pm logo

கார்த்திகேயபுரம் காழி ஞானதேசிகர் அருளிச்செய்த
திருவீழிமிழலை அழகியமாமுலையம்மை பிள்ளைத் தமிழ்


tiruvIzimizalai azakiyamAmullaiyammai piLLaittamiz
by kArtikEyapuram kAzi njAnatEcikar
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
We thank Tamil Virtual Academy, Chennai for providing a scanned PDF version of this work
Our sincere thanks go to Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance
in the preparation of this work
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கார்த்திகேயபுரம் காழி ஞானதேசிகர் அருளிச்செய்த
திருவீழிமிழலை அழகியமாமுலையம்மை பிள்ளைத் தமிழ்

Source:
திருவீழிமிழலை அழகியமாமுலையம்மை பிள்ளைத் தமிழ்
மூல பாடம்
கார்த்திகேயபுரம் காழி ஞானதேசிகரவர்களால் அருளிச்செய்யப்பட்டது
இஃது கொத்தமங்கலம் சிவநேச செல்வர் ஸ்ரீமான் சா. மு. ராம. ராமசாமி செட்டியாரவர்கள்
சஷ்டியப்த பூர்த்தியின் ஞாபகார்த்தமாக அச்சியற்றப்பெற்றது.
PRINTED AT THE SUNDAY TIMES PRESS, G. T. MADRAS.
----------
கணபதி துணை
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ படிக்காசு விநாயகமூர்த்தி துணை
மூர்த்தி விசேஷம்
ஸ்ரீமூலநாதர், திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி

1. ஸ்ரீகண்ட பார்வதீ நாதெள
தேஜிநீ புர நாயகம்
ஆயுர் பலம் ஸ்ரீயந் தேகி
ஹரமே பாதகம் ஹர.

க்ஷேத்திர விளக்கம்

2. பூ கைலாச நிவாசாய
கல்யாணபுரம் வாசிநே
பஞ்சாக்ஷர புரேசாய
தக்ஷண காசி விகாரிணே
ஷண்மங்கள ஸத்தலேசாய
சுவேத கானன வாசிநே
ஆகாச நகரே சாய
பனசாரண்ய வாசிநே
நேத்திரார்ப்பண புரேசாய
ஸ்ரீ தேஜிநீ சாயதே நமஹா.
----------------
திருவீழிமிழலையின் பெருமை


அருள்மொழிகளான வேத சிவாகமங்களாற் பரமபதிக்கு இன்றியமையாதனவாகிய ஷாட்குண்ய பரிபூரண நிஷ்களாதீத சச்சிதானந்தப் பிழம்பாகிய ஸ்ரீ சிவபெருமான் பரங்கருணையினால் சகள நிஷ்கள ரூப சதாசிவ நாம மஹாலிங்க மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கப்பெற்ற புண்ணிய க்ஷேத்திரங்கள் பலவற்றுள்ளும் அதிவிசிஷ்ட சுயம்பு ஸ்தலமாய், பொய்யாதொழுகும் புண்ணிய க்ஷேத்திரங்கள் பலவற்றுள்ளும் அதிவிசிஷ்ட புண்ணிய நதியாகிய காவிரியாற் சூழப்பெற்ற சோழவள நன்னாட்டிலே பல வளங்களும் பொருந்தி செழிப்புற்று விளங்கும் திருவீழிமிழலையெனுந் திருநகரின் தேஜிநீ வனமென்னும் சிறந்து உயர்ந்து ஒளிருவதும், திருவருணமயமான ஸ்ரீ கைலாச பர்வதத்தின் இருபத்தைந்து சிகரங்களில் ஒன்றாகிய கல்யாண சிகரமென்னும் பெயருள்ள திருவீழிமிழலையில் லோகரக்ஷகராகிய மகாவிஷ்ணு தபசு செய்து நேத்திரார்ப்பணம் செய்து சக்கரம் பெற்றதும், பிரம்மதேவன் தன்னால் சிருஷ்டிக்கப்பட்ட திலோத்தமை என்ற பெண்ணை மோகித்ததனால் உண்டான பாவத்தை நிவர்த்திக்கும்பொருட்டு இந்த க்ஷேத்திரத்தில் அஸ்வமேத யாகம் பண்ணி அப்பாவத்தினின்றும் நிவர்த்தி யடைந்ததும், இன்னும் இந்திரன் முதலாகிய தேவர்களும், அகஸ்தியர், வசிஷ்டர் முதலாகிய அநேக மகரிஷிகளும், இத்தலத்தில் எண்ணிறந்த சிவலிங்கப் பிரதிஷ்டை, தடாக முதலாகிய தர்மங்களைச் செய்து ஸ்ரீதேஜிவன ஈஸ்வரருடைய கிருபையால் க்ஷேமத்தை அடைந்ததும், உமாதேவியாரை கார்த்தியாயனர் தவத்திற்கு மகளாகக் கொடுத்து அந்த கார்த்தியாயனியை திருமணம் செய்தருளியதும், விஷ்ணு பக்தராயிருந்து சைவசமய தீக்ஷைபெற்று சிவபூஜை புரிந்துவந்த சைவரான சுவேதகேதுவின்பொருட்டு எம சங்காரம் செய்தருளியதும், இரதி தேவியின் தவத்திற்கிரங்கி மன்மதனுக்கு உயிரருளியதும், சிபிச் சக்ரவர்த்தியும், புரூரவாவும் திருப்பணி செய்யப் பேரருள் புரிந்ததும், புரூரவாவின் மனைவி பத்திரவல்லிக்குப் பஞ்சாக்ஷர உபதேசஞ் செய்தருளியதும், தம்மைத் தேவார திருப்பதிகங்களினாலே பாடிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்கும் திருநாவுக்கரசு நாயனாருக்கும் படிக்காசு கொடுத்து சைவ பரிபாலனஞ் செய்தருளியதும், "பதிகம் பாடினோர்க்குப் பரிசாகப் பொற்காசு கொடுத்தீர்; அடியேனுக்கும் கொடுத்தருளு மென்று தம்மைத் தேவார திருப்பதிகங்களாலே பாடிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் கங்கணமும் காப்பும் கொடுத்தருளியதும், வழிப்போக்கிற் போகும்போதாவது தங்கி தம்மை வழிபடுவோரை இந்திராதியர் வழிபட வைப்பரென்று சேந்தனார் திருவிசைப்பா பாட ஞானாசாரியத் திருக்கோலங் காட்டியருளியதும், அரிபிரமரறியாத பெரியோனது குமரன் என்று கந்தவேளைத் திருப்புகழ் பாடிய அருணகிரி நாதருக்கு ஆனந்தமருளியதும், காவேரியானது அழைக்க வந்து இருமருங்குஞ் சூழ்ந்து அபிஷேக தீர்த்த மாயருள் பெற வருளியதும், வேதாகம புராணேதிகாசாதி சர்வகலைகளும் போற்ற அருளியதும், காழிஞான தேசிகரவர்களால் அழகியமாமுலையம்மை பிள்ளைத்தமிழ் பாடியதும் இன்னும் பலவித அற்புதங்களைப் புரிந்ததுமான அளவிலாப் பெருமைகளையுடையதாகும் இப் புனித க்ஷேத்திரம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விநாயகர் ஸ்தோத்திரம்
திருவுங் கல்வியுஞ் சீருந் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகு மாழத்து பிள்ளையைப் பேணுவாம்.
~~~~~~~~~~~
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
பண் - நட்டபாடை
சடையார் புனலுடையானொரு சரி கோவணமுடையான்
படையார் மழுவுடையான் பலப்பூதப் படையுடையான்
மடமான் விழியுமை மாதிடமுடையா ன்னையுடையான்
விடையார் கொடியுடையானிடம் வீழிமிழலையே

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீ ரேசலில்லையே
இறைவராயினீர் மறைகொண் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே
காழிமாநகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலைமேற் றாழுமொழிகளே.
~~~~~~~~~~~~
திருநாவுக்கரசு நாயனார்
பண் - திருத்தாண்டகம்
போரானை யீருரிவைப் போர்வையானைப்
      புலியதளே யுடையாடை போற்றினானைப்
பாரானை மதியானைப் பகலானானைப்
      பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்துநின்ற
நீரானைக் காற்றானைத் தீயானானை
      நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்
தேரானை திருவீழி மிழலையானைத்
      சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே.       (1)

சவந்தாங்கு மயானத்துச் சாம்பலென்பு
      தலையோடு மயிற்கயிறு தரித்தான்றன்னைப்
பவந்தாங்கு பாசுபத வேடத்தானைப்
      பண்டமரர் கொண்டுகந்த வேள்வியெல்லாங்
கவர்ந்தானைக் கச்சியே கம்பன்றன்னைக்
      கழலடைந்தான் மேற்கறுத்த காலன்வீழச்
சிவந்தானைத் திருவீழி மிழலையானைச்
      சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.       (2)

அன்றாலின் கீழிருந்தங் கறஞ் சொன்னானை
      யகத்தியனை யுகப்பானை யயன்மாறேட
நின்றானைக் கிடந்த கடனஞ் சுண்டானை
      நேரிழையைக் கலந்திருந்தே புலன்களைந்தும்
வென்றானை மீயச்சூர் மேவினானை
      மெல்லிய லாடவத்தி னிறையளக் கழலுற்றுச்
சென்றானைத் திருவீழி மிழலையானைச்
      சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.       (3)

தூயானைச் சுடர்ப்பவளச் சோதியானைத்
      தோன்றிய யெவ்வுயிர்க்குந் துணையாய்நின்ற
தாயானைச் சக்கரமாற் கீந்தான்றன்னைச்
      சங்கரனைச் சந்தோக சாமமோதும்
வாயானை மந்திரிப்பார் மனத்துளானை
      வஞ்சனையா லஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச்
சேயானைத் திருவீழி மிழலையானைச்
      சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.       (4)

நற்றவத்தி னல்லானைத் தீதாய்வந்த
      நஞ்சமுது செய்தானை யமுதமுண்ட
மற்ற மரருலந்தாலு முலவாதானை
      வருகாலஞ் செல்காலம் வந்தகால
முற்றவத்தை யுணர்ந்தாரு முணரலாகா
      வொருசுடரை யிருவிசும்பினூர் மூன்றொன்றச்
செற்றவனைத் திருவீழி மிழலையானைச்
      சேராதார் தீநெறிக்கே சேர்க்கின்றாரே.       (5)

மைவான மிடற்றானை யவ்வான்மின்போல்
      வளர்சடைமேன் மதியானை மழையாயெங்கும்
பெய்வானைப் பிச்சாட லாடுவானைப்
      பிலவாய பேய்க்கணங்க ளார்க்கச்சூலம்
பொய்வானைப் பொய்யிலா மெய்யன்றன்னைப்
      பூதலமும் மண்டலமும் பொருந்தும்வாழ்க்கை
செய்வானைத் திருவீழி மிழலையானைச்
      சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.       (6)

மிக்கானைக் குறைந்தடைந்தார் மேவலானை
      வெவ்வேறாயிரு மூன்று சமயமாகிப்
புக்கானை யெப்பொருட்கும் பொதுவானானைப்
      பொன்னுலகத் தவர்போற்றும் பொருளுக்கெல்லாந்
தக்கானைத் தானன்றி வேறொன்றில்லாத்
      தத்துவனைத் தடவரையை நடுவுசெய்த
திக்கானைத் திருவீழி மிழலையானைச்
      சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.       (7)

வானவர்கோன் றோளிறுத்த மைந்தன்றன்னை
      வளைகுளமு மறைக்காடு மன்னினானை
யூனவனை யுயிரவனை யொருநாட்பார்த்த
      னுயர்தவத்தி னிலையறியலுற்றுச் சென்ற
கானவனைக் கயிலாய மேவினானைக்
      கங்கைசேர் சடையானைக் கலந்தார்க்கென்றுந்
தேனவனைத் திருவீழி மிழலையானைச்
      சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.       (8)

பரத்தானை யிப்பக்கம் பலவானானைப்
      பசுபதியைப் பக்தர்க்கு முத்திகாட்டும்
வரத்தானை வணங்குவார் மனத்துளானை
      மாருதமாலெரி மூன்றும்வாயம் பீர்க்காஞ்
சரத்தானைச் சரத்தையும் தன்றாட்கீழ்வைத்த
      தபோதனனைச் சடாமகுடத் தணிந்தபைங்கட்
சிரத்தானைத் திருவீழி மிழலையானைச்
      சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.       (9)

அறுத்தானை யயன்றலை களஞ்சிலொன்றை
      யஞ்சாதே வரையெடுத்த வரக்கன்றோள்
ளிறுத்தானை யெழுநரம்பி னிசை கேட்டானை
      யிந்துவினைத் தேய்த்தானை யிரவிதன்பற்
பறித்தானைப் பகீரதற்கா வானோர்வேண்டப்
      பரந்திழியும் புனற்கங்கை பனிபோலாகச்
செறுத்தானைத் திருவீழி மிழலையானைச்
      சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.       (10)

சுந்தரமூர்த்தி நாயனார்
வேதவேதியர் வேதநீதிய ரோதுவார் விரிநீர் மிழலையுள்
ஆதிவிழி கொண்டீ ரடியேற்கு மருளுகென்று
நாதவேதம் வண்டோதுவார் பொழினாவலூரன் கீதம் வன்றொண்டனற்றமிழ்
பாத மோதவல்லார் பரனோடுங் கூடுவரே.
~~~~~~~~~~~
சேந்தனார்
திருவிசைப்பா
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
      கரையிலா கருணைமா கடலை
மற்றவரறியா மாணிக்க மலையை
      மதிப்பவர் மனமணி விளக்கை
செற்றவர் புரங்கள் செற்றவெஞ்சிவனை
      திருவீழி மிழலை வீற்றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண்டுள்ளம்
      குளிரவென் கண் குளிர்ந்தனவே
நீற்றினை நிறையப்பூசி
      நித்தலாயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி ஒருநாளொன்று
      குறையக் கண்ணிறையவிட்ட
ஆற்றலுக் காழிநல்கி
      அவன்கொணர்ந் திழிச்சுங்கோயில்
வீற்றிருந் தளிப்பார்வீழி
      மிழலையுள் விகிர்தனாரே.
~~~~~~~~~~~~~~~
மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும்
அண்ணலா ரடியார் தமையமுது செய்வித்தல்
கண்ணினாலவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல்
உண்மை யாமெனினுலகர் முன்வருகென வுரைப்பார்.
~~~~~~~~~~~~~~~
மங்கள திருத்தாண்டகம்
கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சியான்காண்
      கந்தருவம் பாட்டிசையிற் காட்டுகின்ற
பண்ணவன்காண் பண்ணவற்றின் றிறலானான்காண்
      பழமாகிச் சுவையாகிப் பயக்கின்றான்காண்
மண்ணவன்காண் தீயவன்காண் நீரானான்காண்
      வந்தலைக்கும் மாருதன்காண் மழைமேகஞ்சேர்
விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலானான்காண்
      விண்ணிழிதண் வீழி மிழலையானே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அருணகிரிநாதர் - திருப்புகழ்
எருவாய் கருவாய்தனிலே யுருவாயிதுவே பயிராய் விளைவாகி
      இவர்போய்வரா யவர்போயிவரா யிதுவே தொடர்பாய் வெறிபோல
ஒருதாயிருதாய் பலகோடியதா யுடனேயவமாய் அழியாதே
      ஒருகால்முருகா பரமாகுமரா உயிர்காவெனவோ தருள்தாராய்
முருகாவெனவோர் தரமோதடியார் முடிமேலிருதாள் புனைவோனே
      முனிவோரமரோர் முறையோவெனவே முதுசூருரமேல் விடும்வேலா
திருமால் பிரமாவறியாதவர்சீர் சிறுவாதிருமால் மருகோனே
      செழுமாமதில் சேரழகார் பொழில்சூழ் திருவீழியில்வாழ் பெருமாளே.
~~~~~~~~~~~

