இராமனாதன் செட்டியார் இயற்றிய
மயூரகிரிக் கலம்பகம்
mayUrakirik kalampakam
by amarAvati irAmanAtan ceTTiyAr
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
A raw text file was generated using Google OCR and the text was subsequently corrected
for any OCR errors.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
அமராவதி புத்தூர் இராமனாதன் செட்டியார் இயற்றிய
மயூரகிரிக்கலம்பகம்
Source:
குன்றக்குடி என்னும் மயூரகிரிக் கலம்பகம்
ஆசிரியர் : அமராவதி புதூர் வயி. நாக. அ. இராமநாதன் செட்டியார்
உரைவிளக்கம் : குன்றக்குடி ஆதீனப் புலவர் சைவத் தமிழ்மணி
சைவத் தமிழ் அறிஞர் வித்துவான் க. கதிரேசன் , பூவாளூர்
சாத்து கவி: தேவகோட்டை மகாவித்துவான் வீர. லெ. சின்னய்யா செட்டியார்
முகவுரை: மதுரைத் தமிழ்ச்சங்க் வித்துவான் மு. ரா. அருணாசலக் கவிராழர்
---------------
மயூரகிரிக் கலம்பகம்.
உ : சிவமயம்
தோகையடி விநாயகர் காப்பு.
திருமாது வாழ்க்கை நிலைக்கின்ற குன்றையில் தேங்கடமாத்
தருமாது வள்ளி தழுவும் கடம்பன்பொன் தாட்(கு)எளியேன்
பெருமாது கொண்டு கலம்பகம் சூட்டிடப் பேசுபலம்
வருமா துளைகெழு கைத்தோகை அத்தி வழங்குறுமே.
குறிப்புரை: கடம்- மலைப்பகுதி. மா- தினைமாவு. பெருமாது- பேராசை. வருபலம்- வரும் அறிவாற்றல். மாண துளை- கெழுகை- நீண்ட துளைபொருந்தியகை - துதிக்கை. மாதுளை *- கை- மாதுளம்பழம் ஏந்திய துதிக்கை. தோகை அத்தி- அருள்தருதோகையடி விநாயகர்.
பொழிப்புரை: திருமகள் நிலையாகக் குடிகொண்டுள்ள குன்றக்குடியில், தேனும் மலைப்பகுதித் தினைமாவும் தந்த வள்ளிநாயகியைத் தழுவும் அருள்தரு ஆறுமுக அப்பனின் திருவடிகளுக்கு, எளியவனான நான் பேராசைகொண்டு கலம்பகம் கட்ட வரும்அறிவாற்றலை நீண்ட துளைபமொருந்திய ' நாரதர் தந்த மாதுளம்பழம் ஏந்திய ; துதிக்கையுடைய அருள்தரு தோகையடி விநாயகர் வழங்குவாராக.
இலக்கணக் குறிப்பு: மாதுளை - பொதுமொழி. (1)
--------------
கலைமகள் துதி.
மாரதியை மலைவாரும் மன்மதனை
மலைவாரும் மருவிஆடும்
காரகு)இயை தடம்புடைகழ் தெங்(கு)இரவி
புரவியைப்போய்க் கதுமென்றாு) ஓட்டிச்
சாரதியை இளநீரின் மகிழ்செய் குன்றைக்
கலம்பகவார் சலதி நீந்தப்
பாரதியை மானசவா வியுட்பற்றப் பெற்றேற்கும்
பயமுண் டாமோ.
குறிப்புரை: மா ரதி- அழகிய இரதிதேவி. மலைவார்- ஒத்தஅழகுடையவர். ஆடும்- நீராடும் . கார்அது இயை- மேகம் தவழும். தடம்புடைசூழ் தெங்கு காரது இயை. தடம்புடைதகழ்- மருதாபுரிக் குளப்பக்கங்களைச் சூழ்ந்த. இரவிபுரவி- ஞாயிற்றின் ஏழு குதிரைகள். கதும்- விரைந்து. வார்சலதி- பெருங்கடல். பாரதி- கலைமகள். மானசவாவி- மனமாகிய குளம்.
பொழிப்புரை: அழகிய இரதிதேவியை ஒத்த மகளிரும், மன்மதனை ஒத்த ஆடவரும் பொருந்தி நீராடும் மருதாபுரிக் குளத்தைச் சூழ்ந்து வளர்ந்த தென்னை மரங்கள் போய், ஞாயிற்றின் தேரினை இழுக்கும்ஏழு குதிரைகளையும் விரைந்து ஒட்டியபின், தேரோட்டிக்கு இளநீர் அளித்து மகிழ்விக்கும் வளமார்ந்த குன்றக்குடிப் பெருமானைப் போற்றும் கலம்பகமாகிய பெருங்கடலினை நீந்திக் கடக்க, கலைமகளை என் மனமாகிய குளத்து வெண்டாமரையில் எழுந்தருளப் பெற்றஎனக்கு அச்சமில்லை. மானசவாவி என்பது மனமாகிய குளம் என்ற பொருளுடன் கயிலையை ஒட்டிய யொட்டிய மானசசரோவரம் என்ற பொய்கையைத் தொனிப்பொருளாயும் புலப்படுத்துவது.
இலக்கணக் குறிப்பு: கலம்பக வார்சலதி, மானசவாவி - உருவகங்கள். இச்செய்யுள் உயர்வுநவிற்சியணியும், தற்குறிப்பேற்றவணியுமாம் (2).
--------
திருமகள் துதி.
மைத்துருமம் சார்பொழில்விண் புகுந்(து)இருட்டிக்
குளிர்நடுக்க வானோர் மாழ்கி
இத்துருமம் புதுமைசெயும் ஐந்தருவில் சேர்ந்தன்றன்றாு)
என்று தேற
வைத்(து)உருமம் வேண்டுகுன்றைக் கலம்பகம்சொல்
லின்செல்வம் வாய்ப்ப வாரி
வித்துருமப் பொற்கொடியை அகம்படர
வைத்தேற்கு மிடிஉண டாமோ.
கு-ரை: மைத்துருமம்- கார்மேகம். மாழ்கி- மனம்மயங்கி. புதுமை செயும் இத்துருமம். இத்துருமம்- இம்மரங்கள். QHHH= தேவருலக ஜவகை மரங்கள். அவை: கற்பகம், அரிசந்தானம், தேவதாரம், பாரிசாதம், மந்தாரம் என்பன. உருமம்- வெப்பம். இன்சொல் செல்வம்- இனிய சொற்களாகிய செல்வம். வாய்ப்ப- கிடைக்குமாறு. வாரி வித்துருமம் - கடலின் பவளக்கொடி. அகம்- மனம். மிடி- சொற்செல்வ வறுமை.
பொ- ரை: மரங்களின் செறிவால் இருண்டசோலையின் மரங்கள் வானுலகில் புகுந்து அதனையும் இருளச்செய்து குளிர்ச்சியூட்ட, அதனால் மனம்மயங்கிய தேவர்கள், இது நம்தேவருலக ஐந்தருவால் ஏற்பட்டதன்று என்று தெளிந்து, வெப்பத்தை விரும்புவர். இத்தகு வளமான குன்றக்குடிப் பெருமானின் கலம்பகம்பாட இனிய சொற்செல்வம் வேண்டி, கடலில் படரும் செம்பவளக்கொடிபோல் விளங்கும் அழகிய திருமகளை என் உள்ளத்தில் படரவைத்த எனக்குச் சொற்செல்வ வறுமை உண்டாகாது.
இ- பு: இன்சொல் செல்வம்- உருவகம். வித்துருமப் பொற்கொடி- உவமத் தொகை . இச்செய்யுள் உயர்வு நவிற்சியணி. (3)
------------
பார்வதி துதி.
முனிவரையும் ஒருமொழியின் மயக்குகொடிச்
சியரின்சீ மூதம் மேவும்
மினிவரையும் வேறல்எளி தோஒளியின்
எனஒளியும் விதங்காட் டும்சீர்
உனிவரையும் புகழ்க்குன்றைக் கலம்பகத்தின்
தமிழ்இனிமை ஓவாகு) ஓங்கப்
பனிவரையின் வழிபசுந்தேன் உண்டேனென்
பாடலுக்கும் பழிப்யூ௨ண் டாமோ.
கு-ரை: கொடிச்சியர்- குன்றக்குடி மலைகழ்ந்து வாழ்மகளிர். சீமூதம் மேவும்- கார்மேகத்தில் பொருந்திய. மின்: இவரையும்- மின்னல் இவர்களையும். வேறல்- வெல்லுதல். ஒளியும்- மறையும். உனி- உன்னி- நினைத்து. சீர்உனிஒளியும். வரையும்- நான் எழுதும். பனிவரையின் பசுந்தேன்- இமயமலையில் தோன்றிய பசிய தேனான பார்வதி தேவி.
பொ- ரை: முனிவரையும் தன்ஒப்பற்ற இன்சொல்லால்மயக்கும் குன்றக்குடிக் கொடிச்சியரைக் கண்ட கார்மேகத்தில் தோன்றும் மின்னல், பிறமகளிரை ஒளியால் வென்றதுபோல், குன்றக்குடி மகளிரைத் தனது ஒளியால் வெல்ல முடியாது என்று உடனே ஒளிந்துகொள்ளும் தன்மையுடைது.. இத்தகு சிறப்பினை நான்எண்ணிக் குன்றக்குடியில் எழுந்தருளியுள்ள பெருமானைப் போற்றும் கலம்பகத்துத் தமிழின் இனிமையானது இடையறாது மிகும்பொருட்டு, இமயமலையில் தோன்றிய பசியதேனான பார்வதி தேவியை மனத்திற்கொண்ட என்பாடலுக்குப் பழிப்பில்லை.
இ- பு: மினிவரையும்- மின்னிவரையும்- எதுகைநோக்கிய செய்யுள்விகாரம்.
உனி- உன்னி- எதுகைநோக்கிய செய்யுள் விகாரம். பசுந்தேன் - உருவகம்.
முனிவரையும்.........விதங்காட்டும் - தற்குறிப்பேற்றவணி. (4)
------------
நூல்.
1.1. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.
1. வானேறும் கற்பகப்பேர் வண்(டு)அலையும் தண்டலையும்
தேனேறும் பங்கயச்செந் திருநாடும் திருநாடும்
இமையாத பெருஞ்சிறப்பின் இணைக்கண்ணும் கணைக்கண்ணும்
அமையாத திறம்படைத்த அரம்பையரும் நரம்பைஅரும்
சுவைஅமுத சுரபிமுலை துணையும்விரல் தடவிவழி
இவைஅமுதம் அல(து)இலெனும் இசைப்பாட்டும் இசைப்பாட்டும்
ஓராறு வளநளினத்(து) உறுவதனத் தடத்திருமின்
போராறு விழிகாதல் பொழிஆறு கரைஅலைப்பக்
குடியேறி மலையேறிக் குலவுதிருக் கோலமதைப்
படியேறித் தொழும்யாரும் பலகாலும் எதிர்காணூஉ
எண்ணளவும் மதியாதே இழித்(து)இழியும் பெருந்தகைய
விண்அளவு மயூரகிரி விமானத்தின் மிசைப்பொலிவோய்
இது, பன்னிரண்டடித் தரவு
1. கு- ரை: பேர் கற்பகம்- புகழ்வாய்ந்த கற்பகமரம். தண்டலை- சோலை. திருநாடும் திருநாடும்- திருமகள் விரும்பும் தேவநாடும். கணைக்கண்ணும் இணைக்கண்ணும்- அம்புகளைஒத்த இருகண்களும். அமையாத- ஒப்பற்ற. நரம்பை- யாழ்நரம்பினை. அமுதசுரபி- பால்சுரக்கும் காமதேனு. துணையும் விரல்- ஆதரவுடன்கூடிய விரல்களால். இசைப்பாட்டும் மிசைப்பாட்டும்- வணைஇசையுடன் கூடிய மேலானபாட்டும். ஓர் ஆறுவள நளினத்து உறு- ஒப்பற்ற ஆறுவளமான தாமரை மலர்களாக விளங்கும். தடவதனத்து- பெருமைபொருந்திய திருமுகத்தில். இருமின்- இரண்டு மின்னல்ஒத்த வள்ளி தெய்வயானை. போர்- செறிந்து பொருந்திய. விழிஆறு காதல்பொழி ஆறு- விழிகளின்வழியே அன்பினைப் பொழியும் ஆறு. கரைஅலைப்ப- கரைகளில் மோத. குடியேறி- வந்து. எதிர்காணூாஉ- நேரேகண்டும். எண்அளவும்- நினைப்பின் அளவும் - மிகச்சிறிதும். இழித்து இழியும்- கீழாக்கி மலைவிட்டிறங்கும். விணஅளவு- வானளாவிய. விமானம்- திருக்கோயில்.
பொ- ரை: வானுலகில் உள்ள புகழ்வாய்ந்த கற்பகமரத்து வண்டுகள்வந்து அலையும் சோலையுடையதாய், தேன்மிக்க செந்தாமரையில் உள்ள செய்யாளாகிய திருமகள் விரும்பும் சிறந்த தேவநாடும்ஆகி; அம்பினை ஒத்த இருகண்களும் இமைக்காத பெருஞ்சிறப்பினையுடைய அரம்பையர் வீணைநரம்புகளை ஆதரவுடன்கூடிய விரல்களால் தடவிமீட்டிப் பாடும்இசைப்பாடல்கள், அமுதசுரபி யாகிய காமதேனு சுரக்கும்சுவையான அமுதம் - பால் - அல்லது வேறில்லை என்னுமாறுபாடும் பாட்டும்பொருந்த, ஒப்பற்ற வளமான ஆறுதாமரைகளாக உள்ள பெருமை பொருந்திய ஆறுகிருமுகங்களையும், இருமின்னல்களாக விளங்கும் வள்ளி தெய்வயானைஎன்ற இருவரின் விழிகள்பொழிகின்ற காதலாகியஆறுகள் கரைமோதிச் செறிந்துபொருந்த, மயிலேறிக் குன்றக்குடிவந்து விளங்கும் திருக்கோலத்தை, மயில்மலைப் படியேறிவந்து பலமுறை தன்னைவணங்கும் எத்தகையவரையும் நேரேகண்டும், அவர்களை மிகச்சிறிதும் நினைக்காமல் கீழானவராக ஒதுக்கிவிட்டு, எம்போன்றோர் பொருட்டு மலைவிட்டிறங்கி வந்து அருளும் பெருந்தன்மையனே ! வானளாவிய மயில்மலைத் திருக்கோயிலில் பொலிகின்றவனே !
விளக்கம்: “மயிலேறிக்.......... பெருந்தகைய” என்ற பகுதி,
“இங்குநம் இல்லங்கள் தோறும்எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை”
(திருவாசகம் பா.171) என்பதை நினைவூட்டும்.
-------------
1.2. மணிமுகம்தாங் கியசலதி வடிவினம்தோ கையைவிரிக்கும்
பிணிமுகம்தாங் கியநீதான் பிணிதவிர்ப்ப(து) அதிசயமே
கொலைவினையைத் தனிஆளும் குலக்கொடியாள் உவப்பதற்கோ
புலைவினையைத் தொலைத்(து)ஒளிரும் போர்வேலைப் பரித்தனையே
மூவுலகும் தொழவிசும்பு முழு(து)ஆளி மகள்மகிழ
மாவுலகம் புகழ்ச்சிசெயும் வச்சிரம்கை நச்சினையே
எரியுமல ரவனுடலம் எரியும்விழ் களிப்பதற்கோ
செறியுமயிர்த் தகர் ஏறித் திக்கெல்லாம் திரிந்தனையே
கொஞ்சுதலை விடுத்(து)இறைவன் குடிலைகொளச் செயுமுறைக்கோ
அஞ்சுதலைக்(கு) உயர்வாக ஆறுதலை ஆயினையே
சிந்திக்கும் தகைமிகவும் சிறந்ததென்றும் இளையாய்நீ
வந்திக்கும் திறல்விர வாகுவென்னை உயிர்த்துணையே.
இவைஆறும் ஈரடித்தாழிசைகள்.
2. கு-ரை: மணி- முத்து. சலதி- கடல். பிணிமுகம்- மயில். பிணி- மலநோய். தனி- ஒப்பற்றமுறை. புலை- கீழான. பரித்தனை- தாங்கினாய். விசும்பு முழுது ஆளி- வானுலகைஆளும் தேவேந்திரன். வச்சிரம்- வச்சிராயுதம். கைநச்சினை- கையில் விரும்பித் தாங்கினாய். எறியும் மலரவன்- மலர்களைளய்யும் மன்மதன். எரியும்விழி- சிவபிரானது தீவடிவான நெற்றிக்கண். தகர்- ஆட்டுக்கிடாய். குடிலைகொள- பிரணவப் பொருள் பெற. அஞ்சுதலைக்கு உயர்வாக- ஐந்தலைச் சிவனான சதாசிவமூர்த்தியைக் காட்டிலும் உயர்வுபெற. சிந்திக்கும்- விரும்பும். இளையாய் என்ஐ நீ- என்றும் இளையவனான, என்தலைவன் ஆகியற். வந்திக்கும்திறல்- புகழத்தக்கஆற்றல்.
பொ - ரை: முத்துகளைத் தன்பால் பெற்ற கடல்நிறமொத்த அழகிய தன்தோகையை விரிக்கும் பிணிமுகத்தை - மயிலினை - ஊர்தியாகப் பெற்ற நீ எமது மலப்பிணி தீர்ப்பது அதிசயமாகும்.
விலங்குகளைக் கொல்லும்செயலை ஒப்பற்ற முறையில் செய்யும் வேடர் குலக்கொடியான வள்ளிநாயகி மகிழ்வதற்காகவா, கீழான இருவினைகளையும் வேரறுத்து ஒளியுடன் விளங்கும் போர்வேலினைத் தாங்கினாய்.
மூன்றுஉலகங்களும் வணங்குமாறு வானுலகைஆளும் இந்திரன்மகள் தெய்வயானையம்மை மகிழ்வதற்காகவா பேருலகம் புகழந் வச்சிரப்படையை விரும்பிக் கையில் ஏந்தினாய்.
மலர்களைஎறியும் மன்மதனைளரித்த நெற்றிக்கண்ணன் - சிவபிரான் மகிழவா நீ மயிர்செறிந்த ஆட்டுக்கிடாய் மேல்அமர்ந்து எண்திசையும் திரிந்தாய். உன்னைக்கொஞ்சுவகதைக் கைவிட்டுச் சிவபிரான் ஓங்காரத்து உட்பொருளைக் கேட்குமாறு செய்து நீ உயர்வுபெறவா அவனது ஐந்துதலைகளுக்கும் மேலான ஆறுதலைகள் உடையவனாக ஆனாய்.
எக்காலத்தும் இளையவனே!, என்தலைவனே! அனைவரும் விரும்பும்தகுதியே மிகச்சிறந்தது என்பதால் புகழத்தக்க ஆற்றல்வாய்ந்த வீரவாகுவை உன் உயிர்த் துணைவனாகக் கொண்டாய்.
------------
1.3. கணமழை பொழிதரு கருமுகில் மிசைவர
வணமிகு வெகுநடம் அறைபயில் மயிலினை
திதிபெறு சுதர்உறு திறம்உயிர் பருகிய
அதிகொடு விடவடி(வு) அமைதரும் அயிலினை.
இவை நாற்சீர்ஓரடி கொண்ட அம்போதரங்கம்.
3. . கு-ரை: கணம்- நீர்த்துளி. வணம்- வண்ணம். அறைபயில்- புள்ளிகள் மிக்க. திதி- காசிபமுனிவரின் மனைவியாகிய திதி என்பவள். சுதர்- மக்களாகிய அசுரர். உறுதிறம்உயிர்- மிக்க ஆற்றல்வாய்ந்த உயிர். விடவடிவு- மிகக்கொடிய வடிவனான சூரன்.
பொ -ரை: நீர்த்துளிகளை மழையாகப் பொழியும் கார்மேகம் வானில்வர வண்ணம் மிக்க சிறந்தநடனம்ஆடும் புள்ளிகள்மிக்க மயிலுடையவன் ந். காசிபமுனிவரின் மனைவி திதி பெற்ற அசுரர்களின் ஆற்றல்மிக்க உயிரையுண்டு மிகக்கொடிய வடிவனான சகரனாகிய மயிலும் உடையவன் ந்.
-----------
1.4. . மரகத துரகம் இசைந்தனை வரைமது அமுதம் மிசைந்தனை
பரமத திமிரம் மறைந்தனை பரமகு டிலையும் அறைந்தனை.
இவை முச்சீர் ஓரடி கொண்ட அம்போதரங்கம்.
4. கு- ரை: மரகத துரகம்- பசியமயிலாகிய குதிரை. வரைமது- மலைமகள் ( மது- மாது என்பதன் குறுக்கல் விகாரம்) அமுதம்- பால். மிசைதல்- பருகுதல். பரமத திமிரம்- பிறமதத்தவரின் அறியாமைஇருள். பரமகுடிலை- மேலான ஓங்காரம்.
பொ - ரை: பசியமயிலாகிய குதிரையில் அமர்ந்தாய். மலைமகளாகிய பார்வதி தேவியின் பாலினைப் பருகினாய். பிறமதத்தவரின் அறியாமை இருளில் மறைந்துகொண்டாய். மேலான ஓங்காரப்பொருளைச் சிவபிரானுக்கு உபதேசித்தாய்.
-----------
1.5. சூர்அறுத்தனை போர்வெறுத்தனை
தோம்விடுத்தனை நேம்மடுத்தனை
பார்பொறுத்தனை நீர்ஒறுத்தனை
பாரிடத்தினை ஓர்இடத்தினை
இவை இருசீர் ஓரடி கொண்ட அம்போதரங்கம்.
5. கு-ரை: போர்- பகையுணர்வு. தோம்- குற்றம். நேம்- நேயம்- அன்பு. நீர்- கடல். பாரிடம்- பூதம். ஓர்- மனம்தெளிதல்.
பொ - ரை: கரனாகிய மாமரத்தைப் பிளந்தாய். பகையுணர்வை வெறுத்தாய். குற்றங்களை நீக்கினாய். அன்பு பாராட்டினாய். உலகைக்காத்தாய். கடல் சுவற வேலெறிந்து தண்டித்தாய்திருவிளையாடற் புராணச் செய்திஇது,. பூதங்களிடையே இருந்தாய். மனம்தெளிந்தோரிடம் உள்ளாய்.
-------------
1.6. காவோதண் ணிழல்மலியும் கடிபொழிலிற் செடியோபூம்
பூஓவப் புதுமலரில் புகுசுகுண மணமேயோ
தடமோமிக்(கு) உளசலனத் தடந்திரையோ தண்ணின்
இடம்ஓவப் புனல்அகலாகு) இருக்கின்ற குளிரேயோ
பாசமோ(ட) ஆர்க்கும் படமோநுண் ணூலோகார்ப்
பாசமோ யாதோ பகர்நீ் பரம்பொருளே.
இவை பெயர்த்தும் ஈரடித்தாழிசைகள்
6. கு-ரை: காவோ- சோலையா. கடி- நறுமணம். பூம் பூவோ- மென்மையான மலரா. ஓவம்- அழகு. சுகுணமணம்- நற்குணமுள்ள மணம். தடம்- குளம். தடந்திரை- குளத்துந்ரின் அலை. ஓவம்- அழகு. பாசம்- ஆசை. படம்- ஆடை. கார்ப்பாசம்- பருத்திப் பஞ்சு.
பொ - ரை: பரம்பொருளாகிய அருள்தரு சண்முகநாதப்பெருமானே ! fH , சோலையா? தண்ணிய நிழல்மிக்க காவலுடைய சோலையில் உள்ள செடியா? மென்மையான மலரா? புத்தம்புதிய மலரில்புகுந்துள்ள நற்குணமுள்ள மணமா? குளமா? குளத்தில் நிறைந்து அலையும் அலையா? தண்ணினிடத்து இடையறாது விளங்கும் அதனைநறநீங்காத குளிர்ச்சியா? ஆசையுடன் உடுத்தும் ஆடையா? ஆடையில் உள்ள மெல்லிய நூலா? நூலுக்குரிய பருத்திப்பஞ்சா? இவற்றில் யாதாக உள்ளாய்? என்பதை எனக்குக்கூறு.
( பெருமான்; பொருள், பொருளின்பண்பு, அதற்குரிய மூலம் ஆகிய
அனைத்துமாவான் என்றார். )
-----------
1.7. எனவாங்கு
குவிகடல் ஆடைப் புவிகரு உயிர்த்துக்
கண்ணன் பின்வரும் வண்ணவான் குடுமி
இமயம் பயந்த அமைஅம் தோளி
முலைப்பால் உண்டு கலைப்பா விண்ட
சுந்தர ஞானசம் பந்த ஆரிய
ஊழியும் உலவா வாழி நெடும்புகழ்
குன்றா மயூரக் குன்றைவந் தணைவார்
வேண்டிய ஆங்கே தூண்டிய வள்ளல்
தன்மை கேட்டுநின் சார்ந்தனன்
புன்மை போக்கிமன் நன்மைகாட் டுதியே
7. கு - ரை: குவிகடல்- இடைவெளியின்றி இணைந்தகடல். கருவுயிர்த்து- ஈன்று. பின்வரும்- தங்கையாகிய. குடுமி- உச்சி. அமைஅம் தோளி- மூங்கில் ஒத்த தோள்களையுடைய மலைமகள். கலைப்பா- ஒளிசிறந்த பாக்கள். விண்ட- அருளிய. ஆரிய- குருவே. உலவா- அழிவில்லாத. தூண்டிய- விரைந்து வழங்கியருளிய. புன்மை- மும்மலம் முதலிய கீழானவை. மன்நன்மை- நிலையான நன்மைதரும் வீடுபேறு.
பொ - ரை: இடைவெளி இன்றிஇணைந்த கடலினை ஆடையாக உடுத்த உலகத்து உயிர்களை எல்லாம் ஈன்றவளும், திருமாலின் தங்கையும், அழகிய மேலான உச்சியையுடைய இமயத்து இமவான் மகளும் ஆகிய மூங்கிலொத்த தகதோள்களுடைய மலைமகளின் திருமுலைப்பால் பருகியதால் ஒளிசிறந்த பாக்களை அருளிய அழகிய திருஞானசம்பந்தராய் விளங்கிய சிவகுருவாகிய தலைவனே! நீ ஊழிக்காலத்திலும் அழியாது வாழ்க. தனது பெரும்புகழில் குன்றாத உனது மயில்மலைக்கு உன்னை வணங்க வருகின்றவர் விரும்பியவாறே, விரைந்து வழங்கும் உன்வள்ளல்தன்மையை உலகோர்கூறக் கேட்டு உன்னைவந்து அடைந்தேன். என்மலமாசுகளைப் போக்கி, நிலைத்த நன்மைதரும் வீடுபேறு அருள்வாயாக.
விளக்கம்:
“பெம்மான் முருகன் பிறவான் இறவான்”,
“ உதியா மறியா உணரா மறவா”
“அடிஅந்தம் இலா அயில்வேல் அரசே” (கந்தர் அநுபூதி 12,18,19)
“எம்பெருமானின் மெய்யோ அகிலமும் இருப்பதம்மா”
“ தற்பரமதாம்எந்தை நம” (கந்தபு. உற்பத்தி.94, 82)
“ சாவில் பிறப்பின் இல்லானை: (பாம்பன்சுவாமிகள். திருவலங்கல்.பக்.72) முதலிய முருகமெய்யியலுக்கும், இந்நூல் 32ஆம் பாடலுக்கும் முரண்பட்ட செய்தி,
“இமயம் பயந்த அமைஅம் தோளி
முலைப்பால் உண்டு கலைப்பா விண்ட
சுந்தர ஞானசம்பந்த ஆரிய” (இக்கலம்பகத்து முதற்பா. சுரிதகம்)
என்பது. ஏன்? சமயச்சான்றோர் ஆகிய திருஞானசம்பந்தரின் பெற்றோர், சிவபாத இருதயரும் பகவதியாருமாவர். பகவதியார் திருவயிற்றில் திருஞானசம்பந்தர் பிறந்தவர் என்பதைச் சேக்கிழார் பெருமான்,
“கருத்துமுடிந் திடப்பரவும் காதலியார் மணிவயிற்றில்
உருத்தெரிய வரும்பேறு உலகுய்ய உளதாக” (பெரியபுரா. 1923)
(உருத்தெரிய வருதல்- கருக்கொள்ளுதல்)
என்கிறார். இந்நூலின் பாஎண் 32 கூறுவதேமெய்யியலுக்குஒத்தஇவர் உட்கோள்என்க.
-----------
2. துதி வெண்பா.
காட்டில் புனம்காக்கும் கன்னிமட மான்குருளைக்ககு)
ஆட்டில் புலிவேங்கை ஆயினையென் - கோட்டில்தேன்
தத்திவரச் செய்வாய்ப்பாய் தண்குன்றை கண்டார்சம்
பத்கு)இவரச் செய்வாய் பகர்.
கு - ரை: கோட்டில்- மரக்கிளையிலிருந்து. தத்திவர- பாய்ந்துவர. வாய்ப்பாய்- வாய்ப்புடைய. சம்பத்து- பெரும்பேறுகள். இவர- பெருக. காட்டில்- ஊரெல்லையில். புனம்- தினைக்கொல்லை. மடமான்குருளை- இளைய மான்கன்று - வள்ளிநாயகி. ஆட்டில்- விளையாட்டில். புலி வேங்கை- புலி எனப்படும் வேங்கைமரம். என்- என்னகாரணம்.
பொ - ரை: மரக்கிளை அடையிலிருந்து தேன் பாய்ந்துவரும் வாய்ப்புடைய தண்ணிய குன்றக்குடிக்கு வந்து உன்னைக்கண்டு வணங்கியவர்களுக்குப் பெரும்பேறுகள் பெருகிவரச் செய்யும் பெருமானே ! ஊர் எல்லையில் உள்ள தினைக்கொல்லையைக் காக்கும் வள்ளிநாயகியாகிய இளமான்கன்றுடனாகிய அருள்விளையாட்டில் நீ புலிஎனப்படும் வேங்கைமரம்ஆன காரணம்என்ன? கூறுக.
நயம்: வள்ளியை மடமான் குருளை என்றதற்கேற்ப முருகனைப் புலிவேங்கை என்றார்.
இலக்கணக்குறிப்பு: குன்றை- இடவாகுபெயராய் நின்றமரூஉமொழி. வள்ளி - மடமான் குருளை; முருகன் - புலிவேங்கை. முற்றுருவகவணி.
---------
3. கிள்ளைவிடு தூது.
(பொருள்வயின் பிரிந்த தலைவனுக்குத் தலைவி கிளியைத் தூதாக அனுப்புதல்.)
கட்டளைக் கலித்துறை.
பகலும் பரவும் இரவாக்கும் குன்றைஎம் பைம்பொழிற்கண்
புகலும் களிமொழிப் பூங்கிளி காள்அந்தில் போய்உரையீர்
அகலும் பெருவெறுக் கைக்காசை வைத்து)அணை யாதுநின்றாக்(கு)
இகலும் குணத்(து)அமு தும்கைத்(து) உளாள்இவள் என்பதுவே.
கு - ரை: பரவும்- பரவிவரும். களிமொழி புகலும் பூங்கிளிகாள்- மகிழ்ச்சிதரும்
சொற்கள் பேசும் அழகியகிளிகளே. அகலும்- கைவிட்டுப்போகும் - நிலையற்ற.
வெறுக்கை- செல்வம். அணையாது- என்னைக் கூடாது. இகலும்குணத்து-
விரோகிக்கும் குணத்துடன்.
பொ - ரை: ஒளி பரவிவரும் பகற்காலத்தையும் தடுத்து இரவுப்பொழுது போலாக்கும் பசுமைசெறிந்த சோலையில் வாழும் மகிழ்ச்சிதரும் சொற்கள் பேசுகின்ற அழகிய கிளிகளே ! நிலையற்ற பெருஞ்செல்வத்தை மிகவிரும்பி, என்னைக்கூடாது பொருள் வயிற் பிரிந்த என்தலைவரிடம் போய் “இவள்உன்னை விரோதிக்கும் குணத்தால்
உணவும் உண்ணவில்லை” என்பகதைக் கூறுங்கள்.
நயம்: பலரும் அடுத்து அடுத்துச் சொல்லின், “எறும்புகள் ஊரக்கல்லும் தேயும்”
என்பதால் கிளிகாள் என்று பன்மையில் அனைத்தையும் அழைத்தாள். பகலும் இரவு
ஆக்கும் பொழில்: “வெயில்நுழை கல்லாக் குயில்நுழை பொதும்பர்” என்றார்பிறரும்.
இ - பு: வெறுக்கை - காற்றுத் தொழிலாகுபெயர். அந்தில் - அசைநிலை.
அமுதும் - பிறவற்றையும் குறிக்கும் எச்சவும்மை.
-------------
4, இதுவும் அது.
எழுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.
வேதரூபம் பெறும்அறு மாமுக வித்தகன்
குன்றைத் தத்தைகள் நீவிர்எம்
சாதரூபம் பெறுநும் சிறைக்(கு)உறுந் தலைவ
னார்க்(கு)உறச் சாற்றுதல் வேண்டும்எம்
மாகு) அரூபம் பெறுவது திண்ணமே மான
மின்று வளைகலை போயின்று
சாதரூபம் பெறுசை சவத்(து)உள தகையள்
ஆயினள் தாழ்குறின் என்று)அரோ.
கு - ரை: வேதரூபம்- ஞானவடிவம். வித்தகன்- ஞானி. தத்்தைகள்- கிளிகளே. எஞ்சாதரூபம்- ஞானத்தால் அழகால் குறைவில்லா வடிவம். நுஞ்சிறை- கிளிச்சிறை. உறும்- ஒத்த. அரூபம்- மரணம். மானமின்று- வெட்கமில்லாமல். வளை கலை- வளையலும் ஆடையும். சாதரூபம்- பிறந்தகோலம். சைசவம்- கைக்குழந்தைத் தன்மை. தாழ்குறின்- நீ வரக்காலம் தாழ்த்தால்.
பொ - ரை: ஞானவடிவமான ஆறுதிருமுக ஞானியின் குன்றக்குடியில் வாழும் கிளிகளே ! நீங்கள், ஞானத்தால் அறிவால் குறைவில்லா வடிவமாய், கிளிச்சிறைப் பொன்ஒத்த தலைவனுக்கு; “இவள் உன்பிரிவால் மானமில்லாமல் தன்வளையலும் ஆடையும் இழந்து, பிறந்த கோலத்துக் கைக்குழந்தை போலானாள். நீ வரக் காலம்தாழ்த்தின் இவள் மரணமடைவது உறுதி” என்று கூறவேண்டும்.
வி-ம்: முருகன் ஞானவடிவன், “ஞானந்தான் உருவாகிய நாயகன்” (கந்தபு. கூரன் அமைச்சியல். 128) காமமீக்கூர்தலால் உடல்மெலிதல், வளை கலைபோதல் என்பன மெய்ப்பாடுகள்.
இ - பு: அரோ - முன்னிலைஅசை. இச்செய்யுள் உவமையணி.
-------------
5. துதி வெண்பா.
என்றே அருள்வைமதி யில்லேற்(கு) உயர்குன்றைக்
குன்றே விழைந்துவிளங் கும்சேயே - நன்றேமால்
புல்லும்இறை புந்திமகிழ் பொன்னே வெளியேதர்க்
கொல்லும் அசனியே கூறு.
கு - ரை: மால்புல்லும் இறை- மோகினியான திருமாலைத் தழுவிய சிவன். வெளி- ஞானவெளி. அசனி- இடியேறு.
பொ - ரை: சிறந்த குன்றக்குடிக் குன்றினையே மிகவிரும்பி வாழும் அருள்தர சண்முக நாதப்பெருமானே ! மோகினியாகிய திருமாலினை இறுகத்தழுவிய சிவன் மகிழும் பொன்னே ! ஞானவெளியே ! சூரனைக் கொன்ற இடியேறே ! அறிவற்ற எனக்கு என்றைக்கு அருளுவாய் ? கூறுக.
வி-ம்: திருமால் மோகினியான போது சிவன்புல்ல, மாசாத்தன் தோற்றத்தை, சிவஞான முனிவரின் காஞ்சிப் புராணம் “மாசாத்தன் தளிப்படலம்” கூறும்.
இ - பு: பொன் , அசனி - உருவகங்கள்.
-----------
6. தலைவன் பவனிவரக்கண்டு வருந்திய தலைவியைத் தலைவன் சேர்வானோ என்று பாங்கி கூறுதல்.
பதின்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.
கூறுசங் கணிந்த கொண்டல் தேடுசங் கரன்ப யந்த
கோகிலம் தழங்கு குன்றை முருகேசர்
ஏறுதிண் திறம்து லங்க வேலைநின்றாு) எழுந்து சிங்க
ஏ(று)எதிர்ந் த(து)என்(று) உகந்து மயில்மீதே
ஆறிரண் டுதிண்பு யங்க ளோடுவந்த வென்றி கண்டு)இவ்
ஆகுலம் தழைந்த கொம்பை அணைவாரோ
வீறுசுந் தரம்தி ரிந்து தேறுசிந் தையும்பி றழ்ந்து
மேவுசங் கடம்தொ லைந்து விடுமாறே.
கு - ரை: கூறு- புகழப்பெறும். கொண்டல்- மேகவண்ணனான திருமால். கோகிலம்- குயில். தழங்கும்- ஆரவாரிக்கும். ஏறுதிண்திறம்- மிகவலிய ஆற்றல். வேலை- கடல். சிங்கஏறு- ஆண்சிங்கம். எதிர்ந்தது- போரிட எதிர்வந்தது. வென்றிகண்டு- வெற்றிபெற்று. ஆகுலம்- காமக்கலக்கம். கொம்பு- தலைவி.
பொ -ரை: புகழப்பெறும் பாஞ்சசன்னியம் என்ற சங்கேந்திய மேகவண்ணன் ஆகிய திருமாலால் தேடப்பெறும் சிவபெருமானின் மகனும், குயில்கள் ஆரவாரிக்கும் குன்றக்குடியில் எழுந்தருளியுள்ளவனுமான அருள்தர ஆறுமுகப் பெருமான்; தனது மிகவலிய ஆற்றல் விளங்கக் கடலிலிருந்து ஆண்சிங்கம் எழுந்ததென்று கருதி, மயில்மேல் பன்னிரு வலியதோள்களுடன் ஏறி, அவ்வாண்சிங்கமாகிய கூரபன்மனை வென்று வந்ததைக்கண்டு காமக்கலக்கம் மிக்க இவளை, இவளது பெருமை பொருந்திய அழகு திரிந்து, தெளிந்த மனம்பிறழ்ந்ததாலான துன்பங்கள் தொலையுமாறு வந்து கூடுவானோ.
இ - பு: சிங்கவேறு - உருவகம்.
-------------
7. புயம்.
பாட்டுடைத் தலைவன் புயங்களின் செயல் கூறுதல்.
முப்பத்திரண்டூசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
ஆறு பொங்கிஅயல் ஓடூ கின்றஅருள்
ஆழி தந்தநெடூ வேல்வைத் திருந்தன
ஆசு கம்தனு வாள்கொ டூம்பரிசை
ஆழி உந்திஎறி பாசத்து) இசைந்தன
ஆத பம்செய்சத கோடி அங்குசமொழடு)
ஆக வம்செய்படை மேவிப் பொலிந்தன
ஆகு லம்தவிர வார ணம்குமுறி
ஆடு கின்றகொடி ஏறிக் கிளர்ந்தன.
தூறு புன்பயம் இலீர்வ ரம்பெறுவிர்
கழ்கிர் என்றகுறி காணப் பொலிந்தன
சோம கண்டநுதல் வேட மங்கைஅரி
கழ்சி லம்பூஅணிசெய் பாதத்தகு) இறைஞ்சின
தோகை வெம்புரவி வாய்கி டந்து) உலவு
சோர்வு விண்டகடி வாளத்து) இசைந்தன
தோத கம்பரவு மாய விஞ்சைமிகு
கர்இ ரண்டுபட வேல்விட் டெறிந்தன
பாறு தைந்தமொழி யானை நங்கைசம
பாகம் விஞ்சுமுலை மேல்உற்று) உறைந்தன
பாத லம்செறியும் நாகர் துங்கமணி
பாவு திண்கடகம் ஏறிச் சிறந்தன
பாத கம்கெழும லோடு நிந்தைபடு
பாவி என்கவிஅ வாவிப் புனைந்தன
பாவ மும்சுரமும் ஓட எந்தைபுகழ்
பாடி வென்றுதிரு நீறிட்டு) அணிந்தன
மாறும் இந்த்ரன்அர(ச) ஆள வந்தஉயர்
வாழ்வு தந்ததவ ஊழில் கிளர்ந்தன
மாத வன்கமல நாபி வந்தமறை
வாணி யன்தலையை மோதித் துலங்கின
வார இந்து) உளவி சால மன்றல்மலர்
மாலை துன்றிஅழ(கு) ஊறிச் செறிந்தன
வாழை பைங்கமுக மோ௭ ஸனும்படிவிண்
வாவு குன்றைஇறை ஸீரப் புயங்களே.
