சுப்பய்யாபிள்ளை எழுதிய
சாமிநாத பூபதி பள்ளு
cAminAta pUpati paLLu
by cuppaiyA piLLai, pirapantam - paLLu
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சுப்பய்யாபிள்ளை எழுதிய
சாமிநாத பூபதி பள்ளு
Source:
சாமிநாத பூபதி பள்ளு
“சுவடியியலும் பதிப்பியலும்” பட்டப் பேற்றிற்காகச்
சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பெறும் பதிப்பேடு
பதிப்பாளர் ௧. விஜயராஜ்
நெறியாளர் : முனைவர் ய. மணிகண்டன்
உதவிப் பேராசிரியர்
தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக் கழகம்
2011
-------------
“சுவடியியலும் பதிப்பியலும்” பட்டயச் சான்றிதழுக்காகச்
சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு அளிக்கப்பெறும் பதிப்பேடு. எண் : 43011070
-----------------
நெறியாளர் சான்றிதழ்
முனைவர் ய. மணிகண்டன் உதவிப் பேராசிரியர்
தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை - 600005
சென்னைப் பல்கலைக்கழக, சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டப் பேற்றிற்காக 2010-2011ஆம் கல்வியாண்டில் “சாமிநாத பூபதி பள்ளு” எனும் தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்பதிபேடு என்னுடைய மேற்பார்வையின் கீழ் முதுகலை மாணவர் க. விஜயராஜ் சொந்த முயற்சியில் உருவாக்கப் பட்டுள்ளது என்று சான்றளிக்கிறேன்.
நாள்: 2011 நெறியாளர்,
இடம்: சென்னை - 5. (ய. மணிகண்டன்)
---------------
பதிப்பாளர் உறுதிமொழி
க.விஜயராஜ்
தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை 600 005.
என்னும் பட்டப் சுவடியியலும் பதிப்பியலும் பேற்றிற்காகச், சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறைக்கு அளிக்கப்பெறும், “சாமிநாத பூபதி பள்ளு” என்னும் தலைப்பின் இப்பதிப்பேடு, எனது சொந்த முயற்சியில் உருவானது என்றும், அது இதற்கு முன்பு வேறு எந்தப் பட்டயத்திற்கும் அளிக்கப் பெறவில்லை என்றும் உறுதி அளிக்கிறேன்.
பதிப்பாளர் (க.விஜயராஜ்)
நாள்: 2011
இடம்: சென்னை-5.
-----------------------
நன்றியுரை
சுவடியியலை பட்டயப்படிப்பாக வைத்துள்ள சென்னைப் பல்கலைக் கழகத்திற்கும், முதுகலையில் சுவடி பற்றிய புரிதலையும் மாணவர்கள் பெறவேண்டும் என்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் தமிழிலக்கியத்துறைத் தலைவர் பேரா. வீ. அரசு அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுவடியைப் பதிப்பிக்க அனைத்து நிலைகளிலும் நெறியாள்கை செய்த பேரா ய. மணிகண்டன் அவர்களுக்கும், வகுப்பு எடுத்த விரிவுரையாளர்கள் முனைவர் சி. இளங்கோ, முனைவர் லதா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுவடியைத் தந்துதவிய கீழ்த்திசை சுவடி நூலகத்தாற்கும் என் நன்றி.
என்னுடைய வாழ்வில் அக்கறை செலுத்தி படிக்க வைத்துக் கொண்டிருக்கும் என் தாய் இந்திராணி மற்றும் சகோதரி க.மீனா இருவருக்கும், நண்பர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்க கடமைப்பட்டுள்ளேன்.
கணிப்பொறி அச்சு செய்த நண்பருக்கும், புத்தக உருவாக்கம் செய்த அச்சகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றி.
----------------
பதிப்புரை
சென்னைப் பல்கலைக் கழகத்தில் உள்ள கீழ்த்திசை சுவடி நூலகத்திலிருந்து தாள்சுவடி (எண்.TR874) "சாமிநாத பூபதி பள்ளு” என்பது நான் பதிப்பிக்க எடுத்துக் கொண்ட நூல்.
“வீறாச்சி மங்கலம்” என்னும் ஊரில் வாழும் சாமிநாத பிள்ளை என்பவரை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட இந்நூலானது, தம்பாபிள்ளை என்பவரின் மகனான சுப்பய்யாபிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது.
சாமிநாத பிள்ளை என்ற பண்ணைக்காரரின் சிறப்பு, அவரின் நாட்டு வளம் போன்றவற்றையும், பள்ளர்களின் இயல்பையும் இந்நூல் விளக்குகிறது.
---------------
வாழ்த்து
பார்பூத்திடுந் திருலபூமன் படிபோற்றுதின் வீரமனங்
காசீர்த்தி கொண்டிலங் .......... பனி மலற்காமன்
வார்பூத்திடு முலையினர் மோகனவடி வேற்குகனருள்
பெருயோகன மகாபெ...... முதவுதியா கனவழுத்துவி
தார்பூத்தசுந் தரகுணசீ லன்சகலோற் குமனபுரு
மனுகாலன் தருசாமி னாதெந்திர பூபாலன்
கார்பூத்தமும் மதம்புனைநேசர் கலைவானர் கட்குதவு
முலாசன்கனி யால்கரமேந் தியஅரசடிக் கற்பகந்துனையே.
தன்னரந் திலகிய மதிமு கத்தான்
மண்ணார்ந்து சோம்பல் வுகந்து கத்தான்
தண்டாமறை மலற்றிரு வரசன் தளைக்கு
மூலரசன் கண்ணாயிரத் திறையவன் போலுங்
கண்ணார்ந்த சொல்லிசை வதுநாலுங் கார
காத்தவல்ல வனென்ற சேந்தன்கனி ஏதிகரந்தன்
என்னாரப் பணிந்தேற் றியபோசன் என்னாங்
காமியற்று விலாசன் எங்கோடிசாமி னாதகுபேரன்
மேலிசைக்கும் பன்னிசைக்கே பெண்ணார் துதி
வேணியர் பாணியர் பிரைசித்தர் வினை
முடித்தவர் நடித்தவர் பெம்மான் சிவகாமி
தன்பால் வளர்பிஞ் ஞகன் றுணையே.
மதியூகி உத்தம குணதீரன்
மகமேறு வொற்றிடு புயபாரன்
வானரதி காரனத்தி பால்நெய்
துயத்திடு கனிவாயின் தரியாரை
வெற்றிகள் புரிதூயன் தருசாமினா
தெந்திர சகாயன்தளைக்கும் பன்னிசைக்கே
துதிசாற்று தண்மலருரை வேதன்
துதிவாய்த்த ருளுதவிய பாகன்துடர்
பூத்திடுதுள வணினாதன் சொலுமைவர்தூதன்
பதிபோற்று நன்னயமிகு நேமிப்
படைகாத்திடு கா............ மாமி
பனிபாற்கூட லுயர்கிருஷ்ண சாமிபாதமலர்துணையே.
மூத்தபள்ளி வருகை
அம்புய மானோங்கு புயத்தண்ணலா னாரருளே
நம்பிய மாலாஞ்சா மினாதமுகிலைப் பணிந்தே
செம்பவ ளமோயிலவோ செவ்வாயென் றாய்ந்து
ஜெகமும் புகழ்வீறாச்சி மங்கைமூத்த பள்ளி தோன்றினளே.
சிந்து
அஞ்சுகம் போல கொஞ்சியபேச்
சாங்கஞ் சனஞ்சூழ் அஞ்சபூச்சு
மாயந் தேளில் சேர்பூந்துகி
லுடையு மயில் விளிக்கடையும்
மிஞ்சி யுதித்தி டுதடமலை
போல்நெஞ் சில்மத் ததேழுகுட
முலைமேல் மிக்க மணித்தாவ
டமலை யமைக்கு ழலிசைய
கஞ்ச மிலங்கி யபதமெல்ல
அஞ்சி நடந்தத் திரசவெல்லக்
கட்டி யென தனிரசங்காட்
டிக்கன் பணிபூட்......
மஞ்சி னஞ்சூழ்ந் திலகுவீறாச்
சிமங்கை நகற்கி சைந்திடும்பண்
ணைமன் னனக்கேத் தமனமகிழ்
மூத்த பள்ளி வந்தனளே.
கலிப்பா
வர்ணமயில் போலும் தரதிபோலுந் துதிசேர்'
கன்னியனுந் தாளைக்கரை நகரிற் பள்ளியறுன்
சின்னஇடை துவழசித் திரமுலைக் கோடசைய
அன்னமெனக் காமுகர்கொண் டாசைசொன்ன வந்தாளே.
சிந்து
வாசமிகு ........... சவாது மகா
புனுகுங் கமகமகம வென்வன மணிமேகலை
மருங்கில் கமதாதி விலகதே சுல.........ட்டி
சௌாமர கதமணிவடம் பூட்டிதிருக் கனிவாயிற்தன்
மெல்லப் பேசிசெங் கையைவீசி நேச..............
பையோங்க ஆசைபொருந் தாடவ ரேங்க
நீலநிற குழல்வகுப் பெடுத்துநேர் பெறமுடித்து
பூசியமரு சளைநிரந் துலங்கப் போர்மதவெள்
தனிமனங் கலங்க புள்ளுயர் தடமுயர்
தாளைக் கரைப் பள்ளி வந்தனளே.
விருத்தம்
மருக்கமழ சிந்தாமணியூர் பெரிய
திருவடி யுதவுவர்க்கு மாரன்
தருக்குலவு காதலத்தான சாமி
நாதேந்திர வேல்தனைக் கொண்டாடி
பெருக்கமிரும் பண்ணைதனக் காஸ்த்தியாய்
வந்தபள் ளன்பிறபல மோங்கு
திருக்குலவு வீறாச்சி மங்கை
நகர்குடும்பன் வந்ததிரஞ் சொல்வோமே.