கடவுள் துணை
திருச்சிற்றம்பலம்

திருவீழிமிழலை அழகியமாமுலையம்மை பிள்ளைத் தமிழ்

விநாயகக் கடவுள்
சீர்கொண்ட மும்மதம் பொழியுமிரு சிறுகவுட்
      சிந்துரமுகத்து நிலவுந்
திகழ்கிம் புரிக்கோடு கற்றைவெண் ணிலவுபொழி
      திங்களெழில் காட்டநின்றே

பார்கொண்ட நாவினுக் கரசர்திரு ஞானசம்
      பந்தர்செந் தமிழினுக்குப்
படிக்காசு வைத்திடும் பிள்ளை பரிமளயுகள
      பாதாம்புயம் பணிகுவாம்

நீர்கொண்ட வேணிப்பி ரானுளம கிழ்ச்சிபெற
      நிலவுமணி மாடகூட
நீடுகோபுர மோங்கி யளகாபு ரிக்குநேர்
      நிகர்வீழி மிழலைவாழும்

வார்கொண்ட சுந்தரகு சாம்பிகை யெனுங்காமர்
      வல்லிசெம் பவளவல்லி
மாணிக்க வல்லி கோமள வல்லிகலி
யாணவல்லிசொற் றமிழ்தழையவே.
________________

1. காப்புப்பருவம்

திருமால்
பூமேவு கற்பகப் புனிதநறு மலர்மாரி
      பொதியமுழு மதியினிலவு
பொழியுமொழு கொளிதவழும் வெள்ளிமால் வரையினிற்
      புனைமணிவி மானநாப்பண்

மாமேவு மாணிக்க பீடத்தி லையனுடன்
      வையகம கிழ்ந்தளிக்க
மருவிநிறை சுந்தரகு சாம்பிகையெ னம்மனையை
      மனதுவந்தி னிதுகாக்க

தேமேவு தண்ணம் பசுந்துழாய்ப் படலை
      செந்திருவள ருமார்பினிலகத்
திகழ்மகர குண்டலம் விண்டலம் விளக்கித்
      திருந்துமிரு தோளிலங்கத்

தாமேவு பன்னகச்சூட் டுமேட் டெழிலணை
      தனிற்கண் வளர்ந்தசங்கு
சக்கரா யுதந்தரித் துலகளந் திடநிமிர்ந்
      தருளும்பசுங் கொண்டலே.       1
--------------------
பரமசிவன்
வளருமிள மதிநதியு மிதழியு மருவுமுடி
      மிசைவெள் ளெருக்கேற்றிடு
மணியைவரு திரிபுரமு னெரிதர வறிதுநகை
      செய்தவள்ள லைப்பாற்கடல்

மறுகவமரர் கள்கடைய வருவிட மதனை
      மகிழ்வுடனள் ளிவுட்டேக்கிய
மகிமைதி கழ்தருக ருணைய முதினை
      மழுவொடுழையணி கையனைச்சூட்டிய

தளைசெய்கயி றுடனதிர யெதிர்வரு சமனை
      யவனியுள் விழத்தாக்கிய
சரணபரிபுர தரனை யுரைபெறு சகல
      வுயிர்களின்மெய் யிளைப்பாற்றிடு

தருவையிர சதகிரியின் வருமொரு தருமசொருப
      நல்வெள்விடைக் காட்சிசெய்
தவர்கள் பவவினை யொழியநறு வழிதரும்
      விண்ணிழியுமெமை யனைப்போற்றுதும்

அளகமிசை யிசைபெரு கும்விளரி நல்லளிகள்
      முரல்குரவை முடித்தேற்புற
அளவில்வள மிகுமிரவி மதியெனு மணிகொள்
      பிறையொளிசெய் தரச்சூட்டிய

வமுதைமர கதமணியை வழுதிபெண் ணரசை
      முழுதுலகை யளித்தாட்சிசெய்
தருளுமிறை வியையமரர் மடவரம களிர்முடி
      பணிசெல்வியைப் பூத்தொளிர்

துளபமணி முகிலிளைய ளெனநிறை துதிசெய்
      திடவளர்தைய லைத்தேக்கமழ்
தொடையலொ டுமணிவடமு மணிதிகழ் துணைமென்
      முலையுறைமை வரைத்தோற்றம்

துளகண்ம ணியினைய டியின்மு றைமுறை
      தொழுதுமலர்நிகர் கையெடுத்தேற்றியே
சுருதிபர வியமிழலை நகர்வளர் சுகிர்தபரி
      மளவல்லியைக் காக்கவே.       2
------------------------
படிக்காசு விநாயகன்
இன்னிலந் தன்னிற் றொடுத்து முடிவரிதா
      யிருக்கின்ற கருமமெனினும்
இகலோக பரலோக சாதகந்த னைநினைந்
      தெண்ணிடு முயற்சிமுதலாம்

உன்னினற் கிடையூறு தன்னைவந் தணுகாமன்
      முன்னின்று நீக்கிவளரும்
ஒண்ணிலா வுலவைதிகழ் வண்ணமால் யானைமுக
      முன்னைநாதனை நினைகுவாம்

உன்மனா தீதப்பரஞ் சுடரு டன்கலந்
      தொன்றாயிருந் துபரையாய்
உயர்குடி லைமேவி யொளிர்விந்து முதலாகிநின்
      றுலகம்புரிந் தளித்த

அன்னபரிபூ ரணியை யங்கயற் கண்ணமுதை
      யகிலாண்ட புவனங்களுக்
காதாரமா கிவளர் சுந்தரகு சாம்பிகை
      யணங்கினைக் காக்கவென்றே.      3
---------------------
முருகவேள்
வந்துபோர்புரிவ னென்றண்ட கோளகைகிழிய
      வாய்விட்டெ ழுந்தசூரன்
மார்பைப்பிளந்து நிமிர்தாளைத் தறிந்துதலை
      வட்டாடியிட்ட நெடுவேற்

கந்தவேளைக்குமரர் குருபரனை முருகனைக்
      காந்தணிகர் பன்னிரண்டு
கையனைச்சரவணப் பொய்கைவரு மையனைக்
      கையெடுத்துத் துதிப்பாஞ்

சிந்தையாரமு தைப்பசுங்கிளி யைமதுரமிகு
      செங்கரும்பைத் தெவிட்டாத்
திரவியத்தைக் கனியையன்ன பூரணியைமிகு
      செல்வியைத் தேவர்பரவுஞ்

சந்திரசேகரரான விண்ணிழிந் தருள்கின்ற
      தம்பிரான்பங் கில்மருவித்
தண்ணருள்சு ரந்திடுஞ்சுந்தர குசாம்பிகைத்
      தையலைக்காக்க வென்றே.       4
-----------------------
நான்முகன்
நீர்தாங்குமொண் டுறைநெடுங் கரைவழிந்திட
      நிறைந்திடு தடங்கிடங்கி
னிலவியிடுமள்ளற் கருஞ்சேற் றினுதியாது
      நெட்டிதழ் குவிந்திடாது

பார்தாங்குசேடன் படப்பாயன் மீதுதுயில்
      பச்சைப்பசுங் கொண்டலின்
பைந்தாளினுந்தியங் கமலமிசை வதிந்திடும்
      பகவனைத்துதி செய்குவாம்

வார்தாங்குகளபமுலை மாதுமேனை யினிருகண்
      மணியாய்வி ளங்கியிலகு
மலையரையனருமைத் துரைச்சி யைத்தெள்ள
      முதவாரியை வளம்பெருக்கிச்

சீர்தாங்குதிருவீழி மாநகரமா கிவளர்
      தேசினி வனத்துமன்பர்
சிந்தையினுமகலாத சுந்தரகு சாம்பிகைத்
      தேவியைக் காக்கவென்றே.       5
----------------------
திருமகள்
விளரிச்சுரும்பொடு வரிச்சிறை யளிக்குலம்
      விண்ணினின் றாடிவீழ
மென்முகைநெகிழ்ந்து பரிமளம் வீசிவள்ளவாய்
      விண்டுதண் டேன்றுளிக்கும்

முளரிப்பொகுட்டுறை முருக்கிதழ்க் கனிவாய்
      வெண்முத்தநகை யமுதமொழுகும்
முழுநிலவுபூரணச் சந்திரோத யம்போலு
      முகமாதையஞ் சலிசெய்வாம்

அளகச்சொருக்குமணி விற்புருவ முன்னுத
      லுமைவரிபரந் துமைதோய்ந்
தயில்வேலைவென்று செங்கயல் போற்பிறழ்ந்து
      வளரருள்பெருகும் விழிமயிலைநற்

களபச்செழுஞ்சே றணிந்துசெங் குங்குமக்
      கலவைதோய்ந் திலகிளமுலைக்
கர்ப்பூரவல்லியைச் சுந்தரகு சாம்பிகைக்
      கௌரியைக்காக்க வென்றே.      6
---------------------------------------
கலைமகள்
தெண்டிரைசுருட்டித் திரட்டிய முதந்தருந்
      திருப்பாற்க டற்பிறந்தே
திருவின்மருமகளை வருவெண்மதி யைநிகர்
      பெறத்திகழ்வெள்ளை மேனியிலக

வண்டுமுரல்கின்ற வெண்டாமரைப் பூவின்மேல்
      வந்துகுதிகொண் டிருந்து
மதுரகவிபாடவடியேனை யாட்கொண் டகலை
      மகள்சரணமஞ் சலிசெய்வாம்.

எண்டிசைநடுங்கத் திடுக்கிட் டுநின்
      றோட்டமிட்டு வானவர்களபயம்
இடவந்தமகிடாசு ரன்றலை தடிந்து
      தளிரிணையடிக் கீழிருத்தி

விண்டிருகண்விழியும் பிதுங்கிட மிதித்து
      வளர்வில்லியைச் செல்வமோங்கும்
வீழிநகர்வாழ்கின்ற சுந்தரகு சாம்பிகை
      நன்மெல்லியைக் காக்கவென்றே.       7
--------------------------
சத்த மாதர்கள்
தண்ணமுதமொழுகி வழிபுழுகு செஞ்சாந்
      தொடுசவ்வாது பன்னீரணிந்து
தளதளெனவொளிசெய்யு மிளமுலையு மருவசெந்தா
      மரைப்பூவின் முகமும்

வெண்ணிலவுபொழி தரளநகையுமை விழியுமிள
      வெயிலொழுகு மேனியும்பொன்
மின்னெனவிளங்கிவரு கன்னியர்க ளெழுவரையும்
      வேண்டிநின்றஞ் சலிசெய்வாம்

எண்ணரியமாதவர்கள் வேதியர்க ளன்புமிகு
      மிதயபுண்ட ரிகமருவி
இருள்சீத்தெழுந்தி லகுமணிவி ளக்காகி
      வளரெம்பிராட்டியை வளர்ந்த

புண்ணியக்கொழுகொம்பை மிழலைநகர் வாழ்கின்ற
      பூங்கொடியையியல் கொண்மையில்போற்
பொற்புமிகுசுந்தர குசாம்பிகையை யகலாது
      புடைசூழ்ந்து காக்கவென்றே.       8
--------------------------
திருநீறு.
வெண்டிரைசுருட்டிநவ மணிகொழித் தெழுகின்ற
      வேலைபுடை சூழுலகினில்
வேதாளபூதக் குரூரப்பசா சேவல்
      வீரன்முனி சூனியமெலாந்

தெண்டனிட்டோடச் சுரந்தலையிடிப்புச் சிலேட்டு
      மஞ்சன்னி வாதந்
தீராதநோயெலாந்தீர்த்து மோட்சந்த ருந்திரு
      நீற்றையஞ்சலி செய்வாம்

பண்டைநான்மறை தேடியோலமிட் டறியாத
      பச்சைப்பசுங் கிள்ளையைப்
பாராண்டபெண்ணரசை விண்ணவர்
      பணிந்திடும்பதாம்புயம் விளங்குமயிலைத்

தொண்டையங்கனிவாய் வயுங்கமென் னடைகொண்ட
      தூவியன்னத் தையினிய
சுந்தரகுசாம்பிகையை யகலாதி ருந்துநற்
      றுணைசெய்து காக்கவென்றே.       9
------------------------
முப்பத்துமூவர்
நிகழிதழ்ப்பனிமல ரெடுத்திரு கரங்கூப்பி
      நின்றருச்சனை புரிகுவாம்
நித்தியகலியாணியைப் பத்தரித யத்தினில்
      நீங்காததெள்ள முதினைப்

புகழ்பரவவிளவெயில் கொழித்தில குமிரவியும்
      புதுநிலவு பொழிமதியமும்
புகலரியவித்தைநிறை நவகோடி சித்தரும்
      பொருவுகளி றோரெட்டுநன்

மகிழ்பெறுமருத்துவர் கணங்கள் பதினெண்
      மரும்வசுக்களிரு நால்வருஞ்சீர்
மருவுபதினொருகோடி பெலவுருத் திரரும்
      வடிவாள்வீர ரெண்பதின்மருந்

திகழ்முனிவரெழுவரும் வயிரவர்க ளெண்மருந்
      திசைபால ரிருநால்வருந்
திறன்மருவுமகவானு முப்பத்து முக்கோடி
      தேவருங்காக்க வென்றே.       10

காப்புப்பருவம் முற்றிற்று.
---------------------

2. செங்கீரைப்பருவம்

வாராட மெல்லென நெகிழ்ந்த குங்குமமுலை       மலர்க்கண் பொழிந்ததீம்பால்
மாங்குயிலின் மென்குதலை மருவு செம்பவள       நிகர்மணி யதரவயிறு

பீரோடி யொழுகிச் சுமங்களை மடித்தலம்       பெருகியாடையை நனைப்பப்
பெருமகிழ்ச் சியினுட னெழுந்து செங்காந்       தணிகர்பெய்வளைக் கையிலேந்திக்

