சி வாயிலிட்டுப் பக்குவம் பார்த்துச் சுவையாயுள்ளதைப் பெருமானார்க்கூட்டி யிவ்வாறொழுகு நாளில், அங்கு அநுசிதமாயிருத்தலைக்கண்டு மனம் பொநு றாத சிவகோசரியார்க்கு அவர் முறுகிய அன்பினையுணர்த்த ஏழாநாளில் ஒருதிருக்கண்ணில் உதிரமொழிகும்படியாயிருந்தனர், ஊனமுது கொண்டு வரச் சென்ற அத்திண்ணனார் அதனைக்கண்டு பதைபதைத்துப் பச்சிலை மூலிகை பிசைந்து விட்டும் நிற்காதிருத்தலை கண்டவனுக்கு, ஊனேயுறுதியென்று தமது வலது கண்ணைப் பெயர்த்தப்பவுடனே யுதிரநிற்பக் கண்டு மகிழ்ந்தனர். மீளவும் அவரன்பினையுணர்த்த மற்றோரு கண்ணிலும் உதிரம் பெருகும்படி காட்டியருள, நான் மருந்து கண்டமையா லஞ்சேனென்று இடக்கண்ணைப் பெயர்த்தப்ப அடையாளத்துக்காகத் தமது காலைத் தூக்கி, அக்கண்ணிடத்தில் வைத்துக்கொண்டு பெயர்த்தப்பினாரென்பது புராணவரலாறு. சத்திநிபாதம் திருவருட்பதிய. (90)
------

வான்மீ தெழும்புகையான் மாவிரதத் தாற்கதிரோ ன்
போன்மா மகஞ்செய் புலியூரே - தேன்மாறாத்
தோடா யிரந்தான் றுலங்கம் புயன்றலையை
ஓடா யிரந்தா னுறைவு.    ,  ,   (91)

இ - ள். (வான் மீது – ஆகாயத்தின்மேல், எழும்புகை ஆல் - எழாநின்ற புகையினால், மாவிரதத்து ஆல் – பெரிய விரதமுடையால்) வான்மீது - ஆகாயத்தின் மேல் எழும்புகை ஆல் - உதயஞ்செய்தலாலும், மா – குதிரைபூண்ட; இரதத்து ஆல் - ஒற்றையுருளையுடைய தேராலும், கதிரோன் போல் - சூரியனைப்போல, மாமகம் செய் - பெருமைவாய்ந்த யாகங்களைச் செய்யும், புலியூர் - புலியூரானது, தேன்மாறாத - தேன் நீங்காத, ஆயிரம்தோடுதான் - ஆயிரமிதழ்கள், துலங்கு – விளங்கும், அம்புயன் – தாமரையில் வசிக்கும் பிரமனது, தலையை – சிரத்தை, ஓடு ஆய் - ஓடாகக்கொண்டு, இரந்தான் - இரந்த இறைவர், உறைவு - வசிக்கு மிடமாம்.
இறுமாப்புற்ற பிரமன் தலையைக் கொய்து செருக்குற்ற திருமால் கால்நரம்பிற் சூலத்தால் வயிரவமூர்த்தி குத்தியுதிரம் பலியேற்றனர் என்பது புராணவரலாறு. ஆய் செயவெலெச்சத் திரிபு. (91)
----------------

ஆங்கருணை யோடமுதீந் தங்கவலை நீக்கிமடம்
பூங்கலையிந் தொப்பாம் புலியூரே - வாங்கும்
வரங்கம் பலவாணன் வாயில்காத் தன்பர்க்
கிரங்கம் பலவாண னில்.    ,  ,   (92)

இ - ள் (ஆம் - அமைந்த, கருணை ஓடு - பொரிக்கறியோடு. அமுது ஈந்து - அன்னத்தைத்தந்து, கவலை நீக்கி - பசித்துன்பத்தைப் போக்கி) ஆம் - உண்டாகும், கருணை ஓடு - கிருபையோடு, அமுதுஈந்து - அமுதினைத்தந்து, அங்கு - அவ்விட த்தில்
அ அல் ஐ - அந்த இருளினை, நீக்கி - ஒழித்து, மடம் - ……..; பூங்கலை - பொலிவமைந்த கலைகளையுடைய, இந்து ஒப்ப ஆம் - சந்திரனையொக்கும், புலியூர் - புலியூரானது வாங் கும் - பெற்று வரம், வரத்தையும்; கம் - தலையையும், பல - பலவாகவுடைய, வாணன் - வாணாசுரன், வாயில் காத்து - வாயிலைக் காக்க, அன்பாகு - அடியார்களுக்கு, இரங்கு - இரங்காநின்ற, அம்பலவாணன் – அம்பலவாணனது, இல் - திருமனையாம்.
காத்து செயவெனச்சத் திரிபு. (92)
-------------------

ஐயம்பெய் தேதா ரணிமகிழிட் டங்கசன்போற்
பொய்யில்சத்தி ரஞ்சூழ் புலியூரே - யையரவு
மீதாம் புயத்தினார் மிக்கமுயன் மேலழுத்தும்
பாதாம் புயத்தினார் பற்று.    ,  ,   (93)

இ - ள் (ஐயம்பெய்து (இரப்பவர்க்கு) பிச்சையிட்டு, தாரணி - உலகிலுள்ளோர், மகிழ இட்டு - மகிழ உணவுதந்து,) ஐ அம்பு எய்து - பஞ்சபாணங்களைப் பிரயோகித்து, தார் அணி மகிழ் இட்டு – மகிழ மாலையையணிந்து, அங்கசன் போல் - மன்மதனைப்போல், பொய இல் - உண்மைவாய்ந்த, சத்திரம் சூழ் - சத்திரங்கள் சூழ்ந்த, புலியூர் - புலியூரானது, பை அரவு - படத்தையுடைய பாம்புகள், மீது ஆம் - மேலேயாகிய, புயத்தினார் - திருப்புயங்களை யுடையவரும், மிக்க முயல்மேல் அழுத்தும் - வலிமை மிகுந்த முயலகன் மேலழுத்திய, பாத அம்புயத்தினார் - திருவடித்தாமரையையுடைய வருமாகிய இறைவர், பற்று – அன்பு கூர்ந்திருக்கு மிடமாம்.
தேவதாருவந முனிவர்கள் ஏவிய முயலகன்மேல் திருத்தாளூன்றி நடித்தனர் என்பது புராண வரலாறு. முயலகன் எனவரற் பாலது முயல் என வந்திருக்கின்றது. (93)
--------------

மாற்புணர்ந்து நீறணிந்து மாமதிமே லிட்டுயர்ந்தோர்
போற்பலமா டஞ்சேர் புலியூரே - சூற்பெறு
கோடுந் தலைவளைப்பார் கூப்பமறைச் சேய்க்கயன்முன்
றேடுந் தலைவளைப்பார் சேர்வு.    ,  ,   (94)

இ - ள் (மாற்புணர்ந்து - மேகத்தைத் தழுவி, நீறு அணிந்து - சுண்ணச் சாந்தாலலங்கரிக்கப்பட்டு, மா – பெருமை வாய்ந்த; மதி – சந்திரனை; மேலிட்டு - மேல் கொண்டு) மால் புணர்ந்து - பெருமையைப் பொருந்தி; நீறு அணிந்து - விபூதியைத்தரித்து, மாமதி - நுண்ணிய அறிவை; மேலிட்டு - சேர்ந்து, உயர்ந்தோர்போல் – உயர்ந்தவர்களைப்போல; மாடம்சேர் - மாடங்கள் நெருங்கிய, புலியூர் - புலியூரானது, சூல்பெறு - சூல் வாய்ந்த, வெண்கோடு – வெள்ளிய சங்குகளை; உந்து - கொழிக்கும், அலைவளை - அலைகளையுடைய, கடல்வளை தலையுடைய, பார் – உலகிலுள்ளோர்; கூப்ப - கைகுவிக்க; மறைச்சேய்க்கு - பார்ப்பனச்சிறுவன் பொருட்டு, அயன் முன் தேடும் - பிரமன் முன்பு தேடிய, தலை வளைப்பார் - திருமுடியை வளைப்பவராகிய இறைவர்; சேர்வு – சேருமிடமாம்.
பார்ப்பனச்சிறுவன் பூசனைக்குதவ முடியை வளைத்தமை முன்பு கூறியது காண்க. வளை முதனிலைத் தொழிபெயராய் உருபும் பயனும் உடன்தொக்கு நிற்றலால் வருமொழி முதல் வல்லெழுத்து மிக்கது. (94)
--------------

எப்போது நன்மணந்தோய்ந் தேற்பவர்க்கிட் டைந்தருவொப்
புப்பேசும் வீதிப் புலியூரே - மெய்ப்பான
நந்திப் பரியார் நளினத் தயனரிக்குஞ்
சந்திப் பரியார் தலம்.    ,  ,   (95)

இ-ள். (எப்போது உம் - எந்தக்காலத்திலும், நல்மணம் தோய்ந்து – நல்ல கலியாணங்களைப் பொருந்தி, ஏற்பவர்க்கு இட்டு – இரப்பவர்க்குக்கொடுத்து) எப்போது உம் - எந்நாளிலும், நல்மணம் தோய்ந்து - நல்லவாசனையைப் பொருந்தி, ஏற்பவர்க்கு இட்டு – இரப்பார்க்குக் கொடுத்து, ஐந்தரு - பஞ்சதருக்களுக்கு, ஒப்பு பேசும் – ஒக்கும், வீதி - வீதியையுடைய, புலியூர் - புலியூரானது, மெய்ப்பு ஆன - உண்மையமைந்த, நந்தி – இடபமாகிய; பரியார் - குதிரையையுடையவரும், நளினத்து - தாமரையில் வசிப்பவரும், அயன்கு உம் - பிரமனுக்கும், அரிக்கு உம் - திருமாலுக்கும், சந்திப்பு அரியார் - சந்தித்தற்கரிய வருமாகிய இறைவரது, தலம் - திருப்பதியாம்.
உம்மை இனைத்தென அறிபொருளில் வந்த முற்று. (95)
-----------------

சோபனத்தைச் சேர்ந்துசெங்கோற் றூக்கியுயர் தோரணந்தான்
பூபதிக்கொப் பாகும் புலியூரே - தாபரவெண்
டிக்கெனுமா சாரத்தார் சிட்டர் நெஞ்சுட் டித்திக்கு
மிக்கெனுமா சாரத்தா ரில்.    ,  ,   (96)

இ-ள் (சோபானத்து ஐ சேர்ந்து - படிகளைப் பொருந்தி; செம்கோல் தூக்கி -கோணத்துலாராசி யளவுந் தூக்கப்பட்டு) சோபனத்து ஐ சேர்ந்து - சுபத்தையடைந்து, செங்கோல் தூக்கி - செங்கோலையேந்தி, உயர்தோரணம் தான் - உயர்ந்த தோரணமானது; பூபதிக்கு ஒப்பு ஆகும் - அரசனுக்கு ஒக்கும், புலியூர் - புலியூரானது, தாபரம் - அசையாத, எண்திக்கு என்னும் - எட்டுத்திக்கென்கின்ற, ஆசாரத்தார் - ஆடையையுடையவரும், சிட்டர் நெஞ்சு உள் - பெரியோர் மனத்தில், தித்திக்கும் – தித்திக்கா நின்ற, இக்கு என்னும் - கரும்பாகிய, மாசாரத்தார் - பெரிய சாரமாயுள்ளவருமாகிய இறைவரது, இல் - திருமனையாம்.
சோபானம் சோபனம் குறுக்கல். (96)
--------------

அம்மழைக்கண் ணாற்காலா லாடுதலாற் கேதனங்கள்
பொம்மன்முலை யாராம் புலியூரே - சம்மதியாய்ப்
பொங்கரவி னன்பணிவார் பொற்சடைக்கிட் டோர்கிரணச்
செங்கரவி னன்பணிவார் சேர்வு.    ,  ,   (97)

இ-ள். (அமழைகண் - அந்த மேகமண்டலத்தில், கால் ஆல் ஆடுதல் ஆல் - காற்றுலாடுதலினால்) அம் – அழகிய, மழை - மேகம் போன்ற, கண் அல்- கண்களாலும், கால் ஆல் - காலினால், ஆடுதல் ஆல் – ஆடுதலாலும்; கேதனங்கள் – கொடிகள்; பொம்மல் - பருத்த, முலையார் ஆம் - தனத்தையுடைய நாட்டியமகளிரை யொக்கும், புலியூர் – புலியூரானது; சம்மதி ஆய் - சம்மதித்து, பொங்கு - கோபிக்கும், அரவு – பாம்பாகிய; நன்பணி - நல்ல ஆபரணத்தை, பொன் - பொன் போல நிறம் வாய்ந்த, சடை கு இட்டார் - சடையிலணிந்தவரும், கிரணம் செங்கரம் - சிவந்த கிரணத்தையுடைய, இனன் – சூரியனால்; பணிவார் (பூசனை செய்து) - பணியப்படுபவருமாகிய இறைவர்; சேர்வு - சேர்ந்திருக்கு மிடமாம்.
முன்னின்ற இல்பொருளைக் கூறுமிடத்தில் அசைநிலையாகக்கொள்க. (97)
-------------

மாலகல முற்று மணிவடம்பூண் டிந்திரையாள்
போலிரத மாரும் புலியூரே - பாலனைக்கொல்
வானகத்தை யூன்றினார் வாளரக்கன் மாமுடிமேற்
கானகத்தை யூன்றினார் காப்பு.    ,  ,   (98)

இ-ள். (மால் - மேகமண்டிலத்தின், அகலம் - விசாலத்தை, உற்று - அளாவி, மணிவடம் பூண்டு - இரத்தின வடத்தைப் பூண்டு) மால் அகலம் - திருமால் மார்பினை, உற்று - பொருந்தி; மணிவடம் பூண்ட - முத்துவடத்தைப் பூண்ட; இந்திரையாள்போல் - திருமகளைப் போல; இரதம் ஆரும் - நிலத்தேர் நிறைந்த; புலியூர் – புலியூரானது; பாலனை கொல்வான் - தமது புத்திரனைக் கொல்லும் சிறுத்தொண்ட நாயனாரது, அகத்து - திருமனையில்; ஐ - அழகிய, ஊன் தின்னார் - தசையைத் தின்னாதவரும், வாள் அரக்கன் - வாளையேந்திய இராவணனது, மாமுடி மேல் - பெருமை வாய்ந்த சிரத்தின்மேல் கால்நகத்து ஐ – பெருவிரல் நகத்தினை; ஊன்றினார் - ஊன்றினவருமாகிய இறைவரது, காப்பு - காலாயுள்ள இடமாம்.
சிறுத்தொண்ட நாயனார் சரித்திரத்தை முன்னர்க் காண்க - இரதமூரும் எனப்பாடமுமுண்டு. அது உவமைக்குப் பொருத்தமின்மையால் ஆரும் எனப்பாடங் கொண்டாம். (98)
----------

செல்வந் திருந்திடலாற் சேர்முடத்தாற் பிங்கலனேர்
புல்லுந்தெங் கோங்கும் புலியூரே - மெல்லிதழ்வாய்
விண்ட கடுக்கையார் மேனா ளமரருக்கா
வுண்ட கடுக்கையா ரூர்.    ,  ,   (99)

இ-ள். (செல்வந்து இருந்திடல் ஆல் - மேகம்வந்து தங்குதலாலும், சேர்முடத்து ஆல் - பொருந்திய முடத்தினாலும்) செல்வம் திருந்திடல் ஆல் – செல்வத்தி னிறைவாலும், சேர்முடத்து ஆல் - பொருந்திய முடத்தினாலும், பிங்கலன் நேர்புல்லும் – குபேரனையொத்த, தெங்கு - தென்னைமரங்கள்; ஓங்கும் - உயர்ந்து தோன்றும்; புலியூர் – புலியூரானது; மெல் இதழ் – மெல்லிய இதழ்கள், வாய்விண்ட - வாய்மலர்ந்த; கடுக்கையார் - கொன்றை மாலையை யணிந்தவரும், மேல்நாள் - முன்னாளில், அமரர்களுக்கு ஆக - தேவர்களுக்கு ஆக, உண்ட கடு - உண்ட விடத்தை, கையார் - வெறுக்காதவருமாகிய இறைவரது; ஊர் - ஊராம்.
குபோனுக்கு முடத்தன்மையை வந்த இடத்திற்காண்க. (99)
--------------

மாகமண்ட லந்தாங்கி வண்டமிழ்பூத் தாறுவிட்டுப்
பூகமுங்கும் பன்சீர்ப் புலியூரே - ஆகமங்கள்
கூறிடுமா வாக்கினார் கூடலிறைக் காநரியை
யேறிடுமா வாக்கினா ரில்.    ,  ,   (100)

இ-ள். (மாகமண்டலம் - விண்ணுலக வட்டத்தை, தாங்கி - சுமந்து, வண்டு அமிழ – வண்டுகள் மூழ்கிய, பூத்தாறு விட்டு – பூங்குலைகளை விட்டு) மா - பெருமைவாய்ந்த கமண்டலம் தாங்கி - கமண்டலத்தை ஏந்தி; வண்தமிழ்பூத்து – வளமை வாய்ந்த தமிழைத் தந்து, ஆறு விட்டு – நல்வழியைக்காட்டி; பூகம் உம் - கமுக மரமும், கும்பன்சீர் - அகத்திய முனிவர் சீர் வாய்ந்த; புலியூர் – புலியூரானது, ஆகமங்கள் – இருபத்தெட்டாகமங்களை; கூறிடும் - சொல்லியருளிய, மா - பெருமை வாய்ந்த, வாக்கினார் - திருவாக்கினையுடையவரும், கூடல் இறைக்கு ஆக - மதுரையிலுள்ள அரிமர்த்தன பாண்டியனுக்காக, நரியை - நரிகளை, ஏறிடும் - ஏறாநின்ற, மா ஆக்கினார் - குதிரைகளாகச் செய்தவருமாகிய இறைவரது, இல் - திருமனையாம்.
அமைச்சாக இருந்து குதிரைகள் வாங்கக் கொண்டு சென்ற செம்பொன்னைச் சிவபெருமானார் திருப்பணிகளுக்குப் போக்கிச் சிவாநந்தத்திலழுந்திய வாதவூரடிகளை, அரிமர்த்தன பாண்டியன் வருவித்துக் குதிரைகளுக்காக வருத்தியகாலத்தில் அச் சிவபெருமானார் நரிகளைப் பரிகளாக்கினார் என்பது புராண வரலாறு. ஆக என்னும் வினையெச்சத்தினீறு தொக்கது மண்டிலம் என்பது மண்டலம் என்பது சிராமியம். (100)

மன்னுபுலி யூர்க்கு வகுத்தவெண்பா நூறவற்றில்
உன்னி லிருபத்தைந் தோர்வயனம் - பின்னுமுள
ஐயைந் தொருவயன மையைந் தொருவயனம்
ஐயைந் தொருவயன மாம்.    ,  ,   (101)

புலியூர் வெண்பாவிலுள்ள நூறு செய்யுள்களில் இருபத்தைந்து இருபத்தைந்தாகப் பகுத்து அவற்றுள் ஒவ்வொருவகையும் ஒவ்வொரு விதமாக வருதல் காண்க.
---------------------------------
12ம் செய்யுளில் முன்வசியமாதளித்த எனப்பாடமுண்டு. வசியர் என யமகம் திரிபுகளில் முதனிலைப் போலியாக வருமேயன்றி மற்றையிடங்களில் வைசியரென வருமாதலால் வணிகமாது எனப்பாடங்கொண்டாம்.
31ம் செய்யுளில் சோதிவரை மும்மடியாய் எனப்பாடமுண்டு, அது புராணத்திற்குப் பொருந்தாமையால் சோதிவரை மும்முடியாய் எனப்பாடங்கொண்டாம்.
--------------------------------------

புலியூர் வெண்பா

புலியூரைப்பற்றிய வெண்பாவினாலாகிய நூலென்று பொருள். அவ்வூர்ச் சிவபெருமானைப் பற்றிப் பாடியதும் இதில் அடங்கும். வேற்றுமைப் புணர்ச்சி, இரண்டனுருபும் பயனுமுடன் தொக்கதொகை. 'புலியூரெ’ன்பது - சிதம்பரத்தினது திருநாமங்களுள் ஒன்று. சிவதலங்களுட் சிறந்த சிதம்பரத்திற்கு - தில்லை, கோயில், புண்டரீகபுரம் முதல் மற்றுஞ் சிலபெயர்களும் உண்டு. கால்களுங் கைகளும் புலியினுடையதாக இருக்கப்பெற்ற வியாக்கிரபாதரென்னும் முனிவர் கடவுளைத் தரிசித்து வழிபட்டுப்பேறு பெற்ற தலமாதலின் இதற்குப் புலியூரென்பது காரணப்பெயரென அறிக. புலி - முனிவர்க்கு உவமவாகுபெயர். தன்னைத் தரிசித்த பிரானடியார்களுக்குத் தன்னிடத்திற் பெரும்பற்றை (மிக்க ஆசையை விளைக்கும் புலியூராதலின், இது பெரும்பற்றப்புலியூ ரென்றும் கூறப்படும்). வெண்பா - நால்வகைப் பாக்களுள் ஒன்று. இது இங்கே, அவ்வகைப் பாடலினாலாகிய நூலுக்குக் காரணவாகு பெயர். இதற்கு மேன்மையுணர்த்தும் திரு என்னும் அடைமொழி சேர்த்து, திருப்புலியூர் வெண்பாவென்றும் வழங்குவர்.
காப்பு.
காப்பு - காத்தல்; அது இங்கு, காக்கின்ற கடவுள் விஷயமான வணக்கத்துக்குத் தொழிலாகு பெயர். ஆகவே, கவி தமக்கு நேரிடத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை முடிக்கவல்லதோர் பொருளின் விஷயமாகச் செய்யும் தோத்திரமென்பது கருத்து. தம்மைச் சரணமடைந்தவர் தொடங்கும் தொழில்களுக்கு வரும் விக்கினங்களை (இடையூறுகளை)ப் போக்குதலாலும், தம்மையடையாது அகங்கரித்தவர்களுக்கு விக்கினங்களை ஆக்குதலாலும் விக்கினேசுவரரென்னுந் திருநாமம் பெற்றுள்ள (பரமசிவனது மூத்த திருக்குமாரர்) - விநாயகமூர்த்தியைப் பற்றியதென அறிக. இக்காப்புச் செய்யுளில் அப்படிப்பட்டவர், சைவசம்பிரதாய முறைமைப்படி தலத்துக்குரிய கற்பக விநாயகரென்க.
(இ - ள்.) பொன் ஆரும் - அழகு மிகுந்த, தில்லை - தில்லைவனத்திலுள்ள, புலியூர் – புலியூரென்னுமொரு பெயரையுடைய சிதம்பரத்தலத்தைப் பற்றிக் கூறுகிற, வெண்பாவுக்கு - வெண்பாவினாலாகிற பிரபந்தம் தடையின்றி முடியும் பொருட்டு, நல் - சிறந்த, நாரி கக்கும் - தேனைச் சொரிகின்ற, சரம் – மாலையாகத் தொடுக்கப்படுகிற, பூ கடுக்கையான் - அழகிய கொன்றைமலரைச் சூடிய சிவபிரான், ஈன்ற - பெற்றருளிய, கற்பகம் குஞ்சரம் - கற்பகவிநாயகரது, பூ கழல் - தாமரைமலர்போன்ற அழகிய திருவடிகளை, பல நாளும் - பலநாளிலும் (தினந்தோறும்), ஏத்தி - துதித்து, பணிகுவாம் - (யாம்) வணங்குவோம்; (எ - று.)

எல்லா நூல்களிலும் மங்கலமொழி முதல்வகுத்துக் கூறவேண்டுவது கவிமரபாதலின், பொன் என்று தொடங்கினார், மேல் நூலின் முதலில் சொல் என்று தொடங்குவதும் இதுபற்றியே: திரு யானை தேர் பரி கடல் மலை மணி பூ புகழ் சீர் மதி நீர் எழுத்து பொன் ஆரணம் சொல் புயல் நிலம் கங்கை உலகம் பரிதி அமிழ்தம் இவையும், இவற்றின் பரியாயப்பெயர்களும், இவைபோன்ற இன்னுஞ்சிலவும் மங்களச்சொற்களாம். சிதம்பரத்தலமுள்ள இடம் தில்லையென்னும் மரமடர்ந்த காடாயிருந்தமையின், தில்லையென்றும் தில்லைவனமென்றும் பெயர்பெறும். பணிகுவாம், கு - சாரியை. இது, கடவுள் வணக்கமாதலால் "நான்முகற் றொழுது நன்கியம்புவன'', ''அச்சுத னடிதொழு தறைகுவன்", "பந்த மடிதொடை பாவினங் கூறுவன்" என்றாற்போல ஒருமையாற் கூறித் தன்னைத்தாழ்த்தாமல் பன்மையாற்கூறித் தன்னை உயர்த்தியபின் இதில் வணக்கமென்னெனின்;

அங்ஙனம் உயர்த்திக் கூறுதல் பிறவிடங்களில் உண்டெனினும் இவ்விடத்தில் உயர்த்தியதன்று; தானொருவன் கடவுளையறிந்து அன்புகூர்ந்து வணங்கி அப்பயனைத் தான் அடைதலினும் சிருஷ்டி தொடங்கித் தன் கோத்திரத்தாரையுந் தன்னோடு கூட்டிவணங்கி அவர்க்கும் அப்பயனை அடைவித்தலே சிறந்ததெனக் கருதிச் சான்றோ ரெல்லாம் தொன்றுதொட்டு இவ்வாறு கூறிவருவது மரபாமென்க. (மரபு - பழமை) என்னெனின்; 'ஏகதந்த னிணையடி ........ம்', 'ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே', ‘சரணவா ரிசமாக தலைக்கொள் வாமரோ', ‘மலரடி சென்னி வைப்பாம்’ என இவ்வாறு கூறியவை அளவில வென்க. கழல் பணிகுவாமென இயைக்க; இதற்கு யாம் என்னுந் தோன்றா எழுவாய் வருவிக்க. நன்னார் இகக்கும் எனப்பிரித்தும் நல்லநாரை நீங்கின என்றுமுரைத்து, தெய்வத்தன்மையாலமைந்த கொன்றைப்பூமாலையென்று கருத்துக் கூறுவாருமுளர். கடுக்கையென்னும் கொன்றைமரத்தின் பெயர் அதன் மலருக்கு முதலாகு பெயர். சரப்பூங்கடுக்கையான் – கடுக்கைப்பூச்சாத்தானென மாறுதமலுமாம். சரப்பூங்கடுக்கை - மாலையாகப் பூக்குங் கொன்றைமாலையான்; ஈன்ற. ஈன் - பகுதி. கற்பகவிருட்சம்போல வேண்டுவோர் வேண்டும் பலாபலன்களை வேண்டியவாறு ஈந்தருளுந் தன்மையராதலின், சிதம்பரத்தலத்துப் பிள்ளையாருக்குக் கற்பகவிநாயகரென்று பெயர். எல்லா அவயவங்களினும் முதன்மையாய தலை யானைத்தலையாயிருத்தல்பற்றி, விநாயகக்கடவுளைக் குஞ்சரமென்றார்.

நூல்
--------
1. (இ - ள்.) சொல் செறி - சொற்கள் நிறைந்த, வேத அந்தம் - வேதத்தின் முடிவாகிய உபநிடத்திற் கூறப்படுகிற, சுடர் - ஒளியையுடைய, தகர வித்தையது ஆம் - தகர வித்தையாகிய, பொன் சபை - பொன்னம்பலம், நின்று - நிலைபெற்று, ஓங்கும் - உயர்ந்திருத்தற்கிடமான, புலியூரே - புலியூரானது, - முன் - முன்னொருகாலத்தில், சமனை - யமனை, வீசு - உதைத்தருளின, பதத்தால் - திருவடியால், நடித்தார் - திருநடனஞ்செய்த ருளினவரும், வில் கொண்டு – (காண்டீபம் என்னும்) வில்லை ஏந்திக்கொண்டு, அமர் விளைத்த - போரைச்செய்த, பாசுபதத்தான் - (தம்மிடத்துப்) பாசுபதாஸ்திரத்தைப் பெறும் அருச்சுனனால், அடித்தார் - அடிக்கப்பட்டவருமாகிய சிவபிரான், பற்று – விரும்பியெழுந்தருளி யிருக்குந்தலமாகும்; (எ - று.)

இப்பிரபந்தத்திலுள்ள பாட்டெல்லாம் (கலம்பகங்களில் வரும் பதியென்னுந்துறை போல) முன்னிரண்டடிகளில் ஊர்ப்பெயரும் வருணனையும், பின்னிரண்டடிகளில் தலைவன் பெயரும் மகிமையுமாக அமைக்கப்பட்டுள்ளனவென அறிக. ஊழ்வினையாற் பதினாறு பிராயம்பெற்ற மிருகண்டு புத்திரராகிய மார்க்கண்டேயரென்பவர், கூற்றுவன் வந்து காலபாசத்தாற் கட்டியிழுக்குங்காலத்துப் பரமசிவனைச் சரணமடைய, அப்பெருமான் யமனைக் காலாலுதைத்துத் தள்ளி முனிகுமாரருக்கு என்றும் பதினாறாகத் தீர்க்காயுசு கொடுத்தருளினரென்பதும், பாசுபதம் பெறத் தவநிலைநின்ற அருச்சுனனை அழிக்கத் துரியோதனனேவலாற் பன்றிவடிவாய் வந்த மூகாசுரன்மேல் வேடவடிவாய்வந்த சிவபெருமான் அம்பெய்ய, அது பிளக்குமுன்னே அருச்சுனன் அம்பொன்றெய்து வராகத்தை விழுத்த, அதுகாரணமாக அவ்விருவருக்கும் உண்டான போரிற் பரமசிவன் எதிரியின் வில்நாணியையறுக்க, பார்த்தன் அவ்விற்கழுந்தால் கடவுளது முடியில் அடித்தவளவிலே, சிவபிரான் தமது நிசரூபத்தோடு காட்சிகொடுத்து அவன் வேண்டுகோளின்படி பாசுபதாஸ்திரத்தையும் வில் அம்பறாத்தூணி முதலியவற்றையும் அருளிப்போயினரென்பதும் இச்செய்யுளிற் குறித்த கதைகள். இவற்றால் முறையே கடவுளது அடியவர்க்கெளிமையும், அமரர்கட்கருமையும் விளங்குகின்றன. இவற்றுள் முந்தின சரித்திரத்தால், அனுபவித்தே தீரவேண்டும் பெருவலியுடையதாகிய ஊழ்வினையையும் தன் அடியார்க்குக் கடக்கச் செய்கிற கடவுளது பேராற்றல் புலப்படும்.

உயிர்களுக்குத் தலைவனாதலாலும், விருஷபத்துக்குத் தலைவனாதலாலும் பசுபதியென்று சிவனுக்குப் பெயர்; அவனது சம்பந்தமானது - பாசுபதம்: தத்திதாந்தநாமம். இவ்வரலாறு - ஒருவனது குற்றத்தைப் பொறுத்து அவனுக்கே அருள் செய்தற்கு திருஷ்டாந்தமாக எடுத்துக் கூறப்படும். முன் - காலமுன், சமன் – ஸமன் என்னும் வடமொழித் திரிபு; (எல்லாவுயிர்க ளிடத்தும்) நடுவுநிலைமையாக நடப்பவனென்று பொருள்: சமநன் என்னும் வடமொழித் திரிபாயின் – எல்லாப் பிராணிகளையும்) ஒடுக்குபவனென்றும், யமன் என்னும் வடமொழிச் சிதைவாயின் - (பிராணிகளைத்) தண்டித்து அடக்குபவனென்றும் பொருள்படும். வீசுபதம் – இறந்தகால வினைத்தொகை; பாசுபதத்தான், ஆன் - மூன்றனு நம் சிதம்பரத்தில் நடித்தது, வியாக்கிரபாத முனிவர் பதஞ்சலி பகவான் என்பவர்க்காக என்க. பற்று - செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயரென்றாவது. முதநிலைத் தொழிலாகு பெயரென்றாவது கொள்க. ஓங்கும் புலியூர் - பெயரெச்சம், இடப்பெயர் கொண்டது; இனி, பொன்சபை நின்று ஓங்கும் - பொன்சபை நிற்றலால் தான் சிறப்புப்பெற்ற என்றுமாம். புலியூரே யென்பதிலுள்ள ஏகாரத்தை, அசையாகவாவது, பிரி நிலை தேற்றங்களுள், ஒன்றாகவாவது கொள்க. சொல் செறி - புகழ் மிக்க என்றுமாம். வேதாந்தம் என்பதற்கு – வேதத்தின் தேர்ந்த கருத்து என்று பொருள். தகர வித்தையென்பதற்கு - சிதாகாசம் என்பது தேர்ந்தபொருள்; பிரமபுரமாகிய இச்சரீரத்திலிருக்கும் தகரமாகிய இருதயகமலத்தில் உள்ள ஆகாயம் போலுதலால், தகர வித்தையதாம் பொற்சபை யெனப்பட்டது: தஹரம் - இதயம், வித்தை - வித்யை, உபாசனா ரூபமான ஞானம், பூதாகாசம் போலச் சடமாகாது ஞானவடிவமான ஆகாயமாமென்க. பாசமாகிய இருளை யொழித்தலின், சுடர்த் தகரவித்தை யென்றார். பொற்சபை – பொன்மயமான சபை; கனகசபை. (1)

2.- (இ - ள்.) தன் கருமம் – தான் பிறந்த சாதிக்கு உரிய (நித்திய நைமித்திக) கருமங்களை, நீத்த - செய்யாதொழிந்த, துன்மதன் - துன்மத னென்னும் பிராமணன், முன் – முன்னொரு காலத்தில், நடம் காண - (சிவபிரானுடைய) திருநடனத்தைத் தரிசிக்க, நிரம்பும் கதியை தந்த - இன்பம் நிறைந்த முத்தியை (அவனுக்குக்) கொடுத்தருளின புலியூரே - புலியூரானது, கங்கை அதி மோகர் - கங்காதேவியினிடத்தில் மிகுந்த விருப்பத்தையுடையவரும், அத்தர் - (யாவர்க்குந்) தலைவரும், மா சடையார் - பெரிய சடையை யுடையவரும், மோது அலை உப்பு அற்ற அருள் சாகரத்தர் - வீசுகின்ற அலை களும் உவர்ப்புச்சுவையு மில்லாத திருவருட்கடலானவரும், மாசு அடையார் - (இயல்பாகவே) பாசத்தினின்று நீங்கினவருமாகிய சிவபிரான், சார்பு - சேர்ந்திருக்குமிடமாம்; (எ - று.)

பாண்டிநாட்டிற் பிராமணசாதியிற் பிறந்த துன்மதன் தன் தந்தை சொல்லையுங் கேளாமல் தனது சாதிக்கு இன்றியமையாத தொழில்களுள் ஒன்றையுஞ் செய்யாது விட்டுக் கொலைகளவு முதலிய பெரும்பாவத்தொழில்கள் பலவற்றையுஞ் செய்துகொண்டு பலவிடங்களிலுந் திரிந்து தன் கூட்டத்துடனே சிதம்பரத்துக்குச் சமீபமாக வருகையில், அன்று மார்கழித் திருவாதிரைத் திருநாளாதலால், சுவாமிதரிசனத்துக்கு வந்த அடியார் கூட்டங்களோடு கலந்து அவன் சென்று பொன்னம்பலத்தை யடைந்து அங்குச் சிவபிரானுடைய திருநடனத்தைத் தரிசித்து, மீண்டுங் கொடுந்தொழில்களைச் செய்து கொண்டு விந்தியாரணியத்திற் செல்லுகையில், பாம்புகடித்து இறக்க, அவனது பாதகங்களை நோக்கி யமதூதர்கள் வந்து அவனைக் கட்டியிழுத்துக்கொண்டு செல்கையில், அவன் ஒருகால் சிவநடனத்தைத் தரிசித்திருந்த மாத்திரத்தாலுண்டாகிய பெருநற்பயனால் சிவகணங்கள் வந்து அவனை யமபடரினின்றும் மீட்டு உயர் கதியிற்கொண்டு சேர்த்தன ரென்பது முன்னிரண்டடியிற் குறித்த கதை.

நீத்த, நீ - பகுதி. துன்மதன் - துர்மதன்: வடசொல்; கெட்ட களிப்புடையவனென்று பொருள். நடம், கதி - வடசொற்கள். காண – செயவெனெச்சம், காரணப்பொருள் தருதலால், இறந்தகாலம். முன் - இங்கே காலமுன், நிரம்புங்கதி - நிரதிசய அ....தத்தைத் தருவதும், எல்லாப்பதவிகளிலும் மேம்பட்டதும், ஒப்புயர்வற்றதும், அழிவில்லாததுமான முத்தியுலகம். கங்கை அதிமோகர் என்றது, கங்காநதியை எப்பொழுதும் தலைமேற்கொண்டிருத்தலால். அருட்சாகரத்தர் - நீர் நிரம்பிய கடல்போலக் கருணை நிரம்பியவர் கடவுளென்றபடி. மோதலையுப் பற்ற சாகரமென்றது கடவுளுக்குச் சஞ்சலத்தன்மையும் வெறுப்பும் இல்லையாதலின். சாகரம் - சகர சக்கரவர்த்தி குமாரர்களால் தோண்டப்பட்டதெனக் கடலுக்குக் காரணக்குறி. தத்திதாந்தநாமம். மாசு - குற்றம் என்றது இங்கே மும்மலத்தையும்; சார்பு - …….. ……… தொழிலாகுபெயர். ஒருகாலத்தில் திருக்கைலாசத்திலே உத்தியானவனத்திலே உமாதேவியானவள் உருத்திரமூர்த்தியின் பின்னேவந்து பேசாமல் விளையாட்டாக அவருடைய இரு திருக்கண்களையும் தனது இரண்டு திருக்கைகளால் ஒருகணப்பொழுது மறைக்க, அம்மாத்திரத்தில் சந்திரசூரியராதியர் அனைவருடைய ஒளிகளும் ஒழிந்து எங்கும் இருள்மூடி யுகங்கள் பல கழிந்து மன்னுயிர்கள் மிகவருந்த, அவ்வருத்தத்தையழிக்கும் பொருட்டு சிவபிரான் சிறிது நெற்றிக்கண்ணைத் திறந்து நோக்க, பார்வதி அதனைக் கண்டு அஞ்சி உடனே கண்களை மூடிய கைகளிரண்டையும் வாங்கிவிட்டு அப்பொழுது தன் கைவிரல்கள் பத்திலும் தோன்றிய வியர்வைநீரைக் கீழேயுகுக்க அவ்வியர்வைகள் பத்தும் பத்துக் கங்காநதிகளாய் எங்கும் பரவி உலகத்தையொழிக்கலுற, அதுகண்டு அஞ்சிவந்து சரமணமடைந்த தேவர்களது வேண்டுகோளால் சிவபெருமான் அவற்றைத் தன் சடையில் தரித்தருளி ஒடுக்கினரென்பது, கங்கையதிமோகர் என்பதிலுள்ள கதை, அன்றியும் பகீரத சக்கரவர்த்தி கங்காநதியை மேலுலகத்திலிருந்து நிலவுலகத்துக்குக் கொணர்கையில் அவனது வேண்டுகோளால் அக்கங்காநதியை முடியின் மேலேற்ற சரித்திரமும் உண்டு. (2)

3.- (இ - ள்) பாதகம் செய் – (கொலை முதலிய) பெரும்பாவத் தொழில்களைச் செய்த, துற்சகனும் – துற்சகனென்னும் வேடனும், பண்டு - முன்னொருகாலத்தில், கண்டு - சிவநடனத்தைத் தரிசித்து, இறப்ப (தன் எல்லையில்) மரணமடைய, (அவனுக்கு), கதி உவந்த போத - நற்கதியில் மகிழ்ந்து செல்லும்படி, இட்ட - கொடுத்ததருளிய, புலியூரே -புலியூரானது, வேதன் சிரம் - பிரமனது தலையும், மதலை - கொன்றை மலரும், அக்கு - எலும்பும் என்பவற்றை, அணிதார் சேர்த்து – அழகையுடைய மாலையாக ஒருங்கு அணிந்து, நரசிங்கத்து உரம் அது அலைய கணித்தார் - (திருமால்கொண்ட) நரசிங்க வடிவத்தினது வலிமை கெடும்படி கருதியவராகிய சிவபிரானது, ஊர் - இடமாம்; (எ - று.)

