சாந்துப்புலவரியற்றிய
குன்றக்குடி யென வழங்கும்
"மயூரகிரிக்கோவை" - பாகம் 2
mayUrakirikkOvai - part 2 (verses 240 -536)
by cAntup pulavar
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
We thank Tamil Virtual Academy for providing a PDF copy of this work
The soft copy of this work has been prepared using Google OCR and subsequent proof-reading
of the raw OCR output.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சாந்துப்புலவரியற்றிய
குன்றக்குடி யென வழங்கும்
"மயூரகிரிக்கோவை - - பாகம் 2"
Source:
இராமநாதபுரம் சமஸ்தான வித்துவான் சர்க்கரைப்புலவர்
குமாரர் சாந்துப்புலவரியற்றிய
குன்றக்குடி யென வழங்கும் "மயூரகிரிக்கோவை".
இஃது பல கனவான்களுடைய விருப்பத்தின்படி இந்நூலாசிரியர் மரபிலுதித்தவராகிய
கோடகுடிச் சேதுப்புலவர் குமாரரும், ஆலங்காடு ஸ்ரீமத் ராம, சிதம்பர செட்டியாரவர்கள்
மாணாக்கருளொருவரும் மன்னார்குடிப் பின்ட்லே காலேஜ் தலைமைத் தமிழ்ப் பண்டிதருமாகிய
சர்க்கரை இராமசாமிப் புலவரால் அரும்பதவுரை யியற்றித் திருவாவடுதுறை யாதீன வித்துவானும்
மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் சைவநூற் பரிசோதகருமாகிய ஸ்ரீமத், சே. ரா. சுப்பிரமணியக்
கவிராயரவர்களாற் பார்வையிடப் பெற்றுத் தஞ்சாவூர் கல்யாணசுந்தர முத்திராசாலையிற்
பதிப்பிக்கப்பெற்றது.
இதன் விலை ரூ.1.
1908. (Copy Right.)
-------------
கணபதி துணை
வேலுமயிலுந் துணை.
மயூரகிரிக்கோவை. - - பாகம் 2
உள்ளடக்கம்
13. இரவுக்குறி (213 - 239 )
14. இரவுக்குறி யிடையீடு (240 - 258)
15. வரைதல் வேட்கை (259 - 277)
16. வரைவு கடாதல் (278 - 296)
17. ஒருவழித் தணத்தல். (297 -308 )
18. மரைவிடை வைத்துப் பொருள் வயிற்பிரிதல் (309 - 329)
19. வரைவு மலிவு (330 - 336)
20. அறத்தொடு நிற்றல் (337 - 353)
21. -உடன் போக்கு (354 - 372)
22 . கற்பொடு புணர்ந்த கௌவை (373 - 398)
23. மீட்சி (399 - 404)
24. தன்மனைவரைதல் (405- 410)
25. உடன் போக்கிடையீடு (411 - 416)
26. வரைவு (417 - 420 )
27. இல்வாழ்க்கை (421 - 430)
28. பரத்தையிற்பிரிவு (431 - 479)
29. ஓதற்பிரிவு (480- 489)
30. காவற்பிரிவு (490 - 499)
31. தூதிற்பிரிவு (500 - 510)
32. துணைவயிற்பிரிவு (511- 521)
33. பொருள்வயிற்பிரிவு (522- 536)
---------------
13. இரவுக்குறி (213 - 239 )
இறையோன் இருட்குறி வேண்டல்.
கூந்த லெனவிருண் டே நீட லாற்கண்ணுக் குச்சரியா
மேந்தற் குவளை மலர்த்தின தாலயி லேந்துங்கையான்
சாந்த மயில்வெற்பினம்விரும் பார்விழித் தாமரைக்கே
காந்தி குறைப்பத னாலிருட்போதல் கருதினமே, (213)
டாங்கி, நெறியின தருமை கூறல்.
இடைவிடுத் தான் முலை யாந்தலை போக்கி லெழுந்தலையா
மடையக் குறிக்கிற் கொலைச்செந்து வாம தடிக்கொன்றதாம்
படர்வழியெங்கு மயில் வெற்பர் தாதை பணிசுற்றுமாந்
தொடையுறு பாதையொன் றுண்டறி யாய்வரச் சொல்வதெங்கே (214)
இறையோன், நெறியின ெதளிமை கூறல்,
ஆறு பெரிதில்லைக் காவலை யஞ்சில னாண்மைவன்மீ
னூறுமுண் டோதிரு மாலாழி யுண்டன் புறவசுரர்
நீறு படச்செய்த வேலோன் மயில் வெற்பினேரிழைகான்
சீறும்வெம் பாம்புக்குப் பெண்ணாங் கருடத் தியானமுண்டே. (215)
பாங்கி, அவனாட் டணியியல் வினாதல்.
ஆயிரம் வெள்ளத்தொடாளி முகனை யசியொன்றினான்
மாயப் புரிந்தவன் போற்றுஞ்சு வாமி மயில்வரையோய்
நீயுன் னகரின் மருவலர் மேன்மை நிகழ்த்திமண
மோய்வில் குழையா ரையும் பினவரை யுஞ் சொல்லுமே. (216)
கிழவோன், அவள் நாட் டணியியல் வினாதல்.
அறியாரைப் போன்று குறியா துரைக்கின்ற வத்துறை போ
னெறிசே ரெளிமைக்குப் பின்னிது கூறினை நேசமிதென்
றறியேன் முருகன் மயில்வரை யாய் நும் மணிநகர்ப்பூஞ்
செறிவே தெதுவுங்கள் போன்றும்மைத் தந்த செழுஞ்சுனையே (217)
அவற்குத், தன்னாட் டணியியல் பாங்கிசாற்றல்.
ஆயா தவர்மனம் போன்றிரு நீங்குங்கற் றாய்ந்தவர் போ
லோயா மணம்பெறுஞ் சேந்தன் மயில்வெற்புறையண்ணலே
காயாத மாவென்றும் பூவாத மாவைக்கை யாலழித்துப்
பாயாத வேங்கையஞ் சுஞ்சோலை யாங்கள் பயிலிடமே. (218)
இறைவிக் கிறைவன் குறையறி வுறுத்தல்.
சங்கையை யெண்ணிய பேரைவை யான் புகழ்ந் தாரைவைப்பான்
புங்கவ ரிற்சண் முகவேலன் றோகைப் பொருப்பணங்கே ன்றோ
செங்கையில் மேலும் விரைவுங்கொண் டெம்மண்ணல் சேர்தன
கொங்கையை நாடி யிடைதேடு முன்மலர்க் கூந்தலிலே. (219)
நேரா திறைவி நெஞ்சொடு கிளத்தல்.
கான வரும்படைச் செல்வர்களே தொழக் கந்தனையே
வானவர் மங்கையர் செல்வர்களே பொன் மயில்வரைமேற்
கூனறு கானிலெங் குஞ்சர மேயெழுங் குஞ்சரமே
யானில் வருமம் புலியே யினியெழுமம் புலியே. (220)
நேரிழை பாங்கியொடு நேர்ந்துரைத்தல்.
உரவினை செய்பவர் மாயையென் பாரறி வொன்று தற்கோர்
திருமுகங் கூடப் பெறுஞ்சிவன் றோகைச் சிலம் பண்ணலார்
வரவினைக் கூறலு நன்றே யுனது மனமுநன்றே
யிரவினுக் கஞ்சுவதில்லைகொ லேழைக் கிரங்கவரே. (221)
நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக் குரைத்தல்.
ஒருவிரல் காட்டிக் குழல்காட்டிக் கைகுவித் தோங்கிச்செங்க
பொருநெறி வைத்தனள் கூலி கரும்பார் புதல்வர்க்குண்டோ
முருகன் மயில்வரை மேலன்னங் காட்டிக்கை மூக்கில் வைத்தே
யிருவிரல் காட்டி யொருவிழி மூடின ளேந்திழையே. (222)
குறியிடை நிறீஇத் தாய்துயி லறிதல்.
அகத்தான் வருந்திய வன்பருக் கன்ப னழகுளசண்
முகத்தான் மயில் வெற்பிலற்புதங்கண்டேன் மொழிவன் பெண்ணே
பகற்காக்குஞ் சண்பகஞ் சேராது தும்பியென் பார்களுரை
மிகத்தா னமுத மதுவுண்டு பூமெத்தை மேலுற்றதே. (223)
இறைவிக் கிறைவன் வரவறி வுறுத்தல்.
தோழியர் தூங்கினர் நற்றாயுந் துஞ்சின டோய்ந்துடையார்
வாழியர் நங்கொல்லைச் சண்பகக் சாவின் மலர் மெத்தைமேற்
கோழியர் குன்றக் குடியார்கை வேலன்ன கூர்ங்கண்ணியே
மேழியர் மாலை யெனவே யிருண்டது விண்கங்குலே. (224)
அவட்கொண்டு சேறல்.
பால்சர்க் கரைபழங் கர்ப்பூரம் வெற்றிலை பாக் குமுதற்
சாலவங் குண்டு மணிச்சிலம் பென்மடித் தாங்கினன் காண்
சூலி மகன்குகன் றோகைவெற் பார்மெய்ச் சுகம்பெறவா
கோலைப்பெண் ணாக்கித் துகின் மூடிப் பஞ்சணைக் குட்படுத்தே. (225)
குறியுய்த் தகறல்.
கற்பூர மோர் பங்கு வைத்தளித் தார்பழுக் காயிலையீ
தற்பூ ரவர்மன மாழத்தர் காண்குக னார் சிகண்டி
வெற்பூரிரவைநஞ் சாதியைச் சாரின் மிறைசொல்வதார்
நிற்பீர் மருவல ரைத்தலை சாய்ப்ப னிமிடத்திலே. (226)
வண்டுறை தாபோன் வந்தெதிர்ப்பந்தம்
செடிதேடி மந்த காம்பிடி தேசியக்கவின்பம்
பிடிதேடு மோரை வேலன் பாப்பா
யடிமேலடியிட்டை யோகாடெர்விழி பார் விடியா
விடினல்லவோமுன்பாதி பேப்பட ... (227)
பெருமக ளாற்றின தருமைரினைந் திரங்கல்.
சாதிரஞ் சாளிக ஞாயமெம் முர்வாத் தக்கதன்றா
மீதுறை சஞ்சா விகாட்ட ஞாயத்தின் மேவினிர்
ரோது மறைபணி சேந்தன் பாயில்வரை யுற்றவர்க
மதையு மாத னானெறி கண்டெனைச் சேர்ந்தளிரே. (228)
புரவலன் றேற்றல்.
இடைநினைந் தாற்கன்னி வாகன மென்செய்யு மேய்ந்தவல்கும்
படடநினைந் தாலி பாயலு மென்செயும் பாற்கடல்சேர் (கட்
விடை சுமந் தான்மகன் ராகைவெற்பாய்செற்றம் வேண்டியென்
கடை- சினந் தாலெங்கு நம்மூர் சிவக்குங் கனற்கொழுந்தே. (229)
புணர்தல்.
மறையாத மின்ம வாடாத் கொடியை வகையுணவிற்
குறையானமுத மெனு, தமயந்தி கொண்ணிடதம்
திறைமா னெனிற்குகன் றோகைனெற் பிற்கற்ற தில்லை கொல்லோ
நிறைமதகுருத்தெரியாமந்திரத்தி னெறிகனே. (230)
புகழ்தல்.
ஆல மெனுமக ரோனை வேல்னிட்டறுத்தமார்
தாலி பதித்த முருகன் மயில்வரைத் தையலரே
மேல் யடையல் முன்னே கலகலவென்பதனாம்
காற்சிலம்புக்கு கோல்ல வேசிலன் கைச்சிலம்பே . (231)
இறைமகளிறைவனைக் குறிவிலக்கல்
இன்னாமை வேண்டினிரவி லெழுகவென் றேபெரியோர்
சொன்ன பொய்யன்று முருகோன்றான்பணிதோகைவெற்பா
பன்பார் போற்றார் சிவந்ததை காங்கனைன் பங்கயக்கண்
டன்னார் கறுத்தன் பார் நீயென்னச்சந் தவிர்ந்திடனே. (232)
அவன், இறைவியையில் வயின் விடுத்தல்.
முத்தாயர் கேள்விக்கு வைத்திர்கொமேரியா முன்று கட்டுங்
கைத்தாளிட்ட கொல்பொய்த்தாவிட்டனிர்கொல் கருணையெ
வைத்தான் முருகன்மயில் வெப்பினர் சென்மனங்கலக்கு ன்மேல்
வித்தேன் கதிர்தோற்றிலுங்கஞ்சங்கொள்ளா விகசிதமே. (233)
இறைவியை, எய்திப்பாங்கி கையுறைகாட்டல்.
கான்கொண்ட கூந்தவனாம்படி யேகால் கடிது சென்று
நான்கொண்டு வந்த மார்கரத் தேந்தின்னினத்திலோர்
வான்கொண்ட மலர்ந்ததென் பார்பச்சை வண்டி தென்பார்
தேன்கொண்ட போல முருகன் மயில் வரை செல்வர்கள் . (234)
இற்கொண் டேகல்.
பாலிக்குச் சொல்லினும் வேல் சிவப்பானதைப்பாளிதங்கொ
ணீலிக்குச் சொல்லினும் பொல்லாப்பென்றாய்முனிகழ்த்தல் செய்வாய்
சூலிக்கு மைந்தன் மயில்வெற்பி லெல்லாந் துவண்டனவே
காலிக்குஞ் சொற்றிடு மேகண்டைச் சேலைக் கமகமப்பே. (235)
பிற்சென்றிறைவனை , வரவு விலக்கல்.
கன்ன வடுவை யிதழை முலையைக் கலந்தன்று நீ
சொன்ன படி.மறைத் தாண்மறைத் தாளல்லள் சோர்வைமயில்
வன்னி முருகன் மயில்வரை மேலிறை வாவருத
லின்னம் பொறுப்பவளோபல்லக் கேற்ற வெழுந்தவளே. (236)
பெருமகன் மயங்கல்
கொங்கைக்கு மார்பின் னகைக்குங் கலைக்குமக் கொங்கை தொட்ட
செங்கைக்குங் குற்ற முரைத்தன வேயினிச் செய்வதென்னே
துங்க மயில்வரை வேல்னு ரீயுந் துணையன்றியோர்
வங்க நடந்திடு மேபெரு கோதை மயற்கடற்கே. (237)
தோழி தலைமக யேர் கிளந்து விடுத்தல்.
ஆதி மலரை நினைக்கு முடியு மயலவர் சொற்
பாதையிற் கொண்டு மகிழு முறம்விழல் பார்க்குங்கொடி
யோதை குறிக்கு மயில் வரை யான்பத முன்னுமிந்தக்
காதலிக் குத்தப்பு நீக்குவ துன்னூர்க் கனகதுப்பே. (238)
திருமகட் புணர்ந்த வன் சேறல்.
மாவென்ற கண்ணியென் லூர்க்கேகற் கென்றடை வையமெலாங்
கூவென்ற சூரைவென் றோன் மயில் வெற்பிற் குறுகுமிருட்
காவென்று மாவென்றுஞ் சொன்னதெல்லாநிற்க காமமுற்றை
யோவென்ற போதண்ட கோள்முந் தீப்பட்ட டொளிவிடுமே. (239)
அரும்பதவுரை
(213) நம்விரும்பார் என்றது நற்றாய் முதலியோரை, சாந்தம் - தன்மரம். போதல் - வருதல்.
(214) அடையக்குறிக்கின் - விடாமலொருங்கே யெழுதினால். பாலைச்செந்து - முதலை. இடை - நடு, தலை - முதல், அடிக்கு ஒன்று - டிவைப்பு ஒன்றுக்கு ஒன்று. பணி - ஆபரணம். அது பாம்பு
(215) ஆறு - வழி. வன்மீன் - முதலை. திருமால் ஆழி - தலை யாற் கொண்ட வாசைக்கடல் ; திருமால் சக்கரம். பெண் என்றது லவியை.
(216) மாயப்புரிந்தவன் - வீரவாகுதேவர். அசி-வாள். மருவலர் - சனையுள்ள புட்பம், பகைவர். குழையார் - தரு , மகளிர். நம்பின வரை ரும்பியமலையை, நம்பப்பட்டவரை.
(217) அறியாரைப்போன்று குறியா துரைக்கின்றவத்துறை என் பதுமேல் 165-ம் பாடலை. குறியாதுரைத்தல் - ஒன்றை விட்டொன்று கூறுதல். பூஞ்செறிவு - சோலை. உங்கள் போன்று என்பது புட்பங்கட்கி டமாதலால் என்க. உம்மைத்தந்த செழுஞ்சுனை என்றது நீரிற்கை கொ டுத்தெடுத்ததனாற்கற்புடைத்தாய்ச் சேர்ந்த குறிப்பு.
(218) ஆயாதவர் - மெய்ந் நூலுணர்ச்சியில்லாதவர். காயாத மா - யானை. பூவாதமா- அத்தி. பாயாதவேங்கை - வேங்கை மரம். அழித்து - அழித்தலால் எனவெச்சத்திரிபாகக்கொள்க.
(219) சங்கை - ஐயம் புகழ்ந்தாரைப்புங்கவரில் வைப்பன் என்க புங்கவர் - தேவர். விரைவு - வேகம். கொங்கை என்றது முலைபோலும் யானையை. நாடி - விரும்பி. இடை என்றது இடைபோலுஞ் சிங்கத் தந்தை. மலர் சூடுங்கூந்தல் என்றது தாரகாகணங்களையுடைய இருளில் என்றபடி.
(220) கானவர் - வேடர். படைச்செல்வர் - ஆயுதச் செல்வமு டையவர். மயில்வரைமேற் கந்தனையே தொழவானவர் மங்கையர் செல் வர்களே எனக்கொண்டு கூட்டுக. செல்வர்கள் - வருவார்கள். எங்கும் சாம் - எவ்விடங்களிலுமிருகங்களை யெய்யும் ஆம்பு. குஞ்சரம் - யானை ஆனில் வரும் அம்புலி - இடபந்தைப்பாயும் அழகிய புலி . இனி எழும் அம்புலி யென்றதனான் முன்னிருட்டுள்ள தென்பது கருத்து.
(221) உரவினைச் செய்பவர் - வலிய தொழிலைப்புரியுஞ்சூான் முத லானவர். அறிவு - ஞானம். திருமுகங்கூடப் பெறுஞ் சிவன் என்றது ஐந்துமுகத்தோடு அதோமுகமுங்கூடிய சிவனாகியவாறுமுகக்கடவுள் என் றவாறு. இரவினுக்கு - இராத்திரிக்கு , யாசகர்க்குக் கொடுத்தற்கு. ஏழை - தலைவி , எரியவர், ஏழையாகிய வெனக்கிரங்கினவர் என்றது னால் வரச்சொன்ன தாயிற்று. ஆறுமுகம் என்றது ஐந்து முகத்தோடதோ முகமும் எனக் கந்தர்கலி வெண்பாவிற் கூறுதல் காண்க.
(222) ஒருவிரல் காட்டி என்பது ஒற்றையாய் என்னுங்குறிப்பு. சூழல் காட்டி என்பது சோலையிடத்தில் என்றவாறு. கைகுவித்தோங்கி என்பது வேலாயுதத்தையும் வைத்துக்கொண்டு என்ற படி. கை நெறி வைத்தது படுத்திருக்கச்சொல்லுக என்னுங்குறிப்பு. அன்னங்காட்டியது சோறு கொண்டுபோய்ப்போடு என்றபடி. மூக்கில் ஒருவிரல் வைத்தது ஒருவருமறியாமற் சண்பகமாத்தடியிற் கூட்டிவந்து வைகான்றபடி. இரு விரல் காட்டியது இரண்டுநாழிகை யிருக்கட்டும் என்னங்குறிப்பு. ஒரு விழிமூடல் என்றது தாய் தாங்கட்டும் என்றவாறு. ஒருவிழி மூடாததனாற் றான் விழித்திருப்பதாயிற்று. நெறி - கன்னத்தின் மேற்பக்கம்.
(223) தும்பி - வண்டு, யானைபோலுந் தலைவன். உரைமிகவென் பார்கள் எனக்கூட்டுக. அமுதமது - அமுதம்போலுந்தேன், அமுதமாகிய வச்சோறு. பூமெத்தை - பூவாகிய மெத்தை, பூமியாகியமெந்தை
(224) நற்றாய் - பெற்றதாய். துஞ்சினள் - பாங்கினள். மேழியர். (வேளாளர். மாலை - கருங்குவளை.
(225) சிலம்பை மடியிற் றங்குதல் ஒலியாமலிருக்கும் பொருட்டு என்க. கோலைப் பெண்ணாக்குதல் படுத்திருக்கிற பாவன செய்தற்கு என்க. ரூலி - சிவபெருமான்.
(226) கற்பூர மோர்பங்கு வைத்தளித்தார் என்னவே ஆண்பிள் குக் கற்பூரமிரண்டு பங்கு என்பதாயிற்று. நம் சாதி - நமது சண் மரம், நமது சுற்றத்தார். மிறைசொல்வதார் என்றது (அச்சாதியைச் ந்தாற்) குற்றஞ் சொல்பவர் யாவர் என்றபடி. போனாற்றலை வரிருப் என்பது குறிப்பு. மருவலரைத்தலைச்சாய்ப்பன் என்றது வாசனை ள மலர்களைக் கொய்து வருவேன் என்றவாறு. பகைவரைத்தலை கவி செய்வேனென்பது மற்றொரு பொருள். பழுக்காயிலையிது என்றது ) சண்பக மரத்தடியிலிருக்குந்தலைவர் கொடுத்ததென்று சுட்டிக்காட் தாயிற்று. பழுக்காயிலை - பாக்கு வெற்றிலை .
(227) விடியா விடின் அல்லவோ முசமாமதிமேன்கள் என்றது ற்குறியில்லையென்று முகம் வாடும் மென்பது குறித்தென்க.
(228 ) சாதி சஞ்சாளிகஞாயம் என்றது சண்பக மலரிற்றேனு ச்செல்லும் வண்டுகளிறந்து படுமுறைபோல எம்மூருக்கு வந்தால் னை, கரடி, புலி, சிங்கம், பாம்பு, முதலை, முதலியவற்றாலுங் கானவரா ம் பிழைப்பதில்லை என்றவாறு. சஞ்சாளிகபுட்பஞாயத்தின் மேவினிர் பது காத்திருந்த தவளையுண்ணாமற் றூரத்து வண்டு வந்து தாமரை பர்த்தேனையுண்பது போலச் சுற்றத்துத்தலைவரிருக்க நீ வந்து மேவினீர் ஏறபடி. உற்றவர் - அடையப்பெற்றவர்.
(229) கன்னி - துர்க்கை . வாகனம் - இடை. அரிபாயல் - ம்பு. பாற்கடல் சேர்விடை என்றது திருமாலாகிய காளையை. செற் - கோபம்.
(230) மறையாதமின், வாடாக்கொடி, ஐவகையுணவிற்குறையா முதம் எனும் நீ என்க. ஐவகை - கடித்தல், நக்கல், பருகல், விழுங் ), மெல்லல். நான் நளனே . ஆனாலும் உன்னுடன் பகற்காலத்திலும் யாதிருக்கும்படி அந்நளனைப்போலுருத்தெரியாத மந்திரத்தைக் கற்ற ல்லை என்றபடி. கொல், ஓ. அசைநிலை பகலும் பிரியாமலிங்கெவர்க் ர் தெரியாவிஞ்சை பெற்றிலமே. என்றார் பிறரும்.
(231) மேலையடையலர் முன் என்றது மேன்மையையடைந்த லர்போலும் பாதங்களினிடமாகி என்றவாறு. முற்காலத்துத்திரிபுரத்தி ள்ள சத்துருக்கள் முன் என்பது மற்றொரு பொருள். கலகலவென்ப நால் - காற்சிலம்பு கலந்துகொள் கலந்துகொள் என்று கூறுவதனால். வன் கைச்சிலம்பு நேரல்ல வென்றது அங்ஙனங்கலகலகவென்னாமை ரல் என்க.
(232) இன்னாமை - துன்பம். இரவு - இராத்திரி, யாசித்தல் வந்தகை, கால்கள், என்பங்கயக்கண் தன்னாற் கறுத்தன என்றது ருந்தியதென்று கைகளையும், கால்களையும், தலைவி கண்ணில் வைத்துக் காண்டமையால் அஞ்சனம் பட்டுக்கறுத்தமையென்க. இன்னாமை வண்டினிர வெழுக என்பது நான் மணிக்கடிகையிற் காண்க. இதனைத் ன் கருத்திற்கியையப் பொருள் கொண்டு கூறினாளென்க.
(233) முத்தாயர் என்பது செவிலித்தாய், ஊட்டுந்தாய், பெற்ற பாய்மார்களை என்க. பருவமிகலாற் கைத்தாயையும், முலைத்தாயையும், கினார். வைத்தீர் கொல், இட்டீர் கொல், இட்டனிர்கொல். என்பன
பாங்கியையுமுளப்படுத்தியவினா. செல் என்றது தலைவியை மாத்திர நோக்கி என்க.
(234) நளினம் - தாமரை. நீலம் - குவளை
(235) பாலி - பாலூட்டுந்தாய். வேல் சிவப்பு என்றது கலவி யாற் சிவந்த கண்களை. பாளிதங்கொள் நீலி - சோ ஜாட்டுந் தாயாகிய கொடியவள். பொல்லாப்பு - தீங்கு . முன் - முன்னாளில் நிகழ்த்தல் செய்வாய் - நடப்பாயாக. காலி - ஒருவர். கமகமப்பு - வாசனை. பாரி தம் - சோறு. ஏகாலிக்குஞ் சொற்றிடுமே என்பது மற்றொரு பொருள்.
(236) நீ சொன்னபடி மறைத்தாள் என்றது கன்னவடுவை மஞ்சணெய்ச் சிவப்பாலும், அதாவடுவைப் பற்களாலும், முலை வடுவைச் சந்தனச்சேற்றாலும், மறைக்கச்சொன்னதை என்க. பல்லக்கேற்றவெ ன்றது கால்சிவத்தலாற் சகியாமற்றன்னை மறந்துரைத்தது என்க.
(237) குற்றமுரைத் தனளே என்றது கொங்கையை வடுப்படுத்த லானும், மார்பில் நகைகளைச் செவ்வனே யணியாமையானும், ஆடையை நிலைகுலைத்து விடுவதாலும், தோழிகுற்றங் கூறினாளென்க. வங்கம் - தோணி. ஒதை - ஓசை. மயல் - ஆசை
(238) மலரை முடியும் என்றது பூக்கட்டிவைத்துப் பார்த்தலை. அயலவர் சொல் - விரிச்சி. அதாவது நற்சொற் கேட்பது. கொடி யோதை குறித்தலாவது காக்கை கூப்பிடுவதை நோக்குதல். முறம் விழல் பார்க்கு மென்றது முறக்குறி பார்த்தலை. தப்பு - சோர்வாகிய தவறு. உன்னூர்க்கனக தப்பு என்றது வார்க்குப்போனவுடன் முரசறை யச்சொன்ன குறிப்பு. கனகதப்பு - பொன்னாற் செய்ரபரை
(239) இருட்காகுறுகும் - இருண்டசோலை யிருக்கும். மாருறு கும் - மிருகங்களிருக்கும். காமம் - விருப்பம், , , என்பன ஒலிக் குறிப்பு.
இரவுக்குறி முற்றிற்று.
--------------
14. இரவுக்குறி யிடையீடு (240 - 258)
.
இறைவிக்கிகுளை யிறைவர வுணர்த்துதல்.
விண்ணி லுதித்த பதினொரு கோடி விபுதருக்காக்
கண்ணி லுதித்த முருகன் மயில்வரைக் காதலியே
யெண்ணி லுதித்தவுன் காலுஞ் சிலம்பு மிருகையும் போன்
மண்ணி லுதித்தன வேபட்சி சால மலர்வனத்தே. (240)
தான் குறி மருண்டமை தலைவியவட்குரைத்தல்.
….வெறு புகலற்ற வேகாக்ர சித்த வியப்பிலிடை
….ஆறு வராதென் றிருந்தேன் பெண்ணேமர மொன்றையொன்றாச்
…ருறை படுத்த விழுமொலி யாற்பசுந் தோகைவெற்பா
….ாறு பொறிகொண்ட காற்று மருட்டிற்றெனைம் பொறியே. (241)
பாங்கி தலைவன் றீங்கெடுத் தியம்பல்.
பாட்டவைத் தார்கல்லைச் சொல்லவைத் தார் பொய்யைக் கால்வயி மறுக்,
கூட்டவைந் தார்கையைத் தன்மெய்யைக் கங்கையுள் ளங் கைத்தொட்டி,
லாட்டவைத் தார்மயில் வெற்பார்செய் நன்றி யென் னன்றியுக்கை,
நீட்டவைத் தார்புன்னை மேற்பாம்பை யெ என நினைப்பினியே. (242)
புலந்தவன் போதல்.
….ரம்போ னிலையர் பொன் போலிலங் கும்மனஞ் சஞ்சலத்தாற்
….நாங்கா மெனச்சொன்னது நிச மாயின கூந்தல்வனம் பரந்தோடித்
….தென்னையில் வாழையின் மாவிற் பருங்கமுகி
…ரிரந்தோடியுமில்லை வேலன் மயில் வெற்பினேரிழையே. (243.)
புலர்ந்தபின் வருங்களந், தலைவிகண்டிரங்கல்.
….ந்தினைக் காய்த்தது புன்னை பொன் மாலையும் பங்கயமுஞ்
….ந்தனம் பூத்தது பேசாக் கிளிமுல்லை தந்ததுண்டே
…சந்தின் முருகன் மயில் வரை மேலண்ணல் சென்றனரோ
….ந்தின ரோநிற்கின் றாரோகண் ணேயுன்னைப் பெற்றென்னையே. (244)
தன்றுணைக் குரைத்தல்.
…புனலுக்கு னாகிச் சரவணத் தெய்தி யறுவர் கொங்கை
…பன்சத்தின் பாலுண்ட வன்றோகை வெற்பினர் வாரலரே
எனையொற்றையன்றிலென் பார்க்க ரோர்மல ரோன் குருவி
னிமெய்ப் பொருளமு நாகவுண்டன்னை விண் டானெய்துமே. (245)
தலைமகளவலம் பாங் கிதணித்தல்.
…மறுரு வாய்ச்சுனைத் தொட்டிலுளாடியெ னம்மைகைக்கோர்
..பறுருவரனசு வாமி.டைம் தோகைப் பிறங்கலுள்ளாய்
..றுவரோபொய்ம்மை கண்டேன் பலமின் குறி விடிந்து
..தறுவையோ கொம்புபார்நேர்ந்தும் வீண்படச் சென்றனரே. (246)
இறைவன் மேற் பாங்கி குறிபிழைப் பேற்றல்.
….டையி லிருவ ருடனேறி முன்வெள்ளி வெற்பகத்தே
….டைபுரி வேலன் மயூர வெற் பாவிங்கு நண்ணினையே
….டைகுவன் யானா கிலுந் துணை யாய்வரற் காய்ந்ததென்னை
----டாரு மோகமு கங்காயுள் ளன்பு மறந்தனையே. (247)
இறைவிமே லிறைவன் குறிபிழைப் பேற்றல்.
தொட்டிலுற்றாடி யுமைக்குப் தேசஞ் சொலும் பொருளின்
மட்டறி வேலன் மயூர கிரிமட மான் பிணையே
பட்டினி யில்லைப் பகலெண்ணமில்லைப் பகருமக்குக்
கட்டிலு மெத்தையு மில்லை யெளியேன் கருத்திடத்தே. (248 )
அவள் குறி மருண்டமை யவளவற் கியம்பல்.
விமுக்கு முலக வடுக்கினை மாற்றி விலங்கலெல்லா
மமுக்கி யெழுப்பு முருகன் மயில் வெற்பினாரண்ணலே
குமுக்கென்ற கேணியும் விண்ணென்ற வோசையுங் கூவத்திலே
தொமுக்கென் றதுமுன் குறியென்றல் லெல்லாஞ் சுழன்றனளே. (249)
அவன் மொழிக் கொடுமை சென் -வளவட்கியம்பல்.
கின்னரி வீணையினாவதின் றேசிங்கங் கெர்ச்சிக்கின்மேன்
மன்னுறு மிந்திரன் வெம் போரை வென்றான் மயில் வெற்பின் வாய்ப்
புன்னை யரும்புமுற் றத்தசைத் தேனென் புகன்றினியு
னன்னம் புறந்தது வோவென் றனரிறை யாயிழையே. (250)
என்பிழைப் பன்றென் றிறைவிநோதல்.
தூங்கின னோதூங் கிலனோ தெரிந்திலன் சொல்லறிந்தா
னீங்கின ரோநீங் கிலரோ தலைவரென் னெஞ்சிருந்தா
ரேங்கிய தேவர்கள் வாழ வருளு மிறைவன்மயி
லோங்கல ரென்றோர் மிடாலையுற் றஞ்சிப்பி னுற்றதுண்டே. (251)
தாய், துஞ்சாமை.
இலக்கத்தொன்பானெனும் வீரர் துணைக்கொண் டெழுந்துக்காக்
கலக்கந் தவிர்த்த சுவாமி மயில் கரைக் காரிகையே
துலக்குபொற் பாபத்தை முல்லையி லேவைத்துந் துஞ்சுவனோ
பலிக்க வுழக்கின்ற வாபத்தைப் நோக்கிப் பயந்தனனே. (252)
நாய், துஞ்சாமை.
பேசு பிரமனை மாற்றிச் சிருட்டி பெருக்கிமனைக்
கீசன் வரச்செய்த வேலன் மயில்வரை யேந்திழையே
யோசனை பாரிந்த வூர்மலர்ப் பொய்கையுண் ணும் புனல் யாம்
பாசியை நீக்கியிந் நீர் குடிப் பாரெவர் பார்மன்னரே. (253)
ஊர்துஞ்சாமை.
முட்டற்ற வீரா யிரம் வெள்ளம் பூதமு மோதிய நூற்
றெட்டுத் தலைவரும் பெற்றோன் மயில் வெற்பி லேந்திழையே
கொட்டிய மேளமுங் கூத்தையும் பாருயிர் கொண்டவரிச்
சட்டத்தி லாறு மிடையி லிரண்டுந் தவிப்பில்லையே. (254)
காவலர் கடுகுதல்.
மனவேகத் தேரு மருத்தெனும் பாகும் வரிச்சிலையுஞ்
சினவாழி யஞ்சத்தி வேலும் பெற் றோன் மயிற் றிண்சிலம்பார்
புன மேல் வருவர் தடையில்லை யின்று புகிற்கொடி தாந்
தனியான சோலைப் பெயரோடு பூப்பெயர் சார்ந்திடினே. (255 )
நிலவு வெளிப் படுதல்.
முத்தக் குடைநிழற் றேவர்கள் சூழ முதற்சமரி
லந்தி முகனைக்கொன் றோன் மயில் வெற்பினி லாயிழையே
பந்துப் பெயரோ டொருவர்வந் தாலும் பவுஞ்சிதென்பார்
சந்தக்கு பேரன்வந் தாலெவர் தூங்குவர் சொல்லுகவே. (256)
கூகை குழறுதல்.
அசர மெனப்பல் லுயிர்தோறு மந்தரி யாமியுமாய்ச்
சுகநிலை யான முருகன் மயில்வரைத் தோகையரே
நகரந் திரண்டினி லாறொன்ப தேறிக் கதறுமென்றாற்
பகர்பதினொன்று தடையென்று நீங்கும் பதியைவிட்டே (257)
கோழி குரற்காட்டுதல்.
ஒருசாதி யிற்பிறந் தேயஞ்சு சாதியுடன் கலந்து
மருநாளி லூண் முதன் மாறிய மூட மனக்குருகார்
பரிவா யெனக்குரு கார்வே லன்றோகைப் பருப்பதத்தா
ருகா மனையிற் பறையடிந் தால்வர லாவதெங்கே. (258 )
-------
அரும்பதவுரை
(240) விபுதர் - தேவர். காலும், சிலம்பும், இருகையும், போல் பட்சிசாலம் மலர்வனத்தே
மண்ணிலுதித்தன என்பது கால்கள் போக்கு வரத்தாயிரவு முழுதுஞ் சஞ்சரிப்பது, சிலம்புடைய
நடக்கினும் ஒலிப்பது அன்றி அடைந்தாரைக் காட்டிக்கொடுப்பது, கைபாங்கியைத் தட்டி
யெழுப்புவது ஆகிய விம்மூன்று செயலும் பட்சிக்குமுளவாதலறிக.
(241) இடையூறு - துன்பம். சூறை - சுழற்காற்று, படுத்த - சாய்க்க . ஆறுபொறிக்கொண்ட காற்று
என்றது சூட்சமாவதாரவக்கினிப் பொறியாகிய வாறையுஞ் சரவணப்பொய்கையிலிட்டரையு
தேவனை என்க. ஐம்பொறி என்றது சுரோத்திராதியொற்றுமைபற்றிய மன மருட்சியை. காற்றாற்
புள்ளெழும்பிய தைத்தலைவனானிகழ்ந்ததென்று மருண்டே னென்பது கருத்து.
(242) கல்லைக் காட்டல் - அவயன்றிருளிற் காட்டல். கால் வயிறு என்றது உண்ணாவருத்தம் என்க .
