pm logo

அந்தாதிக் கொத்து -பாகம் 1b
சந்திரசேகரன் தொகுப்பு


antAtik kottu - part 1b (4 antAtis)
edited by T. Chandrasekaran
In Tamil script, Unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

அந்தாதிக் கொத்து -பாகம் 1b
சந்திரசேகரன் தொகுப்பு



Source:
அந்தாதிக் கொத்து (ANTĀDI-K-KOTTU)
Edited by : T. CHANDRASEKHARAN, M. A., L. T.,
Curator, Government Oriental Manuscripts Library, Madras,
AND THE STAFF OF THE LIBRARY.
(Prepared under the orders of the Government of Madras.)
MADRAS GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS SERIES. No. 51.
GOVERNMENT OF MADRAS
Price, Rs. 2-10-0.
Dorson Press, 2/47, Royapettah High Road, Mylapore, Madras-4.
------------------------------
அந்தாதிக் கொத்து - பாகம் 1b
4. திருவாவினன்குடி பதிற்றுப்பத் தந்தாதி
5. திருமங்கைக் கரும்பேசர் பதிற்றுப்பத் தந்தாதி
6. திருவெவ்வுளூ ரந்தாதி
7. மதுரை யமக வந்தாதி (மதுரையந்தாதி)
-------------

4. திருவாவினன்குடி பதிற்றுப்பத் தந்தாதி

விநாயகர் வணக்கம்
பாலிவட கரைத்திருவா வினன்குடிநா மப்பதிற்றுப்
      பத்தந் தாதி
மாலிகையைப் பெண்ணமிர்த வல்லிமண வாளரடி
      வனைய நல்குங்
கோலவரு மிருவினைமும் மலக்கோடை தணிந்துயிர்கள்
      குளிப்பான ஞான
வேலிசெய்து முத்தான மழைபொழியும் பவளநிற
      வேழந் தானே.

நூல்
கார்பூத்த மிட(த்தா)[ற்றா]தி [கைலாச] நாதனணி
வார்பூத்த முலை யமிர்த வல்லியுட னிலமகட்கோர்
சீர்பூத்த திலகமெனத் திகழ்திருவா வினன்குடியு
ளேர்பூத்த கருணையின்வந் தெனையடிமை(க) கொண்டானே.       1

கொண்டன்றத் திருமாலுங் கோககனத் துறைவோனும்
பண்டவனி யிடந்தண்டம் பறந்துதிரு வடிமுடியுங்
கண்டறியாப் பரனாதி கயிலாச நாதன்மலர்
வண்டறையா வினன்குடியுண் மகிழ்ந்தருளி யிருந்தனனே.       2

இருளாய் வாணவத்தா லிடர்ப்பிறவிக் கடலழுந்தி
மருள்கூரு முயிர்க்கிரங்கி மலர்[புரையா] வினன்குடியி
னருளால்வந் தமர்ந்திருந்த வாதிகயி லாசனடி
பெருகார்வத் தொடுநினையார் பிறந்திருந்தும் பிறவாரே.       3

பிறவார் ……..கள் பேரின்பக் கடலமிர்த
மறவாம னினையாமல் வாய்மடுப்ப ரடியவருக்
குறவாயா வினன்குடியி லுறையாதி கயிலாச
வுறவா[யுன் திரு]வடிக்கே யடைக்கலமென் றிருப்பாரே.       4

பாரேழு மூடுருவிப பணைத்தெழுந்த வொருமுதலைச்
சீரேறு மறைமுடிவிற் றிருநடனம் பு[ரிந்தவனைக்]
காரேறு மலர்ச்சோலைக் கமழ்திருவா வினன்குடிவாழ்
போரேற்றெம் பரமனையே புகழ்ந்திடுக வென்னாவே.       5

நாவார வஞ்சகமு நவின்றறியார் நறுமலர்தூ
யோவாது பணிசெய்யா ருயர்திருவா வினன்குடியிற்
கோவாய் சிவக்கொ ழுந்தைக் கொண்டாடு
ராவாமற் றிவரெல்லா மா……றிங் கெவ்வாறே.       6

எவ்வழியுஞ் சென்றோடி யிதுநலமென் றதுநலமென்
றெவ………… யநூல்………….. ருழன்றிடுவா ருழன்றிடுக
சைவனையென் னுயிர்த்துணையைத் தண்டமிழா வினன்குடிவாழ்
செவ்விய[தோர் ப]சுந்தேனைத் தினங்கண்டு பருகுவனே.       7

பருத்திவரை யொருசிறுதீப் பட்டிடப்பின் காணாபோற்
கருத்ததிமிர வினைமாளக் கடைக்கணித்தா வினன்குடியி
லொருத்தியுடன் கலந்தருளி யுலகெங்கு நிறைந்தருளித்
திருத்தியெனை யெடுத்தாண்ட சிவனேநின் னடிசரணம்.       8

சரமாக வொருவிண்டு தனுயாக வொருவிண்டு
புரமாய்த்த புண்ணியனே பொங்கெழிலா வினன்குடியில்
வரமாரி பொழிந்தருளு மணியேயென் தாகமறப்
பிரமானந் தக்கடலிற் படிந்திடும்பே றருள்வாயே.       9

வாயாரப் புகழந்துன்னை மனமார நினையாத
பேயான புறச்சமயப் பிணக்கரொடுங் கூடியினித்
தேயாம லறிவுறுத்திச் சிறியனையா வினன்குடிவாழ்
தாயான பரம்பொருளே சரணளித்துக் காவாயே.       10
      வேறு
காவி யங்கண் மங்கைமாதர் காம வெள்ள மூழ்கிநான்
பாவி யிங்ங னுனைமறந்து பரித விப்ப தலமையா
வாவி தங்கு கெண்டை பாய வண்டுலாவு சோலைசூ
ழாவினன் குடிக்குள் வாழு மமிர்த வல்லி நேசனே.       11

நேசமா நினைந்து நைந்து நெக்குநெக் குளங்குழைந்
தூச லாடு பிறவிநோ யொழிக்கு மாறு கருதினோர்
பாச மான வலையறப் பறிப்ப ராவி னன்குடித்
தேசு லாவு சுந்தரத் திருக்கு ளத்தோர் கண்ணரே.       12

கண்ணு மாகி மணியு மாய்க்க ருத்துமா யருத்திகூர
பெண்ணு மாகி யாணுமாய்ப் பிறங்கு சோதி யிருளுமா
விண்ணு மாகி நிலனு மான விமல னாவி னன்குடி
யுண்ணி லாவு மண்ணல் வண்ண முண்மை யாளர் காண்பரே       13

காணி யென்று மனைவி யென்று காதன் மக்க ளென்றுமே
பேணி நின்ற கிளைக ளென்று பிற[வு] மாசை கொள்வரோ
ஆணி தென்று தனுவெ றுத்து மெவயாவி னன்குடி
பாணி கொண்ட வேணி ரதா பாதம் நம்பி னோர்களே       14

கள்ள மின்றி யெனது சிந்தை கசிவுகொண்டு னடிகளிற்
பள்ள மேறு புனலெனப் படர்ந்து வாழ்வ தெந்தநாள்
தெள்ளும் வெள்ளை நீற ணிந்த தேவவாவி னன்குடி
யுள்ளு மன்பா நெஞ்சிடத்து முறையு நீல கண்டனே       15

கண்டு பாகு தேனெனக் கவித்தி றங்கள் பாடிநற்
றொண்டுசெய் கிலாத புல்லர் தொடரொ ணாத பெற்றியான
பண்டு செய்த மாத வத்தா பரவுமாவி னன்குடி
வண்டு கிண்டு கொன்றை மாலை வனையும்நதி வண்ணனே       16

வண்ண வண்ண மாகி நின்று வடிவுறும்பொய் வாழ்வையே
யெண்ணி யெண்ணி யின்று காறு மிடருழந் தலுத்தனன்
தண்ண றாத் திங்கள் சோலை தங்குமாவி னன்குடிப்
பண்ணி னோசொ லமிர்த வல்லி பாகநீ யிரங்கிடே       17

இரங்கு கின்ற கடல்வரைப்பி னெங்குமோடி வன்குறுங்
குரங்கி னாடு மெனது நெஞ்சு குவியவைத்தி மாதரா
ரரங்கி லாட மயில்கள் சோலை யாடுமாவி னன்குடி(த்)
தரங்க மாடு கங்கை சூடு சங்கராவெ னய்யனே       18

அப்பிலே கிடந்த [நா]க மதிரு மாவி னன்குடி
யொப்பி லாத வொருவர் தம்மை யுள்கிநாளு நெஞ்சமே
செப்பு மாக மங்கள் சொன்ன திறனினிற்க வல்லையேல்
வெப்பு மிஞ்சு நரகில் வீழ்ந்து கருவில்வீழ்வ தில்லையே       19

இல்லை யென்னும் லோபாபேரி லெண்ணி லாத கவிசொலி
நல்லநாள் களைக்க ழிக்கு நாவ லீர்கள் வமமினோ
வல்லி தங்கு குமுத வாயி னமுதவல்லி கொழுநனைத்
தொல்லை யாவி ன[ன்குடிச்] சிவக்கொ ழுந்தை வாழ்த்தவே       20

வேறு
வேதா நடுக்கங் கிள்ளியகை
      வீரா சங்கக் குழையணிந்த
காதா வொருவன் றொண்டருக்காக
      கங்குல் யாமத் தெழுந்தருளுந்
தூதா திருவா வினன்குடிவாழ்
      சுடரே யாதி கயிலாச
நாதா வென்று துதியாரை
      நாயேன் காணக் கடவேனே       21

கடப்பாய் மனமே யினியேனுங்
      கறங்குக் கவலைப் பெருங்கடலைப்
படப்பாந் தளின்மேற் கிடப்பானும்
      பதுமத் தோனு முணராமே
மடப்பா வையர்கள் குடைந்தாடும்
      வாவித் திருவா வினன்குடியி
லிடப்பா லுமையோ டிருந்தபிரா
      னிருதாள் பிணையாக் கைப்பிடித்தே.       22

பிடிக்குங் கொடிய மழுப்படையான்
      பெரும்பா ரிடங்கள் விருதெடுக்க
நடிக்கு மாதி கயிலாச
      நாதன் திருவா வினன்குடியா
னொடிக்கு மளவிற் புரமெரித்தோ
      னோக்கா லெளியேன் வினைக்குன்றை
யிடிக்கும் படிநான் முன்னாளி
      லென்ன தவஞ்செய் திருந்தேனே.       23

செய்யான் கரியான் பொன்னிறத்தான்
      தாமும் வெளியான் பச்சையினா
னையா ன்னத்தா னமரர்களுக்
      கமமா னாதி கயிலாசன்
மையார் தடங்க ணமுதவலலி
      மகிணன் திருவா வினன்குடியா
னெய்யா திருக்கும் வரமளித்தா
      னினிமே லென்ன குறையெனக்கே       24

எந்தா யெந்தை யெனப்பணிவார்க்
      கெல்லாங் கடந்த வீடருளுஞ்
சிந்தா மணியே யணிமதிள் சூழ்
      செல்வத் திருவா வினன்குடியா
னந்தா வாதி கயிலாச
      நாதா(ர) தாதார் மலாக்கொன்றைக்
கொந்தார் சடையா யென்னையுநின்
      குற்றே வலுக்காட் கொள்வாயே       25

வாய்த்த படிவா னரகென்னும்
      வகைமூன் றிடத்தும் பசுக்கடமை
மேய்த்து வினைக ளொத்திடத்தே
      மேலாங் கதிவீ டடைத்திடுவான்
காய்த்த கமுகா வினன்குடியிற்
      கடியார் மலர்தூ யண்டர்முடி
சாய்த்து வணங்க விருந்தருளுந்
      தம்பி ரானெம் பெருமானே       26

பெருமான் றாணு வீசானன்
      பெம்மான் பித்தன் பிறைசூடி
கருமா மிடற்றன் காபாலி
      கால கால னுருத்திரனென
றருளகூர் திருவா வினன்குடிவா
      ழமமா னாதி கயிலாசன
திருநா மங்கள் பலவோதிச்
      சிறியேன் வழுத்தப் பெற்றேனே.       27

பெற்றேன் பிரமன் திருமாலும்
      பெறுதற் கரிய பெருவாழ்வை
யுற்றே னன்பர் திருக்கூட்ட
      முற்றுக் கிடந்த யிருவினையு
மற்றேன் திருவா வினன்குடியி
      லமாநத வாதி கயிலாசா
சற்றே கடைக்கண் பார்த்தெனது
      தலைமே லடிசூட் டியபின்னே       28

பின்னுஞ் சடையா வினன்குடிவாழ்
      பெரியோ யொன்று விண்ணப்பம்
இன்னுங் கருப்பா சயத்துறினு
      மேறா நிறையத் தழுந்துறினு
மன்னு மமரர்க் கதிபதியாய்
      வாழப் பெறினு முன்னடியே
யுன்னும் பெரிய மெய்யன்பே
      வுதவ வேண்டு மடியேற்கே.       29

அடித்தா மரைக ளடியேற்கு
      மளித்தாய் கரத்திற் றிரிசூலம்
பிடித்தாய் பொன்னஞ் சடைமுடிமேற்
      பிறையு மரவுங் கலந்திருக்க
முடித்தாய் தென்னா வினன்குடியின்
      முத்தா காணத் தொந்தமென
நடித்தா யாதி கயிலாச
      நாதா வுந்தன் செயலென்னே.       30

வேறு
என்னாவி யஞ்ச வெருமைக் கடாவி
      லிருள்கொண்ட கொண்ட லெனவே
தென்னாரை யாளி வருநாளி னல்ல
      திருவாவி னன்கு டியுள் வாழ்
மன்னான வாதி கயிலாச நாத
      வாய்விட் டழைப்பன் விடை மே
லநநா ழிகைக்கென முன்னாக வந்தெ
      னச்சந் துரத்தி யருளே.       31

அருக்கன்றன் வாயி னிறைபற்கண முற்று
      மடியா வுகுத்து முடியாத
திருக்கொன்று தக்கன் மகம்வந்த தேவா
      திக்கோட வோட வவரை
முருக்குந் திறத்த ரெளிதாக வந்து
      மொழியா வினன்கு டியில்வாழா
திருக்கின்ற வாதி கயிலாச நாத
      ரிசைகூற வல்ல ரெவரே.       32

வல்லாண்ட கொங்கை யமுதாம் பிகைக்கு
      மணவாள மேரு வரையாம்
வில்லாண்ட வாதி கயிலாச நாத
      விடையேறு கின்ற விமலா
செல்லாண்ட சோலை மணநாறு கின்ற
      திருவாவி னன்கு டியுளாய்
பல்லாண்ட வீறு தலையோடு கொண்டு
      பலிகொள்வ தென்ன வழகே.       33

அழலிற் கொதிக்கும் விடயத்தின் மூழ்கி
      யறிவொன் றிலாம னெடுநாள்
விழலுக் கிறைத்து மெலிவார்க ளென்ன
      வினையே னிளைப்ப தழகோ
நிழலுற்ற ரதன மணிமண் டபங்க
      (னி) [ணி]றையாவி னன்குடியில்வாழ்
கழலுற்ற சானு(?) வளர்சோதி யாதி
      கயிலாச நாத வரனே.       34

அருவாகி யெண்ணி லுருவாகி முற்று
      மறிவாகி யெங்கு நிறைவாய்
இருளாகி யொன்று மொளியா யிரண்டு
      மிலதாகி நின்ற பொருள்காண்
திருவாவி னன்கு டியில்வாழு மண்ணல்
      செறியா ருயிர்க்கொ ருலவாக
கருவான வாதி கயிலாச னெங்கள்
      கருணா கரக்க டவுளே       35

கடல்வண்ண னாவ னயனாவன் மூன்று
      கதிராவன் வேறு குறியாயப்
புடைநண்ணு மாறு சமயத்தர் கொண்ட
      பொருளாயு நிற்பன் மரைமேல்
மடவன்ன மேறி விளையாடு பொய்கை
      மருவா வினன்கு டியமதே
யிடமன்னு மாதி கயிலாச நாத
      னெண்ணற்ற கோல முளனே.       36

கோலங் கடந்து கரணங் கடந்து
      குணமுங் கடந்து வரிவாய
ஞாலங் கடந்து ககனங் கடந்து
      நாதங் கடந்து பகரு
மூலங் கடந்து முடிவுங் கடந்த
      திருவாவி னன்கு டியில்வாழ்
காலங் கடந்த பொருளான வாதி
      கயிலாச நாத வரனே       37

அரக்கன் பொருப்பை யடல்கொண் டெடுக்க
      வலரும் படிக்கு நெரியா
விரக்கம் புரிந்த திருவாளர் நாளு
      மெழிலாவி னன்கு டியரைப்
புரக்கின்ற வாதி கயிலாச நாதா
      புகழ்வார்க்கு நல்ல வருளே
சுரக்கின்ற செல்வா தமையன்றி வேறு
      தொழுகின்ற தெய்வ மிலையே.       38

இல்லாமை கூர வுலகெங்கு மோடி
      யிரைதேடி வாடி யலையும்
பொல்லா வெனக்கு வுனையன்றி வேறு
      புகலேது மில்லை யருள்வாய்
கல்லாய வாதி கயிலாச நாத
      கவிவாணா வந்து புகழுந்
தொல்லாவி னன்கு டியிலே யிருந்து
      தொழிலைந்து செய்யு மரசே.       39

சேவேறி மூன்று தொழில்செய்ய வல்ல
      திகழ்மூ வருக்கு மரியோன்
மாவேத மோல மிடுமம் பலத்துள்
      மகிழ்தாண்ட வஞ்செய் வரதன்
காவேரி சிந்த மடுவாய் நிரம்பு
      கவினாவி னன்கு டியில்வாழ்
கோவான வாதி கயிலாச னெங்கள்
      குலதெய்வ மான முதலே.       40

வேறு
முதனடு விறுதியா மூன்று மில்லவன்
அதுவிது வெனவுண ரறிவுக் கப்புறன்
சதுமறை யவனைமா தவனை யாள்பவன்
துதிகொளா வினன்குடித் தோன்று நாதனே.       41

நாத்தழும் புறவுற நாளு நின்னையே
தோத்திரஞ் செய்வனைத் தொண்டு கொண்டனை
யாத்தனே யமலனே யாவி னன்குடிக்
கூத்தனே யெனடியவன் குறியெ திர்ப்பையே.       42

பையுளு மகந்தையும் படிறும் பாவமு
மையமுந் திரிவுமின் றகன்று போகுமால்
தெய்வநா யகன்றிரு வாவி னன்குடி
மெய்யனைப் பரிவுடன் வேண்டு வார்கட்கே.       43

வேண்டுமா றெனக்கினி வேறொன் றில்லையால்
மாண்டமா லயன் றலை மாலை மார்பினிற்
பூண்டவன் விளங்குபொன் னாவி னன்குடி
யாண்ட வன்சரணா னான பின்னரே.       44

பின்னலஞ் சடைமதிப் பிளவு சூடியைக்
கன்னலஞ் சிலையனைக் காய்ந்த கண்ணனை
யன்னசா லைகணிறை யாவி னன்குடி
மன்னனைப் பணிந்துயவீர மதியி லீர்களே.       45

கள்ளவிழ் தும்பையுங் கட (மு)(மபு) மாத்தியும்
வெள்ளெருக் கலரையு மிலைந்த வீசனை
மள்ளலங் கழனிசூ ழாவி னன்குடி
வள்ளலை வணங்கிநீ வாழ்தி நெஞ்சமே.       46

நெஞ்சமே களவென நிலத்தின் வாழ்வைநீத்
தஞ்சம்வாழ் தடம்புன லாவி னன்குடி
மஞ்சனா திரையினான் வளர்சி லம்படி
கெஞ்ச[லே நெஞ்சமே] கருதி வாழியே.       47

ஏழையே னுடலெடுத் தெடுத்திந் நாள்வரை
பாழிலே வுழைத்தன்ன பயன்பெ றாமலே
வாழியான் பணிதிரு வாவி னன்குடிப்
போழிளம் பிறையணி புனித போ(த்தி)[ற்றி]யே.       48

போற்றிய பாலனைப் புரந்து வந்தெதிர்
கூற்றினை யுதைத்தனை கோலப் பாலியா
மாற்றினீள வடகரை யாவி னன்குடி
யேற்றினா னிருப்பதென் னிதயக் கோயிலே.       49

கோயிலே யாவினன் குடியெ னும்பதி
காயுமா நாகமே கையிற் கங்கணம்
பாயும்வெம் புலியுரி பரிவட் டம்பல
பேயுட னாடிய பெருமை யாளர்க்கே.       50
      வேறு
ஆளியொத்திடுஞ் சிற்றிடைப் பொற்றொடி யணங்காங்
காளி வேடகுற வாடுமா வினன்குடிக் கடவுள்
வாளி யச்சுத னாகமும் மதிளெயதோ னடியார்
தாளி லுற்றிடு தூளியே சுமக்கவென் றலையே.       51

