செம்பொன் அந்தாதி
(தண்டபாணி சுவாமிகள் )
cempon antAti
of taNTapANi cuvAmikaL (edited by rEvati)
in Tamil Script, Unicode/UTF-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF version of this work for ebook preparation.
The soft copy of this work has been prepared using Google OCR and subsequent proof-reading
of the raw OCR output.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of
Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
செம்பொன் அந்தாதி
தண்டபாணி சுவாமிகள் (ப.ரேவதி பதிப்பு )
Source:
செம்பொன் அந்தாதி
*சுவடியியலும் பதிப்பியலும்” பட்டயப் பேற்றிற்காகச் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு
அளிக்கப்படும் பதிப்பேடு
பதிப்பாளர் ப. ரேவதி
நெறியாளர் பேரா. வீ. அரசு
தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்லைக்கழகம்
ஆகஸ்ட் - 2007
சுவடியலும் பதிப்பியலும்” பட்டயப் பேற்றிற்காகச்
சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பெறும் ஆய்வேடு
--------------
செம்பொன் அந்தாதி
நெறியாளர் சான்றிதழ்
பேரா. வீ. அரசு,
தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை - 600005.
சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறையில் நடைபெற்று வரும் சுவடியியலும் பதிப்பியலும் பட்டயப் பேற்றிற்காக 'செம்பொன் அந்தாதி' என்னும் தலைப்பிலான சுவடியை ப. ரேவதி அவர்கள் என் மேற்பார்வையில் பதிப்பு செய்தார் என்றும் இந்த ஆய்வேடு அவரின் சொந்த முயற்சியில் உருவானது என்றும் சான்றளிக்கிறேன்.
நெறியாளர் (வீ. அரசு)
நாள்: 2007
இடம்: சென்னை-5.
-------------
பதிப்பாளர் உறுதிமொழி
ப. ரேவதி
தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை - 600 005.
சுவடியியலும் பதிப்பியலும் என்னும் பட்டயப் பேற்றிற்காக சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறைக்கு அளிக்கப்பெறும் 'செம்பொன் அந்தாதி' என்னும் தலைப்பிலான இப்பதிப்பேடு என் சொந்த முயற்சியில் உருவானது என்று உறுதியளிக்கிறேன்.
ஆய்வாளர் (ப. ரேவதி)
இடம்: சென்னை-5
---------
உள்ளடக்கம்
பதிப்புரை
ஆராய்ச்சியுரை
செய்யுள்
துணைநூற்பட்டியல்
பாடற் முதற்குறிப்பகராதி
பின்னிணைப்பு
சுவடிநகல் இணைப்பு
-----------
பதிப்புரை
கல், பாறை, காசுகள் போன்றவற்றில் எழுத்துக்களாகவும், குறியீடுகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின் ஓலையைப் பதப்படுத்தி ஓலையின் பதிவு செய்து சுவடி என்றழைக்கப்பட்டது.
"சுவடியைப் படித்தல்” என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே என்ற நிலை இருந்தது. ஐரோப்பியர் வருகைக்குப் பின் பதிப்பு அதிகமானது.
மூடநம்பிக்கையால் தீயிலிட்டும், ஆற்றில் விட்டும் பலர் குடும்பச் சொத்து என்று சுவடியைத் தனி நபர்களிடம் பிரிந்து கிடந்தது. கோயில்களிலும், மடங்களிலும், தனிப்பட்ட நபர்களிடமும் இருந்து சுவடிகளைச் சேகரிக்கும் பணியில் ஐரோப்பியர் ஈடுபட்டனர். இதில் தான் மெக்கன்சி, லேடன், பாதிரியார், பிரொலன் போன்றோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்.
1577 ஆம் ஆண்டில் "தம்பிரான் வணக்கம்” முதன் முதலில் இந்தியாவில் தமிழில் அச்சடிக்கப்பட்டது. பின் 1835 முதல் 1920க்குள் தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், நன்னூல் போன்றவைகள்அச்சில் ஏறி விட்டன.
அச்சு வருகைக்கு முன் ஓலைச் சுவடியில் உள்ளவற்றை அப்படியே பிரதியெடுக்கும் வழக்கமும் நம்மிடம் உண்டு.
சென்னைப் பல்கலைக்கழகத்தமிழ் இலக்கியத் துறையில் நடத்தப்பெறும் "சுவடி மற்றும் பதிப்பியல்” என்னும் பட்டயப் படிப்பிற்காக இவ்வாய்வேட்டினைச் செப்பனுடன் முடித்துத் தர வழிகாட்டிய பேராசிரியர் வீ. அரசு அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுவடியை எழுதவும், எழுத்துக் கூட்டிப் படிப்பதற்கும் வகுப்பில் சுவடியைத் தந்து உதவிய பேராசிரியர் ய. மணிகண்டன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கீழ்த்திசைச் சுவடியியல் நூலகத்தில் நான் எதிர்பார்த்த சுவடி கிடைக்காத சூழலில் தன்னிடம் இருந்த சுவடியை எனக்குத் தந்து உதவிய என் நெருங்கிய நண்பரும் வழியாட்டியவருமான கு. சுதாகர்க்கு நன்றி கூறவில்லையென்றால் என் பதிப்பு முழுமை பெறாது.
எக்காலத்திலும் எனக்குத் தோளோடு தோள் நின்று உதவிய என் சக தோழர்கள் கணேஷ், அருணா, ஜீவா அனைவருக்கும் நன்றிகள் பல. அச்சுப்பணியைச் சிறப்பான முறையின் பயன்படுத்தி நூலினை வடிவமைத்த 'டுடே கிராஃபிக்ஸ்' அச்சகத்தார் திரு.ரெ. பாபு அவர்களுக்கும் மேலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நண்பர்கள் உதவி செய்திருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ப. ரேவதி
------------------
ஆராய்ச்சியுரை : ப. ரேவதி
கல், பாறை, ஓலை என்பவற்றின் பதிவு செய்யப்பட்டது. அவற்றுள் ஓலையைப் பாகாப்பது மிகவும் கடினம். ஓலையைப் பதப்படுத்துவது எவ்வளவு முக்கியமானதோ அது போல பாதுகாப்பதும் முக்கியமானது. குறிப்பிட்ட சமூகத்தினரால் மட்டுமே எழுதப்பட்டதும், அவர்களே அதனை வைத்திருந்தனர். அத்தகு சுவடிகளை தொகுத்தும் பாதுகாத்தும் வருகின்றனர். குறிப்பாக கீழ்திசை சுவடியின் நூலகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், உ.வே. சாமிநாதய்யர் நூலகம், தஞ்சை சரஸ்வதி மஹால் போன்றவைகள் சிறப்பாகப் பாதுகாத்து வருகின்றனர்.
சித்த மருத்துவம், சோதிடம் போன்ற சுவடி முழுமையாக கிடைக்கிறது. ஆனால் அதனைப் பதிப்பகத்தில் எனக்கு ஆர்வமில்லை. கீழ்த்திசைச் சுவடியியல் நூலகத்தில் சமூகம் சார்ந்த ஓலைச்சுவடி கிடைக்கவில்லை. கிடைக்கக் கூடிய கதை, நாடகம் சுவடி பல்முறை பதிப்பாகிவிட்டது. எனவே பதிப்பிப்பது புதியனவாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். அத்தகைய சுவடிகள் அங்கு இல்லை. எனவே செம்மஞ்சேரியில் உள்ள தென்கிழக்கு ஆசியா மையத்தில் நான் எதிர்பார்த்த சமூகம் சார்ந்த சுவடி என்பது கிடைக்கவில்லை. அவ்வாறு இருப்பதும் யாருக்கும் வழங்கப்படுவதில்லை என்றும் கூறிவிட்டனர்.
மீண்டும் கீழ்த்திசைச் சுவடியியல் நூலகத்திற்கு வந்தேன். ஒரு வார காலமாக முயன்றும் சுவடி கிடைக்கவில்லை. மேலும் ஆர்வத்துடன் பதிப்பிக்க வரும் மாணவர்களை அவர்கள் மதிப்பதும் இல்லை. அரசு ஊழியர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்ச்சியும், தியாக உணாச்சியும் இல்லாமல் கடமை ஈடுபாடும் இல்லாமலே செயல்புரிகின்றனர் என்பது மனதினை வேதனைக்குள்ளாக்கியது. அந்த சூழலில் என்னால் அங்கு சுவடி பதிப்பிக்க செல்ல மனம் விரும்பவில்லை.
