பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 11
திருவெவ்வுளூர் கனகவல்லித்தாயார் மாலை
tiruvevuLUr kanakavallittAyAr mAlai
(paLLikoNTAn piLLai pirapant tiraTTu - part 11)
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext file has been prepared in a two-step proces: OCR of the PDF file followed by careful proof-reading, correction of the OCR output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 11
திருவெவ்வுளூர் கனகவல்லித்தாயார் மாலை.
Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய
ஸ்ரீமாந் - கச்சிக்கடாம்பி – இராமாநுஜாசார்ய ஸ்வாமிகள்
திருவடி சம்பந்தியும், எதிராஜதாஸரென்னும் தாஸ்ய நாமியுமாகிய
ப்ரபந்ந வித்வான் கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய
பிரபந்தத் திரட்டு
இஃது -- ம-ள-ள- ஸ்ரீ அ- இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்ந வித்வான் - காஞ்சீபுரம், ஸ்ரீமாந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு திருமணம் - செல்வகேசவராய முதலியார் M.A. அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராயநாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
Registered copyright.
----
திருவெவ்வுளூர் கனகவல்லித்தாயார் மாவிலை.
காப்பு.
கனகவகிவல்லி கடுக்கும்வினை தீர்
அனகவெவ்வுள்வாழு மமலை - கனகவல்லித்
தாயடியிற்பாமாலை சாத்தவுடைய நங்கைச்
சேயடியைச்சிந்தி நெஞ்சே தேர்ந்து.
நூல்
கடல்வண்ணன் காமருமார்பமுறையங்கனை மணியைக்
கடல்வந்தகாரிகையாருடுக்கூட்டக்கலாநிதியைக்
கடல்வண்ணமானுங்கனகவல்லிக்கருணாலயையை
கடல்வண்ணக்காதலிற்கண்ணுநெஞ்சே நற்கதிபெறவே. (1)
கனகவல்லிப்புண்ணியவினைகாழ்த்துக்கனத்தகருங்
கனகவல்லிப்பாதகவினை தீர்த்துக்கருத்துள்வைத்துக்
கனகவல்லிக்கஞ்ச வீட்டுந்திருவெவ்வுட்கண்ணுமுறை
கனகவல்லித்தன்னைகாப்பணெஞ்சேகொள்ளல் காதரமே. (2)
எஞ்சிய பொன்புடமாதியின்மாற்றுயர்ந்தென்ன வென்றும்
விஞ்சியநின்னடியார் தங்குழுவில்விரவச்செய்தென்
துஞ்சியஞானந் துலங்கச்செய்திப்பவத்துக்கவலைக்
கஞ்சியவென்னைக்கனகவல்லித்தல்லியாதரியே. (3)
சந்திரன் வேனிலிருதுவின் வெப்பந்தணித்தலென
மந்திரநின்னடியார்க்கடியாரருண்மன்னியுய்யுந்
தந்திரஞ்செய்தென்முத்தாபந்தணியச்சமைத்தருள்வாய்
இந்திரையெவ்வுட்கனகவல்லித்தன்னையென்பவளே. (4)
இந்தனத்தோங்குமெரியென நல்லுணர்வின்மையெனும்
பந்தனத்தோங்குமென்பாவமீரீ இநின்பணியருள்வாய்
சந்தனத்தோங்குந்தடமுலைத்தாமரைத்தாக்கணங்கே
நந்தனத்தோங்குந்திருவெவ்வுட்பொற்கொடி நாயகியே. (5)
துட்டரிணக்கந்தொகையில் பிறவித்துயர்க்குவித்தாம்
சிட்டரிணக்கநற்சித்திக்குவித்தெனச் செப்புவரால்
பட்டர்கள்போற்றுங்கனகவல்லித்தல்லிபத்தசனர்க்
கிட்டர்கள் சங்கத்தடியேனிணங்கிடவெண்ணுதியே. (6)
அபயம்பெறவெண்ணி நின்னம்புயப் பூவடியையண்மி
அபயம் புகுந்தவடியேன் கண்முன்னர்வந்தஞ்சலென்றெற்
கபயந்திருவரதந்தருமாய்மலரத்தங்களாம்
