pm logo

சிறுமணவூர் முனிசாமி முதலியார்
எழுதிய "கள்ளுகடைசிந்து என்னும் குடியர் சிந்து"


kaLLukaTaicintu @ kuTiyar cintu
by ciRumaNavUr municAmi piLLai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Roja Muthiah Research Library (RMRL), Chennai for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிறுமணவூர் முனிசாமி முதலியார் எழுதிய
கள்ளுகடைசிந்து என்னும் குடியர் சிந்து

Source:
கடவுள் துணை.
கள்ளுகடைசிந்து என்னும் குடியர் சிந்து.
நாகப்பட்டணம், சுப்பராய முதலியார் குமாரர்,
தங்கவேலு முதலியார் அவர்களது
தனியாம்பாள்அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
1905
---------
கடவுள் துணை.
கள்ளுகடைசிந்து.

விருத்தம்‌,

நம்பினான் யிருந்தகள்ளே நாடியை யறிந்தகள்ளே
தம்பியுந்தகப்பன்பாட்டன் தலம்பறைக்கண்டகள்ளே,
வம்பு நீ செய்தாய்கள்ளே வருவையோ சொல்வாய்கள்ளே,
சொம்புபோல் குடுவைகள்ளே சோ றுபோல் கொதிக்குங்கள்ளே,

தங்கம்போ லானகள்ளே தைரியங் கொடுக்குங்கள்ளே,
எங்களை வளர்க்கு ங்கள்ளே எங்கேபோ யொளித்தாய்கள்ளே,
சிங்கம் போலெகுருங்கள்ளேஜெயிலுக்கு அனுப்புங்கள்ளே
பொங்கியே வழியுங்கள்ளே புறப்பட்டு வருவாய் கள்ளே.

ஆனந்தக்களிப்பு.

ஜாடியேஉனக்கொருகும்பிடு - அந்த
சாராயங் குடித்தாக்கால் பேதியெடுக்குறு
புட்டியே உனக்கொருகும்பிடு - அந்த
பீரைகுடித்தாக்கா சோரைக்கெடுக்குது

கள்ளே உனக்கொருகும்பிடு - அந்த
கஞ்சாவடித்தாக்கா நெஞ்சைவுலத்துது
மரமே உனக்கொருகும்பிடு- அந்த
மதத்தையிழுத்தால் பலத்தைக்கெடுக்குது
எப்போவருவாயோகள்ளே - உனக்கு
இதுஞாயமல்லாநீ எழுந்துவாகளே.
-
இ-ம்-நாதநாமக்கிரியை-ஆதிதாளம்,

பல்லவி.
வந்துதேகள்ளு -யீஸ்வரன் போலே
வந்துதேகள்ளு

அநுபல்லவி.
வந்துதேபார்கள்ளு வாகனங்கருவாடு
நொந்துயிருந்தபேரை நெட்டித்தள்ளிக்கொண்டு ()

சரணங்கள்.
ஆதிவேலைகளெல்லாம் அடுமாண்டுபோச்சுது
அஞ்சணா ஆரணா படியொன்று ஆச்சுது
சோதியதன்சுருக்கு சூரியனுக்கும்யேது
சுள்ளைக்கடித்துக்கொண்டு உள்ளுக்குக்கள்விட்டால்

யெழும்புதேபோதை - தலைக்குமேல்கை துக்கி
கடிக்குதே பல்லை

ஆரணாபோனாலும் ஆட்டின் மயிரே போச்சு
அதுகுடிக்கும்போதை காட்டுப்புலியும்சீச்சீ

பாரில் பட்டையும்பத்தாய் குழந்தைகுடிக்கும்பாச்சி
பாட்டாக்கள் ஒருமூச்சி பாணந்தடுத்துப்போச்சி(வ)

ரகுபதிகடைகள்ளு ராவெல்லாங்கொடையுது
ரவுண்டுடாணாக்கள்ளு கிருக்குகள் வாங்குது
பரைச்சேரிகடைக்கள்ளு பாடுது ஆடுது.
பாழுஞ் சுடுகாட்டுகள்ளு தலைகீழாய்துள்ளது.