கூராடு பைங்குவளை மலர்விழியி லொற்றி       மேற்கோதாட்டி மணிகுயிற்றுங்
குங்குமக் கலவைகமழ் மஞ்சனச் சாலையிற்       கொடுவந்து பாராட்டநற்

சீராடி யிளவெ நீராடிவிளை யாடுகிளி       செங்கீரை யாடியருளே
திருமிழலை நகர்வாழ வருமழலை பொழியம்மை       செங்கீரை யாடியருளே.       1
-----------------------
கவ்வை விரிதிரைநீர்க் கருங்கட லுடுத்திடுங்       காசினியின் மீதைம்புலக்
கள்ளரைக் காய்ந்தருந் தவநிலை புரிந்திடுங்       காத்தியாயன முனிவரின்

வெவ்விய மனக்கவலை தீர்ந்துகளி கூர்ந்திருகண்       விழிமலர் மகிழ்ச்சிபொங்க
மெல்லமெல் லத்தவழ்ந் தொளிசெய் மரகத       மணியைவென்றெழுந் தெழில்கொழிப்பக்

கொவ்வை யிதழ்மடம யிற்கூடி நின்றென       நறுங்கூந்தலார்ந் திலகமகரக்
      குழைய சையமின் னிளங்கொடி போன்று       தாதியர்குழாம்பாது காத்துநிற்பச்

செவ்வி ரல்சுவைத்தமுத முண்டுவிளை யாடுகிளி       செங்கீரை யாடியருளே
திருமிழலை நகர்வாழ வருமழலை பொழியம்மை       செங்கீரை யாடியருளே.       2
------------------------
காசினிப ரித்திடு மாதிசேட னுநெடுங்       காற்றிறை வனுஞ்சீறியே
கனகமக மேருவினை வாலினாற் சுற்றிமணி       கவினாயிரம் படங்கொண்

டூசிதனை நாட்டநினை கினுமிடங் காட்டாம       லுயர்சிகரமு ழுவதுமறைத்
துன்பெலன் காண்குவ னலைத்தி டிலெனக்       கன்னபேராயி ரம்வருடமும்

பேசருமு காந்தமூடி யதென வடித்துப்       பிராணவாயுவை யும்வாங்கப்
பின்புல கமுறை யிடவொ துக்குபட       வெளியிற்பிடுங்கியிடு மையைந்தினிற்

றேசுபெறு கலியாண கொடுமுடி வளர்ந்தகிளி       செங்கீரை யாடியருளே
திருமிழலை நகர்வாழ வருமழலை பொழியம்மை       செங்கீரை யாடியருளே.       3
-------------------
வானேறு முகிழ்நிலவு வளரிளம் பிறையுமிள       வண்டோலமிடு மிதழியும்
மாவிளந் தளிருமொளிர் கூவிளமு மத்தமும்       வைத்தசடை கட்டவிழவந்

தானேறு கைத்தன்ப ரில்லங்க டொறுமெழுந்       தருள்புரியும முதவாரி
ஐயனொரு பக்கத் தமர்ந்து விளையாடி       மகிழங்கயற் கண்ணிதாவு

மீனேறு பொற்குடி யுயர்த்திமறி கடல்சூழ்ந்த       மேதினிபுரந் துவேம்பின்
மென்றுணர்த்தெரியல் வேய்ந்திலகுமணி       முடிசூடும்வேந்தர்கோன் வாய்ந்தமகளாய்த்

தேனூறு செவ்விதழின் வாய்நீர்கொ ழித்தகுயில்       செங்கீரை யாடியருளே
திருமிழலை நகர்வாழ வருமழலை பொழியம்மை       செங்கீரை யாடியருளே.       4
--------------------------
கொத்தாடு புழுதிபடு நன்னிலந் தன்னிற்       குழைந்துபயி ராகிவாய்த்த
கொன்றை யின்மெல் லிணர்கொள் முல்லையி       னரும்பையிடுகுளிர்நறுங் கொழுமலர்ப்பூந்

தொத்தாடு சுரிகுழற் கோதைசெங் காந்தணிகர்
      சுடர்வளைக் கைசிவப்பத்
துடுப்பிட் டடுப்பேற்று பாலினீர் சுவறத்       துழாவிமேற் றோய்த்துவைத்த

மத்தாடும் வெண்டயிரும் வெண்ணையுந் திருடியுரல்       மார்புறக் கட்டுண்டமா
மாயனடி தேடிமனம் வாடியுனை நாடநீண்       மதுரைப்பெருந் தெருவினிற்

சித்தாடுநித் தரொடு முத்தாடி மகிழ்செல்வி       செங்கீரை யாடியருளே
திருமிழலை நகர்வாழ வருமழலை பொழியம்மை       செங்கீரையாடியருளே.       5
---------------------
வேறு
சரமணி முத்துவ டஞ்செய் சரப்பணி       சங்கிலிநின் றாடத்
தவழ்நவ ரத்ன மிழைத்த பதக்கந்       தகுமோ கனமாட

விரலணி யுங்கணை யாழியி னிளவெயில்       வீசிவ ழிந்தாட
விழியிணை மகரக் குழையொ டுபொருதி       விளங்கியொ சிந்தாடத்

திருமணி யிருதோ டணியொளி பரவித்       திசைதிசை தொறுமாடச்
செங்கனி வாயிள வெண்ணில வாடத்       திகழ்திரு முகமாட

அரைமணி பட்டிகை பட்டம சைந்திட       வாடுக செங்கீரை
ஆழிய ளித்திடும் வீழிந கர்க்கிளி       யாடுக செங்கீரை.       6
---------------
கனிசிறு தண்டைச தங்கைசி லம்பொலி       கலகல வெனவாடக்
கவினுறு தமனிய வொளிகிளர் கொலுசு       கலின்கலி னெனவாடப்

பணிமுடி நின்றொளிர் செம்மணி மேகலை       பயினூலி டையாடப்
பைம்பொ னிழைத் திடுமைம் படையாடப்       பகரரை ஞாணாட

மணிதிகழ் தங்கநல் வளை யொடுசங்கிலி       மருவிய சைந்தாட
வயிரமி ழைத்தணி யொளியுமிழ் கங்கண       வளையல சைந்தாட

அணிதரு பவளச் சுட்டிய சைந்திட       வாடுக செங்கீரை
ஆழிய ளித்திடும் வீழிந கர்க்கிளி       யாடுக செங்கீரை.       7
---------------
தெளிவயி ரச்சிறு தொட்டி லுதைந்து       சிவந்தடி கன்றாதே
திகழ்நவ ரத்தின விளிம்புபி டித்துன்       செங்கைவ ருந்தாதே

துளியிரு கண்ணி லரும்பிட வழுதுன்       தொண்டையு நோகாதே
சுந்தரமார் புதழும் புறவுநதி விழுந்து       மெய்துவ ளாதே

வளரொளி பரவிய செங்கம லத்திரு       மலர்முகம் வாடாதே
வந்துசு ரந்துநி றைந்தருள் பொழியநின்       மணிமுடியொ ளிரநிமிர்ந்

தளவில் சராசர மசையவ சைந்தினி       தாடுக செங்கீரை
ஆழிய ளித்திடும் வீழிந கர்க்கிளி யாடுக செங்கீரை.       8
-------------------------
விரைமது ரஞ்சொரி பசியக ரும்பினின்       மேவுசெ ழும்பாகே
விரிதளிர் பம்பிய தருவின் மணந்திசை       வீசியெ ழும்போதே

உரியம னந்தனி லனுதின மும்பெரி       தூறுநறுந் தேனே
உலகினி லின்புறு சுவைய முதந்திகழ்       மேனியி ளம்பேடே

திரிபுவ னங்களு முனது பதந்துணை       தேடிவருந் தாயே
சிறுமைப டுங்கொடு வறுமையு றும்பிணி       தீரவருந் தேவே

அரியசு மங்களை மகிழம கிழ்ந்தினி       தாடுக செங்கீரை
ஆழிய ளித்திடும் வீழிந கர்க்கிளி       யாடுக செங்கீரை.       9
-------------------
வேறு
புளகிதமுற் றவணங் கேசெங்கோ செங்கீரை
      புகழ்பெறு சித்திமருந் தேசெங்கோ செங்கீரை
விளைசுவை யுற்றகரும் பேசெங்கோ செங்கீரை
      வினைகட விர்த்திடுநங் காய்செங்கோ செங்கீரை
தளர்வினில வைப்பெனவந் தாய்செங்கோ செங்கீரை
      தரணிய ளித்தகுழந் தாய்செங்கோ செங்கீரை
வளர்தருவிற் பயில்கொம் பேசெங்கோ செங்கீரை
      மகிழ்மிழ லைப்பதியம் பாள்செங்கோ செங்கீரை.       10

செங்கீரைப்பருவம் முற்றிற்று.
--------------------------------

3. தாலப்பருவம்

படர்தே மாவின்க னியுதிரப் பாய்ந்து
      கடுவன் விளையாடும்
பருமால் வரைசூழ் பொன்னிவலம் படைத்ததென்
      பாற்றிசை நோக்கி

அடர்வா ரணத்தின் வெண்ம ருப்பு
      மகிலுமார நறுங்குறடும்
அலைத் துத்த கர்த்துப் பொங்கிவரு
      மரிசொலாற்றின் வடகரையின்

நடைநீர் பாயும் வயற்சேற் றினலங்
      கொண்டூரும் வெண்பணில
நாப்பட் பைங்கா ணாமை பையநடக்குங்
      கயல்க ளோடிநெடு

மடைவா யுகளும் வீழிநகர் மயிலே
      தாலோதா லேலோ
மணியே காத்தியா யனர்தம் வாழ்வே
      தாலோதா லேலோ.       1
--------------------------------
காலைப்பொ ழுதின் மலர்ந்த செழுங்
      கமலமோரா யிரமெடுத்துக்
கரத்தா லெண்ணி விண்ணி ழிந்த
      காரணேசன் றிருவடிமேற்

சீலத்துட னேமுக மலர்ந்து சிந்தை
      யுருகிப் பூசனைசெய்
திருநாடன் னிலொரு நாளிற் சிவன்றன்
      மாயையா லொருபூச்

சாலக்கு றையவெ டுத்தெடுத் துத்தாழா
      தெண்ணுவ துங்குறையத்
தானாச் சரியமுடன் வலக்கண் டன்னை
      மிடைந்தர்ச் சனைபுரிந்த

மாலுக்கி ளையாய் வீழிநகர் மயிலே
      தாலோதா லேலோ
மணியே காத்தியா யனர்தம் வாழ்வே
      தாலோதா லேலோ.       2
---------------------------
பொருகோட் டெருமை முலைசுரந் துபொழிந்த
      தீம்பால்பெருக் கெடுத்துப்
புதுநீர் பாய்ந்த கோட்ட கத்துப்
      பூந்தாமரைப்பொன் வள்ளத்து

முருகோ டிலகிக் கரை யருகு
      முழுதுஞ்சூழச் சேவலென்ன
முகமன் கூறவூ டலினால் முனிந்து
      சீறியெழுந் துபறந்

திரைதேர்ந் திடும்பேட் டிளவன்னத் தினிய
      பார்ப்பினின மருங்கிலிருந்து,
களைதீர்ந் தெடுத்து முகமிரங் குந்தாய்
      செற்றிசை நோக்கும்

வருசீர்க் கழனி வீழிநகர் மயிலே
      தாலோதா லேலோ
மணியே காத்தியா யனர்தம் வாழ்வே
      தாலோதா லேலோ.       3
----------------------------
காலைக் கதிர்கண் டலர்ந் திடுசெங்
      கமலவாவிச் செழுந்தண்ணீர்
கலங் கமேதி படிந்து ழக்கக்
      கன்னிவாளை தாவிநெடுஞ்

சோலைக் கமுகின் மிடறணு கிச்சுடரும்
      விண்மீன்ற னைப்பாய்ந்து
தூங்குந் தேமாங் கனிகிழித் துத்தூய
      பசுந்தேன் பெருக்கொடுவந்

தாலைக் கரும்பின் சாற்றினு டனருமா
      மறைதேர் வேதியருக்
களித்த தான நீர்பாயு மந்தண்
      கால்வாய் மடையடைக்கும்

மாலைப் பழன வீழிநகர் வாழ்வே
      தாலோதா லேலோ
மணியே காத்தியா யனர்தம் வாழ்வே
      தாலோதா லேலோ.       4
--------------------------------------
கொண்ட லாடுஞ்செழி யநறுங் கூந்தல்
      வருகாரி ருள்காட்டக்
குளிர்வெண் மதிய முகங் காட்டக்
      கோலவன்ன நடைகாட்டக்

கெண்டை காட்ட விழிமொ ழிப்பூங்
      கிள்ளைகாட்டுங் கடைசியர்கள்
கெழுநீர் மலர்ந்த கழுநீருங் கிளர்
      பங்கயமுஞ் சாய்த்துழுதக்

கண்டல் வேலிப் பண்ணைவ யல்கலந்து
      நாற்றுமுடி யவிழ்த்துக்
காந்தள் விரலாற் சூழ்ந்துநடக் கனிவாய்க்
      குரவை யிடமகிழ்ந்து

வண்டு பாடும் வீழிநகர் மயிலே
      தாலோதா லேலோ
மணியே காத்தியா யனர்தம் வாழ்வே
      தாலோதா லேலோ.       5
----------------------------------
குறையாக் கல்வித் திறமை யுஞ்சீர்
      குன்றாவாழ்வு நல்லறஞ்செய்
கொள்கை யொழுக்க நடை யன்புங்
      குணமும்பொறுமை வணக்கமுஞ்சொல்

நிறைவா மையு நித்யகன் மநியமந்
      தவறாதியற்றி வருநெறியு
முருகி நடையு நெஞ்சம் நெகிழ்ந்தே
      யுருகிச்சிவார்ச் சனைசெய்

முறைப்பாட் டியல்பு மகங் குழைந்து
      முகமுலர்ந்தே யன்னமிடும்
முதிர்ந்த வறிவு நிறைகு டிகள்
      முழுதுந்திகழ்ந்து தழைத்தோங்கு

மறையோர் சூழும் வீழிநகர் மயிலே
      தாலோ தாலேலோ
மணியே காத்தியா யனர்தம் வாழ்வே
      தாலோ தாலேலோ.       6
---------------------------------
வேறு
அலைசுற்றியகட லுலகிற்கருள்
      புரிமாதே தாலேலோ
அமரர்க்கிடர்செயு மயிடர்கட்டு
      சூலி தாலேலோ

தொலைவற்றுழல்வினை வலைவிட்டிடவொளிர்
      தோகாய் தாலேலோ
தொழும்வித்தகரக மகிழச்செயிரறு
      சூழ்வே தாலேலோ

