pm logo

பள்ளிகொண்டான் பிள்ளை இயற்றிய பிரபந்தத் திரட்டு -21
அரங்கநகரப் பனடிப் புகழ்ச்சிமாலை

aranganagarap panaTippukazcci mAlai
of paLLikoNTAn piLLai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பள்ளிகொண்டான் பிள்ளை இயற்றிய பிரபந்தத் திரட்டு - 21
அரங்கநகரப்பனடிப்புகழ்ச்சிமாலை

Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய
ஸ்ரீமாந் - கச்சிக்கடாம்பி – இராமாநுஜாசார்ய ஸ்வாமிகள்
திருவடி சம்பந்தியும், எதிராஜதாஸரென்னும் தாஸ்ய நாமியுமாகிய
ப்ரபந்ந வித்வான் கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய
பிரபந்தத் திரட்டு

இஃது -- ம-ள-ள- ஸ்ரீ அ- இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்ந வித்வான் - காஞ்சீபுரம், ஸ்ரீமாந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு திருமணம் - செல்வகேசவராய முதலியார் M.A. அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராயநாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
Registered copyright.
----
ஸ்ரீமதேராமாநுஜாய நம:
அரங்க நகரப்பனடிப்புகழ்ச்சிமாலை

காப்பு.
அரங்கநகரப்பனடிப்புகழ்ச்சிமாலை
ரெங்குலவுமன்பினொடு செப்ப - வரங்குலவும்
பூமானைமார்பணைந்தோன் பொன்னடிசேர் தென்குருகைக்
கோமானை நெஞ்சே குறி.

நூல்.

பணியார்கடற்பு விமாந்தருமன்னிமனனஞ் செய்யும்
ணியார்படிவரும் பல்லூழிக்காலம் பயின்றபெருந்
எணியார்தவந்திரண்டீ ருருவாகித்திகழ்தலொக்கும்
அணியாரரங்கநகரப்பனங்கிரியம்புயமே.       (1)

...ரோரரவிந்தநின்மலச்சேக்கை நிகழ்விரிஞ்சன்
...ரார்துறக்கத்திமையோர் முனிவர்களேனையர்கள்
கூரார்மனக்கு மொழிக்கு மெட்டாவொளிக்குப்பைய வாஞ்
..ரோரரங்கநகரப்பன்வாசத்திருப்பதமே.       (2)

பந்தமிரிந்துயிர்க்கூட்ட முய்வானற்பரிவுடைய
நந்தையர்தாயர்கடம்மினு நாளுந்தழைக்குமன்பால்
அந்தமிலா விதிவாக்கியஞ் சொற்றிடுமாரணத்தின்
அந்தமுறைவதரங்கநகரப்பனங்கழலே.       (3)

தொன்மையுயிர்க்கணந்தவழிச்சென்று சுகம் பெறுவான்
நன்மை பலவுநவிற்றலினாளுநலம் பெருகிப்
புன்மையில் வேதபுருடன் மனமொழிபோற்றகிலாத்
தன்மையுடையவரங்க நகரப்பன்றாட்டுணையே.       (4)

கள்ளியல் பூங்கற்பகநேமிசங்கங்கலப்பை கொடி
முள்ளியறாண்முண்டகங்கதை தோட்டிமுரண்குலிசம்
ஒள்ளியவிவ்ளாதிய சுபரேகைகளுற்றொளிருந்
தெள்ளிய நங்களரங்கநகரப்பன் சீரடியே.       (5)

அரங்கநகரப்பனடிப்புகழ்ச்சி மாலை .

பெரியனவாயுஞ்சிறியனவாயும் பிறங்கமுதக்
குரியனவானவுடுக்கணவேந்தருதித்ததெனும்
அரியனவானவுகிர்களமைந்தனவா மெவர்க்கும்
அரியன் வானவரங்கநகரப்பனங்கிரியே.       (6)

பொன்மை பெறுபுண்டரீகப் பொற்பாவையும் பூமகளும்
நன்மைபெறு தங்கரமலர்கொண்டுநனிவருடின்
வன்மை பொறாவென்றுளம்வட்கிவாடுறு மார்த்தவத்தின்
றன்மையுடையவரங்கநகரப்பன்றாண்மலரே.       (7)

சாலச் சுகந்தந்தனை நாளுங் கொண்டு தழைத்தசரற்
காலக்கலாநிதியைக்கடுத்தோங்கிக்கவின்பெறுமெய்ச்
சீலத்திருவனந்தப்பாதுகையிற்றிகழ்ந்து நிற்குங்
கோலத்தரங்க நகரப்பன்வாசக்குரைகழலே.       (8)

வடிநிலைஞானியர்வண்மனம்வாழ்வனமாமறையோர்
முடிநிலை கொள்வன முன்னுமவருளமுக்குறும்புங்
கடிநிலையுள்ளனவாங்கழன்மாறனெங்கற்பகத்தை
அடிநிலை கொண்டவரங்கநகரப்பனங்கழலே.       (9)

