pm logo

பள்ளிகொண்டான் பிள்ளை இயற்றிய
பிரபந்தத் திரட்டு -16
திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதி மாயவன் மாலை

tiruvallikkENi pArtacArati mAyavan mAlai
of paLLikoNTAn piLLai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பள்ளிகொண்டான் பிள்ளை பிரபந்தத் திரட்டு - 8
திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதி மாயவன் மாலை.

Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய ஸ்ரீமாந் - கச்சிடக்கடாம்பி -
இராமா நுஜசார்யஸ்வாமிகள் திருவடி சம்பந்தியும்,
எதிராஜதாஸரென்னும் தாஸ்ய நாமியுமாகிய ப்ரபந்த வித்வான்
கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய
பிரபந்தத் திரட்டு

இஃது ம-ள-ள-ஸ்ரீ அ. இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்த வித்வான் - காஞ்சீபுரம் ஸ்ரீமா ந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு, திருமணம் - செல்வகேசவராய முதலியார் அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராய நாயகர் ஆர்பனேஜ் அச்சிக் கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 வருடம், ஆகஸ்ட் மாதம்
Registered Copyright
------------

திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதிமாயவன் மாலை


ஸ்ரீ ஸ்ரீமதேராமாநுஜாய நம:

காப்பு.
அருச்சுனன்றன் சாரதிநம் மல்லிக்குளம்வாழ்
அருச்சுனமன்றிடந்தவப்பன் - றிருச்சரணிற்
சொற்றொடையல் சூட்டநெஞ்சே தொல்குருகைத்தண்வகுள
நற்றொடையன்மாறன்றா ணம்பு.

நூல்.
அகரமுதலவனைத்தெழுத்தும்மதுபோன்முதலா
நிகரவுலகுநினையுடைத்தாதலினின் கடனாந்
திகரமறவவ்வுலகத்துயிர்களைச்சேர்ந்தளித்தல்
மகரவுயிர்க்குயிரே பார்த்தசாரதிமாயவனே.       (1)

திருக்கிளர்மார்பதிருவல்லிக்கேணிய சீதமுகில்
உருக்கிளர்மேனியவோவாக்கருணைக்கண்ணுத்தமனே
செருக்கிளரென்மனச்செல்லலொழித்திதிகந்தமெலாம்
மருக்கிளர்மாலைப்பயப்பார்த்தசாரதிமாயவனே.       (2)

ஆழிமுரசினனைம்புலவேடரறுபகைஞர்
பாழிமுருக்குமுரமுநின்பாதப்பணியுந்தந்தாள்
ஊழிமுதல்வவுயிர்க்குயிராகியொளிர்தலைவ
வாழி முகுந்தவரபார்த்தசாரதிமாயவனே.       (3)

மாவல்லவமுற்றும்வாய்ந்திட்டவாஞ்சையமாமறையின்
மாவல்லிசையொலிவைகுந்தவாணமனக்கவலை
மாவல்லிநீங்கிடவல்விரகொன்றுமதித்தருள்வாய்
மாவல்லிக்கேணிமகிழ்பார்த்தசாரதிமாயவனே.       (4)

ஒண்மையுணர்வினருன் பாதசேவையுடுபமரீஇத்
தண்மைச்சனனமரணசுகதுக்கசாகரத்தை
எண்மையினீந்துவரேழையென்செய்கேனிரங்கியருள்
வண்மையல்லிக்குளம் வாழ் பார்த்தசாரதிமாயவனே.       (5)

காட்சியிலென்போல்பவர்கள் பிறவிக்கடல்கடப்பான்
பூட்சிமெய்ஞ்ஞானம்புகட்டி நின்பாதப்புணைகொடுத்து
மீட்சியின் மோக்கக்கரையேற்றுதனின்விழுக்கடனாம்
மாட்சியல்லிக்குளம் வாழ் பார்த்தசாரதிமாயவனே.       (6)

பரந்தருபாவச்செயனீக்கிநின்பதபங்கயமே
நிரந்தரமேத்திநின்னாம நிகழ்த்திநினதுருவே
உரந்தரவுள்ளத்திலுன்னியுய்வானல்லுணர்வுபெற
வரந்தரவேண்டுமகிழ்பார்த்தசாரதிமாயவனே.       (7)

கஞ்சங்கதைகற்பகஞ் சங்கநேமிகலப்பைகொடி
விஞ்சங்குசங்குலிசாதிநற்சின்னம் விளங்குநின்றாள்
வஞ்சங்குடிகொண்மனத்தேன் வழுத்தியுவானருள்வாய்
மஞ்சங்கசற்றந்தவபார்த்தசாரதிமாயவனே.       (8)

ஓராமறைபயின்றம்மறைசொற்றனவுற்றியற்றி
நேராவருணநெறிதவம்யோகத்தினின்றுநிற்கே
ஆராதனஞ்செய்யுமாற்றலிலேற்குமஞர்ப்பிறவி
வாராவணங்காத்தருள் பார்த்தசாரதிமாயவனே.       (9)

