திருமலையாண்டிக் கவிராயர் இயற்றிய
கண்டிக் கதிரேசன் சதகம்
kaNTik katirEcan catakam
by tirumalaiyANTik kavirAyar, pirapantam - catakam
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருமலையாண்டிக் கவிராயர் இயற்றிய
கண்டிக் கதிரேசன் சதகம்
Source:
கண்டிக் கதிரேசன் சதகம்.
இஃது தென்காசித்தாலூகா பொய்கைநகர்,
தி.வை. திருமலையாண்டிக் கவிராயரவர்கள் இயற்றியதை
தென்காசி, தாலூகா ஆபீஸ் ஹெட்கிளார்க்கு, ஸ்ரீமான் T. S. குத்தாலம் பிள்ளை அவர்கள் விருப்பத்திற்கிணங்க. திருநெல்வேலி இந்து காலேஜ் தலைமைத் தமிழாசிரியர்,
ஸ்ரீமான் மே. சொ. சுப்பிரமணியக் கவிராயர் அவர்களால் பார்வையிடப்பட்டு
தென்காசி, ஸ்ரீ மீனாக்ஷி பிரஸில் பதிப்பிக்கப்பட்டது.
1930.
----
கண்டிக் கதிரேசன் சதகம் - சாற்றுக்கவிகள்.
திருநெல்வேலி, இந்து கலாசாலை, தலைமைத் தமிழாசிரியர்,
மே. சொ. சுப்பிரமணியக்கவிராயர் அவர்கள் இயற்றியது.
திருவளரும் பொய்கைநிறை பொய்கையில் வாழ்
மெய்கைநிறை சீலங் கொண்டு
பெருவளநற் கலைபயின்ற திருமலையாண்
டிக்கவிஞன் பேரன் பாலே
யுருவளருங் கண்டியில்வேள் பதம்பணிந்தோர்
சதகமதை யுரைசெய் தானால்
சருவகவி வல்லோருங் கண்டுகண்டிச்
சதகமெனச் சாற்று மாறே. 1
-----
திருக்குறட்குமரேச வெண்பா ஆசிரியரும், கவிச்சக்கரவர்த்தியுமான
தூத்துக்குடி, ஸ்ரீமான், கவிராஜ ஜெகவீர பாண்டியனவர்கள் இயற்றியது.
தருமலையா வெனநரரை யிதுவரையும் பாடியுளஞ்
சலித்துப் பின்போய்
வருமலையா மிருமலையும் வளிமுதலா மும்மலையு
மலையுந் துன்பக்
கருமலையா வகையுணர்ந்து கதிரேசன் சதகமிதைக்
கழறிப் பொய்கைத்
திருமலையாண் டிக்கவிஞன் தானுமுய்ந்து பிறர்க்குமுய்வு
தனைச்செய் தானே. 2
-----------
திருநெல்வேலி வண்ணார்பேட்டை, எனப்பெயர்வழங்கிய வண்ணை
நகர்வாசியும், தமிழ் வித்வானும், கொழும்புநகர், தம்பையா சத்திரத்தமைத்துள்ள
சைவசபை முதலிய சைவ சபைகளில் சைவப்பிரசாரகராயிருந்தவர்களுமகிய
மகா-ள-ள-ஸ்ரீ சுந்தரமூர்த்தி பௌராணிகரவர்களியற்றியது.
சீர்பூத்த வுலகிதன்கட் பிறதலத்துஞ் சிவதலங்கள்
சிறந்தவாகு
மூர்பூத்த சிவதலங்க ளுள்ளவற்றுஞ் சிலதலமே
யுயர்ந்ததென்ப
வேர்பூத்த சிலதலத்து முத்தலமே யதிகமிவை
யெவைக்கு மேலாங்
தார்பூத்த தென்காசித் தலந்தனக்கொப் புயர்விலதித்
தலத்தைச் சார்ந்தே
பொய்கையெனப் பெயரியவோர் பொற்பதியுண்
டப்பதியிற் பொருந்திநாளு
முய்கையிலே மனம்வைத்தங் கூற்றுறுநீர்ப்
பொய்கையிலே யுதயத்தாடிப்
பொய்கைவெகு ளிகணீத்தப் போதகத்தாட்
போதகத்தே புரிந்துபோற்றுஞ்
செய்கையிலே தவராதெண் டிருமேவ
மனையறத்திற் சிறந்து வாழும்
கற்றவர்கள் புகழ்வையா புரிப்பெருமன்
கதிரேசன் கருணையாலே
பெற்றவரப் புதல்வனருள் முருகேசன்
பெரும்புகழெப்போதும் பேசும்
நற்றவனெங் குற்றவரும் நனிமகிழ
வின்கவிக ணாளும்பாடும்
கொற்றவனந் திருமலையாண்டிக் கவிஞனெனப்
பெயர்கொள் கோதிலோனே.
இன்னவனல் லெழிற்கொழும்பு கண்டிநகரிவை
தளியாவென்றும்வாழு
முன்னவரும் பழம்பொருட்கு முன்னவரும்
பழம்பொருளா முருகேசற்குப்
பன்னவருந் தமிழ்பாவி னெழிற்சதக
மியற்றிமிகு பண்பிற்றந்தான்
பொன்னகரின் மன்னவரு மென்னவரும்
நன்னர்மகிழ் பூப்பமாதோ.
----------
சின்னய்யாபுரம், மகா-ன-ஈ-ஸ்ரீ பால்வண்ணங் கரையாளரவர்கள் குமாரரும்
சேற்றூர் சமஸ்தான வித்வானுமாகிய, ஸ்ரீமான் அப்பாவுக்கவிராயர் அவர்கள் இயற்றியது.
உளம் பொருந்த நினைப்பவர்த முற்பவவெப்
பவித்தோங்கி யுயருஞ் சம்பங்
குளம் பொருந்தம் பகத்தினிலங் குறித்தமுள ரித்தனிச்
செங்கொழுந்தைச் சேர்ந்து
வளம்பொருந்தும் பொய்கைதனில் மருவுசங்க
முற்றொழிர்மா மணியென் றோதக்
களம்பொருந்தி டாதுநிறை கல்வியிரத்
தினமிளிருங் கனகச் செப்பு.
தெற்கண்டு மாமுனிவ னாதியரோ தியவியற்கட்
செறியெ ழுத்துச்
சொற்கண்டு பொருள்கண்டி யாப்பணிமற் றுந்தெளிந்து
தொன்னூல் வல்லோர்
கற்கண்டு பாகிதென நற்கண்டிச் சதகமொன்று
கழறினா னால்
செற்கண்டு வசம்பொருமா வளப்பொய்கைத்
திருமலையாண் டிச்சிங் கேறே.
----------
சேற்றூர், சமஸ்தானம் தர்மபாடசாலை தமிழாசிரியரும், வித்வானுமாகிய
மகா-ஈ-ஈ-ஸ்ரீ கி. அபிஷேக சுந்தரக் கவிராயர் அவர்கள் இயற்றியது.
மஞ்சாரும் பொழில்புடைசூழ் பொய்கையெனும்
நகர்வாசன் வளங்கும் மெய்நூல்
எஞ்சாத நன்னடையான் திருநீருங்
கண்டிகையு மிலங்கு மெய்யான்
துஞ்சாத புகழ்நால்வர் பாசுரமா
மணங்கமழுந் தூயநா வான்
அஞ்சாகு மிலக்கண நூல் கற்றதற்குத்
தக்கபடி யமைதி பெற்றோன்
பன்னுதுதிப் பரஞ்சோதி, வாக்கியததிற்
பற்றுடையான் பகரி லங்கை
மன்னுகண்டிச் சதகமெனச் செவ்வேளின்
பதமலரை மனத்திற் கொண்டே.
உன்னுமதி வல்லகவி விற்பனர்க
ளுள்ளமகிழ்ந் துவப்பச் சொற்றான்
துன்னுபுகழ்த் திருமலையாண் டிக்கவிஞ
னென்றுலகஞ் சொலத்தக் கோனே
-------
தென்காசித்தாலூகா வெள்ளகால் மகா-ஈ-ஈ-ஸ்ரீ ஸ்ரீமான் வெ.ப.
சுப்பிரமணிய முதலியாரவர்கள் இயற்றியது.
வெண்பா.
கண்டிக் கதிரேசன் காற்சதங்கை யாச்சதகம்
எண்டிக் கவர்பார்த் தினிதன்பு -- கொண்டு
கருமலையா துய்யஅச்சேய் கால்மீ திசைத்தான்
திருமலையாண் டிக்கவிஞன் தேர்ந்து.
------------
ஸ்ரீமத் முருகதாச சுவாமிகள் மாணாக்கரிலொருவரும் ஊற்றுமலை சமஸ்தான வித்துவான்களிலொருவருமாகிய சங்கரன் கோவில் தாலூகா வாசுதேவநல்லூர்
சு.கந்தசுவாமிப்புலவரவர்களியற்றியவை.
இருமலையாண் டிரண்டுவரை காடுறையை
வர்ப்புரந்தோ னெதிரம் மானால்
வருமலையாண் டிறல்கெடவென் றோனமார்க்
கிடுமமுதின் மதுரம் வாய்ப்பப்
பொருமலையாண் டிகவா நீர்ப் பொய்கைவளப்
பொய்கைநகர்ப் புண்ணியன் சீர்த்
திருமலையாண் டிக்கவிஞன் சதகமெனுந்
தமிழ்மாலை செய்தன் பாக.
மதிரேச கம்பூர கங்கும்ப கஞ்செய்ததி
மகத்துவ வின்பச்
சதிரேச தாவுளயோ கிகளிதய குகைவாசன்
சங்கம் வீசி
யதிரேச றுவரியின் வா யளகைநிகர் கண்டிநக
ராண்டவன் சீர்க்
கதிரேசன் றிருவடியில் வனைந்தன்னோன் கருணையும்பு
கழும்பெற் றானே.
--------------
௸தாலூகா மலையடிக்குறிச்சி மகா-ஈ-ஈ-ஸ்ரீ அ. பிச்சையாப்
பிள்ளையவர்களியற்றியவை
மந்திரங்க ளும்பரவற் கரிதாகி
வாதவூர் வாதற்காக
வந்தியான் வந்தியா ளெனவுரைத்
தாட்கொண் டருளும் வள்ளலாமற்
றிந்திரவி யைம்பூத மியமானோ
டெட்டுருவா யிலகு மெம்மான்
றந்திடுதென் னிலங்கையினிற் கண்டிநகர்
தனிவளர்வேற் சாமிக்கன்பாய்.
கன்னன்மொழி மாதிருவர் பிணங்காதுட்
கனிந்துதரக் கடம்பி னோடு
சொன்னலஞ்சேர் தமிழ்ச்சதகத் தொடை துலங்க
வினிதன்பாச் சூட்டிப் பெற்றான்
பொன்னவடன் னருளொடுநா மகளருளு
மவனருளும் புலவர் போற்றுங்
தென்னவனாட் டுயர்பொய்கைத் திருமலையாண்
டிக்கவிஞ ஜெயசிம் மேறே.
--------------
௸ தாலூகா நகரம் மகா--ஸ்ரீ வே. முத்துவீரப்புலவர்களியற்றியது.
சீரிலகுங் கண்டிகொளும் பினுலுறையுஞ்
செவ்வேள்மேற் செழிப்புற் றோங்கும்
பேரிலகும் பொய்கை கர்த் திருமலையாண்
டிக்கவிஞன் பெருமை சான்ற
ஏரிலகுந் திருச்சதக மியற்றினா
னியற்றமிழா விதையா ராய்ந்து
பாரிக்கும் பாவலர்கண் டுளமகிழ்ந்தா
ரதன்பெருமை பகறற் பாற்றோ
-----------
சிவகிரி சமஸ்தான வித்துவான் மகா-ா-ஈ-ஸ்ரீ அ.மகாலிங்கப்
புலவரவர்ளியற்றியவை
பண்டிகையு மானளின மாமலைமான்
மணாளனடி பராய்வெண் பூதி
கண்டிகையு மொருவா வாது புனைமெய்யன்
றிவியபொதி கையில்வாழ் தண்டு
குண்டிகையு மணிகைதவத் தோனுமதி
மதித்தேவ குலத்தில் வந்தோன்
எண்டிகையும் புகழ்தென்கா சித்தாலு
காப்பொய்கை யெனுமூர் வாழ்வோன்.
தொலைக்கருத் தவாப்பிறப்பற் றொருவவென்று
மொழுக்காலந் துணையாக் கொள்வான்
கலைக்கருத்த மெத்திரத்த பாவெனினு
நுட்பமொடு கண்டு கேள்வித்
தலைக்கருத்த யார்க்குமின்பப் பிரசங்கம்
புரிதமிழ்தேர் தக்கோன் றுய்தோர்
நிலைக்க கருத்த னங்கடிரு மலையாண்டி
நாவலனன் னேமத் தாலே.
சுருப்புக்க டலைகைப்பரந் தண்டுநாண்
டனுவாக் கொடுய்ய வேடன்
உருப்புக்க டலைசெய்தோன் சேய்கண்டிக்
கதிரேசர் குவப்ப தாக
அருப்புக்க டலைக்கவந்தா ளஞ்சுவான்
கருத்தவனல் கமுதி னேராய்க்
கருப்புக்க டலைமதித்துட் சுதைதந்தாங்
கின்சதகங் கழறுற் றானே.
------------
கோவிற்பட்டித்தாலூகா நாகம்பட்டி பெரியவீடு மகா-ள-ள- ஸ்ரீ
நா.வெ. சீனிவாச நாயக்கரவர்களியற்றியது
பொன்னகச நிகர்பொய்கை நகரில்வையம் போற்றுதிரு
மலையாண்டிப் புலவ ரன்பா
கன்னலிற்சா றெனமொழிந்தான் சீர்சால்கண்டிக் கதிரேசன்
சதகமெனு மரிய நூலை
பின்னிலத்தர் தேவரொடு மெவருங்கேட்கி லிரும்பிறவிக்
கடலொடுதீ வினையு நீங்கிப்
பன்னலறு பலவளமு மெய்திப்பின்னர் பரமபத
மடைவரெனப்ப கர்ந்திட் டேனே.
------------
௸ தாலூகா : ஷையூர் மக-ஈ-ஈ-ஸ்ரீ மு. கோபாலுசுவாமி நாயக்கரவர்களியற்றியது.
