pm logo

திருமயிலைப் பிரபந்தங்கள் - பாகம் 1
(திருமயிலைப் பிள்ளைத் தமிழ்
திருமயிலை உவமை வெண்பா
& திருமயிலை வெண்பா)


tirumayilaip piLLait tamiz,
tirumayilai uvamai veNpA
& tirumayilai veNpA
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருமயிலைப் பிரபந்தங்கள் - பாகம் 1
திருமயிலைப் பிள்ளைத் தமிழ் , திருமயிலை உவமை வெண்பா
& திருமயிலை வெண்பா

Source:
திருமயிலைப் பிரபந்தங்கள்
TIRUMAYILAI PRABANDHANKAL
EDITED BY T. CHANDRASEKHARAN, M.A., L.T.
Curator, Government Oriental Manuscripts Library, Madras
and the Staff of the Library
(Under the orders of the Government of Madras)
PRINTED BY THE SUPERINTENDENT , GOVERNMENT PRESS , MADRAS
1953
MADRAS GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS SERIES-27.
GOUVERNMENT OF MADRAS
-------------------
திருமயிலைப் பிரபந்தங்கள் - பொருளடக்கம்.
1. முன்னுரை (ஆங்கிலம்)
2. முன்னுரை (தமிழ்)
3. திருமயிலைப் பிள்ளைத்தமிழ் பருவ அட்டவணை
4. திருமயிலைக் கோவை பொருளட்டவணை
5. திருமயிலைப் பிள்ளைத் தமிழ் மூலம்
6. திருமயிலைக் கோவை
7. திருமயிலை உவமை வெண்பா
8. திருமயிலை வெண்பா
9. திருமயிலைக்கோவை: பிற்சேர்க்கை
10. திருமயிலைப் பிள்ளைத்தமிழ் பாட்டு முதற் குறிப்பு அகராதி.
11. திருமயிலைக் கோவை பாட்டு முதற் குறிப்பு அகராதி.
12. திருமயிலை உவமை வெண்பா பாட்டு முதற் குறிப்பு அகராதி.
13. திருமயிலை வெண்பா பாட்டு முதற் குறிப்பு அகராதி
--------------------

INTRODUCTION

TIRUMAYILAI PRABANDHANKAĻ consists of the following four works:
(i) Tirumayilaippillait-tamil, (ii) Tirumayilaikkōvai, (iii) Tirumayilai Uvamai Veņpā and (iv) Tirumayilai Veņpā. Of these, the first two deal about God Singaravelar enshrined at the temple of Sri Kapaliśvara in Mylapore. The other two deal about the Gods Kapalisvara, Vinayaka in dancing, Singaravelar and Karpakavalli. These works which are rich in similes, metaphor, etc., describe the greatness of these deities and the beauty of Mylapore.

Other works describing the greatness of these Gods are Tirumayilai Ula, Tirumayilaikkalambakam, Kapāliśvara Pañcaratnam, Karpakavalli Mālai, Singaravelar Veņpa, Tirumayilai Yamakavantādi.

The place now known as Mylapore is the same as the one called "Mayilappu ", etc. This is referred to in great detail by Thirujñāna- sambandar and Tirunavukkarasu Nāyaṇār in their works like the Tēvāram.

The Vinayakar enshrined in the temple at Mylapore is known as 'Küttāḍum Pillaiyar' or Natana Vinayakar. The Lord Siva who is enshrined here is known as Kapāli, since he appeared with the ornaments of skulls before Parvati. There are other names for this place like Punnai Vanam, Vēdapuri, Sukrapuri, etc. Śrī Rāma, Vālī, Sugrīva, Vāyilā Nāyaṇār, Elēlasingan and others are said to have worshipped the Gods. of this place. This is the place where Sivanesaccelvar, an ardent devotee of Lord Siva, who had collected the bones of his deceased daughter Pūm pavai in a pot, had her life revived with the help of Tirujñāna- sambandamurti..

It is mentioned in these works that there are many holy Tirthas like "Vāli Tirtha, Rama Tirtha, Kapāli Tirtha, etc., " in this place.
The names of all these Gods and other deities are mentioned in the stanzas of all these works.

TIRUMAYILAIPPILLAIT-TAMIL.

This is a work eulogizing Lord Singaravelar. The "Pillaittamil" is one of the 96 kinds of works in Tamil literature. It describes the impor- tant features, usually of the life of a God or a very great man, dividing the period of youth into ten parts. It is again subdivided into two groups relating to Anpaṛpillaittamil and Penpārpilļaittamil.

The Anparpillaittamil comprises of 10 chapters known as Kāppu, Senkirai, Tāl, Śappani, Muttam, Vārāņai, Ambuli, Siruparai, Sirril, Siruter and the names Kalangu, Ammāņai and Usal, replace the terms Siruparai, Sirril, and Sirutter in the Penparpillaittamil. This is sung during the bright fortnight of the odd months of a new born baby starting with the 3rd month and ending with the 21st month. In the Pillaittamil all the ten sections have 10 stanzas except the first section called Kappu which will be in 9 to 11 stanzas.

The work Singāravēlar Pillaittamil contains 101 stanzas in beautiful style. The author is said to be one Tandavarayar belonging to Tondai- nāḍu, who was patronized by one, Pumpāvai Vēlappa Mudaliar. This is said to have been sung (Arangerruppaḍi) in the month of Avani of the year Bhava corresponding to the Saka year 1678. The style of this work is very beautiful and superb. It is in praise of God Muruka.

TIRUMAYILAIKKŌVAI .

This work represents the type called "Kõvai" in Tamil literature and sings the praise of the Lord Singāravēlar enshrined in the Kapā- liśvara temple in Mylapore. It deals with Akapporul like Morality, etc., and contains 416 stanzas. This is a rich composition in a very beautiful style, abounding in literary flourishes. It describes the greatness of Mylapore and of the Lord Muruka. This is the work of one, Ambala- vāṇakkavirāyar, a good scholar in Tamil, who was the Tamil Pandit in the Dharmapuram Mutt, and was the preceptor of Arunacalakavi- rayar. He is different from the Ambalavāṇakavirayar, the author of Arappalisvarar Satakam.

TIRUMAYILAI UVAMAI VENPÅ.
This is composed in ordinary style by Natalinga Kaviraja of Tirunel veli. Mylapore is compared to Manmatha, lotus, the scriptures, etc.

TIRUMAYILAI VEŅPĀ.

In more than 100 verses, Lord Siva in the form of Kapālīśvara, enshrined at the temple in Mylapore is praised. The style is simple and beautiful. This gives an account of the greatness of the place and its holy tank.
This work also is rich in literary flourishes, abounding in double entendre. Even the name of the author is not known.

All the above mentioned four works are printed from the paper manuscripts of this library bearing numbers (i) R. 861 and R. 887, (ii) R. 884, (iii) R. 883 and (iv) R. 886. These manuscripts were purchased from one Sri C. V. Jambulingam Pillai of Mylapore in the year 1925-26.

After printing Tirumayilaikkovlai, it was brought to my notice that a copy of the same is available in Dr. U. V. Swaminatha Iyer Library, Adyar, Madras. On examination of this manuscript, it was found to contain the twelve verses from 373 to 384 which are missing in the manuscript of this library as well as 47 additional verses 417 to 463 in the end. These have been copied, edited and added as Appendix-I and Appendix-II respectively, printed on pages 141 to 150.

I have to express my thanks to Srimathi Rukmini Devi, the Adhyaksha of the Dr. U. V. Swaminatha Iyer Library, Adyar, Madras, for permitting me to copy the above verses from the manuscript of that Library.

My thanks are due also to Messrs. V. R. Kalyanasundaram, V. S. Krishnan and M. Pasupathy, Pandits of this Library who prepared the press copy and corrected the proofs.

Government Oriental Manuscripts Library, Madras-5, T. CHANDRASEKHARAN,
Dated 15th December 1952. Curator.
-------------------

முன்னுரை.

திருமயிலைப் பிரபந்தங்கள் என்ற இத்தொகுப்பினுள்-1. திரு மயிலைப் பிள்ளைத்தமிழ், 2. திருமயிலைக் கோவை, 3. திருமயிலை உவமை வெண்பா, வெண்பா 4. திருமயிலை என்னும் பெயரிய நான்கு நூல்கள் அடங்கியுள்ளன. இவற்றுள் முன்னவை இரண்டும், சென்னை மயிலாப்பூர் கபாலீச்சரத்தின்கண் கோயில் கொண்டுள்ள சிங்கார வேலராகிய முருகப் பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப் பெற்றுள்ளன. பின்னவை இரண்டும் மயிலாப்பூரில் எழுந்தருளி யுள்ள கபாலீசர், கற்பகவல்லியம்மை, கூத்தாடும் விநாயகர், சிங்காரவேலர் ஆகியோரின் அரும் பெருஞ் சிறப்புக்களையும், மயிலைப்பதியின் பெருமை களையும், உவமை வாயிலாகவும் சிலேடை முதலியவற்றாலும் விளக்கு கின்றன.

மயிலைப் பதியைப் பற்றியனவாகிய வேறு பிரபந்தங்கள், திருமயிலை உலா, திருமயிலைக் கலம்பகம், கபாலீசர் பஞ்சரத்தினம், கற்பகவல்லி மாலை, சிங்கார வேலர் வெண்பா, திருமயிலையமகவந்தாதி என்பனவாம்.

மயிலாப்பூர் என்று தற்காலத்தில் கூறப்பெறும் இத்தலம் "மயிலாப்பு" என முன்பு வழங்கப்பட்டது. இது தேவாரம் பெற்ற திருப்பதியாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இத்தலத்தைப் பற்றி ஒரு பதிகம் பாடி யுள்ளார். திருநாவுக்கரசு நாயனாரும் வேறு தலங்களைப் பற்றித் தாமருளிய திருப்பதிகங்களில் மயிலையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். அப்பகுதிகள் பின்வருவனவாம்.

"மங்குன் மதிதவழு மாட வீதி
மயிலாப்பி லுள்ளார்" (புக்க திருத்தாண்: 1)

"மயிலாப்புள்ளே செடிபடு வெண்டலையொன்
றேந்தி வந்து " (திருவொற்றியூர்த் திருத்தாண்: 6)

உமாதேவியார் மயிலுருவத்தை யடைந்து இத்தலத்து இறைவனைப் பூசித்தமையால் இதற்கு மயிலாப்பு, மயிலாப்பூர் என்னும் பெயர்கள் உண்டாயின. இப்பெயர்களின் சிதைவே மயிலை என்பது. கற்பகாம்பிகை பூசித்த செய்தியைத் திருஞான சம்பந்தர்

"மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்,''

என்று தெரிவித்தருளினர்.

இங்கு எழுந்தருளியிருக்கும் விநாயகருக்குக் "கூத்தாடும் பிள்ளையார்", என்பது பெயர். இப்பெயர் "நடன விநாயகர்,” என வடமொழியில் வழங்கப்பெறும். கோயில்கொண்டுள்ள சிவபெருமான் பெயர் கபாலீசுவரர் என்பது, பார்வதி தேவியாருக்கு இறைவன் கபாலமேந்தியவனாக இத்தலத்தில் காட்சி கொடுத்தமையின் இப்பெயர் வழங்கலாயிற்று. (முன்பு காபாலீ கர்கள் இங்கு குடியேறி யிருந்தனரென்றும், அவர்கள் மயிலைச் பெருமானுக்குக் "கபாலீசுவரர் ” என்று பெயரிட்டன ரென்றும் சிலர் கூறுவர்.) கபாலீசுவரர் எழுந்தருளியுள்ள கோயிலுக்குக் கபாலீச்சர மென்று பெயர். அம்பிகையின் பெயர் கற்பகவல்லியம்மை. முருகப் பெருமானுக்குச் சிங்கார வேலரென்று பெயர். இந்தத் தலத்துக்குரிய விருட்சம் புன்னை. ஆதலின் புன்னைவன மென்றும் இத்தலத்துக்கு ஒரு பெயருண்டு. வேதபுரி, சுக்கிரபுரி என்ற வேறு பெயர்களுமுள. உமா தேவியார், முருகக் கடவுள், இராமர், வாலி, சுக்கிரீவன், வாயிலார் நாய னார், ஏலேல சிங்கன் முதலானவர் இத்தலத்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றனர்.

சிவநேசச் செல்வர் என்னுஞ் சிவனடியார் தம்மகள் பூம்பாவை என்பவள் இறந்த பின்பு, அவள் எலும்புகளை ஒரு குடத்தில் சேமித்து வைத் திருக்க, திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் இங்கு எழுந்தருளியபோது, குடத்திலுள்ள எலும்புகளை மீண்டும் மகளாகுமாறு பதிகம் பாடிய பெருமை பெற்றது இத்தலம்.

வாலி தீர்த்தம், இராம தீர்த்தம், கபாலி தீர்த்தம், சுக்கிர தீர்த்தம், வேத் தீர்த்தம் முதலியன இங்குள்ள புண்ணிய தீர்த்தங்களாம். இந் நூல்களில் பலவிடங்களில் மேற்கூறிய செய்திகள் கூறப் பெற்றுள்ளன. அவைகளில் சில வருமாறு:

திருமயிலைப் பிள்ளைத் தமிழ் முதலான நான்கு பிரபந்தங்களிலும், கடவுள் வணக்கச் செய்யுட்கள் கூத்தாடும் பிள்ளையாரைப் பற்றியன.

"பேரின்ப வீடுதவு கூத்தாடு மைங்கரப்
பிள்ளைசர ணந்துதிப்பாம் [திருமயிலைப் - காப்புச் செய்யுள்.]

"பருகாவி சூழு மயிலைநற் கோவைப் படர்வதற்கு
முருகா ரொருகொம்பிற் கூத்தாடும் பேரத்தி முன்னிற்குமே."
(திருமயிலைக் கடவுள் வாழ்த்து.]

"கூத்த விநாயகனுங் கும்பமுலை யாரிருவர்
காத்த விநாயகனுங் காப்பு" [திருமயிலை உவமை வெண்பா காப்பு.]

"கார்முகத் தானைக் கனிக்குவலஞ் செய்நடனக்
கார்முகத் தானை கழல்" [திருமயிலை வெண்பா காப்பு.]

இறைவன் திருநாமம் கபாலீச ரென்பது :

" மயில்பூசிக்க வுற்றவர் கடாலக் கரத்தினர்
கஞ்சம்போன் றாடிய தாளைப் பழிச்சுதும்" (திருமயிலைப் : காப்பு :2]

"கருத்தன் மருவு கபாலனென்றுங் [திருமயிலை உவமை: 6.]

அம்பிகையின் பெயர் கற்பக வல்லி யென்பது :

சிலைமகள் கற்பக வல்லியைப் போற்றுதும் (திருமயிலை காப்பு : 3]

வளைசுரமுங் கற்பக வல்லியுஞ்சேர் பண்பாலத் தளைமயிலை (திருமயிலை உவமை : 7)

"வேளூர் தையல்
நாயகியே கற்பகமானாள் " [திருமயிலை உவமை : 74]

முருகப் பெருமானின் பெயர் சிங்கார வேலரென்பது :

''சிங்கார வேலனைப் பரவுமென்
மெய்ப்புகழ் தமிழ்தழைய வே" (திருமயிலை கடவுள் வணக்கம்.]

"சிங்கார வேலரெனு நாமஞ் சிவகுமரர்
மங்காது பெற்ற மயிலையே" [திருமயிலை வெண்பா: 42]

தலவிருட்சம் புன்னை என்பது :

"கந்தஞ் சேம்பார் புன்னாகத் தடத்தினர் " [திருமயிலை காப்பு: 2]

"புன்னை வளர் மயிலாப்பூர்" [திருமயிலை உவமை : 67]

"பூமணக்கும்
புன்னாக மேயார் புரி " [திருமயிலை வெண்பா : 2]

இராமர் முதலானவர்கள் வழிபட்டுப்பேறு பெற்றனர் இத்தலத்தில் என்பது:

" சொன்மலிசீ ராமன்சா முண்டிதுர்க்கை சுக்ரீவன்
மன்மதனும் போற்று மயிலையே '' (திருமயிலை வெண்பா : 49]

"சங்கரனார்க் கந்நாட் டசதரன்சே யுற்சவங்கள்
மங்கலமாய்ச் செய்த மயிலையே " (திருமயிலை வெண்பா: 48]

"வாலிதக்கன் சங்கன் வசிட்ட வேதங்கள்
மாலுமால் போக்கு மயிலையே ” [திருமயிலை வெண்பா : 43]

"கண்ணிழந்த வெள்ளி கதியடைவான் முக்கணனை
வண்ணமுறப் போற்று மயிலையே ' [திருமயிலை வெண்பா : 46]

பூம்பாவையைச் சம்பந்தப் பெருமான் உயிர்ப்பித்தது:

"காழிக்கோ வெள்ளெலும்பை
மாதங்க மாக்கும் மயிலையே'' [திருமயிலை வெண்பா: 25]

இத்தலத்தில் பல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன என்பது :

"வாலிதீர்த் தஞ்சேர் மயிலையே (திருமயிலை வெண்பா : 37)

"வேததீர்த் தஞ்சிறந்த வெள்ளிதீர்த் தம்பிறவி
வாதைதீர்த் தோங்கு மயிலையே (திருமயிலை வென்பா : 39)

"சாற்று மிராமதீர்த் தம்பிறவி நோய்தனை
மாற்று வளஞ்சால் மயிலையே” (திருமயிலை வெண்பா : 47)

இத்துணைச் சிறப்புக்கள் வாய்ந்த இப் பழம்பெரும் பதியில்தான் பொய் யாமொழியாராகிய திருவள்ளுவர் வாழ்ந்திருந்தார். திருவள்ளுவர் ஆலயம் இத்தலத்தில் உளது. அச்செய்தியைக் குறிக்கும் பகுதிகளாவன:

"வள்ளுவரின் சொல்வளமே வாய்த்த "( திருமயிலை உவமை:4)

"கள்ளமிலா வுள்ளத்துக் கற்புருவாம் வாசுகியார்
வள்ளுவரோ டும்வாழ் மயிலையே" (திருமயிலை வெண்பா : 2)

"காக்கிற் சினங்காக்க காவாக்காற் கொல்லுமெனும்
வாக்கின்மிக் கோரவாழ் மயிலையே" (திருமயிலை வெண்பா :3)

I. திருமயிலைப் பிள்ளைத் தமிழ்
இது, திருமயிலைச் சிங்காரவேலரைப் பாட்டுடைத்தலைவராகக் கொண்டு இயற்றப்பட்டுள்ள பிரபந்தமாகும். தமிழ் மொழியிலுள்ள தொண்ணூற் றாறு வகைப் பிரபந்தங்களில் பிள்ளைத்தமிழ் என்பது ஒன்று. தேவர்களையோ, மானிடரிற் சிறந்தாரையோ தலைவராகக் கொண்டு, அவர்களது இளமைப் பருவ நிகழ்ச்சிகளைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துப் பாடுவது பிள்ளைத் தமிழாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களைக் கொண்டது ஆண்பாற் பிள்ளைத்தமிழாம். இவற்றுள் சிறுபறை, சிற்றில், சிறு தேர் என்பனவற்றை விலக்கி, கழங்கு, அம்மானை, ஊசல் என்ற மூன்று பருவங்களைச் சேர்த்து பெண்பாற் பிள்ளைத்தமிழ் பாடப்பெறும். பிறந்து மூன்றாம் மாதம் முதல் இருபத்தொறு மாதம்வரை ஒற்றைப்பட்ட மாதங்களில் வளர்பிறைப் பருவத்தில் பிள்ளைத் தமிழைப் பாடவேண்டும்.

"மூன்று முதல்மூ வேழு திங்களில்
ஒற்றை பெற்ற முற்றுறு மதியின்
கொள்ளுக பிள்ளைக் கவியைக் கூர்ந்தே." (இலக்கணவிளக் : பாட்டியல்: 49)

என்ற சூத்திரத்தால் இதனையுணரலாம். மூன்று, ஐந்து, ஏழாம் ஆண்டு களிலும் பிள்ளைத்தமிழ் பாடலாம். பிள்ளைத்தமிழில் காப்புப்பருவம் ஒன்பது முதல் பதினொரு பாடல்கள்வரை பாடப்படும். மற்றப் பருவங்கள் பத்துப் பத்துப் பாடல்களுடையனவாம்.

சிங்காரவேலர் பிள்ளைத்தமிழ் எனப்படும் இந்நூலில், காப்பு முதல் சிறு தேர் ஈறாகப் பத்துப் பருவங்களுள்ளன. கடவுள் வாழ்த்துப் பாடலுட்பட 101 பாடல்களைக்கொண்டது இந்நூல். நடைசிறந்துள்ளது. முருகப்பெருமானின் சிறப்புக்களைப் பலவாறு எடுத்துக்கூறுகின்றது. இந்நூலை இயற்றிய புலவர் பெயர் தாண்டவராயர் என்பதும், அவர் தொண்டை நாட்டைச்சேர்ந்தவரென் பதும், சக ஆண்டு ஆயிரத்தறுநூற்றெழுபத்தெட்டில் (18-ஆம் நூற்றாண்டு) பவ வருஷம் ஆவணிமாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இந்நூலை அரங் கேற்றினாரென்றும் தெரிகின்றது,

"நயமதுர கவிபொழியு நிபுணதாண் டவராய
நாவல னிசைந்து பாடி
நான்மறைசொல் வாணர் தமிழ் வாணர்நிறை தொண்டைவள
நன்னாட் டுளோர்கள் மெச்ச
இயல்புறு சகாத்தமோ ராயிரத் தறுநூற்று
எழுபத்து எட்டாண் டினில்
எய்துபவ வருடமா வணியுத்தி ரட்டாதி
யின்புட னரங்கேற் றிடுஞ்
செயமிலகு-தமிழ் கொண்ட சிங்கார வேலவ” (சிறுதேர்ப். 10)

என்ற பகுதி இதனை யுணர்த்துகின்றது.

இந் நூலாசிரியர், மயிலாப்பூரில் வாழ்ந்து வந்த பூம்பாவை வேலப்ப முதலியாரென்னும் செல்வரின் ஆதரவினால், இந்நூலையும், திருமயிலை யமக வந்தாதி" "சிங்கார வேலர் வெண்பா” என்ற நூல்களையும் இயற்றி அரங்கேற்றினார் என்று பின் வரும் பாடலால் அறியப் படுகின்றது.

தண்பார் துதிக்கு மயிலையந் தாதி சயில நல்கும்
பெண்பாகந் தந்தருள் சிங்கார வேலவர் பிள்ளைத்தமிழ்
வெண்பாவா மூன்று மரங்கேறச் செய்துநன் மேன்மைபெற்றான்
பண்பா வலர்புகழ் பூம்பாவை வேலன்மெய்ப் பாக்கியனே.
(திருமயிலை யமக வந்தாதி : இறுதி; அரங்கேற்றம்.)

2. திருமயிலைக் கோவை

இது, திருமயிலைக் கபாலீச் சரத்தின்கண் எழுந்தருளியுள்ள சிங்கார வேலராகிய முருகப் பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு பாடப் பட்டுள்ள கோவை யென்னும் ஒருவகைப் பிரபந்த விசேடமாகும். இதனை அச்சிட்ட பிறகு, அடையாறு மகாமகோபாத்தியாய, டாக்டர் உ. வே. சாமி நாதையர் அவர்கள் நூல்நிலையத்தில் பனையோலைப் பிரதி யொன்றிருப்பது தெரிய வந்தது. அதனுள், இந்நூல் நிலையப் பிரதியில் இல்லாத 373-384-ஆம் எண் வரையுள்ள பாடல்களும், இறுதியில் 47 பாடல்கள் அதிக மாகவும் காணப்பட்டன. அவற்றையும் பிறசேர்க்கையாக வெளியிட்டுள்ளேன். தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களில் கோவை யென்பதும் ஒன்று. இஃது அகப்பொருளைப் பற்றியது. களவு, கற்பு என்னும் ஒழுக்கங்களைக் கூறுவதாய் அமைந்து, கட்டளைக் கலித்துறை என்ற பாவகையால் பாடப் பெறுவது. திருச்சிற்றம்பலக் கோவையார், தஞ்சை வாணன் கோவை, அம்பிகாபதிக் கோவை, கோடீச்சுரக் கோவை முதலாயின இவ்வகையைச் சார்ந்தவையாம்.

திரு மயிலைக் கோவை யென்ற இந் நூல் நிலையப் பிரதியில் கடவுள் வாழ்த்து, அவை யடக்கச் செய்யுட்களுட்பட 418 கட்டளைக்கலித்துறைக ளுள்ளன. கற்பியலில் பரத்தையிற் பிரிவு என்ற பகுதியுடன் முடிந்துள்ளது. சிங்கார வேலரைப் பற்றிய சிறப்புக்களும், மயிலைப்பதியின் பெருமைகளும் இந் நூலில் அழகுபடக் கூறப் பெற்றுள்ளன. சொல்நடை, பொருளழகு இவற்றில் சிறந்துள்ளது. "வரைவு கடாதல்" என்னும் பகுதியில் பகல் வருவானை இரவு வருகென்றல்" என்னுந் துறையொன் றுள்ளது. தலைவியைச் சந்திப்பதற்காக பகற்காலத்தில் வருந் தலைவனை விலக்கி, இரவுப் பொழுதில் வருமாறுகூறுதல், என்பது இதன் பொருள் இத் துறைக்குரிய பாடலை ஆசிரியர் மிக அழகாகக் கூறுகின்றார்.