சன்மங்கருமந்தவிருநின்றோற்றங்கள் சாகைமறைத்
தன்மங்கணாட்டவுஞ்சாதுசனங்களைத்தாங்கவுமாங்
கன்மங்கடலிற்பெரிதாப்படைத்த வெற்காப்பவரார்
மன்மங்கலாகரனே பார்த்தசாரதிமாயவனே.       (10)

கோப்பியமாநின்னவதாரக்குய்யங்குறிக்கும்வலி
பூப்பெறுவேதபுருடற்குமில்லெனிற்போந்தவிஞ்சைக்
காப்புறுவேனெங்ஙன்காண்பலிரங்கியெற்காத்தருள்வாய்
மாப்பயிலல்லிக்குளப்பார்த்தசாரதிமாயவனே.       (11)

வந்தார்த்தர்செய்யஞ்சலிமுறைமாப்புகன்மன்னிடமாய்ச்
செந்தாமரைபுரைநின்னடியிற்சரண் சேர்ந்தனனென்
சிந்தாகுலமறச்செய்திதிருவருடீனசன
மந்தாரவல்லிக்குளப்பார்த்தசாரதிமாயவனே.       (12)

முரணார்பொறிவழிமோவாது சன்மமுடித்திடுநின்
சரணாரவிந்தத்திற்றங்கியென்னுள்ளந்தனித்திருப்பான்
அரணாமருள்செய்து காத்தியெவருமடைசரண
சரணாவல்லிக்குளம்வாழ்பார்த்தசாரதிமாயவனே.       (13)

...ண்மணிமாலையுரமணிநாதவுருப்பிணிப்பேர்ப்
...ண்மணி நாயகபேராவஞ்ஞானப்பிறங்கிருட்கோர்
...ண்மணியே நல்ல வேதச்சிரோமணியே விழியின்
... ண்மணியேயெனையாள்பார்த்தசாரதிமாயவனே.       (14)

நித்தர்நெஞ்சக்கஞ்ச நீங்காதொளிர்நீனிறமணியே
முத்தருளமுதமுந்நீர்முளைக்குமுத்தேநினது
பத்தர்கள்பாதப்பணிக்கடியேனைப்பணித்தருள்வாய்
மைத்தமழைமுகிலே பார்த்தசாரதிமாயவனே.       (15)

காணிக்கனிகடல்காணாதனவாய்க்கரில் கடிந்தோர்
பேணிக்கருத்தெனும்பெட்டகம் வைத்துப் பெரிதுவக்கும்
மாணிக்கமே நன்மரகதமேயென்மயக்கறுத்தாள்
மாணிக்குறளானவபார்த்தசாரதிமாயவனே.       (16)

ஒருமத்தடியுண்டுலூகலத்தோடுகட்டுண்டகண்ணா
தருமத்தனித்துணைத்தற்பரநின்னைச்சரணடைந்தேன்
கருமத்தளையறுத்தாளுதிவச்சங்கமலைமணி
மருமத்தவிர்பவனே பார்த்தசாரதிமாயவனே.       (17)

அந்தாமவாணரநுபாவியவப்பிராகிருத
சிந்தாமணியே சிறந்தன நல்குதெய்வத்தருவே
நந்தா விருநிதியேயெனைக்காக்கநயந்தருள்வாய்
மந்தாகினிப்பதத்தாய் பார்த்தசாரதிமாயவனே.       (18)

எண்ணவெண்ணத்தித்தித்தின் பந்தருமிரதக்கரும்பே
உண்ணவுண்ணத்தெவிட்டாதவுறுசுவையோங்கமுதே
கண்ணகண்ணித்தொழுவேற்கருளன்பர்கருத்தலரான்
மண்ணமண்ணப்பொலிவாய் பார்த்தசாரதிமாயவனே.       (19)

பூமணக்கின்றபொழிலல்லிக்கேணிப்புராதனனே
தூமணக்கின்ற சுடராழியேந்தியதோளண்ணலே
நோமணக்கின்றவென்னோலாப்பவப்பிணி நொய்தொழித்தாள்
மாமணக்கின்றவுரப்பார்த்தசாரதிமாயவனே.       (20)

சதுரானனன்முனந்தோன்றியவுந்தியந்தாமரையாய்
விதுரான கன்மனை வேண்டி விருந்து மிசைந்தவனே
விதுராகுவிட்டதெனவென்மனக்கோள்விடவருள்வாய்
மதுராபுரிந்தவாபார்த்தசாரதிமாயவனே.       (21)

இறையுமிரக்கமிலாக்கொடுங்கஞ்சனிழைத்துவைத்த
சிறையுறு தேவகிசிந்தாகுலத்தீச்செகுத்ததெனக்
கறையுறுமென்மனக்கண்ணார்கவலைக்கனறணித்தாள்
மறையுறையும்பொருளேபார்த்தசாரதிமாயவனே.       (22)