சிந்து
மொய்த்திடுங் கருங்கொண்டை முடித்து
மேல்மீசை நன்றாய் முருக்கிக்
கண்டையுரு மாலிறுக்கிக் கட்டி
சித்திர வர்ணச்சோமனை வெளுத்துமே
இடையிற் சேர்த்துச் செண்டுபோலலெழுந்து
தடிகொண்டு லாவியே துத்தியம்
பெருக்கும் நாச்சிமுத்தன் வளவில்சாறாய்
சோம்புடன் குடித்துமத்த தும்பிபோலவே
அஷ்த்திரவேள் சாமினாதெந்திர புத்திமான்
தென்கரை நாட்டிலரும்புகள் சேரும்
பண்ணைக் குடும்பன் வந்தான்.
சாமிநாதெந் திரசிங்கார நேமவான் பெரும்புகழைத்
தான்படியார் கள்நெஞ்சில் தாம்படிப் பேன்
தாமனாந்தம் பாபிள்ளையை பூமியில் வணங்கார்
மேனிகளப்பா சோவென்றுள்க் கோல்களைப் பாச்சவேன்
கோமனார் புகழ்மருத னாய்கந்தனைத் துதியாக்
கொடுங்கோல் மன்னரெலும்பை கொடுங்கோல் செய்வேன்
நாமமே வீறாச்சி மங்கைநகரிற் பண்ணைதழைக்க
நலம்பெறும் பண்ணைப் பள்ளனாணே யாண்டே.
கலிப்பா
காற்குலவு தின்புய மால்சாமினா தெந்திரதிட
தீற்கனமகிழ் பண்ணை சிறக்கவரும் பன்னியர்கள்
பாற்குளினி தான் ............ பாகமென வாய்திறந்து
மாற்கமதாய் தங்கள்வரன் முறைகள் சொல்வாரே.
தரு
மன்னும் வீறாச்சிமங்கை தன்னிலென்னான் டவர்தான்
வந்து முகிற்த்தஞ் செய்தஅந்த நாளில்
கன்னல செரிவயலிற் பொன்னெரி டும்பேர்
தன்பாய்க் கண்டுசரடு கட்டிக்கொண்டா னென்னைச்
சொன்ன மொழிகடந்த ஒன்னலார் தம்மை
வென்னதுடிப் பள்ளனுக்கு மூத்தகுடி பள்ளினான்.
தன்னயஞ் செருளா சாமினாத மகீபன்
பண்ணை நடத்தும் பெரிய பள்ளினானே யாண்டே.
நங்காம தேனுசாமி னாதகுபேரன் பள்ள
நாட்கொண்டு பள்ளடுமை யானகொண் டேனாள்
சிங்கார மாகஎந்தன் கொங்கைக் குடத்தைப்
பார்த்து தட்டியேமகிழ்ந்து தாலிகட்டினா னென்னை
துங்கமிகும் பொருளைதங்குங் குனபால்க் கறைத்
துரைப்புள் ளுலாவுந் தாளைக்கரைப் பள்ளினான்
பங்கயஞ் சேர்வீறாச்சி மங்கைநகரிற் பண்ணைப்
பள்ளன் தனக்குச்சின் னப்பள்ளினா னாண்டே.
தோற்றமிரு வலார்களாற் றம்பறித் தெரியுஞ்
சுற்றம்போல் செயிலனாற்று முற்றும் பார்ப்பேன்
கூற்றந் தொண்ணூத்தியா ரும்நாற் திரையில்
வாள்வோங் கிக்குடி கட்டும் போல
நாற்றைமுடி கட்டுவேன் நிற்றொளிமேனி யாக்குச்
சோற்றை இட்டேன்ஆண் டவர்நிலைநாட்டும்போல
நாற்றைமேல் நாட்டுவேன் பாற்றிரண்ட வசனம்பகர்
சாமினாத சிங்கம்பண்ணைக் கியல்வுதங்கும் பன்னினான்ண்டே.
கலிப்பா
தெட்டுவள காதபுல்லாதென் கடற்கப்பா லேகத்
தாட்டுவளத் தெற்றெனசொல் சாமினாதெந்திரன் வரபில்
வாட்டுவளம் பொருக்களம்பள்ளி யர்கள்வாய் மலர்ந்து
நாட்டுவளஞ் சொல்லிமணி நாறுக...தோன்றினரே.
நாட்டுவளம்
வானமூன்று மழைபெய்து காற்கும்
வயலிற்சாலி மணிமுத்தைச் சேர்க்குந்
தாளமீய் வரென்றுநத பெற்குந்
தாளமேய் வாதன்கலி தீர்க்கும்
மேனிலாமணி மாடத்துள் ளோற்கு
மிவ்வெண்மை கண்டுமிரும்புன லாற்குஞ்
சேனைகாவலன் மால்சாமினாத வசீறன்
தென்கரை நாடெங்கள் நாடே.
கன்னிவாழைப் பழுத்ததை நாடுங்
கவிக்குமுன் னங்கருமந் தியாமே
மன்னியேஅக் னியிற்கை போடும்
வயலெல்லாம் பின்மதுப்புன லோடும்
மின்னும்வான மழைத்துளி சாடும்
விபரத்தால் நெல்விளைந்துற நீடுந்
துன்னலார் பணிமால்சாமினாத சமுகன்
வாழ்வளநாடு எங்கள் நாடே.
கஞ்சம்பூத்த தடத்தனங் காட்டு
மெய்கன்னி மாதாதடத்தனஞ் காட்டு
வஞ்சமாரன் முலைகளை தேடும்
மாதாரரு முலைகளை தேடுஞ்
செஞ்சம்பாவும் பன்னத் திருக்குந்
தாள்மூத்தி னற்பன்னத் திருக்கும்
அஞ்சலார் பனிமால்சாமினாத அதுலன்
தென்கரை நாடெங்கள் நாடே.
அந்தனஞ் சக்கரங்களை நேருமனப்
பெண்ணார சக்கரங்களை நேரும்
அஞ்சலந்தனந் தத்தைமேல் வளைக்கும்
மநச்சந் தனந்தத்தை மேல்வளைக்கு
கந்தரங் கச்சத்தந்திக் குமேவும்
முகந்தாங் கச்சத்தந்திக் குமேவும்
அயந்துதாரு நிகர்சாமிநாத அதுலன்
வாழ்வள நாடெங்கள் நாடே.
வானரந் தத்தையொட்டிய சூதத்தில்
வானரந் தத்தையென்று குதிக்கும்
பானமா விரசக்கனிக் கேறவும்
பானமா விரசக்கனி யோடும்.
மேனகைகஞ்சி பாதமின்னார் சித்திர
மேனகைக்கஞ்சி வேர்வை ஜொலிக்குந்
தானிவாரண்ண சாமினாதேந்திர தயாலு
தென்கரை நாடெங்கள் நாடே.
மன்னுமாதனைக் கொண்டலச் சாடும்
வறுத்தயூகங் கங்கைகொண்டல் சகரடுந்
துன்றுமிஞ்சியு மஞ்சளைச் சேருங்
சூதமிஞ்சியு மஞ்சளைச் சேருங்
கன்னிமாடங் கள்நெல்லி வந்தாமே
நாற்கவிலாருங் கன்னெல்லி வந்தாரும்
அன்னதாரும் நிகரும்நிகர் சாமினாதஅதுலன்
வாழ்வள நாடெங்கள் நாடே.
சோலைதோறுங் கருங்குயில் பாடுங்
சுகத்தினாற் பசுந்தோகை நின்றாடும்
மாலைதோறும் வசந்தனைத் தேடும்
மாதர்மீதில் மலர்களை சாடுங்
காலைதோறும் மணாளரைக் கூடுங்
கருத்தினாலுங் கண்மலர் சூடும்
ஞாலமேழும் புகழ்சாமிநாத நரேந்திரன்
தென்கரை நாடெங்கள் நாடே.
காரமென் பதுசேலை யெழுத்துக்
களங்க ளென்பதிராக் கதிராகும்
ஓரமென் பதிருப்பதின் கோடு
நல்லோட்ட மென்பதுயர்ந்த பலவீடு
சோரமென் பதுவாலியில் தீர்த்தம்
பின்சுட்டி யென்பதுமாதர் சிரத்தில்
கோரவரம் பரிமால்சாமி னாதகுபேரன்
வாழ்வள நாடெங்கள் நாடே.
வீசக்கண்டது தென்மலைத் தென்றல்
வீங்கக்கண்டது மெல்லியர் கொங்கை
யேசக்கண்டது மன்மதன் தன்னை
இறையக்கண்ட தேழும்புனல் வெள்ளம்.
பேசக்கண்டது மங்கள வார்த்தை
பிரட்டக் கண்டதுநெய் பலகாரம்
ராசற்கேநிகர் மால்சாமினாத நரேந்திரன்
தென்கரை நாடெங்கள் நாடே.
கலிப்பா
தண்யான் மதிமுகத்தான் சாமிநாதேந் திரவேள்
என்யார் புகழ்நாட் லெல்லேருங் கொண்டாட
வின்பாயந் திலகுபொழில் மீதேமிக மகிழ்ந்து
பன்பார குயிற்கூடவும் பாண்மைதனைச் சொல்வோமே.
தரு
பொன்னர சிலர்தபுரி விக்கினேசுபரர்
பாதம்போற்றி மகிழ்ந்து தேற்றியே
கூவாய்குயிலே நரையமூலர் விவளர்
சிதம்பரேசுவரர் ஞான நடராச ரருள்சிறக்கக்
கூவாய்குயிலே இந்நிலமெல்லாம் பரவுமக்கள்
கிருஷ்ணசாமி பதமிறஞ்சி மகிழ்ந்தேற்றியே
கூவாய்குயிலே கன்னிகாமாட்சி வெங்க
மலைநாயகி பத்திரகாளி அருளோங்கவே
கூவாய்குயிலே பொருளைந்திக் கணபாலிளறும்
மந்தராயரருள் புகழ்ந்துநித மகிழ்ந்துமே.
