பள்ளிகொண்டான் பிள்ளை பிரபந்தத் திரட்டு -22
தொண்டை நாட்டுத் திருப்பதிப் பஞ்சரத்தினங்கள்
toNTainATtup
tiruppatip panjcarattinangkaL
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பள்ளிகொண்டான் பிள்ளை பிரபந்தத் திரட்டு :
தொண்டை நாட்டுத்திருப்பதிப் பஞ்சரத்தினங்கள்
Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய ஸ்ரீமாந் - கச்சிடக்கடாம்பி -
இராமா நுஜசார்யஸ்வாமிகள் திருவடி சம்பந்தியும்,
எதிராஜதாஸரென்னும் தாஸ்ய நாமியுமாகிய ப்ரபந்த வித்வான்
கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய "பிரபந்தத் திரட்டு"
இஃது ம-ள-ள-ஸ்ரீ அ. இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்த வித்வான் - காஞ்சீபுரம் ஸ்ரீமா ந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு, திருமணம் - செல்வகேசவராய முதலியார் அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராய நாயகர் ஆர்பனேஜ் அச்சிக் கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 வருடம், ஆகஸ்ட் மாதம்
Registered Copyright
------------
ஸ்ரீமதேராமாநுஜாய நம:
தொண்டை நாட்டுத்திருப்பதிப் பஞ்சரத்தினங்கள்.
காப்பு.
சீர்பூத்ததொண்டை நன்னாட்டிலுலகுய்யச் சிறக்குமிருபானிரண்டு
திருப்பதிகடோறு நற்றொண்டர் குழுவாழ்ந்திடத் திருவுருக்கொண்டு விவிதப்
பேர்பூத்துவாழு மெம்பெருமான்கள்கழல்களின் பேதைமையினீடுபிறவிப் பிணிப்
பொரீஇயுய்யவொளிரைம் மணிப்பாவினப் பிணையல்கள்புனைந்தணியவே
நீர்பூத்தகுணகணநிறைந்த பூமாதுறை நிறத்தெந்தைசீரருளினால்
நித்தியர்கள்கலையினுந் திகழுமைம்படையாதி நிகழ்பவைகள்கலையினானும்
பார்பூத்தசேதநர்களுய்யவருமாழ்வார்கள் பரவுமாசாரியர்கடம்
பாத்தாமரையைப்பழிச்சு தூஉ நெஞ்சே பரிந்துதுணைநிற்க வென்றே.
தொண்டைநாட்டுத் திருப்பதிப் பஞ்சரத்தினங்கள்.
1 - வது திருக்கச்சி- அத்திகிரி.
பொன்னிறப்புண்டரிகை கேள்வநித்தியர்தமைப் போல நினையநுபவித்துப் –
புகல்கயிங்கரியவின் புடையனாய் வாழப் பொருத்தம் படைத்திருந்தும்
அன்னதையிழந்திற கொடிந்து துயர்பறவையென வல்ல லுறுகின்றவெல்லை –
யன்புடன் கரணாதி களையளித்த வைகள் கொண் டல்வழிசெலாதுநின்னை
மன்னியுய்யும் வண்ண மாமறைவிரித்ததன் மருமமாம் பொருள் விளக்க –
மகிமைபெறு பெரியரைத் தந்த பேருத வியை மறந்தேற்கு முய்தலுண்டோ
அன்னையொத்தென் பிழை பொறுத்தனின் கடனாகு மரு ளாள வத்திகிரிவாழ் –
அதி நேச விசுவாச மிகுதாச ரகவாச வகிலே சவமரேசனே. (1)
தீதாரவேசன்ம சன்மங்கடோறுமென் றெரியாமையாற் புரிந்து –
  தேடினேன்பாதக மவற்றின்வருதுன்பெலாந் திசைமுகரநேகர்கற்பப்
போதாரவே நுகர்ந் தாலுமவையொழியா பொருந்தலர்க ளென்னவுள்ளும் –
  புறமு மோர்கணமுமொழி யாதுந லிகின்றவென் புகலுவேன்புகலாகநின்
பாதாரவிந்தமே பற்றினேன் மற்றிலேன் பரம்பாவனமூர்த்தியே –
  பழவினைகள்பாறவே நின்கடைக்கண்களாற் பார்த்தருளியாவினுக்கும்
ஆதாசபூத வெற் கருளனின் கடனாகு மருளாள வத்திகிரிவாழ் –
  அதிநேச விசுவாச மிகுதாசரகவாச வகிலேச வமரேசனே. (2)
வேற்றளவை வேண்டா விழுச்சீருடைச்சகல வேதச்சுருக்கமான –
  வீடுதருதிருமந்திரத்தின் முப்பதமும் விளக் குமாகார மூன்றுஞ்
சாற்றிடினுயிர்க்கெலாம் பொதுமையாதலினித்யர் சங்கத்தையேகடுப்பத் –
  தகுசுத்தசத்துவத் திருநாட்டிலென் றுமொரு தன்மை பெறுமுணர்வுடையனாய்த்
தேற்றமுடனினை நுகர்ந் தீறிலின் பத்தினிற் றேக்கிடுந்தகை யிருந்துந் –
  திறல்கொணின் மாயையா னஃதொழிந் திப்பிறவி சிக்கினேனதனை நீக்கும்
ஆற்றலையளித்தெனை யளித்தனின்கடனாகு மருளாளவத்தி கிரிவாழ் –
  அதிநேச விசுவாச மிகுதாசரகவாச வகி லேசவமரேசனே. (3)
சுரநர விலங்குதா வரயோநிபேதங்க டேடாறும்யான் மாறி மாறித் –
  தொகைக்கடங்காப்பிறவி மேவியவ்வுடலையே தூய வுயிரென்றெண்ணலுந்
திரமுற்றியானென் றகங்கரித்தலுமயற் றேவர்கட்கடிமை செயலுஞ் –
  சேர்ந்தபடுகுழிகளி னழுந்தியம் மூன்றன் றிறத்தினுக்கேற்பவான
தர முறுஞ்சாத்யசா தநநேடி நலிவதோர் தாழ்பொருளை நண்ணிநின்னைத் –
  தணந்து விடும் விரதமேற் கொண் டொழுகும்
விமுகன்யான் சார்ந்த நல்விதியினின்னை
யரணெனவடைந்தன னளித்தனின்கடனாகு மருளாளவத் திகிரிவாழ் –
  அதிநேச விசுவாச மிகுதாசரகவாச வகி லேசவமரேசனே. (4)
மாதவமுகுந்தகே சவநந்த கோவிந்த வனஜாஷ்வனஜநா ப –
  வனகஜேந்திரவரத வாரகாஞ்சீபூர்ண வாற்சல்ய சம்பாஷண
வேதவேதாந்தவேத் தியசத்யவதிக்ஷேத்ர விமலசுப்புண் யகோடி –
  விமாந சுந்தரமஹா தேவீமநோஹர விரிஞ்சீமஹேஷ்டிஜாத
பூதமுனிபரகால த்ரமிட தோத்திரபாத்ர புங்கவாபச்சிம திசாம் –
  புஜவதநமண்டல முநீந்த்ரயோகித்யேய புஞ்சவக்ஞாநஹரண
ஆதவாநந்தபல் வலவெனைக்காத்தருள் செ யருளாளவத் திகிரிவாழ் –
  அதிநேச விசுவாச மிகுதாசரகவாச வ கிலேசவமரேசனே. (5)
---------
2-வது திருவட்டபுயகரம்.
..லத்தியல்புதீதாயி னந்நிலத்துறு நல்ல நீரியல் புதிரியுமா போல் –
  நிரயபதனந்தருந் தீத்தன்மை மாந்தரொடு நெடுநாளிணக்கமுற்றென்
..லத்தியல்புமாறியைம் பொறிகளானிர்ப்புண்டு புன்புல னுகர்ச்சிபெறலே –
  புருடார்த்த மென்றெண்ணி மலை முடிவிளக்கெனப் புகல்கீதையருள் குரவனும்
..லத்தியல்பினிருடிகளு மாழ்வார்களுங்கருணை நரலையா மாரியர்களும் –
  நயந்தருள் செய்நன்னூல்க டேறாத பாவியே னன்மை பெற்றுய்ய வருளாய்
..லத்தியல்பின்வளனெலா மெஞ்ஞான்றுமாறாது பொங்கி அபயக்குமட்ட –
  புயகரத்துயர் சீல நிசிசரர்க்கொரு கால புலவர்கட்க நு கூலனே. (1 )
வேத வேதாந்தத் தனிப்பொருளுணர்ச்சியான் வேறு பொருளிச்சியாது –
  விமலநின்ன நுபவத் தேநின்றுவீடுற மெய்ஞ்ஞானவாரியர்கடம்
பாதமேதுணை யெனப் பற்றிமற்றொன்றையும் பற்றாதவை ராக்யனாய்ப் –
  பரமசத்துவநிட்ட னாய்ச்சமந்தமமெனும் பண்புடைச்சம்பன்னனாய்
நீதமுறுமோக்காதி காரியாயுய்யும்வண நின்றிருவுளத்தி னெண்ணின் –
  நிலை கொளாதலையுமன நீசனேனுய்குவே னின் சித்தமென்பாக்கியம்
போதமுடையோருளக் கமலத்திலுறை திவ்யா புருடனேதி கழுமட்ட –
  புயகரத்துயர்சீல நிசிசரர்க் கொருகால புலவர்கட்க நு கூலனே. (2)
தேகநற்பொருள் பிரா ணன்வீடுமனைமனைவி சிறுவர் முதலோரெனக்குச் –
  சேட மென் றெண்ணாம லென்னையாட்கொண்டநற் றேசிகன் சேடமாக்கி
வேகமுறவேறொன்று மெண்ணாமலவனினைவின் வேட்கை யினொதுங்கியவனால் –
  விற்கவுங்கடவனாய் நற்கரும் முடையனாய் மெய்ஞ்ஞான விமலர்சேவைப்
பாகமுற்றவனாகி நன்னடைகளுடையனாய்ப் பகருமெய்யு ணர்வுகொள்ளும் –
  பரிவனாய பிமாந சூந்யனாய் நூனம்பு பக்குவியுமாகவருள்வாய்
பூகமெனவேகன்ன லோங்கிநிதம்வளரும் புனற்பழனமே வுமட்ட –
  புயகரத்துயர்சீல நிசிசரர்க்கொருகால புல வர்கட்கநுகூலனே. (3)
இருசெருக்கடைதலும் பிறரைநிந்தித்தவர்த மில்லாதியி ச்சித்தலும் –
  இகழ்ந்தவைகளுண்டுபரு கிடலுமயலா ந்தெய்வ மிகல் விடய சாதநங்கண்
மருவலொடு நினையுநின் னன்பரையுமிகழ்தலு மறுத்திடத் தக்கவாகும் –
  மறுக்காவிடிற் பெற்ற சற்குருவினருளு மபி மானமுங்காப்பல்லகாண்
ஒருசெய்நிறை நீர்புடைச் செய்ப்பயிர் வளர்ப்புண்மை யுரைபயிர்மிகுத்தகளையும் –
  றுச் சிவேர்நையப் புழுப்பட்டு றாவுமே லோம்பிடாதன்னயானும்
பொருளாகவெண்ணியத் தீக்குணகணங்களைப் போக்கியு ய்யக்கொளட்ட –
  புயகரத்துயர்சீல நிசிசரர்க்கொரு கால புலவர்கட்கநுகூலனே. (4)
அவித்தையும் பிற விதரு வித்தகங்காரமு மநர்த்தகாரண மென்பரால் –
  அவையுள்ளதுணையு மெத் தகைஞானி கட்குமிவ் வரும்பவத்தொடர்பு நீங்கித்
தவித்தலற்றுனைய டைத லில்லை யதனாலவை தவிர்த்தென னையாட்கொள்ளுவாய் –
  தயங்குக்கநாகிருதி மானவலர்மேன்மங்கை தலைவதிகழ்சக்ரராய
செவிக்கினியவாதிகே சவ நாம நிற்குந் திருக்கோலகரி வரற்குச் –
  சேவைதருநிலையவெம் ப்ராந்திமுனிகலிகன்றி செந்தமிழ்ச் சொன்மாலைய
வித்துன்பறுக்குங் கஜேந்த்ரபுட்கரணியொடு புலவர்து திமருவுமட்ட –
  புயகரத்துயர் சீல நிசிசரர்க்கொருகால புலவர்கட்க நுகூலனே. (5)
------------
3-வது திருத்தண்கா.
நீர்நிலைக்கடல் சிறிது நிலை கடந்தேறாது நிற்கவோர்வடவை யமையும் –
  நீடுபிறவிக்கட லறப்பெரித்தற்கதிக நேரினதுதகுவதாமென்
றோர் நிலையுறாதுபற் பல நிலைகளுற்றடைந் தோர்கணமு மொழியாது நின் –
  றுடற்றுமுத்தாபமாம் வடவைக ளமைத்தவற் றுறுகணுறுமுயிர்களெல்லாம்
பேர்நிலை கொண்மண்கா வடைந்து தமுருப்பங்கள் பேராத தன்மை நோக்கிப் –
  பெருந்தகாய் நண்ணுமவர் தாபங் கணீக்கிப் பெயர்த்து மருவாதவற்றின்
வேர் நிலையுமாற்றவோர் தண்காப்படைத்துவாழ் விமலவி ழிவிடயங்களை –
  விளக்கொளிகடம்மையும் விளக்கம் றுமெம்மையும்
  விளக்கொளிகொள் செம்மையானே. (1)
நின்றவா நில்லாத நெஞ்சுடையனென்செய்கே னிமிர்மா னுடப்பிறப்பின் –
  நேர்தாவரப்பிறப் பேவிழுமிதென் பனது நேரினு பயச்செருக்கும்
ஒன்றாவெவர்க்கு நின்று தவலாமொப்பிலா துயர்கருணையு ததியென்ன –
  உலகு புகழ் நம்பிள்ளை போலுமாரியர்க ளினி யுண்டாயினவர்களாலே
நன்றாகவேயுய்யு நாளுமுண்டாகுமிஞ் ஞாபகங்கொண்டு தானோ –
  ஞானநிதியான பெரு[$] மாளுமிப்பிறவியை நயந்தனர் முனைம் பொறிகளை
வென்ற முனிவரரேத்த நின்றதண்காவுறையும் விமலவிழி விடயங்களை –
  விளக்கொளிகடம்மையும் விளக்கமறு மெம்மையும்
  விளக்கொளிகொள் செம்மையானே. (2)
---
[$] குலசேகரப்பெருமாள்.