நன்றி என் அன்றியும் எனப் பிரிக்க. புன்னைமேற்பாம்பு என்றது. அங்கிய பாம்பைத்தலைவன்
வைத்து மாலையென்றெடுத்ததை, என்க . அன்மெய் என்றது குமாரக்கடவுள் குழந்தை வடிவத்தை
(243) சரம்போல் நிலையர் என்றது நினைத்த குறியிற்றைக்கும் பாணம் போலுமனநிலையுடைய
பெரியோரை என்க. குரங்காமெனச் சொன்னதைக் கைவல்லியத்திற்காண்க. தலைவிய
வயவங்களைவன் முதலிய பிவைகளிற் குறித்திருந்துங் காணவில்லை என்பது கருத்து.
அன்றிவன மெல்லாமோடிப்பார்த்துங் கண்டிலேனென்றானெனினு மமையும். பரந் து - பரவி.
நிரந்து - கலந்து. கூந்தல் - கூந்தற்பனை. அதன்சரங்கூந் சற்குவமானம். தென்னை - தனம்.
வாழை - துடை. மா - மேனியும், பண்ணும். கமுகு - கழுத்து.
(244) புன்னையிற்றலைவன் வந்து வைத்திருக்கின்ற பந்தையிலக்க ணயாற் காய்த்ததென்றார்.
ஏனையவுமன்ன. பேசாக்கிளி - ஒப்பனைக் ஒளிகாட்சிப்படுத்தாததாற் கண்ணையிகழ்ந்தாள் என்க.
(245) உன்னைத்துணைபிரிந்தவன்றிலென்பார்கள், தாய்விஷபா னம் பண்ணுவாள்; எனவே
யெல்லை தப்புவேன் வந்தது மட்டும் என் பது கருத்தாயிற்று. தனிமெய்ப்பொருள் அமுது என்பது சிவபெருமா னுண்டவிடம் என்க
(246) கண்டேன் பலமின் என்றது இரவில் மேல் வீட்டிலிருந்த பாங்கி புன்னையங்கானத்திற்
றலைவனிடசாரி வலசாரியாகச் சுற்றும் போதுண்டாகிய கத்தியினொளிகளை என்க . குறிவிடிந்து
தேறுவை என் மது தலைவனடிச்சுவடுகளைக் கண்டு தெளிவாய் என்றவாறு. ஓ இரக்கக் குறிப்பு.
(247) தென்னை மடல் கமுகங்காய் தருமோவெனவே வெற்றிலை பாக்குத் தலைவி வைத்ததாயிற்று.
ஆய்ந்த தென்னை என்றது தலைவன் முன்னாராய்ந்து பார்த்ததென்னை என்றபடி. வந்ததறிந்தும் வராதது போற் கூறுவது மடந்தையர்க்குச் சுபாவம். நண்ணிலையேல் யானாகிலுந் துணையாய் வருவேன் என்பது பரியாசம்.
(248) பொருளின் மட்டு - பொருளின்ளவை. பட்டினியில்லை என்றது பாங்கி தலைவன்
றீங்கெடுத் தியம்பற் றுறையில் உசஉ - வது கால் வயிற்றுக்கூட்ட வைத்தார் என்றமையால்
எளியேன் கருதுமிடத்திற் பசி பத்திருத்தலில்லை என்றவாறு. பகலெண்ணம் என்றது விடிந்தபின் பார் க்க வருதலை , கட்டிலும் மெத்தையுமில்லை என்றது கட்டிலிற் பஞ்சணை யிற் படுத்திருக்கிற பேர் வரக்கூடுமோ என்றவாறு. எளியேன் என்பது பெருமித ரசம்.
(249) கேணியோசை தலைவன் பழமுதிர்த்தல் ; விண்ணென்றது கம்பு வீச்சு . கூபவோசை
என்றது கிணற்றில் கல்லெறிதலை. இவற்றி ற்கு மறுதலை கேணியில் மீன் அடித்தது, ஆகாயத்திற் பக்ஷி வேகமாய்ப் பறந்தது, கேணியிற் றென்னைநெற்று விழுந்தது ; என்க. அல் - இரவு குமுக்கு - தொமுக்கு, என்பன ஒலிக்குறிப்பு:
(250) கின்னரிவீணையின் ஆவதின்றே சிங்கம் கெர்ச்சிக்கின் என்றது யான் செய்த சிங்க நாதம்
கின்னரி வீணையி னிசையைப்போற் கேளாது போலும் என்ற டி. புன்னை அரும்பு முற்றத்து
அசைத்தேனே ன்றது வந்ததற்கடையாளங் கூறியவாறு. அன்னம் - அன்னப் பறவை, தலைவி.
இனிப்புகன்று என்
(251) மிடா - ஆளைப்போலுயர்ந்த வொருசெடி. மயில் ஓங்கலர் என்றது தோகை
மலையிலுள்ளவராகிய தலைவரை.
(252) பாபத்து - பாய். ஆபத்து - ஆய். பத்தாவது எண்யகாம் மாதல் காண்க. பாய் - பாயல்.
ஆய் - தாய். ஆபத்தைநோக்கிப் பயந் தனன் என்பது மற்றொரு பொருள்.
(253) பாசி - நாய். பீர் - காமவின்பம். நீர்ப்பாசியை விலக்கி யிந்த நீரைக்குடிக்கவல்லார் யார்?
என்பது மற்றொரு பொருள்.
(254) உயிர் வரிச்சட்டத்திலாறு என்றது . இடையில் இரண்டு என்றது ர். (ர்) என்றபடி
தவிப்பு - உறங்காதிருத்தல்.
(255) தளியான சோலைப் பேர் - கா . பூப்பெயர் - அலர் . இர ண்டுங்கூடிற் (காவலர்) என்றடி.
(மருகா வருக வகை டான் - ன, தன்னா குவர் - நித்திரை செய்வார் மற்றொரு பொருள்
தாழ்ந்திருப்பார், சோம் பியிருப்பார் என்றுமாம்.
(257) ககாத்திரண்டினில் காவில். ஆறு - கூ. ஒன்பது - கை (கூகை) பதினொன்று
கோ. கோ - அசன்.
(258) ஒருசாதி - கோழி. அஞ்சு சாதியுடன் கலந்து - வல்லூறு, ஆந்தை, காக்கை, மயில்
என்னுமிவைகளோடு அஞ்ச சாதியென்னும்படி கலந்து போன் முதன் மாறுதலாவது காண், நடை, அசு, நித்திரை, மா ணம் ஆகியவில்வைந்து தொழிலு மொருநாளிற் பந்துச் சாமத்தில் மாறி வருவது. மூடமனமாவது முறைதப்பிய சேர்க்கையும், காரணமில்லாத யுத்தமும் . பறையடித்தல் சிறகடித்துக் கூவுதல், அருகிலுள்ள மனையிலே பறையாகிய வாத்தியத்தைக் கொட்டினால் யாவர் வருவார் என்பது மற் றொரு பொருள்.
இரவுக்குறியிடையீடு முற்றிற்று.
------------
15. வரைதல் வேட்கை (259 - 277)
(பாங்கி) பருவரல் வினவல்.
பாதாவுந் தந்தையும் பிள்ளையுஞ் சுற்றமு மற்றுமெல்லா
நா னெனநின் றவன்மயில் வெற்பினி னின்றமதி
தே பிறை மேற் பிறையுங்கொவ்வைக்சனி மேலிலையு
நே தரித்திலை யென்னோ பருவரல் வந்ததுவே. (259)
பங்கிக்கிறைவி, அருமறை செவிலி யறிந்தமை கூறல்.
காவைப் பழத்தினிற் காயும் வடுவுங் கொடுத்தவரார்
வைக்கென் றாவன்னையுன்னைக்கிளியைப் பகர்ந்தொழித்தேன்
விற் கணத்தை மறைத்த க்ரவுஞ்சப் பொருப்பையங்கைத்
நவிக்களித்த மயிலோன் மயில்வரைச் சேயிழையே. (260)
தலைமகன் வருந்தொழிற் கருமை சாற்றல்.
ஒருநாளும் பாதி யதுநாலு கூறதி லொன்று தள்ளி
வருமூன்று கூறுக்கொ ரேழிடை யூறு வருங்கொடிகாய்த்
திருவே ரகத்தி லிருந்தோன் மயில்வெற்பர் சேயிழையே
யிருணாள் வருவதெங் கேகுற்றம் பார்க்கின்றவில்லத்திலே. (261)
தலைமகனூர்க்குச் செலவொருப் படுதல்.
படையோ டெழுந்து விண்ணோர்சேய்நல் லூரிற் பணியச்செந்தி
லடைவார் மயில் வெற்பி னானோர் விலைச்சரக் கானதினாற்
கடையூம் போய்க்கப்ப லேறிப் பலர்கண் படச்சென்றுபொன்
கொடையாளர் வீட்டிற் புகுந்தே சரக்குப்பை கூடுவனே. (262)
பாங்கி இறைவனைப் பழித்தல்.
விரும்பிமுன் காட்டின் மனமஞ்சி லீரென்று வேண்டியுன்கா
றிரும்பிய போது கல் லென்றாரது நல்ல செப்பல்லவோ
கரும்பு மொழிவள்ளி யார்மயில் வெற்பர் கருணையென்னோ
குரும்பையி லேயென்றுங் கோவாத முத்தங் குவித்ததுவே. (263)
பூங்கொடி, இறையோன்றன்னை நொந்தியற் படமொழிதல்.
வானுண்ட தேசிகன் சொற்படிக் கேவிறல் வாகுவைநீர்
மீனுண்ட வூர்க்குப் புகவிடுத் தோன்மயில் வெற்பனையாய்
நானுண்டு நீயுண்டென் றோர் பூத் தலைவைத்த நண்பர் விடார்
தேனுண்ட வண்டினந் தேடாத் தருவில்லைத் தேசத்திலே. (264)
கனவுநலி புரைத்தல்.
மாகாயம் பாய்ந்திந்தத் தேவையிற் சொர்ன மலையொடுக்கி
மீகீ ழுயர்ந்தவன் போற்றிய வேண்மயில் வெற்பர் வந்தார்
தோகாயென் றார்முத்தந் தந்தார் படுத்தார் துயில் புரிந்தா
ராகாயப் பூவு முயற்கொம்பு மாயின ராரணங்கே. (265)
கவினழி புரைத்தல்.
அடியைப் படர விலங்கையி லூன்றி யதிர்கடற்குக் குடியைப்
படரவிட் டோன் பணி வேண்மயிற் கோத்திருந்தார் படியைப்
படரவிட் டார்பழி யாம்பயிரைப்பசலைக் கொடியைப்
படரவிட் டார்மணம் பூசிய குன்றத்திலே. (266)
தன்றுயர் தலைவற் குணர்த்தல் வேண்டல்
மீறித் தனுவிட்டு நாண்போன வாறும் விழுந்திடுஞ்சிற்
றாறக் கரைப்பட்ட துஞ்சொல்லு வாருவ ராயினன்றே
வானத் திலங்கேசன் பொன்முடி யாயிரமுஞ்
சூறைப் படுத்தான் றொழுப்வேள்பைத் தோகைச்சுரும்பவர்க்கே (267)
துன்புறுபாங்கி சொல்லெனச்சொல்லல்.
மால்வைத் தசுரர் வெருண்டோட வீர மயேந்திரத்திற்
கால்வைத்த வன்பணி வேண்மயில் வெற்புறை காவலர்க்கே
சேல்வைத்த கண்ணிணை யாயென் னியம்புதி சேர்கிளிக்குப்
பால்வைத் தருத்தில் ரோவளர்ப் போரிந்தப் பாரகத்தே (268 )
அலர்பார்த்துற்ற வச்சக்கிளவி.
இழகு மணிக்குங் குமக்குரும் பைக்கொடி யேயுனது
விழிவடு வேனுங் குழைவாய்தல் பெற்றது விண்ணமெல்லார்
தொழும்வடி வேலன் மயில் வெற்பி லுன்னனை சொல்லியவாய்
பழமென வாயு மலரைக் கொடுத்துப் பயப்பிந்ததே. (269)
ஆறுபார்த்துற்ற வச்சக்கிளவி.
ஓதும் வடக்கு மதில் காவ லாளியை யூறுசெய்த
சோதி பணியும் பரஞ்சோதியார் பசுந் தோகைவெற்பார்
பாதியிரவில் வருதனன் றோவரைப் பாந்தளுண்டே
நீது செலப்பணி யேவரி லூர்க்குச் செலப்பணியே. (270)
காமமிக்க கழிபடர் கிளவி
மங்காத கீர்த்தி பெறவீர வாகுக்கு வான் கதிர்போற்
சிங்கா சனஞ்சபைக் இந்தவன் றோகைச் சிலம்பண்ணலார்
தங்காதல் கண்டனிரேகிளி காண்மலர்த் தண்டலை நாள்
பொங்கிர் புளினங்களே துயர் கூறும் புளினங்களே. (271)
தன்னுட்கையா றெய்திடு கிளவி.
திரிகரிப் போர்வையன் மைந்தன் மயூரச் சிலம்பண்ணலா
ரொருகரி தாயிருந் தோர் நாட்டுயர வுரைத்த வெஞ்சொற்
பரிகரி யென்றதுங்கோட்டானை தாழக்கைப் பற்றியபோ
தரிகரி யென்றதும் வீணோமதியேயதுமதியே, (272)
நெறிவிலக்குவித்தல்.
மைப்பார் புகழு மருது துரைவேண் மயில்வரை மேற்
பறைப்பூசத் தேரில் வரச்செய் வதுமன்ன தானஞ்செய்ய
மப்பூ மியுங்கண் டிடவரலாமென் இறைவருமே
லெப்பூ சலுமுண்டுமைப்பூச லுண்டெனி லேதமின்றே. (273)
குறி விலக்கு வித்தல்.
…விய தாயர் குறிவிலக் காகிய மென்னுடம்பிற்
பாவி யொருவன் கணை பட்ட சூழ்ச்சி பகர்சகியே
நாவடி கொண்டுமுப்பத்துமுக் கோடியர் கைதொழுத
சேவடி யான் செந்திலான்பாந்நோகைச்சிலம் பவர்க்கே. (274)
வெறிவிலக் குவித்தல்.
முன்னிய சூரனைச் சொல்லாமை சொல்லி முனிந்தவர்கள்
பின்னிட வந்தோன் பணிகுகன் றோகைப் பிறங்கலன்னை
பொன்னிசை மேடத்தை முன்னிட்டுப் பூசை புரிந்திடினுங்
கன்னியுஞ் சிங்கமு நீங்காதென் றோது கனங்குழையே. (275 )
பிறர்விலக்குவித்தல்.
அன்றைத் தினத்தி லசுரேசர் பல்லா யிரரையவன்
முன்றிற் படுத்தான் பணி வேண் மயில்வரை பொய்குழலே
யின்றைக் கிரப்பார்க் கிசைவதுண்டோக சென்னையில்வர்
குன்றக் குடியெனப் பேரிருந் தாலுங்குன் றாக்குடியே. (276)
குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தல்.
சொன்றிக் குழிசி யெனப்பதின் காவத்தூரந்தெவ்வூர்
வென்றிக் கனலிட் டவன் பணி வேண்மயில் வெற்பணங்கே
குன்றக் குடிக்கா வலர் மணமிக்கென்று கூறினையே
லன்றைக் கனை நனி யாங்கார நீங்கும் பின் னாவதுண்டே . (277 )
அரும்பதவுரை
(259) மதி - முகம். பிறை மேற் பிறை என்றது நெற்றியிற் பூசும் திருநீற்றை என்க . கொவ்வைக்கனி - வாய்,
இலை - வெற்றிலை.
(260) கோவைப்பழம் - இதழ். காய் - பாக்கு. வடு - தழும்பு. உன்னைக்கிளியைப்பகர்ந்து ஒளித்தேன்
என்றது பாக்குக் கொடுத்தது பா ங்கியென்றும், மாறுபடுத்தியது கிளியென்றும் மறைத்துச் சொன்னேன் என்றவாறு. அம்கைத்தேவி என்றது சத்திவடிவாகிய வேலாயுதத்தை என்க. கணம் - கூட்டம்.
(261) ஒருநாளும் பாதி என்றது இராத்திரியை. நாலு கூறு - நான்கு சாமம். ஒரு சாமம் உண்டொழிவு.
மூன்று சாமத்திலே ரிடை யூறாவன நாய் முதற் கோழியிறுதியாகிய எழுமாம்.
(262) கடை - வாயில், ஆவணம். கப்பலேற்றல் - ஆறுகடத்தல், தோணியேறுதல், சாக்குப்பை - மலர்
மாலையாலாகிய மெத்தை, சாக் கையுடையபை. பொன்கொடையாளர் - அலைவார், பொன்னக்
கொடுத்து வாங்குபவர். சரம் - மாலை.
(263) கால் திரும்புகிறபோது காலிலழுத்தும் கல்லென்றார். அதுடன மஞ்சவிரென்று சொன்ன
சமயத்திற் சொன்னதால் மனத்துக்கு வமையாக்கி யெடுத்துரைப்பதாயிற்று. குரும்பை - முலை.
கோவாத முத்து - கண்ணீ ர்.
(264) தேசிகன் - பிரகஸ்பதி. நீர் மீனுண்டவூர் - மயேந்திரபுரி ஓர் பூத்தலை வைத்தல் -கையாகிய
மலரைத் தலைபிலே வைத்துறுதிகூறுதல்.
(265) மாகாயம் - பெரிய வாகாயம். தேவை - இராமேச்சுரம். சொர்ன மலை - கந்தமாதனம். ஒடுக்கி
என்றது அழுத்தித் தாழ்த்தி என் றபடி. மீகிழுயர்ந்தவன் - வீரவாகு.
(266) குடி என்றது இராவணாதி யிராக்கதர்களை. படரவிட் டோன் என்றது இராமனை. படி - பூமி.
பசலைக்கொடி - முலைமேற் பசலை. மணம்பூசிய குன்றம் - களபமணிந்த முலை.
(267) தனு - உடம்பு, வில். நாண் - வெட்கம், நாணி. சிற்றாறு - சிறுமார்க்கம், சிறுந்தி.
அக்கரை - காமவெழுச்சி, அந்தக்கரை. சிற்ற அக்கரைப்பட்டதென்றது தலை!மகனூர்க்குச்
செலவொருப்பட்டதெனினு மமையும்.
(268) கிளி என்பது தலைவியை வளர்ப்போர் - தலைவர் . பால் காமவின்பமாகிய பால். தலைவர்
உன்றுயரமெலா மறிந்தவராகலான் பான் சொல்லவேண்டுவதில்லை யென்பது குறிப்பு. -
(269) வடு - மாவடு, குழைவாய்தல் - குழைவையாராய்தல். பழம் - கோவைப்பழம். அலர் - அவராகிய
பழமொழி. வடுக்குழையானது, பழமலரானது என்பது மற்றொரு பொருள்.
(270) வரைப்பாந்தள் - மலைப்பாம்பு. செலப்பணியே - நீர்ப் பாம்பே. வரில் தீது - றலைவர்
வரிற்றீங்குண்டாகும். செலப்பணி - செல்லப்பணிப்பாயாக.
(271) சபை - சூரபன்மன் சபை. புளினம் - மணற்குன்று. புள் இனம் - பறவைக் கூட்டம்.
(272) மயூரச்சிலம்பண்ண லார் என்றது குமாரக்கடவுளை. ஒரு நரி - ஒருசாக்ஷி. தாய் - தாயானவள்.
இருந்து ஒருநாள் துயர் - யா னிருந்து ஒருநாள் துயரப்பட. உரைத்த வெஞ்சொல் - சொல்லிய கொதிஞ்சொல்
பரிகரி என்றதும் - பொறுத்துக்கொள்ளென்று தலைவர் சொ ன்னதும். அரிகரி என்றதும் சோலை,
மூங்கில், கிளி, சிங்கம் முதலா பின சாக்ஷி என்றதும். மதியே - சந்திரனே. அதுமதியே - அதனை
கருதுவாயாக. அரிகரியென்று பிரார்த்தனை செய்தது மென்பது மற் றொரு பொருள்
(273) தைப்பூசத் தேரையும், அன்ன தானஞ்செய்யு மிடத்தை பும் பார்க்க வரலாம். வருமேல் - மற்றைப்
போதில் வந்தால். எப்பூசலு முண்டு - ஆறலைக்கும் பூசல், இனப்பூசல், புலி முதலியவற்றின் பூசல், காவலர் முதலிய பூசல், தாய்பூசல், ஆகிய எல்லாப்பூசலு முண்டாகும், மைப்பூசல் என்றது தன்னைப் பிறரறியாமற் செய்யும் அஞ்சனம் பூசுதலை.
(274) ஏவியதாயர் - இல்லிலிருக்கும்படி கட்டளையிட்ட தாய்மார் கள். குறி - எண்ணம். விலக்காகியும்
என்றது தினைப்புனங்காவலுக் குப்போகலா மென்றுரைத்தது. பாவியொருவன் - மன்மதன் . குறிவி லக்காகிபு மம் புதைத்த தென்பது மற்றொரு பொருள்.
(275) பொன்னிசை மேடம் - அழகுடைய ஆட்டுக்கடா, பிரகஸ் பதியிருக்கு மேடராசி பூசை - பலியிடுதல்,
பூசித்தல். நன்னி - தலைவி, கன்னிராசி. சிங்கம் - தலைவன், சிங்கராசி.
(276) என்னையின்றைக் கிரப்பார்க்குப் புகழிசைவதுண்டோ வெனக்கொண்டு கூட்டுக. யாசிப்பவருக்குப்
புகழுண்டாகாது என்பது மற்றொரு பொருள். குன்று அக்குடி - குன்றிய அந்தக்குடி. குன்றாக்குடி உயர்குடி , எனவே யுயர் குலத்துக் கற்புடையோனா கலாற்பிறர் வரைவிற் கிசையே னவர்வாவை விலக்கு என்பது கருத்து.
(277) சொன்றிக்குழிசி - சோற்றுப்பானை. தெவ்வூர் என்றது இலங்காபுரியை. காவலர் மணம் - அரசர்
கலியாணம். சோலையிலுள்ள மலர் வாசனை யென்பது மற்றொரு பொருள். பின் ஆவதுண்டே என்பது
நீகூறினாற் கொடுக்கலாமென்று மனங்கொள்வாள் பின்றகப்பனார்
முதலானோரையுஞ் சம்மதிக்கச் செய்வாள் என்றபடி
வரைதல் வேட்கை முற்றிற்று.
---------------
16. வரைவு கடாதல் (278 - 296)
வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்
எப்போ தருள் புரி வீரென்ற வார்த்தையிரவிற் கொண்டு
துப்போ திதழ்மின்னை யென்னையென் றாவன்னை தூங்கமார்க்
கப்போது தூது தெரித்தவன் றோகை யணிவெப்பமே
செப்போதி னாண் மலர் கொய்யாதர் மேலிட்டுச் சீர்பெறவே. (277)
அலரறிவுத்தல்.
சீரார் சயந்தனுந் தேவரும் போற்றுஞ் சிறையினிக்கண்
ணேரான வன்மயில் வெற்பிறை வாவிவ ணேர்பழி
வாராத போதி லரும்பாகும் வந்தான் மலாலா
மீரா றிடைப்பட்டிடில் வடு வாமென் றிரங்கினளே. (278)
தாயறிவுணர்த்தல்.
குறியான் வலுவென்ற போதே கணங்கள் குரைகடலே
நெறியாக வானெறி வந்தோன் மயில் வெற்பினேரண்ணலே
பறவாத வன்னமு முண்ணாத வன்னமும் பார்த்திலனென்
ற்றவே வெகுண்டு குறித்தாளெம் மன்னை யருங்களவே. (279)
வெறியச்சுறுத்தல்.
வாட்டமில் வீர ருடனேம கூடத்தின் மாமுனிவர்
பாட்டுக் கருள்செய் திருந்தோன் மயில்வெற்பிற் பார்மன்னனே
கோட்டிற் செறிமுலை பாரா யெனிலிந்தக் கோயிலிற்பா
ராட்டுக்கு முன்மத் தளதாள வோசை யதிர்ந்திடுமே. (280)
பிறர்வரை வுணர்த்தல்.
ஆங்கார முற்றனன் வந்தா னில்னென் றடையலரூர்
தாங்காண நின்றவன் றோகைவெற் பாருந் தனித்துரையே
யேங்காத வுங்களி லூரு முலகமு மென்படுமோ
நீங்காத மானுக்குக் கொல்லாத வேங்கையை நேர்குவரே. (281)
வரைவெதிர் வுணர்த்தல்.
பூமலி ரூரன் மகன் போரை வென்றவன் போற்றுஞ்செவ்வேள்
காமலி தோகைவெற் பாமணம் பேசக் கருத்தினையேற்
றாமரை யெம்மூரகவித ழெம்மையர் தையலி வண்
மாமணச் செந்தேன் வருநீ கொண் டேகுதி வண்டெனவே. (282)
வரையுநா ளுணர்த்தல்.
நானைக்கு முன்வந் திடுஞ்ரூர பன்மனைச் சாடி வந்த
சேனைக் கடலை யழித்தோன் மயில்வரைத் தேரண்ணலே
வானத்தி னூர்கொண்ட வம்புலி பார்த்தனர் மாதர் மலர்
நானத்தினூர்கொண்ட வம்புலி பார்த்தனர் கானவரே. (283)
அறிவறிவுறுத்தல்
அழிக்கின்ற தானவன் மாயமஞ் சக்கை யயிலெறிந்தோன்
செழிக்கின்ற தோகைவெற் பான்றந்தை போலத் திருவண்ணலே
பறிக்கஞ்சி னாளோர் பதிவு சொன் னாலும் பகர் தல்விட்டுச்
ஈழிக்கின்ற வாரி முழங்கா லனவென்று சொல்லினளே . (284)
குறிபெயர்த்திடுதல்.
..வகித்த மானத் துடன் கோட்டை தூளிட்ட வீரன் பணி
..பாகத் தவியன் முருகன் மயில் வரை மன்னவனே
சாகத்திலேவர வேண்டா மினியின்று தொட்டுயர்ந்த
..ராகத்தின் வாய்வருந் தேவா முதம் பெற நாடுவையே. (285)
பகல் வருவானை யிரவுவருகென்றல்.
.மையாரு மேனி பெறுபானு கோடனை மாய்த்தல் செய்த
செய்யான் பணிகுகன் றோகைனெற் பாபகற் சோவெண்ணிற்
கையாரு மாலையிற் சேரா ந்துமணங் காண்கிலது
மெய்யார் மனித மரத்திலுண் டாமலர் மேவிடுமே. (286)
இரவுவருவானைப் பகல்வருகென்றல்.
சொருபங்கொள் தெய்வப் படைசிங்க மாமுகரூரன் விட
வொருவுதல் செய்த குமரன் மயில் வெற்புக் கோர்பகலே
வருதனன்றாமந்த வாணன் மகள் சகி வந்திடினு
மிரவினுக் கஞ்சாத் துரையே யிராவர லெண்ணலையே. (287)
பகலினு மிரவினும் பயின்று வருகென்றல்.
செல்லியல் சிங்கமு காசுர னுட்கொண்ட சேனை வரக்
கல்லிய வாளியன் வேலன் மயில்வரைக் காவலவா
மல்லியல் கீர்த்தியும் புண்ணிய மும் பெற்ற மன்னவர்கள்
வெல்லை யிகழார் கருநிற மாலை யிகழ்ந் திலரே. ( 288)
பகலினு மிரவினு மகலிவ ணென்றல்
தோல்வி படாத வரிமுகன் ஞானத்திற் றோத்திரஞ்செய்
வேலன் முருகன் குகன் சேந்தன் வேண்மயில் வெற்பிறைவா
மாலைவந் தால்விழி நீலத்துக் காரம் வருத்திராங்
காலைவந் தாலு முகமதி யாமனைக் கஞ்சத்துக்கே. ( 289)
உரவோனாடு முருங் குலனு,மரபும் புகழும் வாய்மையுங் கூறல்.
ஊருட னாடுங் குலமு மரபு முயர்புகழுஞ்
சீரொடு வாய்மையு நின்போ லுயர்வு செறியெறியா
ளேருறு வேலன் மயில் வெற்ப கூந்த லிவட்குரைக்காய்
றார்மலர்க் காடல்ல வோ மணங் காணுந் தருணமிக்க. (290)
ஆறுபார்த்துற்ற வச்சங் கூறல்.
வாரீச சந்திர ஞாயமிவ் வூர்க்குன் மலர்முகமே
யோர் பானு பங்கய ஞாயமெம்மையர்க் குறுமனமே
சேர்வான மாறின் முருகன் மயில்வெற்பிற் சிரு.றுமோ
தாரா தரசா தகஞாய மங்கை தரணியிலே. (291)
ஆற்றாத் தன்மை யாற்றக் கூறல்.
வல்லி யெழுதிய தாமரை யேயென்னும் வாரிசஞ்சே
ரல்லியை நீத்த மறவியென் னோவென்னு மாடும் பச்சைச்
செல்வ மயில்வரை வேளை நினையார் நிறமெனவே
யெல்லியு நீங்கு மிவளுக்கொன் மாற்ற விசைத்தருனே. (292)
காவன் மிக வுரைத்தல்
நில்லெனச் சிங்க முகன்றலை பற்பல நீக்கிநின் றோன்
கல்விவித் தான முருகன் மயில்வரைக் காவலனா
பல்வித மான கனவோ விளங்கப் படுத்தவன்னை
சொல்விலங்கிட்டனள் கள்ளருக் குற்றார் துணையில்லையே. (293)
காமமிக வுரைத்தல்
..ஈட்டிற் குழந்தை யிதழ்கடிக் குங்கிளி மேற்புகலுங்
..பட்டு மரம்பை யணைத்து முத் தாடிக் கனிபருகு
..பட்டிற் சிறந்த முருகன் மயில் வெற்பி னாரியிச்சை
காட்டிற் குருவித் தலைப்பனங் காயென்னிற் கூறலென்னே. (294)
கனவுகலி புரைத்தல்.
…'ழிமீ திருந்து தன மீதிலாவர் விழிக்கினெஞ்சின்
..ரியோ டுவர்பிரி யேனென்பர் வேலன் மயில்வரையார்
..சியாகு மென்னும் பறித்தேகு மென்னும் படுமிரவின்
..மாழியா லிரந்தும் விழியாள் விடிந்து முன் மோகினியே. (295)
கவினழி புரைத்தல்.
…ண்ணாத செங்கனி பூதி செறிமணி யோட்டுத்த
…ண்ணாடி போல்வஞ்சி யாகின ளேயிரு கால் பணிந்து
…ண்ணாடர் போற்று முருகன் மயில்வரை மேவினர்போ
---லண்ணாத தெண்ணிவண் சாதியி லேமுத் தினையுகுத்தே. (296)
அரும்பதவுரை
(278) இரவில் எப்போதருள் புரிவீர் என்றது நனவிற்சேர்க்கையி லாவது, கனவிற் புணர்ப்பிலாவதாகுக.
இறைவனையெப்போது அருள்புரி வீர் என்ற வந்தச் சொல்லைச் செவிலியிரவிலேனும், பகலிலேனும்
வின வத்தலை வியானவள் கனவிற் பூப்பறிக்கின்ற மகளிரோடு கூறியதாக்கி எப்போது என்பதை
எந்தப்பூவைப் பறித்து வந்து எனக்குக் கொடுப்பீர் என்று கூறினதாய் மறைத்தாளென்க.
(அரும்பு - சிறுசொல். மலர் - பெருவார்த்தை , வடு - குற்றம், அரும்பு , மலர், வடு, என்பது மற்றொரு
பொருள்.
(279) வலுக்கணங்கள் குறியான் என்ற போதே - தமது வலிமை யையும் தங்கூட்டமான சேனா
வீரர்களையும் சூரன் றெரிந்து கீழ்ப்படிய மாட்டானென்ற வடனே. பறவாதவன்னம் - சோறு ,
உண்ணாதவன்னம் - அன்னப்பறவை.
(280) கோடு - மலைச்சிகரம். தலைவி துயர் நீக்கும் பொருட்டு அன் னையர் மத்தள நாள் முழங்கப்
பலியிடுவார் என்பது கருத்து - ஆடலுக்கு
முன் மத்தள தாளமதிரு மென்பது மற்றொரு பொருள்.
(281) நீங்காத மான் - தலைவி. கொல்லாவேங்கை . பொன். உங்களில் ஊரும் உலகமும் என்படுமோ
வென்பது பொன்னேர்ந்தால் அந்த விறைவர்க்கும், தலைவற்கும் யுத்தம் வருமென்றும், இவ்வூரிற்
பாங்கியர் முதலிய விறைவனைச்சேர்ந்தவர்கட்கும், சேராதவர்கட்கும், துக்கம் வருமென்றும், இவ்வூர்
அழியினும் அழியும் என்றும், இறைவியுயிர்க்கிறு வருமென்றும், இன்னும் பலவாகவுங் கூறியவாறு.
ஏங்காதவுங்கள் என் றது திடசிந்தை நீங்காத தலைவன் றலைவியரை என்க.
(282) மாமணச் செந்தேன் என்றது கலியாணத்துக் குரித்தான தலைவியை,
(283) ஊர்கொாண்டவம்புலி - பரிவேடங்கொண்ட சந்திரன். கானத்தின் மலர் வார்கொண்ட
வம்புலி - வேங்கை மரம். எனவேயில் ரெண்டு மாயினாற்குறிஞ்சி நிலத்திற் கலியாண நாளாம் என்றபடி. புலி - வங்கை, மலர் ஊர்கொண்ட - மலர்களொடு பொருந்திய.
(284) தோகை வெற்பான்றந்தை பழிக்கஞ்சியது திருவிளையா ற் புராணத்தானறிக. பாங்கியானவள்
பிறரறியாமற் பதிவான வார்த் தை சொல்லப் புகினும் அதைவிட்டுச் சுழிக்கின்ற சமுத்திரமுழங்காலள வன்று குறியாள் கூறலாய்ச்சொற்றதனால் இறைவன் மேலிட்டுச் சொ லும் பழிக்கு அஞ்சியதாயிற்று. அன்றியும் காவலெவ்வளம். காரியம் பாவர் மணஞ்செய்யவல்லார் என்னுங்கருத்துமாயிற்று.
(285) சோகம் - அசோகமரம். அசோகம் சோகமானது தலைக் கறை. நாகத்தின் வாய்வருந்தேவாமுதம்
என்றது புன்னை மரத்திடத் எல் வருந்தலைவியை. நாகம் - தேவருலகு.
(286) அலரென்றுபெயரே யன்றிமலான்றாகலானிங்கனங் கூறி றர் . அலர் - பழிமொழி. மாலையிற்
சேராதெனவே மாலைக்காலம் ரெலாமென்றுமாம். மணங்காண்கிலது எனவே பழி மகுந்தாற் கலியா
எத்துக்கு யோக்கிய மல்லவென்பது மாயிற்று.
(287) வாணன் மகள் சகிவந்திடினும் என்றது உஷைமோகித்த திருத்தனை யிருட்டிலே கட்டிலுடனே
கொண்டு வந்த சித்திரலேகை பந்தாலும் என்றபடி. இரவினுக்கஞ்சாதுரை இருட்டுக்குப் பயப்படாத
பிறைவன். கொடுக்கிறது செலவென்று நினையாதவன் என்பது மற்றொரு பொருள்.
(288 ) எல் - பகல். கருகிறமாலை - இருட்டு. எனவேபக லினு ரெவினும் நீ வருக என்றவாறு. அரசர்கள்
திருமாலையும், சூரியனையுங்க பாது பூசிப்பர் என்பது மற்றொரு பொருள்.
(289) அரிமுகன் - குதிரைமுகத்தையுடைய சூப்பன்மன். ஆரம் - லைவன் மார்பிலணிந்த பதக்கம்.
மதி - தலைவன் முகம் பதக்கத்து மணி நரியப்பிரகாசமாகின்ற தாலெவருங்காண்பார்களென்றெண்ணி
வீட்டை திட்டு வராமனித்திரைபண்ணு வராதலாற் சூரியனைக் கண்ட குவளை மல் ரத்து போலப்
பதக்கத்தைக் கதிராக்கிக்கண்ணை நீலமாக்கிக் கூறினாளா எற்று. முகமதியென்றது எல்லாருஞ்சந்திரனை
யறிவதுபோலிவனை யறி பாராகையாற் சனத்திரளாம். வரிற்காரியமில்லையென்று வீட்டிலிருப்பா
ராகையால் மதிதாமரையைக்குவிப்பது போலிவன் முகமதி கண்டு வரக் ட்டாத வதனால் வீடு
தாமரையாயிற்று.
(290) மணம் - கலியாணம், வாசனை.
(291) வாரீச சந்திரஞாயம் - குவிதல். பானுபங்கயஞாயம் - வி சிதம். இறைவன் - சூரியன். தலைவி தந்தை
தமை யன்மார் மனம் தா P. எனவே உார் தூங்கும் போதும் விழித்திருப்பாரெம்மையன் மார் ன்பதாயிற்று.
தாராதர சாதகஞாயம் என்றது மேகத்தையே கெதி பாக வெண்ணி யிருக்குஞ் சாதகப்பட்சி போலத்
தலைவியுன்னையேகதி மாக நினைத்துளாள் என்றவாறு.
(292) வல்லியெழுதியதாமரை என்றது முலைகளிற் கொடிவடி மாய்ச் சந்தனக்கோல மெழுதிய கைகளை.
வாரிசஞ்சேர் அல்லி - முக பாமரையிலுள்ள செவ்வாம் பலாகிய தலைவியதாம்.
(293) சொல்விலங்கு என்றது வீட்டைவிட்டு வெளியே செல் லற்க. என்றபடி.
(294) குழந்தையிதழ் கடிப்பதும் வந்தானென்னுஞ் சொல்லைக் இட கேட்டு அதனை விரும்புவதும்
வாழையை ணடது.காம் மிக்க குறிப்பு. குருவித்தலையிற் பனங்காய் கட்டினாற்போவென்பது பழமொழி.
