pm logo

அந்தாதிக் கொத்து
பாகம் 1a (3 அந்தாதிகள்)
சந்திரசேகரன் தொகுப்பு


antAtik kottu, part 1a (3 antAtis)
edited by T. Chandrasekaran
In Tamil script, Unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

அந்தாதிக் கொத்து - பாகம் 1a (4 அந்தாதிகள்)
சந்திரசேகரன் தொகுப்பு



Source:
அந்தாதிக் கொத்து (ANTĀDI-K-KOTTU)
Edited by : T. CHANDRASEKHARAN, M. A., L. T.,
Curator, Government Oriental Manuscripts Library, Madras,
AND THE STAFF OF THE LIBRARY.
(Prepared under the orders of the Government of Madras.)
MADRAS GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS SERIES. No. 51.
GOVERNMENT OF MADRAS
Price, Rs. 2-10-0.
Dorson Press, 2/47, Royapettah High Road, Mylapore, Madras-4.
------------------------------
பொருளட்டவணை
பாகம் 1a
i. முன்னுரை (ஆங்கிலம்)
ii. முன்னுரை (தமிழ்)
1. கணபதி யந்தாதி
2. திருவரங்கப் பதிற்றுப்பத் தந்தாதி
3.சேடமலைப் பதிற்றுப்பத் தந்தாதி
பாகம் 1b
4. திருவாவினன்குடி பதிற்றுப்பத் தந்தாதி
5. திருமங்கை கரும்பேசர் பதிற்றுப்பத் தந்தாதி
6. திருவெவ்வுளூ ரந்தாதி
7. மதுரை யமக வந்தாதி
பாகம் 1c
8. சடக்கர வந்தாதி
9. சுப்பிரமணிய ரந்தாதி
10. சௌந்தரி யந்தாதி
11. சித்தரந்தாதி (உரையுடன்)
12. சிஷ்ட ரந்தாதி
--------------

INTRODUCTION

The Tamil poetry is replete with several etymological characteristics and remains a grand grammatical structure supported by numerous sub-structures, which may be grouped as forming ninety-six Prabandhas.

"Antadi" is one of the ninetysix divisions which the Tamil language proudly possesses. Each of the division is known as "Prabandham” and Antadi is one amongst them. The word "Antadi" is a derivation of Sanskrit and contains two words "Antam" and "Adi" which signify "End" and "Beginning". The poetical beauty of this series of Prabandham is that the end of a piece of verse forms the beginning of the next piece. Hence it is called Antadi.

The suffix-it may be the last word, letter or even sound-finish-of a stanza will form the prefix of the subsequent stanza. The whole piece will have this peculiarity. There are two kinds of "Antadi" in particular. One contains ten sets, each having ten verses of particular form of poetry. The other contains at a stretch one hundred verses of the same form of poetry-such as Venba and Kattalai-k-kalitturai.

"Antadi" has been recognized as containing the foregoing characteristics and the ancient grammarians have borne out this conclusion amply well. However, the most ancient grammarian" Tolkappiyar" does not seem to have mentioned this particular Prabandham in his work "Tolkappiyam". He has of course spoken about such new ideas that may adorn Tamil Poetry at a later, date and has classified it to be a "Feast". Later, a commentator of Tolkappiyam (Perasiriyar), in connection with “Ceyyuliyal", has particularly mentioned that Antadi is to be classified under this. head "Feast" (Virundu).

Nammalvar-the great muse and a very great Vaishnava Saint and Scholar-extolled as the biggest of the twelve Alvars-has sung extempore about one thousand and odd verses about God. It is most characteristic to note that all of them come under "Antadi".

Most of the Antadi Prabandhams are in praise of God. It is not anything to be wondered at, especially when we bear in mind that all great scholars of yore lived for God in the true sense of the term and no wonder they versified about the one nearest to their hearts-that of God.
Antadi especially has all the merits of a high standard in literature. It maintains a truly high tradition in the form, presentation and meaning.

The Antadi-k-kottu series now being published contain 12 such Antadi pieces, preserved among the manuscripts of this Library.

1. Ganapati Antadi

This Antadi is in praise of Lord Ganesa who is always prayed first in order that all impediments (for the work launched) may be removed by His infinite grace. He is called "Vighnesvara" after this age-old custom.

In this piece there are thirty-two stanzas in His praise. Although it is customary that Antadi contains one hundred or more stanzas, this Antadi seems to be an exception to the generality and it is presumed such form also has been in vogue.

The author of this work is not known. is based on a single palm-leaf manuscript described under No. D. 242.

2. Tiruvaranga-p-patirru-p-pattantadi

Sri Rangam and the presiding Deity in the great temple there-Lord Ranganatha-are the recipients of deep reverence, homage and Bhakti from the earliest days. Almost all Alvars have sung in praise of Sri Ranganatha and many more scholars and Bhaktas have lost themselves in adoration of this Deity. "Pillai-p- Perumal Aiyangar is one such erudite scholar and a great exponent of the Bhakti Bhava He has sung several Prabandhas in praise of Lord Ranganatha, whose grace has been inimitably and forcefully brought out in his several Prabandhas, such as Tiruvaranga-t-tantadi etc.

This piece is called "Tiruvaranga-p-Patirru-p-pat tantadi" because it contains ten different sets of ten verses each, all in praise of the Lord at Tiruvarangam.

All these songs are highly devotional and the author has artistically handled much of the twelve great Alvars the formost Vaishnava saints.

The name of the author seems to be "Venkata- caladasa" as it appears in the last stanza. This Antadi has been published from a palm-leaf manuscript described under No. D. 2302. There is also a restrored copy of this manuscript under No. R. 1515.

3. Sedmalai-p-patirru-p-pattantadi

Tirupati and Sri Venkatesvara are perhaps the most widely known Kshetram and Deity respectively. From the common man, deeply caught in world liness, to the highest spiritual aspirant, all have bowed before this Great "Personal-God"-Lord Srinivasa. It is about Him and Tirupati that the Sedamalai Patirruppat- tantadi seems to have been sung. The style is full of peculiarity and at the same time brings about emotion and devotion.

The author, who is evidently a very great Tamil Scholar, seems to be a disciple of Vallur Devaraja Vallal. It is probably this Devaraja Vallal who is the author of Kucela Upakhyanam. The name of the author of this Antadi, however, remains unknown. This Antadi is quite different from "Sedamalai Antadi" whose author is "Pallikondan Pillai".

This is based on a single palm-leaf manuscript described under No. D. 253. A restored copy of the same is available under the No. R. 135 (b).

4. TIRUVAVINANKUDI PATIRRU-P-PATTANTADI

This Antadi piece of 100 songs is in praise of Lord Siva at Tiruvavinankudi. This place is situated on the North bank of Palar in Tondaimandalam.

The author sings the praises of Lord Siva and His Heavenly Consort Amirtavalli. All these songs touch the heart of the reader and he is imbued with loving devotion to Lord Siva.

From the post-script to this poetical piece, it is understood that the author is "Subrahmanya Munivar", son or a disciple of the much renowned Ambalavana Desikar who had been at one time head of the Tiruvavaduturai Adinam.

This is based on a palm-leaf manuscript described under No. D. 257. There is also a restored copy available under No. R. 135 (d).

5. TIRUMANGAI KARUMBESAR PATIRRU-P- PATTANTADI.

This Antadi is sung in praise of Lord Siva known as “Karumbesar", the presiding Deity at Tirumangai. The style is simple and lucid and it is no wonder one loses himself completely in the devotion evoked by this piece.

Only 86 verses are available in this Antadi and no light is thrown about the other missing songs. The author too is not known.

This is based on a palm-leaf manuscript under No. R. 5019. A restored copy of this manuscript is also available here under No. R. 5341. The manuscript was purchased in 1954-55 from Sri Singaravelu Kavirayar of Mitilai-p-patti.

6. TIRUVEVVULUR ANTADI
This Antadi is in praise of Sri Vira Raghava Perumal who is the presiding Deity in the temple at Tiruvevvulur now known as Trivellore in Chingleput district. This Antadi consists 100 songs and special mention should be made about the various "Citrakavis" such as Tribhangi etc. A detailed note has been given for every such Citrakavi, wherever it appears in the text. The author seems to be one "Narayanadasan".

The present work is based on a palm-leaf manuscript described under No. D. 258. There is a restored copy of the same under No. R. 1704.

7. MADURAI YAMAKA ANTADI

This Antadi is in praise of Lord Cokkanatha svami in Madurai. The main characteristic of this piece is that it is based on "Yamakam" details of which are given in the foot-note.

The author of this work is Palapattadai Cokkanatha Kavirayar, son of Kanakku Chokkalingam Pillai of Madurai. The author is a contemporary of Vijaya Ragunatha Sethupathi of Ramnad. Dr. U. V. Swaminatha Iyer, the great Tamil scholar, has published three works "Tevaiyula" "Alakar Killai-vidu-dutu" and "Madurai Mummani-k-Kovai" of the same author.

As there were only 14 verses in the original manuscript of this library under No. D. 262, the remaining verses were copied from a palm-leaf manuscript of the Antadi preserved in the Mahamahopadhyaya Dr. U. V. Swaminatha Iyer Library, Adyar.

8. SHADAKSHARA ANTADI

This Antadi about Lord Subrahmanya seems to have been sung by Agastya. Cariyai, Kiriyǎi, Yogam and Jnanam are the four different classifications in this piece containing 102 songs. Details may be found in the Tamil Introduction. This edition is based on a palm-leaf manuscript described under No. D. 250 and compared with the manuscripts bearing Nos. R. 1228 and 1890.

9. SUBRAHMANYAR ANTADI

This Antadi, in praise of Lord Subrahmanya, at Uttaramerur in Chingleput district, is noteworthy, since the author has composed the whole piece in "Venba” metre. The name of the author, however, is not known.

This work is based on a palm-leaf manuscript purchased in 1916-17 from Sri. C. V. Jambulingam Pillai of Mylapore, bearing No. R. 351. There is a restored copy of the same work under No R. 3771.

10. SAUNDARI ANTADI

This Antadi is in praise of Goddess Ambigai and contains 100 songs. It is to be noted that each song is of different type and such a feat in composing Antadi is rarely encountered. As such, this is of great value to ardent lovers of Tamil literature. The name of the author is not known.

This work is based on a palm-leaf manuscript described under No. D. 254. There is a restored copy of the same work bearing No. R. 1703.

11. SIDDHAR ANTADI

This Antadi also is in praise of Goddess Ambigai. There are only 22 verses in this Antadi and a commentary also is available. This is also published along with the Antadi. The names of the authors of both the Antadi and the commentary are not known. This work is based upon a palm-leaf manuscript described under No. D. 252. There is also a restored available in this library under No. R. 135 (a).

12. SISHTAR ANTADI

This Antadi too is in praise of Goddess Ambigai. Only five verses are available in the original manuscript.

The name of the author is not known. This work is based on a single palm-leaf manuscript described under No. D. 251.

I have to express my thanks to Srimathi Rukmini Devi, the Adhyaksha of the Mahamahopadhyaya Dr. U. V. Swaminatha Iyer Library, Adyar, Madras, for permitting me to copy the eighty-seven verses of Madurai Yamaka Antadi which were not available in the manuscript of this library and to compare the Shadakshara Antadi with the manuscript available in their Library.

I must also thank Vidvan V. S. Krishnan, Pulavar M. Pasupathi and Vidvan E. B. Venugopal, Tamil Pandits of this Library for preparing the press copy and correcting the proofs.

The Dorson Press have also to be thanked for the neat execution of the printing of the work within a short period.

Madras,
15th February 1956.       T. CHANDRASEKHARAN,
      Curator, Govt. Oriental Manuscripts Library.
-----------------

முன்னுரை

தமிழ்மொழியிலுள்ள தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் அந்தாதி என்பதும் ஒன்று. அந்தாதி என்ற தொடர் முதல் பாடலின் அந்தத்தை அடுத்த பாடலில் ஆதியாக வுடையது எனப் பொருள்படும். வடமொழித் தொடர்; தீர்க்க சந்தி. அந்த - ஆதி எனப் பிரிக்கலாம். அந்தாதியாவது, முன்நின்ற செய்யுளின் இறுதியிலுள்ள எழுத்தாயினும், அசையாயினும், சீராயினும், அடியாயினும் அடுத்து வருஞ் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது. இவ்வந்தாதி நூற்றந்தாதி, பதிற்றந்தாதி எனப் பலவகையாகப் பாடப் பெறும். வகைக்குப் பத்துப் பாடல்களாகப் பலவகைப் பாக்களில் நூறு பாடல்கள் அந்தாதித் தொடையாற் பாடுவது பதிற்றந்தாதி அல்லது பதிற்றுப்பத் தந்தாதி எனப்படும். நூறு வெண்பாவினாலேனும், நூறு கட்டளைக் கலித்துறைகளினாலேனும் அந்தாதித் தொடை பாடப்படுவது நூற்றந்தாதியாம். நூறு வெண்பா நூறு கலித்துறை, கூறுத னூற்றந் தாதிக் கோளே." என்பது இலக்கண விளக்கப் பாட்டியல். எனவே, அந்தாதி என்னும் பிரபந்தம் சொற்கள் தொடர்ந்து கோவையாக வருதலையே முதல் நோக்கமாகக் கொண்டது என்பது நன்கு புலப்படும். "செய்யுளந் தாதி சொற்றொடர் நிலையே" என்ற தண்டியலங்கார நூற்பாவும் இக்கருத்தினை வலியுறுத்தல் காண்க.

இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலில், "விருந்தே தானும், புதுவது கிளந்த யாப்பின் மேற்றே” என்று கூறியுள்ள நூற்பாவுக்கு "புதுவது கிளந்த யாப்பின் மேற்றென்ற தென்னையெனின் புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்துவரச் செய்வது; அது, முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க" என்று பேராசிரியர் உரை கூறினமையின் அந்தாதி யென்னும் பிரபந்தம் "விருந்து' என்ற வகையின்பாற் படும் என உணரலாம். பிற்கால இலக்கியங்களில் இவ்வந்தாதியைச் சிறு காப்பியத்துள் அடக்குவர்.

வைணவ ஆழ்வார்களில் தலைசிறந்தவராய நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி என்னும் பிரபந்தத்திலுள்ள ஆயிரஞ் செய்யுளும் அந்தாதித் தொடையால் அமைந்திருப்பது நோக்கத்தக்கது.

இவ் வந்தாதிப் பிரபந்தங்களெல்லாம் பெரும்பாலும் கடவுளர் தோத்திரங்களாகவே அமைந்துள்ளன எனலாம். சிறுபான்மை ஞானாசாரியர், அரசர் முதலியோரைப் புகழ்ந்தும் பாடப்படுவதுண்டு. “அவனருளாலே அவன்றாள் வணங்கி" "அவனன்றி யோரணுவு மசையாது" என்ற தத்துவத்தினை யுணர்ந்த பெரியோர்களால் பாடப்பெறும் இத்தகைய பிரபந்தங்கள் இறைவனைக் குறித்த தோத்திரங்களாகவேயன்றி மற்றொன்றாயிருத்தல் கூடுமோ?

இங்ஙனம் பாடப்பெற்றுள்ள அந்தாதிகள் பலவும் சொல்லழகு பொருளழகுகளிற் சிறந்து, தெய்வ மணங்கமழ விளங்கு கின்றன. திருவரங்கத்தந்தாதி, அழகரந்தாதி, திருக்கருவைக் கலித்துறையந்தாதி, திருக்கருவை வெண்பாவந்தாதி முதலாயின இவ்வகையில் அமைந்தனவாம்.

வெளியிடப்பெறும் இந்தத் தொகுதியினுள் பன்னிரண்டு அந்தாதிகள் அடங்கியுள்ளன. இவற்றுள் பதிற்றுப்பத்தந்தாதி நான்கு, வெண்பா வந்தாதி ஒன்று. பல்வகை விருத்தங்களாலாகிய அந்தாதி ஒன்று ஏனைய கலித்துறையான் அமைந்தன.
---------------
1. கணபதி யந்தாதி

இது, விக்கினங்களை நீக்க வல்ல விநாயகப் பெருமானைப் பற்றிப் பாடப்பெற்ற தோத்திரச் செய்யுட்டகளைக் கொண்டது. இதனுள் முப்பத்திரண்டு கட்டளைக் கலித்துறைகள் உள்ளன.

“கணபதியந் தாதி கலித்துறையா யெண்ணான்
கணபதிமேல் சொல்லமுற்றுங் காப்பு."
என்னுங் கடவுள் வாழ்த்துச் செய்யுளடிகளும்.
“இதுநாலெண் கலித்துறையா யெண்ணான்கு னாமமல
ரிணைக்குந் தாரை”
என்று நூலின் இறுதியில் கூறப்பெற்றுள்ள விருத்தமும் இதனை உணர்த்துகின்றன. இந்நூலில் விநாயகப் பெருமானின் திருவுருவச் சிறப்பும், மக்களாகப் பிறந்தோர் அனைவரும் அப்பெருமானை வணங்கவேண்டும் என்றும், அவனை வணங்கினால் எல்லாப் பயனையும் இம்மையிலும் மறுமையிலும் பெறலாம் என்றும் நன்கு உணர்த்தப் பெற்றுள்ளன. தலையால் கணபதிப் பெருமானை வணங்கியும், நாவினால் அவ் விறைவனைப் போற்றியும், காதுகளில் அவன் புகழினைக் கேட்டும், கைகளினால் அக்கடவுள் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலைத் தூய்மை செய்தும், கண்படைத்த பயனைப் பெறத் தும்பிக்கைப்பிரானைத் தரிசனம் செய்தும் வந்தால், அப்பெருமானது திருப்பாதங்கள் நம்மை ஆட்கொள்ளும் என்று இந்நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. பின்வரும் பாடல் இதனைத் தெரிவிக்கும்:-

"பூண்டிடுஞ் சென்னி புகழ்ந்திடும் நாக்குபாக் களையன்பாய்
வேண்டிடுங் காது விளக்கிடும் பாணி விரைந்துநித்தந்
தீண்டிடு நெஞ்சந் தரிசிக்குங் கண்வாய் செய்திடுங்கா
லாண்டிடு நீட்ட புழைக்கைக் கடவு ளடியிணையே". [பா: 17.]

அடியவர்கள் விநாயகப் பெருமானுக்கு உணவாகப் படைக்கும் பொருள்கள் இவையென்று கீழ்க்காணும் பாடலில் அழகுற எடுத்துக் கூறப்பெற்றிருக்கின்றன:

"வகையா மமுது பருப்புநெய் பாறயிர் வர்க்கவகைத்
தொகைமோ தகமே யெள்கட லைப்பொரி தோசைவடை
தகைதீர் குரும்பை விடலை யவல்பழம் சர்க்கரை தேன்
கு[கை] கவாய் வயிற்றற் குணவாய்ப் படைத்திடு வார்பத்தரே". [பா:8.]