அடி 1.கு - ரை: ஆறு- கங்கையாறு. அருளாழி- அருட்கடல்- சிவபெருமான் ஆசுகம்- அம்பு. தனுசு- வில். கொடும் பரிசை- வட்டவடிவுடைய கேடகம். இசைந்தன- பொருந்தின- ஏந்தின. ஆதபம்- ஒளி. சதகோடி- நூறுகோடி. ஆகவம்- போர். ஆகுலம்- துன்பம். வாரணம்- சேவல். கிளர்ந்தன- ஒளிர்ந்தன.
பொ -ரை: வாழை....வீரப்புயங்கள்- இது பசியபாக்குமரமோ என்னுமாறு செழித்து வானளாவிய வாழைகள் விளங்கும் குன்றக்குடி இறைவனான அருள்தரு சண்முகநாதப் பெருமானின் வீரம்மிக்க திருத்தோள்கள்; பொங்கியெழுங்து பக்கங்களில் எல்லாம் ஒடுகின்ற வானுலகக் கங்கையைத் தடுத்துத் தன்தலையில் தாங்கி, உலகைக் காத்த அருட்கடலான சிவபெருமான் வழங்கிய பெருமை பொருந்திய வேல் ஏந்தின; அம்பு, வில், வாள், வட்டவடிவம் கொண்ட கேடகம், சக்கரம், உந்திஎறியும் பாசம் தாங்கின; பரிதிபோல் நூறுகோடி மடங்கு ஒளிரும் அங்குசத்துடன், போரிடும்பிற கருவிகள் பொருந்திப் பொலிந்தன; அடியவர் துன்பம் நீக்கக் கொக்கரிக்கும் சேவல் இலச்சினையுடன் கூடிய கொடியினை உயர்த்தின.
அடி 2. கு - ரை: தூறு புன்பயம்- அற்பம்செறிந்தஅச்சமும், பயனும்- நற்பேறும். வரம்- மேன்மை. சூழ்திர்- என்னைச் சுற்றிவாருங்கள் - வணங்குங்கள். என்றகுறி- அபய வரதக்குறி. சோமகண்டம்- நிலவின் துண்டம் - பிறை. வேடமங்கை- வள்ளி நாயகி. அரி- உள்ளிடுபரல். வெம்புரவி தோகை- விரும்பத்தக்க குதிரையாகியமயில். வாய்கிடந்து உலவு- வாயினில் அமைந்து அசையும். . சோர்வு விண்ட- இடைய்ீடின்றி. இசைந்தன- பிடித்திருந்தன. தோதகம்- வஞ்சனை.
பொ - ரை: அற்பம்செறிந்த அச்சமும் நற்பேறும் இல்லாதவர்களே, வரம்பெற என்னைச் சழுங்கள்- வணங்குங்கள் என்ற அடையாளத்தை அபயம் வரதம் மூலமாக அனைவரும் காணப்பொலிந்தன; பிறைபோன்ற நெற்றியுடைய வள்ளிநாயகியின் உள்ளிடு-பரலுடைய சிலம்பணிந்தகால்களை வணங்கின: விரும்பத் தக்கமயிலாம் குதிரையின் வாயில்அமைந்த கடிவாளத்தை விடாது பற்றி இருந்தன; வஞ்சனையான மாயவித்தை மிக்க சூரபன்மன் இருகூறாகுமாறு வேலெறிந்தன;
அடி 3. கு - ரை: துதைந்த- நெருக்கமான - ஒத்த. மொழியான்- மொழிபேசும் சிவபிரான். நங்கை- பார்வதி தேவி. உற்றுஉறைந்தன- பொருந்தி இருந்தன - கட்டிப்பிடித்தன. பாவு- பதித்த. ஏறி- அணிந்து. கெழுமல்- செறிந்த. அவாவி- விரும்பி.
பொ - ரை: பாலொத்த மொழிபேசும் சிவபிரானையும் பருத்த மார்புடன் அவனது இடப்பாகம் உடையவளையும் பொருந்தி இருந்தன - கட்டிப்பிடித்தன; பாதாளத்து நாகர்களின் தூயமணிகள் பதிக்கப்பெற்ற பருத்த கடகம் அணிந்து சிறந்தன; செறிந்த பாதகங்களுடன் பழிபட்ட பாவியாகிய என் பாடல்களையும் மாலைகளாக விரும்பி அணிந்தன; கூன்பாண்டியனது பாவமும் சுரமும் நீங்க எம்தந்தையாகிய சிவபிரானின் புகழ்பாடித் திருந்ற்றினைப் பூசியன.
வி-ம்: திருஞானசம்பந்தர் முருகன் அல்லராயினும் முதற்பாடல் சுரிதகத்தில் கூறியது போலவே இங்கும் முருகனைத் திருஞானசம்பந்தராகக் கூறுவதுஇவர்காலக் கருத்தின் வல்லாண்மைக் காட்டுகிறது. முன்னை விளக்கத்தை இங்கும் நினைக.
அடி 4. கு - ரை: மாறும்- ஆளும் நிலையில் மாறிய. தவவூழில்- மிக்க முறைமையில். நாபி- கொப்பூழ். வாணியன்- நான்முகன். மோதி- குட்டி. இந்துஉள- பச்சைக் கற்பூரமணமுடன். வார மலர்மாலை துன்றி- அன்புடன் மலர்மாலை அணிந்து.
பொ - ரை: ஆளும் நிலையில் மாறிய இந்திரன் மீண்டும் அரசாளும் அவ்வுயர் வாழ்வுதந்த மிக்கமுறைமையில் ஒளிர்ந்தன; திருமாலின் தாமரைக் கொப்பூழில் தோன்றிய நான்முகன் தலையில் குட்டிவிளங்கின; பச்சைக் கற்பூரமணமுடன் பெரிய மணமாலை அன்புடன் அணிந்து அழகுபெருகத் தம்முள் செறிந்து விளங்கின.
-----------
8. களி.
கட்குடியன் கள்ளின் பெருமையைச் சிலேடைவகையில் கூறுதல்.
எண்சீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
கள்ளாரும் கடம்பூஅணியும் குன்றைநகர்க் குடியன்
கட்கடையை விட்(டு) அகலாக் களியம்யாம் புனலின்
நள்ஆரும் நெடுந்தாலப் பால்சுமந்த பொறையால்
நாகர்குலத்(து) இறைஅறிவிற் சான்றானாய் உற்றான்
ஒள்ஆரும் மருமார்பன் மதுஅணுவுண்(டு) அன்றோ
ஓங்குபுரு டோத்தமனென்(று) உலகுதொழ லானான்
புள்ஆறும் பிரமன்அம்ம களைநாவில் வைத்தே
போதன்ஆ யினன்இனிநாம் புகலின்நகை வருமே.
சிலேடைப்பொருள் 1. கு-ரை. . கள்- தேன். குடியன்- குடிமகனாக எழுந்தருளியுள்ளவன் - அருள்தரு சண்முகநாதப்பெருமான். கட்கடை-கடைக்கண்- கடைக்கண் நோக்கு. களி- பெருமகிழ்ச்சி. புனலின் நள்ஆரும்- நீருடையகடல்நடுவில் உள்ள. நெடுந்தாலப்பால்- பெரியபூமியாகிய இடம் . நாகர்குலத்து இறை- நாகங்களுக்கு அரசனான ஆகிசேடன். சான்றானாய்- மிக்கவனாய். ஒள்- ஒளி. மருமார்பன்- மணக்கும் மார்புடைய திருமால். மது அணுஉண்டு- மதுஎன்றஅரக்கன் உயிர் உண்டு. புள் ஆரும்- அன்னப்பறவையில் தங்கிய - ஏறிவரும். அம்மகளை- அழகிய கலைமகளை. போதன்- அறிஞன். நகைவரும்- நகைப்புக்கு இடமாகும்.
பொ-ரை: . தேன்பொருந்திய கடம்ப மலர்மாலை அணிந்தவனாய்க் குன்றக்குடியில் எழுந்தருளியுள்ள அருள்தர சண்முகநாதப் பெருமானின் கடைக்கண் நோக்கினை விட்டகலாத பெருமகிழ்ச்சியுடையவன் நான். நீருடைய கடல்நடுவில் உள்ள மிகப்பெரிய உலகமாகிய இடத்தைச் சுமந்ததால், நாகர்குலத்து அரசனான ஆகிசேடன் அறிவில் மிக்கவனாய் ஆனான். துளசி மணக்கும் ஒளிபொருந்திய மார்பனான திருமால், மதுஎன்ற அரக்கனது உயிர்குடித்தல்லவா ஆண்களுள் உத்தமன் என்று உலகவரால் வணங்கப் பெறுகிறவன் ஆனான். அன்னப்பறவையில் ஏறிவரும் நான்முகன் அழகிய கலைமகளைத் தன்நாவில் வைத்ததாலேயே அறிஞன் - வேதம் போதிப்பவன் ஆனான். மேலும் நாம் சொல்லத்தொடங்கின், அதுநகைப்புக்கு இடமாகும்.
சிலேடைப்பொருள் 2. கு-ரை: (சிலேடையுள்ள பகுதிகள்மட்டும்) குடியன்- கட்குடிகாரன். கட்கடையை- கள்ளுக்கடையை. களியம்- கட்குடியில் களிப்பவன். நெடுந்தாலப் பால்- உயரமான பனையின் கள். சான்றான்- சாணான் - கள்விற்போன். மது அணுவுண்டு- கள் அணுவளவுபருகி. அம்ம களை- கள்ளினை. போதன்- போதைஉடையவன்.
பொ - ரை: தேன்பொருந்திய கடம்பமலர் அணிந்த அருள்தரு சண்முகநாதப் பெருமானின் குன்றக்குடிக் கட்குடிகாரனாகக் கள்ளுக்கடையை விட்டுச் சிறிதும் அகலாத கட்குடியன் நாம். குளிர்ந்த நீர்கழ்ந்த உயரமான பனைமரக் கள்ளினை வயிறுமுட்ட மிகப்பருகியதால் நாகர்குலத்து அரசனான ஆதிசேடன் அறிவு சான்றவன் ஆனான். மணக்கும் ஒளி பொருந்திய மார்புடைய திருமால் அணுவளவு கள்பருகி யல்லவா ஆண்களுள் சிறந்தவனாக வணங்கப்படுகிறான். அன்னப்பறவையில் ஏறிவரும் நான்முகன் கள்ளினைச் சுவைத்ததால் அல்லவா போதையுடையவன் ஆனான். மேலும் நாம் சொல்லத் தொடங்கின் அது நகைப்புக்கு இடமாகும்.
இ - பு: அம்ம - உரையசைச்சொல்.
------------
9. இதுவும் அது.
எழுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
நகைவரும் என்னில் புகைவரும் இறைபின்
நல்கினோன் வதிமயில் மலைக்குக்
குகைவரும் குன்றாக் குடிஎனும் பெயர்யாம்
கூடலால் பெறும்பெருங் குடியேம்
தகைவரும் தேறல் உறாதவர் அருமா
தவங்கள்கா ணாதவர் மதுரைக்
திகைவரும் பெரும்பே(று) இலாதவர் எல்லாம்
செகத்தினுக்(கு) என்பயன் இருந்தே.
சிலேடைப் பொருள் 1. கு-ரை: புகைவு அரும் இறை- அழிவற்ற சிவபெருமான். பின்நல்கினோன்- இளையவனாகத் தந்த முருகன். குகைவரும்- குகையுடன்கூடிய. குன்றாக்குடி- புகழ்குன்றாதவர் வாழிடம். பெருங்குடியேம்- நற்குடியில் பிறந்தநான். கூடலால்- வந்துவாழ்வதால். பெறும்- பெற்றது. தகைவரும் தேறல்- தகுதிவாய்ந்த மனத்தெளிவு. மதுரைத் திகைவரும்பேறு- மதுரைமாநகரினைக் கண்டு மனம்திகைக்கின்ற நற்பேறு. செகம்- உலகம்.
பொ - ரை: அழிவற்ற சிவபெருமான், இளையவனாகத் தந்த முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள மயில்மலைக்குக் குகையுடன் கூடிய குன்றாக்குடி என்றபெயர் நற்குடியில் பிறந்த நாங்கள் வந்து வாழ்வதால் அதுபெற்றது. தகுதிவாய்ந்த மனத்தெளிவு பெறாதவர், அரிய மாதவப்பயன் காணாதவர், மதுரை மாநகரினைக் கண்டு மனம் திகைக்கின்ற நற்பேறு இல்லாதவர் ஆகியவர்கள் வாழ்வதால் உலகிற்கு என்னபயன் ? இவர்கள் வாழ்வதென்றால் அது நகைப்பிற்குரியது. (குன்றக்குடியில் சமணர்கள் வாழ்ந்த சிறுகுகை - சமண்பாழி - ஞானியார் மலையில் உள்ளது).
சிலேடைப் பொருள் .2. கு-ரை: (சிலேடையுள்ள பகுதிகள் மட்டும்) பெருங்குடியேம்- மிடாக்குடியராகிய நாங்கள். தகைவுஅரும்- தடையின்றி. தேறல் உறாதவர்- கள் குடிக்காதவர். மாதவம்- கள். மதுரை- கள். திகைவரும் பெரும்பேறு- திகைக்கும் - மயங்கும் பெரியநற்பேறு .
பொ - ரை: அழிவற்ற சிவபெருமான், இளையவனாகத் தந்த முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள மயில்மலைக்குக் குகையுடன் கூடிய குன்றாக்குடி என்ற பெயர் மிடாக்குடியராகிய நாங்கள் வந்து குடியிருப்பதால் அதுபெற்றது. தடுப்பாரின்றிக் கள்குடிக்காதவர், கள்காணாதவர், கட்குடியால் மயங்கும் நற்பேறிலாதவர் ஆகியோர் வாழ்வதால் உலகிற்கு என்னபயன் ? இவர்கள் வாழ்வதென்றால் அது நகைப்பிற்குரியது.
-----------
10 . இரவுநீடத் தலைவிவாடுதல்.
தலைவனைப் பிரிந்த தலைவி இரவுப்பொழுது நீடித்துத் தோன்றுதலால் வருந்திக் கூறுதல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.
இருந்துவசம் பிறிதொன்றும் இன்றிஎழில்
பன்னிருதோட்(கு) ஏங்கி ஓங்கிப்
பெருந்துவசம் பிரம்எனப் பிறங்குதனம்
கனம்தினமும் பெயர்ந்து சோர்ந்து
வருந்துவசந் தனச்சாரல் மாயூரா
சலற்சேர்க்க மதியீர் அன்னோன்
அருந்துவசம் ஒலியாமை ஆற்றிஅதை
மாற்றுதிரால் அறவும் தேர்ந்தே.
கு - ரை: வசம் பிறிதொன்றும் இன்றி- நிலைமை வேறொன்றும் இல்லாமல். ப்ரம் பெரும்துவசம்- வலிமையான பெரியஅடையாளம். ஓங்கி ஏங்கி- மிகப்பெரிதும் ஏங்கி. பெயர்ந்து சோர்ந்து- கூடியும் குறைந்தும், வருந்துவ- வருந்துகின்றன. மதியீர்- நினைக்காதவர்களே. அரும்துவசம்- சிறந்த கொடியில் உள்ள சேவல். ஆற்றி- துயர்தீர்த்து. அறவும் தேர்ந்து மாற்றுதிர்- முழுமையாக ஆராய்ந்து மாற்றுங்கள்.
பொ -ரை: தன்சரிவுகளில் சந்தனமரங்களுடைய மயில்மலையானின் பன்னிரு திருத்தோள்களை அணைய, வேறுநிலைமை ஒன்றும் அறியாமல் - செய்வதறியாமல் - பெரிய அடையாளமாக விளங்கும் என்தனங்கள், நாடோறும் தமது கனத்தில் கூடியும் குறைந்தும் வருந்துகின்றன. நான் அவனைக் கூடும் வகையை நினையாதவர்களே ! அவனது சிறந்த கொடியில்உள்ள சேவலின் துயரை முழுமையாகத் தீர்த்து அதனைக் கூவாநிலைக்காவது மாற்றுங்கள்.
வி-ம்: தனங்கள் தமதுகனத்தில் கூடுதல் குறைதல் என்பன, புணரக்கருதுதல் கருதாமை குறிக்கும் மெய்ப்பாடுகள்.
------------
11 . துதி.
நாற்பத்துநான்குஅடி நேரிசைஆசிரியப்பா.
தேக்(கு)அடர் சாரலின் மாக்கனி தேறலைக்
கடுநடைக் கூர்எயிற்று) அடுதிறல் கடுவன்
கொல்லைச் சவரர்இல் ஒல்லைப் புகாஅ
ஐவனம் பொதிந்த மைவனக் குடம்கவிழ்த்(து)
எடுத்(து)எடுத்து நிறைய மடுத்துச் செடித்தலைக் 5
கொழுந்துணர்ச் சுமையடை அழுந்துற இருத்திக்
காதல் மந்திபால் போதல் மரீ இமுனர்
வைத்துச் சுவைத்திஈ(து) உத்தம நறாஎன
நெடும்பொழு(து) ஏயாக் கொடுந்தழல் காம
வெம்பசிக் கிடந்து பம்(பு)அஞர் உழந்தேற்(கு) 10
எத்தனை மதுக்குடம் உய்த்தனை யேனும்
விரும்பலன் புணர்ச்சிப் பெரும்பலன் வெஃகிக்
கலவிப் புதுத்தேன் குலவி ஒருங்கே
உண்(டு)இறு மாப்புக் கண்டனம் ஆக
இப்பகல் கழித்தும்என்(று) ஒப்(பு)அகல் பூம்பொழில் 15
சென்(று)அணை வளஞ்சால் குன்றைஅம் பொருப்பிற்(கு)
ஆற்றுப் படிந்தவர் நாற்றத் தொழுநோய்
முன்னாச் செலற்குநாத் துன்னாப் பல்பிணித்
தொடாநெடுங் கடல்கண் படாதுகணம் வறப்பத்
தண்ணவாம் அருள்பொழி வண்ணவான் செம்மைக் 20
கொண்மூக் கேண்மதி எண்மழூ வுலகும்
இடன்நனி பரப்பிய சுடர்மணித் திண்தோள்
இந்திரன் புதல்வியை மந்திர முறையின்
வேட்டனை காமக் கோட்டியின் மீண்டு
நன்றுசிறி(து) அறியாக் கொன்று) உழல் வாழ்க்கை 25
மறநாய் குரைப்(பு)அறாத் திறனார் முன்றில்
துஞ்சுங் காலையும் வெஞ்சினம் அறாஅப்
பாபமூர்த் தியர்பெறு கோப வாய்ச்சியைக்
களவுகொண்(டு) எழுந்த அளவி லாற்றல்
கடம்கவிழ் கரித்துணை மடங்கல் ஏ(று) என்(று)உனைப் 30
புகழ்ந்(து) அடங் காது மகிழ்ந்துபா டுதலை
மன்னிய அடியர்தாள் முன்னிய விருப்பும்
ஈட்(டு)அன் பில்லார் மாட்டு வெறுப்பும்
அறன்வாய்க் கால்செலும் திறன்நீர் அறிஞர்க்
காணும் தோ(று) எலாம் நாணும் செறுநர் 35
இன்னா செய்யின் உன்னா மடமும்
கழிப்பின்முற் படுத்த பழிப்பின் அச்சமும்
சிவமதம் அலாமற்(று) அவமதப் பயிர்ப்பும்
௭ககனென்று) உனைஉணர் சே(கு)உறு தேர்ச்சியும்
நின்தொழும் பேற்றின் முற்(று)இறு மாப்பும் 40
செயிர்இல்நல் லாற்றில் தைரியப் பெருக்கும்
எழுத்(து) ஆறு ஓவா வழுத்துமா களிப்பும்
யாண்டும் பொருளா எளியேன்
வேண்டினன் அடிகளின் ஈண்(டு)ஆர் தரற்கே. 44
அடி 1- 16. குறிப்புரை: தேறல்- தேன். அடுதிறல்- போரிடும் வலிமை. கடுவன்- ஆண்குரங்கு. கொல்லை- சோலை. சவரர் இல்- வேடுவரது இல்லம். ஒல்லை புகா- விரைந்துபுகுந்து. ஐவனம் பொதிந்த- மலைநெல்லரிசியில் தயாரித்த கள்நிறைந்த. மடுத்து- பருகி. செடித்தலை- செடிகளின்நுனி. சுமையடை- சும்மாடு. அழுந்துற- அழுந்த - நன்குபதியுமாறு. போதல் மரீ இ- போய்ச்சேர்ந்து. முனர்- முன்னே. உத்தமநறா- சிறந்த கள். ஏயா- பொருந்தாத. பம்பு அஞர்- மிக்கதுன்பம். உயத்தனையேனும்- தந்தாலும். புணர்ச்சிப் பெரும்பலன் வெ..கி- புணர்ச்சியில் உண்டாகும் பெரியஇன்பத்தை விரும்பி. குலவி- கொண்டாடி. ஒருபகல்- ஒருநாள். ஒப்பு அகல்- ஒப்பற்ற.
பொழிப்புரை: பருத்தபலாக் கனியின் தேனாகிய சாறு அலைபாயும் தேக்கு மரங்களுடைய மலைச்சாரலில் வாழும் விரைந்த தாவுதலும் கூரியபற்களும் மிக்க ஆற்றலும் கொண்ட ஆண்குரங்கு, சோலையில் உள்ள வேடர் இல்லத்தில் விரைந்து புகுந்து, ஐவனநெல்லரிசியாலான கள்நிறைந்த கரியகுடத்தினைக் கவிழ்த்து அக்கள்ளை நிறையப் பருகி, தனது அன்புடைய பெண்குரங்கிடம் சென்று, அக்குடத்தை நுனியில் கொழுந்துகளுடன் கூடிய செடியைச் சும்மாடாகக் கொண்டு குடம்சாயாது உறுதியுடன் வைத்து, தன்மந்தியிடம் “இதுமிகச்சிறந்த கள்ளாகும் இதனைப்பருகு” என்று வேண்ட, மந்தியானது, பொருந்தாத கொடியதீப்போன்ற காமக்கொடும்பசியில் கிடந்துஉழன்ற நான், மிக்க இன்பத்தை விரும்பிப் புணர்ச்சியாகிய புதுத்தேனைக் கொண்டாடி ஒருசேர நான்உண்டு இறுமாப்புற்றேன், இப்போது நீ எத்தனைக் கட்குடம் தந்தாலும் பருக விரும்பேன், இந்த ஒருநாள் கழியட்டும்” என்று ஒப்பற்ற அழகிய மலைச்சாரலின் ஒருபக்கத்தை அடையும் குன்றக்குடி மலையில்;
அடி 17 - 30. குறிப்புரை: ஆற்றுப்படிந்தவர்- திருமுன்வாயிலில் தரையில் விழுந்து வணங்கியவர். முன்னா- நினைக்க இயலாத. சொலற்குநாத் துன்னா- நாவால் சொல்லுதற்கரிய. பிணித்தொடா- நோய்ப்படாமல். நெடுங்கடல்- பிறவிப்பெருங்கடல். கணம்- அற்பங்கள். தண்ணவாம் அருள்- குளிரச்செய்யும் அருள். செம்மைக் கொண்ழூ- செம்மேகமே - சேயோனே. கேண்மதி- கேட்டருள்க. எண்- நினைக்கத்தக்க. மிடல் நனிபரப்பிய- ஆற்றலை மிகப்பரப்பிய. சுடர்மணி- ஒளிரும் அழகு. மந்திரமுறை- வேதமுறை. வேட்டனை- மணந்தாய். நன்று- நற்செயல். மறநாய்- வேட்டைநாய். முன்றில்- வாயில். பாப மூர்த்தியர்- பாவவடிவினர் - வேடர் கோப வாய்ச்சி- இந்திரகோபப் பூச்சிபோல் சிவந்த உதடுகளுடைய வள்ளிநாச்சியாரை. காமக்கோட்டி- அளவற்ற விருப்பம். கடங்கவிழ் கரி- மதம்பெருகும் யானைமுகத்து விநாயகர். களவுகொண்டு- களவு மணம்்புரிந்த. மடங்கல் ஏறு- ஆண்சிங்கம்.
பொ - ரை: உனது திருமுன்னான வாயிலில் வந்து தரையில் விழுந்து வணங்கியவர்களின் நாறும்தொழுநோய், நினைக்க இயலாததும் நாவாற் சொல்லற்கு இயலாததும் ஆகிய பலவகை நோய்கள், தொடர்ந்துவரும் பிறவிப் பெருங்கடல் முதலிய அற்பங்கள் வறண்டு அழிய, அவர்களைக் குளிரச்செய்யும் அருள்மழை பொழியும் அழகிய மேலான செந்நிற மேகமான சேயோனே !: கேட்டருள்க. நினைக்கத்தக்க மூன்று உலகங்களிலும் தனது ஆற்றலை மிகப் பரப்பியவனும், ஒளிரும் அழகிய வலிய தோள்களுடையவனும் ஆகிய தேவேந்திரன் மகளை- தெய்வயானை யம்மையை- வேதமுறைப்படி மணந்தாய். நற்செயல் சிறிதும் அறியாதவராய், விலங்குகளைக் கொன்று வாழும் வாழ்க்கையராய், வேட்டை நாய்களின் குரைப்பொலி நீங்காத தன்மை பொருந்திய வாயிலுடையவீட்டில், தாம் உறங்கும்போதும் கொடிய சினத்தின் நீங்காத பாவநினைவுடன் உறங்கும் வேடர்குலத்தில் பிறந்த வள்ளி நாச்சியாராகிய இந்திரகோபப் பூச்சியை- தம்பலப் பூச்சியை- ஒத்துச் சிவந்த உதடுகளையுடையவளை அளவற்ற விருப்புடன் மதம்பெருகும் யானைமுகத்து விநாயகர் துணையினால் களவுமணம் கொண்ட ஆண்சிங்கமே! என்று,
இலக்கணக்குறிப்பு: கேண்மதி - மதி - முன்னிலைஅசை.
அடி 30 - 44. குறிப்புரை: முன்னிய- நினைக்கும். ஈட்டுஅன்பு- தேடிப்பெற்ற அன்பு. நீர்- நீர்மை- இயல்பு. நாணும்- நாம் அவ்வாறில்லையே என்று வெட்கும் இயல்பும். முன்னா மடம்- எண்ணிப் பார்க்காத உள்ளமும். கழிப்பின் முற்படுத்த- விலக்குதற்குமுன் மனத்தில் தோன்றும். பழிப்பு- பழிக்கத்தக்க செயல்கள். அவமதம்- பழிப்படுமதம். பயிர்ப்பு- அருவருப்பு. ஏகன்- ஒப்பற்ற ஒருவன். சேகு உறுதேர்ச்சி- வயிரமொத்த உறுதியான தெளிவு. இறுமாப்பு- பெருமிதம். செயிர் இல் நல்லாறு- குற்றமற்ற நல்வழி. ஆறெழுத்து- சரவணபவ. ஓவாவழுத்தும்- இடையறாது மனத்தில் போற்றும். யாண்டும் பொருளா- எப்போதும் உறுதிப்பொருளாக. அடிகளின்-உன்திருவடிகளை. ஈண்டு ஆர்தரற்கு வேண்டினன்- இவ்வுலகில் அனுபவிக்க வேண்டினேன்.
பொழிப்புரை: உன்னைப் புகழ்வதுடன் மகிழ்ந்து பாடுதலையும் நிலையாகக் கொண்ட அடியவர்களின் திருவடிகளை நினைக்கும் விருப்பமும், தேடிப்பெற்ற அன்பு இல்லாதவரிடம் வெறுப்பும், அறவழியில் செல்லும் திறன்வாய்ந்த அறிஞர்களைக் காணும் போதெல்லாம் நாம் அவ்வாறில்லையே என்ற நாணமும், பகைவர் துன்பம் செய்தாலும் அதை நினைக்காத உள்ளமும், தீயவற்றைச் செய்யுமுன் உண்டாகும் பழியற்ற அச்சமும், சிவமதம் அல்லாத பிறமதக் கொள்கைகளில் அருவருப்பும், ஒப்பற்ற ஒருவன் நீயே என்று உணரும் மனத்தெளிவும், அதன்வழி வாழும்பேற்றில் முதிர்ந்த பெருமிதமும், குற்றமற்ற நல்வழிகளை மேற்கொள்வதில் அளவற்ற தைரியமும், உனது திரு ஆறெழுதாகிய “சரவணபவ” என்பதை இடையறாது சொல்லிப் போற்றுவகில் பெருங்களிப்பும், இவ்வுலகில் அனுபவிக்க எளியேனுக்கு எப்போதும்உறுதிப்பொருளாக உன்திருவடிகளை அருளவேண்டுகிறேன். அருள்க
-----------
12 . துதி.
நேரிசை வெண்பா.
ஆரும் பணியும் அறுகும் செறியுமுடி
யாரும் பணியும் அறுமுகனே - காரும் இல்லின்
முன்பெருமை ஏறும்ஒன்றி மோதுகுன்றை எம்பெருமான்
உன்பெருமை மற்(று) ஆர்க்(கு) உறும்.
கு - ரை: ஆர்- ஆத்திமலர். பணி- பாம்பு. அறுகு- அறுகம்புல். முடியார்- தலையராகிய சிவபிரான். காரும்- நீர்வளமும். முன்- முதன்மை. ஒன்றி ஏறும். மோது- அலைமோதும். உறும்- உண்டாகும்.
பொ -ரை: ஆக்கிமலரும், பாம்பும், அறுகம்புல்லும் செறிந்த சடைமுடியுடைய சிவபெருமானும் வணங்கும் அருள்தரு ஆறுமுகப்பெருமானே ! நீர்வளமும் முதன்மையான பெருமைகளும் ஒருசேர மேன்மேல் மிகும் குன்றக்குடியானே ! உனது பெருமைகள் யாருக்கு உண்டாகும்? யார்க்கும் உண்டாகாது.
---------
13. குறம்.
குறத்தி குறிசொல்லுதல்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
உறத்தி யானிக்கும் வேளைக்(கு) உவந்தவேள்
உவந்த குன்றையைச் சீதனங் கொண்டுவாழ்
குறத்தி யான்இக்கு மாமொழி மாதராய்
குமுத வாய்மலர்ந்(து) ஓர்மதி கூறு) எனத்
திறத்தி யான்இக் குலத்திங்கள் செப்பும்இத்
திறத்தி னால்மிது னம்தெரிந் தேன்இயல்
திறத்தி யான்இக் குறியின் மகப்பெறல்
ஆதி மாதம்இன்(று) ஆதிபத்(து) ஆயினே.
கு - ரை: உற- மனத்தில் பொருந்த. வேள்- முருகப்பெருமான். இக்கு- கரும்பு - இனிமை. ஓர்மதி- ஒருமாதத்தின் பெயர். திறத்தி- வாய்திறந்து கூறினாய். குலத்திங்கள்- ஆண் பெண்கூட்டம் குறிக்கும்மாதம் - மிதுனம். செப்பும் இத்திறத்தினால்- சொன்ன இத்தன்மையால். மிதுனம்- புணர்ச்சி. இயற்று அறத்தி- அறநெறியினளே. ஆனிக்குறி இல்- கெடுதற்குறி இல்லாத. ஆதிமாதம் இன்று- முதல்மாதம் இது. ஆகி- முதலாக. பத்துஆயினே- பத்துமாதமானால் மகப்பெறல்- மகப்பெறுதல் ஆம்.
பொ -ரை: நாம் மனத்தில் பொருந்தத் தியானிக்கின்ற வேளையினை ஏற்று, மகிழ்ந்து அருளும் முருகப்பெருமான், மனம் மகிழ்ந்து வாழும் குன்றக்குடியைச் சீதனமாகப் பெற்றுவாழும் குறத்திநான். கரும்பொத்த இன்மொழி பேசுகிறவளே! உன் செங்குமுதமலர் ஒத்த வாய் திறந்து ஒருமாதத்தின் பெயரினைக் கூறுக என, ஆண்பெண் சேர்க்கை குறிக்கும் மாதமாகிய மிதுனம் என்பதை வாய்திறந்து சொன்னாய். நீ சொன்ன இத்தன்மையால் புணர்ச்சி என்ற பொருள் அறிந்தேன். அறநெறியினளே ! உனக்குக் கெடுதற் குறியில்லாத கருவாய்த்த முதல்மாதம் இது. பத்து மாதமானால் மகப்பெறுதல் ஆம்.
-----------
14 . கார்கால வருத்தம்.
தலைவனைப்பிரிந்ததலைவி, கார்காலம்வரக்கண்டூவருந்துவதைப்பாங்கிகூறுதல்.
எண்சீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
ஆயர்தங் குழலும்ஈங்(கு) அழல்உமிழும் படிவந்து)
அளியள்ஒளிர் செவிவெதுப்பத் தங்கு உழலும் காலம்
சேயவள வாரிஆ லம்குடித்தும் அந்தோ
திரண்டுமுகில் வாரிஆ லம்பிலிற்றும் காலம்
பாயகொடு விடஅரவு மடவரல்வான் அல்குல்
படுமெலிவில் படம்அடங்கிச் சிறைகிடக்கும் காலம்
தாயபுகழ் மயில்மலையின் முருகன்வடி வேலின்
தடித்(து)ஒளிர மெலிந்(து)எம்மின் சலிக்கின்ற காலம்.
கு - ரை: அளியள்- கருணை காட்டத் தக்கவள். சேயவளம்- சிறந்தவளம். வாரிஆலம்- கடல்நீர். வாரி ஆலம்பிலிற்றும்- ஒருசேர விடத்தைச் சொரியும். பாய- பருத்த. மடவரல்- தலைவி. வான்- பெருமை. படுமெலிவு- மிக்கமெலிவு. படம் அடங்கி- விரிதலில்லாமல். சிறைகிடக்கும்- கட்டுப்பட்டுக்கிடக்கும். தாய- மிகும். தடித்தொளிர- தடி-து-ஒளிர- மின்னல் வருத்தி ஒளிவீச௪. எம்மின்- எம்மைப்போல். சலிக்கின்ற- இளைத்து ஓய்கின்ற.
பொ - ரை: இடையர்களின் புல்லாங்குழலின் இன்னோசை நெருப்பை உமிழும் வகையில் வந்து, கருணை காட்டத்தக்க இவளது ஒளிரும் காதுகளைச் சுட்டுத் துன்பத்தில் உழலச் செய்யும் காலம். மேகம் சிறந்த வளமான கடல்நீர் பருகியும், அந்தோ! திரண்டு ஒருசேர மழையாம் நஞ்சினை இரைக்கும் காலம். பருத்த கொடியவிடப் பாம்பின் படம் ஒத்த இவளது பெருமை பொருந்திய பெண்குறி மிக்க மெலிவினால் தனதுவிரிதல் அடங்கிக் கட்டுப்பட்டுக் கிடக்கும் காலம். மிக்க புகழுடைய மயில் மலையில் எழுந்தருளியுள்ள முருகனது கூரியவேல்போல் ஒளிவீசிய மின்னல் பின்னர் எம்மைப் போலஉடல்இளைத்து மெலிந்துதன் செயலற்ற காலம்.
வி-ம்: அல்குல் படமடங்கல், உடல் மெலிந்து சலித்தல் என்பன, தலைவன் பிரிவால் தலைவிக்குப் புணர்ச்சிவேட்கை இன்மைகுறித்த மெய்ப்பாடுகள்.
---------
15 . தலைவன் தன்நிலை சாற்றல்.
தலைவிக்குத் தலைவன் அன்பின் வலிமையைக் கூறல்.
கலிவிருத்தம்.
காலன் விழக் கறுத்துச் சிவந்தபூங்
காலன் ஆரியன் கார்இயல் குன்றைநீர்
காலன் மாறுதல் கண்டனை யாயின்ஓர்
கால்அன்(பு) இன்மைஎற் காணுவை பூவையே.
கு - ரை: கறுத்து- சினந்து. ஆரியன்- குரு. கார்இயல்- மழைபொழிதலில். மாறுதல் கண்டனையாயின்- மனம்மயங்காகிருப்பின். ஓர்கால்- ஒருவேளை. என்அன்பு இன்மை- என்பால் அன்பற்ற தன்மையை. காணுவை- காண்பாயோ.
பொ - ரை: யமன் உயிர்விடச் சினந்து உதைத்ததால் சிவந்த தாமரைமலர் போன்ற திருவடிகளையுடைய சிவபெருமானுக்குக் குருவாகிய முருகப்பெருமானின் மேகம் தவழும் குன்றக்குடியில் மழை பொழிதல் கண்டு மனம் மயங்காதிருப்பின், பூவையே ஒருவேளை என்பால் அன்பற்ற தன்மையைக் காண்பாயோ? காணாய். (மழைகண்டு மனம் மயங்காதே, வந்துவிடுவேன் என்றான்.)
----------
16 . நற்றாய் வருந்தல்.
மயங்கும் மகளை நோக்கித் தாய்வருந்தல்.
கட்டளைக் கலித்துறை .
பூம்பா டலம்மல ர௬ம்குன்றை வாணன் புகழஅறி
யோம்பா டலம்எனினும்அருள் வேள்வனப் புள்அழுந்தி
ஏம்பா டலம் உறல் ஆனாள் வளர்த்த இளங்கிளியும்
ஓம்(பு)ஆ டலம்கிடை யாக்கிடந் தாளென் ஒருமகளே.
கு- ரை: பூம்பாடலம்- மென்மையான பாதிரிமலர். வாணன்- வாழ்பவன். பாடலம்- பாடமாட்டோம். வனப்பு- பேரழகு. ஏம்- இன்பம். . பாடலம்- வாய்பேசாமை. ஓம்பு வளர்த்த இளங்கிளி- பாதுகாத்து வளர்த்த இளையகிளி. ஆடலம்- விளையாடமாட்டோம். கிடையாக் கிடந்தனள்- படுத்தேகிடந்தாள்.
பொ-ரை: மென்மையான பாதிரி மலர்கள் மலரும் குன்றக்குடியில் வாழும் அருள்தர சண்முகநாதப் பெருமானைப் புகழ்ந்து பேசவோ பாடவோ அறியோம். எனினும் அருள் புரியும் அவனது விரும்பத்தக்க பேரழகில் என் ஒரேமகள் மனமமழுந்தி, என்னுடன் இன்புறப் பேசாதவளும் ஆனாள்; பாதுகாத்து வளர்த்த இளங்கியுடன் விளையாட மாட்டோம் என்று படுத்தே கிடந்தாள்.
------------
17. நெஞ்சறிவுறுத்தல்.
தலைவன் தன்துன்பத்தை மனத்துக்குச் சொல்லுதல்.
சந்தக் கலிவிருத்தம்.
மகவான்விதி வதிசீர்மயில் மலைசாருதி மனனே
தக(வு)ஆன்முது கினிலேவரு தரமாகயி லையின்மேல்
நகவான்முது மகமேருநன் னகம்ஏறிய தகைசால்
பகவான்மகன் அருள்வான்இரு பதம்ஓர்இறை யினிலே.
கு -ரை: மகவான்- தேவேந்திரன். விதி- நான்முகன். தகவு ஆன்- தகுதிவாய்ந்த இடபம். நகுவான்- நகைக்க. வான் முது மகமேரு நல் நகம்- பெரிய தொன்மையான மகாமேருநன்மலை. ஏறிய- வில்லாகளடுத்த. பகவான்- சிவபிரான். ஓர் இறையினிலே இருபதம் அருள்வான்- ஒருநொடிக்குள் தனது இருதிருவடிகளையும் அருள்வான்.
பொ - ரை: மனமே! தேவேந்திரனும் நான்முகனும் முருகனைத்தொழ வாழும் மயில் மலையை அடைவாயாக. அங்குள்ளவனும், தகுதி வாய்ந்த இடபத்தின் முதுகில் ஏறிவந்து, பிறர் நகைக்தக்கவாறு பெரிய தொன்மையான மகாமேரு நன்மலையை வில்லாக எடுத்த பெருமேன்மையுடைய சிவபிரானுக்கு மகனுமாகிய அருள்தர சண்முகநாதப் பெருமான் தனது இரு திருவடிகளையும் ஒருநொடிக்குள் உனக்கு அருள்வான். அங்குச்செல்க.
--------
18 . மறம்.
மறவர்குலத் தலைவியை மணக்க விடுத்ததூதனை மறுத்துத் தோழி கூறுதல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
இறைஒருபத் திரமுய்த்தான் எங்கள்குலக்
கொடியினைவேட்(டு) என்றாய் குன்றை
நிறைபலபத் திரமறவர் கண்காணா
நின்வாழ்நாள் நெடிதே போலும்
பொறைமுடங்க லொடும்கடிது போதியிடை
யூ(று)ஒருவிப் போய்ஊர் சேரின்
அறைகநுங்கள் தலைமகனிவ் அணங்கைஅது
கொடுபூசை ஆற்ற மன்னோ.