சையமலையிலுள்ள வேடர்குலத்திற் பிறந்து கொலை களவு முதலிய கொடும்பாவங்கள் பலவற்றையுஞ் செய்து திரியுந் துற்சகனென்பானொருவன் ஒரு சேரகுலத்தரசர் சிதம்பர தரிசனத்தை விரும்பித் தம் நாட்டினின்று அத்திருப்பதியை நோக்கிச் செல்லுகையில் அவர் பரிசனத்தின் ஏவலால் தான் பொற்சுமையெடுத்து அவர் சேனையுடனே வந்து சிதம்பரத்தையடைந்து அங்குத் திருநடனத்தைத் தரிசித்துச் சில நாட்சென்றபின் சுரநோயால் அங்கு உயிர்நீத்தபின், ஒருகாற்செய்த சிவதரிசனத்தின் மகிமையாற் பெரும்பாவங்களெல்லா மொழிந்து உடனே சிவகதி பெற்றனனென்பது முன்னடிகளிற் குறித்து கதை. பாதகம் – வடசொல். துற்சகன் - வடசொற்சிதைவு துஸ்ஸஹனென்னும் வடசொல்லுக்கு - பொறுக்கவொண்ணாதவனென்று பொருள். கண்டு உவந்து என்னும் வினைகளை ஊருக்கேற்றி யுரைப்பாரு முளர். துற்சகனும், உம்மை - இழிவுசிறப்பு; கீழ்ச்செய்யுளில் வந்த துன்மதனையும், மேற்செய்யுளில் வரும் துற்றெரிசனனையும் நோக்கிய இறந்தது எதிரது தழுவிய எச்சப்பொருளதாகவுங் கொள்ளலாம்.

போத - புகுத என்பதன் மரூஉ; போ என்னும் பகுதியின் மேல் து - சாரியையென்றுங் கொள்ளலாம். பிரமன் எப்பொழுதும் நான்கு முகங்களாலும் நான்கு வேதங்களையும் பாராயணஞ் செய்கின்றமையின், அவனுக்கு வேதனென்று பெயர்; இதனை வேதா என்னும் வடசொற்றிரிபாகக் கொண்டால், விதித்தற்றொழிற்குரிய கடவு ளென்று பொருளாம். சர்வசங்கார காலந்தோறும் ஒடுங்குகிற பிரமரது தலைகளையும் விஷ்ணுக்களது எலும்புகளையும் சிவபிரான் மாலையாகத் தொடுத்து, எப்பொழுதும் அழிவில்லாமல் எஞ்சிநின்ற பொருள் தாம் ஒருவரே யென்று அப்பிரமனாதியோர் அறிந்து வழிபட்டு நற்கதியடைதற் பொருட்டு, ஆபரணமாக அணிகின்றன ரென்பது பற்றி, ‘வேதன் சிரம் அக்கு அணித்தார் சேர்த்து' என்றார். மதலை யென்னுங் கொன்றைமரத்தின் பெயர், அதன் பூவுக்கு முதலாகு பெயர். திருமால் நரசிங்காவதாரமெடுத்து இரணியனைச் சங்கரித்தபின் அவனிரத்த முழுவதையுங் குடித்து அதனால் மயங்கிச் செருக்குக் கொண்டு மூவுலகங்களுக்கும் வருத்தமிழைத்தபொழுது, அதனைப் பிரமன் முதலிய தேவர்களாலறிந்த பரமசிவன் அவர்கள் வேண்டுகோளால் சரபவுருக்கொண்டு அச்சிங்கத்தைக்கொன்று அதன்தோலை மேற்கொண்டனரென்னுங் கதைபற்றி, நரசிங்கத்துரமலையக்கணித்தார் என்றது. உரமது, அது - முதல் வேற்றுமைச் சொல்லுருபு நரசிங்கம் – கழுத்துக்குக் கீழ்ப்பட்டது மனிதவடிவமும், முகம் சிங்கவடிவமுமாக அமைந்த திருமாலின் நான்காமவதாரம். அணித்தார் - இரண்டனுருபும் பயனுந்தொக்க தொகை. (3)

4. - (இ-ள்.) மறையோன் - ஒரு பிராமணனது, உள் - மனம், களிப்ப - மிக மகிழும்படி, பொன் குடையால் - அழகிய குடையொன்றை (அவனுக்கு)க் கொடுத்த புண்ணியமாத்திரத்தைக் கொண்டு, துற்றெரிசனன் - துர்த்தரிசனனென்னும் வேடனுக்கு, நல் கதியை - உயர்ந்தபதவியை, நல்கும் - கொடுத்தருளின, புலியூரே - புலியூரானது, சொல் கிளர் நால் ஆரணம் ஆறு அங்கத்தர் – சிறந்த சொற்கள் விளங்குகிற நான்கு வேதங்களையும் (அவற்றின்) அங்கமான ஆறு சாஸ்திரங்களையும் வெளியிட்டவரும், அம் பவளம் மேனியின் - அழகிய பவழநிறமான தனது உடம்பிலே, நாரணன் மால் தங்கு - நாராயணனென்னும் ஒருபெயரையுடைய திருமால் தங்கப்பெற்ற, ஓர் அத்தர் - ஒரு (இடது) பாகத்தையுடையவரும் ஆகிய சிவபிரானது, நாடு - ஊராம்; (எ - று.)

விந்தியமலையையடுத்த வனத்திலுள்ள வேடர்களின் தலைவனான துற்றெரிசனனென்பவன் வழிப்பிரயாணிகளைக் கொள்ளையடித்துக் கொலை செய்தொழுகுகிற தன்வழக்கப்படி, ஒருநாள் அவ்வழியில் வயது முதிர்ந்த ஓரந்தணன் வரக்கண்டு அவனைக் கொல்வதாக அச்சமுறுத்தி அவனது பொருள்முழுவதையுங் கவர்கையில், அவ்வந்தணன் அஞ்சி 'பெருமூப்புடையவனாகிய யான் வெயிலால் வருந்தாவண்ணம் நீ கவர்ந்த குடையை மாத்திரம் எனக்குக் கொடுத்துவிட்டுப் போ’ என்று வேண்ட, அங்ஙனமே அக்குடையை அவ்வந்தணனுக்குத் தானஞ்செய்து, அந்த நல்வினையால், அவ்வேடன் சிலநாட்சென்றபின் இவ்வுலகத்தை நீத்துச் சிவகதியடைந்தன னென்பது இச்செய்யுளின் முன்பாதியிலுள்ள வரலாறு. துர்த்தரிசனன் என்னும் வடசொல்லுக்கு – நோக்குதற்குக் கொடியவனென்று பொருள். 'பொற்கொடையால்' என்ற பாடம் கதைக்குப் பொருந்தாது. வேதம் நான்கு - இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம். வேதாங்கம் ஆறு - சிக்ஷை, வியாகரணம், சந்தம், நிருக்தம் சோதிடம், கற்பம் என்பன. சொல்கிளர் - புகழ்மிக்க என்றுமாம். சிவனது திருமேனிநிறம் செம்மையாதலை ‘வலப்பாகம் செழும்பவளச் சோதியென்ன வரணீலச் சோதியென்ன மற்றைய பாகம் என்பதனாலுங் காண்க. நாரணன் என்னும் உயர்திணைப் பெயரின் ஈறு தொக்கது. அத்தம் - அர்த்தம்: வடசொல்; பாதிவடிவம், அதனையுடையவர் அத்தர். சிவபிரான் தனது இடப்பாகத்தில் உமாதேவியோடொப்பத் திருமாலையும் அடக்கி வைத்துக் கொண்டுள்ளாரென்பது நூற்கொள்கை. பவளமேனியினோர் என எடுத்த - பவழ நிறமுடையவரென்றுங் கொள்ளலாம். 'மறையோனுக்களித்த' என்றும் பாடங்கொள்ளலாம். (4)

5. - (இ - ள்) ஓர் – ஒப்பற்ற, மழமுனிவன் - பாலமுனிவர், தாண்டு – பாயுந்தன்மையுள்ள; புலி - புலியினுடைய; கால் - கால்களையும்; கை - கைகளையும், உகிர் - நகங்களையும், தாம் பூண்டு இருந்து - தாம் பெற்றிருந்து; அர்ச்சிக்கும் - சிவபூசை செய்தற்கிடமான, புலியூரே - புலியூரானது; பாண்டியற்கு ஆய - பாண்டியனுக்காக; மாணிக்கம் - மாணிக்கங்களை; காட்டினார் - காண்பித்தவரும், மாமறைப்பாலன் - சிறந்த வேதங்களுக்குரிய ஓர் அந்தணச் சிறுவன் (அபிஷேகஞ்செய்த), பாலால் - பாலினால்; அங்கு - அப்பொழுது, வேணிக்கு - (தமது) சடையை, ஆட்டினார் -அசைத்தருளினவருமாகிய சிவபிரானது, வீடு - இருப்பிடமாம்; (எ - று)

மத்தியந்தின முனிவரது குமாரர் தமது தந்தையின் கட்டளைப்படி சிதம்பரத்தையடைந்து திருமூலட்டானேசுவரரை அருச்சித்து வருநாட்களில் ஒருநாள், பொழுதுவிடிந்தபின் சென்று அருச்சனைக்கு மரங்களினின்று மலரெடுக்கலாமென்றால், அப்பொழுதைக்குள் வண்டுகள் வந்து மலர்களை தின்றுவிடுகின்றனவாதலின், அம்மலர்கள் பூசனைக்குப் பயன்படுவனவல்ல. பொழுது விடிவதற்குமுன் மலரெடுக்கலாமென்றால் வழி தெரிகின்றதில்லை; அன்றியும், இருட்பொழுதில் மரங்களிலேறினால் அவற்றில் விழுந்துள்ள பனியினால் கைகால்கள் வழுக்குகின்றன; அதனால் நான் பழுதில்லாத மலர்களைக் கொண்டு பூசிப்பது எவ்வாறு' என்று வருந்தியிருக்கையில் சிவபிரான் வந்து காட்சி கொடுக்கப்பெற்று அப்பிரானை வணங்கிப் பிரார்த்தித்து அவனருளால், புலியின் கால்கைகளைப் போன்ற கூரிய வலிய நகங்களையுடைய கால்கைகளையும், அவற்றில் கண்களையும் பெற்று வியாக்கிரபாதரென்னும் பெயருடையவராய் முறைப்படி பூசையைப் புரிந்தனரென்பது முன்னடிகளிற் குறித்த கதை. வழுக்காமற் பற்றியேறுதற்குக் கால்கைகளில் நகங்களும், பார்த்து நடத்தற்கும் பூக்களைப் பழுது பார்த்தெடுத்தற்கும் அவற்றின் கண்களும் வேண்டப்பட்டன வென்க.

மதுரையில் வீரபாண்டியன் மகனுக்கு மகுடம் சூட்டக் கருதி மந்திரிகள் கருவூலத்திற் சென்று பார்க்கையில், அவனது வேசையர் மக்கள் முன்னமே அங்குள்ள பொருள்களையெல்லாம் கவர்ந்து போய்விட்டமையாற் கிரீடஞ் செய்வித்தற்குத் தக்க இரத்தினங்கள் கிடையாமையால், யாது செய்வோமென்று வருந்தி அவற்றை வாங்குதற்குச் செல்கையில், சிவபிரான் அருளால் வணிகத் திருவுருவங்கொண்டு வழியில் வந்து விற்பவராய், தம்மிடத்து நவமணிகளும் உள்ளன வென்று காட்டினரென்பதும்; திருவிரிஞ்சிபுரத்தில் சிவபூசை செய்யும் ஆதிசைவவேதியருள், தந்தையையிழந்த ஒரு சிறுவனது பூசை முறை வர, அந்நாளில் பிறரெவரும் பெரியோர் வந்து உதவாமையால், அவ்வந்தணச்சிறுவன் தானே சென்று அன்போடு பூசனை செய்யத் தொடங்குகையில், அச்சிவலிங்கப்பெருமான் அவன்பால் இரக்கமுற்று, அவர் தமக்குப் பாலபிஷேகம் முதலியன எளிதிற்செய்யுமாறு அச்சிறுவனுக்கு எட்டும்படி தமது திருமுடி தாழ்ந்தருளின ரென்பதும் கதைகள். ஆய் ஆக: எச்சத்திரிபு; இனி, பாண்டியற்கு - பாண்டியன் பொருட்டு, ஆய் மாணிக்கம் - ஆராய்ந்தெடுக்கப்பட்ட மாணிக்கங்களை, காட்டினாரென்றும் உரைக்கலாம். வேணிக்கு - நான்காம் வேற்றுமையுருபு செயப்படு பொருளில் வந்ததனால், உருபு மயக்கம். வேணி - வட சொல். மாணிக்கம் – மாணிக்யம்.

இனி, மாமறைப்பாலன் பாலால் வேணிக்கு அங்கு ஆட்டினர் என்பதற்கு - சிறந்த பிராமண குமாரரான விசாரசருமரால் பாலைக்கொண்டு திருமுடிக்கு அக்காலத்தில் அபிஷேகஞ் செய்யப்பட்டவரென்று உரைத்தல் நேராமென அறிக. சோழமண்டலத்தில் திருச்சேய்ஞலூரில் பிராமண சாதியில் பவித்திரை வயிற்றில் தோன்றிய விசாரசருமர் இடையர் பசுக்களை அடிப்பது பார்த்துப் பொறாமல் இரங்கி அவ்வூர்ப் பசுக்களையெல்லாம் அவ்வவற்றிற்கு உடையவரின் அனுமதி பெற்றுத் தாமே மேய்த்து வருங்காலத்தில் மண்ணியாற்றங்கரையில் மண்ணினால் ஒரு சிவலிங்கத்தைத் தாபித்து அப்பசுக்களின் பாலைக்கறந்து குடங்குடமாகக் கொண்டுபோய் அபிஷேகஞ்செய்துவர, அது தெரிந்து அவ்வூரவர்கள் அவரது தந்தையாகிய யச்சதத்தனிடத்திற் போய் 'உமது புத்திரன் பசுக்களை அன்போடு மேய்ப்பது போலக் கொண்டுபோய்ப் பாலைக்கறந்து மணலிற்சொரிந்து விளையாடுகிறான்' என்றுசொல்லி முறையிட, அத்தத்தன் மைந்தனறியாதபடி மறைந்து சென்று அங்ஙனஞ் செய்தலைக்கண்டு மிகுந்த கோபங்கொண்டு விசாரசருமரைத் தன் கைத்தண்டினாற் பலமுறையடித்துத் திருமஞ்சனப் பாற்குடங்களைக் காலினாலிடறிச் சிதற அந்நாயனார் தம்முன் கிடந்த ஒருகோலை எடுத்து உடனே சிவனருளால் மழுவாகிய அதனால் சிவாபராதஞ்செய்த தந்தையின் கால்களை வெட்டிவிட்டு முன்போலவே அருச்சனை செய்ய, பரமசிவன் பிரத்தியட்சமாகி அவருக்குச் சண்டேசுரபதத்தை அளித்தருளினரென்பது கதை. இனி, மறைப்பாலன் - மார்க்கண்டேயரும், வியாக்கிரபாதருமாகலாம். (5)

6. - (இ-ள்) அழும் - அழுகிற, வெம் - விரும்பத்தக்க, புலியின் புத்திரனுக்கு – வியாக்கிரபாத முனிவரது குமாரனான உபமன்யுவுக்கு, தத்து - மோதுகின்ற, திரை – அலைகளையுடைய; பால் உததிதன்னை - பாற்கடலை, ஈயும் - கொணர்ந்து கொடுத்தருளுதற்கு இடமான, புலியூரே - புலியூரானது, பத்தி - சிவபக்தியாகிய, தவம் - சிறந்த தவம், தழைத்த - நிரம்பின, சித்தனார் - மனதையுடைய சிறுத்தொண்டநாயனார், தாம் சமைத்த - தாம் பாகஞ் செய்த, சேயை - (அவரது) குமாரனை, உவந்து - விரும்பி, அழைத்த (முன்போலுருவங்கொண்டு வரும்படி) அழைத்தருளின, சித்தனார் - ஸித்த வடிவங்கொண்டவராகிய சிவபிரானது, ஊர் - ஊராம்; (எ-று.)

வியாக்கிரபாதமுனிவர் தமது தந்தையின் கட்டளைப்படி வசிட்டமகா முனிவரது உடன்பிறந்தவளை மணஞ்செய்து உபமந்யுவென்னுங் குமாரரைப் பெற, அக்குழந்தையை மாமனாகிய வசிட்டரும் அவர் மனைவியான அருந்ததியும் எடுத்துக்கொண்டுபோய்த் தமது பர்ண சாலையில் காமதேனுவின் பாலையூட்டி வளர்த்து வருகையில், ஒருநாள் தந்தைதாயரான வியாக்கிரபாதரும் அவர் மனைவியாரும் அன்பினாற்சென்று அக்குழந்தையைத் தமது பர்ணசாலைக்கு எடுத்துக் கொண்டுவந்து தமக்குப்பால் கிடையாமையால் மாவை நீரிலே கரைத்து ஊட்ட, அதனை அக்குழந்தை உட்கொள்ளாது உமிழ்ந்துவிட்டுக் காமதேனுவின் பாலைக்கருதி விரும்பியழ நல்ல பாலூட்டிச் சமாதானப்படுத்த வழியில்லாமல் அக்குழந்தையைத் தந்தை சிவசன்னிதானத்திற் கொண்டுவிட, அங்கு அக்குழந்தை பசியாற்றாது அழுது சிவபிரானருளாற் பாற்கடலைப்பெற்று உண்டு வளர்ந்ததென்பது முன்னடிகளிற் குறித்த கதை. உததி - நீர்தங்குமிடம்; வடசொல், இங்கே, கடலென்னு மாத்திரையாய் நின்றது. புத்திரன் என்னும் வடசொல்லுக்கு – தனது தந்தைதாயரைப் புத் என்னும் நரகத்தினின்று காப்பவனென்று பொருள்; புத் - மக்களில்லாதவர் அடைவதோர் நரகம். திருச்செங்காட்டங்குடியில் அந்தணர்குலத்தில் அவதரித்த சிறுத்தொண்டநாயனாரது அன்பை வெளியிடும்பொருட்டுச் சிவபிரான் பைரவத் திருவுருவங்கொண்டு அவர் மனைக்கு வந்து அரிய பிள்ளையையறுத்துக் கறிசெய்து அமுது படைப்பவர் வீட்டிலேயே தாமுண்போமென்று கூற நாயனார் அதற்கு உடன்பட்டு தமது புத்திரனாகிய சீராளனை அறுத்துக் கறிசெய்து அமுது படைக்கையில், சிவபிரான், "உமது பிள்ளையில்லாமல் உண்ணோம்; பிள்ளையைக் கூப்பிடும்," என்ன, அதற்கு உடன்பட்டு ......... ......... பிள்ளையையழைக்க, அப்பிள்ளை முன்போலும் ...... ....... வந்தனனென்பது பின்னர் அறிந்த கதை; . .......... - மாயவித்தையையுடையவரென்றுங் கொள்ளலாம். (6)

7. - (இ-ள்) மெய் திகழும் சேடன் - ……… ……… ஆதிசேஷன்; உருவிட்டு - (தனது) வடிவத்தை ஒழித்து; பதஞ்சலி ஆய் - பதஞ்சலியென்னும் முனிவடிவமாகி; பொய்கையுழி - ……………. ………………; வந்த - வந்தடைந்த; புலியூரே - புலியூரானது; வையை வரம்பு கட்டுவார் - வைகைநதிக்கு அணை ...........; ஆனார் - ..........யடையவரும்; மாமுநிக்கு பால் சாகரம் புகட்டுவார் ஆனார் - ............. ..................... முனிவருக்குத் திருப்பாற்கடலை உணவாகக் கொடுத்தருளும்; ஆனார் - ஆகிய சிவபிரானது; காப்பு - (உயிர்களைக்) காவல் செய்யும் இடமாம் (எ - று).

முன்னொரு காலத்தில் அத்தரி முனிவரும் அவரது மனைவியான அனசூயையும் ஆதிசேஷன் தமக்கு மகனாகப் பிறக்க திருமாலை நோக்கித் தவஞ்செய்து அவரது அனுக்கிரகத்தைப் பெற்றபின்னர், ஆதிசேஷன் மானுட மகளது கருப்பத்திற் பிறத்தற்கு அஞ்ச, அவ்வனசூயை ஒரு ........ ........... ஸ்நானஞ் செய்து சுத்தியடைந்து ...................... .................... அஞ்சலியிடனிடத்தால் அஞ்சுதலைச் சிறுபாம்பாகித் தோன்ற, அவள் அதனைக்கண்டு பயந்து கையுதற, ஆதிசேஷன் அவளது அக்கையினின்று விழுந்ததனால் பதஞ்சலியென்னும் பெயரைப் பெற்றான். (பத- விழுதல்; அஞ்சலி - கூப்பிய கை) பின்பு ஒருகால் சிவபிரானது நடனத்தின் மகிமையைத் திருமால் கூறக்கேட்டு ஆதிசேஷன் அதனைத் தரிசிக்க விரும்பித் திருக்கைலையையடைந்து தவஞ்செய்ய சிவபிரான் பிரத்தியக்ஷமாய், 'நீ இவ்வடிவத்தோடு சென்றால் உலகமஞ்சுமாதலின், முன்னொருகால் எடுத்த சிறிய பதஞ்சலி வடிவத்தோடு நாகலோகத்திற் சென்று, அங்கு ஒருமலையருகிலுள்ள பிலத்துவாரம் சென்று தில்லைவனத்தில் முடிவதாதலின், நீ அவ்வழியாய் அங்குச் சென்று சேர்ந்து வியாக்ரபாத முனிவனோடு நமது நடனத்தைத் தரிசிப்பாய்' என்று அருள, அங்ஙனமே நாகராசன் பிலத்துவாரத்தின் வழியாய்த் தில்லைவனத்தையடைந்து திருநிருத்தந் தரிசித்தனரென்பது முற்பாதியிலுள்ள கதை. சிதம்பரத்தில் திருவருந்தேச்சுரத்துக்கு மேற்கேயுள்ள நாகசேரியென்னும் புண்ணியதீர்த்தமே ஆதிசேஷனெழுந்த பிலத்துவாரத்தின் எல்லையாம். மெய் திகழும் - உண்மை விளங்குகின்ற என்றுமாம். சேடன் - வடசொற்றிரிபு; (பிரளய காலத்திலும் அழியாது) மிகுபவனென்று பொருள். வாதவூரடிகளை வருத்தியதன் பொருட்டு அரிமர்த்தன பாண்டியன்மீது உண்டான கோபத்தால் சிவபிரான் வையையாற்றை அவன் நகர் மேல் ஏவ, அந்நதி மதுரையையழிக்குமாறு பெருகிவர, அந்நகரத்தார் யாவரும் அரசன் கட்டளைப்படி கூலியாட்களை வைத்துக் கரைகோலுகையில், சோமசுந்தரக்கடவுள் பிட்டு விற்றுண்ணும் வந்தியென்னும் மலட்டுக்கிழவிக்குத் தன் கருணையால் வேலையாளாகச் சென்று முடியின்மேற் கூடையில் மண்ணைச்சுமந்து கொண்டுபோய்க் கொட்டினாரென்பது கதை. புகட்டு - புகவிடு என்பதன் மரூஉ. (7)

8 - (இ - ள்.) மாசு இலா - குற்றமில்லாத, அம்புலிக்கும் - அழகிய புலியின் வடிவத்தைச் சிறுபான்மை கொண்ட வியாக்கிரபாத முனிவருக்கும், மாது உமைக்கும் - மகளிரிற் சிறந்த உமாதேவிக்கும், மா நடத்தை - சிறந்த (தமது) திருநடனத்தை, பூசமதில் – (தைமாதத்துப்) பூசநட்சத்திரத்தில், காட்டும் - (சிவபிரான்) தரிசனங் கொடுத்தற்கிடமான புலியூரே - புலியூரானது, பேசு அரிய - சொல்லுதற்கு முடியாத, வித்தகத்தார் – ஞானவடிவமாக வுள்ளவரும், கண்டு இறந்தார் வீடு உற செய்து - (தம்மைத்) தரிசித்துப்பின் மரணமடைந்த அடியார்கள் முத்தியடையும்படி அருள்செய்து, அங்கதற்கு ஆ மத்தகத்து ஆர் கண் திறந்தார் – மன்மதனையொழிக்கும் பொருட்டுத் திருநெற்றியிற் பொருந்தின நெருப்புக்கண்ணை விழித்துப் பார்த்தவருமாகிய சிவபிரானது, வாழ்வு - வாழுமிடமாம்; (எ - று.)

மாசு என்றது – ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலத்தொடக்கை தைமாதத்தில் வியாழக்கிழமையும் பௌர்ணமியும் பூசநக்ஷத்திரமும் பொருந்திய நன்னாளில் திருநடனத்தைக் காட்டியருளினா ரென்க. பூசம் - புஷ்யம், மத்தகம் - மஸ்தகம் இவை - வடசொற்றிரிபுகள். வித்தகத்தார் கண்டு இறந்தார் வீடுற என எடுத்து - ஞானமுடையவர்கள் தம்மைத் தரிசித்து மரித்து முத்திபெற என்றுங் கொள்ளலாம். அங்கஜன் என்னும் வடசொல்லுக்கு – (திருமாலின்) உடம்பினின்று உண்டானவனென்றாவது (பிராணிகளின்) உடம்பினிடமாகத் தோன்றுகின்றவ னென்றாவது பொருள் கொள்க. ஆ - ஆக; விநாசம் - வாழ்வு - தொழிலாகுபெயர். பார்வதிதேவி ஐந்துபிராயமானவுடனே பரமசிவனை மணஞ்செய்தற்குத் தவஞ்செய்ய விரும்பியவளாய்த் தன் கருத்தைப் பெற்றோர்க்குத் தெரிவிக்க, அவர்களால் "அன்னைகே ளெம்மி னிங்கி யருந்தவ மாற்றற் கொத்த, தின்னதோர் பருவமன்றா லியாண்டுமோ ரைந்தே சென்ற, நின்னுடல் பொறாதா லீண்டிந் நிலைமையைத் தவிர்தி" என்றுகூறி முதலில் மறுக்கப்பட்டதனால், அவளுக்கு உமையென்ற திருநாம முண்டாயிற்று; உ, மா என்பதற்கு - அம்ம, வேண்டாம் என்று பொருள். (8)

9. - (இ - ள்.) சிங்கவன்மன் - சிங்கவர்மாவென்னும் அரசன், முன் ஆக - முற்பட (முற்காலத்தில்), சிவதடத்தில் - சிவகங்கையிலே, முழ்க – வந்து நீராட, பொன் ஆகம் ஆக்கும் - (அவனுடைய உடம்பைப்) பொன்னிறமான உடம்பாகச்செய்த, புலியூரே - புலியூரானது, ஒன்னார்க்கு ஆக - பகைவர்களை யொழித்ததற்காக; போர் கொள் - போரைச்செய்ய, குன்று வளை வில் - மேருமலையாகிய வளைந்த வில்லை, எடுப்போர் – எடுத்தருளுந் தன்மையுடையவரும், கூடல்தனில் - மதுரையிலே, சென்று - (வீதிகளிற் ) போய், வளை விற்போர் - கைவளையல்களை விற்குந்தன்மையருமாகிய சிவபிரான், செறிவு - பொருந்துமிடமாம்; (எ-று.)

உடம்புமுழுவதுஞ் சிங்கம்போன்ற நிறத்தையுடைமையாற் சிங்கவன்மனெனப் பெயர்பெற்ற கௌட தேசத்து இராசகுமாரன் தலயாத்திரை செல்லுதற்குத் தந்தையிடம் விடைபெற்று வருகையில் தில்லைவனத்தையடைந்து அங்குச் சிவகங்கையென்னும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடிப் பொன்னிறமான வடிவத்தையடைந்து அதனால் இரணியவன்மனெனப் பெயர் பெற்றானென்பது முற்பாதியின் கதை. சிவகங்கை - இது கனகசபைக்கு வடக்கேயுள்ளது. ‘சர்மா' என்பது பிராமணர்க்குப்போல, 'வர்மா' என்பது க்ஷத்திரியர்க்குச் சாதிக்குரிய பெயர்; இவை – தமிழில் சன்மன், வன்மன் எனத் திரிந்து நிற்கும். ஒன்னார் - ஒன்றார் என்பதன் மரூஉ; கலவாதவரென்று பொருள். இங்கே 'ஒன்னார்' என்றது திரிபுரத்து அசுரரை; ஒருகாலத்தில் வருணன் சோமசுந்தரக் கடவுளது திவ்ய சக்தியைப் பரிசோதிக்குமாறு எண்ணி ஏழுமேகங்களையும் அளவின்றி மழைபொழிந்து மதுரையை அழிக்கும்படி ஏவ அங்ஙனமேயந்த ஏழுமேகங்களையுந் தடுக்கும் பொருட்டு அக்கடவுள் கட்டளையால் ……………….. ………………… மேகங்களும் மேலுயர்ந்து நான்கு மாடமாகக் கூடியதால் மதுரை நான்மாடக்கூடலென்றும், மாடக்கூடலென்றும் கூடலென்றும் பெயர் கொண்டது. "வளறிறல் வருணன் விட்ட மாரியை விலக்கவீசன் ...... ........ .........நீங்கிய மேக நான்குங் குன்றுபோ ......... நான்கு மாடமாகக் கூடலாலே, அன்றுநான் மாடக்கூட லானதான மதுரை மூதூர் ....... . ஒருகாலத்துப் பரமசிவன் தாருகவனத்திலுள்ள முனிவர்களின் ................ ................. கற்புநிலையைப் பரீட்சிக்கவெண்ணித் தாம் ஒருவிட சங்கம ........... வடிவங்கொண்டு அவரில்லந்தோறுஞ் சென்று பிக்ஷாடனராக .............. பத்தினியர்கள் அவரைநோக்கிக் காதல்கொண்டு ................. ................... கைவளைகள் கழன்று விழுமாறு .................... அதையறிந்த முனிவர்கள் அம்மகளிரை மதுரையில் வணிகர்களின் மகளாகப் போய்ப்பிறக்கும்படி சபித்து, அம்மதுரைக்கடவுள் வந்து அவர்கள் கைகளைத் தொடும்பொழுது இச்சாபம் நீங்குமென்று அனுக்கிரகமுஞ் செய்ய, அங்ஙனமே வைசியகுலப் பெண்களாய் வந்து பிறந்த அவர்கள் ................... சோமசுந்தரக்கடவுள் திருவுள்ளத்தெண்ணித் தாம் வளையல் .......... ஒரு வணிகனது வடிவத்தைப் பூண்டு வீதிகளில் சென்று அம்மகளிர் கரங்களுக்கெல்லாம் வளையலிடுகிற பாவனையாய் அவர்கள் கைகளைத் தொட்டு அவர்கள் சாபத்தைப் போக்கியருளினாரென்பது ஈற்றடியின் கதை. செறிவு - தொழிலாகு பெயர். (9)

10.- (இ - ள்) அள்ளிய வாய் - தான் எடுத்த வாயினின்று, ஓதனம் ஒன்று - ஒரு சோற்றவிழை, அந்தணன் வாய் வீழ்ந்த - ஒரு பிராமணனது வாயிலே விழும்படி செய்த, கொடிப்புள் - காக்கையாகிய பறவை, அருள்பெற்று – (சிவனது) திருவருளை யடைந்து; உய்யும் - நற்கதி பெறுதற்கிடமான, புலியூரே - புலியூரானது, உள்ளமது சோதிக்க வருவார் - (திருநீலகண்ட நாயனாரது) மனநிலையைப் பரிசோதனை செய்ய வருபவராய், தொண்டர் ஓடு உன்வசம் என்று ஓதி - அடியவனே (இந்தப்) பிச்சையோடு உன்வசத்திலிருக்கக் கடவதென்று சொல்லி (க்கொடுத்து), கவருவார் - (பின்பு அதனை) எடுத்துச் சென்றவராகிய சிவபிரானது, ஊர் - தலமாம் (எ-று).

சிதம்பரந்தரிசிக்க வந்த அந்தணனொருவன் இளைப்பால் அவ்வூரில் ஓர்பால் வாய்திறந்து உறங்குகையில், ஆகாயத்தில் அன்னத்தையெடுத்துச் சென்ற ஓர் காக்கையினது வாயலகினின்று ஓரவிழ் அவ்வந்தணன் வாயில் விழ, அதனை அவன் உண்ணவே, அந்தச் சிவபுண்ணியத்தால் அக்காக்கை சிவகதி பெற்றதென்பது முற்பாதியின் கதை. "அன்னம் வீழ்தலு மருந்துயில் வசத்தினா லறியான், மின்னு நூனெறி வேதியன் விழுங்கினானம்மா, வென்ன சொல்லுகோ மீதறியாது செய்காகம், பன்னுமிப் பயனாற் சிவபதமடைந்ததுவால்," என்பது சிதம்பரபுராணம். ஓதநம், வசம் - வடசொற்கள். திருநீலகண்டநாயனர் மனைவியாரோடும் சிவனடியார்க்குத் திருவோடுதரும் நியமங்கொண்டு ஒழுகு நாளில், அவர்களன்பை உலகமறிய வெளியிடும் பொருட்டுச் சிவபிரான் ஒருநாள் ஒரு சிவயோகியாய்த் திருவுருவம் கொண்டு வந்து தமது கையிலுள்ள ஓட்டை அவர்கையிற்கொடுத்து இதனைக் காப்பாற்றி வையுமென்று கூறிச் சென்று பின்பு அதனை மறைத்தருளினரென்பது பிற்பாதியின் வரலாறு. கொடிப்புள் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. (10)

11. (இ - ள்) சென்று - (தனது எல்லையிலே) வந்து, நலம் தீது செய்யில் - நல்வினையையாவது தீவினையையாவது செய்தால், (அவை) பொன்றாது - கெடாமல், ஒன்று கோடியது ஆய நீடும் - ஒவ்வொன்றுங்கோடி யென்னுந் தொகையுடையதாய் வளருந் தன்மையதான, புலியூரே - புலியூரானது, நின்று - (ஒருகாலை ஊன்றி) நின்று, ஆடும் - (ஒருகாலைத் தூக்கிநின்று) நர்த்தனஞ்செய்கிற, பொன் அம்பலவர் - பொன்மயமான சபையை உடையவரும், புகல் மறையினால் உணரா - (யாவருஞ்சிறப்பித்துக்) கூறும் வேதங்களால் அறிய முடியாத, வன்னம் பலவர் - பல நிறங்களை யுடையவரும் ஆகிய சிவபிரானது, மனை - இருப்பிடமாம்; (எ - று)

முற்பாதியில் குறித்தது க்ஷேத்திர மகிமை. பொன்னம்பலம் - கனகசபை. வன்னம் - வடசொற்றிரிபு. 'வன்னம் பல' என்றது - குணம், செயல், தோற்றம் ஆகியவற்றை; நன்மை, தீது - வினைகளுக்குப் பண்பாகு பெயர். கோடி - நூறு லட்சம். பொன்றாது என்னும் எதிர்மறை வினையெச்சத்தில், பொன்று - பகுதி. நீடும், நீடு - பத்தி. இனி, தீது சென்று நலம் செய்யில் என இயைந்து, தீவினை ...... நல்வினை செய்தால் என்று உரைத்தலும் ஒன்று. பலநிறம் - கருமை, செம்மை, வெண்மை. (11)

12. (இ - ள்) மாக்கள் (தன் எல்லையிலுள்ள) மனிதர்களது, வினை - தீவினையை, பால வயிரவன் கை சூலத்தால் போக்கி - பாலவயிரவ மூர்த்தியினுடைய திருக்கையிலுள்ள சூலாயுதத்தால் ஒழித்து, நலம் தந்த - (அவர்களுக்கு) நற்கதி கொடுக்கும் தன்மையதான புலியூரே - புலியூரானது; சாக்கியர் - சாக்கிய நாயனார், கல்மோத - கல்லினால் அடிக்க, கனிவு இருந்தார் - (அவர்பால்) மகிழ்வோடிருந்தவரும், முன் - முன்னே, வணிகமாது - வைசியகுலத்தில் தோன்றிய புனிதவதியார், அளித்த - (அன்பாற்) கொடுத்த, சூதம் கனி - மாம்பழத்தை உண்ட, விருந்தார் - விருந்தினருமாகிய சிவபிரான், தோய்வு - பொருந்துமிடமாம்; (எ-று)

சிதம்பரத்தில் வாசஞ்செய்பவர் தீவினை செய்வாராயின் அவர்க்கு யமதண்டனை கிடையாதென்றும், அவர்கள் பாலவைரவமூர்த்தி திருக்கையிலேந்திய சூலாயுதத்தால் ஒரு முகூர்த்தகாலத்துள் தண்டிக்கப்பட்டுப் பின் நற்கதி பெறுவரென்றும் நூற்கொள்கை. மாக்கள் - மனவுணர்வில்லாமல் ஐம்பொறுயுணர்வு மாத்திரத்தையுடையவரும், மக்கள் - ஐம்பொறியுணர்வோடு மனவுணர்வையும் உடையவருமாதலால், இங்கே, விவேகமின்றித் தீவினை செய்பவரை 'மாக்கள்' என்றார். பாலவயிரவமூர்த்தி சிவாம்சமாவர். திருச்சங்கமங்கையில் வேளாளர்குலத்திலுதித்த ஒருவர் பௌத்தமதத்தின் கிளையான சாக்கிய சமயத்திற் பிரவேசித்து அது சற்சமயமன்றென்று தெளிந்து பரமசிவனே பதியென்று அறிந்து அச்சாக்கிய சமய வேஷத்தைத் துறவாமலே தினந்தோறுஞ் சிவலிங்கத்தைத் தரிசனஞ் செய்தபின்பே போசனஞ் செய்யவேண்டுமென்று விரும்பிச் சமீபத்திருக்கிறவொரு லிங்கத்தை நாடோறுந் தவறாமல் தரிசித்து அருகில் கிடக்கும் கல்லையெடுத்து அன்போடு அதன்மேல் எறிந்து அருச்சித்துவர, ஒருநாள் பரமசிவன் உமாதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றிக்காட்சி தந்து அச்சாக்கியநாயனாரைத் தமது திருவடியிற் சேர்த்தருளினாரென்பதும்; காரைக்காலில் வைசியர்குலத்தில் தோன்றிய (பின்பு காரைக்காலம்மையெனப் பெயர் பெறும்) புனிதவதியாரைப் பரமதத்தனென்பவன் மணம் புரிந்து இல்லற நடத்திவருகையில், சிவபிரான் ஒரு அடியவர் வேடங்கொண்டு மிக்கப்பசியால் இளைப்புற்றவர் போல வந்தடைய, அப்புனிதவதியார் அவர்க்கு அன்னம் படைத்துத் தம் கணவன் அன்புடனனுப்பிய மாங்கனியிரண்டனுள் ஒன்றையும் உடன் பரிமாறி உபசரித்து அருள்பெற்றன ரென்பதும் பிற்பாதியின் கதைகள், வைசியமாது என்ற பாடத்துக்கு வைசியமென்னும் வடசொற்றிரிபென்பர். விருந்து – புதுமை; புதிதாய் வந்தவர், விருந்தார். தோய்வு - தொழிலாகு பெயர்; சூதம் - வடசொல். வயிரவன் - பைரவன்; வடமொழி. (12)

13. - (இ-ள்) சொல்லா – (சிவநாமத்தைச்) சொல்லாத, சிவசன்மா - சிவசர்மா என்னும் அந்தணனுக்கும், சோமநாதற்கு - சோமநாதனென்பவனுக்கும், வினை பொல்லாங்கு - (முற்பிறப்பிற் செய்த) தீவினைகளாகிய தீங்குகளை, அகற்றும் - ஒழித்தருளின, புலியூரே - புலியூரானது; மாமலை - பெரிய மேருகிரியை, வில் ஆ வணக்கும் - வில்லாக வளைத்த, சமர்த்தினர் - சாமர்த்தியத்தையுடையவரும், தோள்மேல் - தமது புயங்களின்மேல்; மாசுணம் குஞ்சு - நாகக்குட்டிகளை, அமர்த்தினார் - (ஆபரணங்களாகத்) தங்க வைத்தவருமாகிய சிவபிரான், தோய்வு - தங்குமிடமாம்; (எ-று)

மேலக்கடற்கரையிலுள்ள சோமநாதமென்னு மாலயத்தில் திருக்கார்த்திகை யுற்சவத்தைச் சேவிக்கச் சென்றவர்களுள் சோமநாதனது உடம்பு படுதலால் அவ்விடத்துள்ள திருவிளக்கு அகல்களுள் ஒரு நெய்யகல் வீழ்ந்து விளக்கு அணைய, அவன் அதற்கு ஒன்றும் பரிகாரஞ் செய்யாமையாலும் அருகில் நின்ற சிவசன்மாவும் அதுகண்டு ஒன்றுஞ் செய்யாது சும்மாயிருந்து விட்டதனாலும் உண்டான பாவத்தால் இருவரும் மறுபிறப்பில் ........... இரண்டு பேய்களாகி விந்தியாரணியத்தில் அலைகையில் வாமதேவ முனிவரைக் கண்டு வணங்கி அவரருளிச் செய்தபடி சிதம்பரத்தையடைந்து சிவனுக்கு அடிமைபூண்டு தீவினை தீர்ந்துய்ந்தனரென்பது முற்பாதியின் கதை. சோமநாதற்கு என்பதிலுள்ள நான்காமுருபை சிவசன்மா என்பதனோடுங் கூட்டுக. 'சோமநாதர்க்கு' என்ற பாடத்துக்கு, சிவசன்மா சோமநாதர் என்பது - பலர்பாலால் முடிந்த உயர்திணையும்மைத்தொகை யென்க. சமர்த்து - திறமை. குஞ்சு - இளமைப்பெயர். ஒருகாலத்திற் பரமசிவன் தம்மை மதியாத தாருகவனத்திலுள்ள முனிவரது மனநிலைமையைப் பரீக்ஷிக்க எண்ணித் தாம் ஒரு விடசங்கமத் திருவுருவங் கொண்டு அவரில்லந்தோறுஞ் சென்று பிக்ஷாடனஞ்செய்து தம்மை நோக்கிக் காதல்கொண்ட அம்முனிபத்தினியரது கற்புநிலைமையைக் கெடச்செய்ய, அதுகண்டு பொறாமற் கோபமூண்ட அம்முனிவர்கள் அபிசார யாகமொன்று செய்து அவ்வோமத் தீயினின்றுமெழுந்த நாகங்கள், பூதங்கள், மான், புலி, முயலகன், வெண்டலை முதலியவற்றைச் சிவனைக் கொன்றுவரும்படி ஏவ, சிவபெருமான் தம்மேற் பொங்கிவந்த நாகங்களை ஆபரணங்களாகவும், பூதங்களைத் தமது கணங்களாகவும் கொண்டு, மானைக் கையிலேந்தி, புலியைத் தோலையுரித்து உடுத்து முயலகனை முதுகிற் காலாலூன்றி, வெண்டலையைக் கையிற்பற்றி, சடைமேலணிந்து, இங்ஙனமே அவற்றையெல்லாம் பயனிலவாகச் செய்துவிட்டன ரென்பது கதை. (13)
14. - (இ-ள்.) ஆழ்ந்த கடல் செல்வற்கு - ஆழமாயுள்ள கடலுக்குத் தலைவனான வருணனுக்கு, அடர - நெருங்கிய, பிரமகத்திதனை – பிரமஹத்தி தோஷத்தை, போழ்ந்து அறுத்து – பிளந்து ஒழித்து, ஆளும் – அடிமைகொள்ளுந் தன்மையுடைய, தென் புலியூரே - அழகிய புலியூரானது, தாழ்ந்தவரை - (தம்மை வணங்கின) அடியார்களை, துய்ய கதியேற்றினார் - பரிசுத்தமான உயர்கதியில் அடையச் செய்தவரும், சோதி - ஒளியையுடைய, வெள்ளி வெற்பு அனைய - வெள்ளிமயமான கைலாசகிரியைப் போன்ற, வெய்ய கதி ஏற்றினார் - வேகமான நடையையுடைய வெண்ணிறமான இடபத்தை யுடையவரும் ஆகிய சிவபிரானது, வீடு - ஸ்தானமாம்; (எ - று.)

