pm logo

சிற்றிலக்கியத் திரட்டு - பாகம் 1
இராமப்பய்யன் அம்மானை
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொகுப்பு


ciRRilakkiyat tiraTTu, part 1
irAmappayyan ammAnai
edited by vaiyApurip piLLai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
We thank Tamil Virtual Academy, Chennai for providing a scanned PDF version of this work
Our sincere thanks go to Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance
in the preparation of this work
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிற்றிலக்கியத் திரட்டு - பாகம் 1
இராமப்பய்யன் அம்மானை
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொகுப்பு

Source :
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த
சிற்றிலக்கியத் திரட்டு
பொதுப்பதிப்பாசிரியர்: இ. சுந்தரமூர்த்தி
பேராசிரியர் & தலைவர், தமிழ் இலக்கியத்துறை
சென்னைப்பல்கலைக் கழகம்
நூலகத்திற்கு அன்பளிப்பு
சென்னைப்பல்கலைக்கழகம், 2001

Chitrilakkiyath thirattu
First Edition: November - 2001
University of Madras
வடிவமைப்பு: வே.கருணாநிதி
PRINTED IN INDIA
The PARKAR , 293, Ahamed Complex 2nd Floor
Royapettah High Road, Chennai - 600 014.
---------

அணிந்துரை

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை அவர்கள் பேரகராதிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பல்வேறு சிற்றிலக்கிய நூல்களையும் பதிப்பித்து வெளிக்கொணர்ந்தார். ஓலைச் சுவடியிலிருக்கும் நூல்களை அழியாமல் பாதுகாத்து அச்சு நூலாக உருவாக்க வேண்டும் என்ற பேரவா அவருக்கு இருந்தது. எனவே சென்னைப் பல்கலைக்கழகம், சைவ சித்தாந்த மகாசமாஜம், மதுரைத் தமிழ்ச் சங்கம், ஆழ்வார் திருநகரி திருஞான முத்திரைப் பிரசுராலயம் முதலாய பல்வேறு வெளியீட்டகங்களின் வாயிலாகப் பல சிற்றிலக்கியங்களை வெளியிட்டார். சித்தாந்தம், நவசக்தி, செந்தமிழ் முதலாய தமிழ் இதழ்களிலும் இந்நூல்கள் வெளிவந்தன. தனித்தனியே வெளியிடப்பெற்ற இந்நூல்கள் அனைத்தும் இப்பொழுது சென்னைப் பல்கலைக் கழக வெளியீடாக ஒரே தொகுதியாக வெளிவருவது பெரிதும் மகிழ்ச்சிக்குரியது.

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை நூற்றாண்டு விழா 1991ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நிகழ்ந்தபோது பல்கலைக்கழகம் புறத்திரட்டு, சிற்றிலக்கியத் திரட்டு ஆகிய இரு நூல்களையும் வெளியிட முன்வந்தது. இந்த இரு நூல்களும் இப்பொழுது பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவருகின்றன. சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராய் விளங்கிய பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை அவர்களின் இவ்விரு தொகுதிகளையும் பல்கலைக்கழகம் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றது.

பேராசிரியரின் மருகர் திருமிகு இராமசாமி அவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் பேராசிரியர் நினைவு மன்றத்தாரும் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்களும் இந்நூல்களைத் தொகுத்துத் தருவதில் பெரிதும் உதவினர். இவர்கள் அனைவருக்கும் நன்றி.

சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை இயக்குநர் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் இந்நூல் வெளிவரப் பெரிதும் உதவினார்கள். அவருக்குப் பாராட்டுதல்கள். தமிழுலகம் இத்தொகுதியை ஏற்றுப் போற்றும் என்று நம்புகின்றேன்.

சென்னை       பொன்.கோதண்டராமன்
01.11.2001 (பொற்கோ)
துணைவேந்தர்
சென்னைப் பல்கலைக்கழகம்
---------------

தொகுப்புரை

பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளையவர்கள் 1925ஆம் ஆண்டு முதல் 1946ஆம் ஆண்டு வரை பலவகையான சிற்றிலக்கியங்களைப் பதிப்பித்துள்ளார். இவை யாவும் இன்றைக்கும் கிடைப்பதில்லை. பல்வேறு இதழ்களிலும் மலர்களிலும் இவை வெளியிடப்பட்டுள்ளன. சிதறிக்கிடக்கும் இவற்றையெல்லாம் ஒன்றாய்த் தொகுத்து வெளியிடுவது தமிழியல் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாயிருக்குமெனக் கருதி இப்பணி மேற்கொள்ளப்பட்டது. பேராசிரியர் பதிப்பித்துள்ள 30 சிற்றிலக்கியங்கள் 14 வகையைச் சார்ந்தனவாகும். இவற்றில் திருக்குறுங்குடி அழகிய நம்பியுலாவும் திருமுருகாற்றுபடையும் (புதிய உரையுடன்) இரண்டாம் பதிப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான திருமுருகாற்றுப்படை, பேராசிரியரின் கணிப்பின்படி (பார்க்க: 'திருமுருகாற்றுப்படை', இலக்கிய தீபம்) கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். நக்கீரதேவநாயனார் இதனை இயற்றியவராவார். பத்துப்பாட்டு மிகப் பிற்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டது எனக் கருதும் வையாபுரிப்பிள்ளை, திருமுருகாற்றுப்படையானது கடவுள் வாழ்த்துப் போலப் பத்துப்பாட்டுள் முதலாவதாக வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார். எனவே, திருமுருகாற்றுப்படையானது ஆற்றுப்படை எனும் சிற்றிலக்கிய வகையாகக் கொள்ளப்பட்டு இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

பேராசிரியராலேயே எழுதப்பட்ட புதிய உரையுடனும் உரையாசிரியர் உரையுடனும் என இரு திருமுருகாற்றுப் படைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சாத்தூர் நொண்டி 'சம்பந்தம்' என்ற புனைபெயருடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது. கோதை நாச்சியார் தாலாட்டு, ஆழ்வார் நாடகம் ஆகிய இரண்டும் இதுவரை வையாபுரிப் பிள்ளையின் பதிப்புகளில் இடம் பெறாதிருந்து, இத்தொகுப்புப் பணியின்போது கண்டறியப்பட்டவை. இவை போன்று பார்வைக்குக்கிட்டாத வேறு சில சிற்றிலக்கியங்களையும் வையாபுரிப்பிள்ளை பதிப்பித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அவர் விட்டுச் சென்ற சில ஆவணங்களால் அறியமுடிகிறது. ஓலைச் சுவடியிலிருக்கும் பல இலக்கியங்களை அழியாவண்ணம் காப்ப தொன்றையே நோக்கமாகக் கொண்டு, பேராசிரியர் தமது பெயரைக் கூடச் சேர்த்துக் கொள்ளாமல், நண்பர்களுக்காகவும் நிறுவனங்களுக்காகவும் பதிப்பித்துக் கொடுத்த சிற்றிலக்கியங்களும் இத்தொகுப்பில் அடங்கும். இப்பதிப்புகளுக்குப் பேராசிரியர் தந்துள்ள முன்னுரைகளும் அநுபந்தங்களும் பதிப்பாசிரியர்களுக்கு வழிகாட்டும் சிறப்புடையன. பதிப்பிக்கப்பட்ட கால அடிப்படையில் சிற்றிலக்கியங்கள் இங்கு தொகுக்கப்படவில்லை. வகைப்படுத்தப்பட்ட அட்டவணையின் அடிப்படையில் இவ்விலக்கியங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூலுக்கும் பேராசிரியர் தந்துள்ள முன்னுரைகளும் அநுபந்தங்களும் பிற செய்திகளும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன.

நினைவு மன்றத்தில் கிடைத்த நூல்கள் தவிரப் பிறவற்றைப் பல்வேறிடங்களில் தேடிப் பெற்றுப் படியெடுத்ததுடன், பேராசிரியரின் சிற்றிலக்கியப் பதிப்புகளை வகைதொகை செய்து கொடுத்த - பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை பற்றி ஆய்வு மேற்கொண்ட ஆய்வு மாணவர் பு. ஜார்ஜ் அவர்களுக்கு நினைவு மன்றம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

நினைவு மன்றத்தில் இல்லாதிருந்த சிற்றிலக்கியங்களைக் கொடுத்துதவிய மறைமலையடிகள் நூலகத்தார், உ.வே. சாமிநாதய்யர் நூலகத்தார், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தார் ஆகியோர்க்கும் பேராசிரியர் மு. சண்முகம்பிள்ளை அவர்களுக்கும் இதுவரை எமது பார்வைக்கு வராதிருந்த 'கோதை நாச்சியார் தாலாட்டு' எனும் சிற்றிலக்கியத்தைத் தந்துதவிய சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை ஆய்வு மாணவர் இரா. சீனிவாசன் அவர்களுக்கும் நினைவு மன்றம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

பேராசிரியர் பணியாற்றிய சென்னைப் பல்கலைக்கழகமே இத்திரட்டினை வெளியிடுவது பெருமகிழ்ச்சிக்குரியது. இத்திரட்டினை வெளியிடுவதற்கு வழிவகுத்து, வெளியிடும் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பதிவாளர் மற்றும் பதிப்புத்துறை இயக்குநர் டாக்டர் இ.சுந்தரமூர்த்தி ஆகியோர்பால் நினைவு மன்றம் நன்றி பாராட்டுகிறது.

நினைவு மன்றத்தார்.       பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை
================
பொருளடக்கம்
பாகம்-1

I. அம்மானை
1. இராமப்பய்யன் அம்மானை (1951)
II. ஆற்றுப்படை
2. அணிமுருகாற்றுப்படை (1937)
3. அருள் முருகாற்றுப்படை (1937)
4. திருமுருகாற்றுப்படை (புதிய உரையுடன்) (1933)
5. திருமுருகாற்றுப்படை (உரையாசிரியர் உரையுடன்) (1943)
6. பொருள் முருகாற்றுப் படை (1937)
7. வருமுருகாற்றுப்படை (1937)
III. உலா
8. இராஜராஜ தேவருலா (1925)
9. திருக்குறுங்குடி அழகிய நம்பியுலா (1932)
10. முப்பந்தொட்டியுலா (1934 )
IV. எழுகூற்றிருக்கை
11. திருவெழுகூற்றிருக்கை (1937)
V.கோவை
12. மதுரைக்கோவை (கூடற்கோவை) (1934)
VI. தாலாட்டு
13. கோதை நாச்சியார் தாலாட்டு (1928)
VII. தூது
14. இராமலிங்கேசர் மீது பணவிடு தூது (1934)
15. துகில்விடு தூது (1927)
16. தெய்வச்சிலையார் விறலிவிடு தூது (1936)
17. நெல்விடு தூது (1933)
----------------
பாகம்-2
VIII. நாடகம்
19. பராங்குச நாடகம் (ஆழ்வார் நாடகம்) (1945)
IX. பள்ளு
20. குருகூர்ப் பள்ளு (பராங்குசப் பள்ளு) (1932)
X. போர்
21. இரவிக்குட்டிப் பிள்ளை போர் (1951)
XI.மாலை
22. தினகரமாலை (தினகரவெண்பா) (1932)
23. திருக்கோளூர் சுவாமி வைத்தமாநிதி திருப்பணிமாலை (1933)
24. தென்திருப்பேரை சுவாமி மகரநெடுங் குழைக்காதர் திருப்பணிமாலை (1933)
XII. வகுப்பு
25. கரவகுப்பு (1937)
26. களவகுப்பு (1937)
27. சக்தி வகுப்பு (1937)
28. சொரூப வகுப்பு (1937 )
XIII. விலாசம்
29. பூகோள விலாசம் (1933)
XIV.விருத்தம்
30. நரி விருத்தம் (1941)

பின்னிணைப்புகள்
==============

1. இராமப்பய்யன் அம்மானை

தாரணிரா மய்யன் சடைக்கன் தனைப்பிடித்துப்
பாரறிய வந்தபடை பண்பாக - மாமதுரைச்
சித்தி விநாயகனே செங்கமலை தன்மருகா
புத்திமிக வேணுமே போற்றி.

காப்பு
கற்தன் திருமகனே காரானை மேனியனே
சத்திக் கணபதியே தய்யனல்லாள் புத்திரனே
வித்தை விநாயகனே[*] வேறுவினை வாராமல்
புத்தி மிகத் தந்து போத வரமருள்வாய்
சித்தி விநாயகனே தென் கூடல் வாழ்பவனே       5
பத்தியுடன் அம்மானை பாட வரமருள்வாய்
வெற்றி விநாயகனே வேலவற்கு முன்னோனே
சித்த மிரங்கித் திருவாக்குத் தந்தருள்வாய்
கந்தனே யிக்கதையைக் காத்தருள வேணுமையா
மைந்தா குமரா மயிலேறுஞ் சேவகனே[@]       10
என்று மயிலேறும் இளைய பெருமாளே
மாறிவரு சூரர்தம்மை வாகாக வென்றோனே

நூற் பொருள்
ராமப்பய் யன்படைப்போர் நன்றாக யான்பாடக்
காமன் தனையெரித்த கண்ணுதலோன் முன்னடவாய்
ஆஸ்த்தான போசன் அதிவீர ராமயன்மேல்[#]       15
மன்னர்கள் மெச்சு மதியூகி ராமயன்மேல்
மாற்றலர்கள் சிங்க மன்னன்புரை ராமயன்மேல்
திக்கடங்க வெட்டித் திறைகொண்ட ராமயன்மேல்
ஆராரும் பாடுகின்ற அம்மானை பாடுகிறேன்
---------------
[*] வினாயகனே, [@] சேவுகனே, [#] ராமயனே.
--------------

(ராமப்பய்யன் சடைக்கத்தேவர் மேற்
படையெடுத்துச் செல்ல விடைபெறுதல்)
தென்னவனார் கச்சித் திருமலை நராதிபனைப்       20
பொன்னவனாம் ராமய்யனும் போற்றியிரு கையேந்தி
ஆண்டவனேயிப்போ அடியேன் சொல்விண்ணப்பங்கேள்
மதுரை நகராளு மன்னவனே நீர்கேளும்
பூவேந்தே யென்தனக்குப் பொருந்தி மனமகிழ்ந்து
தேவேந்திரன் பட்டம்போல்ச் செய்விச்சீர் மன்னவனே       25
அன்றுமுதலின்றளவும் அடியேனும் உன் தனக்கு
அட்டதிக்கு மெட்டு மானபதி னாறு மெல்லாம்
திக்கடங்க வெட்டித்திறை கொண்டே தானுமின்று
வணங்காத மன்னர் தம்மை வணக்குவித்தேன் ஆண்டவனே
நின்னருளால் மன்னர் தம்மைநீள நிலத்தில் வெட்டிக்       30

கட்டாத கப்பமெல்லாம் கட்டுவித்தேன் நின்னருளால்
கண்டு வணங்காதான் கைகட்டி நில்லாதான்
எல்லோரும் வந்து எமக்குப் பணிவிடைதான்
என்பேருஞ் சொன்னால் எதிர்ப்பர்களோ மன்னவர்கள்
வானுலகில் வந்(தெ) திர்த்த மன்னரையுந் தான்பிடித்துக்
கட்டிக் கொடுவருவேன் கற்தன் சமுகமதில்
தஞ்சாவூர்க் கோட்டைதனைத் தவிடுபொடியாக்கிவைப்பேன்
கோவிலடிக் கோட்டையிலே கொள்ளையிட்டுக் கொண்டிடுவேன்
எனக்குவிடை தாருமய்யா வென்று(ரைத்)தான் ராமய்யனும்

விறுதுபுகழ் ராமாநீ வீரியங்கள் பேசாதே       40
ஆண்டவனே இப்போது அடியேன்சொல் விண்ணப்பங்கேள்
-------------------
20 2 கட்சித், 27. 2 ராமய்யனைப் 24.2 யெந்தனக்குப், 26. 4 உந்தனக்கு,
28-31. இவ்வரிகளுக்குப் பதில்:
திட்டனவே வெட்டித் திறைகொண்டு நான்வருவேன்
வணங்காத பேறையெல்லாம் வணங்கவைப்பேனாண்டவனே
34.3 எதுப்பற்களோ.
-------------------------
பாளையக் காறரெல்லாம் பயந்து வணங்குவர்காண்
வணங்காமல்த் தானிருக்கும் வண்ட மறவனையும்
வளைந்து பிடித்துவந்து வணங்கவைப்பேனாண்டவனே

45. எனக்குவிடை தாருமய்யா என்றுரைத்தார் ராமய்யனும்
வேண்டாமடாராமா வீரியங்கள் பேசாதே
பண்டு முன்னாள் நம்சேனை பாருலகு தானறியக்
குழல்வாய்க் கிரையாகக் கொள்ளை கொடுத்தோமே
இன்று பகைத்தா லெதிர்த்தமன்னர் தான் நகைப்பார்

50. சேதுக் கரைதனிலே சென்றவர்கள் மீண்டதில்லை
வாளுக்கிரையிட்ட மறவன் வலுக்காறன்
துப்பாக்கி மெத்தவுண்டாந் தோறா மறவனுக்குத்
தன்னரசு நாடுந் தனிகோட்டை யாளுவனாம்
மதுரைப் படையென்றால் மதியான் மறவனுந்தான்

55. மறவர்கள் சற்று மதியார் வடுகனென்றால்
உன்னுடைய வாள்த்திறத்தை யொருக்காலு மெண்ணான்காண்
வேண்டாமடாராமா வீரியங்கள் பேசாதே
மன்னன் உரைத்ததெல்லா மனமகிழ்ந்து கேட்டுநின்று
கன்னன் புலிராமன் கைகட்டி வாய்புதைத்து

60. அரசர் பெருமானே ஆண்டவனே சொன்னீரே
பண்டு வடுகரென்று பாராமல் நீருரைத்தீர்
என்கீற்தி தன்னை யினிக்கேளும் ஆண்டவனே
வஞ்சனைகள் பண்ணுகின்ற மறவர்களெல்லோரும்
தஞ்சமென்று வந்து சரணஞ் சரணமென்பார்

65. தஞ்சாவூர்க் கோட்டைதனைத் தவிடு பொடி யாக்குவிப்பேன்
மைசூருக் கோட்டைதனை மதியாமல் நானடிப்பேன்
வங்காளம் கொங்கு மலையாளம் உள்ளதெல்லாம்
தங்காமலுன்பாதம் சரணம் பணியவைப்பேன்
வட்டான முள்ள மகிதலத்து மன்னரெல்லாம்

70. கட்டாத கப்பமெல்லாம் கட்டவைத்தே னுன்னருளால்
சதிரத்தை யெண்ணாமல் தான்குறும்பு சொன்னோரை
---------------------------------------------------------------------------------------
48.1-2 குளல்வாய்க் கிறையாகக், 65 4 யாக்கிவிப்பேன். 69 3 மகதலத்து.
---------------------------------------------------------------------------------------
மதுரைத்தலை வாயிலிலே வந்து பணியவைத்தேன்
வையகத்திலுள்ள மன்னர்மனு ராசாக்கள்
சேரப் பணிந்து தெண்டனிட்டு நிற்கலையோ

75. வல்லவனோ தான் மறவன் மகாபொருட்டோ மன்னவரே
இவ்வசன மெல்லாம் இயல்வா யுரைத்த பின்பு
மைவிழியார் மோகன் மன்னவனார் முன்னை நின்று
மெய்வசன மாக விளம்பினார் ராமய்யனும்
சென்றே மறவனுட செய்தியெல்லாம் பார்த்துவரப்

80. பண்டைப் படைவெட்டும் பார்த்து வருவேனான்
ஆண்டவனேயிப்போ தனுப்புவிக்க வேணுமென்றார்
போய்வாறே னய்யா பொருந்தவிடை தாருமென்றார்
போய்வாறே னென்றதொரு புகழ்ரா மனைப்பார்த்து
வணங்கா முடிவேந்தன் வாகாய்ச் சிரித்துரைப்பார்

85. எப்படியோ வென்று எண்ணி நினையாமல்
இல்லாத செய்தியெல்லாம் ஏனுரைத்தாய் ராமாநீ
முன்னமே தானிறந்த முனைவடுகர் பற்றாதோ
மறவனுட பூமியிலே மாள்வையென்று கற்பினையோ
என்றுசொல்லி மன்னவனும் இயம்புவா னப்போது

90. பெற்றார் பிறந்தார் பெயர்போன நங்குலத்தார்
உற்றார் உறமுறையா ருள்ள வடுகரெல்லாம்
பாளையக் காறர் படைத்தலைவரெல்லோரும்
வேளையத்தில் வென்றுவரும் வீரப்பரிவாரங்களும்
தொட்டியார் கம்பளத்தார் தோறாத சேவகரும்
95. சூரப்பய்ய னைவெட்டிச்சூறையிட்டான் கண்டாயே
ஆங்காரியஞ்சொல்லும் அருணாத் திரிதனையும்
பண்டுவடுகர் படைத்தலைவரத்தனையும்
சதுரேறி வெட்டிச் சதிமானஞ் செய்தவன்காண்
சேதுக் கரைதன்னில் சேர இறந்துவிட்டார்

100. காட்டிலே வெட்டிக் கழுகுபசி தீரவைத்தான்
வெற்றிச்சங் கூதிவிறுது பரித்தவன்காண்
----------------------------------------------------------------------------------------
72. 2 வாயலிலே, 74. 3 தென்றநிட்டு, 80.3 பாத்து, 81.3 தனுப்பிவிக்க,
87.4 பத்தாதோ, 90.1பெத்தார், 91.1உத்தார். 96.3 அருணசாஷ்த்
-----------------------------------------------------------------------------------------
முன்னமே வெட்டி முனைகண்டான் மறவனுந்தான்
இந்நாளி லேதான் எண்ணான் வடுகனென்றால்
வேண்டாங்காண்ராமய்யனே வீரியத்தை விட்டுவிடும்

105. தென்னவனே விண்ணப்பம் செய்கிறேன் கேளுமய்யா
முன்னமே நஞ்சேனை முரிந்தார்க ளென்றுரைத்தீர்
மன்னவர்கள் மெத்த மடிந்தார்க ளென்றுரைத்தீர்
அந்த மறவன் படும்பாடு கேளுமய்யா
என்தனுட வாள்த்திறத்தை இனிப்பாரு மன்னவனே

110. திரியோ தனனைச் சித்திர சேனன்முன்னாள்
பரிவாகத் தேர்க்காலில் பாசமுடன் கட்டுகைபோல்
அரக்கர் குலத்தை அனுமா ரறுத்தாப்போல்
மறக்குலத்தை நானும் வா(கா)ய்க் கருவறுப்பேன்
எட்டாம லோடியெங்கே யிருந்தாலும்

115. சென்றிறங்கி யெட்டாளநாள்த் தென்ன(வன்) பாருலகில்
நாடழித்துக் தீக்கொளுத்தி நன்னகரி பாழாக்கி
வெட்டிச் சிறைப்பிடித்து வேந்தன் சடைக்கனையும்
கட்டிக் கொடுவருவேன் கற்தனே யுன்பாதம்
ஆண்டவனே இப்போ அனுப்புவிக்க வேணுமென்றான்

120. போய்வாறேனய்யா பொருந்தவிடை தாருமென்றான்
வணங்கா முடிவேந்தன் மனமகிழ்ந்து தான்சிரித்து
நல்லதென்று சொல்லி நரபாலன் அப்போது
நம்பிக்கை முத்திரையும் நல்வயிர மோதிரமும்
தும்பிப் பதக்கன் சொ(ல்)வயிடூரியமும்

125. தாளிச் சவுக்களியுந் தங்கக் கடையமுடன்
ஆளிப் பதக்கமுடன் ஆனபீதாம்பரமும்
நீலக் கடுக்கன் நிரையாழி மோதிரமும்
அஸ்த்த கடையமுடன் ஆணிமுத்து மாலைகளும்
முத்துக் கடுக்கன் முன்கை முதாரியுடன்

130. கொத்துத் திராயுங் கோத்தமுத்துத் தாழ்வடமும்
சவ்வாது (ப் பொட்டுமிட்டு)த் தலையில்த் தலைப்பாகுவைத்துப்
--------------------------------------------------------------------------------------------
105.3 செய்யிறேன், 119.3 அனுப்பிவிக்க, 127.3 நிறையாளி, 130.4 தாவடமும்.
--------------------------------------------------------------------------------------------
பூஷணங்க ளுள்ளதெல்லாம் பூட்டியலங்கரித்து
மாயோகி யென்னுமொரு வான்பரியுந் தான்கொடுத்துப்
பட்டத்துக் குஞ்சரமும் பாங்குடனே தான்கொடுத்து

135. ஏற்ற பணிகொடுத்தார் எதிரில்லா ராமயற்கு
நேசமுடன் உன்தனக்கு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்
ஆறுசடைச் சொக்கர் அரனா ரருளாலே
அங்கயல்க்கண் மீனாட்சியம்ம னருளாலே
தீரவெட்டி வாருமென்று தென்னன் விடைகொடுத்தார்

140. விடைவாங்கிராமய்யனும் விறுது பலபேசிக்
கற்தனெனுந்துரையைக் கனகரற்றின மேடைதனில்
நின்றனுப்பிக் கொண்டு நீதியுடன் கைகுவித்து
ஆண்டவனே இப்போ தடியேனும் போய்வாறேன்
போய்வாராய் ராமாவென்று பொருந்தி மனமகிழ்ந்து

145. வீரியவா னென்றாலும் வெஞ்சமரில் பத்திரமாய்க்
கச்சைகட்டிப் பாளையத்தில் கண்தூக்கங் கொள்ளாமல்
எச்சரிக்கை மேலேயிருந்துகொள்ளுங் காரியத்தை
பாரி படுக்களமும் பதனமாய்த் தானிறுத்தி
வாதுசொல்லி நீபோறாய் மறவன் சதிகாறன்

150. அப்போது ராமயனும் அன்பாய் மனமகிழ்ந்து
புறப்பட்டான் ராமயனும் பேருலகு தானறிய
கொலுச்சா வடிதனிலே கொலுவிருந்தான் ரா(ம)யனும்
அந்தநாள் சென்று அலைகதிரோன் போய்மறைந்தான்

மீனாட்சி கோயிலிற் சென்று ராமப்பய்யன் வரம்வேண்டல்

மற்றநாள்த் தானு மன்னன்புலி ராமயனும்

155. செப்பமுடன் மீனாட்சி திருவாசல் தன்னில்நின்று
சிங்கார மண்டபமுந்திருத்தேரும் உன்தனக்கு
வங்கார மாக வயிரப்படி தங்கப்படி
மெய்ப்பாகக் கட்டிவைப்பேன் மீனாட்சியேயுமையே
என்தனுட சேனை இளந்தலையாய்ப் போகாமல்
---------------------------------------------------------------------------------------
134 4தான்குடுத்து, 151.1 பிறப்பட்டான்.
------------------------------------------------------------------------------------------
160. வந்த மறவனுடன் வாகாய்ச் சமர்பொருது
வெற்றிகொண்டு மீண்டுவர வேக முடனருளும்
கன்னி மதுரமொழிகயிலாசர் தன்துணையே
என்று மிகப்போற்றி யேற்ற மலரடியைத்
தெண்டனிட்டு மெள்ளத் திறமாய் வெளியில்வந்து

(தமையன் வயித்திஅய்யனிடஞ் சென்று ராமப்பய்யன் விடைபெறுதல்)
165. ஆரவா ரத்துடனே ஆர்ப்பரித்துக் கொக்கரித்துத்
தமையன் வயித்தியய்யன் தார்வேந்தன் தன்னிடத்தில்
மதியா மறவன்மேல் மன்னவனே போய்வாறேன்
அண்ணா நீ ரென்னை அனுப்புவிக்க வேணுமென்றார்
என்றுசொன்ன தம்பியரை யேறிட்டுத் தான்பார்த்து

170. என்துணைவா தம்பியரே யென்வார்த்தை கேளுமினி
மறவன் சதிகாரன் மதியா னொரு நாளும்
தன்னரசு நாடு சதிமானஞ் செய்திடுவான்
சேதுக் கரைதனிலே சென்றவர்கள் மீண்டதில்லை
சேதுவிலே படையெடுத்தோர் திரும்பினபே ருண்டோகாண்

175. வாதுசொல்லி நீபோறாய் மறவன் வலுக்காறன்


உன்னுடைய வாள்த்திறத்தை யொருக்காலு மென்னாண் காண்
விறுதுக்கு வெட்டிவரும் வேந்தனே தம்பியரே
இவ்வசன மெல்லாம் இயல்பா யுரைத்தபின்பு
கன்னன்புலி ராமயனுங் கைகட்டி வாய்புதைத்து

180. என்னுடைய வாள்த்திறத்தை யினிக்கேளும் அண்ணாநீர்
பண்டு வடுகரென்று பாராமல் நீருரைத்தீர்
சென்றிறங்கி யெட்டாநாள்த் தேவரீர் பாருமினி
நாடழித்துத் தீக்கொளுத்தி நன்னகரம் பாழாக்கி
வெட்டிச் சிறைப்பிடித்து வேந்தரையுந் தான்துரத்திக்