கூவாய்குயிலே கருணைதரவளர் பருத்திக்காட்டு
நாச்சியார்பாத கமலமலர்தனைத் துதித்துக்
கூாவய்குயிலே திருவுலவி வளமருதமலை
அய்யாதடிக்கார திருவருளுந் தழைத்தோங்க
கூவாய்குயிலே அருளுதவும் வீறாச்சி மங்கை
யில்வள்ளியருயன் அண்ணாவிதனைப் போற்றி
கூவாய்குயிலே பெரியதிருவடி யுதவுதுரை
சாமினாதேமதிரன் பிரபலத்தைப் புகழ்நதுமே.
கூவாய்குயிலே தரியலாசிங் கேறுதுரைச்
சாமினாதேந்திர முகிலதன்கிளை யெல்லாந் தழைக்க
கூவாய்குயிலே வருசைபெரு கங்கைக்குல
யீமால்சாமினேதேந் திரமன்னவனை வாழ்த்தியே
கூவாய்குயிலே பரிசனமெல்லாந் துதிக்குஞ்
சாமினாதேந்திர முகில்பண்ணைக ளெல்லாந் தழைக்க
கூவாய்குயிலே மன்னுமறை யோர்கள்
குலுநாறணாசாரி முகில்வேண்மை யுடன்வாழ்கவே
கூவாய்குயிலே அன்னதரு வென்னவந்த
அண்ணயனும் ரொட்டியாசாரியரும் வாழ்கவே
கூவாய்குயிலே நன்னலமுஞ் சேர்மணிய
மாரயனும் வெங்கிட்டாங்கயனும் வாழ்கவே
கூவாய்குயிலே துன்னுபுகழ் துரைராயன்
வெங்கிட்ட ரமணய்யன்சுகம் பெருகிவாழ்கவே
கூவாய்குயிலே அனவரதக் கலியாணன்
கநரசயனும் நீதிபதிகல்லாசாரி வாழ்கவே
கூவாய்குயிலே சொன்மொழி தப்பாதமுகில்
கிருஷ்ணபேந்திர நிதியுஞ்சுப்பராயருந் தழைக்க
கூவாய்குயிலே மனதுமகிழவே பொய்யறும்
குப்பயனும் வரிசையுடன் வாழ்கவே
கூவாய்குயிலே தனபதியை நிகரான
சாமினாதேந்திர முகில்சௌபாக்கியம் பெருகவே
கூவாய்குயிலே கொற்றைநகராதி பன்குமாரர்
ரற்றினவேணாட கோவேந்தன் தழைக்கவே
கூவாய்குயிலே சோற்றமிளவ லோற்குதவுஞ்
சாமினாதேந்திர முகில்துத்திய முறவாழ்கவே
கூவாய்குயிலே கற்றதமிழி எங்கள்
முத்தனேந்திர யூகிகன்புகழை வாழ்த்தியே
கூவாய்குயிலே வெற்றிப்புனைமுருகய விபேகியெங்கள்
ஆண்டியப்ப வில்விசையன் வளந்தேறக்
கூவாய்குயிலே தவசிமுகில் தானுதவு
முத்தனேந்திர தீரன்தரணியில் வாழ்கவே.
கலிப்பா
தானகர்ண னென்னவந்த சாமினா தேந்திர
திடமான்பகன் வீறாச்சிமங்கை நகற்பள்ள ரெல்லாம்
நானிமெல் லாந்தழைக்க நல்லமழை பெய்யவன்றே
ஆனைமுகன் பூசைமுதல் யாவருக்குஞ் செய்வாரே.
தரு
வையம்புகழ் மழைபெய்யும் படியாய் தெய்வ
பகவானை நோக்கிப்பொங் கல்மிகவே செய்யும்
மெய்யர் விக்னேசு வரர்க்குச் செய்யும்
பணிவிடை கள்விடலை கடலைஅவ லுடனே
வையும் வாழுஞ்சிதம் பரேசர் நாளுங்
கருணைதர வாய்ப்புடன் மகிழ்ந்து முருக்காப்பு
நடத்தும் நீளும்வீறாச்சி மங்கை யானுங்
கிருஷ்ணசா மிக்குநினைத்து சமாராதினை தனித்து
செய்யுங் கொற்றை நகரில்வளர் தென்னிர்ப்
பாமர் கொண்டாட அபிஷேகங்கண்டு நடத்தும்
நற்றமி னோர்துதிக் கும்நீல நகரில்
காளிநாய கிக்கன்பது பொன்போதவே கொடும்.
புகழு மெங்கள் வடபத்திகாளி யம்மன்
வாய்த்திடும் படங்கண்ணி நெற்றியாய் செய்வார்.
கலிப்பா
தாதுபுனை தின்புயத் தான்சாமினா தேந்திர
திடமாதவன் வாள்வீறாச்சி மங்கைநகர் பள்ளரெல்லாம்
நீதிபுனை காளியம்மன் நெந்தப்படங் கண்ணிக்குக்
காதுசினக் கேட்டுக் கடாக்கள் பிடிப்பாரே.
சிந்து
தண்ணார்முகப் பிரதாபன்பிரமிப் பண்ணரிக்கண்ணன் தனக்குமே
சந்தனத்துடன் பாலைக்கொடுத்து கந்தபொழுது விந்தையாய்
பெண்ணார் முரதங்களி நாயகிக்கண் ணாயிரத்தின்
கருணையால் பெருகும்பெரிய பழனியாண்டிக் கருகிலொருவன்
பரிசனுந் தூண்டும்பன் னியாண்டியும் புகழ்வேண்டும்
பன்னியாண்டி யுஞ்சொல்லும் பொருப்பைவெல் லுங்கருப்பன்
விருதுபுனை முத்திருள்ள குழந்தைவேலன் கருப்பக்
குடும்பனுங் கற்பகம் பெருமணஞ் சான்சொல்லு
பவரான பெரியவீரனுங் கதித்தவேலன் பிரமறுமடைக்
கலனுங்கு மானவீரனும் பார்புகழும்பண் ணாம்கருப்பன்
பரசுராமன் மாடனும்பதி புகழ்சிவனாண் டிக்குடும்பன்
பகருந் தாளைநகரிலே சீர்சிறந்திடு மனஞ்சான
வன்னியன் செட்டிசின்ன ணஞ்சாறுடன் செல்லாரும்
பள்ளரெல்லா ருங்கூடித்திருந் தினார்புகழ் பொருந்தினார்.
கலிப்பா
மிக்கவிது ரர்க்குநிகர் மெய்புகழ் மிகப்பெருகு
சக்கிரபதி சக்கிரதர சாமினாதேந் திரன்மேய்க்க
சிக்கென முழக்மோடு செப்பழு மிகப்பெரு
குகைக்களி ரெனப்பகடு கட்டத் தணீந்தாரே.
சிந்து
மன்றல்சேர் மலர்சூடி பள்ளறவென் றிவறி
நின்றாடி வெகுவளமாய்ச் சத்தக்குழ லூதியே
மட்டிலாமே ளங்கொட்டினான் நன்றியாய் நிலைநாடி
மனதொன்று போலும்பண் ணாடிவந்து நடந்தான்
பகடிடந்தான் வெகுதிடந் தானென்று துடந்தான்
கன்றிடா மலேபேசி னான்செம்பொற் குன்றுபோல
வெள்ளைவீசி னான்கச்சை கட்டினான்புயந் திட்டினான்
மெள்ளகால் வைத்தான் மீசைமேல் வைத்தோன்
துன்றுசோ மனைஎடுத்தான் உனக்கென்று வேலன்
கைகொடுத் தான்திடஞ் சொன்னான்பயல் சின்னாறும்
மெள்ளசிரித் தான்பின்றுஞ் சதிரிட்டுஒருவருக் கொருவர்
வெற்றி சோலி மிகத்தானே கட்டினானே.
விருத்தம்
பரும்மதக் கருணியேரப் பாங்கரிய கொட்டுப்
பகடுபிடித் தாடிநின்ற பள்ளர் யாவும்
பெருமைபொ ருந்தியகாளி யாட்டஞ்செய்த பிரபலத்தால்
கருணை வெள்ளப் பெருக்க மோங்கி
துருவ னெனவரு சாமினாத யோக்கியன்
சுகம்பெரு கிவளர்நாட் டில்சோம்பு கூர்ந்து
கருமுகல் வானுலகமெங் கும்படர்ந் தேமலுங்
காலூன்று மழைக்குரி யைக்கண் கண்டாரே.
தரு
வட்டமதி யொட்டிப் பரிவட்டங் கூறுது
நீலவர்ண மணியென்ன மழைமின்னி யேறுது
முட்டைகொண் டுகட்டெறும்பு னெட்டி லோடுது
நாளுமோக மாயினேக பொன்மண்டுகம் பாடுது
தொட்டபனை யன்றில் குறல்விட்டு மொய்க்கிது
கடலந்தோய் மதில்மேயுஞ் சிப்பிவாய் திறக்குது
அஷ்டதிசை யோர்புக ழுஞ்சாமி னாதவேள்
மின்னைக்கன் டிபெறும்பள் எரெல்லரங்கும்பு செய்வீரே.
கலிப்பா
காறருந்தின் டியத்தான் சாமினா தேந்திர
வெள்ளரோருங் கைகொடை போலெனசையுங் கொண்டாட
சீராருமாம் பொருளை தெள்ளமுதாய் வெள்ள
முர்ப்பேராரும் வானமழை பெய்யத் தொடங்கியதே.
