T.V. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய
பாண்டியர் வரலாறு
pANTiyar varalARu
by cAtaciva paNTArattAr
In Tamil script, Unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext file has been prepared in a two-step proces: OCR of the PDF file followed by careful proof-reading,
correction of the OCR output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
T.V. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய
பாண்டியர் வரலாறு
Source:
பாண்டியர் வரலாறு
ஆராய்ச்சிப்பேரறிஞர் TV சதாசிவ பண்டாரத்தார் எழுதியது
வெளியிடுபவர் : திருமதி சின்னம்மாள் சதாசிவ பண்டாரத்தார்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி-6. சென்னை-1.
1968
----------
TV சதாசிவ பண்டாரத்தார் (1892-1960)
1968 சின்னம்மாள் சதாசிவ பண்டாரத்தார்
Ed 1 July 1940, Ed 2 Oct 1950, Ed 3 July 1956, Ed 4 Nov 1962,
Ed 5 Dec 1966, Ed 6 Mar 1968.
PAANDIAR VARALARU
Appar Achakam, Madras-1.
------------
பொருளடக்கம்
1. முன்னுரை
2. கடைச்சங்க காலத்திற்கு முந்திய பாண்டியர்கள்
[வடிம்பலம்ப நின்ற பாண்டியன் - பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.]
3. கடைச்சங்க காலத்துப் பாண்டியர்கள்
[பாண்டியன் முடத்திருமாறன் - பாண்டியன் மதிவாணன்- பொற்கைப் பாண்டியன் - கடலுண் வாய்ந்த இளம் பெரும்வழுதி - பாண்டியன் அறி வுடைநம்பி - ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன் - பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் - தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் - பாண்டி யன் கானப்பேர் கடந்த உக்கிரப் பெருவழுதி - கருங்கையொள் வாட் பெரும் பெயர்வழுதி பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதி - நல் வழுதி - கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறன் - குறு வழுதி - வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெரு வழுதி - நம்பி நெடுஞ்செழியன். ]
4. பாண்டிநாட்டிற் களப்பிரர் ஆட்சி
5. கி.பி.575 முதல் கி.பி.900 வரை ஆட்சி புரிந்த பாண்டியர்கள்
[பாண்டியன் கடுங்கோன் - மாறவர்மன் அவனி சூளாமணி- செழியன் சேந்தன்-மாறவர்மன் அரி கேசரி - கோச்சடையன் ரணதீரன் - அரிகேசரி பராங்குச மாறவர்மன் - நெடுஞ்சடையன் பராந்தகன் - இரண்டாம் இராசசிம்ம பாண் டியன் - வரகுண மகாராசன்-சீமாறன் சீவல்ல பன் - வரகுணவர்மன் - பராந்தக பாண்டியன். ]
6. கி. பி. 900 முதல் கி.பி.1190 வரையில் ஆண்ட பாண்டியர்கள்
மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் - வீரபாண்டியன் அமரபுயங்கன் மானாபரணன் - வீர கேரள பாண்டியன் - சுந்தரபாண்டியன் விக்கிரம பாண்டியன் - வீரபாண்டியன் - சீவல்லப பாண்டியன் - பாண்டியன் வீரகேசரி-
சீவல்லபன் மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பராக்கிரமபாண்டி யன் - சடையவர்மன் பராந்தக பாண்டியன் மாறவர்மன் சீவல்லபன் சடையவர்மன் சடையவர்மன் - வீர குலசேகர பாண்டியன் - சடையவர்மன் பாண்டியன் - மாறவர்மன் விக்கிரம பாண்டியன்.]
7. கி. பி. 1190 முதல் கி.பி. 1310 முடிய ஆட்சி புரிந்த பாண்டியர்கள்
முதல் சடையவர்மன் குலசேகர பாண்டியன் - முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன்- இரண் டாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன்- சடைய வர்மன் வீர பாண்டியன் - சடைய வர்மன் விக் கிரம பாண்டியன் - முதல் மாறவர்மன் குல சேகர பாண்டியன் - சடையவர்மன் சுந்தர பாண்டியன் - மாறவர்மன் விக்கிரம பாண்டி யன் - மாறவர்மன் வீர பாண்டியன்.
8. கி. பி. 1810 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆட்சி புரிந்த பாண்டியர்கள்.