இங்ஙனம் விநாயகப் பெருமானை வழிபட்டு அப்பிரானது கருணையினால் இவ்வுலகத்தவர் அடையும் பயன்கள் இவையெனப் பின்காணும் செய்யுளில் நன்கு உணர்த்தப்பட்டிருக்கின்றன.

"புத்தியும் வித்தையும் போதமும் ஞானமும் புண்ணியமும்
சத்தியுந் தானமுந் தர்மமும் நேமமுஞ் சத்தியமும்
பத்தியும் பண்பும் குணமும் புகழுநற் பாக்கியமும்
முத்தியு மற்றெப் பொருளுந் தருங்கை முகனருளே". [பா :12]

இவ்வாறு எளியநடையில் பக்திச் சுவை ததும்பப் பாடப்பெற்ற இவ்வந்தாதி முப்பத்திரண்டு பாடல்களோடு முடிகின்றது. நூறு பாடல்கள் எல்லையெனினும் சிறுபான்மை குறைந்தும் வரும் என்பதற்கு உதாரணமாக இவ்வந்தாதியைக் கொள்ள லாம். இவ்வரிய நூலை இயற்றி நமக்கு அளித்த ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
மூலப் பிரதியில் பல இடங்கள் சிதைந்து உள்ளமையின் சில பாடல்களின் முழு உருவமுங் கிடைக்கவில்லை. ஒன்றிரண்டு இடங்களில் இவ்வாறிருக்கலாம் எனக் கருதி
[ ] இக் குறிகளுக்கு இடையில் சில எழுத்துக்கள் சேர்க்கப்பெற்றுள்ளன. பாட்டிலுள்ள எழுத்துக்களில் தவறாக உள்ளவை என்று தோன்றியன, ( ) இந்தக் குறியீடுகளுக்கு இடையே அமைக்கப்பெற்றுள்ளன. எழுத்துக்கள் விடுபட்டுப் போன இடங்கள்....... இங்ஙனம் குறிக்கப் பெற்றிருக்கின்றன. இவ்வடையாளங்களனைத்தையும் பின்வரும் அந்தாதிகளிலும் ஆங்காங்குக் காணலாம். இவ்வந்தாதி, நூல்நிலைய காடலாக்கு D. 242-ஆம் எண்ணின் கீழ் வருணிக்கப்பட்டுள்ள பனையோலைப் பிரதியை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப் பெறுகின்றது. சீர் முதலியன சில பாடல்களில் ஒழுங்காகப் பிரிக்க இயலவில்லை. எழுத்துப் பிழை முதலியவற்றை அறிஞர்கள் பொறுப்பார்களாக.

2. திருவரங்கப் பதிற்றுப்பத் தந்தாதி

இது, "கோயில் திருமலை பெருமாள் கோயில்" என்று வைணவர்களால் போற்றப்பெறும் தலங்களில் முதற்கண் உளதாய கோயில் என்னும் திருவரங்கத்தில் ஆதிசேடன் மீது கண்வளர்ந்தருளும் அரங்கநாதப் பெருமானைப் பற்றிப் பாடப் பெற்றுள்ள பதிற்றுப்பத் தந்தாதியாகும். அரங்கமென்பது ஆற்றிடைக்குறை, காவிரியாற்றின் இடையிலே ஏழு மதில் சூழ்ந்த திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அரங்கநாதனை ஆழ்வார்கள் அனைவரும் தம் பாமாலைகளால் போற்றியுள்ளனர். பிள்ளைப்பெருமாளையங்கார் என்னும் திவ்வியகவி இத்தலத்து இறைவனைக் குறித்துப் பல பிரபந்தங்கள் இயற்றியுள்ளார்.

இவ்வந்தாதி சிறந்த தோத்திர நூலாகும். எம்பெருமானின் கல்யாண குணங்களில் ஈடுபட்ட இந்நூலாசிரியர் மிக உருக்கமாகப் பாடியுள்ளார். ஆழ்வார்கள் பிரபந்தங்களில் மிக்க ஈடுபாடுடையவர் இந்நூலாசிரியர் என்பது இந்நூற் பாடல்களால் நன்கு விளங்குகின்றது. திருவரங்கத்து இறைவனை வணங்கி வினைகளைப் போக்குவோம்; அவனைத் தவிர துணை யாருமில்லை; அப்பிரானே எல்லாப் பொருள்கட்கும் தலைவன்; எவ்வித இடர் ஒருவருக்கு வரினும் அப்பெருமான் கருணையினால் நெருப்பில்பட்ட பஞ்சுபோல் அது அழியும் என்று பல பாடல்களில் அழகுபட எடுத்தியம்புகின்றார். கொடிய பாவம் செய்தவர், மிகுந்த தீச்செயல்களை உடையவர், தினந்தோறும் கெட்ட நடத்தையிலேயே உழல்பவர் யாவராயினும் முற்பிறப்பில் செய்த நல்வினையின் பயனால் அவர்கள் வாயினால் திருவரங்கம் என்று ஒருமுறை விளம்புவரேல், தேவர்கள் எல்லோரும் மதிக்கும்படி பேரின்பப் பதவியையடைவர் என்று கூறுகின்றார். கீழ்க் காணும் பாடல் இதனை விளக்குகின்றது:
"சூழ்ந்திட்டார் கொடும்பவமே சொன்னார் தீமை
      தொகுத்திட்டார் வெவ்வினையே துணிவி னாளும்
வீழ்ந்திட்டார் வேட்கைவெள்ளத் தன்னா ரேனும்
      விதிவசத்தா லரங்கமென்றே விளம்பி னாரே
லாழ்ந்திட்டார் பேரின்ப வமுத வாரி
      யமைவுற்றா ரடியரொடு மமல வீட்டுள்
வாழ்ந்திட்டார் வானோரு மலரு ளோனும்
      வானவரு மேனையரு மதிக்கத் தாமே".
[பா: 4.]
இப்பாடல்,
“பாதியா யழுகிய கால்கைய ரேனும்
      பழிதொழிலு மிழிகுலமும் படைத்தா ரேனு
மாதியா யரவணையா யென்ப ராகில்
      அவரன்றோ யாம்வணங்கு மடிக ளாவார்
சாதியா யொழுக்கத்தால் மிக்கோ ரேனுஞ்
      சதுமறையால் வேள்வியால் தக்கோ ரேனும்
போதினான் முகன்பணியப் பள்ளி கொள்வான்
      பொன்னரங்கம் போற்றாதார் புலையர் தாமே."

என்னும் திருவரங்கக் கலம்பகப் பாடலை நினைவுறுத்துகின்றது. திருவரங்கப் பெருமை, ஆழ்வார்கள் சிறப்பு முதலான பல செய்திகள் இந்நூலில் கூறப்பெற்றுள்ளன. கடவுள் வாழ்த்துப் பாடல்கள் நீங்கலாக நூறு பாடல்கள் இந்நூலில் உள்ளன. நூலாசிரியர் பெயரைத் தெரிவிக்கும் பாடலொன்று இறுதியில் உள்ளது. 23, 24-ஆம் பாடல்கள் மூலப் பிரதியில் காணப்பெறவில்லை. இந்நூலாசிரியர் சிறந்த தமிழ்ப் பயிற்சியும் வைணவ நூல்களில் ஆழ்ந்த அறிவும் உள்ளவர் என்பது இவர் பாடல்களால் விளங்குகின்றது. பாடல்கள் சிறந்த நடையுடையன. இது, பத்துப் பத்துப் பாடல்கள் ஒவ்வொரு வகைப் பாவினால் பாடப் பெற்றுள்ள பதிற்றுப்பத்தந்தாதி யாகும். பின்வரும் பாடலால்,
"பிறங்குலக மிசையோங்கு பெருவீடாந் திருவரங்கம்
      பெரிய கோயி
லறங்குலவ வருள்புரியு மழகியநம் பெருமாள்பொன்
      னடிமே லன்பின்
நிறங்குலவ பதிற்றுப்பத் தந்தாதித் தமிழ்மாலை
      நிலவ மேன்மைத்
திறங்குலவு குணநேசன் வேங்கடா சலதாசன்
      செய்தான் மாதோ"
(திருவரங்கப்: இறுதிப் பாடல்.)
வேங்கடாசலதாசன் என்பது இந் நூலாசிரியரது பெயரென்று தெரிகிறது. இவரைப் பற்றிய வேறு செய்தியொன்றும் அறியக் கூடவில்லை. இது, இந்நூல்நிலைய காடலாக் D. 2302-ஆம் எண்ணின்கீழ் வருணிக்கப் பெற்றுள்ள பனையோலைப் பிரதியினின்றும் பெயர்த்தெழுதப்பட்டு இங்கு வெளியிடப் பெறுகின்றது. மூவருடக் காடலாக்கு 1515-ஆம் எண்ணில், இதனைப் பெயர்த்தெழுதிய பிரதியொன்றும் உள்ளது.

3. சேடமலைப் பதிற்றுப்பத் தந்தாதி

சேடமலை என்பது திருவேங்கடத்தைக் குறிப்பதாக விருக்கலாம் என்று தோன்றுகின்றது.
"என்று சூழ்சிக ரத்திரு வேங்கடம்
விரவி மீதி லினிதுறை கொண்டலே"
என்ற இவ் வந்தாதியின் 18-ஆம் பாடல் இதனை விளக்குகின்றது. இது, கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் தவிர, நூறு செய்யுட்களையும், இறுதியில் வாழ்த்துச் செய்யுளொன்றனையும் கொண்டுள்ளது. சேடமலையில் எழுந்தருளியுள்ள பிரானைப் பற்றிப் பாடப்பெற்ற பதிற்றுப்பத்தந்தாதியாகும் இது. மிடுக்கான நடையுடையது. படிக்குந்தோறும் மனநெகிழ்ச்சியைத் தர வல்லது. திருவேங்கடச் சிறப்பும், இறைவன் பெருமையும், எம்பெருமானின் அவதார விசேடங்களும் இந்நூலில் விளங்க எடுத்துக் கூறப் பெற்றுள்ளன. இந்நூலாசிரியர் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் வைணவ சாத்திரங்களிலும் சிறந்த பயிற்சி பெற்றவர் என்று திண்ணமாகக் கூறலாம்.
"சீராரு மதிவதனத் தெரிவையர்கள் மாடமிசைச்
      சென்றாங் கெய்து
மேராறு மரம்பையரோ டிரணியகந் துகமாடு
      மெழில்வல் லூரன்
பேராருந் தமிழியலெற் கோதியருள் புரிகிறவன்
      பிறங்கு கஞ்சத்
தாராரும் புயனெவரும் புகழ்தேவ ராசவள்ளல்
      தனைத்து திப்பாம்.''
[பா: 3.]
என்ற பாடலால், இந்நூலாசிரியருக்குத் தமிழறிவுறுத்திய ஆசிரியர் வல்லூர் தேவராச வள்ளல் என்பவர் எனத் தெரிகின்றது. நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. 19.ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் பெருமானாகிய திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் மாணாக்கர்களில் வல்லூர் தேவராசப்பிள்ளை என்பவர் ஒருவர். "குசேலோபாக்கியானம்" என்னுந் தமிழ் நூலை இயற்றியவர் இவரே.

இவ்வந்தாதியில் குறிப்பிடப்பெற்றுள்ள "வல்லூர் தேவராச வள்ளல்" என்பவர் மேற்குறிக்கப் பெற்றவராக இருக்கலாம் என்று தோன்றுகின்றது. இவர் சிறந்த செல்வந்தராக விளங்கியவர் என்பது; "இரணியகந் துகமாடும்" என்ற தொடரால் விளங்குகின்றது. இரணியம் - பொன்; கந்துகம் - பந்து. வீட்டு மெத்தையில் மாதர்கள் தேவ மகளிருடன் பொற்பந்து ஆடுவார்களாம்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பெங்களூரில் தங்கியிருந்தபொழுது தேவராசப் பிள்ளையவர்கள் முதன்மையாக விருந்து கவனித்து வந்ததாக மகாமகோபாத்யாய
ஐயரவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இங்ஙனம் சிறந்து விளங்கிய தேவராசப் பிள்ளையவர்களிடம் இவ்வந்தாதி ஆசிரியர் தமிழ்ப் பயிற்சி பெற்றவர் எனக் கொள்ளலாம். எனவே, அவர் காலமாகிய 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இந்நூலாசிரியர் என்பது பொருந்தும்.
"இந்நூல்" பள்ளிகொண்டான் பிள்ளை என்பார் இயற்றிய 'சேடமலை யந்தாதி'யினின்றும் வேறுபட்டது. இவ்வந்தாதி இந்நூல்நிலைய காடலாக்கு D. 253-ஆம் எண்ணின் கீழ் வருணிக்கப்பட்டுள்ள பனையோலைப் பிரதியை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப்படுகின்றது. மூவருடக் காடலாக்கு 135(b) எண்கொண்ட மற்றொரு காகிதப் பிரதியுமுள்ளது. இது முன்னைய பனையோலைப் பிரதியைப் பெயர்த்து எழுதி வைக்கப்பெற்றதாகும்.

4. திருவாவினன்குடி பதிற்றுப்பத் தந்தாதி

இது, திருவாவினன்குடி என்னுந் தலத்தே கோயில் கொண்டுள்ள சிவபெருமானைப் பற்றிப் பாடப்பெற்றுள்ள பதிற்றுப்பத்தந்தாதியாகும். இந்நூலில் குறிக்கப்பட்டுள்ள திருவாவினன்குடி என்பது தொண்டை நாட்டில் பாலாற்றுக்கு வடகரையில் உள்ளதொரு சிவதலமாகும். அங்கு அமிர்தவல்லியம்மையுடன் ஆதி கைலாசநாதராகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்றார். இதனை :-
"பாலிவட கரைத்திருவா வினன்குடிநா மப்பதிற்றுப்
பத்தந் தாதி
மாலிகையைப் பெண்ணமிர்த வல்லிமண வாளரடி
வனைய நல்குங் ''
[பாலி: பாலாறு.)
என்னுங் கடவுள் வாழ்த்துச் செய்யுளடிகள் நன்கு விளக்கும். சிறந்த தோத்திரப் பாடல்கள் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது. உதாரணமாக ஒரு பாடல் காண்போம்:

"பெருமான் றாணு வீசானன்
      பெம்மான் பித்தன் பிறைசூடி
கருமா மிடற்றன் காபாலி
      கால கால னுருத்திரனென்
றருள்கூர் திருவா வினன்குடிவாழ்
      ழம்மா னாதி கயிலாசன்
திருநா மங்கள் பலவோதிச்
      சிறியேன் வழுத்தப் பெற்றேனே'.
[பா: 27.]
இப்பாடல் மனத்தை உருக்கும் வண்ணம் அமைந்துள்ளது. வாய் நிறைந்து பாடும் இது, கேட்பவர்கட்கெல்லாம் பக்தியுணர்ச்சி உண்டாக்க வல்லது என்பதில் தடையேது?
இது போன்ற பாடல்கள் பல உள்ளன. இதனுள், காப்புச் செய்யுள் தவிர, நூறு பாடல்கள் இருக்கின்றன. இந்நூலின் இறுதியில் பின்வருமாறு ஒரு குறிப்புக் காணப் பெறுகின்றது:

“கீலகவரு தை மாதம் 21வது சுக்கிரவாரத்தில் உத்தராட நக்ஷத்திரத்தில் பாடி நிறைவேறி யெழுதி அரங்கேற்றினது; இந்த அந்தாதி, திருவாவடுதுறை நமச்சிவாயகுரு பரம்பரையில் அம்பலவாண தேசிகருக்குப் புத்திரனான சுப்பிரமணிய முனிவன் பாடியது. "ஆதிகைலாச நாதர் துணை, அமிர்தவல்லியம்மை பாதாம்புயந்துணை "

இதனால் இவ்வந்தாதியை இயற்றியவர் பெயர் சுப்பிரமணிய முனிவர் என்பதும், திருவாவடுதுறை ஆதீனத் தலைவராக விளங்கிய அம்பலவாண தேசிகரின் மாணவர் என்பதும் தெரிகின்றது. புத்திரன் என்பது மாணாக்கர் என்னும் பொருளில் வழங்கப் பெற்றதாகக் கருதலாம்.

இது, இந் நூல்நிலைய காடலாக்கு D. 257-ஆம் எண்ணின் கீழ் வருணிக்கப் பெற்றுள்ள பனையோலைப் பிரதியினின்றும் பெயர்த்தெழுதி வெளியிடப்படுகின்றது. இந்தப் பிரதியினின்றும் பிரதி செய்யப்பட்ட வேறொரு பிரதியுமுள்ளது. அதன் எண் R.135(d).

5.திருமங்கை கரும்பேசர் பதிற்றுப்பத் தந்தாதி

திருமங்கை கரும்பேசரைப் பற்றிய பதிற்றுப்பத்தந்தாதி என்பது இத்தொடரின் பொருள்.
“துதிக்குந் திருமங்கை வாழ்கரும் பேசர் துணைமலர்த்தாள்
பதிக்கும் பதிற்றுப்பத் தந்தாதி சொல்ல."
என்ற இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுளால் இதனை யுணரலாம். கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டினைத் தவிர, 86 செய்யுட்களே மூலப் பிரதியிலுள்ளன. மற்ற செய் யுட்கள் காணப்பெறவில்லை. அந்தாதி குறையாகவேவுளது. ஒரு பிரதியே இருந்தமையால் உள்ளவரை பிரதி செய்யப் பெற்று வெளியிடப்படுகின்றது. இந்நூல் எளிய இனிய நடை யுடையது. இறைவனிடம் பக்தியை வளரச் செய்வது.
"கண்ணாடி தனில்யானை காண்பார் போலென்
கருத்திலுனைக் காண்பதெந்தக் காலம்"
[பா: 48.)
என்று இவ்வாசிரியர் பாடியுள்ளமை எவர் மனத்தையும் இளக்குந் தன்மைவாய்ந்தது. இவ் வரிய நூலை இயற்றினார் இன்னார் என்று தெரியவில்லை. இவ் வெளியீடு மூவருடக் காடலாக்கு 5019-ஆம் எண் கொண்ட பனையோலைப் பிரதியினை ஆதாரமாகக் கொண்டது, இந்தப் பிரதி, மிதிலைப் பட்டி, திரு. சிங்காரவேலு கவிராயர் என்பாரிடமிருந்து 1954- 55-ஆம் ஆண்டில் விலைக்கு வாங்கப்பெற்றது. இதனிலிருந்து பிரதி செய்யப்பெற்ற வேறொரு பிரதியுமுளது. அதன் எண் R 5341. மூலப் பிரதியிலேயே சில பாடல்களுக்குப் பாட பேதங்களும் குறிக்கப் பெற்றிருந்தன. அவையும் அடிக் குறிப்பாக ஆங்காங்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

6. திருவெவ்வுளூ ரந்தாதி

இது, இக்காலத்தில் திருவள்ளூர் என வழங்கும் திருஎவ்வுள் என்னும் தலத்தில் கோயில்கொண்டிருக்கும் வீரராகவப் பெருமானைப் பற்றிய அந்தாதியாகும். கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் நீங்கலாக நூறு கட்டளைக்கலித்துறைகள் கொண்டது. இனியதும் சிறந்ததுமான நடையுடையது. சொல்லழகு பொருளழகுகளிற் றலைசிறந்து மிளிர்வது இதனுள், மடக்கு முதலான சொல்லணிகளும், நிரோட்டம், திரிபங்கி, பிறிதுபடு பாட்டு, கரந்துறைச் செய்யுள், காதைகரப்பு முதலான சித்திர கவிகளும் அமைந்துள்ளன. பக்திச் சுவை ததும்புவது. இதனை இயற்றியவர் நாராயணதாசரென்னும் பெயரையுடையவர் என்பது.
“படப்படி யோர்களுன் பேரென் னெனவிப் பவமெனும்வெவ்
விடப்பட்ட நீக்குநின் பேருரை யாவெனை மெல்லவென்பே
ரிடப்பட்ட தாகுநா ராயண தாசனென் னச்செய்தநின்
றிடப்பட்ட தாமுத்தி நன்றுநன் றெவ்வுட் டிருவூரனே”.

