குப்பாநந்த சுவாமிகள் இயற்றிய
செங்குந்தர் சதகம்
cengkuntar catakam
by kuppAnanta cuvAmikaL
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
We thank Tamil Virtual Academy for providing a PDF copy of this work
This e-text has been prepared using Google OCR online tool and subsequent
proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
குப்பாநந்த சுவாமிகள் இயற்றிய
செங்குந்தர் சதகம்
Source:
குருவே துணை.
செங்குந்தர் சதகம்.
இஃது வாலைச் சமுத்திரமென்னும் முரட்டுமா நகரில்
ஸ்ரீ கணபதி கந்தசுவாமி கோவில் ஸ்தாபன கர்த்தராய் விளங்கிய
ஸ்ரீமத் குப்பாநந்த சுவாமிகளால், இயற்றப்பட்டு,
கணபதி கிராமத்தில் பால் மிஷின் வைத்திருக்கும் உபாத்தியாளர்
அ. பெரியதம்பி முதலியார் குமாரர் ஆறுமுக முதலியார் பாரியாள்,
கருணையம்மாள் பொருளுதவியால், கோயமுத்தூர்,
செங்குந்தர் அச்சுக்கூடம், லிமிடெட்டிற் பதிப்பிக்கப்பெற்றது.
1932, காப்பிகள் 1000.
ஆங்கீரஸ ௵ சிம்மரவி.
விலை அணா 4.
------------
முகவுரை.
குருவே துணை.
செங்குந்தர் சதகம் என்னும் இந்நூலானது, சாதாரண லௌகிக ஒழுக்கமாகிய ஜாதி மத
சம்பிரதாயங்களையே விதந்துசென்றும் ஏனையவற்றை அர்த்தபத்தியாதிய ஞாயங்களால்
இகழ்ந்து கூறும் வாத நூல்கள் போலாது முதலிரண்டு மூன்றாம் அடிகள்வரையும் ஸ்ரீ முருகப்
பெருமான் பரத்துவ லக்ஷணங்களையும், திருவருட்பெருக்கமைந்த திருவிளையாடல்
வைபவங்களையும், பக்தி ஞானங்களால் வியந்து துதிச்சுவை யமையத் தோத்தரித்தும்,
ஈற்றடியில் தாலசூக்கும சம்பந்தங்கொண்டு வீரவம்சத்தினராகிய செங்குந்தர்கள் "வடிவுந்தனழம்
மனமுங் குணமுங் குடியுங் தலமுங் குடிபோகியவா, வடியந்தமிலா வபில்வேலாசே
மீடியென்றொருபர்வி வெளிப்படினே” என்னும் கந்தரநுபூதிப்படி மிடிகனலால் வருந்தும்
துன்பங்கண்டாற்றாதவராய் இரக்கமமைந்து மற்றைய புருடார்த்தங்களையடைவிக்குந்
துணைக் கருவியாய் நிற்கும் பொருள்வளம் பொலிந்துய்யுமாறு ஸ்ரீ கந்தக்கடவுளின்
றிருவருட்டுணை கொண்டு பாடிமுடிக்கப்பட்டுள்ளது.
இந் நூலாசிரிய சுவாமிகள், செங்குந்தமரபினர் செய்தவத்திரண்டே யங்கங்கொண்டுலகி
னராருமேத்தெடுப்ப ஸ்ரீ குகப்பெருமான் குன்று தோறாடற்படை வீடுகளிலொன்றாகிச்
சிறந்து விளங்கும் கதித்தமலைக்கும், ஆளுடைய நம்பிகளாகிய ஸ்ரீ சுந்திரமூர்த்தி சுவாமிகளால்
ஊர்த் தொகையில் வைப்புஸ்தலமாக அமைத்துப் பாடியருளப்பெற்ற குரக்குத்தளி என்னும்
சிவாலயத்துக்கும் சமீபித்துள்ள வாலைச்சேஷத்திரமென் வழங்கும் முரட்டு மாநகரின்கண்
அவதரித்து மாதாபிதாக்களால் குப்பையன் எனப்பிள்ளைத் திருநாமஞ் சூட்ட வளர்ந்து கல்வி
அறிவு ஒழுக்கம் சாந்தம் முதலிய சற்குணங்கள்பொலிந்து தமது குலதெய்வமாகியும்,
முழுமுதற்றனித் தலைமைப் பரமாகியும் விளங்கும் ஸ்ரீ முருகப் பெருமானையே தமது
பாசனா மூர்த்தியாகக் கொண்டு பூசித்தும், உத்தமக் கௌமார மெய்யன்பர்கள் பணி
விடையாதியும் புரிந்தும் உலகியன் முறையமைந்தும் கமல சலம்போற் பற்றின்றி இல்லரத்
துறையில், தமது சரீரத்திற்கு முப்பத்து நான்காண்டுப் பருவமெய்துங்காறும் பொருந்தி
வாழுநாள் ஓர் நாள் கனவில் கருணைக் கடலாகிய ஸ்ரீ தண்டபாணிக் கடவுள் காக்ஷியளித்து
கடன் மடை திரந்தாங்கு அமுதவாக்களித்து நீ இதுமுதலாகி கேமது புகழ்ப் பிரதாபங்களையே
அரிய செந்தமிழ் பாக்கள்கொண்டு பாடக்கடவாயாக'' எனத் திருவாய் மலர்ந்தருளலும்
உடனே துயில் நீங்கப்பெற்று, அருளாவேச பரிதவராய், இரவும் பகலும் இடையீடின்றி
ஏடுமெழுத் தாணியும் கைவிடாது " ஆடும்பரி வேலணி சேவலெனப் பாடும்பணியே பணியாகக்
கொண்டு ஸ்ரீ முருகப் பெருமான்மீது அளவின்றிய திருப் புகழ் பலவிதமாகிய விருத்தப்
பாக்கள் கொண்டு பாடியணிந்தும் விளங்கினராக. அக்காலத்தில் இவர் தரிசன பரிசன
நோக்கமாதிய செயல்களால் "மலடரென் றமைந்தோர் மக்கண் மிக்கெய்தியும், விலகுறாப்
பிணியால் வேதனை யடைந்தோர், நலமிகப் பொருந்தியு நானிதுபெற்றா விலகநிற்கின்ன
தீகுவனென்னுங்,கோறிக்கையாளர் குறைதவிர்ந் துலவாச், சீருற்ற காதைகள் செப்பரும்
பலவாம், உலர்ந்து போய்விற காயுறுந் தருவினம்பல, பலந்தரும் வண்ணம் பாடல்கள்
பொழிந்தும், முதிர்தரு மன்பின் முடிவணங்கன்பர்க் கெதிர்வருகாலத் தியல்புகள் சொற்றும்
விளங்கும் நாளில், இவரிடம் அன்பமைந்த அணுக்கத் தொண்டராகி பூந்துரை நாடு
வெள்ளோடென்னும் பதிக் கணித்தாகி யுள்ள சாளைப்பாளையத்தில் வாழும் சடையப்ப
முதலியார் என்பவர் செய்யுந் தொழிலிற் சிறந்ததென் றான்றோர் புகலும் செய்யுந்
தொழிலினைத் தமைந்த தம்மினத்தர் வறுமைப் பிணியாற் படும் சளம் பொறாது தீர்ந்துய்யும்
வண்ணம் அநுக்கிரகிக்கப் பிரார்த்தித்ததற்காக இந்நூற் பாடியதாக இதன் 98, 99-வது
கவிகளிலாதாரங் காணப் படுகிறது.