185. கட்டிக் கொண்டு நான்வருவேன் கச்சித் திருமலை யேந்திரன்முன்
அண்ணாநீர் இன்று அனுப்பிவைக்க வேணுமென்றார்
போய்வாறே னய்யா பொருந்திவிடை தாருமென்றார்
அவ்வார்த்தை கேட்டு ஆனதொரு அய்யனுந்தான்
போய்வாரு மென்று பொருந்தி மனமகிழ்ந்து
-----------------------------------------------------------------------------------------
165 1 ஆர்பா, 168.3 அனுப்பிவிக்க.
-----------------------------------------------------------------------------------------
190. என்றுரைத்த தம்பியரை யேறிட்டுத் தான்பார்த்துக்
கட்டியே தம்பியரைக் கனபுயத்தி லேயணைத்தார்
இருகண்ணால் நீர்தளும்பி யேங்கி மிகத்தழுவி
எச்சரிக்கை மேலே யிருந்துகொள்ளுங் காரியத்தை
பாரி படுக்களமும் பதனமாய்த் தானிறுத்தி

195. வீரியவா னென்றாலும் வெஞ்சமரில்ப் பத்திரமாய்க்
கச்சைகட்டிப் பாளையத்தில் கண்தூக்கங் கொள்ளாமல்
அண்ணனுந்தான் சொல்ல அதிவீர ராமய்யனும்
நின்றனுப்பிக் கொண்டு நீதியுடன் கைதொழுது

(படைகளுடன் புறப்பட்டுக் கடைவீதியின் வழிச்சென்று
சின்னராவுத்தர் பாளையத்திற் கூடாரமடித்தல்)

சிவிகை தனிலேறிச் சிறந்த மதுரையிலே

200. கொலுச்சாவடிகடந்து கொற்றவனுந் தானடந்தான்
பாளையக்காரர் படைத்தலைவரெல்லோரும்
எண்ணவொண்ணாக் கோடிபடை யெல்லோருஞ் சூழ்ந்துவர
ஆனை குதிரையளவிறந்த சேனையுடன்
மட்டில்லாச் சேனையுடன் வந்திருந்தார் மண்டபத்தில்

205. ஏறிட்டுத்தான் பார்த்து எல்லோரும் வாருமென்று
(போய்ப்புகுந்)து அய்யனுந்தான் போசனைப்போல் தானிருந்தார்
இந்திர லோகம்போல் இருந்ததுகாண் மதுரைநகர்
நடந்தான் புலிராமன் நல்லபெருஞ் சேனையுடன்
ஆனைமேல் பேரிகை அலைகடல் போல்முழங்க

210. ஒட்டகைமேல் பேரிகை யுலகங் கிடுகிடெனக்
குதிரைமேல் டம்மானங் குமுகுமென்று தான்முழங்கப்
பதினெட்டு மேளவகை பண்புடனே தான்முழங்க
ஆயிரம் பல்லாக்கு அதிவீரர் சூழ்ந்துவரக்
குஞ்சரமும் வான்பரியும் கோடேற்று முன்னடக்கக்

215. கட்டியக் காரர் கனவிருது கூறிவரப்
பஞ்சவர்ணப் பாவாடை கொஞ்சி மிகப்போட
-----------------------------------------------------------------------------------
190.இவ்வடி தவறாக எழுதப்பட்டுளதெனத் தோன்றுகிறது; 169ம் அடி பார்க்க
191.1-2கட்டியணைத் தெம்பியரை, 192. 2 நீர் தளம்பி, 203. 3 யிளவறந்த,
207.3 இருந்துதுகாண் 214 3 கோடேற்ற.
------------------------------------------------------------------------------------
விருது வகைகளெல்லாம் வேடிக்கையாய்ச் சூழ்ந்துவரக்
கவிவாணர் கொண்டாடக் கண்ணன்புலி ராமயனை
எக்காளம் ஊத இயல்முரசு தான்முழங்க

220. மெய்க்காளம் ஊத மிகவிருது கூறிவரத்
தூளிப் புகையாகத் தூசியிலே தானடந்தார்
அந்தரத்தில் தூளெழும்பி ஆதித்தனை மறைக்கக்
கடைவீதிதன்னில் புறப்பட்டார் ராமயனும்
மதுரைப் பதிவாழு மங்கையர்க ளெல்லோரும்

225. தேவேந்திரனோதிருமாலோ என்பாரும்
பூவேந்தன் என்பாரும் போசனிவன் என்பாரும்
மன்மதன்காண் என்பாரும் மதிமந்திரிகாண் என்பாரும்
பூலோகந் தழைக்கவந்த புண்ணியவான் என்பாரும்
என்று புலம்பியேமாந்து நிற்பாரும்

230. நின்று புலம்பி நெடுமூச் செறிவாரும்
உடுத்த கலைசோர ஒய்யாரக் குழல்சரியக்
கதித்துவிம்முந் தனத்தைக் கையாலே தானமுக்கி
இப்படியே பார்த்துநின்றார் ஏந்திழைமா ரெல்லோரும்
செப்பமுடன் ராமயனும் தீரன் பவனிவந்தான்

235. வைகை யொருபுறமாய் வந்தே யிறங்கிநின்று
சென்றே யிறங்கினார் சின்னராவுத்தர் பாளையத்தில்
எண்ணெய்க் குடத்தை யெறும்புவந்துசூ(ழ்)ந்தாப்போல்
வண்ணக் கடல்போலே வளைந்தடித்தான் கூடாரம்
ஆயிரங் கூடாரம் அடித்தார்கள் கொற்றவர்கள்

240. அந்நேரந் தன்னில் அலைகதிரோன் போய்மறைந்தான்
ஆழிநெடுந் தேரேறி அலைகதிரோன் வந்துதித்தான்

(வண்டியூர்க் கோட்டையிலே வந்திறங்கிக் கொலுவிருந்து
செயமக்களை யழைத்துச் செய்திசொல்லித் திருப்பூவணத்திற்கு
வந்து கூடாரமடித்தல்)

மற்றநாள் தானு மன்னன் புவிராமயனும்
வண்டியூர்க் கோட்டையிலே வந்தே யிறங்கினர்காண்
---------------------------------------------------------------------------------------
217 2 வகையளெல்லாம், 223.3 புறப்பட்டார், 2371 எண்ணைக்
---------------------------------------------------------------------------------------
கோட்டையிலே வந்திறங்கிக் கொலுவிலே தானிருந்தார்

245. செயமக் களைத்தான்சேர அழைக்கச் சொன்னார்
அந்தச் சணமே அழைத்து வந்தாரெல்லாரும்
கூட்டமிட்டு வந்தார்கள் கொலுவிட்டு மன்னவர்கள்
நாட்டமுடன் செய்தியெல்லாம் நன்றாகத் தானுரைத்தார்
சேது மறவனைத்தான் சென்று பிடிக்கவென்று

250. வீரப்பரி வாரங்களே மேல்ச்செய்தி யென்னவென்றான்
முந்திவாது சொல்லிவந்தேன் மன்னன் சமூகத்திலே
சூரனே அய்யாவே தொறாத ஆண்டவனே
முந்தின சண்டையிலே முறிந்துவந்தா ரெல்லோரும்
இந்த விசையும் இளப்பங்கள் வாராமல்
255. தந்திரமாய் அத்தேசந் தான்போக வேணுமென்றார்
பஞ்சவர்க்கு மாயன் பாரித்து நின்றார்போல்
வஞ்சவினைசெய்த மறவனுக்கு அப்போது
தனுக்கோடிக் காவலென்று சாங்கமாய் நின்றார்கள்
ஆகையினால் முன்சேனை அமடுபட்ட தென்றுரைத்தார்

260. கேட்டுத்தான் ராமயனுங் கெறுவிதமாய்ச் சொல்லுவனாம்
பாளையக்காரர் படைத்தலைவரெல்லோரும்
வேளையமாய் ராமயனும் வெகுவரிசை தான்கொடுத்து
ஏறுங்கோ பல்லாக்கு யெடுங்கோடா கூடாரம்
சந்திரரும் சூரியருந் தானவருங் கொண்டாட

265. இந்திரன்போல் ராமயனும் ஏறினான் தண்டிகைமேல்
வச்சிர சரீரமென்று வாழ்த்திப் பிராமணரும்
அச்சதையுந் தான்கொடுத்தார் ஆறா யிரம்பேர்கள்
நடந்தான் புலிராமன் நளினப் பரியேறி
உருவிய வாள்க்காரர் ஒன்பதினா யிரம்பேர்கள்

270. சருவிப்பொரு மல்லையர்கள் தண்டிகையைச் சூழ்ந்துவர
மைக்கொழுந்து போலே மகாசேனை சூழ்ந்துவரத்
திக்கெழுந்த சூரியனைச் செந்தூள்கள் தான்மறைக்கச்
சென்றே யிறங்கினார் திருப்பூவணந் தன்னிலே
ஆற்றங் கரையும் அடர்ந்தமரச் சோலையிலே
---------------------------------------------------------------------------------------
259 3 அமடுபட்டு, 274.1 ஆத்தங்.
------------------------------------------------------------------------------------------
275. ஏரிக் கரைகளெல்லாம் இறங்குவித்தார் பாளையத்தைத்
துடியான மன்னவரைச் சுற்றி யிறங்கச்சொல்லிக்
கச்சைக்கட்டிப் பாளையத்தில்க் கண்தூக்கங் கொள்ளாமல்
பாரி படுக்களமும் பதனமாய்த் தானிருந்தார்

(திருப்பூவணத்திலிருந்து மானாமதுரைக்கு வழிநடத்தல்)
கங்குல் விடிந்து கதிரோன் எழுந்தபின்பு
280. மன்னன் புலிராமன் மன்னவரைத் தானழைத்து
ஒழுகுப் படியே யுற்றபடை ராணுவெல்லாம்
அந்தப்படியே அழைக்கச் சொன்னாரய்யனுந்தான்
மற்றநாள்த் தானும் மன்னன்புலி ராமயனும்
தேவர்கள் பூசைபண்ணுந் திருப்பூ வணத்தைவிட்டு

285. மானா மதுரைக்கு வழிகொண்டு போகச்சொன்னார்
கூடாரந் தான்பிடுங்கிக் கொல்லிட்டுத் தானடந்தார்
வைகை வழியாக நடந்தார்கள் சேனையெல்லாம்
மன்ன(ன்) புலிராமன் மதம்பொழிந்து கொக்கரித்து
நடந்தான் புலிராமன் நல்லமுத்து மாலைகொஞ்ச

(வழியில் மாவலிவாணனது ராஜகெம்பீரன் கோட்டையைக் காணுதல்)
290. வாற வழிதனிலே மண்கோட்டை யேதுவென்றார்
கிளியினங்கள் பாடுங்கிறுங்காத கோட்டையென்றார்
ஆடும் பரியும் அழகருட சீமையென்றார்
மாவலி வாணன் மன்னன் இருந்தவிடம்
காடுகளைத் தான்பார்த்தான் கன்னன்புலிராமய்யனும்

295. அந்நேரந் தன்னிலா யிரம்பேரைத் தானழைத்துக்
காடுவெட்டி முள்ப்பொறுக்கிக் கட்டையற வேபறித்து
ராசகெம்பீரன் நல்லபெருங் கோட்டைதனை
ஏறிட்டுத் தான்பார்த்தார் எல்லோருங் கெடிகலங்கி
கூவிக் கடல்போலே கொக்கரித்துச் சேனைவெள்ளம்

300. தாவிப் பரிவாரந் தளத்துடனே தான்கூடி
(வானரவீரமதுரையில் இறங்கிக் கூடார மடித்துக் கொலுவிருத்தல்)
-------------------------------------------------------------------------------
276 3 சுத்தி, 296.2 முள்ப்புறக்கிக்
-----------------------------------------------------------------------------------------------
வானர வீரன் மதுரைதனில் வந்திறங்கி
ஆற்றங் கரையும் அடர்ந்த மரத்தடியும்
தோப்பு மரமுஞ் சோலையிடங் கொள்ளாமல்
பாலை(ப்) பருக்குமந்தப் பாங்காண ஊரணியும்

305. மன்னன் புலிராமன் மனமகிழ்ந்து கொக்கரித்து
ஏரிக் கரைக்குள் இறங்கினார் பாளையமும்
எண்ணிக்கை யேபிடிக்க எல்லாரும் வந்துநிற்க
ஆனை அறுநூறு ஆறா யிரங்குதிரை
ஒட்டகை யெழுநூறு உபைய தளத்துடனே

310. இந்திரன்போல் ராமய்யனும் ஏகாந்தக் கொலுவிருந்தார்
அந்தநாள்ச் சென்று அலைகதிரோன் போய்மறைந்தான்

(படையெடுப்பைப் பற்றித் தூதன்முலமாகச் சடைக்கன் அறிதல்: சபதம்)
கங்குல் விடிந்து கதிரோன் எழுந்திருந்து
சடைக்கனுட தூதுவனும் தளத்தையெல்லாம் தான்பார்த்துக்
கெடிகலங்கியே பயந்து கெடிசடைக்கண் முன்னேவந்து

315. தெண்டனிட்டுத் தூதுவனும் செப்பினா னப்போது
ஆண்டவனே இப்போ அடியேன் பயந்துவந்தேன்
என்றுசொன்ன தூதுவனை ஏறிட்டுத் தான்பார்த்து
ஒன்றுக்கும் அஞ்சாதே உரையடா தூதுவனே
கச்சித்திருமலை யேந்திரருக்குக் கண்ணான ராமய்யனாம்

320. காசினியில் வேந்தர்தம்மை கப்பங்கட்டச் செய்தவனாம்
வணங்காத பேரை வணங்கவைத்த ராமய்யனாம்
மானா மதுரையிலே வளைந்தடித்தார் கூடாரம்
கோடிக் குறுவெள்ளம் கொண்டுவந்து விட்டாற்போல்
இந்தப்பெருஞ் சேனைவெள்ளம் எங்கே யிருந்ததய்யா

325. கண்டு பயந்துவந்தேன் கற்தாவே ஐயாவே
பூண்ட மணிமார்பன் புகழ்ச்சடைக்க னப்போது
சீறுவடி வாள் அசைத்துச் சினந்தான் சடைக்கனுந்தான்
எறிந்துவிட்ட பம்பரம்போல் இங்கே நீ ஓடிவந்தாய்
முன்னாள் நம்மாலே மூண்டுவந்த மன்னர்ஸர்வம்
--------------------------------------------------------------------------------------
306.1 ஏரைக், 311 2 செண்டு, 317.1-2 யெண்டு சொன்ன தூதுவனெ,
318.3 ஒரையடா, 328 1-2 எறிந்தி விட்டுப் பம்பறம்போல்.
-----------------------------------------------------------------------------------------
330. பறம்பக்குடிக் கோட்டையிலே பட்ட தறியானோ
துப்பாக்கி தன்னாலே சூறையிட்டேன் கண்டாயே
அறிந்திருந்து பார்ப்பான் அவன்படைதான் வந்ததென்றால்
இதுக்குப் பயந்துவந்தா யென்னடா தூதுவனே
சூரப்பய்யனைத் துரத்திச் சூறையிட் டேன்கண்டாய்

335. அருணாத் திரிதனையும் அவன்படைக ளத்தனையும்
குழல்வாய்க் கிரையாகக் கொள்ளைகொண்ட தறியானோ
சடைக்கனுடவலுவைத்தானும் அறியானோ
அறிந்து மிருக்கலையோ அவனுந்தான் சொல்லலையோ
என்னை மெலிவிக்க எவரால் முடியுமடா

340. எண்ணாமல் வந்து இறங்குமந்தப் பா(ர்)ப்பானைக்
கண்ணைப் பிடுங்கிக் காட்டிலே யோட்டாட்டால்
என்பெயர் தான்சடைக்கன் எடுத்ததுவும் ஆயுதமோ
பின்குடுமி தன்னில்ப் பேருலகு தானறியத்
தேங்காயைக் கட்டிச் சிதற அடியாட்டால்

345. என்பேர் சடைக்கன் எடுத்ததுவும் ஆயுதமோ

(ராமநாதபுரத்துப்பண்டாரம் பகைத்திறமொழிதலும்
சடைக்கன் கோபித்தலும்)
ராமநாத சுவாமிபூசைபண்ணும் நல்லதொரு பண்டாரம்
வாள்க்கோட்டை ராயன்மதச் சடைக்கன் முன்னேவந்து
உம்முடைய வாள்த்திறத்தை உரைத்தீரே மன்னவரே
மன்னப் புலிராமன் வாய்த்திறமுங் கைத்திறமும்

350. இப்போது நானுரைக்க இனிக்கேளு மன்னவரே
பாளையக் காறரேல்லாம் பணியாத பேருமுண்டோ
அரசர் படையோடே ஆண்மைசெய்ய வேண்டாங்காண்
கற்தன் பெரும்படைதான் கடல்போலே வந்ததென்றார்
சென்றுவணங்கித் திரையிடவே வேணுமென்று

355. காண வெனக்கடுகிக் கப்பங்கட்ட வேணுமென்றார்
பண்டாரஞ் சொன்னதற்பின் பாங்காய்ச் சடைக்கனுந்தான்
செங்கமலக் கண்கள் சிவக்கவிழி நீர்ததும்பச்
சீறிவடிவாளசைத்துத் தீரன் சடைக்கனுந்தான்
---------------------------------------------------------------------------------------------
331. 3 சூறையிட்டான், 332.4 வந்துதென்றால், 335.4 ளத்தினையும்,
338 2 மிருக்கிலையோ; 4 சொல்லிலையோ, 341 2 பிடிங்கிக்,
353 1 கத்தன்; 4 வந்து தென்றார். 355.1-2 கணவென நடகிக், 356.1 பண்டாறஞ்.
-----------------------------------------------------------------------------------------------
பார்ப்பான் தனக்குப் பயந்துமெள்ளத் தானுமினிக்

360. கப்பமுங் கட்டிக்கைகட்டி நிற்பேனோ
ஈழத்து மன்னவர்கள் என்னை நகைப்பார்கள்
மண்டலத்தி லுள்ள மன்னர் நகைப்பார்கள்
அவ்வார்த்தை கேட்டு ஆனதொரு பண்டாரம்
என்வார்த்தை தன்னை இனிக்கேளா யாமாகில்

365. ஆசார வாசல் அரமனைக்கு உள்ளதெல்லாம்
இடித்துப் பரவி எருக்கு விரைப்பான்காண்
பேய்கொண்டான் ஆண்டிபிடரியிலே போடுமென்றார்
அந்த மொழிகேட்டு ஆனதொரு பண்டாரம்
ஆண்மைத் திறங்கள் அறிவேமென்று பண்டாரம்

370. கோவித்தெழுந்திருந்து கோவிலேயே போனார்காண்

(சடைக்கன் தனது படைவீரர்களை அழைத்துக் கூத்தன்மகன்
சேதுபதியின் பொருட்டு இராமப்பய்யன் படையெடுத்து
வந்தமை சொல்லுதல் வீசு கொண்டைத்தேவன் மறுமொழி)
பண்டராம் போனதற்பின் பாங்காச் சடைக்கனுந்தான்
என்மருகா வன்னியரே இப்புதுமை கேள்க்கலையோ
மதியாரழகனையும் வாவென்று தானழைத்து
மக்கத்திலானையெனு மதப்புலியைத் தானழைத்துச்

375. சின்னாண்டி பெரியாண்டி சென்றுசமர் வென்றவனே
வெண்ணிமாலை குமரா வீராணி வாவென்று
சேதுக்கு வாய்த்த சேவகனே வாவெனவே
வாதுக்கு வெட்டிவரும் மதுரைவழி கண்டவரே
கொண்டயங் கோட்டைக் குறும்படிக்கு மன்னவரே

380. செம்பிநாட்டிலுள்ள சே(ர்)ந்தப்படை மன்னவனே
மங்கல நாட்டு வணங்காத மன்னவரும்
கன்னன் கலியாணி காவலனே வாவெனவே
றாவுத்த மாரே நயமுடனே வாருமென்று
வீசுகொண்டைத் தேவா வீமனே வாவெனவே
--------------------------------------------------------------------------------------
361.1ஈளத்து, 3631 அவ்வாற்தை, 367.1-2 பேய்தொண்டானானடி
377.3 சேவுகனே, 386.1 வாத்திசொல்லி.
--------------------------------------------------------------------------------------
385. குமாரனழகனையுங்கூப்பிட்டுக்கிட்டவைத்து
வாதுசொல்லிவெட்டிவரும் வணங்கா முடிவேந்தர்
பொத்தையுடையான் போர்வேந்தே வாருமென்று
கறுத்தவுடையான் கன்னனே வாருமென்று
றாவுத்தக் கற்தன் நல்லபடைக் காலாளும்

390. பாளையக் காறர் பரிவார மத்தனையும்
வாவென்றுதானழைத்துவரிசை மிகக்கொடுத்தார்
மாப்பிள்ளை வன்னியரே வாருமென்றுகிட்டவைத்து
வேங்கைப்புலிகளே வீரப்பரிவாரங்களே
முன்னாளில் வந்தவினை முடியவெட்டி வென்றீர்களே
395. அந்நாளிலென்னை அரசுநிலையிட்டீரே
இந்நாளில் வந்தவினை இயம்புகிறோம் கேளுமினிக்
கூத்தன்மகன் சேதுபதி வார்த்தை குறியாக
ராமப்பய்யனென்றொருவன் நம்பதியைத்தானோக்கி
மானா மதுரையிலே வந்தே யிறங்கினானாம்

400. மதச்சடைக்கன் தானுரைக்க மறவருமங் கேதுரைப்பார்
வீசுகொண்டைத்தேவன் வேந்தன் முகம்பார்த்துப்
பார்ப்பான் படையெடுத்தால்பாரமென்று சொன்னீரே
வந்த வடுகரெல்லாம்மடிந்தார்கள் அந்நாளில்
இந்த விசைவாறான் இவன்பிழைத்துப் போவானோ

405. வாறபடையத்தனையும்மடியவே போரிடுவோம்
சூறையிட்டுச் சுற்றித்துணிபிடுங்கி வாறோமையா
தீரன் சடைக்கன் செய்தியெல்லாங் கேட்டபின்பு

(சடைக்கன் மருகனான வன்னி தைரியங்கூறிப் படையுடன்
போருக்கெழுதல்; கடுக்கழத்தூர் காரடர்ந்தகுடி, காவனூர் என்ற ஊர்களைக் கடந்து செல்லுதல்)
மட்டுப்படாதவன்னியன் மதம்பொழிந்து கொக்கரித்துக்
கெட்டானோ பார்ப்பான் கீழ்த்திசையை நோக்கிவந்து
--------------------------------------------------------------------------------------------
387.1 மொத்தை, 393.2 புலியளே, 394 4 வென்றியளே,
395.3 அரிசிநிலை, 406. 2-3 சுத்தித் துணிபிடிங்கி.
---------------------------------------------------------------------------------------
410. பஞ்சாங்கஞ் சொல்லவொரு பாழூரு தானில்லையோ
பூசைபண்ணித் தான்பிழைக்கப் பிள்ளையார் தானில்லையோ
ஆசைகொண்டு வந்தானோ அறியாமல் பார்ப்பானும்
முன்வந்து தெறிபட்ட முதலிமார் சொல்லலையோ
வடுகர்பட்ட பாடெல்லாம் மறந்தார்கள் மன்னவர்கள்

415. பார்ப்பானும் இத்தேசம் படையெடுத்து வந்தானோ
இங்கே படையெடுக்க இனிவெட்கந் தானிலையோ
சாய்ப்பாக வந்த தளத்தை முரியவெட்டிப்
பார்ப்பான் குடுமியிலே பாங்குடனே தேங்காயைக்
கட்டியடிப்பேனென்றான் கன்னன்புலி வன்னியுந்தான்

420. மார்பிலிடும் நூல்பறித்து மாட்டுவடம் போட்டிடுவேன்
அண்டரெல்லாங் கொண்டாடும் அம்மானை யிப்போது
ஆண்பிள்ளை சிங்கம்வன்னி அம்மான் முகம்பார்த்து
வெண்டாள மார்பா விசாரமினி வேண்டாங்காண்
கண்டு வணங்கிவள்ளி கடுகியே தானெழுந்து

425. பொக்கிஷத்தைத் தான்திறந்து பூஷணங்கள் தானெடுத்து
ஆபரண முள்ளதெல்லாம் அன்பாகத் தானணிந்து
வங்கார மானவன்னி வாதுசொல்லித் தானெழுந்து
சிங்கார மாகவெகு சேனை தளத்துடனே
மதயானை தனிலேறி வந்தானே வீதியிலே

430. விதமான பெண்களெல்லாம் வேடிக்கை பார்க்கவந்தார்.
வெறுமை பிடித்தாப்போல் மெய்விரலை வாயில்வைத்து
அறுமறுக்கன் கொண்டாப்போல் அங்கிசைந்த பெண்களெல்லாம்
தன்னியத்தைக் கையாலே தானமுக்கி நிற்பாரும்
நின்று மயங்கி நெடுமூச் செறிவாரும்

435. உடுத்த கலைசோர ஒய்யாரக் குழல்சரிய
இப்படியே நின்றார்கள் ஏந்திழைமா ரெல்லோரும்
வன்னிதுரை என்பாரும் மன்மதன்காண் என்பாரும்
தேவேந்திரனோ திருமாலோ என்பாரும்
பூவேந்தன் என்பாரும் போசன் இவன் என்பாரும்
-----------------------------------------------------------------------------------------
411.3 புள்ளையார், 416.3 இனிவெக்கந், 419.4 வன்னியன்தான்,
425.2 தான் துரந்து, 429.4 வீதிஇலே, 433.3 தானமிக்கி,
439.1 பூவேந்திரன்.
------------------------------------------------------------------------------------------
440. இந்தப்புவியாளும் ராசன்காண் என்பாரும்
என்று புலம்பி யேமாந்து நிற்பாரும்
செப்பமுடன் வன்னித்துரை தீரன்காண் என்பாரும்
நடந்தான்பெருஞ் சேனையுடன் நல்ல வழிகூடி
நாடு கலக்கியெனும் நல்லதொரு வான்பரியைக்

445. கொண்டு வரச்சொன்னான் கோடையிடி வன்னியுந்தான்
ஏறினான் வான்பரிமேல் இயல்வேந்தர் சூழ்ந்துவர
ஆனை குதிரைபடை அன்பாகத் தானடக்க
ஆனைமேல் பேரிகை அதிர்ந்து முழங்கிவர
ஒட்டகைமேல் பேரிகை ஒக்க முழங்கிவரக்

450. குதிரைமேல் டம்மானங் கூட முழங்கிவரத்
தித்தியும் மத்தளமும் சேர ஒருபுறமாய்த்
தத்தி நடனமிடத் தாதியர்கள் தானாட
ஆனைத் திரளும் அடல்பரியு முன்னடக்கச்
சேனை மிகநெருங்கச் செந்தூள் மிகப்பறக்க

455. வானத்தின் மீன்போலே மன்னர் குடைநெருங்க
வாணப் பொதியுடனே வங்கார ஈட்டிகளாம்
அருவிகட்டி வல்லயங்கள் ஆர்ப்பரித்து முன்னடக்க
அம்புவில்லுக் காரர் அதிவீரர் சூழ்ந்துவரக்
கோடேறிக் சூழ்ந்துவருங் குப்பாயக் குழல்காரர்

460. வீரப்பரி வாரமெல்லாம் வெகுதிரளாய்ச் சூழ்ந்துவரக்
கட்டியக் காரர் கனவிருது கூறிவரப்
பஞ்சவர்ணப் பாவடை கொஞ்சி மிகவெறிய
ஆலவட்டம் பிடிக்க அதிவீரர் முன்னடக்கச்
சந்திர காவிடால் தளமெல்லாந் தானிலங்கக்

465. காவிக் குடைபிடிக்கக் கனவிருது கூறிவரச்
சாம்பிராணி தூபம் தலமெல்லாங் கமகமென
வெண்சாமரம் வீசி விருதுசின்னந் தானூத
நடந்தானே வன்னிதுரை நாவலர்கள் கொண்டாட
கடுக்கமுத் தூர்கடந்து காரடந்த குடிகடந்து
-------------------------------------------------------------------------------------------------
446.3 இயர்வேந்தர், 455. 1 மானத்தின், 456.4 ஈட்டியளாம்,
457.1 அரிவிகட்டி; 3 ஆர்ப்பரித்து, 459.1கோடேரி, 466. 3 தளமெல்லாம்
------------------------------------------------------------------------------------------------------------
470. வாய்த்ததொரு காவனூர் வழியாகத் தானடக்க
அந்தநாள் சென்று அலைகதிரோன் போய்மறைந்தான்

(படையை வகுத்து அரியாண்டி புரக்கோட்டை, புதுக்குடிக் கோட்டை,
போகலூர்க் கோட்டை, தொண்டி, இளையான்குடிக்கோட்டை,
இவைகளுக்கு அனுப்புதல்)
மற்றநாள்த் தானும் மன்னன்புலி வன்னிதுரை
மதியாரழகனையும் மன்னன் குமாரனையும்
சின்ன வூழியவகுப்பு சேர்ந்தபடை யத்தனையும்
475. அரியாண்டி புரக்கோட்டைக்கு அதிசீக்கிரத்தில் போகச்சொன்னார்
பொத்தை யுடையான் போர்வேந்தன் தன்படையும்
வீசுகொண்டைத் தேவன் வீமன் பெரும்படையும்
புதுக்குடிக் கோட்டைக்குப் போமென்று தாமுரைத்தார்
மதுரைவழி கண்ட மதத்தேவன் தன்படையும்

480. கறுத்த வுடையான் கன்னன் பெரும்படையும்
றாவுத்தக் கற்தன் நல்லபடைக் காலாளும்
போகலூர்க் கோட்டைக்குப் போமென்று தாமுரைத்தார்
வட்டாணந் தொண்டியிலே வையுந்தன் தாணையத்தை
இளையான் குடிக்கோட்டை யெச்சரிக்கை யென்றுரைத்தார்