சிந்து
இந்திர தருவைநிகருஞ் சாமினா தேந்திரன்
கொடுத்த அமுகொப்பாய் எழுந்த மேக
மூவரிநீரை யுண்டீசன் கழுத்துக்கு வமையாய்
அந்தரத்தினி லெழுந்துபைந்த மிளகருணா மனாக
மணியைப்போல அடுத்துமின் னல்கொண்டி வன்முன்
முரசமாற்ப தெகைகொண் டதிர்ந் துமே
சிந்தைமகிழ தொண்ணூத் தியாறு சீறத்தி
எண்திசை யூன்றல்போல சிறந்தபூதல நிறைந்து
பாத்ததிசை யெல்லாம் மழைக்கால் நின்றே
புந்திமகிழ்ந்து சிவபெருமான் தன்புலமைக் குதவும்
பொருளைப்போல் பொன்னூதி கிரிகுளிரச் சினந்து
புதுமையாய் மழை பொழிந்தே.
கலிப்பா
சொக்கரை மீனாம்பிகையைச் சோம்புடனேதான் துகிக்குஞ்
சக்கரை நெர்போன்றசெஞ் சோற்சாமினா தேந்திரன்
சுக்கரை யாமகொடுத் தித்தொகைதுய றாற்றுவதோ
அக்கரை யாயிக்கரைக் கண்டஞ்சி மெலிந்தாளே.
சிந்து
வெடுகந்தா மடங்குசீர் தனக்கு வடுகந்தா மடங்கவே
கும்பானைக் குடந்தாங்கிக் குற்வறக்கும் பானைக்குடம் போகியே
கவளும் வெங்கைக் குலத்தையு மிக்கதுவளும் வெங்கை
குலத்தையுஞ் சாரும்பெருமை நாகமுமதி லூரும்பெருமை நாகமுடிஞ்
கவளக்குஞ் சாக்கோட்டையும் வேடாகவ ளக்குஞ்சாக் கூட்டையுங்
கதித்திடும் பரும்பன்றி யிரங்கி உதித்திடும் பரும்பன்றியும்
நவமேய்க் கந்தரைப் பணிந்துமே சிறந்துவமைக் கந்தரை
பணிந்துமே நாலைவனத்திற் புருகவேவெள் ளம்பாலைவனத்தில் புகுந்ததே.
கலிப்பா
கொட்டமிட்ட துட்டரிட்ட கொத்தளத்தி ரட்டைஎட்டி
மட்டரப்புடைத் தேதுர்த்தமக் கரைசேருத் துளக்கி
அஷ்டதிக்கினிற் சினத்ததட்டு கைக்களிற் றுயாத்த
சட்டமிட்டசொற் பிரசித்த சாமினா தேந்திரனே.
சிந்து
சேரும்பாலை வனங்களேரி ரேரும்பாலை வனத்திலேறி
செல்லும்வேலை வேரையென்று பின்சொல்லும் வேலைவேரையும்
பாருமறவாம் மையுமதில்சாரும் மறவாம்பையும் பருத்தமுடைக்க
தூரையுமதில் வறுத்தமுண் டகத்துரையுஞ் சாருங்கானத்
தேறலைக்கொண்டு மீறுங்கானத் தேறலைச்சாடியே பள்ளம்
நிறம்பியே சளிச்சாமியே வெள்ளம் பரப்பியே
நேரும்பத்திர காளிபதத்தி லாரம்பத்திரந் தூவியேநிலை
வனங்கடந் தேறிநின்றமூலை வனந்தனிற் சார்ந்ததே.
கலிப்பா
மழைக்குழலி யிவள்க்குனது மயற்பெருகியே மயக்குமுற
விளைக்குமதன் மலற்பகளி விடுக்கமன துனைக்கருதி
அழைத்துவர விடுத்தன்றா னலற்குவளை கொடுத்தருள்செய்
தழைத்தபுகழ் செனித்தமுகில் சாமினா தேந்திரனே.
சிந்து
சாடுமுல்லை யங்காவையும் புகள்
கூடுமல்லை யுங்காவையுந் தருவெனப்
பொருந்து வரையுமதி லுருவெனப்
பொருந்து வரையும் நாடும்ஆட்டுப்
பட்டியுங் குளிமூடு மாட்டுப்படியும்
நட்டு மெருக் காளையுங் கயர்
கட்டுமறுக் காளயுைம் ஆடுஞ்
சாமைக் காவையும் தினம்ஆடுஞ்.
சாமைக்காவையும் ஆயர்நாட்டும் மயிரையும்
அவர்தாயா ராட்டுந் தயிரையும்
நீடுங்கைக் குருந்தடியை யுந்தளிர்
கோஷங் கைக்குருந் தடியையும்
கேருமுகந்தன் பதத்தில் சேத்து
சாரு மருந் தோய்ந்தே.
கலிப்பா
அங்கசன் சினந்தேழுந் தடந்தேயுஞ் சாங்கன்தங்கு
கொங்கையின் புறஞ்செலுங் குணம்தெரிந் துளந்தயங்கி
மங்கையிங் கியந்ததுந்தன் வன்புயம் பொருந்தவென்று
சங்கான பதம்புகழ்ந்த சாமினா தேந்திரனே.
சிந்து
நின்ற மருதங்களே மிகச்சென்ற மருதம்பொங்குவே
நீடிடும் பன்னத்தையு மதிற்கூடிடும் பளனத்தையுஞ்
சென்று கூடுமத்தவளையும் பள்ளியன்று போடுமத்தவளையுஞ்
சேருமிந் திரனண்டையும் மிகச்சாருசுந் திரண்டையுந்
துன்று பள்ளியர்பானையுஞ் செலத்தன்று துள்ளியமீனையுந்
துலங்கிடுங் கரும்புகட்டையும் வயலிலங்கிடும் கரும்புகட்டையும்
மன்றிலே மிகச்சிதறியே வெள்ளமொன்றிலர் தெடுத்துதரியே
வாய்த்த செயநிலஞ்சார்ந்து மெந்தஆர்த்தநெய் தலிற்சாய்த்தே.
கலிப்பா
வீரதந்திஎரி வென்றிமீறி அஞ்சலார் புரிந்தபோரில்
நின்றுடாசியென்று போர்புரிந்த சூரர்மண்டை சொரிதண்டு.
வீளவென்றி சூடிநன்கி ரீடியென்று சாரம்
எங்குமே துலங்கு சாமினா தேந்திரனே.
சிந்து
பாயும் நெய்தலைக்கூடியே பயந்தோடுங் கைதையை
சாடியேபகரு முப்பழக்கொட்டையு மலைநிகருமுப் பழக்கொட்டையும்
ஆயும் பாவாசத்தையும் கறிசாயும் பிராசனத்தையும்
மாய்ந்திட ராமன்துஞ்சமுந் தமிழ்க்கீய்ந்திடா கல்நெஞ்சமும்
சாயுமுவற் கொள்பங்கமுங் கரைஆயுஞ் சுவற்கொள்
வங்கமுஞ் சார்ந்தநானிலம் பொருளெல்லாந் நிறைசுள்ளி
தள்ளித் துள்ளியேதோயும் வருணன்பதத்தைப் போற்றி
சுரந்திடும் வெள்ளம்பாந்துமே துலங்கும்பொருளைப் பருகிவார்.
கலிப்பா
மதுரமிஞ்சு வசனமங்கை மயல்மிகுந்துன் அருகில்வந்து
விதிவெளுந் தவனலில் றேந்துமெலிவ தெந்தவகை
விழும்புவது நிசந்தனமு மளந்தடரு வியன்புபுரி
மகிழ்ந்து சதுர்பொருந் துவிதரனென்ற சாமி னாதேந்திரனே.
சிந்து
கொட்டிலிருந்த தேனையுமலைக் காட்டிலிருந் தயானையுங்
கொடியமுள்ளியஞ் துரையுமதில் நெடியதுகள்ளி யந்தூரையும்
சூட்டுக்கட்டையும் பாடியுந்தயிர் பூட்டிகடையுஞ் ஜாடியும்
அலைவற்றிருந்த மானையும்பள்ளி கலசத்தி நேதமீனையு
மோட்டிதுளை யாங்கமுந்தின மோட்டும்வழைய வங்கமு
முழங்குமைந் தினைப்பொருளைலாங் கொண்டுமுந்தி முந்தியுந்தியே
பூட்டும்புகழ் சேர்வருணராசற்குப் பொங்கமேபெருந் திறையைப்போல்
பொருளைமான திபெருகிவார் புதுமைபாரும் பள்ளீரே.
களிக்கரை
தோயம்புகுந்த தாராவே சோதம்புகுந்த தாறாவே
சோம்பேபெருகு மனத்தினமே துயரம்பெருகு மனத்தினமே
நேயமுகந்த தனிக்கடலே நினைந்தான்மதனுந் தனிக்கடலே
நெடியவானத் தவளைகளே நிலங்கணடதுமத் தவளைகளே
ஆயுஞ்சலரும் பொருந்தேனே யானும் வறகன் பொருந்தேனே
அறுங்காரு கந்தஅம்பரமே அனங்கன்விடுத்த அம்பரமே
சாயும்வாரி நடுக்காரே தாயாவசைக்கும் நடுக்காரே
சாமினாததுரை யென்கெதனால் வரச்செய்துரை யெனக்கே.