இத்தகைய திருவருள் விளக்க மேம்பாடுகள் பல கொண்டு உலகினர் குப்பானந்த சென்னுங்
காரணப் பெயர் சூட்டிப்போற்ற விளங்கிய சுவாமிகள், வாலை க்ஷேக்திரத்திரத்தின்கண்
ஸ்ரீ விநாயக மூர்த்திக்கும் ஸ்ரீ கந்தசாமி கடவுட்கும் பக்தி மிகுதியாலும், அன்பர்கள் சகாயத்
தாலும் ஆலயத் திருப்பணி சிறப்புற முடித்துப் பிரதிஷ்டையாதில் புரிந்து நித்திய நைமித்திகமாதி
நடத்திப் பாமானந்த சலதியின் மூழ்கி வாழுநாள் தமது சரீரத்தின் கால வெல்லையையும்
அதன்பின் நடை பெறும் விஷயத்தையும் ஸ்ரீ முருகப் பெருமான் றிருவருளுணர்த்த வுணர்ந்து
தாம் ஏற்படுத்தியுள்ள ஆலய பரிபாலனமும் எதிர்காலத்திய, அமையுந் தமது சமாதிப் பணியும்
எனைய கைங்கரியங்களையும் சிறப்புற நடத்தும் ஆற்றல் பெற்றவர் தமது மூத்த புதல்வியின்
குமரராய் விளங்கும் பழனியப்பனே யெனத் தேற்றி அவரை அழைத்து அருளநுக்கிரக வுபதேசம்
புரிந்து "பழனியப்ப சுவாமிகள்" எனத் தீக்ஷா நாமஞ்சூட்டி திருவருள் மயமாய்த்
தம்மிடத்தமைந்த விபூதிச் சம்புடத்தை யருளி எல்லா நன்மைகளும் உண்டாகுமாறு ஆசீர்வதித்து
அன்பினர் சூழ்ந்து போற்ற மனக்கனிவுடன் ஸ்ரீ கந்தசாமிக் கடவுளின் றிருவடிகளில்
மனத்தைப்பதித்து மந்திர மூலமாகிய ஸ்ரீ ஷடாக்ஷர மகாமந்திரஞ் செபித்துக் கொண்டு
அஞ்சலியஸ்தராய் ஆனந்தக் கண்ணீர் பெருக எம்பெருமானைப் போற்றிய வண்ணமாய்,
கலியுகாதி 4992 விகுர்தி-௵ ஐப்பசி -௴ 21-உ சுக்கிர வாரம் பூர நக்ஷத்திரத்தில், அகண்ட
சச்சிதானந்த பரமாகிய ஸ்ரீ முருகப் பெருமான்றிருவடியிற் கலந்தருளினர். சுபம்!
செங்குந்தரினம் பொலிய ஸ்ரீ குப்பானந்த சுவாமிகளால் அநுக்கிரக ரூபமாகப் பாடிவைத்த
பாசுரங்களாகிய அமுதத்தை, தனித்தனி பாத்திரங்களாகிய புத்தகங்களிற் பெய்து பலர்க்கும்
உபயோகமாகும்படி ஸ்ரீ பழனியப்ப சுவாமிகளிடம் உத்தரவு பெற்று அச்சிட்டளித்த ஸ்ரீமதி
கருணையம்மாளுக்கு ஸ்ரீ முருகப் பெருமான் எல்லா நலங்களையும் தந்தருள்வாராக.
-------------------
செங்குந்தர் சதகம்
தெய்வமே துணை.
உ
குருவே துணை.
பதிப்புப்பாயிரம்.
சிரவணபுரம் கௌமாரமடாலயம், ஸ்ரீலஸ்ரீ இராமானந்த சுவாமிகள்
மாணாக்கர் கந்தசாமி சுவாமிகள் இயற்றியன.
பதினான்குசீர் விருத்தம்.
சீர்பொலிவாலை சமுத்திர நாமந்
திகழ்தரு முறட்டுமா நகரிற்
சிந்துரமுகவன் கந்தசாமிக்காந்
திருத்தளியமைத்துமுன் றவத்தாற்
கூர்பொலி வடிவேற் குகன் றிருவருளாற்
கொண்டலாரிடித் தொனிநாணக்
குளிர் திருப்புகழா திய பொழிந்தாடல்
குயிற்றுக்குப் பானந்தப் பெரியோன்
பார் பொலி புகழ்ச் செங்குந்தர் தாமிடியாற்
படுசளம் பொறாதுளத் தருளாற்
பரம சற்குருவின் றண்ணருள் புரிவான்
பகர் செங்குந்த சதகத்தை,
யேர்பெறுமினத்தர் துதித் திகபரச்சீ
ரெய்திடப்பழனி யப்பப்பே
ரிசைதவன்றன்பா லேற்றுவந்தச்சி
லிட்டிசை யுடல் பொருந்தினளால்
எழுசீர் விருத்தம்
மேலியைந்திடுசீர் பெற்றவளின்
பம்விரவியற் கணபதி நகரின்
பாலியைந்திடு பாலியந்திரமமை
யுபாத்தியான் பெரியதம்பியின்சே
யோலிடுமாறு முகமுதலி தனக் குற்ற
நற்றாரமாந்த கையாள்
சாலியல் கருணையம்மையா நாமந்தரித்தவி
ருரித்தினண் மாதோ.
விநாயகர் காப்பு.
ஏத்துமடியா ரிடாகற்றி யெந்நாளுங்
காத் துதவி செய்யுங் கணபதி நின்-பூத்துணைத்தாள்
போற்று மென்றன் செந்தமிழாற்பூவார் செங்குந்தரின்ப
மேற்றுயரச் செய்வா யிசைந்து.
விண்ணப்பம்.
முருகக்கடவுள் வெண்பா.
தேனே வடித்தெடுத்த தெள்ளமுதே தித்திக்குங்
கோனே திருப்பழனிக் கொற்றவனே - தானோதுஞ்
செந்தமிழாற் செங்குந்தர் சீர்மிக்கரு டுலங்க
வந்துதவுங் கந்தர் திருவாக்கு.
உ - குருவே துணை.
நூல்.
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.
காலையிலே யெழுந்துபுண்ய நதிசென்று
தந்தமொடு கைகால் சுத்தி
சீலமொடு செய்து வெண்ணீற்றினைக்
கைகொடு சிவனடியைச் சிந்தைசெய்தே
வாலைகுருசாமி யென்றே நெற்றிதனி
லணிந்தவரை வாழ்த்தி யேத்த
ஞாலமதி லுங்களுக்கே யதிக செல்வங்
கொடுத்து முத்தி நாட்டுவாரே (1)
வேறு
அறுசீர்க்கழி நெடில் விருத்தம்.
திருவுமை யருளால் வந்த செங்குந்தர் செய்யும் வேலைக்
குரமிகவுதவி செய்தற் கும்பர் நாயகனே யுன்றன்
கிருபை யதல்லால் வேறோ கிரிதொறும் பரவி நின்ற
சரவணபவனே யீது ததி யருள் புரிகுவாயே (2)
எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.
ஆதிகுரு வேதமறைப் பொருளேயுண்மை
யடியகுளமகலாத வருளே பச்சை
நீதிமயிலேறி யுல காண்ட மூர்த்தி
நின்னையல்லால் வேறுமொரு தெய்வமேது
சோதிமயச் சுந்தரமே செங்குத்தர்க்குத்
துணையிருந்து சுகம் பெருக்குஞ் சுப்ரமண்யா
நாதனென வளர் பழனிவேலா சீலா
நாயகனே யிக்கவிக்கு நன்மை செய்யே (3)
சீராரு முகமிலங்கச் சிரத்திரத்தினத்
திருமகுடத் தொளிவு கதிரவன்போன் மின்ன
வாரார் பூங் காதணியுங் குழைகள் மின்ன
மார்பழகும் பதக்க மின்ன மாலையாட
காராருங்குழல் வள்ளிபங்கா வுன்றன்
கருணையுள்ள செங்குந்தர் கவலையாமோ
நேராக வுறுகலியை விலக்கிச் செல்வ
நேர்மையுறச் சந்ததமு நிலை செய்வாயே (4)
வேறு
அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.