எப்பிறவியானாலு மெனையாவர்யாவைக்கு மிறைவபேராற் றலுடையாய் –
  என்று மேலதிகாரி யில்லாப் பெரும்ப கவ வீறிலாக்கருணைநிலய
தப்பாதவ்வுயிரை நீ வாழ்விக்கவெண்ணினாற் சருவமுத்தி ப்ரசங்கந் –
  தலைப்படாவண்ண நற் கருமஞானாதியைத் தகுமேதுவாப்பணித்தாய்
ஒப்புரவினுறவெணிற் செய்வேண்டுவனவெலா முண்டா க்கிநின்னுகர்ச்சிக் –
  குரியனாக்குவைபண் டயோத்தி ச்சராசரத் துயிர்கள் வீடுற்றதிலையோ
விப்பிரர்கள்வேதமோ தித்தொழுந்தண்கா வின் விமலவிழி விடயங்களை –
  விளக்கொளிகடம்மையும் விளக்கமறு மெம்மையும்
  விளக்கொளிகொள் செம்மையானே. (3 )
கூறுமேற்கருமமுங் கூடுங்கொலென்னினீ கூடாதகருமங்களைக் –
  கூட்டுவித்திடுமாண்மை யுடையையன்றோ நீ குறித்த விளையாட்டினுய்க்கத்
தேறிவினைவழியெமை நடத்தினெ முயற்சியாற் செய்தக்க வில்லை நின்றன் –
  செழுங்கருணைபெருகத் தலைப்படினி யாமுனைச் சேராது செய்வோரிலை
வீறுநீயெமையடைய வேண்டின்யா முன் செய்த வினையுந் தடாது நல்ல –
  வினைகளுஞ் செய்வித்து நின்னையடை வித்திடுவை வேதவேதாந்தவேத்ய
வேறுபட வெண்ணா தளித்தருள் செய்தண்காவின் விமலவி ழிவிடயங்களை –
  விளக்கொளிகடம்மையும் விளக்க மறுமெம்மையும்
  விளக்கொளிகொள் செம்மையானே. (4)
விதிவிலக்கினையுணர்ந் தொழுகும் வகையுண்மேவி விமல முற நியமித்தெனை –
  விளம்பமில்லாது நீ கைக்கொள்ளவேண்டின் விழைந்து பரமார்த்தனாக்கி
நதிவாரிவரவணித் தாங்காலதற்குரிய நற்குறிகள் காணு மாபோல் –
  நாயினேனுழி முத்த புருடலக்ஷணமெலா நல்கியருணின்றநிலைய
திதி செய்மரகதவல்லி நாயகசரச்சுவதி தீர்த்த சீகர விமான –
  திவ்யப்ரகாசதீ பப்ரகாசப்பெயர திகழ் வருணதிசை யானன
விதிசெய்கலிகன்றியருள் பாடல் பெறுதண்காவின் விமல விழி விடயங்களை –
  விளக்கொளிகடம்மையும் விளக்க மறு மெம்மையும்
  விளக்கொளிகொள் செம்மையானே. (5)
-------
4- வது திருவேளுக்கை.
மலையினிற்றிண்ணிதாந் தேகாபிமானியாய் மாமருந்துகணுகர்ந்து –
  மன்னாவுடம்பைப் பெருக்கியைம்புலவாசை மருவிமனை மனைவியிச்சை
விலையினிற் கொண்டு நூல் வழியினொழுகாது மனம் வீழ்ந்த வழியொழுகிலீலா –
  விடயனாயிதுகாறு நின்ற நானி னியேனு மேதக்க மெய்யுணர்வினாற்
தலைமையாமான்ம நிலை தேர்ந்து மூன்றா கார சம்பந்நனாய வைக்குத் –
  தக்கபடியுடல்வீழு நாளளவிருந்துன்றி யாவி டயனாகியென்றும்
உலைவிலாப்பேரின்ப வீடு பெற்றுய்யவரு ளோங்குபுகழ் வேளுக்கைவாழ் –
  உயர்குணத் தவிர்சோம் வொழிவில் சத்தியகாம வொளிர்சகத்திரநாமனே. (க)
சற்குருவினான் முத்தி சார்குவோர்ப்ரதம நற் சரமப்ரபந்நரென்னச் –
  சாற்றுமிருவகையர்முத லதிகாரிநின்வழிச் சார்ந்தொழுகு பரதந்த்ரனாய்
அற்கு நின்னுழியே யமைந்த பேரன்பனா யாழ்வாரின் மர்வன் மற்றை –
  யதிகாரிநின்னையரு ளாரியற்குச் செய்யும் யலுதவியின்மைதேறி
நிற்குமவனே தெய்வ மென்றெண்ணிவழிபட்டு நிகழ்மதுரகவிகள் போல –
  நிலவுமவனொன்றுமறி யாவென்னையிந் நெறி நிறுத்தியென்னறியாமையாம்
ஒற்கமொழி வித்திறுதி யுவணமீ தூர்ந்துவந் தோம்புவாய் வேளுக்கைவாழ் –
  உயர்குணத் தவிர் சோம வொழிவில் சத்தியகாம வொளிர்சகத்திரநாமனே. (உ)
கலையினுணரப்படுந் தகையனீயாரியன் கண்கண்டிடத்தக்கவன் –
  காதல் வழியொழுக நீ விடுவையவனதனைக் கடிந்து நல்வழியினுய்ப்பன்
நிலை போகலீலைக ளிரண்டையுஞ்சமமா நினைத்திடுவை நீய வன்றான் –
  நிருபனிச்சித்த விலை மாதினை மருத்துவ னி னைத்துயர்மருந்துதவியே
அலை பிணியொழித்தவன்போகத்தினுக்குரிய ளாக்கும் விதமென்னவுயிர்கள் –
  அஞ்ஞான நோய் நீங்க மெய்ஞ்ஞானவுறைதந்து ன நுபவக்குரிமை செய்வன்
உலைவின்றியவனையே குலதெய்வமென்றெண்ணி யுய்யவ ருள்வேளுக்கைவாழ் –
  உயர்குணத்தவிர் சோம வொ ழிவில் சத்தியகாம வொளிர்சகத்திரநாமனே. (கூ)
சூரியன் பரதந்த்ர னாகையாற் பொன்வணிக னரசனுக்கணி செயுங்கால் -
  ஆடகந்தனையோட வைத்தலங்காரத்தினப்பணி செய்துதவுமாபோற்
பாரினிற் சீடனை நினக்குரியனாச்செயப் பகுதிப்பதார்த்தவின்பப் –
  பற்றறுத்துறவேண்டு பிரபந்ந வொப்பனைகள் பலவுமுண்டாக்கிநிற்குச்
சீரினேர்குவனின் சுதந்தரத்தாற் பெற்ற சேடனிலுநற்றேசிகன் –
  திருத்தியருளதிகாரி யானனியுகப்பினைச்செய்திருப்பாயென்பரால்
ஓரினவனே தெய்வம் வேறில்லை யென்றெண்ணி யுய்யவருள்வேளுக்கைவாழ் –
  உயர்குணத்தவிர்சோம வொழிவில் சத்தியகாம வொளிர்சகத்திரநாமனே. (ச)
சரமப்ரபந்நாதி காரிதன்னன்னடைச் சம்பத்தையருளியென்னைச் –
  சரமதசையிற்பரம புருடார்த்தலக்ஷணத் தனிவீட்டிலுய்த்தருளுவாய்
பிருகு முனிகண்காண வந்தமாதவ பெரியார் பேசிடுமுகுந்தநாம் –
  பெருமாட்டி வேளுக்கை வல்லிமகிழ்மணவாள பீடுபெறுகனகமான
மரபுபெறுகலிகன்றி யொடுப்ராந்திமுனி செய்யு மங்கலா சாசநத்த –
  மகிழ்ந்து கீழ்த்திசை நோக்கி நிற்குந்திருக் கோல மகிமைக்கதம்பசரச
உரவுநீருலகினோருன்னிவருவரமெலா முத விமகிழ் வேளு க்கைவாழ் -
  உயர்குணத்தவிர் சோமவொழிவில்சத்தி யகாம் வொளிர்சகத்திரநாமனே.
---------
5-வது திருப்பாடகம்.
பகுதி நூற்சுவைமனைப் பற்றுண்டியுடைமாதர் பக்கலிலறாத வேட்கை –
  பரிந்து தீவினை செயப் புகுமவாவுடையோர்கள் பரகதிக்குரியரலராற்
றிகிரியெனவிவைகொண்டு திரியாமலீனரொடு சேராமலே காந்தநற் –
  சீலனாய்த் தேர்ச்சிபெறு சிட்டர் நன்னடையினிற் றிட சித்தனாகிவிடய
விகுதியற்றவனாகி வேதாந்த சாத்திர விசாரணையினுண்மை தேர்ந்து –
  விழைந்துயிர் வருத்தாத பேரருளனாகினவன் வீடுறுதறிண்ணமென்ப
திகழ்முத்திவழிபெறச் சிறியேனையாட்கொள்வாய் தென்றிருப்பாடகத்தாய் –
  சீர்த்தகுணகண பூர்த்தி வாய்த்த வடியவரார்த்தி தீர்த்தருள்க்ருபாமூர்த்தியே. (1)
வீறுசமதம் முதல் வான்மகுணநிதியனாய் வெகு பூத்தயையுடையனாய் –
  விடய சுகநயவா விரக்தனாய் முத்தத்வ விஞ்ஞான பரிபூர்ணனாய்
சீறிக்குடும்பிக ளடித்திகழ்ந்தாலுஞ் சினங்கொளாப்பரம் சாந்த –
  சித்தனாயறுசுவைகொ ளுண்டியே தேடாது தெறுபசியு நீர்வேட்கையும்
மாறயாதானுமேத் தியவத்தருந்து சீ வன நியதியுடையனாகி –
  மகிழ் பொருட்பேறிழவி லின்பதுன்பங்கொளா மனமுடையனாகி நின்னைத்
தேறும்படிக்கருள்செய் தாட்கொள்வாய் நிலவளஞ் செறி திருப்பாடகத்தாய் –
  சீர்த்தகுணகண பூர்த்தி வாய்த்த வடியவரார்த்தி தீர்த்தருள்க்ருபா மூர்த்தியே. (2)
பகைவர் மித்திரர்மான மவமானம் வெம்மைபனி பயனட்ட மின்பதுன்பம் –
பகர் நிந்தைது திகளிற் சமநெஞ்சமுடையராய்ப் பகர் பெருஞ்சாந்தகுணராய்ப்
புகை வெகுளி நீத்த புண்ணியராய்ச் சமத்தமாம் பூதவஞ்சகமில்லராய்ப் –
புகழ் பரமசாதுக்க ளாய்மனைவி புதல் வர்பொன் பூமிதானியமிவற்றிற்
பகையாவுவர்ப்பராய் நினையாதுவருவதிற் சந்துட்டரா யுயர்ந்த –
சாரதம சாத்ரவித் துக்களொடுகூட்டியித் தமியேனையாட்கொள்ளுவாய்
சிகையினோடுபவீத திரிதண்டதரமுனிவர் சேர்திருப்பாட் கத்தாய் –
சீர்த்தகுணகண பூர்த்தி வாய்த்தவடியவரா ர்த்தி தீர்த்தருள்க்ருபா மூர்த்தியே. (3)
முன்புள்ளவாரியர்கள் மொழிமுறைமைபிறழாது மூலமுமரைகேள்வியுற்று –
மொழிந்தவப்பொருளுக்கு முன் பின் முரண்வாராது முற்றுமாராய்ச்சி செய்து
துன்பமறுமப்பொருளை யுரையாதுதம்மனந் தோன்றுமோர்பொருளுரைத்துச்
சுத்த சம்பிரதாய வார்த்தையீ தென்னவே சொல்லுமாத்திக நாத்திகர்
புன்மையுறும் விபரீத நடையிற்புகுத்திடும் போதகர்கள்வர் கள்வழியிற் –
போகாது நீக்கி நின் றிருவுளப்படியொழுகு புனிதரொடுகூட்டியாட்கொள்
தென்றிசைக்கோனாணை செல்லாதஞானியர்கள் சேர்திருப் பாடகத்தாய் –
சீர்த்தகுணகணபூர்த்தி வாய்த்தவடிய வரார்த்தி தீர்த்தருள்க்ருபாமூர்த்தியே. (4)
சங்கு சக்கரமுறு தடக்கையம்பரமநற் றரும் நிலை பெறுவிப் பாவ –
தண்ணந்துழாய்த்தார சாம்பூநதத்துடைய தாயரைக் கண்ணவுண்மை
தங்குபாண்டவதூத தகையுருப்பிணிதேவி சத்யபாமா விலாச-
தயங்கிடும் பத்திரவி மானமச்சிய தீர்த்த சந்ததமுநின்கணன்பு
பொங்கரிதமா முனிக் கருடந்த முதல்வவெம் பூதமுனிபராந்தியோகி –
புகல்பத்திசாரர்கலி கன்றியிவர்வேதப் பொருட்டமிழ்ப்பாடல் விடய
செங்குணக்கினை நோக்கி வீற்றிருக்குங்கோல தென்றிருப் பாடகத்தாய் -
சீர்த்தகுணகண பூர்த்தி வாய்த்தவடிய வரார்த்தி தீர்த்தருள்க்ருபா மூர்த்தியே. (5)
--------------
6- வது திருநீரகம்.
