pm logo

துரோபதை அம்மானை
புலவர் சொக்கலிங்கம் பதிப்பு

turOpatai ammAnai
edited by pulavar cokkalingam
in Tamil Script, Unicode/UTF-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India and Tamil Virtual Academy for providing.
a scanned PDF version of this work for ebook preparation.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of
Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

துரோபதை அம்மானை
பதிப்பாசிரியர் புலவர் வீ. சொக்கலிங்கம்

Source:
துரோபதை அம்மானை
பதிப்பாசிரியர் புலவர் வீ. சொக்கலிங்கம்
தமிழாசிரியர் (ஓய்வு), சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூல்நிலையம், தஞ்சாவூர்.
விலை ரூ.7-50
முதற் பதிப்பு 1986
தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு எண் 245
1986
வெளியீடு : தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலையம் தஞ்சாவூர்.
பதிப்பகம் : இலாலி அச்சகம், தஞ்சாவூர்.
--------------

வெளியிடுவோர் முகவுரை


நமது நாட்டு இதிகாசங்களுள் மகாபாரதம் என்னும் நூலும் ஒன்றாகும். இந்நூலில் தருமன் முதலிய ஐவருக்கும் மனைவியாக இருந்தவள் திரௌபதி. அவள் துச்சாதனனால் துகிலுரியப்பட்ட வரலாற்றை அம்மானை நடையில் கூறுவதே இந்நூல்.

திரௌபதி என்பவள் துருபதன் செய்த வேள்வியில் பிறந்து பாண்டவர் ஐவரை மணந்தவள். பாண்டவர்கள் செய்த இராஜசூய வேள்விக்கு வந்த துரியோதனனை இகழ்ந்து நகைத்ததன் சினங்கொண்டு காரணமாக துரியோதனன் பாண்டவர் ஐவருடன் சூதாடி நாட்டைக் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், திரௌபதியை அவையிலே மானபங்கம் செய்ய வேண்டி, ஆடையைக் களையச் செய்தான். கண்ணன் அருளால் திரெளபதியின் மானம் காக்கப்பட்டது. துரியோதனன் எண்ணம் நிறைவேறவில்லை. ஆயினும் திரௌபதி மிகுந்த சினம் கொண்டு அவையிலே துரியோதனனை நோக்கி "பன்னிரண்டாண்டுகள் வனவாசம் முடித்து வந்து உங்கள் அனைவரையும் அழித்து என் கூந்தலை முடிப்பேன்” என்று வஞ்சினம் கூறி, விரித்த கூந்தலுடன் தருமர் முதலானோருடன் வனவாசம் புறப்பட்டாள்.

மேற்கூறப்பட்ட கதை மிகவும் எளிய நடையான அம்மானையில் எழுதப்பட்டுள்ளது. இந்நூலை சரசுவதி மகாலில் 245-வது வெளியீடாக வெளியிட்டுள்ளோம். சுவடியில் உள்ள இதனை ஆய்ந்து வெளியிட பெரு முயற்சி எடுத்துக் கொண்டு, பதிப்பித்துத் தந்த சரசுவதி மகாலின் முன்னாள் தமிழ்ப்பண்டிதர் திரு வீ. சொக்கலிங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டுகிறேன்.

இந்நூல் நடுவணரசு வழங்கிய மானியத்திலிருந்து வெளியிடப்படுகிறது. இந்நூல் சிறந்த முறையில் வெளிவர உதவிய நூலக நிர்வாக அதிகாரி பொறுப்பிலுள்ள திரு. அ. பஞ்சநாதன் அவர்கட்கும், அழகுற அச்சிட்டுத் தந்த இலாலி அச்சகத்தாருக்கும் நன்றி கூறி மகிழ்கிறேன்.

தஞ்சாவூர், 17-9-86 இன்னணம்,
து. இரா. இராமசாமி, இ.ஆ,ப.,
மாவட்டாட்சியர் மற்றும் இயக்குநர்,
சரசுவதி மகால் நூலகம்,
------------------

முன்னுரை

* பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டக் கோவான் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்"

என்பார் மாணிக்கவாசகர், தாம் பாடிய திருவாசக திருவம்மானைப் பகுதியில், 'அன்னை" அல்லது "தாய்' என்றுபொருள்படும் அம்மானை அம்மனை, அம்மானாய்,, அம்மானே, அம்மானார், முதலான சொற்களைச் சிறுமியர் தம் ஆடலிலே பயன்படுத்திப் பாடியதாகக் காணக்கிடைக்கிறது.

தோற்றமும் வளர்ச்சியும்
அம்மானையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய செய்திகளை எமது வெளியீடுகளிற் காணலாம். மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம், எளிய நடையில் பெரிய வரலாறுகளும், கதைகளும் ஆற்றொழுக்காக, 'அம்மானை' என்ற பெயரால் எழுந்தன. இவ்வாறு எழுதப்பெற்ற நூல்கள்பலவற்றுள், இந்த 'துரோபதை அம்மானை'யும் ஒன்று.

துரோபதை அம்மானை
இதிகாசங்கள் மூன்றனுள் சிறந்த நீதிகளைப் போதிப்பது மகாபாரதம், வடமொழி வியாசபாரதத்தை அடியொற்றி 'வில்லிபாரதம்‘ எழுந்தது. பாரதக்கதை பலபடியாக மக்களுக்கு அறிமுகமாகி இருந்தது. இராமாயணம் போல இதுவும் மக்களிடையே பேசப்பட்டும், தெருக்கூத்தாக நடிக்கப்பட்டும் வந்தது. படிக்கத் தெரியாதவர்கள் காதால் கேட்டும். கண்ணால் கண்டும் மகிழ்ந்தனர் அதிகம் படிக்காதவர்கள் அதாவது எழுதப்படிக்க மட்டும் தெரிந்தவர்கள், எளிதில் புரிந்துகொள்ளும் அளவுக்கு இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

எமது சுவடி.
இச்சுவடி, அண்மையில், எமது மகாலுக்கு, திருச்சி புறநகர் பிரிவு C. R. C. (டினரவர்) ஓட்டுநர் திருவாளர் R. சமுத்திரம் அவர்கள்' திரு இராசேந்திரன் அவர்கள் மூலம் அனுப்பித்த சுவடிகளுள் ஒன்றாகும். எமது பதிவெண் 1551 என்ற எண்ணைப் பெற்றது இச்சுவடி, மூலத்தின் படியே யாகும். சுவடியில் பிழைகள் மலிந்து கிடக்கின்றன. சிலவரிகள் இரண்டுமுறை எழுதப்பட்டுள்ளன. சகாதேவன் அடிக்கடி சாத்திரம் பார்ப்பதால் சாத்திரத்தின் அடிப்படையில் அமைந்தது, இச்சுவடி.

சுவடியின் காலம்
இது, அண்மைக் காலத்தில் எழுதப்பட்டதாதல் வேண்டும். இதில், மல்லுக ஜெட்டிகள் பேசப்படுவதால், மல்லுக ஜெட்டிகளை தஞ்சைக்குக் கொணர்ந்த தஞ்சை மராத்திய மன்னர்கள் காலமாக இருக்கலாம். 511-ம் வரியில், 'தம்பியவன் லெக்கணரைத் தலை- முழுகச் சொல்லுமென்றான்' என்பதற்குப் பதிலாக, 'தம்பியவன் லெக்கணர்க்குத் தலைமுழுகச் சொல்லுமென்றான் என்றுளது. இது, மராத்திய மக்கள் பேச்சுவழக்கு புள்ளிகள் இட்ட அழகான எழுத்துக்கள் காணப்படுகின்றன. இருவர் கையெழுத்துக்கள் காணப் படுகின்றன. தஞ்சை மராத்தியர் காலமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆசிரியர்:
இதன் ஆசிரியர் பெயர் காணப்படவில்லை. பழைய அம்மானைக் கதைப்பாடல்களில், 'புகழேந்திப் புலவர் எழுதிய இன்ன அம்மானை' என்றிருக்கும். அவ்வாறு கூறுவதற்கும் இடமில்லை. கதைப் போக்கு, உபகதைகள் மாறுபட்டுள்ளன. சுவடிபற்றிய குறிப்புக்கள், பலபடியாகக் காணப்படுகின்றன.

ஓசை மிகுந்த வரிகள்:
23, 119, 128, 136, 150, 337, 370, 371, 432, 501, 515, 519,528 531, 752, 828, 864 முதலியன.
ஓசை குறைந்த வரிகள்:
34. 192, 274, 378, 385, 394, 396, 433, 460, 753, 851 முதலியன.
நடை:
பேச்சுவழக்கு நடையில் இருக்கிறது. திரியோதிரன். திட்டோ- திரன்' துட்டோதிரன் முதலான சொற்கள் காணப்படுகின்றன.

பேச்சு வழக்குச் சொற்கள்:
நாம்ப (நாம்),போர(போகிற), வார (வருகிற), வெத்தி (வெற்றி) ஒத்தை (ஒற்றை), திருவளம் (திருவுளம்), கோவித்து (கோபித்து), கொத்தவன் (கொற்றவன்), போத்தி (போற்றி), மாத்தான் (மாற்றான்), அழுவயிலே (அழுகையிலே), கடவாய் (கடைவாய்), சோர்ந்து நிக்கிறதும் (சோர்ந்து நிற்கிறதும்), வச்சார்கள் (வைத்தார்கள்), புகழ் பிறவே (புகழ் பெறவே), கினா (கனா கனவு), குடுப் பாரோ (கொடுப்பாரோ), பொண்ணு (பெண்),பண்ணி (பன்றி), மற்றும் பல.

பெயர்கட்கு அடைமொழி
தேசத்தழகன் - திரியோதிரன், சாயாம் புவர்ணன்- சகுனி, தார முடி- யான் - சகுனி சாந்தணிந்த மார்பன் சகுனி; சாயாம்பூவண்ணன் சகுனி, தக்கபுகழுய தருமர்-தருமலிங்கம், வெத்தி மகசாலை வீமன், வெத்திமதயானை வீமன், காண்டாவனமெரித்த காளை யருச்சுனன், பட்டுக் கொடிவேந்தன் பரி நகுலன், நாமக் கொடியவேந்தன் நகுலன், சாத்திரத்தில் வல்ல சகாதேவன், பத்துப் பொன் கொண்ட பார்த்தன் தனஞ்சயன், பாக்கியத்திலே பிறந்த பாஞ்சால ராசகன்னி, துலங்கு மணிவிளக்கு துரோபதை, தோறா வழகி துரோபதையாள் முதலியன.

பிற சிறப்புச் செய்திகள்:
ஆண்களுக்குக் குடுமி உண்டென்பது 674, 675-ம் வரிகளால் தெரிய வருகின்றது. 732-ம் வரி தாயுமானாரை நினைவுகூர்கிறது. நூலாய்க் கடுந்திரளாய் என்ற சொற்கள் அடிக்கடி வருகின்றன.

சிலவரிகளில் சொற்கள் மிக்கும் குறைந்தும் (896) உள்ளன. 884-ம் வரியில் கொண்டு வந்து வாரும்என்றுளது 1801-ல் வரிபிரழ எழுதப் பட்டுதுளது 1841-ல் பத்மாசூரன் கதை கூறப் பட்டுள்ளது 1957-ல் குருடன் மகன் என்பதைத் துரோபதை சுட்டுகிறாள். 2004-ம் வரியில் பட்டணத்துத் தேவடியாள் என்று துரியோதனன் திட்டுகிறான், 2068ல் - பிலாரிஷி, பிலாவரிஷி என்று கூறப்படுகிறது. 2372-ல் மலைப்பாம்பு கடிப்பதாகக் கூறியது தவறு. பல இடங்கள் வினைமுடிபு சரியில்லை னகர, நகர, ணகர, வேறுபாடுகள், ரகர றகர வேறு பாடுகள் காணப்படுகின்றன.

பழமொழிகளும் உவமைகளும்
நஞ்சு தின்று நஞ்சுகக்கும் நடுச்சாம வேளை, உள்ளங்கை சாத்திரத்தை ஊடுருவத் தான் பார்த்தல், ஒத்தை மரத்து, ஒரு - மரத்துக் கொம்பானோம், உரலிலகப்பட்டு உலக்கைக்குத் தப்புவதரோ, கூட்டில்டைத்த கோழிக்குச் சமம், நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொருவர், கூடப்பிறக்கலையோ கூட்டுப் பாலுங்கலையோ ஒக்கப் பிறக்கலையோ ஒருமுலைப் பாலுங்கலையோ, வெத்தி மதயானை வீமன், கன்றுக் கிரங்கி கற்றாப் பசுப்போலே, சந்தணப் புயத்திலே சரியவெட்டினாப் போலே, மற்றும் பல உள்ளன.

மேற்கோள் தொடர்கள்
ஒருகோடி வந்தாலும் உதிரம் பிறப்பாமோ 923
ஒப்பாரி கொண்டாலும் உடந்தைப் பிறப்பாமோ 924
உயிரைப் பரிகொடுத்த செங்காட்டி லன்னம்போல் 933
பிறவி பரிகொடுக்க பூமியில் ஓடுவனோ 934
சோத்துக்கு வீங்கி சொல்கேளாப் பிள்ளையைப்போல் 968
மாடுமா டென்று வளர்ந்தபில்லைத் தின்பாரும் 1159
காணாதது கண்டு யெடுத்தவர்போல் 1283
மானத் தருந்ததியே வானத் தருந்ததியே 1396
கொண்ட பெண்ணைவிட்டாலுங் குறிச்சபெண்ணைப் போகவிடன் 1713
தெக்கெழுந்த சூரியனும் வடக்கெழுந்து வந்தாப்போல் 1720
[1] நூலாய்க்கடுந்திரளாய் நூத்தொருவர் 792, 1850, 2082
பண்ணிகள் தானும் பலகுட்டி போட்டாப்போல் 2076
ஆண்மலடு பெண்மலடு அத்தனையும் தான்மலடு 2083
கிழக்கெழுந்த சூரியனும் மேற்கெழுந்து வந்தாப்போல் 2223
ஆறுகுற்றம் நூறுபிழை அத்தனையும் தான்பொறுத்து 2422
பாலுக்கு மேல்கறியும் உண்டோதான் பத்தினியே 2425
சாமத் துரோகி சண்டாளா உந்தனுக்கு 2465
பசும்புனுகுஞ் சவ்வாதும் பண்ணியின்மேல் பூசினால் 2502
பண்ணி யறியுமோ பரிமணத்தின் வாசினையை
குங்குமமுஞ் சந்தணமும் குரங்குமேல் பூசினால் 2504
குரங்கு மறியுமோ குங்குமத்தின் வாசினையை 2505
பொறுத்தா ரசாள்வார் பொங்கினார் காடுறைவார். 2474
கலியாண வாசலுக்குக் கைவிளக்காய் வந்திரே 2670
சிவ பூசை தான்முடித்துத் திருநாமம் தான்சாத்தி 2824
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி 2949
மூங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பார் 2950

முதலான பல தொடர்கள் அருமையாகக் காணப்படுகின்றன.
----
[1] பல இடங்களில் வருகின்றன
-------

சிறப்புச் சொல்
இதில், பல நல்ல சொற்கள் கையாளப் பட்டிருப்பினும் •கிள்ளாக்கு என்ற சொல், கைச்சீட்டு (கைச்சாத்து) என்ற பொருளில் கையாளப் பட்டிருப்பது அருமை.

கற்பனை
துரோபதையாள் கண்ணனுக்கு துகில் கொடுத்த கற்பனைக் கதை புதுமையாயுள்ளது. இதனைக் கதைச்சுருக்கத்தில் காணலாம்.

ஏடு பிறழ்ந்தது
76- ம் ஏடுமுதல் 3ஏடுகள் முன்பின்னாகப் படியெடுக்கப்பட்டுள்ளன. அதாவது இது. பிரதிசெய்யப்பட்ட மூல ஏட்டின் ஏடுகள் பிறழ்ந்- துள்ளன போலும். இதில் சரிப்படுத்தப்பட்டுள்ளன

குறிப்பு
50-வது ஏட்டின் பின்பக்கத்தின் முதலில் 'பொன்னம்மயனாயக்கன் அரிவேன்' என்றுளது.

சமய ஒற்றுமை
சிவபூசை தான்முடித்துத் திருநாமம் தான்சாத்தி என்ற சொற்றொடரால் பாண்டவர்கள் சிவபூசை முடித்துவிட்டுப் பின்னர் தம் சமயக்குறியாகிய திருநாமம் (திருமண்) சாத்திக் கொண்டு செயல்பட்டனர் என்பது புலனாகிறது. திருநாமம் இன்றித் திருநீறு தரித்துக்கொண்டு சிவபூசை செய்தனர் என்பதும் இதனால் பெறப்படு கின்றது, எனவே அவர்கள் சமய வேறுபாடு கருதவில்லை என்பது தெளிவாகின்றது

நகைச் சுவை
துரோபதையாள் சீற்றத்தால் ஏராளமான பாம்புகள் வந்து சூழ்ந்துகொள்ள ஆடையற்று, துரியோதனாதியர் ஓடியதை அழகாகவும், அடக்கமாகவும், நகைச்சுவையாகவும் ஆசிரியர் பாடுகின்றார். மற்றும் பல இடங்கள் படித்து இன்புறத்தக்கவை.

சுவடி தந்தோர்க்கு நன்றி

இச்சுவடியினை, எமது மகாலுக்கு அன்பளிப்பாகத் தந்துதவிய திருவாளர், R சமுத்திரம் (C. R, C. புறநகர்ப்பிரிவு பேருந்து ஓட்டுநர், திருச்சி) அவர்கட்கு எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

நன்றி:
இந்நூலை ஆய்ந்து வெளியிட அனுமதியளித்த தஞ்சை மாவட்ட ஆட்சியரும் எமது சரசுவதி மகால் இயக்குநருமான திருவாளர், து. இரா. இராமசாமி இ.ஆ.ப., அவர்கட்கும் ஷ மகால் நூல்நிலைய நூலகரும் நிருவாக அதிகாரி லிட் அவர்கட்கும் திருவாளர் அ. பஞ்சநாதன் எம். ஏ., பி, லிட்.. இந்நூல் வெளிவரப் பொருளுதவிபுரிந்த மாநில அரசுக்கும், நன்முறையில் அச்சிட்டுத்தந்த தஞ்சை இலாலி அச்சகத்தாருக்கும் எமது நன்றி உரித்தாகிறது.

இதிலுள்ள குற்றங்களைந்து, குணங்கொண்டு வாசித்தல் கற்றறிந்த மாந்தர் கடன், கற்பிற்சிறந்து, இன்றளவும் தெய்வமாக வணங்கத்தக்க பெருமையினைப் பெற்ற துரோபதை அம்மன் மலரடி- களை வணங்கி, எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுகிறேன்.

தஞ்சாவூர் 26.9.86 இன்னணம்,
புலவர் வீ.சொக்கலிங்கம்
தமிழாசிரியன் (ஓய்வு) சரசுவதி மகால் நூலகம்,
------------------------

துரோபதை அம்மானை : கதைச் சுருக்கம்

துரியோதனன் அத்தினாபுரத்தை ஆண்டுவருங்கால் ஒருநாள், தன் தாயாகிய காந்தாரியை நோக்கி, "தாயே! தற்போது, ஐவருக்கும் நூற்றுவருக்கும் அரசு, பாதி பாதியாக உள்ளது. தம்பியர் ஐவரையும் அழைத்துக் கொன்றுவிட்டால், பூவுலகை ஒரு குடைக்கீழ் ஆளலாம். நான் திருமணம் புரிந்து கொள்ள வேணுமென்று கருதியிருக்க அருச்சுணன் மணந்து கொண்ட பாஞ்சாலியைக் கொண்டுவந்து சபையில் நிறுத்தித் துச்சாசனனை விட்டுத் துயிலுரியச் செய்து, தருமாபுரியிலுள்ள மற்ற பெண்கள் எல்லோரையும் கொண்டுவந்து நான் சொன்னபடி கேட்கவைப்பேன் ஐவர் மனைவியரைச் சிறையிடுவேன். அதன் பொருட்டு, ஐவரையும் கொல்ல, என்ன உபாயத்தால் அழைக்கலாம்" என்று கேட்டான். அதற்குக் காந்தாரி, ''மகனே! இலக்கணைக்குப் பூணூல் கலியாணம் என்று ஓலை அனுப்பி, அழைக்கலாம்' என்றாள். இதனைச் சகுனியிடம் சொன்னான். அவனும் அதற்கிசைந்து, 'ஐவரையும் சிறையில் தள்ளி, உன்னையே எல்லாவற்றிற்கும் அரசனாக்குகிறேன். ஆனால் துரோபதை உள்ளமட்டும் ஐவருக்கும் துன்பம் வராது. அவளையும் சிறையில் அடைக்கிறேன்" என்று கூறிவிட்டு. "பூணூல் கலியாண ஓலையை எழுதித் துச்சாசனன் மூலம் அனுப்பும்" என்றான் அதற்கிசைந்த துரியோதனன் அவ்வாறே துச்சாசனனுக்குத் தாம்பூலம் கொடுத்து அனுப்பும்போது, மற்ற சிற்றரசர்களும் நால்வகைக் சேனைகளும் புறப்பட்டனர். துச்சாசனன், 'படைகளுடன் போனால் காரியம் நடக்காது; தனியே செல்கிறேன்" என்றான். அதற்குத் துரியோதனனும் இசைந்தான்.

துச்சாசனன் புறப்படும் போதும் செல்லும் போதும் பல தீநிமித்தங்கள் ஏற்படுகின்றன. பின்வாங்காமல் தருமபுரியை யடைந்து தருமன் அரண்மனைப் பள்ளியறையை யடைந்து, அவன் உறங்குவதைக் கண்டு, வீமன் அந்தப்புறம் சென்று அவன் உறங்குவதையும் கண்டு, பயந்து, அருச்சுனன் பள்ளியறை யடைந்து, அவனையும் கண்டு பயந்து, நகுலன் பள்ளியறை கண்டு நழுவி, சகாதேவன் அந்தப்புறம் வந்து ஆராய்ச்சி மணியை அடித்தான். எல்லோரும் திருடனென்று பயந்து, ஆயுதங்களுடன் திருடனைப் பிடிக்க ஓடிவந்தனர். துச்சாசனன் பயந்து, தருமர் பள்ளிபறை யடைந்து, அவனுக்குக் கால் வருட, தருமர் விழித்து, வியந்து, இந்நேரத்தில் எப்படி, எதற்காக வந்தாய் என்று கேட்க அதற்கு அவன், 'லெக்கணைக்குப் பூணூல் கலியாண ஓலை கொணர்ந்தேன்' என்று ஓலையினைக் கொடுத்தான். மகிழ்ந்த தருமர் தம்பியர் வருகைக்காகக் காத்திருந்தார்.

அப்போது, திருடனைத் தேடி வந்தவர்கள், திருடனைக் காணாமல் பீமன் சகாதேவனைச் சாத்திரம் பார்க்கச் சொன்னான். அவன் 'துரியோதனன் ஐவரைக் கொல்ல சூழ்ச்சியினால் ஓலை அனுப்பி யுள்ளான். ஓலை கொண்டு வந்தவனே கள்வன். இப்போது, தருமருடன் இருக்கிறான்' என்றான், எல்லோரும் அங்கே சென்றனர். கோபத்தோடு வந்தவர்களைச் சாந்தப் படுத்தி, "துரியோதன அண்ணன் அழைக்கிறான்; போகாதிருக்கக் கூடாது; புறப்படுங்கள்" என்றார்.

சகாதேவனைச் சாத்திரம் பார்க்கச் சொன்னார்கள். அவன் பார்த்துத் தமக்கு வரவிருக்கும் ஆபத்தினைக் கூறினான். வீமன் 'போகவேண்டாம்' என அண்ணனை வேண்டுகிறான். அதற்குத் தருமர், 'போகா திருந்தால் அண்ணன் வருந்துவார். அன்புடன் அழைத்தால் போகத்தான் வேண்டும்' என்றார். மேலும், "நாம் எல்லோரும் ஒருகுடிப் பிறந்தவர்கள்; நான் போய் வருகிறேன். வரும் வரை நீங்கள் மனுநீதி செலுத்தி ஆளுங்கள். அழைக்க வந்த தம்பி சித்தம் கலங்கும்!" என்று கோபமுடன் எழுந்தார் வீமன், தம்பியருடன் தருமரை அடிவணங்கி, 'மாற்றானுக்கு இடந்தருகிறீர்கள். நாங்களும் புறப்படுகிறோம்' என்றான். தருமர் மகிழ்ந்தார். எல்லோரும் புறப்பட்டனர்,

துரியோதனன் ஐவரையும் எதிர்பார்த்திருந்தான். சகுனி. அவர்களை வரும்போதே கொல்ல, அவர்கள் தேரைவிட்டிறங்கி வரும் போது, வழியில் வசிகளையும் எத்திகளையும் நட்டுவைத்துக் கொல்லத் திட்டமிட்டதைத் துரியோதனன் செய்தான்.

இதையறிந்த திருமாலாகிய கண்ணபிரான் அங்கு சென்று, தனது காலால் அவைகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, பார்த்தனுக்குச் சாரதியாக இருந்து, அத்தினாபுரத்தை அடைந்து, துரியோதனன் அரண்மனைக்குவந்து, இருக்கையில் அமர்ந்தனர். எல்லோரும் வியந்தனர். துரியோதனன், சகுனியைப் பார்க்க, சகுனி, 'இவர்களைக் கொல்வது மிக எளிது. நம்மிடம் வந்து கூட்டில் அடை பட்டு விட்டார்கள். உறவாடிக் கொல்வோம்' என்றான்.

துரியோதனன் நூற்றுவருடன் எழுந்து, தருமர் முதலாயினாரைப் பாதபூசை செய்து நின்றார். தருமர் துரியோதனனை எடுத்தணைத்து ஆசி கூறினார். துரியோதனன் அவர்களிடம் மிகவும் பிரியமுள்ளவன் போல் பாசாங்கு செய்தான் அப்போது, காந்தாரி வந்து புலம்பினாள். பிறகு, சகுனி, துரியோதனனை அழைத்து, பஞ்சவரைக் கொல்ல ஒரு சதி செய்தான். மகிழ்ந்த துரியோதனன், அவ்வாறே, வசிநட்ட குழிமேல் தடுக்கிட்டு, சிம்மாசனமிட்டு, அதில் பஞ்சவரை அமரச் சொன்னான். அப்போது சகாதேவன், சோதிடம் பார்த்து, மற்ற நால்வரிடமும் கூறிவிட்டு, துரியோதனனிடம், 'நாங்கள் வேறு ஆசனங்களில் அமர்வதில்லை' என்றான்.

அதுகேட்ட துரியோதனன். சகுனியை நோக்க, சகுனி, 'பூணூல் கலியாணத்தை ஆரம்பிக்க வேண்டும். எல்லோரும் எண்ணெய் தேய்த்து முழுகி வாருங்கள்' என்று சொல்லி. பஞ்சவர்க்கு எண்ணெய் தேய்க்க மல்லர்களை அனுப்புகிறான். இதனைச் சகாதேவன் மறுத்துவிட்டு, தருமரும் தானும் ஒருவருக்கொருவர் எண்ணெய் தேய்த்துக்கொண்டனர். அவ்வாறே நகுலனும் அருச்சுனனும் தேய்த்துக்கொண்டனர் பின்னர் அருச்சுனன், வீமனுக்கு எண்ணெய் தேய்த்துவிட வரும்போது, அவன் மறுத்து, மல்லர்களை அழைத்துத் தேய்த்துவிடச் சொன்னான்.

துரியோதனன், மல்லர்களிடம் அவர்களுக்கு எண்ணெய் தேய்ப்பது போல், அவர்களைக் கொல்லச் சொல்லியிருந்தான். அவர்கள் வீமனுக்கு எண்ணெய் தேய்க்கும் போது, வீமன், 'எண்ணெய் தேய்த்தால் தூக்கம் வரும். உடனே சாய்ந்து விடுவேன். நீங்கள் பத்திரமாக இருங்கள்' என்றான் எண்ணெய் தேய்த்ததும் வீமன் சாய்ந்தான் மல்லர்கள் மாண்டனர். மல்லர் மனைவியர் வந்து புலம்பினர். வீமன். முன்னமே சொன்னேனே! சொன்னது எல்லோருக்கும் தெரியுமே! இப்படி இறந்துவிட்டார்களே' என்றான்.

ஏமாந்த துரியோதனனிடம் சகுனி, திருக்குளத்தில் கத்திகளையும் கழுமரத்தையும் நடச்சொல்லி. பஞ்சவரைக் குளிக்கச்சொல்லச் சொன்னான். அவனும் அவ்வாறே சொல்ல, பஞ்சவர்கள் புறப்படும் போது, 'சகுனம் சரியில்லை', என்று சகாதேவனிடம் சாத்திரம் பார்க்கச் சொன்னான். அவன் குளத்தில் செய்துள்ள சதிகளைச் சொன்னான். நாராயணரை வேண்ட, அவர் நடுக்குளத்தில் காட்சி தந்தார். வீமன் மெள்ள குளத்தில் இறங்கி வசிகளையெல்லாம் பிடுங்கி மலைபோல் குவித்தான். தருமர் முதலானோர் திருமாலைத் துதித்தனர்.

திருமால் நல்ல புண்ணிய நீர்க்குளம் அமைத்தார். அதில் அனைவரும் நீராடிக் கரையேறிப் பட்டுடுத்தி நின்றனர். துரியோதனன் உப்பரிகையின் மேலிருந்தான். குளத்தின்மேல் கழுகும் காகமும் பறக்கக் கண்டு, ஐவரும் இறந்தனர் என்று மகிழ்ந்து, ஓலை அனுப்பத் திட்டமிட்டான். அவர்களை இடுகாட்டில் சுட்டெரிக்கச் சந்தனக் கட்டைகளும், வரட்டிகளும் கொணரத் திட்ட மிட்டான். மற்றும் ஆகவேண்டியன செய்து அழுதிருந்தான்.

அப்போது குளக்கரையில், ஐவரும் தலையாற்றிக் கொண்டிருந்ததைக்கண்ட துரியோதனன் மனமுடைந்து அவர்களை ஆரத் தழுவிக் கட்டிக் கொண்டான். அரண்மனை அடைந்ததும், ஐவரையும் கட்டிக்கொண்டு காந்தாரி அழுதாள். பொய்யாக பின், `விடங்கலந்து ஐவரையுங் கொல்லுகிறேன்' என்று காந்தாரி கூறினாள். துரியோதனன் தங்கை துச்சலை, பாண்டவர்க்கு விடங் கலந்த உணவையும், நூற்றுவர்க்கு அறுசுவை உணவையும் சமைத்தாள்.

துரியோதனனும், காந்தாரியும் அமுதுசெய்ய ஐவரையும் அழைத்தனர். சகாதேவன் சாத்திரம் பார்த்தான். ஆபத்து தெரிந்தது. பசும்பால் ஆகாது என்று கூறினர். நல்லது என்று மீண்டும் துரியோதனன் அவர்களை அழைத்து வந்து அமர்த்தினான். காந்தாரி அன்னமிட்டாள். அவர்கள் உண்ணுமுன், கண்ணன் யாருமறியாமல் ஈயைப் பிடித்து வந்து இலையில் இரைத்தான். தலைமயிர் கொத்தாகத் தானே இலையில் கிடக்கச் செய்தான்

அதுகண்ட தருமர், 'ஈ மொய்த்த உணவும், மயிர் கிடந்த உணவும் உண்ணலாகாது' என்று கூற, எல்லோரும் எழுந்தனர். வீமன், 'பசிக்கிறது. எல்லாவற்றையும் போடுங்கள்• என்றான் போட்டதும், எல்லாவற்றையும் பிசைந்து, ஒவ்வொருவர் பெயராகச் சொல்லி, ஒவ்வொரு உருண்டையாகச் சாப்பிட்டான். தண்ணீர் கேட்டான். தண்ணீரில் விடங்கலந்து கொடுத்தாள். குடித்தான். விடம் தலைக்கேறிற்று இறந்தான். தருமரும் தம்பியரும் அழுதனர். காந்தாரியும் அழுதாள். அருச்சுனன் புலம்பினான். தருமன் துரியோதனன் யாவரும் அழுதனர். எல்லோரும் வந்து இழவு கண்டார்கள்.

அப்போது, கண்ணபிரான். 'இறந்தவரை எழுப்பத் தயிலமுண்டு என்று சொல்லி வேடனைப்போல் தெருவில் வந்தார். அழைத்தனர். வீமனை மார்போடே சாய்த்துக் கொண்டு, ஒருகரண்டி தயிலம் கொடுக்க வீமன் விழித்தெழுந்தான். தண்ணீர் விடுவதுபோல் மாயவன் அமுதத்தை ஊற்றினார். எழுந்தது கண்டு எல்லோரும் மகிழ்ந்தனர். இளைப்பாறி இருக்கும் வேளையிலே, துரியோதனன், ஐவரையும் பொழுது போக்காக சொக்கட்டானாட அழைத்தான்.

'தோற்றவர் ராச்சியம் முழுவதும் வென்றவர்க்கு' என்று பந்தயம் கூறினான் துரியோதனன். தருமர் சம்மதித்தார். சகுனி ஒரு எலும்பைச் சதிக்கயிற்றில் கட்டி தருமன் கையில் கொடுத்து சொக்கட்டான் ஆடச் சொன்னான். விருத்தம் போட்டார். பின்னர், சகுனி, சதிக்கயிற்றைத் துரியோதனன் கையில் கொடுக்க அவன் பகடைகளை உருட்ட, 'தருமர் தோற்று விட்டார்' என்று துரியோதனன் துடைதட்டினான்.

மறுபடியும் கயிறு போட்டும், தருமர் தோற்றார். வீமன் முதலானோரும் தோற்க, மகிழ்ந்த துரியோதனன், ஐவரையும் விலங்கிட்டுச் சிறையிலடைக்கச் சொன்னாள். துரோபதையை அழைத்துவரத் துச்சாசனனை அனுப்பினான். மாயவன் மாயம் செய்ததால் வழிதவறி விட்டான்.

கோசல நாட்டு மதுரையை அணுகியபோது, அந்நாட்டுத் தூதுவர்கள், தம் அரசியாகிய அகோரி (அல்லி அரசாணி)யிடம் சென்று சொல்ல, அவள் புறப்பட்டுவந்து. சேனைகளைக் கண்டு அவர்களைக் கொல்லுமாறு மந்திரிக்குக் கட்டளையிட்டாள். போர் நடந்தது. துச்சாசனன் தப்பியோடும்போது, இது அல்லியரசாணி யினுடைய நாடு என்று அறிந்தான். அங்கிருந்தும் தருமபுரியை அடைந்தான்.

துரோபதைக்குத் தீநிமித்தங்கண்டு, துயிலும் வந்தது. தீக்கனவு கண்டாள். ஐவருக்கு மருந்திட்டு (இறக்க) இடுகாட்டில் கட்டைகளை அடுக்கிப் பாடை தூக்கிவரக் கனவு கண்டாள். குந்தி புலம்பியழக் கண்டாள். திருமஞ்சனமாடித் தீயில் விழக் கண்டாள். திடுக்கென்று கண்விழித்தாள்.

ஐவரையும் காக்கவேண்டுமென்று, திருமாலை வேண்டினாள். மீண்டும் தூக்கம் வந்து. தீக்கனாக் கண்டாள். ஐவரும் சோக்கட்டானாடித் தோற்றுப் போவதாகவும், அவர்களைச் சிறையிட்ட. தாகவும் கனவு கண்டாள். அவர்கட்கு விலங்கிட்டதாகவும், துச்சாசனன் வந்து தன் அரண்மனையை இடிப்பதாகவும் கனவு கண்டாள். தாலியைக் கழற்றி செப்பனிடக் கண்டாள். வெள்ளைப் புடவையுடுத்தி வாக்கண்டாள். தன்னை,
மயிர்பிடித்துத் துச்சாசனன் இழுத்து வரக்கண்டாள். விழித்தாள். தோழியிடம் கூறினாள். அவளுடன், மாமியார் குந்திதேவியிடம் சென்று, தோழி மூலம் வருகை தெரிவித்தாள். ஆலத்தி எடுத்து அழைத்து வரச்சொன்னாள் குந்தி. ஆலத்தியை துரோபதை மறுத்த செய்தியைக் கேட்டு, குத்தி வியந்தாள்.

துரோபதை, குந்தியை வணங்கிக் கனவினைக் கூறியழுதாள்- குந்தி, தேற்றி, 'கண்ணனால் ஐவரும் காப்பாற்றப் படுவார்கள் என்றாள். அப்போது துச்சாசனன் வந்தான். துரோபதை. மாளிகையை இடித்தான். துரோபதை கண்டு அவனைத் திட்டினாள். விசுவரூபமெடுத்தாள். அவர்களை விரட்டினாள். பலர் மாண்டனர். துச்சாசனன் வியப்படைந்து, எதிர்க்க முடியாமலிருந்தான். துரோபதை திருமாலை நினைந்தாள். திருமால் தேற்றினார். துரோபதை மனதறிந்து, ஐவரையும், அநேக சேனைகளையும் (மாயமாய்) வரவழைத்தார். துரோபதை இனி அச்சமில்லை எனத் தன் சுய உருவங்கொண்டு. அரண்மனையை அடைந்தாள் அருச்சுனன் போரிட்டான்; மற்றவர்களும் போரிட்டார்கள். துச்சாசனன் சேனைகள் மடிந்தன. துச்சாசனன். வீமனிடம் சரண் புகுந்தான். அவன், அபயமளித்தான். துச்சாசனனை விட்டு விட்டான்.

தப்பியோடிய துச்சாசனன், அத்தினாபுரம் அடைந்து, வாயில் காவலர்களைவிட்டு, ஐவரையும் பார்த்துவரச் சொன்னான். அவர்கள் விலங்கோடிருப்பதை அறிந்தான். தருமனிடம். வந்து, 'துரோபதையை அழையும்' என்றாள் தருமர் சீட்டெழுதி மோதிரத்துடன் கொடுத்தார். துச்சாசனன், துரோபதி மாளிகையை யடைந்து, அவற்றை அவளிடம் கொடுத்தான்.

அவைகளைப் பெற்ற துரோபதை, மோதிரத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு, ஒலையை வாசித்தாள். மகிழ்ந்து, கிழக்கு நோக்கி இந்திரனை நினைந்தாள் இந்திராணியுடன் இந்திரன் வந்து, மணித் தேராகிய இந்திர விமானத்தைக் கொடுத்து அதில் அவளை ஏற்றி, 'வெற்றி உண்டாகட்டும்' என்று வாழ்த்தி அனுப்பினர். இந்திர விமானம் அத்தினாபுரத்தை அடைந்தது.

வழிபார்த்திருந்த துரியோதனன் கண்டு அதிசயித்தான். துரோபதை விமானத்தை விட்டிறங்கி. திருதராட்டிரனை வணங்கினாள். அவன், நான், கண்ணின்றி வருந்துகிறேன் என்றான். உடன் துரோபதை, திருமாலை வணங்கி, அவனருளால் அவனுக்குக் கண்வரச் செய்தாள். கண்பெற்ற திருதராட்டிரன், துரோபதையைப் பார்த்து, அறக்கு மாளிகை தீக்கொளுத்தியதையும் அவர்கள் கானகம் போனதையும், உணவில்லாதிருந்ததையும் அறிவேன். இனி, பாண்டவர்கள் இறந்திடுவார்கள்.
அதனால் நீ துரியோதனனுடன் ஒற்றுமையாக இருந்தால் பிழைக்கலாம்'' என்றான். துரோபதை முனிந்து சாபமிட்டு மீண்டாள்.

அரண்மனையைத் தோரணங்களால் அலங்கரித்து துரியோதனன் சிம்மாசனத்தில் வீற்றிருந்தான் அங்கு வந்த துரோபதையை நோக்கி, 'இந்தச் சிம்மாசனத்திலிருந்து பேசு' என்றான். தலை குனிந்து நின்ற துரோபதையை நோக்கி ‘'ஏண்டி உனக்கு இத்தனை கோபமா?" என்று கேட்டான். மேலும், ''ஐவருடைய வாழ்க்கையை நீ அறியாயோ. இவர்கள் காட்டில் நாய்கள் போல் அலைந்தவர்கள். இவர்களைப் பிடித்துவந்து சிறையிலடைத்துள்ளேன். இட்ட விலங்குடனிருக்கிறார்கள்'' என்றான்.

மேலும், 'உன் திருமணத்திற்காக வரிசை கொடுத்து- காத்திருந்தேன் நீ. வில்லெடுக்கச் சொன்னாய், என் வலிமை உனக்குத் தெரியாது, போகட்டும் இப்போது. நீ என் மனைவியா யிருந்தால், உனக்கு எல்லா நலன்களும் தருவேன். வாய்திறந்து பேசு' என்று பூச்செண்டால் அடித்தான். மாலையைக் கழற்றி எறிந்தான். அவள்மேல் விழவில்லை. மீண்டும் வீசினான். அவைகள் காற்றாய் பறந்தன. ஏன் பேசாதிருக்கிறாப்? உன் மடியைப்பிடித்து மானங்குலைப்பேன்' என்றான்.

துரோபதை, "என் கணவன்மார் பொருட்டுப் பேசாது இருந்தேன். நீ மரியாதையாகப் பேசு. உன் மடியில், உன் தங்கை துச்சலை ஏறுவாளோ? அவளை அலங்கரித்து, உன் மடியில் ஏற்றினால் உன் தம்பியர்கள் மகிழ்வார்களா? உத்தமியை உதாசினம் பண்ணினால் நரகம்தான் சிடைக்கும்” என்றாள். துரியோதனன், கர்ணனை ஏவினான். கர்ணன், துச்சாசனனை அழைத்தான். அவனை விட்டு அவளை அவமானப் படுத்தச் சொன்னான். துரோபதையை இழுத்து வந்தனர். அவள் நடுங்கி. "நாராயணா! கோவிந்தா!!" என அழைத்தாள்.