சிந்து
செஞ்சிலைக் குரவைகேளிறும் சரிசீரால்நெட் டுடலாறாமீன்
திமிங்கலம் பருந்துமிங்கிலஞ் சினைத்தேளி கூளிச்சீளியும்
பஞ்சிலைப் பறவையஞ்சிலைக்கு குரவைபன்னாக்க சலியுண்ணவும்
பருக்குஞ்சாளை திருக்கைவாளை பாங்குபெரு விலாங்குமீன்
குஞ்சாகூகை மீன்கட்டாக்கோ வஞ்சிகூட்டமிடு விறாட்டுடன்
கோளாமசரி செலுககல்லண்டி கோலானும் வண்ணவாலானும்
மஞ்சினக்கெளுத்தி கருமணிபோட்டு வாலமீனெல் லாந்தாவவே
வாயித்தபொருளை கடலில்புகுந்த வளமைபாரும் பள்ளீரே.
கலிப்பா
பூவெருஞ் செல்வம்புகள் சாமினாதேந்திர தேவேந்திரன்
வளருந் தென்கரைநன் னாபோங்க ஆடுவறவந்
தந்தியாம் பொருணையாற்று வெள்ளங் காவேரி
கண்டதற் பின்கப்பல் கொண்டு வந்தானே.
சிந்து
சிந்தியநடையும் பழங்கந்தலுடையு மூளிகீரிபோல் முகத்தினில்
சோறும் யிருஞ்சந்து போய்முறிந் தகையுஞ்
சிந்திய மூக்கும் பருஞ்சட்டிபோல் தலையுமாங்காய் கோட்டிபோல்
பல்லும்வெந் தயங்கடுகு போல்பதிந்த கண்களும்
புதுமேனி போலமுதுகும் வண்றான தாளிவயருஞ்
சந்ததம் புகழ்ந்திடு வீறாச்சிமங்கை யூர்தன்னில்
தாறுமாறுந் தாற்பண்ணைக் காறனார் வந்தார்.
கலிப்பா
துத்தியமிகு யோகத்துரை சாமினாதேந் திரகறுத்தன்
மகிழ்கின்ற பண்ணைகார வந்தநேர் மதில்
குத்துமூலை தான்குலுங்க கொஞ்சுகுழற் போல்பேசி
முந்துநகைப் பள்ளியர்கள் முன்புவந்து கண்டாரே.
சிந்து
கும்பிடுறோ மும்மைக் கும்பிடு கிறோம்
வெள்ளைக் கொக்கு மூஞ்சிப்பண் ணையாண்டே
கும்பிடுகி றோம்செம்பு நாரித்தம் பிரானே
கும்பிடுகிறோ னெட்டசெகுட தேதூர்தாண் டவரே
கும்பிடுகி றோம்சம்பு கன்றுப்பண் ணையாண்டே
கும்பிடுகிறோ மெட்டுச்சன் னைக்கிடாப் பண்ணையாண்டே
கும்பிடுகிறோம் நம்பினோரைக் காக்குஞ்சாமி னாதசீதரன்
பண்ணைநம் பினாரேஉம்மை நாங்கள்கும் பிடுகிறோம்.
:
வந்து நின்றபள் ளிகளைவாரு மென்பார்
சின்னமாடி எங்கேயென்று விளையாடிக் கொள்வராம்
பிந்தியே அறியாள் வார்த்தை விந்தைஎன்பார்
இந்தப் பிரமியுஞ்சுத்த முழுப்பேசை என்பார்
சொந்தமாய் கறப்பிவர் சந்துசொல் வராம்
வெகுசூரி கோபக்காரி சின்னமாரி யென்பார்
நந்துசொல் லக்கன்னியை வளைந்து கொள்வார்
முகுச்சண ணைக்கிடாப்போன்ற நடைப்பண்ணைக் காரனார்.
கலிப்பா
உண்டாடும் பூங்குவளைவாயித் தமனிமாற் பன்மலர்
தண்டாமரை முகத்தான் சாமினாதேந் திரவேள்
கண்டாதரிந்த பண்ணைக் காரனார்முன் புவந்து
கொண்டாடிப் பள்ளியர்கள் கொண்டலடித் தாடினரே.
தரு
வனக்குடம் போலேதிரண்ட தனக்குடந் தானேகண்டு
மயக்கமும் போலேநயிந்தே உமக்கும் என்மேலே
நினைக்கிறீரே இதெல்லாம் மனக்கு ராதமே
வந்துமில்லடி நில்லெனநீதி தெல்லாஞ்சொல் லவுமாகாதே
பொய்யைச்சூட் டியேசிரித்தே கையைக் காட்டுநீர்
நித்தம்போதிக் கும்வார்த்தை நயிந்தேசாதிக் காகுமோ
மையல்கொண் டீரோநையந்தே சையல் கண்டீரோ
சின்னமாடி யென்றீரே யவளைத்தேடி வந்தீரோ
துள்ளிப் பேசுறீர் நயிந்தேபள்ளிக் காசையோ
பின்னுந்தூர நின்றீரே தனித்துச்சேர வந்தீரோ
தள்ளிப் போறீரேதனத் தைக்கிள்ளிப் பாரீரோ
பின்னுஞ்சாடை சொன்னீரே யுமைத்தான்தேடி வந்தோமே.
நேமிநீதி மேதுதிக்குஞ் சாமினாதவேளம் மைநித்தம்
மகிழவே சிறந்த கர்த்தனே கேளுங்
காமிஎன் றீரேயுமைத் தான்சாமி யென்றோமே
மிக்ககண் ணைக்காட்டுரீ ரிவுதென்னே பண்ணைக்காரரே.
கலிப்பா
பார்த்தவுடன் இருவகையே பள்ளியர்கள் மெள்ளநின்று
வார்த்தைசொன் னபோதேமகிழ்ந்து பண்ணைக் காரன்வெகு
நேத்தியிது நேத்தியென்று நின்றுசொல்வ தன்றுமூலைக்
கோத்தமணி பூணசைய கும்மியடித் தாடினரே.
தரு
ஆதிபொரு ளெனவாழ்காளி நாயகியம்மன்
பொற்பாதம் தனைத் துதித்தே
சோதிப்பிரை நுதல்பள்ளியர் மெள்ளவுந்
துள்ளியே கும்மியடித் தனரே.
கலிப்பா
சட்டபுகழ் சாமினோதேந் திரவேன்செய் யப்பண்ணை
கிஷ்டமிகும் பள்ளியர்க னேகியபின் மூத்தபள்ளி
துட்டனென்ற பள்ளன் துலுக்குமெலுக் குஞ்சூதுங்
கட்டேனே வந்தபண்ணைக் காரனிடம் சொல்வாரே.
சிந்து
உள்ளகாரியம் பள்ளன் வைத்ததுளவுக் கோடின்
களவுக் குந்தானே கன்னினா னென்று
துள்ளியுறைத் ததுங்கர் தனேயுங்கள் சித்தமறியுங்
குள்ளிகண் ணியைப்புள்ளி குறித்துக் குலவிபேனேற
சலகைகொடுத் தான்துள்ளியே என்னைத் தள்ளி
முடுககத் துடக்கிறான் தடக்குங் காணாண்டே.
நித்தமே யுறம்வைத்த வயலுக்கு நீர்
கட்டா தின்றைக் கேற்கட்டிப் போறான்
மெத்த வேலையில் தாமாய் வாய்க்கால்
வெட்டினால் அதற்க் கெட்டியும் பாரான்
சித்திரக் காலில் பத்துச்சலகை நெல்
செப்பமாய் செட்டி யப்பனுக் கீய்ந்தான்
புத்தி தானுதுமள் ளத்திணை யில்லைப்
பொருக்கு மேரவைத்தி ருக்குங் காணாண்டே.
கலிப்பா
மூத்தபள்ளி சொன்னமுறை நிசமென்றே யெழுந்து
காத்திரங் கொண்டோங்கு பண்ணைமனம் வெகுண்டே
பதாத்தொரு மித்தேயினைய பள்ளியைச் சீறிச்சினத்து
துர்த்தனென்ற பள்ளனெங்கள் சொல்லெனவுஞ் சொல்வனே.
சிந்து
அம்பொருளை நதியில் வெள்ளம் ஏறி
கூட்டரித் திண்ணைப்பெருகிப் பிணையில்கொண்டு மீறி
தெம்பி வருதென்று மொருக்காலே சொல்லக்கேட்டு
சீக்கிரஞ் சென்றான் புலிக்கண் மேலே
மென்புகழ் சங்கிலிக் கருப்பன் தானே
பள்ளணையில் அவனைக்காத் தருள்வ தரியேனே
பாம்பின் வாயித்தேரை யதுபோலே யெனக்கும்
உள்ளம் பதருதே என்னசெய் வேணாண்டே.
பரிந்து நான்சோறு கொண்டு நேத்து
உப்புத்துரை பாளையத்துப் பெரும்பாதை காத்து
வருத்தி வந்தபள்ளர் சொல்லும் வீணே
இன்றுவரு வானென்றா ரின்னம்வரக் காணேணே
திருமங்கள வெங்கமலை யாயிகாளி யம்மன்
திருவருள் எப்படி யோவென்று அரியே
மருந்தில் விஷங்கலந்த நிலைபோலே எனக்கு
மதிமயங் குதேஎன்ன செய்வேன் ஆண்டே.
கலிப்பா
வாய்த்த தாளைக்கரையில் வந்தபள்ளி சொன்னமொழி
நேத்தி யிதுவென்றே நிகழ்ந்துபண்ணைக் காரனவன்
பாத்திரு கண்கோபமுற் றுபற்கடித்து கைத்தடியால்
சேர்த்தடிப் பேனென்று மனஞ்சீறி எழுந்தானே.