அன்னையுமை யவளிருக்க வப்பனென்ற
வரனிருக்க வலைச்சலரமோ
பின்னை யெவரறிவருண்டு பிள்ளைகளுக்
குறுதியென்ற பெருமை லாபம்
தன்னுடைய தொழிலதனான் முமைமை
தப்பிச் சலிப்பது தாய் தந்தை வேலை
யின்ன மனமிரங்கிலையோ யிச்சணமே
கருணைசெய வெண்ணு வாயே (5)
கயிலாசந்தனிலுதித்துக் கைக் கொள்வ
முதலியென்றே கனிந்தேயம்மை
செயலாலேயவர்களுக்கு நெசவு தொழில் தனைக்
கொடுத்துச் செல்வமோங்கத்
தயவாகப் புவியதனிற் போய்ச் சுகமாய்வாழ்க
வெனத்தானே செப்பும்
வயமாகும்வார்த்தை பொய்யோ வன்றுரைத்த
படி நீயேவாழ்விப்பாயே (6)
நல்லவனே யெவ்வுயிர்க்கு ளுள்ளவனே
யுன்றனருள் நடத்தை சொல்ல
வல்லமையோ யில்லைமயில் வாகனத்தோ
யடியனுன்னை வாழ்ததி வாழ்க
சொல்லருமையுள்ள நவ வீரருக்கேனுன்
கிருபை துணையாம் பார்வை
யில்லையென்ற தென்ன சொல்லோ நல்லதென்ற
வருள் கொடுக்கு மினிய கோவே (7)
பரமனிட செவியிலுரை பகர்ந்தவனே
பன்னிருகை வேலா வுன்றன்
பெருமைதனை யறிபவர்க ளுலகிலுண்டோ
வானிலுண்டோ பேதை காணேன்
அருமை மயிற் சூரியவனே யுன்னடியார்
செங்குந்தர்க் கலைச்ச லென்ன
வறுமைதனை யகற்றி யருஞ் செல்வமது
கொடுப்பதுந்தன் மகிமைதானே (8)
தரணிதனில் முருகனல்லா லொரு தெய்வம்
பேசாது சமய மொன்றும்
நிரையழகா மெனப்பகுத்தே யாவர்களும்
வாழ்வதற் கிந்நீதி மாற்றம்
உரியவனே யுன தடியார் செங்குந்தர்
வறுமையினா லுழலலாமோ
முறையதுவே கலியகற்றி யருள் பெருகக்
கிருபை செய்யு முருகவேளே (9)
மாலயனுந்தேடரிய சொக்கலிங்க நாதர்
பெற்ற மகனே வேலா
பாலரென்ற நவவீரர் தங்களையுந்
தம்பியென்றே பரமனாட்ட
ஞாலமெலா மறியவரைக் கைக்கொண்டாய்
கலியுகத்தில் நலங்கநீயும்
சீலமிலா திருப்ப தென்ன கலிவிலக்கிச்
செல்வமிகச் சிறக்கச் செய்யே (10)
மலைகளெங்கும் விளங்குகின்ற வாறுமுகா
நின்னையல்லால்- மற்றோர் தெய்வ
நிலைகளெங்குக் கண்டதுண்டோ
வறி வறியே னெவ்வுயிர்க்கும் நீயே நீயாம்
கலைகள்விண்ட வற்புதமே
யுனதடியார் செங்குந்தர் கலியான் மெத்த
வலைவதென்னவிது மேலோ நல்ல
செல்வங் கொடுத்துன்ற னருள் செய்வாயே. (11)
வேறு அறுசீர்க்கழி நெடிலடி யாசரிய விருத்தம்.
குலத்தினிற் குலமா மென்று கூறிய குலமாங்குந்தப்
பலத்தினிற் பெரிய வீரபராக்ரமம் படைத்தே கந்தன்
வலத்தினிற் சேர்க்கையாக வந்த சூரரை வதைத்த
நலத்தினைச் சொல்லும் பேர்கள் நன்றென வாழ்வதாமால் (12)
அளுவுருக்கடந்த மேலா மானடி மறவாதேத்தி
வருபவர்க் குதவியாகும் வகுத்த செங்குந்தர் வாழ்வு
பெருமையற்புதமே கொண்டுன் போருள் பெருகி நின்றே
யருமையாஞ் செல்வமெய்த வருள்செய்வாய் குமரவேளே. (13)
சிவனடி வணங்கிப் போற்றுஞ் சிந்தையர் செங்குந்தாதி
பவமெனுந்தாவ சாபம் பறந்திடக் கடைக் கணோக்கித்
தவமெனும்பதி கொடுத்தே தாழ்விலாச் செல்வமீவாய்
கவனமாமயில் நடத்துங் கந்தசம்பந்தவேளே. (14)
வேறு
அறுசீர்க்கழி நெடிலடி யாசரிய விருத்தம்.
அனலின்மிசை யிடும்வாழ்வென்
றறிந்திருந்தும் பேரின்ப மறிவதற்கே
மனமதனிற்பாசமது விடுவதில்லை
விடுவதில்லை மாநிலத்தே
யுனது செயற்படி வருமே யல்லானை
மற்றன்னி வினுறுதியாமோ
கனமிகு மற்புதப்பழனிக்
காரணனே யருள் பெருகுங் கந்தவேளே. (15)
பெருமை மயிலுக்கினிய முருகனது தம்பி
யெனும் பேர் பெற்றோங்கி
வரமகிமை மிகுத்தசுரர் தமை வதைக்கப்
படைத்துணையாய் வந்த வீரர்
உரமுடனே பலன்களற்றுக் கலியுகத்திற்
கொடுமை யென்று முற்றுவாட
அருகணையுங் கலிவிலக்கி யதிக
செல்வ மக்கள் பெறவருள் செய்வாயே (16)
அயிலெடுத்தே யசுரர்களை வதைத்த
வதிவீரனென்றே யமரர் வாழ்வைச்
செயமெனக் கண்டவர்கள் பதி
காத்தவனே யுனைவிட வோர்
தெய்வமேது தயவெனல்கண் டுனதடியார்
செங்குந்தர் கலியதனாற் றயங்கலாமோ
நயமெனக்கொண்டது விலக்கி நல்ல
செல்வமக்கள் பெற நாட்டுவாயே (17)
அருட்சத்தி யெனும்பெரிய வுமையளித்த
வாறுமுகத் தையன் கூட
வரவுதவி யெனப்படைத்த செங்குந்தர்
மக்களிந்நாள் வரவில்லாமற்
பெருமையின்றி வாடுவதை யகற்றியவர்
செல்வமுறப் பிரியமாகத்
தருணமிது கிருபை தரும்
மழகுமயின் மீதேறுந் தம்பிரானே (18)
பாவமிலாத் தொழிலதென்ற நெசவு
தொழிலினைக் காட்டப்படியே பெற்றே
யாவலுடனிது நமக்கு நல்ல பதமார்க்க
மென்றே யறி வொப்பாகக்
காவல்கொண்டே யிரவுபக லலைந்தாலும்
வருவாயிற் கருத்தில்லாமற்
றேவவென்று சிந்தையிலே நோதனன்றோ
கலி விலக்குஞ் செந்தில்வேளே (19)
வாதசுரர்குலம் வதைக்க வரனளித்த
வாறுமுக வடிவேற் கந்தா
சோதாமாகிய வீர ரொன்பதுபேர் படைத்
துணையாய்த் தோன்றி வந்தே
யாதரவாய் நின்று சமர் முடித்த பின்பு
பூவுலகிலவர்கள் வந்தே
போதர லிலா திருக்குங் கலியகற்றிச்
செல்வமருள் புனிதவேளே (20)
வான வர்க்கா வயிலெடுத்தே யசுவர்களை
வதைத்தவனே வள்ளி வாழுங்
கானகத்தே யுறைந்து மயிற் கதித்துகந்த
தென்பதியின் கந்தவேளே
ஞானமுற்ற சிவனடியார் செங்குந்தர்
கலியுகத்தி னலங்கலாமோ
தானகற்றி யவர்களுக்கு மிக்க
செல்வ மென்மேலுந் தருகுவாயே (21)
ஆறுமுகத் தெய்வமென்ற தெய்வமல்லால்
வேறு தெய்வ மறிவதுண்டோ
காரணமுற்றருள் பெருக்கி யாவருக்கும்
வரங்கொடுத்தே கதித்து வாழ்கத்
தாரணியுற்றுனது செயலால் வந்த
செங்குந்தர் தயங்கலாமோ
பார்வை சற்றுஞ் செய்யாமை நல்லதல்ல
வினிமேனற் பார்வை செய்யே. (22)
சொல்லினிக்குஞ் சுருதிக்கு மெட்டாத
மேலவனே துரங்கமேறி
யெல்லவர்க்கும் வாழ்வு தந்த வேழைபங்கா
நின்னையல்லா லேது தெய்வம்
வல்லவர்க்கும் வல்லவனே யுன தடியார்
செங்குந்தர் வறுமை யென்னுந்
தொல்லைதனை விலக்கி யிந்நா ளவர்கள்
செல்வ மிகப்பெருகத் துணை செய்வாயே (23)
சூரர்குலம் வேரறுத்தே யமரர்சிறை
மீட்டவர்க்குத் துணையாய் நின்ற
காரணனே யெவ்வுயிர்க்கு முயிராகிக்
காசினியிற் கதித்து வாழப்
பூரணமாய் நின்றவனே யுன தடியார் செங்குந்தர்
பூலோகத்தி னோதிலாக்
கொடுமை முற்று மறவிலக்கிச்
செல்வமதை நிலைசெய்வாயே. (24)
