pm logo

அந்தாதிக் கொத்து -part 1c
சந்திரசேகரன் தொகுப்பு


antAtik kottu, part 1c (5 antAtis)
edited by T. Chandrasekaran
In Tamil script, Unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

அந்தாதிக் கொத்து -பாகம் 1c


Source:
அந்தாதிக் கொத்து (ANTĀDI-K-KOTTU)
Edited by : T. CHANDRASEKHARAN, M. A., L. T.,
Curator, Government Oriental Manuscripts Library, Madras,
AND THE STAFF OF THE LIBRARY.
(Prepared under the orders of the Government of Madras.)
MADRAS GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS SERIES. No. 51.
GOVERNMENT OF MADRAS
Price, Rs. 2-10-0.
Dorson Press, 2/47, Royapettah High Road, Mylapore, Madras-4.
------------------------------
அந்தாதிக் கொத்து -பாகம் 3
8. சடக்கர வந்தாதி (ஆறெழுத்தந்தாதி)
9. சுப்பிரமணிய ரந்தாதி (சுப்பிரமணியர் பேரில் அந்தாதி)
10. சௌந்தரி யந்தாதி
11. சித்த ரந்தாதி
12. சிஷ்ட ரந்தாதி
------------

8. சடக்கர வந்தாதி
(ஆறெழுத்தந்தாதி)

      கடவுள் வாழ்த்து
கிரக கோரம் பணைத்தென்ன நான்முகக்
      கிழவ னிட்ட விதிதப்பி னாலென்ன
நரக கோர மறலிவந் தாலென்ன
      நமது சத்துரு சங்கார தாண்டவ
சரக கோர நிராமய பூரண
      சண்மு காதி பதிமுரு கப்பன்கை
வரக கோர வடிவேலுண் டென்னிடம்
      வைத்தி ருக்க வயதுபல் லூழியே.

அரி திருமருகன் துணை. - சிவகிரி முருகன் துணை.

சிவமயம்.
நூல்
1. சரியை மார்க்கம்

ஆனந்த மாறெழுத் தாலய மாமென தங்கமெல்லாந்
தானந்த மாதி முதற்பொரு ளாவீசத் தாங்கமுநீ
மோனந்த முன்னுள தென்னுள துன்னுள தென்னுளதா
லீனந்தம் போக்கி யெனைநீய தாக்கிய வென்குருவே. 1

என்குரு வேகிருபை யானந்த மோன வெழிற்சிவனார்
தன்குரு வேபரை யீராறு கோலஞ் சமைந்த1னவைப்
பின்குரு வேவிந்து நாதம் பரம்பெரும் பேரொளிக்கு
முன்குரு வேமுரு கோனா றெழுத்தென்னு மூலங்களே. 2
[பிரதி பேதம்:- 1. நளப்.]

மூலங்க ளேசிவஞ் சத்திவித் தா2யுன்னு முன்பிறந்த
சீலங்க ளேபஞ்ச 3கர்த்தாவும் நின்வழி தேறியொரு
காலங்க ளேயொக்க வேகீ கரிப்பக் கடையுள்நின்ற
கோலங்க ளேமுரு கோனா றெழுத்தின் குணக்குன்றமே. 3.
[பிரதி பேதம்:- 2, யென்று. 3. கர்த்தாவி னின்வழி,]

குணக்குன்ற மேயன்ப ருள்ளு டுருவிக் குமுகு1மென்ற
மணக்குன்ற மேமுரு கா2வென்றன் கர்ம மாற்றிடுங்கங்
கணக்குன்ற மேயெங்கு மாறெழுத் தாயுருக் காட்டியபொற்
சுணற்குன்ற மேயண்ட பிண்டமொன் றாய்நின்ற சூத்திரமே. 4
[பிரதி பேதம்: 1. மென. 2. வெனவே வினைமாற்றிடு.]

சூத்திரம் நம்முடற் சக்கர மேருவைச் சுற்றியரை
மாத்திரை யிற்சந்திர சூரியர் போய்வரும் வாசி3தன்னைக்
காத்திர 4மாய்விட்டு டேகத் திருத்துங் கருமவுனச்
சாத்திரங் கைவரும் நின்னா றெழுத்துந் தரிநெஞ்சற்கே. 5
[பிரதி பேதம்: 3. தனிற். 4. லாயம் விட்டேகத்.]

நெஞ்சேபொற் பீட5ம்நந் தேகஞ் சிவாலயம் நீள்பொறிக
ளஞ்சே 6யிவைபெறு மாதாரஞ் சத்தி 7யருநிலைவிட்
டுஞ்சா துணர்வு முருகனின் னாறெழுத் துன்னுவற்குச்
செஞ்சே வ8லவன் றனக்குச் சரீரமுஞ் சித்துமொன்றே. 6
[பிரதி பேதம்: 5. தந்த, 6. பெறுமிவை.
7. யருணிலை விட்; 8. லன்றன் றனக்குஞ்]

ஒன்றே முருகனின் னாறெழுத் தோசை யுலகமெல்லாம்
நின்றே பலபொருள் நீயென்றும் நானென்றும் நீதிவெவ்வே
றன்றே சமையங்க ளீராறு மாய்நின்ற வானந்தநீ
யென்றே தெளிந்தவர்க் கேகர்ம மாயை யிருளிறுமே. 7

இருளறு மெங்கு மொளியாய் நிரம்பு மிரவுபகல்
9மருளறு மாயினும் வர்த்திக்கும் கர்த்தன்மட் டத்துயர்ந்த
பொருளறு கோணத்தி 10னுள்(ப்)பே சரிய பொறியுள்நின்ற
வருளரு ணாசல வேலே யுனதெழுத் தாறுன்னவே. 8
[பிரதி பேதம்: 9. மருளறும் வாய்வும்.
10. னுள்ளே புலன்பொறி பேசரிய]

உன்னரி தாமுரு கோனா றெழுத்தினை யு(ட்)ச்சரித்தார்க்
கென்னரி தாம்பொரு 11ளொன்றுமில் லையிறப் பும்பிறப்பும்
பின்னரி தாமிவை யொன்12 றன்றிப் பேசிப் பிரமனுடைத்
தன்னதி காரமுந் தப்பியப் பால்நின்ற தானவனே. 9
[பிரதி பேதம்: 11. ளொன்றாம் பிறப்பு மிறப்புமறப்.
12. றொன்றைப் பேசிற்.]

தானவ னாதிவி நாயக னான்முகன் சங்குசக்(கி)ர
வானவன் ருத்திரன் மயேசுர னீசன் வடிவிவையா
றானவ னாறு முகத்தன் பரசமை யையன்முரு
கோனவ னின்னெழுத் தாறே பொருளெனக் கொண்டவனே. 10

கொண்டனை கையிற் பரைவே லினைப்பின்பு கொக்கை ரெண்டாய்க்
கண்டனை மஞ்ஞையுஞ் சேவலு மாய்வரக் 13காரணத்தில்(ப்)
பண்டனை யாதி பகவனிப் 14போதெவன் பாலனென
விண்டனை யாறெழுத் தாய்முக மாறுடன் மேவியதே. 11
[பிரதி பேதம்: 13. காரணத்தாற். 14.போதவன்.]

மேவிய வாதி சிவாய சதாசிவ வேலைதனி
லாவிய நம்பெரு 1மாள்மரு காவென்றுன் னாறெழுத்தைத்
தாவிய வுள்ள 2மதர்க்கவெண் ணீற்றைத் தரித்துனையே
கூவிய பேர்கள் முன் னஞ்சலென் றேவந்து கூடுவையே. 12
[பிரதி பேதம்: 1. மான். 2 மதாக,]

கூடுவை நீயன்ப ருள்ளா லயமெனக் கூடியிருந்
தாடுவை நீமுரு கோனா றெழுத்தினை யாரொருவர்
3நாடுவர் நீயவர் கர்மந் துடைத்து நரகறுத்துப்
போடுவை நீயென்று கண்டோர் கடைவெல்வர் புத்தியிதே. 13
[பிரதி பேதம்: 3. நாடுவை]

புத்தியு நீமுரு கோனா றெழுத்தின் பொருளறியச்
சத்தியு நீசிவ மாகுமாய் நின்ற4ச ரூபமுக
சித்தியு நீயன்பர் பார்க்கின்ற ஞானத் தெளிவுதரு
முத்தியு நீயன்றி வேறில்லை வேத முடிந்திடமே. 14
[ பிரதி பேதம்: 4. சாருவமுக.]

முடிந்திடம் பேச்சற்ற மோனமெஞ் ஞான 5முதல்வநின்னைப்
படிந்திட மேபதி பாசம் பசுவிருள்(ப்) 6பற்றதற்று
விடிந்திடந் தானெனும் நானெனும் 7யாவையும் விட்டெவையுங்
கடிந்திடத் தப்புறத் தப்புறத் தானந்தங் காணுமதே. 15
[பிரதி பேதம்: 5. முதல்வ னெனைப். 6. பற்றகற்றும்.
7. மாயையை]

காணுமென் பால்முரு கோனா றெழுத்தின் கனியையுண்டே
பூணுமென் பாலைம் புலனுமொன் றாய்ச்சரம் பூரித்துள்ளாய்த்
தோணுமென் பாலிற் சுழியூ டசைவற்ற சோதியொத்தா
லாணுமென் பாற்பெண்ணு மென்பால் நின்பாலென் றறிவதுவே. 16

அறிவது வேதெனில் நின்னா றெழுத்தஞ் செழுத்ததிலே
பிரிவது மவ்வெழுத் தண்டபிண் டத்திற் பெருஞ்சிற்றிலாய்ச்
செறிவது 8மப்புறம் நின்றோ ரெழுத்துத் திகாந்தமுட்டி
மறிவதுங் கண்டுதன் னுள்ளே தெளிந்த மவுனங்களே. 17
[பிரதி பேதம்: 8. மப்புறத் தோரெழுத் தானந்தத்]

9ஏதானு மாறெழுத் துள்ளஞ் செழுத்தென் றெடுத்ததெல்லாஞ்
சூதாக நானென் றுருப்பண்ணும் வாறதைத் தூக்குதற்கோ
ராதார மாகி யகமும் புறமு மருவுருவா
மோதா துணர்வு முயிரு10ம தாய்நின்ற தோரெழுத்தே. 18
[பிரதி பேதம்: 9. ஏதேனு 10. மொன் றாய்நின்ற]

ஓரெழுத் தாதி நிராமய மைவரு முன்னறியப்
பேரெழுத் தவ்வெழுத் தேயம்மை தேவி பிறங்கவள்பா
லாறெழுத் துஞ்சடை 1யானவ தார மவனொடம்மை
சீரெழுத் தாறுமோர் வேளா யெடுத்த திருவுருவே. 19
[பிரதி பேதம்: 1. யானவ ளோடவ தார மம்மை].

திருவுரு வாகிய செவ்வேள் முருகனம் சிந்தை2யுள்ளே
யருவுரு வாய்நின்ற தாறெழுத் 3தாயுன்னை யாண்பெண்ணிதென்
றொருவுரு வாய்க்கொளப் போகா தவரவ ருள்ளத்திலே
கருவுரு வெப்படி யப்படி யேநின்ற காரணமே. 20
[பிரதி பேதம்: 2. பற்றி .3. தாமுனை.]

காரண காரிய மிரண்டையுந் 4தாண்டிக் கடவுள்முன்னாட்
பூரண ஞான முகமாய்ப் பிரவேசிப்பப் 5பொங்க(ள)[ழ]லை
யாரணங் காப்ப வதுவே யருவுரு வாயனந்த
நாரண ரூபமுஞ் சங்கர வேடமும் நண்ணினதே. 21
[பிரதி பேதம்: 4. தாங்கிக்.5. பொங்கனலை]

நண்ணின வாறு முகமா முருக நமதுள்ளத்தி
லெண்ணின காரிய மெல்லாந் தரும்பொரு ளெல்லையில்லாக்
கண்ணிநின் னாறெழுத் தானமெய்ஞ் ஞானக் 6கருப்புயர்ந்த
7மண்ணினும் விண்ணினும் யாவுமொன் றாய்நின்ற மாமயமே. 22
[பிரதி பேதம். 6.கரும்புயர்ந்த, 7. மண்ணீனம் விண்ணினம்.]

மாமய மாமுரு கோனா றெழுத்துமட் டற்ற அரி
ஓமய மாமவ்வு முவ்வும தாய்ச்சுழித் தோங்குமுச்சிப்
பூமய மாய்ச்சிவ மாய்ப்பரை யாய்ப்பற் 8பொறியொடுநி
ராமய மாயெங்குந் தானா யிருந்த ரகசியமே. 23
[பிரதி பேதம். 8. பல பொருளாய்.]

ரகசிய மாமுரு கோனா றெழுத்தையும் நம்புவர்க்குச்
சுகசெய மன்றி யபசெய மில்லை தொழில்படுத்தில்
முகசெயந் தம்பன மோகனம் 9பேதன முன்னொளிப்போ
டகசெய 10முச்சம்சங் காரமெட் டெட்டுக்கு மாதியதே. 24
[பிரதி பேதம். 9. பேத முன்னாளி லிப்போ.
10. முச்சமுஞ் சங்கார மெட்டுக்கு]

ஆதி பரைகங்கை தெய்வானை வள்ளி யரன்முருகோன்
சோதி முகமைந்து மாறு முகம்மழுச் சூல்கதிர்வேல்
கோதி லிடப மயில்கொன்றை மாலை குளிர்கடம்ப
மோதிய வஞ்செழுத் தாறெழுத் தாஞ்சுட ருற்பனமே. 25

சுடர்சங்கு சக்கரம் வேல்சூல் மழுவிற் சுரிகைகுலி
சடர் தண்டு தெண்டுகோ டாரிவிட் டேறறி வாள்கரக
மிடர்துஞ்சு பாச மெறிபாறை மானொடீ ராறுகையும்
படரும் படிபொங்கி யாறெழுத் தங்கி பரந்ததுவே. 26

பரந்தந்த ணர்செய்கை பல்லா 1யிரத்தினும்பட் 2டூடுருவி
நிரந்தந்த ரஞ்சிரம் பாதாளம் பாதம்நின் றோர்முகமாய்த்
துரந்தன்றி யாவையுஞ் சூர்கழு வேற்றித்தோம் மென்னநடித்
தர3ன்சுந்த ரன்சங்க ரன்சம்பு வாய்நின்ற தாறெழுத்தே. 27
[பிரதி பேதம்: 1. யிரமும், 2. டூடூருவ
3. னந் தரன்சங் கான்சம்பு]

ஆறெழுத் துண்மை யறியார்கள் கர்ம மறுக்கவப்பால்
வேறெழுத் தில்லைவெண் ணீறில்லை மால்சிவ வேடமில்லை (த்)
தேறெழுத் தேதயன் கையுங் கருக்குழிச் 4சேறதும்பின்
மாறெழுத் தந்தகன் றென்புலத் தேயென்றும் வவ்வுவரே. 28
[பிரதி பேதம்: 4. சேர்தலும்.]

வவ்வுநின் றாட்கன் 5பில்லாரே நரகத்தை வவ்வும்வஞ்சற்
கெவ்வழி மோட்சத்துக் கேதுவென் றாலெழுத் தாறுளநின்
சவ்வுரவ் வுமவ்வு ணவ்வுபவ் வுவ்வட் சரத்திலொன்றைக்
கவ்வுங்கள் வோர்சொற் பிறந்தா லுடன்கதி காட்டுமதே. 29
[பிரதி பேதம்: 5. பிலாதார்.]

கதிகாட்டு மோரெழுத் தோரெழுத் தேவச்சிர காயந்தரும்
நிதிகாட்டு மோரெழுத் தோரெழுத் தேயுண் ணிரப்புமருள்
மதிகாட்டு மோரெழுத் தோரெழுத் தேயென்னுள் வைத்தபொற்றாட்
டுதிகாட்டு மேகுக நின்னா றெழுத்துள்ள சூத்திரமே. 30

திரமே முருகனின் னாறெழுத் தங்கிதன் சிந்தை6பற்றப்
பரமே7யிதென்றுள் ளுணர்ந்தார்க்கு மன்பர் பழவினைநெட்
டுரமே சிதையும் பிறப்பறுங் கூற்று மொழியுநில
வரமேயெக் காலமுஞ் சாகார் சிவசித்தர் மாநிலத்தே. 31
[பிரதி பேதம்: 6. பற்றிப், 7. யிதுவென் துளநோக்கு மன்ப]

நிலத்தே 8யிறப்பும் பிறப்பு மறாக்கர்மம் நீங்கு9மெப்போ
தலத்தே மிதக்கினு மேமுரு காவென்றுன் னாறெழுத்தைப்
பிலத்தே பிடித்தவ ரப்பால்நின் னானந்தப் பேரொளிநிற்
சலத்தே மிதப்பரல் லால்பின்னை வேறு தடையில்லையே. 32
[பிரதி பேதம்: 8. பிறப்பு மிறப்பு. 9. மிப்போ.]

தடையாது பாசஞ் சறுவாது மாயை சரமறுகி
யுடையாது காய முலையாதுள் ளாவி யுலகிலினிப்
படையா தயன்கைப் பவநீக்கி ஞானப் பரத்துறைவா
னடையா10தெங்கெங்குஞ் சிவமாகக் காட்டுநின் னாறெழுத்தே. 33
[பிரதி பேதம்: 10. தெங்குஞ்.]

எழுத்தாறு மொன்றுபட் 1டேகீ கரித்துள் ளெழுந்ததொனி
வழுத்தாத மூல முருகன்பொற் றாளிரண்டும் வைத்துளத்தே
பழுத்தோகை யன்போ டிரவும் பகலும் பரமுனக்கென்
2ழழுத்தாவ சத்தர் பிறவிக் கடல்விட் டகலரிதே. 34
[பிரதி பேதம்: 1. டேகிக்கருத்துள் 2. றழுத்தாத]

பிறவிக் கடற்குடற் சம்பர னம்மாவிப் பெருஞ்சரக்கி
லறவைத்த பத்தொன்ப தாறுமச் சாணி யயன்கையினா
லுறவைத்த மந்திர மூன்றுநங் கூரமுன் னஞ்செழுத்துக்
துறவைத்த ஒட்டன் குகனா றெழுத்தின் சுய3 கர்த்தனே. 35
[பிரதி பேதம்: 3. கத்தனே]

கர்த்தன் பரங்கிரி சீரலை யேரகங் காண்பலகுன்
றத்தன்றென் சோலை மலையாவி னன்குடி யாறு4மோர்பா
லித்தன்ப தாயென்னு ளாதார மாறும்வெவ் வேறுருவாம்
பித்தன் சருவ குருவாஞ் சடாட்சரப் பேரொளியே. 36
[பிரதி பேதம்: 4. மேபா.]

குருவான வய்யன் சடாட்சரத் தாகமங் கூறில்முன்னே
யருவான வெட்ட வெறும்பா (ளு) [ழு]ரையுணர் வற்றவிடம்
பெறுவா 5னழிவு தெளிவா யளவற்ற பேரொளியா
யுருவா னதீத முருவாம் படிகனிந் துற்றதுவே. 37
[பிரதி பேதம்: 5. னிழிவு]

உற்றது மிவ்விட மிவ்வண்ண மின்னதென் றோதநினைப்
பற்றதும் பற்றற் றதுமன்பர் பாவ6க மாச்சதங்கே
7பெற்றது மெவ்விட மோமூச்சு விட்டது பின்பசைவாய்ச்
சொற்றது சொற்றிடத் துண்டுமிழ்ந் 8தேங்கித் துணுக்கென்றதே. 38
[பிரதி பேதம்: 6. கம் பாச் சதங்கே. 7. பெற்றவ துந்தர மோ.
8. தோங்கித்]

9துணுக்கென் றுபமுறச் சரணஞ் சரமெனத் தோற்றியொரு
10கணுக்கென் றிலைத்துடன் பூத்தது காய்த்துக் கனிவடிவாய்த்
திணுக்கென்று வூடொரு செக்கரும் பச்சையுந் திங்களுமா
யணுக்கண்ட துண்டில்லை யென்றே நிசபர மானதுவே. 39
[பிரதி பேதம்: 9. துணுக் கென்று பன்முர சாஞ்சர மென்னத் துவன்றி.
10. கணுக் கண்டிலைத்.]

பரமான தாதி சிவனாதி சத்தியுற் பத்திமுற்றி
யுரமான பார்வை யுறுவிந்து 11நாதத் துதிமவுனந்
திரமான சற்குரு தேசிக னூமன் 12றிடாரித்துத்
தரமா மகார முகாரமோங் காரித்துச் சத்தித்ததே. 40
      [பிரதி பேதம்: 11. நாதந் 12. றிடாரித்தவுத்]

சத்தித் தவளவன் றானா யவனவள் தன்13வடிவாய்
முத்தித்த பச்சை முழுமுத 14லாளசண் முகவடிவா
யத்தித் தறு15சம யந்தொழி லாறுக்கு மாறெழுத்தாய்ச்
சித்தித்தென் னாவி விளையாட லண்டத்தின் செய்கையிதே. 41
[பிரதி பேதம்: 13. னுருவாய். 14. லாய்ச் 15. சமையத்.]