கு - ரை: இறை- தலைவன். பத்திரம்- தலைவியை மணக்கவிரும்பும் ஓலை.
உய்த்தான்- அனுப்பினான். நிறைபல பத்திர மறவர்- நிறைந்த அம்புகளுடைய பல
மறவர்கள். கண்காணா- காணாதுள்ள. பொறை- கொண்டுவந்த. முடங்கல்- ஓலை -
மடல். இடையூறு ஒருவிக் கடிது போதி- இடையேபிறமறவர் செய்யும் துன்பம்நீங்கி
விரைந்துபோ. இவ்வணங்கை- இத்தலைவியை. அதுகொடு- அந்த ஓலையால். பூசை
ஆற்ற அறைக- பூசைசெய்யச் சொல்லுக.
பொ - ரை: “எம் தலைவன், உங்கள் குலக்கொடியை மணக்க விரும்பி ஒரு ஓலை
அனுப்பியுள்ளான்” என்றாய். குன்றக்குடியில் வாழும் நிறைந்த பல அம்புகளுடைய
மறவர்கள், இதுவரை உன்னைக் காணாமையால் உனக்கு நீண்ட வாழ்நாள் போலும்.
நீ கொண்டுவந்த ஓலையுடன் இடையே பிறமறவர் தரும் துன்பம் நீங்கி விரைந்து போ.
உன் ஊர்போய்ச் சேர்ந்தால், உங்கள் தலைவனிடம் அவ்வோலையைப் பூசிப்பதன்
மூலம் இவ்வணங்கை வணங்கச்சொல். எமது மறவர், மகள் வேண்டி வந்த உன்னைக் கண்டிருப்பின் கொன்றிருப்பர் என்றதன்மூலம் குறிப்பால் மகள் மறுத்தமையையும், இவ்வோலையை வணங்குவதன் மூலம்இவளை வணங்கச்சொல் என்றதால் இவளை மணக்கும் தகுதி உன்னவனுக்கு இல்லை என்பதும் பெறப்படும்.
---------
19 . சுரம் போயினாட்கு வருந்தல்.
தலைவனுடன் பாலைநிலத்திற் சென்ற மகளை நினைத்து நற்றாய் வருந்திக் கூறுதல்.
கட்டளைக் கலித்துறை.
மன்னும் சிகண்டியன் காலியைப் பாலிக்கும் மால்மருகன்
பன்னும் பரிதி கதிர்காமம் கூரப் பரித்தவைவேல்
மின்னும் கரன்குன்றை வேளைஉன் ஸனாதவர் வேம்உளம்போல்
மன்னும் சுரத்திற்கு முற்றாக் கனிசெல(வு) எவ்வண்ணமே.
கு - ரை: மன்னும்- பெருமைபொருந்திய. சிகண்டியன்- மயிலார்கியன். காலியைப் பாலிக்கும்- பசுக்கூட்டத்தை ஓம்பும். பன்னும் பரிதிகதிர்- புகழப்பெறும் ஞாயிற்றின் ஒளியும். காமம் கூர- மிகவிரும்ப. பரித்த வைவேல்- தாங்கிய கூர்மையான வேல். வேம்உளம்- கொதிக்கும் மனம். செலவு எவ்வண்ணம்- சென்றது எவ்வாறு.
பொ -ரை: பெருமை பொருந்திய மயிலார்தியனும், பசுக்கூட்டத்தை ஓம்பும் திருமால் மருகனும், புகழப்பெறும் ஞாயிற்றின் ஒளியும் மிகவிரும்பும் கூர்மையான வேல் ஒளிரும் கையுடையவனும் ஆகிய குன்றக்குடி முருகப்பெருமானை நினைக்காதவரின் கொதிக்கும் மனம்போல், வெம்மை நிலைத்த சுரத்தில் - கொடிய பாலையில் முற்றாக் கனியாகிய என்மகள் செல்ல இயலாதவளாயிற்றே ! சென்றது எவ்வாறு ?
இ - பு: முற்றாக் கனி - உருவகம். ( அரிய சொல்லாட்சி )
-------------
20 . தென்றலைப் பழித்தல்.
தென்றல் காற்றால் தலைவி துன்புறுவதுகண்டுூ தோழி அக்காற்றைப் பழித்தல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
வண்ணம் பராவு மாறுநமை வருத்தும் சிறுகால் தனிவிழிக்கும்
கண்அம் பராவு கைக்குமுதற் கடவுள் அருளும் காங்கேயன்
விண்ணம் பராவு குன்றைமலை விருப்பன் மயில்உய்த்(து) இருப்பானேல்
திண்ணம் பராவு சிறைப்பெருங்காற் றினுக்(கு)ஆற் றுங்கொல் திக்(கு) உண்டோ.
கு - ரை: வண்- (மன்மதன்) வழங்கும். அம்பு அராவுமாறு- மலரம்புகள் அறுப்பதைப் போல. சிறுகால்- தென்றல். முதற்கடவுள்- முழுமுதலாகிய சிவபெருமான். தனிவிழிக்கும் கண்- ஒப்பற்றமுறையில் காணும்கண். அம் பராவுகைக்கு- அழகைப்போற்றுதற்கு. காங்கேயன்- முருகப்பெருமான். விண்ணம் பராவு- வானுலகு போற்றும். விருப்பன்- விருப்பத்துடன் எழுந்தருளியுள்ள அருள்தர ஆறுமுகன். மயில் உய்த்து- மயிலைச் செலுத்தி. இருப்பானேல்- வந்து என்னோடு இருந்தால். திண்ணம் பரவ- வலிமை படர்ந்த. சிறைப்பெருங் காற்று- மயிலின் சிறகசைவில் தோன்றும் மிகப்பெரியகாற்று. திக்குண்டு- மனம் திகைத்து. ஆற்றுங்கொல்- எதிர்நிற்குமா - விரைந்து ஓடிஒளியும்.
பொ - ரை: மன்மதன் வழங்கும் - எய்யும் - மலரம்பு காரணமாக நம்மை வருத்தும் தென்றலானது; சிவபெருமானின் ஒப்பற்ற நுதல்விழிப் பார்வையில் தோன்றியவனும், தேவருலகத்தவர் போற்றும் குன்றக்குடிமலையில் எழுந்தருளும் விருப்புடையவனும் ஆகிய காங்கேயன், தனது மயிலைச் செலுத்திக் கொண்டு வந்து என்னுடன் இருப்பானேல், பறந்துவரும் அம்மயிலின் வலிமை பரவிய சிறகசைவில் எழும் பெருங்காற்றுக்கு எதிர்நிற்குமோ ? மனம்திகைத்து விரைந்து ஓடிஒளியும்.
----------
21. கார்கண்டூ வருந்துதல்.
கார்காலம் வரக்கண்டூ தலைவி வருந்துவதைத் தோழி தலைவனுக்கு அறிவித்தல்.
கொச்சகக்கலிப்பா.
குண்டலம்வாள் கொடுவெட்டும் கொடுமையின்மின் னற்கொடிகள்
குண்டலம்வாள் வீசுமொரு கொடியைஅறத் தெறலாமோ
வண்டலம்தா ளால்அளந்த மால்போற்கார் கண்டுூழந்து
வண்டலந்தாள் வாராயோ மாறில்குன்றை மறைப்பொதிவே.
கு - ரை: குண்டலம்- வான்வெளி. குண்டலம் வாள்வசும்- காதில் அணிந்த குண்டலங்கள் ஒளிவீசும். தெறல்- தண்டித்தல். வண்தலம்- வளமான இவ்வுலகை. உழந்து- வருந்தும். வண்டலம்- சேறு- தாமரை. தாள்- திருவடியனே. மறைப் பொதிவு- மறைகளின் உட்பொருள்.
பொ - ரை: தாமரைமலர் ஒத்த திருவடிகளுடையவனே! அருள்நிலையில் மாறாதவனாய், மறைகளின் உட்பொருளாய், குன்றக்குடியில் எழுந்தருளியுள்ளவனே! வளமான இவ்வுலகைக் கால்களால் அளந்த திருமால்போல் கருத்தெழுந்த மேகத்தைப் பார்த்ததும் வருந்தும், காதுகளில் குண்டலம் ஒளிவசும் ஒருகொடிஒத்த இவளை, மேலும் வாளினால் வெட்டும் கொடுமை போல் வான்வெளியின் மின்னற் கொடிகளாலும் முழுமையாகத் தண்டிக்கலாமா? வந்து இவளைச் சேர்க.
இ - பு: வண்டலம் தாள் வாராயோ- உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. தெறலாமோ- ஓகாரம் எதிர்மறை.
----------
22. துதி வெண்பா.
பொதிய முனிகல்விப் போதம்சந் தேகம்
பொதியமுனி குன்றைப் பொருளே - அதிவனப்பைக்
கன்னலஞ்சா பத்தைவைத்தோன் காமுறுவோய் காத்தருள்துஞ்(சு)
இன்னல்அஞ்சா பத்தை இனி.
கு - ரை: கல்விப்போதம்- கல்விஞானம். பொதியமுனி- முழுவதையும் தீர்த்த. அதிவனப்பை- மிக்க அழகை. அம்கன்னல் சாபத்தைவைத்தோன்- அழகிய கரும்புவில் ஏந்தியமன்மதன். துஞ்சு இன்னல்அஞ்சா- இறக்கும் துன்பத்துக்குஅஞ்சாத. பத்து- பத்திமையை. இனிஅருள்.
பொ - ரை: அகத்திய முனிவரது கல்வி ஞானத்துச் சந்தேகம் முழுவதையும் ஒங்கார உபதேசத்தால் தீர்த்த குன்றக்குடியில் உள்ள முதற்பொருளே! கரும்புவில் ஏந்திய மன்மதனும் காமுறும் அழகுடையவனே! இறக்கும் துன்பத்துக்கு அஞ்சாத பத்திமையை உன்மேல் இப்போதே அருள்க.
வி-ம்: அகத்தியர்க்கு ஓங்கார உபதேசம் அருளியது:
“கும்பமுனி தேறவுயர் விஞ்சைஅருள் ஆதிகுரு” (சோடசப் பதிகம்.7.)
“பொங்கு திரைக்கடல் உண்டவன் மெய்க்குர௬“(குன்றக்குடி...பிள்ளைத். செங்க்.7)
------------
23. இரவு நீட்டிக்க வருந்திய தலைவி தலைவனை நினைந்து கூறுதல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
இனியாத வன்மொழிஒன்ற(று) என்றும்இயம்
பலன்புலரா(து) இருள்தான் என்னே
துனிஆத வன்தனக்குக் கங்குல்அகற்
றேல்என்று சொல்லி னாயோ
உனியாத வன்பூசித்(து) உயர்மகவு
பெறுங்குன்றை உகந்த கந்த
இனியா(கு)அ வன்மமுள(து) ஏறியசெல்
வாக்(கு)இருப்பின் எதுசெய் யாயே.
கு - ரை: இனியாத- இனிமைதராதக. இயம்பலன்- சொல்லவில்லை. என்னே இருள்தான்புலராது. துனி- நெருங்கிச்சென்று -. இரகசியமாக. யாதவன்- கண்ணன். உனி பூசித்து- தியானித்து வணங்கி. மகவு- சாம்பன் என்றமகன். ௮ வன்மம் இனியாது உளது. வன்மம்- வைராக்கியம். ஏறிய- மிக்க.
பொ - ரை: முன்யுகத்தில் தியானித்து வணங்கிய கண்ணபிரானுக்குச் சிறந்த சாம்பன் ஆகிய மகனை அருளியவனும், குன்றக்குடியில் உவந்து எழுந்தருளி யுள்ளவனு மாகிய கந்தனே ! இனிமை தராத எச்சொல்லையும் நான் உன்னைப்பற்றிச் சொல்லவில்லை. இதுவரை இருட்பொழுது கழிந்து விடியாதது அதிசயமாக உள்ளது. இருட்பொழுதை நீக்கிவிடாதே என்று ஆதவனிடம் இரகசியமாகச் சொன்னாயோ? செல்வாக்கிருப்பின் மனத்தில் படிந்த வைராக்கியத்தால் என்னதான் செய்யமாட்டாய்.
வி-ம்: முன்யுகத்தில், மகப்பேறுவேண்டி வணங்கிய கண்ணபிரானுக்கு அவன் மனைவி சாம்பவி வயிற்றில் சாம்பவன் என்ற மகனை அருளியதை, குன்றக்குடி பற்றிய மயூரகிரி புராணமும், குன்றக்குடி சண்முகநாதர் உலாவும் குறிக்கின்றன.
இ - பு: என்னே - வியப்பு இரக்கச்சொல். துனி, உனி - இடைக்குறைகள்.சொல்லினாயோ - வினாஒஓகரம். செய்யாயே - ஏகாரம் அசைநிலை.
--------
24. தலைவி வருத்தம் தணிக்காத தலைவனைப் பாங்கி நோதல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
செய்யார் குன்றைப் பதிவதிஎம் செல்வி உய்ய நெடுநாளா
வைஆர் வடிவேல் உணவின்றி வாளா விருந்து வருந்(து) உறவு
மைஆர் உடலம் வெந்தவனை மறித்தும் கோறல் வழக்(கு)இல் என்றோ
செய்யார் முந்நீர் மாவைஉளம் தெளிந்து பிளந்த சீரியரே.
கூட்டுமுறை: நெடுநாளா உணவுஇன்றி வாளாவருந்து செய்ஆர் குன்றைப் பதிவதி எம்செல்வி உய்ய, மைஆர் உடலம் வெந்தவனை மறித்தும் கோறல் வழக்குஇல் என்றோஉளம்தெளிந்து , முந்நீர் மாவை வைஆர் வடிவேல் பிளந்த சீரியர் உறவு செய்யார்.
கு - ரை: வாளா- வீணே. செய்- நன்செய்நிலம். மைஆர் உடலம் வெந்தவன்- கரிய உடம்பு நீறான மன்மதன். மறித்தும் கோறல்- மீண்டும்கொல்லுதல். முந்நீர் மா- கடல்நடுவில் தோன்றிய சகூரனாகிய மாமரம். வைஆர்- கூரிய. வடி- நீண்ட. உறவு செய்யார்- கூடாராயினர்.
பொ -ரை: மிகப்பல நாட்களாக ஏதும் உண்ணாமல் வீணே வருந்துகிறவளான, நன்செய் நிலங்களுடைய குன்றக்குடியில் வாழுமெங்கள் செல்வி உயிர்வாழும் பொருட்டு, சிவபெருமானது நுதற்கண்ணால் தனது கரிய உடம்புவெந்து நீறான மன்மதனை மீண்டும் ஒருமுறை கொல்லுதல் முறைமையாகாது என்பதால், கடல்நடுவில் தோன்றிய கூரனான மாமரத்தைச் தனது கூரிய நீண்ட வேலால் பிளந்த சிறந்தவர், இவளுடன் உறவு கொள்ளாராயினார்.
இ - பு: இச்செய்யுள் கொண்டுகூட்டுப் பொருள்கோளினது. தற்குறிப்பேற்றவணி.
-------
25. அம்மானை.
பாட்டுடைத் தலைவனைப் பாடும் ஒருவிளையாட்டு.
அடிமடக்குக் கலித்தாழிசை.
சீர்க்குமுதல் நின்றகுன்றைச் சேந்தன்வள்ளி காந்தனுக்(கு) உண்டு)
ஆர்க்கும் வளம்சுரக்கும் ஆறுமுகம் அம்மானை
ஆர்க்கும் வளம்சுரக்கும் ஆறுமுகம் ஆமாயின்
ஆர்க்கும்பா ராவாரம் ஆருமோஅம்மானை
அன்பர்ப்பா ராவாரம் ஆருமே அம்மானை.
கு - ரை: சீர்- சிறப்பு. சேந்தன்- அருள்தரு சண்முகநாதப் பெருமான். காந்தன்- கணவன். ஆர்க்கும்- ஆரவாரிக்கும். பாரா- பார்த்து. வாரம் ஆருமோ- அன்புபொருந்தி யிருக்குமோ. அன்பர்ப் பாரா- அன்பர்கள் யாவரையும்பார்த்து. வாரம்ஆரும்- அன்புசெலுத்தும்.
பொ - ரை: சிறப்புகளில் எல்லாம் முதன்மையனான குன்றக்குடி அருள்தரு சண்முகநாதன் ஆகிய வள்ளிநாச்சியார் கணவனுக்கு, ஆரவாரிக்கும் அருள்வளம் சுரக்கும் ஆறுமுகம் உண்டு. ஆரவாரிக்கும் அருள்வளம் சுரக்கும் ஆறுமுகம் உண்டென்றால் யாவரையும் பார்த்து அன்பு பொருந்துமோ ? அன்பர் யாவரையும் பார்த்து அன்புபொருந்தும் - அன்புகாட்டும்.
இ - பு: பாரா - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
---------
26. மடக்கு.
மான்ம ருட்சியும் இந்து உள மாலையே
வள்ளி காந்தற்கும் இந்துள மாலையே
தான்ந டத்தலும் கந்துகத் தோகையே
தமியள் காய்ந்ததும் இந்துகத்து) ஓகையே
வான்வ ழுத்தலும் ஆறு வதனமே
மங்கையர்க் கும்சுகம் ஆறு வதனமே
மான்உ வப்பு மையூர்௮ச் சிலம்பையே
மதன்உ வப்பும் ஐஊர்அச் சிலம்பையே.
கு - ரை: மான்- மான்போன்ற தலைவி. மருட்சி- மயங்குவது. இந்து உள- நிலா உள்ள. மாலை-மாலைக்காலத்தையே. இந்துளம்- கடம்பமலர். தான் நடத்தல்- முருகனாகிய தான் செலுத்துவது. கந்துகத் தோகை- குதிரையாகிய மயில். கந்துகத்து ஓகையே- பந்துவிளையாட்டின் மகிழ்ச்சியையே. வான்- வானுலகவர். சுகம்- சுகந்தருவது. மான்- தலைவி. மை- மயக்கம். ஐ ஊர்- பெருமான் ஆகியதலைவன் எழுந்தருளியுள்ள. அச் சிலம்பையே- அந்த மயில்மலையையே.
பொ - ரை: மான்போன்ற தலைவி மயங்குவது நிலவு உள்ள மாலைக் காலத்திலேயே. வள்ளி நாயகியின் கணவனுக்கு உரியது கடம்பமலர் மாலையே. முருகனாகியதான் குதிரையாகச் செலுத்துவது மயிலையே. (முருகனாகிய தலைவனின்) ஆதரவு இல்லாத தலைவி வெறுப்பது பந்துவிளையாட்டின் மகிழ்ச்சியையே. வானுலகவர் போற்றுவது ஆறுமுகனையே. தலைவிக்கும் சுகம் தருவது ஆறுமுகங்களே. மானொத்த தலைவி உவந்து மயங்குவது மேகம்தவழும் அந்தமயில் மலையைக் கண்டே. மன்மதன் வணங்கி மகிழ்வதும் பெருமானாகிய தலைவன் எழுந்தருளியுள்ள அந்த மயில் மலையையே.
வி-ம்: மன்மதன் குன்றக்குடியானிடம் வரம்பெற்றான் என்பது தலபுராணச் செய்தி. எனவே மன்மதன் இரதிதேவி இருவரது அழகிய கருங்கற்சிற்பங்கள் மலையில், பெருமான் எதிரே மயில்மண்டபத்தில் எதிர்எதிராக உள்ளன.
------
27. தெளிவு.
தனியிடத்துக்கண்ட தலைவியைத் தலைவன் இந்நிலவுலகப் பெண்எனத்தெளிதல்.
மருட்பா.
சிலம்பார்க்கும் பூப்படியும் தேங்குழலாள் நான்பார்கின்
நிலம்பார்க்கும் கண்ணிமைக்கும் நேர்ந்தே - கலந்தார்க்கு
நன்றே புரியும் குன்றையங் கிரியில் நேர்ந்(து) இவண்
நின்றஇந் நிலைமை ஈர்ந்தண் கடற்புவி சார்ந்தபூ மகளே.
கு - ரை: பூ- நிலம். நேர்ந்து- நெருங்கி. கலந்தார்- மனங்கலந்தார்.
பொ -ரை: தேன்பொருந்திய மலர்சூடிய இவளின் கால்கள் தரையில் தோயும், நடக்கும்போது கால் சிலம்புகள் ஒலிக்கும். நான் பார்க்கும்போது நிலத்தைப் பார்ப்பாள், கண்கள் இமைக்கும் ஆதலால், தன்னை நெருங்கி மனம் கலந்தவர்க்கு நன்மையையே செய்யும் குன்றக்குடியானது மலையில், மனம் கலந்து இங்கு நின்ற தன்மையால் இவள் பசிய குளிர்ந்தகடல் சூழ்ந்த நிலவுலக மகளேயாவாள்.
வி-ம்: தேவர்க்கு இல்லாதனவும், நிலவுலகார்க்கு உள்ளனவுமாக நளவெண்பா கூறுவன,
“கண்ணிமைத்த லால்அடிகள் காசினியில் தோய்தலால் வண்ண மலர்மாலை வாடுதலால்”.
“நான் .....பார்க்கும்: “ யான் நோக்குங்காலை நிலம்நோக்கும்” (திருக்குறள் 1094.)
--------------
28. கழிக்கரைப் புலம்பல்.
தலைவனைப் பிரிந்த தலைவி நெய்தல் நிலப் பொருள்களோடு தன்னுள் நிலைமை கூறிவருந்துதல்.
பன்னிருசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.
சார்பைந் திரைஉந்(து) உவர்வனமே
தழைத்து நிறையும் துவர்வனமே
தரியேன் உடலம் அரக்(கு)அலமே
தாழ்க்கா(து) ஓடு மரக்கலமே
பார்வந்(து) அலரும் வெண்நத்தே
பதிஅன்(பு) உளரோ எண்ணத்தே
பாவிக் கழிமோ தும்சுறவே
பாவி மகட்கே துஞ்(சு)உறவே
ஏர்பி ணாக்கள் வைகறையே
எளியேற்(கு) இலையோ வைகறையே
எழில்கொள் பலத்த முண்டகமே
இடைந்தேன் துயரம் உண்((டு)அகமே
கூர்வாய் நெடிய மஞ்சுகமே
கொடியேற்(கு) இறையாம் அஞ்(சு)உகமே
குளிர்புன் னாகத் தடங்காவே
குன்றைப் பிரான்தீ(து) அடங்காவே.
அடி 1. கு - ரை: பைந்திரை- வளமான: மிக்கஅலை. வனம்- நீர். துவர் வனம்- வெறுக்கும் பசலைநிறம். அரக்கு- அழிக்கும். அலம்- வருத்தம். தாழ்க்காது- காலம்தாழ்த்தாமல்.
பொ -ரை: வளமான மிக்க அலைகள் உந்துதலால் கடற்கழி சார்ந்தது உப்புநீரே. என் உடம்பில் செழித்து நிறைந்தது யாரும் வெறுக்கும் பசலை நிறமே.. என் உடலினை அழிப்பது மனவருத்தமே. காலம் தாழ்த்தாது ஓடுவது மரக்கலமே.
அடி 2. கு - ரை: பார்- கரையடுத்த தரை. அலரும்- உயிர்ப்புடன் விரிந்து பரந்திருப்பன. வெண்நத்து- வெண்மையான சங்குகள். பதி- ஆழமான. பாவி- பரவலாக. கழி- உப்பங்கழிகளில். பாவிமகள்- பாவிப்பெண்ணான எனக்கு. துஞ்சு- இறத்தல். உறவு- விருப்பம்.
பொ - ரை: கடற்கரைத் தரையில் விரிந்து பரந்திருப்பன வெண் சங்குகளே. என் தலைவனாகிய பெருமான் தன் எண்ணத்தில் என்மேல் ஆழமான அன்புள்ளவரா?. உப்பங்கழிகளில் உயிருடன் சுறாமீன்௧கள் பரவலாக மோதும். தலைவனை அணையாத பாவிமகள் எனக்கு இறப்பதே விருப்பம்.
அடி 3. கு - ரை: வைகறை- விடியல். பிணாக்கள்- இளஞ்சிறுமியர். ஏர்செய்- விட்டின்முன் நீர்தெளித்துக் கூட்டிக் கோலமிட்டு அழகுசெய்தல்.. பலத்த- மலரும் பக்குவப்பட்ட. முண்டகம்- தாமரை. எழில்கொள்- மலர்ந்து அழகுபெறும். துயரம் உண்டு அகமே. இடைந்தேன்- கீழானவளானேன்.
பொ - ரை: விடியற்காலையில் இளஞ்சிறுமியர் வீட்டின்முன் நீர்தெளித்துக் கூட்டிக் கோலமிட்டு அழகு படுத்துவர். எளிய எனக்கு விடிவுகாலம் இல்லையோ. பக்குவப்பட்ட தாமரை மலர்கள் விடியலில் மலர்ந்து அழகுபெறும். என்னுள்ளத்தில் இரவில் என் தலைவனைக் கூடாத துயரமுள்ளது, அதனால் காலையில் நான் மலர்ச்சியின்றிக் கீழானவளானேன்.
அடி 4. கு -ரை: வாய்- அலகு. மஞ்சுகம்- கொக்கு. இறை- நொடிப்பொழுது. அஞ்சு உகம் ஆம்- அஞ்சத்தக்க ஒருயுகம் ஆகும். புன்னாகத்துக் குளிர் அடங்காவே- புன்னைமரங்களின் குளிர் குறைந்தபாடில்லை. தீது- என்னைக் கூடாமையால் விளையும் துன்பம். அடங்கா- மிகுகின்றது
பொ -ரை: கொக்குகள் கூரிய நீண்ட அலகுடன்கூடிய வாயுடையன. வாய்திறந்து கூறவியலாத பாவியாகிய எனக்கு ஒரு நொடியும் ஒருயுகமாகக் கழிகிறது. புன்னை மரங்கள் தரும் குளிர்ச்சி குறைந்த பாடில்லை. என்னைக் கூடாமையால் குன்றக்குடிப் பெருமான் தரும் துன்பம் மேன்மேல் மிகுகின்றது.
-----------
29. தலைவி மயிலினை வேண்டுதல்.
பாட்டுடைத் தலைவன் பவனிவரக்கண்டு வருந்திய தலைவி அவனது ஊர்தியான மயிலினை நோக்கிக் கூறுதல்.
எழுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்
காஇ(து) உறும்கயி லாய நெடுங்கிரி
காவல்செ யும்பதி தாழ்வோனை
வேவ இளந்தளிர் மீது கொடுந்தழல்
விழ்த லெனும்படி ஓவாதே
பாவம் உறும்சசி காயும் நெடுங்கதிர்
பாய விடும்திறம் ஏதேயோ
ஏவம் அறும்பொழில் ஏழ்புகழ் குன்றையி
லேஅக வும்சிகி தாராயோ.
கு - ரை: பதி- தலைவன் - சிவபிரான். தாழ்வோன்- முருகன். இளந்தளிர் வேவ மீது. கொடுந்தழல் ஓவாதே பாயவிடும். சசி- வெண்ணிலவு. ஏது- ஏன். ஏவம்- குற்றம். பொழில் ஏழ்-உலகங்கள் ஏழு. அகவும்- குரலெழுப்பும். சிகி- மயிலே.
பொ -ரை: இளந்தளிர் மேல் அது வேகுமாறு வெப்பம்மிக்க நெருப்பைக் கொட்டுவது போல் மிகஅக்கிரமமாக வெண்ணிலவு, சுடுகின்ற தனது நீண்டகதிர்களை என்மேல் பாயுமாறு இடைவிடாது ஏவும்தன்மை ஏன்? குற்றமற்ற ஏழுலகமும் புகழும் குன்றக்குடிச் சோலையில் அகவும் மயிலே! ஓங்கார உபதேசத்தில், உயர்ந்த கயிலையில் வாழும் சிவபிரானால் பணியப்பெற்ற முருகனை என்னிடம் தருவாயாக.
வி-ம்: சிவன் பணிவு: “சீயனம்போதிஎன வாய்புதைத்துச்செவிதர” (கந்தரந்தாதி.19.)
---------
30 . தலைவனைப் பிரிந்துவருந்திய தலைவியைத் தோழி தேற்றல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
தானே தனக்குத் தனிஉவமைத் தரணி பரவும் அருணகிரி
தேனே அனைய புகழ்ப்பாட்டன் சென்னி துன்னித் திகழ்அப்பன்
தானே உய்ய நமர்உய்ய நல்கு சிறிய மகன்குன்றை
மானே மயங்கிச் சிறிதும்உளம் வருந்தல் வரும்பே ரன்புக்கே.
கு - ரை: பாட்டன்- பாடலுக்கு உரியவன். சென்னிதுன்னி- ஆறுதலைகள் நெருங்கியிருக்க. அப்பன்- முதல்வன். பேரன்புக்கு உய்யத்தானேவரும். வருந்தல்- வருந்தாதே.
பொ - ரை: தான்மட்டுமே தனக்கு உவமை என்று உலகம் புகழும் அருணகிரியாரின் தேனொத்த திருப்புகழுக்கு உரியவனும், ஆறுதலைகள் நெருங்கி இருக்கப்பெற்ற முதல்வனும் ஆகிய அவ்விளங்குமரன், நாமனைவரும் ஈடேறும் பொருட்டுத் தானே வருவான், உய்யப் பேரன்பு நல்குவான், குன்றக்குடி வாழ் மான்போன்றவளே! மயங்கி மனம்வருந்தாதே.
வி-ம்: இச்செய்யுளில் பாட்டன், அப்பன், மகன், பேரன் என்ற முறைப் பெயர்கள் நிரலே வந்தநயம் காணலாம்.
இ - பு: வருந்தல் - எதிர்மறை
-------------
31. விரகம்மிக்க தலைவி நிலவைக் கண்டூ பலவாறு புலம்பல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
மடக்கு.
கேளார் தூற்றும் அதும்அலரே கீழ்வார்ந்(து) ஊற்றும் மதுமலரே
வேளார் எளியேன் படுகிடையே விரைஆர் இலஞ்சி படுகிடையே
ஆளார் செந்தேன் ஆற்றாரே அந்தோ வந்து)ஏன் ஆற்றாரே
நீளார் சிகண்டிப் பதியாரே நிலவைக் கண்டிப் பதியாரே.
கு - ரை: கேளார்- பகைவர். அதும்- அதுவும். அலரே- பலர்அறியப் பழிதூற்றுதலே. மலரே மது கீழ்வார்ந்து ஊற்றும். வார்ந்து ஊற்றும்- ஒழுகி ஊற்றும். வேளார்- விரும்பார். படுகிடை- படுத்துக் கிடத்தல். விரை- நறுமணம். இலஞ்சி- குளம். படுகிடை- மிக்க நெட்டி. தேனாற்றார்- தேனாறுக் குன்றக்குடியான். வந்து ஏன் ஆற்றார்- என்விரகநோயினை வந்து ஏன் தீர்க்க மாட்டார். நீள் ஆர்- நீண்டபுகழ் பொருந்திய. பதியாரே- பதியில் வாழ்பவரே. கண்டிப்பது யாரே.
பொ - ரை: பகைவர் தூற்றும் அதுவும் பலரறியப் பழிதூற்றுதலே. மலர்களே தேனைக் கீழேஒழுகி ஊற்றும். எளியவளாகிய நான் படுத்துக் கிடத்தலை யாரும் விரும்பார். பூமணக்கும் குளங்களில் மிக்க நெட்டியே உள. சிறந்த தேனாற்று வள்ளலான குன்றக்குடியார் என்னைக் காக்கவில்லையே. அந்தோ! அவர்வந்து ஏன் என்னைக் காக்கமாட்டார்? நீண்டபுகழ் புகழ் பொருந்திய மயில்மலையான குன்றக்குடி வாழ்வோரே, என்னை வருத்தும் நிலாவைக் கண்டிப்பது யார்?
---------------
32 . துதி .
இருசீரடி வஞ்சிவிருத்தம்.
பதியார் குன்றையம்
பதியார் சென்றுதம்
பதியார் பண்டியில்
பதியார் மங்கவே.
கு - ரை: பதியார்- இறைவன், அருள்தரு சண்முகநாதன். தம்பதியார்- கணவன் மனைவி. பண்டி- வயிறு. மங்கப் பதியார்- என்றுமுள தன்மை - அநாதி நித்தியம் குன்றக் கருப்படார் - பிறவார்.
பொ - ரை: அழகிய குன்றக்குடி இறைவனாகிய அருள்தரு சண்முகநாதப் பெருமான், தமது என்றுமுள தன்மை- அநாதிநித்தியம் குன்றுமாறு தம்பதியர் வயிற்றில் சென்று கருவாய்ப் படார் - பிறவார்.
----------
33. காமமயக்கத்தால் இரவில் தலைவி வருந்துதல்.
முச்சீரடி வஞ்சிவிருத்தம்.
மங்க ளம்செய் மயில்மலை
இங்(கு)அள் அங்கை இருட்குழாம்
திங்கள் அம்பணி சென்னியான்
வெங்க ளம்பெய் விடங்கொலோ.
கு - ரை: அம்கை அள் - அழகிய கையினால் அள்ளபெறும். திங்கள்அம் பணி- அழகிய பிறையும் பாம்பும். களம்பெய் வெவ்விடம். களம்- கழுத்து.
பொ - ரை: வணங்கினவர்க்கு மங்களம் வழங்கும் மயில்மலையில் அழகிய கையால் அள்ளுமாறு அடர்ந்துள்ள இருள், அழகிய பிறைநிலவும் நாகமும் தன்தலையில் தரித்த சிவபிரானது கழுத்தில் செறிந்த விடமோ?
இ - பு: கொல் - ஐய இடைச்சொல்.
-----------
34. சிலேடை வெண்பா.
ஓலம் செறிகடலை ஒக்குமறு கும்மதனும்
கோலஞ் செறியும்உயர் குன்றையே - மால்அசுரர்
கூற்றுப் படையான் குணக்கீரன் சொன்னமுரு
காற்றுப் படையான் அகம்.
கு - ரை: மறுகு- தெரு. மதன்- மன்மதன். கோலம் செறியும்- அழகு நிறையும். கோல் அஸ்சு எறியும்- ஐவகை அம்புகளையும் எய்யும்.. மால் அசுரர்- கரிய அசுரர்கள். கூற்றுப் படையான்- யமனை ஒத்த வேற்படை ஏந்தியவன். அகம்- இருப்பிடம். மறுகு கோலம்செறியும் என்றும்; மதன் கோல்அஞ்சு எறியும் என்றும் கூட்டுக
பொ - ரை: கரிய நிறமுடைய அசுரர்களுக்கு யமனைஒத்த வேலினை ஏந்தியவனும், உயர்குணத்து நக்கீரரின் திருமுருகாற்றுப்படைக்கு உரியவனுமாகிய முருகப் பெருமானின் இருப்பிடம், வேல் வேல், முருகா முருகா என்று கடல் ஒத்த ஆரவாரம் நிறையும் தெருக்களும், மன்மதனின் தாமரை, மா, முல்லை, குவளை அசோகு ஆகிய ஐவகை அம்புகளும் செறிந்த குன்றக்குடி ஆகும்.
இ - பு: கோலஞ் செறியும் - பிரிமொழிச் சிலேடை.
-----
35 . இடைச்சியார்.
பால்விற்கும் இடைக்குலப் பெண்ணை இச்சித்த ஒருவன்
சிலேடைவகையில் கூறுதல்.
பன்னிருசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
அன்பால் போந்து கட்டுண்பகு)
அல்லால் எவர்க்கும் அடங்காத
அத்திக்(கு) இளையான் குன்றைமணி
அணியே மிடையும் தெருவிடையே
என்பால் குயவன் கலயத்தால்
இனிக்கும் ஆன்பால் பகருதிரோ
இன்றேல் ஆண்பால் யாம்காணா(து)
இட்ட குயவன் கலயத்தால்
தென்பாற்(கு) ஏகப் பகருதிரோ
திகழ்இத் திதியைக் கூடையிலே
சிறக்கக் காட்டி மலர்வாளி
தீத்த தாபம் தீர்த்தருள்வீர்
முன்பாற் கடற்கண் துயில்கூர்ந்த
முகுந்தன் மிகும்தன் மூதிசைபோல்
மூண்டு வளர்ந்த குலத்(து)இரதம்
முதிர்வாய்ச் சியரே ஆய்ச்சியரே.
அடி 1. கு - ரை: அத்திக்கு இளையான்- யானைமுகத்து விநாயகர்க்கு இளையமுருகன். மணி அணி- நவமணிகளும் அணிகலன்களும். மிடையும் தெருவிடையே- செறிந்த கடைத்தெருவில்.
பொ - ரை: அடியவரது அன்பினால்வந்து கட்டுட்படுதல் அல்லாமல் பிறர் யாருக்கும் கட்டுப்படாத விநாயகருக்குஇளைய முருகப்பெருமானின் குன்றக்குடியில், நவமணிகளும் அணிகலன்களும் செறிந்த கடைத்தெருவில்,
அடி 2. கு - ரை: என்பால்- என்னிடம். கலையம்- மண்கலையம். ஆன்பால்- பசுவின்பால். பகருதிரோ- விற்கிறீர்களா; ஆண்பால்- ஆண்மக்களாகிய நாங்கள். கலயம் வன்குயம் - கலயமாகிய தளராதமுலைகள்.
பொ -ரை: குயவன் வனைந்த மட்கலயத்தால், இனிக்கின்ற பசுவின் பாலை விற்கிறீர்களா அல்லது ஆண்மக்களாகிய நாங்கள் காணாதவாறு மறைத்துவைத்த கலயமாகிய தளராத முலைகளால்,
அடி 3. கு - ரை: தென்பால்- இனியபால். ஏக- தனியிடம் செல்ல. பகருதிரோ- சொல்கிறீர்களா. திகழ் இத்திதியை- விளங்கும் இந்த பாக்கியத்தை. கூடையிலே- உம்மைக் கூடும்போது - புணரும்போது. மலர்வாளி- மன்மதனது மலரம்புகள். தீத்த- சுட்ட. தாபம்- காமவருத்தம்.
பொ - ரை: நீங்கள் தரும் இனிய பாலுக்காகத் தனியிடம் செல்லச் சொல்கிறீர்களா? சிறந்து விளங்கும் இப்பாக்கியத்தை உம்மைப் புணரும்போது சிறப்புறத்தந்து மன்மதனது மலரம்புகள் சுட்ட காம வருத்தத்தைத் தீர்த்தருளுங்கள்.
அடி 4. கு - ரை: முகுந்தன்- திருமால் ஆகிய கண்ணன். மூதிசை- முதிர்ந்த இசை. மூண்டு- சிறந்து. குலம்- ஆயர்குலம். இரதம்முகதிர்- சுவைமிக்க. வாய்ச்சியரே- இதழ்களுடையவர்களே.
பொ - ரை: திருப்பாற் கடலில் முன்பு அறிதுயில் கொண்டவனான கண்ணன் புல்லாங்குழலில் இசைத்த முதிர்ந்த இசைபோல் பேசும் சிறந்து விளங்கும் ஆயர்குலத்தில் பிறந்த சுவைமிக்க இதழ்களுடைய ஆய்ச்சியரே !
--------
36 . இதுவும் அது.
ஏறு குடமல் லிகைமுல்லை
எங்கும் செறிந்து கொங்குவிரிந்(து)
இலங்கும் குன்றை மறுகின்அழ(கு)
இன்னம் எழுப்ப வருகிற்பீர்
கூறு நவநீ தம்தழலில்
குழையும் தரத்த(து) அதுகொண்டே
குறியா எம(து)இ தயங்கொதித்துக்
குளிரும் புனலாய் வழிந்கு)ஓட
வேறு செய்த நவந்தம்
வியப்பே இருளில் கொணர்ந்ததுப்போ
வேண்டா தெளிவாய் நிலாப்போந்த
விரைத்துப் புணவே வேண்டுமதன்
கோல்தும் அரிட்டம் யாம்கொள்வான்
கூடக் கொணர்ந்தீ ரேன்உயர்ந்த
குடத்தும் அரிட்டம் கூடாது
கூடா தார்க்கும் பொதுவியரே.
அடி 1. கு-ரை: ஏறு- பருத்த. கொங்கு- நறுமணம். எழுப்ப- மிகுவிக்க.
பொ - ரை: பருத்த குடமல்லிகை, முல்லைஆகியன எல்லாவிடங்களிலும் செறிந்து நறுமணம் பரப்பி விளங்கும் குன்றக்குடித் தெருவிற்கு, மேலும் அழகூட்ட வருகின்றவரே,
அடி 2. கு -ரை: கூறு- விலை கூவிக்கொண்டு செல்லும். நவந்தம்- வெண்ணெய். அதுகொண்டு குறியா- அதுபற்றி எண்ணாமல். கொகதித்து- காமச்சூடேறி.