அவிகாரிசுத்தனித் தியனாளுமோர் நிலை கொ ளமுதமங்கல விக்ரகன் –
அகிலமுந்தன்வயத் துறுமாடலான்படைப் பமையத்தினயனுருவனாய்த்
தவியாதளித்திடுங் காலைத்த னுருவனாய்ச் சங்கரிக்கின்ற வேலை –
சதிருருத்திர வுருவ னாய் நின்றியாவுஞ் செய்தகைகொள்பரவாசுதேவன்
அவிர்திறவவத்தைக்க ணேகமாயருவமா யவ்யக்தவுருவ மருவி –
யமைகாரியக்கண்ணநேகமாய்த்தூலமா யறி வயக்த வுருவமமையுந்
திவிய புருடன்சேத நர்க்கெலாம் வீடுதரு தேவாதிதேவ னெஞ்சே –
திறலார்புயச்சைய திருவாழுரத்துய்ய திருநீரகத் தையனே. (க)
சிட்டி திதிசங்கார மூலமாய்த்தினகரன் செலவாதிபொருளினுருவாய்த்
திகழ் காலதேகியக காலத்தை வென்ற நற் சிற்சொருபனதி வ்யாபகன்
மட்டிலாவுலகவா தாரமாயதிருக்கு மங்களாம்பகுதியாதி –
மலர்பொருட் குஞ்சூக்ம வுருவாயெவற்றினு மறைந்துறைந்தவை கொடோடம்
ஒட்டாதவன் மழுங் காஞான சம்பந்ந னுயருநற்குணகணத்தால் –
ஓங்குபுருடோத்தமன் சுத்தஞானத்துருவி னொளிருமவனறவுநிமலன்
தெட்புடைய வறி வினோர் தெளியுமவனேனையோர் தெளியாத முதல் வனெஞ்சே –
திறலார்புயச்சையதிருவா ழு ரத்துய்ய திருநீரகத்தையனே. (உ)
பேசுமிச்சையினன்றி வினைவயத்தானடை பிறப்பிறப்பில்லாதவன் –
பிரமாதிகட்குமதி பதிதன்னின் மேலான பேரிலாப்பா மாத்துமன்
ஆசறச்சேத நாசேதந ங்கட்கெலா மாதாரபூதன்றனக் –
காதாரம் வேறிலான்றன் னுழித்தானே யமைந்திருப்பவனித்தமும்
ஏசறத்திரிவனவு நிற்பனவுமாகிய வெவற்றினுள்ளும் புறம்பும் –
இகழாதுறைந்தவைக டன்னுழி வசிப்பதற் கேற்ற நற்சொருபமுடையோன்
தேசுறுந்தன்னினே யாவும் விளங்கிடத் திகழ்கின்ற பரமனெஞ்சே –
திறலாாபுயச்சைய திருவாழுரத்துய்ய திரு நீரகத்தையனே. (கூ)
பிரமமெனவேத வேதாந்தத்தினுட்பொருள் பிணக்கற் வுணர்ந்த பெரியோர்
பேசுமவனுலகுயிர்களுடலமாப் பெற்றவன் பெருகுமூலப்பகுதியும்
விரவிவருசீவனுந் தேவமநுடாதியாம் வியத்தங்களுங்காலமும் –
வீறு முத்தொழில்களின் றோற்றத்தினுக்கும் விளக்கத்தினுக்கு நல்ல
கருவியுருவாகவே கொண்டவனுரைத்த முக் காரியமும் விளையாடலே –
கண்ணியவவற்றினால் வேறு பயனொன்றிலான் கருது மெக்காலத்தினுந்
திரமான வன்முனிவர் சிந்தனைக்குரிய னாய்த் திகழுமவ னென்னெஞ்சமே –
திறலார் புயச்சைய திருவாழுரத் துய்ய திருநீரகத்தையனே. (ச)
நிலவு சகதீச்சுரப் பெயரனமதன்னையா நிலமங்கைவல்லி நாதன் –
நீடுசகதீசசுர விமானத்தனிறைபாவ நீக்குமகராயதீர்த்தன்
குலவுமக்ராயமா முனிவரன்கண்கண்டு குறைதீரமுன்வந்தவன் –
குறித்த கீழ்த்திசை நோக்கி நிற்குந்திருக்கோலன் கொற்ற வேற்பரகாலனங்
கலியனருண்மாரிகலி கன்றி பலவள னெலாங் கழுமு திருவாலிநாடன் –
கவிகள் புகழ் நாற்கவிப் பெருமாளமித்திரர்கள் கண்டீ ர வம்புவிமகள்
திலதமென வொளிர்தரு திருக்குறையலூரனுரை செந்தமிழனென்னெஞ்சமே –
திறலார் புயச்சைய திருவா ழுரத்துய்ய திருநீரகத்தையனே. (ரு)
----------
7 - வது திரு நிலாத்திங்கட்டுண்டம்.
உலகு பாரித்தலு மளித்தலுமழித்தலு முரைத்திடினெவன் செயல்களோ –
ஓதுகாரணவாக்கி யங்களெவனுழியியல் பினொண்ணுமோ முத்தொழில்களும்
நிலவி முற்றுப்பெறற் குரிய சாதனமான நிறைஞானமுடைய னெவனோ –
நிகழ்த்து மெவனொப்பாரு மிக்காருமில்லனோ நிலையாதிக விநான்முகன்
குலவிவருசிட்டிமுறை யுரைபழைய நெறியான கோதிலா வேதமுணரக் –
கூறாது திருவுளங் கொண்டவன்யாவனோ கூர்ந்தெவனை முற்றுமாயக்
கலுடமறு நித்யருங் காணார்களோ வவன் கன நெஞ்சமே நிலாத்திங் –
கட்டுண்டமாயனுரை தொட்டுண்டவா யனரை கட்டுண்டவாயனுரையே. (க)
எண்ணுமைம்பூதமுந் தலை நாளினொன்றொடொன் றேய்ந்து கலவாது நிற்க –
ஏன்றவைக்குட்புகுந் திசைவித்திவ்வண்டத்தை யெவனெளிதியற்றினானோ
திண்ணகாரணமா மெவன்பாடு முக்குணச் செயல் கணனி மெய்ம்மையாகத் –
தேசுற விளங்கிநிற் கின்றவோவி ங்ஙனந் தெளிவரியவருவுருவமாய்
ஒண்ணு நற்சேதநா சேதநத்துட் புகுந் தோர்கணமுமொழியாமலே –
யுறைந்தாலுமற்றவற் றின்றோட மெக்காலு மொட்டாதவமலனெவனோ
கண்ணுமவ னெஞ்சமே மிக்க நீர்வள முடைக் கழனிசூழ்திருநிலாத்திங் –
கட்டுண்ட மாயனுரை தொட்டுண்ட வாயனரை கட்டுண்டவாயனுரையே. (உ)
சீலமுறு மெத்தேவ னவதாரமுலகினோர் தீவினையை நீக்கி நின்ற –
செல்வநிலை பெறுவித்து மற்றுமிகு செல்வங்கள் சேர்ந்து வாழ்வுறவமைக்குஞ்
சாலக்குரூரசமு சாரமுற்றோர்க்கவர்க டமையுமறியாமனாவிற் –
சார்ந்த வெவனாமமதை நீக்கிடுமெவன்புனிதச் ரணகமலச்சார்வினான்
ஞாலத்தினிற்பரம சாந்தி பெறுமுனிவர்களு நளிர்கங்கைம் ங்கைதானும் –
நண்ணினரையக்கணத் தேதூயராக்குவர்க ணாட்டிலெல்லோருமஞ்சுங்
காலனுமெவற்கஞ்சி நிற்பனவனெஞ்சமே கட்டுரை கொடிருநிலாத்திங் –
கட்டுண்டமாயனுரை தொட்டுண்ட வாயனரை கட்டுண்ட வாயனுரையே. (கூ)
மருத்தெவற்கஞ்சிவீ சித்திரிதல்கதிரிரவி மாண்புட னெவற்கு வெருவி –
வயங்கிடுதலிந்திர னெவற்குட்கியெவ்வுழியு மாரிபெய் வித்தான் மதியங்
கருத்தினி லெவற்கஞ்சி நன்னில வெறித்திடுதல்கடலெவற் கஞ்சிநாளுங் –
கரைதனைக்கடவாது தன்னிலையினின்றிடுதல் கடுகுகாற்றின் சகாயன்
உருப்புட னெவற்கஞ்சியுற்றிடுதன்மலைகளோ டுல கெவற்கஞ்சி மூழ்கா –
தோர் நிலையினிற்றலா காயமெவனாணையா னோங்கும் பிராணிகட்குக்
கரத்தலில்லாது வழி தருதலவனெஞ்சமே கதிதருந்திருங்லாத்திங் –
கட்டுண்டமாயனுரை தொட்டுண்டவாய னரை கட்டுண்டவாயனுரையே. (சா)
நிலமிசையினேரொருவ ரில்லாதவல்லிதன் னேயமணவாளன்யாவன் –
நிகழ்புருடசூக்தநற் பெயர் பெறும் விமானத்தி னிலவிகிதம் வாழ்பவனெவன்
மலமறுத்துத் தூய்மை தருசந்த்ரபுட்கரணி மகிதலத்துடையானெவன் –
வருணதிசை நோக்கிநிற் குந்திருக் கோலத்தின் மகிழ்சேவைதருவானெவன்
குலவிவருகடுவுண்ட முக்கணம் மான் வேண்டு கோண்முறையின் வந்தவனெவன் –
கொற்ற வேற்பரகால னற்றமிழ்ப்பாடல் பெறு குணசீலனேவனெஞ்சமே
கலை வலோர்புகழுமவ னெண்ணியவரந்தந்து காத்திடுந்திருநிலாத்திங் –
கட்டுண்ட மாயனுரை தொட்டுண்ட வாயனரை கட்டுண்ட வாயனுரையே. (ரு)
----------
8 - வது திருவூரகம்.
பரமாத்துமாவான நின்பத்தியொன்று மே பரமமாந்தரும்மாகும் –
பகருமப் பத்தியே விரைவில் விடயங்களிற் பற்றற விராகாந்தரும்
உரவிராகத்தினாற் பேற்றாசையறவொழியு மொன்றுங்குறித்திடாதே –
உஞற்றிடும் பத்தியா னின்னொப்பிலாக் கருணை யுண்டாகுமென்பவென்றுந்
திரமான பத்திநின் பாற் சிறிதுமில்லாத தீயனேனெங்ங்னுய்கேன் –
திவ்யமாகிய நினது குணதீர்த்தநங்கள நு தினமுஞ் செய்தென்கன் மனம்
உருகி நின்னடியர்பணி செய்து பக்குவியாகி யுய்ந்திடக்கரு ணைகூர்வாய் –
ஓரகத்தொளிர்பாத தாரகத்துணர்போத வூரகத்திருநாதனே.
பெரியவுபநிடதத் தரும் பொருட்கேள்வியும் பெருமநின்னிகரில் சரிதப் –
பெருஞ் சுவைகொளமிழ்தினுக் கிணை வந்து நிற்கப் பெறாது வெகுதூரம் விலகும்
அரியநின் சரிதையைக் கேள்வி செய்வோருள்ள மனலின் மெழுகென்னவுருகி –
அம்பகத்தாநந்த நீர் பெருகியுடல்புள கரும்பியின் புறுதல்போலத்
தெரிதரற்கரிதான வேதாந்த சிரவணஞ் செய்பவர்க்கின் பில்லையாற் –
றினமு மொழியாமனின் சீர்ச்சரிதவமுதமென் செவிமடுத்துன்னடியருக்
குரியனாயவரேவல் செய்து பக்குவியாகியுய்ந்திடக்கருணை கூர்வாய் –
ஓரகத்தொளிர்பாத தாரகத்துணர் போத வூரகத்திருநாதனே. (உ)
அருளினாருயிர்களீ டேறிவாழ்வுறவே யறத்திணுக்கமுதவீடும் –
அமர்பொருட்கற முநற் காமத்தினுக்கடையவரிய தத்துவஞானமும்
உரியபலனாகவே தேறுநின் சங்கற்ப முணராது பொருளை நாடி –
உயரறமுமின்பத்தை நாடியொண் பொருளும் வீ ணுறு பொறியினின்பை நாடிப்
பெருகுகாமத்தையும் பேணுமவர்பிறவிப் பெருங்கடலின் வீழ்வரென்ப –
பேதையேனாதலா னினது சங்கற்பமுறை பிறழாமலொழுகி யென்றும்
ஒருநிலையினிற்கு நின்னன்பருக்காளாகி யுய்ந்திடக்கருணை கூர்வாய் –
ஓரகத்தொளிர்பாத தாரகத்துணர்போத வூரகத்திருநாதனே. (கூ)
தத்துவப் பொருளான சேதநா சேதந சரீரி நீபிரமம் யாவுஞ் –
சார்ந்தபரமாத்துமா பகவனென்றுண்மை நிலை தன்னையாராய்ந்து தேர்ந்த
உத்தமர்கணினை நம்பி ஞானவைராக்யத்தி னுறு தியாற்றமதுடல்களுக் –
குயிர்கடாமாதல் போற் றம்முயிர்க்குயிராக வுன்னையுட்கண்டு மகிழ்வர்
சித்த நிலை நில்லாத சிறியேற்கு நி ன் சொருப சேவைக்கும் வெகுதூரமே –
தினமுமின்றிருவடித் தொண்டுபேரன்புடன் செய்து வாழடியார்கள் பால்
ஒத்தவன் பினனாகி யவரடித்தொண்டுசெய் துய்ந்திடக்கருணை கூர்வாய் –
ஓர சத்தொளிர் பாத தாரகத்துணர் போத வூரகத்திருநாதனே. (ச)
இந்திரற்கருள மூ வடிமண்மாவலிபா லிரந்துலகளந்த பெருமான் –
ஏழா குமாவரண வண்டபித்திகைவரை யெழுந்ததிரிவிக்ரமனெனுஞ்
சந்தமுறு நாமத்த வமுதவல்லித்தலைவ சாரசீகர விமாந –
சந்ததமு மூழ்குவோர்க் கருணாகதீர்த்தத்த தகைவருணதிசையை நோக்கிச்
சிந்திப்பவர்க்கருள நிற்குந்திருக்கோல சீராதிசேடனானஞ் –
சிந்தைகளிகொள்ள முன் வந்தருள் புரிந்தவ சிறந்த திருமங்கை மன்னன்
உந்துபுகழ்பெற்ற திரு மழிசைப்பிரான் மகிழ்ந் தோதியருள் பாமாலைய –
ஓரகத்தொளிர்பாத தாரகத்துணர் போத வூரகத்திருநாதனே. (ரு)
---------
9-வது திருவெஃகா .
