pm logo

"Bharati Patalkal" - English Translation,
edited by Sekkizhar-Adi-p-Podi T.N. Ramachandran
part 2 (songs 51-70)


பாரதியார் பாடல்கள் - ஆங்கில மொழிபெயர்ப்பு
தி. நா. இராமசந்திரன் (தொகுப்பு),
பாகம் 2(பாடல்கள் 51-70)
In unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

BHARATI PATALKAL
English Translation - part 2 (verses 51-70)
edited by T.N. Ramachandran

Source:
BHARATI PATALKAL
Edited by Sekkizhar Adi-p-Podi T.N. RAMACHANDRAN
TAMIL UNIVERSITY, THANJAVUR Tamil Nadu - India
ISBN: 81-7090-137-5
Tamil University Publication No. : 117
Thiruvalluvar Year 2020; Purattasi - October 1989
Title : Bharati Patalkal :
Editor T. N. Ramachandran
Price : Rs. 100-00
Edition : First - 1989
Press : Tamil University (Offset) Press, Thanjavur - 613 001.
------------
"தராதலத்துப் பாஷைகளில், அண்ணல் தந்த
தமிழ்ப் பாட்டை மொழி பெயர்த்தால் தெரியும் சேதி!"
- பாரதிதாசன்
------------
உள்ளடக்கம்

51. துடிக்கின்ற நெஞ்சம்
52. திசை
53. உனைக் கூறப் பிழை இல்லை
54. கலியு முடிவு
55. கடல்
56. வெறி கொண்ட தாய்
57. வந்திலரேல்
58. சுதந்திர தேவியின் துதி
59. மாதாவின் துவஜம்
60. நிதானக் கட்சியார் கூட்டடம் சுதேசியத்தைப் பழித்தல்
61. பாரத தேவியின் அடிமை
62. ஸ்வதந்திரப் பள்ளு
63. மஹாசக்திக்கு விண்ணப்பம் (எண்ணிய முடிதல்)
64. மஹாசக்தி
65. மஹாசக்திக்கு விண்ணப்பம் (மோகத்தைக்)
66. பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி
67. தெளிவு
68. மஹாசக்திக்கு விண்ணப்பம் (அறிவிலே
69. சாதாரண வருஷத்துத் தூமகேது
70. கனவு (பாரதியார் தன்வரலாறு)
---------------

51. துடிக்கின்ற நெஞ்சம்

(பாரத ஜனங்களின்‌ தற்கால நிலை)
(தொண்டிச்‌ ந்து]

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த
      நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்‌
அஞ்சி யஞ்சிச்‌ சாவார்‌ - இவர்‌
      அஞ்சாத பொருளில்லை யவனியிலே,
வஞ்சனைப்‌ பேய்க ளென்பார்‌ - இந்த
      மரத்திலென்பச ரந்தக்‌ குளத்திலென்பார்‌
துஞ்சுது முகட்டிலென்பார்‌ - மிகத்‌
      துயர்ப்படு வாரெண்ணிப்‌ பயப்படுவார்‌.       (நெ) 1

மந்திர வாதியென்பார்‌ - சொன்ன
      மாத்திரத்தி லேமனக்‌ கெலிபிடிப்பார்‌?
ய ந்திரஞ்‌ சூனியங்கள்‌* - இன்னும்‌
      எத்தனை யாயிர மிவர்துயர்கள்‌!
தந்த பொருளைக்கொண்டே - ஜனக்‌
      தாங்குல ௬கைத்தி லரசரெல்லாம்‌,
அந்த அரசியலை - இவர்‌
      அஞ்சுதரு பேவென்றெண்ணி கெஞ்சமயர்வார்‌       (நெ) 2

சிப்பாயைக்‌ கண்டஞ்சுவார்‌ - ஊர்ச்‌
      சேவகன்‌ வருதல்கண்டு மனம்பதைப்பார்‌
துப்பாக்கி கொண்டொருவள்‌ - வெகு
      தூரத்தில்‌ வரக்கண்டு வீட்டி லொளிப்பார்‌.
அப்பா லெவனோ செல்வான்‌ - அவன்‌
      ஆடையைக்‌ கண்டுபயங்‌ தெழுந்து நிற்பார்‌
எப்போதுங்‌ கைகட்டுவார்‌ - இவர்‌
      யாரிடத்தும்‌ பூனைகள்போ லேங்கி நடப்பார்‌. (நெ) 3

277. நெஞ்சு பொறுக்குதில்லையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்‌.
கொஞ்சமோ பிரிவினைகள்‌! - ஒரு
கோடியென்‌ நாலது பெரிதாமோ?
அஞ்சுதலைப்‌” பாம்பென்பான்‌ - அப்பன்‌,
ஆறுதலை யென்றுமகன்‌ சொல்லிவிட்டால்‌
நெஞ்சு பிரிந்து விடுவார்‌ - பின்பு
நெடுநா ளிருவரும்‌ பகைத்திருப்மார்‌.       (நெ) 4

சாத்திரங்க ளொன்றும்காணார்‌ - பொய்ச்‌
      சாத்திரிப்‌ பேய்கள்சொலும்‌* வார்த்தைநம்பியே
கோத்திரமொன்‌ நாயிருக்தாலும்‌ - ஓரு
      கொள்கையிற்‌ பிரிந்தவனைக்‌ குலைத்திகழ்வார்‌
தோத்திரங்கள்‌ சொல்லியிவர்தாம்‌ - தமைச்‌
      சூதுசெயு னீசர்களைப்‌ பணிந்திடுவார்‌ - (ஆனால்‌)
ஆத்திரங்கொண் டேயிவன்சைவன்‌ - இவன்‌
      அரிபக்த ளென்றுபெருஞ்‌ சண்டையிடுவார்‌.       (நெ) 5

நெஞ்சு பொறுக்குதில்லையே" - இதை
      நினைந்து கினைந்தினும்‌ வெறுக்குதில்லையே
கஞ்சி குடிப்பதற்கில்லார்‌ - அதன்‌
      காரணங்க எிவையெனு மறிவுமிலார்‌
பஞ்சமோ பஞ்சமென்றே - நிதம்‌
      பரதவித்‌ தேயுயிர்‌ துடிதுடித்துத்‌
துஞ்சி மடிகின்றாரே - இவர்‌
      துயர்களைத்‌ தீர்க்குவொர்‌ வழிமில்லையே       (நெ) 6

எண்ணிலா நோயுடையார்‌ - இவர்‌
      எழுந்து ஈடப்பதற்கும்‌ வலிமையிலார்‌ |
கண்ணிலாக்‌ குழந்தைகள்போல்‌ - பிறர்‌
      காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள்வார்‌ |
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
      நாலா யிரங்கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டிலே - இவர்
      பொறியந்த விலங்குகள் போலாவாழ்வார்.       ( நெ) 7
-------------

51. The Present Condition of the Indians (13-3-1909).

1. It is beyond heart's endurance
When thought hovers on these debased,
They fear, they dread and they perish;
This world for them is full of fear.
"Vile demons haunt this tree -- nay, haunt
That tank--nay, nay, are deep asleep
On the hill-top." Thus they assert
And grieve much, thinking fear-breeding thoughts.

2. They will say: "Lo, the necromancer!"
This said, gripped by fear they will quake.
Mumbo-jumbo! Thaumaturgy:
How many are the troubles of these!
Kings after all govern their subjects
With taxes collected from people;
But to these, the very government
Is dreadful as a fearful ghoul.

3. The sight of soldiers puts fear in them;
Village menials affright them;
When at great distance they see one
With a gun, they will hide in the house.
Someone goes somewhere; eyeing his dress
These stand up and shake in fear.
Before all men, with folded hands,
They ever behave like cringing cats.

4. It is beyond heart's endurance
When thought hovers on these debased.
Are their factions but a very few?
Shall we say: 'Ten million!' Nay, more.
The father says: "A five-headed snake!"
Should his son call it "six-headed"
They are at once sundered, alas!
For years they will remain as foes.

5. They know not the import of sastras
They will believe the words of them
The sastri-fiends but blame him --
The righteous one of their own clan.
Yet will they praise and obey too
The base who are out to trap them.
In wrath they wrangle, dubbing men
As Siva's servitors and Hari's.

6. It is beyond heart's endurance
Yet my thought is untinged by hate.
They do not even have conjee to drink;
They know not the reason therefor.
They wallow in famine and daily
Tremble and suffer in distress
And perish in misery; there is
No way to ward off their sorrows.

7. Their maladies are legion; .
They have no strength to stand or walk;
Like eyeless babes led by others
These too fare forth and get ensnared.
In this country that once fostered
Billions and billions of great arts,
In this very country holy
These vegetate like senseless brutes.

- Thiru T.N.Ramachandran

Note: The Tamil original appeared in Indid. The words used by Bharati in
line 2 of stanza 5 are சாத்திரிப் பேய்கள் and not சாத்திரப் பேய்கள்.
----------------

52. திசை

ஒருநொடிப்‌ பொழுதி லோர்பத்‌
      தொன்பதா யிரமாங்‌ காதம்‌
வருதிற் லுடைத்தாஞ்‌ சோதிக்‌
      குதிரென வகுப்ப ரான்றோர்‌
கருதவு மரிய தம்ம!
      கதிருடை விரைவு மஃது
பருதியி னின்றோ ரெட்டு
      வி நாடியிற் பரவு மீங்கே. 1

உண்டொரு வான்மீ னஃதை
      யூணர்கள்‌ ஸிரிய ஸென்ப
சுண்டவம்‌ மீனின்‌ முன்னை
      விரைவொடு கதிர்தா னிந்த
மண்டலத்‌ தெய்த மூவாண்‌
      டாமென மதிப்ப ராயின்‌
எண்டரற்‌ கெளிதோ அம்மீன்‌
      எத்தனை தொலைய தென்றே. 2

கேட்டிரோ நார்காள்‌, வானிற்‌
      கிடக்குமெண்‌ ணரிய மீனிற்‌
காட்டிய வதுதான்‌ பூமிக்‌
      கடுகினுக்‌ கணித்தா மென்பர்‌
மீட்டுமோ ராண்டு மூவா
      மிரத்தினில்‌ விரைந்தோர்‌ மீனின்‌
ஓட்டிய கதிர்தா னிங்ஙன்‌
      உற்றிடும்‌ தகைத்து முண்டே! 3

மானுடக்‌ கிருமி கோடி
      வருத்தத்தாற்‌ பயின்று கண்ட
ஊனுறு கருவி யாலிஃ
      துணர்ந்ததென்‌ றுணரு வீரால்‌.
தானுமிக்‌ கருவி காணத்‌
      தகாப்பெருங்‌ தொலைய வாகு
மீனுள கோடி கோடி
      மேற்பல கோடி யென்பர்‌. 4

அறிவெனும்‌ புள்ளு மெய்த்தங்‌
      கயர்வொடு மீளுங்‌ கண்டீர்‌
செறியுமித்‌ திசைதா னெல்லை
      யிலதெனச்‌ செப்பு மாற்றம்‌
பொறிதவிர்க்‌ துரைத்த லன்றிப்‌
      பொருளிதென்‌ றுளத்தி னுள்ளே
குறிதரக்‌ கொள்ள லாமோ?
      கொஞ்சமோ திசையின்‌ வெள்ளம்‌. 5
------------------

52. Sirius (3-4-1909).

1. In one moment light travels, the scholars say,
Nineteen thousand katam; such is its speed;
It is indeed difficult to comprehend it.
The sun's light reaches us in eight minutes.

2. Westerners speak of a star called Sirius, it is reckoned
That its rays, travelling at the same speed
Take three years to reach this mantala -- the earth;
If so, is it easy for thought to fix its distance?

3. Oh men, hear this! This star among the innumerable stars,
It is said, is nearest to the earth--a mere millet.
Again there is a star whose rays take
Three thousand light years to reach the earth.

4. Know that the human insects with manifold pains
Devised but defective instruments to discover these (stars).
And there are billions and billions of stars far, far away
Which cannot be spotted through these tools at all.

