pm logo

சிறுமணவூர் முனிசாமி முதலியார்
எழுதிய "துரோகிச் சிந்து"


turOkic cintu
by ciRumaNavUr municAmi piLLai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Roja Muthuiah Research Library for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிறுமணவூர் முனிசாமி முதலியார் எழுதிய
"துரோகிச் சிந்து"

Source:
இருவினை விளக்கமென்னும்
துரோகிச் சிந்து
இஃது சிறுமணவூர் முனிசாமி முதலியார் அவர்களால் இயற்றப்பட்டு
தமது சென்னை சூளை : சிவகாமிவிலாச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது
1905
--------------
கடவுள்‌ துணை

இருவினை விளக்கமென்னும்‌ துரோகிச் சிந்து

வெண்பா.

இருவினையும்‌ பாரோ ரொளிதுணர வாராய்ந்து
சிறுமணவூர்‌ முனிசாமிச்‌ சாற்றுங்கால்‌--பருவமதக்
குஞ்சரத்தோன்‌ ஞானக்‌ கூர்வேல்‌ கடைக்கண்க
ளெஞ்சொல்‌ ஓக்‌ கென்றும்‌ துணை.

வஞ்சநெஞ்சப்‌ புலவரெலாம்‌ வயற்றுக்‌
      கஞ்சிக்கழுவாரது வாஸ்துவமே
கொஞ்சமேனுமிரக்கமுள்ள மனிதரொல்லாங்
      குறைவற்றிருப்பாரது யெதாஸ்துவமே. (1)

நல்லோர்வயறெறிய செய்யும் நயவஞ்சகா
      நாசமாய்ப் போவாரது வாஸ்துவமே
எல்லாங் கடவுட்செயலென்று நினைப்போரொல்லாம்‌
      ஈடேறுவார்களது யெதாஸ்துவமே, (2)

கொடுத்தமட்டுங்கடவுள்‌ கொடுத்தாரென்றே நினைப்போர்‌
      குறைவற்றிருப்பாரது யெதாஸ்துவமே
அடுத்த சினேகிதரைக் கெடுக்கமுயல்வோரோல்லாம்‌
      அழிந்துப்போவாரது யெதாஸ்துவமே. (3).

சொன்னசொல்‌ தவறிப்பொய்‌ சொல்லத்துணிவோரோல்லாம்‌
      சோற்றுக்கலைவாரது வாஸ்‌துவமே
பன்னியமொறிதனை யெண்ணிரடப்போர்க்கெல்லாம்‌
      பகவானருள்கொடுப்பா ரெதாஸ்துவமே. (4)

இட்டதேபோதுமென்று கட்டுக்கஞ்சுவோரொல்லாம்‌
      அஷ்டசுகம்பெறுவார்‌ வாஸ்துவமே
எட்டாதபொருட்கெல்லாம்‌ யேணிப்போடுவோர்தரை
      மட்டாவார்களது யெதாஸ்‌துவமே. (5)

ஆசைக்கனேகஞ்சொல்லி‌ மோசஞ்செய்கோர்களெல்லாம்‌
      அழிந்துப்போவார்களது வாஸ்துவமே.
ஈசனுக்காகிலும்‌அஞ்சிப்‌ பேசி நடப்போரொல்லாம்‌
      யிடேறுவார்களது யெதாஸ்‌துவமே, . (6)

நம்பிவைத்தபொருளை வம்புசெய்துபறிப்போர்
      கும்போடழிந்துப்போவார்‌ வாஸ்‌துவமே
அம்புவியில்பிறர்க்கு அனுகூலமேநினைத்தால்‌
      ஆண்டவன்‌ துணைசெய்வா ரெதாஸ்துவமே, (7)

உத்தமஸ்திரீகளின்மேல்‌ சித்தம்வைப்போர்களெல்லாம்‌
      ஊமையாய் பிறப்பார்கள்‌ வாஸ்துவமே
பத்தினியைத்தவிற மற்றோரைத்தாயென்றெண்ணில்‌
      மன்னனாகப்பிறப்பா ரெதாஸ்துவமே. (8)