நீதிபெறும் வருணவாச் சிரம தருமத்தினிலை நின்றொழுகி நேர்ந்த பயனை –
நினக்கப்பணஞ்செய்து நெஞ்சத்தை வேறுழி நிகழ்த்தாது நின்கணிக்விச்
சோதியாநின் சொருப ரூபகுணசேட்டிதஞ் சுவைபெற வலங்கரித்துச் –
சொல்லித்து தித்தெண்ணி விழிகளாகந்த நீர் சொரியநனியவசனாகிப்
பேதியாநினது நற் றியானமாமேதியாற் பிரமகற்பந்திளைத்தும் –
பேராதவென் வினைப் பிணிமுத லெறிந்துநற பேரின்பவாரியான
வேதியாகின்பதத் தின்புற்று வாழ்வருள் வேறொன்றை நாடி நின்னை –
வெஃகாததீயமதி வெஃகாததூய துதி வெஃ காவின் மேய பதியே. (க)
பெரியர்சங்கத்தன்பு பெறல் வேண்டுமது பெயிற் பெருமை பெறுமவர்களருளாற் –
பேரின்பநல்குநின் சரிதத்திலன்புறூஉம் பீழை தீரது செவியுறில்
அரியநின்பாலன் புதிக்குமவ்வன்பினோ டமலநின்புகழ் விழைகுவோர் –
அகமலந் தீருமல மொழிதலாலநவரதமநக நின்னன்பர்சேவை
புரிதலாலுத்தம் சுலோகனாநின்கண் பொதிப்பிலாப்பத்தி வருமப் –
போது காமாதிபகை யறுவருமிருக்கவோர் புகல்பெறாதென்னினீங்கி
வெருவியோடுவரிந்த வெற்றிபெற்றுய்யவருள் வேறொன்றைநாடிநின்னை –
வெஃகாததீயமதி வெஃகாத்தூய் துதி வெஃகாவின்மேய பதியே. (உ)
சஞ்சலந்தீர்மனஞ் சத்வ சம்பந்தமாந் தகைகொள் மெய்ஞ் ஞானத்தினாற் –
றணவாத சந்தேக விபரீத நீங்கிச்ச தாகாலநின்னிடத்தே
எஞ்சலில்லாப்பத்தி யேய்தலாற் றெளிவடைந் தென்று மொழியாத விடய –
இச்சையு மொழிந்து நின் னமல மாஞ்சேவைதனிலீடுபடுமிடுபடவே
வஞ்சமாம் பூர்வசஞ் சிதகருமகுலமெலாம் வாதனைச்சு வைகளுடனே –
வைரமற்றோடுமத னான்மனத்தெளிவிற்கு வழியான நினதுபத்தி
விஞ்சவநவரதமுஞ் செய்துள்ளவருள் செய்வாய் வேறொன்றைநாடிநின்னை –
வெஃகாத தீய மதி வெஃகாததூய துதி வெஃகாவின் மேய பதியே.(கூ)
பகுதிபுருடன் பரம புருடனெனவோதுமுப் பகுதியாந்தத்துவத்திற் –
பகர்பரம புருடனா யொளிருபேகு திமுப்பண்பினிற் சத்து வத்தே
புகுதல்செய் துயிர்கள்யா வையுமளித்தவைகள்புரி புருடார்த்தமுதவலாலே-
புரையிலாமோக்க நசை யுடையார்கள் யாவரும் புகலுமேனைய குணத்துத்
தகுதியுடையோர்களைச் சாராது நின்னையே சார்ந்து நின்பத்திபுரிவர் –
தமியேனுமவ்வண்ண நின்பத்தியே செய்து தவிராததான பகுதி
விகுதியறநல்வீடு பெற்றுய்யவருள் செய்வாய் வேறொன்றை நாடிநின்னை –
வெஃகா ததீய மதி வெஃகாததூய துதி வெஃகாவின் மேய பதியே.
தெண்டிரைப்புவிபுகழ் யதோக்தகாரிப்பரன் சீரடியர் சொன்னவண்ணஞ் –
செய்தபெருமாளெனுந் திருநாம்முறு தேவ திகழ்வேதசாரமான
புண்டரிகமேவுகோ மளவல்லிமணவாள பொய்கையென் புட்கரணிய –
புயங்க சயனத்தநங் கணிகண்ணருக்கு முயர் பொய்கையாழ்வார் தமக்கும்
முண்டகமலர்ந்ததோர் கொண்ட லெனவே வந்து முன்னின்ற முதல்வபொய்கை –
முனிமழிசை முனிப்ராந்தி யோகிமுனி பரகால முனிகளருள்வாக்கின் விடய
விண்டலமுமண்டல மு மேவமேற்றிசை நோக்கும் விமல வெனையாட்கொணின்னை –
வெஃகாத தீயமதி வெஃ காததூய துதி வெஃகாவின் மேயபதியே. (ரு)
-----------
10-வது திருக்காரகம்.
எக்கிளவிசாலவும் வியப்பினுக்கிட மா யிருக்கினும் புவனங்களுக் –
கெல்ல ாமி குத்தபா வனமாகுநின்புக ழெடுத்துத்துதிக்க விலையோ
அக்கிளவிதனை நினை யகத்கனுபவிக்கின்ற வடியார்கள் பரம வம்ச –
அந்தணர்களாமரச வன்னங்கள் களிகொண்ட வாவாதகாரணத்தாற்
றொக்க காகங்களிழி துறையென பாபரமங்ன சொன்மாலை நோக்கிநிற்குஞ் –
சொற்களேயாடியனேன் வாக்குழி யிருந்து நீ சொல்வித்துமுக்கனி நெய்பால்
அக்காரமொப்ப வண் ணிக்கு நின்புகழ்பாட வருடிருக்கார கத்தாய் –
அச்சுதாநந்தகோ விந்தவைகுந்தனே யள வினித்யாநந்தனே. (1)
எப்பிரபந்தத்தினிற் கவிதைதொறுமைந்தெனு மிலக்கண ப்பிழையசொற்கள் –
இருத்தினுமநந்தனா நின்புகழ்க் குறியா யிலங்கு திருநாமங்களைச்
செப்புவோர் வாய்த்திடிற் செவியுற்றுமன்பினாற் சிரவணஞ் செய்யுமவாகள் –
சேர்ந்திடிற்பண்ணி னொடு பாடியுமிலாவிடிற் றேர்ந்துதாமே படித்தும்
ஒப்புரவினல்லோர்க ணனியின்பமுறுவரோ வோதுமப் பிரபந்தமே –
உயர்ந்ததாமதனையே யன்பினொடுகேட்டோதி புண்ணெகப்பாடியுய்ய
அப்ரமேயப்பரம புருடனேயருள் செய்வள மமர் திருக்கார கத்தாய் –
அசசுதா நந்தகோ விந்த வைகுந்தனே யள வினித்யாநந்தனே. (2)
சாலவும் வருந்திப் பலத்திச்சையில்லாது சாதித்த கருமங்களுந் –
தலைவனாகிய நினக் குண்மையாமன்பொடு சமர்ப்பணஞ்செய்தலிலையேல்
ஆலநிகர் தாமத விராசத்குணங்களை யகற்றிருற் சத்துவத்தின் –
ஆக்கத்தை நல்கா வடிப்பகுதியுறவற்ற வான்ம நிலை யுடகாண லும்
கோலமுறு நினதுபா சனை தனக்கங்கமாக் கூடிடாதாயினதுவுங் –
குறைவுள்ளதிவைசெயற் கரியதகுவனவுமல கூறுமிவை நீக்கியன்பர்
ஆலிக்கு நின்னாம கீர்த்தனமறாதுசெய் வருடிருக்காரகத்தாய் –
அச்சுதாநந்தகோ விந்தவைகுந்தனே யள வினித்யாநந்தனே.(3)
தீராத பிறவிப் புணர்ப்பினையறுத்து மகிழ் சீதரமுகுந்தநினது –
திவ்யலீலைகளையே சிந்திக்குமன்பர்தஞ் சிந்தை நிலை பெறுதல் போல
ஆராவவாவழியின் வேறாமறங்களை யநுட்டிக்கு மவர்களுள்ளம் –
அமையாது சூறையி னகப்பட்ட நாவாயி னலமந்து திரியு மென்ப
நீராளமாவுருகி நீங்காதநேயமொடு நினது திருவிளையாட்டினென் –
னெஞ்சகமு நிலை நின்று வஞ்சகப் பெருமாயை நிலை யழிவுகண்டு நின்
சீர் ஆராயுமன்பருக் கன்பனாம்வண்ணமே யருடிருக்காரகத்தாய் –
அச்சுதாநந்தகோ விந்தவைகுந்தனே யள வினித்யாநந்தனே. (4)
பிறவியலை மூழ்கினோர்க் காலம் பதூற்கரப் பிடிதருங்கருணாகரப் –
பெருமாளெ னுந்திருப் பெயரவிவ்வுலகெலாம் பெற்றளித்திடுமன்னையாம்
இறைவிபதுமாமணிப் பெயர் காய்ச்சியார்க்கின்ப வேய்ந்த வாமன விமாந –
எளிதினுண்மல நீக்கு மக்ராய தீர்த்தத்த வேன்று தென்றிசையை நோக்கி
அறவர் தொழநிற்குந் திருக்கோலநோற்ற நோன் பாற்றலு றுகாரரெனும் –
அருந்தவர்க்கருள் புரிய முன்வந்த முதல்வவெமை யாட் கொளுமரட்ட முக்கி
அறிஞர் புகழ்கலியன்னுரை பாடலாயடியனுக் கருடிருக்காரகத்தாய் –
அச்சுதாநந்தகோ விந்த வைகுந்தனே யளவினித்யாநந்தனே. (5)
-----------
11- வது திருக்கார்வானம்
பருவடைந்தோர் தினஞ் சுக்லசோணிதமொடு கலந்துநின்றைந்து நாளிற் –
கனமொக்குளுருவமாய்த் தக நாளில ந்தையின் கனிநிகர்த்தூன்செய் பிண்ட
உருவமாய்த்திங்களிற் சிரமுமிருமதியத்தி னுறுகால்கை முதலாமுறுப் –
புடன் மேவுமுடலுமும் மதியுரிவை யுகிரென் புரோமம் விழிசெவியாதியாய்ப்
பரவுபொறிவழியுநான் மதியினேழ் தாதுவும் பஞ்சமதிபசி தாகமும் –
படைத்தாறுமதியிற் சராயுவாம்பையின்ற் பையப் பொதிந்தன்னைதன்
கருவலவயிற்றினல மருபிறவி வாராது காத்தென்னையாட் கொள்ளுவாய் –
கார்வானமின்னு மெரி நீர்ஞாலமெ ன்னவிரி கார்வான மன்னுமரியே. (1)
அன்னை நிதமுணுமந்ந பாநாதியானாக்க மடைகின்றதாதுடையனாய் –
அநேகசெந்துக்களுக் குற்பத்தியிடமாகி யருநரகினின் னாத்தாய்
மன்னுமல மூத்திரக் குழியான குக்கியிடை மாணாப்படுக்கை மேவி –
மல்கியங்குறைகிருமி சாலங்கள்சந்ததமு மாறாப்பெரும் பசியினாற்
றுன்னுசுகுமாரமா மவயவந்தோறுஞ் சுறுக்கெனக்கவ்வியுணலாற்-
றுயர்கூர்ந்தடிக்கடிச் சோர்ந்து மூர்ச்சித்த் துடிக்குமென்பிறவிநோயைக்
கன்னனிகர்நின்னாம கீர்த்தநமருந்தினாற் கண்டித் துதிக்கியருள்வாய் –
கார்வான மின்னு மெரி நீர் ஞாலமென்னவிரி கார்வானமன்னுமரி யே. (2)
தாயுணுங்கைப்புவர்ப் புத்துவர்ப்பாதியாச் சாற்றிடு சுவைகண்மருவிச் –
சமை பதார்த்தத்தானு முண்ட நீர்வெம்மையொடு சாடராக்கினியினாலும்
மேய மெல்லுடலிற் பொறுத்து முடியாதபெரு வேதனையை மேவியவடன் –
மிகுகு டர்கள்சண்டப்பை மே2)! பொதிதலான் மென்றலையையுதரத்துளே
வாயும்வண்ணம்வைத்து நனிவணங்கிய முதுகு வளைகழுத் துடையனாகி –
வகுத்துரைசெயற்கரிய கருவாசவாதனையின் வன்கொடுமையென்சொல்லுவேன்
காயுநரகமுமிதனி னல்லதிதுவாராது காத்தென்னையாட் கொள்ளுவாய் –
கார்வானமின்னுமொரி நீர் ஞாலமெ ன்னவிரி கார்வானமன்னுமரியே. (3)
தீதுறுகருப்பவா சஞ்செயுங்காலை முன் செய்ததோர்சுகிர் தத்தினாற் –
செப்புமேழ்மதியாதி யுணர்வு தோன்றிடுதலாற் சென்ற சநநங்க டோறுங்
கோதுறக்கூசாது செய்தகருமங்களின் கொடுமையை நினைந்துநைந்து –
குழம்பிக்குலைந்துயிர்க் கவுமாண்மை யில்லனாய்க் குறுகுமமையம்பிரசவ
ஏதுவாம் வாயுக்க ளாலலைப்புண்டுமல மீனும் புழுக்களுடனே –
எண்ணுமோர் புழுவா யிருந்துழியிராதயர்ந் தின்னுமோர்கருவில்
வதியக் காதரங் கொள்ளுவே னதனைக்கடிந்தெனைக் காத்தனின்கட்னையனே –
கார்வானமின்னுமெரி நீர் ஞாலமென்ன விரி கார்வானமன்னுமரியே. (4)
நோக்குமவர்நோக்கமுட னெஞ்சமுங்கவர்கின்ற நோக்க முறுகள் வனாம் –
நுவல்கமலவல்லிமகிழ் மணவாள நூன்முறை நுனித்த புட்கலவிமாந
நீக்கமறு கெளரீ த டாகமேற்றிசைநோக்கி நிற்குந்திருக் கோலமுன் –
நிலைபெறுபருப்பதத் தரசனருள்புதல் வியா நிலைக்கு முன்வந்தவ
வாக்குவல்லமையா னெமக்கருள்வரோதயன் வளங்கெழு முமாலி நாடன் –
வாள்வலியின் மந்திரம் பெற்றுய்ந்த தந்திரன் மங்கலாசாசநத்தாய்
காக்கும் வினையுள்ளநிற் கழகாகு மெளியனைக் கருவில் வீழ்த்தாதளித்தல் -
கார்வானமின்னு மெரி நீர் ஞாலமென்ன விரி கார்வானமன்னுமரியே.(5)
-----------
12 - வது திருக்கள்வனூர்.