வல்லாண்மைக்குள்ள தெய்வ மலை
முருகனல்லாமல் மற்றுமுண்டோ
சொல்லாண்மைப் புவி விளங்கத்
துங்கமயிலேறி வந்து துணையாய் நின்ற
நல்லோனைக் கைகூப்பித் தினம்பணியுஞ்
செங்குந்தர் நலக்கமென்ற
தொல்லாண்மைக் கலி விலக்கியவர்கள்
செல்வமிகப் பெருகத் துணை செய்வாயே. (25)
ஐயனே பழனி நகர் வாழ்வுகந்தே
நீடுலக மனைத்துங் காத்த
தெய்வ சிகாமணியே நீ யில்லாமல்
வேறுமொரு தெய்வ முண்டோ
மெய்யரெனப் புவியில் வந்த
செங்குந்த ரவதியுற வினையேன் செய்தாய்
உய்வ தென்றுகலியகற்றிச் செல்வபென்ற
சிறப்பருளு மும்பர் கோவே (26)
பரிதியுற்ற வயிலெடுத்தே வசுரர்
குலம் வேரறுத்த பகைவாவுன்ற
னுரிமையுற்ற மயிலேறி யுலகமெலாங்
காத்தவனே யும்பர் கோவே
சரவணத்தின் பால் வரவே யுன தடியார்
செகுந்தர் தயங்கலாமோ
அரி மருகாவவர்கள் கலிவிலக்கி மிகச்
செல்வமதை யருள் செய்வாயே. (27)
வேதமுதற் றலைமையனே யுலகை
வலம் வந்தவனே விமாலானந்த
வாதியருள் குருபரனே யெவ்வுயிர்க்கு
முயிரானே யண்டர் கோவே
சாதியினிற் குறமாது மணவாளா
வுனதடியார் தயங்கும் வாழ்கை
யேதனையறச் செய்து கலி விலக்கிச்
செல்வமதை யிசைவிப்பாயே. (28)
சிந்தையுற்று மயிலேறி யுலகமெலா மரை
நொடியிற் றிரிந்து வந்தோய்
தந்தையொடு தாயுமுனை யல்லாது
வேறுமொரு சார்புண்டேயோ
விந்தையுற்ற கயிலைதனைக் கைக் கொண்ட
செங்குந்தர் மெலிவதென்ன
வந்துமிக வவர்கள் கலி விலக்கி யருள்
செல்வ மிக வழங்குவாயே. (29)
காரணமாம் வேடிக்கை வெகு விதங்கள்
மேலதுள்ள கந்தா வுன்றன்
பார்வையினாலான நவ வீரரென்ற
பத்தருக்கேன் பவுசு பாக்யந்
தாரணியி லதிக மிலா தவரரகி வருந்தவைத்தாய்
தகைமை தானோ
பூரணமா மருள் பெருகிச் செல்வமிகத்
தழைக்க வருள் புனிதவேள. (30)
கன்னியர்கள் வயிற்றுதித்த நவ வீரரொன்பது
பேர் கதித்து வாழ்க
வுன்னினைவி னருள் புரிந்தே
நெசவு தொழிலினைக் கொடுத்து முறுதியில்லா
தென்ன வித மவர்கள் செய்த பாவமதாயிருந்தாலு
மெண்ணாதன் பால்
வன்ன மயிலேறி வந்து கலியதனை
நீக்கி யருள் வழங்குவாயே (31)
எண் சீர் விருத்தம்,
நீதி மயிலேறி வந்தே யடியர்க் காக்க
நின்னையல்லால் வேறுமொரு தெய்வ முண்டோ
ஆதிகுரு வேலவனே தேவர் தேவா
வயிலதினாற் சூரர் குலமழித்த மெய்யா
ஒதுமுன தடியார்கள் செங்குந்தர்க்கே
யுற்ற தொழிலதனாலே யுறுமிலாப்
மீதியது சற்றுமில்லாக் கலியதாமோ
மேன்மையுறுஞ் செல்வ மிக விளைவிப்பாயே. (32)
வையகத்திலுன்னை விடத் தெய்வமேது
மலை முருகா மயிலேறி நாடி வந்தே
கையிலுற்ற வேலதனாற் சூரர் மாளக்
கண்டு மமராவதியைக் காத்த மெய்யா
செய்கை யுற்ற வன தடியார் செங்குந்தர்க்குச்
சிறந்த தொழிலதனாலே சிறப்பில்லாமல்
நையலுற்ற கலியாமோ வது விலக்கி
நன்மை மிகுஞ் செல்வமிக நாட்டுவாயே. (33)
மனமுவந்தே மயிலேறி யுலகமெல்லாம்
வட்டமிட்ட வடிவேலா மறவர் பெண்ணா
டனமுகத்தே மயல் பெருகிச் சுகித்தெந்நாளுந்
தயவாக வடியருக்குத் தனதா நின்ற
கனக வெற்ப தெனும் பழனி வேலா வாழுங்
காரணனே செங்குந்தர் கதித்து வாழ்க
வினைய தொத்த கலியழகோ வதனை நீக்கி
வேண்டுவதாஞ் செல்வ மெலாமேவச் செய்யே (34)
கருணை மயிலேறு கந்தநாதா வாதி
காரணனே யெவ்வுயிர்க்கு முயிராய் நின்ற
பெருமையனே மறவர்குலப் பெண்ணாள் வள்ளி
பெருமையுற்றேயெப்போதும் பிரியா வாழ்வே
உரமிலங்குஞ்சத்தி வை வேலையா மெய்யா
வுன்னடியார் செங்குந்தருற்ற வாழ்வு
வறுமை யெனுங் கலிகள் பெற னீதியாமோ
மலை முருகாவது விலக்கி வாழ்விப்பாயே (35)
வேதமறைப் பொருளானே மெய்யா மெய்யா
மேதினியி லுன்னைவிடத் தெய்வமேது
ஆதியுமைக் கருமையுள்ள மைந்தா கந்தா
வயிலெடுத்தே யசுரர்களை வதைத்த தீரா
நீதியுடனெப்போதுந் தொழுதலுற்ற
நேயரென்ற செங்குந்தர் நெசவு செய்தும்
வாதையுறலாமோ தானிலாப மில்லா
வகையதென்னவது விலக்கி வாழ்விப்பாயே. (36)
குருவருளே சிவமயமே யடியார் நெஞ்சங்
குடியிருந்தே பதமவர்கள் பெறக்கொடுத்தே
யருள் முருகா கழுகுமலைக் கந்தவேளே
யருணகிரி நாதனுக் கன்றருள் செய்தோனே
சரவணனே யுனதடியார் செங்குந்தர்க்குச்
சாதகமா நெசவு தொழிற் றந்தே லாபம்
உரமுதவா விதமறியேன் கலியை நீக்கி
யுதவியெனுஞ் செல்வமிக வோங்கச் செய்யே. (37)
மூவர்களுநீயல்லால் முருகநாதா
முன்னிற்கு முலகு தனில் மூர்த்திவேறோ
யாவர்களும் பலவிதப் பேர்படைத்து நின்றே
பாவமெனுங் கன்மிச மில்லாத வாழ்வைப்
யளித்தழித்துத் துடைப்பது நின்னருளே யன்றோ
படைத்தவிர் செங்குந்தர்கள் பாக்கியமில்லாம
லாவதென்ன வதுவிலக்கியதிக செல்வ
மடியர் பெறச் சுப்ரமண்யா வருள் செய்வாயே. (38)
நிலைகளுள்ள மலைளெங்கு நீயாய் நின்று
நினைத்தவர்க்கு மிகப்பவுசுநீயே தந்தாய்
வலையதென்ற பாசமதா முலக வாழ்வு
வாழ்ந்து நெடுநாளிருந்தென் மலர்ப்பொற்பாதம்
மலைகள் கொண்டு மகிழ்வது போற்கொடுத்து மேவும்
மகிமை யுமையாளளித்த வடி வேலையா
அலைதலுற்ற செங்குந்தர் கலியை நீக்கி
யதிக வரமிகுத்த செல்வமருள் செய்வாயே. (39)
சொன்ன மொழி பொய்யாத வையா மெய்யா
சூரர் குலம் வேரறுத்தே துணையாந் தேவர்
முன்னவனாய் நின்று குடி காத்த மூர்த்தி
முழுமுதலே யாவருக்கு முகமலர்ந்தே
யன்னமொடு செல்வ மென்ற பாக்கியந்தந்
தாதரவாய் நின்ற வரும்பொருளோ குந்த
ரென்ன குறைசெய்தாரோ கலிகள் கொள்வ
தியல்பல்லவவை விலக்கியினிமை செய்யே. (40)
வாரணமா முகக்கடவுட் கிளைய கந்தா
வையகத்தி லுன்னைபல்லால் மற்றோர் தெய்வம்
காரணமாய் விளங்குகின்ற தறியேனுற்ற
கருணையினாலடியாரைக்காத்த மெய்யா
தாரணியின் மிசை விளங்குஞ் செங்குந்தர்க்குச்
சாதனையா நெசவு தொழிற் றனிலே லாபம்
பூரணமாயில்லாத கலிகளாமோ
புண்ணியனே விலக்கியருள் புரிகுவாயே. (41)
அருமறையின் பொருளாகி நின்ற வுன்ற
னருளதனா னீடுலக மனைத்துங் காத்தாய்
பெருமையனே யெவர்களுக்கு மெட்டா வாழ்வே
பேரின்பக் கடலமிர்தே பிசகிலாத
கருணைபொழி ஷண்முகனின் பாதத்தன்பே
கைகொண்ட செங்குந்தர் கவலையாமோ
