pm logo

பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு :
திருவெவ்வுளூர் வீரராகவப்பெருமான் மாலை

tiruvallikkENi pArtacAratip perumAn mAlai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு :
திருவெவ்வுளூர் வீரராகவப்பெருமான் மாலை

Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய ஸ்ரீமாந் - கச்சிடக்கடாம்பி -
இராமா நுஜசார்யஸ்வாமிகள் திருவடி சம்பந்தியும்,
எதிராஜதாஸரென்னும் தாஸ்ய நாமியுமாகிய ப்ரபந்த வித்வான்
கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய
பிரபந்தத் திரட்டு

இஃது ம-ள-ள-ஸ்ரீ அ. இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்த வித்வான் - காஞ்சீபுரம் ஸ்ரீமா ந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு, திருமணம் - செல்வகேசவராய முதலியார் அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராய நாயகர் ஆர்பனேஜ் அச்சிக் கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 வருடம், ஆகஸ்ட் மாதம்
Registered Copyright
------------
ஸ்ரீமதேராமாநுஜாய நம:
திருவெவ்வுளூர் வீரராகவப்பெருமான் மாலை

காப்பு.
என மாலை நீக்கியரு ளெவ்வுளிராகவன்மேற்
சொன்மாலையன்பினொன்று சொல்லவே - மன் மாலை
உண்ணுமன்ன நீர்முதலா வுன்னியுய்ந்தமாறன்றாள்
எண்ணுதி நீநெஞ்சே யிசைந்து.

நூல்.
அவ்வுட்பொருளாமமுதேயடாச்சுவையான கண்டே
எவ்வுட்கிடக்குமிருங்கனியே யெண்ணெழுநற்வே
உவ்வுட் பொருளாங்கனகவல்லித்தல்லியுண்கரும்பே
மவ்வுட் பொருளெனையாள் வீரராகவமாயவனே. (1)

திருமாமணிமண்டபத்தரிப்பீடத்திருமலர்க்கண்
பெருமாமணியரியங்கத்தெம் மன்னையர்பெட்பினுறக்
கருமாமணியெனவீற்றிருக்குங்கண்ணகாத்தியெனை
மருமாமணியுரனே வீரராகவமாயவனே. (2)

நித்தியர் முத்தர்கண்டுநிரதிசயாநந்தராய்ப்
சத்தியவசத்தினராய்த்தொழும் பதபங்கயனே
புத்தியிலாதபுலையேனிதயமென்புண்டரிக
மத்தியினின்றருள்வாய் வீரராகவமாயவனே. (3)

பகுதியின் மேவிய பந்தத்துயிர்களைப்பார்த்திரங்கித்
தகுதியவாகுங்காணகளேபரந்தந்தவைகள்
புகுதிசெய்தோங்கப்பதினான்குலகங்கள் பூத்தவண்ட
வகுதிசெய்வாயெனையாள் வீரராகவமாயவனே. (4)

ஓடங்கொண்டுந்தியுகளாதுத்தியொழுகு நர்போற்
றோடங்கொண்டே தொண்டனேனிந்தத்தோற்பையிற்றோம் புரிந்து
கூடங்கொண்டுற்பவவாரிகுளிப்பலக்கோதறுத்தாள்
மாடங்கொண்டோங்கெவ்வுள்வாழ்வீரராகவமாயவனே. (5)

இராவணனாற்றளர்ந்தெண்கணனாதியரே மமலை
விரா விவழுத்தவிகங்கத்திறைமிசைமேவியவர்
பராவும் பழிச்சினைக்கொண்டவவின்னுமொர்பாவைபண்டி
வராவணங்காத் தெனையாள் வீரராகவமாயவனே. (6)

பூசித்தநேமியனோடுனைப்புத்திரனாப் பொருந்த
யாசித்தகோசலையெண்ணிறைவேறவவளகட்டில்
நேசித்து வந்தருணின்மல நின்கதைநித்தியமும்
வாசித்துவக்கவருள் வீரராகவமாயவனே. (7)

இராமனெனுந்திருப்பேரோய்ந்திராவணனைக்கடிந்து
பராவன்னை தந்தை பணிப்பாலனஞ் செய்துபார்ப் பொதுவா
விராவுந்தருமமநுட்டித்தவித்தக வீழ்நளின
வரானன வெற்காத்தருள் வீரராகவமாயவனே. (8)

அனந்தன்கலையாமி ளவலைக் கொண்டவ்வரிக்கரியைச்
சினந்தன்று கொல்வித்துச்சேடத்துவச்சிறப்பாமறத்தை
முனந்தன் கினாட்டிய மூவா முதல்வமுரணறுத்தென்
மனந்தன்னில்வீற்றிருந்தாள் வீரராகவமாயவனே. (9)