அண்டத்தி லுள்ளது பிண்டத் தினு1முண்டவ் வாறெழுத்திற்
பண்டத்திற் சத்த கோடிமகா சித்துப் பண்ணுதற்காய்த்
2துண்டித் துடலுயி ராயே பரைசெய்த சூத்திரத்தால்
கண்டித்த 3தோநம சிவாய வென்றுருக் காட்டியதே. 42
[பிரதி பேதம்: 1. முண்டிவ். 2. துண்டத் 3. தோ நமச் சிவாய மென்.]
சரி(தை)[யை] முற்றும்
(இப்பால் கிரி(கை)[யை]ச் சொல்லுகிறது.)

சிவமயம்.
2. கிரி(கை)[யை]

4உருவா மம்மூல மதுவட்டம் நாலித ழுள்ளின்முக்கோ
டருவாம் பிரணவ சத்தியுட் சவ்வுஞ் சருவமய
குருவாம் தோமுக மவ்வே தியாநங் குளிர்ந்தலிங்க
மருவா மவையிவை தானே கணபதி யானதுவே. 43
[பிரதி பேதம்: 4. உருவான.]

ஆனமண் ணறிதழ் நாற்கோணம் பொன்னிற மஞ்சுகுண
5மீனமிம் மூல6ம துள்ளேரவ் வாகு மிவை7யுவந்த
பான மமிர்த முகஞ்சத்தி தேவிசொற் பாரதியாள்
தானுயிர் மந்திரம் நவ்வாகு நான்முகன் சக்கரமே. 44
[பிரதி பேதம்: 5. மீனமில் 6. மதனுளே ரவ்வாகு.]

கரமாய வப்பிரு கோணவெண் பத்திதழ் காண்குணம்நான்
குரமா யருளவ்வு மப்பலங் கார முடந்தையதாய்
வரமாய தேவி திருமுகம் வாம மந்திரமே
திரமாய தோநமோ நாராய ணாஅரி செய்கையிதே. 45

அரிவன்னி செம்மைமுக் கோணமு மூன்றித ழா8றிரண்டாந்
தரியுண்மை ணவ்வுஞ் சிவஞ்சத்தி 9பார்ப்பதி தானுளதாம்
பரியுண்ணல் 10தோத்திர மகோர 11முகமன்பர் பாவமறத்
தெரியுண்மை மந்திரஞ் சிகாரமும் ருத்திரன் சேவடியே. 46
[பிரதி பேதம்: 8. றிரண்டாய்த் 9. பராபரை. 10. கோத்திர.
11. மன மன்பர்]

அடியான வாயுக் கறுப்பறு கோண்பதி னாறிதழ்மேற்
றிடியா னிரண்டு குணம்பொருட் பவ்வவ்வு டேகலிங்கம்
பிடியான சாம்பவி சத்தி முகந்தற் புருடமருட்
12டுடியான மந்திரம் வகார மயேசுரன் றோற்றங்களே. 47
[பிரதி பேதம்: 12. தடியான வம்மந் ரதிமே மயேசுரன்.]

தோற்றிய வானது தூனிற வட்டந் தொடுமிதழ்ரண்
டேற்றிய வோர்குணம் 13வ்வாம் பரம்பற்றி யேபிரியஞ்
சாற்றிய பங்கில் மனோன்மணி தேவி14யீ சானமுகம்
போற்றிய 15யவ்வரி றீயுஞ் சதாசிவ பூரணமே. 48
[பிரதி பேதம்: 13 மவ்வவ்வாம் பரம் 14. யீ சானிய முகம்.
15. லவ்வரி.]

பூரண மாகிய வான்கா லனலப்புப் பூமியிவை
1தாரணி மூலமுந் தானாகி யோரிதழ்த் தாமரைமேல்(க்)
காரண 2மாமவ்வு மவ்வுள்ளாஞ் சுடர்பிறைக் காட்சியுமா
யாரண யோகி பராசத்தி தேவிநின் றங்கமிதே. 49
[பிரதி பேதம்: 1. சாரண, 2. மவ்வு மவ்வு முளதாம்.]

ஏயு மிதழன்பத் தொன்றினும் நின்ற தெழுத்துறுப்பாங்
காயுமுட் சக்கர மாறா றெழுத்துமோர் காத்திரமுயிர்
பாயும் பிரணவ மேபரை தோற்றம் பலசிற்3றில்கொண்
டாயு முடல்பொரு ளாவியு 4மென்சுழி யானந்தமே. 50
[பிரதி பேதம்: 3. றியல்கொண் 4. யும் வெள் சுழி.]

சுழியா தொருவற்குந் தோயாதி தன்பர்க்குந் தோயும்வெட்ட
வெளியா தினையில்லை மெய்ஞ்ஞானா தீதம் விளங்கிய சொற்
றளியா றெழுத்துள் ளவதார மாறொடு தற்பரைவிட்
டழியா திடத்தில் குருமுரு கோனின்ற ததிசயமே. 51

அதிசய மாறெழுத் தாறு சிவமு மறுமுகமாய்க்
கதிசெய்யு மூரற் பரைநெற்றிக் கண்ணெனக் காட்சியுமாய்
விதிசெய்யு மாமயில் மேற்சத்தி யாவுங்கை வேற்படையாய்த்
துதிசெய்யு மன்பர்முன் ஓங்கார வட்டத்துட் டோன்றியதே. 52

ஓங்கார வட்டத்துள் ளாதார மாறும்விட் டோங்கியரி
றீங்கார வட்டத்துள் ளேவிந்து நாத மிணைச்சுடர்மேற்
பாங்காம் 5பரைசிவ 6மிரண்டுமொன் றாயப் பரவெளிநின்
றாங்காரத் தாண்டவி யாறெழுத் தாறு முகத்தம்மையே. 53
[பிரதி பேதம்: 5. பரசிவ, 6. றாகப்.]

ஆறு முகத்தம்மை வேலாயி நின்னெழுத் தாறுமுரு
வேறு முகத்துக் கிலக்கோர் முகமில்லை யென்வினையைச்
சீறு முகத்தி குமராயி யன்பர்சிந் தித்துநினைப்
பேறு மளித்தவற் குள்ளெழுத் தாந்திறல் பெண்கொடியே. 54

பெண்கொடி யேபர மாயிசி வாயி 7பிரணவத்தி
னண்கொடி யேமுரு காயிகு காயி நலமுடைய
பண்கொடி யேயென் னுளமே யிரவும் பகலும்விடா[த்]
தண்கொடி யாதி சடாட்சரீ யீச்வரி யம்பிகையே. 55
[பிரதி பேதம்: 7. பிரணவமா]

அம்பிகை யன்பத்தோ ரட்சரி யு(ட்)[ச்]சரி யன்பர் தமைத்
8தம்பிகை வெவ்வினை சங்கரி சூலி 9சரமசரந்
தும்பிகை யைந்துடை 10யான்தொழி லைவர்ச் சுதன்களெனக்
கும்பிகை 11யன்பர் வல்லி சடாட்சரி குண்டலியே. 56
[பிரதி பேதம்: 7. பிரணவமா 8. வெம்பிகை 9. சாந்தநவத்
10. யான்றொழில் வாசுகி தானவளே, 11. யம்பர்.]

குண்டலி பாரதி லெட்சுமி பார்வதி கோமளைபூ
மண்டலி சாம்பவி தேவி மனோன்மணி வாகினிப்ர
சண்டலி காரிய காரியு காரி சடாட்சரிமா
விண்டலி யாண்பெண் ணிரண்டுரு வாய்நின்ற மின்னொளியே. 57

மின்னொளி 1யண்டபிண் டங்கள் சராசரம் வீண்ணுமண்ணுந்
தன்னொளி 2யாதி சடாட்சரி சாம்ப 3சதாசிவமென்
றுன்னொளி ருத்திர னீசுரன் மாலய னோதரிதா
மன்னொளி யைவர்க்கு மாதாவுந் 4தையலு மானவளே. 58
[பிரதி பேதம்: 1. யாயண்ட பிண்டஞ் சராசா. 2. யான.
3. சதாசிவமே 4. தந்தையு]

மாதா (ப்) பிதாகுரு(த்) தெய்வம் பெறுதவ மற்றுமுள்ள
தாதா 5வழியிட்ட காமிய மோதுஞ் சடாட்சரமென்
றாதார மென்த னுடல்பொரு ளாவி யருள்பலநீ
பாதார விந்தமுந் தந்தென்னைக் காக்கும் பராசத்தியே. 59
[பிரதி பேதம்: 5. வலியிட்ட.]

பராசத்தி யுத்தமி பாசாங்கு சத்தி பரஞ்சுடராம்
நிராசத்தி நீறணி பூரணி காரணி நிர்மலி6யாம்
வராசத்தி யாதி வடுகாயி யட்ட வயிரவியாந்
தராசத்தி ருத்திரி சடாட்சரி நிட்கள தாண்டவியே 60
[பிரதி பேதம்: 6. யென்.]

தாண்டவி7 கௌரி மயிடா சுரன்சிரந் தட்டழியத்
தீண்டவி 8பாசுப ராக்கிரம சூலினி சீறரவு
பூண்டபி ராமி 9நிராகபொன் னம்மையென் புன்மையறுத்
தாண்டவி பஞ்ச10ம வல்லியொ ராறெழுத் தானந்தியே. 61
[பிரதி பேதம்: 7. யேமயி டாசுரன் றன்சிரந் 8. பாத. 9. நிராகிபொன்.
10. பஞ்ச சபை வல்லி யாறெழுத்.]

11ஆனந்தி யம்மைவ ரேபுவ னாயி 12யரகரச
தானந்திக் கால 13வடவாக் கினிசிவ சம்புபர
மானந்தி பேதன மாமாயை ரூபி14வ ராகிகமழ்
தேனந்தி பூங்குழல் வாலை புவனை திரிபுரையே. 62
[பிரதி பேதம்: 11. ஆனந்தி யம்மவ.12. யவரவர்.
13. வடவாகினி தான்சிவ 14. வாதி மகள்]

திரிபுரை யாறெழுத் தாங்காரி நங்கலி சிந்தவறுத்
தெறிபரை 15நம்பகை யென்பாரை வேல்கொண் டெறிந்துயிரைப்
பறிபரை யென்னுள மேகோயி 16லன்பொரு பாயிலுமா
மறிபரை யென்னகம் நின்னக மாய்க்கொண்ட மாதங்கியே. 63
[பிரதி பேதம்: 15. நண்பகை 16. லன்புறு பாயலுமா.]

மாதங்கி யன்பர் பிறவிக் கடலை வடவனலாய்க்
கோதங்கி முன்னை வினையையுங் கூற்றையுங் 1கோதியுள்ளத்
தேதங்கி நின்று விளையாடும் பெண்பிள்ளை யென்செவிக்கே
போதங் கிலிஐயுஞ் சவ்வுமென் றோதிய பூரணமே. 64
[பிரதி பேதம்: 1. கோரி யுள்ளத்.]

பூரண 2மாயென்னப் போக்கும் பிறப்பைப் புணர்கிலியின்
காரணம் நின்னருள் காட்டிடுஞ் சவ்வென்னக் கன்னிகைநின்
னாரண 3தற்சொ ரூபமவ னாக்குவை யாறெழுத்தின்
நாரணன் நான்முக னைமுக மாய்நின்ற நாயகியே. 65
[பிரதி பேதம்: 2. மய்யெனப் 3. மானசொ ரூபம தாக்குவை.]

நாயகி நின்னன்பர் நின்பாதத் தர்ச்சிக்கும் 4நற்கடம்பென்
றோயகி லாரமுஞ் சாந்தமுங் கொன்றை5த் தொடையிலும்நின்
சேயகி லாண்டமென் 6றோற்றிய வய்வர் திருமுடிக்கே
யாயகி லாண்டமுந் தேக்கநின் றாறெழுத் தட்சரியே. 66
[பிரதி பேதம்: 4. நற்கடிமன். 5. யந் தொடையலுஞ்       6. றேற்றிய யைவர்.]

அரிஓம் நமோத்து சிந்த7ம காரமுத லவ்வுள்வவுந்
8திரிவான மந்திர மீரா றெழுத்9தும்நின் சிற்றில்பல
விரிவா கியவண்ட பிண்ட சராசரம் பேதமெவ்வுந்
10தரியாது கண்ட தவ்வுஞ் சிவாய வசியென்பதே. 67
[பிரதி பேதம்: 7. மகர முத லவ்வளவுந். 8. தெரிவான.
9. தினிற் சித்துபல. 10. மறியாது கண்கண்ட.]

அவ்வுஞ் சிவாய வசியென்னு மந்திர மஞ்சுடன்மூன்
றொவ்வுஞ் சிவாட்சர மும்மண்ட லத்திலு மோட்ட11வுடன்
கவ்வுஞ் 12சிவசத்தி யைச்சத்தி யாவியைக் காக்குமவ்வுஞ்
13சவ்வுஞ் சிவசிவ 14வென்பா ரிருவினை தாமறுமே. 68
[பிரதி பேதம்: 11. வுனக் 12. சிவஞ் சத்தி யாவையுங் காக்குங்
கருணைகுரு, 13. மவ்வுஞ். 14. வென்பார்க் கிருவினை]

15அறுமாம் பசுவன்னை யையன் குருவந் தணரடைந்தோர்
மறுமாதா கெற்பஞ் சிசு16ரட்சி யாது வதைபலவுஞ்
செறுமா வகுதி சிவத்துரோகத் தீயையுந் தின்னும்நின்னைப்
பெருமா தவர்க்கெழுத் தாறாங் குடிலப் பெருநெருப்பே. 69
[பிரதி பேதம்: 15. அறுமாப். 16, ரட்சித் தோர்கள்.]

நெருப்பு நெருப்பு பிரணவப் 17பென்னுந்தன் னெஞ்சுவஞ்சர்க்
கிருப்பு நெருப்புக் கபாடம் நின்னன்பர்க் கிரவிவெண்ணெய்
கருப்பு நெருப்பரை காணார்மெய் கண்ட கனிகயிலைப்
பொருப்பு நெருப்பு18க் கிருளறு மஞ்ஞானப் பொறிக்கொழுந்தே. 70
[பிரதி பேதம்: 17. பெண்ணுந். 18. விருப்புறு ஞானப்.]

கொழுந்தே மரகதக் குன்றே யிரத்தினக் கொடுமுடிபூத்
தெழுந்தே பிரகாசிப்ப வீரே ழுலகெண் டிசைபுவனந்
1தொழுந்தே வறுதொழில் வேதம் பலவெழு தோற்றமெம்மை
யழுந்தார்முன் பெற்றெடுத் தாள்திற லாறெழுத் தட்சரியே. 71
[பிரதி பேதம்: 1. கொழுந்தே வுறுதொழில்]

அரிஓம் மரகர அவ்வுஞ் சிவாய அஅங்கிஷஆ
கிரியோம்ஐ யுங்கிலியுஞ் சவ்வுஞ் சவ்வுங் கிலியுமையு
மரியோஞ் சுரும்ப வாஉச்சு மிரியும் ரீயூஞ்சிரியுந்
திரியோங் கிலியுஞ் 2சரவண பவாயி சிவகுருவே. 72
[பிரதி பேதம்: 2. சரவண பவவாயி தேவி.]

குருவாந் திரிபுர பவமாயி யான குமரிமகா
திருவாந் திகழொளி பவ்அவ்வு மான சிவக்கடலே
மருவாம் பரிபுர பவமான வானந்த வாரிபெருங்
கருவாஞ் சயிலொளி பவஆயி யென்னுங் கயல்கண்ணியே. 73

கண்ணி யென்னுஞ் சரவண பவதேவி கமலனரி
நண்ணார் புரமெரித் தோன்மூவரைப்பெற்ற நாயகியே
பண்ணார் 3பவமொளி பவஞான மான பராபரையே
பெண்ணீ 4ரவற்கு அஆவென்று நின்ற பெருஞ்சுடரே. 74
[பிரதி பேதம்: 3. பவனொளி 4. ரிவர்க்கு.]

அஆஇஈ உஊ எஏஒஓ வென்னு மஞ்செழுத்தி
இஈ5உஊ எஏ ஒஓம் நமோ நாராய ணாயவென் றெட்டெழுத்தி
உஊ எஏ ஒஓ அவ்வுமதா மன்பத் தோரெழுத்தி
எஏ ஒஓ சரவண பவ 6அவ்வு மதாய்நின்றதே. 75
[பிரதி பேதம்: 5. ஓ ஓ நம நாராயணாவென்.
6. அவ்வுந் தானின்றதே.]

அவ்வும் உவ்வுமவ்வும் 7றீங்கோ டையுங் கிலியும்
சவ்8வும் பரைசிவம் அங்உங் 9சங்ஙென்ற சத்தமிரண்டும்
ஒவ்வுஞ் சரவண பவ10மான தென்ற வொருவனரு
ளெவ்வு 11மரிகுஃ ரெண்டுந் தாண்டிநின் 12றேதெழுத்தே. 76
[பிரதி பேதம்: 7. றீயுங்கொ டையு. 8. வுஞ்சவ் வும்பரை. 9. ஒங்றீங்கென்ற.
10. வென்ற. 11. மரிக்ஷ.12. றேற யேகெழுத்தே.]
கிரி(கை)[யை] முற்றும்.
(இப்பால் யோகத்தைச் சொல்லுவது) சிவமயம்.
3. யோகம்.
அரிக்கு முதற்பொரு ளெப்பொரு ளண்ட பிண்1டமுமங்
குரிக்குஞ் சடாட்சரத் தோசையைப் பற்றுங் குணமறிந்து (ட்)[ச்]
சரிக்குந் தொழும்பர்க்கு ளாதார மாறுந் 2தமக்குமருள்
மரிக்கும் பரவெளி 3யாகும்நின் பாதம் வழிபடுமே. 77
[பிரதி பேதம்: 1. டங்களுக்குங், 2. தகருமிருள். 3. யாதார மாறும்]

வழிபடும் 4வாசியை வாசியுள் வாசலில் வாங்கியப்பால்
சுழிபடு மாறெழுத் தங்கியைக் கோ(ற்)த்துச் சுழ(ட்ட)[ற்ற] வல்லார்க்
கழிபடுந் தன்றலை மேலயன் கையெழுத் தஞ்செழுத்துங்
கழிபடும் பின்பு யமனோலை யில்லை கனவிலுமே. 78
[பிரதி பேதம்: 4. வாசலில் வாசியை வாசலுள்]

கனவான மாயையிக் காயம்விட் டாவி 5கடக்குமுன்னே
மனமான பாவியைத் தன்வச மாக்கி வசியெனுமுற்
பனமான 6யேணியிவ் வாறெழுத் தேற்றிநின் பாததெரி
சனமான யோகி யழியானெக் காலமுஞ் சத்தியமே. 79
[பிரதி பேதம்: 5. கடரு முன்னே, 6. வேணியி லாறெழுத் தேத்தி]

சத்திய மூலத் திரவியை யூன்றிச் சரநிரைமேற்
பற்றிய தீயிலஞ் சத்திரத் தெல்லையும் பாழ்படுத்தி
முற்றிய சந்திரக் கலையூ டுருவி 7முடிவிலென்னை
யத்திய சீவன் சிவமாகக் காட்டும்நின் னாறெழுத்தே. 80
[பிரதி பேதம்: 7. முடிவில் விண்ணை.]

ஆறெழுத் தானநின் னானந்த மன்பத்தோ ரட்சரத்துக்
கீரெழுத் தோரெழுத் தஞ்செழுத் 8தெட்டெழுத் தேத்திவல
மாறெழுத் தங்கி வடிவாய்க் கடாசல 9வாசல்புகுந்
10தூரெழுத் துண்ணமிர் தஞ்சிவ 11யோகியி துற்பனமே. 81
[பிரதி பேதம்: 8. தீரெழுத். 9. வாசல்புகு. 10. மூறெழுத்.
11. யோகிக்கி]

உற்பன மாகிய வோங்கார 12வட்டத்தை யூடுருவி
யற்பெனு மாக்கையி னுள்ளே சிவாவெனு மட்சரத்தைச்
சற்பன பாஷைக்குந் தாயா றெழுத்தினுட் டாக்கியன்பால்
நிற்பன யோகி தவச்சை யாதிது நிச்சயமே. 82
[பிரதி பேதம் 12. வட்டத்தி னூடுருவி]

13நிச்சி நிலாக்கொழுந் தாறெழுத் தங்கியை நிர்மலமா
யுச்சியு மூலமும் 14நோக்கிரண் டாலமைத் தோரெழுத்தவ்
வச்சினை நாட்டி சிவாக்கினி மூட்டிநெஞ் சண்டபிண்டம்
15வச்சிர யோகி யவனே வயிரி மகாசித்தனே. 83
[பிரதி பேதம்: 13. நிச்செய நீலக் கொழுந்தா றெழுத்தங்கி
நிர்மலமா. 14. பார்வைரண். 15. வச்சிரு.]

சித்தனுஞ் சீவனுந் தேகமும் வாசியுஞ் சே(ர்)வை செய்யும்
பத்தனும் பாசமும் 1பார்வையும் பாத்துப் பதனமதாய்க்
கத்தனுங் கப்பலுங் காற்றுங் கடலுங் கயறுங்கள்ள
எத்தனும் பாதையும் பார்த்தோடு வார்கரை யேறுவரே. 84
[பிரதி பேதம்: 1. மாறெழுத் தேற்றிப்.]