வருமமென்னவது விலக்கிச் செல்வ மோங்கி
வாழ்வுபெறக் குலமுழுதும் வளர்விப்பாயே (42)
வல்லமையிற் கதித்த வயிலெடுத்தே சூரர்
வாழ்வு பொடி தூளாக மதித்தே தேவ
ரெல்வரும் பதியணுகி வாழ்வீரென்றே
யேற்றியவர்க் குற்றவனே யெம்பிரானே
தொல்லுலகந்தன்னில் வந்த செங்குந்தர்க்குத்
தொழிலான நெசவதனாற் சுகமிலாமை
நல்லதல்ல வுறுகலியை நீக்கிச் செல்வம்
நாட்டிவளர் நல்ல சுகம் காட்டுவாயே. (43)
பச்சை மயிலுக்குகந்த பரனேயம்மை
பாக்கியத்தினால் வந்த பாலாசீலா
மெச்சியுனையுலக மெங்கும் போற்றிவாழ்க
மேலவனாயாவருக்கு மேலாய் நின்ற
விச்சை யறுமுகவா வுன்னடிய சென்ற
வினிமையுள்ள செங்குந்த ரிக்காலத்தே
உச்சிதமாய் தெசவதனிலாப மில்லா
துறக்க மென்ன வதுவிலக்கி யுறுதிசெய்யே. (44)
கயிலை வளருமை யளித்த கந்தா செந்திக்
காரணனே பூரணனே கதித்த வீரா
மயிலில் வல முலகமெலாம் வந்து காத்த
மன்னவனே யுன்னைவிடத் தெய்வ முண்டோ
அயிலதனா லமசர் சிறை மீட்ட மெய்யா
யடியரென்ற செங்குந்த ரவதி யென்ன
செயலதுதா னறிகிலையோ கலியை நீக்கிச்
செல்வமொடு வாழ வருள் செய்குவாயே (45)
திருக்காத்தா லயிலெடுத்துச் சூரர் மாளச்
சிறை யமார் தனை யகற்றிச் சிறந்து வாழ்க
வருள் படைத்த மயிலோனே யுலக மெல்லா
மரை நொடியில் வலம் வந்த வையா மெய்யா
அருவடைந்து புவியில் வந்த செங்குந்தர்க்கே
யுறுவினை யாங்கொடுமை மிக வுறுதலென்னே
முருகுலவு நீப மலர் மாலையானே
முறைமையதாய்த் திருவருளி முன்னிற்பாயே (46)
பாரதனிற் பலவகையும் படைத்தழித்துப்
பாது காத்தருள் பவனும் நீயே நீயே
யாரதனைக் கண்டறிந்து வாழ்கின்றார்கள்
ளறியாமல் வீணாக வழிவார் மெத்த
வேற தொன்றுங் கண்டதில்லை யுன்னையோதும்
வேலை யென்ற வேலை குன்ற வினையதாமோ
நீரி தென்ன கொடுமை செய்கை நல்லதல்ல
நிதிகள் பெறக் கிருபை யருள் நியமிப்பாயே (47)
மந்திரமும் நீயே நீ வடிவேற் கந்தா
மாநில மும் நீயே நீ யல்லான் மற்றோர்
தந்திரமுங் கற்றறியேன் கருணை கொள்ளுந்
மியனது வாக்குரைத்த தமிழ் விளங்கச்
சிந்தை தனின் மறவாமலுன்னை யோதுஞ்
செங்குந்தர் தங்களுக்கே சிறந்த வாழ்வு த
விந்தை யள வில்லாமற் கலிகள் மேவும்
வினை வென்னவதுவிலக்க வேண்டும் நீயே. (48)
மறைய வனைச் சிறையில் வைத்து முருகா நீயே
மானிலம் வாழ் யாவரையும் வகுத்து விட்டே
நிறை நிறையாய்க் கயிலை செல்லும்படியே செய்த
நீலமயில் வாகனனே நின்னையல்லா
லுறுமணியற்புக மறியா ருனது பத்த
ருகந்த தொழிற் பிழைப்பதனா லொழுங்கிலாமல்
வறுமையுற்றுத் திரிவதென்ன கலியகற்றி
வாழ்வதனை யெப்பொழுதும் வழங்குவாயே. (49)
அரிதான வுன்றனருளமைவு கண்டே
யடிதொழுக மாட்டாதவசடர் மெத்த
விரிவாகப் பரிவு கொண்டு வீணாம் வாழ்வை
வேண்டி மெத்தத் திரிவார்கள் வீடுகாணார்
குருவாகப் பலகாலும் பணிதலுற்ற
குலமதென்ற செங்குந்தர் தானே குன்றத்
தெரியாமலிருப்பது போலிருக்கலாமோ
தேடியவர் கலியகற்றாய் சேவலோனே. (50)
கதித்தமயி லேரிவந்தே யுலகம்வாழக்
கருணை செயுங் காரணனே கந்தா வுன்னை
மதிப்பதில்லா வேறு விதமாமோ சொல்லு
மதலையடியேன் றுதிக்க மனமுவந்தே
நதிப்பெரிய பழனியப்பா வுன்றனன்பர்
நாடோரு நெசவு தொழிலான்மயங்க
விதிப்படியோ கலிவிலக்கிச் செல்வமீந்து
வேண்டிய வாழ்வுகளருளி விளங்கச் செய்யே. (51)
பெருமையுற்ற குறமாதின் மகிணாவுன்னைப்
பேணிமனத் தெண்ணு நர்க்குப் பிழையுண்டாமோ
மருவு கொடுந்துயர மெல்லா மகற்றியுன்றன்
மகிமை கண்டு நன்றாக வாழவேண்டு
மருமையுற்ற வுனதடியார் செங்குந்தர்க்கே
யலைச்சலென்றே கொடுமை வரலாமோ சொல்லாய்
முரணமையுங் கலிவிலக்கிச் செல்வமீவாய்
முருகா பன்னிருகரத்து மூவர்கோவே. (52)
ஆதிமறை நூன்முதல்வா வகிலமூர்த்தி
யருள்மிகுத்தே யமார்சிறை மீட்டதேவா
நீதிமயி லேறி யசுரேசர் வாழ்வை
நெடிய வயிலாலழித்த நிமலானந்தச்
சோதிமயப் பொருளாகி விளங்கி நின்ற
தூயவனே செங்குந்தர் தொடுத்த வேலை
மாது புவியதில் விளங்கிச் செல்வமோங்க
வரமருளிக் காப்பதுன்றன் மகிமைதானே (53)
இரவு பகல் நீயே நீயல்லால் வேறோ
யேழுலகு நீயே நீ யல்லால் வேறோ
யருளுடைய வாதி குருபரனே மெய்யர்க்
ககமதிலே குடியிருக்கு மையா மெய்யா
யுரிமையுறு முன்னடியார் செங்குந்தர்க்கே
யுற்ற கலியாவையுமே யொ துக்கி யாள்வாய்
அரிமருகா திருப்பழனி வாழ்வே போற்று
மடி யருளம் பிரியாத வமல வாழ்வே (54)
கரியமுகில் மேனி வண்ணன் மருகா வுன்றன்
காரணத்தை யெவரறிந்து கருத்துற்றோர்க
ளுரிய மயில் வாகனனேயும்பர் கோவே
யுன்னைவிட வேறு தெய்வ முலகிலில்லை
பெருமையனே யுனதடியாராஞ் செங்குந்தர்
பெருமையற்ற கலியதனான் மயங்கலென்ன
வரும்மதோ யானறியேன் தனை நீக்கி
வலிமையுற்ற செல்வமொடு வாழ்விப்பாய (55)
பொய்யாத மெய்யரகம் பிரியா மூர்த்தி
போரூர் வாழாறு முகப்புனித வேளே
ஐயா வென்றடி தொழுத பேரைக் காத்த
வாதி முதற் குருபரனே யசுரர் காலா
மெய்யா சைக்குடையவர்கள் நாளுங் காணா
வித்தகனே செங்குந்தர் மெலிந்து வாடி
நையாமற் காத்தருள் செய் முருகா விந்த
நானிலத்தோர் வான்று திக்கு ஞான வாழ்வே (56)
எப்போதுஞ் சிந்தையுற்றே யொப்பாய் நின்றே
யேழைகளைக் காத்த கந்தா வினிமையுள்ள
அப்பா மெய்ப்பொருளே யுன் கிருபையல்லா
லகிலமதில் வேறு மொன்றை யறிவிற்காணேன்
தப்பாத கருணையனே தணிகை வாழுஞ்
சண்முகனே செங்குந்தர் சாதி வேலை
யொப்பாக வில்லாமல் நைவ தாமோ
யுன் செயலாற் கலி விலக்கி யுறுதி செய்யே. (57)
கானகம்வாழ் தினைபுனத்து வள்ளி பங்கா
கயிலைவள ருமையளித்த கந்தவேளே
வானவர்கள் துயரகலச் சூரர் வாழ்வை
மாற்றி யெமனாருலகம் வாழவைத்தாய்
தேனுலவு கடப்ப மலரணியுந் தேவே
செங்குந்தர் கவலையுற்றுச் சிறப்பிலாமற்
பானுவின்முன் மழையறியாப் பயிர்போல் வாடும்
பாவமென்ன வதுவிலக்கிப் பாக்கியமீயே. (58)
சீதையரி மருகா செவ்வேற் கையாவுன்
றிருக்கருத்தை யாவர்களுந் தெரியமாட்டார்.