உபயமுநல்குதியொண்பொற்கொடியன்னையுத்துங்கையே. (7)
அலைதீர்ந்தவாழியெனவடியேனுள்ளமார்ந்த வித்தை
நிலை தீர்ந்து நின்னடிநேயத்தினின்று நெடும்பிறவி
வலை தீர்ந்துவாகைக்கனகவல்லித்தன்னைவானவியே
தொலைதீர்ந்தவைகுந்தந்துன்னிச்சுகிக்கவொர்சூழ்ச்சிசொல்லே. (8)
அசத்தாம்பொறிகளலைக்கவலைப்புண்டலந்தவற்றின்
வசத்தாயனேகபவமெடுத்துக்கும் பிவாச முறீ இ
நிசத்தாபமெய்திய நீசனிச்சன்மத்தினின்னருளின்
வசத்தாற்கனகவல்லித்தல்லிநின்னடிவந்தனனே. (9)
புகுந்திடுஞ்சன்மந்தொறு நானெனதெனும்பொய்ச்செருக்கின்
மிகுந்தவனாகிவிருப்புவெறுப்பினை மேவியிரு ள்
வகுந்துவினின்றுமயங்குமென்மையலை மாய்த்திட நீ
தகுந்தவளென்றுனைச்சார்ந்தேன்கனகவல்லித்தன்னையே. (10)
மோகத்தை மூர்க்கத்தை மூட்டும் வழியின் முயன்மனது
சோகத்தையின் பந்தனைச் சமமாவெண்ணுந் தூயபரி
பாகத்தைப்பற்றிநின்பாதத்திற்பத்திமைபண்ணியுய்யும்
யோகத்தைத்தந்தாள் கனகவல்லித்தன்னையுத்தமியே. (11)
நல்லவர் நண்ணலரில்லவரொன்றினயப்புவெறுப்
பில்லவரிந்தியமோடிதயத்தையுமேன்று வெல்ல
வல்லவராநின்னடியார்குழாத்தெனைவைத்திமறைச்
சொல்லவரேத்துங்கனகவல்லித்தன்னைச் சுந்தரியே. (12)
இயற்கையடையடையிவ்வேழையின் மீதிரக்கமெய்திப்
புயற்கைக்கொடைச்செல்வர் பொங்குந்திருவெவ்வுட் பொற்கொடியே
செயற்கைநின் மாயையிற் சேர்ந்த திரிபுகடீர்த்தினியென்
இயற்கைக்குணங்களிலங்க விழைத்தருளின்னருளே. (13)
எல்லாவருத்தியும்விட்டநின்னன் பரிணககந்தந்தென்
எல்லாவழுவுமிரித்துன்னிசையின்னமுதையொல்லும்
எல்லாவழியினுமுண்டுய்யும் வண்ணமினி தருள்வாய்
எல்லாவறமும் வளரெவ்வுட்பொற்கொடியென்னம்மையே. (14)
மோகாந்தராக்குமுளையில்லவண்முதன்முற்றுமொரிஇ
ஏகாந்தபத்தியிழைப்போரிடர்களிரித்திடுநின் தையு ந்
மாகாந்தனுக்கொருமாற்றம்வகுத்தெனைவைகுந்தமாம்
மாகாந்தந்தன்னிற்கனகவல்லித்தல்லிவைத்தருளே. (15)
பகுதியின்பான்மையைப்பாற்றிடுந்தத்துவப்பண்பினையும்
விகுதிசெயுமகங்காரத்தை வீட்டும் விஞ்ஞானத்ை
தகுதியிலேனெனினுந்தந்து மற்றொருதையல் பண்டி
புகுதிசெயாதருள்ளாயெவ்வுள்வாழ்கின்ற பொற்கொடியே (16)
சீர்பூத்தவெவ்வுட்கனகவல்லித்தல்லிச்சிற்பரையே
ஏர்பூத்தநினைபிதாநசங்கீர்த்தநவீட்டினரை
நார்பூத்தயோகந்தவமறையோதனத்திமுழுகற்
பேர்பூத்த புண்ணியஞ் செய்தவரென்பபெரியவரே. (17)
நின்னாமதேய நினைத்தலிற் கேட்ட லினிடுபவ
இன்னாமடியுமமுதாமதை நன்கிசைத்தலினால்
உன்னாமலினச்சண்டாளனும்யாகமுஞற்றுநனாம்
என்னாமறையோர்கனகவல்லித்தல்லியேத்துவரே. (18)
சன்மத்துயரத்தழலாற்புலனசைத்தாவமதான்
மன்மத்துயவுற்றவென்மனவும்பனின்வான் கதையாக்
தன்மச்சுதாநதி தாழ்ந்து சதாநந்தஞ்சாரவைப்பாய்
கன்மப்புனிதர் தொழுமெவ்வுட்பொற்கொடிக்கற்பகமே. (19)
தாக்கு மியனொர்சக்கரவர்த்தியைச்சார்ந்துவரி
நூக்குமி வேண்டலெனவன்றென்வேண்டனுவலினது
காக்குங்கடமைகொள் காஞ்சனவலலிநின்காற்பணிசெய்
பாக்குமிதமில்பரமபத்திப்பெரும்பாக்கியமே. (20)
பவச்சமவாயஞ்செய்மாயையின் வஞ்சிக்கப்பட்டடியேன்
சவச்சமமெய்ச்சுகநச்சுற்றுத்தையலர் தங்கலவி