அவ்வேளையில் எனது நண்பர் சுதாகர் தன்னிடம் உள்ள ஓலைச்சுவடியைக் கொடுத்து இதனை இதுவரை யாரும் பதிப்பிக்கவில்லை என்றார். அதனை எனது நெறியாளரிடம் கேட்டு ஒப்புதல் பெற்றுக் கொண்டு இந்த "செம்பொன் அந்தாதி” என்ற சுவடியைப் பதிப்பிக்கத் தொடங்கினேன்.
முருகக் கடவுளைத் தலைமை நாயகனாகக் கொண்ட தண்டபாணி சுவாமிகளின் சுவடியாகும். முருகக் கடவுளைப் பற்றியது என்பதனைக் கடவுள் வாழ்த்துப் பாடலிலே தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் ஆறுமுகம் உடையவன், பன்னிரு கைகள் உடையவன், சேவலை வாகனமாகக் கொண்டவன் என்ற சொல்லைப் பயன்படுத்தி முருகனின் வீர துரச் செயல்களைப் புகழ்ந்து உள்ளார்.
தண்டபாணி சுவாமிகள் அறுவகை இலக்கணம் என்ற புலமை இலக்கணம் கூறுகின்றார்.
"தமிழ் மொழிக்கு உயர்மொழி தரணியில் உளதெனில்
வெகுளியற் றிருப்போன் வெவம்புல வோனே”
என்று கூறியதில் அவர் தமிழ் மொழிப்பற்று புலனாகிறது சைவத்தையும் வைணத்தையும் ஒருங்கே பார்த்தவர். இவற்றுள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று பாடல் மூலம் தெளிவுற முடிகிறது.
சுவடியின் நீளம் 29.9 செ.மீ. அகலம் 3.8 செ.மீ. ஆகும். இரண்டு பக்கமும் எழுதப்பட்டது. ஒவ்வொரு பக்க சுவடியிலும் 11 வரிகள் இடம் பெறும். படிப்பதற்கு எளிமையான எழுத்துக்களே உள்ளது. வடமொழி கலப்பு இல்லை.
அந்தாதியின் வளர்ச்சி
தமிழில் நெடுங்காலமாகப் புதுப்புது இலக்கிய வகைமைகள் தோன்றியவண்ணமாக உள்ளது. காலச் சூழலுக்கும் அரசியல் மாற்றத்திற்கும் உட்பட்டு இலக்கியங்கள் உருவாகியுள்ளது. காலந்தொட்டு மாற்றம் நிகழ்ந்துள்ளதைச் சங்க இலக்கியம், நீதி இலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் வளர்ந்ததொடு யாப்பு மாற்றங்களம் வடிவ மாற்றங்களம் நிகழ்ந்துள்ளன.
“விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே” (தொல். பொருள். செய்யுள். இளம். நூற்.227)
என்று தொல்காப்பியர் கூறுவதில் இருந்து புதுமையான இலக்கிய வகைமைகள் காலத்திற்கு ஏற்றாற் போல் உருவாகி வந்திருப்பதை அறிய முடிகின்றது.
பிரபந்தம் என்ற சொல் தமிழில் சிற்றிலக்கியம் என்று பயன்படுத்தப்பட்டது. இதற்கான விளக்கம் சரிவர கூறப்படவில்லை. அந்தாதி என்னும் சொல் அந்தம் -ஆதி என்று பிரியும். அந்தம் - முடிவு என்றும் ஆதி - தொடக்கம் என்று பொருள் கூறுகின்றனர். இவ்விலக்கிய வகைமை கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் உருவானது என்றாலும்
8 சங்கஇலக்கியங்களிலேயே சான்றுகள் காணக்கிடக்கின்றன.
ஐங்குறுநூற்றில் தொண்டிப்பத்தில் 118 ஆம் பத்து அந்தாதியாக அமைந்துள்ளது. புறநானூற்றில் அந்தாதி வகைமை ஓரிரு பாடல்களில் ஆளப்படுவதைப் பின்வரும் பாடல் மூலம் அறியலாம்.
“மண்டிலானிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புனைவரு வளியும்
வளித்தலை இயதீயும்
தீமுரணிய நீரு மென்றாங்கு
ஐம்பெரும் பூதத்தியற்கை போல" (புறம்:2)
இப்பாடல் அந்தாதியால் அமைந்திருப்பதைக் காண்கிறோம். கானல் வரியில் பல பாடல்கள் அந்தாதியாக அமைந்துள்ளன.
அந்தாதிக்குரிய இலக்கணம்
இவ்விலக்கியம் தனியொடு வகைமையாகக் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் உருவானது என்றாலும் சிறு சிறு வடிவங்களில் தொன்மையான இலக்கண நூல்களில் ஆங்காங்கு ஆளப்பட்டுள்ளன.
"எழுத்து முதலா ஈண்டிய அடியிற்
குறித்த பொருளை முடிய நாட்டல்” (தொல். பொருள். செய்யுள். இளம். நூற். 71)
என்னும் தொல்காப்பிய நூற்பாவிலேயே குறித்த அடிக்குள் பொருள் முடியும்படி அமைத்தல் வேண்டும் என்பது தெரிகிறது.
இதனையே பின்வரும் பவணந்தியார் விரிவாக வகைப்படுத்திக் கூறுவதைக் காண்கிறோம். இதற்கான இலக்கணத்தைக் கூற வரும் யாப்பிலக்கணம்,
"ஈறு முதலாத் தொடுப்பழந் தாழியென்
றோதினர் மாதோ உணர்ந்திசினோரே” (நூற்.20)
என்று வகுத்துக் கூறுகின்றது. இதற்குத் தெளிவானதொரு வரையறைக்குட்பட்ட இலக்கணத்தைப்
பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. 16 ஆம் நூற்றாண்டில் உருவான பிரபந்த மரபியல்,
“பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாகத்
தொண்ணிற் றாறெனும் தொகைய தான” (நூற்.1)
பிரபந்தங்கள் 96 என்று கூறுவதைக் காணலாம்.
அந்தாதிக்கு இலக்கணம் கூற வரும் பாட்டியல் நூல்கள் அதற்குள் இருக்கும் பகுப்புகளையும் கூறுகிறது. அவை ஒலியந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, கலியந்தாதி என்று நான்கு வகைப்படுத்தியுள்ளது. இதில் கலியந்தாதி,
"முறைமுதல் வரினு மவ்வாவமுந் தாகிய
மிப்பரி சியன்ற முப்பது கட்டளை
மிக்கது கலியந் தாதி யாகும்' (நூற்.94)
என்று கூறுவதைக் காணலாம்.
இதில் கலியந்தாதி என்பது கலிப்பா வகையான கட்டளைக் கலித்துறை அதிகமாக ஆளப்படுவதைக் காட்டுகின்றது.
சிவஞான போதமும் இதற்கான இலக்கணத்தைத் தெளிவாகக் கூறுகின்றது. அவை
“அவன் அவள்அதுவெனும் அவைமூ வினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கிலேத் துளதாம்
அந்தம் ஆதி என்பனார் புலவர்" (நூற். 1)
என்று விளக்கிக் கூறுவதைக் காண்கிறோம்.
அந்தாதியின் போக்கு
அந்தாதி இலக்கியமானது பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துள்ளது. காரைக்கால் அம்மையார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் 'அற்புதத் திருவந்தாதி' என்னும் பாடலை எழுதினார். இவை வெண்பா யாப்பில் அமைந்திருந்தது. இதுவே முதலில் தோன்றிய அந்தாதி என்கின்றனர். பிற்காலத்தில் யாப்பின் பலரும்பல்வகையான
ஆளுமையினால் யாப்பினைக் கையாண்டனர். கட்டளைக் கலித்துறை, விருத்தம், வெண்பா, கலிநிலைத் துறை, கொச்சகக் கலிப்பா போன்ற யாப்பு வடிவங்கள் பயன்படுத்தப்பட்டன.