ஆதியுமையாள் சிறுவா லையா லைய்யா
வசுரர்குலம் வேரறுத்த வங்காவானின்
மீதிலிமை யோர்பதியைக் காத்தாட்கொண்ட
மேலவனே செங்குந்தர் வேலையாலே
வாதுகலியாமோ சொல்லதனை நீக்கி
வாழ்வு பெருஞ் செல்வமிக வழங்குவாயே. (59)
கருணையுற்ற மயிலில்வல முலகமெல்லாங்
கருதுமரை நொடியில் வந்த கந்தாவுன்றன்
றிரமையைக் கண்டறிவாராரில்லை யில்லை
தேவாதி தேவாவுன் செயலே யெல்லாம்
அருமைபெற்ற குறமகளைப் புணர்ந்த மெய்யா
அடியரென்ற செங்குந்த மலையலாமோ
பெருமையுற்ற கிருபையினா லதைவிலக்கிப்
பேணுமடியார்களைக் காத்தருள் செய்வாயே. (60)
செங்கையினில் வேலுமொத்த சேவலோடு
சிறந்தமன மெனுங்கனகத் தேரிலேறி
யெங்கன்ப ருண்டோ வென்றவர்கள் வாழ்வுக்
கினியவனா யிருந்து பதமீந்த கந்தா
பொங்கரவ மணிந்த சிவன் மைந்தா வுன்னைப்
போற்றுகின்ற செங்குந்தர் பொருளினாலே
மயங்கி யலைந்திடும் வாழ்வு நல்லதாமோ
மலைமுருகா வதையகற்றி வாழ்விப்பாயே. (61)
அரிமருகா சிவகாமி பாலா சீலா
அண்டர் பயந் தவிர்த்தாண்ட வாதிமூர்த்தி
குருபரனே யுன்னையல்லாற் தெய்வமேது
குன்றுளதெலா மருவிக் குலாவி நின்ற
சரவணனே சமய மென்ற பேறைக் காக்குஞ்
சண்முகனே செங்குந்தர் தாழ்ந்த வாழ்வேன்
மருவியதை விலக்கியருட் செல்லமீந்து
வாழ்விப்பாய் வறுமைதனைத் தாழ்விப்பாயே. (62)
நேருமிடர் வினைப்பவங்கணீற்றாற் போக்கி
நீதியொடுமுயிர்க்குயிராய் நின்ற மூர்த்தி
சூரர்களாற் படுந்துயாந்தீர்ந்து வானோர்
சுகமான பதவிகளிற் சுகித்து வாழ்ந்தார்
வீரமயிற்கந்தா செக்தியிலே வாழும்
வேலவனே செங்குந்தர் வேலையாலே
காரணமில்லாத கலியாமோ நீக்கிக்
கருணை செய்வாயாறுமுகக் கந்தவேளே. (63)
ஐயனே மெய்யாகம் பிரியாதுற்ற
ஆறுமுகத் தேசிகனே யமரர் கோவே
வையகமே நீயே நீயல்லால் வேறு
மற்றுமொரு தெய்வமென்ற மார்க்கங் காணேன்
கையணியு மீராறு படைகள் பெற்ற
காரணனே செங்குந்தர் கலிமிகுத்து
நையதென்னே யிதை விலக்கிச் செல்வ மோங்கி
நாணெடிய நாள் வாழ்க நன்மை பாரே. (64)
சிவனருளின் வகையதனால் வந்த கந்தா
தேவர் சிறை மீட்டவனே செந்தி வேலா
தவமகிமை படைத்த வன்பர்மனமே கொண்ட
சண்முகனே யுலகமெலாந் தானே தானாய்ப்
பவமுதலாம் பிணிகளெல்லாம் விலக்கி மேன்மை
படைத்தவனே செங்குந்தர் படைத்த வாழ்வு
கவனமிலாதவர்கள் படுந்துயரமாமோ
கலியகற்றிச் செல்வமருள் கந்தவேளே. (65)
வெல்லாண்மை வீரமயிற் குரியவேலா
வெற்றி யசுரேசர் குலம் வேரறுத்த
வல்லாண்மை யாறுமுகா வள்ணீப பங்கா
வலையபிராமி பெருவாழ்வே கந்தா
சொல்லாரு முன்னருளைக்கண்ட பேர்கள்
தொல்லுலகில லைவாரோ செங்குந்தர்க்குப்
பொல்லாத கலியகற்றிச் செல்வமோங்கப்
புண்ணியனே கருணை செயாய் புனித வாழ்வே. (66)
மகபதியின் குலமுழுதும் வாழ்க நன்றே
மனமிரங்கிக் கருணைசெய்து வைத்தாட் கொண்டாய்
செகமதனி லுயிர்க்குயிராய்த் திகழ்ந்து நின்று
சித்தி முத்தியாகிய நற்செல்வ மீய்ந்தாய்
பகவதி யம்பிகை யருளினாலே வந்த
பாலகனே செங்குந்தர் படைத்த வாழ்வு
பகமதிலா தலைவதென்ன வதனைநீக்கிச்
சுகம் பெருகுஞ் செல்வமுற்றுத் துலங்கச் செய்யே. (67)
அரும்பொருளே யாவர்க்கு பெட்டா வுண்மை
யாறெழுத்தா லுலகமெலா மாண்ட மூர்த்தி
வரும் பெரிய மயிலேறிச் செகத்தை யெல்லாம்
மாதுளையின் கனிக்கு வலம் வந்த மூர்த்தி
சுரம்பரனே யுனதடியார் செங்குந்தர்க்குப்
படைத்த தொழிலதனாலே பயனில்லாமற்
தரணிதனிற் றவிப்பதென்ன கலியை நீக்கித்
தளைத்தோங்கும் படி யேநீ தயை செய்வாயே. (68)
கானகத்திற் றினைப்புனத்தைக் காக்கும் வள்ளி
காதலனே யெப்பொருளுங் கலந்த மூர்த்தி
வானவர்க்கா யசுரர் குலம் வேரறுத்து
மங்கை தெய்வயானை தனை மணந்த கந்தா
ஞானமுற்ற வோரெழுத்தின் பொருளைச்செப்பி
நாதர்க்குச் சற்குருவா நாதா துன்ப
மானதொரு கலிவிலக்கி யுளமுகத் தே
யவர்கள் செல்வ மிகப்பொருக வருள் செய்வாயே. (69)
மறைமுதல்வா யாவர்களு மறியா மேன்மை
வல்லவனே சொல்லரிய மலைகடோறும்
உறைபவனே யெவ்வுயிர்க்கு முயிராய் நின்ற
வுத்தமனே சற்குருவே யுமைதன் பாலா
வறமுதலாம் புருடார்த்தம் யாவுமீந்தே
யாதரிக்கும் புண்ணியனே யவிர் செங்குந்தர்
குறைவகற்றிச் செல்வமிகக் கொடுத்தாட் கொள்வாய்
குருபானே மெஞ்ஞானக் கோவே தேவே. (70)
அப்பா மெய்ப்பொருளான சுப்ரமண்ய
வாதரவா யுயிராகியப்பா னின்ற
வொப்பாரு மில்லாத வுமையாள் பாலா
வோங்காரப் பிரணவத்தை யுரைத்த
தப்பாத சொல்லுடையராஞ் செங்குந்தர்
தாரணியில் வறுமைதனா லலையலாமோ
செப்பாத மறை முடிவில் விளங்கு ஞானத்
தேசிகனே நற்கருணை செய்திடாயே. (71)
அச்சுதனார் தன்மருகா வகிலமெல்லா
மரை நொடியில் வலம் வந்த வாதிமூர்த்தி
மெச்சியுனைப்பணிகின்ற வடியார்தங்கள்
வினையறுத்து மெய்ப்பதந்தந்தாண்டு கொள்ள
விச்சையொடு மனமுவந்தே பழனிமேவு
மினியவனே செங்குந்தர்க் கிடுக்கந்தன்னை
வச்ச விதம் நானறியே னதனை நீக்கி
வாழ்விப்பாய் கிரிகடோறு மருவுந் தேவே. (72)
பரமகுரு பண்டிதனே யகிலமெல்லாம் பரவியருள்
பழுத்தொழுகும் விசியாய் சூரர்
வாமுழுது மழித்தவனே விபுதர் நாளும்
வளமையுறக் கருணை செய்த வடிவேற் கந்தா
அருமையுறு செங்குந்தர் கலியினாலே
யழுந்துதற்கு ஞாயமதை யருளாய் முக்கட்
பரையருளும் புத்திரனே பழனி வேலா
பாக்கிய மீந்தாட் கொள்ளப் பகர்கின்றேனே. (73)
உரிமையுற்ற மயிலேறி யசுரர்வாழ்வை
யொரு நொடியிற் றவிடுபொடியாகச் செய்த
வருமையுற்ற வாறுமுகத் தெய்வமே நின்
னருளாலே யாகாத தொன்றுமுண்டோ
பெருமையுற்ற வன்பர்தமக் கெளிய மூர்த்தி
பீழை யெனுங் கலிவிலக்கிப் பெரிதாஞ் செல்வ
மருவியுறச் செங்குந்தரனை வோருக்கும்
வரமளிப்பாயறுபடை வீடு கந்தவாழ்வே. (74)
பாவித்தே யுலகமெலாம் படைத்துங் காத்த
