 
 
சிற்றிலக்கியத் திரட்டு  - பாகம் 3   
உலா (3) 
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொகுப்பு
ciRRilakkiyat tiraTTu, part 3
ula (3)
edited by vaiyApurip piLLai 
In Tamil script, unicode/utf-8 format
 
 
 Acknowledgements: 
We thank Tamil Virtual Academy, Chennai for providing a scanned PDF version of this work
Our sincere thanks go to Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance
in the preparation of this work 
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
 © Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
 
 
சிற்றிலக்கியத் திரட்டு - பாகம் 1  
உலா  (3)
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொகுப்பு 
 Source : 
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை  பதிப்பித்த 
சிற்றிலக்கியத் திரட்டு 
பொதுப்பதிப்பாசிரியர் இ. சுந்தரமூர்த்தி 
பேராசிரியர் & தலைவர், தமிழ் இலக்கியத்துறை 
சென்னைப்பல்கலைக் கழகம் 
நூலகத்திற்கு அன்பளிப்பு 
சென்னைப்பல்கலைக்கழகம் , 2001 
Chitrilakkiyath thirattu 
First Edition: November - 2001 
University of Madras 
வடிவமைப்பு: வே.கருணாநிதி 
PRINTED IN INDIA 
The PARKAR , 293, Ahamed Complex 2nd Floor 
Royapettah High Road, Chennai - 600 014. 
----------------
 III.  உலா   
8.  இராஜராஜ தேவருலா  1925 	 
	 
9.  திருக்குறுங்குடி அழகிய நம்பியுலா  1932 	 
	 
10.  முப்பந்தொட்டியுலா  1934  
------------ 
 
 8 . இராஜராஜ தேவருலா 
 நூல்  
1.		புயல்வண்ணன் பொற்பதுமப் போதிற் புவனச் 
		செயல்வண்ணங் காட்டிய சேயோன் - உயிரனைத்துங் 
	2.	[1]காட்டும் பதின்மரினுங் காசிபன் ஏழ்புரவி 
		பூட்டுந் தனியாழிப் பொற்றேரோன் – ஒட்டி
 
	3. 	யறவாழி யந்தணர் மேலூர்ந்தோன் அவனி 
		புறவாழி முட்டப் புரந்தோன் - மறையோர்க்குப் 
	4. 	பூவிற் கிழத்தியையும் பூமிக் கிழத்தியையும் 
		நாவிற் [2]பழுதஞ்ச நல்கினான் - வாவியிற் 
	5. 	புக்குத் துறையிற் பகைப்புலியும் புல்வாயும் 
		ஒக்க வொருகாலத் தூட்டினோன் - புக்கான் 
	6. 	[3]மறாநிறை யென்று [4]சரணடைந்து வஞ்சப் 
		புறாநிறை புக்க புகழோன் - அறாநீர்த் 
	7. 	தரங்கக் கடலேழுந் தன்பெயரே யாகத் 
		துரங்கப் பசுநாடித் தொட்டோன் - வரங்கொள் 
	8. 	சுரநதி தன்பெய ராகச் சுருதி 
		[5]வரநதி சாபத்தை மாய்த்தோன் - தரணிபர் 
	9. 	மல்லன் மரபை ரகுவின் மரபென்று 
		சொல்ல வுலகளித்த தொல்லையோன் – [6]சொல்லலால் 
	10. 	வந்திரந்த வானவர்க்குத் தானவர் பேரர்மாய 
		இந்திரனை யேறாக்கி யேறினான் - முந்தும் 
	11. 	ஒருதேரா லையிரண்டு தேரோட்டி யும்பர் 
		வருதேரால் வான்பகையை மாய்த்தோன் - பொருது 
------------------
[1] காட்டொன்பதின்மரினுங்,             [2] பழுதஞ்சி,         
[3] மறானிறை,               [4] சரணமை, 
[5] வரனதி,                    [6] செல்லலால். 
---------------------
	12. 	சிலையால் வழிபடு தெண்டிரையைப் பண்டு 
		மலையால் வழிபட வைத்தோன் - நிலையாமே 
	13. 	வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத் 
		[7]தூங்கு புரிசை துணித்தகோன் - வீங்கு 
	14. 	[8]குடகடற்குஞ் சார்வு குணகடலே யாகும் 
		வடகடற்குந் தென் கடற்கு மன்னன் - முடுகிக் 
	15. 	கரையெறிந்த [9]பொன்னிக் கடலேழுங் காப்ப 
		வரையெறிந்த மன்னர்க்கு மன்னன் - தரையின் 
	16. 	பெருமகளைத் தீவேட்ட பின்னருஞ் சேடன் 
		திருமகளைக் கல்யாணஞ் செய்தோன் - பொருநிருபர் 
	17. 	கன்மாலை மார்புங் கடவுள் வடமேருப் 
		பொன்மாலை மார்பும் புலிபொறித்தோன் - சொன்மாலை 
	18. 	நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு 
		வில்லவன் காற்றளையை விட்டகோன் - புல்லார் 
	19. 	தொழும்புடைய வாகத்துத் [10]தொண்ணூறு மாறு 
		தழும்புடைய சண்டப்ர சண்டன் - [11]எழுபகலில் 
	20. 	ஈழமெழுநூற்றுக் காதமும் சென்றெறிந்து 
		வேழந் திறைகொண்டு மீண்டகோன் - சூழி 
	21. 	மதகயத்தா லீரொன் பதுசுரமும் மட்டித் 
		துதகையைத் தீர்த்த வுரவோன் - [12]முதுவறற் 
	22. 	கங்கையும் நன்மதையுங் கொளதமையுங் காவிரியும் 
		மங்கையுட னாடு மரபினோன் - பொங்கி 
	23. 	யலைவீசும் வேலை யனைத்தினுந் தெம்மீன் 
		வலைவீசும் வாரிய மன்னன் -கொலையானை 
---------------------------
	[7]தூங்கும் புரிசை,           [8] குடகடற்குஞ் சார்ந்த குணகடற்கு மார்க்கும், 
	[9] பொன்னிகடலேழுங் கோப்ப,         [10] தொண்ணூறு மாறும், 
	[11] எழும்பகலில்,                  [12] முதுவரற். 
-----------------------------
	24. 	பப்பத் தொருபசிப்பேய் பற்ற வொருபரணி 
		கொப்பத் தொருகளிற்றாற் கொண்டகோன் [13]வெப்பொருவா 
	25.	கூடலார் சங்கமத்துக் கொண்டகோன்- நாடு 
		பாட வரிய [14]பரணிப்பக் கட்டணிவீழ் 
	26. 	கலகமுஞ் சுங்கமுங் காய்கலியு மாற்றி 
		யுலகைமுன காத்த வுரவோன் - பரவுந் 
	27. 	தரணியொருகவிகை தங்கக் கலிங்கப் 
		பரணி புனைந்த பருதி - முரணி 
	28. 	புரந்தன நேமி பொருவ வகிலந் 
		துரந்தன விக்கிரம சோழன் - பரந்தபனென் 
	29. 	றாய பெயர்கொண் டகிலாண்ட மும்புரந்த 
		சேய பெரிய திருக்குலத்து - நாயகன் 
	30. 	சிற்றம் பலமும் திருப்பெரும் பேரம்பலமும் 
		மற்றும் பலபல மண்டபமுஞ் - சுற்றிய 
	31. 	மாளிகையும் பீடிகையு மாடமுங் கோபுரமுஞ் 
		சூளிகையு மத்தெருவுந் தோரணமும் - ஆளுடையான் 
	32.	 கோயிற்றிருக்காமக் கோட்டமு மக்கோயில் 
		வாயிற் றிருச்சுற்று மாளிகையுந் - தூய்செம் 
	33. 	முறைவிட்ட வேற்று முடிமன்னர் தத்தஞ் 
		சிறைவிட் டரசருளிச் செய்து - கறைவிட்ட 
	34.          [15]மைஞ்ஞாக மெட்டு [16]மதனாக மோரெட்டும் 
		[17]பைஞ்ஞாக மெட்டும் [18]பரங்கெடுத்துத் - திஞ்ஞாலந் 
	35. 	தாதைக்குந் தங்கள் தபனற்குந் தோலாத 
		போதந் திமிரப் பொறைநீக்கி – மாதரில்
	---------------------------------------------------------------------------------------------
	[13] ஒப்பொருவர்,          [14] பரணிபகட்டணிவீழ், 
                [15] மைந்நாக,           [16] மதநாக, 
	[17] பைந்நாக,       [18] பரங்கெடுத்-திஞ்ஞாலந் 
	--------------------------------------------------------------------------------------------
	36. 	ஒக்க வபிடேகஞ் செய்யு முரிமைக்கட் 
		டக்க நிலைமைத் தனித்தேவி - மிக்க 
	37. 	புவன முழுதுடைய பொற்றொடியுந் தானும் 
		அவனி சுரர் சுருதி யார்ப்ப - [19]நவநிதிதோய்ந் 
	38. 	[20]தேத்த கருங்கடவு ளெல்லையி லானந்தக் 
		கூத்தைக் களிகூரக் கும்பிட்டும் - போற்றினமேற் 
	39. 	றில்லைத் திருமன்றின் மூன்றிற் சிறுதெய்வத் 
		தொல்லைக் குறும்புத் தொகுத்தெடுத்து - மல்லற் 
	40. 	றசும்பு வாளாகனிற் றண்பெரு நாவல் 
		அசும்பு பசும்பொன் அடுக்கி - விசும்போர் 
	41. 	அலகை யிகந்த வகலகுல [21]வச்சிரம் 
		பலகை ததும்பப் பதித்து - மலர்கவிதை 
	42. 	காக்குங் கடலேழின் முத்தும் வரகங்கை 
		தூக்கு மருவியிற் சூழ்போக்கி - [22]நோக்குந் 
	43. 	தொடுக்குஞ் சிரச்சேடன் சூளா மணிகொண் 
		டெடுக்குந் திருத்திய மேற்றி - யடுக்கிய 
	44. 	தூய வயிரத்தால் [23]வாவியாய்ச் சூழ்கிடந்த 
		பாய மரகதத்தாற் [24]பாகடையாய்ப்-போய் 
	45. 	பருமுத்தா [25]லாவிலியாப் பதுமரா கத்தால் 
		திருமிக்க செந்தா மரையாப் - பெருவர்க்க 
	46. 	நீலத்தால் வண்டின் [26]நிரையா யுரையிகழ்ந்த 
		கோலத்தாற் கோயிற் பணிகுயிற்றிச் -சூலத்தான் 
	47. 	ஆடுந் திருப்பெரும்பே ரம்பலமுங் கோபுரமு 
		மாடம் பரந்தோங்கு மாளிகையுங் - கூடிப் 
------------------
[19]நவநதிதோய்ந்,            [20]தேத்தக் கருங்கடவு,   [21]வச்ரம்,   
            
 [22]நோக்கந்,           [23]வாவியாச்,                 [24]பாசடையாப், 
   
[25]லாவலியாப் பத்மரா கத்தால்,                     [26]நிரையா வுரையிகந்த,
---------------------
	48. 	[27]பொலங்கோட் டுரைமேருப் பூதரமும் போல 
		[28]வலங்கோட் டிகிரியு மானத் - [29]தலங்கொண் 
	49. 	நிலையேழு கோபுரமுங் கண்மே னெருங்கு 
		மலையேழு மென்ன வகுத்துத் - தலையில் 
	50. 	மகரங்கொள் கோபுரமும் வான விமானச் 
		சிகரங்க ளாகித் திகழ - நிகரில் 
	51. 	எரிபொற் படர்பாறை யென்னலா மெங்கும் 
		விரிபொற் றிருமுற்றம் மின்னச் - சொரிபொற் 
	52. 	கடாரம் பனிநீர் கவினிக் கனபொற் 
		றடாகங்க ளாகித் ததும்ப - விடாதுநின் 
	53. 	றற்பக லாக வனந்த சதகோடி 
		கற்பக சோதி கதிர்த்துவரப் - பொற்பூண் 
	54.	வரமகளிர் தத்தம் பணிமுறைக்கு வந்து 
		சுரர்மகளி ராகத் துவள - வொருதான் 
	55. 	பிறக்கும் இமயப் பெருங்கடவுள் வெற்பை 
		[30]மறைக்கும் படிசெல்வம் மல்கச் - சிறக்கும் 
	56. 	இருக்காதி யெம்மறையும் எவ்வுலகும் ஈன்றாள் 
		திருக்காமக் கோட்டந் திகழ்த்தி – வருக்கப் 
	57. 	புனையா மணியாலும் பொன்னாலு மின்ன 
		மணியா லொருதேர் வகுத்து - முனைவன் 
	58. 	திருவீதி யீரிரண்டுந் தேவர்கோன் மூதூர்ப் 
		பெருவீதி நாணப் பெருக்கி - வருநாளிற் 
	59. 	பொங்கார் கலிசூழ் புவனம் பதினாலுங் 
		கங்கா புரிபுகுந்து கண்டுவப்பத் - தங்கள் 
-----------------------------------
[27]பொலங்கொ டுறைமேருப்,        [28]வலங்கொ டிகிரியு, 
[29]தலங்கொள்,               [30]மறக்கும். 
------------------------------- 
 
	60. 	புவனி பெறவந்த பூபாலர்க் கெல்லாம் 
  		பவனி யெழுச்சி பணித்துக் - கவினு 
	
	61. 	மடமயி லொக்க மகுடங் கவித்தா 
		ளுடனுறை பள்ளியுணர்ந்து - தடமுகில்
	62. 	[31]அஞ்சன ........ல மபிடேகஞ் செய்ததென 
		மஞ்சன மாடி வழிமுதற் - செஞ்சடை 
	63. 	வானவர் பொற்றாள் வணங்கி மறையவர்க்குத் 
		தான மனைத்துந் தகை பெறுத்தி - வானிற் 
	64. 	கிளைக்குஞ் சுடரிந்த்ர நீலக் கிரியை 
		வளைக்கு மிளநிலா [32]வானத் - திளைக்கும் 
	65. 	உருவுடை யாடை தரித்தொரு வெள்ளைத் 
  		திருவுடை யாடை திகழ - வொருபுடை 
	66.	பச்சையுடை வாள் விசித்ததொரு பசும்பொற் 
		கச்சை நவரத்நக் கட்டெறிப்ப - வச்ச 
	67. 	வெருவுதர வெல்லா வரவிகளும் போய்வீழ்ந் 
		திருவுதர பந்தனமுஞ் சேர்த்தித் - திருமார்பிற் 
	68. 	கார்க்கடல் மீதே கதிர்முத்தத் தாமங்கள் 
		பாற்கடல் சேர்த்த தெனப்பரப்பக்- கார்க்கடலில் 
	69. 	வந்த வனச மதிபோல மற்றது 
		[33]தந்தக் கடவுள் மணிதயங்கப் - பந்தச் 
	70. 	சுரர்கனகத் தோள்வலயச் சூட்டுக் கவித்த 
		உரக பணாமணியும் ஒப்ப - விரவி 
	71. 	மகரக் [34]குழைத்திருத் தோள்மேல்வந் தசையச் 
		சிகரச்சுடர் போற்றிகழ - நிகரின் 
-----------------------------------	 
[31]அஞ்சன சைல,             [32]மானத், 
[33]தந்த கடவுள்,        [34] குழைதிருத்தோள் 
----------------------------------------------
	72. 	முடியின் மணிவெயிலு முத்தக் குடையின் 
		வடிவு நிலவை மலைப்பப் - படியின் 
73. 	வயங்கு கடக மகுடாதி மின்னத் 
	தயங்கு பெரும்போது சாத்தி - முயங்கிய 
74. 	செவ்விநுத லிற்றிரு நீற்றுப் புண்டரம் 
	வவ்வி மகளிர் மனங்கவற்ற - நொவ்விய 
75. 	நாவியு மான்மதமுஞ் சாந்து நறையகி 
	லாவியு மாகண்டமும் வளைப்பத் - தீவிய 
76. 	தோண்மாலை வாசச் கழுநீர் குழல்சேர்த்திக் 
கோண்மாலை கூசக் குளிர்கொடுப்ப - நாண்மாலை 
77. 	வேந்தர் முடிவணங்க வேதிய ரோத்தெடுப்பப் 
போந்து புறநின்ற போர்க்களிற்றை - வேந்தரின் 
78. 	மாக்காத லாளுவரு மாறழிந்த மீனவனும் 
வீக்காம லெங்குள்ள மெய்ம்முகிற்குங் கோக்கடவுள் 
79. 	எட்டாத வச்சிரமு மெல்லா [35]வறுவெறும் 
வெட்டாமலெங்குள்ள வெற்பினுக்கு - முட்டா 
80. 	முதுவாய் வடவையு முன்னான்கு கோளுங் 
கதுவாய வெல்லாக் கடற்கும் - பொதுவாய் 
81. 	அபயங் கொடுக்கு மயிரா [36]பதத்தை 
யுபய வயக்கோட்டுரிமை - ப்ரபையின் 
82. 	பொருத்தந் தருமொரு மேருப் பொருப்பை 
யெருத்தந் திருக்கவின வேறித் - திருத்தகு 
83. 	பள்ளிப் [37]பலதொங்கச் சோலை பகல் விலக்க 
வெள்ளிக் கவிகை மிசையோங்க - ஒள்ளிய 
	--------------------------------------------------------------------------------------
[35] வுருமேறும்,          [36]வதத்தை,                   [37]பலதொங்கற் சோதி 
	----------------------------------------------------------------------------------------
84. 	ஒற்றை வலம்புரி யூத [38]வளபின்பு 
மற்றையுலகின் வளைகலிப்பக் - கற்றைக் 
85. 	கவரி யிரட்டக் கடவுள் முரசார்த் 
துவரியுவாவாடியொப்ப - அவிர்வாளுஞ் 
86. 	சங்குந் திகிரியுஞ் [39]சானகமுந் தண்டகமும் 
எங்குஞ் சுடர்விட்டிடர்களையக் கொங்கத்து 
87. 	விற்கொடியு மீனக்கொடியுங் கொடுவரிப் 
பொற்கொடியொன்றின் புடைபோதத் - தெற்கின் 
88.  	மலையா நிலம்வரவே வார்பூங் கருப்புச் 
சிலையான் வரவு தெரியத் - [40]தொலையா 
89. 	வீசுந் [41]தவலை விசும்புகூர் மங்குலால் 
வாசவன் வந்த வரவறியக் கூசாதே 
90. 	யாவரொழிவா [42]ரினம்பரவே மற்றுள்ள 
தேவர் வருவ ரெனத்தெளிய - யாவர்க்கும் 
91. 	பின்னர் வழங்கு முழங்கு பெருங்களிற்றுத் 
தென்னர் முதலானோர் சேவிப்ப - [43]முன்னர் 
92.	பரவி யுலகிற் பலமண்ட லீகர் 
புரவி மிசைகொண்டு போக - [44]அருவிபாய் 
93. 	விட்டு மதம்பொழிய [45]வேழத் திசைவேழம் 
எட்டு மொழியப் [46]புகுந் தீண்டிக் - கட்டி 
94. 	இரவிக்கு [47]ணிப்பன வேழு மொழியப் 
புரவிக் குலமுழுதும் போத - விரவி 
95. 	யுடைய நிதிக்கடவுளூர்தி யொழிய 
அடைய நரவெள்ள மார்ப்ப - விடையே 
------------------------------------
[38]வதன்பின்பு,                 [39]சார்ங்கமுந் தண்டமும்,          [40]தொலையாது, 
[41] திவலை,            [42] ரிவைவாவே,          [43]முன்னர்ப்,           
[44]அருவியாய்,              [45] வேழர்,          
[46]புகுந்தீண்டக்,             [47] ணிற்பன 
----------------------------
96. 	யெழுந்த துகளுருவ மேறியுஞ் சுண்ணம் 
விழுந்த துகளுருவம் வீழ்ந்துந் - தொழுந்தகைய 
97. 	விண்ணுலகு மண்ணுல காக விளங்கிய 
மண்ணுலகு [48]பொன்னுலாய் மாறாட- [49]எண்ண 
98. 	[50]மாகதரு மங்கலரும் பாடகரும் விஞ்சையரும் 
பூகத ராயினார் போற்பரவ- நாகர் 
99. 	கொழுந்தெழு கற்பக சாதி குவித்துந் 
தொழுந்தொழு மன்னர் சொரிந்தும் - எழுந்துதன் 
100. 	[51]கைமழை பெய்துங் கனகப் பெயற்றூர்ந்த 
[52]மைமழை மாட மறுகணைந்தான் - தம்முடைய 
குழாங்கள் 
101. 	சாலை தொறுந்திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார் 
மேலை நிலாமுன்றின் மேற்றொகுவார் - …………..
102. 	தெற்றியடைய மிடைவார் சிலமாதர் 
நெற்றி சுருங்க நெருங்குவார் - ………….
103. 	மாளிகை யேறுவார் மண்டபத்தின் மண்டுவார் 
சூளிகை மாடந் தொறுந்துறுவார்- ......
104. 	இரண்டு மருங்கிலுமிப்படி யொப்பத் 
திரண்டு பலரெதிரே சென்று -............ 
105. 	கரும்புருவவில்லுங் கண்மல ரம்பும் 
பெரும்புவன வெல்லை பிடிப்பச் -…….
106. 	நிரைக்கு நிரைமுரல நீலாக்குழாங்கள் 
இரைக்கு மிரைமொகுமொ கென்ன- ………. 
	--------------------------------------------------------------------------------------
[48]பொன்னுலகாய்,                  [49]. எண்ணரிய, 
[50]. மாதரும் பாடகரு மங்கலரும் விஞ்சையரும், [51]. கைம்மழை, 
[52]. பைம்மழை. 
	-----------------------------------------------------------------------------------------
107. 	மாகான கங்கள் ஞிமிறுவாய் வைத்தூதுங் 
		காகாள மென்னும் படிகலிப்ப-….. ……… 
	108. 	…….. ………….. றாழ் குழைதேர டொய்ய 
		மகரம் பிழற்கொடியின் வாய்ப்ப 
	109. 	சேனா முகங்...... தெறிப்ப வதனெதிரே 
		சேனா பராக மெனத்திகழப் - பூநாறுஞ் 
	110. 	சுண்ண மெதிர்தூஉயுடனே தொடியுந்தூஉய் 
		வண்ணமிழப் பத்தம் மனமிழப்பார் - மண்ணுலகில் 
	111. 	இன்னற் பகைவனி வன்கா ணகளங்கன் 
		மன்னர்க்கு மன்னன் மகனென்பார் - முன்னர் 
	112. 	முதுகுல மன்னர் முடிவணங்க வந்த 
		[53]விதுகுல நாயகிசே யென்பார் - [54]குதுகுலங் 
	113. 	கண்வருஞ் செவ்விக் கடவுட் டிசாதேவ 
		[55]ரெண்வருங் காணு மிவனென்பார் - விண்வருந் 
	114. 	தேவர்க்கு நாயகர்க்குந் தெய்வ முனிவர்க்கும் 
		யாவர்க்குங் காவலிவ னென்பார் - தீவிய 
	 115. 	மாதவியுஞ் செங்கழு நீரும் வலம்புரியுந் 
		தாதகியுங் கொ.....லோர்- மாதை 
	116. 	யொறுக்கு மிதிலை யொருவில்லைத் தொல்லை 
		யிறுக்கு மவனிவன் என்பார் - மறுக்காமற் 
	117. 	சென்று கணைகட வார்த்துத் திருக்குலத்து 
		நின்ற பழிதுடைப்பாய் நீயென்பார் - இன்றளவுந் 
	118. 	துஞ்சு துயிலிழந்து கண்டார் குழற்றுளைந்து 
		நஞ்சு குமிழியெழு நாடென்பார் - பஞ்சவனே 
	----------------------------------------------------------------------------------------
[53]. வெதுகுல,       [54]. குதுகலங்,              [55].ரெண்மருங். 
	-------------------------------------------------------------------------------------------
	119. 	வாடையினுந் தண்ணென்னு மந்தா நிலமெமக்குக் 
		கோடையினுந் தீது கொடிதென்பார் - கூடி 
	120. 	முருகுவார் கூந்தலார் மொய்த்தலர்ந்த கண்ணாற் 
		பருகுவார் போல்விழுந்து பார்ப்பார் - பொருமதனன் 
	121. 	பார்த்தானோ புங்கானு புங்கம் படப்பகழி 
		தூர்த்தானோ யாதென்று சொல்லுகேன் -ஆர்த்தான் 
	122. 	உளைத்தான் சிலைக [56]ளொடுகோடி கோடி 
		வளைத்தான் கரும்புலகின் மாய்த்தான் - இளைத்தான் 
				பேதை 
	123. 	இனையர் பலர்புகழ ஈங்கொருத்தி முத்திற் 
		புனையுஞ் சிறுதொடிக்கைப் பூவை-கனமுகினேர் 
	124. 	ஆடாத தோகை யலராத புண்டரிகம் 
		பாடாத பிள்ளைப் பசுங்கிள்ளை - சூடாத் 
	125. 	தளிராத சூதம் தழையாத வஞ்சி 
		குளிராத திங்கட் குழவி - யளிகள் 
	126. 	இயங்காத தண்கா இறக்காத தேறல் 
		வயங்காத கற்பக வல்லி – [57]தயங்கீரை 
	127. 	கூழைச்சுருள் முடிக்குக் கூடுவதுங் கூடாதா 
		[58]மேலைப் பருவத்தி ளம்பேதை - சூழும் 
	128. 	நிலத்தாய வெள்ளம் நெருங்க மருங்கில் 
		முலைத்தாயர் கைத்தாயர் மொய்ப்பத் - தலைத்தந்த 
	129. 	தொக்க [59]கவிகை குலோத்துங்க சோழனை 
		மிக்க பரந்தபனை மீனவனைப்-புக்கார் 
	------------------------------------------------------------------------------------
[56]. ளொருகோடி,            [57]. தயங்கீரக் கூழை சுருள், 
[58]. மேழை பருவத்,                   [59]. கவிகைக்
	-------------------------------------------------------------------------------
	130. 	வணங்க வணங்கி வழுத்த வழுத்தி 
		வணங்க வணங்கா.... தகைலாள் - குணங்காவல் 
	131. 	மன்னன் புனைந்த திருமுத்தின் மாலையை 
		யன்னம் படிந்தாட வாறென்னும் - பின்னருங் 
	132. 	கோவைத் திருப்பள்ளித் தொங்கற் குழாங்கிளிக்கும் 
		பூவைக்கும் நல்ல பொழிலென்னும் - பாவை 
	133. 	யயிற்கு மிருகோட் டயிரா பதத்தை 
		மயிற்கு மலையென்னு மானுங் - குயிற்கிளவி 
	134. 	தேன்வாழுந் தாமஞ்சூழ் தெய்வக் கவிகையை 
		மான்வாழு மாசின் மதியென்னும் - கோனுடைய 
	135. 	பாங்கு வளையாழிப் பார்மடந்தை தன்னுடைய 
		பூங்குவளை மாலை புனைகென்னுந் - தேங்கமலத் 
	136. 	தற்புத் வல்லி[60]யவளே யிறந்துடைய 
		கற்பக மாலையைக் காதலிக்கும் - பொற்பார் 
	137. 	பொலம்புரிக் காஞ்சிப் புகழ....... 
		வலம்புரி மாலைக்கு மாழ்கும் - பொலந்தொடிப் 
	138. 	போரார வாரப் பொலங்கொடி பெற்றுடைய 
		[61].பேரா ரமலைக்குப் பேழ்கணிக்கும் - நேரியன் 
	139. 	ஏந்திழை மாத ரெவர்க்கும் பொதுவாய் 
		பூந்துழாய் மாலை புனைகென்னும் - வேந்தன்முன் 
	140. 	இவ்வகை யல்லதிலங்கிழையார் மால்கூரு 
		மவ்வகை கூரா ளயலொருத்தி - எவ்வுலகும் 
					பெதும்பை 
	141. 	முற்ற முடிக்கு முடித்தாம வேள்சூட்டுங் 
		கொற்ற முடியனைய கொண்டையாள் - அற்றைநாட் 
	---------------------------------------------------------------------------------------
[60]. யவனையிரந்துடைய,              [61].பேரார மாலைக்குப் 
	---------------------------------------------------------------------------------------
	142. 	சாத்து மபிடேகத் தாரைபோற் றாழ்கின்ற 
		கோத்த பருமுத்தக் கோவையாள் - தேத்து 
	