அன்பார்ந்த வாழிக்கலைப்பரதற்கொண்டவனிபொறாக்
கொன்பாரஞ் செய்கந்திருவரைக் கொல் வித்துக் கோதறுக்கு
நின்பாரதந்த்ரிய நிட்டைநிறுவிய நின்மலவென் .
வன்பாரமாவினை தீர்வீரராகவமாயவனே. (10)

சங்கக்கலைச் சத்துருக்கனைக் கொண்டுதரணியுயிர்
பங்கப்படுத்துமிலவணற்செற்று நற்பாகவத
துங்கத்தரும் நிலைப்பித்தவாவெனைத் தொட்டுநின்று
மங்கப்பரிவினை தீர்வீரராகவமாயவனே (11)

நோக்கல் குடைத்றொடுதலின் மன்பதைநோன்மனநோய்
நீக்கல் செய்தீர்த்தமுடையாயழித்தனிலை பெறுத்தல்
ஆக்கன்முதலவிளையாட்டயர்வாயடியனையாள்
மாக்கல்வனிதை செய்தாள் வீரராகவமாயவனே. (12)

பாலுந்திக்குத்தரபாகக்கமலப்பழுவமணங்
காலுந்திக்காதங்கமழ் தேவகாதமெனக்கழறெண் காது
கோலுந்திக்கார் சீர்க்குளக்கரையாலயகூர்ந்தெனையாள்
மாலுந்திக்கஞ்சமலர் வீரராகவமாயவனே. (13)

மனத்தாபநாசன தீர்த்தக்கரையின் மருவியென்றும்
இனத்தாவரசங்கம் முய்யநாகேந்திரன்மடி யில்
வனத்தாமரைக்கண்வளர்கின்றமாதவவல்வினையேன்
வனத்தாவந்தீர்த்தருள்வாய்வீரராகவமாயவனே. (14)

மாதங்கமாதைமணந்த கவுசிகமாமறையோன்
ஏதங்கடந்தியமன்றமர் பாசமிரித்தொழித்துப்
போதங்கடந்த பெரும் பதமெய்திய புண்ணியமென்
மாதங்கவத்திரனே வீரராகவமாயவனே. (15)

சிறு விதிதன்னையிகழ்ந்தனனென்றரன்சீறிச் சென்னி
அறு விதியாலண்முமத்தியை நீக்கியருள்செயுஞ் சீர்
உறுவிதித்தீர்த்தமுடையா யென்றுன்பு மொழித்தருள்வாய்
மறு விதிமாமணியாய் வீரராகவமாயவனே. (16)

கங்கைமுதலநதியினுந் தூய்மைகழுமிய தென்
றங்கைமகதியெனும்யாழ்முனிவற்கயன் முன் நாள்
சங்கையறச் சொறடக்கரையாயென்சழக்கறுத்தாள்
மங்கைமணியுரமார் வீரராகவமாயவனே. (17)

பசுமதிபூண்டநரவடி வேனிலம்பாவைநல்லார்
வசுமதியாதுன்மலரடிவாழ்த்தும் வரமருள்வாய்
வசுமதிமானுந் திருமுகம் வாட்கண்வளைக்கரங்கொள்
வசுமதிதேவிவர வீரராகவமாயவனே. (18)

சிந்தனை செய்து தவஞ்செய்பிரத்யும் நச்செம்மன் முன்னர்
வந்தனை வேண்டும்வரம்யாவுநல்கிவழி விளங்கும்
மைந்தனையுந்தந்தளித்தது போனின்மலரடியை
வந்தனை செய்யெனையாள் வீரராகவமாயவனே. (19)

மிருகண்டுமைந்தன் சதா நீகன்மைந்தற்குமே விமுன்னாள்
திருகண்டுநெஞ்சந்தெளியவுரைத்தநின் சீர்ச் சரிதை
இருகண்டுளித்திதயங்கசிந்தேத்தவெனக்கருள்வாய்
வருகண்டு நேர்பவனே வீரராகவமாயவனே. (20)

படியிற் புகுந்தோரரக்கன்றனையும்படிவரையும்
இடியிற்றெழித்துண்ணுவான்வரக் கொன்றிய மன்படர்கைப்
பிடியிற்றவிர்த்து நற்பேறு தந்தான்மனனேய நந்தன்
மடியிற் றிருக்கண்வளர் வீரராகவமாயவனே. (21)

மாரன்கணைவென்றமாதவருள்ளமகிழ்ச நற்கு
மாரன்செய்பூசனை கொண்டோனயோத்தியர் மன்னருள்கு
மாரன்மலர்மகள்கையாற்றொடமனம்வட் குசுகு
மாரன் மனனேயுணர் வீரராகவமாயவனே.(22 )

கருமகதியிலுழனமைக்காப்பவன் காணென்னெஞ்சே
பெருமகனாமயன்பெற்றதயரதப்பேரரசன் தருமகனற்றருமச்சேனப்பேர்கொடராபதியின்
மருமகனெவ்வுள்வளர் வீரராகவமாயவனே. (23)