சிந்து
பள்ளனெங்கடி பள்ளிப்பயல் பண்ணுறா யென்னகள்ளி
அனைகாற்கப் போனதுநிஜமே அணைகாற்கப் போனதுவசமே
துள்ளின மாடுமேலே பொதிசுமக்கு மென்பதுபோலே
அந்தத் துடுக்கன்வரைச் சொல்லுமூலை துலுக்குறாந்
தள்ளிநில்லு வயலைக்கண் பரியானேஅந்தப்பயலைக்
கண்டினி னானேகுட்டை மாத்திலடிக் குமுன்னே
மெல்லவரச் சொல்வாயடி சொன்னேன்தயவுக் காரிஅந்தன்
செயலைத்தா னறியாமே அந்தத்தாளைக் கரையிலாடுமே.
மெந்தன்தடி கண்டால்பயல் பயத்தோடு குதித்துப் பேசுரதேது
ஊசிகொல்லா தெருவில் வில்லாது உள்ளுக் குள்ளே
கிழக்குமேற்குஞ் சொல்லிக் கொண்டாலே வருக்கே கேக்கும்
உதித்த பொழுதும் போருமோயெனக் குண்ணோடே வழக்காமோ.
பருந்தடி கண்டால் குரங்காடும்
பள்ளன் தனக்குமேல் கையுண்டு
மிதிச்சாடுறேன் தடிகொண்டு வாடிக்கைச்
சொல்லப்போகும் வகையெல்லாம் வச்சு
மூடும்நாக்கு வளைக்குறி யென்ன
துள்ளியிங்கே வரச்சொல்லு வாயடிபள்ளி
விருத்தம்
வருமருத மலைநாதா பத்தைப் போற்றி
வளர்சாமி னாதேந்திரன் வளஞ்சேர் பண்ணைப்
பருவமிகுப் பள்ளிதனைச் சினக்கும் போது
பக்கவழி சுற்றிவரப் பண்ணைக் காரன்
தருணமறி யாப்பள்ள னாரே வாருஞ்
சம்பாவுக் கேற்பூட்டித் தருணந் தானே
எருவிரையேற் றினங்களெங்கே சொல்வா யென்று
எடுத்துரைக்க பள்ளன்மகிழ்ந் தியம்பு வானே.
சிந்து
கேழுங் கேழுமென் னாழுமேனை மிக்க
மேவியே சொல்லிச் சொலிகன்னி மேத்தீரம்
நாளுமே பண்ணை யாற்கு நயினாற்கு
நாட்டி லில்லாத கொட்டியுண் டாருச்சே
வாளைநோக் கியாமானிலம் பணம் வைத்து
வாங்கும் நிலத்தில் உழுதுதார விடாமலே
நாளும் பயிரேற் றுந்தந் திரம்
நீரளிவீர் பண்ணை யாண்டே.
கேளுங்கான் சம்பா நெல்லைக் கடல்துரை
கேட்டிப் பார்க்கக் கண்டிட்ட மதாகும்
நாளுமே முத்துவெள்ளை மணியஞ்செய்
நாரணா சாரியார் செவிக் காச்சு
வாழுங்கோ தும்பை யண்ணய்யன் கலியாண
வாசல் தோறும் வகைவகை யாச்சு
நீளுமோ ரானைக் கொம்பரைக் கொம்பணர்
சாடினோர் நின்றார் பார்ககவாருங் காணாண்டே.
நாட்டில்மேவுஞ் செந்தாழை இவ்வூர்
நடராசர் வேண்டமெனத் தள்ளிபோட்டார்
தேட்டினாளு மிளகுசெட் டியப்பன்
செட்டியார் கடைக்கேசெல் லுண்டாச்சு
கூட்டிடும்பன் னையச்சம் மிக்காளி
தன்கோயில் கட்டளைப்படி யாச்சு
மீட்டுமோரம் பாணமிலங்கை யின்வீதி
எல்லாம் விளையுங் காணாண்டே.
தங்குமோர் நாராயணன் கிருஷ்ணசாமி
என்பதுதான் றயீரோ பங்கமேது
புளுகுசம்பாவும் பள்ளியாண்டி மகள்வசமாச்சு
செங்குருகை சிந்தாமணி யாள்வார்
திருநகரி யெனச்சொல்லிக் கொள்வார்
பொங்கமேவி வள்ளாளன் தரணி
சந்தன வாசலில் காணும்
புகழுமுத்தன் பூமன் காணாண்டே.
வாய்ந்தசாமி னாதேந்திரன் பண்ணைக்கு
வளமதாக உளவுமா டெங்கே
காய்ந்துலவு செங்காளை முன்வீரன்
கதித்துமேபல் லுதித்ததறி வீரம்
மாய்ந்ததோள் வெள்ளைக்களை யடிக்கடி
பக்கமேறப் பருமோழை யாச்சு
ஆய்ந்தகொம் பனைவீடுகள் தோறும்
வரவரகள் வைத்தர் சித்தாண்டே.
வல்லதேர் பதக்காத்தா றுமெங்கள்
காமாட்சி கோயில்முன் மண்டிபடுக்கு
வெல்லுஞ் செம்மரைக்கா ளையைமுன்னம்
விலாதன் கொண்டுமீண்ட தறிவீரே
முலைகா ளையுங்கண் கொண்டசூட்டால்
முடங்கியே பின்ஒதுங்கின துண்டு
அல்லிக்காளை யும்பூமியைவிட் டதரிகி
வீரரென் போர்பண்ணை யாண்டே.
ஆனதோர் கிடைக்காத தாழைக்கண்டு
வந்தாரு மில்லையது நிசந்தானே
போனதோர் சின்னக்காளை மச்சாவி
பொருட்டல் வாதுபிரட்டு களுண்டோ
வானமந்திரக் காளைதன்மேனி வடிவுண்டோ
மறைந்த தறிவீர தானஞ்செரே
ஒற்றைக்கொம் பறுமுத்து பூசாரி
பூசையைத் தாங்கும் காணாண்டே.
எதுகாணும்பின் றொண்டியைக் காத
மெடுத்துப்பொன் யியவறீ யீரோ
கோதிலாத இருப்புக் கொளுக்
காளைகள் கூட்டங்கள் போட்டோம்
சாதியான வசியர்கள் தறக்கொலைத்
தாங்கட்கா மெனதான்வைத் துக்கொண்டார்
சூதுபோல்சொல் கிறீரினினா னென்ன
சொல்லுவேன் மயனபண் ணையாண்டே.
விருத்தம்
என்செல்வே னென்றபள்ளன் தினையே பார்த்து
யெழுந்துபண் ணைக்காரறு மொன்றியம் பிடாமல்
நன்றுநன்று மால்சாமி னாத யோக்கியன்
நலகுபெறும் பண்ணைவயல் நல்ல தாளி
வின்றுரம்வைத் திடவேணும் மிடையாற் பாற்சென்
றேகியும்நல் லாடுபட்டி எடுத்து வாவென்
றென்றுதலாய் சொல்லக்கேட் டுமகிழ்ந் தேபள்
ளனோடினாள் தடிதடிசுழற் றியாடி னானே.
தரு
இப்பொழுதி லேகியந்த யிடையாபட்டி யாடுகொண்டு
செப்பமுடன் வருவனறிச் சிக்காங் காணாண்டே.
தினமுமந்தக் கிடையொட்டி சிறுமைகண்டு பெருமையுடன்
மனமகிழ்ந்து மதியஞ்சென்றால் வருவேன் காணாண்டே
இனமுடனே கனமுலவி யிங்குவந்த இடையருக்கு
மனமகிழ்ந்து மதிகவெகு மதிசெய் வீராண்டே.
கலிப்பா
கட்டுடனே பள்ளன் கடிகிஉறைத் தமொழி
சட்டமுறவே மகிழ்ந்து தாலமெல்லாங் கொண்டாடி
இஷ்டமதா யாடுபட்டி எல்லாங்கொண்டே கியிச்சிப்
பட்டிதனில் வானிடையர் பண்புடனே தோன்றினரே.
சிந்து
பச்சைப்பா வளைந்தவுடன் லக்கொச்சை தான்மீக
வீசப்பற்று கடகால்தூக்கி சுற்றிமெள்ள நடந்து
தச்சதுணி யுறுமாலைக் குச்சுப்போல் சேர்த்தித்தலை
அசைத்துப் பெரியபல்லுப் பவ்வரையைக் காட்டி
அச்சுடனே தடியூன்றி மெச்சிநெற்றி நாமமிட்டு
அடுத்துவந்து பள்ளனுடன் வந்துபேசி
யிச்சிநகர் தனில்வளந்து உச்சிதமெல் லாம்படைத்த
இடையாவ ரினத்துடனே அடவுடன் வந்தனரே.
உம்பர் கோனாட்டை மனம் நம்பியே
முன்றொருவ னூரைவிட்டுப் பொன்செய்தி ஆரரியர்
குடும்பாசம் புக்கொண்டு மதுவம்புக்கோ நிசந்தானோ
தவத்திபொருக் கால்தூக்கிக் கிடக்குங் காண்குடும்பா
நாடுமில்லை வீடுமில்லை சந்திருதோருங் குடியாச்சு
சிந்திமக்கு வந்து விடியுமோ குடும்பா.
பாந்தமா கொணாட்டை வருந்தாமல் முன்னமொரு
பாம்புகரந் திருக்குமென்ற அடியல்லோ குடும்பா
பொருந்திய விறகோணாட்டை திருந்தாம லன்னாளில்
பொன்னுலங் கண்டசெய்தி வினைமோ குடும்பா
இருந்தபேருக் கோணாட்டை ஒருநாளிலே ருச்சுமக்க
என்றுசின்னக் கன்னியரை யேவினன் குடும்பா
திருந்துமெங் கள்சாமினோதேந் திரமுகில் பண்ணைவயற்
செய்விளையும் மென்றுலகஞ் செப்புமே குடும்பா.