துட்டனாகியவெனக் கிட்ட தாமிக்கருச் சூழல்வாசந்தக்கதே-
துயருறும் புவியைப் புரக்கவெக்கதியினுந் தோன்றியருண்முதல்வநினது
மட்டவிழுமரைமலர்ச் சரணமேசரணென வணங்குகின்றேனென்னவும் –
மாதாவினுதரத்தி னுடலமிந்திரியங்கண் மனவுருவமாயை மன்னி
இட்டனைப்போன்றியா னனிபெருந்தாபமுறு மிதயத்தின விகாரியா –
யெவ்வுபாதியுமிலா விறைவனாகிய நின்னை யேத்து கின்றேனென்ன வுந்
திட்டமுடன் முன்செய்த துதிகளுக்களவின்று தென்றிருக் கள்வனூராய் –
திறல் பொங்கும் வக்ரகர ருரமங்கு முக்ரசா திகழ்சங்க சக்ரதரனே. (1)
பஞ்சபூதங்களிந் திரியங்கள் விடயங்கள் பகரகங்காரமென்னப் –
படுமிவற்றாற்கண்ட வுடலின் மறைவுற்றியான் பற்றுமவ்வுடலிலானாய்த்
தஞ்சனாயளவிலா மகிமைதனையுடையனாய்ச் சகலமுமறிந் தவனுமாய்ச் –
சக்ரதர னாயொளிருநிற்கு வெகுதண்டன் சமர்ப்பிக்கிறேனென்னவும்
அஞ்சிடத்தகும் வினையின் வீக்குண்டுதுயருமென் னமல மெய்ச்சொருபமுணர –
வருள் புரிந்திடுநிற் கநேகமுறைவாழ்த்தியஞ் சலிசெய்கிறேனென்ன வுஞ்
செஞ்செவே முன்செய்த துதிகளுக்கீறின்று தென்றிருக்கள்வனூராய் –
திறல்பொங்கும் வக்ரகர ருரமங்குமுக் ரசர திகழ்சங்கசக்ரதரனே. (2)
முக்காலவிடயமு முணர்ந்திடுங்கருவியா முதிர்ஞானமருளுநின்னை –
முடிவிறாவரசங்க மத்துறையு முதல்வ நினை மூழ்த்திடுஞ்சமுசாரமாஞ்
சக்கரமழுந்தித் தவிக்கின்றவேழைமுத் தாபசாந்தியினிமித்தஞ் –
சரணமடைகின்றன னிரத்தமலமூத்திரந் தங் குதாய்க்குக்கியான
துக்க கூவத்தினின் றேறி வெளிவரவே துணிந்துரை செய்மதியமெண்ணித் –
துயருமெற்கருள் பெருங் கருணைவாரிதிநினைத் தோத்திரிக்கின்றென்வேறோர்
திக்கிலேனென முனஞ் செய்து திக்களவின்று தென்றிருக்கள்வனூராய் –
திறல்பொங்கும் வக்ரகர ருரமங்கு முக்ரசர திகழ்சங்கசக்ரதரனே. (3)
நன்றிசெய்துவக்குமுத் தமசீல நிற்கியா னல்குமஞ்சலியன்றிநின் –
நன்றிக்கு வேறென்னை கைம்மாறு செயவலேனாடுமேழ்தாது வீக்கப்
பன்றிப சுவாஞ்சீவர் தம்முடலினின்பமும் பருவரலுமுணர்வர்யானோ –
பரிவினீயருண்மதியி னற்சமந்தமமேவு படிவனாய் நினையுட்புறம்
நன்கறியவல்லனிக் கருவாச் நின்றும் வெளி நண்ணநச்சேனின் மாயை –
நாடலானிருசெருக் குற்றுமனைபுதல்வரென நலிபாச மடைதலினெனச்
சென்னியின்வணங்கி முன் செய்து திக்களவின்று தென்றிருக்கள்வனூராய் –
திறல்பொங்கும் வக்ரகர ருரமங்குமுக்ரசா திகழ் சங்கசக்ரதரனே. (4)
கருவாசமே நன்று பேருதவி செய்யுநின் கழல்கண்டு தரிசித்திடுங் –
கருவியாமுணர்வுறலி னவ்வுணர்வினுதவியாற் கவலை தருநாநாவிதக்
கருவாசம்வாராது நீக்குவலெனத் துதிகள் கண்ணியதநந்தகோடி –
கருதாதியாம் வரா கப்பெரும் நித்யபுட் கரணிவாமந விமாந
மருவுமஞ்சுளவல்லி கணவமேற்றிசை நோக்கி மன்னிநிற்கின்ற கோல் –
மகிழுமசுவத்தநா ராயணன் முன்வந்தமாதவா கலிகன்றிதன்
திருவருட்பாடல்பெறு செல்வகருவாராது தீர்த்தருள் செய்கள்வனூராய் –
திறல்பொங்கும் வக்ரகர ருரம் ங்கு முகரசர திகழ்சங்கசக்ரதரனே.(5)
----------
13- வது திருப்பவளவண்ணம்.
எப்பகவனம் மக மிருந்திற்றைநாள்வரை யிலங்காது நின்ற வாக்காம் –
இந்திரியமொடுமற்றை யிந்திரியவகையெலா மியல்பானதன்னொளியினாற்
செப்பமொடு திகழ்தரச் செய்வித்து நித்தமுஞ் சிதைவிலாத்தன் புகழையே –
செந்தமிழ்க்கவிதையாப் பாடுவித்தவைகளைச் சேய்மழலை கேட்டுகக்கும்
அப்ப னெனவேதன்ன தொப்பிலாத்திருவுளத் தங்கீகரித்துநம்மை –
ஆட்கொள்ள வெண்ணிக் கடைக்கணித்தருளினா னப்பகவனென்னெஞ்சமே
ஒப்புரவினொழுகுமந் தணர் மறைமுழக்கறா துயர் பவள வண்ணம் வாழ்வோன் –
உலகெங்கணுங்காத்ர னுலகெ ங்கணுந் நேத்ர னுலகெங்கணுஞ் சோத்ரனே. (1 )
எத்தேவனுயிர்களுக் குயிராகியவைகட் கிரங்கியருளும்லென்னவே –
யெங்கணுங்களைகணொன் றின்றியேதுயர்கின்ற வேழையாநம திடத்தும்
ஒத்தவன்பினனாகி யொப்பிலாத்தனகழல்க ளுறுதியென நனி நம்புவித் –
துபமலம் பரிகரித் துபநிடதநற்பொரு ளுணர்ந்துணர்ந்துட்களிக்குஞ்
சித்தமுறுதன் பரம பத்தர் தங்குழுவினிற் சேர்வித்து நிகரிலாத்தன் –
சீர்த்தியாஞ்சிறிதுந் தெவிட்டாதவமும் நஞ் செவிமடுத்துண்ணவைத்த
உத்தம னெனப்புகலு மத்தேவனுள்ளமே யுயர்பவளவண்ணம் வாழ்வோன் –
உலகெங்கணுங்காத்ர னுலகெங்கணுந் நேத்ர னுலகெங்கணுஞ்சோத்ரனே. (2)
எப்பரமபுருடனதி கோரமாந்தீரா விடும்பையேதருவதான –
இப்பிறவிவேலை நின் றிக்கணமெடுக்கவே யின்ப மயமானதன்ன
தொப்பிலாத்திருவடித் தாமரையினூற்றெடுத் துருசிதரு மகரந்தமே –
உண்டுவட்டாவரச வன்னங்களாந்தொண்ட ருறு பெருங்குழு வி னுய்த்துத்
திப்பியாஞ்சமுசார வாழ்க்கையை வெறுத்திடச் செய்வித்து விடயபோகந் –
தீநரகினுறுபோக மென்னவே திண்ணமாத் தெளிவித்து நம்மையாள
ஒப்பினானப்பரம புருட னெஞ்சேவளத் துயர்பவளவண்ணம் வாழ்வோன் –
உலகெங்கணுங்காத்ர னுலகெங் கணுந்நேத்ர னுலகெங்கணுஞ் சோத்ரனே. (3)
எப்பிரமவாச்சிய கண்டகாரணனாகி யெழில் கொளுந்தனது நாபி –
யென்னு மிரணியமயம் தாயொளிர்ந்திடுமூல விண்டையிற் பண்டைநாளில்
ஒப்பிலாதொளிரு மொளி மானானபிரமனை யுகாந்தளித்தவனுள்ளநின் –
றுலகெலாந் தந்து தன் னாராதனத்துருவி அறுகருமவகைதன்னையுஞ்
செப்புமக்கருமவகை தன்னினாராதனை செயப்படுந்தனையுமுணரத் –
தெளியவுரை வேத வேதாந்தங்களருள்வனச் சீர்ப்பிரமவாச்சியன்றான்
ஒப்பனைசெயற்கரிய வுருவினானுள்ளமே யுயர் பவளவண்ணம்வாழ்வோன் –
உலகெங்கணுங்காத்ர னுலகெங்கணுந் நேத்ர னுலகெங்கணுஞ்சோத்ரனே. (4)
எவன்பச்சைவண்ணனற் பவளவண்ணப்பெரும னென்றுரைசெய பிதானனா –
யிலங்குகின்றவனெவன் புருடீ கரித்தருள விசைபவளவல்லியென்னும்
புவனகாரணிமகிழு மணவாளனாமெவன் புகழ்பவளமாவி மாநன் –
புனிதஞ்செய் சக்ரநற் றீர்த்தத்தனெவனெவன் புனலிறைத்திசையை நோக்கி
அவனி யோர்க்கருளநிற் குந்திருக்கோலனெவ னச்சுவினிதேவதைகளுக் –
கன்புடன் சேவை தர முன்வந்தமுதல்வனெவ னருண்மாரிகலிகன்றிதன்
உவமையில்லாதவாழ்த் துடையனவனுள்ளமே யுயர்பவளவண்ணம் வாழ்வோன் –
உலகெங்கணுங்காத்ர னுல கெங்கணுந்நேத்ர னுலகெங்கணுஞ்சோத்ரனே. (5)
------------
14 - வது திருப்பரமேச்சுரவிண்ணகரம்.
உள நிலை பெறா நீசவுட னிதிநிகேதநமுத னிகழ்த்திடுஞ் செல்வமெல்லாம் –
நிலையுள்ளவென்றவற் றிற்களிப்புறுமே தை நிகழாது நீத்தவனுமாய்
மலை வில்லும்பகலு மனைவிசுதர்முதலோரை மகிழ்விக்கு மாள்வினையினே –
வாணாள் கழித்தறக் கடைவினைக ளே புரியும் வாஞ்சை நனியற்றவனுமாய்
அலை நரகழுந்தினும் பகவநின் மாயையா னங்கு மோகித்தருந்தும் –
ஆகாரமாதியிற் சுகமுண்டெனும் புத்தி யடையா துவர்ப்புடையனாய்
உலை விலா நின்னன்ப ரூழியஞ் செய்தவர்க கருவகை பெற்றுய்யவருள்வாய் –
ஓங்கு பரமேச்சுரவிண் ணகரமுறை) நீதனே யொளிர்பரமபதநாதனே. (1).