சீர்பெருகு பொய்கைநகர் தன்னில்வாழுந் திருமலையாண்
டிக்கவிஞன் சிந்தை தூண்ட
வேர்பெருகு கண்டிநகர்க் கதிரேசன்மீ தெழிற்பாவாற்
சதகமிதை பியம்பல் செய்தான்
பேர்பெருகு பூதலத்தோ ரெவரும்பேணிப் பிறங்குமிதின்
பொருட்சுவை சொற் சுவையை யாய்ந்தார்
நீர்பெருகு சடைமுடியா னரன்றன்பாதம் நேர்வரிது
சரதமென நிகழ்த்தினேனே.
-------------
இஃது இந்நூலாசிரியர் குமாரரும் திருநெல்வேலி ஹிந்து காலேஜ் தலைமைத் தமிழாசிரியர்
ஸ்ரீமான் மே. சொ. சுப்பிரமணியக்கவிராயர் மாணவரும் கடையநல்லூர் ஹைஸ்கூல் தமிழாசிரியருமான ஸ்ரீமான், செல்வச்சாமிப் பாண்டியனவர்கள் இயற்றியது.
பாரார்கண் டிச்சதகம் பன்னெனச்சொல்
திருமலையாண் டிப்பா வல்லோன்
சீரார்கண் டிச்சதக மெனப்புலவர்
வியந்திடச்செவ் வேள்தாள் மீது
ஏரார்கண் டிச்சதக மெனுமாலை
தொடுத்தணிந்தா னிதற்கி ரத்தினத்
தாரார்கண் டிச்சதகந் தரினுமிதன்
விலைபெறுமோ சாற்றுங் காலே.
-------------
இராமநாதபுரம் ஜில்லாவைச்சேர்ந்த ஒக்கூர், முருகானந்த கலாசாலை தலைமையாசிரியர்,
தாருகாபுரம், நீ. சிவகுருநாதத்தேவரவர்கள் இயற்றியது
திருவாரும் பாண்டிள்ட் டிறைவனாகச் செனித்துமுடி
கவித்தரசு செலுத்தி வேலை
யருவாக மருவாகை யயில்வேலே வியடியார்தம்
பிறப்பலையைக் காய்வான் கண்டி
யொருவாம் விருந்தருளுங் கதிரேசன்மே லுயர்சதக
நயமதிக மாகத் தந்தான்
தருவாரு முலகமுதோ வென்னப்போற் றித்தரையி
லுளமாக்க ணலந்தழைக்க மாதோ.
அன்னவனா ரெனிற்பொய்கை மு.தூர்வாழு மலகில்கலையுண
றிஞனதி விவேகன்
மன்னவர்த மவைவியக்கக் கவிப்ரசங்க மழைபொழியுஞ்
செழியநலந் திகழ்மாமேகம்
நன்னயமா மிலக்கியத்திற் கிலக்காயுள்ளோன் நண்ணுதமிழ்ப்
புலவரெலா நயக்குந்தக்கோன்
கன்னலின்சொ லுதவுதிரு மலையாண்டிப்பேர்க் கவிராஜ
னெனச்சீர்கொள் கலைவல்லோனே.
------------
தென்காசித்தாலூகா கடையநல்லூர் ஸ்ரீ வெங்கடேசுவரசாஸ்திரியவர்களியற்றியது
சந்ததமுங் கண்டியுடன் கொளும்பிலுரை
குகன்கதிரே சன்றனக்குச்
செந்தமிழின் மொழியெனுநன் மணிபுனைபாச்
சதகமெனுஞ் சிறந்தவாரம்
முந்துறுமன் புடனணிநதான் திருமலையாண்
டிக்கவிஞன் முதிர்ந்த சீல
னிந்தநிலத் திதன் விலைசொல் வதற்கரிதென்
றறிவுடையோ ரியம்புவாரே.
--------------
௸ தாலூகா வயிரவன்குளமிட்டா மானேஜர் கிருஷ்ணாபுரம் விசுவநாதபிள்ளையவர்களியற்றியது
பலகாரச் கணபதிதாள் பரவுதிரு
மலையாண்டிப் பாவ லோனிவ்
வுலகாரஞ் சலியுரியுங் கண்டிநகர்க்
விலகாரஞ் சுவர்க்கபதம் பெறுவரென்றே
குருபரன்றா ளுளத்தி லுன்னி
சதகமொன்று விலைசேர் முத்தி
னிலகார மெனமுருகற கணிந்தனனப்
பெருமையினை யென்சொல் வேனை:
-------------
௸ தாலூகா ஊர்மேனியழகியான் மகாஸ்ரீ அ. சொக்கலிங்க நாயக்கரவர்களியற்றியது
மாமாலைப் போற்றுபொய்கைத் திருமலையாண்
டிக்கவிஞ வள்ள லென்றுந்
தேமாலை கமுகெனச்சேர் கண்டிநகர்க்
கொளும்பிலுரை செவ்வேள் மீது
நாமாலை யொடுபகலுந் துதிசெய்வணஞ்
சதகமென நறுந்தேன் பில்கும்
பாமாலை தொடுத்தணிந்தா னதன்பெருமை
யானறிந்து பகரற் பாற்றோ.
----------------
பாற்றோ தாலூகா கீழப்புலியூர் மகா-ள-ஈ-ஸ்ரீ தூ. சுடலைமுத்துதேவரவர்களியற்றியது.
சிலைமகளைப் பணிபொய்கைத் திருமலையாண்
டிக்கவிஞ தீரனென்று
மலைமகள்வந் தருள்புரியுங் கண்டிநகர்க்
கொளும்பிலுரை யையன்றாளிற்
றலைமகளாங் குறமகளு மகி மகிழ்சதகப்
பாமாலை சாற்றல்கண்டு
கலைமகளு முடல்வெளுத்தாள் கும்பன்மலைத்
தவனெனவே காணுற்றானே.
--------------
௸ தென்காசி கஸ்பா இரும்புக்கடை மகா-ா-ஸ்ரீ
கைலாசம்பிள்ளையவர்கள் இயற்றியது
அலைத்தடஞ்சூழ் கொளும்புகண்டிக் கதிரேசன்
சதகமொன்று அணிநூல் வாய்மை
நிலைத்தவனாம் பொய்கைநகர்த் திருமலையாண்
உக்கவிஞன் நிகழ்த்தல் கண்டு
மலைத்தவனா கினன்கும்பன் வாணிவே
தனையடைந்தாள் வருங்கார்க் கங்கு
லுலைத்தவன்றே ராதவனா யுலகிலி வர்க்
கிணைதேடி யுழல்கின் றானே.
-----------
தென்காசி கஸ்பா அணைக்கரைத்தெரு மகா-ள-ள--ஸ்ரீ அம்பலவாணபிள்ளை
அவர்கள் குமாரரும், ஸ்ரீ மீனாக்ஷி பிரஸ் மானேஜருமான ஸ்ரீமான் கணபதியா பிள்ளையவர்கள் இயற்றியது.
வண்டினமொய் மலர்ச்சோலை வளைந்ததிருப்
பொய்கைநகர் தனில்வாழ்ந் தோங்கி
எண்டிசையும் பேர்படைத்த திருமலையாண்
டிக்கவிஞ னென்னுமே லோன்
கண்டிநகரி ருந்தெவற்குங் கருணைபுரி
பாஞ்சோதிக் கதிர்வே லன்மேற்
றண்டமிழின் சொற்களினாற் சதகமொன்று
சுவைபெறவே தான்செய் தானே,
------------
அவையடக்கம்.
வலம்புரிந்த வளையினமே தினகரனே வாரிசமே
யிவற்றின் முன்னர்
நலம்புரிந்த சங்கினமே மின்மினியே குமுதமதே
நண்ணி னாற்போற்
புலம்புரிந்த புலவர்முனே போதருவேன் யானெனினும்
புத்தே ணாதன்
றலம்புரிந்த சேய்புகழென் னூலுறலா லெவருமிதைத்
தாங்கு வாரால்.
குரவர்பல சமயத்துங் கூறினுஞ் சைவமதக்
குரவர் போல
விரகரிலை யெனவொப்ப விரிந்தநூ லொருங்குணர்ந்த
மேலோர் முன்னர்
வரகவியா தியரல்லே னாயினுமவ் வரதனுமை
வடிவாஞ் சொல்லும்
புரகரன்சேய் புகழுமிதிற் பொருந்துதலா லெவருமெனூற்
போற்று வாரால்.
------------
நேரிசை வெண்பா.
தாமே பிறர்கவிதை தங்குருவை போக்கியவைக்
கேமே வியவிவரை யின்றிரப்பிற்-றோமேயொன்
றில்லா விவர்புகட்கே யேதமெனப் பேசாதின்
னல்லா ருடனிருந்தே னான்.
---------------
கண்டிக் கதிரேசன் சதகம்.
உ
கதிரேசன் றுணை
விநாயகர் துதி
வெண்பா
சீரார் கொழும்பிற் றிகழ்கண்டி யிற்செவ்வேட்
கேரார் சதக மியம்பற்கவ் - வூராரு
முத்து விநாயகனை முன்செல்வ மாமுகனாஞ்
சித்து விளயகனைத் தேர்.
சீர்மணக்குங் கொழும்பினோடு திருமணக்குங்
கண்டியின்வாழ் செவ்வேள்மீது
வார்மணக்குங் கதிரேசன் மனமணக்குஞ்
சதகமிவண் வழங்கு வானப்
பேர்மணக்கு நகர்களின்வாழ்பிறைமணக்கு
முத்துவிநாயகப்பெம்மானைத்
தார்மணக்குஞ் செல்வ விநாயகனை மனத்திருத்தி
யவர்தாள்சேர் வாமால்.
நூல்
திருவுமிசை வாணியு மறையுமுயர் முனிவருந்
தேவரும் பரவவருளிச்
செயமேவு கதிர்காமம் வாழ்கின்ற குமரனே
தெவ்வைவென் றிடுசமரனே
அருமறைக க டேடியிடு பாதனே போதனே
வமார்கட் கருணீதனே
யையனே துய்யனே செய்யனே மெய்யனே
யழகுறுப் னிருகையனே
தருவுறையவ் வனமுறுங் கயமுகனை வென்றவா
தனதடியர் முனநின்றவா
சாலனே கோலனே பால்னே சீலனே
தங்குமயி லுறுவேலனே
கருமுகில்க ளுறுசோலை யுறுசுகம் பெடையோடு
காமவே தங்கள் பயிலுங்
கண்டியொடு மெண்டகு கொழும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 1
சீருலவு மோராறு வதனனே கும்பமுனி
சென்றுதொழு சீதபதனே
சித்தமிகு சுத்தனே யத்தனே முத்தனே
தேவர்க டொழுங்கத்தனே
யேருலவு பூசுரர்க ளிரவியொடு மாசுரர்க
ளிசைபெறு முனீசுரர்களு
மெப்பொழுது மப்பனே சுப்பையா செப்புவா
மீந்தரு ளெனப்பணிசெயுந்
தாருலவு கண்ணியா பேருலவு புண்ணியா
சண்முகா சுப்பிரமண்யா
சம்புவின் பாலனே நம்புகுண சீலனே
தரணிபுக ழனுகூலனே
காருலவு மேடையைத் தரவமுடி
கதிரவன் குதிரைதவழுங் யாதுவான்
கண்டியொடு மெண்டகு கொழும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 2
பொற்பமைந் திடுவேணு புரமதிற் கவுணியப்
புதல்வனா வந்து தோன்றிப்
புகழுறு ந நதிக்கரைபி லம்மையொடு மானுதவு
பொற்கிண்ண வமுதருந்தி
யற்பவுடல் பொய்யெனப் பிரமபுர பதிகமதி
லானசில பாடல்கூறி
யம்மைமங் கைக்கரசி யாரொடு குலச்சிறை
யமைச்சன்வரை விகிதமதனாற்
சிற்பரன் வழங்குமது ரைப்பதியில் வந்துசம
ணப்பகையெ லாஞ்செயித்துத்
தென்னற்கு வந்தசுர மோடு வந் கூனுந்தி
ருத்தியே சைவம்நாட்டிக்
கற்பகா லங்களினு மழியாத ஞானசம்
பந்தனே கலைகள் செறியும்
கண்டியொடு மெண்டகு கொழும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 3
திருமார்பன் மருகனே செயமேவு முருகனே
திகழ்துவச மாங்குருகனே
தென்மலப முனி பேசு நன்மைதரு விசுவாச
செறிகளப மணிவாசனே
வருமார்ப மாகியே வனமீதி லேகியே
வள்ளியைப் புணர்போகியே
வந்தெனது துன்பமதை மாற்றுவது மலையாக
வலையாநன் மனமுமிலையா
கருணமில் தருள்புரிகு வாய்சம்பு பாலனே
தானவரை வெலுவேலனே
தனதனக ராமிதென வருணமிகு மேடையுறு
தையலர்க ளூடியெறியுங்
கருமைநிற மணிமாலை திகழ்மருகு தந்தியொடு
கந்துக முவந்துலாவுங்
கண்டியொடு மெண்டகு கொழும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 4
அருமறைகொள் சோதியே யண்டர்தொழு மாதியே
யன்பர்கட் கருணீதியே
யான்வினவு குருவான வமலனே விமலனே
படியிணைக ளாங்கமலனே
மருமலர்மெய் வாசனே வரையுறு குகேசனே
மகிழ்தொண்டர் புகழ்நேசனே
வாகைதர வா முருக க வென்றவனி தைக்கருள்செய்
வரதனே பதிவிரதனே
திருமலரினடியிலுறு பணிலமணி பைக்கண்ட
செய்யதா ளோதிமங்கள்
சீரண்ட மெனநம்பி யடைதங்கு கழனியிற்
சென்னலொடு கன்னல்செறியக்
கருமயில்க ணடனமிடு சோலைவளர் மந்திமாங்
கனியையம் மனையாடிடுங்
கண்டியொடு மெண்டகு கொழும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 5
மங்கைய ரணிந்துகமழ் களபங்க ளைந்தாடு
வாசமுறு தானநீரும்
மான்மிகுத் தேறிவரு பாகனையு குத்தாம்பல்
வந்து தவு தானநீருஞ்
செங்கைகள் சிவக்கமுதல் வள்ளலென யீவோர்க
டினமுதவு தான நீருஞ்
சேர்ந்துவீ திகளெல்லாஞ் சேறுசெய மேடையிற்
றிகழ்மாத ரூடியெறியுங்
கொங்கைமணி மாலையப் பங்கங்கள் மாற்றியே
குழுமியுடு வென விலங்கிக்
கோலமிகு கண்ணாடி யென்னவொளி வீசிடுங்
கோவீதி நிரைதுலங்கக்
கங்கைநிறை பணையெலாம் பணிலமணி யிந்துவின்
கதிர்காட்ட வெழில்காட்டிடுங்
சுண்டியொடு மெண்டகு கொழும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 6
சீருலவு தடமுமுயர் தேருலவு மிடமுமறை
தேருமுயர் யோகர்மடமுஞ்
சிவனடியர் பூசனை செய்யபரி மாசனை
திகழ்பரம் வாசனைகளே