திருமுறைகளில் அந்தாதி இலக்கிய வகைமை தனியாக வளர்ந்தது. பதினொராம் திருமுறையில் பல நூல்கள் அந்தாதியாக அமைந்துள்ளதால் இதனை ‘அந்தாதி மாலை' என்றும் அழைக்கப்படுவதைகக் காண்கிறோம். திருவாசகத்தில் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், குழைபத்து போன்றவையும், திருமூலரின் திருமந்திரத்தில் சில பாடல்களிலும், திருஞான சம்பந்தரின் 'பிரமபுரத்துறை’ என்று தொடங்கும் பதிகமும் இயமக அந்தாதியாக அமைந்துள்ளது. சுவடிப் பதிப்பின் இன்றியமையாததை இப்பதிப்புப் பணி உணர்த்துகிறது.
-----------------------
செம்பொன் அந்தாதி
கடவுள் வாழ்த்துப் பாடல்
எந்தப் பகலிலெவர் பாட்லியா தென்று
மந்தப்படி பலித்தவாச்சரிய முள்ளதென்றால்
இந்தப் பனுவல் இயம்பு செம்பொனீ வதற்குக்
கந்தப் பனாதிக் கடவுள் எல்லாங் காரணமே.
நூல்
பொன்வாஞ்சையிற் பாமவித்துழலாவென் சீர்த்திலம்
பொன்மாமலர் யனெ எழுந்தமைந்த தையழிந்தாள்
பொன்மாலவானாப் புறத்தினிற் பாரதம் பதிக குங்கொம்
பொன்றேந்திய கணபதியுடன் வருங் குகனே. 1
குகனுனர்ந்த சொன்மெயாயன நம்பிய கொடுமை
யகல வார்கடற்பு வாயினிற் பொருளிர்ந் தலைந்து
திகழும் வாள்விழிச் சிறுமியர் மயல் கொடுதிகைத்துச்
சகலா நிந்தையும் பெறும்படி யெனை விடுத்தரோ. 2
விடுத்த வாசனை சிற்சில மீளவுமென்னை
யடுத்து வேதனை செய்யும்படி புரிந்தநீயும்பெண்
கொடுத்திடாமலும் இருப்பது முறைகொலோ கூறாய்
கடுத்த வல்லுருக்கயை நெடுஞ்சுடைய காங்கெயனே. 3
காங்கு போலுருக் கொளுமொரு பேயினாற் கலங்கி
யாங்கு வாடிய புலவனைப் புரக்கவறையில் வேல்
வாங்கு போருளுள தெனின் பொருண்மிக வழங்கி
யேங்குறா தென்னை யளித்தருளாறெழத் திறையே. 4
இறையும் மெய்யுணர் வினறிய சிற்சிலரிடத்து
நிறைய மிடக்க தனையொரு நிமிர்த்தமாக கொண்டு
தறையும் வானுமு மகிழ நாறை விப்பதுதகுமோ
பிறையுலாஞ் சடைபிஞ்ஞ கண்விழி பெறும் பேறே. 5
பேறெலாந் தருகுது மென்வென்னொடு பேசி
யூறெலிந் திரணகுறு பொருண் மயிற்பெருக கூட்டி
யாறெலாந் திரிந்தலமா விடுத்த தேனறை யாய்
வீறெலாங் கொடுமலை தொறுநடிக்கும் வேலவனே. 6
வேலனே பாமெனச் சொலுமெனைப் பொருள்விழந்து
சால வாடிட விடுத்த நீயான் மகன்றானென்று
ஓலமிட்ட வாசிலர்க் கருள்புரிந் தனவுளவோ
சிலவே தியன்சிறைப் படப்புடைத்த தேசிகனே. 7
தேசிகன் பாமென் றுணரார் பலர்தேடுங்
காசிலாசை கொள்கயவனிற் ரிதாக் கண்டாய்
ஆசி கூறிய தமியனேன் கவியெலாம் வாமோ
மாசிலாமணியே மயின்மிசை வருவானே. 8
வானவாணாத மவாழ வையுமதித்திடா மனத்தேன்
ஈனர்பாற் பொருளிர்ந் தலைந் திலைந் திடைவ தேனியம்பாய
கூனல் வெண்பிறைச் சீர்த்தினை பாவு சற்குருவாய்க்
கானவேட்டுவச் சிறுமியைத் தொழுத காமுகனே. 9
முகமோராறு மொன்றாய் பின்மொழிந்த வாசகமுந்
திகழு மாடக மயறலச் செகுக்கிலா தென்னோ
தகர்வார் குழறச் சிபுணர் மருத்துவனறந்த .
மகளொடேனலங் குறத்தியை மருவு மார்பின்னே. 10
மாரன விடுங்கணையுங் கொடிதல்ல நல்வழிதேறுங்
கூரறி வில்லவாகைப் பொனிர்ப்பது கொடிதாகுந்
தீரவிளிக் குதுமென்ற மொழிப்படி செய்யாயோ
வீரமிகுங் கதிரவேல் கொடுசூரணை வென்றோனே. 11
வென்றுள வென்னை விருப்புறுவாரென் மிகநொந்து
கனறும் வணம்புரியும் பொருள்வாதனை கழியாதோ
பொன்று தலினறிய சித்தர் முதற்பலர் புடைசூழக்
குன்று தொறுந்தின் நின்று நடம்பயில் குகவேளே. 12
வேளையி தென்றறியாய் கொலுனன்படை மெலிவேன்பான
ஆளையெனுஞ் சொல்புகன்றனையேயிது நலமாமோ
தாளையளித் தருள்த தகுநீ பொருடாராயோ
வாளை நிகர்த் தலழிக் குறமர் தொடும் கிழவோனே. 13
மகிழ்மலர்த் தொடை கொண்டு குலாவு மதனபாணம்
புகினும் விடுத்த மருமன மூர்வா பொன்னாலே
தகிலடையத் தகுமோவது தீர்வகை செய்யாயோ
சிகிமிசை யுதறுலகெங்கு முலாவிய செவ்வேளே. 14
செவ்விய மேல்வாதம் அமையு நிந்தை செயுந்தீயோர்
வௌவியுயிர்க்கு யாவென்று கொளும் பொன்வழங்காரென்று
அவ்வினை யேனுனை யெத்தனை கால மிரந்தேனீ
யவ்வினை மொத்த வர்க்கின்றதென வேல்புனையையாவே. 15
ஐயமறுத்தறி விற்பகர்கின்ற தையல்வாறே
வையமறிந்து சொலும்படி செய்யு மடிப்பானேன்
பொய்யா பொருட்குவையே பாமென்றிடல் புரையன்றோ
செய்ய வளபெற்ற மடந்தையருக் கருள் செய்தோனே. 16
செய்தவமுந் தமிழும் புகழும் புனைதிரு நீறும்
பொய்தவிர் உண்மையு நல்கிய நீ புவி பொன்னாசைக்
கைதவனேன்நிறி கழ்கின்றது காணல் களிப்பாமோ
வைதவிரா நெடுவேல் கொடுமாவை வகிர்ந்தோனே. 17
வகிர்வடு வென்றொளிர் கண்ணியர் கொங்கை வடுக்கண்டுண
மிகிழ்தளளின ........... ........... .............