என்னும் இவ்வந்தாதியின் இறுதிச் செய்யுளான் தெரிகிறது. வேறு ஒன்றும் இவரைப் பற்றி அறியக்கூடவில்லை. திரிபங்கி முதலான சித்திர கவிகளிலிருந்து பிரித்து எடுக்கக்கூடிய பாடல்கள் ஆங்காங்கு அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆறாரைச் சக்கர பந்தப் பாடல் சக்கர பந்தத்துள் அமைத்துக் காட்டப்பெற்றுள்ளது. இவ்வந்தாதியில் வந்துள்ள சித்திர கவிகளுக்குத் தண்டியலங்காரம் சொல்லணியியலிலிருந்து விளக்கமும் அவ்வவ்விடங்களில் குறிக்கப்பெற்றிருக்கின்றது. இது, இந் நூல்நிலைய காடலாக்கு D. 258-ஆம் எண் கொண்ட பனையோலைப் பிரதியினின்றும் பெயர்த்தெழுதப்பட்டு அச்சியற்றி ஈண்டு வெளியிடப் பெறுகின்றது. இதனைப் பெயர்த்தெழுதிய காகிதக் கையெழுத்துப் பிரதியொன்றும் இங்குள்ளது. அதன் எண் R. 1704.

7. மதுரை யமக வந்தாதி

இது, மதுரையில் கோயில்கொண்டுள்ள சோமசுந்தரப் பெருமானைக் குறித்துப் பாடப்பெற்றதொரு யமக வந்தாதியாகும். யமகம் என்பது செய்யுளின் ஒவ்வொரு அடியிலும் வந்த சொல்லே மீண்டும் வந்து பொருள் வேறுபடுவது. இது மடக்கு எனவும் படும். இந்நூலில் வந்துள்ளது அடி முதல் மடக்கெனப்படும். இவ்வந்தாதியில் உள்ள பாடல்களனைத்தும் இங்ஙனம் யமகமாகவே அமைந்துள்ளன. இந்நூற் சுவடியின் இறுதியில்,
“மதுரையிலிருந்து பலபட்டடைக் கணக்கு சொக்கலிங்கம் பிள்ளை குமாரன் பலபட்டடை சொக்கநாத கவிராயர் அவர்கள் செய்த மதுரை யமக வந்தாதி க. இராமேசுர உலா க. கிளிவிடு தூது க. வளமடல் க.
சார்வரி வருஷம் ஆனி மாதம் 82 ஆரம்பம். தை மாதம் 122 முகிந்தது” என்று எழுதப்பட்டுள்ளது.

இதனால், இந்நூலாசிரியர் பெயர் பலபட்டடைச் சொக்கநாதக் கவிராயர் என்பதும், மதுரையில் கணக்கர் வேலை பார்த்த சொக்கலிங்கம் பிள்ளை என்பார் இவரது தந்தை யென்றும் தெரிகின்றது. இவ்வாசிரியர் இயற்றியவாக இதனுள் கூறப்பெற்ற இராமேசுரஉலா, கிளிவிடு தூது, வளமடல் தவிர, மதுரை மும்மணிக் கோவை, பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது என்னும் நூல்களும் இவரால் இயற்றப்பட்டனவென்று தெரிகின்றது. இவற்றுள், இராமேசுர உலா (தேவையுலா), கிளிவிடு தூது (அழகர் கிள்ளைவிடு தூது), பத்மகிரிநாதர் தென்றல்விடு தூது, மதுரை மும்மணிக் கோவை ஆகிய நான்கும் மகோபாத்யாய, டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்களால் வெளியிடப் பெற்றுள்ளன.

இந்நூலாசிரியர் இராமநாதபுரம் விசய ரகுநாத சேதுபதி காலத்தவர் எனத் தெரிகின்றது. இவ்வந்தாதி கடவுள் வாழ்த்துச் செய்யுள் தவிர 101 பாடல்கள் கொண்டது. இது, இந்நூல்நிலையத்துள்ள D. 262 -ஆம் எண் கொண்ட பனையோலைப் பிரதியினை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப் பெறுகின்றது. அதனுள் பதினான்கு பாடல்களே இருந்தன. அடையாறு, மகாமகோபாத்யாய, டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையத்தில் இவ்வந்தாதியின் பனையோலைப் பிரதியொன்று இருந்தது. அப்பிரதியிலிருந்து மற்றப் பாடல்கள் பிரதி செய்யப்பட்டு இப்பதிப்பு வெளிவருகின்றது.

8. சடக்கர வந்தாதி

இஃது,ஆறெழுத்தந்தாதி எனவும் படும். முருகப் பெருமானின் பெருமைகளை நன்கு விளக்குவது. தோத்திர வடிவில் அமைந்த பிரபந்தமாகும். நூற்றிரண்டு கட்டளைக் கலித்துறைகளைக் கொண்டு விளங்குவது. சரவணபவ என்னும் ஆறெழுத்துக்களின் சிறப்பைப் பல்வகைகளில் இந்நூல் புலப்படுத்துகின்றது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நிலைகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. இதனுள், 1-42 பாடல்கள் சரியை மார்க்கத்தையும், 43-76 பாடல்கள் கிரியையினையும், 77-87 முடியவுள்ள பாடல்கள் யோக நெறியினையும்,88-102 பாடல்கள் ஞானத்தையும் பற்றிக் கூறுகின்றன. இந்நூலில் உள்ள பல பாடல்களுக்குப் பொருள் நன்கு விளங்கவில்லை. மந்திரங்கள் பல கூறப்பட்டுள்ளன. இயன்றவரை மூலப்பிரதியிலுள்ளவாறே ஒழுங்குபடுத்தி வெளியிடப்படுகின்றது. இந் நூலின் மூலப்பிரதியிலுள்ள முதலேட்டில் இதனை இயற்றியவர் அகத்திய முனிவர் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இது, இந்நூல்நிலைய காடலாக் D. 250-ஆம் எண்ணின்கீழ் வருணிக்கப் பெற்றுள்ள பனையோலைப் பிரதியை ஆதாரமாகக்கொண்டு வெளிவருகின்றது. இன்னும் இரண்டு பிரதிகளுமுள்ளன. அவற்றின் எண்கள் முறையே: R. 1228, 1890 என்பன. அடையாறு, மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையத்திலுள்ள இவ்வந்தாதியின் பனையோலைப் பிரதியுடனும் சிற்சில பாடல்கள் ஒப்பு நோக்கப்பட்டுத் திருத்தஞ் செய்யப் பெற்றன. மற்றப் பிரதிகளில் காணப்பெற்ற பாட பேதங்களைத் தொகுத்து ஆங்காங்கு அடிக்குறிப்பாகக் கொடுத்துள்ளோம். இப்பதிப்பில் காணப் பெறும் “கிரக கோரம் பணைத்தென்ன” என்ற கடவுள் வாழ்த்துச் செய்யுள் மற்றப் பிரதிகளில் காணப்பெறவில்லை.

9. சுப்பிரமணிய ரந்தாதி

இது, செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் என இக்காலத்தில் வழங்கப்பெறும் வடமேரூரில் கோயில் கொண்டுள்ள முருகப்பிரானைப் பற்றிய அந்தாதியாகும். அருணகிரிநாதர் தம் திருப்புகழில் இவ்வூர் முருகனைப் பிரானைப் போற்றியுள்ளார். வெண்பாக்களால் அமைந்தது. கடவுள் வாழ்த்துச் செய்யுள் தவிர, 102 செய்யுட்களையுடையது. நடை சாதாரணமானது. நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. இது, நூல்நிலைய மூவருடக் காடலாக்கு 351-ஆம் எண்ணின்கீழ் வருணிக்கப் பெற்றுள்ள பனையோலைப் பிரதியை ஆதாரமாகக் கொண்டு வெளி வருகின்றது. இப்பிரதி 1916-17-ஆம் ஆண்டில் மைலாப்பூர் ஸ்ரீ சி. வி. ஜம்புலிங்கம் பிள்ளை அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கப் பெற்றதாகும். இதனைப் பெயர்த்தெழுதிய வேறோர் பிரதியும் நூல்நிலையத் துள்ளது. அதன் எண் R. 3771 என்பது.

10. சௌந்தரி யந்தாதி

இது, அம்பிகை பற்றிய தோத்திரமாக அமைந்ததொரு அந்தாதியாகும். பலவகையான விருத்தங்களாலாயது. கடவுள் வாழ்த்துச் செய்யுள் நீங்கலாக நூறு பாடல்களைக் கொண்டது. நடை சாதாரணமானது. வெண்பா, கலித்துறை என்ற இரு வகைப் பாக்களில் ஒன்றான் மாத்திரமன்றி, இவ்வந்தாதியிலுள்ள பாடல்கள் பல்வேறு விருத்தங்களான் பாடப் பெற்றுள்ளன. நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. இது, இந்நூல்
நிலைய காடலாக்கு D. 254-ஆம் எண்ணின்கீழ் வருணிக்கப்பட்ட பனையோலைப் பிரதியினின்றும் பெயர்த்தெழுதப்பட்டு, இங்கு வெளியிடப் பெறுகின்றது. இப் பிரதியினைப் பெயர்த்தெழுதப் பட்ட மற்றோர் பிரதியுமுள்ளது. அதன் எண் R. 1703.

11. சித்தரந்தாதி (உரையுடன்)

இதுவும் அம்பிகையைப் பற்றிய தோத்திரப் பிரபந்தமே. காப்புச் செய்யுள் தவிர இருபத்திரண்டு கட்டளைக் கலித்துறைகளையுடையது. "சித்தரந் தாதி யிருபத் திரண்டையுஞ் செப்புவனே” என்ற கடவுள் வாழ்த்துச் செய்யுளடியால் இவ்வந்தாதியின் பெயரையறியலாம். இதற்கு உரையொன்றும் உள்ளது. நூலாசிரியர், உரையாசிரியர் ஆகியோர் பெயர்கள் தெரியவில்லை. இது, இந்நூல்நிலைய டிஸ்கிரிப்டிவ் காடலாக்கு 252-ஆம் எண் கொண்ட பனையோலைப் பிரதியை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப்படுகின்றது. இதனைப் பார்த்துப் பிரதி செய்யப்பட்ட வேறோர் பிரதியுமுள்ளது. அதன் எண் R. 135(a).

12. சிஷ்ட ரந்தாதி

இந்நூலும் அம்பிகையைப் பற்றிய தோத்திரமே. ஐந்து பாடல்களே மூலப் பிரதியிலுள்ளன. நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. டிஸ்கிரிப்டிங் காடலாக்கு 251-ஆம் எண்ணின்கீழ் வருணிக்கப்பட்டுள்ள பனையோலைப் பிரதியினை ஆதாரமாகக் கொண்டு இப்பதிப்பு வெளிவருகின்றது.

மேற்கூறப்பெற்ற அந்தாதிகளில் பெரும்பாலானவை ஒரே பிரதியை ஆதாரமாகக் கொண்டு வெளிவருபவை. அதனால் சீர்பிரித்து அமைத்தலில் பிழைகள் நேர்ந்திருக்கலாம். இயன்றவரை திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அச்சுப் பிழைகள் பல இருத்தல் கூடும். பெரும் பிழைகளாகத் தெரிந்தவற்றைத் தொகுத்துப் பிழையுந் திருத்தமும் என்ற தலைப்பில் தனியே கொடுத்துள்ளோம். அவற்றில் காணாத பிழைகளை அறிஞர்கள் திருத்திப் படிக்க வேண்டுகின்றேன்.

மதுரை யமக வந்தாதியில் 15-ஆம் செய்யுள் முதல் முடிவு வரையுள்ள செய்யுட்களைப் பிரதி செய்து கொள்ளவும், ஆறெழுத்தந்தாதியை அவர்கள் நூல்நிலையச் சுவடியுடன் ஒப்பிட்டு நோக்கவும் அன்புடன் அநுமதியளித்த அடையாறு, மகாமகோபாத்யாய, டாக்டர். உ. வே. சாமிநாதையர் நூல்நிலையத்தார்க்கு எனது நன்றியைச் செலுத்திக் கொள்ளுகிறேன்.

இந்த அந்தாதிகளை, மூலப்பிரதிகளிலிருந்து பெயர்த்து எழுதி, அச்சிடுவதற்குரிய வகையில் அமைத்துக் கொடுத்த இந்நூல்நிலையத் தமிழ்ப்பண்டிதர்கள்: வித்வான் ஸ்ரீ. வி. எஸ். கிருஷ்ணன், புலவர் ஸ்ரீ . மு . பசுபதி, வித்வான் ஸ்ரீ. இ. பா. வேணுகோபால் ஆகியோர்க்கு என் நன்றி உரியது.

இந்நூலை நன்கு அச்சியற்றித்தந்த தொர்சன் அச்சகத்தாருக்கும் எனது நன்றியைச் செலுத்துகிறேன்.

சென்னை-5,       தி.சந்திரசேகரன்.
15-2-1956.
------------------

அந்தாதிக் கொத்து
1. கணபதி யந்தாதி

கடவுள் வாழ்த்து

தானுந்தந் தானுமழித தானுமிளை யானுமுன்வந்
தானுமற்றை யானுமுந்தி தன்கைபெறத் - தானுங்
கணபதியந் தாதி கலித்துறையா யெண்ணான
கணபதி (வி) [மே]ல சொல்லமுற்றுங் காப்பு

நூல்
மணிமகு டச்சென்னி மாமுக முக்கணவந் தாடுசெவி
யணிநுத லோர்கொம்பு ….. கழம்புக ழைங்கைமுந்நூற்
பணிதவழ மார்பு சுழியுநதி நற்குட பண்டிபொற்கிண
கிணியரை யூடு மலர்த்தா ளவையுங் கணபதிக்கே       1

திக்கெட்டு மண்ணும்விண் ணுங்காலுந் தீயுஞ் சலமுநிறைந்
திக()கட டில்லாமலச் சது ….. ழக்கொண் டிருமையெல்லா
பைக்கெட்டுப் போலவைத்து முத்தொழில் செய்விக்கும் பஞ்சகிர்த்தியன்
தைக்கெட்டில் பிறப்புறு மாததைச் சதுர்த்தியனே       2

சதுவேத மாகம சாத்திர புராணந் தலைமயங்கா
இதுவே நிசமென றெழும்ப வளாத றறுனி
பொதுவே யிருந்து மெனைத்தடுத் தாளவதிப் போதிதுவோ
விதுவேறும் வேணிப் பிரானார் குமார விநாயகனே       3

நாயக மேதெய்வ நாயகமே யிந்த நாயகமே
தாயகம் போலவந் தாயக மேதனித் தாயகமே
தாயக மாலயன் மாலயன் போற்றுந் தெய்வநமசி
வாயகா மாதிப மாதங்கை வல்லபை வைத்தவனே       4

வைத்தான் கிருபையை வையானன மன்பதை வாழ்த்தில்
கைத்தானென புன்மொழி கையா தருளையுள(க) காலவிலங்காய
தைத்தான் பவத்தளை தைய யானினி யொருதாளவு
வித்தான மூன்றறு வித்தானம் பெயபிள்ளை யாரய்யனே       5

ஆரார் துணைநமக் காரா ருரிமைபெற் றார்பிறந்தா
ரூரா ரிருந்தென் னா[னிரா]தென்ன வுண்மைசொல்ல
வாரார் நமன்பகை மாற்றார் துயருற்று வாடுமுகம்
பாரா ரொருவரன் பாய்ப்பிள்ளை யாரைக்கைப் பற்றுநெஞ்சே.       6

நெஞ்சுபுண் ணாக நினைப்பதை நீக்க நிலைதவறா
வஞ்சு புலனிலென் வாய்செவி யேசெல் லடியிணையே
பஞ்சுறு தாளுமை பாலன் கணபதிப் பண்பாலக்
கெஞ்சுபு காட்டு துதியாடு பாடுசொல் கேள்வகையே.       7

வகையா மமுது பருப்புநெய் பாறயிர் வர்க்கவகைத்
தொகைமோ தகமே யெள்கட லைப்பொரி தோசைவடை
தகைதீர் குரும்பை விடலை யவல்பழம் சர்க்கரை தேன்
கு[ ]கைவாய் வயிற்றற் குணவாய்ப் படைத்திடு வார்பத்தரே.       8

பத்தரை யெண்ணரை யாறரை நாலரை பன்னீரரை
யத்தமும் வாயும் விழிமுக முஞ்சர ணங்குழையு
முத்தமு றுதந்தம் ...... முகஞ்சிர முங்கருத்தில்
நித்தமும் வைத்தவர் நீங்கார் சொர்க்கத்தை நிலவரமே.       9

நிலத்தில் புரண்டுகை கூப்பி வலஞ்செய்து நின்றுநெற்றி
தலைக்கிரு செவிமடித் துக்குட்டிக் காது தனைப்பிடித்தே
பலத்தோ டிருந்து மெழுந்து நிருத்தம் பெறுமவர்க்காம்
பலத்தைக் கொடுப்ப னிசமாகு வாகனன் பார்த்திருந்தே.       10

திருந்தி வளர்பெண்ணும் பூமியுங் கோடி திரவியமு
மிருந்துமில் லாமலுந் துன்பமல் லாதிலை யீதொழிக்கு
மருந்து நிசம்விக்கி னேசுர மூர்த்தி மருமலர்த்தாள்
பொருந்து மனாலயர்க் கேயின்ப வாழ்விந்தப் புத்திநன்றே.       11

புத்தியும் வித்தையும் போதமும் ஞானமும் புண்ணியமும்
சத்தியுந் தானமுந் தர்மமும் நேமமுஞ் சத்தியமும்
பத்தியும் பண்பும் குணமும் புகழுநற் பாக்கியமும்
முத்தியு மற்றெப் பொருளுந் தருங்கை முகனருளே.       12

அருள்மணி யயம்பொன் சிலைமரம் வேர்முத லாகியமண்
பொருள்படு தந்தம்நற் றேவுருக் கொள்ளுமிப் பூதபதி
திரளுறுங் கோமய மேலதி வாசஞ் சிறப்புடனா
மருளறப் பூண்ப தறு ..........கை வாய்க்குணமே.       13