(வன்னி அரியாண்டிபுரக்கோட்டைக்கு வருதல்:
போர் - வன்னியின் வெற்றி)

485. மற்றநாள்த் தானும் மன்னன்புலி வன்னியவன்
அரியாண்டி புரக்கோட்டையில் அதிசீக்கிரம் போயிறங்கிக்
கோட்டை புகுந்து கொத்தளத்தில் மேலேறி
எதிரி படையை யேறிட்டுத் தான்பார்த்து
எங்கே இருந்ததடா இந்தப் பெரும்படைதான்

490. கோடிக்கு(று) வெள்ளமெனக் கொண்டுவந்து விட்டானோ
வீரியங்கள் பேசிவன்னிவிதமுடனே ஆர்ப்பரித்துப்
பார்ப்பான் பெரும்படையைப் பார்முரிய வெட்டவென்று
இருந்த படைத்தலைவ ரெல்லாரையும் அழைத்து
அஞ்சாமல் பார்ப்பான் நெஞ்செதிரே வந்தானோ
------------------------------------------------------------------------------------
484.1 இளையாங், 489.2 இருந்துதடா 490.1கோடிக்கி.
----------------------------------------------------------------------------------
495. இறங்கின பாளையத்தை யெழுப்பவென்று தான்துணிந்து
கோட்டை திறந்து புறப்பட்டார் மன்னவர்கள்
பார்ப்பான் படைமேலே பாருலகு தானறிய
எறிந்தார் எறிவாணம் எல்லையற்ற சேனையின்மேல்
சுட்டார் குழல்காரர் சொல்லரிய மன்னரைத்தான்

500. குத்தி விரட்டிக் கூடாரங் கொள்ளையிட்டார்
வேறுபட்டுக்குத்தி விரண்டொடிப் போவாரும்
அய்யோ சிவனேயென்று அலறி விழுவாரும்
குத்துண்டு போர்க்களத்தில் குலவையிட்டு நிற்பாரும்
காலற்று வீழ்வாரும் கையற்று வீழ்வாரும்

505. குறைப்பிணமாய் நின்று கூத்தாடி நிற்பாரும்
வேலவனே என்பாரும் விதிவசமோ என்பாரும்
மன்னன்புலி வன்னியவன் வாகாகவே திரும்பி
வெற்றிச்சங் கூதினார் விருது சடைக்கனவன்
பார்ப்பான் பெரும்படையில் பட்டார்கள் முந்நூறு

510. மறவர் அறுபதுபேர் மாண்டார்கள் அக்களத்தில்
அந்தநாள் சென்று அலைகதிரோன் போய்மறைந்தான்

(கொண்டப்பய்யன் படைத்தலைவர்களைத் திரட்டி அரியாண்டி
புரக்கோட்டையின் வெளியிற் போர்புரிதல்: வன்னியின் வெற்றி)

மற்றனாள் தானும் மன்ன(ன்)புலி ராமய்யனும்
இந்தப் படைத்தலைவ ரெல்லோரையும் அழைத்து
அஞ்சாமல் தான்மறவன் நெஞ்செதிரே வந்தானோ
515. மாப்பிள்ளைக் கொண்டய்யா மன்னவனே வாருமென்று
திருமலைக் கொண்டப்பையா தீரனே வாருமென்று
சத்துருக்க னய்யனே தார்வேந்தே வாருமென்று
பொன்னமராயா போர்வேந்தே வாருமென்று
மண்டுருப் பாப்பய்யனே மன்னவனே வாருமென்று

520. நத்தத்தூர் லிங்கய்யனும் நல்ல படையாளும்
கொண்டப்ப நாயக்கன் கூட்டப் பெரும்படையும்
வீரமலை நாயக்க வேந்த(ன்) பெரும்படையும்
எட்டப்ப நாயக்கன் எல்லையற்ற காலாளும்
தொப்பய நாயக்கனும் தோறாத சேவகனும்
------------------------------------------------------------------------------------
496. 2 துரந்து 3 பிறப்பட்டார், 502 4 விழவாரும்,
523 3 எல்லையத்த, 524.4 சேவுகனும்.
------------------------------------------------------------------------------------
525. இறவப்ப நாயக்கன் எதிரில்லா மன்னவனும்
பூச்சிநாயக்கன் போர்வேந்தன் தன்படையும்
முத்தய நாயக்கன் மூவலூர் மன்னவனும்
தென்காஞ்சி மூக்கன் சீவலமாறன் படையும்
முடுகு நாட்டு மூவரையன் தன்படையும்

530. கோதமரெட்டி கூட்டப் பெரும்படையும்
குற்றாலத் தேவன் கூட்டப் பெரும்படையும்
தென்மலை வன்னியனும் சேனை பெருந்தளமும்
சின்னணஞ்சாத் தேவன் சேனை பெருந்தளமும்
கட்டபொம்ம நாயக்கன் கனத்தபெருஞ் சேனைகளும்

535. ஊற்றுமலையானும் உகந்தபெருஞ் சேனைகளும்
கீழ்முகத்துத் தும்பிச்சியும் கீர்த்தியுள்ளான் தன்படையும்
மேல்முகத்துத் தும்பிச்சியும் விருதுபுகழ்க் காலாளும்
ஏழுமடையில் இறவப்பன் தன்படையும்
கழுகு படையான் கதித்தபடைக் காலாளும்

540. ஒவள நாயக்கனும் உற்றபுகழ்க் காலாளும்
போருக் கதிகாரி பொம்மநாயக்கன் படையும்
அப்பாச்சிக் கவண்டன் ஆன பெருந்தளமும்
ஏழாயிரம்பண்ணை யெதிரிலான் தன்படையும்
கணக்கதிகாரிகவண்டன் பெரும்படையும்

545. இரவும் பகலுமிருந்துபொரு சேவகரும்
நரிக்கு விருந்தாக்கும் நல்லசிறு பொம்மணனும்
முட்டிவெட்டிச்சூறையிடும் முத்தப்பநாய்க்கன் படையும்
இருந்து பறந்துவெட்டும் இலுப்பையூர்க் காமாட்சியையும்
பழனியில் சின்னயனும் பார்வேந்தன் தன்படையும்

550. ஆய்க்குடிக் கொண்டையனும் அவன்படைக ளத்தனையும்
விருப்பாச்சி நாயக்கனும் வேந்தன் பெரும்படையும்
கன்னிவாடி நாயக்கனும் கதித்தபடைக் காலாளும்
லிங்கமநாயக்கன் நீதியுள்ளான் தன்படையும்
பெத்தண நாயக்கன் பெருஞ்சேனை யத்தனையும்
----------------------------------------------------------------------------------------
528.3 சீவிலிமாறன், 530.2 றுட்டி, 531.1 குத்தாலத், 535.1 ஊத்து,
540.3 உத்தபுக்கழ்க், 543. 1-2 யேளா இரம்பண்ணை, 545 4 சேவுகரும்,
546.1 நரிக்கி, 547. 2 சூரையிட்டு, 549.1 பளனிஇல்
----------------------------------------------------------------------------------------------
555. வாலப்ப நாயக்கன் வலுவுள்ளான் தன்படையும்
வெங்கம நாயக்கன் விறுதுபுகழ் காலாளும்
தென்னம னாடுசேனை பேருந்தளமும்
வீசுங்க னாடு விருதுபுகழ்க் காலாளும்
செல்லப்பொட்டி நாயக்கன் சேனை பெருந்தளமும்

560. திருமலைப் பூச்சியனும் சேனைபடையத்தனையும்
சொக்கலிங்க நாயக்கன் சொல்த்தவறான் தன்படையும்
விசுவப்ப நாயக்கன் வேந்தன்படை யத்தனையும்
மணலூரு நாயக்கன் மன்னன் பெருந்தளமும்
வேலப்ப நாயக்கன் வேந்தன்படை யத்தனையும்

565. மருதப்பத் தேவன் மன்னன்படை யத்தனையும்
கோடாங்கி ரெட்டி கொலைகார நத்தனையும்
முனைச்சமரில் நின்றுபொரும் மூங்கிலணைப் பூசாரி
பட்டத்து நாயக்கன் பரிவார மத்தனையும்
தென்னம னாடுசேனை பெருந்தளமும்

570. இருந்து பறந்துவெட்டும் இலுப்பையூர்க் காமாட்சி
வங்கார முத்தய்யன் வலுவுரைத்தான் தன்படையும்
அரியலூராரும் அவர்படையும் அத்தனையும்
மறுனூத்து நாயக்கன் மன்னன் பெருந்தளமும்
வால சமுத்திரத்தில் மன்னன்படை யத்தனையும்

575. குன்னத்தூர் ரெட்டி குமாரன்படை யத்தனையும்
நாஞ்சினாட்டுத் துரையும் நல்லபடை யத்தனையும்
திருநெல் வேலி சேர்ந்தபடை யத்தனையும்
மறுனூத்து நாயக்கன் மன்னன் பெருந்தளமும்
மலையாள ராசாவும் மன்னன் பெரும்படையும்
580. கொளும்பினில் ராசாவும் கூட்டப் பெரும்படையும்
ஏழாயிரம்பண்ணை யெதிரிலான் தன்படையும்
ஈரோடு தன்னில் எண்ணவொண்ணாக் கொங்குமன்னர்
நல்லமநாயக்கன் படையும் நாகமன் தன்படையும்
ஊற்று மலையானும் உகற்தமுடன் பூவணனும்
------------------------------------------------------------------------------
566.3-4 குலைகாரநத்தனையும், 570.2 பரந்துவெட்டும், 583.3 நாகமதன்,
584.3 னுகற்தமுடன்.
-----------------------------------------------------------------------------
585. கறட்டுமலைநாயக்கன் கன்ன(ப்) பெருந்தளமும்
கச்சைகட்டி நாயக்கன் கனத்த பெருந்தளமும்
காங்கய னாடு கன்னப் பெருந்தளமும்
மூங்கிலணைப் பூசாரி முனைச்சமரில் மன்னரெல்லாம்
காமாட்சி நாயக்கன் கன்னப் பெரும்படையும்

590. காமய நாயக்கன் கதித்தபடைக் காலாளும்
நாகம நாயக்கனும் நல்லபடைக் காலாளும்
போருக் கதிகாரிபொம்மயன் தன்படையும்
சேரலாரை வென்ற செங்கமலத் தாபிள்ளையும்
சிலுப்பொட்டி நாயக்கனும் சேனைவெள்ள மத்தனையும்

595. கோதம ரெட்டி கூட்டப் பெரும்படையும்
மன்மது கானும் வாய்த்த புரவிகளும்
ஆசிறு பேய்க்கும் அஞ்சாப் புரவிகளும்
உச்சிமிய் யாவும் உகந்த பெருந்தளமும்
சவ்வாசு கானும் தன்புரவி யத்தனையும்

600. வாய்மூசகான்தளமும் வாய்த்த புரவிகளும்
வாவுகான் தன்படையும் வாய்த்த கரிகளுடன்
சின்ன ராவுத்தர் சேர்ந்த புரவிகளும்
முசேகான் குதிரையும் முத்து முதலியரும்
காதுறு சாயபு கன்னன் புரவிகளும்

605. தானுதாய் ராவுத்தன் தன்புரவி யத்தனையும்
மீறா சாயபும் வேந்தன் பெரும்படையும்
அதிரி சாயபும் அடர்ந்துவருஞ் சேனைகளும்
மகமது சாயபு மன்னன் புரவிகளும்
கானு சாயபு கரித்த புரவிகளும்

610. படேகான் கிலுசும் வாய்த்த புரவிகளும்
மன்மதுகான் கிலுசும் வாய்த்த புரவிகளும்
மிசறுகான் தன்பரியும் வெகுமையாய்த் தானெழுந்து
எல்லோரும் வந்து இயல்பாகத் தானெழுந்து
உபையதள மெல்லாம் ஒருமிச்சுத் தான்திரண்டு
--------------------------------------------------------------------------------
588.1 மூங்கில்முனைப் 589.3 கன்னம், 593.3 சிங்கமலற்,
595.1-2 கோதை மறுட்டி, 5983 உகற்ந்த, 608.4 புரவியளும்.
----------------------------------------------------------------------------------
615. இன்றைக்கு லெக்காக எதிர்த்த மறவனையும்
சென்று பிடிக்கவென்று சீறிவடி வாளெடுத்து
மாப்பிள்ளை கொண்டய்யன் மதயானை போல்ச்சீறிப்
பாளையக் காரர் பலபேரைத் தானழைத்துப்
பதினெட்டுக் கையாகப் பாங்குடனே தான்பிரித்து

620. எட்டப்ப நாயக்கன் எதிரில்லான் தன்படையும்
இறவப்ப நாயக்கன் எல்லையற்ற காலாளும்
பூச்சிய நாயக்கன்போர்வேந்தன் தன்படையும்
கட்டப்பொம்மநாயக்கன் கற்னன் பெரும்படையும்
நேரே பொருகையிலே நெருங்கிச் சமர்பொருதார்

625. காமாட்சி நாயக்கன் கற்னன் பெருந்தளமும்
தென்காஞ்சி மூக்கன் சீவிலிமா றன்படையும்
முடுகு நாட்டுமூவரையன் தன்படையும்
முத்தய நாயக்கன் மூவலூர் மன்னவனும்
கோதமரெட்டி கூட்டப் பெரும்படையும்

630. குன்னத்தூர் ரெட்டி குமாரன் பெரும்படையும்
தென்மலை வன்னியனும் சேனை பெருந்தளமும்
முட்டிவெட்டிச்சூறைகொள்ளும் முத்தயநாய்க்கன் படையும்
நரிக்கு விருந்தாக்கும் நல்லசிறு பொம்மணனும்
கணக்கதி காரக் கவண்டன் பெரும்படையும்

635. கொப்பக் கவண்டன் குறிக்கவண்டன் மெய்க்கவண்டன்
சின்னணஞ்சாத் தேவன் சேனை பெருந்தளமும்
சிலுப்பெட்டிநாயக்கன் சேனைவெள்ள மத்தனையும்
சின்னம நாயக்கன் சேனை பெருந்தளமும்
வாலப்ப நாயக்கன் வலுவுள்ளான் தன்படையும்

640. கோலக் கொண்டய்யன் கூட்டப் பெரும்படையும்
ஏழு மடையான் எரிசின்னன் தன்படையும்
ஈரோடு தன்னில் எண்ணவொண்ணாக் கொங்குமன்னர்
காங்கய னாட்டில் கதித்த முனைக்கவண்டன்
தளவாயி னாயக்கன் தார்வேந்தன் தன்படையும்
---------------------------------------------------------------------------
617.3 மதையானை, 627 1 ஏற்ப்ப, 627.1 முடுக்கு,
633.1 நரிக்கி, 640. 2 கொடையான்.
----------------------------------------------------------------------------
645. நத்தத்து லிங்கய்யனும் நல்லபெருங் காலாளும்
நேரே பொருகையிலே நெருங்கிச் சமர்பொருதார்
இந்தவகை யெல்லாம் எல்லோருந் தான்துணிந்து
கோட்டை தனைவளைந்து கூடாரந் தானடித்தார்
கோட்டையில்க் குள்ளிருந்து குறும்படித்த மறவருந்தான்

650. சும்மா இருந்தால் சிரிப்பா ருலகிலுள்ளோர்
என்றுசொல்லி மறவர் எல்லோருங் கச்சைகட்டி
பா(ர்)ப்பான் பெரும்படைதான் பாரமோ என்றுசொல்லி
வந்தெதி(ர்)த்தார் மன்னர் வலுவறிய வேணுமென்று
அரியாண்டிபுரக் கோட்டைவிட்டு அன்பாய் வெளியி(ல்) வந்து

655. அஞ்சுகையாய்த் தான்பிரித்து அடந்து பொருகவென்று
கறுத்த வுடையான் கன்னன் ஒருகையிலே
வீசுகொண்டைத் தேவன் வீமன் ஒருகையிலே
பொத்தையுடையான் போர்வேந்தன் ஒருகையிலே
மதுரைவழி கண்ட மதத்தேவன் ஒருகையிலே

660. றாவுத்தக் கற்தன் நல்லபடை ஒருகையிலே
அஞ்சுகையாய்த் தான்பிரித்து அடர்ந்துசமர் பொருகையிலே
எறிந்தா ரேறிவாணம் எல்லையற்ற சேனையின்மேல்
சுட்டார் குழல்க்காரர் சொல்லரிய சேனையின் மேல்
வாளோடே வாள்முரிய மண்டிப் பொருதார்கள்

665. அம்புவில்க் காரன் ஆர்ப்பரித்துத் தான்பொருதான்
ஆனைகுத்திச் சோர்ந்து அலறி விழுவாரும்
இருபடையு மூண்டு எதிர்த்துச் சமர்பொருதார்
வாண மடிபட்டு மண்மேல் கிடப்பாரும்
குத்துண்டு போர்க்களத்தில் குலவையிட்டு நிற்பாரும்

670. குறைப்பிணமாய் நின்று கூத்தாடி நிற்பாரும்
வேல்க்குத்துப் பட்டு விரண்டோடிப் போவாரும்
வேலவனே என்பாரும் விதிவசமோ என்பாரும்
காலற்று வீழ்வாரும் கையற்று வீழ்வாரும்
முட்டிப் பொருதார்கள் மூவுலகுந் தீயெரியக்

675. கிட்டிப் பொருதார்கள் கீழுலகந் தீயெரிய
வலங்கையிலே நின்றபடை வளைத்துப்போர் செய்தார்கள்
இடங்கையிலே நின்றபடை யெதிர்த்துப்போர் செய்தார்கள்
தேக்கிலையில் நீரதுபோல் தியங்கியே தான்மறவன்
மன்னன் புலிராமன் மறித்தான் மறவரைத்தான்
------------------------------------------------------------------------------------------
659.1 மதுரைவளி, 660. 1- 2 ராவுத்தர் கூத்தன், 667.2 மூன்று
670.1 குறைப்பெணமாய், 676.3வளத்துப்போர்.
------------------------------------------------------------------------------------
680. மன்னன் புலிவன்னி வாகாகத் தான்திரும்பி
எதிர்த்துப்போர் செய்தான் எதிரில்லா வன்னியுந்தான்
பா(ர்)ப்பான் பெரும்படையும் பறந்து குலவையிட்டுக்
குத்தி விரட்டி(க்) கூடாரங் கொள்ளையிட்டு
மதச்சடைக்கன் தான்வளர்த்த வன்னிக்கு வாய்த்ததென்று

685. ஊடுருவச்சென்றான் உலகங் கிடுகிடென
வெட்டித் துரத்திவன்னி விறுதுகளுந் தான்பேசி
மன்னன்புலிராமன்படை மட்டில்லாச் சேனை வெள்ளம்
தட்டழிந்து கெட்டதுபோல் தலைகெட்ட நூலதுபோல்
மன்னன் புலிராமன் மட்டில்லாச் சேனையின்மேல்

690. மூவா யிரம்பேர் முழுதுமங்கே தான்மடிந்தார்
மறவர் படையில் மடிந்தார்கள் முந்நூறு
வெற்றிச்சங் கூதி விருதுகளும் பேசிவந்தான்
அந்தநாள் சென்று அலைகதிரோன் போய்மறைந்தான்

(மறுநாள் ராமப்பய்யனும் சடைக்கனும் ஒருவர்க் கொருவர்
வஞ்சினங்கூறி ஓலைவிடுத்தல்)
ஆழிநெடுந் தேரேறி அலைகதிரோன் வந்துதித்தான்

695. அன்று முரிந்து அடைந்தார்கள் பாளையத்தில்
மன்னன்புலி ராமன்படை மட்டில்லாச் சேனைவெள்ளம்
மறவனே ஆண்பிள்ளைகாண் மண்டலத்தி லுள்ளோரே
பெண்டுகளோ என்று பெருமூச்சுத் தானெறிந்து
மாப்பிள்ளை கொண்டப்பய்யன் மகாகோபங் கொண்டெழுந்து

700. வெங்கிட கிஷ்ணய்யன் வீமனே வாருமென்று
இருந்த படைத்தலைவர் எல்லோரையும் அழைத்து
அஞ்சாமல்த் தான்மறவன் நெஞ்செதிரே வந்தான்காண்
இன்றைக்கு லெக்காக எதிர்த்த மறவனைத்தான்
சென்று பிடித்துத் திசைநாலுங் கொள்ளையிட்டு
-----------------------------------------------------------------------------------------
681 1 எதிற்துப், 690.1முவ்வா, 684.3 வன்னிக்கி,
682 4 கொலவையிட்டுக் 692.1 வெத்திச்சங், 695.3 அடர்ந்தார்கள்,
7033 எதுத்த.
----------------------------------------------------------------------------------
705. கைப்பிடியாய்த் தான்பிடித்துக் கட்டிக்கொடு வாராட்டால்
என்பேரோ ராமன் எடுத்ததுவும் ஆயுதமோ
மற்றநாள்த் தானும் மன்னன்புலி வன்னியவன்
மன்னன் சடைக்கனுக்கு மறுநிருபந் தானெழுதி
ஒற்றன் தனையழைத்து ஓலை தனைக்கொடுத்து

710. ஒற்றனவனோடி உற்றதொரு காற்றெனவே
வாள்க்கோட்டைராயன் மதச்சடைக்கன் முன்னேவைத்து
ஆண்டவனே இப்போ அடியேன்சொல் விண்ணப்பங்கேள்
மன்னன் புலிராமன் மட்டில்லாச் சேனைமுன்னே
சென்று புகுந்து திசைநாலுங் கொள்ளையிட்டு

715. வெட்டித் துரத்தி விருதுகளுந் தான்பேசி
மன்னன்புலிராமன்படை மட்டில்லாச் சேனைவெள்ளம்
மூவா யிரம்பேர் முழுதுமங்கே தான்மடிந்தார்
மறவரிரு நூறுவாகா கப்பட் டார்கள்
மற்றநாள்ப் போலே மறப்போரில் வெற்றிகொண்டோம்

720. நாலாம் நாள்ப் போரில் ராமனுட தன்படையில்
அஞ்ஞூறு பேர்கள் அங்கே மடிந்தார்கள்
மறவரிருநூறு மடிந்தார்கள் அக்களத்தில்
என்றுசொல்லி ஒற்றன் இதமுடனே தானுரைத்தான்
அப்போது சேதுபதி அந்த விசளங்கேட்டு

725. இந்தவெற்றி போதாதோ என்மருகா வன்னியரே
கூத்தன்மகன் சேதுபதி வார்த்தை குறியாக
நம்மை யெடுக்கவென்று நம்பதியை நோக்கிவந்து
மானா மதுரையிலே வந்தேகி அங்கிருந்து
மண்டலத்திலுள்ள மகாசேனை அத்தனையும்

730. கூட்டிவந்து ராமய்யனும் கூடாரந் தானடித்து
என்னை யெடுக்க எவரால் முடியுமடா
ராமருட பாதம் நமக்குதவி யாயிருக்க
மலையில்வளர் காதலித்தாய் மங்கையுமை தானிருக்க
முக்கோடி தீர்த்தம் முழுதுமங்கே தானிருக்க
----------------------------------------------------------------------------------------
706.4 ஆயிதமோ, 708.4தானெழுது, 709.1 ஓட்டன்,
710.3-4 உத்ததொரு காத்தெனவே, 719. 2-3 போரில் முத்தப்போரில்,
726. 3 வார்த்தை 732.4 யாயிருக்கும், 734.2 தீர்த்தம்
-----------------------------------------------------------------------------------------------
735. வாமஞ் செகநாதர் வாய்த்ததுணை யிங்கிருக்கப்
பா(ர்)ப்பானொருபொருட்டோ பாருலகில் மன்னவனே
எதிர்த்துவந்த பார்ப்பானை இனிவிடப் போறோமோ
நாளைப் பகல்பொழுதில் நாழியலுக் குள்ளாக
அம்மானை பந்தாடி அலைக்கழிவு பண்ணாட்டால்

740. என்பேரோ சடைக்கன் எடுத்ததுவும் ஆயுதமோ
பார்ப்பானைக் கொன்றால் பாவம்வந்து சூழுமென்று
பின்குடுமி தன்னில் பேருலகந் தானறியத்
தேங்காயைக் கட்டிச் சிதற அடிப்பேனான்
கண்ணைப் பிடுங்கிக் காட்டிலே ஓட்டிடுவோம்

745. என்றுசொல்லி ஒலை யெழுதுமென்றார் சடைக்கனுந்தான்
ஓலையெழுதி ஓடவிட்டார் ராமய்யற்கு
ஒற்றனவனோடியுற்றபெருங் காற்றெனவே
கோலா கலராமன் கொலுவிலிருக்கையிலே
ஓலை தனைக்கொடுத்து ஒதுங்கிநின்றான் ஒட்டனுந்தான்
750. வாசித்துப்பா(ர்)த்து மன்னன்புலி ராமய்யனும்
எரியும் நெருப்பில் எண்ணெய்தனை விட்டாப்போல்
கண்சிவந்து சீறிக் கடுங்கோபங் கொண்டேழுந்து
என்வார்த்தை தன்னை யினிக்கேளுந் தூதுவரே
சதுரகிரி பருவதத்தைத் தான்பார்த்து நாய்குலைத்தால்

755. சேதமுண்டோ என்று சிரித்தான் புலிராமன்
சடைக்கனுட பெண்டி(ன்) தாலி தனையறுத்து
அர(ண்)மனை தோறும் ஆசார வாசலெல்லாம்
எருக்குங் குறுக்கும் இனிவிரைப்பே னென்றுசொன்னார்
தூதுவனைத் தானழைத்துத் துங்கமுடிராமய்யனும்

760. சொன்னதொரு வார்த்தைதனைச் சொல்லடா தூதுவனே
அப்போது தூதுவனும் அவ்விசளந் தான்கேட்டு
ஓடினான் தூதுவனும் உற்றபெருங் காற்றெனவே
வாள்க்கோட்டை ராயன் மதச்சடைக்கன் முன்னேவந்து
ஓலை தனைக்கொடுத்து ஒதுங்கிநின்றான் தூதுவனும்
----------------------------------------------------------------------------------------
738. 3 நாளிகலுக், 739, 3 அலக்களிவு, 740.4 ஆயிதமோ, 742.1 பின்குடும்பி,
749.3 ஒதிங்கிநின்றான், 751. 3 எண்ணைதனை, 764.3 ஒதிங்கிநின்றான்.
-----------------------------------------------------------------------------------------
765. வாசித்துப் பார்த்து மதம்பொழிந்து கொக்கரித்து
என்மருகா வன்னி யிவ்விசளங் கேள்க்கில்லையோ
பாளையக் காரர் படைத்தலைவரை யழைத்துப்
பார்ப்பான் நகைத்துப் பகிடிபண்ணி ஓலைவிட்டான்
சும்மா இருந்தால் சிரிப்பா ருலகி லுள்ளோர்

(வன்னி போகலூர் வெளியிற் போரிடுதல்:
அரியாண்டிபுரக் கோட்டையார் உதவுதல்: வன்னியின் வெற்றி)

770. மதச்சடைக்கன் தான்வள(ர்)த்த வன்னிக்கு வாய்த்ததென்று
பொத்தையுடையான் போர்வேந்தன் ஒருகையிலே
வீசுகொண்டைத் தேவன் வீமன் ஒருகையிலே
கறுத்தவுடையான் கன்னன் ஒருகையிலே
மதுரைவழி கண்ட மதத்தேவன் ஒருகையிலே

775. றாவுத்தக் கற்தன் நல்லபடை யொருகையிலே
மதச்சடைக்கன் தான்வள(ர்)த்த வன்னியொருகையிலே
அறுகையாய்த் தான்பிரித்து அடர்ந்துபோர் செய்யவென்று
போகலூர் வெளியில்ப் புறப்பட்டா ரெல்லோரும்
மன்னன் புலிராமன் மட்டில்லாச் சேனைவெள்ளம்

780. பெண்டுகளோ வென்று பெருமூச்சுத் தானெறிந்து
மாப்பிள்ளைக் கொண்டப்பன்மன்னன் மிகச்சினந்து
வெங்கிட கிஷ்ணய்யன் வெகுமையாய்த் தானெழுந்து
மண்டுருப் பாப்பயனும் மகாகோபங் கொண்டெழுந்து
சத்துருக்கையன் தார்வேந்தன் தான்சினந்து

785. பாளையக் காறர் படைத்தலைவ ரெல்லோரும்
கச்சைகட்டி வேலெடுத்துக் கனத்தகுழல்த் தானெடுத்துப்
போகலூர் வெளியில் போருக்கு வந்தார்கள்
இருவர்படை மூண்டு எதிர்ந்துபோர் செய்தார்கள்
வன்னி யொருபுறமாய் மாற்கமாய் வந்துநின்று

790. மாபோகி யென்னுமொரு வான்பரிமேல்த் தானேறி
ஊடுருவச் சென்றான் உலகங் கிடுகிடென
----------------------------------------------------------------------------------
770.4வாய்த்துதென்று, 775.1-2 ராவுத்தக் கூத்தன், 778.3 பிறப்பட்டா,
783.1 மண்ணூறு, 788. 2 மூன்று
------------------------------------------------------------------------------------
இடசாரி வலசாரி யெய்யாமல் ஊடறுத்தான்
மன்னன் புலிராமன் மட்டில்லாச் சேனைவெள்ளம்
தட்டழிந்து கெட்டதுகாண் தலைகெட்ட நூலதுபோல்