நான்முகனாரதமாமுனிகேட்கநயந்துரைத்த
தேன் முகமாமலருட்டாபநாசன தீர்த்தவளம்
நூன்முகமா வுணர்ந்தெண்ணு நெஞ்சே நம்மை நோற்றளிப்பன்
மான்முகவம் போருகன்வீரராகவமாயவனே. (24)

முதுகை வளைக்குமுதிர் மூப்புத் துன்பின் முழுகிநிற்குங்
கொதுகை நிகரென்றன் குற்றங்களைக் குணமாகக்கொண்டு
மதுகை மறலிவருங்காற்ககமிசைவந்தெனையாள்
மதுகைடபமர்த்தனாவீரராகவமாயவனே. (25)

இருந்தேவபாகவிருடிக்கருளிறைவாநினது
திருந்தேவனின்று சிறியேன் கதிபெறச்செய்தருள்வாய்
பெருந்தேவதேவவடியார்பிறவிப் பெரும் பிணிக்கோர்
மருந்தேவனோடதியே வீரராகவமாயவனே. (26)

மூப்பொருமூர்த்தமெடுத்தென நண்ணிமுகந்திருமட்
காப்பொடும் வேதியனாயுற்றென்காயத்திற்கண்வளர்வான்
பாப்பொடு சாய்ந்தெனச்சாயத்திருவுளம்பற்றியதென்
மாப்பொறிவாழுரனே வீரராகவமாயவனே. (27)

சாலியவிமுனிதண்ணிலைச்சாலையின் சங்கநல்கு
நாலியரித்துககொழிபானரலையினாறியபைம்
பாலியடையினற்பாகவதோத்தமர் பன்னுளத்தின்
வாலியதோவென்னுடல் வீரராகவமாயவனே. (28)

உண்ணாதுறங்காதவைசெய்தொழுகுமுயிர்ககிரங்கிப்
பண்ணார்மறையைத்தமிழ்செய்தமாறன் பணிபதிபோற்
றண்ணார்தமியனின்றாணிலையாதற்குத்தக்கவனோ
மண்ணாரமார்பமவிர் வீரராகவமாயவனே. (29)

ஊனாதியூனிலுயிராதியவ்வவ்வுயிர்க்குயிராங்
கோனாதிமேலொரு கோனிலனாதிகுணப்பகு தி
மானாதியாதிய கங்காரமோடுதன்மாத்திரையும்
வானாதி வாழ்த்தறியேன் வீரராகவமாயவனே. (30)

வேதாதியாதிவிளக்காதிவேதவியன்முடியில்
ஓதாதி மூலப் பொருளாதியுந்தியுதித்தவனும்
பூதாதிபனுமிந்தாதியுமாதிபொழுதொடுநாண்
மாதாதியாதியருள்வீரராகவமாயவனே. (31)

பெண்ணாதியாணழிதூஉவாதியாயும் பெயர்ந்து நிற்றி
கண்ணாதியவைம் பொறிபுலனாதிகடந்துநிற்றி
விண்ணாதி தீ நீர்வளியாதியாகியும் வேறு நிற்றி
மண்ணாதியெற்கருள்வாய் வீரராகவமாயவனே. (32)

மண்ணாய்மறிகடலாய்வன்னியாயெறிமாருதமாய்
விண்ணாய்விரிந்தவ வீயா விவிதவிழுமந் தந்தென்
கண்ணார்வினையுங்கடுகிக்கழிந்திடுங்காலமென்றோ
மண்ணாரமாமணியாய்வீரராகவமாயவனே. (33)

மநுவந்தரங்கண்மலரயன் கற்பங்கண்மாண்டிடினுந்
தநுவந்தரந்தருமென்வினைசற்றுந்தணந்தொழியா
தநுவந்தரஞ் செயுமந்தோவென் செய்கேனயனெறியும்
மநுவந்தாரமுமிலேன் வீரராகவமாயவனே. (34)

நல்லோரைக் கூடிநலமுணராதவிந்நாயடியேன்
நல்லோரையிலடிகோலினன் போன்மிந்நடலை வினைக்
கெல்லோரையுமிரந்தேனிதன் வேரையிரித்தொழிக்க
வல்லோரைக்காணேனருள் வீரராகவமாயவனே. (35)

மிச்சை முளைத் திட்டுமேன்மேலும் வீங்கிவிருத்தியடை
பொச்சை வினையைப் புறங்கண்டு மீண்டுபுகாதொழிக்கும்
விச்சையருளாயெனினுண்மைஞானவிழிபடையா
வச்சையனென்செய்குவல்வீரராகவமாயவனே. (36)

