pm logo

பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 10
திருநின்றவூர் என்னைப் பெற்றதாயார் மாலை

tiruninRavUr ennaippeRRa tAyAr mAlai
        (paLLikoNTAn piLLai pirapant tiraTTu - part 10)
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext file has been prepared in a two-step proces: OCR of the PDF file followed by careful proof-reading, correction of the OCR output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 10
திருநின்றவூர் என்னைப் பெற்றதாயார் மாலை

Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய
ஸ்ரீமாந் - கச்சிக்கடாம்பி – இராமாநுஜாசார்ய ஸ்வாமிகள்
திருவடி சம்பந்தியும், எதிராஜதாஸரென்னும் தாஸ்ய நாமியுமாகிய
ப்ரபந்ந வித்வான் கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய
பிரபந்தத் திரட்டு

இஃது -- ம-ள-ள- ஸ்ரீ அ- இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்ந வித்வான் - காஞ்சீபுரம், ஸ்ரீமாந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு திருமணம் - செல்வகேசவராய முதலியார் M.A. அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராயநாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
Registered copyright.
----

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
திருநின்றவூர் என்ணைப் பெற்றதாயார் மாலை

காப்பு.

நனையீன்ற நாண்மலர்க்கா நாப்பணுறைநின்றை
யெனையீன்ற தாயி னிணையில் - கனையீன்ற
நூபுரத்தாண்மீதுகவி நோன்றொடைசாத்தக்குருகை
மாபுரத்தான்காப்பன் மகிழ்ந்து.

நூல்.

திங்கடினகரனன்ன சங்காழிதிகழ்திருக்கைப்
பங்கயநோக்கெம்பிரான் பத்தராவிப்பரமன்மகிழ்
பங்கயையேயென்பவப்பிணிபாறப்பரிந்தபய
அங்கைகவிநின்றவூர்வாழெனைப்பெற்றவம்மனையே.         (1)

அமுதவுணவினரேத்தவமுதவளக்கர்வந்தாய்
அமுதமொழிதொடுத்தன்பிற்பழிச்சுமடியவர்கட்
கமுதமுதவுந்திருவேயடியன்கணன்புவைத்தாள்
அமுதகிரணமுகத்தாயெனைப்பெற்றவம்மனையே.         (2)

பொருட்கண்ணும் பூவையர்கண்ணும்புவிக்கணும் பொங்கவித்தை
யிருட்கண்ணிரீ இநின்னடியாரிணையடியென்றுமெண்ணுந்
தெருட்கண்ணுதவியென்செஞ்ஞான நன்னிலை திண்ணநண்ண
அருட்கண்புரிநின்றவூர்வாழெனைப்பெற்றவம்மனையே.         (3)

பிறந்தங்குமிங்கும் பெரிதலைப்புண்டுபெயர்த்துமுடல்
இறந்தங்குமிங்குமிடும்பையுற்றேனினியேனுநின்றன்
நிறந்தங்குதாணினைந்துய்யவோர் சூழ்ச்சிநினைத்தருள்வாய்
அறந்தங்குநின்றைப்பதிவாழெனைப்பெற்றவம்மனையே.         (4)

தீக்கால்புனல்விண்புவிசெய்செகத்தைச் செழுங்கருணை
நோக்காலளிக்குமளிக்கு நொதுமலர்நோக்கருட்கும்
வாக்காலொருவகைவாசிவகுக்கின் வண்வாரிதியும்
ஆக்காலறலுநிகராமெனைப்பெற்றவம்மனையே         (5)

அடுக்கலுறுமண்டகோடியுளார்ந்தவனைத்துயிர்க்கும்
இடுக்கண்செய்மாயையொரீ இக்காத்தளிக்கு நின்னின்னிசைக்கும்
எடுக்கும் பிறர் தம்மிசைக்குமுவமையிசைக்கின் முகட்
டடுக்கலணுநிகராகுமெனைப்பெற்றவம்மனையே.         (6)

கலைக்கும் புராணவகைக்குந்தலைமைக் கனமறையின்
றலைக்குமெட்டாநின்றகவார்குணகணச்சால்பினுக்கும்
மலைக்கு மற்றோர் மாட்சிமைக்குமுவமைவகுத்திடிற்குண்
டலைக்குங்கழிக்குநிகராமெனைப்பெற்றவம்மனையே.         (7)

காணிக்கருமட்கடம்போன்ற காயங்கழிந்திடுங்கான்
மாணிக்கச்செப்பின் வருந்திப் பியவுடன் மன்னிமறை
வாணிக்கணங்கொடுவாழ்த்தடியார் குழுமன்னவைப்பாய்
ஆணிக்கனகமுடியாயெனைப்பெற்றவம்மனையே.         (8)

கூரத்தினாலுயர்ந்தோனென்றெனைநின் கொழுநனென்றுங்
கோரத்தினாலுயரிச்சிறையிட்டனன்கூய்ப்புருட
காரத்தினாலெனைக்காத்தருள்வாய் நற்கனகமணி
ஆரத்தினாயின்னமுதேயெனைப்பெற்றவம்மனையே.         (9)