தலைவ னேதிரு வாவினன குடிவளர் சதுரா
மலையின் மேல்வரு மமிர்தநா யகிமண வாளா
வுலையு ளேபுகு மெழுகென வுனைநினைந் துருகாப்
புலைய னேன்செய்த பிழையெலாம் பொறுப்பதுன் கடனே.       52

கடம்பு சூடிய கந்தனைத் தந்தகண் ணுதலோ
யடம்பு சூடிய வாவினன் குடியனே யடியே
னுடம்புஞ் சிற்றறி வுயிரையு முனதுகை யேற்று
மடம்பு காப்பெரு வாழ்வையீந் ததுவென்ன வகையே.       53

வகைபெ றுந்திரு வீதியா வினன்குடி வாழ்வே
பகைசெய் முக்குறும் பெறிந்தமா தவாமனப் பதுமக்
குகையி லேயன வரதமு நடம்புரி குழகா
நகைசெய் வார்பிற ரென்னைநீ நலியவிட் டிடிலே.       54

விட்டிடா திந்த மகவுடல் விரும்பபுநா னுன்னை
யொட்டி யானென தெனுஞ்செருக் கிரண்டையு முதறி
யெட்டஞ் சுக்கதி [ரி]ரண்டறக் கலந்துவாழ் குவனோ
வட்டமு றத்திதென் னாவினன் குடியமர்ந் தவனே.       55

அமரா கோவினை யாவினன் குடியனை மறந்து
திமிர நெஞ்சமே யென்சொல்வேன் தேடிய நிதியும்
தமரை யுந்துணை யெனக்கொண்டு சொலுநல்வ லறிவைக்
கமரி லேயுகுத் தலைநதனை சாலநாட கழித்தே.       56

கழியு மத்தியா னாவினன் குடியுளான் கடங்கள்போய்
[ப]ழியு மத்தியை யுரித்தணி போர்வையா னெனக்கு
விழியு மத்தியின் மணியுமா யிருந்துநல வீட்டின்
வழியு மத்திரு வருளையுங் காட்டினன் வகுத்தே.       57

வகுத்த வேதனார் தாதைக்கு வருசலந் தரனைச்
செகுத்த சக்கரங் கொடுத்ததென னாவினன் குடியான்
தொகுத்த ளித்தசி வாகமப் பனுவலின் றுணிவைப்
பகுத்தறிந் துய்யாத வர்களே பயனிலாப் பதரே.       58

பதவி யாவன யாவையுந் தருபவன் பழஞ்சஞ்
சிதவி யாதியைத் தீர்ப்பவன் செய்திடுந் தவத்தின்
னதவி யாதன்கொள் மயக்கைநீத தாண்டவ னலமே
யுதவி யாவினன் குடிவள ரொருபரம் பொருளே.       59

பொருப்பு நேர்முலை யன்னலார் பொன்னின்மா ளிகைமேல்
வரிப்பந் தாடிடு மாவினன் குடியுறை வரதா
விருப்பு நெஞ்சினே னேழையேன் பாவியே னின்னுங்
கருப்பு காவண்ணங் காத்தருள் கருணைமா கடலே.       60

வேறு
கடக்கரி யொலியும் புரவியி னொலியுங்
      கதிர்மணித் தோகளி னொலியு
நடத்தொழின் மடவா ரடிச்சிலம் பொலியு
      நாகலோ கத்தின்மட் டணவு
மிடத்தினிற் சிறந்த வாவினன் குடிவா
      ழிறைவனால் வாக்குமா கமத்தை
வடத்தினீ ழலினன் றுரைத்தநா யகனென்
      மலா(ர்)ப்பிணி யொழிக்குமா மருந்தே.       61

மருத்தரு மலங்க லிலங்குபூங் குழலு
      மதிநிகர் வதனமண் டலமும்
பருத்தெழு தரள வடங்கொள் பூண் முலையும்
      பரிபுர சரணமும் நிறைந்த
திருத்தமா ரமிர்த வல்லிநா யகனைத்
      திருவள ராவினன் குடிவா
ழொருத்தனைக் கருத்தினி லிருத்துவார்க் கல்லா
      தொழிந்திடா தூழ்வினைத் தொடக்கே       62

வினைத்தொடக் கொழிய நறுமல ரெடுத்து
      மென்றொடை தொடுத்தாற் கணியீ
ரனைத்துயிர் களுக்குந் திருவருள் பொழியு
      மாவினன் குடியுளா ரமுதை
தினைத்துணை யேனு மனத்திடை நினையீர்
      சிவாலய மலகிடீர் மெழுகீர்
கனத்துவா ணாளைக் கழிப்பீரென் செய்வீர்
      கயிறொடந் தகன்வரு மன்றே.       63

அன்றுதொட் டகலா துயிர்க்குயி ராகி
      யருளினா(ர்த்தி)[ற் றி]ருத்தியு மந்தோ
கன்றிடும் பிறவிக் கருங்கடல் கடவாக்
      கள்வனே னுய்யுநா ளுளதோ
தென்றல்வந் துலவுஞ் செம்பொன்மா ளிகைமேற்
      சீதளக் கதிர்மதி தவழும்
பொன்றிடா வளங்கூ ராவினன் குடிவாழ்
      புராந்தகா கருணைமா மலையே.       64

மலையைமத் தெனக்கொண் டிருங்கடல் கடைய
      வந்தெழு கொடுவிடங் காண
வலைவுகொண் டோடி யரகர கரவென்
      றரியயன் முதலிய வானோர்
தலைவனே சரணஞ் சரணமென் றிறைஞ்சத்
      தாங்கிய தழல்விடம் பருகி
நிலைபெறு திருவா வினன்குடி யமர்ந்த
      நிருத்தயா னுனதடைக் கலமே.       65

கலங்கிடக் கொடிய கயமுகா சுரனைக்
      கறுவியங் கவனுயிர் குடித்த
விலங்கிய வொருவெண் கோட்டிப முகத்தி
      னனந்தலை மதலையா வீன்ற
வலங்கலஞ் சடையா யாவினன் குடிவா
      ழண்ணலே யிருவினை யென்னும்
விலங்கினைக் களையா வென்னையா னந்த
      வீட்டினிற் குடியிருத் துகவே.       66

இருக்கெலா முணர்ந்த முனிவரர்க் குரிய
      விளமுலை மடந்தைமா ரரையி
னுருக்கிளர் கலைசோர்ந் தரியகற் ப………
      வுருவுகொ……….டுத்தகா ரணமென்
றிருக்கிளர் கமலை யரசுவீற் றிருந்து
      சிறப்புறு மாவினன் குடிவாழ்
முருக்கிதழ்க் கனிவா யமிர்தநா யகிதன்
      முகிழ்முலை தைக்குமார் பினனே.       67

பின்னலஞ் சடில வட்டமேற் கோணற்
      பிறையும்வா னவர்நதி யணங்கும்
வன்னியு மறுகு மத்தமும் பொதிந்த
      வ[ள்ளலே] வெள்ளைநீற் றழகா
கன்னலங் கழனி நிறையமுத் துதிர்க்குங்
      காட்சிகூ ராவினன் குடிவாழ்
பன்னகா பரணா வுன்திரு வடிக்கே
      பணிசெய்பாக் கியமெனக் கருளே.       68

அருவியா னந்தம் விழிகணீர் சொரிய
      வழுதழு துள்ளமே யுடற்பற்
றொருவியா னந்த பரவச மாகி
      யொன்றுபட் டிருக்கிலொண் மழுவாங்
கருவியா னந்த வினைத்தளை தறித்துக்
      கரிசிலாக் கதிதருங் கண்டாய்
மருவியா னந்த னாகிட வூர்ந்த
      வள்ளலா வினன்குடி வாழ்வே.       69

வாழுநா ளெல்லாம் வீணிலே போக்கி
      மலப்புழுக் குரம்பையே சுமந்து
தாழுமா நிரையக் கிடங்கெலாங் கிடந்து
      தளர்ந்துநீ சலித்தனை நெஞ்சே
சூழுமா தவர்கண் மனத்திரு டுறக்குந்
      தூண்டருஞ் சுடர்மணி விளக்கே
யேழுலோ கமும்போற் றாவினன் குடிவா
      ழிறைவனை மறந்திடே லினியே.       70

வேறு
இன்னி யம்பல முழங்கிடும் வீதி
      இலங்கு மாவினன் குடியுறை யரசே
சென்னி யம்பல வனைத்தரித் தருளுஞ்
      செல்வ னேயென தல்லல்தீர்த் தருள்வாய்
மன்னி யம்பல மதிநட நவிலும்
      வான வர்சிறு மருங்குலுக் கிணையா
மின்னி யம்பலங் காரமா னமிர்த
      மென்கொ டிக்கொரு பங்கையீந் தவனே.       71

வனத்த டாகமு நந்தன வனமு
      மருங்கு டுத்ததென் னாவினன் குடிவாழ்
சினத்த போர்விடைச் சிவபெரு மானே
      செறிந்த முத்தலைச் சூற்படை யுடையாய்
முனைத்த பன்றியின் கோடணி மருமா
      முறைபி றழ்ந்திடா வுனதுசீ ரடியா
ரினத்தி லேயினிக் கூடிவாழ்ந் திருக்க
      வெல்லை யில்லதோ ராசைபூண் டனனே.       72

பூண்டு கொண்டனை கூவிளந் தாரும்
      புற்ற ராவையுங் கொக்கிற கையுநீ
யாண்டு கொண்டனை யென்னையும் பொருளா
      யைய நின்பெருங் கருணையென் சொல்வான்
றீண்டு நீள்கொடி யாடுபொன் னெழில்சூழ்
      திசையெ லாம்புக ழாவினன் குடியுள்
வேண்டு வாரவர் வேண்டிய வருளும்
      வித்த காவிமை யோர்சிகா மணியே.       73

மணிக ளொன்பது நிரைத்துவில் வீசு
      மாட நீடிய வாவினன் குடிவா
ழணிகொ ளம்பிகை யெம்பெரு மாட்டி
      யமிர்த வல்லித னன்பனே யுருகிப்
பணிசெய் வார்க்கருள் மடைதிறந் தளிக்கும்
      பசுப திப்பர மாபழ வினையாம்
பிணியி னான்மிகத் தேய்ந்துதேய்ந் திளைத்தேன்
      பேதை யேனையும் பாதுகாத் தருளே.       74

பாது காத்தி ருப்பதுன் கடமை
      பணிகளே செய்து கிடப்பதென் கடனே
சூது காத்திடு மிளமுலை மடவார்
      தோழி மாரொடு மென்மெல நடந்து
போது காத்தலை யெடுத்துமென் குழற்குப்
      புனைந்து முத்தணி யூசலா டிடும்பொன்
மாது காத்திடு மாவினன் குடியின்
      மருவி வாழ்ந்தருள் புரிசதா சிவனே.       75

சிவந்த வேணியு மபய வரதமுந்
      தெள்ளு நீறணி [தி]ருநுத லழகும்
பவந்த விர்த்தருள் கருணைநேத் திரமும்
      பவள வாயுநற் குறுநகை யழகும்
அவிந்தி டாவொலி தருஞ்சிலம் படியும்
      அமிர்த வல்லிசேர் திருவுரு வமுமாய்
நவந்த ருந்திரு வாவினன் குடிவாழ்
      நாத னென்னுளங் கோயில்கொண் டனனே.       76

கொண்ட கோலமு மாவினன் குடியிற்
      குடியி ருந்தருள் சிவபிரா னருளுங்
கண்டு கண்களா லடித்தொழும் பாற்றிக்
      கரையி லானந்தக் கடல்படி யாதே
தொண்டை வாய்க்கிளி மொழிநலார் கலவித்
      தூர்த்த ராகிநன் நடையிழந் திறுமாந்
துண்டு டுத்துநல் லாயுளைக் கழிக்கு
      முவர்க ளுக்கென்ன வுறுதிசொல்லுவனே.       77

சொல்லு நூல்பல வோதினும் புனலிற்
      தோய்ந்து பற்பல தவங்களாற் றிடினுங்
கல்லி லேறிநன் நிட்டையி லிருந்து
      கால மெண்ணில கழிக்கினு மேன்மை
அல்லு மெல்லுமென் னுயிர்க்கொரு துணையா
      மமிர்த நாயகி யம்பிகை யுடனே
மல்ல லாவினன் குடியினி லிருக்கும்
      வள்ள லார்திரு வருள்பெறா தவர்க்கே.       78

கேதனத்தினை யிடந்தொறு நாட்டிக்
      கேடி லன்புடை யார்க்கனு தினந்தப்
பாத னத்தினைப் பரிவுட னூட்டிப்
      பயன்[கொ]ள் பாக்கியர் வீதியி னூடு
வேத னத்தினை யேந்திவா னவர்கண
      மிடைந்த வாவினன் குடியுறை விமலா
சேத னத்தினை யடியனேற் களித்துன்
      சே(ர்)[வை] செய்திடக் காட்சிதந் தருளே.       79

தந்தை யாய்நறும் பாலமு தூட்டும்
      தாயு மாயிருந் தென்னையாண் டவனே
எந்த நாளென்றன் வினையற நின்னா
      டிரண்ட றக்கலந் திருந்துவாழ்ந் திடுவேன்
கந்த மார்செழும் பாளைவண் கமுகுங்
      கதலியுந் தெங்குஞ் சண்பக வனமு
மந்த மாருத முலவிட நாளும்
      வளரு மாவினன் குடிநிரு மலனே.       80

வேறு
நிருத்த னித்த னிராமய னிட்கள
னொருத்த னவெவ் வுலகமுங் காப்பவன்
றிருத்த மாருந் திருவாவி னன்குடிக்
கருத்த னாதி கயிலாச நாதனே.       81

தன்ன மாயினுந் தன்னை நினைந்திடின்
மன்னு மூலபண் டாரம் வழங்குவான்
தென்னந் தண்டலைத் திருவாவி னன்குடிக்
கன்னி யாதி கயிலாச வள்ளலே.       82

வள்ள லேமுலை யார்க்கென் மதியெலாங்
கொள்ளை யாகக் கொடுத்திளைத் தேனருள்
தெள்ளுஞ் செல்வத் திருவாவினன்குடி
யுள்ளிருந்த வொருபர மேட்டியே.       83

மேட மொன்றும் விடைக்கொடி யுஞ்சூழ்
சேடு கொண்ட திருவாவி னன்குடித்
தோடு கொண்டசை சுந்தரக் காதனை
மூட நெஞ்சமே முன்னுமுப் போதுமே.       84

போதும் போதுமிப் பொன்றுடல் வாழ்வினி
மாதர் வீதிகண் மல்காவி னன்குடி
நாத னேமிக நானுலந் தேனையா
தீது தீரச் சிவான மூட்டிடே.       85

ஊட்டுங் கன்னற் கலாவி னுள்ளமேன்
வேட்டுன் சேவடி மேவுவ னேதொண்டை
நாட்டி (நீ)[னீ]டிய நல்லாவி னன்குடி
யாட்டு கந்துநின் றாடிய வையனே.       86

ஐய நுண்ணிடை யஞ்சொற் கடைசியர்
செய்யிற் பாடுந் திருவாவி னன்குடி
மெய்யன் மெய்யன் விழிக்கெதிர் தோன்றுவான்
பொய்ய னேனுட் புகுந்ததெவ் வண்ணமே.       87

மேவி னன்குடி மீட்டென துள்ளமே
பூவி னன்குடி லச்சடைப் புங்கவன்
சேவி னன்குடி தோய வளர்ந்திடு
மாவினன்குடி யாண்மரு ளீசனே.       88

ஈச னேநல் லெயிலாவி னன்குடி
வாச னேமலக் கோடையின் வாடினே
னாசி லாத வமிர்தவல் லிக்குநன்
னேச னேயரு ணின்னடி நீழலே.       89

நீக்க மின்றி நிறைந்த வுனைக்கண்டு
போக்கொ ராறையும் போக்கியென் றுய்குவேன்
தேக்கு நீர்வயற் றென்னாவி னன்குடி
காக்கு மாதி கயிலாச நாதனே.       90

வேறு
நாதனே போற்றி யாவி
      னன்குடி நண்ணும் வேத
கீதனே போற்றி வெள்ளிக்
      கிரியில்வாழ் பவனே போற்றி
போதனே போற்றி மாயன்
      பூப்பிளந் தறிய மாட்டாப்
பாதனே போற்றி யெங்கள்
      பகவனே போற்றி போற்றி.       91

போற்றுவார்க் கமுத மான
      புண்ணியா போற்றி மாறன்
மாற்றினா லடிக்க நின்ற
      வடிவுடை யவனே போற்றி
சேற்றுறு கழுநீ ரோடை
      செறிந்தவா வினன்கு டிக்க
ணேற்றின்மேற் காட்சி தந்திங்
      கென்னையாண் டவனே போற்றி.       92

ஆண்டவா போற்றி மார்பி
      லணிகிள ரக்க மாலை
பூண்டவா போற்றி நல்வி
      ழாவறாப் புனித வீதி
நீண்டவா வினன்கு டிக்க
      ணிலவிய நிமலா போற்றி
தாண்டவ மாடி போற்றி
      தவிக்கின்றேன் தனிய னேனே.       93

தனிவிடைப் பாகா போற்றி
      சதுமறைப் பொருளே போற்றி
பனிவரை யமிர்த வல்லி
      பாகனே போற்றி நீலங்
கனிதரு கண்டா போற்றி
      கந்தப்ப னப்பா போற்றி
துனிதரு கவலை யெல்லாந்
      துடைத்தருள் மூவர் கோவே.       94

கோவனைந் தாடு கின்ற
      குருமணி முடியாய் போற்றி
மேவிவித் தின்றி யெல்லாம்
      விளைவுசெய் பவனே போற்றி
(யா)[வா]வியிற் கமலம் பூத்த
      வாவினன் குடியில் வாழுந்
தேவனே போற்றி யென்றன்
      சிறுமைதீர்த் தருள்செய் வாயே.       95

செய்வதொன் றறிகி லாத
      சிற்றறி வுடையேன் மேலாஞ்
சைவசித் தாந்த் வுண்மை
      தனிப்பெரு மார்க்கந் தேறி
யுய்வகை கருணை யால்வந்
      துதவிய குருவே போற்றி
யைவகை மலந்தீர்த் தாளு
      மாவினன் குடியாய் போற்றி.       96

போற்றிமுத் திருக்கு மூன்று
      புகழ்ச்சுட ராய தேவே
போற்றியோர் மறுவி லாத
      பொருவிலெண் குணத்தி னானே
போற்றியா வினன்கு டிக்கட்
      பொருந்திவாழ் கருணை மேரு
போற்றியெங் கணுநி றைந்த
      பூரணா னந்த வாழ்வே.       97

வேதமே துரக மாக
      மேயசஞ் சரணா போற்றி
யோதரு மூழி காலத்
      தொருவனாய் நின்றாய் போற்றி
யாதுலர்க் கின்ப நல்கு
      மாவினன் குடியுள் வாழுங்
காதலாய் போற்றி யாதி
      கயிலாச நாத போற்றி.       98

போற்றுமஞ் செழுத்து நல்ல
      புனிதமா ருருவாய் போற்
தோற்றமு மீறு மில்லாச்
      சுகப்பெருங் கடலே போற்றி
சாற்றரும் வினையே னுற்ற
      யாற்றுவாய் போற்றி கீர்த்தி
தணப்பிலாப் பிறவி நோயை
      யாவினன் குடியம் மானே.       99

அம்மையென் னமுத வல்லி
      யன்பனே போற்றி மானைக்
கைமல ரேந்து மாதி
      கைலாச நாத போற்றி
செம்மணி மதில்சூழ் தென்னா
      வினன்குடிச் சிவனே போற்றி
யெம்மையு மடிமை யான
      வெனக்குப கார போற்றி.       100

திருச்சிற்றம்பலம்
திருவாவினன்குடி பதிற்றுப்பத் தந்தாதி முற்றும்.
-------------

5. திருமங்கைக் கரும்பேசர் பதிற்றுப்பத் தந்தாதி.

காப்பு: விநாயகர் வணக்கம்

துதிக்குந் திருமங்கை வாழ்கரும் பேசர் துணைமலர்த்தாள்
பதிக்கும் பதிற்றுப்பத் தந்தாதி சொல்லமுன் பாரதம்பொன்
மதிக்கும் வரையில் வரைந்தது போலருள் மான்சசியால்
உதிக்கு மிருகொம்புக் காளைமுன் வந்த வொருகொம்பனே.       1

இறை வணக்கம்
தாயே யெனப்பெண் ணுருவாய் வயாமக டன்முனுக்….
தாயே யுனைநம்பு மன்பர நேசர்க்கு மன்புகந்தாய்
பேயேன் றனக்கருள் வாய்மங்கை வாழ்கரும் பேசுரனே
நீயே கதியன்றி வேறே கதியில்லை நிச்சயமே.       2

சிவமயம்.
திருவளர் கரும்பேசர் துணை.