நெகிழ தருமெண்னை நெடும்பொருள் வாதனை நீங்காதோ
வகிமிசை யாடும் பற்பரியேறு மயிற்சேயே. 18
சேயமுகங்களெவ்வாறு முனுலுரை செயுமாறு
தூயநெறிப் பொருளேயென நன்குணர் துணிபுற்று
மாயவலைப் பொருளாசை விளைந்திடல் வடபன்றோ
நீயறியா விதமுண்டு கொல்வேலொடு நின்றானே. 19
நின்றநிலைக் கிழவெய்திய தென்று நிணைத்துள்ளங்
கன்றலுறும்படி செய்த பின்னுஞ் சில களவூடே
பொன்றருமாறு புகன்றனையே யவை பொய்தானோ
குன்றம் தொக்க வெனைஞ் சினுமவந்நு குதிப்போனோ. 20
போன கழந்தெண்ணீரும் புசிக்கு மறிள வீதளிப்போன
ஆன நீ வேண்டுமட்டு மாட சடமேனறிக் கில்லாய்
தேனமுதம் போலுமவை செம் பொன்னிற் றாழந்தனவோ
வானவரூர்க் காவல் செய்யும் வடிபோசைப் பெருமானே. 21
பெருமானுந் துதிக்கு முன்றன்
மருமார்ந்த தமிழ்ப் பாடற் காடகத்தின் விலைகூறி
பொருமாண்பு மில்லார் போலூர்தோறு முழலகின்றேன்
றிரு மானறோய் மார்புடைய சீதான்றன் மருகோனே. 22
கோ னெனும் போருள்ளானாக குணமும் உள்ளாரென்றெண்ணி
நானெடு நாடகழிக்கின்றேன் வின்றபடி நீ நடத்தில்
ஊனெடுத்த பயன் கொளவேனுனக் கொளித்திங் கொன்று மில்லைத்
தேனெனத் தீஞ்சுவை காட்டுந் திருப்புகழ்க் கினியோனே. 23
இனிய தமிழ்ப் பாசுரங்களே ழிலக்கம் பாடுதற்குங்
கனியு முன் தருளாபற் காண்பதற்கு மாசை கொண்டு
பனியை நம்பியுழு வான்போற் பைம்பொன்னைத் தலைகின்றேன்
றினியிலைவேற் படையானே சற்றிரங்கத் தருணமிதே. 24
தருணமிதென் றெத்தனையோ தாமுரைத்து மிரங்குகில்லாய்
அருணகிரி யென்றென்னையத் தனைபோ தனறிந்த தெல்லாம்
பொருணசையாற் புண்பட இயபுலர் விடுத்திடத்தானே
வருணமா கதம்போலு மயிற்றோகை நிழலானே. 25
நிழல் போலு நீயிருந்து நின்னருடகே யிச்சைகொண்டுந்
தழல்போலு மிடக்கஞ் சித்தம் நியத்தும் விழைவுற்றேன்
கழல்போற்று மென்மனைத் துடகன் விலுரைத்தவை யெல்லாம்
விழல்போலப் போகாத விதஞ்செய்வாய் வேலவனே. 26
வேலை முதலாம் புனலில் வெந்தீடால் விடுத்ததமிழ்
மாலை யெல்லாம் தழுவதற்கும் வல்ல நீமாழை நல்கிச்
சோலை மலிநெல்லையிற் போய்ச்சுகமுறுச் செய்தருளாயோ
காலையினிற் பரிதியெனக் கவின்காட்டு முருகோனே. 27
முருகாரு மலரே நிதிமுப்போது முனைப்பூசித்
தருகார னைவருக்கும் அன்னமிடுவது செய்யும்
பெருகார் வத்திச் சையினாற் பீதகத்தின் பிணக்குற்றேன்
ஓருகாலாண்டஞ் செய்வார்க் குபதேச முரைத்தோனே. 28
உரைத்தருளா நின்சொல்லை யுண்மையென நம்பியதாற்
இரைத் தலையிற்றுரும் பொத்தேன் செப்பிய வாறின்றேது
நரைத்த வெள்ளிக் காசாயே நல்கிடினு நாறைள்ளேன்
வரைத் தலந்தோறுள்ளானே வம்பு செய்ய வேண்டாமே. 29
வேண்டுவன யாவு நின்பான மிக்ககோட்டு மெலிவேனை
யாண்டு கொண்ட தில்லை யென்றால் சிலமவ்விற்றையுமாதோ
கூணகிள மெய்த்தொண்டர் பணிகுன்றா மறபொன்றருவாய்
தாணடு மயின்மே ற்றுலிங் குஞ்சன் முகத்தோர் தற்பானே. 30
பாவையெனு மடநல்லானி மித்தமே பொருள் விழைந்த
................. ............. ............. 31
சாலவு நீயுரைத்தபடி பொருள் கொடுப்பாயா மாகிற்று மியேனத்தைக்
கோலவழி மடவார்க்கே கொடுத்திடேனின் வேலைக் குறித்த பூசைச்
சீலமுதலாய் வற்றிற் செலவிடுவோனன் தடிமைத்திறம் பூண்டோர்க்கு
கோலமென் விரிப்போர்க்கு முதவுவேன் கடம்பணியு மூத்தமாமனே 32
மான்னேய விழியார்க்கு வழங்குதற்கே
பொருள் விரும்பி வருந்தினாலுந்
தானளிக்க வேண்டாவோ தமிழ்ப்
பனுவற்கு தவிர்ர்த் தடங்கையாயோ
யானடிமை யென்பதுண்டே லெனதின்பதுண்ப
முன் தெனக் கூடாதோ
பானலங் கடகுஞ் சரியுங் குறங் கொடியு
மவழக் காடும்பவளக் குன்றே. 33
குன்றா தமிதவத்தாற் ருளாயென வெனைப்
பயந்தாள் கொதிகனை காணு
மென்றா பிந்த வர்த்திலேயேலினிக் கொடுகழு
முத்தி நலமெனக்கேன் வேண்டாம்
பொன்றானோ சத்தியத்து முத்தியினும்
பெரிதாமுன்பு நதிக்கானே
வொன்றாலு மளவிடுதற் கரிய திருவருட்
பெருங் கூத்துடைச் செவ்வேளே. 34
செவ்வேளைத் தொழுமொரு வனபொருளாசைய
பேய்பிடித்துத் திரிகின்றானென்
அவ்வேளை யுலகத்தார் அளைவோருஞ்
சொலுமிளப்ப மெனக்குத்தானோ
வவ் வேளையென் கனிவில்ப் படியே
தியமொழியையயத் திட்டாயோ
வெவ் வேளைப் புகழுவேர் மனநாணச்
சிவந்திலங்கு மேனியானே. 35
யானொரு வாறெண்ணி யெண்ணிக் கவி
பாடத்துவக்குவது மென்னை மிஞ்சித்
தானொரு வாறமைந்தெனயு மயங்குவது
நீயறிந்த சாதமேனு
மோனொரு பாட்டானாலு முடனேயப்
படிபலிக்க வில்லையையா
மானொரு காட்டினிற் பயந்த மடமகளைந்
தனியேபோய் வணங்குங்கோவே. 36
கோவேயென் குணந் தொருவன் குருமணியே
மயிலூருங்குமாவேளே
பாவேறத் தொடுப்பவருக் கெளியானே யெள்
சிர்த்திற மைப் பொன்னாசை
யாவே சமிருப்பதனைத் தவிர்த்துனருளாவே
சம்மைபச் செய்து
தீவேந் தாமுதலாய் கயவர்கள்
பாலர்ந்த துயர்தீர்த்தாளினனே. 37
இன்னே வந்தெதிர் தோன்றிப் பிறவாத
தனிவீட்டுளே கென்றாலு
மென்னே யமே பொருளென்றிருக்கும்
வாசிலர் வருத்த மீர்கைக்காய
பொன்னேற வேண்டும்ப பாலவிளையாட்டுஞ்
சிலவாறு புரிய வேண்டும்
பின்னே யகத்தி வேண்டு மெனச் சொல்வேனடய
சேவல் பிடித்துள்ளானே. 38
பிடித்தப்பிடிப் பிறுகுவது தளர்வதுவு மென்
செயலோ பெரியோர் தொன்னூல்
படித்தறியே னறனைக் கவிதை பாடிடச்
செய்தருளானது பாமேயன்றேர
வெடித்தகுர்ற பெருமுதலை யனைய
மிடிப்பணி தீர்மிகப் பொன்னிந்தாள்
வடித்த கதிர்வேலே நதிமயிலேறித்
தினமுலகை வலஞ் செய்வோனே 39
வலஞ்சேருங் குறக்கொடியு மிடந்ததோயப்
பெறுமானே மகளு மென்னை
நலஞ்சேரு மதலையெனப் பலகாலு
முரைத்திருந்து நாயினேனும்
பொலஞ்சேரு மனைவாயிற் படிதோறும்
போயிர்க்கப் புரிந்தாயந்தோ
சலஞ்சேருஞ் சடிலமுளார் சதலழுத்த
கனல்விழி யாற்றா வந்தோனே. 40
தரகுவேண்டுமாகிலு முனக்கீரு வன் றமிழ் கொடு பொருளீயும்