வேருலவு சோலையும் வேதியர்கள் சாலையும்
விலைமாத ரணிசேலையும்
விளையாடு மந்தியே வேதமுறை சந்தியே
விற்சருகை யணி முந்தியே
மேருவெனு மேடையும் வேசியர்கள் சாடையும்
விரைகமல மிகுமோடையு
மேன்மைபெ றிரத்தினம் வேட்கைபுரி யத்தினம்
வெண்மைநிற முத்தினமுமே
காருலவு கரையினிறை தாழைமலர் கண்டுகுரு
கென்றுகயல் கழனிதாவுங்
கண்டியொடு மெண்டகு கொழும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 7
அந்தணர்கள் மடமும்வை சியர்தங்கு மிடமுதன்
றறியோவர் செய்படமுமே
யசனமிடு மன்னமே யரசர்மகிழ் சொன்னமே
யணிதிகழு மெவ்வன்னமே
சந்துலவு செய்களுந் தவசியர்கள் மெய்களுக்
தருவனவ ரீகைகளுக்
தழைகள் மிகு மாலையே சம்புசெப மாலையே
தணவாத வதுவேலையே
வந்துதவழ் கொம்புமே மதகிலிழி யம்புமே
மாலுறையு மிடமெங்குமே
மணமுறு மிறால்களே வாவிடு வரரல்களே
வானளவு பேரால்களே
கந்துகமு மதகயமு மூலவிவரு வீதிசெறி
கனகவா னுலகுநிகளுங்
கண்டியொடு மெண்டகு கொழும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 8
ஆருலவு தடமதனி லதிகமக ரங்களே
யலரெலா மகரங்களே
யண்டர்க டன்வீதியே யளை கடையு மோதையே
யம்மரத ரேர்சீதையே
யேருலவு மேடையி லிரத்தினச் சன்னலே
யெழின்மாத ரிசைதுன்னலே
யெல்லுறு மிலுச்சிதனி, வீரமதி தவழவே
யிசையமுத முங்கமழவே
சீருலவு மாவண மதிற்பணிகள் மின்னவே
சீரள்கை நகரென்னவே
செயல்பெருகு மன்னவர்கள் வாயில்மும் முரசமே
திகழ்சோலை யிற்பிரசமே
காருலவு மேடைகளின் வானுலக மங்கையர்
கலாடம தசைத்தாடிடுங்
கண்டியொடு மெண்டகு கொழும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 9
மாதர்நதி யாடியிடு மஞ்சணீ ரோடுமே
வாவியி லனங்கூடுமே
வண்டுலவு பணையிலவ் வாசநீர் பாயுமே
வளர்கன்னல் கமுகேயுமே
சீதள முகிற்சாயல் கண்டுமயி லாடுமே
செறிபமர மும்பாடுமே
செப்புதகி லந்தலா ரணிகின்ற வாருமே
திகழ்களப மதுநாறுமே
சூதமணம் வீசுமலர் கமழ்கின்ற சோலையே
சொல்வைசிய ரனசாலையே
சொல்லினுபர் கின்னரர்கள் பாடியிடு மோசையே
சொன்னகரு ளார்க்காசையே
காதம்வரை மணம்வீச வனிதையர்க ளணிகின்ற
களபமெழில் வீதிகமழுங்
கண்டியொடு மெண்டகு கொழும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 10
சீருலவு காவலர்க டெளிதமிழ்ப் பாவலர்கள்
டினமும்வரு மேவலர்களுக்
தினம்நினைவ ராணையே சேர்ப்பரிசை வீணையே
செய்திருத் துவர் கோணையே
யேருலவு வைசியர் யாவரும் புகழசிய
ரெவ்விடமு மகிழ்சுசியரு
மிருவிருந் தெதிர்செல்வ செதிரிகளை யேவெல்வ
ரிறைவன்வே தஞ்சொல்வரே
தாருலவு கொடிகளுந் தழைசோலை யடிகளுக்
தடியிலுறு தீந்தடிகளுஞ்
சசிமான முட்டுமே தண்டேற லொட்டுமே
தனமாதர் தினம்கட்டுமே
காருலவு மரியுலகு நாணமுற வீதிசெறி
களகமா ளிகைகள்சூழுங்
கண்டியொடு மெண்டகு கொழும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 11
12. வனமுலவு பணைகளிற் கரியமே திக்குழாம்
வந்தறுகு தின்று நீடு
வாழையி ணுழைந்துலவு சாளைகளெவ் வேளையினும்
வாவுதட நீரருந்தி
மனமதனி லமுதுணுங் கன்றினை நினைக்கவே
மடிவிம்மி முலைசுரந்தம்
மடுவினி லொழுக்குபா லன்னம் பிரித்துண்டு
வனசத்தி னூடு துயிலச்
சினைவரா லெனமடுவின் மள்ளியர்கள் கால்கிளைத்
திண்டோளின் மள்ளர் தடவச்
சிறுகாம மிஞ்சலினவ் வாடவர்கள் மார்போடு
திகழ்கொங்கை மூழ்கவோடிக்
கனமருவு சோலையிற் கலவிசெய வதுகண்ட
கலைமந்திகனிகொ டெறியுங்
கண்டியொடு மெண்டகு கொழும்பிலுறை வாசனே
பீசனே கதிரேசனே. 12
கோடாது மேலோங்கு சோலைவளர் மந்திகள்
குதித்துவா னுலகதருவின்
கோடதனி லுறுபல மருந்தியவ் வுலகினிற்
குருளைகளி னோடுலாவ
வீடாது வாழ்தரு மரம்பையர்க ளிதுவேது
வேற்றுலக செந்துவென்று
மெல்லவே பின்செல்ல வுருமிப் பயங்காட்டி
மீண்டுமவ் விலஞ்சி சேரும்
வாடாத முல்லையொடு பிச்சியிரு வாச்சிசிறு
மல்லிகை யசோகுகோங்கு
மாதுளையின் மலரெலாஞ் சென்றுசென் றவையில்வரு
மதுவெலாம் வாரியுண்டுங்
காடாக நிறைகின்ற கஞ்சத்தி னமுதுண்டு
களிவண்டின் னிசைபாடிடுங்
கண்டியொடு மெண்டகு கொழும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 13
மன்றறரு மாயர்பா டியில்முன்ன முரலினொடு
மருதிடை தவழ்ந்து சென்று
வரைமுலைப் பூதகியை யமுதொடுயிர் பருகியயல்
மனைகடொறும் வெண்ணெயுண்டு
குன்றா வரம்பிடைக் கோதையர்க டடமதிற்
குழுமிநீ ராடுமமயங்
குறுகியவர் துகில்கடமை வாரிக்கு ருந்தினுயர்
கோட்டில்வைத் தாட்டிமகிழப்
பொன்றாத வெழின்மாதர் விரகந் தலைக்கொண்டு
பொற்கர்நி தம்பம்வைத்துப்
போற்றியே தந்துகி லிரப்பக் கொடாதேடி
போடியென விளையாடியே
கன்றால்வி ளாங்கனி யுகுத்தருளி வரை தூக்கி
நிரைகாத்த மால்மருகனே
கண்டியொடு மெண்டகு கொழும்பிலுறை வரசனே
யீசனே கதிரேசனே. 14
பாவலர்க ளெனவண்டின் னிசைபாடி வரமடப்
பரவையர்கள் சேனையாக
பசியகிளி குதிரையா யசிதாழை மலரதாப்
படரிருட் டும்பியாக
மாவலரி னுறுகுயிற் சின்னமாய்க் கன்னல்வில்
வாங்கிமலர் வாளி தாங்கி
மாமுடி புனைந்திரதி மாதொடு மதிக்கவிகை
வருதென்ற லிரதமேறிப்
பூவலரு மங்கையரு மாடவரு மயல்கொண்டு
புதியசம் போகமூழ்கப்
பொருதுமா மலர்சூடி மதனன்வரு புங்கமுள
புதியவிள வேனிறோறுங்
காவதனில் மயிலெலா நடனமிட மந்தியது
கண்டுசதி காட்டியாடுங்
கண்டியொடு மெண்டகு கொழும்பிலுயர் வாசனே
யீசனே கதிரேசனே. 15
பொன்னனைய மாதர்தட மாடவவர் முகமதைப்
புதியச்சி யெனமகிழ்ந்து
புகழுறுங் குவளைமல ரக்குழலை யிருளென்று
பூங்கரையின் முல்லைமலா
மின்னலென வவரிடைகள் கண்டுதா ழைகளெலாம்
வெண்மலர்கள் சொறியவேரி
விளைவிக்கு மவர்கள்மொழி கேட்டகுயில் தத்தைகளும்
விள்ளாது நாணமூழ்க.
வன்னமது நடைகற்கு நினைவோடு பின்செல்ல
வானதட நதிகளோடி
யாரமொடு கயலுலவு சாலிகளு மிணையிலா
மதிரசவ ரம்பையாதிக்
கன்னல்கமு கெழில்தெங்கு கழைகள்பல பலவு செறி
கழனிக ணிறைந்தவெழிலார்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுரை வாசனே
யீசனே கதிரேசனே. 16
நாதனுறு மதுரையில்வை சியர்குலத் தினில்வந்த
நாயகன் றனபதிக்கு
நன்மகவி லாமையாற் பொன்னைநிகர் தங்கையரு
ணம்பியாந் தோன்றறன்னை
நீதமுள் தேவியோ டாருமறி யப்பரனை
நேர்ந்து சுவி காரமாக்கி
நிதிபதிக ளணிமுதற் செல்வங்க ளீந்துபின்
நின்மலன் பதம்நாடியே
மாதவத் துற்றவர் வராமையால் ஞாதியர்கள்
வன்பினப் பொருள்கள் கவர
மறுகுதன் மருகற்கு மாதுலன் றனபதியின்
வடிவாய் வழக்குமோதிக்
காதலொடு சபைமுன்பு பொருள்வாங்கி
யருள்செய்த கடவுளரு டருகுமானே
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 17
கோசிகன் சனகனொடு குறுமுனி வசிட்டனுங்
குவலயந்தனிலுளோருங்
கொண்டல்வா கனனும்வா னண்டர்க ளியாவருங்
கோகனக மலருளோனுந்
தேசுறுங் கயிலையிற் சென்றுதிரி புரர்கொடுமை
செப்பிடச் சிவனுமோர்ந்து
திகழருட் டேவியொடு திரிபுரந் தனைவெலச்
செம்பொன்மலை வில்லதாக க
வாசுகியை நாணாக மால்பெரிய வம்பாக
மறையெலாம் பரிகளாக
மாலுந்தி யிற்றோன்றி யுலகம்ப டைத்தருளு
மலரவன் சூதனாகக்
காசினியை ரதமாக வேகொண்டு புரம்வென்ற
கருணையர் னுதவுபொருளே
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுரை வாசனே
யீசனே கதிரேசனே. 18
19. தருவைநிகர் தசரதன் மதலையாய்த் தோன்றியத்
தவமுனிவ னோடு சென்று
தாடகையை வென்றகலி கைசாப நீத்துமெய்ச்
சனகனுரை மிதிலைவந்தே
யுருவமிகு சீதையைக் கண்டுமயல் கொண்டுமெய்க்
குறுமுவமை பலவும்விண்டே யுத்தமன்
சனகனிடம் வினவவவ னிராசசபை
யூடன்று கொண்டுகாட்டும்
வரிவினா ணேற்றியே சீதையை மணந்தமால்
மருகனே கரியமேதி
மடுவினிற் செரிதலால் வாளைகள் வெகுண்டுவான்
மடுவினிற் றாவிவீழுங்
கருவிவான் மணியினொடு கழைமணிநெல்
மணியெலாங் கழனிகளி லுகழுமெழிலார்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுரை வாசனே
யீசனே கதிரேசனே. 19
அரணமுறு மிருகமு மக்கினி வனங்காலோ
டவமிருத் துஞ்செய்வினையு
மந்தகனும் நோய்பேயு மரசர்க ளிடுக்கமு
மரவுகளி னுற்றவிடமுந்
திரணமென வேவந்த வறுமையுங் கோட்கிரக
செய்கையால் வருதுன்பமுஞ்
சித்திரவி லத்திரமு னாய்பய மெவையுமே
சிதைவுறத் தண்டைசூழுஞ்
சரணகம லத்தையித் தருணமதி லருள்செய்வாய்
தருமனே மலர்மருகனே
சாரங்க மருள்வனிதை தனைமணந் திடுகுகா
சந்தன மணிந்தசுமுகா
கரணமொரு முகமாக முருகவென வோதிடுங்
கன்னிகைக் கருள்வேல்னே
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுரை வாசனே
யீசனே கதிரேசனே. 20
கொல்லானை தனையன்று வட்டாலை மண்டபங்
குறுகிநர சிம்மவாளி
கொண்டுவிற் சேவகஞ் செய்தெய்து தென்னவன்
குறைதீர்த்திவ் வுலகுகாத்த
வல்லானை நல்லானைப் புரையொன்று மில்லானை
வஞ்சகர்கள் பாற்செலானை
மாலானை யுரிபுலித் தோலானை வாலானை
மார்பிலணி நூலினானை
யல்லானை யறியுலவு பகலானை மண் முதல
வைம்பூத மாகினானை
யபிடேக மாரனரன் மகிமையறி யாமையா
லன்றுரைசெய் வாதையோர்ந்து
கல்லானை தின்னக் கரும்பீந்த வரனருள்செய்
கந்தனே யுந்துமெழிலார்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுரை வாசனே
யிசனே கதிரேசனே. 21
சிறியவனை மொழிதவ ரிடாதபடி வனமதிற்
றிருவிலக் குமணனோடுஞ்
செல்பொழு திராவணன் சீதையைக் கைக்கொண்டு
சென்றதா லவளை நாடி
யறியவென வநுமனைத் தூதேவி வாரிதனை
யணைகட்டி யெண்குமந்தி
யாஞ்சேனை களினோடு மப்புரஞ் சென்றுவதி
காயனொடு கும்பகருணன்
குறியவுடல் மூலபல மொடுசம்பு மாலியுங்
கோட்கண்ண னிந்திரசித்தன்
குற்றமி கிராவணா தியரிவர்கள் சிரமெலாங்
கொண்டலகை பந்தாடியே
கறிகறி யெனத்தின்ன வில்வளைத் தம்புதொடு
கருணைரா கவன்மருகனே
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுரை வாசனே.