நூல்
கங்கை வளர்செஞ் சடைமுடியுங்
      கருணை முகமுங் கண்மூன்றுஞ்
செங்கை மழுவு மானபயந்
      திகழும் வரத முடன்திருமால்
தங்கை யொருபா லிருந்திலகத்
      தாம்வந் தடியார் தமக்கருள்வார்
மங்கை வளருங் கரும்பேசர்
      மலர்த்தா ளகத்தில் மறவேனே.       1

மறவேன் றிருநீ றைந்தெழுத்து
      மணியும் பணியு மருவுமன்பர்
உறவே யலது வேறுமெனக்
      குளதோ வுளமே யுணராதோ
துறவே விரும்பிப் பலவேடத்
      துடன்கா னகங்க டொறுநடந்தே
அறவே திரிய முடியாதுன்
      னருள்பார் மங்கைக் கதிபதியே.       2

பதியே பசுவே பசுபதியே
      பாசத் தொடரின் பற்றறுக்குங்
கதியே மதியார் முப்புரந்தீக்
      கண்ணா லெரிக்குங் கமழ்திருச்சந்
நிதியே 1யுபைய நிதிபதிக்கு
      நேயா வேணி நிறைந்தசுர
நதியே நதியால் விளங்குவயல்
      நலஞ்சேர் மங்கை நாயகமே.       3      
[பிரதிபேதம்; 1: யிரண்டு]

அகமே வியமா மணிவிளக்கே
      வயன்மால் தேவர்க் கரியவனே
இகமே லடியார்க் கெளியவனே
      யிமவான் மகளுக் கெழிலவனே
மகமே ருவைவில் லாய்வளைத்து
      மதமா வுரித்த வலியவனே
சுகமே மங்கைப் பதிவாழ்பைந்
      தோகைக் கரும்பே சுராதிபனே.       4

ஆதி மறையா கமப்பொருளா
      யணுவுக் கணுவா யகண்டிதமாய்
சோதி வடிவாய் நிற்குணமாய்த்
      துரியா துரியச் சூட்சுமமாய்
நீதி நிறைவாய் நின்மலமாய்
      நிராதா ரமுமாய் நிட்களமாய்
பூதி யணிமங் கைக்குருவாய்ப்
      புவிமே லுதித்தாய் போற்றிடவே.       5

போற்றுந் தமியேன் குரம்பைதனிற்
      புகுந்து மயக்கைம் புலக்குறும்பை
மாற்றும் படி நீ நினைந்துயிரை
      மறலிக் கிரையாய் வருத்தாமற்
றோற்று முனது திருச்சூலந்
      தோண்மேற் பொறித்தாள் தொண்டர்துயர்
ஆற்றுங் கருணைக் கரும்பேயின்
      னமுதே மங்கை யருட்கடலே.       6

கடலிற் றிரையே நிகர்செனனக்
      கருவி லுதித்துக் கருமவசத்
துடலிற் பிணியா லுனதடிமே
      லொருபோ தணியே னொருபோதும்
அடலிற் சமனை யுதைத்தசர
      ணாமென் றறியே னாட்கொள்வாய்
மடலிற் பசுந்தே னுகளிதழி
      மலர்சேர் மங்கை வாழ்கரும்பே.       7

கரும்புங் கனியு மடுபால்சர்க்
      கரையுஞ் செழுந்தேன் கற்கண்டும்
விரும்புஞ் சுவைகள் போன்மொழியு
      மின்னா ரரமாம் விழிக்கென்மனம்
இரும்பு மெனவே யுழல்வேனுன்
      னிருதாள் பணியே னிரங்காயோ
சுரும்பும் பணிபூங் குழலுமையாள்
      துணைவா மங்கை சுடர்க்கொழுந்தே.       8

கொழுந்தேன் முரலு மலர்சாத்திக்
      கும்பிட் டிருதாள் குறித்துவிழுந்
தெழுந்தே யன்பாய்த் திருமுறைக
      ளேழுந் துதித்தஞ் செழுத்துநெஞ்சில்
அழுந்தேன் தறுகண் ணறிவிலியை
      யாட்கொண் டருள்வ தறியேனான்
தொழுந்தே சிகனே மங்கைவளர்
      சுருதிக் கிறைவா சுந்தரனே.       9

தரமா றுடைய மகவிருவர்
      தாமு மிருக்கத் தமிழ்மதுரை
யுரமா றுடைய மண்சுமந்தே
      யுதிர்பிட் டிரந்தா யுயர்வழுதி
கரமா றுடைத்தாய் மேனியின்மங்
      களமா தொருபாற் கலந்தனையே
சிரமா றுடைய சிவனேயுன்
      செயல்யா ரறிவார் செகந்தனிலே.       10

வேறு சந்தம்
தனிமு தற்பொரு ளென்றுனை யாகம்
      சாத்திர மறையோதுங்
கனிமொ ழிச்சிவ சத்தியல் லாலெவர்
      கண்டவ ருண்டோகாண்
பனிம திச்சடை யாய்விடை யாய்பணி
      பத்தர் வற்சலனேயென்
துனிவ யிற்றுநோய் தீர்த்தடி யாரெனத்
      தொண்டுகொண் டருள்வாயே.       11

தொண்ட கத்துறை யாதிப ரால்வருஞ்
      சுகதுக்க மதனாலே
விண்ட கப்படு முயிர்க்கெலா நீயன்றி
      வேறுளதோ வுரையாய்
முண்ட கத்திரு மாலயன் போற்றிடு
      முக்கண னேகாள
கண்ட கத்தனே மங்கை வாழுமங்
      களமின் மனோகரனே.       12

கரக பாலமுஞ் சூலபி னாகமுங்
      கண்ணுதல் மழுமானும்
உரக பூடண மடரு கடக்கையு
      முத்தமி பாகமுமாய்ச்
சிரக ராதி யுடன்மன மெண்ணியே
      சிந்தனை செய்தொருபோ
தரக ராவென மங்கையம் பதியா
      ரங்குவந் தருள்வாரே.       13

அருளு மைந்தரு மனைவியு மொக்க
      மாடையு மாபரணப்
பொருளு மங்கமு மற்றவை யாவையும்
      போதவு மேகுறித்து
மருளும் நெஞ்சனை வஞ்சனை யாட்கொள
      வருவதெந் நாள்பரனே
தெருளு மன்பர்க் கினிகரும் பேசனே
      செஞ்சடை யுடையானே       14

உடையும் யானை யதள்பணி பூடண
      முண்பதும் விடமாகும்
சடையு மங்கமு மாதிரு வோருமே
      சாபமு மாமிடமும்
விடையும் வாகன மையமுற் றோர்மங்கை
      வித்தகா யாமெனவே
இடையு மம்பலந் தோறுநின் றாடினார்
      ஏற்றுயர் கொடியாரே.       15

கொடிய பாதகர் காதகர் மேற்றமிழ்
      கூறியு மேபுகழ்ந்து
மிடிய தாலுமிக் குற்றியுங் கைத்தல
      மெத்த வருந்தினனின்
னடிய லாற்கதி வேறிலை நம்பினே
      னம்பிகை பங்காளா
நெடிய மால்விடை யாய்கரும் பேசனே
      நீயருள் செய்வாயே.       16

செய்வாய் சங்கு சங்கொடு தருநித்
      திலநில வதனாலே
மைவாய் திங்க ளெனவீர வலர்கள்
      வாய்விண் டலர்மங்கை
அய்வாய் தங்கு மதளுடை யிடையா
      யரிபிர மர்க்கரியாய்
மெய்வாய் கண்கள் செவிநா சியிலும்
      மேவிய புலவோனே.       17

புலம்பெறு சிந்தைமெய்ஞ் ஞானியர் யோகியர்
      புரியுமு னூல்மறையோர்
உலம்பெறு மன்ப ரிடத்தில் முளைத்து
      ருசித்த கரும்பாம்நீ
நலம்பெறு சுந்தர வாண்முக மங்கள்
      நாயகி பங்காசஞ்
சலம்பெறு துன்ப மகற்று மருந்தே
      சந்திர சேகரனே.       18

சேகர மன்பிலா நோயுறு தேகந்
      தரித்திர சம்சாரஞ்
சாகர மென்றதன் பால்வரை துன்மதி
      தான்மதி வீணூணிற்
சூகர வன்பனை யாளுவ துன்கடன்
      சூழொளி பாவகதி
வாகர சந்திர லோசன மங்கையில்
      வாழும் யேசுரனே.       19

சுரந்தருள் கற்றா மனமென வுருகித்
      துறைசையில் வளர்கு[ரு]நாத
மரந்தனில் நற்றே சிகனாய் மாணிக்க
      வாசகர்க் குபதேசம்
புரந்தரு ளுற்றே பிரமர கீடம்
      போலவு மேசெய்தாய்
சிரந்தரி யத்தா பித்தனை *யும்பார்
      தென்மங் கைக்கரசே.       20
[பிரதிபேதம்: *யாள்வாய்]

வேறு
கைக்கர வுடன்வாய் பொய்சேர் கயவரை யடுத்து நான்காத்
துக்கர முகமும் பார்த்துத் துன்பமே யின்ப மானேன்
அக்கர விந்தன் றன்கண் ணருச்சனை யடிமேற் செய்யச்
சக்கர மளித்தாய் மங்கைச் சம்புவே நம்பு வேனே.       21

நம்புநின் சரணி ரண்டு நளினநாண் மலர தாக
வம்புவண் டேன ருந்தும் வண்டெனச் சுழலா நின்றேன்
தும்புரு வீணா கானத் துணைச்செவி யுடையாய் கங்கை
யம்புலிச் சடையாய் மங்கை யட்டமா சித்தி யானே.       22

சித்தி 1யார் மந்தி ரங்கள் செபித்துரு வேற்றிப் போற்றிப்
பத்தி2சே ரன்பர் போல்நின் பணிவிடை செய்தன் பாகி
முத்திசே3ர் வகைசற் றில்லா மூடனைக் காப்ப தெந்நாள்
அத்தியா பரணா மங்கை யம்பிகா பதியெம் மானே.       23

வேறு
மானே நிகரும் விழிமடவார்
      மயலிற் சூறை வளிச்சருகாய்த்
தானே மனமு மயங்கிநித்தந்
      தயங்கித் திரிந்துன் றனைநினையேன்
ஊனே வுடலே வுடலிலுறு
      முயிரே வுயிருக் குறுதுணையே
கானே றுடையாய் விடவரவக்
      கைகங் கணனே முக்கணனே.       24
[பிரதிபேதம்: 1. சேர், 2. பத்தியா. 3. முத்தியா]

கணப்போ துனது திருவடியைக்
      கருத்தி லிருத்திக் கனிந்துருகி
மணப்போ தணிந்து பணிந்துலகில்
      மரித்துற்பவித்து மறுகாத
குணப்போ தவுளப் பழவடியார்
      கூட்டத் தெனையுங் கூட்டாயோ
உணப்போ தனமாய் விடமருந்து
      மொளியே மங்கை யுத்தமனே.       25

வேறு
உத்தம ரடியா ரென்ன வுனக்குநா னடிமை யுற்றே
மத்தமர் தயிர்போல் நோவால் மயங்கியே வருந்து வேனோ
எத்தம ரிருந்து மென்னா மிரங்கி1நீ யருள்வாய் மங்கைச்
சித்தமர் வித்தே மங்கை 2செங்கண்மா விடையா னானே.       26
[பிரதிபேதம்: 1. மிரங்கிநின் னருளே வேண்டும்,
2. சச்சிதா னந்த தானே.]

விடையமைந் ததனா லுள்ளம் விதறி1யெவ் விடங்க டோறும்
புடையமைந் தோடும் யாற்றுப் புரிசுழித் துரும்ப தானேன்
சடையமர்ந் திலகு மூலத் தனிக்கரும் பானே யைங்கை
உடையமைந் தனையும் பெற்ற வுமையொரு பாகத் தானே.       27
[பிரதிபேதம்: 1. யோர் நிலைமே வாமற்.]

பாகன மொழியும் வேலம் பாமன விழியுங் காட்டு
மோகன வடிவா மின்னார் முலைமத மாவுக் குள்ளம்
ஆகனற் கரும்பாய் வாடி யலந்தன னருள்வாய் மஞ்ஞை
வாகன வேளைப் பெற்ற மங்கையம் பதியி னானே.       28

நானமும் பணியும் பூவும் நலம்பெற வலங்கரித்து
மான1மு மின்றி யீன வகைத்தொழில் புரியு மாந்தர்க்
கூனமு மில்லா வின்சொல் லுரைத்துயிர்2 காப்ப தெந்நாள்
ஏனமு மனமு போற்று மிட்சுமா பட்சத் தானே.       29
[பிரதிபேதம்: 4. முந் தவிர்த்து. 5. துடல் வருத்த மானேன்]

பட்சியாய்ச் சரப ரூபம் படைத்திரி முதலோர் சிந்தைக்
கட்சிசேர்ந் தண்ட மீன்ற காமக்கோட் டனத்தை மேவி
வெட்சியார் குகனைப் பெற்று 1மேதினி தனையு மன்பர்
குட்சிசேர் வினையுந் தீர்க்குங் 2கோமள மங்கை யானே.       30
[பிரதிபேதம்: 6. மேவலர் புரமு, 7. குள்விழிக் கழையி னானே]
      வேறு: கொச்சகம்
கழையேந்து மாதவன் செங்கண்ணு மயன் சிரசும்
தழையேந்து கால்கரமேற் றானமைத்த வாறுலகில்
உழையேந் துனதடிமை யுண்டென் றுரைத்திடவோ
இழையேந்து கொங்கைக் கிசைந்தகரும் பேசுரனே.       31

சுரமார் வனமலைக டோறுஞ் சுழல்பரம
பரமாருஞ் சாட்டையும்போற்பற்றவினை யுற்றலைந்தே
வுரமா ரெழுத்தஞ் 1சுரையே னருள்புரிவாய்
வரமார் கரும்பே மதிச்செஞ் சடையானே.       32
[பிரதிபேதம்: 1. சுணரே.]

சடைவா யொருத்தியுந் தான்பாதி யாயொருத்தி
இடைவா யொருத்தி யிருக்கமுனி மாதர்
கடைவா யிரந்தாற் கலைநெகிழச் செய்வதுண்டோ
விடைவா யுகந்1த 2மகமேருச் சிலையானே.       33
[பிரதிபேதம்: 1. தங்கை. 2. மங்கை]

சிலையாய் முளைத்தீர் சிலையே குடியானீர்
1மலையான் மகளை மணந்திருக்க வேணுமென்றே
அலையார் கடல்விடமுண் டண்டர் தமைக்காத்து
நிலையா யருள்கரும்பே நீள்கருணை யாரமுதே.       34
[பிரதிபேதம்: 1. மலைவார்]

ஆரா மணிக்கரும்பே யாடரவோ டம்புதமாங்
தாரமதனைத்தலைமீ தில்வைத்துக் கொண்டதல்லாற்
பேரம்ப லந்தோறும் பித்தரென வேநடித்தீர்
வீரம ணியுமங்கை வேட்கன லோசனரே.       35

வேடனெச்சில் தின்றும் விடாய்தீரா வாயுவுட்கொண்
டாடரவாய்த் தோலுரி1சேர் தங்கமத்தி யாநீரே
கீடமுதல் மாதவஞ்சேர் கேரள சிங்கவள
நாடதிய ரானவிட்சு நாதா சதாசிவமே.       36
[பிரதிபேதம்: 1. பொன்ற.]

சிவமாகிச் சத்தியொடு சேர்ந்துருவ மாகித்
தவமாய் முளைத்ததனிக் கரும்பையே விரும்பாய்
அவமா யப்பிசித மருந்து மனமேயுற்
பவமா ரணமாம் பவக்கடலை நீந்துவையே.       37

நீந்த வருகடலாம் நீயுன் கருணைகப்பல்
கூர்ந்தருள் பாய்மரமாங் கொடியென் கொடியாகும்
போந்1திகள் வேறு புகலிடமுண் டோமலைமான்
காந்தனென்னு மங்கைவளர் கன்னற் பெருமானே.       38       [பிரதிபேதம்: 1. திருக்க]

பெருமான் கரத்தேந்தும் பெம்மானை வேதன்
றிருமான் மகிழுமங்கைச் செங்கரும்பைப் போற்றுவர்தாம்
இருமா நிலத்துக் கிறையாகி யப்பாற்
பொருமான் விழிச்சசியைப் பொன்னுலகை யாளுவரே.       39

ஆளுங் கரும்பி னடிச்சார மாலறிவான்
வேளு மறிந்துலகை வென்றி புரிந் தான்மனமே
கொளு மகலுமந்தக் கோலத் திருவடிநீ
நாளும் நினைவாய் நமனும் நினையானே.       40

வேறு
நினையும்வினை நினையாத வினைக டன்னால்
      நீணரக சுவர்க்கமெய்தி நிலவி ராப்போற்
புனையும்வினை மாந்தர்களே முள்ளை முள்ளாற்
      புரிந்துகளை வதுபோலப் புவன் மீன்ற
அனையுமலர்ப் புங்கவனும் போற்று மங்கை
      யமர்ந்தகரும் பேசர்சர ணார விந்தந்
தனையமுகந் தவர்பணியே செய்தாற் கன்மந்
      தருவினைபோம் பரமபதந் தானுண் டாமே.       41

தானுண்டென் றிருப்பவர்க டமைப்பு ரக்குந்
      தழல்விலோ சனக்கரும்பே தாம ரைப்பொன்
மீனுண்ட வுலகதனி லாசை மூன்றால்
      மெத்தமன மேமயங்கி மிகவ ருந்தி
ஆனுண்ட வுணவினரை நம்பிக் கான
      லருந்தவிடாய் 1தீருமென வலைவார் போல
நானுண்டென் றுனைப்பணிய வறியா தேவீ
      ணாளாய்வீ ணாளாய்வா ணாளுற் றேனே.       42
[பிரதி பேதம்: 1. தணிநீரென்]

உற்றவரை வேற்றுமையா யெண்ணித் தோளி
      லுகந்திருந்து செவிகடிக்கு முலுத்தர் தம்மை
யிற்றவரை யடுத்தொருசாண் வயிற்றுக் கீய
      வெச்சில்தின்றும் விடாய்தீரா திருந்தே னுக்கே
கற்றவரை வளைத்துநகைத் திஞ்சி மூன்றுங்
      கண்ணம்பா லெய்தகறைக் கண்டர் தொண்டர்
நற்றவரை யாதரிக்கு மங்கை வாழ்கன்
      னற்பரனே தற்பரனே நலஞ்செய் வாயே.       43

நலம்புரியும் வெண்டிருசெந் திரு1வுலாவும்
      நளினதடஞ் சூழ்மங்கை நாடு கந்து
கலம்புரியு மங்களநா யகிபங் காளா
      கரும்பேசர் திருக்கோயில் கண்டு வண்டீர்
வலம்புரியுந் தெண்டனிடும் வாய்பு தைத்து
      மதலைதர வேணுமென்று மறுத்து ரைத்தான்
சலம்புரியு மதன்போர்க்கு வின்னா ணாகத்
      தான்பகைநீர் நானுமென்றே சாற்று வீரே.       44
[பிரதி பேதம்: 2. திருவும் வாழும்.]

சாற்றுபுரா ணாகமவே தாந்த(ம்) மேலாஞ்
சச்சிதா னந்த1மெனச் சராச ரங்கள்
போற்றுதனி மூலமெனும் வேழ மூர்த்தி
பொற்கழலை நினைந்திறைஞ்சிப் போற்றா தார்தாம்
வேற்றுரு வநேகமெடுத் துலைந்து நோவால்
மெலிந்திறுதி2க் காலமுற்று மேதி வாழ்வெங்
கூற்றுவச 3மாய்ச்சூல முங்கட்டச் சூலங்
குற்றவெழு நரகினிலுங் குடியா வாரே.       45
[பிரதி பேதம்: 1. மதாய்ச், 2. யாய்ச்செங்கண்
3. மாயபய காசுங்,]

குடியாய மங்கையினு மன்பர்மனத் தினும்வாழ்
      குளிர்கலா நிதிநதிசேர் கோடீ ரத்தா
துடியாருஞ் செங்கராசங் கரகி ரீசா
      தோகைவளர் கரும்பேசர் துணைத்தாள் போற்ற
மிடியார்நல் குரவலகை விலங்கு தீக்கொள்
      விடவரவ மகலும் வினைக டீரும்
அடியார்போற் றாழ்வில்லா வாழ்வுண் 1டாகி
      யருளுண்டா மெய்ஞ்ஞான வறிவுண் டாமே.       46
[பிரதி பேதம்: 1. டாய்நல்ல]

அறியாமை யிருக்குமன வஞ்ச புஞ்ச
      மருந்துயரம் பலபிணிக்கா தார வில்லம்
குறியான மலபாண்ட மயான காட்டங்
      கொடுங்காம வறைதவறு குடில் பீடம்
வெறியான பித்துருவங் கர்ம காண்ட
      மேவியுனக் காளாகி விடிவ தெந்நாள்
மறியார்செங் கரதலனே 1வடியார் வாழ்வே
      மங்கைவளர் கரும்பேவிண் மணிக்கண் ணானே.       47
[பிரதி பேதம்: 1. வறிஞோர்.]