சிறுகோட்டுப் பெரும்பழந்தூங்கியாங்கிவள் உயிர்தவச்சிறிது காமமோ பெரிதே எனக்காம மிகுதியைப்
பிறருங்கூறினார். முத்தாடி - முத்தமிட்டு - கோட்டிற் பனங்காயெனக்கூட்டுக.
(295) விழியாதிருந்தால் நீங்காதிருப்பார் என்பது கருத்து. மோகினி - திருமால் கொண்ட பெண்ணுருப்
போலுந் தலைவி.
(296) உண்ணாத செங்கனி என்றது அழுகும் என்ற படி. பூதி - புழுதி . சாதி - சண்பகப்பூப் போலுமூக்கு .
மேனியுமாம். முத்து - கண்
வரைவு கடாதல் முற்றிற்று.
--------------
17. ஒருவழித் தணத்தல். (297 -308 )
தன்பதிக் ககற்சி தலைவன் சாற்றல்.
…நசம்வன் காயுங் கனியும் விதையும் பெருத்த சொர்ன
…ஞ்சிக் கொடிக்குத் துகிர்க்கொடி நீசொல் வரிக்கணையால்
…ஞ்சு மரிமுகற் கொன்றோன் முருகன் விளங்குகின்ற
..ந்செழுந் தாகிய வாறெழுத் தெய்திலுண் டாவதுவே. (297)
….ரி யுருவொடு போர்செய் மகாசுரனானவனைக்
…ளியிற் போக்கிய சேந்தன் மயில்வரைக் காவலவா
…ளுமன் வஞ்சி லிரண்டோ பழுதில்லை நாடிச் செல்வாய்
….நமுன் னஞ்சி லிரண்டு பழுதாய் விடுநிசமே. (298 )
தலைவன், நீங்கள் வேண்டல்.
…நத்தினி லெண்ணியசுரேசன் றேரை யருகழைத்துச்
…ச்சொருபம்பெற நின்றோன் மயில்வெற்பிற் சொல்வதுகேள்
…..பத்தின் மகத்திற் குறைபார்ப்ப துண்டெங்குஞ் சார்கிலனுன்
நத்துக்குச் சென்று கனிவாய்க்கு மீள் குவன் மொய்குழலே. (299)
பாங்கி விடுத்தல்
பொருசூர னார்சர பப்பட்சி யாகப் பொன் மென்மயிலா
யொருமா மலையுகைத் தோன்மயில் வெற்பி லுறையண்ணலே
திருமானை நீத்தல் செய் மன்னருண் டோவிரைந் தேசென்று நீ
குருவாரம் வந்து புகின் மந்த வாரங் குறிக்குவையே. (300)
தலைவிக்கவன் செலவுணர்த்தல்.
பல்லா யிரமுருக் கொண்டெழுஞ் சூரனைப் பார்த்து நகைத்
தெல்லா மொடுக்கிய சாமி மயில் வெற்பி லேந்திழையே
மல்லார் மலைமர நோய்பின் னிடப் போய் வருது மென்றார்
கல்லார் சுரமென நீவாடச் செல்கின்ற காதல்ரே. (301)
தலைவி, நெஞ்சொடு புலத்தல்.
மார்பினிற் றாமரை பூத்ததுங் கோங்குற்ற மாமரமும்
போருறு மாவி லசோக மலர்ந்ததும் பூகந்தென்னை
நேருறு சேந்தன் மயில்வெற்பர் கண்டிலர் நேர்ந்திலர்கம்
மூரு வகை மறந் தாரூ ருவகைகொண் டோடினரே (302)
சென்றோ னீடலிற் , காமமிக்க கழிபடர்கிளவி.
ஞானசொ ரூபம்வெஞ் சூரற்குக் காட்டியந் நாண்மறைந்த
கோன் முருகையன் மயில் வெற்பர் நீடினர் கூர்கடலே
கானன் மரக்கல மேவிழி நீருங் கலங்கலமே
தூநலச் சோலைக ளேயெழு தீர்வரிஞ் சோலைகளே . (303)
கோற்றொடிப் பாங்கி யாற்றுவித்தல்.
தூண்டிய தேரே றினர் மயில் வெற்பர் துரைமருது
பாண்டிய னுந்தேர் வடந்தொட்டனன் விருப் பாகு முன்னை
வேண்டிய மன்னர் வருவார்வையாபுரி மென்கரைமேற்
றீண்டு திருவர சேயிட மாவந் திருவரசே. (304)
அவன், வந்தமை யுணர்த்தல்,
ஊர்காண் குரவையும் பேரியுங் கொம்பு மொலித்த வொலி
பார்மா வலவர்முன் னானார் படகுடி பார்கொடிப்பார்
கார்மா நிகரு முனைப்பார் மயில்வெற்பிற் கந்தன் வருந்
தேர்காண வந்தனர் நீயலங் காரிபொற் சிந்துரமே. (305)
வந்தோன்றன்னொடு, நொந்து வினாதல்.
சொன்னாளுத் தாரஞ்செய் நீரோ வெனவுரை தும்மல் செய்து
பின்னாள் வருமென் றதற்குக் கொடுமொழி பேசினன் பூம்
பொன்னாள் குகன் செயலாலிவண் வந்து புகுந்ததனா)
லென்னாக்கு மூக்குங் கொடுத்தீர் மயில் வெற்பிறையவரே. (306)
வேந்திறல் வேலோன், பாங்கியொடு நொந்து வினாதல்.
….ருதலைத் தீக்கம் பெறும்போடு மத்தள மேய்ந்தவுன்னால்
….ருத றவிர்தன் மறப்பதுண்டேபொன் மயில்வரைமேற் (டோ
…ருவிய சொற்கொண் டிறைவியை யென்னவுஞ் சொன்ன துண்
…ருகனை யெண்ணித் துயர்போக வென்று முருகனையே (307)
பாங்கி, இறைவியை யாற்றுவித்திருந்த வருமை கூறல்.
..பான்வினை யாளர் மரவினை யாளர் புகலுமண்ணின்
..வினை யாளர் வெண்ணூல்வினை யாளரைத் தாக்கல் செய்தேன்
…என்விளை யாடு முருகன் மயில்வரைத் தேரண்ணலே
..என் வினை கூறுவ துன் வினை மேன்மன மெய்திடினே. (308)
அரும்பதவுரை
(297) பிஞ்சு - மாவடு காய்- சொற்கேட்டான் காய், கனி-கோ வைக்கனி . விதை - மாதளை விதை.
இவைமுறையே கண், முலை, அதரம், பல், என்பனவாம். வஞ்சிக்கொடி என்றது தலைவியை,
துகிர்க்கொடி - பவளக்கொடி அது பாங்கி அஞ்செழுத்தாகிய வாறெழுத்து - மயூபகிரியாகிய குன்றக்குடி,
மயூரகிரி குன்றக்குடியாதல் போலப்பஞ்சாக்காமே சட்டாக்கா மென்றபடி.
(298) அவ்வஞ்சு என்றது மயூப கிரியை. இரண்டு பழுதில்லை என் றது எங்களைப்போற் குடித்தனமும்,
மானமும், போகின்ற பழுதுவருவ தில்லை என்றபடி இரண்டு பழுதாய்விடும் என்றது தலைவி
(ஆவி)யை.
(299) மகத்திற் குறை - யாக முதலிய வறப்புறங்காவற்குறை. முகம் - திங்கள். கனிவாய் - கொல்வைக்
கனிபோன்ற வாய். இங்கு வாரத்தைக் குறித்துரின்றன. பன்முகத்துக்காகப் போய் வாய்க்குப் பயந்து
வருகிறேனென்பது மற்றொரு பொருள்.
(300) திருமான் - இலக்குமி, தலைவி. குருவாரம் - வியாழக்கிழமை மந்தவாரம் - புன்னகை.
(301) மலை - கல். மாம் - ஆர். நோய் - சும். பின்னிடவெனவே நல்லார் சாம் என்பதாயிற்று. வருதும்
எனவே காட்டுக்கயலே பூரா யிற்று. கல்லார் சுபமெனவாடல் - படியாதவர் பாடல் போல வாட்டப்
படுதல்,
(302) மார்பினிற்றாமரை - மதன்கணைத்தாமரை. கோங்கினில் மாமரம் - தினத்தில் மாம்பூச்சாம். மாவில்
அசோகம் - கண்ணில் சோகக் கணை. ஏனையவிரண்டுங் கொடிய பாணமாகையாற் கூறினாரில்லை.
பொருவகை - துடை வகை . ஊர் உவகை - பாரினிடத்துச் சந்தோஷம். ஆரூர் - தங்குகின்றதம்
மூரென்றுந் திருவாரூரென்றும் பொருளாம்.
(303) கலங்கலமென்றது எண்ணுப்பொருள் வரிந்து - வரிஞ்சு பொலி
(304) திருவாசு - அழகிய வரசமரம். பெண்ணரசி . வையாபுரி - ருதடாகம்.
(305) மாவலவர் - குதிரைக்காரர். படகுடி - கூடாரம் . கார்மா கர் உனையென்றது பார்க்குந்தோறுங்
களிப்பேறலாலென்க. சிந்துரம் - மலையாகிய யானை.
(306) என்னாக்கு மூக்குங் கொடுத்தீர் என்றது இறையவர்க்குச் செலவுரை சொற்றதனாலும், பொய்த்தும்
மற்செய்ததனாலும், தலைவர்க் நத்தரவு கொடுத்தீரன்றோ வென்றும், தும்மற்படி வாராதிருந்தால் நாக்
கையு மூக்கைபு மறுப்பேனென்றுந் தலைவி சொல்லிய சொல்லைத்தவிர்த்து இறைவன் புகுந்ததனாலென்க.
பூம்பொன்னாள் - தலைவி.
(307) பாங்கிக்கும் இறைவன், இறைவியர் மனம் போல் நடப்பது துன்பமாதலா லிருதலைக் கொள்ளியையும்,
மத்தளத்தையு முவமித்தார். வருதல் - இறைவியின்பம் . தவிர்தல் - இடையூறு தவிர்தல். துருவிய
சொல் - ஊரவர் விசாரிக்கின்ற பழிச்சொல். என்றும் உருகு அனையே. எனப்பிரித்துரைக்க.
(308 ) பொன்வினையாளர் - தட்டார் . மரவினையாளர் - தச்சர். மண்வினையாளர் - குயவர் . நூல்
வினையாளர் - நெய்வார். இவர்களாற் கல்யாணச் சோடினை முயற்சியைத் தாக்கல் செய்து ஆற்றினேனென்றாள் என்க.
ஒருவழித்தணத்தல் முற்றிற்று
----------------
18. மரைவிடை வைத்துப் பொருள் வயிற்பிரிதல் (309 - 329)
என்பொருட் பிரிவுணர்த் தேந்திழைக்கென்றல்..
…பநிலை யஃகின் மறநிலைச் செம்பொனரசர் கொள்வார்
…றுநர் பொருள்தன் மூன்று வகையினுஞ் சீரிய தாங்
…வர் மலைக்கொடி மேவிய வேண்மயிற் கோத்திரத்திற்
…முற் றுரைத்தி மலையாள வீழந் திறைகொள்வதே. (309)
நின்பொருட் பிரிவுரை நீயவட்கென்றல்.
…பரடிக்குப் போம்ப வழக்காட்டுக் கேகுங் கலிங்கத்துக்குத்
…பாண்டிக்குப் போந்திர கூழங்கை யாடுந் தொடுத்தடிமைக்
…பண்டசு வாமி மயில்வரை யாளுக்குக் கூறிடினீ
…டவ ளுண்டு விடை கொண்டு போகுவ தோர்குவனே (310)
நீடேனென்றவ னீங்கல்.
…நரை மேவினர் மிக்கான வீகையை வர்ச்சிப்பரோ
…நலிப் பார்க்குக்கல் யாண முயற்சி கடனல்லவோ
…னியாற்றுதி வேண்மயில் வெற்பினி னீடநில்லேன்
…தழு கண்ணுக்குங் காதுக்குந் தூர மிகவில்லையே. (311)
பாங்கி, ஓடரிக்கண்ணிக் கவன் செலவுணர்த்தல்.
…ண்டமும் பாரு நிறைந்த வசுரர்க்குங் காரஞ்செய்தோன்
…படமிழ் காழ்மயில் வெற்பாருஞ் சோலைத் தனிக்குயிலே
….பண்டிடு மாசைபற்றாதென்று மேலுங் கொளப்புகுந்தார்
….தாடிறன் மன்ன ருனையே யிருத்திய சிந்தை கொண்டே. (312)
பூங்குழையிரங்கல்.
பூங்குழை மாவென நின்றானை வேலிற் பொருதவன் பூந்
தேங்கமழ் சோலை மயூர கிரிக்குறை செல்வரவர்
தாங்கட மேவி யெனது பசுவைத் தனிபுரக்க
வேங்கையைத் தேடின ராமறிந் தார்க்கு வியப்பிதுவே (313)
பாங்கி கொடுஞ்சொற் சொல்லல்.
மாவை யிரண்டிட்டுச் சேவலுந் தோகை மயிலுமெனப்
பூவி லமைத்த முருகன் மயூரப் பொருப்பணங்கே
பாவையர்க் கிப்படி யுண்டோ மயல் பழி பார்த்திலையே
யாவியுங் கூடுமொன் றாக்கில னே முன் னயனுமக்கே. (314)
தலைவி கொடுஞ் சொற் சொல்லல்.
பொன்வாசஞ் செய்யு முருகன் மயில்வரைப் பூங்கிளியின்
றன்வா சகமுஞ் சகிவா சகமுஞ் சரிசொல்லலா
மின்வாசஞ் செய்யு மயில் காட்டி யெம்மை விருதளித்த
மன்வா சகமு மரிச்சந்த்ரன் சொல்லு மதிச்கிலொன்றே. (315)
வருகுவர் மீண்டெனப் பாங்கிவலித்தல்.
கானே ரிருவர் நும் போற்கண் டனராங் கடிதுறுவார்
மீனே சுமந்த வரைமீட்ட வேண்மயில் வெற்பினில்வாழ்
மானேயுன் கண்வைத்த காலே நடந்தது வந்திடுநங்
கோனேது சென்றது நானே துரைத்தது கோபமென்னே. (316)
பருவங்கண்டு பெருமகள் புலம்பல்.
ஏறிய மேகஞ் சரியவில் வீசமி னெற்றொடுங்க
வேறிய லானை பிடியோ டெதிரமென் காந்தண்மின்னத்
தூறலு மேவ விருமலர்க் கண்ணீர் சொரியச் செவ்வேள்
கூறு மயில்வரைக் கார்கால மியானெனக் கூடியதே (317)
இகுளை வம்பென்றல்.
கூந்தலைக் கண்டு மயினட மாடின கொண்டவல் குற்
பாந்தளைக் கண்டு செங்காந்தளிற் பாந்தள் படமெடுத்த
வேந்திய மின்னு மிடைச்சோதி வேண்மயி லேய்ந்த வெற்பிற்
சாந்த முலையல்ல வோவிளை யாடுதந் தாவளமே. (318)
இறைமகண்மறுத்தல்.
வானி லிடித்தொனி கூறினும் பேரிகை வாத்தியமென்பாய்
ஞான முதற்பொருளாகிய வேண்மயி னாகத்தின் வாய்க்
கான்வரு வார் செங்கைக் காந்தளின் மல்லிகைக் கண்ணியைப்பா
ரானையைக் குத்திச்சொல் லான்மறைத் தாணிக ரன்றுனக்கே. (319)
வயிற் பிரிதல்.
அவர் தூ தாகிவந்தடைந்ததிப்பொழுதெனத், துணைவிசாற்றல்.
… து முருகன்கை வேலென மின்னி யுவன்மயில்போன்
…து பசந்து கொடிச்சிறை போலிடி விட்டு முகி
…தொரு பத்திலொன் றானதி னால்வந்து தோன்றியதா
…த னருள்போற் குளிர்ந்து விண் ணார்மயி னாகத்திலே. (320)
பிணைவிழியாற்றல்.
..லெனத் தேனெனக் கண்டென்ன வார்த்தை பகரிருவர்
..பலன்ன கண்ணுக் கினிய செவ் வேண்மயில் வெற்பிடத்தே
..பாலன்ன வேந்தர் வரல் சொல்லிக் காக்குங் குணத்தினன்றோ
..லென்ன வுன்னை வகுத்தான் கொடிய மலரயனே. (321)
அவனவட்புலம்பல்.
…னாறு பாயுங்குன் றக்குடி மாதுக்குச் சேந்தன் செங்கை
..பனாடுங் கண்முத்த நீலமுத் தாகக்கொள் வெண்முத்தெல்லாங்
..னார் வெடிமுத்த மாக நுதன்முத்தங் கன்னத்தின்வா
..னாத செம்முத்த மாகநன் றாப்பொருளாக்கினமே. (322)
அவன் வருகாலைப பாகன்றன்னொடு சொல்லல்.
…திங் கொடி நெடுந் தேர்வல வாவன்ப ரன்பரென்றே
….டுங் கொடிகையிற் கற்சுமந் தேபழி செய்தனம்யாம்
…டுங் கொடிக்குவெந் நீர்விடல் போல் வேண் மயில்வரைமேற்
…பிங் கொடியவென்னெஞ்சுமுன் பாய்ச்சற்குதிரையுமே. (323)
மேகந் தன்னொடு சொல்லல்.
…ரா திருந்தவன் மேலன் பென் னோவென்று மாற்றுதற்கோ
…ரா திரார்வந் தனரென்ன வின்சொற் பகருதற்கோ
…ரா ரொருவரை நீத்துச்செல் பாவி யெனைநிகராய்த்
…ரா தரமே முருகன் மயில்வரை சார்கின்றதே. (324)
பாங்கி, வலம்புரி கேட்டவன் வரவறி வுறுத்தல்.
…முடி யாய் வெளி யேபயி லாயிரு கண்விழியாய் புனை
..யாயணி தானணி யாயிவை மாற்றினதா
…ர்திகழ் வேண்மயில் வெற்பி லரகர வோசையென்ன
…பயர் வந்தன ரென்றே முழங்கிய வெண்சங்கமே. (325 )
வலம்புரி கிழத்தி வாழ்த்தல்.
…பயிட்டும் பின்னொரு வீட்டி லடைத்துங்கைவாளுருவிக் பால்
…ாலையிட்டுங் கண்டதுண்டஞ்செய்தும் வேண்மயிற் குன்றத்தர்
…லயிட்டு மேன்மையர் மேன்மைய ரேசங்க மேயுங்கள் பேர்
…யிட்டுங் காலிட்டுங் கல்யாணத் துஞ்சொல்லத் தக்கதுவே. (326)
வந்தழி, நினைத்தமை வினாவல்.
உங்களை விட்டுப் பிரியா திருந்திடு மொண்டொடிக்கு
மங்கலங் காட்டத் திருப்பூவணம் வந்த மார்க்கநன்முஞ்
செங்கைகொள் வேலன் மயில் வெற்பிற் சிந்தனை செய்ததுண்டோ
வெங்களை விட்டுப் பொருள் வேறு தேடு மிறையவரே. (327 )
நினைத்தமை செப்பல்.
குளங்கண்ட போதும் வயல் கண்டபோது முன்கூட்டுண்வண்டின்
வளங்கண்ட போதுங் குயில் கூவும் போது மழைமெரிகார்ந்த
தளங்கண்ட போது மயில் வெற்பினிட்கள் சாமிமெய்
களங்கண்ட போது நினைத்தமை பாகனுங் கண்டனனே. (328)
அனத்தகை யவளை யாற்றுவித் திருந்தமை, பாங்கி கூறல்.
தாக்கா நிதிசெய்யச் சென்றமன் னாவுமை தன் புதல்வன்
மாக்கார் மயூர கிரிமான் வருத்தத்தை மாற்றியது
தீக்கான் முகிலும் படமுந்தன் காலுஞ்செஞ் சேல்விழியுங்
காக்காய் கனாவெறும் பொய்தானு நானுமுன்கைகளுமே. (329)
அரும்பதவுரை
(309) அறநிலையஃகின் - தருமநெறிப்பொருள் குறைந்தால். மற திலைச் செம்பொன் என்றது
பகைவர்பொருள் , குற்றத்தண்டனையால் வரும்பொருள், சூதில் வெல் பொருள்களை என்க.
செறுநர் - பகைவர். திரமுற்றுரைத்தல் - வரலாறு தப்பாமற் சொல்லுதல். மலையாள - முலை பாகிய
மலைபையாள். ஈழம் - பொன். மலையாளம், ஈழம் என்னுந் தேயத் கிற்றிறைக்கொள்வது என்பது
மற்றொரு பொருள்.
(310) கண்டி - ஆபரணம், ஒரூர்; பவளக்காடு - பவளக்குப்பை, ஒரு ஊர். கலிங்கம் - சேலை, ஒரு தேசம்.
ஈழம் - பொன். ஒரு தேசம்.
(311) மாதரைமேவினர் - பெண்களை விரும்பியவர், பெரியபூமி பிற்றங்கியவர். ஈகை - பொன்,
கொடை. வற்சித்தல் - விலக்குதல், தள் ளுதல். கல்யாணம் - விவாகம், பொன். கண்ணுக்குங் காதுக்குந்
தூர மில்லை என்றது அவைக்கிடமுகமானாற்போல விவர்க்கிடமோ ரூரானதா லாற்றுவாரென்பதாம்.
அன்றிக்கண்ணாலே கோபித்தாற் காதிலேயுள்ள தைச் சொல்லென்பது மொரு கருத்து.
(312) ஆசை - பொன், அன்பு.
(313) கடம் - நீதி, காடு. பசு - உயிர், பசுமாடு. வேங்கை - பொன், புலி.
(314) மயல் - காமமயக்கம்.
(315) வளர்த்த கிளியும் வந்தான் வந்தான் என்னும் பாங்கியுந் தலைவியுள்ள மெலியும் வேளையில்
வந்தான் வந்தான் என்பாள தலாற் சரியாயிற்று. மன்வாசகத்தை அரிச்சந்திரன் சொல்லென்றது துதி
நிந்தை .
(316) கானேரிருவர் என்றது சுறநெறியிற் செல்லுமுடன் போக் குக்குரியவரை. மீனே சுமந்தவர் - தேவர்கள்.
கண்வைத்தகால் - வந்த தற்கு நொந்ததென்று கண்ணில் வைத்த கால், கண்ணாகிய பூவாலர்ச்சனை
பண்ணியகாலெனினுமமையும். மீட்ட - சிறைமீட்ட
(317) கார் காலம்யானெக்கூடியதே என்றது கார் காலத்தில் மேகமும், வில்லும், பின்னும், யானையும்
பிடியும் விளையாடலும், காந்த ளும், தூற்றலும், மலர்களிற் கள்ளாகிய ரீரு முண்டாயின.
தலைவியிடத்தில் குழல் சரிந்த மயக்கமும்; புருவநெரித்த பார்வையும், துவண்டவிடை யும்,
யானையாகிய முலைவிம்மிப்பிடியாகிய விடையோடி கலுதலும், குவிந்த கையும், பிறர்பழியுரையும்,
இருகண்களிலுநீர் வருதலும், உண்டாயின. காந்தளரும் புதல்பற்றிக்குவிந்தகையென்று வயித்தார்.
வேறியலானை - பிடியைப் பிரிந்து வேறாகவிருந்த யானை. வில் - இந்திரதனுசு
(318) கூந்தலை மேகமென்று மயில் களாடின. அல்குலைக்கண்ட பாம்பு இனமென்று படமெடுத்தது
செங்காந்தண்மலால்ல. இடைரிழலை மின்னல் என்னாதே. விளையாடும் யானை முலையின் சாயை
இது கார் காலமன்று ரின்னாலண்டாகிய புதுமை என்க. காந்தளில் - காந்தள் போல.
(319) காட்டிலிருந்து வருவார் மல்லிகை மாலை கொண்டு வருவ நாற் கார்காலமேயென
மறுத்துரைத்தாள் என்க. ஆனையைக்குத்திச் சொல்லால் மறைத்தாள் என்பது ஒரு அரசன்
மனைவி போர் நாயகனி டஞ்செல்ல மதிலேறிக் குதித்தபோது பட்டத்துயானை யெதிரில் வழி
மறித்து நிற்க அதைக் கைவேலாற் குத்திக் கொன்று சென்று அவனைக் கலந்து திரும்பி வந்து
தன்னுயிர்ப் பாங்கியிடத்திற்றான் போய் வந்தவா லாற்றைச்சொல்லி வருங்கால் யானையைக்
குத்தினே னென்ற சொல்லைக் கேட்டுக்கொண்டாசனந்தப்புரத்துக்கு வாடைனே மிக்கனவால்
யாது ரிகழுமோ வென்றிறைவி சொல்லத் தோழி இப்படிப்பட்ட கனவு கண் டாயே யென்னாகுமோ
வென்றும், உன் கனவு பழுதாகாமற் பலிக்குமே யென்றும் அரசனுக்குத் தோன்றாமன் மறைத்தாளென்க.
இன்தோர்கதை யுலகில் வழங்குகின்றது.
(320) கொடிச்சிறை போலிடிவிட்டு என்றது சேவல் சிறைபு டைத்தலை. பத்துத்தாதிலொன்று என்பது
மேகவிடுதது.
(321) மால் என்பவர் கைம்மாறு கருதாமற் காத்தலை யுடையவர் , கருநிறம் வாய்ந்தவர்,
இலக்குமியாகிய மின்னைத் தன்னிடத்துடையவர், வில்லையுடையவர் , கங்கை நீரைப் பாதத்தி
இடையவர் ; நீயுவை யாவை யுமுடையை அகலாற் கொடியையுடைய தாமரை மலரிலிருக்கும்
பிரம் னின்னையுமா லென்றான் என்க. கோல் - ஊன்றுகோல். அது இடையூறு வந்தவேளையிற் காப்பது.
(322) நீல முத்தம் - மைய்யோடு கூடிய கண்ணீர்த்துளி. கொள் வெண்முத்தம் - அணிந்திருக்குமுத்து மாலை.
கான் வெடி முத்தம் - காட் டில் வெடிக்குங் கொட்டைமுத்து. நுதல் முத்தம் - வெயர்வை. செம் முத்தம்
என்பது அவ்வெயர்வை மஞ்சளோடும் மஞ்சணெய்யொடுங்கூடி பானாலென்க.
(323) கையிற்கற் சுமத்தல் - சாணைக்கல்லாசிய கன்னத்திற் சயைவைத்தல். சுமந்து என்பது சுமக்க வென்னு
மெச்சத்திரிபு. ரைந்து வாலை நோக்கிய தலைவிக்கு விரைந்து செல்லவேண்டும் அவ் ரைவின்மையால்
விரைந்து செல்லுங் கருத்தாய்ப்பாகன் குதிரைமே ட்டுரைத்தான். வெந்நீர் விடல் போற்கூடும் என்பது
மெள்ளச்செல்லு என்றபடி.
(324) ஏர் - அழகு . ஒருவரை நீத்தல் என்றது இறைவன்றலை யை நீத்தலையும், மேகமலையை நீத்தலையும்,
என்க. தராதரம் - மேகம்.
(325 ) கார்முடியாயென்பது கூந்தல் இறையவர் கையொப்பனை பவேண்டலின் முடியாதிருத்தலாலென்க.
வெளியே பயிலாதது பிறர் சர்ச்சி பாராத குறிப்பு. இருகண் விழியாமை இறையவர் நீங்காதிருப் ற்கு. வார்
புனையாமை கச்சுச்சிறுமை பற்றி யென்க. அணிதான யாமை இறை வரைப்பிரிய விட்டு விட்ட வென்று
அவயவங்கள் மேல் மறுப்பு. அவ்வாறன்றி வெறுப்பென்றே பொருள் கோடல் சிறப்பன் என்க.
எவ்வண்ணமுங் கூடப்பிள்ளைப்பாவை விண்டாள் என கஎஎ-ம்
டலிற் கூறியதானுமறிக.
(326) கொலையிடுதல் - சதையகழ்தல். தலையிட்டும் என்றது பம்புரி வடிவாகச் செய்ததலைக் கோல
மணிதலை. வலம்புரி வயின்வைத் த்து வாமுடித்த துகளறு முச்சியென்பது திருமுருகாற்றுப்படை லிட்டும்
என்றது கணைக்காலுக்குச்சங்கமென்று பேரிட்டதை. கல்யா த்திற் சொல்வது தீயை வலம்புரியென்பதும்,
சங்கநாதம் பண்ணச் சால்வதும், தாழிநீரிற் சங்குடன் மோதிரம் போடச் சொல்வதும். வாரண பங்கரிக்கச்
சொல்வதும், வீட்டுக்கு வெள்ளையடியென்பதும், கைக் வளையிடுமென்பது முதலியனவாம்.
(327 ) மங்கலம் - கல்யாண சுபம். திருப்பூவணம் - இலக்குமி பாலிவாகும் வண்ணம், அன்றித்தாமரை
வண்ணம் போன்ற அவயவத் நாடு கூடிவந்த வெனினுமாம் அது இருவிழி மலர்ந்து வருவது. மார்க் - சமயம்,
வழி. மங்கலமென்னு மூரைக்காட்டித்திருப்பூவணமென்னு ருக்கு வந்த வழி நல்லதாம் என்பது மற்றொரு
பொருள்.
(328 ) நினைத்தமையாவது. குளங்கண்டபோது பூ முதலியவற்றை ண்டும், வயல் கண்டபோது சோலை
புட்கள் முதலியவற்றை நோக்கியும், ட்டுண் வண்டின் வளங்கண்டபோது பேட்டோடு சேர்க்கை கருதியும்
பில் கூவும் போது கார்காலம் பார்த்ததும், கார்காலங்கண்டபோது தாகச்செல்லென்றதும், சவாமியைக்
கண்டபோது நெடுகிலுஞ் சேர்க் செய்யவேண்டியதுமாம். பாகனுக்குத் தெரியுமெனவே கூட
வந்தவரருக்கும் வழியில் வந்தவர்களுக்குத் தெரியுமெனலாயிற்று.
(329) மேகந்தூதாய் வந்தும், இருவரையு மெழுதிய படம் பார்த் க்களிக்குங் காட்சிப்பொருளாயிருந்தும்,
கால் குறியிடங்கண்டு திரும்பி தவியும், விழியிடந் துடித்தும், காக்கை காலை தனிலெழுதல்,
காணாமன்புறுதல், மாலை முழுகிமனையடைதல், உற்றாரோடுண்டல், உலகோம் , என்னுமைந்து
குணங்களையுங் காட்டியுதவியும், கனா சேர்க்கை செய் ம், வெறும் பொய் - ஆதரவார்த்தைகளும்,
தானே தேறியும், நான் என்ப சவினவியதானும் உன்கையென்பது சத்தியஞ்செய்தலை நினைத்தலானும்
என்க . உன்கை என்பதற்கும் கொடைகொண்டோர் வந்துரை த் தலைக்கேட்டு மெனினுமாம்.
வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் முற்றிற்று
------------------
19. வரைவு மலிவு (330 - 336)
காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி, காதலிக்குணர்த்தல்.
திரைக்கட லேயெண்பதாயிரம் யோசனை சேர்ந்த பொன்னார்
புரத்திடை வாவென்ற சிங்கார வேலன் புரக்குமயில்
வரைக்குயி லேகிளி யேமன் னவருன் மணங்கருதி
யரைப்பணங் கொள்ளப்பொன் னாயிரங் கோடியனுப்பினரே. (330)
காதலி நற்றா, யுள்ள மகிழ்ச்சியுள்ளல்.
கண்டன்னை நெஞ்சங் களிகூருஞ் சிற்றன்னை கண்டனளேல்
விண்டிட நெஞ்சங் குறியா ளிதுநிசம் வீணல்லவே
திண்டிறல் வேலன் பசிய மயூரச் சிலம்பிடத்தே
வண்டென்ன வென்றான் மணந்தேடி மன்னவர் வந்திடினே. (331)
பாங்கி, தமர்வரை வெதிர்ந்தமை தலைவிக்குணர்த்தல்.
காதலர் வந்தனர் நீயெதிர்ந்தாலென்னக் காருண்யராஞ்
சோதி முருகன் குகன் சேந்தன் றோகைச் சுரும்பிடத்தே
மாதங்கந் தேர்பொற் குடங்கயல் பூங்க வரியொடு முன்
றாதை யெதிர்ந்தனர் கேண்மேளத் தோடுகைத் தாளங்களே. (332)
அவளுவகையாற்ற துளத்தொடு கிளத்தல்.
பூட்டுக்கு வந்த விபத்தும் வராத தறிந்து முலைக்
காட்டுக்கு வந்த விறுமாப்பு மாடவர் கூறுங்கல்விப்
பாட்டுக்கு ளான பயனுநெஞ் சேவிடப் பார்த்திபர்கைத்
தட்டுக்களிற்றியம் வேண்மயில் வெற்பைத் திடுக்கிட்டதே . (333)
தலைவனைப் பாங்கி வாழ்த்தல்.
…மரை மேற்பனை காய்த்தது நின்மேற் றயையிலள் போற்
….மின் முடித்தலை சாய்த்ததும் வேண்மயிற் பொன்வரைநீ
..மனு மாசி லிரதியும் போலக் கலந்ததுவு
..மறிந் தோமண்ண லேயது வோவின்னு நண்ணுவதே. (334)
தலைவி, மணம் பொருட் டாக வணங்கைப் பராநிலை, காட்டல்.
..ருமான் மருகன் பரங்குன்றின் வாய்த்தெய்வயானை நனக்
..ருமாலை யிட்டவன் றோகை மயில் வெற்புறையண்ணலே
..ருமாலை யந்தொழு மங்கையைப் பார்மழை மண்டலத்தே
..ருபூ வெழும்பி யொருபூ வரும்பா யிருந்தது வே. (335)
கண்டோன் மகிழ்தல்.
..ன்னன் முகுந்தன் சீர்கொண்டு போற்ற மனமகிழ்வோன்
..ன்னுந் தமிழ்செறி தோகை மலையினிற் பார்மனமே
..ன்னும் புயலு மதியமும் பூவில் விளக்கிமல்
..ன்னங் கடவுளை நம்மால் வணங்கு மருமையையே. (336)
அரும்பதவுரை
(330) அரைப்பணம் - அல்குல். அரை - இடை. பணம் - பாம் புப்படம். அரைப்பணத்தை வாங்க
வாயிரங்கோடி பணமனுப்பினாரென் பது மற்றொரு பொருள்.
(331 ) சிற்றன்னை - செவிலித்தாய். விண்டிடக் குறியாள் - விலக்க நினையாள் . மணம் - விவாகம்.
(332) சுரும்பு - மலை. மாதங்கம் - யானை. பொற்குடம் - பூாண கும்பம். கயல் - இணைக்கயல்.
கவரி - சாமரை, இவைமங்கலப்பொருள் கன். தலைவியெதிர்தலுக்கு முறையே, தேகம், முலை, கண்,
கூந்தலென்க.
(333) ஆட்டுக்கு வந்த விபத்து - வெறியாட்டம். கோட்டிறு மாப்பு - முலை விம்மல் பாட்டுப்பயன் -
கேலிச்சாடை கேட்டு - சம்பா தியப்பொருள். களிற்று இயம் - யானைமேலிட்டமுரசு .
(334) தாமரை மேற்பனை காய்ந்தது என்றது கையிற் பனை மடற்கு நிரை செய்ததை. பூமின்-தலைவி.
முடித்தலை சாய்த்தது என்றது பாங்கிக்குத் தலைவிமறைத்தலை. அதுவோ வின் நண்னுவதே என்றது
அப்படிப்பட்ட களவுப்புணர்ச்சிக்காலானிவாவாபோகிறது வரமாட் டாது என்றபடி. - எதிர்மறை.
(335) மழை மண்டலம் - கூந்தல். இருபூ - இரண்டுகை. ஒரு பூவரும்பு - தாமரையரும்பு போற்
குவிந்தகை. ஆகாயத்திலிரண்டு பூத் தோன்றி யொருபூவாயரும்பி யுளதென்பது மற்றொரு பொருள்.
வரைவு மலிவு முற்றிற்று
---------
20. அறத்தொடு நிற்றல் (337 - 353)
கையறு தோழி கண்ணீர் துடைத்தல்.
…ந்திர லூர்குடி யேற்றிக் கயிலைக் கெழுந்தருளி
…ந்தவர் தோகை மலைச்சாரம் போந்த மயிலியலே
நரகாந்தக்கற் சாணையிற் றண்ணீர் தருதலென்னே
…தியில் லாத பகலே மதியெங் கமர்ந்தது வே. (337)
கலுழ்தற் காரணங்கூறல்.
…ளுக்கு வின்மையை வைத்தா ருறவை மனத்தெண்ணியோ
…பாந்துயில்புரியாத வெறுப்பை நினைந்து கொண்டோ
…பளுக்குப் பேரழ இந்தருள் வேண்மயில் வெற்பிடத்திந்
ளிப்பற்றுள்ளவர் போலே கலுழு நயனங்களே. (338 )
தலைவன், றெய்வங்காட்டித்தெளிப்பத்தெளிந்தமை, யெய்தக்கூறல்.
கண்ணான தாமரை வேலவன் மேற்செலக் காட்டியுயர்
விண்மீ திருதா மரைமலர் நீட்டி விரைந்தினி மேற்
பெண்ணே பிரியிற் பிரிந்தே னிசமென்று பேசினர் மற்
றெண்ணேர் தவறு மயில்வரை மீதி லிருந்தவரே. (339)
இகந்தமை யியம்பல்.