சித்துமசித்துந் திகழ் நீயு நாளுஞ் சிறந்து நிற்றல்
கொத்துமறைகள்னந்தமுங்கூறுங்கொடுவினையும்
ஒத்து நடப்பதெவனோபிரணவத்துட்பொருளாம்
வத்துவெனும் பெரியோய் வீரராகவமாயவனே. (37 )

நினக்குப்பரதந்திரமாயிராது நிகழும் வினை
தனக்குப் பரதந்திரமாவொழுகுந்தலைப் பொறியென்
எனக்குப்பகர்தியிருங்கழலேத்தியிறைஞ்சுமவர்
மனக்குப்பிரியகர வீரராகவமாயவனே. (38 )

கல்லெழுத்தென்னவென்காழுளத்தெட்டக்கரங்களெனும்
நல்லெழுத்துக்களை நாட்டல் செய்யாது நலிவினையார்
சொல்லெழுத்தின்படித் தூங்கென்றயன்றலை தொட்டெழுதும்
வல்லெழுத்தைத் துடைத்தாள் வீரராகவமாயவனே. (39)

குட்டத்திகிரிக்குவலயந்தன்னிற் கொடிய வினைச்
சட்டத்திகிரித்தனிக்கோறழைத்திடச் சற்று நின்றன்
இட்டத்திகிரியியங்காவியலென்னிசைத்தருள்வாய்
வட்டத்திகிரிப்படை வீரராகவமாயவனே. (40)

இறையேயென விறையேனுமிரக்கமிலாவினையார்
மிறையே புரிந்து கணந்தொறுமாநந்த மேதையெனுந்
திறையேயிறுக்கச் செய்கின்றனரென்செய்வறேர்ந்தருள்வாய்
மறையே புகழெவ்வுள்வாழ்வீரராகவமாயவனே. (41)

தாவரசங்கமச்சார்வாமுயிர்க்குச் சமநிலையாய்
மீவரவன்புசெய்வானேகமலவிலோசனனே
மாவரனே யென்மனநோயொழியமகிழ்ந்துவந்தோர்
மாவரமீந்தருள்வாய்வீரராகவமாயவனே. (42)

மறைபுகு மென்னெஞ்சைவாட்டுமறுக்கங்கண்மாயும்வணம்
இறையருள் செய்யினிகழ்ச்சியென்யார்க்கு மிறையவனே
பொறைமலையே புண்ணியநிதியேபுகழ்ப்பூடணமே
மறைமணியேயெவ்வுள்வாழ்வீரராகவமாயவனே. (43)

அண்டரெழிற்கந்திரு வரியக்கரருந்தவர்கள்
தொண்டர்துறவிகடோகையர் பாலகர்சூழ்வினைநோய்ப்
பிண்டர்கள் பெட்டனபேறருள்வாயென்றன்பேதறுத்தாள்
வண்டர்கள் வாழ்த்தும் புகழ்வீரராகவமாயவனே. (44)

உடனிகழ்ந்துள்ள நிகழ்ந்துயிர்க்குண்ணிகழ்ந்தோங்குபொறி
இடனிகழ்ந்தெல்லாமியங்கிடும் வண்ணமியக்க வல்லாய்
உடனிகழ்ந்துன்னையுணராவகை செயுறு பகையாம்
மடனிகழாதருள்வாய் வீரராகவமாயவனே. (45)

அணங்கவருத்தும நாதிவினை வேரனைத்து மறுந்
துணங்கநின் பாதத்து ழுவலன்பென்று முடையவர்பால்
இணங்கவிதயத்தினெண்ணியவர் புகழேத்தெடுத்து
வணங்கவருள்புரிவாய் வீரராகவமாயவனே. (46)

கற்றிற்றென்றென்னிலையுட்கண்களித்திடக் காணகிலேன்
தெற்றிற்றென்றுன்னிலை தெள்ளியர் செப்பினுந்தே ரகிலேன்
உற்றிற்றென்றோரவுணர்த்துதியேலுற்பவவுத்தி
வற்றிற்றெனமகிழ்வேன் வீரராகவமாயவனே. (47)

ஆராவமுதமனையாய் நினைவு நின்னன்பரையும்
ஆராத காதலுடன் வேண்டுவகொண்ட நுதினமும்
ஆராதனஞ்செயும்வண்ணமருளியரும்பவநோய்
வாராவணங்காத்தருள் வீரராகவமாயவனே. (48 )

பொய்யாக்குஞ் செய்வினை புக்கியங்காநிற்கும் புன்மைநெஞ்சம்
மெய்யாக்குஞ் செய்வினை மேவியியங்காவிதியெனையோ
மெய்யாக்கும் பாசகராக்கண்டென்னுள்ளமிகநடுங்கி
மையாக்குங்கால்வந்தருள் வீரராகவமாயவனே. (49)