கண்ணாடி தனில்யானை காண்பார் போலென்
      கருத்திலுனைக் காண்பதெந்தக் காலங் காலன்
உண்ணாடிப் பாசமுங் கைக்கொண்டதட்டி
      யுறுக்கியழைத் திடப்பயந்தே யுடல்விட் டாவி
விண்ணாடிப் புலன் பொறிகள் விழிசு மூன்று
      விக்கலைமே லாய் வருந்தும் வேளை கண்டே
மண்ணாடி வந்தருள்வாய் மங்கை வாழ்வே
      மங்களநா யகிபாகா மழுக்கை யானே.       48
[பிரதி பேதம்: 1. மயங்கி]

மழுப்புரமுங் கருணையில்லாக் கண்ணு மீயா
      மரக்கரமு மின்சொலில்லா வாயும் பெற்றுக்
கொழுப்புடன்பூ பாரமென வீணூ ணுண்டு
      கொடுவினைக்கா யுடலெடுத்துக் கொண்ட லைந்தேன்
முழுப்புவன சிருட்டிதிதி சங்கா ரம்மா
      முத்தொழிலு மெத்தொழிலு முடிப்போ மென்று
விழுப்புயர்வெள் ளேறுயர்த்த கொடிக்க ரும்பே
      வேண்டுமுன தருளிதுகாண் வேளை தானே.       49

வேளையெரித் தாய்கமலன் றலையைக் கொய்தாய்
      விழிபறித்தாய் மாலைதக்கன் வேள்வி வீட்டாய்
தாளையசைத் தேயுதைத்தாய் சமனை வெற்பார்
      தசமுகனைப் பெருவிரலாற் றணியச் செய்தாய்
நாளையென வெண்ணாமற் றாழ்வு வாழ்வும்
      நல்கினைவன் பன்பவர்போல் 1நானு மாகேன்
வாளைதிகழ் தடம்புடைசூழ் மங்கை நாட்டில்
      வளர்கரும்பே யென்பிணியு மாற்று வாயே.       50
[பிரதி பேதம்: 1. நாடி நாளும்.]

வேறு

வாயுந் திகழ்மன மாகந் திரிவித
      மாகுங் கரணமு மேகமுமாய்
வேயுந் தருமணி போன்மங் கையில்வளர்
      வேழங் குடியென வாழீசர்
சேயுந் தமிழ்மறை யோனுந் திருமக
      டேவு முனிவர்க டேவருமன்
பாயுந் தொழுதருண் மேவுந் திருவடி
      பணிவா ரவர்வினை தணிவாரே.       51

தணியுங் கருமுகி லகிலசை வலமருள்
      தாரே வுன்றற வார்குழல்கார்
மணியுந் திருமகள் கலைமக ணிறமென
      வங்கயல் விழிசேர் மங்களமான்
அணியுங் கழையுரு வெனவும் வளர்பர
      னம்புய வடியிணை நம்பியுமே
பணியுந் தவிர்வது செனனம் பலபிணி
      பாசமு மிகலயம் பாசமுமே.       52

பாசன மிசைபரி பாகுட னறுசுவை
      பாலமு ததியா பாலுறவே
போசனம் நுகரவு மேதில னுமதிரு
      போதடி பரவவு மேதவறாம்
மாசன வேதக டார்சுழல் பிணிகெட
      மாதய வருள்செயு மாதாவாய்
மோசன வாநதி வாழ்சடை யணிகழை
      மூலமர் செகபரி பாலனரே.       53

பால னயனமது வேள்புர திரிபுரம்
      1பாவக புரமென மேவுகவே
காலன முயலகன் மேலடர் புரிவது
      கால்கர மதுவெலுந்2 தோவினையே
மாலன் வருளது தானடி யவர்துயர்
      மாளவு மிகல்செயும் வாண்மனமே
வேலன் விழிநடை யாளுமை புணர்கழை
      வேதரை நிதநினை தீதிலையே.       54
[பிரதி பேதம்: 1. பாறிட வமர்தரும் வீறுடனே. 2. மாலிபமே]

தீங்கரும் பிணிக்குடல் நொந்துழல் வதுவின்றிச்
      சேர்ந்தடி யவரெனத் திரியாது
பாங்கரு மொழிநித மோஞ்சிவ வெனவுமன்
      பாந்திரு முறைகளைப் பகராது
கோங்கரும் பிணைமுலைச் சாம்பவி யுடனுனைக்
      கூர்ந்தக நினையவுங் குறியாது
பூங்கரும் பதில்வளர் சாம்ப சதாசிவ
      பூங்கழ லிணையருள் புரியாயே.       55
புரியு மிருவினை தனிலும் வருபிணி
      போக்குறா துலைதுன் மார்க்கரே
எரியு மாகிமதி விழியு மணிகரும்
      பேசர் மங்கையினில் வாசமாம்
வரியு மணியான் விழியின மணியது
      மந்திர மாவதெ ழுத்தைந்துமே
தரியு நினையுநல் லவிழ்த மனுதினஞ்
      சாற்றுவீர் திருவெண் ணீற்றையே.       56

நீற்றறை யுறைதிரு நா[வு]க்கர சிடரினை
      நீக்குவ தெனவடி யேற்கடரா
காற்றறை வலியற லூற்றொடு பொருமியுங்
      காத்திர மிழைத்திரை காற்றறாநோய்
மாற்றருள் புரியினி யாற்றில னுனதடி
      மாத்திரங் கதியல தாற்றுவரார்
வேற்றலர் புரமெரி நேத்திரம் வளர் நுதல்
      வேட்கரும் பிறைவபஞ் சாக்கரனே.       57

கரமஞ் சுடைகய முகனந் தரிபரை
      ககமங் கையில்வட திகைவாழுஞ்
சிரமஞ் சுடையவர் 1பரைமங் களமயில்
      தினமும் புணர்கழை வனவாசர்
சரமஞ் சுகடிகழ் மதில்மண் டபமுயர்
      தடமுன் றினில்பணி விடைசெய்வோர்
புரமஞ் சுறயம னமரும் பழவினை
      பொருதும் பிணிகளுங் கருதாரே.       58
[பிரதி பேதம்: 1. வர.]

கருதார் திரிபுர மெரிதா விடவடர்
      கண்ணுத லேமறை விண்ணவர்மால்
வருதா பதர்பணி கழையே சுரமலை
      மஞ்ஞையோர் பால்வளர் பிஞ்ஞகனே
ஒருதாழ் வடமொடு திருநீ றிடவுனை
      யுன்னிட வேநித மன்னவர்பால்
இருதாண் மலரருள் 1புரிவா யெனையவ
      2ரென்னையு மேசெய்வை 3யின்னமுதே.       59
[பிரதி பேதம்: 1. புரிவா யவரென, 2. வென்னையு, 3. யுன்னருளே,]

இன்மையு மறுமையு மம்மையு 1மெழுபிறப்
      2பெய்தியும் பணிவிடை செய்தறியேன்
நன்மையுந் திகழறி வின்மையும் பிணியொடு
      3நைவனுன் னடிபணிந் துய்வதெந்நாள்
பன்மையு மொருமையு முண்மையு மறைபுகல்
      பங்கய கரபண கங்கணனே
வன்மையும் பலதளை மென்மையி லணிவள
      மங்கையில் வளர்கழைச் சங்கரனே.       60
[ பிரதி பேதம்: 1. மெழுமையு, 2. மின்புட னுனை
நினைந்தன்புசெய்யேன், 3. தயந்துடல் வருந்தினேன் வந்தருள்வாய்.]

வேறு
சங்கினம் பணைசூழ் மங்கைநா 1டாளுஞ்
      சாம்பவி மங்களே சுவரிதன்
பங்கினர் கரும்பே சுரரிரு நளின
      பாதமே கதியெனப் பணியக்
கொங்கினங் கமழும் புட்பசா திகளாய்க்
      கூவிளை யறுக்குவேர் கொழுந்தாய்
அங்கினம் கோவில் திருப்படி யாகவு
      மமைத்தெனைப் படைத்தில னயனே.       61.
[பிரதி பேதம்: 1. டாழுஞ்,]

அயமுகன் றக்கன் வேள்வியி லுகந்தே
      யதிலவிப் பாகமும் வேண்டுங்
கயமுகன் முதலாந் தேவருக் கெல்லாங்
      கனல்விழி யுதித்தவன் கையாற்
பயமுக மளித்தா யப்படி யடியேன்
      பாரவல் வினையினைப் பாராய்
நயமுக மாகும் பத்தவற் சலனே
      நாதனே மங்கைநாட் டரசே.       62

அரசுதா கரன்சேர் பவளகோ டீரா
      வமலனே திரிபுராந் தகனே
பரசுபா ணியனே திருவளர் கரும்பே
      பரமனே யெனப்பெயர் பகர்ந்து
சிரசுமேற் கரமா யகத்திலஞ் செழுத்துந்
      திருவெண்ணீ றக்குடன் றிகழ
முரசுயர் கோவில் வலம்புரிந் திடுவார்
      முத்தரா யிருப்பவர்முத் தினத்தே.       63

முத்திருந் திலகு முளரியந் தடஞ்சூழ்
      முத்தமிழ் மங்கைமூ தூர்வாழ்
நத்திசை கிரீப மங்கள நாயகி
      நயனமாஞ் சகோரமு நாடப்
பத்திரு நான்கு கலைவள ரமிர்தப்
      பசுங்கதிர்க் கன்னலம் பரனென்
றெத்திசை துதிக்க வுதித்தனை விண்ணோர்க்
      கிறைவனே மறையவர்க் கிருக்கே.       64

இருக்கு மாசன மீதிலன் பாகவே
      யிருத்தியேநல் லமுதுக ளென்றுமன்
பருக்கு மீய்ந்துன் பணிவிடை செய்தபின்
      பாலிப்பாய்நின் பரம பதத்தையே
முருக்கும் நெரித்தட செங்கனி வாய்க்குறு
      மூரலா 1லும துள்ள முகந்துதான்
செருக்கு மங்கள நாயகி பங்கில்வாழ்
      செம்மலே யெம்மையாள் சிவனே.       65
[பிரதி பேதம்: 1. லுமதருட் செல்லான்]

சிவந்த தாளை நினைந்தருட் செல்வந்தான்
      சேரவேயறி வின்றியுந் 2தேசமேல்
உவந்த தீப மிருக்கவுந் தீயுகந்
      தோடிநான் தேடியு முலைந்தேன்
அவந்த யர்விலி கூற்றஞ்சு மேயெழுத்
      தஞ்சுமேயென் னுளத்தி லழுத்துவாய்
கவந்த வார்சடை வளர்கரும் பேசனே
      காமனைக் 3காய்ந்தருள் கணனே.       66
[பிரதி பேதம்: 2. திகைத்தே, 3. காய்மா.]

கண்ண னாலிரு கண்ணனா மாயிரங்
      கடவுளர் பதிகளுங் கருதேன்
றிண்ண நின்றிருக் கோவி(லி)ல் மேவிய
      திருப்பணிச் சிலையெனச் செனிப்பேன்
எண்ணமீ தன்றி வேறிலை தானெனக்
      (கீ)[கே]ழைபங் காளனே யிரங்காய்
தண்ண மேந்திய 4காதல் விமலனே
      5சடிலனே கற்பகத் தருவே.       67
[பிரதி பேதம், 4. பாணியாய் பாணிவாழ்,       5. சங்கரா மங்கையுத் தமனே.]

தரும நீதியு மோட்சசா தகங்கள்
      சாத்திரங் கலைகளுந் தரித்தே
உரும மந்திசந் தியிலுநின் றிருப்பெயர்
      ஓர்(தி) [த]ர முரைத்திட வுணரேன்
கரும தேக மெடுத்தலைந் தாற்றிலே
      கரைத்திடும்புளி யாகினேன் காத்திடாய்
மரும மாதவன் வேதவன் போற்றிடு
      மங்கைவாழ்செங் கரும்பிறை வள்ளலே.       68

வள்ளத்தா மரைமலர் வாவிசூழ் மங்கை
      வளர்கரும் பேசர்சே வடியை
உள்ளத்தா மரைமிசை வைத்தெழுத் தஞ்சுநூ
      றுருச்செபித் துகந்திடு வோர்கள்
வெள்ளத்தா மரைமயில் திருமயில் நாளு
      மேவிவாழ்ந் தன்புமேன் மேலும்
கொள்ளத்தா மரைமதி யணிந்தவ ரடியார்
      கொள்கைபோ லிருப்பர்தாள் குடியே.       69

குடிக்கும் நீரெனக் கானலைத் தாகமாய்க்
      குறுகியே மறுகின குணம்போல்
மடிக்குந் தெய்வங் களைநாடிக் கும்பிட்டே
      வாழ்த்திநா னிழைத்துனை வணங்கேன்
தடிக்கும் புல்லறி வாளனைக் காத்திடாய்
      தஞ்சம்நீ கதியாகுஞ் சபையிலே
நடிக்கு மங்கை வளர்கரும் பேசனே
      1நம்பனே சொன்னபன் னகனே.       70
[பிரதி பேதம்: 1. நதிசெடாதரப் பூத நாதனே.]
வேறு
நகத்தி னாற்பொன் னசுரனை மார்புகீண்
டிகத்தின் மேலரி யெய்தும் வெறிகெட
வகத்திற் புள்ளுரு வாங்கரும் பேசனே
சகத்தி லென்றுயர் தன்னையு மாற்றுவாய்.       71

மாற்றலர் முப்புர மாள நகைத்துவன்
கூற்று 2தன்னையுங் கோபித் துதைத்தனை
போற்று மன்பர் புகலன்பி னாலன்றோ
3ஏற்றுயர் கொடியாய் மங்கை யீசனே.       72
[பிரதி பேதம்: 2 மஞ்சிடக், 3. ஆற்றுயர் சடையாய்.]

ஈசர் மங்கை யிறைவர்பொற் றாளன்பிற்
பேச யாரும் பிழைதவிர்ந் துய்குவார்
நீசர் நாளைப்போ வார்நிறை யன்பினாற்
பாசம் போயம் பரமன்று ளெய்தினார்.       73

எய்தி கத்தினி லின்பதுன் பத்துயர்
பொய்தி கழ்ப்புன் புலையுடம் பாற்றி (நீ)யே
வைதி கச்சைவ வாழ்வுகந் தீசனே
செய்தி கழ்ச்சியில் லாதருள் செய்வையே.       74

வைய மாநில மாய்ப்புரம் வென்றவர்
வைய மீது வளர்கரும் பேசுரர்
செய்ய தாமரைச் சேவடி சிந்தனை
செய்ய வேதன் சிருட்டிப்ப தில்லையே.       75

தில்லை மாவனஞ் சேருஞ் சிதம்பரத்
தெல்லை காண வெமபுரங் காண்கிலர்
தொல்லை முத்தி யுதவினை பொற்கிரி
வில்லை யேந்துகை வேழம் யேசனே.       76

ஏச யாரு மெடுத்துடல் நோயினால்
மாசடைந்துனை வந்து வணங்கிலேன்
பாச மோடெம்மை படைத்தவ ராள்வதுக்
கேச டைவுமுண் டோசொல் கிரீசனே.       77

1கிரிகை யாலுமுன் கேசவன் பூசைதாள்
அரிய கண்ணிடந் தாழிபெற் றான்மங்கை
யுரிய வீசர் பணியுகந் தோர்கட்குத்
தெரிய ஞான கிரிகையுஞ் சித்தியே.       78       [பிரதி பேதம்: 1. கிரியை,]

சித்த ராதிமூ வாறு திருக்கணம்
பத்த ராகிப் பணிவிடை செய்தலால்
நித்த ராயநன் னிலைமையுற் றார்மங்கை
அத்தர் தாணினை வார்க்குமுண் டாகுமே.       79

ஆகு வாகன ராறு முகவர்க்கு
மாகு மையர் மதனயன் மாதுலர்
நாகு மங்கள நாயகி மால்பங்கா
ஆகு லத்தெனக் காண்டவ ராமின்னே.       80

வேறு
மின்னாரிடை மடவார்மயல் மேவும் [பிணி] யினிலிப்
பொன்னாரவர் சுவர்க்கஞ்சுக போகந்தரு மென்றே
என்னாருயிர் சுடர்தீபவண் டென1 வேசுழல் கின்றேன்
துன்னார்புர மெரித்தோயருள் துணைத்தாமரை யடியே.       81
[பிரதி பேதம்: 1. வாயின் கரும்பே,]

அடியாருட னுறவாய்த்திரு வடித்தொண்டுகள் புரியேன்
நடியார்சபை முதல்மாதலம் நாடேன்தட மாடேன்
மிடியார்பிணி பசிவாட்டவும் வினையேனுனை நினையேன்
துடியார்கர தலனேகழைச் சுடரேயரு டருவாய்.       82

தருவார்பொழில் சொரித்தேனிறை தடத்தாமரை யிடத்தார்
மருவார்திரு மங்கைப்பதி வாசர்கரும் பேசர்
திருவார்மதில் சிகரந்திகழ் திருவாலய மருவார்
கருவார்பிறப் பிறப்பாய்நர கத்தேயுறை வித்தே.       83

வித்தாரம துரஞ்சித்திர மேலாசொடு நாலாம்
பத்தாரழ கார்வாழ்கவி பாடிப்புகழ்ந் தோர்கள்
இத்தாரணி முழுதுந்திரிந் திளைத்தேனென்னை யழைத்தே
முத்தார் செழுங் கரும்பேசுர முதல்வாவரு ளுதவாய்.       84

உதவாரவர் பொருளாறன லுளவா.............களவுக்
கித1வாமுன தடியேன்கலிக் கிவர்தாமிரங் குவரோ
சதவாண்மகன் முதலோர்2கிரி தருமங்கையும் வெருவ
மதவாரண முரித்தோய்திரு மங்கைப்பதி யானே.       85
[பிரதி பேதம் : 1, வாய்மது வீயாகுவ நிவர்தா, 2, மலை,]

யானென்பது மகமென்பது மெனதென்பது மனத்தும்
ஊனென்பது முடலென்பது முயிரென்பது முயிருக்
கானென்பது மருளென்பது மறிவென்பதும் நெறிநீ
தானென்பதும் வேறோவுரை திருசெங்கழை 1யரனே.       86
[பிரதி பேதம் : 1. யானே, ]

[இதற்குமேல் பாடல்கள் மூலப்பிரதியில் காணப்பெறவில்லை.]
-------------------------------------------

6. திருவெவ்வுளூ ரந்தாதி

உடையவர் தோத்திரம் வெண்பா
ஆழிசங்கை மாற்களித்தா யாண்டன்பர் தம்பிறவி
ஆழிசங்கை மாற்றிவைத்தா யம்புயத்தி- லாழிசங்கை
பூதூர வையாநின் பொன்னடியென் சென்னியிறும்
பூதூர வையாயிப் போது.       1
நம்மாழ்வார் தோத்திரமும் அவையடக்கமும் கலித்துறை
சீரார் குருகையன் றாடொழு துட்கொண்டு சிற்றறிவிற்
கூரார்வ மேத்துக வென்னப் பழங்கணைக் கொல்லநற்பா
லாரார் கலியிற் றுயின்றாயென் றெவ்வுளந் தாதிசொல்வல்
பாரார் கவிக்குற்றம் பாரா ரெனும்பலம் பற்றிநின்றே.       2

கனகவல்லித் தாயார் தோத்திரம் வெண்பா
என்கோ தறமுடித்திங் கேத்துவே னென்றுமெவ்வுண்
மன்கோ னிடத்தார்வம் வைத்துறையும் - பொன்கோ
கனகவல்லித் தாயார் கனத்த தனத்துக்
கனகவல்லித் தாயார் கழல்.       3

வாணி தோத்திரம்       கட்டளைக் கலித்துறை
பாரதி கந்தர நந்தாள நந்துறம் பங்கயத்திற்
பாரதி கந்தரு மேனிப் பணியிடைப் பந்திற்கொங்கைப்
பாரதி கந்த மறையோன் கிழத்தியின் பத்மநற்றாள்
பாரதி கந்த புலையே னிவரப் பவக்கடற்கே.       4

நூல் கட்டளைக் கலித்துறை
திருவரன் பாரிற் றிருவரந் தந்தன்பர் சேயெனத்தாய்க்
கருவரன் மாய்த்துக் கருவரன் றோடக் கடிந்தவன்றம்
பருவரன் மோதும் பருவரன் பிற்கருள் பண்பினன்கா
மருவரன் கௌரி மருவரன் போற்றெவ்வுண் மாயவனே.       1

மாயா வுடலருண் மாயா வமரர் வழுத்தெவ்வுளாந்
தேயா விருவினை தேயா வுனைத்தொழில் செய்திலர்க்கென்
றாயா வறிபவர்க் காயா யருமறை யாய்ந்தறியாக்
காயா நிறத்தவ காயா யிழுக்கனைக் கண்டுகொண்டே.       2