	143. 	[62]விடம்போல் மணிகட்கு வேழங்கட் கெல்லாங் 
		கடம்போற் கலையூறுங் கண்ணாள் - அடங்க 
	144. 	வயிர்ப்பான் மறலி [63]மகளுருக்கொ ளீதென் 
		றயிர்ப்பா ரயிர்க்கு மழகா - ருயிர்ப்பாவை 
	145. 	கொல்லிக்கு முண்டுயி [64]றாண்மைத்திரி கூடத்துஞ் 
		சொல்லிக் கிடக்குந் துணைமணிக்கும் - வல்லி 
	146. 	யிதற்கு நடைவாய்த் துயிர்வாய்த்த தென்ன 
		மதர்க்கு மொருதிருமாது- [65]முதற்றண் 
	147. 	பணிவாயிலாயம் [66]பரந்தலக கிள்ளைக் 
		கணிவாயின் முத்த மருளி - மணிவாயிற் 
	148. 	சொல்லா யெனக்கன்னை சொல்லாயே நீயன்றி 
		வல்லாய் பிறவறிய வல்லவோ [67]கல்லாணக் 
	149. 	கோழித் திருந்தாத கொற்றவற்கு வெற்றிப்போ 
		ராழித் திருக்கை யபயற்கு - வாழியாய்க் 
	150. 	காக்குங் கடலேமு மாடுங் கடாரமோ 
		வாக்கு நதியேழு [68]மாராமோ - தேக்கிய 
	151. 	பண்ணேழுங் [69]கன்னாவ தங்கிஷமோ? பண்டளந்த 
		மண்ணேழும் [70]வாகு வலையாமோ- தண்ணறுந் 
	152. 	தூவ னறவப் பொழிலேழுந் தொங்கலோ 
		காவன் மலையேழுங் கந்துகமோ - மேவலாய்ச் 
	153. 	செய்யு நலத்துடைய கோளேழுந் தீபமோ 
		பெய்யு முகிலேமும் பேரியமோ - வையகங் 
	---------------------------------------------------------------------------------------------
[62]. விடம் போற் பணிகட்கு,           [63]. மகனுருக், [64]. ராண்மைதிரிகூடத்துச், 
  [65].முதற்றன்,            [66]. பரந்தகலக்,      [67]. கல்யாணக், 
[68]. மாறாமோ,             [69].கன்னாவதம்சமோ,  [70]. வாகுவலையமோ 
	----------------------------------------------------------------------------------------------
	154. 	கூறு மவையிவை யென்று குறுந்தொடி 
		வேறு தனிவினவு மெல்லைக்கட் - சீறும் 
	155. 	ஒருத னடியின் மடிய வுபய 
		மருது பொருத [71]வயனை விருதன் 
	156. 	விலையினமுத மதன விமலை 
		முலையின் முழுகு முதல்வன் - வலைய 
	157. 	கனக சயில வெயிலி கணவன் 
		அனக னமல னதுலன் - தினகரன் 
	158.	வாசவன்றென்னன் வருண னளகேசன் 
		கேசவன் பூசக்ர கேயூரன் - வாசிகை 
	159. 	யாழிப் பெருமானபயன் அனபாயன் 
		சூழிக் கடாயானை தோன்றுதலும் - தாழாது 
	160. 	சென்றாள் திருமுன்பு செந்தளிர்க் கைகுவித்து 
		நின்றாள் இனிவறிதே நிற்குமே - யென்றாலுங் 
	161. 	கோடு கமழ்கண்டல் கொண்டற்கு [72]மாலதியோ 
		[73]னேடு நகாதே யுடையாதே - பீடுற 
	162. 	வந்த கொடுங்குன்ற வாடைக் [74]கிளங்கொன்றைக் 
		கொந்து கொடாதே குழையாதே- செந்தமிழ்த் 
	163. 	தென்ற லெதிர்கொண்ட தேமாங் கொழுங்கன்று 
		மன்றல் கமழாதே மாளாதே - யென்றுபோய்ச் 
	 164. 	சூதள வல்ல துணைமுலை தூயகண் 
		காதள வல்ல கடந்தபோய் - மாதர் 
	165. 	உருவத் [75]தளவென் றொளியுக்க மாக்கம் 
		பருவத் தளவல்ல பாவம் - தெருவத் 
	----------------------------------------------------------------------------------------
[71]. வயவன்,                 [72].மாலதிபோன்,          [73].றேடு நகாதே யிடையாதே, 
[74].கிளங்கொன்றை,               [75].தளவன். 
	------------------------------------------------------------------------------------------
	166. 	[76]துடைவதுடையாதா முள்ள முறவோர்த் 
		தடைவதடையாதா மச்சம் - கடல்கடைந்த 
	167. 	சேயினு நல்ல பெருமாள் திருத்தடந்தோள் 
		தோயினுந் தோய மனந்துணியு - மாயினும் 
	168. 	ஏந்து தடந்தோ [77]ளிணைப்பணைப்புக் கண்டிலன் 
		காந்து மதிவதனங் கண்டிலன் - பூந்தடந் 
	169. 	தேரினகலுந்திருந்தல்குல் கண்டிலன் 
		காரினிருளளகங்கண்டிலன் - மாரவேள் 
	170. 	எய்யு மொருகருப்பு வல்வில் லெடுத்தானோ 
		கொய்யு மலரம்பு கோத்தானோ - தையல்மால் 
	171. 	மந்தா கினிக்கோன் றிருப்புருவ வரர்சிலையுஞ் 
		செந்தா மரைக்கண்ணுஞ் செய்ததே - நொந்தார் 
	172. 	[78]வளைத்தளி செங்கை மடுத்தெடுத்து வாசக் 
		[79]கிளைத்தளி பாயக் கிடத்தித் [80]ளைத் தொகை 
	173. 	[81]யாய்க்குழ லென்று பரவு மனலூதும் 
		வேய்க்குழ லென்று விளம்பியுந் - தீக்கொள் 
	174. 	[82]நிகழ்நிலா வென்று நிருபகுல துங்கன் 
		புகழ்நிலா வென்று புகன்றும் - இகலிய 
	175. 	[83]பல்லிய மென்று பரராச கேசரி 
		வல்லிய மென்று மருட்டியும் - எல்லிய 
	176. 	[84]சல்லார மென்று கதிரோன் திருமருமான் 
		மெல்லார மென்று விளம்பியும் - நல்லார் 
	177. 	அருத்தி யறியா ரவையிவை யென்று 
		திருத்தி விட [85]விடர் தீர்ந்தாள் - ஒருத்தி 
	------------------------------------------------------------------------------------------
[76].துடைவ துடையாதவுள்ள முரவோர்க்கடைவ தடையாத வச்சம், 
[77]. ளிணைப்பசப்புக்,        [78].வளைத்தளிர்ச் செங்கை,  
[79].கிளைத்தளிரப் பாயற் கிடத்தித்,   [80]. துளைத்தொகை, 
[81]. யாய்க்குழ லன்று,                 [82]. நிகழ்நிலாவன்று, 
[83]பல்லிய மன்று,       [84]. கல்லார மன்று, [85]. விடாய் தீர்ந்தாள் 
	--------------------------------------------------------------------------------------------
				மங்கை
	178. 	உருவ வரிக்கண்ணொழுக வொழுகப் 
		புருவமுடன்போதப் போத - வெருவி 
							
	179. 	வனமுலை விம்மி வளர வளரப் 
		புனைதோள் புடைபோதப் போத - வினையார் 
	180.	அருங்கலையல்குலகல வகல 
		மருங்குபோ யுள்வாங்க வாங்க - நெருங்கு 
	 181. 	பரவவர ராசபயன் கரன்மேல் வேட்கை 
		வரவர வற்றாத மங்கை - பொருவரு 
	182. 	தேமி....ங்கும் காலையி.... செவ்வி 
		தாமரைக்கே சாலுந் தரத்ததோ - காமர் 
	183. 	அமுத மதியத் தலர்நிலா முற்றுங் 
		குமுத நறுமுகைக்கே கூறோ - நமதுகார் 
	184. 	கானின் மடமயிற்கே காணியோ தண்ணிள 
		வேனில் குயிற்கே விதித்ததோ- தேனிமிருந் 
	185. 	தண்டா மரையாள் தலைவனை யானும்போய்க் 
		கண்டாலென் னென்னுங் கடைப்பிடியாள் - பண்டை 
	186. 	யொளியா ரணங்காதூ மமைத்தா மென்றுந் 
		தெளியாத வாறே தெளிந்துங் - களியன்னம் 
	187. 	வாவிக் கரையில் வரநீ ரரமகளிர் 
		சேவிக்க நின்றாடுஞ் செவ்வியாள் - காவிற் 
	188. 	புகுதிலவன்	றெய்வப் பூங்குழையா ராயத் 
		தொகுதி புடைபெயர்ந்து சூழ்வாள் - மிகுதே 
	189. 	னிரையர வந்தரு செய்குன்றி னீங்கா 
		வரையர மாதரில் வாய்ப்பாள் -[86]பெருவலை 
	-----------------------------------------------------------------------------------
[86]. பெருவிலை 
	-----------------------------------------------------------------------------------
	190. 	முத்தின் விளங்கி முளரித் தவளப்பூங் 
		கொத்தில ணங்கனைய கோலத்தாள் - பத்திய 
	191. 	பச்சை மரகதம் பூணிற் பணைமுலைசூழ் 
		கச்சை நிலமகள்போற் காட்சியாள் - நிச்சம் 
	192. 	உரக பணமணிகொண் டொப்பிக்கி லொப்பில் 
		வரகமலை யன்ன வனப்பாள் - நரபதி 
	193. 	[87]மைமுகில் வண்ணத்து வானவன் மீனவன் 
		[88]கைமலை மேல்வரக் கண்டதற்பின் - [89]மொய்மலர் 
	194. 	நீலமே வேய்ந்தடுக்க நீலமே பூண்டுடுக்க 
		நீலமேயன்றி நினையாதாள் - நீலமே 
	195. 	முன்னுடைய செங்கே ழெறிக்கு முறிக்கோலந் 
		தன்னுடைய மானந் தழீஇக்கொள்ளப் – பின்னர் 
	196. 	நெருங்கு கழுநீரு நீலோற் பலமு 
		மொருங்கு மலர்தடமொத்து - மருங்கே 
	197. 	இறங்கிய கற்பக வல்லியு மேறி 
		யுறங்கிய தும்பியு மொத்தும் - பிறங்கு 
	198. 	வயங்கு [90]தளரின் மலங்கொம்பர் பூக்கொண் 
		டுயங்கு [91]கருவளை யொத்துந் - தயங்குவாள் 
	199. 	கோலத்தால் மெளலிக் குலோத்துங்க சோழற்கு 
		ஞாலத்தா ரெல்லார்க்கு [92]நாயகற்குஞ் - சீலத்தாற் 
	200. 	காசுங் கலாபமு மேகலையுங் காஞ்சியுந் 
		தூசுந் துகிலுந் தொடியு [93]நாண் - கூசேன் 
	201. 	வெளியே தருவேன் விரையாருந் தொங்கல் 
		கிளியே தருவே கிளியே - யளியேநீ 
	202. 	தாது கடிகமழ் தாதகி தாமத்தின் 
		போது கொழுதப் புறப்பட்டாய் ஓதிமமே 
	---------------------------------------------------------------------------------------- 
[87].மைம்முகில்,           [88]. கைம்மலை,             [89]. மொய்ம்மலர்,  
[90]. தளிரின் மலர்க்கொம்பர்,  [91] கருவிளை,             [92]. நாயகற்குச், 
[93]. நான் 
	-------------------------------------------------------------------------------------------
	203. 	எங்கள் பெருமானை யிங்கே தரவாநீ 
		யுங்கள் பெருமானுழைச்செல்லாய் - பைங்கழற்காற் 
	204. 	சேயை நினைந்தேகி....ம்முடைய சேக்கையான் 
		சாயன் மயிலே தலைப்பட்டாய் - பாயுங் 
	205. 	கடமானே போலவற்கு நீநின்னைக் காட்டின் 
		மடமானே தானே வருங்காண் - கடிதென்று 
	206. 	கொள்ளைகொள் காமன் கொடும்பகைக்குக் கூசித்தன் 
		பிள்ளைகளோடிருந்து பேசுவாள் - உள்ள 
	207. 	….. ….. ….. லகில குல நீலரத்தினாபரணம் 
		விலக வெயிலை விலக்க-வலகிற் 
	208. 	பெரிய பெருமான் பெரும்பவனி வீதி 
		விரிய வெதிரே ....ழுந்தாள் - வரிவளை 
	209. 	ஆயத்தாரென்னில் அளியத்தா ரெல்லோரும் 
		நேயத்தாரல்ல... ... நிற்பரே - தேயத்தார் 
	210. 	மன்னனை யஞ்சாதே வாரணத்தை யஞ்சாதே 
		மின்னனை யாளை........ மீதூரா - முன்னர் 
 
	211. 	தடமாகுந் தெய்வக் களிறு விரும்பும் 
		இடமாகும் யாமென்பார் போலப்-படமா 
	212. 	யிரைப்பச் சுருளோ டிருளளக பாரம் 
		நிரைப்ப வனமாகி நிற்பார் - விரைப்பூண் 
	213. 	முலையாய் வளரு முரட்குவடு கொண்டு 
		மலையா நெருங்க வருவார் - தொலையாத 
	214. 	பாய வருமுத்த மாலைபல தூக்கித் 
		தூய வருவியாத் [94]தோன்றுவாள் - சாயற் 
	215. 	கொடியா யடிசுற்றிக் கொள்வார் புரக்கும் 
		பிடியாய் நறுந்துகள் பெய்வார் - விடுதுமோ 
	----------------------------------------------------------------------------------
[94]. தோன்றுவார் 
	--------------------------------------------------------------------------------------
	216. 	[95]யாழா மிடற்றால் வளைக்குதும் யாமென்பார் 
		[96]தோளாய் வளைத்தெங்குஞ் சூழ்போவார்-[97]ஆழைக்கைத் 
	217. 	தியாகனை மானதனைத் திக்கானை யெட்டுக்கும் 
		பாகனை...... சென்று பற்றுவார் - தோகையை 
	218. 	நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாநின் 
		பொற்றுகில் தந்தருளிப் போகென்பார் - மற்றிவள் 
	219. 	தன்சங்கங் கொண்ட தடந்தா மரைக்கண்ணா 
		நின்சங்கந் தந்தருள நேரென்பார் - முன்கொள்ளும் 
	220. 	இன்றுயிர்க் கெல்லா மெறிபாற் கடற்கொள்ளு 
		நின்றுயில் தந்தருள்வாய் நீயென்பார் - [98]ஒன்றென்று 
	221. 	மானு மயிலு மனையார் விளைத்திளைப்பத் 
		தானுங் களிறுந் தடையுண்ட - கோனுந் 
	222. 	தடுத்த கொடிக்குத் தசமடங்கு வேட்கை 
		யடுத்த திருநோக் கருளிக் - கொடுத்த
	223. 	திருநகை மூரல் திகழ்ந்தா னணங்கும் 
		ஒருநகை கூர்ந்தொருகா லுய்ந்தான் - பெருநகை 
	224. 	யெய்தி யனங்க னெழப்போனான் மாதரும் 
		[99]உய்து சிறந்தா ருழைச் சென்றாள் - [100]நொய்திற்
	225. 	[101]கூசினார் [102]சாந்தும் பனிநீர் குழைத்திழைத்துப் 
		பூசினா ராவி பொழிந்தொழிந்தார் - வீசினார்
	226. 	இட்டார் நிலவிலிளந்தென்ற லுக்கொணர்ந்து 
		சுட்டார் குளிரி தொடுத்தெடுத்தார் - விட்டாரோ 
	227. 	பள்ள மதனிற்படரும் பெரும்புனல்போல் 
		உள்ள வுயிரை யுடன்கொண்டு - வள்ளல்பின் 
	------------------------------------------------------------------------------------------
[95]. யாழால்,           [96]. தோளால்,      [97]. ஆழிக்கைத்,  
[98]. என்றென்று,              [99]. உய்தி,                [100]. நொய்தினிற் 
[101]. 225 முதல் 240 முடியவுள்ள கண்ணிகள், விக்கிரமசோழனுலாவிலும்
	224 முதல் 239 வரையுள்ள கண்ணிகளாகக் காணப்படுகின்றன.  
[102]. சாந்து பனி நீர் 
	------------------------------------------------------------------------------------------------
	228. 	ஓதை மறுகில் உடன்போன போக்காலிப் 
		பேதை நடுவே பிழைத்தொழிந்தாள் - மாதரில் 
					மடந்தை
	229. 	வாரிபடும்முதை யொப்பாள் மதுகரஞ்சூழ் 
		வேரி கமழ்கோதை வேறொருத்தி - மூரித்தேர்த் 
	230. 	தட்டுஞ் சிறுகப் பெருகு மரகதத்திற் 
		கட்டுங் கனபொற் கலாபாரம் - பட்டுந் 
	231. 	துகிலுங் கரப்பச்சுடர் பரப்பிக் கைபோய் 
		அகல்கின்ற வல்குல் அரிவை - யிகலி 
	
	232.	[103]யொருத்தி மருங்குல்கடிந் தொன்றினைவந் [104]தொன்றி 
		நெருங்கிய [105]பைய நிரம்பித் - தருக்கி 
	233. 	யிடங்கொண்டு மின்னுக் கொடியொன்றிரண்டு 
		குடங்கொண்டு நின்றதெனக் கூறத் -[106]தடங்கொ 
	234. 	டிணைத்துத் ததும்பி யிளையோர்க ணெஞ்சம் 
		பிணைத்துத் தடமுகட்டிற்பெய்து பணைத்துப் 
	235. 	பெருமையுவமைபிறங்கொலிநீர் ஞாலத் 
		தருமைபடைத்ததனத் தன்னம் - கருமை 
	236. 	யெறித்துக் கடைபோ யிருபுடையு மெல்லை 
		குறித்துக் குழையளவுங்கொண்டு - மறித்து 
	237. 	மதர்த்து வரிபரந்துமைந்தர் மனங்கள் 
		பதைத்து விழநிறத்திற் பட்டுத் - ததைத்துக் 
	238. 	கழுநீரிதழின் கவினழித்துமானின் 
		[107]விழிநீர்மை வாய்த்த விழியாள் - முழுதும் 
	239. 	[108]நெறித்துக் கடைசுழன்று நெய்த்திருண்டு நீண்டு 
		[109]செறித்துப் பெருமுருகு தேக்கி - [110]நிறுத்துணம 
	-----------------------------------------------------------------------------------------------
[103]. யொருக்கி,                [104]. தொன்று,          [105]. மாமை, 
[106]. தடங்கொண்,           [107]. விழுநீர்மை,   [108]. நெறிந்து கடை குழன்று, 
[109]. செறிந்து,             [110]. நறுந்துணர் 
	--------------------------------------------------------------------------------------------------
	240. 	வரர்ந்து கொழுந்தெழுந்த வல்லியாய் [111]மாந்தளிரைச் 
		[112]சோர்ந்து மிசையசைந்த சோலையாய்ச் - சேர்ந்துநிற்ப 
					