பாழ்வினை பாவவினைபட்டிமைவினை பாழ்நரகில்
வீழ் வினைமாதரை வெஃகும் வினையிவ் விளைத்தழிக்கும்
ஊழ்வினை நீக்கியென்னுள்ள நின்பாதத்திலூன்றி நிற்கும்
வாழ்வினையீந்தருள்வாய்வீரராகவமாயவனே. (50)

உறவியையிவ்வுலகப்பொருண்முற்று முவர்த்தொழிக்குந்
துறவியையுள்ளந்தராயேனுந்தொல்வினை தொட்டுவரும்
பிறவியைப்பேர்க்காயெனினு நின்னல்லடி பேணலின்கண்
மறவியையேனு மொழிவீரராகவமாயவனே. (51)

நெஞ்சமுரம்பைநெருப்பின் மெழுகெனவே நெகிழ்த்துப்
புஞ்சவஞ்ஞானப் பொருப்பைப் பொருக்கெனப்போழ்ந்தொழித்துக் கஞ்சநிகர்நின்கழற்றுணையேயென்றுங்காதலிக்க
வஞ்சமிலாவன்பருள் வீரராகவமாயவனே. (52)

பாருதிதந்திப்படிறன்படர்கள்படாமலருள்
கூருதி குற்றமெண்ணாது கல்யாணகுணக்கடலே
வாருதிகுப்புற்றென்னன்னையைக்கண்டுநல்வார்த்தை
சொன்ன மாருதிதன்னைமகிழ்வீரராகவமாயவனே. (53)

புழுக்குடரீருள்புண்ணீர்மல நீர்சீப்புரளியுறை
கொழுக்குடநாடிதசைவளி பித்தைக்குரம்பையெனும்
இழுக்குடலத்தினியற்கையிற்றிற்றென் றெணியுவர்க்க
வழுக்குழுத்தேற்றியருள் வீரராகவமாயவனே. (54)

கடியாக்கடியவினைவேர்கழன்றுகழியவென்றும்
விடியாக்க விருண்முற்றும் விடிந்து விமல நின்றன்
அடியார்க்கடியவனாகியுய்வண்ணமருள்புரிவாய்
வடியாக்கருணைக்கடல்வீரராகவமாயவனே. (55)

அங்கற்பந்தோறுமய னொடுமண்டமனைத்தினையுஞ்
சங்கற்பத்தாற்சமைத்தாருயிர்க்கூட்டந்தழைக்கும்வணம்
பைங்கற்பமாதிப்பழமறைநல்கும் பரம்பரனே
மங்கற்பனைக்காத்தருள்வீரராகவமாயவனே. (56)

அகக் கோட்டமவ்வியமாகிய நீங்கியவிரடியார்
அகக்கோட்டந் தன்னிலமுதக்கடலினமரமலா
முகக்கோட்டமின்றியென்னெண்ணக்கருத்தைமுடித்தருள்வாய்
மகக் கோட்ட மோங்கெவ்வுள்வாழ்வீரராகவமாயவனே. (57)

பற்றொன்று நெஞ்சப்பதகன்பளகன் பரம்பொருணூல்
கற்றொன்றுந் தேறாக்கயவனின் கஞ்சக்கழலையன்றி
எற்றொன்றுமெண்ணாதிருந்து சுகிக்கவிரங்கியருள்
மற்றொன்றும் வேண்டேன் மகிழ்வீரராகவமாயவனே. (58)

வெங்கணராகுமரக்கர்குலமுதல்வேரறுப்பான்
கங்கணங்கட்டிய காகுத்தகங்கணக்காரிகையார்
அங்கணமானுமசுத்தக்குழியிலறா தொழுகும் வங்கண
நீத்தருள்வாய்வீரராகவமாயவனே. (59)

சினக்குற்றஞ்சிற்றின்பக்குற்றஞ்சிறுவரைச் சேர்ந்தொழுகுங்
கனக்குற்றங்கள்ளங்கழகங்கரவடங்காதகமாம்
இனக்குற்றநின்னையுநின்னடியாரையு மெண்ணகிலா
மனக்குற்றமாய்த்தருள்வாய் வீரராகவமாயவனே. (60)

வேற்றோர்வித்தத்தை விழைந்தபிழையங்கவேதநன்னூல்
ஆற்றோர்க்கலக்கணயர் பிழை நின்றனருட்கிலக்காம்
பேற்றோர்ப் பிழைத்தபிழை பொறுத்தாளுதிபேரிலங்கை
மாற்றோர்க்கு மாற்றலனே வீரராகவமாயவனே. (61)

உந்திக்கமலத்துலகு தந்தாயுன் னொளியடியைப்
புந்திக்கமலத்திருத்திநிதம் பூசனை புரிந்து
சிந்திக்கச் சிங்ஙவையாற்று தித்தேத்தச் சிரங்கரத்தால்
வந்திக்கச் செய்தெனையாள் வீரராகவமாயவனே. (62)