5. The bird of intellect that soars returns fatigued;
The dictum that the expansive directions are boundless
Exceeds sense-perception; is beyond mind's comprehension.
Endless indeed is the vastitude of the direction!

-Thiru T.N.Ramachandran
Note: The Tamil original appeared in India. This poem was lost sight of by all the editors of Bharati's works, so far. It is reproduced for the first time by the Tamil University.
------------

53. உனைக்‌ கூறப்‌ பிழை இல்லை

அன்னாயிவய்‌ குனைக்கூறப்‌ பிழையில்லை,
      யாமேநின்‌ அருள்பெற்‌ றோங்க
என்னானுந்‌ தகுதியிலேம்‌ மிகப்பொல்லேம்‌
      பழியுடையேம்‌ இழிவு சான்றேம்‌
பொன்னான வழியகற்றிப்‌ புலைவழியே
      செல்லுமியல்‌ பொருந்தி யுள்ளேம்‌
தன்னால்வந்‌ திடுநலத்தைத்‌ தலிர்த்துப்போய்த்‌
      தீமையினைத்‌ தழுவு கின்றேம்‌. 1

எல்லையிலாக்‌ கருணையுறுந்‌ தெய்வதநீ
      யெவர்க்குமன மிரங்கி நிற்பாய்‌
தொல்லையெலாற்‌ தவிர்த்தெங்கள்‌ கண்காண
      நொடிப்பொழுதில்‌ துருக்கி மாந்தர்‌
நல்லபெரும்‌ பதங்காணப்‌ புரிந்திட்டாய்‌
      பலகால ஈவைகொண்‌் டன்னார்‌
சொல்லரிய பிழைசெய்த தத்தனையு
      மறந்தவரைத்‌ தொழும்புகொண்டாய்‌, 2
------------


53. We Cannot Blame You (8-5-1909)

1. O Mother, we cannot blame you;
Your grace we are unfit to receive
To flourish; very bad are we,
Base and utterly blame-worthy.
It is not in our nature to tread
The golden path; base ways are ours.
We forsake the good that seeks us
And embrace evil falsity.

2. Endless is your mercy; to all
You show pity; in a bare trice
Banishing all troubles, oh Goddess,
Before our very eyes, you made
The Turks rise to goodly greatness.
Evil-prone, for good many years
They wrought unspeakable crimes foul;
Them you ignored and enslaved them.

3. If for even a split second
With purity thrice-blest, we cannot
Hail you with such words as, "Mother!
Sea of wisdom and grace benign!
Great Goddess! Ens Supreme! Save us!"
And cry out, and are unwilling
To hail your names, but choose to wilt,
Mother, can we ever blame you?

4. Who can protect the insect small
Which into flame willingly falls?
If by grace we put out a lamp
It will wing round and round and then fall
Into another lamp and perish.
If like that we but willingly
Fall into utter perdition
Mother, what is there for you to do?

5. In times past, when you did deign
To grant us all grace, we the brainless,
Did not bid you a warm welcome;
Nor did we choose to adore you;
We fought internecine battles
And were smitten to smithereens.
When now you come again, we keep
Our visages turned away in shame.

-Thiru T.N.Ramachandran
(To be continued)
Note: The Tamil original appeared in India. Bharati's desire to continue
the poem did not fructify.
------------
54. கலியுக முடிவு

291. மிகப்பொன்‌ னுடையோன்‌. மிகஅதைச்‌ சிதறுவோன்‌
அவனே வலியனாய்‌ ஆணைதான்‌ செலுத்துவன்‌.
பாத்திரந் தவறிப்‌ பைம்பொன்‌ வழங்கலே
தவமென முடியும்‌. தையலார்‌ நாணிலா(து),
ஆட்சியை விரும்புவர்‌. அவனியை யாள்வோர்‌       5

குடிகளி னுடைமையைக்‌ கொள்ளையிட்‌ டழிப்பர்‌,
பொய்யுரை கூறி வணிகர்தம்‌ பொருளைக்‌
கவர்வர்‌, இவ்வுலகத்‌ திறுதிமின்‌ கண்ணே
மக்களின்‌ அரனெலா மயங்கிநின்‌ நிடுமால்‌,
பொருட்காப்‌ பென்பது போய்ப்பெருங்‌ கேடுறும்‌.       10
------------

54. The End of Kali Yuga (5-6-1909)

The one that owns much gold will scatter it;
That one, grown strong, will rule with an iron-will.
That will be deemed as tapas to gift away
Gold to the wrong ones; women--all shameless--,
Will desire to rule; they that rule the world
Will loot the subjects and will waste it all.
With false words, they will confiscate the wealth
Of merchants. As the world doth near its end
All piety of people will 'wildered be;
Protection will cease; evil will be afoot.

- Thiru T.N.Ramachandran
Note: The Tamil original appeared in India. The Tamil version is a rendering of an English poem by Mrs. Flora Annie Steel. Mrs. Steel composed the poem to deride the budget presented by Lloyd George.
----------
55 கடல்

கடலே காற்றைப் பரப்புகின்றது.விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல் நீர் அந்தச் சுழற்சியிலே தலைகீழாகக் கவிழ்ந்து திசை வெளியில் ஏன் சிதறிப் போய்விடவில்லை?
பராசக்தியின் ஆணை. அவள் நமது தலைமீது கடல்வீழ்ந்து விடாதபடி ஆதரிக்கிறாள்.

அவள் திருநாமம் வாழ்க. கடல் பெரிய ஏரி; விசாலமான குளம்; பெருங் கிணறு; கிணறு நம் தலையிலே கவிழ்கிறதா? அதுபற்றியே கடலும் கவிழவில்லை. பராசக்தியின் ஆணை.

அவள் மண்ணிலே ஆகர்ஷணத் திறமையை நிறுத்தினாள். அது பொருள்களை நிலைப்படுத்துகின்றது. மலை நமது தலைமேலே புரளவில்லை. கடல் நமது தலைமேலே கவிழவில்லை. ஊர்கள் கலைந்து போகவில்லை. உலகம் எல்லா வகையிலும் இயல் பெறுகின்றது. இஃதெல்லாம் அவளுடைய திருவருள். அவள் திருவருளை வாழ்த்துகின்றோம்.

2

வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந் வெம்மை குன்றிய பிரதேசங்களுக்குக் காற்று ஓடிவருகின்றது. அங்ஙகனம்,ஓடி வரும்போது காற்று மேகங்களையும் ஓட்டிக் கொண்டு வருகிறது. இவ்வண்ணம் நமக்கு வரும் மழை கடற் பாரிசங்களிலிருந்தே வருகிறது.

காற்றே, உயிர்க் கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர் மழை கொண்டுவா. உனக்குத் தூபதீபங்கள் ஏற்றிவைக்கிறோம். வருணா, இந்திரா, நீவிர் வாழ்க இப்போது நல்ல மழை பெய்யும்படி அருள் புரிய வேண்டும்.

எங்களுடைய புலங்களெல்லாம் காய்ந்து போய்விட்டன. சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்று காலிகளுக்கும் நோய் வருகிறது.அதனை மாற்றியருள வேண்டும்.

பகல் நேரங்களிலே அனல் பொறுக்க முடியவில்லை. மனம் ‘ஹா ஹா’ வென்று பறக்கிறது.

பறவைகளெல்லாம் வாட்டமெய்தி நிழலுக்காகப் பொந்துகளில் மறைந்து கிடக்கின்றன. பல தினங்களாக, மாலைதோறும் மேகங்கள் வந்து கூடுகின்றன.

மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய்,ஓரிலை கூட அசையாமல், புழுக்கம் கொடிதாக இருக்கிறது. சிறிது பொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து மேகங்களை அடித்துத் துரத்திக்கொண்டு போகின்றன. இப்படிப் பல நாட்களாக ஏமாந்து போகிறோம்.

இந்திரா, வருணா, அர்யமா, பகா, மித்திரா, உங்கள் கருணையைப் பாடுகிறேன். எங்கள் தாபமெல்லாந் தீர்ந்து, உலகம் தழைக்குமாறு, இன்ப மழை பெய்தல் வேண்டும்.
--------------

55. To the Sea (12-6-1909)

O grey wild sea,
Thou has a message, thunderer, for me.
Their huge wide backs
Thy monstrous billows raise, abysmal cracks
Dug deep between.
One pale boat flutters over them, hardly seen.
I hear thy roar Call me,
"Why dost thou linger on the shore
With fearful eyes
Watching my tops visit their foam-washed skies?
This trivial boat
Dares my vast battering billows and can float.
Death if it find,
Are there not many thousands left behind?
Dare my wide roar,
Nor cling like cowards to the easy shore.
Come down and know
What rapture lives in danger and o'erthrow."
Yes, thou great sea,
I am more mighty and outbillow thee. .
On thy tops I rise;
'Tis an excuse to dally with the skies.
I sink below
The bottom of the clamorous world to know.
On the safe land
To linger is to lose what God has planned
For man's wide soul,
Who set eternal godhead for its goal.
Therefore he arrayed
Danger and difficulty like seas and made
Pain and defeat,
And put His giant snares around our feet.
The cloud He informs
With thunder and assails us with His storms,
That man may grow
King over pain and victor of o'erthrow
Matching his great
Unconquerable soul with adverse Fate.
Take me, be
My way to climb the heavens, thou rude great sea.
I will seize thy mane,
O lion, I will tame thee and disdain;
Or else below
Into thy salt abysmal caverns go,
Receive thy weight
Upon me and be stubborn as my Fate.
I come, O Sea,
To measure my enormous self with thee.

- Sri Aurobindo
Note: The Poem printed here is the original. Bharati's translation in Tamil of this poem appeared in India.
---------------
56 வெறி கொண்ட தாய்

ராகம்-ஆபோகி தாளம்-ரூபகம்

1.
பேயவள் காண்எங்கள் அன்னை-பெரும்
பித்துடை யாள்எங்கள் அன்னை
காயழல் ஏந்திய பித்தன்-தனைக்
காதலிப் பாள்எங்கள் அன்னை. (பேயவள்)

2.
இன்னிசை யாம்இன்பக் கடலில்-எழுந்து
எற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடம் மூழ்கித் திளைப்பாள்-அங்குத்
தாவிக் குதிப்பாள்எம் அன்னை. (பேயவள்)

3.
தீஞ்சொற் கவிதையஞ் சோலை-தனில்
தெய்விக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி-மதுத்
தேக்கி நடிப்பாள்எம் அன்னை. (பேயவள்)

4.
வேதங்கள் பாடுவள் காணீர்-உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருஞ் சாத்திரம் கோடி-உணர்ந்
தோதி யுலகெங்கும் விதைப்பாள். (பேயவள்)

5.
பாரதப் போரெனில் எளிதோ?-விறற்
பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்
மாரதர் கோடிவந் தாலும்-கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள். (பேயவள்)
---------------

56. The Frenzied Mother (4-9-1909)

1. Our Mother--a demon is She
Full of frenzy wild and fury.
Her lover is a madman of ire
Whose palm doth sport the blazing fire.

2. In the melodic sea dulcet
Where tossing billows fume and fret
Leaps the Mother in great joyance
And there doth dance in all pleasance.

3. In poesy-haunting Eden
With divine fragrance well-laden,
Decked with flowers of sweet honey
She dances in drunken harmony.

4. The Vedic hymns, in joy, She sings
With Spear of Truth, Her canter rings.
She strews sastras, the Mother kind
Within the reach of all mankind.

5. The Bharat War! How great was it
Blazed Arjuna's bow, by Her lit.
Million heroes opposing, She
Slays in a trice, in gory glee.

- Thiru T.N.Ramachandran
Note: The Tamil original appeared in India.
----------------

57. வந்திலரேல்

விந்தைத்‌ திலகரர விந்தரொடு பாலர்பதி
சிந்தைச்‌ சிதம்பரமாஞ்‌ செம்மலுமே - வக்திலரேல்‌
ஆதரமா மன்னை வளநாடெங்‌ கேவந்தே
மாதரமா மந்திரமெங்‌ கே.
------------

57. On V.O.C. and Others (11-9-1909.)

If there had not been born in India the wondrous Tilak
Aurobindo, Bipin Chandra Pal, Lala Lajpat Rai,
And that good-hearted gentleman Chidambaram, where
Would our fertile and loving mother-country be, where
Would the great mantra-Vande Mataram--be?

