pm logo

பள்ளிகொண்டான் பிள்ளை இயற்றிய பிரபந்தத் திரட்டு
திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதிப் பெருமான் மாலை

tiruvallikkENi pArtacAratip perumAn mAlai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பிரபந்தத் திரட்டு
திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதிப் பெருமான் மாலை

Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய ஸ்ரீமாந் - கச்சிடக்கடாம்பி -
இராமா நுஜசார்யஸ்வாமிகள் திருவடி சம்பந்தியும்,
எதிராஜதாஸரென்னும் தாஸ்ய நாமியுமாகிய ப்ரபந்த வித்வான்
கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய
பிரபந்தத் திரட்டு

இஃது ம-ள-ள-ஸ்ரீ அ. இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்த வித்வான் - காஞ்சீபுரம் ஸ்ரீமா ந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு, திருமணம் - செல்வகேசவராய முதலியார் அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராய நாயகர் ஆர்பனேஜ் அச்சிக் கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 வருடம், ஆகஸ்ட் மாதம்
Registered Copyright
------------
ஸ்ரீமதேராமாநுஜாய நம:
திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதிப் பெருமான் மாலை.
------

காப்பு.
பூவினமார்ந்த பொழிலல்லிக்கேணியன்மேற்
பாவினமாலை பகரவே - பூவின்கண்
உண்ணாதுறங்கா துறங்காப்புளி நீழற்
கண்ணாருமாறன்றாள் காப்பு.

நூல்.
அகாரமுதற்பெயரம்புய நாபவனைத்துணின்றும் விகாரமிலாதவவேதத்தலைவவென்வெய்ய பவ
நிகாரமொழிய நின்னீடருட்சூரியனேர்ந்து திக்க
முகாரவிந்தக்கண்ணநின்றிரு முன்னத்தின் முன்னுதியே. (1)

ஆதாரமாருயிருக்கும் பகுதிக்குமாயவநின்
பாதாரவிந்தம்பணிந்தடியேன் பணிக்கும்பகர்வைக்
காதாரக்கேட்டென்கருத்தல்லனீங்கக்கருணை செய்வாய் சேதாரக்காப்புடைசேரல்லிக்கேணிச்சிரீதரனே. (2)

சூர்கொண்டுதுய்ப்பிக்குஞ்சூழற் பொறித்துட்டர்தோதகநின்
பேர் கொண்டுமன்பர்கள் பேசுபெரும் புகழ் பேணியுநின்
னார் கொண்டு நீக்க நயந்தேன்றிருவுள நானறியேன்
பார்கொண்ட கீர்த்தித் திருவல்லிக்கேணிப்பரஞ்சுடரே. (3)

என்பவநோய்க்கு மருத்துவசித்த சித்தாயியல் வோன்
என்பவயான்சொன் முறைகேட்டிரங்கியெனதிதயத்
துன்பவடவைசுருங்க நின் பேரருட் சோனை தந்தாள்
அன்பவசத்தொண்டர் வாழ்த்தல்லிக்கேணியரிந்தமனே. (4)

மாவகியேந்துமகிதனிற்பாற்கடல்வாசமொரீ இ
மாவகிரக்கண்ணியறவுருவாமங்கையர்க்கரசி
தேவகிக்கீட்டிசை தோன்றச் சுதப் போர்த்திவாகர நற்
நாவகியல்லிக்குளக்கண்ணவென்றனைக் காத்தருளே. (5)

பார்த்தசாரதிப் பெருமான் மாலை.

அநந்தன் கவித்திடவப்பன்கையூர் தியமைந்தமரர்
அநந்தவிய முமுழக்கவரம்பையாடி வரச்
சுநந்தன்மனைபுக்கு நீராடியாய்ச் சிசுவண வள்ளத் த
நந்தனிற்பாலமு துண்டாய் நின்றாணற்சரணெனக்கே. (6)

மேவியபொன்னுடை மெய்ப்பூண்மிளிரவிரைகமழக்
கோவியர் கோலத்தைக் கண்டு கொண்டாடக் குறுகி நினைக்
கூவியணைத்துமடி மீதிருத்திக்குயங்கொடுத்தாள்
ஆவியசற்றியகண்ணா வருளன்படியானுக்கே. (7)

பூகனை போதுமுலையுண்டது நீ பொறுக்க வொணா
வேதனை தந்தாய் விடுதியெனவும் விடாதுறிந்து
சாதனையோடவடன்னுயிருண்டசருவ சக
நாதனை நண்ணுதி நெஞ்சே நல்வீட்டின்பநல்குவனே. (8)

கோடையுருமிடித் தென்னப்பெருங்குரற்கூச்சலிட்டுக்
கோடையுறழ்கை விதிர்த்தவ்வுருவங்குலைந்து பண்டைப்
பீடையுருக்கொண்டவளுயிர் பேர்ந்திடும் பெற்றி செய்த
மாடையுடையனை நெஞ்சேவழுத்துன் மயலறவே. (9)