அவச்சமரத்தில்லை தலறுமாறருள்புரிவாய்
தவச்சமநோக்கினரேத்துங்கனகவல்லித்தல்லியே. (21)
துறக்கவசந்தச்சுனாசீரனாதிச்சுரர்துதிக்கும்
அறக்கவசம்புனையாடகவல்லியன்னாயவித்தை
உறக்கவதன்வயத்துற்றவெற்குன்னிலையுன்னமனஞ்
சிறக்கவசப்படுங்காலமென்றோவதைச்செப்புதியே. (22)
திலவைநிகரானனநிதிவல்லியன்னாயடியன்
உலவையெவணுமுலவியுமொன்றினொன்றாததுபோற்
செல்வையுடையதிரிகுணத்தோடுசெறிந்திருந்துங்
கலவையவற்றிற்கொளாநிலைநிற்கக்கருணை செய்யே. (23)
அன்னையெனுமெவ்வுளாடகவல்லியறைவெளிசப்
பொன்னை விழுங்கிய மீனினவித்தை புரியும் பொம்மல்
கன்னைவிரும்பித்தௌவாது தமியனின்றாள்விரும்பிப்
முன்னையொன்றெண்ணாதிருந்து பெறவருள் பேரின்பமே. (24)
பெருங்காற்றடியுண்பெருங்கலத்தென்மனம்பேரவித்தை
ஒருங்காற்றுமூறுகளாலுலைப்புண்டொல்குமவ்வுலைவு
சுருங்காற்றினுய்த்துச்சுகந்தந்தருள்பிறர் துன்புறுதல்
ஒருங்காற்றகில்லாநிதிவல்லியெவ்வுளுறைபவளே. (25)
என்றுமிருபாடெரிகொள்ளிக்கட்டையிடையெறும்பின்
என்றுமிருவினைத் தீச்சுடுமிம்மெய்யிதயமிருந்
தென்றுமிருளினிடர்படுமெற்கருள்வாயிமையோர்
என்றுமிருதி செய்தேத்திடும் பொற்கொடியிந்திரையே. (26)
கன்மாந்தரமுக்கரணங்களாலுங்கடிதியற்றிச்
சன்மாந்தரத்திற்றடுமாறுமேழைநின்றாளடையுந்
தன்மாந்தர வழிசார்ந்துதனவல்லித்தல்லியிருண்
முன்மாந்தலரிவழிமுத்தியான்பெறமுன்னுதியே. (27)
வானந்திக்குப்புகழாடகவல்லிநின் மாயை தரு
மானந்திக்கும் பிமன்னாவழிசெய்தென்மனோ விருத்தி
ஈனந்திக்காரஞ்செய்தெப்போது நின்னடி யெண்ணியெண்ணி
ஆனந்திக்குந்தன்மையென்றோவடியேனடைவதுவே. (28)
கோளாண்மையரையுங்கோள் செய்குசுமக்கொடுங்கணைகொள்
வேளாண்மை வீட்டி வெருட்டுறுமாயை விறலை வெல்லுந்
தாளாண்மைதந்துன்சரோருகத்தாணிழல்சாரவைப்பாய்
வேளாண்மைவாழ்க்கையர் வாழெவ்வுட்பொற்கொடிவித்தகியே. (29)
ராகத்தை நீத்தவிருடிகளேத்தெவ்வுளிந்திரையே
பராகத்தைத் தேனைப்பொழி பதுமாதனப்பண்ணவியே
இராகத்தையேய் சொல்லிரணியவல்லியன்னாயெழும்பூ
பராகத்தையெண்ணினுநின்குணமெண்ணப்படாவென்பவே. (30)
கங்குலைச்செங்கதிர்க்காவலன்காய்ந்து கடிதலென
மங்குலைச்சின்னபின்னப்படமாருதமாய்த்தலென
இங்குலைப்புண்ணுமெளியேன்பவத்தையிரித்தருள்வாய்
அங்குலைக்கந்திப்பொழிலெவ்வுட்பொற்கொடியம்மனையே. (31)
திருட்டுடன் காமஞ்சினங்கொலை பொய்த்தல்செருக்குவதம்
வெருட்டுறு சூதாதியவிளைத்துத்தனை வேட்டவனை
மருட்டுறும் பொன்மயன்மாற்றிநின்பாதம் வழுத்திநிற்கும்
பொருட்டென்மனத்தைப்புணர்த்துதிபொற்கொடிப்பூரணியே. (32)
தாய்தந்தையர்க்குஞ்சகோதரர்கட்குந்தகவரென
வாய்தந்தவர்க்கு மற்றோர்க்குமெந்நாளுமனமழுங்கு
நோய் தந்திடும் பொன்னசையற நின்கடைநோக்கருணூல்
ஆய்தந்தவர்கள் புகழெவ்வுட்பொற்கொடி யன்னையெற்கே. (33)
இகத்திற்குமேலாம்பரத்திற்குமாவெண்ணியீட்டுநர்தஞ்
சுகத்தின் பொருட்டுந்துறவோர்பொருட்டு நின்றொண்டர் தங்கள்
மகத்தின்பொருட்டுமுதவாப்பொருணசை மாற்றிநின்றாள்
அகத்தின் புறவெண்ணியுய்வானருளாடகவல்லியே. (34)
ஒருமித்தவுள்ளத்தவருநட்டோருமுறவினரும்