நெருப்பினில் வந்தவணேர்ந்தபராபவநீணெருப்பை
விருப்பவிவிதவிதத்தூசுதகத்தின் வீத்தவவென்
உருப்பவுறுவலுதாசனற்செற்றருளோங்கலி ரு
மருப்பரணமாய்த்தவனே பார்த்தசாரதிமாயவனே.       (23)

பாணாக்கினியாற்பனித்துத்தரைகொள்பயாக்கினியை
ஊணாக்கியவொளிவட்டத்தவென்றனுறுவலெனுங்
கோணாக்கெரியுங்குளிரச்செய்சாந்தீபினிக்குரவன்
மாணாக்கனானவனே பார்த்தசாரதிமாயவனே.       (24)

சினத்தின்மிகுமுநிசீடர்கடம் பசித்தீக்குளிக்கும்
வனத்தின்வரைந்தைவர்வாட்டத்தை வாட்டியவானவவென்
இனத்தின்னற்றீயுமிரித்தாளெஞ்ஞான்றினுமெண்ணுநல்லோ
மனத்தின்கண்மன்னிமகிழ்பார்த்தசாரதிமாயவனே.       (25)

கோடியநேகவெண்கோடிப்பொருளுங்குசலமில்லோர்
தேடியலையெண்வகைச்செல்வச்சீருஞ்சிந்தித்திலனால்
நாடியடியனயப்பதுன்பத்திமைநற்றிருவே
வாடியவெற்கருள்வாய் பார்த்தசாரதிமாயவனே.       (26)

கிட்டவரியவளகைக்கிழவன்கிளர்ந்தசெல்வம்
நட்டனனில்லை நயந்தடியேன்மற்றுநட்டதுதான்
எட்டவரியநின்றாட்கன்புடைமையெனுந்திருவே
வட்டவளையாயருள் பார்த்தசாரதிமாயவனே.       (27)

அணிமாமகிமாபிராகாமியங்கரிமாலகிமா
து ணிமாப்பிராப்தி வசித்துவமீசத்துவப்பயனை
யெணிமால் கொளேன்கொளனின்றிருத்தாட்டொண்டிழைப்பதற்கே
மணிமாலைமார்பவருள் பார்த்தசாரதிமாயவனே.       (28)

திரைக்கடல்சூழ்புவியாதியவேழ்பெருந்தீவினரென்
உரைக்கடங்கச்சக்கரவர்த்தியாயுலகாளுஞ்செல்வம்
அரைக்கணக்காலத்தழிவதழியாததுநின்பொற்றா
மரைக்கழற்கன்பஃதருள் பார்த்தசாரதிமாயவனே.       (29)

பூவலர்கற்பகப்பொன்னாட்டிலென்றும் புலவர்கணம்
ஏவலடங்கியியற்றச்சுதன்மையினிதிருக்குங்
காவலனாக்கங்கடிந்துன் கழற்கன்புகாதலித்தேன்
மாவலமார்பவருள்பார்த்தசாரதிமாயவனே.       (30)

உரமேவியவுடலோடிவ்வுலகினிலூழிமட்டும்
பரமேவிநிற்கும்பரிவிலன்பின்னர்ப்பரிவது தான்
வரமேவுநின்கழல்வாழ்த்தன்பஃதருள்வானமைந்த
மரமேதினிநட்டவாபார்த்தசாரதிமாயவனே.       (31)

பொருதிரையாழிபுவிவிண்சுரர்நரர்புள்விலங்கு
தருதிருநாபிச்சரோருகன்பட்டந்தருதியென்று
கருதினனில்லைக்கருதுதனின்றன்கழற்கணன்பே
மருதிடைச்சென்றோயருள் பர்ர்த்தசாரதிமாயவனே.       (32)

மூளாவினைத்துயர்மோகரித்தென்னை முருக்கிநிதம்
வாளாவதைக்கின்றதென்செய்குவேனருள்வாரிதியே
கேளாவதுதனைக்கீண்டருள்கஞ்சக்கிழத்தி மண
வாளாவல்லிக்குளம் வாழ் பார்த்தசாரதிமாயவனே.       (33)

தன்னுடலந்தனைத்தாங்காதவனுஞ்சகத்துளனோ
உன்னுடலாமுயிரோவாத்துயருழக்கின்றதது
துன்னுடறுன்புறுகின்றதுயிரின்றொகைகட்கெல்லாம்
மன்னுயிரேயருள்வாய் பார்த்தசாரதிமாயவனே.       (34)

ஒருகாலொருவன்சரணமடை, தலுனக்கு மி கை
ஒருகாற்சரணவரணம் புரிதலுரித்தெனக்காம்
அருகாதநேகமுறைபுகலார்த்தியவத்தையதாம்
வருகாரனையவனே பார்த்தசாரதிமாயவனே.       (35)

நாயேனினை நண்ணநாடிலென்னன்மைநவைக்கிடனாம்
நீயேயெனை நண்ணநேடிலென் குற்றநிலையறமாம்
நீயேயெற்காத்தருணீத்தத்துலகநிகிலமுநின்
வாயேபுகச்செய்பவபார்த்தசாரதிமாயவனே.       (36)