மங்கலரேகைக்கரங்கான்மணிமறுமார்பெழுவாய்
அங்கமுறலாலவடூயையாய்ச்சந்தகில் புழுகு
துங்கநன்னாவிமணமே விமீளாச்சுகத்தபதந்
தங்கவருள் கண்ணனை நினை நெஞ்சே தவறறுமே. (10)

நீராட்டுபுபொற்புறுத்திப்பொற் றொட்டிலிளின்னையிட்டுச்
சீராட்டுச்சன்மத்திருநாள் விழாவுக்குச் சேர்ந்தவரைப்
பாராட்டு மெல்வையிற் பண்டியுட்புக்குப் பதுங்கிவந்த போராட்டுத்தானவற்போழ்ந்தாய்டியற்புரந்தருளே. (11)

செந்தாமரைச்சிற்றடியிற்கைத்தண்டை சிறுசதங்கை
நந்தாதொலிககவரைமணி நாலநளிர்வகன
இந்தாரிலங்கத்தவழ்ந்தோடியாய்ச்சியெடுத்தருமை
மைந்தாவென மகிழ்கண்ணாவென்மையலை மாற்றுதியே. (12)

சிறுவாயெயிறுதிகழ் துப்பிதழ் செவிசேர் திருக்கண் நறுவாசனைக்குழல்வின்னுதனன்மதிநாணியஞ்சுங்
குறுவால் விபரிப்பானனங்சாண்டிடைச்சி கொண்டாட்ருமைச்
சிறு வாவல் லிக்குளத்தேவா வென்றீவினை தீர்த்தருளே. (13)

வீட்டினுழைந்திளங்கன்றுகடம்மைவிடுத்துவிளை
யாட்டிற்றுரத்தியவையம்மவோவென்றரற்றவங்கன்
சாட்டியஞ் செய்யற்கவென்றோர்ப்பழித்த தலைவவென்றன் மாட்டியனமாவினைமாய்ந்தோடும் வண்ணமதித்தருளே. (14)

அறையுறைந்தங் குளபாறயிர்வெண் ணெயயின்றதனுள்
உறையழைக்கண்ணாளொருகோ விசையைக் கண்டுண்ணவெற்கு
நறையுறைபாலிறை கல்குதியோ வென்றநம்பவென்னுட்
குறையறத் தீரும் விரகொன்று செய்யக்குறித்தருளே. (15)

உறுவதையெண்ணி யொர்கோவி ெதய்பாறயிருள்ளவெல்லாஞ்
சிறுவரொடுண்டிட்டதிண்கலங்கண்டவட்டிட்டி யிது தொறுவர்மனைகளிற்சூனியப்பாழ்மனை யென்றுசொல்லிக்
கறுவலைக் காட்டிய கண்ணாவென்கவ்வைகடிந்தருளே. (16 )

ஏடார் தயிர் வெண்ணெய்பாலுண்ணக்கண்ட வொகாந்திழையாள்
ஏடாதிருடவெனவேடிகள்ளியென் றேன்றவள்வாய்
ஈடாகமிச்சிலைப்பூசியவென்னப்பவென்மனத்தைக்
கூடா விருந்ததன் குற்றங்களையக்குணித்தருளே. (17)

யாருமறியா கிடைச்சியர் சேமித்தயாவுமுண்டு
நேரு மரிகட்கு நேர்ந்து நும்பாறயிர் நெய்யினையித்
தாருமடமந்திதா முண்டவென்ற தலைவவென்றன்
சோருமனத்துத் துணுக்கமுந்துன்புந் துடைத்தருளே. (18)

நடுமேட்டுறிவைத்தபாறயிர்வெண்ணெய் நெய்நாடியுரற்
கொடுபோந்து நின் றெட்டிக்கொம்பாற் சடங் கரைக்குத்தியவை தொடுவாகவுண்டருள்சோர சிகாமணியே தொறுவர்
நடுநாயகநின்னைநாளு நினைமன நல்குதியே. (19)

புங்கவிருளறைபுக் கங்கிருக்கும் பொருளனைத்தும்
அங்கவொளியினணிகலத்தேசினலங்கிடச் செய்
மங்கலதீபமெனவந்துமின்னின் மறைந்தவவென்
தயங்காமுறவினைபங்கமுற்றோடக்கண்பார்த்தருளே. (20)

மண்ணுண்டனையென் வில்லையென்றேமலர்வாய் திறந்து
எண்ணுஞ்சராசரம்யாவையுங்காட்ட விடைச் சியிரு
கண்ணுங்கவித்து வியப்புறக்கண்டகண்ணா கடையேன்
கண்ணுங்கரும் மின்னேகடை கூடக்கணித்தருளே. (21)

ஒருவாவுலகுமுவரியுமோங்கலுமொண்சுடரும்
பெருவானவர்களுந்தாவரசங்கமப்பேர்படைத்த
உருவாமனைத்து நின்னுள்ளே கண்டாய்ச்சியுணர்வு
பெறத் திருவாய்திறந்த முதல்வா வென்றீமையைத் தீர்த்தருளே. (22)