பொ - ரை: நீங்கள் விற்கக் கூவும் வெண்ணெய் நெருப்பில் உருகும்தன்மை யுடையது. அந்த வெண்ணெய்பற்றி எண்ணாமல் எமது இதயம் உம்மால் காமச்சூடேறிக் குளிர்ந்த நீராகப் பெருகி ஓடுமாறு,,
அடி 3, 4 இரண்டிலும் உள்ளவற்றைப் பின்வருமாறு கூட்டிப் பொருள்கொள்க. “வேறுசெய்த நவந்தம் வியப்பே. கூடாது ஆர்க்கும் பொதுவியரே ! மதன் கோறும் அரிட்டம், கூட யாம்கொள்வான் கொணரர்ந்தீரேனும், இருளில் கொணர்ந்த துப்போ வேண்டா. குடத்தும் அரிட்டம் கூடாது. நிலாப்போந்த உயர்ந்த துப்பு விரை உணவே வேண்டும்
கு _ ரை:.வேறு செய்த- காமவிகாரப் படுமாறு செய்த. நவந்தம்- புதுமை. கூடாது- எம்மைத்தழுவி இன்புறுத்தாமல். ஆர்க்கும்- ஒளிவீசி மின்னும். பொதுவியர்- இடைச்சியர். கோறும்- கொல்லும். அரிட்டம்- விரகத்துன்பம். கூட யாம்கொள்வான்- மிகுதியாக நான் வாங்கும்பொருட்டு. இருளில்- இருள்போன்ற கூந்தலுடைய உமது தலையில். துப்பு- நெய். குடத்தும் அரிட்டம்- குடத்தில்உள்ள மோர். நிலாப்போந்த- ஒளியுடன்வந்த. துப்பு- பவளம்ஒத்த இதழ். விரை- பூந்தேன். உணவே வேண்டும்- நான் உண்ணவே விரும்புகிறேன்.
பொ - ரை: காம விகாரம்படச் செய்த புதுமை வியப்பானது ! எம்மைத் தழுவி இன்புறுத்தாமல் ஒளிவீசி மின்னும் இடைச்சியரே ! மன்மதன் எம்மைக் கொல்லும் துன்பம் காரணமாக மிகுதியாக நான்வாங்கும் பொருட்டு, இருள்ஒத்த கூந்தலுடைய தலையில் சுமந்து நீவிர் கொண்டுவந்த நெய் வேண்டாம், குடத்திலுள்ள மோரும் வேண்டாம், ஒளியுடன் வந்தநுமது பவளஇதழ்தரும் பூந்தேனே நான் உண்ணவேண்டும்.
வி-ம் : “பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர் : என்ற திருக்குறட்பகுதி இங்கு, “விரைத் துப்பு உணவு: - பூந்தேனாய் இனிக்கும் பவளம்போன்ற இதழுணவு - என்று ஆளப்பெறுகிறது.
---------
37. மதங்கியார்.
நடனமாடிப் பாடும் பெண்ணொருத்தியைக் கண்ட
காமத் தலைவனொருவன் கூறுதல்.
அறுசீர் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
பொதுநடனம் பயில்பெருமான் மருமான்வாழ்
குன்றைவளம் பொலியும் கீர்த்தி
மதுகடம்வாய் விரிந்த(து)என வாய்திறந்து
நாட்டியம்செய் மதங்கி யாரே
கதும்எனம தனும்இலக்கு நாட்டிஅஞ்(சு)எய்
தான்கடகக் கரம்இ லங்க
எதுமனம்மீ ளவும்நாந்த கம்கொண்டீர்
நாம்தகம்தாங் கிடற்கு மன்னோ.
கு - ரை: பொதுநடனம் பயில்- ஆயர் அனைவரும் காணநடனம் ஆடிய.
பெருமான்- கண்ணன் ஆகிய திருமால். மது கடம்- தேன் குடம். வாய்திறந்து- பாடி. மதங்கியாரே- ஆடல் பாடல்வல்ல பாண்மகளே. இலக்கு நாட்டி- குறிவைத்து. அஞ்சு- ஐவகை மலர்அம்புகள். தாங்கிடற்கு- காத்துக்கொள்வதற்கு. நாம்தகம்- நாங்கள் தக்கவர்ஆகமாட்டோம். எதுமனம்மீளவும்- கீழ்ப்பட்ட மனம்மீளுமாறு. நாந்தகம் கொண்டீர்- வாள் ஏந்தினீர்.
பொ - ரை: ஆயர் அனைவரும் காண நடனம் ஆடிய கண்ணபிரான் ஆகிய திருமாலின் மருமகன் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள வளம்பொலியும் புகழார்ந்த குன்றக்குடியில், தேன்குடம் ஊற்றுவதுபோல் பாடி, நடனம்செய்யும் மதங்கியாரே! உம்மைக் கண்டதும் மன்மதன் குறிவைத்து விரைந்து, தனது ஐவகை அம்புகளையும் எம்மேல் எய்தான். நாங்கள் தக்கவர் ஆகமாட்டோமென்பதால், எமது கீழான மனம்மீள, கடகம் அணிந்த கையில் வாள் ஏந்தியுள்ளீர்.
வி-ம்: கண்ணன் ஆடிய பொதுநடனத்தை,
மாயவன்தம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்
கோவலர்தம் சிறுமியர்கள் குழல்கோதை புறம்சோர
ஆய்வளைச்சீர்க்கு அடிபெயர்த்திட்டு அசோதையார் தொழுதேத்தத்
தாதெரு மன்றத்து ஆடும்குரவை” (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை)
என்பது விளக்கும்.
-------------
38. இதுவும் அது.
பன்னிருசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
மன்னு கின்ற சூரபன்மன் வாழ்வு குன்ற வேல்விடு
மதுகை மிஞ்சு குமரனெந்தை மருவு குன்றை நகரிலே
உன்னு கின்ற செயல்பிறங்க அபிந யங்கள் காட்டுவ
உமது சிந்தை அறியும் அந்த உணர்வு தந்த தில்லையே
தின்னு கின்ற கண்டகம் சுழற்ற ஏது ஏதரோ
தெளிவில் துன்பு கண்(ட)அகம் சிதைந்து நைந்து போயதே
பன்னு கின்ற நட்டம் விட்டு யோக லாபம் அருள்திரேல்
பாக்கி யம்ப லித்தும்ஆவி பாழின் நட்டம் ஆகுமே.
கு - ரை: மன்னுகின்ற வேல்- பெருமை பொருந்திய வேல். மதுகை- ஞானம். பிறங்க- விளங்க. அபிநயம்- காமக்குறிப்பு. காட்டுவீர்- காட்டும் மதங்கியாரே. தந்ததில்லை- பிறர்க்குத் தரவில்லை. கண்டகம்- உடைவாள். ஏது ஏது- காரணமென்ன. தெளிவில் துன்பு- மனத்தெளிவின்மையால் ஏற்படும் துன்பம். தின்னுகின்ற அகம்- எம்மை அரிக்கும்மனம். நட்டம்- உடைவாள் சுழற்றி ஆடும்நடனம். யோகலாபம்- புணர்ச்சி இன்பம். ஆவிநட்டம் ஆகும்- உயிர் இன்பப்பயன் இழக்கும்.
பொ - ரை: சூரபன்மனின் அசுரவாழ்வு குன்றுமாறு பெருமைபமொருந்திய வேலெய்த மேலான ஞானவடிவுடைய முருகனாகிய என்தந்தை வாழும் குன்றக்குடி நகரில், மனத்து நினைவைக் காமக் குறிப்பில் - அபிநயத்தில் காட்டும் மதங்கியாரே! உமது மனமறிந்த அவ்வுணர்வை உமது செயல் காட்டவில்லை. நீங்கள் உடைவாளைச் சுழற்றக் காரணம் என்ன? என்மனத்தைத் தின்னும் அக்காரணத்தால், என்மனம் தெளிவுபடாமல் சிதைந்து நொந்து போனது. உமது நடனத்தைக்கைவிட்டுப் புணர்ச்சி இன்பம் தந்தால் உயிர்க்கு நற்பேறு வாய்க்கும். இன்றேல் உமது நடனம் பயனற்றதாய் ஆகும்.
----------
39 . துதி .
விருத்தக் கலித்துறை.
ஆதியோடு) அந்தம் ஏதும் இகந்தோ னானாலும்
பாதிஅ ணங்(கு)ஓர் பாகன் மகன்சேய் பால்போலும்
சாதிசெ வந்தி மாலதி கொன்றை சாதேவம்
ஊதிகை சந்தம் மாமலி குன்றை ஊர்தானே.
கு - ரை: இகந்தோன்- கடந்தவன். சேய்- இளையோன். சாதி- சாதிப்பூ. மாலதி- சிறுசண்பகம். சாதேவம்- நாவல்மரம். ஊதிகை- முல்லைமலர். சந்தம்-சந்தனமரம். மா- மாமரம்.
பொ - ரை: அம்மையப்பன் மகன், ஆதியும் அந்தமும் இல்லா இளையவன். ஆனாலும் அவன் ஊர், பால்ஒத்த மிகவெண்மையான சாதிப்பூ, செவந்திப்பூ, சிறுசண்பகப்பூ, முல்லைப்பூ, கொன்றைமரம், நாவல்மரம், சந்தனமரம், மாமரம் மலிந்த குன்றக்குடியாகும்.
-------------
40 . தலைவி துன்புறுதல் நோக்கிப் பாங்கி தலைவன் கொடுமை கூறுதல்.
பன்னிருசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
நேர்போந்(து) உய்தீத் திரட்பட்ட
நிலைமை உலகம் படமுடிவின்
நெகிழ்க்கு நுதல்அம் பகம்முளரி
நிமலன் அருள்குன் றைப்பெருமான்
சார்போம் துயரம் உழந்தேமேல்
தரிய லார்தாம் சிரியாரோ
சமண முதல மதங்களையச்
சபைக்(கு) எழுந்த தருணத்(து)ஆண்
வார்போந்(து) உயரப் பூம்பாளை
வாய்த்துக் காய்த்து வளம்சுரக்க
வைத்த திறத்தின் ஈங்குநனி
வருந்து மடல்ஆள் முடிப்பெணெ்ணை
யார்போந்கு) எவ்வாறு) அழைக்கினும்வந்(து)
அவ்வாறு) ஆற்றான் அவனுக்(கு)ஈ(து)
ஆற்ற ஆற்றல் அரிதேயோ
அதுசெய் யாமை யிறும்பூதே.
அடி . 1.கு-ரை: திரள்தீ நேர்போந்து பட்டநிலைமை- திரண்ட த் நேரிடையாக வந்துபட்டது ஒத்த தன்மையை. உலகம் பட- அசுரர்களால் உலகம் அடைய. முடிவில்- இறுதியாக. நுதல் அம்பகம் முளரி- நெற்றிக்கண் ஆகிய தாமரை. முகிழ்க்கும்- மலர்ந்த- திறந்த. முதல்வன்- சிவபிரான்.
பொ -ரை: திரண்ட தீ நேரிடையாக வந்து பட்டது ஒத்த நிலைமையை, அசுரர்களால் உலகம் அடைய, முடிவில் தனது நெற்றிக்கண் ஆகிய தாமரையை முகிழ்க்கச்செய்து சிவபிரானருளிய குன்றக்குடி அருள்தரு சண்முகநாதப்பெருமானே !
அடி 2. குரை: சார்போம்- மனம் மொழி மெய்யால் சார்ந்தநாங்கள். தரியலார்- மாற்றார். எழுந்த- பிறந்த. தருணம்- இளமை – இளமையபொருந்திய திருஞானசம்பந்தர்.
பொ -ரை: மனம் மொழி மெய்யால் உன்னைச் சார்ந்த நாங்கள் துன்பப்பட்டால், எம்மைக்கண்டு மாற்றார் சிரிக்கமாட்டார்களா? சமணசமயம் முதலிய மதங்களைக் களையும்பொருட்டுச் சீர்காழியில் பிறந்த இளமைபொருந்திய திருஞானசம்பந்தர்.
வி-ம்: “குன்றைப் பெருமான் சார்போம் துயரம் உழந்தோமேல் தரியலார்தாம் சிரியாரோ” என்ற தொடர்,
விர என்தன்னை விடுதிகண்டாய் விடில் என்னைமிக்கார்
ஆர்அடியான் என்னின் உத்தரகோசமங்கைக்கரசின்
சீரடியார் அடியான்என்று நின்னைச் சிரிப்பிப்பனே.” (திருவாசகம்.152)
என்பதை நினைவூட்டுகிறது.
அடி 3-4 : கு - ரை: வார்போந்து உயர்ந்த- நீண்டு வளர்ந்து உயரமான. ஆண்பூம்பாளை- ஆண்பனையின் அழகிய பாளை. மடல்ஆள் முடி- பூவிதழ் ஆளும் கூந்தல் - மலர் கடிய கூந்தல். அவ்வாற்றான்- அவ்வழியே. ஆற்றல்- அருளுதல். அரிதேயோ- உன்னால் இயலாததா. அது- அருளாமை. இறும்பூதே- பெருமைதருவதா? இல்லை. அருள்க.
பொ -ரை: திருஓத்தூரில் ஒருதொண்டர் வேண்ட நீண்டு வளர்ந்து உயரமான ஆண்பனையின் உச்சியில் அழகிய பாளை வாய்த்துக் குலைதள்ளி வளமாகக் காய்க்க வைத்தார். எனவே இவ்வுலகில் யார்சென்று எவ்வாறு அழைத்தாலும் அவ்வழியே அவருக்கு அருளும் நீ, மிகவருந்தும் மலர்சூடிய கூந்தலுடைய இவளுக்கு அருளுதல் இயலாததா? அருளாமை உனக்குப் பெருமை தருவதா? அருள்வதே பெருமைதருவது.
வி - ம்: திருஞானசம்பந்தர், திருஓத்தூரில் சமணர் நகைத்தல் தீர, அடியார் ஒருவர் ஆண்பனைகள் எல்லாம் காய்க்க அருள்புரிமாறுவேண்ட, திருவருளால் அவ்வாறே ஆக்கியமையைப் பெரியபுராணம் 2876 - 2886 செய்யுள்களில் காணலாம்.
இ - பு: இச்செய்யுள் வேற்றுப் பொருள் வைப்புஅணி.
------------
41. பிச்சியார்.
முக்குறித் தொகுதியாக விபூதியும் சிந்துரப்பொட்டும் கலமும் கபாலமும் தாங்கிப் பித்துடையார் போலத்திரியும் பெண்ணைக்கண்ட தலைவனொருவன் கூறுதல்.
பன்னிருசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
தேறுசதுர் வேதம்அறை பிரணவத்(து) உட்பொருள்
தெளித்தபர மாசாரியன்
தேவகுஞ் சரியோடு வள்ளிமஞ் சரிகுலாய்ச்
செறிகுன்றை நகரத்தினே
கீறுதிரி புண்டரம் சிந்துரம் சுந்தரம்
கெழுநுதற் பிச்சியாரே
கேண்மின் ஊர் வசிதிலோத் தமைஆதி மாதர்கள்
கிளர்எழில் கோயிலெல்லாம்
ஊ றும்அதி லாவண்ணி யத்தினுக்(கு) ஏக்கற்(று)
ஒடுங்கிஏற் றிடவுமன்னி
ஓ யாத ஒண்மஸ்சு எப்பிச்சை இடல்பிறர்க்(கு)
உரைசெய்திரு வோடுபொலிவீர்
மாறுபொரு மூவிலைப் படைகாளை களையெலாம்
வன்பலி கொளக்கொண்டதோ
மனைகள்தொறும் மடவார் வழங்குபலி கோடற்கு
வாய்த்ததோ வாய்மலர்கவே.
கு - ரை: தேறு- தெளிந்த. தெளித்த- எடுத்துரைத்த. பரமாசாரியன்-மேலானகுரு- சிவகுரு. மஞ்சரி- மலர்மாலை. குலாய்- பொருந்தி. நுதல் கறு திரிபுண்டரம்- நெற்றில் இடப்பெற்ற திருநீற்றுக்கோடுகள் மூன்று. ஆதிமாதர் பிறர்- முதலியபிற அரம்பையர். மன்னி-நிலையாகத்தங்கி ஊறும்- மேன்மேல்பெருகும். அதிலாவண்ணியம்- பேரழகு. ஏக்கற்று- ஆசையால் தாழ்ந்து. ஒடுங்கி- அடங்கி. ஓயாத- குறைவில்லாத. மஞ்சுளப்பிச்சை இடல்- அழகுப்பிச்சை இடுதல். உரைசெய்- கேட்கும். திருவோடு- பேரழகுடன் । திருவோட்டுடன். பொருமூவிலைப் படை- பகைத்துப் போரிடும் கலம். மாறுகாளைகளை எலாம்- உன்னைக்கண்டு மதிமயங்கும் காளைப்பருவத்தினர் அனைவரையும். வன்பலி கொள- உமது பேரழகுக்கு வலிதில் பலியிடும் பொருளாகக் கொள்ள. பலிகோடற்கு- பிச்சை ஏற்பதற்கு.
பொ - ரை: தெளிந்த நால்வேதத்துள் மறைபொருளாகிய பிரணவத்தின் உட்பொருளை எடுத்துரைத்த சிவகுருவாகிய அருள்தர சண்முகநாதப் பெருமான், தேவருலககத் தெய்வயானையம்மை, மலர்மாலை ஒத்த வள்ளிநாச்சியார் ஆகியோருடன் செறிந்து பொருந்திய குன்றைநகரில், நெற்றியில் இடப்பெற்ற திருநீற்றுக்கோடுகள் மூன்றுடன் சிந்துரப்பொட்டும் சேர்ந்த அழகிய பிச்சியாரே! கேளுங்கள். ஊர்வசி, திலோத்தமை முதலிய அரம்பையர் நிலையாகத்தங்கி, உம்மிடம் மேன்மேலும் மிகும்பேரழகினுக்கு ஆசையால் தாழ்ந்து, அடங்கிக்கிடந்து ஒளிபொருந்திய அழகுப் பிச்சையிடுமாறு வேண்டும் பேரழகுடன் பொலிகின்றவரே ! உமது அழகில் மயங்கும் காளைப்பருவத்து இளைஞர்களை எல்லாம் பலியிட - கொல்ல மூவிலைச் சூலம் ஏந்தினீரா? அல்லது வீடுகள்தோறும் மகளிர்இடும் பிச்சையினை ஏற்கத் திருவோட்டுடன் விளங்குகிறீரா? வாய்திறந்து சொல்லுங்கள்.
--------------
42. இதுவும் அது.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
வேட்டுவரு வார்க்(கு)உருகு முருகுகுன்றை
அருகுநின்று வெருட்சிப் பார்வை
காட்டுபிச்சி யீர்ச்சுடர்ச்செங் கதிர்நிவந்து
மேல்நோக்கிக் கஞலப் பாலம்
தீட்டுசிந்தூ ரத்திலகம் தெரிவும்தூ
ரத்(து)இலகத் திரிவீர் முற்றும்
விட்டுநுதல் விழிஇஃ.தோ வேறுபர
மர்க்(கு)ர உளதோ விளம்பீர் மாதோ.
கு - ரை: வெருட்சிப்பார்வை- மருண்ட பார்வை. சுடர்ச்செங்கதிர்- ஒளிரும் செஞ்ஞாயிறு. நிவந்து- உயர்ந்து. கஞல-எழ. பாலம்- நெற்றி. தெரிவு- தெரிவது. இலக- விளங்க. முற்றும் வீட்டு- முழுவதையும் அழிக்கும்.
பொ -ரை: தன்னை விரும்பி வருகிறவர்க்கு மனமுருகி அருளும் முருகப்பெருமானது குன்றக்குடியில் என்அருகில் நின்று மருண்டபார்வை பார்க்கும் பிச்சியாரே! ஒளிரும் செஞ்ஞாயிறு உயர்ந்து மேலெழுவதுபோல் நெற்றியில் இட்ட சிந்தூரப் பொட்டு தூரத்தில் வரும்போதே தெரியுமாறு விளங்கத் திரிபவர்களே! இச்சிந்துரப் பொட்டு, முழுவதையும் அழிக்கும் சிவபெருமானது நெற்றிக்கண் என்பது இதுதானா? இதுவன்றி நெற்றிக்கண் வேறு அவருக்கு உள்ளதா? கூறுங்கள். ( திலகத்துடன் கூடிய உமது அழகு, காண்போரைக் காமஎரியால் வசமிழக்கச் செய்கிறது என்பது குறிப்பு.)
இ - பு: மாதோ: அசைச்சொல். இச்செய்யுள் எடுத்துக்காட்டு உவமையணி.
---------
43 . ஊசல்.
மகளிர் ஒருவரையொருவர் ஊஞ்சலாட அழைத்தல்.
கொச்சகக் கலிப்பா.
தோரண வாயில் துதைகழனி யில்துழனி
வாரணமூர் குன்றை மறுகை எழில்பாடிக்
காரணம் இன்றிக் கடற்கெண்டை செய்வள்ளைப்
பூர்ணகோ பத்தினீர் பொன்னூசல் ஆடாமோ
போதத் தக(வு)உடையீர் பொன்னூசல் ஆடாமோ.
கு - ரை: துதை- செறிந்த. துழனி- ஒலி. வாரணம்- சங்கு. காரணம்- நோக்கம். கடல்கெண்டை- கடலில் புரளும்கெண்டைமீன் ஒத்தகண்கள். செய்வள்ளை- நன்செய் நிலத்து வளமான வள்ளைக் கொடிஒத்த காதுகள். பூரணகோபத்தினீர்- தம்பலப்பூச்சியை முழுமையாக ஒத்த இதழ்களுடையவர்களே. போதத் தகவு- ஞானத்தகுதி. பொன்- அழகு / பொற்பலகை.
பொ -ரை: தோரணங்களுடைய வாயில் முன்னே செறிந்த நன்செய் நிலங்களில் ஒலிக்கும் சங்குப்பூச்சிகள் ஊர்கின்ற குன்றக்குடித் தெருக்களின்அழகை வேறு காரணம் இன்றிப்பாடி, கடல்வாழ் கெண்டை பிறழ்வதொத்த கண்களும், நன்செய்நிலத்தில் வளர் வளமான வள்ளைக்கொடி ஒத்த காதுகளும், தம்பலப்பூச்சியை முழுதும்ஒத்த இதழ்களும் உடையவர்களே! பொன்னூசல் ஆடுனோம். ஞானத்தகுதியுடையவர்களே! பொன்னூசல் ஆடுவோம்.
இ - பு: ஆடாம்- உளப்பாட்டுத் தன்மைப்பன்மை வினைமுற்று.
---------
44. தலைவிக்கு நேரும் துன்பநிகழ்ச்சியைச் சகியாதவளாய்ப் பாங்கி தன்னுள்ளே சொல்லுதல்.
கொச்சகக் கலிப்பா.
மோதுமே வந்து முழங்குமே பாழ்ங்கடலும்
காதுமே வேளும் கடப்பமே இவ்விர(வு) என்(று)
ஓதுமே மாதும்மேல் ஓங்கு மயில்மலைவேள்
ஏதுமே கூறா(து) இனிக்கடப்பந் தார்தரினே.
கு ரை: மேலோங்கு- புகழ்மேலோங்கிய. ஏது- குற்றம். இனி- மனத்தில் இனிக்கும். வேளும் காதுமோ-மன்மதனும் கொல்வானோ. இவ்விரவு கடப்பம். மாதும் ஓதும்.
பொ - ரை: புகழ் மேலோங்கிய மயில்மலை முருகன் என்மேல் குற்றமேதும் கூறாது என்மனத்தில் இனிக்கும் தனது கடப்பமலர் மாலையைத் தந்தால், பாழாய்ப்போன கடல் நான்வருந்த மோதாது, முழங்காது. மன்மதனும் என்னைக் கொல்லான். இந்த இரவையும் கடப்போம் என்று தலைவி கூறுவாள்.
இ - பு: முன்னைய ஏகாரங்கள் மூன்றும் எதிர்மறை ஓகாரங்கள். பின்னைய ஓகாரங்கள் மூன்றும் அசைநிலைஓகாரங்கள்.
---------
45 . சித்து.
பொய்வேடச் சித்தருள் ஒருவர், மெய்வேடச் சித்தர்செயல் செய்வோம் என்பதைச் சிலேடைவகையில் கூறுதல்.
பன்னிருசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
தந்தை சீடன் ஆகிவந்(து) இறைஞ்சு குன்றை யான்குகன்
சரண பங்க யத்துவம் தயங்கு சித்த சித்தரேம்
சிந்தை தேவர் இறைவ ணங்கு குருவை எங்கள் முறையினால்
செம்பொன் என்று கண்டவித்தை செகம் அறிந்த(து) இல்லையோ
நிந்தை சேர்இ ரும்பையும் தராவை யும்கொ ணர்ந்துநீர்
நேரில் உய்க்கில் அரியதான பணிஎ னச்செய் கிற்பமால்
விந்தை யாவை அரிய இங்கண் ஒது கின்ற தாமிரம்
இசையு மாஇ யற்றுவோம் விழித்(கு)இ மைக்கும் முன்னமே.
கு -ரை: தந்தை- தந்தையாகிய சிவபிரான். துவம் சரணபங்கயம்- இருகிருவடித் தாமரை. சித்த சித்தர்- மனமுடைய சித்தர். தேவர் இறை சிந்தை வணங்கு- தேவேந்திரன் தியானித்து வணங்கும். குருவை- சிவபெருமானை - இரசத்தை செம்பொன்- சிறந்த பெறற்கரும்பொருள் / சிறந்த பொன். தரா- செம்பும் காரியமும் 1: 5 என்றவிகிதத்தில் கலந்த உலோகம். பணி- அணிகலன் -/ செயல். இசையுமா- பொருத்தமானதாக.
பொ - ரை: தந்தையாகிய சிவபெருமானே சீடனாக இருந்து வணங்கும் குன்றக்குடியினன் ஆகிய அருள்தரு சண்முகநாதப் பெருமானின் இரண்டு திருவடித் தாமரைகள் விளங்கும் மனமுடைய சித்தர்யாம். தேவேந்திரன் தியானித்து வணங்கும் சிவபெருமானை எங்களது முறைப்படி சிறந்த பொன்னிறப் பொருளாக - தேவேந்திரன் மனத்தில் போற்றும் (ஒன்றை மற்றொன்றாக மாற்றும்) இரசத்தால் எதனையும் எங்களது முறைப்படிச் சிறந்த தங்கமாக, மாற்றும் எமதுசித்துவேலையை உலகம் அறிந்த-தில்லையோ? இகழத்தக்க இரும்பையும் தராஎன்ற உலோகத்தையும் எமது முன்னேற்விர் கொண்டுவந்து தந்தால் அதனை அரியசெயலுடையதாக ஆக்குவோம் / இரும்பையும் தராஎன்ற உலோகத்தையும் எமது முன்னே நீவிர் கொண்டுவந்து தந்தால் அதனை அரிய அணிகலனாகச் செய்யும் வல்லமையுடையோம். இத்தகு விந்தைகள் வேறு எவை உள்ளன? தாமிரமாம் செம்புஉலோகத்தை நீங்கள்சொல்வதுபோல் பொருத்தமான அனைத்துமாகக் கண்ணிமைக்குமுன் மாற்றுவோம் என்கிறார் இப்பொய்வேடச் சித்தர், இச்செய்யுளில்; குரு, செம்பொன், பணி என்றசொற்கள் இருபொருளில் வந்துள்ளன.
--------------
46 . இதுவும் அது.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்
மேக்குவளர் குன்றைவரை விழைமுழைவிட்டு
இழிந்துஉலக விபர் தத்தை
நோக்குநசை சிறிதுகொடு வந்தசித்த ரேம்அப்பா
நுவல்நா கத்தைத்
தேக்குமா சுணமாக்கி எங்கும்ஏ கம்பரந்த
தேவுக்(கு) ஈந்தோம்
வாக்கும்அறா(து) உண்டுசிவந் தானெமக்(கு)ஆ
காரம்அர(வு) அக்கால் மன்னோ.
கு - ரை: மேக்கு- மேல்நோக்கி - உயரமாக. முழை- குகை. இழிந்து- வெளிப்பட்டு. விபரீதம்- அதிசயம். நோக்கு நசை- பார்க்கும் விருப்பம். நாகத்தை- துத்தநாகத்தை । நாகப்பாம்பை. தேக்கு மாசுணம்- நிறைந்த பாம்புகள். ஏகம்பரந்த- ஒப்பின்றிப் பரவியுள்ள. தேவு- சிவபெருமான். அ-அரவு கால் உண்டு எமக்கு ஆகாரமாகி வாக்கும் அறாது மன் சிவந்தான். கால் அ- கக்கிய. அதனை - விடத்தை. ஆகாரம்- உணவு / அடையாளம். வாக்கு- திருந்திய வடிவம். அறாது- மாறாது. மன் சிவந்தான்- பெருமை பொருந்திய செந்நிறத்தனாகவே விளங்கினான்.
பொ - ரை: அப்பா! உயர்ந்த குன்றக்குடி மலையிலுள்ள நாங்கள் விரும்பும் குகையை விட்டு வெளிப்பட்டு உலக அதிசயத்தைக் காணும் விருப்பம் சிறிதுடன் வந்த சித்தர்நாம். சொல்லப்பெறும் நாகம் என்ற உலோகத்தைருல்ல பாம்பை) எவ்விடத்தும் ஒப்பின்றிப் பரவியுள்ள சிவபெருமானுக்குத் தந்தோம். அதை அவர் நிறைந்த பாம்புகள் ஆக்கியபின். பாம்பு கக்கிய அந்த நஞ்சினை உணவாக உண்டபின்னும், தனது அடையாளம் மாறாமல் பெருமை பொருந்திய செந்நிறத்தனாகவே விளங்கினான். இச்செய்யுளில் நாகம்,ஆகாரம் என்பன இருபொருளில் வந்துள்ளன...
-------------
47. சம்பிரதம்.
சம்பிரதம்- இந்திரசாலம். சித்து, சம்பிரதம் தம்முளொத்த செய்தியின. .
பன்னிருசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
மன்னஆ காயத்தை விரலால் சுழற்றிஅதை
மாற்றிஅவ் வாறுவைப்பேன்
வையமார்த்(து) ஓடுகோ ரங்காட்டு வேன்ஒது
வரைஉடைத்(து) உணவுகொள்வேன்
துன்னவா னம்புவனம் வாசால கத்தினால்
தொந்தம்உற ஒன்றாக்குவேன்
சொலற்கரு திறல்தனஞ் செயனைஅடு தொழில்வரின்
தொடரவிற கிட்(டு) எரிப்பேன்
அன்னவா விமனைச் சிறைகொண்(டு) அடித்துவெளி
அலையப்ப றக்கவிடுவேன்
ஆணைமந் திரமில்லை விரல்றுகிப் பன்னகம்
அடிக்கடி எடுத்(து)எறிகுவேன்
இன்னவாறு) இன்னமும் இயற்றும்இவை வித்தையோ
இனி௫)அட்ட சேவல்மீனம்
இசைகாவின் உயிர்பெற்று) எழுந்(து)ஓடு மயில்மலையின்
இங்கு ஒர்பதி காண்பிப்பனே.
அடி 1. குரை: காயம்- வானவெளி - மருந்து. சுழற்றி- சுழலச்செய்து / கலக்கி. மாற்றி- சுழல்வதை மாற்றி / தெளியவைத்து. மன்-ஆ- நிலைபெற்றதாக. வையம்- தேர். கோரம்- குதிரை / ஒருமந்திரம். ஓது வரை- புகழுக்குரிய மலையை / ஓ துவரை- ஒழிவின்றித் துவரைப்பயற்றினை. பன்னகம்- பலபாம்புகள் விரலின் பல நகங்கள்
பொ - ரை: வானவெளியை, எனது விரலால் சுழலச்செய்து பின்னர் (சுழல்வதை
மாற்றி) முன்புபோல் அவ்வாறே நிலைபெற்றதாக வைப்பேன்.
மருந்தினை என்விரலினால் கலக்கி முன்புபோல் தெளிவு உடையதுஆக்கி வைப்பேன்.
தேரினை ஈர்த்துச் செல்லும் மந்திரத்தை உமக்குக் காட்டுவேன்.
தேரினை இழுத்துச்செல்லும் குதிரையை உமக்குக் காட்டுவேன்.
புகழுக்குரிய மலையைத் தூளாக்கி உணவாக உட்கொள்வேன்.
ஒழிவின்றித் துவரைப் பயற்றினை உடைத்து உணவாக உட்கொள்வேன்.
அடி 2. கு - ரை: வானம் புவனம்- வானுகையும் இவ்வுலகையும். வான்- நம்பு *வனம்- தேவர்களும் ஏற்குமாறு. வாசாலகம்- சொற்சாதுர்யம். தொந்தம் உற-.தொடர்பு படுத்தி. துன்ன- பொருத்தமுற. அருந்திறல்- பேராற்றல். தனஞ்செயன்- அர்ச்சுனன் / 5. விறகு- விறல்- கு. விறல்- வீரம். ( கு - சாரியை;இட்டு- சொரிந்து. விறகு- காட்டம். ,
பொ - ரை: சொற்சாதுர்யத்தினால் வானவெளியையும் அழகிய உலகையும் தொடர்பு படுத்திப் பொருத்தமுற ஒன்றாக்குவேன். சொற்சாதுர்யத்தினால் தேவர்கள் நம்புமாறு அழகிய இவ்வுலகை (கடல்வழியால்) இணைத்துப் பொருத்தமுற ஒன்றாக்குவேன் சொல்லுதற்கரிய பேராற்றல் வாய்ந்த அர்ச்சுனனை அழிக்கும்செயல் நேரின் விரத்தைத் தொடர்ந்து சொரிந்து எரிப்பேன். சொல்லுதற்கரிய பேரற்றல் வாய்ந்த தீயினைத் தொடர்ந்து எரியவிட நேரின் தொடர்ந்து காட்டத்தை- விறகினை- இட்டு எரிப்பேன்.
அடி 3.கு-ரை: அன்னவா- அதுபோலவே. விமனை- பாண்டவருள் ஒருவனான விமனை / கருடனை. சிறைகொண்டுூ அடித்து- சிறையிலட்டும் அடித்தும் சிறகினால் அடித்துக்கொண்டு. விரல்றுகி- விரல் நுனி. பல்-நகம்- பல மலைகள் / நகங்கள். ஆணை:- சத்தியம்.
பொ -ரை: அதுபோலவே விமசேனனைச் சிறையிலிட்டும் அடித்தும் வெளியில் அலையுமாறு கெடுப்பேன். அதுபோலவே கருடனை அதுதனது சிறகடித்துக் கொண்டு வெளியில் அலையுமாறு பறக்கவிடுவேன். எனது விரல் நுனிகளிலிருந்து பல மலைகளை அடிக்கடி எடுத்து எறிவேன். இது சத்தியம். என்விரல் நுனிகளிலிருந்து கூடுதலான நகங்களை அடிக்கடி வெட்டி எறிவேன். இது சத்தியம்.
அடி 4. கு - ரை: இயற்றும்- செய்யும். வித்தையோ- வித்தைகளல்ல. இனிது அட்ட- நன்கு சமைக்கப் பெற்ற. இசை காவின்- பொருந்திய காவடியிலிருந்து. ஓர்பதி- ஒப்பற்ற இறைவனை - அருள்தர சண்முகநாதப்பெருமானை.
பொ - ரை: இதுபோன்று மேலும் இயற்றும் இவை பெரிய வித்தைகளல்ல. நன்கு சமைக்கப்பெற்ற சேவல், மீன் ஆகியவற்றைக் காவடிகளிலிருந்து அவை உயிர்பெற்று எழுந்து ஓடச் செய்யும் இம்மயில் மலையில் ஒப்பற்றவனாகிய அருள்தரு சணமுகநாதப் பெருமானை உமக்குக் காட்டுவேன்.
----------
48 . துதி.
விருத்தக் கலித்துறை.
காணும் கண்ணும் கண்ணும் மனமும் கமழ்நின்தாள்
பூணும் கையும் செய்யும் படிஅம் புயநாதற்(கு)
எணும் கோணும் ஏய்ந்தில வாஞ்சை ஈவாயோ
மாணும் குன்றை வாழ்அயில் அங்கை மறவோனே.
கு - ரை: அயில் வாழ் அங்கை- வேலேந்திய அழகியகை. ஏணும்- பெருமையும். கோணும்- கமண்டலமும். அம்புயநாதர்க்கு ஈவாய்- நான்முகனைச் சிறைவீடு செய்து அருளியவனே. கண்ணும்- கருதும் / நினைக்கும். ஏய்ந்தில- படியவில்லை. பூணும்படி செய்- பொருந்துமாறு செய்தருள்க.
பொ - ரை: வேலேந்திய அழகிய கையுடன் மாட்சிமை பொருந்திய குன்றையில் எழுந்தருளியுள்ள வீரனே ! தாமரையில் வீற்றிருக்கும் நான்முகச் சிறைவீடுசெய்து பெருமையையும் கமண்டலமும் ஈந்தவனே ! உன்னைக் காணும் எனது கண்களும் நினைக்கின்ற மனமும் பற்றவேண்டிய கைகளும் மணக்கும் உன்திருவடிகளில் படியவில்லை. அவை அங்ஙனம் செய்ய அருள்க.
இ - பு: இச்செய்யுள் கொண்டுகூட்டுப் பொருள்கோளில் அமைந்தது.
-----------------
49 , இதுவும் அது.
பன்னிருசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
மறமொன்றும் அறியாத குறைநிறை தயாவாரி
வார்ந்(து)எங்க ணும்பரந்து
வந்(து)எவரும் நீடித்(து) இளைக்கும் களைப்பாற
வாழ்வின்ஆ டித்திளைக்கும்
திறமொன்று குன்றைப் பொருப்பினை விருப்பினைத்
தீராத பரமகுருவைச்
சேந்தனைத் தேவகரி காந்தனைச் சிறியனேன்
சிந்தனை விடாக்கந்தனை
முறம்ஒன்று தழைசெவிக் கடைஎழும் கால்திரளை
மூண்டுகட் செவிஉண்டிடு
மும்மதத் தோற்(கு) இளைய சண்முகத்(து) இறையைஒரு
முறைகார்த் திகைத்தினத்தே
நிறமொன்று பொற்குடுமி நெறிசென்று கற்றாவின்
நெஞ்சிற்க சிந்துநோக்கி
நிற்பிரேல் உள்ளுவ ஒருங்(கு)அங்க ணேபெறுதிர்
நேர்தவம் பிறி(து) இல்லையே.
கு- ரை: குறைமறம்- குற்றமாகிய கெடூதல். நிறைதயா வாரி- நிறைந்த கருணைக்கடல். வார்ந்து- நீண்டு. நீடி- நீண்ட பிறவிகளில். திளைத்த- அனுபவித்த. வாழ்வின் ஆடித்திளைக்கும்- நல்வாழ்வில்முழ்கி இன்புறச்செய்யும். பொருப்பினை- மலையாய் வீற்றிருப்பவனை. விருப்பினைத் தீராத- அடியவர்பால் விருப்பம் குன்றாத. தேவகரி- தெய்வயானையம்மை. முறமொன்று- முறத்தோடு ஒற்றுமைப்பட்ட - முறமொத்த. தழை- பெரிய. செவிக்கடை- செவியில். கால்- காற்று. கண்செவி- பாம்பு. நிறமொன்று- ஒளி பொருந்திய. குடுமி- உச்சி. நெறி- முறை. கற்றா- கன்று - ஆ- இளங்கன்றுடைய பசு. அங்ஙணே- அவ்விடத்திலேயே.. பெறுகிர்- பெறுவிர்கள்.
பொ - ரை: குற்றமாகிய கெடுதல் ஏதும்அறியாத நிறைந்த கருணைக்கடலாக, நீண்டு எங்கும் பரவிவந்து, பற்பல பிறவிகளில் அனுபவித்த தவினைக் களைப்பு ஆறுமாறு செய்து, நல்வாழ்வில் மூழ்கிஇன்புறச் செய்யும் தன்மை பொருந்திய குன்றக்குடி மலையாய் வீற்றிருப்பவனை, அடியவர்க்கு அருள்வதில் விருப்பம் குன்றாத மேலான சிவகுருவை, சேயோனை, தெய்வயானையம்மைக்குக் கணவனை, அற்பனான என் சிந்தனையில் நீங்காத கந்தனை, முறமொத்த பெரிய செவியை அசைத்தலால் மூண்டுஎழும் காற்றுத் திரளையுண்ணும் பாம்பணி அணிந்த, கன்னமதம் கபோதமதம் பீஜமதம் என்ற மும்மதத்து யானைமுக விநாயகருக்கு இளையவரான அருள்தர சண்முகநாதப் பெருமானாகிய இறைவனை, ஒருமுறை கார்த்திகையன்று, ஒளி பொருந்திய அழகிய உச்சிக்கோயிலுக்கு முறைப்படி சென்று பெருமானை, தனது இளங்கன்றினைக்கண்ட பசுப்போல் மனம்கசிந்து நோக்கிநின்றால் நினைத்தவை அனைத்தையும் அங்கேயே பெறுவீர்கள். இதனை ஒத்ததவம் வேறுஎதுவும் இல்லை.