சிலைவைத்தென வளைபுருவத்தெழில்
      கனிதேனே தாலேலோ
சிவசத்தியைமிக வளரச்செயவரு
      தேவீ தாலேலோ

தலைமைப்புகழ்திகழ் மதுரக்கனிமொழி
      தாலோ தாலேலோ
தழைமுத்தமிழ்நிறை மிழலைப்பதிவளர்
      தாயே தாலேலோ.       7
---------------
வேறு
காழியம்பதியில்வளர் கோலமந்தணர்திலகர்
      காணவிங்கருள் கௌரிதாலேலோ
ஆழிசங்கணியுநெடு மாயவன்றங்கையெனை
      யாளவந்திடும் விமலி தாலேலோ
தாழிருஞ்சிறைமயிலி னேர்கனிந்திலகுயொளிர்
      தாவுசுந்தரவல்லி தாலேலோ
வாழைபைங்கமுகுகழை சூழ்வளந்தருமிழலை
      வாழ்சுமங்களை புதல்விதாலேலோ.      8

வருகாவிரித்திவலை வயல்தாவுமியல்சோழவள
      நாடளித்தகிளி தாலேலோ
திருமாதுநிர்த்தமிடு மிழலாபுரிக்கரசி
      செழுநான்மறைத் தலைவிதாலேலோ
குருகார் தடத்திலகி மலர்நீலநெட்டிதழ்கொள்
      குளிர்போதுதித்த கிளிதாலேலோ
பெருவேடனிட்டகனி விளவோர்பதத்தில்ணி
      பெருமானிடத்தி றைவிதாலேலோ.       9
----------------
வேறு
பாராளவந்தகுமாரி
      தாலோ தாலேலோ
பாகூறுசெந்துவர்வாயாய்
      தாலோதாலேலோ

கார்போலிருண் டெழுகோதாய்
      தாலோ தாலேலோ
காமாரிபங்குறை பாவாய்
      தாலோ தாலேலோ

கூரார்தருந் திருச்சூலீ
      தாலோ தாலேலோ
கோரீசுமங்கலி தாயே.
      தாலோ தாலேலோ

சீரார்சுமங்க ளைவாழ்வே
      தாலோ தாலேலோ
தேவீசவுந் தரிமாதே
      தாலோ தாலேலோ.       10

தாலப்பருவம் முற்றிற்று.
-----------------------

4. சப்பாணிப்பருவம்

பங்கயத் தடமருவி விளையாடு பவளவாய்ப்
      பைந்தூவி வெள்ளோதிமப்
பார்ப்பென விளங்குநின் பாங்கியர்கள் புடைசூழ்ந்து
      பருமணித் தொட்டில்பற்றி

யிங்கிதநி றைந்தசொற் கொண்டுபா ராட்டியு
      மெழின்மலரும் விழிமலர்சிவந்
தண்ணரிய வெண்முத் தரும்பியி டுவதுகண்
      டெடுத்துமுத் தாடியிலகுந்

திங்கள்வெண் பட்டாடை மெல்லென வொதுக்கி
      யெழில்சேர்குறங் கினில்வளர்த்தித்
தேவர்சிறை மீட்கவரு தெய்வக்கு ழந்தைவளர்
      செவ்வாயினி தழ்நெரித்துச்

சங்குவைத் தமுதூட்டு செங்கைத்த லத்தினாற்
      சப்பாணி கொட்டியருளே
தவங்கிளர் சுமங்களை யிளங்கிளி தளும்பவொளிர்
      சப்பாணி கொட்டியருளே.       1
----------------------------------
கண்சேந்த வெஞ்சினக் குஞ்சரத் துரிவையுங்
      கதிர்மணிச் சூட்டுமெட்டுக்
கறைமலர்ந் திடநெடும் படம்விரித் திடுமுரக்
      கங்கணமு நீத்துவளரும்

வண்காந்தி திகழ்சடை மறைத்துத் தளங்கொடா
      மறைமுகங் கருணைபொழிய
மெளலிபுனை கலியாண சுந்தரக் கடவுளணி
      மணிவிரலி னைப்பத்தியும்

விண்போந் துவருபந் தெறிந்துவிளை யாடியும்
      வெண்புழுதி யாட்டயர்ந்தும்
மிக்கவம் மனைகழங் காடியுஞ் சேடியர்
      விளங்கவகை கூரவொளிருந்

தண்காந்த ளங்கையெடுத் தென்னை மகிழவொரு
      சப்பாணி கொட்டியருளே
தவங்கிளர் சுமங்களை யிளங்கிளித ளும்பவொளிர்
      சப்பாணிகொட்டியருளே.       2
------------------------------------
கருவுற்ற நாண்முதற் கவலையுற் றலையெறிகருங்
      கடல்வளைந் து
காசினிசு வர்க்கநர கங்கடனின் முற்சென்ம
      கன்மம்பு சிப்பதற்குப்

பெருகிக்கி டந்திடுந் தனுகரண புவனங்கள்
      பெற்றுழலு மிவ்வேலையிற்
பிரியாத விருவினைத் தொடர்பாலு மாணவப்
      பெருவேர்மு ளைத்தலானும்

வருமுற்ப வக்கொடுஞ் சுழலிடை யழுந்தாது
      மன்னுயிர் மகிழ்ச்சிகூர
மருவுசிவ போகமெனு மானந்த மதுமலர்
      மலர்ந்துமங் களநிறைதருந்

தருவிற்ப டர்ந்திடுங் காமர்பூங் கொடியிலகு
      சப்பாணி கொட்டியருளே
தவங்கிளர் சுமங்களை யிளங்கிளித ளும்பவொளிர்
      சப்பாணி கொட்டியருளே.      3
--------------------------------
பம்புந்த ரங்கக்கருங் கடலுடுத் துவளர்
      பாரினால் வேதவாய்மை
பகரவரு கவுணியர் குலத்தினி லுதித்தசிவ
      பாதவித யர்க்கியற்று

நம்பும் பெருந்தவப் பயனாகி யம்மைதரு
      ஞானபோன கமருந்தி
நன்மது ரத்தமிழ்ப் பதிகந்த லந்தொறு
      நவின்றுபாண் டியனையுற்ற

வெம்பந்த மிகுகூனும் வெற்புந்த விர்த்திலகும்
      வெண்ணீ றளித்தவாது
வென்றம ணரைக்கழு விலேற்றியே புகழோங்க
      வேணுபுரமீ துதித்த

சம்பந்தர் செந்தமிழ்ப் பாடல்கொண் டருள்செல்வி
      சப்பாணி கொட்டியருளே
தங்கப்ப டிக்காசு பங்கிட்டு வைத்தகிளி
      சப்பாணி கொட்டியருளே.       4
-----------------------------
விண்பயிலும் வானவர் மறுத்திலகு பைங்கூழ்கள்
      வீய்ந்துதீய்ந் திடவேலைநீர்
வெந்நீர தாகிக்கொ திப்பவுயர் சோலைதொறு
      மேவுதருவே ருலர்ந்து

கண்கவரு நெட்டிலை யுதிர்ந்துமெல் லிணரெலாங்
      கருகிநிழ லழதாகிக்
கடுகியுத ராக்கினி களமுடுக மன்னுயிர்
      நிலைகலங்கி யிடுகாலந்தனிற்

பண்புபெற வறுசுவைப் பாலடிசிற் முக்கனிகள்
      பாவுநீர்வ கைகளுடனே
பகிர்ந்தி ருக்கூட்டமீ ரெண்ணாயி ரத்தினொடு
      பறையறைந் தெவருநுகரச்

சண்பைகா வலர்திருப் பாடல்கொண் டருள்செல்வி
      சப்பாணி கொட்டியருளே
தங்கப்ப டிக்காசு பங்கிட்டு வைத்தகிளி
      சப்பாணி கொட்டியருளே.       5
---------------------------------
பிழையும்வா துஞ்சூது மோதியபி நயமிகப்
      பேசியேம யக்குசமணர்
பேணுநெறி முழுதுமோர்ந் தாராய்ந்து சோதனைசெய்
      பெருகுநாட் டன்னிலுண்மை

விழைத ருஞ்சைவநா யகமான திலகவதி
      மெய்யன்பு கண்டுநாதன்
மீளவே சூலை நோயேவ மீண்டிப்பால்
      விளைந்தநீற் றரையும்விடமும்

மழைமதம் பொழியானை வந்ததுங் கடலினிடை
      வருகருங் கன்மிதப்ப
மகிமைபெற் றதுமுலகு போற்றவே சிவசமயம்
      வளரவந் தவதரித்துத்

தழையுநா வுக்கரசர் பாடல்கொண் டருள்செல்வி
      சப்பாணி கொட்டியருளே
தங்கப்ப டிக்காசு பங்கிட்டு வைத்தகிளி
      சப்பாணி கொட்டியருளே.       6
--------------------------------
திரணமுத லானபல புதல்பூண் டின்வேரினைத்
      திருகிப்பிடிங் கியகழுந்
திவ்வியவுழ வாரமுறை கையும்வார் காதுமணி
      திகழ்மணிக் குழையும்வஞ்ச

முரணகல வுருகியிடு மெய்யன்பு வெண்ணீறு
      முழுதுமொளிர் திருமேனியும்
முகமலர்ந் தானந்த மாரிபொழி விழிமலரு
      முத்தமிழின் மதுரமொழுகும்

வருணநிறை கனிவாயு மிலகவெண் ணாயிர
      மன்னியதி ருக்கூட்டமும்
மருவியிரு புடைசூழ ஞானசூரிய னெனவே
      வருகின்ற தோற்றநோக்கித்

தரணிமகி ழப்பர்சொற் பாடல்கொண் டருள்செல்வி
      சப்பாணி கொட்டியருளே
தங்கப்ப டிக்காசு பங்கிட்டு வைத்தகிளி
      சப்பாணி கொட்டியருளே.       7
---------------------------
அஷ்டதிக் கினுமுலகி லிடுசரா சரமெலிந்
      தாருயிர்ப தைப்பவாடி
அங்கமே சோர்ந்திடும் வறுமைவந் திடுங்கால
      மவ்வினைவளர் கன்னலின்

கட்டுதீம்பா லகொழுங் கனிசென் னலன்னங்
      களிப்பினொடு தொண்டருண்ணக்
கண்காட்சி பெறுபேட்டை கட்டியநவ நிதிமுங்
      கணக்கில்பல சரக்குநிறையச்

செட்டியப் பாரென்று பேர்கொண்டு விற்பதிற்
      சேர்வட்டவா சிப்பார்த்துத்
தினமுமிப் படியுனது கணவன்விற் பனைசெயச்
      செய்துதிகழ் சம்பந்தர்சொற்

சட்டமிகு மப்பர்சொற் பாடல்கொண் டருள்செல்வி
      சப்பாணி கொட்டியருளே
தங்கப்ப டிக்காசு பங்கிட்டு வைத்தகிளி
      சப்பாணி கொட்டியருளே.       8
----------------------------
வேறு
உடலை வருத்தி யருந்தவ முற்றிய
      யோகநிலைக் குறியா
உபரதி வந்து விருப்பு வெறுப்பு
      மொழிந்து துறந்தவர்புன்

னடலை கடிந்துல கின்புறு கற்பினள்
      நற்பணிசெய் நிகழும்
நன்னெறி யின்றுறை நின்றவ ரைம்புலம்
      வென்றவர் நறைகமழும்

படலைய ருந்துள வம்புனை மாயன்
      பதுமம லர்க்கிறைவன்
பைந்தளி ரிலகிய வைந்த ருள்நிழல்
      வளரிந்திரனும் பரவுங்

குடிலைய ரும்பொரு ளாகிய சுந்தரி
      கொட்டுக சப்பாணி
குலவுசு மங்களை யருளுமி ளங்கிளி
      கொட்டுக சப்பாணி.       9
-------------------------
நவமணிநின் றொளிர் பரிபுர சுந்தரி
      கொட்டுக சப்பாணி
நறைகமழ் தண்புழு கொழுகுசு மங்கலி
      கொட்டுக சப்பாணி

தவநிறை யந்தணர் சுருதிய ரும்பொருள்
      கொட்டுக சப்பாணி
தயவுபொ ழிந்திடு திருமுக மம்பிகை
      கொட்டுக சப்பாணி

புவனிப ணிந்துறு சரணிப ரம்பரி
      கொட்டுக சப்பாணி
புகழ்வள ருஞ்செழு மிழலை யருங்கனி
      கொட்டுக சப்பாணி

குவலயம் வென்றிடு நயனநி ரந்தரி
      கொட்டுக சப்பாணி
குலவுசு மங்களை யருளுமி ளங்கிளி
      கொட்டுக சப்பாணி.       10

சப்பாணிப்பருவம் முற்றிற்று
----------------------------

5. முத்தப்பருவம்

பைந்தா தளைந்துசிறை யளிகள் பதும
      வள்ளமது வருந்திப்
பறந்து குடைந்து பண்க னிந்து
      பாடுஞ்சோலைப் பசுங்கிளியே

சிந்தா மணியே கண்ம ணியே
      தெள்ளாரமுதப் பெருங்கடலே
தேடித்தே டிப்பழ வடியார் சிந்தை
      யுருகப்பெரு குமன்பால்

வந்தேமெனக் கோயிலிற் புகுந்து வளரும்
      பரமானந்த வெள்ளம்
வழிந்து பாயப் பேரின்ப வடிவாய்
      விளங்கும் பராபரையே

செந்தேன் றுளிக்குஞ் செழும்பவளச் செவ்வாய்
      முத்தந் தருகவே
செம்பொற் காசுதரு மிழலைத் திருவே
      முத்தந் தருகவே.       1
-----------------------------------
பூம்பாளைகள் வெண்முத் தரும்பும் புனைமென்
      கமுகின்மி டறணுகிப்
பொற்றா மரைமேற் சுரும் புமுரல்
      பொற்புவாய்ப்ப நின்னன்னை

தாம்பா டிய தென்விளி கேட்டுத்
      தடங்கணுறங்கா வகைக்கண்டு
தரளம ணித்தொட் டினிலெ டுத்துத்
      தயங்குமடியின் மீதுவைத்துக்

காம்போ டிகலுஞ் செங்காந் தடகைமேல்
      விரலா லிதழ்நெரித்துக்
கறந்த வமுதம் புகட்ட வுண்டு
      களைதீர்ந்தி ருந்தகற்பகமே

தீம்பால் மணக்கும் பசுங்குதலைச் செவ்வாய்
      முத்தந் தருகவே
செம்பொற் காசுதரு மிழலைத் திருவே
      முத்தந் தருகவே.       2
------------------------------------
பித்தார்ந் தண்ட கூட மெல்லாம்
      பிடுங்கிக்கணவ னிடத்தழிப்பப்
பெருக்குங் கற்பானமு நியாது பின்னே
      நின்றுதொ டுத்தடக்கிப்