வீங்கு பெரும்புகழ்வேதமயன் பொன்விளங்குசிறை
யோங்குமுவணனுரகாபரணமொளிருமுரன்
பாங்கு பெறும் பதுமப்பாணியென்னும்படியிரண்டுந்
தாங்குவன நம்மரங்கநகரப்பன்றாளிணையே.       (10)

மாமாலை நல்கிடுமாயப்புணர்ப்பற்றுமானுடர்கண்
மாமாலை நண்ணும் வழிகாட்டவந்தந்தமாலருளாந்
தேமாலை பூண்ட பதின்மர்பசுந்தமிழ்ச் செய்யுட்களாம்
பூமாலை பூண்டவரங்க நகரப்பன்பொன்னடியே,       (11)

தொடர்ந்து தொடர்ந்தென்றுந்தொன்மைச்சுருதிகடோத்திரிக்கச்
சுடர்ந்த மெய்ஞ்ஞானமழிசையடிகடுனைந்துதற்பின்
படர்ந்துவருகவெனப்பணித்திட்ட பசுந்தமிழ்ப்பின்
படர்ந்தவரங்கநகரப்பன்கஞ்சப்பதத்துணையே.       (12)

விக்கிய மாயைவிறலையுமூழ்வினை வீற்றினையும்
ஊக்கியவைம் பொறியொன்னாரையுந்தம்முரப்படையால்
நீக்கிய நின்மலர்நெஞ்சிற்கு நாளு நிரதிசய
போக்கிய மாமெம்மரங்க நகரப்பன் பொற்கழலே.       (13)

ஓவலிலாதெங்கணுமெவற்றுள்ளுமொளிர்பிரம்
பாவனை வீறுஞ்ச நகாதியோகிபரம்பரையின்
தூவன வம்புயச்சோபன வுள்ளச்சுகாதனத்தின்
மேவியுறைவவரங்க நகரப்பன் மெல்லடியே .       (14 )

பாவத்துதிக்குமெமக்கார்ப்படலையன்பைதிரத்திற்
ஊவற்றிரைப் பொன்னி நாப்பண் பெரியர் தொகுத்து வைத்த
ஆவத்தனத்தின விர்ந்தோங்குமன்பரருவினையின்
சாவத்தைத் தீர்க்குமரங்கநகரப்பன்றாளிணையே.       (15)

ஈண்டியவன்புடனெந்நாளுமேத்தியிறைஞ்சுபவர்
வேண்டிய வேண்டிய வண்ணம் பெற்றுய்யும் விரகுகளைப்
பூண்டிலங்கா நிற்கும் புன்மைநெஞ்சேயிப்புதுமைதனைக்
காண்டிய ரங்கநகரப்பன்கஞ்சக்கழலிணையே.       (16)

அடியார்களன்பின பசயித்துத்தந்தணியும் பற்பல்
படியார்மலர்பல்வலமலர்கோட்டுப்பருமலர்நற்
கொடியார்மலரிவையென்றுங் கமழ்ந்து குலவி நிற்குங்
கடியாரரங்கநகரப்பன்பாதகமலங்களே.       (17)

ஒளியாருரைமாற்றுயர் பொலன்றண்டை யொலிசதங்கை
நளியார்பரிபுர நூபுரமா தியநன்கணிந்து
களியாரடியர்கள் கண்மனந்தம்மைக்கவர்ந்தொளிரும்
அளியாரரங்கநகரப்பனங்கிரியம்புயமே.       (18)

பாரகமெங்கணும் பற்பல சன்மம் பரித்து நின்று
மாரகமுற்றுவெம்மாயைமயக்கமறந்து தமை
ஓரகமென்று முறாவுயிருய்யு முபராயநல்குந்
தாரகமானுமரங்கநகரப்பன்றா ளிணையே.       (19)

கருந்தாது காஞ்சனவல்லிகளாமென்று கட்டுரைக்குந்
திருந்தாவிருவினையாற்சுரராதியதேகநல்கிப்
பெருந்தாபந் துய்ப்பிக்கும் பீழைப்பிறவிப் பெரும் பிணிக்கோர்
மருந்தாயின நம்மரங்கநகரப்பன்மாணடி யே .       (20)

பக்குவிகட்கு நற்பாறேனெய்கண்டுபருகமுதங்
கொக்குக்கதலிபலாக்கனிச்சாறுகுளம் விசயம்
இக்குவின்சாறெனவென்றுந்தெவிட்டாதினிதிருக்குந்
திக்குவிண்போற்றுமரங்கநகரப்பன்சேவடியே.       (21)

மூலமுளரிமுளைத்திட்டமுன்னவனால்விவிதக்
கோலமலர் குளிர் நீர்விளக்காதிய கொண்டு நிதஞ்
சீலமுடன்றிருப்பூசை செயப்பட்ட சீர்த்தியன
ஞாலம் வணங்குமரங்கநகரப்பனல்லடியே .       (22 )