அப்போது, அதுகேட்டு, (வைகுந்தத்தில்) நாராயணர் எழும் போது, இலக்குமி தடுத்தாள். அப்போது, நாராயணர், ''ஒருசமயம் நான் மோகினி உருக்கொண்டபோது, சிவபெருமான் என்னைக் கைப் பிடித்தார். அப்போது, தேவமாதர்கள் ஒன்பதின்மர் அங்குவந்து. எங்களை சதுரங்கமாட அழைத்தனர். ஆடையாபரண மெல்லாம் பணயம் வைத்து ஆடினோம். நாங்கள் தோற்று விட்டோம். ஓடிப்போய் ஐவேலிக் காயில் ஒளிந்து கொண்டார்[#] அவர்கள். என்னிடம் வந்து, என் ஆடை அணிகலன்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டு. துணிமணிகளையும் பிடுங்கிக் கொண்டனர். நான் தண்ணீரில் நின்று, ஆடையற்றுத் தவிக்கும்போது, துரோபதை, போட்டாள். அதுகொண்டு, அரண்மனை வந்தேன். அதனால். கரை வந்து, தன் புடவையில் ஒரு முழம் கிழித்து என்னிடம் திருமஞ்சனம் ஆடி அவ்வழி வரும்போது, என்னைக் கண்டு, கங்கைக் அவளுக்கு இப்போது உதவி செய்யவேண்டும்" என்று கிருஷ்ண உருவோடு, துரியோதனன் சபைக்கு வந்தார்: (மறைவாயிருந்தார்)
------
[#] சிவன் ஐவேலிக் காயில் ஒரிந்தது, பத்மாசுரனுக்காக என்பது ஒரு வரலாறு
---

அப்போது, “நீ சொன்னபடி கேட்காவிட்டால். உன் துகிலை உரிந்து, மானங்குலைப்பேன்" என்றான். ''சபையில், ஒருவர் பெண்ணை மானங் குலைக்க லாகாது என்று சொல்லியும், தடுத்து, மானங்குலைக்க எழுந்ததும். மற்ற மன்னர்கள். தம்பியர்கள் எல்லோரும் ஓடி ஒளிந்தார்கள்.

துரியோதனன். துச்சாசனனை விட்டுத் துயிலுரியச் சொன்னான். அவன் அது செய்தான் துரோபதை. 'கோவிந்தா` என்று கூப்பிட்டாள். உடன், நிறையப் புடவை வர வேண்டுமென்று சாப மிட்டாள்` பாரதப் போருக்காக ஐவரும் வாளாவிருந்தனர். (மறைவிலிருந்த) கண்ணன், பற்பல வண்ணங்களில், ஆயிரமாயிரம் புடவைகள் வர அருளினார். துச்சாசனன் அயர்ந்து விழுந்தான். துரியோதனன், அவனது மயக்கந் கெளிவித்தான். பிறகு துரியோதனன் தானே துயிலுரிந்தான். அவனும் வியந்து, இப் புடவைகளை நெய்துதரும் சாலியனைக் காட்டென்றான். 'நீ காட்டுவா யாகில், அவனுடன் உன்னை மகிழ வைப்பேன்' என்றான்.

எல்லாப் புடவைகளையும் எடுத்துச் சேர்த்துக்கட்டி யானை மேலேற்றித் தன் அரண்மனைக்கு அனுப்பினான். மீதமுள்ளவற்றை எல்லோருக்கும் கொடுத்தான். துரோபதை இவனை 'வண்ணானோ என்று நிந்தித்தாள் அப்படியானால் நீ வண்ணான் (என்) மனைவி. நெசவு செய்பவனைக் கணவனாக அடைந்துள்ளாய். அவனைக் காட்டு அவனுடன் உன்னை மகிழ வைக்கிறேன். காட்டாவிட்டால் உன்னைச் சிறையிலடைப்பேன்" என்றான், துரியோதனன்.

அதுகேட்ட துரோபதை, துச்சலையையும் காந்தாரியையும் பழித்துக் கூறினாள். பின்னர். 'காந்தாரி இருபது ஆண்டுகள் தவமிருந்து, சிறையிருந்தும் பின்னர், திருமணமானால், கணவன் மண்டை வெடித்துவிடும்' என்று சாத்திரம் சொல்ல, ஒருவரும் திருமணம் புரிந்து கொள்ளாதிருக்க, தான் வளர்த்த ஆட்டுக் கிடாயை மணக்கோலஞ் செய்து, அவளுக்குத் தாலிகட்டச் சொல்ல அது தாலி கட்டியதும் மண்டை வெடித்து இறந்தது. உடனே ஒப்புக்கு ஒரு குருடன் திருதராட்டிரனை வைத்து, பேருக்குக் கணவனாக்கினர். பிள்ளைக்காக மூவாயிரம், நாலாயிரம் பேருடன் கூடியும் குழந்தையில்லை" 'குந்தி குழந்தை பெற்றதும், அது பொறாமல் அடுக்களை சென்று, அடிவயிற்றைப் பிடிக்க, உதிரம் கொட்டிய பின்னர், நீராடி வரும்போது, பிலாவ முனிவர் கண்டு, செய்தியறிந்து, அவளுடன் கூடி, பன்றி பலகுட்டி போட்டதுபோல, நூற்றுவரும் ஒரு பெண்ணும் பிறந்தீர்கள். மிஞ்சிப் பேசாதே. நீங்கள் எல்லோரும் மலடுகள். உன் தம்பி மனைவியரைச் சபையில் மானபங்கப்படுத்தினால் எப்படி யிருக்கும்! தீமை செய்தாய். இனி உன் ராச்சியம் உன்னதல்ல. கேடு விளையும்' என்று திட்டிவிட்டுச் சென்றாள் துரோபதையாள்.

அதுகேட்டு, துரியோதனன், 'உன்னை வீதியில் விட்டு அவமானப் படுத்துவேன்' என்றான். அதற்குத் துரோபதை, `உன் தாயாரிடம். உன் பிறப்பைப்பற்றி அறிந்துவந்து பேசு' என்றாள். அவன் சென்று, காந்தாரியிடம் கேட்டான். அவள், "அடபாவி! துரோபதையைத் துயிலுரிந்தாயே! இது தகுமா? அவள் சேதி உனக்குத் தெரியாதா? அவள், ரகசியத்தை அம்பலப்படுத்தி விட்டாளே! பிலாவரிஷியைக் கூடித்தான் நூற்றொருவரைப் பெற்றேன். அவரது, பூணூல், என் கழுத்தில் இதோ இருக்கிறது. நீங்கள் அவர் மகன்கள்'' என்றாள். அதுகேட்டுத் திரும்பி சபைக்கு வந்தான்.

துரோபதை, “நான் சொன்னது நிசமா" என்று கேட்டாள். அதற்குத் துரியோதனன், நீ பிலாவ ரிஷியைக் காட்டி, அவர் மகனென்று நிரூபிக்காவிட்டால், உன்னை அவமானப்படுத்துவேன்" என்றான். துரோபதை, 'மேக வர்ணனைத் தொழ, பிலாவரிஷி, 100 பலாப்பழத்துடனும், விநாயகர் கங்கையுடன் வந்தார். அங்கு துரியோதனனைக் கட்டித் தழுவி அமர்ந்தார். உண்மை கூறினார். துரோபதை, துரியோதனனைத் திட்டினாள். அங்கு துரோணர். வந்தார். அவர், பிலாவரிஷி, விநாயகர், முதலானவர்களை அனுப்பி விட்டுத் துரோபதையை வேண்டினார். துரியோதனனைப் பார்த்து, 'உன் அரசு அழியப் போகிறது என்றார். அவன் 'துரோணரை அவமதித்தான். அவர், எழுந்து அந்தப்புறம் போனார். அந்தப்புறப் பெண்கள், துகிலுரிந்த புடவைகளைக் கட்டியிருந்தனர். அதன் வரலாறு கூறினர். எல்லோரும் துரோபதை அரண்மனைக்குச் சென்று, அவளிடம், ஒரு புடவையைக் கொடுத்தனர். அவள் கோபித்து, 'இந்தப் புடவை உங்களுக்கு ஆகாது', என்று கூறி, தனக்குத் தந்த புடவையை வாங்கி, மாயனை நினைந்து வணங்கி, அப்புடவைக்குப் பூமாலை அணிந்து பெட்டியில் வைத்துப் பூசித்து வணங்கினாள்.

அரண்மனையில் உள்ள ஆறுலட்சம் பெண்களும், விளையாட்டுப் பார்க்க வீதியில் வந்து, பின்னர் துரியோதனன் சபைக்கு வந்தார்கள். அங்கு வந்தது கண்டு, துரோபதை, வருந்தி 'கோபாலா' எனக் கூவிப் பின், ஆகாயத்தில் பறக்கும் பறவைகளைக் கூவி, 'வண்ணப் பறவைகளே! நீங்கள் பறந்திடுங்கள் ஆகாயத்தில்' என்றாள். என்றதும், வண்ணப் புடவைகளெல்லாம் ஆகாயத்தில் பறந்தன நூற்றொருவர் மனைவியரும், ஆடையின்றி நின்றார்கள். தன் கையால் அரையை மூடிக்கொண்டு நிற்பதைப் பார்த்தாயா? 'துரியோதனா!" என்று சிரித்த துரோபதை, மீண்டும் கோபாலனை நினைந்து, 'பட்டு வகை உடுத்திய இவர்களைப் பாம்பு கடிக்க வையும்" என்றாள்.

அப்படியே செய்தார் நாராயணர் நடுச்சபையில் நாலாயிரம் பாம்புகள் விழுந்து எல்லோரையும் கடித்தன. எல்லோரும் அலறி விழுந்தனர். கொலுக்குலைந்து ஓடினார். துரியோதனன் அரைஞாண கூடஇல்லாமல் ஓடினான். துரோபதையும் மற்றவர்களும் பார்த்துச் சிரித்தனர் கோச வளநாட்டுக் குருக்கள் ஓடிவந்து துரோபதையை மன்னிக்கும்படி வேண்டினர். துரோபதை பாம்புகளை விலக்கினாள் எல்லோரும் வருந்தினர். அவரவர் இருக்கை சென்று உடையுடுத்தினர். நூற்றுவர் மனைவியர் பழிச்சொல் வந்தனென்று வருந்தி `ஐவர் இருந்த தால் நாம் பிழைத்தோம். இனி அவர்களை அவர்கள் ஊருக்கு அனுப்புதல் நலம்` என்றனர். துரியோதனன் மறுத்தான். எல்லோரும் அவைக்கு வந்தனர். குரு அவர்களைப்பார்த்து புத்திபுகட்டி விடுவிக்குமாறு வேண்டினார். அதற்குத் துரியோதனன் "ஐவரையும் வனவாசம் ஓட்டிவிட்டு, துரோபதையை அருகிருத்தி ஏவல் செய்வேன்" என்று கூறி குருவைப் போகச் சொன்னான்.

கோபமுடன் எழுந்த குரு, மீண்டும் அறவுரை கூறி, 'உனக்கு அழிவு காலம் வந்து விட்டது" என்று கூறிச் சென்றார். துரியோதனன், துரோபதையைப் பார்த்து "பெண்ணே! நீ என் அருகில் இருந்தால் இந்த அரசை உனதாக்கி, நான் உனக்கு ஏவல் செய்திருப்பேன்" என்றான். அதற்குத் துரோபதை,"நான் பாரதப் போர் முடிக்கப் பிறந்தேன். அப்போரில் நூறுபேரையும் கொன்று, தொட்டுத் துயிலுரிந்த, துச்சாசனன் தலையையும், உன் தலையையும் கிடத்தி, ஏறி மிதித்து, என் கூந்தலை முடிப்பேன்" என்று சபதம் கூறினாள்.

அதுகேட்ட துரியோதனன், சகுனியை நோக்கி, சதுரங்க மண்டபத்தில், துரோபதையுடன் சூதாடி, “நான் தோற்றால், அவளை கிட்டு விடுகிறேன். அவள் தோற்றால் சொன்னபடி கேட்பாள், நீர் பாய் சொல்லும்' என்றான். அவன் சொல்ல, அதற்கிசைந்த திரோபதை, திரையிடச் சொல்லி, தான் காலால் கயறு உருட்டவும், அவன் கையால் கயறு உருட்டவும் சொல்ல, அதன்படி துரியோதனன், கயிற்றைத் துரோபதைமுன் போட, அவள் அதைக் காலால் எடுத்து அப்புறத்தே வைக்க, அவள் தோத்து விட்டாள் என்று சகுனி சொன்னான் துரியோதனன், துடைதட்டிச் சிரித்தான்.

அப்போது, கண்ணபிரான் ஓடிவந்து, கயிற்றைக் கடலில் வீசினார். இருவரும் கயிற்றைக் காணாது திகைக்கும் போது, துரோபதை கண்ணபிரானை அழைத்துத் தன் மானத்தைக் காக்க வரவேணு மென்று வேண்டி, தனக்கு பகடை விளையாடப் பசும்பொன் கயறு வேண்டுமென்றும் வேண்டினாள். அவ்வாறே வர, அதனைப் பூசித்துப் போட்டாள். துரியோதனன், அதில் தன் கணையாழியைக் கயிற்றில் சுற்றி துரோபதையிடம் கொடுத்துவரக் கர்ணனை அனுப்பினான் அவன், துரோபதைக்குமுன் போட்டான். ஆட்சி மோதிரம் அம்பலத்தில் வந்ததென்று சொல்லி, 'ஐவரையும் மீட்பேன்' என்றாள் துரோபதை.

முதல் ஆட்டத்தில் தருமரையும், பிறகு தன்னையும், பிறகு வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோரையும் செயித்து, மற்றவர்களையும், சேனை முதலானவைகளையும் செயித்தாள். கர்ணனை செயிக்கக் கயறுருட்டும்போது சேனாதிபதி ஓடி, தருமரிடம் கூற. தருமர். 'பழிவரும்' என்று அஞ்சினார். 'துரோபதை, சூதாடி ஐவரையும் மீட்டாள். என்று ஏசுவார்கள்' எனப் பயந்தார். 'ஐவரைச் செயித்தது போதும், துரியோதனாதியரைச் செயிக்க வேண்டாம்" என்று, கைச்சாத்து எழுதிச் சேனாபதி மூலம் தருமர் அனுப்பினார்.

அதைப் பெற்ற துரோபதை, உடன் அவ்விடம் விட்டகன்று. சிறைக்கூடத்தருகே ஐவரையும் காணச் சென்றாள். காணாது புலம்பினாள். தருமர் கேட்டுத் தம்பியர்க்குக் கூறினார். அக்குரல் கேட்டுத் துரோபதை மீண்டும் புலம்பினாள். வீமன் எழுந்தான்* கதவு நிலைகளை உடைத்தான். எல்லோரும் வெளிவந்தனர். காவலர்களைக் கொன்றார்கள். விலங்குகளை முறித்தெறிந்து வெளியில் வந்தார்கள்.
.
அரண்மனையையும் மண்டபங்களையும் இடித்தார்கள். வீதியில் எதிர்ப்பட்டவர்களை-யெல்லாம் கொன்றார்கள். துரோபதை வந்து தருமனை வணங்கினாள். அவளை தேற்றினார். மற்ற நால்வரும் அத்தினாபுரத்தை அழிக்க முற்பட்டனர். நூற்றுவர் பயந்தனர். சபை கூடினர். அப்போது துரோணர், ''முன்பே நான் உனக்குப் புத்தி சொன்னேன். கேட்கவில்லை" என்றார்

அப்போது, தருமரும் தம்பியரும் வந்து, துரோணரை வணங்கினர். அவர், அவர்களுக்கும் புத்தி சொல்லித் தருமபுரிக்குச் செல்லுமாறு கூறினார் அதற்குத் தருமர், ''நாங்கள் கொடுத்த வாக்குத் தவறாமல் வனவாசம் போகிறோம்'' என்றார். தம்பியர்கள் வருந்தினர்.

தருமர், ஒருபடி எள்ளையும், ஒருபடி நெல்லையும் கொண்டுவந்து, ஒவ்வொருவர் மார்பிலும் போடச்சொன்னார். அவைகள் அப்படியே இருந்தன. பிறகு எல்லாவற்றையும், தன் மார்பில் போடச் சொன்னார். அவைகள் பொரிந்து மழைபோல் விழுந்தன. அதுகண்டு தம்பியர், 'பொறுத்தார் அரசாள்வார்;' என்று தருமரை வணங்கினர்.

தருமர், துரியோதனாதியரை அழைத்துவந்து, "நாங்கள் எட்டு நாட்களாகச் சிவபூசை செய்யாமல், உணவில்லாமல் இருக்கிறோம் நாங்கள் சிவபூசை செய்து, திருநாமம் தரித்து, உண்டு, ஒருநாள் இருந்து போகிறோம். நீங்களே ஆளுங்கள்'' என்றார்.

அதற்குத் துரியோதனன், ''கடுகளவு இடங்கூடத் தரமாட்டேன்'' என்றான். அதற்குத் துரோபதை, 'பனிரண்டு ஆண்டு வனவாசம் முடிந்து வந்து, உங்கள் அனைவரையும் கொன்று. என் கூந்தலை முடிப்பேன்" என்று சூளுரைத்தாள். உடனே தருமர் முதலானோர் `திருமாலே துணை' என்று, கானகம் நோக்கிப் புறப்பட்டார்கள். துரியோதனன் மகிழ்ந்து, கர்ணனிடம், செல்லும் வழியில், வசிநட்டு இடையூறு செய்யச் சொன்னான். ஒருவர் நடக்க வழிவிட்டு, மற்றவைகளை இடர்ப்படுத்தச் சொன்னான். மரங்களையெல்லாம் வெட்டச் சொன்னான். நல்ல தண்ணீர்க் குளங்களில் நஞ்சு கலக்கச் சொன்னான்.

அவ்வழியே தருமர் முதலானோர் செல்லுங்கால், சோர்வுற்ற போது தருமரைத் தலையிலும், நகுல சகாதேவர்களைத் தோள்மேலும், துரோபதையைக் கக்கத்திலும் சுமந்து, அருச்சுனனுடன் வீமன் வழி நடந்தான். வசிகளெல்லாம் தவிடுபொடியாயின சிவபெருமான் மகிழ்ந்து, வீமனுக்கு ஏழு சிங்க பலத்தைக் கொடுத்தார். மற்றவர்களுக்கும் பலம் கொடுத்து, "உமக்கு மாயன் துணை” என்று போனார். தேவர்கள் பூமழை பொழிந்தனர்.

அதன்பிறகு, அவர்கள் புறப்பட்டு வனம்நோக்கி நடந்தார்கள். சந்தனச் சோலையில் தங்கி, பொய்கையில் நீராடி, சிவபூசை முடித்துத் திருநாமம் சாத்தி, அருகிருந்த முனிவரை வணங்கினார்கள். அவர், பழம் முதலான உணவுப் பொருள்களை வரவழைத்தார். அவர் வரவழைத்த அதிசயத்தைக் கேட்டால் நம் தீவினைகள் மாயும்.

இக்கதையைக் கேட்டவர்க்கும், சொன்னவர்க்கும், விரும்பிப் படித்தவர்க்கும் துரோபதையாள் நல்ல வரங்கொடுப்பாள். நமச்சிவாய வாழ்க ! நாதன்தான் வாழ்க!!
--------

துரோபதை அம்மானை

காப்பு

அத்தி முகனே ஆனைமுக வேதியனே !
சக்தி மகனே தையல்நல்லாள் புத்திரனே!
வித்தகனைப் பாட வேலவனே முன்னடவாய்!

கலைமகள் காப்பு

தாயே சரசுவதியே[1] சாம்பிராணி வாசகியே[2]!
நீயே துணையாக நெஞ்சில் குடியிருந்து,
மாறாத் துகில்கொடுத்த[3] மாயன் அடிவணங்கி!
தோறா அழகி துரோபதையை யான்பாட
வீறாக வேஎனக்கு விக்கினங்கள் வாராமல்
வந்த வினைதீர்த்து மலராச[4] னத்திறுத்தி
பாரதத்தை முன்னடத்தும் பச்சைமால்[5] தங்கையசே!

துரியோதனன் கொலு

அத்தி புர[6] முழுதும் அரசாண்டு தானிருந்தான்
மன்னன்துரி யோதனனு மலராச[7] னத்திருத்தி
நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொருவர் சூழ்ந்திருக்க

ஐவரைக் கொல்ல, துரியோதனன் தாயை உபாயங்கேட்டல்

மாலை முடியானும் மாதாவைத் தானோக்கி
ஐவருக்கும் நூத்துவர்க்கும் அரசுநிலை பேர்பாதி
தக்க புகழுடைய தருமரையுந் தம்பியையும்
உரிமை யுடனழைத்து, உயிர்வ தைப்படுத்தி[8]
அவனி முழுதும் ஆள்வோ மொருகுடைக்கீழ்[9]
தர்மா புரியிலுள்ள தையல் நல்லா ளத்திளையும்
ஆறுலட்சங் கோடி அருச்சுணனார் தேவியரை
ஐவருட தேவிமா ரத்தினையுங் கொண்டுவந்து
தள்ளிவந்து அத்தினையும் தானத்தி புரந்தனிலே
பாக்கியத்தி லேபிறந்த பாஞ்சால ராசமகளைக்[10]
கொள்ளவேணு மென்றுசொல்லிக் குறித்திருந்த பெண்ணதனைத்
தாலிகட்டிக் கொண்டான் தனஞ்சயனு மப்போது
தோறா வழகி துரோபதையைத் தள்ளிவந்து.
அம்பலமு மேத்தி அபிமானந் தான்குலைத்து
சொன்னபடி கேட்கவைப்பேன்[11] தோகை யரைமாதை
[12]துட்டோ திரனைவிட்டுத் துயிலை யுரிவேன் நான்
ஐவருட தேவி ஆறுலெட்சம் பெண்பிள்ளை
அத்தினையுங் கொண்டுவந்து அரையி லடைப்பேனான்
என்ன உபாயத்தால் அழைக்கலாம் என்தாயே
ஐவரையுங் கொல்ல அருளுமென்று தான்கேட்டான்.

--------
[1]. சறஸ்ப்பதிஏ என்றுளது [2]. வாசகிஏ என்றுளது [3]. துயில்கொடுத்த என்றுளது
[4]. மலற்ச என்றுளது [5]. பச்சமாய் என்றுளது [6]. அத்தினாபுரம்
[7]. மலற்ச என்றுளது [8]. கொன்று [9]. மொருகிடைக்கீள் என்றுளது.
[10]. ஓசை அதிகமாயுளது [11]. கேள்க்கவைப்பேன் என்றுளது
[12]. துச்சாசனன்
--------------

காந்தாரி மறுமொழி

பேடைமயில் காந்தாரி பெண்பெருமாள் கூறினாள்[13],
அஞ்சாதே என்மகனே அப்படியே பண்ணுகிறேன்.
தருமருட னாடு தரணிமுழு தாளவைப்பேன்
அத்தினா புரிமுழுதும் ஆண்டிடுவாய் என்மகனே
உபயமாய்ச் சொல்லுகுறேன் ஒன்றுக்கு மஞ்சாதே.
அவனி முழுதுமுன்னை ஆளவைத்துப் பார்ப்பேனான்.

உபாயம் கூறல்

தம்பியவ(ன்) லக்கணற்குத் தாரணியெல் லாமறிய

பூணூல் கலியாண ஓலை அனுப்புதல்

பூணூல் கலியாணம் பூலோகந் தானறிய
தக்க புகழுடைய தம்பிமா ரைவருக்கும்
விண்ணப்ப வோலை[14] விரை(வி) லெழுதுமென்றாள்.
தம்பிமா ரைவருந்தான் நமக்காக வேண்டியிப்போ
கூடி யிருந்து குவலயத்தை நாள்தோறும்
சேர்ந்து மகிழ்ந்திருந்து தேசமெல்லாம் ஆளாமல்
பஞ்சவர்க்கு நாள்தோறும் பாவிகளு மானோமே;
ஒற்றை மரத்தில் ஒருமரத்துக் கொம்பானோம்.
ஒருத்தி வயத்தில் பிறவாத வஞ்சினையோ.
பார மன்னவரைப் பார்த்துநெடு நாளாச்சு
ஒக்கப் பிறக்கவில்லை ஒருமுலைப்பா லுங்கவில்லை.
கூடப் பிறக்கவில்லை கூட்டுப்பா லுங்கவில்லை
காணாம லைவரையுங் கண்கூடு தான் வீங்கி
தம்பிமா ரைவருந்தான் சந்தோஷ மாகவந்து
தேவி யுடனே தென்னவர்க ளைவருந்தான்
தந்தைதாய் மக்கள் சகலவரையுந் தான்கூட்டி
சேனா பதிகளைத் தேசத்தில் தான்நிறுத்தி
பஞ்சவருந் தேவியுமாய் பந்தலின்கீழ் வந்திருந்து
பூணூல் கலியாணம் புத்திரனுக்குத் தான்முடித்து
தக்க புகழுடைய தருமனுக்கு விண்ணப்பம்.
விண்ணப்ப வோலை விதவிதமாய்த் தானெழுதி
ஓலை யெழுதி உத்திரங்க ளையவர்க்கும்

------
[13]. ஓசை குறைகிறது [14]. மோலை என்றுளது
-------------

சகுனியிடம் கூறல்

மாமன் சகுனிதன்னை வாவென்று தானழைத்து
உத்துருமை சொல்லி உகந்தெடுத்து வாசித்தார்
தா(ர) முடியான் சகுனியவன் தான்கேட்டு

சகுனி கூற்று

மன்னர் பெருமானே மருமகனே அஞ்சாதே
பதினாலு லோகமெல்லாம் பாராள வைப்பேனான்
பஞ்சவரைக் கொண்டுவந்து பாழ்கிடங்கில் தள்ளிவைத்து
அத்தினா புரியிலுள்ள ஆரணங்கு அத்தினையும்
தரும புரியிலுள்ள தையல் நல்லாள் அத்தினையும்
கொம்பனையைக் கூட்டிவந்து குடிவசமே பண்ணவைப்பேன்.
தோறா வழகி துரோபதையாள் உள்ளமட்டும்
பத்தினியாள் உள்ளமட்டும் பஞ்சவர்க்குச் சேதமில்லை
ஆரணங்கைத் தள்ளிவந்து அரையில் அடைத்துவைத்தால்
கார்நெல் (ல) வைதனக்குக் களையெடுத்தாப் போலாகும்
------------

துச்சாதனன்மூலம் ஓலை அனுப்புதல்

செண்டாடும் மன்னன் திட்டோ திரன்கையிலே
ஓலை கொடுத்து உண்மைசொல்லி தம்பியர்க்கு
மன்னர்கள் ஐவரை(யும்) வரவழையும் என்றுசொல்ல[15]

துரியோதனன் தாம்பூலம் கொடுத்தல்

தேசத் தழகன் திரியோ திரன்மகிழ்ந்து
தரணி முழுதாளும் தம்பிதிட் டோதிரனே
எதுத்தாரைச் சங்கரிக்கும் என்தம்பி வாள்வீரன்
தாம்பூல(ம்) கையில் தார்வேந்தன் கைகொடுத்து

துச்சாதனன் புறப்படல்

இருகையி னால்வாங்கி எழுந்திருந்தார் வீரியனும்
சேனை பரிகரியுஞ் சேரவே தான்கூட்டி

அரசர்கள் துரியோதனனிடம் விடைகேட்டல்

எண்ணத் துலையாத ராசாக்கள் கோடிலெட்சம்
தரும புரிக்குத் தான்பயண மென்றுசொல்லி
வேந்தன்திரி யோதிரனே விடைகேட்க வந்தார்கள்

அப்போது துச்சாதனன் கூறல்

திரியோ திரன்தம்பி திட்டோ திரன்தானும்
விழுந்து நமஸ்கரித்து வேந்தன்திர யோதிரனே
இன்ன மொருவார்த்தை சொல்லுகுரே னண்ணாவி

‘சேனைகளுடன் போகக்கூடாது” எனல்

சதுரங்க பலத்துடனே[16] தான்போக வொண்ணாது
ஆனை படையுடனே அரமணையில் நான்போனால்
போகவொண்ணா தண்ணாவி போர்வேந்தன் சொல்லுகுறேன்,
ஐவ ரறிந்திடுவார் அனுகூல மாகாது
ஆனைபடை யென்பிறகே ஆகாது அண்ணாவி

-----------
[15]. என்று சொல்லி என்றுளது [16]. பிலத்துடனே என்றுளது
-------

'தனிமையாகச் செல்லுகிறேன்' எனல்

உத்தமரே வீரியரே உண்மைசொல்லி ஐவரையும்
அழைத்து வருவேனான் அண்ணாவி என்றுரைத்தான்

சகுனி இசைதல்

தார முடியான்[17] சகுனியவன் தான்கேட்டு
மெத்த மனமகிழ்ந்து வேந்தன்திட் டோதிரனே
உன்மனதுக் கேத்தபடி உண்மைசொல்லி ஐவரையும்
வெத்தியுடன் கூட்டிவந்து மேதினியை யாளுமென்றார்.

துரியோதனன் விடைகொடுத்தல்

அந்த மொழிகேட்டு அரவக் கொடிவேத்தன்
அனுப்பி விடைக்கொடுத்தான் ஆனந்த வாழ்குமரன்

துச்சாதனன் புறப்படல்

சந்திரா யுதத்துடனே தார்வேந்தன் தம்பியவன்
வாசலும்வா சல்படியும் தானடந்து அப்போது
தேனார் மொழியின் தெருவீதி தள்ளிவந்து
அந்தத் தெருவும் அரமணையுந் தானடந்து
மத்து மொருவீதி வகையுடனே போகையிலே

தீ நிமித்தம் காணல்

தூரு தலச்சி துந்துமிபோல் பெண்ணவள்தான்
கொள்ளி எடுத்துக் குறுக்கேவரக் கண்டானே
பூனை குறுக்கிடவும் புதுப்பானை முன்னைகண்டான்
எண்ணெயும் புண்ணாக்கும் எதிர்க்கேவரக் கண்டானே
மெத்த மனமேங்கி வேந்தன்துட் டோதிரனும்
அவ்வீதி விட்டு மறுவீதி போகையிலே
கண்டான் சவன[18] மங்கே காளைதிட் டோதிரனும்
ஓரி[19] குறுக்கிடவும் ஒத்தைப்பார்ப்பான் நேரிடவும்
மங்கை யொருத்தி மணல்வாரித் தூத்தி நின்றாள்
திருமதிலும் கோபுரமும் தெப்பக் குளத்தருகே
பொல்லாத காகம் புலம்பியே கூப்பிடவும்
தேசத் தழகன் திரியோதிரன் தம்பிகண்டான்.
என்ன சவனமிது எதிராகக் கண்டுதுகாண்.
வாடி முகந்தழன்று[20] வற்ணமுகம்[21] வேறுபட்டு
அவ்வீதி விட்டு மறுவீதி தானடந்து
கோட்டான் குழறக் கோமான் குதிச்சுதுகாண்.
மற்றுமொரு கானகத்தில் மன்னவனும் போகையிலே
கண்டான் சவனமங்கே காளைதிட் டோதிரனும்

----
[17]. தாமுடியான் என்றுளது [18]. சகுனம்
[19]. நரி [20]. முகந்தளர்ந்து [21]. வண்ணமுகம்
------

திரும்பக்கூடாதென்று விதியை எண்ணுதல்

எடுத்த பயணம் இனிதிரும்பப் போறதில்லை
எந்தப் படிவருமோ எழுத்து முகிந்துதுவோ.[22]
பிரம்மாவெழுத் தைவிலக்க வல்லவரு முண்டோதான்.
நாடு கடந்தான் நடுக்காடு தானடந்தான்.

நடு யாமத்தில் தருமபுரி அடைதல்

மன்னவர்கள் வீத்திருக்கும் மதிலேறுங் கோபுரமும்
நஞ்சுதின்று நஞ்சுருக்கும்[23] நடுச்சாம வேளையிலே
சுத்தியெங்கும் பார்த்துவந்தான் சுந்தரப் பூமுடியான்.

அரண்மனையைக் காணல்

நிறுத்தியகண் ணாடிகளும் நிலையேறுங் கோபுரமும்
கோத்தமுத்துத் தாவடமும் குங்குமஞ்சேர்[24] மண்டபமும்
பூங்கா வனமும் பொய்கையும் வாவிகளும்
சலவைசப்பிர மண்டபமுஞ் சப்பிரமஞ்ச மேடைகளும்
முத்திலங்கும் மாளிகையும் மூவா யிரவிளக்கும்

தருமனது பள்ளியறை காணல்

தங்க விளக்கெரிய சகாலத்துப் போர்வையுடன்
தாதுமணி மார்பழகன் தர்மலிங்கம் பள்ளிகொண்டார்.
----
[22]. முடிந்ததுவோ [23]. நஞ்சு'கக்கும் எனல் பொருந்தும்
[24]. குங்குமமுஞ்சேர் என்றுளது
--------------

வீமன் பள்ளியறை காணல்

வெத்தி மகராசன் வீமனுட பள்ளியறை
ஆயிரங் காதவழி அலங்கார மண்டபத்தில்
ஒன்பது களஞ்சியத்தில் உத்தமியும் நிறைந்திருக்க
உமியை விரித்து ஒப்பறவாய்த் தான்பரப்பி
அகலத்தல காணிகளும் அலங்காரப் பஞ்சணையும்
உகந்த மலைபோலே உசந்ததல காணியுமாய்
நீட்டினான் காலை நெடுகவிட்டான் முக்காட்டை
தூக்கினான் காலை தொண்ணூத்திக் காதவழி
முடக்கினான் காலை முன்னூத்திக் காதவழி
எட்டுவொண்ணாக் கொண்டதுபோல்[25] இருப்புதெண் டாயுதத்தை
மருங்கிடையில் சாத்தி மதகரியும் பள்ளிகொண்டான்.

வீமனைப் பார்த்துப் பயப்படல்

திரும்பி முகம்பார்த்து திடுக்கென்று தான்பயந்து
வேரை[26] நினைவுகொண்டு வேந்தனுட தம்பியவன்
உள்ளம் நடுங்கி உடம்பு தடுமாறி
ஏரிட்டுப் பார்த்தான் இவன்கிடந்த மாளிகையில்
இருப்புக் கதவும் ஏழுசுத்துக் கண்மதிலும்
வெத்தி மகசாலை வீமரே தப்பாது
தட்டி எழுப்பிவிட்டால் வெட்டி யெறிந்திடுவான்.
எட்டி நின்று கூப்பிட்டால் எட்டி மயிர்பிடிப்பான்.
கிட்டநின்று கூப்பிட்டால் கிழித்து எறிந்திடுவான்.
இருப்புத்தெண் டாயுதத்துக் கிரையாக ஆக்கிடுவான்.
இவனை யெழுப்பவென்றால் எமனாலு மாகாது.

அருச்சுனன் பள்ளியறைக் கேகல்

அருச்சுனன் பள்ளியறை எங்கேயென்று தேடலுற்றான்.
காண்டீபன் பள்ளியறை காளை விளக்கெரிய
தூண்டா விளக்கெரியச் சோதிவிடும் சித்திரங்கள்
பொன்னுலகில் பொஷ்பம் பூச்சரங்கள் தான்னிருத்தி
முத்தினால் தோரணங்கள் முன்னே சரந்தூக்கி
மாத்தில்லாத் தங்கம் மாணிக்கம் தானிலங்க
தடவி விரித்த சப்ரமஞ்ச[27] மேடைகளும்

------------
[25]. குண்டதுபோல் என்றுளது [26]. வேறே [27]. சப்ரமஞ்சள் என்றுளது
----

சாந்து புனுகு சகலாத்துப் போர்வையுடன்
சித்திரமணி மண்டபத்தில் தேர்விசையன் அப்போது
பத்துலட்சம் பெண்களுடன் படுத்திருந்தான் வில்விசையன்.

அருச்சுனனைக் காணல், பயப்படல்

திரியோ திரன்தம்பி திட்டோ திரன்பார்த்து
வெருண்ட படையைவெட்டி வேசாரி வந்தவர்போல்
வாடி முகந்தளன்று வர்ணமுகம் வேறுபட்டு
ஆளா லழகன் அருச்சுனரைத் தான்பார்த்து
அகல நின்று தானழைத்தால் அதட்டி எழுந்திருப்பான்
கள்ள ரிவரென்று கத்திக் கிரையிடுவான்.
அருச்சுணனார் பள்ளியறை அண்டயினிப் போகாது.

சகாதேவன் பள்ளியறையில், அவனைக் காணல்

பசும்பொன் முடிபொருத்த பாத்தான் சகாதேவன்
பள்ளியறை எங்கேயென்று[28] பார்மன்னன் பார்த்துவந்தான்
லெட்சுமி மண்டபத்தில் நவகோடி முத்தழுத்தி
பொன்னரிய மாலை பூச்சரங்கள் தோரணங்கள்
மல்லிகைப் பூச்சரங்கள் வகைக்குவகை தோரணங்கள்
கட்டி யலங்கரித்துக் கண்ணாடி தான்தூக்கி
தூணுக்குத் தூணு தூண்டா விளக்கெரிய
துலங்கி இருபுறமும் சோ தியிடுந் தோரணங்கள்
பசும்பொன் குடமேழும் பதித்திருந்த மண்டபமும்
வாங்கு பிடிசூரி வச்சிறுக்கிக்[29] கச்சைகட்டி
தங்கத் தலகாணி சகலாத்துப் போர்வையுடன்
மல்லிகைப் பூவும் மலர்வீசும் மண்டபமும்
அப்படியாக் கொத்த அறையில் படுத்திருந்தான்.
திரியோ திரன்தம்பி திட்டோ திரன்பார்த்து

நகுலன் பள்ளியறை சென்று திரும்பல்

சிங்கக் கொடிவிருதுஞ் சேவுகமும் வீரியமும்
பதினெட்டு ஆயுதமும் படைமுக (மு)ஞ் சேவுகமும்
பரிக்கி நகுலன் படுத்திருக்கும் மாளிகையில்
நகுலனுட மாளிகையில் நான்போக ஒண்ணாது
கண்டால் விடுவதில்லை கத்திக் கிரையிடுவான்.

---
[28]. யெங்கையென்று என்றுளது [29]. வச்சிரக்கி என்றுளது
------------

மீண்டும் சகாதேவன் அரண்மனைவந்து ஆராய்ச்சிமணி அடித்தல்.

சாத்திரக் கொடிவேந்தன் சகாதேவன்[30] மாளிகையில்
அஞ்சாமல் வந்துநின்று ஆராச்சி[31] மணியடித்தான்.

எல்லோரும் எழுந்திருத்தல்

ஆராச்சி மணியோசை கேட்டு யெழுந்திருந்து
அந்த அதிரிலே அருள்கண் முழித்தான்[32]
கட்டாயி தத்துடனே காண்டீப னோடிவந்தான்.
சேனா பதியளெல்லாம் சேர யெழுந்திருந்து,
உருவின கத்தியுடன் ஒருகோடி சூரியன்போல்
மண்டி யிடைக்கியமும் வலதுகையி லேபிடித்து
வந்தாண்டா கள்ளனென்று வாலாரும்[33] பண்ணிநின்றார்.

வீமன் எழுதல்

அந்தத் தொனிகேட்டு அமர்ந்திருந்த போர்வீமன்
வெத்தி மகசாலை வீம னெழுந்திருந்து
தெண்டாயு தத்துடனே தெருவீதி தன்னில் வந்தான்.
விடுகாதே[34] என்று வெளிப்பட்டான் போர்வீரன்
பட்டுக் கொடிவேந்தன் பரிநகுலன் கண்முழித்து
வச்சிராயு தத்துடனே மன்னவனும் வந்துநின்று
கல்பெரிய கோட்டையிலே கலக்கங்கள் வந்துதென்று
கட்டடா வென்று கதறியே ஒடிவந்தான்
கள்ளனைக் கண்டால் கத்திக்கிரை யாக்கிடுவேன்[35]
அகலமுள்ள கோட்டையெல்லாம் மராமத்துத் தான்பார்த்து
சுத்தி வளைந்துகொண்டு தூருவிட்டுப் பார்க்கையிலே

துச்சாசனன் பயம்

திரியோ திரன்தம்பி திட்டோ திரன்பயந்து
நடுங்கி உடல்பதறி நாவு தடுமாறி
ஏழுசுத்து கோட்டையிலே என்னை விடுவதில்லை

---
[30]. சகதேவன் எனல் பொருந்தும் [31].ஆருச்ச என்றுளது
[32]. முளித்தான் என்றுளது (ஓசை குறைகிறது) [33]. = ?
[34]. விடாதே [35]. யாயிடுவான் என்றுளது
------------

கண்ட சவனம் கைமேல் பலித்துதென்று
இவர்கள் துடர்ந்துவர எங்கே யொளிவேனான்.
வேதன் விதியே விலக்கவினிப் போகாது.
வெட்டி யெறிந்திடுவான் வேதச் சகாதேவன்
நஞ்சுதின்று நஞ்சுருக்கும் நடுச்சாம வேளையிலே
ஒண்டி ஒருவனுமாய் உயிரிழக்க வந்தோமே.
திட்டோ திரன்[36] தானும் துக்கிச்சு[37] மூச்செரிந்து
இனியிருக்கப் போகாது ஏழுசுத்துக் கோட்டையிலே.

தருமன் மாளிகைக்குச் செல்லல்

தக்க புகழுடைய தருமருட மாளிகையில்
போனான்திட் டோதிரனும் புகழ்பெரிய தருமரிடம்
உத்திரத் தூணருகே ஓடி யொழிந்திருந்தான்
தெருக்கள் தெருக்கள்தொறும் தீவட்டி கோடிலட்சம்
பார்த்து வருகையிலே பதரி உடல்நடுங்கி
தக்க புகழுடைய தருமருட பந்தலிலே

தருமருக்குக் கால்பிடித்தல்

அடப்ப மிடுவார்போல் அண்டையிலே வந்திருந்து
வலர்ப்பாதம் நோகாமல் மடிமேல் எடுத்துரைத்து
கணைக்கால் முழங்காலும் கையாலே தான்பிடித்து
திருத்துடைகள் ரெண்டுந் திருக்கி முருக்கெடுத்து
கணையாழி மோதிரங்கள் காலிலே தானழுத்தி

தருமன் வினவுதல்

துணுக்கென்று தான்முழித்தார், திட்டோ திரனிருந்தான்
கண்மணி யான கரும்பேநீர் எங்கேவந்தீர்?
இச்சாம வேளையிலே என்பிறப்பே எங்கேவந்தீர்?
பொல்லாதான் காவலிலே புண்ணியரே எங்கேவந்தீர்?
மதகரியான் கண்டாக்கால் வாளுக்கிரை யாக்கிடுவான்
தாயாதிக் காரர் சதிகேடன் ராச்சியத்தில்[38]
ஏதுக்கு இந்நேரம் ஏன்தம்பி வந்தீரோ?
பேச்சுக் கிடமாகும் பெரியவர்கள் தர்மமிது
எந்நேர மாச்சு? ஏன்தம்பி இங்கேவந்தீர்?
பசும்பொன் கரத்தால் பாத மடிந்தீரே!
கட்டழகன் கையைக் கண்மலரோ டேயணைத்து
நீர்வந்த சேதி நிலவரமாய்ச் சொல்லுமென்றார்.

-------
[36]. துட்டோதிறன் என்றுளது [37]. தூக்கிச்சு என்றுளது.
[38]. சதிர்கேடன்றாச்சியத்தில் என்றுளது
--------

துச்சாசனன் கூறல்

அண்ணாவி இப்போ அடியேனுஞ் சொல்லுகிறேன்.
தென்ன முடிவேந்தன் திரியோ திரன்பெருமாள்
மைந்தனவன் லெக்கணற்கு முறையோடே தான்கேட்டு
பூணூல் கலியாணம் புத்திரற்குத் தான்முடிக்க
ஓலை யெழுதி உத்திரங்கள் தான்சேர்த்து
இந்தச் சிண[39] மோலை இனிக்குடுத்து வாருமென்றார்.
ஆகையினாலே அடியேனும் ஓடிவந்தேன்.