மயக்குமங்கையர்களே காந்தசம் போகாதி வடிவமாமாயையானும் –
மகரயாழ்குழலிசையி னினிதென்னுமக்கடம் மதுரமாமழலையானுந்
துயக்குறாதவருண்ட சேடமாமிச்சிலைத் துய்த்ததோகதிறாது – தொழில்கள்
பலியாது பிறர் பொருள் வெளவு நெஞ்சனாய்த் துயராது மூப்படைந்து
தியங்காது நோய்களான் மெலியாது முடிவிற் சிலேத்துமாதிகள் செய்துன்பஞ் –
செறியாது திடசித்த னாய்நின்றுபொறிவென்று செய்யநின்றிருவடிநினைந்
துயத்தகு முபாயமுரை நின்னடியர்பணிகள் செய் துய்யத்தடுத்தாளுவாய் –
ஓங்குபரமேச்சுரவிண் ணகரமுறை நீதனே யொளிர்பரமபதநாதனே.(2)
வெருவவருகாலதூ துவர்களைக்கண்டுளம் வெருளாது மலசலங்கள் –
விட்டுக்கொளாதுகண் டத்தவர்கள் பாசத்தின் வீக்குண்டு நலியாது பின்
தெரிவரியயாதனா தேகமடையாதவர்கள் சீறித்தெழித்துரப்பச் –
சித்த நிலை தளராது யாம்யமார்க்கத்தில்வரு செல்லல்களுழந்திடாது
இரிசாகத்திரமுறு மிலக்க யோசனைநெறி யிரண்டலது மூன்றென்னவே –
இயம்பிடு முகூர்த்தத்தி னிற்கடந்தரியரசியற்றியுறைபுரியை நோக்கா
தொருவவருள்புரியு நின் றொண்டர்கட்காளாகி யுய்ந்திடக் கருணைகூர்வாய் –
ஓங்குபரமேச்சுரவிண் ணகரமுறை நீதனே யொளிர்பரமபத நாதனே. (3)
சூகரமிரெளரவந் தாலம் விசசனமகாச் சுவாலமேதப்தகும் பம் –
சுவபோசநம் விலோகித ம வீசியோடக்கினிச் சுவாலமுறு மப்ரதிட்டஞ்
சோகமுறு ரோதம்ருதி ராரம்பம்வைதரணி துயரதச்சிரமிலவணஞ் –
சொல்கிருமிசங்கிருமி போச நந்தமசுமிகு சூர்செயுங் கிருஷ்ணசூத்ரம்
வேகமுறு சந்தமிச மசித்ரவனமுடன் வீறிவரு பூயவகமுன் –
விறப்புறுங்கிருஷ்ண மிவை முதலான கொடு நரகில் வீழாமலாளவல்ல
ஒகையர்களாநினது தொண்டருக்காளாகி யுய்ந்திடக்கருணைகூர்வாய் –
ஓங்குபரமேச்சுரவிண் ணகரமுறை நீதனே யொளிர்பரமபதநாதனே.(4 )
வாழ்வு பெறும் வைகுந்த முதவலால்வைகுந்த வல்லியெனு மெங்களன்னை –
மகிழுமதுமிதநேச மணவாளகுமுதமெனும் வளரொளி விமாநவாச
பாழ்வினை யொழிக்குமா யிரமதித்தீர்த்தத்த பண்பின்மேற் நிசையை நோக்கிப் –
பரிவினெந்நாளுநிற் குந்திருக்கோலத்த பரமபாகவத னென்னக்
கேழ்கொள்பல்லவராய கேத்ரபதிகண்ணுறக் கெழுதகை மையுடன்வந்தவ –
கிளர்ந்தபேரருண்ஞான நிதியான கலிகன்றி கீர்த்தித்தவாழ்த்துடையவ
ஊழின்முறையென்னையாண் டருள்செய் நின்னன்பருக் கூழியஞ்செய்யவருள்வாய் –
ஓங்குபரமேச்சுரவிண் ணக ரமுறை நீதனே யொளிர்பரமபதநாதனே.(5)
15- வது திருப்புட்குழி.
உத்தமசுலோகநின் சீர்ச் சரிதைகேளாம லொரிகாலம்வதருக்கன் –
உதயமாயவனி யோர் நாள்கழித்த பினவக ளுயிர்வாழ்தல் பயனற்றதே
ஒத்து மரவகையுமுயிர் வாழுந்துருத்தியு முயிர்ப்பு விடுணர்விலாரென் –
றோ துமிருகாற்பசுக் களின்வீசிளேறாகு மூர்ப்பன்றியடி விலங்கும்
நித்தமிரை புண்டுகளி கொள்ளுமாதனினது நிரதிசயம் கிமைகேளா –
நீசனேன்பிறவியும் பம் நள் ளதாமோ நீயேகணித்தருளுவாய்
அத்தனேகத்தனே சுத்தனேநித்தளே சரிசெய்யுட்கு யமலனே –
அசுரர்செயுமிடம் தொலைய துல்சரம் விடுசிலைய வகிலசுபகுணநிலயனே. (1)
சுத்தநின் சீர்முகத் தானெவனுளத்துநீ துடியாவுகாலமேனுந் –
தோன்றவிலை யோவவன் புருட்பசு வன்னியும் தொடருமிளிவரவுதன்னாற்
கத்து நாயென்னவுங் கரில்விடயமுண்ணலிற் கருதுககேழலெனவுங்-
கண்டகப்பிரியத்தி னெட்டகமதெவுங் கடும்பொறை சுமத்தலாலே
மத்தகத்தபமெனவு முரைசெயப்படுவனம் மறுனெனர் கெய்தா துநின் –
மகிமைபெறு சரிதையைக் கேட்பித்தவ்வழியினென் மதிவிடயனாகியென்னை
அத்தமண் பெண்ணாசை ய ணுகாமலாட்கொள் வா பயணம் செய்புட்குழியமலனே –
அசுரர்செயுமிடர் தொபம்.வதுலசரம் விடுசிலைய வகிலசுபகுணநிலயனே. (2)
உருக்கிரம நின் விக்ரமங்கள்கேளாச் செவியி னுட்டுக்கள் த்வாரமே –
ஓதுதுதிவிடயனா நின்னாமமுரைசெயாதுள்ள நா நுணலை நாவே
வருக்கமணிமுடியதே னுந்தினை வணங்காத வன்முடியிழுக் குடையதே –
வனைகடகமுளவேனு நின்பூசை புரியாது! வதிகரம்ப்ரேதகரமே
பெருக்கமுறநின் சேவை புரியாதகண்மயிற் பீலியுறுகண்ணேயெனப் –
பெரியோர்கள் பேசுவர்க ளாதலாலின் வகைப் பிழையொன்றும்வாராமலே
அருத்தியுடனென்னையாட் கொளல்வேண்டுமையனே யாணிசெய்புட்குழியமலனே –
அசுரர்செயுமிடர் தொலை ய வதுலசரம்விடுசிலைய வகிலசுபகுணநிலயனே. (3)
பரம பாகவதர் பத ரேணுவை விரும்பாத பதகனுயிருள்ள சவமாம் –
பரமநின்றிருவடித் துளவமணமோ வாதபதிதன் மூச்சுறுப்ரேதமாம்
அரியநின்னாமங்கள் கேள்வியுறு காலத் தகத்திலோர்பேரின்பமும் –
ஆனன மலர்ச்சியுட னம்பகத்தாநந்த வருவி நீர்ச்சொரிவுமுடலிற்
குரிய புளகமுமுறா னுளமுபலவுளமென் றுயர்ந்தோர்களுரை செய்வரால் –
ஓதுமிக்குற்றவகை யாவையு மொழித்துநல் லுணர்வுநற்குணமுமென்பால்
அரணெனவமைத்தென்னை யாட்கொள்வாய் வளமே வி யணிசெய் புட்குழியமலனே –
அசுரர்செயுமிடர் தொ லைய வதுலசரம் விடுசிலைய வகிலசுபகுணநிலயனே. (4)
பேருலகெலாம் பரவு புகழ் விசயராகவப் பெருமாளெனும் பெயரனே –
பெருங் கிழமை பெற்றமர கதவல்லி நாய்ச்சியார் பெட்புறும் பிரியவரனே
எருலவும் விசயகோ டீ விமாநத்தனே யிசை சட்டாயுத் தீர்த்தனே –
ஏந்தலா மிந்திரன் றிசைநோக்கியேவீற் றிருக்குந்திருக்கோலனே
சிருலவுமன்புள சடாயுவுக்குப்பிரத் யக்ஷமாகிய செல்வனே –
திருமங்கையாழ்வார் செய் மங்களாசாசநச் செத்தமிழ்ச் சுவையுடையனே
.ஆருலவுமன்பனா யெனையுமாட்கொள்ளுவா யணிசெய் புட்குழியமலனே –
அசுரர்செயுமிடர் தொலைய வதுல சர ம்விடுசிலைய வகிலசுபகுணநிலயனே. (5)
----------
16- வது திருநின்றவூர்.
சீர்கொண்ட பேரருட் செல்வவென்னைப்பெற்ற திருவன்னையார் மணாள -
திகழ்வருணனுக்கருள்செய் பக்தவற்சல்வவன் றிருநாமபுட்கரணிய
பேர்கொண்ட வுற்பல விமாநத்தகலிகன்றி பேணியருள் வாக்குகந்த -
பெருமகீட்டிசை நோக்கி நிற்குந்திருக் கோல பிரணவப் பொருளானவ
ஏர்கொண்டபாவைகளின் யாவரையுமவர்செய்வினை யெ -
எடுத்தாட்டுமொருமுதல்வ விதிவிலக்குகளிலா விறைவவெளியேற்கிரங்கிப்
பார்கொண்டநின்னடியர் பணி செய்துவாழப் பணிக்காத தென்னின்றவூர் -
பற்றிலாவிக்கிரம முற்றஞானச்சர ம பத்தராவிப்பரமனே.
எண்ணிறந்தளவைக்கடந்து நித்தியமாகி யீடுடனெடுப்பு மின்றி -
இயற்கையாய்த்தோடவா சனைசிறிதுமிலவா யிலங்குமறிவாற்றலாதி
நண்ணு கல்யாணகுண யோகனீயாகையா னானிலத்தொருவர்துன் பில் -
நலிதல்கண்ணுறினிரக்கங்கொண்டு நாளுமவர் நன்மை பெற
வெண்ணிநிலவு தண்ணீர் வசந்தமா ரம்போலவர்க்கே சமைந்தவர்கள்சன் மமறிவு -
சார் தொழிலினிழிவுபாராதவருணிலயனே தமியனைக்காவாத தென்
பண்ணமருநான்மறையு மந்தணர்கள் குழுவும் பயின்று வாழ்திருநின்றவூர் -
பற்றிலாவிக்கிரம் முற்றஞானச்சர ம , பத்தராவிப்பரமனே. (2)
நீதஞ்சமில்லார்க டஞ்சமாயவர் கொண்ட நினைவுதனைமுமறுவித்து -
நின்னையுநினாது பொரு டன்னையும் வழங்கியவர் நெஞ்சமுறுகரும் முற்றில்
நாதநீ செய்தக்க செய்தவன் போன்று நீ நாடொறுஞ்செய்தநன்மை -
நாடாமலவர்செய்த வற்பமாநன்மையே! நாடியவர் நெடிது துய்த்தஃதப்
பிராகிருத விடயவின்பச்சுவைகள் யாவையுமறக்கும்வண்ணம் -
எந்நிலைகடம்மினும் பொருவிலாவினியனா மெந்தை யேநினது தொண்டர்
பாத மேத்திப்பரவு மிதய பரிபாகம் பணிக்காத தென்னின்றவூர் -
பற்றிலாவிக்கிரம முற்றஞானச்சரம் பத்தரா விப்பரமனே .(3)
னைவியொடுபுதல்வர்புரி குற்றங்கள்கண்டவை மனக்.
கொளாப்புருடனைப்போன் - மருவிநின் றோர்பிழைக
ணினது திருவுள்ளத்து மதியாதவற்றையுலகத் னையாம்பிராட்டிநிற்
கறிவிக்கினுங்கொளா தவர்களவை செய்யார்களென் -
றன்பினொருநிலைநின் றளித்து விழைகாமினி யழுக்குகக்குங்காமுகன்
பனைநிகர்த்தவர் தோட மினிது கொண்டவர்கள் பாற் சாருமுக்கரணத்தினுந் -
தணவாத செவ்வியுடை யாயென் னைநின்னடியர் தாட்காட்படுத்தாத
தென் னசமாவாழைகள் பழுத்துமண நாறும் படப்பைசூழ்திருநின்றவூர் -
பற்றிலா விக்கிரம முற்றஞானச்சரம் பத் தராவிப்பரமனே .(4)
அடுத்தவர் நினைப்பிரியினின்றுயர் பெருங்கடலு மவர்துயர் குளப்படியுமாம் -
அத்தகைய நீ நின்னை யவர்களுக்குத்தக வமைத்துகிற்றாழ விட்டுக்
சடுத்தவர்கள்கட்டவு மடிக்க வுஞ்சுலபனாய்க் காதலாவன் நின்றதன் -
கன்றுக்கிரங்கிமுற் கன்றையும் புற்றரக் கருதிவருமவர் தம்மையும்
எடுத்த கூர்ங்கோட்டாற் குளம்பினாற்றக்கபடி யெற்றித் துகைக்கு மாபோல் -
இலக்குமியைநித்ய சூரிகளை நீத்தவர் கேண்மை யிச்சித்துநிற்குமியல்
படுத்தபைந்நாகணைய வெளியனைக்காவாத பரிசென்னை திருநின்றவூர் -
பற்றிலா விக்கிரம முற்றஞானச்சரம் ப த்தராவிப்பரமனே. (5)
----------
17 - வது திருவெவ்வுளூர்.
திருமகிழ்மணாளதிற் கென்னவோர்வடிவு பெயர் சொரியாதுதமருகந்த -
திருவுருவும் பிதான முங்கொண்டத்துத் தெரிந்துமுணர்கிலனென்ன வும்
பொருவின்றியாவும் வல்லவனாகியல்லவன் போன்றுமோர் குறையுமிலனாய்ப் -
போந்துமஃதுடையவன் போன்றும் புரக்கு நீ போற்றிப்புரக்கப்படும்
பொருள் போன்று நின் மேன்மை மாறியெவருக்கும் புலம் எறளிக்கும் -
பூரணாகாராணா நாரணாபின்னடிய ர் புகழ்பாடியுய்யவருள்வாய்
விருது பெறும் வேதவாழ்த் தொவி மறாவெவ்வுள்வாழ் விர்மலனே கொடியவசுர -
வீரராகவமாய் வீர வரககமேய வீரராகவமாயனே. (1)
பகுதிபெளதிகமதாய் நிலை யாததாயின்பு பருவரல்கணுகர் விப்பதோர் -
பரிகரமதாய்த் தூய்மை யில்லதாயுயிர் விடிற் பார்க்கவும் பரிசிக்கவும்
தகுதியொன்றில்லதாய் மிச்சையையந்திரிபு தருவதாகிய தேகமே -
சார்புருடனென்னவுஞ் சத்தாதிதுய்த்தல் தகு பிராப்பியமென்னவுந்
தொகுதிபெறுவருணநிலை யறமாறி சேர்தந் தொப்பு துயிர்நலிந்து -
துய்க்கப்பிறன்கடை யிருந்தாக்கடையான துட்டனேனினது தொண்டர்
மிகுதியாம் புகழ்பாடி யுய்யவருள் கலப்பா யெவ்வுள் விமல்கொடியவசுர
வீரராகவமாய வீரவாதகமேயரா கவமாயனே. (2.)