தன்புடையன் பிலனென்று சுதந்தரனாந்தலைவன்
என்புடையிச்சிறையிட்டனனென்றுமிவர்ந்தெழும்பேர்
இன்புடைவீட்டினையெய்தும்விரகொன்றிழைத்தருள்வாய்
அன்புடையார்க்கரணாவாயெனைப்பெற்றவம்மனையே.         (10)

ஓராவியற்கையொருமாயையானின்னுடையவன்செய்
தீராவியற்கைச் சிறுமியர் சிற்றின்பச்சேற்றையொரீஇத்
தூராவியற்கைச்சுடர்ச்சடரக்குழி தூர்த்துநின்பால்
ஆராவியற்கையவா நல்கெனைப்பெற்றவம்மனையே.         (11)

கவித்தையவேடனுங்காலன்றமருஞ்செய்கவ்வைதம்மாற்
றவித்தையவோவம்மவோவென்றரற்றுஞ் சமயமதிற்
புவித்தையலோடு நின்னன்பனு நீயும் புரிந்துவந்தென்
அவித்தையினாற்றலறுத்தாளெனைப்பெற்றவம்மனையே.         (12)

தீர்த்தப்பெருமைத்திருநின்றைவாழ்திருவேகொடிய
தூர்த்தப்படிறர் தொடர்பாற்றொடர்ந்ததுகளையெல்லாந்
தீர்த்தப்புறநின்றிருப்பதஞ்சேர்ந்துயத் திண்ணமெண்ணும்
ஆர்த்தப்பிரபன்னனாச்செயெனைப்பெற்றவம்மனையே.         (13)

மலக்கண்மகிழ்புழுமானநிரந்தரமம்மர்செய்யும்
நிலக்கண்ணிதமுநன்னீலக்கண்ணேரிழையார்நிதம்பப்
பிலக்கண்விரும்பும் பெரும்பேதைமையிற்பிறந்திறக்கும்
அலக்கண்டவிர்த்தலறமாமெனைப்பெற்றவம்மனையே.         (14)

பூத்திகழ் பொய்கை பொலிதிருநின்றைப்புரித்திருவே
ஆத்திகநாத்திகனாகியறத்தைவிட்டல்லவை செய்
தோத்திகழ்ந்தேனென்னுறு பிழைநீத்தென்றுமுள்ளத்துண்மை
யாத்திகனாக்கியருள்வாயெனைப்பெற்றவம்மனையே.         (15)

முலைப்பாலருந்தாமுதிர்ஞானமாமுனிமுன்னியருள்
கலைப்பாற்பொருளென்கருத்திற்பதித்தவன்காட்டுநெறி
நிலைப்பாலிருக்கநினைத்தருள்வாய்நின்றைநித்திலமே
அலைப்பாலுத்தியதேயெனைப்பெற்றவம்மனையே.         (16)

படியார்தொடர்பைப்பரீ இப்பரமானந்தப்பத்தி வெள்ளப்
படியார்படியிற்பயில்வித்தெனைநின்றன்பங்கயத்தாட்
தடியாரடியார்க்கடியாரடியார்தமக்கடியார்
அடியார்க்கடியவனாச்செயெனைப்பெற்றவம்மனையே.         (17)

ஆழ்வார்கடம் புகழாரியர் தஞ்சீரமைத்தமுத
வாழ்வாரநல்கிடும் வண்டமிழ்மாலைவகுத்துரைத்தென்
றாழ்வார்பிறவிதணப்பானருள் சன்மசாகரத்தில்
ஆழ்வார்தமக்கம்பியாவாயெனைப்பெற்றவம்மனையே.         (18)

மருங்கலநீர்வயல் சூழ்நின்றைமாமகளே வினையாஞ்
சிருங்கலந்தேய்க்கும்படைபவச்சிந்துவிற்சேர்ந்தெடுக்கும்
பெருங்கலநின்பெயர்பேசுமென்சென்னிப்பெருமகுட
அருங்கலநின்னடியாகுமெனைப்பெற்றவம்மனையே.         (19)

கார்க்கோலமாயவன் கண்மணியாநின்றைக்காரணிநின்
சீர்க்கோலங்கண்டு சிறக்காத சிந்தையன்றீய சமன்
போர்க்கோலங்கொண்டுபொருக்கெனவென்னுழைப்போதருங்கால்
ஆர்க்கோலமிட்டழைப்பேன் சொல்லெனைப்பெற்றவம்மனையே.         (20)

விதுரன்சுதன்மாவிழைகூனிமுன்னம்விமலனுக்கு
மதுரவடிசிலுமாலையுஞ்சாந்தும்வழங்கியபோற்
சதுரர்கள் வாழ்நின்றைத்தாக்கணங்கேநிற்குத்தண்பிறவி
யதுரனளிக்கவலனோவெனைப்பெற்றவம்மனையே.         (21)

முத்திநிலையை முகுந்தனைநின்னை மொழிமநுவைச்
சித்திசெய்தேசிகனைச்சீர்ச்சமந்தமஞ்சேர்க்கவல்ல
சத்தியவன்னதழைத்திடச்செய்தி தழங்கிடும்பால்
அத்திபெறுநந்தனையேயெனைப்பெற்றவம்மனையே.         (22)