ஓலையைக் கொடுத்தல்

ஓலையைக் குடுத்து ஒதுங்கிநின்று வாய்புதைத்து
கைகட்டி நின்றான் கனத்ததிட் டோதிரனும்.
வாசித்துப் பார்த்து மன்னர் மனமகிழ்ந்து

தருமன் மகிழல்

இன்பங் குளிர்ந்து இருதோளும் பூரித்து
தம்பிதிட் டோதிரனை சகலாத்துப் போர்வையிலே
இருத்தி மனமகிழ்ந்து ஏகாந்த மாயிருந்து
உகந்து மனமிரங்கி ஒருபுசமி ரு சமாய்
ஓலை தனைச்சுருட்டி உத்தமருங் கைபிடித்து
வீமன் விசையனையும் விந்தை நகுலனையும்
சாத்திரத்தில் வல்ல சகாதேவ ராசனையும்
வேணுமென்று[40] சொல்லி வீத்திருக்கும் வேலையிலே

கள்ளனைத் தேடி மற்றவர்கள் ஓடிவரல்

வந்தகள்ளன் எங்கேயென்று மன்னவர்கள் தான்தேடி
தேடித் திரிந்து தெருவெங்கும் காணாமல்

---
[39]. க்ஷணம் [40]. வேறுமென்று என்றுளது
---------

வீமன் சகாதேவனைச் சாத்திரம் பார்க்கச் சொல்லல்

வெத்தி மகசாலை வீமராசன் தானுமப்போ
தரும புரிக்குத் தான்வந்த கள்ளன் எங்கே
தம்பி சகாதேவா சாத்திரத்தைப் பாருமென்றார்.

சாத்திரம் பார்த்தல்

வெள்ளி வெளிச்சமதில் வேதாவைக் கைநீட்டி
உள்ளங்கை சாத்திரத்தை ஊடுருவத் தான்பார்த்து
ஐவரையுங் கொல்ல அரவக் கொடிவேந்தன்
ஓலை யெழுதி உத்ததம்பி கைகொடுத்து
ஐவரையு மிப்போ அழைக்கவந்த கள்ளனவன்
தாரார் புகழ்படைத்த தருமருட பந்தலிலே
ஓலை குடுத்து உத்திரங்கள் தான்பேசி
இருக்கிறான் கண்டீரோ என்னுடைய அண்ணாவி
சாத்திரத்தில் வல்ல சகாதேவா நீயுரைக்க[41]

தருமர் மாளிகையில் தம்பியர்கள் வந்து கூறல்

தாது மணிமார்பன் தருமருட மாளிகையில்
சுத்தி வளைத்துக்கொண்டு தூருவிட்டுப் பார்க்கையிலே
தரும ரெழுந்திருந்து தலைவாசல் தன்னில் வந்தார்
தக்க புகழுடைய தருமலிங்கம் பாதமதில்
சரணஞ் சரணமென்று தாளிணையைப்[42] பூண்டுகொண்டு
அச்சமத்த கோட்டைக்கு மழியாங் கறனக்கு[43]
நஞ்சுமரங் கொண்டுவந்து நாட்டினா னண்ணாவி
பகையில்லா நாட்டில் பழிகாரன் வந்ததென்ன?
கலங்காங் கரியிலே[44] காரணியான் வந்ததென்ன?
மன்னன் மதகரியும் மகாகோபங் கொண்டெழுந்து
கத்திக் கிரையிடுவேன் கதரியே ஓடிவந்து
நகுலன் சகாதேவன் நல்ல அருச்சுணனும்

துச்சாசனனைக் கொல்லவந்தவர்களைத் தருமர் தடுத்தல்

திட்டோ திரன்பயந்து தூணருகே போயிருந்தான்
தரும ரவர்பார்த்துத் தன்பேரி லாணையிட்டு
என்னாணை தம்பி எரியுமென்றா ராயுதத்தை
ஆயுதத்தைத் தானெரிந்து ஆசாரம் பண்ணிநின்றார்.
வாருங்கோ தம்பியென்று[45] வாயாரச் சொல்லாமல்

-----
[41]. சகாதேவநீதிருரைக்க என்றுளது [42]. தானிளையை என்றுளது
[43]. = ? [44]. = ?
-------

துரியோதனன் ஓலையைப் பீமனிடம் கொடுத்தல்

கோவித்த தம்பியரைக் குளுந்தமுகந் தானாக்கி
மன்னன் மதகரியும் வாய்த்ததம்பி மூவரையும்
அருகே நிறுத்தி ஆதரவாய் வார்த்தை சொல்லி
அரவக் கொடிவேந்தன் அனுப்பிவைத்த ஓலைதன்னை
வாசித்துப் பாருமென்று மநகரியான் கைகொத்தான்.

ஓலை வாசித்த தம்பியர், தருமர் உத்தரவு கேட்டல்

ஒவ்வொருவ ராக உகந்தோலை வாசித்தார்
தக்க புகழுடைய தருமர் முகம்நோக்கி
சித்தத்துக் கேத்தபடி செப்புமென்று தான்பணிந்தார்.

தருமர் விருப்பம்

அண்ணன்மனம் நொந்திடுவார் அல்லே[46] சலித்திடுவார்
பஞ்சவரைக் கூட்டிவந்து பந்தலிலே தானிறுத்தி
ஐவரையுங் கூட்டிவந்து அலங்கார மாய்நிறுத்தி
தம்பிமார் பெண்டுகளும் சார்ந்தசன மத்தினையும்
பந்தலிலே வந்து படுமான மாயிருந்த
பூணூல் கலியாணம் புத்திரற்குத் தான்முடித்து
சோபன மென்றுசொல்லி அனுப்பிவைத்தார் (தம்பிதனை)
ஐவரையுங் காணவென்று அவரே பிரியமுடன்
சோபன ஓலைகொண்டு திட்டோ திரனும்வந்தான்.

தருமர் புறப்படச் சொல்லல்

போகா திருந்தால் பேருலகில் ஏற்காது
மன்னவரே தம்பியரே மறுவார்த்தை பேசாமல்
கண்மணியே தம்பியரே கடுகெனவே நாம்போவோம்
தக்க புகழுடைய தருமரு மீதுரைக்க[47]

------
[45]. தம்பியரை என்றுளது [46]. அல்லது போலும்,
[47]. தருமரினுரையுரைக்க என்றுளது.
-------

சகாதேவனைச் சாத்திரம் பார்க்கச் சொல்லல்

வீமன் விசையன் மிகுந்த பரிநகுலன்
தார முடியான் சகாதேவ னைப்பார்த்து
தம்பி சகாதேவா சாத்திரத்தைப் பாருமென்றார்.

சகாதேவன் சாத்திரம் பார்த்து, துரியோதனன் சூழ்ச்சியினைத் தெரிவித்தல்

உள்ளங்கை சாத்திரத்தை ஊடுருவத் தான்பார்த்து
அன்பான ஓலையென்று அறிவில் நினைக்காதீர்
போர வழிமுழுதும் பொய்க்குழியை வெட்டிவைப்பான்
வார வழிமுழுதும் வசிகளை நாட்டிவைப்பான்
எண்ணெய் முழுகவென்று இன்பமுடன் தானழைத்து
மல்லர்களை விட்டு வல்லுயிரை மாய்த்திடுவான்.
அன்னத்தில் வின்னம் அவன்கலந்து வைத்திடுவான்.
உத்தமரே அண்ணாவி ஒருவர்தப்பப் போறதில்லை
பொல்லாதான் பட்டணத்தில் போகவொண்ணா தண்ணாவி.
ஆகாதான் பட்டணத்தில் அடிவைக்கப் போகாது.
இத்தனைக்கும் நாம்ப[48] போயிருந்தோ மேயாகில்
சோகி[49] விளையாடித் தோர்வை வளர்த்திடுவான்
சொக்கட்டா னாலே தோர்வையும் உண்டாக்கி
வனத்தில் குடிபோக வந்திருந்த ஓலையுந்தான்.

வீமன் போகவேண்டாமென தருமரை வேண்டுதல்

வெத்தி மகசாலை வீமரவர் தான்கேட்டு
பொல்லாதான் பட்டணத்தில் போறதுவும் நீதியல்ல
சித்த மிரங்குமென்று சேவடியைப் பூண்டுகொண்டார்.

தருமர், 'அன்புடன் அழைத்தால் போகவேண்டும்' எனல்

தம்பிமார் நால்வரையும் தான்பார்த்து மேதுசொல்வார்
வையகத்துக் கேற்காது மதகரிலே தம்பியரே
அண்ணன் மனந்தனிலே ஆயாசம் வத்திடுங்காண்.
அன்புவைத்து ஐவருக்கும் அனுப்பிவைத்த ஓலையிது
போகா திருந்தால் பிறநாட்டுக் கேர்க்காது.

----
[48.] நாம் என்பதன் பேச்சுவழக்கு [49]. சோழி
---------

அருச்சுனன் மறுத்தல்

அந்தப் படிகேட்டு அருச்சுனனு மேதுசொல்வான்
போகவொண்ணா தண்ணாவி புண்ணியரே சொல்லுகிறேன்.
நாங்கள் வருவதில்லை நாடுவிட்டு இப்போது
தாராற் புகழ்படைத்த தருமலிங்கம் பள்ளிகொண்டார்.

தம்பியரை ஆளச்சொல்லல்

ஐவருந்தான் மாண்டாலும் அரசு நிலையுமில்லை
தேச[50] மலையாமல் செங்கோல் தவறாமல்
நான்போய் வருகமட்டும் நாட்டிலே தானிருந்து

நாம் ஒருகுடிப் பிறந்தவர்கள்

வாசல் குடிதழைக்க மனுநீதி தப்பாமல்
இருந்தர சாளுமென்று எழுந்திருந்து தருமருந்தான்
வக்க விலக்கமில்லை பருமரத்துக் கொம்பானோம்
ஒத்தை மரத்து ஒருமரத்துக் கொம்பானோம்.
ஐவரும் நூத்தொருவர் ஆண்பிறவி கண்டீரே.

தருமர் கோயத்துடன் எழுதல்

ஆகையி னாலே யழைக்கவந்த தம்பியற்கு
சித்தங் கலங்கிவிடும் திருவுளத்துக்[51] கேற்காது
கோவித் தெழுந்திருந்து கொத்தவனுந் தானடந்தார்.

வீமன் சினந்துகூறித் தம்பியருடன் புறப்படல்

வெத்தி மகசாலை வீம னெழுந்திருந்து
சரணஞ் சரணமென்று சாஷ்டாங்கத் தெண்டனிட்டு
நகுலன் சகாதேவன் நல்ல அருச்சுணனும்
பொற்பாதம் பூண்டுகொண்டு போத்தி யடிவணங்கி
சொன்னபடி கேட்டு தொண்டருக்கும் நீர்தானும்
தரும புரியில் தங்கமணி மாளிகையும்
சொன்னபடி கேட்டு தொண்டுபண்ணி நாள்தோறும்
(ஏ)வல்சொல்லுந் தொண்டருக்கு இவ்வார்த்தை சொன்னதென்ன?
சினந்தாரைக் கொல்லவொட்டாய் சேவுகங்கள் பண்ணவொட்டாய்.
கொல்லவந்த மாத்தானை கூட்டி யருகில்வைப்பாய்[52]
பாரே ழுலகையும் பதியிருந்து ஆளவொட்டாய்.
உம்மைவிட்டு நாங்கள் ஊரில் இருப்பதில்லை.

---
[50.] தேஷ என்றுளது [51]. திருவளத்துக் என்றுளது
[52]. வைப்பான் என்றுளது
-----

தருமர் மகிழ்ந்து ஆயத்தம் செய்தல்

தருமர் மனமகிழ்ந்து தம்பியர்மே லன்புவைத்து
அஞ்சு ரதத்தை அலங்கரித்து வாருமென்றார்.
சோடித்தார் வெண்தேருஞ் சொன்ன[53] மயமாக
ஆயிரஞ் சூரியனும் உதைய மானாப்போல்
கொண்டுவந்து விட்டார் குந்திமக்கள் பந்தலிலே.

ஐவரும் புறப்படல்

பொன்னின் ரதமேறி புறப்பட்டார் ஐவருந்தான்.
ஆகாசம் பூமி அதிரவே தானடக்க
செம்ப வளக்கொடியாள்[54] செய்யாளுந் தானடந்து
புஷ்ப மழைபொழியும் புண்ணியனார் போறவழி.
அத்தி புரம்நோக்கி ஐவருந்தான் போகையிலே

துரியோதனன் எதிர்பார்த்தல்

வழிபாத் திருந்தான் மன்னன்திரி யோதிரனும்
செந்தாம ரைப்பூவில் செங்கதிரோன் வந்தாப்போல்
பசும்பொன் ரதமேறி பஞ்சவர்கள் வாரார்கள்.
நச்சேத் திரமும் நாழிகையுந் தான்பார்த்து
விடிந்து எழுந்திருந்து வெளியில் வருகையிலே
வாரதொரு பஞ்சவர்க்கு வாய்த்தபுத்தி சொல்லுகிறேன்.

சகுனி உரை

சாயாம்பு வர்ணன் சகுனியங் கேதுரைப்பான்.
மண்ணாளும் வேந்தர் மனஞ்சலிக்க வேண்டாங்காண்
உத்தமர்க ளைவரையும் ஒருநொடியில் கொல்லுகிறேன்.

---
[53]. தங்க [54]. செம்பவளக் கொடியவர்கள் என்றுளது
---

சகுனி சூழ்ச்சி செய்து வசி நடச் செல்லுதல்

ரதம்விட் டிறங்கி நடந்து வரும்வழியில்
கூரம்பு கத்திகளும் கொடியசெப்பு ஊசிகளும்
தேரைவிட் டிறங்கித் தெருவில் வருகையிலே
இருப்பு வசியை[55] எங்கும் நிறுத்துமென்றார்.
தெருத்தெருவு கள்தோறும் சிங்காரச் சோடினையும்
இந்தப் படிவசியை எங்கும் நிறுத்துமென்றார்.

கண்ணபிரான் அறிந்து, காக்கவருதல்

பாவிதிரி யோதிரனும் பண்ணிவைத்த வஞ்சினையும்
செங்கண் நெடுமால் திருவிளத்தி லேபிறந்து
மைச்சினமா[56] ரைவருக்கும் மடிப்பு வருகுதென்று
ஒடிவந்து மாயவரும் உத்தமரை[57] காக்கவென்று

கண்ணன் காலால் வசிகளைப் பிடுங்கிடுதல்

அவனி முழுதளந்தார் அந்தமலர்ப் பாதமதில்
காலால் வசிபிடுங்கி காயாம்பு மேகவன்னர்
முத்து ரதத்தை முன்கையிலே தா தானேந்தி

கண்ணன் அருச்சுனர்க்குத் தேரோட்டுதல்

ஐவரையுங் காக்கவென்று அருச்சுணர்க்குத் தேரூர்ந்தார்.
அவ்வீதி விட்டு அத்தி புரத்தில்வந்தார்

துரியோதனனுடைய அரண்மனையை அடைதல்

தேசத் தழகன் திரியோதிரன் வீத்திருக்கும்
ஆனந்த மார்பன் அறமணையில் போய்ப்புகுந்து
சிங்கா சனத்தில் திரமாக வீத்திருந்து

துரியோதனன், சகுனியைப் பார்த்து வியத்தல்

பஞ்சவர்க ளேறிவந்த பசும்பொன் ரதம்பார்த்து
அம்மான் சகுனி யவன்முகத்தைத் தான்பார்த்து
முத்து விரல்சுழட்டி மூக்குமேல் கையைவைத்து
முள்ளு கிழிக்கவில்லை முடிச்சபூ வாடவில்லை
என்ன புதுமையென்று விறுமிச்சுத் தானிருந்தான்.
எண்ணாது எண்ணி இவரிருக்கும் வேளையிலே

-----
[55]. வசி-கழுமுள், சூலம் [56.] மைத்துனர் [57]. உற்றமறை என்றுளது
--------

சகுனி கூற்று

சாயாம்பு வர்ணன் சகுனியங் கேதுரைப்பான்
உரலி லகப்பட்டு உலக்கைக்குத் தப்புவரோ !
கூட்டி லடைத்ததொரு கோழிக்குச் சமானமது !
மெத்த மயங்காதே வேந்தர் பெருமானே !
ஒருநாழி கைப்பொழுதில் உயிர்வதை பண்ணிவைப்பேன்.
மருவி யுறவாடி வாசமுட னேயிருந்தால்
உருமையுடன் கொல்லுறது ஒருநிமிசங் கண்டீரே.

துரியோதனன், ஐவருக்கும் பாதபூசை செய்தல்

தேசத் தழகன் திரியோ திரன்கேட்டு
சிங்கா தனத்தைவிட்டுத் திகழக் குதிச்சிறங்கி
மல்லிகை முல்லை மலரோ டி(ரு)வாச்சி
வில்வமுடன் மந்தாரை[58] வீறுடனே செண்பகமும்
பாதங் கழுவிப் பட்டுனால் நீர்துடைத்து
தக்க புகழுடைய தருமருட பாதமதில்
நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொருவ ரெல்லோரும்
வர்ணமா யிரம்புஷ்பம் மலரடியிற் சொறிந்தார்கள்.
அண்ணா சரணமென்று அடிபணிந்து நின்றார்(கள்)

தருமர் எடுத்தணைத்தல்

தக்க புகழுடைய தருமலிங்கம் கூறுகிறார்.
கண்ணேரு பொல்லாது கடுகவே எழுந்திரியும்.
உன்வயறு பதைக்கம்[59] பண்ணிவிழ வொண்ணாது.
பொன்னின் திருமேனி புழுதிபட வொண்ணாது.
தங்கப் பதைக்கம் தரையில்விழ வொண்ணாது.
நெத்தியிலே கைகொடுத்து நேரா எடுத்தணைத்து,

ஆசி கூறல்

இன்னம் பதம்பெறுவீர் ஈடேறி வாழ்ந்திருப்பீர்.
சந்திரர் சூரியர்கள் தானவர்களுள்ளமட்டும்
நிற்பீர் நிலைதரிப்பீர் நீடூழி வாழ்ந்திருப்பீர்.
வாயார வாழ்த்தி மனம்பொறுத்த(ான்) தருமருந்தான்.

--------
[58]. வந்தாரை என்றுளது [59]. பதைக்கப் பண்ணி விழ போலும்
-------

துரியோதனன் கூறுதல்

தேசத் தழகன் திரியோ திரன்மகிழ்ந்து
தக்க புகழுடைய தருமர் தனஞ்சயரை
கூடப் பிறக்கலையோ கூட்டுப்பா லுண்கலையோ
ஒக்கப் பிறக்கலையோ ஒருமுலைப்பா லுண்கலையோ
ஓங்கி வளர்ந்த ஒருமரத்துக் கொப்பானோம்
பக்க விளக்கமில்லை பலமரத்துக் கொம்புமில்லை
ஒருவர் வயத்தில் பிறவாத வஞ்சினையோ:
ஐவரையுங் காணாமல் அரைச்சீவ னாகிவிட்டோம்.[60]
பஞ்சவரைக் காணாமல் பாதிப் பிலன்குறைந்து
முத்துமுடி காணாமல் முகஞ்சோட்டை யானோமே.
கட்டிக்கொண்டா னாவலுடன் கதறினான் கொற்றவனும்
நூலாய்க் கடுந்திறளாய் நூத்தொருவ ரத்தினையும்
அழுது புலம்பி அருகிருக்கும் வேளையிலே
எழில்ப்பெரிய[61] தருமரையும் ஏரிட்டுத் தான்பார்த்தான்.

காந்தாரி வந்து கண்டு புலம்புதல்

நூத்துவரைப் பெத்த காந்தாரி ஓடிவந்து
பஞ்சவர்க ளைவரையும் பார்த்துநெடு நாளாச்சு
நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொருவர் தம்பிமார்
கூடி யிருந்து குவலயத்தை யாளாமல்
விட்டுப் பிரிந்ததென்ன வேதியரே தம்பியரே.
ஐவரையுங் கண்டு அலர்ந்த (தா) மரைபோல்
உங்களையுங் கண்டு உருகுதே யென்மனந்தான்.
ஐவ(ரு)ம் என்தனக்கு அரியதுணை யென்றிருந்தேன்.
ஆச்சியுட மக்கள் அரியதுணை யென்றிருந்தேன்.
மாலை முடிதரித்த மக்களுட பந்தியிலே
ஐவரும் நூத்தொருவர் அலங்கார மாயிருந்து
அன்னம் படைத்து அருகிருந்து பாரேனோ
காயுங் கிழங்குங் கலந்துவைத்துப் பாரேனோ
கத்திக் கதறி காந்தாரி தானிருந்தாள்
பாலும் பழமும் பகுந்துவைத்துப் பாரேனோ[62]
ஆனந்த மாரி அழுகை தணிந்த பின்பு

----
[60.] அறச்சீவனாக்கி விட்டோம் என்றுளது [61]. எனில்ப்பெரிய என்றுளது
[62]. பாரனே என்றுளது
-------------

சகுனி துரியோதனனிடம் சூழ்ச்சி கூறல்

சாயாம்பு மேனி சகுனி யெழுந்திருந்து
தேசத் தழகன் திரியோ திரன்தனையும்
கண்காட்டி மெள்ள கடுக வரவழைத்து
சகுனிதிரி யோ திரனை சதுர்வார்த்தை தான்பேசி
சிங்கா தனத்தின்கீழ் சிறக்கக் குழிகள் வெட்டி
வசிகளும் மலைபோலே (வரிசையாய்த்) தானிறுத்தி
பொய்க்குழியின் மேலேயொரு பொன்னு தடுக்குமிட்டு
வன்னச்சிங் காதனங்கள் வரிசையுடன் தான்போட்டு

துரியோதனன் பூரிப்படைதல்

தேசத் தழகன் திரியோ திரன்மகிழ்ந்து
காவேரி தான்பெருகிக் கடலில் விழுந்தாப்போல்

துரியோதனன் பஞ்சவரைச் சிங்காதனத்தில் அமரச்சொல்லல்

கோதா விரி[63]யுங் குருட்சேத்திரப்[64] பூமியெல்லாம்
பாரக் குடியேற்றி வந்தியளே பஞ்சவர்கள்
குலைந்தங் கரியெல்லாங் குடியேற்றி வந்தியளே
செலுத்தி அரசாளும் தேர்மன்னா ஐவருந்தான்
தரும புரியுந் தங்கமணி மாளிகையும்
நேராத ராசாக்கள் நீள்நிலத்தில் தானிருந்தால்
நம்மை நகைப்பார்கள் நாட்டிலுள்ள ராசாக்கள்.
தேனார் மொழியார்க்குச் சிங்கா தனம்போட்டு
வாருமென்று சொல்லி வருந்தி யழைத்துவந்து
சிங்கா தனங்காட்டி திரியோ திரனிந்தான்

சகாதேவன் கூற்று

தங்கம்போல் மேனி சகாதேவ னேதுசொல்வான்.
உள்ளங்கை சாத்திரத்தை ஊடுருவத் தான்பார்த்து
அருகிருக்கும் நால்வருக்கும் அந்தரங்கஞ் சொல்லுகிறேன்.
ஒருவருக் கொருவர் ஊடாடித் தான்பேசி

----
[63]. கோதாவரி, என்றுளது [64]. குருக்ஷேத்திரம்
---------

வேறு ஆசனத்தி அமர்வதில்லை என்றுல் துரியோதனனிடம் கூறல்

பாவிதிரி யோதிரனைப் பார்த்தான் சகாதேவன்
ஊசி வளநாட்டில்[65] ஒருநா ளிருந்துவந்தோம்
அடிவணங்கித் தெண்டனிட்டு ஆசாரஞ் செய்தாலும்
மாணிக்கச்சிங் காதனங்கள் வரிசையுடன் போட்டாலும்
வேரேசிங் காதனங்கள் விரும்பி யிருப்பதில்லை;
என்று சகாதேவன் இவ்வார்த்தை தானுரைக்க

துரியோதனன் வருந்தல்

தேசத் தழகன் திரியோ திரன்கேட்டு
சாயாம்பு வர்ணன் சகுனி முகநோக்கி
குட்டையன் சகாதேவன் குறுக்கே மரித்தானே

சகுனி ஆறுதல்

முறிஞ்சாலு மென்ன முடிபொருத்த ராசாவே
உன்மனது மெய்க்க ஒருநொடியில் கொல்லுகிறேன்.

பூணூல் கலியாணத்தை ஆரம்பித்தல்

பூணூல் கலியாணம் பொருந்தவந்த தென்றுசொல்லி[66]
நச்சேத் திரமும் நல்மூர்த்த வேளையிலே
தம்பியவன் லெக்கணற்கு தலைமுழுகச் சொல்லுமென்றான்
சேனா பதிகள் சிகவேந்தர் உள்ளதெல்லாம்
சேரவே ஸ்நானம்பண்ணி[67] சித்திரமணிப் பந்தலிலே
பூணூல் கலியாணம் பொருத்தமிது தப்புதென்று

ஐவரையும் எண்ணெய் தேய்த்து முழுகச் சொலல்

எழில் பெரிய ஐவருக்கும் எண்ணெய்க்காப்புச் சாத்துமென்றார்.
நல்லெண்ணெய் மண்டபத்தில் ராசாக்க ளையழைத்து
பஞ்சவர்க ளைவருக்கும் பாரமுக் காலியிட்டு[68]
ஐவரு மங்கே அலங்கார மாயிருந்து
அஞ்சுகிண்ணி யெண்ணெய் அவர்கள்முன்னே வைத்தார்கள்
மாமன் சகுனியுடன் மன்னன் திரியோதிரனும்

---
[65]. ஊசிவளநாட்டி நாட்டில் என்றுளது [66]. பொருந்தவிந் தென்று சொல்லி என்றுளது
[67]. ஸ்தானம் பண்ணி என்றுளது [68]. பாறமுக்காலிதான் போட்டு என்றுளது
---------

மல்லர்களை விட்டு எண்ணெய் தேய்க்கச் சொலல்

சந்தோஷ மாச்சுதென்று சதிர்வார்த்தை தான்பேசி
முடிகி யழையுமென்றார் மூணுலெட்சம் மல்லர்களை
அழைத்து ஒருநொடியில் அந்தரங்கம் உண்மைசொல்ல
வெத்தி மகசாலை வீமன் அருச்சுனர்க்கு
ஐவருக்கும் ரெண்டு மல்லர்களை முன்னைவிட்டு
தருமரையும் தம்பியையும் தார்வேந்தன் தான்பார்த்து
எண்ணெய்விட்டு நீராடி எத்தனை நாளாச்சோ
அந்தமுட னேயவர்க்கும் அடவாகஎண்ணெய்[69] சாத்துமென்றார்
ஒருவருக்கு ஒன்பதுபேர் ஓடிவந்து நின்றார்கள்.

சகாதேவன் தருமனுக்கு எண்ணெய் தேய்த்தான்

சாத்திரத்தில் வல்ல சகாதேவன் தான்பார்த்து
தக்க புகழுடைய தருமர் முகநோக்கி
மயிர்முடியைத்[70] தீண்ட மல்லர்களு மாகாது
வாருங்கோ தம்பியரே மல்லக செட்டியளே
தருமத்தி னாலே தாரணியை யாண்டிருந்தோம்
அண்ணனும் தம்பியுமாய் அரசாண்டு தானிருந்தோம்
பிறசாதி வந்துயெங்கள் பொன்முடியைத் தீண்டவில்லை
ஆனதினா லுங்கள் அரமனைக்கிப் போங்களென்றார்
தருமருட பூமுடிக்கு சகாதேவன் எண்ணெய்விட்டான்.

நகுலன் அருச்சுணனுக்கு எண்ணெய் தேய்த்தான்

பட்டுக் கொடிவேந்தன் பரிநகுலன் எழுந்திருந்து
அருச்சுனர் பூமுடிக்கு அடவாக எண்ணெய்விட்டார்.
ஒருவருக் கொருவர் உகந்துஎண்ணெய் விட்டார்கள்.

நால்வரும் எண்ணெய் தேய்த்த பிறகு அருச்சுனன் பீமனுக்கு
எண்ணெய் தேய்க்க வருதல்

ஆதித்தன் போலே அருச்சுனர் எழுந்திருந்து
எதுக்கவந்து வீமனுக்கு எண்ணெய்விட வந்துநின்றான்

------
[69]. எந்தை என்றுளதோடு சீரும் மிக்குளது [70]. மையிற்முடியைத் என்றுளது.
-------------

வீமன் மறுத்து மல்லர்களை அழைத்தல்

ஆகுமோ ஒன்னாலே[71] அரிச்சதலைக் கெண்ணெயிட
வென்னி[72] ஒரு நாளறியேன் மேனியெல்லாம் நோகுதிப்போ.
எண்ணெயொரு நாளறியேன் என்னுடம்பு நோகுதிப்போ
எந்தன் தலைமுடிக்கி எண்ணெயிட வேணுமென்றால்
மல்லக செட்டிகளில் வலுவுடையா ருண்டானால்
வரச்சொல்ல வேணுமென்று மதகரியுந் தானுரைத்தான்.

துரியோதனன் மகிழ்ந்து மல்லர்களை அனுப்புதல்

தேசத் தழகன் திரியோ திரன்கேட்டு
பூரித் தெழுந்திருந்து பூண்டிருந்து பூஷணங்கள்
அரவக் கொடிவேந்தன் அம்மான் முகநோக்கி
வீம னொருவருந்தான் வெத்தியுட னேமடிந்தால்
நால்வரையு மிப்போ நொடியினில்[73] சங்கரிப்பேன்
எட்டுலெட்சம் மல்லர்களும் ஏழுலெட்டம் மல்லர்களும்
வெத்தி மதவானே[74] வீமனுக்கு முன்னேவிட்டான்.
காலனைப் போல்வீமன் கடைக்கண்ணால் தான்பார்த்து
இத்தனை பேரும் இடதுகைக்குப் போதாது[75]
பொன்முடிக்கு எண்ணெய் போதா தொருக்காலம்
கால்கடியச் சேவுகரைக்[76] கடுக அழையுமென்றார்.
ஓடி யழைத்துவந்தார் ஒருகோடி மல்லர்களை

வீமனைக் கொல்ல மலலர்களை ஏவுதல்

தேசத் தழகன் திரியோ திரன்பார்த்து
நடுவன்[77] தடுத்தாப்போல் நடுமண்டை தான்சிதற
கொண்ணீரே[78] யாமாகில் கோடி தனங்கொடுப்பேன்.
திரியோ திரனுரைக்க திரண்டுவந்த மல்லர்களை

வீமன் மல்லர்களை எச்சரித்தல்

ஏரிட்டுத் தான்பார்த்தான் எதிரில்லாப் போர்வீமன்
கொத்தவரே வீரியரே குத்தமென்று சொல்லாதீர்
மல்லர்களே எண்ணெய்விட்டு மகாகோடி நாளாச்சு
அண்ணுமுதல் இன்னுவரை எண்ணெயிட நேரமில்லை
எந்தன் தலைமுடிக்கி எண்ணெய்விட்டால் மல்லர்களே
தன்னை யறியாமல் தானே யுறக்கம்வரும்
எச்சரிக்கை யாக நின்று எண்ணெய்தனைச் சாத்துமென்றார்.
நித்திரையும் வந்துதென்றால் நேராகச் சாய்ந்திடுவேன்.
தப்பிப் பிழையுங்கோ சமத்துள்ள மல்லர்களே
பதனமாய்ச் சொன்னேன் பாவியென்று சொல்லாதீர்.
வெத்தி விருதுடையான் வீம னிவனுரைக்க

---------
[71]. உன்னாலே [72]. வெந்நீர் [73]. நடையில் என்றுளது
[74]. மதவானை [75]. போகாது என்றுளது [76]. சேவுகறே என்றுளது.
[77]. நவன் என்றுளது நடுவன் - எமன் [78]. கொன்றீரே
------------

மல்லர்கள் எண்ணெய் தேய்த்தல்

கிங்கிலியர் போலே கிட்டநின்று மல்லர்களும்
காஞ்ச தலைக்கெனக்குக் கையெண்ணெய் பத்தாது
குடத்தோடே வார்த்துக் குளுரவே[79] தான்தேய்த்து
மூணுகுடம் எண்ணெயிட்டு முடிகோதிப்[80] பின்போட்டு
தோளுந் திருமுகமும்[81] பூந்துடையுங் கணைக்காலும்
முதுகு முதல்மார்பு முரிக்கியெண்ணெய் இட்டார்கள்
வெத்தி மதயானை வீமருக்கு யெண்ணெயிட்டார்
கண்ணுகள் மூடிக் கருத்தசரும் வேளையிலே

மல்லர்களைக் கொல்லல்

இதுசமய மென்று எதுக்கவந்த மல்லர்களை
முன்னாக வந்துநின்ற மூணுலெட்ச மல்லர்களை
வலது புறம்பிரண்டான் மலைபோலே போர்வீரன்
ஈஎரும்பு போலே எல்லோரும் மாண்டார்கள்[82]
இயல்பெரிய வீமனுந்தான் இடது புறம்பிரண்டான்
ஏழுலெட்சம் மல்லர்களும் இயல்பாய் மடிந்தார்கள்
மயக்கமாய் நித்திரையும் வலதுகையை வீசிவிட்டான்
நிறைந்துநின்ற மல்லரெல்லாம் நீறுபொடி யானாரே.
மல்லக செட்டி மனையாட்டி யெல்லோரும்[83]
தலையிலே கையைவைத்துத் தானழுது நிற்கையிலே
வெத்தி மதவானை வீமனுங்[84] கண்முழித்தான்.
மோசம் வருமென்று முன்னமே சொன்னேனே.
அப்போதே சொன்னேனே அறிவுகெட்டுப் போனதென்ன.
கண்மயக்கம் வந்துநான் கல்லின்மேல் சாய்ந்துவிட்டால்
கல்லு நெரிந்து கடுகுபொடி யாகிடுமே.
என்மேல் குத்தமில்லை இருந்த சபையறியும்.
குஞ்சிரிப்பு கொண்டு கொத்தவனும் வீற்றிருந்தான்.

-----
[79]. குமுற என்றுளது [80]முடிகொதிப் என்றுளது
[81]. திருமாளே என்றுளது [82]. பிரண்டார்கள் என்றுளது
[83]. மனையாட்டில்லொரும் என்றுளது [84]. மகவானே வீமற் என்றுளது
-------------

துரியோதனன் மனந்தளர்தல்

சேதத் தழகன் திரியோ திரன்பார்த்து
தார முடியோன்[85] சகுனி முகனோக்கி
முன்னுக்கும் பின்னுக்கும் முழுப்பகையும் ஆச்சுதுகாண்.
வீமன் மடியவென்று விட்டதொரு மல்லரெல்லாம்
சேர மடிந்து செப்புத் தரையாச்சு
என்னசெய்வோ மென்று ஏங்கி முகம்வாடி

சகுனி உபாயம்

மன்னவனே என்மருகா மனஞ்சலிக்க வேண்டாங்காண்.
ஐவரையு மிப்போ அரநொடியில் கொல்லுகிறேன்.
பட்டணமும் ஆளவைப்பேன் பஞ்சவர்கள் தேவியெல்லாம்
மாமன் சகுனிசொல்ல மன்னவனும் தான்மகிழ்ந்து

திருக்குளத்தில் வசியை நடற

செப்பு வசி[86]யைத் திருக்குளத்தில் நாட்டுமென்றான்.
இருப்பு வசியை ஏகமாய் நாட்டுமென்றான்.
கூரம்புக் கத்திகளும் கோடிசெப்பு ஊசிகளும்
எண்ணத் துணையாத இருப்பு வசிநிறுத்தி
ஆனந்த மார்பன் அரமணையில் வந்திருந்தான்.
.
பஞ்சவர்களைத் திருக்குளத்தில் நீராடச் சொல்லுதல்

பஞ்சவர்கள் ஐவரையும் பாங்காகத் தான்பார்த்து
எண்ணெய்த் தலையுடனே இந்நேரந் தானிருந்தால்
நச்சேத் திரமும் நாழிகையுந் தப்புதென்று
திருக்குளத்தில் நீராடி திரும்பிவந்து மாளிகையில்
பூணூல் கலியாணம் புத்திரற்குத் தான்முடித்து
விருந்துண்டு இளைப்பாறி வீத்திருந்து புத்திசொல்லி'
விட்டுப் பிரிவதில்லை வேதியரே இப்போது.
திருக்குளத்தில் நீராடி, சீக்கிரத்தில் வாருமென்றார்.
அரப்பிட்டுத் தான்முழுகி அரச்சிணத்தில் வாருமென்றார்.

-----
[85]. தாமுடியான் என்றுளது [86]. வசி-கழுமுள்; சூலம்; கழுமரம்
----

தீச் சகுனம்

சிறக்க நடந்து செல்லும் வழிதனிலே
பொல்லாச் சவனம் புகழ்பிறவே[87] கண்டதினால்
சாமி திருமால் சகாயமுண்டு ஐவருக்கும்

தருமன் வருந்தி சகாதேவனைச் சோதிடம் பார்க்கச் சொல்லல்

தம்பிமார் சொல்லைத் தட்டிவந்தேன் அத்திபுரம்
தம்பி சகாதேவா! சவனமிதைப் பாருமென்றார்.

சகாதேவன் வசி நட்டதைக் கூறல்

அண்ணாவி இப்போ அரவக் கொடிவேந்தன்
திருக்குளத்தில் வஞ்சினையும் செய்தானே மாபாவி.
இப்போ திருக்குளத்தில் இறங்கவே போகாது.
பார வசியும் பருமுள்ளும் நாட்டிவைத்தான்.
தெக்கு வடக்காகத் திரும்பாது மச்சமெல்லாம்
இந்தப் படியே[88] யெங்கும் நிறுத்திவைத்தான்
சொல்லுது இந்நிமித்தம் சோதிச்சுப் பாருமென்றார்.
என்று சகாதேவன் இவ்வார்த்தை தானுரைக்க

திருமாலை வேண்டுதல்

செங்கண்மால் தஞ்சமென்று திருக்குளத்தை நாடிவந்து
பவளத் திருக்குளத்தில் படிமீதில் வந்துநின்று.

திருமால் காட்சி கொடுத்தல்

ஈரே ழுலகளந்த[89] யென்பெருமா ளோடிவந்து
நாரா யுணமூர்த்தி நடுக்குளத்தில் ஊசிமுனை
ஆகாச மாக அமர்ந்திருந்தா ரக்குளத்தில்

--------
[87]. சகுனம் புகழ் பெறவே [88]. படியை என்றுளது
[89]. முலகமர்ந்த என்றுளது
-----------

கண்டார்க ளைவருந்தான் காட்சியுள்ள கண்ணாலே
ஐவரையுங் காக்க நம்மை யாளுங் குருசாமி
செங்கெருட னேறி திருக்குளத்தில் வந்ததினால்
எப்படியோ சித்தம் இதுஅறிய வேணுமென்று

வீமன் வசிகளைப் பிடுங்கிக் குவித்தல்

வெத்தி மதவானை வீம னொருவனுமாய்
மெள்ள யெறங்கிப் படியிலொரு கால்வைத்து
வசியைப் பிடுங்கி மலைபோலே தான்குமித்து
கூரம்பு கத்திகளுங் கோடான கோடிகண்டான்
என்பிறப்பே அண்ணாவி எட்டுநாள்ச் சொல்லுமென்றான்[90]
இருக்கட்டும் தம்பியரே ஏறிமெள்ள வாருமென்றார்.
முத்து விரல்சுழட்டி மூக்குமேல் கையைவைத்து
பாவி திரியோதிரன் பண்ணிவைத்த வஞ்சினையை
பஞ்சவரைக் கொல்லவென்று பண்ணிவைத்தான் மாபாவி.
பார்த்து விசாரமிட்டு பாரளந்தார் தஞ்சமென்று

திருமாலைத் துதித்தல்

எங்கள் தனக்காக இவ்வடிவு தானெடுத்து
ஆழியுஞ் சங்கும் அழகுதிரு மாலையுடன்
செங்கருட னேறித் திருக்குளத்தில் வந்தீரே.
எள்ளுக்கு ளெண்ணெயைப்போல் எங்கும் நிறைந்தீரே,
கண்ணுக்குள் பாவையைப்போல் கலந்துநின்ற காரணரே
என்று தருமர்சொல்ல எறங்கி[91] மனமகிழ்ந்து,
ஐவரையுங் காக்கவென்று ஆயனார் ஓடிவந்து,

திருமால் திருக்குளம் அமைத்தல்

ஆகாச கெங்கையைப் போலே அரவணைத்து,
செந்தா மரைமலருஞ் சிறந்திருக்கும் வாவிகளும்
அகிலாண்ட காவேரி யாறுகளுங் கண்டபின்பு
தக்க புகழுடைய தருமர் மனமகிழ்ந்து
தம்பிமார் நால்வருக்குஞ் சாத்தினார் தருமலிங்கம்
இந்த அதிசயங்கள் எங்குந்தான் கண்டதில்லை
ஆளுங் குருசாமி ஆயரே தப்பாது
சரணஞ் சரணமென்று சாஷ்டாங்கம் பண்ணிநின்றார்

---
[90]. பொருள் விளங்கவில்லை [91]. இறங்கி
-----------

ஐவரும் நீராடிக் கரையேறினர்

ஆனந்தக் காவேரி ஐவருமே நீராடி
ஈரங் களைந்து இழைசேர்ந்த பட்டுடுத்தி[92]
தார்வேந்த ரைவருந்தான் தலையாத்திக் கொண்டிருந்தார்.