பிழையெவைக்குங்கழுவாயாம் பிரபத்திபேசிடுங்காற்
பிழையினத்துற்றுப்பொறைகொளவேண்டிடும்பெற்றிமைத்தாம்
பிழைபொறுத்தேழையைக்காத்தனினக்கே பெருங்கடனாம்
மழைமுகிலன்னவனே பார்த்தசாரதிமாயவனே.       (37)

அருட்பார தந்திரியத்தினறையச்சுதந்தரமாந்
தெருட்பாரதந்திரியம்மே சிறப்புடைத்தென்பவிந்தப்
பொருட்பாரதந்திரியத்தெனைக்காத்தருள் பொன்னுலகும்
மருட்பாருமேத்தும்புகழ்ப்பார்த்தசாரதிமாயவனே.       (38)

தூராவிடயத்துரிசுஞ்சொரூபத்தின்றொல் பகையும்
ஓராதகேவலநாத்திகனாயினுமுன்றிருத்தாள்
நேராச்சரணடைந்தேனென்பவப்பிணிநீத்தருள்வாய்
மாராயமாக்கடலே பார்த்தசாரதிமாயனே.       (39)

தோய்ந்தவிடயத்தின்றோடஞ்சொருபவிரோதமிவை
ஆய்ந்துமொழுக்கிலனாதலினாத்திகநாத்திகனாய்
ஏய்ந்தவெளியவனின்சரணெய்தின்னேன்றெடுத்தாள்
வாய்ந்தகுணக்குன்றமே பார்த்தசாரதிமாயவனே.       (40)

பெரியாரிடத்திற்பிழைசெயலுக்கிரப்பீழையென்று
தெரியாமலுந்தெரிந்துஞ் செய்த வேழைதிருமகளே
கரியாகநின் கழலிற்சரண்புக்கனன்காத்தருள்வாய்
வரியாரரவணையாய் பார்த்தசாரதிமாயவனே.       (41)

அறையகங்காரமுமஃதின்மையுமிவ்வகிலமெலாம்
நிறையமலா நினை நீங்கவுங்கூடவு நேர்தலினாற்
கறையடையவ்வகங்காரங்கடிந்தெனைக்காத்தருள்வாய்
மறையவர்சேர்தாண்மலர்ப்பார்த்தசாரதிமாயவனே.       (42)

விரியுஞ்செருக்கும் விடயவவாவும்விளைநிலமாத்
திரியுமெனையுமவைக்கநுகூலரையுஞ்செறுக்கும்
அரியுமரவுமெனவெண்ணியவருள்புரிவாய்
வரியுரகப்பள்ளியாய் பார்த்தசாரதிமாயவனே.       (43)

ஒழிப்பாரை நின்னைக்குரவரைக்காணிலுவந்தமுத
மொழிப்பாலுறவினர் தந்தை பசியருண் மூரலெனச்
செழிப்பாகவெண்ணியுவானருள் சிந்தை செய்வோர்களைநல்
வழிப்பாற்படுத்திமகிழ்பார்த்தசாரதிமாயவனே.       (44)

முற்சனனத்தின்முடிந்தவினையறியேன்மொழியிப்
பிற்சனனத்திலிளமைதொட்டுன்பதம் பேணியுளேன்
துற்சனரீட்டந்தொலைத்தெனையாளுதி தொண்டருக்கோர்
வற்சலனானவனே பார்த்தசாரதிமாயவனே.       (45)

தொண்டுசெயாவகையென்மனவாசியைத்தோய்விடயச்
செண்டுவிலென்றுந்திரிக்குநின் மாயையென்செய்குவல்யான்
விண்டுவெனுநீகரியெனைக்காக்க விழைந்தருள்வாய்
வண்டுவராபதியாய் பார்த்தசாரதிமாயவனே.       (46)

உரக்குணம்பூதம்பொறிநவவாயிலுறுவலின்பம்
வரத்தாதுவாயுபயன்வேர் கிளைவெளிவான்பலந்தோல்
பரத்தவிலையிரதம்பெற்றமூலப்பகுதியெனும்
மரத்தெனக்குக்கரி நீபார்த்தசாரதிமாயவனே.       (47)

முற்றாமுகிழ்முலையார்மோகவாரிதிமூழ்கியென்றுஞ்
சற்றாகிலுங்கரைகாணாததிற்றடுமாறுகின்றேன்
கற்றாவெனவிரங்கிக்கடுங்காமங்கடிந்தெனையாள்
வற்றாவருட்கடலே பார்த்தசாரதிமாயவனே.       (48)

கண்ணீர்விட்டுள்ளங்கசிந்து கரைந்துன் கழற்கமலம்
எண்ணீர்மையேழைக்கியைந்திடுங்காலமியல்வதென்றோ
ஒண்ணீர்மைமானகங்காரந்தன்மாத்திரையோசை விண்கால்
மண்ணீர் முதலானவபார்த்தசாரதிமாயவனே.       (49)