கொண்டவள்மனம் நோகச்‌ செய்யும்சம்சாரமெல்லாம்‌
      குடியேற்றமில்லையது வாஸ்‌துவமே
இரண்டுபேருமொன்ரு யொத்திருப்பார்களாகில்‌
      என்றுங்குறைவேயில்லை யெதாஸ்துவமே. (9)

கணவனன்றிபிறரைக்‌ கருதா தபெண்களெல்லாங்
      கைலையிடம்பெறுவார் வாஸ்துவமே
பிணமாய்மதித்துப்பல புருடரைப் புணர்பவள்
      பைசாசமாயலைவாள்‌ யெதாஸ்‌துவமே. (10)

தாரமிருக்கப்பர தாரத்துடன்சுகிப்போர
      நேரத்திற்கெதிராவார் வாஸ்துவமே
சோரமில்லாமலே சம்சாரத்துடனிருப்போர்‌‌
      பிராரத்துவம்பெறுவா ரெதாஸ்‌துவமே, (11)

தடுக்கென்றுபிறர்மனம்‌ நடுங்கும்படிச்செய்தால்‌
      தெய்வமழித்துவிடும்‌ வாஸ்‌தவமே
கொடுக்காவிட்டாலும்வீணாய் கெடுக்காதிருந்தாலவா்‌
      குலவிர்த்தியாயிருப்பா ரெதாஸ்‌துவமே. (12)

ஏழைவயறெறியப்‌ பேழையில்வைத்தபணம்‌
      பாழாசப்போகுமது வாஸ்துவமே
ஆழியைப்போல்கரை யற்றமனமுடையோர்க்‌
      காண்டவனேகொடுப்பா ரெதாஸ்துவமே. . (13)

சத்திரம் முதற்பல சாலைசோலையமைத்தால்‌
      சாயுச்சியம்பெறுவார்‌ வாஸ்‌துவமே.
எத்‌தப்பிறர்பொருளைப்‌ பற்றவுபாயஞ்செய்தால்‌
      யேமலோகம்பெறுவா ரெதாஸ்‌துவமே, (14)

தன்மானம்பிறர்மானம்‌ யெண்ணிநடப்போர்க்கெல்லாந்
      தர்மமேதுணையாகும்‌ வாஸ்துவமே
பொன்னைமதித்துமானம்போக்கிப்பிழைப்போர்க்கெல்லாம்‌
      போஜனங்கிடைப்பது அசாத்தியமே. (15)

எதிரிலினிக்சப்பேசி பின்னால்புரணிசொல்வோர்‌
      யெரிநரகம்பெறுவார்‌ வாஸ்துவமே
பொதுவாகமன்னுயிர்மேல்‌ பூரணநெஞ்சுடையோர்‌
      புண்ணியலோகம்பெறுலா ரெதாஸ்துவமே, (16).

கூட்டுறவைப்பிரிக்கக்‌ கூறுண்டாக்குவோரொல்லாங்
      குடியோடழிந்துப்போவார் வாஸ்‌துவமே
நாட்டினில்பி றர்க்கெந்த நாளுந்‌துணைபுரிவோர்
      நன்றாய்சுகித்திருப்பா ரெதாஸ்‌துவமே (17)

வாழும்பெருமையினால்‌ யேழையைக்கேலிசெய்வோர்‌
      பாழாய்முடிந்திரவார் வாஸ்துவமே
தோழனாகிலுந்தக்க தாழ்மையுடனிருந்தால்‌
      சுவாமியருள்புரிவா ரெதாஸ்‌துவமே, (18)

அடக்கமெனும்பதம்போல்‌ ஒடுக்கமுடையோர்க்கெல்லாம்‌
      ஐயன்படியளப்பார்‌ வாஸ்‌துவமே
நெடுக்குக்குறுக்கறியா முடுக்குந்துடுக்குடையோர்‌
      நீர்மேற்குமிழியாவா ரெதாஸ்துவமே. (19)

சத்தியந்தவறிப்பொய்‌ சத்‌தியம்விரும்பினால்‌
      சுவாமியழித்திவொர்‌ வாஸ்துவமே
முத்தியைவிரும்பிடும்‌ மூதறிவோர்க்குத்தெய்வம்‌
      முன்னேயிருக்குமென்பா ரெதாஸ்‌துவமே. (20)