யீசனே கதிரேசனே. 22
சந்துலவு பாதனே தணிகையுறு நாதனே
தன்கடம் பணிதேனே
தரணியிலு தாரனே வீரனே தீரனே
தகைமைபெரு மணியாரனே
பந்துலவு தனவள்ளி பாகனே யோகனே
பரமநீ றணிவாகனே
பத்தர்மே லருள்புரியும் வித்தகா மேன்மைபெறு
பண்ணவர்க் கருள்கத்தனே
நந்துலவு குழையனருள் பாலனே வேலனே
நன்மைமிக வருள்சீலனே
நலவனே வலவனே புலவுமீன் குதியாடு
நளிகடற் செந்திலவனே
கந்துக மெழுந்துலவு துகளிரவி யைப்பரிக்
கவின்வெள்ளை காட்டும்வீதிக்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுரை வாசனே
யீசனே கதிரேசனே. 23
சினகரஞ் செறிமதுரை வீரமா ரன்றோன்ற
றென்னனபி டேகனுக்குச்
செகமதனை முடிசூட்டி யரசருள வென்றுபுகழ்
செரியரச ருறுகாலையிற்
றனகமதின் வஞ்சமுறு சோரமா தர்கள்சேயர்
தனிமகுட மதனைவெளவித்
தாமறைவு செய்திடவும் வேறுமுடி செய்யவே
தகைமணிக ளமையாததா
லனகனொடு மிதுவினவி வாவெனச் சிறுவனொ
டமைச்சர்வரு முன்னதாக
வணிகண்டி யொடுகுழைகள் காதினிலி லங்கியிட
வங்கதந் தோளிலேற்றிக்
கனகமுறு வைசியரா மாணிக்கம் விற்றுவரு
காமாரி யருள்குமரனே.
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 24
ஆதிகயி லாசமலை மேருமலை கந்தமலை
யண்ணா மலைப்பதியினு
மணிபரங் குன்றஞ் சுவாமிமலை வடபழனி
யழகுதிரு வேளூரினுஞ்
சோதிதிகழ் சென்னிமலை சண்பைநகர் காஞ்சிநகர்
துகளறு விராலிமலையுஞ்
சொல்லவுயர் திருமதுரை கதிர்காமம் நற்றொண்டர்
சூழ்திருத் தணிகைகாரை
மோதியலை வருதிருச் செந்தில்கழு காசலமு
முதுகாவி மலையிலஞ்சி
முருகநீ வாழுமிட மெண்ணரிய வாங்குறிய
முனிவனன் றுணறநூலைக்
காதிலும் தேசித்த சரவண பவாவெமது
கடவுளே கொடிகள்மிடையுங்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுரை வாசனே
யீசனே கதிரேசனே. 25
மாரிபொழி கின்றதென வருள்புரியு மருணகிரி
மதுரத் திருப்புகழ்ப்பா
மாலைதவ சீராறு புயமதனி லெளியேன்சொல்
மாலையு மணிந்தருள்செய்வாய்
வேரிதனி லார்ந்திடு கடப்பமல ராரனே
விரை செரியும் வெண்ணீறனே
மெய்ம்மறைக டேடியிடு பாதனே நாதனே
வித்தகர்க் கருணீ தனே
போரில்வரு மசுரரைப் புகழ்வேலி னட்டவா
போதனைச் சிறையிட்டவா
பொன்மதுர மொழிவரைமி னீன்றருளும் வேலனே
பொன்னாடர் தொழுசீலனே
காரியுரை யேரிகளும் வாவிகளும் வளையின்ற
கவின்மணிக டிகழுமெழிலார்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 26
வடிகொண்ட தூயவொண் கங்கா சலத்தினின்
வடிவமதை யாட்டிமேனி
வழிநீர்து டைத்துவிழி வாய்துண்ட மிவையினீர்
மாற்றிமயி ராற்றியேவெண்
பொடிகொண்டு பூசிவா சப்பொடிக டூவிமைப்
பொட்டிட்டு நுதல்கள்சோதி
பொலிவுறச் சுட்டிக ளணிந்துபிறை யிட்டணி
பொருந்துகுண் டலமுமிட்டு
மடிகொண்ட வரைவடந் தண்டைகள் சிலம்புகள்
மணிச்சதங் கைகளிட்டுமே
வாய்ந்தவிரு கொங்கையமு தூட்டிமுத் தாட்டியிம்
மகிதல் மெலாம்புரக்குங்
கடிகொண்ட வுமைமாது தொட்டில்வைத் தாட்டியருள்
காட்டிமகிழ் வுறுபாலனே
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுரை வாசனே
யீசனே கதிரேசனே. 27
எத்தனை தரந்தாய ரிடமணுகி யவர்மடி.
யிருந்திருந் தேசலித்தே
யெழிலுரு வெடுத்துடன் வெளிவந்து கொடிதனந்
தங்களை யியற்றுகின்ற
மத்தனென வெளியனாய் வறியனாய்ச் செல்வமிக
வாய்ந்தநா டுகளலைந்து
மனமிலாக் கல்லாவை நிகரான கயவர்மேன்
மதுரகவி பாடியவர்கள்
முத்தமதி னாடொருஞ் சென்றிரந் திடுகவலை
முற்றிலு மெனக்கொழிப்பாய்
மூதார ணங்கள்சொலு மாகம விதங்களை
முறைமுறையி னாய்ந்து தூய
கத்தனென வுத்தமர்க ணித்தந் தொழத்தொழக்
கருணையுத விடும்முதமே
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுசை
வாசனே யீசனே கதிரேசனே. 28
பாரிலொரு மணிதிகழ்க ணாயிரங் காகங்கள்
படவிடுமோர் கல்லின்முன்பு
பாய்ந்துவரு மோவிருள்கள் செறிவுறத் தோன்றினும்
பகலவனை யெதிர்நண்ணுமோ
போரில்முகில் வரையைநிகர் கரிகோடி வரினுமொரு
போரரியி னெதிர்நிற்குமோ.
புல்லுணு மரைக்கூட்ட மொருலக் கம்வரினுமொரு
புலியதனின் முன்போதுமோ
நேருறவென் னொடுதோன்று கன்மசஞ் சலவிருக்க
ணிறைவுறக் கூடினாலு
நிமலநி னருட்சோதி யென்மீது பரவிலவை
யிடையாது நிலைநிற்குமோ
காரரிய பயிரினுக் கருளல்போ லென்னைநீ
காத்தருள்செய் கனகமாடக்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுரை வாசனே
யீசனை கதிரேசனே. 29
சிலையா னடுத்தலை புடைத்தவர்க் குந்தோல்கள்
செறிதிருப் பதமாறியே
செய்யதிரு முகமகில் மிதித்தவர்க் குந்தேசு
திகழ்கின்ற திருமேனிமேல்
மலையாது கற்கொண் டெறிந்தவர்க் குந்தோளின்
வடுவுறக் கடுகியேகை
மாறா லடித்தவர்க் குங்கருணை செய்தருளும்
வரதனுத் வியபாலனே
யலையாழி சூழ்திருச் செந்தில்வடி வேலனே
யரன்மகவ தாயுதித்துன்
னன்பர்கட் கருளாது சும்மா விருத்தலீ
தழகாகு மோமொழிகுவாய்
கலையாவை யுந்தேர்ந்த முனிவனுக் குரைசெய்த
கருணைப் பெருங்கடவுளே
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 30
சீலமுடன் வைகரை யெழுந்துமலர் கொய்துவிரை
திகழ்கின்ற சுனையின் மூழ்கிச்
சிதவடிவ வெண்ணீறு பூசிமூ விருமுகஞ்
சேர்ந்தகண் டிகைகள் பூண்டு
மூலமனு வாம்நின் சடாட்சர தியானமதை
முற்றும் செபித்துவேல்கொள்
முருகமுரு காவென்றே யருணகிரி நாதமுனி
மொழிதிருப் புகழ்மாலையை
மேலுநின தருளினா லோதிப் பணிந்து துதி
மெய்ஞ்ஞான நிலமைபூண்ட
வித்தகா சிரியர்க்கு நித்தமருள் சிலனே
விண்ணவர் தொழுங்கோலனே
காலமொடு கற்பனை கடந்துமே லாகியுரை
காட்சியே யாட்கொடருள்வாய்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுரை வாசனே
யீசனே கதிரேசனே. 31
மரிகமுறு மின்னுங் கனாவுமென வேமாறி.
வருகின்ற பவவியாதி
மாற்றுவீ செனநாளு மாற்றொணாத் தேவர்களை
வழிபட்டு நின்றுகூறித்
தாகமொடு நாடொறு மலைந்தலுத் தேனினது
சரணபங் கயமுதவியே
சஞ்சல வியாதிகளை மாற்றியருள் புரிகுவாய்
தண்கடம் பணிமுருகனே
மேகமதி னோடிவரு விரவிபரி யுறுவியர்வை
வெண்டூக கொண்டுமாற்றி
விரவிநிற் குங்கொடிக ளுலவியிட மணிமாட
மிடைகின்ற மணிவீதியுங்
காகநிரை கூட்டினிற் குயின்வளர்ந் தோசையிடு
கானிரை களுஞ்சூழ்தருங்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 32
அஞ்சனக் கண்ணியர்கள் மயல்மூழ்கி யவர்களா
லாகின்ற கவலையொருபா
லனுதினமு மேமைந்தர் மனைகளுக் கிரைதேடி
யலைகின்ற கவலையொருபால்
நெஞ்சமதி னயமிலா வஞ்சகர்கள் பாற்கவி
நிகழ்த்தியலை கவலையொருபால்
நீலநிற யமன்வந்து பாசம்வீ சிடுவனென
நிதமும்வரு கவலையொருபா
லெஞ்சிடா வண்ணமா மிவ்வகைக் கவலையுறு
மின்னல்களை மாற்றியாண்டே
யேழையென யாட்கொள்வ தெந்தநாள் கந்தனே
யிதுவேளை யருள்வையையா
கஞ்சனக் கதவநிரை சாளரங் களினூடு
கலைமதி யுரிஞ்சியோடுங்
கண்டியொடு மெண்டகு கொளும்பிஅறை வாசனே
யிசனே கதிரேசனே. 33
பொன்னுறையு மதுரையினோர் பெணைவேட்ட வணிகன் மெய்ப்
புகழ்மாமன் மகளைவேட்டப்
புறத்தநகர் சென்றவளை மதுரைக் கழைத்துவரு
பொழுதிருளி னோர்தளியினில்
மன்னியிடு மரவினால் வணிகன்வீய்ந் திடவதைய
வனிதைகண் டேங்கவுமையின்
வடிபா லருந்துகா ழியர்கோ னறிந்துவிட ன்
மாற்றியவ னுக்கவளையே
வன்னியுங் கிணரோ டிலிங்கமுங் கரியாக
மணமுடித் திடமதுரையின்
மாற்றவள் சினாட்சென்று வசைகூற வாடியிடு
வைசியக் குலமணியெனுங்
கன்னிமகிழ் வுறவன்று சாட்சியாய் நின்றருள்செய்
கங்காள் னருள்தெய்வமே
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 34
தாவிவரு நினதுமயில் வாய்ப்பட்ட வாவுபோற்
சாற்றாவின் வாய்த்தவளைபோற்
தவளைவாய்ப் பட்டிடு சுரும்புபோன் மான்கன்று
சாடுபுலி வாய்ப்படுதல்போற்
கூவிவரு மங்கையர்கள் கண்வலைப் பட்டவர்கள்
கொந்தளக் காட்டினூடு
குலவிவழி தெரியாம லலைகின்ற வென்னைநின்
கோகனக சரணநீட்டி
யாவியென வழிகாட்டி வெளிமீட்டி யருளூட்டி
யாள்வதற் கிதுசமையமே
யமலைசெறி கயிலைமலை விமலையருள்
பாலனே யன்பர்கட் கனுகூலனே
காவியொடு கமலமலர் வாவிகள் செரிந்திடக்
கண்டுவண் டிசைபாடிடுங்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யிசனே கதிரேசனே. 35
நில்லாத வுடலமிதை மானிடந் தனிலந்த
நீதபோ தன்வகுக்க
நிலவுற்ற சீவரிற் சிலர்செல்வ ராகவு
நிகர்வறியர் சிலராகவும்
வல்லாண்மை பேசியிடு மிண்டர்சில
ராகவு மானமுளர் சிலராகவு
மகவுபெறு வாழ்வுடையர் சிலராக வுங்கொடிய
வந்தியர்கள் சிலராகவு
வொல்லாத செய்தனையி தேதேலு நியாயமா
வொது பட்ச பாதமலவா
வொதுகொண்டு நீபெறும் பேறென்கொ வருள்செய்வா
யொலிமறைக் கரியபொருளைக்
கல்லாலி னீழலி னிருந்துநால் வர்க்கருள்செய்
கண்ணுதற் கரியகுருவே
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 36
மோதலைகள் வீசியிடு சலராசி நடுவோடி
மொத்துண்டு கரைகாண்குற
முறிதுரும் பென்னவும் மந்திகைச் சார்ந்தவிரை
மொய்த்தபூ மாலையெனவும்
பாதகக் கொலைஞரிடு வலைதனி லகப்பட்ட
பசியமான் கன்றென்னவம்
பாசம தறுந்தோடு பம்பரம் தெனவும்யான்
படுகவலை மாற்றியருள்வாய்
சூதமா முடுரு வடக்கொம்பு விடுவிழுது
தொருமந்தி யூசலாடத்
தூயதே னூஞ்சலிசை பாட்வது கேட்டசிரல்
தொடுசிற மசைத்துமகிழக்
காதவரை முரசமதிர் வைசியர் மனையிசைக்