பப்பத்துப்பங்குயராவரணத்திருபானமைந்த
முப்பத்துக்கோடி வித்தாரவண்டக்குவைமொய்யணுப்போற்
செப்பத்தமைதிருமேனிக்கண்ணாநின்றன் சேவடியாம்
வைப்பத்தந்தந்தருள்வாய் பார்த்தசாரதிமாயவனே.       (50)

காட்டுதியிவ்வுலகத்தையயன்மனக்கஞ்சநின்று
நாட்டுதிநின்னுருவாய் நக்கனுள்ளநளின நண்ணி
வீட்டுதியிவ்விளையாட்டுக்கிலக்கெனவேண்டியெனை
வாட்டுதிவாழ்வென்றருள்பார்த்தசாரதிமாயவனே.       (51)

என்றனிலக்கணமென்வயினின்றிலங்காதவணம்
மன்றமறைக்குநின்மாமாயை செய்யுமயக்கவிருள்
பொன்றநின்சீரருண்மார்த்தாண்டன்றோன்றிப்பொலிவதென்றோ
மன்றன்மலர்த்தொடையாய்பார்த்தசாரதிமாயவனே.       (52)

திங்கடிகழ்முகத்தேவகிதேவிதிருவயிற்றிற்
றிங்கடுவாதசஞ்சேர்ந்து பின்பூவிற்செனித்தவநின்
அங்கணருள்வரினாயேற்கவ்வீட்டின்பமங்கையதே
மங்கலமேனியனே பார்த்தசாரதிமாயவனே.       (53)

கடியருணாம்புயக்கண்ணீரிருதோள்கவுத்துவப்பூண்
முடியணிமோதிரமுத்து மணிச்சரமொய்க்கவசந்
தொடியைம்படையொடுந்தோன்றியவாவென்றன்றுன்பமின்றே
மடியமகிழ்ந்தருள்வாய் பார்த்தசாரதிமாயவனே.       (54)

கோணன்னிலையுறக்கோவானவர்வாச்சியங்கொளுத்தி
மாணன்மலர்மழைபெய்திடமாதவர் வாழ்த்தெடுப்பப்
பாணன்கிசையினர்பாடவந்தாயென்படரொழிய
மாணன்றருள்புரிவாய் பார்த்தசாரதிமாயவனே.       (55)

பசுவேதியர்கட்குமானததானம் பகுத்து நின்று
சிசுவானநீபெருந்தேவன் றெளிந்தனனென்று செப்பும்
வசுதேவற்காத்தவவல்வினையேனையுமாத்துயராம்
வசுதீர்த்துக்காத்தருள்வாய்பார்த்தசாரதிமாயவனே.       (56)

சரத்தசரத்துயிர்க்கந்தரியாமிசரீரியெனுந்
திரத்தெய்வநாயகவித்திருச்சேவையைத்தீயர்கட்குக்
கரத்தியென்றன்னைசொலக்கரந்தாயென்கவலைதனை
வரத்தினொழித்தருள்வாய் பார்த்தசாரதிமாயவளே.       (57)

மணக்கமலாதனன்றந்தாய் நினையென்மதலையெனல்
பிணக்கறுபிள்ளைமுன்பெற்றிழந்தின்னலிற் பேதுறுமென்
உணக்கொழியென்றவட்காத்தாய்வருத்து முறுவலொரீஇ
வணக்குறுமெற்கருள்வாய் பார்த்தசாரதிமாயவனே.       (58)

தூயசுவாயம்புக்காலத்திற்பிரச்நிசுதசெனும்பேர்
நீயுமிவரு நெடுங்காலநோற்றலினின்புதல்வன்
ஆயினனன்னாயறிதியென்றாயென்னகத்துயரம்
மாயமகிழ்ந்தருள்வாய் பார்த்தசாரதிமாயவனே.       (59)

பின்னாரதிதி நற்காசிபப்பேர்தமைப்பெற்றநும்பால்
அன்னாயுபேந்திரனாயிப்புவியிலவதரித்தேன்
என்னாவுரைத்தவவின்னாவவித்தையெனதிதய
மன்னாமனித்தருள்வாய் பார்த்தசாரதிமாயவனே.       (60)

மேதைவரநுங்கட்கிவ்வுருக்காட்டினன் வீடளிக்குந்
தாதைதநயனெனும் பாவகத்தென்னைச்சார்விரென்று
பேதைமைபேர்ந்திடப் பேசியவாவென்பெரும்பிறவி
வாதையொழித்தருள்வாய் பார்த்தசாரதிமாயவனே.       (61)

பெற்றவன்கைம்மிசைநள்ளிருட்போழ்திற்பெருகுநதி
வற்றிவழிவிடவாய்ப்பாடிமேவியவானவநீ
சற்றருள்செய்யினென்சன்மத்துயரந்தணந்திடுமால்
மற்றொரு துன்பமிலைப்பார்த்தசாரதிமாயவனே.       (62)

மஞ்சனமாட்டி நின்னாவழித்தாளுக்குவாய்திறந்து
விஞ்சுஞ்சராசரங்காட்டியவாநின் விரைமலர்த்தாள்
தஞ்சமெனவந்து சார்ந்தேன் சரமதசையினின்றாள்
வஞ்சஞ்செய்யாதருள்வாய் பார்த்தசாரதிமாயவனே.       (63)