வசிபதித்த குளத்தில் முதலை,மீனெல்லாம் செத்து மிதத்தல்

பவளக் குளத்தில் பதித்த வசிகளெல்லாம்
ஆள்பிடியன் கோமுதலை அக்குளத்து[93] மச்சமெல்லாம்

கருடன், காகம் முதலியன குளத்தின்மேல் பறத்தல்

செத்து மிதக்குது செங்கருடன் வட்டமிட
கழுகு பறக்கக் காகங்கள் வட்டமிட
கண்டுதிரி யோதிரனுங் கண்குளிரத் தான்பார்த்து
உத்த சனமும் உடன்பிறந்த தம்பியுமாய்

துரியோதனன் உப்பரிகையின் மேலிருந்து காணல்

உப்பரிகை மேடையிலே உயரவே தானேறி
மாமன் சகுனியுடன் மன்னனு மேதுரைப்பான்.
ஐவரும்போய் நீராடி அரைச்சாம மாச்சுதென்று
உயிரோடே தானிருந்தால் உற்றமக்கள் வாரார்கள்.
உத்துவழி பார்த்துநின்றார் உப்பரிகை மேலேறி

ஐவரும் மாண்டார்கள் என்று யாவருக்கும் ஓலைய திட்டமிடல்

பாண்டவ ரைவருத்தான் பவளத் திருக்குளத்தில்
வசியில் விழுந்து மாண்டிறந்து போனாரோ,
காகம் விருந்துண்ணக் கழுகு பசியாற
நாய்க்கு நரிக்கு நல்லவிருந் திட்டோமே
பேய்க்கும் பிசாசுக்கும் பெருவிருந்து போட்டோமே
செத்தார்கள் பஞ்சவர்கள் சிவலோகஞ் சேர்ந்தார்கள்.
குலுங்கச் சிரித்துக் கொலுவிலே தானிருந்து
எங்குங் குளுந்து இருதோளும் பூரித்து,
மாமன் இருந்ததினால் மாத்தானை வெண்ணோமே.
ஆருக்கு ஓலை அனுப்புவோம் என்றுசொல்லி
மாமன் சகுனி மந்திரியைத் தான்கேட்க,

-----
[92]. ஈறங்கிழைந்து இழைசொந்தப் பட்டுப்படுத்தி என்றுளது
[93.] ஆள்ப்பிடியன் கோமுதளை அக்குளத்தி என்றுளது
----------

குந்தி முதலானவர்கட்கு ஓலை எழுதுதல்

குந்தமா தேவியர்க்குங் குவலையத்தி லுள்ளவர்க்கும்
பாஞ்சால ராசகன்னி பாரிலுள்ள மன்னவர்க்கும்,
அருச்சுணர் தேவி ஆறுலட்சம் பெண்களுக்கும்,
பெருமாள் சகோ தரியாள் பிறதேச மன்னவர்க்கும்
பொய்கை தனில்பிறந்த பூமடந்தை அல்லியர்க்கும்
தார்வேந்த மாரி சமூகமெல்லாந் தானறிய
ஓலை யெழுதுமென்றா ருள்ளமெல்லாந் தானறிய
சார்ந்தபகை யானாலுஞ் சாவுக்குப் போகவென்று
பங்காளி தாயாதி பகையா யிருந்தாலும்
உத்துருமை செய்யாட்டால் உலகிலுள்ளோர்க் கேற்காது

இறுதிச் சடங்குக்கு ஆவன செய்தல்

சந்தணக் கட்டைவெட்ட தமிசங்கள்[94] சொல்லுமென்று
மரம்வெட்டிக் கொண்டு வந்து வகைக்குவகை
கட்டைவெட்டி கட்டையுடன் விராட்டி கடுக வரவழைத்து
தருமருட(ன்) நால்வருக்கும் சதிராகத் தானடிக்கி
சாந்துசவ் வாதுடனே சந்தணங்கள் கெந்தபொடி
குங்குமங் கஸ்தூரி கோடிப் புடவைகளும்
மல்லிகைப் பூச்சரங்கள் மாலைகளுஞ் சந்தணமும்
அஞ்சுவர்ணப் பொட்டியிலே அடவாக வாய்க்கரிசி
அஞ்சடுக்குப் பொட்டியிலே அடக்கிவைத்த வெத்திலையும்
கோலவர்னப் பச்சைவடம் கோடி தலைப்பாகும்
முத்து முடிமன்னன் முகப்பணிதி செய்துகொண்டு
ஐவருக்கும் மாசிந்தி அலங்காரச் சோடினையும்

எல்லோரும் அழல்

எல்லோருங் கூடி இறங்கி அழுதார்கள்
அரவக் கொடிவேந்தன் அழுது வருகையிலே
தக்க புகழுடைய தம்பிமா ரைவருந்தான்
எந்தப் பிறப்பி லினிக்காணப் போகாது
ஐவரும் மடிந்து அரியபதஞ் சேர்ந்தாரோ[95]
துறையு மறியாமல் துணிந்து மடிந்தார்கள்

கொள்ளிசட்டி தூக்கி வருதல்

ஆசந்தி[96] தூக்கி அழுது வருகையிலே

---
[94]. உத்தரவு [95]. சேர்ந்தார்களோ என்றுளது
[96]. பாடை
----------

தருமர் முதலானோர் தலையாற்றிக் கொண்டிருத்தல்

தக்க புகழுடைய தருமருட(ன்) நால்வருமே
தலையாத்திக் கொண்டிருந்து தலைப்பாகுந் தானீந்து
ஆதித்தன் வந்து அலைகடலைச் சூழ்ந்தாப்போல்
ஏகாந்த மாக இவரிருக்கும் வேளையிலே

துரியோதனன் காணல்

கண்டுதிரி யோதிரனுங் கலங்கி மனம்உடைந்து
எண்ணாது எண்ணி ஏங்கிமனம் புண்ணாகி
நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொருவர் வந்துகண்டு
தம்பிமார் வேணுமென்று தவசுபண்ணி நானிருந்தேன்
பஞ்சவரைக் காணவென்று பரதவித்து நாமிருந்தோம்
உயிரும் உடலும் ஒருமரத்துப் பட்டையைப்போல்
எண்ணி யிருந்தேன் எட்டி வழிபார்த்து
செம்மை யுடனே செங்கோல் செலுத்தாமல்
என்னைவிட்டு நீங்கள் இறந்துவிட்டால் (இப்போது)
மண்ணில் இருப்பதில்லை மாளுவது நிச்சயங்காண்
கட்டிக்கொண்டா னாவலுடன் கதரியே தானிருந்தான்

பாண்டவர்க்குத் துரியோதனன் திருட்டி கழித்தல்

ஐவருட பீடையினி அகன்றுது யிப்போது
தலைப்பாகும் பச்சைவடம் தாதுமணி பூசணமும்
தாம முடியார்க்குத் தலைசுத்தி விட்டெரிந்து
திஷ்ட்டி கழித்துத் திருநீற்றுக் காப்புமிட்டு
ஐவரும் நூத்துவரும் மாமனையில்ப்[97] போய்ப்புகுந்து

காந்தாரி வந்து புலம்பல்

நூத்துவரைப் பெத்த காந்தாரி ஒடிவந்து
முத்தின் திருக்கரத்தால் முகத்தி
ஆச்சியுட மக்கள் அரியதுணை என்றிருந்தேன்
மக்க ளிறந்துவிட்டால் மண்ணி லிருப்பேனோ
திருக்குளத்தில் நீராடச் சேருவது[98] நானறியேன்.
வருச மொருகாலம் வசிவத்து யிருக்குதென்பார்
சொல்லுவார் கண்டறியேன் திரியோ திரன்யான்
வென்னீரு விட்டு முழுகவைத்துப் பாராமல்
புத்தி யறியாத பிள்ளைகளைப் பெத்தேனே
நீங்கள் மடிந்துவிட்டால் நிமிஷந் தரிப்பேனோ[99].
பழுதில்லாப் பத்தினிக்கி பழிக்கிமுன் சொல்வேன்
ஐவரையும் பெத்தெடுத்த ஆச்சியர்க்கு ஏதுசொல்வேன்.
என்ன வகைசொல்லி இருப்பேன்நாள் பூமியிலே
இந்தக் குமரர்களை இழந்து மிருப்பேனோ.
கட்டி யழுது கதறினாள் காந்தாரி
கலியாண வாசலிலே கண்குளிரப் பாராமல்
மோசங்கள் வந்துதென்றால் முன்னாள் பகையாகும்
ஐவரையுங் கட்டி யழுதாளே காந்தாரி
காந்தாரி ஓடிவந்து கதறி யழுகையிலே

----
[97]. மாமலையில் என்றுளது [98]. சேந்து என்றுளது
[99]. தரிப்பேன் என்றுளது
---------

சகாதேவன் கூறுதல்

செம்பொன் முடிபொருத்த செல்வக் குமாரனார்
சாந்தணிந்த மார்பன் சகாதேவ னேதுசொல்வான்
உத்துருமை யா (க) உகந்தழுத கண்ணீரால்
சாகாமல் வந்ததென்று சண்டாளி தானழுதாள்
வீணுக்கு உயிரை விடுவாளே காந்தாரி

துரியோதனன் விடம் இட்டுக்கொல்ல சதிசெய்தல்

சகுனிதிரி யோதிரனுஞ் சதிர்வார்த்தை தான்பேசி
தங்கையரைத்[100] தானழைத்து தனித்துவைத்து உண்மை சொல்லி
பச்சனாவி[101] சேர்க்கப் பழிச்சென்று தானிருந்து
அன்னத்தில் வின்னம் அடவாகத் தான்கலந்து

காந்தாரியும் மகள் துச்சலையும் சோறு சமைத்தல்

ஐவரையு மிப்போ அரைநொடியில் கொல்லுகுறேன்
ஒன்றுக்கு மஞ்சாதே உலகாள்வாய் என்மகனே
பருவ மதயானை பஞ்சவர்க ளைவருக்கும்
ஆயிரம் பானை அடவாகத் தானெடுத்து
பச்சனா விகலந்து பாங்கா யுலையூத்தி
பதினா யிரக்கலப் பச்சரிசி தானெடுத்து

---
[100]. துரியோதனன் தங்கை - துச்சலை
[101]. விடம்
---------

விடங் கலத்தல்

பத்தி லொருபங்கு பச்சனாவி தான்கலந்து
அடவாகத் தானெடுத்து சாதஞ் சமைத்துவைத்து
பருப்புடன் நாவி பாங்காகத் தான்கலந்து
சுத்திரி பிலாக்காய் கலந்துபச்சை நாவியிட்டு
கூட்டுக் கரியுங் குழம்பு வகைசமைத்து
பாவக்காய் பச்சடியில் பத்துசேர் தான்கலந்து
நேராக நெய்விட்டு (நினைவாகத்) தான்கலந்து
இப்படி எட்டுவகை இயல்பாகத் தான்கலந்து
அஞ்சரைக் குள்ளே அடிக்கி யிறக்கிவைத்து

நூற்றுவர்க்குச் சமையல் செய்தல்

காலுமுகம் சுத்திபண்ணி காந்தாரி நாயகியும்
ஒருபத்துப் பானை ஓடி யெடுத்துவந்து
நூலாய்க் கடுந்திரளாய் நூத்துவர்க்கு அந்நேரம்
பட்சத் துடனே பாலா லுலையூத்திப்
பானையிலே தானிருக்கும் பழவரிசி[102] தானெடுத்து
மக்களுக்கு வேணுமென்று வளமாய்ச் சமைத்துவைத்து
ஆயிரத் தெட்டுகலம் அரிசி தான்சமைத்து
மக்களுக்கு ஏத்ததெல்லாம் வகையாகக் கரிசமைத்து
பொரிக்கரியும் பச்சடியும் புத்துருக்கு[103] நெய்யுடனே
நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொருவர் மக்களுக்கு
அஞ்சரைக் குள்ளே ஆவின்பால் காச்சிவைத்து

சமையல் முடிந்தது கூறிச் சாப்பிட அழைத்தல்

சினத்தில்[104] சமைத்து அண்ணனிடம்[105] வந்துசொன்னாள்.
தக்க பகழுடைய தருமர் முகனோக்கி
தாய்வீடு தேடிவந்து தாமரைப் பொய்கையிலே
செத்துப் பிழைத்து திரும்பிவந்து சேர்ந்தீர்களே
செல்வக் குலக்கொழுந்தே திரும்பி வராதிருந்தால்
மக்களுடனே மாளுவது நிச்சயந்தான்
குந்தமா தேவிபெற்ற குலவிளக்கே வாருமென்றாள்.
பார முகம்சோம்பி பசித்து இருப்பானே(ன்)
இந்நேரம் மட்டும் சோம்பி யிருப்பானே(ன்)
ஆச்சுது போசனம் சாப்பிட வாருமென்றாள்.

-
[102]. பழவருசி என்றுளது சாரம் [103]. புத்திறற்க்கு என்றுளது
[104]. க்ஷணத்தில் [105]. அண்ணனுக்கு என்றுளது
------

மண்டபத்தை அலங்கரித்தல்

அமுதுண்ணும் மண்டபத்தை அழகா யலங்கரித்து
நாலு[106] திசையும் நடுவே விளக்கேத்தி
குத்து விளக்கெரிய குங்குமஞ்சேர் மாளிகையில்
தேசத் தழகன் திரியோ திரப்பெருமாள்

துரியோதனன் தருமர் முதலானோரை சாப்பிட அழைத்தல்

வாருங்க தம்பியென்று வருசையுடன் தானழைத்து
தக்க புகழுடைய தருமமல்ல யெங்களுக்கு
ஆருயிரே கண்மணியே அரசு நிறந்ததீரே[107]
சாகாமல் நோகாமல் சதிரங் கொடிந்தீரே
இத்தினை நேரம் பசித்து இருந்தீரே
வாருமென்று கைபிடித்து வணங்கா முடிவேந்தன்
அமுதுண்ணும் மண்டபத்தில் ஐவரையுந் தானழைத்து

அப்போது சகாதேவன் சாப்பாட்டில் பசும்பால் ஆகாது எனல்

சாந்தணிந்த மார்பன் சகாதேவ னேதுசொல்வான்
ஆள்கொல்லிப் பஞ்சமதில் அசனம்[108] பண்ணவந்தோம்
நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொருவர் பந்தியிலே
சோத்துக்கு வீங்கி வந்தோம்நாம் அண்ணாவி
ஐவருட பந்தியிலே ஆவின்பா லாகாது
என்று சகாதேவன் இவ்வார்த்தை தானுரைக்க

துரியோதனன் கேட்டு சகுனியைக் கேட்டல்

அந்தநல்ல சேதி அரவக்கொடி யோன்கேட்டு
சாயாம்பு மேனி சகுனி முகனோக்கி
தம்பி சகாதேவன் சாத்திரத்தைக் கேட்டீரோ

சகுனி மறுத்து, அழைக்கச் சொலல்

உத்தமனே என்மருகா ஒன்றுக்கு மஞ்சாதே
காந்தாரி நாயகியாள் கைமருந்து பொல்லாது
உருகி யழையுமென்று உண்மைசொல்லிப் போகவிட்டான்

----------
[106]. நாழு என்றுளது [107]. = ?
[108]. அசனம் — போசனம்; சாப்பாடு; ஆசனம் என்றுளது
-----------

மீண்டும் வந்து துரியோதனன் பஞ்சவரை அழைத்தல்

தேசத் தழகன் திரியோதிர னோடிவந்து
தக்க புகழுடைய தருமர் மனமிரங்கி
ஐவரும் நூத்துவரும் அலங்கார மாயிருந்து

காந்தாரி சாப்பாடு பரிமாறல். உண்ணச் சொல்லல்

பேடைமயில் காந்தாரி பொட்டெனவே ஓடிவந்து
பதலை[109]யிலே போசனத்தைப் பரிவாகக் கொண்டுவந்து
மாத்து விரித்து வாழையிலை தான்போட்டு
தக்க புகழுடைய தம்பிமா ரைவருக்கும்
ஏட்டரையில் போசனத்தை எடுத்துவந்து தான்படைத்தாள்
ஏரிட்டுப் பார்த்துமுன்னே எடுத்துவந்து தான்படைத்தாள்
பொரித்த பொரிக்கறியும் போதவே தான்படைத்து
கொண்டுவந்து தான்படைத்தாள் குலமாத ரெல்லோரும்
பொன்செம்பு தண்ணீரே போதவே தான்கொடுத்து
உண்ணுங்க மக்களென்று உபசாரம் பண்ணிநின்றாள்.

கண்ணன் யாருக்கும் தெரியாமல் ஈயையும், தலைமயிரையும் இரைத்தல்

ஈரே ழுலகளந்த யென்பெருமா ளோடிவந்து
ஆரு மறியாமல் ஐவருட பந்தியிலே
ஈயைப் பிடித்து இரைத்தா ரிலைமேலே
கொத்து மயிராகக் குறுக்கே கிடந்தாரே

ஈ விழுந்த சோறு ஆகாது எனல்

தக்க புகழுடைய தருமரு மேதுரைப்பார்
ஈவிழுந்த சோறு இனியுங்கப் போகாது
கொத்துமயிர் கண்டதினால் குடிகேடு வஞ்சினையும்

ஐவரும் எழுந்திருந்தனர்

என்றுசொல்லி தருமர் (உடனே எழுந்திருந்து
காண்டா வனமெரித்த காளை யருச்சுணனும்
நமக்குமிது ஆகாது நாடி யெழுந்திருந்து
நாமக் கொடிவேந்தன் நகுலன் எழுந்திருந்தான்
சாத்திரக் கொடிவேந்தன் சகாதேவன் எழுந்திருந்தான்
வெத்தி மதசாலை[110] வீமன் எழுந்திருந்தான்

----------
[109]. பதலை - குண்டான், பதளை என்றுளது [110.] மகசாலை ?
-----

வீமன் எல்லாவற்றையும் சாப்பிடல்

அஞ்சாறு நாளாச்சு அன்னமுந் தான்பொசித்து[111]
நாலுபேர் போசனமும் நமக்குமிது போதாது
கொண்டுவந்த சாதமெல்லாம் குவித்தான் மலைபோலே
கறியுடனே சாதங் கையாலே தான்பிசைந்து
மாதாவே தாயே வயறு பசிக்குதம்மா[112]
இருக்கிற சாதமெல்லாம் எவ்வளவும் வையாமல்[113]
கொண்டுவந்து போடுமென்று கூறினான் போர்வீமன்
தாதிகளும் மூப்பிகளும் தட்டுப் பரிமாறி
கொண்டுவந்து போட்டார்கள் குன்று மலைபோலே.

வீமன் திருமால், நால்வர்களைச் சொல்லி ஒவ்வொரு
உருண்டையாக உண்ணுதல்

மெத்த மனமகிழ்ந்து மேகவர்ண ருண்டையிது
சாமி திருமால் சகாயமென்று தான்போட்டான்
தருமலிங்கந் தருமமென்று போட்டா னொருவுருண்டை
அருச்சுனர் தருமமென்று போட்டா னொருவுருண்டை
பரிநகுல னுண்டையென்று போட்டா னொருவுருண்டை
தம்பி சகாதேவள் தருமமிது வென்றுசொல்லி
ன்னங்கொண்டு வாரும் என்தாயே யுள்ளதெல்லாம்
சீவிச் சுரண்டியெல்லாம் சீக்கிரமாய்க் கொண்டுவந்து
ஆச்சுது மகனே உண்டு இளைப்பாறும்
குண்டு மலைபோலே கூட்டித் திரட்டியதை

காந்தாரி தருமம் என்று சாப்பிடுதல்

காந்தாரி தருமமென்று போட்டானே காளையரும்
மாதாவே தாயே மனது[114] சலியாதே
கொண்டுவா சாதமென்று கூறினான் போர்வீமன்
என்னசெய் வேன்மகனே சாதங்கள் மட்டாச்சே

வடித்த கஞ்சியை குடியுமெனல்

வடிகஞ்சி தண்ணீரும் வாகாய்க் குடியுமென்றாள்
கொண்டுவந்து தாருமம்மா குணமுடைய மாதாவே

------
[111]. புசித்து [112]. இப்போது என்ற கொல் மிகுதியாக உளது
[113]. வைக்காமல் [114]. மனங்கள் என்றுளது
----------

கஞ்சி குடித்தல்

தாக மெனக்குமெத்த தாமிசங்கள் பண்ணாதீர்
முடிதரித்த காந்தாரி முப்பது பானையிலே
ஆறுகலக்[115] கஞ்சியெல்லாம் அடவாகக் கொண்டுவந்து
வெத்தி மதசாலை வீம ரெழுந்திருந்து
உத்தண்ட வீரியனும் ஒருமண்டாய்த் தான்குடித்தான்
இம்மட்டுந் தானே என்தாயே பாருமம்மா
தாயே நீ கொண்டுவா தாகமும் மெத்தவென்றான்

கழுநீரெல்லாம் குடித்தல்

எட்டு முடாக்கழனி எல்லா மெடுத்துவந்து
இந்த[116] மருந்து எடுத்துவந்து தண்ணியெல்லாம்
நூறு முடாவில் நொடிக்குமுன்னே தான்கலந்து
கொண்டு மிகவந்தாள் கோலமுள்ள வீமனுக்கு
(அப்படியே) அத்தனையும் அரநொடியில் தான்குடித்தான்

விடமேறி செத்து விழுந்தான்

நஞ்சு விஷமேறி நடுங்கி உடல்பதறி
தாராரும் வீமனுக்கு தலைமண்டை கொண்டுதுகாண்
தாங்க முடியாமல் தம்பியரைத் தான்பார்த்து
அண்ணரே தம்பியரே அரிய பிறவிகளே
விட்டுப் பிரிந்தேன் மேதி(னி)யி லுங்களையும்
தாங்க முடியாமல் தாவிக் குதித்தெழுந்து
அண்ட கடாகமட்டும் அலறியே போர்வீமன்
செம்பொன் முடிவீமன் செத்து விழுந்தானே.

நால்வரும் புலம்பல்

தருமருந் தம்பியருந் தானே யெழுந்திருந்து
வெத்தி[117] மதசாலை வீமன் மதகிரியே
முத்தின் திருக்கரத்தால் முகத்தி லறைந்துகொண்டு
உன்னை இழக்கவென்றோ உன்வார்த்தை தட்டிவந்தேன்
அத்திபுரம் தேடிவந்து என்தம்பி வீமனையும்
உன்னை இழக்கவோ ஊரைவிட்டு நான்வந்தேன்

காந்தாரி அழுதல்

கண்ணுக் [118]கற்றாப் பசுப்போலே
வருந்தி வருந்தி(யழு) திட்டாளே காந்தாரி

---
[115]. அருகலக் என்றுளது [116]. = ? இருந்த எனல் பொருந்தும்
[117]. வெற்றி [118]. கன்றுக்கிரங்கி
-----------

தருமர் புலம்பல்

கண்மணியே வீமா நீ கனத்த உடன்பிறப்பே[119]
சந்தணப் புயத்தில் சரியவெட்டி னாப்போலே
கையில் சிவமாலை[120] கழட்டி யெரிந்தேனே
பஞ்சாட் சரமாலை பரித்து யெறிந்தேனே
தாரணி யெல்லாம் புலம்பி யழுகையிலே
கண்ணைப் பரிகொடுக்கத் தேசமதை விட்டுவந்தேன்
சீவன் பரிகொடுக்கத் தேசமதை விட்டுவத்தேன்

அருச்சுனன் புலம்பல்

ஆதித்தன் போலே யருச்சுனனு மேதுசொல்வான்
எதிராளி நாட்டில் எட்டியடி வைய்யேனே
உம்மாலே அண்ணாவி உயிரிழந்து போனோமே
ஒருகோடி வந்தாலும் உதிரம் பிறப்பாமோ
ஒப்பாரி கொண்டாலும் உடந்தைப் பிறப்பாமோ
வச்சிரக் கிரீடமதை மண்ணுக்கிரை யிட்டேனே
இப்படித் தான்புலம்பி ஏங்கி யழுவயிலே

மற்றவர்கள் புலம்பல்

தேசத் தழகன் செத்தளவு தான்கேட்டு
தங்க வழகியைத் தலைமேலே வைத்தவனும்
தா (ம) முடியானுந் தம்பியரும் நூத்துவரும்
தார்வேந்த ரைவருந்தான் தாரணியில் வருகையிலே
பொல்லாச் சவனம் புகழ்பிறவே[121] கண்டாரோ
கலியாண வாசலிலே கண்குளிரப் பாராமல்
உயிரைப் பரிகொடுத்த செங்காட்டி லன்னம்போல்
பிறவி பறிகொடுக்க பூமியில் ஓடுவனோ[122]
தக்க புகழுடைய தருமரையும் நால்வரையும்
கட்டி யழுது கதறினான் போர்வேந்தன்
தம்பிமார் நூத்துவரும் சகலசன முள்ளவரும்
இழவுவந்து கண்டார்கள் எழில்பெரிய தருமரையும்
மாலை முடியானே மதவானை கண்டேறி
எங்கேயடா போயொளிந்தாய் என்தம்பி போர்வீமா
என்று புலம்பி யிருக்குமந்த வேளையிலே

----
[119]. உடப்பிறப்பே என்றுளது [120]. ஜெபமாலை
[121]. புகழ் பெறவே [122]. னாடுவனோ என்பது போலுளது
----------

மாயவனார் வேடவடிவு கொண்டு அரண்மனைக்கு வருதல்

பஞ்சவரைக் காத்த மாயவரும் யோசித்தார்
தருமருட தம்பிக்கு மோச(மும்) வந்து (தெ)ன்று
வனவேட ரைப்போலே மாயன் வடிவுகொண்டு
செத்ததொரு வீமனையும் சிணத்தி லெழுப்பவென்று
மாயனு மப்போ காவடியைத் தோளில்வைத்து
ஐவ ரிருக்குமந்த அரமணையி லோடிவந்து

நஞ்சு தின்றவருக்கு தயிலம் என்று சொல்லி வந்தார்

நஞ்சுதின்ற பேருக்கு நல்ல தயிலமென்றார்
அரளிதின்ற பேருக்கு ஆன தயிலமென்றார்
தயிலந் தயிலமென்று தார்வேந்த ரப்போது
வேடன் தனைவணங்கி விசாரமிட்டு ஏதுசொல்வான்
வீமன் மடிந்த விசாரமது சொல்லவென்றால்
எட்டுநாள்ச் செல்லும் ஏழுலெட்சம் பொன்தருவேன்.
பாருமையா வென்று பரதவித்து நிற்கையிலே
ஈரே ழுலகளந்த என்பெருமா ளோடிவந்து

வீமனை வேடன் மார்போடு சாத்தச் சொல்லுதல்

மாண்டவனைத் தானெடுத்து மாரோடே சாத்துமென்றார்.
தக்க புகழுடைய தார்வேந்தர் நால்பேரும்
மாண்டவரைத் தானெடுத்து மாரோடே தான்சாய்த்து

தயிலம் உள்ளுக்குக் கொடுத்தல்

ஒருகரண்டி தயிலம் உள்ளுக்குப் போகவிட்டார்

வீமன் எழுந்திருத்தல்

அந்தச் சிணமே அதட்டி யெழுந்திருந்தார்.
பூட்டின வாய்விட்டுப் பூட்டுத் திறந்துதப்போ
மண்டலங்கள் பதிய முண்ட பெருமாளும்
திறந்த கடவாயில்[123] தீர்த்தந் தனைச்சொரிந்து

மாயன் அமுதம் கொடுத்தல்

ஆதிநா ராயணனும் அமுர்தந் தனைக்கொடுத்தார்
அரக்கரண்டி தயிலம் அண்ணாக்கில் தான்விடவே
விட்ட வுடனே வெறிநஞ்சு தான்முறிந்து
வெத்தி மதசாலை வீம னெழுந்திருந்தார்
சோத்து (க்கு) வீங்கி சொல்கேளாப் பிள்ளையைப்போல்

--
[123]. கடைவாய்
----------

திருமால் மறைதல்

மாயன் பெருமாளும் மாயமாய்ப் போனாரே

தருமர் வருந்துதல்

தக்க புகழுடைய தருமருந் தம்பியரும்
மதகிரி வீமனையும் மதிமுகத்தில் தானழைத்து
அண்ணாரு மிங்கிருக்க அரியபதஞ் சேந்தீரே
தம்பியரும் நானும் தாயில்லாப் பிள்ளையைப்போல்
இருந்து தவிக்கவைத்து எமலோகஞ் சேர்ந்துவந்தீர்
ஆனாலும் அண்ணாவி அடியேனான் சொல்லுகுரேன்
திரியோ திரன்சேனை மன்ன(வ)ர் தன்திறமும்
எண்ணெய் விடவந்த எட்டுலெட்சம் மல்லர்களும்[124]
சிமிட்டி முளிக்குமுன்னே சிவலோகஞ் சேர்ந்தார்கள்.

வீமன வேட்டைக்குப் போக அனுமதி கேட்டல்

வேட்டைக்கிப் போய்வாரேன் விடைதாரும் அண்ணாவி
வாக்குவேணு மென்று வணங்கினார் போர்வீமன்

தருமர் மறுத்தல்

என்ன நடந்தாலும் என்பெருமாள் தஞ்சமென்று
புத்திமெத்தச் சொல்லி புகழ்பெரிய தம்பியர்க்கு

துரியோதனன சகுனியைக் கேட்டல்

வீத்திருக்கும் வேளையிலே வேந்தன்திரி யோதிரனும்
சாந்தணிந்த[125] மார்பன் சகுனி முகனோக்கி
ஐவரும் வேண்டார்கள்[126] அதுக்கேத்த புத்திசொல்லி

சூதினால் தோற்கடிக்க எண்ணுதல்

சூது பொருதித் தோற்கடிக்க வேணுமென்று
அரிபிளவும் வெத்திலையும் ஐவருக்குந் தான்கொடுத்து
சந்தோஷ மாகத் தானிருக்கும் வேளையிலே
சூதுபெறும் மண்டபத்தில் திரியோ திரனிருந்தான்

---
[124]. மன்னர்களும் என்றுளது [125]. சாந் தரிந்த என்றுளது
[126]. வென்றார்கள் எனினும் அமையும்
------------

சூது விளையாட தருமரை அழைத்தல்

சந்திரவடம் பூண்டிருக்கும் தருமர் முகனோக்கி
புகழ்வேந்த தம்பியரே பொழு(து)தான் போகவில்லை
சொக்கட்டா னாடி தொடுத்துவிளை யாடிடுவோம்
வாருமென்று சொல்லி மகிழ்ந்தழைத்தா னப்போது

தருமர் சம்மதித்தல்

நல்லது நல்லதென்றான் நல்லதொரு தருமலிங்கம்
பஞ்சவரும் நூத்துவரும் பந்தையங்கள் தான்கூறி
பகடைசா லையாடி பழுதுவர லாகாது
தேசத் தழகன் திரியோ திரனுரைப்பான்

துரியோதனன பந்தயங் கூறல்

பந்தயங்கள் சொல்லுகுரேன் பாண்டவரே நீர்கேளும்

பந்தயம் அரசு, பரி, கரி முதலான எல்லாம்

திரியோ திரன்தோத்தால் செல்வங்[127] கரியெல்லாம்
மாளிகையும் மண்டபமும் மக்களும் பெண்டுபிள்ளை
தாதிகளும் மூப்பிகளும் தாதுமணி யுள்ளதெல்லாம்
ஏழக்குரோ ணிபடையும் ஏத்தமுள்ள ராச்சியமும்
அஸ்தினா புரிமுழுதும் அடங்கலும் ஐவருக்கு
ஐவரும் தோத்துவிட்டால் லசையாங் கரியெல்லாம்
ஆளுகுற பூமியெல்லாம் அடங்கலும் நமக்குத்தான்
விலைமாதர் குலைமாதர் வேண்டிய பெண்சிறையும்
அரமணைப் பெண்டுகள் அடங்கலும் எங்களுக்கு
தோத்தவன் சீமையெல்லாம் தோரணங்கள் கட்டுவது
அரமணையி லுள்ளதும் அடங்கலும் நமக்குத்தான்

சம்மதித்தனர்

இப்படிச் சம்மதித்து ஏத்தமுள்ள தம்பியரே
சொக்கட்டான் போட்டு சோகிவிளை யாடுமென்றார்

விளையாடல்

தக்க புகழுடைய தருமருந் தான்கேட்டு
அப்படியே ஆகுதென்றார் ஆனதொரு தருமலிங்கம்
நல்லதொரு சோதினையும் நாலுதிக்குந் தான்போட
பொன்பதிச்ச குண்டுகளும் பொன்னால் மரக்காலும்
சாயம்பு வர்ணன் சகுனி யெடுத்துவந்தான்
சோடா யிருந்துகொண்டு சோகிவிளை யாடுமென்று
சகுனி யெலும்பைச் சதிக்கயற் றில்மாட்டி
தக்க புகழுடைய தருமர்கையி லேகொடுக்க

----
[127]. செல்லவங் என்றுளது
---------

தருமர் துரியோதனனை ஆடச் சொலல்

மூத்தா ரிருக்க முன்னாடப் போகாது.
அஷ்த்தமணி கையாலே அலங்கார மாயுருட்டி
தக்க புகழுடைய தருமரவர் தான்வாங்கி
படபடப்பு மில்லாமல் பத்திரமாய்த் தான்போட்டார்
பத்துமஞ்சு மல்லாமல் பருத்தம் போட்டறியார்
இப்படி யேவிருத்தம் இயல்பாகப் போட்டபின்பு
சாயம்பு வர்ணன் சதிக்கயற்றைத் தான்மாட்டி
தேசத் தழகன் திரியோதிரன் கைகொடுத்தான்.

துரியோதனன் பகடையாடல்

பாவிதிரி யோதிரனும் பகடைகளைப் போட்டானே.

தோற்றதாகக் கூறல்

தோத்துவிட்டா ரென்று துடைதட்டித் தான்சிரித்தார்.
தாது மணிமார்பன் தருமலிங்க மப்போது

பிள்ளையார் ஆட்டம் என்று மீண்டும் ஆடுதல்

பிள்ளையா ராட்டமென்று பின்னுங் கயற்போட்டார்

பஞ்சவர்கள் தோற்றல்

இருக்காலும் தோத்துவிட்டார் இயல்பெரிய தருமலிங்கம்
வெத்தி மதவானை வீமன் கயற்போட்டான்
வெத்தீ மதவானை வீமனுந் தோத்துவிட்டான்
வீமன் கயற்றை விசையனுந் தான்வாங்கி
நானிப்போ வெல்வனென்று நடுவே கயற்போட்டான்
காண்டா வனமெரித்த காளையுந் தோத்துவிட்டான்
பட்டுக் கொடிவேந்தன் பரிநகுலன் தான்போட்டான்
அப்போது அவனும் அடவாகத் தோத்துவிட்டான்
சாத்திரக் கொடிவேந்தன் சகாதேவன் தான்போட்டான்
சகுனி கெலிச்சுவிட்டான் சகாதேவன் தோத்துவிட்டான்
-------------

துரியோதனன் மகிழ்ச்சி

தேசத் தழகன் திரியோ திரன்மகிழ்ந்து
இன்று பிழைத்தேன் ஈடேறிப் போனேனே.

எல்லாம் நமக்கென்று கூறுதல்

தேடுந் திரவியமும் தேசமும் வந்துதென்றான்
ஆளு மடியாளும் அரமனைப் பெண்டுகளும்
சொந்த மெனக்கென்று துடைதட்டித் தான்குதித்தான்
கைகொட்டித் தான்சிரித்து கடுகி யெழுந்திருந்து

ஐவரைச் சிறையிடல்

ஐவரையு மிப்போது அரையில் அடையுமென்றார்.

விலங்கிடல்

தருமரைப் பிடித்துக் கால்விலங்கு போடுமென்றார்
பூத விலங்கு போடுமென்றா ரைவருக்கும்
தென்னாட்டு மன்னன் திரியோ திரன்பெருமாள்
திட்டோ திரனுடனே துடசகுனி மூவருந்தான்
காவல்கூ டந்தனிலே காவலரும் வந்திருந்தார்
வாய்மதங்கள் பேசி மண்டலத்தை யாண்டியளே
சூதாடித் தோத்தவர்க்குச் சொல்ல வழக்கமுண்டோ
நீட்டுங்கோ காலை நிலத்தையும் பாராமல்
சூதாடிந் தோத்தவர்கள் சொல்மறக்க மாட்டாமல்
தாமரையில் தண்ணீர்போல் தருமலிங்கந் தானேங்கி

தருமர் ஈசன் செயல் எனல்

என்பிறப்பே தம்பியரே ஈசன்செயல் கண்டீரே
மாயன் அருளிதுகாண் மறுவார்த்தை பேசாமல்
போர்வேந்தர் நால்பேர்க்கும் புதுவிலங்கு போடுமென்றார்
தக்க புகழுடைய தரும ரொருவரையும்
வேந்தர் பெருமாளே வெக்காவில் வையுமென்றார்
வெத்தி மதவானை வீமன் மதகிரிக்கி
ரெண்டு கால்தனக்கு நீள்பெரிய தாள்தனக்கு
கருணை விலங்கு கடினமாய்ப் பூட்டுமென்றார்
ரெண்டு துடைதனக்கும் ரெண்டுமுழந் தாள்தனக்கும்
இரனூறு தான்விலங்கு இணையாகச் சாத்துமென்றார்
காண்டா வனமெரித்த காளை யருச்சுனற்கு
யத்துப்பொன் கொண்ட பாத்தன் தனஞ்செயற்கு[128]
நாலா யிரங்கோடி ரணதுட்டு கொண்டுவந்து
தோள்மட்டுஞ் சாத்துமென்றார் துளசிமணி மார்பனுக்கு
பட்டுக் கொடிவேந்தன் பரிநகுலன்[129] மன்னனையும்
விட்டால் குடிகேடு வேந்தன்துட் டோதரனே
ஆனை விலங்கு அரையிலெடுத்துவந்து
சதிர மசையாமல்[130] சாத்து விலங்கையென்றார்
வாயும் நலியாமல் மறுவார்த்தை பேசாமல்
இந்த விலங்கையெல்லாம் எடுத்துவந்து சாத்துமென்றார்.
---------
[128]. பாத்தான் தன் செயற்கு என்றுளது வருகிறது [129]. பரிங்குலன் என்றே
[130]. மதையாமல் என்றுளது
----

காவலிடல்

உத்த சனமும் ஒருகோடி ராச்சியமே
வாசல் பதனமென்று பாங்காகத் தான்வைத்தார்.
கஸ்தூரி மண்டபத்தில் காவலரூம் வீத்திருந்தார்

மீண்டும் சகுனியைக் கேட்டல்

மாமன் சகுனிதன்னை வரவழைத்து அந்நேரம்
பாக்கியமும் நீர்கொடுத்துப் பாராள வைத்தீரே

துரோபதையை அழைத்துவரக் கேட்டல்

மாது துரோபதையை வரவழைத்து இப்போது
ஏந்திழையைக் கொண்டுவந்து என்னருகே சேருமென்றார்.

சகுனி துச்சாதனனை ஏவுதல்

தா(ம) முடியான் சகுனியவன் தான்கேட்டு
தங்கப்பொன் மேனியனே தம்பிதுட் டோதரனே
ஆரணங்கைக் கொண்டுவர ஆகுமோ உன்னாலே
ஐவருட தேவிமார் அத்தினையுங் கொண்டுவர
பாக்கியத்தி லேபிறந்த பாஞ்சால ராசகன்னி
இருக்கும் அரமணையில் என்தம்பி வாள்வீரா
தோரணங்க ளத்து[131] துரோபதையைக் கூட்டிவந்து
ஆகுமென்றால் சொல்லு ஆனதம்பி நூத்துவரும்

---
[131]. அறுத்து

-------------

துச்சாதனன் வீரம் பேசுதல்

துட்டோ திறன்சினந்து தீபரக்கத் தான்பார்த்து
அண்ணாவி யிப்போது அடியன்சொல் விண்ணப்பம்
தரும புரியில் தங்கமணி மாளிகையில்
மந்திர வாளெடுத்து வந்தேன் அண்ணாவி
உறையெடுக்கக் கூடாதோ உத்ததம்பி நானிருக்க
கொண்டுவந்து சேர்ப்பேன் கோல விழிமயிலை

விடைகேட்டல்

எனக்கு விடைதாரும் என்னுடைய அண்ணாவி
தேசத் தழகன் திரியோ திரன்மகிழ்ந்து

விடை கொடுத்தனுப்பல்

தாம்பூல வெத்திலையும் தார்வேந்தன் தான்கொடுத்து
அனுப்பி விடப்பாத்தான் ஆனந்த வாள்குமாரன்

புறப்படல்

முடிமேல் முடிதரித்த முக்கோடி ராட்சதர்கள்
எக்குரோணி சேனையுடன் எல்லோரும் பயணமென்றான்
மத்த கெசங்கள் மதகரியள் தா ன்கோடி
தேருங்கரி யும்பரியும் சேரப் பயணமென்றான்
முத்துக் கீரிடமுடன் முடிமன்னர் தான்கோடி
சந்திர னுதையம்போல் தளங்கள்வந்து சூழ்ந்துநிற்க
எக்காள நாகசனம் எங்குங் கிடுகிடென
நாட்டியங்க ளாடிவர நாலுலட் சம்பேர்கள்
அஞ்சுலட்சங் கோடி அரவக்கொடி யன்விருது
உருவின கத்தியுடன் ஒருகோடி ராட்சதர்கள்
சந்திராயு தத்துடனே தார்வேந்தன் தம்பியவன்
செப்பமுடன் தேரேறி தெருவீதி தன்னில்வந்தான்.

மரயனின் சோதனை

ஆயன் பெருமாள் அவன்சமத்தைத் தானறிய
அய்வர் சகாயம்[132] அருங்கான கந்தனிலே
வந்ததொரு சேனையெல்லாம் வழியை மதிமயக்கி
திகைப்பூடு தான்மரித்து திட்டெனவே தான்போட்டான்

---
[132]. சகாயர் எனில் அமையும்
----------

வழி தடுமாறிப் போதல்

துட்டோ திரனும் திகைத்துவழி தப்பிவிட்டான்
வழிதப்பித் தானடந்தான் மதுரை திசைநோக்கி
தருமா புரிநடந்து சதுர்துடந்து போகையிலே

மதுரை அல்லி அரசாணிக்காடடைதல்

பிறவா முடிதரித்த பெண்பெருமாள் தூதுவர்கள்
தார்வேந்தர் மாறி சமூகத்தில் வந்துநின்றார்

அவளிடம் வழியறியாமல் வந்துவிட்டோம் எனல்

மாதாவே தாயே வரிசை துரைமகளே
எங்களுட வார்த்தை இனிக்கேளும் மாதாவே
ஏதோ தெரியாது எண்ணவொண்ணா சேனைதளம்
மறுபூமி ராசாக்கள் வந்ததுவுந் தானறியேன்

அல்லி அரசாணி கோபித்துப் போருக்கெழல்

சந்திரரே சூரியரோ தானவரோ நானறியேன்
இந்திரனார் தன்படையும் இந்நாட்டில் வந்ததில்லை
செக்கச் சிவந்த திரிசூலி அகோரியவள்
கோசலை நாடுடையாள் கொலுவிட்டுத் தானிறங்கி
மாதுநல்லாள் தன்னுடைய மந்திரியைத் தான்பார்த்து
ஆனை அழையுமென்றாள் ஆனந்த வாள்மாரி
வெள்ளி அம்பாரி வெங்கல மணியோசை
ஏழுலட்சம் கிங்கிலியர் இருப்புத் தடிகொடுத்து
கொண்டுவந்து விட்டுக் கும்பிட்டு நின்றார்கள்

அல்லி யானையேறிப் புறப்படல்

ஏறினா ளானையின்மேல் எட்டுத் திசையதிர
நீலக் குடையும் நிசா நகரார் சூழ்ந்துவர
பவள நிறத்தாளும் பத்துலட்சம் தோழியரும்
ஏரிட்டுப் பார்த்து ஏதுசொல்வாள் பெண்பெருமாள்
---------

மந்திரிக்கு உத்தரவிடல்

மதுரையின் மேல்வாரார் மகாசேனை யத்தினையும்
மந்திரியைக் கூட்டி மகாசேனை யத்தினையும்
தட்டழிய வெட்டி தவுடு பொடியாக்கி
அட்டி பண்ணாமல் அரைச்சினத்தில் வாருமென்றாள்
குறுக்கே மரித்தாளே கொள்ள[133] மாரியவள்

துச்சாதனன் பயப்படல்

திரியோ திரன்தம்பி திட்டோ திரன்பயந்து
அஞ்சுதலை நாகம் கோரியென்று[134] வாளிதொட்டாள்
பட்டு விழுந்து பனைபோல் கிடப்பாரும்
திரியோ திரன்செய்த தீவினையோ என்பாரும்
சிவசிவா வென்று தியங்கி விழுவாரும்
மக்களைத் தேடி மடிந்து கிடப்பாரும்

பயந்து துச்சாதனன் ஓடுதல்

திட்டோ திரனுந் தெறிபட்டு ஓடயிலே

செட்டியாரைக் கேட்டறிதல்

செட்டி வரக்கண்டு தேசமிது ஆருதென்றான்
அய்யா சுவாமி அடியேன்நான் சொல்லுகுரேன்
மதுரஞ் சொரியும் வாள்மயிலாள் நன்னாடு
அல்லி அரசாணி அவருடைய தேசமென்றார்
தாலி பிழைத் (த)து தலைமுறைக்கும் போதுமென்றார்.
மாடுமா டென்று வளர்ந்த பில்லைத் தின்பாரும்

ஓடுதல்

இப்படி யாக ஈடழிந்து ஓடயிலே
சேரப்பட் டு(டு)த்தி தேசத்தில் நான்போனால்
நம்மை நகைப்பார்கள் நாட்டிலுள்ள ராசாக்கள்

தருமபுரியடைந்தான்

தர்மா புரிநோக்கி தார்வேந்தன் போகலுத்தான்.