தோளாண்மை கொண்டுகலி புருடன்றொடர்ந்து கின்ன் தெல் பரமவைதிக மதத் -
துணிவு கோளறிவயைான் சமறெனச்சூள் செய்து சூழ்ந்தொர்புடைகறு சிகிரின்
வேளாண்மை காட்டி நின் வணக்குடைத்தவநெறியின் விறிவல்யா னெனத்தன்
விருநெலாங்கொ ண்டொப்ச தன் வேழ வில் வாங்கி வீசிக்மேந்திநிற்பான்
தாளாண்மை கொடுநமன் றமரொர்புடையவர் பெருமை சாற்றித்தருக்கி நிற்பர் -
தமியனேனின்றமரருட்படை வலத்தினவர் தம்மை வென்றுய்யவருள்வாய்
வேளாண்மை செய்தொழுகும் வேதியர்கள் வாழெவ்வுள் விமலனேகொடியவசுர -
வீரராகவமாய் வீரவாசுக மேய வீரராகவமாயனே. (3)
கண்ணீர்க்குதாசன் னுருப்புறு குடங்கரின் சார்பின் வெப்போசையாதி -
சம்பவிப்பதுபோற் சரீரவிந்தியமனோ தத்துவவிலக்ஷணாதி
எண்ணீர்மையுள்ளபதின் மூன்றிலக்கணமுமிசை யிவ்வுயிர்க்குப் பகுதியின் -
இயல்பாலவித்தைவினை வாசனைச்சுவைகளிவை யென்றுமுளவாகுமெனவும்
நண்ணிர்மையஃதொழியி னவையொழியு மென்னவுந் நவில்வரவ்வாறொழிந்து -
நாயினேனின் தடியர் குழுமே வியுய்யுநன் னாளு மெந்நாளோசொலாய்
விண்ணிர்மருத்தெரிமண் முதலாகியெவ்வுள்வாழ் விமல்னேகொடியவசுர -
வீரராகவமாய் வீரவாசுகமேய வீரராகவமாயனே. (4 )
எண்பத்துநான்கிலக் கம் யோனிபேதங்க ளென்பவளை யொவ்வொன்றினும் -
எண்ணிலாப்பவமெடுத் தெய்த்தொழிந்தேனைய வினியேனுமெய்யுணர்வெனுங்
நண்பெற்று முத்தத்து வத்தினிலைகண்ட்டியர் கழல்பணிந்துய்யவருள்வாய் -
கனகவல்லிக்கன்ப சாலிஹோத்தி ரமுனிவர் கண்காணவந்த செல்வ
எண் பெற்றவிசயகோ விமாநத்தநரர் ஹ்ருத்தாபநாசதீர்த்த -
இசை கொள்வீக்ஷாரண்ய கட்செவிச்சய நத்தவெங்கள்கலிகன்றிநித்ய
விண்பெணத்துஞ் செந் தமிழ்ப்பாடல்பெறுமெவ்வுள் விமபனேகொடியவசுர -
வீரராகவமாய் வீரவாசுகமேய விதசாகமாயனே. (5)
--------------
18- வது திருநீர்மலை.
மணியணிகொள் பூமாது மார்பநன்கொளிர்நீல மணிவண்ணமதுசூதன -
மன்னுயிரனைத்தினுக் குந்தலைவயாவினும் வரையாது நிறையுமுதல்வ
பிணிதுன்பு குற்றமில்லாப் பரமவெண்ணவும் பேசவுந்தரமல்லதோர் -
பெருந்தகைய முற்றும் வல் லவமுற்று முணர்பவ பிறப்பிலாப் பெருநலத்த
பணிபதிப்பள்ளிய விகங்கபூபதிபாக பாலாழிதுயிலும் மல -
பக்தவற்சலபரஞ் சோதிமய வென்றுநின் பல்பொயர்கள் பன்னியுன்னித்
திணி கொண்ட நெஞ்ச நெக்குருகியென் வினையெலாந் தீர்ந்துய்யவருள்செய் சங்கந் -
திகிரி சேர்தருமத்த திகிரி யூதியமுத்த திகழுநீர்மலையத்தனே. (1 )
பிறர்மனை நயத்தலும் பிறர் பொருள் விரும்பலும் பிறர்வசை நிதங்கூறலும் -
பிறர்மனஞ் செவிகள்சுட வெட்டெனப் பேசலும் பெரியோரை நிந்தித்தலும்
புறனுரைத்திகழ்தலும் பொய்த்த இலுங்கொலைகளவு புரிதலும் புலனுமன்னும் -
போன வழிபோதலும் புல்லரொடிணங்கலும் பொச்சாந்து செம்மாத்தலும்
அறவினைமுகத்தில் விழி யாது திவினையெலா மாதரித்துக் செய்தலும் -
ஆண்மையாகக் கொண்ட வெனை விழுங்கியவளறு மங்காக்கு நெறி பெற்று நின்
திறனுற்றவடியர்பணி செய்யத்திருந்தியின் சேவடிக்காட்கொள்சங்கந் -
திகிரி சேர்தருமத்த திகிரியூரிய முத்த திகழுநீர்மலையத்தனே. (2)
தீமைவகையாவையுஞ் செய்தொழுகு மூர்க்கர்குல திலகனனிவறுமை யெய்திச் -
சென்றிரந்தோர்க் கொன்று மீயாவு லுத்தர்கள் சிகாமணி சிறப்பளிக்கும்
வாய்மை பொறையில்லாத வம்பர்கள் சிரோட்டன் வீண் வாதுபுரிவோரில் வல்லோன் -
வஞ்சகளிலதிவியா பக ரும் பொய்யாம் வழக்குரைப்போரினிபுணன்
தூய்மை நெஞ்சில்லாத துட்டாக்ரகண்யன்மிகு துன்மார்க்கசக்ரவர்த்தி -
துரபிமானிகடுரந் தரனான வெனையுநின்றொண்டர் தங்குழுவினுக்குச்
சேய்மையாக்காதவர் திருப்பணி செய்தெளியேன் றிருந்தும்வகையருள்செய் சங்கந் -
திகிரி சேர்தருமத்த திகிரி யூதிய முத்த திகழுநீர் மலையத்தனே. (3)
வாராட்டுவனமுலைச் சிறுமியர்கள் வாஞ்சையோ வானினும் பெரிதுடையனால் -
வான் பொருளினாசையேழ் கடலினும் பெரிதுடையன் மன்னாதமன விந்தியப்
போராட்டெவற்றினும் பெரிதுடையனிவைகொளிப் பூதவுடலச்சிறையினிற் -
புசித்ததுன்பமையுமதி லிட்டநீயேதயை புரிந்து விடுவித்து விரசை
நீராட்டியருவுடலு நீக்கிஞாநாநந்த நீங்காத நித்யதேகம் -
நேர்ந்துதிருமாமணியின் மண்டபத்தெனையேந்தி நின்மடியிருத்திமோந்து
சீராட்டி வினவிமகிழ் பேறுபெற்றுன்னடிமை செய்துய்ய வருள்செய் சங்கந் -
திகிரி சேர்தருமத்த திகிரியூதிய முத்த திகழுநீர்மலையத்தனே. (4)
வரந்தருமரங்கநா யக நாம நீலமுகில் வண்ண நீர்வண்ணவணிமா -
மலர்மங்கைநேய நற் றோதகிரிமான தென்மாதிரமலர்ந்த நோக்க
தரங்கமணிகர்ணிகா தீர்த்தத்த மாணிக்க சயநத்ததொண்டைமானென் -
சக்ரவர்த்திக்கு நற் பிருகு மார்க்கண்டே யசத்யநிலை முனிவரர்க்கும்
இரங்கி முன்வந்தவர்க ளுள்ளக்கருத்தெலா மீடேறவருள் புரிந்தோய் -
எம்மடிகள் பூதமுனி கலிகன்றியேத்திய வியற்றமிழின்வாழ்த்துகந் தோய்
திரங்கிச்சரீரமவீழ் காலையென்முன்வந்து திருவருள் செய்தாட்கொள்சங்கந் -
திகிரி சேர்தருமத்த திகிரியூதிய முத்த திகழுநீர்மலையத்தனே.(5)
-----------
19- வது திருவிடவெந்தை
நாடுமிக்காலஞ்செய் வேறுபாடில்லதாய் நலமந்தமில்லாததோர் -
நாட்டிலென்றுஞ்சுருங் காஞாநவிபவரா நற்குணக்கடல நந்தன்
பீடுறுந்தார்க்கியன் சேனைநாதன்முதல பேரின்பநித்தியர் க்கும் -
பேராப் பெரும் பிறவி பேர்த்தொழித்தென்றும் பிறங்குமுணர்வுடையராகிக்
கூடுமுத்தர்க்குமநு பவவிடயபூகனாய்க் கொலுவீற்றிருக்குநின்னைக் -
கும்பிட்டுவாழ்த்திநின் கோலங்குறிக் கொண்டு குறைகடீர்ந்துய்யவருள்வாய்
ஈடுபடுமன்பருள் ளக்கமலமோவா திருக்குமிந்திரைகொண்கனே -
இசை சிந்தையயன் முந்தை வரு விந்தைம லருந்தி யிடவெந்தையுறையெந்தையே. (1)
இவ்வுலகு பூத்தலுங் காத்தலுமழித்தலு மியற்றற்குமென்று நீங்கா -
விடும்பைக்குடும்பிக டமக்க நிட்டங்களையிரித்தொழித்துக்காக்கவும்
அவ்வியமவித்த சிந்தையராமுபாசகர்க ளல்லலுறுபிறவிநீங்கி -
யருமருந்தா நின்னை யடையவருள் செய்யவு மமைந்தசங்கருடணாதி
செவ்விபெறு மூன்றுருவ மாம் வியூகமாகிச் சிறந்திருக்கின்றநிலையுஞ் -
சிறியனேன் றெள்ளிதி னுணர்ந்துய்யும் வண்ணநின் றிருவுளமகிழ்ந்தருளுவாய்
எவ்வுலகினுள்ளவரு மேத்தவவரெண்ணங்க ளீடேற்றுமுழுமுதல்வனே -
இசை சிந்தையயன் முந்தை வருவிந்தைமலருந்தி யிடவெந்தையுறையெந்தையே. (2)
செப்புசங்கருடண ருரன்வலியினுயிரினைச் சேர்ந்ததைப்பகுதிநின்றுந் -
தீர்த்தெடுத்துப்பிரத்யும் நநிலையுங்கொண்டு தெளி நூல் பயிற்றுவித்தல்
இப்புவியழித்தலிவை யாற்றிடுவர்ப்ரத்யும் ந ரிகழ்வில் செல்வம் வீரியம் -
ஏய்ந்துமனமேவிநற் றருமோபதேச முட னியன் மநு சதுட்டயா தி
ஒப்பிலாச்சுத்தவர்க் கப்படைப்புஞ்செய்வ ருயரும நிருத்தராற்றல் -
ஒளியின் மெய்யுணர்வீந்து காலமிச்சிரசிட்டி யும்புரிவரென்பரெளியேன்
எப்படியிவற்றினைக் கண்டுணரவல்லே னிரங்கி நீயேயருளுவாய் -
இசை சிந்தையயன் முந்தை வருவிந்தைமலரு ந்தி யிடவெந்தையுறையெந்தையே. (3)
நித்தியோதிதருநற் சாந்தோதிதருமென்ன நிகழ்வாசுதேவவீற்றும் -
நிலவு நனவாதியுரு வுங்கேசவன் முதனிகழ்த்துமூர்த்திகள் பேதமும்
பத்திதரும நிருத்த ருழியவதரித்தமுப்பானாறு பேதமான -
பதுமநர் பாதியாம் விபவமுமுபேந்த்ரத்தி பத்ததுதி திரிவிக்ரம
வித்தை பெறவருணல் கயக்ரீவவரிகிருஷ்ண விமல நரநா ராயண -
விறன்மச்சகச்சப் வராகாதியவதார மெய்ம்மைநிலையுந்தொண்டனேன்
இத்தரையிலிவ் வுடம் போடுகண்டின்பமுற் றீடேறவருள் புரிகுவாய் -
இசை சிந்தையயன் முந்தை வருவிந்தை மலருந்தி யிடவெந்தையுறையெந்தையே. (4)
நர கொடுசுவர்க்கத்தை யடையவத்தைகடோறு நானிலச்சேதநர்களை -
நற்றுணையினீங்கா திருக்கின்ற நிலையன்றி நனிசுபாச்சிரயமான
திருமேனி கொண்டவர்க் குத்த்யேயனாகிச் சிறந்தளித்துறவினவர்தஞ் -
சிந்தை குடிகொண்டு நிற் கின்றநிலை தன்னையுஞ் சேவித்து வாழ்
வருள்வாய் வரைவிலா நித்யகல்யாணகோமளவல்லி மன்னகல்யாணதீர்த்த -
வகுக்குமவ்விமாநத்த நித்யமார்க்கண்டேய வரமுனிக்கருள் சேவைய இரவி
வருதிசைநோக்கி நிற்குந்திருக்கோல வெங்கள்பர காலதோத்ர
இசை சிந்தையயன் முந்தை வருவிந்தை மலருந்தி யிடவெந்தையுறையெந்தையே. (5)
--------------
20-வது திருக்கடன்மல்லை.