செந்திற் பதியுவந் தோன்மயிலாபுரிச் செல்வன்மத்த
தந்திக் கிளையவன் சிங்கார வேலன் சயிலமன்னா
பந்திக் கதிர்விரி நண்பகல் நீவரல் பான்மையன்றால்
அந்திக்கு நீவரிற் சந்திக்குஞ் சிந்திக்கு மாரணங்கே. (திருமயிலைக்: 252)

இறுதி வரியில் அமைந்துள்ள சொன்னயமும் பொருணயமும் நம்மைக் களிப்புறச் செய்கின்றன. இது போன்ற பல சிறந்த பாடல்கள் இந் நூலில் ஆங்காங்கே காணப்படுகின்றன.

இந் நூலை இயற்றிய ஆசிரியர் பெயர் அம்பலவாணக் கவிராயர் என்பது. இவர் சிறந்த தமிழ் புலவர். தருமபுர மடத்து ஆதீன வித்துவானாக இருந்தவர். அறப்பளீ சுவரர் சதகம் பாடிய அம்பலவாணக் கவிராயரினும் இவர் வேறானவர் என்று தெரிகின்றது.
-----------------
3. திருமயிலை உவமை வெண்பா.

இஃது மயிலைப் பதிக்கும், மன்மதன், தாமரைப்பூ, வேதம் முதலான பல பொருள்களுக்கும் உவமை அமையுமாறு பாடப் பெற்ற நூற்று முப்பது வெண்பாக்களைக் கொண்டுளது. நடை சாதாரணமாக உள்ளது. திரு நெல்வேலி நடலிங்க கவிராசர் என்பவரால் பாடப்பெற்றது என்று மூலப் பிரதியின் இறுதியில் குறிக்கப்பட்டுள்ளது. இந் நூலைப் பற்றிய வரலாறாக வேறொன்றும் புலப்படவில்லை.
----------------

4. திருமயிலை வெண்பா.

இந் நூலில், மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள சிவபிரானைப் பற்றிய தோத்திரங்களாகக் கடவுள் வாழ்த்து நீங்கலாக நூறு பாடல்களுள்ளன. நடையழகு சிறந்துள்ளது. இத்தலத்துச் சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றவர்களைப் பற்றியும், இப் பதியின் பழம்பெருமையையும்,இங்குள்ள தீர்த்தங்களின் சிறப்புக்களையும் நன்கு விளக்கமுடன் எடுத்துக் கூறுகின்றது. பொதுவாகவும் சிலேடைகளாகவும் பாடல்கள் அமைந்துள்ளன. இதனை இயற்றினார் இன்னார் என்று தெரியவில்லை.

மேற்கூறப்பட்டவற்றுள், "திருமயிலைப் பிள்ளைத் தமிழ்" என்பது, இந் நூல் நிலயத்திலுள்ள R. 861, 887 என்ற எண்களைக் கொண்டுள்ள காகிதக் கையெழுத்துப் பிரதிகளை ஆதாரமாகக் கொண்டு வெளிடப் படுகின்றன. அவை 1925-26-ஆம் ஆண்டில் மயிலாப்பூர் ஸ்ரீ சி. வி. ஜம்புலிங்கம் பிள்ளை என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டனவாம். திருமயிலைக் கோவை என்ற நூல் R. 884-ஆம் எண்ணுள்ள பிரதியினையும், "திருமயிை உவமை வெண்பா என்பது R. 883-ஆம் எண் கொண்ட பிரதியினையும், திருமயிலை வெண்பா " என்பது R. 886 -ஆம் எண்ணினையும் ஆதாரமாகக் கொண்டு வெளியிடப் பெறுகின்றன. இம் மூன்றும் காகிதப் பிரதிகளே. இவையும் 1925-26-ஆம் ஆண்டில் மேற்குறிப்பிட்டவரிடமிருந்து நூல் நிலையத்துக்காக விலைக்கு வாங்கப் பெற்றனவாம்.

இறுதியாக, இந் நான்கு நூல்களையும் மூலப்பிரதிகளிலிருந்து பெயர்த்து எழுதி, அச்சிடுவதற்குரிய வகையில் அமைத்துக் கொடுத்த இந் நூல் நிலைய பண்டிதர்கள் ; ஸ்ரீ வி. ஆர். கல்யாணசுந்தரம், ஸ்ரீ வி. எஸ். கிருஷ்ணன், ஸ்ரீ எம். பசுபதி ஆகியோருக்கு எனது நன்றி உரியதாம்.

இந் நூல் நிலய திருமயிலைச் சிங்காரவேலர் கோவைப் பிரதியில், காணப் பெறாத, பாடல்களை தங்களிடமிருந்த பிரதியிலிருந்து எடுத்து வெளியிட அன் புடன் அனுமதியளித்த அடையாறு மகாமகோபாத்யாய, தாக்ஷிணாத்ய கலாநிதி, டாக்டர் உ.வே.சுவாமிநாதையர் நூல் நிலைய நிருவாகிகட்கு என் நன்றியறிதலைப் புலப்படுத்துகின்றேன்.

சென்னை, தி. சந்திரசேகரன்.
1952-ஆம் ௵ டிசம்பர் ௴ 15.
----------------------------

1. திருமயிலைப் பிள்ளைத் தமிழ்
(திருமயிலைச் சிங்கார வேலர் பிள்ளைத் தமிழ்)
(தாண்டவராயப் புலவர் இயற்றியது)


சிவமயம்
திருச்சிற்றம்பலம்.
திருமயிலைச் சிங்காரவேலர் பிள்ளைத்தமிழ்.

கூத்தாடும் விநாயகர் வணக்கம்.

சீர்கொண்ட முத்தமிழ்சொல் நாவல ருளத்துநற்
      செழுமறைகளின் சிரத்தும்
தென்மயிலை யூரகத் தயன்முதலி யோர்தொழுந்
      திருக்கபா லீசரென்னப்
பேர்கொண்ட வேணிப்பி தாமருவு கோயிற்
      பிறங்குகுண பாலிடத்தும்
பேரின்ப வீடுதவு கூத்தாடு மைங்கரப்
      பிள்ளைசர ணந்துதிப்பாம்
தார்கொண்ட பன்னிரு புயத்தாறு முகவனைச்
      சங்கரித ரும்புதல்வனைச்
சரவணனை முருகனைக் குகனையரி மருகனைச்
      சாடாட்சரத் திருமந்த்ரனை
வேர்கொண்ட மாமுதற் சூரனைக் கிரவுஞ்ச்
      வெற்பினைக் கடலைவென்ற
வீரனைச் சிங்கார வேலனைப் பரவுமென்
      மெய்ப்புகழ் தமிழ் தழைகவே.
-----------

1. காப்புப் பருவம்.

திருமால்,
முகில்வண்ணன் மரகத மெனும்பசிய மணிவண்ணன்
      முதுகருங் கடலின் வண்ணன்
முகைவிண்டு தேன்சொரியு நறியபூ வைப்பூவின்
      முழுநீல வண்ண னம்பொன்
துகில்வண்ணன் வித்துரும வாய்வண்ண னம்புயத்
      துணைத்தாளின் வீண்ணன் வண்டார்
துழாய்மவுலி வண்ணனென் றாழ்வார்கள் செந்தமிழைச்
      சொலும் வண்ணனைப் பரவுவாம்
அகில்வண்ண மிலகிரு தனக்கோட்டு வள்ளிகட்
      கஞ்சனமு மெழுதி நுதலின்
அழகொழுகு பொட்டிட்டு வெட்சிமலர் கூந்தலி
      னணிந்தடிக ளன்ப டியன்மேல்
மிகில்வண்ண வேடன் கணைக்கினைவ னென்றுசரண்
      மேவு மெனையாட் கொண்டருள்
வேடனைத் தென்மயிலை யூரனைச் சிங்கார
      வேலனைக் காத்த ருளவே.       1

கபாலீச்சுரர். (வேறு.)

அந்தண் டீம்பா னதிசூழ்நற் பிரதக்கண
      ரஞ்சம் பேந்தா சறுவேளைப், பொடித்தவர்
அன்பர் தேர்ந்தோ தியபாடற் குறித்துவே
      ளங்கம் பூம்பாவை யதாகப் படைத்தவர்
கந்தஞ் சேம்பார் புன்னாகத் தடத்தினர்
      கண்கண் டீண்டோர் மயில்பூசிக்க வுற்றவர்
கந்தந் தேங்கால் கபாலக் கரத்தினர்
      கஞ்சம் போன்றா டியதாளைப் பழிச்சுதும்
எந்தந் தீங்கியா வையுமோடத் துரத்திநல்
      லின்பங் காண்கா ணெனமோனப் பொருட்சொலில்
எங்குந் தாந்தா மெனுஞானக் குருக்களை
      யென்றன் சேண்கோ புரவாயிற் றெருத்தலை
சந்தங் கோங்கார் நிறைகூடற் றலத்துயர்
      தங்கந் தோன்றா தனமீதிற் செழித்திடும்
சங்கஞ் சேர்ந்தாய் தமிழ்நூலைத் தெரித்தரு
      டங்குஞ் சோகோங்கா கியசேயைப் புரக்கவே.       2

கற்பகவல்லி அம்மை. (புய வகுப்பு)

கனகரை யட்டவர் புதல்வர் தமக்க
      கதியருள் பச்சைநன் மெய்யர்பிற் றோற்றிய
கவுரியை யொட்டலர் வளவர் துதித்திடு
      கௌரியைப் பெற்றருள் செல்வியைத் தேக்குறு
கருமுகி லொத்திடு மலரள கத்தொளிர்
      கருணை யுவட்டெழு கண்ணியைப் பூக்கொடு
கருதடி யர்க்கருள் கனிதரு மெய்க்கதி
      கரிசற வுற்றருள் கன்னியைச் சீர்த்திகழ்

தினகரர் முற்பொலி யருண னிறத்தொளிர்
      திகழ்வடி வத்தளிர் மெல்லியைப் பாக்கொடு
தினமும் வழுத்தினர் விழிமுன் னுதித்திடு
      தெளிவுற கைக்கரு நெல்லியைக் காத்தருள்
திரள்கனி யைப்பொழி மலர்மது வைக்கடை
      திரையமு தைப்பொருள் சொல்லியைச் சீர்செறி
திருமயிலைச்சிவன் மனைவியை யற்புத
      சிலைமகள் கற்பக வல்லியைப் போற்றுதும்

மனகவ சத்திரன் முனிவ ரகத்தினை
      வடவைய னற்சிறை யில்லைவிட் டார்த்திடு
மகியைமி குத்தொளிர் சரவண நற்புனல்
      வனசம லர்ச்சிறு பள்ளியிற் கார்த்திகை
வனமுலை தொட்டுணு மகவையி கற்பொரு
      மறவவு ணர்க்குல் வெய்யனைத் தாழ்த்துயர்
மகபதி யைத்தரு வளர்க்கனத்தினின்
      மகிழவ மைத்திடு மையனைக் கூர்த்தயில்

அனகனை வைப்புறு சமணர்ம தத்தினை
      யழியநி னைத்தர சுய்யவுற் றேட்டினை
அனலிடை யுற்றபின் னவர்சப தப்படி
      யலைந்தி யிட்டெதிர் செல்லமுற் காட் டிய
அதிசய சித்தனை யலகில்ப வுத்தரை
      யசனிகொ லப்பணி சைவனைத் தீர்த்தர்கள்
அரியய னைப்பழ வடியரெனச் செய்த
      வழகயில் கைக்கொளு மெய்யனைக் காக்கவே.       (3)

திருமகள். (வேறு.)

சொற்கமல வானுலக மிவ்வுலகிலுண்டென்று
      சுருதிதிரு மால்சதுமுகன்
சுக்கிரன் முதற்றேவர் தவமுனிவ ரெழுவருந்
      துதிசெயுந் தென்மயிலைவாழ்
விற்கமல வெண்டிங்கள் செஞ்சடையின் மேல்வைத்த
      விமலக்க பாலீசர்தம்
மெய்ப்பாதி குடிகொண்ட கற்பகமின் னாளுதவும்
      வேலன்ற னைப்புரக்க
பற்கமல முத்தமும் தமிழ்க்குமுதிர் பவளமும்
      பணைத்தோளி னுக்குவேயும்
பாட்டளிது தைந்தபைங் கூந்தற்கு முகிலுமிணை
      பகர்தலரி தானவடிவப்
பொற்கமல மீதுநற் செங்கோ னடாத்தவரு
      பூவேந்தர் வண்புயத்தும்
புயல்வண்ணன் மருமத்து மகலாதி ருக்குநம்
      பொன்மா தெனுஞ்செல்லியே.       4

கலைமகள்,

பண்டிங்க ளப்பரிய தமிழ்பாடு மருணகிரி
      பாமாலை கண்டுவே தப்
பயனையொரு பாட்டாக நக்கீரர் புகல்கின்ற
      பாக்கண்டு மோர்காசெடைக்
கொண்டிங்க ளக்கரிடை யேகரைத் தாலென்ன
      கூறுமென் புன்சொல்கொளும்
குருபரனை மயிலைவளர் சிங்கார வேலேந்து
      குமரனைத் தனிப்புரக்க
பெண்டிங்கள் வளர்பக்க நவமியிற் பூசித்த
      பேருளஞ் சேர்பாரதி
பேரந்த காரமடர் ஞானவா தித்தவொளி
      பெருகவருள் பனுவலாட்டி
வெண்டிங்கள் மேனியொடு செவ்வாயு மன்மதனு
      மிக்கவிழி யும்புருவமும்
மேவியா ழம்பொழியும் வெள்ளியிழையு மஞ்சதிரை
      வேல்குழலு மிசைவாணியே.       5


கூத்தாடும் விநாயகர்.

தண்கோட்டு வெண்மதியை வானதியை யெட்டலாற்
      சடைபோல மடல்விரிதலால்
தனிமூன்று கண்களுள வாற்றென்ன மரமெலாந்
      தாணுவென் னிறைமயிலைவாழ்
வெண்கோட் டெழுத்தாணி கொண்டொருவி யாதன்சொல்
      வேதப்பொ ருட்பாரதம்
வெற்பகத் தெழுதவல கற்பகச் செஞ்சரண
      மேன்மையுற வஞ்சலிப்பாம்
திண்கோட்டு மலையிமய மகண்முலைக் கோட்டூறு
      தென்தமிழ்க் கடலையுண்டு
சிவசமய ரிடைமின்னி மறுசமயர் நெஞ்சந்
      திடுக்கிடக் குமுறியார்த்து
விண்கோட்டி னரவுண்ட வங்கமொரு பெண்ணாக
      மெய்யமுத மழை[கள்] பொழியும்
மேகமென முன்வந்த பாலனைச் சிங்கார
      வேலனைக் காத்தருளவே.       6

நான்முகன்.

உரையைப் படைத்தநால் வேதங்க ளும்படைத்
      துபநிடத மும்படைத்தே
ஓதுமிதி காசமா றங்கம்பு ராணம்
      ரொன்பதினையும் படைத்துத்
தரையைப் படைத்தமர ருலகைப்படைத்துயிர்க
      டம்மைப்ப டைத்ததன்றித்
தன்னைப்படைத் தமா றன்னைப் படைக்கவல்
      சதுமுகனை யஞ்சலிப்பாம்
பரையைப்ப டைத்தசிவ னுணரவரி தாமொரு
      பதப்பொருளு ணர்த்துகுருவை
பாகீர திக்குமுமை மாதுக்கு நடுவுநிலை
      பார்த்தொழுகு கின்றசுதனை
விரையைப் படைத்தநறு நீபமல் ருடன்வெட்சி
      வேண்டித் தரித்தபுயனை
மிக்கபுகழ் திருமயிலை மேவிவளர் சிங்கார
      வேலனைக் காத்தருளவே.       7

வடுகக் கடவுள். (வேறு.)

கொஞ்சு கிளிநான் மறையோதுங் குயிலி
      னிசையாழ் போற்கூவும்
குளிர்கா வினிற்பைந் தோகைநடங் குலவுஞ்
      செந்நெல் கன்னலென
விஞ்சு வளஞ்சேர் தென்மயிலை விசாகப்
      பெருமாள் குகப்பெருமான
வெற்றிப் பெருமாள் சிங்கார வேலப்
      பெருமா டனைக்காக்க
துஞ்ச லிலாதான் புவிகாக்குந் துத்திப்
      பணியா னிடிக்குரலான்
சூலப் படையான் விரிச்டையான் துகிலைப்
      புனையா மருங்குடையான்
வஞ்சர் மனம்போற் கஞ்சுகியான் மறைத்தார்
      பிரமன் சிரக்கரத்தான்
மதுரத் தமிழோர் கொண்டாடும் வடுவில்
      வடுகப் பெருமாளே.       8

வென்றிவேல். (வேறு.)

மயன் மனத்தி னாலமைத்த பசும்பொனுல கத்தோர்
      மகிதலத்தோர் பாதலத்தோர் வணங்குமயிலையில்வாழ்
குயவரியி னதளாடை யுடுத்தகபா லீசர்
      குமரனென வந்தருள்செய் குருபரனைக் காக்க
அயனரியை யயனரிபோற் றுரந்தசிங்க முகவன்
      அசமுகிதன் வயிற்றுதித்த வலகில்பெரும் படையால்
செயமிகுமச் சூரனுயி ரன்னமெனப் புசித்து
      தென்கடனீ ராற்றாகந் தீர்ந்தகதிர் வேலே.       9

கார்த்திகை மாதர். (வேறு.)

அகனகம் விளக்கியெழு சலதியும்வி ளக்கிவி
      யகிலமும்வி ளக்கிநகர் தாழ்
அடவியும்வி ளக்கிமலர் குவளையும்வி ளக்கியல
      ராம்பலவும் விளக்கி
ககனமும்வி ளக்குசடை யாவினைவி ளக்கியிருள்
      கந்தரம்வி ளக்கியரனார்
கண்ணெனவி ளங்குமதி தன்மனைவி யெனவந்த
      கார்த்திகைப் தம்பணிருவாம்
மகனகம கிழ்ச்சியுறு சசிமகளெ னப்புவிசொன்
      மடமயின் டித்தப்புயனை
மதுநுகர்மலைக்குறவர் சிறுமிதன வெற்பணைய
      மடல்கொளும் யற்குமரனை
இகனகமெ னக்கடவு எதிவதமி யற்றவுண
      னிகல்கொளநி னைத்தகுகனை
இமையவர்வ ழுத்தவள மிகுமயிலை யிற்குடிகொ
      ளெழிலயில னைக்காக்கவே.       10

காப்புப் பருவம் முற்றிற்று.
------------------------

2. செங்கீரைப் பருவம்.

மருமமிசை யிலகிய தக்கமுங் காதிலணி
      மகரகுண் டலமுநுதலில்
வச்சிரம முத்துசிறு சுட்டியொடு கட்டியம
      ணிப்பட்ட மும்மகுடமும்
பருமவச லத்திணைசொன் மொய்ம்பிலணி வலயமும்
      பன்னிருக ரக்கடகமும்
பைம்பொனரை வடமுமரை ஞாணுநூபுரமுமிரு
      பங்கயத் தாளுமென்மைத்
தருமநிறை முந்நூலு மிலகும் ராறுகட்
      சண்முகமு மன்பர் காணத்
தண்லின் மீதெழுமி ளம்பரிதி போலிந்தர
      தனுவைநிகர் மஞ்ஞைமிசையே.
திருமயிலை தனின்மருவு சிங்கார வேலனே
      செங்கீரை யாடியிருளே
செங்கண்மாற் றிருமருக கங்கையா டருமுருக
      செங்கீரை யாடியருளே.       (1)

மின்னலிணை யாமிடையி னந்நலார் சந்தரசிலை
      மேடையிடை நின்றுமதியை
[*] வெண்ணெயென வெண்ணியங் கண்மிமீ ளுங்கிளியை
      மென்மழலை மொழிதிருத்திப்
மின்னல்செறி கூந்தற்கு மணமூட்டு புகையைமழை
      பெய்யுமுகி லென்றுநாடிப்
பேடைமயி னடனமிட வண்டிசைகள் பாடும்பெ
      ருந்தொண்டை வள நாட்டினில்
கன்னல்செறி யாலையிற் சாறாறு போலவே
      கமலத்த டாகமேவிக்
கதலிக்கும் வீதிநடு கமுகிற்கு மள்ளர் நடு
      கழனிகட் கும்பாய்தலால்
செந்நெல்விளை மயிலைவளர் சிங்கார வேலனே
      செங்கீரை யாடியருளே
செங்கண்மாற் றிருமருக கங்கையா டருமுருக
      செங்கீரை யாடியருளே.       2
---
[*] எண்ணியுங் கண்ணி மீதுங்கிளி- (பாடம்)

பாற்கடலெ னப்பெருகு சிவசத்தி தீர்த்தமுறு
      பங்கயங் குளிர்ந்துமலரப்
பணைமருப் பெருமைகன் றுந்திமுட்டியதெனப்
      பருமடிப் பால்பொழியவிண்
மாற்கம்வரு கதிரவன் நோர்ப்புரவி யஞ்சியே
      மனக்கதியின் மிகநடக்க
வானவர்ம டந்தையர்க ளிமையாத கண்கணர்.
      மடந்தையர்கள் கண்களாகச்
சூற்கறிய முகிலுலவு பனசத்தின் முட்கனிச்
      சுளைவிண்டுதே றல்சொரியும்
சுரபுன்னை சண்பக மிலஞ்சி நிறை சாலையிற்
      றுய்யபூ மாரிபொழியச்
சேற்களுகண் மயிலைவளர் சிங்கார வேலனே
      செங்கீரை யாடியருளே
செங்கண்மாற் றிருமருக கங்கையா திருமுருக
      செங்கீரை யாடியருளே.       3

சுக்கிலமெ னுஞ்சிறிய வித்துளே யுயிரெனுஞ்
      சூக்மவுட லுடனடங்கிச்
சுரோணிதச் சேற்றினா னன்னமய நீரினாற்
      றூல்வடி வாயுதித்து
மிக்கபிர பஞ்சத்தின் யானெனதெ னும்பற்றின்
      வேரூன்றி யைந்தவாவாம்
வெங்கிளை னைத்துவெகு துன்பமே காய்த்தெழில்
      வினைத்தச்ச னாற்றறிபடும்
இக்கனவை மெய்யென மயக்குமா யந்தவிர்ந்
      தேதிலார்க் கெளியனாகி
எதிர்வந்து முத்தியருள் சச்சிதா னந்தகும்
      ரேசனே குருராசனே
திக்கிலுயர் மயிலைவளர் சிங்கார வேலனே
      செங்கீரை யாடியருளே
செங்கண்மாற் றிருமருக கங்கையா திருமுருக
      செங்கீரை யாடியருளே.       4

முகமலரை மோந்துமுத் தாடியிரு விரலினான்
      முன்கவுணெ றித்தெயிறிலா
முறுவல்கண் டுளமகிழ்ந் தாறுபால் பீறிடு
      முலைக்கண்க யக்கியூட்டி
நகைமலர்வெ தும்பவெந் நீராட்டி நேயமுட
      னறுங்குங்கு மங்களாட்டி
நற்றுகிலி னாலொற்றி நெற்றியிற் றிருநீறு
      நனி நிலப் பொட்டுமிட்டே
அகல்கலத் தயினிநீர் சுற்றியம் மானீந்த
      வணிதொட்டின் மேல்வளர்த்தி
ஐயனே யரையனே யாறுமுக னேயென்றெம்
      மம்மைகொண் டாடவந்த
சிகிரிதிகழ் மயிலைவளர் சிங்கார வேலனே
      செங்கீரை யாடியருளே
செங்கண்மாற் றிருமருக கங்கையா டருமுருக
      செங்கீரை யாடியருளே.       5

மணிமக ரக்குழை முருகொடு மெளலியும்
      வளைசுட் டியுமாட்
மார்பணி கண்டிகை நித்தில மாலைமுன்
      மலர்வெட் சியுமாடத்
திணிபுய மிசைசெறி கேயூ ரத்தொடு
      சிறுகங் கணமாடச்
செய்யபொன் னரைஞா ணரைவட மாடத்
      திகழ்பரி புரமாடப்
பணிமொழி கற்பக வல்லிநின் னழகைப்
      பரிவொடு கொண்டாடப்
பையவெ ழுந்து வழ்ந்துக டாட்ச
      பங்கய முகமாட
அணிமயி லைப்பதி யானட மாடிட
      வாடுக செங்கீரை
யாருமை பெற்றரு ளாறுமு கச்சுத
      னாடுக செங்கீரை,       6

கஞ்சம லர்க்கணை முயன்று பிசைந்துநின்
      கைம்மலர் வாடாமே
கனிபவ ளத்துவர் வாயித ழூறிக்
      கவினுடை நனையாம
செஞ்சர ணத்தையு தைத்தழு திருகண்
      டிரண்முத் துதிராமே
சிறுபிறை வேணியர் மார்பிடை யாடித்
      திருவடி காயாமே
குஞ்சர மென்வை சைந்து தவழ்ந்துகு
      றுங்கடை யேறாமே
குவவுத் திண்புய மீதொளி தாவுங்
      குழைகள்கு லுங்காமே
அஞ்சம லர்ப்பொய்கை மயிலையி னரசே
      யாடுக செங்கீரை
யாருமை பெற்றரு ளாறுமு கச்சுத
      னாடுக செங்கீரை.       7

குண்டலம் வெயிலிர விண்டல மென்லிசை
      கொண்டலம் வருகாதும்
குங்கும் பரிமள சந்தன மிலகிய
      கொங்கல ரணிமார்பும்
மண்டல மிசைமதி மண்டல மெனுமுக
      மண்டல மோராறும்
மந்தர கிரிவட விந்தமு நிகரென
      வன்றட மிகுதோளும்
தண்டமிழ் பொழிகளப யின்றிடு மழலைகள்
      தங்கிய கனிவாயும்
சங்கர ரணிபிறை கண்டிகல் திருநுத
      றனிலிடு திருநீறும்
அண்டர்க டொழவரு மயிலையி னரசே
      யாடுக செங்கீரை
யாருமை பெற்றரு ளாறுமு கச்சுத
      னாடுக செங்கீரை.       8

(வேறு.)