கரத்தாற்படைத் தகழற்றுணையாலிருகண்மணியாற்
சிரத்தாற்செவிநாசிகைத்துளையானல்ல சிந்தையினால்
உரத்தாலுறுபயன்யாவுநின்னுள்ள முகந்தருளும்
வரத்தாலடைந்துய்குவல் வீரராகவமாயவனே. (63)

துடித்துச் சுகாநந்தவெள்ளத்திற் றோய்ந்துளஞ்சோர்ந்து சொக்கி
நடித்து நின்னாம நவின்று நயநங்கணாரமல்கிப்
பொடித்துப் புளகம் பொருமியெஞ்ஞான்றுநின் பூங்கழலே
வடித்துப்புகழவருள் வீரராகவமாயவனே. (64)

வரனும்பரானுமறிவரியானுமணிமகுடச்
சிரனுந்திருச்சக்கரமாதியைம்படை சேர்ந்திலங்குங்
கரனுங்கனகாம்பரனுநந்தாயாங்கனகவல்லி
வரனுந்தெரிதிநெஞ்சேவீரராகவமாயவனே. (65)

ஒண்மை நின்னாணையையுல்லங்கனஞ்செய்தொழுகுமனத்
திண்மையன்றீயரிற்றீயவன் செப்பமிலாச் சிறியன்
உண்மையொறுத்தற்குரியோனெனினுமுகந்தெனை நின்
வண்மையினாண்டருள்வாய் வீரராகவமாயவனே. (66)

அறவாதிருக்க மறவாது பேசிநின்னாணைதனை
இறவாதிருக்க நின்பாதத் தொழும்பு செய்வோரினத்தைத்
துறவாதிருக்க வென்றொல்லை வினையைத் தொலைக்கு நின் பேர்
மறவாதிருக்கவருள் வீரராகவமாயவனே. (67)

கருவந்த நாண்முதலாவிதுகாறுமென் காலமெலாம்
வெருவந்தன செய்து வீணாக்கழித்தனன் மேவுநின் சீர்
ஒருவந்தமெண்ணியினியேனுமுய்யவுணர்வருள்வாய்
மருவந்தவுந்திமலர்வீரராகவமாயவனே. (68)

கன்னெஞ்சங்கீண்டோர் நரகேசரியாய்க்கதக்கனகன்
றன்னெஞ்சங்கீண்டுதநயற்கருள்செய் தயாநிதியே
நின்னெஞ்சுவக்க நினைந்து நினைந்து நெகிழ்ந்துருகா
வன்னெஞ்ச நீக்கியருள்வீரராகவமாயவனே. (69)

முடிகவிபிச்சமொரீ இநீயிருவர்க்கு முந்தையநாண்
முடிக வித்தாய் நின்னடியிற்கரங்கண் முகிழ்த்து நின்று !
முடிகவிழ்த்துத் தொழு மெற்குச் சுவைமுதிர் முத்தமிழால்
வடிகவிபாடவருள் வீரராகவமாயவனே. (70)

காகங்கதறிமுறையிடவுள்ளங்கனிந்ததன் வெஞ்
சோகங்கதழ்ந்து தவிர்த்தது போலென்றுயரொழித்தாள்
நாகங்கதநாயகப்பள்ளி மேவியநாரணனே
வாகங்கதப்புயனே வீரராகவமாயவனே, (71)

தநுவாதியற்றுச்சடப்பொருள் போன்ற தசையிரங்கித்
தநுவாதிதந்துய்யக்கொள்வானமக்கு நெஞ்சேதக வா
மநுவாதி நான்கு மறையும் வளத்திருமந்திரமாம்
மநுவாதியுந்தந்தவன் வீரராக வமாயவனே. (72 )

மகராலயனை வழிபட்டுவன்னியின் வாளிதொட்டு
மகராலயஞ்சுட்டுவந்தவன் வேண்டிவரங்கொடுக்க
மகராலயத்தணைகட்டியமாதவவான்கருணை
மகராலய வெனையாள் வீரராகவமாயவனே. (73)

காமித்திரவிகுலம் வந்திருவினைகைத்தவிசு
வாமித்திரமுனிமாமகங்காத்தவமாதவருட்
கோமித்திர நற்குகன்மித்திரகுளிர்கோக நக
மாமித்திர வெனையாள் வீரராகவமாயவனே. (74)

கரதானவகண்டக்கற்பகாட விக்கான் கமழும்
வரதான வாசவதேவகணவந்திதசரணா
பரதானகசோதர பரமாநந்த பத்தசன
வரதானவென்றனையாள் வீரராகவமாயவனே. (75)

சித்தாந்தராயனின்சேவடி யென்றுந் திகழ்ந்தொளிருஞ்
சுத்தாந்தரங்கர் தொழும் பனல்லேன்சுருதித்துணிவாஞ்
சித்தாந்தமொன்றுந்தெளியேன்சிற்றின்பச்சிறுமியருன்
மத்தாந்தனாமெனையாள் வீரராகவமாயவனே. (76)