வருணனுக்குப் பகைவனாகவுள்ள ஓரசுரனை வெல்லுமுபாயத்தை அவ்வருணனுக்குத் தெரிவிக்கும் பொருட்டு அவனுடைய குரு இரவில் வருணனிடம்வர, அப்பொழுது வருணன் அவனை பகைவனென்று கருதி அவன்மேல் தனது பாசாயுதத்தை எறிய அதனால் அவ்வாசிரியன் இறக்கவே, அப்பார்ப்பனக் கொலைப்பாவம் ஒரு பிசாசுவடிவமாய்த் தோன்றி வருணனைக் கைகால் கழுத்துக்களைக் கட்டிக் கடலிற் போட்டுவிட, நெடுநாள் கடலிலழுந்திக்கிடந்த வருணனுக்கு நடேசப் பெருமான் ஒரு மாசிமகத்தில் காட்சிதந்து அக்கட்டுக்களை அறுத்துவிட்ட நளினரென்பது முற்பாதியின் கதை. அதுமுதல் அத்துறை பாசமறுத்த துறையெனப் பெயர்பெறும். பிரமன் - அந்தணன். ஹத்தி - கொலை; இடபத்துக்கு வெள்ளிமலை - நிறம் பருமை வலிமை சிவனுக்கிடமாதல் இவற்றால் உவமை. தென் – தெற்குத் திசையிலுள்ள என்றுமாம். கடற்செல்வன் - நீரையே செல்வமாகவுடையவன். ஏறு - எருது; ஆண்மைப்பெயர். (14)

15. - (இ-ள்) வன்மதி - கொடுமையான மனத்தை உடைய, நீசன் - புலையனொருவன், கடல்நீர் - சமுத்திர தீர்த்தத்தில், மாசி மகத்து - மாசி மாதத்து மகநட்சத்திரத்தில், ஆட - நீராட, அவன் - அப்புலையனது, புன்மை - நீசத்தன்மையை, தவிர்த்து - நீக்கி, ஆளும் - கருணைசெய்து அவனையடிமை கொண்ட, புலியூரே - புலியூரானது, தென் மதுரை – தென்திசையிலுள்ள மதுராபுரியில், கல் களிறுக்கு – ஒரு கல்யானைக்கு, இக்கு - கரும்பை, அளித்தார் - (தின்னும்படி உணவாகக் கொடுத்தருளியவரும், கானவன் - வேடர்குலத்தில் தோன்றியவராகிய கண்ணப்ப நாயனார் தந்த, எச்சில் - (அவரால்) எச்சில் செய்யப்பட்ட உணவை, சுவைக்க - உருசி பார்த்து உட்கொள்ளும் பொருட்டு, பற்கள் இறுக்கி - (தமது) பற்களால் மென்று தின்று, களித்தார் - களிப்படைந்தவருமாகிய சிவபிரான், பற்று - பொருந்துமிடமாம்; (எ- று)

மாசிமக நாளில் தன்னில்வந்து நீராடுபவர் யாவர்க்கும் முத்தியளிக்குந் தன்மையுள்ள பாசமறுத்த துறையென்னுங் கடல்தீர்த்தத்தில் ஒரு மாசிமகத்தினன்று ஒரு சண்டாளன் அம்மகிமையுணராமலே தான் இயல்பிலே மூழ்கியெழுந்து அப்பயனால் அவ்விழி பிறப்பொழிந்து உயர்கதி பெற்றனனென்பது முற்பாதியின் கதை. 'மாசிமாமகத்துச் சொற்றவரையறையில்லாத் தீமை, நீசனங்கவனு நன்கு நினைந்திடானதனின்மூழ்கித், தேசுறு முத்திசேர்ந்தான் செப்புவ தென்னோ' என்பது சிதம்பரபுராணம். இது குய்ய தீர்த்தமெனப்படும். மதி – அறிவு; வடசொல். வன்மை - அருளில்லாமை; கொலைகளவு முதலிய தீச்செயல்கள் பலவற்றிலும் விரைந்துசெல்லுதல். நீசன் - யாவரினுங் கடைப்பட்டவன். புன்மை – இழிவு; பண்புப் பெயர், வடமதுரையொன்று உண்மையின், தென்மதுரையென்றது – இனம்விலக்க வந்த அடைமொழியாம். இனி, தென் - அழகிய என்றுமாம். மதுரை - பாண்டிய நாட்டிலுள்ளதும், தன் பெயர் கேட்ட மாத்திரத்தில் முத்திதருந் தன்மையதும் ஆகியதொரு சிவதலம். குலசேகரனென்னும் பாண்டியன் காடுகெடுத்து நகராக்கி அந்நகரத்திற்குச் சாந்தி செய்யக்கருதியபொழுது சோமசுந்தரக்கடவுள் திருவுளத்தறிந்து தமது திருச்சடையிலணிந்த சந்திரனிடத்தினின்றும் அமிர்தத்தையுகுக்க, அவ்வமுதம் சென்று அந்நகர் முழுவதும் பரவிச் சாந்திசெய்து மதுரமயமாக்கியதனால், மதுரையெனப் பெயர் பெற்றது, இதனை 'மணிமலர்த் தாரோன் மாளிகை தனக்கம் மாநகர் வடகுண பாற்கண், டணிநகர் சாந்தி செய்வது குறித்தா னண்ணலா ரறிந்திது செய்வார்."

பொன்மயமான சடைமதிக்கலையின் புத்தமு துகுத்தனரது போய்ச் சின்மயமான தம்மடியடைந்தார்ச் சிவமயமாக்கிய செயல்போல, தன்மயமாக்கி யந்நகர் முழுதுஞ்சாந்திசெய்ததுவதும், நன்மயமான தன்மையான் மதுரா நகரென வுரைத்தனர் நாமம்" என்னுந் திருவிளையாடற் செய்யுள்களாலறிக. அபிஷேகபாண்டியன் காலத்தில் சோமசுந்தரக்கடவுள் எல்லாம் வல்ல சித்தருருவாகிப் பல விசித்திரமான செயல்களைச் செய்ய, அதுகேட்டு அவரை வரவழைக்க முயன்ற அப்பாண்டியன் அவரைத் தேவாலயத்தின் உட்பிரதக்ஷிணத்தில் மேற்குப் பக்கத்திற்கண்டு, கடவுளென்று அறியாமல் மனிதரென்று கருதி ஒரு பெருங்கரும்பைக் கையிற்கொண்டு அவருக்குக் காட்டி இதனை இவ்விந்திர விமானத்தைக்காக்கிற கல்லானைகளுள் இவ்யானை உண்ணுமாறு செய்வீரானால் உமது சகலசித்தி விளங்கும் என்று இயம்ப, அதற்குச் சம்மதித்துச் சித்தர் கடைக்கண்ணாற் சைகை காட்ட, உடனே அக்கல்யானை உயிர்பெற்றெழுந்து அக்கரும்பைப் பிடுங்கித் தின்றதென்பதும், அடுப்பூரில் வேடர்குலத்தில் தோன்றிய திண்ணனாரென்னும் இயற்பெயரையுடைய கண்ணப்பநாயனார் வேட்டையில் தான் கொன்ற மிருகத்தின் கொழுந்தசையை அம்பாலரிந்தெடுத்து நெருப்பிற் பதமாகக் காய்ச்சி வாயிலிட்டு ..... ...... தசையையெடுத்து ஊட்டக் கடவுள் உண்டருளின ......... பிற்பாதியின் கதைகள். இக்கு - இக்ஷு; வடசொல். கானவன் - ............. ......... காட்டில் வாழ்பவன், எஞ்சுவது - எச்சில். ... ... எஞ்சுதல் - ஒழிதல். மிகுதல் இறுக்கி - இறுகக்கொண்டு போவது. (15)

16. - (இ-ள்.) எவர்க்கும் - எல்லோர்க்கும், மேவும் - பொருந்துகின்ற; நடுக்கங்கள் தமை - அச்சங்களை, காயா பூவணன் - காயா என்னுஞ் செடியினது மலர்போற் கரிய நிறத்தையுடைய திருமால், வீட்டி - ஒழித்து; காக்கும் – காத்தருளுதற்கிடமான; தென் - அழகிய; புலியூரே - புலியூரானது, கோவணம் - (தமது) கோவணத்தை, சீர்தட்டு இட என்று - சிறப்பையுடைய தராசுத்தட்டிலே வைத்து நிறுப்பாயென்று கூறி; ஒப்பினார் தம் - (அதற்கு) உடன்பட்ட அமர்நீதி நாயனாரது, பிறவி வல் இருளை - ................ ........ வலிய இருட்டை, அட்டிட - அழித்தருளுதற்கு, என்ற ஒப்பினார் - சூரியனை யொத்துள்ளவரு மாகிய சிவபிரான், ஆர்வு - விரும்பி வாழுமிடமாம் (எ-று)

கைலாசத்திற்சென்று திருமால் சிவபிரானிடம் அனுமதி பெற்றுவந்து சிதம்பரத்திலிருந்து கனகசபையில் நிகழும் திருநடனத்தை யென்றுந் தரிசித்து அடியவருள் தலைவராய ……. …………… ……………கின்றனரென்பது வரலாறு. நடுக்கம் - மனமும் உடம்பும் நடுங்குவதற்குக் காரணமான அச்சமுறுத்துஞ் செய்கைகளுக்குக் காரியவாகு பெயர். வீட்டுதல் - குவித்தல். காயா + பூ - காயாம்பூ; மரப்பெயர் முன்னரின மெல்லெழுத்து வரப்பெற்றது. வணன் - வண்ணன். விகாரம். வணிகர் குலத்தவராகிய அமர்நீதி நாயனார் திருநல்லூரில் மடங்கட்டுவித்துச் சிவனடியார்களுக்கெல்லாம் பலவகைக் கோவணமீந்து அவர்களை உபசரித்து வருகையில், சிவபிரான் இவரது பெருங்குணத்தை வெளியிடும் பொருட்டு ஒருநாள் ஒரு பிரமசாரி வடிவமாய்வந்து தனது கோவணமிரண்டனுள் உடுத்துள்ளதொழிய மற்றையதொன்றை அவரிடங்கொடுத்து, “நாம் நீராடி வரும் வரையில் இதனை வைத்துக் காத்திருந்து பின்பு நமக்குக்கொடும்” என்று கூறிச் சென்று, அதனை மாயையால் தாமே மறைத்தருளி, நீராடி மழையில் நனைந்துவந்து, நமது கோவணத்தைக் கொடுமென்று கூற, நாயனார் வைத்தவிடத்திற்சென்று தேடிப்பார்த்துக் காணாமையால் அஞ்சி நிற்க, கடவுள் கண்டு ‘அது போனாலும் அதற்குச் சமமாகவுள்ள இந்த மற்றொரு கோவணத்துக்கு ஒப்பான எடையுடையதைக் கொடுத்தால் உடன் படுவோம் என்று கூற, நாயனார் தலைநாட்டி, ஓர்தட்டில் அக்கோவணத்தையிட்டு மற்றொருதட்டில் தமது ஆடை பொன் முதலிய பொருளனைத்தையும் இட்டும் அதற்கு ஒப்பாகாமையால் தாமும் ஏறி எடையை நிறைத்துச் சிவகதியை யடைந்தனரென்பது பிற்பாதியின் கதை. சீர்தட்டு - சீர் தூக்கு தட்டு என்றுமாம். இட - அகரவீற்று வியங்கோள். பிறவி - துன்பத்துக்கு ஆகுபெயர். பிறவி - தொழிற்பெயர். வி விகுதி. பிறப்புத்துன்பம், முச்சுடர்க்கும் ஒழியாத இருள்போலுமாதலின், வல்லிருளென்றது. ஆர்வு - தொழிலாகு பெயர். (16)

17.- (இ-ள்.) நேயம் - அன்பையுடைய, மனையாளுடனே - (தமது) மனைவியுடனே, நீலகண்டனார் - திருநீலகண்ட நாயனார், முதுமைபோய் - மூப்புப்பருவமொழிந்து, இளமைபெற்ற- இளம் பருவமடைதற்கு இடமான, புலியூரே - புலியூரானது, தீய மலத்து - (ஆணவம் முதலிய) மும்மலத்திலே, ஒடும் - விரைந்து செல்கின்ற, போதம் – (தீய) அறிவு, கெட்டார் - ஒழித்த அடியார்களுடைய உள்ளத்தார் - மனத்திலெழுந்தருளியிருப்பவரும், அன்று - அக்காலத்தில், இருவர் - (பிரம விஷ்ணுக்கள்) இரண்டுபேரும், தேடும்போது - தேடும்பொழுதில், அங்கு- அவ்விடத்து, எட்டார் - (அவர்களுக்கு) எட்டாமல் நின்றவருமாகிய சிவபிரான், சேர்வு - சேர்ந்துள்ள இடமாம்; (எ-று) மனையாம் என ............. திருத்துக.

சிதம்பரத்தில், குயவர் குலத்தோரான திருநீலகண்டநாயனார் சிவனடியார்களுக்குத் திருவோடு கொடுக்குந் தெய்வநெறி பூண்டு இல்லற வாழ்க்கையில் ஒழுகுநாளில், அவரை பிறமகளிரிடத்து விருப்புடையவராக அறிந்து அவர் மனைவியார், "இனி நீர் எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம்," என்று ஆணையிட்டுக்கூற, அவர் அதுகேட்டு அஞ்சி, மனைவியாரை மாத்திரமேயன்றி (மனைவியார் எம்மை என்று பன்மையிற் சொன்னதனால்) பிறமகளிரையும் பரிசியாமலே இருவரும் முதுமையடைய, இவர்கள் சிறப்பை வெளியிடும்பொருட்டு சிவபிரான் ஒரு சிவயோகி வடிவமாய் வந்து தமது கையோட்டை அவரிடங் கொடுத்துத் தாம் மீண்டும் கேட்கும்போது கொடுக்கவேண்டும் என்று கூறிச்சென்று, அதனைத் தாமே மறைத்தருளி, மீண்டுவந்து கேட்கையில், நாயனார் அதனைக் காணாமையால் அஞ்சி வந்து கூற, சிவயோகியார் 'நாம் நம்பமாட்டோம், உமது மனைவி கையைப் பிடித்துக்கொண்டு நீர் இக்குளத்தில் மூழ்கியெழுந்து சொல்லும்' என்ன, உடனே அவர் ஒருதடியின் இருதலையையும் மனைவியுந் தாமுமாகப் பிடித்துக்கொண்டு அக்குளத்தில் மூழ்கியெழுகையில், இருவரும் இளமை பெற்றனரென்பது, முற்பாதியின் கதை.
மனையாள் - வீட்டிலிருந்து சமுசார காரியங்களைச் செய்பவள். காரணப்பெயர். நீலகண்டன் - நீலநிறமுள்ள கழுத்துடையவன்; இது கடவுள் பெயர் அடியவர்க்கு இட்டு வழங்கிய ஆகுபெயர். ஆர் என்னும் பலர்பால் விகுதி, உயர்வு குறிக்க வந்தது. முதுமை, இளமை – பண்புப்பெயர்கள். தீயமலத்து ஓடும் போதம் கெட்டார் உள்ளத்தார் - கொடியமலங்களையொழிக்குந் தத்துவஞானமுடையவராய் இயற்கையறிவு பரவசப்பட்ட அடியார்களது இதயகமலத்தில் அவர்கள் கருதிய வடிவத்தோடு எப்பொழுதும் வீற்றிருப்பவர். தாம்தாம் கடவுளென்னுங் கருத்துக்கொண்டு ஒருவர்க்கொருவர் பகைமை பூண்ட பிரமவிஷ்ணுக்களின் மாறுபாட்டை யொழிக்கும் பொருட்டுப் பரமசிவன் அவ்விருவர்க்கும் நடுவில் ஒரு பெரிய அனற்பிழம்பினுருவமாய்த் தோன்றி நின்று, ‘இப்பிழம்பின் அடியையும் முடியையும் தேடுமின்' என்ன, அவ்வடி முடிகளில் ஒன்றை முன்னங்கண்டவரே முதல்வரென்று சொல்லிப் பிரமன் ஹம்ஸரூபியாய் முடியினைக் காண விண்பறந்தும், விஷ்ணு வராக ரூபியாய் அடியினைக்காண மண்ணிடந்துஞ் சென்று பலகாலந்தேடியும் முடிவுகண்டிலராய்ப் போயினரென்பது கதை. அன்று - முன்பு, இருவர் - தொகைக் குறிப்பு, சேர்வு - தொழிலாகு பெயர். மலம், போதம் - வடசொற்கள். (17)

18. - (இ - ள்.) அந்நாள் - அந்தக்காலத்தில், சிகை விளக்கு ஏற்று - (தமது மயிர் முடியைத் திருவிளக்காக எரித்தருளின, துன்பினுக்கு - பக்தி மிகுதிக்காக, கணம்புல் நாயர்க்கு - கணம்புல்ல நாயனாருக்கு, முத்தி - வீட்டுலகத்தை, ஈயும்- கொடுத்தருளின, புலியூரே - புலியூரானது, எந்நாளும் - எப்பொழுதும், அன்பர் கருத்து உடையார் - அன்புடைய தமது அடியார்களது உள்ளத்தை (த்தமக்கு வாழுமிடமாக) உடையவரும், அன்பரிடத்து - (தமது) அடியார்களிடம். அன்பு இல்லா - அன்பையுடைத்ததகாத, வன்பர் - கொடியவர்களது, கரு - பிறப்பை, துடையார் - ஒழித்தருளாதவருமாகிய சிவபிரான், வாழ்வு - வாழுமிடமாம்; (எ-று).

புள்ளிருக்குவேளூரில் அவதரித்தவரும் சிவாலயத்தில் திருவிளக்கிடுதலையே சிறந்த திருப்பணியாகக் கொண்டொழுகுவருமாகிய ஒரு நாயனார், சிதம்பரத்துக்கு வந்து தமது பொருளனைத்தையும் விற்றுத் திருப்புலீச்சரமென்னுமாலயத்தில், அத்திருப்பணியை வழுவாது நடத்தி வருகையில், பொருளில்லாமையால் கணம்புல் அரிந்துவந்து அதனைவிற்று அப்பணியை நடத்துகையில், அதுவும் ஒருநாள் விலைபடாமற் போகவே, அப்பொழுது திருப்பணிக்கு முட்டுவராதபடி அப்புற்கற்றையைக் கோவிலில் வைத்து எரித்து அது போதாதாகவே தமது சிகையை உடன்வைத்து எரித்து அப்பணியை நடத்தி அப்பிறப்பொழிந்து சிவகதி பெற்றனரென்பது முற்பாதியின் கதை. அந்நாள் - முற்காலத்திலென்றபடி; விளக்கு - விளங்கச் செய்வது, காரணக்குறி. முத்தி - வடசொல்; எல்லாப் பற்றுக்களையும் விட்டு அடையுமிடம். கணம்புல் - ஓர்வகைப்புல். அதனைக்கொண்டு பணிநடத்தினதால் இவர்க்கு இப்பெயர். நாயர் - நாயகரென்னும் வடசொல்லின் விகாரம். உயர்வுப்பன்மை. நாயகனென்பது நாயன் என விகாரப்படுதலை "நாயனு ... டிமையு நாட்டியதாகும்," எனக் கபிலரகவலிலும், "வானோர்க்கெல்லாம் நாயனாம் பிதாமகன்," என வில்லிப்புத்தூரார் பாரதத்திலும் காண்க. கரு - காபடம். வடசொற்றிரிபு; பிறப்புக்கு ஆகுபெயர். வன்பர் - வல்நெஞ்சனே...டி, உடையார் - பண்படியாப்பிறந்த உடன்பாட்டுக் குறிப்பு வினையாலணையும் பெயர். துடையார் - வினைப்பகுதியடியாப் பிறந்த எதிர்மறைத் தெரிநிலை வினையாலணையும் பெயர். (18)

19. - (இ - ள்.) நாளை போவோம் என்பார் - (சிதம்பரத்துக்கு) நாளைக்குச் செல்வோம் என்று நாள்தோறுங்கூறிச் சிலகாலங் கழித்ததனால் திருநாளைப் போவாரெனப் பெயர்பெற்றவர். தாவு - மேலெழுந்தெரிகிற, ஓமத்தால் - (தில்லைவாழந்தணர் வளர்த்த) ஓம அக்கினியினால், நீசம் - (தமது) சண்டாளத்தன்மை, போய் - நீங்கி, கதி – முத்தியை, சேர் - பெறுதற்கிடமான, புலியூரே - புலியூரானது, சம்புவை - நரிகளை, மா ஆக செய்து - குதிரைகளாக்கி, முன் - முக்காலத்தில், இந்தார் (ஈந்தார்) - கொடுத்தருளினவரும், தந்த - (சமணர்கள்) கொணர்ந்து ஏவிய, அத்தி - யானை, சாய - இறக்கும்படி, வில்லில் - வில்லிலே, அம்பு - பாணத்தை, வைச்சு - வைத்து, எய்து - பிரயோகித்து, முனிந்தார் - கோபங் காட்டினவருமாகிய சிவபிரான், ஆர்வு - விரும்பித்தங்குமிடமாம் : (எ - று )

ஆதனூரிற்புலையர் குலத்திற் பிறந்த நந்தனார் சிதம்பரத்துக்கு வந்து அங்கு அந்தணர் செய்யும் வேள்விகளினின்று எழும் ஓமதூமத்தைக் கண்டு உட்செல்ல அஞ்சிப் பின்பு சிவபிரான் கட்டளைப்படி தில்லைவாழந்தணர் வளர்த்த தீயில் மூழ்கிச் சண்டாள சன்மத்தையொழித்து முனிவடிவமாகியெழுந்து உட்சென்று சுவாமிதரிசனம் பெற்று உயர்கதியுற்றன ரென்பது முற்பாதியின் கதை. தாவோமம் - வினைத்தொகை. ஓமம் - ஹோமம்; வடசொற்றிரிபு. நீசம், கதி - வடசொற்கள். சிதம்பரதரிசனஞ்செய்தல் வேண்டுமென்று எப்பொழுதுங் கருதியும், அங்கு உட்சென்று தரிசித்தல் நமது குலத்துக்கு இயலாதென்பதால், "நாளை போவோம், நாளை போவோம்,' என்று சிலகாலங்கழித்தனர் இந்த நாயனாரென்க. அரிமர்த்தன பாண்டியனிடம் பிரதான மந்திரியாயிருந்த வாதவூரடிகள் குதிரை வாங்கும்பொருட்டு அவன் கொடுத்த பொருளைத் திருப்பெருந்துறையிற் பரமசிவன் வந்து தந்த காட்சியைத் தரிசித்து எழுந்த பக்தியால் .................. ............. கைங்கரியத்தில் செலவு செய்துவிட, பின்பு ............. ............... ............. .......... அவ்வடியவரது துன்பத்தை தீர்க்கும்படியாகச் சோமநாதக்கடவுள் நரிகளைக் குதிரைகளாக்கிக் கொடுத்தருளினரென்பதும் சோழராசனொருவனது விருப்பத்தால் சமண ............... .................. ................... எழுப்பினதொரு மதயானையை அவனுக்கு ............ விக்கிரம பாண்டியனைக் கொல்லும்படி ஏவியனுப்ப, யாவரும் ............ வந்த அவ்யானையை அவ்வரசன் வேண்டுகோளால் சோமநாதக்கடவுள் …….. ………….. வடிவமாய்த் தோன்றி நாரசிங்கபாண ................... ...................... ............... .................... என்பதும் பிற்பாதியின் கதைகள். மா என்னும் ............... .............. சொல், இங்கே இடத்திற்கேற்பக் குதிரையைக் குறித்தது. ............ ................ ...........; வடசொற்றிரிபுகள். பின்னிரண்டடிகளாலு………………….. முன்னது - பிரிநிலை; பின்னது - அசைநிலை. ஈந்தார் - இந்தாரெனுந் திரிபு நோக்கிவந்த குறுக்கலென்னுஞ் செய்யுள்வகையாம். ............... ................ அத்தி என எடுத்து, சந்திரனையொத்த வெண்மையான கொம்புகளையுடைய யானை யென்றுமாம். ஹஸ்தம் - கை, இங்கே துதிக்கை. அதனையுடையது ஹஸ்தி, வைக்க - போலி. எய்து, எய் - பகுதி. கதிசேர் என இயைவதனால் - அசை. (19)

20. - (இ - ள்.) சித்ககன சத்சொரூபம் - ஞானாகாச வடிவமாகவுள்ள கடவுளின் .....தை (... வித்து ஆநந்திப்பதான), சீர் அகத்தை - சிறந்த முத்தியிடத்தை, சேந்தன் - சேந்தன் என்பவனும், முன் - முற்காலத்தில், ……… ………….. ………….. (ச்சிவபிரானுக்கு) க்கொடுத்து, பெற்ற - பெறுதற்கிடமான, புலியூரே - புலியூரானது, நல்கொடிக்கு - நல்ல பெண்ணொருத்திக்கு, ஓர் தாயும் ஆனார் - ஒப்பற்ற ஒரு தாயாக இருந்தவரும், கொடியார் தங்கள் வினைத்தீங்கு ஒடியார் - கொடுந்தன்மையுடையவர்களது ...................... கருமங்களாலாகிற துன்பங்களை யொழித்தருளாதவரும், பாயும் ஆனார் கொடியார் - பாயாது செல்லுந்தன்மையுள்ள இடபத்தின் வடிவமைந்த துவசத்தையுடையவருமாகிய சிவபிரான், பற்று - விரும்பி வாழுமிடமாம்; (எ-று).

சிதம்பரத்தற் சேந்தனென்பவன் சிவனடியார்க்குத் திருவமுது செய்வித்து இல்லற வாழ்க்கையிலிருக்கையில் செல்வமெல்லாமொழிந்து வறுமையால் உணவில்லாமல் மக்கள் வருந்துதலை அவன் மனைவி நோக்கித் தனது மங்கலநாணையவிழ்த்துக் கொடுக்க, கணவன் அதனை வாங்கிச்சென்று விற்றுக் கொண்டுவந்து கொடுத்த புல்லரிசியை சமைத்தபின்னர் அவன் பூசை முடித்து வருகையில், நடேசப்பெருமான் ஒரு அடியவர் வடிவங்கொண்டுவந்து தமது ஆற்றவொண்ணாத பெரும்பசியைத் தீர்க்க வேண்டுமென்று கூற, அவர்கள் தமது மக்கள் பசியையும் நோக்காமல் அவ்வடியவரது பசியைத் தீர்க்கத் தொடங்க, கடவுள் அவ்வுணவு முழுவதையுந் தானுண்டு அவர்கள் பசியைத் தீர்த்து அவர்களுக்கு முத்திதந்தனரென்பது முற்பாதியின் கதை. சித்ககன தத்ஸ்வரூபம் என்னும் வடசொற்றொடர், திரிந்தது, அகத்தைப் பெற்ற என இயையும், சேந்தனும் என்ற உம்மை பிறர் பலர் நற்கதி பெற்றதைக் குறிப்பித்தலால், எச்சப்பொருளது. கொடி - கொடி போல் மெல்லிய அழகிய வடிவமுடைய பெண்ணுக்கு உவமவாகுபெயர்.

திரிசிராப்பள்ளியில் தனகுப்தனென்னும் வணிகன், காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள இரத்தினகுப்தன் மகளை மணஞ்செய்து வாழ்கையில், சிவபக்திகொண்டு சிராமலைப்பெருமானை வழிபட்டு ஒழுகும் அவர் கருப்பமுற, அச்செய்தி கேள்வியுற்று அவள்தாய் அவளைக் கருவுயிர்ப்பிக்கும் பொருட்டு அதற்கு இன்றியமையாத பொருள்கள் பலவற்றையும் அமைத்துக்கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தினின்று திரிசிரபுரத்துக்கு வருகையில் வழியில் காவேரிநதி கரைபுரண்டோடிய வெள்ளப்பெருக்கால் தடைபட்டு நின்றுவிட, பிரசவகாலஞ் சமீபிக்கையில் சிவபிரான் அருளால் அவ்விரத்தினகுப்தன் மனைவி போலவே வடிவெடுத்து வந்து அவளது பிரசவத்துக்கு இனிதாகத் துணைசெய்து உதவினரென்பது கதை. தாயும் என்ற உம்மை. .............; கடவுளாலேயன்றி என்னும் பொருளைக் குறித்தலால், எச்சப் பொருளதுமாம். கொடியார் தங்கள் வினைத்தீங்கு ஒடியார் - நல்லடியாரது வினைப்பயன்களை யொழிப்பவர் என்றபடி. ஆன், ன் - சாரியை. ஆர்கொடி - வினைத்தொகை. (20)

21. - (இ - ள்.) விண்தலமே போற்றும் - தேவலோகத்தவரும் வணங்கும்படியான, விராட புருடனார் - (உலகவடிவாகவுள்ள) விராட்புருஷரது, இதய புண்டரிகம் ஆன - இதயகமலதளமாகவுள்ள, புலியூரே - புலியூரானது, சண்டன் - பயங்கரனான யமனுடைய, வலிமை - உறுதியையுடைய, தாம்பு - பாசபந்தத்தை, ஒழிவித்து - நீங்கச் செய்து, ஆர்வத்தொடு - அருளுடனே, மார்க்கண்டருக்கு - மார்க்கண்டேயருக்கு, அன்பை தாம் பொழிவித்தார் - அன்பைத் தாம் சொரிவித்திட்டவராகிய சிவபிரான், பற்று - விரும்பி வாழுமிடமாம், (எ-று)

தலமே - ஏ - உயர்வு சிறப்பு, ஆர்வம் - இயற்கை விருப்பமென்றும், அன்பு - செயற்கை விருப்பமென்றும் வேறுபாடு கொள்க. பொழிவித்தார் - பிறவினை தன்வினைப் பொருளது, மார்க்கண்டருக்கு - மார்க்கண்டரிடத்திலென்க. இனி, மார்க்கண்டருக்குத் தம்பால் அன்பை மிகச் செய்தவரென்று உரைப்பாருமுளர். (21)

22. (இ-ள்) குஞ்சிதம் தாள் கண்டவரை - (மேலெடுத்தாடிய) வளைந்த (சிவபிரானது) திருவடியைத் தரிசித்த அடியார்களை, கும்பிடப் பெற்றோர்கள் - வணங்கப்பெற்ற பாக்கியமுடையவர்கள், விரும்பும் சிவவீடு எய்தும் - (யாவரும்) விரும்புதற்கேற்ற சிவகதியை யடைவதற்குக் காரணமான, புலியூரே - புலியூரானது, செம் சடையில் - சிவந்த (கபர்த்தமென்னுந் தமது) சடையிலே, சின்ன இளம்பிறையார் - சிறிய இளஞ்சந்திரனை யுடையவரும், தில்லை மறையோர் உரு நாம - தில்லை வாழந்தணர்களது வடிவம் யாம், என்ன – என்ற; விளம்பு - கூறியருளின, இறையார் - தலைவருமாகிய சிவபிரானது, இல் - இடமாம்; (எ- று)

குஞ்சிதத்தாள் கண்டவர் - சிதம்பரத்திற் கனகசபையில் நடேசப்பெருமான் ஒருதாளையூன்றி ஒருதாளைத்தூக்கியாடும் ஆநந்த தாண்டவ நடனத்தைத் தரிசுத்தவ ரென்றபடி. சிவன் - (யாவர்க்கும்) மங்களத்தைச் செய்பவன். சிவம் - சுபம். சின்ன - சிறிய என்பதன் மரூஉ: சின்னம் எனஎடுத்து - அடையாளமான என்றும் பொருள்கொள்ளலாம். சந்திரன் தக்ஷமுனிவரது புத்திரிகளாகிய அசுவினி முதலிய இருபத்தேழு நட்சத்திரங்களையும் மணஞ் செய்துகொண்டு அவர்களுள் உரோகிணியென்பவளிடத்து மிகவுங்காதல் கூர்ந்து அவளுடனே எப்பொழுதுங் கூடிவாழ்ந்திருக்க, மற்றைமகளிரது வருத்தம்நோக்கி அவனை 'க்ஷயமடைவாயாக' என்று சபித்த அம்முனிவர் சாபத்தாற் சந்திரன் பதினைந்து கலைகளுங்குறைந்து மற்றைக் கலையொன்றையும் இழப்பதற்கு முன்னர் சிவபிரானைச் சரணமடைய, அப்பெருமான் அருள்கூர்ந்து அவ்வொற்றைக் கலையைத் தம் தலையிலணிந்து சிவபிரானைச் சரணமடைய, மீண்டும் கலைகள் வளர்ந்து வரும்படி அநுக்கிரகித்தாரென்பது கதை. குருவாகிய தமது மனைவியான தாரையைச் சந்திரன் புணர்ந்ததனாற் சினந்து பிருகஸ்பதி சபித்த சாபத்தால் அச்சந்திரன் கலைகள் குறைந்தானென்றுங்கதை கூறப்படும். இவ்வரலாற்றால் கடவுள் தம் திருவடிகளையடைந்தார்க்குக் குறை தீர்த்தருளுந் தன்மையரென்பது விளங்கும். இரணியவன்மராசன் வியாக்கிரபாத முனிவரது கட்டளைப்படி தில்லை வாழந்தணர் மூவாயிரவரையும் தன் தேரிலேற்றிக்கொண்டு பிரமன் வேள்விசெய்த அந்தாவேதியினின்றுந் தில்லைப்பதியை யடைகையில், அந்தணர் மூவாயிரவருள் ஒருவர் குறையவே, அப்பொழுது நடேசப்பெருமான் 'இவ்வந்தனர் யாவரும் நாம்மையொப்பார், நாம் இவரையொப்போம். ஆதலால், நாம் இவருள் ஒருவர்' எனக்கூறித் தொகையை நிறைத்தனரென்பது கதை. (22)

23. - (இ-ள்) தேவம் - தொன்மைத் தன்மையுள்ள, மறை - வேதங்களும், ஆகமங்கள் - சிவாகமங்களும், தென்கயிலை என்று - தக்ஷிணகைலாசமென்று ஒரு திருநாமங்கூறி, தொழ - (தன்னை வணங்க), பூ உலகில் - பூலோகத்தில், ஓங்கும் - உயர்வு பெற்றுள்ள, புலியூரே - புலியூரானது, மூ உலகும் – மூன்றுலோகங்களும், வந்து உதிக்கும் முன் - வந்து தோன்றுமுன்னமே, உணர்வார் - (அவற்றின் உற்பத்தி விநாசங்களை) அறியுந் தன்மையரும், அப்பர் - திருநாவுக்கரசு நாயனார், தம் பாதம் துதிக்கும் முன் - தமது திருவடியைத் தோத்திரஞ்செய்யு முன்னே (செய்தவளவிலென்றபடி),வாழ்வு அருள - (அவருக்குப் பேரின்ப) வாழ்க்கையைக் கொடுத்தருளும் பொருட்டு, புணர்வார் - (அவர் பக்கல்) வந்துசேருந் தன்மையருமாகிய சிவபிரான், சார்பு - சேர்ந்து தங்குமிடமாம்: (எ-று)

தேவ என்னும் அடைமொழியை ஆகமங்களுக்கும் கூட்டுக. ஆகமங்கள் - சிவபிரானால் அருளிச் செய்யப்பட்ட காமிகம் முதல் வாதுளம் ஈறாகிய இருபத்தெட்டு. பூ - வடசொல். அப்பரென்னுஞ் சொல்லுக்கு தலைவரென்று பொருள்.; இது, திருநாவுக்கரசு நாயனாருக்குத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் முதலிற் கண்டபொழுது இட்டு அழைத்த திருநாமம். கயிலை - வடசொற்றிரிபு, (23)

(24) - (இ-ள்) – நல் மா தவத்து - சிறந்த பெருந்தவத்தையுடைய, ஒருவன் - ஒருத்தன் நாடும்படிக்கு – விரும்பிய விதத்திற்கு, இரங்கி - (கடவுள் தாம்) அன்புகொண்டு, பொன்மாரி பெய்யும் - பொன்மழையைப் பொழிதற்கிடமான, புலியூரே - புலியூரானது, முன்மார்பில் - (தமது) மார்பின் முன்னிடத்திலே, பல்நாகம் தந்தார் - பல பாம்புகளாகிய உபவீதத்தையுடையவரும், பகர் தமிழ்க்கு ஆ - (சுந்தரமூர்த்திநாயனார் தம்மேற்) பாடிய தமிழ்ப்பாட்டுக்காக, (அருள்கொண்டு), செங்கலதனை, பொன் ஆக தந்தார் - செங்கல்லை (அவருக்கு)ப் பொன்மயமாகக் கொடுத்தருளியவருமாகிய சிவபிரானது, புரி - திருநகராமாம்; (எ-று)

பெருந்தவமியற்றியுள்ள ஓரடியவர் தில்லையில் திருப்பணியை நடத்திவருகையில், இடையிற் பொருளில்லாமையால் வருந்த, அவ்வருத்தத்தை அகற்றும் பொருட்டுச் சிவபிரான் கருணைகூர்ந்து சுவர்ணவர்ஷத்தைச் சொரிவித்தன ரென்பது முற்பா தியின்கதை. பன்னாகம் என ஒருசொல்லாக எடுத்து, பந்நகமென்னும் வடசொல்லின் திரிபெனக் கொண்டு, பாம்பென்று உரைக்கலாம், தந்து - நூல்; வடசொல்: இங்கே, முப்புரி நூல், பூணூல். தந்து என்னும் வடமொழி, ஆர் என்னும் பலர்பால் விகுதியோடு சேர்கையில் சிறுபான்மை உயிர்வரக் குற்றியலுகரம் கெட்டது. தமிழ் - பாட்டுக்குக் கருவியாகுபெயர். சுந்தரமூர்த்தி நாயனார் பங்குனியுத்திரத் திருநாள் சமீபித்தலும் தமது மனைவியாரான பரவையாருக்குத் திருவிழாச்செலவின் பொருட்டுக் கொடுப்பதற்குப் பொன் கொண்டு வருவதற்காகத் திருப்புகலூரிற் சென்று பரமசிவனைக் குறித்துப் பதிகம் பாடி அக்கோயில் வாயிலிலேயே அவர்பால் கோயில் திருப்பணிக்கு வந்த செங்கற்களைத் தலையணையாக வைத்துக்கொண்டு மேலாடையை விரித்து அதில் துயிலுகையில், கடவுள் அருளால் அச்செங்கல்லைப் பொன்னாகச் செய்துவிட, நாயனார் துயிலுணர்கையில் அதனைக்கண்டு மிக்க மகிழ்ச்சி கொண்டனரென்பது கதை. புரி - ஈற்று இகரமான வடசொல். (24)

25. - (இ-ள்) நாமகள் - சரசுவதி. தென் கீழ்த்திசையில் - தென்கிழக்குத் திக்கிலும், பூமகள் - இலக்குமி, நாட்டும் குணதிசையின் - (முதலதாக) நிறுத்தப்படுகிற கிழக்குத் திக்கிலும், அர்ச்சிக்கும் - பூசித்துப் பேறு பெறுதற்கிடமான, புலியூரே - புலியூரானது; வாழ்த்து அடியார் தமக்கு - (தம்மைத்) துதிக்கிற அடியார்களுக்கு, தாம் அல்லது ஓர் ஆதரவு இல்லார் - தம்மையன்றி வேறொரு பற்றுக்கோட்டை யுடைத்ததாகாதவரும், அம் கையில் - அழகிய திருக்கையிலே, பொன் பூதரவு இல்லார் - பொன்மலையாகிய மேருவை வில்லாகக் கொண்டவருமாகிய சிவபிரான், வாழ் - (என்றும்) வாழ்ந்தருளுகிற, புரம் - திருநகரமாம், (எ-று).