வலைப்படுமீனினிவ்வையத்து மாயைமயக்கவென்று
நிலைப்படுநெஞ்சமிலாதுழல்வேனுக்குநேயநின்பாற்
றலைப்படும்வண்ணந்தயை செய்துகாத்திதரையுடுத்த
அலைப்படுநித்தில மன்னாயெனைப்பெற்றவம்மனையே.         (23)

தாதேயுமிச்சடந்தள்ளியிலிங்கத்தனுவுடனே
மீதேயமையர்ச்சிராதிவழியினை மேவிடுங்காற்
பாதேயநின் பெயர் பாடல் பரிக்கும் பரம்பொருணீ
ஆதேய நானெனை யாள்வாயெனைப்பெற்றவம்மனையே.         (24)

கோணைப்படுநின்பொருள்கொளனீகுயிக்கொண்டுகொள்ளும்
ஊணைத்தடுத்தலுயர்குருமந்திரமுள்ளுறைதே
ஏணைப்பரிபவஞ்செய்தலிவற்றையிரித்தெனைநின்
ஆணைப்படியொழுகச்செய்யெனைப்பெற்றவம்மனையே.         (25)

சூரியையிந்தத்துவக்கெனைவிட்டுத்தொலை துணையுஞ்
சீரியையாரியன் செய்ந்நன்றியென்றுமென்சிந்தை தன்னிற்
கூரியையன்பிற்குறித்துய்ய நீகுறிக்கொண்டருள்வாய்
ஆரியையேநின்றவூர்வாழெனைப்பெற்றவம்மனையே.         (26)

நினக்குமெனக்குமுபகாரகன் குருநேருதவி
தனக்குத்தகுதியதாகுங்கைம்மாறு சமைக்கவெணின்
எனக்குப்பலருந்தகுபொருளெங்கணுமில்லையென்ப
அனக்குமரன்றொழுந்தாளாயெனைப்பெற்றவம்மனையே.         (27)

சீர்பூத்தநின்றன்கல்யாணகுணத்தின் சிறப்பினையும்
பார்பூத்தநின்னருட்பத்தர்கள் பாவனப்பண்பினையும்
நார்பூத்தவென்னெஞ்சினாட்டியருளுதிநற்பழனத்
தார்பூத்தநின்றைப்பதிவாழெனைப்பெற்றவம்மனையே.         (28)

தெருடிகழ்வண்ணஞ் சிருட்டி தொடங்கித் தினஞ்செயுநின்
கிருடிபரம்பரைகேழ்பெறவின்னேகிளத்திடுமைம்
பொருடிரிபுந்தியென்புந்தியினொள்ளிதிற்போந்துதிக்க
அருடி திருநின்றையூர்வாலெனைப்பெற்றவம்மனையே.         (29)

ஐந்துவிதமாமரும்பாதகத்தையுமாற்றுவிக்கும்
துபுலனுமவிக்கறியேனறிதற்கரிய
ஐந்துபொருள்களுமன்னவையொவ்வொன்றினுமடங்கும்
ஐந்துபகுப்புமறிவியெனைப்பெற்றவம்மனையே.         (30)

பாவப்பரப்புப்பெரும்புறவாழிப்பரப்படக்குங்
கோவத்துருப்பங்கொடு முற்கக்கோரங்குளிர்த்திவிடும்
ஓவத்தமில்லனவன்னவை நீக்கியுணர்வுதந்தாள்
ஆவத்தரும்பொருள்வைப்பேயெனைப்பெற்றவம்மனையே.         (31)

காலமெலாம்விழைச்செய்தினுமாயிரங்கண்ணன்றன்பேர்
சாலமெலாஞ்செயுந்தையலராசை தவிர்தலில்லை
ஞாலமெலாமிதை நச்சிநசிக்குநவிற்றுமிதற்
காலமெலா நல்லனவாமெனைப்பெற்றவம்மனையே.         (32)

அகற்றவொண்ணாவன்பமைந்திடுமன்னையரிசினத்தால்
அகற்றினுமன்னாளருணினைந்தேயழுமக்குழவி
இகத்திலெனும் பெரியோர்மொழிகேட்டிலையோவெனைநீ
அகற்றிவிடுதலறமன்றெனைப் பெற்றவம்மனையே.         (33)

விரதிகள்போற்றுந்திருநின்றை வாழ்கின்றவித்தகியே
இரதிநிகரில்லவளின்பமாதியிகச்சுகமுஞ்
சுரதிருவாதிச்சுகமுந்தவ்வென்றெற்குத்தோற்றும் வண்ணம்
அரதிபிறப்பதென்றோ சொல்லெனைப்பெற்றவம்மனையே.         (34)

வியர்த்து வினைவழியிவ்விளையாட்டு விபூதியிலெற்
பெயர்த்தும்பெயர்த்தும் பிறப்பிக்கினல்லபிராப்பியமா
உயர்த்துரை பூமியுறுவதென்றோவிவ்வுடலொழிகால்
அயர்த்தொழியாதருள் செய்வாயெனைப்பெற்றவம்மனையே         (35)