கோகுலத்தார்கண் விழியாதிருக்கக்குறும்புழுதி
ஆகுலக்காற்றடித்துன்னையணைத்துக்கொண்டம்பரத்தில்
ஏகுலத்தோட்டிருணாவர்த்தற்பற்றியெளிதினட்ட
மாகுலக்கற்புயனேயருண்மாயை மயக்கற் வே. (23)

அளகாபுரிவாழரன்றோழன் பெற்றவருமைமைந்தர்
நளகூபரமணிக்ரீவர்கணாரதர் நல்கு நன்மை
யுளசாவந்தீரமருதிடைவல்லுரலோடு சென்ற
களவாநினதடியேனுய்யவோர் வழிகாட்டுதியே. (24)

கன்றுருவாய்ந்தவசுரனையண்ணற்குக்காட்டிமணந்
துன்று மலர் மழை பெய்து விண்ணோர் துந்துபிமுழக்கச்
சென்று பின்கால் பற்றிவெள்ளிலின் மோதிய சேவகயான்
என்று நின்பாதமிறைஞ்சியுய்வண்ணமியம் புதியே. (25)

வெள்ளிமலையுருவெங்குலிசத்துண்ட மேவுபகன்
அள்ளிநினை நுங்க நீயவனெஞ்சங்கியினழற்ற எள்ளியுமிழவன்வாயையிருபிளவாவிடந்த
தெள்ளிய யானுன்றிருப்பணி செய்துய்யச்சிந்தைசெய்யே. (26)

மலை போற்பருத்துக் குகைக் கோணங்கொண்டுமகிய தரந்
தலைவானிலோட்ட மெனவாய் திறந்து தழலின் விழித்
துலை போலுயிர்த்துவருபாம்பினுட்புக்குயிரையுண்ட
தலைவா நின்பாதத்துலையாதவன் பெற்குத்தந்தருளே, (27)

சொன்னவகாசுரனின்றுணைத் தாளிற் சுடருருவாய்த்
துன்ன மணமலர் தூய்ச்சுரரேத்திடத்தொக்க விஞ்சை
மன்னவர்பாடவரம்பையராடமகிழ்ந்தகண்ணா என்னவலத்தையெளிதினிரித்திடவெண்ணுதியே. (28 )

செப்பாரிள முலைக்கோவியரே வலுஞ் செய்தவர்கள்
அப்பா கண்ணா விசைபாடெனப்பாடியலர் புரைதாள்
துப்பாகிக் கொப்புளரும்ப நடித்தருள் சுந்தர நீ
தப்பாதருள்செய் நின்றாளிணையேத்துந்தகையெனக்கே. (29)

மரப்பாவைமாமணித்தட்டொடு முட்டுமணைமரக்கால்
வரப்பாதுகை முதற்கொண்டாடியுமனைதோறுமையம்
இரப்பார்க்கண்டஞ் சுமவன் போனடித்துமிலீலை செய்த
புரப்பாளவிப்புரம் போங்காலருளெற் குன் பொன்னடியே. (30)



அப்புறு தாழியிற்றன்னிழல்கண்டன்னையாதியர்க்க
தொப்புறக் காட்டியொரு கோல் கொடெற்றவுரு நிழலும்
அப்படிச் செய்யவடிக்கவருகின்றதம்ம வென்று
செப்பியவப்பவருணின்னடியென்றுஞ் சிந்திக்கவே. (31)

நாவனறுங்கனிவிற்பாட்குத்தண்டுலநல்கியடைந்
தாவலினுண்ணவரிசி நவமணியாகவம்மை
போவரை நிற்கப் பொருணினதே கொடுபோதியென்ற
தேவகிமைந்தனை நெஞ்சேவழுத்துதிதீங்கறவே. (32)

கூடிய பாலரையோடிப்பிடித்துங்குழல் பயின்றும்
பாடியும் வெள்ளிற் பழமெறிந்துங்கிள்ளைபாண்டின்மயில்
கூடியல் பூவையெனக்கூவியுமக்குளிர் நதிக்கண்
ஆடியகண்ணனடி யெனக்கென்று மருந்துணையே. (33)

மணிமாலையோடுதளிர்மாலை பூந்தொடைவாய்ந்த குன்றி
மணிமாலை பூண்டுமயிற்பீலிசூடிவளர்யமுனை
மணிமாமணற்கண்மருந்தமுதுண்டு மகிழுமென்கண் மணிமாமணிவண்ணவென்மனமாயையைமாய்த்தருளே. (34)

சிரத்தமணியணி பீலி நுதலதிலகஞ்சுட்டி
வரத்தமிடற்றனவாரங்கள் காதனவான்குழைகள்
அரத்தவிதழ்த்திள மூரல் பொற் கங்கணமங்குலிகள்
கரத்தனவோங்கு நங்கண்ணன் கழலிணைகண்ணுநெஞ்சே. (35)

வரைசேர்விபுலமணிமறுமார்பினில் வைசயந்தி விரைசேரலங்கலொடுமணிமாலைமிளிரமலா
குரைசேர்சதங்கையரை நாண் பொன்னாடைகள் சோமளமாம்
அரை சேர்கண்ணா வறுத்தாளுகியென்றன வித்தையையே. (36)