கற்றசுவாயம்புவென்னுமனுக்கமலத்திறைவன்
சொற்றவண நீர்சுமந் தீபதூபஞ்சுவையடிசின்
மற்றையவுங்கொண்டருச்சனை செய்தமகிமையுள்
நற்றவர் போற்றுமரங்கநகரப்பனற்பதமே.       (23)

உலகிருளோட்டுமொளியோன் சிலபகலுட்குழைந்து
நலகுலையாதிநறுமலர் தீபநறும்புகை கொண்
டலகறுமன் பினருச்சனை செய்த வழகுடைய
இலகுமரங்கநகரப்பன்கஞ்சவிணைக்கழலே.       (24 )

சூரியன் புத்திரனாகியவைவச்சுதமனுவாற்
சீரிய பூசைத்திர வியங்கொண்டு சிறிது பகல்
ஆரியன் சொற்றவடைவிருச்சிக்கப்பட்டனவாந்
தூரியவோதையரங்கநகரப்பன்றூ வடியே.       (25)

அண்டாதிபதியாகண்டலனோட ருந்தவர்கள்
தொண்டர்களாகித்தொழு து சில பகரோத்திரித்து
வண்டரறாமலர் கொண்டு வழிபட்டமாண்பினவாம்
வண்டர்புகழுமரங்கநகரப்பன்வண்கழலே.       (26)

விழிப்டுநீரினன் மெய்யிடம்யா வும் விரிபுளகன்
மொழிபடுதோத்திரன் முந்துறுபத்திமுதிர் பெருக்கிற்
சுழிபடு நெஞ்சினனாமிக்குவாகெனுந் தோன்ற்றன்னால்
வழிபடப்பட்டவரங்கநகரப்பன்வண்பதமே.       (27)

புந்திக்கு ளென்றும் பொலிகின்றபத்திமைப்பூடணத்தன்
கந்திக்குமாமலரா திய கொண்டுகளிதுளங்கிச்
சிந்திக்குஞ் சிந்தையன்வீடணப் பேர்கொண்ட செம்மறன்னால்
வந்திக்கப்பட்டவரங்க நகரப்பன்மாண்டியே.       (28)

கூரியகற்றைக்கதிராலிருளைக்குமைத்தொழிக்குஞ்
சூரியன் மாமரபுற்துதித்தோங்கிய தோன்றல்களாற்
சீரிய பூசை செயப்பெற்றனவெச் செகத்தினுக்கும்
ஆரியனானவரங்கநகரப்பனங்கழலே.       (29)

வண்மை கொண்மாவலிதந்தமண்டன்னிலிரண்டடிக்கா
நுண்மையின் மண்ணவர் விண்ணவர் தந்தலை நோன்றுதொட்டுக்
கண்மையொன்றின்றியம் மூன்றாமடிக்கவன் காழ்த்ததலை
திண்மையிற் றொட்டவரங்கநகரப்பன்சேவடியே.       (30)

விதிவாய்ந்த வேதத்தைச்சோமுகன் கொள்ள விதிநடுங்கி
மதிமாழ்கிவாழ்த்தப்படர்ந்தவ்வசுரனைமாய்த்தவன் கொள்
துதிவாய்மறையைக் கொணர்தந்தளித்தன தொண்டர் பெரு
நிதியாமரங்கநகரப்பன் பொன்னடிநீரச மே       (31)

முச்சகந்தன்னினுமுப்பிரிவாகி முடுகிச்சென்று
நச்சகமாகவவற்றிலுறைபவர் நாடொறுஞ்செய்
நச்சகந்தன்னை நலிந்தோட்டுங்கங்கைநதியினைத்தன்
மெச்சகந்தந்தவரங்கநகரப்பன் மெல்லடியே.       (32)

நீடிய கூடத் திரிகூடக்குன்றினெகிழ்முளரி
மூடிய பொய்கைமுதத்தினிழியமுதலை பற்ற
வாடியவாரணங்காப்பானரியுய்த்துவல்லை விரைந்
தோடின வாநம்மரங்கநகரப்பனொள்ளடியே .       (33)

உத்தானபாதன் மகனுலையாப்பதமுற்றமைவான்
வித்தான நற்றவம் வேண்டிப் புரியும் விரைப் பொழிற்கட்
சத்தாந்தயைசெயச் சார்ந்தனசேந்தநற்றாமரை போல்
அத்தான நங்களரங்கநகரப்பனங்கிரியே .       (34 )

பொய்கைமுனி பூதத்தாழ்வார் பேயாழ்வார் பொலிந்து நிற்குஞ்
செய்கைகொள் கோவலிடைகழி சேர்ந்தன தீயர்தலை
கொய்கையறநிலை நாட்டிடல்கூடுங்குலவடியார்
உய்கை குறிக்குமரங்கநகரப்பனொண்கழலே.       (35)

இசை கொண்ட நூல்வழியென்றுந்தமையெண்ணியேத்தி நிற்கும்
கசை கொண்ட நந்திருப்பாண்பெருமாளை நன்மேனியொடும்
பசை கொண்டுதம்முழியந்தர்ப்பவிக்கப்பணித்தனவெண் -
சைகொண்ட கீர்த்தியரங்கநகரப்பன்சேவடியே.       (36)