795. மாப்பிள்ளை கொண்டப்பய்யன் மதயானை போல்சீறி
எதிர்த்த மறவனை யினிவிடப் போறோமோ
என்றுசொல்லி அய்யன் எல்லாரையுஞ் சினந்து
தொட்டிய கம்பளத்தார் துடிகாரரையு மழைத்துப்
பல்கடித்துச் சீறும்விசை பாருங் கிடுகிடென

800. எல்லோருந் தான்திரண்டு ஏகினர்காண் அம்மானை
மறவர் படைமேலே மண்டிப் பொருதார்கள்
மறவர்வெகுண் டோடினதை வன்னியவன் தான்பார்த்துப்
புலியை நரிபாய்ந்து போகுமோ என்றுசொல்லி
வலையில் அகப்பட்ட மான்போலே தான்மறவர்

805. தேக்கிலையில் அகப்பட்ட தீர்த்தம்போல் தான்மறவர்
அம்பு(பட்)டுச் சோர்ந்து அலறி விழுவாரும்
வாண மடிபட்டு மண்மேல் கிடப்பாரும்
குத்துண்டு போர்க்களத்தில் குலவையிட்டு நிற்பாரும்
உண்டைபட்டுச் சோர்ந்து உருண்டு கிடப்பாரும்

810. வேல்குத்துப் பட்டு வெருண்டோடிப் போவாரும்

வேலவனே என்பாரும் விதிவசமோ என்பாரும்
காலற்று வீழ்வாரும் கையற்று வீழ்வாரும்
குறைப்பிணமாய் நின்று கூத்தாடி நிற்பாரும்
வன்னியவர்துணிந்து மண்டிப்போர் செய்தார்காண்

815. அரியாண்டி புரத்தார் அதிசீக்கிரத்தில் வந்துதவி
கா(ர)டந்தகுடிக் கோட்டையார் கடுகித்தான் வந்தார்கள்
எல்லோரும் வந்து இனிவிடப் போறோமோ
என்றுசொல்லி மறவர் எதிர்ந்துபோர் செய்தார்கள்
மன்னன் புலிராமன் மட்டில்லாச் சேனைவெள்ளம்

820. கட்டவிழ்த்த மான்போலே கதறியே ஓடலுற்றார்
எண்ணா யெக்கடா என்றே ஒளிப்பாரும்
-------------------------------------------------------------------------------------------
805.3 தீர்த்தம்போல், 818.3 எதுந்துபோர், 820.1 கற்றவிளத்த.
-------------------------------------------------------------------------------------------
அக்கடா ஒச்சையென்று அரண்டுதா மோடுவாரும்
காடித கொடுக்கு காலன்போல் வந்தானே
என்செய்வோ மென்று ஏங்கி முகம்வாடி

825. உண்டைபட்டுச் சோர்ந்து உருண்டு கிடப்பாரும்
வேல்குத்துப் பட்டு வெருண்டோடிப் போவாரும்
வாண மடிபட்டு மண்மேல்க் கிடப்பாரும்
குத்துண்டு போர்க்களத்தில் குலவையிட்டு நிற்பாரும்
அம்புபட்டுச் சோர்ந்து அலறி விழுவாரும்

830. காலற்று வீழ்வாரும் கையற்று வீழ்வாரும்
குறைப்பிணமாய் நின்று கூத்தாடி நிற்பாரும்
வேலவனே யென்பாரும் விதிவசமோ என்பாரும்
அய்யோ சிவனேயென்று அலறி விழுவாரும்
அந்திரத்தில் தேவர்கள் அலங்காரம் பா(ர்)த்துநிற்க

835. இந்த வுலகில் எவருடைய தன்போரோ
வாலியுட போரோ மாயனுட தன்போரோ
என்றுதான் சொல்லி யெல்லோரும் பா(ர்)த்திருக்க
வெட்டி விருதறுத்தான் விருதுபுகழ் வன்னியுந்தான்
குதிரை யிருநூறு குண்டுபட்டுத்தான்விழுந்து

840. ஆனையுமோர் பத்து அம்புடனே தான்சோர்ந்து
கூடாரங் கொள்ளையிட்டுக் குடல்பிடுங்கி மாலையிட்டு
விருப்பாட்சிநாயக்கனும் விருதுசொல்லி வெட்டிவந்தான்
காமாட்சி நாயக்கனைக் கழுத்தை யறுக்கலுற்றான்
தொண்டமநாயக்கனைத் தோள்சரிய வெட்டலுற்றான்

845. வெங்கம நாயக்கனை வெட்டிப் பிளந்தெறிந்தான்
பாளையக் காரரைத்தான் பறந்து கழுத்தறுத்தான்
ஆறுபாளை யக்காரர் அடங்கா அரசரைத்தான்
தலையறுத்துக் கொள்ளையிட்டு தாரைசின்னந் தான்முழங்க
வெற்றிகொண்டு வன்னி வீரியங்கள் பேசிவந்தான்
---------------------------------------------------------------------------------------------
822.3 அறுண்டுதிறு; 3-4 அரண்டுதிரும் போடுவாரும், 824.1 என்ஞ்செய்வோ,
830 1 காலத்து;3 கையத்து, 837.7 குறைப்பெணமாய், 840. 3 அன்புடனே
846.3 பரந்து, 847.4 தரசரைத்தான், 849.7வெத்திகொண்டு.
---------------------------------------------------------------------------------------------
850. கோட்டை புகுந்தான் கோடையிடி வன்னியுந்தான்
மன்னன்புலிராமன்படை மட்டில்லாச் சேனைவெள்ளம்
அன்று முரிந்து அடைந்தார்கள் பாளையத்தில்
மன்னன் புலிராமன் மட்டில்லாச் சேனையிலே
மூவா யிரம்பேர் முழுதுமங்கே தான்மடிந்தார்

855. மறவருட தன்படையும் மடிந்தார்க ளஞ்ஞூறு
அந்தநாள் சென்று அலைகதிரோன் தான்மறைந்தான்

(படைவீரர்களுக்குப் பரிசளித்து வன்னி சேதுக்கரையிற்
சடைக்கனிடஞ் செல்லுதல்: வழியில் அவன் வருதல்:
அவனாற் புகழப்பெறுதல்)
மற்றநாள் தானும் மன்னன்புலி வன்னியுந்தான்
வெற்றிகொண்ட மன்னரைத்தான் விரையவே தானழைத்துப்
பூஷணங்க ளெல்லாம் பூட்டி யலங்கரித்துப்

860. பச்சை வடங்கொடுத்துப்பாங்கா யமுதளித்துக்
கெந்தபொடி சந்தனமும் கெறுவிதமாய்த் தான்பூசி
அடைக்காயும் வெள்ளிலையும் அன்புடனே தான்கொடுத்துக்
கோட்டை பதனமென்று கோலாகல வன்னியுந்தான்
சேதுக்கரை வாழும் தீரனிடம் போகவென்று

865. ஏறினான் தண்டிகைமேல் எல்லையற்ற சேனைமுன்னே
கட்டியக் காரர் கனவிருது கூறிவர
வெண்சா மரம் வீசி விருது பலமுழங்கப்
பேரிகை டம்மானம் பிறகே தொனிமுழங்கச்
சந்திர காவிடால் தளமெலாம் தானிலங்க

870. நடந்தான்காண் வன்னியுந்தான் நல்லமுத்து மாலைகொஞ்ச
அத்தியுத்திக் கோட்டையிலே அம்மா னருகேவந்தான்
வந்துகண்டு தெண்டனிட்டான் வாள்வீரன் வன்னியுந்தான்
ஏந்தி யெடுத்து இரு கண்ணோடே தானணைத்து
ஆயிரம் ஆலாத்தி அடுக்கடுக்காய்த் தானெடுத்துத்
------------------------------------------------------------------------------------------------
854.3 முளுதுமங்கே, 858.1வெத்திகொண்ட; 4 தானளைத்து,
861.2 சந்தணமும், 862 4 தான்குடுத்துக், 865.3 எல்லையத்த,
868 2 டம்மாணம், 871 2 கோட்டைஇலே; 4 னறுகைவந்தான்.
----------------------------------------------------------------------------------------------
875. திட்டிக் கிடாய்வெட்டிதீரனவன் வன்னியற்கு
வேண்டும் வரிசையெல்லாம் விதவிதமாய்த் தான்கொடுத்துச்
சேனை படைத்தலைவர் சேர இருந்தாலும்
கோடி திரவியங்கள் கொள்ளையிட்டுப்போனாலும்
இந்தவெற்றி போதாதோ என்மருகா வன்னி யென்றார்

880. கேட்ட படைத்தலைவர் கெடிகலங்கிப் போவார்கள்
இனியிளப்பமில்லை யென்மருகா வன்னியென்றார்
அந்தநாள் சென்று அலைகதிரோன் போய்மறைந்தான்

(அரியாண்டிபுரக்கோட்டையின் முற்றுகை: மறவர் தப்பியோடிக்
காரடர்ந்தகுடியைக் கடந்து செல்லுதல்: அவர்களைத் துரத்திச் சென்று
ராமப்பய்யன்படை வைகையாற்றங்கரையிற் கூடாரமடித்தல்)

மற்றநாள் தானும் மன்னன்புலி ராமன்படை
அரியாண்டி புரக்கோட்டையை அடுத்து வளைந்துகொண்டார்

885. கோட்டையிற் குள்ளிருந்து குறும்படித்த மறவருந்தான்
இனியிருந்தால் மோசமென்று எல்லோருங் கிலேசமுற்றுப்
பொழுது புகுந்தாப்போல் போகவென்று தான்துணிந்து
கச்சைகட்டியெல்லோருங்கனத்தவெடி தானெடுத்துக்
கா(ர)டந்த குடிவிடியக் கடுகியே ஓடிவந்தார்

890. மற்றநாள் தானும் மன்னன்புலி ராமன்படை
போனான் மறவனென்று பொருமி மிகச்சினந்து
வண்ட மறவன் மதிமயங்கிப் போனானோ
காடிதைக் கொடுக்குமகன் காணாமல் ஓடுவனோ
வண்ட மறக்கொடுக்கை வளைந்து பிடிக்கவென்று

895. தொடர்ந்து பிடிக்கவென்று சொல்லரிய மன்னரெல்லாம்
கூடாரந் தானெடுத்து(க்) கொல்லிட்டுத் தானடந்தார்
கா(ர)டந்த குடிக்கோட்டை கடந்துமிகக் கொக்கரித்து
வாழையடர்ந்திருக்கும் வைகை நதிகடந்து
ஆற்றங் கரைதனிலே அடித்தானே கூடாரம்

900. அந்தநாள் சென்று அலைகதிரோன் போய்மறைந்தான்
------------------------------------------------------------------------------------------------
885.1 கோட்டையுக், 895 1 துடந்து, 896.3 கொலிலிட்டுத்,
898.1-2 வாளைபடந்திருக்கும், 899.1ஆத்தாங்.
-------------------------------------------------------------------------------------------
(ராமப்பய்யன்படை பாம்பாற்றங்கரையிற் கூடாரமடித்தல்:
அத்தியுத்திக் கோட்டையினின்றும் சடைக்கன் வந்து பொருது
காயப்படுதல்: வன்னி பொருது வெற்றிகொள்ளுதல்)

மற்றநாள்த் தானும் மன்னன்புலி ராமன்படை
அத்தியுத்திக் கோட்டையிலே அவனிருப்பதறியாமல்
பாம்பாற்றங் கரைதனிலே பாங்காகப் போயிறங்கிக்
கூடாரந் தானடித்தான் கோலாகல ராமன்படை

905. அந்த விசளம் அறிந்து சடைக்கனுந்தான்
கடவை மறித்துக் கலந்துபோர் செய்தான்காண்
பாதை மறித்துப் பாங்காகக் கொள்ளையிட்டான்
இருவர்படை மூண்டு எரித்துப் பரித்தார்கள்
அப்போ சடைக்கன் ஆர்ப்பரித்துக் கொக்கரித்து

910. நாடு கலக்கியெனும் நல்லதொரு வான்பரிமேல்
ஏறிச் சடைக்கன் எல்லையற்ற சேனைமுன்னே
ஊடுருவச் சென்றான் உலகங் கிடுகிடென
வாளோடு வாள்முரிய மண்டிப்போர் செய்யலுற்றார்
மன்னன்புலிராமன் மட்டில்லாச் சேனைவெள்ளம்

915. வந்து வளைந்துகொண்டார் மதச்சடைக்கன் சேனையின்மேல்
கோல(க்) கொண்டயான் கூட்டப் புரவிகளும்
ஆயிரம் புரவி ஆர்ப்பரித்துத் தான்பொருதார்
பட்டாணிவாளெடுத்துப் பருந்துபோலே பாய்ந்து
ஊடுழக்க வெட்டினான் உல(க)ங் கிடுகிடென

920. தீரன் சடைக்கனையும் திறமாக வெட்டலுற்றார்
காயமது பட்டுக் கலங்கியே சடைக்கனுந்தான்
என்மருகா வன்னியினிவந்து கூடுமென்றான்
அப்போது வன்னி அவ்விசளந் தான்கேட்டுப்
புலியை நரிபாய்ந்து போகுமோ வென்றுசொல்லி

925. வீசை முறுக்கி விறுதுகள் தான்பேசி
வெட்டின பட்டாணியை விறுதுசொலித் தான்பிளந்தான்
பெட்டியு முடியுமாய்ப் பிளந்தெறிந்தான் வன்னியுந்தான்
-----------------------------------------------------------------------------------------
901. 1-2 மத்தநாள்ச் சென்று, 903.1பாம்பாத்தங்; 4 போஇறங்கிக்,
916 4 புரவியளும், 918 3 பறந்துபோலே, 925.1வீசி,
927.1பொட்டியு; 3 புளந்தெறிந்தான்.
-----------------------------------------------------------------------------------------
இடசாரி வலசாரியெதிர்த்துப் பொருதலுற்றார்
முந்நூறு பட்டாணி முழுதுமங்கே தான்மடிந்தார்

930. அய்யாயிரம் பேர் அக்களத்திலே மடிந்தார்
கூடாரங் கொள்ளையிட்டுக் குடல்பிடுங்கி மாலையிட்டுப்
பட்டபடுகளத்தைப் பார்க்கப்பயந் தோடுவராம்
மாலவாண்டு கொடுக்கு வஞ்சனையாய் வெட்டுவனோ
என்றுசொல்லிராமன்படை யேங்கி முகம்வாடி

935. ஒன்றோடே ஒன்று உருண்டு கிடப்பாரும்
கழுகு பருந்து காகம்விருந் துண்டிடவே
மன்னன்புலி ராமன்படை மட்டில்லாச் சேனைவெள்ளம்
தட்டழிந்து கெட்டுத் தறுகாமலோடிவிட்டார்
விதிவசமோ என்று வெறிகொண்டு ஓடலுற்றார்

940. மாமனுட மச்சினன்தான் மாண்டு கிடப்பாரும்
செகநாதம் போனாலும் சேரப் பிழைப்போமோ
என்று புலம்பியேமாந்து போவாரும்
அன்று முரிந்து அடைந்தார்கள் பாளையத்தில்

(சடைக்கன்பொருட்டு வன்னி வருந்துதல்)
மற்றநாள்த் தானு மதச்சடைக்கன் வன்னியுந்தான்

945. அம்மான் முகம்பார்த்து அழுது மனங்கலங்கிக்
காயமது கட்டிக் கலங்கி முகம்பா(ர்)த்துக்
கோடி திரவியங்கள் கொள்ளைகொண்டு போனாலும்
விறுது சடைக்கனையும் வெட்டுவனோ பட்டாணி
கோட்டை விலை போனாலும் கொற்றவர்கள் மாண்டாலும்

950. ஆனை குதிரைபடை அளவற்று மாண்டாலும்
ஊழி முடிந்தாலும் உகாந்தமாய்ப் போனாலும்
நன்னகரி கொள்ளையிட்டு நாடழிந்து போனாலும்
விறுது சடைக்கனுக்கு வேதனையுந் தான்வருமோ
என்று புலம்பிவன்னி யெழுந்திருந்து போகலுற்றார்
------------------------------------------------------------------------------------------
938 4 லோட்டிவிட்டார், 942 3 யேமறந்து, 944.1மித்தநாள்த்,
949.3 கொத்தவர்கள், 950.3 அளவத்து, 951 1உள்ளய், 953.3 வேதினையுந்
--------------------------------------------------------------------------------------------
(சடைக்கனும் வன்னியும் பாம்பாற்றங்கரையிற் படகேறி
இராமேச்சுரந்தீவுக்குப் போதல்)
955. மற்றநாள் தானும் மதச்சடைக்கன் வன்னியுந்தான்
ராமநாத சுவாமி நல்லதுணை யென்றுசொல்லி
அம்மானே நீருமிப்போ ஆனைபரியேறுமென்றார்
அத்தி(யுத்தி)க் கோட்டைவிட்டு ஆன பெருந்தளத்தான்
பாம்பாற்றங் கரைதனிலே பாங்குடனே வந்திறங்கிச்

960. சோங்கும் மறுமாவும் சோடினையாய்ப் பாய்விரித்து
படைத்தலைவ ரெல்லோரும் படையிலே யேறுமென்றார்
தண்டிகை பல்லாக்குச் சகலமும் ஏற்றலுற்றார்
ஆனை குதிரை அடங்கலுந்தான் ஏற்றுமென்றார்
பொக்கிஷங்கள் கூடாரம் பொருந்தியே யேற்றுமென்றார்

965. எல்லோரையு மனுப்பி யெதிரில்லா லன்னியுந்தான்
பெண்டு(கள்) நாச்சியெனும் பெரியதொரு வான்பரியும்
நாடுகலக்கியெனும் நல்லதொரு வான்பரியும்
தோணியிலே தானேறத் தோணுதில்லை வான்பரிதான்
என்செய்வோ மென்றுவன்னி ஏங்கி முகம்வாடி

970. நானேறும் வான்பரியை ராமனோ ஏறுவன்காண்
கண்ணைப் பிடுங்கிக் காட்டிலே ஒட்டுமென்றார்
அப்போ படைத்தலைவர் அருகேநின்று என்சொலுவார்
கட்டியே வான்பரியைக் கப்பலிலே ஏற்றுமென்றார்
கப்பலிலே யேற்றிக் கரைசேர்ந்தார் வான்பரியைக்

975. கப்பலிலே தானேறிக் க(ன)த்த சடைக்கனுந்தான்
ராமநாத சுவாமி நல்லதுணை யென்றுசொல்லி
உன்பாதம் நம்பிவந்தேன் உலகளந்த மாயவனே
மன்னன் புலிவன்னி மகாதுக்கப்பட்டுநின்று
என்செய்வோ மென்றுவன்னி யிருந்து கிலேசமுடன்

(அத்தியுத்திக் கோட்டையில் ராமப்பய்யன் இருபதுநாள் தங்குதல்)
980. போனான் மறவனென்று பொருமி மிகச்சினந்து
எங்கேதான் போனாலும் இனிவிடப் போறோமோ
-----------------------------------------------------------------------------------------------------
967.4 வான்பரியின், 980 3 பொறுமி.
------------------------------------------------------------------------------------------------------
கடலேறிப் போனமென்று கனவிறுது கூறினனாம்
வீரவாள் கைப்பிடித்து வீரியங்கள் பேசினனாம்
என்வலுவும் அவன்வலுவும் இனியல்லோ பார்க்கவேணும்


985. என்றுசொல்லி அய்யன் இருகண் மிகச்சிவக்க
அப்போ படைத்தலைவர் அருகேநின்று என்சொல்லுவார்
சேதுக் கரைவாழும் தீரன் அரசிருப்பும்
அத்தியுத்திக் கோட்டை அவனிருந்து போனதல்லோ
பள்ளியறை மாளிகையும் பலகணியு மெத்தவுண்டாம்

990. படைத்தலைவர் சூழ்ந்திருக்கும் பன்னக சாலையுண்டு
என்று படைத்தலைவர் எல்லோருந் தாமுரைத்தார்
அப்போது ராமய்யனும் அந்த விசளங்கேட்டு
அத்தியுத்திக் கோட்டை அர(ண்)மனையில் வந்திருந்தார்
இருந்தானேராமய்யனும் இருபதுநாள் அர(ண்)மனையில்

(ராயர் காகிதமும் கர்த்தர் காகிதமும்)
995. கோலாகல ராமன் கொலுவி லிருக்கையிலே
மதுரை தனிலிருந்து வந்தானே ஒற்றனுந்தான்
ராயருட காயிதமும் நலமுடனே தானெழுதி
முகிலருடன் பாச்சா முப்பதினா யிரங்குதிரை
கணவாயை வந்து கட்டிக்கொண்டா ரென்றுசொல்லிக்

1000. கோலக்கொண்டை யான்குதிரைக் கூட்டப் பெருந்தளமும்
ராயருட சீமையெல்லாம் நாலுதிக்குங் கொள்ளையிட்டு
விசையா புரமும் வேலூருங் கொள்ளையிட்டுக்
கணவாய்(க)ள்கோட்டையெல்லாம் கட்டிக்கொண்டானென்றுசொல்லி
இங்குவரப் பயணமாயிருக்கிறா னென்றுசொல்லி

1005. ராயருட காயிதமும் நமக்குவந்த தென்றுசொல்லி
மன்னன் புலிராமனையும் வரவழைக்க வேணுமென்று
கற்தனுட காயிதமும் கடுகியே தான்கொடுத்துக்
காயிதத்தைக் கொண்டு கடுகியே ஓடிவந்தான்
மன்னன் புலி ராமய்யனை வந்துகண்டான் ஒற்றனுந்தான்

1010. காயிதத்தைக் கொடுத்துக் கைகட்டி நிற்கலுற்றான்
--------------------------------------------------------------------------------------------------------
984.4 பார்க்கவென்று, 996.4 ஒட்டனுந்தான், 1005 3 நமக்குவந்து,
1004.3 யிருக்குறா, 7010.4 நிக்கலுற்றான்.
-------------------------------------------------------------------------------------------------------.
(ராமப்பய்யன் மதுரை வந்து அங்கிருந்து புறப்பட்டுச்சென்று
ராயரைக்கண்டு துலுக்கர்படையை வெற்றிகொண்டு மீளுதல்:
வரும்வழியில் கள்ளரை அடக்குதல்: வானரவீரமதுரைக்கு வருதல்)

வாசித்துப் பார்த்து மன்னன்புலி ராமயனும்
துலுக்காண மொருபொருட்டாய்ச் சொல்லி அனுப்பினரோ
துலுக்கர் படையெல்லாந்தூளிபடவே துரத்திக்
குதிரைத் தளத்தையெல்லாம் கொள்ளையிட வேணுமென்று

1015. மாப்பிள்ளை கொண்டப்பய்யன் மன்னன் தனையழைத்து
வெங்கிட கிஷ்ணய்யன் வீமன் தனையழைத்து
மண்டுருப் பாப்பய்யனே வாருமென்று தானழைத்துப்
பாளையக் காறர் பலபேரைத் தானழைத்து
எல்லோரையு மழைத்து இதமாகப் புத்திசொல்லி

1020. இன்றுமுத லெட்டாநாள் இங்கே வருவேனென்று
ஆற்றங் கரையும் ஆன துறைமுகமும்
புகழ்பெரிய போகலூர்க் கோட்டை பதனமென்று
என்றுசொல்லி ராமய்யனும் ஏறினான் தண்டிகைமேல்
மன்னர் படைசூழ மந்திரிமார் சூழ்ந்துவர

1025. ஆனை குதிரை ஆர்ப்பரித்து முன்னடக்கப்
பேரிகை டம்மானம் பிறகே முழங்கிவர
வெண்சா மரைவீச விறுது பலமுழங்கக்
கட்டியக் காறர் கனவிறுது கூறிவரக்
கவிவாணர் கொண்டாடக் காரியப்பேர் முன்னடக்கப்

1030. பதினெட்டு மேளவகை பண்பாய் முழங்கிவர
ஆனைமேல்ப் பேரிகை அதிர்ந்து முழங்கிவர
வந்தே யிறங்கினார் மானா மதுரையிலே
கங்குல் விடிந்து கதிரோன் எழுந்தபின்பு
தேவர்கள் போற்றிசெயுந் திருப்பூவணங் கடந்து

1035. மதுரைத்தெரு வீதியிலே வந்தார்காண் ராமய்யனும்
அந்நேரந் தன்னில அர(ண்)மனையில் வந்திருந்து
--------------------------------------------------------------------------------------------------------
1014 4 வேணுமென்று சொல்லி, 1017 1மட்டூறுப் 1019 3 இதவாகப்,
1035.2 வீதிஇலே, 1036 1 அன்னேரந்.
----------------------------------------------------------------------------------------------------
மற்றநாள் தானும் மன்னன்புலி ராமய்யனும்
மன்னன்திரு மலையேந்திரனை வந்துகண்டு சந்தித்து
ஆண்டவனே இப்போ அழைத்த பணிவிடையேன்

1040. என்வார்த்தை தன்னை யினிக்கேளும் ராமாநீ
கோலக்கொண்டை யானும் குதிரைப் பெருந்தளமும்
கணவாய்(க)ள் கோட்டையெல்லாம்கட்டிக்கொண்டா ரென்றுசொல்லி
விசையா புரமும் வேலூருங் கொள்ளையிட்டு
இங்குவரப் பயணமா யிருக்கிறா னென்றுசொல்லி

1045. ராய ரதுக்கு நமக்கெழுதி வந்ததுகாண்
அதுகண்டு நாமள் (அழை)ப்பித்தோம் ராமய்யனே
இதுவோசில பாரமென்று எண்ணியுரைப்பார்கள்
குதிரைத் தளமெல்லாங் கொள்ளையிட்டு வாறேனய்யா
வெட்டித் துரத்தி விருதுகளும் தான்பறித்துக்

1050. கணவாய் (க)ள் கோட்டையெல்லாம் கலங்கவே தானடித்து
ஆறு கடக்க அலைகுலையத் தான்துரத்தி
வெட்டித் துரத்தி வேலூரு கைப்பிடித்து
ஆயிரங் குதிரை அன்பாகத் தான்சேர்த்து
வாறேனய்யா என்றுசொன்னான் மன்னன்புலி ராமய்யனும்

1055. ஆயிரங் குதிரைக்குவா யமுதுகூட்டச் சொன்னான்காண்
மன்னன்திரு மலையேந்திரன் மனமகிழ்ந்து கொண்டாடிக்
கன்னன்புலி ராமய்யனுங் கைகட்டி வாய்புதைத்துப்
போய்வாறே னய்யா பொருந்திவிடை தாருமென்றான்
நின்றனுப்பிக் கொண்டு நீதியுடன் கையேந்திப்

1060. போய்வாராய் ராமாவென்று பொருந்தி விடைகொடுத்தார்
நடந்தான் புலிராமன் நல்லமுத்து மாலைகொஞ்சத்
துவரிமான் தன்னில்வந்தான் துங்கமுடி ராமய்யனும்
மற்றநாள் தானும் மன்னன்புலி ராமய்யனும்
சோழவந்தான் தன்னில் சூழ்ந்தடித்தான் கூடாரம்

1065. மற்றநாள் தானும் மன்னன்புலி ராமய்யனும்
வடமதுரை தன்னில் வண்மையுடன் சென்றிறங்கித்
திண்டுக்கல்லு கடந்து தேக்கமலை தன்னில்வந்து
-------------------------------------------------------------------------------------------
1053.4 தான்சேர்ந்து.
-----------------------------------------------------------------------------------------------
மற்றநாள் தானும் மன்னம்புலி ராமய்யனும்
மணப்பாறை தன்னில் மன்னவனுஞ் சென்றிறங்கி

1070. இரட்டை மலைவழியாய்க் கடந்தார்கள் எல்லோரும்
திருச்சிராப் பள்ளிகடந்து சீரங்கந் தனிலிறங்கி
மற்றநாள் தானும் மன்னன்புலி ராமய்யனும்
சமையபுரங் கண்ணனூர் தன்னிலே வந்திறங்கி
ஊட்டத்தூர் தன்னில் ஒருநொடியிற் போயிறங்கி

1075. மற்றநாள் தானும் மன்னன்புலி ராமய்யனும்
வாலிகொண் டாபுரத்தில் வந்திருந்தா ரெல்லோரும்
கங்குல் விடிந்து கதிரோன் எழுந்தபின்பு
ஆயிழையாள் வீற்றிருக்கும் ஆரணியுந் தான்கடந்து
வேலூரு தன்னில் விரையவே வந்திறங்கி

1080. வெங்களூர் தன்னில் விரையவே சென்றிறங்கிக்
கங்குல் விடிந்து கதிரோன் எழுந்ததற்பின்
ராயருட சமுகந்தன்னை நன்றாக வந்துகண்டு
ஆண்டவனே இப்போ அழைத்த பணிவிடையேன்
ராமப்பய்யன் உரைகேட்டுராயருந்தான் ஏதுசொல்வார்

1085. துலுக்கர் பெரும்படைதான் தொலையாத வான்பரியும்
கணவாய் வழியில்வந்து கடல்போலே வந்ததுகாண்
சீமை யழித்துத் தீக்கொளுத்தி விட்டார்காண்
அதுகண்டு நாமும் அழைப்பித்தோம் ராமய்யனே
மன்ன னுரைத்ததெல்லாம் மனமகிழ்ந்து கேட்டுநின்று

1090. ஆண்டவனே யிப்போ அடியேன்சொல் விண்ணப்பங்கேள்
துலுக்கர் படையைமெய்ப்பாய்ச் சொன்னீரே ஆண்டவனே
இதுவோசில பாரமென்று எழுந்திருந்தான் ராமயனும்
குதிரைத் தளத்தைவென்று குஞ்சரமுங் கொள்ளைகொண்டு
வெட்டி விரட்டி விருதுகளும் தான்பறித்து