பத்தாம் பிறவிபடைத் தவனைப் படைத்த
      தாயாய்த் தங்கையுமாய்ப்
பறந்து மலர்ந்த பிரபஞ்சப் படைப்பு
      முதலைந் தொழிலுக்கும்

வித்தாய்ப் பஞ்ச சத்தி யதாய்
      விளங்கி யொருமூன்று
பாதான மேவி யுயிர்கட் கருள்புரிய
      விரும்பிவிளைந்த வேதாந்த

சித்தாந் தத்தின் பொருளான சித்தே
      முத்தந் தருகவே
செம்பொற் காசுதரு மிழலைத் திருவே
      முத்தந் தருகவே.       3
------------------------------
காவாழ் மயிலே கருங்குயிலே கவினுஞ்
      சிறியப சுங்கிளியே
கமலப் பொகுட்டி லினிதிருந் துகாதல்
      கூர்வண் புகழனமே

நாவாழ் வேதச்சிரப் பொருளே நலஞ்சூழ்ந்
      தொளிருங் கற்பகமே
ஞானத் தளிரே சிவக் கொழுந்தே
      நாதங்கடந்த பேரொளியே

மூவா முதலே யனாதிம லமுத்தர்
      நினைந்த படிகூட்டி
முடிப்ப தற்கோ ருறுது ணையாய்
      முடியாவின் பவடிவான

தேவேதே வர்தொழு மணியே செவ்வாய்
      முத்தந் தருகவே
செம்பொற் காசுதரு மிழலைத் திருவே
      முத்தந் தருகவே.       4
-------------------------
முள்ளார் பசுந்தா ளிலகமுக மலர்ந்து
      வாசமதுச் சொரியு
முளரிப் பொகுட்டில் வீற்றிருக் குமுது
      மாமரைதேர் சதுமுகத்து

வெள்ளோ திமத்தோன் பாற்க டலின்
      விளங்குஞ்சேடன் படப்பாயன்
மீது துயிலும் பூவை மலர்
      மேனிமுகுந்தன் றேடரிதா

யெள்ளா ரெண்ணைப் போன்று நிறைந்
      திருந்தேயின்பந் தருங்கரும்பே
ஈட்டும் பாசவிரு ளகற்ற வெழுந்த
      மணிவிளக்கே

தெள்ளா ரமுதப் பெருக்கேநின் செவ்வாய்
      முத்தந் தருகவே
செம்பொற் காசுதரு மிழலைத் திருவே
      முத்தந் தருகவே.       5
------------------------
பொய்வைத் தவர்க்குக் கிடையாத பொருளே
      புவனம் பதினாலும்
புரக்குங் கருணைப் பெருவெள்ளம் பொங்கிப்
      பொழிந்து கரைபுரளக்

கைவைத்தடியார் தமைப்பிற விக்கடலி
      னழுந்தாவகை யெடுத்துக்
காக்கு மமுதே பசுங் கிளியே
      கரும்பேதிகழுங் கண்மணியே

மைசுற்றெழு துங்கருந் தடங்கண் மயிலே
      மறைநான் கோலமிட்டு
வருந்தி வருந்தித் தேடுமரு மருந்தே
      பிறிதுவி லைமதியாத்

தெய்வக் கனியே தேனூறுஞ் செவ்வாய்
      முத்தந் தருகவே
செம்பொற் காசுதிரு மிழலைத் திருவே
      முத்தந் தருகவே.       6
------------------------------
வேறு
அரிபாய்ந் திடக்கரட மதமுற்றி ருந்தொழுகு
      மண்ணல்மால் யானைதன்னை
அங்காந் துதங்காம லுள்ளழுந் திடவிழுங்
      கடல்பெறு திமிங்கிலமுதற்

பெருமீன் சினங்கொண்டு பாய்ந்து மீகான்கைப்
      பிடித்திடுங் குழல்சோர்ந்திடப்
பெலன்பெறு கலம்பல தகர்த்து விளையாடிப்
      பிறங்குநவமணி கொழித்த

விரிபூந்தி ரைக்கடன் மடுத்துக்க ருக்கொண்டு
      மின்னிப் பரந்துகுமுறி
வெள்ளிவி ழெனமருவு தாரை பொழிதுளி
      தூங்குமேக படலங்கிழித்துத்

தருவோங்கு பொழில்சூழ்ந்த சோழவள நாட்டரசி
      தருகதிருவாய் முத்தமே
தழைதமிழ் விளங்கு திருமிழலையில் வளர்ந்தகிளி
      தருகதிருவாய் முத்தமே.       7
------------------------------
பண்ணுலா வியவண்டு வீழ்ந்தரித் திடுமலர்கள்
      பழுதுபடும லரொழித்துப்
பரிமளங் கமழு நறுமலர் கொய்து
      தெண்ணீர்ப்படிந்து வெண்ணீறணிந்து

கண்ணிலா நந்தநிறை வெள்ளநீர் பெருகக்
      கரைந்துருகி யுருகிநின்று
காதல்கூர்ந் திருகரங் கூப்பிச்சி வார்ச்சனை
      செய்கருணை யடியார்களுள்ளிட்

டெண்ணில் லாவுயிர்க ளுக்காதார மாகியிடு
      மெம்பிரான் றோழன்மருவு
மெழில்கனிந் தொளிதிகழு நவநிதி யமுங்
      கொழித்திலகு மளகாபுரியெனத்

தண்ணிலா மாடமலி சோழவள நாட்டரசி
      தருகதிருவாய் முத்தமே
தழைதமிழ் விளங்குதிரு மிழலையில் வளர்ந்தகிளி
      தருகதிருவாய் முத்தமே.       8
--------------------------------------
கதிரோனெ ழுங்கடிகை யைந்தின் முன்னித்திரை
      கடிந்தங்க சுத்திபண்ணிக்
கவலாது சிவகீர்த்த னஞ்செய்து மேவரிய
      காவிரிப்பு னலின்மூழ்கி

விதிமார்க் கம்வழுவாம லருணோத யந்தன்னில்
      விரவுமர்க்கிய மளித்து
மிக்ககா யத்திரிசெ பித்துத்தி யானித்து
      வெய்யோனை யடிபணிந்து

துதிபாட மோதிநிக ழாறுகரு மங்களுந்
      தூய்மைபெற வேயியற்றிச்
சொல்லரிய பிரமவித் தெனவுலக முழுவதுந்
      தொழுதுகை யெடுப்பவாய்ந்த

சதுர்வேத சம்பன்னர் சோழவள நாட்டரசி
      தருகதிருவாய் முத்தமே
தழைதமிழ் விளங்குதிரு மிழலையில் வளர்ந்தகிளி
      தருகதிருவாய் முத்தமே.       9
--------------------------------------------
வரைவந்தி ருண்டிடுக மஞ்சூழ்ச்செ ழுங்கொண்டல்
      வளர்கற்கு ழிந்திளச்சூழ்
மழைபொழிந் திடநெடுங் கால்கொண்டு வீழ்ந்தருவி
      மலையினடி வாரமண்டு

நுரைசிந்து முனிவரென குண்டக்கைத் தீர்த்தத்
      தினுட்கலந் திடவடர்ந்த
நுண்டளிர்த் தேமாத் தடஞ்சினை முறித்தகி
      னுடங்குவே ரொடுபிடுங்கிக்

கரைபொங் கிவழியச் சுழிந்தெழுந் தம்பினிற்
      கடுகிவிசை கொண்டுமதுரங்
கனிந்திடு பசுந்தே னெனச்சிவந் தோடிவரு
      காவிரிப்புனல் பரந்த

தரைபொன் கொழித்திடுஞ் சோழவள நாட்டரசி
      தருகதிருவாய் முத்தமே
தழைதமிழ் விளங்குதிரு மிழலையில் வளர்ந்தகிளி
      தருகதிருவாய் முத்தமே.       10

முத்தப்பருவம் முற்றிற்று
---------------------------------

6. வருகைப்பருவம்

சிந்துரப் பொட்டுநுத லிட்டபொற் பட்டமுந்
      திகழ்சுட்டி யுந்திருந்து
திருமுகம லர்ந்தெழில் கனிந்தொ ழுகமை
      யெழுதுசெய்யவேல் விழிசிறந்து

வந்தருள் பொழிந்திடச் சூழியர் கொண்டையும்
      வளருச்சி வாளிமுத்தும்
மன்னிளம் பருத்தியிள வெயிலுமுழு மதிநிலவு
      மருவிமுடி மீதுதவழச்

சந்திரப்பி றையினொடு சூரியப்பி றையுந்தயங்க
      வார்குழை கள்மின்னத்
தங்கவளை யங்கத நங்கையமு தாரியுஞ்
      சன்னவீர மும்விளங்கச்

சுந்தரநி றைந்தமணி மேகலை பிறங்கவளர்
      தோகைமாமயில் வருகவே
சூழுமறை வேள்விநிறை வீழிவ னமேவு
      சுந்தரகுசாம் பிகைவருகவே.       1
----------------------------------
ஞான்றுபற் பகனீங்க நீங்கரிய மாதவ,
      நயந்துபுரி முனிவர்கள்குழாம்
நவிலரும் பதினெண் கணங்கள் விஞ்சையருரகர்
      நாற்றிசைமி டைந்துசூழ

வான்றச துர்மறை கிளர்ச்சி லம்பொலி
      யலம்பமடல விழுமம்புயமென்னனீ
டவிரொளி விளங்குஞ் சிதபதந்தூக் கிநிமரடல்
      விடையிலேறி மன்னு

வான்றொடு நெடுங்குடுமி வெள்ளிமால் வரைமீண்டு
      மலிவிண்ணி ழிந்துவந்து
மகிழுமண வாளநற்கோல நிகழ்தர நின்ற
      வற்புதமு லாவுமுக்கட்

டோன்ற லொருபக்கத் திருந்துவி ளையாடவளர்
      தோகைமாமயில் வருகவே
சூழுமறை வேள்விநிறை வீழிவ னமேவு
      சுந்தரகுசாம் பிகைவருகவே.       2
-----------------------------
சேயவான வர்நறும் பூமாரி பொழியத்
      திருந்துதுந் துமிமுழங்கத்
திகழரம் பையர்நடம் புரியவரி பிரமாதி
      தேவர்கடுசித் திறைஞ்சப்

பாயுமால் விடையண்ணல் வெள்ளியங் கிரிதனிற்
      பகர்காதையுணர் பொழுதினிற்
பைஞ்சிறை யமஞ்சை யொன்றாடு வதுகண்டதைப்
      பார்த்துளம் வேறுபடலால

லையுநான் மறைதேடு மெய்ப்பொரு ளதாகிவள
      ரையனைச் சைவவாய்மை
யாகம விதிப்படி யினுள்ளன் புபெருகி
      யிடவானந் தமாயிருந்து

தூயநாண் மலரால ருச்சனை புரிந்திடுந்
      தோகைமா மயில் வருகவே
சூழுமறை வேள்விநிறை வீழிவ னமேவு
      சுந்தரகுசாம் பிகைவருகவே.       3
----------------------------------
ஆகமபு ராணசாத் திரநெறி யுணர்ந்துவர
      லறிவாலகங் கரைந்தே
அருணிறைந் திடுகுருவி லிங்கசங் கமமூன்று
      மாய்ந்தமெய்ப் பொருளெனக்கண்

டோகையுடன் வந்தனைப் புரிந்து மெய்ப்பத்தி
      செய்துள்ளும் புறம்புமொன்றாய்
உருகியுரு கிப்பெருகு கண்ணிநீர் சொரிய
      வொள்ளழல் மெழுகெனக்குழைந்து

பாகமுறு மன்பர்பரி பக்குவம றிந்துவளர்
      பழவினைத் தொடர்பால்வரும்
பார்மீது தேகாதி பிரபஞ்ச வாழ்க்கையின்
      பற்றறுத்ததின் மெலிந்த

சோகசா கந்தவிர்த் தழியாத வீடுதருந்
      தோகைமாமயில் வருகவே
சூழுமறை வேள்விநிறை வீழிவ னமேவு
      சுந்தரகுசாம் பிகைவருகவே.       4
---------------------------
தகுதிபெறு பெண் பொருட்டா கவந்தித்
      திருத்தகுமேன்மை வேள்விபுரியச்
சகலவணி கலனுந்தரித் திடதுகை யிலென்ன
      சற்பாத்திரமும் வலக்கைப்

புகுபொன் னகப்பையுந் தாங்கியே நாமாது
      பூமாதுமலர்மாது பாற்பொழிதேனு
முடனின்று முனிவ விழை வரம்யாது
      புகலுதியெனக் கேட்டலும்

அகமகிழ நீபுத்திரி யாகிவர வேண்டுமென
      வக்கணஞ் சிவனிடத்தில்
அருள்பெற் றுமுநிதவசு புரிதீர்த்த புட்கரணி
      யதின்முளைத் துத்தழைந்து

தொகுமுகை மலர்ந்தநறு நெய்தலிற் றோற்றியொளிர்
      தோகைமாமயில் வருகவே
சூழுமறை வேள்விநிறை வீழிவ னமேவு
      சுந்தரகுசாம் பிகைவருகவே.       5
--------------------------
வேறு
கஞ்சாசனத் தில்விளங்கி வளர்கதிர்
      வெண்டரள மணிமுறுவற்
கமலைகமல மலர்வீடு கடந்து
      நடந்துவ ருவதுபோற்

பஞ்சாரடிமேற் சிலம்பொலிப் பப்பசும்
      பொற்சிவிறி கரத்தெடுத்துப்
பையப்பை யநடந்து புனல்பாய்ந்து
      குடைந்துவி ளையாடு

மஞ்சாரள கமின்னி டைசூழ்மணி
      மேகலையார் மையெழுதும்
வடிவேணெ டுங்கணெழில் கவரமதித்து
      விரும்பி வாவிதனில்

அஞ்சேலுக ளும்வீழிந கர்க்கரசே
      வருக வருகவே
அருள்சேர் காத்தியா யனர்பெண்
      ணமுதேவருக வருகவே.       6
---------------------------
ஊழின்வலி மைமுன்படைத் தவுழுவ
      லன்பிற் குறுதுணையா
உதவிபுரிவார் போற்கூட்ட வுடலோடி
      ரண்டிற்குயி ரொன்றாய்

வாழுமவை கற்பிரிவென் னமன்னு
      மின்னற் பொழுதினின்று
வாடிமெலிந் துபெருங் கற்பின்
      வடமீன்றனக் குநிகரான

ஏழையிரங் குமதவேளுக் கிலகும்
      வெற்றி முரசாகி
யிரவும்பக லுங்கண்ணு றங்கா
      திரையுங்கடல்சூழ் புவியிலரிக்

காழியளிக் கும்வீழிந கர்க்கரசே
      வருக வருகவே
அருள்சேர் காத்தியா யனர்பெண்
      ணமுதேவருக வருகவே.       7
------------------------
பொளக்கும தியினகடுரிஞ் சிப்பொன்னங்
      குன்ற மெனவெழுந்து
பொலியுமாட மலிமறு கிற்புதுத்
      தோரணங்கள் பொழிலகத்துக்