திருமணங்கொல்லையரசுச்சியேறித்திசையனைத்துங்
கருமணிக்கண்கொடுகாண் குறுங்காற்கலிகன்றி முன்னர்த்
திருமணக்கோலத்துடன்வந்தருளுஞ் சிறப்பினவாம்
மருமணச் சோலையரங்கநகரப்பன்மாணடியே.       (37)

பணிசெய்துகச் சிப்பதியினின்றூர்க்குப்படர்தருங்காற்
ரிணியிருடீரவொர்தீவிகையாளிற்றெறும்பிறவிப்
பிணியறநோற்ற திருக்கச்சிநம்பிமுன்பேர்ந்தனவால்
அணிகொள ரங்கநகரப்பனங்கிரியம்புயமே.       ( 38 )

மந்திரநம்மிளையாழ்வாரடிகளை மாய்க்க வெண்ணுந்
தந்திரயாதவனுட்கச்சவரனிற்சார்ந்தவரை -
விந்தியக்கானின்றுமெய் விரதப்புவிமீட்டுமுய்ப்பான்
முந்திநடந்தவரங்க நகரப்பன்மொய் கழலே.       (39)

வண்மையரன்றலைதன்கரம்வைத்தவன்வாய்வரத்தின்
உண்மையுணர்வான் முயல்விருகாசுரனோங்குளத்தின்
திண்மைதுமித்துச் செகுப்பானவனுழிச்சென்றனவாற்
கண்மையுடையவரங்கநகரப்பன்கான் மலரே.       (40)

மருவாசமாலைப்புயவம்பரீடன் மனத்திருந்து
துருவாசமாமுனி சொற்றவெஞ்சாபமத்தோன்றறனை
மருவாதவண்ணமகிழ்ந்தனநல்லமரபடியர்
கருவாச நீக்குமரங்கநகரப்பன்காற்சுமமே.       (41)

யோகம் புரியும் விகுக்கியரசனுளத்திருந்து
மாகம் புவி தொழுமா முனியாந்துருவாசனிட்ட
சோகம்பயக்குஞ்சுடுசாவந்தன்னைத் தொலைத்தனவால்
நாகம் பரவுமரங்கநகரப்பனல்லடியே.       (42)

ஆடகன்மைந்தனகங்காரநீங்கியவிருளமாந்
தோடகந்தன்னிற்சுடர்ந்தோங்கி நின்று சுடுதொழிலார்
கூடகர் செய்த கொடுவினையாவுங்குழைத்தனபொற்
காடகனங்களரங்கநகரப்பன்காற்றுணையே.       (43கூ)

நேயமுடனன்னைமஞ்சனமாட்டிநிழன் மணிப்பூண்
தூயனவேய்ந்து தொழின்மணித்தொட்டிறு யிற்றிநிற்க
மாயமுடன்வதைப்பானோர்சகட்டின் மறைந்துவந்த
தீயனைச்செற்றதரங்க நகரப்பன்சீரடியே.       (44)

சீர்த்திக்குபேரன் சிறுவர்கள் சேயிழையார்களொடு
தீர்த்தத் திலீலை திகம்பாராய்ப்பகல்செய்து நிற்றல்
பார்த்தன்று நாரதரிட்டநற்சாவம்பரிவுடனே.
தீர்த்திடச் சென்றவரங்க நகரப்பன் செஞ்சரணே.       (45)

கோட்ட மிலாமனக்கோவலர்கோனந்தகோபனில்லி
னாட்டமுறழ்நம்மசோதைதன்னாட்டநனிகளிக்க
வாட்டமிலாது தவழ்ந்து தளர்நடை வந்து விரைந்
தோட்டந்தன நம்மரங்கநகரப்பனொண்கழலே.       (46)

கரும்பியலுஞ்சுவைக்கட்டுரையார் தண்கலாநிதிபோல்
விரும்பியலானனத்தார் வெண்ணகைகள் விளங்குமுல்லை
அரும்பியலாய்ச்சியராடெனக்கூத்துகளாடிக்கொப்புள்
அரும்பியனநம் மரங்கநகரப்பனம்பதமே.       (47 )

பூக்கொண்ட கூந்தற் பொது வியர்தத்தம் புக்கிலுறை
ஆக்கொண்ட பாலளையைத்தம்மகமேட்டமைத்துவைக்க
நேக்கொண்டவைகர நேர்வானிமிர்ந்திடநெட்டுரலின்
மீக்கொண்டன நம் மரங்கநகரப்பன் மெல்லடியே.       (48)

மதிபாண்டரத்தயிர்த்தாழிக்கு மற்றதில்வாஞ்சைகொண்ட
ததிபாண்டற்குங்கதிநல்கவவனுழிச்சார்ந்தனவால்
விதிபாண்டரங்கரைவெள்ளத்தின் மேனிவிளங்கவைத்தோன்
கதிபாண்டவர்க்கா மரங்கநகரப்பன்கான்மலரே.       (49)