கலிப்பா
பட்டிவைக்கப் போனான்முன் பட்டிவைத்த தாகவுஞ்சோறத்
தட்டிவைத்த பள்ளனுடல் தட்டிவைத்தா லேநிமிருங்
குட்டிவைத்தீ ரேயவறுங் குட்டிவைத்தா னென்றசொல்லை
நட்டிவைத்து மூத்தபள்ளி னாடிமுரை யாட்டாளே.
சிந்து
அடுமையை யாளும் நயினாரைக் கொடுமையைக் கேளு
மிடையாதா னாட்டை கண்டானேவளு வயில்கோட்டை கண்டானே
குடியிருந் திருந்தேனே யிளையாள்சொற் படியிருந்தாளே சோற்றுக்கு
குடுப்பது மில்லையே அவளாசை விடுப்பதுந் தொல்லையே
பொடிவிடு வானேநெல் லொருபடி தொடுவானே...
நான் சொல்லும் பூறாயம்பிடிப் பான் அடிக்கடி சாறயங் குடிப்பான்
துடிக்கொண்டும் பேசிஅவனைக் கைத்தடி கொண்டு வீசி
படித்துடன் சேர்க்கிடமிதித் தால்காரிய நஞ்சிக்குரல் காணான்டே.
கலிப்பா
கோடுவைத்த மூத்தபள்ளி கூறிநடந்தான் னத்தின்
பேடுவைத்த பள்ளன்பிரீ தியுடனே கீர்த்தி
நாடுவைத்த மால்சாமினா தேந்திரன் பண்ணைவயலை
ஆடுவைத்த சேதிதங்க ளாண்டையுடன் சொல்வானே.
சிந்து
துலங்கும் பெரியநல்லி காணியுஞ் சுப்பய்யன்
காணிதோற் றும்பெருமாள் கோயிற் காணி
ஆற்றடி வயலும்யிலங் கிவளரும் புளியடி
வயலும் நாவலடியு மிஷ்டம் பெருகுங்
குட்டக் குளமுங்கட்டை வெட்டியும்பலன் பொருந்தி
அதிரு வண்டிவயலு மஞ்சள் காணியும்
பூவாவடியுஞ் சோழ்வயலும் வெலாங் காணியும்
பலன்பெருகுஞ் சிவனாப் பட்டாரமுந் தோணிக்
காணியும் பசற்றெல் லாம்பட்டி வைத்ததே
வெகு திட்டங் காணான்டே.
கலிப்பா
பாரிரண்டு வைத்தபள்ளன் பண்டிநிச மென்றுமதி
காரிரண்டு வார்த்தைக் கடவாமலே விரைந்து
பேரிரண்டு பள்ளாமிடித்து வரவே கோடுபோய்
கூறிரண்டு காலக்குமறக் குட்டை யடித்தானே.
சிந்து
பள்ளனையுங் குட்டைதனிற் போட்டானென்ற செய்தி
பண்புடனே இளைய பள்ளி கேட்டாள்
தள்ளரிய துயர முற்றுக் கொண்டாள்
சீக்கிரத் தில்தானோடி வந்தவனைக் கண்டாள்.
வள்ள முலைமீது கண்ணீர் வடித்தாள்
மூத்தபள்ளி வஞ்சினை யாதென்றுபல் லைக்கடித்தாள்
மெள்ள வந்து பள்ளனிடந் துரைப்பாள்
உனக்குவந்த வினையமறிந் திலனெனக் கைநெறிப்பாள்.
கொண்ட தொருகண வனென்று மிலைய
சக்களத்தி கூறினாள் திக்களபொய் யும்புலையே
கண்டவர்கள் விண்டுசொல் வார்கோடி சொன்னாலுங்
கைப்புண்ணுக் குண்டோ பெருங் கண்ணாடி
பண்டுமைக் கொண்டம பண்ணைக்காரன் மூத்த
பள்ளி பச்சமுற நடக்கு மதிதுரன்
மண்டலத் திலறி யேனிப் பேச்சு
தலைமுறையில் வாறாத குறைவற வுமாச்சு.
குட்டை தனிலடிக்க வந்தார மெதிர்ந்து
நின்று கூறினால் தெரியும் விபகாரமங்
கட்டுட னுனது பரையெல்லாம் வெவ்வெண்பா
வீசுக் கச்சேரிக் கேயப்பாலிச் சொல்வேன்
நட்டணை செய்தானிளப் பங்கண்போ நமதுகுற்றம்
நாலுபேர் சொல்லுஞ் சாட்சி யுண்டோ
தட்டி வைத்திடா தையேணை யிடும்பா
எங்கள் துரைச்சாமி னாதேந்திர பண்ணைக்குடும்பா.
அமையாத முதலைகடித்தாலே கடிநீக்க
அடிவயத்தை தடவுவது போலே
நமைவேண்டிச் சொலும்படி யுண்டிரக்கி
நமதுபண்ணை நயினார்சொற்படி சிறையைநீக்கி
இமையாமல் விழித்திரு நீகண்ணே
உன்வீட்டிலிப் பொழுதுவருவ னடிபெண்ணே.
கலிப்பா
தாதுகொண்ட தின்புயமே சார்ந்தபண்ணைக் காரனிடங்
கோதுகொண்ட குண்டனிகள் வறிமன தாராமல்
வாதுகொண்ட பள்ளியைம் மனத்திற்போ டென்றுமகா
சூதுகொண்ட மூத்தபள்ளி சோறுகொண்டு வந்தாளே.
சிந்து
கண்டவுடன் தரிகொண்டு கவிழ்ந்தீர் குடும்பனாரே
யாருகண்ணீர் தும்பமற்றெண் ணமுண்டாசீர் குடும்பானாரே
பெண்டிளையாள் வைத்துக்கொண்ட பெருக்கக் குடும்பனாரே
வார்த்தை பேசவென்றால் தங்...கோசல் லேரவெறுங்
குடும்பனாரே யென்குத் தெய்வமெந் நாளைக்குமுண்டு
குடும்பனாரே பின்னுமேரவிட் டேணியைமார வைத்தீரே
குடும்பனாரே பானைக்குள்ளி னையாளைக் கண்டாலுங்
குடும்பனாரே கனபாக்கிய முமேலேசிறாக் கியமுண்டாச்சு.
கலிப்பா
சொந்தமதாய் மூத்தபள்ளி சொன்னமொழி யத்தனையும்
விந்தையதாய் கேட்டபள்ளன் மெள்ளமணி நாவசைத்தேன்
பைந்தாடிேயே புஞ்சொற்படி நடப்பேன் கையினால்
லெந்தனையிவ் வேனைகண்பா ரென்றுகந்து சொல்வானே
சிந்து
செய்ததெல்லாங் குற்றமடி மூத்தபள்ளி யுந்தன்சித்த
வைத்திட்டி மூத்தபள்ளி அய்யெய்யோ யென்னசேவனடி
மூத்தபள்ளி.....யாண்டவற்கும் சொல்லவேணா
மூத்தபள்ளி குஷந்தேக மெல்லனேருதடி மூத்தபள்ளி
எண்ணைச் சிக்கென லட்சிக்கவேணு மூத்தபள்ளி
ஆகஞ் சினேக மல்லோ மூத்தபள்ளி
தெரியாத மெய்விரோதங் கொண்டாய் மூத்தபள்ளி
அன்பில் லாதவம்பு செய்தாய் மூத்தபள்ளி
உன்னை யாளுமண வாளனல்லோ மூத்தபள்ளி
துன்ப முந்தன் தம்பமடி மூத்தபள்ளி
இன்னதுந்த மிட்டால் வேகமல்லோ மூத்தபள்ளி.
என்னிடத்தில் சொன்னதினால் பண்ணைக் குடும்பர்
காரியமெப்படி வசப்படுங் காண்பண்ணைக் குடும்பர்
கன்னிச்சின் னப்பொன்னிக் கென்றால்பண் ணைக்குடும்பர்
பண்ணைக்காற் றன்றுசார முண்டுபண்ணைக் குடும்பர்...
அந்த லண்டிவந்து கண்டால் மூத்தபள்ளி
சுபாகஞ் சொன்னேன் மூத்தபள்ளி
சொந்த மென்றிசைந் திடாமல் மூத்தபள்ளி
நீதான் தூரநிற்கக் காரியமோ மூத்தபள்ளி.
பண்ணைக் குடும்பா ருட்டை வெட்டிட
யெனகட் டளையோ பண்ணைக் குடும்பா
தூண்டியென பாலக்கூண் டுரைத்தாய் பண்ணைக்குடும்பா.
செய்திசொல்ல எந்தவல் லமையோ பண்ணைக்குடும்பா.
எவ்வித முஞ்செவ் விதமாய் மூத்தபள்ளி
வேனிஏற்றி யன்புச் சாற்றடியோ மூத்தபள்ளி
பவ்வியங் கொண்டொவ் விச்சொல்வேன் பண்ணைக்குடும்பா-
தெய்வம்பாற் குண்நம்மைக் காக்கவேணும் பண்ணைக்குடும்பா.
கலிப்பா.
என்றுமத்த மூத்தபள்ளி யின்பமுரக் கூறியப்பால்
சென்றுநீக் கிச்சிறை விடுவிப்பே னெனவே
மன்றுலக மெல்லாமறிய மன்னனுட வார்த்தையினால்
அன்றிசைந்து தங்கள்பண் ணையாண்டலுனைக் கண்டானே.
சிந்து
ஆண்டவனே என்னை ஆண்டவனே பண்ணைநாயனே
எனக்காதர வேயுந்தன் பாதமல்லாறில் நாயனே
கூண்மென் பாய்மனமமுண்டு வந்தேன் பண்ணைநாயனே
செய்தகுற்ற மெல்லாமனது துற்றுப்போறும் பண்ணைநாயனே
செய்யாதகுற் றங்கள்மெய் யாகச்செய் தாலும்நாயனே
தங்கள்சித் தம்பொருத்தன்பு வைத்திடவேணு மென்னாயனே
கையாரக் கண்டகவிஞ் சகிப்பீரே நாயனே
பள்ளன் காவலினால் வில்லௌந்தான் பண்ணைநாயனே.