நாமகடென் என மூலத்தைத் திருத்துக. நாமகள் - பிரமனது நாவில் வாழும் மகள், எல்லோரது நாவிலும் வாழ்வபவளுமாம். பூமகள் - தாமரைப்பூவில் வாழும் மகள். வாழ்த்து அடியார் தமக்குத் தாமலது ஓராதரவு இல்லார் - தம்மை வாழ்த்துமடியார்களுக்குத் தாமே பற்றுக்கோடாக வுள்ளவரென்றபடி. பூதரம் - (மேலும் கீழுமிருந்து) பூமியைத் தாங்குவது, மலை; வடமொழி, காரணப்பெயர். புரம் - வடசொல்; தெற்கு + கிழக்கு + திசை = தென்கீழ்த்திசை. குணக்கு + திசை = குணதிசை; "திசையொடு திசையும்" என்னுஞ்சூத்திரம் விதி. (25)

26. – (இ-ள்) வாசனைசேர் மாமலரான் - நறுமணம் பொருந்திய சிறந்த தாமரைப்பூவில் தோன்றிய பிரமனும், மாமறை மூவாயிரவர் - சிறந்த வேதம்வல்ல தில்லைவாழந்தணர் மூவாயிரம்பேரும்; பூசனை செய்து - சிவபூசையைச் செய்து, ஏத்தும் - வணங்கித் துதித்துக் கிடக்கும், புலியூரே - புலியூரானது, ஓசைதரு - ஒலியைச் செய்கின்ற, பால் சங்கு - பால்போல வெண்ணிறமான (பாஞ்சசன்னியமென்னுஞ்) சங்கத்தையுடைய, அரி - திருமாலினுடைய, ஆர் - அருமையான, பதுமம் திருக்கண் - செந்தாமரை மலர்போலுந் திருக்கண்ணை, அணிந்தோர் - (தமது திருவடியில்) தரித்தவரும், பால் (தமது) வாமபாகத்தில், சங்கரியார் - உமாதேவியை யுடையவருமாகிய சிவபிரானது, பதி - திவ்வியதலமாம்; (எ - று)

'மலரான்' என்ற பாடத்துக்கு - பூக்களைக் கொண்டு என்க. சிவபெருமானது திருவடி விரலால் தரையிற் கீறியுண்டாக்கப்பட்ட சலந்தராசுரனைக் கொன்ற சக்கராயுதத்தை அரக்கர் முதலியோரையழித்தற்குப் பெறும் பொருட்டுத் திருமால், சிவபெருமானை நாள்தோறும் ஆயிரந்தாமரை மலர்களைக்கொண்டு அருச்சித்து வழிபட்டு வருகையில், ஒருநாள் பரமசிவன் அவ்விஷ்ணுவினது அன்புநிலைமையைப் பரிசோதிக்க வெண்ணி ஒரு மலரை மறைத்திட, திருமால் மனந்தளர்ந்து தமது செந்தாமரை மலர்போலுங் கண்களுள் ஒன்றைப் பறித்து அருச்சித்தாரென்பதும், பிருங்கியென்னும் மகாமுனிவர் பரமசிவனை மாத்திரம் பிரதக்ஷிணஞ் செய்யக்கண்ட பார்வதிதேவி தன்பதியை நோக்கி முனிவர் என்னைப் பிரதக்ஷிணஞ் செய்யாமைக்கு ஏது என்ன என்று வினவ, உருத்திரமூர்த்தி இஷ்டசித்தி பெறவிரும்புபவர் உன்னையும், மோக்ஷம் பெறவிரும்புபவர் என்னையும் வழிபடுவர் என்ன, அதுகேட்ட தேவி பெருமானினின்று பிரியாதிருக்குமாறு தவம்புரிந்து வாமபாகம் பெற்றாரென்பதும் கதைகள். பத்மம் - பத்மம். திருக்கு – த்ருக்; வடசொற்றிரிபுகள். ஆர்பத்மம் - (பெருமை) பொருந்தின தாமரை யென்றுமாம். அணிந்து ஓர் பால் என்றும் பிரித்து உரைக்கலாம். சங்கரி - சங்கரன் என்பதன் பெண்பால். இன்பத்தைச் செய்பவனென்று பொருள்: சம் - சுகம். (26)

27. – (இ-ள்) ஓது - (ஒழிக்க முடியாததாகச்) சொல்லப்படுகிற, பசியால் - பசியினாலே, எருவை - ஒரு கழுகு; உண்ண - உட்கொள்ள, இறக்கும் - உயிரைவிட்ட, கயற்கு - கயல்மீனுக்கு, அப்போது - அப்பொழுதே, கதி - உயர்ந்த பதவி, அளிக்கும் - கொடுத்தருளின, புலியூரே – புலியூரானது, பூதி – விபூதியை, வெகு ஆய் - மிகுதியாக, இடும் - தரித்த, ஆகத்தனார் - திருமேனியையுடையவரும், வல - வலிய, கமர்வாய - நிலவெடிப்பிலே, மாவடுவை - மாம்பிஞ்சை, வாய் இடும் - (தமது) திருவாயிற் கொண்டு அமுது செய்தருளின, மா கந்தனார் - சிறந்த தலைவருமாகவுள்ள சிவபிரான், வாழ்வு - வாழ்ந்திருக்குமிடமாம்; (எ-று).

ஒரு கழுகு பசியினால் ஒரு கயல்மீனைக் கௌவியெடுத்துக்கொண்டு தில்லைப்பதியினெல்லையிலே வந்து தின்னுகையில், அவ்வெல்லையில் உயிரைவிட்ட அக்கயல்மீனுக்கு நடேசப்பெருமான் முத்தி தந்தருளினரென்பது முற்பாதியின் கதை. "பொருவிரைவப் புணரியிற் புணரொருமீனோ, ரெருவைமுன் கொணர்ந்தணி தில்லை யெல்லையோர்பாத்தின், மருவியக்கயல் கொன்றுண மாய்ந்தவவ்வுயிர்ப்போய்க், கருத நம்பெருமுத்தியைப் பெற்றதக் கணத்தில்," என்பது சிதம்பர புராணம். "ஒரு நாளுணவை யொழியென் றாலொழியாய், இருநாளைக் கேலென்றா லேலாய் - ஒருநாளு, மென்னோ வறியா யிடும்பைகூ ரென்வயிறே, யுன்னோடு வாழ்த லரிது" என்பவாதலால், ஓதுபசியெனப்பட்டது. பசி - உணவின் வேட்கை. எருவை - ஒரு பறவை. நல்கும், நல்கு - பகுதி. பூதி - திருநீறு. வெகு - பஹு, கத்தன் - காத்தன்; வடசொற்றிரிபுகள். "கலப்பான திருமேனி யணிந்த நீற்றாங் கதிர்முத்தின் சோதியென," என்றார் வில்லிப்புத்தூராரும் கணமங்கலமென்னுந் திருப்பதியில் வேளாளர் குலத்திலுதித்த தாயன் என்பவர் வறுமையடைந்த பின்பும் தமது வழக்கத்தை விடாமல் செந்நெல்லரிசி, செங்கீரை மாவடு இவற்றைச் சிவாலயத்தில் அமுது செய்வித்தற்குக் கொண்டுபோய்க் கொடுத்துவரும் நாளில், ஒருநாள் அரிசி முதலியவற்றை யெடுத்துச் செல்லுகையில், பசியிளைப்பாற் காலிடறிவிழ, அப்பொழுது நிலவெடிப்பில் எல்லாஞ் சொரிந்துவிடவே, மிக வருத்தமுற்றுத் தன் சன்மத்தை வெறுத்து அரிவாளினால் தமது கழுத்தை அறுக்கத் தொடங்குகையில், அவ்வெடிப்பிடமாகச் சிவபிரான் கையைநீட்டி அவர் கையைப் பிடித்துக் கொலையைத் தடுத்துவிட்டதுமல்லாமல் அங்குச் சிந்தின மாவடு முதலியவற்றை ஓசையுண்டாகக் கடித்து அமுது செய்தருளினரென்பது கதை. இவர்தாம் அரிவாட்டாய நாயனார். வடு - இளங்காய். கர்த்தா என்னும் வடசொல்லுக்கு (எல்லாவற்றையுஞ்) செய்பவனென்று பொருள். (27)

28. - (இ-ள்.) பத்தரை கொண்டே - (சிவபிரான் தாம் நேரிலல்லாமல் தமது) அடியவராகிய மாணிக்கவாசகரைக் கொண்டே பேசா பாவை தனை பேசுவித்து - ஊமைப்பெண்ணைப் பேசும்படி செய்து, புத்தரை ஆள் கொள்ளும் - புத்த சமயத்தவரை அடிமை கொள்ளுதற்கிடமான, புலியூரே - புலியூரானது, முத்தி தரும் - (தன்னை ஜபித்தவர்களுக்கு) மோக்ஷத்தைக் கொடுக்கிறபஞ்ச அக்கரனார் – ஸ்ரீபஞ்சாக்ஷர மகாமந்திரத்தை யுடையவரும், பணிவார் வினை - (தம்மை) வணங்கும் அடியார்களது கருமங்களை, அழல் முன் பஞ்சு ஆக்கு - நெருப்பின் முன் பஞ்சையொக்கும்படி செய்கிற (இருந்தவிடந் தெரியாதபடி அழிக்க வல்ல) அரனார் - அரனென்னுந் திருநாமமுடை யவருமாகிய சிவபிரானது, பதி - தலமாம்: (எ-று.)

இலங்கையினின்று வந்த புத்தர்கள் பலர் சிதம்பரத்தையடைந்து தில்லை வாழந்தணர்களை வாதுக்கு அழைக்க, அவர்கள் கடவுள் கட்டளைப்படி மாணிக்கவாசகருக்குத் தெரிவிக்க, அவர் புத்தர்களை வாதத்தில் வெல்ல, அதனையறிந்த சோழன் தனது ஊமைப்பெண்ணை அங்குக்கொணர்ந்துவிட்டு, இவளது ஊமைநோயைத் தீர்க்குஞ் சமயமே மெய்ச்சமயமென்று கூற, புத்தர்களது மணிமந்திர ஔஷதங்களால் தீர்க்க முடியாதாய் விட, மாணிக்கவாசகர் விபூதியைக் கொடுத்தருளி அம்மகளைப் பேசும்படி செய்தருளின ரென்பது கதை. பத்தர் - பக்தர். பேசாப்பாவை - பேசாத அழகிய பெண். புத்தர் - புத்தனைத் தெய்வமாகக்கொண்ட மதத்தவர். பஞ்சாக்கரம் - ஐந்தெழுத்துடைய மந்திரம்; தீர்க்கசந்தி பெற்ற வடசொற்றொடர். அரன் - ஹரன்; அழித்தற் கடவுள். (28)

29 - (இ-ள்) கண்ணுறு போதும் (தம்மிடம் மூழ்காமல் தம்மைத்) தரிசித்த மாத்திரத்திலும், பவத்தை - (அவர்களது) பிறப்புகளை, காய்ந்து – ஒழித்து, அருளும் – (அவர்கட்கு) நற்கதி கொடுத்தருளுகிற, ஈரைந்து புண்ணிய தீர்த்தம் - பரிசுத்தமான பத்துத் தீர்த்தங்கள். சேர் - பொருந்தியுள்ள, புலியூரே - புலியூரானது, பெண் ஒரு பாகத்து இருந்தார் - உமா தேவி ஒரு பக்கத்தில் இருக்கப்பெற்றவரும், கட்டு அரியார் (ஆபரணமாகக்) கட்டியுள்ள நாகங்களையுடையவரும் கை கூப்பி நின்று துதிக்க திருந்தார்கண் தரியார் - (தம்மை) அஞ்சலி செய்து வணங்கிநின்று துதிக்கும்படி திருத்தமடையாதவரிடத்துத் தங்காதவருமாகிய சிவபிரானது, காப்பு - (எல்லாவுயிர்களையுங்) காக்குமிடமாம்ந (எ-று)

சிதம்பர தசதீர்த்தம் - சிவகங்கை, குய்யதீர்த்தம், புலிமடு, வியாக்கிர பாததீர்த்தம், அநர்ததீர்த்தம், நாகசேரி, பிரமதீர்த்தம், சிவப்பிரியை, திருப்பாற்கடல், பரமாநந்தகூபம் என்பன. கண்ணுற்றபோதே என்ற உம்மை - இழிவு சிறப்பு. கண்ணுறுபோதே என்றும் பாடம். பவம் – வடசொல். இரண்டடியிலும் ‘கட்டரியார்’ என மூலத்தைத் திருத்துக. கூப்பு-கூம்பு என்பதன் பிறவினை, கட்டு அரியார் என்பதற்கு - (இயல்பாகவே பாசத்தினின்று நீங்கினவரென்றும் பொருள்கொள்ளலாம். கட்டரியார் கைகூப்பி நின்று துதிக்க என எடுத்து - பாசமொழிந்த அடியவர்கள் கை குவித்துத் தொழுதுநின்று துதிக்கவென்று
உரைப்பாருமுளர். திருந்தார்கண், தரியார் என்றதனால், திருந்தின அடியவரிடத்துத் தங்குபவரென்றது போதரும்.
(29)
30. – (இ-ள்.) முந்த - முற்பட (முன்காலத்தில் என்றபடி), முத் தீ இடையின் - மூன்று வகை அக்கினிகளிலே, அவி - அவிகளை, சொரிந்து - பெய்து, மறை புத்தேள் - (எப்பொழுதும்) வேதங்களை ஓதும் பிரமதேவன், ஓமம் செய் - வேள்வி செய்யப்பெற்ற; புலியூரே – புலியூரானது; மெய் தோளில் மா துளவன் - (தனது) திருமேனியின் பகுதியான தோளில் பெரிய திருத்துழாய்மாலை யுடையவனும், நத்தன் - சங்கத்தையுடையவனுமாகிய திருமாலால், வணங்கு - வணங்கப்பட்ட, பதன் - திருவடிகளையுடையவரும், ஆகத்து ஓர் மாது உளவன் - (தமது) திருமேனியிலே ஒப்பில்லாத உமாதேவியையுடையவரும், அத்தன் - (யாவர்க்குந்) தலைவருமாகிய சிவபிரானது, மனை - இடமாம்; (எ - று.)

அவி - ஹவிஸ் என்னும் வடமொழித் திரிபு; யாகத்தில் தேவர்க்கு இடும் நெய் முதலிய உணவுக்குப் பெயர். கங்கைக்கரையில் அந்தர்வேதியில் பிரமன் ஓர் யாகத்தைச் செய்யத்தொடங்கி அதனை முடித்தற்பொருட்டுத் தில்லைவனத்திற்குச் சென்று திருநடனத்தை தரிசித்துத் தில்லைவாழந்தணர்களையும் வியாக்கிரபாதமுனிவரையுந் துணைகொண்டு வேள்விமுடித்தனனென்பது கதை. நந்து – சங்கம். (30)

31. - (இ- ள்) ஓர் கலை - ஒரு அம்சமானது, எங்கு எங்கும் - எல்லாச் சிவதலங்களிலும்; உலாவி - சஞ்சரித்து, அத்த யாமத்தில் – நடு இராத்திரியில், பூரணம் ஆய் - நிறைவாகி, ஒன்றும் - பொருந்தப்பெற்ற, புலியூரே – புலியூரானது; காரணம் ஆம் – (திருநடனஞ் செய்தருளுதற்குக்) காரணமான பார் - தில்லைவனத்தில், தாண்டவன் - ஆனந்த தாண்டவ நடனத்தையுடையவனும், ஆர் பணிந்தாலும் - யாவர் வணங்கினாலும், உள் அன்பை பார்த்து - (அவர்களது) மனத்திலுள்ள அன்புநிலையை நோக்கி, ஆண்டவன் - (அவர்களை) அடிமைகொண்டருள்பவனுமாகிய சிவபிரான், ஆர் - பொருந்திய, பதி - தலமாம்; (எ- று)

சிவபிரானது பூர்ணவடிவம் சிதம்பரதலத்தில் எழுந்தருளியிருப்ப தென்றும், அதனது ஆயிரங்கலைகளுள் ஒருகலை கைலாசம் முதலிய எல்லாத் தலங்களிலுஞ் சென்று வியாபித்து நடுநிசியில் மீண்டுவந்து அவ்வடிவத்தில் ஒடுங்கி நிறைவதென்றும் ...கொள்கை. "எப்பதிகளினுமுள்ள விறையருண் மூர்த்தியாவுஞ், செப்பருஞ் சிதம்பரத்துட் டிருவத் தயாமாதனனி, லொப்புறவடைதலா நூலுரைக்கு மெக்காலத்துள்ளு, மப்பெருங்காலச் சேவையதிக வுத்தம மாமென்றே” என்றார் சிதம்பர புராணத்தும். அத்தம் - அர்த்தம். பூரணம் - பூர்ணம். வடசொற்றிரிபுகள். யாமம் - மூன்ரு யாமங்கலையுடையதெனக் காரணப்பெயர். சிதம்பரத்தை 'காரணமாம் பார்' என்றது, தேவதாருவனம் சிவபிரான் திருநடனஞ் செய்தலைப் பொறுக்க மாட்டாமையாலும், பூமிக்கு நடுவாகிய தில்லைவனம் அந்நடனத்தைப் பொறுக்குந்தானமாக இருத்தலாலும், அங்குத் திருநடனஞ் செய்தருளினமையின்; இனி, காரணமாம் பார் - (முத்தி பெறுதற்குக்) காரணமான இடமென்றுமாம். அன்றியும், (மற்றைத்தலங்களைத் தரிசித்த பயன்கள் இத்தலத்தைத் தரிசித்ததற்குக்) காரணமாகப் பெற்ற இடமென்னலாம்; "சொற்றதின்னதேற் சுருதிநாயகனிடங்கொண்ட நற்றவங்களாலாவ தென்னெனனினான்மறைகள், முற்றுநாடருஞ் சிதம்பரமூர்த்தியைக் காண்டற், குற்றவத்தலக் காட்சிகளேதுவான முணரில்," என்பது சிதம்பரபுராணமாதலின். (31)

32. – (இ-ள்.) சோதி வரை - ஒளியையுடைய மகாமேருகிரியினது, மும் முடி ஆய் - மூன்று சிகரங்களாக, எவர்க்கும் - யாவர்க்கும், தோன்றாது - காணப்படாமல், அனுபூதி - (சிவாநுபவமுடையவர்களுக்கே) அவ்வநுபூதி நிலையில், வெளி ஆகும் - புலப்படுகின்ற, புலியூரே - புலியூரானது. அங்கம் - எலும்பை, மாது என - பெண்ணாக, தர வல்லான் - செய்து கொடுக்க வல்லவராகிய திருஞான சம்பந்தமூர்த்திநாயனார், நாளும் - தினந்தோ றும், கை கொள் – கையிலே வைத்துக்கொண்டு உபயோகிக்கும்படி, பொன் தாளம் இடும் - (அவர்க்குப்) பொன்னினாலமைந்த தாளத்தைக் கொடுத்தருளின, கந்தாம் அல்லான் (அல்கந்தரத்தான்) - இருள் நிறமான கண்டத்தையுடைய சிவபிரான், ஆளும் - (உயிர்களை) அடிமை கொள்ளுகிற, காப்பு - காவலிடமாம் ; (எ - று.)

மேருவின் வடசிகரம் திருமூலட்டானமும், தென்சிகரம் கனகசபையும், மேலைச்சிகரம் கோபுரத்துவாரமுமாகச் சிதம்பரதலம் மேருவின் மூன்று சிகரங்களாகும் உண்மை பிறர்கண்களுக்குப் புலப்படாமல் சிவானுபூதியுடையவருக்கு மாத்திரமே புலப்படுமென்பது முற்பாதியின் வரலாறு. அனுபூதி - வடசொல். திருமயிலையில் வணிகர்குலத்தில் தோன்றின சிவநேசரென்பவர் கபாலீசுவரரருளாற் பிறந்த முற்பாதியின் வரலாறு. வணிகர் தம் புத்திரியாகிய பூம்பாவையைச் சம்பந்தமூர்த்திநாயனாருக்கு உடைமையாகக் கருதி வளர்த்து வருகையில், ஒருநாள் நந்தவனத்திற்சென்று மலர்கொய்கையில் அம்மகள் பாம்பு தீண்டியிறக்க, அவளைச் சம்பந்தமூர்த்தி நாயனாரது உடைமையாகக் கருதியிருந்தது பற்றி, அவளைத் தகனஞ்செய்த என்பை எடுத்தெறிந்து விடாமல் ஒரு குடத்தில் வைத்து அவளிருந்த கன்னிமாடத்திலிருத்தி அதனை அவர் பாதுகாத்து வருகையில் அந்நாயனார் அத்தலத்திற்கு வந்து ............. ............. அச்செய்தியையறிந்து அக்குடத்தை வருவித்துப் பதிகம் பாடிச் சிவனருளால் அவ்வெலும்பைப் பெண்ணாக்கினரென்பதும்; அந்த நாயனார் முன்னம் திருக்கோலக்காவென்னுந் திருப்பதியிலெழுந்தருளித் திருக்கரத்தால் ஒத்தறுத்துத் திருப்பதிகம் பாடுகையில், சிவபிரான் அருள்கூர்ந்து பொற்றாளம் அளித்தருளினரென்பதும், கதைகள். கந்தரம் - தலையைத் தரிப்பதொக்க கழுத்துக்குக் காரணக்குறி; கம் - தலை. (32)

33 - (இ-ள்.) வானம் உலகு ஏத்த -தேவ உலகத்தாராலும் துதிக்கப்படுகிற, துர்வாசர் - துர்வாச முனிவரது; பசி - பசி; ஆற - தணியும்படி; உமை - உமாதேவி, போனகம் - உணவை; அளிக்கும் - (அவருக்குத்) தந்தருளின; புலியூர் - புலியூரானது; ஆன சந்நம்பத்துவிதத்தார் நாடு அரியார் - பத்துவகையான பிறப்பையுடைய திருமாலுந் தேடியறிதற்கருமையானவரும், மோனத்தார் நம்பு அத்துவிதத்தார் - மௌனநிலைமையையுடைய சிவயோகிகள் விரும்புகிற அத்துவைதக் கலப்பையுடையவரும் ஆகிய சிவபிரானது, நாடு - தலமாம்; (எ-று)

துர்வாச முனிவர் திருநடனந் தரிசித்தற் பொருட்டு சிதம்பரத்துக்கு வருகையில், பசியால் இளைப்புற்று எங்கும் உணவு கிடையாமல் வருந்தி "எருக்கு முளைத்த தில்லை யீசனு மிங்கில்லை," என உரைக்கத் தொடங்கினபோது சிதம்பரத்திலுள்ள சிவகாமியம்மை ஒரு பார்ப்பனச்சிறுமி வடிவங்கொண்டு அவர்க்குத் திருவமுது படைக்க, அம்முனிவர் அதனையுண்டு பசிதணிந்து, "எருக்கு முளைத்தது இல்லை யீசனு மிங்குண்டு," என மாறியுரைத்தனரென்பது கதை. "வானமுலகு" எனப் பாடங்கொண்டு - விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவரும் எனவும் உரைக்கலாம். திருமாலின் திருவவதாரம் பத்து - மச்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமன், தசரதராமன், பலராமன், கண்ணன், கற்கி என்பன. அத்தும் தம, மோனம் - வடசொற்றிரிபுகள். மோனம் - பேசாவிரதம். அத்துவிதம் - இரண்டற்றது. ஆன்மபோதமுங் கண்ணொளியும் போலச் சிவமும் ஆன்மாவும் தம்முள் இரண்டறக் கலக்கும் என்பது சைவசித்தாந்திகள் கருத்து; மாயாவாதிகளோ ஆகாயமும் குடவாகாயமும் பொலப் பிரமமும் ஆன்மாவும் தம்மிற் சேர்ந்து ஒன்றுமென்பர், (33)

34 - (இ-ள்.) வாள் - ஒளியையுடைய, நகையால் - (தமது) புன்சிரிப்பினாலே, தீ - எரிகின்ற, புரத்தின் - திரிபுரத்திலே, வாழ் - வாழ்ந்திருந்த, மூவரை - மூன்று அசுரர்களை, காவல் பூண - திருவாயில் காக்குந் தொழிலைக் கொள்ளும்படி, அளித்து (சிவபிரான்) கருணை செய்து காத்து, ஆளும் - அடிமை கொள்ளுதற்கிடமான, புலியூரே - புலியூரானது, ஆணவத்து ஆம் - ஆணவமலத்தினாலாகின்ற, மெய் கரு - உடம்பின் தோற்றத்தினுடைய, துவாதனையால் - தொடர்ச்சியினால், மிக்கு உழலா - மிகுந்து வருந்தாத, மிக்கோர்கள் - (சிவஞானமுடைய) பெரியோர்களது, மெய் கருத்து - உண்மையையே கருதுத் தன்மையுள்ள மனத்தினாற் செய்யப்படுகின்ற, வந்தனையான் - வணக்கத்தை யேற்றுக்கொள்பவனுமாகிய சிவபிரானது, வீடு - இடமாம் ; (எ-று)

திரிபுரத்தில் வாழும் அசுரர்களுள் மூவர் மாத்திரம் புத்தவேஷங்கொண்ட திருமாலின் தீய உபதேசத்தாற சிவபத்தி குலையாமலிருக்க, பின்பு சிவபிரான் தமது சிரிப்பினாலாகிய நெருப்பினால் அம்முப்புரத்தையும் அவற்றில்வாழும் அசுரர்களனைவருடனே யெரித்திடுகையில், அம்மூவரை மாத்திரம் அழித்திடாமல் சிதம்பரத்தில் திருக்கோயில் வாயிற்காவலாளராம்படி அருள்செய்து ஆட்கொண்டனரென்பது கதை. "முப்புரங்களை முக்கணன் முனிந்தநாள் மூவரும் முழுத்தீயிற், றப்பினாருளர்" என்றார் வில்லிப்புத்தூராரும். அம்மூவர் - சுத்ருமன், சுசீலன், சுபுத்தி என்பவர். தீபுரம் - வினைத்தொகை. மும்மலங்களுள் ஆணவமலம் கன்மமலத்துக்கு மூலமாதலால், ‘ஆணவத்தாம் மெய்க்கருத்துவந்தனை' எனப்பட்டது. 'ஆணவமாம்' என்ற பாடத்துக்கு - காரண காரியங்களை ஒற்றுமை நயம்படக் கூறியதென்க. கரு - கர்ப்பம்; இங்கே, இலக்கணையால், பிறப்பு. துவந்தனை . ஒன்றற்கொன்று தொடர்ந்திருத்தல்; அலைவுமாம். ஆணவமா மெய்க்கருத்துவந்தனையால் மிக்குழலா மிக்கோர்கள் என்றது - கடவுளருளாற் கருமமொழிந்து பிறப்பற்றுத் தவறாது முத்திபெறும் நிலையிலுள்ளவர்களை, இவர்கள் சீவன்முக்தரெனப்படுவர், உழலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; அப்படிப்பட்ட வினையெச்சமாகக் கொண்டு, பிறப்புத் தொடர்ச்சியால் மிக்கு அலையாதபடி என்றும் பொருள்கொள்ளலாம். மிக்கோர்கள் மெய்க்கருத்துவந்தனையான் என்றதில், கீழ்மக்களது பொய்க்கருத்தாற் செய்யப்படும் வந்தனத்துக்கு எட்டாதவனென்றும் கருத்து ஏற்படும். (34)

35.- (இ-ள்) சம்பந்தர்க்கு - திருஞானசம்பந்தமூர்த்திநாயனாருக்கு, அந்தணர்கள் தம்மை - தில்லை வாழந்தணர்களை, சிவ கணம் ஒப்பும் - சிவபிரானைச் சூழ்ந்துள்ள கணங்களை ஒத்திருக்கின்ற, பண்பை - உண்மைத்தன்மையை, காட்டும் - புலப்படுத்தற்கிடமான, புலியூரே - புலியூரானது, அம்புலிவான் எட்டு ஆகம் - சந்திரனுலாவப்பெற்ற ஆகாயத்தை அளாவிய [மிக நீண்ட] (தனது) திருமேனி, மஞ்சு ஆர்ந்தான் - மேகத்தை யொத்திருக்கப்பெற்ற திருமால், ஏத்த - (தம்மைத்) துதிக்க, மறையோடு இருபான் எட்டு ஆகமம் சார்ந்தரன் - வேதங்கள் நான்கிலும் இருபத்தெட்டு ஆகமங்களிலும் பொருந்தியுள்ளவராகிய சிவபிரானது, இல் - இடமாம்.

சம்பந்தமூர்த்திநாயனார், திருநீலகண்டயாழ்ப்பாண நாயனாருடன் சிதம்பரத்திற்குச் சென்று நடேசப்பெருமானைத் தரிசித்து சந்நிதானத் தலத்தில் நிரந்தரவாசஞ் செய்தற்கு அச்சமுற்று அருகிலுள்ள திருவேட்களத் தலத்திலே வசித்திருக்கும் நாளில், ஒருநாள், நடராசரை அருச்சிக்கும் பேறுபெற்ற தில்லை வாழந்தணர்களது மகிமையைப் போற்றிச் சிதம்பரத்துக்குச் செல்லுகையில் அவ்வந்தணர்கள் சிவபெருமானருளாற் சிவகணநாதராகப் புலப்படத் தரிசித்தார். சிறுபிராயத்தில் உமாமகேசுவரர்களால் அருளுடன் ........ ....... பெற்றுச் சிவபிரானருளால் உமாதேவி ஞானப்பால் ஊட்ட உண்டாகிய தத்துவ ஞானத்தின் சம்பந்தத்தை யுடையவரானதனால், இந்நாயனார்க்குத் திருஞானசம்பந்தரென்ற திருநாமம். ஒப்பும் என்பதில், ஒப்பு - பகுதி. 'ஒக்கும்' என்றும் பாடங்கொள்ளலாம். அஞ்சு ஆர்ந்தான் எனப் பிரித்து - தனது திருமேனியில் பஞ்சாயுதங்கள் பொருந்தின திருமாலென்றும் உரைக்கலாம்; அஞ்சு – எண்ணலளவாகு பெயர். இனி, சந்திரனும் ஆகாயத்திலளாவும் வடிவத்தையுடைய மேகத்தை (வாகனமாக)ப் பொருந்தின இந்திரனுந் துதிக்க என்றும் பொருள்கொள்ளலாம். இருபத்தெட்டுச் சிவாகமம் - காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அம்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், பரோத்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சருவோக்தம், பாரமேச்சுவரம், கீரணம், வாதுளம் என்பன. இருபது + எட்டு = இருபானெட்டு; ஆன்சாரியை வர நிலைமொழியின் அது கெட்டது. (நன் - உருபு - 10) கணம் - கூட்டம். (35)

(36) - (இ-ள்.) வாதவூரன் - திருவாதவரில் அவதரித்த மாணிக்கவாசக சுவாமிகள், கோவை - திருக்கோவையாரென்னும் நூலை, புகல - பாடிச்சொல்லிவர, (அதனை), வைத்த அருளால் - (அவர்பக்கல்) வைத்த திருவருளினால், புத்தகத்தில் தீட்டும் - ஏட்டுச்சுவடியில் (சிவபிரான்) எழுதுதற்கு இடமான, புலியூரே - திருப்புலியூரானது, துத்தி அரா - படப்புள்ளியையுடைய நாகங்களும், வானத்து அமர் இந்து - ஆகாயத்திலே பொருந்துகிற சந்திரனும், ஆர் - பொருந்திய, மா மவுலியார் - சிறந்த சடையுடையவரும், எழு நா - ஏழு (சுவாலைகளாகிய) நாக்குக்களையுடைய அக்கினிதேவனது, வான் அத்தம் - பெரிய (ஏழு) கைகளையும், அரிந்தார் - அறுத்தவருமாகிய சிவபிரானது, வாழ்வு - இருப்பிடமாம்; (எ - று.)

மாணிக்கவாசகர் தில்லையிலெழுந்தருளியிருக்கையில், சிவபிரான், பாண்டிய நாட்டில் அவரோடு முன் பழக்கமுள்ள ஒரு அந்தணனது வடிவத்தை எடுத்து வந்து அவரது அனுமதி பெற்று அவர் பாடிய திருவாசகத் திருப்பாடல்களை எழுதிய பின்பு, ஒரு கோவைப்பிரபந்தம் பாடவேண்டுமென்று கூறி, அங்ஙனமே அவரால் திருவாய் மலர்ந்தருளப்பட்ட திருச்சிற்றம்பல கோவையாரென்னுந் திவ்விய நூலையுந் தாமேயெழுதி முடித்தன ரென்பது கதை. கோவை - இங்கே அகப்பொருட்கோவை; அது - இருவகைப் பட்ட முதற்பொருளும், பதினான்குவகைப்பட்ட கருப்பொருளும் பத்து வகைப்பட்ட உரிப்பொருளும் பொருந்திக் கைக்கிளை முதல் உற்ற அன்புடைக் காமப்பகுதியவாங் களவொழுக்கத்தினையுங் கற்பொழுக்கத்தினையும் கூறுதலே யெல்லையாகக் கட்டளைக் கலித்துறை நானூற்றால் திணைமுதலாகத் துறையீறாகக் கூறப்பட்ட பன்னிரண்டு அகப்பாட்டுறுப்பும் வழுவின்றித் தோன்றப் பாடுவது. அருளால் தீட்டும் என இயையும். அருளால் புகல என இயைத்து - (அடியார்களை உய்விக்க வேண்டுமென்று அவர்களிடத்து உண்டான) கருணையினால் வாதவூரடிகள் பாட என்றுமுரைக்கலாம். புத்தகம் - புஸ்தகம், அத்தம் - ஹஸ்தம்; வடசொற்றிரிபுகள். இந்து, மெளலி - வடசொற்கள். எழுதும் பிரிவற் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைக் காரணங் கண்ணொளியுமஃது அக்கினிக்குப் பெயராதலை "அமிழ்தென வெழுநா வெகும் என்பது சைவகளும் விண்ணோர் மிசைகுவர்" என்ற பழம்பாடலிலுங் காண்க. பரகாயமும் போலப் ....... ‘ஸப்தஜிஹ்வா’ என்று ஒரு பெயர் கூறுவர். எழும் ...... ....... ....ந்த பெயராகவும் எடுக்கலாம் . அக்கினியின் ........ .......... ...... வாள் - ஒளியையுடையது, தக்கன் வேள்வி தகர்த்த பொழுதிலென்க. (36)

37 - (இ - ள்.) சீர் உற்ற - ........... பொருந்தின, அசரீரி - உடம்பு விளங்காத ஆகாயவாணி, சேக்கிழார்க்கு - சேக்கிழார் நாயனாருக்கு, ஆதி மொழி - (பெரியபுராணம் பாடுதற்கு) முதற்சொல்லை, பூரித்து - மகிழ்ச்சி மிக்கு, உரைக்கும் - சொல்லுதற்கிடமான, புலியூரே - புலியூரானது, நீரை கரந்து வைத்த வேணியார் - கங்காநதியின் வெள்ளத்தை உள்ளடக்கி வைத்த சடையையுடையவரும், காதினில் தாவி கூய் - (தமது) திருச்செவியில் தாவிக் கூவிக்கொண்டு, கரம் துவைத்த - (தமது இடத்) திருக்கையிற் பொருந்தி ஒலிக்கின்ற, ஏணியார் - மானையுடையவரும் ஆகிய சிவபிரான், காப்பு – காக்குமிடமாம்; (எ - று.)