-------
[133]. கொள்ளை எனில் அமையும் [134]. = ?
-------------

துரோபதைக்குத் தீ நிமித்தம் காணல்

வழியில் வருகையிலே வாள்மயிலாள் ராசகன்னி
தோற வழகி துரோபதையும் அப்போது
தோள்கள் துடிக்கிறதும் துக்குறிகள் காட்டுறதும்
பாக்கியத்தி லேபிறத்த பாஞ்சால ராசகன்னி
பொன்னுலகில் மாதருடன் பொருத்திவிளை யாடயிலே
முன்னான லெட்சிமியும் முகம்விட்டுத் தான்விலக
கூடிவிளை யாடயிலே கூட்டம் பிரிந்துவிட்டாள்.

தூக்கம் வருதல்

நித்திரா தேவிவந்து நிலத்திலே தள்ளுகுறாள்
கண்கள் துடிக்கிறதும் கைசோந்து நிக்கிறதும்
ஏழாந் தளத்திலே ஏகாந்த மேடையிலே
ஆணிப்பொன் மாளிகையில் அலங்காரச் சோடினையும்
தூணுக்குத் தூணு சோதிவிடுஞ் சித்திரங்கள்
காலுக்குக் காலு கனியும் அலங்காரம்
செவ்விளனீர் பச்சிளனீர் சிங்காரச் சோடினையும்
மேல்கட்டு கட்டி விடுஞ்சரங்கள் தோரணங்கள்
முத்திலங்கும் வாசலிலே மூவாயி ரம்விளக்கும்
பள்ளி யரையில் பளிங்குமா மண்டபத்தில்
கோடி திருவிளக்கு கொண்டுவந்து வச்சார்கள்
வெஞ்சா மரம்வீச வீத்திருந்தா ளுத்தமியும்
குலமாத[135] ராயிரம்பேர் கோதை யருகிருக்க
விலைமாத ராயிரம்பேர் முன்னும்பின்னுஞ் சூழ்ந்திருக்க

துரோபதை உறங்குதல்

நித்திரா தேவிவந்து நிலத்திலே தள்ளுகிறாள்
தாம முடியாள்]136] சவுந்தரியும் ஒடிவந்து
சம்பங்கி மெத்தையிலே சகலாத்துப் போர்வையிலே
எடுத்து விரித்தார் ஏந்திழையாள் மா தருக்கு
நித்திரையும் பண்ணயிலே நெடுமால் திருவருளால்
ஒருசொற்பனம்போலே கண்டான் துரோபதையும்

--
[135]. குலைமாத என்றுளது [136]. தாமுடையாள் என்றுளது
-----------

தீக்கனா காணுதல்

சொற்பன மேதென்றால் திரியோ துரன்நகரில்
தக்க புகழுடைய தருமரையுந் தம்பியையும்
வருந்தி யழைத்து மருந்திடவுங் கண்டாளே
வேந்தர்க் கரசன் விசானத்தைச்[137] செப்பனிட்டு
ஐவருக்குங் கட்டை அலங்கார மாயடிக்கி
கோலவர்ணப் பச்சைவடம் கோடி தலைப்பாகும்
அஞ்சுவர்ணப் பெட்டியிலே அடவாக வாக்கரிசி
ஆசந்தி தூக்கி அலரிவரக் கண்டாளே
தேரை அலங்கரித்து தெருவீதிவரக் கண்டாளே
சாவோலை கொண்டு தரும புரியில்வந்து
மண்ணும் மரமும் வாய்விட்டுத் தானழுது
குந்தமா தேவி குழந்தைகளைத் தான்தேடி
போன வழிபாத்து புலம்பிவாக் கண்டாளே
ஏந்திழை யாளும் என்குலத்துத் தங்கையளும்
சிங்காரத் தோப்பில் திருமஞ் சனமாடி
தேவேந் திரனும் திருமாலும் பாத்திருக்க
தீயில் விழுந்து திடுக்கென்று தான்முழித்து
----
[137]. மயானம்
------

திருமாலை வேண்டுதல்

புவனம் வளர்ந்த பூலோக சாமியும் நீர்
காணாத சொப்பனங்கள் கண்டதென்ன மாயவரே
நீபாவி பொல்லான் திரியோ திரன்சபையில்
சேர்ந்தார்கள் பஞ்சவர்கள் தீங்கு வராதபடி
முள்ளு கிழியாமல் முடிச்சபூ வாடாமல்
மாலை மயங்காமல் மல்லிகைப்பூ வாடாமல்
கொண்டுவந்து சேரும் கோவிந்தா அண்ணாவி
மெத்த மனமேங்கி நிண்ணாள் துரோபதையும்

மீண்டும் தீக்கனா காணுதல்

நித்திரையும் கொண்டாளே நேரிழையு மப்போது
சர்ப்பினையாய்த் தானழைத்து தருமரையுந் தம்பியையும்
சொக்கட்டா னாலே தோர்வையும் உண்டாக்கி
வேந்தர் பெருமாளே வெக்காவில்[138] வைக்கக்கண்டாள்.
மத்துமுள்ள நால்வருக்கும் வில்விலங்கு காலிலிட்டு
கண்டாள் தெரிசினத்தில் கானகத்தில் தான்போக
கூட மிருக்கக் குடிபோகக் கண்டாளே.
மாட மிருக்க வனம்போகக் சண்டாளே.
தேச மிழந்து தெருவில்வரக் கண்டாளே.
திரியோ திரன் தம்பி திட்டோ திர னோடிவந்து
ஏழுசுத்துக் கோட்டையெல்லாம் இடிக்கவும் கண்டாளே.
ஐவ ரரமணையும் அலங்கார மாளிகையும்
காத்தும் அணுகாத கனகரெத்தின மாளிகையில்
சேற இடித்துச் செப்புத் தரையாக்கி
பூசின மஞ்சள் புதுப்பணதி யுள்ளதெல்லாம்
பூண்டு இருந்த[139] பொன்னா பரணமெல்லாம்
சேரக் கழன்று சிதறவே பூமியிலே
வில்லாக நான் பிறந்தேன் வெத்தியுள்ள ஐவருக்கும்
மூவர்களும் வந்திருக்க மூர்த்தமிட்ட மங்கிலியம்
சேர அவிழ்த்து செப்பனிடக் கண்டேனே.
பொன்னுலகை யாளும் புண்ணியனா ரென்மாமன்
மூணுலெட்சம் கல்பதித்த முத்துவர்ணச் சேலையிலே
மூணுலெட்சம் நல்பிடவை முத்திரியுந் தான்போட்டு
மாமன் குடுத்த மணிப்பிடவை யத்தினையும்
நித்த மொருபுடவை கட்டிக் கிழித்ததெல்லாம்
பொன்னால் சமைத்த போழையிலே தான்போட்டு
வெள்ளைத் துயிலுடுத்தி வீதிவரக் கண்டாளே.
சந்திக்கி சந்தி தலைவிரியக் கண்டாளே.
வர்ன மயில்கூந்தல் மடியில்விழக் கண்டாளே.
தாதியளும் மூப்பியளும் தண்டியொத்த பெண்டுகளும்
ஏந்திழை மாரும் என்குலத்துத் தங்கையரும்
மாள விளக்கெரியும் மங்கை நல்லான் மாளிகையில்
காத்தும் அணுகாமல் கதைகேழ்க்கும் மாளிகையில்
திரியோ திரன்தம்பி திட்டோ திரன்புகுந்து
ஒருவர் மயிர்பிடிக்க ஒன்பதுபேர் பின்தள்ள
இருவர் மயிர்பிடிக்க இருபதுபேர் பின்தள்ள
சேரப் பிடித்துத் தெருவில்வரக் கண்டாளே
பொல்லாக் கினாக்கண்டு[140] புலம்பி யெழுந்திருந்தான்
தனக்குக் கவுரி[141] யிடுந் தாதி முகனோக்கி
காணாத சொற்பனங்கள் கண்டு பயந்தேனே.

----
[138]. வெங்கா - (கொடிய காடு) சிறைச்சாலை போலும்.
[139]. அசை குறைகிறது [140]. கனாக்கண்டு [141]. கவரி - சாமரம்
------------

குந்தி அரண்மனைக்குத் துரோபதை புறப்படல்

ஐவரையும் பெத்தெடுத்த அம்மனுக்குச் சொல்லவென்று
பாங்கியரைத் தான்பார்த்துப் பல்லாக்கு அழையுமென்றாள்
ஆரணங்குந் தோழியரும் அட்சணமே கொண்டுவந்து
பாக்கியத்தி லேபிறந்த பாஞ்சால ராசகன்னி
வாடி முகந்தளர்ந்து வர்னமுகம் வேறுபட்டு

பல்லக்கி லேறுதல்

தா (ம) முடியாளும் தண்டிகையின் மேலேறி
வாசல் படி(யதனை) விட்டு நடந்தார்கள்
பிரம்புத் தடிக்காரர் பின்னுமுன்னுஞ் சூழ்ந்துவர
தேனார் முலையாள் தெருவீதி தன்னில்வந்தாள்
தேரோடும் வீதி தெருவு நடந்தார்கள்

குந்தி மாளிகையை யடைதல்

தா (ம) முடியாளும் தண்டிகையை விட்டிறங்கி
ஓடமலர்க் கண்ணாளும் ஓராம் படிநடந்து
அஞ்சாம் படி நடந்தாள் ஆரணங்கு ராசகன்னி

தாதியர்கள் குந்தியிடம் தெரிவித்தல்

குந்தியம்மன் தாதியர்கள் கொம்பனயைக் கண்டவுடன்
குந்தியம்மன் தாதியர்கள் கொம்பனைக ளெல்லோரும்
விரை(வா) யெழுந்திருந்து வேல்பொருதுங் கண்ணாளும்
சிங்கா தனத்துக்கு முன்பாக வந்து நின்று
ஆடை யொதுக்கி அணிபவள வாய்திறந்து
வறுசை மருமகளும் வா ரார்கள் என்றுசொன்னார்.
பசும்பொன் முடிதரித்த பத்தினியும் வாராள்காண்.
ஐவர் மணிவிளக்கு ஆரணங்கும் வாராள்காண்.
துலங்கு மணிவிளக்கு துரோபரையும் வாரார்காண்.

குந்தி கேட்டு மகிழ்தல்

கோணாத மாதவத்தி குந்தியம்மாள் தான்கேட்டு
எங்குங் குளுந்து இருதோளும் பூரித்து
பூரித் தெழுந்து பொன்னா பரணமெல்லாம்[142]
மெத்தன மகிழ்ந்து மேலான குந்தியம்மன்
சிங்கா தனத்தைவிட்டு திகழக் குதிச்சிறங்கி
அருச்சுனா தேவியரும் ஆரணங்கும் வாராளோ
பாஞ்சால ராசகன்னி பாண்ட(வர்) கையாயுதமோ
காண்டா வனமெரித்த காளையுட தேவியரோ
மாதர்க் கதிபதியாள் மணிவிளக்கு வந்தாளோ
என்ன தபஞ் செய்தேனோ ஏந்திழையா ளிங்கே வர
காணா (த) துகண்டு யெடுத்தவர்போல் தான்மகிழ்ந்து
மாமியைக் காண[143] வந்தாளே ராசகன்னி
அம்மாமி கோவிலுக்கு அருமைபெற[144] வந்தாளே
மக்களையுங் காணாமல் வழிபார்த்து நானிருந்தேன்
காலமில்லாக் காலத்தில் கட்டழகி வாராளோ
கோடி திருவிளக்கு கோபுரத்தி லேத்துமென்றார்
ஆலாத்தி சுத்துங்கள் அபிஷேகப் பத்தினிக்கி

துரோபதைக்கு ஆலத்தி எடுத்தல்

ஆலாத்தி சோடித்தார்கள் அஞ்சுலெட்சந் தாதியர்கள்
மூத்துனால் ஆலாத்தி மூவாயி ரங்கோடி
பவளத்தால் ஆலாத்தி பதினாயி ரங்கோடி
பசும்பொன் அலங்கரித்து பத்துலட்சம் ஆலாத்தி
தங்க மொளிவிடவே தாதியர்கள் கொண்டுவந்து
நட்சேத்தி ரம்போலே ராசகன்னி முன்னைவந்தான்
தோறா வழகி துரோபதையுந் தான்பார்த்து
எந்தனுக்கும் ஆலாத்தி ஏற்குமோ தாதியரே
அங்கயற் கண்ணி அம்மாள்மீ னாச்சியர்க்கும்
அழகிய சொக்கருக்கும் ஆதிநா ராயணர்க்கும்
ஏற்குமே அல்லாது எவர்க்கும் பொறுக்காது
எனக்குமுன்னே கொண்டுவந்தால் ஏற்குமோ தாதியரே
ஆலாத்தி பெண்கள் அரமனையில் போய்ப்புகுந்து
குந்தியம்மன் தன்னுடனே கொம்பனையாள் சொல்லுகிறாள்
சொல்ப்பெரிய குந்தியம்மன் தோழிசொல்லைத் தான்கேட்டு
சிங்கா தனத்தைவிட்டுத் திகழச் குதிச்சிறங்கி
தோற வழகி துரோபதை முன்னைவந்து
பேடை மயில்கண்ணாள் பொட்டனவே ஓடிவந்து
பசும்பொன் குடத்தில்வந்த பன்னீரைத் தான்வாங்கி
பாதம் விளக்கி பட்டுனால் நீர்துடைத்து
புஷ்ப வகையெல்லாம் போதவே தான்சாத்தி
தாளிணையைப் பூண்டுகொண்டு சாஷ்டாங்கள் தெண்ட னிட்டு

--------
[142]. =? வினைமுடிவு இல்லை [143]. கண்டு என்றுளது
[144]. அறுமை பிற என்றுளது
----------

குந்தி துரோபதையை விசாரித்தல்

கோணாத மாதவத்தின் குந்தியம்மன் தான்பார்த்து
வந்து பணிந்து நின்ற மருமகளைத் தானெடுத்து
வாயார வாழ்த்தி மதிமுகத்தை முத்தமிட்டு
தங்கச்சிங் காதனத்தில் சகலாத்து மெத்தையிலே
தெய்வக் குலக்கொழுந்தைச் சிங்கா தனமிருத்தி
மலரா சனத்திருத்தி வந்தவகை சொல்லுமென்றாள்

துரோபதை தான்கண்ட கனவைக் கூறுதல்

கண்டகினா யென்மாமி கணக்குமிடப் போகாது
அண்டளிக்கப் போகாது அம்மாமி நீர்கேளும்
பூபால ரைவருந்தான் போன வழிதனிலே
வசியில் விழுந்து மடிந்திடவுங் கண்டேனான்.
ஐவருக்குங் கட்டை அடவாகத் தானடுக்கி
குங்குமங் கஸ்தூரி கோடி தலைப்பாகும்
கட்டி யலங்கரித்து கனமுடனே தான்போத்தி
புனுகு மணத்தோடே பூபால ரைவரையும்
கொட்டு முழக்கோடே கொண்டுவரக் கண்டேனான்.
தர்ம புரிக்கு சாவோலை கொண்டுவந்து
திருமஞ் சனமாடித் தீயில் (விழக் கண்டேனே.
கண்டகினா என்மாமி கணக்குமிடப் போகாது.
சொக்கட்டா னாலே தோர்வையு முண்டாக்கிச்
சூது விளையாடிச் சொல்மறக்க மாட்டாமல்
மண்ணும் மனையும் மனையில் உள்ளதெல்லாம்
சேர அவர்தோத்து சிறையிருக்கக் கண்டேனான்
வெத்தி மதசாலை வீமரா சேந்திரர்க்கும்
சாத்திரக் கொடிவேந்தன் சகாதேவன் வல்லவர்க்கும்
கால்விலங்கு கைவிலங்கு போட்டிருகக் கண்டேனான்
தரணி முழுதாண்ட தருமபெரு மாள்தனக்கு
வெத்திமுடி. மன்னவரை வெக்காவில் வையுமென்றான்
என்று துரோபதையும் இயம்பவே குந்தியம்மன்
இவ்வளவு தானோ இன்னமுண்டோ சொல்லுமென்ருள்
இன்னமுண்டு சொல்லுகுறேன் என்மாமி நீர்கேளும்.
தாராத் தனஞ்செயர்க்கும் சாமி நகுலருக்கும்
பூத விலங்கு போட்டிருக்கக் கண்டேனான்.
முற்பணத்தி ஆபரணம் முடிமேல் தரித்ததெல்லாம்
பட்டமும் சுட்டிகளும் பசும்பொன் னரைஞாணும்[145]
முன்கை முதாரி முழுக்கடையம் மோதிரங்கள்
கழுத்து நிறைந்த கடுகுமணி யத்தினையும்
மார்(பு) நிறைந்த வயிரமணிக் கோர்வையெல்லாம்
காது நிறைந்த கடுக்கன் பணதியெல்லாம்
முத்துச்சரங்கள் முடிமேல் தரித்ததெல்லாம்
சேற அவிழ்ந்து சிதறவே கண்டேனான்
கோதுபடா மங்கிலியம் கொத்துவிட்டுத் தான்விழுந்து
திரும்பி யெடுத்துச் செப்பனிடக் கண்டேனான்
மூணுலட்சங் கல்பதித்த முத்துவர்ணச் சேலையெல்லாம்
பொன்னா லமைந்த போழையிலே தான்போட்டு
வெள்ளைத் துயிலுடுத்தி வீதிவரக் கண்டேனான்.
கூந்தல் விரித்துக் குடிபோகக் கண்டேனான்.
திரியோ திரன்தம்பி துட்டே திரன்தானும்
சதுரங்க சேனையுடன் தரும புரியில்வந்து
யானைகளை விட்டு அரண்மணையைத் தானிடிக்க
ஏழுசுத்துக் கோட்டை இடிக்கக்கினா கண்டேனான்
குலமாதர் விலைமாதர் கோடிலெட்சம் பெண்டுகளும்
ஒருவர் மயிர்பிடிக்க ஒன்பதுபேர் பின்தள்ள
இருவர் மயிர்பிடிக்க இருபதுபேர் பின்தள்ள
மாளிகையை விட்டு மாபாவி பட்டணத்தில்
அரும்பாவி பட்டணத்தில் அம்பலமும் தானேறி
தொட்டுத் துயிலுரியக் கண்டேனான் சொற்பனத்தில்
செனன மெடுத்தேனே சிரிப்பாருக் குள்ளானேன்
கண்டகினா என்மாமி கணக்குமிடம் போகாது
தர்மா புரியில் தங்கமணி மாளிகையும்
பதியிழந்து போக பண்பாகக் காணுகிது
உபாயத்தால் சூதாடி உயிர்பரித் தான்பாவி
நான்கண்ட சொற்பனங்கள் ஒருநாளும் பொய்யாது
வளவு தானோ இன்னமுண்டோ சொல்லுமென்றாள்.
இன்னமுன்டு சொல்லுகுறேன் என்மாமி நீர்கேளும்
மாருந் தோளும் மார்புந் துடிக்கிதிப்போ
பஞ்சவரை விட்டு பதியிழந்தேன் என்மாமி
ஐவரையும் விட்டு அம்பலத்துக் காளானேன்

---
[145]. னரைசாளும் என்றுளது
------------

துரோபதை கண்ணீர்விடல்

காரிழையாள் ராசகன்னி கண்ணாலே நீர்சொரிந்தாள்.
பவளம்போல் கண்ணீரை மளமளென்று சோரவிட்டாள்.
முத்துப்போல் கண்ணீரை முலைமார்பில் சோரவிட்டாள்.

குந்தி துரோபதையைத் தேற்றுதல்

கோணாத மாதவத்தி குந்தியம்மன் தானெழுந்து
பஞ்சவர்ணப் பட்டெடுத்துப் பத்தினியைக் கண்துடைத்து
ஐவரையுங் காக்கவந்த அபிஷேகப் பத்தினியே
தக்க புகழுடைய தார்வேந்த ரைவருக்கும்
பார்மன்ன ரைவருக்கும் பழுதுகளே வந்துதென்றால்
பகலும் இரவாகும்[146] பதங்கன்[147] மறைந்திடுவான்
பட்டப் பகல்தனிலே பகலே நிலாவெரிக்கும்
பத்தினியாள் உள்ளமட்டும் பஞ்சவர்க்குச் சேதமில்லை
ஆரணங்கு உள்ளமட்டும் ஐவருக்குஞ் சேதமில்லை
மாலை முடியாளே மானத்[148] தருந்ததியே
நாரா யணமூர்த்தி (நற்) றவர்இ ருக்குமட்டும்
செங்கண்மா லுள்ளமட்டும் சேதமில்லை ஐவருக்கும்
சந்திர சூரியர்கள் தானவர்க ளுள்ளமட்டும்
ஆதித்தன் உள்ளமட்டும் ஐவருக்கும் மாயனுண்டு
மாளாத மங்கிலியம் அவர்தான் குடுப்பாரே
தவறாத அத்திபுரம் தரணிமுழு தாள்வாயே
கட்டின மங்கிலியம் கர்ப்பாந் திரமிருக்கும்
மாளுவர் நூத்துவர்கள் ஆளுவார் பஞ்சவர்கள்
என்றுகுந்தி சொல்ல இவளை மனந்தேற்றி
மாமியும் பொன்னரசும் மகிழ்ந்து இருக்கையிலே

துட்டோதிரன் தர்மாபுரி வருதல்

சந்திராயு தத்துடனே தார்வேந்தன் தம்பியவன்
திரியோ திரன்படையும் சேனைமன்ன ருள்ளதெல்லாம்
சதுரங்க சேனையுடன் தர்மா புரியில் வந்து
துரோபதையைத் தான்பிடிக்கத்[149] துட்டோ திரன்வார[150]
படைவருகு தென்று பாங்கிமா ரோடிவந்தார்
சிங்கா தனத்தைவிட்டு கீழே[151] குதிச்சிறங்கி
கண்டகினா என்மாமி கைமேல் பலிச்சிதிப்போ
அஞ்சிப் பயந்து அடிவணங்கித் தெண்டனிட்டு
ஆசாரம் போத்தி அருமையிட்டு மாமியர்க்கு
என்மாமி இப்போ இனியிருக்கப் போகாது
போகவிடை தாருமென்று பொற்பாதம் பூண்டுகொண்டு
பத்தினியாள் கண்டகினா பழுதொருநாள் போகாது
அருந்ததியாள் கண்டகினா அப்பறத்தே போகாது
இந்தப்படி பஞ்சவரை என்னபழி செய்தானோ

---------
[146]. மிறௌவ்வாகும் என்றுளது [147]. பதங்கன்-சூரியன்
[148]. வானத் என்பது [149]. தான் பிடித்து என்று
[150]. திரன்வந்து என்றுளது [151]. திகள் என்றுளது
----------

துட்டோதிரன் முற்றுகையிட்டு அரண்மனையை இடித்தல்

துரோபதை மாளிகையைச் சுத்தி வளைந்துகொண்டு
தர்மா புரியில் தவுடுபொடி யாகுதிப்போ
யானையை விட்டு அரண்மனையைத் தானிடித்தான்.

துரோபதை காணல்

கொண்டைப் பூவதிரக் கூந்தல் தனைவிரித்து
தேனார் மொழியாள் தெருவீதி சென்றேகி
மாது துரோபதையும் மாளிகையைத் தான்பார்த்து

துரோபதை அவனைத் திட்டுதல்

ஆகாப் பறையா அழிபரையா சக்கிலியா
மாடுதின்னுஞ் சக்கிலியா மதியாம லிப்போது
பொண்ணும் புரசும் புலம்பி அழுகவைத்து
தீண்டாப் பறையா திருமதிலை ஏனிடித்தாய்?

துரோபதை விசுவரூப மெடுத்தல்

சீறி யெழுந்தாள் சிங்கக்குட் டியதுபோல்
தா (ம) முடியாளுந் தன்வேஷந் தான்மாறி
விசுவ ரூபமுடன் விண்ணுலகந் தான்வளந்தாள்
சிங்க முகமும் திருச்சடையும் சக்கரமும்
விருது இடைக்கியமும்[152] வீறுங் கபாலமுடன்
ஏந்திய கபாலம்[153] எடுத்தாள் திரிசூலம்
ஆங்காரக் கோபமுடன் அதட்டியே கொக்கரித்து
வாய்விட்டு அதட்டினாள் வாள்மயிலாள் அந்நேரம்.
----------
[152]. கேடயம் போலும் [153]. கபாம் என்றுளது.
---------

போரிடல்

எக்கிய வயறும் எடுத்ததிருச் சூலமுடன்
அதட்டித் துரத்தினாள் ஆங்காரக் கோபமுடன்
ஒருகை யறைந்தாள் உலகந் திடுக்கிடவே
திரியோ திரன்படையைத் திரும்பிமிகத் தான்பார்த்து
சூல மெடுத்துச் சூரையிட்டாள் ராசகன்னி
நாலா யிரங்கோடி ராசாக்கள் பட்டணங்கள்
தர்மா புரியைவிட்டு தட்டளித்து ஓடயிலே
முன்போகப் பின் நடந்தாள் மூர்க்கமுள்ள ராசகன்னி
நட்சத் திரவிளக்கே ராசகன்னி வாடிநீ
பெருமா ளுடன்பிறந்த பேர்பெரிய ராசகன்னி
மேகத்தில் தான்மறையும் மின்னொளியே வாடி நீ
அவரவர்கள் லெட்சமுடன் ஆகாசத் தெருவிருந்து

திரியோதிரன் படை தோற்றல்

திரியோ திரன்படையைச் சுத்தி வளைத்துக்கொண்டு
தாழ்ந்து வளைந்துகொண்டு சதகோடி[154] நாகமது
பதுங்கிக் கடிக்கிதுகாண் பத்தினியாள் நாகமது
அதட்டிக் கடிக்கிதுகாண் அபயமென்று தானோட
சூலத்தி னாலே துணித்தாளே ராசகன்னி
பட்டு விழுந்து பருபதம்போல[155] சாய்ந்தார்கள்.

துட்டோதிரன் கவலுதல்

ஈதென்ன மாயமா இருக்குதையா அத்திபுரம்
தக்க புகழுடைய தருமருந் தம்பியரும்
ஐவர் ராசாக்கள் அரசாண்டி ருக்கையிலே
பவுசு படையுடனே பகையாளி வந்தெதித்தால்
வெட்டி எறிந்திடுவாள் வீரியத்தைத் தான்காட்டி
பேரா ரருச்சுனர்க்கும் பேர்பெரிய வீமனுக்கும்
தரும நகுலனுக்கும் சகாதேவ மன்னனுக்கும்
பெண்படையும் அம்பலமும் பெருகவே மெத்தவுண்டு.
சினந்தாரைச் சங்கரிக்கும் சேவுகமும் மெத்தவுண்டு.
பேயும் பிசாசுகளும் பெருவிரியன் பாம்புகளும்
ஆடுமாடு போலே அடைத்துவைத்துப் போனாரோ
பகைமன்னர் சேனை படையெடுத்து வந்தாலும்
பூதப் பிசாசுகளும் பொல்லாத ராட்சதையும்
பூசையும் ஆகுமென்று பிடித்தடைத்து வைத்தாரோ
இந்தப் படையுடனே எதுக்கவும் போகாது
வேந்தன்துட் டோதரனும் விசாரமிட்டுத் தானிருந்தான்.

----------
[154]. சதாகோடி என்றுளது [155]. பருவதம் - மலை
----------

துரோபதை வருந்துதல்

மாளிகையைப் பார்த்து மங்கை துரோபதையும்
ஐவ ரரமனையும் அலங்காரச் சாவடியும்
சேர யிடித்துச் செப்புத் தரையாக்கி
பாத்து மிருந்தீரோ பாரநா ராயணரே
வசியில் விழுந்து மடிந்தாரோ பஞ்சவர்கள்
தேசமெல்லாங் கொள்ளையிட்டுச் சிறைபிடிக்க வந்தானே
அரக்கு மாளிகையில் அடக்கிவைத்துத் தீக்கொளுத்தி
அறிந்துவந்து பஞ்சவர்கள் அறிவுகெட்டுப் போனதென்னா
திரியோ திரன்படையைத் தீயா யெரிப்பேனான்
அஸ்த்தனா புரியில் அடைத்துவைத்துத் தீக்கொளுத்தி
மணிக்குடலைத் தான்பிடிங்கி மாலையிட்டுக் கொள்ளாட்டால்
என்பேரு ராசகன்னி எடுத்ததுஞ் சூலமல்ல.

திருமாலை நினைத்தல்

செங்கண் நெடுமாலே சிறைமீள்க்குஞ் சேவுகரே
கோவித்துக் கொள்ளாதீர் கொத்தவனே அண்ணாவி

திருமால் தோன்றுதல்

மெத்தச் சிரித்து வேதநா ராயுணனும்
செங்கருடன் மேலே திறமான மாயவனும்
சித்திரத்தேர்[156] மண்டபத்தில் செங்கண்மால் வந்திருந்து,

-----
[156]. சித்தித்தேர் என்றுளது
-----------

ஐவரை உண்டு பண்ணிப் போருக்கனுப்புதல்

அய்வரை[157] யுண்டுபண்ணி ஆயிதமுந் தான்கொடுத்து
போருக் கனுப்பிவைத்தார் புகழ் பெரிய மாயவனும்
தெண்டா யுதமெடுத்துத் தெருவீதி தன்னில்வந்து
கூடினான் சேனையிலே கோபமுள்ள போர்வீமன்
நாடினான் சேனையிலே நகுலனப் பாவியுடன்[158]

துரோபதை வருந்துதல்

தோற வழகி துரோபதையும் அப்போது
ஐவரையுங் கொண்டு ஆரணங்கு ராசகன்னி
என்பிறப்பே தங்கையரே எச்சுக்கிட மானோமே
புகழ்பெரிய தருமருக்குப் பேச்சுக்கி டமானோம்.

துரோபதை தன் சுய உருக்கொளல்

தன்வேஷந் தான்மாறி சச்சுரூப[159] மாயிருந்தாள்
வினைமுகத்தில் வந்தார்கள் வெத்தியுள்ள ஐவருந்தான்
இனிமேல் கிலேசமில்லை என்பெருமா ளுள்ளமட்டும்
போனாள் துரோபதையும் புகழ்பெரிய மாளிகையில்

துரோபதை போரிடல்

காண்டா வனமெரித்துக் கையில் சிலைவளைத்து
விட்டா னொருகணையை விண்ணவர்கள் கொண்டாட
பட்டு விழுந்து பணைபோல் கிடப்பாரும்
அம்புபட்டு மயங்கி அலறி விழுவாரும்,
சாடினான் வீமன் தவிடு பொடியாக
கூடி யடித்துக் குமித்தான் மலைபோலே
நாடி நகுலன் நாலுதிக்குஞ் சூழ்ந்துகொண்டு
கத்திக் கிரைகொடுத்து கருவறுத்தான் சேனையெல்லாம்
சேரக் கருவறுத்தான் தீரன்ச காதேவன்.

துச்சாசனனை விமன் விரட்டுதல்

துட்டோ தரனைத் துரத்தினான் போர் வீமன்.

----------
[157]. ஆயவரை என்றுளது [158]. நகுலன் பாவியுடன் என்றுளது
[159]. தற்சொரூபம்-தன் (பழைய) உரூவம்
-------------

துச்சாசனன் பணிதல்

சந்திரா யுதம்போட்டுத் தான்பணிந்தான் வீமனையும்
கும்பிட்ட பேரைக் கொல்லவொண்ணா தென்றுசொல்லி
விட்டுப் பிடித்தார்கள் வெத்தியுள்ள ஐவருந்தான்
விட்டுப் பிரிந்தார்கள் வெத்தியுள்ள ஐபேரும்
ஏரிட்டுத் தான்பார்த்து எழுந்திருந்து ஒடலுத்தான்.
ஒடிக் களைத்து உட்கார்ந்து தானிருந்தான்.

துச்சாதனன் சேனைகள் மடிந்தன

என்பிறகே வந்த எக்குரோணி சேனையெல்லாம்
செத்து மடிந்து சிவலோகம் சேர்ந்தார்கள்
எண்ணத் துலையாத ராசாக்கள் பட்டணங்கள்
ஆனை ஒருகோடி அக்குளத்தி லேமடிந்து
இருப்புத்தெண் டாயுதத்துக் கிரைகொடுத்தான் போர் வீமன்.

துச்சாசனன் அத்தினாபுரம் வரல்

சேரப் படைகொடுத்து செத்துப் பிழைத்துவந்தேன்
கோவித்துக் கண்சிவந்து கொத்தவனு மேதுரைப்பான்

பாண்டவர்கள் சிறையில் இருத்தல்

வாசல் பதனமென்று வைத்திருந்த காவலரைப்[160]
பார்த்துவரச் சொன்னானே பஞ்சவர்க ளைவரையும்
இட்ட விலங்கோடே இருந்தார்கள் பஞ்சவர்கள்
தக்க புகழுடைய தருமரையுந் தான்பார்த்து

துரோபதையை அழைக்கச் சொல்லித் தருமரிடம் கூறல்

துரோபதையைத் தானழைக்கச் சொல்லுமென்ற னப்போது
கூட்டி அனுப்பிவிட்டேன் கோடானு கோடிதளம்
கொண்ணானே வீமன் கொலைக்களத்தி லிப்போது
மாது துரோபதையை வரவழைக்க வேணுமென்றான்

--
[160. காவலென்ன என்றுளது
-----------

தருமன் தன் கணையாழியையும் நிலையையும்
துச்சான்னிடம் கொடுத்து அனுப்புதல்

கையில் கணையாழி கழட்டியே தர்மலிங்கம்
துட்டோ தரன்கையில் திருவாழி தான்கொடுத்து
தோரணச் சீட்டு (ம்) திருவாழி மோதிரமும்
எழுதிக் குடுத்து எழுந்திருந்தார் தருமலிங்கம்
காவல்கூ டந்தனிலே[161] காவலரும் வந்திருந்தார்.

துச்சாசனன் புறப்படல்

பாசி படந்த பதினெட்டக்கு ரோணியுடன்
தேருங் கரிபரியுந் தேசத்து மன்னவரும்
தர்ம புரிக்குத் தான்பயண மென்றுசொல்லி
பூமி யதிரப் பூலோகந் தத்தளிக்க
உருவின கத்தி ஒருகோடி ராசாக்கள்
செம்பொன்மணித் தேரேறி செய்யாறுந் தானடந்து
மூங்கில்) வனநடந்து மூணுலட்சந் தேருடனே
தர்மா புரியில் சதுரங்க சேனையுடன்
தேரைவிட் டிறங்கித் திரியோதிரன் தம்பியவன்

துரோபதை மாளிகையை அடைதல்

தோற வழகி துரோபதையாள் மாளிகையில்
முத்துமணி வாசலிலே முகப்பிலே வந்துநின்று
தாதி தனையழைத்து தார்வேந்தன் தம்பியவன்

துரோபதை மோதீரத்தை வணங்குதல்

திருவாழி மோதிரத்தைச் சேயிழையாள் தான்வாங்கி
முந்தி[162] யொதிக்கி முன்னைவைத்துத் தெண்டனிட்டாள்
தரணி முழுதாண்ட தருமருட மோதிரத்தை
எடுத்து மனமகிழ்ந்து ஈஸ்வரியும் ராசகன்னி
கண்ணில் அணைத்துக் கணையாழி மோதிரத்தை

ஓலையை வாசித்தல்
மணிச்சுருளைத் தானெடுத்து வாசித்துத் தான்பார்த்து
இன்பங் குளுந்து ஈஸ்வரியும் ராசகன்னி
மெத்த மனமகிழ்ந்து நின்னாள் துரோபதையும்

---
[161]. குடந்தனிலே என்றுளது [162]. முந்தானை
-------

மாமியை துரோபதை வணங்குதல்'

மாமியார் பாதம் மலர்சாத்தித் தெண்டனிட்டு
விடைபெத்துத் தான்பணிந்து நின்னாள் துரோபதையும்
தெருவீதி தானடந்து திருக்குளத்தில் நீராடி
ஐவ ரிருக்கும் அரும்பாவி பட்டணத்தில்
நொடியில் போவாளோ கனத்த மருமகளும்

தேவேந்திரனை வணங்குதல்

தேவேந் திரரைத் திசைநோக்கித் தெண்டனிட்டு
நின்னாள் பெருந்தவசு நீலக் கருங்குயிலாள்.

இந்திரன் இந்திரவிமானம் அனுப்புதல்

தேவேந் திரனாருஞ் சிந்தையிலே தானினைந்து
அருகில்நின்ற மனிதர்[163] ஆரணங்கைத் தான்பார்த்து
பாக்கியத்தி லேபிறந்த பாஞ்சால ராசகன்னி
அருச்சுனனார் தன்தேவி அழியாத பத்தினியும்
திரியோ திரன்சபையில் தேரேறிப் போகவென்று
நின்றாள் பெருந்தவசு நீள்பெரிய கங்கையிலே
பாரடி மாதேஉன் பாலருட தேவிதன்னை
ஏலக் கருங்குயிலாள் இந்திராணி கூறுவளாம்
ஆயிரந் தேரேறி அதிகத்தே ருண்டுபண்ணி
இந்திரவி மானமது எவர்க்கும் பொறுக்காது
இந்திரவி மானமதை இலங்க அலங்கரித்து
தோற வழகி துரோபதைக்கி அப்போது
அனுப்பிவிடு மென்று அடிவணங்கித் தெண்டனிட்டு
நட்சத் திரங்கள் நவமணிகள் தான்பதித்து
சூரியனைப் போலே சோதிவிட நாலுதிக்கும்
எந்தமுகம் போனாலும் ஏந்திழையாள் ராசகன்னி
வெத்திகொள்ள வேணுமென்று விடை கொடுத்தாரிந்திரனார்.

--------
[163]. ரமனிவர் என்றுளது
------------

இந்திரவிமானம் பூவுலகம்வருதல்

இந்திரவி மானமதை ஏவினார் இந்திரனார்
தோற வழகி துரோபதைக்கி முன்னேவந்து
சோதி வெளிச்சமதைத் துரோபதையுந் தான்பார்த்து
இந்திரவி மானமதை ஏந்திழையுந் தான்தொழுது

இந்திரவிமானத்தில் ஏறினாள்

இந்திரவி மானமதில் ஏறினாள் ராசகன்னி
இந்திரவி மானமது எழுந்திருந்து தான்பறந்து
முன்னை நடந்தாளே மூர்க்கமுள்ள ராசகன்னி
செய்யாறுந் தானடந்து சீதேவி ராசகன்னி

இந்திரவிமானம் ஆகாயவழியால் அத்தினாபுரம் வருதல்

அத்தினா புரம் நோக்கி ஆகாச வீதியிலே
நட்சேத்திர மாலைகளும் நாலுதிக்குஞ் சூரியனும்
இந்திரவி மானமது இலங்குவனந் தேசமெல்லாம்

உப்பரிகையில் துரோபதை வருவதைக்காணல்

உப்பரிகை மேடையிலே உயரவே தானேறி
வழிபாத்தி ருந்த மகுடமுடி வேந்த (ரவ)ர்
இந்தநல்ல தான்வெளிச்சம் ஏதென் றுரைப்பாரும்
ஏதோ தெரியாது இந்திரவி மானமது
வருகுது வென்று மன்னவர்க்குத் தானுரைத்தார்
பூமியில் விட்டகன்று பொன்னுலகில்ப் போவெனவே
தைலாட்டன்[164] வீத்திருக்கும் தங்கமணி மாளிகையில்
போனாள் துரோபதையும் புகழ்பெரிய மாமனிடம்.

தூதர்கள் ஓடி திருதராஷ்டிரனிடம் துரோபதை வருவதைக் கூறல்

வாசலிலே கொண்டுவந்து வச்சிருந்த சேனைதளம்
தூதுவர்க ளோடிவந்து துரைராசன் வேந்தன்முள்ளே
விழுந்து நமஸ்கரித்து விண்ணப்பஞ் செய்தார்கள்,
பாக்கியந்தி லேபிறந்த பாஞ்சால ராசகன்னி
ஐவருட தேவி அரமணைக்கி வாராள்காண்.
துலங்கு மணிவிளக்கு துரோபதையும் வாராள்காண்.

--
[164]. திருதராட்டிரன்
---------

திருதராஷ்டிரனை துரோபதை வணங்குதல்

திருதராட் சிதன்[165] கேட்டு சிந்தை மகிழ்ந்திருந்தான்.
வந்து புகுந்தாளே மாமனார் மாளிகையில்
சரணஞ் சரணமென்று தாள்பணிந்தாள் ராசகன்னி.
ஐவர் மணிவிளக்கே அருகிருந்து பார்த்ததில்லை.
துலங்கு மணிவிளக்கே திஷ்டியினால் கண்டதில்லை.
மல்லிகைப் பூவே மலர்ந்தசெந் தாமரையே.

துரோபதையிடம் திருதராஷ்டிரன் கூறல்

பாவி யிடத்தில் பத்தினியும் வந்ததென்ன?
பாரா திருக்கப் பாவியும்நா னானேனே!
குடுத்து வையாத கொடும்பாவி யானேனே!
அந்த மொழிகேட்டு ஆரணங்கு ராசகன்னி

துரோபதை திருமாலை வேண்டுதல்

ஆயிர நாகம் அதன்மேல் பள்ளிகொள்ளும்
செங்க (ண்)நெடு மாலுடைய தினக்கோல [166] முள்ளதெல்லாம்
சொல்லித் துதித்தாளே துரோபதையும் ராசகன்னி

திருமால் வரந் தரல்

அந்த மொழிகேட்டு அரிகேச வன்மகிழ்ந்து
கேட்ட வரங்கொடுத்து கிளிமொழியார் தங்கையர்க்கு

----
[165]. திரிதராட்டிரன் [166]. திகைகோல என்றுளது
----------

திருதராஷ்டிரனுக்குக் கண்தெரிய வேண்டுதல்

திஷ்ட்டித் தெரியவென்று[167] செப்பினாள் மாமயிலாள்.