இ - பு: தயாவாரி. பொருப்பு - உருவகங்கள். முறம் ஒன்றுதழை செவி, கற்றாவின் நெஞ்சு- விரியுவமைகள். மும்மதம்- தொகைக்குறிப்பு. பெறுதிர்- முன்னிலை ஏவற்பன்மை வினைமுற்று.
--------------
50 . இதுவும் அது .
இதுவும் பன்னிருச்ர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
இல்லை மனையை அரும்பொருளை
இல்லை எனலும் தொல்லைநெறி
இன்றி யமையா அவற்றைவிதி
இகந்து தள்ளும் உள்ளும்ஒர்கால்
ஒல்லை எழும்பும் கொடுஞ்சினத்தால்
ஒன்றும் முன்பின் நோக்காதே
உதிக்கும் உவர்ப்பும் கபடத்தால்
உதரப் பிழைப்பும் காரணமா
எல்லை கிடையாப் பொய்வேடம்
எங்கும் சுமந்து திரிந்(து) உழலும்
ஏழைப் போலிப் படிவத்தீர்
இஃதோ துறவப் பயன்வெஃகின்
வல்லை வளமார் மயில்மலைமேல்
வைகும் வடிவேல் தாங்குமொரு
மறவன் சரண பங்கயத்தின்
வண்டர் ஆகி வழுத்துமினே.
கு - ரை: இல்- வீடு. மனை- மனைவி. அரும்பொருள்- கிடைத்தற்கரிய பொருள். தொல்லைநெறி- பண்டை வாழ்க்கைமுறை. விதிஇகந்து- விதிகளை ஒதுக்கி. உள்- மனம். ஓர்கால்- ஒவ்வொருசமயம். உவர்ப்பு- வெறுப்பு. உதரப்பிழைப்பு - வயிற்றுப்பிழைப்பு. எல்லைகிடையா- அளவற்ற. ஏழை- அறிவற்ற. வெ.ஃகின்- துறவின் பயனை விரும்பினால். வல்லை- விரைந்து. வண்டர்- வண்டுகள்.
பொ -ரை: வீடு, மனைவி, கிடைத்தற்கரிய பொருள் என்று ஒன்றுமில்லை என்று இவற்றைத் துறத்தலும்; இன்றியமையாப் பண்டை வாழ்க்கைமுறை விதிகளை ஒதுக்கித் தள்ளும் மனமும்; ஒவ்வொரு சமயம் விரைந்து தோன்றும் கொடிய சினத்தால் சிறிதும் முன்பின் சிந்திக்காமையால் எழும் வெறுப்பும்; வயிற்றுப் பிழைப்புக் காரணமாக வஞ்சனையான அளவற்ற பொய்வேடமும் தாங்கித் திரிந்து துன்புறும் அறிவற்ற போலியான வேடமுடையவரே ! இதுதான் துறவுப்பயனா ? துறவுப்பயனை விரும்பினால், விரைந்துபோய் மயில்மலைமேல் வீற்றிருக்கும் கூரியவேல் தாங்கிய ஒப்பற்ற அருள்வளம் பொருந்திய வீரனாம் அருள்தர சண்முகநாதப் பெருமானின் திருவடித் தாமரைகளின் அருள்தேனை அனுபவிக்கும் வண்டுகளாகிப் போற்றுங்கள்.
இ - பு: வண்டர் - மொழியிறுதிப் போலி. இச்செய்யுள் இயைபு உருவகவணி.
-------------
51. கொற்றியார்.
வைணவ வேடந்தாங்கித் திரியும்ஒருபெண்ணைப் பார்த்துக் காமித்த ஒருவன் கூறுதல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
வழித்தகத்(கு) ஊரிச்சேறும் மாறாத அருவிமயில்
மலையில் தண்பண்
கொழித்ததிரு வாய்மொழியில் குவலயமெல் லாம்மயக்கும்
கொற்றி யாரே
செழித்தகோ டரம்கருகல் கட்டுண்டல் முதலாய
செறியா வாறு
மழித்தஅள கக்கடத்தை வாய்ந்தீர்சற்று) எயிற்றா)அளகம்
வழங்கு வீரே.
கு - ரை: மாறாத அருவி வழித்து அகத்து- வற்றாத அருவிநீர் ஓடும் வழியிடங்களில். ஊரி- ஊர்ந்துசெல்லும் சங்கு. தண்பண் கொழித்த- இனிமை அமைந்து செழித்த. கோடரம்- மயிர்ச்சாந்து. கருகல் கட்டுண்டல்- கருநிறத்துடன் முடிக்கப்பெறுதல். செறியாவாறு- பொருந்தாதபடி. மழித்த அளகக்கடம்- சிரைத்ததால் கூந்தலில்லா உடம்பு- தலை. எயிற்று அளகம்- வாலெயிறு ஊறியநீர்.
பொ - ரை: வற்றாத அருவிநீர் ஓடும்இடங்களைச் சங்குகள் சென்றடையும் மயில்மலையில் இனிமையமைந்து செழித்த தனதுசொற்களால் உலகவரைமயக்கும் கொற்றியாரே ! மயிர்ச்சாந்தினால் செழித்துக் கறுத்து முடிக்கப்பெறுதல் முதலியன பொருந்தாதவாறு கூந்தல்சிரைக்கப்பெற்ற தலை யுடையவர்களே ! உமது வாலெயிறு ஊறியநீர் சிறிது வழங்குவீராக.
------
52 . இதுவும் அது.
பன்னிருசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
வழங்கு கோடி வரம்புயங்க மகீப னும்சொல வாய்இலா
மயின்ம லைக்குகன் ஆளும்நேம வளங்கெ ழும்பெயர் நாட்டிலே
தழங்கு நந்துசு தரிச னம்கதை சாபம் வாள்அடை யாளமே
தாங்கி அந்தரம் நின்று) இழிந்தன தகைமை முற்றிய கொற்றியார்
முழங்கு பைங்கடல் நீலமேனி முராரி மோகினி ஆயினும்
முழுதை யும்சதி ரிசம்இயம்புதல் முடி(வுஉ றாது)அவர் காமநோய்க்
கிழங்கு போல்நகில் அகிலம்மாழ்குறு கேடு கூழ்தலின் விடினார்
கெழிஇயது) அம்இலம் எம்இலம்புகு கிற்பின் ஏது)ஒரு தீது)அரோ.
கு - ரை: கோடிவரம் வழங்கு மயில்மலை. வரம்- மேன்மைகள். புயங்கமகீபன்- பாம்புகட்கு அரசன் - ஆதிசேடன். தழங்கு- ஒலிக்கும். நந்து- சங்கு. சுதரிசனம்- சக்கரம். சாபம்- வில். அந்தரம் நின்று இழிந்த- வானுலகிலிருந்து இறங்கிய. முற்றிய- முதிர்ந்த. முராரி- திருமால். சதிரிசம் முழுதையும்- நடனம் முழுவதையும். கிழங்கு போல்நகில்- கிழங்குபோல் திரண்டமுலைகள். அகிலம்- உலகம். காமநோய் மாழ்குறும்கேடு சூழ்தலின்- காமமயக்கத்தால் கேடுவிளைதலால். இல்லம் விடினார் கெழீஇயது- வீடுகளில் இறந்தவர் எண்ணிக்கை மிகுதியாயிற்று. புகுகிற்பின்- வந்தால். ,
பொ-ரை: பாம்புகட்கு அரசனான ஆதிசேடன் தன்நாக்களால் கூறவியலாதபடி கோடிக்கணக்கான மேன்மைகள் வழங்கும் குன்றக்குடிக் குகனது வளம்பொருந்திய நேமநாட்டில், திருமாலின் அடையாளங்களாகிய ஒலிக்கும்சங்கு, சக்கரம், கதாயுதம், வில், வாள் ஆகியன தாங்கி வானிலிருந்து வந்தது போன்று அழகுமுதிர்ந்த கொற்றியாரே ! முழங்கும் வளமான கடல்ஒத்த நிறமுடைய திருமாலாகிய மோகினியாலும் உமது நடனஅழகு முழுவதையும் கூறிமுடிக்க முடியாது. கிழங்குபோன்று திரண்ட உமது முலைகளைக் கண்ட உலகவர்மயங்கினர். உம்மீது கொண்ட காமமயக்கத்தில் விழ்ந்தவர் அவரவர்வீடுகளில் மிகுதி. இந்நிலையில் ந் எம்விட்டுக்கு வந்தால் என்ன தீங்கு நேரும் ! இன்பமே நேரும்.
-------------
53 . வண்டுவிடுூ தூது.
பிரிந்துபோன தலைவனுக்குத் தலைவி தன்வருத்தத்தைச் சொல்லி வண்டைத் தூதாக அனுப்புதல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
அராபதங்காள் எம்கண்கள் அணையிர்நீர்
நுமையல்லால் அன்பர் யாரே
தராபதத்தார் தொழும்விருப்பில் சார்ந்து) என்றும்
மிடைகுன்றைச் சயிலம் போய்ச்சென்று
இராபதம்தான் ஒன்றும்அந்தோ இக்கிளிவாய்க்(கு)
அன்றுமுதல் என்றுசேந்தன்
தராபதம்தா வாப்பொழில்பூஞ் சுராவிதம்மாந்
தாத்தெவிட்டச் சார்திர் மாதோ.
கு - ரை: அராபதங்காள்- வண்டுகளே. தராபதத்தார்- தரை- பதத்தார்- உலகில் பக்குவமுடையார். மிடை- செறிந்த. சயிலம்- மலை. ( “போய்ச்சென்று...........மாதோ: முடியப் பின்வருமாறு கூட்டிப் பொருள்கொள்க. ) போய்க் குன்றைக் தாவாப்பொழில் பூஞ்சுரா தெவிட்டாவிதம் மாந்தா, சென்று “அந்தோ! இக்கிளிவாய்க்கு அன்றுமுதல் பதம்தான் ஒன்றும்இரா” என்று சேந்தன் தராபதம் சார்திர் மாதோ. தாவா- கேடற்ற. பூஞ்சுரா- மலரின் மென்மையான தேன். மாந்தா- பருகி. வாய்- சொல். பதம்தான் ஒன்றும் இரா- உணவென்பது சிறிதும் இல்லை - சிறிதும் உண்ணவில்லை. தராபதம்- தராத திருவடிகள். சார்திர்- அடைந்து சொல்லுங்கள்.
பொ -ரை: வண்டுகளே ! நீங்கள் எமதுகண்ணொத்தவர்கள். உங்களைத்தவிர எமக்கு உம்போல்அன்பர் பிறரில்லை. உலகில் பக்குவமுடையார் விருப்பத்தொடு வணங்க எந்நாளும் சென்று செறியும் குன்றக்குடி மலைக்குப்போய், கேடற்ற சோலை மலர்மென்தேனைக் தெவிட்டாதவகையில் பருகியபின்சென்று, “ஜஐயோபாவம் கிளிபோல் இனிக்கப்பேசும் இவள், உன்னைக்கண்ட அன்றுமுதல் நீ இவளுக்குஇன்பம் தராத விரகத்தால் உணவு சிறிதும் உண்ணவில்லை” என்று குன்றக்குடியான் திருவடிகளை அடைந்து சொல்லுங்கள்.
-------------
54 இதுவும் அது.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
மாப்பெயரும் பெறிஇவிரைவில் செலஆறு
கால்வாய்ந்து மன்னும் சாதி
மீப்பெயரும் குடிமல்கி ஆர்க்கும்அரி
யீர்எமக்கு மிகவும் நண்பீர்
கோப்பெயரும் கொடிமாடக் குன்றையில்தேன்
ஆறுஒடும் குடிக்க லாம்இக்
காப்பெயரும் முருகைமணந் தீர்யாமும்
அவ்வண்ணம் களிக்கு மாறே.
கு - ரை: மாப்பெயர்- வண்டு என்றபெயர். சாதி மீப்பெயரும்குடி மல்கி- இனத்தால் பெருகி மேலும்குலத்தாலும் பெருகி. அரியீர்- வண்டுகளே. கோ- வானம். மிக்காப்பெயரும்- மிகுதியும்உலாவும்.. முருகு- நறுமணம். மணந்தீர்- அனுபவித்துக் கொண்டிருந்தீர். அவ்வண்ணம் களிக்குமாறு- அதுபோல் - இதழ்த்தேன் பருகி. முருகை- முருகனை- அனுபவிக்குமாறு. செய் என்றுமுடிக்க.
பொ - ரை: வண்டு என்ற பெயரும் பெற்று, விரைந்து செல்ல ஆறுகால்களையும் பெற்றுப் பெருமைபொருந்திய இனத்தால்பெருகி மேலும் குலத்தாலும் பெருகி ஆரவாரிக்கும் வண்டுகளே ! எமக்கு நெருங்கிய நண்பர்களே ! மிகுதியாக உலவும் நறுமணத்தை இக்காவில் அனுபவித்தீர் ! வானளவு உயரப்பறக்கும் கொடிகளுடைய மாளிகைகளுள்ள குன்றக்குடியில் தேனாறு ஒடும், சென்றால் அதைப்பருகலாம்; சென்று நும்போல் நானும் முருகனது இதழ்த்தேன் பருகி அனுபவிக்குமாறு உதவுக.
-----------
55. மெய்தொட்டுப் பயிறல்.
தனியிடத்துக்கண்ட தலைவி பேசாதிருக்கவும் தலைவன் அவள் சூடிய கூந்தல்மலர்களில் மொய்க்கும் வண்டுகளை ஓச்சுவான்போல் நெருங்குதல்.
கட்டளைக் கலித்துறை.
மாறின்றித் தூங்கும்வெள் வேல்குன்றை ஏந்தல் வரையகத்தே
ஈறின்றி நாளும் வளரெழில் பேதைதன் யாதும்இடை
யூறு) இன்றி நீண்டு கழல்வழும் கோதை யுறுங்குரலைச்
சாறின்றி வேறொன்று) உணஅறி யாவண்டர் தாக்கன்மினே.
கு - ரை: மாறின்றி- பகையுணர்வின்றி. வெள்வேல்- தூயவேல் - ஞானவேல். தூங்கும்- தாங்கிய. குன்றை ஏந்தல்- குன்றக்குடியில் வீற்றிருக்கும் பேரரசன். ஈறுஇன்றி- எல்லையின்றி. கழல்- கால். கோதை- கூந்தல். குரல்- பூங்கொத்து. சாறு- தேன். வண்டர்- வண்டுகளே. தாக்கன்மின்- தாக்காதீர்கள். .
பொ - ரை: பகையுணர்வின்றி ஞானவேல் தாங்கியவனாய்க் குன்றக்குடியில் வீற்றிருக்கும் பேரரசனின் மலைக்கண், அழகிய இவளது எல்லையின்றி நாடோறும்வளர்ந்து, எவ்வகை இடையூறுமின்றி நீண்டு காலினைத்தொடும் கூந்தலில் மிகுதியாகச் சூடியபூங்கொத்தின் தேனுக்காக, தேனினையன்றி வேறொன்றை உண்ண அறியாத வண்டுகளே : தாக்காதீர்கள் என்றுகூறிப் பலமுறை மெய்தொட்டான்.
இ - பு: கழல்- தானியாகுபெயர். இடையூறு- முதனிலைதிரிந்த தொழிற்பெயர்.
----------
56 . வலைச்சியார்.
வலையால் மீன்பிடித்து விற்கும் பெண்ணைப்பார்த்த தலைவனொருவன் விகடமாகப் பேசுதல்.
பன்னிருசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.
தாக்கும் புலிக்கும் பதஞ்சலிக்கும்
தந்தோம் தந்தோம் வீடென்று
சபைக்கண் நடிக்கும் முதல்நுதற்செந்
தழல்கண் உயிர்க்கும் தமிழ்த்தெய்வம்
காக்கும் குன்றைக் கிரிமறுகில்
கண்டே மனமா: னம்படவே
களிக்கும் மீனம் பாணியிடைக்
கறங்கப் பாணி யினில்சாலம்
ஊக்கும் திறத்தில் கூலம்இழுத்து)
உறுகூறு) இயற்றிக் கொண்டுவிற்கும்
ஒறுக்கும் செய்கை வலைச்சியரே
உங்கள் இயலும் நயனமும்தோற்யு)
ஆக்கும் தரத்த வனமயிலை
அடைய மீளக் கொணர்ந்துமுனி(வு)
ஆற்றாது) ஏதி லார்க்குவிலை
ஆற்ற ஆற்றல் அழகிதன்றே.
கு - ரை: தாக்கும்- சார்ந்துள்ள. புலி- புலிக்கால்முனிவர் . வீடு தந்தோம் தந்தோம்- வீடுபேறு கொடுத்தோம்கொடுத்தோம். சபை- பொன்னம்பலம். முதல்- முதற்பொருள்- சிவபெருமான். உயிர்க்கும்- தோற்றுவித்த. தமிழ்த்தெய்வம்- முருகன் - அருள்தரு சண்முகநாதப் பெருமான். பாணியிடைக் கறங்கக் களிக்கும் மீனம்- நீரில் சுற்றிமகிழும் மீன்கள். பாணியினில்- நீரிலிருந்து... சாலம்- வலை. கூலம் இழுத்து- கரைக்கு இழுத்து. மீளக்கொணர்ந்து- வலையிலிருந்து மீட்டுக் கொண்டுவந்து. உறுகூறு இயற்றிக் கொண்டு- மிக்க கூறுகளாகக் கட்டிவைத்து. ஒறுக்கும் செய்கை- காண்போரையும் மீன்களையும் கொல்லும் செயல்செய்யும். இயலும் நயனமும்- சாயலும் கண்களும். தோற்பு ஆக்குவனம்தரத்த- நான் தோற்குமாறு செய்யும் பக்குவத்தின.. வனம் அயிலை- நிறத்து அழகினை. ஏதிலார்க்கு அடைய- அயலார் ஒருசேரப்பெற. முனிவுஆற்றாது-வெறுப்புக்கொள்ளாது. விலைஆற்ற- விலைக்கு விற்க. ஆற்றல்- முயலுதல்.
பொ - ரை: தன்னைச் சார்ந்துள்ள புலிக்கால் முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் வீடுபேற்றினைகத் தந்தோம் தந்தோம் என்று பொன்னம்பலத்தில் திருக்கூத்து இயற்றும் முழுமுதற்பொருளாகிய சிவபெருமானின் நெற்றிக்கண் தோற்றுவித்த தமிழ்த்தெய்வமாம் அருள்தரு சண்முகநாதப்பெருமான் காக்கும் மயில்மலைவீதியில் கண்டு எமது மனம் இழிநிலையுற- காமுற, நீரில்சுற்றி மகிழும் மீன்களை நீரிலிருந்து வலையால் கரைக்கு இழுத்துவந்து, பெருங்கூறுகளாகக்கட்டி வைத்து விற்றுக் கொலைத்தொழில் செய்யும் வலைச்சியரே! உமது சாயல் கண்கள் ஆகியவற்றால் எம்மைத் தோற்கடித்த தன்மையை மீண்டும் கொண்டுவந்து உமது அழகினை அயலார் வெறுக்காமல் விலைக்குவிற்கும் செயல் மிகஅழகானது.
----------
57 . இதுவும் அது.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
ஆறு தடுக்கும் கிரவுஞ்சத்து) அடல்தா ரகனை அலறிவிழக்
கூறு படுக்கும் ஆறுமுகன் குன்றைப் பொருப்பீர் வலைச்சியரே
ஈறு கொடுக்க விழிச்சாலத்து எவையும் படுப்பிர் என்மேலும்
சேறு தொடுத்த முடைச்சாலம் தெரியோ நுமது சிந்தனையே.
கு - ரை: ஆறு- வழி. கிரவுசத்து அடல்தாரகன்- கிரவுஞ்சமலையாம் வீரம்மிக்க தாரகாசுரன். ஈறுகொடுக்க- கொல்ல. விழிச்சாலம்- கண்களாகிய வலை. படுப்பீர்- அகப்படுத்துபவர்களே. சேறு தொடுத்த- சேறுகலந்த. முடைச் சாலம்- புலால்நாறும் கண்வலை. தெரியோ- விரிப்பதுதான்.
பொ -ரை: வழிச்செல்வோரைத் தடுக்கும் கிரவுஞ்சமலையாம் வீரம்மிக்க தாரகாசுரனைக் கொன்ற அருள்தர ஆறுமுகப் பெருமான் எழுந்தருளியுள்ள மயில்மலைக் குன்றக்குடி வாழ்வலைச்சியரே! உமது விழிகளாகிய வலையால் எத்தகைய மனத்தையும் அகப்படுத்துவோரே! என்னைக்கொல்லச் சேறுகலந்த புலால் நாறும் கண்வலை விரிப்பதுதான் உமது எண்ணமோ?
----------
58 . துதி .
கலிவிருத்தம்.
சிந்தனை வந்தனை செய்ய கிற்கிலை
நிந்தனை யாவயும் நீங்கி னாய்அலை
நந்தனை மிடைதரு நளினி சூழ்குன்றைக்
கந்தனை அலதுயார் கருணா மூர்த்தியே.
கு - ரை: நந்தனை- கண்ணபிரானை. மிடைதர- தழுவிய. நளினி- திருமகள்.
பொ -ரை: மனமே! நீ கண்ணபிரானைத் தழுவிய திருமகள் சூழ்ந்துவாழும் குன்றக்குடிக் கந்தப்பெருமானைச் சிந்திக்கவோ வணங்கவோ இல்லை. வினைப்பழி யாவும் நீங்கவில்லை. வினைப்பழி நீங்கிநலம்பெறக் கருணை வடிவான அக்கந்தனைச் சிந்தனை வந்தனை செய். அவனைத்தவிரக் கருணைவடிவானவர் வேறுயாருளர்?
--------
59 . தழை வியந்து உரைத்தல்.
தலைவன் கொண்டுவந்த அசோகந்தளிரைத் தோழி தலைவிக்குத்தர
தலைவி வாங்கி மகிழ்ந்து தோழிக்குக் கூறுதல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
திக்(கு)அந்தம் இசைஇசைக்குன் றைக்கந்தன்
முகம்மலர்ந்து செழித்(து) என் நெஞ்சில்
துக்கம்த விர்ந்(து) இன்பம் தழைஎன்று
தந்ததழை தோழி கேளாய்
இக்கந்தம் பொலிசிலைஜங் கணைக்கிழவன்
பல்லவத்தை யில்ல வாகப்
புக்(கு)அந்தம் கண்டிடுவல் லரியாகி
நிறைந்த(து) என்ன புதுமை தானே.
கு - ரை: அந்தம்- எல்லை. இசைஇசைக்கும்- புகழ்ந்துகூறும். துக்கம்தவிர்ந்து- காமவிரகத்துன்பம் நீங்கி. தந்ததழை- கொடுத்த அசோகந்தளிர். சிலை ஐங்கணைக் கிழவன்- கரும்பு வில்லுடன் ஐவகை அம்புகளுக்கும் உரியமன்மதன். பல்லவத்தை- அசோகந்தளிரை. கந்தம் பொலி இ- மணம் சிறக்கும் இந்தத்தழை. இல்லவாகப் புக்கு- பயனற்றதாகும் வண்ணம் வந்து. அந்தம் கண்டிடு- முடிவுகாணச்செய்த. வல்லரி- பூங்கொத்து.
பொ -ரை: தோழி! திசைகளின் எல்லைவரைவாழ்வோர் புகழும் குன்றக்குடிக் கந்தப்பெருமான், என்னிடம் “நீ செழித்தமுகம்மலர்ந்து காமவிரகம்நீங்கி இன்பத்தில் தழைப்பாயாக என்று கொடுத்த தழைபற்றிக் கூறுகிறேன்கேள். கரும்பு வில்லுடன் ஐவகை அம்புகளுக்கும் உரிய மன்மதனின் அம்பாகிய அசோகந்தளிரை, மணம் சிறக்கும் இத்தழை பயனற்றதாக்கும் வண்ணம்வந்து, எனது விரகத்திற்கு முடிவுகாணச் செய்தபூங்கொத்துஆகி என்மனத்தில் நிறைந்தது. இது புதுமையாகும்”.
---------
60 . இதுவும் அது.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
புதிய வாசனை கமழ்தரு குன்றையம்
பொலங்கிரிப் பூங்காவின்
நிதிய ஆண்டகை அருளிய தனிமுறி
நிகழ்த்துறில் பிறிதன்றால்
மதிய வாள்முக மடவரால் எனக்(கு)இனி
மதன்கணை மலர்யாதும்
பதிய ஆற்றுவது) இலைஎனகத் தனதுகைப்
படவரை முறியாமே.
கு - ரை: நிதியம்- கடவுள்மணி. ஆண்டகை- ஆண்களுள் தகுதிவாய்ந்தவன் - பெருவீரன். தனிமுறி- ஒப்பற்ற தளிர். நிகழ்த்துறின்- கூறினால். வாள்முகமடவரால்- ஒளிபொருந்திய முகமுடையவளே. பதிய ஆற்றுவது- நெஞ்சில் தைத்துச்செய்வது. வரை- எழுதியனுப்பிய. முறி- தளிர்ப் பத்திரம்.
பொ -ரை: அன்றாடம் மலரும்மலர்களால் புத்தம்புதிய மணம்கமழும் பொலிவார்ந்த குன்றக்குடிப் பூங்காவிலிருந்து, கடவுள்மணியாகிய குன்றக்குடிப் பெருமான் அனுப்பியருளிய ஒப்பற்றதளிர்பற்றிக் கூறினால், ஒளிபொருந்திய முகமுடைய தோழியே “அத்தளிர், மன்மதனது மலர்அம்புகள் என்நெஞ்சில் தைத்துச் செய்யப்போவது ஏதுமில்லைஎன்று எனக்குத் தனதுகைப்பட எழுதியனுப்பிய தளிர்ப் பத்திரம் ஆகும்.”
வி-ம்: ஆண்டகை - நாமெல்லாம் பெண்ணுக்குப் பிறந்த பெண்மக்கள், முருகப்பெருமானே ஆண்மகனான சிவபிரானிடம்தோன்றிய ஆண்மகன் என்பது புராண வழக்கு. சைவமெய்ப்பொருளியல் முடிவும், உயிர்கள் எல்லாம் பரசிவமாகிய ஆண்மகனைச் சென்றடையவேண்டிய பெண்மக்களே என்பதும் எண்ணத்தக்கன.
----------
61 . குறித்த காலத்தில் வராத தலைவனை நினைந்து வருந்துந் தலைவியின் துன்பத்தை நோக்கித் தலைவன் கொடூமையைத் தோழி கூறுதல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
முறைதவறா நெறியைஉலகு) அனைத்(துஉயிர்க்கும்
பயிற்றுவிக்கும் முதல்வன் குன்றை
இறைதவறா(து) ஆவணியும் கன்னியும்வந்(து)
அணைமதிஎன்றறு) எண்ணி எண்ணி
நிறைதவறா(ு) ஆவணியும் கன்னியுமம்
மரில்கழித்தாள் நினைகி லானே
மறைதவறா வாய்மைஎம்போல் ஏழையர்க்கே
யோவலியோர் மறுக்கின் மாதோ.
கு-ரை: அ- அணியும் கன்னியும்- வியக்கும் அணிகளுடன்்கூடியஇளைமைத் தன்மையுடன். அணைமதி- வருக. நிறை- மாட்சிமை. ஆவணியும்கன்னியும்- கார்கால மாகிய ஆவணி புரட்டாசி மாதங்கள். மம்மர்- விரகத்துன்பம். நினைகிலானே- நினையாதகாரணத்தால்.. மறை தவறாவாய்மை- இரகசியத்தில் தவறாத வாய்மை. ஏழையர்- ஆற்றலற்றவர். வலியோர்- ஆற்றலில் வலியவர். மறுக்கில்- நிறைவேற்ற மறுத்தால்.
பொ - ரை: நெறிமுறை தவறாமையை உலகில்உள்ள அனைத்து௨உயிர்களுக்கும் பயிற்றுவிக்கின்ற முதல்வனாகிய குன்றக்குடித் தலைவனான பெருமானிடம், “நீ தவறாமல் வியக்கத்தக்க அணிகலன்அணிந்த இந்த இளைமைத்தன்மை யுடையவளை ஆவணி புரட்டாசி ஆகிய கார்காலத்தில் வந்துகூடுக” என்றுதோழியாகிய நான் இரகசியமாகக் கூறியபடி வராமையால், இவள் நினைத்து நினைத்துத் தனது மாட்சிமைதவறாது ஆவணி புரட்டாசி மாதங்களை விரகத்துன்பத்துடன் கழித்தாள். நான்கூறியதை நினையாத காரணத்தால் இரகசியத்தில் தவறாத வாய்மை என்பதை, ஆற்றலில் வலியவர் நிறைவேற்ற மறுப்பாரானால், அது ஆற்றலற்ற எம்போன்றவர்க்கு மட்டுமேயா? ஆற்றலில் வலியவர்க்கு இல்லை போலும்.
வி-ம்: ஆவணியும் கன்னியும் என்பன வேறுவேறு பொருள்களில் வந்துள்ளன.
-----------
62 . துதி:
கொச்சகக்கலிப்பா.
மாண்தலைஎப் புவனமுமே விடிவிக்கும் வலிச்செஞ்தட்(டு)
ஆண்டலைவண் துவசமொடு பெண்தலைத்தே அருள்வேலும்
வேண்டலைநெஞ் சேகுன்றைப் பதியினையும் விழைந்திலையா
நீண்டுஅலைஒத்(து) இயமன்வரும் அமையத்து);ஆர் நிறுத்துவரே.
கு - ரை: மாண் தலை- மாட்சிமைப்பட்ட இடம். செஞ்சுட்டு வலி ஆண்டலை- சிவந்த கொண்டையுடன் கூடிய வலிமையான சேவல். வண்துவசம்- நீண்ட கொடி. பெண்தலைத்து- இச்சாசத்தி கிரியாசத்தி ஆகிய வள்ளி தெய்வயானை என்ற பெண்டுகளை முதன்மையராகக் கொண்டு. வேல்- வேலேந்திய முருகன். நிறுத்துவர் ஆர்- நெருங்காமல் தடுத்துநிறுத்துபவர் யார்.
பொ - ரை: மாட்சிமைப்பட்ட பூமியின் எவ்விடத்தையும் தனது கூவுதலில் விடியச்செய்யும் சிவந்தகொண்டையுடன்கூடிய வலிமையான சேவல் இலச்சினை யுடைய நீண்ட கொடியுடன், இச்சாசத்தி கிரியாசத்தி ஆகிய வள்ளி தெய்வயானை என்ற சத்தியரை முதன்மையராகக் கொண்டு அருளும் வேலேந்திய முருகனை, நெஞ்சே நீ வேண்டவில்லையா ? குன்றக்குடியிலிருந்து அருள்பாலிப்பவனை விரும்பவில்லையா ? பேரலைபோல இயமன் உன்னைநோக்கி வரும்போது அவனைத் தடுத்து நிறுத்துபவர் அருள்தரு சண்முகநாதனைத் தவிரயாருளர் ? யாருமில்லை. வி-ம்: “காலன் எனைஅணுகாமல் உனதுஇரு காலில்வழிபட அருள்வாயே” (திருப்புகழ்- “பாதிமதி நதி”)
------------
63 . கூதிர்க்காலம் வந்தும் தலைவன் வருதலைக் காணாத தலைவி வருந்துதல்.
கட்டளைக் கலித்துறை.
நிறுக்கும் துலாவனை யான்எமை ஈண்டு நிறுத்திஉளம்
பொறுக்கும் படிசொற் றனதூக்கும் துட்டனும் பொங்குகிங்கள்
ஒறுக்கும் பிரான்விழி வெந்குஊக்கும் துட்டனும் ஊங்(கு) உயிரை
அறுக்கும் துயர்தெரிந் தான்இல்லை யேகுன்றை ஆண்டகையே.
கு - ரை: துலா- துலாக்கோல்... சொற்றன- கூதிர்க் காலமாகிய ஐப்பசி கார்த்திகையில் வந்துவிடுவேன் என்று சொல்லியவற்றை. தூக்கும்- துலாராசிக்குரிய ஐப்பசியும். துட்டனும்- விருச்சிக ராசிக்குரிய கார்த்திகையும். பொங்கு திங்கள்- முழு நிலவும். ஒறுக்கும்- வதைக்கும். பிரான்- சிவபிரான். ஊக்கும்- விரகதாபத்தை மிகுவிக்கும். துட்டன்- த்யவனான மன்மதன். (தூக்கு துட்டன் - இருபொருள் தந்தன;.
பொ - ரை: சமன்செய்து சீர்தூக்கும் கோலொத்த தலைவன், என்னை இங்கே பொறுத்து இருக்கச்சொல்லிக் கூதிர்காலத்தில் வந்துவிடுவேன் என்ற உறுதிமொழிகளின் வண்ணம் வராமையால், என்னை ஐப்பசி கார்த்திகை மாதங்களும் முழுநிலாவும் வதைப்பதுடன், சிவபிரானின் நுதற்கண்ணால் நீறான தீயவனான மன்மதனும் என்உயிரை அறுப்பதைக் குன்றக்குடி ஆண்டகை - பெருமான் அறியவில்லையே.
-----------
64 . முன்பனிக்காலம்.
தலைவன் வருதலை எதிர்பார்த்திருந்த தலைவியின்துன்பத்தைப் பாங்கி கூறுதல்.
நேரிசை வெண்பா.
ஆதவனும் தண்டலையின் ஆறிஇருந்து) ஏகுகுன்றை
மாதவனும் மாதை மறப்பதே - காதவந்த
மார்கழிக்கும் தைக்கும் வழிபார்த்து)ஓய்ந் தாள்கண்ணீர்
மார்கழிக்கும் தைக்கும் மலர்.
கு - ரை: ஆதவனும்- கதிரவனும். தண்டலை- சோலை. ஆறி- இளைப்பாறி. மாதவன்- அருள்தரு சண்முகநாதப் பெருமான். காதவந்த- கொல்லவந்த. கண்ஓய்ந்தாள்- கண்சோர்ந்தாள். தைக்கும்மலர்- துளைக்கின்ற மன்மதனது மலரம்புகள். நீர்- கண்ணீர். மார் கழிக்கும்- மார்பினைக் கடந்துபெருகும். ( மார்கழி தை - இருபொருள் தந்தன;)
பொ - ரை: கதிரவனும் இளைப்பாறத் தங்கிச்செல்லும் சோலைகளையுடைய தலைவனான குன்றக்குடிப் பெருமானும்கூட, இவளை மறக்கலாமா ? இவளைக் கொல்லவந்த முன்பனிக்காலமாகிய மார்கழி தை மாதங்களில் இவள் அவன் வரும்வழிபார்த்துக் கண்சோர்ந்தாள். வராததால் இவளது கண்ணீர இவள் மார்பினைக் கடந்து பெருகும். அலர்தூற்றுதல் இவள் மார்பில் தைத்துத் துளைக்கும்.
இ - பு: மாதவனும் - உம்மை உயர்வுசிறப்பும்மை.
-------------------
65 . பின்பனிக் காலம்.
பின்பனிக்காலமாகிய மாசி பங்குனி நீங்குமுன் வருவேன் என்ற தலைவன் வரக்காணாமையால் தலைவி வருந்துதல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
மஞ்(௬ ஓவா நெடுஞ்சிகர வரைக்குன்றை
மான்அனையீர் மகிழ்வோடு) அஞ்சக்
குஞ்சோஆ காயமின்னல் கொடியோ௭ன்று)
எத்தனையோ கூறிக் கூடி
நம்சோவா னம்தொட்ட நகர்தீர்ந்து
கும்பம்மீ னம்போ முன்னர்
நெஞ்சோவா தனைஅகல முலைக்கும்பம்
ஈனம் உறா நிலைசெய் யாரே.
கு - ரை: மஞ்சு- மேகம். அஞ்சம்- அன்னப்பறவை. கூடி- சேர்ந்து. வானம் தொட்டசோ- வான் அளாவிய மதில். தீர்ந்து- நீங்கி. கும்பம் மீனம்- மாசி பங்குனி மாதங்கள். வாதனை- துன்பம். கும்பம்- கலசம். ஈனமுறா நிலை- குழையாநிலை- புணர்தல். செய்யார்- செய்யாராயினார். (கும்பம்மீனம் - இருபொருள் தந்தன;)
பொ -ரை: “இடையறாது மேகம்படரும் உயரமான உச்சியினையுடைய மலை.அமைந்த குன்றக்குடியில் வாழும் மானொத்தவரே, நீர் இளைய அன்னமோ வானத்து மின்னற்கொடியோ” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிப் பாராட்டி என்னைக் கூடியபின், பின்பனிக்காலமாகிய மாசி பங்குனிமாதங்கள் கழியுமுன் வருவேன் என்று சொல்லி, வானளாவிய மதில் சூழ்ந்த நமதுநகர் நீங்கியவர், நமது மனத்துன்பம் தீருமாறு வந்து நம்முலைக்கலசம் குழையாநிலை - புணர்ச்சி - செய்யாராயினார்.
-----------------
66. இளவேனிற்காலம்.
சித்திரை வைகாசி நீங்குமுன் வருவேனென்ற தலைவர் வராததனால் தலைவியின் அழகழிந்தநிலை பாங்கி கூறுதல்.
கட்டளைக் கலித்துறை.
ஆஞ்சித்த நேசித் தவர்க்கு)அருள் குன்றைஎம் அண்ணல்எங்கும்
தாம்சித்கு)அ சித்து) அனைத் தும்செறி யும்இறை தான்குறித்துப்
போம்சித் திரையும்வை காசியும் சென்றன பொட்டும்இடாள்
வாஞ்சித்(து) இரையும்வை காசிஎன் றே௨உமிழ் வாள்மயிலே.
கு - ரை: ஆம்- ஈரம். சித்தம் நேசித்தவர்- உள்ளத்து அன்புசெலுத்தியவர். சித்து அசித்து- அறிவுடைப்பொருள் அறிவிலாப்பொருள். செறியும்- கலந்திருக்கும். வாஞ்சித்து- விருப்பமுடன். வைகா- தங்கவில்லை. சிஎன்றே- வெறுத்து. உமிழ்வாள்-துப்புவாள். (சித்திரை வைகாசி இருபொருள் தந்தன.)
பொ - ரை: ஈரமனத்துடன் அன்புசெலுத்தியவர்க்கு அருளும் எம்குன்றக்குடி அண்ணல், அறிவுடைப்பொருள் அறிவிலாப்பொருள் அனைத்திலும் தாம்கலந்துள்ள தலைவன், தாம்வந்துவிடுவதாகக் கூறிய சித்திரை வைகாசிமாதங்கள் கழிந்தன. அவன் வராமையால் ஒளிரும் மயிலொத்த இவள், தனது நெற்றியில் பொட்டும் இடவில்லை, விருப்பமுடன் உண்ணாமையால் உணவும் தங்கவில்லை, அதனைச் -சி' என்று வெறுத்துத் துப்புவாள்.
இ - பு: பொட்டும் - உம்மை எதிரது தழுவியது. இரையும் - உம்மை இறந்தது தழுவியது. மயில் - உவமையாகுபெயர்.
---------
67 . முதுவேனில்.
ஆனி ஆடி மாதங்களில் வந்துவிடூுவதாகச் சொன்ன தலைவன்
வராமையால் தலைவி உடல்மெலிவதைத் தோழி பிற பெண்களுக்குக் கூறுதல்.
கட்டளைக்கலித்துறை.
வாள்விழி ஒக்கும் மடந்தைநல் லீர்குன்றை வாழ்அடியார்
கேள்சொலக் கிள்ளையும் கேட்டதன் றோஉள் கிளர்வுறுமா
மீள்(வு இவண் ஆனியை ஆடியைக் கூறினன் மீண்டிலன்மின்
னாள்உடல் ஆனியை ஆடியை நோக்கி அயருவளே.
கு - ரை: கேள்- நண்பனாகிய தலைவன். கிள்ளை- கிளி. உள்கிளர்வு உறுமா- மனம் எழுச்சிகொள்ளுமாறு. இவண் மீள்வு- இங்குத் திரும்பிவருதல். மின்னாள்- ஒளிபொருந்திய இவள். ஆனியை- அழிவை. ஆடியை- கண்ணாடியை. (ஆனி ஆடி இருபொருள் தந்தன)
பொ -ரை: வாளினை ஒத்துஒளிரும் விழிகசுடைய நல்லபெண்களே! அடியார்களின் நண்பனாகிய குன்றக்குடித் தலைவன் என்மனம் எழுச்சிகொள்ளுமாறு இங்குத்திரும்பிவருதல் ஆனி ஆடிக்குள் என்றுசொன்னதை, உடனிருந்த கிளியும் கேட்டதல்லவா ? ஆனால் இங்குத்திரும்பி வரவில்லை. அதனால் ஒளிபொருந்திய இவள் தன் உடல்அழிவதை - இளைப்பதைக் கண்ணாடியில் கண்டு மனம் தளர்கிறாள்.
