pm logo

மதுரை மீனாட்சியம்மன் பேரில் அகவல்
திருப்போரூர்‌ டி. கோபால்‌ நாயகர்‌ அவர்களாற்றமது


akaval on mInATciamman of Madurai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

மதுரை மீனாட்சியம்மன் பேரில் அகவல்
திருப்போரூர்‌ டி. கோபால்‌ நாயகர்‌ அவர்களாற்றமது

Source:
மதுரை மீனாட்சியம்மன் பேரில் அகவல்
திருப்போரூர்‌ டி. கோபால்‌ நாயகர்‌ அவர்களாற்றமது
மதராஸ்‌, என்‌. சி. கோள்டன்‌ அந்தியந்திரசாலையிற்‌ பதிப்பிக்கப்பெற்றது.
17-18 காளத்தியப்‌ப முதலி வீதி, மதசாஸ்‌ என்‌. சி.
1914
------
மீனாட்சியம்மைபேரில்‌ அகவல்‌.

அம்பாள் துணை

பங்கயத்திருவே பார்வதியுமையே
செங்கண்மால்தங்கை தேவிமீனாட்சி .
இங்கிதப்பொருளே யேந்திழையாளே
மங்கள நிறைந்த மாதங்கதேவி
பராபரமான பரஞ்சுடர்‌ விளக்கே
தராதலம்படைத்து தானெழுந்தருளி
நிராதலமாக நினைவிலிருந்து
புராதனமாகப்‌ புத்தியிலிருந்‌.து
முக்கோணத்தின்‌ முறைதனைப்பயிற்றி
சட்கோணத்தின்‌ தகைசனைக்காட்டி
ஐங்கோணத்தி னறிவெனச்கோதி
விங்கவுருவத்‌ துடனின்றதேவி
தாயைப்போலத்‌ தயவாய்வளர்த்து
வாயைத்திறந்து வாவென்றழைத்து
குருமொழிஞானக்‌ குவலயல்காட்டி

திருவருள்வைத்து தெரிசனங்கொடுத்து
பஞ்சாட்சசத்தின்‌ பதிவிளையுரைத்து
நெஞ்சிற்றரிக்க நினைவையுங்கொடுத்து
மாட்சியஷ்டாட்சர வகையெனக்கோதி
சூட்சாசரத்இின்‌ சுருக்கமறிவித்‌
தேகாட்சரத்தின்‌ நிலையறிவித்தே
ஆகாவுள்ள மயக்கமஃகறாதி.
வேகாக்கருவி வியர்வையுந்தரித்து
சாகாமருந்து தன்னையுந்தரித்து
போதுமொறுக்கம்‌ பொறுமையளித்த
மாதுமையான மதுரைமீனாட்சி
சத்திமுத்தி சட்கோணத்தி
சித்திவெற்றி சவபெருஞ்சோதி
சூலிகபாலி சூச்திரப்பொருளே
வேலனையீன்ற விளக்கொளியானே .
மவ்வும்வவ்வும்‌ வளர்ந்தொழுங்கொழுந்தே
ஓம்நமோவென்னு முற்பனப்டொருளே
ஆமால்‌என்ன வமர்ந்திருந்தவளே
புல்லரிடத்திற்‌ பொருக்காதவளே
வல்லமைசொல்வோர்‌ வாய்கிழிப்பவளே

பச்சடுக்குற்றுப்‌ பகைத்‌துவந்தபேரை
நச்சுவேலால்‌ நாக்சைப்பிடுக்குவாய்‌
சக்கரவித்தை சமா்க்குற்றபேரை
சிக்கெனப்பிடித்‌.துச்‌ சிந்தைகலங்குவாய்‌
விடப்‌பில்லிதையப்பில்லிவிட்டவரை
துடித்திடவுதைத்துத் தொலைந்திடுந்தாயே
துலுக்கர் மந்திரமும்‌ தொட்டியவித்தையும்‌
மலுக்கரோதும்‌ மலையாள வித்தையும்‌
கற்றுவந்தபேரை கர்ப்பங்கழித்து
பற்றிப்புடைத்துப்‌ பாய்க்கிடைசெய்வாய்‌
உன்றனை நம்பினே னுன்னுடையடியனேன்‌
தந்தைதாய்நீயே தயையுடன்காப்பாய்‌
வீரமல்லாரி விக்ரமசூலி
சூரசம்மாரி துர்க்கிசாமுண்டி
பத்ரகாளி பராபரஞ்சோதி
சித்திமதுரைச்‌ சிங்காரவல்லி
மாயேஸ்வரியே மனோன்மணியம்மையே
தாயேயுமையே சங்கரிகெளரி
மார்க்சண்டனுக்கு வயதுபதினாறு
தீர்க்கமாயளித்தோன்‌ தேவிபராபரி
யக்குவடத்தி யநேகமாய்ப்பூண்டு