சிறுத்தவிடையணிமின்னவெண்பட்டுடை சீர்த்ததிங்கள்
இறுத்தகிரணத்திலங்கவிணைமுலையேன்றலங்க
உறுத்தித்தயிர்கடைந்தாட்கருணல்குமொருவவெற்கும்
மறுத்துரையாதருள்வாய் பார்த்தசாரதிமாயவனே.       (64)

மாணிக்கமாலைகள் சிக்குற்றுலாவமறுவின்மணி
ஆணிப்பொற்கங்கணமார்க்கக்குழைசெவியார்ந்திலங்கப்
பாணித்தயிர்கடையாய்ச்சியினென்னைப்பரிந்தருள்வாய்
வாணித்தலைவற்றந்தாய் பார்த்தசாரதிமாயவனே.       (65)

முழுமதியொத்தமுகாரவிந்தத்தினன் முத்தமென
எழுகுறுவேர்வை பனிப்பக்குழற்றொடையேய்மலர்கள்
நழுவத்தயிர்கடையாய்ச்சிக்கருளிய நாயகவென்
வழுவறுத்தாளமகிழ்பார்த்தசாரதிமாயவனே.       (66)

அன்பாரறிஞரினாய்ச்சிகளிப்பினவசமுறீஇ
நின்பாலலீலைக்குணகீர்த்தனஞ்செயுநீர்மையெனப்
புன்பாவியுமுனைப்போற்றியுய்வண்ணம்புரிந்தருள்வாய்
மன்பரவலர்புகழ்வாய் பார்த்தசாரதிமாயவனே.       (67)

பசித்தவன்போலப் பறந்து தவழ்ந்து பணைமுலைப்பால்
புசித்துச் சிரித்துச்சில் வேடிக்கைமாயம்புரிந்தெழிற்றாய்.
சசித்தண்முகத்தினை நோக்குங்கண்ணாவித்தமியனுள்ளம்
வசித்ததுயரொழித்தாள் பார்த்தசாரதிமாயவனே.       (68)

பட்டாடைச்சிற்றிடை நோவக்கை சேப்பப்பனிப்பமுகங்
கட்டாரளகநெகிழக்கண்டாய்ச்சிதயிர்கடைய
ஒட்டாமற்செய்கண்ணவென்பவவொட்டறவுன்னுதியால்
மட்டார்துளவத்தொடைப்பார்த்தசாரதிமாயவனே.       (69)

காய்ச்சினபறயிர்நெய்மனைதோறுங்கவர்ந்தயின்றே
ஆய்ச்சியர்வெண்ணெய்க்குக் கூத்தாடுங்கண்ணவழி பிறவி
நோய்ச்சிறைநீங்கநுவலருட்கண்கொடுநோக்ககர
வாச்சியனானவனேபார்த்தசாரதிமாயவனே.       (70)

வந்து பிறந்து மறைந்துவிடமுண்டுமாற்றலரால்
நொந்துமலைசுமந்தோர்விடந்தீயினுடங்கியந்தேர்
உந்தியுரைபொய்த்தலாதிய செய்தவவுய்யவெற்குன்
மந்திரமேயமையும் பார்த்தசாரதிமாயவனே.       (71)

கறையுறக்கட்டியிடைச்சியடிக்கவிக்காசினிமேல்
உறைவனயாவுமொருங்குற்றுளையச்செய்யுத்தமனே
இறையருள் செய்யினிவ்வேழையடியனெளிதினுய்வன்
மறைபுகுவோர்க்கருள்வாய்பார்த்தசாரதிமாயவனே.       (72)

வீட்டுமன்கைக்கணையாற்றெய்வமங்கலமேனி முற்றுங்
காட்டுறு சல்லடைக்கண்போற்றுளைபட்ட காவல்நீ
வேட்டருள்செய்தென்றன் வீயாப்பிறவிவினை தொலைத்தென்
வாட்டந்தவிர்க்கமகிழ்பார்த்தசாரதி மாயவனே.       (73)

வணங்காமுடியினன்பாற்றூதுசென்றவன்வைத்தகுழிப்
பிணங்காவருமல்லரோடமர்செய்திடும் பெற்றியனே
இணங்காவருளினிவ்வேழையிடரற்றெளிதினுய்வல்
வணங்காரனையவனே பார்த்தசாரதிமாயவனே.       (74)

உருத்துக்கட்டீயுமிழ்ந்தோங்கலுருவம் பெற்றோடிவந்த
எருத்துப்படிவத்தசுரனைச்செற்றவிறைவநின்றாள்
கருத்துட்பதித்துத்தொழுங்கடையேனையெக்காலுநின்று
வருத்துற்றவல்வினை தீர்பார்த்தசாரதிமாயவனே.       (75)