அண்டர் பணிகும்ப மாமுனிக் கேதமி ழானவெல்லாம்
விண்ட குழகன் கடம்பன் மயில்வரை மேவுகொடைக்
கொண்டலன் னார்கனி வாய்ப்பா லமுதங் குலாவிப்பன்னா
ளுண்டவர் வீட்டுக் கிரண்டகஞ் செய்தா லுரைப்பதென்னே. (340)
(பாங்கி இறைவனை) இயற்பழித் துரைத்தல்
பார்மே லிறைவர் சொற் கன்மே லெழுத்தென்பர் பார்க்கிலது
நீர்மே லெழுத்தென வாயிற்ரன் றேயிவர் நேர்நனவு
கார்மேல் விளங்கு முருகன் மயில் வெற்பிற் கந்தருவ
ரூர்மேன்மை யானது நீயன்ப ரென்பதென்னோவியமே. (341)
(தலைவி) இயற்பட மொழிதல்.
முயக்கிடை யேவெளி காண வயர்ந்தது முன்னொரு நாட்
கயத்திடைச் சொற்றதும் வேண்மயில் வெற்பர் கருதலர்மேல்
வயத்திடைச் செல்பவ ராரென்ற போது வருந்துயரு
மயர்த்திருப்பாரல்லர் தப்பாது மார்க்க மதிர்கடலே. (342)
தெய்வம் பொறைகொளச் செல்வ மென்றல்.
முருகாவுன் முன் சொன்ன வார்த்தைவிண்டாரென்று முத்தவெர்பி
லிருகாந்த ளேற்றிய துண்டே பொறுத்தரு ளென்றுசொல்லக்
குருகார் சரவணப் பொய்கையின் மூழ்கிக்குன்றக்குடிக்கே
திருகா மனச்சகி யேவிரை வாயின்று செல்குவமே. (343)
இல்வயிற் செறித்தமை சொல்லல்.
காட்டின் மறித்துப்பொய்யாமொழி கூறுங்கவிதைகொண்டோன்
வீட்டினி லாறு படைவீட்டி னான்மயில் வெற்பனையாய்
சூட்டிய மாலையுந் தோண்மாலை யஞ்செல்லுஞ் சோலையுநின்
றாட்டிய மாலையுங் கண்டன்னை யிற்செறிப் பாக்கினனே . (344)
செவிலி, கனையிருளவன்வரக் கண்டமை கூறல்.
கத்தூரி மிஞ்சிய நீற்றிலை சேர்பழுக் காய்ச்சுருட்டு
வைத்தாய் மலர்மெத்தை மீது கொண்டன்னை மனத்தயிர்த்தா
ளெத்தா மெனவெண்ணி வேண்மயில் வெற்பி லிரவினின்று
முத்தார மும்வெற்றிலைச்சீட்டுங் கண்டு முனிந்தனளே. (345)
எறிவளை வேற்றுமைக் கேது வினாதல்.
சய்யவன் வேலன் மயில் வெற்பின் மன்னர் சிறுமிக்கின்றே
மய்யுறு வேதனை நேரென்னி லன்னம் விருப்பமில்லைக்
கயில் வளையில்லை மாலென் றெவருங் கருதினரே
பயமுண் டாய தவள் பாங்கியாமென் னருண்மகளே. (346)
வெறி விலக்கல்.
…சாக முறாத்தென் கிழக்குறு தேவின் றுயர் குறியாய்
..கன மான கடாய்க் கின மென்ன மனத்தெண்ணிலாய்
….குவென் றார்த்தனை குன்றக் குடியிற் குமரவெங்கள்
…கள மானுன்னை நம்பின பாவநன் றாகியதே. (347)
வெறி விலக்கியவழி வினாதல்.
….ருகன் பாசு பதத்தைக்கை யேந்திய சாமியையம்
….பாருக னாணப் புகன்றானை நாணப் புகல்வதென்னே
….பாரு மயில்வரை மேலுள்ள வார்த்தை யுரைபெறுசூல்
….ரங்கொ ளன்னைக் குரையா தொளித்தன் மரபல்லவே. (348 )
பூ, ஏதுவாகத் தலைப்பாடியம்பல்.
…ரும்பூத மைந்த னுருவான சூரைப் பிளந்தடியார்
…நம்பூசை பெற்றவன் மாயூர வெற்பிற்றை யற்களியே
…ருந்தாரைப் பைங்குழல் பற்றி யிழுத்துப் புகமுடித்து
…நந்தா வுரைசொற் றிருந்தா ரொருவர் மன மகிழ்ந்தே . (349)
புனல், ஏதுவாகத் தலைப்பாடியம்பல்.
…பகை யாக வரிப்பட்ட பூக்கண் முகிழ் நகையைத்
…பகை தீர்க்கவம் பிற்கொல்லு நாளித் தரணியிலோர்
…பதி வேலவர் கையிற் குழல் கொண்டு வேட்டெழுப்பி
புதல் விக்குயிர் தந்தார் செவ் வேண்மயிலோங்கலினே (350)
களிறு, ஏதுவாகத் தலைப்பாடியம்பல்.
…ணுக் கமுதெனும் வேண்மயில் வெற்பிலொர் காவலர் நம்
….ண்ணிற் கரும் போர் மதயானை வாய்ப்படப் பின்னளித்தார்
….ரணி லெழும்புங் கலைகள் பின் போயது வெய்ய பணி
…ணுமவ் வேளை கரிமலை வச்சிர நாந்தகமே. (351)
மின்னிடை வேற்றுமை கண்டுதாய் வினாதல்.
..அவிற்சங் காமுலை மேற்றோன் றியபிறை யாய்ந்திலை செய்
…க ற்சங் கோதையுங் காண்கிலை சோர் துகில் காண்கிலை கோன்
…வ ற்சங் கோதை மகிழ்வதுஞ் செவ்வேண் மயில்வரைமே லி
….சிற்சங் கோதை குறிப்பதும் பாரா திருந்தனையே. (352)
செவிலி, முன்னிலை மொழியால் மொழிதல்.
அண்ணாத பாங்கி மதியுடன் பாட்டிலொ ராண்சிங்காம்
பெண்ணானை மத்தகஞ் செங்கை நகத்தாற் பிளந்ததுண்டாங்
கண்ணான தெய்வ முருகன் மயில்வரைக் காரிகையே
யுண்ணா துறங்கா தெதிர்சிங்க நோக்கநெஞ் சோர்கின்றதே. (353)
அரும்பதவுரை
(337) சந்திரகாந்தக் கற்சாணை என்றது போலத்தை தண் ஸர் - கண்ர் . மதி - புத்தி, சந்திரன்.
(338) வாள் - கண். வில்மை - கண்ணிலிடும் பிரகாசமாகிய மை. வாள்வித்தையில் வில்வித்தையை
வைத்தவான்பது மற்றொரு பொருள். பற்றுள்ளவர்போலே கழுமென்றது வாடிய முகம், வளை
சோருங்கை , அயர்ந்துகால், புரிந்த முலை, ஆகியவவயவங்களைக்குறித்து அவையினமாகையா
வன்புவைத்துக் கண்ணகிய வவயவங்க ஒழுகின் றதென்றாள் என்க. கண்வாளுக்கு மையிட்டவர்
இறைவர் . அது . மெய் தொட்டுப் பயிறல். அணிந்துழிநாணியதுணர்ந்து தெளிவித்தல், பாங்கி
கவர் பொருட் சொல்லி நான் முதலிய துறைகளானறிக.
(339) கண்ணான தாமரை வேலவன் மேற்செலக்காட்டி என் மது வாயைப்பார்த்துக் கொண்டு
என்றபடி. இருதாமரை மலர் விண்மீது மீட்டி என்றது கைத்தாமயைகளை மேலே குவித்துத் தூக்கி
என்றபடி. பிரியிற் பிரிந்தேன் என்பது உன்னை யான்
பா வே னானாலுயிர்பிறிந்தவனே என்றபடி. என்னேர் தவறு - மனமறிந் குற்றம். பொய்ச்
சாத்தியஞ் செய்தாரென்றவாறு.
(340) குழகன் - போழகுடையவன். வாய்ப்பாலமுதம் - அதரத் னமிர்தம். வீடு - மனைவி.
இரண்டகம் - ஒருவழிப்படாத நினைப்பு. அவுடனே பாலுஞ் சோறுஞ்சாப்பிட்ட வீட்டுக்
கிரண்டகஞ் செய்தாற் சால்லுவதென்னை? என்பது மற்றொரு பொருள்.
(341) கந்தருவநகர் தோன்றி மறைதலாலு வகையாயிற்று. இவர் நர் நனவு என்றது தலைவர்
செய்த பொய்ச் சத்தியம். என்றபடி. ஓவி ம் - சித்திரப்பாவை.
(342) முயக்கிடையே வெளிகாண வயர்ந்தது என்றது ஆலிங் ன மிறுக்கவில்லை மிருது
வென்று துக்கப்பட்டதை என்க . களத்திடைச் சாற்றது என்றது தலைவி நீரில் மிழ்ந்திய
ஞான்று வீழ்ந்தெடுத்துயிரளித் தலைவனை நீயே உயிர்காவலனென்றதை என்க .
வயத்திடைச் செல்ப ராரென்ற போது வருந்துயரும் என்பது கருதலர் மேற் செல்பவர்யா
என்று தலைவன் வினவியபோ துடனே யிறைவன் செலவுகுறித்த வினா வன்றுதலை
விமயங்கிய குறிப்பு. கடல் நெறிதப்பிக்கரையைப் படரா தனவே வராமலிரார் என்பதாயிற்று.
(343) விண்டாரென்று - நீக்கினாரென்று. முத்தவெற்பு - முலை. ருகாந்தள் - இரண்டுகை.
எற்றியது - அடித்துக்கொண்டது.
(344) சூட்டிய மாலை - இறைவன் கையணி. தோண்மாலை - அதி சித்த சேலையுடை.
செல்லுஞ்சோலை - ஓரிடப்பயிற்சி. ஆட்டிய மாலை ன்றது நாண்வரையிறத்தல் முதலாகியவ
வத்தையைத் தருமெய்ப்பாட்
னாசை மிகுதியை என்க. மால் - ஆசை.
(345) கத்தூரி மிஞ்சிய நீற்றிலை யென்பது. கஸ்தூரியிரு பங்கும், ற்பூரம் ஒரு பங்கு மிட்ட
வெற்றிலைச் சுருட்டுக் களைத்தலைவி படுக்குமலர் மத்தையிற் பாங்கிவைத்திருந்ததைச்
செவிலிகண்டு ஆண் மகனுக்குவை கதென்று சந்தேகித்தாள், என்றும், தலைவன் வந்து
போனதற் கடை பளமாகவைத்த முத்துமாலையையும், நகத்தால் வரைந்த வெழுத்துள்ள
வற்றிலைச்சீட்டையுங்கண்டு கோபித்தாள் என்றுங்கூறினாள் என்றவாறு.
(346) வேதனை என்றது பிரமனுக்கும், துன்பத்துக்கும். அன் 'ம் என்பது சோற்றுக்கும், பட்சிக்கும்.
கையில் வளை என்பது சக்க த்துக்கும், கைவளைக்கும். மாலென்பது மாயவனுக்கும்,
மயக்கத்துக்ம் என்றவாறு.
(347) தென்கிழக்குறுதேவன் - அக்கினிபகவான். துயர் என் து வாகனமாதலாலென்க.
குமரவென்றது வெறியாட்டாளனை.
வம் - அபிப்பிராயம்.
(348) வாரம் - அன்பு. மரபு முறைமை. தாய்க் கொளித்த லுண்டா வென்பது பழமொழி.
(349) அளியே பொருந்தாரை - வண்டுகள் மோதப்பெறுமாலை ய. கருணையில்லாதவரை.
முடித்து - சூட்டி, அழித்து வருந்தா - ருந்தாமல், வருந்தி.
(350) வரிபட்ட பூக்கள் முன்பகையாக முகிழ் நகையைத்தான் பகை தீர்க்க அம்பிற் கொல்லுநாள்
எனக்கூட்டுக. வரி - வண்டு, இயேகை. அம்பு - நீர், பாணம். பூக்கள் என்பது நீலோற்பலம்,
செவ்வாம்பல், தாமரைமலர்களை என்க. வேட்டு - விரும்பி துப்பாக்கிகொண்டு வெடி
யெழுப்பியென்பது மற்றொரு பொருள்.
(351) பெண்ணிற்கரும்பு - தலைவி . விண்ணிலெழும்புங்கலைகள் என்றது தறிபட்டு மேலெழும்பிய
கொம்புகளை. அதன்பின் போயது வெய்ய பணி என்பது அறுபட்டெழும்பிய துதிக்கையை. கரிமலை
என் மது தலைவன் வாளால் நாலு காலையும் வெட்டி விட்டமையால் யானை மலை
போலிருந்தமையாலென்க. நாந்தகம் வச்சிரமே என்றது மலைகளைச் சிறகரிந்து லைபெறச் செய்து
போற் செய்தமையாலென்க. யானைவா பிற்பட்ட கரும்பைத் திருப்பினானென்பது மற்றொருபொருள் .
வர்சியம் - வச்சியாயுதம்.
(352) முலைமேற்றோன்றிய அரவிற் சங்காம் பிறை என்றது பார்ப் பாரப்பாம்பின்பச் சங்கரேகை
போலு நகக்குறியை. காவிற்சங்கு என் றது. தோழிதலை மகள் துயர் கிளந்து விடுத்தற்குக் குறிக்குஞ்
சங்கு, கொம்... முதலியனவாம். இறைவனோடு கூடுமிடத்துக் கைவளையொ விப்பதெனினுமாம்.
வாவிற் சங்கோதை மகிழ்வது என்றது வலம்புரி கேட்டவன் வாவறிந்து மகிழ்தலை . இரவிற்
சங்கேடை என்றது அர்த்த சாமத்திற்குறித்த சங்கோகையை. அது இருவர்க்கு நினைப்புக்கூறிவைத்துப்
பாதிச்சாமந்தெரிவித்த தென்க. சோர்துகில் - ஆயாசவடை - மும் லியன.
(353) ஆண்சிங்கம் என்பது தலைவனை. பெண்ணலை - தலைவி. மத்தகம் - முலை. எதிர் சிங்கநோக்க
நெஞ்சோர்கின்றது என்றது எதிர் ந்த சிங்கப்பார்வையை மனதினினைத்துப்பயந்து எனவும் தலைவன்
பார் வையை நெஞ்சினினைத்து விகாரப்பட்டென்றுங் கொள்க. சிங்கநோக் கென்றது முன்பின்
பார்த்ததுக்குமாம். முன் பார்த்தல் - முன்னடந்த செயலை. பின்பார்த்தல் - பின்னடக்குஞ் செயலை .
மத்தகம் பாந்த துண்டாமெனவேபாங்கியறத்தொடு நின்றாளென்று செவிலி நர்முய்க் குக் கூறியதாயிற்று.
அறத்தொடு நிற்றல் முற்றிற்று.
-----------
21. -உடன் போக்கு (354 - 372)
டாங்கி தலைவற் குடன் போக் குணர்த்தல்.
அஞ்சப் படையஞ் சனுப்பிவெஞ் சூரனணியைவென்றோன்
மஞ்சிற் பொலியு மயில்வரை காக்கின்ற மன்னவரே
செஞ்சொற் கிளிபையுன் பூங்கா வனத்திற் செறிந்தனன்றும்
கொஞ்சத்தனத்துக்குக் கொஞ்சந்தனத்தைக் கொடாரொரோ (354)
ஆங்கவன் மறுத்தல்.
இரண்டு தனக்குட மீய மனுட ரிருக்கன
முரண்பட வார்த்தை மொழிந்தனை நிற்க முதியவிண்ணோர்
சரண்புகுஞ் சாமி மயில்வெற்பிற் சாமரை பூத்திடுமோ
வரண்புரம் போகுமுன் மாந்தளிர் மேன்முத் தரும்பிடுமே. (355)
அவளுடன் படுத்தல்.
இனத்திற் செறிந்த விவள் புத்தி சாலியென் றின்னுமெண்ணிர்
கனத்திற் பொலிந்த முருகன் மயில்வரைக் காவலரே
யனத்திற் செறிநடை யார் நல்ல கான மகல்வதுண்டோ
வனத்திற் படாததுண் டோதா மரைதும் மகிழ்ச்சியுண்டே . (356)
தலைவன் போக்குடன் பந்தல்.
கல்லுஞ் சரிமல ருஞ்சரி வேண்மயிற் கார்வரை மேற்
புல்லுமுள்ளுஞ்சரி சேர்ந்தேகி லென்று புகன்றதுண்டே
பொல்குங் கிளிக்குத் தினை சாமை காட்டியல் வோர் புறத்தே
நெல்லுங் கனியுந் தெரித்தமு தூட்டிநின் றேருவனே. (357)
பாங்கி, தலைவிக்குடன் போக்குணர்த்தல்.
தனத்திற் சிறந்தவர் கைபாலை யாழிற் றடவந்ததா
லுனக்கவ ரென்றும் பிரியா திருப்பது சிதமன்றே
வனத்திற் குமரிக்கு வேண்டுதல் செய்ய மயில்வரை வேள்
புனத்திற் குமரி வரவேண்டு மென்றும் புகன்றனரே. (358)
தலைவி, நாணழி விரங்கல்.
… ன்னாவென் றின்னிசை வண்டினம் பாடுஞ்செழும்பொழில் சூழ்
….பானாடர் போற்று முருகேசன் றோகைப் பருப்பதத்தே
…னாணை தேசமெங் குஞ்செலப் போக்கித் தபையின்றியே
…ன்னாணை மாற்ற நினைத்தனன் றோம் மிறையவரே. (359)
கற்பு மேம்பாடு, பூண்முலைப்பாங்கி புகறல்.
..படு வாழ்க்கையர் போலிரு மாத ரிடத்தர் மயில்
…ற்பிற் சுனைக்க ணெடுத்தவ ரார்கரி வென்றவரார்
…து வேதலைக் கொள்வார் மணத்தைக் கருதியபேர்
….பற்பறு நாண்டலைக் கொண்டா லென்னாவது பூங்கொடியே. (360)
தலைவி, யொருப்பட்டெழுதல்.
…உரூந் தாலென் னுறவிருந் தாலென் னுவந்தபெய
.. ருந் தாலென் களிற்றைப் பிடிநீத் தமர்வதுண்டோ
…ரூந் தாளுங் குமரன் மயில் வரைப்பாங்கிமின்னே
….கருந் தாலல்ல வோமயி லாடல் கருதுவதே. (361)
விருப்புடைப்பாங்கி, சுரத்தியல் புரைத்தல்.
…ம பர்பி னப்படிச் செய்வது வேகற்பின் மங்கையர்க்கு
….நாயமாவது சேந்தன் குகன்மயி னாகமின்னே யு
…னுசெம் பாம்பு கரும்பாம் பதாங்கரி யுங்கரியாம் பட
…நழலிற் குழையுங் குழையும் வெம்பாலையுண்டே , (362)
(தலைவி) சொல்லல்
ஆடவன் சோலை மலைதிரு வேரக மார்பழனி ரேடு பரங்கிரி
செந்தூரன் வேண்மயில் வெற்பகத்தே
டிவர் வீட்டின் மணமில்லைக் கோவில்லை யின்பமில்லை மா –
ரூகில்லா வலரில்லைக் காட்டிலிந் நாலுமுண்டே . (363)
பாங்கி, கையடை கொடுத்தல்.
பெருகும்ப ராசி யொருசிங்க ராசியிற் போயிடினுஞ்
சான்றுகூந்தல் விடைராசியின் பெயர் சாரினும் கர
பங் கொள்ள விடாமலிக் கன்னியைக் காத்து நன்றா
யிங் கடகக்கை யாம்வேண்மயில் வெற் பிறையவனே. (364)
வைகிருள் விடுத்தல்
காதி லாடிய தேவர்மெய்ம் மாலை கலிக்கவட
வீர நிலாடி. மகன்றோகை வெற்பி லிறையவரே
சேடதிலாக மனமிருந் தாலித் தெரிவைக்குநீர்
சாட்டதின் மாலையைச் ரூட்டிப்பொன் வைகறை தான் செல்லுமே. (365)
அவன்சுரத் துய்த்தல்,
மாலி லரவம் புரியார் விடையில் வருபவர் பொன்
மேலி லரவம் புரிவார் மகன் மயில் வெற்பனையாய்
பாலி லரவம் புலியுண்டு பாம்புண்டு பையநட
காலி லரவமிவ் வூரி லரவத்தைக் காட்டிடுமே. (366)
அசைவறிந் திருத்தல்.
நேத்திர மூன்றுடை யான்மக னென்ற னினைவில் வந்து
பாத்திர மாக்கொண்ட வேண் மயில் வெற்புறை பைங்கொடியே
காத்திரந் தேற விரைந்து நன் னீரிற் கலந்துலாந்தோர்
மாத்திரை செல்லிற் சுரமாறும் பின்னை வழிநலமே. (367)
உவந்தலர் சூட்டி யுண்மகிழ்ந்துரைத்தல்.
பணமுடி யாரன் பரைமுடி. யார்வன் பரைமுடிப்பார்
குணமுடிப் பார்தருஞ் செவ்வேண்மயில் வெற்பிற் கொம்பரன்னீர்
கரைமுடை யாரென நின்றோமிக் காட்டினிற் காரிகைரும்
மணமுடி யார்சுத் திகைகொள்ள வந்த மகிழ்ச்சி நன்றே. (368)
கண்டோரயிர்த்தல்.
பண்ணா யிரங்கொண்டு தும்புரு நாரதர் பாடவிரு
பெண்ணார் விரும்ப வெழுந்தருள் காட்சிப் பெருமையுள்ளான்
றண்ணார் மயில் வெற்பிலிந்த்ராணி யென்னிற்கண் டானிமைக்குங்
கண்ணா யிரமில்லைத் தேவேந்த்ர னென்னக் கருதிவர்கே (369)
காதலின் விலக்கல்.
ஆறோ பெரிதா றலைப்போர் கொடிய ரலைகடல்போ
லூறோ வளவின் றனிச்சம்பொ றாதுள்ளங் காலுவட்கு
வீறோது மாயை மகனைவென் றோன் மயில் வெற்பண்ணலே
பேறோதெம்மூரலர் மாளிகை வைகுந்தம் பின் செல்கவே. (370)
தன்பதியணிமை சாற்றல்.
பகர்தேவி பட்டணம் விட்டு வந்தாற்றிருப் பாலைக்குடி
மிகுசேது மார்க்கமென் றெண்ணலல் லாலெண்ணம் வேறுமுண் டோ
புகவே சிறுவயல் விட்டாற் பெருவயல் பூம்பொழில்கண்
மிகவே தெரியுங்குன் றக்குடிக் கோவிலும் வேலையமே. (371)
தலைவன், தன்பதியடைந்தமை தலைவிக்குணர்த்தல்.
அன்னை யெனும்பிணி யில்லாத காட்டி லருங்கிளியே
யுன்னிகர் கின்ற சரவணப் பொய்கை யுதுசுவர்க்கந்
தன்னிகர் கின்ற செவ் வேண்மயில் வெற்பிது தண்களப்
மின்னிகர் பொன்னுல கைவெள்ளி யாக்கிய வீடிதுவே. (372)
அரும்பதவுரை
(354) கிளி - தலைவி. பூங்காவனம் என்பது தலைவன் on னையை. கொஞ்சத்தனம் - அற்பமாகிய
பொருள், கொஞ்சு தர்குயோக் கியமான முலை. கொஞ்சலாவது வாயால் நிகழ்குறி .
(355) இரண்டு தனக்குடம் என்றது தலைவிமுலைகளாகிய தடங் களை, வெற்பிற்றாமரை
பூவாதென்றது கல்லிலே கால்வைக்க மாட்டாள் கன்றபடி... மாந்தளிர் மேன் முத்து என்றது
காலிற்கொப் மாம் என்க.
தேகத்தில் வெயர்வை யெனினுமமையும்.
(356) புத்திசாலி - புத்திமிக்கவள், புத்தியையுடைய வருந்ததி. கானம் - இசை, காடு, வனம் - நீர்,
காடு . தாமரை - தாமரை, தாவு கின்ற மரைமான். தாமரை என்றது தலைவிபாதங்களை,
உன்மகிழ்சி பி ைவபாகிய தாரை வனத்திற் செல்வமென வேயு...ன் படுத்தியதா பிற்று.
(357) தலைவியைக் கிளி யென்றதற்கேற்பத் தினை சாமைகளைக் பட்டி நெல், கனி, அமுது,
வாட்டி எகுவேனென்றான் என்க. தலை க்குத்தினை, சாமை, விளைந்த அவள்குறிச்சியைக் காட்டி
நெல்லுஞ் சாலையுமுடைய தனது மருத நிலத்தைக் காட்டுவேன் என்றான் என்ற டி: ஓர் புறத்தே
யென்றதனாற்றலைவனூர் சமீபமாக விருக்கிறதென்றா ற்று. அது இடமணித்தென்றலானுமறிக.
தெரித்த முதூட்டி என்ற னாற்றலைவன் பதிக்குப்புற நகரிலிளைப்பாறிப் போவார் என்க.
(358) பாலையாழ் தடவியது பாலை நிலத்துப் பாதையிற் பிரிவுக் றிப்பு . வனத்திற்குமரி - பாலை
நிலத்திலுள்ள பத்திரகாளி. புனத்திற் மரி என்பது தலைவியை. பாலையாழென்றதனால்
வனத்திற்குமரி என் து பாலைவனத்துக்குமரியை என்க.
(359) என்னாணை என்பதற்கு என் நாணை என்றும், என் ஆணை யன்றும் பிரித்துப்பொருள்
கொள்க. ஆணை - ஆக்ஞை.
(360) தலைக்கொள்ளல் - உயர்வாகக் கொள்ளுதல், தலைமேற் டிக் கொள்ளுதல். கற்பு - பதிவிரதா
தருமம், முல்லைமலர். நாண் - Toணம், (மலர்தொடுக்கும்) நார்.
(361) களிற்றைப்பிடி நீத்தமர்வதுண்டோ எனவும், காரிருந்தா ல்லவோ மயிலாடல் கருதுவதே
யெனவுங் கூறினமையாற்றலைவியுந் லைவனைத் தொடர்ந்தேக வொருப்பட்டாளாயிற்று.
(362) செம்பாம்பு - கேதுவென்னும் பாம்பு. கரும்பாம்பதா மன்றது பாலையின் வெப்பத்தாலென்க.
தழலிற்கு உழையும் குழையும் னப்பிரிக்க. குழைதல் - வருந்தல். கரி என்பது வெள்ளை யானையெ
ரினுமமையும்.
(363) மணம் - கலியாணம். கோ - இறைவன். இன்பம் - புணர்ச் பயின்பம். நாண் தருகில்லா
அலர் - சந்தோஷத்தையுண்டாக்கும் புட் ம். நாண் தருகில்லாவலரெனவே நாணைத்தரும் அலராகிய
பழிச்சொல் பட்டிலுண்டாமென்பதாயிற்று.
(364) கும்பராசி - தனம். சிங்கராசி - இடை. விடை ராசிப் பர் - நரை. மகரமீன் - கண். அம் - கண்ணீ ர்.
கன்னி - தலைவி .
கடகம் - இரத்தினங்களழுத்திய காப்பு.
(365) காமத்திலாடிய தேவர் என்றது பிர்மவிஷ்ணுக்களை மெய்ம்மாலை - எலும்பு மாலை.
கலிக்க - ஒலிக்க. ஈமம் - சுடுகாடு. சாமம் - இருட்டு. மாலை - பூமாலை, மாலைக்காலம்,
வைகறை - விடியற்காலம்,
வருகின்ற வறைவீடு.
(366) மால் இலர் அவம்புரியார். மேலில் அரவம் புரிவார். பாலில் அர அம்புலியுண்டு. எனப்
பிரித்துரைக்க. அரவென்பது சிவசிவ பாவரேயோ என்பது போலும் அச்சக்குறிப்பு. காலிலரவம் -
சிலம்பு . ஊர வம் - ஊராரொலித்தல்.
(367) நன்னீர் - நல்லநீர்மை, நல்ல தண்ணீர் கலந்துரைத்தல் - சர்ந்து பேசுதல், கூட்டித்தேய்த்தல்.
மாத்திரை - நொடிப்போது,
பிணிமருந்து. சுரம் - வியாதி, அருநெறி. மாறும் - கழிந்துவிடும் ; ஆறி விடும். பாத்திரமாக்கொண்ட
வென்பதற்குப்பாக்களைத்திரமாகக் கொ பண்ட வெனினு மமையும்.
(368 ) பணம் - பாம்பு. குணமுடிப்பு - குறைவு. மன முடி யார் - கலியாணஞ்செய்யாதவர், வாசக்
கூந்தலார். கத்திகை - வாளேந் தியகை, மாலை, கணம் - சிறுமை.
(369) வெளிப்படை.
(370) எம்மூர் அலர் மாளிகை வைகுந்தம் பின் செல்கவே என்ற மையாற்றலை வியையுந்
தலைவனையுமிலக்கு யொகவும் திருமாலாகவு மயிர் தத்தார் என்க. மாயைமகன் - சூரபன்மன்.
(371) பகர்தேவி - புகழ்ந்து பேசப்படும் பெண்ணே , பட்டணம் என்பது தலைவி நகாத்தை.
திருப்பாலைக்குடி - பத்திரகாளி குடியிருக் கும் பாலை நிலத்தூர். சேதுமார்க்கம் - கரைவழி,
இராமேச்சுரம்போ கும்வழி, சிறுவயல் - சிறிய வயல்கள், ஒருபார் . பெருவயல் - பெரியவ பயல்,
ஒரு பார் . வேல் - லேலாயுதக்கடவுள். தேவிபட்டம் விட்டு வந்தாற்றிருப்பாலைக்குடியென்ன
மூருமிராச்சுவயுமன்றி வேறொன்று Nடையிலில்லை என்பது மற்றொரு பொருள். சிறுவயல்
குன்றக்குடிக் கருகிலுள்ள வோரூர்.
(372) உன்னிகர்கின்ற சாவணப்பொய்கை என்றது பூவால் விளங்குதல், அடைந்தோர்
பாவந்தீர்த்தல், வண்ணமுடைத்தாதல், நன்னீருடைமை, கண்டோர் மனவியப்பு, தொட்டாற்
குளிருடைமை உண்டாற்பேரின்பமுடைமை, முதலானவையாலென்க. அன்ணையெ னும்பிணி -
அன்னையிடுக்கம், களபம் - சுண்ணச்சாந்து.
உடன்போக்கு முற்றிற்று.
------
22 . கற்பொடு புணர்ந்த கௌவை (373 - 398)
பாங்கியை வினவல்.
பந்தெடுத் தாய்போ ருயிர்ப்பெடுத் தாயொர் பயிலெடுத்தாய்
கொந்தெடுத் தாயங்கு மிங்குஞ்சென் றாய்பவங் கொள் கடலில்
பந்தெடுத் தாண்டவன் சேந்தன் மயில்வரைக் குன்கிளிதான்
எந்தெடுத் தேசெல்லுங் கோவை யுறுமெனிற் செப்பினியே. (373)
பாங்கி செவிலிக் குணர்த்தல்.
என்றே தருமிந்த மாலையென் றாடதர நான் புகுந்தே
என்றே பழைய வரைநினைந் தோவெனை யன்பிகந்தோ
சென்றா டிரும்பினன் காணேன் முருகன் செயலிதென்றே
என்றேன் மயில்வரைக் கூகை யிரட்டு நெடுஞ்சுரமே. (374)
இனைய லென்போர்க் கெதிரழிந்து மொழிதல்.
சொல்விலங் கிட்டதல் லானான் வளர்த்த துரைப்பிடிக்கு
பல்விலங் கொன்று சம் பாதிக்கி லோம்விரை வாய்ப்புகுந்தாள்
புல்ல விளையும் பயிர்க்கிந்தப் போக்கு முளைத்ததென்றாற்
செல்வஞ் செறிகின்ற குன்றக் குடியான் செயலிதுவே. (375 )
தன்னறி வின்மை தன்னை நொந் துரைத்தல்.
இரவு தவிர்ப்பது நன்றேயென் றாளிந்த வேந்தலிற்போய்
பரவிளை யாட வருள் செயென் றாள் வேண் மயில்வரையார்
..ரவி லொடுங்கவர் கள்ளரென் றாள் சொற் கருத்திலன்யா
வரமதிற் சாய்ந்தினிப் பாலை யுதவென்று மோதினளே. (376)
தெய்வம் வாழ்த்தல்.
..கரத்தி லேவ லடியென்றல் பண்ணை பகரும்விதை
..கிழ்கின்ற தாய்ப்பேர் வருமாறு செய்வி மயூரகிரி
..முகிழ்நகை வள்ளி கணவா தலைவரை முன்னிமணந்
தாகுமலர் மாலை யிருகோங் கலர்த்திய தோகையையே. (377)
செவிலியறத்தொடு நிற்றல்.
..டியானைக் கொம்பொரு நான்குபின் பாகிடப் பின்றொடர்ந்த
படியானைக் கொம்புமுன்னான்கினின் றானைத் துறந்து நமர்
..டி.மீது வேற்று மணநினைந் தானம்மிற் பற்றுமுண்டோ
..டியாரை வாழ்விக்கும் வேண்மயில் வெற்பினம் மாயிழைக்கே, (378)
பாங்கி தன்னொடு புலம்பல்.
பூரப் பொருந்திய துன்றாய்க் குரைத்தனை யன்றெனக்கே
சரச்சொற்றாயில்லை வேலன் மயூரச் சிலம்பிலெம்மை
..ரிற் பகைத்துடி பார்க்கவைத் தாயுன் னுறவினளைப்
பாரிற் பகைத்துடி பார்க்கவிட் டாயென்ன பாவமிதே, (379)
பாங்கியர் தம்மொடு புலம்பல்.
தேவையை மேற்கொண் டெழுந்தாலும் போம் பொருள் சேர்த
பாவைய ரேவேண் மயில்வெற்பினென்ன பகர்வதியாலுண்டோ
னேவு நிகர்கண்ணி யை நோக்கி நீங்க ளிரங்கலென்னே
கோவை விரும்பிப்பின் பாலை யிகழ்தல் குணமல்லவே. (380)
அயலார் தம்மொடு புலம்பல்.
இரவே யிருபூ மலர மதியை யெமக்கொளித்து
வரவே புரியும் வெய் யோனை யழைத்து மதிகொடுத்து
விரைவாய் நடந்தனள் வேலன் மயில்வரை மெல்லியலி'
ரரவே யிழந்த மணிபோல வாடி யயர்ந்தனமே. (381)
பயிலிடந் தம்மொடு புலம்பல்.
மாவே வடுக்கொள் பலாவே கனிகனி வண்டன் முல்லைக்
காவேகண் ணீர்சொரியாறே யிரைசுனை கான்ற மணப்
பூவே தலைகவிழ் மென்கொடி யேவனம் போய்நடுங்கு
தேவே யுறைமயில் வெற்பாளை யானெனத் தேடிக்கொண்டே (382)
நிமித்தம் போற்றல்.
ஒருங்கடி சிற்குவை தானஞ்செய் வாரொரு கோடி சுற்றப்
பெருங்கடி போலு முருகன் மயூரப் பிறங்கலிலே
யருங்கடி யாமென்றன் காவலை நீத்தா ளணையச்செய்தாற்
கருங்கொடியே வரும் பொன் கொடியாற்றின்னுங்காய்க் கொடியே. (383)
சுரந்தணி வித்தல்.
நேசித்த பாதையி ராமீ சுரவழி நேரும்வல்லோர்
யோசித்த பாம்பனந் தங்காண லாம்வே யுகுந்தமுத்த
மாசித்த பூமகள் கொப்புள மாங்கதி ராந்தெய்வநீர்
பூசித்த வேண்மயில் வெற்பாரைக் காப்பது புண்ணியமே. (384)
தன்மகள் மென்மைத் தன்மைக் கிரங்கல்.
பன்னீரில் லாச்சந் தனம் பார்க்கில் வெப்பாம் பதயுகள்
மென்னோவொர் நாளனத் தூவி யெனச்சிவப் பெய்தியவா
னன்னீர் கொள்வேண்மயில் வெற்பிற் சுனைமொண்ட நல்ல தண்ணீர்
வெந்நீரென் பாட்குக் குளிர் நீர்மை யானதென் வெஞ்சுரமே. (385)
இளமைத் தன்மைக் குளமெலிந் திரங்கல்.
வேங்கைத் துறுகற் புலிப்பற ழென்று வெருவியையர்
பாங்கர்வந் தீட்டி கொடுக்கு மிளமைப் பருவத்தினா)
நீங்கிருள் யாமத்து வேண்மயில் வெற்பைத் துருவினளாய்
கோங்கரும் பாது தளவும் விள்ளாது குறுமுகையே. (386)
அச்சத் தன்மைக் கச்சமுற் றிரங்கல்.
பங்காளும் வள்ளியென் றாய்தேவ குஞ்சரி பால்விருப்பார்
மங்காத வாசக் கடம்பார் மயூர வரையினிலே
சங்கீத மேளந் தணாரென்ற போதுள்ளந் தானஞ்சுவாள்
வெங்கா ருடலத்த நாகங்க ளோசிக்கின் மெய்ந்நடுக்கே. (387)
கண்டோ ரிரக்கம்.
தாகத்தி னாற்சென்று பாங்கிய ராற்றிற் றலைப்படச்சூழ்
போகத்தி னார்சொல் லிடியே முழங்கப் பொழுதாற்றா
யாகத்தின் கண்மழை சோனைய தாக வகலுங் கொல்லோ
மேகத்தின் பான்மின்னுப்போலச்செவ்வேண்மயில் வெற்பிடத்தே. (388)
ஆற்றாத் தாயைத் தேற்றல்.