ஏறுவ துன்கண் செவிமூக்கு நாக்குநெஞ் சத்தைரெண்டு
கூறுசெய் தந்தரங் கத்தே மனது குருவெனவே
தேறுவ தாதியு மந்தமுந் தாக்கிச் 2சிவனடுவா
வாறுத 3லம்வறை ஆறையும் பார்ப்பதிவ் வாறெழுத்தே. 85
[பிரதி பேதம்: 2 சிவனடுவே, 3. லம்பரை.]

ஆறெழுத் தோரெழுத் தால்பொர வாசியை யச்சமன்றி
யாறெழுத் தோரெழுத் 4தால்கடி வாளமிட் டந்தரங்கத்
தாரெழுத் தோரெழுத் தாற்கல் 5லனைவைத் தங்க6வடி
யாறெழுத் தீரெழுத் தோரெழுத்தேத்திட வானந்தமே. 86
[பிரதி பேதம்: 4. தாற் கட்டி வாழ விட், 5, லனையும் வைத்
6. வடியிட்,]

அந்தத்திற் பிங்கலை யாதியி லேயிடை யாக்கியர
விந்தத்திற் பாய்ந்து சுழிமுனை போய்ப்பெரு வெள்ளத்துள்ளாய்ப்
பந்தத்த னற்கதிர் பான்மதி நாதப் பரப்புமுப்பா
இந்தக்கண் காட்சிக் கப்பாலென் னையாண்ட விறையிருப்பே. 87
யோக முற்றும், (இப்பால் ஞானத்தைச் சொல்லுவது.) சிவமயம்.
4. ஞானம்.

இறை7யிருக்கு மிடமெய்தி னுங்காந்த னிடம்புகுந்தாள்
மறையிருக்குங் கயிலைக்கோப் பெறுமட்டு மருவலன்றிச்
சிறையிருக்கும் படியித் தலங்8கொஞ்சச் சிணுக்கைவிட்டோர்
துறையிருக்கத் துறைசென்றா டக்கன்னி தொடக்கறுமோ. 88
[பிரதி பேதம்: 7. யிட மெய்தினுங் காந்தனி டம்புரந்
தாளினிய. 8 கொஞ்சிச்.]

தொடக்கறு மின்பமுந் துன்பமுங் கட்டிச் சுமந்தலையும்
விடக்கறு மெய்பொய் விருப்பு9ம் வெறுப்பினும் வெட்டவெளி
நடக்கிற பாதை நடக்கறி யாமல் நடக்குமிந்தச்
சடக்கறப் பார்மன மேமற்றெல் லாங்கெடு சாத்திரமே. 89
[பிரதி பேதம்: 9. மருப்புற்று]

சாத்திரம் வேதம் சமயம்வண் ணாத்திதண் ணீரில்விட்ட
மூத்திரம் போம்படி போமன மேயந்த மூத்திரமோர்
பாத்திரங் கொள்ளப் பலனுண் டிதிலொரு பாழுமில்லை
கோத்திர முங்குல முங்குடி போய் நின்னைக் கூடினர்க்கே. 90

கூடின தாறுகைக் கொண்டவ னாரு குருக்களெவன்
பாடின மந்திர மாறுமிந் நான்கும்போய் 1பாரினுண்ணி
வீடின் போதுறு மெய்ஞ்ஞான தீத விலாச2வெளி
நாடின தும்3மங்ங னேநின்ற தும்நீவள்ளி நாயகமே. 91
      [பிரதி பேதம்: 1. யிந்தப் பாரினுணீ 2. வொளி.
3. கே நின்றதுவும் வள்ளி.]

நாயக நீயேன் 4நானேன் நானென நம்பிலுன்னைத்
தாயக மென்று தாமே திருச்சொல்லுந் தானிறந்து
போயக மும்புறமு 5மொன்றக லாம்பரி பூரணத்தே
யாயக லாதிட மொன்6றாகக் காட்சி யறப்பெற்றதே. 92
[பிரதி பேதம்: 4. நானேது. 5. மெந்தக் காலமும்.
6. றாசைக் கண்டாசை]

பெற்றாளும் பொய்பிறப் பித்தானும் பொய்ப்பெண்டிர் பிள்ளையும்பொய்
உற்றாரும் பொய்யுல கத்தாரும் பொய்7 நம் முடம்புயிர்பொய்
கற்றார் பிதற்றலும் பொய்ச்சம யாதி கடவுளர்பொய்
முற்றா முலைவள்ளி பங்கனெங் கோன்8 மெய்யன் முன்னிற்கிலே. 93
[பிரதி பேதம்: 7. நம்மு டம்புயி ரும்பொய் யுறமுறையுங்.
8.வந்து முன்னிற்கவே]

முன்னிற்ப தா9ரவனி முன்னிற்ப தாரு முருகனெவன்
வென்னிற்கும் 10பகலோ விருளோ தெய்வம் வேறுளதோ
தன்னிற்குந் தன்னிழல் தன்னிட மானவத் 11தன்மையைப்போ
லுன்னிற்கு முன்னிழல் நானுன் னிடத்தி லொடுக்கங்களே. 94
[பிரதி பேதம்: 9. ரவண். 10. வெம்பக. 11. தண்மையைப்போ]

ஒடுக்கமுந் தோற்றமு முன்னையல் லாதில்லை யுன்னையுன்னால்
படுக்கவும் ரட்சிக்க வும்12பா ரிருவினை பாந்தமறு
மிடுக்கமு மின்பமு மில்லா திடத்தி விருவருமற்
றடுக்கவு13ள் ளவச்சென் றாடுதீர்த் தம்வந் தாடினதே. 95
[பிரதி பேதம்: 12. பாரு நீவினைப் பாந்தம் வரு.
13. னென்றவச்.]

ஆடின பம்பர மோகயி றோவெறிந் தானிடமோ
சாடின தற்பர மோவிசை போன தென்14னுயிரைக்
கூடின துமம்மையப்பனுந் தன்15வீடு குமிறவிழுந்
தோடின தெவ்விட மவ்விடம் நீயென் றுணருவதே. 96
[பிரதி பேதம்: 14. றன்னு யிருங். 15. கூடக்]

உணராத போத முரையாத வுடல்பொரு       [ளொன்றொடொன்றைப்
புணராத 1போதம் புரையற்ற சோதி புலன்குழைய
மணராசு வாச மகிழாத வானந்தம் வள்ளிபங்கன்
கணமா கிலுமென்னைப் பிரியாத சீவனின் றன்வடிவே. 97
[பிரதி பேதம்: 1. போகம்.]

வடிவம் பொருளரு ளைங்குணம் வாக்கு 2மனமடியு
முடிவுமில் லாத முடியுன்னைச் சூட்டி முருகனென்றே
படிகந் தனில்கண்ட காட்சிப் 3பிறவஞ்சப் பார்வை4யற்று
விடியும் 5பொழுது மிரண்டுமொன் றேதெய்வம்       [வேறில்லையே. 98
[பிரதி பேதம்:2. மனம் வடிவு. 3. பிரபஞ்சமும். 4. யுற்று.
5. பொருளு.]

இல்லையுண் டென்ப திரண்டுஞ்சொல் லாத விடமதுன்னை
கல்லையுஞ் செம்பையு மண்ணையுஞ் சூழக் கனிவுறுத
லொல்லையிற் போன வுயிருடன் கூடி யுதவி6செய்வ
தல்லயல் சுற்றத் தவ7ராகக் காண்புற் றரற்றுவதே. 99
[பிரதி பேதம்: 6. செய்யா. 7. ராக்கைக் கன்புற்]

அரற்றலுங் களிப்பு 8மின்ன தென்னவோ ராகமத்தாற்
பரத்தலும் பேசப் படாமையு மெங்கும் பராபரமாய்
நிரத்தலும் 9நிர்த்தலும் நிரவாமை யும்நினைப் பும்மறப்பும்
இரத்தலு மீய்தலு மில்லாத 10தோற்றமதி யெவ்வண்ணமே. 100
[பிரதி பேதம்: 8. மினண்டின. 9. மொன்று. 10. தோற்றம் நீ.]

எவ்வண்ண மெவ்வுரு எவ்வுயி ரெவ்வுள னென்றறியாச்
செவ்வண்ண மூமன் 11கனாவுரை யற்றநின் சேவடியாய்ச்
சவ்வண்ண மென்றன் சங்கரி கோதைதன் னாகவரந்
13தவ்வண்ண மாதிம மறைபேச வைய மறிந்ததுவே. 101
[பிரதி பேதம்: 11. கனவுரைத் தானின் சேவடியைச்,
12. னர் சங்கரி கோரத்தைத் தான்கவர்ந்தே. 13.யெவ்.]

வையஞ் சலமங்கி கால்வான் பலதேவுயிர் வான்முடிவிட்
டெய்யும் பரமுதற் சால்வதெல் லாமெம் பிரான்முருகர்
தெய்14யென்று நின்று நின்றாடச் சிலம்போசைத் திருவிளையாட்
டையநின் னங்க மிதென்னங்க மாய்15க்கொண்ட வானந்தமே. 102
[பிரதி பேதம்: 14. யென்ற பாதச் சிலம்போசையுற்ற. 15. நின்ற.]
குருபாதம் துணை. சிவமயம்
சரியை, கிரியை, யோகம், ஞானம் முற்றிற்று.
சடக்கர வந்தாதி முற்றும்.
====================

9. சுப்பிரமணிய ரந்தாதி
(சுப்பிரமணியர் பேரில் அந்தாதி)


வெற்றிமயி லேறும் வேலரே மேரூரில்
நெற்றிவிழிக் கண்ணிரண்டு நித்திரையோ - சத்தி
வள்ளிதெய் வானை வருந்தி யழைத்தாளே
புள்ளியிது வென்றெனக்குப் போட்டாய். 1

விநாயகர் வணக்கம் வெண்பா
முத்திதரு ஞானம் மொழிமங்கை வேலர்மேல்
பத்தியுட னந்தாதி பாடவே - வெற்றியுடன்
அரிபிரமர் காணா[த வ]ரன்மதலாய் மேரூர்வாழ்
கரிமுகனைக் கைதொழுதேன் காப்பு. 2

அத்தி யெறும்புகடை யானவுயி ரத்தனைக்கும்
முத்தி வரமளிக்கு மேரூரில் - பத்தியுடன்
மங்கைவே லாயுதர்மேல் மாலையந் தாதிகரு
கங்கைமக னைங்கரனே காப்பு. 3

நூல்
மாதவஞ்செய் மேரூர் மங்கைவே லாயுதரே
வேதனரன் மாலும் விண்ணவருஞ் - சீதமதி
யிரவி முனிவோரு மிந்திரரு மடியாரும்
பரவி யுனைப்புகழ்வார் பரிந்து. 1

பரிந்து வறுமுகனைப் பாவலர்கள் மேரூரில்
விரிந்து குவிந்து விளம்புவார்- தெரிந்து
அருமை யடியார்க ளம்புயத்தைக் கண்டு
ஒருமையுட னுள்ளத்தி லோதும். 2

ஓது மறுமுகனே ஒங்காரத் துட்பொருளே
மாதுவள்ளி தெய்வானை மங்கையுடன் -(போது)[பாதி]மதி
சூடுமர னளித்த சுந்தரனே மேரூரில்
ஆடுமயி லேறியரு ளளி. 3

அளிப்பா யறுமுகவா வடியார்கள் தங்கருத்தில்
ஒளிப்பா யிருந்து வொளிவிப்பாய் - களிப்பாக
கருவடியில் வந்த காரணத்தி னாலே
குருவடியைத் தொழுதேன் குறித்து. 4

குறித்து வறுமுகனை கொங்கை குலுங்கப்
பிறித்து மடமாதர் புகலுவார் - வெறித்து
வந்தன னடியேன் வகைசொல்வாய் மேரூரா
விந்தவினை வந்த தேது. 5

ஏதுபிழை செய்தாலு மேழை யெனக்கிரங்கி
தீது புரியா தெய்வமே- நீதி
தழைக்கின்ற மேரூர் தையல்வள்ளி பாகா
பிழைக்கின்ற வாறெனக்குப் பேசு. 6

பேசு மடியேன் பிழைபொறுத் திவ்வுலகில்
வீசு புகழளிக்கும் வேலவனே- பூசுரர்கள்
போற்று மறுமுகனே புகழ்பெரிய மேரூரா
காத்தருள வேணுமுன் கடன். 7

கடன்பட்டு நெஞ்சங் கலக்கமிக வறுக்க
உடன்பட்டு வுன்கருணை வுதவுவாய் -சடம்பெற்ற
அடியார்கள் போற்று மறுமுகனே மேரூரா
பொடியாக வென்வினையைப் போக்கு. 8

போக்குதற்கு வறுமுகனைப் பொருந்த வகைதெரியா
நாக்குநிலை யில்லா நாயேனை - காக்குதற்கு
வகையிலையோ மேரூரா வல்வினையை நீக்கப்
பகையுண்டோ வேலா பகர். 9

பகராமல் மேரூரில் பார்தவம் நீயிருந்தால்
நிகரிலா நானிருக்க நீதியோ -தகரேறு
வேதப்பொ ருள்வேலா வித்தகனே யறுமுகவா
காதலடி யேன்வாழக் கருது. 10

கருதுமடி யார்கள்வினை கட்டறுக்கும் வேலா
பொருதுமயி லேறும் புனிதனே - தருமநெறி
தழைக்கின்ற மேரூர் தையல்வள்ளி பாகா
பிழைக்கின்ற வாறெனக்குப் புகல். 11

புகலாமல் நீயிருந்தால் பேதையடி யேன்வறுமை
யகல வருள்புரிவா யறுமுகவா - நிகரிலா
சூரென்று வந்தரக்கன் சிரந்துணித்த மேரூரா
காரென் றுனைப்பணிந்தேன் கை. 12

கைவிட்டால் நாயேனைக் காப்பா ரொருவரில்லை
பொய்விட்டார் போற்றும் புகழ்வேலா - மையிட்ட
கண்ணா ரிருவர் கலந்த புயத்தழகா
தண்ணார்ந்த மேரூரில் தரித்து. 13

தரித்துத் தவம்புரியும் தானமுனி வர்க்காகச்
சிரித்துப் புரமெரித்த சீமான் - வரத்திலிந்த
ஆனை முகற்கிளைய வறுமுகனே மேரூரா
சேனை வரமெனக்குச் செப்பு. 14

செப்புதற்கு வன்கருணை செங்கணெடு மால்மருகா
ஒப்பி யெனக்கு வுதவுவாய் - இப்புவியில்
மாதவஞ்செய் மேரூர் மங்கைவே லாயுதரே
ஆதரவா யென்னை யழைத்து. 15

அழைத்துக் கிருபை யருள்வா யறுமுகனே
தழைத்திருக்கச் செல்வந் தருவாய் - குழைத்துருகி
பூசைபுரி யுன்னடியார் போகமுடன் மேரூரில்
ஆசையுடன் வாழ்க வருள். 16

அருள்வா யடியார்க்கு வப்பனே யிவ்வுலகில்
பொருளிலா நானிருக்கப் போகுமோ - மருவியெனை
காப்பா யறுமுகவா கர்த்தனே மேரூரா
தீர்ப்பா வென்வினையைத் தீர். 17

தீராமல் நீயிருந்தால் தீர்ப்பவர்கள் வேறெனக்கு
ஆராகி லும்பார்த் தறிவிப்பாய் - வீராதி
வீரா வறுமுகவா மெய்யனே யறுமுகவா
வாராய் வினை தீர்ப்பாய் வந்து. 18.

வந்து பிறந்து வல்வினையி லேயழுந்தி
நிந்தை படவெனக்கு நீதியோ- சுந்தரஞ்சேர்
மேரூ ரறுமுகவா முன்வினையைத் தீர்த்து
சீருடனே வுன்பாதஞ் சேரு. 19

சேரும் வகையெனக்குச் செப்புவா யிவ்வுலகில்
ஆரு மறியா தரும்பொருளே - சீருடனே
அத்தர் தமக்குரைத்த வறுமுகனே மேரூரா
குற்றமது தீரவெனக் கூறு. 20

கூறு மடியேன் கொடிய வினையறுத்துச்
சீறும் பயமதனில்(ச்) சேராமல்- தேறுவகைக்
காட்டா யறுமுகவா கந்தனே மேரூரா
கூட்டாயோ வுன்பதத்தில் கூட்டு. 21

கூட்டுவாய் வேலா கொடிய வினையகற்றி
நாட்டுவா யடியேனை நானிலத்தில் - ஆட்டுவார்
அரவுமதி புனையு மரன்மகனே மேரூரா
இரவுபக லாய்க்காட் டினி. 22

இனியாரை நோவேன் இறைவனே யறுமுகவா
முனியாதே யென்னை நீ மேரூரா- கனிவாய்
கண்டு களிப்பார் கானகத்தில் மாதவர்கள்
தண்டு கமண்டலத்தோர் திரண்டு. 23

திரண்டு வறுமுகவன் திருவடியை நோக்கிப்
புரண்டு பணிந்து புலம்புவார் - மிரண்டு
பிரியா வகையளிப்பாய் பேதை யடியேனை
சரியாக வைப்பாய் சரண். 24

சரணமென்று பாதஞ் சார்ந்த வகையறிவேன்
மரண மகல மருந்தறியேன் - கரணங்
கடந்துநின்ற மேரூரா கர்த்தனே யறுமுகவா
தொடர்ந்துவரும் வல்வினையைத் தொலை. 25

தொலையாப் பிறவி துயரறுத்து வேலா
அலையாமற் செல்வ மளிப்பாய் - நிலையாய்க்
காட்டா யறுமுகவா காங்கயனே மேரூரா
வாட்டமது தீர்ப்பாய் மகிழ்ந்து. 26

மகிழ்ந்திருக்கச் செல்வ மளிப்பா யறுமுகவா
இகழ்ந்தோர்க் கிருவினையை யேத்துவாய் - புகழ்ந்தடியார்
பூசிக்கு மேரூர புண்ணியனே மால்மருகா.
நேசிக்க வுன்னை நினைந்து. 27

நினைந்து வறுமுகனை நின்றுக்கண் ணீர்சோரக்
கனைந்துருகி நின்று களிப்பாரை - புனைந்துவரும்
பொல்லா வினையைப் போக்குவாய் மேரூரா
கல்லாமல் கற்றேன் க(ல)வி. 28

கலவிச் செயமா(ய்கை) [யை] காமன் கணையதனால்
குலவிக் கொடும்வினையில் கோம்பினேன் - உலவிவரக்
கேட்டுதோ மேரூரில் கேள்வியோ யறுமுகவா
கூட்டுதற்கு மில்லையோ குலம். 29

குலமதிலே யில்லாக் கொடிய வினைசெய்தேன்
நலமாக மேதினியில் நானிருக்க - செலவு
கொடுப்பா யறுமுகவா குமரனே மேரூரா
யெடுப்பாரு மில்லை யெனக்கு. 30

எனக்கு வகைசொல்வாய் எம்பிரா னறுமுகவா
மனக்கவலை மாய்க்க மருந்துதவாய் - புனக்குறவர்
மங்கை மணவாளா மறையோது மேரூரில்
கங்கையுமை மைந்தனே கா(ர்). 31

காராமல் நீயிருந்தால் காப்பா ரொருவருண்டோ
நாராய ணன்மருகா நல்குவாய் - சீரான
கானமயி லேறிவருங் கந்தனே மேரூரா
ஊன வினைமாண் டுயர்ந்து. 32

உயர்ந்த வடியார்க்கு வொளியா யறுமுகவா
நயந்த புகழளிக்கும் நாதா - பயந்தவர்க்குச்
சீரான செல்வஞ் சேரும் வகையருள்வாய்
பேரான யென்வினையைப் பேதி. 33

பேதித்து நோய்பிணிகள் போகும் வகையெனக்கு
ஆதித்தன் போல்வந் தருளைப் போதிக்க
வந்த வறுமுகனே வடிவேலா மேரூரா
பந்த வினையகலப் பாரு. 34

பாருள் ளறுமுகனைப் பார்த்துக் களித்திருக்கச்
சீருட னென்வினையைத் தீர்ப்பிப்பாய் - பேரருள்
கூடிவரு சூரர்குல காலா மேரூரா
தேடியுனை வந்தேன் திகைத்து. 35

திகைத்து வறுமுகவா சிந்தை கலங்கி
பகைத்தவரைக் கண்டு பயந்தேனை - நகைக்க
உடன்பட்டு நீயிருக்க வொக்கு மேரூரா
கடன்பட்டே னுன்புகழைக் காட்டு. 36

காட்டு மறுமுகவா கஞ்சன் தனைமுனிந்து
பூட்டுஞ் சிலைவேடர் புனக்குறத்தி - கேட்டுகந்து
மருவி மணஞ்செய்த மால்மருகா மேரூரா
கருவில்வந்த காரணத்தைக் கண்டு. 37

கண்டு பயந்தென்னைக் காலனணு காமுன்னம்
பண்டு வினையகற்றி(ப்) பாலிப்பாய் - தொண்டுசெயும்
அடியார்கள் போற்று மறுமுகனே மேரூரா
கடியாம லென்னைநீகாப் பாய். 38

காப்பாயோ மேரூர் கடம்பா வறுமுகவா
தீர்ப்பாயோ யென்வறுமை தீர்ப்பிப்பாய் - நேர்ப்பாக
நின்றசுரர் மாள நெடியவேல் விட்டருளி
விண்ணவர்கள் குறைதீர்த்த வேலா. 39