சமணசமயக்கொள்கையைப் பாராட்டத்தொடங்கின அநபாய சோழ மகாராஜாவை உய்விக்கும் பொருட்டுச் சிவனடியார் சரித்திரத்தை ஒரு பெருங்காப்பியமாகப் பாடுதற்கு அவ்வரசனது முதல் மந்திரியாகிய சேக்கிழார் நாயனார், சிதம்பரத்தையடைந்து சபாநாயகரைத் தரிசித்து, அடியெடுத்துத் தந்தருள வேண்டுமென்று பிரார்த்திக்க, உடனே சபாநாயகரது திருவருளினாலே ‘உலகெலாமுணர்ந் தோதற்கரியவன்’ என்று ஓரசரீரி வாக்கு எழ, அத்திருவாக்கையே முதலாகக் கொண்டு அவர் திருத்தொண்டர் புராணம் பாடி முடித்தனரென்பது கதை. உற்றசரீரி - பெயரெச்சவிறு தொகுத்தல். உற்று எனப் பிரித்து - சிறப்புப் பொருத்தி என்றுமாம். அசரீரி - தெய்வ வாக்கு. தொண்டை மண்டலத்தில் குன்றத்தூரில் வேளாள வருணத்தில் சேக்கிழார் மரபிலே உதித்த அருண்மொழித்தேவர், தாம் உதிக்கப்பெற்ற சேக்கிழார் மரபை விளக்கினமையால், அவருக்குச் சேக்கிழார் என்னும் பெயர் உண்டாயிற்று. பூரித்து என்பதைப் பூரிக்க என்னும் எச்சத்திரிபாகக் கொண்டால், பாடிமுடிக்க என்று பொருள்படும். தமது திருச்செவியருகில் இனிமையாகக் கூவும்படி சிவபிரான் கரத்திலேந்தினது, தாருகவனத்து முனிவர்களாலேவப்பட்டு அண்டம் வெடிபட ஆரவாரித்து வந்ததொரு மானையென்க. (37)

(38) (இ - ள்.) வாள் - வாளாயுதத்தையேந்திய, கை - கையையுடைய, அச வாணிபர் - ஆட்டுவணிகர் குலத்தில் தோன்றிய உய்யவந்த தேவநாயனர், சொல் - கூறின, மா நூலினை - சிறந்ததொரு சைவசித்தாந்த சாஸ்திரத்தை, படி கல் பூட்கை - படியிலுள்ள கல்யானை, எடுக்க - எடுத்துத்தர, கொள் - (அதனை யாவரும்) அங்கீகரித்தற்கிடமான, புலியூரே - புலியூரானது, தாள் கமலம் போது உளவன் - நாளத்தையுடைய தாமரைமலரில் உள்ளவனான பிரமனும், நத்தன - சங்கத்தையுடைய திருமாலும், புருகூதன் - இந்திரனும், (என்னும் இவரால்), போற்றும் - துதிக்கப்படுகிற, அந்தி போது உள வனத்தன் - மாலைப் பொழுது போலுள்ள செந்நிறத்தையுடைய சிவபிரானது, புரி - நகரமாம்; (எ - று.)

சிதம்பரத்திலிருந்த திருக்கடவூருய்யவந்ததேவ நாயனார், தமதுஞானாசாரியராகிய உய்யவந்த தேவநாயனாரால் உரைக்கப்பட்டதும் சைவசித்தாந்த சாஸ்திரம் பதினான்கினுள் முற்பட்டதுமான திருவுந்தியாரென்னும் நூலின் உட்பொருளை விளக்கும் பொருட்டுத் தாம் ஒரு நூலியற்றிச் சபாநாயகர் சந்நிதானத்தில் வாசிக்கத்தொடங்கும் பொழுது, 'சந்நிதானத்தின் படியிலுள்ள கல்யானை இந்நூலை யெடுத்துவைத்தால் மாத்திரமே இதனைவாசிக்கத்தகும்’ என்று தில்லைவாழந்தணர் முதலியோர் கூற, நாயனார் அதற்கு உடன்பட்டு அக்கல்யானை மேல் நூலைவைக்க, அவ்யானை உயிர்பெற்று எழுந்து தன்மேல் வைக்கப்பட்ட அத்திருநூலைத் துதிக்கையாலெடுத்துப் படியின் மேல்வைத்து அதன் தெய்வத்தன்மையை விளக்கி அந்நூலை அனைவரும் அங்கீகரிக்கும்படி செய்ததென்றும், அதனால் அந்நூலுக்குத் திருக்களிற்றுப்படியாரென்று காரணப்பெயர் வந்ததென்றுங் கதை. அஜம் - ஆடு. வாணிபம் - வியாபாரம்; வாணிஜ்யம் என்னும் வடசொற் சிதைவு. 'பூழைக்கை' என்பது, ஐகாரங்கெட்டு ழகரம் டகரமாத்திரிந்து பூட்கையென நின்றது; துவாரத்தையுடைய துதிக்கையை யுடையதெனப் பொருள்படுகிற வேற்றுமைத்தொகையன் மொழி. அத்தன் எனப் பதம் பிரித்து - பிரமனது தந்தையான திருமாலென்று உரைப்பாருமுளர். புருகூதன் என்னும் வடசொல் - புரு என்னும் அசுரனைக் கொன்றவனென்றும், வேள்வியில் அழைக்கப்படுபவனென்றும் பொருள்படும். அந்தி - ஸந்த்யா என்னும் வடமொழித் திரிபு; இது - இங்கே, சிறப்பாய், மாலைச்சந்தியை யுணர்த்திற்று. இனி, அந்தி - (பகற்பொழுதின் ) அந்தமாகவுள்ளதென மாலைக்காலமாகலாம். அந்திப்போது உள வன்னத்தன் என்பது - செவ்வானம் போன்ற திருநிறமுடையவ னென்றபடி. 'அந்திவண்ணன்' என்று சிவபிரானுக்கு ஒரு திருநாமம், வனம் - வர்ணம்; வடசொற்சிதைவு. (38)

39 - (இ-ள்.) ஆசை எட்டினுக்கு; இறையும் - எட்டுத்திக்குக்களுக்குத் தலைவரான (இந்திரன் முதலிய) திக்குப்பாகர் எண்மரும், ஆசை எட்டி - அன்பு மிகுந்து, ஆசை விட (தமது) மலக்குற்றத்தை ஒழியுமாறு, பூசை இட்டு - (சிவபிரானைப்) பூசனை செய்து, போற்றும் - துதித்தற்கிடமான, புலியூரே - புலியூரானது - பேச எட்டா – (தமது நிலையையெடுத்துப்) பேசுதற்கு முடியாத, வேத அந்தர் – வேதமுடிவின் பொருளாகவுள்ளவரும், உம்பர் அமர் விண் நாடு அளந்த - தேவர்கள் வசிக்கின்ற சுவர்க்க லோகத்தை யளாவியுயர்ந்த, நெல்லை - திருநெல்வேலியிலுள்ள, வே - மூங்கில்கள், தாம் தரும் - தாம் பெறப்பெற்ற; பரமர் - சிறந்த கடவுளுமாகிய சிவபிரானது, வீடு - இருப்பிடமாம்; (எ- று)

அஷ்டதிக்பாலகர்களும் தில்லையில் தத்தம் திசையெல்லையிலிருந்து சிவபிரானைப் பூசித்துக் குறைதீர்ந்து பேறு பெற்றனரென்பது கதை. ஆக – குற்றம். ஆசையெட்டி ஆசைவிட என்றது - முரண்விளைந்தழிவணி. ஆசைவிட என்பதற்கு - தம் ஆசைதீர வென்று உரைப்பாருமுளர். பூசை - பூஜா என்னும் வடசொற்றிரிபு. பேசவெட்டா என்பதற்கு - சொல்வதற்கரிய சிறப்பையுடைய என்றுமுரைக்கலாம். விண்ணாடளந்தவே என இயையும். எல்லாம் அழியும் பிரளயகாலத்தில் தமக்கும் அழிவுநேரிடுமென்று கவலையுற்று வேதங்கள் பலநாள் சிவனைக் குறித்துத் தவம் புரிந்து அவரது தரிசனத்தைப் பெற்று ‘பிரளயகாலத்தில் தேவரீர் தாமிரசபையில் நின்று செய்யுந் திருநடனத்தை நாங்கள் தரிசிக்கவேண்டும்; பிரளயத்திலுமழிவில்லாத அத்தலத்தில் நாங்கள் மூங்கிலாய் நின்று எப்போதும் நிழலைச் செய்ய, நீர் எங்களிடம் முத்தாய்த்தோன்றி எங்களுக்குப் பிள்ளையுமாக வேண்டும்’ என்று வரங்கேட்க, கடவுள் அதற்கு இணங்கித் திருநெல்வேலியில் வேணுவனத்தில் மூங்கில் முத்தாகி அம்மூங்கிலின் கீழ் எழுந்தருளியிருக்கின்றன ரென்பது கதை "அரிபிறந்த தன்று தூணி லரனும் வேயி லாயினான்' என்றார் வில்லிப்புத்தூராரும். நெல்லை - நெல்வேலி, மரூஉமொழி. தாம் - அசை. வேய் என்பது வே என விகாரப்பட்டது; சிந்தாமணியில் பேய் என்பது பே என் நின்றாற்போல. (39)

40 - (இ - ள்.) சூரியனும் - பச்சை துழாய் முகிலும் - பசுநிறமான திருத்துழாய் மாலையையணிந்த மேகம் போற்கருநிறமுடைய திருமாலும், தென் பூருவ திக்கில் - தென்கிழக்குத் திசையிலே, பூசனை செய் - பூசை செய்தற்கிடமான, புலியூரே - புலியூரானது, கூரிய வேல் - கூர்மையையுடைய வேலாயுதத்தை யேந்திய, ஆறு முடி குமரனால் - ஆறுதிருமுடிகளையுடைய முருகக்கடவுளினால், உபதேசம் பெறுவான் - (பிரணவப்பொருளின்) உபதேசத்தைப் பெற்றவனும், ஆறு முடிக்கும் - கங்காநதியைச் சடையில்) தரித்தருளின, அரன் – அரனென்னுமொரு திருநாமமுடையவனுமாகிய சிவபிரான், ஆர்வு - விரும்பி யெழுந்தருளியிருக்குமிடமாம்; (எ - று.)

ஒருகாலத்தில் பிரமன் முதலிய தேவர்களனைவரும் வந்து சிவபெருமானைத் தரிசித்துக் கைலாசத்தினின்று மீண்டு செல்லும்பொழுது, அங்கிருந்த முருகக்கடவுளைப் பிரமனொழிந்த பலதேவர்களும் வணங்கிச்செல்ல பிரமன் மாத்திரம் அச்சிவகுமாரனைச் சிறுபிள்ளையென்று கருதி அலட்சியஞ்செய்து வணங்காதொழிய, அக்கடவுள் அவ்வயனுக்கு அறிவு வருவிக்கவெண்ணி அவனை நோக்கி ‘பிரணவ மந்திரத்துக்குப் பொருள் சொல்வாய்' என்ன, அவன் அது கூறத்தெரியாது மயங்க, குமாரக்கடவன் ‘பிரணவத்துக்குப் பொருளறியாதவன் படைப்புத் தொழிலை நடத்தத் தக்கவனல்லன்’ என்று சொல்லி அயனைத் தலையிலே வலியக்குட்டிச் சிறையிலிட, சிவபிரான் தான் சென்று குமரனுக்கு நல்வார்த்தை கூறி அயனைச் சிறையினின்று விடுவித்தபின், குமரனை யெடுத்து மடியின்மீது வைத்து உச்சிமோந்து தழுவி, 'பிரணவப்பொருள் உனக்குத் தெரியுமோ? தெரியுமாயிற் சொல்வாய்' என்ன, முருகமூர்த்தி ‘அது இரகசியமாகவன்றி வெளிப்படையாக உரைக்கற் பாற்றன்று' என்று கூற, உடனே சிவபிரான் செவிதாழ்த்துக் கொடுத்து அதனைக்கேட்டு ஆனந்தித்தனரென்பது கதை. பசுமையென்னும் பண்புப்பெயர் விகாரப்பட்டு ஐகாரச் சாரியைபெற்றுப் பச்சையென்று நின்றது. துழாய் - துளஸீ என்னும் வடசொற் சிதைவு; முகில் - உவமையாகு பெயர். (40)

41 - (இ - ள்) மெய் – சத்தியந்தவறாத; கவுடர் கோன் - கௌட தேசத்தார்க்கரசனான இரணியவர்மன், செழும் சாம்பூநதத்தால் - சிறந்த பொன்னினால், மேல் நிலத்து ஒரு ஆலயங்கள் - மேலுள்ள பொன்மயமான தேவலோகத்தைப் போன்றதொரு சிவாலயங்களை; செய்யும் – செய்தற்கிடமான; புலியூரே - புலியூரானது; ஞானமுற்ற சம்பந்தர் அத்தர் - திருஞானம் பொருந்தின சம்பந்தமூர்த்தி நாயனாருக்குத் தந்தையானவரும்; தராதலம் எல்லாம் புணரும் சம்பு - எல்லாவுலகங்களிலும் கலந்த சம்புவென்னுந் திருநாமமுடையவரும்; அந்தரத்தர் - ஆகாயவடிவமாயுள்ளவருமாகிய சிவபிரானது; தலம் - இடமாம்; (எ - று).

கௌட தேசத்தரசனான சிங்கவர்மன் தாதை கட்டளைப்படி தில்லையை யடைந்து சிவகங்கையில் முழுகி உடநாற்றமொழிந்து பொன்னுருப்பெற்று இரணியவன்மனாகித் திருநடனந்தரிசித்துத் தன்னாட்டைவிட்டுச் சோழநாட்டையாண்டு திருவம்பலம் முதலிய திருப்பணிகள் பலவற்றைச் சுவர்ணமயமாகச் செய்வித்தனென்பது கதை. ஆலயம் - திருக்கோயில். கவுடர் - முதற்போலி. சாம்பூநதம் - நால்வகைப்பொன்களுள் ஒன்று; மற்ற வை - ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம் என்பன. மேருவிலுள்ளதொரு நாவல்மரத்தின் கனிகளின் சாரமாகப்பாயுஞ் சம்புநதியிற் பிறத்தலால், சாம்பூநதமன்று பெயர்; "நாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழை' என்பர் நக்கீரதேவரும். சீகாழியில் திருஞானசம்பந்தர் மூன்றாம் பிராயத்தில் தமது தந்தையாராகிய சிவபாதவிருதயர் ஸ்நாநம் பண்ணுதற்குப் போம்போது தாமுங் கூடச்சென்று அவர் தீர்த்தத்தில் மூழ்கியபொழுது அவரைக்காணாமல் கதறியழுது சிவபிரானுடைய திருத்தோணி விமானத்தைப் பார்த்து 'அம்மே! அப்பா!' என்று அழைக்க, சிவபிரான் அக்குழந்தையினிடம் தந்தைபோல அன்புடையவராய் உமாதேவியைக் கொண்டு அக்குழந்தைக்குப் பாலூட்டி ஆட்கொண்டருளின ரென்பது கதை. சிவபிரானது இளையகுமாரராகிய சுப்பிரமணியமூர்த்தியே சம்பந்தமூர்த்தியாயினரென்பது நூற்கொள்கையாதலாலும், சிவபிரானைச் சம்பந்தரத்த ரென்னலாம். தராதலம் - பூமியினிடம், தராதலமெலாம் புணருஞ் சம்பு என்றது, யாதாமொன்றை யறியுமிடத்து உடலுமுயிருந் தன்னில் ஒன்று பட்டு அறியும் அறிவைப்பிரிக்க வொண்ணாதாற்போலவும், யாதாமொன்றைக் காணுமிடத்துக் கண்ணினொளியும் ஆதித்தப் பிரகாசமுந் தன்னிலொன்றுபட்டு நிற்குந் தன்மையைப் பிரிக்க வொண்ணாதாற்போலவும், சிவனும் பிரபஞ்சமுந் தன்னிற் பிரித்தற்கரியதாய் அநந்யமாயிருக்கு மாதலின், பஞ்சபூதங்களுக்குரிய சிவஸ்தலமைந்தனுள் சிதம்பரம் ஆகாசலிங்கஸ்தானமாதலால் அந்தரத்தர் தலம் என்றது. கவுடர் கோன் செய்யும் - ஏவுதற்கருத்தா. (41)

42 – (இ – ள்). பண்டு - முற்காலத்தில், ஊர்ந்த நடத்தால் - (சிவபிரான்) மேல்கீழாகச் செய்த நடனத்தினால், உக்கிரசாமுண்டியும் - பயங்கரத்தன்மையுடைய காளிதேவியும், நாணம் புக்கு - வெட்கத்தையடைந்து, வந்தித்து - வணங்கி, ஏத்தும் - துதித்தற்கிடமான, புலியூரே - புலியூரானது; அக்கு வலையம் கழுத்து உளவன - ருத்திராக்ஷமாலையைக் கண்டத்திலே தரித்துள்ளவனும், வாரியில் மீனுக்கு ஆ - கடல் நீரிலுள்ளதொரு மீனைப் பிடித்தற்பொருட்டாக, வலை - வலையை, அங்கு - அக்கடலிலே, அழுத்து - அழுந்தச் செய்த; உளவன் - சூழ்ச்சியையுடையவனுமாகிய சிவபிரானது, வாழ்வு - இருப்பிடமாம்; (எ - று)

மகிஷாசுர சங்காரஞ் செய்து .............. பத்திரகாளியைப் பங்கஞ் செய்விக்கும் பொருட்டு, சபாநாயகர் பலவித நடனஞ்செய்ய, அவளுந் தோல்வியடையாமல் அப்படியே உடன் ஆடிவர, பின்பு சுவாமி தமது குண்டலங் கழன்றதைக் காதிலே தானே சேரும்படி ஊர்த்துவ பாதமாக நடனம் செய்ய, அவளும் அப்படி ஆடுதற்கு நாணித் தோல்வியுற்றனளென்பது முற்பாதியின் கதை.
கர்வபங்கத்தின் முன்பு காளி தனக்கு நிகரில்லையென்று இருந்ததனால், உக்கிர சாமுண்டியென்றார். உம்மை - உயர்வுச் சிறப்பு. ஊர்த்தம் - ஊர்த்த்வம் என்பதன் விகாரம்; நாண - தொழிற்பெயர். அம் - விகுதி; அக்கு - அக்ஷமென்னும் வடசொற்றிரிபு. வலயம் - வலையம் - இடைப்போலி. அக்குவலையம் - என்பு மாலையுமாம். பாண்டிய நட்டில் தண்டுறைப்பாக்கமெனுங் கடற்கரைச் சேரியில் வாழ்கின்ற ஒரு வலைஞர் தலைவன், பலநாளாகப் பலவாறு வலைவீசி முயன்றும் பிடிக்கப்படாததொரு கடலிலுள்ள பெருமீனைப் பிடிப்பவனுக்குத் தன்மகளை மணஞ்செய்து கொடுப்பதென்று நிச்சயித்திருக்க, சோமசுந்தரக் கடவுள் தாம் ஒரு வலையனுருக் கொண்டுசென்று யாவரும் வியக்கும்படி வலையைவீசி, தம்மால் முன்னே சபிக்கப்பட்ட நந்திதேவரது வடிவமாகிய அம்மீனைப் பிடித்துக் கரைமேற் போகட்டுவிட்டுத் தமது சாபத்தாற் பிறந்த உமாதேவியின் வடிவமாகிய அம்மகளை மணஞ்செய்து கொண்டாரென்பது கதை. ஒருகாலத்தில் உமாதேவி சிவபிரான் செய்த உபதேசத்தையும், அக்காலத்தில் நந்திதேவர் சிவபெருமான் செய்த கட்டளையையும் பாராமுகஞ் செய்ததனாற் சாபமேற்றன ரென்க. உளவு - தந்திரம். (42)

43 - (இ - ள்.) மாதவத்து - சிறந்த (சிவஞானமாகிய) தவப்பயனையுடைய, மாணிக்கவாசகர் - திருவாதவூரடிகள், மன்றுள் - கனகசபையிலேயுள்ள, ஒளிக்குள் - சோதியினுள்ளே, பூதியத்தோடு - பஞ்சபூதசம் பந்தத்தாலாகிய (தமது) மானுட சரீரத்துடனே, ஒன்றும் - கலப்பதற்கிடமான, புலியூரே - புலியூரானது, பூ கேதகை தாமம் கழித்து - அழகிய தாழைமலரை அணியாது நீக்கி, அளி பார்தனனொடு அண்டம் - குளிர்ச்சியான நிலவுலகத்தோடு பல அண்டகோளங்களையும், ஊழிதோறும் – யுகாந்த காலந்தோறும், தாம் அங்கு அழித்து - தாமே அவ்விடத்தில் (ருத்திர ரூபியாய்ச்) சங்கரித்து, அளிப்பார் - (பிரம விஷ்ணு ரூபியாய் மீட்டும்) படைத்துக் காப்பவராகிய சிவபிரான், சார்பு - சேர்ந்திருக்குமிடமாம்; (எ - று.)

மாணிக்கவாசக சுவாமிகள் செய்த திருவாசகம் திருக்கோவையார் என்னுந் திருமுறைகளைச் சபாநாயகர் அந்தண வடிவமாய் எழுதிமுடித்தபின்பு, தில்லைவாழந்தணர்கள் மாணிக்கவாசகரைத் தரிசித்து 'இத்திருமுறையிலுள்ள பொருளை எமக்குத் தெரிவித்தருளல் வேண்டும்' என்று வேண்ட, சுவாமிகள் 'நாம் உணர்த்துவோம் வாரும்' என்று அவர்களையழைத்துச்சென்று திருவம்பலஞ் சேர்ந்து 'இங்கு நின்ற பெருமானாரே இதற்குப் பொருளாவார்' எனக்காட்டி, அங்கு நின்றோர் யாவருங்காண, சோதியுட் சோதியாய் இரண்டறக் கலந்தனரென்பது முற்பாதியின் கதை. இவரது வாய்மொழிகள் மாணிக்கம் போலச் சிவபிரானால் நன்கு மதிக்கப்பட்டமையின், மாணிக்கவாசகர் என்ற திருநாமம். பூதசம்பந்தமானது பூதீபம். வடமொழித்தததிதாந்த நாமம். தமது நடுவிலே அனற்பிழம்பு வடிவமாய் நின்ற சிவபிரானது அடிமுடிகளைத் தேடத் தொடங்கிய பிரமவிஷ்ணுக்களுள், அன்னப்பறவை வடிவமாய், முடியை நோக்கி நெடுந்தூரஞ்சென்ற பிரமன் அதனைக் காணாது இளைத்து, அப்பொழுது அத்திருமுடியினின்று வீழ்கிறதொரு தாழைமலரை நோக்கி, தான் முடியைக் கண்டதாகப் பொய்ச்சாட்சி கூறவேண்டுமென்று இரக்க, அம்மலர் அவ்வாறு பொய் கூறினமையின், அதனை இனி ஏற்பதில்லையென்று கடவுள் கருத்திட்டனரென்பது கதை. தாமமெனும் மாலையின் பெயர் இங்கே பூவுக்குக் காரியவாகு பெயர். (43)

44 - (இ - ள்.) நாட்டம் உறு - (யாவரும்) விரும்பத்தக்க, மாசி மகம் நாள் – மாசிமாதத்து மகநக்ஷத்திரத்தினன்று, வணிகன் - ஒருவைசியனது, பாசம் வினை பூட்டு - அவாவின் காரியமான கருமத்தின் பந்தத்தை, அறுத்து - ஒழித்து, ஆளும் - (அவனை) அடிமைகொண்ட, தென் புலியூரே - அழகிய புலியூரானது, மாட்டில் எழு துங்கர் - இடபத்தின்மேல் எழுந்தருளுகிற பெருமையையுடையவரும், அப்பா அனார் - (எல்லாவுயிர்களுக்குந்) தந்தையாரைப் போல்பவரும், ஏடு அதனில் கோவை எழுதும் கரம் பரனார் - ஏட்டுச்சுவடியிலே (மாணிக்கவாசகரது) திருக்கோவையாரென்னும் நூலையெழுதின திருக்கையையுடைய (யாவரினும்) மேம்பட்ட கடவுளுமாகிய சிவபிரானது, இல் - இடமாம்; (எ-று)

பாதகனாகிய துர்க்கடனென்பானொரு வணிகன் பலரோடுந் தோணியிலேறி மாசிமகத்தினன்று கடலிற் பாசமறுத்த துறையில் வருகையில், தோணியுடன் அமிழ்ந்து தீவினையொழிந்து நற்கதி பெற்றனனென்பது கதை. ''துற்கடனென்றோர் பாவி துணிதரு வணிகனென்போன், கற்கடமனைய சிந்தைக்கா தகனமாகமாதத், திற்கடகடனாகு நாளுற் றிறைதகு துறையிற்றில்லை, நற்கடற்படிய முத்தி நண்ணினாரெண்ணிலார்கள்' என்பது கோயிற்புராணம். நாட்டம் - நாடுதல், விரும்புதல்; தொழிற்பெயர்; அம் - விகுதி. அப்பு அரானார் எனப்பிரித்து - (கங்கா) சலத்தையேந்தின அரனென்னுந் திருநாமமுடையவ ரென்றும் பொருள்கொள்ளலாம். (44)

45. (இ - ள்.) தேசிக நமசிவாயர் - குருநமசிவாயரென்பவர், களிப்பு பெற - பேராநந்தமடையும்படி, செப்பும் நடத்தை - (யாவருஞ்) சிறப்பித்துக் கூறும் திருநடனத்தை, காட்டும் - (சிவபிரான்) தரிசனங் கொடுத்தற்கிடமான, தென் புலியூரே - அழகிய புலியூரானது, ஒப்பு அது இலா ஓர் ஏற்றினான் - உவமையற்றதொரு இடபத்தை வாகனமாகவுடையவனும், மறையான் - வேதங்களைக் கூறினவனும், உள்ளத்து இரங்கும் அடியோர் ஏற்றினால் - மனத்தில் அன்புகனிந்து உருகுகிற அடியவர்கள் (ஒரு அர்ச்சா விக்கிரகத்தில்) ஏறியருளப்பண்ணினால், மறையான் - (அங்குத் தன்னை) மறையாமற் புலப்படுத்துபவனுமாகிய சிவபிரானது, ஊர் - இடமாம்; (எ-று.)

குருநமசிவாயர் சபாநாயகரருளால் அவருக்குச் சாத்தும் பொருட்டுத் திருச்சிலம்புங் கிண்கிணியுஞ் செய்விக்கத் தொடங்குகையில், தில்லைவாழந்தணர்கள் ‘இவற்றைச் சாத்தினால் எம்பெருமான் திருநடனஞ்செய்வரோ' என்று பராமுகமாகச்சொல்ல, நமசிவாயர் அவ்வணிகலங்களைச் செய்வித்துச் சாத்தித் தில்லைவாழந்தணர்களை வருவித்து ''அம்பலவா வோர்கா லாடினாற் றாழ்வாமோ, வும்பரெலாங் கண்டதெனக் கொப்பாமோ - சம்புவே, வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்கும் தித்தியென, வொத்துப் பதஞ்சலிக்குமோ" என்று கடவுளை நோக்கிக் கூற, உடனே சிவபிரான் திருநடனஞ் செய்தருளின ரென்பது கதை. நடம் - வட சொல். மறையான் - வேதங்களிற் புகழப்படுபவ னென்றுமாம்; ஏற்றினால் – ஆவாகனஞ் செய்தாலென்ற படி. அடியோர் ஏற்றினால் மறையான் என்பதற்கு - அடியவர்கள் (தம்மைக் காக்கும் பாரத்தைத் தம்மீது) வைத்தால் (அதனை) மறுக்காதவனென்றும் உரைகொள்ளலாம். இனி, 'ஏத்தினால்’ என்பது யமகப் பொருத்தத்தின் பொருட்டுத் தகரம் றகரமாத்திரிந்த தெனக்கொண்டு, துதித்தாலென்று உரைப்பாருமுளர். (45)

46. – (இ - ள்.) நந்தி முதல் தேவர் - நந்திதேவர் முதலிய தேவ கணங்களும், பல ஞான முனிவோர் - சிவஞானமுடைய முனிவர்கள்பலரும், பூசை - சிவபூசையை, புந்தி மகிழ்ந்து - மனமகிழ்ந்து செய்து, ஏத்தும் - துதித்தற்கிடமான, புலியூரே - புலியூரானது, தம் தனையைக்கு - தமது பெண்ணுக்கு, ஆம் மரு கேசம் - அழகாகிய நறுமணத்தையுடைய கூந்தலை, சரிப்பார் - ஒழியச் செய்தவராகிய மானக்கஞ்சாற நாயனாரது, அன்பினுக்கு – பத்தியை நோக்கி உவந்து அதற்காக, முத்தி இட்டோர் - (அவர்க்குச்) சிவகதியருளிய வரும், ஆமருகே சஞ்சரிப்பார் - எருதினிடத்திலேறிச் சஞ்சரிப்பவருமாகிய சிவபிரானது, ஆர்வு - தங்குமிடமாம் (எ-று.)

நந்திமுதல் தேவர் - நந்தியாகிய தலைமைத்தேவரென்றும், பலம் ஞானம் எனப்பிரித்து - எல்லாப்பயன்களையும் தரும் தத்துவ ஞானமென்றும் பொருள் கொள்ளலாம். கஞ்சாறூரில்வேளாளர் குலத்தில் தோன்றிய மானக்கஞ்சாறநாயனார் சிவனருளால் ஒரு பெண்ணைப்பெற்று ஏயர் கலிக்காம நாயனாருக்கு விவாகஞ்செய்துதர நிச்சயிக்கப்பட்ட சுபதினத்திலே பரமசிவன் ஒரு மகாவிரதி வடிவங்கொண்டு மானக்கஞ்சாறநாயனார் வீட்டுக்குச் சென்று அங்குத் தம்மை வணங்கியெழுந்த மணப்பெண்ணினுடைய கூந்தலைப்பார்த்து ‘இப்பெண்ணின் தலைமயிர் நமக்கு பஞ்சவடியாக மார்பில் தரிக்கப்படுதற்கு உதவும், என்று உகந்துகூற கஞ்சாறர் உடனே உடைவாளையுருவி அக்கூந்தலை அடியோடு அரிந்து கொடுக்க, கடவுள் மகாவிரதி வடிவத்தையொழித்து நிஜரூபத்தோடு தோன்றி நாயனாருக்குத் தம்முடைய சன்னி தானத்தைக் கொடுத்து மறைந்தனரென்பது கதை. மருக்கேசமென்பது மருகேசமென்றும், மருங்கே என்பது மருகேயென்றும் இடையொற்றுக் கெட்டு நின்றது, யமகத்தை நோக்கி. ஆ - இங்கே பசுவின் ஆண்மை குறித்தது. சரித்தல் - சரியச்செய்தல். (46)

47. - (இ-ள்.) வன்பர் புலையோர் எனினும் - கொடும்பாவிகளும் நீச சாதியருமாயினும், வாசம் செயில் - (தன் எல்லையில்) வசித்தல் செய்தால் (அதுமாத்திரத்தைக்கொண்டு), அவர்தம் புல் பிறவி மாற்றும் - அவர்களது இழிவான பிறப்புக்களை யொழிக்கவல்ல, புலியூரே - புலியூரானது, அன்பு திகழ் வத்திரங்கள் ஐந்தார் - (அடியார்களிடத்து) அருளவிளங்குகிற ஐந்து திருமுகங்களையுடையவரும், வனத்து - தாருகவனத்திலுள்ள, இருடி மாதர் - முனிவர்மகளிரது, இடை - அரையிலுடுத்துள்ள, வத்திரம் - ஆடைகளை, களைந்தார் - நீக்கியருளினவருமாகிய சிவபிரானது, மனை - இருப்பிடமாம்; (எ - று.)

ஐந்து திருமுகங்களாவன - ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம் என்பன. இவற்றுள் , ஈசானம் - ஊர்த்துவமுகம், தத்புருஷம் - கிழக்குமுகம், அகோரம் - தெற்குமுகம், வாமம் - வடக்குமுகம், சத்தியோசாதம் - மேற்குமுகம். ஐந்து முகங்களையுமுடைமை, சதாசிவ மூர்த்திக்கு உள்ளதென்க. மூன்றாமடியில், வத்திரம் - வக்த்ரம், நான்காமடியில், வத்திரம் – வஸ்த்ரம். இரண்டும் வடமொழித்திரிபுகள். இருடி -ருஷி. இதுவும் வடமொழிற்றிரிபே. தாருகவனத்து முனிவர்களது பத்தினிமார்கள் தனது பிக்ஷாடனத் திருவுருவத்தைக் கண்டு காதல்கொண்டு ......... .......... ........ ......... ........ ரென்பது கதை. இடை - ....... ........ ....... ...... ஆகுபெயர். வன்பு - கொடுமை. அதனையுடையோன். ....... - சண்டாளத்தன்மை; அதனையுடையோர் ............... ................... .............. ............ ......... ............ 'அன்புதிகழ வத்திரம்' என்றது. (47)

48. – (இ - ள்).
(இந்தப்பக்கம் முழுமையும் எழுத்துக்கள் சிதைந்துள்ளதால் சரியான விளக்கங்களைப் பதிவு செய்ய இயலவில்லை)

49. - (இ - ள்). நாட்டில் - வெளித்தேசங்களில், இறந்தோர் - மரணமடைந்தவர்களது, நல் என்பு - நல்ல உடம்பின் எலும்பை, அ எல்லைதனில் - அத்தில்லையம்பதியின் எல்லையிலே, போட்டிட - கொண்டுவந்து போட்ட மாத்திரத்தில், ஆன்மா -(அவ்வெலும்புக்கு உடையவர்களது) உயிர்கள், வீடு எய்தும் - முத்தியைப்பெறும் மகிமையையுடைய, புலியூரே – புலியூரானது, கோடு இபம் ஊர் வாசவன் - (நான்கு) தந்தங்களையுடைய (ஐராவதமென்னும்) வெள்ளையானையை (வாகனமாகக் கொண்டு ஏறி நடத்துகிற இந்திரனும், அசத்தினன் - ஆட்டுக்கடா வாகனத்தையுடைய அக்கினியும், வாழ்த்தித் தொழும் - துதித்து வணங்கப்படுகிற, சரணம் வாசம் வனசத்தினான் - பரிமளத்தையுடைய தாமரைமலர் போன்ற திருவடிகளையுடையவனாகிய சிவபிரானது, வாழ்வு - தங்குமிடமாம்; (எ-று)

இறந்தவரெலும்பு தில்லைப்பதியிற் போடப்பட்ட மாத்திரத்தில் அவ்விறந்தவர் முத்திபெறுவரென்பதும், தேவேந்திரனும் அக்கினிதேவனும் அத்திருப்பதியிற் சிவபூசை செய்து பேறுபெற்றனரென்பதும் இதிற்குறித்த வரலாறுகள், ஆன்மா - ஆத்மா, வடசொற்றிரிபு, வாசவன் - அஷ்டவசுக்களுக்குத் தலைவன்; அல்லது, செல்வமுடையவன்; வஸு - தேவர்களில் ஒரு வகையார்; அல்லது, ஐசுவரியம். வாசவனசச்சரணத்தினான் என விகுதி பிரித்துக் கூட்டுக. "அன்னிய தலத்துப் பொன்றினோரென், பற்றருள் கொண்டத் தலத்திற் புதைக்கில் வினைகெட முத்தி பெறுவரன்றே'' என்பது சிதம்பர புராணம். (49)

50. - (இ - ள்.) ஏழ் உலகு ஏத்தும் - ஏழுலோகத்துயிர்களும் துதிக்கத்தக்க, ஒன்பான் இலிங்கம் பிரதிட்டை - ஒன்பது சிவலிங்கப் பிரதிஷ்டைகளை, பூழியர்கோன் - பாண்டியர் மரபில் வந்த ஓரரசன், செய்த - செய்தற்கிடமான, புலியூரே - புலியூரானது, வாழ் சிவலோகத்தர் - (என்றும்) அழியாது நிலைபெறுகிற சிவலோகத்தையுடையவரும், கணிச்சி படையார் - மழுவாயுதத்தையுடையவரும், காதலித்து உன்னாத நெஞ்சகத்தர்கண் - (தம்மை) விரும்பித் தியானியாத மனதுடையவர்களிடத்து, இச்சிப்பு அடையார் - விருப்பத்தைப் பொருந்தாதவருமாகிய சிவபிரானது, காப்பு - பாதுகாக்குமிடமாம்; (எ-று.)

ஒரு பாண்டி நாட்டரசன் சிதம்பரத்தில் ஒன்பது சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிறப்புப் பெற்றான் என்பது கதை. பிரதிட்டை - ப்ரதிஷ்டா என்னும் வடசொற்றிரிபு; மந்திர பூர்வமாகச் சடங்குமுடித்துத் தாபித்தல், பூழியர் - பாண்டியர். உன்னாத - நினையாத. (50)

51. - (இ - ள்.) ஆன பல சத்திரத்தும் - பொருந்திய அநேக சத்திரங்களிலும், போனகம் பாலிக்கும் - உணவைக் கொடுக்கப் பெற்ற; ஆழ் கமலம் வாவியினும் - ஆழ்ந்த தாமரைத்தடாகங்களிலும், போன கம்பு ஆர்க்கும் - சென்ற சங்குகள் ஒலிக்கப்பெற்ற; புலியூரே - புலியூரானது; யான் எனும் தற்போதம் ஒழிவு ஆயினார் - (தானல்லாத உடம்பை) யானெங்கிற சீவபோதம் (அகங்காரம்) ஒழிதலையுடைய, யோகிகளது, புந்தி - மனத்திலே, சுடர் - விளங்குகின்ற, ஒளியார் - சோதி வடிவாயுள்ளவரும், வேதமொழி வாயினார் - நான்கு வேதங்களையும் சொல்லியருளிய நான்கு திருவாயையு முடையவருமாகிய சிவபிரானது, வீடு - தங்குமிடமாம்; (எ-று)

போனகம் பாலிக்கும் என்றது, வெவ்வேறு வகையாகப் பிரிந்து இருபொருள் பட்டதனால், பிரிமொழிச் சிலேடையணி. சத்திரம் - பொதுவிடம். தத்போதம் - வடசொல். தத் - ஜீவன், போதம் - அறிவு. வேதமொழிவாய் - சத்தியோசாத மொழிந்த நான்குமென்பர். (51)
52. – (இ - ள்.) ஓதிமமும் - அன்னப்பறவைகளும், போது அகமே நிற்கும் - தாமரைமலரினிடத்தே தங்கப்பெற்ற: வேந்தர் உலவும் நெடுவீதிகளும் - அரசர்கள் சஞ்சரிக்கின்ற பெரிய இராசவீதிகளும், போதகமே நிற்கும் - யானைக்குட்டிகள் நிற்கப்பெற்ற, புலியூரே - புலியூரானது; மாதவர்க்கு வீடு அளித்தார் - பெருந்தவமுடைய சிவயோகிகளுக்கு முத்தியுலகத்தைத் தந்தருளினவரும், மாட்டினார் – இடபத்தை வாகனமாகவுடையவரும், வேணி புயத்து - (தமது) சடையின் மேலுந் தோள்களின்மேலும், அளி - வண்டுகள் மொய்த்தற்கிடமான, இதழிஏடு - கொன்றைமலர்களின் இதழ்களாலமைந்த, ஆர் தார் - நிறைந்தமாலையை, மாட்டினார் - அணிந்துள்ளவருமாகிய சிவபிரானது, இல - இடமாம்; (எ - று.)