- Prof. R.E.Asher
Note: The Tamil original appeared in India. It is prefixed to an article of
Bharati, entitled "V.O.Chidambaram and Coimbatore-jail".
---------------
58. சுதந்திர தேவியின் துதி

இதந்தரு மனையின் நீங்கி
      இடர்மிகு சிறைப்பட் டாலும்,
பதந்திரு இரண்டும் மாறிப்
      பழிமிகுத் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
      விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
      தொழுதிடல் மறக்கி லேனே. 1

நின்னருள் பெற்றி லாதார்
      நிகரிலாச் செல்வ ரேனும்
பன்னருங் கல்வி கேள்வி,
      படைத்துயர்ந் திட்டா ரேனும்,
பின்னரும் எண்ணி லாத
      பெருமையிற் சிறந்தா ரேனும்,
அன்னவர் வாழ்க்கை பாழாம்,
      அணிகள்வேய் பிணத்தோ டொப்பார்.       2

தேவி!நின் னொளிபெ றாத
      தேயமோர் தேய மாமோ?
ஆவியங் குண்டோ? செம்மை
      அறிவுண்டோ?ஆக்க முண்டோ?
காவிய நூல்கள் ஞானக்
      கலைகள் வேதங்க ளுண்டோ!
பாவிய ரன்றோ நின்தன்
      பாலனம் படைத்தி லாதார்?       3

ஒழிவறு நோயிற் சாவார்,
      ஊக்கமொன் றறிய மாட்டார்;
கழிவறு மாக்க ளெல்லாம்
      இகழ்ந்திடக் கடையில் நிற்பார்;
இழிவறு வாழ்க்கை தேரார்,
      கனவினும் இன்பங் காணார்;
அழிவறு பெருமை நல்கும்
      அன்னை!நின் அருள்பெ றாதார்.       4
வேறு

தேவி!நின்னருள் தேடி யுளந்தவித்து
ஆவி யும்தம தன்பும் அளிப்பவர்
மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்
தாவில் வானுல கென்னத் தகுவதே       5

அம்மை உன்தன் அருமை யறிகிலார்
செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார்;
இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை
வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே.       6

மேற்றி சைப்பல நாட்டினர் வீரத்தால்
போற்றி நின்னைப் புதுநிலை யெய்தினர்;
கூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும்நின்
பேற்றி னைப்பெறு வேமெனல் பேணினர்.       7

அன்ன தம்மைகொள் நின்னை அடியனேன்
என்ன கூறி இசைத்திட வல்லனே?
பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின்
சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன்.       8

பேர றத்தினைப் பேணுநல் வேலியே!
சோர வாழ்க்கை, துயர், மிடி யாதிய
கார றுக்கக் கதித்திடு சோதியே!
வீர ருக்கமு தே!நினை வேண்டுவேன்.       9
-------------

58. Hymn to the Goddess of Liberty

1. Bereft of the comforts of home
Were I to be gaoled in woe,
Altered, both in estate and wealth
Shame-rife, to fall in disgrace low;
Or a million misfortunes varied
Transpiring were to rout me,
Goddess liberty! even then,
I will not forget to worship thee.

2. Those unblessed of thy divine grace
Be they rich beyond all compare
Be they exalted, versed in lores
Taught and heard, numerous and rare
Besides in innumerable
Virtues others let them excel.
Of what use the life such as theirs?
A dead carcass adorned in jewel.

3. Goddess! the land shorn of thy light
Do we call that a nation? Say,
Will there be life? Have they knowledge
And uprightness? And wealth, have they?
Are there epics? Have they the arts
Scientific, the Vedas? Nay.
To forgo the ministrations
Of thy grace, sinners, aren't they?

4. They will die of incurable sickness
Willless to ken a zest for life;
Insulted even by the brutes
Infamous, they'll stand last in strife;
They know not the life free from blame
Eyeless to joys even in dream;
They, who, devoid of thy grace,
Mother! who gifts immortal fame.

5. Goddess seeking thy grace, distressed in heart,
Those who offer their lives, and also their love
Though, condemned in fell gaol, they stand and smart,
They deem it as blameless heavens above.

6. Mother! those who know not thy virtues rare
And think the disgraceful slavery, great.
The golden dome that worldly joys prepare
They must shun as dire gaol of hellish state?

7. They of many western lands, a new state
Achieved, through fair courage, applauding thee.
"Lives in crores to Death we will consecrate
To win thy grace" -- so did they cherish thee.

8. Thou, of such wondrous aspect resplendent
Worded how can thy servant hymn thy praise,
Born in a wasting wasted land fragment,
Lost in pride, unhonoured by thy signal grace?

9. Thou strong fence that fends justice great and right!
A life of stealth, sorrows and poverty
Which darkness to quell shine thy rays
Oh Light! Nectar of the heroes! I pray to thee.

- Prof. S.Raman
------------------
59. மாதாவின் துவஜம்
பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்

(தாயுமானவர் ஆனந்தக்களிப்பு வர்ணமெட்டு)

பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர் -- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
சரணங்கள்

1 ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்
அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)

2 பட்டுத் துகிலென லாமோ?
அதில் பாய்ந்து சுழற்றும்
பெரும்புயற் காற்று மட்டு மிகுந்தடித் தாலும்
அதை மதியாதவ் வுறுதிகொள்
மாணிக்கப படலம்.

3 இந்திரன் வச்சிரம்
ஓர்பால் அதில் எங்கள் துருக்கர்
இளம்பிறை ஓர்பால் (தாய்)
மந்திரம் நடுவுறத் தோன்றும்
அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?

4 கம்பத்தின் கீழ்நிற்றல்
காணீர் எங்கும் காணரும் வீரர்
பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர்அவ் வீரர்
தங்கள் நல்லுயிர் ஈந்தும்
கொடியினைக் காப்பார்.

5 அணியணி யாயவர்
நிற்கும் இந்த ஆரியக் காட்சியோர்
ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய
மார்பும் விறல் பைந்திரு வோங்கும்
வடிவமும் காணீர்!

6 செந்தமிழ் நாட்டுப் பொருநர்
கொடுந் தீக்கண் மறவர்கள்,சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர்
தாயின் சேவடிக் கேபணி செய்திடு துளுவர்,

7 கன்னடர் ஒட்டிய ரோடு்
போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்.
பொன்னகர்த் தேவர்க
ளொப்ப நிற்கும் பொற்புடையார் இந்து ஸ்தானத்து மல்லர்,

8 பூதலம் முற்றிடும், வரையும்
அறப் போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்
சிந்தை துணிந்த தெலுங்கர்
பாரில் மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்,

9 பஞ்ச நதத்துப் பிறந்தோர்
முன்னைப் பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும தாயின்
பதத் தொண்டு நினைந்திடும்வங்கத்தி னோரும்,,

10 சேர்ந்ததைக் காப்பது காணீர்
அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத
நிலத் தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)
------------------

59. The Beauteous Flag of the Mother

1. Behold the gem, the banner of Mother!
Come and humbly adore it and extol.

2. Tall stands the mast, and from its crest
The flag of red silken lustre wafts
With the well-printed dazzling words
Proclaiming 'Vande Mataram." Behold the gem ...

3. Is it a piece of mere silk? Into it
Blows and twirls a mighty cyclone;
Even when it rages excessively
It wafts serene a ruby-drift. Behold the gem ...

4. Indra's thunder-bolt and young crescent
Of our Muslims bedeck the flag;
At its midst is Mother's mantra;
Its majesty is ineffable. Behold the gem ...

5. Behold them beneath the mast
An immense throng of peerless heroes;
Tried and trusted and brave are these;
They may yield their life, but not the flag.
Behold the gem ...

6. Behold the phalanxes! is not
This noble sight a joy for ever?
Behold their bedecked chests and forms --
The abode of divine valour.
Behold the gem ...

7. Soldiers of Tamil-land, Maravas
Whose eyes blaze with raging fire,
Cera warriors, stout-hearted Andras
And Tuluvas devoted to Mother's feet

8. Kannadas, Odyas and Maratas
Whose might will put to fright even Death
And righteous wrestlers of India
In form very like the supernal lords.

9. Rajput heroes whose fame will not fade
Till the end of the entire world
Or as long as martial prowess. lasts
Or as long as chaste women breathe

10. The natives of Punjab and those of great realms
Whence heroes from Arjun onward took birth,
They of Bengal who even when they slumber
Forget not their devotion to the feet of Mother:

11. These have gathered here to guard it; behold this!
May their strong-willed bravery thrive for ever!
May the banner of Mother-Bharat
By these adored, flourish in fame for ever!

- Thiru T.N.Ramachandran
Note: The Tamil original formed part of Janma Bhumi -- 1909.
----------------

60. நிதானக்கட்சியார்‌ கூட்டம்

சுதேூயத்தைப்‌ பழித்தல்‌

(நந்தனார்‌ சரித்திரத்தலேயே சேரிப்‌ பறையா்களெல்‌லோரும்‌ ஒன்றுசேர்த்து
நந்தனாரையும்‌ அவரது சுட்ரியாரையும்‌ பழிக்கன்றார்கள்‌. சேரியிலே
மாட்டிறைச்சி யுண்டு புலைவாழ்வு வாழ்ந்துகொண்டு ஆண்டைப்‌ பார்ப்பானுக்கு
அடிமை செய்வதே சொர்க்கமென்‌ றறியாமல்‌, சிதம்பரப்‌ பயித்தியங்‌ கொண்டு
அலையும்‌ நந்தனாராலும்‌, அவருடைய சீடர்களாலும்‌ பெரிய கேடுகள்‌
விளையக்கூடு மென்று வருத்தங்‌ கொண்டு அப்‌ பறையர்கள்‌ **நாம்‌, என்ன செய்வோம்‌,
புலையரே . இந்தப்‌ பூ.சியிலில்லாத புதுமையைக்‌ கண்டோம்‌” என்று யோசிக்கிறார்கள்‌.
அந்தப்‌ பாட்டின்‌ கருத்தையும்‌ வர்ணமெட்டையுந்‌ தழுலிப்‌ பின்வரும்‌ பாடல்‌
எழுதப்பட்‌ டிருக்கின்றது. இந்தப்‌ பாட்டிலே மேத்தா, கோகலே முதலிய நிதானஸ்தர்கள்‌
நமது தேசவிமோசன மென்னுஞ்‌ சிதம்பரத்தை எண்ணி ஆசை கொண்டு பரவச
நிலையி லிருக்குந்‌ இலக முனிவசாலும்‌, அவரது கட்சியாராலும்‌ நாட்டிற்குக்‌
கெடுதி விளைய மென்று பேசும்‌ விஷயங்கள்‌ அமைக்கப்பட்‌ டிருக்கிறன.)

இராகம்‌ புன்னாக வராஸி - தாளம்‌ ரூபகம்‌

பல்லவி
நாமென்ன செய்வோம்‌, துணைவரே- இந்த
பூமியி லில்லாத புதுமையைக்‌ கண்டோம்‌       ( நா) 1

சரணங்கள்
திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு
செம்மையும்‌ தீமையுமில்‌ லாமலே போச்சு
பலதிசை யுந்துஷ்டர்‌ கூட்டங்க ளாச்சு
பையல்கள்‌ கெஞ்சில்‌ பயமெனபநே போச்சு       (நா) 2

தேசத்தி லெண்ணற்ற பேர்களுங்‌ கெட்டார்‌
செய்யுந்‌ தொழில்முறை யாவையும்‌ விட்டார்‌
பேசவோர்‌ வார்த்தை தாதாசொல்லி விட்டார்‌
பின்வர வறியாமல்‌ சுதந்திரம்‌ தொட்டார்‌.       (நா) 3

பட்டம்பெற்‌ றோர்க்குமதிப்‌ பென்பது மில்லை
பரதேசப்‌ பேச்சில்‌ மயங்குபவ ரில்லை
சட்ட மறந்தோர்க்குப்‌ பூஜைகுறை வில்லை
சர்க்காரிடஞ்‌ சொல்லிப்‌ பார்த்தும்பய னில்லை.       (நா) 4

சீமைத்‌ துணியென்றா லுள்ளங்‌ கொதிக்கிறார்‌
சீரில்லை யென்றாலோ எட்டி மிதிக்கிறார்‌
தாமெத்தை யோ“ வந்தே'' யென்று துதிக்கிறார்‌
தரமற்ற வார்த்தைகள்‌ பேசிக்‌ குதிக்கிறார்‌.       (நா) 5
------------

60. The Moderates Go Desperate (1909)

1. What can we do friends? This is a wonder
Hitherto unbeknown to this our world.

2. It is all because of 'Tilak,
Gone are good and bad, that is our luck.
The evil gangs are everywhere,
The fellows have lost fear and care.