வாயே வழுத்திரு கண்ணே தரிசி மடற்செவியே
நீயே திருப்புகழ் கேண்மோநே ரர்ச்சி நெடுங்கரமே
நாயே னிருகண் …………. செய்பணி நற்றலையே
மீயே யுளங்கொள் விநாயகன் மெய்த்துணை விண்ணப்பமே.       14

விண்ணப்பஞ் செய்துமே கும்பிட்டுக் கைகட்டி முன்னநின்றே
வுண்ணப் பதமில்லை யென்றாலுஞ் சம்பன்ன ருற்றளியார்
வண்ணப் பிரபந்தத் துக்குமுரு கார்தம்மை வாழ்த்துவதென்
னெண்ணப் படு……… னமைக்காக்கும் நாய னிற்பனன்றே.       15

பானலக் கண்ணியர் பாலர் கிளைகள் பணிகலைசீ
ரானை குதிரை கொடிதேர் சிவிகைசிங் காதனஞ்சூழ்
சேனை யமைச்சர் திரவியம் நெற்கட்டுச் சேர்மகுடம்
பூணகர் நாடுபெற் றார்பிள்ளை யாரன்பு பூண்டவரே.       16

பூண்டிடுஞ் சென்னி புகழ்ந்திடும் நாக்குபாக் களையன்பாய்
வேண்டிடுங் காது விளக்கிடும் பாணி விரைந்துநித்தந்
தீண்டிடு நெஞ்சந் தரிசிக்குங் கண்வாய் செய்திடுங்கா
லாண்டிடு நீட்ட புழைக்கைக் கடவு ளடியிணையே.       17

அடிமிதி யாக்கினை நோய்கலி மால்கரு வல்லவிடப்
பிடிதடை கட்டுப் பிணைவிலங் கெச்சு வயில் …கோதி
கடியெறி வெப்பொப்புக் காலப்பு மண்ணடை கைப்படைநாண்
மிடிபட் டிடார் தோன்மத்தர்க் காட்பட்ட மேன்மக்களே.       18

மேன்மக்கள் கீழ்மக்க ளாண்மக்கள் பெண்மக்கள் மேதியினிற்
றான்மெய்ப் பு... றனிக் கோமயத் தைத்திரட் டிப்பிடித்தெங்
கோன்மத்த கப்பிள்ளை யாராய்க் குறித்தறு கும்புனைந்து
ஊன்மொய்த்த சென்னி குட்டிக்கை கூப்ப வுறுதியுண்டே.       19

உண்டென்ற வர்க்குண் டில்லார்க் கில்லைநீயவ் வுறுதி தந்தால்
கொண்டு னடக்குங் குணமுமில் லெல்லைகைக் கொள்பவரா
ரண்டுந்தென் பால்தன்ம ராச னொருவனுண் டல்லசெய்வான்
தொண்டரில் செத்துப் பிறப்பாய் மெய்ஞ்ஞானத் துதிக்கையனே.       20

கையனே பதபங் கயனே சிவகங் கையனருள்கோ
மயனே சைவச் சமயனே செவ்வேட மையனேநன்
னியனே மறையின் பயனே கணச்ச பயனெனவாழ்
செயனே விழியுச் சியனே னலனிச் செய்தெய்வமே.       21

தெய்வானைக் கன்றுக்கு மரிசியுந் தீனுமைந்து
கைவாரிப் போட்டிட நால்வாய்க்குக் காணுங் கவளமிடு
பைவாய் பாபெற்ற பெறுவய றார்ப் படைப்ப
போவரா பிறப்பிறப் பில்லாமல் வாழ்வார்க ளுத்தமரே       22

உத்தம னேயென் னுடல்பொரு ளாவிக் குடையவனே
வித்தக னேயுள் விழியே …………. மதவேழமுக
மத்தக னேமணி மந்திர னேவழுத துவரன்பார்
பத்தரைக் காக்கு முதலே முதன்மை படைத்தவனே       23

படைப்பேது ரெட்சிப்ப தேதளிப் பேது படைத்ததெல்லாம்
துடைப்பேது நலவினை தீவினை யேதின்ப துன்பமுமே
தடைப்பேது பின்திறப் பேதுபெண் பொன்பணி யாதியந்தம்
விடைப்பாக னுக்குமெட் டாக்கை முகன்செயல மேன்பட்டதே       24

பட்டவா துன்பப் படாதவா நன்மை பலவிதமாக
கெட்டவா நிந்தை கெடாதவா குட்டுக் கிணங்கிருகை
விட்டவா பாவ மிடாதவ ரன்பு விளைந்தகத்தால்
தொட்டவா கூத்தைத் தொடாதவாகை முதற்செயலே       25

செயமாகு மெண்ணுங் கருமமெல் லாந்தென் திசையனுக்குள்
பயமாகு மென்னிலப் பயமுமுண் டோரன்று பாரதத்தை
வயமே ருவிலக கொம்பா லெழுதிய நாமமத
கயமா வதனனைப் பாடிக்கொண் டாடிக் கதிபெறுமே.       26

பேறும் பலந்தர செல் ……….. பந்தாநல விவேகமுந்தா
வூறும் பவந்தீர் கலிநோய் மருடீ ரெமதுபயந்
தீரன் றும்பலந் தாவென்றானை வலஞ்செய் தநாளிலுற்
      ……..ல வாவுறு மேகதந் தானன வாரணமே 27

வாரண மேநய வாசக மேகண மணியொளியே
பூரண மேவிளை புண்ணிய னேபொரு ளின்பொருளா
யாரண மேயெம தாருயி ரேதனிக் காதரவே
காரண மேமன மேனனை வேயைங் கரப்பிள்ளையே       28

பிள்ளைக்கு மூப்பு பெற்றார்க்கு மூப்பு பெ……..
கொள்ளக் கொடுக்கக் குறையாபல வித்தைக் குங்குருவாம்
பள்ளிக்கு மால்யத் துக்கும் பிரதான பதிகன்பெயா
வெள்ளப் படைக்கு …….காதத னாமவிக் கினகாத்தனே       29

விக்கின காத்த வியனே நினைத்தொழ வேயறியாக
கைக்கினிக் காலன் கயறிடு வான்கொட்டிக் கா…….. டிப்பான்
அக்கினி யாலெரிப் பானடிப் பானிரை யத்திடுவான்
கொக்கின் மாளப் பொருமயி லான்றுணைக் குஞ்சரமே       30

சரத்தின் மனுடப் பதராய்ப் பிறந்திறந் தாவதென்ன
சரத்தினன் றுகெனிற் றானணி வானபசுத தனமசற்று
சரத்தின மாவென்ற தந்தைக்கு மாஞ்சந்து சாத்தொருங்கும்
சரத்தின் சிலையிருப் பாசன மாகுமகற் றானெனிலே       31

கற்றாவு நீயிளங் கன்றினை நான்மழைக் கரமுகில்நீ
முற்றாப் பயிர்முளை னான்னை னீயம் முலையுண்ணிநான்
சிற்றானைக் கொம்பு செவிவாய் முகங்கை சிறந்த பிள்ளாய்
மற்றாரு மில்லை யெனக்கா வுயிர்க்கண் வளர்மணியே       32

விருத்தம்
சதுவேத வரைமுகடுஞ் சாத்திரசசோ லையும் புராண
      தனிக்கா னாறும்
பொதுநீக்கிச் சஞ்சரிக்கும் புனிததெய்வ [மூல]முதல(ப)
      பொருளந் தாதி
யிதுநாலெண் கலித்துறையாய் யெண்ணா [னகு] னாமமல
      ரிணைக்குந் தாரை
பதிவாய்க்கொண் டவர்களிக பரலோக மெனகின்ற
      பதிக ளாமே.       33

கணபதி யந்தாதி முற்றும்
------------------

2. திருவரங்கப் பதிற்றுப்பத் தந்தாதி

காப்பு
ஆழ்வார் வணக்கம்
தென்பாற் சிறந்தொளிர் சீரரங் கேசர் திருவடிமேல்
அன்பாற் பதிற்றுப்பத் தந்தாதி சூட்டி யருள்பெறநான்
தன்பாற் கருணை பெருகி மறைத்தமிழ் தந்துலகை
நன்பாற் பொருத்திய மாறன் பதாம்புய நாடுதுமே.       1

எம்பெருமானார் வணக்கம்
வாதாம்பற் பலச(மை)[ம]ய மயக்கிருடீர்ந் துயிர்களுய்ய
      வந்து தோன்றிச்
சாதாந்தற் கருத்திரங்கிச் சந்தேயி விபரீதந்
      தலைசாய்ந் தோட
வேதாந்தப் பழம்பொருளாம் விசிட்டாத்து விதப்பொருளை
      விளக்கி யாண்ட
போதாந்தத் தொளிர்பூதூர் எதிராசன் றிருவடிகள் போற்றல்
      செய்வாம்       2

ஆசிரியன் வணக்கம்
(வெண்பா)
ஓதித் தொழுதுமே லுள்ளமே நாரணனை
ஆதிக் குரவ ரருள்பெறுதும் - நீதித்
தருமந் திரமருவுந் தன்னருளா லுண்மைத்
திருமந் திரமளித்தான் சீர்.       3

நூல்
உலகமெங்கு நிறைந்தபரப் பிரம மாகி
      யொளிர்திருநா ராயணவென் றுயர்நால் வேதம்
பலகலைதே ரயனரனவா னருவ மேத்தப்
      பதின்மரொடு பாகவதர் பணிந்து போற்ற
வலகில்புக ழார்ந்ததிரு வரங்க மேவி
      யனந்தன்மேற் கண்வளரு மாதி மூர்த்தி
இலகியநின் றிருவடியே சரணம் புக்க
      வெளியேனை யருள்புரிந்தா ளெம்பி ரானே.       1

எம்பிரா னெவ்வுயிர்க்கு முயிரா மீசன்
      இந்திரன சந்திரமவுளி யிறையோன் வேதன்
நம்பிரா னென்று பணிந் தேத்தநாளு
      நயந்தருளு நளினமலர் மங்கை நாதன்
வெம்பிரா வணனையுயிர் வீட்டி மேனாள்
      வீடணனுக் கருளரங்க விமான மேய
தம்பிரான் றிருவடியா ரடியார் பாத
      தாமரையே தலைக்கணியாந் தமிய னேற்கே.       2

தமியனென ………. சனச்சார ………….. ருந்
      தன்மையிலேன் சார்ந்தவர்க்கோர் பயனுஞ் சாரா
வுமியனென் னுனதடிமை யென்னும் வாய்மை
      யொன்றுண்டே யாதலா லெனை மேலாஞ்
சமியனே திருவரங்கத் தலைவ னேநின்
      தாமரைக்க ணருளவெள்ளந் தனிலோர நுண்டூந
துமியினா லொருபொருள்செய் தாட்கொண் டாய்க்கென்
      றொண்டனேன் பண்டுதவஞ் சூழந்திட் டேனே       3

சூழ்ந்திட்டார் கொடும்பவமே சொன்னார் தீமை
      தொகுத்திட்டார் வெவ்வினையே துணிவி னாளும்
வீழ்ந்திட்டார் வேட்கைவெள்ளத் தன்னா ரேனும்
      விதிவசத்தா லரங்கமென்றே விளம்பி னாரே
லாழ்ந்திட்டார் பேரின்ப வமுத வாரி
      யமைவுற்றா ரடியரொடு மமல வீட்டுள்
வாழ்ந்திட்டார் வானோரு மலரு ளோனும்
      வானவரு மேனையரு மதிக்கத் தாமே       4

மதிக்கின்ற மாதவத்து யோகா ஞானா
      மண்ணகத்தா விண்ணகத்தா வந்து தெண்ணீர்
கதிக்கின்ற காவிரிமா நதியின் மூழ்கிக்
      கனகவிமா னத்தரங்கன் கமல(ப) பாத
முதிக்கின்ற மெய்யன்பிற் றொழுவார் பேற்றை
      உமைகேளவ னாரதருக் குரைபு ராணம்
விதிக்கின்ற ததிகமான தொண்டீர் காண்மின்
      மேவுதுநாந் திருவரங்க[ம] விரைமி னீரே       5

விரைமினோ வுயிர்க்குறுதி வேண்டி நிற்பீர்
      மெய்ஞ்ஞான வாழ்வார்கள் வேத மெய்நூல்
உரைமினோ நாரணர்க்கா ளுரிமை பூண்டே
      வுடையவரெம் பெருமானா ரொழுக்கி னின்மின்
றரைவிணமீ திவைநிகர்க்குந் தகுதி காணெஞ்
      சரைமரணத் தளர்ச்சினும் மெய்சாரா முன்னம்
வரைமின்தோய் மாதேவன் வேதா வேத்தி
      மகிழ்புகழ்சேர் திருவரங்க மருவு மாறே       6

மருவுமா றறியேனின் மலர்ப்பொற் பாத
      மதியிலேன் வாழ்நாள்வீழ நாளி னுயத்தேன்
வெருவுமா றடுபிறவி வெம்மைக் காற்றேன்
      வெங்கூற்றுக் கென்செய்கேன் விமல மூர்த்தி
திருவுமா மணியதுவுந் திகழு மார்பா
      திருவரங்கக் கோயில்வளர் தேவா வென்னை
யொருவுமா றுன்னியினி யொழியல் கண்டா
      யுனையல்லா லுறுதுணைமற் றொன்றி லேனே.       7

ஒன்றாகிப் பலவாகி யாவு மாகி
      யொன்று பல வன்றாகி யாவு மன்றி
நின்றாய்நீ யென்றுணாதது மல்லால் வேத
      நின்னிலைமை யுள்ளபடி யின்னுந் தேரா
தென்றாலிங் கியாவர …..தறிய வல்லா
      ரெம்பெருமா னெழிலரங்கத் தெந்தா யுன்றன்
குன்றாலன் றானிரைகாத திலங்கை வென்ற
      குணக்கடலிற் குடைந்தாடிக் குளிர்க்கின் றோமே.       8

குளிர்ப்புற்ற சிந்தையராய்க் குருகூர் மாறன்
      கூறுமறைத் தமிழவாய்மை கொண்டு தாழ்ந்து
தளிர்ப்புற்ற மெய்யினரா யரங்க மேவித
      தங்குநாதாந் தனிமுத்தித் தலத்துண் மேவிக்
களிப்புற்ற பேரின்பங் கலந்தார் முன்னங்
      கண்ணுதல்சொல் புராணநூற் கருத்து மீதே
வொளிப்புற்ற புந்தியரா யரங்கஞ் சாரா
      துழலவரென்னே சிலாபிறவிப் பற்றி னூடே.       9

பற்றற்றார் பற்றிநின்ற பற்றற் றோயைப்
      பற்றுற்ற பாவியேனயான பற்றறற் பாற்றோ
பெற்றுற்றார் பெரும்பயனே யரங்க மாலே
      பேதுற்றேன் றீவினையாற் பேதை நாயேன்
சற்றுத்தா னீயருளத் தகாதோ வெங்க
      டாமரையாட் டலைவனே தரும மூர்த்தி
முற்றத்தா னிரங்காது முனிதி யாகின்
      முதல்வனே முடிவென்கொல் மூர்க்க னேற்கே       10

வேறு
மூர்க்கனே னாகி முடியவே கெடுவான்
      முயல்கின்றேன் றீமையே யாகிற
பார்க்கின்றா ரெவரும் பழிக்கின்றா ராவா
      பாவமேற் கொண்டுவெந் நரகிற
சேர்க்கின்ற தாகுஞ் சிறியனே னாண்டைச்
      செய்வதென் னேபொன்னு மணியு
மீர்க்குநீர்ப் பொன்னி சூழ்திரு வரங்கா
      வென்னப்பா விரங்கிநீ யருளே       11

அருளுமா றறியே னடியனே னாவி
      யாக்கையோ டலசினன் சால
வெருளுமா றினிநீ விடுத்திடேல் விமலா
      வேண்டுறின் மேதையோர் தம்மை
மருளுமா றுஞற்ற வல்லமா யவனே
      மலர்மங்கைக் கினியமா மாலே
தெருளுமா றருள்செய் திருவரங் கத்துட
      சேடன்மேற் கண்வளர் தேவே       12

தேவதே வேசன் றேவகி புதல்வன்
      றிங்களுட பருதியுட டிகழ்வோன்
மூவரா னவருண முதல்வன்முக குணத்துண்
      முதற்குணச் சத்துவ மூர்த்தி
யாவனோ வவனிவ வறிதுயி லரங்க
      னாதலா லடைந்துய்து நம்மா
லாவதே தனைத்து மவனருட் செயலென
      றசைவறு நிலைமைகொண் டகமே       13

அகமனை புதல்வ ராடைபூ டணம்பொன்
      ஆதிய பொருள்களே யவாவிச
சகமதி லுழன்று தளர்ந்துபோய்க் குடும்ப
      சாகரத் தழுந்தினார்க் கெல்லாம்
மிகமலா புன்னை நிழன்மதி வாவி
      விளங்குசீ ரரங்கமெய்ப் பரனே
புகலிட மாநின் பொன்னடிப் போதின்
      போதமே போதமா குவதே       14

ஆகுவதி யாதோ வலைகடல் சூழந்த
      வவனிமேற் பிறந்துளார் யார்க்குஞ்
சாகுவ தல்லா லாதலா லுயிர்க்குச்
      சனனமு மரணமுந் தபுவான
போகுவ தொழிக புகுவது புகுக
      பொருந்திய திருந்தியுள் ளருந்தி
யேகுவ திலதா மின்பவீ டளிக்கு
      எழிலரங் கத்துறை குவமே       15

உறைதரு காம மாதியாந் தீய
      வுட்பகை யாறையு மொறுத்துக்
குறைதரு புலன்க ளைந்தையுஞ் செறுத்துக்
      குதித்தெழு மனத்தினைக் குறைத்து
பொறைதரு முபசாந் தந்தமிற பொருந்தி
      பொலிதிரு வரங்கநா ரணனை
நிறைதரு மனபி னிறைஞ்சியேத் துவதே
      நித்தியா னந்தமெய்ப் பேறே       16

பேறிதிற் பெறும்பே றியாதுகொ லறியேன்
      பெருமநின் னடிமைபெற் றுய்ந்தேன்
தேறினுந் தேறா விடினுந் தெரித்தாள்
      செய்வினைக் கென்கட வேன்யான்
ஊறிய வனப ருளச்செழுந் தேனே
      யுவட்டெறி கடற்படா வமுத
யீறின்ற சுவையே யரங்கத்து ணிறைந்த
      வின்பவா னந்தமாக் கடலே.       17

கடல்புயல் காயாக களங்கனி காவிக
      கதிர்மணி வண்ணமெய்க் கண்ணா
மடலவிழ கமல மலாப்பொகுட் டுறையு
      மங்கையின் புறுமறு மார்பா
வுடலெனும் வாயிற் சிறையிடை யடியே
      னுலண்டுபோ யுழன்றன் னினியுன்
விடலருங் கருணை கொடுதடுத் தாட்கொள்
      விளங்குசீ ரரங்கநா யகனே.       18