குவடுதோ றின்புறு கோவே செந்தே னுண்டாடும்
      குறவர்ம கட்குடிணாளா சங்கே தந்தீரும்
தவமுனி வற்கருள் வாழ்வே செஞ்சேண் மஞ்சாரும்
      சரவண நற்சுனை நண்பா விண்பா ரின்பேதப்
புவனம் ளித்தவி தாதா வென்றா யின்றோர்சொற்
      பொருளை விரித்திலை மூகா வம்பா வென்றோதும்
சிவகும ரப்பெரு மானே செங்கோ செங்கீரை
      திருமயி லைப்பதி வேலா செங்கோ செங்கீரை,       (9)

கரிபொரு மற்பரி காலா டிண்டே ரின்சேனை
      களைபொரு விற்கணை யாலே கொன்றாய் கண்டோடி
விரிகடன் மத்தியின் மாவாய் நின்றோர் வன்சூரன்
      மிகுதவ மற்செய்து மீளா முன்போய் வென்றோய்பொற்
றருவம ரர்க்கர சானோ ண்பார் பெண்பாகா
தமிழ்முனி சற்குரு நாதா நம்பா லன்பால்வன்
சிரமிசை வைத்திடு தாளா செங்கோ செங்கீரை
திருமயிலைப்பதி வேலா செங்கோ செங்கீரை.       10

செங்கீரைப் பருவம் முற்றிற்று.
----------------------

3. தாலப் பருவம்.

ஊனே சுமந்த மானிடரு முயர்பொன்
      னுலகிற் புத்தேளும்
ஒளிநான் முகனு மெமதிடுக்கண் ணொழித்தா
      ளெனவே முறையிடலால்
கானேர் துளவப் புயக்கமலக் கண்ணன்
      மகர வடிவாகிக்
கடலுட் புகுந்தம் மறைதிருடுங் கள்வ
      னுடலஞ் சிதைத்தெவர்க்கு
நானே தலைவ னெனத்தருக்கி நாம்
      நரகந் தனிற்கிடந்து
நையும் பிறவி தொலைவதற்கா நாடிப்
      பரவிப் பூசித்த
மீனே சுரன்றந் தருள்கந்த வேளே
      தாலோ தாலேலோ
வேத புரிவாழ் சிங்கார வேலா
      தாலோ தாலேலோ.       1

நள்ளின் யாமத் தாலயத்து ணந்தா
      விளக்கைக் தூண்டுகின்ற
நற்புண்ணியத்தா லிப்பிறவி நைந்திப்
      புவியாண் மாவலியாம்
வள்ளி யோன்பான் மூவடிமண் மால்சென்
      றிரக்கும் போதிசைந்த
வண்மை கண்டு தடுத்தகொடு மாபா
      தகத்தான் மூவுலகும்
எள்ளி யேச வொருகணிழந் தெய்தா
      நீசவடி வெய்தி
என்செய் 3வமென் றெனைத்தவமு மியற்றித்
      தெளிந்து பூசித்த
வெள்ளீ சுரன்றந் தருள்கந்த வேளே
      தாலோ தாலேலோ
வேத புரிவாழ் சிங்கார வேலா
      தாலோ தாலேலோ.       2

வையம் புகழுந் தசரதன் முன்மதலை
      யாகித் தாடகையை
வதைத்து முனிவன் மகங்காத்து வலியார்
      சனகன் வில்லொடித்துச்
செய்யசீதை தனை மணந்து செமதக் கினிதன்
      சுதனை வென்று
சீரை புனைந்து வனஞ்சென்று சிந்து
      வார மணையடைத்துத்
துய்ய வெள்ளி மலையெடுத்தான் றுவள
      வீழ்த்தி மனைவிகொண்டு
துங்க வயோத்தி நகர்மகுடஞ் சூடி
      ராமன் வந்திறைஞ்சும்
மெய்ய கபாலீ சுரன்றந்த வேளே
      தாலோ தாலேலோ
வேத புரிவாழ் சிங்கார வேலா
      தாலோ தாலேலோ.       3

ஒளிவிண் ணுலகத் திந்திரனுக் கொற்றைக்
      கவிகை நிழற்றுதல்போல்
ஓங்கும் பாரிசாத வல்லிக் குதவுங்
      கொழுகொம் பாய்வளர்ந்து
தளிர்பொன் னம்பொன் னலரான் மால்சதுரா
      னனத்த னெனச்செழித்துத்
தழைக்குந் தேனா லரம்பையர்க டகுபைங்
      கூந்த றனைநனைத்துக்
குளிர் தண் மடுவிற் கஞ்சமஞ்சக் குலவித்
      திளைக்குஞ் சினைபலவாய்க்
குவிமுத் தரும்பு தாரகையின் கூட்டம்
      போல மிகவிளங்கி
மிளிர்புன் னாகத் தீசர்தந்த வேளே
      தாலோ தாலேலோ
வேத புரிவாழ் சிங்கார வேலா
      தாலோ தாலேலோ .       4

அன்போர் வடிவாஞ் சிவனேய
      ரருமைத் தவத்தாற் பெற்றெடுத்த
அரிவை யழகைக் கண்டுவக்கு
      மளவில் கிளைஞர்க் கருளாமே
தென்பூ மியினிற் கௌணியர்கோன்
      செயலே வியந்தங் கவர்க்களிக்கச்
சிந்தித் திருக்கும் போதரவாற்
      சிதைய வவண்மெய் யனலழற்றி
என்போர் குடத்தி. லெடுத்தமைத்தன்
      றெதிர்ந்த சிறுவர் முனம்வைக்க
இன்சொற் றமிழ்பத் தோடுதலு
      மெழுந்த மடமா தரையாட்கொள்
மின்பூம் பாவை யீசர்தந்த
      வேளே தாலோ தாலேலோ
வேத புரிவாழ் சிங்கார
      வேலா தாலோ தாலேலோ.       5

(வேறு.)

இந்தீவ ரத்தினனை வண்டார்வ னப்பிளைஞ
      ரென்பார் வாழ்வாராம்
இந்த்ராணி பொற்பினுயர் பெண்கோடி யுற்றுலவு
      மேல்வீடே நீள்வான்
மந்தார மட்டணுகு சந்தர்வ ருக்கைபுனை
      மாவே மாகாவாம்
மந்தார வெட்சி நிறை நந்தாவ னத்தின்மிகு
      தேனே காலாறும்
செந்தான மிட்டபொழு தாம்பூத லத்திலுறு
      நீரோ பாலாறாம்
தொந்தோமெ னச்சுரர்க ணின்றாடு சுக்கிரபுரி
      யாள்கோ வேவேளே
தந்தாவ ளத்துரியர் கங்காளர் பெற்றசுத
      தாலோ தாலேலோ
சங்கிராம வெற்றிமிகு கங்காந திக்குமர
      தாலோ தாலேலோ.       6

அம்போரு கச்சுனையி னின்றோல மிட்டலறு
      போதே போதாதோர்
அம்போத கத்தின்முனம் வந்தாள்வ டத்தர்மரு
      மானே மானேவா
வும்பாணி யத்தர் மகி ழுஞ்சீரு ரைத்தகுரு
      நாதா நாதாவேர்
ஒன்றாய்முளைத்தமுத லைந்தேப ரப்பிரம
      ரூபா ரூபாபூம்
கொம்பாமி டைக்குறமி னண்பாத ரித்திடும்
      ணாளா தாளாறாய்
கொந்தாம லர்க்குண்மது நந்தாத சுக்ரபுரி
      யானே யானேயா
சம்பூர ணப்பரமர் கங்காளர் பெற்றசுத
      தாலோ தாலேலோ
சங்கிராம வெற்றிமிகு கங்காந திக்குமர
      தாலோ தாலேலோ.       7

பைங்காய்ப ழுத்தகமு கங்கார் முகிற்குமுயர்
      மானாள் போலாநீ
பம்பூவ குத்திடலும் வந்தேய ருச்சனைசெய்
      வேதா வேயாநீள்
கொங்கார்மு கைத்தளவம் வெங்காம மிக்கநகை
      மானார் தானாமால்
கொண்டாசை யுற்றவர்கை கண்டீர்வ தொப்பிதழி
      மாகோ ழேதார்சேர்
செங்கேத கைக்குண்மடல் வெண்டாத டுத்தமுசு
      நீசே வார்போலாம்
செஞ்சாலி முத்தமொளிர் சிங்கார சக்ரபுரி
      நாடாள் கோமானே
சங்கார்தி ருக்குழையர் கங்காளர் பெற்றசுத
      தாலோ தாலேலோ
சங்கிராம வெற்றிமிகு கங்காந திக்குமர
      தாலோ தாலேலோ.       8

(வேறு.)

பண்டைநான் மறைதே ருங்குரு பரனே
      தாலோ தாலேலோ
பந்தவல் வினைதீ ரும்படி யருள்வாய்
      தாலோ தாலேலோ
குண்டலி இடைசூ ழும்பிர ணவமே
      தாலோ தாலேலோ
கும்பக வெளிநா தந்தரு மொளியே
      தாலோ தாலேலோ
தொண்டர்க ளுளமே வுஞ்சர வணனே
      தாலோ தாலேலோ
தொம்பத மருள்பே ரின்பமெய் வடிவே
      தாலோ தாலேலோ
தண்டமிழ் மயிலே சன்றரு சுதனே
      தாலோ தாலேலோ
சங்கரி புதல்வா ஐங்கரர் துணைவா
      தாலோ தாலேலோ.
ஒண்பதி பசுபா சங்களை யொழிவாய்
      தாலோ தாலேலோ
உண்சுவை யொளியூ றுந்தொலி மணமே
      தாலோ தாலேலோ       9

திண்புவி பொருண்மா தென்றமும் மயமே
      தாலோ தாலேலோ
தெண்கட லமுதே கண்கொளு மணியே
      தாலோ தாலேலோ
பண்பக ரிசையே நண்பினர் நசையே
      தாலோ தாலேலோ
பைந்தமி ழுரையே யிந்திரர் துரையே
      தாலோ தாலேலோ
தண்பொழின் மயிலே சன்றரு சுதனே
      தாலோ தாலேலோ
சங்கரி புதல்வா வைங்கரர் துணைவா
      தாலோ தாலேலோ.       10

தாலப் பருவம் முற்றிற்று.
-----------------------

4. சப்பாணிப் பருவம்.

பனிவட்ட மதியுடன் பரிதிவட் டத்துருட்
      பார்வட்ட விரத மேறிப்
பங்கயவுள் வட்டப்பொ குட்டுநான் முகனான்கு
      பழமறைப் புரவி தாண்டக்
குனிவட்ட வாயிரத் தெட்டுமுடி மேருவிற்
      கொடுவட்ட வாக கியினான்
கூராழி வட்டக்க ரத்தனொரு வாளியாய்க்
      கொண்டண்ட வட்ட வுயிரை
முனிவட்ட முப்புரவ ரெதிர்வட்ட மிட்டைந்து
      முகவட்ட மிலக முன்போர்
முயல்வுற்ற போதவர்கள் கரவட்ட மனதுன்னி
      முகில்வட்ட விளமின் னல்போல்
தனிவட்ட மிட்டுநகை செய்தவன் றந்தசுத
      சப்பாணி கொட்டி யருளே
சண்முகவி சாகனே தென்மயிலை வேலனே
      சப்பாணி கொட்டி யருளே.       1

முந்துவா னிமயத்தின் மேனைதவ மகிமையான்
      முளரித்த டத்து தித்த
முதுமறைசொ லருணநிற வனிதையை விரும்பியே
      முக்கணான் வேட்கு நாளில்
இந்தமானிடருரகர் சித்தர்விஞ் சையர்முனிவ
      ரிமையவர்க டொழுத லாலே
இவ்விடைய ணிந்தேற்றத் தக்கணத் திக்கணத்
      தேகெனவி யந்து வந்து
விந்தமா கிரியையும் டக்கியவ் வாதரவின்
வில்வலன் றனைமு டுக்கி
மேதினியி லுளசிவத் தலமெலாந் தரிசித்து
      மிக்கசெந் தமிழ்வி ளங்கும்
சந்தனா சலமுனிவ ணங்குகா ரணகுரவ
      சப்பாணி கொட்டி யருளே
சண்முகவி சாகனே தென்மயிலை வேலனே
      சப்பாணி கொட்டி யருளே.       2

கானமிசை யுலவுவெங் கரடிபுலி யானையைக்
      கணபணப் பெருமா சுணக்
கயிற்றிடைமி னுக்கரிய பொற்பணியெ னத்தமது
      கந்தரத் திட்டு முனிவர்
ஊனமுத யின்றுநகர் புண்ணீர்குடித்திரவி
      யூர்தேரின் மோலி சூட்டி
ஒண்மதியி னைப்பிழிந் தொழுகுபன் னீரிலே
      யும்பர்க்கு வினையு ரைத்து
பீனதன வாளெயிற் றரிவையர்க ளுடலிடைப்
      பெய்துகுல கிரியே ழையும்
பிடுங்கியவர் கையிலிட்டாடுமம் மானையெனப்
      பிலவாய்திறந்து கூறும்
தானவர்க ளுயிருண்ட காலாயு தக்கடவுள்
      சப்பாணி கொட்டி யருளே
சண்முகவி சாகனே தென்மயிலை வேலனே
      சப்பாணி கொட்டி யருளே.       3

வட்டமிடு மோராழி வையத்தி னிற்கட்டு
      மரகதப் புரவி தம்மை
மனைக்குதிரை யாக்கிவிண் டவழுமுகி லேழையும்
      வளைகின்ற சாட்டை யாக்கி
அட்டகுல வெற்புமுறை யிடமாக்கி வாருதிக
      ளவையெட்டும் வாவி யாக்கி
யானையெட் டையுமுகைத் தூரத்தி யாக்கி திறை
      யளக்குமிட மௗகை வாக்கிச்
சிட்டருறு பொழிலேழு மனந்தவன மாக்கியே
      டிசையுண்ணு பூதங் களைச்
சேனைகளு மாக்கிமல ரீயனரியொ டிந்திரன்
      செங்கோலின் முறைந டக்கச்
சட்டமிடு நவவீரர் தமையனென வந்தவன்
      சப்பாணி கொட்டி யருளே
சண்முகவி சாகனே தென்மயிலை வேலனே
      சப்பாணி கொட்டி யருளே.       4

மதுமுகந் துண்டுயிர்வ தைத்தமரர் முனிவரரை
      வாதிக்கு நிசிசர ரையும்
வஞ்சமும ழுக்காறு மிவறலுங் குடிகொண்ட
      மனிதர்ப சாசர் களையும்
விதுமுகங் கருகநற் சனர்கள் வறிஞராய்
      வீடுதோ றிரந்துண் ணவும்
வேறொருவர் காதறனை யுள்ளம்வைத் துணையன்றி
      வேறில்லை யெனுவ ரைவிலாப்
பொதுமுகம் பார்த்துழலும் வேசியர்கண் மயல்கொண்ட
      புருடரையு மேன மைத்தாய்
போதித்த மறைமுதற் பிரணவப் பொருலென்ன
      புகல்டா வைன்று சொல்லி
சதுமுகன்மு டித்தலைபு டைத்திடுக ரங்களாற்
      சப்பாணி கொட்டி யருளே
சண்முகலி சாகனே தென்மயிலை வேலனே
      சப்பாணி கொட்டி யருளே.       5

(வேறு.)

விறன்மிகு முக்கிர பூதப் படைநல்
      வீரர்கள் புடைசூழ
விண்டொடு பொற்றேர் மிசைசென் றங்கொரு
      வெற்பி னிருந்தமர்செய்
மறவவு ணப்பெரு வாருதி யுண்டிட
      வடவைத் திருவுருவாம்
வடிவேல் தொட்டிகல் வென்றபின் மணம்விரி
      வாகைத் தொகைசூடி
நறவுமிழ் கற்பக நளிநீ ழற்குடி
      நண்ண வமைத்திடலால்
நாகம் பணிசெயு மாகண் டல்னரு
      ணன்னுதன் மனநாணக்
குறமகண் முற்செல மயன்முதிர் கிழவன்
கொட்டுக சப்பாணி
கொத்தலர் கற்பக வல்லித ருங்குக்
      கொட்டுக சப்பாணி.       6

தென்றற வழ்ந்துல வும்பொழின் மன்னிய
      செய்யப ரங்கிரியும்
திரையொலி முழவொலி வளையொலி செறியுந்
      சீரார் செந்தூரும்
என்றும்வ லந்திரி யென்றுட னிந்துவு
      மிமையவ ரும்பரவும்
ஏரக முந்திரு மாறொழு திருவா
      வினன்குடி யென்பதியும்
பன்றிய முயலக தீர்ந்திடு சாரற்
      பழமுதிர் சோலையினும்
பற்பல கோடிகு றிஞ்சிநி லத்தெழு
      பைம்பொற் கொடுமுடிசேர்
குன்றுதோ றாடலு மாடிய முருகன்
      கொட்டுக சப்பாணி
கொந்தலர் கற்பக வல்லித ருங்குக
      கொட்டுக சப்பாணி.       7

மஞ்சரி மொய்த்த குழற்பிறை நுதலிணை
      வாள்விழி மதிமுகமும்
வள்ளைகள் செவிபவ ளம்மிதழ் முத்தொளிர்
      வாணகை செங்காந்தள
அஞ்சரி யுற்றகை யசலமி ணைத்தன
      மாலிலை யகடுந்தி
ஆறுந் திச்சுழி கொடியிடை யரவல்கு
      லானைக் கைதொடைநல்
சஞ்சரி கச்சர ணன்னம் மயிலின்
      சாயற் குயிலினிசை
தத்தைசொன் மெய்த்தளிர் மேனித் தெய்வத்
      தன்மைவ னப்பினிளம்
குஞ்சரி யைப்புணர் குஞ்சரர் துணைவா
      கொட்டுக சப்பாணி
கொந்தலர் கற்பக வல்லித ருங்குக
      கொட்டுக சப்பாணி.       8

சரவண பவவெனு மறிஞர் மனத்தி லிருப்போனே
      தமிழ்கொடுன் னடியினை துதிசெய்கு லத்தை வளர்ப்போனே
அரவனை யரியய னமரரி டுக்கண் ணொழித்தோனே
      அலைகடல் சுவறிட வயிலையெ டுத்து விடுத்தோனே
விரகமெய் மயறரு குறமக் ளச்ச் முறத்தானே
      விரைவொடு மதகரி முகனைவ னத்தி லழைத்தோனே
குரவர் திகழ்புய வறுமுக கொட்டுக சப்பாணி
      குகமயி லையின்வளர் குருபர கொட்டுக சப்பாணி.       (9)

பலகலை குறுமுனி யறியநொ டிக்குள் ளுரைத்தோனே
      பகையற வயலெனு முறைமத் விர்த்த கருத்தோனே
அலகில் மெய்யடி யருணகி ரிக்கருள் வைத்தோனே
      அவனவ ளதுவெனு மருவுரு வத்தை யமைத்தோனே
நலதவ முயல்பவ ரணுகிய முத்தி நிலத்தோனே
      நதிமதி முடியினர் தொழுமௌ னத்தை விரித்தோனே
குலமயின் மிசைவரு சரவண கொட்டுக சப்பாணி
      குகமயி லையின்வளர் குருபர கொட்டுக சப்பாணி.       10

சப்பாணிப் பருவம் முற்றிற்று.
-------------------

5. முத்தப் பருவம்.

பொழியுஞ் செந்தேன் மலர்ப்பொழில்கள்
      பொதியு நீருண் புயலளக்கப்
பொற்கோட் டிமயப் பொருப் பரசன்
      புதல்விக் கருணைத் தண்ணிலவின்
விழியு மன்பு முனதுமதி
      விம்ப வதன மேலமைத்து
விம்முங் குடம்போற் றனஞ்சுரந்து
      மேரு வரைவீ ழருவியென
வழியும் பாலை மணிச்செம்பொன்
      வள்ளத் தேந்தி நின்கைதர
வாங்கி யயின்ற வவ்விடையே
      மதுரத் தமிழாந் தேவாரம்
மொழியு மழலைத் திருவாயான்
      முத்தந் தருக முத்தமே
முகிறோய் புன்னைக் காமருவு
      முருகா முத்தந் தருகவே.       1

வானப் பொருளா கியசிந்தா
      மணியு மானு மிரு நிதியும்
மலர்ப்பொன் மரமு மரம்பையர்கள்
      வாய்செந் தேனுங் கடலமுதும்
தானப் பொருட்கிம் புரிக்கோட்டுத்
      தவளக் கவளக் களிற்றின்மிசை
தங்கு மரசும் புவியரசுந்
      தந்தோர் முத்தித் தடமேவும்
ஞானப் பொருளுந் தரவல்ல
      நம்பன் பழிச்சி வணங்கி நின்று
நான்கு மறைக்கு முதற்பொருளை
      நவிலா யென்முன் னோரெழித்தின்
மோனப் பொருட்சொல் திருவாயான்
      முத்தந் தருக முத்தமே
முகிறோய் புன்னைக் காமருவு
      முருகா முத்தந் தருகவே.       2

சதிர்முத் தரையு மெண்ணாத
      சங்கப் புலவோர் நின்றைஞ்சத்
தனிப்பொற் பலகை மீதிருந்து
      தண்டா மோனந் தணந்திருந்து
கதிர்முத் திலகும் வெண்ணகையங்
      கயற்கண் மாதர் கருத்துவக்கும்
கடம்பா டவியின் வாழ்சோலைக்
      கட்வுளுடனே தருக்கஞ் செய்து
எதிர்முத் தகத்தா லவர்சொன்ன
      வெல்லாப் பொருளு மகழ்ந்தன்பாய்
இறைய னார்சொல் பொருள்பொருளென்
      றீந்து கரம்பொன் முடிதுளக்கி
முதிர்முத் தமிழைப் புகழ்வாயான்
      முத்தந் தருக முத்தமே
முகிறோய் புன்னைக் காமருவு
      முருகா முத்தந் தருகவே.       3

மறுவற் றொளிரும் மதிமுகமும்
      வடிவேலம்பும் வாள்குந்தம்
வயங்கு நீல மான்வண்டு
      வலைவா ருதிநே நிருவிழியும்
சிறுகச் சிறந்த தமருகம்போற்
      றிகழ்ந்து நுடங்கு நுண்ணிடையும்
செம்பொற் குடஞ்சூ ழிளநீர்திண்
      சிலையைப் பொருத கனதனமும்
உறுபுத் தமுதுஞ் சருக்கரைதே
      னொத்த மொழியு மிகச்செறிந்த
உன்றா யெனுங்கற் பகவல்லி
      யுளத்தா மரையை யலர்த்துநிலா
முறுவற் பொருந்துந் திருவாயான்
      முத்தந் தருக முத்தமே
முகிறோய் புன்னைக் காமருவு
      முருகா முத்தந் தருகவே.       4

நத்த மிப்பி முற்றுகார் நளின முத்தம் பங்கமுறும்
      நத்தை முத்த நலிபடும்வேய் நன்னெற் கன்னன் முத்தினரசல்
மத்தக் கசக்கோட் டேனத்தின் வண்கோட் டுளமுத் தறுத்தெடுப்பர்
      வான்முத் தந்தோ மின்னினையு மச்ச முத்தமலை போதும்
கொத்தின் பூக முத்துதிரி கொக்கின் முத்தம் புலானாறும்
      குளிர்வெண் மதிய முத்தமறுக் கோதாய் முத்தங் கோதானின்
முத்த முறுவற் றிருவாயான் முத்தந் தருக முத்தமே
      முகிறோய். புன்னைக் காமருவு முருகா முத்தந் தருகவே       .(5)

(வேறு)
களமாரி நெற்கதிர்க ளெழுகுவா லொண்கிரிக்
      டுப்பவதி னேறு சங்கம்
கதிர்மதிய னந்தமென வெண்ணிலவு காலக்க
      டிக்குவளை குமுத மலர
வளவர்செய் திருப்பணிசெய் முகப்பினவ மணிகளால்
      வளைகின்ற சிகரி மகுடம்
வான்முகிலை யளவிடுங் கேதனங்க ரங்களால்
      வானவரை வரவ ழைக்கும்
இளவையிலெ றிக்குமணி நெடுவீதி யாவணத்
      திரையுமொலி கடல்க ளொக்கும்
இரதியூர் வசிமாதர் இவரென்று மாதர்குழ
      லெழிலியென மயின டிக்கும்
அளவின்வள் நிறைமயிலை யதிபனென வருமுருக
      வமுதவாய் முத்த மருளே
அவுணர்கிளை களைவேல் விமயமக டருபால்
      வமுதவாய் முத்த மருளே.       6

ஒளிர்சிறைவி ரித்துவளை யறுகாலை யூன்றியுட
      லுட்கூனி மிர்ந்தெ ழுந்தே
ஓடியா டிப்பாடி நாடியூ டிப்பெடைக்
      ளுடன்மலர்க் காவி னேகித்
துளிமதுவ யின்றதுது வர்ப்பிதென விட்டுநறை
      சொறியுமலர் வாவி யுற்றுச்
சுருண்முகைபு டைத்தவிழ்த் துந்திக்கு டைந்திகழ்
      துதைந்தகத் தேனை யுண்டு
களிமிகுதி யான்மனம யிங்கியிசை முரலாது
      காலோடு கால்கள் பின்னிக்
கதிரவன லர்த்துசெந் தாமரைப் பள்ளியிற்
      கருமணிகள் போற்கண் டுயில்
அளிகள்பயின் மயிலை தனி லதிபனென வருமுருக
      வமுதவாய் முத்த மருளே.
அவுணர்கிளை களைவேல விஷயமக டருபால்
      வமுதவாய் முத்த மருளே.       7

வன்னமலர் வாவியிடை சென்றுசிறு மூலங்கள்
      வாலமுத மென்ன வுண்டு
மதுநீர ருந்திநறு மணம்வீசு சந்தனமென்
      மகரந்த முடறி மிர்ந்து
யன்னமுயர் குடையாக நெட்டிதழ்வி ரிந்த தண்
      பங்கயத் தவிசின் மேவிப்
பலகலைக் கேள்விமுயல் வேந்தரென வேறுபல
      பறவைமென் குரல்க ளோர்ந்து
தன்னினமெ னும்பெடையை யோர்சிறையி னான்மெலத்
      தழுவித்திளைத்து வீதி
தனில்வந்து நூபுரமி ரங்கியடி பேர்த்திடுந்
      தையலார் நடைகள் கற்கும்
அன்னநிறை மயிலை தனி லதிபனென வருமுருக
      வமுதவாய் முத்த மருளே
அவுணர்கிளை களைவேல் விமயமக டருபால
      வமுதவாய் முத்த மருளே.       8

வகிரு மதியை யிணைசொன் னுதலும்
      வளைகள் செறியு மத்தமும்
வரிவை யடரு நெடிய விழியும்
      வலிய வரையை யொத்திடும்
நகில வினையு மொளிமின் னிடையு
      நகையின் றுகிரின் முத்தமும்
நளின மலரின் முகமு மினிய
      நறிய மொழியு மற்புத
எகின நடையை யிகழு நடையு
      மிருளோ டிகலு மைக்குழல்
எழிலு மருண நிறமு மிலகு
      மிமய வரசி புத்திர
முகிலை யனைய கருணை வடிவின்
      முதல்வ தருக முத்தமே.
முதிய மறைகள் பரவு மயிலை
      முதல்வ தருக முத்தமே.       9

அருவு முருவு மகில் தலமு
      மணுவு மலையு மற்றுள
அளவில் பொருளு நொடியி னளவி
      னமையை நினையு நிற்குண
ஒருவ னிதய மகிழ வொருசொல்
      லுணர வுரைசெய் விற்பன
உதய வருணர் வருண நளின்
      வுபய சரண சிற்பர
மருவின் மணமும் வெளியின் வளியு
      மதுவில் ரசமு மொப்பவன்
மனதி னிறையு நிமல வருளின்
      வடிவ வகர வக்கர
முருக மரையின் மலரின் வளரு
      முருக தருக முத்தமே
முதிய மறைகள் பரவு மயிலை
      முதல்வ தருக முத்தமே.       10

முத்தப் பருவம் முற்றிற்று.
-------------------

6. வருகைப் பருவம்.