3. Many of this nation are spoiled,
From work and duty have recoiled.
Words of Dadhabhai hold sway,
Freedom they claim; it is their doomsday.

4. The titled are not respected,
The aliens' words are suspected.
Idolized are now the lawless,
Plaints to government are deemed useless.

5. At all foreign goods they flare up,
Dissent helps their wrath develop.
Something 'Vande' say they and are rapt;
Their speech and dance are in evil wrapt.

- Thiru T.N.Ramachandran
Note: The Tamil original forms part of Janma Bhumi -- 1909.
-----------------
61. பாரத தேவியின்‌ அடிமை

(நந்தன்‌ சரித்திரத்திலுள்ள "ஆண்டைக்‌ கடிமைக்‌ காரனல்லவே””* என்ற
பாட்டின்‌ வர்ண மெட்டையுங்‌ கருத்தையும்‌ பின்பற்றி எழுதப்பட்டது.)

பல்லவி

அந்நியர்தமக்‌ கடிமை யல்லவே - நான்‌
அந்நியர்தமக்‌ கடிமை யல்லவே.       1

சரணங்கள்‌

மன்னியபுகழ்ப்‌ பாரத தேவி
தன்னிருதாளிணைக்‌ கடிமைக்காரன்‌.       (அந்‌) 2

இலகுபெருங்குணம்‌ யாவைக்கு மெல்லையாம்‌
திலக முனிக்கொதந்த அடிமைக்‌ காரன்‌.       (அந்‌) 3

வெய்யசிறைக்குள்ளே புன்னகை யோடுபோம்‌
ஓயன்பூபேந்த்ரனுக்‌ கடிமைக்‌ காரன்‌.       ( அந்) 4
---------------

61. The Servitors of Bharata Devi

1. No slave to the aliens am I!
No slave to the aliens am 1!

2. A slave am I to the feet twain
Oh Bharat-Devi's gloried reign. 'No slave...

3. A slave am I to Tilak saint,
Apex of virtues and restraint. No slave ...

4. A slave am I of Lord Bhupendra
Who smiles in prison like Indra. No, slave ...

5. A slave am I to truthful Pal
Whom even Death cannot appal. No slave ...

6. Slave am I of Brahma Bhandava bold
Who even through fire did dharma uphold. No slave ...

- Thiru T.N.Ramachandran
Note: The Tamil original forms part of Janma Bhumi -- 1909.
----------------

62. சுதந்திரப் பள்ளு

பள்ளர் களியாட்டம்
ராகம்-வராளி தாளம்-ஆதி

பல்லவி
ஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே;
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று (ஆடுவோமே)

சரணங்கள்
1.
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வென்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே-பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே-நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடுவோமே)

2.
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம்
எல்லோரும் சமமென்பது உறுதி யாச்சு;
சங்குகொண்டே வெற்றி ஊது வோமே-இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓது வோமே (ஆடுவோமே)

3.
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே-பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே-இனி
நல்லோர் பெரிய ரென் னும் காலம் வந்ததே-கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே (ஆடுவோமே)

4.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம் (ஆடுவோமே)

5.
நாமிருக்கும் நாடுநமது என்ப தறிந்தோம்-இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்-இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்-பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடுவோமே)
---------

62. Pallar-Dance (1909)

Chorus:
Come, that we may sing,
For Freedom's bliss is ours!
Come, that we may dance,
For Liberty is ours!

1. A Brahmin no more will be hailed
As "Lord, Lord," again;
No more a white man in our land
As "Master" shall remain;
No more to those who would receive
Of such their alms, we bow,
Or bend to those who us deceive;
Never from now!

2. Hail Freedom! Freedom: everywhere
The word is trumpeted!
That we are brethren, equals born,
For certainty is said.
Come, take the gleaming ivory shells
And breathe, "The strife is done!"
That earth may listen, and earth may know
That we have won!

3. O joy! the time is come when one
Is only as his neighbour;
The cheats of pomp and foppery
Are gone from us forever;
Who are the great? Only the good;
And these shall great remain;
The evil men in fall have shown
Their strength is vain!

4. The sweated labour and the plough
Of us shall honoured be;
Vain revellers a target stand
Unto our mockery;
Shall we the fat unwholesome weed
Labour to water and save?
Or waste, in serving greedy drones,
Our life-blood brave?

5. This land beneath our feet, we know,
Sure, is our very own;
Its proud possession could belong
To us and us alone;
Nor would we slave to any soul,
Come from the whole wide earth and hoar;
The Perfect only, we would serve
For evermore.

-- Prof. Hephzibah Jesudasan
Note: The Tamil original forms part of Janma Bhumi -- 1909.
----------------

63. அன்னையை வேண்டுதல் / மஹாசக்திக்கு விண்ணப்பம்
வழமையானது

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே யெண்ணல் வேண்டும்
திண்னிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் லறிவு வேண்டும்

பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்மு னிங்கு
நசித்திடல் வேண்டு மன்னாய்.
-------------

63. Beseeching the Mother (February, 1910)

Thoughts and aims must come to pass:
And the mind shall think only good.
A stout and sturdy heart I seek,
And a clear, lucid intellect.
All the sins that I have done,
Like mist before the rising sun,
Should by thy Grace dissolved be,
Mother! as I stand before thee!

- Prof. K.G.Seshadri
Note: The Tamil original appeared in Karma-Yogi.
----------------

64. மஹா சக்தி

சந்திர னொளியில் அவளைக் கண்டேன்,
சரண மென்று புகுந்து கொண்டேன்;
இந்திரி யங்களை வென்று விட்டேன்,
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்.

பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்,
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்;
துயரி லாதெனைச் செய்து விட்டாள்,
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்.

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்;
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்;
வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்,
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்.
------------


64. Maha Sakti (February, 1910)

1. Finding her glistening in the moonlight,
I took sudden refuge in her;
I have subdued the senses at last,
and demolished vain Desire.

2. She made the glitter of the Stars
The motion of the wind that blows
The vastness of the ethereal space,
And the joy in my heart-praise Be!

3. She said: "Serve me and thrive,
and mind not the fruits of action."
she has chased all sorrows away
and wedded me to Joy.

- Dr. Prema Nandakumar
Note: The Tamil original appeared in Karma-Yogi.
The translation here published follows the version of Karma-Yogi.
-----------------

65 மஹாசக்திக்கு விண்ணப்பம்

மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன்
      மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு-அல்லா லதில்
      சிந்தனை மாய்த்துவிடு;
யோகத் திருத்திவிடு-அல்லா லென்தன்
      ஊனைச் சிதைத்துவிடு;
ஏகத் திருந்துலகம்-இங்குள்ளன
      யாவையும் செய்பவளே! 1

பந்தத்தை நீக்கிவிடு-அல்லா லுயிர்ப்
      பாரத்தைப் போக்கிவிடு;
சிந்தை தெளிவாக்கு-அல்லா லிதைச்
      செத்த வுடலாக்கு;
இந்தப் பதர்களையே-நெல்லாமென
      எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே-உள்ளே நின்று
      இயங்கி யிருப்பவளே. 2

உள்ளம் குளிராதோ?-பொய்யாணவ
      ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ?-அம்மா!பக்திக்
      கண்ணீர் பெருகாதோ?
வெள் ளைக் கருணையிலே இந்நாய் சிறு
      வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே அனைத்திலும்
      மேவி யிருப்பவளே! 3
----------------


65. Prayer To Mahasakti

1. Destroy all my delusion
Or else cease my breath;
Fell to the ground my frame
Or slay the thought within;
Set me firm in Yoga true,
Or mangle all my flesh:
O thou who madest all this world
From thy monadic state divine.

2. Bondage all remove,
Or away my burden of life;
Make clear my intellect,
Or make me a lifeless corse;
Shall these be deemed as grain,
That are but empty chaff?
O thou who movest all things
As Mahasakti immanent.

3. Won't ever my pretence melt, Mother
And tears flow, of devotion prire?
Won't my heart become pellucid
And my flawed ago false, perish?
Won't the flood of thy Grace slake
My currish hankerings for good?
Oh thou Ens Ineffable
That doth pervade everywhere!

- Prof. K.G.Seshadri
Note: The Tamil original appeared in Karma-Yogi. The translation here given follows the version of Karma-Yogi.
----------------

66. பாரதமாதா
திருப்பன்ளி எழுச்சி

பொழுது புலர்ந்தது, யாஞ்செய்த தவத்தால்‌;
      புன்மை யிருட்கணம்‌ போயின யாவும்‌।
எழுபசும்‌ பொற்சுடர்‌ எங்கணும்‌ பரவி
      யெழுந்து விளங்கிய தறிவெனும்‌ இரவி)
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்‌ கிங்கூன்‌
      தொண்டர்பல்‌ லாயிரர்‌ சூழ்ந்து நிற்கின்றோம்‌.
விழிதுயில்‌ கின்றனை பின்னுமெங்‌ தாயே,
      வியப்பிது காண்‌!பள்ளி மெழுந்தரு ளாயே. 1

புள்ளினம்‌ ஆர்த்தன, ஆர்த்தன முரசம்,
      பொங்கின தெங்குஞ்‌ சுதந்திர நாதம்‌
வெள்ளிய சங்க முழங்கின கேளாய்‌;
      வீதியெ லாமணி குற்றனர்‌ மாதர்‌!
தெள்ளிய அந்தணர்‌ வேதமும்‌ கின்றன்‌
      சீர்த்திரு நாமமும்‌ ஓதி நிற்‌ கின்றார்‌.
அள்ளிய தெள்ளமு தன்னையெ மன்னை
      ஆருமி ரேபள்ளி யெழுந்தரு ளாயே 2

பருதியின்‌ பேரொளி வானளிடைக்‌ கண்டோம்‌;
      பார்மிசை நின்னொளி காணுதற்‌ கலந்தோம்‌;
கருதிநின்‌ சேவடி யணிவதற்‌ கென்றே
      கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்‌;
சுருதிகள்‌ பயந்தனை! சாத்திரங்‌ கோடி
      சொல்லரு மாண்பின! ஈன்றனை யம்மே!
நிருதர்கள்‌ நடுக்குறச்‌ சூல்கரத்‌ தேற்றாய்‌,
      நிர்மலை யேபள்ளி யெழுந்தரு ளாயே!