நாயக நீயே யைம்பெரும் பூத
      நவையிலா வுலகங்க ணலகித்
தாயக மாகி நின்னுளவைத் தளிக்குஞ்
      சச்சிதா னந்தமா மூர்த்தி
பாயக மாகப் பண்கணப் பணிமேற்
      பள்ளிகொண் டருள்பரம் பரனே
தூயகா வாழுந் திருவரங் காநின்
      றொண்டுபண் டேதொண்ட னேனே.       19

தொண்டர்தந் தொண்ட ரென்றவர் தொண்டன்
      தொண்டனேன் றொண்டுடையவனே
கண்டுகொண் டெனைநீ கைநெகிழ்த் திடிலோ
      களைகணமற் றாருளார் கண்டா
யண்டமண் டலங்க ளுண்டுமிழந் தளிக்கு
      மப்பனே வொப்பிலா தவனே
யெண்டிசை விளக்கு மெழுமதின புடைசூ
      ழெழிற்றிரு வரங்கவம் மானே.       20

வேறு
மானாளு மாதேவன் மகிழ்ந்தேத்துந் திருவரங்கன்
றானாளும் வண்ணமவன் றாட்பணிசெய் குவநெஞ்சே
மேனாளுள் ளன்பொடுமவ் வீண்டுவைப்போற் றினரன்றோ
வானாளு மிந்திரரு மண்ணாளு மன்னருமே.       21

மன்னவரா யெத்தனையோர் மாண்டொழிந்தார் மண்ணாண்டு
பொன்னகராண டெத்தனையோ போயொழிந்தார் கேட்டிலையோ
வென்னிலைமை கண்டவா வாழவெண் ணுகின்ற பேதைநெஞ்சே
தென்னரங்கா தரிசனமே செய்வதுநா முய்வதுவே.       22

23, 24 [இடையில் இரு பாடல்கள் மூலப் பிரதியில் இல்லை]

வீட்டிலையைம் புலத்தொடா வீட்டிலையுட் பகையைந்துஞ்
சுட்டிலைவெவ் வினைக்கானைச் சொல்லின்னா டொறுநெஞ்சே
மட்டிலைய புகழார்ந்த மதிலரங்கா தாணமலாக்கீ
ழொட்டிலைநீ யாதலா லுன்னோடென் னுறவெனக்கே.       25

உறவேது மில்லாதெ னுன்னடியே சரணெனுநற்
றுறவேதும் புரியாத துச்சாரி நாயடியே
னறவேது காட்டியுயிர்க் கருளரங்க வம்மானே
பிறவேது காட்டியெனைப் பிரித்திடிலென் பெறும்பயனே.       26

பயனென்னோ வறிகிலன்முற் பவத்தினுமிப் பவத்தினுஞ்செய்
நயனங்கண் மூன்றுடைய நாயகனென் றிந்திரனென்
றயனென்று மாயினார்க் கருளரங்கப் பெருமானே
செயனன்று தீதென்று தெரிகிலனின் றிருவருளே.       27

திருவருளு நினதருளுஞ் சேர்ந்துலகாய் விரிந்ததெனப்
பொருவரிய புராணமறை(ப்) புலப்படுத்து மாதலா
லொருவருநும் மருளன்றி யுஞற்றுவதொன் றில்லையெனத்
தெருளவருமிங் கியாவர்க்குந் தென்னரங்கத் திருமாலே.       28

திருமாலுக் கடிமைசெயுஞ் செகத்தீர்கா ளென்றுணர்ந்து
மொருவாய்மை கண்டுகேட் டுணர்ந்திருந்து முணரார்போற்
பெருமால்செய் பிறதெய்வம் பேணுவார் சிலரென்னே
வருமாயை களைந்தருளு மதிலரங்க மாதவனே.       29

மாதவாவாழ் திருவரங்க மாதவனே மாயையிருட்
காதவனே யாரணாக்கு மாகமாக்கு மாதியனே
வேதமுதல் வாவெனையுன் மெய்ப்புகழே யன்பருட
னோதவர மீந்தாட்கொ ளூழிதொ றூழியுமே.       30

வேறு
ஊழி யூழிநின் றாயிர வாயினு
      முரகவேந் துலகங்க
ளேழி னேழினோ டிடையறா தேத்தினு
      மீறுருப் பெருஞ்சீர்த்தி
யாழி யாழியம் பகவனே யரங்கத்து
      ளறிதுயில் நெடுமாலே
வாழி வாழிநின் னருளெனை யாண்டொளிர்
      வான்றரு துணைத்தாளே.       31

துணைய தாவதுன் றுணையடித் துணையலாற்
      றுணைபிரி துயிர்க்கென்னே
யிணையி லீசனீ யிறுதியிற் படைப்பினி
      லென்கண்மூர்த் தியுநீயே
வணையுந் தேவாமற் றியாவர்க்கு மெவர்க்கு
      மா தாரநீயே யாமே
பணைகொள் பாணியைம் படையனே யரங்கத்துட்
      பள்ளிகொண் டருள்மாலே.       32

மாலின் மூழ்கியுண் மயங்கிய மதியிலி
      மடவனேற் கருள்கூர்ந்துன்
காலின் வான்றுணை காட்டிமெய் யின்பமுங்
      காட்டியெற் கூட்டாயே
லாலின் மாமுத லேயரங் கேசனே
      யச்சுதா னந்தாநின்
பாலின் வாழ்கருப் படைப்பவன் றுடைப்பவன்
      பயனெவன் படுவாரே.       33

படுவ ரோபயன் பரமநின் பதத்தின்மேற்
      பத்திமை பெற்றில்லார்
நடுவ ரோவிசை நானில் மீதுற
      நவைசெயைம் புலவேட்கை
விடுவ ரோவென்றுந் தாந்தம தென்றெனும்
      வெஞ்செருக் கெனும் பேயை
யடுவ ரோதிரு வரங்கத்துள் வாழுநின்
      னனபினா தமைப்போன்றே.       34

அன்பு வந்தனை செய்த யடைந்தவர்க்
      கணிதிரு வரங்கேசன்
முன்பு வந்தனை தந்தையி னருள்செயு
      மூர்த்தியென் றறிதந்து
மென்பு நைந்துடல் கரைந்தகங் குழைந்துயி
      ரிளகியன் புறுகில்லேன்,
வன்பு முந்திய மரனினு மிரும்பினும்
      வலியன் மாள்கில்லேனே.       35

மாள்கி லாமையொன் றோமனம் பொறிநெறி
      மயங்குபு திரிதந்து
மீள்கிலா மையும்வினை கொடுமட வத்துயா
      விசிப்பறா வினைச்சாலங்
கீள்கி லாமையுங் கிளாந்தாயர்ந் தெய்த்தனன
      கிளத்திவைக் கெல்லா நீ
யாள்கி லாமையொன றேகுறை யடியனை
      யரங்கநின் னருள்செய்தே.       36

அரங்க நாதனே யவரவர் தெய்வமு
      மாகிநின் றருளமூர்த்தி
இரங்கு தாயக னெனுமறை முடிவிதற்
      கியலகரி யாரென்னிற்
சிரங்கை யோதிமுன் றிரிசிவன் விளித்தவோர்
      சிந்துர மென்பாராற்
றிரங்க லந்துநா முய்துமே லவனடி
      சேர்தலே திறமாமே       37

திறல்கொள் வாணனா யிரங்கரந் துணிபடத்
      திசைமுகன் மகன்மைந்தா
மறல்ககொள் மோடிபேய பூதசா லம்பல
      மலைந்துபின் னிடவந்நாள்
அறல்கொள் கூந்தன்மா மங்கைமார் பரங்கனா
      ராழிதொட் டமாவென்ற
விறல்கள் பாடிநாம் வெவ்வினைக் கூற்றிற்கு
      விடைதரு கிற்பாமே       38

விடைய மோரைந்தும் வென்றஞா னியாக்கருண
      மெய்ப்புக ழரங்கேச
அடைய வேபொரு மரக்கரை யசுரரை
      யழித்தம ரரைக்காத்தான்
உடைய னாகின னுபய விபூதியு
      மொருமுதற் றானேயாய
கடைய னேற்குநற் கருணைசெய் தானவன்
      கடமையென் னுரைக்கோனே.       39

கடனி ரண்டுள் மறைதெரிப் பனவவை
      கருதுயிர்க் குயிராகி
யுடன மர்ந்துகாத் தருளரங் கேசன்ற
      னுயர்திரு வடியேவற்
றிடனுளங் கொடுநாஞ் செயல்வ னம்மைத்
      தானெனச் செய்றோமின்
நடந வின்றவ னான்முகன் கடைப்பிடி
      நமரங்கா ளிவையாமே.       40

வேறு
ஆவ தாவதி யாதுதா னழிவ தாவதி யாதுதான்
சாவ தாவதி யாதுதான் சனிப்ப தாவதி யாதுதான்
போவ தாவதி யாதுதான் பொருந்த லாவதி யாதுதான்
தேவ நீசெய மாய மல்ல தெழிலரங்க நாதனே       41

நாத முங்க டந்து வேத நான்கையுங் கடந்தொரைம்
பூத முங்க டந்ததின் புலன்க ளுங்க டந்துசொற்
போத முங்க டந்துநின்ற பொன்ன ரங்க மன்னநின்
பாத மென்ற னெஞ்சுள் வந்த பான்மையென்ன பான்மையே.       42

என்ன மாய முன்றன் மாய மென்றியா னியம்புகேன்
பின்ன மாயுன் னாமலெம் பெரும நீயெ லாமெனா
வுன்ன மாய மாகியென்னை யுன்னு ளுயத்தொ ளித்தியால்
அன்ன மாயவ் வாதி நூல றைந்தசீ ரரங்கனே.       43

சீர டுத்த செல்வ மலகு தென்னரங்க மன்னவா
னூற டுத்த செல்வம் வேண்டு கின்றிலேனவ் வும்பர்போல்
வேர டுத்த பிறவி தீர வேண்டினே னுனையலா
லார டுத்து வந்த ளிக்க வல்லராவ ரையனே.       44

ஐய மையம் வைய வாழவெ னையனேயிம் மெய்யெனும்
பொய்யை மெய்யெ னாவிரும்பு பொய்யின் வெய்ய பொய்யனேன்
மெய்யுண மெய்ய னாகுமுன்றன் மெய்கொள் பாத
மெய்தியான உய்யு நாளு மெய்துமா லுங்கொ லோவ ரங்கனே       45

உற்ற பெற்றி யுற்று நிற்கு முன்பதங்க ளுன்னவும்
பெற்ற பெற்றி யிற்றி ருத்தி பெற்றுனன்பு பேணவுங்
கற்ற பெற்றி சொற்றுதித் தரங்க யான்க ளிக்கவு
மிற்ற பெற்றி முற்றுவித தெனைக்கொ ளுன்னி யீசனே.       46

ஈசன் வாசு தேவன் விண்டு விருடிகேச னாரணன்
பாச நாச மேசெயும் பரம்ப ரன்ப ரஞ்சுடர் தாசர்
நேசன் மாசிலாத தாம ரைக்க ணெம்பிரான் வாசம்
வீசு காவ ரங்கன் மாயனாதி மூர்த்தியே.       47

ஆதி மூர்த்தி யரிய மூர்த்தி யமலமூர்த்தி யாதியஞ்
சோதி மூர்த்தி மாயைமூர்த்தி தொல்லை மூர்த்தி யெல்லையி
னீதி மூர்த்தி தரும மூர்த்தி நெடியமூர்த்தி மாதொரு
பாதி மூர்த்தி பதும மூர்த்தி பணியரங்க மூர்த்தியே.       48

பணிகொள் பாப்பணைக் கணிங்கு பள்ளிகொள் ளரங்கநீ
துணிகொள் வேத வேதியன் சுடலை யாடி யிந்திரன்
கணிகொ டேவா யாரும் யாவு முள்ளிடக் கவர்ந்தபே
ரணிகொ ளண்ட முண்டுமிழ்ந் தளந்த வாறெவ் வாறரோ.       49

ஆறு நாறு தாள மூவ ராயமூர்த்தி யானநீ
வேறு வேறு கூறவாய் விளங்கு வாயுன் மாயையாற்
றேறு நீறு பூசுமச் சிவன்பி தாவெ னப்பர
மாறு கூறு மாறியான் மதிக்கி லேன ரங்கனே       50

வேறு
மதிக்கு மத்தி னுடைதயிர் மான்யா
னுதிக்கும் வெவ்வினை யாலுள் ளுடைந்தனன்
விதிக்கு நாயக னேயரங் காவிடேல்
கதிக்க ண்ணணநின் கண்ணருள் செய்கவே       51

கண்ண நின்கழற் கண்ணன்பு தந்துனை
நண்ண வென்னைய ரங்கநல கிற்றியே
லெண்ண நின்றன் வெவ்வுயிர்க் குமரு
டிண்ண நீசெய்வ தென்பது திண்ணமே.       52

செய்ய னேகரி யாயவெளி யாய்த்திக
ழைய நாரண னேயரங் காவுனை
வையம் வானு மறிவரி யானெனி
லுய்யு மாறெங்ங னுள்ளவு யிர்க்கே.       53

உயிர்க்கு மோருயி ராயவ ரங்கனே
பயிர்க்கு நீரெனும் பான்மைய னேயெனை
யயிர்க்கு மாறுசெய் தாலழ காகுமோ
செயிர்க்க லாத திருமக ளார்க்குமே.       54

திரும கட்குஞ் செகமகட் குஞ்சிறப்
பொருமை கட்க்கு முளத்திற்கு மாயினை
யருமை கட்கரை செயரங் காவுன்
பெருமை கட்குமுண் டோகரை பேசினே.       55

பேசப் பேசப் பெருகு நின்பொரு
ளீசற் கேனுமவ் வெண்கணற் கேனுமுள்
ளாசற் றார்க்கருள் கூரு மரங்கநின்
றாசாக் கேது குறையருள் சாற்றற்கே       56

சாற்று மாற்றி யேனுனைத் தாமதக்
கூற்றின் வாய்ப்படு கொள்கைய னென்னை நீ
போற்று சீரரங் காபுன் பவக்கரை
யேற்று மாறெங்ங னென்னுடை வள்ளலே.       57

வள்ள லென்றுனை வந்தடைந் தோரெலாங்
கள்ள மின்றிக் கருதிய யாவையுங்
கொள்ளை கொள்ளுங் கொடையரங் காவுனை
யுள்ள வுள்ளமெய் யுள்ள முவக்குமே.       58

உவக்கு நற்புக ழோங்கு மரங்கனே
நிவக்கு நின்பதஞ் சார்ந்தபி னின்னுநீ
பவக்க டற்கு ளடியனைப் பாய்ச்சிடிற்
றவக்கு றையி தென்பது சாலுமே.       59

சாலுஞ் சாலுமித் தாழ்பிற வித்துயர்
மேலு மேலும்வந் தென்னை விழுங்குதற்
போலும் போலும் போர்ச்செயல் நீயினி
யேலு மேலு மிரங்கரங் கேசனே.       60

வேறு
அரங்க நாதமுன் னடைந்தவர்க் கரும்பத மளித்தாய்
தரங்க வாரிதி கடைந்தமு தமரர்க்குத் தந்தாய்
புரங்கண் மூன்றெரித் தவன்பலி போக்கினாய் புகல்புக்
கிரங்கி வேண்டினேற் கிரங்கலாயி தென்கொ யலிசையே.       61

இசைக்கு நாயக னிருவினைக் கயிற்றினெவ் வுயிரு
மசைக்கு நாயக னசைவிலா நாயக னலரா
ணசைக்கு நாயக னாலிரண் டிரண்டென நவிலுந்
திசைக்கு நாயக னரங்கநா யகனெங்க டேவே.       62

எங்க டெய்வமவ் விமையவர் தெய்வமோ ரிருமூன்
றங்க நான்மறை யந்தமு மறிவருந் தெய்வ
நங்க டெய்வமென் றயனர னாடுமெய்த தெய்வ
மங்கண ஞாலத்தீ ரறிமினோ வரங்கமாத் தெய்வம்.       63

அறிவு தந்துநம் மடர்ப்பவந் தீர்ப்பவ னரங்கன்
பிறிது பேசியென பிணக்குடை மதத்தீர்கா ணுமக்கிங்
குறுதி வேண்டிநீ ருயதிரே லவன்பத மடைமின்
வறிது பலசம யமுமவன் மயக்கென மதிமின்.       64

மின்னை யொத்ததிவ் வுடலமென் றாலினி வேறிங்
கென்னை நித்தியப் பொருளுள் விருபகை யிகந்து
தன்னை யொப்பிலாத தனிமுத லரங்கமா தவன்றன்
பொன்னை யொத்ததாட் பொருந்தலே நித்தியப் பொருளே.       65

பொருளை யீட்டியைம் புலனுகர் வாழ்க்கையே பொருந்தி
மருளை யீட்டிய மடமையோர் மறுமைக்கு மாயா
விருளை யீட்டினா ரல்லதிங் கெழிலரங் கேச
னருளை யீட்டிலா ரென்செய்வா ரந்தகற் கினியே.       66

அந்த மில்லவ னாதியு மில்லவ னரியா
னெந்த வண்ணமுள் ளன்பொடு மெண்ணினார்க் கெல்லாம்
வந்தவ வண்ணமே வரந்தரு வள்ளலின் வரங்கத்
திந்த வண்ணமாச் சேடன்மேற் கண்வள ரிறையே.       67

இறைவ னாரண னெம்பிரா னரங்கனென் றெடுத்தே
யறைவ னாடுவன் பாடுவன் யானவன் மால்கொண்
டுறைவ னோடுவ னுலாவுவ னூர்தொறும் பலருங்
குறைவி லானொரு பித்தனென் றிகழந்துரை கொளவே.       68

கொள்ள வின்பமா மென்றுநின் னன்பர்கூட் டுறவே
தெள்ள வின்பமா மெவர்க்குநின் றிருவருட் சீரே
விள்ள வின்பமாம் வேதநூல் விரும்புநின் பெயரே
வுள்ள வின்பமா மரங்கவத் திருவொடு முனையே.       69

உன்னை யுயத்திலன் செவியினுங் கொடியனா மொருவன்
றன்னை யுயத்தனை முத்தியி னரங்கமா தவனே
யன்னை யெத்தனை யத்தனு மெத்தனை யாக
வென்னை யித்தனை கூத்திற்கு வைத்தனை யென்னே.       70

வேறு
என்னா ளுன்னா ரருளெய் துவன்யா னென்றாயே
பொன்னாள் மன்னே புகழ்சேர் கோயிற் பொலிதேவே
யந்நா ளிருநா ளளவில் புலைசெய் தலந்தேன்மேற்
சென்னா ளுன்னா ளாகத் திருத்திப் பணிகொள்ளே.       71