இதுவென்னகள்ளு-பலவைதொட்டிக்கள்ளு
ஒழுவுதேசொள்ளு

பெண்சாதியெதிர்த்தாக்கால் பளிச்சென்றுமாட்டுது
பிள்ளை நயினாவென்றால் சொள்ளையிலடிக்குது
தன் பேச்சிபோல் வந்தால் தட்டிக்கொடுக்குது
தடுத்துச்சொன்னால் பல்லை கடித்துமுடுக்குது

யெடுக்குதேகிருக்கு நாலுபேர்பிடித்தாலும்
யிழுக்குதேமொரப்பு (வத்)
---------

செஞ்சி ஏகாம்பரமுதலியாராலியற்றிய குடியர் அலங்காரம்.

வெண்பா.

காலைக்குடியரெல்லாங் கவைக்குதவார்கள் குடிப்பார்
வேலைக்குப்போகார் வெறியனைப்போலலைவார்
வெறுமைவந்தபோது வேலைக்குப்போவார்.
தருமமோகுடியர்க்குத் தான்.

புருஷன்சொல் சிந்து.

முக்கிமுக்கிகஷ்டப்பட்டு கேளடி பெண்ணே
மூணுபணங்கொண்டுவந்தேன் பாரடி கண்ணே
பக்குவமாய் செலவுநீ பண்ணடி பெண்ணே
பாட்டாக்கள்ளுக்கொருபணந் தாக்கடி கண்ணே

பெண்சொல்லல்.

கள்ளை மறந்திட்டா குடிகார பாவி
காலையில் குடியாதடா சதிகார பாவி
பிள்ளைகுட்டி பெத்தாயோடா சண்டாள பாவி
யின்னம்புத்திவல்லையோடா குடிகார பாவி

(புரு) சேனை நாள் பழக்கமடி முட்டாளு பெண்ணே
ஜென்மத்திலே வூரிபோச்சே கெட்டண்டி கண்ணே
நானுமட்டுங்குடித்தேனென்று எண்ணாதே பெண்ணே
நாலுமூணுதலம்பரையாய் நடக்குது கண்ணே

(பெ) குடிக்கேனென்றுசத்தியங்கள் பண்ணையே பாவி
குடல்பழுத்துதென்றுகதை சொன்னையே பாவி
ஜாடிகள்ளு உன் குலைக்கிப்போதாதே பாவி
சாப்பிட்டாலும் வீண்சண்டைகள் செய்யாதே பாவி

(புரு) மனவருத்தப்படுவதாலே கேளடி பெண்ணே
மாஜினமாகிலுந்தின்னு வாரண்டி கண்ணே
துணதுணென்றுபேசாதடி முட்டாளு பெண்ணே
துட்டுகூட குரைஞ்சிபோச்சி தூக்குது. கண்ணே

(பெ) பணம்போனாலும் போகுதையா எந்தன் கணவா
பங்கிவுண்டைபழக்கம் வேண்டாம் எந்தன் கணவா
குணத்தின்படி நடப்பேனையா எந்தன் கணவா
கும்மாமுட்டுகுடுக்கவேண்டாம் எந்தன் கணவா

(புரு) கும்மாவுன்னை குடுப்பதில்லைகேளடி பெண்ணே
குடிக்கிமட்டும் ஒத்தைபணம் தாக்கடி கண்ணே
சும்மாசும்மாசொன்னேனென்று எண்ணாதே பெண்ணே
சோத்துப்பானையெகிரிப்பூடுந் தவரினால் கண்ணே

(பெ) சோத்துபானை எகரிபோனால் கேளடா பாவி
சூத்துதாண்டாகாஞ்சிபோகுங் குடிகார பாவி
நேத்து சொன்னசத்தியத்தை மறந்தாயே பாவி
நெஞ்சிமட்டும் நெட்டிவிட்டு வந்தாயே பாவி

(புரு)குடியருக்குசத்தியங்க ளேதடி பெண்ணே
கூச்சலிங்கே போடவேண்டாம் கேளடி கண்ணே
படியடித்தும் போதைகொஞ்சங் காணண்டி பெண்ணே
பணமிருந்தால் பட்டைகுடித்துவருவண்டி கண்ணே