----------
68 . தலைவன்கலவியின் அருமையை நினைந்து தலைவி இரங்கல்.
பதின்சீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
வதுவைமுழ(வு) என்றும் அகலாத மறுகுசெறி குன்றை வரைமேவு
வரதன்நெறி சென்ற முனிவோர்கள் மனம்ஆரும்
விதுவைஅணி கின்ற சடைநீடு பரமன்நுதல் வந்த குமரேசன்
விழையுமயல் கொண்டு பொழிலாடூ குழல்வாரி
மதுவம்மலி கந்த மலர்மாலை செருகிஉடல் ஒன்ற உறவாடி
மருவிஇதழ் உண்((௫)அ வசமான தினமேபோல்
எதுபொழுதும் துன்றி இனிமேலும் மதனசுக சிந்து விடைமூழ்கி
எறியும்மலர் அம்பு தொடையாக உறுநாளே.
கு - ரை: வதுவை முழவு- மணமுரசு. வரதன்நெறி- மேலான சிவநெறி. மனம் ஆரும்- உள்ளத்தில் பொருந்திய. விது- மூன்றாம்பிறை. விழையும்மயல்- விரும்பும் மயக்கம். குழல்வாரி- கூந்தலைவாரி. மதுவம்- தேன். உடலொன்ற மருவி உறவாடி- உடல்பொருந்தத் தழுவி உறவுகொண்டு. இதழ்மருவி உண்டு. அவசமான- பரவசமான. துன்றி- உறவுகலந்து. மதனசுக சிந்து- காமஇன்பக் கடல்.
பொ -ரை: எப்போதும் திருமணமுரசின் முழக்கம் நீங்காத தெருக்கள் செறிந்த குன்றக்குடி மலையில் எழுந்தருளியுள்ளவனும், மேலான சிவநெறியில் நிலைத்த முனிவர்கள் மனத்தில்நிறைந்த மூன்றாம்பிறையை நீண்டசடையில்கடிய பரம்பொருளின் நுதற்கண்ணில் தோன்றியவனும் ஆகிய குமரப்பெருமான், என்னை விரும்பும் மயக்கத்துடன், சோலைக்கண், தேன்மிக்க மலர்மாலைகட்டி, என்உடலுடன் பொருந்த தழுவி இதழ்பொருந்தியுண்டதால் நான் பரவசமடைந்தபின் என் கூந்தலை வாரிய நாள்போல், உறவுகலந்து காமஇன்பக்கடலில் திளைக்கும்நாட்கள், இனிமேல் மன்மதன் எய்யும் மலரம்புகள் எனக்கு மலர்மாலையாகும் நாட்களேயாம்.
இ - பு: மதனசுக சிந்து - உருவகம்.
-----------
69 . தனியிடத்துக் கண்ட தலைவியைத் தலைவன் இவள் எவ்வுலகப்பெண்ணோ என்று ஐயுறல்.
எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.
நாளபங் கசவதன மோகசுந் தரஇரகதி
நாடுமஞ் சுளம்ஒழுகும் அந்தர மடந்தையோ
காளகந் தரஅகில நாயகன் பொலிகயிலை
காதல்கொண்டடுு) உலவிவரு கந்தருவ மங்கையோ
நீளவெம் பணிபரவு பாதலம் கெழுமகள்கொல்
நீடுபைங் கடல்அகிலம் நின்றுபயில் கொம்பரோ
தாளம்வந் தனைகொள்தன மாதுகுஞ் சரிமருவு
சாமிகுன் றையின்மயர்வு தந்து) உலவு வஞ்சியே.
கு - ரை: நாளபங்கசம்- தண்டில் துளையுடைய தாமரைமலர். மோகசுந்தரம்- ஆசையுண்டாக்கும் அழகு. மஞ்சுளம்- பேரழகு. காள கந்தரம்- நஞ்சு தங்கிய கழுத்து. கயிலை காதல்- கயிலாய விருப்பம். நீளவெம்பணி- நீண்ட கொடிய பாம்புகள். பாதலம் கெழுமகள் கொல்- பாதாலத்து நாக கன்னிகையோ. பைங்கடல்- வளமான கடல். தாளம் வந்தனைகொள்- தாளமாகிய கருவியும் வணங்கும். மாது- வள்ளி நாயகி. குஞ்சரி- தெய்வயானை அம்மை. மயர்வு- மனமயக்கம்.
பொ -ரை: தாளமாகிய கருவியும் வணங்கும் தனங்களுடைய வள்ளிநாயகியும் தெய்வயானை அம்மையும் தழுவும் பெருமானது குன்றக்குடியில், காண்போர்க்கு மனமயக்கம் தந்து உலாவும் இவள்; தண்டில் துளையுடைய தாமரைமலர்போன்ற முகத்துடன் காண்போர்க்கு ஆசையையுண்டாக்கும் அழகிய இரதிதேவியும் விரும்பும் பேரழகு ஒழுகும் தேவருலகப் பெண்ணோ ? நஞ்சுதங்கிய கழுத்துடைய தலைவனான சிவபிரான் பொலிகின்ற கயிலாயத்தை விரும்பி அங்குஉலவும் கந்தர்வமகளோ ? நீண்டகொடிய பாம்புகள் போற்றும் பாதலத்து நாககன்னியோ ? உலகில்நீண்டகடலில் பயிலும் கடற்கன்னியோ ? யாரோ அறியேன்.
இ - பு: மடந்தையோ, மங்கையோ, கொம்பரோ - ஓகாரங்கள் வினாப்பொருளன. கொல் - ஐய இடைச்சொல்.
---------
70 . தோழி தலைவியின் நலம்புனைந்து உரைத்தல்.
நேரிசை வெண்பா.
வஞ்சிக்கு மேலா வயங்குமிடை மாதரெங்கள்
வஞ்சிக்கு மேல்ஆட வர்க்கு) உண்டோ - மஞ்(ுஉக்கு
வாளைவணங் காச்சிதறி வாவுகுன்றை அம்மடமான்
தாளை வணங்காத் தரம்.
கு -ரை: வஞ்சிக்குமேலா- வஞ்சிக்கொடியைக்காட்டிலும். மாதர்- அழகு. வஞ்சி- பெண். அம்மடமான் தாளை வணங்காத் தரம்உண்டோ. மஞ்சு வாளைஉக்கு- மேகம் தனது நீரை- மழையை வெளிப்படுத்தி - பொழிந்து. வாவு- கடக்கும்.
பொ - ரை: மேகம் தனது மழையைப்பொழிந்து குன்றக்குடியானின் ஒளிவடிவை வணங்கிக்கடக்கும் குன்றக்குடிவாழ் வஞ்சிக்கொடிபோன்ற தலைவியும், வஞ்சிக் கொடியினும் மெலிந்த இடையுடைய அழகியஎங்கள் இளையமானும் ஒத்த இவளது மேலான கால்களில் விழுந்து வணங்காத தன்மை ஆடவர்க்கு இல்லை. வணங்குவர்.
இ - கு: உண்டோ - ஓகாரம் எதிர்மறைப்பொருளது.
-----------
71. தனியிடத்துக் கண்ட தலைவியின் உடலுறுப்புகளை வருணித்துத் தலைவன் மகிழ்ந்து கூறுதல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
தரம்கண்(டு)அம் புயபாதம் தரும்குன்றைக்
குமரேசன் தடங்குன் றூ(டூ)அ
தரம்கண்டம் முகம்துவர்சுந் தரநந்தம்
நிறைஇந்து)அம் தனம்தொந் தம்பூ
தரம்கண்டம் மொழிஅல்குல் தடம்குண்டு
சுனைஇவற்றைச் சாரா மேப..
றரம்கண்டம் கொண்டம்இன்று புறங்கண்டம்
கண்டகம தனையும் தானே.
கு - ரை: தரம்கண்டு- இருவினை ஒத்ததகுதியைப் பார்த்து. தடங் குன்றூடு- பெருமை பொருந்தியகுன்றக்குடியில். அதரம் கண்டம் முகம்- உதடும் கழுத்தும் முகமும். துவர் சுந்தரநந்தம் நிறைஇந்து- பவளம் அழகியசங்கு முழுநிலவு. தொந்தம் அம்தனம்- இரண்டு அழகிய முலைகள். பூதரம்- பொன் மலைகள். மொழி கண்டம்- சொற்கள் சர்க்கரை. அல்குல் தடம் குண்டுசுனை- அல்குல்இடம் ஆழமான சுனை. சாராமே- சார்ந்தே. இன்று பஃறரம் கண்டம் கொண்டம்- இன்றைக்கு அவற்றின்பற்பல மேன்மைகளையும் கண்டுகொண்டோம். அம் கண்டக மதனையும்தான் புறங்கண்டம்- அழகிய மலர்வாள் ஏந்திய மன்மதனையும் வெற்றிகண்டோம்.
பொ - ரை: இருவினைஒத்த தகுதியைப்பார்த்துத் தனதுதாமரைஒத்ததிருவடிகள் அருளும் குமரேசனின்குன்றக்குடிக் குன்றூரில்; உதடுூகளாகிய பவளம், கழுத்து ஆகிய அழகியசங்கு, முகமாகியமுழுநிலா, இரண்டுஅழகிய முலைகளாகிய பொன்மலைகள், சொற்களாகிய சர்க்கரை, அல்குல்இடமாகிய ஆழமானசுனை இவற்றைச் சார்ந்து - அனுபவித்து, அவற்றின் பற்பல மேன்மைகளையும் இன்று கண்டுகொண்டோம். இதனால் மலர்ஆகிய வாள்ஏந்திய மன்மதனையும் வெற்றிகண்டோம்.
இ - பு: அதரம் கண்டம் முகம் துவர் சுந்தரநந்தம் நிறை இந்து – உருவக நிரல்நிறையணி. தொந்தம்தனம் பூதரம், மொழிகண்டம், அல்குல் குண்டுசுனை - உருவகங்கள்.
-------------
72 . மேகவிடு தூது.
பிரிந்துபோன தலைவனுக்குத் தலைவி மேகத்தைத் தூதாக விடுத்தல்.
பதின்மூன்றுசீர்ச் சந்த விருத்தம்.
தனையே தான்உண ராதபு ராதனன்
நுதல்மே லேநிமிர் தீவிழி வாய்வரு
சமரா மோதத யாநிதி காமரு முருகேசன்
பனையே போல்விழு நீள்கர வாரணன்
இளையோன் வானவி யானைம் னோகர
பரமா சாரியன் ஏழைய ரேம் உளம் முழுது) ஆள்வோன்
தினையே போழ்துமி யான்மற வாதது
தெரியா னோமுகில் காள்அரு ளாஇது
திறலோ மாதரை ஆடவர் ஓவுதல் முறைதானோ
வினைத்ீர் சீர்மயில் மாமலை மேவும்அ(ு)
இடமா மேயவண் மேவிய காலையின்
விடலீர் ஓதுமின் யாவையும் ஆதரவு) ஒழியாதே.
கு - ரை: புராதனன்- அநாதியன். நிமிர்- செழித்த. சமர்- போர். ஆமோததயாநிதி- மகிழும் கருணைச் செல்வம். காமரு- விரும்பும். வானயானை- வானுலகத் தெய்வயானையம்மையின் வி மனோகர- மிக விரும்பப் பெறுபவனே. பரமாசரிய- மேலானசிற்குருவே. தினையே போழ்தும்- நொடிப்பொழுதும். அருளா இது- அருள்புரியாத இத்தன்மை. ஓவுதல்- வருத்துதல். மேவியகாலை- அடைந்தபோது. விடலீர்- மறந்துவிடாதீர்கள். ஒழியாது- கைவிடாமல். ஆதரவு யாவையும் ஒழியாதே ஓதுமின் விடலீர்.
பொ -ரை: தன்னைத் தானுணராத அநாதியனது நெற்றியில் தசெழித்த கண்ணில் தோன்றிய போர்வல்லவனும், மகிழ்ச்சிவழங்கும் கருணைச் செல்வனும், பனைமரமொத்து நீண்டுதொங்கும் துதிக்கையுடைய விநாயகனின் விரும்பத்தக்க தம்பியும், தெய்வயானையம்மையால் விரும்பப் பெறுபவனும், மேலான சிற்குருவும் ஆகிய குன்றக்குடிப்பெருமான், கீழானவளாகியநான் நொடிப்பொழுதும் தன்னை மறவாது நினைப்பதை அறியவில்லைபோலும். மேகங்களே ! எனக்கு அருளாமைதான் அவனது ஆற்றலா? பெண்ணாகிய என்னைபோன்றவரை ஆடவர்கள் வருத்துவது நீதியாகுமா? நினைத்தவர்களின் இருவினைகளையும் தீர்க்கும் சிறந்த பெருமை பொருந்திய மயில்மலையை இடமாகக்கொண்டு நீவிர் அடைந்தபோது என்னைக் கைவிடாமலும், மறவாமலும் என்மிக்க அன்பினை அவனுக்குச் சொல்லுங்கள்.
----------
73 . நாரைவிடு தூது.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
தேரைவலம் படஉகைத்துத் தினம்செயும்பா
நுவும்நயனம் திகைப்பப் பொன்செய்
ஊரைவலம் படஓவின்று உளம்அவலம்
படப்போதகு) உணர்கி லாளே
நாரைவலம் படச்சேறல் நலம்படவென்
றிடநின்றாய் நார வீரைச்
கூரைவலம் படஎறிந்த குன்றையன்எம்
மிடமாகச் கழ்போ தாவே.
கு - ரை: வலம்பட- வலமாக - வெற்றியுண்டாக. தினம்செயும்- பகற்பொழுதை உண்டாக்கும். பாநு- கதிரவன். பொன்செய்- ஒளிரும். ஊரை- குன்றக்குடியை. வலம்பட- வெற்றியுண்டாகுமாறு. ஓவின்று- தொடர்ந்து. நாரை- அன்பினை. வலம்படச் சேறல்- வெற்றிபொருந்த எழுந்து. நலம்பட- நன்மையுண்டாக. வென்றிட நின்றாய்- வெல்ல நின்ற. போதாவே- நாரையே. உளம் அவலம்பட- மனம்வருந்த. ஓர்கிலாள்- நினைவற்றாள். நாரம் வீரை- நீர்நிறைந்த கடலினை. சகூரை- கரனை. வலம்பட- வலிமை பொருந்த. எறிந்த- வென்ற. எம்மிடமாச்சூழ்- என்னிடம்வரச்செய்.
பொ -ரை: தனது தேரினை வலமாக - வெற்றிபொருந்தச் செலுத்திப் பகற்பொழுதை உண்டாக்கும் கதிரவனும் கண்டுதிகைக்க ஒளிரும் குன்றக்குடியை; வெற்றி யுண்டாகுமாறு தொடர்ச்சியாக அன்புவெற்றியுற எழுந்து - பறந்து நன்மையுண்டாக வெல்லநின்ற நாரையே ! “இவள் மனம்வருந்த நினைவற்றாள்” என்பதைச் சொல்லி; நீர்நிறைந்த கடலினையும், கூரனையும் தனதுவலிமை பொருந்த வென்ற குன்றக்குடிவேலனை என்னிடம் வரச்செய்.
வி-ம்: முருகன் நீர்நிறைந்த கடலினை வென்றது : திருவிளையாடற்புராணம் “எண் 13. கடல்சுவர வேல்விட்ட படலம்” விரிவாகவுரைக்கும். இதனை, “ஒருவேலை மகனுக்கு ஈந்து பூமிக்குள் கடலை வறிது ஆக்கினீர் என்று சிவபெருமானை மதுரைக் கலம்பகம் செய்யுள் எண் 91 இல் ஸ்ரீ குமரகுருபரஅடிகள் சுட்டுவார். கதிரவன் தனக்குத்தானே வலமாகச் சுழகின்றது என்பது விண்வெளி அறிவியல். இதனை அன்றே திருமுருகாற்றுப்படை, “ உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு” என்கிறது. இவர், “தேரை.....பானு” என்கிறார்.
--------
74. இதுவும் அது.
போதாவே தனைமறந்து புணர்ந்துகளிக்
குறுநாள்இப் போழ்து போகா
ஒதாவே தனையுடற்றும் அறுபதுகன்
னலும்கன்னல் ஒன்றின் உய்ய
ஏது) ஆவே தனைதானும் பகையானாள்
பிதாவேந் யேனும் சென்று
மோதாவே தனைஅலைக்கும் குன்றைமுரு
கனைஅணைய மொழிந்தி டாயே.
கூட்டுமுறை: போதா வேதனை போகா. ஏது ஆவே தனைதானும் ஓதாவேதனை உடற்றும். அறுபதுகன்னலும் உடற்றும் பகையானாள். மோதா வேதனை அலைக்கும். கன்னல் ஒன்றின் உய்ய இப்போழ்து மறந்துபுணர்ந்து களிக்குறுநாள் பிதாவே நீயேனும் சென்று குன்றைமுருகனை அணைய மொழிந்திடாயே.
கு -ரை: போதா- பொறுக்கமுடியாத. ஏது- ஏதேனும் காரணம். ஆ- ஆக. தனைதானும்- தாயும். ஓதா வேதனை உடற்றும்- என்னால் சொல்லமுடியாத அளவு மனத்துன்பம்செய்யும். கன்னல்- நாழிகை. மோதா- அலைமோதும். கன்னல்ஒன்றின் உய்ய- ஒருநாழிகை இன்புற. இப்போழ்து- இந்தத் துன்பநேரம். களிக்குறுநாள்- இன்புறும் நேரத்தை. பிதாவே- நாரையே.
பொ -ரை: பொறுக்கமுடியாத இவ்வேதனைகள் போகவில்லை. ஏதேனும் காரணமாகத் தாயும் என்மனத்திற்குச் சமாதானம் சொல்லமுடியாத அளவுதுன்பத்தை அறுபதுநாழிகையும் செய்யும் பகைத்தியானாள். அதனால் அலைமோதும் துன்பம்வதைக்கும். நான் ஈடேறி, இத்துன்பநேரத்தை மறந்துஇன்புறும் ஒரு நாழிகை நேரத்தின் பொருட்டு, நாரையே ! நீயாவது குன்றக்குடி முருகப்பெருமானிடம்போய் என்னைக் கூடவருமாறு சொல்லுக.
இ - பு: ஓதா- ஈறுகட்ட எதிர்மறைப் பெயரெச்சம். தனை- இடைக்குறை. இச்செய்யுள் கொண்டுகூட்டுப் பொருள்கோளது.
---------
75 . கல்வியிற் பிரிவு கூறிய தலைவனைப் பாங்கி தடுத்தல்.
பன்னிருசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
ஆசு மதுரம் சித்ரம்வித்
தாரம் பயிற்றும் பிடியிடையும்
ஆலோன் மலர்த்தா அரக்காம்பல்
அவிழ்க்கும் இனிக்கும் குளிர்மொழியும்
ஏசு தவிரும் நினதுமனத்கு)
எழுது பழுதில் திருவுருவும்
இழைஊ(%) ஏகத் தவம்செயினும்
இழையாக் குசைஉ களமும்உடல்
தேசு குறிக்கின் காண்டிகைக்கும்
சிறப்பின் விருத்தி உரைக்கும் ஒரு
சிறிதும் உளது கொல்லோசந்
தேகம் இலக்க ணம்பலவும்
மூசும் இலக்கி யமும்நின்பால்
முதுகிற் பவளை ஒரீ இத்தமிழை
முயலக் கழகம் புகல்நகைப்பே
முறையோ குன்றை இறையோனே.
கு -ரை: பயிற்றும்- படிப்பிக்கும். பிடி- கைப்பிடிஅளவான. ஆலோன்- சந்திரன். மலர்த்தா- மலரச்செய்யும். அவிழ்க்கும்- இதழ்விரித்து. ஏசு- குற்றம். திருஉ௬- சிறந்த கலை / அழகியஇசைப்பாட்டு . இழை ஊடுஏக- நூல் ஒன்று நடுவில் செல்ல. இழையா- சற்றும் குழைதலில்லா. உகளக்குசை- இருமுலைகள். தேசு- ஒளி. காண்திகைக்கும்- கண்ட அளவிலேயே திகைப்புறச்செய்யும். விருத்தி உரைக்கும்- மகிழ்வுடன் கூறும் சொல்லுக்கும். சந்தேகம் உளது கொல்லோ. மூசும்- மிகப்பலவாய் நிறைந்த. முதுகிற்பவள்- பேரறிவு உடையவள். ஒரீ இ.- நீங்கி. முயல- கற்க.
பொ - ரை: தன்னைப் போற்ற, ஆசுகவி மதுரகவி சித்திரகவி வித்தாரகவி ஆகிய நால்வகைக் கவிகளையும் படிப்பிக்கும்படியாக உள்ள கைப்பிடி அளவான இடையும்; நிலவு மலர்த்த மலரும் அரக்காம்பல் மலர்ந்தாற்போன்ற உதடுகள் விரித்துப் பேசும் இனிய குளிர்ச்சியூட்டும் சொல்லும்; குற்றமற்ற உன் மனதில் எழுதும் கலையும் இசைப்பாட்டும்; நூல்ஒன்று நடூவில்புகுந்து செல்ல இயலாதவாறு திரண்டு புணர்ச்சியில் வெப்பமூட்டினாலும் நிறைவில் சற்றும்குழையாத இரண்டு முலைகளும்; கண்ட அளவில் திகைக்கச்செய்யும் / காண்டிகைக்கும் உடம்பின்சிறப்புப் பற்றிய மகிழ்வுடன்கூறும் சொல்லுக்கும் / விருத்தியுரைக்கும் ஒருசிறிதும் ஐயமுண்டோ ? பல இலக்கணங்களாக மிகப்பலவான இலக்கியங்களாக நின்பால் பேரறிவுவுடையவளை நீங்கித் தமிழ்கற்கக் கல்விபயிலிடம் செல்லுதல் என்பது நகைப்பிற்குரியது. குன்றக்குடித் தலைவனே ! நீகல்வியில் பிரிதல் முறையன்று.
வி-ம்: இதன்கண், தமிழ்கற்றல் தொடர்பான நால்வகைக் கவி, சொல், எழுத்து, இசை! கலை, நூல், புணர்ச்சி, காண்டிகையுரை, விருத்தியுரை, இலக்கணங்கள், இலக்கியங்கள் ஆகியன தலைவியைச்சார்ந்து வந்துள்ளமை காணலாம்.
--------
76 . இதுவும் அது.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
இறையும்இவள் பிரியாத குன்றைஅதி
பதிவடநூல் இயல்பும் தேற
நிறையும்அவா உளதாயின் விழியேகா
வியம்காட்டும் நெறியே நீ௨ள்
ஞுறையுமா நாடகமும் அலங்கார
மும்தவிர்ந்த(து) ஒருநாள் உண்டோ
பறையுமிகு தர்க்கமெலாம் மொழிவள்செலேல்
சேண்போய்க்கற் பனஎன் மன்னோ.
கு - ரை: இறை- நொடிப்பொழுது. அதிபதி- தலைவனே. தேற- கற்றுத்தெளிய. நீ உள் உறையும்- நீ இவள் உள்ளத்தில் வாழும்(உள்ளுறை,. மா நாடூ அகமும்- சிறந்ததை விரும்பும் உள்ளத்தையும்.(மா நாடகத்தையும்) அலங்காரமும்- அழகினையும் (அணிவகைகளையும்,. தவிர்ந்தது- இல்லாதிருந்தது. பறையும்- கூறப்பெறும். செலேல்- பிரிந்து செல்லாதே. சேண்- நெடுந்தொலைவு. என்- வேறுஎன்ன உள்ளது.
பொ - ரை: நொடிப்பொழுதும் இவளைப் பிரியாத குன்றக்குடித் தலைவனே ! வடமொழிநூல்களின் இயல்பினையும் கற்றுத்தெளிய உனக்கு மிக்கஅவா இருப்பின், இவளது கண்களே வடமொழிக் காவியங்களைக் காட்டும், இவளது வாழ்க்கைமுறை, நீ் இவளது உள்ளத்தில் வாழ்வதால் சிறந்தஉள்ளத்தையும், அதன்அழகையும்காட்டாது ஒருநாள்கூட இருந்ததில்லை. கூறப்பெறும் தருக்கம் அனைத்தையும் இவள் பேசுவாள். எனவே நெடுந்தொலைவு போய்க்கற்கவேண்டுவன என்ன ? செல்லாதே. வி-ம்: காவியம், உள்ளுறை, நாடகம், அலங்காரம், தருக்கம் ஆகியன அனைத்தும் இவள்பால் உள. எனவே சேண்சென்றுகற்க வேண்டா என்றாள்.
--------------
77. கவிக்கூற்று.
பாட்டுடைத் தலைவனைப் புலவன் புகழ்ந்து கூறுதல்.
கட்டளைக் கலித்துறை.
நோதவிர் குன்றை வரைபுரை தோளநின் நோன்கமலப்
போகு)அவிர் விக்கும் இரவியும் காண்பரும் பூம்பிணையல்
தாது)அவிழ் மார்பூ௮அ கலம்உரம் கண்்(ட)அவை தாம்பொதுவாய்
மாகு)அவிர் ஆகத்துக்(கு) ஆகு பெயரெனும் வண்புவியே.
கு -ரை: நோதவிர் நோன்வரைபுரை தோள. நோதவிர்- துன்பம் தடுக்கும். நோன்வரை புரை - வலியமலைஓஒத்த. தோள- தோள்களுடைய தலைவனே. அவிர்க்கும்- மலரச்செய்யும். பூம்பிணையல்- மலர்மாலை. தாது- தேன். தாதுஅவிழ்பூம்பிணையல். மாது-* அவிர்- அழகு விளங்கும். ஆகம்- உடம்பு, மார்பு.
பொ -ரை: துன்பம் வராமல்தடுக்கும் வலிமையான மலைஒத்த தோள்கள் உடையவனே! தாமரைமலர்களை மலரச்செய்யும் கதிரவனும் காண்பதற்கரிய ஒளியுடையதும், தேன்சுரக்கும் மலர்மாலை கூடியதும் ஆகிய உனது வளமான மார்பின் அகலத்தையும் வலிமையையும் கண்ட உலகவர், அத்தகு மார்பினையுடைய திருமேனியை, அண்டமெலாம் பரவியதாதலின் அகலமென்ற பொருளும், அண்டத்தைக் காப்பதால் - தாங்குவதால் வலிமைஎன்ற பொருளும் பொருந்திய “ஆகம்” என்ற ஆகுபெயர்ப் பொதுச் சொல்லல் குறிக்கின்றனர்.
வி-ம்: உடம்பு என்றபொருள்தரும் ஆகம் என்றசொல் - அகலம் - மார்பு என்ற பொருளும் தருவதாகும்.
----------
78 . கையுறை மறுத்தல்.
தலைவன் தலைவிக்குக் கொடுக்கும்படி கொடுத்த முத்துமாலையைத் தோழி மறுத்துக் கூறுதல்.
கட்டளைக்கலித்துறை.
வண்டானம் தாமரை ஆர்குன்றை வாணன் வரையின்இயல்
வண்(ட)ஆனம் தாழும் கரிமத் தகத்தின் வருந்து)இடைது
வண்டால்நந் தாமுத்த மாலைஎவ் வாறு)அணி வம்தலைவா
வண்டால்நந் தாநய னம்களம் என்றுசொல் மாணிழைக்கே.
கு - ரை: வண்டானம்- நாரை. தா மரை- தாவிச்செல்லும் மான். கரி ஆனம் வண்டு இயல் தாழும் மத்தகத்தின்- யானையின் முகத்தில் வண்டுகள் உலாவிப் படியும் மத்தகம் போன்ற முலைகளால். இடை துவண்டால்- இடுப்பு வளையுமானால். நந்தா- குறைவற்ற. வண்டால் நயனம்- அம்பு ஒத்த கண்கள். வண்டால் களம்- சங்கு ஒத்த கழுத்து.
பொ -ரை: நாரைகளும், தாவிச்செல்லும் மான்்௧ளுமுடைய குன்றக்குடிப் பெருமானின் ஊரில், கேடற்ற அம்புகள் ஒத்தகண்களையும், கேடற்ற சங்கினை ஒத்த கழுத்தினையும் உடையளான, யானையின் முகத்தில் வண்டுகள் உலாவிப்படியும் மத்தகமொத்த இவளது முலைகளால் வருந்திக்கொண்டுள்ள இடுப்பு, உனது கையுறையாகிய பருமுத்து மாலையால் வளையுமானால் அம்மாலையை இவள் எவ்வாறு அணிவாள்? என்று கையுறை மறுத்தாள்.
வி-ம்: கண், கழுத்து ஆகிய இரண்டுக்கும் ஏற்ப, அம்பு, சங்கு என்ற பொருள்தரும் வண்டு எனும்சொல் நின்றது.
இ - பு: நந்தா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். வண்டால் - ஆல்- அசைநிலை.
----------
79 . இடம் அணித்துஎன்றல்.
உடன்போக்கில் தலைவியைப் பாலைநிலத்தின் வழியே கூட்டிச் செல்லும் தலைவன் தலைவி வருத்தம்கண்டு தன்ஊர் மிக அண்மையில் உள்ளதென்று தேற்றுதல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
கேதனம்கா யம்செறியக் குளிர்குன்றைக்
கிரியைவல்லே கிளர்மு கத்துச்
சதனங்கா யம்தேனா றும்அரியை
யும்தவிர்ந்தேம் திருநெல் லைப்பேர்ப்
போதனங்காய் அங்கனைகொண் கன்கழனி
யம்பதியும் புரையில் யோக
சாதனங்காய் அம்பதியும் வடுமுனியூ
ரும்கடந்தேம் சார்ந்து நாமே.
கு - ரை: கிளர் முகத்து- ஒளிபொருந்திய முதன்மையான. காயம் சீதனம்- நிலைத்த சீ்தனமான. அரியை- அரியக்குடி. தவிர்ந்தேம்- கடந்துவிட்டோம். போதனம் காய்- ஞானத்தின் பயனான. அங்கனை- மனைவி. கொண்கன்- கணவன் - சிவபிரான். கழனியம்பதி- கோவிலார். யோகசாதனம் காய்- யோகசாதனையின் பயன். பதியும்- தங்கும். வடுமுனியூர்- குற்றங்களை வெறுத்தவூர் - பாதரக்குடி. கடந்தேம்- கடந்துவிட்டோம். கேதனம்- கொடிகள். காயம்- ஆகாயம்.
பொ -ரை: ஒளிபொருந்திய முதன்மையான நிலைத்த சீதனமான தேனாற்றையும் அரியக் குடியையும் கடந்துவிட்டோம்; திருநெல்லைப் பேருடைய ஞானத்தின் பயனாய்விளங்கும் மனைவியான மலைமகளின் கணவனது(சிவபிரானது) கோவிலாரையும், யோகசாதனையின் பயன்தங்கியதால் குற்றங்களை வெறுத்த வூராகிய பாதரக்குடியையும் கடந்தோம். பலவகைத் துகிற்கொடிகள் வானில்செறிந்து பறப்பதும், தண்ணியதுமான குன்றக்குடியை நாம் சார்ந்து ; இ - பு: இச்செய்யுள் குளகம். (குளகம்- தன்னளவில் பொருள்முடியாது அடுத்தசெய்யுளை நாடிநிற்பது.)
-----------
80 . இதுவும் அது.
மேலெதிர்தும் ஆயிரங்கண் கோபுரமும்
மிகக்கலங்கி விலங்கி மாழ்க
மால்அனைய மருதுபாண் டியன்செய்திருக்
கோபுரமும் மதுர மேன்மைப்
பால்அலைகொள் கடலைவிரு தாபுரியும்
படிபடிகள் பண்பின் ஓங்கிச்
சாலும்நெடும் தடமருதா புரியுமொரு
நொடியில்அன்பு தழ்இச்செல் வோமே.
கு - ரை: மேல்எதிர்தும்- வானில் எதிர்கொள்ளும். ஆயிரங்கண் கோபுரம்-தேவேந்திரனது தேவருலகம். மாழ்க- வருந்த. மால்- திருமால். பாலலை-வெள்ளலை. விருதாபுரியும்படி- பயனற்றதாகச் செய்யுமாறு. படிகள்- இறங்குதுறைப் படிக்கட்டுகள். சாலும்நெடும்- மிகமிகப் பெரிய.
பொ - ரை: வெண்மையான அலைகளையுடைய கடலும்கூட சிறியது என்னுமாறு, மருதுபாண்டியன் அமைத்த விரிந்த பரப்புடையதும், இறங்குதுறைப் படிகள் முறைப்படி சிறந்ததுமான மிகப்பெரிய மருதாபுரிக் குளத்தையும், வானத்துத் தேவேந்திரனது தேவருலகமும் மனம்கலங்கி வருந்துமாறு, மலைக்கோவிலில், திருமால்ஒத்த மருதுபாண்டியன் எழுப்பியதால் நம்மை எதிர்கொள்ளும் திருக்கோபுரத்தையும்,அன்புடன்ஒருநொடியில் கடந்துநம் இடத்தினை அடைவோம்.
----------
81. மடல் விலக்கு .
தான் காதலித்த தலைவியை அடைதல்வேண்டிப் பனைமடலால் ஆனகுதிரை ஏறத்துணிந்த தலைவனைப் பாங்கி விலக்குதல்.
கட்டளைக்கலித்துறை.
வேடகம் சானக மின்தொழும் குன்றைஎம் வித்தகன்தாள்
கூ()அகம் கன்னிஅம் தேனூருக்(கு) இச்சையும் கொண்டதுண்டேல்
தோ(ட)அகம் சேர்மது மாலைய நீள்மது ரைசிதற
ஏடகம் சாடி அசுவம்செய்(து) ஏறல் இதமலவே.
கு - ரை: வேடகம்- ஒருவகைக்காதணி. சானகம்- அம்பு. மின்- தலைவி. கூடுஅகம்- கூடும் மனம். அம்கன்னி. தேன் ஊரு- இனிய தொடை - அல்குல். தோடு- மடல். மதுசேர் ஏடகம்- கள்ளுடைய பனைமரம். மதுமாலைய- பக்குவமான வரிசையில் அமைந்த பனம் பாளை. நீள் மதுரை சிதற- மிக்க கள் சிதறுமாறு. சாடி- வெட்டி. அசுவம்- குதிரை.
பொ -ரை: குன்றக்குடியில் வீற்றிருக்கும் ஞானியாகிய முருகனைக்கூடும் மனமுடையவளும், தனது காதணியைச் தொட்டுவணங்கும் அம்பாகிய கண்களுடையவளும் ஆகிய எம்குமரியாகிய தலைவிமேல்மட்டுமன்றி அவளது அழகிய இனிய தொடைகளின்மேலும் - அல்குல்மேலும் - விருப்பமிருப்பின், கள்ளுடன் மடலோடு கூடியபனைமரத்தின் பக்குவமான வரிசையில் அமைந்த பனம்பாளையின் மிக்க கள்சிதறுமாறு வெட்டி, குதிரைசெய்து ஏறிவருதல் தக்கசெயலன்று.
இ - பு: ஊரு - இடவாகுபெயர்.
-----------
82 . துதி .
பன்னிருசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
வேர்க்கும் திறமா சுரநாடு
மேவ அறமா சுரர்ஒருங்கு
விளிக்கும் தெய்வத் திருநாம
விநோதம் செறியும்மயில்மலையில்
ஆர்க்கும் பிறவி நோய்க்கெல்லாம்
அரிய மருந்து) உண்(௫) அமுதமருந்து)
அதிதி பெறுவார் மருண்டூவெருண்டு)
அலற மருந்து கொடும்பகையைத்
தீர்க்கும் இசைய மருந்துவலிச்
செவ்வேல் கரமேல் படர்ந்துகதிர்
திகழ்ந்து விரிந்த வேட்டூவர்தம்
சிறுமி அறியும் அதைநுனித்துப்
பார்க்கும் பெருஞ்சீ ரகமிளகும்
படிநீர் ஊற்றி அதிமதுரம்
பரவிக் கலந்து தினம்உண்மின்
பாறும் சீறும் பிணிதாமே.
கு - ரை: வேர்க்கும்- அசுரர்க்கு அஞ்சும். மாசுரநாடு- பெருமை பொருந்திய தேவருலகம். மேவ- மீண்டும் அதில்வாழ. அறமாசுரர்- புண்ணியர்களாகிய பெருந்தேவர்கள். தெய்வத்திருநாமம்- தெய்வத்தன்மைவாய்ந்த முருகா என்றதிருப் பெயர். விநோதம்- மகத்துவம். பெறுவார்- பெற்றெடுத்த அசுரர்கள். பகை- பிறவிப் பகை. இசைய- இணக்கமான. வேட்டுவர்தம் சிறுமி- வள்ளிநாயகி. பெருஞ்சீரகம், மிளகு, முழுகுமளவுநீர், அதிமதுரம் என்பன மருந்துக்குரியன என்பது வெளிபடைப் பொருள். பெருஞ்சீர்: அகம்- பெருஞ் சிறப்புக்குரிய உள்ளம். இளகும்படி- உருகுமாறு. நீர்- அன்புநீர். அதிமதுரம்- மிக இனியசெயல்கள். பரவிக் கலந்து- தூவிக்கலந்து / போற்றி மனம்கலந்து. உண்மின்- உட்கொள்ளுங்கள் / நினையுங்கள். சீறும் பிணி தாம் பாறும்- கடுமையான உடல்நோய்கள் தாமேசிதறி அழியும் / வினைநோய்கள் தாமேசிதறி அழியும்.
பொ - ரை: அசுரர்க்கு அஞ்சும் தேவருலகத்தவர் மீண்டும் அவ்வுலகடைய, புண்ணியர்களாகிய தேவர்கள் ஒருங்குகூடி, முருகா ! என்று ஓலமிடும் மகத்துவம் செறிந்த மயில்மலையில் எல்லாருடைய பிறவிநோய்களையும் தீர்க்கும் அரியமருந்து உள்ளது. அதுஅமுதமானமருந்து; அந்தத் திதி பெற்றெடுத்தஅசுரர்களை மருளச்செய்து அஞ்சிஅலறச் செய்யும்மருந்து; கொடிய இருவினைகளால் வரும் பிறவிப்பகையைத் தீர்க்கும் இணக்கமான மருந்து; முருகனின் அழகிய வேலோடு படர்ந்தகைகளோடுூ ஒளியுடன் விரிந்துவிளங்கும் அம்மருந்தை வேடர் குலத்துச் சிறுமியாகிய வள்ளிநாயகி நுட்பமாக நோக்கும். அம்மருந்தின்மேல் பெருஞ்சிறப்புக்குரிய உள்ளம் உருக, அன்புநீர் ஊற்றி, மிகஇனிய செயல்களை அதில்தூவிப் போற்றி மனம் கலந்து நாடோறும் நினையுங்கள் / பெருஞ்சீரகம், மிளகு இவற்றில் படியளவுற்ரூற்றி அதிமதுரம் கலந்து நாடோறும் உட்கொள்ளுங்கள். இதனால் கடுமையான இருவினை நோய்கள் / உடல்நோய்கள் தாமே சிதறி அழியும்.
-------------
83 . இதுவும் அது.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம் ( வேறு ).
தாவில்இசை முப்பத்து முக்கோடி தேவரும்
தாழ்துதிக்(கு) ஓடிமறையச்
சதகோடி தாங்கிஎண் ணற்(கு)ஓடி வருகின்ற
தந்திஉந் திச்செலாது
பூவிலடி படஅணுகி அங்காழி யம்பதிப்
பொங்்(கு)ஆழி அம்(புஅதிகமாப்
போய்க்கரை புரண்டுதேங் கக்கா விரிப்பூம்
புனல்பெருக்(கு) ஆறுசோர
ஓவில்வள நந்தன வனம்செழிப் புறவளர்த்கு)
ஒளியஅலர் காணஷட்டும்
ஒங்குதவ மிகுகூர பன்மாபன் மாயையும்
ஒழிந்து)ஓய்ந்துஒர் மாவாகஆழ்
வீவில்அத் தியும்அஞ்சு மாபிளந்து) அறுமா
விசும்பின்எழு மாச்சுடர்தெறும்
வெள்வேலை மயில்மலைச் செவ்வேள் பொறுக்கநமன்
விடுகழுமுள் என்செய்யுமே.