நின்னெழில்‌ விழியருள்‌ காண்பதற்‌ கெங்கள்‌
      நெஞ்சகத்‌ தாவலை நீயறி யாயோ?
பொன்னனை யாய்வெண்‌ பனிமுடி, யிமையப்‌
      பொருப்பின னீந்த பெருந்தவப்‌ பொருளே!
என்னத வங்கள்செய்‌ தெத்தனை காலம்‌
      ஏங்குவம்‌ நின்னருட்‌ கேழையம்‌ யாமே?
இன்னமும்‌ துயிறுதி யேலிது நன்றோ?
      இன்னுஙி ரேப்பள்ளி? யெழுந்தரு எரயே! 4

மதலைய ரெழுப்பவுக்‌ தாய்துமில்‌ வாயோ?
      மாநிலம்‌ பெற்றவ ளிஃதுண ராயோ?
குதலிலை மொழிக்கிரங்‌ காதொரு தாயோ?
      கோமக ளேபெரும்‌ பாரதர்க்‌ கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டுங் கூறி
      வேண்டிய வாறுனைப் பாடுதுங் காணாய்,
இதமுற வந்தெமை யாண்டருள் செய்வாய்
      ஈன்றவ ளேப்பள்ளி யெழுந்தருள்வாயே.
---------------


66. Morning Hymn to Mother India

1. The day hath dawned;
Our austerities have fructified;
The vile forces of darkness have melted into thin air;.
The golden beams of the morning sun illumine all over;
The sun of wisdom shines in all its splendour.
Thousands on thousands are we, your votaries,
Gathered to praise you and pay you homage.
Amazing it is that you are still asleep
Arise, Awake, Mother dear.

2. Birds boom, drums din;
The song of freedom fills the air.
Listen, o, Listen to the blast of the conches.
Women fill the streets;
Wise Brahmins recite the vedas
And chant thy holy name.
Soul of my soul, pure ambrosia,
Arise, Mother, awake.

3. We behold the sky bathed in sunlight;
We long to see thy eyes floodlight the earth.
Our own loving hearts in bloom
We offer on your lotus-red feet.
O Mother of the Vedas and the numerous sciences
Whose excellence defies description
O Mother pure, whose trident caused
The demons to tremble, Awake.

4. Dost thou not know our heartfelt longing
to behold thy grace-raining eyes?
Golden one, Offspring of the snow-crowned
Lord of the Himalayas
How long should we, poor souls, yearn,
And what penances perform, for thy grace?
Is it proper that thou shouldst still slumber?
My life sweet, awake.

5. No mother remains asleep when her children call her
Mother of a vast country, canst thou not realise this?
What kind of mother is she
Who doesn't respond to infant's lisps?
Queen, sovereign of great Bharat:
In all your eighteen languages
We salute and extol thee in several ways.
Arise! Awake! thou who gavest birth to us
Bless us with thy benign reign.

-Prof. S.Ramakrishnan
----------------

67. தெளிவு

எல்லா மாகிக்‌ கலந்துநி றைந்தபின்‌
      ஏழைமை யுண்டோடா? - மனமே!
பொல்லாப்‌ புழுவுனைக்‌ கொல்ல நினைந்தபின்‌!
      புத்தி மயக்கமுண்டோ? i

உள்ள தெலாமோ ருலிரென்று கண்டபின்‌”
      உள்ளவ்‌ குலைவதுண்டோ? - மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு எாழ்ந்தபின்‌
      வேதனை பயுண்டோடா? 2

சித்தி னியல்பு மதன்பெருஞ்‌ சத்தியின்‌?
      செங்கையுக்‌ தேர்ந்துவிட்டால்‌ - மனமே!
எத்தனை கோடி யிடர்வந்து சூழினும்‌
      எண்ணஞ்‌ சிநிதுமுண்டோ? 3

செய்க செயல்கள்‌ சிவத்திடை நின்றெனத்‌
      தேவ னுபைத்தனனே - மனமே
பொய் கருதாம லதன்வழி நிற்பவர்
      பூதல மஞ்சுவாரோ

374. ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்
கச்சமு முண்டோடா - மனமே
தேன்மடை லிங்கு திறந்தது கண்டது
தேக்கித் திரிவோமடா.
--------------

67. Unit Universalised (February, 1910)

1. When merged and become universalised
Can ever the unit persist? Oh Mind!
When it is resolved to liquidate you,
O Mind, -- wicked worm --, can buddhi falter?
2. When dawns the knowledge, that all that exist
Are but one life, can the heart ever flounder?
When one is immersed in the flooding grace,
Can pain dare hold its sway, thereafter, aye?

3. If peerless knowledge of pure consciousness
And its puissance great is come by,
Oh Mind! What though the onslaught of countless troubles be,
Could they touch at all the thought of the freed?

4. "With your being firm established in Sivam
Perform your deeds". Thus spake the Deva Great.
Will they ever the world fear who travel
On the godly way from falsehood immune?

5. They swim and joy in the soul-sea of light;
Can fear near them, tell me Mind, you sirrah
Behold, the flood-gate of honey is flung open
We will dam it for our soul's irrigation.

-Thiru T.N.Ramachandran
Note: The Tamil griginal appeared in Karma-Yogi.
------------------

68. மஹாசக்திக்கு விண்ணப்பம்

எண்ணிய முடிதல் வேண்டும்
      நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
      தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
      பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
      நசித்திடல் வேண்டும் அன்னாய்.

-- 1910 ஆம் வருடப் பதிப்பு.
---------------

68. Petitioning Mahasakti

Clarity of intellect, firmness of heart,
An inwardly coursing flood of love,
Unique lordship over the senses,
Longing quest all the time after the way
Of Your grace and establishment
In Karma-Yoga: May you grant me these
O Supreme Ens that is without
Any mark or guna, but indeed is all.

-Thiru T.N.Ramachandran
Note: The Tamil original appeared in Karma-Yogi.
This poem was later added to the autobiography in verse (Kanavu), by Bharati.
---------------


69 சாதாரண வருஷத்துத் தூமகேது

தினையின் மீது பனைநின் றாங்கு
மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக்
ழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண் டிலகும்
தூம கேதுச் சுடரே,வாராய்!

எண்ணில் பல கோடி யோசனை யெல்லை
எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புனைந்த நின்னெடுவால் போவதென் கின்றார்.

மண்ணகத் தினையும் வால்கொடு தீண்டி
ஏழையர்க் கேதும் இடர்செயா தேநீ
போதி யென்கின்றார்;புதுமைகள் ஆயிரம்
நினைக்குறித் தறிஞர் நிகழ்த்துகின் றனரால்.

பாரத நாட்டில் பரவிய எம்மனோர்
நூற்கணம் மறந்துபன் னூறாண் டாயின;
உனதியல் அன்னியர் உரைத்தடக் கேட்டே
தெரிந்தனம்;எம்முளே தெளிந்தவர் ஈங்கிலை.

வாராய்,சுடரே!வார்த்தைசில கேட்பேன்;
தீயர்க் கெல்லாம் தீமைகள் விளைத்துத்
தொல்புவி யதனைத் துயர்க்கட லாழ்த்திநீ
போவை யென்கின்றார்; பொய்யோ,மெய்யோ?

ஆதித் தலைவி யாணையின் படிநீ
சலித்திடுந் தன்மையால்,தண்டம் நீ செய்வது
புவியினைப் புனிதமாப் புனைதற் கேயென
விளம்பு கின்றனர் அது மெய்யோ,பொய்யோ?

ஆண்டோர் எழுபத் தைந்தினில் ஒரு முறை
மண்ணைநீ அணுகும் வழக்கினை யாயினும்
இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்
விளையு மென்கின்றார்;மெய்யோ,பொய்யோ?

சித்திகள் பலவும்,சிறந்திடு ஞானமும்
மீட்டும் எம்மிடைநின் வரவினால் விளைவதாப்
புகலு கின்றனர்; அது பொய்யோ,மெய்யோ?
-------------

69. The Comet (March, 1910).

1. Like a palm tree set on a millet plant,
With a growing tail on a little star,
You blaze forth in kinship with eastern moon.
Oh lustrous comet! I bid you welcome.

2. You range over countless crores of yojnas;
They say your endless tail is wrought of gas
The softness of which is indeed peerless.

3. They aver that your tail touches the earth too
And you fare forth with no harm to the poor; .
The wise talk of your myriad marvels.

4. We that are over Bharath spread, have forgot
Long long ago the lore of works; we learnt
Of your nature true from aliens only;
None amongst us is with clarity blessed.

5. Come, Oh flame! I will put you some questions.
They say, you will cause harm to the evil.
And will immerse in a sea of misery
The ancient world. Is this true or untrue?

6. "By Her mandate great -- the Primal Goddess,
You fare forth executing punishment
Purging the world of its impurities
And making it pure" they say. True or false?

7. "It is a rule with you to appear once
In a cycle of seventy five years;
This time you will cause many marvels" say they.
I ask of you, if this be true or false.

- Thiru T.N.Ramachandran
Note: The Tamil original appeared in Karma-Yogi.
----------------

70. கனவு

“பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
மெல்லப் போனதுவே.” -- பட்டினத்துப் பிள்ளை

முன்னுரை

வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய
      மறைவ லோர்தம் உரைபிழை யன்றுகாண்;
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள்
      சரத மன்றெனல் யானும் அறிகுவேன்;
பாழ்க டந்த பரநிலை யென்றவர்
      பகரும் அந்நிலை பார்த்திலன் பார்மிசை;
ஊழ் கடந்து வருவதும் ஒன்றுண்டோ?
      உண்மை தன்னிலொர் பாதி யுணர்ந்திட்டேன். 1

மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
      மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்; தன்னுடை
      அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
      செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்;
      சிறிது காலம் பொறுத்தினுங் காண்பமே. 2

உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே
      உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
      கனவிலும் இங்கன வாகு இதனிடை
சிலதி னங்கள் உயிர்க்கமு தாகியே
      செப்பு தற்கரி தாகம யக்குமால்
திலத வாணுத லார்தரு மையலாந்
      தெய்வி கக்கன வன்னது வாழ்கவே.       3

ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஓடியும்
      ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினுமே
ஈண்டு பன்மரத் தேறியி றங்கியும்
      என்னொ டொத்த சிறியர் இருப்பரால்;
வேண்டு தந்தை விதிப்பினுக் கஞ்சியான்
      வீதி யாட்டங்க ளேதினுங் கூடிலேன்,
துண்டு நூற்கணத் தோடு தனியனாய்த்
      தோழமைபிறி தின்றி வருந்தினேன்.       4

பிள்ளைக் காதல்

அன்ன போழ்தினி லுற்ற கனவினை
      அந்தமிழ்ச்சொலில் எவ்வண்ணம்சொல்லுகேன்?
சொன்ன தீங்கன வங்குத் துயிலிடைத்
      தோய்ந்த தன்று, நனவிடைத் தோய்ந்ததால்;
மென்ன டைக்கனி யின்சொற்
      கருவிழி மேனி யெங்கும் நறுமலர் வீசிய
கன்னி யென்றுறு தெய்வத மொன்றனைக்
      கண்டு காதல் வெறியிற் கலந்தனன்.       5

‘ஒன்ப தாயபி ராயத்த ளென்விழிக்
      கோது காதைச் சகுந்தலை யொத்தனள்’
என்ப தார்க்கும் வியப்பினை நல்குமால்
      என்செய் கேன்? பழியென் மிசை யுண்டுகொல்?
அன்பெ னும்பெரு வெள்ளம் இழுக்குமேல்
      அதனை யாவர் பிழைத்திட வல்லரே?
முன்பு மாமுனி வோர்தமை வென்றவில்
      முன்ன ரேழைக் குழந்தையென் செய்வனே?       6

வயது முற்றிய பின்னுறு காதலே
      மாசு டைத்தது, தெய்விக மன்றுகாண்;
இயலு புன்மை யுடலினுக் கின்பெனும்
      எண்ண முஞ்சிறி தேன்றதக் காதலாம்;
நயமி குந்தனி மாதை மாமணம்
      நண்ணு பாலர் தமக்குரித் தாமன்றோ?
கயல்வி ழிச்சிறு மானினைக் காணநான்
      காம னம்புகள் என்னுயிர் கண்டவே.       7

கனகன் மைந்தன் குமர குருபரன்
      கனியும் ஞானசம் பந்தம் துருவன்மற்
றெனையர் பாலர் கடவுளர் மீதுதாம்
      எண்ணில் பக்திகொண் டின்னுயிர் வாட்டினோர்
மனதி லேபிறந் தோன்மன முண்ணுவோன்
      மதன தேவனுக் கென்னுயிர் நல்கினன்;
முனமு ரைத்தவர் வான்புகழ் பெற்றனர்;
      மூட னேன்பெற்ற தோதுவன் பின்னரே.       8