பொருமித்தலைப்பட்டுப்போர்புரியச்செய்யும்புன்பகையைத்
தருமித்தமனியவாசை தவிர்த்துநின்றாளிலன்பு
நிருமித்தருள் செய்திபொற்கொடியாகியநின் மலையே. (35)
மண்ணுற்று நீருற்றுத்தீயுற்றுக்காலுற்றுவானமுமுற்
றெண்ணுற்றுநோக்குறுங்கேட்குறுமெவ்வெப்பொருள்கடொறும்
நண்ணுற்றுநிற்கின்ற பொற்கொடித்தாய்நின்னைஞானமென்னுங்
கண்ணூற்றுக்கண்டுகளித்தேத்தியுய்யக்கருணை செய்யே. (36)
பந்தப்புரளிதருநவவாயில் படைத்தழியும்
இந்தப்புரத்தினிடையாரிதய கமலமெனும்
அந்தப்புரம்விட்டடியேனெழுங்காலளித்தியெவ்வுட்
சந்தப்புரம்வாழ்கமனியவல்லிசரோருகையே. (37)
குக்கன்மனைதொறுஞ்சென்றடி கூழ்கொள்ளுங்கூற்றின் விலி
தக்கன்மசன்மந்தரும் பலன்றுய்த்துத்தளர்தமியேன்
விக்கன்மறுகலுற்றிம் மெய்விடுங்கால் விகங்கமிசை
மிக்கன்பின் வந்தாள் வெறுக்கைக் கொடியெனும் வித்தகியே. (38)
தேகத்தினாலயற்சீவாகளாற்றெய்வத்தாலடையுஞ்
சோகத்தின் மூழ்குறுந்தொண்டன் றொலைவில் சுகமயமாம்
போசத்தின் மூழ்குநின்றொண்டாகள் வாழும்புகழ்ப்பரம
மாகத்தின்மன்னமகிழ்ந்தருளாடகவல்லியன்னே. (39)
தலைச்சுமையத்தலை நாங்காற்புயத்திடைத்தாங்கிடினும்
நிலைச்சுமை நீங்கிற்றிலை துயர் நீங்க நிகழ்த்தும்வினை
வலைச்சுமை யன்னவருத்துந்தமனியவல்லியன்னாய்
புலைச்சுமைநீங்குமுன்னல் வழியுய்த்தெற்புரந்தருளே. (40)
புண்ணிய பாவத்துகிரிபொறியரம்புரவிகளபூண்
டண்ணியதேகவிரதத்திதயமென்னாதநத்தில்
நண்ணியவென்னைமனச்சாரதிதிருநாட் நாட்டினின்பம்
உண்ணியநல்வழியுநிதிவல்லியுன்னுதியே. (41)
புலிங்கக்கனலிற்பொலிமணிப்பூண்கள்புனைந்தவிர் பொற்
கலிஙகக்கனகவல்லித்தல்லிகாகுத்தன்காதுகணை
குலிக்கக்குறியுய்த்ததென்னவடியற்குறித்துவிட்ட
இலிங்கர்கடத்தையிரிக்குமியவையிசைத்தருளே. (42)
சிட்டியிற்றந்தது மண்டச்சிதைவிற்சிதைவதுமா
ஒட்டிய நுட்பவுடலிடைநீங்குமுபாயமென்னே
கிட்டியுயிர்க்குயிராந்துணையேயென்றன் கேதநெஞ்சுந்
திட்டியுநீங்காக்கனகவல்லித்தல்லிச்செய்யவளே. (43)
அஞ்ஞா னிகளறியாவணமாவியடங்கிநிற்பாய்
சுஞ்ஞானிகடொழுதேத்தவவருளந்தோன்றிநிற்பாய்
கைஞ்ஞானியாமிக்கடையேன்கனகவல்லித்தல்லியே
மெய்ஞ்ஞானிகணிட்டைமேவியுய்வானோர் விரகு செய்யே. (44)
அமங்கலமாகுமவித்தையஞரையடியறுப்பான்
சுமங்கலம்பூண்டநின்றூமூர்த்தமுஞ்சுடர்ச்சோதிமயச்
சுமங்கலமாநின்சொருபமுங்காட்டியித்துட்டனென்றுந்
சமங்கலவாதபரிசருள்பொற்கொடித்தம்மனையே. (45)
வண்டானதுபாரிசாதமலர்கண்டு மற்றோர் மலர்
உண்டாயிருக்கினுமன்னதைக்கண்டுகவாததுபோற்
றாண்டாமடியன்சுவணக்கொடித்தல்லிதூயநின்றாட்
டண்டாமரைமலரன்றிமற்றொன்றினைச் சார்கிலனே. (46)
யூகித்துணரவொண்ணாதநினமாயையுண்டாட்டினுற்று
மோகித்துநிற்குமென்சன்மந்தொறுநின்முளரியந்தாள்
பாகித்துக்கொண்டுண்ணும் பாகவதர்பதம்பற்றியுய்வான்
தாகித்து நிற்கத்தயை செய்கனகவல்லித்தல்லியே. (47)
எண்ணான்குகோடியிரட்டியிரட்டியெண்ணெய்ந்தவராய்
தண்ணார்சிருட்டிதிதிலயந்தான்செயுஞ்சத்திகட்குக்
கண்ணா நிறைவியெனுங்காஞ்சநவல்லிக்கான்மலரை