வேலா யெனக்கு விளங்கும் வரமளிப்பாய்
ஆலால முண்ட வரன்மதலாய் - பாலான
சங்கையெடுத் தோன்மருகா சற்குருவே மேரூரா
யென்கை பொருள்கொடுப்பா யின்று. 40

இன்றுபோ காதோ இருள்வினைக ளெல்லாம்
அன்றமரர்க் காகவந்த வறுமுகனே - சென்றடைந்தேன்
பாராயோ வேலா பார்புகழு மேரூரா
வீரா வுலகினான் வேறு. 41

வேறு படுத்தியெனை வேதனையி லேவிதித்தாய்
சீறுமர வந்தரித்த சிவன்புதல்வா - நீறுதவி
அல்லல் வினையை யறுப்பா யறுமுகனே
கொல்லாவர மெனக்குக் கொடு. 42

கொடுப்பா யறுமுகவா கொடியவினை நீக்கி
யெடுப்பா யெனைவுலகி லிசைவிப்பாய் - முடுக்காக
வந்தசுரர் மாள வடிவே லெடுத்தகுகா
முந்தவினை யறுக்குமே ரூர். 43

மேரூரில் நின்று முடுகித் தவம்புரிவாய்
ஆரூரில் வந்து வமர்ந்திருப்பாய் - போரூரில்
கோழிக் கொடிபடைத்த குமரனே யறுமுகவா
வாழியென் றுன்பதத்தில் வந்தேன். 44

வந்தே னறுமுகவா வல்பிணியி லேயழுந்தி
நொந்தேனுன் சேவடியை நோக்கியே - கந்தனென்னும்
பேரான மால்மருகா புண்ணியனே மேரூரா
கா (ரா)[வா]யோ வுன்மன (து)[மு]ங் கல். 45

கல்லோ வறுமுகவா காங்கேயா யான்பிழைக்க
சொல்லொன்று நீபகர்ந்தால் தோடமோ - தொல்லுலகில்
அந்தணர்கள் போற்றும் அரன்மகனே மேரூரா
வந்தவினை யகற்றவா ராய். 46

வாரா யறுமுகவா மாலயனு மிந்திரர்க்காய்க்
கூராழி யாலசுரரைக் கொன்றவனே - காவாயோ
வேலாகு காதணிகா மேரூர் தவம்புரியும்
சூலாயு தாநீயே துணை. 47

துணையாரு மில்லையுனைத் தொழவும் வகையறியேன்
கணையேவி சூர்தொலைத்த கர்த்தனே - அணையாயோ
மேரூ ரறுமுகவா மெய்ஞ்ஞான வித்தகனே
பேரூரா யென்வினையைப் போக்காய். 48

போக்காயோ மேரூர் புகழு மறுமுகவா
தூக்கா யரும்பிணியை நீதொலைத்து - நோக்காக
வாக்கிலே உன்புகழை வையகத்தில் நான் துதிக்க
நாக்கிலே வுண்மைப்பொருள் நாட்டு. 49

நாட்டு மறுமுகனை நலமிலா நாயடியேன்
கேட்டு மகிழ்ந்து கறுவித்தேன் - ஊட்டுவாய்
தேவாதி தேவா செந்தணிகை மேரூரா
மூவாதி மந்திரத்தை மொழிந்து. 50

மொழிந்து வறுமுகவா மும்மலமு மிருவினையி
லழிந்திடா முன்கருணை யருளுவாய் - ஒழிந்திடாப்
பிறவிநோய் துன்பம் போக்குதற்கு மேரூரா
மறைவினிலே நீயுரைப்பாய் மருந்து. 51

மருந்து வகையெல்லா மாபிணிக்கு மேரூரில்
இருந்து வறுமுகனே யியம்புவா - யருந்தவஞ்செய்
மங்கைவே லாயுதரே மால்பிரம ரும்பருக்காய்
செங்கைவே லெடுத்தவரைச் சேர்ந்தேன். 52

சேர்ந்தேன் மேரூரில் செல்வ மிகவேண்டி
பூந்தே னறுமுகனைப் போற்றுதற்குச் - சார்ந்தேன்
அடியேன் செய்தவினை யகற்றி யெனையாள
முடியாதோ மேதினியோர் முன்(னே). 53

முன்னே யறுமுகவா முன்வினையை வேரறுத்துப்
பின்னம் பிறவியில்லாப் போக்குவாய் - கன்னங்
கரியமால் தன்மருகா காங்கயனே மேரூரில்
திரியவெனக் குண்டோ திறமை. 54

முறைமையில்லை யோயின்னு மேரூரில் - குறமகளைச்
திறமையில்லா வுன்னடியேன் தெரியாப் பிழைபொறுக்க
சேரு மறுமுகவா செகதலத்தில் வேறெனக்கு
ஆருமில்லை நீசொல் லறிவு. 55

அறிவுமிகச் சொல்வா யறுமுகனே மேரூரா
பிறிவுபடச் செய்தாயே பூதலத்தில் - நெறியுடனே
நீக்கும் வகையளவாய் நிர்மலனே மால்மருகா
ஊக்கும் வகையெனக்கு வோது. 56

ஓது வகையெனக்கு வுதவி யறுமுகவா
தீது வாராத திறமளிப்பாய் - சூதுயெமன்
தூதுவரா முன்னந் துயரறுப்பாய் மேரூரா
போதுமென்று போட்டாயோ புள்ளி. 57

புள்ளியிது வென்று போட்டாயோ மேரூரில்
அள்ளியமு தளிப்பா யறுமுகனே - வள்ளியுடன்
கூடி வாழக் குலாவி மயிலேறி
ஆடியெனக் குரைப்பா யருள். 58

அருளைப் புரிந்து அரும்பிணியை வேரறுத்துப்
பொருளைக் கொடுப்பாயோ புண்ணியனே - இருளொளியும்
ஒன்றா யடியார்க்கு வோது மறுமுகனே
நன்றாக மேரூரில் நாடி. 59

நாடி யறுமுகனை நானிலத்தில் மேரூரில்
ஓடித் தவஞ்செய்யு முத்தமரை - கூடி
யிருந்து பணிந்தறியேன் யிருள்வினையி னாலே
மருந்துதவி யென்வினையை மாற்று. 60

மாற்றுவாய் மேரூர் மாதவஞ்செய் யறுமுகவா
போற்றுதற்கு வுன்கருணை புகழுவாய் - கூற்றுவனை
புதைத்த வரன்புதல்வா வுலகமுண் டவன்
மருகா புதைத்த புகழெனக்குப் புகட்டு. 61

புகட்டுவாய் மேரூர் புகழு மறுமுகவா
அகட்டுவழி யில்லா தருள்புரிவாய் - திகட்டாத
இன்பந் தருவா யீச னருள் புதல்வா
அன்பருக் கடிபணிய லாக்கு. 62

ஆக்கு மறுமுகவா வந்தணர்கள் வாழ்மேரூர்
காக்கு முயிரனைத்துங் கலந்திருப்பாய் - வாக்குதவி
அல்லல் வினைபோக்கி அடியேன் துயர்தீர
நல்ல புகழளிப்பாய் நாதா. 63

நாதா சமரகுரு நான்மறைக்கு மெட்டாத
வேதாந்தத் துட்பொருளை விளம்புவாய் - மாதாவாய்
அனைத்துயிருங் காக்கு மறுமுகனே மேரூரா
மனத்துயரம் போகுமோ மாண்டு. 64

மாண்டு மறவாமல் மாதவஞ்செய் மேரூரில்
கார்ப்பா யறுமுகவா கடம்பா வுனக்கபயந்
வேண்டு மருந்தெனக்கு விளம்பியெனை - ஆண்டு
தீர்ப்பாயோ யான்செய்த தீம்பு. 65

தீம்புபொறு மேரூர் தேவா வறுமுகவா
வேம்புபோ லுன்னடியேன் வேறுபட்டேன் - பாம்புடனே
பாதிமதி யணியும் பரமரருள் பாலா
சோதிபொரு ளெனக்குச் சொல்லு. 66

சொல்லு மறுமுகவா சோகை வலிநோயை
வெல்லும் வகையருள்வாய் வேல்முருகா - பல்லுயிர்க்கும்
மேரூர் தவம்புரியும் மெய்ப்பொருளே வித்தகனே
வாருமென் றுனையடியார் வருந்தி. 67

வருந்தி யிருக்க வல்லவர்கள் மேரூரில்
பொருந்தி யிருப்பார் பெருவினைக்கு - மருந்திடவே
பூதலத்தில் வந்த புண்ணியனே யறுமுகவா
ஆதரித்து நின்றே னசந்து. 68

அசந்து தெரியாம லறுமுகனே மேரூரில்
கசந்து திரிந்து கருகினேன் - இசைந்து
உருவாக்கி யென்னை உலகிருக்க வேலா
திருவாக்குச் செப்புவாய் தெளிய. 69

தெளியவுரை மேரூர் தேவா வறுமுகனே
அளியாயோ செல்வ மடியேனுக்- கொளியாகிப்
பிரகாச மாகப் பெருமைதரு வேல்முருகா
குறகான கத்திவள்ளி கோவே. 70

கோவே யறுமுகவா கொடிய தவம்புரியுந்
தேவே யடியேனைத் தெரியேனை - வாவென்று
வரமளிப்பாய் வேலா வல்வினையை நீக்கிப்
பரமளிக்க மேரூரில் பார். 71

பாரா யறுமுகவா பாதமது நான் தேடித்
தீரா மயக்கத்தில் தியங்கினேன்- போராடிச்
சூரர்தமை வேரறுத்த சோதியே மேரூரில்
வீரர்தமை விட்டுநீ விளம்பு. 72

விளம்பு வகையெல்லா மியம்பி யறுமுகவா
வளம்புரியு மேரூரில் வாழ்விப்பாய் - உளங்குளிர
ஆடிவரு மடியா ரருமறையு மாரணமுந்
தேடிவரு முன்னே தெரிந்து. 73

தெரிந்து வறுமுகவா தரிசித்து வுன்பாதம்
பணிந்து புரிந்து பாவிக்க - விரிந்து
போகா வகையெனக்குப் புகலுவாய் மேரூரா
ஆகாத வல்வினையை யறிந்து. 74

அறிந்து வறுமுகனை அல்லல் வினையதனால்
பிரிந்து புகழாதே புலம்பினேன் - முறிந்து
வாடி மனந்தளர்ந்து வந்தேனே மேரூரில்
ஓடிவந்து யென்வறுமை யோட்டு. 75

ஒட்டு மறுமுகவா வுள்வினையை வேரறுக்கக்
காட்டு வகையுங் கடைமருந்துங் - கூட்டுவாய்
வேலனே மேரூரில் வித்தகா வுன்னடியேன்
ஓலமிட நீதியோ வுன்னை. 76

உன்னை யறுமுகனென் றுதிக்க வகைதெரியா
தென்னை வினையழுத்த லேற்குமோ- அன்னை
மாதாபி தாகுருவே மால்மருகா மேரூரில்
வேதாயென் விதியெல்லாம் விளங்கு. 77

விளங்கும் படியோ வேதன் விதித்தானோ
களங்கமிலா துன்கருணை (க்) காட்டுவாய் -இளங்குமரா
வெற்றிமயி லேறு மேரூ ரறுமுகவா
பத்தியுட னுன்பாதம் பணிந்து. 78

பணிந்துநின்ற தேவர்க்காய்ப் பரவி யசுரர்களைத்
துணிந்து சிரந்துணிந்துத் தோகைமயில் - அணிந்தேறும்
ஆறுமுக மேரூரா ஆறிரண்டு தோள்வேலா
வேறுவினை வாரா வியம்பு. 79

வியம்பு கதிர்காமா வேதனையினாலழுந்திப்
பயம்புகுந்து வந்துநின்ற பாவியேன்- செயம்பொருந்த
வேணு மறுமுகவா வேலனே மேரூரில்
பூணுவது முன்பாதப் பொருள். 80

பொருளாக மேரூரில் புகழ்ந்தே னறுமுகனை
மருளாக வந்தவினை மாளவைப்பாய் - அருளாக
அடியார் மனத்தி லறிவிப்பாய் வேலா
முடியாதோ (யென்) விரத முடி. 81

முடித்தா லறுமுகனே முன்வினையும் பின்வினையும்
படித்தாலு மூழ்வினைகள் பாறுமோ - அடித்தாலும்
நீயா தரவொழிய நிர்மலனே மேரூரா
தாயாகி யெனையீன்ற தாய். 82

தாயாகி யென்னைத் தாரணியி லீன்றெடுத்து
நாயா யலைய நகைப்பித்தாய் - பேயாகி
அலைந்தே னறுமுகனே யரும்பிணியி லேயழுந்தி
யுலைந்தேன் மேரூரா யொடுங்கி. 83

ஒடுங்கி யிருப்பார்க்கு உயர்ந்திருந்து வூழ்வினையைப்
பிடுங்கி மருந்திடுவாய் புண்ணியனே- நடுங்கிநான்
வந்தே னறுமுகவா வடிவேலா மேரூரில்
யென்றன் வினைதீர்ப்பா யிரங்கி. 84

இரங்கா யறுமுகனே யென்றன் மனங்காயங்
குரங்கா யுனையறியாக் கும்பிட்டேன் - வரங்கேட்க
தேவரரி பிரமர் தேடுவார் மேரூரில்
மூவருனைப் புகழ்வார் முதல். 85

முதலாக மேரூரில் முகுந்தன் சகோதரிக்கு
மதலா யறுமுகவா மாதவனே - குதலைமொழி
அறியாத பாலகனை யடிமைகொண்டு யிவ்வுலகில்
முறியாக்கி வைத்தாய் முனிந்து. 86

முனிந்தா லறுமுகவா மேதியினி லென்னைக்
கனிந் தாற்று வாருண்டோ கார[ண]னே - குனிந்தேற்றி
மறையோர் புகழும் மாதவஞ்செய் மேரூரில்
பிறைசூடும் பெம்மான் புதல்வா. 87

புதல்வா வுனைத்தொழுவேன் புகழ்பெரிய மேரூரில்
குதலை மொழியில்வந்த கொடுவினையை - முதலாக
அறுப்பா யறுமுகனே ஆரணத்துக் குட்பொருளே
பொறுப்பாயோ யான்செய் பிழை. 88

பிழைக்க வடியார்கள் புகழ்பெரிய மேரூரில்
அழைக்க வருவா யறுமுகவா - தழைக்க
வரமருள்வாய் வேலா வந்தவினை நீக்கி
அரன்மகனே யடியேனை யாள். 89

ஆளு மறுமுகனே அடியேன் செய்திருந்த
கோளுங் கொலைவறுமை கொடுவினையு -மாளும்
படியா யருள்புரிவாய் பாலனே மேரூரில்
குடியாக வென்னையாட் கொள்ளு. 90

கொள்ளுதற்கு வுன்னடியைக் குறித்த வகையறியேன்
தெள்ளுதமி ழோதித் திரிந்தறியேன் - துள்ளுமயில்
ஏறிவரு மேரூ ரிறைவனே யறுமுகவா
கூறிவிடும் யான்செய்த கொடுமை. 91

கொடுமை யறுப்பாய் குமரா வறுமுகனே
அடிமைகளைக் காப்ப தருமையோ- கடுமையாய்
வந்த வசுரர்களை வதைத்துவரு மேரூரா
யென்றன் வினையறுக்க விதங்கி. 92

இதங்கி யறுப்பாய் இருவினையு (மும்மலமு) மேரூரில்
உதங்கி வுணவா யிருக்கவுரை - மதங்கி
திரிசூலி மாதளித்த தேவனே யறுமுகவா
குறியாகச் சொல்வாயென் குறை. 93

குறையே தறுமுகனே கூறுவாய் மேரூரில்
மறையோர்கள் தேவரிஷி மாமுனிவர் - முறையோவென்
றேத்துவா ரடியார்க ளிணைவிடா துன்பதத்தை
வேர்த்துவிது விதிர்த்துமெய் வெம்பி. 94

வெம்பி யரும்பி விரும்புவார் மேரூரில்
நம்பி யிருந்தோர்க்கு நாடளித்தாய் - தும்பிமுக
வாரணர்க்கு நேரிளைய வடிவே லறுமுகனைப்
பூரணமாய்க் கண்டடியார் புணர்ந்து. 95

புணர்ந்து வறுமுகனைப் பூதலத்தின் மேரூரில்
உணர்ந்து வுளங்களியா வுருவாகி - மண(ர்)ந்து
ஒளிப்பா யிருப்பார்கள் உயர்ந்தவரை நெஞ்சமே
களிப்பா யவர்பதத்தைக் கா(ணு)[ண்]. 96

காணு மறுமுக(னை)[னே) கந்தனே மேரூரில்
தாணுவே வுன்பாதந் தந்தருள - வேணுமென்று
ஆவலாய் வந்தேன் அடியேன் துயர்தீரச்
சேவல் கொடியோனே சாற்று. 97

சாற்றுவாய் மேரூரில் சஞ்சலங்கள் தீர்த்தென்னை
சேற்றடம் படைத்துங் கரைந்திருப்பாய் - வீற்றிருந்து
வெற்றி பொருத வியம்பு மறுமுகனே
பத்தியுடனான்வாழப் பார்த்து. 98

பார்த்து வறுமுகவா பாலரடி யார்கள் முதல்
போற்றுதற்கு வுன்கிருபை போதிப்பாய் - கூற்றுவனும்
வாரா வகையருள்வாய் வஞ்சனைகள் சேராமல்
நேராக வுன்பாதம் நினைந்தேன். 99

நினைந்தேன் மேரூரை நித்த மறுமுகனைப்
புனைந்தே னடிபணியப் பூரித்தேன்- மனந்தேறிப்
பூசை புரியும் பூதலத்தி லடியாரைப்
பாசமுட னவர்பாதம் பணிந்து. 100

பணிந்து குருபாதம் பாவித்துப் பூசைசெய(த்)
துணிந்துவந் துன்பாதந் தொடர்ந்து - அணிந்திருக்க
நீறு கொடுப்பாய் நிர்மலனே மேரூரில்
பேறு கொடுப்பாய் பெருக்க. 101

பெருக்க வறுமுகவா பெருமையுடன் மேரூரில்
இருக்க வரந்தருவா யிந்திரன்போல்- உருக்கமுடன்
அந்தாதி செய்த அடியார்க ளீடேற
வந்தாரே வேல்முருகர் வாழி. 102

சுப்பிரமணிய ரந்தாதி முற்றும்.
; ----------------

10. சௌந்தரி யந்தாதி

விநாயகர் வணக்கம்
முத்தியளித் திடுங்கரிமா முகனே யுன்றன்
      முண்டகத்தாள் பணிந்தேத்தி மொழிவ தாகும்
சத்திதிரி புரைகவுரி வுமையாள் ஞானத்
      தனிவாழ்வு தருமாறு சாற்று மாலை
சித்திதரு மந்தாதி சிறப்பாய் நாயேன்
      சிந்தனையை முடிக்கவருள் செய்வா யென்றன்
புத்தியருள் விளக்கமிகும் போத நாதப்
      பொன்னடியை யுன்னடியைப் புகழு மாறே.