ஐந்தாம்புலனையவித்தோர்களுள்ளவம் போருகத்தில்
நந்தாதொளிர் வனவாய் நூபுராதிகணண்ணின் வாய்க்
கொந்தாருங்கற்பகமாதியிரே கை குலவு நின்றாட்
செந்தாமரை கள் கண்ணா வடிவேற் கென்றுஞ் சேமலைப்பே. (37)

விருந்தாவன நின்றிருத்தாட்பரிசத்தின் வெம்மை மும்மை
அருந்தாவநீங்கிய நின்னன்பருள்ளத்தாமலமதாய்
இருந்தா னிரைகட் கிளம்பும்றரச் செய்யிறைவ வெற்கு
மருந்தானளநின்மலரடி யென்முடிமாமுடியே. (38)

ஒளிப்பதுமோடுவதுங்குழல் கொம்புகளுதுவதும்
விளிப்பதும்வீ நிழலூர் வதுமன்னத்தின்மீளலுநீர் குளிப்பதுமஞ்ஞையினாடலுமாற்றிக்குடவர்தமை
அளிப்பதஞ் செய் கண்ணவாற்றறுப்பாயென்ன வாவினையே. (39)

கோவலர் குட்டரைக்கூய் நீவிர்கன்றின்குவாற்குறு நீர்
ஆவலறுத்தறலாட்டியரித்தமைத்துவிட்டேன்
ஏவலின் வம்மினுணாவுண்டி லீலையிழைத்துமென்ற
காவலவென்பொயி மேவலர் தம்மைக்கடிந்தருளே. (40)

மருக்கிளர் தாமரைக்காயையிதழ்கள் வளைவதெனத்
திருக்களர்நின்னைச் சிறுவர்கள் சூழச்சிக் சத்துணவை
மருக்கிளர் பன்னத்திலுண்டுமணலின் மகிழ்ந்துலவும்
உருக்கிளர் கண்ண கருக்குழி நீத்தெனையோம்புதியே. (41)

எத்தனை கன்று சிறு வரயன்கவர்ந்தேகினனோ
அத்தனை கன்று சிறுவருமாகியவப்பனைநங்
கத்தனைக்கண்ணனை ககாதல!டியர்கருத்தகலா
நித்தனை யேத்துதிநெஞ்சேயந்தாமநெறிபெறவே. (42)

கன்றுஞ்சிறு வருங்கார் மேனி பொன்னுடை கம்புவளை
ஒன்றிய நாற்றோண்முடியாதியபெற்றொளிர்ந்திடக்கண்
டன்றயனாநந்தித்தேத்தவவனுக்கருளமலா
என்றனிதயத்திருந்தருளாயென்று மின்புறவே. (43 )

அனகா நீ கன்றுஞ்சிறு வருமானதையானறிந்தேன்
சனகாதியருமறியார்நின் மாயையின்றன்மையென்று கனகாமபாலன்கழறவக்காரணங்கட்டுரைத்த
கனகாம்பரதரநாயேனைக்காக்குங்கடனி னக்கே. (44 )

தாலவனத்துச் சமன்றண்டவாலதியுஞ்சவளம்
போலவிர்காதும் விதிர்த்து நெறித்துப்புகைக்க ணொடு
ஞால நடுங்கவருந்தேனுகனை நலிந்திடுகோ
பாலசிகாமணியேயடியேன்வினை பாற்றுதியே. (45)

மடுவலையோசை முழவமரப்புள்வகுளியிசை
படுமணியுச்சியரங்குவிண்ணாட்டவர் பார்ப்பவராக்
கடுவுடைக் காளியன் மீது நடித்தருள்கண்ண வென்றன்
அடுமனநோய்க்குன்னருளாம தாகமளித்தருளே. (46)

வானத்தரம்பையர் யாழ் குழல்வண்முழவங் கொளுத்தக்
கானக்கதிசதிதப்பாதரவின்கதிர் முடி மேற்
றானத்தமரர்தொழத்தாண்டவஞ் செய்தாளவெற்கு
ஞானச்சுடர் நல்கியினத்திமிர நலிவகற்றே. (47 )

படியவர் விண்ணவர்பாதவம்பக்கி பசுவின மென்
கொடிய விடம்பட நீறாகுமிக்குட்டன் கோவனலன்
நெடியவனா மென்று காளிபனெஞ்சுகநின் ற)வன்மேல்
நடியமலாசுவற்றா யென்பிறவிரலையையே. (48)

மதிமுக நாகன் மனைவியர்மக்களொடுமருவிக்
கதியிலையென்று கரங்குவித்துள்ளங் கரைந்துருகிப்
பதிகிதிப்பிச்சையருளென்று நின்று பழிச்சவவர்
துதியருள் செய்தவவொன்மதிநிற்க வொர் சூழ்ச்சி சொல்லே. (49)

