பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 5
திருநீர்மலை அணிமாமலர் மங்கைத்தாயார்மாலை
tirunIrmalai aNimalai mangkaittAyAr mAlai
(paLLikoNTAn piLLai pirapant tiraTTu - part 5)
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
A raw text file was generated using Google OCR and the text was subsequently corrected for any OCR errors.
We thank Mr. Rajendran Govindasamy, Chennai, India for his assistance
in the proof reading of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 5
திருநீர்மலை அணிமாமலர் மங்கைத்தாயார்மாலை
Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய ஸ்ரீமாந் - கச்சிக்கடாம்பி
இராமாநுஜாசார்ய ஸ்வாமிகள் திருவடி சம்பந்தியும், எதிராஜதாஸரென்னும்
தாஸ்ய நாமியுமாகிய ப்ரபந்ந வித்வான் கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள்
இயற்றிய பிரபந்தத் திரட்டு
இஃது -- ம-ள-ள- ஸ்ரீ அ- இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்ந வித்வான் - காஞ்சீபுரம், ஸ்ரீமாந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு திருமணம் - செல்வகேசவராய முதலியார் M.A. அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராயநாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
Registered copyright.
----
"திருநீர்மலை அணிமாமலர் மங்கைத்தாயார்மாலை"
ஸ்ரீமதேராமாநுஜாய நம:
திருநீர்மலை அணிமாமலர் மங்கைத்தாயார்மாலை
காப்பு.
ஆய்நீர்மலைவா ழணிமாமலர்மங்கைத்
தாய்மேற்றமிழ்மாலை சாத்தவே
பாய்நீர்ப் பொருநைத்துறைக்குருகைப்
புங்கவன்மாறன்சீர்க் கருணைக்கடற்கழலே காப்பு.
நூல்.
பார்மலிநின்புகழ்பாடவொட்டாதெனைப்பற்றிநின்று
போர்மலைந்தெற்றைக்கும் புன்கண்டருமென்புராணவினை
வேர்மலைந்துண்மைவிளக்குமெய்ஞ்ஞானம் விழைந்தருள்வாய்
ர்மலைவாழுமணிமாமலர் மங்கைநித்தியையே. (1)
கச்சகக்கொங்கையர்காமக்கலவியென்காலமெல்லாம்
நச்சகத்தேனுநின்னாயிரநாமநவின்றுமனக்
கச்சகச்சேட்டைகழிந்துகளிக்கக்கடைக்கணித்தா ள்
ச்சகம் போற்றுமணிமாமலர்மங்கைமுன்னவளே. (2)
மாயாத்திரிகுணமண்டி மயக்கமயங்கியென்றும்
ஓயாத்திரிகையினுற்றுப்பிறந்துலகெங்கணுமோர்
நாயாத்திரியுமென்மீது நினக்கருணண்ணிடுமோ
தோயாத்திரி வாழணிமாமலர் மங்கைத்தூயவளே. (3)
கதகாத்திரிகொண்டுகாலனென்கண்வருங்காற்கலுழப்
பதகாத்திரிமேற்படர்ந்தருள்வாயெம்பழவினைகட்
கதகாத்திரியமலாத்திரியென்றென்று மண்டர்தொழும்
உதகாத்திரி வாழணிமாமலர் மங்கையுத்தமியே. (4)
விபயனெய்து நின்பொங்கருளாலென்புலத்தவிழி
செவிபயனெய்து நின்சேவையினின் சீர்ச்சிரவணத்தின்
கவிபயனெய்து நின்காதுறிற்காமுற்காழ்மறையோர்
அவிபயனெய்துமணிமாமலர்மங்கையம்மனையே.(5)
ஞாலமுண்டானொடுநாரநத்துறை நாயகியே
காலமுண்டாயினவெல்லாம்விடயக்கலுடமெனும்
ஆலமுண்டேனும் பிழைப்பனின் சீர்த்தியமுதமுணுஞ்