பகவுருவானவசுரற்கிளவல்பருத்தமலை
யகவுருவாகியழிதருங்காலவனாவியொளித்
தகவுருவாகித்தமைச்சாரவேயிடந்தந்தனநஞ்
சுகவுருவானவரங்கநகரப்பன்றூவடியே.       (50)

வடித்த நன்னீருடைக்காளிந்தியுந்திமடுவினினீர்
குடித்தவர் யாரையுங்கொல்வான் விடத்தைக் கொடுத்து நின்ற
தடித்தசடக்காளியன்றலை நாடகச்சாலை நின்று
நடித்தவரங்கநகரப்பன்வாரிச நற்பதமே.       (51)

கறையுடைக்காளியன்காதலிமார்கள் கவன்று மனக்
குறைகளைக்கூறிக்கொழுநன் பிழைகுறியாதெமக்கு
நிறைதிருப்பிச்சையளியென்று வீழ்ந்து நிலத்திறைஞ்சி
மறைபுகநின்றவரங்க நகரப்பன்மாண்டியே.       (52)

மொழிதந்த முல்லை நிலக்கோவலர்கான்முளைகளொடும்
வழிதந்தவான்கணம்வற்சக்கணத்தொடும் வானவர்கள்
விழிதந்தவானந்தவேலையின் வெவ்விருந்தாவனத்தே
உழிதந்தனநம்மரங்கநகரப்பனொண்கழலே.       (53)

கால்வைக்கவொண்ணாநெருஞ்சிற் பழங்கொண்ட காடதனைப்
பால் வைத்த மாமடித்தேநு வுங்கன்றும் பரிந்துதத்தந்
தால்வைக்க நற்பசும்புற்றரை செய்தனசாகைமறை
ஓல்வைக்கு நங்களரங்கநகரப்பனொண்பத்மே .       (54)

தூயதுவாதசிக்காக முனையிற் றோய் பொழுதோர்
மாயவசுரன்மரீஇ நந்தகோபனை வவ்விச்சென்று
தோயவிரைநகருக்கவவற்கொணர்வான் றொடர்ந்து
போய்வரங்க நகரப்பன்வாரிசப்பூங்கழலே.       (55)

சுந்தரவிஞ்சையர்தோன்றல்சுதரிசனப்பெயரோன்
அந்தணர்வைவினகியாகியம்பிகையாள்வனத்தில்
நந்தனை நுங்கவவ்விஞ்சையன்வைவற்றுநன்மை பெற
வந்தன்றுதைத்தவரங்க நகரப்பன்வண்சரணே.       (56)

துவர்ந்தவிதழ்க் கோவியர்களைந்திட்ட துகிலை யெலாங்
கவர்ந்து மறைந்தலைக்காளிந்தியாற்றங்கரைப்புறத்தே
நிவாந்துறை நீ பநிருமலமாகிநிர்வாணமுற
இவர்ந்தவரங்கநகரப்பனிண்டையிணையடியே .       (57)

வார்ந்து படர் நீர்ப்பிரபாச தீர்த்தத்தின்மாழ்கியுயிர்
போந்த சுதனைக் கொணர்தந்து சாந்தீபினிக்கருள்வான்
தர்ந்துறுமன் பிரியுறைசைம்மினியம்பதிக்குச்
சார்ந்தவரங்கநகரப்பன்றாமரைத்தாளிணையே.       (58 )

கொன்னுடை வேதியன்கோளுற்ற பிள்ளைகளைக் கொணர்வான்
தென்னுடைத்தெய்விகத்தேர்மிசையேறிநற்றே சொளிய
தன்னுடைச்சோ திக்குச் சார்ந்தீண்டுச் சார்ந்தனதாவில் வெற்றி
மின்னுடை நேமியரங்கநகரப்பன் மெல்லடியே.       (59)

பூதலத்திற்கஞ்சன்வீட்டியவாறு புதல்வரையுங்
காதலிக்கின்றனன்காண்பானெனவன்னை கட்டுரைக்கக்
காதலத்தோனுடனன்னவரைக்கடிதிற்கொணர்வான்
பரதலஞ்சென்றவரங்க நகரப்பன் பாதங்களே.       (60)

திண்படைத்தீயவன்காலயவனற்செகுத்திடுவான்
நண்படைநாகர்கணல் கும்வரத்தினனிப்பல நாள்
கண்படை கொண்முசுகுந்தனுழிச்சென்று காட்சிதந்த
பண்புடைத்தாயவரங்கநகரப்பன்பாதங்களே.       (61)

காசினியோர் புகழைவர்செய் வேள்வியிற்கற்றவர்கள்
யோசனையுற்று முயர்ந்தோருரைத்திடு முத்திகொண்டும்
வாசனைவாய்ந்த மலராதிகொண்டுவகுத்த முதற்
பூசனை பெற்றவரங்கநகரப்பன் பொன்னடியே.       (62)