வேணிபுயம் - உம்மைத்தொகை, புயத்து - ஏழனுருபுத்தொகை; அத்து - சாரியை. ஆர் - ஆத்திமலரென்றும் கொள்ளலாம். 'புயமீதிதழி' என்றும் பாடம். ஏடு என்னும் பூவிதழின் பெயர் பூவுக்குச் சினையாகுபெயரென்றுங் கொள்ளலாம். மாதவர்க்கு வீடளித்தார் என்பதற்கு - திருமாலுக்கு நற்கதி தந்தவரென்றும், வேணி புயத்தார் என எடுத்து - சடைதொங்குந் தோள்களையுடையவரென்றும் பொருள் கொள்ளலாம். (52)

53. - (இ - ள்.) மா தயங்கு சோலைகளும் - பெருமை விளங்குகிற சோலைகளும், மகிழ் - மகிழமரத்தினது, பூ தழை கப்பு – மலர்களையுந் தழைகளையுமுடைய கிளைகள், ஆடும் – அசையப்பெற்ற; வந்த அப்பர் தாமும் - (தரிசிக்க) வந்த திருநாவுக்கரசு நாயனாரும், மகிழ்பூத்து அழைக்க (சிவபிரான்) மகிழ்ச்சி மிக்கு(த் தம்மை நற்கதிக்கு) அழைத்தருளும்படி, பாடும் - (தமிழ்ப் பதிகம்) பாடுதற்கிடமான, புலியூரே - புலியூரானது; வாய்த்த - (சிவபத்தி) பொருந்தின, புலியோடு - வியாக்கிரபாத முனிவருடனே, அ பதஞ்சலியார் - அந்தப் பதஞ்சலி முனிவரும், உள மகிழ - (தரிசித்து) மனங்களிக்கும்படி, மன்றில் - கனகசபையிலே, நடம் ஆட - ஆநந்த தாண்டவஞ் செய்தற்கு, பதம் சலியார் -(தமது) திருவடி இளைப்புறாதவராகிய சிவபிரானது, ஆர்வு - தங்குமிடமாம்; (எ-று)

மா - வண்டென்றும் அழகென்றும், மரப்பொதுப்பெயரென்றும், மாமரமென்றும் கொள்ளலாம். அப்பதஞ்சலி - அகரக்சுட்டு பிரசித்தியைக் காட்டிற்று. (53)
54. - (இ - ள்.) கண் பங்கயம் - தாமரை மலர் போலும் கண்களையுடைய; மின்னார் - மின்னலையொத்த மகளிரது, கார் குழலில் - மேகத்தையொத்த (கரிய) கூந்தலிலும், புட்பம் சரம் சேர் - மலர்கள் மாலைகளாகப் பொருந்தப்பெற்ற; அந்தியினில் - மாலைப்பொழுதிலும், புள் பஞ்சரம் சேர் - பறவைகள் (தத்தம்) கூடுகளில் அடையப்பெற்ற; புலியூரே - புலியூரானது, நட்பினொடு - அன்பினுடனே, மெச்சி –(தம்மைத்) துதித்து, கும்பிட்டார் - வணங்கின அடியார்களுடைய, மெலிவு – பலவகைத் துன்பங்களையும், ஒழிப்பார் - நீக்கியருள்பரும், வந்தி இட - வந்தியென்னும் மலட்டுக்கிழவி கொடுக்க, இச்சிக்கும் - விரும்பியுண்ட, பிட்டார் - பிட்டினையுடையவருமாகிய சிவபிரானது, இடம் - இடமாம்); (எ-று)

புட்பம் - புஷ்பம்; வடசொல. பிட்டு - ஒருவகைச் சிற்றுண்டி. வந்தியிடமே பிட்டுக்களை யிச்சித்தது, கரைபுரண்ட வையையாற்றை அடைப்பதற்கு அவளது வேலையாளாகச் சிவபிரான் வந்து அமர்ந்தபொழுதி லென்க. கள் பங்கயம் மின்னார் - தேனையுடைய தாமரை மலரில் வாழுந் திருமகள் போன்றவரென்றுமாம். (54)

55 - (இ - ள்.) சாரா ஒலி நீடு - பொருந்திய ஓசைமிக்க, ஆவணமும் - கடைவீதிகளும், கற்பூரமணம் துன்னும் - பச்சைக் கர்ப்பூரத்தின் பரிமளம் மிகப்பெற்ற; தம் பதியை மாதரும் - தங்கள் கணவனை மகளிரும், கற்பு ஊர மணந்து உன்னும் - கற்பு நிலைமைமிகக்கலந்து (அவளையே தெய்வமாகக்) கருதப் பெற்ற, புலியூரே - புலியூரானது,
பாரினுடன் - பூமியும், ஊதை - வாயுவும், அங்கி - அக்கினியும், அம்பு - சலமும், வான் - ஆகாயமும், (ஆகிய பஞ்ச பூதங்களினுடைய) உள் புறம்பான் - உள்ளிலும் வெளியிலும் உள்ளவனும், மாதர்பக்கல் - ஒரு பெண்ணினிடத்து, அங்கு - அக்காலத்தில், தூதை - தூது மொழிகளை, இயம்புவான் - சொல்லுந்தன்மையனுமாகிய சிவபிரான், தோய்வு - பொருந்துமிடமாம்; (எ - று.)

ஆவணம் - ஆபணம்; வடசொல். செய்யுளாதலின், ஐம்பெரும் பூதங்களின்முறை பிறழவைக்கப்பட்டது. சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரிலே சங்கிலியாரை விவாகஞ் செய்துகொண்ட சங்கதியைக் கேள்வியுற்று அதிக கோபங்கொண்டிருந்த அவரது முதல் மனைவியாராகிய பரவையார், நாயனார் தம்மிடம் வருதற்கு உடன்படாமல் ‘வந்தால் பிராணத்தியாகம் பண்ணுவேன்' என்று சொல்ல, அதனையறிந்த சுந்தரமூர்த்தி பரமசிவனைத் தியானித்து ‘பரவையாருடைய ஊடலைத் தீர்க்கத் தூது சென்றருளவேண்டும்' என்று பிரார்த்திக்க, சிவபெருமான் சிவார்ச்சனை செய்கின்ற ஒரு ஆதிசைவரது வடிவங் கொண்டும் தாமாந்தன்மையை யறிதற்கேற்ற திருக்கோலத்தோடும் அர்த்தராத்திரியில் இருமுறை தூது நடந்து சென்று சமாதானஞ் சொல்லி அவள் கொண்டகோபத்தைத் தணித்து நாயனாரை அவளிடத்துப் போம்படி அருள் செய்தனரென்பது கதை. 'தாசிபக்கல்' என்ற பாடத்துக்கு, பரவை நாச்சியாரைத் தாசியென்றது - அவர் திருக்கைலாசகிரியிலிருந்த பார்வதிதேவியாருடைய சேடியரிருவருள் ஒருவராகிய கமலினியென்பவரது அவதாரமாதலாலும், அவர் திருவாரூரில் பதியிலாரெனப்படுகின்ற உருத்திரகணிகையர் குலத்திற் பிறந்தவராதலாலுமென்க: தாசி - அடியவள்; விலைமகள். தோய்வு - தொழிலாகு பெயர். (55)

56. - (இ-ள்.) மீ தாவு இமகரனை - ஆகாயத்திலே தவழ்ந்து செல்லுகிற சந்திரனையும், ஆல் பூத்து துடைக்கும் - ஆலமரம் செழித்து வளர்ந்து மாசு துடைக்கப்பெற்ற, புலியூரே - புலியூரானது, கூத்து ஆடி - திருநடனம் புரிந்து, பாதம் சிவந்தார் - திருவடி செந்நிறமடைந்தவரும், ஆலவாயினில் - மதுரைப்பதியில், ஓர்போது - ஒரு காலத்தில், பழிக்கு அஞ்சி வந்தார் - பழிக்காக அச்சங்கொண்டுவந்தவருமாகிய சிவபிரானது, புரி - திருநகரமாம்.

மதுரை நகரத்தின் பழைய எல்லையை அறிவித்தல் வேண்டுமென வேண்டிய வம்சசேகர பாண்டியனுக்குச் சோமசுந்தரக்கடவுள் தன் கையில் ஆபரணமாக அணிந்துள்ள நாகத்தை நோக்கி ' நீ வரையறுத்துக் காட்டு' என்று கட்டளையிட அது தன் வாலும் வாயும் ஒன்றுபடும்படி வளைந்து அந்நகரைச் சுற்றிநின்று அதன் எல்லையைக் காட்டிய தலம் மதுரை. ஆலவாயென்று பெயர்பெற்றது. ஆலவாய் என்னுஞ்சொல்லுக்கு - விஷத்தை வாயிலுடையதென்று பொருள். இது ஹாலாஸ்யம் என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு. அனந்தகுண பாண்டியன் காலத்தில் ஒரு பிராமணன் மனைவியோடுங் குழந்தையோடும் புத்தூரிலிருந்து மதுரைக்கு வரும் வழியில் ஒரு ஆலமரத்தினிழலில் மனைவியையிருக்கச் செய்து தாகத்துக்குத் தண்ணீர் கொண்டுவரப்போய் மீண்டு வந்தபொழுது, மனைவி அம்பு தைத்து இறந்து கிடக்கக்கண்டு கலங்கி, அங்கு இளைப்பாறி நின்றானொரு வேடனைக் குற்றவாளியென்று கருதிப் பிடித்து அரசனிடங் கொண்டுபோய்விட, அரசன் பலவாறு விசாரித்தும் உண்மை விளங்காமையால், சொக்கநாதரைப் பிரார்த்தித்து அவர் நியமனப்படி அந்தணனோடு மாறுவேடம் பூண்டு புதுமணம் நிகழ்வதொரு வணிகன் மனையிற் சென்று அங்கே வந்திருந்த யமதூதர் சம்பாஷணையால் ஆலமரத்தின் இலையிற் பலநாளுக்குமுன் ஒருவன் எய்து தைத்திருந்த அம்பு காற்றின் விசையால் தற்செயலாய்விழப் பார்ப்பனி இறந்து போயினாளென்று அறிந்து தெளிந்து வேதியனையுந் தெளிவித்தானென்பது கதை. பெண் கொலை காரணமாக வேடனுக்கும் அரசனுக்கும் வரும் பழியையஞ்சி அதனைச் சிவபிரான் உண்மை அறிய உபாயஞ்சொல்லித் தீர்த்ததனால், 'பழிக்கு ஆலவாயினோர்போ தஞ்சிவந்தார்' எனப்பட்டது. அஞ்சிவந்தார் என்றது, அசரீரி வாணியாக வந்தெழுந்து விரகு கூறினமையின். இமகரன் - ஹிமகரன்; பனியைச் செய்பவனென்று பொருள்; குளிர்ந்த கிரணங்களையுடையவ னென்றுமாம். அரம்பை - ரம்பா என்னும் வடமொழித் திரிபு. (56)

57. - (இ - ள்) அல் பகல் - இராத்திரியிலும் பகலிலும், சோடு அன்றில் - இணையான ஆணன்றிலும் பெண்ணன்றிலும், அன்பால் - அன்பினால், உம்பர் உக்கும் புறபதிமேல் - தேவலோகமுஞ் சிதைதற்குக்காரணமான (மிகவுயர்ந்த) பனைமரத்தின் மேல், ஆகும் - (பிரியாது) வசிக்கப்பெற்ற; ஆம் தவத்தால் - சித்திபெற்ற தவத்தினாலே, புல்பதி – புலிக்காலையுடைய வியாக்கிரபாதமுனிவர், உம்பருக்கும் மேல் ஆகும் - தேவர்களிலும் மேன்மையடையப் பெற்ற; புலியூரே - புலியூரானது, வெற்பின் உருவம் தக்க - மலையின் வடிவமாய்ப் பொருந்தின; அழல் ஒளியார் - அக்கினிச் சோதியானவரும், மன்றுள - கனகசபையிலே, எவருக்கும் - யாவருக்கும், அரவிந்தம் கழல் ஒளியார் - தாமரைமலை போன்ற (தமது) திருவடிகளை மறைக்காமல் தரிசனந் தருபவருமாகிய சிவபிரானது, வீடு - இடமாம்; (எ-று)

அன்றிலென்பது ஒருவகைப்பறவை. இது, அல்லும் பகலும் அனவரதமும் ஆணும் பெண்ணுங்கூடியே நிற்கும். ஒரு கணப்பொழுது ஒன்றையொன்று விட்டுப்பிரிந்தாலும் …… ……………… ………………… ………... இதனை வடநூலார் கிரௌஞ்சபக்ஷியென்பர். ………… ………………. புல - புலி, பதி - பதமுடையவர். பதம் - கால். ...................... .................. மேலாகும் என்பதற்கு – வியாக்கிரபாத ………….. ……………….. தேவலோகத்தினும் மேன்மையதாகப்பெற்ற என்றுமுரைக்கலாம். தக்கழல் - விகாரம்; 'புக்ககம்' போல. (57)

58. - (இ - ள்) மா வனம் சூழ் - மாமரங்கள் தொகுதியாகச் சூழ்ந்துள்ள, கா இடத்தும் – சோலைகளினிடங்களிலும், பூவை வண்டு ஊதும் - மலர்களை வண்டுகள் (வாயால்) ஊதி மலர்த்தப்பெற்ற; தென் - அழகிய, மால் உறு மின்னார் இடத்தும் - காமமிக்க மகளிரிடத்தும், பூவை வண் தூது வந்து என் - நாகணவாய்ப்பறவையை நோக்கி (நீ, சிறந்த தூதாகச் செல்வாயென்று) சொல்லுதலமைந்த; புலியூரே - புலியூரானது, நா அளைந்து - நாவினிற் கொண்டு, பிட்டி இரதம் மென்றார் - (வந்தி கொடுத்த) பிட்டினது சுவையை மென்று உட்கொண்டவரும், பிரமப்பாகா - பிரமனாகிய சாரதியே! தட்டு இரதம் - தட்டையுடைய தேரை, கொடு வா - கொண்டுவா, என்றார் - என்று (திரிபுரதகனகாலத்திற்) கூறினவருமாகிய சிவபிரானது, தலம் - இடமாம்; (எ-று)
‘கொணர்வாய்' என்ற பாடத்துக்கும் கொண்டுவருவாயென்றே பொருள், ஏவலொருமை முற்று: கொணா - பகுதி. மூன்றாமடியில், இரதம் - ரஸம்; வடசொல். 'மாலுறுமின்னார்' என்ற பாடத்துக்கு – இவ்வுர; மாலுருமின்னார்' என்ற பாடத்துக்கு – ஆசையை விளைக்கும் அழகியவடிவமுடைய மகளிரென்க. வேட்கைகொண்ட ஆடவரும் மகளிரும் ஒருவரிடத்து ஒருவர் பறவைகளைத் தூதுவிடுதல் மரபு. (58)

59 - (இ - ள்) பண்டு - முன்னொரு காலத்தில், தவம் செய்திடவும் - பெருந்தவத்தைச் செய்ததனாலும், புண்டரிகம் - புலிவடிவம், அல்கும் - (மழமுனிவருக்குத்) தங்குதற்கிடமான: பள்ளர் - பயிர்செய்யுஞ் சாதியார், அலத்தால் - கலப்பையைக்கொண்டு, உழவும் - உழுதலாலும், புண்டரிகம் - தாமரைமலர்கள், மல்கும் - (எங்கும்) நிறைந்து விளங்குதற்கிடமான: புலியூரே - புலியூரானது, விண்டும் - திருமாலும், மறை வேந்தும் - வேதங்களுக்குத் தலைவனான பிரமனும், (என்னும் இவர்களால்), அறியார் - உணரப்படாதவரும், இருக்குமே அறியார் - சிறந்த வேதங்களாலும் அறியப்படாதவரும், தீ அகலோடு ஏந்தும் மறியார் - (வலத்திருக்கையில்) நெருப்புத்தகழியையும் (இடத்திருக்கையில் மானையுந் தரித்துள்ளவருமாகிய சிவபிரான், இருக்கும் - எழுந்தருளியிருக்கிற, இல் - இடமாம் ; (எ - று.)

தவஞ் செய்திடவும் என்பதற்கு - எல்லாத்தவங்களினும் மேலான சிவபூசனையை நன்குசெய்யும் பொருட்டு என்றும் உரைக்கலாம். அலம் - ஹலம், விண்டு - விஷ்ணு, இருக்கு – ருக்; வடசொற்றிரிபுகள். பிரமனை மறைவேந்து என்றது, எப்பொழுதும் நான்கு முகங்களாலும் நான்கு வேதங்களையும் ஓதுகின்றமையின். இருக்குமே, ஏ - உயர்வு சிறப்பு. இருக்கு மேய் அறியார் எனப் பிரித்து - வேதங்கள் பொருந்தியறியப் படாதவரென்று முரைக்கலாம். மறி - மான். நீர்வளத்தாற் கழனிகளில் மிகுதியாயுள்ள தாமரைகள் உழவருழுபடைகளாற் சிதைவுண்டு எங்கும் நிறைந்திருக்குமென்க. (59)

60. - (இ - ள்.) சாற்ற - சிறப்பித்துச் சொல்லப்படுகிற, திரு தொண்டரும் - மேன்மையையுடைய சிவனடியார்களும், நந்தமாக போற்ற (தம்மைத்) தூண்டுகிற நல்லறிவு கதுதிக்க, வளம் மிக்க - சிறப்பு மிகுதற்கிடமான: செய் சங்கு இனமும் - கழனிகளிலுள்ள சங்குகளின் கூட்டமும், முந்து மதிபோல் தவளம் மிக்க – சிறந்த சந்திரன்போல வெண்ணிறம் மிகப்பெற்ற; புலியூரே – புலியூரானது; - சங்கம் தரங்கத்தர் - சங்குகளையுடைய பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமால், ஏறு உரு ஆய் - இடபத்தின் வடிவமாய், தாங்க - தம்மைச் சுமக்க, மகிழ்வோர் - திருவுள்ளமுகந்தருளுபவரும், உமை ஓர் பங்கத்தர் – உமாதேவியை ஒரு பாகத்துடையவரும், அங்கத்தர் – எலும்புமாலையை யுடையவருமாகிய சிவபிரான், பற்று - விரும்பி வசிக்குந்தலமாம் ; (எ - று.)

திரிபுரசங்காரகாலத்தில் அமைந்த பூமியாகிய தேர் சிவபிரானேறிய மாத்திரத்தில் அக்கடவுளைச் சுமக்க ஆற்றலில்லாமல் அச்சுமுறிந்து சிதையவிருக்க, அச்சமயத்தில் திருமால் இடப வடிவமாய்க் கீழ்நின்று அத்தேரை வீழ்ந்திடாதபடி தாங்கினரென்பது கதை. தரங்கம் – அலை; கடலுக்குச் சினையாகு பெயர்; தரங்கம் – பிரளய சமுத்திரமுமாம். தரங்கத்தர் - கடல் போலுங் கருநிறமுடையவரெனினுமாம். சங்கம் - தரங்கத்துக்கு அடை மொழி, தரங்கத்தர்க்கு அடைமொழியாயின், பாஞ்சசன்னியமென்க. சங்கத்து அரங்கத்தர் எனப்பிரித்து – கையிற் சங்கையுடைய திருவரங்கமென்னுந் திருப்பதிக்கு உரியவரான திருமாலென்று உரைப்பாருமுளர். பங்கு அத்தர் என்றும் பிரித்துப் பொருள் கொள்ளலாம். அம் கத்தர் எனப் பிரித்து - அழகிய கடவுளெனினுமாம். கத்தர் - கர்த்தர். அங்கத்தர் - உத்தம அங்கமாகிய பிரமகபாலத்தை யுடையவருமாம். (60)

61 - (இ - ள்.) தெள் இமையோர் - (மனந்) தெளிந்த தேவர்கள், போற்று தொறும் - (சிவபிரானை வந்து) துதிக்கும்பொழுதிலெல்லாம், கன்னி - இளமையையுடைய, செம் - செந்நிறமுள்ள, புள் - கருடனாகிய வாகனத்தில், இவரும் - ஏறுந்தன்மையுள்ள, மால் - திருமால், சேர் - (அவர்களுடன் வந்து) சேரப்பெற்ற; தேம் பொழில் தொறும் - இனிய சோலைகளிலெல்லாம், கனி செம் புள்ளி வரும் - பழங்களிற் சிவந்த புள்ளிகள் பொருந்திய, ஆல் - ஆலமரம், சேர் - பொருந்தப்பெற்ற: புலியூரே - புலியூரானது, வெள்ளி சயிலத்து இருப்பார் - வெள்ளிமலையாகிய திருக்கைலாயத்தில் வீற்றிருப்பவரும், சனி பிறப்பில் - சனிபோலக் கொடிய ஜந்மத்திலே, என்னை பயில திருப்பார் - என்னைப் பொருந்தும்படி மீளச்செய்யாதவருமாகிய சிவபிரானது, பதி - தலமாம்; (எ - று.)

கனி - கன்னி; தொகுத்தல், கன்னி - அழியாத என்றுமாம். முத்தி பெற்றவர் இங்கு மீண்டுவந்து பிறப்பதில்லையாதலின், பிறப்பிலென்னைப் பயிலத்திருப்பா ரெனப்பட்டது. சனி - நவக்கிரகங்களிலொருவன். இனி, சனித்தலாகிய பிறப்பென்றுங் கொள்ளலாம். சனிப்பு இறப்பில் எனப் பதம்பிரித்து, பிறப்பு இறப்புக்களி லென்றுமாம். (61)

62. - (இ - ள்.) தங்கம் அவை - பொன்னம்பலத்தை, சேவிக்க - தரிசிக்கும் பொருட்டு, அரும் புங்கவரே - அருமையான புருஷரேஷ்டர்கள்தாம், சேரும் - வந்துசேருதற்கிடமான: தண் நறைவண்டு உண்ண - குளிர்ச்சியான தேனை வண்டுகள் பருகும்படி, அரும்பும் கவரே சேரும் - முகிழ்க்கின்ற மரக்கிளைகள்தாம் பொருந்தப்பெற்ற, புலியூரே - புலியூரானது, அம் கைதனில் ஏந்து தலை ஓட்டினார் - அகங்கையிலே ஏந்தின பிறரம கபாலத்தையுடையவரும், ஏத்தும் அன்பர் தாய் முலை பாலமாந்து தலை ஓட்டினர் - (தம்மைத்) துதிக்கின்ற மெய்யடியார் (மீளவும் பிறந்து) தாயின் முலைப்பாலையுண்ணுதலை யொழித்தருளுந் தன்மையருமாகிய சிவபிரான், வாழ்வு - வாழுமிடமாம்; (எ - று.)

முதலுரைக்கு - வரும் புங்கவரென்றும் உரைக்கலாம். ஒருகாலத்திற் பிரமன் தானே முதற்கடவுளென்று கூறிச் செருக்குற்றிருக்கையில், சிவபிரான் தாமே முதல்வரென்றும் தெரிவிக்குமாறு திவ்வியசொருபத்தோடு எதிரில்தோன்ற, அவ்வயனது ஐந்தாம் முகம் 'எனது நெற்றியினின்றுந் தோன்றிய நீயோ முதல்வன்' என்று கூறி சிவனைப் பழித்தவளவில், அப்பெருமான் தமது அம்சமாகிய வைரவரை நோக்கியருள, அவர் தமது இடக்கை விரலின் நகத்து நுனியால் அவ்வைந்தாந்தலையைக் கொய்துவிட, அக்கபாலம் அப்படியே அவர் கையில் ஒட்டிக்கொள்ளுதலும், உருத்திரமூர்த்தி, தருமத்தை உலகத்தவர் அறிந்து அனுஷ்டிக்குமாறு தாம் அனுஷ்டித்துக் காட்டும்படி வைரவரை நோக்கி 'இப்பாவந்தொலையப் பிச்சையெடுக்கவேண்டும்' என்று உரைக்க, அவர் அங்ஙனமே பலகாலம் பல தலங்களிலுஞ் சென்று கைக் கபாலத்தோடு பிக்ஷாடானஞ்செய்து திரிந்து, பின்பு காசியிற்சேருகையில், அந்த க்ஷேத்திரமகிமையால் உடனே கையைவிட்டு அது நீங்கிற்றென்பது கதை. அன்பாதாய் முலைப்பால் மாந்துதலை யோட்டினார் - பக்தர்கள் பிறப்பை யொழித்து நற்கதியருள்பவ ரென்றபடி. (62)

63. - (இ - ள்.) பூசை - சிவபூசை, முத்தி தரும் - மோக்ஷத்தைக் கொடுக்கும், என்று - என்று நிச்சயித்து, புது அரவம் - புதுமையான பாம்பின் வடிவமான பதஞ்சலிமுனிவர், ஆற்றும் - (அப்பூசனையைச்) செய்தற்கிடமான: மூகைதனை பேசிடு என்று - ஊமைப்பெண்ணைப் பேசுவாயென்று அருள் செய்து (பேசுவித்து), புத்தர் அவம் மாற்றும் - (மாணிக்கவாசகர்) புத்தசமயத்தாரது கொடுமையை ஒழித்தற்கிடமான: புலியூரே - புலியூரானது, சித்தி மதி நேமித்தார் - (எட்டுவகைச்) சித்திகளையும் (பலவகை) அறிவுகளையும் ஏற்படுத்தியவரும், அத்தனார் - (யாவர்க்குந்) தலைவரும், நித்திய கல்யாணி - எப்பொழுதும் மங்களமுடையவளாகிய, சிவகாமி - சிவகாமியம்மையை, தாரத்தினார் - மனைவியாகவுடையவருமாகிய சிவபிரான், காப்பு - (உயிர்களைக்) காக்குமிடமாம்; (எ -று.)

முத்தி தரும் பூசை - மோக்ஷங்கொடுக்க வல்ல பூசையை, என்றும் - எப்பொழுதும் என்றும் பொருள் கொள்ளலாம். மூகை, தாரம் என்பவை - முகா, தாரா: என்னும் வடமொழித் திரிபுகள். புதுமையென்னும் பண்புப் பெயர், ஈறுபோய்த் தன்னொற்றிரட்டிற்று. புத்தரவம் என்றது - ஆதிசேஷன் தனக்கு இயல்பாகவுள்ள பெரியவுருவத்தை நீத்துச் சிறியதோருருவைக் கொண்டமையின். சித்தி - அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன; இவற்றுள், எல்லாப் பொருளினும் நுண்ணியதாதல் அணிமா, பெரிதாதல் - மகிமா, பாரமுள்ளவதாதல் - கரிமா, இலேசாகல் - லகிமா, வேண்டுவன அடைதல் – பிராப்தி, நிறைவுள்ளவனாதல் - பிராகாமியம், ஆட்சி யுளனாதல் - ஈசத்துவம், எல்லாந்தன் வசத்தாக்க வல்லவனாதல் – வசித்துவம். நேமித்தார் - நியமித்தார் என்பதன் மரூஉ. சிதம்பரத்திலுள்ள உமாதேவிக்குச் சிவகாமியம்மையென்று பெயர்; சிவனால் வேட்கை கொள்ளப்படுபவளென்றும், சிவன்பால் வேட்கையுள்ளவளென்றும் பொருள்படும். (63)

64 - (இ - ள்.) சொல் பழுத்த - புகழ் மிகுந்த, மாமுனியும் - சிறந்த பாலமுனிவரும், புல் பதத்தை ஆரும் - புலியின் காலைப் பொருந்தற்கிடமான; சூழும் துறவினரும் - (அங்குச்) சுற்றிலுமுள்ள துறவறத்தவர்களும், புல் பதத்தை ஆரும் - புல்லரிசியினாலான உணவை விரும்பி உண்ணுதற்கு இடமான; புலியூரே - புலியூரானது, உற்பவித்த - (திருமாலுர்தியில்) தோன்றின, கஞ்சம் மனை - தாமரை மலராசனத்தை; வீட்டினார் - (தமக்கு) இருப்பிடமாகவுடைய பிரமதேவரது, கம் - தலையை; பறித்தார் – கொய்தவரும், செம்பதத்தால் - அவர்க்கு (தமது) திருவடியால், வெம் சமனை விரட்டினார் - கொடிய யமனைச் செருக்கொழித்தவருமாகிய சிவபிரானது, வீடு - ஸ்தானமாம் (எ-று)
துறவினர் - இல்லறப் பற்றுக்களைத் துறத்தலையுடையவர்; துறத்த - நீங்குதல். உற்பவித்த - உத்பவித்து; றகாரம்; கஞ்சம் - நீரிற் பிறப்பது; வடசொல். மனை வீடு - ............... மொழியாகலாம். மன் ஐ வீடு எனப் பிரித்து - நிலைபெற்ற அழகிய தங்குமிடமென்று உரைப்பாருமுளர்; துறவினர். புல்பதத்தை ஆரும் - தருப்பாசனத்திற் பொருந்துதற்கிடமான என்றுமாம். சொல் பழுத்த - சாபானுக்கிரகச் சொற்கள் முதிர்ந்தவென்றுங் கொள்ளலாம். (64)
65. - (இ - ள்) நன்கு உற்ற மாதரும் - (எல்லா) அழகுகளும் மிக்க பெண்களும், பொன் கற்ப அடுக்கும் - அழகிய பதிவிரதா தருமம் பொருந்தப்பெற்ற; அந்நல்லார்கள் முன்றில்களும் - அந்த அழகிய பெண்களின் வீட்டின் முன்னிடங்களும், பொன் கல் படுக்கும் - பொன்னும் இரத்தினங்களும் பொருந்தப்பெற்ற; புலியூரே – புலியூரானது; மெல் - மென்மையான; கள் - தேனையுடைய, கமலம் - தாமரைமலர் போன்ற; அடி - (தமது) திருவடிகளை, வந்தியார்கட்கு - வணங்காதவர்களுக்கு, அருளரா - கருணை செய்யாதவரும், ஞானம் அமலம் வடிவு - ஞானமயமான குற்றமற்ற (தமது) திருமேனி, அந்தியார் - சாயங்காலத்துச் செவ்வானத்தின் நிறமாக வுள்ளவருமாகிய சிவபெருமான், ஆர்வு - விரும்பியெழுந்தருளியிருக்குமிடமாம்; (எ-று).

நன்கு - பண்புப் பெயர்; நல் - பகுதி, கு - விகுதி, நல்லாள் என்று இலக்குமிக்குப் பெயராதலால், நல்லாரென்றது - பெரும்பாலும் மகளிரையே யுணர்த்தும். கள் - விகுதி மேல் விகுதி. முன்றில் - இல்முன் என்பது முன்பின்னாக மாறிவழங்கிய இலக்கணப்போலி. பொன் - இலக்குமி போல என்றுமாம். கற்பு - கொழுநனையே தெய்வமென்று ஒழுகும் மேற்கோள்; இது - பெரியோர்கள் கற்பித்தலால் ஆகுவது. இரண்டாமுறைக்கு, பொன் கல் படுக்கும் - பொன்னினாலமைக்கப்பட்ட கற்கள் பதிக்கப்பெற்ற என்றுங் கொள்ளலாம். வடிவம் தியார் எனப்பிரித்து - தமது சொரூபம் அக்னியானவரென்றும் கொள்ளலாம். தியார் - தீயார் என்பதன் குறுக்கல்: "நன்றென்றேன் றியேன்" என்பதில் 'தியேன்' என்பது போல (65)

66.- (இ-ள்) தேம் பொழில்மேல் - இனிய சோலைகளின்மேலே, சேல் பாய - சேல்மீன்கள் தாவிப்பாய்தலால், பூ பழன் - அழகிய பழங்கள், நஞ்சு - நைந்துவிழுந்து, ஆரும் - நிறையப்பெற்ற; மேதி - எருமைகள், செம் கழையை - சிவந்த கரும்புகளை உண்ண உண்ணும் பொருட்டு, பூ பழனம் சாரும் - (நீர்வளமிகுதியால் தாமரை முதலிய) பூக்களையுடைய கழனிகளிற் சேரப் பெற்ற; புலியூரே – புலியூரானது; மேம்படும் எண் தோளுக்கு - சிறப்புற்ற (தமது) எட்டுத் திருத்தோள்களுக்கும், ஆசை பட்டார் - எட்டுத்திக்குக்களையே பட்டாடையாக வுடையவரும், தொண்டு ஆம் இயல் பகை இல்லாளுக்கு - (தமக்கு) அடிமையான இயற்பகை நாயனாரது மனைவியின் பொருட்டு, ஆசைப்பட்டார் - விருப்பமுற்றவருமாகிய சிவபிரான், ஆர்வு – விரும்பி யெழுந்தருளியிருக்கு மிடமாம், (எ - று.)

பழன் - இறுதிப்போலி. நஞ்சு – நைந்து என்பதன்போலி. சிவபிரானுக்கு எண்தோளுடைமை காலவிசேஷத்திலென்க; திரிபுரதகன காலத்திலென்பர்: "மாறாப்போர் மணிமிடற் றெண்கையாய் கேளினி" என்றார் …….. தொகையிலும். ஆசைப்பட்டார் - (வேறு ஆடை தரிக்காமல்) திகம்பரராய் நின்றவர். காவிரிப்பூம்பட்டினத்தில் வைசியர் குலத்திலுதித்த இயற்பகைநாயனார் சிவனடியார் திறத்தில் அன்பு பூண்டொழுகும் உறுதியை வெளியிடும் பொருட்டுச் சிவபிரான் ஒரு விட வடிவங் கொண்டவராய் அவர் வீட்டுக்குச் சென்று அவர் செய்யும் உபசாரத்துக்கு மகிழ்ந்து உமது மனைவியை எனக்குத் தரவேண்டும் என்ன, அதற்கு இசைந்து அவர் கொடுக்கத் தாம் பெற்றுச் செல்லுகையில், அந்நாயனாரது சுற்றத்தார் வந்து சூழ்ந்து அத்தீச்செய்கைக்கு இசையாது, இறைவரைத் தடுக்க, நாயனார் சென்று அவர்களைக் கண்டித்து இறைவர்க்கு வழிவிட்டு மீளுகையில் சிவபிரான் ஓரிடையூறு வந்தவர்போல நாயனாரை மறுபடி கூவியழைத்து இடபவாகநாரூடராய்க் காட்சிதந்து அவர்க்கும் அவர்மனையார்க்கும் முத்தியளித்தன ரென்பது கதை. உலகத்தாரியல்புக்கு மாறாக மனைவியைப் பிறர்க்குத் தந்தமையின், இவர்க்கு இயற்பகையென்று பெயர்போலும். இல்லாள் - வீட்டிலிருந்து சமுசாரக் காரியங்களை நடத்துபவள்; இல் - வீடு, ஆசைப்பட்டார் - ஆசைப்பட்டவர்போல நடித்தவ ரென்றபடி, பழம் நையும்படி, சேல் நீரின்று துள்ளி மரங்களின் மீது பாய்தல், நீர்வளச்சிறப்பினாலாவாகும். (66)

67. - (இ-ள்) கார் புணர்ப்பில் - மேகம்போன்ற (தனது) உடம்பிலே, பொன் கலையை - பொன்னாலாகிய பீதாம்பரத்தை, போர்ப்பவன் - தரித்துள்ள திருமால், அன்பு ஆர்க்கும் - சிவபக்தியாகிய தளையாற் கட்டுண்ணப் பெற்ற: காமுகர்க்கு ஆ - காமமுடையோரை வருத்தும் பொருட்டு, வேள் வரவை - மன்மதனது வருகையை, போர் பவனன் - போர்செய்யவல்ல வாயுதேவன் (மந்தமாருதம்), பார்க்கும் - எதிர்பார்த்தற் கிடமான: புலியூரே - புலியூரானது, பார்ப்பதி ஆம் - பார்வதிதேவியாகிய, பெண் - சிறந்த பெண், தன் ஆகத்து - தம்முடைய திருமேனியில், அடுத்தார் - பொருந்தப் பெற்றவரும், பேர் மணத்தில் - பெரிய கலியாண காலத்திலே, சுந்தரனை - சுந்தரமூர்த்திநாயனாரை, தொண்டன் ஆக - (தமக்கு) அடியவனாகும்படி, தடுத்தார் - தடுத்து ஆட்கொண்டவருமாகிய சிவபிரான், தோய்வு - பொருந்துமிடமாம்; (எ-று.)

போர்ப்பவனன் என்றது, காமுகரைத் தென்றலிளங்காற்று மிகவருத்துதலால். பார்ப்பதி - (இமய) மலையின் மகளென்று பொருள்; வடசொற்றிரிபு. அடுத்தார் என்றதற்கேற்ப, தம் ஆகத்து என்னாமல், தன் ஆகத்து என்றது – ஒருமைப்பன்மை மயக்கம்; இனி, பெண்தன் ஆகத்து அடுத்தார் - உமாதேவியினது உடம்பிற் பொருந்தினவரென்றும் பொருள்கொள்ளலாம், திருக்கைலாசமலையில் சிவபெருமானது அடியார்கூட்டத்தில் ஒருவராகிய ஆலாலசுந்தரர் சிவபூசனைக்காகப் பூப்பறித்தற்குத் திருநந்தனவனத்துக்குப் போனபொழுது அங்குப் பார்வதிதேவியாருக்காக அலர்கொய்து கொண்டு நின்ற அத்தேவியாரது சேடியர்களாகிய அநிந்திதை கமலினியென்னும் பெண்களிருவரையுங் கண்டு அவர்கள் மேற்கொண்ட ஆசையாற் கடவுள் கட்டளைப்படி மானுட சன்மமெடுத்துத் திருநாவலூரில் ஆதிசைவர் குலத்தில் இசையனார் என்பவருக்குச் சிவஞானியார் வயிற்றிற் பிறந்து வளர்ந்து புத்தூரிலிருக்கிற சடங்கவி சிவாசாரியருடைய புத்திரியை மணஞ்செய்ய இருக்கையில், சிவபிரான் ஒரு வயோதிகப் பிராமண வடிவங் கொண்டு 'நீ எனக்கு அடியவன்’ என்று சொல்லி வழக்கிட்டு அத்திருமணத்தைத் தடுத்து அச்சுந்தரமூர்த்தியை யழைத்துச் சென்று திருவெண்ணெய்நல்லூரையடைந்து தரிசனந்தந்து அவர்க்குச் சமுசாரபந்தத் தொடராதபடி அவரையாட் கொண்டருளின ரென்பது கதை. (67)

68. - (இ-ள்.) தென்ஆர் பொழிலிடத்தும் - அழகுமிக்க சோலைகளினிடங்களிலும், புன்னாகம் தோடு ஆர் - சுரபுன்னை மரத்தின் பூவிதழ்கள் நிறைந்த: செம் கனகம் மன்று இடத்தும் - சிவந்த பொன்மயமான திருவம்பலத்தினிடத்திலும், புல் நாகத்தோடு ஆர் - வியாக்கிரபாத முனிவர் பதஞ்சலி முனிவரோடு பொருந்தப் பெற்ற, புலியூரே - புலியூரானது, நல் நீரை விட்டு விளக்கு இட்டார் - சுத்த ஜலத்தை வார்த்து விளக்கெரித்த நமிநந்தியடிகள் நாயனாரது, வினை - கருமத்தை, தொலைத்து - ஒழித்து, அன்பு ஒட்டு - (தம்மிடத்துப்) பக்தியாகிய சம்பந்தம், விள (விள்ள) - நீங்கினால், ஆர்மாட்டினும் - எவரிடத்திலும், கிட்டார் - நெருங்காதவராகிய சிவபிரான், உறைவு - தங்குமிடமாம், (எ-று.)