அவன் கண் பெற்று வருந்துதல்

பிறவிக் குருடனுக்குப் பெருமா ளருளாலே
திஷ்ட்டி தெரிந்து தேன்மொழியைத் தான்பார்த்து
பஞ்சவர்கள் செய்ததெல்லாம் பாத்திருந்து நாள்தோறும்
அரக்குமணி மாளிகையில் அடக்கிவைத்துத் தீக்கொளுத்தி
கன்னி வனம்போய்க் காடுறைந்த நாள்முதலாய்
காஞ்ச தலையுங் கரிவேசந் தானாகி
உடுத்த பிடவையில்லை உண்டிருக்கச் சோறுமில்லை
கார்நெல் வயல்தனக்குக் களையெடுத்தாப் போலாச்சோ
கன்னி இளமயிலே[168] கண்ணாலே தான்பார்த்து
உப்பரிகை விட்டிறங்கி ஓட்டமாய் ஓடிவந்தான்.

நகரை அலங்கரித்தல்

தெருவீதி எல்லாஞ் சித்திரங்கள்[169] தானெழுதி
அம்பலத்து வீதியெல்லாம் அலங்காரச் சோடினையும்
வீதிக்கு வீதி விதமான தோரணங்கள்
மாட மலங்கரித்து மாளிகையு முண்டுபண்ணி
பூவா லலங்கரித்து பொன்னாஞ் சிகரம்வைத்து
இரத்தினசிங்கா[170] தனங்கள் சீராக்கித்[171] தான்போட்டு
தூணுக்குத் தூணு தூக்கா யிரமா (கு)ம்
அகிலுடனே சந்தணமும் அடவான சாம்பிராணி
வாசங்கள் கட்டிவைத்தான் வாசலெங்கும் தான்மணக்கும்.

துரியோதனன் மணக்கோலங் கொண்டு சிங்காதனத்தில் அமர்தல்

திரியோ திரனிருக்கச் சிங்கா தனம்போட்டு
மாலை முடியானும் மனக்கோலஞ் செய்துகொண்டு
சிங்கா தனத்தில் திரியோ திரனிருந்தான்.

---
[167]. திரியவென்று என்றுளது [168]. இளமயிலை [169]. சிறங்கள் என்றுள
[170]. ரதத்தின்சிங் என்றுளது [171]. ராக்கிந் என்றுளது
---------

துரோபதை வரல்

மாளிகைக்கு முன்னாக வந்தாள் துரோபதையும்
யந்த லலங்காரம் பத்தினியும் தான்பார்த்து
நீலக் கருங்குயிலான் நின்றாள் மரம்போலே.

துரியோதனன் கூறல்

அப்போது மன்னன் அவள்முகத்தைத் தான்பார்த்து
பூவிலு மெல்லடியான் பொற்பாதம் நோகாமல்[172]
வந்திருக்க வேணுமென்று மாளிகையு முண்டுபண்ணி
காயுங் கிழங்குங் கனிகளுமே யல்லாமல்
வேறே உறவுமில்லை விதியத்த பஞ்சவர்க்கு
கட்டின தாலிக்கிக் கடைமணியு மில்லாமல்
பூண்ட பணிதிக்கிப் புதுப்பணிதி யில்லாமல்
வெங்கான கத்தில் மிருகம்போல் பஞ்சவர்கள்
மண்ணும் மனையும் மனையாட்டி தானிழந்து
தேச மிழந்து சிறையிலடை பட்டார்கள்
இனிமேல் விடுவதில்லை இறந்திடுவார் பஞ்சவர்கள்.
தேசமெல்லாம் ஆளுந் திரியோ திரன்பெருமாள்

துரியோதனனுடனே சேர்ந்திருந்தால் வாழலாம் எனல்

மண்ணுக்கு மன்னன் மகுடக் கொடிவேந்தன்
திரியோ திரனுடனே சேர்ந்து கலந்திருந்தால்
தனக்குத் தான் வேணுமென்ற சவுபாக்கி யத்துடனே
இருக்கலாம் கண்டீரே ஏந்திழையே ராசகன்னி.

அதுகேட்டு துரோபதை சாபமிடல்

அந்த மொழிகேட்டு அபயமென்று சாபமிட்டான்.
முன்னே யிருந்தபடி முழுக்குரு டாக்கிவிட்டாள்.

---
[172]. நோக்காமல் என்றுளது
--------

துரியோதனனுடைய சபைக்கு வரல்

மாளிகையை விட்டு வந்தாளே கோரமுடன்.

துரியோதனன் மகிழ்தல்

அரவக் கொடிவேந்தன் அம்மான் முகநோக்கி
கும்பிட்ட தெய்வங் கூடி வருகுதம்மா
ஆதரித்த தெய்வம் அழைத்து வருகுதம்மா
பூவா லலங்கரித்துப் பொன்னாஞ் சிகரம்வைத்து
சிங்கா தனம்போட்டுத் திருவிளக்குந் தானேத்தி
வாசம் மணக்க வாசினைகள் தான்வீச
மல்லிகைப் பூவும் மரிக்கொழுந்து வாசினையும்
குங்குமங்கள் தூரிகளும் குமுகுமென்று தான்வீச
சந்தனவாசம் சாம்பிராணி வாசமுடன
ஏறி யிருந்து இலங்குமணி மாளிகையில்
சிங்கா தனமிருந்து திருவாக்கும் செப்புமென்றான்.

துரோபதை மறுமொழி கூறவில்லை.

வாய்திறக்க வில்லை மறுவார்த்தை சொல்லவில்லை
பொன்னின் முடிகவிழ்ந்து பெருவிரலைப் பார்த்துநின்ருள்.

துரியோதனன் மீண்டும் ஏசல்

ஏண்டி துரோபதை இத்தினை கோபமுண்டோ
ஐவருட வாழ்க்கை அறிஞ்சிருந்தும் கோபமென்ன
தேடி யெடுத்தாயே தேசத்துப் பஞ்சவரை
மண்ணும் மனையும் மனையாட்டி தானிழந்து
சந்திகள் தோறும் தலைபுழுத்த நாய்போலே
கானகத்தி லேதிரிந்து கரடிபுலி மான்கலைபோல்
காயுங் கிழங்குங் கனிகளுமே யல்லாமல்
வேறொன்று மில்லை விதியத்த பஞ்சவர்க்கு
திரும்பியரசாளவந்தால் தேசத்தில் பஞ்சவர்கள்
தேடிப் பிடித்துவந்து சிறையி லடைத்துவைத்து.
இட்ட விலங்கோடே இருக்கர (து) நிச்சயங்காண்
நீ-காஞ்ச தலையுங் கரிவேசந் தானாகி
பூண்ட பணிதிக்கிப் புதுப்பணிதி யில்லாமல்
ஆன அடியாளும் அரமனையு மில்லாமல்
பாடகந் தண்டை பணிச்சிலம்பு மில்லாமல்
வெள்ளைத் துயிலொழிய வேறுதுயி லில்லாமல்
மாலை[173] முடியாமல் மல்லிகைப்பூச் சூடாமல்
மாலை யிடுங்கழுத்தில் மஞ்சள்மய மில்லாமல்
கூடும் புருவத்தில் குளுந்தமை இல்லாமல்
கைம்பெண்ணைப்[174] போலே கவுழ்ந்திருக்கக் காரியமேன்.
வில்வளைத்து மாலையிட வேந்தரெல்லாம் வந்திருந்தார்
உன் - மாதா பிதாவிடத்தில் வந்துமே பெண்கேட்டு
வரிசை கொடுத்து வந்திருந்தேன் பந்தலிலே
அப்போதே சொன்னேன் ஆரணங்கே உந்தனுக்கு
பாஞ்சால ராசகன்னி பத்தினியைக் கொள்ளவென்று
கோடி திரவியமும் கொடுத்த வரிசையெல்லாம்
வாங்கி மனமகிழ்ந்து உன்-மா தாவுந் தானிருக்க
கலியாண வாசலிலே காத்திருந்த பேரையெல்லாம்
வில்லெடுக்கச் சொன்னாயே வேந்தர் பிலமறிய
எந்தனைப்போல் வல்லவர்கள் உண்டோதான் வையகத்தில்
திரியோ திரன்சேதி தேசமெல்லாந் தானறியும்
தலையி லிடித்தபின்பு தாழக் குனிந்தாயே.
---
[173]. மலை என்றுளது [174]. கைப்பெண்ணை என்றுளது
-------

தனக்கு மனைவியாயிருக்க வேண்டுதல்

கொண்டபெண்ணை விட்டாலும் குறிச்சபெண்ணைப் போக விடேன்.
எந்தனுக்குப் பாரியா யிருந்தியே யாமாகில்
வேலைக்குக் கோடி[175] வெள்ளாட்டி நான்விடுவேன்.
அடப்ப வரிசைக்கு அஞ்சுலெட்சம் பொன்விடுவேன்.
பூஷணங்களுள்ளதெல்லாம் பூட்டி யலங்கரிப்பேன் நான்தருவேன்
வேணுமென்ற பட்டுகளும் மெல்லியரே நான்தருவேன்
வந்து வெகுநேரம் மரம்போலே நின்றாயே
தெற்கெழுந்த சூரியனும் வடக்கெழுந்து வந்தாப் போல்[176]
தீய புகையுடனே[177] சிங்கா தனமிருந்து
வாயைத் திறந்தால் வாய்முத்து சிந்திடுமோ?
தாளைத் திறந்தாலே தங்க முதிர்ந்திடுமோ?
கடவுங் குயில்மொழியே உன் - குரலோசை கேளேனோ
மாடப் புறாவே உன் வாய்ப்பிறப்பைக் கேளேனே.
பொற்பாதம்[178] னோகாமல் வந்திருந்து என்மடியில்
தேனார் மொழியாளே உன் திருவழகைப்[179] பாரேனோ.

---
[175]. வேலைக் கொடி என்றுளது [176]. பொருந்துமாறில்லை
[177]. தீய்ப்புகையுடனே என்றுளது நீ புன்னகையுடனே எனில் பொருந்தும்
[178]. ரவர்பாதம் என்றுளது [179]. திரூவாள்க்கை என்றுளது
------

பூ, சந்தனத்தை விட்டெறிதல்

மல்லிகைப்பூச் செண்டெடுத்து மார்மேலே விட்டெறிந்தான்
சாந்து புனுகு சவ்வாது சந்தனமும்
வாரி யெறிந்தானே மார்மேலுந் தோள்மேலும்
மாலை யெறிந்தாளே மார்மேலே விட்டெறிந்தான்.

அவைகள் அவள் மேல் விழவில்லை

துரோபதையைத் தீண்டாமல் தூர விழுந்திடுமாம்
ஏறிந்ததொரு மாலையெல்லாம் எட்டி விழுந்ததென்ன
கிட்டே யடுத்துக் கிளிமொழியாள் முன்னே வந்து.

கீழே விழுந்தவற்றை எடுத்துவரச் சொல்லல்

கொடுத்திருந்த மாலையெல்லாம் எடுத்துவரச்சொன்னானே.

மீண்டும் அவள்மீது எறிதல்

மாலையெல்லாம் வாரியவள் மார்மேல் விட்டறிந்தான்.

மறுபடியும் அவள்மீது விழவில்லை

காத்தாய்ப் பறந்துதுகாண் கன்னியரைத் தீண்டாமல்.

அவன் வியத்தல்

மந்திரங்க ளுண்டோ மருந்துண்டோ உன்கையிலே?
மாயநரிக்கொம்பு வச்சு மிருக்குறியோ?
பேய்போலே நீயும் பெருநிலையாய் நின்றாயே.
கழுத்துக்களும் நோகாதோ காலுந்தான் வலியாதோ.

மானங்குலைப்பேன் எனல்

சூதாடித் தோத்தார்கள் தோகையரை எந்தனுக்கு
மடியைப் பிடித்துவந்து மானங் குலைப்பேனான்.

துரோபதை சினந்து கூறுதல்

வாயைத் திறந்தாளே மங்கை துரோபதையும்
ஐவருக்கும் தான் பயந்து அஞ்சிநின்றேன் இந்நேரம்
மதுவாரி[180] யாயிருந்தால் மச்சான் கொளுந்தனென்பேன்
மதுவாரி தப்பிவிட்டால் மட்டுமிஞ்சிப் பேசுவேனான்.
நாயேறும்[181] உன்மடியில் நாயகியும் ஏறுவனோ?
பேயேறும்[182] உன்மடியில் பெண்பெருமா ளேறுவேனோ?
பரையன் மடியில் பத்தினியும் ஏறுவேனோ?
உடனே வருந்தீங்கு உத்தமியைச் சொன்னாயே?
நூத்துவ ருடன்பிறந்த னொடியழகி துற்சடையாள்[183]
துய்ய மலற்கண்ணாள் துற்சடையா ளேறுவாளோ?
பணிதி வகையெல்லாம் பரிசமென்று தான்பூட்டி
ஆடை யுடுத்தி அலங்காரப் பூச்சூட்டி
உன் - கையாலே மங்கிலியம் கட்டி அழகுடனே
செண்பகப்பூச் சூட்டி சேர்ந்து கலந்திருந்து
உங்க ளுடன்பிறந்த உதிரங் குளுந்திருக்கும்
ஆகாப் பறையா; அளிபறையா சக்கிலியா!
மாடுதின்னுஞ் சக்கிலியா! மதியாமல் சொன்னாயே.
அருந்ததி யைப்பார்த்து அகந்தைகளைச் சொன்னாயே.
பத்தினியைப் பார்த்து பதங்குலையச் சொன்னாயே.
உத்தமியைப் பார்த்து உதாசினங்கள் சொன்னாயே
பல்லுக்கும் வாய்க்கும் பதக்குப் புழுச்சொரியும்
நாக்கழுகி மூக்குப்போய் நரகத்தில் நீகிடப்பாய்.

துரியோதனன் கர்ணனை ஏவுதல்

தேசத் தழகன் திரியோ திரன்கேட்டு
தள்ளடா கர்ணா தாடகையை அப்புறத்தில்.

---
[180]. மரியாதை [181]. நாயறும் என்றுளது [182]. பேயறும் என்றுளது
[183]. துச்சலை - துரியோதனனின் (கடைசி) ஒரே தங்கை
---------

கர்ணன் செயல்

பட்ட மரம்போலே பத்தினியைப் பார்த்துநின்றான்.
நின்றான் மரம்போலே நினவழிந்து கர்ணனுந்தான்.

துரியோதனன் கோபித்தல்

தேசத் தழகன் திரியோதிரன் கேட்டபின்பு
கோவித்துக் கண்சிவந்து கொத்தவனும் வாளெடுத்து
தர்மா புரிக்கித் தனிவேட்டை போகையிலே
கன்னி யிவளோடே கைகலந்தான் கள்ளனிவன்.
ஓடமலர்க் கண்ணாள்க்கு உள்ளா யிருந்தாயே.
பாவையரைப் பார்த்துப் பனை மரம்போல் நின்றாயே.

துச்சாசனனை அழைத்தல்

பேர்சொல்லித் தானழைத்துப் புகழ்பெரிய தம்பியரை
எதுத்தாரைச் சங்கரிக்கும் என்தம்பி வாள்வீரா
சேனை தளத்துடனே துட்டோ திரனும்வந்தான்
பூரிச் சிருவரும் பொல்லாத ராட்சதரும்
வந்து நிறைந்தார்கள் மகாராசன் கொலுவி (னி)லே.

மயிர்பிடித்துத் தள்ளச் சொல்லல்

ஏரிட்டுப் பார்த்து என்தம்பி வாள்வீரா
தேசத் தழகன் திரியோ திரன்சபையில்
மந்திரிமார் சேதிசொல்ல வாய்குழறி நிற்பாரும்
தேசத்து ராசாக்கள் சேதிசொல்லத் தான்பயந்து
அரச சபை[184] நடுவே அஞ்சாமல் வந்துநின்று
வார்த்தைக்கி வார்த்தை மறுவார்த்தை சொன்னதென்ன
மானக்கா ரியென்றால் வாயுந் திறப்பாளோ
வாயைக் கிழித்துஅவள் மானத்தைத் தான்குலைத்து
மயிரைப் பிடித்திழுத்து மல்லாக்கத் தள்ளுமென்றார்.

--
[184]. அபைசபை என்றுளது
----------

துரோபதையை இழுத்து வரல்

ஒருவர் மயிர்பிடிக்க ஒன்பதுபேர் பின்தள்ள
இருவர் மயிர்பிடிக்க இழுத்துவந்து அம்பலத்தில்
அரச சபைநடுவே ஆரணங்கைத் தள்ளிவந்து

துரோபதை திருமாலை வேண்டுதல்

வேர்த்து விறுவிறுத்து மின்னாள் துரோபதையும்
உள்ளம் நடுங்கி உடம்பு தடுமாறி
ஐவருக்கும் நான்பயந்தேன் ஆதிநா ராயணரே !

திருமால் புறப்படல்

ஆதிநா ராயணரும் அய்யோத்தி மானகரில்
மங்கைநல்லாள் சீதையுடன் மத்துமுள்ள கன்னியரும்
கோபஸ்தி' ரீகளுடன் கூடிவிளை யாடயிலே
கோவிந்தா வென்று கூவிமுறை யிட்டதுவும்
நாராசங் காச்சி நடுச்செவியில் விட்டாப்போல்
ஈயத்தைக் காச்சி இருசெவியில் விட்டாப்போல்
திடுக்கிட் டெழுந்தார் செங்கண்மா லந்நேரம்.

இலக்குமி தடுத்தல்

மங்கை நல்லாள் தான்தடுக்க மாயவரு மேதுரைப்பார்.

திருமால் முன்பு நடந்தது கூறல்

நானுமொரு நாளையிலே நாகரிக மோகினியாய்
நகரிவிளை யாடயிலே நல்ல பரமசிவன்
மச்சினரே வாருமென்று வலதுகையைத் தான்பிடித்தார்.

ஆகாயக் கன்னியர்கள் சதுரங்கமாட அழைத்தல்

அந்தநல்ல வேளையிலே ஆகாசக் கன்னியர்கள்
எங்களையும் கண்டு எதுக்கவே ஓடிவந்தார்.
சதுரங்க மாடுதற்கு சாமிகளே வாருமென்றார்.

பணயம் வைத்தல்.

கட்டும் பிடவை கணத்த பணிதியெல்லாம்
பந்தயங்கள் கூறிப் பார வனந்தனிலே
சந்தனச் சோலையிலே சதுரங்கம் போட்டிருக்கும்.

திருமால் சிவன் தோற்றல்

நாங்க ளிருபேரும் நலமாகத் தோத்துவிட்டோம்
ஆதிசிவ னோடி அய்விரலிக் காயொளிந்தார்[185]
ஆரு மறியாமல் அங்கே ஒளிந்திருந்தார்.

கன்னியர்கள் ணயப்பொருளைப் பறித்தல்

கன்னியர்க ளொன்பதுபேர் கலகலென்று ஒடிவந்து
பச்சை வடமும் பசும்பொன்னால் குண்டலமும்
அடங்கலுந் தானுரிந்தார் அந்தமுள்ள கன்னியர்கள்.
கட்டத் துணியுமொரு கச்சடமும்[186] இல்லா மல்
எல்லாம் உரிந்துகொண்டு எந்தனு[187] மப்போது

உடையற்றிருத்தல்

நிர்மாண சுரூபமாய் நிற்குமந்த வேளையிலே

துரோபதை துணி கொடுத்தாள்

தோற வழகி துரோபதையும் அப்போது
தேனார் மொழியாள் திருமஞ் சனமாடி

--
[185]. ஐவேலிக்காய் - இதன் விதை சிவலிங்கம் போல் இருந்பதைக் காணலாம்
[186]. கெகிபீனம் - கோவணம் [187]. சென்றது எனப் பொருந்தும்.
---------

கன்னிமா ரோடே கெங்கைக் கரையில்வந்தாள்
தண்ணீ(ரி)ல் நின்றுகொண்டு தங்கை என்றழைத்தேன்.
ஒருமுழத்தைத் தான்கிழித்து ஒண்டொடியுந் தான்போட்டாள்.

மானங் காத்தல்

அபிமானந் தான்மூடி அரமனைக்கி வந்து விட்டேன்.
இந்த உலகுதன்னில் ஏந்திழையைப் பார்க்க வென்று
என்னைத் தடுக்காதீர் ஏந்திழையைப் பார்க்க வென்று

திருமால் புறப்படல்

தோள்கள் நிறைந்த துளசிமணி மாலையுடன்
பச்சை நிறத்தாளும் பவளச்சல் லாவுடனே
கிஷ்ட்ண அவுதாரமுடன் கேசவனுந் தானெழுந்து
ஆடுங் கெருடனுடன் அரியதொரு வாகனத்தில்

துரியோதனன் சபையில் ஆகாயத்தில் அமர்ந்திருத்தல்

ஏறிப் பறந்தார் ஏந்திழையைக் காக்கவென்று
செங்கருட னேறி திரியோ திரன்சபையில்
ஆகாச மாக அலங்கரித்து வட்டமிட்டு
ஆகாச மாக அமர்ந்திருந்தார் மாயவனும்.

மீண்டும் துரோபதையைத் திட்டல்

சிங்கா தனத்தைவிட்டு திகழக் குதிந்திறங்கி
சொன்னபடி கேட்டால் துரோபதையே இப்போது

துரோபதை கூறல்

அல்லடா நீதான் அகந்தையைத் தான்பேசி
மானங் குலைத்து மதுவாரி செய்வேனென்று
இப்படி நீதான் பயமுறுத்து மப்போது
சொன்னபடி கேள்ப்பதில்லை சொல்லுகுரேன் கேளுநீ
ஆண்பெண் சகலருமே அவிமானந் தான்குலைந்து
ஆடுமாடு போலே அனைவோருந் தானும்
கையாலே மூடக் கவிழ்ந்திருப்பாய் கந்தலே நீ
-----------

துரியோதனன் துயிலுரியச் சொல்லல்

இன்னம் படும்பாடு இருக்குதென்று தானுரைத்தான்.
துயிலை உரிந்து சொன்னபடி கேள்க்கவைப்பேன்.
மானங் குலைத்து மாளிகையில் தள்ளுமென்றான்.

நூற்றொருவர் இச்செயலைக் கண்டித்தல்

நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொருவர் சூழ்ந்திருக்க
ஒடிவந்து தெண்டனிட்டு உத்திரங்கள் சொல்லுகிறார்.
ஐவருக்கும் தேவி அழியாத பத்தினியை
மானங் குலைத்தால் வையகத்துக் கேற்காது.
என்றுசொல்லக் கேட்டு எரியளவே கண்சிவந்து
மந்திர வாளுருவி மன்னவர்கள் தான்விலக்க
மன்னவனே சொன்னதுக்கு வாளுருவி வந்தாயே
நல்லதே யென்று நடந்தார் அரமனைக்கி,
ஒடி ஒளிந்தார்கள் உத்ததம்பி மார்களெல்லாம்.

திரோபதை கண்ணனை நினைத்துப் புலம்பல்

அரனே உனக்கபயம் ஆதிநா ராயுணரே!
ஆகாச வாணியம்மாள்! பூமாதேவி! நீர்கேளு.
பெண்ணாய்ப் பிறந்தேனோ! பூமியிலே நானொருத்தி.
ஆரும் படையாத அழகைப் படைத்தேனே!
ஆகாசத் தைப்பார்த்து அழுதானே ராசகன்னி

கண்ணனை விண்வெளியில் காணல்

கேசவனும் போக(க்) கெருடன்மேல் வீத்திருந்தார்.
கண்டு களிகூர்ந்து காயாம்பூ மேனியரே!
இனிமேல்க் கிலேசமில்லை என்பிறப்பே அண்ணாவி.

திரோபதை அஞ்சுதல்

மானங் குலைஞ்சுதென்றால் மண்ணி லிருப்பதில்லை,
திரியோ தி(ர)னுயிரைச் சிவலோக மேத்திவிப்பேன்.
பொன்னின் கரத்தாள் பூவாடை தானிறுக்கி
பாலை முடியாளும் மாராப்புத் தானிறுக்கி
---------------

துட்டோதிரனை விட்டு துகிலுரியச் செய்தல்

எங்குஞ் சமுத்திரம்போ லிருக்குஞ் சபைதனிலே
துட்டோ தரனைவிட்டுத் துயிலை யுரியுமென்றான்.

துயிலுரிதல்

உரிந்தான் துயிலை உத்தமிக்கு முன்னைவந்து.

கோவிந்தா என்றழைத்தல்

'கோவிந்தா' என்று கூப்பிட்டாள் கொம்பனையும்.

துகில்கள் மாளாமல் வாவென்று அலறுதல்

மாளாத் துயிலாய்[188] வரவென்று சாபமிட்டாள்.
ஐவ ரிருக்குமந்த ஆடை குலைத்ததுவும்
ஐவர்க் கபயமென்று அலரினாள் ராசகன்னி.
---
[188]. துகில் - ஆடை
-----------

ஐவரும் விலங்கை முறித்தல்

விலங்கை முறித்திடுவார் வெத்தியுள்ள ஐவருந்தான்.

துரோபதை புலம்பல்

பாரதமு மில்லை படைப்போரு மில்லையென்று
கேளாமல் சாபமிட்டு கெருடன்மேல் வீத்திருந்தார்.
தாது மணிமார்பன் தருமருக்கு கேள்க்கிலையோ
வெத்தி மதவானை வீரியர்க்குக் கேட்கிலையோ
வில்வளைத்து மாலையிட்ட விசையருக்குக் கேட்கிலையோ
சாமி நகுலருக்கும் சகாதேவ வீமருக்கும்
கேட்டு மிருப்பாரோ கேசவனார் மாயமிதோ,

விதவிதமாகச் சேலைகள் வருதல்

உரியத் துலையுதில்லை உத்தமியாள் பூவாடை
முத்திலங்கும் பூவாடை மூவா யிரமுழமரம்
பவளவர்ணப் பாவாடை பதினா யிரமுழமாம்
சூரிய காந்தி சோதிவிடும் பூவாடை
வெள்ளைத் துயிலாடை வெள்ளிச் சரிகைமின்னும்
சந்திர காந்தி சரிகையிட்ட பூவாடை
நீலவர்னப் பட்டாடை நெறிசிகப்பு ஆயிரமாம்
கோலவர்ணப் பட்டாடை குறுக்குவர்ணம் ஆயிரமாம்
பச்சைவர்ணப் பூவாடை பத்துலட்சம் பொன்பெறுமே
செங்கருடன் மேலிருந்து திஷ்ட்டித்தார் மாயவனார்.
உரியத் துலையுதில்லை உத்தமியாள் பூவாடை.

துச்சாதனன் திகைத்து விழுதல்

வேர்த்து விறுவிறுத்து வேந்தனுட தம்பியவன்,
பூவாடை வாசம் பொறுக்க முடியாமல்,
கொண்டாடும்[189] மன்னன் துட்டோ திரன்திகைத்து,
தேசத் தழகன் திருமுகத்தைத் தான்பார்த்து
மாயமோ மந்திரமோ மார்க்கமோ நானறியேன்.
விழுந்தான்துட் டோதிரனும் வேந்தன் சபைதனிலே.

துரியோதனன் வந்து அவனைத் தூக்குதல்

சிங்கா தனத்தைவிட்டுத் திகழக் குதிச்சிறங்கி
ஒடிவந்து தூக்கி உகந்து எடுத்தணைத்து
வேர்வை துடைத்து விசிறிகொண்டு தான்வீசி
மயக்கந் தெளிந்து மாளிகையில் வந்திருந்தான்,

துரியோதனன் வந்து துகிலுரிதல்

தேசத் தழகன் திரியோதிர னோடிவந்து
உரிஞ்சான் துயிலாடை உத்தமிக்கு முன்னைவந்து
சேர்ந்திருக்கும் பூப்போலே சிறுசிவப்பு வர்ணமுமாய்
முருக்கம் பூப்போலே மூணுலட்சம் பூவாடை
துத்திப்பூப் போலே துலையுதில்லை பூவாடை
ஆவாரம் பூப்போலே அழகுசிறு பூவாடை
அகத்திப்பூப் போலே அஞ்சுலட்சம் பூவாடை
ஓங்கி வளருதுகாண் உத்தமிக்குப் பூவாடை
மலைபோலே குமிந்துதுகாண் மாதுநல்லாள் பூவாடை
காரிழைக்கி முன்னேவந்து கத்திரிச்சான் பூவாடை
மறுதுயில் வளர்ந்துதுகாண் மாயவனார் சொல்ப்படிக்கு

--
[189]. திண்டாடும் எனல் பொருந்தும்
----------

துரியோதனன் மயங்குதல்

தோற வழகி துரோபதையைச் சுத்திவந்து
முத்து விரல்சுழட்டி மூக்குமேல் கையைவைத்து
மந்திரங்க ளுண்டோ மருந்துண்டோ உன்கையிலே
மாய நரிக்கொம்பு வச்சு மிருப்பியோ
சொக்குப் பொடிக்காரி சூதுகத்த கள்ளியிவள்
ஒருவர்க் கொருத்தியுண்டு உலகத்தி லுள்ளபடி.

'ஐவரே அன்றி சேணியரையும் மாலையிட்டாயோ’எனல்

ஐவருக்கும் முந்தி போட்டது மல்லாமல்
துரோபதை இப்போநெய்த சாலியனைக் காட்டிவிடு.
ஆளும் அறியாத அழகு புடவையெல்லாம்
நெய்து குடுத்தவனை நிச்சயமாய்க் காட்டிவிடு
அந்த மாப்பிளையும் பெண்ணும் மகிழ்ந்திருக்க வைப்பேனான்.
இந்தப் படியாக இடும்புகளைத் தான்பேசி

துரியோதனன், உரிந்த துகில்களை அரண்மனைக் கு அனுப்பினான்

குன்று மலைபோலே குமிந்த துயிலெல்லாம்
மடித்து முழம்போட்டு மன்னவனுந் தான்கிழித்து
ஆயிரம் மாட்டில் அழகாய்ப் பொதியேத்தி
காலாளுந் சேவகருங் கட்டிச் சுமந்தார்கள்
எடுக்கத் துலையாது ஏந்திழையாள் பூவாடை.
ஆனையின் மேலே அழகாய்ப் பொதியேத்தி

அந்தப்புரப் பெண்களுக்கு அனுப்புதல்

தம்பிமார் பெண்களுக்குச் சார்ந்தசன மத்தினையும்
ஆனந்த மார்பன் அரமனைக்கிப் பேரசுவிட்டான்,
மடித்து முழம்போட்டு மன்னவனுந் தான்கிழித்து[190]

---
[190]. மறுமுறை வந்துளது
---------

மந்திரிமார் முதலானோர்க்கும் கொடுத்தல்

ராசாக்கள் மந்திரிகள் நல்லதள கர்த்தருக்கும்
உத்தண்ட மார்பன் உடுவரையுந் தான்கொடுத்தான்
வெள்ளைப் புடவையெல்லாம் விரித்து முழம்போட்டு
உத்தண்ட மார்பன் உடனே குடைகுடுத்தான்[191].
சேனா பதிகள் செகவேந்த ரத்தினைக்கும்
குடுத்து கொலுவிருந்தான். கொத்தவனு மப்போது

வண்ணானோ என்று துரோபதை ஏசல்

ஏரிட்டுத் தான்பார்த்தாள் ஏந்திழைமா ராசகன்னி
கழுதை பொதிபெருக்குங் கசுமால வண்ணானோ!
ஆனையின் மேலே அழுக்கெடுக்கும் வண்ணானோ?
மாட்டி லழுக்கெடுக்கும் மதிகெட்ட வண்ணானோ!
கழுதை பொதியெடுக்கக் கண்ணாலே தான்பார்த்து
முட்டுப்[192] பிடவை வெளுக்கப் பிறந்தாயோ
வெள்ளாவி வைக்க விறகுகளுங் கட்டைகளும்
தேடிப் பொருக்கித் தெருவில் விராட்டிகளும்
வெள்ளாவி வைத்து வெளுக்கப் பிறந்தாயோ.
உளர்மண்[193] வேணுமென்று ஓட்டிக் கழுதையெல்லாம்
மாராப்புப் போட்டு மண்ணுஞ் சுமப்பாயோ.
கன்னிமுட்டுப் பெண்கள் கழித்த பிடவையெல்லாம்
குனிந்து வெளுக்குங் குருட்டுவண்ணான் தன்மகனோ.

புடவையின் உயர்வு கூறல்

இந்நாட்டுப் பட்டுப்போலே எண்ணாதே வண்ணானே.
பொன்னுலகில் வாழும் புண்ணியனார் என்மாமன்
வருந்தி யழைத்த மாணிக்கப் பச்சைவடம்
என்னுடைய பூவாடை இடைக்கிடை[194] தங்கமடா
வீணான சேலையைப்போல் வெளுக்காதே வண்ணானே,
நட்சத் திரமும் நவகோடி தேவர்களும்
சந்திரருஞ் சூரியஞ் சாபமிட்ட பூவாடை
ஆயிரம் நாகம் அதுமேலே பள்ளிகொள்ளும்
சீரங்க ராமர் சீர்த பூவாடை

----
[191]. கொடை கொடுத்தான் [192]. முட்டு-தீட்டு
[193]. உவர்மண் - து வெளுக்கப் பயன்பவேது
[194]. இழைக்கு இழை எனல் பொருந்தும்
-------

நன்றாய் வெளுத்துவந்தால் கூலியும், இல்லையேல்
அடியும் கொடுப்பேன் எனல்

இவ்விடத்துப் பட்டதுபோ லெண்ணாதே வண்ணானே
சந்திர காந்தி சரிகையுடன் பச்சைவர்னம்
சாதி பறச்சாதி சங்கைகெட்ட வண்ணானே
சத்தும் பயங்கரமாய்த் தான்வெளுத்து வாவென்று
நாமக் கொடிபோலே நன்றாய் வெளுத்துவந்தால்
நட்சத் திரம்போலே நன்றாய் வெளுத்துவந்தால்
சந்தோச மாகவுன்னைத் தர்மபுரிக் கியழைத்து
ஊரும் விடுதிகளும் உடமைகளும் நான்தருவேன்
வரிசை யுடனே மாசம்படி கொடுப்பேன்நான்.
தப்பிதமாய் வந்தியென்றால் தாரணியெல் லாமறிய
கன்னத்தி லேயநைந்து காலில் விலங்கிடுவேன்.
கழுத்தைத் திருகிக்[195]1 கழுதைமேல் போட்டிடுவேன்.
என்று துரோபதையும் இவ்வார்த்தை தானுரைக்க

துரியோதனன் கோபித்தல்

தேசத் தழகன் திரியோ திரன்கேட்டு
வண்ணாரத் தேவியரே மறுவார்த்தை பேசாமல்
ஆனைவண்ணான் தேவியரே அழுக்கொடுக்க வாடி நீ
கொழுந்தனென்று பாராமல் கோத்திரங்கள் சொன்னாயே[196]
என்முகத்தைப் பாராமல் இழுக்குகளைச் சொன்னாயே
பெண்பாவ மென்று பொறுத்திருந்தே னிந்நேரம்
மிஞ்சிமிஞ்சிப் பேசாதே வெள்ளாட்டி இச்சபையில்
கண்டதில்லை கேட்டதில்லை கடல்சூழ்ந்த வையகத்தில்
கணவ னொருவனுண்டு[197] கற்புடைய மங்கையர்க்கு
ஐவர் குடிகொடுக்க அஞ்சுபேர் வேணுமென்றாள்.
அத்தினையும் பத்தாமல் அவனியெல்லாந் தான்திரிந்தாள்.

நெய்வாரைக் காட்டிவிடு, இல்லையேல் சிறையிலடைப்பேன் எனல்

மாய நரிக்கொம்பு வச்சிருந்த கன்னியிவள்
கொங்கு வளநாட்டில் கோலியனைத்[198] தான்கூடி
எட்டுலட்சங் கோலியனை இடையி லொளித்துவைத்தாய்
மந்திரங்க ளுண்டு மருந்தறியாள் கன்னியிவள்.
தந்திரத்தி னாலே சாலியனை வைத்திருந்து
மந்திரத்தி னாலே வளந்ததுகாண் பூவாடை
கோவிந்தா வென்று கோலியனைத் தானழைத்து
நீலப் புடவையுடன் நிசமாய்த் தான்நெய்து
நெய்யுந் தலத்தை நிசமாயகக் காட்டிவிடு[199]
கோடி திரவியமும் கொடுப்பேனான் விலையாக
கோலியனும் நீயும் கூடி விளையாட
வீடும் விடுதிகளும் வேண்டுந் தனங்கொடுத்து
மகிழ்ச்சி யுடனே வாழ்ந்திருக்க வைப்பேனான்.
பட்டணத்துத் தேவடியாள் பணம்பறிக்குங் கள்ளியிவள்.
என்மேலே குத்தமில்லை ஈஸ்பரனார் தானறியும்
ஐவரைப் போலே அடைப்பேன் சிறைவீட்டில்.

---
[195]. கந்தை திருடி என்றுளது [196]. சொன்னாஏ என்றுளது
[197]. னொவனாண்டு என்றுளது [198]. கோலியர் - நெய்வோர்
[199]. கட்டிவிடு என்றுளது
----------------

துரோபதை, துச்சலையையும், காந்தாரியையும் திட்டுதல்

தோரு வழகி துரோபதையுந் தான்கேட்டு
பத்தினியைப் பார்த்து இவ்வார்த்தை சொன்னாயே.
உத்தமியைப் பார்த்துஇந்த உதாசினங்கள் சொன்னாயே.
பல்லுக்கும் வாய்க்கும் பதக்குப் புழுச்சொரியும்
நாக்குக்கும் மூக்குக்கும் நடுவே புழுச்சொரியும்
தொண்டை புழுத்துச் செவியில் சொரியுமடா.
மண்டை புழுத்து வாயில் சொரியுமடா.
கருத்த உடம்பில் காக்காய் புடுங்குமடா.
சிவத்த உடம்பில் தீப்பிடிக்க நாளாச்சோ
தொந்தி வயத்தில் தீப்பிடிக்க நாளாச்சோ,
அந்திக் கொலுவும் ஆசாரச் சாவடியும்,
அம்பல வீதி அலங்கார மாளிகையும்,
பகலே நரியோடி பாழ்கிடக்க நாளாச்சோ.
உள்ளே அழுக்கிருக்க உத்தமியைச் சொன்னாயே.
உங்க ளுடன்பிறந்தாள் ஒருத்தியுண்டு தேவடியால்
அவள்சேதி சொல்ல அஞ்சுநாள்ச் செல்லுமடா.

காந்தாரியைப் பழித்தல்

நூத்துவரைப் பெத்த நொடியழகி காந்தாரி.
கொள்ளாக் குமரி குடிகெடுத்த காந்தாரி.
வெட்டியிலே கண்டவரை எட்டி மடிபிடிப்பாள்.
மஞ்சள் கழுத்தோடே மல்லிகைப்பூத் தான்சூடி
தேவடியாள் போலே திரிவாளே சந்தியிலே
மந்தையிலே கண்டவரை வழிமறித்துத் தான்மயக்கி
காசு பறிக்குங் காசுமால வெள்ளாட்டி.

காந்தாரியின் திருமணம் பற்றிக் கூறுதல்

கொள்வாரு மில்லாமல் குமரிருந்தாள்[200] காந்தாரி.
பொல்லாச் சவனமிட்டுப் போவார்க ளெல்லோரும்
காந்தாரியைக் கேட்கவந்த தார்வேந்த ரெல்லோரும்
தையலுக்கும் மன்னனுக்குஞ் சாஷ்திரங்கள் தான்பார்த்து
தாலிகட்டிக் கொண்டால் தலைவெடித்துப் போகுமென்று
கண்டு பயந்து களைத்தபேர்கள்[201] எத்தினை பேர்.
ஓடிப் பிழைத்து ஒதுங்கினபேர்' எத்தினை பேர்.

காந்தாரி திருமணமில்லாதிருத்தல்

அஞ்சிப் பயந்து அவர்கள்கொள்ள மாட்டாமல்
கண்ணாலம் பண்ணாமல் கட்டழகி தானிருந்தாள்.
கொங்கைக் குமரி குடிகேடி காந்தாரி.

16 வருடம் தவசிருத்தல்

பதினாறு நல்வருஷம் பார்த் தவசிருந்தாள்.'
அப்படியுங் கொள்ளாமல் அருஞ்சிறையில் தானிருந்தான்.
வாசலிலே கண்டவரை மடிபிடித்துத் தானிழுத்து
பலஸ்திரி களைப்போலே பண்மும் மிகவாங்கி
கன்னி கழியாமல் கட்டழகி தானிருந்தாள்.

ஆட்டுக்கிடாயை மணக்க, அது மாண்டது

வளத்த கிடாய்தன்னை மணக்கோலஞ் செய்து கொண்
மாடப்பொன் மங்கிலியம் மாதுபக்கல் தன்னில்வைத்து
காரிழையான் தன்கழுத்தில் கட்டினார் மங்கிலியம்

----
[200]. குமாரியாயிருந்தாள் போலும் [201]. கனைத்தோ கள் என்றுனது
---------

மணக்கோல மானகிடாய் மண்டியிட்டுத் தானெழுந்து
ஆட்டுக் கிடாய்க்காலும் அவள்கழுத்தில் பட்டவுடன்
மண்கோல மானகிடாய் மண்டை வெடிச்சுடனே

திருதராஷ்டிரனை கூட வைத்து ஒப்புக்குத் தாலிகட்டுதல்

குருடன்திரித ராட்சிதனைக் கூடக் கொலுவில்வைத்து
ஒப்புக்குத் தாலிகட்டி ஒப்பித்து வைத்தார்கள்
கொண்ட புருஷனென்று குறிப்புக்குப் பேருமிட்டு
மாலையிட்டான் மன்னனென்று மாளிகையில் வந்திருந்தாள்.

திருதராஷ்டிரனுடனே வாழ்தல்

திரிதராட் சிதனுடனே சேந்திருந்து மாளிகையில்
வாழ்ந்து நெடுநாள் மைந்தர்களு மில்லாமல்
அன்பத் தொருவீதி அடங்கலுந் தேடியுண்டு

3000 பேர்க்கு முந்தானி தானிடல்

மூவா யிரம்பேர்க்கு முந்தானி தான்போட்டாள்.
நாலா யிரம்பேர்க்கு நடுவே படுத்திருந்து
அப்போது பிள்ளைகளை அறியாளே காந்தாரி.