கல்வினை நீக்குங்கழற்றுகளான்கனற்கண்ணுதலோன்
வில்வினை வீட்டி மிதிலை நன்னாடியைவேட்டவள்ளல்
நல்வினையோர்க்கு நல்கும்பதத்தான் மனனே நமது
வல்வினை தீர்த்தருள்வான் வீரராகவமாயவனே. (77 )

ஓரீசனெல்லாவுலகுக்கு மெவ்வெவ்வுயிர்க்கு மருள்
கூரீசன்றாடகை தன்னுயிர் கொண்ட கொடுங்கணையன்
மாரீசற்செற்றவனெஞ்சே நமக்கு நல்வாழ்வளிப்பன்
வாரீசநாபனெனும்வீரரரக வமாயவனே. (78 )

நீரகநின்றைநிலாத்திங்கட்டுண்ட நிகழரங்கம்
ஊரகமெவ்வுடிருவேங்கடங்கச்சியூருடையாய்
தாரக நாமசமன்றமரென்னொடு சண்டை செயு
மாரகநாள்வந்தருள்வீரராகவமாயவனே. (79)

கரவற்ற நெஞ்சத்தவர்க்கருள் காகுத்தகண்ணுபகல்
இரவற்றவீறிலிருஞ்சுக வீட்டினிருக்கும்வணம்
புரவற்ற வென்னைப்புரந்திடனின்கடன்போக்குடனே
வரவற்ற பூரணனே வீரராகவமாயவனே. (80)

ஆக்குந்தொழிலுமளிக்குந்தொழிலுமறக்கடையிற்
போக்குந் தொழிலும் புரிபவனம்மைப் புரப்பனெஞ்சே
நோக்குந்திசைதொறுமுள்ளவனுண்ணியர் நுண்ணுணர்வும்
வாக்குங்கடந்தவன்காண் வீரராகவமாயவனே. (81)

பதினான்குலகப்பகுப்பாமண்டங்கள்பரிப்பவனுங்
கதிநான்குளவவையில்லாவுயிரிற்கலப்பவனும்
விதிநான்கு வேதவிளக்கானவனும் விழுப்பயனாய்
மதிநான்களிப்பவனும் வீரராகவமாயவனே. (82)

இன்வேட்டை நீத்தோரிடுக்கண் டொலைத்துப் பொன்னேணமொன்றைப்
புன வேட்டையாடிய புண்ணியகாலபுரக்கணக்கன்
கனவேட்டைமுற்றக்கருக்கிநின் பாதகமலந் தந்தென்
மன வேட்டை தீர்த்தருள்வாய் வீரராகவமாயவனே. (83)

சிலை போன்றதிண்ணிய நெஞ்சநின்பாலுலைத்தீமெழுகின்
நிலை போனெகிழ்ந்து நினையெண்ணச்செய்தாணிசாபதியின்
கலை போலுடற்பணிவெண்மலைமீதோர்கருமணிமா
மலை போல் விழிதுயில்வாய் வீரராகவமாயவனே. (84)

பாமகணாயகன் பன்னிமமால்வரைப்பார்த்திவனாங்
கோமகணாயகன் வாழ்திருமேனியின் கூறுடையான்
பூமகணாயகன் பொல்லாகமை நெஞ்சமே புரப்பான்
மாமகணாயகன்காண் வீரராகவமாயவனே. (85)

என்னையகலு நிலை நினக்கில்லை யெனக்குமஃதே
என்னையறிதியெளியே னெஞ்ஞான்றினுமெவ்விதத்தும்
நின்னையறியாநிலை யென்கிட்கிந்தைநிகழ்கவிகண்
மன்னைய ளித்தவனே வீரராகவமாயவனே. (86 )

உண்மையின்ஞானவுருவினனாய் நிற்குடம்பினனாய்
அண்மையெஞ்ஞான்றுமமர்ந்து நினையறியாவணஞ்செய்
திண்மைநின் மாயைத்திறலினைவெல்லுந்திறமிலெனை
வண்மையினாண்டருள்வாய்வீரராகவமாயவனே. (87)

கலைக்கோலச்சாலிய விமுனிக்கங்கைகமலனுய்யு
நிலைக்கோலஞானக்குறிக்கைநெடுமாமணிமகுடத்
தலைக்கோலந்தாய்மார் வருட்டிக் கோலந்த நுவெனு நீண்
மலைக்கோலம் யான்மறவேன் வீரராகவமாயவனே. (88 )

போர்ச்சாலகடங்கடர் போன்ற பூரியன் பூங்குழலார்
நார்ச்சாலகத்திலெந்நாளுநலிபவனன்மை செய்நின்
சீர்ச்சால மெண்ணாத்திருவிலியாஞ்சிறியேன்றிறத்து
மார்ச்சால நீதிசெய்தாள் வீரராகவமாயவனே. (89)