சேட்பட்ட தீவினைத்தெட்பாற்சிறுமியர் சிற்றின்பத்தே
கோட்பட்டசிந்தையனாயவரேவல்குயிற்றெனைநின்
றாட்பட்டபத்திமைத்தாளாண்மையோர் திருத்தாள்களுக் ே
ஆட்பட்டடிமைசெயச்செய்யெனைப்பெற்றவம்மனையே.         ( 36)

முத்தத்துவமுமுகுரப்பொருளென முற்றுமென்றன்
சித்தத்திரீஇச்சித்திச்சிந்தையனாயெனைச்செய்திடநீ
சித்துவக்கிற்றிருநாட்டுப்பேரின்பச்செல்வமென
தத்தத்தடைந்ததலவோவெனைப்பெற்றவம்மனையே.         (37)

போகம்பலவும் புராதன வீடும் புகுத்துங்கன்ம
யோகம்பயிலவுணர்வாதியில்லேனுரியனலேன்
சோகம் பலவுந்தருமிப்பிறவிதொலைவதெங்ஙன்
யாகம்பயினின்றவூர்வாலெனைப்பெற்றவம்மனையே.         (38)

எட்டங்கங்கூடியியன்ஞானயோகமிசைந்தியற்றல்
கட்டங்கடைப்பிடியில்லாவெனக்குநின்காமருதாள்
எட்டங்கமுநிலனேயவிறைஞ்சினனென்வினையை
அட்டங்கமுதமருள்வாயெனைப்பெற்றவம்மனையே.         (39)

இகழ்தல் செயாதுனையெண்ணுமவரிதயாம்புயத்திற்
றிகழ்தல் செயுநின்றிருவடித்தாமரையைத் தினமும்
புகழ்தல்செய்வித்தென்றன் பொல்லா வினையின் புகர்க்கிழங்கை
யகழ்தல் செய்தாளலறமாமெனைப்பெற்றவம்மனையே.         (40)

தாயுந்தகப்பனுஞ் சந்ததியுந்தமரும்பெருமை
வாயுங்குரவனுந்தெய்வமுமற்றும்வளனுநன்மை
யேயும்பதங்களுமீறினல் வீட்டின்புமென்றுமெனக்
காயும்பொழுதுன்னடியாமெனைப்பெற்றவம்மனையே.         (41)

மடியா நின்மாயை மயக்கமெனுமங்குன் மாற்றுவதும்
வடியாப்பவக்கடல் வற்றிடச்செய்வதும்வாரவித்தை
விடியாவிரவைவிடிந்திடச்செய்வதுமெய்ம்மையெற்குன்
னடியாகுமாதித்தியனேயெனைப்பெற்றவம்மனையே.         (42)

அவத்தைக்கொடுத்தடையாவரும்பேற்றையளிக்கவல்ல
தவத்தைக்கெடுத்துச்சதாநந்தவாழ்வைத் தடுத்திருள்சேர்
பவத்தைக்கொடுத்தெனைப் பாழாக்குமாயை பயிற்றிநிற்கும்
அவத்தைக்கொருமுடிவின்றோவெனைப்பெற்றவம்மனையே.         (43)

பொறுக்கவொண்ணாப்பெரும்பொல்லாப்பிழைப்பொறைப்பொக்கணத்தன்
குறுக்கவொண்ணாக்குமார்க் வஞ்ஞானத்தின் கொட்டகத்தன்
இறுக்கவொண்ணாதவிருசெருக்கேனென்னிருவினையும்
அறுக்கவொண்ணாகவறுத்தாளெனைப்பெற்றவம்மனையே.         (44)

வறிஞர்க்குச்செல்வம்பசியர்க்குண்வல் சிவறந்திடுநாச்
செறிஞர்க்குத் தீம்புனனோயோர்க்கதகந்தெறும்படையால்
எறிஞர்க்கிசைந்திடுமீரிரண்டோடதியேதமிலா
அறிஞர்க்குநல்லமுதாவாயெனைப்பெற்றவம்மனையே.         (45)

என்னையுடம்பையினத்தைக்குடும்பியையெண்ணயற்றேத்
தன்னைவயிணவர்தம்மையெனக்கருள்சற்குருவை
நின்னையெம்மானை நினைத்திருக்கும்வண்ணநேர்ந்தருள்வாய்
அன்னையருக்கன்னையாயெனைப்பெற்றவம்மனையே.         (46)

வேதமிருதிமுதனூலில் வீறிவிளங்குலக
நாதனுறுபொருளாகிநம்மாரியர் நற்றனமாய்
ஏதமறுசரணாகதியின் பொருளீரைந்தையும்
ஆதமுறவெற்கருள்வாயெனைப்பெற்றவம்மனையே.         (47)

சோதரர்புத்திரர் சொல்லன்னைதந்தையர் தொல்லையயன்
ஓதரனாதியரோவுறுவற்பொழுதோம்பல் செய்யார்
காதரநீக்கிக்கை சோராதடியரைக்காத்தளிக்க
ஆதரங்கொள்பவணீயேயெனைப்பெற்றவம்மனையே.         (48)

குரவர்குலநின் குலங்கூடிநின்றுகுரவர்புகழ்
பரவியென் குற்றம்பகர்ந்து குரவர்பரம்பரை மந்
திரமணிநன்கு செவித்துய்யச்செய்திசெய்யாமறையின்
அரவமறாநின்றவூர்வாழெனைப்பெற்றவம்மனையே.         (49)