கழகஞ் செறிந்தவெழிலார்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனை கதிரேசனே. 37
உருத்திடு விருத்திரனை வெல்வதற் கரிமுன்வந்
துறுகுறை யிரந்துநிற்ப
வோரேழு கடலையு முழுந்தமிழு நீரிதென
வுண்டுமிழு நிலமையுடையன்
பருத்துவரை யாவையு நெருக்கிச் செருக்கோடு
பார்வான வெளி தோன்றிடாப்
பாரவசை விந்தமது பாதல முறச்செய்து
பாவமறி வடிவுகாட்டி
யருத்தியுட னிதனையுணு தென்வமுது செய்வித்த
வசுரர்வஞ் சகமறிந்து
வசனமாம் வாதாவி யோடுவில் வலனையு
மடக்கிடு மகத்தியன்றன்
கருத்தினில் மிகப்பதிய ஞானமுப தேசித்த
கருணைப் பெருங்கொண்டலே
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 38
சிலைமாரி மளமளென வேபொழிய வதுகண்ட
சிறுகன்று தொறுநிரையெலாஞ்
சேர்ந்துடல் பதைத்துப் பதைத்தோடி வெருவிடச்
செங்கையாங் காம்புதொட்டு
நிலைமா மலைக்குடை கவித்துக் கழைக்குழலை
நீடிசை தெரித்தூதியே
நேயமொடு மயிலை செறி நிறைபுனற் காளிந்தி
நேர்ந்தவற் றைக்காத்திடும்
முலைமா நிலத்தலைவன் மருகனே யசுரர்கள்
முறிந்தோட வெலுமுருகனே
முனிவார்க டேவர்க டொழத்தகுந் தலைவனே
முத்தியரு ளுமைபுதல்வனே
கலைமாது மலைமாது மலர்மாதும் வாழ்தலாற்
கவினெலாம் பெருகுசெல்வக்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 39
ஒரமா யுள்ளார்வ மின்றியே கள்ளமன
முடையனா யினுமுனக்கே
யூழியஞ் செய்வழி வழித்தொண்ட னாகையா
அலறிகய வுன்னையன்றி
யாரையான் கைகுவித் தேத்துவேன் போற்றுவே
னையனே யெனதுகவலை
யாங்கொடிய பசிநீக்கி நினதருட் போசனமு
மருளிதின் னடிமையென்னும்
பேரையா வருமறிய நின்பதப் பணிவிடைசெய்
பெருவேலை யருள்புரிகுவாய்
பேசறிய மறைபரவு மீசனருள் புதல்வனே
பேருலகு தொழுமுதல்வனே
காரைநிகர் கூந்தலா ரணியமணி மாலைமிகு கடைவிதி
மிடையு மெழிலார்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசுனே.. 40
தரையினிற் றோன்றியுயிர் பொன்றினவர் சலதியிற்
றாவிவரு மலையையொப்பர்
தண்சுடிகை கூடியுல காள்மன்னர் பொன்றினது
சல லதியுள் மணலையொப்பர்
நிரையினிற் சதவேள்வி செய்திந்திர பதமணுகி
நீண்முனிவர் தொழவிணாண்ட
நெடுமன்னர் மாண்டவரை யெணினுடுக் கணநேர்வர்
நீசனே னுடல்கள்வீய்ந்த
துரைசெய்ய முடியாது பொய்வாழ்வி தாமிதென
வோர்ந்துள மதனிலுன்னி யுன்னடிமை
யாகினேன் வன்னமயின் மிசைவந்து
வந்தாள விதுசமயமே
கரைசெயணை மதகிலிழி யம்பினிற் சேல்பாயல்
கண்டுளா னுண்டுமகிழுங்
கண்டியொடு மெண்டகு கொளும்லுறை வாசனே
யிசனை கதிரேசனே. 41
மனதுநினை யெவ்வளவு தரநினைத். ததுவாய்
வழுத்தினது மெத்தனைதரம்
மண்ணின்மிசை நின்னடியை யெத்தனை தரம்யான்
ங்கினது மறியாய்கொலோ
தினமுதின் றாட்கே தொழும்பனென வோர்ந்துநின்
சித்தம திரங்கவிலையென்
செய்குவே னேழையே னின்பணித் தொழில்செய்த
செயலெலாம் வீணானதோ
தனமுடைய வதிகாரி யெனினும்வே லைகள்செ
சம்பளமுமிலையென்பரோ
சாமியிது தர்மமா பாதியெனி னுங்கூலி
தந்துயிச் சந்தியாள்வாய்
கனமருவு மேடைதனின் மயினடன மிடல்கண்டு
காம்போதி .கிளிகள் பாடுங்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 42
சாமரை யெனப்பிரியு நினைவன்றி நின்னடிக
டன்னைநினை யாதமனமுஞ்
சச்சிதா னந்தவடி வாநின துருக்கண்டு
தாரைபொழி யாதகண்ணுஞ்
சேமமிகு நின்கீர்த்தி சொல்லாத தாஅவுஞ்
சேவடி தொழாதகரமுஞ்
சித்தமிகு பத்தியொடு சினகசத். தினைவலஞ்
செய்துதிரி யாதசுழலும்
மாமறை வணங்குநின் வரலாறு கேளாத
வன்செவியு மாக்கியேசில்
மனுடரை வகுத்ததிது தருமமா ஞானமுற
மனதுவைத் தருள்வையையா
காமமிகு கணவரொடு வனிதையர்க ளிசைபாடு
கழகஞ் செறிந்தவெழிலார்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 43
மாவலி யெனுங்கோ மருங்கினொரு குறள்வடி
வமைந்த மறையவனாகியே
வந்தணுகி மூன்றடிக் கிடமுனது பூமியில்
வழங்கென விபந்து நிற்பக்
கோவதனை யீந்தன மெனத்தாசை வார்த்துக்
கொடுத்தருளு பொழுதிலேயிக்
குவலயந் தன்னையோ ரடியா யளந்துமீன்
குலவுவான் மிசைநிமிர்ந்து
சேய்வெளியின் முகடுகீண் டண்டமெண் டிசையெலாந்
திரள்புயப் பொலிவுகாட்டித்
திருமுடியை யெவருமறி யாவண்ண முயர்பெரிய
திருமேனி கொண்டதேவாங்
காவல்பெறு திருமாலை மாமனெ வேகொண்ட
கந்தனே யருள்செய்சந்தக்
கண்டியொடு மெண்டகு கொளும்பிஅறை வாசனே
யிசனே கதிரேசனே. 44
பாரண்டு தாம்பினில் விசித்துநிமி ரூசலுறு
பவனமின் றசையுமாபோற்
பரிவுமிகு சஞ்சலத் துடனலையு மனவலைவைப்
பாற்றிநின் றுனதுகாட்சி
நேரண்டி டத்தவஞ் செய்துதுதி செய்துவிழி
நீர்த்தும் பப்பராவி
நிற்கின்ற தொண்டர்பணி செய்துமறி யேன்றவசி
நிலைமைகளி னொன்றுமறியேன்
வாரண்டு கும்பதன மாதர்பின் பற்றியவர்
வழிகாம நூல்களோதும்
வன்மையே னெற்குனது பாதபங்கய மீந்து
வரமுதவ விதுவேளையே
காரண்டு கோபுரமு மாபுரமு மொழிவீசு
கயிலையை நிகர்க்குமெழிலார்
கண்டியொடு மெண்டகு கொளும்பினுறை வாசனே
யீசனை கதிரேசனே. 45
மீனொன்றி டத்துளி தெறிப்பச் செறிந்தேறு
விரைகடற் றிரைசுருங்க
வெய்யகவ லைப்பெருந் திரைமிகும் பிரபஞ்ச
வெங்கொடுங் கடலின்வீழ்ந்து
நானென்று மாணவச் சுழியி
ழியி ன மிழாதுநின் னளினமா முபயபர் த
நற்புணையி லேறிமுத் திக்கரையி னெய்தவரு
ணல்குவா பிதுசமயமே
தேனொன்று தேவார மமுதகவி வெழுதியறல்
செறிவைகை யெதிர்நடாத்திச்
சேயொளி நெருப்பிற் சுடாதியற் றிச்சமணர்
செருவெலாம் வென்றகுகனே
கானொன்று நதிசாரும் வனமெலாஞ் சண்பகக்
காடுபூத் தொளிருமெழிலார்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 46
முரல்கனி தேனொடு பானெய்தயி ரானவறு
சுவையுடைய முற்றுமுண்டு
முழுமுத ராக்கினி யவித்துலவு மலகையென
மூதூர்க டொறுமலைந்து
நேருவனி தையர்மையல் வலையினிற்
சிக்கியே நிதமுமவ ரேவல்செய்து
நீடப்பி வந்துபுண் ணாகவே கீற்றுண்டு
நீரொழுகு குய்யமதிலே
சாருமன மதைமீட்டு நின்னுபய பங்கயத்
தாடொழுநல் வேலையருள்வாய்
சர்வபரி பூரண வகண்டதத் துவஞான
சச்சிதா னந்தமுதலே
காருறுவிண் விஞ்சையர்கள் வந்துவை சியரெனக்
கனகர மே டையிலுலாவுங்
கண்டியொடு மெண்டகு கொளும்பி லுரை வாசனே
யீசனை கதிரேசனே. 47
இரவியொளி வீசியே வருதல்கண் டிதழவிழ்த்
திடுகளின் வீடுமேவு
மீரிரண் டானனப் பிரமனுல கோடண்ட
மெண்டிசை சராசரங்கள்
விரவியிடு சீவர்க ளடங்கப் படைக்கவும்
விரலாழி மால்காக்கவும்
வெங்கனலி யோடட்ட பாலகர்கள் வயிரவர்கள்
வேழங்க டிசைகாக்கவும்
பரவித் திருக்கருணை நாட்டம் பணித்துமெய்ப்
பரமண்ட லங்கள் முதலாப்
பகிரண்ட கோடிவரை காலாயு தக்கொடி
பரக்கவுல காண்டவரசே
கரவிகட கடதந்தி யுலவிவரு விதியுங்
கனகமா ளிகையும் வாய்ந்த
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுரை வாசனே
யீசனே சதிரேசனே. 48
சூற்கொண்ட மேகமும் நடுநிசியி னிருளதுந்
தோற்கவா லமும்வெளுக்கத்
தோய்ந்திடு கறுப்பேறு நிறமேரு வாயினிற்
றோன்றுறு மதிக்கீற்றினை
மேற்கொண்ட தந்தங்கள் சிறிய நுண் பற்களிவை
வெயில்காட்டு மின்னலாக
மேதினி துளங்கிடப் பேசுகுர விடியாக
விற்கைகளி னோடு நின்று
பாற்கொண்ட லப்புமழை பொழிதலென வீசிப்ப
ரந்தெழுஞ் சூரர்முகிலைப்
பச்சைமயின் மேற்கொண் டயிற்காற்று வீசிய்வை
பாரவெளி யாக்குகுகனே
காற்கொண்டை வனிதையர்கள் சதியினொடு நடனமிடு
கழகஞ் செறிந்தவெழிலார்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே.
யீசனே கதிரேசனே. 49
சடைப்பவள மாங்கொடிப் பந்தரிற் கங்கையாந்
தையல்ல மந்தாடிடத்
தலையிலொரு பாலுறும் பிறையாட வாடிடத்
தலைமாலை யாவாடிடத்
புடைத்திரு மடந்தைகைத் தாளமிட் டாடிடப்
பூணுமான் மழுவாடிடப்
பூங்கொன்றை யக்கறுகு தும்பைமல ரிவையெலாம்
பொற்பொடு கலந்தாடிடக்
குடைப் பெரிய பூதமுங் கூத்தாட வாணனுங்
கொட்டுமத் தளமுமாடக்
கோதறுங் கனகசபை மாதவர்க டொழநடங்
குலவுகோ னுதவுபொருளே
கடைப்பெரிய வீதியில் விடைக்கடவுள் பவனிவரு
காட்சிமிக வாய்க்குமெழிலார்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 50
வல்லாரின் வல்லனிவ னென்றுலகர் யாவரு
மதிக்கும்வகை பலநூலெலாம்
வாசித்த தன்பொரு ளறிந்துபா டிடுவலனு
மதியுமிக வருள்புரிந்து
மில்லாது பொருடேடி யயல்மனைக் டொறுநாடி
யாசித்த லிதுவுநன்றோ
வென்செங்கு வேனேழை ய்ருள்செய்ய விதுவேளை
யினிநாளை யென்றிடாதே
நல்லாருறுஞ் சிலோன் பூமிவை சியர்கட்கு
நமதுபா வலவனென்று
நாட்டியொரு கிள்ளாக்கை நீட்டியே பொருளீட்ட
நல்குவா யிதுசமயமே
கல்லார மாலையொடு முல்லைமா லிகையுமணி
கனவைசியர் சூழமெழிலார்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 51
சாந்தவறி வானினை நினைக்கின்ற வேளைபல
சஞ்சலஞ் சாருமையா
சஞ்சலந் தனைமாற்றி யேநினைக் கிற்பசித்
தழல்வந்து முடுகுமையா
நேர்ந்தவி விரண்டையும் விலக்கிடிற் சோகமுள
நித்திரைகள் சூழுமையா
நீக்கிவரு நித்திரையை மேனினைத் திடின்மாதர்
நேசம்வந் தணுகுமையா
வேந்துதிரை யெனமாறி யிவையிங்ங னூறுசெயி
லேழையே னென்செய்குவே
னிடையூறு நீக்கிநின தடிபரவும் வேலைகொள்
விதுசமய மிதுசமயமே
காந்தங் கருந்தாது கவர்தலிற் கண்டவர்கள்
கண்கவரு மாடமோங்குங்.