வானத்திற் செல்வன் பரவையி னாடி வருவனிந்தக்
கானத்தை வெற்பைத் துருவில னோபண்டு காதிற்பட்டி
நான்வைத்த வேரை யிவர்மாறி வைக்கினுந் தான் கொணர்வன்
ஞானக் குமரன் மயில் வரை வேந்த னளனல்லவே. (389)
ஆற்றிடை, முக்கோற் பகவரை வினாதல்.
படையவர் முன் செல்லப் பின்படைந் தாளொரு பாவைமயி
லுடையவர் வேண்மயில் வெற்பகல் வாரினுண் டோகண்டது
டையவ ரேகையின் முக்கோல்கொண் டுய்வா னடையவரே
குடையவ ரோறக்கனியமுது குடையவரே. (390)
மிக்கோ, ரேதுக்காட்டல்.
பெண்ணாள் பிரிந்தாள் பிரிந்தா ளெனர்சொற் பிதற்றி வந்தார்
பிண்ணாடு காட்டினில் வீணே யலைவதென் வேலெடுத்தோர்
பண்ணாடும் போற்றுங்குன்றக்குடி யாய்பருவத்தொருவ
நண்ணாத கேணி சுவைபெறு மோவில் வுலகத்திலே. (391)
எயிற்றியொடு புலம்பல்.
மகம் தேறிய வெண்பிறை போற்கொடு வேங்கைாக
மாகையிற் ரூடு மெயினர் பெண் ணேமயி லோன் முருகன்
சாகமி லாத மயில்வரை மீதொரு தோகையுமோர்
ரகமுங் கூடி விளையாட இண்டோ நவிலுவையே. (392)
குரவொடு புலம்பல்.
..ருவார் குழையணிந் தாய்பூங் கொடியிடை வாய்ந்தனை பூந்
..ருவா யினைமுரு கோன்மயில் வெற்பிற் செழுங்குரவே
..ருகா னடையும் வளைக்கையுஞ் சொல்லுமில் லாவியப்பா
..பாருபாவை காட்டியொர் பாவையைக் காட்டாதுணர்வல்லவே. (393)
சுவடுகண்டிரங்கல்.
திரண்ட குமரியைக் கைப்பற்றி னார்சுரத் தீவலஞ்செய்
துரந்தரு சேந்தன் மயில் வெற்பை நீங்கின ருற்றவர்கா
லிரண்டடி நாலடி யாகிய தேபெண்ணிரண்டடிதா
னரண்புகு மெட்டடி யாகிய தேசெய்ய லாவதென்னே. (394)
இதுவுமது
எங்குஞ் செந்தாமரை மேற்றா மரையுற் றெதிர்கடம்பு
குங்குமஞ் சந்தங் கொழுந்து மணத்தாற் குளிர்ந்தனவாற்
றங்கு புறவடி மீது செங் கைகொண்டு தாங்கியபோ
தங்க விணையடி யீது செவ் வேண்மயி லார்வெற்பிலே. (395)
கலந்துடன் வருவோர்க் கண்டு கேட்டல்.
உடம்புமுன் னாக வுயிர்பின் னுருவெடுத் துற்றது போ
லிடம் பெறுகொங்கையொரு வேந்தன் பின்னடந்தேகலுண்டோ
குடம்பைதம் வீடெனப்புட்போற் குகன் மயிற் குன்றிடத்தே
…டந்தவர் போல் வரு வீர்நும் வரத்து நலந்தந்ததே. (396)
அவர், புலம்ப றேற்றல்.
சுவர்ப்படு பந்தென மீடிமின் னேயவர் சுந்தரனார்
தவப்புதல் வன்முரு கேசன் மயில்வரை சார்ந்தவர்போ
லுவப்பின ராகி மருவ லரை முடித் துற்று தவிக்
கவற்சியில் பேரின்ப மேவ நகர்ப்புறங் கால்வைப்பரே. (397)
புதல்வியைக் காணாது, கவலை கூர்தல்.
விண்ணாட்டு மங்கைய ரான் மாடி யாடியின் மெய்ம்மறைக்கு
மண்ணாட்டு மாதர் திகழ்வேண் மயில் வெற்பின் மற்றென்கண் டேன்
கண்ணேர் குராவு மராவு மராவுங் கராவுமென
துண்ணே ரிராவுங் கலையுங் கலையு மென் னுள்ளமுமே. (398)
அரும்பதவுரை
(373) பயில் - பாசாங்கு. கொந்து - பூங்கொத்து. நன்கிளி என்பது தலைவியை.
சிந்து - சந்கப்பாட்டு. கோவை - இராசாவை. கிளிகோவைப்பழந்தின்னப் போமென்பது
மற்றொரு பொருள்.
(374) மாலை - இருட்டு, மலர் மாலை. பழயவரை - பழமையாகிய, மலையை, இறையவனை.
கூகையிாட்டுஞ்சாமென்றதனாற் பாதிச்சாம் மென்க. இாட்டல் - ஒலித்தல்,
(375) சொல்விலங்கு - சொற்றடை - துரைப்படி துயைப் பெண். வல்விலங்கு - நாயகன். விலங்கு.
விலையும் பயிர் - பக்குவகா லம். விளைதற்குரிய பயிர். போக்கு - ஈரம்போக்கு, களை .
(376) இரவு - இபாப்பொழுது, பாசித்தல். எந்தல் -- சிம்மார் , அரசன். காலில்லொடுங்கவர்
கள்ளர் , காலில் ஒடுங்குமவர் கள்ளர் . எனப்பிரித்துரைக்க. பாலையுதவு - பாலைவனத்தை
யுதவு, பாலைத் தரு வாயாக. உரத்திற்சாய்ந்தென்பது பிரிவால்வருந்துக்கத்தாலென்க.
(377) பகரத்தில் - வல்- போ . அடியென்றல் - மாறு. பண்ணை - செய். விதை - வித்து.
தாய்ப்பேர் - ஆய். எனவே; போமாறு செய் வித்தாய் என்றபடி. மணந்தொசமலர் மாலை.
கலியாணமாலை. இரு கோங்கு என்பது முலைகளை. (பாமாறு செய்வித்த வருமாறும்
புரிந் தருளே யென்பதிங்கு நோக்கத்தக்கது.
(378) பிடியானைக்கொம்பொரு நான்கு என்பது தலைவி முலைக ரும்; யானைக்கொம்புஞ்சேர்ந்து
என் 5. பின்பாகிட - அவைகளெதிரா ற் பின் காட்ட. துடி - உக்கிரம் ; வலி. கொம்புமுன் -
தலைவிக்கு முன்பு. நான்கின் - சாதுரங்கத்தினான் கவதாகிய காலாள் போல.
(379) உன் தாய் என்பது செவிலியை. ஊரிற்பகைத்துடி - பகை பர் செருக்கு. பாரிற்பகைத்துடி - பாலை
நிலத்திலுள்ள வடுக்கென்னும் பாத்தியம்.
(380) தேவை - விருப்பம். போம் பொருள் - ஊழாற்போகத் சக்க பொருள். எவு - அம்பு. கோ - பசு ,
அரசன். பாலை - பாலினை, பாலைநிலத்தை
(382) இருபூ - கண்ணும், காலும். மதி - புத்தி, சந்திரன். வெய் பயான் - இறைவன், சூரியன். மதி
கொடுத்து - புத்தியைக் கொடுத்து.
ணியேயிழந்த அரவென்று கொண்டு கூட்டுக.
(382) எடு - பிஞ்சு , குற்றம். கனிகனி - பழம் பழு , உருகுருகு. பண்ணீ ர் - கள் நீர் , கண்ணீ ர் .
இரை - ஒலி, அலறு. தலைகவிழ் - தலை சாய், நாணாற்றலைகுனி. நடுங்கு - ஆடு, நடுக்கங்கொள்ளு.
(383) அடிசில் - சோறு. பெருங்கடி - இராசகல்யாணம். அருங் டி - கடுங்காவல் . கருங்கொடி - கரியகாக்கை.
பொன் கொடி- தலைவி. பாய்க்கொடி - சீனிக்கோவைக் கொடி. கருங்கொடியே யணையச்செய்
பாற்றின் வங்காய்க்கொடிவரும் என்க.
(384) இராமீசுரவழி - வேறிடத்திலில்லாத மேலான சுரப்பாதை, இராமேச்காஞ்செல்லும் பாதை.
பாம்பு அனந்தம், பாம்பன் அந்தம் எனப்பிரித்துரைக்க. பாம்பன் அந்தம் - பாம்பனாற்றின் முடிவு.
அழ கெனிமைமையும்.
(385) வெந்நீர் குளிர் நீர் என்பது முரண்.
(386) வேங்கைத் துறுகல் என்றது வேங்கை மலர்களுதிர்ந்து கிட குங்குண்டு கற்களை என்க .
புலிப்பறழ் - புலிக்குட்டி. கோங்கு என்பது முலைகளை . தளவு - முல்லையரும்பனையபல்.
முகை - அரும்பு. கருங் கால் வேங்கை வீயுறு துருகலிரும்புலிக்குருளையிற்றோன்றுங்காட்டிடை
எனவும், கருங்காலின வேங்கை கான்றபூக்கன்மே லிருங்கால் வயவேங் கையேய்க்கு மெனவுங்,
கூறியமையிங்கொப்பு நோக்கத்தக்கது. ஈட்டி - பாாயுதம்.
(387) தணார் என்பது ஒலிக்குறிப்பு. மெய்ந்நடுக்கே என்பது அல்லாது வேறில்லையென்றபடி.
எகாரம் பிரிநிலைக்கண் வந்தது. வெங் பாருடலந்த நாகங்கள் என்பது யானையும், பாம்பும் என்க.
(388) ஆற்றுவாத்தும், இடியும், மழையும், மேகமும், மின்னும், நற்பித்தவாறு காண்க .
ஆறு - பாதை. போகத்தினார் சொல்லிடி என் பது பரியாசக்காரர் வார்த்தை மிகுதலை.
கண்மழை - கண்ணீர். மே நம் - இறைவன். மின் - இறைவி .
(389 ) பட்டிவைத்தவேர் என்பது ஆணைப்பெண்ணாகவும், பெண் ணையாணாகவும்,
செய்யவல்லது இவ்வாலாறு விக்கிரமாதித்தனான்காவது பதுமைக்கதையானறிக. நளனல்லவே
என்பது உருத்தெரியாதமந்தி சோபதேசமிவனுக்கில்லை யென்றபடி. பட்டி - விக்கிரமாதித்தன் மந்திரி
(390) முக்கோல் - திரிதண்டம். அறக்கூனிய முதுகு உடைய வரே எனப்பிரிக்க. அற - மிக .
நடை - ஒழுக்கம், நடத்தல்.
(391) பருவத்திலூறிய நீரையுண்ணாரெனிற் பின்னுண்பாரின்றா கத் துர்வாசமா மாறுபோலப்
பருவத்தில் விவாகஞ்செய்யாவிடிற் பிறர் கொள்ளா வண்ண மித்தகைய வலருண்டாமென்பது கருத்து.
(392) மேகம் என்பது தேகம். வேங்கைநகம் - புலிப்பற்றாலி. தோகை - தலைவி. நாகம் - யானை
போலுந்தலைவன். மயிலும், பாம்பும் விளையாடுவதென்பது மற்றொரு பொருள்.
(393) குழை - இலை, தோடு என்னுங்காதணி. பூங்கொடியிடை வாய்ந்தனை என்பது புட்பக்
கொடி படரப்பெற்றுளாய், பூங்கொடியைப் போலுமிடையைப் பெற்றுளாய் என்றபடி. ஒருபாவை
காட்டி என்றது பாவைபோலிருக்குங்குரங்காயை.
(394) உரம் - ஞானம். உற்றவர் - இறைவர். இரண்ட டி - நால டியாகியதே என்றது இறைவன்
குதிரை மேற்கொண்டதாலென்க. எட் டடியாகியது என்றது இறைவி பல்லக்கிலேறியதாலென்க.
(395) தாமரைமேற்றாமரை யுற்றது என்பது இறைவன் கால டிச்சுவட்டிலிறைவிகாலடி பட்டதை.
கடப்பமரத்தருகிற்படுத்திருந்த மையான் மணத்தாற்குளிர்ந்ததென்க. புறவடி - சுகாசனத்திருந்த
தலைவனடி. இணையடி - தலைவன் மடியிலிருந்த தலைவியடி.
(396) உடம்பு - இறைவன். உயிர் - இறைவி - வருவீர் என் பது சுரம் போய்த் திரும்பிக்கலந்துடன்
வருவோரை. நலந்தந்ததே என் பது இத்தன்மையோரும் எப்போது முண்டென்னு முறுதிவந்தமையா
லென்க. வருவோர்க்குப் புள்ளையும், அவர் வீட்டுக்குக்கூட்டையு முவமா னமாகக் கொள்க.
நடந்தவர் போல - சுரத்திலே சென்றவராகிய எங்க ளுடையதலைவி தலைவர் போல என்க.
(397) உவப்பு - மகிழ்ச்சி. மருவலரை முடித்து - வாசனையுடைய மலர்களைச் சூடி, பகைவர்களை
யழித்து. உற்றுதவி - துன்பமுற்றவிடத்து தவி புரிந்து. |
(398) மாடி - வீட்டுமேன் மாடியில் . கண்நேர்குராவும், அராவும். மராவும், கராவும்; இராவும்,
கலையும், கலையும் உள்ளமும் , கண்டேன் மற் றென் கண்டேன் எனக்கூட்டுக.
கற்பொடு புணர்ந்த கௌவை முற்றிற்று.
-----------
23. மீட்சி (399 - 404)
தலைவிசே ணகன்றமை செவிலித்தாய்க் குணர்த்தல்.
மாதெனச் சென்றோர் மயில் தொடர்ந் தேனது வான் பறந்த
போதொரு மானைத் தொடந்து சென் றேனது போன துகான்
வீதி செறிமயில் வெற்பார் செயலென்று மீண்டனன் யான்
போதல் செய்யாதது வானே யவர் சேண் பொருந்தினரே. (399)
தலைவன் றம்மூர் சார்ந்தமை சாற்றல்.
வையா புரியுஞ் சரவணப் பொய்கையும் வாயில் செறி
கையா றிரண்டுடை யான் கோயிற் றோகைக் கனங்கிரியு
முய்யா னமுநக ரும்வீர வாகு வுடனிடும்பன்
மெய்யான சன்னிதி யும்பா ரிதுநம் வியனகரே. (400)
தலைவி முன் செல்வோர் தம்மொடு தன்வரல், பாங்கியர்க் குணர்த்தி விடுத்தல்.
பந்தடி போற்பா விடையா டியகுழற் பண்பினைப்போ
..லுந்து மிருவினை யாற்போகந் துய்ப்பா ருடம்பினைப்போல்
வந்து திரும்பிய பாங்கியர்க் கேவேண் மயில்வரைமேற்
ஈந்தடி பார்த்து வரல் கூறும் வேதத் தலைவர்களே (401)
ஆங்கவர், பாங்கியர்க் குணர்த்தல்.
..ல்லதண் ணீரள்ளி யுண்ணா தவரில்லை நன்மலரை
யெல்ல வருமுடிப் பாரத னாலென் னிரங்குதனீர்
கல்வி கொள் வேண்மயில் வெற்பி லிருவருங் காடன் செட்டி
செல்வ மணிமண் டபப்படி பார்த்துத் திரும்பினரே. (402)
ஆங்கவர் கேட்டு, நற்றாய்க் குணர்த்தல்.
அன்னை யெமையிந் நகரார் துணையற்றவரெனவே
சொன்ன பழிமொழி போயின வாற்சுரம் போமிருவர்
..ன்னு குன் றக்குடி. வேளை வணங்கி மருது துரை
..ன்ன தரண்மனை யிற்புசித் தேவரல் சாற்றினரே. (403)
நற்றாய் கேட்டவ, னுளங்கோள் வேலனை வினாதல்.
பில்வரை வேலன் வருவரென் றோதி வருமுருகா
..யலு மொருமின்னுங் காட்டி னடந்த புதுமையுண்டே
..யலவர் காண வகமெய்து மோவயல் வீடெய்துமோ
சயல்பெற்ற மின்கைத் தருமோவின் றோவிது செப்புகவே. (404)
அரும்பதவுரை
(399) மயிலும், மானும், தலைவியைப் போன்றமையாலிங்கனங் கூறினாள். வான் - தேவருலகு.
சேண் - தூரம். தேவருலகு.
(400) உய்யானம் - பூஞ்சோலை.
(401) பந்து, குழல், உடம்பு; இம்மூன்றும் போக்குவரத்துண்மை யாலுவமையாயின. குழல் -
நெய்வார் கருவி. சந்தடி - சனக்கூட்டத் தாலாகுந் தொந்தரவு.
மயூரகிரிக்கோவை யரும்பதவுரை.
(402) காடன் செட்டி என்பார் மருது பூபதிக்குயிர் நண்பர். வர் மாபிலுதித்தவர்களிப்பொழுதும்
ஆத்தன்குடி என்னுமரண்மனைப் ட்டியிற் பெருமித முடையவர்களாயிருக்கிறார்கள். இவர்
மண்டபம் டி சந்நிதிக்குச் செல்லு மலையடிவாரத்திலுள்ளது. இப்பொழுதுஞ் சல்வமணி
மண்டபப்படியாகவே சிறந்து விளங்குகிறது. இச்செட்டி ாருடைய அன்னசத்திரம் மருது
பாண்டியனால் ஐந்து கிராமங்கள் முற் பாட்டாக விடப்பெற்றுள்ளது.
(403) துணை என்பது தலைவியை. மருது துரையரண்மனையா 'து மலைக்குத் தென்கீழ்த்
திசையிலிருந்து சிதைவுற்றதாகத் தெரிகிறது.
(404) முருகா வென்றது வெறியாட்டாளனை. புயல் - இறை ன். மின் - இறைவி. அகம் - தலைவி வீடு.
அயல்வீடு - உறவினர் 'டு. இன்றோ என்றது வரைந்து கொண்டிருந்து வீடுவானோவென்ற
மீட்சி முற்றிற்று.
-------------
24. தன்மனை வரைதல் (405- 410)
பணிமொழி நற்றாய் மணனயர் வேட்கையிற், செவிலியை வினாதல் .
ராம லிருக்கினு மோர்வீட்டுள் ளார்பிறர் மாடத்திலே
ராம லிருப்பர் குகன் மயில் வெற்பி லிது வளமாந்
ராது கொண்டார்பின் கொடாது சென் றார் வந்து சார்ந்திந்தவூர்
ராவ மணங்கொண் டிலர்கா வலரென்ற பான்மைநன்றே. (405)
செவிலிக்கிகுளை, வரைந்தமை யுணர்த்தல்.
சொன் மாலை கொண்ட புலவர்க்குச் சேந்தன்பைந்தோகைவெற்பி
னன் மாலை பைம்பொ னறுந்தூசு தண்டிகை நல்லுணவா
நென்மாலை யீந்து தலைநா ணிகர்நா ணிலைசெய்து நம்
பொன் மாலைக் கேமணந் தந்தாரென் றொற்றர் புகன்றனரே. (406)
வரைந்தமை செவிலி, நற்றாய்க் குணர்த்தல்.
அருணிதிப் பாலினு மேற்பா ரினுமறி யாமையினான்
மருது துரை பணி சேந்தன் மயூர வரைத்திருவே
யிருவரை யேந்தி யொருவரை யுட்கொண் டிருந்தவளோர்
வரைதலை மேற்கொண் டனளென்று வெஞ்சொல் வழங்கினரே. (407)
உற்றாங்கிருவரும், தலைவியில் வந்துழி தலைவன் பாங்கிக், கியான்
வரைந் தமை நமர்க் கியம்புசென் றென்றல்.
குன்றக் குடிக்கும் ரேசன் பதத்தருள் கொண்டு நன்றா
மன்ற னடந்தது சோலையில் லாமலென் மானையருண் ..
மின்றகு நுண்ணிடைக் கோது சனத்தை விளம்பவற்றோ
வொன்றிய நீயெனுங் கொம்பில்லைத்தப்பென்பதொன்றில்லையே. (408)
தானது முன்னே சாற்றிய துரைத்தல்.
வெப்புற்ற கார்வலம் பார்க்கின்ற நாடவிம் மெல்லியலைக்
கைப்பற்றி யேகல்கல் யாணமன் றோவின்று கைப்பற்றினா
ரொப்பற் றவரென்று சொல்வதென் வேண்மயி லோங்கலிவ்வூ
ரெப்பக் கமுமுரைத் தாரெங்கள் போலுன்கை யேற்றவரே. (409)
இதுவுமது.
நானுரைத் தேன் முன்ன மன்றித் தமிழ் கொண்டு நல்குவெகு
மானமுந் தோகை மலைக்கும் ரேசர்முன் வைத்தவன்ன
தானமு மஞ்சளும் வாசியும் யானையுந் தையனல்லார்
தேன்மொழி யுங்கண்ணுங் கைகாலு மூரெங்குஞ் செப்பினவே. (410)
அரும்பதவுரை
(405) பிறர் மாடத்திலே யிராமலிருப்பர் என்பது ஒரு வீட்டுக் ண்ணாடி மாடத்திலுள்ளவர்
அயல் வீட்டுக்கண்ணாடி மாடத்திற்றோன்று லாலென்க. தராது கொண்டார் என்பது தாய்
தந்தையர் கொடுக்கா ற் கொண்டார் என்றபடி. பராவ - புகழ்ந்து துதிக்க. மணம் - கலியானம்,
வாசனை. காவலர் - காக்குந்தொழிலில் வல்லவர். காவின்கணுள் மலர்.
(406) தலைநாணிகர் நாணிலை செய்து என்பது உயிரினுஞ் சீரிது ரண் , அந்நாணுயிருள்ள
வரையிலும் போவதில்லையாகலானிகர் நாணெ ரறு மங்கலநாணுக்கு வமையாக்கினார்.
தலை நாள் நிகர் நாள் நிலைசெய்து னப்பிரித்து இயற்கைப்புணர்ச்சி மகிழ்ச்சியை நிகராக
வெனினுமமை ம். பொன்மாலை என்பது தலைவியை மணம் - கலியாணம். பொன் நாலாகிய
மாலைக்கு வாசனையைத் தந்தார் என்பது மற்றொரு பொருள்.
(407) அருள்நிதி - கொடுக்கும் பொருள். பால் - பகுப்பு. ஏற்பார் - பராசகர் . அறியாமை -
கொடைமடம். இருவரை - இரண்டு முலை. ஒரு ரை என்பது இறைவனை. ஓர்வரைதலை -
ஒப்பில்லாத கலியாணத்தை. ரெண்டு மலையைத் தாங்கி யொருமலையையுட்கொண்டிருந்தவள்
மற்றொரு
லையையுந் தலைமேற் கொண்டாள் என்பது மற்றொரு பொருள்.
(408) மன்றல் - கலியாணம், வாசனை. நீயெனுங்கொம்பு என் து பாங்கியை. தப்பு - குற்றம்.
மற்றக்கொம்பு, தப்பு முதலான வாத் யெங்களுண்டு என்றபடி.
(409) கைப்பற்றியேகல் என்பது சுரம் போக்கை என்க . ஏற்ற ர் - பரிசு பெற்றவர்.
(410 ) தமிழ் கொண்டு - தமிழ்ப்பாமாலையேற்று. மஞ்சள் - சுமங் லிகட்குக் கொடுக்கு
மஞ்சட்கொடை மொழி - சோபன வாழ்த்து, கலி பாணப் பொருமையைப் புகழும் பேச்சுக்கள் .
கண் - அஞ்சனந் தீட்டப் பெற்றமை. கையும், காலு. மென்பது வீச்சாலு நடையாலுமென்க.
ஆமணங்களானெனினு மமையும்.
தன்மனை வரைதல் முற்றிற்று.
--------
25. உடன் போக்கிடையீடு (411 - 416
நீங்குங் கிழத்தி பாங்கியர் தமக்குத், தன் செல் வுணர்த்தி விடுத்தல்.
அன்பினிற் காத்தவர்க் கேகாணிக் காசை யளித்தனன் பின்
வன்சொற் செவிலிக்குக் காற்கா சளித்தேன் வருபவரே
துன்குர வற்கொரு காசளித் தேன் குகன் றோகை வெற்பி
லென்செல விப்படி யானதென் றோதிடு மேழையர்க்கே. (411)
தலைமகள், தன்செல வீன்றாட் குணர்த்தி விடுத்தல்.
மைக்குயில் கூவ மதன் வருஞ் சேந்தன் மயில்வரைமேற்
கைக்கிளிக் கன்னத்தை யூட்டச்சொல் லீர்கலைக் கேபிடி சேர்த்
திக்கணம் பச்சைப்புன்னீட்டச்சொல் லீரெங்களன்னையைப் பூங்
கொக்கைக் குயிலுக்குக் காட்டச்சொல் லீர்நடக் கும்பலரே. (412)
ஈன்றாட் கந்தணர் மொழிதல்.
ஒட்டித் திருட்டைவி சாரித்தி டாம் லொருத்தரிடங்
கட்டிக் கொடுக்க நினைத்தத னாலிவள் காட்டொளித்தாள்
செட்டிப்பெயர் கொண்ட வேண்மயில் வெற்பினுன் செங்கைக்கிளி
யெட்டிப் பழந்தின்னு மோகொள்ளுங் கோவை யிகழ்ந்தினியே. (413)
ஈன்றாள், அறத்தொடு நிற்றலிற் றமர்பின் சேறலைத், தலைவி கண்டு தலைவற் குணர்த்தல்.
பந்தன கொங்கை யறத்தொடு நின்றிடும் பாவிசொல்லா
லெந்தை யிடத்தன்னை சொன்னாள் கொ லேந்த லகத்திருக்குஞ்
சந்தனஞ் சுற்றிய வத்தியு மாவுந் தழையரசுங்
எந்தசு வாமி மயூர வரைசூழ் கடம்படர்ந்தே . (414 )
தலைமக டன்னைத் தலைமகன் விடுத்தல்.
ருக்கு மணியைத்து வாரகை யான் கொண் டுடன் செல்லுநாட்
உருக்குமவளுக்கு முன்னோனைக் கட்டிய தேரிதன்றோ
நெருக்கு முன் றன்னைக்குந் தந்தைக்குஞ் சேனைக்கு நேசமுன்னா
திருக்குமன் றோகந்தன் மாயூர வெற்பினி லேந் திழையே. (415 )
தமருடன் செல்பவ ளவன்புற நோக்கிக், கவன்றரற்றல்.
பார்புரிந் தாற்பழி யென்றார் குகன் மயிற் பொன் வரைமே
வார் பிரிந் தாரிப் படிச்சேலை சுற்ற வணிகொடி சேர்த்
நார்புரிந் தாரிணை வாழையுங் கட்டியுள் ளாமெனது
தர்பிரிந் தாரினத் தேரே திரும்பு திரும்பினியே. (416)
அரும்பதவுரை
(411) அன்பினிற் காத்தவர் என்பது பாங்கியரை காணிக்காசை - காணியாட்சி விருப்பம்.
காற்கு ஆசு - காலுக்குக் குற்றம். குரவர் - பெ ற்றோர் . ஒருகாசு - ஒரு குற்றம். செலவு - செல்லுகை.
காணிக்காசு , காற்காசு, ஒருகாசு, இவை கொடுத்தேனென் செலவிவ்வள வென்று
சொல்லுமென்பது மற்றொரு பொருள்.
(412) அன்னம் - சோறு, அன்னப்பட்சி. பிடி - கைப்பிடி, பெண் யானை, புல் - புல்லு, புலி.
கொக்கு - மாமரம், ஒரு பட்சி.
(413) ஒருத்தர் - வேற்றரசர் . கட்டிக்கொடுத்தல் - பிடித்துக் கொடுத்தல், கலியாணஞ்
செய்தல். திருட்டு என்றது களவுப்புணர்ச் சியை. கிளி என்பது தலைவியை
எட்டிப்பழம் - பிறர்வரைவு. கோ தலைவன். கோவைப்பழந்தின்ற கிளி யெட்டிப்பழந்
தின்னாதென்பது மற்றொரு பொருள்.
(414) பந்தன கொங்கை என்பது அன்னை என்க. எந்தலகத்தி ருக்கும் சந்தனம் என்பது
தலைவனிருக்குந் தேரை என்க. அத்தி- யானை. மா - குதிரை. அரசு என்றது தலைவிதமையன்.
கடம் படர்ந்து - காட் டில் நடந்தது. எந்தலிலிருக்குஞ் சந்தன மரத்தை அத்திமரமும், மரமமும்,
அரசமரமும், கடப்பமரங்களோடர்ந்து சுற்றிய வென்பது மற்றொரு பொருள். எந்தல் - சிறிய ஊர்.
அரசன். கடம் - காடு, படர்ந்து நடந்து.
(415) திருக்கு முன்னோன் என்க. திருகல் - மாறுபடல் . முன் னோன் - ருக்கும். தன்னை - தாய்.
(416) சேலை - புடவை, தேர்ச்சேலை. கொடி - இடை, தவசம். வாழை - துடை, வாழைமாம்.
தேர் - அல்குல், தேர்.
உடன் போக்கிடையீடு முற்றிற்று.
------------
26. வரைவு (417 - 420 )
சென்றோன் மீண்டுவந்து அந்தணரை (முன்னிடல்.)
… கயிரண் டாறுடை யான்மயில் வெற்பிற் கவன்றது கண்
… ய்தலை யெண்ணித் நமரொடும் பேசி யொருவர் தள்ளா'
… வயரை மேவிவந் நாலுயிர் போல வமைந்த குண
… மய்யுறு நாலரை மேல் லிவற்கு மிகவெளிதே. (417)
சான்றோரை முன்னிடல்.
திக்கோ ருடன் புவி யோரு மமரருந் தேடத்தக்க
தக்கோருந் தேடும் விசாகன் மயில்வரைச் சாரலிலே
புக்கோ ருரைத்தசொற் றப்பா ருடனே புகுந்தனரான்
மிக்கோரை நோக்கியன் றோசெய்கு வார்மண மேலவரே. (418 )
அருங்கலந் தருதல்.
சேலாகு மாயன் மருகன் மயூரச் சிலம்பிடத்தே
மேலா நம் மைய ரிறையோ னளித்த வியன் கனக
மாலார் சரப்பணி சொன்ன வளைமுத்து மாலை கொள்ளுங்
காலாழி கண்டன ரோராழி போலக் கலித்தனரே. (419)
வரைந்துழிக் கண்டோர் மகிழ்ந்து கூறல்.
சங்கமுங் கைப்பற்றித் தீவலஞ் செய்த தகையுஞ்செங்கை
கங்கைப் புனல் வைத்ததுமாவுந் தேருமுன் கண்டனமே
மங்கல வேண்மயில் வெற்பின் மழுவில்லை மானுமில்லை
யிங்கில் ரீசனன் றேமங்கை பாக மிசைந்தனரே. (420)
அரும்பதவுரை
(417) ஐயரை என்பது வேதியரை. நாலரை என்பது நாணமு தலிய நான்கு குணத்தினையுடைய
தலைவியை. ஐயரை மேவினாவரைமே வலெளி தென்பது மற்றொரு பொருள்.
(418) தக்கோர் என்பது சிவபெருமானை. மிக்கோரை - சிறந்த லக்கினத்தை, பெரியோரை
(419) காலாழி யென்பதைக் காற்சமுத்திர மாக்கி யோராழி யெ ன்று கற்பனை செய்தார்.
காலாழியைச் சமுத்திரமாக்கின தற்குரிய வள மாக வணிகளைக் கொள்க. சரப்பணி - செல்லுகின்ற
பாம்பு. வளை - சங்கு. முத்துமாலை - முத்துக் கூட்டம்.
(420) முன்கண்டனமே என்பது, சங்கம் - வலம்புரி கேட்டவன் வரவறிவுறுத்தலும், கைப்பற்றித்
தீவலஞ் செய்தல் - உடன் போக்கிற் சுவடுகண்டிரங்கலும், செங்கைப்புனல் - புனல் எதுவாகத்
தலைப்பாடியம் பலுமாம் - கெடுதியுள் வேழமுதலாயின வினாவலும், தேர் - இறைவிக்கிறைவன்
வரவறிவுறுத்தலும் ஆகிய துறைகளானறிக. கங்கைப்புனல் வைத்தது - நெறியின் தெளிமை
கூறற்றுறையெனினுமமையும் இவ்வ வளவுங் கலியாண வணிகளாதலுங் காண்க. ஈசனுக்குக்
கொள்ளுங்கால் வலது கையிலக்கினி, இடதுகையில் வளையல், கங்காந்திப்புனல், வேதக்
குதிரை, பூமியாகிய தேர் என்க.
வரைவு முற்றிற்று.
---------
27. இல்வாழ்க்கை (421 - 430)
தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல்.
காவேந் தியகுழல் கண்ணுஞ் செங் கையுங் கதிர்நகையு
மாவேந்தர் பொன்னும் பெரியோருமிவ்வண்ணம் வைத்ததின்றே
பாவேந்தர்க்கன்பன் குகன்றோகை வெற்புறை பாவையென்கைப்
பூவேந்து முன்கையன் றோவிந்த வண்ணம் புரிந்ததுவே. (421)
தலைவனைப் பாங்கி வாழ்த்தல்.
கதிர்மதி போலென்றுங் கன்னி தொடர் சிங்கங் காணுமென்றும்
விதியினிற் சொற்றனிர் வீண்வார்த்தை யின்றி விளைத்தல் செய்தி
ரெதிருற்று வேண்மயில் வெற்பி லிராமனென் றேயிசைந்த
மதுர மொழிநிலைத் தீர்மன்ன ரென்சொல்வளர்த்தனிரே. (422)
தலைவியை, வரையு நாளளவும் வருந்தா திருந்தமை, உரையா யென்றல்.
ஆர் வீட்டின் மன்றலென் றார்மெலிந்தாய்பின் னறுபதுநா
ளோர்வீட் டிருந்தனை நீங்கா திருப்பதை யுன்னிய நீ
கார்வீட் டுலாவுங் குகன்மயில் வெற்பர்பின் காட்டல்கண்டு
பார்வீட் டுறங்கினை யாவியெங் கேவைத்துப் பார்த்தனையே. (423)
பெருமகளுரைத்தல்.
பொருந்திட முண்டண்மை யுண்டு துணையுண்டு பொய்களுண்டு
விருந்துண் டியமுண்டு சங்குண்டு தேருண்டு வேட்கையென்னா
மிருந்திடு நீயுண் டிவருண்டு நானுண் டெலாங்கொடுத்த
மருந்தெனுந் தோகை மலைமே லிருக்குஞ்சு வாமியுண்டே. (424)
தலைவனைப் பாங்கி வரையுநா ளளவு,
நிலைபெற வாற்றிய நீர்மை வினாதல்.
கனவினு நீங்கில ளெம்மா னுனையெந்தக் காலத்துமுன்
மனமிசை நீங்கிலம் யாமுமி தாக மயின்முருகன்
மனிமயில் வெற்பி லிவள் பாவை நோக்கிச் சலிப்பதுண்டே
பனநடை யைப் பிரிந் தெவ்வண்ண நீதுய ராற்றியதே. (425)
மன்றன் மனைவரு செவிலிக் கிகுளை, அன்புற வுணர்த்தல்.
நாவும் விளைவும் வரவுங் கொடையுங் கதித்தமயிற்
றேவு மயில்வெற்பு மாயின ரேயன்று தேடியுன்கால்
வாவுங் கிரியுஞ் சுரமும் புறவும் வருந்தச்செய்தார்
பூவு மணமும் பிரிதலுண் டோபெற்ற பூங்கொடியே. (426)
வாழ்க்கைநன் றறைதல்.
விண்பார்த்த னோக்கி விசும்பு தொழுமயில் வெற்புடையான்
பண்பார்த் தொளிக்குஞ்சொன் மானார் புணர்வேள் பதம் பணிவோ
எண்பார்த்த மங்கையறிவையென் சொல்வது நன்குணவிற்
கண்பார்த்து மற்றவன் கைப்பார்த்து நிற்குஞ்சொற் கண்டிலனே. (427)
மணமனைச் சென்று வந்த செவிலி, பொற்றொடி கற்பியனற்றாய்க் குணர்த்தல்.
இசைந்திடுங் காலை முருகன் மயில்வரைக் கேகிவரும்
பசம்பெறுமானம் புரக்குஞ் சரவண வாவிகுடைந்
சைந்த விருளுற் றறியாது சேருநண் பாதரிக்கும்
சுங்கொடிக் காரோ கருங்கொடிச் செய்கை பயிற்றியதே. (428)
நன்மனை வாழ்க்கைத் தன்மை யுணர்த்தல்.
… ம்மனை வாழ்க்கை யினுமவர் வாழ்க்கை நலங்கனிவா
… நம்மனை யன்பிற் படுத்துஞ் செயல்கொடுக் குஞ்செயற்கெ
… மம்மனைக் கல்லும் பகலுங் துயிலில்லை யாறுபெற்ற
… ம்மனைப் போலு நிலைபெற்ற தோகைக் கனங்கிரிக்கே. (429)
அன்னவர் காத லறிவித்தல்
தா திருந்திலர் வேந்தரக் காலு முறநினைப்பார்
பாதே துணையில் வந்தாலும் வருவர் துயர்தலின்றி
தேயித் தியாதி பிரிவினுஞ் சேந்தன் மயில்வரைமான்
வதாந் தியர் மனம் போல்வே றொரு தெய்வம் வேண்டிலளே. (430)
அரும்பதவுரை
(421) காவேந்திய குழல் என்பது தலைவியை. கண் - குறிப்பு ணர்த்தல், கை - நாணிக்கண்
புதைத்தல் ; ஈகை - முறுவற்குறிப்புணர்த் தல் ; மாவேந்தர் பொன் - பிறர்வரை வுணர்த்தல் ;
பெரியோர் - சான்
மாரை முன்னிடல் ; பாவை என்பது பாங்கியை. பூவேந்தியகை - கை றையேற்றல்.