சீலமுண்டாயினணிமாமலர் மங்கைச்செந்திருவே.(6)
(Jr)
கன்று கொலுய்த்தளித்தானொடுநின்கழல்காண்குறுநாள்
இன்று கொலன்றுகொலென்றிருப்பேற்கஃதியைந்திடுவ
தென்றுகொலென்னையிம்மாயப்புலிக்கிரையாக்கவெண்ணல்
நன்றுகொலோசொல்லணிமாமலர்மங்கைநாயகியே. (7)
மாலாழியேந்துமெம்மானுடன் முத்தமணிவரன்றும்
பாலாழிப்பந்தனையன்னாய்நிவந்தென்பவப்படல
நிலாழிநிககியென்னெஞ்சநிலாவநினைதியொளி
காலாழியங்கையணிமாமலர்மங்கைக்கண்மணியே. (8)
தோயமலையடிக்கண்ணுஞ்சுருதிச்சுடர்ச்சிரத்துந்
கோயமலைத்திருவேகின்றிருவடித்தொண்டுசெயும்
நேயமலைக்கடனேரப்பெருகநினைவினைக்குப்
பாயமலைக்கு மணிமாமலர் மங்கைப்பண்ணவியே. (9)
ரண்ணாதவளின்றிருக்கோயினின்னடி நண்ணியன்பு
பண்ணாகவனென்று நீ செய்கிருடிபரம்பரையை
யெண்ணாதவனாயினுமடியேனவ்விருணரகம்
கண்ணுதருள் செய்யணிமாமலர்மங்கைநற்றிருவே. (10)
கல்லாகவனின் கனச்சீர்க்கவிகணின்கட்டளையில்
நில்லாதவனெஞ்சநேயமிலாதவனீள்பொறியை
வெல்லாதவனாயினுமடியேனின்னும் வீண்பிறவி
புல்லாதருள் செய்யணிமாமலர்மங்கைப்புங்கவியே. (11)
பொறைக்கடலேபுண்ணியக்கடலேபவப்புன்கணுக்கோர்
உறைக்கடலே நல்லொளிக்கடலேயுவர்ப்பாம்விடயக்
கறைக்கடலேயுமெனைநின்றன் கீர்த்திக்கதவமுதத்
துறைக்கடல் சேர்த்தியணிமாமலர்மங்கைச்சோபனையே.(12)
பாவக்கனலும்பதப்பாவையர்பற்றுப்பாழ்ங்கனலுங்
கோவக்கனலுமொண்குக்கிக்கனலுங்கொளுத்திடுமுத்
தவக்கனலுந்தணித்தெனைக்காத்திநின்றண்ணருளால்
ஆவத்தனமாமணிமாமலர்மங்கையச்சுதையே. (13)
பாக்கியமாகப்பகுத்தகுரவர்பரம்பரையின்
வாக்கியவல்லிபிடித்தேறிநின்மணவாளனடி
ஊக்கியவென்னையுயரயனாதியவும்பரெலாம்
நூக்ககிலராமணிமாமலர்மங்கைநோன்மையனே. (14)
பன்னியகாரணமாயுலகாகப்பரிணமிக்கு
மன்னியநின்னை மறைபுகுந்தேனென்மலமறுத்தாள்
அன்னியனல்லேனணிமாமலர்மங்கையம்மனையே.
நன்னியமங்கொண்ட நாரணனாயகியே கருணை (15)
ஊழாய்வகுத்தபதினான்குலகமுமுள்ளடக்கி
ஏழாவரணமுமேற்கொண்டவண்டவினங்கணின்றன்
காழார்கடகக்கரமேந்தியாடு நற்கந்துகமாம்
யாழாமொழிகொளணிமாமலர்மங்கையம்புரையே. (16)
சக்குறு சந்திர சூரியகாந்தமென்சையமெண்ணிற்
புக்குறுநீர்கனனெய்யெனவென்புரம்புக்குநிற்கும்
முக்குணச்சேய்களுமொய்த்தாயுநின்னருளான்முசித்து
நெக்குணச்செய்தியணிமாமலர் மங்கைநின் மலையே. (17)
சொத்துத்துவங்கொளெனக்குச்சுவாமிநியாகியநீ
பத்துத்தலையிட்டமூன்றாமிலக்கணப்பான்மையெலாம்
ஒத்துத்தயங்கிடச்செய்தசத்தென்னவுறங்குமெனைச்
சத்துப்பொருள் செய்யணிமாமலர்மங்கைத் தாக்கணங்கே. (18)
வேதத்தடிப்பணவப்பொருளேமிகுமேதையுருப்
பூதத்தடிகள் புகழ்புனற்யூகரப்பொற்கொடியே
மாதத்தடியுணும்வல்வினையேற்கென்றும் வண்டுணைநின்
சீதத்தடிகளணிமாமலர் மங்கைச்செய்யவளே. (19)
உனகலிகன்றியடிகள்செய்வாழ்த்துடையாயெனது
கண்கலிதீரநின் காட்சியுங்காதல்கொள்காதிரண்டும்
அண்கலிதீரவபயவின் சொல்லுமளித்தருள்வாய்
மண்கலிதீர்க்குமணியேயணிமாமலர்மங்கையே. (20)
விண்டலமோங்குங்குவட்டறல்வே தண்டவித்தகியென்