குடைந்துவண்டோலிடுங்கொங்கார் குசுமஞ்செய்கோதையென்றும்
மிடைந்தவிறற்றோட்சிசுபாலன் மேவியவெஞ்சமரில்
உடைந்துயிர் நீங்குழியவ்வுயிரொள்ளொளியோங்குருவில்
அடைந்ததரங்க நகரப்பன் பொன்னடியம்புயமே.       (63)

கடுத்த பகைத்தந்தவக்ரனமரைக்கருதிவர
விடுத்தகதையிற்றகர்ப்புண்டவனுடல்வீழ்தருங்கால்
அடுத்த வுயிரவிர்ந்தோங்கியணுகியடைய முகங்
கொடுத்தவரங்கநகரப்பனம் பொற்குரைகழலே.       (64)

சாந்தனிதமுங்கணக்கில் கறவைகடானஞ் செய்யும்
வேந்தனிருகுக்கு வேதியரிட்ட வெஞ்சாவந்தன்னைப்
போந்து பொருக்கெனப்போக்கிப் புரந்தன் புண்டரிகை
காந்கனெநைம்மாங்க நகாப்பன்கான்மலரே.       (65)

குண்டைக்கபாலிதன்கூற்றின் படித்தமைக்கூடியன்பிற்
றொண்டைப் புரிந்துதுவரத் தொழுதுதுதித்திரந்த
கண்டைச்செவியற்குமுத்தி கொடுத்துக்களித்தனவாற்
றண்டைச் சதங்கைய ரங்கநகரப்பன்றாளிணையே.       (66)

கண்ணியகானத்துப்பஞ்சவர்வாழ்தருங்காலை விருந்
துண்ணிய வந்த துருவாசமாமுனிக்குள்ள முடைந்
தெண்ணியவெல்வையினன்னவர்பாலின்பளிக்கவெண்ணி
நண்ணினவா நம்மரங்கநகரப்பனற்கழலே.       (67)

அருந்தவனுண்டிடு நெல்லிக்கனியையறுக்கவப்பா
டிருந் தவரம் முனி சாபமியம்புவரென்றிபம்ப
வருந்தியவைவர் நினைக்கவவர் முன்னர் வல் விரைந்து
பொருந்தியனநம்மரங்க நகரப்பன்பூங்கழலே,       (68)

மன்றன்மலர்த்தொடையைவர்கட்காக மனமுவந்து
கன்று சினத்தினன்கண்ணில்லவன்றருங்கான்முளைபாற்
றொன்று வருந்திநற்றும்பிபுரத்திற்குத் தூது சொல்வான்
சென்றவரங்கநகரப்பனிண்டைத்திருவடியே.       (69)

இமைத்தொளிர்மாமணிமோலிச்சுயோதனனீறு செய்வான்
சமைத்த பொய்யாசனத்தின்கீழ்நிலவறைசார் பயம்பில்
அமைத்ததறுகணராமல்லர்தம்மோடரக்கர்களைக்
குமைத்தவரங்கநகரப்பனம் பொற்குரைகழலே.       (70)

கன்னன்பிறப்பைக்கழறிய வன்கட்செவிக்கணையைப்
பின்னுமருச்சுனன் மீதுவிடாவரம் பெற்றடைதி
என்னுமுரைசொலக்குந்தியில்லத்தினுககேகினவால்
அன்னைநிகருமரங்கநகரப்பனங்கிரியே.       (71)

பாரதஞாட்பினின் மூன்றாம்பகலிற்பரிதிகொண்டு
பூரதம்விட்டுப்புவிசேர்ந்து போந்தைப் பொலன்கொடி கொண்
மாரதரேத் தும்வரநதிமைந்தன் முன் வந்தனவாற்
சீரதர் காட்டுமரங்கநகரப்பன் சேவடியே.       (72 )

வீழியிதழ்க் குந்தி முன் பெற்றகன்னன் விரைந்து விட்ட
பாழிய ரவக்கணைபாாததன்மீது படாதவன்றேர்
ஆழியடியொன்றவனிபுதையவழுத்தியவால்
ஊழிமுதல்வனரங்க நகரப்பனொண்கழலே.       (73)

உத்தந் தொடங்கிய பன்னிரண்டாம் பகலோங்குபக
தத்தன்கிரீடிமிசைவிட்ட சத்தியைத் தட்டிடவே
யெத்தனமாகியெழீஇ நின்றனவவ்விரதமிசை
அத்தனரங்கநகரப்பனம் புயவங்கிரியே .      (74)

மேற்றிசைப்பாலகன் மெய்யன்சதாயு வெகுண்டுவிட்ட
காற்றிசை வேகக்கதை பற்குனற்கதுவாதவணம்
போற்றிசைத்தேரிற் பொருக்கென்றெழுந்து பொலிந்து நின்ற
நாற்றிசை யேத்துமரங்கநகரப்பனல்லடியே.       (75)