9. தென்பாண்டி நாட்டில் ஆட்சிபுரிந்த பிற்காலப் பாண்டியர்கள்
[சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் - சடைய வர்மன் குலசேகரபாண்டியன் - அழகன் பெரு மாள் பராக்கிரம பாண்டியன் - சடையவர்மன் சீவல்லப பாண்டியன் - சடையவர்மன் பராக் கிரம குலசேகர பாண்டியன்-நெல்வேலி மாறன் - சடையவர்மன் அதிவீரராம பாண்டி யன் - வரதுங்கராம பாண்டியன் - வரகுணராம குலசேகர பாண்டியன். ]
10. பாண்டியர் அரசியல்
[பாண்டிமண்டலத்தின் உட்பிரிவுகள் - அரசனும் இளவரசனும் - அரசியல் அதிகாரிகள் அரசிறை - நில அளவு - இறையிலி - அளவை கள் - நாணயங்கள் - கிராம சபை - ஆவணக் களரி - படை - வாணிகமும் கைத்தொழிலும் - கல்வி – சமயநிலையும் கோயில்களும் - சில பழைய வழக்கங்கள். ]
சேர்க்கை 1. பாண்டிய மன்னர்களின் செப்பேடுகளும் மெய்க்கீர்த்திகளும் மானூர்க்
கல்வெட்டும்
'சேர்க்கை 2. கல்வெட்டுக்களிலுள்ள பாண்டியரைப்பற்றிய சில பாடல்கள்
சேர்க்கை 3. இடைக்காலப் பாண்டியர் மரபு
பொருட்குறிப்பு அகராதி
---------------
முகவுரை
உலகில் நாகரிகம் பெற்ற நாட்டினர் தம் முன்னோர் வரலாறுகளைப் பலவகையாலும் ஆய்ந்து, உண்மைச் சரிதங்களை மக்கள் எல்லோரும் உணருமாறு தம் தாய்மொழியில் வெளியிட்டுப் போற்றி வருகின்றனர். நம் தமிழகத்தில் முற்காலத்தில் ஆட்சி சிந்த தமிழ் வேந்தர்களான சேர சோழ பாண்டியர்களின் வரலாறுகள் நமக்கு மகிழ்ச்சியும் உணர்ச்சியும் அளிக்க வல்லன என்பது யாவரும் அறிந்ததொன்றாம். கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் தமிழ் நூல்களையும் பிற ஆராய்ச்சி நூல்களையும் ஆதாரமாகக்கொண்டு எழுதப்பெற்றது 'பாண்டியர் வரலாறு' என்னும் இந்நூலாகும். இது கடைச்சங்க காலத்திற்கு பின்னர்த் தொடங்கி, கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பாண்டிநாட்டில் ஆட்சிபுரிந்த பாண்டி மன்னர்களின் சரிதங்களைச் சுருக்கமாகக் கூறுவதாகும்.
இந்நூல் மூன்றாம் பதிப்பாக இப்பொழுது வெளியிடப் பெறுகிறது. எனது ஆராய்ச்சியிற் புதியனவாகக் கண்ட கருத்துக் பலவும் முன்னரே இடம் பெற்றுள்ளன. இதன் பிற்சேர்க்கை வேள்விக்குடிச் செப்பேடுகள் சின்னமனூர்ச் செப்பேடுகள் பலவற்றின் பகுதிகளும் மெய்க்கீர்த்திகளும் பாண்டியரைப் பற்றிக் கல்வெட்டிற்கண்ட பாடல்களும் சேர்க்கப் பெற்றுள்ளன. ஆராய்ச்சித்துறையில் கருத்து வேறுபாடுகள் நிகழ்தலும் புதியன வாகக் கிடைக்கும் ஆதாரங்களால் சில செய்திகள் திருத்த ஆய்துதலும் இயல்பாகும். இந்நூல் எழுதுவதற்குக் கருவிகளாக உள்ள தமிழ் நூல்களையும் கல்வெட்டுக்களையும் பிறநூல்களையும் முறையே வெளியிட்டுதவிய புலவர் பெருமக்களுக்கும் கல்வெட்டு இலாகா அறிஞர்களுக்கும் ஆராய்ச்சியாளர்க்கும் எனது உறியுரியதாகும்.
இந்நூலை எழுதத் தூண்டி இதற்கு அணிந்துரையும் தந்துதவிய கரந்தைத் தமிழ்ச்சங்கத் தலைவர், தமிழவேள் காலஞ்சென்ற இராவ்சாகிப் த.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்களது தமிழ்த்தொண்டு என்றும் நினைவுகூருதற்குரியதாகும்.
சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களின் தமிழ்ப்பாடக் நவினர் இந்நூலைப் புலவர் தேர்விற்குரிய பாட நூல்களுள் ஒன்றாகத் தெரிந்தெடுத்துள்ளனர். அவர்கட்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இதனைக் கண்கவர் முறையில் அச்சிட்டுதவிய சென்னைச் சாது அச்சுக்கூட நிர்வாகி திரு.மு. நாராயணசாமி முதலியார் அவர்களுக்கும் 'புரூப்' திருத்தி உதவிய அரிய நண்பர், தமிழாராய்ச்சித் துறை விரிவுரையாளர் வெள்ளைவாரணரவர்கட்கும் எனது நன்றியுரியதாகும்.
அண்ணாமலை நகர், இங்ஙனம்,
4-7-1956 T. V. சதாசிவ பண்டாரத்தார்
-------------------
ஐந்தாம் பதிப்பின் முன்னுரை
இப்பதிப்பு அச்சாவதற்குத் திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் செய்த உதவிக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
வழக்கம்போல் தமிழறிஞர் இப்பதிப்புக்கும் ஆதரவு தரு வார்கள் என்று நம்புகிறேன்.
--------------
ஆறாம்பதிப்பின் முன்னுரை
இப்பதிப்பில் புதிய பிற்சேர்க்கையாக மாறன் சடைய னின் மானூர்க் கல்வெட்டுச் சேர்க்கப்பட்டுள்ளது. பாண்டி யர் காலத்திய கிராமசபை விதிமுறைகள் அதில் கூறப்பட்டுள்ளன.
நூல் வெளியீட்டில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் உதவியமைக்கு அவர்கட்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
-----------
அணிந்துரை
'பாண்டியர் வரலாறு' எனும் ஆராய்ச்சி நூலைப் படித்தேன். பண்டை இலக்கியங்களின் சான்றுகளையும் கல்வெட்டுக்களின் உண்மைகளையும் ஒப்புநோக்கிப் பாண்டி மன்னரின் மெய்ச்சரிதையைத் தமிழ்மக்கள் அறிந்துகோடற்கு ஏற்ற கருவிநூல் இதுவேயாகும்.
நூலாசிரியர் தமிழ்ப்புலமை மிக்கவர்; கல்வெட்டுக்களை நுண்ணிதின் ஆய்ந்து உண்மைகாண வல்லவர், கட்டுரை வன்மையும் கலைபயில் தெளிவுமுடைய இத்தமிழ்ப்புலவர் இந்நூலை இயற்றி உதவியது யாம் நன்றியுடன் போற்றத்தகும் நற்செயல்.
தமிழ்மக்கள் இதனைப் போற்றிப் பயன் கொள்வாராக.
கரந்தைத் தமிழ்ச்சங்கம், த.வே. உமாமகேசுவரன்,
தஞ்சை } சங்கத்தலைவர்
14-7-'40
--------------
பாண்டியர் வரலாறு
1. முன்னுரை
அமிழ்தினுமினிய நம் தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு நிலவும் இந்நிலப்பரப்பு முற்காலத்தே தமிழகம் என்று வழங்கப் பெற்றதென்பது தொன்னூலாராய்ச்சி-யுடையார் யாவரும் அறிந்ததொன் றாம். இப்போது இதனைத் தமிழ்நாடு என்றே யாவரும் கூறுவாராயினர். இது வடக்கில் வேங்கடமும் தெற்கிற் குமரிமுனையும் கிழக்கிலும் மேற்கிலும் இரு பெருங் கடலும் உடையதா யிருக்கின்றது. இத் தமிழகத்தைக் குடபுலம் குணபுலம் தென்புலம் என்ற மூன்று பெரும் பகுதிகளாகப் பிரித்துப் பண்டைக்கால முதல் ஆட்சி புரிந்துவந்தோர், சேர சோழ பாண்டியர் என்னும் தமிழ் மூவேந்தரேயாவர். இன்னோர் ஆட்சிபுரிந்த பகுதிகள் முறையே சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம் எனப்படும். இவற்றுள் பாண்டிய மண்டலத் தின் அரசுரிமை யுடையராய்ப் பண்டைக்காலத்தே விளக்க முற்றிருந்த பாண்டிய அரசர்களின் வரலாறே ஈண்டு யாம் ஆராயப் புகுந்தது.