வரகுனானொரு வன்றனைக் காணுற் விடுத்திபுலது போதும்
பரவுவார் துயர்கண்டு கண்டுவப்புறு பாலனெனறறியாமல்
இரவினும் பலநாளுனைத் துதித்தன் னிசை கொளவானரி பாகோவே. 41
வாணிபஞ் செயும்வரினுந் தாழ்வுறு
மன்னவர் தமைக்கண்டுங்
காணியாகிலு மிர்க்க மொன்றனைகிலர்க்
கடவுளர் முனைத்தேர்ந்து
மாணியாம் பசும்பொன்னினைத்
தவத்தினும் திகமென்றாகின்றேன்
றேணிலர்விய முனை கொடு திகழ்வுறுந்
திருக்கை வோலடுத்தோனே. 42
எடுத்த தாளுடைப்பா சிவன்புதல்வர்கள்
இருவரிலிளையோன்றான்
கொடுத்தளிப் பவரெவர் கொலோ
வறிகிலேன் குளிர்மொழிக்கலை மாதே 43
கலைவிதித்த மாமுனிய தனகருவியிற்
கவின்றா வமைத்துள்ள
நிலைபொறும் பனுவற்றொகையாவையு
நிகழ்த் திருநதிர் விந்தும்
புலையாகையினும் புகுபொருண் மயல்
கொடுபுலர்ந்திடப் புரிந்தாயே
தலைமையாகிய தெய்வமே யாவினுந்
தனித்தனி வாழ்வானே. 44
வாழும் வானவர் தங்களிலியாவர்
தாம்வந்தெனன மதியாமற்
கூழுவெங்கலப் பிணியினைத் தொடைப்பினுந்
துணிந்து நான்வாதம்மே
லாழுமெய்யறிவினை புகழ் பனுவலோ
ராறொடு தொன்னூறும்
வீழுமன பொருதொடுத்தணிகுவனிது
மெய்யலாற் பொய்யன்றோ. 45
அன்று தொட்டிது நாள்வரை பனுவல்
திறனைத்தையுமணி தெய்வ
மொன்று மில்லையப் பெரும் புகழ்
விரும்புவதுண்டெனிலுயர் தானுங்
கன்று மாறு செயமிடியினைத் தணந்து
பொற்களஞ்சியந்தரு மன்றோ
குன்றுறா மொழிச்சுவை பொருட் பொலிவுணர்
குணம் பெறுபுலவோரே. 46
புலவர்கோனென்ப பெயிர்புனைந் தன்னவர்
புகல கலித்தொகை வேண்டிப்
பலவினோ தமுன்புரிந்த வேற்குருபான
பகர்வன முமுதாகி
நிலவுகின்ற வனாகினுரு நினைக்கும்
கணந்தோறுங்
குலவுமின்ப மிக்குயாச்சியே யவ்விதங்கூறிருந்
தகைத்தன்றே. 47
தகைக்கலாம் திரிகாமுகமாறுடைச்
சரவணபவ னென்னைப்
பகைக்குமாந்தர் கடகு வகையும் விரும்பிய
பண்பினர்க்குள நோவு
மிகைக்குமாறு செயமிடியினைத் தடிந்திடும்
விறலிலானா மாகிற
றிகைக்கொணா நலஞ் செயுமவாதமைத்துச்
செய்வதிற் கலியேனே. 48
ஏனமாகி முனமறை கொணர்ந்தொரு
கவியிடைத்த நாவலன்பின்னே
போனமாத வன்னந் தையிலிற்ந் தன்ன
போலுமென்று ணர்வுற்றே
னானவாறி லையா மெனில வனபொருளடி
யவர்களுக்கு குதவாம்
லீனாவள்ளுர் மாதி கொண்டருந்து
தற்கிசைவ தென்னியம்புகீரே. 49
இயம்பு செந்தமிழ் ருமைதேர்ந்
திலரிடத்திர்க்குமோ றெனைவிட்ட
சயம்பு வினறலை நான்கு மற்றொன
றெனத் தறிபடத்தகுமாகி
னயம்பு கன்றசொற் பார்தி மங்கல
நாணழிந்திடுங் கொல்லோ
கயம்பு ரைந்த சொன்னகடயுடைப் புலவரைக்
கலந்து வாழ்ந்திருப்பாளே. 50
இருப்பு நெஞ்சுடைய பொல்லாரிடத் திளைத்தேனின் சொற்
றிருப்பு கழிலக்கம் பாடிச்சேவடிக் கணிவேன கண்டாய
விருப்புறு மளவிற் செம்பொன் விரைந்திளித் தருளவேண்டுங்
கரும்பு விற்காமனா னுங்கவினுடைக் கந்த வேளே. 51
கந்தனே பரமென்றெண்ணிக் கருத்து நைந்துருகு நாயே
னிந்த வெங்கலி நோய்க் கஞ்சியாவா பொன்னீந் திட்டாலு
மந்த வானவரையாட லாகுமென்ற றைந்தேனந்தோ
முந்த நீ வேண்டு மன்றோ முருகவிழ குரவத்தானே. 52
குரவருக காசா முன்றன் குரைகழலன்றிப் பின்னும்
பரவலுஞ் சிறிதுண்டு அந்தப் பண்பை நீயறிகிலாயோ
விரவல னெனும்போ யீகையோன் என்னும் பேரிந்தாள
சரவணத் தபத்திற்றோன றித்தகு வரைத் தடித்துள்ளானே. 53
தடித்தெனக் குலவும் வேலுஞ் சலச் நோமுகமுந்தாளும்
இடிக்குர்ற் சேவலாதி யாவையு மெண்ணு நெஞ்சும்
படிச்சுமையாவார்த மபொறபண நினைத் துழல்லாமே
கடிக்கடம் பலருந் திண்டோட கனகமால வரையன் னானே. 54
நானறிந்தறியாதுன்பாடைத் திய குற்றங் கோடி
யான போதிலு நீயென்னை யளிப்பதே கடமை யன்றோ
மீனகே தன்னைப் பெற்றாள வெறுத்ததான மிகவு நொந்தேன்
பானல் உங்க உடம்பூத்த பன்னிரு புயத் தெம்மானே 55
மானேநோவிழியார் மோகவலையினுங் கொடிய பைம்பொன்
பூனை போற்பதுங்கி நொந்து புலம்பிட படுத்து மென்னை
யானை போற் பிளிறு மாண்புற்ற விதாச செயவல்லாயோ
கூனை நோமுலைப் பேய தன்னைக் குன்றொடு தடிந்த கோவே. 56
கோவை வாய்குறத்தி பாகா குளுசகளி கொழுநா கொற்ற
மாவை வென்றவனே யென்ன வழுத்திய வாயளந்தப்
பாவையும் பகாச செய்த பண்பையான் அறிகின்றிலலேன்
பூவை நேருமையாளீன்ற புதல்வனாம் புனிதவேளே. 57
புனிதமா தவமுஞ் செஞ்சொற் புலமையின பொலிவுந்தோர்
மனிதரைப் பொருளென் றெண்ணி மடமையால் வருத்த மேற்றேன்
கனிதருந் தமிழவேட்டம் பொற்காசெனக் கருள வேண்டும்
பனிதரு மலையாள கொங்கைப் பாலரு வாயுள்ளானே. 58
உள்ளவை யாவு நின்பாலுதவியதம்இயனேற் கோர்
எள்ளல் உம்புகழுமில்லை யென்பது சாதமேனுங்
கள்ளவன கலிநோய்க் கஞ்சிக் கனகம வேட்டு ழன்றேன கண்டாய்
வள்ளல் அந்தகைமை காட்டாய மலைதோறும் வசிக்கின்றோனே. 59
வசியறா நெடுவேற் பூசை விளப்பமே முதலதாகப்
பசிதணித்திடன மட்டுள்ள பலவகைத் தொழிற்கும் பத்தி
சுசி முதலிய வற்றோடு சுவணமும் வேண்டு மன்றோ
நிசிசார்குலத்தை நீறா நிற்றிடு நிமலவேளே. 60
நிமலஞானமு நீதா வல்லையென்
றமார்வாழ வையுமைய மென்றென்னீனனே
றமர் வருந்தற் சகிக்க வல்லேனலேன
சமர சானந்தச சண்முக நாதனே. 61
நாதனார்க்கு நவிலரு மெய்பொரு
ளோதவல்லை யுனைத் தெமாழுநாயினே
னேதமுற்றிங் கிடைந்திட லாகுமோ
சீதநீபச செழுந்தொடைச் செல்வனே. 62
செல்வா வாயிலிற சென்று செனறெய்க்கு மென்
பலவகைத் துயர் பாழ்படப்பைம் பொனீந்
தெல்வனப் பொடெதிர்வாற் கெண்ணுவாய
கலவரைக்கு கைக்காவில கொள்க நாதனே. 63
கந்த மீறுங் கடம்பினைப் போலவதாஞ்
சந்த மாயிர் நூறினிச் சாற்றுவே
னிந்த மாலைக் கிரங்கிடல் வேண்டுமோர்
செந்தழற் கிரிநேரெழிற் சேந்தனே. 64
சேந்தனேயெனச் செப்பிடுஞ் சீர்பெறு
மாந்தர் பாதமலர்ந்தொடு மவணபொடியா
யிந்தணிந்து மடற்கலிக் கஞ்சினேன்.