கோவத்தரிமழைபெய்விக்கக்கோவலர்கோக்களுய்வான்
கோவர்த்தனக்குடையேந்தியவப்பகுலவடியர்
ஆவத்தனமேயடியேனை நின்னடிக்காட்கொள்பொன்செய்
மாவத்திரதரனே பார்த்தசாரதிமாயவனே.       (76)

வடமார்பிலங்கவருபூதனை முலைவாய்கொடிய
விடபானம்பண்ணிவிடத்தீயுமிழும்வியாளபண்
நடமாடியகண்ணநாயேற்குன்பாதநளினந்தந்தாள்
வடவாலிலை துயின்றோய் பார்த்தசாரதிமாயவனே.       (77)

தடித்தவுடலத்துச்சாணூரமுட்டிகர் தங்களொடும்
இடித்தகுரலிபத்தோடுமிகல் செய்யிறையவனே
நொடித்தபொழுதினடியனையாட்கொணுவல்பதின்மர்
வடித்ததமிழ்மறையாய் பார்த்தசாரதிமாயவனே.       (78)

குரகதிவேகத்திற்கூக்கோக்குலைந்துகுழையவந்த
துரகதவாயிற்கையிட்டுக்குமைத்துத்துமித்தவனே
பரகதமாவெனைப்பாலித்தனிற்குப்பரும்புகழாம்
மரகதமேனியனே பார்த்தசாரதிமாயவனே.       (79)

இரசதவோங்கலிருநீள் சிறைபெற்றெதிர்ந்ததென
விரசியவெய்யபகாசுரன்வீந்திடவென்றவனே
பரசியவெற்குன்பதப்பணிசெய்துய்யும்பத்திதந்தாள்
வரசுரபூசிதனே பார்த்தசாரதிமாயவனே.       (80)

காலாக்கினிக்கடுவாற்கண்டயாவையுங்காந்து பொடி
போலாக்கவல்லபுயங்கத்தைப்போழ்ந்தவபுன்மையனை
மேலாக்க வெண்ணினின் மேன்மைக்கு நீர்மைக்குமேதகவாம்
வாலாக்கு வித்தவனே பார்த்தசாரதிமாயவனே.       (81)

தளம்பெறுகாலதண்டத்தொடுவச்சிரதண்டநிகர்
குளம்படிவாற்கொல்லுந்தேநுனை சொன்றகொண்டல் வண்ண
உளம்படிந்தங்குளவுட்கையொரீ இநல்லுணர்வுதந்தாள்
வளம்பெறுமல்லிக்குளப் பார்த்தசாரதிமாயவனே.       (82)

ஆயிரநோக்கன்முப்பத்துமுக்கோடியமரரொடும்
ஆயிரவாகனழலாடியோடும்மர்பொருதோய்
பாயிரநான்மறைபன்னும்பரமபரிந்தெனையாள்
மாயிருஞாலம்புகழ் பார்த்தசாரதிமாயவனே.       (83)

துரியோதனனாகியர் துணைமன்னர்தொகுபடையாம்
விரியோதம் வென்ற விமலாவெற்காக்க விழைந்தருள்வாய்
பரியோதிமமாம்பரனேபுவனப்பரப்பையெலாம்
வரியோதனமெனக்கொள் பார்த்தசாரதிமாயவனே.       (84)

பரநிலைநித்தமுத்தர்க்கு வியூகமப்பண்பினர்க்கே
உரநிலைசேர்விபவம்புண்ணியர்க்கெங்கு முற்றுறைதல்
திரநிலையோகியர்க்கர்ச்சையென்போவிய தீனர்கட்சிவ்
வரநிலை தந்தெனையாள் பார்த்தசாரதிமாயவனே.       (85)

ஒன்றுடன் சேரெட்டுறவு மொழியாதுனக்குமெற்குந்
தொன்றுதொட்டுண்டெனச் சோதித்திருமந்திரமுரைக்கும்
இன்றுனதாளடைந்தேனெனைக்காத்தருளெண்சமத்த
மன்றலிருஞ்சுவையே பார்த்தசாரதிமாயவனே.       (86)

எவ்வான் பிழையுமிழைத்துநின்னாணையிகந்ததுட்டத்
தெவ்வானவனின்றிருவடியிற்சரண்சேர்ந்தனனால்
அவ்வான நீயுறவுன்னியருளினரில்பொறுத்திம்
மவ்வானவெற்கருள்வாய் பார்த்தசாரதிமாயவனே.       (87)

தந்தைதநயவுறவு புதிதன்று தன்சுதனைத்
தந்தைபுரத்தலியல்புதநயனெனுந்தமியேன்
சிந்தையஞாறநின்றிருத்தாட்புகல் சேர்ந்திடுவான்
வந்தனன் காத்தருள்வாய்பார்த்தசாரதிமாயவனே.       (88)

புரப்பான் புரக்கப்படுபொருட்சம்பந்தப்பூர்த்தியுண்டு
புரப்புனக்கேகடனீக்கவிதியில்லைப்புன்மையனென்
நிரப்பறநின்கழலேசரண்புக்கனனோந்தருள்வாய் நந்து
வரப்பிலருட்கடலே பார்த்தசாரதிமாயவனே.       (89)