பொன்முளரிமலரணையின் மன்னுமாமகள்கணவ போகவிளையாட்டுழிகளாய்ப் -
புகலுமிருவகை விபூ தித்தலைவவிருவழிப் புவனகோடிகளனைத்தும்
மன்னப்படைத்தளித் தீறு செய்தனி முதல்வ மலர்பொருளெவற்றினுள்ளும் -
மருவிக்கரந்துறையு மணிவண்ணவொளிவண்ண மாய கேசவமுகுந்த
பன்னகாதிபசயன பரமகல்யாணகுண பக்தவற்சலவென்றுநின் -
பாவனத்திருநாம் மாயிரமு நாவைப் படைத்தபயனுற விளம்பி
உன்னியுளமகிழ் தொண்டர் சேவை செய்துய்யவரு ளுயர்திருக்கடன்மல்லைவாழ் -
உலகபாரணதத்ய வுலககாரணசத்ய வுலகபூரணநித்யனே. (1)
விள்ளாதுநின்னொடவி பத்தமாஞ்சித்தொடு விசிட்டமாம் பகுதிதன்னை -
வேறாக்கியண்ட கா ரணமானமான் முதல வேற்றுருக்கொளவமைத்தே
எள்ளாதவண்டத்தை நிருமித்து மற்றதனில் யாப்புண்ட தொகுதியுயிர்கள் -
ஏய்ந்த நான்முகனைப் படைத்தவற்குயிரினத் தின் பெயருருச் செயல்களைத்
தள்ளாதுணர்த்துமறை சொலியிரவியாதியர்கடமையுமவருறையுஞ் சதுர்த் -
தச புவனமும் பூர்வ கற்பமுறைசெய்வவன் றன்னை நியமித்தகுருவே
உள்ளாதவடியேனு நின்னடியரேவல் செய் துய்யவருள் கடன்மல்லை வாழ் -
உலகபாரணதத்ய வுலக்காரணசத்ய வுலகபூரணநித்யனே. (2)
சால நீடருமையை யுடைத்து நூல்வழிவருந் தத்துவவிவேகமென்ப -
சாற்றுமத னாலவ் வழிக்குமடியற்கு மெட்டனையும் பொருத்தமிலையாற்
கோலவெளிதானவும் தேசவழியாலதைக் கொண்டுய்யவேகுறிக்கின் -
குருமந்த்ரபரிபவம் பெரிதுடையனதனி னது கூடும் விரகில்லையென்னைப்
போலவெப்பொழுதினுந் தீயோர்களில்லை யென் பொல்லாத பிழைகணின்போற் -
பொறுப்பவருமிலையன்பர்தோட போக்கியனான புனிதனே நின்புகல் புகல்
ஓலமிட்டுக்கூய வும்பலரசுக்குதவ வுற்றவாகடன்மல்லைவாழ் -
உலகபாரணதத்ய வுலக்காரணசத்ய வுலக பூரணநித்யனே. (3)
கழிந்தனவும் வருவனவு மின்ன தன்மைய வெனக் கண்டுணரவல்லேனலேன் -
கருவுற்றிறத்தலா திய பெருந்துன்பெலாங் கையாறெனக்கொள்கிலேன்
இழிந்தவர்களொடுநட் டரக்கியர்களென்றெண்ணு மியல்புடைய மகளிர்தம்மை -
எனதாவியேய முத மேயென நினைந்துருகி யிணைமுலைமயக்கீடுபட்
டழிந்தவுணர்வுடையனா யல்லற் பெருங்கடலி லாழ்ந்துகரைவீடுகாணா -
தலை கின்றவேழையே னின்னடிப் போதத்தை யண்டினேன்பவவிடும்பை
ஒழிந்துய்யும் வண்ண நின் னடியருக்காட்டுத் துயர்திருக்கடன்மல்லைவாழ் -
உலகபாரணதத்ய வுலககாரணசத் ய வுலகபூரணநித்ய னே. (4)
வாதபித்தஞ்சிலேத் துமமென்னுமிவைதமது வரைநிலைகடந்து மாறி -
வலிந்தைய மேலிட்டு மரணயாதனை யென்னும் வன்றுயரழுந்திநன்று
தீதொன்றுமறியாது சிலைதருப் போன்று வீழ் தீயதசை சேரநெஞ்சந் -
திடுக்கென்றுசோகாக்கு முடையாயுன்னுடைமையைச் சிக்கெனக்காத்தல்கடனே
நீதக்க நாக்ருதி விமாநத்த நிலமங்கை நேய புண்டரிகமுனிவர் -
நேர்வந்தநித்யதல சயநகீழ்த்திசை நோக்குநிம்லமாகருட நதிய ஓது பரகாலனெம்
பூதமுனி பாடல் பெற் றுயர் திருக்கடன் மல்லைவாழ் -
உலகபாரணதத்ய வுலககாரணசத்ய வு லகபூரண நித்யனே. (5)
------------
21 - வது திருவல்லிக்கேணி
சீர்பூத்தமாமாது பூமாது நீளைமகிழ் தெய்வநாயகவெனைத்துஞ் -
சேராவிகாரவா நந்தஞானச்சொருப திகழுமறிவாற்றலாதி
நீர்பூத்தகுணகண வலங்கார விளையாட்டினிகிலவுலகும் படைத்து -
நிலை பெறச் செய்தழிக் குந்தலைவவார்த்தாதி நிலைநான்கு புருடாகட்கும்
பேர்பூத்த நாற்பயனு முதவுபவவேறாப் பிறங்கு திருமேனியவெனப் -
பேசிமகிழ் நின்னடியர் பூசைபுரியாவென் பெரும் பிழைபொறுத்தாளுவாய்
பார்பூத்த மான்மியத் திருவல்லியங்குளப் பரமனே மெய்யுணர்வினாற் -
பார்த்த பேரிடர்வீய வாய்த்த சீரருண் மேய பார்த்தசாரதிமாயனே. (1)
அண்டகோடிகளகண்டத்தினுந் தெரியா வநாதியாம் வினை வயத்தால் -
அநந்தமாம் யோநிபே தத்துடலமேவிவா ழான்மகோடிகளி லென்போற்
றண்டவகையாவைக்கு மோரிலக்காகிநின் றனியாணைனையிகழ்ந்து -
சஞ்சரித்திடுமுயிர்க ளெவையுமிலை யெளிய வித் தன்மையுளகொடியேனுநின்
றொண்டர்கட்காளாகி யவர்களபிமாநமாந் தொடர்பு கொண்டுனதநுபவத் -
துணைய திகமில்லாச் சுகக்கடலின்மூழ்கும்விதி சூழ்காலமெக்காலமோ
பண்டைமறைவாணர்வாழ் திருவல்லியங்குளப் பரமனேமெய்யுணர்வினாற் -
பார்த்தபேரிடர்வீய வாய்த்த சீர ருண்மேய பார்த்தசாரதிமாயனே. (2)
ஒற்றேவல்கொண்டு நிகழ் பவையறிந்துல காணை யுருளை செலவாளுமரசர் -
உத்தியோகத்திருவர் பெருவாணிகப்பொறிய ருழவுபுரி செல்வர் முதலோர்
வெற்றேவறனிலொழுகி யவர் முகமலர்ச்சியும் விடக்குடல் வளர்த்தறானும் -
விழுமிதாம் பேறென்றென் வா ணாளை வீண்வினையில் வீழ்த்தினேனினது தொண்டர்
குற்றேவனின்றவர் குணக்கடல் படிந்து கிண் குப்பாயமாக் கவித்த -
குற்றங்கள்பாற்றிநின் றிருவடித்தொண்டுட் குழைந்துருகுநாளுமுளதோ
பற்றேவனீங்கியோர் பற்றுமல்லிக்குளப் பரமனே மெய்யுணர்வினாற் -
பார்த்தபேரிடர்வீயவாய்த்த சீரருண்மே ய பார்த்தசாரதிமாயனே. (கூ)
வருணவைணவ நிலைக் கேற்பவுணவாதிகள் வரித்தடியருக்குநிற்கும் -
வழங்கியுடனிற்குமள வுண்டுகுரவன்மகிழ வழிபட்டிருத்தலாதி
அருமையா நிட்டை பெற் றுன்றொண்டர் தொண்டருக்கடிமை செய்துய்யவருள்வாய் -
அகிலமாதாவா முருப் பிணிமாநோகர வமர்ந்து கீட்டிசையை நோக்கிப்
பெருமைதரநிற்குந் திருக்கோல பிருகு முனி பெருவளத் தொண்டை நாட்டுப் -
பெருமானிவர்க்குப் பிரத்யக்கமானவ பிராந்திமுனிமழிசை முனிகள் பரகாலன் வாழ்த்துடைய
திருவல்லியங்குளப் பரமனே மெய்யுணர் வினாற் -
பார்த்த பேரிடர்வீய வாயத்தசீர ருண்மேய பார்த்தசாரதிமாயனே. (சு )
ஆரத்தகருமமற் றிவ்வுடல் விடுத்தலரி யமர்மண்டலத்தூ டுபோய் -
அமுத விரசையின் மூழ்கி யருவுடம்பும் விட் டருந்தாபம் யாவுநீங்கிச்
சாரத்தமாநவன் கையூறுறீஇச் சுத்த சத்துவாத்மகமாய்ப்பெருந் -
தகைகொள் பஞ்சோபநிஷண் மயஞாநவாநந்த ஜநகமாய்நினதநுபவச்
சீருற்றபரிகரம தாமப்பிராகிருத தேகமுற்றடி யோர் குழாஞ் -
சேர்ந்து திருமாமணியின் மண்டபத்துன்னை நான் சேர்ந்துயயவருள் புரிகுவாய்
பாருற்றதுயரறுத் தல்லியங்கேணியுறை பரமனே மெய்யுணர்வினாற் -
பார்த்த பேரிடர்வீய வாய்த்தசீரருண் மேய பார்த்தசாரதிமாயனே. (5)
-------------
22-வது திருக்கடிகை.
அகிலாண்ட நாதநிகழ் பகுதிமுக்குணவசிய ராகி நினைத்வாது நின் -
அகளங்கமானசீர்க் குணகீர்த்த நங்களேயநவரதமும் புரிந்து
பகிராத சித்தநின் பானிறுவியொளிர்நின் பரஞ்சோதிமயவடிவையே -
பாவனை செய்தாநந்த பரவசத்துளமுருகு பரம பாகவதர்பரம்
மகிமையேவாயார வாழ்த்தியவர்பாத்தா மரைகளேதஞ்சமென்ன -
மனத்தெண்ணியவர் திருப் பணிகளே செய்தடியன் வாழ்ந்திடக் கருணைகூர்வாய்
திகழிரவிமதியங்க டவழவுயர் கொடுமுடிகள் செறிகடிகைமலை வாசனே -
தெருளடியர்பவநாச வருள்கமலை ம கிழ்நேச திகழ்சகல ஜகதீசனே. (1)
ஒரு பொருளயின்றுற்ற நோய் பின்னுமதனையே யுண்ணலின்றாதவாபோல் -
உறுபவந்தருபல நசைக்கருமமப்பவமொழிக்காது பலனொரு வியக்
கருமம்புரிந்து நிற் கர்ப்பணஞ் செய்ய வெகு காலந்தொடர்ந்தபிறவிக் -
கட்டொழியுமது வேவருத்துமுத்தாம் நோய் கடிதருமருந்து மெனவே
சுருதியுணர்குரவராற் றேர்ந்துணர்ந்தவ்வழி துளங்காது நின் றெம்மனோர் -
தொல்வினைத் துகளறுத் தாட்கெள்ள வல்லநின் றொண்டர்தந் தொண்டர்கமலத்
திருவடிகளேதஞ்ச மென்றெண்ணியுய்யவருள் திகழ்கைமலைவாசனே -
தெருளடியர் பவநாச வருள்கம் மகிழ்நேச திகழ் சகல ஜகதீசனே. (2)
குலால கீடம் போன் றருத்தபஞ்சகமதிற் கூறு மெய்யவுகொண்டு -
குலவு மூன்றாகார சம்பந்நராகுநிகம்லவடியா கூட்ட மேவி
நிலாவுமுயிர் துன்புறத் தகு கரும் நேடாது நேர்ந்தெருச்கொருவர்தந் -
நெஞ்சபோதகராகி யிங்கு 9 ன்னாளூ நேய நீங்காமலுள்ளக்
லாமறு குணாநுபவ நற்கயிங்கரிய மொடு காலங்கழித்தே யகங் -
காரமற்றவனாகி நின்னுழியுநின்னன்பர் கண்ணும் பசாரமடையச்
செலாவகைதிருத்தியாட் கொள்ளுவாய்வளனெலாஞ் செறிகடிகைமலைவாசனே -
தெருளடியர் பவநாச வருள் கமலை மகிழ்நேச திகழ் சகல ஜகதீசனே. (3)
எப்பொருளிடும்பைக ளெலாநன்கிரித்தற் கியைந்தசாதகமென்பரோ -
என்று மொழியாப்பிறவி நீப்பதற்கதனின்வே றிலையென்பரோதுறந்தோர்
எப்பொருளுணர்ந்தபி னினிக் கேட்கவேண்டுவன வில்லையென்றொழிவார்களோ -
எலாமறையுமிதுவன்றி வேறோர் பரப்பிரம் மில்லையெனவுரை செய்யுமோ
அப்பொருளெனப்புகலு மப்பநின் சரணே யடைந்தொழிவில் காலநிற்கே -
யாளாகிநின்னையே யநுபவிக்கின்ற நின் னன்பருக்கன்பனாகிச்
செப்பமுடனவர்கள் பணி செய்துய்யவருள் செய்வாய் திகழ்கடிகைமலைவாசனே -
தெருளடியர்பவநாச வருள் கமலை மகிழ்நேச திகழ்சகல ஜகதீசனே. (4)
நல்லவக்காரக் கனிப்பெருமவருள் யோக நரசிம்ம வமுதவல்லி -
நாய்ச்சியார்மகிழ்தலை வ சிங்க கோஷ்டத்தியென நவினாமமுறு விமாந
அல்லறீர்த்தருளமுத தீர்த்தத்தகீட்டிசை யமர்ந்த திருமுகமண்டல -
அழகாகவீற்றிருக் குந்திருக்கோலத்த வாழியான்புதல்வன்விச
யல்லிதூதுவனஞ்ச னாதேவிசிறுவனிரு விழிகாணவந்த வதமிழ் மலை வாசனே -
வேதமுரைமாறன் பிராந்திமுனிகலிகன்றி வீறுபெறு பாசுரத்
தல்லறீர்நின்னடிய ரருண் மேவியுய்ந்திடச் செய்கடிகை
தெருளடியர் பவநாச வருள்கமலை மகிழ் நேச திகழ்சகலஜகதீசனே. (5)
தொண்டைநாட்டுத்திருப்பதிப் பஞ்சரத்தினங்கள் முற்றுப்பெற்றன.
பிரபந்தத்திரட்டு முற்றிற்று.
--------------------
This file was last updated on 11 March 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)