குந்திக்குக் குழந்தை பிறந்தது

காணிக்கிப் புத்திரனைப் பெத்தெடுத்தாள் குந்தியம்மாள்
தாயாதி வமுசத்தில் தம்பிமார் தான்பிறந்தார்.

காந்தாரி அடிவயித்தை பிடித்தல்

அப்போது காந்தாரி ஆவல் பொருமலுமாய்
பெரியங் கரியிலே பிள்ளைகுர லில்லா மல்
அடுக்களை போயிருந்து அடிவயத்தி லேபிடித்தாள்.
--------

இரத்தப் பெருக்கு

ஆறுகடல் கொள்ளாமல் அகத்தியமாத்[202] தானோட
ஆத்தங் கரைதனிலே அஞ்சானீ ராடிவந்தாள்.

வியாசர் விசாரித்தல்

கனத்த பிலாவரிஷி[203] கன்னியரைத் தான்பார்த்து
என்ன கவலையென்று இன்பமுடன் தான் கேழ்க்க
சொன்னாள் கவலையெல்லாம் தோத்தமுள்ள மாமுனிக்கி[204].

வியாசரை மருவி நூற்றொருவர் பிறத்தல்

அந்தப் பிலாவரிஷி ஆரணங்கைத் தான்தழுவி
கன்னியரைத் தானழைத்துக் கடுகி மயலாகி
இருவருங் கூடி இருந்துவெகு நேரம்மட்டும்
மானங் கறுக்கி மழைபொழிந்தாப்[205] போலாச்சே
நூறு கலையம் ஒருநொடியில் வரவழைத்து
பண்ணிகள் தானும் பலகுட்டி போட்டாப்போல்
நூத்துவரும் பொண்ணும் நொடியில் பிறந்தியளே
அவுசாரி மக்களுக்கு ஆண்மையென்ன வார்த்தையென்ன.

வியாசரிஷி மக்கள்

மஞ்சனூல் பட்டுஉன் மாதா தரிச்சிருக்க
நூத்தொருவ ரென்று பேரிட் டவர்போனார்
பிலாவ ரிஷிமகனே பேச்சுமிஞ்சிப் பேசாதே.
நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொருவர் பெண்டுகளும்

எல்லோரும் மலடு

ஆண்மலடு பெண்மலடு அத்தினையுந் தான்மலடு
ராசாக்கள் மந்திரிகள் ராணுவத்தோ ரெல்லோரும்
சேர மலடானார் நீ செய்ததொரு பாதகத்தால்
உன் - வாயில் கறுப்பிருக்க வாய்மதங்கள் பேசாதே.

--------
[202].ரத்தமாய் எனல் பொருந்தும் [203]. வியாச முனிவர்
[204]. மாமுக்கி என்றுளது [205].மனழிந்தாப் என்றுனது
---------

பெண்களை சபையில் மசனங் குலைக்க மாட்டார்கள்

உன்-வீசை[206] கறுத்திருக்க மிஞ்சிமிஞ்சிப் -பேசாதே
உன்-தம்பிமார் பெண்டுகளைச் சபையிலே கொண்டுவந்து
மானங் குலைப்பாரோ வையகத்து ராசாக்கள்
பிறப்பி லிருப்பா(ரோ) பின்வ ரிஷிமகனே
இட்டாய் நெருப்பை இழுக்குகளைப் பேசாதே
மட்டுமிஞ்சிப் பேசாதே மதுவாரி யாய்ப்பேசி
அண்ணன்தம்பி பெண்டுகள் உனக்கும் அவுசாரி.

குருகுலத் தரசர்கள் பாண்டவர்களே! எனல்

குருகுலத்து ராசாக்கள் குந்திமக்கள் ஐவருந்தான்
பீலாவ ரிஷிமகனே பூமியுனக் கில்லையடா
எட்டா மலர்க்காசை யிருக்கும்[207] உரா சேந்திரனும்,.
எட்டிப் பிடித்தாலும் ஏணிவைத்துப் பார்த்தாலும்
கிட்டாது கண்டாயே கேடு வருகுதுகாண்.

துரோபதை திட்டுதல், புத்தி கூறுதல்

வாய்மதங்கள் பேசினால் உன்-வாயைக் கிழிப்பேனான்
சாதிப் பிறப்பு சங்கைகெட்ட சக்கி (லி)யா
ஈனாப்[208] பறையா இறைச்சிதின்னும் சக்கிலியா
கோலியனைக் கண்டாலும் குறுக்கே வழிமரிப்பாள்
சுபணம் வாங்கு(ம்) காந்தாரி உன்மாதா.
அவுசாரி பட்டணமும் உன்-ஆட்சியுட சேதிகளும்
சபையில் கடைபோட்டு சவுரியத்தை நான்குலைப்பேன்.
உன்- ஆட்சியுட சேதியெல்லாம் அம்பலமு மேத்திவைப்
பேன். லெச்சை கெட்டுப் போகாதே லெட்சணத்தோ டேயிரு
தப்பிப் பிழையடா சாதிகெட்ட சக்கிலியா.
இந்தப்படி புத்திசொல்லி ஏகிவிட்டாள் ராசகன்னி.

---
[206]. மீசை [207].மலற்காசமிருக்கும் என்றுளது.
[208]. ஈனப் எனல் பொருந்தும்.
----------

இச்செய்தியை துரியோதனன் நிரூபிக்கச் சொல்லல்

அந்தப் படிக்கிமிப்போ அத்தாட்சி பண்ணாவிட்டால்
ஆக்கினைகள் செய்து.. அறையில் அடைத்துவைப்பேன்
அம்பலத்து வீதியெல்லாம் அடித்துத் துயிலுரிந்து
வீதிக்கி வீதி விளையாட்டுப் பார்ப்பேனான்.

'உன் தாயைக் கேள்' என்று துரோபதை கூறுதல்

அந்த மொழிகேட்டு ஆரணங்கும் ராசகன்னி
உன்னாச்சி யிருக்குமந்த அரமணையில் சென்றேகி
மானிபக் - காரனென்றால் உன்-மாதாவைத் தாள்கேளு
நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொருவர் பிள்ளைகளை
ஆருக்குப் பெத்தாய் நீ சூச்சியென்று தான்கேட்டு
பெத்த வதையைப் பிரியமுடன்[209] நீகேட்டு
மறுபடி என்னுடனே வாய்திறந்து பேசுமென்றாள்[210]

தாயிடம் செல்லல்

அப்போது மன்னவனும் அதிகோபங் கொண்டெழுந்து
ஆனந்த மார்பன் அரமனையில் போய்ப்புகுந்து
மாதாவின் பாதம் மலர்தூவித் தெண்டனிட்டு

காந்தாரி உபசரித்தல்

பூரித்து மனமகிழ்ந்து பொற்கொடியாள் காந்தாரி
வாயார வாழ்த்தி வலதுகையால் தானணைத்து
தங்க மினுமினுங்க சதலாத்துப் போர்வையிலே
இருத்தி மகனை எந்திழையாள் முத்தமிட்டு
அரவக் கொடிவேந்தன் ஆருத் துயரமுடன்
வாழ்த்தி எடுத்த வகைபோதும் மாதாவே.

'எங்களை யாவருக்குப் பெற்றாய்' எனக் கேட்டல்

நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொருவர் பிள்ளைகளை
ஆருக்குப் பெத்தாய்நீ ஆச்சியரே என்றுரைத்தான்.
இடும்பன்திரி யோதிரனும் இப்படியேதான் கேட்டான்.

----
[219]. பிரிஷமுடன் என்றுளது [220]. மென்றால் என்றுளது
--------

காந்தாரி கூறுதல்

காந்தாரி நாயகமும் காதினால் தான்கேட்டு
உள்ளபடி சொல்லுகுறேன் உன்னாணை என்மகனே
கோவித்துக் கண்சிவந்து கோலக் கிளிமொழியும்
ஐவரையுங் கொண்டுவந்து அறையில் அடைத்துவை த்து
சும்மா யிருந்தவளைத் துயிலை யுரிந்தாய் நீ
அம்பல மெல்லாம் அரங்கேத்தி வைத்தாளோ
அவள்சொல்லை முன்னே அறியாயோ மாபாவி.
மாபாவி நீதான், மாலையிட்ட சேதியைக்கேள்
வாக்கப் படாமல் மலர்ந்தபூச் சூடாமல்
கொள்ளாக் குமரிருந்தேன் கோத்திரத்தில் நானொருத்தி
தகப்பன்திரித ராட்சிதற்குத் தாரம் முடிந்தபின்பு
குந்தமா தேவியரும் குமாரர்களைப் பெற்றெடுத்தாள்.
தாயாதி வங்கிஷத்தில் தம்பிமார் தான்பிறந்தார்
பட்டமு மாளுதற்குப் பாலகரு மில்லாமல்
ஆதின்றன்[221] தனக்கு அரசுபிள்ளை யில்லாமல்
அடிவயத்தில் குத்தி அலறி விழுந்தழுதேன்.

வியாச முனிவருக்குப் பிறந்தீர்கள் எனல்

ஆன குரல்கேட்டு ஆன பிலாவிரிஷி
இன்ப முடனே எழுந்திருந்து ஓடிவந்து[222]
சொன்னேன் துயரமெல்லாம் தோத்தமுள்ள மாமுனிக்கி
கண்டு மயலாகிக் காவலனார் தான்கூடி
பிரிய முடன் தழுவிப் பெத்தேண்டா[223] நூத்துவரை
பெத்து வளர்த்துநான் பூலோக மாளுகுறீர்.
செம்பொன் முடிதரித்து சிங்கா தனமிருந்தீர்.
பொன்னின் முடிசூட்டிப் பூமியர சாளவந்தீர்.
நீங்களு மில்லாட்டால் நிலையரசு மில்லையென்றாள்.
பிலாவ ரிஷிபோட்ட பூனூல் பட்டுகளும்
என்மகனே என்கழுத்தில் இந்தா யிருக்குதென்றாள்.
விலாவி ரிஷிகொடுத்த பிள்ளையல்லோ நூத்துவரும்
என்று சொல்லி காந்தாரி இவ்வார்த்தை தானுரைக்க.

---
[221]. வந்தார் எனல் பொருந்தும் [222]. = ?
[223]. பெத்தாண்டா என்றுளது
------------

துரியோதனன் கோபத்துடன் சபைக்கு வருதல்

சீறி எழுந்திருந்து திருமுகங்கள் தான்கருக்கி
தோறா வழகி துரோபதையாள் சொன்னதெல்லாம்
நிசமாய் இருந்துதடி நீமாலை யிட்டதுவும்
ஆனந்த மார்பன் அம்பலத்தில் வந்திருந்தான்.

துரோபதை துரியோதனனை வினவுதல்

ஏரிட்டுப் பார்த்து ஈஸ்பரியும் ராசகன்னி
மாலை முடியானே உன் மாதாவைக் கேட்டாயோ
சொன்ன தொருவார்த்தை செவிகொடுத்துக் கேட்டாயே?
உங்கள் பிறப்பை நீ உத்திருந்து கேட்டாயோ?

துரியோதனன் வியாசமுனிவரை அழைத்து நிரூபிக்கச் சொன்னான்

தேசத் தழகன் திரியோ திரன் கேட்டு
பிலாவரிஷி மகனென்று பிலங்குறையச் சொன்னாயே!
அம்பலத்தி லிப்போது அத்தாட்சி பண்ணாவிட்டால்
அம்பலத்து வீதியெல்லாம் அடித்துத் துயிலுரிவேன்.
உன்னைப்போல் பெண்டுகளை நீசுமக்க நானடிப்பேன்,
பெண்பாவ மென்று பொறுத்திருந்தே னின்நேரம்.

துரியோதனன் யாவரையும் அழைத்தல்

சிங்கா தனத்தை விட்டுத் திகழக் குதிச்சிறங்கி
சேனா பதிகள் செகவேந்தர் உள்ளதெல்லாம்
கண்காட்டித் தானழைத்தான் சேடன்திரி யோதிரனும்
வந்து நிறைந்தார்கள் மகாகோடி வீரியர்கள்.
--------

துரோபதையாள் வியாசரைக் காட்டுகிறேன் எனல்

தோற வழகி துரோபதையும் கூறுகிறாள்
அண்ணமாரே தம்பிமாரே அருகிருந்த சேவுகரே!
ராசாக்கள் மந்திரிகள் நாடும் அறியாதோ
பெத்து வளத்த பிதாவையும் காட்டுகிறேன்.
திரிதராட் சிதனுக்கிளைய சித்தப்பனைக் காட்டுகிறேன்
ஏழக்கு ரோணிபடை இருக்கும் சபைதனிலே
அத்தாட்சி பண்ண அழைத்துவந்து நானவரை
தாடிகள் வீசைகளைத் தானே சிரைக்கவைப்பேன்
கோச வளநாட்டில் குருக்கள் வலட்டுவரும்[224]
செல்வக் குடுமி (சிரைக்கவைக்கப் பார்ப்பேனான்)
மொட்டை யடித்து முகத்தி லுமியவைப்பேன். தமிழ்
பார்மன்னர் ராசாக்கள் பார்த்துச் சிரிக்கவைப்பேன்.
பள்ளர் பறையரெல்லாம்[225] பார்த்துச் சிரிக்கவைப்பேன்.
என்னைப்போல் பெண்டுகளை எடுத்துச் சுமக்கவைப்பேன்.
சபைகூடும் அம்பலத்தில் தலைசாய்க்க[226] வைப்பேனான்.
ஆதித்த னைத்தொழுதாள் அபிஷேக பத்தினியும்
வேத விநாயகரை விழுந்து நமஸ்கரித்து
ஆலா[227] விருட்ச மதுமேலே பள்ளிகொள்ளும்
சீரங்க ராமர் திருத்தாள் சரணமென்றாள்.
ஆகாச கங்கையுடன் ஆன பிலாமரமும்
ஆரிய விநாயகரும் அம்பலத்தில் தான்வரவும்
வேணுமென்று சொல்லி நின்றாள் துரோபதையும்
மேகப் பதியிலேதான் வீத்திருக்கும் மேக்வர்ணா
சரணம் சரணமென்று சாஷ்டாங்கம் தெண்டனிட்டு

வியாசர் வருதல்

மாது தொழுதுநிற்க வந்தான் பிலாவரிஷி.
பட்ட மரங்களெல்லாம் பச்சை துளுரோடி
காயோட பிஞ்சோட கனத்த பழமோட்
நூலாய்க் சுடுந்திரளாய் நூத்தொருவர் மக்களுக்கு,
நூறு பிலாப்பழமும் நொடிக்குமுன்னே தான்பறித்து
ஆகாச கங்கையுடன் ஆன பிலாவரிஷி
விநாயகனார் தன்னுடனே வேந்தன் சபைதனிலே

----------
[224].= ? [225]. பல்லற் பரையறெல்லாம் என்றுளது
[226]. தளை தாய்க்க என்றுளது [227]. ஆளா என்றுளது
---------

வியாசர் துரியோதனனைத் தழுவுதல்

வந்து பிலாவரிஷி மன்னன்திரி யோதிரனைத்
தழுவி உறவாடி தானிருந்தார் மாமுனியும்.

வியாசர் வரலாறு கூறுதல்

வந்திருந்து மாமுனியும் வாய்திறந்து நூத்துவர்க்கு
பூலோக மாளுதற்குப் புத்திரனு மில்லாமல்
ஒன்னாச்சி[228] முன்னொருநாள் என்னிடத்தில் வந்திருந்து
மாயவனார் வரங்கொடுத்து மருவியே நானணைந்து

அவர் துரோபதையிடம் கூறுதல்

எனக்குப் பிறந்தவர்கள் ஏந்திழையே நூத்துவர்கள்
மைந்தரைப் பெத்தபின்பு வாரதில்லை என்னிடத்தில்
தகப்பனா ரென்கிறது சத்துமிவர் கண்டதில்லை
நூலாய் ய்க் கடுந்திரளாய் நூத்தொருவர் மக்களுக்கு
ஆளுக் கொருபலத்தை அவர்கள்கையி லேகொடுத்து
கைலாசம் போலிருந்தார்[229] கணபதியும் மாமுனியும்.

துரோபதை துரியோதனனைப் பரிகசித்தல்

கிழக்கெழுந்த சூரியனும் மேற்கெழுந்து வந்தாப்போல்
நின்றாள் துரோபதையும் நீலவிழி தான் சிவந்து
ஏரிட்டுத் தான்பார்த்தாள் ஏந்திழையும் ராசகன்னி
நாயே நீ சிங்காதனத்தில் நடுவிருந்து பேசாதே
குருகுலத்து[230] ராசாக்கள் கோவித்துக் கொள்வார்கள்
உப்புடனே சோறு உயிருடனே செத்தாயோ
திருதராட்சி தனுக்கிளைய சித்தப்பனைக் கண்டாயோ
முத்துமுடி ராசாக்கள் முன்னிருந்து பேசவெக்கம்
ராசாக்கள் மந்திரிகள் நாடும் அரிந்தாரே.

---
[228]. உன் தாயார் [229]. உன் தாயார் [230]. குருக்குளத்து
----------------

துரோணர் வந்தார்

செல்லாத பேர்பெரிய[231] துரோணரும் ஓடிவந்து
பார்ப்பதியே தாயே பாஞ்சால நாயகமே
அழிபரையன் சக்கிலியன் அருந்ததியைக் கொண்டுவந்து
மாதேவி பத்தினியாள் மானம் அறிவானோ
இந்தச் சபைதனிலே இம்மாத்தி ரம்போது(ம்).

வியாசரை அனுப்புமாறு துரோபதையைக் கேட்டுக் கொண்டார்

வருந்தி வரங்கேட்டார் மன்னர்[232] துரோணருமே.

துரோபதை வியாசரைப் போகச் சொல்லல்

தோறா வழகி துரோபதையும் ராசகன்னி
அம்மான் பிலாவிரிஷி அழைத்தவுடன் வந்திரே
நீதியுடன் உங்கள் நிலைக்கி எழுந்தருளும்
உத்த துணையாக உதவினதே போதுமையா
உங்கள் பதிக்கி உத்தமரே போமெனவே
விநாயகனைக் கைதொழுது நின்றாள் துரோபதையும்.
கெங்கைபிலா விரிஷியும் கிருபை விநாயகரும்
இருந்த இடந்தனிலே இயல்பாய் அனுப்பிவிட்டு

துரோணர் துரியோதனனுக்குக் கூறுதல்

கொத்தவரும் வீரியரும் குருக்கள் துரோணருந்தான்
தேசத் தழகன் திரியோ திரன்கேளும்
(தா) ர முடியசனே தம்பிமார் தேவியரை
அபிமான மில்லாமல் அம்பலத்தில் தள்ளிவந்து
மானங் குலைத்தாயே மானுபத்தைக்[233] கண்டாயே.
அத்தி புரமிழ்ந்து அரசுநிலை தானிருந்து
போகுதடா உன்வாழ்க்கை புத்திகெட்ட மா பாவி,

----
[231]. பேருகள் பெரிய என்றுளது [232]. குருவாயிற்றே! [233]. =?
---------

அதற்குத் துரியோதனன் துரோணரைத் திட்டுதல்

தேசத் தழகன் திரியோ திரன்கேட்டு
குருக்களென்று சொல்லிக் கும்பிடுவா ருன்னையுந்தான்
தேடுந் திரவியத்தைத் திருவடியில் வைத்திடுவேன்.
நீரெங்கள் மாணுபத்தைப் பேசவும் நீதியல்ல
வேறொருவ ரானாக்கால் வெட்டுவேன் அஞ்சுதுண்டாய்.

துரோணர் அந்தப்புரம் செல்லுதல்

ஆதி குருவெழுந்து அரமணையில் போய்ப்புகுந்தார்:

அந்தப்புறப் பெண்கள், துயிலுரிந்த புடவைகளைக் .ட்டியிருந்தார்கள்

நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொருவர் பெண்டுகளும்
அவர்கள் துயிலுரிந்து அருந்ததியாள் பட்டுடுத்தி.
ஏகாந்த மாக எல்லோருந தானடந்து
பெருந்திருவாள் மாளிகையில் போயிருந்து எல்லோரும்
ஐவரையுங் கொண்டுவந்து அறையில் அடைத்துவைத்து[234]
துரோபதையைக் கொண்டுவந்து துயிலை யுரிந்தார்கள்.
மாளாத்[235] துயிலாய் வளந்துது பூவாடை
மடித்து முழம்போட்டு மன்னவனுந் தான்மகிழ்ந்து
எங்கள் அரமணைக்கி ஏழுலெட்சம் பூவாடை
கொத்துமுடி மன்னவர்கள் கொடுத்து அனுப்பிவிட்டார்.

துரோபதையையும் ஒரு புடவையைக் கட்டிக்கொண்டு வரச் சொல்லுதல்

நல்ல புடவைகட்டி நாயகியாள் பார்த்துவர
நீயுமொரு பட்டுடுத்தி நேரிழையை வாருமென்றாள்.

துரோபதை சினந்து கூறுதல், தீங்கு வரும் எனல்

பேறு அழகி பெருந்திருவாள் தான்கேட்டு
நெத்திப் புருவம்ரெண்டும் நெருப்புப் பொறிபறக்க
(ஆண்) மை குலையாதோ ஆனமுகங் குன்றாதோ
கொடுத்த பிடவைதன்னைக் கொம்பனையுந் தான்வாங்கி
பொற்கொடியாள் பூவாடை பொறுக்குமோ உங்களுக்கு
நெருப்பில் பிறந்தபட்டு நிற்குமோ உங்களுக்கு
மருப்படாப் பத்தினியை மன்னவர்கள் தேவியரை
பஞ்சவர்கள் பத்தினியை பைங்கிளியைத் தள்ளிவந்து
மாபாவி சண்டாளன் மானங் குலைத்தானோ.
உங்களுக்குத் தீங்கு உடனே வரு(கு) மடி.

-----
[234]. இவ்வரி 2 முறை எழுதப்பட்டுள்ளது
[235]. மாறாய் து என்றுளது
--------

நூற்றொருவர் மனைவியர் வெளியில் செல்லல்

பேறா வழகி பெருந்திருவா ளீதுரைக்கக்
கொம்பனையா ரெல்லோருங் கோவித்துத் தானடந்தார்.
திரட்சியுடனே தெருவீதி தன்னில்வந்தார்.

துரோபதை தனக்குத் தந்த புடவையினைப் பூசித்தல்

பேறாவழகி பெருந்திருவாள் தான்புலம்பி
மாளாத் துயில்கொடுத்த மாயன் அடிவணங்கி
பூவும் புதுமலரும் பூவாடை யிற்சொரிந்து
சந்தணங்கள் தூரிகளும் சம்பிராணி வாடைகளும்
தங்கத்தி னாலே சமைத்ததொரு பொட்டியிலே
வைத்து வணங்கி மாளிகையில் தானிருந்தாள்.

துரோபதை துரியோதனனிடம் இது கூறல்

அரமணைப் பெண்டுகளும் ஆறுலட்சம் பெண்டுகளும்
விளையாட்டுப் பார்க்கவென்று வீதியிலே வந்தார்கள்.
அவ்வீதி விட்டு மறுவீதி தானடந்து
ஆரணங்குப் பட்டுடுத்தி அப்புறத்தே வந்தார்கள்.
பூவாடை சோதியிட பொற்கொடியா ரெல்லோரும்
செங்காட்டுத் தீப்போலே சேரவே வந்துநின்றார்
தோகு வழகி துரோபதையுந் தான்பார்த்து
தேசத் தழகன் திரியோ திரன்கேட்டு
மங்கை நல்லாள் பட்டுடுத்தி மல்லிகைப்பூத் தான்சூடி
உன்-தம்பிமார் பெண்டுகளும் தாதிகளும் மூப்பிகளும்
வேடிக்கை பார்க்கவென்று வந்த சபைதனிலே
கிழக்கெழுத்த சூரியனும் மேற்கெழுந்து வந்தாப்போல்
தின்றள் துரோபதையும் நீல விழிசிவப்பாய்
-----------

துரோபதை கண்ணனை வேண்டுதல்

ஆகாசத் தைப்பார்த்து அருந்ததியும் ஏதுசொல்வாள்
மேகப் பதிவிலேதான் வீத்திருக்குங் கோபாலா!
பார்த்து மிருந்தீரோ பரமனா ராவுணரே.
சரணஞ் சரணமென்று சாஷ்டாங்கள் தெண்டனிட்டு

பறவைகளை அழைத்து புடவைகளை எடுத்துச் செல்லச் சொல்லுதல்

அஞ்சுவர்ணப் பட்சி அலங்கார நீலவர்ணம்
பட்டு நிறப்பட்சி பறக்குஞ் சிறுகுருவி
மஞ்சத குருவி மயிலே குயிலினங்காள்
நீலக் குருவி நீர்சிகப்பு வர்ணமெலாம்
தேவதாரப் பட்சியளே செங்குருவி நீங்களெல்லாம்
பச்சைக் குருவி பறந்திடுங்கோ கானகத்தில்
ஆங்குருவி பொங்குருவி ஆகாச மாய்ப்பறந்து
என்று துரோபதையும் இவ்வார்த்தை தானுரைக்க

பறவைகள் புடவைகளை எடுத்துச் செல்லல்

காத்தாய்ப் பறந்ததுகாண் கன்னியர்கள் பூவாடை
நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொருவர் பெண்டுகளும்

பெண்டுகள் புடவையற்று நின்றனர்

நீதிமய மில்லாமல் நிர்வாண[236] மாகநின்றார்.
உடம்பு தடுநடுங்கி உள்ளம் தடுமாறி
ஆடுமாடு போலே அம்மணமாய் நின்றார்கள்.
தாதியளும் மூப்பியளும் தன்கையினால்த் தான்மூடி
சேனா பதிகளுஞ் செகவேந்தர் பெண்டுகளும்
மந்திரிமார் பெண்டுகளும் மாணியத்தைத் தான்மூடி
மாணிபமும் தான்குலைந்து மந்தையிலே நின்றார்கள்.

-------
[236]. ஆடையற்று
-------

துரோபதை துரியோதனனை ஏளனம் செய்தல்

பார்த்துச் சிரிச்சாளே[237] பத்தினியும் ராசகன்னி
தார்வேந்தே[238] ! கண்டாயோ ! உன்- தம்பிமார் பெண்டுகளை!
முடிமன்னர் பெண்டுகளும் மூடி (ன) தைக் கண்டாயோ!
அருந்ததியாள் பட்டுவகை அணிந்திருக்கும் ரா சகன்னி
பாம்பாய்க் கடித்துப் பார்க்கவையும் இப்போது[239]

எல்லோரையும் பாம்பு கடிக்க வேண்டுமென்று துரோபதை வேண்டல்

மேகப் பதிவிலேதான் வீத்திருக்கும் மேகவர்ணா!
சரணஞ் சரணமென்று சாஷ்ட்டாங்கந் தெண்டனிட்டாள்
மெள்ளச் சிரித்தார்[240] வேதநா ராயணரும்
கேட்ட வரங்கொடுத்தார் கீர்த்தியுள்ள தங்கையர்க்கு
மாவயரைத் தானினைந்து வரவழைத்தாள் தங்கையரும்
நாகேந்திரன் தங்கையரே நட்சேத் திரவிளக்கே
மேகமதில் தான்மறையும் மின்னொளியே வாடி நீ
பட்டத்து ராசாக்கள் பகுமானந் தான்குலைந்து
நட்சத் திரலோகம் நாககன்னி வந்திருந்து

எல்லோரையும் பாம்பு கடித்தல்

நாலா யிரம்பாம்பு நடுச்சபையி லேவிழுந்து
புகுந்து புடுங்கு (து)கா(ண்) பொய்க்கொடியாள் சொல்படிக்கி
திரியோ திரராசன் திருமுடியில் சுத்துதுகாண்
துட்டோ திரனுடைய திருமுடியில் சுத்துதுகாண்
நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொருவர் தம்பிகளை
கொம்பேறி மூக்கன்போல் கொடுமுடியில் சுத்துதுகாண்
பட்டுப் பிடவையெல்லாம் பாம்பாய்ப் பிடுங்குதுகாண்
அரமணைப் பெண்டுகளும் ஆறுலெட்சம் பெண்டுகளும்
ஆடுமாடு போலே அரமணையில்ப் போய்விழுந்து
புகுந்து புடுங்குதுகாண் பொற்கொடியான் சொல்படிக்கு

-----
[237]. சிரித்தாளே [238]. தார்வேந்தாயி என்றுளது
[239]. பார்க்க வைதுப்ளேனீப்போது என்றுளது [240]. சிரித்து என்றுளது
----------

பெண்டுகள் துரியோதனனைத் திட்டுதல்

அலரி அபயமிட்டு அம்பலத்தி லோடிவந்தார்.
மாபாவி சண்டாளன் மாளிகையுங் கொள்ளாது
எங்கே பறப்போம் இடிவிழுவான் பட்டணத்தில்
தாலிக் கயத்தில் சரஞ்சரமாய்த் தொங்குதுகாண்.
அடிக்கயத்தைச் சுத்துதுகாண் ஆபரணம் மாலையைப்போல்
நட்டுவாக் காளிகளும் ரணதேளுந் தும்பிகளும்
புகுந்து புடுங்குதுகாண் பொற்கொடியாள் சொல்படிக்கு
உத்தமியாள் பட்டை உடுத்திவரச் சொன்னாயே
சண்டாளா வென்று தலைவிரித்து நிற்பாரும்
மந்திரிமார் தேவியரும் மத்துமுள்ள தாதிகளும்
அவர்கள் துயிலாடை அந்தரமாய்த் தான்போட்டு
அய்யோ சிவனேயென்று அலரி விழுவாரும்
கொம்பிக் குளறிக் குதித்தோடி நிற்பாரும்
ஆறு குளத்தோடே அலறி விழுவாரும்
அங்கே சிலபாம்பு ஆடைகளைத தான்பிடுங்கி
திரும்பிக் கரைஏறித் தீவினையோ என்பாரும்
கூட்டங் குலைந்து கொலுகுலைந்து ஓடயிலே

துரோபதை சிரித்தல்

ப(ா) த்துச் சிரித்தாளே பத்தினியாள் ராசகன்னி.

பலரும் கண்டு சிரித்தல்
பலசாதி யத்தினையும் ப(ா) ர்த்துச் சிரித்தார்கள்.
பள்ளர் பறையரெல்லாம் பார்த்துச் சிரித்தார்கள்.
ஏழைக் குடிகளெல்லாம் இருந்து சிரித்தார்கள்.
வேடிக்கை பார்த்தாளே மின்னாள் துரோபதையும்.

துரியோதனன் அரைஞாண் கயிறுகூட இல்லாமல் ஓடுதல்

அரவக் கொடிவேந்தன் அண்ணாக் கயறு[241] மத்து
சேனா பதிகளுடன் தெரிபட்டு ஓடயிலே
மந்தையிலே கோடி மலைப்பாம்பு சூழ்ந்துகொண்டு
திரும்பிக் கடிக்குதுகாண் தேன்மொழியாள் சொல்படிக்கு

------
[241]. அரைஞாண் கயறு (இடுப்பில் கட்டுவது)
---------

ஆணும் பெண்ணும் அம்பலத்திற்கு ஓடிவரல்

அம்பலத்தை நோக்கி அலறியே ஓடிவந்தார்.
ஆணுடனே பெண்ணும் அலறி விழுவாரும்
ஆணுடனே[242] பெண்ணும் அம்பலத்தில் நின்றோமே
இப்படி யாக இருக்குமந்த வேளையிலே

குருக்கள் வந்து மன்னிக்கும்படி வேண்டுதல்

கோஷ வளநாட்டுக் குருக்களுமே ஓடிவந்து
பார்பதியே! தாயே! பாஞ்சால நாயகமே!
மாதேவி லட்சுமியே! உன்-மகிமை அறிவானோ.
மாதே சிவகாமி சாம்பிராணி வாசகியே!
அல்ப்பன் அறிவானோ அருந்ததியே உன்மகிமை.

முன் நிகழ்ச்சியை நினைவு படுத்தல்

ஐவரையுங் கொண்டுவந்து அறையில் அடைத்துவைத்து
துரோபதையைக் கூட்டிவந்து துட்டோ தரனுடனே
ஏழக்கு ரோணிசேனை ஏத்தமுள்ள ராசாக்கள்
இராசாக்கள் கோடி இராணுவங்கள் கோடிலட்சம்
கூட்டி யனுப்பிக் கொலுவி லிருந்தாயே.
துட்டொ திரனுஞ் சேனை கரிபரியும்
தர்மா புரிநோக்கி தானடந்த சேனையெல்லாம்
(பே)யும் பிசாசுகளும் பொல்லாத ராட்சதையும்
திஷ்ட்டித்துக் கொண்டாளே திரிபுரையும் ராசகன்னி
ஐவரையும் அங்கே அழைப்பித்து ரசகன்னி
சேறக் கருவறுத்தார் தென்னவர்கள் ஐவருந்தான்
இட்ட விலங்கோடே இருந்தா (ர்) க ளிங்கேயுந்தான்
அங்கே யழைத்தாளே ஆனதம்பி மாரியிவள்
வெத்தி மதவானை வீமனுட கையாலே
சேறக் கருவறுத்து சேதி யறியாயோ
துட்டோ திரனே துரத்தினான் போர்வீமன்
சந்திரா யுதம்போட்டுத் தான்பணிந்தான் வீமனையும்
தொட்டுத் துயிலுரியச் சொன்னானே மாபாவி
தொட்ட விரலழுகும் சொன்னாலும் நாக்கழுகும்
தருமர்திரு வாழிகண்டு தனித்துவந்தா ளீஸ்பரியும்[243]
வலிய பிடித்துவந்து மானங் குலைத்தானோ
மானங் குலைந்ததினால் மானத்தைக் காண்பானோ
மறுதுயி லாக வளர்ந்துதே யீஸ்பரிக்கி
அந்த வயணம் அறியாயோ மாபாவி.
ல்லாதே போனால் ரிணகள மாகிவிடும்.
(தீ)யா யெரிப்பாள் சேனைதள மத்தினையும்
()ெசல்வங் கரியெல்லாம் தீயா யெரித்திடுவாள்.
பகலே நரியோடி பாழ்கிடக்க நாளாச்சோ.
ஆதித்தன் சாயுமட்டும் அழுநிலையே வைத்தாயே
பத்தினியாள் பாவம் பலித்துதடா உந்தனுக்கு
சார்ந்த சனமும் தம்பிமார் பெண்டுகளும்
மாலை குலைந்து மந்தையிலே நின்றார்கள்
பாம்பாய்க் கடித்துப் பார்க்கவைத்தாள் ஈஸ்வரியும்.
---
[242]. ஆணும் என்றுனது
------------

குருக்கள், துரோபதையை மீண்டும் வேண்டல்

செந்தா மரைப்பாதம் திருவடிகள் நோகுமம்மா.
(ப)ாதங்கள் நோகுமம்மா பத்தினியே உந்தனுக்கு
வன்னிமரச் சோலையிலே மாதா(வைத் தா)னிறுத்தி
மந்திரிகள் ராசாக்கள் மானமும் போகுதம்மா
பாம்புகளுந் தேளுகளும் பத்தினியே கொல்லுதம்மா
திஷ்ட்டித்த பாம்புகளும் உன்-தேவி விளங்குமம்மா
ஆறுகுந்தம் நூறுபிழை அத்தனையும் நீபொறுத்து
என்னபிழை யானாலும் எ(ன)க்காய் மனம்பொறுத்து
தலைக்கிமேல் வெள்ளமது தானோடி ஏதுபலன்
பாலுக்கு மேல்க்கரியும் உண்டோ தான் பத்தினியே.
இந்தமட்டுந் தான்பொறுத்து எல்லோரும் தான்பிழைக்க
குருக்கள் மனுக்கேழ்க்க கொம்பனையுங் கேளாயோ.

நாககன்னியை துரோபதை வேண்டல்

மாபாவி செய்த வஞ்சினையை நீபொறுத்து
நாகேந் திரன்மகளே நட்சேத்தி ரவிளக்கே
மேகத்தில் தானொளியும் மின்னொளியே என்பிறப்பே
சண்டாளன் மேலே சர்ப்பத்தை மீளுமம்மா

---
[243]. நீஸ்பரியும் என்றுளது
----------

நாககன்னி பாம்புகளை விலக்குதல்

பத்தினியாள் சொல்கேட்டு பாங்கான நாககன்னி
ராசாக்கள் மந்திரிகள் ராணுவங்கள் எல்லோரும்
அருனா ளில்லாமல்[244] அலங்கோல மாகநின்றார்.
சர்ப்பத்தைத் தான்விலக்கித் தானிருந்தா ளுத்தமியும்.

நூற்றொருவர் பெண்டுகள் வருந்துதல்

நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொருவர் பெண்டுகளும்
அரண்மனையில் போய்ப்புகுந்து அபிமானந் தான்மூடி

பழிச்சொல் வந்ததென்று வருந்துதல்

மண்ணுள்ள காலமட்டும் வார்த்தைக்கிட மானோமே.
சந்திராள் சூரியாள் தானவர்கள் உள்ளமட்டும்
பேச்சுக் கிடமானோம் பெரியவர்கள் தர்மமிது
பத்தினியைக் கொண்டுவந்த பாவந் தொலையாது.
அம்பலத்தில் விட்டு அபிமானந் தான்குலைத்தீர்
அவளுடைய மானத்தை அம்பலத்தில் கண்டதில்லை.
ஆணுடனே[245] பெண்ணும் அம்பலத்தில் நின்றோமே.
அவள்முன்னே நீங்களுந்தாள் அடிவணங்கிப் போகாமல்

ஐவரிருந்ததால் நாம் பிழைத்தோம் என்றார்கள்

ஐவ ரறிந்தால் அரசழியக் கொண்ணுடுவான்
ஐவ ரிருந்ததுனால் ஆரணங்குந் தானிறங்கி
சர்ப்பத்தைத் தான்விலக்கித் தற்காத்தாள்
ஈஸ்வரியும். சாண்வயறு கொண்டு தப்பிப் பிழைத்துவந்தீர்
நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொருவர் பெண்டுகளும்

நூற்றொருவர் பெண்டுகளும், பஞ்சவர்களையும்,
துரோபதையையும் ஊருக்கனுப்ப வேண்டுதல்

ஐவரையும் இப்போது அழைத்துவந்து மாளிகையில்
சர்ந்த சனமும் தம்பிமார் பெண்டுகளும்..
ஊருக் கனுப்புமென்று உத்தமர்கள் சொன்னார்கள்.

---
[244]. அரைஞாண் (இடுப்புக் கயறு) [245]. ஆணும் என்றுளது
----------

துரியோதனன் இன்னமும் காரியம் இருக்குதென்றான்

அந்த மொழிகேட்டு அரவக் கொடிவேந்தன்
மின்னம்வெகு காரியங்கள் வேறே இருக்குதென்றான்.,

படைத்தலைவர்கள் ஆடையுடுத்தி அவைக்கு வரல்

பதினெக்கு ரோணி படைத்தலைவ ரெல்லோரும்
ஆடை யுடுத்தி அனைவோரும் வந்துநின்றார்.
சபைகூடும் அம்பலத்தில் தார்வேந்தன் வந்திருந்து:

குருக்கள் கூற்று - புத்தி புகட்டுதல்

கோச வளநாட்டுக் குருக்களும் ஏதுரைப்பார்.
தேசத் தழகா திரியோதிரா நீகேளு
ஏண்டா நீ மன்னா இடும்புகள் பண்ணுகுறாய்.
கட்டவோ வெட்டவோ கால்விலங்கு போட்டுவைத்து
மானத் தருந்ததியை மருப்படாப் பத்தினியை
அம்பலத்தில் கொண்டுவந்து அபகீர்த்தி செய்தாயே.
சாமத் துரோகி சண்டாளா உந்தனுக்கு
முன்னுக்கும் பின்னுக்கும் முழுப்பகையும் உண்டாக்கி
உத்தமியைத் தான்வணங்கி உபசார வார்த்தைசொல்லி
(ஐ) வருந் தானுமிப்போ அடைபட்டுத் தானிருந்தால்
(த) க்க புகழுடைய தருமர் தனஞ்செயர்க்கும்
அந்தியில்லை சந்தியில்லை அனுஷ்டானந் தானுமில்லை.
ஐவருக்குந் தானும் ஆகாரந் தானுமில்லை
ஐவரையும் இப்போ அழைத்துவரச் சொல்லுமென்றார்.
பின்னை வருகுறதை முன்னாலே சொன்னேனான்.
பொறுத்தா ரரசாள்வார் பொங்கினார். காடுரைவார்.
அப்பா எனக்கு ஆனதையும் பாருமென்றார்.

துரியோதனன் சூளுரைத்தல்.

தேசத் தழகன் திரியோ திரன்கேட்டுக்
கன்னந் துடிதுடிக்க கண்ணுரெண்டுந் தான்சிவக்க
பாத்தான் மிகச்சிவந்து பாவைரெண்டுந் தீப்பறக்க
ஆளுங் குருசாமி ஐயாவே நீர்கேளும்
குத்தமாய்ச் சொன்னாலு (ங்) கோவித்துக் கொள்ளாதீர்,
நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொருவர் மாண்டாலும்
அத்தி புரமிழந்து ஆதினங்கள் போனாலும்
வாகாக ஐவரையும் வனவாசம் ஓட்டிவிட்டு,
ஆரணங்கைக் கூட்டிவந்து அலங்கார மாளிகையில்
சிலையில்[246] மிகுந்த சித்திரத்தைக் கூட்டிவந்து,
சம்பத்துப் பாக்கியமும் சகலமும் நான்கொடுத்து,
(கா) த்திருந்து ஏவல்செய்து கைகட்டி நிற்பேனான்.
-------
[246]. சீலையில் என்றுளது
-------

குருவை அரண்மனைக்குப் போகச் சொல்லல்

ஆதி குருவே ஆண்டவரே நீர்கேளும்
தாளிணைகள் ரெண்டும் சாஷ்டாங்கம் பண்ணுகுரேன்.
ஆதி குருவேநீர் ஆரமணைக்குச் செல்லுமென்றார்.

குருக்கள் மீண்டும் அறவுரை கூறுதல்

கோச வளநாட்டுக் குருக்களுங் கோபமுடன்
பொல்லாத எமனுனக்குப் பிடரியிலே வந்திருக்க
அத்தி புரத்தில் அரசு நிலையிழந்தாய்
ஆடாத சூதாடி ஐவரையும் வெத்திகொண்டாய்.
சத்திய வாக்குத் தானளிக்க மாட்டாமல்
(இ) ட்ட விலங்கோடே இருக்குடூர் பஞ்சவர்கள்
(வில)ங்கு மெதிரோடா வெத்தியுள்ள ஐவருக்கு.
உங்கள் தலையும் உருளுமடா சந்தியிலே.
சேனை பரிகரியும் செல்வங் கரியெல்லாம்
இப்போ தழியுதடா என்வார்த்தை கேளாயோ.
சொல்லுகுற பேச்சைக் செவிகுடுத்துக் கேளாயோ.
பசும்புனுகுஞ் சவ்வாதும் பண்ணியின்மேல் பூசினால்
பண்ணி யறியுமோ பரிமணத்தின் வாசினையை.
குங்குமமுஞ் சந்தணமும் குரங்குமேல் பூசினால்
குரங்கு மறியுமோதான் குங்குமத்தின் வாசினையை.
பறையன் தலைமேலே பசும்பொன்கி ரீடம்வைத்தால்
பறையன் அறிவானோ பசும்பொன்கி ரீடமதை.
பொண்ணாலே கெட்டவர்கள் பேருலகில் மெத்தவுண்டு.
ஆணாலே கெட்டவர்கள் ஆருமில்லை வையகத்தில்.