அங்கரதிபதிகன்னன்றத்தைய பகரிப்பான்
வெங்களந்தன்னினரை முதிர்வேதியவேடமுடன்
பொங்கியவனுழிப் பொள்ளெனப்போயினபூத்த புன்னை
திங்களிலஞ் சியரங்கநகரப்பன்சேவடியே.       (76)

மைவந்தகண்ணுத்தரைகருமாப்பரித்தாமன் விட்ட
வைவந்தவாளியின் வெந்து கரியாய்மகியில் விழப்
பைவந்தவக்கருப்பாங்கினுயிர்த்தெழப்பண்டைய நாள்
தைவந்தது நம் மரங்கநகரப்பன்றாண்மலரே.       (77 )

பாரார் சொன்மாலைப்பரித்தாமன்போரிற்பகைத்துவிட்ட
நாராயணாத்திரமைவருயிர்நலியாதவணம்
நாராரவருழி நண்ணின நண்பர்க்கு நன்மைதருஞ்
சீராரரங்கநகரப்பன்செம்மலர்ச்சேவடியே.       (78 )

பாவனனான பகுளாச்சுவற் கும்பகர்சுருத
தேவன்றனக்கு மெய்ஞ்ஞானம் விளங்கிடச் செப்புதற்குக்
காவன் மிதிலைக்கடி நகர் சென்றனகண்மனங்கொள்
பூவன நங்களரங்நகரப்பன் பொன்னடியே.       (79)

காவத்தனான கடவுளர் கோன்கடுங்காமமுற்று
மேவத்தகாதெனவோராவகலிகைவேட்கைகண்டு
கோவத்தவட்குக் கவுதமமாமுனிகூறு கொடுஞ்
சாவத்தைத் தீர்த்தவரங்காயரப்பன்றண்கழலே.       (80)

மாணடைமன்னுஞ்சன கனவைக் கண்வருமெவருந்
தாண்டையோய்ந்து தளரச் செய்சம் புத்தவரெடுப்பான்
ஏணடை பொன்மலையெண்டிக்கிபமலையேறரிமா
நாணடை கொண்டவரங்கநகரப்பனல்லடியே.       (81)

பாந்தட்படி பெறுஞ்சித்திரகூடப்பறம்பினுக்குப்
போந்து சரணடைந்தேத்திடும் புண்ணியனாம்பரத
ஏந்தன்மகிழ வெழிற்பாதுகைகளிரண்டினையும்
ஈந்தவரங்க நகரப்பனிண்டையிருங்கழலே.       (82 )

அரணமென நின்றுயிர்களைக்காக்கவமையுமந்தக்
கரணங்கொ ளெம்பெருமாட்டிதன்கொங்கையைக்கண்டுகுத்தி
விரணஞ்செய்காகவுருவாஞ்சயந்தன் விழைசரண
வரணமுகந்தவரங்கநகரப்பன்வண்கழலே.       (83)

அண்டர்கள் யாகமும் யோகமுமாற்றிடுமந்தணராந்
தொண்டர்கள் வாழவுந்துட்டர்கள் கூட்டந் தொலைந்திட வுந்
தண்டகக்கானத்துலவைதளிர்த்துத்தருநிழலிற்
பண்டுபடர்ந்தவரங்கநகரப்பன்பாதங்களே.       (84)

மந்தமதமாவனைய விராதனைமாய்த்தவன்றன்
பந்தமுறு பெரும்பாவந்துடைத்துப் பருத்துயர்ந்த
விந்தவுடலையிளையான் வகிர்ந்து விடுங்குழிவாய்
உந்தியதுநம்மரங்க நகரப்ப னொண்கழலே.       (85)

நடைதந்த நற்றவராஞ்சரபங்கர்நணுகுமடம்
அடைதந்தவர்தந் சுவாசிகொண்டோமவனலிலுடல்
உடைதந்துயிர் விடுங்காற்சேவைகந்தொளிர்வீட்டைவால்
விடைதந்தன நம்மரங்கநகரப்பன் மெல்லடியே.       (86)

திக்கணை சீர்த்திச்சு தீக்கணமாமுனிசேருறையுட்
புக்கணைந்தன்னோன்பு சன்முகமன் னுரைபுந்திகொண்டு
சொக்கணை நல்விருந்தாகித்தவத்தின றொகுதியெலாந்
தக்கணைகொண்டவரங்கநகரப்பன்றாளிணையே.       (87)

என்றுமுள கமிழந்கமுனிவனெதிர்ந்துவந்து
நன்றுவரவென்று நற்றவர்தம்மொடுநற்கரகம்
ஒன்றிய நீர்மலர்கொண்டுவந்திக்கவுவனுழியிற்
சென்றவரங்கநகரப்பன்சேமத்திருவடியே.       (88)

தூயவைதேகியின் சொக்கைத்தன் சோதரிதோத்திரிக்கத்
தீயவரக்கர் பதிமோகங்கொண்டு தெருட்டிவிட
மாயஞ்செயவந்தமாரீசப்பேர்வசுமானின் பின்னே
போயின நங்களரங்கநகரப்பன் பூங்கழலே.       (89)