நீரெ டுத்து வருதற் கவள் மணி
      நித்தி லப்புன் னகைசுடர் வீசிடப்
போரெ டுத்து வருமதன் முன்செலப்
      போகும் வேளை யதற்குத் தினந்தொறும்
வேரெ டுத்துச் சுதந்திர நற்பயிர்
      வீந்திடச் செய்தல் வேண்டிய மன்னர்தம்
சீரெ டுத்த புலையியற் சாரர்கள்
      தேச பக்தர் வரவினைக் காத்தல் போல்       9

காத்தி ருந்தவள் போம்வழி முற்றிலும்
      கண்கள் பின்னழ கார்ந்து களித்திட
யாத்த தேருரு ளைப்படு மேழைதான்
      யாண்டு தேர்செலு மாங்கிழுப் புற்றெனக்
கோத்த சிந்தையோ டேகி யதில்மகிழ்
      கொண்டு நாட்கள் பலகழித் திட்டனன்;
பூத்த ஜோதி வதனல் திரும்புமேம்
      புலன ழிந்தொரு புத்துயி ரெய்துவேன்.       10

புலங்க ளோடு கரணமும் ஆவியும்
      போந்து நின்ற விருப்புடன் மானிடன்
நலங்க ளேது விரும்புவன் அங்கவை
      நண்ணு றப்பெறல் திண்ணம தாமென
இலங்கு நூலுணர் ஞானியர் கூறுவர்;
      யானும் மற்றது மெய்யெனத் தேர்ந்துளேன்;
விலங்கி யற்கை யிலையெனில் யாமெலாம்
      விரும்பு மட்டினில் விண்ணுற லாகுமே.       11

சூழு மாய வுலகினிற் காணுறுந்
      தோற்றம் யாவையும் மானத மாகுமால்;
ஆழு நெஞ்சகத் தாசையின் றுள்ளதேல்,
      அதனு டைப்பொருள் நாளை விளைந்திடும்
தாழு முள்ளத்தர், சோர்வினர், ஆடுபோல்
      தாவித் தாவிப் பலபொருள் நாடுவோர்,
வீழு மோரிடை யூற்றினுக் கஞ்சுவோர்,
      விரும்பும் யாவும் பெறாரிவர் தாமன்றே.       12

விதியை நோவர் தம் நண்பரைத் தூற்றுவர்,
      வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர்,
சதிகள் செய்வர்பொய்ச் சாத்திரம் பேசுவர்,
      சாத கங்கள் புரட்டுவர், பொய்மைசேர்
மதியி னிற்புலை நாத்திகங் கூறுவர்,
      மாய்ந்தி டாத நிறைந்த விருப்பமே
கதிகள் யாவும் தருமென லோர்ந்திடார்;
      கண்ணி லாதவர் போலத் திகைப்பர்காண்       13

கன்னி மீதுறு காதலின் ஏழையேன்
      கவலை யுற்றனன் கோடியென் சொல்லுகேன்?
பன்னி யாயிரங் கூறினும், பக்தியின்
      பான்மை நன்கு பகர்ந்திட லாகுமோ?
முன்னி வான்கொம்பிற் றேனுக் குழன்றதோர்
      முடவன் கால்கள் முழுமைகொண் டாலென
என்னி யன்றுமற் றெங்ஙனம் வாய்ந்ததோ
      என்னி டத்தவள் இங்கிதம் பூண்டதே!       14

காதலென்பதும் ஓர்வயின் நிற்குமேல்
      கடலின் வந்த கடுவினை யொக்குமால்;
ஏத மின்றி யிருபுடைத் தாமெனில்,
      இன்னமிர்தும் இணைசொல லாகுமோ?
ஓதொ ணாத பெருந்தவம் கூடினோர்
      உம்பர் வாழ்வினை யெள்ளிடும் வாழ்வினோர்
மாத ரார்மிசை தாமுறுங் காதலை
      மற்ற வர்தரப் பெற்றிடும் மாந்தரே!       15

மொய்க்கும் மேகத்தின் வாடிய மாமதி,
      மூடு வெம்பனிக் கீழுறு மென்மலர்,
கைக்கும் வேம்பு கலந்திடு செய்யபால்,
      காட்சி யற்ற கவினுறு நீள்விழி,
பொய்க் கிளைத்து வருந்திய மெய்யரோ
      பொன்ன னாரருள் பூண்டில ராமெனில்
கைக்கி ளைப்பெயர் கொண்ட பெருந்துயர்க்
      காத லஃது கருதவுந் தீயதால்.       16

தேவர் மன்னன் மிடிமையைப் பாடல்போல்
      தீய கைக்கிளை யானெவன் பாடுதல்?
ஆவல் கொண்ட அரும்பெறற் கன்னிதான்
      அன்பெ னக்கங் களித்திட லாயினள்;
பாவம் தீமை பழியெதுந் தேர்ந்திடோம்;
      பண்டைத் தேவ யுகத்து மனிதர்போல்
காவல் கட்டு விதிவழக் கென்றிடுங்
      கயவர் செய்திக ளேதும் அறிந்திலோம்.       17

கான கத்தில் இரண்டு பறவைகள்
      காத லுற்றது போலவும் ஆங்ஙனே
வான கத்தில் இயக்கரியக்கியர்
      மையல் கொண்டு மயங்குதல் போலவும்
ஊன கத்த துவட்டுறும் அன்புதான்
      ஒன்று மின்றி உயிர்களில் ஒன்றியே
தேன கத்த மணிமொழி யாளொடு
      தெய்வ நாட்கள் சிலகழித் தேனரோ.       18

ஆதி ரைத்திரு நாளொன்றிற் சங்கரன்
      ஆலயத்தொரு மண்டபந் தன்னில்யான்
சோதி மானொடு தன்னந் தனியனாய்ச்
      சொற்க ளாடி யிருப்ப, மற்றாங்கவள்
பாதி பேசி மறைந்துபின் தோன்றித்தன்
      பங்கயக் கையில் மைகொணர்ந்தே, ‘ஒரு
சேதி! நெற்றியில் பொட்டுவைப் பேன்’ என்றாள்;
      திலத மிட்டனள்; செய்கை யழிந்தனன்.       19

என்னை யீன்றெனக் கைந்து பிராயத்தில்
      ஏங்க விட்டுவிண் ணெய்திய தாய்தனை
முன்னை யீன்றவன், செந்தமிழ்ச் செய்யுளால்
      மூன்று போழ்துஞ் சிவனடி யேத்துவோன்,
அன்ன வன்தவப் பூசனை தீர்ந்தபின்
      அருச்ச னைப்படு தேமலர் கொண்டுயான்
பொன்னை யென்னுயிர் தன்னை யணுகலும்
      பூவை புன்னகை நன்மலர் பூப்பள் காண்.       20

ஆங்கிலப் பயிற்சி

நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்
      நேரு மாறெனை எந்தை பணித்தனன்;
புல்லை யுண்கென வாளரிச் சேயினைப்
      போக்கல் போலவும், ஊன்விலை வாணிகம்
நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை
      நாடு விப்பது போலவும், எந்தைதான்
அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை
      ஆரி யர்க்கிங் கருவருப் பாவதை       21

நரியு யிர்ச்சிறு சேவகர் தாதர்கள்
      நாயெ னத்திரி யொற்றர் உணவினைப்
பெரிதெ னக்கொடு தம்முயிர் விற்றிடும்
      பேடியர் பிறர்க் கிச்சகம் பேசுவோர்
கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங்
      கலைப யில்கென என்னை விடுத்தனன்.
அருமை மிக்க மயிலைப் பிரிந்துமிவ்
      அற்பர் கல்வியின் நெஞ்சு பொருந்துமோ?       22

கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்பின்
      கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
      ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்;
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்;
      வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்;
துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்
      சொல்லு வாரெட் டுணைப்பயன் கண்டிலார்.       23

கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
      காளி தாசன் கவிதை புனைந்ததும்,
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
      ஓர்ந்த ளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்,
நம்ப ருந்திற லோடொரு பாணினி
      ஞால மீதில் இலக்கணங் கண்டதும்,
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
      இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும்,       24

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்துத் தர்மம் வளர்த்ததும்,
பேர ருட்சுடர் வாள்கொண் டசோகனார்
பிழை படாது புவித்தலங் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்,       25

அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
      தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;
முன்ன நாடு திகழ்ந்த பெருமையும்
      மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்
      பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்;
என்ன கூறிமற் றெங்கன் உணர்த்துவேன்
      இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே!       26

{[மு.ப.]: ‘மோர்ந்த ளந்தொர் பாற்கரன் மாட்சியும்’}

சூதி லாத வுளத்தினன் எந்தைதான்
      சூழ்ந்தெ னக்கு நலஞ்செயல் நாடியே
ஏதி லர்தருங் கல்விப் படுகுழி
      ஏறி யுய்தற் கரிய கொடும்பிலம்
தீதி யன்ற மயக்கமும் ஐயமும்
      செய்கை யாவினு மேயசி ரத்தையும்
வாதும் பொய்மையும் என்ற விலங்கினம்
      வாழும் வெங்குகைக் கென்னை வழங்கினன். 27

ஐய ரென்றும் துரையென்றும் மற்றெனக்
      காங்கி லக்கலை யென்றொன் றுணர்த்திய
பொய்ய ருக்கிது கூறுவன், கேட்பீரேல்:
      ‘பொழுதெ லாமுங்கள் பாடத்தில் போக்கிநான்
மெய்ய யர்ந்து விழிகுழி வெய்திட
      வீறி ழந்தென துள்ளநொய் தாகிட
ஐயம் விஞ்சிச் சுதந்திர நீங்கியென்
      அறிவு வாரித் துரும்பென் றலைந்ததால்.’       28

செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது;
      தீதெ னக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன;
நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
      நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்.
சிலமுன் செய்நல் வினைப்பய னாலும்
      நந் தேவி பாரதத் தன்னை யருளினும்
அலைவு றுத்துநும் பேரிருள் வீழ்ந்துநான்
      அழிந்தி டாதொரு வாறுபி ழைத்ததே.       29

மணம்

நினைக்க நெஞ்ச முருகும்; பிறர்க்கிதை
நிகழ்த்த நாநனி கூசு மதன்றி்யே
எனைத்திங் கெண்ணி வருந்தியும் இவ்விடர்
யாங்ஙன் மாற்றுவ தென்பதும் ஓர்ந்திலம்

{[பாட பேதம்]: மன்றெனகு ‘கேட்பீரேல்’
‘சில முன் செய்தன நல்வினை யானுநந்’}

அனைத்தொர் செய்திமற் றேதெனிற் கூறுவேன்:
அம்ம! மாக்கள் மணமெனுஞ் செய்தியே.
வினைத் தொடர்களில் மானுட வாழ்க்கையுள்
மேவு மிம்மணம் போற்பிறி தின்றரோ.       30

வீடு றாவணம் யாப்பதை வீடென்பார்;
      மிகவி ழிந்த பொருளைப் பொருளென்பார்;
நாடுங் காலொர் மணமற்ற செய்கையை
      நல்ல தோர்மண மாமென நாட்டுவார்.
கூடு மாயிற் பிரம சரியங் கொள்;
      கூடு கின்றில தென்னிற் பிழைகள்செய்து
ஈட ழிந்து நரகவழிச் செல்வாய்.
      யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண்.       31

வசிட்ட ருக்கும் இராமற்கும் பின்னொரு
      வள்ளு வர்க்கும் முன் வாய்த்திட்ட மாதர்போல்
பசித்தொ ராயிரம் ஆண்டு தவஞ்செய்து
      பார்க்கி னும்பெறல் சால வரிதுகாண்.
புசிப்ப தும்பரின் நல்லமு தென்றெணிப்
      புலையர் விற்றிடும் கள்ளுண லாகுமோ?
அசுத்தர் சொல்வது கேட்கலிர், காளையீர்!
      ஆண்மை வேண்டின் மணஞ்செய்தல் ஓம்புமின்.       32