நண்ணாதவர்முத்திநண்ணாதவரெனுநான்மறையே. (48)
பூதங்களைக்கொண்டு பூதச்சிருட்டி புரிந்து நிற்றி
பூதங்களைக்கொண்டு பூதப்புரவுபுரிந்துநிற்றி
பூதங்களைக்கொண்டு பூதத்தழிவுபுரிந்து நிற்றி
பூதங்களைப்புரமாகக்கொள் பொற்கொடிப்பூமகளே. (49)
முளைக்கின்றமுக்குணமுத்திவழிமுயலாமலெனை
வளைக்கின்றவாரணித்தேயவை தம்மைவயப்படுத்தி
யிளைக்கின்ற நுண்ணிடையேமவல்லித்தல்லியென்றுநின்றாட்
டிளைக்கின்றபத்திமைச்செல்வந்தந்தென்னைத்திதித்தருளே. (50)
கிடியன்றனம் பசியுற்றோனனம்புனல்வேட்கையுற்றோன்
குடியம்புதம்பெற்றருந்திமனங்களிகூர்தலென்னக்
ஈடியம்புயகட்கனகவல்லித்தல்லிகாமர்நின்றாள்
அடியன் விழிகள்கண்டானந்தவாரியடையச்செய்யே. (51)
இருமைப்பயனையுமீறிலின்பத்தையுமீவதுவும்
இருமைப்படவருமின்னாவிடர்களிரிப்பதுவும்
பெருமைப்பிறவிக்கடற்கோரணையாப்பிறங்குவதும்
அருமைக்கனகவல்லித்தல்லியன்பரடிப்பொடியே. (52)
காழ்த்தபொறிக்குப் புலனாங்கடன்மைகள் கண்டிறுத்துப்
பாழ்த்தவென்னெஞ்சம்பயிர்படும் வண்ணம்பதப்படுத்தக்
காழ்த்தலிலாததிற்றாவரநேர்நிலைசார்ந்து நிற்பாய்
வாழ்த்தற்குரிய பெரும்புகழ்க்காஞ்சநவல்லியன்னே. (53)
அருள்வாளுருவியகச் செய்யகத்தூற்றுத்தழற்றித்
தெருள்வாய்பத்திப்பயிர்செய்வித்துணர்வற்றேக்கு வித்தே
இருள்வாய் செருக்குக்களைகளைவித்துனதேவலின்பப்
பொருள்வாய்த்திடவருள்வாயெவ்வுட்பொற்கொடிப்புண்ணியையே. (54)
வேதந்தருநல் விவேகப்பொருளைவிரித்திடுங்காற்
போதந்தருநினைநின்னாதன்றன்னைப்புரிந்துபற்றல்
ஏதந்தருபிறவிச்சிறைநீத்தலெனமுடியும்
நீதந்தரும்பொற்கொடித்தல்லியின்னனநேர்ந்தருளே. (55)
துன்புப்பரமாவதி பிறவிக்கடறோய்ந்தழுந்தல்
இன்புப்பரமாவதிநின்னடியிலியைந்திருத்தல்
என்புப்பரமுமஃதில்லாப்பரமெடுக்கினுநின்
அன்புப்பணியையருளாடகவல்லியம்மனையே. (56)
நிரதிசயாநந்த நீங்காததுக்கநிதானஞ்சொல்லின்
இரதிசயவைம்பொருளுணர்வுண்மையுமின்மையுமாம்
அரதிசயித்தப்பொருளைந்துந் தேறவருள்புரிவாய்
விரதிசயந்தொழும்பொற்கொடித்தாயெனும் வித்தகியே. (57)
ஒண்மையவாமிப்பொருளைந்தினையுநன்குள்ளுமு
வுண்மைக்கடி சத்துவகுணமின்மைக்குரைக்குமடி ணர்
தண்மையிராசதந்தாமதமாஞ்சத்துவமளித்தி
வண்மைத்திருவெவ்வுள்வாழ்பொற்கொடிப்பத்தவற்சலையே. (58)
முற்குணமூலநின்கோனருணோக்கத்தின் மூழ்குதலாம்
பிற்குணமூலமிப்பேரிருண்ஞாலப்பிறவியென்ப
முற்குணமென்றுமொர் முட்டின்றியென்னுழி மூட்டுவிப்பாய்
நற்குணவாரிதியேபொற்கொடியெனுநாயகியே. (59)
அரு ணாக்குக்காரணமெம்மானியற்கையருட் குணமே
இருணோக்கியபிறவிக்கடியெண்ணிலிருவினையே
அரு கடியேன்பெறவொருமாற்றமறைந்தருள்வாய்
தெருணோக்கினர்புகழ் சீதேவி பொற்கொடிச்சின்மயையே. (60)
சொல்லுமருளுக்கடிசுகிர்தத்துவந்தோமதரிற்
செல்லுமிருவினைக்காரணமென்றுஞ் செறுமவித்தை
புல்லுஞ்சுகிர்தத்துவத்தைப்பொருத்திப்பொய்ஞ்ஞானமதை
வெல்லும்படிக்கருள்வாய்பொற்கொடித்தல்லிவேண்டலிதே. (61)
அறைந்தவவித்தைநிதானமநாதியசித்துறவாம்
நிறைந்தசௌவார்த்தத்தடியயநத்தினிகழுறவாம்
பறைந்தவசித்துத்தொடர்பறநின்னருட்பார்வைதந்தாள்