வடித்திடுங் கள்ளையுங் குடித்திடும் நாயனே
புத்திமட் டொன்றுசொல் வதுதிட்டமலோ பண்ணைநாயனே
துடித்துமன் சொன்னேன்குடித் திருமாத்தி யால்நாயனே
மிகச்சொன்னதி னால்மனவின்ன முண்டோபன் ணைநாயனே
தூங்கிய கொங்கைக்குத் தாங்கல்யல் லோனாயனே
பிள்ளைத்தொட்டிற்குபூமி கிட்டியதாயல் லேனாயனோ
நீங்கிரியாத் துயர்தாங்கு வனோபண்ணை நாயனே
பள்ளனிடத்தும் வாடிமவலைத் தனன்காண் பண்ணைநாயனே.
வாய்த்துதென் றேயனையேத் தஞ்செய்தார் நின்றுநாயனே
தண்ணீர்மால் வழியாக வெளிவந்த தென்னாயனே
ஒத்தவான் னேர்க்கட்ட மூந்தமிட்டால் பண்ணைநாயனே
பள்ளனில்லா மலேருழும் வல்லாருண்டோ பண்ணைநாயனே.
அப்பஉனை வேணுமுதல் பிணைநானல்லோ நாயனே
மேலுமக்கரை யேதுதாளைக் கரைப்பள்ளிக்கு நாயனே
குப்பய்யா பஞ்சாங்கச் செப்பமென்றா ரின்றுநாயனே
பள்ளக்குட் டையைவெட்டியே விட்டிடவேணு மென்னாயரே.
விருத்தம்
மண்டலத்தோர் புகள்சாமினாத யோக்கியன் மனமகிள
பண்ணைக்காரன் மகிட்சி கூர்ந்து
பண்டுவந்த மூத்தபள்ளி மொளிதப்பாமல் பருமாக்
குட்டையை நீக்கிபள்ளன் தன்பால்
வண்டிதஞ்சேர் மொளியுரைத்து சாதம்பூசி வெகுமானங்
கொடுக்கு மந்தபகு மானத்தால்
கண்டுவெற் றினங்கள் வினடீதெல் லாம்கைவச
முண்டாச்சு தென்று கருதினானே.
கலிப்பா
வெற்றிபுனை வித்துவகை மேவும்பெருங் கவுண்டன்
நுற்றமொளி சொன்னபள்ள துன்மைகண்டு வன்மையதால்
நற்றபுகள் சேர்சாமி னாதவேளைத் துதித்து
மற்றுமுள வெற்றினமு மாட்டியவடி சொல்வனே.
தருவு
வெள்ளைச்சிவ லைக்கருமரை யன்படலைக் கொம்பன்
மேகவிறனை பனைங்காரி ...... வெடிவாலன்
குள்ளைமணிப் பூதன்முத்து நிறத்தான் பெரியமோனை
குட்டைக் கொம்பன் கூடுகொம்பன் துளைவாயன்
துள்ளுங்கபா டப்புல்லை யெள்ளுப்பூ நிறத்தான்
பிசுத்தொடுத் தான்கடுக்காய் வெள்ளைதொழுப் புகுந்தான்
பன்னைநிறத் தானிந்த விதத்திலுண் டாயிரமே
பண்ணைக் குளவு மாடும்பா ரீரண்டே
நல்லசுப வேளையில் நானேரிட்டிடும் பள்ளர்
நன்மையாக வினாதன்னை நாற்றுப் பாயவே
வல்லமைசேர் பிரமிப்பண் ணூடிகளை நண்பகல்
வாய்த்த பள்ளியாண்டி நேத்தி யதாய
சொல்லும் பருசன்மகன் பள்ளியாண்டி கருப்பன்
துலங்கும் பழனியாண்டி நலங் கொண்டுமே
குல்லமல னாச்சூடிச் செல்வம்பெரு கும்பள்ளர்
கூட்டமுடன் மாட்டை யேருபூட்டி யுழுதார்.
பூட்டும் நுகத்தை காளைமெட்டிமை யாச்சிம்பி
புலிபோல் எளுந்து மீறிப்போகும் போது வாட்டமில்லா மல்பண்ணைக் குடும்பன் சினந்துசுற்றி
வட்டமிட்டு காளைதன்னை கிட்டி மிகவே
கூட்டிப் பிடிக்கவெகு தாட்டிமையாகக் காளை
கொம்பி னாலேமுடிகிச் சிம்பும் போதிலே
தீட்டும்புகள் சேர்பள்ளன் மீட்டுமனந் தளந்து
இயங்கி மிகவும் மதிமயங் கினானே
கலிப்பா
கள்ளமுற வேஎருது கைக்கடங் காமல்பாயப்
பள்ளன்மதி சோர்ந்தநிலை பார்த்துமந்த மூத்தபள்ளி
மெள்ளவரும் போதுவிளங்கு தாளைக் கரையில்
குள்ளிசின் னப்பள்ளி மிகக்கூடிவா நாடினனே
சிந்து
காரானைதனைப் பாய்ந்து பிடித்தாயின்று
பசுங்கன்று பாய்ந்ததற்கு மனந்துடித்தாய்
வாராதவருசை வாலாச்சே வீமனக்கும்
வலுவான பிலனோடிப் போச்சே
பாரமலுனக் களித்த விருந்தோதாளைக்
கரைப்பள்ளி சின்னக்குள்ளி யிட்டமருந்தோ
சாருயங்குடி யெளுந்துகெள்ளா யெங்கள்துரைச்
சாமினாதேந் திரன்பண் ணைப்பள்ளா
வலியபுலி தனைப் பிடித்து கொல்வாய்
யெருதுகுத்த மதிமயங்கி வீள்வதென்ன சொல்வாய்
கலிகால மகிமை செய்த வாதோவுரு
மூத்த கள்ளியந் தப்பள்ளி செய்தசூதோ
நலியா மருலளுந் திருக்கவேணும் வளர்
காளிநாயகி தன்கிறுபை யென்று தோனும்
சொலு வாய்மை தெரிந்துமனங் கொள்ளாய்
கங்கை குலத்துரை சாமினாதன் பண்ணைப்பள்ளா
கலிப்பா
இவ்வாறு பள்ளியர்க ளேங்குமிகவே யியம்புஞ்
செவ்வாய முர்தருஞ் செவியில்நுளை தோலுமே
அவ்வார்த்தை காதுக்கவு ஷதம்போலே யெளுந்து
வெவ்வாய்ப் புலிபோல மிகச்சீறி நின்றானே
தருவு
மற்றவர் போற்றிய ராமன்சாமி னாதமன்மத
வேள்தனது பண்ணை வயல்கள் தோறும்
நாற்றையெல் லாம்நடவேணு மென்றே பள்ளன்
நயினாற்குச் சொல்லி மற்றைநாளில் தானே
தோற்றுமியலப் பள்ளரெல்லா மெருகு கொண்டே
சுப்பய்யன் காணிவயல் கள்தோறும் நீர்விட்
டேற்றியரு சாறுளவில் நறுதொளி களாக்கி
யெல்லோரும் நடப்பருவ மெனச் சொல்வாரே
நடுகைச்சிந்து
கார்க்கால வெள்ளமும் வாய்க்கால் நிறம்பவந்ததினால்
நீர்க்கக்காலோப் பூட்டிநின்ற பள்ளர்சென் றதற்பின்
பார்க்கக்காலால் நடந்து பள்ளியர்கள் நாற்றுநடுந்
தீர்க்கக்கால் கள்யெக்கஞ் செல்லக் காலேருதே
கலிப்பா
சீரார வாரியதிரு வடிநரேந் திரனருள்
தாரார மணிப்புயத் தான்சாமினா தேந்திரவேளுள்
ளராரும் பண்ணைவய லெல்லாம்விளைந் துதென்றே
காரார முகிரத்தக்க திருகொண்டு வந்தானே
கலிப்பா
கங்கையா வேள்மாலசாமி னாதமுகிலே தனைக்கப்
பங்கையஞ் சேர்பண்ணைப் பள்ளன் பலம்பெருக்க
பொங்கு மிகுசெல்வம் பொருந்திவளர் வீறாச்சி
மங்கைநகர் செல்லுமுற மங்கலஞ்சொல் வேன்றானே
மங்களம்
மங்களா மங்களம் ஸ்ரீதரனுக்கு மங்களாமங்களம்
பொங்குபோதனுக்கு புகள்வினோதனுக்கு
தங்குநீதனுக்குச் சாமினாதனுக்கு மங்களா மங்களம்!
நேசனுக்குச் சர்வசேனுக்குச் சுதன்சீசனக்குப்
பவஞ்சனுக்குச் சாத்திவாசனக்குச் செகதீசனுக்கு
கயிலாசனுக்குச் செயமங்களா மங்களம்!
சீலனுக்கு அனுகூலனுக்கு வளர்ஞாலனுக்குத்
தண்டைக் காலனுக்கு நாமலோலனுக்கு
வள்ளிவில்லனுக்கு உமைபாலனுக்கு வடி
வேலனுக்கு செயமங்களா மங்களம்!
நீதனுக்கு அய்வர்தூதனுக்கு நல்வினோதனுக்கு
சதவேதனுக்கு வில்லிசூதனுக்கு மின்செய
பாதனுக்கு புண்ணிய போதனுக்குச்
சாமினாதனுக்குச் செய மங்களம்!
சீதானுக்கு மங்களம் மங்களம்.
சாமிநாத பூபதி பள்ளு முற்றும்
This file was last updated on 19 Dec 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)