செஞ்சரணின் விரலிருமு ழந்தாட்க ளீராறு
      செங்கைகள் சிவப்ப வூன்றிச்
செஞ்சதங்கை கள்கொஞ்சநூபுர மொலித்திடச்
      சிவன்மார் பினிடை தவழ்ந்து
சஞ்சரிகண் வெண்டலையை வேணிநடு மடுவினிற்
      றங்குநீ ரால லம்பித்
தண்கொன்றை மாலைகளி னூறுதே னேந்திவான்
      றாவுமா னுக்க ருத்திப்
பஞ்சுரமி சைத்தசிறு வண்டைப்பி டித்துநெளி
      பாம்பின்வா யிற்படுத்திப்
பனிமதியை வாங்கியுமை நுதலிணைய தாமெனப்
      பார்த்துவிளை யாடு குமரர்
மஞ்சரிய ளித்தபிடி யானைமண வாளகுற
      வள்ளிநா யகன்வ ருகவே
மஞ்சண்முதி ரிஞ்சிகொளும் விஞ்சிவிரி கஞ்சநிறை
      மயிலை நாயகன் வருகவே.       1

சிலைநுதலி லணிசுட்டி பளபளென வொளிவிடச்
      செய்யபொற் பட்ட மின்னச்
செவிமகர குண்டலம் பன்னிரண் டாதித்தர்
      செறிவதென வெயிலெ றிப்பக்
கலைமதிமு கத்தமிழ்த மொழுகுகனி வாயினிற்
      கதிர்முறுவ னிலவ றிப்புக்
கண்டசர மொளிர்தவள் முத்துமா லிகைத்திரள்
      கனவுடுப் போல்வி ளங்க
விலையிலா மாணிக்க மரகதம ழுத்திகதிர்
      வில்வாகு வலய மொளிர
வெற்றிவீ ரக்கழல் சதங்கைகிண் கிணிமணிகொள்
      வீரநூ புரமு ழங்க
மலைமகட வத்தின்வரு செல்வநா யகனீப
      மாலைநா யகன்வ ருகவே
மஞ்சண்முதி ரிஞ்சிகொளும் விஞ்சிவிரி கஞ்சநிறை
      மயிலை நாயகன் வருகவே.       2

செங்கயல்வி ழிச்செவிலி யொக்கலையின் வைத்துனைத்
      திண்சிலைக் கோடு காட்டிச்
சீதமுலை காட்டிநட மாடுமயில் காட்டிவளர்
      திங்கள்வரு வழிகாட்டிநின்
சங்கரிக ரத்தேந்தி நறியநீ ராட்டியிரு
      தனகிரிப் பாலூட் டியோர்
தங்கநவ ரத்தினத் தோட்டின்மிசை யாட்டிநற்
      றாராட்டி முத்தாட் டிட
இங்கிவர்க ளிவ்வாறு சீராட்டல் கண்டுவா
      னிமையவர்கள் பாராட் டலும்
ஈரேழு பதினாலு புவனமுமோ ரண்டமெனு
      மெண்ணரிய கோடி யண்ட
மங்களகல் யாணமிக வளருநா யகநீப
      மாலைநா யகனவ ருகவே
மஞ்சண்முதி ரிஞ்சிகொளும் விஞ்சிவிரி கஞ்சநிறை
      மயிலை நாயகன் வருகவே.       3

கங்கையக முகமலர்ந் தெதிர்வந்து வாவென்று
      கைகொட்டி நின்ற ழைக்கக்
கண்டுதலை யைக்கவிழ்ந் திருதாளு தைந்துமத
      களிறெனப் பிளிறி யார்த்துச்
செங்கைமல் ராற்பிசைந் தீராறு நயனமுஞ்
      சேப்பக் கலுழ்ந்து பொங்கித்
தேங்கித்தி கைத்துச்சி னத்துப் பிணீக்கந்
      திளைத்திடுத லுற்று நோக்கிக்
கொங்கைபிதிர் விட்டோடு பாலுட னனைப்பக்
      குடங்கையா லேந்தி மெல்லக்
கொஞ்சிக்கு லாவியிஃ தியாதைய னேயென்று
      கொண்டாடு மைய வெற்பின்
மங்கைவத னாம்புயம் பார்த்துநகை யாடியுள்
      மகிழுநா யகன்வ ருகவே
மஞ்சண்முதி ரிஞ்சிகொளும் விஞ்சிவிரி கஞ்சநிறை
      மயிலை நாயகன் வருகவே.       4

பொற்பளிங் காற்செய்த தூண்டோறு முன்னிழல்
      பொலிந்திலங் குதலை நோக்கிப்
பூதநா யகன்மதலை யாதலா லிவனுமெப்
      பொருள்களினு நிறைவ னென்றே
பற்பல கணங்கள்வந் தங்கங் கிறைஞ்சிப்
      பரிந்தெடுக் கவுண் ணிமெய்ப்
பரிசித்து வெட்கமணி மண்டபத் திடையிட்ட
      பஞ்சனையின் மேற்ற வழ்ந்து
கற்பரசி யாமிமய மாதுசெங் காந்தளங்
      கைவிரல்கள் பற்றி நின்று
காதிலிரு குண்டலஞ் சுழலநுத லணிசுடிகை
      கதிராறு போற்று லங்க
மற்புயம் ராறுங்கு லுங்கநட மிடுசுப்ர
      மணியநா யகன்வ ருகவே
மஞ்சண்முதி ரிஞ்சிகொளும் விஞ்சிவிரி கஞ்சநிறை
      மயிலை நாயகன் வருகவே.       5

(வேறு.)
காதி னுனது மதலைமொழிக்
      கருதிக் கேட்டோ ரிசைகேளார்
கண்ணா லுனது திருவழகைக்
      கண்டோர் பிறவித் துயர்காணார்
தீதி லுருவந் தீண்டினவர்
      செழிக்கு மடவார் முலைதீண்டார்.
சீத முறுவ றனைப்பார்த்தோர்
      திகழு நிலவு தனைப்பாரார்
ஓதி னரிய வாய்முத்த
      முண்மை யாகப் பெற்றோர்கள்
ஒன்று மிரண்டு மூன்றென்னு
      முயர்ந்த முத்தி நனிவேண்டார்
ஆதி முதலே யாறுமுக
      வமுதே வருக வருகவே
அங்க மொருபெண் ணாமயிலை
      யரைசே வருக வருகவே.       6

வீறு நிறைமெய் யுயிர்காம
      விழைவே முத்தி யெனுமதமும்
விலையூன் மண்ணுக் கொக்குமென
      மிசையு மாசீ வகர்மதமும் நீறு புனைதல் - பாவமென
      நீந்தித் திடுசா ரணர்மதமும்
நீடுங் கரும முத்தியென
      நிகழ்த்து மீமாஞ் சையர்மதமும்
தேறும் பிரமஞ் செகத்தெனவே
      செப்பும் வேதாந் தம்மிரண்டும்
திறஞ்சேர் முத்தி யெனும்பேதச்
      செருக்கு மகற்றி யுட்சமயம்
ஆறு முரைசெய் யாறுமுக
      வமுதே வருக வருகவே
அங்க மொருபெண் ணாமயிலை
      யரைசே வருக வருகவே.       7

பொறியோ ரைந்துந் தகளியதாய்ப்
      பூத மைந்து மதன்றொண்டாய்ப்
பொருந்து மவாவா லுண்டாகும்
      புலன்க ளைந்து மணிவிளக்காய்ச்
செறியூ ணுடம்பே யாலயமாய்த்
      திரநீள் சுழினைக் கம்பமதாய்த்
தெளிநீர்க் கங்கை யாரமுதாய்ச்
      செம்பொற் சிகரி சேகரமாய்
நெறிசேர் வாயிற் றிருவாயாய்
      நிருத்த மடவார் சுவாசமதாய்
நிவேத முளனா யமைத்தெண்ணி
      நிகழ்த்து மொழிகள் வாச்சியமாய்
அறிவோ ருளஞ்சே ராறுமுக
      வமுதே வருக வருகவே
அங்க மொருபெண் ணாமயிலை
      யரைசே வருக வருகவே.       8

(வேறு.)
முடவர் நுகர நெடிய மலையின்
      முடியி ன்றவு நணுகல்போல்
முதிய மறையு மறிய வரிய
      முதல்வ னுனது வடிவையே
அடரு மமரர் முனிவர் மனித
      ரசுர ரனைவ ரறியவே
அமல வரனு மிமய மயிலு
      மருளு மழகு முதல்வனே
உடலு மவுண ரிருளை முடுகு
      முதய ரவியி னயிலனே
உரக படமு முடலு நெறிய
      வுலக மிலகு மயிலனே
மடலின் வனச நயன் வதன
      நிமல வருக வருகவே
மகர சலதி முரசின் மயிலை
      வரதன் வருக வருகவே.       9

பிரமர் கவுணி யர்குல திலக
      பிரபலன் வருக வருகவே
பெருக நிதிய வசிய ருதவு
      பெரியன் வருக வருகவே
பரமர் பரவு கமல் சரண
      பகவன் வருக வருகவே
பழைய வடிய ரிதைய மருவு
      பனவன் வருக வருகவே
குரவ னபணி யிமய சயிலி
      குழகன் வருக வருகவே
குணக ணபண பணியி னணியர்
      குமரன் வருக வருகவே
மாக தநிற முகின்மெய் வளையன்
      மருகன் வருக வருகவே
மகர சலதி முரசின் மயிலை
      வரதன் வருக வருகவே.       (10)

வருகைப் பருவம் முற்றிற்று.
----------------------------

7. அம்புலிப் பருவம்.

சித்தசன் கவிகையா னெனவும்பர் புகலமர
      செகமெங்கு மொலிபரவலாற்
செய்யபொன் னாரமொரு திரணமென நினையவே
      செய்யவல் லவனாதலால்
புத்தமுத மென்னவே நகையினில் வொழுகலாற்
      பூரணக் கலையாட்சியால்
பொங்குமலை வாருதியி னோர்பிறவி யுறுதலாற்
      பூமிதனை வலம்வருதலால்
முத்தமருள் வாயினால் வாரணக் கரனென்று
      முன்னூ லெடுத்தோதலால்
முத்தமிழ்ச் சம்பந்த ராசனிவ னாதலான்
      முற்று நினை யொப்பன்கண்டாய்
அத்தனரு டிருமதலை யாதலா னிவனுட
      னப்புலீ யாடவாராய்
ஆதிமயி லைப்பதியின் மேவுமயி லத்தனுட
      னம்புலீ யாடவாராய்.       1

காசிபன் வரத்துதைய னாதலா லாசையுறு
      கட்டிளமை யுடன்மேவலால்
ககனவழி யேகியக் கல்லோல மோலமிடு
      கடல்வாயி னிற்றங்கலால்
மாசில் கருத்தனிவ னாதலா னாடோறு
      மனமகிழ்நல் லின்பமுறலால்
மத்தமறு துணையாகி யுத்திதனை மெலிவித்த
      மாபுகழின் வாக்குமிகலால்
தேசிக னெனப்பெயர் சொல்லிலாரி னுங்காண
      சீயத்த நாதனெனலால்
செம்பாதி யீசனம் பிறையாக வோட்டலாற்
      சீர்தூக்கி னின்னையொப்பான்
ஆசிடை நுடங்குகற் பகவல்லி சேயனுட
      னம்புலீ யாடவாராய்
ஆதிமயி லைப்பதியின் மேவுமயி லத்தனுட
      னம்புலீ வாட வாராய்.       2

கற்கடக மிதுனமுறு செங்கையுற் றாய்மலர்க்
      காலிற்சி லம்புவந்தாய்
கவினார மாலையக் கந்தரஞ் சூழக்
      கணங்களுட னேதிரிகுவாய்
சிற்சொருப மாசிக்கு ழந்தையென வுலகெலாந்
      தெரிசிக்க வேவளருவாய்
சிவன்சடா முடிமீதுஞ் சிவ்வடிய ரகமீதுஞ்
      செழித்துமிக வேதிகழுவாய்
எற்கதிர வற்குமுன் கலைகள்கிர கிக்கவே
      யீகுவாய் புந்தியருள்வாய்
இத்தொழில்க ளிவனுக்கு மாறா திருக்கையா
      லிவனின்னை யொப்பதறிவாய்
அற்புத கபாலீசர் சிங்கார வேலனுட
      னம்புலீ யாட வாராய்
ஆதிமயிலையப்பதியின் மேவுமயி லத்தனுட
      னம்புலீ யாடவாராய்.       3

தேரினுரு ளாகியே நீசுழலு வாயிவன்
      றேரேறு சிவன்மைந்தனாம்
தென்னிலிங் கையினேக வஞ்சுவா யிவனுனைச்
      செல்வித்த ராமன்மருகன்
வாரிதிக ழிப்பிமுத் தொளியையொத் தாயிவன்
      மாணிக்க வொளியாயினோன்
வருகுணக் கன்றியுத் தரமறிகி லாயிவன்
      வளைசமுத் திரமுவறிவோன்
கூரிரவி னிருளொன்ற கற்றிடவ லாயிவன்
      கொடுவினையி னிருளோட்டுவோன்
கூறினின் றனிலுமொரு கோடிகுண மதிகமாங்
      கூடவிளை யாடநின்போல்
ஆருமிலை யென்றுநினை யாமலெம் மையனுட
      னம்புலீ யாடவாராய்
ஆதிமயிலைப்பதியின் மேவுமயி லத்தனுட
      னம்புலீ யாடவாராய்.       4

வீரனொரு வன்றாளி னுதைகள்பட்டவன்
      வீரர்க்கு முதல்வனானோன்
வெய்யவன் முகங்கண்டு நாணிமறை வாயிவன்
      வேல்கண்டு கதிர்கனண்ணும்
கோரமுட னின்குருச் சாபமுற் றாயிவன்
      குருசாமியாய் முன்னின்றோன்
குக்கிடக் குரல்காணி னஞ்சுவா யிவன்கொற்றக்
      கொடிக்குரலென் றுமகிழ்வோன்
நேரம்வர வேமுன்னி நீநடப் பாயிவன்
      நேரம்வர வே நினைகிலோன்
நிந்தைக்கு மாளாவை யிவனெய்து நெறிகண்டு
      நீடுலகு ளோர்வாழ்த்துவார்
ஆரணம் பரவவரு சிங்கார வேலனுட
      னம்புலீ யாடவாராய்
ஆதிமயி லைப்பதியின் மேவுமயி லத்தனுட
      னம்புலீ யாடவாராய்.       5

எவ்வுயிர் தனக்குநீ யிருபட்ச னாதியிவ
      னெந்நாளு மொருபட்சனாம்
இடமிடம் தன்றியிடம் வேறில்லை யுன்றனக்
      கெண்டிசையு மிவனெய்துவோன்
ஒவ்வொரு கலைக்குலகை வலம்வந்து பெறுவையிவ
      னோதுமெண் ணெண்கலையுளோன்
ஓயாத லைந்தலந் தேதேய்கு வாயிவ
      னோரதலத் துற்றுய்குவோன்
நவ்விவிழி யாருனைக் கண்டேசு வார்களிவ
      னயனவீக் கணம் வேண்டுவார்
நல்லவர் சதுர்த்திதனி லுன்முகம் பாரார்க.
      ணான்சொல்வ தன்றுகண்டாய்
அவ்வவர் கருத்தறிந் தருள்செய்முரு கேசனுட
      னம்புலீ யாடவாராய்
ஆதிமயி லைப்பதியின் மேவுமயி லத்தனுட
      னம்புலீ யாடவாராய்.       6

விண்ணாறு தலைவைத்த பரமற்கு மெய்ஞ்ஞான
      விதியைமுறை யாயுரைத்தான்
மீனவன் கூன்வெப்பு நீங்கவம ணர்கணெஞ்சம்
      வீடவெண் ணீறளித்தான்
உண்ணாடி யூனற்ற வங்கமொரு பெண்ணாக
      வொருநொடியி னிற்சமைத்தான்
ஊமையொரு பிள்ளைவாய் விண்டுநூ லுரைத்திடவு
      மொருமொழியின் வாக்களித்தான்
எண்ணாத பலவெண்ணி யென்மறுத் தீர்க்குமிட
      மெத்தல் மெனத்திகைத்தாய்
இமையவர்க டொழுகபா லீசுரத் தெய்தி
      லிட்டகா மியமெய்துவாய்
அண்ணாவி னமிழ்தொத்த சிங்கார வேலனுட
      னம்புலீ யாடவாராய்
ஆதிமயிலைப்பதியின் மேவுமயி லத்தனுட
      னம்புலீ யாட வாராய்.       7

மனந்தனி னினைந்தவுட னக்கீரன் முன்வந்து
      வனகற்கி முகியைவென்றான்
வாசவன் முதற்றே வரைந்தருவி னீழல்குடி
      வைகமிக வாழ்வளித்தான்
கனந்தரு தமிழ்ச்சங்க மதுரைநகர் மூழ்கவரு
      கடலைவே லானீவினான்
கடிகியண் ணாமலையி னருணகிரி முன்றொழுது
      கர்ணுமா வோடிவந்தான்
தனந்தனியி ருந்தேங்கு நீயென்ற பூரண
      சமாதியை இயற்றவேண்டா
சகலவடி வாய் நின்ற தெய்வமென் றெண்ணிநீ
      தாள்பற்றி முத்திபெறுவாய்
அனந்தகுண கல்யாண சிங்கார வேலனுட
      னம்புலீ யாடவாராய்
ஆதிமயிலைப்பதியின் மேவுமயி லத்தனுட
      னம்புலீ யாடவாராய்.       8

வெம்மையவு ணர்கள்வாரி வெற்பஞ்ச வேவிட்ட
      வேலொன் றிருப்பதறிவாய்
வேதன் முடித்தலைக ளொன்றொடொன் றடிபட்டு
      விண்ணென்று புண்ணீர்வரச்
செம்மைவிரல் காய்ப்பமுன் குட்டியது மறிவாயிச்
      செம்மல்முனம் வந்தயானை
சீறிடமுன் னவமதிப் புண்டுநீ பட்டதுயர்
      செப்புவதென் யாருமறிவார்
மும்மையு மளிக்கவல னொருமத்லை யாகிமணி
      முன்றிலிடை நின்றுகஞ்ச
முகலமர்ந் துன்னையவன் வாவென்ற ழைத்ததுவு
      முன்செய்த புண்ணியங்காண்
அம்மைமுன் நீவந்த தேனென் றுரைத்திடா
      னம்புலீ யாடவாராய்
ஆதிமயிலைப்பதியின் மேவுமயி லத்தனுட
      னம்புலீ யாடவாராய்.       9

சின்னம் படைத்தசம ணெண்ணா யிரம்பேர்க
      டென்மதுரை வையைக்கரைத்
திட்டதனி னட்டகழு வேறவுஞ் செய்துபின்
      றிரும்பிவரு போதுவழியில்
கன்னங்கறுத்தவுட லுளமுடைய பாதகக்
      கண்பனைக் காடென்னவே
காணுமுகம் விண்ணிடியை யேவித்து ரத்தசிறு
      காளையுனை வரவழைத்தான்
பொன்னம் புயத்தடம் நண்ணுமட வார்களணி
      பூணின்மணி யாலுமீசர்
பொற்கோயில் கட்டுமணி வச்சிரத் தாலுமலர்
      பூத்தவிசு போல்விளங்க
அன்னங்க ளெத்தினமும் வாழ்தொண்டை நாடனுட
      னம்புலீ யாடவாராய்
ஆதிமயி லைப்பதியின் மேவுமயிலத்தனுட
      னம்புலீ யாடவரராய்.       10

அம்புலிப் பருவம் முற்றிற்று.
--------------------

8. சிற்றிற் பருவம்.