உறைந்தபுகழெவ்வுளூர்வாழும்பொற்கொடியுத்துங்கையே. (62)
கிட்டமரதனக்கேழ் தின்றுருவைக்கெடுப்பதெனத்
தொட்டவசித்துயிர்த்தொன்மைக்குணங்கடொலைத்த்ழிக்குந்
துட்டவசித்தின்றொடர்பறுத்தென்றன்மை தோன்றுவித்தென்
இட்டமளித்தருள்வாயெவ்வுட்பொற்கொடி யிந்திரையே. (63)
வேட்டுவன்கீடத்தையூகித்தன் போற்செய்விதமெனவே
நாட்டுமயநமுஞானம்பெறும்வழிநன் குறுவித்
தீட்டுமுயிரையுந்தற் சமமாக்குமிவ் வீடுதந்தாள்
தீட்டும் புகழ்கொள்கனகவல்லிப்பேர்த்திருமகளே. (64)
திகந்தங்கமழைந்தருமலர்தேவர்கள் சிந்தியுளம்
உகந்தங்கமாமறையோதிப்பராவுமொளிப்புகழ்முச்
சகந்தங்கிப்பொங்குந்தமனியவல்லி நின்றாணினையா
திகந்தங்கமுற்றுழல்வேனுய்யநின்னுளத்தெண்ணுதியே. (65)
ஊரகநீரகங்காரகமாகியுயர்பதிபோல்
எரகவெவ்வுளும் வாழேமவல்லியையிந்திரையைத்
தாரகளாச்சியன்றன் மணவாட்டியைத்தாழ்ந்துதொழச்
சொரகமேயெங்ஙன்றுன்னு திமுத்திச்சுகத்தினையே. (66)
பிரபஞ்சவாழ்க்கைப்பெருமயல்பேர்த்திடும்பெற்றிமைத்தாம்
வரபஞ்சவத்திரவானவனாண்டவயச்சிலையின்
உரபஞ்சனஞ்செய்துலகையொறுத்தவொள்வாளரக்கன்
சிரபஞ்சனஞ் செய்த சீராமன்றேவிதிருவருளே. (67)
பிறவிப்பிணிக்குப் பெருமருந்தானது பேசிடுங்கான்
றையிப்பிரபஞ்சமாயையை மாய்த்துமனமொருக்குந்
துறவிப்பிருந்துமுந்தொண்டர்தொகையுந்துகளறு சீர்
அருவிப்பிரருந்தொழும்பொற்கொடித்தாயகத்தருளே. (68)
நன்மவியாதிமுதலானநோய்கட்குக்கொள்கலனாய்க்
கன்மவிபாசத்தினாற்ககுதோறுங்கடுத்தெடுக்குஞ்
சன்மவிடாயைத் தணிப்பதுபொற்கொடித்தல்லிசுபத்
சன்மவிலாசத்திருவடித்தெய்வத்திருமிழலே. (69)
கற்பரத்தாள்மும்மைக்காசினியோர்தமைக்காத்தளிக்கும்
அற்பகத்தாளமுதக்கடலாலயத்தாளருளாம்
பொற்பகத்தாள் புலமைப்பாவலர்புகழ்பொற்கொடித்தாய்
கற்பகத்தாளைக்கருது நெஞ்சே நற்கதிபெறவே. (70)
மண்ணிலுகித்தமணப்பூங்கொடிமறையோரிதய
விண்ணிலுதித்துவிளங்கிடுமின் கொடிமெய்ம்மைகண்டோர்
எண்ணிலுதித்திடுமீறிலின்பக்கொடியேழையிந்தப்
புண்ணிலுதித்தலைப் போக்கிப்புரந்திடும்பொற்கொடியே. (71)
பெருந்தன்னைபேருலகத்தோரெவர்க்கும்பிறங்கி யெங்கும்
பொருந்தன்னைபுங்கத்தபோதனர்வாழ்புரை தோறும்புக்க
விருந்தன்னை வேதவிளக்கன்னையென்பவவேரறுக்கும்
மருந்தன்னைபொற்கொடிப்பேர்கொண்டெவ்வுட்பதிவாழன்னையே. (72)
நரர்தொழுந்தாய்நல்லஞானியர் நண்ணிநவிற்றிடுந்தாய்
சுரர்தொழுந்தாய் சுருதிச்சிக்கறுத்தோன்சுகாதிமுனி
வரர்தொழுந்தாய் நல் வரந்திருந்தாய் வளர்வைகுந்தமா
பூரர்கொழுந்சாயெவ்வுட்பொற்கொடித்தாயென்றுபோற்றுநெஞ்சே. (73)
கொல்வியைகோல்விடுங்கோத்திரை நேர்கொடுங்கோதண்டப்பேர்
வில்லியைவேட்டவிதேகர் குலவிளக்காமுலகத்
தல்லியையாவரும் வேண்டும் வரங்கடருங்கனக
வல்லியை வாழ்த்தின் வருந்திருமாமணிமண்டபமே. (74)
மிழை எழு நூறரக்கியரீண்டிப் பகலுமிரவு
வழு நூறுமாற்றிய வண்மையின்வல்வினையேன்செய்வழுக்
குழுதூறிக்காத்திகுகுத்தொறுமெவ்வுட்குறித்துவந்து
தொழு நூறுகோடியுயிர்கட்கருள்சுவணக்கொடியே. (75)
கழுகுக்கரசன் முன்னின்னிலை கண்டுகனலிடை சேர்