	241. 	நதிக்கு மலைக்கு மடவிக்கு நாளுங் 
		குதிக்கு மதச்சுவடு கோத்து - மதிக்கும் 
	242. 	பிடிவிடாக் காதற் பெருங்களிறுங் கன்றும் 
		அடிவிடா தவ்வா றடையப் - படிவிடா 
	243. 	தாட்டுங் கரிவாரி யேழென்பா ரெட்டென்னக் 
		கூட்டும் பெருங்கடவுட் கொல்யானை - நீட்டிற் 
	244. 	பணிகொண்ட பூதப்படைநான்கும் [113]பற்றப் 
		[114]பணிகொண்ட பௌவம் [115]பரக்கப் - பணிகொண்ட 
	245. 	கார்முற்றும் பேரணி வீழ்ப்பக் [116]கவரிய 
		[117]ரூர்முற்றஞ் செற்ற தொருகூற்றஞ் - சேரர் 
	246. 	கனக்கு [118]மனீக களந்தோறுங் கைக்கொண் 
		டினக்கு மரசுவா வெல்லாந் - தனக்குத் 
	247. 	துணிக்குங் கழைக்கரும்பு நெல்லுஞ் சுமக்கப் 
		பணிக்குங் கடவுட்பகடு - தணிப்பரிய 
	248. 	[119]பூகங்கைத் தாடோயச் செங்கை புயல்வானில் 
		மாகங்கை தோயப்போய் மாமேனி - நாகங்கைக் 
	249. 	கொண்டு தனிதங்கள் கோள்வேங்கை வீற்றிருப்பக் 						கண்டுகளிக்குங்களியானை - வண்டலம்ப 
	250. 	நின்று குதிக்கு மதத்தினிலநெகிழ்த்தே 
		[120]கன்று மொளிப்பக் குளிப்பமுன் - சென்றெழுதிப் 
	251. 	பண்டு வெளியில் மகதத்தைப் பாவடியாற் 
		செண்டு வெளிகண்ட சேங்கண்மாக் - கண்ட 
	-----------------------------------------------------------------------------------------------
[111] மாந்தளிர்,            [112]. இவ்வடிக்குப் பின் சிலகண்ணிகள் சிதைந்து போயினவென்று 
	தெரிகிறது, 
[113]. பாறப்,                [114]. மணிகொண்ட,               [115]. வறக்கப், 
[116]. கவுரிய,            [117] ரூர்முற்றுஞ்,  [118]. மனீகங், 
[119] பூகங்கை தாடோய,           [120]. குன்று. 
	----------------------------------------------------------------------------------------------
	252. 	மதிலே யகழாக வாங்கியகழே 
		மதிலே யெழாநிற்க வைத்துப் - புதுமைசெய் 
	253. 	வாவிகள் செய்குன்ற மாகவச் செய்குன்றம் 
		வாவிக ளாக வெனவகுத்துத் - தாவுமான் 
	254. 	வெள்ளிடை [121]கோனகராகவக் [122]கோனகர் 
		வெள்ளிடை யாக வெனவகுத்துத் - தெள்ளிப் 
	255. 	புரப்பா ரிரப்பாராய்ப் போக விரப்பார் 
		புரப்பாரே யாக்கும் புகழ்மாத் - திருக்குலத்துக் 
	256. 	கண்ட னயிரா பதமதங்கால் காலத்துக் 
		கொண்ட தொருசுவடு மேல்கொண்டு - வண்டு 
	257. 	கடியுங்களிறுங் [123]களிறுமே காதற் 
		பிடியும் பிடியாமே பின்னர்க் - கடிமதில் 
	258. 	மாற்று வருவன வங்காள பாகத்து 
		வேற்று... மாமிறுக மதத்தைப் - போற்றார் 
	259. 	வயிரா கரமெறிந்த மானதன் கண்டன் 
		அயிரா பதமதமே யாகச் - செயிர்தீர்ந்த 
	260.         [124]காதர் பிடித்தேனாத [125]தேருக் கடாக்களிறென் 
		றோதப் பெயரு மொருபொருப்புப்-பாதையிற் 
	261. 	கச்சியிற் காற்றளையிற் கல்லிற் கலிங்கத்திற் 
		கொச்சியில் வாதாவி யிற்குளத்தில் - விச்சியில் 
	262. 	வல்லூரிற் கொல்லா புரத்து மணலூரில் 
		நெல்லூரிற் புத்தூரில் நெட்டுரிற் - செல்லூரிற் 
	263. 	கோட்டாற்றிற் கொங்குல வக்கூரிற் கொப்பத்தில் 
		வாட்டாற்றிற் கம்பலையின் மண்ணையில் - வேட்டுத் 
	264. 	தரணி கவர்ந்து தமிழ்வேந்தர் பாடும் 
		பரணி புனைந்த பகடு - சரணென்று 
	-------------------------------------------------------------------------------------------
[121] கோநக,                [122]. கோநக,   [123] களிறாமே, 
[124]. காதற்,               [125]. தேருங் 
	--------------------------------------------------------------------------------------------
	265. 	வாடா மதுரயாழ் வாங்கி மடவரல் 
		பாடா விருந்த பருவத்து - நீடாப் 
	266. 	பரிசிலுடனே [126]பணிப்பதுபோர் யானை 
		குரிசிலுடன் வந்து கூடத் - தெருவில் 
	267. 	வரவந்தான் மன்னர் பிரானென்று மாரன் 
		பொரவந்தான் கைவாங்கிப் போனான் - [127]விரல்கவர 
	268. 	வீணைக் [128]ககப்பட்ட வேழ மிடற்றுக்கு 
		மாணைப் பெருமா [129]னகப்பட்ட-வாணுதல் 
	269. 	ஐந்து தருவு மமைந்த திருமாலை 
		தந்து தொழவெழுந்து சாத்தினான் - மைந்தனும் 
	270. 	பண்ணுக்கே தோற்பான் பணைமுலைக்கு மல்குலுக்குங் 
		கண்ணுக்குந் தோலானே கைக்கொண்டான் - வண்ணமும் 
	271. 	வெண்டுகிலுங் காஞ்சியு மேகலையுந் தோள்வளையுங் 
		கொண்டவற்றின் மாறு கொடுப்பான்போற் - பண்டை 
	272. 	முடியுஞ்சிங் காதனமு முத்தக் குடையும் 
		படியு........ ……. .பணிப்பான் - பிடியுஞ் 
	273. 	சிவிகையு நிற்பவச் சேயிழை வீதி 
		கவிகையுந் தானுங் கடந்தான் - குவிமுலை 
	--------------------------------------------------------------------------------------
[126].  பனிப்பறு, பணிப்பதுபோல்,  [127] விரலகவு, 
[128].க்கப்பட,           [129]. னகப்பட 
	----------------------------------------------------------------------------------------
					அரிவை 
	274. 	யேனை யரிவை யொருத்தி யிகல்மாரன் 
		சேனை திரண்டனனைய செவ்வியாள் - வானில் 
	275. 	விடுசுடர்ச்செக்கர் வியாழமுந் தோற்கும் 
		படிசுடர்ப் பைம்பொற் படியாள் - வடிவு 
	276. 	நெடிதோற்கி லொக்கு நிறைமதிய நேரே 
		படிகோற்கு முத்தின் படியாள் - முடிவில் 
	277. 	குலபதும ராக மதிகுதி கொள்ளும் 
		பலபதுமராகப் படியாள் - அலைகடலின் 
	278. 	முற்றா [130]மகையாள் முகத்தா மரையாளப் 
		பொற்றா மரையாளப் போதுவாள் - அற்றைநாள் 
	279. 	தண்ணென் கழுநீர்த் தடம்பொய்கை நாமெலாம் 
		அண்ணல் வருமளவு மாடுதுமென் - றெண்ணிப் 
	280. 	புணைக்கு மொருவன் புறங்காவ லாயத் 
		துணைக்குந் தடஞ்சுருங்கத் தோயப்-பணைக்கும் 
	281. 	புடைக்கும் விசும்பிடம் போதா முலைக்கு 
		நடைக்கு முதற்பகை நாமென் - றுடைப்புண்டு 
	282. 	பின்னப்படுஞ்சக்ர வாகப் பெருங்குலமும் 
		அன்னக் குலமும் [131]அலம்வரப் - பின்னருங் 
	283.               [132]கா.... குங் கருங்கட்கு முட்காதே கைவகுத் 
		[133]தே... குந்தரமேநா மென்றுபோய்த் - [134]தோ...கின்ற 
	284. 	வாவியிலுள்ள வரால்களுஞ் சேல்களும் 
		தாவி விழுந்துதடுமாறத் - [135]தீவியம் 
	285. 	பொம்மென் சிலம்பு புலம்பு புறவடிக்கும் 
		அம்மென் கழுத்துக்கும் ஆற்றாது - மம்மர்பட் 
	286. 	டெங்குந் திரியா [136]திரியாபோ யாமையுஞ் 
		சங்குந் தடத்தை விடத்தவழ - நங்கைதன் 
	287. 	செவ்வாயுங் காதுஞ் செயிர்த்தபின் சென்றொதுங்க 
		எவ்வாயுங் காணா தெதிரேநின் - றவ்வாய 
	288. 	கொள்ளைக் குமுத மலருங் குழையிள 
		வள்ளைக் கொடிய முடன்மயங்க - வெள்ளம்போற் 
	289. 	பெய்யு மதயானைக் கோடும் பெருநெடுங் 
		கையும் புடைப்பக் கலுழ்வதுபோற் – றொய்யல்சூழ்
	------------------------------------------------------------------------------------------------ 
[130].முகையாள்,         [131]. அலமரப்,           [132]. காற்கும்,  [133]. தேற்குந், 
[134].தோற்கின்ற,            [135]. தீவிய,      [136]. திரியல்போ 
	--------------------------------------------------------------------------------------------------
	290. 	தாம முலையாலுந் தோளாலுந் தாக்குண்டு 
		காமர் தடமுங்கரைகடப்பக் - கோமகன் 
	291. 	உள்ளம் பருகப்பெருக வுலாக்கொண்டு 
		கள்ளம் பெருகுங் கருநெடுங்கண் - வெள்ளம் 
	292. 	படிய வருசிவப்பு வள்ளம் பசுந்தேன் 
		வடிய வருசிவப்பின் வாய்ப்ப - நெடிது 
	293. 	திளைக்குந் திருமகளை வாவியிற் சேவித் 
		திளைக்குங்கொடியிடையா ரேத்தத் - திளைத்துழித் 
	294. 	தம்மைக் கமல மலர்க்கருளித் தாமவற்றின் 
		செம்மை கவர்ந்த திருக்கண்ணு - மெய்ம்மெய்யே 
	295. 	பொய்போய வைய மருங்குலு மேகலைபோய்க் 
		கைபோ யகன்ற கடிதடமும் - பைபோய் 
	296. 	வெறிக்கும் [137]பணிவளையம் வீங்கிய வேய்த்தோள் 
		எறிக்கும் பெரும்பே ரெழிலும் - நெறிப்படக் 
	297. 	கொண்டுபோந் தேறியக் கோமகன் பேரழகு 
		பண்டுபோய் நோக்கப் பயப்படுவார்- கண்டு 
	298. 	கலன்கலன் கண்ணெச்சிற் கென்று கடிதிற் 
		பொலன்கலன் கொண்டு பொதிந்தார் - இலங்கிழை 
	299. 	யானைப் பெருமா ளயிரா பதத்திருந்த 
		தானைப் பெருமானைச் சந்தித்தாள் - மேனி 
	300. 	பொருவிற்கே யெல்லா வரம்பையரும் போதாத் 
		திருவிற்கே குற்றேவல் செய்யாள் - பொருவிற்கை 
	301. 	வானிற்கோ [138]னஞ்சி [139]வதிவானை [140]யஞ்சாதே 
		[141]வேனிற்கோ னேபரவ மேற்செல்வான் - வானத் 
	302. 	[142]தெடுக்குங் கொடிமாத [143]ராசிற்றொடையிற் 
		றொடுக்கு மகரம்போற் றோன்றா - தடுத்தெய்யு 
	---------------------------------------------------------------------------------------
[137].பணிவலயம் வீக்கிய,       [138].னஞ்ச, [139]. வருவானை, 
[140]. யஞ்சாத,   [141]. வேனிற்கோ னைப்பாவ மேற்செல்வாள், 
[142]. தடுக்குங்,   [143]. ரார்சிற்றிடையிற், 
	------------------------------------------------------------------------------------------------
	303. 	மன்றன் மலரம்பு விற்கரும்பு வண்டுநாண் 
		தென்றல்தேர் தானனங்கன் செற்றதென -மென்றோளி 
	304. 	பாங்கியெடுத்தபடாகைப் பசும்பொற்பூ 
		வாங்கி யெதிர்தூய் வணங்கினாள் - தாங்கி 
	305. 	யெடுப்ப வெழுவாள் இருதிருத்தோள் மாலை 
		கொடுப்ப விறைவனுங் கொண்டான் - கொடுத்தவற்றுள் 
	306.	பொன்மாலை போதகத்தைச் சூட்டிப் பொலன்குவளை 
		நன்மாலை சாத்தினா [144]ணாயகனுந் - தன்மார்பில் 
	307. 	ஆர்மாலை கோமா னருளினான் அம்மாலை 
		கார்மாலை யுட்கொண்டு கைக்கொண்டாள் - பார்மாலே 
	308. 	மூதண்டங் காக்கு முதுதண்ட மாரவேள் 
		கோதண்டத் [145]தின்..... கொள்ளாரதோ - மாதண்ட 
	309. 	முற்றக் கடல்கிடந்து வேவ முனிந்தின்னங் 
		கொற்றத் தனிவிற் குனியாதோ - நற்றடத்தில் 
	310. 	ஏறுமுதலை யெறிதிகிரி வேள்மகர 
		வேறு முறிய வெறியாதோ -ஆறாது 
	311. 	காந்து முழுமதியை யேரரோர் கலையாக 
		ஏந்து சுடர்வடிவாள் ஈராதோ - பாந்தள்மேல் 
	312. 	வைய முடையான் வலம்புரியிவ் வைகறைவா 
		யுய்ய வொருகுரல்வந் தூதாதோ - வையந் 
	313. 	தணியுந் தகைத்தோ தமியள்மா லென்று 
		பணியுங் கொடியிடையைப் பாரா - அணிய 
	314. 	உருத்தந்த தோற்றங்களொன்றினுந் தப்பா 
		[146]வருத்தா திருமனத்து வைத்தோ - திருத்தடந் 
	315. 	தோளுந் திருமார்பும் நீங்காத் துணைவியரில் 
		நாளும் பிரியாம னல்கினான் - மீள 
	------------------------------------------------------------------------------------------------
[144]னாயகனும்,     [145]. தின்மீது,          [146]. வருத்தந் 
	------------------------------------------------------------------------------------------------
					தெரிவை 
	316. 	[147]ஒருமகன் கண்ட னொருபெரும் பேராகம் 
		திருமகள் போலத் திளைப்பாள் - இருநிலந் 
	317. 	தாளா லளந்து தருபெரியோன் றாங்கிய 
		தோளாள் [148]வளந்த துணைமுலையாள் - நாளுந் 
	318. 	திரையர மாதருஞ் சேவிப்பாள் [149]பேரு 
		வரையர மாதரில் வாய்ப்பாள் - கரையில் 
	319. 	விருப்பவனி கூர வருகின்ற மீளி 
		திருப்பவனி முன்விரைந்து செல்வா - ளுருப்ப 
	320. 	[150]வணந்த பணிவலயத் தண்ணல் முதனாள் 
		மணந்த மணச்செவ்வி வாய்ப்பக் - கொணர்ந்தணிந்த 
	321. 	சூடா மணியும் பணிவளையுஞ் சூடகமுங் 
		கோடாழ் [151]மணிமகரக் குண்டலமு - மாடிய 
	322. 	[152]சச்சைய மாலையுமாரமுந்தாமமுங் 
		கச்சையு மேகலையுங் காஞ்சியும் - பச்சென்ற 
	323. 	பட்டுங் குறங்கணியும் பட்டிகையு நூபுரமுங் 
		கட்டுங் கனவயிரக் காறையும் - இட்ட 
	324. 	திலகமு மான்மதமுஞ் செஞ்சாந்து மெல்லா 
		வுலகமுந் தோற்கு முருவுங் - கலகமு 
	325. 	மாரனுந் தானும் வருவாளை மன்னரில் 
		வீரனுங் காணா வெருவாரப் - பாரனைத்துந் 
	326. 	தேருந் திருவைத் திருவவ தாரங்க 
		டோறும் பிரியாத் தொடர்பாலும் - வேறுகண் 
	327. 	வாளாலும் வார்புருவ வில்லாலு மாங்கமைந்த 
		தோளாலு மீளத்துவக்குண்டு -நீளிய 
	----------------------------------------------------------------------------------------
[147]. ஒருமகள்,          [148]. வளர்ந்த,  [149]. மேரு, 
[150]. வனந்த,           [151] மக்குண்டலமு,       [152]. சச்சையு 
	-----------------------------------------------------------------------------------------
	328. 	மைவிடா [153]நோக்கித் திருக்கை மலரணைக் 
		கையிடா வார்வங் கடைப்பிடித்துத் - தெய்வப் 
	329. 	புயவயை விலையன போற்றுகின்ற தெல்லாம் 
		இயவன முழுதுமியந்தான் - கவினிய 
	330. 	அற்புத மாலையணியப் பணிசெய்யுங் 
		கற்பக [154]மென்று கடைக்கணித்தான்-பொற்பதி 
	331. 	பாதங்களாதி முடியளவும் பாரிப்ப 
		மாதங்க ராசிதிருவாய்மலர்ந்தான் - ஓதி 
	332. 	முடிக்குந் தலைக்கோலம் போல்வன முத்தின் 
		படிக்குஞ் சலாபம் பணித்தான் - வடிப்பலகை 
	333. 	அச்சிறா பாண மனைத்திற்குந் தன்வட 
		வச்சிறா காமே வழங்கினான் - பச்சை 
	334. 	மணிக்குத் தலையாய மாணிக்க ரத்னப் 
		பணிக்குத்ரி கூடம் பணித்தான் - தணிப்பில் 
	335. 	பெரும்பேருவகையா ளாகிப் பெருமான் 
		விரும்பேர் புதுக்கண்ணி மீண்டாள் – பொரும்போர்
 
	336. 	வெருவளரும் பார்வேந்தர் வேந்தனைப் போற்றும் 
		பொருநரும் பாணரும் புக்கார் - தெரிவைக்குப் 
	337. 	பாடிக் குழலூதிப் பாம்பிற் படக்கூத்து 
		மாடிக் குடக்கூத்து மாடினாள் - பாடியில் 
	338. 	ஆனிரையு மாமா ளிகையும்போ லானுலகிற் 
		கோனிரையு மாலக் குழாங்கொண்டு - மீனிரை 
	339. 	மீது புடையுமடைய வனவே 
		யூதுந் திருப்பவள முட்கொண்டுஞ் - சீதத் 
	340. 	தடந்தூர வந்துங் ககன தலமு 
		மிடந்தூர வந்து மினிய - குடங்கள் 
	---------------------------------------------------------------------------------------
[153]. நோக்கிதிருக்கை,                [154].மொன்று. 
	-------------------------------------------------------------------------------------
	341. 	எழவெழ மென்மே லெழுந்துங் குடங்கள் 
		விழவிழ மென்மேல் விழுந்தும் - பழகிய 
	342. 	கோளீண்டு சோழேந்த்ர சிங்கந் திருத்தடந் 
		தோளீண்டு மென்றென்று சொல்லியும் கோளொழிய 
	343. 	நின்வேய் [155]தயிரென்று நேரியன் மேருவிற் 
		பொன்வேய் குழலோன்பின் போக்கினாள் - பின்னர் 
	344. 	[156]கரும்பிற்கு மாறாகத் தங்கோமா னாவற் 
		பசும்பொற் றசும்பு பணித்தாள் - ஒசிந்துபோய் 
	345. 	நாடகப் பாம்பிற்கு நங்கற் பகங்கோத்த 
		வாடகப் பாம்பொன் றருளினாள் - பாடுநர்மேல் 
	346. 	வற்றாத மான்மத வாவியில் வாடாத 
		பொற்றா மரையைப் புனைகென்றாள் - கொற்றவன் 
	347. 	கொந்தார மாலை கொளவிளைத்த மாலைக்கு 
		மந்தார மாலை வருகென்றாள் - நந்தாத 
	348. 	பேறுந் திருவருளு மெய்தி யவர்பெயர 
		ஏறுந் தவிசு தரவேற்று....... 
	349. 	துகிலசைந்து நாணுந் தொலைய வளக 
		முகிலசைந்து நோவிடைக்கு முற்ற - வகிலமுஞ் 
	350. 	சேனையு மன்னருந் தெய்வப் [157]பெருமாளும் 
		யானையு நிற்க வெதிர்நின்று - கோனே 
	351. 	சதயுக மென்னுந் தரணிபர் மக்கள் 
		பதயுக மல்லது பாரார் - உதயாதி 
	352. 	காந்தின கைத்தலத்தைப் பார்மடந்தை கற்பாகாத் 
		தேந்து மவரவா சென்றிகழ்வர் - பூந்தொடி 
	353. 	நற்போர் மடந்தை திருத்தோளை நாமுடைய 
		வெற்போரிரண்டென்று வீற்றிருக்குங் கற்பிற் 
	-------------------------------------------------------------------------------------
[155]. தவிரென்று,         [156]. தசும்பிற்கு,      [157].பெருமானும் 
	------------------------------------------------------------------------------------------
	354. 	கலந்தாளுஞ் சொற்கிளத்தி கன்னதுவய மேனப் 
		பொலந்தா மணியென்று போகாள் - நிலந்தரா 
	355. 	அந்தா மரையுங் கடைக்கண்ணை யென்னிரண்டு 
		செந்தா மரையென்று செம்மாக்கு - முந்துற 
	356. 	மல்லா புரேச் சிலகால மற்றிவை 
		யெல்லாந் தணித்துடையோம் யாமென்றே- யல்லாது 
	357. 	மேகோ தகமிரந்த சாதகம் வெற்பையே 
		யேகோ தகம்பொழிந்தா லென்செய்யும் - மீகத்தின் 
	358. 	தாலை வெயில்வேண்டு தாமரைக்குக் கற்பாந்த 
		வேலை வெயிலெறிக்க வேண்டுமே - மாலைச் 
	359. 	சிலாவட்டஞ் சிற்சில சென்றுருக வென்று 
		நிலாவட்ட நின்றெறிக்க நேரே - குலாவிளைஞர் 
	360. 	சேற்றாக்கால் மீளுந் திருநாடா நீதருமால் 
		ஆற்றாக்கால் மேன்மேலளிப்பரே - கோற்றொடியார் 
	361. 	நீங்கரிய மேகமே யெம்போல்வள் நீயளித்தாற் 
		றாங்கரிய........ 
					பேரிளம்பெண் 
	362. .	……….. …………. ………… ..வேறொருத்தி 
		……….. ..வெறுமத விததா னேறினாள்- 
	363. 	கச்சை முலையுங் கடிதடமுங் குங்குமச் 
		சச்சை கமழுந் தடந்தோளும் - நிச்சயமும் 
	364. 	ஏந்த வுளதென் றிருந்த மலர்நின்றும் 
		போந்த திருமகள் போலிருப்பாள் - வேந்தர் 
	365. 	பணியுந் தடமகுடம் பன்னூறு கோடி 
		யணியுந் திருத்தா ளபயன் - பணிவலய 
	366. 	வீக்கிலே வீங்கியதோள் மேரு கிரிசிகரத் 
		தாக்கிலே சாய்ந்த தனதடத்தாள் - பூக்கமழ் 
	367. 	ஆரேற்ற பொற்றா ளருளொளியை யாயிரம் 
		பேரேற்ற தெய்வப் பெருமானைக் - காரேற் 
	368. 	றடல்போலடுதிகிரி யண்ணலைத் தன்பாற் 
		கடல்போ லகப்படுத்துங் கண்ணாள் - மடல்விரி 
	369. 	தெங்கினும் ஏற்குந் தசும்பினுந் தேர்த்தெழப் 
		பொங்கு நுரையினும்போய்ப் போகாது - தங்கு 
	370. 	நறவு குவளை நறுமலர்தொத் துண்ணு 
		மிறவு கடைக்கணியத் தேய்ப்பச் - சுறவுக் 
	371. 	கொடியோனை நோக்குவாள் கண்டாள்போற் கொங்கை 
		நெடியோனை நேமிப் பிரானைப் - படியோனைக் 
	372. 	கண்டனை மேதினியாள் காந்தனை வந்துய்யக் 
		கொண்டனை யென்று குறுகுவாள் - கண்ட 
	373. 	மலர்கண் ணிமைப்புச் சிவப்பூர மாற்றித் 
		திலகங் குறுவியராற் றேம்பப் - பலகுதலை 
	374. 	மாற்றந் தடுமாற்ற மெய்த மனத்துள்ள 
		தேற்றுமித் தோற்றஞ் சிதைவிப்ப - ஏற்கைமிகு 
	375. 	தன்மை யறிய நிலவினேன் சந்தனத்தே 
		முன்னை யறிய வுணர்வினேன் - வென்வையிற் 
	376. 	செல்லாத கங்குலெனத் தீராத வாதரவேம் 
		பொல்லாத வெம்பசலைப் போர்வையோம் -நில்லாத 
	377. 	வாமே கலையே முலைவிக்கா விம்மினேம் 
		யாமேயோ விப்போ தெளிவந்தேம் - யாமுடைய 
	378. 	நன்மை யொருகாலத் துள்ள தொருகாலத் 
		தின்மை யுணராயோ வெங்கோவே - மன்னனு 
	379. 	முன்பு கருடன் முழுக்கழுத்தி லேறுவது 
		பின்பு களிற்றின் பிடர்க்கழுத்தே - மின்போல் 
	380. 	இமைக்குங் கடவு ளுடையினைபண்டிப்போ 
		தமைக்குந் துகிலினை யன்றே - சமைத்ததோர் 
	381. 	பாற்கடலிற் சீபாஞ்ச சன்னியம்பண் டிப்போது 
		காற்கடி சென்றுகவர் சங்கே - சீர்க்கின்ற 
	382. 	தண்ணந் துழாய்பண்டு சாத்தத் திருத்தாமக் 
		கண்ணியின் றாரின் கவட்டிலையே - வெண்ணிய 
	383. 	தெள்ளி யறைபாற் கடலே [158]திருத்துயில் 
		பள்ளி யறையின்று பாசறையே - வெள்ளிய 
	