கொள்வார் கொள்ளுங் குணமா நிதியே கோவிந்தா
தளவார் தெள்ளுஞ் சீரேய் கோயிற் றிருமாலே
வுளவா ருள்ளத் தொளியே யெளியே னையுமைவா
களவார் கள்ளக் காட்டிக் கூத்துக் காணேலே.       72

காணா நின்றேன் கனவு நனவுங் கழிதன்மை
பேணா நின்றே னுன்தா ளென்றும் பிழையாமே
சேணார் பொழிலே ழெயில்சூழ் செம்பொன் றிகழ்கோயிற்
கோணா கணையாய் கூவிக் கொள்ளாய் குறிக்கொண்டே.       73

கொண்டாய் கோலம் பலவு முலகங் கொண்டுள்ளே
பண்டா லிலைமேற் படுத்தாய் கோயிற் பரனேமே
லண்டா வண்டத் தார்நீ யல்லா லடியேனை
யெண்டா னில்லா விடரா ழியுணின் றெடுப்பாரே.       74

பாரே நீரே தீயே காலே படர்வானே
பேரே வூரே யெனயா வையுமாம் பெருமானே
சீரேய் கோயிற் றிருமா லேயுன் றிறனல்லா
லாரே களைக ணாரே கதிமற் றாவாரே       75

ஆவா கெடுவா யந்தோ வென்னா வருணீயு
மேவா நோவே யாவா னடுமூழ் வினை தானு
மோவா துனையே கூவா நின்றே னுயர்கோயிற்
றேவா தியாதந் தேவா வென்னான் செய்கேனே.       76

செய்கே னுன்தாள் சேர்வா னியலுஞ் செயலியாது
முய்கே னுய்கே னதனா லிருந்தே னொருபாவி
மெய்கேள் கோயில் விமலா மிகுதீ வினையேனைக்
கொய்கூ ராழிக் கொடுகொய் தவனிக் குறைதீரே.       77

தீரா வினையா னுளதோ வருணீ செய்தாயேல்
வாரா நலனும் வருமே யார்க்கு மகிமீதே
பேரா யிரனே நாரா யணனே பெருமானே
யாரா வமுதே வரங்கா யிரங்கா யடியேற்கே.       78

அடியா லுலக முழுது மளந்தா யணிகோயிற்
படிவா னேத்திப் பணிவான பணிமேற் படுத்தாயால்
நெடியாய் குறியாய் நிறைவா யுறைவாய் நிமலாநீள்
செடியார் யாக்கை யிதுதீர் திறனீ செய்யாயே.       79

செய்யா ளெனுமீன் றிகழ்மா முகிலே திருமாலே
யையா கோயி லமலா வுனதின் னடியாரு
மெய்யா ஞானத் தீயா லெனதூழ் வினையென்னத்
துய்யாம் படிநீ செய்தா ணலனே சூழ்வானே.       80

வேறு
சூழ்வ துனது கோயில்வலந்
      துதிப்ப துனது திருநாமந்
தாழ்வ துனது தாண்மலர்க்கீழ்
      தங்கு வதுநின் னரங்கத்து
ளாழ்வ துனதின் னருளினே
      யாக வடியேற் கமையுமேல்
வாழ்வ திதனிற் பெறவற்றோ
      மாலே பரம பதத்தினுமே.       81

பரம பதமாந் திருவரங்கப்
      பதிக்கண் வளரும் பரம்பொருளே
புரம தொருமூன் றெரித்தவனுட
      பூமே லவனுட பொலிமூர்த்தி
யுரம தொருவாத் திருமருவு
      மொருமா முதல்வா வொருவேனீ
சரம தசையி லஞ்சலெனத்
      தமியேன் முன்வந் தருளுகவே       82

முன்னம் பிறந்து பட்டதுயர்
மொழியுந் தரமோ முடிவில்லை
யின்னம் பிறந்து படுந்துயர்கட்
கென்னா குவனோ வென்கோவே
தன்னந் தனியே யிப்பவத்திற்
      சாலத் தளர்ந்து சாம்புகின்றேன்
பொன்னந் திகிரி யரங்காவென
      போது விடியப் புரியருளே       83

புரியப் புரிய நினக்கன்பு
      போதம் வளர்ந்தே யானெனது
பிரியப் பிரியப் பேரின்பம்
      பெருகு வடு பெறு(த)துமெனத்
தெளியத் தெளியத் தெளிவின்றித்
      தீதே முயன்று திகைக்கின்றேன்
சரியச் சரிய வாணன்றோ
      டடிந்த வரங்கா சரணுனக்கே       84

சரணஞ் சரணே யல்லதிங்கென
      சகல வுலக சரணியனே
மரணம் பிறவிக் கருமருந்தே
      மாயை யிருட்கோர் வான்சுடரே
கரணம் பொறிகட் கரியானே
கருடக் கொடிவா கனனேயே
ழரணம் புடைசூ ழணியரங்க
      வம்மா னேயுன் னடியேற்கே.       85

அடியா ருனக்கே யாருமெனில்
      யானுன் னடியா னல்லேனோ
படியார் தெய்வம் பலவிற்கும்
      பரனீ யொருவ னல்லையோ
கடியார் பொழில்சூழ் திருவரங்கக்
      கருணா லயனே கருதியருள்
முடியா விடாசெ யிதுகாய
      முடியு முன்ன முன்னின்றே.       86

முன்னின் றருளா தொழிதியேன்
      முனைவ னேயா னெவணுயவென்
பின்னின் றுனையே தொழுதேத்தும்
      பிரமன் முதலோ ரெவனாவா
பொன்னின் றொளிரு மணிமார்பா
      பொலிசீ ரரங்கப் புத்தேளே
யென்னின் றென்னா மிவ்வுலகத்
      திறையே பொய்த்தான் முறையாமேல்.       87

முறையோ முறையோ முதல்வாவோ
      முகுந்தா வோவென் றோலமிட்டே
குறையோ நிறையக் குழைவேன்
      கோவே யென்னென் றருளகிலாய்
மறையோ திறையே யிதுதகவோ
      மருமத் திருப்பா ளுணர்த்திலளோ
பொறையோர் நிறையோர் மிகவாழும்
      புகழ்சே ரரங்கா புகனீயே.       88

நீயே வுலகத் தாய்தந்தை
      நின்னு ளனைத்து நீயவற்றுட்
சேயேன் மீது திருவருணீ
      செய்யா திருந்தாற் செவ்வியதோ
பேயே யெனினுந் தான்பயந்த
      பிள்ளைக் கிரங்கு மென்பாராற்
றீயே புலன்பார் காலவானே
      தேவே யரங்கத் திருமாலே.       89

திருமா துறையுந் திருமார்பா
      திகழ்சீ ரரங்கத் திருமாலே
வொருநா ளொருபோ துன்கடை நோக்
      குயத்தா யென்னி லெனையுமது
பெருநாள் டாக்கும் பிறப்பிருளைப்
      பீறிப் பெருவீ டிருத்துமே
கருஞா யிறுபோ லொளிர்வானே
      கதிரு மதியுங் கண்ணானே.       90

வேறு
கண்ணனந்த னொருமதலை கண்ணுதற்கோர் மூதாதை
கருதின் மேலாங்
கண்ணனந்த மாதியிலான காவிரிமா நதியரங்கக்
      கவின்சேர் கோயிற்
கண்ணனந்தன் மேற்றுயிலுங் கடவுள்பதங் கண்டுதொழு
      தேத்த யார்க்குங்
கண்ணனந்த முடியனந்த நாவனந்தம் படைத்திலனே
      கமலத் தோனே.       91

கமலமலாத திருமருவு மரங்கேச நின்கடைக்கட
      கருணை பெற்றோர்
நிமலவுயிர் முத்தராய நித்தியசூ ரியராகி
      நிலவா நின்றா
ரமலவுன தருள்பெறா தடியனே னவிச்சையிரு
      ளடரப் பட்டிங்
கிமலநிறை யுடற்பொ றைகொண் டிப்பொறைக்கோ
      ரிரும்பொறையா விருக்கின் றேனே.       92

இருக்குமுத லறிவரிய விறையரங்கா வெவ்வுயிரு
      மிரக்கிப் பானீ
பெருக்குபல வுருவாகிப் பிறந்தனையென் பதுதெளிந்தாம்
      பிறப்பிலெந்தாய்
சருக்குழியு ளழுந்துமவர தறியா ருனைவேறு
      கழறா நிற்பா
திருக்குலவு மெய்யுணர்ந்தோர் சென்மந்தீர் வானுனையே
      சிந்திப் பாரே.       93

சிந்திககச் சிந்தைபெற்றோந் திருத்தொண்டீர் திருவரங்கா
      திருத்தாள் போற்றி
வந்திக்கச் சென்னிபெற்றோம் வாய்வாழ்த்தப் பெற்றோமெய்
      வாழ்வும் பெற்றோம்
நந்திக்கந் நாரணரே நாமார்க்கும் புகலல்லோ
      நமனார்க் கேது
சந்திக்க விதியம்மா சஞ்சிதவா காமியத்தின்
      சார்பற் றோமே.       94

சார்புணர்ந்து சார்புகெட வொழுகவெனும் வாய்மைமொழித்
      தகுதிக் கேற்பப்
பார்புகழும் வான்புகழும் பரவாசு தேவரங்கன்
      பதச்சார் பல்லால்
ஆர்புகலும் புகலாமோ வறிவிலிகா ளந்தோமுன்
      னாதி வேத
நீர்புகுதந் துலகையுமே நிலைநிறுவி யறமுநிலை
      நிறுவி னானே.       95

நிறுவதுமெய்த் திருவொடுநின் னீர்மைதிகழ திருவுருவென்
      னெஞ்சி னுள்ளே
யுறுவதுநின் னுபயபத்த திடைவிடா வுழுவலன்பி
      னுறுதி மற்றை
யிறுவநின் னடியரொடு மிணக்கமிலாப் புனகோட்டி
      யிணக்க மென்றும்
பெறுவதுநின் னருளல்லாற் பிறிதுண்டோ திருவரங்கா
      பேச நீயே.       96

பேசினேன் பிதற்றினேன் பேதையே னின்புகழைப்
      பிழைக்கச் செய்தேன்
கூசிநீ முன்னன்மதோ குணக்கடலே திருவரங்கக்
      கோவே யுன்னை
யோசினா னாயீரமுஞ் சிசுபால னென்பாரா
      லென்னா கிற்றிங்
காசினா னாகினனோ வமலவீ டவற்குமிட
      னான வாறே.       97

ஆனதே தோவெவர்க்கு மவத்தையோ ரைந்தானு
      மனுப வத்திற்
போனதே தோதெரியேம் பொய்மெய்யாக தற்போதம்
      போன போழ்தே
வானதே தோமற்றை மண்ணதே தோவரங்க
      மாயற் காளே
நானதே தோவுருவ நாமமியா தோவுரைப்பின்
      நவிலவதி யாதோ.       98

நவிலவ்வெலா நின்கிளவி நடிப்பவெலா நின்செயலே
      நன்விற் றோன்றுந்
துவிதமெலா நின்னினைவின் சூட்சியன்றே சுதந்தரமென
      றொழும்ப னேற்கு
புவிமுதலா யாவுநீ பொருந்துயிர்கள் பாவைகளுன்
      புணர்ப்பி னாடிக
குவிவவெலா நின்னுள்ளே யாதலினாற் றிருவரங்கக்
      கோயுட் டேவே.       99

தேவரெலாந் தொழுதேத்துந் திருவரங்கக் கோயில்வளர்
      தேவ தேவன்
காவலெலா மியாவருக்கு மாயினா னடியேற்குக்
      கதியு மானான்
மூவரெலா முடையவரென் பாரவரு ளிவனேமெய்
      முதலவ னானா
னோவலிலா முத்தொழிற்கு மொருமூர்த்தி யுள்ளானா
      னுலகுந் தானே.       100

சம்பூர்ணம் ஸ்ரீமதே ராமானுஜாய நம
[நூலாசிரியர்]

பிறங்குலக மிசையோங்கு பெருவீடாந் திருவரங்கம்
      பெரிய கோயி
லறங்குலவ வருள்புரியு மழகியநம் பெருமாள்பொன்
      னடிமே லன்பின்
னிறங்குலவ பதிற்றுப்பத் தந்தாதித் தமிழ்மாலை
      நிலவ மேன்மைத்
திறங்குலவு குணநேசன் வேங்கடா சலதாசன்
      செய்தான் மாதோ       101

திருவரங்கப் பதிற்றுப்பத் தந்தாதி முற்றும்
---------------------

3. சேடமலைப் பதிற்றுப்பத் தந்தாதி

நம்மாழ்வார் துதி
அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்

அணிகொண்ட கோகனக வணையானை யுலகமோ
      டளித்துக் காக்கும்
திணிகொண்ட வைம்படையான் திருமார்பன் சேடமலைச்
      செல்வன் றாளில்
மணிகொண்ட பதிற்றுப்பத் தந்தாதி மலர்மாலை
      மகிழ்விற் சூட்டப்
பணிகொண்ட பார்புகழுங் குருகையர்கோன் பாதமலர்
      பணிதல் செய்வாம்.       1

மாருதி துதி
விஞ்சுமறி திரைப்பரவை யோரிறையிற் கடந்தேகி
      மின்போன் மேனிக்
கொஞ்சுசுக மொழிச்சீதா மணியைக்கண் டிராமனுக்கங்
      கோது கோமான்
செஞ்சலச் மலர்ப்பாதஞ் சிந்திப்பா முற்சேடச்
      சிலம்பன ருளில்
அஞ்சுவைகொள் பதிற்றுப்பத் தந்தாதிப் பாமாலை
யணிய மாதோ.       2

குரு வணக்கம்
சீராரு மதிவதனத் தெரிவையர்கள் மாடமிசைச்
      சென்றாங் கெய்து
மேராறு மரம்பையரோ டிரணியகந் துகமாடு
      மெழில்வல் லூரன்
பேராருந் தமிழியலெற கோதியருள் புரிகிறவன்
      பிறங்கு கஞ்சத்
தாராரும் புயனெவரும் புகழ்தேவ ராசவள்ளல்
      தனைத்து திப்பாம்.       3

நூல்
அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்

மணிகொள் புவிநீர்த் தழலெறியும்
      வளிவா னிரவி மதியுயிராய்த்
திணிகொ ளட்டாக கரமனுவைத்
      தினமுங் கணித்துத் திகழடியார்
பிணிகொள் வினைதீர்த் தருள்புரிந்து
      பிறங்கா னந்த வடிவமா
வணிகொள் சேடா சலத்தமரு
      மம்மான் பதமே பணிநெஞ்சே.       4

பணிகொ ளரிய வணையானைப்
      பணியா ருள்ளத் தணையானை
மணிகொள் வரைத்தோ ளாதனை
      வையம் போற்று மாதனை
அணிகொண் மாழை யுடையானை
      யரவப் பறம்பை யுடையானை
பிணிகொ ணெஞ்சே துதித்தியெனிற்
      பெறுவா யின்பப் பெருவீடே       5

இன்ப மனைவி யெழின்மைந்தர்
      இலகு வெறுக்கை தவ்விரும்பித்
துன்புற் றுழலு மடநெஞ்சே
      தூய ரெவரும் பணிந்தேத்துங்
கொன்பெற் றுயர்சே டாசலத்துக்
      குரிசி லடித்தா மரைமலரை
அன்பு பெறவே வுன்னுதியேல்
      அரிய வீடு பெறுவாயே.       6

பெறுதற் கரிய பரம்பொருளைப்
      பேசற் கரிய வொளிப்பிழம்பை
மறுவின் மறைகள் புகழ்முதலை
      வானோர்க் கமுதூட் டியவிறையை
தொறுவா மனைதோ றுறுவெண்ணெய்
      சுவைத்த முகிலை யெழிலியென்றும்
துறுமுஞ் சிகரச் சேடமலைச்
      சுடரைத் துதித்தி தீமன்னே.       7

மனவாக் குடலாற சிந்தித்து
      வாழ்த்தி வணங்கும் பாகவதர்
இனஞ்சேர் சேடா சலப்பெருமா
      னிலங்கை யரசன் றனைச்செகுத்த
சினங்கொ டயிலை யனுக்கும்விழி
      சீதைக் கொழுநன் சேவடியைத்
தினம்பே ரன்பிற் றுதித்திடுவீர்
      செகத்திற் சனனங் கடப்பீரே.       8

கடவா ரணத்தின் மருப்பொசித்தாய்
      கரிசி லடியா ருளம்வசித்தாய்
படவா ளரவி னடங்குயின்றாய்
      படிவெண் டதியொள் ளிழுதயின்றாய்
மடவா ரரங்கி லெனக்காவில்
      மயிலா ராடத் திருமலையாய்
தடவா ரிதியிற் றுயிலமுதே
      தமியேற் கருள்வாய் பெருவாழ்வே.       9

வாழும் போக மோகங்கள்
      மருவா விரும்பு மானிடர்காள்
தாழு மளகக் கருந்தடக்கண்
      டரள மூரல் வாழுரனை
யேழு வையம் புகழ்சேட
      வேந்த லிலகும் பெருமானை
வீழு மன்ப ரடிதொழுமின்
      விளங்க வவைமற் றடைவீரே.       10

அணிகொள் கமலை யுரத்தானை
      யாழி வளையார் கரத்தானை
திணிகொள் சேட மலையானைச்
      செய்ய மாழைக் கலையானை
மணிகொள் பரம பதத்தானை
      வயங்கு மிண்டைப் பதத்தானை
பிணிகொள் நெஞ்சே பணிதியென்ற
      பெருகு துயரந் தணிதருமே.       11

தணியுஞ் சிவனந் தணர்முனிவர்
      தயங்கு கமலன் முன்னிமையோர்
பணியுஞ் சேட மலையானே
      பவந்தீர்த் தெனையாள் பதுமையொடு
மணியுஞ் சுடரு மருமார்பா
      வைய முண்ட செவ்வாயா
வணியுஞ் சாலம் புடையுடுத்த
      வரங்க நகர்வாழ் கருங்கடலே.       12

கடல்சூ ழுலகம் புகழநின்செங்
      கமல மலர்த்தாள்L பணிந்தறியேன்
உடல்சூழ்ந் தறிவீ னரைப்பாடி
      யுழல்வே னெனினும் பொறுத்தருள்வாய்
அடல்சூழ் வாளை முடத்தெங்கின்
      அவிர்முப் புடைக்கா யுகப்பாய்ந்து
மலர்சூழ் மலர்வான் யாற்றுலவு
      மருத வரவ மலைத்தேவே.       13

கட்டளைக் கலிப்பா
தேவ னேமுகில் நாணுறும் வண்ணனே
      செய்ய தாமரை நோதரு கண்ணனே
கோவி னங்கள் குவதர வேயிசை
      குறித்த வாய்க்குழ காவெனை யாளுவாய்
தூவி யன்ன நடைபயில் மங்கையர்
      சுரியல் கண்டு முகிலெனத் தோகைபூங்
காவி லுள்ளங் களித்துநன் காடுறுங்
      கரிசில் சேடப் பருப்பத்த தாமனே.       14