நரகதமாலய நீத்தன்பரைத்திருநாட்டினுய்க்கும்
விரகதயாளவடியேன் கொடுவினை வேரறுத்துப்
பரகதமாகப் பணிகொண்டுகாத்தனின் பாரமதாம்
மரகதமேனியனே வீரராகவமாயவனே. (90)

இராமரமாரமணாசுரர்போற்றுமிணையடியாய்
குராமரவப்பொழில்சூழெவ்வுண்மேவிய கொண்டல்வண்ண
சராமரணாதிதொழுந்தமியேற்குத் தவிர்த்தருள்வாய்
மராமரமேழெய்தவா வீரராகவமாயவனே. (91)

நாட்டஞ்சுழல நமன்றமர்கூடி நலிவு செய்யக்
காட்டங்கற் போன்றுயிர்கக்கிடுங்காலைக்கலுழன்மிசை
ஓட்டந்துவந்து நின்னொள்ளடிச்சேவையுதவி யென்றன்
வாட்டந்தவிர்த்தருள்வாய் வீரராகவமாயவனே. (92)

கானவர்கோனற்கவிக்குலக்கோன்கண்களிக்கு நண்ப
மானவர்கோ னெனமாருதிதோண்மிசை வாய்ந்திலங்கைத்
தானவர்கோனைத்தடிந்தவநின்னைச் சரணடைந்தேன்
வானவர் நாட்டைத்தந்தாள் வீரராகவமாயவனே. (93)

திருமகள் கொண்கநற் றேவாதிதேவநின்சிந்தைவந்த
ஒருமகன்றன்வினை யெற்கொழிந்தானினதுந்திவந்த
திருமகனெல்லிமகன் வினைதீருந்தெருட்சனகன்
மருமகனே யெவ்வுள்வாழ்வீரராகவமாயவனே. (94)

மார்த்தாண்டன் செய்ய மரபில் வந்தாயென்மலங்கழித்து
மார்த்தாண்ட மண்டலத்தூடே நடாத்திவயங்கு பல
மார்த்தாண்டனொளிர்மாப்பதநல்குதிமல்கிருடீர்
மார்த்தாண்டமண்டலம் வாழ் வீரராகவமாயவனே. (95)

கடத்திற்கப்பாவளிபித்தந்துரக்கநின் கட்கருணைத்
திடத்தினடியனதைவிடுங்காலர்ச்சிராதிவழி
நடத்திநல்லாநந்தவாரு தியாந்திருநாட்டினுய்ப்பாய்
வடத்தினிலை துயின்றாய் வீரராகவமாயவனே. (96 )

கரண களேபரங்காழண்டமண்டக்கருப்பொருள்கள்
கரணவிலீலைக்குக்காரணமாயை கடத்துவித்துச்
சரணமடையுந்தமியேற்குத்துன்பந்தருசனன
மரணமொழித்தருள்வாய் வீரராகவமாயவனே. (97)

ஒன்பான்றுளை கொளுடலை நின்றொண்டனுகுத் தெழுங்காற்
றென்பான் மறலியைச் சீறிக்கலுழன்றிருப்பிடர் மேல்
அன்பான் மலர்மகளோடுமென் முன்வந்தருள்புரிவாய்
மன்பான் முதிர்சுவையே வீரராகவமாயவனே. (98)

தீக்கதிசேருந்திறத்தினனேனுந் திருத்தி நின்றாள்
வீக்கதிகாரியவனைக்கருணை விழித்துணையால்
நோக்கதிகாரி பரம்பரை நோக்கி நுவலருஞ் சீர்
மாக்கதிதந்தெனையாள் வீரராகவமாயவனே. (99)

மந்தனை நோக்கியருளாயெனினுமிம்மாநிலத்தோர்
பந்தனைபாற்றப்படிவந்த பாரமிலாக்கருணைச்
சிந்தனையானெம்மிராமாநுசமுனி செய்மலர்க்கை
வந்தனைக்கேனுமருள் வீரராகவமாயவனே. (100)

வாழி திருவெவ்வுள் வாழிய வானவகாதமடு
வாழிவரிய விமாமுனிவாழிவயிணவர்கள்
வாழிகருணைக்கடலாங்கனகவல்லிச்சநநி
வாழியெப்போதினு நம் வீரராகவமாயவனே. (101)

விதிவானவர்தொழு மெவ்வுட்கிடக்கும் விமலனுக்கோர்
துதிமாலையாகிய சொன்மாலை நூறு சுபப்புரசைப்
பதிவாழ்பவன்வைணவர்தாட்டுகளெனும் பள்ளிகொண்டான்
எதிராசதாசனிரும்பவ நீங்க விசைத்தனனே. (102)

வீரராகவப் பெருமான் மாலை முற்றிற்று.
------------

This file was last updated on 17 Feb. 2025
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)