	384. 	முத்தக் குடைகவித்து முன்கவித்த மாணிக்கக் 
		கொத்துத் தொடையொக்கக் கூட்டுமே - யித்திறத்தால் 
	385. 	எண்ணிற் கரிய பெரியோனீ யெங்களையு 
		மண்ணிற் கிகழ வடுக்குமே - விண்ணப்பங் 
	386. 	கொண்டருளு கென்ன முகிழ்த்த குறுமுறுவற் 
		றண்டாளக் கொற்றத் தனிக்குடையோன் - பண்டறியா 
	387. 	வாரமு	 மாலையு நூலும ருங்குலாற் 
		பாரமு மேகலையும் பல்வளையு - மூரும் 
	388. 	பிடியுஞ் சிவிகையுஞ் சேரும் பிறவும் 
		படியுங் கடாரம் பலவும் - நெடியோன்
	389. 	கொடுத்தன கொள்ளாள் [159]கொடாதனை கொண்டாள் 
		அடுத்தன தோண்மே லயர்ந்தாள் - எடுத்துரைத்த 
	390. 	பேதை முதலாகப் பேரிளம்பெண் ணீறாக 
		மாதரினங்கொள்ளா மால்கொள்ளச்- சோதி 
	391. 	இலகுடையான் கொற்றக் குடைநிழற்ற வீரேழ் 
		உலகுடையான் போந்தா னுலா. 
		அன்று தொழுத வரிவை துளவணிவ 
		தென்று துயில்பெறுவ தெக்காலந் - தென்றிசையில் 
		நீரதிரா வண்ண நெடுஞ்சிலையை நாணெறிந்த 
		வீரதரா வீரோத யா. 
--------------------------
[158].திருந்துயில்கொள்,               [159].கொடாதன.
		--------------------------
 இராஜராஜதேவருலா முற்றும்.  
-----------
 9. ஸ்ரீ திருக்குறுங்குடி அழகிய நம்பியுலா 
						காப்பு 
		பூமாலை சேர்குறுங்கைப் பொன்மேனி நம்பியெங்கள் 
		மாமால் பவனியுலா மாலைக்கு - நாமேவு 
		பூவற் கருடனே பொன்னுலகத் தார்பரவுங் 
		காவற் கருடனே காப்பு. 
						நூல் 
		கார்கொண்ட மேனியான் கைகொண்ட நேமியான் 
		பார்கொண்ட பாதப் பரந்தாமன் - சீர்கொண்ட 
		பூமகளும் பார்மகளும் போற்றியிரு பாலிருப்ப 
		மாமலரோன் கைகுவித்து வந்திப்ப- நேமியுடன் 
		சங்கமுத லைம்படையுந் தானிலங்கப் புள்ளரசு 
		புங்கவனாஞ் சேனையர்கோன் போற்றிசைப்ப - எங்குநிறை 
		தேவர் குழாம்நெருங்கிச் சேவிப்பச் செங்கமலப் 
		பூவலரும் நீலவரை போலவே - யாவருக்கு 
		மிஞ்சிய வைகுண்ட [1]வீட்டிருக்கும் நாளவுணன் 
		நெஞ்சிற் கெறுவம் நிறுத்தவெண்ணிக் - கொஞ்சவுறு 
		வாமனமாய் வேள்விபுரி மண்டபத்திற் சென்றிரந்து 
		தாமனதால் மூவடிமண் தாவென்ன - ஒமெனவே 
		வெள்ளி தடுப்ப விழியொன்று போக்கிமுன்னே 
		யள்ளியநீர் கையேற்ற வந்நாளில் - உள்ளமகிழ்ந் 
		தோரடியிற் கீழே[2] ழுலகளந்து மேல்நின்ற 
		வோரடியில் மேலே[3] ழூலகளந்தும்- ஓரடிக்கும் 
		எங்கே யிடமென் றெதிர்மா வலிசிரசிற் 
		பங்கே ருகப்பொற் பதம்வைத்தே - துங்கத் 
		திரிவிக் கிரமத் திருவவ தாரஞ்செய்      	10
		தருள்முக் கியதலமென்றா ரும் - பரவரிய 
	_________________________________________________
		(பி-ம்)[1]. வீட்டிருக்க, [2].வுலகவந்து, [3]. வுலகளந்தும் 
	___________________________________________________
		வாமனச் சேத்ரமென வாழுங் குறுங்குடியான் 
		தேமருவு சித்தாச் சிரமத்தான் - மாமறையோன் 
		கோர முகத்திற் குறுங்கன் பிறந்திந்தத் 
		தாரணியிற் றீதிழைக்கத் தான்கண்டே - நேரெதிர்ந்து 
		[4]வென் றுதிரு வைகுண்டம் வீற்றிருந்த கோலமும்பொற் 
		குன்று தனில்நின்ற கோலமும்பால் - துன்றுகடற் 
		பள்ளிகொண்ட கோலமும்பண் பாய்ச்சேவை சாதித்து 
		விள்ளுமவ னாமம் விளங்குமூர் - உள்ளமகிழ் 
		கோடிமகா தீர்த்தங் குலவுதல மென்றுவிண்ணோர் 	      15
		நாடியிறைஞ் சுங்குறுங்கை நன்னகரான் - வீடுபெற 
		நேசித்தலர் சொரிந்து நின்றெழுபத் தெண்பிரமர் 
		பூசித் தினிதேத்தும் பொற்பதத்தான் - தேசிகமாஞ் 
		செக்கச் சிவந்த செழுஞ்சுடரைப் பேதமறப் 
		பக்கத்தில் வைத்த பரிவினான் - மிக்கதமிழ்ச் 
		சீரன் புறவே தெரிந்துபா டும்பறைச்சிக் 
		காரங் கொடுத்தருளு மன்பினான் - நாரதனார் 
		நன்றுதரு மெஞ்ஞான்றும் ஞானம் விளங்குமென 
		நின்று தவம்புரிய நேசித்தோன் - வென்றிதரு 
		மாக்களிற்று வேந்தன் மனப்பூ ரணமாக 	     	20
		நாக்கறுக்க வுண்மையாய் நாக்களித்தோன் - ஆக்கமது 
		மிச்சநமக்குக்கீழ்வீட்டுவர மங்கையெனப் 
		பிச்சனுக்குப் பேறுதவும் பெற்றியான் - இச்செகத்தில் 
		வந்தித்த காரி மதலை யெனப்புளிக்கீழ்ச் 
		[5]சந்தத்து வேதந் தமிழ்செய்தோன் - சிந்திக்குந் 
		தெற்குவீ டென்றுதிரு மங்கை மன்னன்வர 
		நற்கதியன் றீந்தருளும் நம்பெருமான் - சொற்கிசைந்த 
		பாடற் குருகிப்பரவு மரையர் துழாய் 
		மாடத்திற் போயிருந்த வாரத்தான் - நாடிக் 
		குழனார் கழனிக் [6]குளத்திற் றிருவாய் 	     	25
		மொழியா லடகுகொய்த மூர்த்தி - வழுவால் 
		வருராக் கதனும் மதங்கனும்வீ டெய்தக் 
		கருணா கடாட்சமருள் கண்ணன் - அருள்கூரும் 
		எம்பெருமா னார்சீட னென்னச்சோ [7]மன்றுவைத்த 
		நம்பெருமா னாயிர நாமத்தான் - தம்பமினி 
		யாரெனக்கு நானுன் னடைக்கலமென் றேயிறைஞ்சுஞ் 
		சேரனுக்குப் பிள்ளையாய்ச் சென்மித்தோன் - வார்புனலிற் 
	_____________________________________________________________
		(பி-ம்.) [4]வென்றிதிரு,  [5] சந்தித்த, 
 [6]. குழத்தித் திருவாய்,         [7]. மன்றோய்த்த 
	__________________________________________________________________________
		காரண்ட மூழ்கிக் கரும்பனையைச் சுற்றிவரப் 
		பேரண்ட வீடளித்த பெற்றியான் - சீர்தங்கு  
		பிள்ளைதர [8]வேணுமென்றே பேராசை யாற்றவஞ்செய்       	30 
		வள்ளமுலைப் பாடக வல்லிபால் - உள்ளறிவாய்ச் 
		சென்மித்துத் திக்கனைத்துஞ் சென்றுரா மேசுரத்திற் 
		றன்மத்தால் செப்பேடு தான்கண்டே - நன்மைபெறுஞ் 
		சீவல மாறனுக்குச் சித்தமகிழ்ந் தேயருள்செய் 
		காவலவன் செங்கமலக் கண்ணினான் – மேவு
		 முறைகேத் திரபால் மூர்த்தி வடகீழ்ப் 
		[9]புறமேவ வன்பு புரிந்தோன் - நிறமான 
		பச்சைப் பரியேறிப் பாரறியச் சேரனுக்காய் 
		[10]மெச்சப்படைவெட்டும் வீரத்தான் - உச்சிதமாம் 
		நீல வரையருவி நேராகச் செவ்வந்தி       35
		மாலை புனையு மணிப்புயத்தான் - சால 
		மழைதடுத்து முன்னான் வசந்தன்கொண் டாடுங் 
		குழகனம்பி ராயனெங்கள் கோமான் - விழைவாகத் 
		தேசிக விலாசக் சிகரந் தெரிசித்த 
		கோசிகனுக் கன்பு கொடுத்தபிரான் - வீசலைசூழ் 
		பாருண் [11]டுமிழ்ந்தளந்து பன்றியாய்க் கீண்டெடுத்த 
		நீருண்ட மேகநிறத் தினான் - பேரண்ட 
		அண்டமு மண்டத் தலகிலுயிரும் படைக்கப் 
		பண்டயனை யீன்ற பரந்தாமன் - விண்ட 
		முதலை [12]நிருதன் முனியை யடர்ந்து 	     	40
		மதலை மதலையாய் வந்தோன் - இதமுடனே 
		அன்றெதிர்ந்த தாடகையை யாதி யிராவணனை 
		வென்று செயங்கொண்ட வீரத்தான் - துன்று 
		மருது சகடுவளர் தொட்டிற் பேய்ச்சி 
		யெருது குதிரை யிளங்கன் - றுருகியபுள் 
		ளானை முதல்மல்ல ராவியுண்டு கஞ்சனையும் 
		வானி லனுப்பு மருகனார் - ஆனிரைக்காய்க் 
		குன்றெடுத்து மாய்ச்சியர்கள் கூறையெடுத் தும்மனைக்குள் 
		சென்றெடுத்து வெண்ணெய் திருடியும் - அன்றெடுத்த 
		தாம்போ டசோதைமுன்னே தாழ்ந்துநின்றோன் தாமரைத்தாள் 45 
		பாம்போடு மாடும் பரதத்தான் - மேம்படித் 
_______________________________________________________________
		 (பி - ம் ) [8].வேணுமென்று,               [9]. புறமேவியன்பு, [10]. மெச்சு, 
[11].டுமிழ்ந்தமர்ந்து,            [12].கிருதன் 
	________________________________________________________________
		தென்றுபதி னாறா யிரங்கோ பியர்மகிழ 
		மன்றல் புரிந்தருளு மாயத்தான் - வென்றிபுனை 
		ஐவருக்குத் தூதுரைத்தும் அர்ச்சுனற்குத் தேரூர்ந்தும் 
		தையலுக்குத் தானை தனைக்காத்தும் - செய்ய 
		பகலில் இரவழைத்தும் பாரதப்போர் மூட்டிச் 
		செகமகிழப் பூபாரந் தீர்த்தோன் - இகழ்வான 
		வாணன் கரமறுத்தோன் வானோர் [13]பணிந்தேத்தும் 
		சேணிந் திரற்கிளைய செங்கண்மால் - காணும் 
		மதுகை டபர்ச்செற்றோன் மாமதவா னைக்காய்      	50
		முதலை தணையடர்த்த மூர்த்தி முதியதிரைப் 
		பாலுததி யிற்பகுவாய்ப் பாம்பிற் பசுத்துரத்துங் 
		கோலிலா லிற்றுயிலுங் கோவிந்தன் - மேலடியர் 
		தன்னெஞ்சும் வைகுந்த தானமுந் தாழ்ந்திறைஞ்சும் 
		என்னெஞ்சும் நீங்கா தினிதிருந்தோன் - முன்னமொரு 
		மாவானை முன்னு மதுரத் தமிழ்பாடு 
		நாவாணன் பின்னும் நடந்தபிரான் - தேவான 
		ஈசனார் பக்கத்தும் ஏத்துமறை யுச்சியினும் 
		நேசமா யெப்போதும் நின்றமால் - காசினியாந் 
		தான மடிதீண்டத் தாரகைக்கு மேலான 		     	55
		வானமுடி தீண்ட வளர்ந்தபிரான் - ஆனதவம் 
		நம்புருஷ நாராயணப் பேரே ரிச்சிறப்புந் 
		தும்பிநின்று லாவியபூஞ் சோலையும் - பைம்புனல்சேர் 
		[14]காலடியி லாற்றின் கவர்த்தலையிற் பொன்விளையச் 
		சாலி விளையுந் தடம்பணையும் - மேலான 
		சித்திர கோபுரமுஞ் சேர்ந்ததென்னஞ் சோலைகளும் 
		வர்த்தனையாந் தென்குறுங்கை மாநகரரன் - இத்தரையில் 
		முத்தொழிற்கு முவுருவாய் மூலநடு வீறாகி 
		வித்தகஞ்செய் பேரின்ப வீட்டிநான் -[15]அத்திபடி 
		மீனாமை பன்றியரி மிக்க குறள்பரசுக் 		      60 
		கோன்வார் சிலைராமன் கூன்கலப்பை - தானேய் 
		விசயபெல ராமன் விளங்குகிட்ணன் மாவாந் 
		தெசவவதா ரம்புரியுந் தேவன் - உசிதமறைக் 
		காரணத்தா னார்க்குமடங் காரணத்தா னேந்தியகை 
		வாரணத்தான் காத்தருள்கை வாரணத்தான் - கார்வரை 
		ஆகத்தான் பூமகள்சேராகத்தா னன்றெடுத்த 
	________________________________________________________________	
		(பி - ம்.) [13]. பரிந்தேத்தும், [14].காலடியிலிரற்றினக், [15]. அத்தியடி 
	________________________________________________________________
		நாகத்தான் பள்ளிகொண்ட நாகத்தான்- கோகனகபோல் 
		வுந்தியா னீள்சகட முந்தியான் கன்றெறிந்த 
		வந்தியான் தாரணிசெவ் வந்தியான் - சிந்தியார் 
		உண்ணத்தான் பார்முழுது முண்ணத்தான் நீண்டகடல்       65 
		வண்ணத்தான் வாமகர வண்ணத்தான் - எண்ணுமன்பால் 
		வாரத்தான் முன்பாரா வாரத்தான் அஞ்சவெய்த 
		தீரத்தான் சிந்துநதி தீரத்தான் - பாரிரந்த 
		வாமத்தான் சங்கரன்சேர் வாமத்தான் ஆயிரமா 
		நாமத்தான் கஸ்தூரி நாமத்தான் - கோமளப்பால் 
		வேலையான் முத்தொழில்செய் வேலையா[16] னெல்லழைத்த 
		மாலையான் பூந்துளப மாலையான் - ஞாலத் 
		திடர்செய் கனகனெதிர வவன்றன் 
		குடரலங்க லாயணிந்த கொண்டல் - [17]கடல்சார் 
		அலகில் தரணி யடியி [18]லடைய 	     	70
		மலரு மிருதாள் மலரான் - குலவுநெறி 
		நின்று முனிவர் நெருங்கித் தவம்புரியு 
		மன்றல் மயேந்திர மால்வரையும் - நன்றுதருஞ் 
		சிந்து நதியுந் திருப்பாற் கடல்வளமும் 
		நந்துதவழ் வைகுந்த நன்னாடும் - முந்துங் 
		குருங்கா புரியுங் குலவுபுது வாச 
		மருங்காத் துளப மலரும் நெருங்கும் 
		கருட துவசமுங் கைமதங்கள் சிந்த 
		மருடருநாற் கோட்டுமத மாவும் - தரணியிலே 
		வென்றி தருங்கவன மேவு துரகதமும்	 	     	75
		மன்றலொலி மாறா மணிமுரசுந் - துன்று 
		மருவு தசாங்மென வாழ்வோன் சிறந்த 
		உருவு தசாங்க முடையோன் - அருமறைதேர் 
		அய்யன் குழகன் அழகிய நம்பியலர் 
		கொய்யுந் துளபக் குறுங்குடிமால் - பையா 
		டராவணை வாசன் அறிவி லரிய 
		பிரானெனை யாளும் பெருமாள் - விராவுமலை 
		நம்பிதிருப் பாற்கடலில் நம்பிபள்ளி கொண்டருளும் 
		நம்பி யிருந்தநம்பி நானிலத்தில் -உம்பர்தொழ 
		நின்றகரு மேகம்போல் நீண்டபொன் மேனிநம்பி 	      80 
		வென்றிபுனை நாத வினோதநம்பி - என்றும் 
	___________________________________________________________
		(பி - ம்) [16].னெல்வளைத்த, [17]. கடலரசர்,  [18]. லடையு 
	___________________________________________________________ 
		தரணிபுக ழாபற் சகாயநம்பி செம்பொன் 
		மருவிய செங்கனிவாய் நம்பி - கருணை 
		பரவுதய் மார்த்தாண்டப் பந்தற்கீ ழுண்மை 
		வருராம தேவமக ராசன் - தருபீடத் 
		துற்கனமாய்ப் பூமகளும் [19]ஓங்கு நிலமகளும் 
		விற்பனமாய் நீங்காத மேன்மையான் - அற்புதமாம் 
		நங்கை யெனையாளும் நம்பிக்கு நாச்சியார் 
		மங்கை குறுங்குடி வல்லியார் - பங்கிலே 	     	85
		சீராக வீற்றிருக்கச் சித்த மகிழ்ந்துதிரு 
		வாரா தனங்கொண் டருளுநாள் - பாரோர் 
		பரவு திருப்பங் குனித்திரு விழாவிற் 
		கருட துவசமேற் கட்டிச் - சுருதிமுறை 
		கேட்டு முதற்றிருநாள் [20]கேடகத்தி ரண்டாம்நாள் 
		தீட்டு திறல்விசைய சிங்கத்துஞ் - சூட்டுநாள் 
		மூன்றி லனுமார் முதுபுயத்தும் நாலாம்நாள் 
		நான்றமுடி யைந்தலை நாகத்துந் - தோன்றிவரும் 
		அஞ்சாம்நா ளிற்கருட னம்புயத்தும் ஆறாம்நாள் 
		எஞ்சாத வானையினும் ஏழாம்நாள்- மிஞ்சவே 
		வேண்டியபள் ளிச்சிவியார் மேவு சிவிகையினுங்       	90
		கூண்ட வெட்டாம்நாளிற் குதிரையினும் - பூண்டுங் 
		குலவொன்ப தாம்நாள் குருந்தேறி வீதி 
		வலம்வந்து பத்தாம்நாள் வானில் - அலருதைய 
		காலத்தில் நித்யல்படிக் கட்டளையாந் [21]தாரையுட்ணஞ்
		சீலத் துடனமுது செய்தபின்பு - பாலாழிச் 
		சீரார் திருமஞ் சனஞ்செய்து வாய்த்ததிரு 
		வாரா தனங்கொண் டருளியே - நேராய் 
		இசைந்தமணி ரத்னாபி ஷேகத்துக் கேற்ப 
		அசைந்த குழைக்கா தழகும் - பசுந்துளபத் 
		தாருங் கவுஸ்துவமுஞ் சங்குசக்ரக் [22]கையுமியல் 	      95
		தேருங்கஸ் தூரித் திருநுதலும் - காரில்மின்போற் 
		பீதாம் பரமும் பிறவிப் பிணியறுக்கும் 
		பாதரம் புயமும் பலபணியுஞ் சோதிதரு 
		மாணிக்க மாலை வயிரவொளி யுஞ்சூழ்ந்த 
		[23]காணிற்பொன் பூத்ததொரு கார்வரைபோல் - பூணிலகப் 
		பூவுலகும் பாதலமும் பொன்னகரத் திந்த்ரன்முதல் 
	_____________________________________________________________
		(பி-ம்.) [19]. ஓங்க,  [20].கேடகத்து மிரண்டாநாள், [21] தாரையுட்டிணஞ், 
[22]. கையுமேல்,           [23]. காணிப்பொன்; கானிற்பொன் 
	____________________________________________________________
		தேவர் முனிவர் செயசெயென - மேவரிய 
		காளமுதற் பல்லியமுங் கார்முழக்க மென்னவண்ட 
		கோளமட்டும் நின்று குமிறவே-ஆழ்வார்கள் 
		பன்னிருவ ரோதியப்ர பந்தமும் நான்மறையும்       100
		முன்னம் மறையோர் மொழிந்துசெல்ல - உன்னரிய 
		பேரருளா ளச்சீயர் பேராம் வயிணவர்கள் 
		சார்வுறுதா னத்தார் தலத்தார்கள் -வாரமுறுங் 
		கோயில் வளரனைத்துக் கொத்தும் புடைசூழ 
		ஏயதிருத் தேரி லெழுந்தருளி - நாயகனார் 
		சீலப் பவனிவரச் சேனையர்கோ னின்றுதிரு 
		வோலக்கஞ் சேவித் துடன்போத- மேலான 
					குழாங்கள் 
		காத லரம்பையருங் காகோ தரநாட்டு 
		மாதரும்பர் மங்கையரும் வந்தீண்டிச் - சீதக் 
		களமுங் கவானுங் கனதனமேற் றொய்யில்       105
		வளமும் விழியும் வதனத் - தழகும் 
		கமுகு கதலி கரும்பிளநீர் வாசங் 
		குமுகுமெனுங் காவிகஞ்சங் கொண்டே - சமுகமாய் 
		வீதி வளமைசெய்யு மேன்மைபோ லேநெருங்கி 
		நீதி யிருமருங்கும் [24]நின்றேத்தி - மாதரீர் 
		வாரீர் பவனிதொழ வாரீ ரிவரழகைப் 
		பாரீர் எனவே பகருவார் - [25]தார்குழலீர் 
		முன்னானை காத்தார் முலையானைக் கன்புசெய்யார் 
		என்னா மிவர்நீதி யென்றுசொல்வார் - நன்னுதலீர் 
		நாடறிய வேமுன் நரசிங்க மாயானைக் 	     	110
		கோடு பிறந்தாரென்று கூறுவார் - ஆடைதனை 
		அன்றொருத்திக் கீந்த தவராகி மாதர்கலை 
		இன்றுகொள்வ தேதென் றியம்புவார் - நன்றுநன்று 
		கூடுகின்ற கோபியர்தங் கூறைகவர்ந் தேதுளபஞ் 
		சூடுகின்றார்க் குள்ள தொழிலிதென்பார் - ஆடல்மதன் 
		வாதை பொறாமல் வளைசோர்வார் வார்சோர்வார் 
		கோதைமலர் சோர்வார் குழாத்தொருத்தி - பேதையடர் 
	_____________________________________________________________
		(பி - ம்.) [24] நின்றேத்தி,         [25]. கார்குழலீர் 
	_____________________________________________________________
						பேதை 
		காலம்வரு மட்டுங்கரைகடவா வேலைபோல் 
		வேலைவிடம் போலும் விழியினாள் - மாலை 
		வனைகுழலார் தம்முடனே வண்டலயர் போதில்       115
		எனையடிமை கொண்ட நம்பிராயர் - புணைதேர்ப் 		
		பவனிதொழுந் தாயரைப்பின் பற்றிநடந் தோடி 
		யவர்கள்சொன்ன வண்ணமுரைத் தன்னே - இவர்மெய்யில் 
		மாலைதனை வாங்கும் வண்டல்மக வுக்கெனவே 
		சேலைநிகர் கட்கடைநீர் சிந்தினாள் - ஆலை 
		மதன்பைங் கழைகுழையான் வார்கணையும் பூட்டான் 
		விதஞ்செய்மறு வீதிபோம் வேளை - பெதும்பைரத்ன 
					பெதும்பை 
		வார்புனையு முத்து வடம்புனையச் சிந்தையருள் 
		[26]கூரவடிக் கொண்டரும்புங் கொங்கையாள் - ஆர்வமுடன் 
		வெற்றிசெய்யுங்[27] காமவிகாரங் கொழுந்துவிட்டுப்       	120
		 பற்றிப்ப டரும் பருவத்தாள் - பொற்றொடியார் 
		கூடுங் கலவிகுறித் தெழுதுஞ் சித்திரத்தை 
		மேடையிற்போய்ப் பார்த்துநிற்கும் வேளைதனில் - சூடும் 
		மருத்தேர் குழற்பாங்கி வந்துநம்பி ராயன் 
		திருத்தேர்ப் பவனியென்று செப்பக் - கருத்துருகி 
		மாதருடன் வந்து வணங்கிநம்பி ராயன்மேல் 
		காத லரும்பவிழுங்காட்சிபோல் [28]ஒதீர் 
		மருக்குலவு மார்பிலொரு மாதல்லால் தோள்மேல் 
		இருக்குமிவ ளாரொருத்தி யென்றாள் - விரைக்குழலார் 
		பூவில்வளர் மாது புவிமா திருவரிவற் 	     	125 
		காவசிய மென்ப [29]தறியாயோ - பாவாய் 
		எனவுரைத்த போதில் இணைவிழியால் நோக்கி 
		மனமுருகி னாள்பின் மறைந்தான் - பனிமதியைக் 
		காண விளகுசந்த்ர காந்தமொத்தாள் மாரன்வர்மம் 
		பூணவயல் வீதிப் புறம்போந்தான் -வாணுதலாள் 
	_____________________________________________________________
		(பி - ம்.) [26] கூர்வடிக், [27].காமா, [28]. ஆதீர், [29]. தறியாயே 
	_____________________________________________________________
					மங்கை 
		மங்கை யொருத்தி மதனாபி ஷேகமிரு 
		கொங்கைமயில் காமக் குலதெய்வம் - இங்கிதமாஞ் 
		சீரார் துணைவிநம்பி தேர்ப்பவனி பார்க்கவின்னே 
		வாராயெனவே மகிழ்ந்துபோய் - நேராய்ப் 
		பணிந்தே மயலாயப் பரிபவங்க ளெல்லாந் 	      130
		துணிந்தே யெதிராடிச் சொன்னாள்- மணந்தருளிச் 
		செய்யவிருந் தாவனத்திற் சென்றொருத்திக் காகநீர் 
		மையல்கொண்ட செய்தி மறந்தீரோ - பொய்யலவே 
		மோகம் பொறாமலொரு மொய்குழலுக் கும்மைப்போல் 
		ஆகங் கொடுத்தார்கள் ஆர்சொல்வீர் - சோகமாய்ப் 
		பேராசை [30]யானானும் பெண்ணன்றோ பூந்துளபத் 
		தாராசை தீரவே தாருமென்று - தேரிற் 
		றொடர்ந்தாள்வே ளம்பு சொரியவயல் வீதி 
		நடந்தார்பொற் றேருடனே நம்பி - மடந்தை 
					மடந்தை 
		வடுவும் பிணையும் வளர்சேலும் வேலும் 		      135
		கடுவுமமு துங்கலந்த கண்ணாள் - நடுவாம் 
		எழுபருவத் துள்ளு மிவள் பருவமென்று 
		தொழுதுமதன் போற்றுந் துரைப்பெண் – அழகான 
		பொன்னூச லாடும் பொழுது குழையிரண்டும் 
		மின்னூச லாட விறலிபோய் - உன்னழகு 
		நன்றென்று கொண்டாடி நம்பிதிருத் தேர்ப்பவனி 
		யின்றென்றாள் சென்றா ளிறைஞ்சினாள் - நின்றுருகிச் 
		செங்கனகத் தேர்விருப்பஞ் செய்தீர் மயலான 
		வெங்களல்குற் றேருமுமக் கேலாதோ - பைங்கமலக் 
		கைச்சங்கங் கொண்டீர் கருத்தில் விரும்புமெங்கள் 	      140
		மெய்ச்சங்கம் நீர்விரும்ப வேண்டாவோ - நச்சரவம் 
		ஏறுபுள்ளோ டின்புற் றிருந்ததுபோ லெங்கள்மேற 
		சீறுமதி நட்பாச்சோ தீண்டாதோ - கூறீர் 
		எனாமுன்மத னெய்தான் இருகாலி [31]லிட்டாள் 
		மனாவையல்கு லேந்தினாள் வாரைத் - தனமேற் 
	______________________________________________________________
		(பி-ம்) [30]. யாய்நானும்,       [31]. லிட்டான் 
	______________________________________________________________ 
		கரிய குழல்மறைப்பக் காதல்கொண்டாள் மற்றோர் 
		தெருவில் மதனொடுதேர் செல்ல - அரிவை 
					அரிவை 
		இலவுகுமிழ் முல்லை யிதழ்க்குவளை வள்ளை 			
		மலருமொரு தாமரையில் வாய்ப்பக் - கலவியிலே 
மேனகையுங் கொல்லிமலை மேனகைசெய் தாளும்வெட்கத்      	145	
	