மெழுகுக்குமேற்பட்டுருகியமென்னெஞ்சமேன்மைநிலை
புழுகுக்கடிகமழ்பூங்குழற் பொற்கொடிப்புங்கவியே
தொழு தக்கனேற்குஞ்சுரந்திடுங்காலத்தைச்சொல்லுதியே. (76)
வீடணன் வேதவிழுப்பவொழுக்கினன் மெய்ம்மையன்புப்
பூடணன் புத்திரிக்குன்னுழிப்போந்தபுரிவெவருந்
தூடணனென்றுசொலுமெற்குந்தோன்றிடுமோசுரர்கள்
தேடணன்மாதவன்சேர்பொற்கொடியெனுஞ்செய்யவளே. (77)
புனமானெனவந்தபொன்மான்செய்புள்ளுவம் போலடியேன்
மனமான் செய்வஞ்சனை மாண்டிடும் வண்ணம்வரமளிப்பாய்
தினமான்ம நிட்டையர் சிந்தையுள்வைத்தெண்ணுஞ்செய்யவளே
கனமான்மியவெவ்வுட்பொற்கொடிப்பங்கயக்கண்ணன்னையே. (78)
மகோதரன் பிண்டிவனக்கண்புரிபெருமாயைகட்குச்
சகோதரமாயை புரிமனமாயை தவிர்த்தருள்வாய்
ககோதரப்பள்ளியன் கற்பத்துயிர்கள்களித்தட ங்குஞ்
சுகோதரன்றோௗணைசுந்தரப்பொற்கொடித்தூயவளே. (79)
குயந்தனைக்குன்றிற்கொடியுருவாய்க்குத்திக் குற்றமிழை
சயந்தனைக்காத்திட்டதன்மையினாளுநின்றாமரைத்தாள்
வியந்தனையேயென்றுவேண்டுமென் குற்றம் விமோசனிக்க
நயந்தனையாயினலம்பொற்கொடிநளிநாதனையே. (80)
வீட்டும்படைதசைவெட்டும்படையங்கவேதநன்னூல்
தீட்டும் படைசித்தர் வேதகப்பொன்றொடிற்றேசிகமாம்
ஈட்டும்பரமவருளுறின்யான் முத்தனென்பவனா
நாட்டும்புகழ்ப்பொற்கொடியன்னையே கடனந்தனையே. (81)
பத்துக்களத்தன்பவநத்திருப்பினும் பாழ்த்திழிந்த
வத்துக்களாமுடல்வன்சிறைவாசம்வயாவுடைத்தாம்
நத்துக்களநளிநாதநப்பொற்கொடி நாயகியென்
தத்துக்களைந்துநின்னந்தாமவாழ்க்கையைத் தந்தருளே. (82)
அரக்கியரீட்டத்துறவிற்கொடிதாலடியனுக்குத்
தரக்கியற்றாரந்தநயர்களாதியர் தம்முறவு
குரக்கியலாமனச்சேட்டையிரீ இப்பொற்கொடியன்னையே
அரக்கியற்றாமரைதாணினைவண்ணமருள் புரியே. (83)
பெருவடிவுற்றுப்பெருநீர்கடந்து நிற்பேணிவந்த
திருவடியைக்கண்டதென்னவடியனின் சீர்த்தகொண்கன்
றிருவடிவான நற்றேசிகன்றாளைச் சிறந்து பற்றல்
மருவடிவுற்றதெனத்தோன்றும்பொற்கொடிமாமகளே. (84)
நினக்குப்பிரியமுடனஞ்சனைசுதனேர்ந்துரைத்த
மனக்குப்பிரியகரனாமெம்மான் குணமாட்சிமைபோல்
எனக்குப்பெரியர் தம்மின்னாவொழிக்குமிருங்கதையாந்
தனக்குப்புரையிலதாமெவ்வுட்பொற்கொடித்தாக்கணங்கே. (85)
திருவாழிதந்து திருவடி செப்புந்திறங்களெனத்
திருவாழி சங்கம்புயத்திற்பொறித்திடுந்தேசிகன் சொல்
கருவாழி நீக்குங்குரவர்பரம்பரைக்கட்டுரையாம்
திருவாழிலக்குமிபொற்கொடியம்பொருட்செல்வியன்னே. (86)
தலைமணிதன்னைத் தகைமாருதிகையிற்றந்ததொக்கும்
அலைமணியாழிப்பவநீக்கவத்தனருள்செய்மறைக்
கலைமணியாகுந்திருமந்திரம்பொற்கனங்குழையே
சிலைமணிப்பூருக்கனகவல்லித்தல்லிச்சிற்பரையே. (87)
திரிசடைச்செல்விநினக்குத்துணையெனச்சேர்ந்ததொக்குர்
கரிசடையேழைகருவாழிவற்றிடக்காத்தளிக்கும்
பரிசடைபுண்ணியராகுநின்பத்தர்பதத்துணைகள்
விரிசடையோர்புகழ்பொற்கொடியாரணவேத்தியையே. (88)
இராவணகு எம்பகருணாதிமாற்றலரிவ்வுலகில்
இராவணங்கொல்வித்ததென்னவெனையென்று மீடழிக்கும்
இராவணமாயையிகுவித்தருள் பெரியோரிதய
இராவணமேயெங்கனகவல்லித்தன்னையிந்திரையே (89)