கண்டா மெனுமொழி கண்டா னரவிந்தங் கார்குழல்சேர்
தண்டா மரையவ டண்டாத மார்ப சலங்கவர்ந்த
கொண்டா லடியனைக் கொண்டா னினக்குக் கொடுஞ்சிரம
முண்டா வுரையனை யுண்டா யணியெவ்வு ளூரத்தனே.       3

அத்தா வனைச்சக்ர வத்தா வழிவழி யாளவந்த
சித்தா வுனைத்தெரி சித்தாவ லின்மனஞ் சோர்ந்துருகிக்
கத்தா வெனச்சொலிக் கத்தாதிருக்கிற் கவினெவ்வுளூர்ச்
சத்தாய பரவசத் தாவெங்ஙன் முத்தி சார்வதுவே.       4

சாரலை வேங்கடச் சாரலை நண்ணித் தலமடவார்
மூரலை முத்தென்று மூரலை யீட்டியென் மூடநெஞ்சே
யீரலை போற்கத்தி யீரலை வவ்விக்கொண் டீமக்குறள்
பாரலைத் தோடுவ பாரலை யாதெவ்வுட் பற்றுவையே.       5

பற்றின மற்றிலன் பற்றின மாகியும் பத்தர்களக்
கற்றின புன்மையன் கற்றின மேய்த்தவ கண்ணபொறி
யிற்றின வுள்ளம் பயிற்றின னாதலி னீண்டுய்குவ
தெற்றின லாம்பனி யெற்றின னாயெவ்வு ளின்றலனே.       6

இன்றல மந்தன னின்றல கிட்டிட லெவ்வுளென்னு
னின்றல முற்றவ னின்றல மில்ல னிரைபிரிந்த
கன்றல மர்ந்துழல் கன்றல னன்பர் கணமகன்றா
குன்றல டர்முலைக் குன்ற லரும்பொன்னைக் கூடுரனே.       7

கூடு மடியருட் கூடு மவர்துதி கொண்டவெவ்வு
ணாடு மயன்மறை நாடு மகத்திலு நற்பரம
வீடு மழற்கடு வீடு மராமணி விற்சிரத்தின்
பாடு முன்தளி பாடு மலர்த்தாள் பரவினவே.       8

பரந்தா னுனக்குப் பரந்தாம னேயெனைப் பற்றிவிட்டுக்
கரந்தா லுமேயென் கரந்தா வருளெனக் காட்டிநிற்ப
இரந்தா மவற் குயிரந்தான மாகவு மிரவலராற்
புரந்தா விலெவ்வுட் புரந்தா யிலென்கிலர் புன்மையென்றே.       9

என்றா யெனுமெனை யென்றா ளடிமைக் கிசைவிப்பதே
பொன்றா நினதகப் பொன்றா வெனச்சினம் பூண்டனையோ
என்றா னிலையடி யென்றாப மேகநின் னின்னருளே
முன்றாச ரேத்தெவ்வுண் முன்றாக மோடு முயங்கினனே.       10

முயங்கு மறைகண் முயங்குமென் றாலிந்த மூடனுக்கு
வயங்கு னடிப்பங் கயங்கு றுங்கொல் வறிதடைந்தேன்
தயங்கு பொறியி லியங்குவட் டூர்மது சார்ந்துணுமோ
கயங்கு லவெவ்வு ளியங்குகண் ணாவிரங் காததென்னே.       11

காதலை யான்சொலி னாதலை யோதிலை காணவென்னின்
ஈதலை யானென வோதலை மெய்யுரு வேனுமன்பர்
மாதலை யீட்டத்தை யீதலை யாநின் மழையெனுமெய்
நோதலை யுற்றிடு மோதலை வாவெவ்வு ணோன்றவனே.       12

நோன்ற தவங்களு மான்ற பலபல நூலறிவுஞ்
சான்ற வொழுக்கமு மேன்ற வருத்தியுஞ் சால்புமிவை
போன்றன வென்னுளை தோன்றலின் றேனுமென்
புன்றலையி லூன்றநின் றாளரு ளீன்றளிக் கும்மெவ்வு ளூரவனே.       13

ஊர்ந்தான் கருடப்புள் ளூர்ந்தான் கனக னுரத்தை முன்ன
ரீர்ந்தான் மலமனம் பேர்ந்தான் வளங்குல வெவ்வுளிடைச்
சார்ந்தான் சுரர்க்கருள் கூர்ந்தான் றனைப்புனை காற்கவியிற்
சேர்ந்தான் மனக்கறை தீர்ந்தான் றினமெனைத் தேற்றுவனே.       14

தேற்றினன் றொண்டரை மாற்றினன் புன்கருச் சீர்விரசை
யாற்றினன் சக்கர மாற்றினன் போற்றிடு மன்பருழை
யூற்றினன் றண்ணரு டோற்றினன் றென்னெவு ளூரன்வின்னாண்
ஏற்றினன் பார்த்தரு ளாற்றின னில்லையெற் கென்னென்பனே.       15

என்னைக் கருதுரை யென்னை யிடரி லிருத்தினதாற்
பொன்னை யணிநிறத் துன்னைச் சுகத்திற் பொருத்தியதோ
அன்னை யுயிர்க்கென முன்னை மறைக ளரற்றன்மெய்யோ
மன்னை வரையளி பின்னை வராவெவ்வுள் வாழ்பரனே.       16

பரனைக் கனகாம் பரனைக் கவினெவ்வுட் பரற்கிருபா
கரனைப் பொருவிற் கரனைத் தனியலக் கையன்சகோ
தரனைத் துளசி தரனைத் தரிசிக்கத் தந்தவப்பூ
வரனைப் புகழ்வன் வரனைப் பெறப்போவ திற்பெரிதே.       17

பொரியா யுளத்திற் பிரியா தெனையிடர்ப் பேரகழி
தரியா தெடுத்து விரியா டகக்கழற் சார்த்தவுருக்
கரியா யுலகிற் கரியா யிரங்கெனைக் கண்டுமெவ்வுட்
புரியா வருளைப் புரியா யெனிலென்ன பூட்டகமே.       18

பூட்டா யுதிபவங் கூட்டா யென்னற் புதுமைவிளை
யாட்டாக வாடலை வேட்டா யெனுமிஃ தறிகிலன்மேல்
வீட்டா யெழிலெவ்வு ணாட்டா யபய மிளிர்வரதம்
தாட்டா மரைகளுங் காட்டா திருந்திடிற் சாலநன்றே.       19

சாலுங் கொடியனைப் போலு மொருவசை சார்ந்துறவா
னாலுங் கமலத்த னேலும் படிசெய் கலனவமெப்
பாலுங் கொளாவகைக் கோலும் படியெனைப் பண்ணுவித்தெக்
காலுங் கணித்தனை மேலும்ப ரேத்தெவ்வுட் காவலனே.       20

*மடக்கு
காவ லரும்பன கத்திந்தி ரனயன் கைகுவித்துக்
காவ லரும்பன காசல வென்னக் கவினெவ்வுட்சு
காவ லரும்பன கொங்கைப்பொன் காந்த கடையேற்கன
காவ லரும்பன சக்கனி யேயருள் கண்டனெனே.       21
------------------------------------------
*21-ஆம் பாடல் முதல் 30-ஆம் பாடல் முடிய மடக்கு என்னும் இலக்கண வகையைச் சார்ந்தவை; மடக்காவது : வந்த சொல்லே ஒவ்வொரடியிலும் வந்து பொருள் வேறுபடும்படி பாடப்படுவது. இப்பாடல் ஒவ்வொரடியிலும் முதலிரண்டு சீரும் ஒரே சொல்லாக வந்த அடிமுதல் முற்றுமடக்கு எனப்படும். இது யமகம் எனவும் வழங்கப்படும்.
------------------------------------------------------------------------------------------------------------
கண்ணமை யன்ன வெழிறோ ளுருக்மிணி காந்தன்கஞ்சக்
கண்ணமை யன்னவ நீதமுண் டானெவ்வுட் கத்தனடிக்
கண்ணமை யன்னனி யற்றாநெஞ் சேமுத்தி காணவிடுக்
கண்ணமை யன்ன வுடலைச்சே றாதுக டன்மையன்றே.       22

கடத்த விரும்பத மூன்றினைக் கன்மமிக் காயமென்னுங்
கடத்த விரும்பத ராகுமென் னெஞ்சினைக் கட்டித்துன்பங்
கடத்த விரும்பத மாக்கிடிற் புண்ணியங் காலில்வாரற்
கடத்த விரும்பத ரார்க முடுக்கெவ்வுட் காரணனே.       23

காரம ருந்தனி மேனிய முன்ன வுகாரநன்ம
காரம ருந்த வெவ்வுள தாய்சேய் கதறத்தருங்
காரம ருந்த வதுபோற் பொறிசென்று காமமென்னா
காரம ருந்தயி லாதரு ளெற்குநின் கான்மலரே.       24

மலைவருந் தங்க ளறிற்றள்ளி யென்னை நமன்றமர்செம்
மலைவருந் தங்க மதைப்பெண்ணைப் பூவைக்கொள் வான்மறமா
மலைவருந் தங்க மதாற்புரி யும்முனம் வந்தருள்க
மலைவருந் தங்க லையிற்றுயின் றோயெவ்வுண் மங்கலனே.       25

மங்கலந் தங்க வந்தகன் கிட்டிலன் வாய்த்திங்குச்சே
மங்கலந் தங்க மதிலாழி சங்கம் வரைவித்தனன்
மங்கலந் தங்க மனமே பவமற வந்தவனார்
மங்கலந் தங்க வுடையவ னெவ்வுளின் மானவனே.       26

மானவ நந்த னரும்புதல் வாமணி வண்ணசந்த
மானவ நந்த வனந்திக ழெவ்வு ணிவாசமுன்கன்
மானவு நந்த வடிவைத் தனையெனின் வைக்கவதை
மானவ நந்த சயனாவிப் போதென் மனக்கல்லிலே.       27

மனவலங் கார நெடியவ மூவடி வாங்கியவா
மனவலங் கார திருவெவ்வு ளீச மணிவலய
மனவலங் கார மராகமுங் காட்ட மகிழ்வையுற்ற
மனவலங் காரண மென்கொலுன் னித்தொழ வந்ததுவே.       28

வந்தனந் தந்த வெனைநீ மறுக்கறம் மல்லறாரி
வந்தனந் தந்தவ றில்லல்ல லெங்ஙன மாற்றுவரார்
வந்தனந் தந்த விளரிபச் செல்வமா வைத்தனெனு
வந்தனந் தந்த மனைபுல் கயத்தெவ்வுள் வண்டலனே.       29

வண்டலங் கந்த வனமாலை மார்ப வனத்தெவ்வுளாம்
வண்டலங் கந்த மலரென நின்ற வஞ்சமல
வண்டலங் கந்த வீர்க்காயென் னினுமுனை மன்னுமெற்கு
வண்டலங் கந்தர மின்னார் மயலினை மாற்றுகவே.       30

மாற்றரும் புன்மைய துன்னடி யாரை மறந்திங்ஙனென்
பாற்றருந் தாகர மானே னதுசெயற் பாலதன்றே
சேற்றரும் பம்புய வம்பக வம்பசை செம்மணிக
ளேற்றரும் பட்ட முலைப்பொன் னோடெவ்வு ளிருப்பவனே.       31

இருந்தா யெழிலெவ்வு ளென்செய வோவந் திரந்தவெற்கு
வருந்தா திருவெனும் சொல்வன்மை யின்றி வலியநிரு
தருந்தா னவரும் விருந்தா யருந்திடச் சண்டனுக்குத்
தருந்தா வறுவலி யைக்கலி யைக்கண்டு தாங்கலற்றே.       32

தாங்கிலை யேனுஞ் சரணார விந்தந் தராயெனினு
மூங்கிலை யூதிய வேதிய வெவ்வுள முன்னவவா
றூங்கிலை மேற்றுயில் கொண்டவ வன்பரைச் சுட்டியவர்
பாங்கிலை யோவெனைக் கூட்டா யெனிலென் பகர்நினைவே.       33
      *நிரோட்டகம்
நினைத்தனை யென்னி னினக்கேல் செயலினை நேரச்சிந்தை
தனைத்த னைந்தின னிடத்திற்செல் கலாத்திற் சார்தற்கென்னே
யினைத்தனை யர்க்கென் றினியீக லாதெனை யீயநின்னிற்
றினைத்தனை யென்னை நினைக்கிலை யேயென் றினகரனே       34
---------------------------------
*நிரோட்ட(க)ம் என்பது இதழ் முயற்சியாற் பிறப்பனவாகிய உ, ஊ, ஒ, ஓ, ஒள,
ப, ம, வ என்னும் எழுத்துக்கள் வாராமற் பாடப்படுவது,
உ, ஊ, ஒ, ஓ, ஒள, ப, ம, வ விவற்றியைபு, சேராநி ரோட்டத் திறத்து," என்றாராகலின். நிரோட்யம் என்பது நிரோட்டம் என நின்றது. நிர் = இன்மை. ஓட்டியம் = உதடு சம்பந்தமுடையது. இச்செய்யுள் அவ்வாறமைந்தமை காண்க. [தண்டி: சொல்லணியல்].
-------------------------------------------------------------------------------------------------------------
*காதை கரப்பு.
கராவுகச் சேதி தவந்தார் வலயம் காநமவ
வராக ததிசோ ரதணிந் தனனீ வழிநணுக்
பராவரு [மெ]மீச கணிக்கறு நாம பனகமனா
மராமிசை வாமத வந்தனின் முன்னந்த மானவனே.       35
[35. *காதை கரப்பு என்பது, ஒரு செய்யுள் முடியவெழுதி அதனீற்று மொழிக்கு முதலெழுந்துத் தொடங்கி ஒவ்வொரெழுத் திடையிட்டு வாசிக்கப் பிறிதொரு செய்யுட் போதுவது, [தண்டி; சொல்லணியியல்]
இதனீற்று ('கராவுக' என்ற செய்யுளின்] மொழிக்கு முத லெழுத்துத் தொடங்கி
யொவ்வோரெழுத்து இடைவிட்டு வாசிக்க,
“தனமுனிந்த வாமிம
மனமறுக்க மீருரா
கநவனந்த சோதரா
வநமலர்ந்த சேகரா"
என்னும் வஞ்சித்துறை வந்தமை காண்க.]

+திரிபங்கி
ஆனந்த தாய்நின்னை யேயனை யாய்இம்ப ராமெவ்வுளாய்
தானவள் ளால்மின்னை யேலு ரனேநம்பு தாளினனே
ஊனமுள் ளேன்என்னை யாளுவை யேவெம்பு வோததிதீர்
ஈனமுள் ளேல்முன்னை மாதவ னேதம்ப மேயரியே.       36
[36. +திரிபங்கி என்பது:
யாதேனும் ஒரு செய்யுளாய் நின்று ஒரு பொருள் பயப்பதன்றி அதுவே மூன்று செய்யுளாய்ப் பிரிந்து முடிந்து வெவ்வேறு பொருள் பயக்கத் தக்கதாகப் பாடப்படுவது. திரி = மூன்று,பங்கி = பேதமுடையது. [தண்டி: சொல்லணியியல்]
இஃது பின்வருமாறு மூன்று வஞ்சித்துறைகளாக அமையும்:
1. ஆனந் த[த]தாய் தான வள்ளால் ஊன முள்ளேன் ஈன முள்ளேல். 2. நின்னையே யனையாய்
மின்னையே லுரனே
என்னையா ளுவையே
முன்னைமா தவனே.
3. இம்பரா மெவ்வுளாய்
நம்புதா ளினனே
வெம்புவோ ததிதீர்
தம்பமே யரியே.

*பிறிது[படு] பாட்டு
அரியே யலகை முலையுண் டழித்த வரியநிற்கே
புரியே னென்றியா னுனையெக் காலமேனு மொருவகில்லேன்
தரியே னுறுகண் சலதியின் மூழ்கிச் சராசரத்திற்
றிரியே தமற வருளெவ்வுள் வாழ திதிசுதனே.       37

[37. அடி தொடைகளை வேறுபடுத்தலால் முன்னைய நிலை மாறி வேறொரு செய்யுளாகும்படி பாடப்படுவது பிறிதுபடு பாட்டு, [தண்டி: சொல்லணியியல்]
இச் செய்யுள், நிலைமண்டில வாசிரியப் பாவாகவும் வருதல் காண்க.
அரியே யலகை முலையுண் டழித்த
வரிய நிற்கே புரியே னென்றியா
னுனையெக் கால மேனு யாமொருவ
கில்லேன் தரியே னுறுகண் சலதியின்
மூழ்கிச் சராசரத் திற்றிரி யேதமற
வருளெவ் வுள்வா ழதிதி சுதனே.]

+தகரவருக்கச் செய்யுள்
திதத்த ததிது ததைதூ திதத்தொத்த தேதித்தித்தே
துதித்த தத்தத்த துதைதூது தத்துத்தத் தொத்ததிதத்
துதித்த துதைத்ததீ தாதா ததிததத் தோதத்தத்த
ததித்த துதித்ததொத் தித்துத்தித் தத்தத்த தாதிதித்தே.       38

+இச்செய்யுள் தகரவருக்கத்தால் அமைந்தது.
இது மடக்கு என்னும் சொல்லணியின் பாற்படும்.
இதன் பொருள்:
திதித்த = நிலைத்த, ததி = தயிரை, து= உண்ட, ததை = நெருங்கிய, தூதி
தத்து= (பாண்டவர்) தூதினினிமைக்கு. ஒத்த = சரியான, தே= தெய்வமே, தித்தித்தே = இரசித்தே, துதித்த = (யாவராலும்) துதிக்கப்பட்ட; தத்தத்த= வரங் கொடுப்பவனே, அதீதா = குற்றமில்லாதவனே, தாது=பூந்தாது, அதி = அதிகரித்த. ததத்து = அகலத்தையுடைய, ஓதத்து = சமுத்திரத்திற் சயனித்த, அத்த= அத்தனே, ததித்த துதித்தது = ததித்த துதித்தென்ன தாளம், ஒத்தி = தட்டி, துத்தி = பாம்பின் படப்பொறியில், தத்து = தாண்டின அத்த= எப்பொருளுமுடையவனே, துதை = நெருங்கிய, தூ = உடலாகிய வூனில், துதம் = அசைவுடைய, துத்தத் தொத்து= நாயாகிய வடிமைக்கு, அதிதத்து = அதிக ஆபத்து, உதித்தது = தோன்றியது; (ஆதலால்) உதைத்து = அவைகளை நின் பாதத்தா லுதைத்தும், திதித்து = என்னை ரட்சித்தும் தா = பரமபதத்தைத் தந்தருள், என்பதாம்.

*ஆறாரைச் சக்கரம்
பதக்கணி லெவ்வுளுள் வீதிக ளில்லன்ப ராதரிக்க
மதக்களி றாங்கொங்கை ரதிவரன் றாதை வருவனந்தா
நிதக்கவ லைப்பிணி வாராதின் னம்புனை நீமுற்றும்பா
பதக்கம லத்தைநின் றாய்கலுழ்ந் தாழலென் பாழகமே.       39

*இது சக்கரபந்த மென்ற சித்திரகவி வகையைச் சார்ந்தது. வண்டியின் சில்லுப்போல் அமைக்கப்பட்ட சித்திரத்தில், சில உறுப்புக்களில் எழுத்துக்களைப் பொதுவாக நிற்கும்படி யமைத்துப் பாடப்படுவது சக்கர பந்தமாகும். சக்கரம்: வண்டியின் சில்லு; பந்தம் = கட்டு; ஒடுக்குதல். சக்கரத் துட்டடு மாறுதறானே சக்கர பந்த மெனச்சாற் றினரே” என்பது மாறனலங்காரம். இது நான்காரச் சக்கரம், ஆறாரச் சக்கரம், எட்டாரச் சக்கரம் என மூவகைப்படும். ஆரைச் சக்கரம் எனவும் படும்.

39. "பதக்கணி லெவ்வுளுள்' என்ற பாடல் மேற்காணும்
ஆறாரைச் சக்கரத்துள் அமைந்திருத்தல் காண்க.
இது, ஆறு ஆராய் நடுவே "தி'' என்ற எழுத்து நின்று ஆர் ஒன்றனுக்கு ஒன்பதொன்ப தெழுத்தாய் குறட்டின் மேல் (ஆர்க்கால்களுக்கு அடியில் உள்ள குடத்தின் வளைவான பாகம்) வீரராகவன் என்ற பெயர் நின்று சூட்டின்மேல் இருபத்து நான்கு எழுத்து நின்று இடக் குறுக்கு ஆரின் முனையிலிருந்து அதன் எதிர் ஆரின் முனையிறுதி சென்று முதலடி முற்றி, அடுத்த வலக்கீழ் ஆரின் 'முனையிலிருந்து அதன் எதிராரின் முனையிறுதி சென்று இரண்டாமடி முற்றி, அடுத்த வலக்கீழ் ஆரின் முனையிலிருந்து எதிர்த்த மேல் ஆரின் முனையிறுதி சென்று மூன் றாம் அடி முற்றி, அதற்கடுத்த வலக்கீழ் ஆரின் முனையிலிருந்து வட்டை வழியே வலஞ் சுற்றி நான்காமடியால் முடிகின்றது.