கிளக்குமூ வர்திருப்பா டற்கிள்ளை
      கேட்கும் பூவைவண்டு
கிளர்ந்தா னந்தக் கூத்தாடுங்
      கீதம்பாடு மிதுவன்றி

விளக்கும றிவைமெய்ஞ் ஞானவீடு
      மளிக்கும் பரிமளிக்கும்
வித்தைய ளிக்கும்பரி வளிக்கும்
      விம்மியெழுந்து வான்முழுதும்

அளக்கும் புகழ்சூழ் வீழிநகர்க்
      கரசே வருகவருகவே
அருள்சேர் காத்தியா யனர்பெண்
      ணமுதேவருக வருகவே.       8
--------------------------
வேறு
கொழுதியளி பண்முரலு மினிய
      குமுதமிலகு குலமுநீள்
குரவைமலர் முருகுபெருகு குளிர்கொணிழல்
      மொய்பொழிலுமூர்

முழுதுமருவி யெழிலெய்திட வெண்முகை
      பெய்தரள் நகையும்வாண்
முகமுமதுர மொழுகுகிளி மென்மொழியும்
      விழியும் வழியும்வார்

அழுகுகமழு மளகமதன் வில்பொருவு
      புருவமுருவநேர்
புதல்வரிய கமலையொளி செய்புதிய
      பதுமமது ரைவாழ்

வழுதியரவுமிரு கண்மணி யேவருக
      வருக வருகவே
மருவிமிழலை வளருமமுதம் வருக
      வருக வருகவே.       9
-----------------
துதிசெய் மணியே வருகவருக
      சுகிர்தி வருக வருகவே
துடருமிடர் கள்விலக விலகு
      துணையே வருக வருகவே

புதியகம லநயனி வருக
      புநிதி வருக வருகவே
புகழுநிதி யம்வருக வரிய
      பொருளே வருக வருகவே

பதுமை பரவு சரணிவருக
      பசிய தருவே வருகவே
பயிலுமினிய கிளியே வருக
      படரு மொளியே வருகவே

மதுரமொ ழுகுகனி யேவருக
      மலையி னரசி வருகவே
மருவிமிழ லைவளரு மமுதம்
      வருக வருக வருகவே.       10

வருகைப்பருவம் முற்றிற்று
------------------------

7. அம்புலிப்பருவம்

இன்னமுத மயமான வானந்த மாக்கட
      லிடத்திற்பி றந்திடுதலால்
எண்ணரு முயிர்ப்பயிர் தழைத்திடச் செய்தலா
      விலகியிடு தரணிமீது

நன்மதி யெனப்பெயர் படைத்திடுத லாற்பெருகு
      நவில்கலை நிறைந்திடுதலால்
நள்ளிருட் படலங் கிழித்திடு தலாற்றெய்வ
      நாயகனிடத் துறைதலால்

முன்னுமிர வலர்முக மகிட்சிபெற வருதலால்
      மூதண்டகூ டமெல்லா
முறைமுறை யடுக்கிவிளை யாடும்பி ராட்டிக்கு
      மொழியுவமை பெற்றிடுதலால்

அன்னபூர ணியான கலியாண வல்லியுட
      னம்புலீ யாடவாவே
அந்தமுத லெழுதரிய சுந்தரகு சாம்பிகைமு
      னம்புலீ யாடவாவே.       1.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொருவரிய காரிருட் போழ்ந்துவெண் ணிலவுபொழி
      புதியவெண்ம தியமெனவே
போற்றியுல கத்தவளர் கீர்த்தியும் பெருகொளி
      புனைந்தவன் னுஞ்செருக்கும்

ஒருவிரனா லெங்களரு மைத்துரைச் சியென்
      றுனைமறைத் திடவொடுங்கி
யுள்ளழுந் தினையது மறந்தனை கொலாந்திக
      ழுடுக்கண்டு வூக்கமருவி

வருமதியு னக்கின்ன மொருமதிவ குப்பல்கேள்
      வாளரவின் வாய்துடித்த
வைகரனி னின்செவி மழுங்கினது முணர்கிலாய்
      மற்றுனக்கின்று புகல்காண்

அருள்கனிந் தொழுகவள ரன்னபூ ரணியுட
      னம்புலீ யாடவாவே
அந்தமுத லெழுதரிய சுந்தரகு சாம்பிகைமு
      னம்புலீ யாடவாவே.       2
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மஞ்சரி மணங்கமழு மைந்தருவி னீழல்வளர்
      வானவர்கள் கோன்மலரிமேல்
வாழ்பிரமன் மால்முதற் கடவுள ருடன்கூடி
      மனுவோதியங் கியைவளர்த்

தெஞ்சுதலு றாதுநிறைவேற் றநினைத்தக்க னொடிருந்து
      தெள்ளமிர் தகிரணம்
ஏகமாயாக லாசாலைகள் முழுவதுஞ் சொரியவினி
            திருந்தது மறந்தாயச்

செஞ்சொனி றைகல்வியுங் கேள்வியு நிரம்பியிடு
செல்வதம துறுதிவாக்குச்
சேரிடமறிந் துசேர்ந் திடவேண்டு மென்றது
      தெரிந்துணர்கிலா யுணர்தியேல்

அஞ்சிலம் பொலிகொஞ்சு மன்னபூரணியுட
      னம்புலீ யாடவாவே
அந்தமுத லெழுதரிய சுந்தரகு சாம்பிகைமு
      னம்புலீ யாடவாவே.       3
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வளரிளம் பருவத்தி னரைவந்து முதிர்கூனும்
      வந்துநிரை நிற்கநல்ல
மணக்கோல முஞ்செய்து வருதெய்வ சாட்சியாய்
      வானநீர்வாந் தன்மகளீர்

இளநலம் பெருகியிரு வென்றுகயிற் கொடுத்
      திடுமாம னிட்டசாபம்
எழிலைக்கு லைத்துலக மிழிசொற் சொலச்செய்த
      திதுகிரகவிர வனெனினுங்

கிளர்சொற்க வேந்தனும் பெருமையைக் கீழாக்கு
      கின்றதுநினக் குவருமிக்
கிலேசத்து ணுக்குதவி கண்டிலேங் கண்டிலேங்
      கெழுமுமறை யோலமிடநின்

றளவில்பல கலைதேடு மன்னபூ ரணியுட
      னம்புலீ யாடவாவே
அந்தமுத லெழுதரிய சுந்தரகு சாம்பிகைமு
      னம்புலீ யாடவாவே.       4
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விழியால்ம தன்றனைக் காய்ந்தவர் தம்வெகுளிவரு
      வீரபத்திர னடியினுள்
வீழ்ந்துமிதி பட்டுமுழு மதியுனக் கவமதி
      விளைந்ததும் வளர்ந்திடுபெரும்

பழியாக வரவம் விழுங்கி யுச்சிட்டப்
      படுத்தினது நின்னையொருநாள்
பார்த்திடக் கடவதென் றென்றுலகில் வாழ்பவர்
      பழித்தது மழித்தழித்துச்

செழியாதி ருந்துகுறை யுற்றதுந் தீரலாஞ்
      சிந்தித்தவர முழுவதுஞ்
செம்மைபெற விம்மையிற் பெற்றுமகிழ் கூறலாந்
      திருந்தியிட லாமன்றியும்

அழியாத வீடுதரு மன்னபூ ரணியுட
      னம்புலீ யாடவாவே
அந்தமுத லெழுதரிய சுந்தரகு சாம்பிகைமு
      னம்புலீ யாடவாவே.       5
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தாதையார் தன்மரபின் வழிமுத லெனச்சிறிது
      தாழ்ந்திருந் தனளன்றியிச்
சகதண் டமண்டல மடுக்கொரு நொடிப்பொழுது
      தனிநீறுபடும் வளர்ந்த

காதிலணி மகரவொண் குழைமீது தாவுமிவள்
      கருநெடுங் கண்சிவந்தாற்
கலைமதிக் கடவுணி முன்னிற்க வல்லைசெங்
      கமலாநாண் மலர்தழைந்த

சீதளநெடுந் தடம்பொய் கையுமிலங்கு செந்தேன்
      சொரிமலர்ச் சோலையுஞ்
சென்னெலங் கழனியு மன்னுதிரு வீழிநகர்
      திகழ்காத்தியா யனர்தமக்

காதரவு பெருகவரு மன்னபூ ரணியுட
      னம்புலீ யாடவாவே
அந்தமுத லெழுதரிய சுந்தரகு சாம்பிகைமு
      னம்புலீ யாடவாவே.       6
~~~~~~~~~~~~~~~~~~~
வேறு
குழையணிந் திடகுழகனொண் சுடர்குழுமு
      செஞ்சடை மிசையினேர்
குடிகொள்கங் கையினுடனி ருந்தனை
      குலவுகின்றனை யெனவுநாட்

டழைகருங் குழல்மழலை வண்டிசை
      தரமுரண்டெதிர் தொடரவே
தகுமிளம் பெடையன மெனும்படி
      தனிநடந்துனை வினவினாள்

கழைசொரிந் திடுதாள மும்பொரு
      கரிசிருங்கமு மணியும்வார்
கரைசொரிந் திரிநதிபரந் திருபுறம்
     வழிந்தெழில் கவினநீண்

மழைவளந் தருமிழலை நண்புற
      வருகவம்புலி வருகவே
வளருமம் பிகைதிரு முகம்பெற
      வருகவம்புலி வருகவே.       7
~~~~~~~~~~~~~~~~~~~~~~
அருள்செயுங் குருமனை தொழும்பவ
      மகலவம்புலி வருகவே
யடருறும் பெருமுயல கன்பிணி
      யகலவம்புலி வருகவே

கருகிநின் றுடல்வெளி றுகின்றது
      கடியவம்புலி வருகவே
கலைகுறைந் திடுகவலை கொண்டது
      களையவம்புலி வருகவே

பெருவிடந் தொடர்பகை தவிர்ந்தருள்
      பெருகவம்புலி வருகவே
பெருமைவண் புகழ்தழைய வந்தொளி
      பெருக்கவம்புலி வருகவே

மருவுசெந் தமிழ்மிழ லைநண்புற
      வருகவம்புலி வருகவே
வளருமம்பி கைதிரு முகம்பெற
      வருகவம்புலி வருகவே.       8
~~~~~~~~~~~~~~~
நறைகமழ்ந் திடுபிரச முந்திய
      நளினமின்புறு பிரமன்வாழ்
நலநிறைந் தணியெழி றழைந்தொளி
      நகுபதந்தனை யருளவோ

கறையொடுங் குயர்படம் விரிந்தெறி
      கதிர்நெடுஞ்சுடர் மணிகள்சூழ்
கவின்விளங் கரவணையி லின்புறு
      கரியவன்பத முதவவோ

அறைசிலம் பொலிகலக லென்றிடப்
      வடிநடந்துனை வினவியே
அழைமினென் றனள்பெறு தவம்பெரி
      துடையவம்புலி யரியநான்

மறைமுழங் கிடுமிழலை நண்புற
      வருகவம்புலி வருகவே
வளருமம்பி கைதிருமு கம்பெற
     வருகவம்புலி வருகவே.       9
~~~~~~~~~~~~~~~~~~~~~
உகுநறுந்துளி மதுமணங் கமழொளிர்
      செழும்பனி மலர்கள்சூ
ழுறுகருங் குழலிவள் கனன்றிடி
      லுறுதிகண்டில முணர்குவாய்

அகிலமெங் கணுமுறை யியம்புவ
      தரிமயஞ்செ கமெனவுவந்
தனையவன் றிருவிழிசிவன் பதமதிலணிந்
      துயர்துதி செய்தே

முகமலர்ந் திடவரிய வெம்பகை
      முரணெரிந்திடு திகிரிவான்
முழுதிறைஞ் சிடுகடவுளன் றருள்செய
      முகுந்தனெய் திடுதலால்

மகிமைகண் டுகொள் மிழலைநன்புற
      வருகவம்புலி வருகவே
வளருமம் பிகைதிரு முகம்பெற
      வருகவம்புலி வருகவே.       10

அம்புலிப்பருவம் முற்றிற்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~

8. அம்மானைப்பருவம்

திங்கணுத லிடைமருவு குறுவேர் வையமுதந்
      திகழ்ந்துதுளி கொள்ள நின்ற
செவ்வியைக் காட்டவரு மையெழு தியையரி
      சிறந்துகடை கூர்ந்துவாய்ந்த

பொங்கும்வடி வேலைப் புறங்கண்ட பார்வைபொன்
      புனைகழங்கொடு சுழலதாய்ப்
புருவங்கு னித்துவளர் நெற்றிமே லேறப்
      பொருந்துமரக தமிழைத்த

கங்கணம் விளங்கமணி தங்குட ககஞ்சரி
      கலின்கலினெ னத்திருந்துங்
கதிரிளம்பி றையுமிழ் வெயிலவிரித் தொழுகொளி
      கனிந்தசெம்பவள மிசைசேர்

அங்கைநிறை தங்கவளை யங்கதம லிந்தசைய
      வம்மானை யாடியருளே
அந்தரள மணியிலகு சுந்தரகு சாம்பிகைமி
      னம்மானை யாடியருளே.      1
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செம்பஞ்சின் மெல்லடி நடைக்கேக் கமுற்றுமேற்
      றிரிகின்ற வெள்ளோதிமந்
திகழண்ட மென்றோடி வரவுவா மதியென்று
      செம்பாந்தள் படமெடுப்பக்

கம்பந்த னிற்கட்டி நின்றவயி ராவதங்
      கவளமென்றெழில் பெறுதுதிக்
கைநீட்ட மல்லிகைப் பூம்பந் தெனத்தேவ
      கன்னியர் மனங்காமுற

விம்பந்தி ருந்துமிதழ் வெண்கொடியும் வான்மீது
      வெண்டாம ரைச்செழும்பூ
மேவியே பூத்துநிற் கின்றதிது புதுமையென
      மிகநினைய முத்திழைத்த