மொழிசேட சேடியுறவுமுண்டென்னை முழுமகனாக்
கழியாமற் காக்குங்கடனினக்குண்டுன் கழலிணையே
வழியாஞ்சரணெனவந்தேன்மகிழ்ந்கருள்வாயுகந்து
வழிபாடுசெய்வார்ககருள்பார்த்தசாரதிமாயவனே.       (90)

பகுத்தவுநரத்திம்பர்த்துருபாரியைப்பந்தமுண்டால்
உகுத்தலிலயன்றுன்னொள்ளடியேசரணும்மனனென்
மிகுத்தல் பொறுத்தெனைமேம்படக்காத்திவியனுலகம்
வகுத்தருள்வானவனேபார்த்த சாரதிமாயவனே.       (91)

நயங்கெழு மவ்வினின்ஞாதுருஞோநவிலுறவுண்
டுயங்குமெற்காத்தலுனக்கேகடனின்னுவாதிருத்தாள்
சயங்கெழும்சரணாவடைந்தேனென்றளர்வொழித்தாள்
வயங்கெழு மைம்படை யாய் பார்த்தசாரதிமாயவனே.       (92)

உரைசேர்கமச்சொல்லுடைமையுடையானுறவுரைக்குந்
தரைசேருடைமையைத்தாங்கலுடையான் னிக்கடனாங்
குரைசேர்கழலடைந்தேனெனைக்காத்திகுளிர்ந்தசெந்தா
மறைசேர்மகன்மகிணா பார்த்தசாரதிமாயவனே.       (93)

நாரக்கிளவிசரீரசரீரியினட்புரைக்கும்
ஈரச்சரீரிசரீரத்தைப்பேணலியல்புநின்றாள்
சாரச்சரணடைந்தேனெனைக்காத்தருள்சார்ந்தவர்க்கோர்
வாரப்பெருங்கடலே பார்த்தசாரதிமாயவனே.       (94)

அறையுமயனச்சொலாதாரவாகேயமா முறவைப்
பறையுமிவ்வாற்றினுமெற்றாங்கனின் பரம்பங்கயனும்
மறையுமறி ராமலர்ப்பதந்தந்தெனை வாழ்விமும்மை
முறையுமுணர்ந்தோர்க்கருள் பார்த்தசாரதிமாயவனே.       (95)

ஆயக்கிளவியறைபோக்த்ருபோக்கியமாமுறவை
ஏயக்கிளக்குமிதுவுமெற்காத்தற்கிசைந்ததுவே
தோயக்கிடக்கையிருந்திவ்வுலகினைத்தோற்றுவித்த
மாயக்கிழவமகிழ்பார்த்தசாரதிமாயவனே.       (96)

சேதனத்தோடுமசேதனத்தோடுஞ் செறிந்திருந்தும்
வேதனத்தோமடையாது விளங்குதிமெய்யிதய
ஆதனத்தோங்கு மடியேன தன்கண்ணஞருறுவேன்
மாதனத்தோர்புகழும் பார்த்தசாரதிமாயவனே.       (97)

மெய்யடைபாலியமாதியான் மிடையா விதம்போன்
மெய்யடை முக்குணத்துன்பமும்யான் மிசையாது செய்து
கய்யடைப்புக்ககடையேனைக்காத்திகரத்தினொளிர்
வய்யடையைம்படையாய் பார்த்தசாரதிமாயவனே.       (98)

உருவாக்கறங்களொழித்தெனையே சரணுற்றடையிற்
கருவாக்குநானுன்கலுடமனைத்துங்கடி வலஞ்சேல்
குருவாக்கியகுலத்தாயென்றநின்னுரை கூர்ந்தெனுள
மருவாக்கிளைக்கவருள் பார்த்தசாரதிமாயவனே.       (99)

சொல்லா லாயவிக்கவித்தோந்தூக்கின் வாலுகச்சொன்றிதனிற்
கல்லாய்தலொக்குமிக்கல்லாதவன் சொலுங்காதலித்து
நல்லாய் திருவருணல் குதியன்பர்க்கு நன்மைசெய
வல்லாயல்லிக்குளம்வாழ்பார்த்தசாரதிமாயவனே.       (100)

வாழிகனமான்மியவல்லிக்கேணிவளநகரம்
வாழிபிரதைமகன்வைய முன்னின்றமாவலவன்
வாழியுருப்பிணித்தாயெனுமாமலர்மாளிகையாள்
வாழியடியவர்வாழியுபயமறைகளுமே.       (101)

கதியாக நிற்குந்திருவல்லிக்கேணிநங்கண்ணனுக்கோர்
துதிமாலை நூறுசொன்மாலைகள் சோலைசுடுன்னுகச்சிப்
பதிவாழிராமாநுசதேசிகன்றன்பதம் பணிவோன்
எதிராசதாசனெனும்பள்ளிகொண்டானியற்றினனே.       (102)

பார்த்தசாரதி மாயவன் மாலை முற்றிற்று.
--------------------
This file was last updated on 17 Feb. 2025
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)