இவைகளையல்வத்துறை களானறிக. கடையடிக்கு நீகை பாசிக்காரி என்பது கருத்து.
(422) கதிர்மதி போல் என்பது பிரிந்துழிக் கூறும் பிரிவச்சத்தி லும், கன்னி தொடர்
சிங்கமென்பது சிங்கம் வினாவிற்கெதிர் மொழி கொ பத்தலிலும் இராமன் என்பது பிரியேன்
என்பதிலுமாம். அதுவேறேகலி பாணஞ் செய்வதில்லை என்றபடி, மன்னர் என் சொல்-நிலை
செய்கின்றவர் என்னும் சொல்லை. வளர்த்தனிர் - நிலைபெறவளரச் செய்தீர் என்றவாறு.
திர்மதிபோலென்று தலைவி சொன்னதையும், கன்னிதொடர்சிங்கமெ எறு யான்
சொன்னதையும், இராமனென்று நீர்சொன்னதையும் நிலை பெறச்செய்து மன்னரென்றிசைத்த
சொல்லை வளர்த்தீர் என்றபடி. மன்
லைபேறு.
(423) ஆர்வீட்டில் மன்றல் என்றார் என்பது இறைவர் கூற்று. ஆதுவரை விடைவைத்துப்
பொருள் வயிற்பிரியுங் குறிப்பு. அறுபது பாளென்பது அப்பிரிவிற் கெல்லையை என்க.
நீங்காதிருக்கவுன்னுதல் - பிரிவெண்ணியழுங்கல், நெஞ்சொடுபுலத்தல் முதலியவற்றை என்க .
பின் காட்டல் என்பது அவன் விடுத்தகறலை . பார்வீட்டுறங்கல் - தறையிற்படுத் நல் .
அஃதுடன் போக்கிடை யீட்டிற்கடுங்காவலுங்கொடு மொழியங்கை பிகந்த காதலு முண்டாயபோது
என்க . எனவே மன்றலென்று கேட்ட குறிப்பறிந்து பிரிவிற்கு மெலிந்ததையும், இப்பிரிவிரண்டினுங்
கால நீடவ நந்தி யதையு மிறைவர்க்குப் பாங்கிதெரிப்பது மொரு கொள்கை என்க.
(424) பொருந்திடம் இடம் பெற்றுத்தழால், அண்மை - இடம் ணித்தென்றல் . துணை - பாங்கன்.
பொய்கள் - வேழமுதலியன வினாவல். விருந்து - விருந்திறைவிரும்பல் . இயம் - கொம்பு, தப்பு
அவை தோழி தலை மாடுயர் கிளந்து விடுத்தல். சங்கு - வலம்புரிகேட்டவன் வாவறிவுறு த்தல்.
தேர் அவன் புறநோக்கிக்கவன்றாற்றல். நீஎன்பது பாங்கியை. இவர் என்பது தலைவரை. நான்
என்பது தலைவியை , இவ்வளவையுங் கூட்டி வித்தமருந்து சுவாமி என்றாளென்க. இயற்கைப்
புணர்ச்சியாதியாகவரை விறுதிக்குச் சகாயமான பொருள் களிவை. எனவே இயற்கைப்புணர்ச்
சிக்கிடம் பெற்றுத்தழுவு தலான் மகிழ்வு, பாங்கற்கூட்டத்துக்குப் பாங்க னான் மகிழ்வு ,
பாங்கிமதியுடன் பாட்டிற்கு இறைவன் வார்த்தையான் மகிழ்வு, பாங்கியிற் கூட்ட முதலான
வற்றிற்கு விருந்திறை விரும்பலான் மகிழ்வு, இரவுக்குறிமுதலான வற்றிற்குக் கொம்பு,
தப்புக்குறிக்குந்தோழி தலை மகள் துயர்கிளந்து விடுத்தலான் மகிழ்வு, வரைவிடை வைத்துப்
பொருள் வயிற் பிரிதன் முதலானவற்றிற்கு வலம் புரிகேட்ட வன்வரவ றிவுறுத்தலான் மகிழ்வு,
உடன் போக்கு முதலானவற்றிற்கு அவன் புற நோக்கிக் கவன்ற ரற்றலான் மகிழ்வு, அஃதினி
மேலந்தணர் சான்றோ ரை முன்னிடுவானென்ற மகிழ்வு, மற்றைய வெளிப்படையானதாலறிக.
(425) இவள் பாவை என்பது கண்ணாடி மண்டபத்தில் மறைந்து கின்ற தலைவி நிழற் பாவையை.
கனவினு நீங்கிலள் என்பது கனவு கலி புரைத்தலை.
(426) கா - காட்டுவரத்து. விளைவு - நாட்டு வரத்து . வரவு - பல தேயம், கடல் வியாபார
முதலியவற்றின் பொருள் வரவு. கொடை - இக பரசாதகக்கொடை, கதித்த - மிகுந்தன. தேவும்
மயில் வெற்புமாயின்ரே என்பது இருவரும் விட்டு நீங்காததற்கும், அருளுக்கும், பெருமைக்கும்
குறித்துரைத்ததென்க.
(427) விண்பார்த்தல் - வான் வீறடக்கவெழுதல், பண்பார்த்து ஒளிக்குஞ்சொல் என்பது
இசை நிகயாவோமாவென்று பார்த்து யாழ் முதலியவற்றிலொளித்தலை
கண்பார்த்தல் - விருந்துக்குறிப்பு. கை பார்த்தல் - கறியுண் குறிப்பு. சொற்காணாமை - கேளாது
படைத்தல்.
(428) காலை தனிலெழுதல் காணாமலின் புறுதல் மாலை முழுகி மனையடைதல் - சாலவே
யுற்றாடோடுண்டலுல கோம்பலிவ்வைந்துங் கற்றாயோ காக்கைக்குணம். என்னுமிக்
குணங்களைத் தலைவிக்கு யாவர் பயிற்றினாரென்பது கருத்து. உலகோம்பல் சகுனங்
காட்டலாலென்க.
(429) நம்மனை வாழ்க்கையினுமென்பது நம்முடைய குரவர், நற் றாய், செவிலி, வீடு,
செல்வம், இவ்வைந்தினு மிறைவ, னிறைவி, பாங்கி, வீடு, செல்வமதிகமென்றபடி. அல்லும்
பகலுந் துயிலில்லை என்பது பகற் காலம் இல்வாழ்க்கை மிகுதியாற்றலைவன் பூசைக்காவன
செய்தலும், கோ விற் சிறப்பு விசாரணையும் கொடுப்பதும், அனுப்புவதும், விருந்திடுவதும்,
பாக்கிலையளிப்பதும், சந்தனம் பூசுவதும், காவியபுராணங் கேட்பதும், இராக்காலம்
மஞ்சச்சிறப்பு , பாக்கிலையமைத்தல், களபச் சேர்வை, அறு சுவையுண்டி, ஆடல்பார்த்தல்,
வீணாகானம் பண்ணல், மாலையார்த்தல், மணியணி யொப்பனை, கூந்தல் முடித்தல்,
ஆடையுடுத்தல், பனிநீர் தோ ய்தல், புணர்தல், முதலியவற்றானுமென்க. கம் - தலை.
அம்மனை - தாய் போலுந்தலைவி.
(430) ஓதாதிருந்திலர் வேந்தர் அக்காலுமுற நினைப்பார் என் பது கல்வியிற் பிரிவினுந்
தலைவன்றலைவியை நினைந்து புலம்பும் என்றபடி. தூதுந் துணையுமேதுவாய்ச் சென்றோர்
புலம்புவது மரபாவிருக்கப் புலம் பாமல் வந்தும் விடுவர் தலைவர். கல்வியிற் பிரிவு
மூன்றாண்டாகவும், தூது ந்துணையுமேதுவாகிய பிரிவொவ்வோராண்டாகவுமிருந்தும்
வேதாந்தியர் மனம்போலக்கணவனையே சிந்தை செய்திருந்தாளென்பது கருத்து.
வேதாந்தியர் மனம் - நிட்களப்பற்று.
இல்வாழ்க்கை முற்றிற்று
-----------
28. பரத்தையிற்பிரிவு (431 - 479)
காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக், கேதுவி தாமிவ் விறைவிக் கென்றல்.
மணிமாட வீதி மயில்வரை வேளை வணங்கிலர்போற்
றுணியா தன துணிந் தேகினர் மாலென்று சொல்லவுற்ற
ரணியார்நறுங்கொங்கையாற்றுங்கொல்லோவன்பில்லாயிழையார்
பணிமே லிருந்தங் கருடனை யேவிட்ட பாவத்தையே. (431)
தனித்துழி யிறைவி துனித்தழு திரங்கல்.
காட்டைவிடாது பின் னாட்டைவிடாது கலந்தவுயிர்
கூட்டைவிட் டோடிற்றை யோவெனைப் போல்பவர் கூறி லுண்டோ
சூட்டு மயில்வரை பாரரு கெனிற் சொல்வதென்னே
வீட்டில் விருப்பறுத் தாரோ பரத்தை விரும்பினரே. (432)
ஈங்கிது வென்னெனப் பாங்கி வினாதல்.
தேன் காணும் பூம்பொழிற்செவ்லேண்மயில் வெற்பிற்சேயிழையுன்
மான் காணு மைக்கண்ணுங் கொங்கையுங் காண மலரணை நீ
தான் காணு மந்தப் புரம்பலர் காணச் சரிக்கிலிது
நான்காணத் தக்கது வோ சொல் சொல்க நறுநுதலே. (433.)
இறைமகன் புறத்தொழுக் கிறைமக ளுணர்த்தல்.
கொண்டு கழித்தன வானோங் குகன்மயிற் குன்றிடத்தே
வண்டு கழித்த மலர்களுண் டேயிந்த மானகரா
ருண்டு கழித்த கலமென்றெண் ணாரிறை யோர் பலருங்
கண்டு கழித்த குடந்தேடிச் சூளையைக் காத்தனரே. (434)
தலைவியைப் பாங்கி கழறல்.
ஆனாலும் பட்சியை வாவிதள் ளாதடி யார் பதவி
மேனாலு மெய்த வருள்வோன் மயில் வெற்பர் வேண்டினர்பாற்
றேனாலுங் கன்னல்விட் டோலையுண்னுங்கரித் தேசத்தினார்
போனாலும் போவதுண் டோமனத் தாசையும் போகமுமே. (435)
தலைவி, செவ்வணி யணிந்து சேடியை விடுத்தல்.
குருட்டின ரானை கண்டாலன்ன பன்மதக் கொள்கையுள்ளோர்
மருட்டினை நீக்கு முருகன் மயூர வரையையன்னா
டிருட்டினர் சென்றிடுஞ் சேரியிற் செல்கெனச் சேடிமின்னா
ரிருட்டினிற் செவ்வ லரிபலர் காண வெழுந்ததுவே. (436)
அவ்வணி யுழையர்கண் டழுங்கிக் கூறல்.
பாய்காய்க்குந் தோளுடை மாயன் மருகன் பணிந்தவர்க்குத்
காய்காய்க்கு மன்பன் மயில்வரை மேவிய தையனல்லார்
நோய்காய்க்கு மாசையி னாலே விடுத்தனர் நொய்ய பிள்ளைக்
காய்காய்க்கும் பூவைக் கனிகாய்க்கக் காட்டல் கருத்தல்லவே. (437)
பரத்தையர் கண்டு பழித்தல்.
சேவேற் றிடுங்கொடி யார்பணி யார்க்குத் திருக்கொடியார்
கோவேற்ற பிள்ளை குமரன் மயில்வரைக் கொம்பனையார்
காவேற்ற பூங்குழன் மேனா ணெறிந்திக் கடைத்தெருவிற்
பூவேற்ற தன்பருள் வானை மருவப் புரிந்ததுவே. (438)
பரத்தைய, ருலகிய னோக்கி விடுத்தல்
பரத்தையிச் சித்தவர் வீட்டையு றாரென்ற பான்மைதப்பி
வரத்தை யுதவினம் வேண்மயில் வெற்பர் மகிழிறைவா
வுரத்த களிறு மலையூடு போய்த்தரு வுற்றொடித்துத்
திருத்தகு பூஞ்சுனை யாடியுந் தன்பிடி சேர்ந்திடுமே. (439)
தலைவன், வரவுகண் வேந்து வாயில்கண் மொழிதல்.
காத்தெனைச்சிந்தையிலெண்ணிய நான்கையுங்கைக் கொடுத்தோன்
தேத்தரு வாரு மயில் வரை யார் சிந்தை சீரிதன்றோ
தூர்த்தரை நீத்தனர் பன்னிரு நாள் வரை துய்க்கவல்லி
பூத்தது பார்த்துவந் தார்வடு நீங்கிப் புறாகரோ (440)
வரவுணர் பாங்கி யரிவைக் குணர்த்தல்.
வாய்க்காற் புனன் மறு வாய்மடை பாய்ந்து வரினுந்தலை
சாய்க்காது செந்நெலதனால் வெகுநலந் தான்பெற்றதாற்
சேய்க்காசை யுள்ள மயில் வெற்பர் வந்தனர் சென்றெதிர்வாய்
தாய்க்கா னது பிள்ளைக் குண்டேமன் னர்க்குச் சகசமதே. (441)
முதிரா மென்முலை யெதிர்கொண்டு பணிதல்.
கண்ணுக்குங் கைக்கும் பகைவருமோ செங்கைகண்ணிற்பட்டால்
விண்ணுக்குப்பாதையெனும் வேண்மயில் வெற்பர் வேற்றுமையோ
பெண்ணுக்குப் பேயு மிரங்குமென்பாரிவர் பேரறிவா
மெண்ணுக்கென் னோசொல்வதின்பமொன்றேயுயிரென்பதொன் றே (442)
புணர்ச்சியின் மகிழ்தல்.
நிரம்பப் பசித்தவர் சோ றுண்டல் போல நிருபர் துய்த்தார்
குரும்பை முலையுந்தண் ணீர்த்தாக முற்றவர் கொள்கைபெற்றாள்
விரும்பிய சேந்தன் மயில்வரை யாளொருமிக்குப் பெற்றாள்
நரும்புக்கட்டாக வெறும்பு வருமென் கதைப்படியே. (443)
இதுவும் அடுத்தகவியும் தலைவி கூற்று.
காமக்கிழத்தி, நீத்தமை பொறாது நின்றுகிழ வோனைப் பழித்தல்.
அன்றிலன் னாரு முளர் பாரி னம்மன்ன ரட்டையன்னா
ரென்று சொல் வாளு மொருத்தியன் றோவவளென்னின்மிக்காள்
குன்றக் குடிக்கும் ரேசன் பதமலர் கூடிலர்போற்
கன்றி வெகுண்டு சொல் லாத்து சொல்லுங் கருத்தெண்ணிலே. (444)
அவனொடு, பாங்கொடு பரத்தையைப் பழித்தல்.
அருளை விரும்பி மறவாத வென்னை யகன்று சென்றார்
பொருளை விரும்பி மறப்பார் விரும்பப் புகுதல் செய்தார்
முருகன் மயில்வரை யாரன் பவர்மிசை முற்றுங்கொல்லோ
விருவரும் பொய்யன் பினரன்றி யில்லை யியம்புதற்கே. (445)
(காமக்கிழத்தி) மனைவியைப் பழித்தல்.
வந்தார் மறந்தனண் முன் செயல் யாவு மறித்து மங்கே
பிந்தா ரதற்கும் பெருமூச் செறிந்தனள் போதையில்
டந்தா வளத்தை விலங்கிடு வாரிற் றடை புரியா
ளெந்தோ விவள் செய்கை வேண்மயில் வெற்பி லிருப்பவரே. (446)
பரத்தையர் காதற் பரத்தையைப் புகழ்தல்.
வாராது வந்த மறிமானை நீக்கி மனையயலா
டாராத வானைக் கொரு பிடி யாகுஞ் சாதிமின்னாள்
பாரா ளவளொடும் வாழ்தனம் வாழ்க்கையின் பண்பையன்றோ
சீராரும் வேலன் முருகன் மயூரச் சிலம்பிடத்தே. (447)
(பரத்தையர்) தம்மையிகழ்தல்.
தீராத நெஞ்சுக்கு தெய்வந் துணையென்று செப்புமொழி
தாராள மாயின தெங்களுக் கோவவர் தங்களுக்கோ
வாராரைச் சீறி வருவாரைத் தேடி மதர்த்தெழுந்தாய்
பாரா ரூனைக்கொங்கை யேகுகன் றோகைப் பருப்பதத்தே. (448)
(பரத்தையர்) கிழவோன் றன்னையும் பழித்தல்.
மின்றகு நுண்ணிடை யார்குண மாறிடை வேசைகுண
மென்ற தவர்க்கு வராதே நடந்து கொளின்பமென்னோ
மன்றன் முருகன் மயில்வரை சென்று வருமிறைவா
வொன்று மறிவினர் மேலே நடந்தன வுன்புத்தியே. (449)
(பரத்தையர்) தம்மை (த்தாமே) புகழ்தல்.
மின்னென மாதர் பயிலுங் குகன் மயில் வெற்பவரே
பொன்னனை யாளும் பரவையு நங்குலப் பூவையராம்
பன்னுவ தென்னவர் கற்பிற்கு வெஞ்சொற் பகர்தற்கன்றோ
மன்னு முலகொரு நூலைக் குறளென்று மாற்றியதே. (450)
வெள்ளணி யணிந்து விடுத்தல்.
மதுமலர்ச் சோலை யுதிர்மலர் சோதி மதியமுத்த
முதிர்வன போலு முருகன் மயில்வரை யொண்டொடியார்
கதுமென வெள்ளைத் துகிலுமுத் தாரமுங் காட்டி வெள்ளைப்
புதுமலர் சூடிப் பழமலர்ப் பேர் சொல்லிப் போந்தனரே. (451)
புள்ளணி, மாலைவே லண்ணல் வாயில் வேண்டல்.
ஆயிர கோடி யுடுவுதிர்ந் தாலென்ன வார்த்தகவி
பாய மலருகும் பூஞ்சோலைத் தோகைப் பருப்பதத்தார்
தாயிலு மன்ப ரருளுண்டு மானருள் சற்றுமுண்டு
சேயின னென்றனி ரண்மைய னாயினன் செப்புகவே. (452)
தலைவிநெய் யாடிய திகுளை சாற்றல்.
தருவார்த்தை யின்றி மறுவார்த்தை பேசிற் றயையிலரைப்
பொருள் வார்த்தைக் காவி சுமவார் நிகரென்று போய்மறந்தீர்
ருவாற் றிகழ்குகன் மாயூர வெற்பின் மடந்தைக்கென்சொற்
குருவார்த்தை யோபெற்ற பாலானெய் யாடிக் குளித்ததுண்டே. (453)
தலைவன் றன் மனத் துவகை கூர்தல்.
அனைக்குமுன் னேதந்தை யார்க்குமுன் னேபெற்ற வையனன்பர்
தனைக்குமுன் னேவருஞ் சேந்தன் மயில்வரைத் தையனல்லாண்
மனைக்குமுன் னே பெற்ற வான்கன்று தூக்கியென் றோமகிழு
மெனக்குமுன் னேயிரு பாற்குடந் தாங்கி யெதிர்கொள்வதே. (454)
தலைவிக் கவன்வால் பாங்கி சாற்றல்.
தாசானு தாச ரெனத்தேவர் வந்தடி. தாழ்ந்துசிவ
பூசா விதிசெயுஞ் சேந்தன் மயில் வெற்பர் பூங்கொடியுன்
பேசாத பிள்ளையைப் பேசுவிக் கும்பிள்ளை பேரிடவுன்
னாசார வாசலுற் றாறி யேனுன் னருளுள்ளமே. (455)
தலைவி யுணர்ந்து தலைவனொடு புலத்தல்.
பூவென்ற சோலை புவிமே லுடுக்கணம் பூத்ததென
மீவென் றெழுகுகன் றோகைவெற்பீரன்பு வேண்டிவந்தீர்
மாவென்ற கண்ணார் முலைப்பான் மணப்பவ ரென்றிடினுங்
கோவென் றவரென்ன மோவிழி யாமை குறித்தனரே. (456)
பெரியோன், விடுத்துழிப் பாங்கி வாயில் மறுத்தல்.
விண்கா வுறைமந்தி மேனோக்கிப் பாய் விரிந்தகனித்
தண்கா வளந்திகழ் வேலன் மயில்வரைத் தையனல்லாய்
மண்பா னடை கொண் டரையுடம் பாகி மதிமுடித்துப்
பெண்பா லிசைந்தவர் வந்தாரென் றோதுதல் பேதைமையே. (457)
பாணன் வாயில் மறுத்தல்.
இங்கே யிறையவர் வந்தார் புறத்தொழுக் கில்லையென்று
சிங்காரம் பேசினை வேலன் மயூரச் சிலம்பண்ணலா
ரங்கே யிருக்க வவளோ விவளென்னு மப்பதத்திற்
சங்கீதம் பாடினை யாமே பொய்ப் பாணர் தருமநன்றே. (458 )
பாணன் கூற்று.
வல்லென்ற கொங்கைமின் னேகுகன் றோகை மயில் வெற்பிலே
கொல்லென் றயலவர் கூடின ரேயவர் கூடவப்பாற்
செல்லென்ற போதிடி யுற்றதொத் தேன் சினந் தேயெடுப்பேன்
கல்லென் றனைபடி யாதிருந் தேனருள் காண்பதென்றே. (459)
விறலி, வாயில் மறுத்தல்.
பண்ணுஞ் சுரமும் பயின்றிடுங் காலம் பயின்றனமு
னண்ணுஞ் சுரமு மொழியு மறந்தனர் நாளுக்கு நாட்
கண்ணுமில் லோமிரு காதுமில் லோமிரு கையுமில்லோம்
பெண்ணுமில்லோம் விற லீகந்தன் றோகைப் பிறங்கலிலே. (460)
கூத்தர் வாயில் மறுத்தல்.
ஆடிய காலுஞ்சொற் பாடு மிடறுமுள் ளார்கண்மிக்கா
மூட றவிர்த்தவர்க்காவன தேட அறுதியென்றே
தேடு முருகன் மயில் வெற்பர்க் கோதமின் செப்புமென்போம்
கூடு நசைகொண்டு மேலா டிய கழைக்கூத்தர்கனே. (461)
விருந்தொடு வந்துழிப் பொறுத்தது கண், டிறையோன் மகிழ்தல்.
செருந்தொன்று கூந்தலினியென் செய்வாளன்பு சேரினமாம்
விருந்தொன்று வந்தது நெஞ்சே குகன் மயில் வெற்பிலது
பொருந்தென்று சொல்லுமினமே துனியெனும் புன்கனுக்கோர்
மருந்தென்று தேறினிச் செவ்வாயமுத மருந்தல்லவே. (462)
இறைமகள் விருந்துகண், டொளித்த வூடல் வெளிப்பட நோக்கிக்,
சீறே லென்றவள் சீறடி தொழல்.
பஞ்சணை மேலஞ்சிச் செல்கின்ற காலைப் பருத்தடக்கை
வெஞ்சின வேழத்தின் மேற்சிலம் பார்த்தன் வேர்த்துவிம்மித்
துஞ்சினர் போலு மிளம்பிடி. பஞ்சடி கொட்டவன்றே
கஞ்சமுத் தீன்றன செவ்வேண் மயூரக் கணங்கிரிக்கே. (463)
இஃ, தெங்கையர் காணி னன்றன் றென்றல்.
வேலை விரும்பினர் புன்றொழிற் செய்தல் விசிதமன்றே
மாலுடை யாரென வந்தனை தோகை மயிற்குமரன்
சோலை மயில்வெற்பின் மன்னவ னேசிறுத் தொண்டனென்னக்
காலை முடித்தனை யெங்கையர் காணிற் கலங்குவரே. (464)
எக அங்கவர் யாரையு மறியே னென்றல்.
மிஞ்சுமென் மால்வினைக் காரர் பதம்விழில் வெஞ்சினம் போய்
நெஞ்சு குழைவரென் பார்கண்டி லேன்பர னேர்குவரோ
பஞ்சணை மேற்படுப் பார்குகன் றோகைப் பருப்பதத்தே
கஞ்சத்துத் தண்ணீர் கலிங்கத்துப் பாய்ச்சல் கருணையன்றே. (465)
காமக் கிழத்தியைக் கண்டமை பகர்தல்.
வள்ளல்ச மாலி யுடையண பாண்டியன் வாழச்செய்த
வெள்ளி மயிலி லெழுந்தருள் வோன் மயில் வெற்பினிலோர்
கள்ளியுன் றாய்தலை மேற்கையு நின்மிசைக் கண்களுமாய்
மெள்ள நகைத்ததுங் கண்டேனுன் வீட்டிலென் மேல்வைப்பிலே. (466)
தாமக் குழலியைப் பாங்கி தணித்தல்.
தேறாத செல்வ முருகன் மயில் வரைச் செல்வனுன்பாற்
கூறா தன சொல்லிச் செய்யா தனசெய்துங் கோபமென்னே
மாறான் மகிழுந் திரு மகிழ்ந் தாளின்பம் வாய்த்தபதி
னாறா யிரரன்றி யோர் மானெஞ் சேறி யமர்ந்ததுவே. (467)
தணியா ளாகத் தலைமக னூடல்.
சிற்றுளி கற்பிளந் தாலன்ன பின்சொற் சிறந்தனவென்
பற்றுரை சேற்றிடைக் கம்பத்தை நேர்ந்ததென் பாவமிதே
கற்றை யழற்சடை யான் மகன் றேகைக் கனங்கிரிமே
லற்றைப் புனச்சுகமன்றோரும் விடுற்ற வஞ்சுகமே. (468)
அணிவளைப் பாங்கி யன்பிலை கொடியையென்,
றிணர்த்தார் மார்பனை யிகழ்தல்.
தலைநா ளிடைச்சின மெங்குவைத் தீரயிற் சாமிமயின்
மலைமாதர் முந்தி வரிக்கிலன் போது மலிந்து தின்றாற்
பலநாட் கரும்புங் கசக்கு முமையன்றிப் பற்றையில்லா
விலைமாத ரேவிலையில்லாத மாதர் விரும்புகவே. (469)
மகப்பொறை கூர்ந்த வண்ண முரைத்தல்
ஆகம வேத மடி தொழு தேத்துமை யாறுமுகன்
றோகை மலையில் விளையாடும் பொன்மயில் சூற்கொண்டநாண்
மேகங் கறுத்தது மின்னுந் துடித்தது வேய்பசந்த
பூக மலர்ந்தது தென்னையுங் காய்த்தது போர்மன்னனே. (470)
புரவலன் போந்து புதல்வனைக் காண்டல்.
சேனா பதிக்கம் விறல்வாகுக் கீந்து தன் செய்கையெல்லா
மானாத சங்கர லிங்கத் தபோநிதிக் காக்கியவே
டேனார் மயில்வெற்ப ரஞ்சனம் போட்டிலர் செங்கையிலே
பானாறு முன்சொற் பொருளெடுத்தார் பொன் பலகொடுத்தே. (471)
புறங்காட்டல்
ஆன்க ணெழுந்தடி யார்க்கு விடைதந் தருளுமெங்கள்
கோன்கண் மணியெனும் வேளுறை குன்றக் குடிமலைமேன்
மான் கண்ணி யேயின்பப் பாலு மமுதமும் வைத்துக்கொண்டு
தேன்குழ லீந்தனை காமப் பசியதிற் றீர்வதின்றே. (472 )
காமக்கிழத்தி வாயில் வேண்டல்.
வாக்குங் கிருதாக் கினிஞாய நீங்கு மதிச்சிலைபோ
லாக்கு மனத்தைக் கதிர்ச்சிலை ஞாய மழகதன்றாம்
பாக்கு மிளகு மலிகுகன் றோகைப் பருப்பதத்தாய்
தேக்கிலை நீரெனச் செய்வதென் போல்பவர் செய்வதுவே. (473)
பாங்கி வாயில் நேர்வித்தல்.
தீத்தட்டு கல்லென்பர் மன்னரை மேல்வரு தென்றல் கண்ட
பூத்தவஞ் சிக்கொடி யாமென்பர் மாதரைப் போர்வயவர்
நீத்திடி லென்கண் டகபல ஞாயத்தை நேர்தனன்றாங்
காத்திகழ் தோகை மலைவேலன் வேலன்ன கட்குயிலே. (474)
ஆயிழை மைந்தனு மாற்றா மையுமே, வாயிலாக வரவெதிர் கோடல்
தேங்கமழ் சோலை மதுரையி லேபண்டு சென்று சங்கந்
தாங்கிய சங்கை தவிர்த்தோன் மயில்வரைத் தாரண்ணலே
யீங்குனக் கென்றடை யாற்றாமை யும் பெற்ற வென்பிள்ளையு
மூங்கி லணை தழற் போலென் வெறுப்பை முடித்தனவே. (475)
மணந்தவன் போயபின் வந்த பாங்கியோ,
டிணங்கிய மைந்தனை யினிதிற் புகழ்தல்
மறுமார்க்கஞ் செய்தவெஞ் சூரா தியர்க்கு மயிற்கு முத்தி
யுறு சாபஞ் செய்த முருகன் மயில்வரை யொண்டொடியே
தறுகாப் புலிக்குட்டி வீரநன் றேபரி தானுமின்றிச் சிறுதே
ருருட்டிப் பெருந்தே ரரைப் பெண்மை சேர்த்தியதே. (476)
தலைவனைப் புகழ்தல்.
பூவிற் கொடுக்குந் தொழில் கொடுப் போர்மெய்ப் புரவலர்க்குங்
காவற் செயலருள் வோர்மயில் வெற்புறை காரிகையே
பாவத்தை வாங்கித்தான் புண்ணியம் பாதி பகிர்ந்தளிக்குந்
தேவர்க்குக் கண்ணிமை யாதுகை நீங்கில சேக்கையினே. (477 )
சிலைநுதற்பாங்கி , மனைவியைப் புகழ்தல்.
பொருந்தின ரென்றபொழுதேமுன் கொண்ட பொறாமையெல்லா
மருந்து கலந்த விடம்போ லொழிந்தன மாதவர்கள்
டிருந்திய வேலன் மயூர வரையினிற் சேயிழையே
யருந்துதி யென்னி னிகரோ வதுவு மருந்து தியே. (478 )
பாலனைப் பழித்தல்.
ஆதியி லாக்கிப் புசிப்பன யாவு மளித்தவன்பன்
பேத நினைத்திலன் சேந்தன் மயூரப் பிறங்கலிலே
தாதைகை யாடுந் தனக்குட நீ பெறத் தக்கதன்றோ
வோதிய பாற்குடம் பிள்ளாய் விதியின் றுதவியதே. (479)
அரும்பதவுரை
(431) மால் - ஆசை. அன்பில் ஆயிழையார் - பரத்தையர். பணி மேலிருத்தல் - பரத்தையர்
சொற்படி நடத்தல், திருமாலாதி சேடன் மேலிருந்து அழகிய கருடனை விட்டபாவத்தை
யாற்றுமோ வென்பது மற்றொரு பொருள். இங்குப், பணி - ஆதிசேடன்.
(432) கலந்தவுயிர் - இறைவன். கூடு - தலைவி. சூட்டு - உச்சிக் கொண்டை. வீட்டில் -
முத்தியில், வீட்டில். பரத்தை - பெருந்து றவை, பரத்தையரை.
(433) காணமலாணை நீ என்பது பொன் போலுந் தாமரை மலரி லிருக்குமிலக்குமியை
யனைய நீ. என்றபடி. மைக்கண்ணும், கொங்கை யுங்காண வென்பது அவற்றின் சோர்வை என்க.
(434) வண்டு கழித்த மலர் - பழம் பூ. எனவே பழமையாகிய நம்மை நீங்கிப்பு துமையாகிய
நடையையுற்றாரெனலாயிற்று. உண்டு கழி த்த கலம் - எச்சிற்கிண்ணி. பலருங் கண்டுகழ்த்த
குடத்தைத் தேடிக் குய வன் சூளையைக்காத்தார் என்பது மற்றொரு பொருள்.
(435) சுவாமி யொருவராக விருந்தும் நான்கு வகுப்பாருக்கும் பதவி நாலாகக்கொடுப்பா
ரென்பதும், யானை கரும்பைத் தின்னாது ஓலை யைத்தின்னுந் தேசத்தினாரென்பதும்,
உள்ளுறையவமம். வேண்டினர் பாற்போனாலும் எனக்கூட்டுக.
(436) திருட்டினர் - தலைவர். சேடிமன்னாரிருட்டு - பாங்கியர் கூந்தல். செவ்வலரி -
செவ்வலரிப்பூ. இருட்டிற் பலர் காணச்சூரிய னெழுந்ததென்பது மற்றொரு பொருள்.
அலரி - சூரியன்.
(437) பாய் காய்க்குந்தோளுடைமாயன் என்பது கணிகண்ணன் போகின்றான் என்னும்
வெண்பாவானறிக . பிள்ளைக் காய்காய்க்கும் - மாதர்பூப்பு. கனிகாய்க்கக்காட்டல் - கன்னியிடந்
தெரித்தல். காயை யுண்டாக்குமலரைக்கனி காய்த்ததென்பது மற்றொரு பொருள். பிள்ளைக்
காய் - பிஞ்சுக்காய்.
(438) கோ - கண். நாண் எறிந்து - வெட்கத்தை விட்டு. பூவேற் றது என்பது செவ்வரிப்பூச்சூடிக்
கொண்டிருப்பதை. அன்பு அருள்வான். என்பது தலைவனை. மலரை யேற்றது வானை
மருவவெனவும் துப்பாக்கி மேல் நாணியை எறிந்து எனவும் வேறு பொருள் படுமாறுணர்க.
குழல் - துப்பாக்கி, நாண் - நாணி.
(439) பரத்தையிச்சித்தவர் - பரத்தையரையிச்சித்தவர். வீடு - இச்சித்தவர்வீடு.
பான்மை - தன்மை. மலையென்பது நகரம். மரமொடித் தல் - வேண்டும் பொருள் கோடல்.
சுனையாடல் - பரத்தையரைச்சேர் தல். தன்பிடி என்பது தலைவியை. பான்மை தப்பி
வரத்தையு தவினம் என்பது பரத்தையிச் சித்தவரை. வீட்டையடைய செய்தோம் என்ற படி.
இங்குப் பரம் என்பது பரம்பொருளை என்க.
(440) நான்கு என்பது புருடார்த்தங்களை. வல்லிபூத்தது என் பது தலைவி பூப்புற்றதையென்க.
தூர்த்தர் - தாசியர். பன்னிருநாள் என்பது நீபாடிய பின்னீராறு நாளுங் கருவயிற்றூறுங்
காலமாகலான் என்க . வடு - பழிமொழி. வடுநீங்கிப் புறநகர் நீங்கி வந்தார் என்க.
வல்லி பூத்தது, வடுநீங்கி என்பன வேறு பொருள்.
(441) சேய் - பிள்ளை. மன்னர்க்குச் சகசமதே என்பது அறுவ கைப் பிரிவுமரசர்க்குரியதென்றபடி,
(443) நிரம்பப்பசித்தவர் - சோறு கிடையாமை யான் மிகப்பசித் தவர். தண்ணீர்த்தாக
முற்றவர் கொள்கையென்பது கொடுத்தது போது மென்று கொள்ளுவது போலப்புணர்ந்தது
போதுமென்றிருத்தல். கதை - கரும்பு கட்டாகக்கிடந்தா லெறும்பு தானே வரும் என்பது.
(444) அன்றில் பிரியாததன்மையுடையது. ஆடுகருக்கொண் பாற்கருவுயிர்த்த பின்பே
கூடுந்தகைய தாகையாலிங்கனங்கூறினார். ஒரு தி என்பது தலைவியை. கன்றி வெகுண்டு
என்பது தலைவன் பரத்தையிற் செல்லும் போது தடுத்தமையாலென்க. தகர்வாராது
மாறினும் பின்புவரு மென்னுங் கருத்தாற்றங்குமென்பது கருத்தாலாட்டையன்னார் என்ற
ரெனினுமாம். வார்கோட்டுவயத்தகர் வாராது மாறினுங் குறுமயிர்ப் புருவையாசையில்
வைகும் என்பது ஐந்குறு நூறு உா.அ.
(445) இருவர் என்பது தலைவனையும், பாத்தையையும் என்க. முன் செயல் என்பது
தனித்துப்புலம்ப விட்டுப்பிரிந்த செய்கையை.
(446) பிந்தார் - தாமதியார். எனவே முற்பட்டுச் சென்றார் என்ற படி. தந்தாவளம் - யானை.
எந்தோ - என்னோ .
(447) வாராது வந்த என்பது கிடைத்தற் கருமையாய்க்கிடைத்த என்றபடி. மறிமான் -
தலைவி. மனையயலாள் - காமக்கிழத்தி . தாயா வானை என்பது பிறரிடஞ்சோவிடப் பெறாத
தலைவனை என்க . நம் சாதி மின்னாள் என்பது காதற்பாத்தையை. பாராள் - பாருக்குரியவளாவள்.