அம்பஞ்சு சூழ்கரும் பணிமிழலை வாழ்செல்வி
      யம்மானை யாடியருளே
அந்தரள மணியிலகு சுந்தரகு சாம்பிகைமி
      னம்மானை யாடியருளே. 2
~~~~~~~~~~~~~~~~~~~~~
பஞ்சாரு மெல்லடி யரிக்குரற் கிண்கிணி
      பரிந்தோல மிடவிளங்கு
பஞ்சவன் னக்கிளிக ளெனநின்ற நின்றுனைப்
      பாங்கியரி லுரிமைவாய்ந்த

கஞ்சாச னத்தரிவை நீயையர் சமூகமேற்
      கண்டுவாவென விடுத்த
கவினொழுகு மடவினப் பெடையென விளங்கிவரு
      கதிர்முத்தி னம்மனைதனை

எஞ்சாம லெட்டிப் பிடித்திட வகப்படா
      தேகநீகண்டு நகைசெய்
திளநிலா மதியுமென் றெண்ணிநின் கைமலரி
      னிதழ்குவிந்தது கொலோவென்

றஞ்சாடை மொழிபகர்ந் ததுதழைய மிழலைதனி
      லம்மானை யாடியருளே
அந்தரள மணியிலகு சுந்தரகு சாம்பிகைமி
      னம்மானை யாடியருளே. 3
~~~~~~~~~~~~~~~~~~~~~~
மண்டும புகழ்க்கெல் லையாகிவ ருத்திருவீழி
      மாநகர்க் கிலகியிடுகண்
மணியாகி மரகதக் கொடியொன்று தித்திளைய
      வண்பதங் காட்டிவந்து

வெண்டிங் கள்கொன்றை யணிவேணிப் பிரானருள்
      விளங்கத்தழைந்து வரல்போல்
விளையாடல் புரியுங் கருங்குயிலை யெம்மனோர்
      விம்மிதங் கொண்டுநின்று

கண்டெண் ணியளவிடற் கரியசித்தண்டமுங்
      கணிதநூற் புலமைவல்லோர்
கணக்கினு மகப்படா தாகியேவொப் பனைசெய்
      கற்பனை மிகுத்துவளர்பே

ரண்டப்ப டைப்பத னொடுக்கமுங் காட்டிவரு
      மம்மானை யாடியருளே
அந்தரள மணியிலகு சுந்தரகு சாம்பிகைமி
      னம்மானை யாடியருளே. 4
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடிகமழ நறும்பொய்கை நீராடிவரு நித்திய
      கன்மநிறை வேற்றிவாய்ந்த
காயத்திரி பஞ்சா க்ஷரஞ்செபித் துறுதிபெறு
      கடவுளைநி னைந்திருந்து

நெடியவைம் புலன்வழியின் மனமோடி வாடாது
நிலைபெற நிறுத்திவேத
      நெறிகொள் ளவளருஞ் சிவாகம முணர்ந்துண்மை
நிறைபுரா ணங்களோதிப்

பொடியணியு மேனியிள நிலவொழுக விருகண்மலர்
      பொழியருவி யன்புமடைநீள்
புடைபறந் திடுதிறந் தெழுவதென மாறாது
      பொழியமுக மகமலர்ந்த

அடியவர்த மனமுருக வருள்பெருகு மிழலைதனி
      லம்மானை யாடியருளே
அந்தரள மணியிலகு சுந்தரகு சாம்பிகைமி
      னம்மானை யாடியருளே. 5
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வையகம கிழ்ந்தாட வானவர்கள் மும்மாரி
      மழைபொழிந் தாடவான்மேல்
மருவுதே வேந்திரன் கண்ணா யிரம்பெற்று
      வந்தபயன் வாய்த்ததென்றே

துய்யதுதி செய்தாட முனிவரர் களெழுவருந்
      தூயசெங் கைக்குவித்துத்
தொழுதாட வென்புநெக் குள்ளுருகி யன்பூறு
      சுத்தராந் தொண்டராடத்

தையனின் காந்தளங் கையினிலெ டுத்தாடு
      தங்கவம் மனைகள்சற்றுஞ்
சாயாதி மைப்பொழுது தனிலா யிரங்தரந்
      தானாடும் வண்மைநோக்கி

ஐயனுங் கூத்தாட வுய்யவரு மிழலைதனி
      லம்மானை யாடியருளே
அந்தரள மணியிலகு சுந்தரகு சாம்பிகைமி
      னம்மானை யாடியருளே. 6
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேறு
கழனிதொ றுஞ்சிறு களைகடி யுஞ்செறி
      கார்நிகருங் குழல்சூழ்
கடைசியர் கண்களு முகமும் விளங்கிய
      காமுறு தண்புனலி

னிழல்க துவுங் குவளையு மரவிந்தமு
      நீடவிருந் ததனால்
நிலவிய வங்கலு முருவநி றைந்தவர்
      நீள்கரைவந் தொழியார்

விழியிலு றுங்களை புகுதம றைந்தது
      வேறினியுண் டுகொலோ
வினவவ ளர்ந்திடு மதிசய மென்ற
      சொல்மேவு புறம்பணைசேர்

அழகுத ழைந்திடு மிழலை யிளங்கிளி
      யாடுகவம் மனையே
அமரர்ப ணிந்திடு சரணச வுந்தரி
      யாடுகவம் மனையே. 7
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெருமைத ழைந்து பகைத்தி றம்வென்று
      பிறங்கிய வரசரெலாம்
பெருமுர சதிர்திரு வாயிலி னின்று
      பெருந்திரை யிட்டுழலத்

திருகுசி னங்கிளர் சீயமெ னத்திசை
      திசையதிர் தரவிரவுஞ்
செங்கோ லுருமைசெய் நீதியு முள்ளத்
      தினிலெழு தயவுமிகுந்

தருமநி றைந்த புரூரவ னென்று
      தயங்கிய புகழ்திகழுஞ்
சக்கர வர்த்தி யநேகதி ருப்பணி
      தனையன் பொடுபுரியும்

அருமைமி குந்திரு மிழலையி ளங்கிளி
      யாடுகவம் மனையே
அமரர்ப ணிந்திடு சரணச வுந்தரி
      யாடுகவம் மனையே. 8
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலகமு தின்சுவை யெனவள ரம்பிகை
      யாடுகவம் மனையே
எழில்கனி யுந்திரு வடிவவி ளம்பிடி
      யாடுகவம்மனையே

பலகலைப் பண்பு கொளுருவென நின்றவ
      ளாடுகவம் மனையே
பணிசெயு மன்பர் தமனதிலு றைந்தவ
      ளாடுகவம் மனையே

குலகிரி கொஞ்சிடு புதல்விநி றைந்தரி
      யாடுகவம் மனையே
குவலைய முய்ந்திட வரமுத வுங்கொடி
      யாடுகவம் மனையே

அலகில் வளந்தழை மிழலையி லங்கிளி
      யாடுகவம் மனையே
அமரர்ப ணிந்திடு சரணச வுந்தரி
      யாடுகவம் மனையே. 9
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செம்மனத் தினினிறை யும்மமு தொளிதிக
      ழம்மனை யாடுகவே
செம்மலை பெறுநிதி யம்மென வொளிர்கிளி
      யம்மனை யாடுகவே

மும்மல வினைபொழி வெய்திட வருகுயி
      லம்மனை யாடுகவே
மும்முர சதிர்வழு தியினிரு கண்மணி
      யம்மனை யாடுகவே

கம்மென வனமிகு தேசுறு வனமயி
      லம்மனை யாடுகவே
கம்மிய கருமுகில் வண்ணன திளையவ
      ளம்மனை யாடுகவே

அம்மல ரினில்வரு மம்மைச வுந்தரி
      யம்மனை யாடுகவே
அம்மனை யுந்தரு மெம்மனை சீர்பெறு
      மம்மனை யாடுகவே. 10

அம்மானைப்பருவம் முற்றிற்று
~~~~~~~~~~~~~~~~~~~~~

9. நீராடற்பருவம்

கண்ணினை விளங்குசெங் கழுநீர் மலர்ந்திடுங்
      காட்சியைப் போன்றுசெப்பக்
கள்ளவிழ்த் திலகியிடு வள்ளிதழ்க் குமுதநின்
      கனிவாய்ம லர்ந்துவெளிற

எண்ணுசூல் வளையினொடு வால்வளை யொலித்திட
      விளஞ்சினை வராலோடிவந்
தேக்குற்று நின்றுநின் கால்கண்டு மால்கொண்
      டினைந்திடச் சேறுள்ளியே

தண்ணமுத நோக்கை யெதிர்நோக்கி நோக்கித்திரிதரத்
      தரணியுண்ட நெடியோன்
தாணினைய வேபெருகி வருகின்ற வரிநதித்
      தண்ணந்து றைக்குவிந்த

வெண்மணற் குன்றேறி யோடிவிளை யாடுகிளி
      வெள்ளநீ ராடியருளே
விள்ளுநாண் மலர்வீழி வள்ளல்பா லுறைமாது
      வெள்ளநீராடியருளே. 1
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அளிதூங் கிசைச்செழும் பண்கனிந் தாய்மல
      ரணிந்திடுகு ழற்கற்றைசூழ்ந்
தாடிப்ப சுஞ்சுண்ண மெய்திமிர்ந் தூதிமொய்த்
      தாலித்தெ ழுந்துதொடரக்

களியோங்க மெல்லென நடந்துமயி லகவுபொழில்
      காவதநெ ருங்கிவாசங்
கமழ்நெடுங் கரையேறி யரிசொலாற் றனுநலங்
      கவினுமொண் டுறைபடிந்து

துளிதூங்கு தண்ணங் குறுந்திவ லைபொங்கத்
      துணைச்சிலம் பொலியொலிப்பத்
தூயதீம் புனல்குடைந் தாடுதோ ழியரொடு
      துவாதசாந் தத்துமேலாம்

வெளிதேங்கு மானந்த வெள்ளைவடி வான்கிளி
      வெள்ளநீ ராடியருளே
விள்ளுநாண் மலர்வீழி வள்ளல்பா லுறைமாது
      வெள்ளநீ ராடியருளே. 2
~~~~~~~~~~~~~~~~~~~~~~
அண்டமுக டதிர்தரக் கொண்டல் குமுறிப்பரந்
      தார்த்திடித் திலகிமின்னி
அங்கண்வா னுலகளந் தவனெனவ ளர்ந்தோங்கி
      யலகில்பல வளநிறைந்த

தண்டலையு டுத்துநிறை சையமால் வரைதனிற்
      சலசலென் றொளிதிகழ்மழைத்
தாரைகான் றொழியாது பொழியவழி தருமருவி
      தண்முத்து மாலைபோன்றே

மண்டுபுகழ் கொண்டபூ மாதுளம கிழ்ச்சிபெற
      வந்துதிரு மிழலைசூழ்ந்தே
மன்னுயிர் தமக்கெலா மன்னை தன்முகமென
      மலர்ந்தமுத நல்கிமாறா

வெண்டிரை சுருட்டிவரு பொன்னித்து றைக்கிறைவி
      வெள்ளநீ ராடியருளே
விள்ளுநாண் மலர்வீழி வள்ளல்பா லுறைமாது
      வெள்ளநீ ராடியருளே. 3
~~~~~~~~~~~~~~~~~~~~
அரிதீர்த்த மருவுதிரு வேணிசங் கமபற்ப
      மயறீர்த்த மிந்திரதீர்த்தம்
அடல்பெருகு மியமனது தீர்த்தம்வரு ணன்றீர்த்த
      மளகையா திபனமைத்து

வருதீர்த்த மறைநெறி வழாதகௌ தமதீர்த்த
      மார்க்கண்ட தீர்த்தமகிமை
வளரும்விசு வாமித்திர தீர்த்தமொடு தீர்த்தமலர்
      வாழ்பிரம தீர்த்தம்வாணி

புரிதீர்த்த மேன்மைபெறு காயத்திரி சாவித்திரி
      புவிமாது பூமாதுபாற்
புகழ்பத்திர வல்லிபார் வதியுருத் திரர்கபிலர்
      புனைதீர்த்த மொடுபரந்து

விரிதீர்த்த மிருபதிற் றைந்தினுநி றைந்திலகும்
      வெள்ளநீ ராடியருளே
விள்ளுநாண் மலர்வீழி வள்ளல்பா லுறைமாது
      வெள்ளநீ ராடியருளே.       4
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பூவைமேனி யனினைய வொருகூறு விட்டிலகு
      பூந்துருத்திக் குமேல்பாற்
பொன்னிநதி தென்முகந் தொண்ணூற்றி யொன்பது
      பொருந்துகூற் றொடுபிரிந்தே

தாவில்வந் தெழில்பரவு சைவலங் கூர்தறண்
      டாமரைப்பூ முகங்கண்
டங்குமீன் சங்கங் கழுத்துப் பருத்திடுத
      னஞ்சக்கர வாகமுந்தி

பரவுசுழல் வெண்மணற் குன்றுபிற் றட்டுப்
      படிந்திடுமி ளஞ்சினைவராற்
பண்புபெறு கால்கைத் தரங்கம மிரங்கியிடு
      பரவைக்கு ரற்றுதியதாய்

மேவும்வள ரரிநதிப ரந்ததீம்புனல் பெருகும்
      வெள்ளநீ ராடியருளே
விள்ளுநாண் மலர்வீழி வள்ளல்பா லுறைமாது
      வெள்ளநீ ராடியருளே.       5
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கண்ணொக்கு நெய்தல்செங் கழுநீரும் வள்ளவாய்க்
      கமலமுஞ்சாய்த் துழுதிடுங்
கழனிதனி லள்ளற்க ருஞ்சேற்றி னிடைசூழ்ந்து
      கடைசியர்கள் குரவைபாட

எண்ணிக்கை யிடவரிய வால்வளைக ளிடறிநுண்
      ணிடைதேம்ப நடவெழுந்தே
எழில்பெரு குகாவிரிப் புனல் கால்பரந்து
      பாய்ந்திட வீழிமிழலைவாழ

வண்ணக்கு ருத்துவிட் டோங்கியி லைமரகத
      மணித்தகடு போன்றுவிரிய
மாணிக்கம டலவிழும் வாழைகுலை சாய்த்தென
      வளைந்தநெற் கதிர்நுனிதொறும்

வெண்முத்த மீன்றிலகு சோழவள நாட்டரசி
      வெள்ளநீ ராடியருளே
விள்ளுநாண் மலர்வீழி வள்ளல்பா லுறைமாது
      வெள்ளநீ ராடியருளே.       6
~~~~~~~~~~~~~~~~~~~
வேறு
தங்குங்கரட மதஞ்சொரியுந் தறுக்கட்சீற்றப்
      பரூஉத் தடக்கைத்
தந்திமருப் பும்வெண்ணி லவுந்தவழ்
      தண்டரள மணிக்குவையுங்

கொங்குண்ட லர்ந்தநறும லருங்குடவால்
      வளையுமி ருமருங்குங்
கொழித்துப் புளினந்தொறு மொதிக்கிக்
      குழைந்துதழைந்து திகழ்ந்தோங்குஞ்

செங்குங்குமத் தின்றடஞ்சி னையுந்திகழ்
      காழகிலு நறுங்குறடுஞ்
சேரமுறித்துக் கரையில் வைத்துத்திரைக்
      கையதனா லரைத்திரைந்து