		தானகைசெய்1 காமசுர தாளியாம் - மானனையாள் 
		பாங்கினாற் செம்பொற்[33] படாமும் வனைகோலும் 
		வாங்கினாள் நம்பி வடிவெழுத - ஓங்குபொற்றேர் 
		மன்னுங் குறுங்கை நம்பிவந்தார்வந் தாரென்று 
		சின்னத் தொனிகேட்பச் சென்றிறைஞ்சி - முன்னொருத்தி 
		[34]மெய்க்கரும்பி னாசையால் வில்லொடித்தீர் போர்மாரன் 
		கைக்கரும்பை வில்லைசெய்யக் காணேனான் - மைக்கடலின் 
		வீரடைத்து மேவுமணை மீது சென்றீர் என்னிருகண் 
		ணாறடைத்து மேவு மணைகாணீர் -மாறுபடும் 
		புள்வாய் கிழித்தநீர் பூங்குயிலோ டன்றிலெனும் 	      150
		புள்வாய் கிழிக்கவின்று போகாதோ - உள்ளம் 
		பரிபவமென்றாள்கடைக்கண் பாலித்து மற்றோர் 
		தெருவில் மதனொடுதேர் செல்லத் தெரிவை 
					தெரிவை 
		நிலவுமுடித் தோன்முடிக்க நீறுபட்ட காமன் 
		இலகுமுயிர் பெற்றுலக மெங்குஞ் - சிலையேந்திச் 
		சென்றுபோர் வென்று செயஸ்தம்பம் நாட்டியே 
		நின்றநாள் தேடுகின்ற நிட்சேபந் - துன்றுமலர் 
		வாவிப் புனலாடி மாதருடன் தேர்ப்பவனி 
		சேவித்தாள் நம்பி திருமுன்போய் - மேவீர் 
		வளையாழி கைக்கிருக்க மையலா மெங்கள்      	155 
		வளையாழி கொள்ள வழக்கோ - இளையார்கள் 
		காணவளைத் தாளிவளைக் கைக்கொளவே நல்கீரேல் 
		பூணமலர்த் தாரளித்தாற் போதுமே வாணுதலார் 
		ஆந்தரங்க மாமிருவர்க் காட்சிபுய மார்பல்லாற் 
	________________________________________________________
		(பி - ம்) [32] காம சுரனிகயாம், [33]. பரமும் வளை கோலும், 
		[34] மெய்க் கரும்பு மாசையால், 
	_________________________________________________________
		பூந்துளப மார்க்கும் பொதுவன்றோ - பூந்துளபத் 
		[35]தாரே தரீரேற் றகுந்தகா தென்பதொன்றும் 
		பாரேன்கை [36]தொட்டும் பறிப்பேனான்- தேருமென்றாள் 
		புன்முறுவல் செய்துநம்பி [37]போனா ரயல்வீதி 
		மன்மதனும் நின்று வளைக்கின்றான் - கன்னற் 
		றனுவிற் சரந்தொடுத்தான்[38] தையலின்மெய் யென்னத் 
		தனுவிற் [39]சரக்கூட தானாள் - வனிதையப்பாற் 
	_______________________________________________________________
(பி - ம்.)[35]. தாரேதீ ரீரேற்,          [36].தொட்டுப், [37]. போனார் பல வீதி, 
[38]. தையலும் மெய்,  [39]. சரக்கூடத், 
____________________________
					பேரிளம்பெண்
		காரார் கருங்கூந்தற் செங்கனிவாய் வெண்முறுவற் 
		பேரான சிற்றிடைசேர் பேரிளம்பெண் - மாரனுக்கு 
		வீறுதரு விற்றொழிலுமிக்ககலைக் கியானமுமே 
		[40]கூறவருந்தீட்சா குருபீடம் - தேறிமறை 
		தேடுகின்ற நம்பி திருப்பதிநூற் றெட்டிலொன்று 
		பாடகமென் றேயணியாப் பாதத்தாள் -நாடறிய 
		எங்கள்நம்பிக் கொப்பாக யான்வனையே னென்றிகழ்ந்து 
		சங்கவளை பூட்டாத் தடக்கையாள் - அங்கொருத்தி 
		மாலுக்கு மாலானாள் மாற்றவள்பே ரென்றுசொல்லிக்       165
		கோலத் திருவணியாக் கூந்தலாள் - மேலுலகத் 
		தோரைவென்று தானே உபயசொர்க்க மாய்ச்சினந்து 
		பாரைவெல்லப் பார்க்கும் பயோதரத்தாள் - நேரான 
		சீதம்வளர் வச்ரச்சிலா தலத்தி லேபகவற் 
		கீதைபிர சங்கிக்கக் கேட்டிருக்கும் - போது 
		விரும்பவனி போற்றுநம்பி மேவுதிருத் தேரில் 
		வரும்பவனி சேவிக்க வந்தாள் - கரும்புயல்போல் 
		நீண்டபொன் மேனிநம்பி நின்ற வடிவழகைக் 
		காண்டலுமே மட்டுமிஞ்சுங் காதலாய் - வேண்டுகின்றாள் 
		சந்ததமும் [41]நீர்விரும்புஞ் சந்திரபா கைக்குதவும் 	      170 
		ஐந்தருவந் தாலு மதுகொள்ளேன் - சிந்தா 
		மணிமகத்வ மாருமது மார்புக் கணியாய் 
		அணிகவுத்வ மீதுமில்லை யாசை - பணிவோர்க்குச் 
		[42]சாந்தணியு மார்பிற் சவாது மணம்வீசும் 
		பூந்துளப மாலைதந்தாற் போதுமே - ஈந்தருள்வீர் 
		என்றா ளிதுசமய மென்றுமதன் வில்வளைத்தான் 
____________________________
[40]. கூறுவரு,  [41]. நீயிருப்பச்,        [42]. சாந்தனிவர் மீது 
	__________________________________________________________________
		வென்றா னினியெனவே மெய்தளர்ந்தாள் - தென்றல்வரச்
		 சாலகங்கள் தாழ்திறந்தார் தாரையுட்ண சாந்திகள்மென் 
		மேலுமமைத் தார்தளிரால் மெத்தையிட்டார் - ஆலவட்டம் 
		வீசினார் மல்லிகைவி தானித்தார் சாந்துபன்னீர்      	175
		பூசினார் நேர்ந்தாரப் போதொருத்தி - நேசமுள்ள 
		மூதறிவாம் பாங்கிவந்து மொய்குழலா ரைவிலக்கிக் 
		காத லொருவர் கருத்தறியீர் - வேதனையே 
		செய்தீர் இவட்கிதங்கள் செய்வதுபோ லேயிடர்கள் 
		செய்தீர் இனியென்ன செய்குவீர் - வெய்துயிர்க்க 
		வார்த்தபன்னீர் நம்பி மகிழுந் திருப்படிக்கத் 
		தீர்த்தநிகராகுமோ செப்புவீர் - போர்த்த 
		குளிறு முலைமேற் குறுங்கேச நம்பி 
		துளபநிகராகுமோ சொல்லீர் - குளிர்மை யென்றீர் 
		ஏந்து களபநம்பி யிட்டபட்ட வர்த்தனம்போல் 	     	180
		போந்தமயல் போக்கவிது புத்தியோ - சாந்தாற்றி 
		வட்ட விசிறிநம்பி வாழ்கோ புரவாச 
		லிட்டமுள்ள தென்றலொப்போ வீதெல்லாம் - விட்டுவிடீர் 
		என்றுபோய் நம்பிக் கிதமுரைத்து வாங்கிவந்து 
		மன்றல்மலர் சூட்ட மனமகிழ்ந்தாள் - நின்றுகிளி 
		பேசுகின்ற தென்னவரும் பேதைமுதற் பேரிளம்பெண் 
		ணாசைகொண்டு போற்ற வருள்செய்தே - தேசமகிழ் 
		நம்பிகுறுங் காபுரியில் நாத வினோதநம்பி 
		யும்பர்தொழப் போந்தான் உலா. 	     		184
		அழகியநம்பியுலா முற்றும். 
				~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 
 10.  முப்பந்தொட்டியுலா 
					காப்பு 
		சொல்லு முப்பந் தொட்டிவரு சோமநா தீசுரன்மே 
		னல்ல வுலாவை நவிலுதற்கு - வெல்லுந் 
		திருத்தன் மருகன் செயங்ககொள்செல் வப்பிள்ளை 
		யொருத்தன் முகனமக்கே யுண்டு. 
					நூல் 
				   தலவரலாறு 
	சீர்பூத்த தண்பிறையுந் தீம்புனன்மந் தாகினியுந் 	     	1
		தார்பூத்த செஞ்சடையிற்றாங்கினோ-னேர்பூத்துத் 
		தோன்றுமதி வெம்பருதி சொற்றிகழுஞ் செய்யவன்னி 
		மூன்றுகோ வான முகத்தினான் – கான்றிகழுங் 
		கந்தரஞ்சொல் வட்டக் கமடமருப் பென்பிதழி 
		வந்திலங்கு கின்ற வரைமார்பன் - சந்ததமு 
		நீறணிந்த மெய்ய னெரித்தநர சிங்கவுரி 
		கூறு மிதமான கோவணத்த - னாறுமலர்ப் 
		பாதனுல கெல்லாம் பரவ வரிதான 	     	5
		நாதனெவரிடத்து நண்ணுவோ - னாதிநாள் 
		வந்தசிந்து தேசத்தின் மாமண்ட லாதிபனுஞ் 
		சுந்தரஞ்சேர் மங்கைமின்னுஞ் சொற்சுதனுந் - தந்திரங்கள் 
		மன்னுமதி யூகியுமாய் வாழ்ந்திருக்கு நாளதனிற் 
		பன்னுஞ் சிவதலங்கள் பார்க்கவென - வுன்னுகையி 
		லாகாச வாணிசொல்வா ளானதொண்டை நாடதனில் 
		வாகா மலையாறு மாமுனிவர்- யோகநிலை 
		செய்யுஞ் சிவதலமுஞ் சித்தங் களிக்கவுண் 
		டையமறப் போமென்ன வாங்கவனு-மெய்யினுளம் 
		வெய்யில்மெழு காயுருகி மேவுமனை செய்தளங்கள்      	10
		செய்யு மகிழ்ச்சியுடன் செல்லுமப்போ மையகன்ற 
		கொய்யுளைப்பாய் மாவிரண்டு கொண்டதிவே கங்கொளவே 
		வெய்யதளஞ் சேய்மனைவி விட்டேக - வையமில்லாத் 
		தென்பூமி நந்திமலை தீனரட்சி பாலாறு 
		மன்னு மிருபாலு மாமுனிவ - ருன்னுலிங்கப் 
		பூசைசெயு மிடங்கள் பொற்றோண்டை நன்னாடு 
		காசி தனிலதிக காஞ்சிபுர - மீசுரியார் 
		மெய்த்தவமாய்ச் செய்யுமிட மேல்பாலாம் பூங்கோடு 
		வைத்ததெண்ட காரணிய மாதீர்த்தஞ் - சித்தமது 
		ஒன்றாஞ் சிவானந்தர் யோகஞ் செயுமிடமும்      	15
		வென்றிபெற வந்துகண்ட வேளையினிற் - குன்றின்முனி 
		பாதம் பணியுமப்போ பார்த்திபனே யிங்ஙன்வந்த 
		தேதுமனத் துள்ள தியம்புமென - வாதரவா 
		யிந்த வனமு மினிதிருந்த மாதவத்தோர் 
		பந்தமறச் சொன்ன பதவியல்புஞ் - சிந்தைமுற்ற 
		முக்கணன்றாள் பூசை முறையு முரையுமென 
		வக்கண் சிவானந்த வம்முனிவன் - மிக்கவே 
		யேதமறக் கேட்பா யிதுதெண்ட காரணிய 
		மாதவிமிராமர்செய வந்தவிட - மோது 
		முனிவ ரிரவிமதி முதறிவாந் தேவ 	     	20
		ரினியசிவ பூசைசெய வெண்ணிக் - கனிவுடனே 
		வந்தவிடம் வேதமா வாக்யதத்து வ(ம்)மசியா 
		மிந்தப் பொருள்வ சிட்டரிராமருக் - கந்தமுற 
		முப்பதமு மேபிரித்து முன்னா முபதேசஞ் 
		செப்பியது மிந்தவிடஞ் சிந்தைவைப்பா - யிப்படியெந் 
		நாவா லுனக்கருள்வோ நாமுரைத்த சொற்படியே 
		யேவற் பணிவிடைசெய் யென்னவே - யாவலுடன் 
		செப்பு மேனக்கா மதேனுவைவிட் டேயிதனைத் 
		தப்பறவே மேய்த்திங்ஙன் சாருமென - வொப்பியே 
 