தாம வாழ்குழ லாய்ச்சிய ராகிய
      தழைம யிறகுத் தருக்கருள் கொண்டலே
சேம மாநின் பதமலர் தாழதராச
      சிறிய னேன்செய் பிழைபொறுத் தாளுவாய
பாம மாகடல் மண்ணவர் விண்ணவர்
      பத்தி யோடு பழிச்சிப் பணிதரும்
வாம மார்சிம யப்பணி மால்வரை
      மாத வாகரி காத்தநல் வள்ளலே.       15

வள்ள லேகள் ளவிழ்மலர் மாதுறு
      மார்ப நின்னிரு தாமரைத் தாள்பணிந்
துன்னி யேத்தி யொழிவில் பவங்கடந்
      துய்ய நல்வர மெற்கருள் வாய்கொலோ
புள்ளு லாவப் புதுமல ரேந்திய
      பொங்கா சூழ்தரு சேட வரையமர்
தெள்ளு மாரமு தேகுணக் குன்றமே
      தென்னரங்கத் தினிதுறை தூயனே.       16

தூய நான்முக னிந்திர னாதியர்
      சொல்லு மெண்டிசைப் பாலகர் வானவர்
மேய பார்புகழ் சித்தர்கள் பத்தர்கள்
      விளங்கு ஞானியர் யாவரும் போற்றுறும்
சேய தாமரை வெள்குறும் பாதனே
      சேட மாமலை வாழரு ணாதனே
பாய வல்வினை யேன்படு வேன்துயர்
      பார்த்து மென்னிரங் காயுரை யண்ணலே.       17

அண்ண லேவிண்ண வர்நிதந் தாழ்ந்திடு
      மாதி யேகம லாசனை நாயகா
தண்ண றாத்துள வச்செழுந் தார்துயல்
      சைல நோபுயத் தாரணி யுண்டவா
கண்ண சேட வரைவளர் சோதியே
      கரிசி லன்பர் கருத்தொளிர் வள்ளலே
பண்ண லர்மொழி யார்மயல் கொண்டுழல்
      பாவி யேற்கும் பரிந்தருள் செய்வையே.       18

செய்ய தாமரைக் கண்ணனைப் பைந்துழாய்த்
      தொயல் சூடிய நீணிற வண்ணனை
ஐய நுண்ணிடைப் பார்க்கவி நேயை
      யமர ருய்ய வமுதருண் மாயனைத்
துய்ய சேட மலையுறை தூயனைத்
      தோமி லாநுரை யுண்டசெவ் வாயனை
வெய்ய நெஞ்சக மேநித முன்னுறில்
      விளங்கு வீடடை வாயிது திண்ணமே.       19

திண்மை கொண்ட திருமலை யையனே
      திகிரி சங்கந் திகழ்தரு கையனே
வண்மை கொண்ட கருமுகில் கண்படும்
      மாம திற்கடன் மல்லை யமுதமே
உண்மை கொண்ட மறையவா போற்றிடு
      மூர கத்தொளிர் நாதநின் றாள்மலர்
தண்மை கொண்ட வறிவொடு தாழ்கிலாத்
      தமிய னேற்குன் னருள்தரு நாளென்றே.       20

என்று சூழசிகரத்திரு வேங்கட
      விரவி மீதி லினிதுறை கொண்டலே
யன்று கைக்கிரி மூலமென் றோலிட
      வாழி யோச்சிக் கராங்கடிந் தாண்டவா
பொன்று மெய்யை நிலையென வெண்ணுறீஇப்
      போற்ற வெண்டிசை யோடிப்பொ னீட்டுபு
துன்று பூங்குழல் வேசியர்க் கீந்துளஞ்
      சோம்பி னேன்பொறுத் தாளினி யண்ணலே.       21

இனிய வெண்ணிறப் பாற்கடன் மேன்மிக
      வெழில்செய் கார்க்கடல் போற்றுயில் கண்ணனே
முனிவர் நூலின் முறைதெரிந் தோங்கிய
      முனிவர் போற்று மருட்பெருங் குன்றமே
பனிசெய் வெண்மதி யந்தவழ் கூடமார்
      பணிவு ரைப்பர வாளெனை யோரறை
கனியி தழக்கொடி யாகி யொளிர்தரக்
      கமலக் காற்றுகள் பெய்மணி வண்ணனே.       22

வண்ண மார்தர ளம்பொரு வெண்ணகை
      மாம யிற்குல மேக்கறு மென்னடைத்
தண்ண றாக்குமு தம்பொரு செய்யவாய்த்
      தாம ரைச்செழு மாமலர் நேர்முகப்
பெண்ண ணங்கனை யார்மயல் கொண்டுழல்
      பேதை யேனெனி னும்பொறுத் தாளுவாய்
கண்ண சேட வரைக்க ணவிர்தருங்
      காத்த வைம்படைக் கைத்தலக் கொண்டலே.       23
      எழுசீரடி யாசிரிய விருத்தம்

கொண்டல்கண் டுயிலுந் தண்டலை புடைசூழ்
      கொடுமுடிச் சேடமா மலைவாழ்
அண்டாநா யகனே பத்தர்நெஞ் சகமா
      ரமலனே யைவர்முன் வேண்டப்
புண்டரீ கத்தாள் வருந்துறத் தூதாய்ப்
      பொலிகரி புரியடைந் தவனே
மண்டலம் புகழும் யாதவ வரையாய்
      மதியிலேன் றனக்கருள் புரியே.       24

அருண்மிகு முள்ளத் தந்தணர் மறையோ
      தார்ப்புமவா னவர்துதி முழக்கும்
தெருண்மிகுங் கவிவல் லோர்துதி யொலியுந்
      தேக்குறு தூயநின் செவிகட்
கிருண்மிகு மகத்தேன் புகன்றிடு புன்சொல்
      லேற்குமோ கராசலங் காத்தோய
பொருண்மிகு மறிஞர் நிரந்தரம் பணியும்
      புயங்கமால் வரையமர் தேவே.       25

வரைபுரை கரிக்கோ டொசித்தவா சேட
      வரைவள ராதிகா ரணனே
தரைபுகழ் நின்சே வடிமலர்ப் பதுமந்
      தாழ்ந்திலே னென்னிலும் பொறுத்தாள்
கரையில்சீர்த் தயர தன்சுத னாகிக்
      கருங்குழற் கேகயன் தனயை
யுரைகொடு வனம்புக் கிலங்கைவேந் திறவெய்
      தும்பரைப் புரந்தருள் மாலே.       26

புரஞ்சுடு நகையான் கைலை மற்றிதன்சீர்
      பொறாதுடல் விளர்த்து மேரு
திருநதிதன் பெருமை கண்டுள நாணிச்
      சிலையென வளைந்ததாங் கதனா
லிருந்தமிழப் புலவ ரிவற்கிணை யிதுவென்
      றிசைத்திடு சேடமா மலைவாழ்
பரஞ்சுட ரேபொற் கண்ணுயிர் செகுத்த
      பரமவென் பவந்தொலைத் தருளே.       27

அருந்தவர் வழுத்து நின்னடி மலரை
      யலர்கொடு பூசைசெய் தறியேன்
திருந்திழை மடவார் தம்மையே புகழ்வேன்
      தேவனே யெங்ஙன மருள்வாய்
கருந்துழாய்க் கண்ணி கமழ்மறு மார்பா
      கடையுகத் தாலடை துயில்வோய்
பொருந்துசீர் சேடச் சிலம்பமா பரனே
      பொலிதிகி ரிக்கர மாலே.       28

மானிகர் மேனி வள்ளலே சோலை
      மால்வரை வாழ்தருஞ் சுடரே
தேனிகர் மொழிவாழ் மார்பவென் னுள்ளரு
      செறியிரு ளகற்றிநன் காள்வாய்
கானிவ ராயர் பூசைகொள் பெருநாள்
      கார்பொழி மழைவரை தடுத்தே
யானிரை காத்த வண்ணலே யரவ
      வடுக்கலி லமர்தரு முகிலே.       29

தருநில மேனட் டருள்பரந் தாம
      தமனிய வம்பரந் தரித்தோய்
கருணையங் கடலே யடியவ ருள்ளக்
      கமலத்தில் வாழ்செழுந் தேனே
மருமலர் துளப மாலையா யெனையாள்
      வழுவையின் பிடியென மதியை
யிருணிறக் கரத்தாற் பற்றியுள் வெள்கு
      மெழிலர வாசலப் பரனே.       30

பரமபா கவதர் துயரெலாந் தவிர்க்கும்
      பண்ணவ விண்ணவ ரிறையே
பிரமனைப் பூத்த பதுமநன் னாபா
      பேசரு மறைமுடிப் பொருளே
மருவலர் சோலை புடையுடுத் தோங்கு
      மாசுண மால்வரை யரசே
இருமனப் பெண்டிர் மயற்கடல் கவிழா
      தெடுக்குத னின்கட னன்றே.       31

அன்றுவெங் கராவாற் றுயருடை வேழ
      மாதிமூ லப்பரம் பொருளே
நன்றெனை யாளென் றழைப்பவாண் டதனா
      நாயக னீயென வுணர்ந்துங்
கன்றுள் மாந்தர் சிலர்நினைப் பரவார்
      கழிபவ மெங்ஙனங் கடப்பார்
துன்றுபூங் கமல வாவிசூழ் சேடத்
      தொன்மலை வாழ்குணக் குன்றே       32

குன்றிரண் டென்ன வொளிர்தருங் கொங்கைக்
      குவளைமா மலர்நிகர் குவளை
மின்திரண் டன்ன மேனியார் தம்மை
      விரும்புறஇ வெறுக்கைமிக் கீந்து
கன்றுவீர் சேட மலையானைப் பொன்னங்
      கலையனைக் கருத்தின் வறபு
துன்றுறப் பணிவீ ரெனிற்றுய ரில்லாத
      தூயவீ டடைகுவ ரெளிதே.       33

கொச்சகக் கலிப்பா
எளிதிராணி யனைச்செற்ற யிறையவாவெந் துயர்தவிர்த்த
வளிதுயிலுந் துழாயலங்க ழ்லவிர்தடந்தோ ளாளரியே
களிதிகழுங் கடாயானைக் காமருவெண் கோடொசித்தாய்
வெளிதடவுஞ் சேடமலை விபுதவெனக் கருள்தெருளே.       34

தெருளகத்து முனிவர்தொழுஞ் சேடமலை தனையணமி
மருளகலக் கமலமலர் வயங்குகோ னேரிபடிந்
தருளுருவ மலரடியை யன்பினிதம் பணிவோர்க்குப்
பொருளுடைய நாற்பயனும் பொருந்துமிது சத்தியமே.       35

சத்தியநான் மறைபரவுந் தனியரவ மலைவாழும்
நித்தியனே நின்மலனே நிராமயனே யென்நின்னைப்
பத்தியொடு தினம்போற்றிப் பணியவர மருள்செய்வாய்
தித்திக்கு மளையுண்ட செங்கமல வாய்ப்பரனே.       36

பரனேநற் சேடமலைப் பண்ணவனே யடல்சான்ற
கரனேமுன் னரக்கரெலாங் களத்தவிய வேவியவெஞ்
சரனேயா தவநாம சைலத்தில் வாழமுதே
வரனேசெஞ் சிறைக்கலுழ வாகனவந் தெனக்கருளே.       37

வந்தடரும் வல்வினையை மாற்றியெனக் கருள்புரிவாய்
வந்தருந்து மரவின்விழி வளர்முகிலே மலர்கொண்டு
வந்தனை நூன் முறையென்று மாறாது புரிபவரெவ்
வந்தவிர வருள்சேட மலைவாழ் சத் தாம்பரனே.       38

சத்துசித்தா னந்தமாந் தற்பரனே தானவாநச்
சத்துவாவாய் மோகினியாய்த் தண்ணமுதண் டாக்களித்தாய்
சத்துவநற் குணமுகிலே தயங்கரவு மலையாய்ச்
சத்துழல்வேற் புரந்திடநின் றனியருளுக் கழகாமே.       39

அழகாருஞ் சேடமலை யண்ணலே வரசரெலாந்
தொழும்வாழ்வை யுளம்வெ கேன் சுடர்பாக வதரேவல்
வழுவாது புரிந்துய்ய வரமருளி யதுபோதும்
பழையநான் மறைவிரித்த பவளவாய்ப் பசுமுகிலே.       40

முகிலடரு முடிச்சேட முதுமலையில் வாழரசே
வகிமிசையிற் பள்ளிகொள்ளு மையாநின் னுநதியே
மகிமுழுதும் பூத்ததெனின் வகுப்பாரார் நின்பெருமை
யகில்கமழு மாடமலி யணியரங்கத் திருமாலே.       41

அரங்கினரி வையராட வரம்பையர்கண் டுளநாணிச்
சிரங்கவிழ்க்கும் வளஞ்சான்ற சேடமலைச் செழுஞ்சுடரே
வரங்கொளசே திபனமுதலோ ருயிர்செகுத்த வுத்தமனே
வரங்கஞனின் னடித்தொண்டு வயக்குறுநல் வரமருளே.       42

வரமுறுமண் ணாசையெழின் மங்கையர்கள் தருமாசை
திரமலமற் றவைவேண்டேன் தேவநின்றாண் மலர்வேட்டேன்
அரவணையா யருள்வாண னருள்கெடுத்த வாழியாய்
பரவுமடி யவர்க்கருளும் பணிமலைவாழ் மாயவனே.       43

கலிவிருத்தம்
மாயன் சேட மலைக்கண் ணவிர்தரு
தூய நான்முகற் றோற்றிய வுந்தியான்
சேய பாதங்கள் சிந்திமின் மாந்தர்காள்
பாய வல்வினை பற்றரிந் தோடுமே.       44

ஓடுங் காலைச் சுழிமுனை யோட்டியே
நாடு நன்னிலை நண்ண வருளளி
பாடுந் தேமலர்க் காவிற் பசுமயி
லாடுஞ் சேட மலைவள ரையனே.       45

ஐய வாரணம் போற்றர வாசல்
ஐய வாரண வங்கைய நிற்றுதித்
துய்ய வெற்கருள் வாய்புவி யுண்டவா
துய்ய வன்பர் துயர்களை செம்மலே.       46

செம்ம லேவர வாசல் தேவனே
விம்மு வெம்முலை விற்கும் பரத்தையர்
தம்மை யேபுகழ்ந் தென்றுந் தருக்குவேற்
கம்ம நின்சர ணம்மருள் வாய்கொலோ.       47

வாயுன தோத்திர வார்கர நின்பணி
மேய கண்ணின் விளங்கு தரிசனம்
நேய மாக நிதஞ்செய் வெற்கருள்
நாய காதிரு வேங்கட நாதனே.       48

நாத வைம்பொறி செற்றுயர் நற்றவா
போத வுள்ளம் பொலிபுரு டோத்தமா
வேத மில்லர் வாசல் வென்னக்க
கோத றுத்தருள் வாய்கருங் கொண்டலே.       49

கருவி ழிச்செங் கமலை வளர்தரு
மரும நின்னடி யாரடி வாழ்த்திலர்
விருள கத்தனை யெங்ஙன மாளுவாய்
திருவ நீளர வாசல்ச் செல்வனே.       50

செல்வச் சேட வரையமா தேவனே
வில்லில் வல்ல விதுரன் மகிழ்ந்து செய்
நல்விருந் துண்ட நாயக நின்னடிக்
கொல்லும் பத்தி யுவந்தருள் கண்ணனே.       51

கண்ண னைத்துள வாரங் கமழுரக
கண்ண னைப்பணி மால்வரைக் கத்தனைக்
கண்ண னைத்து மருள்செயுங் கஞ்சநேர்
கண்ண னைப்பணி காமரு நெஞ்சமே.       52

நெஞ்ச மேபஞ்ச வநேர்க்கரு ணேயநீள்
மஞ்சு லாவர வாசல மாயவன்
கொஞ்சு மென்மொழிக் கோற்றொடி நாயகன்
கஞ்சத் தாளைக் கருதின்ப மெய்துமே.       53
      வேறு
எய்து மானிட ரிகல்வி ளைத்தனைக்
கொய்து வானருள் கோட்டு மாசணத்
தெய்வ மால்வரைத் தேவை நெஞ்சமே
மெய்து தித்திடின மேவு ஞானமே.       54

ஞான சாதனம் நனியி ழைத்திலேன்
தேன வாமொழித் தெரிவை மார்தமை
யீன னாய்ப்புகழ்ந் தேனெ னக்கரு
ளூன மில்பணி யோதிச் சோதியே.       55

சோதி யேமது சூத னாவெழிற்
பாதி வெண்மதி பயிலும் வேணியன்
போதி னோன்பணி புனித வெற்கருள்
தீதின் மாசுணச் சிமயத் தேவனே.       56

சிமய மாசுணச் சிலம்பின் மூவிரு
சமய முந்தொழத் தங்கு கொண்டலே
கமையு ளார்தொழுங் கமலை நாயகா
வமைய வாண்டுகொள் ளன்பி லென்னையே.       57

என்னைப் பாவியென் றிகழ்ந்து கைவிடின்
பின்னை யார்துணை பேசு ரங்கனே
அன்ன வாவிசூ ழரவ மால்வரை
மன்ன வாகரி வரத ராசனே.       58

வரத சக்கர வல்ல மங்கையர்
சுரத முன்னிமா சுணவி லங்கலை
நிரதம் போற்றிலா நீசர்க் கும்மருள்
சரத மாதவா தாழுங் கண்ணனே.       59

தாழ் வானவர் தானங் காப்பவன்
வாழ் நின்னடிப் பூசை மாண்பென
வாழ் நான்மறை யறையு மாளிவெவ்
வேழம் வாழ்பணி மேரு வண்ணலே.       60

மேரு வெஞ்சிலை விமலன் முன்னுளோர்
யாரு மோடுற வாற்றல் வாணன்றோள்
ஆரு லாவரி யாற்றகொய் தாயருள
காரு லாம்பணிக் கல்ல கத்தனே.       61

கச்சு லாமுலைக் கணிகை மார்தமை
யிச்சித் துன்பத மேத்து றாதுழல்
சொச்சை யென்கொடுங் கோது தீர்த்தருள்
நச்ச ராமலை நண்ணு மண்ணலே.       62

நண்ணு நற்புகழ் நாத நின்னடி
யெண்ணி வாழும்வாழ் வேழை யேற்கருள்
கண்ண மாசணக் கல்ல கத்திடை
விண்ணு ளோர்தொழ விளங்கு சோதியே.       63
      வேறு
விளங்குறு மாசண வெற்பில்வாழ் விமலனே
களங்கறு மதிமுகக் கமலைவாழ் மார்பனே
துளங்குபைந் துளவணி தூயனே யென்னையாள
உளங்கரு தன்பருக் குரியசெம் பாதனே.       64

பாவமில் லவர்தொழும் பணிமலைக் கத்தனே
தேவதே வேசயான் றிகழுநல் லோரவை
மேவவென் றருள்செய்வாய் மிளிர்நறா வூற்றுபூங்
காவடர்ந் தோங்குசீர்க் கச்சிவா ழேந்தலே.       65