கண்டலங்கண்டுகளிக்கக்கனகக்ககேச்சுரன்மேற்
புண்டலமெய்விட்டியானெழும் போதென்முன்போந்தருள்வாய்
மண்டலங்காக்கு மருந்தேயணிமாமலர்மங்கையே. (21)
பத்திநெறியும்பகர் பிரபத்திப்பதவையுமென்
சத்திநெறிக்குத்தகாதனவாரியன்றண்ணளியின்
சித்திநெறியெற்குச் சித்திக்கச்செய்து திறம்பலிலா
முத்திநெறிதாவணிமாமலர்மங்கைமுன்னவளே. (22)
சவிப்பெரும்பூணவிர்மார்பன் சுறவத்தகைக்குழை சேர்
செவிப்பெருமானருளாற்றிருக்கோளூர்செனிமதுர
கவிப்பெருமானிட்டைகைகூடச்செய்திகலைமை றயோர்
அவிப்பெருமாட்டியணிமாமலர்மங்கையம்மனையே. (23)
மகவைமணாளனைமையநின்றூட்டுமடவியர்போல்
உகவையினாரமயனத்திடையுற்றுறைபவளே
முகவை நிகர்க்குமிம்மூடனையாளுமுறைமையினின்
றகவையென்சொல்வலணிமாமலர்மங்கைத்தம்மனையே.(24)
தேவாதிதேவன்றிருத்தேவித்தன்மையுந்தீச் சிறையின்
வாவிழிபுமுன்னாதும்பரொண்டொடியார்க்கிரங்கி
மேவாதகாவலின் மேவியவர்சிறைமீட்டநின்சீர்
ஆவாவென்சொல்வலணிமாமலர்மங்கையம்மனையே. (25)
குழவி விழுகுழிதானும்விழுமன்னைகொள்கையென
இழவுறுமெம்மொடு மீண்டியெந்துன்பமிரித்தலினின்
எழலுறும்வாற்சல்லியாதி குணங்களிலங்கிடுமால்
நிழலுமிழ்மேனியணிமாமலர்மங்கைநித்தியையே. (26)
வினைவயத்தாற்சிறைமேவலிழிபுவிதிர்விதிர்த்து
நினையடைந்தோர்சிறை நீக்கக்கருணையினீவலிந்து
முனையடையாது செயலினின் சீர்புவிமுற்றிடுமென்
வினையறுத்தாளணிமாமலர்மங்கைவிளக்கொளியே.(27)
அடலறியாதாரறைப்பலவநுமானையங்கீ
சுடலெனுநிற்கத்துரோகியைத்துஞ்சுகவென்று சொல்ல
மிடலிலையோ பிறர் துன்பறச்செய்தலின் மேன்மையதே
மடலவிழ்பூங்குழலாயணிமாமலர்மங்கையன்னே. (28)
விதித்தன விட்டுவிலக்கியனசெய்வினைஞரையும்
கதித்துக்கைக்கொண்டுகைக்கோடற்குமன்னவைகையுறையாய்
மதித்துக்கொளனின் புருடகாரத்தினல்வைபவமாம்
மதித்துணிமானுநுதலணிமாமலர்மங்கையன்னே. (29)
சாற்றுமவரைக்கைக்கோடலுக்கேது தயைபொறையாம்
ஏற்று குற்றங்களைக்கையுறையாக்கொளற்கேதுசொலில்
ஊற்றுறும் வாற்சல்லியமாகுநின்புகழோதவல்ல
ஆற்றலளித்தாளணிமாமலர் மங்கையம்புயையே. (30)
காற்பட்ட புல்லைக்கறியாக்கபிலை தன் கன்றுடம்பின்
மேற்பட்டதானவழும்பின்பமாகவிரும்பலினின்
பாற்பட்டவிப்பண்பினுக்குறழ்ந்தோங்குமொர்பண்புமின்றாற்
சேற்பட்ட கண்ணணிமாமலர் மங்கைத்திகழ்விளக்கே. (31)
இக்குணமெம்பெருமானினுநின்னுழியெப்பொழுதுந்
தொக்குமிக்குள்ளது தாய்த்தன்மைத்தன்மத்தொடர்பதனாத்
பொக்குடையேனெனவென்னைப்புறத்தினிற்போக்கவொண்ணா
திக்குமொழிகொளணிமாமலர் மங்கையென்னம்மையே.(32)
தோடத்தொடுகுணவானியெனுமித்துக்களிரண்டும்
ஈடற்றொழியினெனையேற்றுக்கொள்ளுவலென்றிருக்கின்
பீடற்றவவ்விருகுற்றமுநின்கட்பிறங்கிடுமால்
மாடற்றவர்க்கருள்வாயணிமாமலர்மங்கையன்னே. (33)
ஆருயிர்க்கெல்லாநிருபாதிகவன்னையாயிருந்தும்
ஊருமென்னன்மையுமூறுநினாதென்றுன்னாதெனைக்கை
சோருதியேலவ்வுறவிற்கரிறுன்னுந்தூய்க்கருணை
வாருதியேயணிமாமலர் மங்கைவரோதயையே (34)
என்னலக்கண்கண்டிரங்காமையானுமென்னேதநெஞ்சில்