நன்மையுயிர்கட்கு நாடாகென் கோர நகை விடத்தாற்
றொன்மை தொடங்கித்து செய்ததுட்டனையுங்கருணைத்
தன்மையினாண்ட தயாநிதி யேயென்று சாற்றரவின்
புன்மை பொறுத்தவநன்மையளித் தெற்புரந்தருளே. (50)

புடையிறைப்புள்ளரசன்பகைகாளிய போயதுச்சி இடையிலென்பாதவிலச்சினையென்று மிலங்குதலாற்
றடையற நீயுறைதண்மணித்தீ விடைச்சார்தியென்று
விடையருள் வித்தகன்றாளை நெஞ்சே நீ விரும்புதியே. (51)

காளியன்கையுறையாத்தந்த பொன்னுடைகாமர்மணி
வாளியல் கங்கணம்பூண்வாசச்சந்தமலரடைக்காய்
நீளியன்மாமண் நீலோற்பலத்தொடை நேர்ந்து கொண்ட
சாளிகைப் பொன்னனையான்சரணென்றுஞ்சரணெனக்கே. (52)

தோற்றிப்பெருமரமாதிய சுட்டுத் துகள்படுத்தி
நாற்றிக்கினும் புகைநண்ண விட்டாயர் நடுநடுங்கிப்
போற்றிப்புகல் புகச்செய்யழலுண்ட புலவநின் பேர்
சாற்றித்தழுதழுக்கா நாவெனககெவன்றந்தனையே. (53)

கருவில சேதனமாய்ப்பஃறொளை கொள்கழைத்துணியாய்ப்
பொருவில் வித்தையை நீத்தோ ரினின்பாற் பொருந்தி நின்கேழ்
இருவிதழ் சேர்ந்திசைசெய் குழல்செய்தவ்வீட்டினையித் திருவிலியிப்பெற்றிமைத்தென்று செப்பத்தெரிகிலனே. (54)

பொருவினுதனெரித்துக்கன்னம்பூரித்துப் பொன்மரும்
மருவிநெறித்துப்புழைதோறு மொக்கவலமிடமாத் திருவிரலூன்றியிசையமுதூற்றத்திருக்குழல்வாய் இருவிதழ்வைத்தவவென்றீவினையறவெண்ணுதியே. (55)

கங்கா நதியெனக்காட்டின்கணுள்ள வோர்காமர்நதி
பொங்காவலையெறிந் துன்றிருத்தாள்களிற்புக்கடைய
மங்காவிசைப்பண்கள் வாய்ந்தகுழலினைவாய்மடுத்துப்
புங்கா நு புங்கமெனப்பாடுவோயெற் புரந்தருளே. (56).

மாவனவேடுவர்மா தவர்வானவர் மற்றுமுள்ளோர்
பாவ விலங்கு பசிதாக நீங்கிப்பரமபதத்
தேவரெனச்களி கூரக் குழலிசைத்கேனளித்த
கோவலவென்னென்று கூறுவலைவர் கொடுமையை யே. (57)

கன்றுகடாய் முலை யுண்ணாது கானக்களியமுத
மென்றுளிமாந்திப்பசிநீங்கியோவிய மெய்யினவாய்
ஒன்றுநின்னொண்முகம் பார்த்துளத்தாநந்தமுற்றுநிற்க
அன்று குழல் குறித்தாயடியேனின்னடைக்கலமே. ( 58 )

காலிகள்கானவமுதுண்டுணவினைக்கைத்துயர
வாலினை யோக்கிவதனத்தையேந்திமயிர் சிலிர்த்து
வாலியநின்கண்மனமுற்று நிற்கவடித்த குழற் பாலிகையாயெற்கருளுதிநின்பதபங்கயமே. (59)

வனமேவு புட்குலமோசையமுதுண்டுன்வானுருவை
மனமீதிருத்திச் செயல்யாவு நீங்கிமவுனியரின்
நினதாணிழலினிலை நிற்கவூதுநிறக்குழல்வாய்
வனமாலையாயென் மனமாலை மாய்க்க மனத்திலுன்னே. (60)

இசை நூலுருக்கொண்டென நின்று குழலேந்திவிடும் நசைசேர்சுரப்பண்ணயந்தரிவல்லிய நாகநவ்வி
திசைதோறுஞ் சென்றுலவாதிகனீங்கிச்செறிந்த நட்பின்
அசையாமற் செய்தவசெய்யென்மனத்தையுமவ்வண்ணமே. (61)

மேகவினமின்னிசை கேட்டுத்திக்கு விதிக்கின் மணம்
ஆகமலர் மழை பெய்து நின்னாகத்தலரிவெப்பம்
போகநிழற்றி முகமன் புகலப்புரிகுழல்வாய்ப்
போகசய்னநின் பொன்னடியெற்குப் புகலிடமே . (62)

நெருக்கமலைக்கற்கணெய்போலுருகநெடிதுபட்ட
விருக்கந்தளிர்த்துத்தழைத்துமலர்மணம்வீசமுனந்
திருக்குழலூதியதேவாவடியனைத் தீய கொடுங்
கருக்குழிவீழத்திக்கவற்றும் வினையைக் கடிந்தருளே. (63)