துரியோதனன் துரோபதையை விடேன் எனல்

செத்தாலும் போகவிடேன் செந்தா மரைக்குயிலை
கெட்டாலும் போகவிடேன் கேசரியை இப்போது
"மாண்டாலும் போகவிடேன் வாழ்மயிலை இப்போது.

மீண்டும் நல்வார்த்தை கூறி எழுந்து போனார் துரோணர்

கேடு வரும்போது கெடுமதிகள் தோத்தாது.
குத்தம் வரும்போது குறுவசனம் கேட்பாயோ
என்று துரோணர் எழுந்திருந்து தான்போனார்.

துரியோதனன் துரோபதையிடம் தன் அருகிருக்குக் கூறல்

தேசத் தழகன் திரியோ திரன்பெருமான்
தோற வழகி துரோபதையைத் தான்பார்த்து
சொல்லுகிறேன் நீர்கேளும் சோலைப் பசுங்கிளியே
ஆதீ னமுனக்கு அடியாளும் தானுமக்கு
ஆண்டு அனுபவிக்கும் அரமணையில் வந்திருத்தால்
திருவிளக்கு வேண்டாங்காண் தெய்வக் குல&கொழுந்தே
உண்டு சுகித்து உடைமைபணி பூண்டுகொண்டு
சந்தணம் கஸ்தூரி தானணிந்து நாள்தோறும்
சிலை மிகுந்த சித்திரமோ ராசகன்னி
வந்து பணிந்து-வாய்பொத்திக் கைகட்டி[247]
ஏவல்செய்து நிற்பேனான் ஈஸ்வரியே ராசகன்னி
குருக்களுக் காகவுன்னைக் கொல்லாமல் விட்டேனான்.

துரோபதை சூளுரைத்தல்

ஈனப் பறையா இழுக்குகளைப் பேசாதே
எச்சி தெறிக்காமல் எட்டிநின்று தான்பேசு.
எச்சி தெரித்தால் இரணங்கள் ஆக்கிவிடுவேன்.
சதகோடி ராச்சியமும் சந்திரன் மண்டலமும்
ஈரேழு லோகம் எரிக்குங் கதிரோனே
எட்டிப் பிடிக்கவென்றால் எட்டுமோ உந்தனுக்கு
கல்லிரும்பு தூணோடே கடுகிவந்து மோதிவிட்டால்.
வலது[248] குலைந்துவிடும் மண்டை சிதறிவிடும்.
செந்தணலைக் கிட்டிவந்து செல்லும் அரிக்குமோடா -
அஸ்த்தினாபுர மாணிக்கம் ஆரணங்கு பெண்பிறந்தாள்.
பாரதப் போர்முடிக்கப் பத்தினியும் பெண்பிறந்தாள்.

--------
[247]. கைகட்டி வாய் பொத்தி எனல் பொருந்தும்
[248]. வல்லமை
-----------

துரோபதை கூந்தல் விரித்து சபதம் செய்தல்

கொடுத்தவனே நூத்துவரை குருச்சேத்திரப் பூமியிலே
சேனை பரிவாரம்[249] செகவேந்தர்க் குள்ளதெல்லாம்
காளிபேர் கொண்டு கருவறுத்துச் சேனையெல்லாம்
நூறு தலையும் நொடிக்குமுன்னே தானறுத்து
தொட்டுத் துயிலுரிந்த துட்டோ திரன்தலையை
இருவரையு மங்கே இழைசோடாய்த் தான்கிடத்தி
குறி மிதித்து என்கூந்த லைமுடிப்பேன்.
கழுத்தடியில் காதுமடா காரிழையும் நானுனக்கு
நத்தாதே நத்தாதே நாயே நீ நத்தாதே.
என்று துரோபதையும் இவ்வார்த்தை தானுரைக்க

துரியோதனன் திரோபதையை சூதாட அழைத்தல்

தேசத் தழகன் திரியோ திரன்கேட்டு
வாடி முகங்கருகி வர்ணமுகம் வேறுபட்டு
சாயாம்பு மேனியனைச் சகுனி முகனோக்கி
என்னுடனே சூதாடி ஏந்திழையைத் தோத்துவிட்டார்
சூதாடும் மண்டபத்தில் தோகையரைக் கூட்டிவந்து
சொக்கட்டான் போட்டு துரோபதையும் மேகெலி (த்தால்)
விட்டு விடுவேனான் மின்னாள் துரோபதையும்
தோத்துவிட்டா ளாமாகில் சொன்னபடி கேள்ப்பாளே
கேளுமென்று சொல்லி கிருபையுடன் தானிருந்தான்

---------
[249]. பரிபாரம் என் என்றுளது
-------

துரோபதை மறுமொழி

தோற வழகி துரோபதையாள் தான்கேட்டு
ஏத்தங் குலைந்திடுவாய் இவ்வார்த்தை சொன்னாயே
'சூதாடும் மண்டபத்தில் துரோபதையும் வந்துநின்று
குச்சிலிய நாயே குறுக்கே திரையிடுவாய்[250]
தெருவில் கடைநாயே திரைமறைவில் நீயிருந்து
நான்-காலால் கயறுருட்ட நீ - கையால் கயறுருட்ட
என்று துரோபதை இவ்வார்த்தை தானுரைக்க

துரியோதனன் அவ்வாறே கயறுபோடல்

திரியோ திரன்கயத்தை துரோபதைக்கி முன்போட்டான்
பெருவிரலால் தானிடிக்கி பெண்பெருமாள் தானெடுக்க
சகுனி கயறு தவறிதான் விழுந்திடுமாம்
எடுத்த கயத்தை ஏந்திழையும் தூரவைத்து

துரியோதனன், துரோபதை தோற்றுவிட்டாள் எனல்

துரோபதை நாயகியும் தோத்துவிட்டா ளென்றுசொல்லி
திரியோ திரன்தானும் துடைதட்டித் தான்சிரித்தான்.

கிருஷ்ணன் சதிக்கயத்தைக் கடலில் எறிதல்

ஈரே முலகளந்த எம்பெருமா ளோடிவந்து
சகுனி கயத்தைச் சதிராகத் தானெடுத்து
ஆயன் பெருமான் அலைகடலில் விட்டெறிந்தார்.
சகுனிதிரி யோதிரனும் சதிக்கயத்தைக் காணாமல்
மூன்னாட்டம் போடுமென்று மொழிந்தாளோ ராசகன்னி
பேரா லழகி பெருந்திருவான் தான்கேட்டு

துரோபதை கண்ணபிரானை வேண்டுதல்

எழாத் தனத்திலே ஏகாந்த மேடையிலே
ஏறி யிருந்து ஏகாந்தம் பார்த்திருந்தாள்.
அரச சபை[251] நடுவே நின்றதுவு மல்லாமல்,
உகமை பெறு மண்டபத்தில் உத்தமியும் வந்தாளோ
மாயன் சகுனிஎன்ன மாயங்கள் செய்தானோ
அண்ட மளந்தவரே ஆதிநா ராயணரே
அருந்ததியாள் மானத்தை ஆயரே காத்தருளும்
பஞ்சவர்க்கு எந்நாளும் பழுதுகளே வாராமல்
அலமேல் மங்கையரும் ஆதிநா ராயணரும்
கோடான கோடி கோபஸ் திரியருடன்
பசும்பொன் கய்ரெடுத்து பகடை விளையாட
அனுப்பிவிட வேணுமென்று அடிவணங்கி மாயவரை
ருகையும் ஏந்தி இருந்தாள் பெருந்திருவாள்.

---
[250]. திறவழையாய் என்றுளது [251].அபைசபை என்றுளது
--------

அவ்வாறே கண்ணன் அனுப்புதல்

அந்தச் சில மே அனுப்பிவிட்டார் மாயவரும்.
ஏலக் கருங்குயிலாள் இருகையினால் தான்வாங்கி
புஷ்ப மலந்துவிப் புதுநீரால் பூசைபண்ணி
சாம்பிராணித் துாபமுடன் சாஷ்டாங்கந் தெண்டனிட்டு

துரியோதனன் கர்ணனிடம் கயறு அனுப்புதல்

காஞ்சிநா டாளும் கர்ணரையுந் தானழைத்து
கணையாழி மோதிரத்தைக் கயத்திலே தானணிந்து
காஞ்சிநா டாளுங் கர்ணனிடந் தான்கொடுத்து
சூதுபொரு மண்டபத்தில் சுருக்கமா யொருநொடியில்
கன்னி துராபதையும் கையில் கொடுக்காதே
ஈண மலடான இரக்கமத்த, மாபாவி
என்னை ஆரமணையில் இருக்கவொட்டான் மாபாவி
அங்கு மிருக்குமன்னர் அனவோருங் காணாமல்
பத்தினியாள் கைதனிலே பதனமாய்த் தான்கொடுத்து
வாருமென்று சொல்லி மாளிகையில் தானிருந்தாள்.

கர்ணன் துரோபதையின் முன் போட்டான்

அந்த மொழிகேட்டு அரைநொடியில் ஒடிவந்து
சூதுபொரு மண்டபத்தில் துரோபதைக்கி முன்னேவந்து
திரைமறைவில்[252] தானிருந்து திரும்பிஎங்குந் தான்பார்த்து
கூந்தல் மறைவில் கொம்பனையாள் முன்போட்டான்.

-----
[252]. சிரைமறைவில் என்றுளது
-----

ஆட்சிமோதிரம் அம்பலத்தில் வந்ததென்றாள் துரோபதை

கைவிரலால் தான்மறைத்து கர்ணனைத் தான்பார்த்து
பேரால் அழகன் பெருந்திருவான் என்றறிந்து
ஆட்சி கணையாழி அம்பலத்தில் வந்தமட்டும்

ஐவரையும் மீட்டேன் என்று போடுதல்

ஐவரையும் மீட்பேனான் அல்லசிறை மீள்ப்பேனான்
கணையாழி மோதிரத்தைக் கைவிரலில் தான்போட்டு
சிறைமீட்க[253] வேணுமென்று சீதேவி தான்போட்டாள்.
மூர்க்கமுள்ள கன்னியிவள் முதலாட்டம் தான்போட்டாள்.

தருமரை மீட்டாள்

தக்க புகழுடைய தருமரையுந் தான்மீட்டாள்[254]

தன்னையும் மற்ற நால்வரையும் மீட்டாள்

பிற்பாடு கயறுரு(ட்டி) மங்கையருந் தான்மீட்டாள்[255]
வாதுசொல்லி சூதாடி மதகிரியைத் தான்மீட்டாள்[256]
அலங்கார மாயுருட்டி அருச்சுனரைத் தான்மீட்டாள்[257]
நன்றாய்க் கயறுருட்டி நகுலரையுந்தான் மீட்டாள்[258]
சூது விளையாடி சொக்கட்டான் தான்போட்டாள்.
டி எட்டு விருத்தம் எடுத்தெடுத்துத் தான்போட்டாள்.
சாத்திரக் கொடிவேந்தன் சகதேவரைத் தான்மீட்டாள்.
ஆனந்த மாரி ஐவரையுந் தான்மீட்டாள்.

துரியோதனாதியரை வெற்றி கொளல்

ஆடிக் கெலிச்சு அவர்களையும் வெத்திகொண்டு
சேனை கரிபரியுந் தேசமெல்லாந் தான்கெலிச்சு
தர்ம புரியிலுன்னைத் தனிவிலங்கு போட்டுவைப்பேன்
வாடி முகந்தளர்ந்து வர்ணமுகம் வேறுபட்டு
தானே இளைத்துத் தனிமயக்கங் கொண்டாப்போல்
சேனா பதிகள் சிகவேந்த ரெல்லோர்க்கும்

--
[253]. சிரைமிடககம் என்றுளது
[254], [255], [256], [257], [258]. தானு மீட்டாள் என்றுளது
--------

கர்ணனைச் செயிக்கச் சொலல்

கானகத்துக் கருணனுக்கு சுயறுருட்டி வாடிநீ.

தானபதி தருமரிடம் கூறல்

தானா பதியோடித் தர்ம்ம ரடிபணிந்து
ஐவரையும் மீட்டாள் ஆரணங்கு ராசகன்னி
மாது சிறைமீட்டு வையகத்துக் கிப்போது
தர்ம்மா புரிக்கிச் சதுரங்க சேனைமுதல்
சேனா பதியர் செகவேந்தர் தங்களுக்கும்
கனத்த நகர்தனக்குக் கயறுருட்டும் வேளையிலே
தானா பதியுரைக்கச் சாத்துவார் தருமலிங்கம்.

`பழிவரும் என்று தருமர் அஞ்சுதல்

பஞ்சவர்கள் நாடும் பறிகுடுத்த பிற்பாடு
துரோபதையாள் சூதாட தோத்தமுள்ள நாடுதன்னை
மீட்டபின்பு பஞ்சவர்கள் வெத்திபெத்தா ரென்றுசொல்லி
முடிபொருத்த ராசாக்கள் முத்துமுடி மன்னவர்கள்
இயல்வேந்தர் எல்லோர்க்கும் பேச்சுக்
பூலோகம் உள்ளமட்டும் போகாது இவ்வார்த்தை.

வனவாசம் போவோம் என்று தருமர் கூறுதல்

பனிரெண்டு நல்வருடம்[259] பாரவனம் போய்வருவோம்.
அம்பலத்தில் நிற்கிறதோ ஆரணங்கு நாயகியும்
கிளிமொழியாள் துரோபதைக்கி கிள்ளாக்குத்[260]
தான்கொடுத்து தக்க புகழுடைய தருமருந் தம்பியரும்

ஐவரை மீட்டதே போதும் மற்றவர்களை செயிக்க வேண்டாம் எனல்

ஐவரையுந் தேவியையும் மீட்டதே[261] போதுமென்று
தர்ம்ம புரிதனக்கு தாரணிக்குஞ் சேவுகர்க்கும்
சேனா பதிகளுக்கும் செகவேந்தர் தங்களுக்கும்
கயருருட்ட வேண்டாங்காண் காரிகையே இப்போது.
தானா பதியைச் சடுதியிலே போகவிட்டார்.

----
[259]. நால்வருடம் என்னது [260]. கைச்சாத்து [261]. மிட்டதே என்றுளது
---------

தானாபதி சென்று துரோபதைக்குரைத்தல்

ஓடி ஒருநொடியில் உத்திரங்கள் கொண்டுசென்று
பத்தினியாள் கையில் பாங்காகத் தான்கொடுத்தான்.
தோற வழகி துரோபதையும் தான்பார்த்து
கிள்ளாக்கைத்[262] தான்பார்த்து கிளிமொழியா ளப்போது

துரோபதை புறப்படல்

சூதாடும் மண்டபத்தைத் தோகையரும் விட்டகன்று
காவலர்கள் தானிருக்குங் கஸ்தூரி மண்டபத்தில்
பொன்னின் தலைவிரித்துப் போனாள் துரோபதையும்.

காவல்கூடம் வரல்; விசாரித்தல்

காவல்கூ டந்தனிலே கதவருகே வந்துநின்று
இருப்புக் கதவருகே ஏந்திழையும் வந்துநின்று
அண்ணரே தம்பியரே அருகிருக்குஞ் சேவுகரே
பஞ்சவர்க ளய்வரையும் பத்தியுடன் பார்த்ததுண்டோ
செத்து இறந்து சிவலோகம் போனாரோ.

ஐவர் இருப்பிடமறிதல்

ஐவர் விலங்கோடே அறைவீட்டில் தானிருந்தார்.
கண்ணாலே கண்டுவந்தேன் கற்புடைய மாதாவே
ஐவ ரிருக்குமந்த அரசழிவான் சீமையிலே

துரோபதை புலம்பல்

ஐவ ரிருக்கையிலே ஆடை குலைத்ததுவும்
மண்ணுள்ள காலமட்டும் வார்த்தைக் கிடமானேன்.
கலியாண வாசலுக்குக் கைவிளக்காய் வந்தீரே.
உங்கவந்த பஞ்சவர்கள் உயிரோடே செத்ததென்ன
வையகமெல் லாமறிய மாபாவி அம்பலத்தில்
துட்டோ தரனைவிட்டுத் துயிலை யுரிந்தானே.
அம்பலத்தில் என்னையவன் பம்பரம்போ லாட்டிவைத்தான்
இறகொடிந்த பட்சியைப்போல் சித்தாட்டங் கொண்டானே
அரச சபைநடுவே அபயமிட்டு நின்றதுவும்
அருஞ்சிறையில் தானிருந்த ஐவருக்குங் கேள்க்காதோ
மந்திரகிரி வீமனுக்கும் மதகரிக்குங் கேட்கிலையோ[263]
வில்வளைத்து மாலையிட்ட விசையருக்குங் கேட்கிலையோ
சாமி நகுலருக்கும் சகாதேவ வீமருக்கும்
அபயமென்ற சத்தம் அறியாமல் போனதென்ன?
ஐவர் தனக்கு அன்பாக மாலையிட்டேன்.
அம்பலமும் ஏத்திஎன்னை அருமை குலைத்தானே
ஆரும் படையாத அழகைப் படைத்தேனோ
எவரும் படையாத எவ்வர்ண[264] மானேனோ
மண்டலத்தி லில்லாத வடிவைப் படைத்தானோ
என்னை வலதளிக்க இழுத்தானே சந்தியிலே
சீரோடே நீயிருந்தால் தெருவில்வரக் காரியமென்ன
ஆணேறும் அம்பலத்தில் அஞ்சாமல் கொண்டுவந்து
சொல்லாது சொல்லித் தயிலும் உரிந் தானே .
பெண்ணாய்ப் பிறந்துநான் பேச்சுக்கிட மானேனே.
பேசுங் கிளியோர்க்குப் பூமரமாய் நின்றேனே.
வேல்பொருதுங் கண்ணாள் விழுந்து புரண்டழுதாள்.
ஐவ ரிருந்தால் அழுகுரல் கேளாதோ.

----
[262]. கைச்சீட்டு, கைச்சாத்து
[263]. மந்திரிகிரி வீமனுக்கும் மந்திரிக்குங் கேக்கலேயோ என்றுளது
[264]. யௌவனம்
--------

தருமர் கேட்டுத் தம்பியரிடம் கூறல்

தன்மறவாய்க் கேட்டு தம்பிமார் நால்வருக்கும்
தாது மணிமார்பன் தர்ம்மலிங்கஞ் சொல்லுகிறார்.
ஐவரையுங் காக்கவந்த அபிஷேகப் பத்தினியாள்
ஐவர் மணிவிளக்கு அழுகிறாள் தம்பியரே
இட்ட விலங்கோடே எழுந்திருந்து நால்வருந்தான்.

பேச்சுக்குரல் கேட்டு அவள் மீண்டும் புலம்பல்

பேச்சுக் குரல்கேட்டுப் புலம்பினாள் ராசகன்னி.
ஐவருக்கும் மாலையிட்டு அவுசாரி யானேனே.
ஐவர் மனையும் அலங்காரச் சாவடியும்
சேர இடித்துச் செப்புத் தரையாக்கி
தேசமெல்லாங் கொள்ளையிட்டுச சிறைபிடிக்க வந்தானோ.
சொல்லாதுஞ் சொல்லித் துயிலை உரிந்தானே.
அருமை நிலைகுலைந்து அம்பலத்தில் நின்றேனோ.
கூந்தல் பிடித்திழுத்து கோலக் கலையுரிந்தான்.
அம்பலத்தில் நின்று அழுசத்தங் கேட்கிலையோ.

வீமன் எழுந்திருத்தல்

வெத்தி மதவானை வீம னெழுந்திருந்து
முருக்கிப் பிரண்டான்[265] மூர்க்கமுள்ளபோர்வீமன்.

கதவுகளை உடைத்துக்கொண்டு வெளிவரல்

கதவு நிலைகாலால் தானே யுதைத்தானே.
நாலா யிரங்கோடி ரணதுட்டுத் தான்பயந்து
வேந்தர் பெருமாளும் வெளிப்பட்டா ரப்போது

காவலர்கள் மாய்ந்தனர்

காவல் பதனமென்று காத்திருந்த சேனையெல்லாம்
வாசல் பதனமென்று வைத்திருந்த சேனையெல்லாம்
செத்து மடிந்துதுகாண் செந்நெல் கொலைபோலே.
வாரி யடித்தான் மதகரியும் போர்வீமன்.

விலங்குகளை முறித்தெரிந்து ஐவரும் வெளிவரல்

கா (ணும்) சணத்தில் கால்விலங்கு தான்முறித்தான்
கோட்டையை விட்டுக் குதிச்சானே வில்விசையன்
மாய னுடன்பிறந்த மாகாளி தஞ்சமென்று
பதினெட்டு ஆயுதம் பார்த்து வரவழைத்து
அபிமானம் போனபின்பு ஆண்மையென்ன வார்த்தையென்ன
வெத்தி நகுலன் விலங்கு தனைமுறித்தான்.
தன்மறவாய்க்[266] கண்டால் தன்பேரி லாணையென்பான்.
போக முடியாது போரந்தன்[267] அண்ணாவி
என்று நகுலன் இவ்வார்த்தை தானுரைக்க
காண்டா வனமெரித்த காளையருங் கூறுகிறான்.
சொல்லாதுஞ் சொல்லித் துயிலை யுரிந்தானே.
கண்டால் விடுவதில்லை என்று நடக்கலுத்தான்.
முன்கை கடித்து முதல்வாசல் தான் நடந்தான்.
வேதன் சகாதேவன் விலங்கு தனைமுறித்தான்.
வாங்கு பிடிசூரி வச்சிறுக்கிக் கச்சைகட்டி
சந்திராயி தத்துடனே சகாதேவன் தானடந்தான்.
----
[265]. புரளுதல் [266]. = ? [267]. = ?
----------

மாடமாளிகைகளை நால்வரும் இடித்தல்

நாலுபே ருங்கூடி நடந்துவந்து அம்பலத்தில்
ஆடிக் குதித்து அலங்கரித்தான் போர்வீமன்
மண்டபமும் மாளிகையும் வலதுகையி னாலிடித்தான்.
அம்பலத்து வீதி அலங்கார மண்டபத்தை
சேர இடித்தான் தீரனவன் போர்வீமன்.
நாடி நகுலன் நடந்துவந்து வீதியிலே
கண்ட பேர்களெல்லாம் கத்திக் கிரைகொடுத்தான்.

தருமரைத் துரோபதை பணிதல்

தம்பிமார் போனபின்பு தர்ம்மலிங்கம் ஓடிவந்து
வில்லம்பு போலும் விரசாக ஓடிவந்து
மாரளவு தண்ணீரும் தாரைவிட்டுத் தானோடி
வந்து பணிந்தான் வாழ்மயிலாள் ராசகன்னி.

தருமர் துரோபதையைத் தேற்றுதல்

காந்தமலர்க் கையாலே கண்ணீர் தனைத்துடைத்து
விட்ட குறையும் விதிவசமுந் தான்வந்து
பனிரெண்டு நல்வருஷம்[268] பந்தையங்கள் தான்பேசி
சூது விளையாடித் தோத்துவிட்டேன் கண்டாயே.
இப்போ முடித்தால் ஈஸ்பரர்க்கு ஏற்காது.
பாரதமு மில்லை படைபொறுத் தாருமில்லை.
----
[268]. நால் வருடம் என்றுளது
----

புத்திமெத்தச் சொல்லி பொற்கொடியைத் தான்தேத்தி

அத்தினாபுரத்தை அழித்து, நூற்றொருவரைக் கொல்லப் புறப்படல்

வாசலிலே காவல் வச்சிருந்த சேனையெல்லாம்
கோவித்துத் தானெழுந்து கொண்ணானே போர்வீமன்.
இப்போ விலகவென்று இருவருமாய்த் தானடந்தார்
நகுலன் சகாதேவன் நால்பேருந் தான்கூடி
அஸ்த்தினா புரிக்கோட்டை அடவாகப் பிடிக்கவென்று
சீறி யெழுந்திருந்தான் தெண்டாயு தவீமன்.
கொடுங்காத்தும் அக்கினியும் கோவித்து எழுந்தாப்போல்
நூத்தொருவர் பூமுடியை நொடியில் அறுக்கவென்று
காண்டீபன் வில்லெடுத்துக் கச்சைகட்டி வில்வளைத்து
கோவித் தெழுந்திருந்தான் கொடுமுடிகள் தானிடிக்க.

நூற்றொருவர் பயம்; சபை கூடி ஆலோசித்தல்

நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொறவர் தான்பயந்து
பாசி படந்த படைத்தலைவ ரெல்லோரும்
சேனா பதியளெல்லாம் சேரவே கூட்டமிட்டு
தோராத வில்லி துரோணன்சிறு விஷ்ட்டுமரும்[269]
எல்லோருங் கூடி இருந்து விசாரமிட்டு

துரோணர் கூறல்
கோச வளநாட்டுக் குருக்களுமங் கேதுரைப்பார்.
ஐவரையுங் கொல்லவென்று அநேகவிதம் பண்ணினாங்
பஞ்சவர்க ளைவருக்கும் பட்டப்பே ருண்டோதான்[270]
எண்ணத் துலையாத ராசாக்கள் பட்டணங்கள்
ஏழக்கு[271] ரோணி சேனையெல்லாந் தானிருந்து
வலுவிலங்கு பூட்டி வைத்திருந்த காவலெல்லாம்
சேர மடிந்து சிவலோகஞ் சேர்ந்தார்கள்.
சொன்னாலு முந்தனுக்குச் செவியில் கேள்க்கலையோ
சந்திரர்க்குஞ் சூரியர்க்குஞ் சத்தே கறுப்புமுண்டோ
மருவத்த பத்தினியை மானங் குலைத்ததென்றால்
பாம்பாய்க் கடித்துப் பறக்கவைத்தா ளுத்தமியும்
தந்துவிலக் கிஉனக்கு வாய்த்தபுத்தி சொன்னேனான்.
---
[269]. பீஷ்மீர் [2702]. பஞ்சவர்கள்ளவற்கு பட்டபேருட்டோதான் என்றுளது
[271]. ஏளேக்கு என்றுளது
----------

சபையில் தருமருடன் நால்வரும் துரோணரை வணங்குதல்

தக்க புகழுடைய தடுமரும் பந்தியிலே
கோச வள நாட்டுக் குருமா[272] ரோடிவந்து
சரணஞ் சரணமென்று சாஷ்ட்டாங்கந் தெண்டனிட்டு
தோறாத வில்லி துரோணருட பாதமதில்
தம்பிமார் நால்வருந்தான் சாஷ்ட்டாங்கந் தெண்டனிட்டு
ஆயிதத்தைத் தூரவைத்து ஆசாரம் பண்ணிநின்றார்.

ஐவருக்கும் புத்தி கூறல், தருமபுரிக்குச் செல்லச் சொன்னார்

அருகில் நிறுத்தி ஐவருக்கும் புத்திசொல்லி
நடந்த வகையெல்லாம் நலமாகத் தான்கேட்டு
மெத்த மனமகிழ்ந்து நின்றாள் துரோபதையும்
ஐவரையுங் காக்கவந்த அபிடேகப் பத்தினியே
கோச வளநாட்டுக் குருக்களு(ம)ங் கேதுரைப்பார்.
ஆரணங்கைக் கூட்டி அரமனைக்கிச் செல்லுமென்றார்.

தருமர் வாக்குத் தவறாமல் வனவாசம் போகிறோம் என்றார்

அந்த மொழிகேட்டு ஆனதம்பி[273] ஏதுரைப்பார்.
வாக்குரெண்டு சொல்வதில்லை வனவாசம் நாம்போறோம்.
தம்பிதிரி யோதிரன்தான் தாரணியை ஆண்டிருந்தால்
நமக்கல்லோ பெருமை நாயகமே தம்பியரே
ஆண்டு பனிரெண்டும் அருங்கான கம்போவோம்.

தம்பிமார் வருந்துதல்

அந்த மொழிகேட்டு ஆனதம்பி நால்வருந்தான்
உம்முடனே. நாங்கள் உடன்பிறந்து கெட்டோமே.
செட்டி யுடன்பிறந்து சேவுகங்கள் பண்ணாட்டாய்.
பங்காளி தன்னுடனே பதியிருந்து ஆளஒட்டாய்.
உரைவிட்ட மந்திரவாள் உன்னிதமாய்த் தானழுத்தி

---
[272] குறுளுமா என்றுளது [273] . ஆனதர்மா எனல் பொருந்தும்
--------

தருமர் பதில்

தாது மணிமார்பர் தருமலிங்கங் கூறுகிறார்
ஆசாரி[274] யாரை அடிவணங்கித் தெண்டனிட்டு

எள்ளையும், நெல்லையும் மார்பிலிடச் சொலல்

எள்விதையும் நெல்விதையும் இன்ப முடனழைத்து
வகைக்கி ஒருபடிதான் வாகாகக் கொண்டுவந்து
ஒவ்வொருவர் மார்பில் ஒருமிக்கப் போடுமென்றார்.
அந்தப் படிக்கி அடவாகப் போடுமென்றார்.
போட்டது போலிருக்கும் போர்வேந்தர் நால்வருக்கும்
இத்தினையுங் கொண்டுவந்து என்மார்பில் போடுமென்றார்.

தருமன் மார்பில் பொரிந்தது

அந்தப் படியே அவர்மார்பில் தான்போட்டார்
மளமளென்று தான்பொரிந்தது மாரி பொழிந்தாற்போல்.

தம்பியர் சினந்தணிதல்

என்னிலையும் பார்க்க ஏத்தமுள்ள சேவுகரோ.
பொறுத்தார் அரசாள்வார் பூலோக முள்ளமட்டும்
உருவின ஆயுதத்தை உரையிலே தான்போட்டு
அண்ண(னு)ட வாக்கு அழிக்கமிகப் போகாது
சரணஞ் சரணமென்று சாஷ்ட்டாங்கந் தெண்டனிட்டு

எல்லோரும் ஒருங்கிருத்தல்
திரியோ திரனையும் சேனைதள மத்தனையும்
வரிசை யுடனே வரவழைத்து அந்நேரம்
ஐவரும் நூத்துவரும் அலங்கார மாயிருந்து
---
[274] குருவை
------

தருமர் உரை

தக்க புகமுடைய தருமலிங்கம் ஏது சொல்வார்

சிவபூசை முடித்து உணவருந்திச் செல்கிறோம் எனல்

எட்டு நாளாச்சு இணைகாவல் நாமிருந்தோம்
திருமஞ் சனமில்லை சிவபூசை தானுமில்லை
அந்தியில்லை சந்தியில்லை அனுஷ்டானந் தானுமில்லை
திருநீறு பூசவில்லை சிவபூசை செய்யவில்லை
சிவபூசை தான்முடித்து திருநாமம் தான்சாத்தி
ஒருபொழுது தங்கி உண்டு பசியாறி
தங்கி இருந்து தவிப்பாறி நான்போரேன்
தேசமெல்லா மாண்டு செங்கோல் செலுத்துமென்றார்.

துரியோதனன் கடுகளவுகூட இடங்கொடுக்கமாட்டேன் எனல்

அந்த மொழிகேட்டு அரவக் கொடிவேந்தன்
எள்ளளவு பூமி இடங்கொடுக்கப் போறதில்லை
கடுகளவு பூமி காட்டே னொருநாளும்
தரிக்க இடங்கொடுக்கேன் தாரணியில் இப்போது.

துரோபதை மீண்டும் சினங்கொண்டு கூறல்

அந்த மொழிகேட்டு ஆரணங்கு ராசகன்னி
தோற வழகி துரோபதையாள் ஏது சொல்வாள்
தரிக்கயிட மில்லையென்றாய் சங்கைகெட்ட சக்கிலியா
சூதாடித் தோற்றவர்க்குத் தேசமில்லை நாடுமில்லை
நாமக் கொடிவேந்தன் நாடேது ஊரேது
ஆண்டு பனிரண்டும் அருங்கான கம்மிருந்து
மீண்டுவந்து அத்திபுரம் மேதினியைக் கொள்ளையிட்

பாரதப் போரில் என் கூந்தலை முடிப்பேன் எனல்

குருச்சேத்திர பூமியிலே கொன்று சினந்தீர்த்து
நூலாய்க் கடுந்திரளாய் நூத்தொருவர்பூமுடியை
சகுனி முதலான தார்வேந்தன் தன் தலையும்
எண்ணத் துலையாத ராசாக்கள் தன் தலையும்
காளி பெலிகொள்ளக் காகங்கள் வட்டமிட
தொட்டுத் துயிலுரிந்த துட்டோ திரன்மார்பில்
ஏறி மிதித்து என்கூந்தல் நான்முடித்து
மாமன் சகுனிதன்னை மணிக்குடலைத் தான்பிடுங்கி
மார்பில் மிதித்து வர்ண மயிர்க்கூந்தல்
அவந்த[275] மயிர்முடித்து வீரகெந்தம் பூசுவேன்னான்
பரையனுட பூமியிலே பாதம்வைக்கப் போகாது.
ப தோற வழகி துரோபதையும் ஈதுரைக்க

தருமர் முதலானோர் கானகம் புறப்படல்

தக்க புகழுடைய தருமரும் தம்பியரும்
மாலைமுடி யானோடே மறுவார்த்தை பேசாமல்
மாயவனே தஞ்ச மென்று வனநோ கிக் தானடைந்தார்,
கையலரும் தப்பியரும் தருமருட பின்பாக
மாலை[276] சரணமென்று வழிகூடி தானடந்தார்.

துரியோதனன் மகிழ்ந்து, அவர்களுக்கு இடையூறு செய்யச் சொன்னான்

தேசத் தழகன் திரியோ திரன்மகிழ்ந்து
காசினியில் வில்லி கர்ணனையுந் தாைைழத்து
போற வழிமுழுதும் பொய்க்குழியும் வெட்டுமென்றான்.
மகாவீர ரெல்லோரும் வசிகளையும் நாட்டுமென்றார்.
முனையளவு உள்ளதெல்லாம் முன்னை நிறுத்துமென்றான்..
செப்புவசியைத் திசைதோறும் நாட்டுமென்றான்.
இருப்பு வசியை எங்கும் நிறுத்துமென்றான்,
ஒருவர் நடக்க ஒதுக்கி வழியும்விட்டு
இருவர் நடக்க இடங்களையும் வையாதே[277]
தழைந்த மரங்கண்டால் தகையாரிப்[278] போகாமல்
இருண்ட மரங்கண்டால் நிழலென்று தானிருப்பார்
காச்ச மரங்கண்டால் காய்கனிகள் தின்பார்கள்
காச்ச மரங்களையுங் காயோடே வெட்டுமென்றான்,
பூத்த மரங்களையும் பூவோடே வெட்டுமென்றான்.
குளுந்த மரங்கனையும் குழையோடே வெட்டுமென்றான்.
தாழி[279] கொடியறுத்தான தக்காளி வேரறுத்தான்
முன்னே கொடியறுத்தான முடடைவேர் வெட்டுமென்றன்.
அப்பகா கொடி யறுத்தான் ஆநண்டை வேரறுத்தான்
நல்லதண்ணி பொய்கையிலே நஞ்சு கலந்துவைத்தான்.
---
[275]அவிழ்ந்த [276]. மாலே - திருமாலே போலும்.
[277].வைக்காதே. [278]=?, [279].
----------

தருமன் முதலானோரை வீமன் தூக்கிச் செல்லுதல்

தருமர் நடக்கத் தடுமாறும் வேளையிலே
வெத்தி மதசாலை வீமன் மதகரியும்
தக்க புகழுடைய தருமரையுந் தானெடுத்து
பொன்முடியின் மீதில்வைத்து போர்வீமன் தானடந்தான்.
நகுலன் சகாதேவன் நடக்க முடியாமல்
திடுக்கென்று நின்று தடுமாறும் வேளையிலே
இருவரையுந் தானெடுத்து இருபுயத்து மேலேத்தி
கொம்பனையைத் தான்தூககிக் கொடங்கையிலே தானெடிக்கி
மத்த கிசம்போலே[280] மதகரியுந் தானடந்தான்.

வேசிகளெல்லாம் தவிடுபொடியாயின

இருப்பு வசியும் எதிரில்லை வீமனுக்கு
செப்பு வசியும் சேர முனைமழுங்கி
எறக்கிற வீமனுக்கு ஏழுசிங் கம்பிலமாம்
மத்த கிசம்போலே மதகரியும் பொய்கையிலே
கல்லு மலையங் கடுகுபொடி யாகுதிப்பேர்
எப்பிழைப்பு மில்லாமல் ஏழுசுத்துக் காதவழி
விரசாய் நடந்தான் வெத்தியுள்ள போர்வீமன்.

சிவபெருமான் வந்து வீமன் முதலானோருக்கு பலங் (காடுத்தல்

கண்டு பிரியமுடன் கைலாச நாதருந்தான்
வெள்ளை விடையேறும் விமலனார் தான்மகிழ்த்து
ஏழுலட்சம் சிங்கடெலன் ஈஸ்டனார் தான் கொடுத்தார்.
பத்துப்பேர் கொண்ட பார்த்தன் தனஞ்செயர்க்கு
வீமன் வலுக்குடுத்தார் வௌளி மலைநாதர்.
தர்மர் நகுலன் சகாதேவர் வீரியர்க்கும்
அப்பலத்து சிங்கம்போல் அரானாந் தான்கொடுத்தார்
குந்திம க ளைவருக்கும் கோபால ருண்டெனவே
பொன்னின் கைலாசம் போனார் அரனாரும்.

தேவர்கள் பூமழை பொழிந்தனர்.

தேவாதி தேவரெல்லாம் திருக்கூட்ட மாயிருந்து
பொன்மாரி பூமாரி பொழிந்தனர்காண் தேவரெல்லாம்.

ஐவரும் கானகமி நோக்கி நடத்தல்

பொன்னு ரதம்போல போர்வீமன் தானடந்தான்
ஆனந்த மாய்நடந்து ஐவரும் பூந்தேரில்
காடு நடந்து கன்னிவனந் தானடந்து
எல்லாம் நடந்தார் இருண்டவனம் தானடந்தார்
சோடர்க ரெண்டுமலை தோணும் பருவதம் போல்
நாதாக்கள் கூட்டம் நல்ல சுனையருகே
சத்த ரிஷிகளுடன் தண்ணீர்த் தடாகமதில்
கற்பக விருட்சமதில் கைலாசம் போயிருக்கும்
மாவும் பிலாவும் வத்தாத பொய்கைகளும்

சந்தனச் சோலையில் தங்கள்

சந்தனச் சோலை தண்ணீர்த் தடாகமதில்
இறங்கி இருந்தார் ஈஸ்பரனே தஞ்சமென்று
வைகுத்த நாதர் மலர்த்தாள் சரணமென்று
சரணஞ் சரணமென்று தானிருந்தார் பஞ்சவர்கள்.

சுனையில் நீராடி வழிபடல்

அந்தச் சுனையருகே ஐவருமே நீராடி
புஷ்ப மலர்தூவிப் பூசைகளுந் தான்முடித்து
சிவபூஜை செய்து திருநாமந் தான்சாத்தி

மாமுனியை வனங்கல்

அங்கிருந்த மாமுனியை அடிவணங்கித் தெண்டனிட்டு
பார்த்திபரே உங்களுக்குப் பசியிளப்பு மெத்தவுண்டு
போத்தி முனிமுகத்தைப் பூரணமாய்த் தான்பார்க்க

முனிவர் கனிகளை வரவழைத்தல்

தேனுங் கனியுந் தெருட்டாத பாலமுர்தம்
தானுஞ் சிவமுனிவர் தன்னிடத்தில் வந்திடுமாம்
இந்தக்கனி பால்பழமும் இப்போ தழைத்தவிதம்
அன்ன சுகமெல்லாம் அலங்கார மாயிருந்து
வரிசை யுடன் கேட்டால் வல்வினைகள் நீங்கிவிடும்.

இக்கதை கேட்டால் துரோபதை நல்ல வரங் கொடுப்பாள்

துரோபதையாள் தன்கதையைச் செவியாறத் தான்கேட்டால்
மெத்த வரங்கொடுப்பாள் மின்னாள் துரோபதையும்
வருந்திப் படித்தவர்க்கு வரங்கொடுப்பாள் ராசகன்னி
உருகிப் படித்தவர்க்கும் உண்மையுடன் கேட்டவர்க்கும்
இந்திர பதங்கொடுப்பாள் ஈஸ்பரியும் ராசகன்னி
முள்ளு கிழியாமல் முடித்தபூ வாடாமல்
அன்ப ரிடத்தில் அறுதினமும் காத்திருப்பாள்.
விசா ரமினி யில்லாமல் வீத்திருந்து கேட்டவர்க்கு
மகிழ்ச்சியுடனே மனதுவைத்துக் கேட்டவர்க்கு
வெத்தி மதசாலை வீமரைப்போல் வாழ்ந்திருப்பார்.
ஆளால் அழகன் அருச்சுனரைப் போலிருப்பார்
நளினி நடையழகன் நகுலரைப் போலிருப்பார்.
சகல கலையறியுஞ் சகாதேவன் போலிருப்பார்.
பொன்னின் கைலாசம் பொற்பாதம் போற்றிடுவார்,
வேத வியாசர் வேதாந்த வாக்கியத்தை
கொம்பா லெழுதுங் கோடி மதவா னை
என்னகுத்தம் வந்தாலும் எழுத்துக்குத்தம் வந்தாலும்
கொண்டு பொறுத்தருளும் குஞ்சரமே கண்மணியே
அஞ்சிப்பயந்து அடிவணங்கிக் கேட்டவர்கள்
அல்லித்தா மரைபோல் அன்னைசுத்த மெல்லோரும்
துன்பமற வாழத்[281] துணையிருப்பாள் ராசகன்னி.
என்றும் பதினாறாய் இருப்பார்கள் வையகத்தில்.
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி
மூங்கில்போல் சுற்றம் [282]முசியாமல் வாழ்ந்திருப்பார்.
---
[281] வாழ்ந்து என்றுளது. [282] சுத்தம் என்றுளது.
---

வேலும் மயிலும் குருவே துணை

திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த
தாராநல்லூரிலிருக்கும் முத்துக்கருப்பன்
குமாரன் ரெங்கசாமி சுவடி படிக்கிறது
துரோபதையம்மானை.


பிரசோத்பதி-௵ மாசி - ௴ 29-௳ எழுதிக்கொண்டது.
வேலுமயிலும் குருவே துணை.
துரோபதையம்மானை முற்றிற்று.
----------------

This file was last updated on 26 October 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)