ஏந்தொளி மணிமுடி யிமையவர் மன்னவா
சாந்தமார் முனிவரர் தாழ்தரத் துவரைவாழ்
ஏந்தலே மாமக ளிலகுதார் மார்பனே
பாந்தளமால் வரைவளர் பகவவெற் கருள்வையே.       66

வையமெல் லாம்புகழ் மாசுண மால்வரை
யையனே யென்னையா ளைங்கரன் மாதுல
வெய்யதா னவரெலாம் வீடவெங் கணைவிடுகு
சையநோ விற்கரத் தசரதன் மதலையே.       67

மதலையிற் றோன்றுறீஇ வலயபொன் னனையவன்
மதலைமுன் னொருய மாய்த்தருள் சீயவாய்
மதலையங் குழலினாய் வனபவ வாழிக்கோர்
மதலையா மடியருண மாசுண வரையனே.       68

மாசுறாச் சேடமால் வரைவளர் சோதியே
நேசமா ரடியர்தம் நெஞ்சுறை நிமலனே
தேசுறும் பொறிமணி திகழ்நிறக் கொண்டலே
யாசினின் னடிதொழ வடியனேற் கருள்வையே.       69

அரிவிழி மாதர்த மஞ்சொலுக் கொப்பென
வரியெதிர்த திடுதல்கண் ட…சிறை யிட்டென
வரியபஞ் சாமிருத் துமமர வாசல
வரியெனக் கருள்புரி யம்புயக் கண்ணனே.       70

அம்புயங் காசல வண்ணலே யென்னையாள
அம்புயச் செல்விவா ழகல்வா தவனெழில்
அம்புயக் கண்ணனே யாயிர நாமனே
அம்புய ராலடை யவிர்தரு கண்ணனே.       71

கண்டென வின்சொலார் கணவலைச் சிக்கலால்
வண்டுழாய மாலைதாழ மாபநின் பதமலாத
தொண்டுசெய் தறிகிலேன் தூயனே காத்தியோ
விண்டவழ் தருபணி வெற்பில்வாழ் விண்டுவே.       72

விண்ணவர் போற்றர வாசல் விமலனே
மண்ணிடை நற்குல மாடை ரெனுநினைக்
கண்ணுறா ரெனிலவர் கயவரே யென்றுநன்
னுண்ணெறி வாளாக ணுவலவரீ துண்மையே.       73
      வேறு
உண்மையாக வுன்னடிக்க னொருவிலன் புஞற்றிடத்
திண்மையாக வருளுவாய்கொல் செய்யசேட வரையனே
வண்மைமேவு கீரவாரி மலையினானம தித்தமு
தெண்மைநீங்க வமரருக்கெ டுத்தளித்த குரிசிலே.       74

அளிமுரன்று செய்யதேன ருந்துமம்பு யத்திடை
பொளிரிருந்து பொற்கலத்தி யைந்தவெண்ணெ யொத்திடும்
தெளிவளங்கொள் வாவிமல்கு திருவரங்க வாளனை
வெளியளாவு சிமயமேவு வேங்கடாத்திரி வாசனே.       75

வாசநாறு காவடர்ந்த மாசுணச்சி லம்பனே
மாசிலாக்கு ளத்தின்மது மன்னுகின்ற நின்னுரு
நேசமாக நோக்கிவாழு நெறியினையெ னக்கருள்
பேசுதேவர் தாழ்ந்திடப் பிருங்கனாதி தெய்வமே.       76

பிறங்குமண்ட முண்டுமிழந்த பெருமவும்பர் நாயகா
நிறங்கொண்மேக மன்னமேனி நின்மலாநின் மெல்லடி
மறங்கொளவெய்ய நெஞ்சினேற்கும் வாய்க்குமேகொ லோதுவாய்
திறங்கொள்வேத மன்பினேத்து செய்யசேட வெற்பனே.       77

சேடவெற்பில் வாழுமெங்கள் தேவதாம ரைக்கணா
வேடவிழ்ந்த நீலவுண்க ணேழைமார்மு யக்கினால்
பாடல்சாலும் நின்பதம் பணிந்திடாத யாப்புறு
மூடனேற்கு மருளுவாய்கொல் முளரிமங்கை மார்பனே.       78

மங்கருந்தி றத்தயானை வன்மருப்பொ சித்தவா
சங்குநேமி யேந்துகைத் தலத்தவென்னை யாண்டுகொள்
கங்கைதிங்கண் மாசுணங் கடுக்கைதாங்கு காட்சியாற்
சங்கரப்பி ரானெனத் தயங்குசேட வெற்பனே.       79

வெற்பெவற்றி னுஞ்சிறந்த வேங்கடாச லேசனே
யற்புதாநின் னன்பரேவ லற்பினோடு செய்வரம்
எற்களித்தி யெள்ளினெண்ணெ யென்னவெவ்வு யிர்க்கணும்
பொற்புறப்ப ரந்துநின்ற பொருவிலாத வள்ளலே.       80

வள்ளவாய்ம றத்தடத்து வாளைமீது பாய்ந்தன்ப
புள்ளடர்கந்த வானயாறு புக்குலாவி மீளுறும்
எள்ளுறாவ ளப்பணை யிலங்குசேட வரையவா
உள்ளுமும்மை வினைநடாத்து முயருமூன்று வடிவனே.       81

மூன்றிரண்டொ டெட்டிலாப மூவிரண்டு சத்தமஞ்
சான்றதான நாதாவெய்ய தசைகள்வந்த போதினும்
ஆன்றமாச ணச்சிலம்பி னமருநிற்ப ணிந்திடிற்
றோன்றுவெய்ய துயரிரிந்து தூயவின்ப மொன்றுமே.       82

ஒன்றிரண்டு நான்குபஞ்ச முற்றவெட்டி ராறினி
லென்றிராகு கேதுநீல னேற்றசேயி யங்கினுந்
துன்றுசேட மலைமிசைத் துலங்குநின்ச ரண்துதித்
தென்றுமுன்னு வார்க்கவற்றி லியாதுதுன்பி யற்றுமே.       83


விராட புருஷன்
எண்சீரடி யாசிரிய விருத்தம்

துன்னருள்செய் தலந்தானந் தரமே நாபி
      தொடுகடல்க ளகடுவரை யென்புமா முரோம
நன்னதிக ணரம்புமதி மனமாமே முலைக
      ணவிலழலவாக கலைசெந்நா நண்ணியகா லுயிர்ப்பு
பன்னருக்கன விழிசிருட்டி கட்கடையின் பிறழவே
      பகருடுப்பன மன்கடைவாய்ப் பன்மாயை முறுவல்
உன்னுதிசைச் செவிமறை சொர்க்கலோக நுதன்மேல்
      உலகுசிரங் காருணையா யுற்றவேங் கடனே.       84

வராக அவதாரம்
கடங்குலவு மறைமுதல்வ னாசியினிற் றோன்றிக்
      கனகவட மகமேரு வணுவாக வளர்ந்து
மடங்குலவு பொற்கண்ண னேற்றார்த்து மோதும
      வன்கதையைப் பறித்தவன்செய் வெம்மாயை நீக்கி
இடங்குலவும் பிறைமருப்பா லவன்மார்பம் பிளந்தே
      யெருக்கிநில வலயமெடுத் தினிதுமுன்போ னிறுத்த
திடங்குலவு வெண்கேழ லுருக்கொண்ட பெரும்
      சிறியனுக் கருள்சேட மலைவாழுங் கோவே.       85

நாரத அவதாரம்
கோதிலாக் கமலமலர் பூத்தகருங் கடலபோற
      குலவுமவ யவம் படைத்த கோமளமே னியனே
மேதகுநின் றொண்டரடித் தொண்டுபுரி வரமே
      வேண்டினே னருள்சேட மலைவளரு மமுதே
சீதவிளந் தென்றலியங் கிஞிமிறு பாடும்
      செய்யநரம் புறுமகதி யாழ்முனியாத் தோன்றித்
தீதிலாப் பாஞ்சராத் திரஞ்செய்தே யளித்த
      தேவனே நான்மறைக டேடரிய பொருளே.       86

நரநாராயண அவதாரம்
பொருள்கொண்ட நான்மறைகள் நாடரிய பெரும
      பொன்னாரு நிறமாயா புண்ணியமா முனிவா
தெருள்கொண்ட வரனயன்முற் றேவர்பணிந் தேத்துஞ்
      சேடமலை மிசைவாழுஞ் செம்பதும நாபா
விருள்கொண்ட முகில்வண்ணா வெழிற்கமலக் கண்ணா
      விலகுபுகழ் நரநாரா யணராகத் தோன்றி
யருள்கொண்ட மாதவத்தை யவனிமிசை விரித்தாய்
      அண்ணலே நின்பெருமை யளக்கவல்லா ரியாரே.       87

கபிலாவதாரம்
வல்லபுல வோர்புகழுஞ் சேடமலை நாதா
      வண்டுளப மாலைபுனை மார்பவெனை யாள்வாய்
தொல்லுலகு பரவுகருத் தமப்பெரியோன் மகவாய்த்
      தோன்றியே கபிலரெனத் திருநாமம் பெற்றே
நல்லசாங் கியயோக நுண்பொருளைத் தாய்க்கு
      நன்முத்தி யெளிதுறப்போ தித்தருளு முதலே
பல்லவத்தண் டலைபுடைசூழ்ந் தொளிரரங்கப் பதியிற்
      படவரா வணைமிசைக்கண் வளர்பரா பரனே.       88

தத்தாத்திரேயாவதாரம்
வளங்கஞல்பொன் னுலகமா ரஞ்சுவைத்தேங் கனிகண்
      மலர்க்கரத்தா லெளிதுபறித் தருநதியுள் மகிழத்
துளங்கரம்பை மிக்கோங்கி யுயாதருசீர மென்பால்
      சூழ்சிகரச் சேடமலைத் தூயவனே யெனையாள்
விளங்குபுக ழத்திரிக்கு மநசூயை தனக்கும்
      மேதகுதத் தாத்ரேய ராகவவ தரித்து
கலங்கிலுள வலர்க்கற்கும் பிரகலா தற்கும்
      காமருதத் துவம்புகன்ற மணிமறுமார் பின்னே.       89

எக்கிய புருடாவதாரம் இடபாவதாரம்
மறுவிலறு தொழில்புரியு மறைருசி யென்பவர்க்கும்
      மகப்புருட னாகவந் தரித்தருளும் பகவ
நறுமலர்த்தார் புயனாபி யெனுமரசாக களித்த
      நல்வரத்தா லவர்க்குமா மகனாகத் தோன்றி
எறுழவலிசே ரிடபனெனு மெழினாமம் பெற்றே
      யிலகுலகத் தார்க்குயாவீ டெய்துநெறி தெரித்தாய்
தெறுபுலன்செற் றார்க்கருளுந் தேவனே யெனையாள்
      சேடமலை மிசைநின்ற திருக்கோலப் பிரானே.       90

பிருது சக்ரவர்த்தி அவதாரம்
கோலமுறு கோகனகச் செல்வியமர் மார்பா
      கோதில்புகழ்ச் சேடமலை முடிவாழுங் கோவே
சீலமுறு பிருதுமன்ன னென்னவ்வ தரித்துச்
      செகதலவா னிடத்தருமபல வளப்பயன் கறந்து
தாலவுயிர்க் களித்தருளுந் தற்பரவற் புதனே
      தமியனேற் குனதுதிரு தரிசனந்[தந்] தாள்வாய்
மூலமறை யுணர்(ப) பதின்ம ருரைத்தசெழுந் திருவாய்
      மொழிக்கின்ப முறும்பரம காரணநா ரணனே.       91

மச்சாவதாரம்
காரணனே சேடமலை வாழ்தருமா மாய
      கடும்பவமாங் கடல்கடக்க நின்பாத பத்திச்
சீரணவும் புணையெளியேற் கருளுவது மென்றோ
      செகமெலாம் புகழ்கூடற் றிருநகர மளித்த
தாரணவு புயாசலச்சத் தியவிரதன் றனையுந்
      தவமுஞற்று முனிவரையுந் தழைதரு பொருளா
லேரணவு மீனவுருக் கொண்டளித்த விறையே
      யிலகுகம லத்திருவார மணிமார்ப மாலே.       92

மாலகன்ற வமரர்களு மசுரருமந் தரத்தான்
      மறிதருவெண் டிரைத்திருப்பாற் கடல்கடைவே ளையினில்
கோலமுற மலையினைவார் கடல்முழுகா திகல்சேர்
      கூர்மமாய் வெரிநேந்திச் சிலகரத்தா லதனை
யேலமிசை யெழாதுதாழ்த் திப்பிடித்துஞ் சில்ல
      வெழிற்கரத்தால் வாசுகியைப் பற்றிநனி யீர்த்தும்
ஓலமிகக் கடைந்தமுதீந் தருளபரனே யெனையாள்
      ஒப்புயர்வில் சேடமலை யொளிர்தருகா ரணனே.       93

தன்வந்தரியவதாரம்       வேறு
ஒளிரு மாமணிக் குயிற்றி யொண்சுட
      ரோங்கு மாமதில் விளங்கு வேங்கடத்
தளியில் வாழ்தருஞ் சச்சிதா நந்த
      தற்பராநின் சீர்போற்றி யாவர்க்கும்
களிமி கத்தந் வந்தரிப் பெயர்க்கொளீஇக்
      கமழ்சு தைக்குடத் தோடு தித்திடும்
அளிகொ ளையனே போற்றி போற்றிநீ
      யமரு மாதலம் போற்றி யென்றுமே.       94

மோகினி அவதாரம்
போற்று மாதவா சூழுஞ் சேடமாப்
      பொருப்பில் வாழ்பவ போற்றி வெம்முரண்
தோற்றி ராவண னிற்ப வின்றுபோய்
      நாளை வாவெனச் சொற்ற வெந்தையே
மாற்ற ருந்தகை மோகி னிப்பெயர்
      மங்கை யாயரக் கரைம யக்கியே
யாற்றல விண்ணவர்க் கமுத ளித்தரு
      ளாதி யச்சுதா புனித போற்றியே.       95

நரசிங்காவதாரம்
புனித மாரர் வாச லத்துவாழ
      பொருவி லாதவா போற்றி வெங்கொடுந்
துனிகொள் பொன்னன்முன் மோது தூணிடைத்
      தோன்றி யேயவன் வலிய மார்பினை
நனியு வல்லுகி ராற்பி ளந்தருள
      நரசிங் காநின்செந் தாள்கள் போற்றியே
கனிவி லார்மட நெஞ்சி லுற்றிடாக்
      கமல நேர்விழி யமல போற்றியே.       96

வாமனாவதாரம்
அமல வாரர வாச லேசனே
      யதிதி காசிப னிருவர் மைந்தராய
நிமல மாவலி பாங்கா மூன்றடி
      நிலம் தேற்றுயாந் தவனி யோடுவிண
விமல வீரடி யால ளந்தவன்
      மிளிர்மு டிக்கணோ ரடியி ரீஇயவற்
கமைத ருஞ்சுத லத்ததை யீந்தரு
      ளாற்றல் வாமன போற்றி போற்றியே.       97

பரசு ராமாவதாரம்
வாம மார்சம தக்கி னிக்குநன்
      மாதி ரேணுகை தனக்கு மைந்தனாய்
நேம மார்பிதா வைச்செ குத்திடு
      நெறியி லாக்கொடு மன்ன னாதியாத்
தோம றாதமூ வேழு மன்னவா
      தொக்க வெங்கடுங் கால னூர்புக
நாம வெம்மழு வேந்து செங்கர
      நம்பி வாமதிருச் சயிலம் போற்றியே.       98

வியாசாவதாரம்
சயில நோதரு புயவி ராவிய
      தழங்கு வேதநான் காவ குத்துநன்
கியல்பு ராணமூ வாறி யற்றியு
      மிறந்த கௌரவா தியரு யிர்த்தெழீஇ
வியமு றுநதிரைக் கங்கை நீத்தமேன
      மேவ வந்தன்முன் னோர்கள் கண்ணுற்
வியலு றத்தெரித் தும்வி ளங்கிய
      வியாத வேங்கட பகவ போற்றியே.       99

இராமாவதாரம்
பகவ னேதிருச் சேட மால்வரைப்
      பண்ண வாபக ரரிய பலவளந்
தொகும யோத்தியிற் றயர தன்பெருந்
      தோன்ற லாகியெண் ணொன்ப தென்றிடு
தொகைகொள் வெள்ளவா னரர்தொ டர்ந்திடத்
      தொல்லி லங்கைவாழ் தருமி ராவணன்
இகலின் மாய்தரக் கணைதொ டுத்தருள
      இராக வாநின்சீ ரெங்கும் போற்றியே.       100

பலராமாவதாரம் / கிருஷ்ணாவதாரம்
எங்க ணும்புக ழெழிலு ரோகிணிக்
      கிலகு நற்பல ராம னாகியே
செங்க னற்கண்வல் லசுரர் யாரையுஞ்
      செற்ற வாரண மாய போற்றியே
துங்க மார்வசு தேவன் தேவகி
      தோன்ற லாகிப் பாரந் தீர்த்தருள்
பொங்கு பேரெழிற் கண்ண போற்றிநற்
      புயங்கக் குன்றிறை யாய வண்ணலே.       101

புத்தாவதாரம்
ஆயு நல்லர வாச லேசநின்
      னடியா மாட்டெனைக் கூட்டி யாட்கொளு
நேய செம்பதம் போற்றி நின்நிற
      நிலவு பின்னைசெந் தாள்கள் போற்றியே
தூய சங்கின் மீன்ற முத்தெறிச
      சுடரி[ன்] நீலமொண பகலி னும்மலர்
பாய நீர்வயற் கீக டப்பொழிற்
      பரவு புத்தனாம் பரம போற்றியே.       102

கற்கியவதாரம்
பரத மாரரங் கொளிருஞ் சம்பளப்
      பதியின் விட்டுணு சரும நாமமார்
விரத மாதாவாக் கினியு தித்தெழில்
      வேத வாமபரி யூர்ந்து நீசரைக்
கரத லத்துவா ளாற்று மித்தறங்
      காக்குங் கற்கியே கச்சி வாழ்தரும்
வரத மாசுண வசல வென்னுளம்
      வயங்கு மாமணி போற்றி போற்றியே.       103

வாழ்த்து       அறுசீரடி யாசிரிய விருத்தம்
பூதலம் புகழுஞ் சேடப் பொருப்பிறை கீர்த்தி கேட்கு
மாதர வாளர் வாழ்க வாங்கதைப் புகல்வோர் வாழ்க
தீதறு மறைகள் வாழ்க திகழ்தருங் கொண்டல் வாழ்க
கோதறு மரசர் வாழ்க குவலயத் துயிர்கள் வாழ்க.

சேடமலைப் பதிற்றுப்பத் தந்தாதி முற்றும்
-------------------

This file was last updated on 25 March 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)