குன்றமென நின்று கோவலர் வெண் பொற்குவட்டினிட்ட
சொன்றிய பூபஞ்சுவைக்கறிபாயிர் தொட்டயின்று
மன்றன்மலர்த்தொடையாதிய பெற்று மகிழ்ந்தகண்ணா
என்றனிதயத்திருந்து நின்னேவற்கிசை விப்பையே .(64)

கோவத்தெழுந்தெழுமேகமுங்கோ விற்கு முறிமின்னி
மாவத்திக்கையின் வழங்க நிரை முல்லை மாக்களுற்ற
ஆவத்தை நீக்கியருள்வான்கைக்காம்பினமைத்தெடுத்த
கோவத்தனககுடையாயெண்ணுதியென்னுட் கேரளறலே. (65)

காமக்கறவைகடவுளர்கோன் செய்கரில் பொறுப்பான்
ஏமக்கமலாசனனினைவேண்டா வெனை விடுத்தான்
சேமக்கண்ணாவெனவன்னதைநோன்றிட்ட சேவகவென்
தூமக்கனலிற்சுடுதீத்துயரைத் தொலைத்தருளே. (66)

புரந்தரன் சுற்றத்தவர் சூழவேண்டும்பொருள் கொணர்ந்து
வரந்தருமாதவர் வாழ்த்திட வெண்ணிறவாரணத்தின்
கரந்தனிற் கோவிந்தபட்டாபிடேகங்களித்தமைக்கப்
புரந்தருள்கண்ணசுரந்தருளன் பெற்புரக்கவென்றே. (67 )

பொடியலை போர்ப்பப்புடைகால்புகை பொறி பூத்த கண்கள்
இடியனவோதை கொடுமுடிக்கொம்பரிறும்புதிமில்
மடிய மதண்ட நிகர்வாலெருத்துவடிவமைந்த கொடியவற்செற்ற
நெடியவவென்னைக்கைக் கொண்டருளே. (68)

கதிவேகத்தானிலத்தூளியெழுந்துக்கனமுட்டத் திதிவேலைஞாலந்திடுக்கிடச்சேடன்சிரந்துளங்கக்
குதிவேசகக்கொய்யுளை வென்ற கோவிந்த கூரறிஞர்
துதிவேதவேத்தியயானுயவழியொன்று சொல்லுதியே. (69)

மாயவியோமாசுரன் வல்லமையின்மலைமுழஞ்சில்
ஆய விளைஞரநேகரையுய்த்ததனாறடைத்து
நேய விநயமுடன்வரக்கண்ட நெருக்கியவன்
மாயவினை முடித்தாய்முடியென்மனமாயையையே. (70)

முன்னை வினையினின்மூண்டதுயரிது மூதுலகுக்
கன்னைபிதா குரு தெய்வமுமாகியருள்பவனே
நின்னை வணங்கிச் சரண்புகுந்தேனிந்நெடுந்துயர்நின் றென்னையெடுத்துப்புரக்கத்திருவுளத்தெண்ணுதியே. (71)

நெடியாய் திருவல்லிக்கேணியில் வாழு நிமலவென்றும்
விடியாவவித்தையிரவும் விடி வித்து வேட்கைவரும்
வடியா விரும்பவவாரிவடிவித்துன்மாமலர்த்தாட் கடியாரடியாரடியடைந்துய்யவருளெனக்கே. (72)

பெருவாய்மை நூலினுணர்வுமியோகப் பிராபகத்தால் வருவாலுணர்வுநினதருளால்வருமாணுணர்வும்
திருவாருரவிறையேனுமிலேனின்றிருவடி சேர்
பெருவாழ்வெனும் பதமெங்ஙனம் பெற்றுய்வல் பேசுதியே. (73)

பழிப்பாவலன்குறளைப்பண்டிதன்பசும் பச்சைப்பொய்யாம்
மொழிப்பானிபுணன்வெம் மூர்க்கர் சிகாமணி மூதறத்தை அழிப்பாரிலக்கிரகண்ணியனின்னையடைந்தனனெற் கழிப்பானெண்ணாதுகண்ணாவெனைக்காத்தல்கழியறமே. (74)

பாவக்களஞ்சியம் பச்சைப் பசும்பொய்பதிந்தவுறை
கோவக்கணக்குதிர் குற்றங்கள் கொள்கலன் கூறுநல்லோர்
சாவக்கடுஞ்சுமைத்தண்ணியனின் சரண்சார்ந்தனனென்
தாவக்கனறணித்தெற்றாங்கல்கண்ணதரும நிற்கே . (75)

நிகழ்ந்த வினைப்பயனுண்பித்தலையேநினைந்தெனைநீ
இகழ்ந்துகைசோரவிடுதலிழுக்குன்னிரும்புகழ்க்குத்
திகழ்ந்தொளிர்நின் சேவடி சரண் புக்கவென்றீவினை வேர்
அகழ்ந்தெனைக் காத்தலறமல்லிக்கேணியரிந்தமனே. (76)