இரவுணுநீர்தரச் சென்ற சுமித்திரையின் புதல்வன்
வரவவ்வயோமுகிவவ்வலிற்றாழ்க்கமனமுடைந்து
கரவறிவான்கடுங்காற்றினுமும்மைகடுகியவன்
விரவுழிச்சென்றவரங்கநகரப்பன் மெல்லடியே.       (90)

விண்ட தென் மாயை விழுத்தவச்செல்வம் விளங்கியதாற்
கொண்டபிறவிகுலைந்ததமுதங் கொடுத்தியென்று
தண்டலில் பத்திச் சபரிசெய் பூசனை தன்னை நன்னர்க்
கொண்டவரங்க நகரப்பனம் பொற்குரைகழலே.       (91)

சூரியன்கான்முளைசுக்ரீவன்றன்னுளந் தோன்றி நிற்குஞ்
சீரிய சங்கையைத் தீர்ப்பான்றிகந்தஞ் செறிப்ணையாற்
பாரியவானமராமரப்பாங்கர்படர்ந்தனவால்
ஆரியனானவரங்கநகரப்பனம்பதமே.       (92)

புனற்கிறை வேண்டும் பொழுது புகாமையிற் பொள்ளெனவே
அனற்கிறையத்திரமுய்க்கவவன்வந்தடைக்கலம் புக்
கினற்கிடமாயினன்காத்தியென் றேத்துமெழிலுடைய
உனற்கினியானம் மரங்கநகரப்பனொண்கழலே.       (93)

குடைப் பெருஞ்செல்வமிலங்கையிராவணன் கூறுமற்றைப்
படைக்கலப்பாதகர் பாசத்தைப் பாற்றிப்பரிவொடுநன்
னடைக்கலம் பூண்ட விபீடணனல்வழி நண்ணநண்ணி
யடைக்கலம் புக்கவரங்க நகரப்பனங்கிரியே.       (94)

மருவாய் மலர்க்குழலஞ்சனை மைந்தன் மதிலிலங்கைச்
செருவாய்ந்த காலைத்தெருட்சிகொடேரெனச் சென்று நின்று
பெருவாழ்வு பெற்றெனத்தன்கரந்தாங்கிய பெட் பின்வாம்
திருவாழரங்கநகரப்பன் சேவடிச் செம்மலரே.       (95)

திண்மைக்கயாசுரன் மீவைதரும் சிலையினுழிக்
கண்மைச் சிவன் விதியிந்திரனாதிக்கணநடுவண்
ஒண்மைக்கதையினையூன்றி நின்றென்றுமுவப்பனவாம்
வண்மைக்கருணையரங்கநகரப்பன்மாண்கழலே.       (96)

தன்மமுனிவன்றநயைதருமவிரதை கொண்கன்
வன்மமுடன்றந்தவைவினைமாற்றமனத்தினெண்ணி
நன்மைதருந்தவஞ் செய்யுழிநன்னர் நடந்தனவாற்
புன்மையகற்றுமரங்கநகரப்பன் பொற்பதமே.       (97)

மண்ணுதல் யாவும் பயந்தவன்மைந்தன் மரீசிமுனி
கண்ணுதல் சாவங்கடிவான்கயையைக் கலந்து தமை
எண்ணுதல் செய்து தவம்புரிசாலைக்கினிதிரங்கி
நண்ணுதல்செய்தவரங்க நகரப்பனற்கழலே.       (98)

தரணிபுகழ் விப்ரநாராயணமுனிவன்றனக்காப்
பரணியிடுமிழைசேர்தேவதேவிப்பரத்தை தன்பால்
இரணிய வட்டிலை யீந்திடச் சென்றன வெவ்வெவர்க்குஞ்
சரணியனானவரங்கநகரப்பன்றாண்மலரே.       (99)

நம்பியனேந்திருப்பணி முன்னர் நயந்து செய்த
வம்பியலார்ங்கண்ணிவண்புயானாந்தன்மவன்மனெனுஞ்
செம்பியனுக்கருள் செய்தனவன் பர்சென் மக்கடற்கோர்
அம்பியனையவரங்க நகரப்பனம் பதமே.       (100)

வாழியரங்கநகரமதிற்கண்வளருமெம்மான்
வாழியரங்கநகரன்னைவாழிவடமறைகள்
வாழிபதின்மர்கள் வாழியவர்தமிழ்மாமறைகள்
வாழியெதிபதிதிப்பியவாணையிவ்வையகத்தே.       (101)

திகழ்ச்சி பெறுஞ்சீரரங்கநகரப்பன் செய்யவடிப்
புகழ்ச்சித்தமிழ்ப்பாவினமாலை நூறும் பொருவிலன்பி
னிகழ்ச்சிக்குரவனபிமானநிட்டையனீடொழுக்க
இகழ்ச்சியிலானம் மெதிராசதாசனியம்பினனே.       (102)

அரங்க நகரப்பனடிப் புகழ்ச்சிமாலை. முற்றிற்று.
------------

This file was last updated on 11 March 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)