ன்னலமாகக்கொளாமையினானுநின்னற்கருணை
ன் னலவாற் சல்லியத்திற்குந்தோடம் வருமருங்குல்
மின்னலங்கொண்டவணிமாமலர் மங்கைமெய்ப்பொருளே. (35)
எம்பெருமானையுமே தங்கள் காணவொட்டாவியற்கை
யெம்பெருமாட்டியவை நினைந்தென்னையெடேனெனிலிவ்
வம்புவிதன்னில்விலக்கியன செய்யுமாறொக்குமால்
விம்பவிதழாயணிமாமலர் மங்கைவித்தகியே. (36)
என்குற்றமாதியவெண்ணாதுகைக்கொண் டெம்மானுடனே
நன்குற்றடையச்செய்நீயே பொச்சாந்தென்னவை நினைக்கின்
புன்குற்றமாகும் விதித்தனவிட்டபுகருமுண்டென்
றன்குற்று நீக்கணிமாமலர்மங்கைத்தயாம்புதியே. (37)
ஏகாக்கியாதியெழுநூறரக்கியரேசினை நீ (கூஎ )
வாகரக்கிக்கொண்ட தெவணும் வயங்கிடும் வாய்மையன்றோ
சேகாக்கியவினை தீர்த்தெனையாட்கொள்ளல்சீரியதே
பாகாக்கியசொல்லணிமாமலர்மங்கைப்பங்கயையே. (38)
கபாலம்பனரினென்னாளைக்கழித்து நல்லோர்கடமை ()
உபாலம்பனஞ்செய்தொறுத்தேயுரனிலியாயொழிந்தேன்
கபாலம்பனந்தெறுங்காலத்தெனக்குநின்கான்மலரே
பாலம்பனமாமணிமாமலர் மங்கைத்தூயவளே. (39)
கரமத்தமாதங்கமானதவாவிச்சுகோதிமத்தின்
வரமத்தமென்னடைமாதர்விழைச்சின் கண்மையல்கொளென்
பிரமத்தைப்பேர்த்துப்பெருஞானந்தந்திப்பிறவிதனைச்
சரமத்ததாய்ச்செய்யணிமாமலர்மங்கைத் தற்பரையே (40)
என்னகத்தாளெறிந்தென்னைத்திருத்துகைக்கென்னுபலம்
என்னகத்தாரியையாயிருப்பாடண்ணிமகரனேர்
என்னகத்தாமரையேய்கழலாளிலங்கப்புமலை
என்னகத்தாணம் மணிமாமலர் மங்கையென்பவளே.(41)
மும்மைப்பொழிற்குமுதல்விமுயற்கூடெனுமுகத்தி
மும்மைப்பொழுதுமுனிவர்தொழும்பதமுண்டகத்தி
மும்மைச்சுடர்களினூங்கவிர்மூர்த்தத்திமோசனிப்பாள்
மும்மைப்பளகுமணிமாமலர் மங்கைமுன்னவளே. (42)
மூதண்டமுற்றவும் பெற்றமொய்த்தாய்மொய்ச்சிகரநன்ம
வேதண்டத்தாணுநலாமெனுமன்மதவேள்கரங்கொள்
கோதண்டத்தாள்கடைநாளர்ச்சிராதியிற்கூட்டியெனை
மாதண்டத்தப்புறஞ்சேர்ப்பாளணிமாமலர் மங்கையே. (43)
திலம்படு நெய்யிற்றிகழ் பொருள்யாவுந்திளைத்து நிற்கும்
பொலம்படுபூணவிர்பூமகளே பொற்புனற்பொருப்பார்
நலம்படு நின்கழற்கெந்நாளுஞ்சோத்தநவின்றுதொழா
திலம்படுவேனென்னணிமாமலர்மங்கையிந்திரையே. (44)
கட்டுவடமலையான்மணிமார்பிற்கதிர்த்துறையுங்
கட்டுவடப்பூங்கதுப்பாய்கடையிலென்கன்மமெலாங்
கட்டுவதகிரிநேர்ககமேல்வந்தெற்காத்திகளக்
கட்டுவடத்தாயணிமாமலர் மங்கைக்கற்பகமே. (45)
பூண்டாத்திரிக்கும் புராணவினையிற்பொருந்திவரும்
வேண்டாத்திரிகுணமெய்யின்னுமேவாவிரகு சொல்வாய்
காண்டாத்திரிக்கமலாலயையேபிக்கடல்புடைசூழ்
மாண்டாத்திரியோர்க்கருளணிமாமலர்மங்கையன்னே.(46)
கவைத்தாட்கரும்பகடூர் திகபம் வந்து கட்டுமுன்னின்
சுவைத்தாட்டரிசனந்தந்தாளவென்னெதிர் தோன்றுதியால்
நவைத்தாளவித்தை முதலநினைநிதநட்பவர்கட்
கவைத்தாளருணிதியேயணிமாமலர்மங்கையன்னே. (47)
கொண்ட கற்பகக் கண்மலர்க்கண்ணிக்கடவுளரும்
படிகொண்டபண்ணவரும் பன்மறையும்பகர் துதிகள்
குடிகொண்ட நின்னடியென்றனுளங்குடிகொள்வதென்றோ
தொடிகொண்டகையணிமாமலர்மங்கைச்சுகாவகையே.(48)