வைய மளந்த நின்மாமன்
      மார்பி னடக்கக் கெளத்துவமா
மணிசற் றழுந்தப் பெருவிரலின்
      வருந்தி மயங்கி மெலிவதுகண்
பைய னேயென் றனைத்துமெல்ல
      வாற்றித் தேற்றி யகமகிழ
அழகு பொழிபொற் றுகில்சாத்தி
      யாழி சங்க யகங்கையினில்
பைய வைத்துப் பாற்புகட்டும்
      பவள வாயின் முறுவலுறும்
படிசெய் துமையாள் கைகொடுக்கப்
      பரிந்து வாங்கிக் கண்ணொற்றும்
செய்ய கமலப் பொற்றாளாற்
      சிறியேஞ் சிற்றில் சிதையல
சீலா மயிலைப் பதிவேலா
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே.       1

துட்ட நமனை மார்புதைத்துத்
      துங்க மதனை வீழ்த்தெரித்துத்
துய்ய வெள்ளி வெற்பெடுத்த
      தொலையா வரக்கன் றோணெரித்துக்
குட்ட வெள்ளைக் கடலுதித்த
      கொடிய விடத்தை மிடற்றடக்கிக்
குலைசெய் குஞர்வாழ் முப்புரத்தைக்
      குறிய நகையாற் பொடிப்படுத்தி
வட்ட மதியி னுடற்றேய்த்து
      வலிய தக்கன் சிரஞ்சிதைத்து
வணங்கும் புலிபாம் பெலியெறும்பு
      மற்று மறுபத் துடன் மூன்று
சிட்டர்க் கருள்செய் சிவன்புதல்வா
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சீலா மயிலைப் பதிவேலா
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே.       (2)

கருவார் பிறவிக் கடல் கடத்திக்
      கதிவீ டருளு மென்றெண்ணிக்
கண்டு தொழுது புதியநறுங்
      கடப்ப மலரா லருச்சிக்க
மருவார் தமக்குங் கிட்டாத
      மலர்த்தாள் வருந்த மறுகின்வந்து
மதலை முடித்த பி[த்] தர்தந்த
      மதலை யென்ப தறிவித்தாய்
பொருவா ரணத்தின் முகனைவென்ற
      புழைக்கை யானை முகனென நீ
போதிவா ளாவென வெம்மைப்
      புடைத்தாய் நினக்கு முறையென்றாற்
றிருவார் மார்பன் றிருமருகா
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சீலா மயிலைப் பதிவேலா
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே.       3

உந்தை வேட னூணெச்சி
      லுண்டா னெனயா மிகழ்ந்தோமோ
உனது மாம னெய்திருடி
      யுரலிற் கட்டுண் டடியுண்ட
நிந்தை சிறிது முரைத்தோமோ
      நின்முன் னவன்றன் பெருவயிற்றா
நீல னெனயாம் பகர்ந்தோமோ
      நின்னைக் கடம்ப னென்றோமோ
விந்தைக் குறத்தி தருந்தினைமா
      விசைந்த தொருவர்க் கிசைந்தோமோ
விளையாட யரோமணற் சோற்றை
      வேட்டால் விருந்தென் றறியோமோ
சிந்தை மகிழ்கற் பகவல்லி
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சீலா மயிலைப் பதிவேலா
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே.       (4)

மீண்டுமடித் தாயாங்கள் வண்டல்
      விளையாட் டிடமோ பகையெந்தாய்
விண்ணு மண்ணுக்க வல்ல
      விரைப்பூங் கமலஞ் சிரமன்று
பண்டு நிருத பலர்மேவும்
      பாரா வாரா வாரியன்று
பஞ்சா னனத்தின் முக்குடையோன்
      பாழிப் புயத்தா ருகனன்று
ஞெண்டு கொழுத்தால் வளைகிடவா
      நீதி போலாஞ் சூரனன்று.
நெடிய கொடிய மயல்விளைக்கு
      நீலக் கிரவுஞ் சமுமன்றாற்
செண்டு பிடித்துச் சீர்காத்தாய்
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சீலா மயிலைப் பதிவேலா
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே.       5

வண்டார் மலர்க்குஞ் சியைமுடித்து
      மணிபொற் சுடிகைத் தனைத்திருத்தி
வள்ளக் குமுத வாய்முறுவல்
      வழங்கு நிலவி னமுதுண்டு
தண்டா மரைநன் முகவேர்வை
      தன்னைத் துடைத்து முத்தமுண்டு
தயங்கு நடைகண் டுளமகிழ்ந்து
      தாயார் விடுத்த திதற்கோதான்
தொண்டா யுங்கள் பணியியற்றுந்து
      தொழும்ப ரெம்மை வீதிதொறுந்
துரத்திப் பேதைப் பெண்கணெஞ்சந்
      துடிக்கச் செய்தா யிதுநீதி[தகை]யோ
திண்டார் புனைபன் னிருதோளா
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சீலா மயிலைப் பதிவேலா
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே.       6

மதியி னிலவு கானற்குள்
      வளையின் பெரிய பாண்டத்துள்
வயலின் செந்நெற் கதிரினுதிர்
      வண்முத் தரிசி கொழித்திட்டுப்
புதிய நதியின் பால்வார்த்துப்
      பெருமுத் திப்பி யான்மூடிப்
புனைசந் தனச்சூட் டடுப்பேற்றிப்
      பூங்குங் குமத்தா லுமிதூவி
முதிய பவளப் பொறிவைத்து
      மூட்டி முளரித் தாள்மாட்டி
முயன்று சமைத்த சிறுசோற்றை
      முன்ன முனக்கிட் டுண்ணேமோ
திதிய மருமான் மருகோனே
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சீலா மயிலைப் பதிவேலா
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே.       7

ஆதி மறையு மயன்மாலு
      மறியாப் பரமன் றிருத்தோளின்
னகன்மார் பிடையிற் றவழ்ந்தேறி
      யணிந்த தவளத் தூளிதமாய்
பூதி யதனி லேபடிந்து
      புழுதி யாட்டன் றயர்ந்ததுவும்
புரிமென் கூந்த ரிமயமயிற்
      புளகத் தனத்திற் றிமிசுண்ணத்
தாதி நனைந்து விளையாடுந்
      தகவு நினக்கு சகசமலாத்
தமியேங் குறித்த மணிலிதுன்பாற்
      றாள்கண் முந்தி யுறுத்தாதோ
தீதில் குணத்தார்க் கருள்புரியுஞ்
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சீலா மயிலைப் பதிவேலா
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே.       8

ஆறு தலையான் தவத்துதித்த
      ஆறு தலையான் நான்மறையுள்
ளாறு தலையா மங்காத்து
      ளாறு தலையே சொலுமெளியேங்
கூறு தலைச்சொ லுட்கொள்ளாய்
      கொதித்தாய் சீறிக் கோபித்தாய்
குணித்தாய் நடித்த யிசைபடித்தாய்
      கோல மறுகு தனினடந்தாய்
வேறு தலைவ ருன்குறும்பை
      விலக்க வலவ லங்குளரோ
மேலா மைந்து தொழிலுனக்கு
      விளையாட் டன்றி யிதுதொழிலோ
தேறு தலைச்சங் கத்தமிழ்சொல்
      சேயே சிற்றில் சிதையேலே
சீலா மயிலைப் பதிவேலா
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே.       9

மாவேந் தியபைந் துணர்ப்புன்னை
      வனத்தின் மலரைப் பறித்தோமோ
மறைதோய் கபாலி தீர்த்தத்தின்
      வந்து புனலைக் குடைந்தோமோ
மூவேந் தர்கள்செய் நின்கோயில்
      முகப்பிற் சிறுசோ றமைத்தோமோ
மூங்கிற் சிறிய முச்சில்கொண்டு
      முன்றிற் றரளங் கொணர்ந்தோமோ
பாவேந் தர்கணின் னருணகிரிப்
      பாடுந் தமிழைப் பழித்தோமோ
பலகால் நாங்க ளாடிடத்திற்
      பகைமை கருதி வருவதென்னோ
தேவேந் திரனார் திருமருகா
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சீலா மயிலைப் பதிவேலா
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே.       10

சிற்றிற் பருவம் முற்றிற்று.
--------------------

9. சிறுபறைப் பருவம்.

அசமுகிதன் னன்னைபெறு நிருதர்சது ரங்கங்க
      ளகிதலத்தி னண்ணி டமிலா
தடுக்கிட்ட பாண்டமென வொன்றின்மே லொன்றுற்ற
      வத்தனையு மூள்க னலின்வீழ்
மசகதிர ளொப்பவிடு முனதுவடி வேலினான்
      மடித்தபினு மப்ப டிவர
வாருணமு தித்தகதிர் முன்னிருளெ னக்கருவி
      மறநிருத ரைக்கூ ளிகள்
முசலமுத லானடித் தம்மிமிள கென்னவே
      முதுநிலத் திட்ட ரைத்து
முன்னின்ற போர்த்தலைவர் கந்தரந் திருகிமணி
      முடியைவிட் டாடச் செய்தே
திசைபுகழ வெற்றிபுரி சேனாபதித் தலைவ
      சிறுபறை முழக்கி யருளே
செகதலம் புகழவரு மயிலையம் பதிமுருக
      சிறுபறை முழக்கி யருளே.       1

எண்டிசைக ளுஞ்செக்கர் நிறமாக வங்கங்கி
      ரத்தங்கள் சிந்த வானத்
தெண்ணில்பிறை யகல்பகலி லுற்றதென வேதோற்ற
      வெண்கிரிகள் பொடிய தாகக்
கொண்டலிடி யுக்கவெனப் பேழ்வாய்திறந்தலறு
      குரலண்ட கூட முட்டக்
கோதிலவர் வீசுவது நிலைநின்ற மின்னெனக்
      குவலயத் திருளை யோட்ட
மண்டிகிரி பம்பரஞ் சூறைவளி போலவே
      மண்ணும்விண் ணுஞ்சு மூன்று
மாயைபல செய்துபுத் தேள்பூத வீரர்கண்
      மயங்கித்தி யங்கி முடுகும்
திண்டித்த சூளாளி பிளந்திடு குபோரியே
      சிறுபறை முழக்கி யருளே
செகதலம் பரவவரு மயிலையம் பதிமுருக
      சிறுபறை முழக்கி யருளே.       2

கடலேழு நிறையோரி மைப்பொழுதி னுண்டிடுங்
      கதிரின்வடி வேலெடுத்துக்
கரிய நிசி சரர்பிசித வுடலினிறை கறையக்க
      ரைபுரள் வேய கத்துக்
குடன்மூளை நிணமெலாம் வீரகா ளிப்பசிகு
      றைத்திடவ ளத்து மற்றைக்
குறைத்தலைக ளெப்பறந் தலையினின் றாடிடுங்
      கூற்றுமவ ருயிருண் பனாம்
நடனவில் ரம்பையர்வி மானமெதிர் கொளவேறி
      நாகலோ கத்தெய் தலும்
நரிகழுகு கழுதுகால் கைசிரம் பங்கிட்டு
      நல்விருந் தேயர்த் துணைத்
திடமழிவில் சிங்கமுக வனைவென்ற சரபமே
      சிறுபறை முழக்கி யருளே
செகதலம் பரவவரு மயிலையம் பதிமுருக
      சிறுபறை முழக்கி யருளே.       3

புங்கவர்த மக்கிடாவி ளைத்தவர்க் கரசொரு
      பொறிக்குயில் தாக வோட
புலோமிசை கரந்தவளைப் பற்றுமச முகிகையைப்
      பொருகாள னுது ணிக்க
அங்கவைந டந்ததென் றேயறிந் தச்சூர
      னமரரைச் சிறையில் வைக்க
அலகில்பல பூதகண மிரதமயில் வாள்கணைவில்
      லானுனக் கீந்த னுப்பத்
துங்கமுட னலைவாயின் வைகியுன் றம்பியைத்
      தூதனுப் பியும்வ ணங்காத்
துட்டவவு ணக்கடலை யோரம்பின் வடவையாற்
      றூளிபட வென்று ஞானச்
சிங்கமென வாகைபுனை பன்னிரு புயத்தனே
      சிறுபறை முழக்கி யருளே
செகதலம் பரவவரு மயிலையம் பதிமுருக
      சிறுபறை முழக்கி யருளே.       4

கோலவா ரணநான்கு கோட்டுலக் கைகள்கொடு
      கொடுநிருதர் பற்கு வைகளைக்
கோதின்மகு டத்துரலி னிடையிட் டிடித்துக்
      கொழித்துவெண் மாவ தாக்கி
பால்லோ சனநீவி சன்னதிநி வேதனம்
      பண்ணியொரு கூன்கு றட்பேய்
பரிவாகி யேதின்ன வெண்ணிவரு பொழுதைந்து
      பட்டினிப் பேய்ப்ப றித்துச்
சாலவொரு பிடியள்ளி வாயினிட மிடறினிற்
      றக்கிவிக் கிக்க டநிணைத்
தண்ணீர் குடித்திளைப் பாறிமகிழ் வாகி நின்
      சார்திருப் புகழ்கள் பாடும்
சீவசிவ பூதகண நாதசே னைத்தலைவ
      சிறுபறை முழக்கி யருளே
செகதலம் பரவவரு மயிலையம் பதிமுருக
      சிறுபறை முழக்கி யருளே.       5

(வேறு.)

களமிசை யாலம டக்கிய முக்கணர்
      கைத்துடி யிசையென்ன ககனத்
திடைசொரி யாயிர வதன்
      கங்கைமு ழக்கென்னத்
துளவணி நெடுமால் கொட்டிய முழவத்
      துழனியி னார்ப்பென்னச்
சுரர்முனி வரர்தொகு மவையின்வி ளங்குஞ்
      சுருதித் தொனியென்னக்
குளமது நிகரென வுனதுதிருப்புகழ்
      கூறுக லிப்பென்னக்
குணில்கொடு குறவர்கு றிஞ்சிநி லப்பறை
      கொட்டும் திப்பென்ன
முளரிய யன்றலை குட்டொலி யென்ன
      முழக்குக சிறுபறையே
முத்தமிழ் மயிலையி னருளுரு முருக
      முழக்குக சிறுபறையே.       6

புடவிக் குரமென வேதன் மைத்தபொ
      ருப்பும்வி திர்ப்படையப்
பொற்றிரு வானவர் நற்றின மென்பு
      கழ்ந்தும கிழ்ச்சி பெறத்
தடவிக் ரமசமர் நிருதாதி யங்கிச்
      சிந்தைக லக்கமுறச்
சேணுறும் விஞ்சையர் வீணைகள் விட்டுச்
      செவிநிறை யமுதுண்ணக்
கடமிக் குள திசை யானைக ளொட்டலை
      காதுகள் செவிடுபடக்
கட்செவி யெட்டுநெ ளிந்துப யந்தெறி
      கனலுமிழ் கண்மூட
முடவுப் படவர வமளியென் மருக
      முழக்குக சிறுபறையே
முதுதமிழ் மயிலையி னருளுரு முருக
      முழக்குக சிறுபறையே       7.

நாகநி ழற்றரு வானவ ரெனவே
      நற்பூ மாரிபெய
நளினத் திருமக ளூடற விர்ந்தரு
      ணாரணன் மார்பணையக்
கோகில முதலா கியசில பறவைகள்
      குழைமர முழை நுழையக்
குஞ்சர மொடுசீ யம்பகை யின்றியோர்
      குகையின டங்கியிட
வாகன மாகிய நின்மயின் மகிழ்வாய்
      மகிதல நின்றாட
வஞ்சனை செயுநிரு தத்திரளேழெனும்
      வாரியை விட்டோட
மோகினி யாகிய மாறிரு மருக்
      முழக்குக சிறுபறையே
முதுதமிழ் மயிலையி னருளுரு முருக
      முழக்குக சிறுபறையே.       8

சிலைநுதன் மைக்குழல் வனச மலர்க்கொடி
      பணிசரணாள்
திரையமு தைப்பொரு கருணை நிறைத்திடு
      கயல்விழியாள்
கலைமதி யொப்பதோர் திருவதனத்தினள்
      பிடியிடையாள்
கனகம யக்கிரி கடைபடு செப்பினை
      யிகழ்முலையாள்
முலைமுகை முத்தென முறுவல் விளைத்திடு
      சிறுநகையாள்
முதிர்கத லிக்கணி நறியச ருக்கரை
      யெனுமொழியாள்
மலைமகள் பெற்றருள் முருக முழக்குக
      சிறுபறையே
மயிலை நகர்க்கிறை புதல்வ முழக்குக
      சிறுபறையே.       9

படியி னிடத்தெனைக் கருவி னுதித்திடும்
      பகைதடிவோய்
பலகலை கற்றவர் சொலும்வழி நிற்பவ
      ரறிபொருளே.
துடியிடை நற்குற மடமயி லைப்புணர்
      சுகமயமே
சுரர்முனி வர்க்கருள் செயவரு தற்பர
      சுயசொரூபா
அடிகளு றத்தவர் மனதிரு ளைப்பொரு
      மிளரவியே
அமலர்செ விக்குண மெனுமொரு சொற்பொரு
      ளருள் குருவே
வடிவழ கைப்பொரு முருக முழக்குக
      சிறுபறையே
மயிலைந கர்க்கிறை புதல்வ முழக்குக
      சிறுபறையே.       10

சிறுபறைப் பருவம் முற்றிற்று.
------------------

10. சிறுதேர்ப் பருவம்.

பையவந் துதயகிரி மீதேறி யிரவிருட்
      படலமொடு சீத மிக்கப்
பனித்தலைய கற்றிவெண் மதிமுக மழுங்கவும்
      பண்ணிவா னத்து மீன்கள்
வெய்யதண் கிரணவொளி யுள்ளடங் கச்செய்து
      மேதியினில் வாழு முயிர்கள்
விழிகட்கு முதவிமிகு பற்பலகு ணங்களைவி
      ளக்கிவை கறையெ ழுந்த
துய்யதமிழ் மறைச்சைவர் செங்கையி னருக்கியத்
      துனையினிற் றன்வ லியினாற்
துட்டநிசி சரர்பகையை நீக்கியவ் வுணவினாற்
      சுரர்மகிழ வனச மலரச்
செய்யும்வெங் கதிரவன் றேர்நாண மாயூா
      சிறுதே ருருட்டி யருளே.       1

பாராள வந்தவத ரித்துக்க பாலீசர்
      பாதம்ப ணிந்து பெயக்குநாட்
பத்திசெய் தரக்கர்தமை வெல்லும்வரம் வாங்கியப்
      பத்துமுக ராவ ணனையும்
பேரான கும்பகரு ணன்றனையு மற்றுளப்
      பிள்ளைகளை யும்ப டையையும்
பிலத்தினி லிருந்துவரு மாமூல பலமுடன்
      பெறுவரங் களையும் வென்று
தாரான வாகையு மணிந்தயோத் தியின்வந்து
      தனதுசெங் கோல்ந டத்தித்
தருமிறைக டிரைகளைக் கொண்டுங்க ளாலையந்
      தாள்கட்டி வைத்த நேயச்
சீராமர் செய்தேரு வந்தவடி வேலவ.
      சிறுதே ருருட்டி யருளே
திரைவாரி முத்தருறை மயிலாபு ரிக்கிறைவ
      சிறுதேருருட்டி யருளே.       2

கலையார வேகற்ற கும்பமுனி சொல்லிலக்
      கணமுடன் காவியத்துக்
கனிமதுர நவரசமு மசலமுரு கப்பாடு
      காந்தாரத் திசையீ ரமும்
மலையாரு மகில்குங்கு மத்தினுள வாசமுடன்
      மற்றுமுள காவின் மணமும்
வளர்தொண்டை நாடதனில் விளைசெந்நெல் வயலூடு
      மள்ளர்களை களையு மாதர்
தலையார மேலிந்த னக்கோட்டின் மீதணிவ்
      வாதுகற் பூர கானத்
தருமணமும் வருவிருந் தூட்டமனை தொறுமட்ட
      சட்டாச மணமு முண்டே
சிலையார வேளிர்தம் வகும்வீதி தனின்முருக
      சிறுதே ருருட்டி யருளே
திரைவாரி முத்தருறை மயிலாபு ரிக்கிறைவ
      சிறுதே ருருட்டி யருளே       3
.
கங்குவளை தின்றிக்க ருந்துமா னின்மனைக்
      கன்றுன்னி நின்று முலையின்
கண்டிறந் தூற்றுபா லாற்செந்நெல் விளையுமுயர்
      கமுகுகனி நெறியுச் சியினில்
தங்குவளை வயிறுளைந் தீன்றமுத் தினிற்பெருகு
      தண்ணிலவி னால்வா வியினில்
தாமரையின் மலர்குவியு மாம்பன்மலர் விரியுமித்
      தண்பனைத் தொண்டை நாட்டில் பொங்குவளை
கடல்சூழ்ந்த பூவுலகி னின்னருட்
      புதுமையறி விக்க வேண்டி
பொற்புறுதி ருத்தணிகை வெற்பினொரு தினமொரு
      பொய்கைதனி லுண்டாக் கியவிச்
செங்குவளை மாலையணி சிங்கார வேல்வ
      சிறுதே ருருட்டி யருளே
திரைவாரி முத்தருறை மயிலாபு ரிக்கிறைவ
      சிறுதே ருருட்டி யருளே.       4

வார்பெறுத னத்திருக் காமாட்சி தவமறிய
      வந்தயே காம்ப ரேசர்
மதகரி சிலந்தியா வுடனம்பி வேடனும்
      வணங்குகா ளத்தி யீசர்
நீர்பெறும் டாடவிகு லுங்கவொரு பதினெட்டு
      நித்தியிடு தியாக ராசர்
நித்தருத் தங்கழுகு வந்துபூ சிக்கவரு
      நிகழ்வேத கிரியீ சுரர்
தார்பெறுசி ரத்தின்வரு மாசிலா மணியீசர்
      தண்டிருப் பாசூ ரீசனார்
தங்குதிரு விற்கோல நாதர்திரு வான்மீசர்
      தாமர்திரு வல்லி தாயார்
சீர்பெறுதி ருக்கபா லீசரருள் வேலவ
      சிறுதே ருருட்டி யருளே
திரைவாரி முத்தருறை மயிலாபு ரிக்கிறைவ
      சிறுதே ருருட்டி யருளே       5

உன்மயம் தாமென்ற பொறிபுலன் கரணங்க
      ளொன்றையொன் றறிய மாட்டா
துன்னுயிரு மறிவிக்க வறியுமது வன்றியே
      யுனதெனதெ னத்தி யங்கும்
பொன்மயமு நிலமயமு மனையாட்டி மயமுமெய்ப்
      பொருதவத் தையினி லுண்டோ
பொய்யுணர்வி தனைவிட்டு மெய்யுணர்வை நாட்டியே
      புவுனபோ கங்க ளெல்லாம்
மென்மயம தாகவே நீநினைகு வாயென்ற
      னிதயத்தி லேவி ளங்கி
யெள்ளுக்கு ளெண்ணெய்போ லெப்பொழுது மகலாத
      வின்பவடி வாகி நிறைந்த
சின்மயநி ராமயகு ழந்தைவடி வேலவ
      சிறுதே ருருட்டி யருளே
திரைவாரி முத்தருறை மயிலாபு ரிக்கிறைவ
      சிறுதே ருருட்டி யருளே.       6

பத்தியுட னுதையத்தெ ழுந்துபுனன் மூழ்கியே
      பரிந்துவெண் ணீற ணிந்து
பகர் பூத சுத்திமுத லைந்தையு மியற்றியே
      பதுமா சனத்தி லிருந்து
புத்தியொரு மிக்கமுக் குணமைந்து புலனையும்
      புறம்விடா துள்ள டக்கிப்
போக்குவர வானயிடை பிங்கலையின் வாயுவைப்
      பூரித்து ளேநி றுத்தி நித்தியம் தாமிதைய புண்டரிக மலருளே
நீடுசின கரம் மைத்து நிமலவடிவுள்ளூறப் பாவித்து விதிமுறை
      நினைந்துசிவ பூசை செய்து
'சித்திபெறு வாயிலார்க் கருள்கபா லீசர்சுத
      சிறுதே ருருட்டி யருளே
திரைவாரி முத்தருறை மயிலாபு ரிக்கிறைவ
      சிறுதே ருருட்டி யருளே.       7

ஆசில்விரை வாசுகவி யரியசந் தத்தமிழ்க்
      கருணகிரி நாதர் தன்னால்
ஐந்திலக் கணமுமுரை யதிமதுர கவிதைதனை
      யன்புமிகு நற்கீ ரனால்
பேசுசித் திராதிகவி பிரமபுர வேதியன்
      பிள்ளையெனு நின்வாக் கினால்
பெருகுவித் தாரகவி பாரகா வியமுதற்
      பிரபந்த மற்று மெல்லாம்
மாசில்வர முறுகச்சி யப்பனாற் செந்தூரின்
      மருவுபகழிக்கூத் தனால்
வளர்குமர குருபரத் தம்பிரா னால்வழியில்
      வருபொய்யா மொழிய வவையால்
தேசுபெறு முலகறிய வறிவித்த தேசிக
      சிறுதே ருருட்டி யருளே
திரைவாரி முத்தருறை மயிலாபு ரிக்கிறைவ
      சிறுதே ருருட்டி யருளே.       8

முந்துதொகை யெண்பெயர் முறைபிறப் புருவளவு
      முதலந்த மிடைபோ லிகள்
மொழிபுணரப் புறத்தெழுந் தியல்புதனி மைத்தோர்
      மொழியைந்து பாலி ருதிணை
யுந்தனையு மூன்றிடத் தும்வழக் குச்செய்யு
      ளோர்குறிப் பால்வெளி யிதனால்
ஓதுதல் சொலதுவிற் குசாற்றறி சொல்பெயர்
      வினைகளுட னிடையுரிசொ னான்காம்
ஐந்திணை யகம்புறமு திரைகோட லாதியா
      மகவைபொ ருளலங் காரமு
மணியிரண் டாறுருப் பாயிரண் டாகுமயற்
      ப வ்வைந் திலக்க ணமெனுஞ்
செந்தமிழ்க் குறுமுனி வணங்குகுரு தேசிக
      சிறுதே ருருட்டி யருளே
திரைவாரி முத்தருறை மயிலாபு ரிக்கிறைவ
      சிறுதே ருருட்டி யருளே.       9

புயலை நிகர் செங்கையினர் பூம்பாவை யூரவர்நின்
      புகழ்மருவு பிள்ளைத் தமிழால்
புகலெனத் தம்மமுத வாக்கினா லொருசீர்
      புகன்றதுன் வாக்க தாக
நயமதுர கவிபொழியு நிபுணதாண் டவராய
      நாவல ணிசைந்து பாடி
நான்மறைசொல் வாணர்தமிழ் வாணர் நிறை தொண்டைவள
      நன்னாட்டு ளோர்கள் மெச்ச
இயல்புறுச காத்தமோ ராயிரத் தாறு நூற்
      றெழுபத் திடனெட் டாண்டினில்
வெய்துபவ வருடமா வணியுத்தி ரட்டாதி
      யிலின்பு டனரங் கேற்றிடுஞ்
செயமிலகு தமிழ்கொண்ட சிங்கார வேலவ
      சிறுதே ருருட்டி யருளே
திரைவாரி முத்தருறை மயிலாபு ரிக்கிறைவ
      சிறுதே ருருட்டி யருளே.       10

சிறுதேர்ப் பருவம் முற்றிற்று.
திருமயிலைப் பிள்ளைத் தமிழ் முற்றும்.
----------------------

திருமயிலைப் பிள்ளைத் தமிழ்.
பாட்டு முதற்குறிப்பு அகராதி.

பாட்டு பருவம், பாடல் எண்

அகனகம் 1.10
அசமுகிதன் 9.1
அந்தண் 1.2
அம்போருக் 3.7
அருவுமுருவு 5.10
அன்போர் 3.5
ஆசில்விரை 10.8
ஆதிமறையு 8.8
ஆறுதலை 8.9
இந்தீவ 3.6
உந்தைவேட 8.4
உரையைப் 1.7
உன்மயம் 10.6
ஊனேசுமந்த 3.1
எண்டிசை 9.2
எவ்வுயிர் 7.7
ஒண்பதி 3.10
ஒளிர்சிறை 5.7
ஒளிவிண் 3.4
கங்குவளை 10.4
கங்கையக 6.4
கஞ்சம 2.7
கடலேழு 9.3
கரிபொரு 2.10
கருவார் 8.3
கலையார 10.3
களமாரி 5.6
களமிசை 9.6
கற்கடக 7.3
கனகரை 1.3
காசிபன் 7.2
காதினுனது 6.6
கானமிசை 4.3
குண்டலம் 2.8
குவடுதோ 2.9
கொஞ்சுகிளி 1.8
கோலவாரண 9.5
சதிர்முத் 5.3
சரவணபவ 4.9
சித்தசன் 7.1
சிலைநுதலி 6.2
சிலைநுதன் 9.9
சின்னம்படைத் 7.10
சீர்கொண்ட 0
சுக்கில 2.4
செங்கயல் 6.3
செஞ்சர 6.1
சொற்கமல 1.4
தண்கோட்டு 1.6
துட்டநமனை 8.2
தென்றறவழ்ந் 4.7
தேரினுரு 7.4
நத்தமிப்பி 5.5
நள்ளின் 3.2
நாகநிழற் 9.8
படியினிடத் 9.10
பணிவட்ட 4.1
பண்டிங்க 1.5
பண்டைநான் 3.9
பத்தியுட 10.7
பாராள 10.2
பலகலை 4.10
பாற்கட 2.3
பிரமர் 6.10
புங்கவர் 9.4
புடவிக் 9.7
புயலை நிகர் 10.10
பைங்காய் 3.8
.
பையவந் 10.1
பொழியுஞ் 5.1
பொறியோ 6.8
பொற்பளிங் 6.5
மஞ்சரி 4.8
மணிமக 2.6
மதியினில் 8.7
மதுமுகந் 4.5
மயன்மனத் 1.9
மரும்மிசை 2.1
மறுவற் 5.4
மனந்தனி 7.8
மாவேந் 8.10
மின்னலிணை 2.2
மீண்டுமடித் 8.5
முகமலரை 2.5
முகில்வண் 1.1

முடவர் 6.9
முந்துதொகை 10.9
முந்துவா 4.2
வகிருமதி 5.9
வட்டமிடு 4.4
வண்டார் 8.6
வன்னமலர் 5.8
வார்பெறு 10.5
வானப்பொரு 5.2
விண்ணாறு 7.7
விறன்மிகு 4.6
வீரனொரு 7.5
வீறு நிறை 6.7
வெம்மையவு 7.9
வையமளந்த 8.1
வையம்புக 3.3
------------------

2. திருமயிலை உவமை வெண்பா
(திருநெல்வேலி நடலிங்க கவிராஜர் பாடியது) .