ஆதிக்குரவருரையுமொழுக்கமுமாய்ந்துகொண்டு
வாதிக்குமற்றையர்வார்த்தையும் வாகையும் வாய்ந்தொருவி
நீதிக்குரவன் பணிநின்பணி செய்துநிற்கவருள்
ஆதிக்கமலத்தணங்கேயெனைப்பெற்றவம்மனையே.         (50)

அருச்சித்தசித்தொடுநின்னிலை நன்னரறிந்தவித்தை
வருச்சித்துநாளும்வளருமொளிமயமாய்வயங்குன்
னுருச்சித்தம்வைத்தெண்வகை மலர்கொண்டு வட்டாதவன் பின்
அருச்சித்து நிற்கவருள்வாயெனைப்பெற்றவம்மனையே.         (51)

எண்ணிக்குரம்பையையேணுறச்செய்யவிழிபொருளை
நண்ணிச்சுவைத்தவென்னாவினைநின்னருணாரமதான்
மண்ணிப்பழமையைமாற்றிமறப்பித்துன் மாண்பெயரே மாம்
அண்ணிக்குமாறருள்செய்வாயெனைப்பெற்றவம்மனையே.         (52)

பாகாரடையுடனிற்கு நிவேதித்துப்பாவனமாம்
ஆகார நீருண்டுன்னட்டாக்கரத்தினடைவறிந்து
வாகாரதன்முப்பதமுமுறையேவகுத்துரைக்கும்
ஆகார மூன்றுமளித்தாளெனைப்பெற்றவம்மனையே.         (53)

ஓங்காரணமுரைப்போர்தவர்வாழ்நின்றையுத்தமியே
தூங்காரவாரத்தொடுகடல்போனின்று தொன்றுதொட்டு
வீங்காரஞர்செய்பிறவிவித்தென்ன விளம்புமிரண்
டாங்காரமுமறுத்தாள்வாயெனைப்பெற்றவம்மனையே.         (54)

மாய்ந்து பிறந்துவருந்து மண்ணோர்க்குற்றவல்வினையைக்
காய்ந்து கழறரநின்றைப்பதி வந்தகற்பகமே
வாய்ந்துவரம்பின்றியெங்கும் வழங்குநின்வான்புகழை
ஆய்ந்துசொலவல்லவராரெனைப்பெற்றவம்மனையே.         (55)

கழலைக்குயமுடைக்காந்தையர்நெஞ்சங்கரையவுரை
மழலைச்சொற்கா முற்றுமாழாந்தவல்வினையேன்பிறவி
நிழலைத்துமித்தென்று நீடுமுத்தாபநெடுவடவை
அழலைத்தணித்தெனையாள்வாயெனைப்பெற்ற வம்மனையே.         (56)

விருப்பங்கொள்பஞ்சாக்கினிவித்தையின்படி விண்ணொருவி
உருப்பக்கதிருறையுண்கூழ்புருடர்பின் னொண்டொடியார்
கருப்பத்தில்வந்துகவற்சியுறச்செய்கடுவினையா ம்
அருப்பத்தைவெட்டியருள்வாயெனைப்பெற்ற வம்மனையே.         (57)

உவாவின்மதியொத்தவொண்முகத்தாய்நின்றவூரகத்தாய்
தவாவின்மை செல்வந்தழைக்கினுந்துன்பின் பத்தன்மையுற்றுச்
சுவாவின்படித்துப்பிறுச்சப்பொருள்களைத் துய்க்கவெண்ணும்
அவாவின்மைநல்கியருள்வாயெனைப்பெற்றவம்மனையே.         (58)

மூவாவென் றூழின்மிளிர்மணிமோலிமுடிகவித்தாய்
ஒவாவென்னூழ்வினையோவும்படி நினக்கோலமிட்டால்
நீவாவென்றன்பினெனைக்கூயென்காரியநீர்மையுடன்
ஆவாவென்றாராய்ந்தருள்வாயெனைப்பெற்றவம்மனையே.         (59)

மருளார்ந்துகன்மரம்போன்றோவலதுமனது நின்பாற்
றெருளார்ந்துதானிந்தத்தேகம்விடுமோதெரியகிலேன்
பொருளாகவெண்ணிப்புகல் புகுந்தேனென்புகரையெண்ணி
அருளாதொழிதலறமன்றெனைப் பெற்றவம்மனையே.         (60)

பாவத்தின்மிக்காய்படர்கென்றியமபடர்கயிற்றாற்
கோவத்தின் வீக்கிக்கொடுபோகுங்காலங்குறுகுமுன்னர்
மாவத்திவண்ணவெம்மானுடனென்முன்னர்வந்து நின்றென்
ஆவத்தைத் தீர்த்தருள் செய்வாயெனைப்பெற்றவம்மனையே.         (61)

பந்தோபயோதரம்பாலோமொழிமுகம்பான்மதியோ
தந்தோவிடைதரளப்பந்தியோதந்தந்தாங்குகளன்
நந்தோவெனநைந்து நாரியர்ப்பேணியென்னாள்களெலாம்
அந்தோ வழித்தேனருள்வாயெனைப்பெற்றவம்மனையே.         (62)