1095. வெற்றிகொண்டு வாறேனென்று விண்ணபஞ் செப்பலுற்றான்
அடைக்காயும் வெள்ளிலையும் அன்புடனே தான் கொடுத்து
---------------------------------------------------------------------------------------------
1078.1 ஆயிளையான், 1085.3 துலையாத 1086. 4 வந்ததுகாண்.
---------------------------------------------------------------------------------------------
வெற்றிகொண்டு வாவென்று விருதுகளும் தான் கொடுத்துப்
போய்வாரு மென்று பொருந்தி மனமகிழ்ந்தார்
நடந்தான் புலிராமன் நல்லபெருஞ் சேனையுடன்

1100. வெங்களூ(ர்) தன்னில் விடுதியாய் வந்திருந்தார்
மற்றநாள் தானும் மன்னன்புலி ராமய்யனும்
இக்கரைவெங்கிடகிஷ்ணய்யருக்கு எழுதினார் ஓலைதனை
ஓலைதனை வாங்கி ஓடினான் ஒற்றனுந்தான்
ஓலை தனைக்கொடுத்து ஒதுங்கிநின்றான் ஒற்றனுந்தான்

1105. வாசித்துப் பார்த்து மனமகிழ்ந்து கொண்டாடி
மன்னன் புலி ராமய்யனை வந்துகண்டான் அந்நேரம்
துலுக்கர் பெரும்படையும் தொலையாத வான்பரியும்
கணவாய் (தனில்) வந்து கட்டிக்கொண்டா ரென்றுசொல்லி
ராய ரதுக்கு நமக்கோலை வரவிடுத்தார்

1110. துலுக்கர் பெரும்படையைத் தூளிபடவே துரத்தி
ஆறு கடக்க அலைகுலையத் தான்துரத்தி
இக்கரைவெங்கிட கிஷ்ணய்யர் எழுந்திரு மென்றுசொல்லி
எல்லோரும் போயே யெதிர்த்துப்போர் செய்தார்கள்
மன்னன் புலிராமன் மண்டிப்போர் செய்யலுற்றார்

1115. இக்கரைவெங்கிட கிஷ்ணய்யன் எதிர்த்துத் துரத்திவிட்டார்
மன்னன் புலிராமன் மட்டில்லாச் சேனையுந்தான்
துலுக்கர் பெரும்படையைச் சூறையிட்டுத் தான்விரட்டி
ஆறு கடக்க அலைகுலையத் தான்துரத்தி
வெட்டி விருதறுத்தான் வேந்தன்புலி ராமய்யனும்

1120. வெற்றிகொண்டு ராமய்யனும் வீரியங்கள் பேசிவந்தார்
ஆறாயிரங் குதிரை அன்பாகத் தான்மடிந்து
அறுபது குஞ்சரமும் அன்பது ஒட்டகமும்
ஆயிரங் குதிரையும் அன்பாகத் தான்சேர்த்துப்
பிடித்து அனுப்பினார் பேர்போன ராமய்யனும்

1125. வெங்கிட கிஷ்ணய்யனும் வீமனே வாருமென்று
கணவாய் பதனமென்று கற்னன்புலி ராமய்யனும்
--------------------------------------------------------------------------------------------
1097.4 தான்குடுத்துப், 1102.3 எழுதினாற், 1103.4 ஒட்டனுந்தான்,
1104.4 ஒட்டனுந்தான், 1107. 3 துலையாத, 1712.3 எழுந்திரியு, 1722. 1 அறுவது.
-----------------------------------------------------------------------------------------------
தன்தண்டந் தான்வைத்தான் தார்வேந்தன் ராமய்யனும்
வேண்டும் வரிசைகளும் வெற்றிகொண்ட குஞ்சரமும்
வெற்றிகொண்டராணுவுக்கு வெகுவரிசை தான்கொடுத்து

1130. ராயருட சமூகத்தில் நன்மையுடன் வந்துகண்டார்
வந்துகண்ட ராமய்யனை மார்போடேதானணைத்து
வெற்றிகொண்ட ராமய்யனுக்கு வெகுவரிசை பண்ணிவைத்துப்
பூஷணங்க ளுள்ளதெல்லாம் பூட்டி யலங்கரித்தார்
என்னருகே ராமய்யனே இருமென்று தானுரைத்தார்

1135. அவ்வார்த்தை கேட்டு அன்புடனே ராமய்யனும்
கச்சித்திருமலை யேந்திரனைக் காணாமல் நானிருந்தேன்
கண்கள்புகை யாகுமையா கற்தனே யென்றுரைத்தார்
எங்கேயிருந்தாலும் எப்போதும் நான்வருவேன்
வந்துதவி பண்ணுவிப்பேன் மன்னவர்கள் மெச்சிடவே

1140. வருஷமொருதரந்தான் வந்துபோ மென்றுரைத்தார்
மனமகிழ்ந்து ராயரையும் மன்னன்புலி ராமய்யனும்
நின்றனுப்பிக் கொண்டு நீதியுடன் கைதொழுது
நடந்தான் புலிராமன் நல்லபெருஞ் சேனையுடன்
ஆயிர(ம்) வான்பரியும் அறுபது குஞ்சரமும்

1145. எண்பது ஒட்டகமும் எதிரில்லாச் சேனைகளும்
அய்யனுட பாளையத்தில் அதிவிரசாய் வந்ததுகாண்
வெங்களூர் தன்னில் விடுதியாய் வந்திறங்கி
மற்றநாள்த் தானும் மன்னன்புலி ராமய்யனும்
வேலூரை விட்டு விசையா புரத்தில்வந்து

1150. ஆனைகுந்தி தான்கடந்து அதிவீர ராமய்யனும்
ஊட்டத்தூர் தன்னில் ஒருநொடியில் வந்தார்காண்
மற்றநாள் தானும் மன்னன்புலி ராமய்யனும்
வாலிகொண் டாபுரத்தில் வந்தே யிறங்கலுற்றார்
மற்றநாள் தானும் மதயானை ராமய்யனும்

1155. காட்சி கொடுக்கும் கண்ணனூர் தன்னில்வந்தார்
மற்றநாள் தானும் அதி மதியுடனே ராமய்யனும்
---------------------------------------------------------------------------------------------------
1128. 2 வரிசையளும், 1132.4 பண்ணிவித்துப், 1140.2 மொருதிரந்தான்,
1144.3 அறுவது, 1146. 4 வந்துகாண், 1155.1காச்சி.
----------------------------------------------------------------------------------------------------
தென்னவர்கள் கொண்டாடும் சீரங்கந் தன்னில்வந்தார்
ஸ்ரீரா(ம) ரங்கருக்குச் சிறப்பு மிகக்கொடுத்தார்.
மற்றநாள் தானும் மதிதீரன் ராமய்யனும்

1160. திருச்சிராப் பள்ளித்தெருவில் வருகையிலே
இவருந்தான் ஆரென்று இயல்பான பெண்களெல்லாம்
மன்மதன்காண் என்பாரும் மதிமந்திரிகாண் என்பாரும்
ராசனிவன் என்பாரும் ராமய்யன்காண் என்பாரும்
துலுக்கர்துரை மக்களைத்தான் துரத்திவந்த சேவகன்காண்

1165. மயலான பெண்களெல்லா மதிளெட்டிப் பார்ப்பாரும்
இப்படியே பார்த்துநின்றார் ஏந்திழைமா ரெல்லோரும்
மற்றநாள் தானும் மகாவீரன் ராமய்யனும்
மணப்பாறை தன்னில் வந்தே யிறங்கினர்காண்
கங்குல் விடிந்து கதிரோன் எழுந்தபின்பு

1170. தேக்க மலைகடந்து திண்டுக்கல் தான்கடந்து
சோழவந்தான் தன்னில் சூழ்ந்தடித்தான் கூடாரம்
கங்குல் விடிந்து கதிரோன் உதித்தபின்பு
துவரிமான் தன்னில்வந்தார் துங்கமுடி ராமய்யனும்
பிள்ளைய பாளையத்தில் போயே யிறங்கினர்காண்

1175. வேந்தன் புலி ராமய்யனும் வெற்றிகொண்டு வந்தானென்று
மன்னன்திரு மலையேந்திரன் மனமகிழ்ந்து கொண்டாடிக்
கற்ன(ன்)புவி ராமய்யற்கு கனகஸ்நானஞ் சொரிய
வயித்திஅய்யன் தன்னை வரவழைக்கச் சொன்னார்காண்
இப்போதே ராமய்யனை யிங்குவர அழையுமென்றார்

1180. சொன்ன வுடனே தோற்றமுள்ள வயித்திஅய்யன்
மன்னவரும் மந்திரியும் வாய்த்த வயித்திஅய்யன்
அந்நேரந் தன்னில் அதிவீர மாய்நடந்து
வந்துகண்டு ராமய்யனை வாகாய் மிகத்தழுவிக்
கற்தனென்னும் ராசன் கச்சித்திரு மலையேந்திரன்

1185. கனகதானஞ் சொரியக் கடுகி அழைக்கச்சொன்னார்
சொன்ன வுடனே தோற்றமுள்ள ராமய்யனும்
------------------------------------------------------------------------------------------------------
1160.1 திருச்சினாப், 1164.4 சேவுகன்காண், 1166.2 பார்த்துநின்ற
1173.1 தொவரிமான், 1186.3 தோத்தமுள்ள.
------------------------------------------------------------------------------------------------------
என்னவெற்றி கண்டேன் எனக்குக் கனகஞ்சொரியச்
சேது மறவனைத்தான் சென்று பிடித்துவந்தால்
கனகமுடனே அப்போ கனகஸ்நானம் பெறலாம்

1190. என்றுசொல்லி ராமய்யனும் எழுந்திருந்து போகலுற்றார்
குஞ்சரமும் வான்பரியும் கோடேறி முன்னடக்கச்
செந்தூள் மிகப்பறக்கச் செங்கதிரோன் தான்மறைய
தேவர்கள் போற்றிசெயுந் திருப்பூ வணத்தில்வந்தார்
கங்குல் விடிந்து கதிரோன் எழுந்தபின்பு

1195. வாய்த்த மடப்புறத்தார் வந்துகண்டாரந்நேரம்
ஆண்டவனே இப்போ அடியர்கள்சொல் விண்ணப்பங்கேள்
கள்ளர் உபத்திரவமும் காவலனே ஆற்றாமல்
மாடுகன்று ஆடுவாய்த்தபணங் காசுமுதல்
சீலைத்துணி மங்கிலியம் சேரப்பறிகொடுத்தோம்

1200. என்றுசொன்ன போதே இருகண் மிகச்சிவந்து
மத்தஞ் சிறுகுடியில் மன்னவனுஞ் சென்றிறங்கி
நாடழித்துத் தீக்கொளுத்தி நன்னகரி பாழாக்கி
வெட்டிச் சிறைபிடித்து விரட்டியே தான்துரத்தி
இப்படியே அய்யன் ஏற்பாய் அழிக்கையிலே

1205. மத்தஞ் சிறுகுடியார் மதுரையிலே போய்விழுந்து
கற்தனெனும் ராஜன் கச்சித்திருமலை யேந்திரற்கு
அய்யன் நடத்தினதை அன்பா யுரைக்கலுற்றார்
அவரு(ரை)த்த தைக்கேட்டு அன்பாய்த்திரு மலையேந்திரன்
கள்ளர்வண்டர் தங்களையும் கருவறுக்க வேண்டாங்காண்

1210. கள்ளர்பத்து நாடென்று கனமா யிருக்கட்டுங்காண்
என்றுசொல்லி ராமய்யற்கு எழுதிவிட்டார் ஓலைதனை
வாசித்துப் பார்த்து மன்னன்புலி ராமய்யனும்
சிறுகுடி விட்டகன்றார் தீரன்புலி ராமய்யனும்
அந்நேரந் தன்னில் அலைகதிரோன் போய்மறைந்தான்
---------------------------------------------------------------------------------------------------
1189.3 கனகஸ்தானம், 1191.3 கோடேரி, 1193.2 போத்திசெயும்;
3-4 திருப்புவனத்தில் வந்தார், 1195. 2 மடப்பரத்தார், 1197.4 ஆத்தாமல்,
1198.1மாடுகண்ணு, 1201.2 சீருகுகுடியார், 1212.2 பாற்து.
--------------------------------------------------------------------------------------------------
1215. கங்குல் விடிந்து கதிரோன் எழுந்தபின்பு
தேவர்கள் போற்றிசெய்யும் திருப்பூ வணத்தில்வந்தார்
மற்றநாள் தானும் மதிதீரன் ராமய்யனும்
ராஜகெம்பீரன் நல்லவரி தான்கடந்து
கிளியினங்கள் பாடும் கிறுங்காத (அ)ரண்கடந்து

1220. வானர வீர மதுரைதனில் வந்திறங்கி
(போகலூர்க் கோட்டை முற்றுகை; ராமப்பய்யன் படையின் வெற்றி
அழகனையும் குமாரனையும் பிடித்துச் சித்திரவதை செய்தல்)

மற்றநாள் தானும் மதபோசன் ராமய்யனும்
போகலூர்க் கோட்டை வளந்திருக்கு மன்னவரை
செஞ்சித் துருக்கமல்ல ஸ்ரீரங்கங் கோட்டையல்ல
மண்கோட்டை தன்னை வளைந்திருக்குஞ் சேவகரே

1225. இத்தனைநாள் இக்கோட்டை வாங்கா திருந்தீர்களோ
நாளைப் பகல்நாலுநாழியலுக்குள்ளாக
கோட்டைதனை வாங்காட்டால் கொன்றிடுவேனுங்களையும்
வைகைக் கரைநீளம் வாகாய்க் கழுவில் வைப்பேன்
என்றுசொல்லி ஓலையெழுதிவிட்டார் ராணுவுக்கு

1230. வாசித்துப்பா{ர்}த்து வயிறெரிந்து மன்னவர்கள்
அங்கேபோய்ச் சாகிறது இங்கே மடிவொமென்று
நாலுதிக்கும் ஏணிவைத்து ராணுவத்தா ரெல்லோரும்
கோட்டையுங் கொத்தளமும் கொம்மையிடித்தார்கள்
குஞ்சரத்தை விட்டுக் கோட்டை தகர்த்தார்கள்

1235. கோட்டை தனைப்பிடித்தார் கொடுங்கோபங் கொண்டெழுந்து
கோட்டையில் குள்ளிருந்து குறும்படித்த மறவருந்தான்
வெட்டி விரட்டவென்று வீரியங்கள் தான்பேசிக்
குமார னழகனும் கூட்டப் பெரும்படையும்
குத்தி விரட்டிக்குலவையிட்டு ஊழியத்தார்
-------------------------------------------------------------------------------------------------
1218.2 கெம்பீரம், 1219 1கிளியெனங்கள்; 3-4 கிருங்காதரன் கடந்து,
1222. 4 மன்னவிரை, 1223.2 துருவமல்ல, 1224.4 சேவுகரே, 1225 4 திருந்தியளே,
1226.3 நாழிகளுக், 1230.3 வயரெரிந்து, 1238.2 னளகனும், 1239.4 உள்ளியத்தார்.
------------------------------------------------------------------------------------------------------
1240. மன்னன்புலி ராமன்படை மட்டில்லாச்சேனைவெள்ளம்
குமார னழகனையுங் கூட்டப்படையத்தனையும்
கைப்பிடியாய்த் தான்பிடித்துக்கட்டியிறுக்கலுற்றார்
வெற்றிகொண்டு அய்யன்படை வீரியங்கள் தான்பேசி
மதியாரழகனையும் மன்னன் குமாரனையும்

1245. கொண்டுவந்து விட்டார்கள் கோலாகல ராமன் முன்னே
பெண்ணைச் சிறைப்பிடித்து ஆணை அரிந்துவெட்டி
அஞ்ஞூறு பெண்சிறையும் அந்நேரங் கூட்டிவந்தார்
மெய்க்காவலாக விடுதிவிட்டு வைக்கச்சொன்னார்
குமார னழகனையும் கூப்பிட்டு முன்னேவிட்டு

1250. என்னோடே நீயும் எதிர்த்துப்போர் செய்வாயோடா
என்றுசொல்லி அய்யன் இருகண் நெருப்பெழவே
காமுட்டிச் சாத்தனைக் கடுக அழைக்கச்சொன்னார்
கட்டியடித்தார்கள் கனகோபங் கொண்டெழுந்து
தச்சனை யழைக்கச்சொன்னார் தார்வேந்தன் ராமய்யனும்

1255. கூட்டிவந்து விட்டார்கள் கோலாகலன் கொலுவில்
மதியா ரழகனையும் மன்னன் குமாரனையும்
குப்புறவே தான்கிடத்திக் குறிமன்னர் பா{ர்}த்திருக்க
முதுகுத்தோல் தன்னை முறைமுறையாய்ச் செதுக்கச்சொன்னார்
அந்தப் படியே ஆனதொரு ஆசாரி

1260. தோலை யுரித்தான் துடித்துத் துடித்துவிழச்
செதுக்கின ஆசாரி தியங்கியங்கே தான்விழுந்தான்
மதியா ரழகனையும் மன்னன் குமாரனையும்
கூட்டிவரச்சொன்னான் கோலாகல ராமன்
கூட்டிவந்து விட்டார்கள் கோலாகலன்கொலுவில்

1265. மூட்டுமூட்டாகமொழியெலும்பை வாங்கச்சொன்னார்
அந்தப்படியே ஆனதொரு ஆசாரி
மூட்டுமூட்டாக மொழியெலும்பைத் தான்தறித்தார்
தறிச்ச வுடலையெல்லாம் தான்வாரிக் கூடையிலே
மதியா ரழகன்தேவி மன்ன(ன்) குமாரன்தேவி
------------------------------------------------------------------------------------------------
1241.2 னளகளையும், 1247: 3 அன்னேரங், 1250 3 எதித்துப்போர்,
1251.4 நெருப்பள்ளே, 1257.1 குப்பறவே, 1265 3 மொளியெலும்பை.
-------------------------------------------------------------------------------------------------
1270. கூட்டிவரச்சொன்னான் கோலாகல ராமய்யனும்
கூட்டிவந்து விட்டார் கோலாகலன் கொலுவில்
இருவர் தலையிலேயும் ஏற்றுமென்றார் கூடைதனைப்
பாளையத்தைச் சுற்றிப் பறையடித்து வரச்சொன்னார்காண்
படைத்தலைவரைப்பார்த்துப் பாருமென்றா ரென்கீற்தி

1275. மதியா ரழகன் மனையாட்டி தன்னையுந்தான்
குமார னழகனுட தேவியைக் கூட்டிவந்து
கபாடக்காரரை விட்டுக் கையைப் பிடிக்கச்சொன்னார்
பறையன்பிடிப் பானோவென்று பார்த்தந்தப் பெண்கொடியாள்
விடுத்தா ளவளுயிரை விண்ணுலகம் போய்ச்சேர்ந்தாள்

1280. மன்னன்புலி ராமய்யனுக்கு வந்துசொன்னா ரந்நேரம்
அவ்வார்த்தை கேட்டு அய்யனுந்தான் அப்போது
வாய்த்ததொரு பெண்கொடியை மனமகிழ்ந்து கொண்டாடிப்
பச்சை வடங்கொடுத்துப் பாங்குடனே அடக்கச்சொன்னார்
அந்தப்படியே ஆனதொரு பெண்கொடியை

1285. எடுத்தடக்கச் சொன்னார்கள் எல்லோருங் கொண்டாட
அந்நேரந் தன்னில் அலைகதிரோன் போய்மறைந்தான்

(ராமப்பய்யன் படை ஆற்றங்கரைக் கோட்டையிலும்
வேதாளையிலும் தங்கிப் பின் பாம்பாற்றங்கரையில் இறங்குதல்)

ஆழிநெடுந் தேரேறி அலைகதிரோன் வந்துதித்தான்
போனான் மறவனென்று பொருமி மிகச்சினந்து
எங்கேதான் போனாலும் இனிவிடப் போறேனோ

1290. கடல்கடந்து போனாலும் கடலைத் துளைப்பேனென்றார்
மன்னன் புலிராமன் மதம்பொழிந்து கொக்கரித்துக்
கடல்கடந்து தீவுகளில் காணாமல் போனானென்று
ஆற்றங்கரைக் கோட்டைக்கு அறுகே முடுகிவந்து
கூடாரந் தானடித்தார் கொற்றவர்க ளெல்லோரும்

1295. ஏடாருமார்பன் ஏகாந்த மாயிருந்தான்
அந்நேரந் தன்னில் அலைகதிரோன் போய்மறைந்தான்
-------------------------------------------------------------------------------------
1272.3 மெடுத்துமென்றார், 1273.2 சுத்திப்; 1279.2 ளவளுஇரை,
1284.4 பெண்ங்கொடியை, 1288 3 பொறுமி, 1293.1 ஆத்தங்கரைக்
1294.2 தானடித்தான்.
----------------------------------------------------------------------------------------
கங்குல் விடிந்து கதிரோன் எழுந்தபின்பு
கூடாரந் தான்பிடுங்கிக் கொற்றவர்களெல்லோரும்
வேதாளை தன்னில்வந்து விரைந்தடித்தார் கூடாரம்

1300. மன்னன் புலிராமய்யனும் வாகாய்க் கொலுவிருந்தார்
மற்றநாள் தானும் மன்னன்புலி ராமய்யனும்
பாம்பாற்றங் கரைதனிலே பார்வேந்தன் ராமயனும்
வந்தே இறங்கினார் மன்னன்படை யத்தனையும்

(திருவணை யடைத்தல்: அரசர்கள், தாசிகள், செட்டிகள்,
பரதேசிகள் கல்லெடுத்தல்)
அந்நேரந் தன்னில் அதிவீர ராமய்யனும்

1305. ஓடத்துறை தோணித்துறை உகந்த கெடித்தலங்காண்
பாம்பன் துறைக்கோட்டை பார்த்துப் புலிராமன்
இந்தபிலங் கண்டல்லோ எதிர்த்தான் மறவனுந்தான்
வாய்த்த துறைமுகத்தில் வந்துநின்று ராமய்யனும்
அயோத்தி ராமர் அடைத்த திருவணைதான்

1310. ஏதடா என்றான் எல்லோருங் கெடிகலங்கி
இந்தத் திருவணைதான் என்றார்க ளெல்லோரும்
திருவணையைத் தானடைக்கத் தீரன்புலிராமய்யனும்
செப்பமாயெல்லோரும் சேரவிங்கே வாருமென்று
ராசாதிராசரெல்லாம் நாட்டமுடன் வந்தார்கள்

1315. பாளையக் காரர் படைத்தலைவரே கேளும்
திருவணையைத் தானடைக்கத் திருமால்போல் ராமய்யனும்
நல்ல திருவணையை நாமடைக்க வேணுமென்று
நாள்நட் சத்திரம் நன்றாகத் தான்பார்த்துத்
தேங்கா யுடைத்தார்கள் தென்னவர்கள் மன்னர்முன்னே

1320. கல்லெடுங்கோ என்று கரியமால் ராமய்யனும்
அரசன்மக்கள் ராசாக்கள் ஆனபடை மன்னரெல்லாம்
றாவுத்தர் பாடி நல்ல பெரும்படையும்
மல்லையர்கள் பொந்திலியர் மன்னர் பெரும்படையும்
எல்லோருங் கூடி இருகைகொட்டித் தான்சிரித்து
-------------------------------------------------------------------------------------------
1298.2 தான்பிடிங்கிக், 1305. 3-4 உகந்தே கெடித்தலுகாண்,
1323 1 மல்லயர்கள், 1325.1எல்லையத்த.
----------------------------------------------------------------------------------------------
1325. எல்லையற்ற சேனைதளம் எல்லோருந் தான்கூடி
மலைமுறிந்து வீழ்ந்தாலும் மண்ணிலுள்ளோர் வந்தாலும்
ஆரால் முடியுமடா ஆளச் சமுத்திரத்தை
காவேரியாறுமல்ல கைவாய்க்கால் தானுமல்ல
பூவேரி தானுமல்ல புனனீர் மடுவுமல்ல

1330. ஆழச் சமுத்திரத்தை அடைக்கவென்று தான்துணிந்து
இந்நாட்டில் கண்டதில்லை இவ்வுலகில் கேட்டதில்லை
பிழைத்த பிழையெல்லாம் பிழையாச்சே மன்னவரே
பா(ர்)ப்பான்பேய் கொண்டான்காண் பார்வேந்தே மன்னவரே
என்றுசொல்லி மன்னரெல்லாம் ஏங்கி முகம்வாடி

1335. நின்ற இடமெல்லாம் நினைந்துநினைந்தே யுருகிச்
சேர்ந்த இடமெல்லாம் சேரக் கிலேசப்பட்டு
என்று சலித்து எல்லோரும் வாய்வறண்டு
நின்றுமெள்ளப் பார்த்து நெடியமால் ராமய்யனும்
தார்கொண்ட ராமனப்போ தலைப்பாகில் கல்லைவைத்துச்

1340. சீர்கொண்டு தானடந்தார் செங்கண்மால் ராமய்யனும்
எல்லோரும் நின்றவர்கள் இதுபுதுமை யென்றுசொல்லி
அரசர்மக்க ளான அதிவீர ரெல்லோரும்
ராவுத்த பாடி நல்லபடை வீரரெல்லாம்
மல்லையர்கள் பொந்திலியர் மன்னர்படை வீரரெல்லாம்

1345. துலுக்கர் பரிவாரம் தோறாத சேவகரும்
உபையதள ராணுவெல்லாம் ஒருமிக்கச் சேகரமாய்
எல்லோரும் சேகரமாய் எல்லையற்ற மன்னரெல்லாம்
ராமனே கல்சுமந்தால் நாமெடுக்க லாகாதோ
என்றுசொல்லி மன்னரெல்லாம் எல்லோருந் தான்கூடி

1350. ஏல மிகப்பாடியெடுத்தார்கள் கல்தனையும்
ஆளுக்கொரு கல்லு அச்சணமே தானெடுத்தார்
தாளில் வணங்காத தார்வேந்த ராசாக்கள்
வேளுக்கு மொப்பாய் விசாரமிட்டு நின்றார்கள்
அப்போதுராமய்யனும் அங்கவரைத் தான்பார்த்து
------------------------------------------------------------------------------------
1329. 3 பொண்ணீர்; 1345. 4 சேவுகரும், 1355.4 ஏத்தமோதான்.
------------------------------------------------------------------------------------
1355. என்னுடைய பூண்நூலுக் குங்கள்நூல் ஏற்றமோதான்
அப்போது ராசாக்கள் அரிகரி யென்றுசொல்லித்
திருவணைக்குக் கல்லுத் திறமாகத் தானெடுத்தார்
ராசாக்கள் கல்சுமந்தால் நாமிருக்க லாகாது
என்றுசொல்லி மன்ன ரெல்லோருங் கல்சுமந்தார்

1360. ராசாக்கள் கல்சுமந்து நடந்து வருகையிலே
வேசை மகளொருத்தி விதமாகத் தான்பா(ர்)த்து
நீண்ட புகைச்சுருட்டும் நெற்றியிலே நாமமுமாய்ப்
பூண்ட சரப்பணியும் பூண்நூல் தலைப்பாகும்
உல்லாச வல்லவெட்டும் ஒருகைச் சுருளுமெங்கே

1365. பக்கச்சமுதாடுமெங்கே பாரித்த வாங்குமெங்கே
கவிகரத்துக் கத்தியெங்கே கன்னரே ராசாவே
கல்லேற்றிவிட்டாரோ கன்னன்புலிராமய்யனும்
சொல்லிச் சிரித்தார்கள் துங்கமுடித் தாசியர்கள்
வேசையர்கள் தான்சிரிக்க விட்டீரே யென்றுசொல்லி

1370. அம்புபட்ட மான்போலே அவதிவந்த தென்றுசொல்லி
வெம்பி மனந்தளர்ந்து வேசித்துக் கண்சிவந்து
மன்னன் புலி ராமய்யனை வந்துகண்டு ராசாக்கள்
வேசை சிரிக்க விட்டீரே மன்னவரே
கத்தியிலே பாய்வோமென்றார் கன்னன்புலிராசாக்கள்

1375. அவ்வார்த்தை கேட்டு அதிவீர ராமய்யனும்
ராசாக்க ளெல்லோர்க்கும் நல்வசனந் தானுரைத்து
அடைக்காயும் வெள்ளிலையும் அன்புடனே தான்கொடுத்துப்
பச்சை வடங்கொடுத்தார் படைத்தலைவர் கொண்டாடப்
பாளையத்திலுள்ள பரஸ்திரிக ளத்தனையும்

1380. கூட்டிவரச் சொன்னார் கோலாகல ராமய்யனும்
ஏழாயிரம் வேசை இயல்பாகக் கூட்டிவந்தார்
ஆளுக்கு ஏழுகல்லு அடவாக எடுக்கச்சொன்னார்
---------------------------------------------------------------------------------------
1363. 4 தலப்பாகும், 1367.1 கல்லேத்தி, 1370. 3 அவதிவந்து,
1371. 2 மனந்தளன்று, 1377. 4 தான்குடுத்துப், 1378.1 பட்சை,
1379 3 பலஷ்திரிக, 1381.1 ஏளாஇரம்.
---------------------------------------------------------------------------------------
ஏலயே லம்பாடி எடுத்தார்கள் வேசையர்கள்
ஒருத்தி கெடுத்தாளே உலகிலுள்ள மாதரைத்தான்