கொக்கிறகணிந்த கோலாகலியே
என்னுடனெதிர்க்‌ தேவல்செய்வோரை
சின்னாபின்னமாய்ச்‌ சிதறவடிப்பாய்‌
அங்கயற்கண்ணியா னந்தக்கூத்தாள்
பங்கிலமர்ந்த பசும்பொற்கிளியே
கக்கிஷமாகச்‌ ககனக்கூத்தாடி
சொக்கசைச்சேர்ந்த மிக்கசுந்தரியே
யானைத்தோலை யழகுடன்போர்த்து
மானைப்பிடித்த வரதன்மகிழ்கொல்‌
சப்பாணியாகச்‌ சந்தியிலிருக்கும்‌
தொப்பைவயிற்றனைச்‌ சுகமாய்ப்பெற்றாய்‌
மயின்மிசையேறி வளளியைப்புணர்ந்த
அயில்வேலேந்தி அன்புடனின்றாய்‌
பாத்திரமேந்தி பலிதானெடுத்து
கூத்தையுதைக்கோன்‌ கொஞ்சுங்கிளியே ,
ஆத்திரமாக வந்தளித்திட்டு
நீபதுரமாக நீயெனைக்காப்பாய்‌
வாழ்வுவறுமையு மினிப்படமாட்டேன்‌
பேர்வரும்பொருளும்‌ பெட்பும்புத்தியும்‌
அன்னமும்சொர்னமும்‌ ஆடையுமுதவி.
என்னைநீகாக்க விதுகடனுனக்கே

பெற்றாய்நீயே பிள்ளைநானுனக்கே
மற்றோருதவி வையகத்‌தில்லை
மோசகங்களசெய்யு மோகினிப்பேயை
நாதாசஞ்செய்யும்‌ நாறாயணியே
காமனையெறித்த கனற்கண்ணாளே
வாமபாகத்தின்‌ மகிழ்ந்தணைந்தவளே
அவ்வுங்கிலியுமா யமர்ந்தவானந்தி
சவ்வுங்கிலியந்‌ தானெழுந்தவளே
ஒன்பதுகிரகமு முடன்படைத்தாலும்‌
அன்புடனேகாத்‌ தருள்புரிபவளே
ஒட்டச்சியாகி யோங்குமம்மனையே
செட்டிச்சியாளே சீர்பதத்தாளே
வேடிச்சியென்று மேன்மைபெற்‌றவளே
ஆடிச்சிவன்பதத்‌ தன்புபெற்றவளே
கொன்றைசூடுங் கோமான்புல்ல
நன்குடன்சேரு நாயகியாளே
எந்தவினையு மிடரும்வந்தாலும்‌
உன்றனை துதிப்பவர்க்‌ கொருகுறைவிலதால்‌
வெட்டுணிகுட்டுணி வீரனும்சூரனும்‌
துட்டவிருளனும்‌ சுடுகொட்டேரியும்‌
மசானருத்திரனும்‌ வாய்கொள்ளிப்பேயும்‌

கசானத்துறையும்‌ கனபூதவீரனும்‌
ஏவலுக்கிசைந்த விரத்தகாட்டேரியும்‌
நாவதுகுளரி நடுங்கவேபண்ணி
என்வார்‌த்தைகேட்டு எனதேவல்செய்து
என்வசமாக இருந்துரட்சிப்பாய்
விடத்தின்னாவும்‌ வெற்றியகாயமும்‌
இடபமும்புலியு மெதிர்ப்படும்பாய்ச்சலும்‌
உன்னுடையகவ லொருபொழுதோத
மின்னொளிபோல்விட்‌ டோடவேபண்ணும்‌
கன்னிக்கிரந்தி கடியகாமாலை
மன்னியசோகை மருந்துறுகுட்டம்‌
குத்துஞ்சூலை கொடிதானபித்தம்‌
சற்றுன்பேர்சொல்‌ தரணிமுன்பனிபோல்‌
சீக்கிமாகத்‌ தெரித்திடப்பார்த்திட்
டாக்கிரம்செய்து அதட்டி நீயோட்டு
மாலுகந்தோது மதோன்மத்ததியே
காலன்வந்தால்‌ கடுந்‌துதைந்துருட்ட
பூவினிலுறையும்‌ பொன்னேமின்னே
தேவர்கள்பணியும்‌ சிவசிற் சத்தியே
பூதவசியமும்‌. புவியிலேவிஜையமும்‌
நாதன்‌கிருபையும்‌ வசீகரனல்கி

பாசவினையின்‌ பந்தமகற்றி
ராசவசீகரந்தந்தருளம்மணி
சிறுத்தொண்டன்பிள்ளை சீராளன்‌றன்னை
அறுத்‌துண்டவரையணைந்தவானந்தி
அஞ்ஞானத்தை யகலத்துரத்தி
மெய்ஞ்ஞானத்தை விளங்கப்பண்ணும்‌
பாடப்படிக்கப்‌ பாவனைசெய்து
நாடவருளு நாவிலிறைந்திருந்
தசதிவாரமே யாதீனம்பெருக
இசையுடனிருக்க வெந்தாய்பாரு
விளக்கொளிதனக்கு முன்மினிப்பூச்சியோல்‌
தளதளவெனவே தமிழையுரைத்தேன்‌
புன்சொலாயினும்‌ போற்றியதாதலின்‌
இன்சொல்புலவர்க்‌ கிதுபொருப்பதுகடன்
மீனாட்சிதாசன்‌ விளம்பியவகவல்‌
தானாட்சியாகச்‌ தான்கேட்டபேர்களும்‌
வையகமுமுதும்‌ வரிசைபெற்றோங்க
செய்வதுகடனுன்‌ திருவடி.சரணம்‌.

மீனாட்சியம்மை அகவல்‌ முற்றிற்று.
------------------------

This file was last updated on 25 Jan 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)