செந்தாமரைமலர்ச்செந்திருவேநின்றைச்செய்யவளே
சிந்தாமணிதினஞ்சிந்தாகுலமுறுந்தீனசன
மந்தாரமென்றுநின்மாமலர்த்தாளின்மறைபுகுந்தேன்
அந்தாமவாழ்வையளித்தாளெனைப்பெற்றவம்மனையே.         (63)

சுரும்பேய்மலர்ப்பொழில்சூழ்நின்றைவாழுஞ்சுகாவகையே
துரும்பேயெனைப்பொருளாக்கிநிற்பேணுஞ் சுமதி தந்தாள்
கரும்பேகனிந்தகனியே கற்கண்டேகடிகமழும்
அரும்பேயலரேயமுதேயெனைப்பெற்றவம்மனையே.         (64)

நாடேனெந்நாளுநின்னற்றாணளினநலங்கனிந்து
கூடேனின்றொண்டர்தங்கூட்டங்குறுமயிர்க்குச்செறிந்து
பாடேன்பளகறுபல்லாண்டுபத்திப்பரவசனாய்
ஆடேனுய்வெங்ஙனருள்வாயெனைப்பெற்றவம்மனையே.         (65)

தாயத்தமருந்தநயருந்தாரமுஞ்சார்பினரு
நேயத்தமைந்து நிலன்வீழ்ந்து நெஞ்சநெகிழ்ந்தரற்றக்
காயத்தை வீழ்த்தியெனைக்காலதூதர்கவர்ந்திடுங்கால்
ஆயத்தமாய்நின்றருள்வாயெனைப்பெற்றவம்மனையே.         (66)

தொட்டகநட்டவிருவர்தஞ் சோணிதசுக்கிலத்தாஞ்
சட்டகந்தாழ்பொருளென்பனயாவுஞ் சமைத்து வைத்த
பெட்டகம்பேர்காற்பிறந்தலைக்கும் பிணிபில்குபுரி
அட்டகக்கூடறுத்தாள்வாயெனைப்பெற்றவம்மனையே.         (67)

அஞ்சுபொறிகளுமவ்வவற்றின் செயலாற்றகிலா
தெஞ்சியெவற்றையுமெண்ணுமுணர்வுமிறந்துகபம்
விஞ்சிவிளம்பவொண்ணா விழுமத்தை விளைத்திடுங்கால்
அஞ்சலெனவந்தருள்வாயெனைப்பெற்றவம்மனையே.         (68)

நிறமானமானுட தேகிகணீதிநெறிதனக்குப்
புறமாநெறிபுகல்பொல்லாது சன்மத்தைப்போக்கவல்ல
திறமானஞானநெறிநிற்றறெள்ளிதிற்றெள்ளியநல்
அறமாமதனையருள்வாயெனைப்பெற்றவம்மனையே.         (69)

போதன்முதலாப்பிபீலிகையீறாம்பொருளனைத்தும்
நீதன்மவாணையினாண்டுபைங்கூழ்க்குநன்னீர் நிலைபோற்
காதன்மையினாலவற்றிற்கரந்துறைகாரணியே
ஆதன்மனத்துறைந்தாள் வாயெனைப்பெற்றவம்மனையே.         (70)

உலகிலுயிர்களை வீட்டை காறுமுன்னூழ்முறையே
பலகிலக்கூட்டிற்படைத்துப்புரந்து பரிகரித்து
விலகலிலாது சுழற்றிடுநின் விளையாடல்களோ
அலகில்லனவென்கதியென்னெனைப்பெற்றவம்மனையே.         (71)

விழித்தங்கிக்காண்பொருள்காணாப்பொருள்கள் விளங்குநின
துழித்தங்குவனவென்றுண்மையுணர்த்தியுளத்தை மற்றோர்
வழித்தங்கவைக்காதெனைக்காத்தியாவும் வகுத்தளித்தே
அழித்தங்குக்குமமலாயெனைப்பெற்றவம்மனையே.         (72)

வீறுபெறும் விழவோங்குந்திருநின்றைமேயவளே
ஊறுதருமென்னுருகவுறுவலொழித்தடையாப்
பேறுபெறும்படி செய்தியெவர்கட்கும்பேசரிய
ஆறுகுணங்களுமான்றோயெனைப்பெற்றவம்மனையே.         (73)

சத்தைகொணீராற்சரீரமுஞ்சத்தியத்தான்மனமு
நித்தியந்தூய்மையுறல்போல நின்றன்னிலையுணர்த்தும்
வித்தையினாலெனை மேத்தியஞ்செய்து நல்வீடருள்வாய்
அத்தையுலகினுக்காவாயெனைப்பெற்றவம்மனையே.         (74)

மன்னிலை மாடங்களோங்குந்திருநின்றைமாமகளே
முன்னிலைப்போகம்புசிப்பித்துப்போதம் பொலிசுகமாம்
என்னிலை நின்றுமிரீஇயிருந்துன்பமியற்றவித்தை
அன்னிலை நீக்கியருள்வாயெனைப்பெற்றவம்மனையே.         (75)