*வல்லினச் செய்யுள்
தாதா சுகப்பொறி பத்தர்சொற் றிட்டபா தைக்கக்கேட்ட
காதா கதைகோடு கட்கத் தொடுதடி கைக்கட்பெற்ற
போதா பதைபதைக் கக்கெட்ட துட்டற்குப் புக்கதுபோ
தாதா தடுத்ததைப் போக்கிட்டுக் காத்திபற் றப்பதத்தே.       40
[இது வல்லின வெழுத்துக்களால் அமைந்தமை காண்க.

**கூட சதுக்கம்
பாழுங் கருக்குழி வாய்விழுங் கன்மத்தின் பாதமறச்
சூழுநண் ணாமுது ஞானநன் மாக்கட றோய்ந்துண்ணமே
லூழுங் கெடவந் தயர்ந்தெவ்வுள் வாச வரம்புரிந்து
வாழுங் கதிதரு முன்சர ணாம்புய மான்மனமே.       41
[**நான்காமடி யெழுத்துக்கள் ஏனை மூன்றடியுள்ளும் நிற்குமாறு பாடப்படுவது கூடசதுக்கம்: கூடம் = மறைவு. சதுக்கம் = நான்கு. மறைவான நான்காமடி யுடையது என்பது பொருள் [தண்டி: சொல்லணியியல்].
இதன் ஈற்றடி எழுத்துக்கள் ஏனை மூன்றடியுள்ளுங் கரந்து நின்றமை காண்க.

+மெல்லினச் செய்யுள்
மான்மா மனமன்னி னானேமி மாணன் மணிமன்னனெம்
மான்மா னிநன்மண னாமனம் மண்ணனம் மண்ணன்மண்ணுண்
மான்மாமை மின்னண்ணு மைமான மேனி மனுமினனை
மான்மான நண்ணாம னானுன்னி னேனிங்ஙன் மன்னமுன்னே.       42
[இதனுள் மெல்லின வெழுத்துக்களே வந்துள்ளமை காண்க]

@கரந்துறைச் செய்யுள்
முன்னந் தனுச்சேமஞ் செய்கிலா ரன்பர் மூர்க்கனாக்கை
பொன்னந் தரையிற் புதைத்திழக் கும்மவர் போற்றரித்தாம்
அன்னந்துய்ப் பிய்த்துமெல் லப்பதனம்புரிந் தானென்றொல்லை
மன்னந்த மைகர மாறா வருளெவ்வுள் வாழ்வலனே.       43

[கரந்துறைச் செய்யுள் என்பது: ஒரு செய்யுள், பிறிதொரு செய்யுட் சொல் புகாது எழுத்துப் பொறுக்கிக் கொள்ளலாம்படி பாடப்படுவது. இஃது கரந்துறைப் பாட்டு எனவும் படும். [கண்டி: சொல்லணியியல்]. இதனுள் “தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது” என்னுஞ் செய்யுட் சொற்புகாது எழுத்துக்கள் வந்தமை காண்க]

$இடையினச் செய்யுள்
வலவா வொழியவா யொளிரெவ்வுள் வாழரியே
வலவா வலாரி யுள்ளே யயர்வீர் வலியவைய
வலவா வயவ ருயிரயி லேவ வலயவாழி
வலவா விழிவா ளரிவைய ருள்ள வழியுழையே.       44
[இச்செய்யுளில் இடையெழுத்துக்கள் விரவிவந்தமை நோக்குக.]

ஒற்றின்றி வந்த செய்யுள்
*உழைவிழி மாதி னொடுகா னகமே குறுதினமா
உழைவழி மேவு சிலைபுத லாதி யுனை மகிழ
இழையுப கார மெவனதை நீயுரை யீசதிரு
இழையணி சேருர கேசவ வேத விறுதியனே.       45
[*இப்பாடல் மெய்யெழுத்துக்கள் விரவாமல் அமைந்திருத்தல் காண்க.]

இறுதிபெ றாவென் றுன்பங்களோநின வின்னிசைகள்
அறுதிபெற் றாலுமுன் னின்னருள் போல்விளை வாகிநின்றே
உறுதிபெற் றேமிகு மென்னவை யா தலி னூங்குணரப்
பெறுதியெவ் வுட்பர மானவ பாவம் பிரிபடவே.       46

பாவனை செய்ய மனமுண் டெனினும் பருசுவரின்
மீவனை யோவியப் பூவையஃ தொக்கும் விகசிதத்திற்
பூவனை யீன்றவ வெவ்வுள்வா ழந்த பொருளொடுறும்
பாவனை யாயரு ளுண்டெனின் மேவும் பரிமளமே.       47

பரிந்திடக் கஞ்சனைக் கொன்றவக் கஞ்சனைப் பாலித்ததென்
புரிந்திட வென்னைய வன்பூவி லெவ்வுட் புரத்தவென்று
சொரிந்திடக் கண்ணீ ருள்நெகக் காவெனச் சொல்லிக்கரம்
விரிந்திடத் தாவரு ளென்றக லேனிற்கும் வேதனையே.       48

வேதனை யானன்றி யெவ்வேவா தரமும் விதித்தனனிவ்
வேதனை யெங்களுக் கென்றென்றுஞ் சொல்வா மிகுவசைநின்
போதனை யென்றறி யாரூர்க் குதவாப் புதல்வனென்ற
வேதனை யீன்றனை யெவ்வுள நின்னையு மேற்குமதே.       49

ஏற்கும் பதமரு ளாயென்னி லென்பழி யேற்குநிற்குத்
தோற்கும் மெனவுண ராயென்று சொல்லலென் றுன்மதியே
வேற்கும் பழிப்பளி கண்ணிற தாயெவ்வுள் வீரமறை
நோற்கும் பழியறம் நிற்கில்லை யென்று நுவன்றிடினே.       50

நுவன்று பனுவலை லோபர் வெறுங்கை நுவலவகங்
கவன்று வரும்பா வலர்போல நின்றிருக் கண்டுதளி
துவன்று வந்தேற் கருளில்லை யென்றானின் சுரந்தளிக்கை
யவன்றுன்னு மெவ்வுள் நிற்கறி விப்பதென் னாமறிவே.       51

அறிவாய் மனித னுருவா யெடுத்துற்ற வப்பொழுதே
பொறிவாய்ப் புலன்கள் கிடையாம னோய்கொளப் புக்கினுடல்
செறிவாய்ப் பொருந்த வெயிற்புழுப் போறுடி செய்கையைநீ
முறிவாய்! வுறாதெவ்வு ளாய்முறி செய்கவிம் மூடனையே.       52

மூடும் படிபாநு வைமறைத் தாய்முன்னை முன்னிரண்டிற்
கூடும் யுகத்தி லதுபோ றிரியுமேற் கொளும்யுகத்தில்
வாடும் படியென் னவிர்ஞான பாநு மறைத்தனையான்
வீடும் படிவ திலையெவ்வு ளாயென் விளம்புவதே.       53

விளங்க வெமக்கருள் செய்வானிவ் வெவ்வுளின் மேவவவன்
உளங்கனி பேரரு ளிங்கும்வந் தேத்திட்டு முண்ணவந்தீர்
துளங்க வுடற்றுவ நும்மைநும் மூர்வரிற் றோத்திரிப்பீர்
களங்க மிலாதே குகவர னாதி கடவுளரே.       54

கடத்த நினக்கு நியாயமுண் டோவெங் கருமத்தினென்
னிடத்த விரும்பவ நோய்வினை யாவு மிகுத்தலின்றிக்
கடத்த வனுக்கருள் செய்தவ வெவ்வுள கட்செவியி
னடத்த வினைதீர்த் திடும்வீர ராகவ னாமமுற்றே.       55

நாமஞ் சொலுந்தொழுந் தாமம் வினவு நடுங்குமென்பெண்
காமஞ் சகிக்குமோ நீயே யுனக்கன்று கானிலுன்சே
யாமஞ் சலரான் புரிதுன் பினையும்பி யாற்றிடப்பல்
யாமஞ் செலுத்தியு மாறினை யெவ்வு ளிராகவனே.       56

இராக மொழித்தே வியர்மக்கள் வீடெனதி யானெனுந்த
மராக விருஞ்செல்வ மிச்சித்து நீயுநல் வாழ்வுவக்கின்
பராக மரைப்பத வச்சுத வெவ்வுள பாரிடந்த
வராக வடியேன் விடுவெனோ பாசப்புன் வாழ்வினையே.       57

வாழ்வார் மறைத்தமிழ் செய்தேத்தி நின்னைநின் மாண்பதத்தில்
ஆழ்வார்க ளென்றழுக் காறடைந் தேனன்றா யன்பொடுனைத்
தாழ்வார் தலையும் பனுவலு மின்றித் தளந்தெனந்தோ
சூழ்வார் கடல்வைப்பி லென்செய்வெ னெவ்வுணற் சுந்தரனே.       58

சுந்தர மாயுண்மெய் மூவாசை யாதியிற் றூக்குமன்பி
லந்தர மாயி னரைமா மடங்கு மடைந்திலனே
கந்தர மேனிய வெவ்வுட் கவுத்துவக் கந்தரசு
தந்தர மென்றெணு மன்புநின் பாதச் சலசத்திலே.       59

சலசத் திருவரைச் சேர்க்கி னகந்தை தருவரெவ்வுள்
நலசத் துவக்குணக் குன்றே நலமெலா நாடிக்கொண்டே
குலசத் துருவெனத் துன்பமெல் லாமெற்கு கூட்டலென்னே
கலசத் தெனுமனத் திற்பதி யாய்நின் கழன்மட்டுமே.       60

மட்டுற்ற கட்டிய மொட்டுமுட் டிட்டுமட் டற்றகட்டு
வெட்டுற்ற புட்கழற் கெட்டதுட் டத்தெட்டர் விட்டவிட்டக்
கட்டுற்ற லற்றெலற் றட்டதிக் கெட்டிடிக் கட்டுருட்டேர்த்
தட்டுற்ற கொற்றவ சொற்றிசற் றெவ்வுளுட் சக்கரனே.       61

சக்கரத் தற்புதற் கற்புரற் கெவ்வுளிற் றற்பரற்கெட்
டக்கரத் தத்துவற் கெய்ப்பறக் கிங்கரத் தாட்பட்டனென்
உக்கரத் தத்தற்ற கட்குடற் கப்படைக் கொற்றர்க்குப்பா
சக்கரத் திற்குடற் றற்குமஞ் சேனண்டல் சண்டவந்தே.       62

சண்டைகொண் டெண்டிசை மண்டலர் தூற்றிச் சபிப்பரன்றி
விண்டையொக் கும்பொன் றருகினு மெல்லுரை மேவுவரோ
கெண்டை விழிச்சியர்ப் போன்றில னின்னருள் கிஞ்சித்தெற்கு
விண்டை யெனிற்கொள்வன் விண்போக மாக விறல்விண்டுவே.       63

விண்டல மண்டல மாயநல் குரவினை மேவிடவா
கண்டல னாதிய ரேத்திடத் தொண்டர்தங் கண்ணிமையா
மண்டல ரிட்டுறத் தேவியென் றேயெவ்வுள் வந்தனைபொற்
குண்டல மாதவ மாதவஞ் செய்ததென் கூறுகவே.       64

கூறுங் களியன்பொ டீன்றோ ரழைக்கக் குழவிநனி
வீறுங் களியன் புறவரும் போலெவ்வுள் வீரமுன்ன
மூறுங் கருத்தன்பு நின்னிடத் தொட்டுணை யுண்டெனிலெற்
காறுங் கடலு மடங்காமிக் கன்பெழு மாய்ந்திடினே.       65

ஆயுங் குதலை மழலை ததும்பவ ரற்றென்சொல்லி
லேயுங் கசிய விலையெனி லுன்மன மெத்தகைத்தோ
காயுங் கொடிய வறுமையி னெக்குக் கசிந்தென்றுமென்
றேயுங் கவன்மனங் கல்லன்று மெய்யெவ்வுட் டேசிகனே.       66

தேசவி ராடக வாடைய பாடக தென்னெவ்வுளின்
வாசவி ராகவ வாசையிற் றத்த வான்றொழிலி
னேசவி திப்பினை யவ்வவ் விபுதர்நி கழ்த்தினரசர்
வேசவி சித்திர செய்ததென் னின்றொழி லீண்டுரையே.       67

ஈண்டு விளைநில மீண்டு வெறுநில மென்றெழிலி
வேண்டுவ தின்றிப் பொழியுமஃ தொத்துயிர் மேல்விருப்போ
டாண்டு வருநீ யறிஞர்க் கருளி யறிவிலெனை
மீண்டு புரந்திலை தோற்றைமங் குற்கெவ்வுள் வித்தகனே.       68

வித்தக மார்ந்தின் னிசையோ டிசைத்த விமலர்கவி
எத்தக வாலுவந் தேகேட் டருளினை யெவ்வுளவென்
பித்தக லற்பக் குரல்கேட் டருளிலை பேர்மறையோய்ப்
புத்தக நச்சல வெறுப்புநிற் கின்றெனப் போற்றலினே.       69

போற்றுந் தசாவ தார மெடுத்தனை போற்றுமெம்முன்
றோற்றுந் தனித்தவிவ் வர்ச்சாவ தாரந் தொடுத்துனிசை
சாற்றுந் தவத்தன்பரிந்திராதி தேவர் சரணிறைஞ்ச
வூற்றுந் திருவரு ளோடெவ்வு ணின்றதென் னுத்தமனே.       70

உத்தம பத்தரை முத்தியில் வைத்தெவ்வு ளுத்துங்கநற்
கத்தம கத்துவ னேநீ யளந்திட்ட காலத்தினா
னித்தம ரக்கடல் வைப்பினி லுன்பதத் திற்படாமல்
சத்தம ரெவ்வுரு வுற்றன ணெங்கணுந் தங்கிலனே.       71

தங்களை யுண்டவ லிங்கெவ்வு ணின்றவ தத்துரலம்
பொங்களை வுற்ற புண்ணொழு கூன்சீப் புலாலொடுகண்
மங்களை யுற்ற வுடலையெவ் வாறயன் வைத்துக்கைம்ம
நங்களை யாமற்செய் தானெமக் கேயுன்ன நாறலினே.       72

நாறு வளரு மழைபெய்ய நின்னரு ணாடவன்பர்க்
கூறு மனத்தன்ப தாலுடல் போய்முத்தி யுய்க்கப்படும்
சோறுமற் றுண்டிவ் வுடல்பருக் குந்தொறுந் துன்விகார
மாறு மெனக்கு வளர்ந்தாலென் னாமெவு ளாண்டவனே.       73

ஆண்டதுண் டென்னை யெனிலடை யாள மறிகிலனே
பூண்டவென் னன்பு புலன்வழி வீணுறப் போகலினே
நீண்ட வுதிப்பெனக் கெங்ஙன நீயின்னஞ் செய்தனையோ
நீண்ட வுருவ வருளொரு வாவெவ்வு ணிர்மலனே.       74

மலங்கப் பிணிப்பிணி காளெவ்வு ளீசன் வறுங்கல்லையன்
றிலங்கப்பெண் ணாக்கின தாளா லிருத்திடி னென்றலையிற்
றுலங்கப் பெருஞ்சித் துருக்கொள்வெ னீரிடந் துன்னலின்றிக்
கலங்கப் பெறுவிர கன்றுறை மின்வணங் காரிடத்தே.       75

இடத்திற் சிரத்தில்வைத் தானர னொவ்வொரு வின்பெண்முகத்
திடத்திற் பிரமன்வைத் தானொரு பெண்பொறி யென்றுநிறத்
தடத்திற் பரித்தை நீயெவ்வுள் யான்பல தையலுள்ளத்
தடத்திற் பரித்தே னுளரோவென் போலிச் சகதலத்தே.       76

சகல சராசரத் தின்னுயி ருட்சஞ் சரிப்பையென்று
புகல மறைகளு மப்படி யென்னுட் பொருந்துனக்கென்
இகல வறுமையி னால்வருந் துன்ப மியைந்திலதோ
அகல வறுக்கா திருப்பதென் னெவ்வு ளருட்கடலே.       77

அருளைப் பொழிந்தன்ப ரன்புப் பயிர்வளர்த் தாளெவ்வுளாய்
தெருளைப் படுக்க வருமூப் பலக்கண்கள் செய்யுமென்றே
யுருளைப் படுகின்ற வென்னெஞ்சங் கட்டி வுடற்றுநமன்
மருளைப் பொருந்த வதைக்குந் துயர்க்கெவ் வணமுறுமே.       78

வணங்கா ருனையென் னினைந்தோ வினோத மகிமைபல
குணங்கா சினியிற் பதிதொறு நீசெய்யுங் கொள்கை கண்டும்
மணங்கா விரியெவ்வு ளாயுன் விடயத்தின் மன்னச்சற்று
மிணங்கா முடிமுத லாக்கொண் டறிவி விழிஞர்களே.       79

இழிந்த பகைவ நலியத்துன் போடெவ்வி லே[க்]கருமுன்
வழிந்தவ ரின்னரு ளேற்றெவ்வு ளீசதம் வாதையுறப்
பொழிந்தனர் பாவஃ தறியாம னாடுவர் புல்லியர்மற்
றொழிந்த விபுதரை நீரென்று கானலை யுன்னலொத்தே.       80

உன்னை யிகழ்ந்த வரைக்கொண் டெமனர குய்ப்பனப்போழ்
தென்னை படுவர் துயர்கூர்ந் தச்சோவென் றிரங்கிநைந்துன்
றன்னை முனிகுவ னானன்ன வர்க்கத் தகாவறிவை
முன்னை யளித்தனை யென்றெவ்வுள் வேத முடிப்பொருளே.       81

பொருளினை யீட்டி யறஞ்செய் திசையுடற் பூணவென்னி
லிருளினை யூட்டுந் தொழிலுண் டுனக்கன் பியற்றவென்னின்
மருளினை மாட்டும் விகாரமுண் டெற்கிங்ஙன் மற்றுனக்கும்
அருளினை நாட்டிட யாதுண் டுரையெவ்வு ளாகரனே.       82

ஆகர மாவருட் கானவ வெவ்வு ளலங்கற்றுழாய்ச்
சேகர வென்றும் வடிவே பெறாநின் றிருவருளாஞ்
சாகர மொற்க முறுமெனி லென்னபில் சாகுமுடற்
சீகர மொற்க முறற்குரை பார்கொலெஞ் சீதரனே.       83

தரமறி யாதுநின் னன்பரைக் கோபிப்பன் சண்டற்குங்கந்
தரமறி நோக்கினர்க் கும்முயிர்ப் பங்கு தருவன்வெங்கா
தரமறி வாகனற் கீவே னுடலைத் தணியெவ்வுண்மந்
தரமறி யம்புய யானுய்வ தெங்ஙன்சொல் தந்திரமே.       84

தந்திரங் கந்தர மந்தர சுந்தர சந்த்ரமுகா
சிந்திர ணந்தொறும் வந்துதி ரந்தெவ்வர் சிந்திநந்த
மந்திர வெஞ்சம முந்திய முந்தைய வந்தனமென்
றிந்திர னின்றுநி ரந்தர முந்தொழு மெவ்வுளனே.       85

எவ்வுளந் தானத்த னென்மன மேயெவ் விடத்துமுயிர்
எவ்வுளந் தன்னிலுந் தங்கவ னாமைந் திரும்புலனாந்
தெவ்வுளந் தேடுக நின்னுள மும்முளன் றேடினவை
தெவ்வுளந் தப்படக் கோறு முபாயத் திரமுமதே.       86

திரமுற்ற ஞானஞ்சற் றில்லாம லுன்பதஞ் சேர்வரோவல்
உரமுற்ற லின்றிச் செருச்செய்வ ரோவெள் ளுறழ்பொருளும்
கரமுற்ற லின்றி யறஞ்செய்வ ரோவென் கடவனந்தோ
பரமுற்ற வெவ்வுள யாதுமற் றன்பிலேன் பாரிடத்தே.       87

பாரிடந் தீசெய்ய றன்பா ரிடம்புரி பாவமுள
ஆரிடஞ் சொல்வே னுடறின்றுந் தாங்கியு மாகலினே
வாரிடந் தோங்கு முலையாள் கனகவல் லிக்கொண்கனே
சாரிடந் தோன்று வளைகொண் டுளையெவ்வுட் டானத்திலே.       88

தானக் கரியின் மருப்பொடித் தாயண்டந் தந்துதுட்ட
ரூனக் கரிய நிசாசரர்க் கொன்றிங் குழலுமக்கள்
வானக் கரியவிந்த் ராதியர்க் காத்தும் மைத்தொழில்கொண்
மானக் கரியெனு மெவ்வுள வெத்தொழின் மற்றும்பர்க்கே.       89