திருமயிலை உவமை வெண்பா.

காப்பு.
பூமான் மகிழ்மயிலை புண்ணியனைப் போற்றி செய்து
நாமா னுவமைவெண்பா நான்பாடக்-காமானுங்
கூத்த விநாயகனுங் கும்பமுலை யாரிருவர்
காத்த விநாயகனுங் காப்பு.       1

நூல்.
சுந்தரமாந் தீர்த்தத் துரைச்சாரயி னாடுதலால்
விந்தைக் குளம்விரும்பு மேன்மையதா- லெந்தையருள்
வேண்டுதலா லென்றும் வியன்மயிலைத் தந்திமுகன்
பாண்டிய விநாயகனொப் பாம்பு.       (2)

புட்கரணி தீர்த்தம் புனைவளத்தாற் பாவைமுகம்
முட்குதிரை முகத்துண் டாக்குதலாற் - கட்செவியா
னோங்கு நகரிக் குருகீழ்க்காற் செந்தூரான்
றாங்குமயி லாபுரிவேள் தான். (3)

வள்ளுவரின் சொல்வளமே வாய்த்தசத்த மால்வரையால்
விள்ளுவகை வாயிலார்க்கு மேலதாற்-றுள்ளலைசூழ்
மாமயில்வன் புன்னையிலே வந்ததாற் செந்தூரே
யாமயிலை யென்றுதுதிப் பாம். (4)

புன்னைமரஞ் சேருதலாற் பொய்யிலா மெய்விளங்குந்
தன்மையினாற் கள்ளவனஞ் சார்தலினாற்-மன்னுமதில்
வீரமார்த் தாண்டனுக்கு மேற்படலா லாவுடைத்தாய்
வூர்களந்தை யூர்மயிலை யூர். (5)

கருத்தன் மருவு கபாலனென் றுங்காண்பால்
நிருத்தர் பொய்யிலார்பால் நிறைவால்-திருத்துபுனைக்
கர்வுடைத்தாய் பச்சைக் கதிரிலகுஞ் சந்நிதியா
லாவுடைத்தாய் கற்பகத்தா யாம். (6)

கங்கை தனுமதியுங் காணுதலாற் றாம்ரவன்னி
தங்கு மிறைவனிடஞ் சார்தலினால்-அங்கை
வளைசுரமுங் கற்பகவல் லியுஞ்சேர் பண்பாலத்
தளை மயிலை யேவிதிபா தம். (7)

கண்ணுவர்சூழ் வேலைக் கருத்துவைக் காட்சியதால்
எண்ணியபோ தாயினர் பணியாற்- பெண்வடிவு
தெற்குமுகச் சேவைதருஞ் சீரால் மயிலைநகர்
தெற்குதவு தென்றளிகை யே. (8)

நன்காந்தை வேங்கடத்து னண்ணியே பாலுறலால்
மன்கதிர்வே லாராசை வந்தனையா-லென்றளிகை
வாயே மருவி வரந்தரலாற் கற்பகமாந்
தாயே வடிவுடைய தாய். (9)

பொதிகைமலை மேற்கீழ்ப் பொருந்துமுக வாய்ப்பாற்
பதிகுலசே கரராம் பண்பாற்-குருதிசெய
குறம்வளர்த்தாள் கோங்குயல் பாடியே கையினால்
யறம்வளர்த்தாள் கற்பகத்தா யாம். (10)

கருவூரார் பாற்றிரும்புங் கண்ணி னருளாற்
மருதப்ப ராசை வளத்தா-லிருமைக்
கடனா விரதிநதி கங்கையெனச் சேரலாற்
புடைமரு தூர்மயிலாப் பூர். (11)

ஆரமலை மேல்பா லணுகலாற் கும்பமுனி
நேர முதல்வ நிரை தரலால் - நாரிசிவ
காமவல்லி மேவு கனவளத்தால் தென்பூவை
நாம் மயிலை நகர். (12)

வேளையென்றும் போற்றும் வியப்பினாற் காசிமன்னன்
நாளும் பரவு நலத்தால்--சூளு
மரகதத்தாய் கற்பக வல்லியென் வாய்ப்பாற்
புரியம்மை யூர்மயிலாப் பூர். (13)

முன்னீரி நாக முடியாட லக்கடனா
நன்னீர்ப் பெரியவள் நாடுதலால் -தன்னேர்
கயிலாய ருள்ளக் களிப்பாற் பிரமை
மயிலா புரியெனவும் வாழ்த்து. (14)

கும்பமுனி சந்தாற் கொற்றந் தமிழ்ப்பெறலாற்
செம்புனல் வாரி சிறந்ததனா-லம்புவியிற்
பொன்மலையின் சீர்வசந்தன் பூவார்ந்த தால்மயிலை
நன்மலய மென்றுதின் நாடு. (15)

உலகின்பாற் கல்யாண முற்றுதவு பண்பால்
இலகுமலை யாசலஞ் சேரின்பாற்-பலர்புகழும்
செட்டிக் கருள்செயலாற் சீர்ப்பாவ நாசகங்கை
இட்டமயி லாபுரியே யாம். (16)

அத்திதீர்த் தங்கண் ணழகுறலாற் கல்யாண
சத்தியெந்த நாளுந் தழைத்திடலால்-முத்திக்
கடனை வழங்குங் கனத்தால் மயிலை
இடமாஞ் சிவசயில மே. (17)

கும்ப நியதிதிரி கூடச் சிவமெனலாற்
சம்பந்தன் பாப்புனையுந் தண்பலவாற்- கொம்புழல்
வாய்மொழித்தா யுங்கள் மருவுதலால் குற்றால
நாம் மயிலை நகர். (18)

களவி லடியவரைக் கண்பார்க்கும் பண்பால்
வளர்கபா லீசரென்னும் வாழ்த்தால் - அளவளவா
மொப்பனையும் பக்க முறலாற் கருவைநல்லூர்
இப்புவியிற் றென்மயிலை யே. (19)

நாக மகிமையினால் நற்கூழைச் சொற்பெறலால்
ஏக வடிவிலரி யன்புறலாற் - பாகமெல்லாங்
கோமதி குலாவுதலாற் கோமாசீ ராசைநகர்
பூமயில்வாழ் தென்மயிலாப் பூர். (20)

பூமி வணங்குதன்மை பூணுதலால் மீறுகின்ற
நேமிசுழித் துள்வாங்கு நேர்மையினால்- நாமின்
வழிபாடு செய்ததுணை மாலை புரிவரலாற்
சுழியல் மயிலையெனச் சொல். (21)

காளை வடிவார் களிப்புறலாற் சிங்கார
வேளை வணங்கியருள் வேண்டுதலால்-நீளுலகின்
மானதியாங் கங்கை வாய்த்தவர்கொண் டாடுதலாற்
கானப்பே ரேமயிலை காண். (22)

காணவரு மப்பனெதிர் காட்சி கொடுப்பதனாற்
பூணுவன்னி போலுமுருப் பூத்ததனாற் - பேணுமிசைப்
பாவணந் தானுமவை (வேற்) பாலனொரு பாலுறலாற்
பூவணமே தென்மயிலாப் பூர். (23)

கானப்பே ராறுசிவ கங்கைகுளங் காணுதலால்
ஈனத்தா ரும்பெருமை யெய்துதலாற் - கானல்புனை
நத்தார் வகைப்புனல்நீர் நாடிக்கோ தைக்கிசைவாற்
புத்தாரே யாமயிலாப் பூர். (24)

ஆப்புரையி னாம மைதலாற் பஞ்சவளங்
காப்புகளின் மேன்மைபெறுங் காட்சியினால்- மீப்புவனங்
கூர்ப்பார் வணங்குங் குணத்தினாற் றென்மயிலை
யாப்பனூ ரென்றே யறி. (25)

கடம்பவன்ன பெண்பெறலாற் கற்பக விமான
மிடம்பழகுங் காட்சி யிசைவாற்-றிடங்கொள்
கபாலீச னென்றுங் களிவால் மயிலைக்
கபாலீச் சுர மதுரை காண். (26)

பரவர் குடியிருப்புப் பாலியென்ற வாய்ப்பால்
அரசர் திறைகொள்ளுங் கவன்பாற் கரிமுகனைக்
கோனாட்சி யாடற் குலவுசித்தி யாக்கினதால்
மீனாட்சி கற்பகமாமே. (27)

ஆடல் யானைக்கு மணிபூட்ட லாலிறைவன்
கூடலுக்கு மென்முகவாய்க் கொண்டதனால் - நீடுசெவ்வே
ளொன்று முதற்றலமென் றுற்றதா லோங்குபரங்
குன்று மயிலையென்றே கூறு. (28)

நீர்க்கரையிற் சேரு நிலைமையாற் காளியர்கோன்
கூர்க்குலிச நிறுத்துங் கொள்கையால்-ஊர்க்குளுயர்
மாட மதுரை வனத்துக் கிசைந்ததனால்
ஏடகநே ராமயிலை யே. 29

வைகைக்கும் பொன்னி வளநாட்டுக் குஞ்சிறந்த
மெய்வைத்த கீர்த்தி விளங்குதலாற்—கைவைத்த
வேலன் மருவும் விருப்பாற் பழமுதிர்
சோலை மயிலையெனச் சொல். (30)

நேரியரு மீன்வரு நின்றுதினம் பொருதலாற்
சீரியரே காணுஞ் சிறப்பினால்-சார்தலினா
லன்றேர் தினங்காணி யண்ணல்புக ழார்ந்தகொடுங்
குன்றே மயிலையெனக் கூறு. (31)

கோங்குமணம் வீசுதலாற் கூர்பழனி வாயமதாற்
பங்கயனாற் றேவர் பரவுதலால்-மங்கைவள்ளி
மேவுங் குகனும் விரும்புதலாற் றென்மயிலை
யாவினன் குடிக்குநிக ராம். (32)

ஊரர்முனம் விண்ணாக முற்றிடலா லங்கிசைந்த
சேரலர்க்கும் பாய்மா சிந்திடலா-லோரிறைவன்
செஞ்சொற் கவிதைகொள்ளுஞ் சீராற் றிருமயிலை
யஞ்சக் களத்தைநிக ராம். (33)

வன்மீன் மதலை வழங்குதலால் வந்தவர்க்கு
நன்மா மணம்பொருந்த நல்குதலாற்-றென்னாரூர்
வேந்தர் மகிழ்ந்திடலான் மின்குடபாற் சேருதலால்
ஆய்ந்தவவி நாசிமயிலை. (34)

ஆனிலையிற் காட்சி யருளுதலாற் கைமழுவா
வீனமுற்றோ ருய்ய விரங்குதலாற்—றேனார்
புனைவளவ னாரின் புகழ்பெறலா னெஞ்சே
நினைமயிலை யூர்கருவூர் நேர். (35)

பேதைப் பிணியகற்றும் பெற்றியினா லெப்பொழுது
மோதக் கடல்முரச மொத்துளதால் - நீதகிள்ளைப்
பேச்சினால் வேதப் பிறப்பாற் றிருப்பாச்சி
லாச்சிராம மயிலை யாம். (36)

கஞ்சநங் கைமேவுங் கனதனத்தார் வாழ்க்கையினால்
வஞ்சியுரை மேல்கீழ் வாய்த்தலால்-மிஞ்சு
குடம்பாய்ந்த காவேரி கூடும் வியப்பாற்
கடம்பூர் மயிலைநகர் காண். (37)

ஆராரொன் றாவர்செவ் வந்தி விருப்புறலாற்
பேராவான் கற்பகத்தாய்ப் பெண்ணிசைவாற்-கூருங்
குயில்வார் குழலைக் கூடு நயத்தால்
மயிலைசிராப் பள்ளி மலை. (38)

காவேரி சூழரங்கங் கைநாக நாடுதலால்
பாவேர் சிலம்பி பணிவதனாற் - பூவேயும்
செங்கணனும் போற்றுஞ் சிறப்புள்தாற் றென்மயிலை
யங்கணன்வா ழானைக்கா வாம். (39)

மாலயனண் ணாப்பதிகம் வாய்த்ததாற் சிந்தனையில்
நாலையுங்கண் டோர்க்குதவி நண்ணுதலாற் - கோலமுறும்
உண்ணா முலையா ளுவந்தான் புகழ்மிகலால்
அண்ணா மலைமயிலை யாம். (40)

தூய மலைக்குமுன்பு தோன்றுதலாற் கற்பகமுஞ்
சேயவன் னிதம்படிவஞ் சேருதலாற் றாய்பெரிய
நாயகியு முத்த நதியுமேற் கொள்வதனால்
ஆயவிர்த்த வெற்புமயி லை. (41)

பல்லக்கு முத்தருட் சம்பந்தர்க் களித்ததனாற்
வல்லகொடை யுங்கொடுக்கு மாண்பதனால்-மல்கும்
வரத்துறைநெல் வாயிலார் வண்மை பெறலால்
அரத்துறையுந் தென்மயிலை யாம். (42)

வன்றொண்டர் பாட வரும்பெண் மணம்விலக்கி
யன்றாண்டான் நல்கு மருமையால்-ஒன்றினைமெய்
கண்டவர்க்குங் காட்டுங் கருணையினால் வெண்ணைநகர்
அண்டர்புகழ் தென்மயிலை யாம். (43)

நாவின்மன் னவர்க்கருளை நல்குதலா லாரூரர்
சேவடிகா ணப்பதிவு சேர்ப்பதனாற்-பாவின்
திருக்கெடில வாழ்வுபுனை சீரா லதிகை
யிருக்குமறை சூழ்மயிலை யே, (44)

நாலுமறை பொருளு நன்மயிலே நல்குதலாற்
தாலமதிற் பெண்கொடுக்குந் தன்மையினாற் - பாலனென்றுஞ்
சம்பந்தன் மேன்மை தழைத்திடலாற் றென்மயிலை
நம்பர்திரு வோத்தூராய் நாடு. (45)

தோகை வணங்குதலாற் றொண்டைமான் கண்டதனாற்
வாகைவேள்சிங் காரமா விருப்பதால் - நாகம்
வளர்மாத மாலிசைந்த வண்மையாற் காஞ்சி
கிளர்மயிலை யென்றே கிளத்து. 46

கம்பைத் திருநகரிற் காணுலாற் கைவளையும்
விம்பத் தணைக்கும் வியப்பினால் - நம்பன்வல
மாமாட்சி சேர்ந்து வரிசைக் கொலுப்பெறலாற்
காமாட்சி கற்பகத்தாய் காண். (47)

பாவலவர் தாமிசையப் பாக முவந்தனாற்
பூவுலகிற் கற்பகத்தின் பொற்புளதாற்—பூவுலகு
மெச்சியபூம் பாவை விளங்கியதாற் றென்மயிலை
கச்சூ ரெனவுங் கருது. (48)

மெய்ப்பொருள்வே டன்கருத்து மேற்கொளலா லவை பின்பாற்
கைப்பொருள்கள் நம்பினர்க்குக் காணுதலால்—எய்ப்புறவே
யந்தகனைத் தாக்கு மபிலான் மயிலைநகர்
கந்தமலி கோவலூர் காண். (49)

தொண்டைநாட் டார்காணுஞ் சூழ்ச்சியினாற் கைவேழம்
விண்டு நடித்தமுத்த மேன்மையாற்—றண்டலைகள்
பாயுங் குயில்கள் பயிலுவதாற் றென்முல்லை
வாயில் மயிலையென்றே வாழ்த்து. (50)

முடங்கல் வளரு முதுமையினாற் காணு
மிடங்கொண் டிறைவ னிருப்பதால் - அடர்ந்தவயி
னேசா கரத்தார் நிறைதலினாற் றென்மயிலை
பாசூ ரெனவே பணி. (51)

வேளாள வண்மை விளங்குதலால் ரத்னசபை
சூளாத ரவினற்பாற் றோன்றுதலால்- நீள் தடத்தின்
வண்டார் குழற்பெண் மருவுதலா லங்கா
டண்டனுறை தென்மயிலை யாம். (52)

கல்லினிசை கோயிற் காணுதலாற் கற்பகப்பூ
வல்லியுங் காவி மருவுதலால் - வல்லிபுணர்
வேடன் கதிர்வேல் விளங்குதலாற் றென்மயிலை
யாடற் றிருத்தணிகை யாம். (53)

சங்காழி மான்மருவுந் தன்மையா யென்னாளு
மங்காத நாக வடிவிசைவாற்—கொங்காரும்
பூங்கடம்பன் கோயிலென்றும் போற்றுவதாற் றென்மயிலை
வேங்கடமு மாம்புவியின் மேல். (54)

வேடன் பரிவுறலால் வேழமுங்கொண் டாடுதலால்
ஆடக நீர்நாக மணுத்தலா-னீடுகற்பக
ஞானப்பூங் கோதை நலந்தரலாற் றென்மயிலை
யானக்கா ளத்தியிறை யாம். (55)

நந்திவரைச் சார்பா னதிதக் கணமுளதால்
உந்துமனந் திகிரி யொற்றுமையால்-விந்தை
யயிலெடுத்தான் சிங்கார னாகவரு பண்பாலக்
கயிலை டியிலைநகர் காண். (56)

கற்பகத்தே னாரிமையக் கண்ணுறலாற் காசியினு
முற்பனமாங் காட்சி யுதவுதலாற்-றற்பரஞ்சார்
பிருங்கிருடி யானவரைப் பேணுதலாற் கேதாரம்
பொங்கு மயிலையென்றே போற்று. (57)

ஈனப் புலைச்சிக்கு மின்புதவ லாலிலங்கை
மானத் திசையாத வின்புதலாற்-றானநிறை
கன்னன் விளையாட்டுக் காட்டுதலா லீண்டொருகோ
கன்ன மயிலையென்றே காண். (58)

என்புங் கதிபெறலா லேழுலமே யப்பதனால்
தென்பனுவல் வேள்கதையைச் செப்புதலா- லன்பின்பிணி
கன்னிகைபுன் னாகமுயர் கங்கையுற லாற்காசி
மன்னு மயிலையென்றே வாழ்த்து. (59)

கமலை யிருப்பிடமுங் காட்டுவிக்கும் பண்பால்
அமலை வடிவா மதனா-லிமையோர்
வலமாய் வணங்கும் வளைத்தாள் மயிலை
தலமாந் திருப்பருப் பதம். (60)

இலஞ்சி வியப்பா லெழின்மறையோன் சொற்குப்
பலன்புதிய பெண்கொடுக்கும் பண்பால்- தலஞ்சிறந்த
தென்றுபட்ட ணத்தா ரிசைவால் வடிவுறலா
லொன்றுமொற்றி யூர்மயிலை யூர். (61)

முற்றில் வனங்குசனை மூவராப் பதாலொருசார்
புற்றுமுனி யன்பரென்றும் போற்றுவதாற்-கற்பகஞ்சேர்
கேசகரியும் பாக மிசைவதாற் றென்மயிலை •
யாசில்திரு வான்மியூ ராம். (62)

செட்டிமக ளன்பாற் றிரிபுண் டரர்பணியாற்
கட்டழகி பெண்ணினல்லாள் கற்பகத்தாற்-கிட்டு
முழுக்குன்று வேத முறைமையா லெங்கோமான்
கழுக்குன்று தென்மயிலை காண். (63)

பெண்ணை வளர்ப்பதனாற் பேராறு தோன்றுதலாற்
கண்ணுதலார் நாளுங் களிப்புறலால்-நண்ணினர்க்குப்
பாத்தூர்செம் பொன்னுதவு பண்பால் மயிலையு
மாமாத்தூ ரெனவே மதி. (64)

பதிசோறுங் கேதகையிற் பூப்பதாற் பந்த
ரதின்மாடங் காட்டு மறைவாற்-பதிகா
வருகால் வழித்துணையின் வாய்ப்பான் மயிலைக்
குருகாவூ ரென்றுதினங் கூறு. (65)

பெண்ணைமுத்தங் கூடும் பெருமையினா லாரூரர்
நண்ணியதி செயத்தை நாடுதலா--லெண்ணுமன்பி
........ ............ ...................
.......... ............. .................. (66)

சொல்லரசர் கற்படு தோன்றுதலாற் பாடலத்தின்
வல்ல பெயரு மருவுதலா- னல்லிசையின்
றென்னை வளத்தாற் றிருப்பா திரிப்புலியூர்
புன்னை வளர்மயிலாப் பூர். (67)

சிவகாமி யார்வாழுஞ் சீரின் சிறப்பாற்
பலகாம மாற்றும் பரிவால் - உவரிமிகு
மெல்லையினை நாகவன மென்பதாற் றென்மயிலை
தில்லைவன மென்றுதினஞ் சேர். (68)

நாகம் புலிபயிலு நல்வேலை கொள்வதனாற்
பாக மொருகற் பகமுளதா-லேகனுயர்
கபால நாடகம்பெண் காணுதலாற் றென்புலியூர்
கபாலன் வாழ்மயிலை காண். (69)

பஞ்சாக் கரமதனாற் பாதை பகுப்பதனால்
மஞ்சார் சதத்தீர்க்கால் மண்டபத்தாற்-றுஞ்சில்பே
ரம்பலமுங் காணு மணியா லரன்றிருச்சிற்
றம்பலமுந் தென்மயிலை யாம். (70)

கங்கரையால் மேல்முகத்திற் காதல் விருப்புதலாற்
றங்குபர மானந்த சார்பதனா—லைங்கரனுங்
கற்பகமென் றாடல் கணித்திடலாற் கற்பகத்தாய்
நற்சிவகா மிப்பெணென்றே நாடு (71)

தோணி யென்றுங் கண்டதனாற் றுங்கவேள் தோன்றுதலாற்
பூணுநிலை யழகு பூத்ததாற்-சேண்வினைதீர்
காரி மகிழ்ந்து கலிதீர்ப்ப தாற்காழி
யூரே மயிலையென்னு மூர். (72)

புள்ளிமயில் விளங்கும் பொற்பினால் பூங்கதிர்வேல்
வள்ளலதி காரம் வாய்ப்பதனாற்-கள்ளவினை
தீர்த்தொருபா லத்தையல் மகிழ்சேவை மேற்காய்த்தலா
லார்த்தனவே றார்மயிலை யாம். (73)

வாட்கப் பெண்ணென்றும் வரந்தரலால் முத்தயரு
நாகடுத்த பேரொளிகூர் நல்லிடத்தால் - யோகமிகுஞ்
செயவாரங் கொள்ளுஞ் சிறப்பால்வே ளூர்தையல்
நாயகியே கற்பகமா னாள். (74)

கேகயம் பூசித்துக் கிருபைபெற லாலிறைவன்
பாகமதி லஞ்சல் பழகுதலால் - நாகதரு
நீடுகா வேரி நிதிதலா லிங்குமயி
லாடுதுறை தென்மயிலை யாம். (75)

செங்கோ லிறைவர் தினமும் பரவுதலாற்
பொங்கோதை நாளும் பொலிவதனாற் - றங்கு
மருமைப் பதிகவிசை யாழொலிக்கும் பண்பாற்
றருமபுர மயிலைநகர் தான். (76)

பொன்னினீர்ச் சங்கம் பொருந்திச் சுவேதவன்
மின்னு மகிமை யிசைவதால் - முன்னைமக
னாடவே முக்குளமு நல்குவதால் நன்றறிவன்
காடன்மயி லேசனென்று காண். (77)

அந்தகமா மால்வினைதீர்த் தைங்கரத்தோ னாடுதலாற்
சிந்துரநே ராலச் சிறப்புளதால்-மந்திரத்தின்
சாலை விளங்குந் தகுதியினாற் றென்மயிலை
யாலவன மென்றே யறி. (78)

சமயநிலை நிறுத்துந் தற்பரனார் வாய்ப்பா
லமைவுறு மேற்கொளி னணியா-லுமையவள்பாற்
போகமார்த் தோங்குமுலை பூம்பாவை யுள்ளதலால்
நாகமயி லைநள்ளா று. (79)

சொற்புலவ ருட்புகலாற் சூழ்ந்துகருந் தார்க்குழவி
கற்பகப் பொன்னூர்க் கருளுவதா-லற்பால்
முருகனார் செய்தொழிலின் மோக முறலாற்.
றருமயிலை தென்புகலூர் தான். (80)

இலையந்த னைகணப தீச்சுரமென் றார்பாலத்
தலைவர்கபா லீசரென்றுஞ் சார்பாற் - கொலையில்
மடிமதலைக் காட்டும் வரத்தால் செங்காட்டங்
குடிமயிலை யென்றுதினங் கூறு. (81)