மிச்சையடியனின் மேதகவொன்றும் விதந்தரியாக்
கொச்சையனின்றன் குலவடியார்குழுக்கூடிமலர்
செச்சையணிந்தவர் சேவடியேத்தித்தெருளடைவான்
விச்சையளித்தாளணிமாமலர்மங்கைமெய்விளக்கே. (49)
குலையளியார் பூக்கொழுதி வண்டாலுங்குளிர்பொழினீர்
மலையளிமாமருந்தே மணியே நன்மரகதமே
நிலையளிநீள்கடலே நினை நேடுமிந்நீசனுய்யத்
தலையளி செய்தாளணிமாமலர்மங்கைத்தற்பரையே. (50)
விரைக்கின்றபூம்பொழில்வீறுதகாத்திரி வித்தகியே
திரைக்கின்றவிம்மெய்சிதையாமுனம்பொற்சிறுசதங்கை
குரைக்கின்றநின்கழல்கொண்டாடியுயக்குறிக்கொளுல
குரைக்கின்றகீர்த்தியணிமாமலர்மங்கையொண்மணியே.(51)
சுருக்கவிபெய்து செந்தீநாளுமோம்புந்தொழுகுலத்தோர்
செருக்கவிசேடத்துவ நிட்டையோர்தொழுஞ்சேவடியாய்
திருக்கவிர்ப்பூநிறச்செய்யவளேயுட்டிருக்கறுத்தென்
திருக்கவிர்வாயணிமாமலர்மங்கைத்திருமகளே. (52)
எண்கரிமாவொலிநீங்காத நீர்மலையேய்ந்த செல்வி
வெண்கரிவேந்தன் விபூதியும் வீழணிமாமகிமா
திண்கரிமாமுதற்சித்தியும் வேண்டிலன் செப்புமிதற்
கொண்கரிநீயேயணிமாமலர் மங்கையுத்துங்கையே. (53 )
பொருப்பணியாகும்புனன் மலைமேவும்புராதனையே
குருப்பணிலங்கோகனகங்குலிசங்கொடிமுதலாம்
விருப்பணிரேகைவிளங்கு நின்றாளில் விதம்விதமாந்
திருப்பணிதந்தாளணிமாமலர்மங்கைச்செந்திருவே. (54)
மிகுந்தத்தைமேவியடியனிச்சட்டகம்விட்டெழுங்கான்
முகுந்தத்தலைவனுநியுமணிமலைபோன்முடுகுஞ்
சகுந்தத்தலைவன்புயம் வந்தளித்திர்சலத்தடம்வாழ்
நகுந்தத்தைச் சொல்லியணிமாமலர்மங்கை நாயகியே. (55)
குவட்டுமரகதவில்லைப்புல்லென்றுகுளிர்மதிமான
கவட்டுந்தண்ணீர்மலையாயெனையாதியங்காலந்தொட்டுச்
சவட்டும்வினையைச்சவட்டிப்புரந்தருடன்கருணை
உவட்டிடுங்கண்ணணிமாமலர்மங்கையுயிர்க்குயிரே.(56)
கொடுமுடியாதி நற்கூழ்மணி துன்னலிற்கூமகட்கோர்
நெடுமுடியன்ன நன்னீர்மலையாயிந்த நீசன் விழுந்
தொடுமுடிவில்வப்பெளவத்தெடுத்தாள் சுருதிக்கையால்
நடுமுடிபற்றியணிமாமலர் மங்கைநாயகியே. (57)
அம்பரக்கம்பலம் வேய்ந்து டுநாலியலங்கலவிர்
அம்பணவத்திரியத்தாணிதன்னிலரசியற்றும்
எம்பெருமாட்டியெளியேன்முறைசெவியேற்றுச்செங்கோற்
றம்பமளித்தியணிமாமலர் மங்கைச்சற்குணியே. (58)
மருத்தமலர்ப்பொழில் சூழ்திருநீர்மலை மாமகளே
திருத்தமுடனின்றிருத்தாளிற்றேமலர்சிந்துவித்துப்
பொருத்தமுடனின்றன் பூசனை செய்வித்தென்புன் பிறவி
வருத்தமறுத்தாளணிமாமலர் மங்கை வானவியே. (59)
ஓயாத்திரையினுகண்டெழுதுன்பத்துடற்பருவஞ்
சாயாத்திரைநரைசார்ந்தனகாலன்றமர்கயிற்றாற்
காயாத்திரைப்புழிக்கண்முன்னர்வந்தெனைக்காத்தருடிண்
மாயாத்திரை தீர்த்தணிமாமலர்மங்கைமாமகளே. (60)
தசும்புந்திடுதனத்தையலர்மையலிற்றங்கிமண்ணும் கொல்
விசும்புந்திரிதருவேனுநின் பொன்னடிமேவுவன்
விசும்புந்தியோங்கறல்வெற்புறைவாய் நல்விரைமலர்த்தேன்
அசும்புந்திருக்குழலாயணிமாமலர்மங்கையன்னே. (61)
மானுறழ்நோக்கியர் வாஞ்சையின் மூழ்கிமதிமயங்கிக்
கானுறழ்தீவினைகண்டகயவன்கடவுளர்தம்