(பெ)பட்டை மூஞ்சிலிடிவிழுக் குடிகார பாவி
பாட்டாவுடன்பட்டை சேர்ந்தால் மோசண்டா பாவி
கஷ்டப்பட்டுபணத்தை வீணா யழிக்காதே பாவி
காலங்கருப்பானதினால் சொன்னேண்டா பாவி

(புரு) பணம் போனாலும்ஷட்பம்போச்சிகேளடி பெண்
பாட்டாயடித்தால் கையுங்காலு முரைக்குது பெண்
கணக்குபார்த்துகுடிக்காவிட்டால் கேளடி பெண்ணே
காலணா கூடகையில் கிட்டாது பெண்ணே

(பெ) பஞ்சை போலே கற்றகல்வி படிக்காதே பாவி
பாரிலுள்ளோரெல்லாம்வுன் போல் குடித்தாரோ பாவி
செஞ்சி-யேகாம்பரங்கவியை கேளடா பாவி
சிரிக்குது உலகமெல்லாங் குடிகார பாவி

தெலுங்குந் - தமிழும்.

ஒகநெலகா படினபாடு
ஊரந்த அடிகிசூடி ஜாடியே கள்ளுஜாடியே

பீருபுட்டி செய்தமோசம்
பீப்பாதண்யைகேட்டுபாருஜாடியே கள்ளுஜாடியே

போசேடப்புடுகு சுருக்கண்டாதி
போயினவதலா ஏமிலேதுபுட்டியே கள்ளு புட்டியே

பட்டைதண்ணியை நம்பிநம்பி
சொட்டுமூத்ரங்கூடகாணோம் புட்டியே கள்ளு புட்டி

கள்ளுவொச்சினமாடவினி
காலிவானாபயப்படிந்தி காவடி கள்ளுகாவடி

இத்தனைநாள்பட்டபாடு
யாரைகேட்டால் தெரியபோவுது குடுவையே கள்குடு

சிறுமணவூர்முனிசாமி
செப்பிசெப்பிநவ்வினாடுமொந்தையே கள்மொந்தை

பரிபூரணானந்தபோதம் - னேற்று
பகலெல்லாமழைபெய்து சுவரெல்லாம்வோதம்

சாறாயபுட்டியை நம்பு- அதை
சாப்பிட்டால்கொடுக்குதே அளவற்றதெம்பு
கையிக்கிச்செலவில்லை கொம்பு - யாரை
கண்டதேகுத்தினால் கயளுதேகெம்பு (தரு)

பெற்றதாய் சொல்லைக்கேளாதே - உந்தன்
பெண்டாட்டி பிள்ளைக்கி கஞ்சிவார்க்காதே
உற்றாரைஊரில் சேர்க்காதே உந்தன்
ஆயுசுக்கும்ஒருகாசு தருமஞ்செய்யாதே (தரு)

பெற்றதாயாரைதடிகொண்டுமாட்டு - பெற்ற
தகப்பனையும் பாட்டனையும் வீட்டைவிட்டோட்டு
உற்றாரைஉறவாரைமாட்டு- இந்த
ஊரிலுள்ளோர்மேல் கச்சையுங்கட்டு

தருமஞ்செய்யாதிரு மனமே நாளை
கருமத்தைசெய்தாலே கடைத்தேறலாமே (தரு)

கள்ளுகடைசிந்து முற்றிற்று.
-----------------

கள்ளுகடைசிந்து - -பதிப்பு 2 (1900)

Source:
கள்ளுக்கடைசிந்து யென்னும் குடியர் சிந்து
இது சிறுமணவூர் முனிசாமி முதலியாராலியற்றப்பட்டு
செஞ்சி ஏகாம்பர முதலியாராலும் மியற்றப்பட்டு
பா. சிவலிங்கையரவர்களது ஆதிகால நிதி அச்சியந்திரசாலியிற்
பதிக்கப்பட்டது. 1900
-----------
விருத்தம்.