மன்னுரை நல்க வணிகன்மகள் கைதொழலால்
துன்னும் வன்னி வாணுதற்குத் தோன்றுதலால்-மின்னுவண்டு
வார்குழற் பெண்பாக மருவுதலால் தென்மருத
லூர் நிக ராமயிலாப் பூர். (82)

சுருதி வழிபடலாற் சொல்லினால் வாரி
விரியக்கோள் செய்விப்பப் பாலக் - கரவில்புக
ழாகுயரச் செய்தாட லரனைவிருப் பால்மயிலை
பாகமறைக் காட்டுப் பதி. (83)

ஓடமிகு வள்ளமதி லோட்டுவிக்கு மெய்ப்பதனால்
நீடுபுத்தர் கீழாக நின்றிடலால் -- நாடிவரு
பிள்ளையைக் காண்பார்க்கு பெருமையினாற் றென்மயிலை
கொள்ளம்பூ தூரெனவுங் கூறு. (84)

பரவையிடந் தூதிசைந்த பாங்கருறு பண்பால்
அரவிந்தப் பூம்பாவை யன்பால்-வரிசையுடன்
கற்பகத்தாய் விடங்கண் கண்ணுதலாற் றென்மயிலை
யுற்பனஞ்சே ருந்திருவா ரூர். (85)

கலையருக்குஞ் செல்வம் கலந்தளிக்கும் பண்பால்
கொலைமறலைப் போக்குங் குணத்தால் - அலையிற்
குடவலை கோகாரி கூடுதலா னாளுங்
கடவூர் மயிலையென்றே காண். (86)

பூசுரர்க்கா யான்மாவைப் பூசித் துதவுதலால்
மாசிலா தோங்கு மணிநிறைவாற் - பேசிலொப்பி
லாமுலையு மர்ச்சனைசெய் தன்பா தனையுயர்பாற்
காமயிலை தென்றுறைசை காண். (87)

மந்திரஞ்சொல் வாலரசன் வணங்குமிடத் தால்வருஞ்சம்
பந்தர்க்கும் பொன்கொடுக்கும் பான்மையா-லைந்தருவு.
மாமணியுஞ் சேர்துறைசை மன்னியோன் யாள்மாசி
லாமணிக பாலீச னாம். (88)

பூசத்தா னங்களபம் பூத்தபொன்னி வாய்த்ததனால்
நேசத்தார் வாய்மை நிகழுவதால் -மாசில்
வரகுணரைக் காக்கும் வளத்தால் மயிலை
யரனா ரிடைமருதூ ராம். (89)

நாவலர்க்குக் காசுபடி நல்குதலாற் றோணிவள
மேவியருள் ஞானக்கண்டு வேண்டுதலால் - மாவலர்
போற்று மயிலை புனைதலாற் றென்மயிலை
யாற்றலுறு வீழிமிழலை. (90)

மாகநீர் வாரி வழங்குதலாற் கைக்கொண்ட
மோகவிசு வேசுரனு முற்றிடலால்-மேகமொப்பா
யாரா வழுதநிறை நாதற்கு முதவுதலாற்
கூறா மயிலைகும்ப கோணம். (91)

தேவிசெய்யும் பூசை சிறப்பாகக் கொள்ளுதலால்
ஆவியில்லார்க் காவி யளிப்பதால்-மேவரிய
பத்திமுற்று நேசர் பணியார் பொருள்பெறலாற்
சத்திமுற்றந் தென்மயிலை தான். (92)

அமர்நீதி நேசர்பணி யன்றளக்குஞ் சீராற்
றமை நேருங் கோவணமுஞ் சார்பாற் - சுமைதலையா
யெல்லாரும் போற்ற விடநாக மேற்கொளலால்
நல்லூர் மயிலை நகர். (93)

வேணு புரத்தவர்க்கு வேனி லகற்றுவதாற்
றாணுபசும் பூசைகொளுந் தன்மையால்-பேணுகின்ற
பன்மயிலைக் காவிரியும் பைம்புனலுங் காணுதலாற்
றென்மயிலைப் பட்டீச் சுரம். (94)

பொன்னியங்கள் மேவுதலாற் புன்னைவளம் பாடுதலாற்
சென்னியுங்கைக் கொண்டீசன் சேருதலால்-வன்னம்
பயிலுமலைச் சாமியொரு பாலனென்னும் வாய்ப்பான்
மயிலை வலஞ்சுழியு மாம். (95)

காவிரிக்கும் வியபராற் கந்தசா மிக்கிசைவாற்
பூவிரிக்கு நாகம் பொருந்துதலால்- மேவு மறை
நால்வருந்தன் மாசகல நண்ணுதலாற் றென்மயிலை
வேலிறைவ னேகரமா மே (96)

ஆலத்தால் மாண்டவரை யன்றழைக்குங் கீர்த்தியினாற்
றாலத்தார் திங்களூர் சார்தலினா-லேலக்
குழகன் வழிபடுவோர்க் குள்ளிருக்கும் வேளூர்
பழன மயிலைப் பதி. (97)

தங்கொருத்திக் கின்னாகந் தான்வளைவால் நேரயர்ந்து
குங்கிலியத் தாருமகிழ் கூர்தலினா-லங்குந்
தினந்தாள் வணங்கினர்க்குச் சீர்மை தரலாற்
பனந்தாள் மயிலைப் பதி. (98)

வேலவரென் னாளும் விரும்பும் பதியதனாற்
பாலளித்து பாலனைக்காப் பாற்றுதலாற் - கோலமிகு
சென்னைநக ருக்கடுத்த தென்பால் வளருதலா
லுள்ளுமயி லூர்சேய் ஞலூர். (99)

அப்பனுக்கு வங்கமலை யார்காட்சி காட்டுதலால்
விப்பிரன் சொற்கேட்கும் வியப்பினால் - மெய்ப்பா
மறையோது மாமுனிவர் வாழுந் திருமறைக்காட்
டிறைவன் மயிலையா னே. (100)

வாகீசர் நற்பணிகொள் வாய்ப்பதனாற் பூவைகிளை
பாகீசை வாகமங்கள் பாடுதலா - லாகூரன்
கூர்ந்தவடி விசைந்து கொண்டால் மயிலை
பூந்துருத்தி யென்றே புகல். (101)

குந்தமலி யாசானக் கும்பிட் டிறைஞ்சுதலாற்
சந்தமா ணிக்கந் தழைப்பதனாஉலைந்தடக்கும்
வாயிலார்க் கின்பம் வழங்குதலா லாவுடையார்
கோயில் மயிலையென்றே கூறு. (102)

நல்லபூம் பாவைதொழும் நற்பெரிய நாயகியாம்
வல்லியரு ளெவர்க்கும் வாய்ப்பதனாற் - றொல்லை
மனவாக்குக் கெட்டான் மருவுகடற் சார்பாற்
புனவாயிற் றென்மயிலாப் பூர். (103)

அன்பா யிலே வளவும் பிரியாத
தன்பாத சேவை தருதலால் - இன்பாக
நேடானைக் கொண்டாடி நேசித்து நிற்பதனால்
ஆடானை யான்மயிலை யான். (104)

பரிதிகுல ராமன் பணிந்துசெலும் பண்பா
லொருசிவ னாகங்கொ ளூர்த்தா-லிருவினையுந்
தீர்த்துமட வார்பவமுந் தீர்ப்பதற் சேதுநகர்
கூர்த்தமயி லாபுரிக்கொப் பரீம். (105)

மானிலத்து முந்து மகிமைப் பதியெனலாற்
றானடங் கற்றோருஞ் சார்வதனாற் பான்மைமிகு
மங்கலநீர் வாய்ப்பால் வளருத் தரகோச
மங்கைமயி லாபுரிநேர் வாம். (106)

சிந்து மதிலுஞ் செறிய நடந்ததனால்
விந்தையா னந்தவல்லி மேவினதால் - எந்தையிடங்
கங்கைசித் திரமாகக் கலந்ததனாற் றென்மயிலை
கங்கைகொண் டானென்றே கருது. (107)

சிந்து கரையிற் செறிதலாற் சிற்பரமா
மந்தரங்க னாடு மறையினால்-விந்தை
பயில்வாகுந் தன்பொருத்தம் பாலுற் றிசைவால்
மயிலைநகர் செப்பறையு மாம். (108)

தெக்கணத்திற் காசி செயல்நடத்து மென்பதனாற்
பக்கணமே யெங்கும் பகுத்திடலா-லக்கணியும்
வேந்தர் கயிலாயர் மேவுதலா லெங்கள்சிந்து
பூந்துறையாந் தென்மயிலாப் பூர். (109)

சந்தி விநாயகனுந் தானாடுந் தன்மையினாற்
புந்தி யிசைந்து பூந்துறையா- லெந்தையுரு
முல்லையன கண்காணு முறைமையாற் றென்மயிலை
நெல்லைநக ரென்றே நினை. (110)

வேண்ட வளர்ந்ததனால் மேலும்வன்னி பூண்பதனாற்
காண்டகுமோர் பெண்வடிவு காணுதலால் - நீண்டுயர்ந்த
வேனில் விருப்பான் வியப்பான் மயிலீசர்
சாலிவா டீசரென்று சாற்று. (111)

அத்தியினிற் பூவை யழைத்திடலா லவ்வேழம்
பத்தாவி னாடப் பரிவறலான் - முத்திதரு
கம்பைநதிக் கீழ்பாற் காணுதலால் கற்பகத்தா
யம்பிகையே காந்திமதி யாம். (112)

செந்தமிழி னெல்லை சிறப்பதனாற் றிண்டிரைகள்
சந்ததமு மோசை தழைத்திடலால்-விந்தைபெறு
கன்னியம் பூம்பாவை கதிதரலாற் றென்குமரி
பன்னுமயி லாபுரிக்கொப் பாம். (113)

மூவர் தமிழ்கொளலால் முன்னுற்று மன்பதைப் பூம்
பாவை யியற்றும் பணியினாற்-காவலவர்
போற்றி யரசுரிமை பூண்பதா லென்சிந்தை
யாற்ற மயிலைநகராம். (114)

தேசிகமாப் பிள்ளை சிறந்தருளி னாடுதலால்
ஈசர்நா கலையஞ்சேர்ந் தின்புறலாற் - பேசுமிசைச்
சொல்லி னழகுஞ் சுகந்தரலாற் றென்மயிலை
வல்லவடி வீசுர மாம். (115)

வள்ளி மணமலையும் வாய்ப்பாற் றிருமலையி
னுள்ளுங் கதிர்காம முற்றிடலால்--வள்ளலுயர்
மன்றுசுப் பிரமணிய மருவலாற் றென்மயிலை
குன்றுதோ றாடலென்றே கூறு. (116)

வாரணமுங் கான மடமயிலுஞ் சேர்வதனாற்
காரணவேள் சிங்காரங் காட்டுதலாற் — கூர்மயிலைக்
கற்பக விருப்பினாற் காந்தனருள் மீறுதலா
லுற்பனஞ்சேர் வள்ளிமயி லூர். (117)

சூட்டுமலைச் சார்பாய்த் துலங்குதலாற் றோகைவழி
பாட்டி லுயரும் பசியினா-லீட்டும்
புயல்சூழ் தளவாய் புத்திரன் சிறப்பால்
மயிலைமா யூரமென்று மாம். (118)

சிந்து வாய்க்கும் சிறப்பாற் சிவகாம்
சுந்தரியாங் கற்பகமுந் தோன்றுதலால் - வந்தித்
தணிவிசையு மேய்ப்பா லருட்பலவா லெந்தை
யணிவீச்சு ரமும்மயிலை யாம். (119)

சொன்னா கமம்விளங்குந் தோற்றத்தால் மாயவனா(ர்)
நி(ரி)ன்னா கமங்கொண்டிறை சூடுதலால் - மன்னும்
வயிரவ கபாலரென்றும் வாழ்த்து மியல்பால்
மயிலைம யேந்திர மலை. (120)

சன்னதி யாஞ்சிந்து தழைத்திடலாற் புன்னாகந்
துன்னு மதிற்குமேற் றோன்றுதலா- லென்னிறைவன்
பக்கமதில் நம்பி பரிவுறலாற் றென்மயிலை
மிக்ககுருங் காபுரியா மே. (121)

பெண்ணாகஞ் சேர்ந்ததனாற் புடபாற் கடலிசைவா
லென்னாளுங் கற்பகஞ் சேர்ந்தின் - மின்னாகம்
நீண்டாங் குறுங்குடியால் நித்தமயி லேசரென்னை
யாண்டா தரிக்குநம்பியு மாம். (122)

நாலுதிசை முகமு நண்ணுதலாற் பாரதியுங்
கோலமுறு பங்கங் குலவுதலால்-ஆலுமறை
யன்னங் கமல மடவாவி சூழுதலால்
மன்னுமயி லூர்பிரமா வாம். (123)

நாகமணி யென்றுலகோர் நாடவெயில் நல்குதலா
லேகனுக்குக் கண்ணென் றியம்புதலாற்-பாகமதிற்
பன்னிரண்டு செங்கரத்துப் பண்ணவனாங் காதலினா
லுன்னிரவி காண்மயிலாப் பூர். (124)

எட்டெட்டு வான்கலையா லிந்திரைக்கு மெய்த்துணையால்
வட்டநில வாகு மகிமையினாலிட்டமுடன்
கற்பகஞ்சேர் நாகதிலங் கண்ணுறலாற் கிந்திரனாம்
பொற்புமிகு தென்மயிலாப் பூர். (125)

திருமயிலை உவமை வெண்பா
மருத நிலத்தார் மருவுசுக வாய்ப்பாற்
றருவிலுயர் கற்பகமுஞ் சார்பால்-லொருவெண்ணால்
தேவர் கபாலரென்றுஞ் சேர்தலினால் விண்ணுலகம்
பூவுலகின் மேல்மயிலாப் பூர். (126)

எட்டுநா கஞ்சூழ்ந் திடுதலாற் கற்பகமுங்
கிட்டலில்லா வெங்கோன்கைக் கேயிசைவால்-வட்டப்
புவனங்க ளுக்குயர்ந்த பொற்பால் மாமேரு
நவமயிலை யென்றுதின நாடு. (127)

சலக்கடலும் பாலிற் றழுவுதலால் நாகத்
திலக்குமிக்கு நாத னிசைவாற்பலத்தாற்
றன்மயிலார் பாலில் சிறந்தவெண்மை சேர்பாற்
கன்மயிலை யேபாற் கடல். (128)

ஆவி னிறைவா லயனும் விரும்புதலால்
மாவின் முகநாடி மருவுதலாற்-காவி
பயில்விழிப் பூம்பாவை பறிவுறலா லென்று
மயிலையிரு தாமரைப்பூ வாம். (129)

பயன்,
மயிலையுவ மைவெண்பா வாசிப்போர் கேட்போர்
பயிலுமிகச் சிந்தை பதிப்போர்-கயிலைமுத
லெல்லாத் தலமு மிறைஞ்சுதவப் பேறெய்தும்
வல்லார் சுகம்பெறு வார். (130)

திருமயிலை உவமை வெண்பா முற்றும்.
------------------


திருமயிலை உவமை வெண்பா.
பாட்டு முதற் குறிப்பு அகராதி

அத்திதீர்த் 17
அத்தியினிற் 112
அந்தகமா 78
அப்பனுக்கு 100
அமர்நீதி 93
அன்பா 104
ஆடல்யானை 28
ஆப்புரை 25
ஆரமலை 12
ஆராரொன் 38
ஆலத்தால் 97
ஆவினிறை 129
ஆனிலையிற் 35
இலஞ்சி 61
இலையந்த 81
ஈனப்புலைச் 58
உலகின் 16
ஊரர்முனம் 33
எட்டுநாகஞ் 127
எட்டெட்டு 125
என்புங் 59
ஓடமிகு 84

கங்கரை 71
கங்கைத் 7
கஞ்சநங் 37
கடம்ப 26
கண்ணுவர் 8
கமலையிருப் 60
கம்பைத் 47
கருத்தன் 6
கருவூரார் 11
கலையருக் 86
கல்லினிசை 53
களவிலடி 19

கற்பகத்தே 57
காணவரு 23
காவிரிக்கும் 96
காவேரி 39
காளைவடி 22
கானப்பே 24
குந்தமலி 102
கும்பநியதி 18
கும்பமுனி 15
கேகயம் 75
கோங்கு 32
சங்காழி 54
சந்திவிநா 110
சமய நிலை 79
சலக்கட 128
சன்னதி 121
சிந்துகரை 108
சிந்துமதி 107
சிந்துவாய் 119
சிவகாமி 68
சுந்தரமாந் 2
சுருதிவழி 83
சூட்டுமலைச் 118
செங்கோ 76
செட்டிமக 63
செந்தமிழி 113
சொல்லரசர் 67
சொற்புலவ 80
சொன்னாக் 120

தங்கொருத்திக் 98
தூயமலை 41
தெக்கணத்திற் 109
தேசிகமாப் 115
தேவிசெய்யும் 92
தொண்டைநாட் 50
தோகை 46
தோணியென்றுங் 72

நந்திவரைச் 56
நல்லபூம் 103
நன்கரந்தை 9
நாகமகிமை 20
நாகமணி 124
நாகம்புலி 69
நாலுதிசை 123
நாலுமறை 45
நாவலர்க்குக் 90
நாவின்மன் 44
நீர்க்கரை 29
நேரியரு 31

பஞ்சாக்கர 70
பதிசோறுங் 65
பரவர்குடி 27
பரவையிடந் 85
பரிதிகுல 105
பல்லக்கு 42
பாவலவர் 48
புட்கரணி 3
புள்ளிமயில் 73
புன்னைமரஞ் 5
பூசத்தா 89
பூசுரர்க்கா 87
பூமான் 1
பூமிவணங் 21
பெண்ணாகஞ் 122
பெண்ணைவளர்ப் 64
பெண்ணைமுத்தங் 66
பேதைப்பிணி 36
பொதிகைமலை 10
பொன்னீயங்கள் 95
பொன்னினீர்ச் 77
மந்திரஞ் 88
மயிலை 130
மருதநிலத் 126
மன்னுரை 82
மாகநீர் 91
மாலயனண் 40
மானிலத்து 106
முடங்கல் 51
முற்றில் 62
முன்னீரி 14
மூவர்தமிழ் 114
மெய்ப்பொருள் 49

வள்ளிமண 116
வள்ளுவரின் 4
வன்மீன் 34
வன்றொண்டர் 43
வாகீசர் 101
வாட்கப் 74
வாரணமுங் 117
வேடன்பரி 55
வேணுபுரத் 94
வேண்டவளர்ந் 111
வேலவரென் 99
வேளாள 52
வேளையென் 13
வைகைக்கும் 30
------------------

3. திருமயிலை வெண்பா

திருமயிலை வெண்பா.

காப்பு.
சீர்மல்கு பூம்பாவைச் செல்வன் றிருமயிலை
யூர்வெண்பா மாலைசொல வுன்னுவா-மேர்மலிபொற்
கார்முகத் தானைக் கனிக்குவலஞ் செய்நடனக்
கார்முகத் தானை கழல். (1)

நால்வர் துதி.
சொல்லரசர் சம்பந்தர் சுந்தரனார் வாசகத்தின்
றொல்லரசர் தாண்முடியிற் சூடுவேன்-கல்லளித்த
தேன்மொழியாள் கேள்வன் றிருமயிலை வெண்பாவை (2)
நான்மொழியா நிற்க நயந்து.

நூல்.
கங்கை முடியோன் கயிலாய வெற்பினக
மங்கைக் கியம்பு மயிலையே - துங்க
வொளியா ரரியார்க் கொளிப்பா ரடியார்க்
கொளியா ரரியா ருழை. (1)

கள்ளமிலா வுள்ளத்துக் கற்புருவாம் வாசுகியார்
வள்ளுவரோ டும்வாழ் மயிலையே-புள்ளியுடைப்
புன்னாக மேயார் புயப்பரமர் பூமணக்கும்
புன்னாக மேயார் புரி. (2)

காக்கிற் சினங்காக்கக் காவாக்காற் கொல்லுமெனும்
வாக்கின்மிக் கோர்வாழ் மயிலையே--ஆக்குமயக்
கங்கரத்த ரத்தர் கணிச்சியார் கள்ளவினைக்
கங்கரத்த ரத்த ரகம். (3)

தோடுசெறி குழையார் சொன்றியளித் தாதுலர்க்கு
வாடுபசு தீர்க்கு மயிலையே - நீடுபுகழ்ச்
சங்கத் தவர்புலவோர் சாற்றரியார் மாமதுரைக்
சங்கத் தவர்புலவோர் சார்பு. (4)

சாற்று முருங்கைத் தருக்காய்கள் செங்கரும்பை
மாற்று சுவைகூர் மயிலையே-போற்றுகின்ற
வேதமொழி வாக்கினார் மெய்த்தொண்டர் தாமும்
வேதமொழி வாக்கினா ரில். (5)

இல்முன்றில் தோறு மிலக்கமிலாப் பூஞ்செடிகள்
மல்குசுக மிக்க மயிலையே-புலகுமலைக்
காரிகையா ரேற்றார் கடல்கடைந்த தேவருமெக்
காரிகையா ரேற்றார் கடை. (6)

ஆர்க்குங் கடலுப்புக் காய்ச்சியர்க ணெய் தயிர்பால்
வார்க்கும் வளஞ்சேர் மயிலையே- மார்க்கசகா
யப்பெருமான் பாணியர வஞ்சடைமேற் சூடுபெம்மான்
அப்பெருமான் பாணியர னார்வு. 7

மான்விழியார் செந்துகிர்நேர் மட்கலம்பொன் மாரிபெறு
வான்வழிந்து செல்லு மயிலையே-மீன்விழியோர்
பாதத் திருத்தினார் பாவியேன் தப்பித
பாதத் திருத்தினா ரார்வு. (8)

கோயிலாத் தன்னெஞ்சங் கொண்டு சிவனிருக்க
வாயிலார் வாழு மயிலையே-தூய
சிலைமாதங் கத்தர் திருமாலங் கத்தர்
சிலைமாதங் கத்தர் செறிவு. (9)

காசிதிருக் காளத்தி காஞ்சிதிருத் தில்லையினும்
மாசிலிசை யாரு மயிலையே-ஆசில்
சடையனார் மெய்ப்பொருளார் தாம்போற்றுந் திங்கட்
சடையனார் மெய்ப்பொருளார் சார்பு. (10)

சங்கரபு ராணத்தைச் சார்ந்த வுருத்திரத்து
மங்கலமா யோது மயிலையே - தங்கும்
பரசினார் வஞ்சியார் பண்பாளர் நாளும்
பரசினார் வஞ்சியார் பற்று. (11)

மன்னுயிருஞ் சங்கரனு மானப் பலதலனும்
மன்னவை மேலா மயிலையே - பின்னியொளி
மாசடையார் கோபாலர் மன்புடையா ரின்புடையார்
மாசடையார் கோபாலா வாழ்வு. (12)

போக முடன்மோக்கம் போகியுல கோர்பெறுவான்
மாக மிழியு மயிலையே-யோகர்
மிழலையார் மூர்த்தியார் மெய்யன்பிற் போற்று
மிழலையார் மூர்த்தியார் வீடு. (13)

ஆரா மருந்துண்ட அண்டர் பவமருந்தாய்
வாராச் சுகங்கூர் மயிலையே-யேரார்பொன்
அம்பரத்தார் தாமரையார்க் கண்ணாதா ராடகச்சிற்
றம்பரத்தார் தாமரையா ரார்வு. (14)

ஊழி யடைந்தெல்லாம் ஒன்றாய் மடிந்தாலும்
வாழி யழியா மயிலையே - காழியார்
காரியார் ஆரூர்ர் கஞ்சாறர் வாழ்த்துக்கண்டக்
காரியார் ஆரூரர் காப்பு. (15)

கூவிளந்தே மாப்புளிமாக் கொன்றையொளிர் சோலைகரு
மாவிளங்க வோங்கு மயிலையே -மாவினடிக்
கண்டங் கருமையார் கம்பர் கடல்விடஞ்சேர்
கண்டங் கருமையார் காப்பு. (16)

முப்பழத்தே னாளொருசார் மொய்யெழிலி நீரொருசார்
மைப்பரவை சேரு மயிலையே- யொப்பிலாச்
செவ்விதழிக் கண்ணியார் தேவிகயற் கண்ணியாஞ்
செவ்விதழிக் கண்ணியார் சேர்வு. (17)

போற்றுகின்ற சத்திகங்கைப் புண்ணிய நீ ரெப்பவமு
மாற்றுகின்ற சீர்சால் மயிலையே-சாற்றுமப்
பூதியார் வெண்காடர் போற்றும் பரமவி
பூதியார் வெண்காடர் பூ. (18)

நாதமற நற்போத நண்ணித்தற் போதம்போய்
வாதமறுத் தோர்வாழ் மயிலையே-சீதமதிக்
கங்கைத் தலையர் கமல மலர்பிரமன்
கங்கைத் தலையர் களிப்பு. (19)

தண்டாப் பவவெயிற்குத் தண்ணிழலைத் தந்துபுன்னை
வண்டால நிற்கு மயிலையே-பண்டூகம்
வெண்ணத்தன் போதன் விலங்குபட்சி யாய்த்தேட
வெண்ணத்தன் போதன் இடம். (20)

கைந்நின்ற சூலக்கங் காளி வடாது திசை
மன்னி யளிக்கு மயிலையே - துன்னிப்
பரஞ்சோதி யார்மூலர் பத்தியுடன் வாழ்த்தும்
பரஞ்சோதி யார்மூலர் பற்று. (21)

வேளாளர் மாமறைதேர் வேதியர்க டாடாளர்
வாளாளர் வாழு மயிலையே -யாளாக
வைகைக்கு வந்தார் மணந்தடுத்து வன்றொண்டர்
வைகைக்கு வந்தார் மனை. (22)