நூல்
பொன்னிதழ் பரந்தமலர் கொன்றைமுடி யின்சடிலர்
      போகசுக போக மயிலே
வன்னியி லெழுந்தவொளி மின்னலென நுண்ணிடை
      வளைந்தொல்கும் வஞ்சி மணியே
உன்னரிய ஞானவொளி யேவொளியின் மேவுமொரு
      வோதிம நலங்கொ ளுமையே
என்னரிய தந்தையை யெழுந்தருள வென்றரு
      ளிரங்கினை யரம்பை யரசே. 1

வேறு
அரசர் தம்பிரா னாழிமால் பங்கய
      னக்கினி நுதற்கண்ணான்
சிரசு பூண்டருள் சேவடிக் கமலத்தின்
      செல்வியே சேணார்ந்த
வரையி லேபிறந் தருளிய மனோன் மணி
      மயேசுவரி மதிசூடி
உரையுணர் சசியு மிறந்தவர்க் கருளிய
      வொளிவிளக் கனையாளே. 2

வேறு
ஆளு மையனை நாளு மம்பல
      மாடி டும்படி நாடியே
கோள ருஞ்சிவ ஞான ரஞ்சித
      கோகி லம்பயில் வாகினி
தாளு மம்புய மேல மர்ந்திடு
      தான கம்புகல் ஞானமே
தோளு றுங்கழை யேர்ப சுங்கிளி
      தோகை யம்பிகை பாகமே. 3

வேறு
பாகங் கலந்தமணி யாகஞ் சிறந்தமுழு
      நீறுந் துலங்கு பரமன்
தாகந் தவிர்ந்தவிர மூறுஞ் சலம்புளக
      சாரம் சொரிந்த குயிலே
பூகஞ் சிறந்தகனி யோகங் கலைந்தவர்கள்
      போதந் தெரிந்த விழியே
மேகம் புகுந்தகுழல் மாதங்கி யெங்கள்சிரம்
      மேவுஞ் செழுங்க மலையே. 4

வேறு
கமலக் கண்ணனு நான்முக னாடிக்
      கதறிக் காணாரைத்
தமதுட் பாகம தாகத் தவமுயல்
      சதுரித் தாய்மாதே
எமதுட் பாதச ரோருகம் வைத்தெனை
      யாளாய் கோமாதே
அமலித் தாளணி யாரணி பூரணி
      யருளுற் றாளவா 5

வேறு
வாயா ரச்சொலி வீழ்வா ரைப்பதம்
      வாழ்வா யப்பாவென்
றோயா நித்திய ஞானா சத்தினி
      யூர்வாழ் விப்பாயே
சேயாய் வைத்தெனை யாள்வா யுத்தமி
      சீர்பா தத்தேனை
நீயா ரப்புரி நாயே னைச்சிவ
      னேரே யுற்றாளே. 6

வேறு
உத்தமி பத்தினி சற்குணி நித்திய
      வொப்பி லருட்கொடி யோதாதே
பித்த னெனப்புவி யுற்ற மயக்குறு
      பிச்சையொ ழித்தருள் மாதாவே
நித்தனை நத்தனை முத்தனை நத்திய
      நிட்டைய ளித்தருள் மாதாவே
சித்தினி பத்தினி யத்தினி சங்கினி
      சிற்றடி யிட்டருள் மானாரே. 7

வேறு
மான்போல் விழியு மிளம்பிறைபோல்
      வயங்கு நுதலுங் கனிவாயுந்
தேன்போல் மொழியுஞ் சிற்றிடையுஞ்
      செம்பட் டுடையுந் திருக்கழுத்தும்
வான்போ லிருண்ட மயிர்க்குழையு
      மணிச்செப் பெனவே கனதனமும்
தான்போ லுவமை சாற்றரிய
      வுமையே சரணந் தருவாயே. 8

வேறு
தருவா யயனுந் திருமா லுணரா
      தருள்செங் கமல சரணன்றே
ஒருமா மனதா யுறவா யுருகா
      துறையா தவமே யுழலுற்றேன்
திருமா மறையே பொருளே சுவையே
      சிவனா ரிடமங் கலவாழ்வே
திருமா மலரே பரிபூ ரணமே
      யெமையாள் பதமே வுமையாளே. 9

வேறு
உமையே மூலத் துறைந்தபொரு
      ளுணர்ந்த சுழியின் முனைதுறந்து
இமையோ ரறிய வரிதாகு
      மென்தா யுனது பதங்கருதி
நிமையா நாட்டத் துடன்காலை
      நீட்டி மடக்கி நிலைபுகுந்து
தமையே யுணருந் தாமருளுந்
      தாயே யமலன் தனிவாழ்வே. 10

வாழ்வே வாழ்வை மறந்திருந்து
      மகிழ்ந்தே களிக்க வரும்வாழ்வே
கூழ்வீ ழீயைப் போன்ற மலங்
      குளித்தே கிடக்குங் கொடியேனைத்
தாழ்வே யகலுஞ் சிவஞானச்
      சரணங் கொடுக்க வெழுந்தருள்வாய்
மாவே ழத்தின் திருக்கோட்டு
      முலையா யுதித்த மலையாளே. 11

மலையிற் பிறந்து சிவஞான
      மடுவிற் குளித்துச் சிவனிடமாய்
நிலையைப் பதித்து யாவருக்கு
      நீயே தாயாய் நிறைந்ததனை
தலைவைத் தறிவா (ளு)[லு]ணராது
      தாயே கிடந்து தயங்குகின்றேன்
கொலைவைத் துழலுங் கொடும்பாவி
      யடியே நம்மைக் குறைதீரே. 12

வேறு
குறைதீ ரும்பொரு ளிறையோ னும்புகல்
      குணமே புன்செவியால்
நிறையா ரும்படி வேனவா வெங்கணு
      நிகழா வுய்ந்திடுவார்
மறையோ துங்கலை மகளே செந்திரு
      மகளே யம்பிகையே
முறையோ வென்றுய ரறவே சங்கரி
      முனியா துந்தயவோ. 13

வேறு
ஓமென் றுரைத்தபொரு ளாமென் றுணர்த்தியது
      ஊமென் றிருத்தி யெதனோ
சேமந் திறக்கவரு வாயென் சிரத்திலுறு
      சீர்வந்த பொற்க மலமே
காமந் தரித்தசிவ யோகந்த ழைத்தகொடி
      நாதந் தொனித்த நடமே
வாமஞ் சுகித்தபர போகஞ்சு கித்தமணி
      மாதங்கி சத்தி யுமையே. 14

வேறு
மயில்போன் றிலகுந் திருமேனி
      மணியோ குயிலோ மறைமுடிவோ
அயில்போன் றிருகண் கருவிளையோ
      வருளார் கடலோ யாதுரைக்கேன்
வெயிலோ நிலவோ சோதிமின்னல்
      ஒளியோ ககனவி ரோசனனோ
பயில்வோ ருனது திருவழகை
      யுமையே தொகுத்துப் பாடரிதே. 15

வேறு
பாடல் விண்ணவ ரோத மாதவர்
      பத்தி வைத்தடி தாழவே
ஆடல் கொண்டிடு மத்த னாரரு
      ளாடல் கண்டிடு மம்மையே
வாட லுந்தழை வாக லும்பெரு
      வாழ்வை நம்பிய மா(ய்கை) [யை]யும்
தேட லுஞ்சிவ னாட லுந்தவிர்
      தேவி யென்குறை தீரவே. 16

வேறு
தீராத வினைமுழுது மாறாத கொலைகளவு
      தீயாக வெந்தொ ழியவே
வாராத வழியுதவு மாமாயி தோகைமயில்
      வாராகி சூலி கௌரி
ஓராத புல்லறிவீ லீறாத போதனையை
      ஓதாம லோத வருள்வாய்
நாராய ணன்பிறவி யோடே பிறந்துசிவ
      னாரே கலந்த வமுதே. 17

வேறு
அமுத மிகுத்திடு தமனிய வட்டகை
      அணையமு லைத்திருவே
எமது கருத்துற வெழுதிய சிற்றுரு
      இதுவென வுற்றருள்வாய்
குமுத நகைச்சிய ரழகை யெடுத்தொரு
      கொடியை வகுத்தனையோ
உமது கருத்தொரு மகிமை யெவர்க்கிது
      உவமையெ னத்தெளிவார். 18

வேறு
தெளிவா யமுதப் பெருக்கெறிந்து
      தேங்குங் கடலிற் றினமூழ்கி
வெளிவாய்த் திருக்குங் கனகசபைக்
      குள்ளே புகுந்து வுமையேவுன்
கனிவாய்த் துருகுங் கணவனுடன்
      கனகத் தவிசின் வீற்றிருந்து
அளிவாய்த் திருக்குங் காட்சிமங்கைக்
      கரசே காண்டற் கருள்வாயே. 19

அருள்வா யாறு தலங்கடந்த
      யருட்பே ரொளிக்கே யருகழைத்துப்
பொருள்வா யிதுநீ தெளிவாயென்
      புதல்வா வெனவோர் புத்திசொல்வாய்
இருள்வாய் மடுத்துக் கிடந்துழைத்தே
      னெனையா ளுடைய வென்றாயே
தெருள்வாய் மனத்தா லுணராத
      சிவமே கலந்த செழுந்தேனே. 20

வேறு
தேனே பூவே காயே கனியே
      திருவே யருவே யுருவேயென்
னூனே யுடலே வுயிரே வுயிருக்
      குயிரே யருளுக் கொருவேரே
வானே நிலனே வளியே கனலே
      மழையே யொழியா வரமேயென்
கோனே குருவே குறைதீ ரமுதே
      எனையா ளரசன் குடிவாழ்வே. 21

வேறு
வாழ்வைப் புகழ்ந்துபெரு வாழ்வைத்
      துறந்துமத மாயைப்பி ணங்க டையனேன்
றாழ்வைச் சிறந்ததிரு நீற்றைப் புனைந் துருகி
      தாளைத் திறந்த ருளுவாய்
ஊழ்வைப்பெ னுங்குறையை நீமுற் றுகந்தருளும்
      ஓமச்ச டங்கி லுறைவார்
ஏழ்வெற்பி னும்பெரிய தாகத் திரண்டமுலை
      ஏழைக் கிரங்கு மமுதே. 22

வேறு
அமுதம் பிஞ்சிள மதியின் செஞ்சடை
      யரனுங் கொஞ்சியபோ
துமிழுஞ் செஞ்சுட ருதயங் கொண்டெழு
      முபயங் கொங்கைகண்மேற்
கமழுஞ் சந்தன மொழுகுங் கைகொடு
      தழுவுங் கஞ்சினியே (?)
திமிதங் கொண்டெழு நடனஞ் செந்திரு
      வுருகுஞ் சிந்தனையே. 23

வேறு
சிந்தனைக் கரியதொரு வந்தணர்க் குரியமயில்
      சிந்துரக் களப முலையே
பந்தடித் திடும்பொழுதி னெந்துரைச் சிறுவிரல்கள்
      பஞ்சிலக் கணமு டியினார்
வந்துநித் திலமுதிர நொந்திளைத் தனைவருக
      மங்கையர்க்கரசி யெனவே
சுந்தரக் கமலமுறு செந்திருக் குழல்வருகு
      சுந்தரக் களப மயிலே. 24

வேறு
மயிலி னழகு பசிய விலையின்
      வடிவு புகலு மொருவரேர்
      மணவன் முடியி லிலகு கமல்       வதன நுதல்செய் வளமையாய்
குயிலை யமுதை மழலை குழலை
      யிசைய வடிவு கொளுமொழி
      குமரி பரமி சிறுமி கிழவி       குழவி குதலை மதலையே
அயிலை யுழையை யளியை வெருளு
      மரிவை விழிகள் பொருவுமோ
      அமல னயனு மரியு மறிய       வரிய சயன மௌனியே
பயிலு மடியர் மனது குறைகள்
      பயிலு மகலும் பதமுளே
      பதியு மெனது சிறுமை தவிரும்       பரம சரித விரதியே. 25

வேறு
விரதம் பயிலுஞ் சிறுவிதிமுன்
      வேள்விக் கிறையோன் விடைகொண்டு
வரமங் கையருக் கரசேநீ
      யன்னா ளரனைப் பிரிந்தன்றோ
இரவு பகலு மில்லாத
      விடத்தே சிவனு மிருக்கின்றான்
அரவின் பணியுங் கலைமதியுந்
      தரித்தார்க் குன்னை யலதுளதோ. 26

வேறு
உளமுங் கசிந்துருகி யுரையுங் குழன்றுள றி
      யுடலுங் கிடந்து புரளக்
களமுங் கருங்கனிகொள் பவளந் தயங்குபுய
      கணவன் கலந்த வலமும்
புளகம் புனைந்தமுலை யளகம் புனைந்தமலர்
      புழுகுங் கலந்து திரவே
மளவெண் டையங்களொலி தருநந்தி யின்கடிது
      வருமென் றவங்க ளுளதோ. 27

வேறு
உளதோ விலதோ வருவோ வருவோ
      வுறவோ பகையோ வுளநொந்தே
களவோ கனவோ மனமோ வெனுமென்
      கபடங் களைநீ களைவாயே
கிளையே தமரே யெனையா ளரசே
      கிருபா கரியே பெருவாழ்வே
விளைவே விதையே நிலமே சலமே
      விரகே சிரகா ரணவீடே. 28

வேறு
வீட்டைத் துறந்து நாட்டத்தி லேறி
      வேட்டைச் சுணங்கை யடிகோலாற்
காட்டைத் திணிந்து மூட்டிக் கனிந்து
      காற்றைத் திணிந்து குழலூது
கோட்டைக்குள் வேந்தர் நீற்றைப் புனைந்த
      கூத்துப் புரிந்த குருவேயென்
றோட்டத்தில் வந்து பார்த்துக் கனிந்து
      மோட்சத்தி லென்னை யுடையாளே. 29

வேறு
ஆட்கொண் டாய்நீ யாளே யாலே யானாலே
நாட்கொண் டோடி வாராய் காவாய் தாய்போலே
வேட்கொண் டாரோ வாரார் மாதே வேறோநீ
கேட்குந் தாயே நாயே னாசைக் கிறையோனே. 30

வேறு
இறையவனை யுற்று முத்தி தேடும்வகை
      இனிய தவமுத்தர் பத்தர் தேவியுனை
நிறைமலர் பரப்பி வைத்து நாளுமுனை
      நெடிய துதிபத்தி வைத்த நேயமுடன்
மறைமுடிவி லுற்ற சத்தி பாதமலர்
      வரவழி துறக்க முத்தி யாகியது
சிறைமயிலை யேர்ந்த பச்சை மேனிதனிற்
      சிவனை யொருபாகம் வைத்தசே யிழையே. 31
வேறு
இழைநுழை யாதிடை யழகுறு பூண்முலை
      யிளவெயில் மேனியிலே
நிழலுறு சாமள மணிவட மாடிய
      நிழலுறு பூதியினாள்
கழைபெறு தோளியை யழகொழு கானிறை
      கருணையி னாரமுதைத்
தொழுமவ ரேசிவ னடியவர் காணிது
      சுருதியி னாலு(றை)[ரை]யே. 32

வேறு
உரையி றந்து உணர்வி றந்து
      வுலவு மாயை யுற்றதோ
திரையி றந்து காண நின்ற
      தேசி காவென் தேசியே
பரைசிறந்த ஞான் மேப
      ரிப்ப தென்ற பத்தரே
இறை யிறந்த சிந்தை யாகி
      யென்று தாயை நம்புவேன். 33

வேறு
நம்பிய வடியா ருக்கு நாரணன் காணா முத்தி
சொம்பிதத் துடனே தந்த சோதிக்கு மரிய சோதி
அம்பிகை பரமி லோக நாயகி யார்க்கு முன்னைக்
கம்பித புளகஞ் செய்யா கண்டலன் காணா முத்தி 34

வேறு
முத்தி யளித்திடு சட்டுவ வட்டகை
      முக்கிய முக்கியமே
நத்தி யுரைப்பவர் சத்தினி மெய்ப்பத
      நற்கர னுற்றவளே
பத்தினி நித்திய முத்தி யளித்தருள்
      பத்மினி சற்குணியே
சித்தி தரைத்தொழு சித்திரை யுற்றிடு
      சிற்றுரு வக்குயிலே. 35

வேறு
குயிலைப் பழித்தமொழி யயிலைத் தெழித்தவிழி
      குவியப் பெருத்த முலையாள்
கயிலைப் பொருப்புறையு மயிலைக் கருத்திலிரு
      கலையைத் தரித்த நிலையை
துயிலைக் கழித்தினிய துயிலைப் பழித்தரிய
      துயரைத் தொலைக்க வறியார்
வெயிலைச் சிரித்தபிற வியைவிட் டெடுப்பதெவர்
      வினையைத் தரித்த மனமே. 36

வேறு
மனமே சினமே வளிகனலே
      மண்ணே விண்ணே மறுசலமே
கனமே லறிவே பகையுறவே
      கண்ணே வொளியே கனலொளியே
தனமே யமுதே சராசரங்கட்
      கெல்லாந் தாயாய்த் தழைத்தோங்கும்
வனமே பிறவிக் கடல்கடக்க
      வந்தே யுதவு மரக்கலமே. 37

வேறு
கலவுமி யருந்துழக்க கவளவந் துசிக்குமென
      கதையதைக் கைப்பிடித்துன்
நிலவுபுகழ் சாகரப் பெருவெள்ள மெவ்வளவு
      நீசெறி துரைக்கவந்தால்
மலவிரு ளறுக்குமென் மாயையும் போமுனது
      மலரடி கிடைக்குமன்றோ
வலகிலா ஞானவா னந்தகுரு பீட்மு
      மன்னரிளங் குமரியரசே. 38

வேறு
அரச ராறுவீ டடைந்துமேற் கண்டிட
      வரியதோ ரானந்தங்
கரைக டந்தபே ரொளிவெளி யிருத்தியக்
      காரணம் பலித்தன்றோ
திரைக டந்தது மாயையு மலங்களுந்
      தேய்ந்தது செயலல்ல
புரைவ ரும்பதங் கிடைத்ததும் பரம்பரி
      பொய்யிலா மெய்வாழ்வே. 39

வேறு
வாழ்பூத கணமாட வாய்நெருப் பெரியபேய்
      வன்கைகள் கொட்டியாரும்
பாழிதிண் டோளலகை கைத்தாள மெத்தவுயர்
      பரமநா டகமாடினோர்
சூழ்பித்த மானதொரு கமலன் சிரத்தினாற்
      றோகையது மாற்றிவித்தாய்
ஆழ்கடல் விடத்தையமு தாகவர னுண்டதென்
      னம்மையுன் கைத்திறமையே. 40

வேறு
திறமை யுற்றிடுநம் மிறைய வர்க்குனது
      திரும லர்க்கரமின் மாலையால்
நிறைத வத்தினொடு பிறவி யைத்தொழுவ
      னிருமலக்கடவு ணிருபரே
குறைவ ரப்பெருமை வரவ ரப்பரம
      குருவெனத்திருவு முடையனே
முறைமு றைப்பிறவி யுறுமு கத்தருணை
      முதல்வழுத்துமவர் பதுமையே. 41

வேறு
பதும மலரா லடிபரவும்
      பங்கே ருகத்தாள் பணிந்தரனார்
நிதமுந் துடைக்கு மெழில்பெற்றா
      னெடியோ னளிக்கும் நிலைபெற்றான்
சதுர்மா முகனுஞ் சராசரங்கள்
      படைத்தா னென்றே சாற்றுமறை
அதனா லுனது திருவருளை
      யல்லா துளவோ வம்பிகையே. 42

வேறு
அம்பிகை யுனது சே(டி)[ம]த் தரும்பொருள் புகழ்ந்த ஞானித்
தம்பிரா னடியைச் சாருந் தவங்களா லுவங்கள் செய்தார்
வம்பனே நவங்கள் கொண்டு வாழ்த்துதற் கிரங்கு மாது
எம்பிரான் முடிமேற் கொன்றை யெருக்குட னிருக்கு மாபோல். 43

வேறு
போதி லயன்றொழு மானேயுன்
      பூரணச் சந்திர மாமோக
னாதி முகங்குளிர் வாழ்வாலே
      நான மெனும்பொருள் நாடாயோ
ஓதிய மென்னடை மாதாவே
      ஓதுவ தென்பிழை பாராயே
ஆதி சௌந்தரி மாமோகி
      யாயி மதங்கி சடாதரி. 44

வேறு
ஆதார மாறு மும்மண்ட லங்க
      ளவையே கடந்த சுவையே
நாதாவு நீயு மொன்றாகி நின்ற
      ஞானா சுகங்கள் தானோ
ஓதா திருந்து வுளமே கசிந்து
      வுருகா வரங்க ளு(டு)தவாய்
மாதா முகுந்த னிளையா யனந்த
      மாயா மதங்கி வடிவே. 45

வேறு
வடிவமுறு சடமெளலி யடியருள நடனமிடு
      வரதனிட முடைய மணியே
கடிகமழு மடியிணைகள் கலகலென் நெகழியணி
      கனகவரை யரையன் மயிலே
துடியிடையு மிளமுலையு மணிவடமு மிருவிழிகள்
      சுரிகுழலு மெயிறி னழகுங்
குடிமருவு மெனதுமன நொடியளவி லென்தரிய
      குறைதவிர வருள்புரியுமே. 46

வேறு
புரியுந் தொழிலு மூலத்திற்
      பொங்குஞ் சலதிப் பெருங்கடலைச்
(ச) [க] ரிகொண் டரிய கனலெழுப்புங்
      கரத்தும் புகுந்து களங்கமல
மெரியுஞ் சுழினைத் தடமேறி
      யீசன் திருத்தா ளிணையடைந்து
துரியங் கடந்த பெருவெளிக்கே
      துஞ்சத் தருவாய் துரைமாதே. 47

வேறு
மாது நின்கருணை ஞான நித்திரைசெய்
      மஞ்ச நாலுநிலை கால்களும்
வேதன் மாலுடனு ருத்தி ரன்கனம்
      யேச்வ ரன்தலை விதித்தபே
றோது பின்னலுறு கச்சு மானதொரு
      வுச்சி தத்துறைச தாசிவன்
மீது கண்டுயில் வல்ல வன்கிருபை
      யன்றி வேறொரு விருப்பமோ. 48

வேறு
விருப்பங் கொடுமோ கமெழும் பியபேர்
      விழிக்குந் தொருநா ளுமிரங் கிடுவாய்
உருக்குந் தனிநா யகன்மே வியபோ
      துழக்குங் கணைமா ரியுலர்ந் திடுமே
பெருக்குங் கனிநெஞ் சநிறைந் துபெறப்
      பிறப்புங் கொடியே னையொழித் திடவே
எருக்குஞ் சடைமா மதியம் பரமன்
      இருப்புந் துயில்தே வியெழுந் தருளே. 49

வேறு
அருளா ரமுதப் பெருங்கடலை
      யடைக்குஞ் சிமிழோ வடியார்கள்
பொருளார் தமிழைப் புகட்டவந்த
      பொற்செப் பிருக்கும் புத்தமுதோ
விருமா முலைக்கண் கறுப்பெனது
      பிறப்பு மிறப்புத் தொலைமருந்தோ
திருமா மகளுங் கலைமகளுந்
      திருத்தும் பணிதி தரித்தாளே. 50