தென்ஆர் – தென்னாதெனாவென்று வண்டுகளொலிக்குமொலி மிக்க என்றுமாம். சோழநாட்டில் ஏப்பேறூரிலுதித்த நமிநந்தியடிகள்நாயனார் திருவாரூரில் அரநெறியென்னுமாலயத்திலுள்ள சிவபிரானைத் தரிசிக்கையில் திருவிளக்குக் குறைவாயிருக்கக்கண்டு அங்குத் தீபகைங்கரியஞ் செய்யக்கருதி அருகிலுள்ளதொரு வீட்டிற் சென்று நெய்கேட்க, அவ்வீட்டுக்குடையவன் சமணசமயத்தவனாதலின் நெய்கொடாது இகழ்ந்துபேச, அதுகேட்டுத் தளர்ந்த நாயனார் உடனே அசரீரி வாணி அருளியபடி அருகிலுள்ள குளத்தின் நீரையெடுத்து வார்த்து அத்திருத்தொண்டைப் பெரிதாக நடத்திப் பேறு பெற்றுய்ந்தனரென்பது கதை. விள் - தொகுத்தல், உறைவு - தொழிலாகு பெயர். புல் - புலி. (68)

69. - (இ-ள் ) பெட்பின் - விருப்பத்துடனே, முகில் - மேகத்தை, கண்டால் - பார்த்தால், எல் தோகை புள் - ஒளியையுடைய கலாபத்தையுடைய (மயிலாகிய) பறவை, பரதம் காட்டும் - கூத்தாடுதலைச் செய்து காண்பித்தற்கிடமான; பிறந்து இறந்தால் - (தன் எல்லையிலே பிறந்து மரித்தால், எற்று ஓகை புட்ப ரதம் காட்டும் - (ஜனன மரணங்களை ஒழிக்கத்தக்க மகிழ்ச்சியைத் தருகிற புஷ்பவிமானத்தை (அவ்வுயிர்களுக்கு அந்திமதசையில்) அடையச் செய்கிற: புலியூரே - புலியூரானது, உள் பரிவால் - மனத்திலேயுள்ள சிவபக்தியினால், கை ஆரம் மா உரைத்தார் - (தமது) கையைச் சந்தனக் கட்டையாகக்கொண்டு (கல்லில்) தேய்த்த மூர்த்திநாயனாரை, காத்து - பாதுகாத்து, ஆல் கீழ் - கல்லால மரத்தின் கீழிருந்து, நூல் - சாஸ்திரங்களை, நால்வர்க்கு - நான்கு முனிவர்களுக்கு, ஒய்யாரம் ஆ - ஒழுங்காக, உரைத்தார் - உபதேசித்தருளினவராகிய சிவபிரானது, ஊர் - தலமாம்.
பெட்பு - தொழிற்பெயர்; விரும்புதல்; பெள் - பகுதி, பு - விகுதி "எல்லே யிலக்கம்" என்னும் தொல்காப்பிய இடையியற் சூத்திரத்தால், ‘எல்’ என்பது - ஒளியைக் குறிக்கும்பொழுது, இடைச்சொல்லாமென்று அறிக. மதுரைப்பதியில் வணிகர் குலத்திலுதித்துச் சிவபக்தி கொண்டு அத்தலத்துச் சொக்கநாதக்கடவுளுக்கு நாள்தோறும் சந்தனக்காப்பு அரைத்துக்கொடுக்கும் திருப்பணியை மேற்கொண்டொழுகும் மூர்த்திநாயனார், வடதேசத்திலிருந்து வந்து பாண்டியனை வென்று அவனரசாட்சியைக் கைக்கொண்டு சமணர் கைவசப்பட்டிருக்குங் கர்ணாடராசன் தமக்கு எங்கும் சந்தனக்கட்டை கிடைக்கவொண்ணாதபடி பண்ணித் தமது திருப்பணிக்குத் தடை செய்ய, நாயனார் ‘சந்தனக்கட்டை கிடையாமற்போலும் அரைக்கிற கைக்குத் தடையில்லையே' என்று தமது முழங்கையை மிகுதியாகத் தேய்த்து, அப்பொழுது சிவபிரான் அருளியபடி, அக்கர்ணாடராசனிறந்தவுடனே அரசாட்சியையடைந்து இறுதியில் முத்தியடைந்தனரென்பது கதை. ஆரம் - ஹாரம். வடசொல். உரைத்தார்க்காத்து - உயர்திணையில் சிறுபான்மை ஐயுருபு தொக்கது; [நன் - உருபு - கரு] நால்வர் - தொகைக்குறிப்பு; சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனத்ஸுஜாதா என்பவர். இவர்கள் ஒருகாலத்திற் கைலாசகிரியையடைந்து சிவபிரானைத் திருவடி தொழுது 'எங்களுக்குத் தத்துவஞானத்தை உபதேசித்தருளல் வேண்டும்' என்று பிரார்த்திக்க, சிவபிரான் கருணைகொண்டு அவ்வெள்ளிமலையின் தென்சிகரத்திலே கல்லால மரத்தினிழலில் தக்ஷிணமூர்த்திவடிவமாய்த் தனியேயெழுந்தருளியிருந்து அவர்களுக்குச் சரியை கிரியை யோகம் என்னும் மூவகை நிலையையும் முதலில் போதித்துப் பின்னர் நான்காவதாகிய ஞானநெறியையும் அனுக்கிரகிக்கக் கருதி அது இத்தன்மையதென்று அறிவிக்குமாறு சின்முத்திரையாகப் பிடித்த திருக்கையோடு ஒரு கணப்பொழுது மெளனமாய் வீற்றிருந்தனரென்பது கதை. ஓகை - உவகையென்பதன் மரூஉ. ரதம் - இங்கே, வாகனமென்னும் மாத்திரையாய் நின்றது. ஆரம்மா - சாதனமாம். (69)

70.- (இ-ள்.) கட்டு உறு - முறுக்குப் பொருந்தின (தளையவிழாத), கோடு பூ - மரக்கிளைகளிலுள்ள பூக்கள், தேன் - வண்டுகள், நூறி - (கால்களால்) துகைத்து, புட்டு - விண்டு, அரிக்க - துளைக்க, வீறும் - மலரப்பெற்ற: கமலம் பூ - தாமரை மலர்கள், தேன் ஊறி - தேன் சுரந்து; புள் தரிக்க - அன்னப்பறவைகள் தங்க, வீறும் – சிறப்புப் பெறுதற்கிடமான: புலியூரே - புலியூரானது, சிட்டர் தொழ - நல்லொழுக்கமுடைய வியாக்கிரபாதர் முதலியோர் வணங்க, மின் ஆடகத்தினால் மேய்ந்த மன்றுள் - மின்னல் போல் விளங்குகின்ற பொன்னினாலே அமைந்த திருவம்பலத்திலே, (செய்கிற), ஆனந்தம் நல் நாடகத்தினான் - பேராநந்தத்தைத் தருகிற சிறந்த திருநடனத்தையுடையவராகிய சிவபிரானது, நாடு - ஊராம்; (எ-று).

பிள் என்னும் பகுதியடியாப் பிறந்த பிட்டு என்னும் இறந்தகால வினையெச்சம், இங்கே சிலேடைப் பொருத்தத்திற்காக, புட்டு எனச் சிதைந்து மருவிற்று. மேய்ந்த - வேய்ந்த என்பதன் மரூஉ. சிட்டர் - சிஷ்டர்; வடசொல். ஆடகம் - ஹாடகம், நால்வகைப் பொன்களுள் ஒன்று, புள் - வண்டாகிய பறவை யென்றுங் கொள்ளலாம். (70)

71. – (இ - ள்.) மேகம் பயில் குழலார் - மேகத்தையொத்த கூந்தலையுடைய மகளிரது, மென் களமும் - கண்ணுக்கினிய கண்டமும், பூகம் பொருவும் – பாக்குமரத்தை யொத்திருக்கப்பெற்ற; தண் பணையும் - குளிர்ந்த [நீர்வளமுள்ள] கழனிகளும், பூ கம்பு ஒருவும் - (உழுகிற காலத்தில்) நீர்ப் பூக்களுஞ் சங்குகளும் நீங்கப்பெற்ற; புலியூரே - புலியூரானது, மாகமொடு – பெரிய விண்ணுலகத்தாரோடு, தாலம் - மண்ணுலகத்தாராலும், பணிந்திடுவார் - வணங்கப்படுபவரும், தாழ் - தொங்குகின்ற, பவளம் கோடீரம் மேல் - பவழம் போலச் செந்நிறமான சடாபாரத்தின் மேல், அம்பு - (கங்கா நதியின்) நீரை, அணிந்து - தரித்து, இடுவார் - அதனைப் பகீரதன் பொருட்டுச் சிறிது) கொடுத்தவருமாகிய சிவபிரானது , வீடு - தங்குமிடமாம்; (எ-று.)

பயில் – உவமவுருபு; இனி, மேகம் பயில் குழலார் - மேகத்தின் தன்மை தன்னிடத்திற் பொருந்தின கூந்தலையுடையவ ரென்றுமாம். இளங் கமுக மரத்தினது கணு வரையிலும் நெய்ப்பிலுங் கண்டத்துக்கு உவமையாம்; "ஈனாத விளங்கமுகின் மரகதமணிக் கண்ணும், ....... தானாக...... கானார்ந்த திரள் கழுத்து” என்றார் சிந்தாமணியிலும். மேகம், களம், பூகம், கோடீரம், அம்பு - வடசொற்கள். இனி, மகளிர்கண்டம், பூ கம்பு ஒருவும் - அழகிய சங்கம் வடிவில் தோற்று நீங்குதற்கிடமான என்றும், குளிர்ந்த கழனி, பூகம் பொருவும் – பாக்குமரம் பொருந்தப்பெற்ற என்றும் பொருள்கொள்ளலாம். தாலம் - ஸ்தலம் என்னும் வடசொல்லின் திரிபாகிய தலம் என்பதன் நீட்டல். மாகம், தாலம் - இங்கே இடவாகு பெயர்கள். (71)

72 - (இ-ள்.) கங்குல்வாய் - இராத்திரிகாலத்தில் (வைக்கப்படுகிற), தீபங்களுக்கும் - திருவிளக்குக்களுக்கும், பொங்கு அரா மணி - விளங்குகிற நாகத்தின் மாணிக்கங்கள், ஈடு ஆம் - ஒப்பாகப்பெற்ற; வெயிலுக்கும் - வெயில் வெப்பத்துக்கும், மணி பொங்கர் ஆ - அழகிய சோலையிலுள்ள ஆச்சா மரங்கள், வீடு ஆம் - தங்க நிழலைத் தரும் இடமாகப்பெற்ற; புலியூரே - புலியூரானது, சங்கரா என்பார் இடத்தினான் – சங்கரனேயென்று துதிக்கும் அடியார்களிடத்திலுள்ளவனும், ஈமத்திடை - மயானத்தில், நடித்த - தன்னுடன்) கூத்தாடின, வல் பாரிடத்தினான் - வலிய பூதகணங்களையுடையவனுமாகிய சிவபிரான், வாழ்வு - வாழ்ந்திருக்குமிடமாம்; (எ - று.)

மணிப் பொங்கு அரா என்றது, பதஞ்சலி முனிவரது ஐந்து தலைகளிலுமுள்ள மாணிக்கங்களையு மாகலாம். எல்லாவுயிர்களுமொடுங்குஞ் சர்வசங்கார காலத்தில் உலக முழுவதும் மயானமாகு மாதலால் ஈமத்திடை யென்றது. பூதங்கள் - தாருகவன முனிவர் ஏவியவை. பொங்கர் – விளங்குந் தன்மையதெனச் சோலைக்குக் காரணக்குறி; பொங்கு - பகுதி, அர் - பெயர் விகுதி. (72)

73. - (இ-ள்.) அல்லிய சுனைகளிலும் - ஆம்பல்களையுடைய நீர்நிலைகளிலும், நாரியே புல்லி குடையும் - மகளிரே பொருந்தி நீராடப்பெற்ற; ஆலையினும் - கருப்பியந்திரங்களிலும், நாரியே புல் இக்கு உடையும் - தேன் போலினிய இரசம் பொருந்தின கரும்புகள் சிதையப்பெற்ற; புலியூரே - புலியூரானது, கல்லில் தலையை தா மோதினார் தம்மை - பாறையிலே தமது தலையைத் தாவித் தாக்கின திருக்குறிப்புத் தொண்டநாயனாரை, ஆண்டு - அடிமைகொண்டு, எண் எண்கலையைத் தாம் ஓதினார் - அறுபத்து நான்குவகைக் கல்விகளைத் தாம் (உயிர்களின் பொருட்டு) வெளியிட்டுக் கூறியவராகிய சிவபிரானது, காப்பு - காக்குமிடமாம், (எ - று.)

அல்லி - பிறநீர்ப்பூக்களுக்கும் உபலக்ஷணம், நாரி என்னுந் தேனின்பெயர், இங்குக் கருப்பஞ்சாற்றுக்கு இலக்கணை. காஞ்சீபுரத்தில் ஏகாலியர்குலத்திற் பிறந்த திருக் குறிப்புத்தொண்டநாயனார் மிக்க சிவபக்திகொண்டு சிவனடியார்களுக்கு வஸ்திரங்களை அழுக்குப்போக்கிச் சுத்தமாக்கிக் கொடுத்து வருநாட்களிலொருநாள், அவரது பக்தியுறுதியை வெளிப்படுத்தும் பொருட்டுச் சிவபிரான் ஒரு விருத்த வடிவங்கொண்டு அவரது வேண்டுகோளால் தமது அழுக்குக்கந்தையைத் தோய்த்து உலர்த்தி அன்று மாலைப்பொழுதினுள் தரும்படி அவரிடங்கொடுத்து, அதற்கு உடன்பட்ட அவர் அங்ஙனம் செய்யவொண்ணாதபடி பெருமழையையும் வருவித்துவிட, நாயனார், அச்சிவனடியார்க்கு வேறு ஆடையில்லாமையால், அவர் வருந்தும்படி அடியார் திருப் பணிக்கு நமக்கு இடையூறுவந்ததே யென்று வருந்தி, தமது தலையைத் துணி தோய்க்கும் பாறையில் மோதும்போது, சிவபிரான் வந்து தரிசனந் தந்து நற்கதியளித்தன ரென்பது கதை. எண்ணெண்கலை – பண்புத்தொகைப் பன்மொழித்தொடர்; அவை - அக்கரவிலக்கணம் முதல் அவத்தைப் பிரயோகம் ஈறாக நூல்களிற் கூறப்படுவன. தா - தாவியென்பதன் விகாரம்; பகுதியே வினையெச்சப் பொருள்பட்டதென்னலாம். புல் இக்கு – வினைத்தொகை. (73)

74. - (இ-ள்.) வெற்பு - மலைகளோடு, இணைக்கும் - உவமிக்கப் படுகிற, கொங்கை - தனங்களையுடைய, மின்னார் - மின்னற்கொடி போன்ற மகளிரது, வீடும் - மாளிகைகளும், பொன் பளிக்கும் சாரும் - பொன்னோடு ஸ்படிகக்கல்லும் அமையப்பெற்ற: செம் தாமரையும் - செந்தாமரைப் பூக்களும், பொற்பு அளி குஞ்சு ஆரும் - அழகிய இளவண்டுகள் நிறையப்பெற்ற; புலியூரே - புலியூரானது, கல் - கருங்கல் தூணையே, புணை ஆ - தெப்பமாகக் கொண்டு, ஓதம் - கடலை, கடந்து வந்தார் - தாண்டி மீண்டுவந்தவராகிய திருநாவுக்கரசுநாயனர், ஓது - கூறின, தமிழ் - தமிழ்ப்பாடல்களை கொண்டு - ஏற்றுக்கொண்டு, இரு பொன் பாதங்கள் - பொன்போலரிய தமது இரண்டு திருவடிகளை, தந்து - கொடுத்து, உவந்தார் - மகிழ்ந்தவராகிய சிவபிரான், பற்று - விரும்பிவாழுமிடமாம்; (எ - று.)

பளிக்கு - ஸ்படிகமென்னும் வடமொழிச்சிதைவென்பர். குஞ்சு - இளமைப்பெயர். திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் வேளாளர் குலத்தில் புகழனார் என்பவருக்குக் குமாரராய்ப் பிறந்த மருணீக்கியாரென்பவர் முதலிற் சமண சமயத்தையடைந்து அங்குத் தருமசேனரென்னும் பெயர் பூண்டு ஒழுகுநாளில், திருவதிகை வீரட்டானத்தில் திருத்தொண்டு செய்திருந்த அவர்தமக்கையாராகிய திலகவதியாரது வேண்டுகோளால் சிவபிரான் அத்தருமசேனர்க்குச் சூலைநோயை யுண்டாக்கிச் சமண சமய மந்திரங்களால் தீராத அதனைப் பின்னர்த் தம் அருளால் தீர்த்து அவரைச் சைவசமயத்தவராக்கி அவருக்குத் திருநாவுக்கரசரென்னுந் திருநாமந்தந்து ஆட்கொள்ள, அதனையறிந்த சமணர்கள் தமது மதத்தைச் சேர்ந்துள்ள அரசனது அனுமதி பெற்று அந்தத் திருநாவுக்கரசு நாயனாரைக் கல்தூணிற் கட்டிக் கடலிடையிற் கொண்டுபோய்ப் போட்டுவிட, அவர் ஸ்ரீபஞ்சாட்சரப்பதிகம் பாடிச் சிவனருளால் அந்தக்கல்லே புணையாக மிதந்து மீண்டுவந்து கெடிலநதி வாயிலாய்த் திருப்பாதிரிப்புலியூரிற் கரையேறின ரென்பது கதை. இணைக்கும், இணை – பகுதி; கு - சாரியை. (74)

75. - (இ-ள்) மிக்க - மிகுந்த, கதிர் - ஒளியையுடைய, தேர் - இரதங்கள், விசும்பை - ஆகாயத்தை, விரு - விரைவாக, புக்கு – சேர்ந்து; அளவி - கலந்து, தாக்கும் – மோதப்பெற்ற; மேலோர் - பெரியோர், தவத்தை - தபசை, விருப்புக்கள் அவித்து ஆக்கும் - (பலவகை) ஆசைகளையும் அடக்கிச் செய்யப்பெற்ற; புலியூரே - புலியூரானது, சக்கரத்தை - சக்கராயுதத்தை, நந்து அரிக்கு - சங்கத்தையுடைய திருமாலுக்கு, இட்ட - கொடுத்த, அன்பு உடையான் - கருணையையுடையவனும், நாளும் - எப்பொழுதும், சிவகாமசுந்தரிக்கு - சிவகாமியம்மைக்கு, இட்டன் - இஷ்டனாவுள்ளவனும், புடையான் - (எப்பொழுதும் அவளைப்) பக்கத்திலுடையவனுமாகிய சிவபிரான், தோய்வு தங்குமிடமாம்; (எ-று.)

விரு - விரைவுக்குறிப்பிடைச்சொல், ‘விருவிரு’ என்பதன் விகாரமென்னலாம். இனி, விரு - விருட்சங்கள், விசும்பை அளவி - ஆகாயத்தையளாவி, மிக்க கதிர் தேர் புக்கு - சிறந்த ஒளியையுடைய (சூரியனுடைய) இரதத்தைச் சேர்ந்து; புக்கு - சேர்ந்து, தாக்கும் - மோதப்பெற்ற எனவுரைப்பாரும் உளர்; இவ்வுரைக்கு, விரு - வடசொற்சிதைவு, சிலேடையில் ஓருரைக்கு விரு என்பதை யொழித்து மற்றவற்றிற்கு மாத்திரம் பொருள் கொள்வாருமுளர். நந்து அரி - வினைத்தொகையாய், நீண்டுவளருந் திருமாலுமாம். இட்டன்பு - தொகுத்தல், ‘வேட்டகம்’ போல. சுந்தரி - அழகியவள். (75)

76. - (இ-ள்.) மன்னும் மலை தந்து - நிலைபெற்ற (அசலமான இமயமலையாற் பெறப்பட்டு, மா களிற்றை - சிறந்த யானைமுகக் கடவுளாகிய விநாயகமூர்த்தியை, உவந்து பெற்று - மகிழ்ச்சியோடு ஈன்று, [மன்னும் அலை தந்து வந்து - மிகுந்த அலைகளை வீசிவந்து, மா களிற்றை பெற்று - பெரிய களிற்று மீன்களை யுடையதாய்]. உமை நேர் - உமாதேவியை யொக்கிற, பொன்னி நதி - காவேரியாற்றினால், சூழும் - சூழப்பட்ட, புலியூரே - புலியூரானது, சென்னிமதி பெம்மான் - முடியிற் பிறையைடைய எம்பெருமானும், இடக்கையான் - டமருகமென்னும் வாத்தியத்தைக் (கையில்) உடையவனும், பேர் அம்பலத்து ஆடும் - பெருமையையுடைய கனகசபையிலே திருநடனஞ்செய்கின்ற, மான் செம் இடம் கையான் - மானையேந்தின சிவந்த இடத்திருக்கையை யுடையவனுமாகிய சிவபிரான், சேர்ப்பு - சேருமிடமாம்; (எ-று)

முதலடி, சிலேடை பற்றிவந்த உவமையணி. களிறு - மீனின் ஓர்வகை; ஆண்சுறா வென்பர். இனி, நதிவிஷயத்திலும், களிற்றைப் பெற்று என்பதற்கு - யானைகளைப் புரட்டி யென்றும் பொருள்கொள்ளலாம். பொன்னைக் கொழித்துவருதலால், பொன்னியென்று பெயர். பெம்மான் - பெருமான் என்பதன் மரூஉ. டம்பம் என்பது இடம்பம் என வருதல்போல, டக்கா என்னும் வடமொழி - இடக்கையென முதலில் இகாரம்பெற்று விகாரப்பட்டது. (76)

77. - (இ-ள்.) மேதகு விண் தாவுறலால் - மேலுள்ள விண்ணுலகத்தை அளாவியிருத்தலாலும், மேல் அம்புலி உறலால் - தன்மேலே சந்திரன் பொருந்துதலாலும், (மேதகு விண் தா உறலால் - மேன்மை பொருந்தின தேவலோகத்தவர் இடமாகக் கொண்டு வசிக்கப்பெறுதலாலும், மேல் அம்புலி உறலால் - மேன்மையையுடைய அழகிய வியாக்கிரபாத முனிவர் வசித்தலாலும்) பூதரம் ஒப்பு ஆகும் - மலைக்குச் சமமான, புலியூரே - புலியூரானது, மோதி பொருமாதங்கத்து உரியார் – தாக்கிப் போர்செய்த யானையின் தோலையுடையவரும், போற்று - (யாவராலும்) துதிக்கப்படுகிற, உலகு ஈரேழும் தரு – பதினான்கு லோகத்து உயிர்களையும் பெற்ற, மாது - மாதேவியை, அங்கத்து உரியார் - (தமது) உடம்பில் உரிமையாகச் சேர்த்துக்கொண்டுள்ளவருமாகிய சிவபிரான், சார்பு - சேருமிடமாம், (எ-று.)

யானைத்தோலுடுத்த கதை; - அருந்தவமியற்றிப் பெருவரம் பெற்ற கஜாசுரனென்பவன் தேவர் முனிவர் முதலியோரை இடைவிடாது வருத்தித் துரத்த, அஞ்சியோடின அவர்களது பிரார்த்தனையாற பரமசிவன் தம்மையெதிர்த்துப் போர் செய்யவந்த அவ்வசுரனைக் காலாலுதைத்துத் தள்ளிக் கொன்று தோலையுரித்துப் போர்த்தருளின தென்றாயினும்; தாருவன முனிவர் ஏவிய யானையினுட்சென்று உருத்திரமூர்த்தி உடலைப் பிளந்து அதனுரிவையைப் போர்த்துக்கொண்ட தென்றாயினுங் கொள்க. உ - உரிக்கப்படுவது, செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர். கெடாக்கால் உரிவையென நிற்கும். “சிவன் சத்தியோடுறிற் செகம்விரிந்திடும், சிவன் சத்தி நீங்கிடிற் செகமதில்லையே" என்றபடி சிவபிரான் தன்னுடைய பராசக்தியான உமையாளுடைய உதவியைக் கொண்டே உயிர்களைப் பெற்றருளுதலால், உலகீரேழுந் தருமாது எனப்பட்டாள்; "பெற்றாள் சகதண்டங்க ளனைத்தும்" என்றார் வில்லிபுத்தூராரும். தேவலோகத்தினுந் தில்லை சிறத்தலாலும் தமது சிவபக்தி மிகுதியாலும் தேவர்கள் தம்முலகினின்று இங்கு வந்து வசிக்கின்றனரென்க. (77)
78. - (இ-ள்) ஆம் - நீரையும், கம்பு - சங்குகளையும், அலை - அலைகளையும், சங்காரம் - (உலகத்தை) அழிக்குந்தொழிலையும், செறிவால் பொருந்தியிருத்தலால், (ஆம் - மிக்க, கம்பலை - ஓசையும், சங்கு - சங்குவளையல்களும், ஆரம் - முத்துக்களும், செறிவால் (தன்னிடம் பொருந்தியிருத்தலால்), அங்காடி - கடைவீதி, பொங்கு ஆழி நேர் ஆம் - பொங்குந்தன்மையுள்ள கடலுக்கு ஒப்பாகப்பெற்ற, புலியூரே - புலியூரானது, சங்கு ஆழி மால் ஆம் - சங்க சக்கரங்களையுடைய திருமாலாகிய; சரத்தர் - அம்பையுடையவரும், மணம்மலி – வாசனைமிகுந்த; செம் பொன் மடலை போல் ஆம் – சிவந்த பொன்னினலாகிய பூவிதழை யொக்கின்ற, சரத்தர் - கொன்றைப்பூ மாலையை யுடையவருமாகிய சிவபிரானுடைய, புரி - ஊராம்; (எ-று.)

அங்காடி - இது தெலுங்கில் அங்கடியென வழங்கும். கம்பலையென்னும் சொல் ஒலியையுணர்த்தும் உரிச்சொல்லாதலை 'கம்பலை சும்மை கலியே யழுங்க, லென்றிவை நான்கு மரவப் பொருள் என்னுந் தொல்காப்பியத்தாலறிக. சங்காரம் - ஸம்ஹாரம்; வடசொற்றிரிபு. (78)

79. - (இ-ள்.) வாய்ந்த வலம்புரி - (தனக்குக்) கிடைத்த (பாஞ்ச சன்னியமென்னும்) வலம்புரிச் சங்கத்தையும், பூ மா - நிலமகளையுந் திருமகளையும், தழுவி - கலந்து, (வாய்ந்த வலம்புரி பூ - பொருத்தின நஞ்சாவட்டைப்பூக்களும், மா - வண்டுகளும், தழுவி - (தன்னிடம் பொருந்தி), நந்தவனம் - பூந்தோட்டம், பூ துளவத்தோன் ஆம் - அழகிய திருத்துழாய் மாலையையுடைய திருமாலை யொத்திருக்கப்பெற்ற, புலியூரே - புலியூரானது, ஆய்ந்த மலர் - சிறந்த தாமரைமலர் போன்ற, செம் கைக்கு - சிவந்த திருக்கையிலே, உழையினார் - மானையுடையவரும், திண் தோள் தொடும் - வலிய தோள்களைப் பரிசிக்கும்படி தாழ்ந்துள்ள, காதில் - காதுகளிலே, சங்கு ஐ குழையினார் - சங்கினாலாகிய அழகிய தோடென்னும் அணியையுடைய வருமாகிய சிவபிரான், சார்பு - சார்ந்துள்ள இடமாம்; (எ - று.)

வலம்புரி - பிரதக்ஷிணமாகச் சுழிந்துள்ளது. சாதாரண சங்கத்தினும் ஆயிரமடங்கு சிறந்தது, வலம்புரி, பூமா – பூதேவி ஸ்ரீதேவிகளைக் குறிக்கும் போது, வட சொற்கள். கைக்கு உருபு மயக்கம், 'சங்கவெண் டோடுடையான்" என்றார் பெரியாரும். (79)

80.- (இ-ள்.) தாலம் படைத்து - உலகத்தைச் சிருஷ்டித்து, அலர்க்கண் தான் ஒழுகலால் - தாமரைப்பூவில் தான் வசித்தலால், (தாலம் படைத்து - பனைமரங்களையுடைத்தாய், அவர்கள் தான் ஒழுகலால் – விளங்குந் தன்மையுள்ள மதுவைத் தான் பெருகவிடுதலால்), பிரமன் போலும் - பிரமதேவனை ஒக்கின்ற, பொழில் - சோலைகள், சூழ் - சூழ்ந்துள்ள, புலியூரே - புலியூரானது, ஆலம் அருந்த - (பாற்கடலிற்றோன்றிய) ஆலகால விஷத்தை உண்டதால், கண்டம் கறுத்தார் - தமது திருக்கழுத்துக் கருநிறமடைந்துள்ளவரும், அன்பர் - (தமது) அடியார், அல்லல் வினை வருந்த - துன்பங்களை விளைக்குங் கருமங்களால் வருத்தமடைய, கண்டு - பார்த்து, அங்கு அறுத்தார் - (அவற்றை அப்பொழுதே ஒழித்தருள்பவருமாகிய சிவபிரான், வாழ்வு - வாழுமிடமாம்; (எ-று.)

ஆலம் - ஹாலம்; வடசொல். பாற்கடல் கடைந்தகாலத்து அதினின்று எழுந்த பயங்கரமான விஷத்தின் வெப்பத்தைப் பொறுக்கமாட்டாமல் அஞ்சியோடின தேவர்கள் முதலியோரது வேண்டுகோளாற் சிவபிரான் அதனை உட்கொண்டு கண்டத்தில் நிறுத்தி அவர்களைக் காத்தருளின ரென்பது கதை. (80)

81. - (இ - ள்.) மின்னும் மணி வேழத்தால் - விளங்கியசைகிற அடிக்கும் மணிகளையுடைய ஐராவத யானையை யுடைமையாலும், மேவு அரம்பையால் – விரும்பப்படுகிற அரம்பையென்னுந் தெய்வமகளை யுடைமையாலும், (மின்னும் அணி வேழத்தால் - விளங்குகிற அழகிய கரும்புகளை யுடைமையாலும், மேவு அரம்பையால் - பொருந்திய வாழைமரங்களை யுடைமையாலும்), வயல்கள் - கழனிகள், பொன் உலகுக்கு ஒப்பு ஆம் - பொன்மயமான தேவலோகத்துக்குச் சமமாகப் பெற்ற, புலியூரே - புலியூரானது, உன்னி - (நம்மைத் தியானித்து, ஒரு கால் ‘நம:’ என்றார் ஒருதரம் நம' என்று கூறி வணங்கிய அடியார்களது, கருத்து - மனத்திலே, உற்று - பொருந்தி, உருத்து எதிர்ந்த தானம் மா வென்றார் - கோபித்து எதிரிட்ட மதசலத்தையுடைய விலங்காகிய யானையை வென்றிட்டோராகிய சிவபிரானது, தலம் - இடமாம். (எ-று.)

அரம்பை, நமா – வடசொற்றிரிபுகள். நம: - வணக்கம். (81)

82. - (இ-ள்.) மா கம் உறைந்து - சிறந்த விண்ணுலகத்தில் வசித்து, ஆம் மை - பொருந்திய மேகத்தையும், வெள்ளை வாரணம் - (ஐராவதமென்னும்) வெள்ளையானையையும், ஊர்ந்து - (வாகனமாகக் கொண்டு) ஏறி நடத்தி, (மா கம் உறைந்து - மிகுந்த நீர் பொருந்தி, ஆமை வெள்ளை வாரணம் ஊர்ந்து - ஆமைகளும் வெண்ணிறமான சங்கங்களுந் தவழ்ந்து), ஓடை - நீரோடைகள், மகம் போகி நிகர் ஆகும் - (நூறு) அசுவமேத யாகத்தையுடைய தேவேந்திரனுக்குச் சமமாகப் பெற்ற, புலியூரே - புலியூரானது, தோகை மயில் புள் ஏறி வருவார் - கலாபத்தையுடைய மயிலாகிய பறவையின் மேல் ஏறிவருகிற முருகக்கடவுளுடைய, போதம் மழலைக்கு - ஞானோபதேசமாகிய குதலைச்சொற்களுக்கு, உவந்தார் - மகிழ்ந்தவரும், வெள் ஏறு இவருவார் - வெண்ணிறமான இடபத்தின்மேல் ஏறுபவருமாகிய சிவபிரானது, வீடு - தங்குமிடமாம்; (எ - று.)

போகி - போகமுடையவன்; போகம் - சுகாநுபவம், வெள்ளை – பண்புப்பெயர்; ஐ - விகுதி. இவருவார், இவர் - பகுதி, உ - சாரியை. (82)

83. – (இ - ள்.) தேன் திகழும் - வண்டுகள் மொய்க்கும்படியான, மா மலர் - சிறந்த பூக்களை, ஏந்தி - (கைகளில்) எடுத்து, பரவி - துதித்து, தாழ்ந்து - வணங்கி, (தேன் திகழும் ஆம் அலர் ஏந்தி - தேன் போல் இனிமையாய் விளங்குகிற மிகுதியான நீரையுடைத்தாய், பரவி - விசாலமாய், தாழ்ந்து - ஆழமாய், அடியார் போன்ற - சிவனடியாரையொத்த, அகழி - அகழியினால், சூழும் - சூழப்பட்ட, புலியூரே – புலியூரானது, உளத்தின் ஊன்றி - (தத்தம்) மனத்திலே பதியவைத்து, அயன் - பிரமனும், நத்தன் - சங்கத்தையுடைய திருமாலும், உவந்து - விரும்பி, தொழுது - வணங்கி, ஏத்தும் - துதிக்கப்படுகிற, குளத்தில் நயனத்தன் - நெற்றியில் (நெருப்புக்) கண்ணையுடைய சிவபிரானது, குடி - வசிக்குமிடமாம்; (எ - று.)

போன்ற கழி - விகாரம். அகழப்படுவது, அகழி, அகழ்தல் - தோண்டுதல், இ - செயப்படுபொருள் விகுதி. (83)

84. - (இ-ள்.) நூல் அளவிட்டு - சாஸ்திரங்களை, அளவுசெய்து - முழுவதுமறிந்து, உயர்ந்து - மேன்மை பெற்று, நீறு அணிந்து - விபூதியைத் தரித்து, (நூல் அளவு இட்டு - எற்று நூலால் அளவு செய்யப்பட்டு, உயர்ந்து - ஓங்கி, நீறு அணிந்து - வெண்ணிறச்சுண்ணம் பூசி), ஆசு இல் மதில் - சிற்பக் குற்றமில்லாத மதில்கள், பூசுரர்போல் ஆகும் - அந்தணர்போலாகப்பெற்ற, புலியூரே - புலியூரானது, மாசு கழலாத - குற்றம் நீங்காத, வல் மதியார்கண் - கொடிய அறிவையுடைய அடியவரல்லாதவரிடத்து, உறார் - பொருந்தாதவரும், கண் ஆம் - (தமது மூன்று) கண்களாகிய, அழல் ஆதவன் மதியார் - அக்கினியையுஞ் சூரிய சந்திரரையும் உடையவருமாகிய சிவபிரான், ஆர்வு - தங்குமிடமாம்; (எ - று.)

பூசுரர் - பூமியில் தேவர்போல விளங்குபவர். ஆங்கு - அசை. (84)

85. - (இ - ள்.) எல் கோ - விளக்கமான கண்களையுடைய, வரை மலைபோலப் பெரிய, ஆகு - பெருச்சாளியை, இவரலால் - (வாகனமாக) ஏறுதலால், (எல் கோ வரை ஆகி வரலால் - பகற்பொழுதக்குத் தலைவனான சூரியன் வரையிலும் உயர்ந்து வருதலால்), ஐங்கரன் நேர் - விநாயகமூர்த்தியையொத்த, பொன் கோபுரம் சேர் - அழகிய கோபுரங்களையுடைய, புலியூரே – புலியூரானது; நல் காற்கு இசைக்கும் – (தனது) நல்ல (அழகிய) கால்களில் ஒலிக்கின்ற, சிலம்பினான் - சிலம்பென்னும் அணியையுடையவனும், ஈரைம் முகத்தான் அசைக்கும் - பத்துத்தலைகளையுடைய இராவணனால் அசைக்கப்பட்ட, சிலம்பினான் - (கைலாச) பருவதத்ததையுடையவனுமாகிய சிவபிரான், ஆர்வு - விரும்பி வாழுமிடமாம்; (எ-று)

ஓரசுரன் பெருச்சாளி வடிவங்கொண்டு முனிவர்களை வருத்த, அவர்கள் வேண்டுகோளால் விநாயகமூர்த்தி அம்மூஷிகத்தையடக்கி வாகனமாகக் கொண்டனரென்பது கதை. ஐங்கரன் - நான்கு திருக்கரங்களோடு துதிக்கையுமாகிய ஐந்தையுடையவன். (85)

86. - (இ - ள்.) அடுத்தோர்க்கு - (தன்னை) அடுத்த அடியார்களுக்கு, கால் காட்டி - (தனது) திருவடிகளைத் தரிசனந்தந்து, ஆறு தலைக் காட்டி - ஆறு திருமுகங்களையும் தரிசனந்தந்து; [அடுத்தோர்க்கு - (தன்னிடம்) அடுத்த மனிதர்களுக்கு; கால் காட்டி - .....காற்றை (த்தன்னிடம்) காண்பித்து, .......... காட்டி - இளைப்பாறும் வகையைக் காண்பித்து] அயில் வேள் போல் - வேலாயுதத்தையுடைய முருகக்கடவுளையொத்த, காவனம் - மரங்களைக்கொண்ட காடு; சூழ் - சூழ்ந்த; புலியூரே - புலியூரானது, அங்கு- அக்காலத்தில், கோலக்குட்டிக்கு - பன்றிக் குட்டிகளுக்கு, பால் ஊட்டினார் - முலைப்பாலை ஊட்டியதாய்; அன்று - அக்காலத்தில்; மாமனுக்கு - (தமது) மாமனாகிய தக்கனுக்கு; கொச்சைமுகம் - ஆட்டுத்தலையை, ஒட்டி - சேர்த்து, கம் - தலையாக; கூட்டினார் - பொருத்தினவருமாகிய சிவபிரானது, ஊர் - தலமாம். (எ-று)

பிருகஸ்பதி பகவானது சாபத்தின்படி இளமையிலேயே தந்தையையுந் தாயையுமிழந்த பன்னிரண்டு பன்றிக்குட்டிகள் படுகிற வருத்தத்தை மதுரைச் சோமசுந்தரக் கடவுள் நோக்கிப் பெருங்கருணை கூர்ந்து உடனே தாய்ப்பன்றியின் வடிவமெடுத்து முலைகொடுத்துப் பாலூட்டி அவற்றைக் காத்தருளினரென்பது கதை. இவ்வரலாற்றை இங்கேயெடுத்துக் கூறியது, இழிந்த அஃறிணைப் பொருளிடத்தும் வரம்புகடந்து அருள்கூர்கிற கடவுளது காருண்யத்தைக் காட்டுதற்கு. பாண்டிநாட்டில் குருவிருந்ததுறையென்னுமூரில் வாழும் சுகலனென்னும் ஒரு வேளாளன் பெற்ற பன்னிரண்டு பிள்ளைகளும் பெற்றோரிறந்தபின் வேடரோடு கூடி வனத்திற் சென்று அங்குத் தவம் செய்து கொண்டிருந்த பிருஹஸ்பதி பகவானது யோகநிலை குலையும்படி அவர்மேற் கல் முதலியவற்றை வாரிவீச, அவர் சினங்கொண்டு பன்றிகளாம்படி சபிக்க, அங்ஙனமே அப்பிள்ளைகள் பன்றிக்குட்டிகளாயினரென்றும் இவற்றின் தந்தையுந் தாயுமாகிய பன்றிகள் ராஜராஜபாண்டியனால் வேட்டையிற் கொல்லப்பட்டு இறந்தன வென்றும் அறிக. சிவபிரான் கட்டளைப்படி வேள்வியை யழித்துத் தக்க முனிவனைத் தலையைத் துணித்த வீரபத்திரக்கடவுள் பின்பு பிரமன் வேண்டுகோளால் அச்சிவனருளிய ஆணையின்படி ஓராட்டுத் தலையைத் தக்கனுடம்பின் மீது வைத்துப் புணர்த்தி அவனையுய்ந்தெழும்படி செய்தருளினரென்பது கதை. உமாதேவி ஒருகாலத்தில் தக்கன்மகளாய்ப் பிறந்து பரமசிவனை மணஞ்செய்து கொண்டதனால், தக்கன் சிவனுக்கு மாமனாராவன்; மாமன் - இங்கே, மனைவியின் தந்தை. (86)

87. - (இ – ள்) மெய் பவம் காய்ந்து - உண்மையாக (த்தன்னை யோது வாரது) பாவங்களை ஒழித்து, அங்கு அமலம் மிக்க - அவ்வாறு தூய்மை மிகுந்த, (மெய் பவம் காய்ந்து - (தன்னில் மூழ்கியவரது) உடம்போடு கூடிய பிறப்புக்களை யொழித்து, அம் கமலம் மிக்க – அழகிய தாமரை நிறைந்த), சிவகங்கையது - சிவகங்கையென்னும் புண்ணிய தீர்த்தமானது, பொய்ப்பு இல் மறைக்கு ஒப்பு ஆம் - பொய்படுதலில்லாத வேதங்களுக்குச் சமமாகப் பெற்ற, புலியூரே - புலியூரானது, மை பனைபோல் தொங்கு – கரிய பனைமரம் போல(ப்பரியதாய்)த் தொங்குகிற, அத்தனுக்கு – (துதிக்)கையையுடைய விநாயகமூர்த்திக்கு, ஐயர் - தலைவரும், தூய நெடு மால் வரை ஆம் - தூய்மையையுடைய உயர்ந்த பெரிய மேருகிரியாகிய, தங்கம் தனு - பொன்மயமான வில்லை ஏந்திய, கையர் - கையையுடையவருமாகிய சிவபிரான், சார்பு - சார்ந்துள்ள இடமாம்; (எ-று).
பொய்ப்பு இல் மறை - உண்மையே கூறும் வேதம். அத்தன் - ஹஸ்தன், வடசொற்றிரிபு. மேரு பொன் மலையாதலின், தங்கத்தனு என்றது. (87)

88. - (இ - ள்.) கால் ஆயிரத்தால் - ஆயிரங்கால்களையுடைமையாலும், கதிர் மணி சூட்டால் - ஒளியையுடைய மாணிக்கத்தையுடைய உச்சிக்கொண்டையை யுடைமையாலும், [கால் ஆயிரத்தால் – ஆயிரந்தூண்களை யுடைமையாலும், கதிர்மணி சூட்டால் - விளங்குகின்ற இரத்தினங்களைப் பதித்த சிகரத்தையுடைமையாலும்] சேடன் போல் - ஆதிசேஷனையொக்கின்ற, ஆலயம் - மண்டபம், சேர் - பொருந்திய, புலியூரே – புலியூரானது, - பால் ஆழி தந்த நஞ்சும் - பாற்கடலுண்டாக்கிய விஷத்தையும், அப்பு ஆர்தமையும் - கங்காஜலம் ஆத்திப்பூமாலை என்பவற்றையும், களம் சடை இட்டு - (முறையே) கண்டத்திலுஞ் சடையிலும் வைத்து, இந்தநம் சுமப்பார் – விறகைச் சுமந்தவராகிய சிவபிரானது, இடம் - வீடாம். (எ-று.)