பெருமானே தரிசனமே சொல்லக்கேளாய்
      பேறானபச்சைமுளகர யுப்புங்கூட்டி
காடான நாக்கின் நுனி நடுவில்வைத்து
      கள்ளதனைப்படியிலூற்றி துரையைத்தள்ளி
அரசுராவென்றுள்ளே செலுத்திவிட்டால்
      ஆதிசிவனயன்மாலு மெதிரேநிற்பார்
பிரியமாய்மதுசெய்யு மருத்துவத்தை
      பரிட்சித்துக்கொண்டவற்கு மோட்சந்தானே

நாதாசமக்கிரியை

பல்லவி,
சாதுகளைக்கெடுக்குதையா பாழுங்கள்ளுயிது

அநுபல்லவி,
சாதுகளைக்கெடுக்குது       சாப்பிட்டால்வெரிக்குது
பாதைபடுத்துது       பவுஷைக்கெடுக்குது-சாது

சரணங்கள்
பிரியமாயழைக்குதையா       பாழுங்கள்ளுயிது
படிவாங்குநெட்டுதையா       பாழுங்கள்ளுயிது

பிரியமாயழைத்து       டிவாங்கிநெட்டுது
வெரிகொடுத்தா திட்டுது       வெளியேநெட்டிதள்ளுது -சாது

கண்டவரை கூட்டுதையா       யிந்தகள்ளு
கடன்வாங்கசெய்யுதையா       யிந்தகள்ளு

கண்டவரை கூட்டுவது       கடைகடைக்கு ஓடுது
சண்டையைவலிக்குது       தெண்டல்கொடுக்குது - சாது

காலையிலழைக்குதையா       தலைநோவுகள்ளு
காப்புகட்டிதிரிகுதையா       தலைநோவுகள்ளு

காலையிலழைக்குது       கடையில் குந்தவைக்குது
வேலையை கெடுக்குது       விண்சண்டைபோடுது - சாது

காசியிருந்தாலழைக்குதையா       பாழுங்கள்ளுயிது
கடன்கேட்டால்முறைக்குதையா       பாழுங்கள்ளுயிது

காசிருந்தாலழைக்குது       கடன்கேட்டால் முறைக்குது
மோசப்படுத்துது       மூலையிலேவொரக்குது

ஓரக்கங்கொடுக்குதையா       உட்கார்ந்துறங்குதையா
கள்ளுபில்லாவிட்டால்       அதுமையைப்போல்
------------

ஓரக்கங்கொடுக்குது ஒருபடிமுறைக்குது
வெளியெடுத்தால்யெரியுது வேதம்படுக்குது       - சாது

வஞ்சனையால்சொல்லவில்லை       யிந்தகள்ளுதான்
வழக்கத்தைசொன்னேளயா       யிந்தமதுவைநான்

வஞ்சனையாம்பிதை விட்டு வழிபடுவாய்புவிமீது
செஞ்சியேகாம்பரம் வியை சித்தத்திலேகிதம்பாடு       - சாது

வேறுமெட்டு,

தெலுங்குத் தமிழும்
ஒக நெலகா படின்பாடு
வூரந்தா அடிக்குஜொடியே கள்ளுஜாடியே
பீருபுட்டி செய்தமோசம்
பீப்பா தண்ணியைக் கேட்டுபாரு காடியே கள்ளுஜாடியே,
போசேடப்புடு சுருக்கெண்டாதி
போயினவதலா யேமிலேது புட்டியே கள்ளுப்புட்டியே,
கல்லிவச்சினமாடவினி காலிவானாபயபடுத்தி
காவடிகள் காவடி,
இத்தனைநாள்பட்டபாடு யாமைக்கேட்டால்
தெரியப்போருக குடிவையே கள்ளு குடிவையே,
சிறுமணவூர்முனிசாமி செப்பிசெப்பி
நவ்வினாடு மொந்தையே கள்ளு மொந்தையே.
-----------

நாதநாமக்கிரிகை

பல்லவி
கரமாயிபோச்சி புசுலையப்பியாசத்தை
      கற்றவர்பேச்சு.