அனைத்துலகத்துக்கு மாதாரபூதவருள்செயநீ
நினைத்திடிலெக்கருமந்தான் முற்றாதுநெறித்துநிற்கும்
தினைத்துணையன்புநின்பாலில னேனுநின்சீரருளாற்
பனைத்துணையுள்ளவன் போலெனைக்காக்கும் பரநினதே. (77)

ஒன்பது கோளு நின்னுள்ளக் கருத்தினுக்கொத்தொழுகும்
என்பது பொய்யோவிறைவாவிவ்வேழையின் மீதிரங்கி
அன்பது செய்யினவையஞர்செய்வனவோவறைதி தென்பதுமாதனைசேர்மணிமார்பசிரீதரனே. (78 )

உள்ளமிருந்துள்ளுவாருன்னமெல்லாமுணரிறைவா
கள்ளவினையொன்று நின்றிருமுன்னர்க் கழறகிலேன்
உள்ளமொரு நொடிவாளாவிராமலுடற்றுகின்ற
வெள்ளவிடர் செய்வினையைக்கண்ணாவெட்டிவீழ்த்து தியே. (79)

உள்ளன்பிலாதவனூணுறக்கத்திலுவப்புடையேன்
கள்ளன்கயவன் கரவடனின் பொற்கழலடைந்தேன்
அள்ளன்மலர்த்தடமாரல்லிக்கேணியமல நின்சீர்
வள்ளன்மையானின்மலர்ப்பதந்தந்தெனைவாழ்விப்பையே . (80)

திருமகரக்குழைசெம்மணிமோலிசெவிசிர மார்
பெருமகரத்தைம்படைக்கண்ணவெம்பெருமாட்டியுறை
மருமகரக்கண்மடந்தையர் மால்வலை மாழ்கச் செய்வான்
ஒருமகரக்கொடியோன் செய்வினையையொழித்தருளே. (81)

கரும வரைகழன்றிக்காயநாயேன்கழன்றெழுங்காற்
றருமவரையன் விடுந்தறுகட்டமர் சார் பொழித்துப்
பரும்வரைப் பெருங்கொங்கை விநதைபயந்த செல்வன்
பருமவரைப்புயம்வந்துன்பதந் தந்தெற்பாலிப்பையே . (82)

எண்பஞ்ச பூதவுடல்விட்டடியேனெழும் பொழுதென்
எண்பஞ்சன் முற்றிடையூறெய் தாம் லெழிற்கடலாம்
ஒண்பஞ்சடியன்னைமாரொடுவணனையூர்ந்துவந்தென்
கண்பஞ்சந்தீரநின் காட்சித்திருத்தந் தெற்காத்தருளே. (83)


அரணியலான வடைக்கலமெங்கணுமற்றவர்க்கோர்
சரணிய சன்மந்தவிர்த்தியன்றேற் சன்னங்கடொறும் புரணிய
வென்றலையோட்டினின்னன்பரைப் போற்றிடுமா ஹிரணிய
கர்ப்பனெழுதவொர்கட்டளையிட்டருளே. (84)

உறவிக்கணக்கினடியேன்வினையினுடுத்தவுடற்
பிறவிக்கணக்கும் பெருந்தகையோர்கட்கும் பேசரிதால்
துறவிக்கணந்தொழுங்கண்ணாதுணைப்பாற்சுடுஞெகிழி
உறவிக்கணத்தினுலையு மெற் காக்கவுவந்தருளே. (85)

சிறைக்கு நிகரிந்தத்தேவாதி நாற்கதித்தேகமெனும்
உறைக்கு வித்தாகியுறையென்பிழைகளொருங்கு நின்றன்
பொறைக்கு விடயமெனப்புகுங்காலமும் பூப்பதுண்டோ
மறைக்கு மெட்டாவல்லிக்கேணியில்வாழ்கின்ற மாயவனே (86)

செஞ்சக்கரங்கொண்டு தேவாதிபன்சுதற்றேற்றும் வண்ணம்
புஞ்சக்கரத்தபனற்புதைத்தாய்புலிங்கம் பொதிகண்
வஞ்சக்கரமதவாரணஞ் செற்றருண்மாயவவென்
னெஞ்சக்கரவட நீங்கியுய்கால நிகழ்த்துதியே. (87 )

புரந்தரனாதியர் போற்று நின்பாதத் தென்புன்மை நெஞ்சம்
உரந்தர நின்றென்று மோவாவுவகையுவட்டெடுக்க
நிரந்தர நின்னடியார் பணியே செய்து நிற்க வெற்கோர்
வரந்தர வேண்டுமல்லிக்கேணி வாழ்கின்றவாமனனே. (88)

வெண்ணந்து சக்கரம் விற்றண்டுவாள்கொள் விறற்புயத்தாய்
தண்ணந்துழாய்முடியாய் நின் பொற்றாமரைத்தாள்களிலென்
எண்ணந்துளக்கமற்றெப்போது நிற்க விருத்திவைத்துத்
திண்ணந் துடைத்தருள் சென்ம வித்தாமென் செருக்கினையே. (89)