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 52
இசைப்பட்ட வளவின்மன நெக்குருகி யுழல்கின்ற
விருசிறைய வசுணமதுபோ
விழிவான வூன்சுவையை நச்சியே தூண்டில்படு
மெழில்மகர மதுபோலவும்
வசைப்பட்ட வொட்டினிற் படுபறவை போலவும்
வலைபட்ட மான்போலவும்
வனிதையர்கள் மயறனி லகப்பட்ட வென்மனநின்
வரசரண மீதுபட்டு
நசைப்பட்ட பாவின மனந்தஞ் சொலப்பட்
டெனாவுந் தழும்புபட்டும்
நாயகா நின்செவிக் கேறவிலை யாவிந்த
நற்றருண மருள்வையையா
கசைப்பட்ட பதுமையைக் கண்டுபா அண்ணாது.
பூசைகள் கலங்குமாடக்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனை. 53
தேக்குநசை நாகங் கிடக்கும்வன் மீகமனத்
தீரங்க டத்துதோணி
தென்றிசைக் கூற்றெனும் பாவன்வெம் பாசவலை
சிக்கித் துடிக்குமச்ச
மாக்கியிடு நான்முக குலாலன் வினை மிர்த்திகையி
ருளியிட வுடைமட்கல
மருமனப் பேயா டரங்கமா தர்கணசை
யசைத்தாட்ட வெருள்வானரந்
தீக்கிடு விருந்தெனுந் தேகமே நிலையிலது
சிறியனெனை யாளவேண்டுஞ்
சீலனே சிவகாமி பாலனே யுயிர்தொறுஞ்
சேர்ந்துநிறை கின்றபொருளே
காக்கும்வை சியரோடு காவலர்கள் செறிகின்ற
கடைவீதி பலகுலாவுங்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 54
துடியிட்ட விடைபெற்ற திருவள்ளி யெழிலதைச்
சுருதியாழ் முனிவனன்று
சொல்லியிட நசையோடு மயலாகி மயிலாடு
சோலைக்கு றிஞ்சிசாந்துன்
னடியிட்ட விடமெலாங் கல்லாக வும்புல்ல
தாகவு முளைத்துமுத்தி
யருள்பதவி பெற்றேனு மல்லீன்யா
னீயுமஃதாக்கினா யல்லையையா
வடியிட்ட திரிசூலி யநநீலி பவமூலி
வாங்குசக் காகபாலி
வனமாலி தங்கையெனு மாதங்கி யீன்றருள்செய்
வரதனே பதிவிரதனே
உயிட்ட வனசமதில் வெண்பணில முத்திலகு
கழனிக ணிறைந்து மேவுங்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனை கதிரேசனே. 55
துரைச்சாமி சாமியென வேசெல்வர் பின்சென்று
தோத்திரஞ் செய்துபாக்கள்
சொல்லித் துதித்துநிதி தாவென் றலைந்துமறு
சுவைகள்மிகு பண்டமார்ந்த
விரைச்சாமை சென்னெல்தரு வமுதெலா முண்டுண்டு
மின்னார்கள் மையல் மூழ்கி
வீணாள தாயிது வரைக்கழிந் ததுமேலுன்
மெய்யருள் விரும்பிவந்தேன்
வரைச்சாமி யென்றகுண மாற்றியருள் செய்தென்னை
வாழ்விப்ப துன்பரங்காண்
மண்முதல வுலகெலா நீற்றவரு நஞ்சுண்ட
வரதனருள் புதல்வவாழிக்
கரைச்சாமி நற்கீர னுக்கருள்செய் சீலனே
கவுரியரு ளிடுபாலனே
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 56
ஆட்சிபெற நீகருணை செய்வதொடு நின்னரிய
வாக்குஞ் சகாயமாக
வண்டருல காமிச் சிலோன்பூமி வந்தேனின்
னடியைமற வாதுபோற்றி
நீட்சியொடு மனமதி னினைந்துபல யாபார
நெறிமுறை புரிந்துசெல்வ
நிதிபெருகு வைசியர் வேளாளர் கட்கொரு
நிருபமிக நண்புவாய்ந்த
தாட்சணிய முளநமது பாவல னிவர்க்குநிதி
தகுதியா யருளவென்று
தானெழுதி னாலவர்கள் ஞாலமொடு பொருளீவர்
தருணமிது தருணமையா
காட்சியொடு கற்பனையின் மேலாகி யுறைகின்ற
கடவுளே கருணைபுரிவாய்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே.
யீசனே கதிரேசனே. 57
சீர்பெறுமி வுலகுதனின் மானுடர்க ளாய்வந்து
சென்மித்த சீவர்முன்னாட்
செய்யுறு தவம்பலந் தூக்கிநிறை காட்டுறுஞ்
சேயே சிவத்தராசே
யேர்பெருகு மங்கவர் தவத்தளவ தாகவு
மிழிபவத் தளவாகவு
மிம்மையிற் செல்வமொடு வறுமையு மளந்துதவு
மீராறு கரநாழியே
நேர்பெரு சடாக்கர தியானமுறு மன்பர்க்கு
நீங்காத செல்வமோடு
நிதிகளுங் கோட்டைக் கணக்கா யளந்து தவு
நேர்வேல் பொரித்தகாலே
கார்பெருகு சோலையுறு மந்திகள்வில் வீரரைக்
கண்டுகமு கேரிவாவுங்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 58
அருணமா னுதவியிடு வள்ளிமான் வடிவமதை
யருடவப் பூமானெனு
தியாழ் முனிவந்து போதியா முன்னமவ
ளாரவளி னூரெதுவென
வருணமாங் குறமாது மலர்மாது கலைமாது
வானுலக மா மாதுமெச்சும்
வள்ளிமா தங்கமிகு தெள்ளுமாங் கனியைநீ
மருவிவேட் டிடவுமீதே
தருணமா மெனநாடி வெருளமா னொருகோடி
தடவரைகண் மீதோடிடுஞ்
சாரலங் காட்டினில் வள்ளியாஜ் பேட்டினைத்
தான்கண்டு வேட்டகுறவா
கருணையாங் கடலாகி வந்தெனக் கருளுவாய்
கமலமிகு வாவிசூழுங்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 59
தொன்றுதொட் டுனதுவழி யடிமைநா னென்னவித்
தொல்லுல கெலாமறியுமே
தொண்டுசெய வேண்டாநீ போவென விலக்கினாற்
றொல்பரம் பரையினோடே
யன்றுதொட் டின்றுவரை செய்கூலி முழுவது
மருள்செய்து தருதன்வேண்டு
மல்லாது போகிலேன் பேய்ப்பிள்ளை யானாலு
மனை தந்தை யிகழ்வதுண்டோ
மன்றுதொட் டிடுபொனம் பலகார னண்டையின்
மறித்துனை யிழுத்துவிட்டு
மத்திசம் பேசுவ னில்லாத சொல்லிலென்
வழக்கிற் கிழுக்குமுண்டோ
கன்றுதொட் டுயர்விளாங் கனிவீழ்த்த வரிமருக
கந்தனே கருணைசெய்சீர்க்
கண்டியொடு மெண்டகு கொழும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 60
புக்கசின முடையராய் வேதனொடு மாலும்
புகுந்தாற்று பகையைமாற்றப்
புவனங்க ஊடுருவி யண்டத்தின் மேலாம்
புரத்தினி னிமிர்ந்தங்கியா
யக்கணியு மரனின்ற நிலமையின் செயல்கண்ட
வயனன்ன மாகிமுடியை
யறிகுவே னென்றேகி னானமால் வராகமா
யடியையறி வுறநாடினான்
செக்கர்நிற வேணிமுடி யறியாத வயனனந்
தேம்பித் திகைத்துவெள்கத்
திருவடியை மால்பன்றி யறியாது கொம்பெலாங்
தேய்ந்திடச் செய்யசோதி
கக்குசயி லச்சோணை நாதனருள் குமரனே
கந்தனே புந்திமேவுங்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுரை வாசனே
யிசனே கதிரேசனே. 61
மழுராமன் மாட்டுவிற் றொழிலுந் துரோணனிடம்
வன்றடித் தொழிலுமோர்ந்த
வாசவன் சுதனோடு வாயுசுத னுங்கொண்ட
வல்லபச் செயல்களாய்ந்து
வழுவார் மனச்சகுனி துச்சாதனன்கன்னன்
மன்சுயோ தனனொடெவரும்
வஞ்சகப் பெரியயோ சனை செய்து பாண்டவரின்
வலியசீர்ச் சிங்கமான
வெழுநேர் புயச்சதா கதிமைந்த னைக்கொல்ல
வெண்ணியே பெரியயாற்றி
னிடையிலொரு கழுவதனை யூன்றவதை யறியாம
விசைநீரி லாடுபொழுது
கழுநேரின் வீழ்வீம னழியாது வழியதாக்
காத்தமால் மருகவருள்செய்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 62
அரியயனு மரியினொடு மறைகளுந் தொழுதேத்து
மணிமதுரை யதனைமுன்ன
மரசுபுரி தென்னனொரு நாள்வேட்டை யாடவென
வசலமது குறுகியங்கே
யுரியமா னினமெண்கு யாளிபுலி யானைகளை
யொடிவீசி வேலினாலு
மொண்டனுவி னாலுவென் 'கண்டுவரு பொழுதவ
ணுற்றவொரு கருமானிவற்
றெரிகுவே னென்றுபெடை யொடுவழுதி படையைச்
சிதைக்கவதை மாரன்வென்று
செற்றபொழு தப்பன்றி யின்குருளை யீராறு
தெருமர அளத்தல்கண்டு
கரியநிற வேனமாய்ச் சென்றமுத முதவினோன்.
காதலே காத்தருள்செய்வாய்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 63
வண்ணப் பயோதரமு மதிமுகமும் வாய்ந்தவுமை
மாதினொடு மலர்கடூவி
வருகின்ற பொன்முகலி யாற்றினொரு சார்பினிலெம்
வரதனுற் றிடவ்வணுளா
னெண்ணப் படும்பெரிய திண்ணனெனு மோர்வேட
னிறைவனடி தொழுமாசையா
லெழிற்குஞ்சி யாங்குடலை யிற்றழைகள் பூமல
ரெடுத்துவா யாங்குடத்திற்
றண்ணப் படுஞ்சலங் கொண்டிளங் கல்லையிற்
றசை கொண்டு பணியுமோர்நாட்
சம்புதன் கண்ணினிற் புண்ணீ ரொழுக்கிடத்
தன்கா லதன்கண்வைத்துக்
கண்ணைப் பார்க்கீந்த கண்ணப்ப னுக்கருள்செய்
காமாரி சுதவருள்செய்வாய்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 64
தனதனன வைசியர் செறிமதுரை மாறன்
றவத்திற் கிரங்கிமூன்று
தனமுடைய கனியாய் மகத்தினிற் றோன்றித்
தடாதகைப் பெயரும்வாய்ந்த
வனனடைப் படைவிழிக் குயின்மொழிப் பவளவித
ழாகமும் பச்சைவடிவா
யன்னையாங் காஞ்சனை வளர்த்திட வளர்ந்துவிவ்
வகிலமதை யாசுசெய்து
சினமுடனி வட்டதிக் கெல்லாஞ்செ யித்துமெய்ச்
சிவனொடு மெதிர்த்தகாலை
திருமுலையி லொன்றுகா ணாதுமன நாணியணி
திகழ்மதுரை தன்னின்வந்து
கனகமலை வில்லியைத் திருமணஞ் சூட்டியிடு
கவுரிபா லகவருள்செய்வாய்
கண்டியொடு மெண்டகு கொழும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 65
அடல்புனை தடாதகையின் மகவதாய்த் தோன்றி மது
ராபுரியை யரசுசெய்து
மையனருள் வேல் செண்டு வளையிவைக
ளாற்பகை யடக்குமா வலிமைபெற்றுத்
திடமொடுவி ணரசனுறு சிம்மா சனத்தினிற்
சேர்ந்துசம மாயிருந்து
செல்லினைத் தளையிட்டு வளையினா
லிந்திரன் சிரமகுடம் விழவீசியே
வடவரையின் மேற்குவடு செண்டா லடித்தங்கு
வைப்புநிதி தனையெடுத்து
வருணரா சன்வலிமை காட்டிச் செருக்கோடு
மதுரையை யழிக்கமேவுங்
கடல்சுவற வேல்விட்ட வுக்கிர குமாரனாங்
கடவுளே கருணைபுரிவாய்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 66
ஐயான னத்தனரு ளாறான் னத்தநினை
யன்னையவ லன்றெடுத்தே
யங்கந் துடைத்தேமெய் வியர்வுகளை மாற்றியெழி
லணிமுகம் புருவமேற்றி
நெய்யால் வழித்துமிகு கங்காசலங்
கொண்டு நீராட்டி யாடைசூட்டி
நீறிட்டே யாறிரு விழிக்குமை யிட்டாறு
நெற்றியிற் பொட்டுமிட்டே
யொய்யார மாய்மணிச் சுட்டியுங் காதினி
லொளிசெய்குண் டலமுமிட்டே
யோலமிடு தண்டைகள் சதங்கைதிரு வடியிட்
டுவந்து வட மறையிலிட்டுக்
கையா லணைத்தமுத மூட்டிமுத் தாடிடுங்
கவுரியருள் பாலவருள்வாய்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 67
நாகாதி பப்புர மடந்தையர்க ளிமையவர்க
ணன்மதனை ரதியைநிகராய்
நல்லெழில் படைத்த விஞ்சையர் விஞ்சைமட
மாதர்நாரதா தியமுனிவர்கள்
மோகா ரிசைப்பாடல் கற்றாடு காந்தருவர்
முதலிரவி சசியினோடு
மொழிதிசைப் பாலரும் பூவுலக மாந்தரு
மொய்த்துநினை யேத்தி நின்று
வாகா மயிற்புரவி மீதேறு பாகாமெய்
மாதவர்க் கருள்செய்கின்ற
வரதகிரு பாகரா குமரகுரு பரவெனுமென்
மனதுகுடி கொண்டபொருளே
காகா வெனப்போற்று மவரவர்க் கருள்செயுங்
கந்தனே வந்தருளுவாய்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 68
அணிவாய்ந்த கார்கால மழைமுகில் கிழித்துவெழி
லவிர்சுட ரெரிக்குமின்போ
லாய்ந்ததிரு வும்பிறையு மவிர்குழற் பாரம
தசைந்துலவ விடைவதன்றி
மணிவாய்ந்த மதகரிக் கொம்பைப் பகைத்துநிகர்
வடவரையை யும்பழித்து
வாரைத் துணித்துப் புடைத்தகுங் குமமுலைகள்
வளர்சுமை பொறா துவாடிப்
பிணிவாய்ந்த நூலெனு நுசுப்பொசி தரத்தண்டை
பிறழுகிண் கிணிபுலம்பப்
பெருதினைப் புனமுலவு வள்ளியெழி னறவினைப்
பேர்பெரிய கொம்பு நீண்ட
கணிவாய்ந் திருந்துண்டு வேறுபல விளையாடல்
காட்டுறுங் கந்தவருள்வாய்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே சதிரேசனே. 69
சருவரி வெருண்டோட மழகதிர் பரப்புச்சி
தண்குடை நிழற்றவாசத்
தமிழோடு பிறந்தமந் தானிலத் தேர்
பூட்டு தகுசுகப் பரிகடூண்டி
மருவரிய பச்சிளங் தளிர்வில் வளைத்துநிமிர்
வண்டுகொடு வண்டுபூட்டி
வாயினால் மகரந்த வாரிபொழி மலாம்பு
வாரிமிக வெய்தெதிர்ந்து
பொருவரிய வீரமொடு முறுமதன் றிருமேனி
பொடியெழச் சுடர்விழியினாற்
பொன்றுவித் தவனைத் திரும்பவருள் செயுமரன்
புதல்வனே மறைமுதல்வனே
கரியவரி சலசமுறு தடமெலா மாதர்புனை
களபகத் தூரிநாறுங்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 70
சீரிட்ட புன்னுனிப் பனியினள வுங்கருத்
திகழாது செய்யவாயுஞ்
சிறிதெனும் வெளுக்காது மைக்கண்கள் பசவாது
திகழுநவ மணிகள்வாய்ந்த
வாரிட்ட கொங்கைகள்
மணிக்கண் கராதுபுகை
வாய்ந்தமண் சுவைவேட்டுவாய் வையாது மதிபத்து
மாகாது 'தூணமதின் வந்திடுங் குழவிகமல
மேரிட்ட வுந்தியிற் றோன்றிடுங் குழவியை
யீராறு கைக்குழவிநீ
யிறைவனுறை கயிலையிற் பிரணவப் பொருள்வினவி
யேதுமறி கில்லனெனவே
காரிட்ட கல்லறைச் சிறையிட்டு மீளவிடு
கந்தனே வந்தருள்செய்வாய்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 71
வயமுகம் பெறுகின்ற திக்கயம் யாவுமுண
வாகும்வே ழங்கடாங்க
மஞ்சிலுறு மிஞ்சுமதி தந்தங்க ளாகமா
மேருவரை தூணதாக
புயன்முகம் பெறுசக்கர வாளகிரி சூழண்ட
புவனமொரு கூடமாகப்
பொங்குகட லேழுமே தானநீர் பொழிகின்ற
பொற்கவுள்க ளாகநாளும்
பயமுகக் கந்தவரை தோன்றிட மதாகவைம்
பூதவெளி பாதையாகப்
பாகனை வெருட்டிடுவ தாகவெதிர் கொண்டுநிழல்
பகையதாச் சினமீக்கொளுங்கு
கயமுகா சுரனெனு மானையை
கந்தனே கவலைதீர்ப்பாய் டக்கியிடு
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 72
மாதர்கரு வாய்தொறுங் குழவியுரு வாய்வந்து
மலையைநிக ரவர்கொங்கையின்
மணிவாய் சுவைத்தமுத முண்டதுப மனியமுனி
வரனுண்ட கடலையொக்கும்
பேதமைகொ ளன்னலார் வாயமுத முண்டது
பெரும்புறக் கடலையொக்கும்.