பொங்கும் பொன்னித்து றைக்கரசிபுது
      நீராடிய ருளுகவே
புகழ்சேர் வீழிநகர்மணி யேபுது
      நீராடிய ருளுகவே.       7
~~~~~~~~~~~~~~~~~~~~~
வழிந்துமதுரத் தமிழ்தழைந்து மணக்குங்
      குடமா முனிகடத்தின்
மருவிக்குலி சப்படைதாங் கும்வானத்
      தரசுவருந் திநின்று

தொழும்பண் பினுக்குமகங் குழைந்து
      துதிக்கைக்கடவுட் சையவரை
சூழவத னிற்கவிழ்த் திடலுந்தூய
      தீர்த்தம்பெ ருக்கெடுத்துக்

கொழுந்து தவழ்ந்து பொன்கொழித்துக்
      குலவுங்கல வைச்சேறளைந்து
குளிர்மென் மலர்பொற் சுண்ணம்விரை
      குழுமுங்கெழும் பட்டாடையுந்திப்

பொழிந்துவருங் காவிரிச் செழுந்தண்புது
      நீராடிய ருளுகவே
புகழ்சேர் வீழிநகர் மணியேபுது
      நீராடிய ருளுகவே.       8
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேறு
திகழ்பொற் சிவிறி கரத்தி லெடுத்துத்
தெளியும் பனிநீரிற்
றெளிகுங் குமவிழு தளவிக் களபச்
சேறுநி மிர்ந்திலகி

நிகழ்பொற் கலவைக ணிறையப் பெய்தெதிர்
      நின்றிடு தோழியர்தம்
நிகழ்முக மீதினி லேறிய சிறிதுளி
      நீள்கால் கொண்டுவிழும்

மகிழ்நற் செவ்வி யிளம்ப ருதிக்கதிர்
      வளர்பங் கயமலர்மேல்
வந்துவி ழுந்துத வழ்ந்திடு மாட்சி
      மதித்திட மூவுலகும்

புகழ்பெற் றிடுமர கதமெய்க் கொடிநிறை
      புதுநீரா டுகவே
பொழிலுற் றுயர்திரு மிழலைக் கிளிவரு
      புதுநீரா டுகவே.       9
~~~~~~~~~~~~~~~~~~~~~~
செங்கய லோடிவி ழிக்கடை கண்டு
      திகைத்திடை தடுமாறச்
செம்பது மந்திரு முகமதி வெள்கித்
      தெளிநீ ருட்புகுதச்

சங்குக ளந்தனை யுன்னி யளைந்து
      தளர்ந்துமு கஞ்சுரியத்
தண்குமு தம்மமு தந்தரு செவ்வாய்
      தனைநினை வொடுசாயக்

குங்கும மிலகுகு ழம்புநி றைந்திடு
      குளிர்பொற் சிவிறியினைக்
குலவிய தோழியர் மீதிலெ றிந்தெழு
      குளிர்நகை யினிதாடிப்

பொங்கிவ ழிந்துசு ழித்துநு ரைத்தெழு
      புதுநீ ராடுகவே
பொழில் பரவுந்திரு மிழலை யிளங்கிளி
      புதுநீ ராடுகவே.       10

நீராடற்பருவம் முற்றிற்று
~~~~~~~~~~~~~~~~~~~~~~

10. ஊசற்பருவம்

தேசுபெறு நவரத்ன மணிவைத்தி ழைத்திடுஞ்
      சித்ரமண்ட பநாப்பணிற்
றெளிநிலாத் தவழ்தருஞ் சந்த்ரகாந் தத்தகடு
      சேர்த்தொப்ப மிட்டதலமேற்

பாசொளிய மரகதப் பைங்கான் மிசைச்செழும்
      பவளங்க டைந்தெடுத்துப்
பாய்ச்சுநெடு விட்டத்தி னிட்டபொற் கொலுசினிற்
      பகர்நிலத்தி லந்தொடுத்த

வீசுமொழு கொளிவடம் பூட்டியொண் சுடர்தாவி
      மிளிர்வச்சிரப் பலகைமேல்
வீற்றிருந் தானந்த வடிவந்த ழைத்திட
      விளங்கிநால் வேதநிறையும்

பூசுரர்கள் மாடமலி வீழிநகர் வாழ்செல்வி
      பொன்னூச லாடியருளே
புந்தியம் புயமிசை வளர்ந்த சுந்தரவல்லி
      பொன்னூச லாடியருளே.       1
~~~~~~~~~~~~~~~~~~~~
கொத்துமுத் துச்சரப் பணியாட வணிமகர
      குண்டலம சைந்தாடவார்
குழையாட வச்சிரக் கொப்பாட நவமணி
      குயின்றதா டங்கமாட

முத்துவாளியு மசைந்தாட வொளிர்மா ணிக்கமுழு
      மணிபதித்து வாய்ந்த
முதிர்பசும் பொற்சோ டசைந்து நின்றாட
            விளமுறுவல் வெண்ணிலவுமா

நித்திலச் சுட்டியுங் கட்டுபொற் பட்டமு
நினதுதிரு நுதனிறைந்து
நின்றாட வொருகோடி சூரியனுதித் தென்ன
      நிகழ்தரு பதக்கமாடப்

புத்தமுத மொழுகுமுத் தமிழ்மிழலை வாழ்செல்வி
      பொன்னூச லாடியருளே
புந்தியம் புயமிசை வளர்ந்தசுந் தரவல்லி
      பொன்னூச லாடியருளே       2
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அரிபரந் தஞ்சனந் தீட்டியயில் வேலைவென்
      றம்பலைத்த மிழ்தினிடைவந்
தணிநீலமணி கிடந்தன்ன வாய்க்கு ழைபொருதி
      யங்கயலெ னப்பிறழ்ந்து

விரிகதிரி மைக்கும்வாள் விழியிலகு திருமகளும்
      வெண்டாமரைப் போதின்மேல்
வீற்றிருந் திடுதூவி யன்னமென வேயெழில்
      விளங்குபா மகளுமேவும்

வரியளி துதைந்தாடு கூந்தலம் பிடியென
      வயங்குமயி ராணியும்பூண்
மலியிரதி நால்வரும் வடந்தொட்டு நின்றாட்ட
      மங்களநிறைந் தவடிவாய்ப்

புரிதிகழு நெடுவீதி வீழிநகர் வாழ்செல்வி
      பொன்னூச லாடியருளே
புந்தியம் புயமிசை வளர்ந்தசுந் தரவல்லி
      பொன்னூச லாடியருளே.       3
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொஞ்சியி டுபச்சைப் பசுங்கிளிய சைந்துநின்
      கோல்வளைக் கையிலாடக்
குலவுமா ணிக்கங் குயிற்றியிடு கடகமொடு
      குளிர்செழும் பவளமாட

வஞ்சிநுண் ணிடைதுவண் டாடவொளி மேகலை
      மருங்கிற் கிரங்கியாட
வளரொட்டி யாணமுந் தங்கவரை ஞாணும்
      வலஞ்சூழ்ந் திலங்கியாட

அஞ்சிறைத் தும்பியொடு மழலைவண் டூதிமல
      ரணிகுழற் கற்றையாட
அம்பொன் மோகனமாலை மார்பிற்கி டந்தாட
      வானந்த வெள்ளமிர்தப்

புஞ்சைவடி வாய்நின்று வீழிநகர் வாழ்செல்வி
      பொன்னூச லாடியருளே
புந்தியம் புயமிசை வளர்ந்தசுந் தரவல்லி
      பொன்னூச லாடியருளே.       4
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முழுமதிவி ளங்குநின் முகமண்ட லந்தன்னில்
      முத்துமூக் குத்திதிகழ
முல்லையி னரும்புசெம் பவளவள் ளத்தின்வளர்
      முறைமைதனை முறுவல்காட்டக்

கொழுதியிள வண்டுமுரல் கூந்தலிற் கைதையங்
      கொழுமலரும் வேர்கொழுந்துங்
குளிர்ந்த செங்கழுநீரு மல்லிகை யினாரமுங்
      குலவுசெண் பகமாலையும்

ஒழுகியபசுந் தேன்சொரிந் திடக்கற்பூ ரமோங்கு
      பொற்சுண்ணம் விரைத்தோய்ந்
துலவுமான் மதமினிய குங்குமக் கலவையுட
      னொளிர்நறுஞ் சாந்தம்விரைவிப்

புழுகுபன் னீர்கமழ வீழிநகர் வாழ்செல்வி
      பொன்னூச லாடியருளே
புந்தியம் புயமிசை வளர்ந்தசுந் தரவல்லி
      பொன்னூச லாடியருளே.       5
~~~~~~~~~~~~~~~~~~~~
வாஞ்சைசெய் கலிங்கநகர் வாழ்தெய்வ விரதன்மகன்
      சுந்தரன் பின்னவன்
மருவுசுகு மாரனிவ ரிருவருந் தந்தையுடன்
      மாய்ந்தபின் கிரிகைசெய்யார்

காஞ்சியிலெ டுத்துவந் திடுதனம் பொதுமகளிர்
      கைக்கொடுத் துந்திருடியுங்
காமனுக காலைசிவ கதைபடித் திடுமிடங்
      கண்ணுறப்பெ ரியோர்க்குமுன்

தாஞ்செயும் பலவுணவு தருபயன் கூட்டவே
      தாழ்களவு விட்டிரந்தித்
தலபுரா ணத்திங்க ளைந்துகேட் டரசராய்த்
      தகுமெழுத் தளவுகாலம்

பூஞ்சிவ புரத்துறைந் தனரென வுரைத்தகிளி
      பொன்னூச லாடியருளே
புந்தியம் புயமிசை வளர்ந்தசுந் தரவல்லி
      பொன்னூச லாடியருளே.       6
~~~~~~~~~~~~~~~~~~~~~~
மருவுசீர் பெறுதுசா ரோகணமி ருகசீரிடம்
      வளர்சருவ தோபத்திரம்
மகிமைபெறு மிரதமுத் திரமுநவமி நாள்சித்திரை
      வாழ்வுதரு தீர்த்தமெனவே

உரிமைபெறு சைவமென் றுரைபெறு புராணத்து
      ருத்திரசங்கிதை யிலுண்மை
ஓங்குசேத் திரகாண்ட மதுதனிற் றொண்ணூற்றி
      னோரத்தியாய முதலாம்

அருமைமிகு தேசினிவனப் பெருமை சூதமுனியாய்ந்
      துரைத்த னனிரதமேல்
ஐயனைத் தரிசனஞ்செய்தவர் கடலைமுறைமை
      யவரோடிருபத் தொருவரும்

பொருவுகரை யேறுவர்க ளென்னுமுரை தழைகவே
      பொன்னூச லாடியருளே
புந்தியம் புயமிசை வளர்ந்தசுந் தரவல்லி
      பொன்னூச லாடியருளே.       7
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அஞ்சிலம் போலிட வரிர்குரற் கிண்கிணி
      யரற்றுசெஞ் சீரடியுதைந்
தாடுந்தொறுஞ் செழும்பைந் தளிர்தளிர்த் திலகி
      யணிமலர்ச் சோகுபூப்பப்

பஞ்சவன்னக் கிளிகள் போலுநின் சேடியர்கள்
      பண்புறத் தழுவிநின்றும்
பார்த்தும்விளி செய்துமே பூத்தமலர் சினைதொறும்
      பரிமளங்க மழவாய்த்த

வஞ்சிநுண் ணிடைதுவள வால்வளை கலீரென்ன
      வளருமணி மேகலைதனில்
வழியுமொழு கொளிதிகழ முகமண்ட லந்தனில்
      மணிமுறுவல் வண்டளவரும்

புஞ்சிலஞ் சாந்தீன்ற கலியாண வல்லிநிறை
      பொன்னூச லாடியருளே
புந்தியம் புயமிசை வளர்சுந் தரவல்லி
      பொன்னூச லாடியருளே.       8
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திங்களணி திருநுத லிலங்குகுங் குமமுந்தி
      ருந்துமொழு கொளிமூக்குநற்
செம்பவள விதழும்விற் புருவமுங் கண்ணாடி
      திகழ்தருக போலவொளியும்

மங்களநி றைந்தமுக மண்டலம் விளங்கவளர்
      வள்ளைவார் காதிலசைய
மகரகுண் டலமும்வேல் விழியினையு நீருண்டு
      வருகொண்டல் போற்றழைந்த

கொங்கவிழ் நறுங்குழலு மிலகமா மயிலெனக்
      குலவுமொள் ளொளியபவளக்
கொழுங்கா னிறுத்தியிந் திரநீலவட் டமேற்
      கொளுவியம் பொன்னிழைத்த

பொங்குமணி மாடநிறை வீழிநகர் வாழ்செல்வி
      பொன்னூச லாடியருளே
புந்தியம் புயமிசை வளர்ந்தசுந் தரவல்லி
      பொன்னூச லாடியருளே.       9
~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோலோக மீதிலகு காமதேனுப் பொழி
      கொழும்பாலி னடிசினல்கக்
குலவும்வா னவர்செழும் பூமாரி பொழியக்
      குபேரனவ நிதியளிப்ப

மாலோகை புரிதரத் திருவாழி தருமையன்
      மகிழ்விண்ணி ழிந்துவந்து
வளர்கின்ற காத்தியா யினியம்மை நின்றிரு
      மணக்கோல மருவிநிற்பச்

சாலோகசா மீபசாரூ பசாயுச்சிய சன்மார்க்க
      பதவி நான்குந்
தகுபெருங் கருணையா லடியவர் தமக்கெலாந்
      தருகுவனெனக் கனிந்து

பூலோக கைலாச வீழிநகர் வாழ்செல்வி
      பொன்னூச லாடியருளே
புந்தியம் புயமிசை வளர்ந்த சுந்தரவல்லி
      பொன்னூச லாடியருளே.       10
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கருணைபுரி நால்வேதம் வாழியா கமம்வாழி
      கலைநிறைபு ராணம்வாழி
கங்கைமுத லானநதி வாழிமறை யவர்வாழி
      கபிலையினம்வாழி வாழி

வருணநான் காச்சிரமம் வாழிவான் மழைவாழி
      வானுலகம் வாழிதஞ்சை
மகாராசன் வாழிசெங் கோல்வாழி யுயர்சோழ
      வளநாடு வாழிவாழி

அருணிறை சிவாக்கிர யோகிக்கு ருபரன்
      பெருகுமாதீ னம்வாழிவீழி
அந்தணர் கள்வாழிமா நகர்வாழி மைந்தருட
      னனைவர்களும் வாழிவாழி

தரணிமுழு தும்பெற் றெடுத்துத்த ளர்ந்துமெய்
      தவழ்ந்தசிறு பெண்பிள்ளையாய்த்
தவழ்ந்தசுந் தரகுசாம் பிகைவாழி யவள்புகழ்த்
      தமிழோங்கி மிகவாழியே.

ஊசற்பருவம் முற்றிற்று.
திருவீழிமிழலை அழகியமாமுலையம்மை பிள்ளைத் தமிழ் முற்றிற்று.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

This file was last updated on 29 Oct 2023.
Feel free to send the corrections to the webmaster "pmadurai AT gmail.com"