பரம ரகசியப் பொருளே பரமானந்த
மேவித்தன் னுயிர்க்குபிராய் நின்ற வாழ்வை
மேதினியிற் கண்டறிவா ருண்டோ யில்லை
புலம்புவது முன்றனுக் கோரழகோ சொல்வாய்
பூவிற்குட் செங்குந்தர் வளமை குன்றிப்
சேவற்சைக் கொண்டவனே ஞானமூர்த்தி
சிந்தித்தற் கரியதொரு தேவதேவே. (75)
தேவர் சிசாமணியேயுன் றிருக்கருத்தைத்
தெரிவதற்கு யாருண்டு தெரியப் போமோ
நாவினின்று மடியவர்கட் கருளுரைக்கு
நாயகனே பூவுலகிற் கிரிகடோறு
மேவிநின்று மெக்கலியுந் தீர்த்த மூர்த்தி
மேதினியிற் செங்குந்தர் தவிக்கலாமோ
வாவிநின்று கருவிகர ணாதியெல்லா
மாட்டி யொழித் தருள்செய்யு மமலவாழ்வே. (76)
பொல்லாத வசுரர் குலம் அயிலாற் போக்கி
பொன்னுலகம் பிழைக்க வருள்புரிந்த கோவே
சொல்லேதுந் தப்பாத மெய்யா வுன்னைத்
தொழுதலுற்ற தொண்டரிடர்த் துன்பம் நன்மை
யெல்லாமுன் கிருபை யல்லான் மற்றும் வேறோ
விருதயத்தி லிறைஞ்சுகின்ற செங்குந்தர்க்கு
வல்லாண்மை யில்லாமற் கலிகள் சூழும்
வறுமை யகற் றிச் செல்வம் வழங்குவாயே. (77)
உத்தமனே சற்குருவே யுமையாள் பாலா
வுன்னைவிடத் தெய்வத்தி னுறுதி காணேன்
நித்தமுமே மனதிலெண்ணி வாழ்வதல்லா
னெஞ்சத்தில் வேறுமொரு நினைவுகாணேன்
குற்றமிலா நெசவு தொழிற் செய்வதாலே
குறைவுற்றுச் செங்குந்தர் மயங்கலாமோ
கத்தனே யறுமுகவா கலியை நீக்கிக்
கருணை செய்து கனந்தழைக்கக் கண்ணோக்காயே. (78)
திர மறவர் குலத்தில் வரு பெண்ணாள் வள்ளி
தினைப் புனத்திலே யிருக்கக் குமரா நீயும்
பரவு முனி நார தனாற் றெரிவதாகிப்
பாதை கண்டு மணம் புரிந்த பானே நல்ல
வருமை மிகு மலகு மலை மேவுங் சுந்தா
வடியபென்ற செங்குந்த ரலையலாமோ
வரும் வறுமைக் கொடுமை தனை விலக்கிச் செல்வம்
வளர்விப்பாய் பழனிமலை வாழுந்தேவ (79)
ஆதிமறை மெய்ப் பொருளே யும்பர் கோவே
யழகு திருப்பழனியில் வந்தாண்ட தேவே
நீதி மயிலுக் கிசைந்தே யுலக கெல்லா
நிமையில் வலம் வந்தவனே நீயே யல்லாற்
சோதி பெனும் வடிவ மொன்று வேறே யுண்டோ
சொல்லினுக்கு மெட்டாத சுடரே யன்பர்
மீது தயவே புரிந்து செல்வ மோங்க
வேலவனே செங்குந்தர்க் கருள் செய்வாயே (80)
சீர் பெருகு மாறெழுத்து மந்த்ர மல்லாற்
றேசத்தில் வேறுமொரு மந்த்ர முண்டோ
பேர் மிருத்த முருகனென்ற தெய்வ மல்லாற்
பேணியே தொழுந் தெய்வம் வேறேயுண்டோ
காரணத்தா லறிபவர்களுண்டோ வில்லை
காசினியி லுன்னடியார் காண வேண்டிப்
பாருலகிற் கிரிதோறு மருவி நின்ற
பான்மையனேயாறுமுகம் படைத்த வேளே (81)
வேறு
உம்பருக்கிடர் செய் சூரர் ருறு குலம் வதைக்க வேண்டி
யெம்பிரான் சரவணத்தி லெழுந்து வானவர்க் கிரங்கி
வம்பர்கள் குலத்தை போக்கும் வள்ளலே செங்குந்தர்க்கே
யம்புவி தன்னிற் செல்வமது பெறவருள் செய்வாயே (82)
வேறு
உமையருளின் மயமதனிற் சிலம்புதனி
லுதித்தவாரா யுலகநீதி சமையமது
தழைக்கவரு செங்குந்தர் கலியதனாற் றயங்கலாமோ
நிமையதனின் மயிலேறி யுலகை வலம் வந்தவனே
நிலைமை கண்டே யுமது திருவருளாலே
கலிநீக்கிச் செல்வமிக வுயரச் செய்யே. (83)
தந்தைதாய் மிகவுறுத்தித் தந்த
தொழிலகனாலே சௌக்கிய மில்லா தெந்த வித
மறியேனா னீசன்மொழி பொய்யாமோ விது வல்லாண்மைக்
கந்த கருணா கரனே செங்குந்த ரிப்புவியிற் கலங்கலாமோ
விந்தையொடு செல்வமதை மென்மேலுந்
தான் பெருக விதித்திடாயோ (84)
எந்தவிதந் தொழி னெசவு நெய்தாலுஞ்
செங்குந்த ரேழை போலே
விந்தையற்ற கொடுமை செய்ய வர்ம மென்ன
வுன் மனத்தில் வேண்டலாமோ கர்தனது
துணைவரென்றுந் திருக் காப்புக்
கயிலைதனிற் காப்போ ரென்றும்
நிந்தையற்ற புகழிருந்து மவர் மயங்க
நீதியுண்டோ நிமல வாழ்வே. (85)
சிவமகிமை யருள்பெற்ற செங்குந்தர்
குலமதென்றே செகத்தில் நீதித்
தவமகிமை யுடைத் தருமைத் தொழி லென்றே
நெசவுதனைச் சாற்றினார்கள் புவனிதனி
லவதரித்துப் போறமும் பெரும் புகழும்
பெற்றோர் செல்வ மவமடைந்து
போகாமற் றென் பழனிமலை
வேலா வருள் செய்வாயே. (86)
உமையருளாற் சிலம்பில் வந்த
கன்னியர்கள் வயிற்றினிலே யுதித்த வீரர்
சமயமுறு செங்குந்தரெனப் பெருமை
தான் படைத்துச் சகத்தில் வந்தே
குமரகுரு தேவ வுனைக் கொண்டாடு
வோர்கள் துயர் கொள்ளலாமோ
நிமையதனிலே யகற்றி நிலைமையுறச்
செல்வமதை நிறைவிப்பாயே, (87)
அரனுடைய கிருபையினா லம்மை திருச்
சிலம்பினில் வந்தவதரித்து
வரமகிமை பெற்றிருந்தும் வானவர்கள்
தன்றுயர மாற்றி வைத்தும்
பெருமை தங்கி மிகுத்த சுகம்
கலியுகத்திற் பொருந்தாமற் பிறழ்ந்த தென்ன
குருபானே திருச்செந்தூர்க் குழந்தை வடி
வேலவனே குறைகடீரே. (88)
ஆரணத்தின் பொருளாகி விளங்கி நின்றே
யகிலாண்ட கோடியெலா மாக்கு மூர்த்தி
நாரணர்க்கு மருமகனாய் வந்த மூர்த்தி
நாதாந்தங் கடந்தொளிரு ஞான மூர்த்தி
வாரணத்தின் றுவசமது பெற்ற மூர்த்தி
வாதாடி யசுரர்களை மாய்த்த மூர்த்தி
காரணத்தை யின்ன தெனத் தேரிகிலேன் யான்
கவலையுறச் செங்குந்தர் கன்மம் யாதே. (89)
நாகமதை யெடுத்து நின்றும் நாகர் கோனும்
நவிலரிய நாகமதைப் பாரில் வீழ்த்தும்
நாகமதைத் திரட்டியே கோடதனிலிட்டும்
நாகமுறைக் கிரங்கி வந்தே யருள் பலித்தும்
நாகமது குதித்து விளையாடுகின்ற நற்கிரி வாழ்
நாரணன்றன் மருகா தீய சோக முற்றுச்
செங்குந்தர் மயங்குதற்குத் தொல்வினை யென்
னதை விலக்கித் துணை செய்வாயே. (90)
வேறு
அரனுடைய புதல்வரென்று மருந் தவத்தை
யுடையரென்று மாதி நூலிற்
பெருமை கொண்டே யுரைத்திருக்கக்
கொடுமையது முடிகி வரும் பெற்றி காணே
னரவகிரி வடிவேலா செங்குந்தர்க்
கித்த துன்பமையலாமோ
வுரிமையுடன் செல்வமிகுத் தோங்கிடு
றித்ததியிலுன கண்ணோக்கே (91)
எண் சீர் விருத்தங்கள்.