உரப்பாசமென்பனயாவையு நீக்கியென்னுள்ளக்கஞ்சப்
பரப்பாசனத்திற்பரிதியினென்பவப்பாவவிருள்
நிரப்பாசதவீற்றிருந்து நிமலநெறிமறலி
கரப்பாசம் வீசிவருங்கான் முன்வந்தென்னைக்காத்தருளே. (90)

மொத்தத்துவக்குண்டமூதண்ட கோடியு மூவுயிரும்
சத்தத்துவரி யெழுவாய்ச் சராசரமாய்த்தயங்கும்
முத்தத்துவநிலை மூவாதவாநந்தமுத்திநிலை
சித்தத்துவந்து தெரித்தியல்லிக்குளச்சிற்பரனே. (91)

அரட்டுநராகியவைவர் வலியுமறத்தையெலாம்
புரட்டுநராகு மறுவர் புணர்ப்பும் புகர்வினைகள்
திரட்டுநர் அவர்திறலுஞ் சிதைத்திசிறப்பியங்கள் இரட்டொவியென்றுமறாவல்லிக்கேணியிறையவனே. (92)

படைப்பிடிப்புப்புரப்பாந்தொழிலைச் சங்கற்பத்திற் செய்வாய்
விடைப்பிடிப்பேரொலிவேழமட்டாய்நின் விரைமலர்த்தாள்
கடைப்பிடித்துய்ந்த நின் காதலடியவர்காற்பணியின்
கிடைப்பிடித்துச் சொல்லியாடியடியனைக் கேசவனே. (93)

போர்ச் சக்கரக்கைப்புனிதபுரந்தரன் பொற்புதல்வன்
கார்ச் சக்கரத்தேர்கடவியகண்ணகவிழ்த்தெடுத்த
ஏர்ச்சக்கரக்குடையெந்தாயஞ்ஞானத்திகலின்வரும்
நார்ச் சக்கரம் வற்றிநானுய்யுநாடனை நாட்டுதியே. (94 )

காலமெலாமொர்கணமுமொழிவின்றிக்கண்ணு மும்மை
ஞாலமெலாங்கண்ணனல்லருடன்னிவநவமாங் கோலமெலாந்தந்தெற்கூத்தாட்டுமாயைக்குறியுடையாய்
ஒலமெலாமிடுமெற்கென்றுறுஞ் சொல்லுபரதியே.(95)

அண்டமுமண்டத்துயிர்கட்குடலுமவையயிலும்
பண்டமுங்கண்ணன்றன்பாவகத்தாக்கிப்பகட்டியெனை
விண்ட முத்தானத்து மாட்டிடுமாயையென் வெய்யவநாங்
கொண்ட முயக்கத்தொடர் பென்றொழிந்திடுங்கூறுதியே. (96)


ஞானவுருவினனாகிய யானுனவின்றசடம்
ஆனவுன்றன்னையடுந்திறனீத்தவவித்தையென்போய்
ஊனவுடற்சிறையுற்றுழல்வேனுக்குளமிரங்கி
ஆனவுறவையொரீ இக்கண்ணற்காணவருளுதியே. (97)

அசித்தாகிய நினைச்சித்தாகிய யானமைத்தடக்கி
வசித்தாள்வலியின்றிக்கண்ணற்றொழாது நின்வஞ்சனையால்
நசித்தாயின் குக்கிநரகத்தழுந்துமென்ஞானமின்மை நிசித்தான்
விடிவதென்றோமாயையே நீநிகழ்த்துதியே. (98)

நினையாட்டியேவல்கொணீர்முகில்வண்ணனியாகத்தான்
மனையாட்டிமண் பொன்மயலான்மருட்டி மதிமயக்கி
வினையாட்டிடந்தொறும் வேண்டும் விசித்திரவேடநல்கி
எனையாட்டி நிற்குமவித்தையென்போய் நீயிரிவதென்றே (99)

வேதியர் போற்றுந் திருவல்லிக்கேணி விமலவயன்
ஆதியர் சொல்லற்கரியநின் சீர்த்தியையானறைதல்
சோதியர் நீக்காவிருளைக்கச்சோதந்துடைக்குமெனும்
வாதியர் சொல்லொக்குமங்கீகரித்தெனை வாழ்வித்தியே. (100)

வாழிதிருவல்லிக்கேணியருச்சுனன்வைய முய்த்தோன்
வாழியுருப்பிணித்தாய் வாழி சக்கரவர்த்தி மகன்
வாழிமந்நாதனுடனத்தியிந்திரனாம் வரதன்
வாழி நந்தெள்ளிய சிங்கப்பிரானிந்தமண்மிசையே. (101)

மெச்சிச்சகந் தொழுமல்லிக்குளக்கண்ணன் மெய்யடிமேல்
இச்சித் தொருசதச்சொன்மாலைசன்ம விடும்பையறக்
கச்சிக்கடாம்பியிராமாநுசகுருக்காற்கமலம் நச்சித்
தொழுதுய்யெதிராசதாசனவின்றனனே. (102)

பார்த்தசாரதிப் பெருமான் மாலை முற்றிற்று
---------------

This file was last updated on 17 Feb. 2025
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)