வேறு
தாளின் சிலம்பு மணிக்கலையுந்
      தயங்கு பவளக் கொடியிடையுந்
தோளுங் கமுகுங் கழுத்துமுலைத்
      துணையுஞ் சுடர்மா மணிவடமும்
காளங் கரும்பாம் பமைத்தபசுங்
      கையுஞ் செய்யக் கனிவாயும்
மீளுங் குழையைப் பொருதுவிழி
      வேலுங் கடையேன் விழித்துணையே. 51

வேறு
துணையான சோதி மயிலின் சினங்கள்
      துறவோர் தவங்கள் பெறுவோர்
அணையான போது நரகம் பலிப்ப
      தறிவா ருலுத்த ரறிவார்
கணைமால் பிறங்கு சிவனார் கலந்த
      கனகா சலத்து மயிலே
இணையான பாத சரணம் புகுந்த
      எளியேனை யாளு மினியே. 52

வேறு
இனியப் பதத்தைவிட்டு சனியம் மதத்தைமுட்டி
      இழிவுச் சடத்தைவிட்டு வுழலாதே
தனிய நிருத்தமுத்தி சரண மெனக்கருத்து
      தமியை யொழித்துமுத்தி யருள்வாயே
பனியை யொழித்தவெற்றி வெயிலை நகைத்தபச்சை
      படரு மொளிக்கிழத்தி யணிமூரல்
முனியை யொழித்தெனக்கு யினிய சிவத்தையுற்ற
      மொழியை யுரைப்பதற்கு முயல்வாயே. 53

வேறு
முயற்கறை யின்றி வந்த முழுமதி முகத்தா யென்றன்
துயர்க்கறை யொழிக்கு மாறு சூத்திரங் கற்றா யில்லை
புயற்கறை யனைய கண்டன் புந்தியிற் புணர்ந்த மாதே
செயற்கரி தான பாவை சித்திரங் கலந்த தேனோ. 54

வேறு
கலந்தத்தி யோடு சலந்தத்தி மோதுங்
      கருங்குட்ட நீடு கடலாலும்
பலம்பெற்ற மாயை மலம்பற்றி மேவு
      பிணங்கட்டை யேனை யொழியாதோ
தலம்பற்றி நாலு நிலம்பெற்று வாழுந்
      தலம்பெற்ற தேவி யுமையாளே
குலம்பெற்ற வாழ்வு குணங்கெட்ட தீது
      குரங்கிட்ட மாலைக் குறியாதே. 55

வேறு
குறித்துப் படுத்துச் சிரித்துப் பிரித்துக்
      கொலைத்துப் படுத்துப் பிணமாகி
பொரித்துத் துருத்திக் குணத்திச் சுழத்திப்
      பொசித்துப் பசித்துச் சிலநாளிற்
தரித்துச் சினத்தைச் சுருக்கிட் டெடுத்து
      தகித்துப் பிணத்தைச் சலியாதே
இருத்திப் பிடித்துக் கருத்தைத் திருத்தி.
      எடுத்துத் தரிக்கப் பிரியாளே. 56

வேறு
பிரியாத மாணிக்க வெளியாகி யடியார்கள்
      பேசாதி ருந்தவாழ்வே
திருஞான சம்பந்த ரொருஞான மாகச்
      சிறந்தேசொ ரிந்தபாலே
குருவாகி யேஎன்றன் குறைதீர நீவந்து
      கூறாத கூறென்னவோ
எரியாது மூலக் கிடந்தேனை யாளாத
      என்னம்மை யென்னம்மையே. 57

வேறு
அம்மையென் னையன் பாகத் தமர்ந்திடு மழகை நாயேன்
இம்மையிற் கண்டார் காணா திருக்கிலே னிறக்க வேனோ
உம்மையான் புகழப் பெற்றே னுறுகுறை வுளவோ சொல்வாய்
தம்மையே யுணரு ஞானத் தபோதனர் தழைக்குந் தாயே. 58

வேறு
தாயே யெனையா ளுதயா பரியே
நாயே னுனைநா ளுநலம் புகழேன்
பேயே னொருபிள் ளையெனத் துணையாய்
வாயே னொருவஞ் சமிலா தவளே. 59

வேறு
வஞ்சமி லாத நெஞ்சறி யாயி
      மங்கல வாழி மதிசூடி
தஞ்சம தாகி விஞ்சிய ஞானத்
      தந்திர வாழ்வு பெறுவேனோ
கஞ்சனி பாதக் குஞ்சித மேவு
      கண்களி கூர வருவாயே
அஞ்சின பாவி என்குறை தீரு
      மஞ்சுரு வாகி யறிவாளே. 60

வேறு
அறிவாகி மனமாகி வருகார ணங்களா
      யாவுஞ்சு கித்தி ருவரும்
மறமீது கொடிதீது பழியீ தெனப்புகன்
      றப்பா லொளித்து விட்டார்
பொறியாரை மேவியது சிவனுமைக் கல்லவோ
      புல்லனென் றில்லை யன்றோ
திரிசூல காரணி தேவிபார் வதிகௌரி
      திருவுளம் பற்றி யருளே. 61

வேறு
அருளைச் சுரக்குந் திருமுலையா
      ளார்க்குந் தெரிய வரிதாகும்
பொருளைச் சுரக்குங் கணவருடன்
      போகங் கலந்த பொற்கொடியே
இருளைக் கடிந்த நெடும்புகழை
      யேற்றுங் கடையேன் றனையேமன்
வெருளப் பிடிக்கு மாறுளவோ
      பிடித்தா லுனக்கு வீரியமோ. 62

வேறு
வீரி சண்டிகை மாரி யந்தரி
      விலோ சனத்திரி சூலியே
நாரி யெங்கள் குறை தீர வந்தருளு
      ஞான தேசிசிவ காமியே
தாரி கண்டிகை புயங்க கங்கணி
      சடா(ச) [த] ரித்தவள மால்விடை
ஊரி யம்பலவ னாடல்கண் டுருகு
      முண்மை யேயரு ளம்மையே. 63

வேறு
அம்மையே மூலா தாரத் தரும்பொருளுணர்த்து ஞானத்
தெம்மையே புரக்க வுன்ற னிணையடிக் கிசைந்த பாரம்
செம்மையே வுனது சீரைச் செப்பவுந் தெரியா தென்னை
இம்மையோ டிம்மை கொள்வாய் ஈசனுக் கிசைந்த தேனே. 64

வேறு
தேனின் மூண்டெழு சீரிசை வண்டுகள்
      மோது கருங்குழை மாதேயென்
றூனி னுடம்புயி ராகி வரந்தரு
      மோருரை யின்பொரு ளோதாயே
ஞான சவுந்தரி மோன சுகந்தரு
      நாரணி பஞ்சமி நாயேனைத்
தானெனி வந்தரு ளாயெனி லிங்கொரு
      தாபர மொன்றிலை மாதாவே. 65

வேறு
வேயூ துங்கரி மாமா வென்றுனை
      வேலா ருங்கனியே
வாயூ துங்கன லேதோ முந்திய
      மாமூ லங்குகையாய்
நீயூ துங்கரி நீமூ ளும்படி
      நேரே வந்தருள்வாய்
ஆயி சங்கரி மாயா விஞ்சுகி
      யாளா யென்குருவே. 66

வேறு
குருபோதக முருவேறிய குகைவிட்டெழு குளவி
குருபாவக மொருபோதக மெதுநீயது சொலுவாய்
கருபோதனை யொழியாவருள் கருணாகர வமுதே
இருபோதினு மறவாதுனை நினையாதுரை யிறைவி. 67

வேறு
இறைவியுன் பதமே போற்றி என்னையீன் றருள்வாய் போற்றி
மறலியை முனிந்தாய் போற்றி மயிடனைத் தொலைத்தாய் போற்றி
குறைவிலா நிறைவே போற்றி கொடும்பகை தொலைத்தாய் போற்றி
அறமிக வளர்த்தாய் போற்றி அன்னையே போற்றி போற்றி. 68

போற்றியே மூலா தாரப் பொன்னடி மலரே போற்றி
போற்றியே மனமும் வாக்கும் போன்றிட முளைத்தாய் போற்றி
போற்றியே நமச்சி வாயப் பொருளினில் புணர்ந்தாய் போற்றி
போற்றியென் னுமையே ஞானம் பொங்கொளி விளக்கே போற்றி. 69

போற்றியென் னாகத் துள்ளே பொருந்திய பொருளே போற்றி
போற்றியென் னம்மை யெல்லாம் பொலிவுற வமைத்தாய் போற்றி
போற்றியென் னப்பன் பங்கிற் புகுந்திடுங் கிளியே போற்றி
போற்றியென் றுரியா தீதப் பூங்கொடி மயிலே போற்றி. 70

வேறு
போற்றிக் கசிந்துருகி வாழ்த்திப் புகழ்ந்துனது
      பூத்துச் சிவந்தபதமே
தோற்றிப் பணிந்தெனது சோற்றிச்சை மண்டியெழு
      தூக்கத்தை யென்றொழியுமோ
நாற்றிக்கு மெண்டிசையு மேற்றித் தொழும்பரம
      மூர்த்திக்கு நங்கையிடமாய்ச்
சாற்றிக் கிடந்தமறை பார்த்துப் புலம்பியது
      தாய்க்குத் தகும்பணியதோ. 71

வேறு
பணியுந் தவத்தோர் பலதுயரைப்
பறியக் கிழிக்கும் வேற்கண்ணாய்
அணியா யரவம் பலபூண்ட
வரனாற் கினிய திருமனையே
மணியுங் கடந்த திருவடிவே
மாலுக் கிளைய மடமயிலே
பிணியென் றுயரை யறுத்தெனையுன்
பிரியக் கடலுட் செறித்தருளே. 72

வேறு
செறிக்கும் பதங்கள் குறிக்குந் திறங்கள்
      செலுத்துந் தவங்க ளுணரேனே
கறிக்குஞ் சிறந்த பொசிப்புங் குடும்ப
      கழப்பும் புணர்ந்த கடையேனே
பொறிக்குஞ் சிலம்பு தெறிக்கும் நடங்கொள்
      பொருப்பன் புணர்ந்த புயல்மேனி
எறிக்குஞ் சிவந்த மணிப்பங் கிழந்த
      இடத்துந் தொடர்ந்த மடமானே. 73

வேறு
மடமான் குரமோ படவரவோ
மணிவட் டகையோ நிதம்பமென
      வகுப்பார் முனிவோர் மலரயனு
மாலுஞ் சிவனு மற்றுள்ள
இடமா னவருஞ் சராசரங்கள்
இருக்கு முதலா கமநூலும்
      எல்லாம் பிறந்து பிறவாம
லிருக்குந் திரிகோ ணங்களிலே
தடமா னவையுந் தாமரையுந்
தவத்தோர் குழுவுந் தனிமுதலுந்
      தங்கச் சிகர கோபுரமுந்
தயங்குங் கோயிற் சிவஞானக்
குடமா மிரண்டுங் குறிகாட்டிக்
குருவாழ்ந் திடத்தைக் குறிப்பறியார்
குயிலே மயிலே யெமையளித்த
யுமையே யவிடங் கூட்டுவையே. 74

வேறு
கூட்டரக் கனைய செவ்வாய்க் கொடியிடைப் பளிங்கு மேனி
ஏட்டினி லெழுதா வேதத் திறைவியென் னிதயத் துள்ளே
பாட்டுரைக் கெழுந்த ஞானம் பார்[ப்]பதி பதுமத் தண்பூ
நாட்டமுற் றிருந்தார் வெற்றி ஞானமுங் கிடைக்கு நாளே. 75

வேறு
நாளை நாளையென வெண்ணி யெண்ணிவெகு
      நாளு மேகழியு நாயினேன்
வேளை வேளையென நின்று நின்றுருகி
      வேறு வேறுசெயல் மேவினேன்
காளை யேறியிரு வோரு மோடிவரு
      கால மேதுபுகல் காரணி
பாளை யோதிகரு ணாகரீ பரம
      பால லோசனீ பரம்பரி. 76

வேறு
பரியேறி நிமிடத்தி லரியசிவ ஞானவழி
பண்புட னடந்தேறியுன்
      பாததா மரைநிழற் கீழ்மேவி யென்வினைப்
பவவிடா யாரவருள்வாய்
நரியேறு புரவியென நடனமிடு வரிபரம
நாதர்க்கு கந்தமணியே
      நாரணி பூரணி பசுபாச வினையற்ற
நன்மருந் தானபச்சை
வரியேறு தோகைமயில் வடிவான கிள்ளையே
வரையரையன் மாணிக்கமே
      மன்னுமுச் சுடராகி மணிவிளக் காகியுறு
மாமாய வல்லசதுரி
திரிபுர மெரித்தசிவ காமிபார் வதிகௌரி
தேவியுமை சத்திவிமலி
      தேடியொரு வடிவெனச் செப்பொணா வானந்த
சித்தியுன் சித்தமுணரே. 77

வேறு
உணருமறை முனிவர்களு மிமையவரு மலரயனும்
      உவரிநிற மணியரசனும்
துணைபதும சரணமல ரிணைமுடிகள் பணியவரு
      துணையரசி வரை புதல்வியே
மணமொளியு ரோசைசுவை வரமுனது கழியுமொரு
      வரமுனது கருணை புரிவாய்
நிணமுருகு மயில்விழியை யெனதுகுறை தவிரவரு
      நிமலியருள் பொழியுமுகிலே. 78

வேறு
முகிலென நிறத்தகொடி வெயிலென நிறத்தமுழு
      மதியெனுமு கத்தரசியே
எகினமு மொளிக்குநடை யிளமுலை கதித்தமலை
      இறுமிறுமெ னத்துவளிடை
நெகிழிக ளரத்தவரு சரணபது மத்துணையை
      நிமிடமு நினைக்கவறியேன்
சகிதபர மப்பிரிய சயனமௌ னத்துருகு
      தருணகரு ணிச்சதுரியே. 79

வேறு
சதுர்மாமறை முடிவாகிய தனிஞான சுகத்தைப்
பதுமாகர மதனாலருள் பரிபூரண மயிலே
இதுமாத முறைக்குங்குறி யெந்தாயென வந்தேன்
முதுமாதவர் துதிகாரண முடிவேதவ வடிவே. 80

வேறு
வடிவெடுத் தெழுதரிய மணியே
      மரகதக் கொடியனைய மயிலே
துடியிடைப் பிடியனமென் னடையே
      துதிசெயக் கருணைபுரி சுடரே
இடியிடித் தெனவசுர ரெதிரே
      எரிபரப் பியவயிரி யெழிலே
கடிதினிற் கருணைபுரி யடியேன்
      கடவுளுக் கடிமையுறு கதியே. 81

வேறு
கதியைப் பாரிது புதுமைக் காகிய
      கடவுட் போதனை காணென்றே
பதியைப் பாரிது விதிதப் பாதொரு
      பயனைக் கூறிய பரஞானம்
பொதியப் பாரிரு வினையைத் தேடிய
      பொடியைத் தூவிநீ யழையாதே
நதியைப் பாதியில் மதியைச்
      சூடிய நடனத் தாரிட முடையாளே. 82

வேறு
உடையாளே மடமயிலே வுவமை யில்லா
      வுருவாளே யாவர்க்கு முயர்ந்த தாயைச்
சடையாளே முக்கோணச் சட்கோ ணத்துந்
      தரியையை மந்திரியைச் சவ்வை யவ்வை
யுடையாளை யங்கங்கு குருவா கிக்கூ
      றுடையாளை கிலியுங்கலந்த குமரி வாழ்வை
விடையாளைப் பரஞ்சோதி யடியைப் போற்ற
      வினையேனுக் கென்பயனோ விதித்த வாறே. 83

வேறு
வாறொன்றி யானுமினி மாறாது சிவஞான
      வழிமருந் தாலெனதுநோய்
மாற்றியிடு மம்மையுன் றிருவடிக் கல்லாது
      மற்றொரு வருக்குமோதேன்
சேறொன்று தசைகுருதி நிணமுளைப் புழுமலத்
      திரள்வைத்த சடவலையிலே
சிக்கிக் கிடந்தலறி நெக்குன் றிருந்தகளை
      தீராத பழியுனக்கேன்
மாறன் பிரம்பினால் மாறொன்று பட்டசிவன்
      மனத்துக்கி சைந்தமணியே
மங்கையுமை சங்கரி மனோன்மணி யெனைப்பெற்ற
      மாதாம யானத்தியே
கூறொன்றி னால்வினைப் பேயொழிய நானென்ற
      குற்றமும் பற்றற்றிடக்
குறைப்பட்ட குடநிறைந் தெப்படி யிருந்ததாக்
      கொள்கையைப் போலருளுமே. 84

வேறு
அருளுக்கொரு கடலேவினை யடவிக்கொரு வனலே
இருளுக்கொரு பகலேயென திதயத்தொரு முதலே
வெருளுக்கொரு தெருளேசில விளைவுக்கொரு வயலே
பொருளுக்கொரு பொருளே துணை யுமையைப்புக லியல்பே. 85

வேறு
இயலிசை யுணரே னினியவை புகழேன்
      இருபதம் நினையே னெனையாள்வாய்
செயலவை தெரியேன் செனனமு மறியேன்
      சிதடித லறியேன் சிறியேனே
மயலினை முனியேன் வறிஞர்க டலையேன்
      மனமொரு வழியே மறிகில்லேன்
நயவிலை யரசே ரிவையர சிரசே
      யரனிட பிறைசே ரமுதாளே. 86

வேறு
அமுதால் வளைத்துக் கடனஞ்சை
      அடக்குந் தடங்க ணம்பிகையே
எமதா ருயிருக் குயிராகி
      யிருந்தீ ரீச னுமையிருவர்
நமதா யிருக்குஞ் சிவஞான
      நாட்டங் கொடுப்பா ருமையன்றித்
தமதா யெவரைத் தேடுவதென்
      தாயே சலித்தேன் றமியேனே. 87

வேறு
ஏனென் றடியேன் றுயரகல
      வெழுந்தாற் குறையோ யிழுக்காமோ
நானென் றிரங்கிக் கிடந்துழைத்தால்
      நன்றோ யெங்க ணாயகமே
ஊனென் றிருண்ட வினைக்கூட்டி
      யுள்ளே வருத்த மொழியாதோ
ஏனென் றுரைத்தா லுணருநெறி
      யீந்தா லெனைவந் தெடுப்பாயே. 88

வேறு
எடுக்க விட்டகுறை வந்து சற்குருவி
      னுருவ மாகியெளி யேனைநீ
முடுக்க நட்டமிடு பாத மேவுதொழில்
      மூட்டு வன்னிகற் பூரமா
யடுக்க லிட்டவினை யாவும் வெந்தொழிய
      வந்த ரங்கமது தந்துபோ
நடுக்க முற்றவிட முண்ட சங்கரனை
      நண்ணு மங்கையது நன்றரோ. 89

வேறு
நன்றென்று தீதென்று நானென்று பொய்யாகி
      நாளுங்க ழிந்தோட தாடவே
நானென்று கொண்டன்ன மேனென்று பேசாது
      நஞ்சுண்டு றங்கலானே
நின்றென்று கூடுவது நிலையான ஞானங்கள்
      நின்கருணை யாலல்லவோ.
நீலிகர காபாலி நின்மாயை யன்றியொரு
      நேரங்கள் சேருங்கொலோ
குன்றென் றிரண்டுமுலை யென்றொன்று பாதியிற்
      கோமானு ரைத்தகுயிலே
கொள்ளாத பேராசை கொண்டால் மருந்தென்ன
      கூறுவது நின்பேதமே
என்றென்று செல்வங்க ளிருபாத மேவியது
      என்சிரமி றைஞ்சவைப்பாய்
எழில்பரவ வரியதொரு ஏகாந்த ஞானியென்
      னிருவிழிக் கரியமணியே. 90

வேறு
மணிநிற மனைய மடப்பாவாய்
      வளரொளி விழியின் மதிப்பாவாய்
துணிவுறு மனத்தை யளிப்பாவாய்
      துரிய வதீத நடிப்பாவாய்
தணிவிலி யெனது கழிற்பாவாய்
      சரணம தேது தரிப்பாவாய்
அணிமுழு நீற்றை யளிப்பாவாய்
      அரகர நாமி யகப்பாவாய். 91

வேறு
பாவா யடியே னிருளறுக்கப்
      பகர்ந்தாய் சரணம் பரிதிமதி
யாவாய் சரணம் சராசரங்கட்
      கன்னே சரண மம்பிகையே
கூவாய் சரண மெனையாளக்
      குறிப்பாய் சரணங் குறிப்பாயே
நீவா வெனத்தா னருள்புரிந்தா
      லுமையே சரண நிலைபெற்றேன். 92

வேறு
நிலைபெற் றேயுனை மலமற் றேபுகழ்
      நிருபத் தாபத ரடிதேடித்
தலைவைத் தேபணி விலைபெற் றேயவர்
      சரணத் தேவல்கொள் சலியாதே
மலைபெற் றேனெனு மனமொத் தேசெயும்
      வகைசொற் றாயிலை யுமையாளே
அலைபெற் றேயுழ லவசத் தேனினி
      யருளைக் கூடுவ தொருநாளே. 93