ஆனுறழ் நின்னையடைந்தனன் காத்தியருட்பரவை
தானுறழ்மைக்கண்ணணிமாமலர்மங்கைத்தம்மனையே. (62)
அதர்த்தவக்கமங்களண்மியரிகளருங்கனிகள்
விதர்த்தலிற்செப்பங்கள் சேறுபடு நீர்ச்சிகரியன்னாய்
பதர்த்தபடிறனைப்பாங்குடன் காத்தனின்பாரமதாம்
மதர்த்ததிருவிழியாயணிமாமலர்மங்கையன்னே. (63)
பிறையேக்கறுப்பப்பிறங்கிடுமொண்ணுதலாய் புவியின்
பொறையேக்கறுப்பப்பொலிபொறையாய் தெய்வப்பூவையர்கள்
நிறையேக்கறுப்பநிமிர்நிறையாய் நின்னடியனெஞ்சக்
குறையேக்கநீக்கணிமாமலர் மங்கைக்கு சேசயையே. (64)
கருப்புச்சிலையன்கணைவிளைவித்தகடும்பவமாம்
இருப்புச்சிலையினிறுமாப்படக்கியிகழ்துலவத்
திருப்புச்சிவணநொய்தாக்கியெளியனை யேன்றுகொணீர்ப்
பொருப்புச்சிவணுமணிமாமலர்மங்கைப்பொன்மகளே. (65)
காற்றுப்பொரக்கழைக்கோற்றேன்ஞெமிர்ந்தென்றுங்கானறவ
ஆற்றுப்பெருக்கொடருவிப்பெருக்குமமைந்தெவணுஞ்
சேற்றுப்பழனஞ்செயுநீர்மலையாய் சிறியன்முறை
யேற்றுப்புரத்தியணிமாமலர்மங்கையிந்திரையே. (66)
ஒன்பான்றொகைகொண்டொளிர்கோளுடுக்களினூங்குதிகழ்
ஒன்பான்மணிகொண்டுஞற்றுமிழைகளொளிர்களத்தாய்
ஒன்பான்றுளையுடல் வீழ்கால் வந்தாளொழியாதவுற
வொன்பானுமெண்ணியணிமாமலர்மங்கையுத்தமியே. (67)
பான்மதியைப்புறங்கண்டெக்கழுத்தம்படுமுகத்தாய்
நூன்மதியைக்கொண்டுனைவழுத்தாதெட்டு நூற்றினுக்கும்
மேன்மதியைக்கடந்தெய்த்தேனென்செய்வல்விழைந்தருள்வாய்
வான்மதிக்கும்புகழாயணிமாமலர்மங்கையன்னே. (68)
குடப்பால்வளைகடவழ்வயனீர்க்குன்றக்கோட்டங்கொண்டாய்
திடப்பாடுடனின்றிருவடித்தொண்டுசிறந்து செய்யுங்
கடப்பாடிலாதகயவனையாளுங்கடனினதே
படப்பாவையேயுமணிமாமலர்மங்கைப்பண்ணவியே. (69)
நித்தியமாகநிகழ்த்தும்பொருளினிகாயக்கெல்லாந்
தத்தியநீயன்னைமாறந்தையென்னுஞ்சதுமறைகள்
சத்தியமாயினென்றத்தைத் தணந்திடத்தக்கவர்யார்
நத்தியளித்தியணிமாமலர் மங்கைநாயகியே. (70)
மாளாவினையான்மறுகியயான்செய்மனுத்தனை நீ
கேளாமறுமொழியொன்றுங்கிளக்ககில்லாதுவர்த்து
வாளாவிருத்தலெவ்வையக்கண்ணும் வழக்கலகாண்
தோளாமணியணிமாமலர் மங்கைச்சுடர்மணியே. (71)
கருமக்களஞ்சியங்காஞ்சிரைநேர்கயவோரெனினுந்
தருமக்கடலே தவிர்த்தியெந்துன்பென்று சார்ந்தவர்க்குப்
பெருமக்களோர்மொழிபேசிற்பிழையென்பிரமன்றந்தை
மருமக்கலாநிதியேயணிமாமலர்மங்கையன்னே. (72)
பொருளாரருச்சைச்சமாதிவழக்கெனப்போற்றுதியேல்
அருளாளனம்பிக்கறுமொழிகூறலவத்தியமாந்
தெருளாருமற்றைநிலைக்குஞ்சிறப்பிலவாஞ்சிறியேன்
மருளாய்ந்தறுத்தியணிமாமலர்மங்கைமன்னவியே. (73)
அருளாளனண்டர்பிரான்கச்சிநம்பியடிகளுக்கோர்
இருளாளுங்காலத்திராவணமேந்தியியங்கியதும்
மருளாகுநீர்மலைவாழுங்கருணைமகோத்தியே
இருளாளுங்கூந்தலணிமாமலர் மங்கையிந்திரையே. (74)
முந்தைமறைகளநந்தமுநாளுமுறைகளிட
எந்தை வெஃகாவண்ணலெம்பத்திசாரரெனுமடிகள்
பைந்தமிழ்ப்பின்சென்றதென்னாகும் பாணிப்பறம்புமன்பர்
சிந்தையும் வாழுமணிமாமலர் மங்கைச்செந்திருவே. (75)
ஆழிவளைதொண்டைமானெனுன்பற்கரவமலை
ஊழிமுதல்வனுகந்தன்றளித்தது முண்மையன்றாம்