மற்றும்பர் தெய்வ முண்டெனி னின்னிடம் வந்தண்டங்கள்
முற்றும் பலவுயிர் யாவு மடங்கி முடிதலென்னே
பெற்றும் பெறாவறி ஞர்க்கென் புகல்வல் பெரும்வெற்குப்
பற்றும் பொருளும் பயக்குஞ் சுகமுநின் பாதங்களே.       90

பாதபங் கேருக பத்மவி லோசன பத்மநாப
நாதபங் கன்பரைக் கிட்டா தருள்பவ நற்றிருச்ச
மேதபங் குன்னிடம் பெற்றார்க ளோசில விபுதர்கொடுந்
தீதபங் கொண்டலை வாரெவ னெவ்வுட் சிகாமணியே.       91

மணிவண்ண வெண்ணுந் துவாதச நாம வதனங்கஞ்ச
பணிவண்ணத் தியார்க்கு முவமேய மானவ பன்னுமறை
துணிவண்ண கிற்றில வாமென் வுளவென் றுயரமுரும்
மணிவண்ண மானிட வின்பம்வா ளாபெரும் பேறுடைத்தே.       92

பேறுக் கலைவதென் னெல்லாக் கொடுமையும் பேதமின்றி
வீறுக்குச் செய்தனை வேம்பூன்றிக் கன்னலை வேண்டலொத்தே
சோறுக் குழலு மதியே மதிமதி தோன்றுமிடை
யூறுக் குதவெவ்வு ளூரனம் போருக வொண்பதமே.       93

பதங்கண்ட போதெவை செய்கில ரெவ்வுளிற் பண்ணவன்பூம்
பதங்கண்ட போதெவர் முத்தியின் றாயினர் பாநுவையே
நிதங்கண்ட போதெக் கமலம்விள் ளாதன நின்னிடஞ்சற்
றிதங்கண்ட போதுனக் கேனருள் கிட்டில தென்னெஞ்சமே.       94

நெஞ்சங் கிடப்பன முக்குற்ற மாதிய நீர்த்தடத்திற்
கஞ்சங் கிடப்பன போற்றுதி பூசைமெய் காதனன்மை
கொஞ்சங் கிடப்பன மேலாகச் சைவலக் கொள்கையெனத்
தஞ்சங் கிடைப்பன வோவெனக் கெவ்வுட் டயர்சிந்துவே.       95

சிந்திக்கு மூவருக் கேற்றே யொழுகுந் திறஞ்சற்றுமில்
மந்திக்கு மூடன் றெரிவரி தாயெவ்வுள் வாயமரர்
வந்திக்கு நாலாவ தாந்தெய்வ மேயுன் வழிப்பட்டெங்ஙன்
புந்திக்கு ளார்வம் பொருந்தி யொழுகுவல் பூதலத்தே.       96

பூதமைந் தாலுடல் செய்துவித் தாயெனிற் பொன்னனைமுன்
காதமைந் தாரு நரசிங்க மானவ காசிபன்வி
நோதமைந் தாவெவ்வுள் வீரநின் றொண்டன்பு நோற்கவதன்
மீதமைந் தாவன யாவுங்கொள் வாய்வல்லை வீயுமுன்னே.       97

வீயாமற் செல்வம் விரவாம னோய்மெய் விழாமலுநீ
மாயாமற் பாலிக் கினுமென் மனத்தொடு வாழ்வுவக்கேன்
நாயாமற் பன்றனைக் கண்ணோட்ட மிட்டு நணுகிச்சற்றும்
காயாமற் காத்தரு ளெவ்வுளி னேரற்ற காகுத்தனே.       98

குத்துந் திரைகட லேழையு மோர்கணை கோத்தட்டனை
தத்துந்தோ லென்பவ் வாரிதிக் கோபல சரம்விடினும்
மத்துந்தி நாட்டினு மேகலங்கா வெவ்வுள் வாணவுருப்
பத்துந்தந் தாய்நின் னருட்கடைக் கண்ணே படவற்றுமே.       99

படப்படி யோர்களுன் பேரென்னெனவிப் பவமெனும்வெவ்
விடப்படர் நீக்குநின் பேருரை யாவெனை மெல்லவென்பே
ரிடப்பட்ட தாகுநா ராயண தாசனென் னச்செய்தநின்
றிடப்பட்ட தாமுத்தி நன்றுநன் றெவ்வுட் டிருவூரனே.       100
திருவெவ்வுளூ ரந்தாதி முற்றும் ; ------------------------------------

7. *மதுரை யமக வந்தாதி
(மதுரையந்தாதி)

[*இவ்வந்தாதி முழுவதும் யமகம் என்னுஞ் சொல்லணியால் அமைந்துள்ளமை காண்க. யமகம் என்பது வந்த சொல்லே ஒவ்வொரு அடியிலுந் திரும்ப வந்து பொருள் வேறுபடுமாறு பாடப்படுவது.]
; காப்பு
ஆனன மைந்தன் புயமும் பதமுமெட் டானெடுமா
லானன மைந்தன் புறநான் மதுரையந் தாதிசொல்ல
வானன மைந்தனென் றம்பிகை சிந்தைசெய் யெந்தை தந்தை
யானன மைந்தனஞ் சித்திவி நாயக னாள்வ துண்டே.
      சுபமஸ்து

நூல்
திருவந் தரவிந்த நீங்காத வாவி திகழ்மதுரை
திருவந் தரவிந் தணிவோனை வேதந் தெரிமொழிகந்
திருவந் தரவிந்த னஞ்சுமந் தோனைச்செய் 1தீர்வணங்கு
திருவந் தரவிந்த ஞாலம் பரிக்குந் திறந்தங்கவே.       1
[1. யீர்வணங்கு.]

தங்கந் தராதலங் கொம்மையங் கொங்கையர் தம்மின்மனந்
தங்கந் தராதலை நீக்கியென் றீவினைச் சாகரமா
தங்கந் தராதருள் தம்முயிர் தாம்பெறத் தாங்குவிண்ணோர்
தங்கந் தராதமிழ்க் கூடலெந் தாயுன் சரணளி2த்தே.       2
[2. மன்றே.]

சரங்கடந் தாவி பறிபோய் விடச்சம ணாகியகுஞ்
சரங்கடந் தாவி வரும்போது கூடலிற் றங்குசரா
சரங்கடந் தாவினைச் சாய்த்திடக் குஞ்சரஞ் சாயவிட்ட
சரங்கடந் தாவிமைப் போதெளி யேற்குந் தயாபரனே.       3

பரனாக மத்தன்பு செய்துதென் கூடல் பணிந்துதிகம்
பரனாக மத்த மணிந்தோன் புகழைப் பரவவல்லான்
பரனாக மத்தனு மாகப் பரிவில னாகதாயா
பரனாக மத்தனை யுஞ்சிவ ரூபமென் பாவினைக்கே.       4

பாவந் தியங்க விடாதேய்ந் திடப்பசுந் தேன்வழியப்
பாவந் தியங்கப் புரவலன் வாழ்வுறப் பாற்குநெஞ்சே
பாவந் தியங்கனைக் கூடற் பிரானைப் பரமனையென்
பாவந் தியங்களன் பாதத்தை யேதொழு பண்புறவே.       5

பண்டங்க நாதன் படும்பாடு மேற்படும் பாடுமெண்ணிப்
பண்டங்க நாதனைக் கூடலி லாடல் பணிந்தவன்பேர்
பண்டங்க நாதனைப் பாடவல் லனல்லேன் பற்பலவாம்
பண்டங்க நாதமி யேற்கென்று தோற்றுங்கொல் பாரகத்தே.       6

பாரக ராவர் மகுடேச ராவர் பரந்திடுபொற்
பாரக ராவ லுறுந்தவ ராவர் பணியிலென்றே
பாரக ராவடர் மால்போற்றுங் கூடற் பரன்வடிவைப்
பாரக 1ராகம் பதறநெஞ் சேகண் பணியிதுவே.       7
      [1. ராகும்]

பணிகல மால்படை தோலுடை பாரை யழித்தழித்துப்
பணிகல மாய்த்தந் தத்துதலை யோடென்று பாவிநெஞ்சே
பணிகல மாயின மதுரைப் பிரான்பற் 2றதுநமக்கு
பணிகல மாடஞ் சுமந்துழக் கென்ற பலங்கொள்வதே.       8
[2. றறு]

பலவாய ரானைப் புரந்திடு மாயன் பணிந்திடுமம்
பலவாய ராகடம் பாடவி யாயுன் பதமலர்த்தீம்
பலவாய ராவிய நன்மணி யாய்ப்பணி யாதுமுத்தர்
பலவாய ராமல்குற் பாவையர் காதலைப் பற்றுவனே.       9

பற்றா மதிக்கலை கண்டோன் பகலவன் கையிலவன்
பற்றா மதிக்க வடர்த்தோன் மதுரைப் பதிகதியாய்ப்
பற்றா மதிக்கய லோர்பதி பாடு பெறுவதுமாம்
பற்றா மதிக்க வுயர்ந்திழி வானதும் பங்கயமே.       10

பங்கய வாவியன் பார்படை யென்று பணிக்குமங்கை
பங்கய வாவியப் பண்ணவ னேபல மேதியோடிப்
பங்கய வாவி யளைந்தாடுங் கூடற் பராவெனவின்
பங்கய வாவி யலையாது கூற்றும் பகைமறந்தே.       11

மறவா வரமொன்று கூடலெந் தாயுயிர் வாட்டுமிரு
மறவா வரங்கெனு மிவ்வுடல் வீழ வரும்பொழுது
மறவா வரலை வழிமறித் தேமதிண் மூன்றெரித்த
மறவா வரவிடி லாவென்று நான்சொல்ல வைத்தருளே.       12

வையம் படைத்த மலரோன் வலாரி வலக்கையின்மேல்
வையம் படைத்தனி யாழிப்பி ரான்வழி வந்துதன்மேல்
வையம் படைத்த மதனைவென் றோன்மதிட் கூடல்பெற்றால்
வையம் படைத்தகை வாம்பரி யோங்குங்கை மாவருமே.       13

வரவிருந் தாவன செய்யாது மான்றலை யார்மனங்க
வரவிருந் தாவட ரக்கிடந் தாலு மதுரைப்பிரான்
வரவிருந் தாவன மால்விடை யான்மலர்த் தாள்கடிதி
வரவிருந் தாவஞ்சி யர்பா லிரந்தவன் வாழ்விக்குமே.       14

விக்கலை வாய்க்கொண்டு மேற்பதைப் பீர்நும் வெறுந்தவங்கா
விக்கலை வாரி வினையைவெல் லாது மிகவுநைந்தா
விக்கலை வாக மேலியர் தான வியன்கூடல்பார்
விக்கலை வாண ருடன்வாழ்ந் திருமது மேன்மையென்றே.       15

என்றா கவலை யொழிவென் பிறப்பு மிறப்புமிடர்
என்றா கவலை யறுவதென் றின்னருள் வாருதியில்
என்றா கவலைப் படர்வதென் றீச னெழின்மதுரை
என்றா கலைமதி யேனுக் கென்றிட மாவதுவே.       16

ஆவாக னாவிந் திரன்முத லோரன் பொழுகுநெஞ்சில்
ஆவாக னாவியன் கூடலெந் தாயுன் னடிபணியேன்
ஆவாக னாவிலு மீய்ந்தறி யார் தம்மை யைந்தருவே
ஆவாக நாவிற் புகழ்வேன் பெறுவ தறிந்திலனே.       17

இலங்கைக்கு மேல்வை யறிந்துதென் கூட லிறைவனைமுன்
இலங்கைக்கு மேநெல்லி யங்கனி போற்கதி யெய்து நெஞ்சே
இலங்கைக்கு மேல்வரை யழிப்பான் வந்திறுத் தவன்போன்ற
இலங்கைக்கு மேதி[னி] யாள்கைக்கும் வேண்ட லிடர்படிந்தே.       18

படியிடந் தான்விசும் பிற்பறந் தான்பதஞ் சென்னியெய்தாப்
படியிடந் தானுமை வாழ்வோன் மறைந்திலன் பாவிநெஞ்சே
படியிடந் தாவிய கூடலின் மான்மியம் பன்மணியாற்
படியிடந் தாமரைப் பொற்றா மரைக்குப் பரிவு செய்தே.       19

செய்ய கமலங் களைந்திட நாளஞ் சிறிதசைந்து
செய்ய கமலங்கள் செந்தேன் சொரியுந் திருமதுரைச்
செய்ய கமலங் கனல்புனைந் தோயென் செனனமறச்
செய்ய கமலங் களைந்துநின் பொன்னடிச் சே(ர்)வைதந்தே.       20

தந்தந் தரிக்குத் தனந்தோ வென நந்தி தாளமின்பந்
தந்தந் தரிக்கு நடம்புரிந் தோர்தமிழ்க் கூடலுற்றோர்
தந்தந் தரிக்கும் வரையுரித் தோர் தணந் தாற்கலைக்கோர்
தந்தந் தரிக்கும் வாகும்பெ றார்சக்க ரேசருமே.       21

சக்கர பாணியி னாலே சமைத்துத் தரித்திடுங்கஞ்
சக்கர பாணி தடம்புயத் தேதலை மாலிகையச்
சக்கர பாணினிக் கன்பனின் கூடலைச் சாய்க்கவந்த
சக்கர பாணியென் றேசுவ ளாய்வளை தான்கன்றவே.       22

கன்றிடப் பட்ட கொடிபோல வாடக் கருதிநறுங்
கன்றிடப் பட்ட னியக்கரு தாதென் கன்னிபொன்மான்
கன்றிடப் பட்டந் திகழ்கூட லங்கயற் கண்கொடிபா
கன்றிடப் பட்டபொன் மேருவில் லாய்க்கொண்ட கண்ணுதலே.       23

கண்ணுத லாந்தட வாள்பிறை தாங்குங் கயற்கண்வளர்
கண்ணுத லாந்தவ மீதெனக் கேகள்வ ரீனர்வஞ்சர்
கண்ணுத லாந்தர பொற்கூட லைக்கட வாதிருக்கக்
கண்ணுத லாந்தரஞ் சென்றலை வேனைக் கருத்துவந்தே.       24

கருத்தரு மானிட ராதிச் சனனங் கடப்பதற்கோர்
கருத்தரு மாதரு மங்களை யாய்ந்திடுங் காட்சியென்பார்
கருத்தரு மாபதி யார்வாழ் கடம்ப வனம்பணியுங்
கருத்தரு மாதர வாதாம் பிறவி களைவதுண்டே.       25

களைவரன் றோகொடுங் காமாதி யைவிக்கல் கண்டுபெருங்
களைவரன் றோவென் னாள்காலைச் செங்கம லத்திதழின்
களைவரன் றோகையர் போலே களிவண் டருந்தமணி
களைவரன் றோடு துறையாளன் கூடல்கல் லாதவரே.       26

கல்லார மையங் கழித்திட ழினுங் கள்ளமனங்
கல்லார மைவிழி யாற்பொரு வாரைக் கலந்திடினுங்
கல்லார மையல்செய் கண்டன் கடம்ப வனமறக்க
கல்லார மையு மருஞ்செவ்வி பார்ப்பர் கடவுளரே.       27

ஊராகந் தோயின் னிசையாழ் மடந்தைய ரோடுகுயில்
ஊராகந் தோடி யுடன்பாடுங் கூடலி லுத்தமரை
ஊராகந் தோணி கடவிக் கடல்கடந் தோடநல்லோர்
ஊராகந் தோன்று மணியா சனத்துட னோங்குவரே.       28

ஓங்கற் குடையுண்ண வீங்கிய கொங்கைய ரொண்குழலாம்
ஓங்கற் குடையுர கத்தல்கு லுக்கொளி ரும்விழிவாள்
ஓங்கற் குடையும் பொழுதேயுங் கூட லுடன் மறந்தில்
ஓங்கற் குடையுட னின்றோன் பணியு மொருத்தனையே.       29

ஒருவாக் குவலய நீங்குதற் கேதக்க னுக்குமுடி
ஒருவாக் குவல்ல வனே தமிழ்க் கூட லுருத்தழுந்த
ஒருவாக் குவடுசெய் தோய்வலி யானுக் குரைத்தபடி
ஒருவாக் குவந்து திருவாக் கருளெ னொருசெவிக்கே.       30

செவிக்கலங் காரமுறு தெள்ளமு தாந்திரு வைஞ்செழுத்தைச்
செவிக்கலங் காரண மெல்லா முரைப்பது சீரடியார்
செவிக்கலங் கார வடங்கண் டிகையவர் சேர்ந்திருக்குஞ்
செவிக்கலங் கார மதுரைப்பி ரான்புகழ்ச் சிந்தனையே.       31

தனையனை யான்கயற் கண்ணியை நின்று தாழுமுன்னே
தனையனை யானனத் தான்றிருப் பாதந் தலையில்வைத்துத்
தனையனை யாண்டு புரந்தரன் வாழ்வையுந் தந்துமுன்னே
தனையனை யானென வைப்பான் றரணி தனில் [வியப்பே.)       32

வியப்பாவை யைவரை வென்றோற்கு நீவெறும் வீணருக்கோ
வியப்பாவை யையநின் வீற்றியெண் மைவிழி….. ……..ங்கா
வியப்பாவை யைமரு வும்மிறை வாமெய் யடியர்சொன்ன
வியப்பாவை யைய மறப்புகல்வ வேண்டியன் கூடலுற்றே.       33

கூடல ராவிக் குவிமுலைப் பாளைக் கொலைமதன்கைக்
கூடல ராவிக் குறுங்கணை யானவன் கூரரத்தாற்
கூடல ராவிக் குறைப்பது தானுயிர் கூடக்கண்டாய்
கூடல ராவிக்கு நின்னகை போல்வருங் கோண்மதியே.       34

மதிக்க வடத்தமா மால்முத லோர்சென்று வேண்டவுமே
மதிக்க வடத்தட மால்வரை போல்வரு நஞ்சையுண்டு
மதிக்க வடத்தனை மேவா னெனவெண்ணி மானிடர்க்காய்
மதிக்க வடத்தனை நெஞ்சே மதுரையில் வந்துறைந்தே.       35

உறையூ ரனையெண்ணி யானிடுங் கூடலி லொள்வளையாய்
உறையூ ரனைய வெழுந்த தலரலை யொருமலர்க்காய்
உறையூ ரனைத்து மழித்தோர் வளை..... வு ரகமதிக்கு
உறையூ ரனைய முடியார் மதுரை யுயர்வரைக்கே.       36

வரைவா யலையெழு தத்துணிந் தாய்வஞ்சி சிற்றிடைநீ
வரைவா யலைவிடல் வேண்டுங்கண் டாயம் மதுரைக்குற்ற
வரைவா யலைவிட வாளாவ ராமங்கை பங்காதமிழ்
வரைவா யலையெறி தென்குன்ற நாட மனந்தெளிந்தே.       37

மனந்தந்தி யாயறி வங்குச மாய்மறித் தேயடக்கா
மனந்தந்தி யானமும் வாயாமல் நற்கதி வாய்த்திடுக
மனந்தந்தி யாவரும் வாழ்த்தவைப் பானலன் மாமதுரை
மனந்தந்தி யான வடிவா னெமக்கென்ன மாதவமே.       38

மாதவ னந்தம் பல்கோடி யாண்டுவந் தோய்ந்துலக
மாதவ னந்த மழியினு மாயை மயக்குபிற
மாதவ னந்தரந் தீராத மாந்தர்க்கும் வாய்க்குங்கொல்லோ
மாதவ னந்த மதுரையி லீசன் மலரடியே.       39

மலராக்கை மானிலந் தோய்முடி யாயும்பர் வாழ்த்தநிரு
மலராக்கை மாவன்னம் புள்ளோ டுலாவா மாத்திரமோ
மலராக்கை மாய்த்தவன் காப்பிந் திரன்பெரு வாழ்வுபெற
மலராக்கை மாவளம் யாவையுங் கூடலெம் மானருளே.       40

மானாகந் தோய மகிழ்வோன் மதுரை நகரிலட்ட
மானாகந் தோயத் திரையெறி வேக வதிதருமெம்
மானாகந் தோய மணிவோனைத் தேடுவர் மாலயன்சும்
மானாகந் தோயப் பறந்தோடிக் காணுங்கொல் வானகரே.       41

நகத்தா னடக்குஞ் சரம்பாயு மார்ப னடுங்குஞ்சற்றே
நகத்தா னடக்கும் புரமூன்று மாதலி நற்கயிலை
நகத்தா னடக்கு முலாவினிற் கூட நகரிலங்க
நகத்தா னடக்குஞ் சிதபாதம் போற்றுத னன்றென்பரே.       42

என்பணி யாநுண் ணிடைபாக மேரு வெனுந்தனு(ம்)நாண்
என்பணி யானுடற் றுஞ்சுமரா வென்செய் தாலுநன்றே
என்பணி யானுட னீவருங் கானின் றிறைஞ்சுவதும்
என்பணி யானுந் திருவால வாயி லிருப்பதுமே.       43