வேறு
நாளோ கழிந்ததினி யானோ சிவபரம
      ஞானோத யம்பெறுவதோ
வாளோ வெனுங்கணுமை யாளோத வஞ்சகமு
      மாமோவ ரும்பயனனோ
கேளா மனம்படுவ தேனே வருங்கவலை
      கேடோநி னைந்தழியுமோ
தோளோ பசுங்கழைய தேனோ வெனும்பசிய
      தோகாயெ ழுந்த துணையே. 94

வேறு
துணையுனை யன்றிக் காணேன் சுடரொளி விளக்கே நும்மை
இணைமலர்ச் சடையான் பாகத் தெழுந்தரு ளிறைவி யுந்தன்
புணைமலர்ப் பாதம் போற்றிக் கிடந்தன்ன புலைய னம்மே
பணைமுலைத் திருவே யுன்றன் பரமெனக் கருணை பாரே. 95

வேறு
பாரிலேபி றந்துழன்ற பாவகாரி யானுனை
சீரினாலி றைஞ்சவுந் தெளிந்தசிந்தை சிந்தையென்
போரிலேம யங்கினேன் புலன்களென்ற புத்தர்கைச்
சூரிலேவி ழுந்தபோது பெற்றதாய் சுதன்கொலோ. 96

வேறு
சுதன்பிழை பொறுப்பாள் தாய்முன் தந்தையும் பொறுப்பான் தாயா
வதம்புரி வாரோ வேறோ ரடங்கவுங் கொடுப்பா ருண்டோ
கதம்பமு மணியுங் காமக் கோட்டியே கருணை பாராய்
சிதம்பர நடனங் கொள்ளுஞ் செல்வியே கல்வி மாதே. 97

வேறு
மாதாக னங்குழையை யோதா திருந்துமத
      மாயா பவங்க ளலவோ
நாதாச வுந்தரியை வேறோ தரும்பரம
      ஞானா சுகங்க ளலவோ
வேதாக மங்களுனை யேதோ தெரிந்துணரும்
      வீணான சிந்தை வெறியோர்
பூதாதி யும்பிறவு மாறே கடந்தமுத
      லாரோ புகழ்ந்து றையுமே. 98

வேறு
உரைத்தா யடியேன் றுயரறவே
      கொடுப்பே னெனுஞ்சொல் லுறுதிபெற
கரத்தா மரையா லள்ளியிட(க்)
      கடையேன் பசிநீங் குதல்கண்டாய்
சிரத்தா மரையி னாயிரத்தெட்
      டிதழே சிறந்த திருப்பதத்தைத்
தரத்தான் குருவா யெழுந்தருளென்
      றாயே யதுவுந் தகும்பரிசே. 99

வேறு
பரிசமுட னைந்துபுல னாகிய தறிந்துபத
      பங்கய மொருத்த ரறியார்
வரிசையுட னெங்கும்விளை யாடிய தழித்துநிதம்
      வந்துபுரி கின்ற மயிலே
தரிசன முதற்பொரு ளுதிப்பது மொடுக்கிய
      திசைப்பரம் வெட்ட வெளியும்
புரிகுழல் செளந்தரி யெனக்கருள் பரம்பரம
      வன்னியடி பொன்னின் முடியே. 100

சௌந்தரி யந்தாதி முற்றும். -------------

11. சித்த ரந்தாதி


குத்தரந் தாதி பிறவிக் கடலைக் குலைத்துநெஞ்சே
முத்தரந் தாதித் துறைபெற லாமுதி ராமுலையா
ளத்தரந் தாதி யகிலாண்ட நாயகி யம்மையுடைச்
சித்தரந் தாதி யிருபத்தி ரண்டையுஞ் செப்புநர்க்கே.
குருபாதந் துணை

பாரடை யப்பதந் திக்கடை யப்பரி வட்டத்தொங்கற்
காரடை யக்கொங்கை வெற்படை யக்கடுக் கைச்சடைக்காட்
டூரடை யப்பகி ரண்டத்து நெல்லைவல் லிக்குகந்த
நீரடை யத்தண் ணளித்திருக் கோயிலென் னெஞ்சகமே. 1
என்றது: வாருமம்மா ஈசுவரி! நிலமேழுஞ்சூழ் வாரிநீரேழு, கீழ்ப்பாதாள மேழு, தம்பலக்குலகிரிகளெட்டும், நடுவே மேருவேழ் கடகஞ் சூழப்பட்டுளதோர் அண்டப்பிரி இப்படி யோரண்டமாகத் தனது பராசத்தி யமிர்தமான திருமேனியில் உதிர நாபியிலுற்ற எல்லையற்ற அண்டகோடிகளில் தோற்றப்பட்ட பாரடங்கலும் தனது பாதமாகவும், கொன்றைமாலை பொருந்திச் சிறந்த சடாடவித் தலையுடைய அண்டங்களின் வுனது முடிதும். பட்டு: சென்னதம்(?) மட்டாகவும், எல்லையற்ற லோகங்கள் முடியுங்கால் கோ(ற்)குமே கொற்றமான பிரளய மடங்க லுனதன்று. கிருபைக் கடலாகவு முடைத்தான வல்லிக்குயின்று ஆளென்றும் தட்டற் றகண்ட பரிபூர்ணமாகப் போக்கு வரவு புணர்ச்சியற விருந்த எனது நெஞ்சகமே திருக்கோயிலாமென்று ஆநந்த ஆச்சரியமாக எழுந்தருளியிருந்தா ளென்றவாறு.

கொண்டையென்றும் சடைக்காடென்றும் கூறியதோவென்னில், ஒருத்தி தானே தேவியான கொண்டையென்றும் வவசரத்துக்குக் அவசரம் விசேஷம் கூறினார் என்றவாறு. 1 -------
நெஞ்சக் கனகல்லு நெக்குரு கப்புக் கெனநிறைந்த
வஞ்சக் கனகல்வி யேயென்னம் மேமருங் குங்குவடு
மெஞ்சக் கனக்குங் கனதனத் தாய்நின் னடிக்கிடந்த
கஞ்சக் கனக மலர்சுமந் தேநின்ற காரணமே. 2

என்றது; வாருமம்மா ஈசுவரி! இடையுங் குவடும் அஞ்சும்படி மிகவுங் கனத்த தனத்தை யுடையாய்; நின்னடி நின்ற சீர்ப்பாத கமலங்களுக்குத் தோற்று இடைந்துபோன பொற்புண்டரீகப் பூவை இதுவே பூக்களுக்குப் புஷ்பமென்னும் அண்டபிண்டங்களில் நின்ற அபதரவடுக்கென்றும் (?) வலது ஸ்ரீ அஸ்தத்திலே அழுத்தமாகப் பிடித்து ஏந்தி யங்ஙனே சர்வாத்மாக்களும் தண்டன் பண்ணும்படி பேராநந்த மகிழ்ச்சி பெற நின்ற காரண சுவரூபங் குறையாமல் ஞான நாட்டத்தாலே எனது நெஞ்சகமாகக் கனத்த கல்லை நெக்குருகப் பார்த்துக் கரைத்து, வஞ்சகஞ் செய்து உள்ளே புகுந்து குடிகொண்டு நின்ற திருத்தவக் கல்வியே யென்று, தாயே இப்படி நீர் ஆண்டு கொண்ட விதற்குக் கைம்மாறு ஏதோவென்று தம்மிலே அதிசயித்து ஆறி எழுந்தருளியிருந்தா ரென்றவாறு. 2
-------------
காரண மென்னென் றறிகின்றி லேன்கட லும்மலையு
மாரண மும்மகி லாண்டமு மண்டரண் டம்பொதிந்த
பூரண மும்மக முஞ்செக மும்புற மும்புறத்து
வாரண மும்பெண் பிள்ளை விளையாடு மணற்சிற்றிலே. 3

என்றது: வாருமம்மா ஈசுவரி! எல்லையற்ற அகிலாண்டங்களில் அங்கங்கே தோற்றப்பட்ட உவர்நீர்க்கடல், நன்னீர்க்கடல், அமிர்தக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல் மதுக்கடல் என்னும் ஏழுவகைக் கடல்களும் பொன்னங்கிரி, வெள்ளியங்கிரி [அஷ்ட சூல பர்வதங்கள்] முதலான மலைவர்க்கங்களும், வேத புராண சாஸ்திரங்களும் அகிலாண்ட பூமி அந்தர சொர்க்கங்களும், இருபத்தெட்டுக்கோடி நரகங்களும், அண்டரண்ட பகிரண்டங்களைப் பொதிந்து சூழ்ந்து கண்ணாந்துயர்ந்து முடிவுறப் பெரும்பாழ் முதலான ஏழுவகைப் பாரமான பரிபூர்ணமும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும்,பதினெண் கணங்களும் நாபியிறுகப் பட்சி தாவரங்களும், பிரமபேதம், விஷ்ணுபேதம், ருத்திரபேதம், மகேசுவர பேதம், சதாசிவபேதம், விந்துபேதம், நாதபேதம், எல்லையற்ற சத்தி பேதம், அறிவின் பேதம், அறியாமையின் பேதம், மாமாயையின் பேதம், பசுதான பேதம், சிவதான பேதம் என்று இவ்வகையாக எண்ணப்பட்ட சேதன வங்காரம் பேர்ந்தனத்த சுரூபமும் ஏழுவகையிற் றோற்றப் பட்டதோர் கருவான முட்டை வெற்பு நிலங் குடரென்றும், நால்வகை சேதனமு............... ஆகவனீயம், கார்கபத்தியம், தக்ஷிணாக்கினி, மூலாக்கினி, காலாக்கினி, கோபாக்கினி, உதராக்கினி, வடவாக்கினி, ஞானாக்கினி, கமலாக்கினி யென்னும், புகையெட்டும், பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம், ஞாயிறு, திங்கள் யமானென்னும் பேர்களெட்டும், சப்த, ஸ்பர்ச, ரூப ரஸ, கந்த, மனம், புத்தி, ஆங்காரம், சித்தமென்னும் புலன்களெட்டும், அதல, விதல, சுதல, நிதல, பூதல, தராதல, மகிதல மகாதலமென்னும் பூதலங்களெட்டும், இயம நியம (மாசுழன்றம்) (ஆசனம்), பிராணாயாமம், பிரத்தியாகாரம் (சாரந்தாகம்), தாரணை, தியானம், சமாதியென்னும் வகையான யோகமெட்டும், காப்பான அஷ்டமா நாகங்களெட்டும், இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் என்னும் காட்சியெட்டும், காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியம், சூனியம், இடும்பை, சேவடி அணைந்தார்களை, காண்டம், வீரம், அச்சம், இழிவு, வியப்பு, மழாம் (?) நகையென்னு மா(ய்கை) [யை] யெட்டும், வாரம், நாள், பக்கம், ராசி, யோகம், கரணம், காலவோரை, பஞ்சபட்சி யென்னும் நாளெட்டும், சமயம், விசேஷம், நிர்வாணம், சாம்பவம், அபிஷேகம், நிராதம், மீதானம் என்னும் நன்மை யெட்டும், சிவஞானம், உண்மை ஞானம், மெய்ஞ்ஞானம், திருஞானம், ஆன்மஞானம், பரம ஞானம்,ஆநந்த ஞானம், அஞ்ஞானம் என்னும் மலங்கள் எட்டும், திசைகளெட்டும், திசையெட்டுந் தரிப்பதற்கு முன்னோ பின்னோ திருவாரூர்க் கோயிலாய்க் கொண்ட நாளே இந்தத் திருப்பாட்டின்படி பொருளுமாம். அண்டகோடிகளை இடைவிடாமல் தாங்கிநிற்கும் வேழக் குழாங்களும் இவையெல்லாம் ஒரு பெண்பிள்ளை சித்தத்தில் விளைந்து விளையாடுந்திறம் என்று அறிகின்றிலேன். இருபத்தோருகம் தம்மிலே அதிசயித்து ஆறி ஆனந்த மயக்கமாக எழுந்தருளி யிருந்தாள் என்றவாறு. 3
-----------
சிற்றிடைக் கொல்கி நுடங்குந் திருவயிற் றாளொருத்தி
பெற்றெடுக் குந்திறல் பிள்ளைகள் மூவரம் மூவரையுங்
கற்றிடச் சொன்ன தொழிலொரு மூன்றவ ரிற்கடைக்காற்
செற்றிடச் சொன்ன பிள்ளைக்கவ ளேயம்மை தேவியுமே. 4

என்றது: வாருமம்மா ஈச்வரி! சிற்றிடை சிறிய இடையினைப் பார்த்துக் காற்றுக்கூட வொதுங்கி நுடங்குந் திருவயிற்றினை யுடைத்தாய் ஒப்பற்ற கண்ட பரிபூர்ணமாகி நிறைந்து சர்வமுந் தானானதொரு பெண் தன்னை ஒருத்தி ஈனவும், தான் ஒருத்தரை யீனவும்படாளாய்ச் சிருஷ்டி ஸ்திதி சங்காரம் என்னும் தொழிலுக்கு உரித்தான புகழினை யுடைத்தாய். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் பேர் கூறப்பட்ட பிள்ளைகளைப் பெற்றெடுத்து இவர்களிற் கடைக்காலான சங்காரத்துக்கு உரித்தான பிள்ளைக்குத் தாயென்றம்மையுமாய்த் தேவியுமானாள் என்றவாறு. 4
-----------
தேவியென் றுன்னைப் பணிவார் விடமுண்டு தேட்டுண்டநா
ளாவியுந் தண்குமு தத்தமு தூற லளித்திலையே
ஓவியம் போலிருந் துள்ளே விழித்துணர் வுற்றிருப்பா
ராவியுங் கோயி லுள்ளாயகி லாண்டமென் னாவதுவே. 5

என்றது: வாருமம்மா ஈசுவரி! தேவியென்று உன்னை நாடோறும் ருத்திரமூர்த்தி மகமேருவே மத்தாகவும், சந்திரனே தறியாகவும், ஆழியே தாழியாகவும், ஆயிரந் திருமுடியுடைய வாசுகியே கயிறாகவும், அந்த வாசுகியினுடைய வாலை அசுரர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும், வாலி, சுக்கிரீவனும் பிடிக்க அதன் தலையாயிரத்துக்கும் ஆயிரம் அஸ்தத்துடனே விஷ்ணுவும் பிடித்து வாங்கி அமிர்தங் கடைந்தார்கள். அதில் பிறந்த நஞ்சு பிர்மா விஷ்ணு தேவர்களால் சங்காரப்படாமல் அந்த நஞ்சு[த்] தகிக்க வுண்டு மயங்கினபோது, அவர்க்கு நின்னாவி யென்னுங் குளிர்ந்த குமுதத் திருவாயமுதூறல் கொடுத்துப் பிழைப்பித்துக் கொண்டா யில்லையாகில் அண்டங்களெல்லாம் என்னவாம்? பஸ்மீகரிச்சுப் போகாவோ! ஓவியம்போல் என்றது: சித்திரத்தில் கொக்கு மீனைக் கவ்வியிருந்த தன்மைபோலவும், தட்டானென்னும் பேருடைய கொடும்பறவை ஒரு தலத்திலே காலிரண்டும் ஊன்றிக் கண்ணிரண்டும் விழித்து, சிறகிரண்டும் விரித்து சகத்திருந்த தன்மை போலவும் சிகப்படழிவின்றி(?) ஓவியம் போல உள்ளே விழித் துணர்வுற்றிருக்கும் பெரியோர்கள் ஆத்துமாவே அழகிய கோயிலாக உள் எழுந்தருளியிருந்தாயென்று அம்மை சந்நிதியிலே விண்ணப்பஞ் செய்து அதிசயித்தருளி இருந்தாரென்றவாறு: என்றது. 5
-------------
வேதாந்த மந்தஞ் சகலக லாந்தம் பொதிந்தவிந்து
நாதாந்த நாயகி யேயென் னம்மேநின் னயனமென்னுங்
காதாந்த கார்க்கடல் கோக்கும் (பொழுதுன்) கருணையன் றோவுலகுக்க
ராதாந்த லைவரு காந்த காலத் தடுங்கனற்கே. 6

வாருமம்மா ஈச்வரீ! வேதாந்தம், ஆகம சாஸ்திரம், புராணம் மற்றும் எண்ணப்பட்ட காலபேதங்களும், (ஐ) [அ]க்கினி அறுபத்து நாலும், ஆதித்தகலை பன்னிரண்டும், இடிகலை பத்தும், மின்கலை எட்டும், இரவு பகல் கலையிரண்டும், இ(ய)மானக்கலை யெட்டும் ஆறும் வந்த கலா பேதங்களும் விட்டு நீங்காது சேரப் பொதிந்து நின்ற விந்து நாதங்களுக்கு உள்ளீடான நாயகியே! என்னம்மே! நின்னயனமென்னும் அடுங்கனற்கு என்றது விபேகர் பேரிலே படையெழுப்பும் ஞானபோக மென்னும் துட்டரைக் காதிற் சுவற வாங்கும் கருணையங் கருங்கடல் இல்லையாகில் எல்லையற்ற வுலகங்கள் முடியுங்கால் சர்வம் உன்னுந்தியை யலர்த்தி உலகத்தை ரக்ஷித்தருளும் தலைவர் யாரோவென்று அம்மை ஸந்நிதியிலே ஆநந்தாச்சரியமாக விண்ணப்பஞ் செய்து தம்மிலே அதிசயித் தாறி எழுந்தருளியிருந்தார் என்றவாறு. 6
-------------
கனத்தடத் துள்ளத் தடமல ருங்கம லத்தமல
வினத்தடத் துன்றிநின தொத்திநிற் பாளகி லாண்டந்தத்துப்
புனத்தடத் தண்டரண்டம் புகுவன் போவன வாகிநிற்கும்
வினத்தாடப் பொன்னுந்தி யாய்வந் தியர்முன் வெளிநிற்பளே. 7

என்றது: வாருமம்மா ஈசுவரீ: கனத்தடமான பூமியில் கனிவுபெற்ற வுள்ளத் தடத்தில் மலர்வதான இருதய கமலத்தின் கண்ணே அமலவனத்து நின்ற நிராமயரூபமே யொப்புக்கொண் டெழுந்தருளி நிற்பாள் அகிலாண்ட வெளிநிற்பளே. அகிலாண்டங்களுக்குத் தத்தம் இறுதி வரத் தொன்று மூழ்கித் தீப்புனத் தடத்தில் அகப்பட்டுத் தட்டுப்படாமல் அண்டரண்ட பகிரண்டங்கள் நல்வினை தீவினைக் கிடமாகப் புக்குப் புறப்பட்டுவருந் திருவுந்தியினை யுடையாள் வந்திக்க வென்று உன் முன்னே அவர்கள் கண்காண வந்து வெளிநிற்பளே யென்றும் அன்பர்களுக்கு உபதேசமாக அருளிச் செய்தார் என்றவாறு. 7
--------------
நிற்பன யாவையு மாகிநிற் பாய்நின் னிடத்தகிலங்
கற்பன வல்ல பொன்னேயென் னம்மேநின் கமலபதஞ்
சொற்பன வாய கவிகற்பி னுங்கவி துலங்கவர்க்கு
பிற்பன வாயதன் றோவறத் தாழ விலைமதித்தே. 8

என்றது: வாருமம்மா ஈசுவரீ! ஒரு கணப் போதிலே அகிலாண்ட உற்பத்திகளைச் சிருஷ்டிக்கவல்ல பூரணியே! என்னம்மே! நினது புண்டரிகப் பதமே சொல்லிச் சொல்லிக் கல்வியினாலே தோய்ந்து பாடும் பதம்பெற்று எனது கல்வியைத் துலங்கவராய் ஞானங்களுக்கு அறவுந் தாழ்விலை மதித்து அவமே இதுவும் விற்கத்தக்க தல்லவே யென்று தம்மிலே அதிசயித்து விண்ணப்பஞ் செய்தார் என்றவாறு. 8
------------
மதியா வெறிக்கு முறுவனி லாமதி மாலையிருள்
பொதியா யெறிக்கு மளகா டவிப்புவ னாதிபதம்
பதியா யெறிக்கு முதயா திபமேழு பாருமகோ
ததியா யெறிக்குஞ் சகதண்ட மேழுக்குந் தண்ணளியே. 9

என்றது: வாருமம்மா ஈசுவரி! உனது முறுவலிற் பேரொளியாகிய நிலவு சோதி விதிக் கதிராக வெறியா நின்றது. சோதிபுவனாதிபரான பஞ்சகிருத்தியம் மகத்தான கிருபைக்கடலேழும், பாரும் சகதண்ட மேழும் பெருகி யலையாகி நின்றதுவேயென்ன அவளது பெருமையைப் புகழ்ந்து விண்ணப்பஞ் செய்தருளினார் என்றவாறு. 9
----------
தண்ணளி பாய்முகிழ் கொங்கை சுரந்து தனிக்குழவி
மண்ணளிப் பாயகி லாண்டஞ் சுடும்வட வாவனலில்
விண்ணளிப் பாயழித் தாடும்வி டாய்கெட மெய்க்கருணைக்
கண்ணளிப் பாயென் னம்மேவினை யேனையுங் காத்தருளே. 10