இப்பாண்டியர் படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டு வரும் தொல்குடியினரென்பது அறிஞர்களது கொள்கை. இக்குடியினர் எக்காலத்து இப்பாண்டி மண்டலத்தை ஆட்சிபுரியும் உரிமையெய்தின ரென்றாதல், எவ்வேந்தரால் இதன் ஆட்சி முதன்முதலாகக் கைக்கொள்ளப் பட்ட தென்றாதல் அறிந்துகொள்ளக் கூடவில்லை. ஆகவே எவரும் ஆராய்ந்து அளந்து காண்டற்கரிய அத்துணைத் தொன்மையுற்ற குடியினர் இன்னோர் என்பது பெறப் படுகிறது.
இனி, வடமொழியாளர் ஆதி காவியமெனக் கொண் டாடும் வான்மீகி ராமாயணத்தில் தமிழ் நாட்டைப்பற்றிய உயரிய செய்திகள் பல காணப்படுதலோடு, பாண்டி வேந்தரது தலைநகர் பொன்னாலும் முத்துக்களாலும் அலங்கரிக்கப்பெற்ற கோட்டை வாயிலையுடையதாய் இருந்தது எனவும் சொல்லப்பட்டுள்ளது. அன்றியும், வியாசமுனிவரது மகாபாரதத்தே, பாண்டவருள் ஒருவனாகிய அருச்சுனன் ஒரு பாண்டியர் குலப் பெண்மணியை மணந்த செய்தி காணப்படுகின்றது.
இங்ஙனமே வடமொழியிலுள்ள புராணங்களிலும் தமிழரசர்களைப்பற்றிய செய்திகள் காணப்படாமலில்லை. கி.மு. நான்காம் நூற்றாண்டினரெனக் கருதப்படும் காத்தியாயனர் பாணினி வியாகரணத்திற்குத் தாம் வரைந்த வார்த்திகம் என்ற உரையுள் ‘பாண்டிய' என்னும் மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளனர். அன்றியும் கிறித்து பிறப்பதன் முன்னர் மகதநாட்டில் ஆட்சி புரிந்த மௌரிய மன்னனாகிய அசோகனுடைய கல்வெட்டுக்களிலும் பாண்டியர்களைப் பற்றிய செய்தி கூறப் பெற்றுள்ளது. இலங்கையின் பழைய சரித்திரத்தை விளக்கும் 'மகாவம்சம்' என்ற சரித நூல் அவ்விலங்கையின் முதற்றமிழ்வேந்தனும் புத்தரது நிர்வாணகாலமாகிய கி. மு. 478 இல் அதனை ஆட்சிபுரியும் உரிமை யடைந்த வனுமாய விசயனென்பான், ஒரு பாண்டியர்குலப் பெண் மணியை மணந் தனனென்றும், ஆண்டுதோறும் தன் மாமனாகிய பாண்டியற்குச் சிறந்த பரிசில் அனுப்பினனென் றும் கூறுகின்றது, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிரீஸ் தேயத்தினின்றும் சந்திரகுப்தன் அரசவைக்கு வந்த
யவன தூதனாகிய மெகஸ்தனிஸ் என்பான் பாண்டி நாட்டின் வரலாற்றைப்பற்றிக் கூறுவது.
“ஹிராக்ளிஸுக்குப் பண்டேயா என்ற ஒரு பெண் பிறந்தது. அவன் அப்பெண்ணிற்குத் தெற்கில் கடலைச் சார்ந்துள்ள ஒரு நாட்டை அளித்தனன். அவளது ஆட்சிக்குட் பட்டவர்களை முந்நூற்றறுபத்தைந்து ஊர்களில் பகுத்துவைத்து ஒவ்வோர் ஊரினரும் ஒவ்வொரு நாளைக்கு அரசிக்குத் திறை கொணரவேண்டுமென்று கட்டளையிட்டான்" என்பது. இனி கி. பி. 79 ஆம் ஆண்டில் இறந்தவராகிய பிளைனி என்ற மற்றொரு மேனாட்டு வரலாற்று ஆசிரியரும் மெகஸ்தனிஸ் கூறியதைப் போன்றுள்ளதொரு கதை கூறியிருக்கின்றார். அஃது "இந்தியாவிற் பண்டோவென்ற ஒரேசாதி பெண் ணரசுக்கு உட்பட்டது. ஹிராக்கிளிசுக்கு ஒரே பெண் இருந்தமையின் அவன் மிக்க அன்புடன் ஒரு பெரிய நாட்டை அவளுக்கு அளித்ததாக்ச் சொல்லுகிறார்கள். அவள் வழியினர் முந்நூறு ஊர்களை ஆட்சிபுரிந்தனர். அன்னோர் பெருஞ்சேனைகளை உடையவராயு மிருந்தனர்' என்பது. யவனாசிரியர் இருவரும் கூறியுள்ளகதை, பாண்டியார், மலையத்துவச பாண்டியனுடைய புதல்வியாகிய மீனாட்சியம்மையின் வழித் தோன்றியவராய்க் கௌரி யர் என்றழைக்கப்பெற்ற செய்தியையாதல், அன்னோர். பாண்டியன் சித்திராங்கதனுடைய மகள் சித்திராங்கதையின் வழித் தோன்றல்களாயுள்ள செய்தியையாதல் குறித்ததாகக் கொள்ளல் வேண்டும். இதுகாறும் யாம் கூறியவாற்றால் பாண்டியர் மிக்க தொன்மை அாய்ந்தன ரென்பது நன்கு விளங்குகின்ற தன்றோ?