வேறு தேயத் தெவரெது செய்யினும்
      வீழ்ச்சி பெற்றவிப் பாரத நாட்டினில்
ஊற ழிந்து பிணமென வாழுமிவ்
      வூனம் நீக்க விரும்பும் இளையர்தாம்
கூறு மெந்தத் துயர்கள் விளையினும்
      கோடி மக்கள் பழிவந்து சூழினும்
நீறு பட்டவிப் பாழ்ச்செயல் மட்டினும்
      நெஞ்சத்தாலும் நினைப்ப தொழிகவே.       33

பால ருந்து மதலையர் தம்மையே
      பாத கக்கொடும் பாதகப் பாதகர்
மூலத் தோடு குலங்கெடல் நாடிய
      மூட மூடநிர் மூடப் புலையர்தாம்
கோல மாக மணத்திடைக் கூட்டுமிக்
      கொலையெ னுஞ்செய லொன்றினை யுள்ளவும்
சால வின்னுமோ ராயிர மாண்டிவர்
      தாத ராகி யழிகெனத் தோன்றுமே.       34

ஆங்கொர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
      ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன்;
ஈங்கொர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள்
      எந்தை வந்து மணம்புரி வித்தனன்.
தீங்கு மற்றிதி லுண்டென் றறிந்தவன்
      செய லெதிர்க்குந் திறனில னாயினேன்.
ஓங்கு காதற் றழலெவ் வளவென்றன்
      உளமெரித்துள தென்பதுங் கண்டிலேன்.       35

மற்றொர் பெண்ணை மணஞ்செய்த போழ்துமுன்
      மாத ராளிடைக் கொண்டதொர் காதல்தான்
நிற்றல் வேண்டு மெனவுளத் தெண்ணிலேன்;
      நினைவை யேயிம் மணத்திற் செலுத்திலேன்;
முற்றொ டர்பினி லுண்மை யிருந்ததால்
      மூண்ட பின்னதொர் கேளியென் றெண்ணினேனி
கற்றுங் கேட்டு மறிவு முதிருமுன்
      காத லொன்று கடமையொன் றாயின.       36

மதனன் செய்யும் மயக்க மொருவயின்;
      மாக்கள் செய்யும் பிணிப்புமற் றோர்வயின்;
இதனிற் பன்னிரண் டாட்டை யிளைஞனுக்
      கென்னை வேண்டும் இடர்க்குறு சூழ்ச்சிதான்?
எதனி லேனுங் கடமை விளையுமேல்
      எத்து யர்க ளுழன்றுமற் றென்செய்தும
அதனி லுண்மையோ டார்ந்திடல் சாலுமென்று
      அறம் விதிப்பதும் அப்பொழு தோர்ந்திலேன்.       37

சாத்தி ரங்கள் கிரியைகள் பூசைகள்
      சகுன மந்திரந் தாலி மணியெலாம்
யாத்தெ னைக்கொலை செய்தன ரல்லது
      யாது தர்ம முறையெனல் காட்டிலர்;
தீத்தி றன்கொள் அறிவற்ற பொய்ச்செயல்
      செய்து மற்றவை ஞான நெறியென்பர்;
மூத்த வர்வெறும் வேடத்தின் நிற்குங்கால்
      மூடப் பிள்ளை அறமெவணண் ஓர்வதே?       38

தந்தை வறுமை எய்திடல்

ஈங்கி தற்கிடை யெந்தை பெருந்துயர்
      எய்தி நின்றனன், தீய வறுமையான்;
ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும்
      ஊணர் செய்த சதியில் இழந்தனன்:
பாங்கி நின்று புகழ்ச்சிகள் பேசிய
      பண்டை நண்பர்கள் கைநெகிழ்த் தேகினர்.
வாங்கி யுய்ந்த கிளைஞரும் தாதரும்
      வாழ்வு தேய்ந்தபின் யாது மதிப்பரோ?       39

பார்ப்ப னக்குலங் கெட்டழி வெய்திய
      பாழ டைந்த கலியுக மாதலால்
வேர்ப்ப வேர்ப்பப் பொருள்செய்வ தொன்றையே
      மேன்மை கொண்ட தொழிலெனக் கொண்டனன்;
ஆர்ப்பு மிஞ்சப் பலபல வாணிகம்
      ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன்;
நீர்ப்ப டுஞ்சிறு புற்புத மாமது
      நீங்க வேயுளங் குன்றித் தளர்ந்தனன்.       40

தீய மாய வுலகிடை யொன்றினில்
      சிந்தை செய்து விடாயுறுங் காலதை
வாய டங்கமென் மேலும் பருகினும்
      மாயத் தாகம் தவிர்வது கண்டிலம்;
நேய முற்றது வந்து மிகமிக,
      நித்த லும்மதற் காசை வளருமால்.
காய முள்ள வரையுங் கிடைப்பினும்
      கயவர் மாய்வது காய்ந்த உளங்கொண்டே.       41

ஆசைக் கோரள வில்லை விடயத்துள்
      ஆழ்ந்த பின்னங் கமைதி யுண்டாமென
மோசம் போகலிர்’ என்றிடித் தோதிய
      மோனி தாளிணை முப்பொழு தேத்துவாம்;
தேசத்தார் புகழ் நுண்ணறி வோடுதான்
      திண்மை விஞ்சிய நெஞ்சின னாயினும்
நாசக் காசினில் ஆசையை நாட்டினன்
      நல்லன் எந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன்.       42

பொருட் பெருமை

பொருளி லார்க்கிலை யிவ்வுல கென்றநம்
      புலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்றுகாண்.
பொருளி லார்க்கின மில்லை, துணையிலை,
      பொழு தெலாமிடர் வெள்ளம்வந் தெற்றுமால்.
பொருளிலார் பொருள் செய்தல் முதற்கடன்.
      போற்றிக் காசினுக் கேங்கி யுயிர்விடும்
மருளர் தம்மிசை யேபழி கூறுவன்:
      மாமகட்கிங்கொர் ஊன முரைத்திலன்.       43

அறமொன் றேதரும் மெய்யின்பம் என்றநல்
      லறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்;
பிறவி ரும்பி உலகினில் யான்பட்ட
      பீழை எத்தனை கோடி! நினைக்கவும்
திறன ழிந்தென் மனமுடை வெய்துமால்.
      தேசத் துள்ள இளைஞர் அறிமினோ!
அறமொன் றேதரும் மெய்யின்பம்; ஆதலால்
      அறனை யேதுணை யென்றுகொண் டுய்திரால்.       44

வெய்ய கர்மப் பயன்களின் நொந்துதான்
      மெய்யு ணர்ந்திட லாகுமென் றாக்கிய
தெய்வ மேயிது நீதி யெனினும்நின்
      திருவ ருட்குப் பொருந்திய தாகுமோ?
ஐய கோ சிறி துண்மை விளங்குமுன்,
      ஆவி நையத் துயருறல் வேண்டுமே!
பையப் பையவோர் ஆமைகுன் றேறல்போல்
      பாருளோர் உண்மை கண்டிவண் உய்வரால்.       45

தந்தை போயினன், பாழ்மிடி சூழ்ந்தது;
      தரணி மீதினில் அஞ்சலென் பாரிலர்;
சிந்தை யில்தெளி வில்லை; உடலினில்
      திறனு மில்லை; உரனுளத் தில்லையால்;
மந்தர் பாற்பொருள் போக்கிப் பயின்றதாம்
      மடமைக் கல்வியால் மண்ணும் பயனிலை.
எந்த மார்க்கமும் தோற்றில தென்செய்கேன்?
      ஏன்பி றந்தனன் இத்துயர் நாட்டிலே?       46

முடிவுரை

உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே
      உண்டு றங்கி இடர்செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
      கனவி னுங்கனவாகும் இதற்குநான்
பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்?
      பண்டு போனதை எண்ணியென் னாவது?
சிலதி னங்க ளிருந்து மறைவதிற்
      சிந்தை செய்தெவன் செத்திடு வானடா!       47

ஞான முந்துற வும்பெற்றி லாதவர்
      நானி லத்துத் துயரன்றிக் காண்கிலர்
போன தற்கு வருந்திலன். மெய்த்தவப்
      புலமை யோனது வானத் தொளிருமோர்
மீனை நாடி வளைத்திடத் தூண்டிலை
      வீச லொக்கு மெனலை மறக்கிலேன்.
ஆன தாவ தனைத்தையுஞ் செய்ததோர்
      அன்னை யே! இனி யேனும் அருள்வையால்.       48

வேறு

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
      அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிக ளின்மீது தனியர சாணை,
      பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
      நிலைத்திடல் என்றிவை யருளாய்,
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
      குலவிடு தனிப்பரம் பொருளே!       49

{[பாட பேதம்]: ‘செய்வதோர்’}
--------------
70. A Dream (1910)

"Like untruth, story old and dream
Away did it all slowly stream."
- St. Pattinatthar.

1. The dictum of them well-versed in Vedas
That all life is a dream, is no error;
The base earthly pomp, I know well myself,
Is impermanent; I have not on earth Beheld
"The Supreme State beyond the Void"
As they call it; is there aught that can balk fate?
I have but sensed a part only of truth.

2. I have realised the total falsity
Of Maya; but alas! I do lack grace
To con and scan the nature of Brahman;
Nor can I by dint of mere devotion
Hold as good, words of some one, which are not
By my own intellect comprehended;
Let me therefore wait and abide my time,

3. All the world is a huge dream and in that
The life of those mischievous human insects
That merely eat, sleep, cause harm and perish
Is a dream within a dream; in this life
The love of maidens with tilak dazzling
Surely is ambrosia for a few days
Which bewitches beings ineffabiy;
Well, may that divine dream of love flourish!

4. When I was ten years old, boys of my age
Would all climb up and down many a tree,
Would swim in river and pond, run and play
In frolic gay, and jibber and jabber.
Afraid of my father's strict injunction
I would desist from gambols in the street.
Alone in my library I languished
Without company or camaraderie.

5. Can I even in my Tamil dulcet
Describe the visitant-dream of that time?
This sweet dream was not slumber-bred; it was
A waking dream; I beheld a virgin
Of fair gait, sweet of speech with jet-black eyes
And a frame that breathed the fragrance of flowers;
With this goddess I fell madly in love.

6. She was nine spring times old; to me she was
Epical Sakuntala! Others may
Wonder at this; what could I do? Am I
To be blamed? If the flood of love should draw
Could any escape it? Before the bow
Of Manmath which has many a great saint
With ease vanquished, what am I, a mere child!

7. The love that springs past boyhood is in truth
Fraught with blemish; it is aught but divine;
Tainted is that love by the thought, that joy
Is meant for the body base to thrill.
As of right are the boys in love to wed
The charming girls of their choice entitled.
When my looks fell on her -- the carp-eyed roe --,
The barbs of Manmath, my life seared away.

8. Kanaka's son, Kumaragurupara,
Mellow Gnanasambhanda and Duruva
Were like me, little boys; these were to God
Devoted, and lived chastened lives.
To Manmath -- Mind-born and Nibbler of Mind --,
I made a total gift of my dear life;
Theirs was divine glory; what 1 -- the fool --,
Came by, I shall relate some other time.

9. To fetch a pitcher of water she would
Fare forth with a face bright with pearly smile;
Before her would march Manmath every day
In battle-array; like the base evil spies
Who at the hest of petty kings that plot
To pluck root and branch the goodliest plant
Of Liberty, lie in vile ambuscade
To surprise the noble patriots true

10. I would wait with joyous eyes and watch her
From behind, tripping all along the way.
That which is attached to the wheel of a car
Moves with the car; even so was poor me.
Drawn by her I trailed after in sheer joy;
Thus did I spend my days a good many.
If her flower-face lustrous turned on me
I would revive, though of all senses reft.

11. "The spirit is with senses and organs
Linked; in this concatenation, man wields
His will to come by weal and is crowned with
Fruition sure". Thus say they who in sciences
Are well-versed; I too know this to be true.
If we are freed from animal-nature
Heaven itself is ours for mere wishing.