இராவண மேனி யொருபது சென்னி யிருபதுகை
இராவணன் மேருவை வெண்கயி லாயத் திடைகவித்த
இராவண மேறுந் தமிழ்க்கூட லாய்மார்பி லிட்டவேண்ட
இராவண மேழை யுதவா யிதழி யிதழிலொன்றே.       44

இதழிக்கல் லார்குழ லேந்திழை யாய்நினக் கென்றுபைந்தேன்
இதழிக்கல் லாரங் குணர்ந்தேன் விழியினை கொண்டுபொரு
இதழிக்கல் லாங்குலம் வெண்சங் குடைக்கு மெழின்மதுரை
இதழிக்கல் லாலம் புயமுத வார்வெற்பி லெண்ணமுற்றே.       45

எண்ண மாரநிமிர்த் தெய்தோன் முதலிய யாரிடத்தும்
எண்ண மாரநின்ற வென்னையொப் பாயுன் னிணையடிக்கென்
எண்ணமார நின்றிடு மாகி லன்றிளை யானொருவன்
எண்ணமா ரனிட ரெய்துதல் யானு மிழந்தனனே.       46

தன்னா தலனா வலனாத லெழின்மத னாதல்சிங்கா
தன்னா தலனாதல் புரந்தா னாதலுஞ் சற்றுமெண்ணென்
தன்னா தனாவெனு வண்டிசை யார்தமிழ்க் கூடலில்வாழ்ந்
தன்னா தனாலுன் பதம்புகழ்ந் தேனெனிற் சங்கரனே.       47

சங்கரி யாகந் தணவாய் தணந்ததக் கன்றலையைச்
சங்கரி யாக மெனச்சிதைத் தாய்தமிழ்க் கூடலுள்ளாய்
சங்கரி யாகண் டலன்போல் விழிகள்பொற் றாமரைநெஞ்
சங்கரி யாகப் புனைந்தா லெனக்குண்டு சற்கதியே.       48

சற்கதி காரண மாய்ப்பணி யேனச் சுதற்குநற்கஞ்
சற்கதி காரவி யார்விழி யாய்சன னப்பெருமூ
சற்கதி ராமுன் கூடலென் றேதங்கு வாரொடுபே
சற்கதி காரந் தரல்வேண்டும் யானத் தலந்தெரிந்தே.       49

தரியல ரத்தியை யெய்தவட் டாலத் தமிழ்ச்சொக்கனார்
தரியல ரத்தி யெனத்தரித் தோர்சங்க மேந்திசகோ
தரியல ரத்திரு நட்டமிட் டோர்தந் திருப்பெயரா
தரியல ரத்திர நாமநெஞ் சேதரி யாதகலே.       50

அகலந் தரமல ககிலாண்டங் கோயிலென் னம்மனைக்கோர்
அகலந் தரஞ்சுடர் தீபம் புவனமெல் லாமடுக்
அகலந் தரணியிற் கூடல்பொற் பீடமன் னாள்முலைக்குன்
அகலந் தரமைய நின்றா ளிணைக்கென்ன கந்தரமே.       51

அகந்தை வராலிணை போற்கணைக் காலென்ன மன்னவர்மால்
அகந்தை வராமலுன் கூடலில் வாழ்ந்துன் னடியர்நல்கி
அகந்தை வராடிகை போதுமென் பார்க்கு னருணிறுவி
அகந்தை வராவிய லையா துடற்றுதற் காண்டகையே.       52

ஆண்ட பிராய நடந்தோட வாண்மையு மப்படிப்போம்
ஆண்ட பிராமமென் னாமோதென் கூடலஞ் சோதியகில்
ஆண்ட பிராண நிலையே யிமையவ ரார்த்திடுபல்
ஆண்ட பிரானென் றடைவேனுன் பொன்னடி யம்புயமே.       53

அம்பு விலங்க நயனம் புரூர மமரிருந்தாள்
அம்பு விலங்கன் முலையனையார் மைய லாம்பெரும்பை
அம்பு விலங்க வருள்வா யரவ மசையமுட்டி
அம்பு விலங்கநல் வெள்ளிமன் றாடிய வாநந்தனே.       54

ஆநந்த மாக்கட வுளர்தம் போலவ னாகம்பெற்ற
ஆநந்த மாக்கட லாடுவ னோவெறும் பாதியனத்[த]
ஆநந்த மாக்கட லாய்தமிழ்க் கூடலி லமர்ந்தவையர்?
ஆநந்த மாக்கடம் மாருயி ராய்நின் றருளண்ணலே.       55

அண்ணலந் தாமரை யானன மாயருந் தூணில்வந்த
அண்ணலந் தாமரை யொன்றால் விழியணி யுந்திருத்தாள்
அண்ணலந் தாமரை மாத்திரைப் போதெண்ணி யம்மதுரை
அண்ணலந் தாமரை போற்றிரிந் தாமிம்மை யம்மையற்றே.       56

அம்மைக் கடைக்கலங் கானெறிக் கேமட வார்குழலாம்
அம்மைக் கடைக்கலங் காதலைக் கூட லரனையெண்ணி
அம்மைக் கடைக்கல கப்போர் விழித்துணை யங்கயற்கண்
அம்மைக் கடைக்கல மென்போமெண் ணேம்பல வாறுகளே.       57

ஆறு தரத்தறு பூதத்தர் கூடலி லன்பையற்கு
ஆறு தரத்தறு காதழைத் தோரங்கை யிற்பசும்புண்
ஆறு தரத்தறு கார்முடி யாரஞ் செழுத்தையெண்ணும்
ஆறு தரத்தறு மூன்று தரத்தறு மாள்வினையே.       58

வினையார வாரம் புனைந்தோயென் றாற்கெடும் வேறிடமே
வினையார வாரவி காண்பனி யாமின் னனாரிருத்த
வினையார வாரத்தில் விண்டுயி லாவியன் கூடனக
வினையார வார விழிபடைத் தார்க்கென் விழுமங்களே.       59

விழுமந் தகவிதென் றோரெ னுடலம் விழுமுன்வந்து
விழுமந் தகன்கடை வாய்க்கும்பற் றேன்மெய்யா முன்றலைக
விழுமந் தகன்றமிழ்க் கூடலெந் தாயுன் விழித்திருமுன்
விழுமந் தகனின் றிசைஞ்சேன் விழைவது மேற்பதமே.       60

பதங்கா தலைச்செய்து மாதவ மாம்பஞ் சுடரில்விழும்
பதங்காத் துப்பெய்த வன்பாற் பணியென் றனைப்பணித்துன்
பதங்கா தலைப்பெருஞ் சென்மந் தொலைக்கும் படியிறக்கும்
பதங்கா தலைக்கொண்டு நான்போற்றக் கூடற் பசுபதியே.       61

பதியா வதுமது ரைப்பதி யேயென்று பற்றநெஞ்சே
பதியா வதுவெவ் வினையெய்த தீவினை பாறவுமா
பதியா வதுமுது கேறும்பி ரான்பஞ் சவனெனும்பூ
பதியா வதுங்குறை வில்லாப் பதம்புனை பாவகத்தே.       62

பாவக நங்கை திருமால் விழிபக லோனெயிறு
பாவக நங்கை மணவாளன் சென்னி பறித்தவனென்
பாவக நங்கையற் கண்பாகன் கூடற் பரனையெண்ணென்
பாவக நங்கை தவங்களெல் லாமெப் படியஞ்சுமே.       63

அஞ்ச மருந்த வடைந்தசெந் தேனுண் டளியினங்கள்
அஞ்ச மருந்த வலர்மலர் கூட லார்விடத்தால்
அஞ்ச மருந்தன தண்ணளி யாரளித் தோர்தமெழுத்[து]
அஞ்ச மருந்தவ மேதவ மாநெஞ்சி லாரணற்கே.       64

ஆரணங் காணம் மதுரையி லீசனை யங்கயற்கண்
ஆரணங் காண மகலாளை யந்தத்தில் யாவருமுய்
ஆரணங் காணவல் லானை யுருவென் றருவமென்றும்
ஆரணங் காணவ னாவறிந் தார்சொல்லு மாய்ந்துகண்டே.       65

கண்டலம் பாதங் கணத்திடை யேகட் டியவுடைவாட்
கண்டலம் பாதகன் கூற்றுவ னாவி கவர்ந்திடவான்
கண்டலம் பாதலம் போற்றிய கூடற் கடவுளைநான்
கண்டலம் பாததெ னன்னோன் கருணையிற் காயத்தையே.       66

காயத் தரணிக் கனல்போற் சமாதியிற் கண்டுவினை
காயத் தரணியிற் கைதொழு வார்தங் கருத்தமரா
காயத் தரணி மதிட்கூட லார்கழற் போதருஞ்ச
காயத் தரணி கருமேநம் மாயைக் கடும்படைக்கே.       67

கடுப்போ னகங்கண்ட மட்டுண்ட வன்கடம் பாய்பெரும்ப
கடுப்போ னகங்கண்ட வட்டால நாதன் கணைமதனைக்
கடுப்போ னகங்கண்ட சூழ்கூட லான்கட் கனிவொழிந்தோர்
கடுப்போ னகங்கண்ட லஞ்சீறும் வேதனைக் காமனையே.       68

காமனை யாண்ட நுதல்விழி யான்கடம் பாடவிநீங்
காமனை யாண்டரை மாத்திரை யாய்க்கடத் தும்பிரமன்
காமனை யாண்டகை யாதியா வெவ்விடங் கண்டமுதிற்
காமனை யாண்டரு ளாளுகி லென்படுங் காசினியே.       69

காசினி தானம் பரந்தா னிலையென்று கண்மயங்காக்
காசினி தானங் கடைப்பிடிப் பீர்கடம் பாடவியே
காசினி தானமென் றேவெள்ளி மன்று கனமணிபோற்
காசினி தான்மது ரேசன் றாளென்று கைதொழுமே.       70

கைப்படை மாலை விடையாக வூர்கடம் பாடவியான்
கைப்படை மாலைக் கவுரியன் மேவிற் கனிமொழிபா
கைப்படை மாலைக் குழலாட் குமாரன் கணையுமவன்
கைப்படை மாலை வளர்ப்பதுஞ் சீனியுங் கற்கண்டுமே.       71

கற்கண்டு மோந்து மணமல ருண்டுகை வீணைமுழங்
கற்கண்டு மோக நடங்கேட் டணைந்து கனியைமயங்
கற்கண்டு மோவப் பொருளான கூடற் கபாலிமதிற்
கற்கண்டு மோமிரு மோமென்று சூழ்ந்தென்ன காதலற்றே.       72

காதலி யங்கம் மலையத் துவசன் கனிந்துபெற்ற
காதலி யங்க மரும்பக வாயுன் கழலொழிந்தா
காதலி யங்கம லத்திரு வாழ்வுங் கவின்பெறுவார்
காதலி யங்கம் பெறினுநன் றேயுன் கடம்படியே.       73

கடம்பா டவிக்கு ளுறைந்திறை யுங்கட வாமறையோர்
கடம்பா டவிக்கு விழைந்தோன் பதங்கரு தாச்சிலமற்
கடம்பா டவிக்குங் கருத்தலை காவலை மருத்துவர்வா
கடம்பா டவிக்குண் மிகும்போதி லென்சொலுங் காலருக்கே.       74

காலரை யன்றி மிகச்சீறுங் கூற்றன் கடுஞ்சகடக்
காலரை யன்றிடுஞ் செந்தீயில் வெந்து கழுத்துமுகங்
காலரை யன்றி லெனக்கன்றி யுள்ளங் களைத்துவருங்
காலரை யன்றிருக் கூடற்பி ரானருட் காப்பெமக்கே.       75

காப்பார் புரந்தர வைவா யரவுகை வாயணிந்தோர்
காப்பார் புரந்தழல் கண்பார் கடம்ப வனத்தர்செழுங்
காப்பார் புரந்தரன் போலாள வைப்பக் கருதிலரங்
காப்பார் புரந்தருள் வாரென்று தீம்பா கலங்குவரே.       76

கலங்கா தவரை யெனச்சலி யாது(ந)லங் காயமரர்க்
கலங்கா தவரை மதுரே சரைக்கரு தாதவரைங்
கலங்கா தவரைச் சுமந்துண்டு வாழ்ந்துங் கழறல்புகாக்
கலங்கா தவரைப் புகழ்ந்துமெய்ப் பார்வை கலுமிருந்தே.       77

வைகலை யாயுனை யெய்யாம லீர்கின்ற வாளிதென்று
வைகலை யாயு மறிவினுள் ளேமத மாவினுரி
வைகலை யாயுமை பங்குறை வோன்மது ரைப்பதியில்
வைகலை யாயுள்ள மேமிது வேதவ மாலுறவே.       78

அறுகாலம் போருக நீலங்க ளாலர்ச்சி யாரொருகால்
அறுகாலம் போதி யழைத்தோனைக் கூட லரனையர்ச்சித்[து]
அறுகாலம் போரிடுங் கூற்றைவெல் லாரவர் வாழ்ந்திடுநா[டு]
அறுகாலம் போலும் வரிப்புலி வாழ்கடம் பாடவியே.       79

ஆடக மன்று புகுந்துவன் றொண்டரை யாண்டவெந்தாய்
ஆடக மன்று கயிலையென் றேவெள்ளி யாற்சமைத்த
ஆடக மன்று விளைந்தசொக் கேயுடற் கங்கியென்றும்
ஆடக மன்றுனை யாமுனுன் றாடுணை யாக்குகவே.       80

ஆக்கை யிலேச நிலையா வகையம்பு யத்தொருவன்
ஆக்கை யிலேசங் கரிப்பவ னேயருட் கூடலகல்
ஆக்கை யிலேச வெழுத்தஞ்சு நாவறி யாதவர் பொல்[லா]
ஆக்கை யிலேச விரவே னுனைத்தொழு மங்கைகொண்டே.       81

அங்கம்பஞ் சாயவ டுப்போற் களிற்றை யடர்முலையாள்
அங்கம்பஞ் சாயதி லாரழல் போலடன் மாரனெய்ப்பும்
அங்கம்பஞ் சாயவென் செய்வான்தென் கூட லமர்ந்திமையோர்
அங்கம்பஞ் சாயன்ன வன்னந் திகழ்மெய்க் கணிநம்பனே.       82

நம்பாவ லாரிதஞ் சேர்முலை பாக நளினமத
நம்பாவ லாரிதை யந்தமிழ்க் கூட நகரனையாய்
நம்பாவ லாரி முதலோர் விரும்ப நமனத்தியா
நம்பாவ லாரினுஞ் செல்லா துன்பாலவர் நாட்டினியே.       83

நாட்டிய மாதி யிருநான் கியோகமு நாடிநையே
நாட்டிய மாதிர வாழ்வுமெண் ணேனடு மார்பிலயில்
நாட்டிய மாதினன் னீபார்த் திருந்தென்ன நன்மதுரை
நாட்டிய மாதிடஞ் செய்தான் றிருப்பெயர் நான்கற்றதே.       84

கற்றா னடைய சலஞ்சாய்ப்பக் கூடலின் கண்வருங்காற்
கற்றா னடைய விடைக்கோர் விடைதந்த காவலன்பேர்
கற்றா னடையப் புரந்திடும் போதுங் கருத்தருள
கற்றா னடைய வனுக்குரை யார்கஞ்சன் மாலையமே.       85

மாலை யருக்க மலரா யினுமது ரேசருக்கெம்
மாலை யருக்க மணிவாய்ப் பனியென மாய்ப்பவற்கு
மாலை யருக்க மலிதலைச் சூலத்தின் வாய்க்கருத்து
மாலை யருக்கமா நன்மா திமைய வரைச்செல்வியே.       86

செல்வரை யாறு முகத்துட னீன்றவர் தென்மதுரைச்
செல்வரை யாறும் பதியார் செனனந் துடைக்கவன்றோ
செல்வரை யாறு கடல்பாருஞ் செய்தயன் மான்முதலாச்
செல்வரை யாறு திறம்பாச் செனனம் படைப்பதுவே.       87

படைப்பரி யங்க நரியா மதுரைப் பரனுமைகண்
படைப்பரி யங்க மெனுந்துடை யான்பதம் போற்றநெஞ்சு
படைப்பரி யங்க வயிரா வதம்வரப் பாரிலினிப்
படைப்பரி யங்கவ லேமென்று வாழுவர் பன்முறையே.       88

பன்னக மாய தாளங் கிளிபெற்ற பாவைபங்கன்
பன்னக மாயன் பணிவோன் மதுரைப் பதிவளத்தைப்
பன்னக மாயம் பரவாது பண்டையிற் சஞ்சிதமாம்
பன்னக மாய வருந்தவ மேபொங்கிப் படர்தருமே.       89

தருக்கத்த னாதி யிறைவரைப் போன்றுதம் பாலவர்தாந்
தருக்கத்த னாதிப னாவதும் வாணி தகையறவே
தருக்கத்த னாதிசை விப்பது மெய்துங்கொல் தாரணிமாந்
தருக்கத்த னாதிரை யான்கூடல் வாழ்வற்றே தாமதற்கே.       90

தாமத ராசத சத்துவ தாற்றவ ராயவராய்
தாமத ராசதர் தேடிச்செல் வாரெவர் தாங்குகொன்றைத்
தாமத ராச தனையர் செழுந்தமிழ்க் கூடலின்றாந்
தாமத ராச தகனாநின் பாதந் தரப்பெற்றிலே.       91

தரவயி ராவதம் போற்பாருங் கற்பகத் தாருவுமே
தரவயி ராவுன் சரணடைந் தோர்தணி யாதசலந்
தரவயி ராதமிழ்க் கூடலல் லாதுதங் காதகங்கா
தரவயி ராசல மேபெறு மாறு தகுதியன்றே.       92

தகுதிக் கலருண் டுழப்போ துறைதடம் போலுடம்பார்
தகுதிக் கலருண்டு தேதறி யார்தனத் தால்நடந்தோய்ந்
தகுதிக் கலருனை யென்றறி வார்தமிழ் வையைவிசைத்
தகுதிக் கலருவீ சுங்கூ டற்பணி றனிமுதலே.       93

முதலைக் கடங்கடல் வாய்நீந்திச் சென்று முயன்றுகொண்ட
முதலைக் கடங்களில் வைத்திழப் பார்முய லார்சிலர்விம்
முதலைக் கடங்க வருள்வோனைக் கூடலின் முக்கண்முழு
முதலைக் கடங்கவில் வேழந் தொறுமை முகவனையே.       94

முகந்தடங் காது முறுவல்பொற் பாத முளரியெழில்
முகந்தடங் காது விழிதார்ப் பார்த்தனன் மொய்த்ததெற்றி
முகந்தடங் காதுறை சூழ்கூட லாய்முன்னை வெவ்வினையுன்
முகந்தடங் காதுல னற்றேன் பிறப்பின் முளைத்திடவே.       95

குடும்பா சுரவயி ரிக்குநெஞ் சாப்பணி வெய்துவித்தோய்
குடும்பா சுரமெதி ரேற்றிய வையைக் கிறையவனே
குடும்பா சுரங்கெடக் கூடலி னின்புக ழேபரவி
குடும்பா சுரகங்கை போலே பெருகு மியைவிலனே.       96

வில்லவ னங்கணை வீணென்று வெள்கிவில் வேள்புகழின்
வில்லவ னங்க மெனத்தேய நானுன்னை வேண்டால்காய
வில்லவ னங்க னிலம்போற்றும் பாடல் விருப்புச்செய்தாய்
வில்லவ னங்கமழ் நீபாட நின்ற வித்தகனே.       97

வித்தக மாகமம் விளையும்பைங் கூழ்வினை யேனவிச்சை
வித்தக மாக முளைத்தலுற் றேனின் விளங்கெழில்பா
வித்தக மாகமம் வாக்கா லுரைத்துமெய் யால்வணங்கேன்
வித்தக மாகப் புகழ்தமிழ்க் கூடலில் வேதியனே.       98

வேதனை யாமற் படைத்தலுத் தான்விண்டு காதலுற்றான்
வேதனை யாமலற் கென்றானு மென்னை வினைக்கனலின்
வேதனை யாமலர்த் தாள்சேரென் றார்சென்ம வேதனைக்கோர்
வேதனை யாமது ரைப்பர மாவெண் புகழெய்துமே.       99

எய்தா யகன்று வருந்திய ஞான்றன்னை யென்னமுன்னம்
எய்தா யகன்றுறை சூழ்கூட லஞ்சிட வெழுமாவை
எய்தா யகன்றவந் தீரா யெனிலெளி யேற்கருள
எய்தா யகன்று மறியேந்து முக்க ணிமையவனே.       100

இமையவ ராகி யிடத்தாய்தென் கூடலெந் தாயிமைப்போ[து]
இமையவ ராகி லிதயத்தி லேயென் றிரந்திருகண்
இமையவ ராகிறு திப்பே ரெழிலையெல் லாம்பொதிந்தால்
இமையவ ராகி யிருப்போம் வளரு மிருந்திருவே.       101

மதுரை யமக வந்தாதி முற்றும்.
---------------------

This file was last updated on 25 March 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)