பிரியமொடு மறுசுவையி னமுதுண்ட வளவண்டர்
பேணுதவ மேருவொக்குஞ்
சேதமலி யான்கொண்ட வுடலெலா மெண்ணிலோ
திகழ்வானின் மீனையொக்குஞ் சேந்தனே
யினியேனு மிவ்வகைய துன்பங்கள்
சேராது னருள்புரிகுவாய்
காதவரை மணம்வீசு சந்தனச் சோலைகள்
கஞ்சனூ ரளவுயர்ந்த
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 73
விளைவுற்ற தவராக வரன்முன்பு கைக்கொண்ட
மேருவே யேடதாக
மெய்த்தவரி லுயர்வாம் வியாசபா ரதமதனை
மெய்ஞ்ஞான மதிலுயர்ந்தே
யளையுற்ற வன்மீகி நாரதன் சொல்கதையை
யன்றெழுதி வைத்தலென்ன
வதிபா ரதப்பெருங் குருகுலச் சரிதமதை
யதிசய மிதென்றயிர்ப்ப
வளைவுற்ற விருகொம்பி லொருகொம்பு தன்னரிய
வாகைபெறு கையில்வாங்கி
வரைவுற்றி வுலகோடு வானுல கெலாம்புகழ
வைத்தவைங் கரனிளவலே
களையுற்ற பயிநென்ன வினையுற்று மெலிகின்ற
கடையனெனை யாளவருவாய்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 74
மேல்காட்டு மெழில்முதுகு வில்லளவு காட்டியிட
மேருவென நிமிர்கொங்கைகள்
மேவுமடி வீழ்ந்தசைவு காட்டியிட வினைகாட்டி
வேல்காட்டு விழியிரண்டுங்
கோல்காட்டி யிலகவிருள் கொடுசெய்த குழல்கணரை
குலவவிடு வெள்ளைகாட்டக்
கொங்காட்டு சீருடல் சுரித்தென்பு காட்டிடக்
குழறல்காட் டிடமொழியெலா
மால்காட்டு நடைகடள் ளாமைகாட் டிடவெழுதின்
வருமுதுமை காட்டுமாதர் மையலாங்
காட்டிடை மனப்பே யிழுப்பதனை
மாற்றிநின் வனசமலராங்
கால்காட்டி நெறிகாட்டி யருள்காட்ட விதுவேளை
கந்தனே நந்தாவளக்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 75
நிலைநின்ற கொப்பைவிட் டொருகாப்பி னளவின்றி
நேர்தாவு மந்திபோல
நிற்குநன் னெறிவிட்டு வஞ்சப்பு லன்கள்செலும்
நெறியோடி நாடோறுமே
யுலைகின்ற சாமர மெனச்சிதறி யோடுமன
தொன்றுபட் டொருநிலையதா
யூன் றுபட் டிடும்வகையை யறிவிக்க மாட்டாம
லோட்டிவிட் டிடுவையேலுன்
றலைநின்ற நானுன்னை விடுவனோ மனதினாற்
றாவிப்பி டித்துவிழியாற்
சரமாரி யப்புமழை பொழிகுவே னார்கொண்டு
சரணமலர் தளை பூட்டுவேன்
கலைநின்ற நக்கீர னைக்காத்தல் போலெனைக்
காத்துநீ யருள்செய்குவாய்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 76
தாயினது கெற்பத் தழுந்துமிடர் சொலவெனிற்
றாங்கா வருத்தமற்றத்
தண்பருவ மெண்ணிலோ வனநடைக் குயின்மொழிச்
சாமவிரு ளோதிமடவார்
வாயிலி னகப்பட்டு வாடுறு வருத்தமது
மாயா வருத்தமப்பால்
வயோதிகப் பருவம்வா வுணர்வகல மொழிகுழறி
வருகின்ற வேளைபலவா
நோயினிட ரால்வரு வருத்தமப் பான்மறலி
நொடியினுயிர் கவர்வனென்றே
நோக்குறு வருத்தமிவ் வுடல்கொண்ட நாண்முதன்
நுவலுமிந் நாள்வரையெணிற்
காயுகள் பதமருளு மானந்த முறுவதெக்
காலமோ வதையறிகிலேன்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 77
தெண்டிரைத் தடமதுரை தனையாளும் வரகுணத்
தென்னன்முன் வடபுலத்திற்
றிகலேம் நாதனாம் புலவனிசை தேர்ந்திடு
செருக்கினா லெமதுபரனை
யண்டிசைப் பாணனொடு பாடிவெல வுன்னுபொழு
தரன்விறகு தலையனாய்ச்சென்
றங்கவன்மு னான்பாண னடிமையென்
றேபாடி யப்பெரும் புலவன்விருது
தண்டிகை யெலாம் போட்டவ் விரவின்வெளி
யோடிடத் தனதன்ப னிசைசூடிடத்
தான்செய்து தாதகித் திருமாலை யான்வேண்டும்
தனமோடு மணிசெய்ரத்தினக்
கண்டிகைகள் சூட்டமகிழ் பாணனுக் கருள்செய்த
கண்ணுதற் கருள்குரவனே
கண்டியொடுமெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 78
அனைத்துயிர்க் கும்பெற்ற வன்னையா யப்பனா
யவையெலா மாக்கிநாளு
மலைகடற் சூழ்புவி யடங்கலொடு வானாடி
யாவையுங் காத்தவரசே
வினைத்தொடர்பி னீயாக்கு முயிரில்யா னொருவனும்
வேறல்லன் வீணனெனினும் சாகரி
வீழ்த்துபவ சாகரத் துணைவதையு னீராறு
விழிகளுங் காண விலையா
நினைத்துநா னின்மீது பாடுவது முன்னான்கு
நீள்செவிக் கேறவிலையா நீயெனைக்
கைவிடுதல் நீதியேர் வாழ்வுபெறு
நிலமைதந் தருள்வையையா
கனைத்தெருமை வாவியிற் கன்றுளிப் பால்சொரியக்
கண்டுவேட் டனமருந்துங்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 79
புவிகட்டி வாழ்ந்தென்ன நிதிகட்டி வாழ்ந்தென்ன
புகழ்கட்டி வாழ்ந்துமென்ன
பொற்றாலி கட்டிடும் பெண்டுபிள் ளைகளோடு
புரைசட்டி வாழ்ந்துமென்ன
வவிகட்டி யாமமுது மடிகட்டி நன்செயொடு
மாம்புன்செய் வேலிகட்டி
யணிபெறுங் கற்கட்டி யரண்மனைகள் கட்டியே
யங்கரும் பாலைகட்டிக்
குவிகட்டி செய்துநெற் கட்டிவாழ்ந் திடினுமைக்
கூற்றுவன் கங்குகட்டிக்
குறிகட்டி யுயிர்கட்டி யோடுபொழு திவையெலாங்
குறுகிவழி கட்டுமோதான்
கவிகட்டி யேபாடு தொண்டருக் கருள்செயுங்
கந்தனே வந்தருள்செய்வாய்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 80
அயமா யிருக்கினுஞ் சிலபோது கரையுநின்
னடியிணைக் கபயமென்ற
வடியனென் கவலையைப் பலவேளை கூறியுநி
னருள்மனங் கரையவிலையே
யியல்பான பாடல்கள் படித்துத் துதித்ததுப
னிருசெவிக் கேறவிலையே
யிதுசம்பிர தாயமா பேசாத சாதன
மெனுந்தொழில் படித்ததெங்கே
சுயமாகு நீநினது தொண்டுசெயு மடியனைத்
தொடர்கவலை யின்றுமுதலாய்த்
துகளா யிரிந்தோட வருள்வா யரன்றேடு
சுருதிமுடி வானபொருளே
கயமாவின் வைசியர்கள் நயமாய் மகிழ்ந்துலவு
கவின்வீதி நீடுமெழிலார்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 81
சென்னிகை தொழுதேத்து மன்றிடப முத்திரைசெய்
திருமதுரை யரனை மறவாச்
செல்வியாம் பூவணப் பொன்னனை யாளெனுந்
திருமாது தேவகணிகை
மன்னுகைக் கரகரீ ராலடியர் கால்கழுவி
மகிழ்வுட னமுதருத்தி
மனதார வவருண்ட மிச்சிலை யருந்திடு
மாதவப் பெருமைசேர்விற்
பன்னிகைப் படுமரன் றிருவுருக் கண்டிடப்
பணமமை வுறாமன்வாடப்
பரமனவள் மனையுறும் பழையபாத் திரமெலாம்.