ஆதவரோர் கோடி யடர்ந்தொன்றாய்க் காலொளிபோல்
மாதவர்வாழ் சீர்சால் மயிலையே-பூதரமார்.
மாதிடத்த ராரார் மதிலழித்தார் பொற்சிலைசேர்
மாதிடத்த ராரார் மனை. (23)

சத்துருவைக் கொள்வில் தகைசேர் வயிரவர்கை
வைத்துத் தரம்வாழ் மயிலையே - பத்தியுடன்
மாறன் செருத்துணையார் வாழ்த்துவார் மாமதுரை
மாறன் செருத்துணையார் வாழ்வு. (24)

காதங் கமழ்சோலைக் காழிக்கோ வெள்ளெலும்பை
மாதங்க மாக்கு மயிலையே-ஆதியுரு
வான்றான் பலவான் உமாபதியான் மால்பிரம
ரான்றான் பலவான் உழை. (25)

அந்தணர்க்குக் கோதானம் ஆற்றுவார் முத்தியெனும்
மந்தணத்தை மேவு மயிலையே - நிந்தையற்ற
சத்தி யிடங்கழியார் தாம்வணங்குந் தன்மையினார்
சத்தி யிடங்கழியார் சார்பு. (26)

வேலியா மெய்யன்பு மேவச் சிவபைங்கூழ்
வாலி விளைத்த மயிலையே-மூலசரக்
கொன்றையளித் தார்சூடுங் கோமானே யென்பார்க்குக்
கொன்றை யளித்தா ருழை. (27)

தண்பாற் கடலுறங்குஞ் சக்கரன்போல் வெண்மறையில்
வண்டார் தடஞ்சூழ் மயிலையே-அண்டிக்
கனநாத னீலகண்டன் கண்டுதொழும் பூத
கணநாத னீலகண்டன் காப்பு. (28)

காம வலைப்பட்ட கலிங்கமன்னன் வெம்பவமா
மாமலையைக் கெல்லு மயிலையே-தீமழுவார்
கைம்மா னுடுக்கையார் கண்ணுதலார் வெண்ணீற்றார்
கைம்மா னுடுக்கையார் காப்பு. (29)

ஆய்ந்தமனு வின்மதத்தி லைந்தெழுத்துஞ் சைவமும்பேர்
வாய்ந்ததலத் தோங்கு மயிலையே-யேய்ந்த
புகழ்த்துணையார் சீராளர் போற்றுவார் நாயகப்
புகழ்த்துணையார் சீராளர் பூ. (30)

புண்ணியர்கள் வாழிடமாய்ப் பூமா திருப்பிடமாய்
மண்ணிற் சிவஞ்சார் மயிலையே-நண்ணியையம்
ஏற்றார் மதியார் மதிலழித்தார் ஏறியவெள்
ஏற்றார் மதியார் இடம். (31)

எண்ணின் முனிகணங்கள் இன்படையக் கும்பமுனி
மண்ணில் வழுத்து மயிலையே-நண்ணுமன் பிற்
பூசலார் நேசனார் போற்றுவார் பார்த்தனுடன்
பூசலார் நேசனார் பூ. (32)

துய்ய மதியணிந்தார் சோதிமய மாயிருந்து
வைய மளிக்கு மயிலையே - செய்யபதந்
தாமோ தரனார் தமக்கருள்வார் வேணிவழிந்
தாமோ தரனார் அகம். (33)

தீயூரங் கண்ணான் செலுபத்த வுமையாளோர்
மாயூர மாய்ச்சேர் மயிலையே-நேயூர்
பசுபதியார் பேயார் பரிந்திறைஞ்சு முக்கட்
பசுபதியார் பேயார் பதி. (34)

அங்க வணிக னலைமுழுகி மாமகத்தில்
மங்குங்கண மாற்று மயிலையே- பொங்குவிடப்
பாப்பணிவார் கோவா மணியனையார் பத்தர்களன்
பாப்பணிவார் கோவார் அகம். (35)

மைப்படியுங் கண்ணாள் மயிலாய்ப் பரவவருள்
மைப்படிகண் டன்வாழ் மயிலையே -யிப்படியிற்
றண்டியார் தாயனார் தம்பாலன் பாரணையுந்
தண்டியார் தாயனார் சார்பு. (36)

பாலிதீர்த் தங்கங்கை பாலிக்குஞ் சீர்சான்ற
வாலிதீர்த் தஞ்சேர் மயிலையே-காலுமொளி
அஞ்சக் கரத்தா னனவரத மும்பரவும்
அஞ்சக் கரத்தா னகம். (37)

சோமுகனார் கையிற் றொடக்குண்ட துக்கமற
மாமறைகள் போற்று மயிலையே - ஆமழநாட்
டானாய னார்சூதர்க் கன்றருள்வா ரென்பாலன்
பானாய னார்சூதர் ஆர்வு. (38)

வேததீர்த் தஞ்சிறந்த வெள்ளிதீர்த் தம்பிறவி
வாதைதீர்த் தோங்கு மயிலையே - கோதில்
மலைவில்லார் தீயார் மனத்திரார் நெஞ்ச
மலைவில்லார் தீயார் அகம். (39)

சூர்முடிப்பான் செவ்வேட்டுச் சுந்தரவே லன்புடனே
வார்சடையார் தந்த மயிலையே-சீர்சால்
மறைஞான சம்பந்தர் வாழ்த்துவார் நான்கு
மறைஞான சம்பந்தர் வாழ்வு. (40)

சண்முகனார் தீர்த்தஞ் சகலகலை ஞான
வண்மை யளிக்கு மயிலையே-உண்மை
அடியா ருழையார் அருந்தவர்க்காக் கல்லால்
அடியா ருழையார் அகம். (41)

சிங்கார வேலரெனு நாமஞ் சிவகுமரர்
மங்காது பெற்ற மயிலையே -யெங்கோ
அருணந்தி யார்வா னடைந்துய்வா னந்நாள்
அருணந்தி யார்வா னகம். (42)

வாலிதக் கன்சங்கன் வசிட்டனால் வேதங்கள்
மாலுமால் போக்கு மயிலையே- சூலப்
படையான வலியான் பயங்கெடுத்தான் பூதப்
படையான் வலியான் பதி. (43)

பூங்கமலத் தண்ணல் புராந்தகன்பாற் பல்வரங்கள்
வாங்கவழி பட்ட மயிலையே-ஓங்கும்
உமாபதியார் மெய்கண்டார் உன்னுங் கயற்கண்
உமாபதியார் மெய்கண்டார் ஊர். (44)

அத்திரிமார்க் கண்டனள னைவாலை மாதிலிங்கம்
வைத்து வணங்கு மயிலையே - வித்தந்
தரும துரையாள் தடாதகையை வேட்ட
தரும துரையார் தலம். (45)

கண்ணிழந்த வெள்ளி கதியடைவான் முக்கணனை
வண்ணமுறப் போற்று மயிலையே -நண்ணியுயர்
சேரமான கோட்புலியார் தேர்ந்துதொழு வார்தரத்திற்
சேரமான் கோட்புலியார் சேர்வு. (46)

சாற்று மிராமதீர்த் தம்பிறவி நோய்தன்னை
மாற்றும் வளஞ்சால் மயிலையே-ஏற்றுக்
கொடியார் மருவாருங் கொன்றையார் என்றுங்
கொடியார் மருவார் குடி. (47)

சங்கரனார்க் கந்நாட் டசரதன்சே யுற்சவங்கள்
மங்கலமாய்ச் செய்த மயிலையே- பொங்குமலர்க்
கண்ணப்ப ரப்பர் கருதுங் கழலர்முக்
கண்ணப்ப ரப்பர் களிப்பு. (48)

சொன்மலிசீ ராமன்சா முண்டிதுர்க்கை சுக்ரீவன்
மன்மதனும் போற்று மயிலையே-பொன்னிரத
வாதியா னாரானார் மாதுலராய் ஞாதிகள்முன்
வாதியா னாரானார் வாழ்வு. (49)

பாண்டவர்கள் வேங்கைமுனி பௌமன்சு மாலியமன்
மாண்டபதம் பெற்ற மயிலையே-ஆண்டவனார்
ஆவா கனத்தர் அனைத்துலகுந் தம்வயமே
ஆவா கனத்தர் அகம். (50)

சிலேடைகள்.

ஊதும்பொற் கொல்லருட னோங்குமன்னர் வீதிகளும்
மாதங்க மேவு மயிலையே--நீதர்
வள்மதலை மெய்யர் வனத்திருடி மாதர்
உள்மதலை மெய்யர் உறைவு. (51).

பொங்குங் கடலிடத்தும் பொய்யாத வாதிகட்கும்
வங்கம் பொன்மேவு மயிலையே-அங்க
மருத்தெரிய லார்வான் மலைத்தெரிவை யார்போல்
உருத்தெரிய லார்வான் உறைவு. (52)

காரார் புரிசையுங் காரிகையார் மார்பகமும் :
வாராருஞ் சீர்சால் மயிலையே-ஏராருங்
கற்பகத்தை யற்பதியார் காளத்தி யார்கயிலை
வெற்பகத் தையர் விருப்பு. (53)

வீடுதொறு மாடங்கள் வீதியினுங் காட்டிடத்து
மாடு செறியு மயிலையே - நீடுபுகழ்
வேலவனை தந்தா வளமுகனை விண்டு மறை
நாலவனைத் தந்தார் நகர். (54)

ஓதும்பூங்*காவனமு முள்ளமறப் பெற்றோரும்
வாதஞ் செறியு மயிலையே - சீதமதிக்
கீற்றினார் மாதரையார் கீர்த்தியினார் மெய்யன்பர்
போற்றினார் மாதரையார் பூ. (55)

போதஞ்சே ரத்தியுடன் பூவாத வத்திகளு
மாதங்காய் மன்னு மயிலையே-யோதியன்பர்
கூப்பிட்டார் வன்னியார் கூடலிலே வந்தியிட்ட
மாப்பிட்டார் வன்னியார் வாழ்வு. (56)

அம்புசெறி கண்ணா ரங்குயமுஞ் சோலைகளும்
வம்பு செறியு மயிலையே-கொம்புழுது
காப்பிட்ட கோலத்தார் கண்டறியார் கோதையைமுன்
கர்ப்பிட்ட கோலத்தார் சார்பு. (57)

மால்மகனைச் செழுங்கரும்பை மாதவரை மாமலரை
மாலை மணக்கும் மயிலையே-ஆலங்
குடியார் பணியார் புரம்பொடித்தார் கோலத்
துடியார் பணியார் தொடர்பு. (58)

மெச்சும்பொன் வாணிபரு மெல்லியர்கண் ணுந்தடமு
மச்சங் கலக்கு மயிலையே-யெச்சன்
தலையரிந்தா ரம்புலியார் மெய்யரிந்தார் தாவுங்
கலையரிந்தா ரம்புலியார் காப்பு. (59)

சுந்தரஞ்சேர் வீதியினுஞ் சொன்மறையோர் நாவினிலு
மந்தரங்கள் மன்னு மயிலையே—அந்தரஞ்சேர்
பொன்னம் பலவன் புலவர்க்கு மெட்டாத
வன்னம் பலவன் மகிழ்வு. (60)

காவலர்கள் கூவுங் கருங்குயில்கள் பூவையர்கள்
மாவிளங்குஞ் சீரார் மயிலையே-தாவின்மெய்
ஞானஞ் சுவைத்தார்க்கு நற்றந்தை கண்டத்
தானஞ் சுவைத்தார் செறிவு. (61)

கோதில் கொடைப்புக்கழுங் கோவேந்தர் சேனைகளும்
மாதிரங்கள் மன்னு மயிலையே - பாதிமதி
நக்கரவப் பணியார் நாடாச் சிவபெருமான்
நக்கரவப் பணியா ரார்வு. (62)

வஞ்சப் பகைமுடிப்போர் வாலிபர்கள் பாவாணர்
வஞ்சி மணக்கு மயிலையே - பிஞ்சுமதி
வேணியினார் ஆற்றார் விறலழித்தார் வாசுகியாம்
நாணியினார் ஆற்றார் நகர். (63)

பட்டமன்னர் கையினிலும் பண்டியிலுங் கேணியிலும்
வட்டந் திகழு மயிலையே- முட்டில்
திரியம் பகனார் சிவனார் பரனார்
அரியம் பகனார் அகம். (64)

மண்டும் விரகமினார் மாதவர்பூ வைங்கணைவேள்
வண்டு நெகிழ்க்கு மயிலையே-தொண்டர்க்
கெளியா ரளியா ரிதழியார் தில்லை
வெளியா ரளியார் விருப்பு. (65)

மாகஞ் செறிசோலை மன்னவர்கள் மாதவர்கள்
வாகை தழைக்கு மயிலையே-ஆகத்துப்
பேதையான் வாரணத்தா னாரணத்தான் பேசரிய
மேதையான் வாரணத்தான் வீடு. (66)

ஆசில் கலிமாவு.மாவணமுங் காவலரும்
வாசஞ் சிறக்கும் மயிலையே-தாசனுக்கா
வீசு பதத்தான் மனைவீத்தார் நரர்க்கருளும்
பாசு பதத்தார் பதி. (67)

ஓடை மலரிடத்து முத்தியா னத்தெங்கும்
வாடை மலியு மயிலையே-தோடுசெறி
கஞ்சா சனத்தார் கருதரியார் கருத்தெழுந்த
நஞ்சா சனத்தார் நகர். (68)

காலூருஞ் சோலைகளுங் கம்பமத யானைகளும்
மாலூர மன்னு மயிலையே-மேலூரும்
பாகீ ரதிப்பிரியார் பண்டுவைத வன்றொண்டர்
மாகீ ரதிப்பிரியார் வாழ்வு. (69)

ஆசில் புகழ்வேந்த ராவத்துஞ் சேனையினும்
வாசி மருவு மயிலையே - பேசுசைவ
வேதா கமவித்தார் மீனவன்போர் வீரர்க்கு
மாதா கமவித்தார் வாழ்வு. (70)

ஏருழவர் வாரிதிநீர் இல்வாழ்வார் சீரார
வாரஞ் செலுத்து மயிலையே - கூரியவேற்
காமாட்சி யைமணந்தார் காஞ்சியிலே மாவடியிற்
றாமாட்சி யை மணந்தார் சார்பு. (71)

ஆர மணிவளத்தை யங்கங்குந் தானியத்தை
வாரி வழங்கு மயிலையே -ஓரிப்
பரிசெய்தார் மாண்டா ரெலும்பைப் பரித்துங்
கரிசெய்தார் மாண்டார் களிப்பு. (72)

ஆண்டாண்டெண் ணீரரசர் மார்பகமன் னம்பசிக்கு
மாண்டார்பெற் றோங்கு மயிலையே-சேண்டாவும்
வெற்புத் தனுவினார் விண்ணொடண்ட மெல்லாந்தம்
பொற்புத் தனுவினார்பூ. (73)

பேழை யிலந்தோறும் பெண்டுகளுய் யானங்கள்
மாழை மலியு மயிலையே - ஊழைமார்க்
கண்டனுக்குப் பக்கத் தரங்கண்டார் கண்பறித்த
தொண்டனுக்குப் பக்கத்தர் தோய்வு. (74)

சுந்தரங்கூ ராய்ச்சியர்க்குச் சோலைத் துருமம்
மந்தரஞ் சேரு மயிலையே-இந்தாரம்
பூண்டா ரிருந்தா ரிதழியார் பொற்கூடல்
ஆண்டா ரிருந்தா ரகம். (75)

வேறு.
நாகமுற்று நற்குகனை நண்ணிச் சேர்த்தருளி
வாகையிரா மன்மான் மயிலையே - ஆகத்
துருக்குற்ற மணவனா ருள்ளத்த ரங்கித்
திருக்குற்ற மணவனார் சேர்வு. (76)

வெண்புரியுந் தண்புனலு மேவிக் கதிர்மணியும்
வண்ணிறச்செய் மானேர் மயிலையே - எண்ணி
முருக்கோட்ட மேயார் முத்துமைசேர் தெய்வ
திருக்கோட்ட மேயார் செறிவு. (77).

தாமரையுந் தண்ணீருஞ் சார்ந்தநற் பொய்கையும்
மாமதிய நேரா மயிலையே - காமதுரைச்
சித்தர் களங்கறுப்பார் செஞ்சடையார் முத்தி
வித்தர் களங்கறுப்பார் வீடு. (78)

தண்டந் தனைக்கொண்டு சக்காப்பே ருற்றரியை
மண்டலிகர் மானு மயிலையே - இண்டைமலர்
சூடினார் பாடினார் சொன்மறைக ளம்பலத்தில்
ஆடினார் பாடினார் ஆர்வு. (79)

பாண்டரங்கன் றன்கண்ணாய்ப் பார்மீ திரவொழித்து
மாண்டிரவி நேரா மயிலையே - பாண்டவர்கள்
பூசித்துப் போற்றினார் போனகமெய்த் தொண்டர்க்கா
யாசித்துப் போற்றினா ரார்வு. (80)

சங்காழி மேவிச் சதுமுகனைத் தானளித்து
மங்காத் திருமால் மயிலையே-கங்காளர்
விண்டங் கரியார் நால் வேத ரறிவறியார்
கண்டங் கரியார் களிப்பு. (81)

வேதமளித் தஞ்சக் கரம்விளங்கி வேதாவாய்
மாதரையிற் சீர்சால் மயிலையே -சீதவொளிச்
சோமன் றனைமுடித்தார் சோதிக்கண் ணாலந்நாள்
காமன் றனைமுடித்தார் காப்பு. (82)

தண்மதியம் பூண்டுசரக் கொன்றைமலர் சார்ந்தவன
வண்ணப்பூங் காநேர் மயிலையே-கண்ணுதலான்
சீலம் பெரியானான் மாமதிவெய் யோன்சேண்மண்
காலம் பெரியானான் காப்பு. (83)

அஞ்சுகைபூண் டாடுகையா லங்கனையார் மூத்தசிவ
மஞ்சனையே மானு மயிலையே - பிஞ்சுமதிக்
கங்கா தரனார் கடையே னிடையென்று
மிங்கா தரனா ரிடம். (84)

வேலையடுத் தாறுதலை மேவிக் கடப்பமலர்
மாலைவே ளொக்கு மயிலையே-ஆலமுண்ட
அஞ்சுகந்தங் கொன்றா ரகத்தன்றி மூவருக்கு
நெஞ்சுகந்தங் கொன்றார் நிலம். (85)

பூமேற் பொலிந்திருந்து பொன்வண்ணப் பேர்மேல்
மாமானுஞ் சீர்சால் மயிலையே - காமாரி
கூரம்பெய் தானன்று கூடலின்மா றன்படைக்கு
நாரம்பெய் தான் னகர். (86)

பன்னும் பொதியிருந்து பைந்தமிழ்மா தைப்பயந்து
மன்னுகும்ப னேரா மயிலையே -முன்மலர்க்கை
மாதாவைத் தார மருவினான் புன்றலையின்
மீதாவைத் தாரமரும் வீடு. (87)

பொன்னனையா ளுய்ந்திடலாற் பொற்கஞ்சச் சங்கத்தான்
மன்னு மதுரை மயிலையே -பன்னும்
மறைவனத்தான் பாலா வடுதுறையான் மன்னு
மிறைவனத்தான் பாலா னிடம். (88)

பொன்னா லயமாய்ப் புகழ்ப்பரவை யாரிடமாய்
மன்னாரூர் மானு மயிலையே - முன்னாளோர்
நாகமெய் தார்கூடார் ஞாயிலெய் தார்தீயார்
ஆகமெய் தார்கூடார் ஆர்வு. (89)

வானவிடை யோங்குதலால் வண்பன்முத் தாற்கமுக்
மானனையா ரொக்கு மயிலையே--தேனனையார்.
வேயனையார் குன்ற முலையுமையை வோட்டாரெந்
தாயனையார் குன்றார் தலம். (90)

போதகத்தாற் சாதகத்தாற் பொய்யா நீ ராற்பொய்கை
மாதவரை மானு மயிலையே - மாதுமையைப்
பாலரிற வாரிதழிப் பாகீ ரதியைமுடி
மேல் ரிறவார் விருப்பு. (91)

பன்னுமா சாரமுடன் செய்யுட் பயில்புலவோர்
மன்னுகழை நேரா மயிலையே - முன்னமொரு
தாயுமா னார்வீடார் தாணுவா னார்மாலாம்
பாயுமா னார்வீடார் பற்று. (92)

வெண்முத்தாற் பாகதனால் வேழப்பே ராற்கழைகள்
வண்மத்த மாவா மயிலையே--திண்மைசெறி
வேய்முத்தர் கண்டா மொழியுமையார் மெய்யா
ஆய்முத்தர் கண்டார் அகம். (93)

வெண்மைசெம்மைப் பல்லிதழ்கண் மேவுதலாற் கஞ்சமின்னார்
வண்ணமுக நேரா மயிலையே-ஒண்கரகக்
கையா னனத்தான் கழுகுபன்றி யாய்த்தேடு
மையா னனத்தான் அகம். (94)

ஈசற்குக் கண்மலரை யீந்துவளை கொண்மால்
வாசக்கர மானு மயிலையே - நேசற்குத்
தூதமைந்தார் தோலா நடரைங்கித் தோயமண்விண்
வோதமைந்தார் தோலார் மனை. (95)

கைவளையார் சக்கரத்தாற் காலாழி யான்மாயன்
மைவிழியார் நேரா மயிலையே -கைவிரவும்
போதகத்தார் போதகத்தான் காணாதார் புன்னைநிழற்
சாதகத்தார் போதகத்தார் சார்பு (96)

பன்னுமத்தி மாவரசாற் பாயுமம்பு வேலாற்கா
மன்னுபடை நேரார் மயிலையே - துன்னி நின்பாற்
சம்பந்த மாற்றினான் தாடொழுதோ மென்பார்தம்
வெம்பந்த மாற்றினான் வீடு. (97)

மைப்படிந்த கண்ட மதியணிந்தார் நேர்முந்நீர்
வைப்பிருந்த சீர்சால் மயிலையே-துப்பிருந்த
செஞ்சடையா ரையர் சிவவென்னார் கல்லுறழு
நெஞ்சடையா ரையர் நிலம். (98)

வானில்வங் கற்பகத்தாற் றேனுவான் மானிலத்தில்
வானுலக மானு மயிலையே-கூனிலவுந்
தேய்ஞ்ச மதியார் திருநீ றிடார்க்கருளத்
தாஞ்ச மதியார் தலம். (99)

பொய்யா மொழியார் புகழாற் புராரியருள்
வையா புரிவேள் மயிலையே - நையாக்
கயிலை யிடத்தான் கடியவிழ்பூங் கோதை
மயிலை யிடத்தான் மனை.

திருமயிலை வெண்பா முற்றும்.
-------------------


திருமயிலை வெண்பா.
பாட்டு முதற் குறிப்பு அகராதி

அங்கவணிக 35
அந்தணர் 26
அம்புசெறி 57
அஞ்சுகை 84
அத்திரி 45
ஆசில்கலி 67
ஆசில்புகழ் 70
ஆண்டாண் 73
ஆதவரோர் 23
ஆராமருந் 14
ஆர்க்குங் 7
ஆய்ந்த 30
ஆரமணி 72
இல்முன்றில் 6
ஈசற்குக் 95
ஊதும்பொற் 51
ஊழியடைந் 15
எண்ணின் 32
ஏருழவர் 71
ஓடைமல் 68
ஓதும் பூங் 55
கங்கை 1
கண்ணிழந்த 46
கள்ளமிலா 2

காக்கிற் 3
காசிதிருக் 10
காதங்கமழ் 25
காமவலைப் 29
காரார்புரி 53
காலூருஞ் 69
காவலர்கள் 61
கூவிளந்தே 16
கோதில் 62
கோயிலாத் 9
கைந்நின்ற 21
கைவளையார் 96

சங்கரபு 11
சங்கரனார்க் 48
சங்காழி 81
சண்முகனார் 41
சத்துருவைக் 24
சாற்றுமிராம் 47
சாற்றுமுருங் 5

சிங்கார 42
சீர்மல்கு 1
சுந்தரங் 75
சுந்தரஞ் 60
சூர்முடிப்பான் 40
சொல்லரசர் 2
சொன்மலி 49
சோமுகனார் 38
தண்டந்தனை 79
தண்டாப் 20
தண்பாற் 28
தண்மதியம் 83
தாமரையுந் 78
தீயூரங் 34
துய்யமதி 33
தோடுசெறி 4
நாகமுற்று 76
நாதமற் 19

பட்டமன்னர் 64
பன்னுமத்தி 97
பன்னுமா 92
பன்னும் 87
பாண்டரங்கன் 80
பாண்டவர் 50
பாலிதீர்த். 37
புண்ணியர்கள் 31
பூங்கமலத் 44
பூமேற் 86
பேழையிலந் 74
பொங்குங் 52
போகமுடன் 13
பெண்ணாகஞ்
பெண்ணைமுத்
பொய்யா 100
பொன்னனையா 88
பொன்னாலய 89

போதகத்தாற் 91
போதஞ்சே 56
போற்றுகின்ற 18

மெச்சும் 59
மைப்படிந்த
மைப்படியுங் 36
வஞ்சப் 63
வாலிதக்கன்
வானவிடை
மண்டும் 65
மன்னுயிருஞ் 12
மாகஞ்செறி 66
மால்மகனை 58
மான்விழி 8
முப்பழத்தே 17
மைப்படிந்த 98
வாலிதக் 43
வானவிடை 90
வானிலவுங் 99
வீடுதொறு 54
வெண்புரி 77
வெண்முத்தாற் 93
வெண்மை
வேததீர்த் 39
வேதமளித் 82
வேலியா 27
வேலையடுத் 85
வேளாளர் 22
---------------

This file was last updated on 15 Dec 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)