நம்வாழ்க்கையின் பண்பையன்றோ - நமது வாழ்க்கையின் பண்பல்லவா? - சாரியை.
(448) தீராதநெஞ்சு - துன்ப ரீங்காத மனம். எங்களுக்கோ அவர் தங்களுக்கோவென்பது
செய்வத்துணையெல்லாருக்கும் பொது வென்றபடி.
(449) மின்றகு நுண்ணிடையார் என்பது கற்புடைய மகளிரை என்க. குணமாறாவன.
அன்னை தயவுமடியாள் பணியுமலர்ப் பொன்னி னழகும் புவிப்பொறையும் - வன்னமுலை
வேளை புணர்ப்பும் விறன் மந் திரி மதியும் பேசிலிவை யுடையாள் பெண் என்பனவாம்.
ஒன்று மறி வினர் என்றது நீ சொல்லிக்கொடுக்கக் காண முதலாயின செய்வா மாகிய,
காமக்கிழத்தி, பின் முறைவதுவைக்கிழத்தி , காதற்பாத்தையர் மளை யென்க.
(450) வெஞ்சொற்பகர்தல் - தாசிவிடயமாகாதென்று சொன்ன வனவின் மகளின் ஐம்
இருவள்ளுவ திகார் இயாகான காமாக பாவை நாச்சியார். என்னுமிருவர் பெருமையும்
விளங்கிக் கிடந்தமை யறிக. குறள் - குறுக்கம்.
(451) தொடியார் என்பது பாங்கியை. பழமலர் -- செம்மல்.
செம்மல் - பிள்ளை.
(452) தாயிலுமன்பர் - குமாரக்கடவுள் . மான் - தலைவி . சேரி னனென்றனிர் -
உனக்காண்பிள்ளையுண்டென்று சொன்னர். அண்மை சமீபம். தூரத்திலுள்ளவனென்று
சொன்னர் சமீபத்தில் வந்து சோர் தேனென்பது மற்றொரு பொருள்
(453) தயையிலர் என்பது பாத்தையதை. பொருள் வார்த்தை க்கு ஆவிசுமவார் என்பது
பொருள்வயிற் பிரிவு என்னும் வார்த்தை போட் பினு முயிர்விடத்துணியுந்தலைவியை
என்க. பெற்றபாலால் - கருவுயிர்த் கவியல் பால், கிடைத்த பாலானெய்யாடிக்குளித்தாள்
என்பது மற்றொரு பொருள்.
(454) அனைக்கு முன்னே - தாய்க்கு (உமைக்கு) நேரில், தந்தை சிவபெருமான். யார்க்கு
முன்னே - எவர்க்கு நேரில் . வான்கன்று - பெரு மையையுடைய பிள்ளை. பாற்குடம் பாலூறு
முலை - ஆன்கன்று தூக்கிப் பாற்குடந்தாங்கி யெதிர்கொள்வது என்றோ வென்பது மற்றொரு பொருள்.
தந்தை பெற்றவையன் எனக்கூட்டுக. கன்று என்பது பிள் ளைக்குங்கூறுதல் மரபாம்.
பெரியபுராணத்தில் திருவாரூர்ச் சிறப்பில், அவ்வரசன் மன்னுரிமைத் தனிக்கன்றும்
எனக்கூறுதல் காண்க.
(455) பேசாதபிள்ளை - மரப்பாவை . பிள்ளைப்பேரிட - நீ பெற்ற பிள்ளைக்குப் பேரிட.
(456) மாவென்றகண்ணார் - பரத்தையர். பெண்களுமாம். கோ என்றவர் என்பது கண்களை.
(457) விண்கா - கற்பகச் சோலை. அரையுடம்பு - மெலிந்ததே கம். மதி - புத்தி. முடித்து -
கெடுத்து. பெண்பால் - பரத்தையரிடம். அர்த்தனாரீசுவரவடிவாய்ச் சந்திரசூடனாகி
உமாதேவியின் பக்கத்திலிருந்த சிவபிரான் பூமியிற் பாதசாரியாய் வந்தார் என்பது
மற்றொரு பொருள்.
(458) அவளோவிவளோ வென்பது ஒரு சாடைப்பதம்.
(459) கொல் என்பது ஒலிக்குறிப்பு. செல் என்பது ஏவல். படியா திருந்தேன் -
கீழ்ப்படியாதிருந்தேன். கொல், செல், இடி, கல், படியாதிருத்தல், என்பது மற்றொரு பொருள்.
(460) சுரம் - பாலைவனம். பயின்றிடுதல் - பழகுதல், கூடுதல். மொழி - பிரியேனென்றது.
கண்ணுமில்லோம் என்பது இறைவன் பிரிந்ததனாற்றேர்த்திருவிழாச்சுவாமி தரிசனங்
கேளிக்கை முதலியன பார்ப்பதில்லை யென்றபடி. காதுமில்லோமென்பது சங்கீதம்,
புராமன காவியங் கேட்டலில்லை என்றபடி. கையுமில்லோமென்பது உடை, நகை ,
ஒப்பனை, கொடுப்பது, வாங்குவது, இல்லை என்றவாறு. பெண் ணுமில்லோமென்பது
இறைவன் புறத்தொழுகற் குறிப்பு.
(461) கூடு - சரீரம், கூடுதல். நசையும், மேலாடியகழையும், கூத்தருக்குமிறைவிக்குஞ்சமான
தருமமாதல் கண்டுகொள்க. கழை - மூங்கில், தவிப்பு.
(462) துனி - புலவி நீட்டம். புன்கண் - துன்பம். செவ்வாய் முதமருந்தல்ல வென்பது
தேவாமுதம் போற்கிடையாததல்லக் கிடைக்கு மென்றபடி.
(463) வேழம் - தலைவன். பிடி - தலைவி. சிலம்பு ஆர்த்த ல் - லைவனையுதைத்தல்.
துஞ்சினர்போல் - சோர்வுற்றவர்போல். கஞ்சம் லைவிகண் . முத்து - கண்ணீர். சிலம்பு
மேல் வேழமார்ப்பதன்றி வேழ தின்மேற் சிலம்பார்த்ததென்பது மற்றொரு பொருள்.
(464) வேலைவிரும்பினர் - வேலாயுதத்தை விரும்பினவர், தொ லை விரும்பியவர்.
மால் - மயக்கம், பெருமை. சிறுத்தொண்டர் - அறுபத்து மூவரிலொருவர். காலை
முடித்தல் - பிள்ளையைக் கோறல், தலை பொதத்தைத் தலைமேற்சூடல். எங்கையர்
என்பது காதற்பரத்தையர்
தலியோரை என்க.
(465) வினைக்காரன் பதம் - சண்டைக்காரன்கால். பரல் - ருக்கைக்கல். கஞ்சம் - கண்.
கலிங்கம் - சேலை. கஞ்சதேசத்து நீரைக் கலிங்க தேசத்துப் பாய்ச்சுத னல்லதல்ல வென்பது
மற்றொரு பொருள்.
(466) மேல்வீட்டிலே என்பது நின்றென்பதற்கிடான்மையாம் சொல்லெச்சமாக
வருவித்துக்கொள்க. மாமிதலையிற் கையும் வந்த கணவன் மேற்கண்ணு யைந்த
நகையுங் கண்டேனெனவே காமக்கிழத்தி யெனவமைந்தது.
(467) கூருதன என்பது பாதத்தை வணங்கியபின்னும் கோபித் தல் தகாதென்றதை.
செய்யாதன என்பது கும்பிட்டதை. ஓர் மான் என்பது துளபமாலையாய் மார்பிலிருக்கும்
பிருந்தையை.
(468) புன்சொல் - கேள்விப்பேச்சு. அந்றைப்புனச்சுகமன்றோ வென்பது அன்று
அப்புனத்திற்கண்டதலைவி இவ்வளவு வன்கண்மைய டையளல்லளென வூடல் கூறலாயிற்று.
(469) தலைநாள் - இயற்கைப்புணர்ச்சியான காள் . பலகாட்கரும் புங்கசக்கு மென்பது
வெகுநாளனுபவத்தினாலே புதியதுநேடவேண்டு மென்ற குறிப்பு. உம்மையன்றி
வேராசையில்லாதவன்பது பரியாசம்.
(470) அவயவங்களுக்குப் பயந்து ஒடுங்கிக்கவினிழ்ந்திருந்தன வெல்லாங்
கருப்பத்தினாலழகு குன்றிய தறிந்து கவின் கொண்டன வென்ற வாறு. கூந்தலுக்கு
மேகமும், இடைக்குமின்னலும், தோளுக்கு மூம் கிலும், கழுத்துக்குக் கமுகும்,
முலைக்குத் தென்னையும் என்க.
(471) சங்கரலிங்கத்த போரிதி என்றது தருமகர்த்தாவாகி விசா //ணையிலிருந்த
சங்கரலிங்கத் தம்பிரானை. செய்கை - கோயிற்பணி விடை. பொருள் - பிள்ளை.
(பொன் பலகொடுத்தல் - அனந்ததான செய்தல். மைப்போட்டுப்பார்க்காமற்
பொருளெடுத்தார் என்பது மற் றொருபொருள்.
(472) இன்பப்பால் - இன்பப்பகுப்பு , சொல். அமுதம் - இதழ் மீர் . தேன்குழல் -
தேனொழுகுங்கூந்தல். பசுக்கூட்டத்திற்றோன்றியடி மைக்காரர்களுக்குக் காளை
மாடு கொடுக்குங்கோனார் எனவும் பாலையுஞ் சோற்றையும் வைத்துக்கொண்டு
தேன்குழலென்னும் பலகாரத்தைக் கொடுத்தாயெனவும் வேறுபொருடோன்று மாறுணர்க.
(473) கிருதாக்கினி ஞாயம் என்பது நெய் சொரிந்த வக்கினி போற் சொலிப்பது.
மதிச்சிலைஞாயம் என்பது சந்திரனைக்கண்டதும் குளிர் நீர் கொடுப்பது. கதிர்ச்சிலை
ஞாயம் என்பது சூரியனைக் கண்டது மக்கினி சொலிப்பது. தேக்கிலை போட்டாமையாற்
காமக்கிழத்தி யென்க.
(474) நீத்தட்டுகல் - சக்கிமுக்கிக்கல் அஃதுள்ளே தியும் புறம்பே குளிர்ச்சியுமாவது.
தென்றற் கொடி என்பது காற்றைக்கண்ட கொடி போல நாணி வணங்குவது.
கண்டகபலஞாயம் என்பது பலாப்பழம் போல மேலே கொஞ்சங் கடினம். உள்ளே
கருணையுமுடைத்தாதல், தானே விரியும் பலாம் பழம்போல வோருகாலத்திறைவர்
வெறுப்புற்றாலுந்தா னே வலியமேவுவதுமொரு கருத்து.
(475) சங்கை தவிர்த்தோன் என்பது உருத்திரசன்மனை. மூங்கி லணை தழல் என்பது மூங்கிலிற்
பிறந்து மூங்கிலைக்கெடுக்குந் தீப்போலூட லாற் பிறந்த வெறுப்பையூடனீடலாம்
பிறந்தவாற்றாமையும் பிள்ளையுங் கெடுத்தனவென்க.
(476) புலிக்குட்டி - புலி போன்றவர் பிள்ளை. தறுகாப்புலி என் பது பரத்தையர் சேரிக்குச் செல்லும்
விரைவைக்கூறியது. பெருந்தேரு டையவரைப் பெண்டன்மையுடையராக்கியது என்பது
மற்றொரு பொ ருள். பரி - குதிரை
(477) பூவிற்கொடுக்குந்தொழில் - பூவிலிருந்து சிருட்டிக்குந் தொழில். புரவலர் - திருமால்.
பெண்பாவந்தலைவர்க்குச் சார்தலும், புருடர் புண்ணியம் பூவையருக்குன்சார்தலுநீதி.
கண்ணிமையாதது - அதிகமோகப்பார்வை. கைதிங்காமை - பிரிவெண்ணியென்க. தேவர்
தலைவர். தேவர்க்குக்கண்ணிமை ஒழுக்க நீங்காமையுண்டென்பது கொள்க.
(478 ) பொறாமையென்றது காமக்கிழத்தி, காதற்பாத்தை, சேரிப் பயத்தை, பின் முறைவது
வைப்பெருங்குலக்கிழத்தி, முதலாயினாரால் வந்த பொறாமைகளை. அருந்துதி - சிறுதுதி.
சிறுமைக்குப் பெயர் அரும் போகமென்றதனானறிக.
(479) பாற்குடம் - பாலூறு முலை. உன்னையுண்டுபண்ணிப்பாது காத்த தந்தை தனக்குடத்தைக்
கையாடிச்சீவனம் பண்ணினார். நீபாற்கு டத்திற்கையாடிச்சீவனம் பண்ணும்படி விதியிப்படிச்
செய்ததென்பது மற்றொரு பொருள். பாலினாலே வேற்றுமைப்படுத்தி நின்றாய் அவர்கையாடில
பென்று பழித்தல் காண்க.
பரத்தையிற் பிரிவு முற்றிற்று.
-----------
29. ஓதற்பிரிவு (480- 489)
தலைவன் பிரிவறிவுறுத்தல்.
கைம்மலர் வாய்மலர் கண்மலர் கான்மலர் மெய்ம்மலர்த்து
மெய்ம்மலி நூலும் பிறவுங் குகன் மயில் வெற்பிடத்தே
லைம்மலி வேற்கண்ணி சந்தேக மாற்ற மனநினைத்தோ
நெய்ம்மலி கூந்த லிளம்பிடிக் கேசென்று நீ சொல்கவே. (480)
பாங்கி தலைவிக்கதனையறிவுறுத்தல்.
உதவி புரியுந் தலையாய நட்பருடல் சிதைத்தார்
பதயுகளத்திற் கெதிரான தொன்றைப் படுத்தல் செய்தா
ரிதமகி தஞ்செயு நண்பர் மனமறி யேன்முருகன்
மதிதவழ் தோகை மலைநா வலர்பலர் வந்தனரே. (481)
பிரிவுடன் படாமை.
தலையாய நட்ப ருடல் சிதைத் தாரென்ற சாடை நன்றா
நிலையா கியநம் முடைநட்பி லாவதென் னேரிழையே
பலதேவர் போற்று முருகன் மயில் வெற்பிற் பண்ணறியுஞ்
சிலையா ருரைபண் ணிருதெய்வ மாகிச் செறிந்ததுவே. (482)
பிரிவுடன் படுத்தல்.
மனத்தின் படி விடு லீலா சுகர்கதை மற்றறிவாய்
வினிக்கை யிசைபசுப் பேய்பாம்பு பாலன் வெறுப்பதுண்டோ
வினத்த விசைத்தெய்வ மேழி லிரண்டை யெழறெரியார்
கனைத்துவண் டார்சுனை வேண்மயில் வெற்பிற்பண் கற்பவரே. (483)
பிரிவுடன் படுதல்.
தாரமு நல்ல கிளையும் புகுவார் தடையி னில்லார்
தீர ரகப்பொருள் வாசிப்ப தேநன்று சேந்தன்மயி
லேர்கொண் மலையி லலங்காரம் பாரா திருவருநம்
மூரிற் புறப்பொருண் மேற்கற் பியனெறி யுன்னுவமே. (484)
பிரிவழிக் கலங்கல், (கார்ப்பருவம் )
பிள்ளையுந் தந்தையும் வந்தா ரெமது பெருங்கவினைக்
கொள்ளை கொண் டாரிருந் தார் நடந் தாரினிக் கூறியென்னாம்
புள்ளி மயிற்குகன் றோகை மலையின் முன் பொற்பழிந்த
வெள்ளை முகிலுங் கறுத்தே யுறுமி வெளிவந்ததே. (485)
பாங்கி வன்புறை.
வீறிற் பிரிந்தனர் போகிலர் மாதம் விளங்குமுப்பத்
தாறிற் கழிந்தன கண்டுங் கலங்க லறிவின்மையாந்
தேறற் சிகிவரை வேலனை யுள்ளார் திறமெனவே
தூறித் திரியுமிக் காருக்கென் னோவுண்மை சொல்லுவதே. (486)
தலைவி வன்பொறை.
ஓதற் ககன்றோ னொழிந்திடை மீண்டன் புடன் கலந்து
போதற் கியையப் புலம்பப் பெறானம் புலம்ப லென்னாஞ்
சோதிக் குகன் மயில் வெற்பானை நொந்து சொலிற்றிரும்பி
வேதத்தினந்தத்தைப் பார்க்கினும் பார்க்குவன் வீண்பெண்மையே. (487)
தலைவன் வருவழிக் கலங்கல்.
வருடமொன் றாகி யொருவருடத்தை மகிழ்ந்தளியே னொருவ
ருடச்செயலாலோர் வருடத்தை யோட்டுகின்றேன்
முருகன் மயில் வெற்பி லோர்வரு டத்தின் முயற்சிதருங்
கருமுகி லாண்டொன்றை யோராண்டதாகக் கருதிலவே. (488 )
வந்துழி மகிழ்ச்சி.
நான்சே ரெழுத்தொடு சொற்பொருள் யாப்பு நயக்குமணி
மீன் சேர்கண் ணாணல்குஞ் சேந்தன் குகன் மயில் வெற்பகத்தே
வான்சேர் நெறியென்ப போய்மீ ளளவுமென் மானங்கொண்ட
கான்சேர் குழற்கு நிகரோ வுலகுள்ள கற்பவரே. (489)
அரும்பதவுரை
(480) இந்நால்வகைப்பூவையுமலர்த்துவது அவினய நூலாகிய பாதசாத்தி மென்க.
(481) உதவிபுரியும் என்பது மடலேறற்குறிப்பு. தலையாய நட்பா ருடல் என்பது
பனையோலை. பதயுகள நேரானதொன்று - புத்தகம் ; தலையாயார் எண்ணரும்
பெண்ணை போன்றிட்ட ஞான்றிட்ட தேதொன் மையுடையார் தொடர்பு. என்பது நாலடி
நட்பாராய்தல் கா
(482) சிலையார் - தலைவர் . பண்ணிருதெய்வம் என்பது விஸ்வா மித்திரன், யமன். அங்கி,
திங்கள், சூரியன், கௌதமன், காசிபன், என்னு மேழிசைக்குரிய தெய்வங்களுள் யமனையு
மக்கினியையுமென்க.
(483) லீலாசுகர் - ஒருபெரியவர் : அவர் மனத்தின்படி யொரு தாசியொருநாள் நடவாத்தாற்
சந்நியாசம் வாங்கினார் என்பது கதை. எழில் இரண்டு என்பது சந்திர சூரியரை பண் - இராகம்.
வினிக்கை - இனித்தல்.
(484) தாரமும், கிளையும் இராகங்கள். அகப்பொருள் - மனக் குறிப்பு. வாசிப்பது -
எல்லார்க்குந் தெரியப்படுத்துவது. அலங்காரம் - ஒப்பனை. புறப்பொருள் - புறம்போன
விறைவன், கற்பியல் - பதிவிர தாதருமம். இருவர் - தலைவியும் பாங்கியும். மனைவி
யிடத்திலும், கிளை யினரிடத்திடத்திலும் விரும்பிச்செல்வார் தடுத்தானில்லார் எனவும்,
அகப் பொருளிலக்கணம் வாசிப்பதே நல்லது எனவும், அலங்காரமென்னுமிலக் கணத்தைப்
பாராமற் புறப்பொருளிலக்கணங் கற்றபின் கற்புநெறி கூறு
மிலக்கணத்தையோ துவோ மெனவும் வெவ்வேறு பொருடோன்றுமாறு மணர்க.
(485) கறுத்து - கோபித்து, கறுநிறமுற்று.
(486) வீறிற்பிரிதல் - தர்க்கத்தின் மேற்பிரின் மாதமுப்பத்தாறு சென்றனவெனவே யோதற்
பிரிவுக்குரிய மூன்றுவரு.--முஞ்சென்றுவிட் டது இறைவர் வருவாரென்பதாயிற்று.
அறித்திரிதல் - மழை துளித் துத்திரிதல், பழிச்சொற்பகர்ந்தலைதல்.
(487) கல்வியிற்பிரியுந் தலைவன் மூன்றுவரு.--த்துக்குள் வருத்த லும், புலம்புதலும்
பெறானென்பதிலக்கணம். வேதத்தினந்தம் - வேதாந் ஆம்; அது படித்தான் மாதர்
முதலான பொருளாசை விகைத் தோற்றும், ஆதற்ககன்றோனு மயங்கான் பொறுத்திருப்பது
பெருமையென்றானென்க.
(488) அளியேன் - எளியேன். வருடமொன்றாகி - மன்மதனாகி. ஒருவருடத்தை மகிழ்ந்து -
ஆனந்தத்தான் மகிழ்ந்து. ஒருவருடச்செய் லால் - ஈசுபச்செயலால். ஒரு வருடத்தை - தலைவி
கண்ணார் வருவகத்தை, ஓட்டுகிறேன் - ஒழிக்கிறேன். ஒருவருடத்தின் முயற்சி சிதருங்
கருமுகில் - வெகுதானிய முயற்சியைத் தருங்கரிய மேகமானது. ஆண்டொன்றை - விகாரியை ;
(விகாபங்கொண்ட தலைவியை) யாண்டதாக - சௌமியமாக; (சுபமாகக் கருத்தில்
வெனக்கார்கண்டு தலைவன் கலங்கி மொழிந்தமை காமண்க.
(489) நான் சேர் எழுத்து என்பது விதி என்க. சொல்லிலக்க ணமும், அகப்பொருளிலக்கணமும்,
புறப்பொருளாகிய வலயவலிலக்கண மும், இயையும், அலங்காரவிலக்கணமும், இறைவி
கண்ணேயுடைத்ததா லுய்த்துணர்க. வான்சேர்நெறி - சுவர்க்கம் போகும் வழி . கற்பவர் -
கற்புடையவர், படிப்பவர்.
ஓதற்பிரிவு முற்றிற்று.
------------
30. காவற்பிரிவு (490 - 499)
தலைவன் பிரிவறிவுறுத்தல்.
ஒன்றாகி முப்பத் திரண்டா மறத்திற் குறுகுறையு
நன்றாய் தேசத்து நீதியு நாட்டிடை நாடமைதி
யென்றாய செல்வ முதலர் னவுமவற் றெய்து குற்ற
மன்றாக் கலுங்குகன் றோகைவெற்பாள்பவர்க் காய்தலுண்டே. (490)
பாங்கி தலைவிக்கறிவுறுத்தல்.
வேத முனிவரர் யாகக் குறைகளும் வேண்டி நின்றோர்க்
கோதிய தேயந் தியாகக் குறைகளு மூர்பலவின்
றீது பலவுந் தவிரக் குகன்மயிற் றிண்சிலம்பார்
காதன் மடக்கொடி யே நடந் தாரென்பர் கண்டவரே. (491)
தலைவி பிரிவுடன் படாமை.
தன்குற்ற நீக்கிப் பிறர் குற்றங் காண்கிற் றலைமையருக்
கென் குற்ற மென்ற குறளறி வார்குற்ற மிங்ககற்றார்
நன்குற்ற சேந்தன் மயில் வரை வேலவர் நாடு கொண்டாற்
பின் குற்ற முள்ளவர் காடுகொள் வாரினிப் பேசலென்னே. (492)
பாங்கி தலைவியைப் பிரிவுடன் படுத்தல்.
சீவகன் றந்தை முயற்சியை நீத்த செயலிலன்றோ
பூவல யத்தைப் புரப்பது விண்டனன் பொற்கொடியே
தேவன் மயில் வெற்பிற் றன்வீடு காக்குந் திறமிலரூர்
காவல் ரென்பதெ னென்றோத னல்ல கருத்தல்லவே. (493)
தலைவி பிரிவுடன் படுதல்.
பல்லார் பயன்றுய்ப்பத் தானே வருந்திப் பகிர்ந்தளித்த
னல்லாண் மகற்குக் கடனென்று நாலடி யார்நவின்றா
ரெல்லாரும் வாழும் பிரிவிற் கிரங்கலுண் டோதமிழின்
சொல்லார் பிரிவல்ல வேகந்தன் றோகைச் சுரும்பிடத்தே. (494)
தலைவனைப் பிரிவழிக் கலங்கல் (கூதிர்.)
கூடு பதமுந் தலையு முடலுங் குவித்ததிர்ந்து
மேடைக டாவி விழிசாய்த் திறகு விரிக்குமயி
னாடர் குகன்மயில் வெற்பேறி யாங்க ணடுங்கவந்த
வாடை யெனும் புலி யாவிகொள் ளாமுனம் வந்திலரே. (495)
பாங்கி வன்புறை.
கார்வாடை நோக்கி மயிலாடுஞ் சோலைக்கன் னாடர் மன்னன்
றேர்வாடை வந்ததுன் பாவாடைச் சோர்வினைத் தீர்க்கவின்றே
பார்வாடை யாலொழிந் தார்குகன் றோகை யணிவரைமுந்
நீர்வாடி வற்றுங்கொல் லோசிகி மைக்க னெருப்பினுக்கே. (496)
தலைவி வன்பொறை
குறுந்துளி வாடையும் பல்லறை யோசைக் குளிருமயி
எறுங்கிரி வேளைப் பணியா தவரி னடுநடுக்கும்
பறும்புனம் போலுமுடலுங் கொண்டென் பொறைவைப்பினன்றோ
தெறும்படை வேல ரறப்புறங் காவல் செலுத்துவதே. (497)
தலைவன் வருவழிக் கலங்கல்.
வஞ்சிக் கொடிதலை சாய்ப்பதுண் டேவரும் வாடைகளே
யஞ்சினு மாடை பறிப்பீர்க ளேகள்ள ரானவர்போன்
மஞ்சு தணிமயில் வெற்புறை வேளை வணங்கினர்போற்
கொஞ்சி வணங்கியொதுங்கித் துவண்டென்று கூடுவதே (498)
வந்துழி மகிழ்ச்சி.
உரைப்பீர் தழற்படு பூம்பாவை போல்பவ ருக்கின்று நா
மரப்பாவை போல வருதலை யென்றனம் வந்து சொல்லார்
கருப்பான்மை தீர்த்த முருகன் மயில் வெற்பிற் கண்ணெனவே
யிருப்பாரைக் காணப் படாரே மகிழ்ச்சி யிராதவரே. (499)
அரும்பதவுரை
(490) தேசத்து நீதி என்பது தேசத்தினொழுக்கந்தெரிதல், அவை - வருணாச்சிரம
தருமந்தப்பு:தல், எளியாடை வலியார் நலிதல், ஆணை மீறல், நடுநிலைமை, கொள்வன
கோடல் விலக்குவன விலக்கல் , மன்னார் நனை நடப்பன வெழுதுதல், நடந்தவை
வாசித்தல், தேச விசாரணை முதலிய பத்துமாம். நாட்டமைதி என்பது. செல்வம்,
விளைவுடைமை , மிருவள் முடைமை, செங்கோலுண்மை, நோயிலாமை, குறும்பிலாமை
முதலிய வாறுமென்க . எய்து குற்றம் என்பது விட்டில், கொட்டியப்பூச்சி, பன்றி, கள்வர்,
அவமழை, யானை, கிளி, இவற்றான் வருந்திங்குகளை யென்க . இவ்வளவும் விசாரிக்க
வேண்டுமென்று தலைவன் பாங்கக்குக் கூறினானெனவே தலைவிக்குச் சொல்லச்
சொன்ன தாயிற்று. பாங்கர் சொல் என்பது எச்சமாய் கின்றன.
(491) யாகக்குறை - பொருளிடையூறு, பகைவரிடை...யூறு . தயக் குறை என்பது
தன்றேயத்திடைத்திராதவெல்லை வியாச்சியங்கண்ணாலே பார்த்தொழிப்பது . தியாகக்குறை
என்பது அடுத்தோர்க்குத்தான் வேத் தலையினின்றுஞ்சென்று கிராமம் விட்டுக்கொடுத்து
வருவது. பெயர் பல வின்றீது பலவுந்தவிரவென்பது மேற்கூறிய பன்றி, யானை, கள்ளர் ,
குறும்பர் , மறுமன்னர் முதலியவற்றிற்கு வேட்ட மார்க்கமாகவும் யுத்த சன்னாகமாகவுஞ்
செல்வது . கண்டவரே என்றதனாற்றானறியாதவள் போற்கூறினாளாயிற்று.
(492) நாடு கொண்டாற்குற்றமுள்ளவர் காடுகொள்வார் என்பது பலருக்கியங்கிப் பிரிவுடன்
படாததுபோற்கூறியதென்க. அன்றித்தலைவி தன்னைத்தானே காடுகொள்வேனென்று
கூறியதெனினு மமையும். காடு கொள்வது தன்னை மறந்து மயங்குவது.
(493) சீவகன்றந்தை - சச்சந்தன். தன்வீட்டைக்காவாதவரை யூரைக்காக்கவல்லவரென்று
கூறுவதென்னையென்று தலைவி கூறினாளாத லாலங்ஙனங்கூறுவது நல்ல கருத்தல்ல
வென்றாள் பாங்கியென்க.
(494) தமிழின் சொல்லார் பிரிவல்லவே என்பது ஓதற்பிரிவு போல மூன்று வருடப்
பிரிவல்லவே என்றவாறு.
(495) இச்செய்யுளிற்கார்கண்ட மயிலுக்குத் தொழிற்றன்மையலங் காரங்கூறியது கண்டு
கொள்க. இக்காலத்தின் மயிலாடுவது காண்பவர் வந்திலரென்பதுமாம். கார்காலமுங்
கூதிர்காலமு மொற்றுமை கருதிக் கொள்க.
(496) சிகிமைக்கல்-சக்கிமுக்கிக்கல், அது தீத்தட்டிக்கல்லென்க.
(497) அறை - மலைப்பாறை. ஓசை - அருவியோசை. பல்லறை யோசை என்பதற்குப்பல்லுடன்
பல்லடிக்கு மோசையெனினுமாம். பொறை - பொறுமை. வறும்புனம் - கதிரறுத்ததினப்புனம்.
தெறும் படை - அழிக்கும்படை.
(498) வஞ்சிக்கொடியைத்தலைசாய்ப்பது போலிறைவியை வாட்டு மென்று கூறினார்.
கள்ளரைப்போலாடை பறிப்பீர்களே என்றது ஆடை சோர்தலைச்சொல்லியபடி. பன்மை
வாசகங்கூறிய திடையறுத்து வரு தலைநோக்கியென்க.
(499) கருப்பான்மை - பிறவித்துன்பம். கண்ணென வேயிருப் பார் என்பது தலைவியை
காணப்படார்க்கு மகிழ்ச்சியில்லை யென்றதனாற் கண்டதனாற் கண்டவிறைவன்
மகிழ்ச்சியுற்ற தாயிற்று.
காவற் பிரிவு முற்றிற்று.
--------
31. தூதிற்பிரிவு (500 - 510)
இறைவன் பாங்கிக்குப் பிரிவறிவுறுத்தல்.
இருவ ரெதிர்ந்தனர் யாதினு மொப்புமை யேற்றவர் நந்
திருவரது நிற்க நம்மினத் தாரெனுந் தேற்றத்தினா
லொருவரிற் சேரப் படாது குகன்மயி லோங்கலன்னீர்
பொருதக ரத்துணை யிரெழுத் தாகப் புரிந்தனமே. (500)
பாங்கி தலைவிக் கஃதறி வுறுத்தல்.
உய்த்த கயங்களொன் றோடொன்று தாக்கியுலைதல் கண்டு
கத்தி யுருவி நடந்தார்பல் வேந்தர் கடம்பணிவோன்
முத்தி தருமயில் வெற்பினி னம்மிறை முன்னடந்தார்
மத்தகஞ் சாய்க்க விலக்கின ரென்றனர் வந்தவரே. (501)
தலைவி பிரிவுடன்படாமை.
பன்னாளும் விட்டுப் பிரியா திருந்தமை பார்த்து மையோ
முன்னோ பிரிந்தனர் பின்னோ பிரிந்தார் முருகனன்ப
ரெந்தாளுந் தோகை மலையிற் பிரிவே யிசைத்தனையேற்
சொன்னாலுஞ் சொல்லா விடினுநன் றேயிந்தச் சொல்லெனக்கே (502)
தலைவியைப் பாங்கி பிரிவுடன் படுத்தல்.
தூதா னவர் நல்ல பாக்கினைச் சோற்றினைத் துய்க்கவுநா
மாதே வருந்த விதியோ முருகன் மயூரவெற்பின்
மீதே நமக்கொரு தூதில்லை யோ செயல் வேறிலையோ
பேதாய் செங்கையொடு காலில்லை யோவிப் பெருநிலத்தே. (503)
தலைவி பிரிவுடன் படுதல்.
ஆண்டிருந் தான் மண மின்னுஞ்செய் வார்திங்க ளாறிருந்தான்
மூண்டமு தங்கொணர்ந் தேயளிப் பார்மதி மூன்றிருந்தால்
வேண்டு வனகையி னாலூட்ட வேண்டுஞ்செவ் வேண்முருக
னீண்ட மயில்வெற்பிற் றிங்களொன் றேலுண்டு நேர்குவனே. (504)
தலைவனைத்தலைவி பிரிவழிக்கலங்கல் (முன்பனி )
அன்ப னிவனென் றனையக லான் பிரியானென்றனை
யின்பனிதயமெட் டேநாளென் றோதினை யெங்கள் குகன்
பொன்பனிக் கின்ற மயில்வரை மீதிற் புகன்மறையோர்
முன்பனிக் கால மகலுமென் றாரம் மொழி நிசமே. (505)
பாங்கி வன்புறை.
கைச்சமு தாடு கொடுத்த திரண்டிற்குங் காணென்றது
மிச்சமர் நீக்கப் படாதோ வெனவுனக் கெய்தியதும்
பச்சை மயில்வரைச் சேந்தன்றைப் பூசப் பயிற்சியினா
லிச்சை பெறுமுன் பனிக்கால மென்பது மெண்ணுவரே. (506)
தலைவி வன்பொறை
வீடுக டோறும் விருந்துண் டிருவரை வேண்டியுற்றார்
காடுக டோறுஞ் சிவரூப மாவதுங் காணுகிலா
ராடல் புரிகுகன் மாயூர வெற்பி னவர்மெத்தவோ
நீடு மொருத்தி யுயிர்மெத்த வோபுகழ் நேர்தனன்றே. (507)
தூது ஏதுவாகச் சென்றோ னவ்வினை நின்று நீட்டித்தழிப், புலந்து புலம்பல்.
ஒழிந்தார் சமர்விருந் துண்டா ரிலைமுன் னுரைத்தவெல்லாங்
கழிந்தா ரவரென்னுங் கத்தியை நோக்குங் கடம்பணிவோன்
வழிந்தோடுதேறன்மயில் வெற்பையெண்ணுங்கண்மாரியென்னுஞ்
சுழிந்தோடு வாரியிற் றோணியை நேருஞ் சுகக்கிளியே. (508)
இறைவன் வருவழிக் கலங்கல்.
போதந் தனங்கல்வி போமாதர் மேன்மனம் பூணிலிந்தத்
தூது புகாவிடிற் சுற்ற மிறைத்தன்மை சோருமன்னோ
நாதன் முருகன் மயில்வரை வாவி நளினங்களே
யோதி னளினங்க ளேயல்ல வேகரிந் துற்றதென்னே. (509)
வந்தழி மகிழ்ச்சி (கண்டோர் கூற்று.)
வாட்பது மங்கணை மானென்னுங் கண்ணி வரல் குறித்துக்
கேட்பது சின்னமென்றாலு மகிழ்ந்தனள் கிட்டுகின்றோன்
மீட்ப துயிரையென் றாலு மகிழ்ந்தனன் மெய்தழுவிச்
சேட்படர் சோலை முருகன் மயூரச் சிலம்பிடத்தே. (510)
அரும்பதவுரை
(500) தகரத்துணையீரெழுத்தென்பது தூது . துணை யிரெழுத் தென்பது வேறேயக்கரங்களைக்
குறியாது அமருற்றவர்க்கேற்பச் சகாய மாக நின்ற வீரெழுத்தென வறிதற்கென்க. பொருத
துணைப்புயம்போ லேயிருக்கிற விருவருக்குமோரெழுத்தாய்ப் போகாமலீரெழுத்தாயு லகத்
திருத்தலைப்புரிந்தன மெனக்கொள்ளினு மமையும். துணை - சகாயம். ஓரெழுத்தாய்ப்
போதல் - சாதல்.
(501) கயங்கள் என்பது இரண்டு இறைவர்களையுமென்க. கத்தி யுருவி நடந்தார் பல்வேந்தர்
என்பது இருவகை யாருக்குந் துணையாகச் சென்ற பேரையென்க. முன்னாகச் சென்றார்
நம்மிறையென்றதனான் மத்தகஞ்சாய்க்கவென்பது துணையாகவந்தவருடன் பொருகின்ற
விருவரும் வணங்குதலையென்க. யுத்தஞ்செய்வாரை யானையிலேற்றிக்கூறிய துள்ளுறையுவமம்.
(502) முன்னும் பின்னும் பிரிந்தார் என்பது கல்விப்பிரிவு, காவற் பிரிவுகளை.
சொன்னானன்றென்பது பிரிவினால் வருமிடையூறு கட்குப் பரிகாரஞ்செய்து கொள்வது.
அது கைவளை கழற்றல், உணவுகுறைத் தல், அழுக்குடை பழகல், கச்சகற்றல் , பாக்கிப்
பழகல், பேசாதிருத்தன் முதலியன. சொல்லாவிடினல்வதென்பது இறைவரிருக்கிறாசென்
றெண்ணத்துயாப்படாதிருத்தல் என்க.