1385. என்றுசொல்லி வேசையர்க ளெல்லோருங்கிலேசமுடன்
வேசையர்க ளெல்லோரும் விடுதிவந்து சே(ர்)ந்தார்கள்
அப்போது செட்டிமகன் அவளை வழிமறித்துச்
சிங்கியடித்துச் சிரித்தார்காண் முன்னைநின்று
பச்சைமஞ்சள் பூச்சும் பாங்கானகை வீச்சுமெங்கே

1390. கடைவீதி தன்னில் கடுகி நட ப்பீர்களே
கையில்வளை கலகலெ(னக்) கால்மோதிரங்கள(க)ளெ(ன)
வங்கணக் காரருடன் வலுப்பேசிச் சிரிப்பீரே
கொங்கைகள் குலுங்கக் கூடைமண்ணைத் தானெடுத்துக்
கோபுரக் கழுதைகள்போல் கொண்டுவந்து போட்டீர்களே

1395. மாப்பிள்ளை மாரைக்கண்டால் வலுப்பேசி நிற்பீர்களே
செட்டி சிரிக்கச் சிரிப்பா(ர்)க் குடம்பெடுத்தோம்
என்று சொல்லி வேசைமகள் எல்லோரும் விடுதிவந்து
மற்றநாள் தானும் மன்னன்புலி ராமய்யன்முன்
தாசிக ளெல்லோரும் தலைப்பட்டார் நீலிகள்போல்

1400. (கல்சுமந்தோ மென்றுசெட்டி காறி மிகவுமிந்தான்
வேசையர்கள் சொன்னபின்பு விருதுபுகழ் ராமய்யனும்
பாளையத்திலுள்ள பலசரக்குச் செட்டிமுதல்
கூட்டிவரச் சொன்னான் கோலாகல ராமய்யனும்
கூட்டிவந்து விட்டார்கள் கோலாகலன் கொலுவில்

1405. செட்டிக ளெண்ணாயிரம்பேர் சேரவே வந்தார்கள்
மன்னன்புலி ராமய்யனும் வணிகர் குலத்தாரே
தாசிகள் கல்சுமந்தால் தான்சிரிக்கக் காரியமேன்
திருமா லடைத்த திருவணையைத் தானடைக்க
ஆளுக்குப் பத்துக்கல்லு அடவாக எடுங்கோளென்றார்

1410. ஏலேலம் பாடியெடுத்தார்கள் செட்டியெல்லாம்
செட்டியர்கள் கல்சுமக்க சிற்றாண்டிப் பயலொருவன்
-----------------------------------------------------------------------------------------
1387. 2 செட்டிமகள், 1390.3 கடிகி; 4 நடப்பியளே, 1392.4 சீரிப்பியரே,
1394 2 கள்தையள்போல்; 4 போட்டியளே, 1395.4 நிப்பியளே,
1399.1 தாசிய; 4 நீலியுள்போல், 1407.1 தாசியள்.
----------------------------------------------------------------------------------------
சிங்கி யடித்துச் சிரித்தான்காண் செட்டிகளை
பிச்சைக்கு வந்தாலும் பின்னேவா யென்பீர்களே
அப்பச்சியென்றாலும் அரைக்காசும் ஈயீர்களே

1415. சிற்றப்பா வென்றாலும் செருப்பா லடிப்பீர்களே
சாகிறோம் என்றாலும் சாப்பாடும் போடீர்களே
காசுகணக் கிட்டதெல்லாம் கைமேல் பலித்ததென்று
பண்ணிய பாவம் பலித்ததே செட்டிகளே
புத்திகெட்ட ஆண்டிசொல்லப் பூராயச்செட்டிகளும்

1420. வெற்றியுள்ள ராமய்யன்முன் விழுந்தாரே செட்டிகளும்
மணங்கெட்டுப் போனோமே மன்னவனே அய்யாவே
நாவிதான் போ(து)மோ நாங்களெல்லாஞ் சாவோமோ
ஆண்டிப்பயல் சொன்னதெல்லாம் அறுக்குதே யெங்களுக்கு
வேசையர்கள் சொன்னதெல்லாம் வேகுதே யெங்களுக்கு

1425. ஆண்டவனே பூமியிலே அரைச்சணமுந் தறுகோமென்றார்
வணிகர் குலத்தாரை வாருங்கோ என்றுசொல்லி
அடைக்காயும் வெள்ளிலையும் அன்பாகத் தான்கொடுத்துப்
பாளையக் காரர் பலபேரைத் தானழைத்து
அயோத்திராமர் அடைத்த திருவணைக்குக்

1430. கல்சுமக்க வேணுமென்றார் கன்னன்புலி ராமய்யனும்
வானரங்கள் கூடி மலைபிடுங்கி வந்தாப்போல்
அன்றுமுதல் மன்னவரும் அரசர்மக்கள் தான்கூடிக்
கொண்டுவந்து கல்குவித்தார் குன்று மலைபோலே
பாளையத்திலுள்ள பரதேசி யத்தனையும்

1435. கூட்டிவா என்றார் கோலாகல ராமய்யனும்
கூட்டிவந்து விட்டார்கள் கோலாகலன் கொலுவில்
அயோத்திராமர் அடைத்த திருவணைக்குக்
கூடைமண்ணை வெட்டிக் கொட்டுங்கோ திருவணைக்கு
அந்தப் படியே அவர்களெல்லாம் மண்சுமந்தார்
---------------------------------------------------------------------------------------
1417 3 சித்தாண்டிப், 1412 4 செட்டியளைப், 1413 1 பிச்சைக்கி; 4 யெம்பியளே,
1414.4 ஈயியளே, 1415.1 சித்தப்பா; 4 லடிப்பியளே, 1476 1 சாகுறோம்;
4 போடியளே, 1417 4 பலித்துதென்று, 1418 4 செட்டியனே,
1429. 4 திருவணைக்கிக், 1431.3 மலைபிடிங்கி, 1433 2 கல்குமித்தார்
--------------------------------------------------------------------------------------------
1440. திருவணையில் ராமய்யனும் திறமாக வந்திருந்து
அயோத்திராமர் அடைத்த திருவணைமேல்
கல்லை யெடுக்கச்சொன்னார் கரியமால் ராமய்யனும்
கல்லைப் பரப்பிக்கனத்த திருவணைமேல்
வாளைகுதி பாயும் வறுக்கை திறுக்கையுடன்

1445. ஓராமீன் வாளைமீன் உற்றபுகழ் நெய்த்தலையும்
ஓங்கு திமிதியுடன் உள்ளான் சுறாமீனும்
பிள்ளைகொல்லி நெய்மீனும் பெருங்குதிப்புச் சாளையுடன்
சுறாமீன் பனைமீன் துலங்கு கடல்கறும்பை
மடவைச் சுறாமீனும் வங்கு நெத்தவுளுவை

1450. ஆனைமீன் குதிரைமீன் அணைமேலே தவ்விவிழச்
சமுத்திரத்து மீனெல்லாம் தாண்டிக் குதித்துவிழ
வாளை குதிபாய மன்னவனும் பார்த்திருந்தான்
திருவணையைத் தானடைத்தான் தீரன்புலி ராமய்யனும்
இலங்கை முழுதாண்ட ராவணன்காண் என்பாரும்

1455. சந்திரரும் சூரியருந்தானவரு மெச்சிடவே
இந்திரன்போல் ராமய்யனும் ஏழாநாள் தானடைத்தார்
ஆயன் கடலை அன்றே அடைக்கையிலே
பூலோக ராமன் புகழ்சடைக்கனைப் பிடிக்கத்
திருவணையைத் தானடைத்தான் தீரன்புலி ராமய்யனும்

(திருவணையில் வன்னி போர்புரிந்து வெல்லுதல்)

1460. சடைக்கன் மருகன்வன்னி தானிந்தச் சொல்கேட்டு
அயோத்தி ராமர் அடைத்த திருவணைமேல்
திறமா யடைத்துச் செலுத்துவனோ ராமனுந்தான்
பா(ர்)ப்பான் படைப்போரும் பாருலகில் நம்போரும்
இருவருட போரும் இனித்தெரியு மன்னவனே

1465. பெண்டுக ணாச்சியெனும் பெரியதொரு கப்பலைத்தான்
கொண்டுவரச் சொன்னான் கோடையிடி வன்னியவன்
பா(ர்)ப்பானைப் பா(ர்)த்துப் பல்கடித்துப் பாசைசொல்லித்
--------------------------------------------------------------------------------------
1446.2 திமிதிமுடன், 1462.1 திரமா.
----------------------------------------------------------------------------------------
தீரன் புலிவன்னிதிறமுடனே வந்துநின்று
ராமர் லெட்சுமணர் நல்ல பெருங்குழலைக்

1470. கப்பலிலே தானேற்றிக் கடுகியே கொண்டுவந்தார்
திருவணையைத் தான்முடுகிச் சென்றே பொருதனர்காண்
சுட்டார் குழல்காரர் துங்கமுடி மன்னரையும்
எறிந்தா ரெறிவாணம் எல்லையற்ற சேனையின்மேல்
வாண மடிபட்டு மயங்கிக் கடலில்விழ

1475. உண்டைபட்டுச் சோர்ந்து உருண்டு கடலில்விழப்
பட்டார்கள் ராமன்படை பாற்கடலில் தானிறைந்தார்
காலற்று வீழ்வாரும் கையற்று வீழ்வாரும்
அய்யோ சிவனேயென்று அலறி மிகமயங்கி
ஆனைவிட்டுச் சேனைவிட்டு ஆற்றாமலோடுவாரும்
1480. வேசையர்கள் செட்டியர்கள் வெருண்டு வெருண்டோடப்
பாளையத்திலுள்ள படைத்தலைவரெல்லோரும்
வன்னியுடகோபங் கண்டு மயங்குவாரும்
பாளையங்க ளெல்லாம் பலதிக்குந் தானோடி
நிற்தூளி யாக்கி நின்றானே வன்னியுந்தான்

1485. அந்தநாள் சென்று அலைகதிரோன் போய்மறைந்தான்

(ராமப்பய்யன் பரங்கிகளை வரவழைத்து ஒப்பந்தம் பேசியபின்,
அவர்கள் இராமேச்சுரத்தீவை முற்றுகையிடுதல்)

ஆழிநெடுந் தேரேறி அலைகதிரோன் வந்துதித்தான்
மற்றநாள் சென்று மன்னன்புலி ராமய்யனும்
மாப்பிள்ளை கொண்டப்பய்யன் வாருமென்று தானழைத்துப்
பாளையக் காரர் பலபேரைத் தானழைத்துப்

1490. திருவணையிற் சென்றுசண்டை தீப்பறந்து போச்சுதென்று
தீவிலிருந்துகொண்டு சேர இறக்கடித்தார்
எதிர்த்துப்போர் செய்தவனை யினிவிடப் போறேனோ
வாய்மதங்கள் பேசி வன்னியே வெற்றிகொண்டான்
பாற்கடலி னூடே படைபொருத வந்தானோ
------------------------------------------------------------------------------------------
1470 2 தானேத்திக், 1471.4 பொருதினர்காண், 1477 1 காலத்து; 3 கையத்து,
1479 3 ஆத்தாம, 1495.3 கண்டியளோ.
---------------------------------------------------------------------------------------
1495. அன்று அவன்வலுவு கண்டீர்களோ மன்னவனே
இன்றைக்கு என்வலுவு எல்லோரும் பாருமென்று
மாப்பிள்ளை கொண்டப்பய்யனே வாருமென்று தானழைத்து
ஈழத்து ராசாவுக்கு எழுதுமென்றார் காயிதத்தைச்
சிங்களத்துப் பரங்கிகளைச் சேர அழையுமென்றார்

1500. கொளும்புப் பரங்கிகளைக் கூட அழையுமென்றார்
மன்னா(ர்ப்) பரங்கிகளை வாகா யழையுமென்றார்
கண்டிப் பரங்கிகளைக் கடுக அழையுமென்றார்
தீவு(ப்)பரங்கிகளைச் சேர அழையுமென்றார்
கொச்சிப்பரங்கிகளைக் கூட அழையுமென்றார்

1505. இலங்கைப் பரங்கிகளை இங்கு அழையுமென்றார்
துலுக்காணத் துள்ள சோங்கு மறுமாவும்
தோணிப் படவிலுள்ள சோங்கு பரங்கியெல்லாம்
எல்லாப் பரங்கிகளை(யும்) இங்கே அழையுமென்றார்
அந்தப் படிக்கு அனுப்பினார் காகிதமும்

1510. வாசித்துப் பார்த்து மனமகிழ்ந்து கொண்டாடி
எல்லோரும் வந்து இறங்கினார் பாளையத்தில்
சோங்கு மறுமாவுஞ் சோகுடனே பாளையமும்
கப்பலுஞ் சோங்குங் கடுகியே பாய்விரித்தார்
அட்ட சமுத்திரத்தில் அலைகடலில் கப்பல்விட்டு

1515. ராமநாத சுவாமி நல்ல பெருந்தீவை
வந்து வளைந்து மலங்கப்போர் செய்தார்கள்
தீவுப் பரங்கிகளுஞ் சென்றே வளைந்தார்கள்
நாலுதிக்குங் கப்பல்விட்டு நாடிச் சமர்பொருதார்
பரங்கியர் தானாபதி பாங்குடனே அப்போது

1520. மன்னன்புலி ராமனையும் வந்துகண்டாரந்நேரம்
அப்போதுராமய்யனும் அன்பாய் மனமகிழ்ந்து
பரங்கியர்கள் தானாபதிக்குப் பச்சைவடந் தான்கொடுத்தார்
ஆண்டவனே இப்போ அடியேன்சொல் விண்ணப்பங்கேள்
வாள்கோட்டை ராயன் மதச்சடைக்கன் கெட்டியென்றான்
----------------------------------------------------------------------------------
1499.2 பரங்கியளைச், 1509.2 படிக்கி, 1574.3 அலகடலில்,
1517.2 பரங்கியளுஞ், 1522 2 தானாபதிதனக்குப்.
------------------------------------------------------------------------------------
1525. எங்களுட கப்பலென்றால் இந்தவழி போகவொட்டான்
தீவுப் பரங்கியர்கள் சேர நடுங்குவர்காண்
கப்பமுங் கட்டி கைதொழுது நிற்பார்கள்
இடுக்கப்பட்டு நாங்கள் இருந்தோம் பெருந்தீவில்
எங்க ளிடுக்கம் இனித்தீரும் ஆண்டவனே

1530. என்றுசொல்ல அப்போது எதிரில்லா ராமயனும்
தீவி லொளித்திருக்குந் தீரன் சடைக்கனைத்தான்
சென்று பிடித்துவந்தால் தீவுதனையுங்களுக்கு
அறுதியாய்த் தந்து ஆதரித்துக் கொள்வோமென்றார்
பரங்கிகள் தானாபதிக்குப் பாங்காய் வெகுமதியும்

1535. பாக்கு மிளகு பலசம்பாரங் கொடுத்து
வரிசை மிகக்கொடுத்தார் வாய்த்த பரங்கியர்க்கு
பரங்கி(த்)தானாபதியும் பாங்குடனே தீவில் சென்றான்
மன்னன் புலிராமன் வாகா யுரைத்ததெல்லாம்
பரங்கியர்க்குச் சொன்னபின்பு பாங்காய் மனமகிழ்ந்து

1540. அந்தச் சணமே அதிவேகத்துடன்வந்து
கப்பலுஞ் சோங்கு(ம்) கடுகவே பாய்விரித்து
அட்ட சமுத்திரத்தில் அலைகடலில் கப்பல்விட்டு
ஏழு சமுத்திரத்தில் இடமறவே பாய்விரித்துப்
பரங்கிகளெல்லோரும் பாசைசொல்லிப் பல்கடித்து

1545. ராமநாத சுவாமி நல்ல பெருந்தீவை
வந்து வளைந்துகொண்டார் வா(ய்)த்த பரங்கியர்கள்

(வன்னி பரங்கியர்களோடு கப்பற்போர்செய்து வெல்லுதல்)

சடைக்கன் மருகன்வன்னி தானிந்தச் சேதிகேட்டுப்
பார்ப்பார்சொல் கேட்டுப்பரங்கி படையெடுத்து
வந்தானே பரங்கியென்று வாதுசொல்லிப் பல்கடித்துப்

1550. பரங்கியும் பார்பானும் பாரமோ என்றுசொல்லி
வீரியங்கள் பேசிவன்னி வீரவாள் கைப்பிடித்து
--------------------------------------------------------------------------------------------
1525.1யெங்களுட, 1526.3 சேற. 1530.1 என்று சொல்லி,
1534.1 பரங்கியள்; 4 வெகுமதியும், 1539.1 பறங்கியற்குச்
--------------------------------------------------------------------------------------
என்வலுவும் அவன்வலுவும் இனிஅறிய வேணுமென்று
ஏறியே கப்பல் எல்லையற்ற படையையெல்லாம்
குப்புறவே தள்ளிக் குடலைப்பிடுங்காட்டால்

1555. என்பெயரோ வன்னி யெடுத்ததுவும் ஆயுதமோ
மதச்சடைக்கன் தான்வளர்த்த வன்னிக்கு வந்தெதிரே
நாடு கலக்கியென்ற நல்லதொரு கப்பலையும்
கொண்டுவரச்சொன்னான் கோடையிடி வன்னியுந்தான்
ராமர் லெட்சுமண ரென்ற பெருங்குழலைக்

1560. கப்பலிலே தானேற்றிக் கடுகியே பாய்விரித்து
அஞ்சு படவும் அடவாகப் பாய்விரித்து
ஏறினான் கப்பலிலே எதிர்த்து விரட்டவென்று
தீவுப் பரங்கிகள்மேல் சினந்தே மிகப்பொருதார்
கொளும்புப் பரங்கிகளைக் குப்புறவே தான்கவிழ்த்து

1565. மன்னார்ப் பரங்கிளை மருண்டோடத்தான்விரட்டிக்
கண்டிப் பரங்கிகளைக் கலங்கவே தான்விரட்டி
ஆறு படவும் அடவுடனே தான்பிடித்தான்
படவி லிருந்த பரங்கிகளைத் தான்பிடித்துத்
துலுக்கா ணத்துச் சோங்கு மறுமாவும்

1570. எதிர்த்துவந்த பரங்கியர்க ளெல்லோரும் போயொளித்தார்
வன்னியுட போரைக் கண்டு மன்னரெல்லாங் கொண்டாடி
வன்னியுட அதட்டு வானங் குமுறுதுபோல்
தட்டழிந்து கெட்டுத்தலைகெட்டுப் போராடினார்கள்
கண்ணுக்கு மெட்டாமல் கருங்கடலி லோடினர்காண்

1575. வெற்றிகொண்டு வன்னி வீரியங்கள் பேசிவந்தான்
தெத்துப் பதனமென்ற திரும்பினான் வன்னியுந்தான்
மன்னன் புலிவன்னி மாமனையும் வந்துகண்டு
வெட்டிய(ரிந்து) சூறை யிட்டுவந்தேன் ஆண்டவனே
ஆறு படவும் அடவுடனே தான்பிடித்துப்
-----------------------------------------------------------------------------------------------
1553.4 படைவையெல்லாம், 1554 1 குப்பறவே, 1556, 3 வன்னிக்கி,
1559.3ரென்று, 1562.3 எதுற்து, 1565.1 மன்னர்ப் 1570. 1 எதுத்து வந்த,
1572.3 மானங், 1575.1 வெத்திகொண்டு, 1578.2 ய-குறை.
-------------------------------------------------------------------------------------------------
1580. படவி லிருந்த பரங்கிகளைக் கொன்றுழக்கிப்
பரங்கிகள் கூட்டமெல்லாம் பாற்கடலில் போய்விழுந்தார்
வன்னி யுரைக்க மதச்சடைக்கன் மனமகிழ்ந்து
பூரித் திருபுறமும் பொன்னுருக்கி விட்டாப்போல்
திட்டிக் கிடாய்வெட்டித் தீரன்புலி வன்னியற்கு

1585. முந்நூறு ஆலாத்தி முறைமுறையாய்த் தானெடுத்தார்
என்மருகா வன்னியரே இந்தவெற்றி போதாதோ
ராமநாத சுவாமி நமக்குத் துணையிருக்கப்
பா(ர்)ப்பானொருபொருட்டோ பார்வேந்தே மன்னவரே
அந்தநாள் சென்று அலைகதிரோன் போய்மறைந்தான்.

(பரங்கியரையும் ராமப்பயன்படையையும் வன்னி வெல்லுதல்)

1590. கங்குல் விடிந்து கதிரோன் எழுந்தபின்பு
முரிந்த பரங்கியெல்லாம் முற்கமாய்த் தான்கூடிப்
பால்கடலிற் குள்ளே பரங்கியெல்லாந் தான்கூடித்
துலுக்கா ணத்துச் சோங்கு மறுமாவும்
கண்டிப் பரங்கியெல்லாங் கனகோபங் கொண்டெழுந்து

1595. கொளும்புப் பரங்கியெல்லாம் கோவித்துக் கண்சிவந்து
சிங்களத்துப் பரங்கியெல்லாம் சினந்து மிகவெழுந்து
துத்துக்குடிப் பரங்கி சோனகர் பட்டணமும்
இருக்கும் பரங்கியர்க ளெல்லோருந் தான்கூடி
ராமநாத சுவாமி நல்ல பெருந்தீவை

1600. வந்து வளைந்தார்கள் வாய்த்த பரங்கியெல்லாம்
தெத்திலே அய்யன்படை சினந்துபோர் செய்தார்கள்
படவில் பரங்கியெல்லாம் பறந்துபோர் செய்தார்கள்
வந்துதிறை கொள்ளவென்று வந்தார் பரங்கியெல்லாம்
தீவை வளைந்துகொண்டு திறமாகப் பொருதனர்காண்

1605. மறவர் படையெல்லாம் மண்டிப் பொருதார்கள்
தேக்கிலையில் நீரதுபோல் தியங்கி மறவரெல்லாம்
நின்று மயங்கி நெடுமூச்சுக் கொண்டார்கள்
-----------------------------------------------------------------------------------------------
1583.3 பொன்முரிக்கி, 1597 1முறிந்த, 1596.4 மிகவெளுந்து,
1597.3 சொன்னகராப், 1604 4 பொறுதினர்காண்.
----------------------------------------------------------------------------------------------
வலையிலகப்பட்ட மான்போலே தான்மறவர்
என்செய்வோ மென்று எதிர்க்கத்திற மில்லாமல்

1610. அந்த விசளம் அறிந்து சடைக்கனுந்தான்
என்மருகா வன்னியரே இனிவந்து கூடுமென்றார்
ஆண்டவனே யிப்போது (பாரும்) அடியேனையுந்தான்
பா(ர்)ப்பானும் பரங்கியுமே பாரமோ என்தனக்கு
அன்றிலங்கை தன்னில் அனுமா ரழித்தாப்போல்

1615. வென்று பரங்கியர்கள் விண்ணு(ல) கில் தான்பார்த்து
வெட்டித் துரத்தி விரட்டிவிட வல்(ல)வன்காண்
வெற்றிகொண்டு வாறேனென்று மேடைமேல் தானேறிச்
சற்றுஞ் சலியாமல் சங்கரனைத் தான்தொழுது
வெங்கண் சிவந்துவன்னி வீரவாள் கைப்பிடித்து

1620. ஏவினான் வான்பரியை யெதிர்த்தவரை வெல்லவென்று
மாப்பிள்ளை கொண்டப்பய்யனே வாருமென்று தானழைத்து
வெங்கிட கிருஷ்ணய்யா வீமனே வாருமென்று
சத்துருக் கையனே தார்வேந்தே வாருமென்று
பொன்னமராயா போர்வேந்தே வாருமென்று

1625. மன்னவர்கள் கொண்டாடும் மண்டுருப்பாப்பய்யனும்
பட்டத்து நாய(க்க)னும் பரிவார மத்தனையும்
தார்வேந்தர் கொண்டாடும் சாமி நாயக்கனும்
நத்தத்துலிங்கய்யனும் நல்லபடைக் காலாளும்
திருமலைப் பூச்சியனும் சேர்ந்தபடை யத்தனையும்

1630. வி ரு து சொல்லி வெட்டிவரும் வெங்க(ம) நாயக்கனும்
போர்க்களத்தில் நின்று பொ(ரு)ம் பொம்ம(ய) நாயக்கனும்
கூத்தன்மகன் சேதுபதி வாய்த்தபடை யத்தனையும்
தோவாளைத் தொண்டு துரைமக்க ளத்தனையும்
பாண்டியர்கள் மெச்சும் பாவூரு மன்னவரும்

1635. வி ரு தணிந்து வெட்டிவரும் வெட்டர்புரந் தளவாயும்
தென்காஞ்சி மூக்கன் சேர்ந்தபடை யத்தனையும்
--------------------------------------------------------------------------------------------
1608.2 லகப்பட்டு, 1609.3 எதுக்கத்திற 1611 1 என் மருகா,
1614.1 அண்ணிலங்கை, 1615 4 தான்பாற்து, 1618.1 சத்துஞ் 3 சங்கறனைத்,
1629.3 சேர்ந்தபடை, 1633.தோவாளத்
---------------------------------------------------------------------------------------
கோட்டாற்று ரெட்டி குமாரன் பெருந்தளமும்
பாளையக் காரர் படைத்தலைவ ரெல்லோரும்
வேளையத்தில் வென்றுவரும் வீரப்பரிவாரங்களும்

1640. பெண்டுகளோ வென்று பெருமூச்சுத் தானெறிந்து
நாளைப் பகல்பொழுது நாழியலுக் குள்ளாகத்
தீவைப் பிடியாட்டால் சேரவே கொன்றுழக்கி
இன்று மறவனைத்தான் சென்றே பிடியாட்டால்
வைப்பேன் கடற்கரையில் வாகாய்க் கழுவுதனில்

1645. வெட்டினான் பரங்கிகள் வேந்தனைத் தான்துணித்தான்
இருபடையு மூண்டு எதிர்த்துப்போர் செய்தார்கள்
கோவித்து வெட்டினான் கொடுங்கால வன்னியுந்தான்
தெத்திலே வந்துதிறமாக வந்தான்காண்
பரங்கி பெரும்படையைப் பார்த்து நீருரைத்தீர்

1650. என்றுசொன்ன போதே எதிரில்லா வன்னியுந்தான்
வாதுப்போர் செய்யும் மறவன் வலுக்காரன்
பரங்கிக ளெல்லாரும் பாசைசொல்லிப் பல்கடித்து
எதிர்த்துப்போர் செய்தார்கள் மறவர்படை யெல்லோரும்
பரங்கிகள் தன்போரைப் பார்த்து(த்)தானும்பணிந்து

1655. ராமநாத சாமி நல்லதுணை யென்றுசொல்லி
நாடு கலக்கியெனும் நல்லதோர் வான்பரியைக்
கொண்டுவரச் சொன்னான் கோடையிடி வன்னியுந்தான்
ஏறினான் வான்பரிமேல் எதிரில்லா வன்னியுந்தான்
பேரிகை டம்மானம் பிறகே தொனிமுழங்கப்

1660. பட்டார் பரங்கியெல்லாம் பருந்து கழுகாயத்
தப்பின பரங்கியெல்லாஞ் சமுத்திரத்தில் போய்விழுந்தார்
கண்டிப் பரங்கியெல்லாங் கப்பலிலே யேறினர்காண்
கப்பலிலே பார்த்துக் கவிலெனவே சுட்டார்கள்
கடலிலே கப்பல் கவிழ்ந்ததுகாண் அம்மானை

1665. தெத்திலே வன்னிதிறமாகப் பொரு(து)விட்டுச்
செயங்கொண்டு வன்னியுந்தான் சே(ர்)ந்தான்காண் அம்மானை
அந்நேரந் தன்னில் அலைகதிரோன் போய்மறைந்தான்
------------------------------------------------------------------------------------------
1637 1கோட்டத்து, 1647.3 நாளிகலுக், 1644.2 கடைக்கரையில்; 4 களுவுதனில்,
1654 4னம்பணிந்து, 1656.2 கலக்கியிடும், 1659. 2 டம்மாணம்,
1665 2 வென்னித்
-------------------------------------------------------------------------------------------
(மீண்டுங் கப்பற்போர்: சடைக்கனைப் பிடிக்க முயற்சி:
வன்னியின் வெற்றி)

மற்றநாள் தானும் மன்னன்புலி ராமய்யனும்
மறவனே ஆண்பிள்ளைகாண் மண்டலத்திலுள்ளோரில்

1670. என்றுசொன்ன போதே எல்லோருங் கெடிகலங்கி
மாப்பிள்ளை கொண்டப்பய்யன் மன்னவனும் அப்போது
கப்பலுஞ் சோங்கு(ங்) கடுகவே தானழைத்தார்
அஞ்ஞூறு கப்பல் அருகாகப் பாய்விரித்து
எள்ளளவு மில்லாமல் இடமறவே பாய்விரித்து

1675. மாப்பிள்ளை கொண்டப்பய்யன் மன்ன னுடன்படையும்
வெங்கிட கிருஷ்ணப்பய்யன் வீமனுடன்படையும்
சத்துருக் கய்யன் தாடாளன் தன்படையும்
பொன்னமராயன் போர்வேந்தன் தன்படையும்
மன்னவர்கள் கொண்டாடும் மண்டுருப்பாப்பய்யனும்