முடி நிழனெற்றியணிநிழல் குண்டலமூசுநிழல்
தொடிநிழலங்கத நீழல்முத்தாரத்தொகுதிநிழல்
கடி நிழல்சன்மவிடாயைத் தணிக்காமரை புரைநின்
அடிநிழலேயது செய்யுமெனைப்பெற்றவம்மனையே.         (76)

படியாக்கருணைநல்வாரிதியாநின்றைவான விநின்
அடியார்க்களித்திடல்யாகாக்கினிபெய்யவியது போன்
முடியாதொளிருமம்மாட்சியர்ப்பேணுமதியளித்துன்
அடியா நிழல்வைத்தளித்தியெனைப்பெற்றவம்மனையே         (77)

புவியார்புகழ்த்திருநின்றைப்பொலப்பதிப்பூமகளே
கவியார்நின்கண்ணென்றுங்காதலிலாக்கயவர்க்களித்தல்
சவியார்தழல் சற்றுஞ் சாராததாம் வெறுஞ்சாம்பரிற்பெய்
அவியாகுமன்னது நீத்தாளெனைப்பெற்றவம்மனையே.         (78)

வாக்குந்த நுவுமனமுமறைகண்மறமெனவே
நீக்குநெறியினிகழாதுநீத்தென்று நேய நின்பாற்
றேக்கும்படிச்செய்தென்றீமைபொறுத்தெனைச்செய்யவனா
ஆக்குங்கடமைநினதேயெனைப்பெற்றவம்மனையே.         (79)

சத்துவமாக்குணச்சால் பேயென்றானந்தழைத்துநிற்க
நத்துவனேனெனினானெனதென்னுநவையறுத்தென்
சொத்துவமென்றுந் துலங்கச் செயுங்கிஞ் சுகச்சுமம்போல்
அத்துவடிவமமைந்தாயெனைப்பெற்றவம்மனையே.         (80)

திருவேசரணந்தெருளே சரணஞ்சிறக்கும்பஞ்ச
தருவே சரணந்தவமேசரணஞ்சகமயமாம்
உருவே சரணமொளியே சரணமுணர்வரிய
அருவேசரணஞ்சரணமெனைப்பெற்றவம்மனையே.         (81)

மாவே சரணமறையே சரணமறைவிளக்குங்
கோவேசரணங்குணமேசரணங்குறைபொறுக்குங்
கூவேசரணமிக்கூவோர்விழைந்தகொடுக்கவல்ல
ஆவேசரணஞ்சரணமெனைப்பெற்றவம்மனையே.         (82)

சொல்லாதிசொற்பொருளாதியுலகினிற்றோன்றிநிற்கும்
புல்லாதியான பொருளாதியன்னபுலப்படுத்தும்
எல்லாதியெல்லினிலங்கொளியாதியிருடழைக்கும்
அல்லாதியாவையுமாதியெனைப்பெற்றவம்மனையே.         (83)

ஆதியளவற்றவண்டமுமண்டத்தவிர்விளக்கும்
ஆதிபதினான்குலகுமுலகத்தமைபொருளும்
ஆதிமறையுமிருகியுநூல்களுமாதியென்றும்
ஆதிநடுமுடிவில்லாயெனைப்பெற்றவம்மனையே.         (84)

அடைக்கலமையென்னமித்திரனென்னையடர்த்திடுங்கால்
அடைக்கலமந்தகன்வந்தெனைப் பாசத்தசைத்திடுங்கால்
அடைக்கலம்யானிந்தயாக்கையை நீக்கவமைந்திடுங்கால்
அடைக்கலநின்னடிக்கென்றுமெனைப்பெற்றவம்மனையே.         (85)

அடைக்கலமம்பகமோரிரண்டுஞ்சவியற்றிடுங்கால்
அடைக்கலங்காது கடம்புலன்கொள்ளாதடைபடுங்கால்
அடைக்கலங்கன்மரம்போன்றென்றன் மேதையழிந்திடுங்கால்
அடைக்கலநின்னடிக்கென்றுமெனைப்பெற்றவம்மனையே.         (86)

திறனொன்றியநின்றிருவடி சிந்தனைசெய்தலன்றிப்
புறனொன்றும் புந்தி புரிந்திலன் பூசல்பொரமறலி
மறனொன்றி மண்டிடுங்காலெனைக்கைவிடன்மாட்சிமைத்தன்
றயனன்றறனன்றறனன் றெனைப்பெற்றவம்மனையே.         (87)

நயவாசநாண்மலர்க்காவுகள் சூழ்நின்றை நாயகியே!
சயவாசகஞ் சொல்லிச்சண்டன்றமரென்னைச்சார்ந்தொறுக்கும்
பயவாசரத்திலென்பக்கத்துநிற்றியென்பாவப்பஞ்சிற் க்கள்
கயவாகனன்பொறியாவாயெனைப்பெற்றவம்மனையே.         (88)

நளிவிசுவந்தொழுநற்றிருநின்றைநளினமின்னே
ஒளிவிசுவம்பரனாநந்தலைவனையுட்படுத்தித்
தெளிவிசும்பாந்திருநாட்டடியார்குழுச்சேர்ந்திடவைத்
தளிவிசுவாசமகங்கொளெனைப்பெற்றவம்மனையே.         (89)