(503) பாதானவர் நல்லபாக்கினை சோற்றினைத்துய்க்கவும் என் பது தூதிற் சென்ற
விறைவர்க்குப் பார்பொர விரும்புமிருவருமிக்குபசா பஞ்செய்வாயாதலா வென்.
தில்லையோவென்பது முன்பனிக்கால மென்று வந்துசோச்சொல்லியனுப்புவது.
வேற்செயலில்லையோ என் பது அதில் வராதிருந்தாற் போவஸ்தை குழந்தைக்குச்சொளம்,
பூனூல், முதலியன தெரிவித்தல். லையோ வென்பது அதற்கு சம்பற்ற தென்றிருந்தால்
கையாவோலையெழுதுவது, கையிற்கணயாரியனுப்பு வது முலியன. காலில்லையோவென்பது
பாறைமேற்றலைவனிடஞ் செல்லுங்குறிப்பு. தாதுந்துணையுமதுவாகச் சென்றவன்
அழுங்கற்குரி பயனாலானிவர்கள் போருக்குள் சொல்லியாரைப்புவதற்கு முரியாகக்கூறினார்.
இச்சொற்களாலுடன்படுத்தல் Sr sir.
(504) ஒருவருடமானால் மறுப்பிற்கல்யாணன் செய்வார் ஆறுமா தமானாற் றேவாமுதகொண்டு
வந்தாரை வாழப்பர் +மிருக்கும். மூன்று மாதமானால் வேண்டியவை பட்ட வேண்டும்.
எனவேசெய வற்றிருப்பேனென்றபடி.
(505) முன்பன் இக்காலம் கன்றும் முன்பணிக்கு அலம் என்றும் பிரித்துலாக்க. அகலும் - பிரியும்.
பயம் தோடும். முன்பன் -லைவன். முன்பு - வலிமை.
(507) இரண்டுக்குங்காண் என்பது. தலைவன் முயாடிங்கிரும் கட்டுமென்று கொடுத்தறுதி
சொன்னபோது நீர்வருவதற்கும் வயாதிருப் பின் யாங்கள் கொலைசெய் கொள்வதற்கும் கும்
என்று கூறியலை யென்க . உனக்கெய்தியது என்பது தலைவர் தம் பிரிவைக்கருதி
யிருவ ாையுஞ்சமாசப்படுத்தப்படாதோவென் டைனே தலையெய்திய போர் வைஎன்.
பாங்கியாற்றியது கண்டு லவனயத் துாை சொன்னதை யெனினுமாமையும்.
அன்றியுடைப்புசமன்பது பெரும்போக்காதலாலின் காலமுன்பனியுடையதென நினைக்கு
வருவார் என்றவாறு. திருவிழா யுக்காயிலும் வருவாரெனிமம்.
(507) இருவர் என்பது அதிர்ந்தமன்னா என்க . வெருபம் - பணியினால் வெள்ளயாய்த்
தோற்றல். ஒருத்திய லக்காப்பாகலாம் பலபேர்களை காப்பது அறமாயாபாலாம்பாழ்
சம்பாதிக்கல் நல்ல சென்ற மையான தலைவி வன்மையாகப் பொறுப்பாக வெளியா யிற்று.
(508) முன்வைத்து சென்பது பார்வைன்புறையில் மு காடுகொடுத்து மதிசொன்னதை
சுத்தியை நோக்கு பென்பது Na வெறுத்து என்க. மயில் வெற்பைலயாண்டாலமன்பது
தெய்வங்காட் டிக்கொப்பத் தெளிய மையொரற்றுலாப்பயன் என் கை என்க. என்னர்
முத்த ம் கார கருமென்பது கண்சீர் மிகும் கட்டுண்ட தோல் போலிருக்கல், பால் பாகம்பு
னால், முதலியவற்றா லென்
(509) நளினங்கரிந்தது முன்பனியா லென்க. போதந்தனங் கல்வி போமென்பது மூதுரை.
நளினம் - தாமரை ; அழகுடைமை. இறையோன் மகிழ்ச்சியைக் கண்டோர் கூற்றாக வுரைத்தது
காண்க. பிரிவுடன் படுதலைப் படர்க்கையாகவும், இறைவன் முன்னிலையாகவுங் கூறினாருமுளர்.
அவர் திருச்செந்தூர்க் கோவைபாடிய சர்க்கரைப் புல வராகிய மூன்றாம் பாட்டனாரென்க.
இது ஏட்டுப்பிரதியிற் கண்ட பழய குறிப்புரை.
(510) மீட்பதுயிரை யென்றாலு மகிழ்ந்தனன் மெய்தழுவி என் பது தான் போன காரியமுயிரை
மீட்குங் காரியமாக விருந்து மதை நோக் கிமகிழாது சொன்ன படிக்கு வந்த மெய்ம்மையைத்
தழுவி மகிழ்ந்தா னென்றவாறு.
தூதிற் பிரிவு முற்றிற்று.
-----------
32. துணைவயிற்பிரிவு (511- 521)
தலைவன் பாங்கிக்குப் பிரிவறிவுறுத்தல்.
விரகண் டாமணிக் குப்புலித் தோலணை வேண்டுமென்னக்
காரக லாதமின் வேலன் மயில்வரைக் காரிகையாட்
கீர நறும்புன லிட்டோர் குருத்திற் கிடத்தவிழித்
தாரென்ன மன்னென்னப் போற்றி யிறந்தவ ராரென்னுமே. (511)
பாங்கி தலைவிக்குப் பிரிவறி வுறுத்தல்.
நேற்றுப் பிழைத்தமை கண்டாருன் போலு நெடியவெள்ளைக்
கீற்றுப் பிறைமருப் பானை யலங்கரிக் கின்றனர்போ
மாற்றுக் குதிரை பலவாறு சேனை மலிந்தவொற்றர்
கூற்றுக் கொருவரு மானார் குகன்மயிற் குன்றிடத்தே. (512 )
தலைவி பிரிவுடன் படாமை.
நாடு நமதன்று நஞ்செல வன்னவர் நல்கலின்று
பாடு படுதன்மண்ணுக்கும் பெண்ணுக்குமென் பாருலகோர்
தேடு குகன் மயில் வெற்பர் துணை மேற் செலவையெண்ணா
ரூடலை நீக்கிலன் றோபக லோரை யுறுவதுவே. (513)
பாங்கி தலைவியைப் பிரிவுடன் படுத்தல்.
நட்டவர்க் கும்மடுத் தோர்க்குஞ் சகாய நடத்தினர்க்கும்
விட்டவர்க் குங்குறை யுண்டாகிற் செல்வது வேந்தர் செய்கை
யட்ட வயிற்குகன் றோகை வெற் பாய்கிளை யார் சிலையிற்
பட்டனர் பின் மறுப் பாரா ரனுப்புவர் பாவையரே. (514 )
பிரிவுடன் படுதல்.
தொடை கொடு வாள்கைக் கொடு நீ றுதவுநற் சொற்கொடுகட்
கடைகொடு வாசச் சுருக்கொடென் றாணின்ற காரிகை நீ
விடைகொடு போதி மயில்வரை வேலவர் மீட்பரிவள்
கொடுகொடு வென்ன வெடுவெடு வென்றனை கொண்டனையே. (515)
தலைவன் பிரிவுழித் தலைவி கலங்கல் (பின்பனி.)
ஐந்து வகைச் சுற்ற மைங்குழு வோரெட் டமைதியுள்ளோர்
முந்தினர் கந்தன் மயில்வெற்ப ராலரண் முற்றினரா
மந்த நகரஞ் சிவக்குமுன் னேவெளுப் பான புகை
யிந்த நகரம் வளைத்தலிற் பின்பனி யெய்தியதே. (516 )
பாங்கி வன்புறை.
அரண்முற் றினரென் பதனால் விடிய லமர் பனியால்
வெருவுற் றனைகுகன் மாயூர வெற்பர் விறலறியாய்
வருதற் குரிமையி லேணியுஞ் சீப்புங்கை மாற்றினராம்
பருதியிற் றோன்றுவ ரேற்செய்யு மோபின் பனிதுயரே. (517)
தலைவி வன்பொறை.
உலகிய னோக்கி யிறைவர்க் கிரண்டிடை யூறுறுமென்
றலர் முலை மாதரு மெம்மனை மேவ வனுப்பினரே
யிலகயில் வேலன் மயில்வெற்பிற் றேவ ரிருவருக்கு
நிலவு விமானங் கொணர்வார் பொறுத்தற்கெனேரிழையே. (518)
துணை ஏதுவாகச், சென்றோ னவ்வினை நின்று நீட்டித்தழிப்,
புலந்து பாசறைப் புலம்பல்.
குலமட மாதரிப் பாசறை மேல்வரல் கொள்கையன்றே
நிலைமை பலபட நேர்வர் பலர் சிலர் நேர்ந்திலரே
யலர்மலி சோலை மயில்வெற்பில் வேலனன் பாலளித்த
தலைமைத் தனித்துரை யேவரல் சென்று தனித்துரையே. (519)
தலைவன் வருவழிக் கலங்கல்.
புகைகண் டுடனே யதிர்தர யார்க்கும் புறங்கொடுத்த
மிகைகண்டு வாழ்த்துங்கொல் லோமங்கையூடி. வெகுளுங்கொலோ
பகை தணித் தற்குச்சென் றேனக லாத பசைமிகுந்தே
னகல்வதென் னஞ்சுக மேயிர வொன்றெனக் கஞ்சுகமே. (520)
வந்துழி மகிழ்ச்சி
எண்ணான் கிலக்கண முள்ளவ ரேயெரி யூட்டுமவ்வூர்ப்
பெண்ணாரென் போல்பவர்க்கவ்வாறு நன்றென்ற பேதை நெஞ்சந்
தண்ணாகச் சேந்தன் மயில் வெற்பி லேவந்து சார்தனன்றாம்
விண்ணார் பனிப்பகை காமாக் கினிபற்றி வெந்ததுவே. (521)
அரும்பதவுரை
(511) வீரகண்டாமணிக்குப் புலித்தோலணை வேண்டுமென்ன வென்பது தலைவியும்
பாங்கியுமிருக்கிற விடத்திலிறை வனுங்கூட விருந் துபாங்கியைப் பார்த்துச் சொன்னது.
வீரகண்டாமணி -- வெற்றிக்கறி குறியாய்ப் போர்க்களத்தில் வலது காலிற் கட்டிக்கொள்ளுமணி,
புலித் தோவணை என்பது அந்தமணி காலிலழுத்தாமற் சுற்றிக் கட்டுவது. இர ந்தவராரெனறது
தலைவனை நோக்கி நீர் துணைமேற் பிரிந்தபோது யுத்தத் திலிறந்தவர் யார் என்று
போய் வந்ததாக மயக்கத்தாற் கூறினாள் தலைவி என்க. இதற்கு மேற் கோள்
திருச்சிற்றம்பலக் கோவை பொருள் வயிற் பிரிவு முனிவருமன்னரும் என்னுஞ் செம்யுளைப்
பார்க்க . நறும்புனல்-- பனிபீர் குருத்து -- வாழைக்குருத்து.
(512) நேற்றுப்பிழைத்தமை கண்டார் என்பது பிரிவை யறிவித் தலுந்தலை விசோர்வுறப்
பாங்கி செய்த உபசாந்தத்தாற் பிழைத்தமையை யென்க. எனவே வேற்றிடத்திருந்து
சன்னத்தஞ் செய்வதாயிற்று. ரின் போலானை யென்பது இவள் பட்டமகிஷியாதல்
போலதுவும் பட்ட த்தியானை என்றபடி மாற்றுக்குதிரை - அஞ்சற்குதிரை. ஆறு சேனை
என்பது மூலப்படை, கூலிப்படை , நாட்டுப்படை, காட்டுப்படை, துணை ப்படை, பகைவருதவிய
படை என்பனவாம். ஒற்றர் கூற்றுக்கொருவரு மானார் என்பது ஒற்றுவிசாரித்தவனோடு
ஏகாந்தமாயித்தலை என்க.
(513) துணைமேற் செலவை யெண்ணார் என்பது துணையாகச் செல்வதில் வரும் பணச்
செலவை யெண்ணிப் பார்க்கிறவரல்ல வெனி னுமமையும். பொட்டல் - கோபவிரிவு,
ஊடே வந்த அல் அல் - இருள். பகலோரையுறுவதுவே என்பது இப்போது சாய்ங்கால
மாயிற்றுப் பக லோராகிய சூரியனை யுதயத்திற்றெரிசித்தல்லவோ பிரயாணப்படவேண்டும்
இரவிலே வருவார் அப்போது பேசிக்கொள்வோ மென்றவாறு. அடேவந்தயிரவிலேலக்கினம்
போதாது பகலிலே லக்கினம் நன்றெ
ன்று கூறலுமொன்று.
(514) நட்டவர் - நட்டாளர் . அடுத்தவர் - பகைவரான் மெலிந்த வர். கொயநடத்தினர் - முன்னுதவி
புரிந்தவர். விட்டவர் - ஒருவன் மேல னுப்பியதாலிளைத்தவர். கிளையார் - இறைவிகிளையர்
சிலையிற்பட்டவர் என்பது கன்னின்றானெந்தைகணவன்களம் பட்டான். முன்னின்று
மொய்யவிந்தாரென்னையர் , - பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன்
மேலோடி யெய்போய்க் கிடந்தானென்னேறு. என்ற புறப்ப ட்டானறிக . பின் மறுப்பாரார்
என்பது நம்முடைய கிளையிற் பெண்பிற ந்த பேர்பின் காயத்துடன் வந்தவர் யாராகினுமேறிட்டுப்
பாரார் அவ்வளவு மானத்தையுடையவர் என்றபடி. பாவையர் அனுப்புவர் என்பது அவர்
மனத்திடத்தைக் கூறியுடன் படுத்தியதாயிற்று.
(515) வேறொரு பிரிவிற்குத்தலைவியிடையூறு சொல்லினுமிதற்கு ச்சொல்லப்படாமையாலித்தன்மை
செய்யுளிற் கூறினார் இத்தன்மை யள் முன் மயங்குதலாமோ வெனிற் சொல்லாது
போவதிலக்கணமாதலா னிப்பிரிவிற்குச் சொல்லிக்கொண்டேனும், குறிப்பினுணர்த்தும்
பெறற் கருங்கிழத்திக்கு என்பகனாற் குறிப்பினுணர்த்தியனும் போகவேண்டு மென்பதை
நோக்சியென்க. சொல்லினாவதென்னை யென்னிக்கற்பு டையாளாதலானிச் செல்யுளிற்
கூறியாங்கு நடப்பித்தாலிடையூறு வாயா தென்பது மனு நீதி யென்க. கொடு கொடு
வெடுவெடு, என்பது கோய க்குறிப்புப்போற் கற்பித்த சொல்லியப்பு. நின்ற காரிகை,
இவள் கொடு என்பது பாங்கியை. நீயென்பது தலைவனை யென்க.
(516) ஐந்து வகைச் சுற்றம் - படைத்தொழிலோர் , சிமித்தம் பார்ப் பவர் , ஆயுள் வேதியர்,
அடுத்தநட்பாளர், பார்ப்பார் என்க. மூங்குழு என்பது மந்திரி, புரோகிதன், ஒற்றன்,
சேனாதியரி , தாதன், என்க. எட்டமைதியுள்ளோர் என்பது காரியக்காரர் , வாயில்
காப்பாளர், மருத மாக்கள் . படைத்தலைவர், தழுவிய சுற்றம், யானைப்பாகர் , குதிரையேற்
றக்காரர் . காவிதிகள் என்க. அரண் முற்றல் - எதிரிகோட்டையை வளைத்தல்,
காஞ்சிவத்தல் - தீப்போடுதல்.
(517) வருதற்குரிமையில் திரை கொடுத்துக்கான வருகிறோமென் றாண்முற்றப்
பட்டிருந்ததெவ்வர் செயலற்றுடைதலால். எணியுஞ் சப்புங் கைமாறினர் என்பது இவர்கள்
எணி வேகிமைகிறுக்கினார்கள். தெவ்வர் கோட்டைக் கதவு தாழ்திறந்தார்கள் என்றவாறு.
சிப்பு - உள்ளிருர் திடுங்கதவுத்தாள். வருதற்குரிமையில் எண் மாற்றினர், சிப்புமாற்றினர்.
எனவிரண்டிடத்துங்கூட்டுக.
(518) அலர்முலைமாதர் - பலர் தூற்றிய முலைமாதராகிய பரத்தை யர். உலகியல்
நோக்கியென்பது பரத்தையர் உலகியனோக்கி விடுத்தலை யென்க . அவர்களுக்குப்
பணமே பொருளல்லாதுலகியல் பொருளல்ல வென்றாலுமிறைவி மீராடியபின்னீராறு
நாளும் பிரியினிறைவனுக்குச் சிசு கத்தியும், நாகமுமாகியவிரண்டிடையூறும்
வருமென்றெண்ய தாயிற்று. தாசிகளுமுலகியனோக்கினராயின் பாசரிக்கமுள்ளயானிப்
பிரிவுக்குப்பொ றுப்பதே பெரிதென்றாள் என்க. தேவர் இருவருக்குலவு விமானங்
கொணர்வார் என்பது வீரசுவர்க்கத்துக்கு தலைவர் சென்றுவிசிங்கா பம்பண்ணி யெனக்குங்
கொண்டு வருவாரென்றதுமானத்தைக்குறித்தும் கூறினாளென்க. அநுமானம் - உடன்கட்டை
யேறுதல். இருவர் - இறைவனிறைவியர்.
(519) தனித்துரை என்பது இறைவன் மகனை. வால்சென்று தனித்துரையென்பது பலர்
வணங்குகின்றார், சிலர் வணங்கவில்லையில் காரியந் தீர்த்து வருகிறேனிது சமாசாரக்தைத்
தளித்துச் சொல்லென்று தன் மகனை முன்னுதாக வனுப்பினானென்க. நேர்தல் - உடன்படல்.
(520) புகைகண்டு என்பது மருவலரூரையழற் படுத்தல்கண்டது . அ திரதர்யார்க்கும்
புறங்கொடுத்தமிகைகண்டு என்பது தன்னிடந்துச்சேக மாகவருகிறவதிரதர்களுக்குப்
புறங்கொடுத்தான் என்ற படி. அதாவது அவ எனைப்பிரிந்திறைவன் முந்தியவிரைவு.
அஞ்சுகம்- அழகியகிளி, ஐந்துயுகம். வெறுத்திருக்கேனல்லேன் ஓரிரவைந்துகமாக
வருந்தினே னென்பதாம்.
(521) எண்ணான்கிலக்கணமுள்ளவர் என்பது தலைவரை. வந்துழி மகிழ்ச்சி
யிறைவனுமிறைவியுந் தனித்தனி மகிழ்தலுமுளவாதலாலிச்செய்யு ளிறைவி மகிழ்தலென்க.
அவ்வூர்ப்பெண்ணாரென்போல்பவர்க்கவ்வாறு நன்று என்பது நண்ணார் நகரினுமென்போற்
பிரிவுடையாருளர்; அவருக் கிவ்விடையூறில்லை நம்முடைய விறைவனூட்டிய வழற்பட்டுத்
தலைவனுந்த லைவியும் வீரசொர்க்கம் புகுவாராதலானன்றென்றாள் என்க. பனிப்பகை -
பின்பனியாகிய பகை. எண்ணான் கிலக்கணம் - சாமுத்திரிகாலட்சணம்.
துணைவயிற் பிரிவு முற்றிற்று
------------
33. பொருள்வயிற்பிரிவு (522- 536)
தலைவன் பாங்கிக்குப் பிரிவறிவுறுத்தல்.
அக்கினிட் டோம் மிறைசூயஞ் சொல்லய மேதமுதற்
றொக்கபல் வேள்வியு நந்தம் புகழுந் துலங்குதற்கே
தக்க குன் றக்குடி வேளருட் கொண்டு தருமமில்லா
மக்கள் பலர்கொள் பொருள் கூட்டல் வேதம் வகுத்ததுவே. (522)
பாங்கி தலைவிக் கதனைப் பகர்தல்.
கருவேங்கை யாகிக் குறப்பிடி மேவும்வி சாகன்மிக்க
மருவோங்கு சோலை மயில்வரை நாடர் மகிழ்மயினீ
திருவோங்கப் பெற்ற சிறுவேங்கைக் கேமணஞ்செய்யவெண்ணிப்
பெருவேங்கை தேடி வருவேங்கை போடென்று பேசினரே. (523)
தலைவி பிரிவுடன் படாமை.
வேண்டும் விருந்திட் டுறுதிகள் கூறிய வேண்மருது
பாண்டியன் பக்க மிருக்கக் குறைகள் பணத்திலுண்டோ
தாண்டு மயிற்பரி யான்றோகை வெற்புந் தமிழ்மதுரை
யாண்டவன் றேசமன் றோவட மேரு வகன்றிலதே. (524)
பாங்கி தலைவியைப் பிரிவுடன் படுத்தல்.
கொடுக்குந் தொழிலைக் கொடாதோன் கொடுக்கப் புகின் மதுரை
யடுக்க லொருவனம் வீரம் யேந்திர மாகியநா
லிடத்திற் பொழிந்த மழையேனு நேர்கில விம்மணத்திற்
றடைப்படு மோகொடை வேலன் மயூரப்பைஞ் சாரலிலே. (525)
தலைவி பிரிவுடன்படுதல்.
மேல்வாரப் பொன்னையென் மேல்வாரம் வைத்தில்லின் மேவச்
பாலார் பிறர் பொன்னைக் கோயிலுந் தானமும் பற்ற நல்கி (செய்து
வேலார் மயின் மனைப் பாங்கற்குந் தம்பிக்கு மிக்க மணங்
கோலா கலத்திற்செய் வேண்டு நிதியங் கொணர்ந்தினியே. (526)
தலைவன் இல்லத் தழுங்கல்.
சோற்று முகத்தி னடையினு மார்பினுஞ் சோர்வு கண்டே
னீற்றுமுத் திற்கு நிகராது நல்கு நிதியமென்றாள்
போற்றிய சண்முக வாவி மருதா புரியெனவே
சாற்று குகன் மயில் வெற்பை விடிலின்பந் தானில்லையே (527 )
இடைச்சுரத் தழுங்கல்.
வேதிய னீசுர வையன் ப்ரதிட்டை விசுவலிங்க
நாத னமரு முருகன் குகன்மயி னாகத்தினார்
நீதியி தன்றுநெஞ் சேநடுக் காட்டி னெறிதப்பல்போன்
மாதை நினைந்தும் பொருளை நினைந்து மயங்கினையே. (528 )
தலைவன் பிரிவழித் தலைவி கலங்கல் (இளவேனில்)
ஆவுங் கலையு மதயானை யுங்கொள்ளை யாடுமெங்கும்
தாவும் பரியு மணிக்குப் பலும்பல சாளிகையு
மேவும் படி வந்த வால்வேண் மயில் வெற் பிறையிருந்தார்
கூவுங் குயிலைக் குரனெரித் தாரன்று கொன்றிலரே. (529)
பாங்கி வன்புறை
கஞ்சம் புகுந்து முன் வல்லத்தி லேகையைக் காட்டுகின்றார்
வஞ்சிக் கொடிமயி லேகலிங் கங்கொள்ளை வாய்த்தனராங்
கொஞ்சுகல் யாண மிகத்தேடிக் கைவசங் கொண்டு சென்று
மிஞ்சும் பணமயில் வெற்பாருக் கென்று முன் விண்டனரே. (530)
தலைவி வன்பொறை.
புகவந்த பொன்னிற் பொறைசிறி தென்பள் புகழுமுன்ற ன
கம் வந்து சேர்குவ தாறாறென் றோதுவ ளாறுமுகன்
குகன்வடி வேலன் மயில் வெற்பர் கொம்பு குறித்தனர் நீ
சகிசகி யென்பள் சகியே யிவளவஞ் சகியல்லவே. (531)
தலைவன் வருவழிப், பாகன் றன்னோடு கூறல்.
கன்றிய காமத்தி னால்வரு மன்னற்குக் காதனள
னன்று கொடிஞ்சியந் தேர்விடக் கற்ற தறிந்தனையோ
வென்றி முருகன் மயில் வெற்பிற் றெவ்வரை வீட்டினன் கூட்
டொன்றில் பாதி யுடைவாள் செலுத்திச்செல் லுன்மனைக்கே. (532)
வருவழிக் கலங்கள்.
தேடச்சென் றோம்பொருள் சென்றன மோசென்ற சென்றவெல்
கூடச் சென்றாளன்றி நின்றா ளிலையெதிர் கூங்குயிலே (லாங்
பாடச் சென்றோர் துயர் தீர்போர் மயில்வெற்பிற் பாவைவிளை
யாடச்சென் றாள் கொல் வனமோ கொல் கண்ணெதி ராயினதே. (533)
வந்துழி மகிழ்ச்சி
பொன்மயி லுற்றது பஞ்ச வனக்கிளி புக்கது வெள்
என்ன நடந்தது பூலை யெதிர்ந்த தருள்விரும்புஞ்
சின்னஞ் சிறுகுயி னாண்கொண் டது பெற்ற சிங்கஞ்செவ்வேண்
மன்னு மயில் வெற்பிற் கல்யாண மாக மகிழ்ந்தனரே (534)
(கிளவியில்லாத்துறை)
தலைவி முன் தலைவன் கார்ப்பருவங் கண்டு மகிழ்தல்.
வருமுனென் கைமந்த்ர வாளாய் வரல்கண்டு மற்றவன்கைத்
தருகின்ற வாளென வாகுநின் கண்ணெனச் சாற்றுகின்ற
பரவையுண் மேக முருகன் மயில் வெற்பிற் பாவலர்க்குத்
துரைமரு தேந்தரன் றரல்போற் பொன் மாரி சொரிகின்றதே. (535)
நாவலர்வாழ்த்து.
வாழி மயில்வரை வள்ளி தெய்வானை மயில்கண்மயில்
வாழி பொருமயில் வாழிகை மேற்கொடி வாழிபதம்
வாழி யருள் சண் முகம்பன் னிருசெங்கை வாழி செவ்வேள்
வாழி தலத்தொடு தானீகர் வாழிய வாழியவே. (536 )
அரும்பதவுரை
(522) அயமேயம் - அசுவமேதம் முதல் வென்பதனாற் கோமே தம், பவுண்டரீகம்,
வாசபேயம், பாசுபதம், முதலானவுங் கொள்க. முனி வர் குறையையு மன்னர் குறையையு
நிரப்புவது பொன்னென்பது முனிவ ருமன்னருமுன்னுவபொன்னால் முடியும் எனும்
திருக்கோவையானறிக. தருமமில்லாமாக்கள் என்றது கப்பங்கட்டிமறுத்தவர், குறும்பரசு
செய்த வர். கள்வர். குற்றஞ் செய்வார். சூதாடுவார் , ஆள்வாரற்ற பொருளுடையார்,
முதலாயினோர். இவர்களாலீட்டிய பொருள் மறநிலைப்பொருள். இப்பொ ருளைக்கூறவே
மநுநெறிதவறாமலீட்டிய பொருள் கூறவேண்டாதாயிற்று.
(523) சிறுகக்கை என்பது இளவரசாகிய குழந்தையை. பெரு வேங்கை - பெரும்பொருள் . கை
போடு என்பது கையடித்துக்கொடுத் தல். தலைவியையாற்றுவிப்பதற்குறுதிசெய்துதா என்றபடி.
(524) தோமும் பாண்டிய தேசமிப்போது தேசாதி பதியுமருது பாண்டியன், விருந்துண்டபோது
எக்காரியங் கட்கு நாமிருக்கிறோமென் அறுதி சொன்ன துண்டே யவனிடத்திற் சொன்னாற்
பாண்டிய னெடுத் தபணம் போக மேருவிலிருக்கு மிச்சப்பணத்தை யெடுத்துத் தருவான்
என்று கூறிப்பிரிவிற் குடன் பாடாளாயினாள் என்க. விருந்துண்டது மீட்சித்திணையிற்
பாங்கியர் கேட்டு நற்றாய்க்குணர்த்தற்றுறை யிற்காண்க. தோகை வெற்புந்தமிழ் மதுரை
யாண்டவன் றேசமன்றோ வென்பது மேருவைச் செண்டாலடித்துப் பொன் கொணர்ந்த
வுக்கிரப் பெருவழு தியாகிய முருகக்கடவுளுடைய வாட்சியுடையதன்றோ ? நாம் பணம்
வேண்டினின்னுமம் மேருவில் மீதமாயிருக்கும் பொருளை யம்முருகவே ளே தருவனெனக்
கூறினாளெனினு மமையும்.
(525) கொடுக்குந் தொழிலைக் கொடாதோன் என்பது கொடை த்தொழிலைப் பிரார்க்கீயாது
தனக்கேயுரிமையாக்கிய முருகனை என்க. மதுரை, கோவர்த்தனகிரி, காண்டவவனம்,
வீரமயேந்திரம், என்னுமிந் நாலிடங்களினமேழு மேகங்களு மழை பெய்தது
திருவிளையாடல், பாகவ ஆம், பாரதம், காந்தம் இவற்றானறிக, இம்மணம் என்பது
இறைவன் மகன் கலியாணத்தை. தடைப்படுமோ கொடை என்பது முருகன் கொடையை.
(526) மேல்வாரப்பொன் - அறநிலைப்பொருள். பிறர்பொன் - மறரிலைப் பொருள் .
தம்பியென்பது - தன் மகனை, கோலாகலம் - ஆடம் பாம். வாரம் - அன்பு.
(527) சோற்றுமுகம் - அன்னம் பரிமாறுங்காலம். நடையினு மார்பினுஞ் சோர்வு - காலயர்வும்.
துயினீக்கமும். தாம்பூலங் கொடுக் கின்றபோது சுண்ணாம்புக்கு நீற்றுகிற முத்து
விலைபெறுமா நீர்சம்பாதிக் கிற பாக்கியம் என்றாளென்க. பொருண்மேற் பிரிவிலின்பமில்லையென
வேபிரியாதிருந்தாற் பொருள் வரத்தில்லையென்பதாயிற்று.
(528 ) விசுவலிங்கம் என்பது மலைமேற் பிரகாரத்திலுள்ளது.
(529) ஆ - பசுக்கூட்டம். கலை - ஆடைகள். பரி - குதிரைகள் சாளிகை - பணப்பைகள்.
இப்பொருளியாவு மற நிலைப்பொருள் என்க. குயிலைக்குரல் நெரித்தார் என்பது தக்கன்
யாகத்தில் வந்த விந்திரனாகிய குயிலைக்கழுத்தை நெரித்த வீரபத்திரக்கடவுளை யென்க.
(530) கஞ்சம் தலைவியிருதயகமலம். ஒரூர். வல்லம் - தலைவிமுகை. ஒரூர் . கல்யாணம் - பொன்,
ஒரூர் . சுபம். மற நிலைப்பொருள் நன்றல்ல வென்றும் வசந்த காலம் வந்ததென்று நிறைவி
கலங்கிய குறிப்பறிந்து பாங்கியானவள் கொள்ளை வாய்த்தனராமென்று திரும்பிய
சந்தோடஞ் சொல்லி வசந்தகாலத்திலிடையூறு தவிர்த்தாள் என்க . மிஞ்சு பணமயில்
வெற்பாருக்கென்றனர் என்பது மறரிலைப் பொருளென்று தலைவிகொ ண்ட துக்கந்
தவிர்த்தற் கென்க. வல் - சூதாடுகருவி.
(531) பொறை - மலை, பொறுத்தல். அகம் - வீடு, மனம். வந்து சேர்குவது என்பது முறையே,
பொருளும், கடலும். என்க . ஆறு அறு என்பது ஆற்றின் பேரிலும், ஊடலாறுதலின் பேரிலுமாம்.
வஞ்சகியல் லவே யென்பதனால் வன் பொறையாயிற்று.
(532) கன்றியகாமத்தினால் வருமன்னன் என்பது இருதுபர் னனை. சொடிஞ்சி - மேன் மொட்டு.
(533) வனங்கள் புட்ப சாலங்களானிறைந்து விளங்கு மாற்றா னிறைவி போல நீனைந்து
கலங்கினனென்க. குயலைப்பார்த்துச் சொற்ற தனாலும், மரங்கள் புட்பித்திருக்கிற தென்று
கூறினமையானும் வசந்த கால மெனவறிக. கூடச் சென்றாளென்பது உரு வெளித்தோற்றதை
(534) பொன் மயில் - பின் முறைவது வைப்பெருங் குலக்கிழத்தி. உற்றது என்பது தலைவி
வீட்டிற்கு வந்தது. பஞ்சவனக்கிளி - தலைவி. புக்கதென்பது இருக்கின்ற விடமலங்கரித்தற்கென்க.
வெள்ளன்னம் - காமக்கிழத்தி . நடந்தது என்பது ஆலத்தியெடுக்க வென்க. பூவை - காதற்பரத்தை,
எதிர்ந்தது என்பது அட்டமங்கலங்களோடெதிர் கொண் டதை யென்க. அருள் விரும்புஞ்
சிறுகுயில் என்பது பாங்கியை. நாண் கொண்டது என்பதற்கு இறைவர் வந்தவுடனே
பாங்கனுக்கும், பாங்கிக் கும், முன்னே கலியாண முடித்தலான் மங்கலநாண்கொண்டனள்
என்க. அன்றிக்கலியாண முயற்சியறிந்து நாணிக்கொண்டாள் எனினு மமையும். சிங்கம்
என்பது தலைவி பெற்ற பிள்ளையை. சிங்கம் கல்யாணமாக மகிழ்ந்தனர் எனக்கூட்டுக.
(535) இறைவன் வருமுன்னிறைவி கண்களிறைவன் கை வாள் போற் சிவந்திருந்து. இறைவன்
வந்தபின்னிறைவி கண்கள் தேர்ப்பாகன் கைப்பட்டுத் திரும்பக்கொடுத்தவாள் போல்
வெளுத்திருந்தது என்க. சிவந்தது இரத்தம்படுதலாலும், வெளுப் துடைத்தலாலும் என்க.
எனவே வாளுறையிடு முன்றேர் விரையவந்தது பாகன் விரைவினாலும் வசந்த காலத்தினாலும்,
மணமுதலிய வற்றாலுமென்க.
மயூரகிரிக்கோவை யரும்பதவுரை முற்றிற்று.
-------------
பிழை திருத்தம்.
செய்யுள். | பிழை | திருத்தம். |
1 | அன்னத்தின் | அன்னதென். |
13 | நிற்கிலென் | நிற்கிலேன். |
14 | சுலவற | சுலைவுற |
32 | கொண்டு | கொண்ட. |
36 | வெல் | வேல். |
41 | கருணையுண்டென் | கருணையுண்டே , |
47 | சார்ந்த துடியோ | சார் துடியோ . |
69 | நொந்தனமே | நேர்ந்தனமே |
76 | உம்பர்க்கல்லை | உம்பர்க்கில்லை. |
78 | உற்றொருநாள் | உற்றொரு நாண். |
86 | தன்னோர் | தன்னோற் |
92 | தெரிக்கேம் | தெரியேம். |
130 | மடவார் | மடவார்க். |
130 | விழைந்து | விளைந்து . |
133 | சஞ்சாரிகம் | சஞ்சாளிகம். |
156 | நானுற்ற | நாணுற்ற. |
167 | எண்ணலை | எண்ணிலை. |
168 | வேண்டுமென | வேண்டுமான. |
200 | தேகினும்போற் | தேகினும் பொற் |
222 | குழைகாட்டி | குழல் காட்டி |
235 | செல்வாய் | செய்வாய். |
238 | தென்னூர் | துன்னூர். < |
240 | உதித்தனவோ | உதித்தனவே. |
246 | கண்டென் | கண்டேன். |
252 | போக்கி | நோக்கி. |
271 | கதிர்பொற் | கதிர்போற் |
299 | அசுரேசன | அசுரேசன். |
308 | செய்தென் | செய்தேன். |
309 | பொருடன | பொருள் தன். |
314 | மயில் | மயல். |
326 | மென்மையர், மென்மையர் | மேன்மையர், மேன்மையர். |
344 | சொல்லுஞ் | செல்லுஞ் |
346 | பாலென் | மாலென். |
377 | தாய்போல் | தாய்ப்பேர். |
377 | கணவர் | கணவா. |
378 | முந்நான் | முன்னான். |
396 | தன்வீடென் | தம் வீடென. |
426 | விழைவும் | விளைவும். |
431 | மாவென்று | மாலென்று. |
443 | மிக்கப். | மிக்குப் |
444 | மன்னராட்டை. | மன்னரட்டை |
450 | யாளுமப்பாவையும் | யாளும்பரவையும். |
453 | பொய் | போய். |
454 | தனக்கி | தனக்கு. |
455 | பிள்ளைப் பேரிட. | பிள்ளைபேரிட |
468 | புன்சொல். | பின் சொல் |
469 | வரிக்கிலின். | வரிக்கிலன் |
471 | மின்சொல். | முன்சொல் |
489 | நெறியெனப் | நெறியென்ப |
497 | கொண்டேன். | கொண்டென் |
514 | பட்ட வர். | பட்டனர் |
526 | மயின் மலை. | மயின் மனை |
532 | சென்ற. | சென்ல |
444 "இதுவும் அடுத்த கவி யும் தலைவி கூற்று என்பது பிழையென்று தவிர்க்க
446 "இல் அவனொடு பாங் கொடு பரத்தையைப் பழித்தல் என்பதில்
"பாங்கொடு" என்பதைப் பிழையென்று விலக்குக.
------------------------------------
மயூரகிரிக் கோவை முற்றிற்று.
வேலு மயிலுந்துணை.
------------------
This file was last updated on 8 Nov. 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)