பணிசெயும் பொன்னாக்கியக்
கன்னிகைக் கீந்துகாட் சியுமீந்த வரனுதவு
கந்தனே யருள்புரிகுவாய்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 82
மேகமும் வெளுக்கக் கருப்பேறு பகடேரி
வெப்பேறு சினமேறியே
வீரமொடு சூலமும் பாசமுங் கொண்டுகடு
வேகமொடு தாவிவருமை
நாகமென வதிர்வுறப் பேசுகுர லிடியென்ன
நானிலங் களும்நடுங்க
நமனணுகி னாலிங்கு நண்ணிடா தேயடா
நான்சேயி னடியேனடா
வேகமொடு மோட்டா வெனவெனது
மனதினீ வீரம்வர வருள்புரிகுவாய்
வெள்ளிவரை யெனுமேடை மேனின்று மயிலாட
மென்குயில்க ளிசைப்பாடிடுங்
காகமொடு புள்ளெலாம் விளையாடு சோலையுங்
கனவரைக ளுஞ்சூழ்தருங்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 83
தாழ்நரை யுரோமங்கள் சாமரைக ளாக நோய்
தானையங் கடலதாகத்
தலைநடுக் கங்களே கொடிகளாய்ச் சேத்துமத்
தண்குதிரை யதிலேறியே
யூழ்வினை யரட்டனா மரணமன் னெனைவென்
றுயிர்ப்புறங் கொளுமுனாக
வுன்னருகி அறுஞான சக்ரவர்த் தியையேவி
யொளிர்கலைகள் சாமரைகளாய்
வாழ்தத்து வஞ்சேனை சாத்திரங் கொடியாக
மறையெனும் பரியிலேறி
மணிநாவின் வாங்கிச் சடாச்சரக் கோலேவி
மரணமனை வென் றுசிவமாங்
காழவொலி யுடனினைப் பெறுதலாம் பட்டமது
கட்டியெனை யாண்டருளுவாய்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 84
வானமது கீறியுயர் மால்வரையின் மேவிடு
மரக்கொம் பிறாலினூறி
வடிகின்ற தேனினைக் குவலயத் தசைநடை
வழங்காது படியுமுடவன்
றானினைத் தங்காந்து வாயினை விரித்திடுந்
தகமைபோ லயனோடமார்
சதுர்மறையு மறியொணா நின்பாத பங்கயந்
தனைமனதி அன்னியுன்னி
நானனு தினந்தேடி வாடினே னிதுசமயம்
நாடிவந் தருள்புரிகுவாய்
நாதனே பூமிபுன லனல்வாத மொடுகாய
நண்ணினிறை வுறுபோதனே
கானம்நிறை விஞ்சையர்கள் கந்தருவ ரிவர்கடங்
கவினகர மெனவிளங்குங்
கண்டியொடு மெண்டகு கொளுப்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 85
வானூறு மகனுட னமரர்களு முறைமுறையின்
வந்துகுற் றேவல்செய்ய
வலனோடு முலகாண்ட விரணியா சுரனைமுன்
வதைத்திடநன் மனதிலுன்னித்
தூணூ டலங்குளை மடங்கலாப் புகையெனத்
தோன்றியவ் வசுரன்மார்பு
துளைபடக் குத்தித் தொலைத்தமால் மருகனே
தொண்டர்முன் வருமுருகனே
யூணூன தாய்த்தின்ற வேடுவச் சேரியினி
அற்றவர்க டன்னையாண்ட
வுத்தம குணாலயா சச்சிதா னந்தவாழ்
வோங்குமடி யார்க்குநல்கிக்
காணூழி காலமு மழியாத மாடகூ
டங்களிற் கதிர்மதிவுலாங்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 86
சீப்பிட்ட கோதையர்கள் கண்களிடு வலைதனிற்
சிக்குண்டு சொக்குண்டனார்
சிற்றின்ப வடிபட்டு நோயுறப் பட்டுறுஞ்
சேத்துமம் பட்டவீப்போ
லாப்பிட்டு வெளியுற்று வரும்வழியை யறியாம்
லயருகின் றேனில்வேளை
யணிமயிலின் வந்துபத மருளியெனை வெளியாக்கி
யாள்வதற் கிதுசமயமே
மாப்பிட் டருந்தியிடு சொக்கேசர் குமரனே
வானுலகை யாள்சமரனே
வரதகிரு பாகரா குமரகுரு பரனேயென்
மனதுகுடி கொண்டபொருளே
காப்பிட்ட வளையலணி வள்ளிதனை மருவிடுங்
கந்தனே வந்தருள்செய்வாய்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 87
பவுரியுற றிடுநடன னுறுமதுரை மறையவர்கள்
பதிவிரூ பாக்கனென்போன்
பன்னியொடு மெழுகன்னி மார்களைப் பரவியொரு
பதுமினிப் பெண்மகவினை
நவிலிலக் கணமோடு மீன்றுபரை மந்
நவின்றவட னாமமோதி மந்திரம்
நற்சைவ வாகமந் தேர்ந்தறிவு சார்ந்தகுல
நங்கையா மம்மங்கையைச்
சவுரியிற் றங்குமரி சமயனுக் குதவவவர்
தன்னாடு கொண்டுசென்று
தம்மருகி யென்னார் வெறுப்பதோர்ந் தேகிழவர்
சற்குமார் பாலராகிக்
கவுரியிற் கருள்செய்து விடைமீது காட்சியருள்
கடவுளரு ளியகுமரனே
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 88
பாலையுறு கடையன லுருக்கிவார்த் திடவொளிகள்
பரவுசெங் கம்பியென்னப்
பணைமின்ன லின்கொடி யெனச்செய்ய குஞ்சியும்
படுகனல்கள் சொரிவிழிகளு
மாலையுண் டிடுநீல மேனியும் பெறுகடா
வாய்ந்தகண் டத்தில் வீக்கு
மணியோசை யோடுபிறை யெயிறதுக் கிக்கொண்டு
வருநமன் காணவென்மேல்
வேலையுற வெழுதியவ னணுகாது செல்லும்வகை
விமலனே யருள்புரிகுவாய்
வெள்ளிவரை யெனுமேடை செறிவணிகர் வீதியொடு
வேதங்கண் முறையினோதிக்
காலையொடு மாலையுஞ் சந்திசெயு மண்டபங்
காட்டியிடு தடமும்வாய்ந்த
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 89
வறுமைப் பெறுந்துயர் மயக்கவு மடியேனின்
மந்திரம் வரைந்தோதியே
வாழ்த்திடா தேயென்ற னிருதயம் பாழான
வண்ணமும் நண்ணியென்றுஞ்
சிறுமைப் படுத்தியிடு கன்மமும் பிணிவந்து
தீண்டலிற் றேகமெலிவுஞ்
சிங்கார வுல்லாச மங்கையர் விகாரமுஞ்
சேர்ந்திவைக ளூறுசெய்தா
லுருமிப் பொருந்துயர மொன்றல்ல யெவைகளுக்
கோடிப் பிழைப்பதிவ்வா
றுற்றவென் றுயரெலா மோர்நொடியின் மாற்றியே
யுனதருட் செல்வமருள்வாய்
கருமைக் குலங்கடமை யெருமைக் குலங்களிற்
கவின்மள்ளர் பிணையல் பூட்டுங்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 90
பானமது நஞ்சுதா னுண்கல மயன்றலைப்
பருவோ டுடுத்துமுடையோ
படுகொலைக் கயவுரியி னொடுபுலியி னுரியுமெய்
பரிக்குமணி யாவினோடே
யேனமுறு கொம்புவெண் டலைமாலை யூர்தியோ
யெப்பொழுதும் நரையேறுதான்
யாதொன்று மில்லாத மாதொன்று
பாகர்க்கி ருப்பிடஞ் சுடுகாடு தான
மானமொன் றில்லாது கௌரிக்கிவ் வுலகோடு
மற்றவுல குக்குமாக
வாட்டமுள யிருநாழி நெல்லீந்து தானுமதில்
வாங்கியுண் பவனல்வேதக்
கானமுள வீசனருள் ஞானமுளபாலனே
ககனமுறு மேடைவாய்ந்த
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 91
சூட்டுமணி யரவுபுனை யான்மதுரை தனையாண்ட
துதியரி மருத்தனச்சீர்த்
தோன்றற னமைச்சராய் வாழ்வாத வூரரைத்
தூயகரு யூலமதனி
லீட்டுநிதி யாவையும் பரிவாங்கி வாவென்றே
யீயவது வாங்கியீச
னெழிலால யப்பணிக என்பர்பணி விடையெலா
மிசைபெற வியற்றிவாழ்வு
நாட்டுபரி நாளைவரு மென்றிறைமுன் மொழியமொழி
காளினவை வாராமையால்
நற்றொண்ட ரைக்குரிசில் சொற்றண்ட ரிடர்செய்ய
நாயக னறிந்துவெய்ய
காட்டுநரி களைவீதி யோட்டுபரி யாக்கியருள்
கருணையர னுதவுபொருளே
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 92
கோடைக் கொதுங்கிக் கலைந்தமுகி லென்னவுங்
குரைகடல் முகட்டெழுந்து
குலவுகதி ரைக்கண்ட விருளெனவு நின்பாத
கோகனக முலவுமன்றற்
சாடைக் கொதுங்கும்வினை யென்பது தெரிந்துநின்
றாளினை நினைக்கொணாது
சஞ்சலஞ் செய்யவே கவலையொரு நொடியெனுந்
தாங்கொணா தென்னாலினி
வேடைப் படுத்துமவ் வினையொழித் தியானுய்யும்
விதமெனக் கருள்புரிகுவாய் விமலையின்
புதல்வனே கமலையின் மருகனே
வேதனே புகழ்போதனே
காடைக் கரும்புளொடு கவுதாரி விளையாடு
கனகவரை யெனுமேடையார்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 93
ஆசைமிகு பத்திதரு சிந்தையு மிலேனினது
வடிகள்பூ சனையுமில்லே.
னாகியசி வாகமப் பற்றுமில் லேன்வினை
யடர்ந்துபூ பாரமானே
னோசைதரு மாதிமறை யுடகருத் தொருசிறிது
மோர்ந்தாய்ந் தறிந்துமில்லே
னொன்றுக்கு முதவாத கானல்நீ சென்னவு
முடைந்தமட் கலமுநிகர்வேன்
வேசையினும் விரிவான வேட்கையுள் ளேனினருள்
மெய்ம்மைக் குரித்தாவனோ
மேலான சச்சிதர் . னந்தவடி வேஞானம்
விளைவிக்கு மோனவடிவே
காசைமலர் போனீறு பூசுமடி யார்கணிரை
கவினுள்ள வீதிசெறியுங்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 94
விப்பிர குலப்பிரம புரநாத னடியரின்வி
பூதிதிக ழுங்கூடல்வாழ்
வேந்தனுக் கிறையருள்செய் பரிகணரி. யாச்செல்லும்
விதமதனை வோர்ந்ததென்னன்
மெய்ப்பிரம ரூபியாம் வாதவூ ரடி கடமை
மீளவுஞ் சிறையிலாக்கு
வெந்துய ரறிந்தீசன் வெள்ளம்வர வுன்னநகர்
வெள்ளத்தி னால்மறுகலால்
வைப்பிரம் பணைநதியை யாவரு மடைக்கவரன்
வந்தியா ளாகியவளீ
மாப்பிட் டருந்தியங் காப்பிட்டு மண்ணிட்
டிடாததான் மாறன் மோதுங்
கைப்பிரம் படியுலகெ லாமடிப டவுமிட்ட
காலகா லன்புதல்வனே
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
யீசனே கதிரேசனே. 95
பொன்னுலக வரையோங்கு கோபுரத் தின்மணிகள்
பொலிகின்ற தூவிநிரையும்
புரியுமெயி லகழிகளும் பணிமாட கூடநிரை
பொங்குசா ளரவணிகளும்
மன்னுலவு தோணியும் மானிரையும் மதமொழுக
வருகரிக ணிரைகடாமும்
மறையவ ரொழுக்கமு மரசர்தம் வீதியும்
வைசியர்கள் செய்முறைகளும்
தென்னுலவு பூவசியர் வேளாண்மை புரிகின்ற
சீலமுறை யதுவுமோர்ந்து
செப்பிடிலெவ் வுலகுமிதை யொப்பதில் லெனமாந்தர்
செறிசிலோன் பூமியதனிற்
கன்னனென வண்மைபொழி காவலர்க ணிரைகின்ற
கனகமா ளிகைகள் சூழும்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
கதிரேசனே ஈசனே. 96
நோயுற் றழுங்குமுடல் சஞ்சலப் பட்டுவாய்
நுரையுற்று வீழ்ந்தபொழுது
நுனியுற்ற வலகுறுங் கழுகுகண மக்கெனும்
நுவல்பேய் நமக்கிதென்னும்
காயுற் றெமக்கெனுஞ் சேனமும் நமக்கெனும்
நரித்திரண மக்கிதென்னும்
நாறும் புலாலுற்ற சுடலையுறு காகமு
நமக்கென்னு மெரிநமதெனும்
பாயுற்ற போகக் கருத்தங்கி வாழுடற்
பாழான வாழ்வு பழுதே பச்சைமயி லேரிவரு
பரமவுல கிற்றோன்று பவநீக்கி யருள்புரிகுவாய்
காயுற்ற தெங்குகள் வளர்ந்துவா னுறுமாதர்
கனதன மிகழ்ந்துகாட்டுங்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
கதிரேசனே ஈசனே. 97
கொஞ்சமெனி னுஞ்சித்தம் விடயவாய்ச் செல்லாது
குறியா யிருக்கவறியேன்
கோதறு தவத்துறையி னின்றுமறி யேனினது
கோவில்வலம் வந்துமறியேன்
தஞ்சமென வேசாது சங்கக் குளாங்களிற்
சார்ந்துமறி யேன்மயங்கு
தருணமதில் வந்துதவு தெய்வத வுபாசனைகள்
சற்றுமோ பழகியறியேன்
வஞ்சமொடு பஞ்சுபடு பாடெலாம் பட்டநான்
வரதநின் னடியனாகி
வாழுநா ளெந்தநா ளிந்தநன் னாளிc
வந்துதவி புரிவையையா
கஞ்சமல ரயனோடு விஞ்சையர்கள் வந்துபணி
கடவுளே கமலைவிழையுங்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
கதிரேசனே ஈசனே. 98
மாதலிச் சாரதிய னுலகினும் வளங்கள்மிகு
மதுரைமனி ராசராச
மாறனின் சோரமா தீழநாட் டுறுவனிதை
மதிவருதல் கண்டுமகிழ் செந்
தாதலியை யொத்தவாய் விறலிமுனம் வந்தனொடு
தாளவிசை பாடி இனரத்
தகுவையோ வெனவிறலி மடமானு மிசையவிசை
தருராச சபையில்மூன்று
போதவர்கள் பாடுகையி லோரமொடு மாறனப்
பொதுமாதி சையைவியப்பப்
பொறைவிறவி யரன்முன்பு பாடிடு மவன்மொழிதல்
பொதுவெனப் பாடுபாணன்
காதலிக் கருளியே இசைவாது வென்றவெங்
கருணையா னுதவுபொருளே
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வர
கதிரேசனே ஈசனே. 99
ஆதிமறை நூல்வாழ்க வந்தணர்கள் வாழ்கவுயர்
வாஞ்சைவ சமயம்வாழ்க
அனுதினம் புரிகின்ற தன்மங்க ளோடுவே
தாகமம் வேழ்விவாழ்க்
நீதியொடு மரசுபுரி மதிமன்னர் வாழ்கநிலை
நிற்குநற் குடிகள் வாழ்க
நீண்மழை பொழிந்துமுப் போகமும் விளைந்துலகு
நிறைசெல்வ மோடுவாழ்க
ஒதுநின் சதகமது கூறினவர் வாழ்கவ
துகந்துகேட் பவர்கள் வாழ்க
உன்னரிய பிரணவப் பொருளினைத் தெளி
வுரையென வுரைத்ததந்தை
காதிலுபதேசித்த வரதகிரு பாதரக்
கடவுளே கருணைபுரிவாய்
கண்டியொடு மெண்டகு கொளும்பிலுறை வாசனே
கதிரேசனே ஈசனே 100
கண்டிக்கதிரேசன் சதகம் முற்றுப்பெற்றது.
சுபம்! சுபம்!! சுபம்!!!
--------------------
This file was last updated on 4 Jan 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)