என்றது: வாருமம்மா ஈசுவரீ! தண்ணளி யென்னுங் கிருபைப்பாலை கொங்கை முகக்கமல முகைபோலும் முகிழ்ந்து விம்மிப் புடைத்து இறுமாந்த தனம் நிறையச் சுரந்து மடவிக் குழவிக் களித்துத் தாவர ஜங்கமங்களைத் தோற்றுவித் தருளிச்செய்தாளே அகிலாண்டஞ் சுடுங் காத்தருளென்றது; வடவாமுகாக்கினியும், ஆதித்தர் பன்னிருவரது கிரணங்களும் ஆயிர முடியுடனே பூமியைத் தாங்குஞ் சேஷனது முகத்திலே நின்றுந் தோன்றி ஆதித்தாதி கிரணத்தாலே விட்ட பூமியில் விட்டூடே புறப்பட்ட காலாக்கினியும் காலருத்திராக்கினியும் ஒக்க வெறித்த அகிலாண்ட உற்பத்திகளை அளித்து விசுவ வியத்தஞ் செய்யும் தம்பிரானார், ஆனந்தக் களிப்பாகச் சங்கார தாண்டவஞ் செய்த விடாய்ப்புத் தீர்ந்து திருமேனி குளிர ஆலிங்கனஞ் செய்து மேலுங் கருணைக்கண்ணே அளிப்பாய் என்னம்மே! அடியேனையுஞ் சனன மரணங்களிற்றள்ளாமல் உயரவுயர்ந்த நலமாக வந்துநின்று அமுதத்தை அருளி ரக்ஷித் தருள்வாயென்று விண்ணப்பஞ் செய்தார் என்றவாறு. 10
-------------
காப்பாய் படைப்பா யொழிப்பாய் கனத்தா மரைக்கரத்துப்
பூப்பா யகிலாண்ட முங்கொண்ட போது புலன்சுடர்போற்
சேப்பான மேருவிற் சேர்ப்புண்ட வண்டசென் னூலின்முத்தங்
கோப்பார் தனிவடம் போற்கொங்கை மேற்பொலி கோலத்தளே. 11

என்றது: வாருமாம்மா ஈசுவரி! சிருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரத்துக்குக் கர்த்தாக்களான பிரம விஷ்ணு ருத்திரனும், ஊழிகளும், கற்பாந்தங்களும் கற்பித்தருளுவாய், அகிலாண்டங் கொண்டபோது கோலத்தளே! பிரமப் பிரளயங் கோக்குங் காலம் அகிலாண்ட உற்பத்தி அழிவு படாமல் ரக்ஷித்தருள வேண்டி அந்த ஆயிரத்தெட்டு மாற்றுள்ள பொன், சோதி மயமாகச் சிவந்து எண்பத்து நான்கு நூறாயிரம் யோசனை சுற்றுடைத்தான மகாமேரு பருவதத்திலே சூழ அடுக்கடுக்காக வளைத்துக் கொங்கை மேலே பொலிவு செய்யச் சிவந்த நூலிலே வெண்தரளத்தைக் கோத்து அணிந்தாற்போல வொத்தவடமாக நேரே தூக்கிச் சாத்திக் கொண்டருளின திருக்கோலத்தை யுடையாளே யென்று சந்நிதியிலே அதிசயமாக அவளது பெருமையைக் கூறியருளினார் என்றவாறு. 11
--------------
கோலத் தனகளபக் கடினத் துங்கக் கொங்கைவஞ்சி
நீலத் தனகள னாகத் திறைவி நிறைமலரோன்
ஓலக் கனகட லூழிபல கோடி யொருநிமிடங்
காலத்தி னாகத்த ளேபுறத் தோம்வெய்ய காலனையே. 12

என்றது, வாருமம்மா ஈசுவரி! களப கஸ்தூரிக் குழம்பை அளவுபட அணிந்து கோலஞ் செய்து கடினமாய்க் கனத்துப் புடைத்துப் பெருத்து இறுமாந்த கொங்கையினையும், நீலம் போலும் அளகாடவியையும் உடையவராய் மந்திர தனு மாயா தனுவாக எடுத்து உயர்த்திகளும் நினை வாகுந்தோறும் உயிர்க்குயிரான இறைவி நிறைமலரோன் காலனுக்கே யென்றது: அண்டரண்ட பகிரண்டங்களெங்கும் நிறைந்து வாராநின்ற போதத்தினை யுடையோன் பேராரவாரமே இடைவிடா தளந்து நிற்கும் பிரமப் பிரளய வூழிகளெல்லாம் ஒரு நிமிஷப் போதாக வாழுமவள் எனது உள்ளக் கோயிலகத்தளாய் எழுந்தருளி யிருப்பளே. இந்தப் பெருமை கொண்டு வெய்ய காலனை வஞ்சகஞ் செய்து புறவிடுமோ வென்று பத்திபதி செய்ய மேம்பாட்டுடனே அங்ஙனே யாறி எழுந்தருளியிருந்தார் என்றவாறு. 12
-----------
கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு சுட்டுக் கலைமதியின்
பால்கொண் டிறக்கி யுள்ளேபணி யாய்ப்பர மாநந்தமே
மேல்கொண்டு நானென்று நீயென்று வேறென்று விம்மிவிம்மி
மால்கொண் டிருப்பனம் மேயறி யேனிந்த மாயத்தையே. 13

என்றது: வாருமம்மா ஈசுவரீ! காலாக்கினியான பவனத்தைக் கட்டுப் படுத்தி மூலாக்கினியை எழுப்பி மோக வாசனையுடனே நறுசேனையாய் இந்திரிய வேடரையுஞ் சுட்டுப் பஸ்மீகரிச்சு மேல் பிரமரந்திரத்திலே யிருக்குஞ் சந்திர கலையிலுண்டான அமிர்த பாலையுள்ளே கொண்டு தெவிட்டிப் பணிந்தாறிப் பரமான மேல்வீடு பெற்று நீயென்றும் நானென்றும் இரு பரவிப்பான (?) சகட்டிப் (?) பொருமி நின்று திருவடிகளிலே என்று கூடுவோமென்று வாஞ்சை கொண்டு பெறும் மகிழ்ச்சியாக ஆறி அங்ஙனே சாலங்களை வஞ்சகஞ் செய்து விண்ணப்பஞ் செய்தருளினார் என்றவாறு. 13
-----------
மாயிலென் மாயா விடிலென் படிவுமென் னாவியுநின்
கோயிலு நீயுமன் றேயகி லாண்டக் குழுவுக்கெல்லாந்
தாயிலு நல்ல தனியுற வேசைவ நாயகியே
யாயிலு மெய்விடும் போதடி யேனுந்த னடைக்கலமே. 14

என்றது: வாருமம்மா ஈசுவரி! சர்வமுஞ் சங்காரப்பட்டுப் போகையில் சங்காரப் படாமல் இருந்தென், எனது உடலும் மனமும் உனது கோயிலும் நீயும் யானென்று உதயஞ் செய்தென்ன? ரத்தினமும் மரகதமும் போல் விட்டு நீங்காது எல்லையற்ற அகிலாண்டங்களில் தோற்றப்பட்ட உயிர்ச்சகமெல்லாம் அடியேனிடத்து நின்ற தன்மை போலத் தாயிலும் நல்ல தனி உறவுமாய் சீவ மோகினியுமாய் இருந்தாயாயினும் சட்டை கழலுங் காலம் அடியேனுன்தன் அடைக்கலமே. வேறொரு தஞ்சமில்லை யென்றிருந்து வேண்டிக்கொள்ளா நின்றா ரென்றவாறு. 14
------------
அடைக்கலம் புக்கென வுந்தியி லண்டமைம் பூதங்கொங்கை
புடைக்கலம் புக்கெனச் சந்திரா திபர்பசும் பொற்கரத்துப்
படைக்கலம் புக்கென வெற்பெட்டு மம்மை பதச்சதங்கைக்
கிடைக்கலம் புக்கெனப் புக்கொளிப் பாருக் கிடமில்லையே. 15

என்றது: வாருமம்மா ஈசுவரீ! மந்திரதனு மாயா தனுவாகச் சென்று அவளது திருவுந்திக் கமலத்திலே அண்டகோடிகளிடத்துப் புகும் பஞ்ச பூதங்கள் அவளது கொங்கைப் புடை நடுவே பு(க்)குச் சுட்டும் குளிர்ந்ததுமான மேனியுடைய ரூபம் சந்திரரூபம் முதலான நித்தியர்களெல்லாம் அவளது பசும்பொன் போலும் நிறத்தொளிரும் சிகத்தங்களில்(?) வேறு விளங்கா நின்ற ஆயுதங்களில் பிரபைக்குள்ளே புகும் அஷ்டகுல பர்வதங்களும் அவளது திருப்பாதச் சதங்கைக்கு இடைதோறும் தரியாகப் புகுமாதலால் புக்கொளிப்பாருக்கு இடமில்லையென்று சோதி கொண்ட சாலோக சாமீப சாரூப சாயுச்சியமே புக்கொளித்து மீண்டும் சுவரேறிப் பந்துபோலே எதிரே புறப்படுமென்று வேதவேதாந்தஞ் சொல்லுந் தன்மை கொண்டே இதுவுஞ் சேதியல்லவென்றே கருதி மககே சாதனா சத்துட்(?)டேயம் பிறந்து அகண்ட பரிபூர்ணமாய்ப் போக்குவரவு புணர்ச்சியறத் தம் ஆநந்த மயமே செய்தி யெந்தமயமாயாறி எழுந்தருளியிருந்தா ரென்றவாறு. 15
---------
இல்லாமை முன்றுள்ள நாணம்பின் றள்ள விரவுதள்ள
நில்லாமை யும்நின தேயரன் சென்னியி னின்னுதல்நே
ரெல்லா மதிதோய்ந் தருமந்த செம்மையெல் லாம்வெளிறப்
பொல்லா மையுமழ கேபுலன் சேவடிப் பொற்கொடியே. 16

என்றது: வாருமம்மா ஈசுவரி! நினது அன்பரிடத்து இல்லாமையாகிய வறுமை யெழுந்து முன்னே செலுத்த நமக்கு ஒருத்தரிடத்திலே சென்று ஏற்க நீதியோவென்று நாணம் பின்னே தள்ள மீண்டும் இரவென்று வாஞ்சை எழுந்து தள்ள, அவரும் நில்லாமையும் அழகல்லவே! நின்னுதல் நேரல்லா மதி பொற்கொடி என்றது, நினது திருநுதலுக்குத் தோற்று அவனது சென்னியிலே பயந்து ஏறியிருக்கும் மதிக்கொழுந்து அவனது தெண்டன் இடத்தோய்ந்து, சிவப்பை விழுங்கி வெள்ளை மேலிட்டுப் பொல்லாமையும் அழகாகப் புனைந்திருக்கும் திருவடிகளையுடைய பொற்கொடியென்று அதிசயமாகக் குறைச்சலுடனே விண்ணப்பஞ் செய்தருளினார் என்றவாறு.16
-----------
பொற்கொடி போலு மிடைவல்லிக் கொத்துப் புருவமென்னும்
விற்கொடி யாசைவை யானை யனைத்தும்வந் திப்படியே
கற்கொடி யேனை நெஞ்சுக் கரைத்த கள்வியுன்தாள்
சொற்கொடி யேன்றுதிக் கப்பெற்ற பேறதை யென்சொல்லவே. 17

என்றது: வாருமம்மா ஈசுவரி! பொற்கொடிபோலும் இடையையுடைய வல்லியே! நினது இரண்டு புருவமென்னும் ஞானவிற் கொடியினாலே சைவ யானையாகிய பரமன் நாகரூபத்தை விட்டு நீங்காமல் அணைத்துக் கிருபை செய்து இருக்கும். பரவிந்துப்படியே கல்நெஞ்சனான கொடியேனை ஞான நாட்டத்தாலே நோக்கிக் கரைத்த கள்வியே! நீ நம்மைப் பாடுரையாக என்று அருளிச் செய்தபடியான் அது சொற்கொண்டு உனைத் துதிக்கும்படியே யான் முன் நோற்றுப்பெற்ற பெரும் பேறான திருவருளின் பயனை ஏதென்று சொல்லுவேன் என்று அதிசயமாக விண்ணப்பஞ் செய்தார் என்றவாறு. 17
-----------
சொல்லுதற் கேது மறியேன் பிறவித் துவக்கறவே
நல்லுப தேச மெனக்களித் தாய்நகை யாற்புசங்கள்
கல்லுவ தேபுரிந் தாரங் கணவரைத் தோள்நெகிழப்
புல்லுவ தேயென் னம்மேநின் னிலாவிடைப் போக்கரிதே. 18

என்றது, வாருமம்மா ஈசுவரீ! பிறவித் துவக்கெல்லாம் வேரற்றுப் போம்படி ஞான நாட்டத்தாலே உயர்வற உயர்ந் தகலமான உபதேசத்தை எனக்கு அருளிச் செய்தாயே! திருநகையாலே பொன், வெள்ளி, இரும்பு, பொன்னும் முப்புர வெயிலைக் கல்லிக் கிழங்கறப் பிடுங்கிப் போடத் தணிந்த தம்பிரானார் தமது கனத்த ஞானப் புய பூதரங்கள் நெகிழ்ந்து சிவானந்தம் பிறக்கும்படி புல்ல நில்லாத இடையினது நுண்ணிமையான போக்கை அறிந்தும் புல்லின பேராநந்த மகிழ்ச்சியை, என்னம்மே! வாக்கு மன்னாதி கோசரமாய் இருந்து அநுபூதி யடைந்த தொழிய வாக்கினாலே கூற, அறிவனோ வென்று விண்ணப்பஞ் செய்தார் என்றவாறு. 18
-----------
போக்கறி யாவிடை யோடுகண் கன்றிடப் பொங்குகொங்கை
மாக்கறி யாபுலன் மேருப் பிடிமண வாளனுக்குத்
தூக்கறி யாவிரு நாழி நெல் லாற்சிறு சோறிடவே
தேக்கறி யாநிற்கு மேயகி லாண்டந் தெவிட்டவுண்டே. 19

என்றது: வாருமம்மா ஈசுவரீ! தானவருக்குப் போக்கு அறியாமல் இருக்கும் சிற்றிடையோடும் கண்களன்றிப் பார்க்கப் பொங்கிப் புடைக்குங் கொங்கைகளின் பெருமையை யீடாமல் பேர்ந்திருக்கும் ஆநந்தமகிழ்ச்சியே கறியமுதாக வடமேரு வில்லாகப் பிடிக்கும் மணவாளனுக்கு ஒருவரது இன்னதன்மை எனக்காப்பார். அவனு வஞ்சிபவ? மென்று இருநாழி நெல்லாலே ஆராவமுதான சிறுசோறாக்கிப் படைக்கவே அகிலாண்டந் தெவிட்ட வுண்டுந் தேக்கறியா நிற்குமே என்று அதிசயித்து ஆறி விண்ணப்பஞ் செய்தார் என்றவாறு. கரியாக வென்றது கடைக்குறைந்தது. 19
----------
தெவிட்டத் தடங்கொண் டிளகிள (கிள) கென்றுசிக் கென்று விம்மிக்
குவட்டைப் பொதிந்த தனங்கொண்ட நம்மைக் கொழுநர் நெஞ்சே
துவட்டிப் பெறுமிரு நாழி நெல் லாற்சுற்ற மெட்டுமிக்கத்
தவிட்டிற் பிழைப்பன முப்பத் திரண்டுந் தவப்பயனே. 20

என்றது: வாருமம்மா ஈசுவரீ! சிவாநந்த மகிழ்ச்சியே மிகவுந் தெவிட்டிப் பெருத்த தனத்தினது குழைந்து சிக்கென்று விம்மிக் குவட்டிலும் பொலிவு பெற்ற தனபாரங் கொண்டு என்னம்மை (க்குக்) கொழுநராய் ரத்தினமும் மரகதமும்போல விட்டு நீங்காத தம்பிரானாரது நெஞ்சத்தைத் தமது உளமகிழ்ந்து, பேராநந்த மகிழ்ச்சியாய்த் துவளப்புல்கி, வாக்கு மனாதீத கோசமாய் எச்சப்படாத பராநுபவஞ் சிவாநுபவ மென்னும் இருநாழி நெல்லாலே சுத்தமாகிய தவப் பயன்களைப் பிழைப்பூட்டித் தருளுவதென்று தம்மிலே ஆநந்தாச்சரியமாக விண்ணப்பஞ் செய்தருளினார் என்றவாறு. 20
--------
பச்சைப் பருமணிப் பாகர பாகர்பொற் றோள்மனம் பட்டுப்படாக்
கச்சைப் பொருத கனதனத் தாய்கதி யொன்றுமில்லா
திச்சைப்ப டுஞ்செல்வர் பொல்லாமை கண்டென்னில் லாமையினால்
வெச்சப் படுதல் நன்றேயரு ளாயினி வேணுமென்றே. 21

என்றது: வாருமம்மா ஈசுவரீ! மரகத மணியும் பிரமையும் போல விட்டு நீங்காத தலைவரது பொலிவு பெற்ற தோள்களில் சிவமண மேலிட்டுக் கச்சை யெதிர் நில்லாமல் பொருந் தனபாரங்களையுடைய நாயகியே! கசிவு ஒன்றுமில்லை வேணுமென் றென்றது, தன்னுளகு, தன்னுருகுத் தன்னைப் போலத் தன்னுள்ளே என்னும் நால்வகைக் கதிகளே இச்சைப் பட்டிருக்கும் பெரியோர்களு மீண்டு சனன மரணங்களுக்கு இடமாகிய போக்குவரவு செய்யும் பொல்லாமை கண்டுங் கதிகளில் இச்சை சற்றும் இல்லாமையே செல்வமாக இருக்கும்படி என்னைத் தேவரீரது திருவுள்ளக் கருணையாலே வேணுமெச்சப்படுகை நன்றே யென்ன குறைச்சலாக அருளிச் செய்தார் என்றவாறு. 21
------
வேணுங் கதியென் றிருப்பார்தம் முள்ளத்து மேவிமிக்க
நாணுங் கொடுமையும் நல்குரவுஞ் செற்ற நாயகியே
சேணுந் தவமுந் திசையெட்டு மாய்நின்ற சிவசத்தியே
பானும் மறையும் பரவுந் திருவடிப் பாரடையே. 22

என்றது: வாருமம்மா ஈசுவரீ! கெதி வேணுமென்று கருதி யிருக்கும் பெரியோர்கள் மனத்துள் விருப்பஞ் செய்து, அவர்கள் வீரம்,அச்சம், இழிவு (யாப்பு) (வியப்பு),காமம், மலம், மூத்திரம், நகை என்னும் எண்வகைக் குண ஹீனமும், குணமும் கொடுமையும் நல்குரவும் நினது ஞான நாட்டத்தாலே நோக்கிப் பஸ்மீகரித்துப் பெருங்களஞ் செய்து அவர்களது உள்ளக் கோயிலுக்குள்ளே யெழுந்தருளி யிருக்கும் நாயகியே! அகிலாண்டங்களெங்கும் நிறைந்து பரிபூர்ணமாய்ப் போக்கு வரவும் புணர்ச்சியும் அறநின்ற பேரொளிப் பிறப்பை விதஞ் சிவாநு பவத்திலே பர(நா)[னா]கிய வியவிசை...
--
சித்த ரந்தாதி முற்றும்.
------------

12. சிஷ்ட ரந்தாதி [$]

ஏயும் புலன்பொறி யேதுள ராகிய வெண்குணத்தின்
ஆயு மனத்தின ரைம்புலன் வென்றிடு மாங்கவரைக்
காயு மனத்தொடுங் காம வெகுளி மயக்கமென்றோ
வோயு மனத்தினுக் குண்ணிறை வாய்நின்ற துன்னறிவே. 1

அறிவே யமுதக் கடல்வெள்ள மேயகி லாண்டமெங்கும்
நிறைவேது மாகிய நின்னரு ளேநினை வுக்குமெட்டாப்
பிரிவே யகண்டமு மண்டமு மாகிய பேதைவெள்ளச்
செறிவே வரனிடஞ் சார்பவ ளேசித்தர் நாரணியே. 2

நாரண னான்முகத் தோனர னிந்திர னால்வருக்குங்
காரண மாகிய கண்ணுத லேகறைக் கண்டனுக்குப்
பூரண வேதப் புராதன பாரதி புண்ணியத்தா
ளாரணி யண்டமும் யாவையு மாகிநின் றன்னையளே. 3

[#]அன்னையை யிங்கென்னை யாளுடை யாளை யரவிந்தத்தின்
பொன்னை யடைந்துய்வ னென்றுகொண்டேன்சென்று புக்கதற்பின்
தன்னையுங் காண்கின்றி லேனென்ன மாயம் வெளிப்பட்டதே. 4

வெளிப்பட்ட சோதியை வெவ்வே றறிந்துதன் பல்குணமாம்
அளிப்பட்ட நெஞ்சினித் தானின்ற தெவ்வுரு வவ்வுருவங்
களிப்பட்ட சோதியிற் காம வெகுளி மயக்கமென்றோ
வளிப்பட்ட நீதி யதுவே வறியுமப் பாரடையே. 5

அந்தாதிக் கொத்து முற்றும்.
; --------------
[$] இவ் வந்தாதியில் ஐந்து பாடல்களே மூலப்பிரதியில் காணப்பெறுகின்றன.
[#] இப்பாடல் மூன்றடியாகவே மூலப் பிரதியிலுள்ளது.
----------------

This file was last updated on 25 March 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)