வாழிய வென்றடியார்கள்வழுத்தும்வன மலைவாழ்
ஆழிவிரற்கையணிமாமலர் மங்கையம்புயையே. (76)
அத்தனரங்கநகரப்பன்புத்தூரடைந்துமுனம்
புத்தமுதொத்தநங்கோதையை வேட்டதும்பொய்யெனலாம்
நித்தமுநீர்மலைவாழ்நின்மலையே நெடுந்தகையோர்
சித்தமுகக்கு மணிமாமலர் மங்கைச்செய்யவளே. (77)
திகழ்ந்தொளிர் சீர்த்திக்குறுங்குடி நம்பிக்குந்தே மறையோர்
புகழ்ந்தொளிர்சீர்த்தியெதிராயமாமுனிபுங்கவற்கும்
நிகழ்ந்ததொர்நீதிச்செயல்களும்பொய்யாநிகழ்த்துமெனை
யிகழ்ந்துவிடற்கவணிமா மலர் மங்கையென்னம்மையே. (78)
நாதமுனிகளெனுமெம்மடிகட்கு நற்குருகைப்
போதமுனிவன்புராணத்தமிழ்மறையும்பொருளும்
நீதமுறமுன்றிருவாய்மலர்ந்தது நீர்ப்பொறியாம்
வேதமுதல்வியணிமாமலர்மங்கை வித்தகியே. (79)
சீர்க்கண்டியாதிதிருவாபரணந்திகழ்களத்தாய்
நீர்க்கண்டியூரடியூர்களினீர்மலைநேர்ந்துகந்தாய்
மார்க்கண்டியோடுபிருகுக்கருள்செய்வகையெவனென்
சூர்க்கண்டிதஞ்செய்யணிமாமலர்மங்கைத்தொல்லமுதே. (80)
சக்கரவர்த்துலத்தாரணியாடொண்டைமானெனும்பேர்ச்
சக்கரவர்த்திக்கருள்செய்தவாறெவன் தண்சலில்
சக்கரம்வர்த்திக்குந்தாயேயெனக்கருடையலர்கள்
சக்கரவர்த்தியணிமாமலர் மங்கைத்தம்மனையே. (81)
பன்னுமருச்சையினீயுமெம்மானும் பகுத்த செயல்
இன்னும் பலவுண்டவையெளியேனாலிசைப்பரிதால்
உன்னுமென்னின்னலொழித்தாளவுள்ளத்துவத்தியெங்கும்
மன்னும் பெரும்புகழாயணிமாமலர்மங்கையன்னே. (82 )
கருவுருவாங்கண்ணன் காதலியாகியகாரணிநின்
திருவுருநாடொறுஞ்சிந்தையிற் சிந்திக்குஞ்செல்வமுற்றா
கருவுருக்கட்டறுங்கார்தோயுநீர்மலைக்காமவல்லி
மருவுருவாகியவல்லியணிமாமலர்மங்கையே. (83)
அபிபூதமாயையறுத்தாளும் வல்லியவிரனந்த
வபிதானவல்லியணிநீர் மலைவாழசாதவல்லி
அபிராமவல்லியடுத்தோரையெவ்வாற்றினுமளிக்கும்
அபிமானவல்லியணிமாமலர் மங்கையாம்வல்லியே. (84)
பொங்கணுமேருப்பொருப்பெனவேபுகலும் பொருள்கள்
எங்கணுமேவியிருக்கின்ற நீயெளியேனுடலாம்
ங்கணுநிற்றியிதன்றுயர்யாவுமிலக்கு நின்றன்
அங்கணுக்காகிலைகொல்லணிமாமலர்மங்கையன்னே. (85)
சன்மம்பலபல செய்துயிர்காக்குந்தலைவியென்றன்
கன்மங்கடைப்பிடித்தென்னைக்கைவிட்டிடக்கண்ணிநனி
வன்மஞ்செயினிந்தமண்ணையென்செய்வல்வதானியைக்குத்
தன்மம்மிதுவன்றணிமாமலர் மங்கைத்தம்மனையே (86)
செருத்தற்கபிலை தன்றீம்பானெய்யுண்டுசிறுத்தவுட
பருத்தற்குவேண்டும்பணநேடிக்காலத்தைப் பாழ்ப்படுத்த
வருத்தற்றொழிலினன்வானாட்டுப்பேரின்பவாழ்வுநுகர்ந்
திருத்தற்கென்செய்வலணிமாமலர் மங்கையிந்திரையே. (87)
எற்றுந்திரைக்கடலெல்லைப்புவிபிறந்தெய்ப்புறுதன்
முற்றுங்கணித்திடினொவ்வொன்றுமென் பிழையாய் முடியுஞ்
சற்றுந்தவறிலைநின்னாற்றவத்தர் சரணடைந்து
பற்றுந்திருத்தாளணி மாமலர் மங்கைப்பார்க்கவியே. (88)
சுந்தரி நீர் மலைச்சோமாநனைவெண்சுரிமுகநேர்
கந்தரிகந்தகமலாலயத்திகராம்புயத்தி
அந்தரியாதியர் வாழ்த்தடியம்போருகத்தியம்ம
மந்தரிதேர்திமனனேயணிமாமலர்மங்கையே. (89)