திரைசேருலகில்பிறர் சுகத்தைவிரும்புவோர்க்கு
      தெய்வசகாயமுண்டு வாஸ்துவமே
அரசார்சபையானாலும்‌ அஞ்சாமற்பொய்யுரைப்போர்
      அழிந்துப்போவார்களது யெதாஸ்‌துவமே, (21)

குறித்தகணக்கில்வஞ்ச நினைப்புகொண்டழிப்பவர்‌
      குலநாசமாகிப்போவார்‌ வாஸ்‌துவமே
சிரித்துப்புரமெரித்த சிவன்சாட்சியாய் நடப்‌போர்
      சிரஞ்சீவியாயிருப்பா ரெதாஸ்துவமே. (22)

மோசஞ்செய்தாலேமகா ராஜனாவானென்று
      மூடர்சொல்வார்களது வாஸ்‌துவமே
ஈசனளித்ததின்மேல்‌ பேராசைபட்டவர்கள்‌‌
      நாசமடைந்திடுவா ரெதாஸ்துவமே, (23).

சினேகமதைப்பிரிக்கச்‌ சல்மிஷஞ்செய்வோரெல்லாம்‌.
      சிரிப்பாய்சிரித்துப்போவார்‌ வாஸ்‌துவமே
அனேகயிடர்வரினும்‌ ஆண்டதனைத்துதிப்போர்‌
      அசைவற்றிருந்திரொ ரெதாஸ்‌துவமே. (24)

தேவாலயங்கள்‌ பல தீர்த்தமெடுத்‌துவைப்போர்‌
      தேவலோகம்பெறுவார்‌ வாஸ்‌துவமே
பாவாணரும்பல யேவலரைப்பழிப்போர்‌
      ஏமலோகம்பெறுவா ரெதாஸ்துவமே, (25)

இருவிளைகளுஞ்சிறு மணவூர்முனிசாமி
      யெழுதிவைத்தானது வாஸ்‌துவமே
அருமையுணராதென்போற்‌ கருமியெல்லாமிதனை
      ஆகடியங்கள்சொல்வா ரெதாஸ்‌துவமே. (26)
----------------------
கடவுள்துனை.

ஆனந்தக்களிப்பு

மானிடமென்று வந்தோரே - மண்மே
லெத்தனை நாளிருப்‌ பீரோசொல்வீரே (மானிட) .

காணியினக்குண்டு வேறே---அற்ப
கனவுக்குநிகரான வாழ்வானதாலே
துணிவுகொண் ‌டன்னியர்மேலே--தினந்‌
தொந்தரைசெய்யாதே நரகம் பொய்யாதே (மா).

ஏழைவயறெரிக்‌ காதே -- கடவுள்‌‌
யிட்டத்தின்மேலேபே ராசைகொள்ளாதே
பாழும்பணத்தை நம்‌பாதே--நீ.
பாடையில்போகையில்‌ கூடவாராதே (மா)

ஏழுமதில்பத்து சிரசும்‌- கொண்ட
ராவணன்செங்கோல்‌ அவனுடையரகம்‌
தாழாமல் நின்று தாவரையும்‌---வீணாய்‌
தானென்றுதுள்ளாதே சீக்கரமழியும்‌ (மா)

கல்லோயிரும்போ வுடம்பு--கலி
யுகமட்டுமழியா த வரமுண்டோசொல்லு
புல்லாகிலும்‌உதவி புண்டு-சுத்த
போற்றள்ளவலகைநீ நல்வழிநில்லு! (மா)

துரியனும்‌ நூறுப்பிறவி-- அவன்‌
துரைத்தனப்பெருமையை. முடியுமாகூறி
பெரியோர்மனம்நோகச்‌ சீறி--அவன்
பூண்டோடழி ந்தானே அநியாயபாவி (மா)