		செல்லுமப்போ தேகாம தேனுவின்பின் னேபோந்து       25
		வல்லநதி நீர்குடித்த வண்மைகண்டு - நில்லாமற் 
		போகையிலே வெம்புலியும் போய்ப்பிடிக்கக் கூப்பிட்ட 
		வோகையிலாச் சத்தத்தா லுற்றவில்லுந் – தாகமற 
		மந்திரவாளுங்கணையும் வன்மமறக் கொண்டுசெல்ல 
		வந்தப் புலியுரைத்த தாச்சரிய - நிந்தைமன்னா 
		காட்டிலிரை யில்லாமற் கண்கலங்கி வெம்பசியாற் 
		கூட்டுமிரை கொள்ளாமற் கொல்லவந்தாய் - நாட்டு 
		மனுநீதி தேர்ந்தமன்னா வார்த்தைசொல்லக் கேணி 
		நணியபசி தீரவருள் நாட்டா - யெனவுரைக்க 
		மாதவத்தோ னாவை வருத்தாமற் றன்னையிப்போ 	      30
		கோதிக்கோ ளென்னவவன் கூறியிடு- நீதியினா 
		லிந்தநெறி கொண்டமன்னா வென்ற னுடல்குளிர்ந்தேன் 
		சந்ததமு மீசனே தான்காப்பன் - சுந்தரமாய் 
		மன்னாநீ யும்பசுவு மாமுனிவன் றன்னிடத்திற் 
		கொன்னேநில் லாமற் குறுகுவா - யென்னவே 
		போகாம லாங்கவனும் போர்வாளா லோவிடுத்தாய் 
		வாகாய்ப்படை விடுத்தேன் வன்புலியே- பாகாக 
		நின்பசியைத் தீர்த்திடென நேயமுட னப்புலியு 
		மன்பா யமர்ந்துபின்னு மாங்கதுதான் - பொன்பொதிந்த 
		தாரார் கடுக்கைச் சடைச்சோம நாதரெனச்      	35 
		சோரா விழியின் முனந் தோன்றவே - பேரா 
		யிரமுடைய வள்ளலே யீசமகா தேவ 
		வரகர [1]வென் றேசொல் லமையம் - விரைவுடனே 
		கோமுனிவன் முன்னேகக் கூறுதிரங் கண்டேங்கி 
		மாமுனிவன் சீறுமுன்ன மாதேவன் - சோமனையே 
		செங்கடையில் வைத்த தெரிசனங்கண் டேயுருகி 
		நெஞ்ச மகிழ்ந்துமன்னா நீ கேளாய் - விஞ்சுமுன்னாள் 
		சோமனார் பூசைகொண்ட சோமநா தக்கடவு 
		டாமிருந்த வெல்லையென்று சார்ந்ததிருக் - காமியார் 
	___________________________________________________________
		பிரதி-[1] வென்றுசொலவ்வமையம் 
___________________________________________________________
		மேவு தவஞ்செய்யும் வேளையின்றி னீயும்வந்து 	      40
		பூவிலைகொண்டேயவரைப் பூசித்தே - யாவலுடன் 
		மன்னுகின்ற வேளையண்ணல் மாப்புலிபோ லேயுனது 
		முன்னம்வரக் கண்டேங்கி முண்டெழுந்து -பன்னு 
		மழைப்புயல் கொண்டோங்கு மாமேனி யாங்கே 
		யழைக்கத் தவமிகுந்த வைய - னுழைக்கரனைச் 
		சிந்தைதனில் வைத்திருந்தார் சீறும் புலியையண்ணல் 
		வந்ததெனக் கட்டியொன்றா மாறதனைப் - பந்தமறக் 
		கண்டேங்கி வந்து கதறும் பசுப்போல 
		வண்டர்பிரா னைத்துதித்த (வப்)போது - விண்ட 
		தவக்குறையா லவ்வுட றான்விட்டோர் வேந்தன் 	      45 
		பவப்பிணி தீர்க்கும் மகவாய்ப்பாரி -னுவப்புடனே 
		வந்தாய் தவக்குறையை மாற்றவிப்போ விவ்விடத்தைச் 
		சிந்தைமகிழ்ந்த தேகண்டாய் தேறுமன்னா -வந்தவிட 
		மாமுப்ப தப்புரமா மன்னுமுப்பந் தொட்டியாஞ் 
		சோமநா தப்புரமாஞ் சொல்லிலின்ன நாமமுமெய்ஞ் 
		ஞானயோ கர்சித்தி நன்னகர மென்றுமுன்னோர் 
		மானமுடன் சொல்லவந்த மாநகர - மானவதி 
		லெந்நாளு மன்பா யிருந்துசிவ புண்ணியத்தைப் 
		பன்னாளுஞ் செய்திடென்று பாலித்தா -ரந்நாளில் 
		முன்னம் பிரிந்த முயங்குமங்கை மின்னாளு 	     	50
		மன்னுமண்ட லாபுருட மாமகவு - முன்னரிய 
		மந்திரியாம் யூகி வரனுடனே நால்வகையாந் 
		தந்திரியோ டேயத் தளங்களெலாம் - வந்திடவே 
		மைந்தனுக்குப் பட்ட மகிழுடனே தான்றரித்துச் 
		சிந்துதே சத்திற் செலவிடுத்து - நந்தலிலா 
		தீட்டுபொருள் வந்ததனா னேழுநிலைக் கோபுரமும் 
		வாட்டமிலா வாயிரக்கான் மண்டபமு-நீட்டுங் 
		கொடிமதிளுஞ் சுற்றிருக்குங் கோவிலுமுண் டாக்கி 
		நெடியதெரு வீதி நெருங்கக் - குடிகடமில் 
		வேதியர்தம் வீதிகளும் வேந்தர்செறி வீதிகளு 	     	55
		நீதி நெறிவசியர் நீள்தெருவு(ம்) - போதரிய 
		வேளாளர் வீதிகளு மேவும் பலகுடியு 
		நாளுமிக வோங்கவே நாட்டிவைத்துக் - கோளறவே 
		மேடத் திருநாள் விளங்கச்செய் தானந்தார் 
		சூடுஞ் சிவானந்தர் சொற்படியே - நாடுமர 
		னங்க ணிருந்தே வனேகவுப சாரமுடன் 
		மங்களமாய்ப் பூசைகொண்ட மாதேவன் - கொங்குவிம்முஞ் 
				மூர்த்தியின் பெருமை 
		செங்கமல மானபதன் றில்லைமு வாயிரவர் 
		தங்களிலொன் றாய்வந்த சாம்பசிவ -னிங்கண் 
		திருநீல கண்டரில்லாள் சேர விளமை 	     	60
		தருநீல கண்டன் றரைமேன் – மருவுங்
		கயற்கணியை யீங்குக் கருணைசுரந் தன்பா 
		யியற்பகையாற் கேபொழியு மின்கார் - நயத்துடனே 
		யுன்னரிய மாமழையி னுற்று முளைவாரி 
		யன்னமிட வேயங் கருள்கொடுத்தோன் - பன்னவரு 
		மெய்ப்பொருணாட் டன்றனதுமெய்யான வன்புகண்டு 
		கைப்பொருள்போன் முத்திநெறி காட்டினோன் - றப்புநெறி 
		கண்டா லடியவரைக் கண்டித்து மீறும்விறன் 
		முண்டருக்கன் பேகொடுக்கு மூர்த்தியார் - பண்டைநாள் 
		கோதில்பொருள் சேய்மனைவி கோவணநேர் தூக்குமமர் 	      65 
		நீதியார்க் கன்புசெய்யு நீதியா - னோதவரு 
		மெத்திசையோர் போற்று மினிய வெறிபத்தர் 
		பத்திகண்டு முத்திநிலம் பாலித்தோன் - சித்திரமாய்த் 
		தோற்றான்பின் னீறணிந்து தோன்றவே னாதியார் 
		மாற்றானை யீசனென வந்துநின்றோன் - சீற்றமறக் 
		கற்றோர் புகலவொரு கண்சாத்துங் கண்ணப்பன் 
		மற்றோர்கண் ணும்பிடுங்கா வாறுசெய்தோ- னுற்ற 
		கலைச்சிக்கி யுள்வளையக் கண்ட கலையன் 
		கொலைக்கஞ்சி யேநிமிர்ந்த கோமான் - சிலைப்புருவ 
		வஞ்சியள கந்தவற்கு மானக்கஞ் சாறனார்      	70
		பஞ்ச வடிக்கீயநலம் பாலித்தோ - னெஞ்சிட் 
		படுபொருணற் றாயனார் பாற்கமரிற் சிந்த 
		வடுவொலியுங்காட்டவங்கண் வந்தோன் - படிதனிலே 
		யாயனா ரஞ்சக் கரத்தை யுதமகிழ்ந்தே 
		வேயினிசைக்க வெளிப்பட்டோன் - றூயருக்கு 
		நந்தலிலா மாமூர்த்தி நாயனார் தன்முழங்கைச் 
		சந்தனக்காப் புக்கிழைக்கத் தான்வந்தோன் - கந்தமுள 
		பூமலரஞ் சக்கரமுப் போதுமுறைத் தேயெடுத்த 
		மாமுருகன் மாலையினால் வாழ்வளித்தோ - னாமுத்திப் 
		பாரி லுருத்ர பசுபதியார் சீருத்தும் 					75
		நீரிற் செபிக்கவந்த நீண்முடியோன் - றேருந் 
		திருநாளைப் போவான் செழுங்கனலுண் மூழ்கி 
		வருநாட் கதியளித்த வள்ள - லொருநாடான் 
		சொல்லுந் திருக்குறிப்புத் தொண்டர் பணிக்குறையாற் 
		கல்விற் றலைமோதக் கைபிடித்தோன் - வல்லபிதா 
		பாதந் தடிந்த பலன்மாலை தீர்த்தப்ர 
		சாதந்தண் டேசுரற்குத் தந்தபிரான் - றீதகல 
 		வுப்பருக்கு மாமணிக ளுண்டாந் திரைக்கடலி 
		லப்பருக்குக் கன்மிதக்க வன்பு செய்தோ னொப்பிலா 
		மெய்கண்ட சைவநெறி மேவுங் குலச்சிறைக்குக்      	80
		கைகண்ட முத்திநெறி காட்டினோன் - செய்பிராண 
		வாயுவையே தானிறுத்தி வந்தமிழ லைக்குறும்பர் 
		நேயங்கண் டின்ப நெறியளித்தோன் - றூய 
		கனிதருமன் பாலேபொற் கற்பு மிகுந்த 
		புனிதவதிக் கன்புசெயும் புத்தே - ளினிதுடனே 
		செப்பியவப் பூதியார் சேயைவிடந் தீண்டியுநல் 
		லப்பருக்கன் னங்கொடுக்க வங்கண்வந்தோன் - செப்புதிரு 
		நீலநக்கர் தேவியுமி நீர்தடவி யச்சிலந்தி 
		யாலுமன்பு செய்ய வருள்கொடுத்தோன்-சீலமிலாத் 
		தப்புச் சமணர்சொல்லாற் சாயா நமிநந்தி 	      	85
		யப்புவினாற் றீபமிட வாங்குவந்தோன் - செப்பியபெண் 
		ணாகவென்பைத் தென்மயிலை யம்பதியிற் சம்பந்தர் 
		பாகனைய பாடலுக்காப் பாலிப்போன் - யோகர்நிலை 
		கண்டசுந்த ரற்குக் கலிக்காமர் நெல்கொடெனக் 
		குண்டையூர் நின்று கொடுத்தபிரான் - பண்டைநா 
		ளாவையிரட்சிக்க வயற்காயஞ் சேர்ந்தோர்சொன் 
		மேவுதிரு மந்திரத்தின் மேனின்றோ-னாவலர்சொற் 
		றண்டி யடிகட்டாகம் வெட்ட வேசமணர் 
		கண்டடியக் கண்கொடுத்த காட்சியான் - பண்டொரு நாள் 
		சூதாடி மூர்க்கனார் தோற்றாரைக் குத்தியவப்       	90
		போதாடி வந்த புனிதனார் - வேதாவோ 
		டண்டர்புகழ் சோமாசியாரடியார் தெய்வமென்று 
		கண்டபொழு தேவந்த கண்ணுதலான் - பண்டைநூல் 
		சொல்லியநீர் பூவன்னஞ்சோராமற் சாக்கிய(ர்)முக் 
		கல்லெறிய முத்திநிலை காட்டினோன் - வல்லமையே 
		வாடாச் சிறப்புலியார் வந்தேற்ப வர்க்கிட்டுக் 
		கோடா மகமுடிக்கக் கொண்டபிரான் - பாடுஞ் 
		சிறுத்தொண்டன் சேயான சீராளன் றன்னை 
		யறுத்திடவே யன்புசெயு மண்ணல் - குறைப்படா 
		வாதியுலாப் பொன்வண்ணத் தந்தாதி செய்தமன்னன்      	95
		காதற்படியே கருணைசெய்தோ - னோதியசீர் 
		காழிக் கணநாதன் கண்ணுதலோன் கோவிலினி 
		தூழியஞ்செய் வார்க்குகந்த வுண்மைகண்டோன் - வாழமுடி 
		நாட்டோமென நூலோர் நற்கூத் துவந்துதாள் 
		சூட்டியர சாளவைத்த சோதியான் - பாட்டுரைத்துப் 	
		