1680. விருது சொல்லி வெட்டிவரும் வெங்கமநாயக்கன் படையும்
போர்க்களத்தில் நின்றபட்ட(ப்) பொரும்பூட்டு ராசாவும்
தார்வேந்தர் கொண்டாடும் சாமயநாயக்கன் தன்படையும்
பட்டத்து நாயக்கன் பார்வேந்தன் தன்படையும்
நத்தத்துலிங்கயனும் நல்லபடைக் காலாளும்

1685. திருமலைப் பூச்சியனும் சேர்ந்தபடை யத்தனையும்
பாண்டியர்கள் மெச்சும் பாவூரு மன்னவரும்
தோவாளைத் தொண்டு துரைமக்கள் தன்படையும்
கூத்தன்மகன் சேதுபதி வாய்த்தபடை யத்தனையும்
எல்லோரும் வாருமென்று எதிரில்லா ராமய்யனும்

1690. கப்பலிலே ஏறுமென்றார் கன்னன்புலி ராமய்யனும்
பாய்கடலினூடே பாய்மரத்தைத் தான்விரித்துத்
தீவைச் சா(ர்)ந்துகொண்டு திறமாகப் பொருதனர்காண்
(தெத்தி)லேயுஞ் சண்டை தீப்பறந்து போகுதய்யா
ஒற்றனவனோடி உற்றபெருங் காற்றெனவே

1695. வாள்கோட்டை ராயன் மதச்சடைக்கன் முன்னேவந்து
மன்னன்புலி ராமன்படை மட்டில்லாச் சேனைவெள்ளம்
-----------------------------------------------------------------------------------------
1687.1தோவாளத், 1690.1கப்பலுலே, 16924 பொருதினர்காண்,
1694.1 ஒட்ட.
------------------------------------------------------------------------------------------------
பாற்கடலினூடே பறந்து படவுவிட்டுத்
தீவைப் பிடிக்கச்சொன்னான் தீரன்புலி ராமய்யனும்
பரங்கிகளெல்லோரும் பாசைசொல்லிப் பாய்விரித்து

1700. ராமனுட படையும் நாலுதிக்குங் கப்பலின்மேல்
துணிந்துபோர் செய்தார்கள் சூதான தீவுதன்னில்
வளைந்து பிடிக்கவென்று வந்துபோர் செய்தார்கள்
கண்டு பயந்துவந்தேன் கற்தனே யென்றுரைத்தான்
மன்னன் சடைக்கன் மகாகோபங் கொண்டெழுந்து

1705. வானத்தைத் தீயெரிக்கும் வன்னியரே வாருமென்று
என்மருகா வன்னியரே இப்புதுமை கேள்கிலையோ
ஒற்றனுந்தான் ஓடிவந்தான் உற்றபெருங் காற்றெனவே
ராமன் படையெல்லாம் நடுக்கடலில் பாய்விரித்து
ராமநாத சுவாமி நல்ல பெருந்தீவை

1710. வளைந்துபிடிக்க வந்துபொர மன்னன்சொன்னான்
நம்மைப் பிடிக்கச்சொல்லி நாலுதிக்கும் பாய்விரித்துச்
சுற்றி வளைந்துகொண்டான் சூதான தீவுதனைத்
தெத்திலேயுஞ் சண்டை தீப்பறந்து போகுதென்றான்
மாமனுந்தான் சொல்ல மன்னன்புலி வன்னியுந்தான்

1715. பா(ர்)ப்பான் பெரும்படையைப் பாரமென்று சொன்னீரே
ஆற்றாமல் பா(ர்)ப்பான் அலையுறான் ஐயாவே
வெட்டித் துரத்தி விரட்டிவிட்டு வாறேனையா
பரங்கிய ரெல்லோரும் பாரமோ என் தனக்குப்
பாற்கடலினூடே பறந்து படவை விட்டு

1720. எதிர்த்த பரங்கிகளை யினிவிடத்தான் போறேனோ
அம்மானே நீர்தான் அளப்பொன்றும் எண்ணாதே
கிலேசங்கள் வேண்டாங்காண் கீற்திகொண்ட மன்னவனே
ராமநாத சுவாமி நல்ல துணையிருக்க
மலைவளர் காதலித்தாய் மங்கையுமை தானிருக்க

1725. சேதுவந்த மாகாளி தேவியுமை தானிருக்க
கால வயிரவனும் காத்துநம்மைத் தானிருக்க
-------------------------------------------------------------------------------------------------
1697.3 பரந்து, 1699.4 வாய்விரித்து, 1707 1ஓட்டனுந்தான், 1712.1 சுத்தி,
1713 4 போகுதென்றால், 1716 1 ஆத்தாமல், 1718 4 யெந்தனுக்கு.
-------------------------------------------------------------------------------------------------
முக்கோடி தீர்த்த முழுதுமங்கே தானிருக்க
என்னை யெடுக்க எவரால் முடியுமய்யா
என்றுசெல்லி வன்னி யெதிர்த்தவரைத் துரத்த

1730. வீசை முறுக்கி விருது பலபேசி
படைத்தலைவர் தம்மைப் பாங்காகத் தானழைத்து
எதிர்த்துவந்த பா(ர்)ப்பானை யினிவிடவே போகாது
வெட்டித்துரத்திவிருது பறிப்பேனென்று
வென்றரசு கொண்ட வீமனே வாருமென்று

1735. வீசு கொண்டைத் தேவா வீமனே வாருமென்று
தார்வேந்தார் கொண்டாடும் தர்மனேநீர் வாருமென்று
குங்குமத் தேவா குமரனே வாருமென்று
கூட்டுக்கால் வெட்டிவரும் கொலைகார மூடனையும்
மன்னனைப் போல் நின்றுபொரும் வாகான கூத்தனையும்

1740. கன்னன் கலியாணி காவலனார் தன்படையும்
பொத்தை யுடையானே போர்வேந்தே வாருமென்று
கறுத்த வுடையானே கன்னனே வாருமென்று
றாவுத்தக் கற்தா ரணவீரா வாருமென்று
மன்னவரைக் காத்தனையும் வாகாகத் தானழைத்துப்

1745. பா(ர்)ப்பான் படைபோக்கிப் படைவேறி வந்தானாம்
வந்துதிரை கொள்ளவென்று வந்ததுகாண் ராமன்படை
பா(ர்)ப்பான் படைப்போரும் பாருலகில் நம்போரும்
இருவருட போரும் இனித்தெரியு மென்று சொல்லி
மதியா ரழகனையும் மன்னன் குமாரனையும்

1750. கொன்றபழி வாங்குமென்று கொற்றவர்க்குத் தாமுரைக்கச்
செங்கண் மிகச்சிவந்து சீறிவடி வாளெடுத்து
நாடுகலக்கியெனும் நல்லதொரு வான்பரியைக்
கொண்டுவரச்சொன்னார்காண் கோலமுள்ள வன்னியுந்தான்
பரியை அலங்கரித்துப் பண்பாக வேதானும்
--------------------------------------------------------------------------------------------
1727.2 தீற்த, 1731 2 தன்னைப், 1738 3 குலைகார, 1739.2 நின்றுபொறும்,
1741.2 யுடையானை, 1743 1-2 றாவத்தக்கூத்தா, 1746.3 வந்துதுகாண்,
1749.1-2 மதையாரளகனையும், 1751.3 சீரவடி.
--------------------------------------------------------------------------------------------
1755. கொண்டுவந்து விட்டார்கள் கோலாகலன் கொலுவில்
வான்பரியைப் பார்த்து வன்னி மனமகிழ்ந்து
மன்னவரும் வன்னியரும் வாருமென்று தானடந்தார்
செந்தூள் மிகப்பறக்கச் செங்கதிரோன் தான்மறைக்கப்
படைத்தலைவரெல்லோரும் பாசைசொல்லிப் பல்கடித்துத்

1760. தெத்திலே சென்றார்கள் திறமாக மன்ன ரெல்லாம்
வாள்கோட்டை ராயன் மதச்சடைக்கன் தன்மருகன்
மன்னன் புலிராமன் மட்டுப்படாச் சேனையின்மேல்
ஊடுருவப் பாய்ந்தான் உலகங் கிடுகிடெனச்
சென்று பொருதான் சேனைவெள்ளத்துக்குமுன்னே

1765. முட்டிப் பொருதான் மூவுலகுந்தானதிர
வளைந்து பொருதான் வாள்வீரன் வன்னியுந்தான்
நெருங்கிப் பொருதான் நெடிய அனுமனைப்போல்
மன்னன்புலி ராமன்படை மண்டிப் பொருதார்கள்
இருபடையு முண்டு எதிர்த்துப் பொருதார்கள்

1770. அப்போதுராமய்யனும் ஆறாயிரம் பேரைக்
கொன்றுதான் அந்தக் கொலைக்களத்தில் நிற்கலுற்றான்
வாள்கோட்டை ராயன் மதச்சடைக்கன் தன்படைதான்
போர்க்களம் விட்டுப் புறங்காட்டி ஓடியதே
மறவர்முரிந் தோடினதை வன்னியவன் தான்பார்த்து

1775. வீசை முறுக்கி வெகுண்டு சினத்துடனே
புலியை நரிபாய்ந்து போகுதோ வென்றுசொல்லி
மன்னன் புலிராமன் மகாசேனை தன்மேலே
ஏவினான்.வான்பரியையெல்லையற்ற சேனையின்மேல்
வெட்டினான் வன்னி வேந்தர்களை தான்துணித்தான்

1780. பட்டார்கள் ராமன்படை பருந்துகழு காய்ந்திடவே
காலற்று வீழ்வாரும் கையற்று வீழ்வாரும்
துண்டதுண்ட மாகத் துணிபட்டு வீழ்வாரும்
-----------------------------------------------------------------------------------------------
1760 1 தெத்துலே; 3 திரமாக, 1767.2 பொறுதான்; 4 அனுமலைப்போல்,
1771 3குலைக்களத்தில், 1778 3 யெல்லையத்த, 1780 3 பரந்துகளும்,
1781 4 வீள்வாரும்
-----------------------------------------------------------------------------------------------
சென்னி யற்று வீழ்வாரும் தெறிபட்டு வீழ்வாரும்
குறைப்பிணமாய் நின்று கூத்தாடி நிற்பாரும்

1785. அய்யோ சிவனேயென்று அலறியே வீழ்வாரும்
வாண மடிபட்டு மண்மேல் கிடப்பாரும்
குத்துண்டு போர்க்களத்தில் குலைவயிட்டு நிற்பாரும்
அம்புபட்டுச் சோர்ந்து அலறியே வீழ்வாரும்
வேலவனே யென்பாரும் விதிவசமோ என்பாரும்

1790. மெய்துணித்து வீழ்வாரும் மெய்ம்மயங்கி வீழ்வாரும்
பட்டபடுகளத்தைப் பார்க்கப்பயந் தோடுவாரும்
மன்னன்புலிராமன்படை வாகாய்முறிந் தோடியதே
கட்டறுத்த மான்போலே கலங்கியே சேனைவெள்ளம்
தட்டழிந்து கெட்டதுகாண் தலைகெட்ட நூலதுபோல்

1795. பிடித்த முகத்தைவிட்டுப் பின்காட்டி ஓடியதே
கடலிலே போய்விழுந்து கப்பலிலே தானேறி
அணைக்கரையைத் தான்கடந்து ஆற்றாம லோடியதே
எழுபதுபேர் பட்டார்கள் எண்ணவொண்ணா ராசாக்கள்
ஆயிரம் பேர்கள் அக்களத்திலே மடிந்தார்

1800. பட்டத்து நாயக்கனும் பாங்காய் வடுகர்மெத்த
தொட்டிய கம்பளத்தார் துடிகாரப் பட்டமார்கள்
பட்டார்கள் அக்களத்தில் பாரரசர் கொண்டாட
படவிலிருந்த பரங்கிகள் எல்லோரும்
கடலைக் கடந்து காணாமல் ஓடியதே

1805. வன்னியுட போரைக்கண்டு மறுதீவி லோடியதே
வன்னியுட பீரங்கி வானங் குமுறுதல்போல்
கோடையிடி போல்குமிறிக் கொடிய படவையெல்லாம்
சுட்டுக் கவிழ்த்தான் துங்கமுடி வன்னியுந்தான்
வெற்றிகொண்டு வன்னி வீரவாள் கைப்பிடித்துத்
1810. தெத்துப் பதனமென்று திரும்பினான் வன்னியுந்தான்
அம்மா னிடத்தில்வந்தான் அதிவீர வன்னியுந்தான்
வெற்றிகொண்டு வந்தேன் வீரனே உன்னருளால்
--------------------------------------------------------------------------------------------
1796.3 கப்பலுலே, 1798.1 எழுவதுபேர், 1801.1 கொட்டிய,
1806. 3 மானங், 1808.1-2 சுட்டுத் தவித்தான், 1809, 1812.1 வெத்திகொண்டு.
---------------------------------------------------------------------------------------------
மன்னன் சடைக்கன் மனமகிழ்ந்து கொண்டாடிப்
பூரித்திருபுயமும் பொன்னுருக்கி விட்டாப்போல்

1815. இந்த வெற்றி போதாதோ என்மருகா வன்னியரே
திட்டிக் கிடாய்வெட்டித் திறமாகத் திட்டி சுற்றி
ஆலாத்தி தானெடுத்தார் அன்பாகப் பெண்களெல்லாம்
அர(ண்)மனையில் போய்ப்புகுந்தான் அதிவீரன் வன்னியுந்தான்
அந்நேரந் தன்னில் அலைகதிரோன் போய்மறைந்தான்.

(ராமப்பய்யன் சபதமும் போரும்)

1820. கங்குல் விடிந்து கதிரோ னெழுந்தபின்பு
மன்னன் புவிராமன் மகாகோபங் கொண்டெழுந்து
இன்று மறவனைத்தான் இதமாய்ப் பிடியாட்டால்
படைத்தலைவர் தங்களைத்தான் பாரக்கழு வேற்றிடுவேன்
வன்னியெனும்மறவன் மதியாமல் வெட்டுவனே

1825. எலியாய்ப் பிறந்துவன்னி இராவணன் ஆனானோ
என்னை வணங்காமல் எதிர்த்துப்போர் செய்தானே
என்படைகள் சேனையெல்லாம் இவனுக் கிரையாச்சே
இப்படை எழுபத்திரண்டில் இவனொருவனானானே
துலுக்கப் படையை யெல்லாந் துரத்திவெட்டி வந்தானே

1830. என்சீவனுள்ளமட்டும் இவனைவிடப் போறேனோ
மறக்கருவை(த்) தானறுக்க மாட்டாமல் போனேனென்றால்
மார்பிலிடும் பூணூல் மாட்டுவடந் தானல்லோ
(கெ)னபடைகள் பட்டபழி கேளாமல் போவேனோ
தீவிலே வைத்துச் சேர மடியவைப்பேன்

1835. சடைக்கன்வன்னி யைப்பிடித்துச் சதையை அரியாட்டால்
என்பேரோராமன் எடுத்ததுவும் ஆயுதமோ
வன்னிக்கு நானிளைத்தால் மறுமன்னர் சிரித்திடுவார்
மறவர்க்கு நானிளைத்தால் மன்னவர்க்கும் ஏறாதே
சொக்கலிங்க மீனாட்சி துணையென்று நம்பிவந்தேன்

1840. என்று சொல்லிராமய்யனும் எல்லோரையும் அழைத்துத்
தீவை வளைந்து கொண்டு சினந்துபொரச் சொன்னான்காண்
--------------------------------------------------------------------------------------------
1822 3 இதவாய்ப், 1828 1-2 டெபடை யெளுவத்திரெண்டில், 1832 2 பூணல்,
1833.2 பட்டபளி, 1837,1838.2 நானெளைத்தால், 1840 4 அளைத்துத்
--------------------------------------------------------------------------------------------
தெத்திலே வந்து திறமாய்ப் பொருதுமென்றார்
திருவணையில் சண்டை செய்யுங்கோ என்றுசொல்லி
கப்பலுஞ் சோங்குங் கடுகவே வரவழைத்துப்

1845. பாற்கடலினூடே பறந்துபோர் செய்தார்கள்
மாப்பிள்ளை கொண்டப்பைய்யன் மதிமயக்கம் போணீர்களோ
வெங்கிட கிஷ்ணய்யா வெகுமயக்கம் கொண்டீர்களோ
சத்துருக் கய்யா சதிமயக்கங் கொண்டீர்களோ
பொன்னமராயா போர்மயக்கங் கொண்டீர்களோ

1850. மண்டுருப் பாப்பய்யனே மதிமயக்கங் கொண்டீர்களோ
தொட்டிய கம்பளத்தார் துணிந்துபோர் செய்யிலையோ
வடுகதுரை மக்களெல்லாம் வாய்வறண்டு போனீர்களோ
எல்லோரையு மழைத்து இதமாகப் புத்திசொல்லித்
தீவை அடைத்துக்கொண்டு சென்றுபோர் செய்யாட்டால்

1855. பாங்காய்க் கடல்கரையில் பாரக்கழு வேற்றிடுவேன்
வெட்டி யரிந்து வெயில்காயப் போட்டிடுவேன்
என்பேரில் குற்றமில்லை ஏழைமதி போனவர்கள்
அன்று லங்கைதன்னை அனுமான் அழித்தாப்போல்
தீவிலுள்ள மறக்குலத்தைச் சேரவதை பண்ணுமென்றார்

(வன்னிக்கு வசூரி)
1860. அந்த விசளம் அறிந்து சடைக்கனுந்தான்
பாளையக் காரர் படைத்தலைவர் தம்மையெல்லாம்
வாவென்று தானழைத்து வரிசைமிகக் கொடுத்து
எம்மருகா வன்னியரே ஏனிருந்தா யிந்நேரம்
என்னை யறியாமல் என்னுடம்பு நோகுதய்யா

1865. (எள்)போட்டால் எள்பொரியும் என்தன் உடம்புதனில்
மாபாவி ராமன் வஞ்சனைகள் செய்தானோ
என்மருகன் வன்னியற்கு இந்தவிதி வந்ததென்ன
கண்ணான தம்பியற்குக் கா(ய்)ச்சல்வரக் காரியமேன்
கேட்டவுடன் சடைக்கன் கெடிகலங்கித் தான்பயந் (தா)ன்
-------------------------------------------------------------------------------------------
1846 4 போனியளோ; 1847-50. 4 கொண்டியளோ, 1850 1மண்டுரு
1852.4 போனியளோ, 1853.3 இதவாகப் 1857 2 குத்தமில்லை,
1858.4 அளித்தாப்போல், 1861.4 தன்னையெல்லாம்.
----------------------------------------------------------------------------------------
1870. இடிவிழுந்தாப் போலே ஏங்கிச் சடைக்கனுந்தான்
ராமநாத சுவாமி நல்லதுணை யென்றிருந்தேன்
காட்டிக் கொடுத்துக் கடக்கப்போய் விட்டீரோ
காட்டிக் கொடுக்காதே கடக்கப்போய் நில்லாதே
மன்னாட்டுத் தாருமய்யா மாயவரே உன்பாதம்

1875. நம்பிவந்தேனுன்பாதம் நடுக்கடலில் தள்ளாதே
உன்பாதந் தஞ்சமென்று உன்னைநம்பி வந்தேனே
பா(ர்)ப்பானே தன்னவனாய்ப்பையஅங்கே சென்றீரோ
நின்று மயங்கி நெடுமூச்சுத் தானெறிந்து
சன்னதியில் தீர்த்தம் தான்வாங்கித் தான்கொடுத்தார்

1880. ராமருக்கும் அம்மனுக்கும் நன்றாகத் தானேர்ந்து
சிறப்பு மிகக்கொடுத்தார் தீரன் சடைக்கனுக்கு
மற்றநாள் தானும் வன்னி யவர்தமக்கு
மேலே வசூரி விசிறியதே அம்மானை
மாயவரை நம்புவரோ மண்டலத்திலுள்ளோர்கள்

1885. துற்கை பிடாரி சூலி கபாலியம்மா
சேதுவந்த காளிக்குச் சிறப்பு மிகக்கொடுத்தார்
என்மருகன் வன்னியற்கு ராமனிவனாகவந்தான்
பா{ர்}ப்பானால் வந்தவினை பாங்காய்ப் பலித்ததுகாண்
வன்னிதனைக் கொல்லவென்று வாகாய் நினைவெடுத்து

1890. யாகம் வளர்த்தான் ஆனதொரு வன்னியற்குக்
கொல்லவென்று பா{ர்}ப்பான் கூற்றுவனாய்த் தான்பிறந்து
என்று சொல்லிச் சடைக்கன் இடைந்து பரதவித்தார்
சடைக்கனுட தேவி தாழ்குழலாள் வந்துநின்று
என்மருகன் வன்னியற்கு இந்தவினை வந்ததென்ன

1895. என்றுசொல்லித் தானழுது இருந்தாலே கொம்பனையாள்

(சடைக்கன் யாகஞ் செய்வித்தல்; ராமப்பய்யனுக்குப் பிளவை)

வஞ்சனை செய்த மாபாவி ராமனுக்கு
வேதியரைத் தானழைத்து வெகுமதிகள் தான்கொடுத்து
---------------------------------------------------------------------------------------
1878. 4 தான்யெரிந்து, 1889. 4 நினவெடுத்து, 1892 3 நிடைந்து,
1893 3 தார்குழலாள் 1897 3-4 வெகுமதியள் தான்குடுத்து
-----------------------------------------------------------------------------------------
யாகம் வள{ர்}க்கச் சொன்னார் நல்ல சடைக்கனுந்தான்
யாகம் வள{ர்}த்த நாலாம்நாள் ராமனுக்கு

1900. முதுகில் பிளவைமூடவலுக் கொண்டதுகாண்
காலில் பிளவைவந்து கடுகிவலுக் கொண்டதுகாண்
{வா}ய்த்த பிளவை வலுக்கொண்டு வந்ததுகாண்
வாகாய் எழும்பி மன்னவனைத் தானுடக்கி
உள்ளிருக்கும் நோவை ஒருவருக்குஞ் சொல்லாமல்

1905. மன்னன்புலி ராமய்யனை வாகாய் உடக்கியதே
அந்தநாள் சென்று அலைகதிரோன் போய்மறைந்தான்

(பாம்பன்துறைவாடியிற் போர்; வன்னியின் வெற்றி)
மற்றநாள் தானும் மன்னன்புலி ராமய்யனும்
கோவித்துக் கண்சிவந்து கடுங்கோபங் கொண்டெழுந்து
சஞ்சலப் பட்டிருந்த தளமெல்லாந் தானழைத்துப்

1910. பாம்பன்துறை வாடியிலே பாரிட்ட சண்டையிட்டார்
பாற்கடலினூடே பறந்துபோர் பண்ணச்சொன்னார்
தெத்திலே சண்டை தீப்பறந்து போகுதென்றார்
அந்நேரந் தன்னில் அதிவீரன் சடைக்கன்தளம்
கூத்தன் தளவாயும் கோமான் மறவருமாய்ச்

1915. சாத்திய வல்லையங்கள் தானெடுத்து ஓடுவராம்
ஓடியங்கே தானும் உலம்பல்பண்ணும் அந்நேரம்
சோபமுடன் கிடந்த தோறாத வன்னியற்குப்
பாம்பன்துரை வாடியிலே பாரிட்ட சண்டையென்றார்
ஆவலுடன் வன்னி ஆர்ப்பரித்துத் தானெழுந்து

1920. என்சீவ னிருக்கையிலே எதிர்த்துப்போர் செய்தானோ
பா{ர்}ப்பானும் பரங்கியும் பாரமோ என்தனக்கு
ஆள்திறங்க ளறியாமல் ஆண்மைசெய்தான் பா{ர்}ப்பானும்
நாடுகலக்கியெனும் நல்லதொரு வான்பரியைக்
கொண்டுவரச் சொன்னார் கோடையிடி வன்னியுந்தான்
---------------------------------------------------------------------------------------------
1900.3 மூடவெலுக் 1907. 4 கொண்டுதுகாண், 1903. 4 தானொடக்கி,
1911.1-3 பார்க்கடலினூடே பரந்துபோர், 1917. 3 தோராத 1921.4 எந்தனக்கு.
-----------------------------------------------------------------------------------------------
1925. முத்தாலே மூக்குத்தி முகப்பட்டுந் தானணிந்து
நாலுகால் வீரதண்டை நற்கீதந் தான்பாடத்
தங்கக் கலணைவைத்துச் சதிராக விருதுகட்டிக்
கொண்டுவந்து விட்டார்கள் கோடையிடி வன்னிமுன்னே
வான்பரியைப் பார்த்து மனமகிழ்ந்து கொண்டாடி

1930. என்னை எடுத்து இதமாக வையுமென்றார்
கல்லணை மேலே கயிறுகொண்டு தானிறுக்கி
ஆபரண மெல்லாம் அன்பாகத் தானணிந்து
சிங்காணி வில்லம்பு சீராவுந் தான்சேர்த்துப்
பட்டாவுங் கைப்பூட்டிப் பாங்குடனே தான்நடந்தார்

1935. கொற்றக் குடைபிடிக்கக் கொற்றவர்கள் முன்னடக்கக்
காவிக் குடைபிடிக்க கன்னன்துரை வன்னியற்கு
நீலக் குடைபிடிக்க நிசான்காரர் முன்னடக்கப்
பஞ்சவர்ணக்குடைகள் பக்கத்தில் சூழ்ந்துவர
வெண்சா மரைவீச விருது பலமுழங்கப்

1940. பதினெட்டு மேளவகை பண்பாகத் தான்முழங்கப்
பேரிகை டம்மானம் பிறகே தொனிமுழங்க
அம்புவில்லுக் காரர் அருகே சிறந்துவர
அருவிகட்டி வல்லையங்கள் ஆற்பரித்து முன்னடக்க
வான்பரிசைக் காரர் வாகாக முன்னடக்க

1945. வெள்ளிகட்டித்துப்பாக்கி விதம்விதமாய்ச் சூழ்ந்துவரக்
குப்பக் குழல்காரர் குலவையிட்டுச் சூழ்ந்துவரப்
பாளையக் காரர் படைத்தலைவர் சூழ்ந்துவரக்
கட்டியக் காரர் கனவிறுது கூறிவரப்
பட்டத்துக் குஞ்சரமும் பாங்காக முன்னடக்க

1950. வெற்றிக்கொள்ள வேணுமென்று வேலவரைக் கைதொழுது
சற்றுஞ் சலியாமல் சங்கரனைக் கைதொழுது
ராமநாத சுவாமி நல்லதுணை யென்றுசொல்லி
நடந்தார்காண் வன்னித்துரை நாவலர்கள் கொண்டாட
நோவோடே போகாதே முகுந்தனே என்மருகா
------------------------------------------------------------------------------------------------
1927 4 விருந்துக்கட்டிக், 1931 3 கயறுகொண்டு, 1935 3 கொத்தவர்கள்,
1938 2 குடையள்; 4 சூள்ந்துவர, 1939.1வெஞ்சா, 1943 1 அரிவிகட்டி,
1946.2 குளல்க்காரர், 1950.1வெத்திகொள்ள, 1951.1 சத்துஞ்
-----------------------------------------------------------------------------------------------
1955. என்றுசொன்ன அம்மானை யேறிட்டுத் தான் பார்த்துத்
தெத்திலே வந்தான்காண் தீரன்புலி வன்னியுந்தான்
தெத்தில் இருந்தபடை சேரவே வந்துகண்டார்
வந்துகண்டு தெண்டனிட்டார் வாள்வீரன் வன்னியுந்தான்
எல்லோரும் வந்து இதமுடனே ஆர்ப்பரித்து

1960. மன்னன் புலிராமன் மட்டில்லாச் சேனையின்மேல்
எறிந்தார் எறிவாணம் எல்லையற்ற சேனையின்மேல்
ராமன்படை யத்தனையும் நடுங்கி மிகப்பயந்து
காலனிவனென்று கலங்கியே ராமன்படை
வன்னியுட யையாலே மன்னவர்கள் மடியவென்று

1965. சொப்பனங்கள் கண்டு துணுக்கென் றெழுந்திருந்தான்
கூகை குழறிடவே கூப்பிட்டு ஓரிகளும்
காகங் கதறிடவே கரிக்கைகன்னி யந்திடவே
இடதுதோள் துடித்திடவே இரு{நா}சி மூடிடவே
அடர்ந்தே கதிரோனை அரவம்வந்து தீண்டதுபோல்

1970. சொற்பனங்கள் கண்டார் துங்கமுடிராமன்படை
அந்நேரந் தன்னில் ஆனதொரு வன்னியற்கு
வாகாய்க் கெருடன்வந்து வட்டமிட்டுச் சுற்றியதே
கண்டுதான் வன்னிகண்குளிரத் தான்பார்த்து
மன்னன் புலிராமன் மகாசேனை யில்புகுந்து

1975. ஆனைத் திரளில் ஆளிசிங்கம் புகுந்தாப்போல்
ஊடுருவச் சென்றான் உலகங் கிடுகிடென
வெட்டினான் வன்னி வேந்தர்களைத் தான்துணித்தான்
சுட்டார் குழல்காரர் சொல்லரிய மன்னரைத்தான்
வாணப்பொதியுடனே வங்கார ஈட்டிகளும்