கோடியருக்கரொளிக்கூங்கொளிரும் வைகுந்தநகர்
நாடி யருத்தியினாளுநின்னாமநவின்றுநின்சீர்
பாடியருச்சனைபண்ணுமென்னெண்ணம்பலிக்கவருள்
ஆடியருக்குங்கவுளாயெனைப்பெற்றவம்மனையே.         (90)

கவசந்தனியறங்கொண்டாய்திருநின்றைக்கற்பகமே
துவசந்தங்கைககொடுசூர்க்காலதூதர்கடொட்டிழுக்குந்
திவசந்தனிற்சிந்தையுட்சிவட்கித்திடுக்கிட்டயர்க்கும்
அவசந்தனில்வந்தருள்வாயெனைப்பெற்றவம்மனையே.         (91)

கலர்மகவாகப்பிறந்ததமையுமிக்காசினிக்கட்
பலர்மகவாகவினும்பிறவாமற்பணித்தியுயர்
குலர்மகமாற்றியிறைஞ்சவவர்க்கருள்கூர்ந்தளிக்கும்
அலர்மகளே நின்றவூர்வாழெனைப்பெற்றவம்மனையே.         (92)

பெற்றார்க்குங் கூடப்பிறந்தார்க்கு நட்புற்ற பெற்றியர்க்கும்
உற்றார்க்குஞானத்துயர்ந்தார்க்குமிவ்வுலகத்துநசை
செற்றார்க்குந் தீயவனின்றன்றிருவடிசேர்தலெஙஙன்
அற்றார்க்கருந்துணையாவாயெனைப்பெற்றவம்மனையே,         (93)

கொங்காரமாப்பொழில் சூழ்திருநின்றைக்குலக்குயிலே
செங்காந்தளங்கைச்சிகியேயென்றீவினை தீர்த்தருள்வாய்
சங்காரகாலத்து தரத்தில்யாவுந்தனித்தொடுங்க
அங்காக்குங்காந்தற்கணியேயெனைப்பெற்றவம்மனையே.         (94)

நல்வழி நல்லவர் நாட்டியிருக்கநடத்தலின்றிப்
புல்வழிமுள்வழி பொல்லாப்புதர் வழிபோகவொண்ணாக்
கல்வழி செல்லுங்கயவரினின் வழிக்காப்பைவிடுத்
தல்வழி செல்வேனரணென்னெனைப்பெற்றவம்மனையே.         (95)

தெருள்வாய்ந்தவேதச்சிரமானுங்கீதைச்சிரமுரைக்கும்
பொருள்வாய்ந்கென்புந்தியிற் பொங்கறம்யாவும் பொருக்கெனவிட்
டுருள்வாய்ந்துதித்த வொருவனையே சரணுற்று நிற்க
அருள்வாய்திருநின்றையூர்வாழெனைப்பெற்றவம்மனையே.         (96)

மனக்குற்றம்வாக்குமெய்க்குற்றந்தமியன்வகுக்குமிப்பா
வினக்குற்றநின்னையடியரையெள்ளியிகழ்ந்த குற்றம்
சினக்குற்றஞ்சிற்றின்பக்குற்றந்தினமுநிற் சேவித்துண்ணா
அனக்குற்றம்யாவும் பொறுத்தாளெனைப்பெற்றவம்மனையே.         (97)

சாவவொட்டாதமருந்தனையாய்மும்மைத்தாவமதால்
வேவவொட்டாமல் விலக்கிவிடயவிருப்பின் மனம்
மேவவொட்டாமற்றடுத்தெனையாள் விறல்வேள்வெ வரிநார்
ஆவவொட்டாமுழந்தாளாயெனைப்பெற்றவம்மனையே.         (98)

தராமுகத்தோர்விண்முகத்தோர்தொழுநின்றைத்தாக்கணங்கே
ராமுகமன்ன வியமன்படரையிரித்தெனையாள்
பராமுகமின்றி வியாதன்செய்சூத்திரபாடியஞ்செய் யி
அராமுககோக்கியெனினுமெனைப்பெற்றவம்மனையே.         (99)

அதிபதிதன்னளிக்கப்படுவோலனாயினுநன்
திபதிசூழ்புவிநன்றுறநண்ணியஞானநிதி
எதிபதிசெய்யஞ்சலிநோக்கியேனுமிலங்குநின்றைக்
கதிபதியேயமுதந்தாவெனைப்பெற்றவம்மனையே.         (100)

வாழ்கதிருநின்றைவாழியவுற்பலமானவள்ளல்
வாழ்கவெனைப்பெற்றதாயாம்வனசமலர்மனையாள்
வாழ்கவடமொழிதென்மொழியாகியமாமறைகள்
வாழ்கபதின்மர்கள் வாழ்கநம்மாரியவர்க்கநன்றே.         (101)

திருநின்றைவாழுமெனைப்பெற்றவன்னைதன் சேவடி
மேற் நின்று நீங்கியுய்வானொரு நூறுகவித்தொடையல்
கருநின்றகாககச்சிவாழுமிராமாநுசத்தலைவன்
மருநின்றதாள் சேரெதிராசதாசன் வனைந்தனனே.         (102)

என்னைப்பெற்றதாயார் மாலை முற்றிற்று.
-----------

This file was last updated on 16 Jan. 2025
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)