		பொய்யடிமை யில்லாப் புலவரறி வினுக்காய் 
		மெய்யடிய ரென்றுயர்ந்த வீடளித்தோன் - வையமதி 
		னான சடைமுடிக்கா யக்கினியின் மூழ்கவுமே 
		மானபுகழ்ச் சோழன்முன்னம் வந்துநின்றோன் - ஞானமிக 
		முற்றுநர சிங்க முனையர்திரு வாதிரைநாட்      	100
		பெற்றதவத் தாலருளைப் பெய்கின்றோ-னத்தின் 
		மறிகடன்முன் மீனீசன் வார்கழற்கென் றேயங் 
		கெறியுமதி பத்தருக்கன் பீந்தோன் - சிறியவிடைப் 
		பொட்டுநுத லார்கரங்கள் போகக் கலிக்கம்பர் 
		வெட்டும்போ தாண்டு வெளிப்பட்டோ-னிட்ட 
		விளக்கினி(ன்)ற தீமாய மெய்க்கலிய னார்தங் 
		களத்தை யரியவந்த கர்த்தன் - வெளுத்துவர 
		நேசவடி யார்களையே நிந்தித்தார் நாக்கரிந்து 
		மாசகலுஞ் சத்தியர்முன் வந்தவள்ளர் – பேசியசீ 
		ரையடிகள் காடவர்கோ னாய்ந்துவெண்பா நாடோறுஞ்        105
		செய்யுமுரை கேட்டுமகிழ் சீராளன் - மெய்யே 
		தரிக்குங் கணம்புலனார் தன்றலையைப் புல்லோ 
		டெரிக்க வெளிப்பட்ட வீசன் - பெருக்கமுடன் 
		காரினா யன்சொற் கவிபாடுந் தொண்டுடனே 
		சேரும் பணிவிடையுஞ் செய்யவந்தோன் - றீரநெடு 
		மாறனார் நீறும் வளர்சிவ பத்தி(யுமெய்) 
		யேறவுஞ்செய் போதுவந்த வேழைபங்க - னீறணிந்து 
		ஞானமுடன் வாயிலார் நாயனார் நேயமா 
		மானதபூ சைக்குநிதம் வந்தவள்ள - றானுணர்ந்து 
		சீரியர்க்குத் தானிதமுந் தேடும் பொருள்கொடுத்த       110 
		பாரின் முனையடுவார் பால்வந்தோ-னோர்பூவான் 
		மூக்கிழந்தாள் கையும்விழ மோதுங் கழற்சிங்கற் 
		கூக்கமுற வீடு முதவினோன் - கோக்கணின்முன் 
		மூட்டையடி யார்க்கன்ன முட்டாமற் கொண்டதென்று 
		காட்டு மிடங்கழியார் காணவைத்தோ - னீட்டுபுகழ் 
		தேக்க செருத்துணையார் தேவிசெய்த குற்றத்தான் 
		மூக்கரிந்த போதுவந்த மூர்த்தியார் - நோக்கொன்றாம் 
		பூசையிரு நாளுஞ் செய்த புகழ்த்துணையார் 
		மாசகலச் சொப்பனத்தில் வந்தவள்ள - றேசுபெறுங் 
		கோட்புலியீசர்க்குக் கொடுத்தநெற்கொண் டோருயிரை        115 
		வாட்கிரையாக் குங்கணத்தில் வந்தவள்ளல் - தாட்பரனைச் 
		சாக்கிரத்துஞ் சொப்பனத்துந் தாநினைந்து நீங்காம 
		னோக்குபத்த ராய்ப்பணிவார் நோக்கவந்தோன் - சீர்க்கமலப் 
		பாதம் பணிந்து பரமனையே பாடுவா 
		ரோதுமிசை கண்டவர்முன் னோடிவந்தோன் - தீதகன்ற 
		சித்தத்தை யேசிவன்பால் வைத்தோர் தெளிவுகண்டு 
		நித்தியமா முத்திநிலைகொடுத்தோன் - வைத்ததிரு 
		வாரூரி லேபிறந்தா ராடு நிலையறிந்து 
		தாரூர் சடையுடனே தான்வந்தோன் - பார்மீது 
		சீரேய்ந்த முப்பொழுதுந் தீண்டுவார் பூசைக்கா 	      120
		யேரேய்ந்த பாத மினிதளித்தோன்- பேராய் 
		முழுநீறு பூசு முனிவர்விதிக் கற்பம் 
		வழுவா நீறிட்டிடவும் வந்தோ - னழுவாம 
		லன்பினப் பாலுமடிசார்ந்த (வ)டியார்க்குத் 
		தென்புதர வந்த செழுஞ்சோதி - பொன்பெறவே 
		பூசல்நா யன்னுளத்திற் பூங்கோயிற் கட்டிலிங்க 
		நேசப்ர திட்டைசெய நீங்காதோன்-றேசுபெற 
		வந்தமங்கை யர்க்கரசி மாமனத்தின் பத்தியினாற் 
		சிந்தைமகிழ் முத்திநிலை செய்கின்றோ - னிந்தணிந்தோ 
		னேசனென வேவந்த நேசநா யன்றனக்கு 	      	125
		[2]வாசமலர்ப் பாத மகிழ்ந்தளித்தோ - னீசனையே 
		காணுந் திருநீல கண்டபெரும் பாணருக்கே 
		வேணிமதி காட்டவந்த மெய்ப்பரமன் - பூணு 
		நசையில்சடை யார்க்கருளே நாட்டினோ னென்று 
		மிசைஞானி யார்க்கருளே யீந்தோன் - பசைதீர் 
		மனுநீதி சோழனுடை வண்மைகண்டே யென்றும் 
		பனுநீதி செய்யும் பரமன் - கனிவுதர 
		வெண்ணிலாப் பேர்களிதய மகிழ்ச்சிபெறக் 
		கண்ணருளே நல்கியின்பக் காட்சி தந்தோ - னண்ணரிய 
	_______________________________________________________________
		[2]. இதன்பின் கோச்செங்கட் சோழரைச் சிறப்பித்தற்குரிய 
		கண்ணியொன்று இருத்தல் வேண்டும். 
	________________________________________________________________
		போக்கும் வரவுமிலான் பொய்யருக்குப் பொய்யானோன்       130
		வாக்குமனத் துக்குமெட்டா மாதேவ-னோக்கரிய 
		மெய்யருக்கு மெய்யன் விதிமா லறியாத 
		வைய னனலகிரியாயினோன் - செய்யும் 
		விருப்பாம் பலிக்காலன் வேண்டுமத லைக்குத் 
		திருப்பாற் கடலளித்த செல்வன் - மருப்பிலகு 
		மாலைவாய்ச் சூகரம்போ யன்றழுத குட்டிக்குப் 
		பாலைவாய்ப் பெய்த பரமேசன் - ஞாலமதிற் 
		காண வரும்புலவன் கண்டோட வேவிறகைப் 
		பாணனுக் காகச்சுமந்த பையரவ - னீணிலத்தி 
		னக்கீரன் றோல்விபெற நாற்கவிவல் லோனெனவே        135 
		சொற்கீர மானமொழி சொன்னமுதல் - பொற்பா 
		நரியைப் பரியாக்கி நற்பாண்டி யன்முன் 
		தெரிய மறைப்பரிமேற் சென்றோன் - பெருகுவையை 
		யாற்றை யடைக்க வரியகொட்டுங் கூடையுமாய்ப் 
		போற்றுமவ்வைக் காளான பொற்சடிலன் - றேற்றமிலாத் 
		தக்கன்றலையைத் தடிந்துநறு நெய்சமித்தோ 
		டொக்கவிட்டு வேள்வி யொடுக்கினோ - னிக்குமதன் 
		றேவி யிரதி திகைத்தழுத நீர்மாற 
		வாவியுடல் காண வவட்களித்தோன் - பாவலர்சொல் 
		தத்துவந்தொண்ணூற்றாறுந் தாமுணர்ந்து தன்னையறி        140
		யுத்தமர்க டானான வுண்மையான் - சுற்றுபசுக் 
		கத்துகன்றைத் தானகலாக் காட்சிபோற் கற்றவர்பாற் 
		சற்றும் பிசகாத தண்ணளியான் - முற்றுநெஞ்சு 
		மெஞ்சி யரிபிரம ரேனையரும் வந்தளவி 
		லஞ்சலென்று நஞ்சையுண்ட வாதிபரன் - விஞ்சுபுகழ்ச் 
		சீலனைமார்க் கண்டனையே சீறு மதிகோபக் 
		காலனைக்கா லாலுதைத்த கங்காளன் - காலகஞ்ச 
		மாயிரத்தி லொன்றுகுறை யாய்கண் மலர் தரித்த 
		மாயனுக்கோ ராழி வழங்கினோன் - றீயகுண 
		முப்புரத்தின் மூவருய்ய முற்றுவித்து மற்றனைவோர்       145 
		மைப்புரத்தை யேயேரித்த வாணகையான் - கொப்பிருக்குங் 
		காதவர்கற் பிற்றாரு காவனத்தின் மாமுனிவ 
		ரோதாத் தவமழித்த வொப்பிலான் - பாதியுடல் 
		கோதிலுமைக்குக் கொடுத்துப்பொன் னம்பலத்தில் 
		வாதினுக்கா யாடி மகிழ்கின்றோ - னோதவரு 
		தில்லையினின் மேவுஞ் சிவப்பிரகா ச(ன்)னிசைத்துச் 
		சொல்லுந் தமிழ்மாலை சூடினோன் - மல்லறரு 
		கானமுற்றும் மேவுமலர்க் காரளிகை மாநெருங்கி 
		வானமுட்டு நந்தி வரையினான் - பானுமுட்டும் 
		பாரவகிற் குங்குமமும் பல்லாம்பல் வெண்மருப்பி 	        150 
		னாரமுநீர் மேவியபா லாற்றினான் - சீர்தெளிய 
		வல்லோர் மிகுசான்றோர் மாதருமஞ் செய்யவரு 
		நல்லோருஞ் சேர்தொண்டை நாட்டினான் - சொல்லோர்ந்து 
		தேடுகின்ற பேர்கற்றோர் சின்மயத்தி னொன்றாக 
		நாடுமுப்பந் தொட்டிந கரினான் - பாடுமளி 
		தேனைக் குடித்துத் தினந்தோறுங் காம்போதி 
		தானிசைக்குங் கொன்றைமலர்த் தாரினான் - பானிகராய் 
		மின்னுகின்ற கொய்யுளையும் வெண்பல்லு மாகநல்லோர் 
		பன்னவரு வேதப் பரியினா-னுன்னுமலஞ் 
		சாடித் தவமோங்கத் தம்மையுணர்ந் தோர்பவமாங்        155
		காடழிக்கு ஞானக் களிற்றினான் - தேடமரர் 
		தேற வசுரர்பயந் தீருமா லென்றென்றுங் 
		கூறுமிடபக் கொடியினா - னீறணிந்தோர் 
		சிற்றறிவு போகச் சிவம்பொருளென் றோரறிவு 
		முற்ற வதிரு முரசினான் - கற்றறிந்தார் 
		சொன்ன மொழிதவறாத் தூயர்வாழ் வாரென்றே 
		சின்ன முழங்கவுயர் செங்கோலான் - பொன்மணிகள் 
					உலாச் சிறப்பு 
		மொய்த்ததிருக் கோபுரமு முன்னிசைந்த பந்தர்களுஞ் 
		சித்ரமணி மண்டபமுஞ் சேர்மதிளு-நித்தியமா 
		மாலயமும் வந்தோர்க ளாடுதீர்த் தக்குளமுங்        160.
		கூலமணி வீதிகளிற் கோதிலா வேலைமிகு 
		வேதியர்கண் மன்னவர்கண் மேலாங் குலவசியர் 
		சாதியுயர் வேளாளர் தாமுதலா-யோதவரு 
		பல்குடியு நாளும் பலதா னியதனமு 
		மல்கி மிகவும் வளரவே - நல்கவரு 
		சுந்தரியோர் பாகர் சுருதி மிகவுரைத்து 
		நந்தலிலா வாழ்சோம நாதனார் - விந்தைபெறப் 
		பன்னுங் கடல்போலப் பல்லியங்க டாமுழங்க 
		வுன்னரிய வீதியெங்கு மோங்கவே -முன்னி 
		யுலாவுதிரு நாளிலொருநா ளெழிலா 	       165 
		நிலாவிய சீராகமத் தினேரே - குலாவுகின்ற 
		தேவர்பிரா னைப்பூசை செய்யமணி மண்டபத்தி 
		னாவலுடனேவருசிங் காதனத்தி-னாவதனா 
		லேத்தியதன் கணெழுந் தருளப் பண்ணியன்பாய்த் 
		தேற்றிய பூசையது செய்தபின்பு - போற்றிய 
		பட்டாடை சாத்திப் பதித்தமணிப் பொன்மகுட 
		மிட்டுச் சிரசிலிசைந் திருக்கக் - கட்டுமணிப் 
		பட்டமிட்ட நெற்றியினிற் பாங்கான கத்தூரிப் 
		பொட்டுமிட்டுக் காந்தி பொலிவுதர - விட்டபச்சைத் 
		தோடு குழையிற்றுலங்கமணிக் கண்டத்தி       170 
		லாடு மணிச்சரங்க ளாங்கசைய - நாடுரத்நத் 
		தோள்வளைய னின்று துலங்க மணிக்கரத்தில் 
		வாள்வளையுங் கங்கணங்கள் வந்திலங்க - நீள்வரியன் 
		வேங்கையின்றோன் மேலே விளங்கும் வயிரமணி 
		நீங்கரிய பட்டையிடை நின்றசையத் - தாங்குமணிக் 
		காலிற் சிலம்பு கனகவெயி லெறிக்கச் 
		சாலை மகிழுஞ் சமயத்தின் - மாலைமின்னார் 
		கொண்டை குலுங்கவிரு கொங்கைநின் றேகுலுங்கக் 
		கண்டசர முத்துவடங் கண்டசையக் - கொண்டகொப்புக் 
		காதசையச் செம்பதுமக் கைவளைய னின்றசைய        175 
		வோதுபதத் திற்சிலம்பு வுற்றசைய - மாதர்செறி 
		மெய்ப்படியே யாடுகின்ற வேளைதனி லேமகிழ்ந் 
		திப்படியோர் காணரத மேறியே - செப்புகின்ற 
		வீதிதனிலே வரவே மெய்க்கண் மலர்தரித்த 
		முதரியேற்றுக் கோடிதான் முன்போத - வூர்திமறை 
		சொன்னவெள்ளி வேதண்டத் தூய தவளநிற 
		முன்னோன் மகிழ்விடையு முன்போதப் -பன்னுமறை 
		பூம னனந்தனிலும் பூங்காம லக்கண்ணான் 
		காமன் பிதாநற் கருடனிலுந் - தாமமணி 
		யிந்திரன்வெள்ளானையிலு மேழுவித நாப்படைத்த      	180
		சந்த வனலோன் றகர்தனிலும் - பந்தமறுங் 
		காலன் கயவாய்க் கருமைக் கடாவினிலும் 
		வால நிருதிநர வாகனத்துங்-கோல 
		வருணன் மகருத்து மான்கலையின் மீதும் 
		பொருடன தன்புட்பகத்தும் பூமேற் கருணைதரு 
		மீசான தேவனிட பத்து மாறிரண்டு 
		தேசு பெறும்பருதித் தேர்மேலுங் - காசுதிக 
		ழிந்து விமானத்து மீச னுருப்படைத்து 
		வந்தோ ரிடபத்து மாமுனிவர் - சந்தமிகு 
		மோரெழுவர் தேர்மேலு மொத்தசித்த சாரணர்கள்       185 
		சீரெழுபுட் பங்கொண்டு சேவிப்ப- வேரெழுந்து 
		கூர்கொண் டிடுமொற்றைக் கொம்பனே ரம்பனுய 
		ரேர்கொண்ட வாகுவினி லேறிவரப் - பார்கொண்டே 
		கட்டுமுலை யாரிருவர் காந்தன் மரகதச்சூட் 
		டிட்டமயின் மீதே யெழுந்தருளப்-பட்டுளதார் 
		கூந்தலுமம் பார்விழியுங் கொண்ட சவுந்தரியே 
		ரேந்துமிள வன்னத்தி லேறிவரச் - சாந்தணிந்த 
		வெண்டா மரைமயிலு மேலா மரம்பையருந் 
		தண்டா மரைந்திருவுந் தார்ச்சசியும் - வண்டாருந் 
		தாரூர் வசியுமிசை தான்கொண்ட மேனகையு       	190
		வாரூர் முலைநாக மங்கையருஞ்- சீரூர் 
		மலைகடலி னீரூர்ந்த மங்கையரு மன்று 
		நிலையா யிருபா னெருங்கி - யலைவிலா 
		வேடிக்கை யாய்வரவே வெள்ளைக் கொடிகள்பல 
		ஆடிவர நெட்டி யழகாக - நீடியகால் 
		சேர்த்து நிரைத்துவந்த திங்க ளனேகமென்னக் 
		கோத்தமுத்தின் வெள்ளைக் குடைநெருங்க- வேற்றிருந்தி 
		வட்டமிட்டுச் செங்கதிரை மாற்றச் சிவந்தினிய 
		பட்டாற் சுருட்டிபலநெருங்க - விட்டபொன்னின் 
		வெண்சா மரையிரட்ட விஞ்சையருக் கொப்பாகப் 	      195
		பண்பாடு வோரிசைகள் பாடிவரக் - கண்காணும் 
		வேத வொலிமுழங்க வீராணம் டக்கைகையான் 
		மோதுமத்த ளாதி முழங்கிவரப் - பாதிமதி 
		வேணிமுடி யான்வந்தான் மெய்ப்பரம யோகியரி 
		லாணிக்கை யாயிருக்கு மண்ணல்வந்தான் - பூணுமணி 
		நாகமணிந் தோன்வந்தா னாடு முபநிடத் 
		வாகமுமாய் நின்ற வரன்வந்தான் - மாகமதி 
		லுண்டாம் பகிரதியங் குற்றசடை யோன்வந்தான் 
		கண்டான் மூன்றான கடவுள்வந்தான் - பண்டமரர் 
		போற்று மலையரையன் பொற்பா மருகன்வந்தான் 	      200
		கூற்றனைக்கா லாலுதைத்த கூற்றன்வந்தான் - மாற்றமில்லா 
		வையன்சோ மேச னருள்தரவந் தானென்று 
		செய்ய திருச்சின்னஞ் சேவிப்ப - வையமதில் 
					குழாங்கள் 
		மின்னனையா ரெண்ணிலார் வேடிக்கை தான்பார்க்கப் 
		பொன்னார் பணிகள் புனைந்துகொண்டு- சொன்னநிறச் 
		சேலை யணிந்துசெழுஞ் சிந்தூரப் பொட்டணிந்து 
		மாலை குழற்கணிந்து மைதன்னை - நீல 
		விழிக்கெழுதிச் சிற்றிடைக்கு வேண்டுமரைப் பட்டை 
		செழித்த வரைஞாணைச் செலுத்திப் - பழிப்பில்லா 
		வெண்டையம்பொன் னின்சதங்கை வேண்டியகாலுக்கணிந்து        205 
		கொண்ட மகிழ்ச்சியுடன் கூடியே - தண்டரள 
		மெத்த யதின்மேலு மேவுநிலா முற்றத்துஞ் 
		சுற்றுமணி மண்டபத்துஞ் சூழுமதிற் - பத்தியிலும் 
		அங்கங் கிருந்து மளகேசன் றோழனெனுஞ் 
		சங்கரனார் பொற்புகளைத் தான்பார்த்துப்-பொங்கிவரு 
		மாலாழி மூழ்கும் வகைகண்டு மக்கணமே 
		காலாழி பூண்டுவருங் கன்னியர்மேல்- மேலாம்வேள் 
		தென்றற்றே ரேறிச் சிறைக்கிள்ளை பாய்பரியாய் 
		வென்றிடுங் கண்ணார்கள் மிகுதளமா - யொன்றிருளே 
		மும்மதமா தங்கமாய் முன்குயிலெக் காளமா        210.
		யம்மவினையசைக்க வாரளிகள்- 
		--		--		--
		-- 		--     --	பன்னுவெள்ளை 
		மன்னியபூச் சங்கெடுத்து வாயில்வைத் தூதுவுமே 
		பன்னுமலர்ச் சாதி பலவிளக்காச் - சொன்னகடல் 
		தூரியமாய்க் கேதகையே சுற்று முடைவாளாய் 
		பாரிற் கரும்பே பருஞ்சிலையாய் - நாரியதில் 
		வண்டா யொருநாலு வாளிதனை யேவிடவே 
		கண்டார் மனங்கலங்கிக் கண்டசரம் - வெண்டரளம் 
		பூணார் புழுகணியார் பூமாலை கொண்டையின்மேற்       215 
		காணா வகைசெய்தார் கையதனால் - நாணாமல் 
		ஆடுங் கழங்குடனே யம்மானை தான்மறந்தார் 
		நீடுபல் லங்குழிகள் நீத்துவிட்டார்- பாடுகின்ற 
		கீதமறந் தார்கரத்திற் கிள்ளையும்விட் டேயிருந்து 
		மாதரள வில்லாரில் மற்றொருத்தி - பேதை (நல்லாள்) 
					பேதை
		பொன்போலு மேனியாள் பூங்கோதை கூடும்வகை 
		மன்கூன் கவரி மயிரசைத்து - மின்சேரும் 
		மூவகையாய்ப் பின்னி முளைத்த சடைபோல 
		வாவலுடன் பின்னே யசையவிட்டு - மேவியபொற் 
		சுட்டி பிறைபருதி சோதிபெற முன்னிலங்கக்      	220
		கட்டி நுதலினிலக் காப்பணிந்து - இட்டமுடன் 
		கண்டசர மாமணிகள் கைவந்தி கைவளையல் 
		கொண்ட வுடைதாரங் கொலுசுதண்டை - பண்டையோர் 
		காண விடுமிடங்கள் காந்தி பெறவணிந்து 
		மாணிலங்கு கின்ற மலரடிக்குப் - பூணுநிறச் 
		செம்பஞ்சை யூட்டித் திருந்துகின்ற பேதையரி 
		லம்பிரண்டுங் கண்ணான வாயிழையாள் - கொம்பிருந்து 
		கூவாமல் வந்தகுயில் கூவிப் பறவாமற் 
		பாவாணர் சொல்லும் பசுங்கிள்ளை - பூவார்ந்த 
		மன்ற றிகழு மலரளைந்து பாலுளநீ 	      	225
		ரென்றும் பிரியா விளவன்னம் - நன்றிதிகழ் 
		திங்கட் கொழுந்து தெவிட்டாத தெள்ளமுத 
		மிங்கொற்று வந்த விளந்தென்றல் - பங்கமறச் 
		செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் போலவே 
		யிற்றுப் பிறக்கு மெயிற்றினாள் - நத்துபுன 
		லுட்டா மரையரும்பு வுள்ளாகி யுள்ளிருந்து 
		மட்டா யிருந்தமுலை மார்பினாள் - கட்டழகி 
		சிற்றி லிழைத்துச் சிறுவியர்க டம்முடனே 
		யொத்தமொழி பேசி யுவந்திருந்து - நற்றெருவிற் 
		காந்தன் மலர்நெருப்பாய்க் கல்லே கரியாகச்       230
		சேர்ந்த மணற்சோறு செய்கையிலே - ஆய்ந்தோர்சொல் 
		தேவாதி தேவன் றிருத்தேர்மேற் செல்லுகையால் 
		மூவா முதல்வனென்று முதறிந்தோர் - நாவா 
		லுரைத்த மொழிதெரியா வொண்ணுதலா ணங்கண் 
		ணருத்தவிருந் துக்கழைமி னென்பாள் - பருத்தகழை 
		முத்தெறிந்தா னாமு முயன்றுமவர் பூச்செண்டை 
		யொத்தெறியா ரோவுண்மை யோரென்றாள் - மொய்த்தமணி 	 
				மார்பெல்லா(ந்த)ங்கு மணக்கோலப் பிள்ளையுடன் 
		சேரப் பொருத்துமெனச் செப்புவாள் - மார்பில 
		-		--		--	 
				235	
		கட்டி விளையாடுங் கண்மணியே - மட்டிலா 
		வேத மறியா விமல னுலகனைத்து 
		மோதவு மெட்டா வொருமுதல்வன் - பேதமிலான் 
		மெல்லியலே நீபுலம்ப வேண்டா மெனத்தேற்றி 
		யல்லறீர்(க்) கின்ற வமையத்திற் - சொல்லிடது 
		பாகம்பிரியாமற் பார்ப்பதியை வைத்தபிரா 
		னாக மணிசோம நாதனார் - யோக 
		விரத மவணகன்றே யேக மதனன் 
		குரகதப்பைங் கிள்ளையிவன் கொண்ட - விரவுதென்றற் 
		றேரைநிறுத் தாமற் சிலையைக் குழையாமற்       	240		
		போரின் மலர்க்கணையைப் பூட்டாமற் பாரில் 
		நிதம்பவர வல்குலா ளேங்காமற் போந்தா 
		னிதம்பேதை யங்கிருந்தா ணேராய்ப் - பெதும்பை 
					பெதும்பை 
		திருத்தா மரையிடத்திற் சேர்ந்த மடந்தை 
		விருப்பா மயிலென்னுமின்னா-ளுருப்படவே 
		வெற்றிபெற்று மாரன் விளங்கும் பவனிக்குச் 
		சிற்றிடைத்தே ரான செழுந்தென்றல் - கற்றவர்சொல் 
		பேறு (புகழ்)மை பெருமை தகும்பெண்மை 
		மீறி யரும்பவந்த மெய்யினாள் -நாறியபூ 
		மாலையையங் காமுகனா மாமனம்வண் டாய்விழவே         245
		கோலமுடன் சேர்த்த குழலினாள் - ஞாலமதில் 
		வஞ்சனைகள் ளங்கொலைகள் வந்தசிறு மையறியா 
		எஞ்சலில் லாத விருகண்ணாள் - மிஞ்சச் 
		சகமும்வச மாக்கவருந் தாட்டா மரையின் 
		முகையின்முளை போலு முலையாள் - சுகமார் 
		வெகுசரச லீலைவித மெல்லியர்கள் சொல்லால் 
		வகைவகையாய்க் கற்ற மனத்தாள் - நகைமுகமாய் 
		மெல்லியர்க டம்முடனே மேவுமணிப் பந்தரின்கீழ் 
		சொல்லும் பலவிதங்க டோன்றவே - குல்லைபுனை 
		மாறான் றுதிக்குமடி வண்மை தனைபாடிச்       	250
		சீறாப்புலியதளின் சீர்பாடி - நீறார்ந்த 
		மேனி தனைப்பாடி வீறாங் கரத்தணிந்த 
		மானையும் பாடி மழுப்பாடி - யாறூர்ந்த 
		செஞ்சடிலம் பாடிச் செழுமதியம் பூசிக்க 
		வஞ்சதரன் வந்த வருள்பாடிக் - கொஞ்சுஞ் 
		சவுந்தரவா லாம்பிகையின் றாள்பாடிச் செங்கை 
		சிவந்திடவே கந்தபொடிச் சிந்த - வுவந்து 
		கழங்காடி யேயிருக்குங் காலையினிற் சின்ன 
		முழங்க வியங்கள் முழங்க - பழங்க 
		ளிலங்கு கதலியிட நெருங்குந் தேர்மே 	      255
		னலங்கொள் புகழ்ச்சோமநாதர் - பலந்தரவே 
		வந்தா ரவர்தம் மதிமுகத்தின் மாணழகுஞ் 
		சுந்தரஞ்சே ரும்புயங்கள் தோன்றழகுங்- கந்தமலர்த் 
		தாரிதழி மின்னித் தயங்குகின்ற மார்பழகும் 
		வீரகண் டாமணியு மேலழகும் - நேருடனே 
		கண்டாள் களித்தாள் செங்காவிவிழி யாலழகை 
		யுண்டாள்பா ராதவர்போ லுத்தமனார் - பண்டையைப்போ 
		லங்கண்விட் டப்பா லகன்றா ரரியமதன் 
		செங்கையம்பு கொண்டபாற் சேர்ந்தனன்பின் - மங்கைதான் 
					மங்கை 
		காமனூ லெல்லாங் கரைகாண வேகற்றுத்      	260 
		தாமரையின் மன்னுந் தனியன்ன - மாமமதிற் 
		சேலைத் துரத்தித் தி(ட)வேலை யும்பழித்து 
		நீலத்தை யொத்த நெடுங்கண்ணாள் - மேலொத்த 
		பாலுந் தெளிதேனும் பாகுங் கொடுத்துமிகு 
		மாலுந் தரும்பவள வாயினாள் - சாலவே 
		கொட்டுமெழில் வாரி குமிழிமுத்து மாலையினை 
		யிட்டுவந்த தென்னு மிளமுலையாள் - மட்டுமலர்க் 
		கொண்டை யதினாலுங் கொங்கை யிணையாலுந் 
		தெண்ட னிடவணங்குஞ் சிற்றிடையாள் - பண்டைமதன் 
		தேரோசொல் லாழியோ செம்பொன்மணித் தட்டோவென் 	265	
		றாராய்ந்து காமுகர்சொல் லல்குலாள்-போராடும் 
		காமன்விழாக் காவணத்திற் கட்டுங் கதலியென 
		வாமமிரண் டான வனப்பினாள் - பூமலர்க்கை 
		பந்தேந்தி மாதருடன் பாடி யிடைதுவளக் 
		கொந்துமலர்க் கொண்டைக் குழல்சரியச் - சிந்தூரப் 
		பொட்டுத் துலங்கப் பொலன்சிறந்த வள்ளையினி 
		லிட்ட பணிக ளிசைந்தாடக் - கட்டுமணிப் 
		பொற்சரங்க ளாடப் பொருந்தும் வளர்நீலக் 
		[3]கற்சரங்க ளாடக் கவினாட - நற்சுரும்பு 
		சுற்றுந் தொடையாடச் சொன்னமுலைக் கச்சாட       270 
		நித்தில மாலை நிறைந்தாடச் - சித்ரமணித் 
		தோள்வளைய லாடத்து லங்குசரி கற்கடகம் 
		நீள்விழிகண் டாடவே நின்றாடத் - தாள்விளங்குந் 
		தண்டை யசையச் சதங்கை கலகலெனக் 
		கண்டு விளையாடுங் காலையினி- லண்டர்பிரா 
		னத்தி யுரிபோர்த்தோ னம்பலத்தி லாடினோன் 
		கற்ற விருடியர்க்குந் தண்கருணை - வைத்தவர்கள் 
		மாதவங்கள் முற்ற வருகின்ற சித்துருவா 
		னாதி பரமான வத்துவித - னோதுமுப்பந் 
	__________________________________________________________
		(பிரதி) - [3]. கற்கரங்க 
	__________________________________________________________ 
		தொட்டி தனிலமர்ந்த சுத்த சிவானந்தன் 	      275
		கட்டு மணிக்காலன் கங்காளன் - துட்டச் 
		சமணர் கழுவேறச் சைவம் விளங்க 
		விமலமணி நீறும் விளங்கக் -- கமலமுகச் 
		சுந்தரியோர் பாகம்வைத்த சோதியான் சீர்த்தியென்றும் 
		நந்தலிலா நற்சோம நாதனார் - விந்தைபெறுந் 
		தேரேறி வந்தவர்தம் செய்ய விதழியந்தார் 
		வாரேறு பூண்முலைமேல் மன்னவே - காரேற்ற 
		பூங்குழலே வாங்கிவந்தாற் போர்மதன னுக்கஞ்சே 
		னீங்கெனறிவள்புகலு மெல்லையினி - லாங்கவன்றே 
		ரப்பா லகன்றிடவு மாலைமத னன்கணைக்கே 	       280
		இப்பாலென் செய்வேனென் றேங்கினாள் -- செப்புமுலைப் 
		பெண்பிறந்தா ரெல்லோரும் பேசினதுங் கேளீரோ 
		கண்பிறந்த காதற் கடப்பரோ - வெண்பிறந்த 
		சொல்லினாற் றேற்றித் தொடர்ந்துவந்த தோழியர்கள் 
		மெல்ல வணைத்தறை மேவுகையின் - மல்லாற் 
		றொடர்ந்த மதனாலுஞ் சோராக் குயிலிற் 
		கடந்தவிசையாலுமனங் காணாள் - மடந்தையரின் 
					மடந்தை 
		மற்றொருத்தி நாக மடந்தை யரின்மேலாள் 
		உற்ற வரம்பையரிலொப்பிலாள் - நத்துவருங் 
		காரோ வரலோ கருநீலச் சைவலமோ 	       285 
		தாரோதி யென்னவருந் தாழ்குழலாள் - சீர்கொள்பிறை 
		கண்டோர் மனமுருகக் கத்தூரிப் பொட்டணிந்த 
		துண்டாகி லொப்பான வொண்ணுதலாள் - மண்டமரி 
		லம்பைத் தூரத்திமிக வாசையுள்ளோர் தங்களையே 
		வம்பாக வாட்டு மலர்க்கண்ணாள் - நம்பினோர் 
		சோகமுற வெட்பூவுஞ் சோர்குமிழு மேகடுப்ப 
		மோகங் கொடுக்குமுயர் மூக்கினாள் - நாகமணி 
		யூட்டியிடு மோலையிளை ஞோர்மனமு மொன்றாகக் 
		காட்டியுஞ்ச லாட்டும்வள்ளைக் காதினாள் - நாட்டுசங்க 
		மன்னசெழுங் கந்தரத்தா ளான பசுங்கழையீ 	      290 
		தென்ன விளங்கு மிருதோளா-ளுன்னுமுல்லை 
		நீங்க வரி(நேர்) நகையா(ள்)வெண் ணித்திலஞ்சேர் 
		கோங்கை யனையவிரு கொங்கையாள் - பாங்கரிய 
		நீலமணிப் பொன்னாரம் நீங்காம லேகிடந்த 
		வாலிலையே யென்னுமணி வயிற்றாள்-மேலாய்ப் 
		பருவமுயர்ந் தேறும் படியோர் பிரமன் 
		வரையின் வயிற்றின் வரையா - ளுரைவல்லோர் 
		பாடியபொற் றேரோன் பகராழி யோவென்று 
		ஆடவர்நித் தம்புகழு மல்குலாள் - நாடுமும்பற் 
		றொண்டையையொப் பான தொடையாள் மலர்ப்பதத்தா          295 
		ளொண்டொடியார் சூழவுடனேறித் தண்டமிழ் சொன் 
		மேல்வீட்டின் முன்றில் வெளியணுகிப் பாலாற்றின் 
		கால்வேட்ட வோடைக் கரைபார்த்து- மால்வேட்ட 
		[4]குன்றுகள் பார்த்துக் குறுகா வனம்பார்த்து 
		வென்றிய் யற்காடு மேற்பார்த்து-நன்றிதருந் 
		தண்டா மரைக்குளங்க டானும்பார்த்து தல்லிநனை 
		விண்டதடம் பார்த்து வெளிபார்த்து - வண்டிறந்த 
		காநந் தனவனங்கள் கண்ணாரத் தான்பார்த்து
		ஆனந்த வாரியருள் பார்த்து - வானத்தை 
	_______________________________________________________________
			(பிரதி) -[4]. கன்றுகள் 
	________________________________________________________________
		யெட்டுந்திரைபார்த்திசைகொத் தளம்பார்த்துட்       	300
		செட்டுவினை தேர்த்தின் டிறம்பார்த்து-இட்டமுள 
		கோபுரமு மண்டபமுங் கோவிலுமே தான்பார்த்து 
		மாபுரத்தின் வீதிவகைபார்த்துத் - தீபம்வளர் 
		வேதபா ராயணஞ்சொல் வேதியர்கள் வேள்விசெயு
		மாதிநூல் வீதி யருட்பார்த்து - மாதவர்கள் 
		பூசை செயுமிடத்தின் பொற்புகளைத் தான்பார்த்து 
		வாசமுள வீதி வளம்பார்த்துத் - தேசுவளர் 
		வேந்தர் முரசதிரும் வீதிகளுந் தான்பார்த்துச் 
		சாந்தணியும் மங்கையரைத் தான்பார்த்து - மாந்தர்மகிழ் 
		ஏரார் குபேரனிணையாத் தனம்படைத்த 	        305 
		சீரார் வசியர் தெருப்பார்த்து - ஆராய்ந்த 
		சற்சூத் திரவீதி தான்பார்த்து மற்றுமுள்ளோ 
		ரிற்சேரும் வாடையினைப்பார்த்து - அற்சேருங் 
		கூந்தலார் தம்முடனே கூடி யிருக்கையிலே 
		சாந்து புழுகுமணந் தாமோங்க - வேந்துமகிற் 
		றூபங் கமழச் சுகந்தம் பரிமளிக்கத் 
		தீப மநேகஞ் சிறந்துவரத் - தாபமக 
		லாலவட்டம் வீச வரிய குடைநிழற்ற 
		ஞாலவட்டஞ் சொல்சோம நாதனார் - நீலவட்டத் 
		தேரேறி வந்த திருக்கண்டாள் செய்யவிதழ்         310 
		தாரேறு மார்பிதழி தான்கண்டாள் - வாரேறு 
		பூண்முலையாள் பாகம் பொருந்துமிடங் கண்டாணம் 
		வாண்முலைமேற் சேர்வதெந்த வாறென்றாள் -- வீண்மொழிகள் 
		பேசுகின்ற வெல்லையினிற் பேரா யிரமுடையான் 
		றேசுபெறுந் தேருமப்பாற் செல்லவே - வீசுமதன் 
		கைச்சிலையை வாங்கிக் கணைதொடுத்தா னாங்கவட்கு 
		நச்சிலைவேற் கண்ணீர் நயந்துவிழப் -பொய்ச்சவிடை 
		தள்ளாடி யேகலைக டாமகலக் கைவளைக 
		ளுள்ளாடிப் பைந்தொடிக ளுய்த்துவிழ - நள்ளார் போற் 
		