1980. சுட்டார் குழல்காரர் சொல்லரிய மன்னரெல்லாம்
எறிந்தார் எறிவாணம் எல்லையற்ற சேனையிலே
தீரன் புலிராமன் சேனைவெள்ள மத்தனையும்
கூகூவெனவே கோடேறியே பொருதார்
அப்போது வன்னியனும் அந்த விசளங்கேட்டு
----------------------------------------------------------------------------------------------
1955.3 யேரிட்டுத், 1961 3 யெல்லையத்த, 1966.2 குளறிடவே,
1967 2 கதரிடவே, 1975.4 பூந்தாப்போல், 1978, 1980 2 குளல்க்காரர்,
1981 2 எரிவாணம், 1983.3 கொடையேறியே.
-----------------------------------------------------------------------------------------------
1985. ஏறினான் வான்பரிமேல் எல்லையற்ற சேனைமுன்னே
ஊடுருவச் சென்றான் உலகங் கிடுகிடென
வந்து வளைந்துகொண்டார் மகாராமன் தன்படையை
இடசாரி வலசாரி எதிர்த்துப் பொருதலுற்றார்
அப்போது வன்னியனும் ஆற்பரித்துக் கொக்கரித்து

1990. முன்கை கடித்து முகத்தில்ரத்தஞ் சிந்திவிழ
வீசை முறுக்கி விருது பலபேசி
வாளோடே வாள்முறிய மண்டிப் பொருதலுற்றார்
விருப்பாச்சி நாயக்கனையும் விருதுசொல்லி வெட்டலுற்றார்
பொம்மண நாயக்கனையும் பிளந்தா னிருகூறாய்

1995. தொட்டய நாயக்கனையும் தோளைப் பிளந்திறைத்தான்
அந்திரத்தில் தேவர்களும் அலங்காரம் பார்த்திருக்க
இந்த வுலகில் எவருடைய தன்போரோ
வாலியுட போரும் மாயனுட தன்போரும்
என்றுசொல்லித் தேவர்களும் எல்லோரும் பா(ர்)த்திருந்தார்

2000. வெட்டினான் வன்னியனும் விருதுகள் அந்தி(ட)வே
மாப்பிள்ளை கொண்டப்பய்யன் மதம்பொழிந்து வந்தெனவே
அன்று பாளையக்காரர் அடங்கா முடியரசர்
விருதுசொல்லும் வேந்தரையும் வேணபோரிலேதடிந்து
பொட்டியும் முடியுமாய்ப் பிளந்தெறிந்தான் வன்னியுந்தான்

2005. உண்டைபட்டுச் சோர்ந்து உருண்டு கிடப்பாரும்
வாணமடித்து மண்மேல் கிடப்பாரும்
குத்துண்டு போர்க்களத்தில் குலவையிட்டு நிற்பாரும்
ஆனைகுத்திச் சோர்ந்து அலறி{யே} வீழ்வாரும்
காகம் பருந்து கழுகுமிருந் துண்டிடவே

2010. வெட்டி விழுந்தறுத்து விருதுபுகழ் வன்னியுந்தான்
மன்னன்புவிராமன் மட்டுப்படாச் சேனைவெள்ளம்
ஆறா யிரம்பேரும் அத்தலத்திலே மடிந்தார்
குதிரை அன்பதுதான் கோடேறி யேற்றடித்தார்
அஞ்சானைக் கூடாரம் ஆர்ப்பரித்துக் கொள்ளையிட்டு
-------------------------------------------------------------------------------------------
1993 2 னாயக்கனை, 1994.3-4 புளந்தானிருகூராய், 1995. 4 பிழந்திரைந்தான்,
2003. 4 லேதடித்து, 2009.2-3 பராந்து களுகுமிருங், 2013 4 யேத்தடித்தார்.
. --------------------------------------------------------------------------------------------
2015. வெட்டித் துரத்திவிருதுகளும் தான்பிடித்து
மன்னன்புலி ராமன் மட்டுப்படாச் சேனைவெள்ளம்
லெக்கா யிருந்ததுகாண் உலகிலுள்ளோர் கொண்டாட
வெற்றிச் சங்கூதி விருதுகளும் தான்பரித்து
தீரனவன் வன்னியனுந் திறமாகவே நிறுத்தி

2020. வீரியங்கள் பேசிமிகவுடனே ஆர்ப்பரித்துப்
பட்டத்து யானைமேல் பாங்கான அவுதாவை
வேண்டிய ஆபரணம் விதமுடனே தான்பூட்டிக்
கொம்புக்கத்தி யுடனே குறுநெற்றி லட்சுமியும்
வீசுசலி கட்டி விதமானப் போதவையும்

2025. நாலுகால் வீரதண்டை நவமணியாபரணம்
வேண்டுவரிசை விதமுடனே தான்பூட்டி
ஏறினான்யானையின் மேல் எல்லையற்ற சேனைமுன்னே
தேவர்க ளெல்லோருந் திடுக்கிட்டுப் பா{ர்}த்திருக்கப்
பஞ்சவர்ணப் பாவாடை கொஞ்சி மிகவெறியக்

2030. கட்டியக் காறர் கனவிருது கூறிவரக்
கொற்றக் குடைபிடிக்கக் கோடிதளஞ்சூழ்ந்துவரச்
சங்கீத மேளஞ் சமுத்திரம்போலே முழங்கப்
பேரிகை டம்மானம் பிறகே தொனிமுழங்க
நடந்தானே வன்னியனும் நல்லமுத்து மாலைசிந்தச்

2035. சேதுக் கரைவாழுந் தீரனையும் வந்துகண்டான்

(சடைக்கனைக்கண்டு வன்னி உறுதிமொழி கூறல்)
வந்துகண்ட வன்னியனை வாரியெடுத்துமெள்ள
ஏந்தியெடுத்து இருகண்ணோடே தானணைத்துத்
திட்டிக்கிடாய் சுற்றித் தீரனவ் வன்னியற்குப்
பள்ளியறை மாளிகையில் பாங்காகக் கூட்டி{வ}ந்து
------------------------------------------------------------------------------------------
2017.1-2 வொக்காயிருந்ததுகாண், 2023 3 குறுநெத்தி,
2029.4 மிகவெரியக், 2031.1கொத்தக், 2032.4 முளங்கப்,
2033.4 தொளிமுளங்க, 2035.2 கரைவாளுந்.
---------------------------------------------------------------------------------------
2040. வெந்நீரை விட்டு விரித்தார்கள் பட்டாவை
அப்போது வன்னியனும் அம்மான் முகம் பா{ர்}த்துக்
கட்டி{ன}கச்சை அவிழ்க்கு முன்னே யென்சொல்லுவார்
என்வார்த்தை தன்னை யினிக்கேளு மன்னவனே
படைத்தலை வரத்தனையும் பாங்காக நம்பாதே

2045. ஆனை குதிரை அடங்கலும் நம்பாதே
உற்றார் உறமுறையார் ஒன்றும்நீர் நம்பாதே
தெய்வத்தை நம்பாதே தீர்க்கமுடன் சொல்லுகிறேன்
மன்னன்புலி ராமனுக்கு வாகாக ஒலைதன்னைக்
கண்டுவணங்கக் காகிதமுந் தானெழுது

2050. அவன் தமயன் வயித்தியனார் அவர்மேலே ஆணையிட்டு
நம்பிக்கை யோலைநமக்குவர வேணுமென்றே
கோடித் திரவியங்கள் கொண்டுபோய்த் தான்கொடுத்துக்
கண்டு வணங்கிக் கலங்காமல் தாமிருங்காண்

(வன்னியின் மரணம்)
என்றுசொல்லி வன்னியனும் இதமுடனே தானுரைத்து

2055. மெய்க்கலக்க மாக மறுகுதென்றான் வன்னியனும்
கட்டின கச்சை அவிழானே வன்னியனும்
மெத்தைதனில் சாய்ந்தான் மெய்க்கலக்க மாகவேதான்
ஏமனும் வந்து எதிர்க்கவர மாட்டாமல்
கிட்ட வரப்பயந்துகெடிகலங்கிப் போய்விடுமாம்

2060. தீரனவன் வன்னியனுஞ் சிவலோகந் தான்சேர்ந்தான்

(சடைக்கன் முதலியோர் புலம்பல்: வன்னியின் தேவி தீப்பாய்தல்)

அப்போது சேதுபதி அடித்துமிக விழுந்தழுது
நின்று மயங்கி நெடுமூச்சுத் தானெறிந்து
என்மருகா வன்னியனே யென்னைக் கெடுத்தாயே
இந்திர செயித்து என்றிருந்தேன் என்மருகா
------------------------------------------------------------------------------------------------
2042 2 அவுக்கு, 2046. 7-2 உத்தார் உரைமுரையார்,
2047 3 தீற்கமுடன், 2048.1மன்னபுலி, 2050 3 அவர்மேலே,
2952.2 திறிவியங்கள், 2056.3 அவிளானே, 2058 3 எதுக்கவர,
2059.3 கிடிகலங்கிப், 2067.4 விளுந்தளுது.
-------------------------------------------------------------------------------------------------
2065. காட்டிக் கொடுத்துக் கடக்கப்போய் நின்றாயோ
நாளைப்படைப்போரில் நலமுடனே ஆர்பொருவார்
நேற்றுப் படைப்போரில் நிசான கொடிகளைத்தான்
வான்பரியின் மேலே (ற்)றி மண்டிப் பொருகையிலே
படைத்தலைவர் கண்ணுக்குப் பாங்காய்ப் பலித்ததுவோ

2070. தேவர்கள் கண்ணுந் திறமாய்ப் பலித்ததுபோல்
மன்னன்புலிராமன் வஞ்சனைகள் செய்தது போல்
பட்டத்து யானையின்மேல் பாங்காகத் தானேறி
ஆபரண மாலையிட்டு அலங்கரித்துத் தான்வரையில்
இருதோளும் பூரித்து இதமுடனே நான்பா(ர்)த்துப்

2075. பா(ர்)த்தகண்ணு மிப்போ பாங்காய்ப் பலித்ததுகாண்
என்னைக் கெடுத்தாயே என்மருகா வன்னியனே
முகத்தில் லறைஞ்சழுது முச்செறிந்து தான்சடைக்கன்
சடைக்கனுட தேவி தாழ்குழலாள் வந்துநின்று
மாருச் சதையை வாரி யெறியலுற்றாள்

2080. கல்கட்டு மோதிரங்கள் கழல அறையலுற்றாள்
முத்துமணி யற்றுவிழ முட்டிப் புரண்டழுதாள்
என்மருகா வன்னியனே என்னை யெடுத்தாயே
சேதுக் கரைவாழும் தீரன்துணை யென்றிருந்தோம்
வான்பரியின் மேலேறி வரும்போது பா(ர்)த்திருந்து

2085. என்மகளும் நானும் இருதோளும் பூரித்து
முகத்திலறைந்தழுது மூச்செறிந்து தான்(ச)டைக்கன்
சடைக்க னுடதேவி தாழ்குழலாள் வந்துநின்று
திட்டிக்கிடாயாலாத்திதிறமா யெடுப்போமோ
என்மகளோ உன்னையிழந்திருப்பாளோ பூமியிலே

2090. பூமிதனிலிருக்கப்பொறுக்குமோ என்மருகா
நாளைப் படைப்போரில் நல்ல சமர்க்களத்தில்
ஆர்போர் பொருவார்காண் அதிவீர ராமருடன்
-------------------------------------------------------------------------------------------------
2065 2 குடுத்துக் 2066.4 ஆர்பொறுவார், 2068.4 பொறுகய்யிலே,
2073 1 ஆவரண 2078.3 தார்குழலாள், 2087 4 பெரண்டழுதாள்,
2084.1 வான்பரியும், 2087.3 தார்குழலாள். 2089 2 ஒன்னையிளம்.
-------------------------------------------------------------------------------------------------
சீனிச் சரப்பளியும் சிங்காரமுத்துத் தாழ்வடமும்
மார்பில் புரண்டசைய மாரிபோலே முழங்க

2095. வீதிவரக் காண்பேனே வேந்தனே யென்மருகா
என்மருகா வன்னியனே இந்தவிதி வந்ததென்ன
என்று சொல்லி மாமியரும் ஏங்கி யழலுற்றார்
படைத்தலைவரெல்லோரும் பாங்காகத்தானலறி
எல்லோரையு மழைத்து எதிரில்லாச் சேதுபதி

2100. வன்னியுட தேவி மனதில் கிலேசமுற்று
நீராடிக் குழல்முடித்து நீலவர்ணப் பட்டுடுத்திக்
கொட்டு முழக்குடனே குதித்தாளே அக்கினியில்
துக்கந் தெளிந்தார்கள் தோறாத வாசகற்கு
அந்தநாள் சென்று அலைகதிரோன் போய்மறைந்தான்

(ராமப்பய்யன் கொலு: வன்னியின் மரணச்செய்தி)

2105. மற்றநாள் கூடி மன்னன்புவி ராமயனும்
கொலுவிலிருக்கையிலே கொக்கரித்துத் தூதுவர்கள்
ஓடிவந்து ராமருடன் ஒதுங்கியே வாய்புதைத்து
வன்னி யிறந்தானென மகிழ்ச்சியுடன் சொல்லுவராம்
குலுங்க நகைத்துக் கொற்றவரைத் தான்பார்த்து

2110. வன்னியு மாண்டானென மன்னவரே கேட்டீர்களோ
என்றுசெல்லி ராமய்யனும் இருபுயமும் தான்குலுங்க
நகைத்து இருக்கையில் நன்றாகவே தூதை

(சடைக்கன் தூது: ராமப்பய்யன் உறுதிகொடுத்தல்:
சடைக்கன் பணிதல்)
சடைக்கன் மிக எண்ணித் தாங்குதரிப் பில்லையென்று
மன்னன்புவிராமய்யனுக்கு வாகாக ஓலைதன்னை

2115. தமையன் வயித்தியனார் தன்மேலே ஆணையிட்டு
நம்பிக்கை யாக நான்வருவே னென்றுசொல்லி
ஓலை தனையெழுதி ஓடவிட்டான் தூதுவனை
-------------------------------------------------------------------------------------------
2093 4 தாவிடமும், 2094 2 பிரண்டசைய, 2097 4யளுகலுற்றார்.
2703 3 தோராத 2706 3 கொக்கறித்துத் 2108.3 மகட்சியுடன்,
2709 3 கொட்டவரைத் 2110. 4 கேட்டியளோ.
--------------------------------------------------------------------------------------------
ஒற்றனவனோடி யுற்ற பெருங் காற்றெனவே
கோலாகல ராமன் கொலுவி லிருக்கையிலே

2120. ஓலை தனைக்கொடுத்து ஒதுங்கிநின்றான் தூதுவனும்
வாசித்துப் பார்த்து மன்னன்புலி ராமய்யனும்
பூரித்திருபுறமும் பொன்னுருக்கி விட்டாப்போல்
வந்ததொரு தூதுவற்கு வரிசை மிகக்கொடுத்து
ராமய்யர் தன்னிருபம் நன்றாகவே யெழுதி

2125. ஒற்றனிடங்கொடுத்து உற்றதா னாபதியும்
இருபேரையு மனுப்பியேகினர்கா ணம்மானை
வாள்கோட்டை ராயன் மதச்சடைக்கன் வந்துகண்டு
வந்த தானாபதியை வரிசை யுடன் அழைத்து
நிருபந் தனையெடுத்து நீட்டினான் தூதுவனும்

2130. வாசித்துக் கண்ணிலொற்றி வாகாகவே சடைக்கன்
இந்த உறுதி யென்தனக்குப் போதுமென்று
வெள்ளியுடன் பொற்பூவும் விதமுடனே தட்டில்வைத்து
ஆபரணமாலையெல்லாம் அன்புடனே தானணிந்து
வேண்டும் வரிசையெல்லாம் விதமுடனே தானெடுத்து

2135. ராமநாத சுவாமி நல்லதுணை யென்றுசொல்லி
ஏறினான் தண்டிகைமேல் எல்லையற்ற சேனைமுன்னே
தானர் பதிக்குத் தனித்துமொரு தண்டிகைமேல்
ஏறவே சொல்லியேகி யிருபேரும்
பாளையக் காரர் பலபேருஞ் சூழ்ந்துவரக்

2140. குப்பை குழல்காரர் கோடிமன்னர் சூழ்ந்துவர
அருவிகட்டி வல்லையங்கள் அருகே நிறைந்துவரப்
பஞ்சவர்ணப்பாவாடை கொஞ்சிமிகவெறியக்
கட்டியக் காரர் களவிறுது கூறிவரச்
சங்கீத மேளம் சமுத்திரம்போ லேமுழங்கப்

2145. பேரிகை டம்மானம் பிறகே தொனிமுழங்கக்
கோலாகல ராமன் கொலுவிலே வந்திருந்து
தண்டிகை விட்டிறங்கித் தான்வந்து சேதுபதி
--------------------------------------------------------------------------------------
2118.1 ஒட்ட, 2120 3 ஒதிங்கிநின்றான், 2130.2 கண்ணிலொத்தி,
2136 3 எல்லையத்த, 2147.1 அறுவுகட்டி.
--------------------------------------------------------------------------------------------------
வேண்டும் வரிசை விதமுடனே முன்னேவைத்துப்
பூவைக் குவித்துப் புதுமையுடன் தெண்டனிட்டு

(ராமப்பய்யன் பரிகசித்தல்: சடைக்கன் ஆண்மைமொழி:
அவனைக்கட்டித் திருமலைநாயக்கர்முன் கொண்டுவருதல்)

2150. அப்போது ராமய்யனும் ஆற்பரித்துக் கோபமதாய்த்
தலைப்பாகை தான்கழற்றித் தட்டிக் குடுமிதனைக்
கட்டின தேங்காயைக் கடுக எடுடா சடைக்கா
என்றுபுலி ராமய்யனும் இவ்வசனந் தானுரைத்தான்
தெண்டனிட்ட சேதுபதி திண்ணமுடன் ஏதுரைப்பான்

2155. உன்த னிடத்தில் ஒடு(ங்)கியே வந்தேனென்று
இந்த வசனம் எடுத்துரைத்தாய் மன்னவனே
என்மருகன் வன்னி யிருந்தானே யாமாகில்
தேங்காயைக் கட்டிச் சிதற அடிப்பானே
என்று சடைக்கன் இவ்வசனந் தானுரைக்க

2160. அப்போது ராமய்யனும் ஆர்ப்பரித்துக் கோபமிட்டு
உன்தன் அடைக்கலம்போல் ஒருக்காலுமில்லையென்று
என்தன் அடியிணையை யேத்திப் பணியாமல்
இந்த மறவனுக்கு இடும்பே தெனநகைத்துத்
தீரன் சடைக்கனைத்தான் திறமாகக் கட்டுமென்றார்

2165. கட்டுமென்ற போதே காவலர்கள் தான்கூடி
மற்கட்டாய்க் கட்டி மன்னன் சடைக்கனைத்தான்
குஞ்சரத்தின் மேலேற்றிக் கோலாகலராமன்
கூடாரந் தான்பிடுங்கிக் கொக்கரித்து ஏதுரைப்பான்
மறவன் சடைக்கன் வந்தானென மனமகிழ்ந்து

2170. பாளையக் காரர் பலபெயர்கள் முன்னடக்க
வெற்றிக் குழல்சுட்டு விருதுகளுந் தான்கூறிப்
பூமியதிரப் புகழ்கதிரோன் தான்மறையச்
சங்கீத மேள(ம்) சமுத்திரம்போ லேமுழங்க
வீராணம் நாகசின்னம் வெண்கலக்கொம் பூதிவரப்
-------------------------------------------------------------------------------------
2157 2 தான்களத்தித் 2163 2-3 இடும்பைதன நகைத்து,
2164 3 திரமாகக் 2168.2 தான்பிடிங்கிக், 2174.3 வெங்கலக்கொம்.
2167 2 மேலேத்திக்,
-------------------------------------------------------------------------------------
2175. பேரிகை டம்மானம் பிறகே தொனிமுழங்க
நடந்துவந்தான் ராமய்யனும் நாகலோக மதிர
மானா மதுரையிலே வந்தடித்தார் கூடாரம்
கூடாரந் தானடித்தான் கொடியபுலி ராமய்யனும்
சடைக்கன் பதனமென்று தலங்காவலரையெல்லாம்

2180. பதனம் பதனமென்று பறையறைந்தா ரம்மானை
அந்தநாள் சென்று அலைகதிரோன் போய்மறைந்தான்
மற்றநாள் சென்று மன்னன்புலி ராமய்யனும்
தேவர்கள் பூசைபண்ணும் திருப்பூவணத்தில் வந்தார்
திருப்பூவணங் கடந்து தீரன்புலி ராமய்யனும்

2185. கூடல்தனை நோக்கி கொற்றப்புகழ் ராமய்யனும்
பூமியதிரப்புகழ்கதிரோன் தானதிரக்
கச்சித்திருமலை யேந்திரனார் கனகரற்றின மேடைவந்து
சடைக்கனைக்கொண்டுவந்தேனென்றுதன்கையை யேந்தலுற்றான்
ராமய்யனைக் கண்டு நலமாகத் தான் மகிழ்ந்து

2190. வாருமென்று சொல்லியபின் மறவனைப்பா(ர்)த் தேதுரைப்பார்

(நாயக்கர் கோபித்தல்: சடைக்கன் மறுமொழி;
அவனைச் சிறையிடுதல்)
ஏண்டா சடைக்கா இத்தனையும் உண்டோதான்
என்னை வணங்காமல் என்பாதங் காணாமல்
தாட்டிமைக ளாகத் தானிருந்தா யேசடைக்கா
என்றுசொல்லுங் கச்சித் தீரருக் கேதுசொல்வான்

2195. ஆண்டவனேயிப்போ அடியேன்சொல் விண்ணப்பங்கேள்
என்மருகன் வன்னி யிருந்தானே யாமாகில்
தேவரீர் பாதந் தெரிசிக்க மாட்டேன்யான்
என்றுசொல்லிச் சேதுபதி திறமுடனே தானுரைக்க
முத்துவீரப்பன் துணைவன் கச்சித்திருமலை யேந்திரருக்குக்

2200. கோபமிகுந்து கொடிய சடைக்கனைத்தான்
அறைக்கோட்டை தன்னில் அடைத்து விலங்குதைத்துக்
கரையில்லாப் பேரைக் காவல்வையும் என்றுரைத்தார்
-------------------------------------------------------------------------------------------
2191 3 யித்தினையும், 2195 4 விண்ணப்பங்கேழ், 2198.3திரமுடனே,
2200 4 சடைக்கனுந்தான், 2201.1 அரைக்கோட்டை
-------------------------------------------------------------------------------------------
மகராசன் சொல்கேட்டு வாகான ராமய்யனும்
அந்தப் படியே அடைத்து விலங்குதைத்துக்

2205. காவலோரை அழைத்துக் காருமென்று வைத்தனராம்
(ராமப்பய்யனுக்குக் கனகாபிஷேகம்)
அப்போது ராமய்யற்கு ஆனதிருமலை யேந்திரனும்
மெய்ப்பாய்க் கனகஸ்நானம் விதமாய்க் கொடுக்கவென்று
ஆபரண மாலை ஆனபீதாம்பரமும்
முத்துக் கடுக்கன் முன்கைவளை மோதிரமும்

2210. வயிரப் பதக்கம் வாய்த்த சரப்பளியும்
பூட்டி யலங்கரித்துப் போர்மன்னன் ராமய்யனை
வாரணத்தின் மேலேற்றி வாகாய்ப் பவனிவந்தார்
பவனி வரும்போது பாங்கான நாகசுரம்
சங்கீத ராகம் தவில்முரசு தான்முழங்க

2215. எக்காள மூத இடிமுரசு தான் முழங்கப்
பேரிகை மத்தளமும் பேசுங்கிடுபிடியும்
மேளத் தொனிமுழங்க வெண்சாமரம் வீசக்
கட்டியக் காரர் கனவிறுது கூறிவர
வரும்பவனிகண்டு மடவார்க ளெல்லோரும்

2220. ஆலாத்தியேந்தி அருகே நிறைந்துவரத்
தாலத் திருவிளக்கும் சமையத்தே நின்றிலங்கக்
கோலாகல ராமன் கொலுவீதி தானடக்க
வரும்போது பட்டணத்து மங்கையர்க ளெல்லோரும்
கண்டு மிகவேகாதல் மிகப்பெருகி

2225. மன்மதன்காண் என்பாரும் வாலசிவன் என்பாரும்
வீமன்காண் என்பாரும் விசையன்காண் என்பாரும்
சொல்லுக்கரிச் சந்திரன்காண் துரைராசன் என்பாரும்
மல்லுக் கரிய மகாராசன் என்பாரும்
என்ற மடவார்கள் ஏற்ற கலைசோர
-------------------------------------------------------------------------------------------
2207.2 கனகஸ்தானம், 2210 2 பதைக்கன், 2212.4 பவுனிவந்தார்,
2213 4 நாகசரம், 2229.1 என்று.
-------------------------------------------------------------------------------------------
2230. நிற்கிறதைக் கண்டு நீதியுள்ள ராமய்யனும்
கண்டு சிரித்துக் கடுகப் பவனிவந்தார்
விண்டுபுகழ் ராமய்யனும் வேழமதை விட்டிறங்கி
வருமதுவைக் கண்டு வாகாய்த் திருமலேந்திரரும்
சமுகந் தனில்நிறுத்திச் சந்தோஷ மாயிருந்தார்

(மாயனருளாற் சடைக்கன்விலங்கு தெறித்தல்)

2235. இருக்குந் தறுவாயில் ஏற்ற சடைக்கனுக்கு
மனக்கவலையாகியதை மாயன் மிக அறிந்து
சடைக்கனுட இக்கட்டுத் தான்தவிர்க்க வேணுமென்று
அப்போது மாயன் அந்நேரம் வந்துநின்று
காட்சி கொடுத்தார் கன்னன் சடைக்குனுக்குக்

2240. காலில் விலங்கு கலீலென்று தான்தெறித்துப்
போனதுவைக் கண்டு புகழ்ந்து மிகச்சடைக்கன்
மாயனுக்குச் சித்தம் வந்ததுகாண் என்றிருந்தான்
இருக்குந் தறுவாயில் ஏற்றதொரு காவலர்கள்
திருமலை யேந்திரர்முன் திறமாக வந்துநின்று

2245. சடைக்கனுட கால்விலங்கு தான்தெறித்த தென்றுரைத்தான்
என்ற பொழுதே இதமாய் மனமகிழ்ந்து
சடைக்கனுக்கு ராமர் தானுதவி யென்று சொல்லிக்
கூட்டிவரச் சொன்னார் கொடியதொரு ராமய்யர்முன்

(நாயக்கர் சடைக்கனை வரவழைத்துச் சிறப்புச்செய்து அரசுகொடுத்தல்)
அப்போ சடைக்கனைத்தான் அருகே வரவழைத்துக்

2250. கச்சித்திருமலை யேந்திரனார் களிகூரத் தான்மகிழ்ந்து
சடைக்கனைப் பார்த்துத் தானுரைப்பார் அம்மானை
மாயன் கடாட்சம் மகிமையுண்டு உன்தனுக்கு
ஆனதினால் சடைக்கா ஆலோசனை வேண்டாம்
என்தனுரை கேட்டு இதமாக நீரிருங்காண்

2255. இருமென்ற சொல்கேட்டு ஏற்ற சடைக்கனுந்தான்
வணங்கி நமஸ்கரித்து வாகாக ஏதுரைப்பார்
-----------------------------------------------------------------------------------
2230.1 நிற்குறதைக், 2237.3 தான்தவிளக்க, 2245. 3 தான்தெறித்து,
2246.3 யிதவாய், 2253.3ஆலோசினை, 2254.3 யிதவாக.
-----------------------------------------------------------------------------------
மாதா பிதா நீரே வாய்த்ததுணை நீரேகாண்
சாமி அடியேன் தாசன்கா ணென்றுரைத்தான்
அந்த மொழிகேட்டு ஆன திருமலையும்

2260. சந்தோஷ மாகியவர் தன்னருகே தானழைத்து
ஆடைவெகு பூஷணமும் அன்பாகத் தான்கொடுத்து
வேந்தன் சடைக்கனுக்கு விருதுகளுந் தான்கொடுத்து
ராமநாத சுவாமி நல்ல பெருந்தீவில்
சென்றிருங்காண் என்று தீரன் விடைகொடுத்தார்

நாயக்கர் சடைக்கனை வரவழைத்துச் சிறப்புச்
செய்து அரசுகொடுத்தல்
(சடைக்கன் மீண்டு அரசு புரிதல்)

2265. விடைபெற்றுத் தான்சடைக்கன் வேகமுடன் கைதொழுது
சொக்கலிங்கம் மீனாட்சிதுணையென்று தான்மறவன்
நின்றனுப்பிக் கொண்டு நீதியுடன் தென்டனிட்டு
ஏறினான் தண்டிகையில் எல்லையற்ற சேனையுடன்
சேனை தளஞ்சூழச் சென்றேகி யேபோனான்

2270. ராமநாத சுவாமி நல்லபெரும் பட்டணத்தில்
செங்கோல் செலுத்திச் சேவடியைக் கைதொழுது
மாயன் அருளால் மண்டலத்தை ஆண்டிருந்தான்

வாழ்த்து
கேட்டவர்க ளெல்லோருங் கிளைகோத்திரந் தழைக்க
படித்தோர்க ளெல்லோருக்கும் பாக்கியங்கள் உண்டாக

2275. மன்னன்கச்சித் திருமலையேந்திரனார் மண்டலத்தை யாண்டகதை
கேட்டவர்க ளெல்லோருஞ் சிறப்பாக வாழ்ந்திருக்க
வாழி மிகவாழி மங்காமல் வாழியதே
சொக்கலிங்க மீனாட்சி துணைபெற்று வாழியதே
ஈசன் அருள்பெற்று எல்லோரும் வாழியதே.

இராமப்பய்யன் அம்மானை முற்றும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

This file was last updated on 29 July 2023
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)