கு - ரை: தாவில்இசை- குற்றமற்ற புகழ். கோடி- தொகுதி - வகைக்கூட்டம். தாழ் துதி- தலைதாழ்த்திய வணக்கம். சதகோடி- வச்சிராயுதம். தாங்கி- தாங்கிய தேவேந்திரன். எண்ணற்கு- நினைத்தஅளவில். தந்தி- அயிராவதயானை. உந்திச் செலாது- ஏறிச்செல்லாமல். அம்காழியம் பதிப்பூவில் அடிபட அணுகி. காழி- சீர்காழி. பூவில் அடிபட அணுகி- பூமியில் நடந்து வந்து., ஆழிஅம்பு- கடல்நீர். தேங்க- தங்க. ஆறு- ஆற்றுவெள்ளம். சோர- வற்ற. ஓட்டும்- அழியும். வளஓவில்- வளத்தில் குறையாத. ஒளிய- ஒளிபொருந்திய. பன்மாயை- பலவகைப்பட்ட மாயவடிவங்கள். மா- மாமரம். ஆழ்வீவுஇல் அத்தி- ஆழங்குறையாக் கடல். அறுபிளந்து- அறுத்துப் பிளந்து. மாச்சுடர்- பெருஞ்சுடராகிய ஞாயிறு. தெறும்- வென்று அழிக்கும். வெள்வேல்- தூய - ஞானவடிவான வேல். பொறுக்க- நம்முள்ளத்தில் தாங்கியிருப்பதால். கழுமுள்- சூலப்படை. என்செயும்- எதுவும் செய்யவியலாது.
பொ -ரை: குற்றமற்ற முப்பத்து மூன்று வகைப்பட்ட தேவர்களும் தமது தலைதாழ்த்தி வணங்காதிருத்தற்கு ஓடிஒளிய, வச்சிராயுதம் ஏந்தியஇந்திரன் நினைத்த அளவில் ஓடிவரும் அயிராவதயானைமேல் ஏறிவராமல் பூமியில் நடந்துவந்து, அழகிய சீர்காழியில் மறைந்து வாழ, அலையெறியும் கடல்நீர் பெருகிப் புரண்டுபோய்ச் சீர்காழியைச்சூழ, காவிரியாற்றின் மென்நீர்ப்பெருக்கு வற்ற, அதனால் வளத்தில் குறையாது நந்தனவனம் செழிக்குமாறுவளர்ந்து ஒளிபொருந்தியமலர்கள் மலரச்செய்ததுடன்; மிக்க தவவலிமைஒங்கிய சூரன், தனது பலவகை மாயைகளும் ஒழிந்து ஓய்ந்து ஒருமாமரமாக, ஆழத்தில் குன்றாத கடலும் அஞ்சுமாறு தோன்ற, அந்த மாமரத்தை அறுத்துப் பிளந்ததாகிய, பெரியவானிலெழும் ஞாயிற்றைவென்று ஒளிர்ஞானவேல் தாங்கிய மயில்மலைப் பெருமானை நாம் நமதுஉள்ளத்தில் தாங்கியிருக்கும்போது, நமன் நம்மேல் விடுக்கும் கூலப்படை நம்மை என்னசெய்யும்? எதுவும் செய்யவியலாது.
வி-ம்: காவிரிப் பூம்பட்டினத்தைக் கடல்கொண்ட போது சீர்காழியைக் கடல்கூழ்ந்ததால் அவ்வூர் தோணிபுரம் என்றபெயர் பெற்றது. அக்கடற்கோளைக் மூன்றாம் ஊழிஎன்பர். அதனால். சீர்காழி தோணிபுரமானகைத்திரு முறைகள்;
“மண்ணினைமூடி வான்முகடுஏறி மறிதிரைகடல்முகந் தெடுப்பமற்றுயர்ந்து
விண்ணளவுஓங்கி வந்துஇழிகோயில் வெங்குரு”
(திருமுறை 1. வெங்குரு திருப்பிரமபுரம். 2)
“அலையும் பெருவெள்ளத்து அன்று மிதந்தஇத் தோணிபுரம்”
(திருமுறை 4. திருக்கழுமலம், திருப்பிரமபுரம். 6) என்று குறிக்கின்றன.
இந்திரன் அசுரர்களுக்குஅஞ்சிச் சீர்காழியில் மறைந்துவாழ்ந்ததைக் கந்தபுராணம்21. இந்திரன் கரந்துறை படலம் விரித்து உரைக்கும்.
----------
84. அன்னம் விடுதூது.
பிரிந்துபோன தலைவன் வராமையால் தலைவி படூம்துன்பம்கண்டூ தோழி அன்னத்தைத் தூதுபோகக் கூறுதல்.
விருத்தக் கலித்துறை.
மேதினித் திலதமொத்த இருமயில் மலையில் கஞ்சப்
போதில்நித் திலம்வைத் தன்ன பொலன்தெரி செவ்வாய் வெண்பல்
மாகு)இனித் திலப்போழ் தேயும் மனம்பொறாள் செவ்வேள் சேர
ஓ(து)இனித் திலபால் அன்னம் உவர்க்கும்பால் அன்னம் நீயே.
கு - ரை: திலதம்- பொட்டு. இரு- பெருமை. கஞ்சப்போது- தாமரைமலர். நித்திலம்- முத்து. பொலன்தெரி- அழகு விளங்கும். திலப்போழ்து- எள்ளளவு நேரங்கூட. பால் அன்னம் இனித்தில. பால் அன்னம்- பால்போல் வெள்ளிய அன்னப்பறவையே.
பொ -ரை: நிலமகளுக்குப் பொட்டுவைத்தாற் போன்ற பெருமையமொருந்திய மயில்மலையில், தாமரைமலரில் முத்துகளை வைத்தாற்போலச் சிவந்த வாயினில் வெண்பற்களுடைய இத்தலைவிக்குப் பாலும் சோறும் இனிக்கவில்லை. அருள்தரு சண்முகநாதக் கூடாமல் எள்ளளவு நேரங்கூட உயிர்தாங்காள் என்பதைப் பால்போல வெள்ளிய அன்னப்பறவையே அவனிடம் நீபோய்ச்சொல்.
--------------
85 . தோழி தலைவியின் துன்பநிலை கூறுதல்.
நேரிசை வெண்பா.
நீபம் தருமாலை நேர்ந்துகுன்றை யேந்தன்முலை
மாபந்து) அருமாலை வண்மொழியே - சாபநுதல்
ஒன்றுமின்னல் அன்னாள் ஒழிந்தாள்கண் ணீரமாலை
ஒன்றும்இன்னல் அன்னாள் உளள்.
கு - ரை: ஏந்தல்- அரசன். நீபம்தருமாலை- கடம்பமலர்மாலை. நேர்ந்து- விரும்பி. மாலை- பெண். வண்மொழி- மெய்ம்மை பேசுகிறவள் . சாபநுதல் ஒன்றும்- வில்லே நெற்றியாகப்பொருந்திய. மின்னல் அன்னாள்- மின்னல் ஒத்ததலைவி. ஒன்றும் இன்னல் அன்னாள்- திரண்ட துன்பமொத்தவள். மாலை- மாலைக்காலத்தில். கண்ணீர் ஒழிந்தாள் உளள்- முன்சொரிந்த கண்ணீரும் வற்றியவளாய் உள்ளாள்.
பொ - ரை: பெரியபந்து ஒத்த மேன்மைபொருந்திய முலைகளுடன் மெய்ம்மை பேசும்பெண்ணே ! வில்லே தனதுநெற்றியாகப் பொருந்திய மின்னல் ஒத்ததலைவி, குன்றக்குடியில் எழுந்தருளியுள்ள பெரும்பேரரசனின் கடப்பமலர் மாலையை விரும்பி மாலைப் பொழுதில் முன்புசொரிந்த கண்ணீரும் வற்றியவளாய்த், திரண்ட துன்ப மொத்தவளானாள்.
----------------
86 . துதி .
பன்னிருசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
உத்திப் படாடவித் தடநெடும் பாயற்கண்
ஒண்கண்வள ர௬ங்கொண்முவின்
உடன்வந்த சயிலகன ருசிதந்த தீராத
ஒருசோதி யேவிசாகப்
பத்திப் படாமுலை பனைக்கைமா தங்ககும்
பம்பொருவு பம்தாரகைப்
பரவுகுழு வினில்நனி சிறந்துகேட் டைப்பெறாப்
பண்புகொள உற்பவித்துத்
தித்திப்பூ அடாநின்ற மழலைபொழி அமிழ்தின் எத்
தேவரும் சீவிக்கவாய்
திறந்து) அஞ்சல் மின்என்ற மறைமூல மேநினது
சீறடிப்போ தருள்வையோ
கத்திப் படாது)எழு பவக்கடல் கடப்பக்
களித்துந் வதிகுன்றைஅம்
கல்லகம் கல்லகம் கண்(டு)உருகி நின்றுக்
கழுத்தமொ(ு) இருக்கவென்றே.
கு - ரை: உத்தி- இணக்கம். படஅடவி- படங்களாகிய காடு. தடநெடும்பாயல்- பெரிய நீண்ட படுக்கை. கொண்மூ- மேகமாகிய திருமால். சயில கனருசி- மலைமகள் ஆகிய மின்னல் - பார்வதிதேவி. தீராத-இறப்பில்லாத. விசாகம்- விசாக நன்னாள். கேட்டைப் பெறாப் பண்பு- கேடில்லாத் தன்மை. பத்தி- பத்திமை. படா- சாயாத. பனைக்கை- பனைமரம் ஒத்த துதிக்கை. மாதங்கம்- யானை. பம் குழு- விண்மீன் கூட்டம். தாரகை- கார்த்திகைப்பெண்கள் அறுவர்கூட்டம். தேவரும் சீவிக்க- தேவர்களும் இவ்வலகவரும் வாழ. அமிழ்தின் தித்திப்புஎன- அமுதம்போன்ற இனிமை யாக . அடாநின்ற- உண்டாக்கும். அஞ்சன்மின்- அஞ்சாதீர். சீறடிப்போது- சிறிய திருவடிமலர்கள். கத்திப் படாது எழு- ஓசையின்றித் தோன்றும். குன்றையம் கல்லகம்- குன்றக்குடி மயில்மலை. கண்டு கல்அகம் உருகிநின்று- பார்த்துக் கல்ஒத்தமனம் உருகி. ஏக்கழுத்தம்- இறுமாப்பு.
பொ - ரை: ஒன்றுடன் ஒன்று இணக்கமுள்ள படங்களுடைய பாம்பாகிய பெரிய நீண்ட படுக்கையில் அறிதுயில் கொள்ளும் மேகமாகிய திருமாலுடன் வந்த மின்னலெனும் மலைமகளாகிய பார்வதிதேவிக்கு மகனான இறப்பில்லாத ஒப்பற்ற பேரொளியே ! விசாகத்தில் கேடில்லாத் தன்மையுடன் தோன்றி, பத்திமையுடன், பனைமரம் ஒத்த துதிக்கையுடைய யானையின் மத்தகக் கும்பம்போன்று சாயாத முலைகளுடைய விண்மீன்களாகிய கார்த்திகைப்பெண்கள் அறுவர்குழு போற்றச் சிறப்பாக வளர்ந்து, அமுதம்போன்று இனிமையுண்டாக்கும் மழலைமொழியால் எல்லாத்தேவர்களும் இவ்வுலகவரும் வாழ அஞ்சாதீர் என்றுஅருளிய வேதமுதற்பொருளே ! ஓசையின்றி உண்டாகும் எனதுபிறவிக்கடலினைக் கடக்கும்பொருட்டூ நீஎழுந்தருளியுள்ள குன்றக்குடி மபில்மலையை நான்கண்டு, கல்லொத்த மனமுருகி நினது அருளால் இறுமாப்புடன் வாழ, நீ நினது சிறிய திருவடிமலர்களை எப்போதுஅருள்வாய் ? உடனே அருள்க.
வி-ம்: இப்பாடலில்சோகி, விசாகம், பனை(அனுசம்), கேட்டை, மூலம் என்ற விண்மீன் பெயர்கள் வந்த நயம் காண்க.
இ - பு: அடாநின்ற. நின்ற - அசைச்சொல். தேவரும் - எச்சவும்மை. அஞ்சன்மின்- மின் - முன்னிலை ஏவற்பன்மை வினைமுற்று விகுதி. அடிப்போது, பவக்கடல் உருவகங்கள். கல் அகம் - உவமைத்தொகை.
-------------
87. தலைவியைக் கண்டூவந்த தலைவன் பாங்கனுக்கு உற்றது உரைத்தல்.
கட்டளைக் கலித்துறை.
இருக்குஓவை நேர்ம தலையார் மதலை இலங்குகுன்றைச்
செருக்கோவை வேலிறை வன்வன் கிரியில் திகழுநண்பா
மருக்கோவை வாய்ச்சி யரிசைவ ரேகொல் மதித்துநம்மேல்
திருக்கோவை யார்திரு வாசகம் ஏதும் தெரித்திலரே.
கு - ரை: இருக்கு ஓவை- இருக்கு மறைகூறும் ஓங்காரம். நேர்- நுட்பம். மதலையார்- கொன்றைகடிய சிவபிரான். மதலை- திருமகன். செருக்கோ- போர்த் தலைவன். வைவேல்- கூரியவேல். வன்கிரி- அருளாற்றலில்வன்மையானமலை. மருக் கோவை வாய்ச்சியர்- மணக்கும் கொவ்வைக்கனி ஒத்த உதடுகளுடைய தலைவி. திருக் கோவை ஆர்- புனிதமான கோவையாக அமைந்த. திருவாசகம்- அழகிய சொல். நம்மேல் மதித்துத் தெரித்திலர்- நம்மை மதித்து ஒன்றும் கூறவில்லை.
பொ -ரை: இருக்குமறை கூறும் ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் நுண்பொருளான சிவபிரானின் திருமகனாக, போர்த்தலைவனாகக் குன்றக்குடியில் வேலொடூ விளங்கும் அருள்தர சண்முகநாதப்பெருமானின் அருளாற்றலினால் வலிமையானமலைக்கண் வாழும் நண்பனே ! நறுமணத்துடன் கொவ்வைக்கனி போல் சிவந்த உதடுகளுடைய தலைவி, புனிதமான கோவையாக அமைந்த அழகியசொல் ஒன்றும் கூறவில்லை. எனினும் நம்மைமதித்துப் பேச இசைவாரோ.
இ - பு: கொல் - ஐய இடைச்சொல்.
-------------
88 . நாரைவிடு தூது.
மன்மதனின் அம்புகளாற்படூம் துன்பத்தைச் சொல்லி நாரையைத் தலைவி தலைவன்பால் தூதாக அனுப்பல்.
நேரிசை வெண்பா.
தெண்டிரைக்கும் வண்டிரைக்கும் தேமாங் குயிற்குமினை(வ)
உண்(௫)இரைக்குக் குன்றைக்(கு)ஓ டும்குருகே - பெண்டிரைத்தான்
பாகம் பொறுக்கும் பதிக்கு) ஜயன் பால்மொழிபூச்
சேகம்(பு) ஒறுக்கும் திறம்.
கு - ரை: இரைக்கு- இரைக்காக. குருகே- நாரையே ! தெண்டிரை- கடல்அலையோசை. வண்டு இரை- இணைதேேடும் வண்டின் ரீங்காரம். குயிற்கும்- குயிலின் குரலுக்கும். இனைவுண்டு- வருந்தி. பூ- மலராகிய. சேவகம்- வயிரம்மிக்கவலிமை)உள்ள அம்பு. பெண்டிரை- பார்வதிதேவியை. பதிக்கு- தலைவனுக்கு. ஐயன்- குரு - அருள்தரு சண்முகநாதப் பெருமான்.
பொ - ரை: இரைதேடி உண்ணக் குன்றக்குடிக்கு விரைந்து பறந்துசெல்லும் நாரையே ! கடல்அலை ஓசைக்கும், இணைதேடும்வண்டின் ரீங்காரத்திற்கும், இனிய குயிலின் கூவுதலுக்கும்வருந்தி, மன்மதனது மலராகிய வயிரமுள்ள அம்புதரும் விரகத்தை இவள் பொறுத்துக்கொண்டிருக்கும் தன்மையை, பார்வதியைத் தனது இடப்பாகம்தாங்கிய சிவபெருமானுக்குக் குருவாகிய அருள்தரு சண்முகநாதப் பெருமானிடம் கூறுவாயாக.
---------
89 . தலைவனைக் கண்ட தலைவி இவன் எவனோ என்று ஐயுறல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
திரத்தவர்மே வியகுன்றைப் பதிஆளும்
பெருமான்உள் தெளிவு பற்றாத்
தரத்தவர்புன் கண்ணோக்கம் மறையவனோ
வேன்மன்னன் தானோ யானைக்
கரத்தவர்பின் னர்த்தோன்றும் இளங்கோவோ
பூருநாண் கழற்றாத் தெய்வ
உரத்தவர்நேர் சசிக்கு) அருள்மாங் கலியகத்
திரனோ௭என் உரைத்து மாதோ.
கு - ரை: திரத்தவர்- மனவுறுதியுடையவர். உள்தெளிவு பற்றா- மனத்தெளிவு கொள்ளாத. தரத்தவர்- தன்மையுடையவரான. புன்கண் நோக்கம்- அச்சப்பார்வை. மறையவன்- பிரமன். வேன்மன்னன்- வேனிலுக்குரிய மன்மதன். இளங்கோ- முருகன். பூரு நாண்- முன்னைத் தாலிக்கயிறு. தெய்வ உரத்தவர்- தெய்வத்தன்மை வாய்ந்த தேவர். நேர்- தகுதி. சசி- இந்திராணி. மாங்கலிய சூத்திரன்- திருமாங்கலியக் கயிற்றுக்கு உரிய தேவேந்திரன். என் உரைத்தும்- யாரென்று கூறுவேன்.
பொ - ரை: இவன்; மனவுறுதியுடைய அடியவர் வாழும் குன்றக்குடியில் அருள்பொழியும் பெருமானைப்பற்றித் தெளிவுகொள்ளாத தன்மையனும் அச்சங் கொண்டவனுமாகிய பிரமதேவனோ ? வேனிற்காலத்துக்குரிய மன்மதனோ ? யானையின் துதிக்கையுடைய விநாயருக்குத் தம்பியாகிய முருகனோ ? முன்னைத் தாலிக்கயிறு கழற்றாத தெய்வத்தகுதியுடைய இந்திராணிக்குத் தாலிக்கயிறு கட்டிய தேவேந்திரனோ யாரென்று கூறுவேன் ?
வி-ம்: முருகனால் குட்டிச் சிறையிடப்பட்டவனாதலின் புன்கண்நோக்கினைப் பிரமனுக்கு அடையாக்கினார்.
தலைவன் தலைவியைக் கண்டுயாரோ என்று ஐயுறுவதே அகத்துறை இலக்கியக்கியமரபு. பெரியபுராணம் அகத்துறை இலக்கியமன்றாதலின் பரவையார், சுந்தரரை “ முன்னேவந்து எதிர்தோன்றும் முருகனோ .......” என்று ஐயுற்றதாகக் கூறும். கலம்பகமும் அகத்துறை இலக்கியமன்றாதலின் தலைவி ஜஐயுறல் அமைந்தது.
-----------
90 . புறங்காட்டல்.
ஊடலால் தலைவி முதுகுகாட்டிப் படுக்கையில் கிடப்பதுகண்டூ தலைவன் கூறுதல்.
கட்டளைக் கலித்துறை.
உரைக்கும் தகைக்குகன் குன்றையன் நீர்நும் முழைக்கனகம்
நிரைக்கும் சுவர்க்கத் தொடுமதி மண்டலம் நேடிஎன்உள்
கரைக்கும் சுவைஅமு தம்பெறு மாறு கருதிவந்தேன்
விரைக்குந் தளவிடம் காட்டுகின் றீர்என் விதிவசமே.
கு - ரை: உரை- புகழ். கனகம்நிரைக்கும்- பொன்னரி மாலைவரிசையுடைய. சுவர்க்கம்- முலைகள். மண்டலமதி- வட்டநிலா முகம். நேடி- விரும்பி. சுவைஅமுதம்- இதழ்அமுது. குந்தளஇடம்- கூந்தல் படியும் முதுகு.
பொ - ரை: புகழத்தக்க தகுதிவாய்ந்த முருகனது குன்றக்குடி ஒத்தவரே ! உமது வட்டநிலாவாகிய முகத்தையும், பொன்னரிமாலை வரிசைகடிய முலைகளையும் விரும்பி, என்மனம்கரைக்கும் இதழமுதம்பருகவந்தேன். ஆனால் மணக்கும்கூந்தல் படியும் முதுகைக் காட்டுகிறீர் - குப்புறப்படுத்துள்ளீர். இது என்விதிவசம்..
-------------
91. பாணனை முனிதல் .
பரத்தையிற் பிரிந்த தலைவன் அனுப்பிய பாணனைத் தலைவி கோபித்தல்.
விதிக்கும் படைக்கும் தொழில்காட்டும்
வேலோன் வயின தேயன்வெரிந்
மேலோன் மருகன் குன்றையிடை
மிடைதீ மடங்கல் அடங்கலும்தாய்க்
கொதிக்கும் உழக்கில் கண்மணிப்பூங்
குழைக்கா தினைக்கா துறத்துயரி
கொடுமை கொளுவ எழுசுரத்தைக்
கூட்டி இசைக்கும் பாணாவோ
மதிக்கும் தீந்தண் குரல்துத்தம்
வளர்கைக் கிளைகண் உழைஅழகு
வழங்கும் இளிவி எரிதாரம்
மானும் எமரை வருத்தாமல்
துதிக்கும் மடஆ டவர்க்கு)இறைதிண்்()
உறுபூ தரம்அம் சுரத்தைஇணை
துதைகந் துகவெம் தருமுலையைத்
தோய்வார்க் கூட்டி இசைப்பாயே.
கு - ரை: விதி- நான்முகன். வயினதேயன்- கருடன். வெரிந்- முதுகு. மேலோன்- எறிவரும் திருமால். மிடைத்- செறிந்தவிரகத்த். மடங்கல் அடங்கலும்- நோய் முழுவதும். தாவிக்கொதிக்கும்-மூண்டுசுடும். உழக்கில்- துன்பத்தில். பூகணமணிக் குழை- அழகியபருத்த மணிகள் பதித்தகாதணி. காதுற- கொல்ல. துயரி- துன்பம் செய்து. கொடுமை கொளுவ- கொடிய தீமூட்ட. குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழிசைப்பெயர்கள். அம்சுரத்தை- அழகிய இசையினை. மடஆடவர்க்கு இறை- அறிவற்ற ஆண்மக்களுக்குத் தலைவனை.. திண்டுஉறு பூதரம்- பருத்த மலை. இணைத்துதை- இரண்டும்நெருங்கிய. கந்துகம்- பந்து. வெம்தருமுலை- ஆசைதரும் முலைகள். தோய்வார்- தோயும் பரத்தையர். மதிக்கும்தீந்தண் குரல்...........அம் சுரத்தை எமரைவருத்தாமல் மட ஆடவர்க்குஇுறை துதிக்கும் திண்டு உறு இணை பூதரம் துதை கந்துக வெந்தருமுலை தோய்வார்க் கூட்டிசைப்பாய் என்று கூட்டுக..
பொ - ரை: நான்முகனுக்கும் படைக்கின்ற தொழிலினை வழங்கும் வேலவனும், கருடன்முதுகில் ஏறிவரும் திருமால் மருகனும் ஆகியபெருமான் எழுந்தருளியுள்ள குன்றக்குடியில், செறிந்த விரகத்தீயாகியநோய் முழுவதும் மூண்டுசுடத் துன்புறும் தலைவியின் அழகிய பருத்த மணிகள்பதித்த காதணிஅணிந்த காதுகளில் கொடிய தீமூட்ட இசையை இசைக்கின்ற பாணனே ! போற்றத்தக்க இனிய இன்பம்தரும் குரல் துத்தம் வளர்கைக்கிளை பெருமை பொருந்தியஉழை அழகுணர்ச்சி வழங்கும் இளி விளரி தாரம் ஆகியஏழ் இன்னிசையால் எம்போன்றவரை வருத்தாமல், அறிவற்ற ஆண்மக்களுக்குத் தலைவனான என்னவன் தோய்கின்ற துதிக்கும் மலையொப்பப் பருத்து, ஆசையூட்டும் இருபந்துகள் ஒத்த முலைகளையுடைய பரத்தையரை அழைத்து வைத்து இசைப்பாயாக.
வி - ம்: ஏழிசைப்பெயர்களும் வரிசையாக வந்தமை காண்க.
-------------
92 . இதுவும் அது.
நேரிசை வெண்பா.
பாட்டுக்கு) உறும்குன்றைப் பண்ணவன்நன் நாட்டிலுன்புன்
பாட்டுக் குறும்ப அறிவோம் பாணனே - கேட்டு) எமர்உள்
வாடஅதி ஆகுலம்ஆழ் வார்ஆ தலின்ஒழித்தி
கோட வதிஆ குலம்.
கு - ரை: பாட்டுக்கு உறும்- புகழ்ச்சிக்குப் பொருத்தமான. பண்ணவன்- கடவுள். நாட்டில்- நேமநாட்டில். பாட்டுக்குறும்பு- பாடலின் கீழானதன்மை. எமர் கேட்டு உள்வாட. அதி ஆகுலம்- அளவற்ற துன்பம். கோடவதி ஆகுலம்- யாழின் ஆரவார ஒலி.
பொ -ரை: புகழ்ச்சிக்குப் பொருத்தமான குன்றக்குடிக் கடவுளின் வளமான நேமநாட்டுப் பாணனே ! உனது பாட்டின் கீழானதன்மையை அறிவோம். அதனைக்கேட்டு எம்மவர் மனம் வாட, அளவற்ற துன்பத்தில்ஆழ்வர். ஆதலின் உனது யாழின் ஆரவார ஒலியைஎழுப்பாதே.
---------
93 . வெறி விலக்கல்.
தலைவியின் காமநோய் தவிர்க்க ஆடுவெட்டிப் பொங்கலிடும் தாயரைநோக்கிப் பாங்கிதடுத்து அந்நோய்தணிக்கும் வழிகூறுதல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
குலைமொய்காய்த் தெங்(கு)அயல்கூழ் தடக்குருகு
நீர்அயலில் குலவித் தோன்றும்
அலைகொள்வான் மீனஇரா சியைக்கொத்தச்
சுற(வுஎழும்பி ஆகா யம்தாய்க்
கொலைசெய்நீள் யானைஎனக் கற்பதருக்
கிளைமுறிக்கும் குன்றை சேர்த்திர்
இலைநெய்வார் தருகோடி அசியில்வெள்
ளையைக்கிழிப்பீர் இரும்பூஒப் பீரே.
கு - ரை: தெங்குக்காய்- தேங்காய். குருகு தடநீர் நிழல்- ஒளிபொருந்திய குளத்து நீரின்நிழலில். வான் அலைகொள்- வானில் அலையும். மீன இராசி- விண்மீன் கூட்டம். தாய்- தாவி. சேர்த்திர்- சேர்ந்தவர்களே. இலை- கூர்மை. கோடி- நுனி. அசியில்- வாளாயுதத்தால். வெள்ளையை- வெள்ளாட்டை. கிழிப்பீர்- வெட்டுகிறவரே.
பொ - ரை: தனது பக்கங்களில் தெங்கங்காய்கள் குலையாகச் செறிந்த தென்னந்தோப்புச் சூழ்ந்த குளத்தின் ஒளிபொருந்திய நீரில்நிழலாகத் தோன்றும், வானில்அலையும் விண்மீன்கூட்டத்தைக் கொத்த, குளத்துச் சுறாமீன் வானில்தாவி, கொல்லும் பெரியயானைபோல் கற்பகமரத்தின் கிளையை முறிக்கும் வளமார் குன்றக்குடியைச் சேர்ந்தவர்களே ! நெய்பூசப்பெற்ற கூர்நுனியுடைய வாளாயுதத்தால் வெள்ளாட்டினை வெட்டவுள்ள இரும்புமனம் கொண்டவர்களே ! வி- ம்: விண்மீனைக் கொத்தமுயன்றசுரா, கற்பகத்தின் கிளையை முறித்தது போல், நீர் இவள் நோய்தீர்க்க எண்ணி வெள்ளாட்டை வெட்டுகிறீர் என்று சாடுகிறாள். இ - பு: வெள்ளை- காராட்டை வெள்ளை என்றது மங்கலவழக்கு. இச்செய்யுள் குளகம்.
------------
94 . இதுவும் அது.
இருக்குஓலம் இட்டும்அறி யாதமயில்
மலைச்செவ்வேள் என்றும் தீராத்
திருக்கோலம் ஒருகால்கண்((௫) அயர்ந்துள்ளேன்
அறுகால்பூஞ் செழுந்தேன் மாந்தி
மருக்கோல்அம் புயங்கிடக்கும் வகைகிடக்கும்
தவமிழைக்கும் மாண்பி லேன்௧கண்
குருக்கோல மகளிர்அம்மை இம்மையும்மை
இயற்றிய(கு)என் கூறி டீறே.
கு - ரை: ஓலமிட்டும்- முறையிட்டும். தீராத் திருக்கோலம்- அழிவற்ற தெய்வ அழகு. அயர்ந்துளேன்- என்வசம் இழந்தேன். மருக்கோல்- மணம்பொருந்திய. அம்புயம்- அழகிய தோள்கள். குருக் கோலம்- நிறத்துடன் அழகுமுடைய. மகளிர் அம்மை- பெண்களாகிய தாய்மாரே. இம் மை- இந்தவெள்ளாடு. உம்மை- முற்பிறப்பு. இயற்றியது- செய்தபாவம்.
பொ - ரை: நிறத்துடன் அழகுமுடைய பெண்டிராகிய தாய்மாரே ! இருக்குவேதம் முறையிட்டும் அறிந்துகொள்ள இயலாதவனாகிய மயில்மலை முருகப்பெருமானின் அழிவற்ற தெய்வஅழகை ஒருதடவைகண்டு என்வசமிழந்தேன். அவனது திருத்தோள்களில் கிடக்கும் மணமும் அழகுமுடைய மலர்மாலையில் மிக்க தேன் பருகிக்கிடக்கும் ஆறுகால்வண்டுகள் போன்றுஅவன்தோளில் கிடக்க விரும்பும் என்பொருட்டு இந்தவெள்ளாடு உங்களுக்குச் செய்தபாவமென்ன ? கூறுங்கள். வி-ம்: வடமொழி வேதங்கள் இறைவனை அறியவியலாமைகுக் காரணம். அவை பாசஞானம் ஆதலின் என்று “ஐயா எனஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே” என்ற சிவபுராணத்தொடருக்கு விளக்கம்தருவார் மகாவித்துவான் ௪. த அவர்கள் தமது குருவருள் விளக்க விருத்தியுரையில். “வேதங்கள் பல்வேறு காலங்களில் பலரால் அருளப்பெற்றவை” என்றஅறிஞர்களின் ஆய்வுமுடிவு இங்கு எண்ணத்கதக்கது. தலைவியின் விரகத்தைத் தோழி தன்மேலேற்றிக் கூறுகிறாள்.
---------
95. அடகு
கீரை விற்கும் பெண்ணொருத்தியைக் கண்டுூ மயங்கிய தலைவன் கூறுதல்.
எண்சீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
கூர்ந்தவள மயில்மலைநீள் மறுகுதொறும் அடகைக்
கூவிநொடை செய்விர்முலை சிறுகீரை எதிர்ந்தோம்
தேர்ந்தபெரு மாயையின்வல் லாரைஅறி யேம்இத்
தெள்ளுபயம் சூழ்காவல் சிறைஉலகின் உமைப்போல்
ஈர்ந்ததணை மலர்க்குப்பை மேனிசெறி வித்தீர்
இறந்தநிந்தை வேளைவசம் இயற்றிஅவன் கொண்டே
ஆர்ந்தகம லாசனையன் ஸீர்நிறத்திற் குப்பொன்
னாங்காண்இப் பங்கேனும் ஆர்சொல்வார் ஒப்பே.
கு - ரை: வளம்கூர்ந்த- வளம் மிக்க. அடகு- கீரை. நொடை- விலை. முலை சிறுகீர் ஐ2- முலையாற் சிறியவராகிய உம்மை. எதிர்ந்தோம்- எதிர்ப்பட்டோம். வல்லாரை- வல்லவரை. தெள்ளு பயம்- தெளிந்த நீர். சிறை- காமம். ஈர்ந்த- குளிர்ச்சியுடைய. இறந்தமலர்க்கணைக் குப்பை- அளவற்ற மன்மதனது மலரம்பு ஆகிய செல்வம். மேனி செறிவித்தர்- உடம்பில் செறியுமாறு செய்தீர். நிந்தைவேளை- நிந்தனைக்குரிய மன்மதன். ஆர்ந்த- ஒளியுடன் மின்னும். கமலாசனை- திருமகள். பொன்னாங்காண் இப்பங்கேனும்- இந்தக் கூறினையாவது பொன்னாகும்காண். ஒப்பு ஆர்சொல்வர்.
பொ - ரை: வளம்மிக்க மயில்மலையின் நீண்டவீதிகளில் கரைகளை விலைகூறி விற்கும் முலையாற் சிறியவராகிய உம்மை எதிர்ப்பட்டோம். தெளிந்த கடல்நீர் சூழ்ந்த உலகில் உம்மைப்போல் காமமாயையில் தேர்ந்த வல்லவரை நாம் கண்டதில்லை. மன்மதனது குளிர்ச்சியுடைய மலரம்புகளை உம்உடம்பில் செறியுமாறு செய்வித்தீர். அளவற்ற நிந்தனைக்குரிய மன்மதனைக் கையகப்படுத்திக் கொண்டு, ஒளியுடன் மின்னும் பொன்னாகக் காணப்பட்ட உமதுஅழகின் சிறுபங்கினுக்குக்கூட திருமகளை ஒப்பாகக் கூறயாரலும் இயலாது. (திருமகளைக் காட்டிலும் பேரழகி என்றான்.)
வி-ம்: இச்செய்யுளில் சிறுகீரை வல்லாரை குப்பைமேனி தைவேளை பொன்னாங்கண்ணிக் கீரையைக்குறிக்கும் பெயர்கள் வெவ்வேறு பொருள்களில் வந்த நயம் காணலாம்.
-------------
96 . தலைவன் கலவிநலம் கண்டுூ தலைவி கூறுதல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.
ஒப்புஉயர்(வு)எப் புவனத்தும் கிடையாத
குன்றைவரை உரவோன் யாண்டும்
செப்பும்இசைக் கொழுந்(ு)ஓடிப் படர்நேம
நாட்டைமுறை செய்யும் வேந்தே
அப்புமுகில் யாப்ப), அவிழ நாண்அகல
வளைசிதற ஆடை சோரத்
துப்புவெளுப் புறவிழிகள் சேப்பநீ்
செய்கலவித் தொழில்நன் றாமே.
கு - ரை: உரவோன்- வலிமைமிக்கவன். இசைக் கொழுந்து- புகழ்மேன்மை. நேமநாடு- குன்றக்குடியைச் கூழ்பகுதி நேமநாடு எனப்பெறும். அப்புமுகில்- நீர்த்துளியுடைய மேகமொத்த கூந்தல். யாப்பு அவிழ- கட்டுஅவிழ. சோர- நெகிழ. துப்பு- பவளம் போன்ற உதடு. சேப்ப- சிவக்க.
பொ - ரை: எவ்வுலகிலும் ஒப்போ உயர்வோ இல்லாத குன்றக்குடி மலையில் எழுந்தருளியுள்ள வலிமைமிக்கவனாய், புகழின்மேன்மை எவ்விடத்தும் ஓடிப்படர் நேமநாட்டினை ஆளும்பேரரசனே ! நீ நீர்துளிகளுடைய மேகம்ஒத்த கரியகூந்தல் கட்டவிழவும், நாணம்அகலவும், வளைகள் ஒடிந்துசிதறவும், ஆடைரெகிழ்ந்து கிடக்கவும், பவளம்போன்ற உதடுவெளுக்கவும், விழிகள்சிவக்கவும் என்பால் செய்த கலவித்தொழில் நன்றேநிகழ்ந்தது.
வி - ம்: கூழைவிரித்தல், கலையும் நாணும் அகலல், வளையல் ஒடிந்து சிதறல், “விழியின்வெளுப்பை இதழ்வாங்கல், இதழின்சிவப்பை விழிவாங்கல்” என்பன கலவித் தொழில் மெய்ப்பாடுகள்.
--------
97. தென்றலால் வரும்துன்பத்தைத் தலைவி பாங்கியர்க்குச் சொல்லுதல்.
நேரிசை வெண்பா.
ஆமேய்க்கும் கோன்மருக னார்குன்றைத் தோழியிர்என்
ஆம்ஏய்க்கும் வெம்பொருள்இவ் அண்டத்தே - ஈம்ஏற்கும்
நீரம் சுமந்தால் நிலம்தொலைக்கும் ஊழிவளி
நீர்அஞ்சு மந்தாநி லம்.
கு - ரை: ஆமேய்க்கும்- பசுக்கூட்டத்தை மேய்க்கும். ஏய்க்கும்- பொருந்தும். வெம்பொருள்- விரும்பும் பொருள். நீரம்- கடல். சுமந்தால்- பெருகின். ஈம் ஏற்கும்- பிணம் ஆக்கும். தொலைக்கும்- அழிக்கும். மந்தாநிலம்- தென்றல். நீர் அஞ்சு ஊழிவளி- நீங்கள் அஞ்சுகிற ஊழிக்காற்றானால். என் ஆம்- உலகம் என்னவாகும் - பேரழிவாகும்.
பொ -ரை: பசுக்கூட்டத்தை மேய்க்கும் கண்ணபிரானாம் திருமால் மருமகனாகிய முருகப்பெருமானது குன்றக்குடித் தோழியரே ! விரும்பும் பொருளுடைய இவ்வுலகில் பொருதும் கடல்நீர் பெருகினால் நிலத்தைப் பிணமாக்கும். இந்த அண்டத்தில் தென்றல் ஊழிக்காற்றானால் என்னவாகும்? தென்றல் தன்னை ஊழிக்காற்றாகக் கொல்கிறது என்றாள்.
-----------
98 . நாணிக்கண் புதைத்தல்.
தனியிடத்துத் தலைவனைக்கண்டூ வெட்கம்மேலிடத் தனது கைகளால் கண்களைப் பொத்திக்கொண்ட தலைவியைத் தலைவன் வினாதல்.
கட்டளைக் கலித்துறை.
நிருவாதி ஈயும் இருகால் குளம்புக நேர்எமக்குத்
திருவாதி ரைப்புனி தாமிர்த மாஎனச் செப்புமொழி
உருஆதிர் நல்அ சலம்மறைத் தீர்குன்றை பூர்அனையீர்
வெருவாதிர் என்று மறைத்தீர்கொல் அத்தத்து மீன்களையே.
கு-ரை: புனித அமிர்தமாம்- புனிதமான அமுதமயமானது. நிருவாதி- துன்பமின்மை - இன்புறுதல். எமக்குநேர்- எமக்கு உடன்பட்டு. இருகால் குளம்- அல்குல். உருஆகிர்- அழகுடையவரே. நல் அசலம்- நலமான மலைகள் - முலைகள். வெருவாதிர்- அஞ்சாதீர். மீன்கள் அத்தத்து- மீன்களொத்த கண்களைக் கைகளால்.
பொ - ரை: திருவாதிரை நாளில் வாய்த்த புனிதஅமிர்தமாகச் சொல்லும் சொல்லுடன் அழகுமுடையவரே ! இன்புறுதலைதக் தரும்உமது அல்குலில் படிய எனக்குஉடன்பட்டதால் குன்றக்குடி ஒத்த நலமுடையவரே ! உமது நலமான முலைகளை ஆடையால் மறைத்தீர். அஞ்சாதீர் என்று உமது கைகளால் மீன்கள்போன்ற கண்களையும் மறைத்தீர் போலும்.
இ - பு: கொல் - ஐய இடைச்சொல்.
-------
99 . தலைவியைத் தலைவன்மணந்து இல்லறவாழ்வு எய்தப் பாங்கி வாழ்த்துக்கூறுதல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
மீகாமன் போலஉடல் கலம்ஒட்டு விக்குமயில்
வெற்பன் பொற்பில்
மாகாமன் தாதைமனம் மகிழும்ஒரு திருமருகன்
வள்ளி காந்தன்
போகாமன் இசைநேம நாட்டுஇறைவ வேட்(டுஇவளைப்
புணர்ந்து வாழ்தி
சாகாமன் மதனும்ஒருக் காலும்வருந் தாஇரதி
தானும் போன்றே.
கு - ரை: மீகாமன்- மாலுமி. உடல் கலம்- உடம்பாகிய மரக்கலம். பொற்பின்- அழகிய. காமன் தாதை- திருமால். மா ஒருதிரு மருகன்- அழகுடன் ஒப்பற்ற தெய்வத்தன்மையுமுடைய மருமகன் - முருகன். காந்தன்- கணவன். போகா மன் இசை- நீங்காது நிலைத்த புகழ். வேட்டுப் புணர்ந்து- விருப்புடன் கூடி.