கொடுத்திட நீயென்ன சிவமா---உனக்கு
கோபம்வந்தாலென்ன யிழைகூடஅறுமா
கெடுத்திடவுன்னாலே ஆமா---அடடா
கிஞ்சிற்றுமலைக்காதே உன்தொழில்தவமா (மா)

இரணியனென்பேர் சொன்னால்‌ வானோ
ரெல்லோரும்பணிவிடை செய்‌தாரோ அன்னாள்‌
கெர்வத்தை மேற்பூண்டதினால்‌--- அவன்‌
கிழியுண்டொருட்சண காலத்தில்மாண்டான்‌ (மா)

'தெய்விமிருக்குதென்‌ றெண்ணூ - உனக்கு
தீங்குசெய்வோர்க்குப காரமேபண்ணு
பெரய்மொழி விஷமென்றுபெண்ணு--உனக்கு.
போஜனமிட்டோரை பூஜைகள்பண்ணு (மா)

ஆயிரத்தெட்டண்ட மொன்றாய்‌--அரசு
ஆண்டசூரபத்ம னவனெங்கே நின்றான்‌
பாவியென்றநாமங் கொண்டோர்‌- -கெதியை
பாடினாலுந்தோஷந்‌ துடருமேகண்டாய் (மா)

ஆசைக்கனேகஞ்சொல்‌ லாதே - சுவை
யானபிறகு நீ தோஷஞ்சொல்லாதே
மோசக்கருத்துகொள் ளாதே---திரு
முன்னிருக்காமல்‌ பறந்துபோவாளே (மா)

நீயேபிழைக்க யெண்ணாதே - பிறர்க்கு
நேந்றுச்சொன்னசொல்லை மறந்துப்போசாதே
நானேவீரனெண்‌ ணாதே-- நமக்கு
நடுவானகடவு ளழித்திடுவாரே (மா)

தன்னைத்தானேபுகழாதே--சற்று
தாழ்ந்தவர்மீதுநீ யிழிவுசொல்லாதே
என்னால்பிழைத்தானெண்‌ ணாதே--நம்‌
எல்லோர்க்குங்கடவு ளிருக்கிறார்மேலே (மா)

இழிவாகப்‌ பிறனராச்சொல்‌ லாதே--கையில்‌
யிருச்கும்பொருள் நம்பி கெர்வங்கொள்ளாதே
ஓழியாமலிருந்தவ ரில்லை- அடடா
உனக்குமாத்திரமென்ன கெடுவுண்டாயில்லை (மா)

நீதோன்றியொருவரைக்‌ கெடுத்தால்‌-- நமக்கு
நடுவானகடவுள்‌ அவரொங்கேயொளித்தார்‌
தாந்தோணித்தம்பிரா னானால்‌---வீணில்‌
தலைகீழாய்மாறித்‌ தரைமட்டமாவாய்‌ (மா)

பிறர்தொழிலைக்கெடுக்‌ காதே--உன்‌
பெண்சாதிபிள்ளைபோல்‌ அவனுக்கும்‌உண்டே
அரநெறியைவிடுக்‌ காதே-- நம்ம
‌ஆண்டவன்கோபத்திற்‌ காளாய்க்கெடாதே (மா)

மன்னாதிமன்னனா யெல்லாம்‌---இந்த
மண்ணுண்டுபோச்சுதே உன்னுடல்பொன்னா
தன்னாலேயாவது யென்னா---கடவுள்‌ -
தன்செயலன்றி யசையுமோ அண்ணா . (மா)

படிப்பவொல்லாமே பெரியோர்‌-- அதின்‌
பயனறிந்தோரெல்லாம்‌ மோட்சத்துக்குரியோர்‌
தடுப்பவரல்லாங்‌ கெடுவோர--- உடல்‌
தன்னைமலைப்போர்‌ நரகத்‌தக்குடையோர்‌ (மா)

அறிவென்னும்‌ பொருள்தெரி ந்தோரே எனக்கு '
அதாரமுங்க ளிருபாதமலரே
சிறுமணவூரறி வீரோ--அடியேன்‌
சிறுவன்முனிசாமி பிழைபொறுப்பீரே. (மா)

துரோகிச்சிந்து முற்றிற்று


This file was last updated on 16 Jan. 2024
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)