அநுபல்லவி.
வரியுமதிகமாச்சி       வாடுங்குடிகள்பேச்சி
பிரியமாய் சுருட்டு       பொடியுல்கருப்பாச்சி-கரமா

சரணங்கள்

கடனென்றுபொடிகேட்டால்       காதைமுடுக்குது
சுட்டும்பொடியானாலும்       துட்டுக்குவொடர்ந்தது
பட்டணத்தில்புகலைப்பேச்சி       பாழாயிபோச்சுது.
பந்தர்புகலைப்பேச்சி       மிஸ்திரம்பரக்குது
துட்டுக்கொருகாண்டி       சிறுக்கைபொடியாச்சி
தொல்லையாம்புகலைக்கு       பல்லோர்பரச்கலாச்சி
மட்டி.புகலைகேசங்       கற்றதேபகையாச்சே
மறந்துவிடுவோமென்றால்       மனமுங்கலங்கலாச்சி

புகலையின்பேச்சி காலணகொடுத்தாலும்
      ஒருபியாச்சி இப்போ

கள்ளுக்கடைகருட்டும்       கடையாய்பறந்துபோச்சி
காப்புக்கும்விலைமிஞ்சி       கருப்பாய்பாக்கலாச்சி
சன்னிவைத்தபுகலை       தம்படிக்கும்ஒருசுருட்டும்
ஓயாமல்சுருட்டி,       உதவாதகோர்வையும்
தங்கம்குவிக்கலாச்சி       சின்னதாச்சி
பிடிப்போர்ஒறங்களாச்சி       பதமாய்ஒத்துப்போச்சி
-------------

வாயிலடக்குவோர்க்கு       வயறும்யெரிந்துபோச்சி
வாட்டமாய்த்தெட்டிடம்       பார்த்தவர்பேச்சி

கருவலாய்ப்போச்சி கெஞ்சாமிப்போர்கள்
      கலங்கிடலாச்சி

ஆரூர்புகலைபேச்சி       அதிகாரம் பெரிதாச்சி
அதற்குமுன்கோர்வை       பாய்ந்துயெகாஸாச்சி
ஊத்தங்கரைபுகை       பார்த்ததேவிலையாச்சி.
உள்ளூர் புகயெஸ்லாம்       கல்லவிலையுமாச்சி

பந்தரின் புகலை சொன்னது சொன்னவிலை
      துள்ளுதேமேலே

அஞ்சாமல்புகலைக்கு       அதிகாரம்பெரிதாச்சி
அவனியில்துசேஷ்டை       அடக்கினாப்சுகமாச்சி
செஞ்சியேகாம்பாவ்       கவியாளெழுதலாச்சி
சீமையிலுள்ளோர்கள்       பார்த்துமகிழலாச்சி'- கர
------------------

ஆனந்தக்களிப்பு.

பரிபூரணானந்தபோதம் நேற்று!
பகலெல்லாம்மழைபெய்து சுவரெல்லாமோதம்       தரு

சாராயபுட்டிய நம்பு - அதை
சாப்பிட்டால் கொடுக்குதே அளவற்றதெம்பு
கையிக்கி செலவில்லை கொம்பு-யாரை
கண்டதேகுத்தினால் கயளுதேகெம்பு       தரு

பெற்றதாய் சொல்லைக்கேளாதே-உந்தன்
பெண்டாட்டிபிள்ளைக்கி kaஞ்சி வார்க்காதே
உற்றாரைஊழில்சேர்க்காதே உந்தன்
ஆயுசுக்குமொரும் ஒரு தருமஞ்செய்யாதே       தரு

பெற்றதாயாரை தடிகொண்டுமாட்டு
பெற்றதகப்பனையும்பாட்டளையும் வீட்டைவிட்டோட்டு
உற்றாரைவுதவானரமாட்டு-இந்த
ஊரிலுள்ளோர்மேலே கட்சியுங்கட்டு

தருமஞ்செய்யாதிருமனமே-நாளை
கருமத்தைசெய்தாலே கடைதேறலாமே.

கள்ளு கடை சிந்து முற்றிற்று
----------------------
This file was last updated on 10 March 2024/
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)