பொ - ரை: உடம்பாகிய மரக்கலத்தை மாலுமிபோல் நாங்கள் செலுத்த அருளும் மயில்மலையானும், அழகிய மன்மதனின் தந்தையாகிய திருமாலுக்கு அழகுடன் ஒப்பற்ற தெய்வத்தன்மையுமுடைய மருமகனும், வள்ளிநாயகிக்குக் கணவனுமாக விளங்கும் நீங்காது நிலைத்த புகழுடைய நேமநாட்டு இறைவனே ! அருள்தரு சண்முகநாதப் பெருமானே ! என்றென்றும் இன்புற்றுவாழும் இறப்பில்லா மன்மதனும் இரதிதேவியும்போல் இவளைக்கூடி வாழ்க.
வி-ம்: “ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே.....” என்ற ஆறாந் திருமுறைத் தனித் திருத்தாண்டகத்தை உட்கொண்டது “ உடல்கலம் ஒட்டூவிக்கும் மயில் வெற்பன்” என்றதொடர்.
இ - பு: வாழ்தி - வியங்கோள் வினைமுற்று. இச்செய்யுளில் இரு உவமை பயணிகள் உள.
-------------
100 . மங்கல வாழ்த்து.
நிலைமண்டில ஆசிரியப்பா.
ஏனல் பசும்புனக் கூனல் கவின்குரல்
கிள்ளைமுன் போக்கிக் கொள்ளைகொள் ளாது
கொடிச்சிறு மருங்குல் கொடிச்சியர் இதணில்
காந்தள்அம் கையில் பாந்தள்அம் செம்மணிக்
குணில்விசைத்து) எறியூப் பணின்மிகக் கூவும் 5
கோகிலம் சிறிதும்ஒப்(ு) ஆகிலம் என்னாக்
கொக்கு) அடைக் கலமாப் புக்கு, அடை கலப்ப
வாய்ஓ வாக்கிளத்து) ஆயோத் தொனியும் ;
துணங்கல் யாண்டும் அணங்(ககு) உறலோடு
வெள்ளென்று வெளிற ஒள்ளென்று சமழ்ப்ப 10
நேர்(வு)இடம் ஒன்று)இலாக் கார்(வு)இடம் உருக்கொளீஇத்
திரிந்தனர் விற(வு உளர் பரிந்தனரன்றி
நெடும்புட் கரத்தில் கொடும்புலி காட்டினும்
நிணம்கழி அவாய்க்கொடு கணம்கழி முன்னர்த் ;
தோன்றமீண்(டு) உறுவன நான்ற தாரைய 15
திருத்திஉள் செறித்துப் பொருத்திவார் விசித்த
சிறுமணிக் கோவை யுறுமணி கறங்கும்
கழுத்தின சுணங்கன் குழுத்துணை காப்ப ;
நீள்வலை சிமிழ்த்துக் கோள்வினை வேளாத்
தொண்டகம் துவைக்கக் கண்(()அகம் கலங்கி 20
னம் சல்லியம் நானம் குடாவடி
சசம்ச் கரம்வரை அசம்சா ரங்கம்
எதிர்இடத்து) ஒளிப்பவிண் வெதிரிடத் தெழியா
வெளிச்செல ஊக்கிய அளிப்பகை முழக்கும்
தண்டம் தேர்புவே தண்டம்போல்வன ; 25
பூட்சிக் குஞ்சரம் மீட்சிப் பேறு) இல
மாட்டிய அமைத்த சாட்டியப் பயம்பில்
சீயம் சித்திர காயம் பூட்கையும்
வீழந்துபே துழப்பச் கூழ்ந்துகை கொட்டி
இடிக்கும் சும்மையும் : பிடிக்கும் வேட்கையில் 30
சாரிகை சகோரம் காரிகைக் குறும்பூழ்
சிரவம் கம்புள் அரவம் புறவம்
ஒலிப்பில் கனைக்கும் கலிப்பும் ; தீராக்
கங்குலான் கானம், மங்குல் இரைப்பும்
அருவிர்த்து) இழியும் அருவி ஓசையும் 35
இறாலுடைந்து) ஒழுகும் நறாவின் அரவமும் ;
காகதுண்ட டம்புன் னாகம் சண்பகம்
திலகம் சந்திர திலகம் பாடலம்
குரவம் கேசரம் மரவம் கோங்கம்
துன்னும் துடவையில் பன்னும் சிகாவளம் 40
அகண்டமும் நிரைத்த சிகண்டம் விரித்துக்
கண்ணுள்செய் ஏங்கலும் எண்ணுள் அடங்காத்
தொழுதிவெந் துழனியும் ; கொழுதிவண்்டு) இமிர்ந்து
பிரசம்(ஊற்று) எடுக்கும் சரசம்இந் தீவரம்
தவளைதேன் குடிக்கும் குவளையொடு கெழுமலின் 45
விமலம் செறிந்தஈர்ங் கமலம் தெரியா
அருங்கடிப் புதுப்போது ஒருங்கு துதையப் ;
பொதியத் தார்அணி பதியவைத் தன்ன
பான்மை தெரிக்கும் மேன்மை சூழ்கரை
நல்வலம் குயிற்றும் பல்வலம் எங்கும் 50
கரண்டம் மராளம் குரண்ட சாரசம்
உம்பலும் வேறு சிலம்பலும் ; யாண்டும்
௧௬௮ண் ணாதுசெய் திருவண் ணாமலைத்
தீது)இ னம்பெறா ஆத் னத்தில்
சைவ சிகாமணி தெய்வ சிகாமணி 55
முன்னோன் வழிவரும் பன்னோன்புு) இயற்றிய
எண்ணிலாப் பெரியோர் நண்ணிவற் றிருந்த
திருமடத்து) எங்கணும் பெருமடம் கழித்துக்
கற்றும் கேட்டும் முற்றும் உணர்ச்சியால்
உற(வு)எலாம் உவர்த்துத் துறவுமேற் கொண்டு 60
மெல்லாடை விடுத்துக் கல்லாடை உடுத்து
நெஞ்(சு உடை யாது செஞ்சடை வளர்த்து
நீறும் கண்டியும் வறுபெறப் புனைந்து
கவலும் தொழில்ஒர் இச் சிவலிங் கார்ச்சனை
வாசனை மலரால் நேசமோ(ு) ஆற்றி 65
உய்யும் கருத்தொடு செய்யும் பூசையில்
தண்டாகு) அடிக்கும் கண்டா நாதமும் ;
பழுதாப் பகரா எழுதாக் கிளவி
வெந்தழல் வேள்வி அந்தணர் நாவில்
ஆரவா ரம்புகல் ஆர வாரமும் ; 70
மாஅலர் நெடுநிலம் காவலர் இளஞ்சிறார்
அடுமரம் கொல்வேல் கொடுமரம் ஒள்வாள்
சமரம் பயிலுழித் தமரமும் ; எட்டியர்
காவணம் நிழற்றுறும் ஆவண மறுகில்
பண்டம்எண் ணற்றன கொண்டனர் பகரும் 75
களனும்உற்று) எத்தகை வளனும் குழுமக் ;
குரம்பு தடுத்துநீர் நிரம்பும் பண்ணையில்
தொழுதுசே றாக்கி உழுதுசொல் வித்திப்
பசும்பயிர் காணலும் விசும்(பஅயிர்த்(து) அஞ்ச
ஆற்றுகா லாட்டியர் நாற்றைப் பறித்து 80
நடுங்கால் செருக்கின் இடும்தீங் குரவையும் ;
பொற்கதிர் காட்டிய நெற்கதிர் முற்றும்
பதத்திற் களைந்துபல் விதத்திற் பெரும்போர்
தோய்ந்(து)அந் தரம்தொட வேய்ந்து பகட்டில்
கவைக்கால் மாழ்கத் துவைக்காப் பலாலம் 85
கழித்த செஞ்சாலி பழித்த பதடியைத்
தூற்றி ஒழுகையின் ஏற்றிக் கொடுபோம்
கோடணைப் பெருக்கும் : வீடுஅணை வாரை
முன்கலந்து) இருத்திஅம் பொற்கலம் திருத்திக்
கருமைகண் டறியா அருமைஒண் பாத்தும் 90
விருப்புநேர் விக்கும் பருப்பும் நேயமும்
துவையும்நற் டாணம் அவையும் கீரமும்
பெருகும் வெண்பெருகும் பருகும் தேறலும்
கொழும்பால் மல்கிய செழும்பா யசமும்
வாழை வருக்கைதே மாழையின் கனியும் 95
கண்டமும் நானா கண்டசிற் றுண்டியும்
திருத்திஉண் டாம்இன்றறு)என்(று) அருத்தியும் மீண்டும்
முன்பின் பாராது) அன்பின் வட்டிப்ப
மாற்றலர்க்(கு) இடைந்த ஆற்றலர் அர(வ)இல்
போதும் இடேன்மின்என்(று) ஓதும் ஓதையும் ; 100
ஒன்றி என்றும் பொன்றல் இன்றி
உவாக்கடல் அடக்கும் அவாக்கொடு கூவி
ஏற்றது கீழாத் தோற்றுவித்து) ஓங்கி
மேல்உயர் குன்றை மால்வரை மோட்டில்
சம்புமூ லம்தரும் பம்பும் ஈராறு 105
கண்அலர்ந்(து) ஒளிர்செவ் வண்ணவான் கரும்பு ;
தரளத் தொங்கலும் சரளச் சின்னமும்
கண்டிகைப் பிக்கும் தண்டிகை ஊர்தியும்
ஆழப் புனல்தரை வாழப் பெறிஇயுறப்
புல்லிநம் கோமள வல்லி தழுவியும் 110
பண்அழிக் கும்குயில் நண்ணிளங் கரிணி
துய்ச்சும் இசைந்த மெய்ச்சுவைக் கன்னல் ;
வானவர் மருளும் தானவர்க்கு) அரசை
அத்திமா வைத்தெறும் நித்திய வேழம் ;
தயித்தியர்க்(கு) அழிந்த பயித்திய அண்டர் 115
குற்றுயிர்க் கிடக்கையில் பற்றற உயங்கிச்
சாதலும் பிழைப்பது) ஆதலும் அல்லேம்
சுதையோ மருள்விடம் அதையோ அருந்தினம்
மருந்து உண் ணாமை பொருந்தும் நம்மில்
திசாமுகம் கவற்றும் நிசாசரர் வலியர் 120
என்னாத் தம்முள் இன்னாப் படரும்
வெருள்நனி துரப்ப ; அருளமிழ்கு) ஒழுக்கிய
கனற்கண் பிறந்து புனற்கண் கிடந்து
கார்த்திகை வளர்த்த சீர்த்திய கழை ; மெய்த்
தண்மையும் போதத் திண்மையும் தவாது 125
பாகும் பொதுளிஉள் ஆகும் வயிரம்
அற்பமும் இன்றிப் பொற்ப ஆனாமை
துன்னிஎவ் உயிர்க்கும் சுகம்தரும் அதனை
முன்னிப் பழிச்சுநர் மன்னிவாழ் வாரே. 129
கு - ரை: ஏனல்பசும்......தொனியும்(அடி 1 - 8) பசும்புன ஏனல்- வளமான தினைக்கொல்லை. கூனல் கவின்குரல்- வளைந்த அழகிய கொத்து. இதண்- காவல் பரண். கொள்ளை கொள்ளாது முற்போக்கி- கொத்கித் தின்னுமுன் விரட்டி. கொடிச்சியர்- குறத்தியர். பாந்தளம் செம்மணி- முதிர்ந்தநாகங்கள் கக்கியஅழகிய சிறந்த நாகரெத்தினம். குணில்- கவண். விசைத்து எறியூ- வேகமாய் எறிந்து. பணின்மிக- இசையைக் காட்டிலும் சிறப்பாக. கோகிலம்- குயில். கொக்கு- மாமரம். வாய் ஓவாக் கிளத்து- இடைவிடாது வாயினால்சொல்லும். ஆயோத் தொனி- கிளிகளை ஓட்டும் ஆயோ என்ற ஒலியும்.
பொ - ரை: வளமான தினைக்கொல்லையில், முற்றியதால் வளைந்த அழகிய தினைக்கொத்தினைக் கொள்ளை கொள்ளவரும் கிளிகளை அவைதின்னுமுன் விரட்டும் கொடிஒத்த சிற்றிடையுடைய குறத்தியர், காவல்பரணில் இருந்துகொண்டு தமது காந்தள்போன்ற கையால் நாகப்பாம்புகள் கக்கிய அழகியசிறந்த நாகரெத்தினத்தைக் கவணில்வைத்து எறியும்போது, குயிலும் ஒப்பாகோம்என்று மாமரத்தை அடையுமாறு இசையினும் சிறப்பாகச் சொல்லும் “ஆயோ: என்ற ஒலியும்:
வி - ம்: குறத்தியர் நாகரெத்தினத்தால் கிளிஓஒட்டியது, “ குழைகொண்டு கோழி எறியும் வாழ்க்கையர்” என்ற முன்னோர் மொழியை நினைவூட்டும்.
கு - ரை: துணங்கற லோடு.......முன்னர்த் . (அடி9 - 15) துணங்கு அறலோடு- துணங்கைக்கூத்து முடியவும். அணங்கு உறல்-அணங்காடுதலுடன். வெள்என்றுவெளிற- வானம் வெளிறி விடிய. ஒள்என்று- விடிந்ததென்று. சமழ்ப்ப- வருந்த. இடம் நேர்வு ஒன்றுஇலா- வலிமையில் ஒப்புமை யாருமில்லாத. விடக்கார் உருக்கொளீ- விடத்தின் கரிய உருவமுடன். விறவுஉளர்- வெற்றியுடையவராய். பரிந்தனரின்றி- இரக்கமின்றி. புட்கரம்- அம்பு. புலி காட்டிலும்- புலியைவிட. நிணம் கழி அவாய்க்கொடு- புலாலில் மிக்க விருப்புடன். திரிந்தனர் முன்னர்- திரியும் வேடர்முன்னே.
பொ - ரை: துணங்கைக்கூத்து முடியவும் அணங்காடுதலுடன் வானம் வெளிறி விடிந்ததுஎன்று வருந்தி, வலிமையில் யாரும்ஒப்பற்ற கரியவிடத்தின் உருவமுடன், வெற்றியுடையராய் இரக்கமின்றி நீண்ட அம்புகளுடன், கொடியபுலியைவிட புலாலில் விருப்புடன் திரியும் வேடர்முன்னே,
கு - ரை: தோன்ற.....காப்ப. (அடி 15 - 18) மீண்டு- மறுபடியும். நான்ற தாரை- தொங்கவிட்ட நாக்கு. உறுமணி கறங்கும்- மிக்கமணிகள் ஒலிக்கும். சிறுமணி- சிறியமணிகள். திருத்தி உள் செறித்துப் பொருத்தி- திருத்தமுறக் கோத்துப் பொருத்தி. வார்விசித்த- நீளமாகக் கட்டிய. கழுத்தின சுணங்கன்- கழுத்துடைய நாய். காப்பத் தோன்ற- காத்துவர.
பொ - ரை: தொங்கவிட்டநாவுடன் ஏவியகைச்செய்து மறுபடியும்வருவனவாய், மிக்கமணிகள் ஒலிக்கும் சிறியமணிகளைத் திருத்தமுறக் கோத்துப்பொருத்திய நீண்ட கோவைகட்டிய கழுத்துடைய நாய்க்கூட்டம் துணையாகக் காத்துவர.
கு - ரை: நீள்வலை.....போல்வன. (அடி 19 - 25): கோள்வினை வேளா- பிடிக்கும் செயலை விரும்பி. சிமிழ்த்து- கட்டி. தொண்டகம் துவைக்க- குறிஞ்சிப்பறை முழங்க. ஏனம்- காட்டுப் பன்றி. சல்லியம்- முள்ளம்பன்றி. நானம்- புனுகுப் பூனை. குடாவடி- வளைந்த அடிகளுடைய கரடி. சசம்- முயல். சீகரம்- கவரிமா. வரைஅசம்- மலையில் வாழ்ஆடு. சாரங்கம்- மான். எதிர் இடத்து- தத்தமக்கு எதிர்ப்பட்ட இடங்களில். விண்வெதிர் இடத்து- வானளவு உயர்ந்த மூங்கில்புதரில். தெழியா- பேரொலி எழுப்பி. வெளிச்செல ஊக்கிய- வெளியே கிளம்புமாறு துரத்தும். அளிப்பகை முழக்கு- கருணை காட்டாத பகைமுழக்கமும். தண்டம் தேர்பு- பேரொலியை ஆராய்ந்தால். வேதண்டம்- பொதிகை மலை.
பொ -ரை: விலங்குகளைப் பிடிக்கும் செயலைவிரும்பி அவ்வேடர் நீண்ட வலைவிரித்துக் குறிஞ்சிப்பறை முழங்க, அதுகண்டு மனம்கலங்கிய காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, புனுகுப்பூனை, வளைந்தஅடியுடைய கரடி, முயல், கவரிமா, மலையாடு, மான் முதலியன தத்தமக்கு எதிர்ப்பட்ட இடங்களில் ஒளிந்துகொள்ள, அவற்றை வானளவு உயர்ந்த மூங்கில்புதர்களில் இருந்து வெளிப்படுமாறு முழக்கிய கருணை காட்டாத பகை முழக்கமும் ஆகியவற்றின் பேரொலியை ஆராய்ந்தால் அம்மலை பொதிகை மலைக்கும்.
கு - ரை: பூட்சிக் குஞ்சரம்..... சும்மையும். (அடி 26 -30): பூட்சிக் குஞ்சரம்- பருத்த உடம்புடைய யானை. மீட்சிப் பேறுஇல- மீண்டு வெளியேறாதபடி. மாட்டிய- அகப்படுத்த. சாட்டிய- வஞ்சனையாக அமைத்த. பயம்பு- யானையை அகப்படுத்தும் குழி. சீயம்- சிங்கம். சித்திரகாயம்- வரிப்புலி. பூட்கை- யாளி. இடிக்கும் சும்மை- ஒலிக்கும் ஆரவாரம்.
பொ -ரை: பருத்த உடம்புடைய யானை மீண்டுவெளியேறாதபடி அகப்படுத்த வஞ்சனையாக அமைத்த யானையை அகப்படுத்தும் குழியில் சிங்கம், வரிப்புலி, யாளி ஆகியன விழுந்து மிகவும் துன்புற ,அதுகண்டூ குழியைச் சூழ்ந்துகொண்டு கைகொட்டி ஒலிக்கும் ஆரவாரமும்,
கு - ரை: பிடிக்கும்......கலிப்பும். (அடி. 30 - 33). சாரிகை- நாகணவாய்ப்புள். சகோரம்- சகோரப்பறவை. காரிகைக் குறும்பூழ்- கருநிறத்துக் குறும்பூழ். சிரவம்- கவுதாரிப்பறவை கம்புள்- சம்பங்கோழி. களரவம்- குயில். புறவம்- புறா. ஒலிப்பில் கனைக்கும் கலிப்பு- குரலால் கொக்கரிக்கும் ஆரவாரமும்.
பொ - ரை: பிடிக்கின்ற விருப்பத்துடன் நெருங்கும் போது, நாகணவாய்ப்புள், சகோரம், கருநிறக்குறும்பூழ், கவுதாரி, சம்பங்கோழி, குயில், புறா ஆகியவை தத்தம் குரலெடுத்துக் கொக்கரிக்கும் ஆரவாரமும்.
வி-ம்: தம்மைப் பிடிக்கவருவது பற்றிப் பறவைகள் தம்இனத்தினை எச்சரிக்கும் வகையில் குரலெழுப்பும் என்பர் விலங்கியலார். இவ்வகைக் குரலே இங்கு “ ஒலிப்பில் கனைக்கும் கலிப்பு ” எனப்படுகிறது.
கு - ரை: தீராக்கங்குல் ..... துழனியும். (அடி33 - 43): கங்குல் ஈன் கானம்- மரங்களின் செறிவால் இருள்தரும் காட்டில். மங்குல் தீரா இரைப்பும்- மேகம் இடைவிடாது மழைபொழிதலும். மருவி ஈர்த்து இழியும்- பொருள்களைப் பொருந்தி அவற்றை இழுத்துக்கொண்டு இறங்கும். இறால்- தேனடை. அரவம்- ஒலி. காகதுண்டம்- அகில். திலகம்- மஞ்சாடிமரம். சந்திரதிலகம்- சந்தனமரம். பாடலம்- பாதிரிமரம். குரவம்- குராமரம். கேசரம்- மகிழமரம். மரவம்- குங்குமமரம். துன்னும்- செறிந்த. துடவை- பூஞ்சோலை. சிகாவளம்- மயில். நிரைத்த சிகண்டம்- அடர்ந்ததோகை. அகண்டமும் விரித்து- எல்லையின்றி - பெரிதாக விரித்து. கண்ணுள் செய்- நடனமாடும். தொழுதி- கூட்டம். வெம்துழனி- விரும்பத்தக்க ஒலி.
பொ - ரை: மரங்களின் செறிவால் இருண்ட காட்டில், மேகம் இடைவிடாது மழைபொழிதலால் வழியில்உள்ள பொருள்களைப்பொருந்தி இழுத்துக் கொண்டு இறங்கும் அருவியின் ஓசையும், தேனடை கிழிந்துஒழுகும் ஒலியும்; அகில், புன்னாகம், சண்பகம், மஞ்சாடி, சந்தனம், பாடலம், குரவம், மகிழ், குங்குமம், கோங்கம் ஆகியமரங்கள் செறிந்த பூஞ்சோலையில் எண்ணற்ற மயில்கூட்டம் தமது தோகையைவிரித்து நடனமாடும் விரும்பத்தக்க ஒலியும்.
கு - ரை: கொழுதிவண்டு......துதைய (அடி 43 - 47: கொழுதி- கூட்டமான. வண்டூ இமிர்ந்து- தேனீக்கள் ஒலித்து. பிரசம்- தேன். சரசம்- இனிமை. இந்தீவரம்- கருங்குவளை மலர். கெழுமலின்- நிறைந்ததால். விமலம்- குற்றமற்றதன்மை. ஈர்- புத்தம்புதிய. கமல அருங்கடிப் போது- தாமரையின் சிறந்த மணம்மிக்க மலர். தெரியா- தெரியாதவாறு. துதைய- செறிய.
பொ - ரை: கூட்டமான தேனீக்கள் ஒலித்து இனியதேன்ஊறும் கருங்குவளையும், தவளைகள் தேன்குடிக்கும் செங்குவளையும் நிறைந்ததால், குற்றமற்றதன்மை செறிந்த புத்தம்புதிய சிறந்தமணமுடைய தாமரைமலர் வெளியே தெரியாதவாறு மறைக்க,
கு - ரை: பொதியத்...சிலம்பலும்.(அடி 48 - 52): தார் அணி பொதிய- ஒழுங்கும் அழகும் உள்ளடங்க. பான்மைதெரிக்கும்- தன்மையை விளக்கும். நல்வலம்- மிக்க வலிமை. பல்வலம்- பல இடங்களிலும். குரண்டம்- கொக்கு. சாரசம்- வெண்நாரை. கரண்டு அமர் ஆள- (இரையினைக்)கவரப் போரிட. உம்பல்- எழுச்சி. சிலம்பல்- ஒலித்தல்.
பொ - ரை: ஒழுங்கும் அழகும் உள்ளடங்குமாறு கட்டியதுபோன்ற தன்மை விளங்கும் சிறந்த குளக்கரைகளில் கொக்கும் வெண்நாரையும் இரைகவரப் போரிடும் எழுச்சிமிக்க ஒலியும்,
கு -ரை: யாண்டும்...... கண்டா நாதமும். (அடி 52 – 67): ௧கர௬அண்ணாதுசெய்-பிறவி நெருங்காதுசெய்யும். தீது இனம்- தீயர் இனத்தை. சைவ சிகாமணி- சைவத்தலைமணி. முன்னோன்- ஆதி குருமூர்த்தி. பெருமடம்- மிக்க அறியாமை. கழித்து- முற்றாக ஓட்டி. யாண்டும்- எப்போதும். உறவு- பாசம். உவர்த்து- வெறுத்து. கல்லாடை- காவியாடை. கண்டி- உருத்திராக்கக் கண்டிகை. வீறு- விளக்கம். கவல்- கவலை. உய்யும்- ஈடேற்றம் பெறும். தண்டாது- குறைவின்றி. கண்டாநாதம்- பெரியமணியின் மிக்கஓசை.
பொ - ரை: தன்னை நெருங்கியவர்க்குப் பிறவிநெருங்காது செய்வதும், தீயவர் இனத்தைப் பெறாததும் ஆகிய திருவண்ணாமலை ஆதீனத்தில் சைவத்தலைமணியாய் அருளாட்சிபுரிந்த முதற்குருமூர்த்தி ரீ தெய்வசிகாமணிதேசிக பரமாசாரிய சுவாமிகளின் வழிவருதற்குப் பெருந்தவம்புரிந்த எண்ணற்ற குருமூர்த்திகள் அருளாட்சிபுரிந்த திருமடத்தில், நாடெங்கும்மிக்க அறியாமையை முற்றாகஒட்டியும், தமது கல்வி கேள்விகளால் முதிர்ந்த ஞானம்காரணமாகப் பாசங்களையெல்லாம் எப்போதும் வெறுத்து வாழ்வில் துறவினை மேற்கொண்டும், மெல்லிய வெள்ளாடையடுத்தாது காவியாடை தரித்தும், அருள்நிலையில் மனம் தளராமலும், செஞ்சடை வளர்த்தும், திருநீறும் உருத்திராக்கக் கண்டிகையும் விளக்கமுறப் புனைந்தும், தன்னைப்பற்றிய எவ்வகைக் கவலையுமின்றி, சிவலிங்கமாக விளங்கும் அருள்தரு காளத்திநாதரை நறுமணம்கமழும் மலர்களால் பத்திமையுடன் உலகும் தாமும் ஈடேறும்பொருட்டு நாடோறும் செய்கிற பூசைகளில் குறைவின்றி ஒலிக்கும் பெரியமணியின்- கண்டாமணியின் மிக்க ஒலியும்;
கு - ரை: பழுதாப் ..... ஆரவாரமும். (அடி 68 - 70): பழுதாப் பகரா- பிழையாக உச்சரிக்கப்படாதது, எழுதாக்கிளவி- எழுதப்பெறாததாகிய மறை. வெந்தழல்- விருப்புடன் கூடியமுத்த். ஆர வாரம்- மனம்நிறைந்த அன்புடன்... புகல்- சொல்லும்.
பொ -ரை: பிழையாக உச்சரிக்கப்படாததும் எழுதப்பெறாததும் ஆகியமறைகளை, விருப்புடன் முத்தீ வேட்கும் அந்தணர்கள் மனம் நிறைந்த அன்புடன் சொல்லும் ஆரவாரமும்;
கு -ரை: மா அலர்.......தமரமும். (அடி 71 - 73): மாஅலர்- அழகுவிரிந்த. காவலர் இளஞ்சிறார்- அரசரது இளஞ்சிறுவர்கள். அடு- போர்க்குரிய. மரம்- வண்டி - தேர். கொடுமரம்- வளைந்தவில். ஒள்வாள்- ஒளியுடைய வாட்படை. சமரம் பயிலுழி- போர்ப்பயிற்சியின் போது. தமரம்- ஒலி.
பொ -ரை: அழகு விரிந்த பெருநிலம் ஆளும்அரசர்களின் இளஞ்சிறுவர்கள்,
தேர், கொல்லும்வேல், வளைந்தவில், ஒளிபொருந்தியவாள் மூலம்பெறும் போர்ப்பயிற்சியின் போதுஎழும் ஒலியும்;
கு - ரை: எட்டியர்.....வளனும்குழும. (அடி 73 - 76): காவணம் உறுநிழற்று- பந்தல் மிக்கநிழல்தரும். ஆவணம்- கடைவீதி. மறுகு- பெருந்தெரு. எட்டியர்- வணிகர். பகரும்- விலைகூறி விற்கும். களனும் உற்று- இடமும்பெற்று.
பொ - ரை: மிக்க நிழல்தரும் பந்தல்களுடைய கடைவிதிப் பெருந்தெருவில் எண்ணற்ற எல்லாவகைப் பொருள்களையும் வணிகர்கள் குவித்துவைத்துக்கொண்டு விலைகூறி விற்கும் இடமும் பெற்று;
கு - ரை: குரம்பு.......குரவையும். (அடி 77 -81): குரம்பு தடுத்து- வரப்புகளால் தடுக்கப் பெற்று. பண்ணை- நன்செய்நிலத்தில். சொல்- நெல். விசும்பயிர்- வளரும் பயிர். ஆற்றுக்காலாட்டியர்- உழத்தியர். தீங்குரவை- இனிய ஒலியும்.
பொ - ரை: வரப்புகளால் தடுக்கப்பெற்று நீர்நிரம்பிய நன்செய் நிலத்தை வணங்கியபின் உழுது சேறாக்கி நெல்விதைத்து வளரும்பயிரைக் கண்டதும், உழத்தியர் நாற்றைப் பறித்து அவற்றை நடும்போது பெருமிதத்துடன் எழுப்பும் இனியகுரவை ஒலியும்:
கு -ரை: பொற்கதிர்......பெருக்கும். (அடி 82 - 88). பொற்கதிர்- அழகிய நெற்கதிர். களைந்து- அறுத்து. அந்தரம் தோய்ந்து தொட வேய்ந்து- வானளாவக் குவித்து. பகட்டின் கவைக்கால்- எருதின் பிளவுபட்ட குளம்பு. மாழ்கத் துவைக்கா- மேவ மிதித்து. பலாலம்- வைக்கோல். பழித்த பதடி- விலக்கத்தக்க பதர். ஒழுகை- வண்டி. கோடணைப்பெருக்கும்- முழக்கப் பெருக்கமும்;
பொ - ரை: அழகிய கதிர்விட்ட நெற்கதிர் முற்றிய பக்குவத்தில் அறுத்து, அடித்து, பல்வகையான பெரியபோர்களாக வானளாவ வேய்ந்து, எருதுகளின் பிளவுபட்ட குளம்புமேவப் பிணையலிட்டூ மிதித்து, வைக்கோலின் நீங்கிய செந்நெல்லில் விலக்கத்தக்கபதரினைத் தூற்றி மூட்டைகட்டி, வண்டியில் ஏற்றிக் கொண்டுபோகும் முழக்கப்பெருக்கும்;
கு - ரை: வீடு அணைவாரை.....ஓதையும். (அடி 88 - 100): முன்கலந்து இருத்தி- முதலில் மனம்கலந்துபேசி இருக்கச்செய்து. கலம்- பாத்திரம். கருமை-குருட்டரிசிக் கருமை. பாத்து- சோறு. நேயம்- நெய். நீடாணம்- தொடுகறி. கீரம்- பால். வெண்பெருகு- வெண்மையான மோர். தேறல்- தேன். வருக்கை- பலா. தேமாழையின்கனி- மாமரத்து இனியகனி. கண்டம்- வெல்லம். நானா- பலவகை. திருத்தி உண்டாமின்- மனநிறைவு பெறஉண்ணுங்கள். முன்பின் பாராது- கைம்மாறோ பயனோகருதாது. வட்டிப்ப- உணவுபடைக்க. மாற்றலர்க்கு இடைந்த ஆற்றலர் அரவில்- பகைவர்க்குத் தோற்றவர் சொல்ஒலி போல. போதும் இடேன்மின்- போதும் போடாதீர்கள். ஓதை- கெஞ்சும் ஒலி.
பொ - ரை: விட்டிற்கு வருகிறவரை முதலில் மனம்கலந்துபேசிஇருக்கச்செய்து, அழகியபொற்பாத்திரமாகிய பரிகலம்திருத்தி, குருட்டரிசிச் சோறுஇல்லாத அருமையான வெள்ளிய சோறுபடைத்து, உண்ண விருப்பம்உண்டாக்கும் பருப்பும் நெய்யும் துவையலும், மிக்க தொடுகறிவகையும், பாலும், பெருக்கிய வெண்மையான மோரும், பருகுதற்குத் தேனும், வற்றக்காய்ச்சிய மிக்கபாலால் ஆன நிறைந்த பாயசமும், மரத்திலேயேபழுத்த இனிய வாழை பலா மாங்கனியும், வெல்லமும், பலவகைச் சிற்றுண்டிகளையும் மனநிறைவுபெற உண்ணுங்கள் என்று உண்பிக்கும்போது, கைம்மாறோ பயனோ கருதாது மிகுதியாகப் படைக்க, அடிக்கும்பகைவர்க்குத் தோற்றவர் சொல்வதுபோல் போதும் இடாதீர் என்று கூறிக் கூறிக்கெஞ்சுவார் பேரொலியும்:
கு - ரை: ஒன்றிளஎன்றும்......வான்கரும்பு. (அடி 101 -106): பொன்றல்- அழிதல். ஒன்றி- பொருந்தி. உவாக்கடல்- வெள்ளுவாக் காலக்கடல். அடக்கும்- வெல்லும். கூவி- அழைத்து. ஏற்று- அங்கீகரித்து. அதுகீழாத் தோற்றுவித்து- தாழ்வடையுமாறு. மோடு- உச்சி. சம்பு மூலம்- சிவபரம்பொருளாகிய மூலப்பொருள். பம்பும்- பொலியும். கரும்பு- முருகன்ஆகிய அக்கரும்பு;
பொ - ரை: வெள்ளுவாக்காலக் கடல்(முழுநிலாக்காலக்கடல்)போன்று பொங்கும் உவகையுடன் நம்மைஅழைத்தும் அங்கீகரித்தும் நம்மொடூ பொருந்தியும், அக்கடல் தாழ்வடையுமாறு எக்காலத்தும் அழியாவாழ்வாகிய வீடுபேறுஅளித்து ஓங்கியவனாய் ஆக்குகிற குன்றக்குடியிலுள்ள வானளாவிய பெருமையபொருந்திய மயில்மலை உச்சியில், சிவபரம்பொருளாகிய மூலமுதற்பொருள் அருளியதும், பொலியும் பன்னிருகண் மலர்ந்து ஒளிர்வதுமாகிய சேயோன் என்னும் அழகிய மேலான கரும்பு;
கு - ரை: தரளத்தொங்கல்........கன்னல். (அடி 107 - 112): தரளத்தொங்கல்- முத்துமாலை. சரளச்சின்னம்- தகுதியின்அடையாளம். கண்டிகைப் பிக்கு- உருத்திராக்கக் கண்டிகைமாலை. தண்டி கை- மிக்க (12) கைகள். ஆழப்புனல் தரை- கடல் சூழ்ந்தஉலகம். வாழப்பெறீஇயுற- நல்வாழ்வு பெறும்பொருட்டு. கோமளவல்லி- வள்ளிநாயகி. புல்லி- இணக்கமுற. பண்ணழிக்கும் குயில்- இசையையும் வெல்லும் குயில். நண்- பொருந்திய. இளங்கரிணி- இளைய தெய்வயானையம்மை. துய்ச்சும்- தழுவியும். மெய்ச்சுவைக் கன்னல்- ஞானச்சுவைதரும் கரும்பு:
பொ - ரை: முத்துமாலையும், முருகன் என்றதகுதியின் அடையாளமாகிய வேலும், உருத்திராக்கமாலையும், மிக்க கைகளும் - பன்னிருகைகளும், மயில் ஊர்தியும். ஆழமான கடல்சூழ்ந்த உலகம் நல்வாழ்வு பெறும்பொருட்டு இணக்கமாக நம்நிலவுலக வள்ளிநாயகியுடன், இசையைவெல்லும் குயிலாகப்பொருந்திய வானுலகத் தெய்வயானையம்மையைத் தழுவியும்பொருந்திய ஞானச்சுவைதரும் முருகனாம் கரும்பு;
வி-ம்: நாம் ஞானவேலவன் அருள்பெறக, விருப்பத்தின் குறியீடான வள்ளிநாயகி வலப்பாலும், செயற்பாட்டின் குறியீடான தெய்வயானையம்மை இடப்பாலும் என்று அமைந்தனர். அம்மைஅருளே அப்பனிடம்நம்மைச் செலுத்துவதை “…….. அருளாம் தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்து ஏயுமதே நிட்டைஎன்றான் எழில்கச்சி ஏகம்பனே” (பட்டினத்தார்) ஞானம்பெற அடிப்படை ஆழமானதூயவிருப்பமும் செயற்பாடுமேஎன்ற குறியீடு இது.
கு -ரை: வானவர்மருளும்.......வேழம். (அடி 113 - 114). தானவர்க்கு அரசு- அசுரர்களின் அரசனான சூரபதுமன். அத்திமா- கடற்கண் மாமரமாக எழுந்த கரபதுமன். நித்திய வேழம்- என்றும் நிலைத்த கரும்பு.
பொ - ரை: தேவர்கள்அஞ்சிய அசுரர்களுக்கு அரசனும், கடற்கண் மாமரமாக எழுந்தவனுமான சூரபதுமனைத் தடிந்த என்றும் நிலைத்த முருகனாம் கரும்பு;
கு - ரை: தயித்தியர்.......சீர்த்தியகழை. (அடி - 115 – 124): தைத்தியர்- அசுரர். அழிந்த- மனம் நொந்த. பயித்திய அண்டர்- பயித்தியம் பிடித்த தேவர்கள். உயங்கி- வருந்தி. சுதையோ மருள்விடம் அதையோ அருந்தினம்- அமுதம் உண்டோமா மயக்கம்தரும் விடத்தை உண்டோமா. மருந்து- அமுதம். திசாமுகம் கவற்றும்- திசைஇடம் எல்லாம் வருந்தச் செய்யும். நிசாசரர்- அசுரர்கள். இன்னாப் படரும்- துன்பம்மிகும். வெருள்- அச்சம். அருளமிழ்து ஒழுக்கிய- கருணையாகிய அமுதம் பொழிய. கனற்கண்- நெற்றிக்கண்ணாகிய கனல். புனல்- கங்கைநீர். சீர்த்திய கழை- சிறப்பு வாய்ந்த கரும்பு.
பொ -ரை: அசுரர்களுக்கு அஞ்சிப் பயித்தியம்பிடித்த தேவர்கள், குற்றுயிராகக் கிடந்து, யாதொரு பற்றுமின்றி வருந்தி, “நாம் சாகவோ வாழவோ உரியரல்லர், அமுதம் உண்டோமா ? மயக்கம்தரும் விடம் உண்டோமா ? அசுரர்களை ஒதுக்கி நாம்மட்டும் அமுதம் உண்ணாதிருந்திருக்க வேண்டும் என்பதே தக்கது, திசைஇடங்களை எல்லாம் வருந்தச்செய்யும் அசுரர்கள் நம்மைவிட வலிமையானவர்கள்,” என்று எண்ணிய அவர்களைத் துன்பம்மிகும் அச்சம் விரட்டியதால்; அவர்கள்மேல் கருணையாகிய அமுதம்பொழிய, நெற்றிக்கண்ணாகிய கனலில்தோன்றி, கங்கைந்ரில் கிடந்துவந்து, சரவணப் பொய்கைந்ரில் கார்த்திகைப்பெண்கள்அறுவர் வளர்த்தசிறப்புமிக்க முருகனாம் கரும்பு.
கு - ரை: மெய்த்தண்மையும்........வாழ்வாரே. (அடி 124 - 129). மெய்த்தண்மை- மெய்யான தண்ணளி. போதக் திண்மை- ஞானவலிமை. தவாது- கெடாது. பாகு- கற்கண்டு - இனிமை. பொதுளி- செழித்து. உள்ஆகும்- மனத்திலுளதாகும். வயிரம்- சினம். அற்பமும் இன்றி- மிகச்சிறு அணுவளவும் இல்லாமல். பொற்பு- பொலிவு. ஆனாமை- நீங்காமை. துன்னி- செறியப்பெற்று. சுகம்- முத்திப்பேறு. அதனை- அத்தகு கரும்பாகிய அருள்தரு சண்முகநாதப் பெருமானை. பழிச்சுநர்- வணங்குகிறவர். மன்னிவாழ்வார்- பெருமையுற வாழ்வார்.
பொ - ரை: மெய்யான தண்ணளியும், ஞானவலிமையும் கெடாது, கற்கண்டின் இனிமைசெழித்து, உள்ளத்தில் உளதாகும்சினம் மிகச்சிறு அணுவளவும் இல்லாமல், பொலிவு நீங்காததன்மை செறியப்பெற்று எவ்வகைப்பட்ட உயிர்க்கும் முத்திப்பேறு தரும் அத்தகுகரும்பு ஆகிய அருள்தர சண்முகநாதப் பெருமானைச் சிந்தித்து வணங்குகிறவர் பெருமையுற வாழ்வார்.
திருச்சிற்றம்பலம்.
-------------------
This file was last updated on 7 Nov. 2024
Feel free to send the correections to the webmaster (pmadurai AT gmail.com)