பானீர்பிரித்திடுமன்னத்தினாரியன்பண்புரையாற்
கானீர்கனன்மண்ககனத்திற்கண்டவிக்காயத்தன்மை
மேனீர்மையுற்றவுயிர்த்தன்மைதேறவிழைந்தருள்வாய்
சூனீர்முகிறவழ்காவெவ்வுட் பொற்கொடிச்சுந்தரியே. (90)
நினக்காகச்செய்யணையென்னப்பவக்கடனீந்துகிற்பான்
எனக்காகவன்பணைகட்டி முத்திக்கரையேற்றுவிப்பாய்
சினக்காகங்காத்திட்ட சீர்த்தியினானிறைசெய்யவளே
புனக்காகதுண்டப்புகைகமழ்வீட்டெவ்வுட்பொற்கொடியே. (91)
பெட்பகலாதகனகவல்லிப்பெருமாட்டி முன்னி
புட்பகமேறியயோத்திபுக்கென்னப்புலைச்சிறையாங்
கொட்பகநீக்கிப்பிரணவத்தேர்மிசைக்கொண்டுசென்று
நட்பகலாதவர்வாழ்திருநாட்டெனைநாட்டுதியே. (92)
செல்லுழியென்னொடுசெல்லாதவர்க்குச்சிறப்பளித்துச்
செல்லுழியென்னொடுசெல்லுநினக்கொன்றுஞ் செய்தறியேன்
அல்லுழிதந்தவென்னாசையறப்பொறுத்தாதரித்தாள்
எல்லுழிதந்த விழையேமவல்லியிலக்குமியே. (93)
பழித்துணைக்காரணமாம்பாவையர் பண்டிப்பாழ்த்தக்கருக்
குழித்துணைகூத்துணைகோத்துணைகும்பித்துணை குலவும்
விழித்துணைமீளாக்கதித்துணையக்கதிவீட்டினுய்க்கும்
வழித்துணையெவ்வுட்கனகவல்லித்தல்லி வானவியே. (94)
பெருநாட்டுமன்பதைபேசிசையெம்பெருமாட்டி செங்கேழ்
மருநாட்டுமாமலராதனையாடகவல்லியன்னை
கருநாட்டுமென்வினைக்காட்டைக்களைந்து கலக்கமில்லாத்
திருநாட்டுமாமணிமண்டபத்தென்னைத்திகழ்த்துவளே. (95)
இலங்கைவிட்டேகுழியெம்மானிடப்பண்பிசைத்ததென
அலங்கையஞரங்கம்விட்டெழுங்காலர்ச்சிராதிவழி
அலங்கைவகை சொல்லியாற்றைக்கடப்பித்தமாநவர்தம்
வலங்கை தொடுவித்துப்பொற்கொடித்தாய்வைப்பள் வைகுந்தத்தே. (96)
மெத்திய சூரியையிக்குடில் விட்டெழும்வேலையன் பாம்
உத்தியசூரிகளேத்திடும்பொற்கொடியுற்றெவரும்
நத்திய சூரியமண்டலவாயினடத்துவித்து
நித்திய சூரிநிகாயத்திலென்னை நிறுத்துவளே. (97)
செத்துப்பிறக்கின்றதேவர்க்குமானுட தேகிகட்கும்
செத்துப்பிறவாவமரர்க்குந்தாயெனுஞ்செய்யவளே
நத்துப்பிறங்குங்களப்பொற்கொடியெனுநாயகியே
தத்துப்பிறவிதவிர்த்தெற்கந்தாமத்தைத்தந்தருளே. (98)
மைந்தன்மறையவன்மார்த்தாண்டன்றந்த மறலியெனும்
மைந்தன்றொழில்களிம் மைந்தன்வயின்மருவாதொழிய
மைந்தன் பின்மாற்றி நின்மாளாச்சுகாநந்தவாரிதியாம்
மைந்தன் பெரும்பதம்வைத்தருளாடகவல்லியன்னே. (99)
திக்குற்றசீர்த்துக்கனகவல்லித்தல்லிசேய்மழலை
எக்குற்றமேயினுமன்றோளுாளத்தின்பினேற்பதுபோற்
சொக்குற்றநெஞ்சன்றெடுத்தவித்தண்டமிழ்ச்சொற்றொடையல்
பொக்குற்றதேனுந்திருவுளங்கொண்டுபுனைந்தருளே. (100)
வாழிதிருவெவ்வுள் வாழியுட்டாபம்வரையிலஞ்சி
வாழிகிர்கியவிமுனிமாசுணமன்படுக்கை
வாழியதிற்கண்வளர் வீரராகவமாயனென்றும்
வாழ்கனகவல்லித்தாயென்னுள்ளமலரகத்தே. (101)
உவ்வுட்பொருளாயுலகுமுயிருமுயிர்த்தளிக்கும்
எவ்வுட்கனகவல்லித்தாய்க்கொரு நூறிசையலங்கள்
அவ்வுட்பொருள்சொலிராமாநுசாரியனம்பதத்தான்
தெவ்வுட்பகைதீரெதிராசதாசன்றெரித்தனனே. (102)
கனகவல்லித்தாயார் மாலை முற்றிற்று.
---------------
This file was last updated on 21 Jan 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)