பூந்தண மேனிப்புனக்குயில் பங்கனே. 65
பங்கமுற்று பதைத்திடும் பாவியேன
சிங்கமென்று திகழ தாச செய்யுமா
றங்கண ஞாலத் தரும பொருணலகுவாய்
சங்க மூன்றுணர் தண்டமிழ்த் தெய்வமே. 66
தெய்வமொன்று தெளிந்தது சத்திய
உய்வதற்கும் உபாயமுண்டு ஓர்ந்துளேன்
பொய்வழக்கா பொருள்வழிச் செல்லுமென
னைவாபெற் றமைவாரல தில்லையே 67
இல்லையென்று முண்டென்று மியம்பிடாக
கல்லை நேரொரு காவலன் பாலுமென்
சொல்லை வீணிற் சொரிந்திடச் செய்த்தேன்
வில்லை நம்பிய வேடர்தம் மீளியே. 68
மீளியா முதல் வீரன்முன் வென்றதோர்
காளி தன்னைக் கருதிய சிற்சில
ராளி போன்ற விரிந்தார் அறியாய் கொலோ
தோளியோர் கிளி சூடிய துங்கனே. 69
துங்க வேல்புனைதோளுடைத் தூயநின்
பங்கயப் பதமனபம் பொனிற் றாழவதோ
விங்கனிந் திடலியர் தறியாய் கொலோ
வங்க தைத்தாற் காம னடையாளமே. 70
ஆள்வது நிச்சயமாகிலி லங்கிய வாடகமிக்
குடையாரும் வயங்கெழு
வாள்வலி பெற்ற வாதாமும் வணங்கிடும்
வாழ்வை முதற்றருவர்யென நம்பினை
வேள்வ குளத்தொடை நாணமுறும் பழமீற
மணத்தகுரா வணியுங்குக
ணீள்வயிர்த் துவலாரி கண்ணப் னெனேய
னெனப்பகர்வாருணர் கந்தனே. 71
கந்த மலிந்தகடம்மைப் போன் மொழி
கண்டவை கொண்டுசொல் கந்தப் பாவிலா
வந்தனை நணசுவையுண் கைக்காறிரு
விண் செவியொன்றின வென்கப் பேறருள்
சந்தத நொந்து புலம்பித்தான வாதஞ்
சிறையின் கணிருந் தெய்த்தோனுட
னந்த விதங்கனவின் கடயோய் நுவலன்பு
பொலிந்த குழந்தைத் தேவனே. 72
தேவரெ வர்க்கு மரூனார் தனாகிய சேயை
நினைத்து மொராயிர் நாளுன
தாவலளிக்குதும் வீணினி னீவதறாதி
ரென்க் கனவூடவனோதியு
மாவலறித் தறை மேலவிடி மோதிய
மானுறு சத்தியினோடு வாடியி
மீவதர்க் கமிலா தவாவாயில்லே கவிதே
திடலியாது சொல்வாணியே 73
வாணிக்கொரு முது நூல்பகாவித்தகன்
வாசக் கமலம் உளானை யிழத்தவனே
லெணிப் பிறையுடையோர் பணி சற்குரு
வேடிச்சியினபு பேணும் விரும்பினன்
வீணிற்றி ரிதருவேனை வளைத்தெனில்
வேடத்தொடுகன வடுநடித்தபி
னாணிக் கன்கமு மீதுமென்ச் சொல்லாவிக்கதி
கவிசாரம் விளைத்ததே. 74
விளைநற் வங்கனி வாயிதழிற்றரு மவிகசித
மங்கையாமோக மென்ப்பகா
தளையினிடம் படுவார்வனையத் தருதமிழையு
மனபொடு மாலையெனப்புனை
யினையவனிந்திரா சேனையினுக் காசென வுணருந்
தவமாகிய வித்தருண
முளையென வந்ததொளிரா டகவிச்சை நன்முனிவர்
பெரும்புடைமூ சனியற்றுமே. 75
இயலிசை நாடகமென்றுள முத்தமிழியல்
பருணமாணிவன் சாணத்துணை
மயிலறும் வீடெனநம்பிய சித்தர்கள்வரை
தருநூல் கலியின்றி யறுத்தபின்
முயல்வுறுமாதவ நன்றென மெத்தவு மொழிதலை
நானமுனிகப்ழந்த்து தம்பிதம்
வியன்மிகு மாடகம் விண்டமொழியுபடி
விரைவின்னியருள் குஞ்சரி நடபனே. 76
நடபினருக்கு விரும்பும் வாந்தரு நற்குணமுற்றி
சிவன்குரு வென்றொளிர்
பெடபுனிடத்திலிருந்து மொழிந்துள
பிச்சையினைத் தாவுந்துணிகின்றிலை
விடபுலமுற்று வருநதிறலும் பலவித்தையும்
உத்தியுமென்று தவுங்கொலை
னுடபிரியத்தினடம் புரியுங்குக சொக்கலையிற்
சிவை கொண்ட குழந்தையே 77
குழவியெனத் தின்மென்றனை நண்ணிய
குறமகள் ததிதருங்கொடி யுன்னொடு
கழலினவிருப்பமுறுஞ் சிறுவனமிகு கலியிலிளைப்ப
தெனெனறிலா கொன்னுவ
லழகிய நட்டமிடும் பசும்ளுஞையில
யிலுடனுற்றுலவுஞ் சிறுசண்முக
விழவு நடத்தி வணங்கிய விண்ணவர்
விசனமழித் தருளந்தனியண்ணலே. 78
தனியமர் வள்ளி தன்முன் பிற போய் வெகு
தாமிருகை கொடுகும்பிட்டோனெனு
மினியது சொல்லிடு சந்தப் பாவலரெவை
யெவையுள்ளினு மந்தப் போதருள
கனிவுனதுள்ளக மொன்றிச் சீர்தால் கருதின
னெள்ளவி லின்பப் பேறருள
குனிதருவில்லியா தங்கடபேணிய
குகவொருகை முகவனபிற்றோழனே. 79
தோழனேன்று சொல்பாட்டணிந்தொரு
தூது சென்றவர் பாற்பிறந்தவர்
வீழவறைருளாடசியும் பகாவேலனென்
றுனை வாழ்த்து மென்றனை
யூழடாநதி வண்வாட்டுகின்றதையோவி
நின்கழல சூட்டலென்று கொல்
காழணைந்துள மாப்படும் படிகாதியுஞ்சமா
வேட்ட மொய்ப்பனே. 80
மொய்மபிற்றின முத்தமிழும் புனைவேன
வம்பிறபொருள் வாதனையிற் கெடவோ
கொம்பிற குயிலன்ன குறக் கொடித
னம்பிற்றி கழகண்முன்யா நதவனே 81
அயனோர் விதமாகவமைக்கினு நின்
செயலவந்து திருத்துமெனத் துணிவேன்
மயலாலின மாழை வழக்குறவோ
செயமே வியவேல் புனை சேவகனே 82
சேவற் கொடியே செயமென்றுரையா
பாவுப் பொருளாசை பறித்தெறிவாய
காவற் றொழில் கொண்டுள கார்முகின்முன
றேவர்க் குரை செய்த சிறப்பின்னே 83
இன்னா தியவெண் வகையும் பாமென்
றுன்தா ருள்ளிலுணர்த்தியு நான்
றன்மால கொடுதாரணியிற கெடவொ