பாம்பிற்கு உடம்பு முழுவதிலும் கால்களுள்ளன வென்பராதலின், 'காலாயிரத்தால்’ என்றது. ஆலயம் என்றது, இங்கே கோயிலின் ஒருபகுதியாகிய ஆயிரக்கால் மண்டபத்தை நஞ்சு களத்து இட்டு, அப்பு ஆர் தமைச் சடையிட்டு என்று முறையே சென்று இயைதலால், மூன்றாமடி - முறைநிரனிறைப் பொருள்கோள். வடதேசத்திலிருந்து அநேகஞ் செயவிருதுகளுடனே தனது மாணாக்கர் பலரோடும் மதுரைக்குவந்து அரசனாற் பலவாறு சம்மானிக்கப்பட்டு அளவுக்கு மிஞ்சின செருக்குக் கொண்டு திரித்த ஏமநாதனென்பானொரு வீணைப்பாடகனை வெல்ல விரும்பிய அம்மதுரையில் ராஜஸமஸ்தான பாடகனாகிய பாணபத்திரனென்பவனது வேண்டுகோளாற் சோமசுந்தரக்கடவுள் ஒரு விறகு தலையனாச் சென்று ஏமநாதன் வீட்டையடைந்து வீணை மீட்டி அதிறசாதாரியென்னு மிராகத்தையமைத்து வாசித்துக் கருவியுங் கண்டமுமொக்க யாவரும் வியக்குமாறு பாடி அவனை அன்றைக்கே நாணங்கொண்டு அஞ்சியோடிப் போம்படி செய்தன ரென்பது கதை, இந்தநம் - வடசொல். (88)

89. - (இ-ள்.) தக்க கலை தெரியல் தன்னால் - சிறந்த சாஸ்திரங்களை ஆராய்தலினால், [(ஆகமவிதிப்படி தனக்கு) ஏற்ற ஆடயையும் பூமாலையையு முடைமையாலும்], வியாசரை ஒப்பு – வேதவியாச முனிவரைப் போலுதலையுடைய, கொடி கம்பம் - துவசஸ்தம்பம், சேர் - பொருந்தப்பெற்ற, புலியூரே - புலியூரானது, எக்கியத்தில் - (தக்க முனிவனது) வேள்வியில், ஆதவனார்- சூரியதேவன், பல்லு கெட்டு - பல்லுடைந்து, பாற - ஓடும்படி, புடைத்து - அடித்து, மறை சொல்லுக்கு எட்டாதவனர் - வேதவாக்கியங்களுக்கு எட்டாதவராகிய சிவபிரான், தோய்வு - பொருந்துமிடமாம்; (எ-று.)

கலைதெரியல் - உபமானத்தில், இரண்டனுருபுத்தொகை; உபமேயத்தில், உம்மைத்தொகை. வியாஸர் என்னும் வடசொல்லுக்கு - (வேதங்களை) வகுத்தவரென்று பொருள். கம்பம் - ஸ்தம்பம், எக்கியம் - யஜ்ஞயம், ஆதவன் - ஆதபன்; வடசொற்றிரிபுகள். ஆதபன் – நன்றாய்த்தபிப்பவன். வீரபத்திரக்கடவுள் தக்கன் வேள்வி தகர்த்த காலத்திற் பல்லுதிர்ந்தவன். துவாதசாதித்தருள் பூஷா என்பவனென அறிக. வியாசர் தக்கலை தெரி யல் - வேதங்களையும் புராணங்களையும் ஆராய்ந்து வரையறைசெய்து ஒழுங்குபடுத்தல். (89)

90. - (இ-ள்) பாடும் இசையால் – பாடுகிற சங்கீதத்தையுடைமையாலும், தனம் கும்பத்தால் - கொங்கைகளாகிய குடங்களை யுடைமையாலும், பாடும் இசையால் - (யாவராலும்) துதித்துப்பாடப்படுகிற கீர்த்தியை யுடைமையாலும், தனம் கும்பத்தால் - பொன்னினாலாகிய கலசத்தை யுடைமையாலும், சினகரம் - தேவாலயம், பூடணம் வெள் மின்னாள் ஆம் - ஆபரணங்களையணிந்த வெண்ணிறமுடைய மின்னல்போன்ற சரசுவதியை யொக்கப்பெற்ற, புலியூரே – புலியூரானது; வேடன் அடி தரிக்கும் - வேடர் குலத்தில் தோன்றிய கண்ணப்ப நாயனாரது பாதத்தை மேற்கொண்ட, கோவார் - கண்ணையுடையவரும், ஆலம் குடித்து - விஷத்தையுண்டு, அமரர் துயர் அரிக்கும் - தேவர்களது துன்பங்களை யொழித்த, கோவார் - (யாவர்க்கும்) தலைவருமாகிய சிவபிரானது, குடி - இருப்பிடமாம்; (எ-று)

திண்ணனது பத்திநிலையை சிவகோசரியார்க்குத் தெரிவிக்கும்பொருட்டு, சிவபிரான், திண்ணனார் பூசைசெய்ய வருகையில், தமது வலக்கண்ணினின்று இரத்தஞ் சொரியப்பண்ண, திண்ணனார் பலவகை மருந்துகள் செய்தும் அவ்விரத்தம் தடைபடாமை கண்டு, தமது கண்ணை அம்பினாலேயிடந்து சுவாமியினுடைய கண்ணிலே அப்பிய மாத்திரத்தில் இரத்தந் தடைப்பட்டதைக் கண்டு அளவிலா மகிழ்ச்சி கொண்டிருக்கையில், திருக்காளத்தீசுவரர் மற்றொரு கண்ணினின்றும் இரத்தம் சொரியப்பண்ண, அங்கும் தமது மற்றொரு கண்ணைத் தோண்டியெடுத்து அப்பக்கருதி, அக்கண்ணையிழக்குங் காலத்தில் சுவாமியுடைய கண் இன்னவிடத்திருக்கிறதென்று தமக்குத் தெரியும் பொருட்டுத் தமது ஒரு செருப்புக்காலை அவர் கண்ணருகிலே யூன்றிக்கொண்டு, பின்பு தமது கண்ணைத் தோண்டத் தொடங்கினரென்பது கதை. தனம் என்னும் செல்வத்தின் பெயர். இங்கே இலக்கணையாய்ப் பொன்னையுணர்த்திற்று. சினகரம் - ஜினக்ருஹம் என்னும் வடசொல்லின் சிதைவு; இந்த ஜினாலயத்தின் பெயர், பின்பு எல்லா ஆலயங்கட்கும் பொதுப்பெயராய் வழங்கலாயிற்று; இதனை அஜநக்ருஹமென்றதன் சிதைவென்றுங் கொள்ளலாம். பிறப்பில்லாத கடவுளின் கோயிலென்று பொருள்படும். பூஷணம் - வடசொல்; அலங்காரஞ்செய்வதென்று பொருள் (90)

91. - (இ-ள்.) வான்மீது எழும் புகையால் - ஆகாயமார்க்கத்திலே உயர்ந்து செல்லுதலாலும், மா இரதத்தால் - குதிரை பூண்ட தேரையுடைமையாலும், [வான்மீது எழும் புகையால் - ஆகாயத்தின் மேல் எழுகிற புகையையுடைமையாலும், மா விரதத்தால் - சிறந்த விரதங்களை அநுஷ்டித்தலாலும்], கதிரோன் போல் - சூரியன் போன்ற, மா மகம் - பெரிய யாகங்களை, செய் - செய்தற்கிடமான, புலியூரே - புலியூரானது, தேன் மாறா - தேன் நீங்காத, ஆயிரம் தோடு துலங்கு - ஆயிரம் இதழ்கள் விளங்குகிற, அம்புயன் - தாமரைப் பூவில் வாழும் பிரமனது, தலையை - சிரசை, ஓடு ஆய் - பிச்சையோடாகக் கொண்டு, இரந்தான் - பிச்சையெடுத்தவனாகிய சிவபிரான், உறைவு - வசிக்குமிடமாம்; (எ - று )
தான் - அசை.
ஆய் - ஆக; செயவெனெச்சத்தின் திரிபு, அம்புஜம் - நீரிற்பிறப்பது. (91)

92. - (இ-ள்) ஆம் கருணையோடு - பொருந்தின அருளுடனே, அமுது ஈந்து - (தனது) அமிர்த கிரணங்களைக் கொடுத்து, அங்கு அ அலை நீக்கி - அவ்வாறு அப்படிப்பட்ட இருளை ஒழித்து, (ஆம் கருணையோடு - நிறைந்த பொறிக்கரியுடனே, அமுது ஈந்து - இனியவுணவை (எவர்க்குங்) கொடுத்து, அம் கவலை நீக்கி - நீரைப்பற்றிய தாகக்கவற்சியையு மொழித்து, மடம் - சத்திரங்கள், பூ கலை இந்து ஒப்பு ஆம் - அழகிய கலைகள் நிறைந்த சந்திரனுக்குச் சமமாகப்பெற்ற, புலியூரே - புலியூரானது, வாங்கும் - பெற்ற, வரம் - வரத்தையுடைய, கம்பலம் - அச்சந்தருந்தன்மையுள்ள, வாணன் - பாணாசுரனது, வாயில் - வீட்டு வாயிலை, காத்து - காவல்பூண்டு, அன்பர்க்கு இரங்கும் - தன் அடியார்க்கு அருள் செய்யுந்தன்மையுள்ள, அம்பலம் வாணன் - பொன்னம்பலத்தில் வாழ்பவராகிய சிவபிரானது, இல் - இடமாம்; (எ - று.)

பாணாசுரனென்பவன் ஒருகாலத்திற் சிவனைக் குறித்துப் பலநாள் அருந்தவஞ்செய்து முடிக்க, அவன் அவனுக்குப் பிரத்தியட்சமாய்த் திருநடனக் காட்சி தந்தருள, அப்பொழுது அவன் இரண்டு கைகளாலும் அழகாக மத்தளந்தட்ட, சிவபிரான் அருள்கூர்ந்து அவனுக்கு ஆயிரங்கைகளையும் நெருப்பு மதிலையும் அளவிறாத பலத்தையும் மிக்க செல்வத்தையும் மற்றும் பல வரங்களையுங் கொடுத்தருள, பெற்றுவாழ்ந்திருந்த அவ்வசுரராசன் மற்றொருகாலத்தில் கைலாசத்துச்சென்று பரமசிவன் நடனஞ்செய்கையில் தனது ஆயிரங் கரங்களாலும் மிருதங்கம் அடிக்க, சிவபிரான் அவன் பக்கல் மிக்க அன்புகொண்டு, ‘வேண்டிய வரங்கேள்' என்ன, அவன் அப்பொழுது ‘உன்னை எப்பொழுதும் தரிசிக்கும்படி நீ அம்பிகையோடும் விநாயக சுப்பிரமணியரோடும் பிரதமகணங்களோடும் என் மாளிகை வாயிலில் இருந்தருள வேண்டும்' என்று வேண்ட, அவனுக்கு அங்ஙனமே அருள்தந்து அவன் வாயிலிற் கடவுள் காவல் செய்திருக்கின்றனரென்பது கதை. கம்பலையென்பது கம்பலம் என ஈறுதிரிந்தது. இனி, கம்பலம் - போரையுடைய வாணனென்றும் உரைக்கலாம், ஒருகாலத்தில் சிவபிரானையே வாணன் செருக்கினாற் போருக்கழைத்தான். கம் பல் என்று பிரித்து, பலதலைகளையுடைய என்று உரைத்தல் கதைக்குப்பொருந்தாது. வாணன் –வடசொற்றிரிபு. வாயில் - இல்வாய் என்பதன் இலக்கணப்போலி. வீட்டின் முன்னிடமென்று பொருள். அல் என்பதன் இரண்டாம் வேற்றுமையாகிய அல்லையென்பது, அலையெனத் தொக்கது. வாணன் – வாழ்நன். மடம் - பெரியோர் வசிக்குமிடம். (92)

93. - (இ-ள்.) ஐ அம்பு எய்த – ஐந்து மலரம்புகளைப் பிரயோகித்து, தார் அணி மகிழ் இட்டு - மாலையாகப் பொருந்தின மகிழம்பூவைத் தரித்து, [ஐயம் பெய்து – (இரப்பவர்க்குப்) பிச்சையிட்டு, தாரணி மகிழ் இட்டு - உலகத்தவர்க்கு மகிழ்ச்சியைச் செய்து] அங்கசன் போல் - மன்மதனையொக்கின்ற, பொய் இல் சத்திரம் - (எவர்க்கும்) தவறுதலில்லாத சத்திரங்கள், சூழ் - சுற்றிலுமிருக்கப்பெற்ற, புலியூரே – புலியூரானது; பை அரவு மீது ஆம் - படத்தையுடைய பாம்புகள் (ஆபரணமாக) மேலே பொருந்தப்பெற்ற, புயத்தினார் - திருத்தோள்களையுடையவரும், மிக்க முயல் மேல் அழுத்தும் - வலிமை மிகுந்த முயலகன் மேலே அழுந்த வைத்த, பாத அம்புயத்தினார் – திருவடித்தாமரையை யுடையவரும் ஆகிய சிவபிரான், பற்று – விரும்பியெழுந்தருளியிருக்கு மிடமாம்; (எ - று.)

"விலக்கில் சாலை யாவர்க்கும்'' என்றார் சிந்தாமணியாரும். முயல் - முயலகன் என்பதன் விகாரம், தாருகவன முனிவரேவிய முயலகனென்னுங் கொடியவனது முதுகின்மீது பரமசிவன் திருவடியை ஊன்றி நடித்தாரென்பது பிரசித்தம். மன்மதனது பஞ்சபுஷ்பபாணங்கள் - தாமரை, அசோகம், மா, மல்லிகை, நீலோற்பலம் என்பன. தாரணி - தரணி; வடசொல்விகாரம் . ஏ – அசை. (93)

94. - (இ-ள்.) மால் புணர்ந்து - பெருமையைப் பொருந்தி, நீறு அணிந்து - விபூதியைத் தரித்து, மா மதி மேலிட்டு - சிறந்த அறிவு மிகுந்து, (மால் புணர்ந்து - மேகமண்டலத்தைச் சேர்ந்து, நீறு அணிந்து - வெண்ணிறச் சுண்ணம் பூசப்பட்டு, மா மதி மேல் இட்டு - பெரிய சந்திரன் தன்மீது பொருந்தப்பெற்று), உயர்ந்தோர் போல் - பெரியோர்களை ஒக்கின்ற, பல மாடம் - அநேக உப்பரிகை வீடுகள், சேர் - பொருந்தப்பெற்ற, புலியூரே – புலியூரானது, சூல் பெறு - சினையைப்பெற்ற, வெண் கோடு - வெண்ணிறமான சங்குகளை, உந்து - கொழித்துத் தள்ளுகிற, அலை - அலைகளையுடைய கடல், வளை - சுழ்தலையுடைய, பார் - நிலவுலகத்திலுள்ளவர்கள், கூப்ப (தம்மைக்) கைகுவித்து வணங்க, மறை சேய்க்கு – வேதம்வல்ல பிராமணகுமாரன் பொருட்டு, அயன் முன் தேடும் தலைவளைப்பார் - பிரமன் முன்னொருகால் தேடிக் காணாமற்போன (தமது) முடியை வணக்குபவராகிய சிவபிரான்; சேர்வு - தங்குமிடமாம்; (எ - று.)

பிற்பாதியிலுள்ள கதை, கீழ் ஐந்தாஞ் செய்யுளுரையிற் கூறப்பட்டது. பார் - ஆகுபெயர். (94)

95. – (இ-ள்.) எப்போதும் நல் மணம் தோய்ந்து - எல்லா மலர்களும் சிறந்த வாசனை பொருந்தி, ஏற்பவர்க்கு இட்டு - வந்து யாசிப்பவர்க்குத் தானஞ்செய்து [எப்போதும் நல்மணம் தோய்ந்து - எப்பொழுதும் நல்ல .......... பொருந்தி, ஏற்பவர்க்கு இட்டு - தக்கவர்க்கு இடங்கொடுத்து], ஐந்தரு ஒப்புப் பேசும் - பஞ்ச தேவதருக்களுக்குச் சமமாகச் சொல்லப்படுகிற, வீதி – தெருக்களையுடைய; புலியூரே - புலியூரானது; மெய்ப்பு ஆன - வண்மை பொருந்தின; நந்தி - நந்திதேவரை, பரியார் - வாகனமாகக் கொண்டவரும், நளினத்து அயன் அரிக்கும் - தாமரைப்பூவில் வாழ்கிற பிரமனுக்கும் திருமாலுக்கும்; சந்திப்பு அரியார் - சேர்தற்கு அருமையானவருமாகிய சிவபிரானது; தலம் - இடமாம்; (எ-று).

ஏற்பவர், ஏல - பகுதி. ஐந்தரு - சந்தானம், மந்தாரம், பாரிஜாதம், கல்பகம், அரிசந்தனம் என்பன. மெய்ப்பு - மெய்ச்சுதல், கொண்டாடப்படுதல் என்றுங் கொள்ளலாம். பரி என்னுங் குதிரைப் பெயர், இங்கு, வாகனமென்னு மாத்திரமாய் நின்றது. நளினத்து என்பதை அரிக்குங் கூட்டி, திருவுந்தித்தாமரையையுடைய என்றும் பொருள் கொள்ளலாம். (95)

96. - (இ-ள்.) சோபனத்தை சேர்ந்து - மங்களத்தை யடைந்து, செங்கோல் தூக்கி - செங்கோலையேந்தி, [சோபனத்தை சேர்ந்து - படிகளைப் பொருந்தி, செம் கோல் தூக்கி -
ஒழுங்கான தூண்கள் நாட்டப்பட்டு], உயர் தோரணம் - உயர்ந்த தோரணம், பூபதிக்கு ஒப்பு ஆகும் - அரசனுக்குச் சமமாகப்பெற்ற; புலியூரே - புலியூரானது; தாபரம் - நிலைபெற்ற, எண்திக்கு எனும் - எட்டுத்திக்குகளென்கிற, ஆசாரத்தார் - ஆடையையுடையவரும், சிட்டர் நெஞ்சுள் தித்திக்கும் - பெரியோர்களது மனத்தில் இனிக்கிற இக்கு எனும் மா சாரத்தார் - கரும்பையொத்த மிக்க சுவையுடையவருமாகிய சிவபிரானது; இல் - இடமாம். (எ-று)
தோரணம் - வெளிவாயிலென்றுங் கொள்ளலாம். சோபனம் - படியென்னும் பொருளில் ஸோபானம் என்னும் வடசொல்லின் விகாரம், பூபதி – பூமிக்குத் தலைவன், தாபரம் - ஸ்த்தாவரம், சிட்டர் - சிஷ்டர்; வடசொற்றிரிபுகள். தித்திக்கும் என்னும் பெயரெச்சத்தில், தித்தி - பகுதி . (96)

97. - (இ-ள்.) அம் மழை கண்னால் - அழகிய மழைபோலக் குளிர்ந்த கண்களையுடைமையாலும், காலால் ஆடுதலால் – (தமது) பாதங்களால் நர்த்தனஞ் செய்தலாலும்; [அ மழை கண்ணால் - அந்த மேகமண்டலத்தினிடத்தை யளாவுதலாலும் காலால் ஆடுதலால் - காற்றால் அசைதலாலும்], கேதனங்கள் - துவசங்கள், பொம்மல் முலையார் ஆம் - பொலிவையுடைய தனங்களையுடைய மகளிரை யொத்திருக்கப்பெற்ற, புலியூரே - புலியூரானது, பொங்கு அரவின் - சீறுகின்ற நாகங்களாகிய, நல் பணி - சிறந்த ஆபரணங்களை, சம்மதி ஆய் - உடன்பட்டு, வார் பொன் சடைக்கு இட்டார் - நீண்ட பொன்னிறமான சடையில் தரித்தவரும், கிரணம் செம் கரம் இனன் பணிவார் -கிரணங்களாகிய சிவந்த கைகளையுடைய சூரியனால் வணங்கப்படுபவருமாகிய சிவபிரான், சேர்வு - சேருமிடமாம். (எ-று)

கேதகம், ஸம்மதி, இநன் - வடசொற்கள். பொம்மல் - பருமையுமாம். ஆம் - உவமவுருபு. (97)

98. - (இ-ள்) மால் அகலம் உற்று - திருமாலின் திருமார்பைச் சேர்ந்து, மணி வடம் பூண்டு - இரத்தின ஆரத்தை அணிந்து, [மால் அகலம் உற்று – மிக்க விசாலம் பொருந்தி, மணி வடம் பூண்டு (அடிக்கும் மணிகளையும் (இழுக்கும்) வடங்களையும் உடைத்தாய்), இந்திரையாள் போல - திருமகளை ஒக்கின்ற, இரதம் - தேர்கள், ஆரும் - பொருந்தப்பெற்ற, புலியூரே – புலியூரானது; பாலனை கொல்வான் – (தமது, குமாரனைக் கொன்றவரான சிறுத்தொண்ட நாயனாரது, அகத்தை - மாளிகையிலுள்ள, ஊன் - தசையை; தினார் - புசித்தருளாதவரும், வாள் அரக்கன் மா முடிமேல் – வாளாயுதத்தையுடைய இராவணனது பெரிய தலைகளின் மேல், கால் நகத்தை ஊன்றினார் - (தமது) இடக் காற்பெருவிரலின் நகத்தை அழுத்தினவருமாகிய சிவபிரான்; காப்பு - காக்குமிடமாம்; (எ-று)

இந்திரை – இந்திரா என்னும் வடமொழித்திரிபு; அகத்தையெனவுள்ள ஐகாரத்தை உருபுமயக்கமென்றாவது சாரியையென்றாவது கொள்க; இராவணனுக்கு வாள், சிவபிரான் பின்னர் அவசெய்த சாமவேதகீதத்துக்கு மகிழ்ந்து ஈந்தது. கால் நகத்தை ஊன்றினார் - தனது திருவடியால் கைலாச மலையை அழுத்தியவரென்றுங் கொள்ளலாம். இராவணன் தனது பேராற்றலால் இருபது கைகளையும் கீழ்க்கொடுத்துக் கைலாசமலையைப் பெயர்த்து எடுத்துத் தனது பத்துத் தலைகளின்மீதும் வைத்துத் தூக்கி அப்பாலெறிந்துவிட்டுச் செல்வதாக முயலுகையில் சிவபிரான் திருவடி விரலையூன்றி அழுத்த, அம்மலையின் கீழகப்பட்டு அவ்விராவணனது தலைகளும் கைகளும் நெரிந்தனவென்க; "கடுகிய தேர்செலாது கயிலாயமீது கருதே லுன்வீர மொழி நீ, முடுகுவ தன்று தன்ம மெனநின்று பாகன் மொழிவானை நன்று முனியா, விடுவிடு வென்று சென்று விரைவுற் றரக்கன் வரையுற் றெடுக்க முடிதோள், நெடுநெடு விற்று வீழ விரலுற்ற பாத திசை நினைவுற்ற தென்றன் மனனே" எனத் திருநாவுக்கரசு நாயனாரும், ''பாங்கிலா வரக்கன் கயிலையன் றெடுப்பப் பலதலை முடியொரு தோளவை நெரிய, வோங்கிய விரலா லூன்றியன் றவற்கே யொளிதிகழ் வாளது கொடுத்து" எனத் திருஞானசம்பந்தமூர்த்திநாயனாரும், “அரக்கன் முடிகரங்க ளடர்த்திட்ட வெம் மாதிபிரான்" எனச் சுந்தரமூர்த்திநாயனாரும் அருளிச்செய்தவாறு காண்க. 'இரதமூரும்' என்ற பாடத்துக்கு தேர்கள் செல்லு மென்க. (98)

99. - (இ-ள்.) செல்வம் திருந்திடலால் - ஐசுவரியம் மிகுந்திருத்தலால், சேர் முடத்தால் - பொருந்தின முடத்தன்மையினால், (செல் வந்து இருந்திடலால் - மேகம் வந்து தன்மீது) தங்கப் பெறுதலால், சேர் முடத்தால் - பொருந்தின வளைவுத்தன்மை யுடைமையால், பிங்கலன் நேர் புலலும் - குபேரனுக்குச் சமமாகப் பொருந்தின, தெங்கு - தென்னைமரங்கள், ஓங்கும் - உயர்ந்திருக்கப்பெற்ற, புலியூரே - புலியூரானது, மெல் இதழ் வாய் விண்ட - மென்மையான பூவிதழ்கள் முறுக்கு மலர்ந்த, கடுக்கையான - கொன்றைமாலையையுடையவரும், மேல் நாள் - முன்னொருகாலத்தில், அமரருக்கு ஆ - தேவர்களைக் காக்கும் பொருட்டாக, உண்ட - அமுது செய்தருளின, கடு - விஷம், கையார் - கைக்கப்பெறாதவருமாகிய சிவபிரானது, ஊர் ஊராம்; (எ – று).

கைலாசமலையின் ஒருபக்கத்திலிருந்து தவஞ்செய்துநின்ற குபேரன் அங்கிருந்த உமாதேவியை ஊன்றிப்பார்த்த காரணத்தாற் கண்ணொளிபசந்து ‘....காஷிபிங்களன்' எனப் பெயர் பெற்றான். பிங்கலன் - பிங்கள நிறமுடையவன்; பிங்கலம் - கறுப்புக்கலந்த பொன்னிறம். குபேரனுக்கு முடத்தன்மை நேர்ந்த வரலாற்றை வந்தவிடத்திற் காண்க; தக்ஷ முனிவர்யாகத்தில் வீரபத்திரனாற் சூரியன் முதலியோர்க்குக் சிலவகை அங்கவீனங்கள் நேர்ந்தது போல, இவனுக்கும் அங்கு முடத்தன்மை நேர்ந்திருக்கலாம். முடம் - உறுப்புக்குறையென்ற மாத்திரமாய், கண்ணொளி மழுங்கியதையேயு மாகலாம். (99)

100. - (இ-ள்.) மா கமண்டலம் தாங்கி - சிறந்த கமண்டலமென்னுஞ் சலபாத்திரத்தை(க்கையில்) தரித்து, வண் தமிழ் பூத்து - சிறந்த தமிழிலக்கணத்தைத் தந்து, ஆறு விட்டு - காவிரிநதியைப் பெருகவிட்டு; (மாகம் மண்டலம் தாங்கி - பெரிய விண்ணுலக வட்டத்தை(த்தன்மேல்) உடைத்தாய், வண்டு அமிழ் பூ தாறு விட்டு - வண்டுகள் (தேனில்) முழ்கப் பெற்ற பூக்களையும் குலைகளையும் வெளிவிட்டு), பூகமும் - பாக்குமரமும், கும்பன் சீர் - அகத்தியர்க்குச் சமமாகப்பெற்ற, புலியூரே – புலியூரானது; ஆகமங்கள் கூறு இடும் மா வாக்கினார் - (இருபத்தெட்டு) ஆகமங்களை வகுத்திட்ட சிறந்த திருவாயையுடையவரும், கூடல் இறைக்கு ஆ - மதுரைப்பதியரசனான அரிமர்த்தன பாண்டியனுக்காக, நரியை - நரிகளை, ஏறிடும் மா ஆக்கினார் – ஏறுகிற குதிரைகளாகச் செய்தருளியவருமாகிய சிவ பிரானது, இல் - இடமாம். (எ - று.)

கமண்டலம் முனிவருக்குரியதாதலை “நூலே கரக முக்கோல மணையே, ஆயுங் காலை யந்தணர்க் குரிய” என்னுந் தொல்காப்பியத்தாலும் அறிக. கங்காதீர்த்தங் கொண்டுவந்த அகத்திய முனிவரது கமண்டலம் குடகுமலைச் சாரலிற் காக்கைவடிவங்கொண்ட வினாயகராற் கவிழ்க்கப்பட்டு அதிலிருந்து காவேரிநதி பெருகியதென அறிக. அகத்தியர் கைலாசத்தில் ஸர்வக்ஞராகிய சிவபிரானிடத்தும் சுப்பிரமணிய மூர்த்தியினிடத்துந் தமிழிலக்கணங்களை உபதேசம் பெற்று வடதிசை நீங்கித் தென்திசை வந்து மலயமலையிலிருந்து சிற்றகத்தியம் பேரகத்தியம் என்னுந் தமிழிலக்கண நூல்களை இயற்றி, அவற்றைத் தொல்காப்பியர் முதலிய மாணாக்கர் பன்னிருவர்க்குங் கற்பித்துக் கொடுத்து அந்தப் பாஷையைச் சுத்தமாக உலகத்திற் பரவச்செய்தனரென்க. அகத்தியர் - தமிழுக்குரிய முனிவராதலின், அவரை உவமை கூறியதோடு இத்தமிழ்ப் பிரபந்தத்தை முடித்தனர், இந்நூலாசிரியரென்க. ஊர்வசியைக்கண்டு காதல் கொண்ட மித்திரன் வருணன் என்னும் இரண்டு தேவர்களது விருப்பத்தால் ஒரு குடத்தினின்று பிறந்தவரிவராதலின், இவர்க்குக் கும்பனென்று ஒருபெயர்; கும்பம் - குடம், சீர் - உவமவுருபு. சதாசிவ மூர்த்தியினுடைய ஐந்து முகங்களுள்ளும், சத்தியோசாத முகத்தினின்று - காமிகம் யோகஜம் சிந்தியம் காரணம் அசிதம் என்னும் ஐந்தாகமங்களும், வாமதேவ முகத்தினின்று - தீபதம் சூக்குமம் சகச்சிரம் அஞ்சுமான் சுப்பிரபேதம் என்னும் ஐந்தாகமங்களும், அகோரமுகத்தினின்று - விசயம் நிச்சுவாசம் சுவாயம்புவம் ஆக்கினேயம் வீரம் என்னும் ஐந்தாகமங்களும், தற்புருடமுகத்தினின்று – ரெளரவம் மகுடம் விமலம் சந்திரஞானம் முகவிம்பம் என்னும் ஐந்தாகமங்களும், ஈசானமுகத்தினின்று - புரோற்கீதம் இலளிதம் சித்தம் சந்தாநம் சருவோக்தம் பாரமேசுரம் கிரணம் வாதுளம் என்னும் எட்டாகமங்களும் ஆக இருபத்தெட்டு ஆகமங்களுந் தோன்றின. இவை - ஞானபாதம் யோகபாதம் கிரியாபாதம் சரியாபாதம் என்று தனித்தனி நான்கு பாதங்களை யுடையனவாயிருக்கும். (100)

(இ - ள்.) நிலைபெற்ற புலியூர் விஷயமாக ஒழுங்குபடக் கூறப்பட்ட வெண்பாக்கள் நூறாம்; அவற்றுள், ஆராயுமிடத்து, முதலிருபத்தைந்து வெண்பா ஒருவகையாம்; அதன் பின்னுள்ள ஒவ்வொரு இருபத்தைந்தும் ஒவ்வொருவகையாம்; (எ - று.)

முதல் இருபத்தைந்து கவிகள் - முன்னிரண்டடி தலமகிமையும், பின்னிரண்டடி திரிபுமாகவும், அதன்பின் இருபத்தைந்து கவிகள் - முன்னிரண்டடி தலமகிமையும், பின்னிரண்டடி, யமகமுமாகவும்; அதன்பின் இருபத்தைந்து கவிகள் - முன்னிரண்டடி சிலேடையும், பின்னிரண்டடி திரிபுமாகவும், அதன்பின் இருபத்தைந்து கவிகள் - முன்னிரண்டடி சிலேடை பற்றிய உவமையும், பின்னிரண்டடி திரிபுமாகவும் வந்தவாறு காண்க. இந்நூலின் முதலைம்பது பாடல்களில் பெரும்பாலும் இத்தலத்தைப் பற்றிய கதைகள் வந்துள்ளன. எல்லாச் செய்யுள்களிலும் பின்னிரண்டடி சிவபிரான் மகிமையைப் பலவகையாலுங் கூறும். யமகமாவது - எழுத்து ஒற்றுமைப்பட்டுச் சொற்பொருள்கள் வேறுபட்டிருப்பது. இது தமிழில் மடக்கெனப்படும். திரிபாவது - செய்யுளடிகளில் முதலெழுத்து மாத்திரம் வேறுபட்டிருக்க இரண்டாவது முதலிய பலவெழுத்துக்கள் ஒற்றுமைப்பட்டுப் பொருளிற் பேதப்படுவது. சிலேடையாவது பலபொருள் தருவது. அது மூலமாக வரும் உபமானம், சிலேடையுவமமெனப்படும். வயணம் என்றும் வழங்கும்.
-------------------------------

புலியூர் வெண்பா நூலாசிரியர், மாரிமுத்துப்பிள்ளை

இந்தப் புலியூர் வெண்பா நூலாசிரியர், மாரிமுத்துப்பிள்ளையென்பவர். இவர், சோழநாட்டில் சிதம்பரத்திற்கு ஈசான திசையிலுள்ள தில்லைவிடங்கனென்னுமூரில் சைவவேளாளர் குலத்தில் தெய்வங்கள் பெருமாள் பிள்ளை யென்பவரது புத்திரர். இப்பொழுதைக்குச் சற்றேறக்குறைய நூற்றுப்பத்து வருஷங்களின் முன் இருந்தவர். இவர் இளம்பிராயத்திலேயே சிவபெருமான் திருவருளால் கவிபாடும் திறமைபெற்றுப் பிறவிக்குருடனொருவனுக்குக் கண்ணைக் கொடுத்துக் கீர்த்தியடைந்தனரென்பர். இவரது குரு சிவகங்காநாத தேசிகரென்பவர். இவர்க்கு அப்பாவுபிள்ளை யென்னும் மறுபெயரையுடைய தெய்வங்கள்பெருமாள் பிள்ளையென்றும், சுப்பராய பிள்ளையென்றும், குமாரசாமிபிள்ளையென்றும் புத்திரர் மூவர். இவர்களுள் இடையிலுள்ளவ ரொழிந்தவர், புலவர்கள்; இவர் தமது மூத்தபிள்ளை இளம்பிராயத்தில் சித்தப்பிரமமுடையவராயும் குடும்ப சிந்தனையில்லதவராயுந் திரிந்துகொண்டிருத்தலைக் கண்டு கவலைகொண்டு ஒருநாள் கடவுளைத் தியானித்தவாறே துயிலுகையில், சபாநாயகர் ஒரு தில்லைவாழந்தணர் வடிவாய்க் கனவில்வந்து காட்சிதந்து ‘உமது கவலை தீரும், இவ்வூருக்கு ஒரு பிரபந்தமியற்றும்’ என்று திருவாய் மலர்ந்தருளி மறைய, இவர் துயிலுணர்ந்து திருவருளைச் சிந்தித்துப் பேரானந்தங்கொண்டு அங்ஙனமே புலியூர் வெண்பாவென்னும் இந்நூலைத் தொடங்கிச் செய்து முடித்தமாத்திரத்தில் இவர் புத்திரரது மனமயக்கம் தெளிந்த தென்பர். இவர் இயற்றிய வேறு நூல்கள் - சிதம்பரேசுவரர் விறலி விடுதூது, வருணாபுரி ஆதிமூலேசர் குறவஞ்சி, மேற்படியார் நொண்டி, மேற்படியார் தாய்மகளேசல், அம்பலப்பள்ளிக்கும் கோவிந்தப்பள்ளிக்கும் ஏசற் பள்ளு, ஐயனார் நொண்டி, அநீதிநாடகம், நடராசப்பெருமான் மேல் கீர்த்தனம், பதங்கள், ரதபந்தம், நாகபந்தம் முதலிய சித்திரகவிகள், பலவித வண்ணங்கள், புலியூர்ச் சிங்காரவேலர் பதிகம், விடங்கேசர் பதிகம் முதலியன.

இந்நூற்பாயிரமாகிய "ஐயன் சபைநாத னனபாய்ப் புலிசைவெண்பா, செய்யென் றினிதுரைக்கச் செப்பினேன் - மெய்யென்று, பாட்டிற் பிழையிருந்தாற் பார்த்துப் பெரியோர்கள், காட்டித் திருத்தக் கடன்" என்னும் பாடலையும், இந்நூற் சிறப்புப் பாயிரமாகிய "திருவளருந் தில்லை விடங்கனுறை சீர்த்தி, வருபுல மாரிமுத்து மால்சீர் - தருபுவியூர், வெண்பா மடந்தையா மேலியற்றியவர்க்கு வெண்பா மடந்தையா மேல்," “எழுத்தறியா முன்னடைந்தால் எவர்தாம் பாடார், வழுத்தரியாமாரிமுத்து வள்ளல் - விழுத்தவன்போல், அம்பல வாண லயிற்கணென்பார் மன்னுதில்லை, அம்பல வாண னருள்," என்னும் பாடல்களையும் அறிக.

இந்நூல் 1889 - ஆம் வருஷம் பி. ஏ. பட்டப்பரீஷைக்குப் பாடமாக இருந்தகாலத்தில், சென்னைக் கவர்ன்மெனட் நார்மல் பாடசாலைத் தமிழ்ப் புலவராயிருந்த மஹா ஸ்ரீ. தி. க. சுப்பராய செட்டியார் அவர்கள் இந்நூலுக்கு முதலில் உரையெழுதி வெளிப்படுத்தினார்கள். பின்பு, இந்நூலாசிரியரது மரபில் நான்காவது தலைமுறையாயுள்ளவரும், இப்பொழுது காஞ்சீபுரம் பச்சையப்ப ஹைஸ்கூல் தமிழ்ப்புலவருமாகிய மஹாஸ்ரீ ச. வேலுசாமிப்பிள்ளையவர்கள், ஓருரையியற்றிப் பிரசுரஞ்செய்துள்ளார்; இந்நூலாசிரியரைப்பற்றி இங்குக் குறித்த விவரம் இவ்வுரையின் முதலிற் கண்டது.
---------------------------

நேரிசை வெண்பாவாவது - நான்கு அடிகளாய் ஈற்றடி முச்சீரடியாகவும் மற்றையடி நாற்சீரடிகளாகவும் பெற்று, காய்ச்சீரும் மாச்சீர் விளச்சீர்களும் வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண்டளையுங்கொண்டு, மற்றைச் சீருந்தளையும் பெறாமல், இரண்டாமடியின் இறுதிச்சீர் முதலிரண்டடிகளின் எதுகைக்கேற்ற தனிச்சொல்லாய்ப் பொருந்த, காசு பிறப்பு நாள் மலர் என்னும் வாய்பாடுகளுள் ஒன்றால் முடிந்து, ஒரு விகற்பத்தாலாயினும் இரு விகற்பத்தாலாயினும் வருவது. [வெண்சீர் வெண்டளையாவது - காய்முன் நேர் வருவது, இயற்சீர் வெண்டளையாவது - மாமுன் நிரையும் விளமுன் நேரும் வருவது; ''காய்முன் நேரும் மாமுன் நிரையும் விளமுன் நேரும் வருவது, வெண்டளை.” ஒரு விகற்பமாவது - நான்கடியும் ஒரு எதுகையாய் வருவது. இருவிகாரமாவது - பன்னிரண்டடியும் ஒரு எதுகையும், பின்னிரண்டடியும் ஒரு எதுகையுமாய் வருவது].
இன்னிசை வெண்பா - இவ்வாறே தனிச்சொல்லின்றி வருவது; தனிச் சொற்பெற்றாலும் மூன்று விகற்பத்தால் வரின், இன்னிசை வெண்பாவாம்.

புலியூர் வெண்பா முழுவதும் இருவிகற்ப நேரிசை வெண்பா.
நாலடியாரில், ஒருவிகற்ப இன்னிசை வெண்பா - 206, 208, 218, 222, 224, 229, 236, 237, 240, 243, 246.
பலவிகற்ப இன்னிசை வெண்பா - 201, 241, 246.
மற்றவையெல்லாம் இருவிகற்ப நேரிசைவெண்பாவாம்.
புலியூர்வெண்பா முற்றிற்று.


This file was last updated on 29 Nov. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)