தென்னாதெனாவென்று தேன் பாடுங்க நீர்ச்சிகரியன்னாய்
மன்னதெனாவிம்மகிப்பொருளொவ்வொன்றுமற்றுமன்ற
உன்னாதெனமனமுன்பெயரன்றிமற்றோர்பெயரும்
பன்னாதெனாவணிமாமலர் மங்கைப்பராபரையே. (90)
கயப்படுதாமரைக்காடலர்ந்தன்னநின்காட்சிதந்து
பயப்படச்செய்யென்படிவமுநாளும்படர்பொறிகள்
வயப்படச்செய்தியென்வஞ்சகநெஞ்சுடன்யானுமென்றன்
மயப்படச்செய்தியணிமாமலர் மங்கைமாமகளே. (7291)
சீத்தைத்தொடர்பைச் சிதைத்து நின்சீர்த்தித்தெளியமுதப்
பாத்தைப்பருகிப்பகாப்பரமானந்தப்பத்திற்றுக்
கூத்தைப்புரிநின் குலவடியார்குழுக்கூட்டியென்றன்
ஊத்தைக்குடிறீரணிமாமலர் மங்கையொள்ளொளியே.(92)
உடங்குறு தீவினையென்றுமுடற்றவுழல்புழுப்போல்
நுடங்குறுமெற்குநின்னூபுரமாக்கழனொச்சிநிழற்
படங்குறுமேலிப்பரவையினூங்குபடரவித்தை
யடங்குறு முய்வலணிமாமலர் மங்கையம்மனையே. (93)
ஒளிததும்பும் பணியாடைநல்லுண்டியொளிர்புன்றேத்
துளிததும்பும்மலர்கொண்டு நிற்பூசித்துத்தோத்திரித்துக்
களித்தும் பிக்கண்கணீர்வார்ந்தெக்காலுநிற்கண்டு நிற்க
அளி ததும்பச்செய்யணிமாமலர் மங்கையம்புயையே. (94)
மாற்றற்கரியநின்மாயையைமாற்றிமனமுவந்து
போற்றற்கரியநின் பொன்னடி போற்றப் புரிந்தெவரும்
பாற்றற்கரியபவப்பிணிபாறப்பணித்திவிண்ணோர்
சாற்றற்கரியாயணிமாமலர்மங்கைத்தம்மனையே. (95)
பூந்தாற்றுக்கந்திப்பொழில்சூழ்புனன்மலைப்புண்ணியையே
சாந்தாற்றி வீசிடலாதிப்பணிகணின் சந்நிதிக்குப்
போந்தாற்றகில்லாப்புலையனின்றாளிற்புகக்கருணை
யீந்தாற்றுவாயணிமாமலர் மங்கையிறையவளே. (96)
ஐயெனச்சொல்லுமமித்திரனென்னையடர்த்திடுங்கால்
ய்யெனவல்விரைந்தோடி வந்தென்றுன்பொழித்தருள்வாய்
மெய்யெனநிற்றிநினைமேவினோர்க்கங்ஙன்மேவலர்க்குப்
பொய்யெனநிற்றியணிமாமலர் மங்கைப்பொன்மகளே. (97)
ஆகாத்தவண்ணறன்னாகமுமப்பத்திரியுமுறை
மாகாத்தமாமலர்மாளிகையாயென்மனமுடம்பு
நாகாத்தல் செய்யாநவையினிந்நாயனையேனுழக்குஞ்
சோகாத்தனீத்தியணிமாமலர்மங்கைச்சுந்தரியே. (98)
நாரினுஞானத்தினும்யாப்புண்ணீர்மலை நாயகியே
பாரினும் விண்ணினும்பாதலந் தன்னிலும்பற்றறுத்தோர்
யாரினும் சீரியனாகுவனீநின்னருட்கடைக்கண்
கூரிலுசிதமணிமாமலர்மங்கைக்கோமகளே. (99)
கருவிகரணங்கலங்காக்காலத்துனைக்கண்டு கண்ணீர்
அருவியின் வாரப்புளகுடல்போர்ப்பவவசநனி
மருவியிருக்கப்பெறினெனைச் சூழ்ந்தடும் வல்வினைகள்
வெருவியொழியுமணிமாமலர் மங்கைமெய்ப்பொருளே. (100 )
வாழ்கநன்னீர்மலைவாழியநீர்வண்ணமாயனென்றும்
வாழ்கமறையவர்வாழ்கவடமொழிமாமறைகள்
வாழ்கபதின்மர்கள் வாழ்கநல்வண்டமிழ்மாமறைகள்
வாழ்கவணிமாமலர் மங்கையன்னையிவ்வையகத்தே. (101)
நீர்மலைவாழுமணிமாமலர் மங்கைநின் மலைக்கோர்
சீர்மலி செந்தமிழ்ப்பாமாலை நூறு திகழ்புகழின்
ஏர்மலிகச்சிக்கடாம்பியிராமாநுசவிறைவன்
நார்மலியுள்ளத்தெதிராசதாசனவின்றனனே. (102)
அணிமாமலர்மங்கைத்தாயார் மாலை முற்றிற்று.
-----
This file was last updated on 10 March 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)