சின்மீறிய சேவல் பிடித்தவனே 84
தவமேது மிலாத வாதம் பொருளுக
கவமே விழைவுற்ற லையத் தகுமோ
குவடாயிர் கோடியினுங் குலவும்
பவளாசல மன்ன பாம்பானே 85
பாமே பாமென்று பகாநதிடினுங்
காவென்ப வாகண்டு நகைத்திடவோ
மாமன்னவர் வாயிலில் விட்டனைவண்
சீர்மாறுந் தெய்வசிகாமணியே 86
மணியிற்றி கழ்வண்டமிழ் மாளிகைபெற
றணியத் தகுமார் விமுனக் கிலையோ
துணியற்று திரதோகை யுடுத்தவண்முன்
கணியொத்துறு காமுக வேடுவனே 87
வேடவர்க்கும் விரைந்தருள வேலவனென
பாடற்கொடு பைம் பொன்னித் தன்னே
லாடற் சிகிமீதவனைக் கருதி
கூடத்தரு கொள்கை மிகுந்திடுமே 88
மிகுதீமை விளைக்கு மிடிக்கனலிற
புகுமாறு புரிந்திடல் புண்ணியமோ
குகுகூகு குகூவெனு மோர் குருகைத்
தொகுதோண் மிசை சூடிய சுந்தரனே 89
தர்மொனற்றி யாதவர்தம் யெதிர்நின்
றிர்வென்றெ னையினனமும் விட்டுவிடேல்
குர்வுங் கமழ் கூதளமும் பிறவும்
விர்வும் புயமீதணி வேலரசே. 90
அரசார்திய பொய்ப் பொருளுளார்தமை
வேட்டலையினும் வரொருமயிவேற
புரவலனடிமையெனும் பெயரல்லாற் புகனறிடேன்
புகலினும் பொய்யாம்
பரவைநீர்ப்பு வியிற் பற்பலரறிவார் பரிந்தெனைப்
புரிந்தருள பாலித்
திரவிலனெனும் போதவிர்த் தினிதாள்
வாயெந்தையே செந்தினாயகனே. 91
நாயினைப் போலு மனத்தினோடலையு
நவைதரு நல்குரவென்னும்
பேயினைத் தணந்துன பெய்கழற்றிருந் தாடபிரச
மாமலர் முடிசூட்டி
யாயிர்ந்தா மெனகனவினீ வலிதுற்றலாந்
வாறனைத்து மெய்யாக்கிச்
சேயினிற்றழு வியர்ப்படுதென்றுனர யாயதிருப்பாங்
கிரியுடைத்தேவே. 92
தேவரு மறிதற் கரிய வயற்தனிற்
சிறிதுரைத்திருந்து மென்விந்தை
பாவ மக்குடையார் மனைப்பொருள்
விழைந்து பரிசழிந்திடுவதேன் பகராய
நீவகுத்திடும் நநெறியலாற செல்லு
நேயமுண்டென்க கென்னிசமோ
காவடர் குடுமிப் பழனியங் கிரியிற்
கடவுளே கருணை வாரிதியே 93
வாரி நீரனையார் பொருள் பெற
விரும்பி மறுகுவதறிந்து நீயிர்ங்கிச்
சீரிய பொருளிற் சிறிதளித் தாளாத
திருக்கினை யெவ் வணந்தீர்
காரிய முடிதற் காணுவேன் கனவிற்
கழறலும் பலித்திடக் கானே
னாரியா பாவு மோக்க கிரியிலா
னையாண்டருளிய வருதே 94
அமுத நேர்மொழியார்மயலினுங்
கொடிதாமாட விருப்பினாலயர்ந்து
சமுசயக் கடலிற் சுழல்வுறு நதிமியேன்
றனைத்தகுத் தாளவதென றுரையாய்
குமுறு பேரொலிக் காரானையின்றிரளைக்
கொண்ட லென்ற ஞ்சி குரங்கு
கமுகிலாமடலிற் பதுங்கிய சோலைக்
கவின்மலைக் கடவு னாயகனே. 95
கூடமொரு மூன்று மொழுக்கு மாலியானைக்
கடகநேர் கவித்தமிழ்ப் புலவர்
திடமறந் தொனிக்க மடங்கலேற்றொலி
நேர்திருப்புகழ் தொடுக்கும் வாழ்வளித்து
மடமிகுந் துலகப் பொருளின்மால் கொண்டு
வருந்தினேன் மயிலில் வந்தருள்வாய்
தடமலைக்குவகு தொறு நடம் பயிலுஞ்
சாணவாரி சமுடைத் தருவே. 96
தருகுதுமென் நீயுரைத்த வாறுதவர்த்
தன்மையிற்றிழைத்தவை யன்றி
யொருபெருந்துயரு மெனக்கிலை யன்றோ
யுன்னருளுணர்கிலாதுண்டோ
விருபது நூறு பவனளித் தொருவேந்தெனத்
திகழாணமையு மின்னே
யருளுதும் வேதியாதி பின்றரு மென்றறைந்த
தாரயில கொள்வானவனே 97
நவமலிமதுர்ச் செழுந்தமிழ்த்தேய
நனந்தலை யிருந்த மூவேந்தர்
சிவகதி பெறலோர் விதத்தினாலறிந்
தேனறிருக்குறு கொடுந்தமிழ்த தேயத்
தவனெனுஞ் சேரன்கயிலை மாலவரைக்
கோவல்லதுமக்க நாடதற்கோ
புவனியோறியப் போயது புகலாய்
போர்புரிபுலவு வேற்புயனே 98
புயங்க மாலிகைத் தோட்கிழவனார்
நாட்புலவர் பாற் புரிந்த வாறுன்னி
நயங்கமழ் மதுரக்கவி புனைந்திந்
நாணலம் புரிந்திலை யெனின் ஞானப்
பயங்கலுழ் மலையாள கற்பினுக்குலகம்
பழுதுரைத் திடுமெனப் பதைத்ததேன்
இயங்கணிக் கனக்குவைய தேயிப்
போதெனக்கு வேண்டுவது வேலிறையே 99
இறைவ நின்னருள வந்தென்னிடத்து
ரத்தவியல பெலாங் கருதியுமடையுங்
குறை தவிர்த்தான னெடியவாயுடையிற
கூட்டிடல் அன்று கொல் கூறாய
நிறை யருட்கடலே நித்தியப் பொருளே
நெறிதோறுங் கலந்து மேனினருய
பொறை மலிகுமா குருபா முருகப் புலவனே
பொருவில் செம்பொன்னேவாள். 100
செம்பொன் அந்தாதி முற்றிற்று
------------
துணைநூற் பட்டியல்
1. சம்பந்தன். மா.சு.,
அச்சும் பதிப்பும், மணிவாளர் பதிப்பகம், சென்னை, 1977.
2. மயிலை.சீனி. வேங்கடசாமி,
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழிலக்கியம், மெய்யப்பன் தமிழாய்வகம், 2001.
3. முருகதாச சுவாமிகள். தி.செ., வண்ணச்சரபம்,
தண்டபாணி சுவாமிகள் வரலாறு, கௌமார சபை வெளியீடு, 1998.
4. இளங்குமரன். இரா.,
சுவடிப் பதிப்பியல் வரலாறு, மெய்யப்பன் தமிழாய்வகம், 2001.