12. In this mayic world phenomenal,
Whatever is beheld is wrought of Mind.
If to-day in the heart, deep desire lurks,
On the morrow its outcome is yielded.
They of drooping heart, victims of fatigue,
They that goat-like, leap on things variform
And quail before besetting difficulty
Can never obtain their desired objects.

13. Fate would they blame, and their dear friends defame,
Hurl on foes obloquy in soaring wrath,
Hatch stratagems, cite pseudo-scriptures false,
Study and scan horoscopes and air out
Base atheism bred by mind falsified.
"Desire -- total and deathless --, alone could
Confer on man fruition." This they know not.
All perplexed they would be like the eyeless.

14. Billions were the worries which besieged me
As my heart of love was on the virgin set.
Many myriad words may be uttered;
Yet devotion is truly ineffable.
Like a lame man struggling for the honey-comb
On a lofty branch, with feet sudden blest,
I know not how at all it came to be.
She did in love link her heart with mine.

15. Unilateral love, be it kno
Like the venom churned out of the ocean;
If love blameless is indeed mutual
Can even ambrosia ever match it?
Even they with ineffable tapas blest
And who spurn the life of the heavenly
Shall into recipients of love turn
From maids with whom they are in love entwined.

16. Like the moon enveloped by thronging clouds,
Like flower soft, shrouded by cruel frost,
Like the sweet milk by neem embittered,
Like long eyes that are deprived of their light,
Like truth assailed and wasted by falsehood,
Are they from love of golden girls witheld
And burnt and consumed by one-sided love
Which even to think on spells perdition.

17. Can the King of Devas sing of indigence?
Can I, of raw unilateral love?
That rare virgin, my beloved darling
Began to pour on me limitless love.
Like them of the ancient Deva-Yuga
We knew not aught of evils wrought by the base,
Such as watch or restraint, rule or custom.

18. Like two sylvan birds in love, like a pair
Of celestial Yakshas by love bewitched,
With none of cloying physical love to mar,
Our spirits mixed and merged with each other.
Thus I spent a few divine days with her,
My Honey whose lips rained words of rubies.

19. On the divine Atirai-day I was
Alone with her, the bright-eyed antelope
In the mandapam of Sankara's Temple
Engaged in a confabulation sweet.
On a sudden she vanished and came back
With collyrium in the palm of her hand.
"On your forehead I shall fix a tilak" .
She said and so she did. Undone was I!

20. She that gave birth to me left me forlorn
And entered the heaven when I was but five.
Her father would Siva's feet, thrice a day
Hail with hymn and sacred song of Tamil sweet.
After his worship, I would come to her,
My golden life, with holy blooms honied
Offered in the sacred adoration;
She would joyously smile like a sweet bloom.

21. My father bade me leave for Nellai town
There to learn the arts of the barbaric.
Like sending a lion-cub to eat grass,
Like apprenticing a Brahmin-boy under
A butcher, my father bade me take to
Un-Aryan, limicolous instruction.

22. Coveted by petty servants foxy,
Slaves, spies who roam like pariah-dogs, eunuchs
Who sell themselves for a mess of pottage,
Sycophants and men base as these swindlers.
Parted from my bird of Paradise, would
My mind be drawn by such education?

23. They cultivate Arithmetic for twelve.
Whole years, but cannot tell the stars of the sky;
A thousand wondrous epics they study,
But know not the poetic Muse profound;
Commerce and Economics they blabber,
But are blind to the nation's poverty;
The names of all sastras, they know by rote,
Yet are not the slightest benefited.

24. Throve Kamban, a true man; the lofty rhymne
Did Kalidasa build, Bhaskara great
With mere eyes scaled the heavens and measured
Sidereal hosts and orbs innumerable;
With miraculous skill Panini wrote
His erudite grammatical thesis;
To the depths of life phenomenal, dived: S
ankara and declared Truth's nature true.

25. On Cilambu sang the younger brother
Of the Chera; divine Valluvar composed
Heavenly scriptures; glorious Pandyas
And Cholas gave gifts of land and upheld
Dharma; with the sword of grace, Asoka
Wielded his flawless sceptre; Shivaji
Hailed by the valorous, extirpated
The barbaric and alien tyranny.

26. All these they learn not -- they that in India
Enter schools of English education.
'The ancient glory that is India's past.
The ignominy that is its present,
And the state by her to be reached' -- to them
Is unknown: Mad learners of eunuch-instruction!
Oh, what am I to say and how learn them!
My soul is all cinders because of these,

27. Wanting to do me good, my good father
Whose heart was guileless, did assign poor me
To the deep pit of alien education,
The cruel black chasm insurmountable,
The horrendous cavern of the fierce beasts
Oí evil delusion, doubt, apathy,
Rancorous wrangling and falsity foul.

28. To the fibsters called 'Iyer' and 'Dorai'
That taught what was claimed to be the art
Of English, I would this proclaim, listen:
"As I spent all my time on your lessons
I became fatigued; sunken were my eyes;
Verve I forfeited; my heart grew timid;
Excessive doubt held me in its power;
Gone was my dear freedom, and my reason
Was tossed like a sliver in an ocean.

29. This would I swear in thousands of temples:
'It cost my father a thousand, and what
I came by were evils many thousands;
Well-being, not a whit, was my portion.'
As a result of my former good deeds
And by the grace of our Bharat-Devi
Despite my fall into your mighty murk
I was somehow saved from dire destruction.

30. If thought upon, mind would melt; in extreme shyness
My tongue would pain me to divulge this.
Howsoever I grieve, I do not know
How this misery could be averted!
I would now relate what it was, alas:
Is there aught to parallel the event
Known as marriage, in this, the human life
Which is full fettered by the karmic chain?

31. They call it 'house' which mars the 'House of Bliss';
They call it larta' which is 'anarta';
They do call it fragrant matrimony
Which is unaromatic acrimony;
If it be not possible, better sin,
Lose virtue and be bound for perdition;
Do whatever you like save this marriage.

32. Even if one should willingly perform
Tapas for a thousand years, rarely -- yes --,
Very rarely is one to be endowed
With a woman like unto the spouses
Of Vasishta, Rama and Valluvar.
Deeming it to be nectar, will ever
One imbibe toddy sold by an outcast?
Listen not to the impure, oh my lads!
Hold fast to manliness and spurn marriage.

33. Whatever be the doings of the men
Of other nations, in fallen Bharat
O youths who are out to quell the blemish
Of sapless existence cadaverous!
Though you should suffer endless miseries
And you be sneered at by a billion men,
Yet, never, never shall you entertain
Even a thought about this blasted deed.

34. When the mind dwells on the deed which is nought
But murder though called beauteous marriage,
Wrought on infants who are but barely weaned,
By the evil, the most cruelly evil --
The nescient, the most ignorantly base --
Men that quell family, root and branch, --
It is apt to curse them to a mean life
Of base slavery for a thousand years
And ultimately annihilation.

35. As a boy of ten, I, deep in my heart
Enshrined a virgin; now in my twelfth year
My father married me to another.
I knew this to be a crime, yet had not
The strength to oppose it; nor did I know
Aught of the singeing my heart had suffered
By the spiralling flame of lofty love.

36. When I did marry a different girl
I thought not that my former love should cease;
I now turned all my thought on this marriage;
As there was truly some ancient nexus
I but thought my wedding to be a game;
Before buddhi could mature by learning
Love one thing was, Duty yet another.

37. Between the enchantment by Manmath cast
And the bondage by the mad people wrought,
I, a boy of twelve lacked not troubles, alas
I knew not of Dharmic law that says:
"What though the plight be, if duty springs thence,
Despite worries, one could toil and do all
And be with truth (thus discovered) attuned."

38. They but fettered me with sastras, kriyas,
Pooja, omens, mantras, tali and bell
And did not unto me reveal the course .
And form of Dharma; they would forge brainless deeds
Of falsity, full-fraught with puissance dire
And call it the righteous path; should elders
Cling to mere form alone, how could a boy --
Lean-witted --, even come to know of Dharma?

39. In the meantime, father was beset by
Great grief, by chill penury; all his wealth --
Great indeed it was --, he lost by the ruse
Enacted by the barbarous aliens.
Those flattering friends who earlier flocked to him
Showed him their back and did vanish away.
Would his kin and servants by him pampered
Henceforth esteem him, after his downfall?

40. In this blasted Kali-Yuga, when the race
Of Brahmins festers and decays, he thought
That to amass wealth by sweat and more sweat,
Was the only good worth doing; he did
Many a transaction and acquired wealth;
But when it burst like a bubble of water
His heart sank and he became a bag of bones.

41. If in this evil and illusive world
Mind chooses to pursue a thing through thirst
Though mouthfuls are drunk again and again,
The illusive thirst is never quenched at all;
Daily advent of things favourable
Feeds on and on for ever the desire.
Though till death do flow things coveted
The base die, their hearts, sere and dry, alas!

42. "Limit there is none for desire; be not
Deceived that peace can be attained after
Enjoyment of things" thundered the Silent One.
Let us hail his feet thrice a day. Subtle
And sharp was intellect, much praised by
His country-men; stout was his heart also;
But he, my father, was by money lured;
The good man ended in a sea of troubles.

43. "This world is not for them devoid of wealth":
These words of the bard are not untrue at all.
They that lack wealth have no race and no help;
Hourly do they suffer by flooding worries;
The prime duty of the destitute is
To earn; I only blame the deluded
Who perish by morbid cupidity;
Blameless is Sri -- Mabalakshmi -- praise be!

44. I will daily hail the wise men who said:
"Dharma alone confers happiness true"
How many billions are the miseries
I was put to, coveting other things;
The very thought quells my power and breaks
My heart; oh youths of this nation! learn this:
"Dharma alone confers happiness true."
To Dharma hold fast and you will be saved.

45. "Truth can be realised only after
Getting chastened by cruel karma hard:
Thus has Thou, Oh God, decreed!
This indeed Is just; yet does this with thy grace agree?!!
Alas, before even a tithe of truth can
Be known, one has mortally to suffer!
Like a tortoise ascending slow a hill :
Men of earth have to acquire saving truth.

46. Gone was father; withering indigence
Came in the wake; refuge none could I have
In the world; my mind lost all clarity
And body, capacity; all-idiotic
Learning gained by waste of money on dullards
Was muck and mud and availed not.
Why, why Was I born in this miserable land?

47. All the world is a huge dream and in that
The life of those mischievous human insects
That merely eat, sleep, cause harm and perish
Is a dream within a dream and for this
Why ponder deeply and wallow in pain?
Of what avail is the past--dead and gone?
Who will like to give up his ghost thinking
On this ephemeral and flitting life?

48. Those who are not with wisdom pre-blessed
Shall in this world have nought but misery.
I grieve not for the past; I forget not
That it will be like casting the fishing-rod
To hook the pole-star -- Duruva --, symbol
Of wisdom true; O Mother! The Author
Of all past, present as well as future:
May you at least hereafter grant me grace.

49. Clarity of intellect, firmness of heart,
An inwardly coursing flood of love,
Unique lordship over the senses,
Longing quest all the time after the way
Of thy grace and establishment
In Karma-yoga: May Thou grant me these
O supreme Ens that is without
Any mark or guna, but indeed is all!

Note: This poem under the title Kanavu, was published in the form of a booklet at Pondicherry by Bharati. This work was banned by the British Government. Bharati maintained a diary which he called "My Journal of Thoughts and Deeds". It contains, inter alia, the following observation. Kanavu -- The Government has got to be made to amend its order of proscription -- The songs attached to the Kanavu book.

In his letter to Ramsay Macdonald published by The Hindu on 10-2-1914, Bharati observes as follows:

"During the trial of the Ashe murder case at the Madras High Court, I could get some glimpses into the sort of "evidence" which made the police suspect me as a possible abettor.

"It would appear that some of the so-called "conspirators" -- the charge of any conspiracy of murder Mr.Ashe, be it noted, broke down in the course of the trial and was abandoned by the Government -- had with them copies of a harmless love poem and a social reform novelette written by me ..."

- Thiru T.N.Ramachandran
The love poem above referred to iş "Kanavu" and the novelette "Aril Oru Panku".
---------------

This file was last updated on 8 Dec 2023..
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)