		கூவக் குயிலினங்கள் கோளின்மதி தீச்சொரிய        315 
		வாளொத்த கண்ணாள் மயங்கையிலே - நாளொத்த 
		தாயரெடுத் தணைத்துத் தன்மா ளிகைபுகுந்து 
		மேயபுத்தி யெல்லா மெடுத்துரைத்துப் பாய 
		லொரு(ங்) குவைத்து மெத்தையினி லொக்கவிருத்தித் 
		தெரியத் தெளியவைத்தாள் செவ்வே - யரிவை 
					அரிவை 
		கருமை தருமுகிலுங் காந்திசெறி மின்னுந் 
		தெரியு மிருசிலையுந் தேனார் - பெருமைபெறு 
		மாம்பலுநீ லோற்பலமு மானசிறு வள்ளைகளுங் 
		கூம்பாத வம்புயமுங் கோத்தமுத்துங் - காம்புகளுந் 
		தேங்குங் திருவறலுஞ் சேர்ந்தசிறு வாழைகளு       320 
		மோங்கி யொன்றான வுருவத்தாள் - மாங்குயிலை 
		யொத்த மொழியா ளுயர்காம னூலையெலாங் 
		கற்றறிந்து சொல்லுங் கருத்தினாண் - முத்தலைசேர் 
		சூலம் பிடித்தியமன் சுற்றாமற் காமுகரை 
		யாலஞ்சேர் கண்ணா லடக்குவாள் - கோலமுடன் 
		செங்கை வளையணிந்து சிந்தூரப் பொட்டுநுதன் 
		மங்கலஞ்சேர் கூர்விழிக்கு மையெழுதித் தங்கநிற 
		மேகலைக ணன்றாய் விளங்கக் கலைசாத்தித் 
		தாகமுடன் காலுக்குத் தண்டையிட்டுப் - பாகனைய 
		சொல்லா ருடன்கூடிச் சோதிமணி மண்டபத்தில் 	       325
		வல்லாருங் கொங்கையாள் வந்தணுகிச் - சொல்லுவாள் 
		மானே யிளங்குயிலே வல்லியே பெண்ணரசே 
		தேனே தெவிட்டாத தெள்ளமுதே - நானுரைக்குஞ் 
		சித்திரங்கள் பாரீர் தெருப்பாரீர் கோயிலுட் 
		சத்தமது பாரீர் தடம்பாரீர் - நித்தியமாய்க் 
		கோபுரங்கள் பாரீர் கொடிக்கம்பந்த தான் பாரீர் 
		மாபுரத்தோர் போற்றும் வகைபாரீர் -தீபம்வளர் 
		நந்தி யிருக்கு நலம்பாரீ ரங்குசஞ்சேர் 
		தந்தி யிருக்குந் தலம்பாரீர் - சந்தமலர்க் 
		கூந்தலா டெய்வானை கோலமுள்ள வள்ளியம்மை         330
		காந்தன் மகிழ்கருணைக் கண்பாரீர் - சாந்தமால் 
		சேருமி லகுமியின் சீர்பாரீர் நான்முகத்தோன் 
		பாரிகையாம் பாரதியின் கண்பாரீர் - சேரும் 
		வயிரவர்தங் கோயிலுடை வண்மை களைப்பாரீர் 
		செயிரறுதண் ணார் சுதைசேர்திங்க ளுயரவைத்த 
		சோமேசர் தாமிருந்த சோதிதனைப் பாரிரென்று 
		நாமம் புகலவந்து நங்கைதான் - காமமுடன் 
		றேவிக் கொருபாகஞ் செய்தபிரா னாசையுற்ற 
		பாவிக்குச் சற்றுங்கண் பாராரோ - நாவினா 
		லேத்து மிருடியர்க்கு வென்(னெ)ன வெத்தினவர்      335
		காத்தெனக்குக் கண்பார்வை காட்டாரோ – சாற்றுகையிற் 
		கிள்ளையேயென்றன் கிளையே யரும்பொருளே 
		யுள்ள மகிழ்ச்சிதரு மொண்சுகமே - கள்ளமிலா 
		வென்மனமே கண்ணேயென் னெண்ணநிறை வேறவு 	 
					யுன்மனமே யல்லாமற் றொன்றுண்டோ - நன்மைபெறுஞ் 
		சோமேசர் மார்பிதழித் தொங்கல்கொணர்ந் தாலெனக்குக் 	 
				காமேசனம் பிடுக்கங் காட்டாது பூமேவுந் 
		திங்கள் குளிர்ந்திருக் குந்தீய குயிற்கூவா 
		தங்கம் பசலைநிற மாகாது - மங்கைமார் 
		பங்கமுறப் பேசார் பழியார்நம் மன்னையர்க       340
		ளிங்கெனக்குச் செய்வா யெனுஞ்சமயம் - சங்கரனார் 
		தேரிப்பாற் செல்லத் திகைத்தாள் சிலைமாரன் 
		பாரிலிக்கு வில்வளைத்துப் பண்சுரும்பை - காரியெனப் 
		பூட்டிவிடுத்தான் கணையைப் பொன்னாரந் தான்விடுத்தாள் 
		பாட்டிசைக்கும் வீணைதனைப் பாரில்வைத்தாள் - கேட்டவன்னை 
		கட்டியணைத்துக் கலங்காமன் மாளிகையி 
		னிட்டமுள தோழியினை யிருத்தி-வட்டமுள 
		வாலவட்டம் வீசினா ரார்த்தார் முத்தாரவடஞ் 
		சாலவைத்த(ர்) சாந்தந் தனத்தின்மிசை - சீல(ம்) 
		வரிசையினாற் றோற்றும் வகையா லரிவை      	345
		யுரிய எனத்தெளித்தங் குற்றாள் - தெரிவைமுனம் 
					தெரிவை 
		பாற்கடலி லேபிறந்த பங்கயமா திவ்வழகை 
		யேற்கவுமே லான வெழிலினாண்- மாற்பெருகு 
		தேரு மிருஞ்சிலையுஞ் செங்கையம்பு மொன்றான 
		மாரனையொப் பான வடிவினாள் - பாருலகில் 
		லண்டேறு தார்புனைந்து வன்புழுகு நள்ளிருளுங் 
		கொண்டே கறுத்த குழலினாள் - விண்டிலா 
		மீனைப் புனலில் விடுத்து மிரள்மானைக் 
		கானிற்றுரத்துமிரு கண்ணினா - ளானையின்றன் 
		கோட்டைப் பழித்துக் குலுங்காத மேருவமை      	350 
		சூட்டி யிருத்துந் துணைமுலையா - ணாட்டமுட 
		ணீளுமான மும்மடியி னீங்காம னின்றுநடை 
		நாளும் பயிலுந டையினாள் - வாளனைய 
		கண்ணா ருடன்றனது கையில்வைத்த வீணையினால் 
		பண்ணா லிராப் பதம்பாடி - மண்ணாள 
		ராடரங்கு மாளிகையு மாவணநல் வீதிகளு 
		நாடிமணி மண்டபத்தி னண்ணியே - சேடியர்கள் 
		சொல்லா விசையாற் றுணைச்செங் கரம்பிடித்து 
		மெல்ல விளையாடும் வேளையினிற் - பல்லியங்கள் 
		நீடாழி போன்முழங்க நித்திலத்தா னீள்கொடிகள் 	       355 
		வாடாப் பரிசை மணிக்குடைகள் - கூடியே 
		ஓடுங் குதிரை மறைக்க வுயர்தலத்தோர் 
		நாடும் புகழ்ச்சோம நாதனா - ராடகப்பொற் 
		றேரையுங்கண் ணாற்கண்டு சிந்தை மகிழ்ந்துமவ 
		சேரும் பெருமையுங்கண் டேயிசைப்பாள் - பாரில்விட 
		முண்ட வழகு முயர்வா ணகையழகுங் 
		கண்ட நுதலிலகு கண்ணழகு - மண்டர்புகழ் 
		காதி னழகுமதிற் காணவே சாத்துகின்ற 
		கோதிலாச் சங்கக் குழையழகு - மோதரிய 
		மானி னழகு மழுவின் கரத்தழகுந் 					360
		தேன்மொழியாள் வாமத்திற் சேரழகுங் - காணின் 
		கடுக்கை மலர்க் கண்ணியார் காணவணிமார்பி 
		லடுத்ததங்க மாலை யழகு - முடுத்த 
		புலியின தளிறுகப் பொங்கரவின் கச்சை 
		யலர விறுக்கு மழகுஞ் - சொலவல்லோர் 
		பாடுங் கமலப் பதத்தா மரையழகு 
		நாடுமுப்பந் தொட்டிநகர் நல்லழகு - நாடியே 
		காதலுடனே களித்தா ளவர் மார்பிற் 
		கோதைதனை வாங்கிவந்தாற் கோதையே - யோதுமனத் 
		துண்ணோ யகலு முயிர்காத்த வாறாமென்       365 
		கண்ணே யெனப்புகலுங் காலையினில் - விண்ணவர்கோன் 
		சென்றான் மலர்வாளி தேமாங் குயிற்காளம் 
		வென்றோனென் றூதவும்வேள் மேல்விடுத்தான் - றென்றலுமே 
		சீறுபுலி போல்வரவே திங்க ளனல்வீசக் 
		கூறு கடன்முரசங் கோடிக்க -வாறுதலை 
		யில்லாம லன்னையர்க ளேச மிகமெலிந்தாள் 
		சொல்லாற மாலையப் பாற்றூக்கினா - ணல்லார்கள் 
		வேர்த்தவளைக் கைப்பிடித்து மேன்மா ளிகைபுகுந்து 
		பார்த்துமிகத் தேற்றிப் பசுங்கிளியே - கீர்த்திபெற 	
	 	வாரளிப்பார் மாலை யகந்தெளிந்த வெம்மைப்போற்      	370
		சீரழிக்கா தேயெனவுந் தேறினாள்- பேரிளம்பெண் 
					பேரிளம்பெண் 
		பெண்ணிற் பெருக்கமுள பெண்பெருமாண் மாரனுடன் 
		வண்ணச் செங்கோனடத்தும் வல்லமையா - ளெண்கலவி 
		வித்தை [5]பெறத்திருத்தி மேலாஞ் சுரதவிதம்  
		பற்றிப் படிக்குப் பழக்கவல்லாள் - வெற்றிபெற 
		மின்னும் பிறையணிந்த வேணிக்கு வேணுமென்றாற் 
		பின்னு [6]முள தென்ற பிறைநுதலாள் - பன்னரிய 
		கைம்மானை வென்று கருநஞ் சுடன்பழகி 
		மைம்மா னிதென்ற மலர்க்கண்ணாள் - செம்மான 
	________________________________________________________
		(பிரதி)- [5]. யெறத்திக்கி              [6]. முன்றனறபொ 
	________________________________________________________
	வேணியரன் கண்டத்தில் மேலாலம்போ னானங்        375
		காண வணிந்த கழுத்தினாள் - கோணுகம்பங் 
		கட்டுண்ட மாதங்கங் காணத் தனத்தினையே 
		முட்டக் குனிந்த முறைபோல - வட்டமணிக் 
		கச்சதனாற் கட்டக் கரைந்து தலைகுனிந்து 
		மெச்சு தரமீது விழுமுலையா - ளிச்சையுட 
		னாலல் படவக்கை யன்றணிந் தார.... 
		மாலை விளங்குதிரு மார்பினாள் - காலுழுவைத் 
		தோலை யரைதனிற் சுற்றினவர் - போற்சித்ரச் 
		சேலை யணிந்தவரிச் சிற்றிடையாள் - காலின் மணி 
கட்டு மரன்போலக் கண்டைதண்டைபொற்சதங்கை       380 
		யிட்ட கமலவிரு பதத்தாள் - விட்டமத 
		வானை வணங்கிடவு மாலமமு தாயிடவு 
		மீன கடற்கன் மிதந்திடவு - மூனமுற்ற 
		நீற்றறைநீ றாயிடவு நித்தனையே பாடுமவர் 
		மாற்றரிய சொல்லு மனத்திலுன்னித் - தேற்றிக் 
		கரட மதகரிமேற் காணவெள்ளி யான 
		வரையினிற் சென்றோருரையும் வாழ்த்தித் - தெரியவுள்ளி 
		யோடுவைகை யாற்றினெதி ரோடத்தே வாரத்தி 
		னேடு விடுத்தவர்சொல் லின்னுரையும் - நாடியுன்னிப் 
	பாண்டியன்முன் னேநரியை பாய்பரியா கக்கொடுத்து       385
	நீண்ட புகழ்படைத்தோர் நீளுரையும் - வேண்டி 
		யிதுவே பொருளென வெண்ணித் தினமு 
		மதியே விளங்கு மனத்தா -டுதிசெய்முன்னாள் 
		பத்திலொ ருபிரமன் பாவி யெனுந்தக்கன் 
		முற்றுமொரு திங்களுக்கு மூவொன்பான் - சித்ரமணிப் 
		பெண்களையே நல்கவந்தப் பெண்ணி லதிரூபத் 
		தண்களையாம் ரோகிணியுஞ் சார்வாக - விண்பிறழுஞ் 
		சித்திரையு மன்பாகச் சித்தத்தி லேநினைத்த 
		புத்தியினான் மற்றோர் புழுங்கியே - யுற்றிருக்குந் 
		தந்தையுட னேயுரைக்கத் தான்கோப மாகியந்த       390 
		விந்துவினை யப்போ விழைந்தழைத்துப் - பந்தமுற 
		நல்லாரை யாமனித்தா னாடியவ ரவரைப் 
		புல்லா வகையென் புகலுமெனச்-சொல்லார்ந்த 
		வென்னழகுக் கொப்பான வேந்திழையே யல்லாமற் 
		பன்னுமற்றோர் தம்மையுநான் பாரேனென் - றின்னல்பெற 
		வாயாரச் சொன்னளவில் மாறுபா டாய்த்தக்கன் 
		றீயான கோபந் திரண்டுதான் - பாயவே 
		சாபம் பிடியென்னச் சார்ந்த சவிமழுங்கக் 
		கோப மிகுந்து கொடுத்தளவிற்-சோபமுடன்
		சற்றுசற்று யோனிக டான்மழுங்க மால்பிரம       395
		ருற்ற மகவா னுடன்றேவர் - பெற்ற 
		பதிபுகுந் திச்சாபம் பற்றவே யிப்போ 
		துதிபெறவே யீயுமென்று சொல்ல - மதிமயங்கித் 
		தக்கனார் தானிட்ட சாபந் தொலைத்திடநாம் 
		மிக்கவரல் லோமென்ற வேளையினில் - தக்கமொழி 
		நாரதனார் சொல்ல நவின்றமொழி யின்படியே 
		வாரிதனைச் செஞ்சடைமேல் வைத்தபிரான் - சீர்திகழ 
		நாமம் பலபுகன்றா னன்மைசெய்ய மூவுலகில் 
		ஏமநிதி நின்னையல்லா லில்லையெனபூலியும்
		வேணி யரன்சாபம் வீழ வருள்செய்தான் 	     400 
		வாணிலவும் பேர வளர்ந்தானே - நீணிலத்தில் 
		பூமிதிருத் தேராய்ப் புகன்றமதி வெம்பருதி 
		நேமியாய்த் தேவர் நிரைகாலாய்-மீமா(ன்) 
		கொடுங்கையா(ன்) மேரு குழைவில்லாய் நாணி 
		யிடுஞ்சேட னாகி யிசைய - விடுங்கணையு 
		மாலாய்ச் சமர்க்களத்தில் வந்தபொழு தங்கவர்கண் 
		மேலாய் நினைத்த விதங்கண்டு - சாலவே 
		முப்புரத்தை வெண்ணகையின் மூளுங் கனலாலே 
		மைப்பறவே யன்றெரித்த மாதேவ-ரிப்புவியி 
		லொண்ணா யிரம்பேரி ருட்டாரு காவனத்திற்       405
		பண்ணார் மொழியார் [7]பலிதரப்பின் - நண்ணியே 
		கேள்வியொரு மந்திரத்தாற் கிட்டியநெய் யாற்சமித்தால் 
		வேள்விசெய் தாரந்த வேள்வினிற் - சூழிமத 
		வெங்களிறுண் டாகவதை மெய்ப்பொருளாய் வேதாந்த 
		சங்கரன்பா லேவவதைத் தானிடிக்க - வங்கவர்கண் 
		மானைவிடுத் தாரதனை வன்கரத்தி னாற்பிடித்தார் 
		கான மழுவைக் கரத்தணிந்தா - ரானபின் 
		பாங்கவர்தம் வேள்வி யழிக்கவொரு வேடங்கொண் 	
				
	டேங்கியவர் களி ளைக்கவே - பூங்குழலார் 
		கண்டு மயங்கக் கலைசோர வங்கவர்க       410
		ளொண்டொடிக(ள்) சோர வுலாவவே - பண்டாங்கு 
		வீதியில்வந் தாரவர்கண் மெய்கலங்கி நாணழிந்து 
		வோதுமயல் கொண்டங் குடன்றொடர்ந்தார் - வேதனுடைத் 
	____________________________________________________________
		(பிரதி) - [7] பலிற்றதப்பி 
	_____________________________________________________________
		தந்தையைப்பெண் ணாக்கித் தவத்தையழியுமென  
		வந்தார் தவத்தார் மயங்கினா - ரிந்தவகை 
		யாலேதம் வேள்வி யலைந்து மவமானார் 
		வேலேந்து கையான் விளங்கவே - மாலேந்தப் 
		பெற்றான் றனக்கிளையாள் பேசுவல்லா ரெக்கலையுங் 
		கற்றான்பின் செல்லுங் கருணைவள்ள லுற்றான்கண் 
		மேவு திருப்பாடி வீற்றிருக்குஞ் சுந்தரியா 	      415 
		ராவலுடன் வாமத் தமர்ந்தபிரா- னாவலர்சொ 
		னற்சோம நாதர் நயந்ததிருத் தேர்கண்டு 
		விற்சேர் கலைநெகிழ மின்றொடிகண் - முற்சோர 
		நின்று கலங்கிவரும் நெட்டுயிர்ப்பி னாலவளும் 
		வென்ற பலசொல் விளம்புவாள் - கன்றுமான் 
		சேரப் பிடித்தீர் திரும்பவொரு மான்செங்கை 
		யாரைப் பிடித்தாலங் காகாதோ - நீருமைக்குப் 
		பாகங் கொடுத்தீர் பணியுமொரு பாவைக்கோர் 
		பாகங் கொடுத்தாற் பழிப்புண்டோ- வாகுவினிற் 
		சேரு மிதழியந்தார் சிந்தை மகிழ்ந்தெனக்குத் 	     	420 
		தாருமுமைக் கட்டித் தழுவினா - லாரினித்தான் 
		தள்ளுவார் தேருடனீர் தாமப்பாற் சென்றக்கா 
		லுள்ள மடலூர வுளமகிழ்ந்தேன் - வள்ளையெனுங் 
		காதார்போ னான்விடேன் கண்ட திருநீறும் 
		போதார மார்பும் புயத்தழகுங் - காதலுட 
		னேத்து மவர்கிடீரென்றென்று மென்றுசொல்லிற் 
		றேற்றுமவ ளாசை தெளிந்திடவே - போற்றியே 
		பார்த்தாள் மனமுருகப் பண்ணி யினியென்கை 
		வேற்றாள்போற் சென்றேகி விட்டனர்கா – ணேத்தரிய
 
		மின்னா ரிவரெழுவர் மேலும் மயலாகப் 	     	425
		பொன்னா ரிதழியந்தார் பூணுவா - ரெந்நாளுந் 
		திங்களன் பாய்ப்பூசை செய்முப் பதப்புரத்திற் 
		பொங்கிநிதி மல்கவரும் பொற்சடையா - ரெங்கு 
		நிறைந்தபிரா னன்பரிட நீங்காம லென்று 
		முறைந்தபிரான் வந்தா னுலா. 
				முப்பந்தொட்டியுலா முற்றும். 
			
----------------------------
This file was last updated on 31 July 2023. 
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)