-----------------
அகரவரிசை செய்யுள் முதற் குறிப்பு
செய்யுள் முதற்குறிப்பு --- பாடல் எண்
அன்று தொட்டிது 46
அரசார்திய 91
அயனோர் 82
அமுத 95
ஆள்வது 71
இல்லையென்று 68
இன்னா 84
இன்னே 38
இயம்பு 50
இயலிசை 76
இனிய 24
இருப்பு 51
இறைவ 100
இறையும் 5
உள்ளவை 59
உரைத்தருளா 29
எந்த காப்பு
எடுத்த 43
ஏனமாகி 49
ஐயமறுத்தறி 16
கந்தமலிந்த 72
கந்தமீறுங் 64
கந்தனே 52
கலைவிதித்த 44
காங்கு 4
குன்றா 34
குகனுனார் 2
குரவருக 53
குழவி 78
கூடமொரு 96
கோவேயென் 37
கோனெனும் 23
கோவை 57
சாலவு 32
செய்தவமு 17
செல்வா 63
செவ்விய 15
செவ்வேளைத் 35
சேந்தனே 65
சேயமுக 19
சேவற் 83
தர்மொனற்றி 90
தரகுவேண்டு 41
தவமேது 85
தடித்தென 54
தனியமர் 79
தருணமிதென் 25
தருகுது 97
தகைக்கலாம் 48
துங்க 70
தெய்வமொன்று 68
தேவரு 93
தேவரெ 73
தோழனே 80
தேசிகன் 8
நவமலி 98
நயினருக்கு 77
நாதனார் 62
நானறிந்தறி 55
நாயினை 92
நின்றநிலை 20
நிழல்போலு 26
நிமிலஞான 61
பங்கமுற்று 66
பாமே 86
பாவையெனு 31
பிடித்தபிடி 39
புயங்க 99
புலவர் 47
புனிதமா 58
பெருமானு 22
பேறெலாந் 6
பொன்வாஞ் 1
போன 21
மகிழ்மலர் 14
மணியிற்றி 87
மான்னேய 33
மாரன 11
மானே 56
மிகுதீமை 89
மீளியா 69
முகமோராறு 10
முருகாரு 28
மொய்ம 81
யானொரு 36
-------------
தண்டபாணி சுவாமிகள் நூல்கள் பதிப்பாய் வந்தனை
1. அரிஏபோத தந்தாதி
கௌமாரசபை, திருவாமபாத்தூர், 1973
2. அருணாகிரிநாத சுவாமிகள் புராணம்
கௌமார சபை, திருவாமாத்தூர், 1967
3. அறுவகை இலக்கணம்
இந்து தியாலஜிக்கல் யந்திரசாலை சென்னை, 1988
4. இராமலிங்க அடிகளார் பதிகம்
கௌமாரசபை திருவாமாத்தூர், 1967
5. எழுபாஎழுபதுபொய் செப்பாக்கம், திருமால் பதிப்பகம்
கௌமார சபை, திருவாமாத்தூர், 1971
6. ஏகந்தான் இதழந்தாதி
இந்து தியாலஜிக்கல் யந்திர சாலை சென்னை, 1988
7. ஔவையார் பதிகம்
கௌமாரசபை திருவாமாத்தூர், 1966
8. கணபதி ஆயிரம்
உலகத்தமிழ் கல்வி இயக்கம், 1994
9. கலம்பகம் திரிவந்தாதி
ஸ்ரீ நிதி அச்சுக்கூடம் 1977
10. குருநாதன் அந்தாதி
கௌமாரசபை திருவாமாத்தூர், 1977
11. குருபரத்தத்துவநூல்
கௌமாரசபை, திருவாமாத்தூர், 1966
12. கௌமார முறைமை
கௌமாரசபை, திருவாமாத்தூர், 1964
13. சடகோபர் சதக அந்தாதி
திரு.க. ரங்கசாமி நாயுடு அவர்கள், இடைப்பாக்கம்
நினைவுமலர், 1996
14. சண்முகநாதப் பெருமாள் பிரபந்ததிரட்டு
கௌமார சபை திருவாமாத்தூர், 1968
15. சாத்துக்கவி
சிதல்யாணம் கம்பெனியர்
16. சென்னைக் கந்தக் கோட்ட கந்தபெருமாள்
தோத்திரத்திரட்டு 1898
17. ஞாயிறு ஆயிரம்
தமிழ் பதிகம் சென்னை-96,1980
18. தமிழலங்காரம்
கௌமார சபை, திருவாமாத்தூர், 1964
19. தனிப்பாடற்திரட்டு
கௌமார சபை, திருவாமாத்தூர், 1968
20. திருச்செந்திற்கோவை கௌமாரவிஜயம்
கௌமாரசபை திருவாமாத்தூர், 1968
21. திருச்செந்திற் பைந்தங்கள்
சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம், 1969
22. திருமாலந்தாதி
கௌமார சபை.திருவாமாத்தூர், 1967
23. திருமுருகன் திருவிளையாடல்
கௌமார சபை திருவாமாத்தூர், 1964
24. திருவாமத்தூர் தலபுராணம்
இந்து தியாலஜிக்கல் யந்திரசாலை, சென்னை 1988
25. திருவரங்கத் திருவாயிரம் திருமளந்தாதி
பி.ஆர். ராமய்யா அச்சுக்கூடம், 1919
26. தியானனுபூதி
கௌமாரசபை, திருவாமத்தூர், 1965
27. தில்லை திருவாயிரம்
கலாரந்தநாகரம், 1988
28. தில்லைபாரதி நெல்லைபாரதி
கழகவெளியீடு, 1964
29. கோத்திரத்திரட்டு
கௌமாரசபை திருவாமாத்தூர், 1964
30. தோத்திரப்பாமாலை
கௌமாரசபை திருவாமாத்தூர், 1964
31. நானினச் சதகம்
திருவாமத்தூர், முருகதாசபிள்ளை, 1951
32. பழனி திருவாயிரம்
கிருஷ்ணன் பிரஸ், 1915
33. புலவர் பிராணம்
கலாரத்னாகரம், 1908.
34. மயிலாசனம் கலம்பகம்
கௌமார சபை, திருவாமாத்தூர், 1924
35. மனுநீதி திருநூல்
கௌமார சபை, திருவாமாத்தூர், 1924
36. முசுருந்தநாடகம்
கௌமாரசபை, திருவாமாத்தூர், 1970
37. முத்தமிழ் பாமாலை
கௌமார சபை திருவாமாத்தூர், 1970
38. முதலொழிய அந்தாதி
ஆதிகலாநிதி அச்சுக்கூடம், 1988.
39. முருகதாதரனுபூதி
கௌமாரசபை திருவாமாத்தூர், 1964
40. முருகப்பெருமாள் படைவீட்டு பாமாலை
அருட்பெருஞ்சோதி அச்சுக்கூடம், 1925
41. முருகப்பெருமாள் பைந்தமிழ்திரட்டு
கௌமாரசபை, திருவாமாத்தூர், 1970
42. வண்ணத்தியல்பு
புலமைவெளியீடு நாவல் ஆர்ட் அச்சுக்கூடம், 1987
43. வண்ணமஞ்சரி
ந. மகாலிங்கம் பொள்ளாச்சி, 1980
44. வருக்கக்குறள்
சென்னை தென்னிந்திய மகாஜனசபை, 1946
45. வல்லநல்லூர்ப் பிரபந்ததிரட்டு
கௌமரசபை திருவாமாத்தூர், 1971
46. வேல் அலங்காரம் மயில் - அலங்காரம்
ஆறெழுத்து அலாங்காரம், முருகானந்தலகிரி
சேகர் அச்சுக்கூடம் சென்னை
47. ஸ்ரீ முருகப்பெருமாள் பதிகம்
கௌமார சபை திருவாமத்தூர், 1967
48. திருவேரகவெண்பா அந்தாதி
வி.அருள் சுவடியியல் பட்டயப்படிப்பு பதிவேடு
தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைகழகம் 2005
49. சைவசதகம்
விஜயலட்சுமி, சுவடியியல் பட்டயப்படிப்பு பதிப்பேடு
தமிழ் இலக்கியத்துறை சென்னைப்பல்கலைகழகம் 2005.
50. சப்த சதகம் (முதல்பாகம்)
பாரதி, சுவடியில் பட்டயப்படிப்பு பதிப்பேடு
தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் 2005
51. சப்த சதகம் (இரண்டாம் பாகம்)
ந. பரிமளா, சுவடியியல் பட்டயப்படிப்பு பதிப்பேடு
தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம், 2005.
------------------------
This file was last updated on 24 Dec. 2024
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)