வீரமயில் வாகனனே வேலா போற்றி
வெள்ளிமலை தங்கு சிவன் பாலா போற்றி
சூரர் குல மாயவை வேல் விடுத்தாய் போற்றி
தொல்லுல கந்தனைச் சிருஷ்டித் தளிப்பாய் போற்றி
நீரழலும் புவிவளி விண்ணானாய் போற்ற
நேயமுள செங்குந்தர் வறுமைதன்னை
தீர வருள் செய்திடு வாயுலக மெங்குந்
தெரிசிக்கச் சினகரங் கொள் தேவ தேவே. (92)
அண்ட பகிரண்ட மெலாம் படைத்துங் காத்தே
யழித்தருள் செய்கின்ற பானருளால் வந்து
கண்டனெனு மசுரனுங் கிழித்து வெற்றி
தான் புணைந்து வானோரைக் காத்த மூர்த்தி
தெண்டனிட்டுப் போற்றி செய்து வணங்கி யேத்துஞ்
செங்குந்தர் கலியதனாற் றிகைக்க லாமோ
பண்டை விணை யறுத்தருளும் பழனி வேலா
பராபரமே யவர்கடுயர் பரிப்பாரே. (93)
ஐந்து கரத் தண்ணலுக்கே யிளைய மூர்த்தி
யாதி பராபசமேசுரர்க் கரிதா மோனம்
வந்துரைத்த தென்பழனி வடிவேலா ன்
மகிமை தனை யிவளவென வகுக்கலாமோ
யுந்த மிரு பதமலரை நாளும் போற்று
முத்தமராஞ் செங்குந்தர் கவலை தீர்த்துச்
சிந்தை மகிழ் வுற்றருளி யடியேன் செய்யுஞ்
செந் தமிழுக் கிரங்கி யருள் செய்திடாயே. (94)
மாமேவு நீப மலர்மாலை வேய்ந்த
வள்ளலே பன்னிருகை வடி வேலா நின்
மாமேவுந் திருவடியை நாளு நாடி
மகிழ்ந்துரைத்த செந்தமிழ்ப்பா மாலை யேற்று
மாமேவு மேனல் வனங் காக்குத் தெய்வ
வள்ளிதனை மனம் புணர்ந்த வடிவேற் கந்தா
மாமேவச் செங்குந்தர் தம்பைக் காத்து
வரமருள்வாய் தென்பழனி வாழுந் தேவே (95)
ஆதியு நீ யனாதி ............ நீயே யஞ்செழுத்து
மாறெழுத்த ............ நீயே
சோதியு நீ சுடாது வணையு நீயே
தொல் அலகோர் தொழு தேற்றுந் தெய்வ நீயே
பாதிமதி சூடுகின்ற பரமனார்க்கு
பகரரிய பிரணவத்தைப் பகர்ந்தோ நீயே
நீதி திகழ் செங்குந்தர் கவலை நீங்க
நீ னிலத்தி லதிக செல்வம் நிகழ் விப்பாயே (96)
திருமிகுத்த சேடகிரி செந்தூர் சோலை
சிரகிரியு மருள் மலை யுந் தேனார் சோலை
மருதகிரி பட்டாலி பூதி யூரும்
வளமருவுஞ் சோணகிரி பரங்குன் றேற்றும்
குருகு திரண்ட கலாத கழனி சூழ்ந்த
குருந்த மலை தென் சேரிக்கிரி கடோறு
மருவி வளர் கற்பகமே செங்குந்தர்க்கு
வளமையுறுந் திருவளித்து வாழ்விப்பாயே. (97)
அருமையுள்ள சடையப்பன் சிவனுக் கன்ப
னகி லமதி லடியாருக் கடிமை யுற்றோன்
பரவியுள்ள காலமட்டும் நல்ல வாழ்வு
படைத்திருந்தோன் பான் பூசை பாக்கியம் பெற்றோன்
கருவதனாற்றன் குலத்தா ரெல்லாம் வாழக்
கவி மாலை சூட்டு மென்னக் கந்தா வாக்கா
லுரிமையிற் குப்பானந்த னுரைத்த நீதிக்
குகந்து செல்வ மிகக் கொடுத்தே யுயர்விப்பாயே. (98)
பூந்துரை நன்னாடு நகர் வெள்ளோ டென்றே
புகழ் பெருகித் தழைத்திடு மவ்வூாடுத்தே
வாழ்ந்து வருஞ் சாளை நகரதிற் செங்குந்தர்
வம்மிசத்திற் சடையப்பன் வாய்த்த பத்தன்
நேர்ந்திருந்தே தன் குலத்தா ரெல்லாம் வாழ
நினைவு கொண்டான் முருகனருள் நேர்ந்த குப்பன்
போந்து சொன்னகவி மாலை தனக்கு வேலா
புந்தி மகிழ் கொண்டு செல்வம் பொலிவிப்பாயே (99)
கலியுக நாலாயிரத்துத் தொளாயிரத்துக்
கதித் தேழுபத்தாரு நிகழ் காலத்தில்
வலுமை யுள்ள பவ வருடமி துன மாதம்
வழங்கு தமிழ் செங்குந்தர் சதகமென்றே
பொலிவு பெறு முருக னருள் வாக்குரைக்கப்
போற்றிய குப்பானந்தன் புகந்த பாடல்
நல மதுறத் தென் பழனி வேலா செல்வம்
நாட்டு வித்தே யிக் கவிக்கு நன்மை செய்யே (100)
முருக வேள் பாதம் வாழி மூவர்க்கு முதல்வன் வாழி
உரியவேல் மயிலும் வாழி யும்பர்க ளுலகம் வாழி
சரஸ்வதி யயலும் வாழி தந்திமாமு கனும் வாழி
திர மிகு நேமிப் புத்தேள் திருமகள் வாழி வாழி
நீதி யிற்ற வறுநில மன்னர்
ஒது மாமறை தந்திரம் பூதியும்
மீது பூவிற்பொ ழிதரு மேகமும்
சாதிகுந்தர் தழைக்கவும் வாழியே.
---------------
This file was last updated on 21 April 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)