இனி, இப்பாண்டியர் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவ ரென்றும் வேப்பம்பூ மாலையைத் தமக்குரிய அடையாள மாலையாகவும் கயல்மீனுருவத்தைக் கொடியாகவும் இலச் சினையாகவும் கொண்டவர்கள் என்றும் பண்டைத் தமிழ் நூல்களும் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் கூறுகின்றன.
இனி, புறநானூறு பத்துப்பாட்டு முதலிய சங்க நூல்களில் எத்தனையோ பல பாண்டிய மன்னர்களின் பெயர்கள் காணப்படுகின்றன: ஆயினும் அவர்களது வரலாறு நன்குணரப்படவில்லை. கடைச்சங்க காலத்திற்கு முந்திய நாட்களில் நிலவிய அரசர்களுள் வடிம்பலம்ப கின்ற பாண்டியனும், பாண்டியன் பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதியுமே சிறந்தோராவர்.
---------------
2. கடைச்சங்ககாலத்திற்கு முந்திய பாண்டியர்கள்
வடிம்பலம்பநின்ற பாண்டியன் :-இவன் நிலந்தரு திருவிற் பாண்டியனெனவும் பாண்டியன் மாகீர்த்தி யெனவும் வழங்கப்பெறுவன். தொல்காப்பியத்திற்கு உரை கண்ட பெரியாருள் ஒருவராகிய நச்சினார்க்கினியர் இருபத்துநாலாயிரம் யாண்டு அரசு வீற்றிருந்தன னென்றும் இவனது பேரவையின் கண்ணே தான் தொல்காப்பியம் அரங்கேற்றப் பெற்றதென்றும் கூறியுள்ளார்[1]. ஆசிரியர் கூறியுள்ள ஆண்டின்தொகை புனைந்துரை யாயிருத்தல் வேண்டுமென்பதில் ஐயமில்லை. ஆயினும் இவன் முடிசூடி நெடுங்காலம் ஆட்சி புரிந்தோனதல் வேண்டுமென்பது சங்கத்துச் சான்றோர் இவனை 'நெடியோன்'[2] என்று பல்லிடத்தும் குறித்துள்ளமையானே வெளியாகின்றது.
இவன், கடற்பிரளயத்தால் குமரிமுனைக்குத் தெற்கிலிருந்த குமரிநாடு முதலியன அழிதற்கு முன்னர் அக்குமரிநாட்டில் பஃறுளி என்றதோர் ஆற்றை வெட்டு வித்துக் கடற்றெய்வத்திற்கு விழவெடுத்தனன். இச் செய்தி புறநானூற்றிலுள்ள ஒன்பதாம் பாடலால் நன்கறியப்படுகின்றது. ஆகவே இவன் தலைச்சங்கத்தி னிறுதியில் வாழ்ந்தவனென்க [3].
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி:-இவ்வேந்தன் வடிம்பலம்பநின்ற பாண்டியனது வழியில் தோன் றியவன். இவனது இயற்பெயர் குடுமி யென்பது. இவன் அரசர்க்குரிய பரிமேதம் முதலிய வேள்விகள் செய்து சிறப்புற்றவனா தலின் இவனது இயற்பெயருக்கு முன்னர்ப் 'பல்யாகசாலை' என்ற அடைமொழிகள் சேர்க்கப் பட்டுள்ளன. பாண்டியருடைய முன்னோர்களிலொருவன் ஆயிரம் வேள்விகளியற்றிப் புகழ்பெற்றன னென்று சின்னமனூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன. இஃது இவ்வேந்தனையே குறிக்கின்றதுபோலும். இவனைக் 'கொல் யானை பலவோட்டிக் கூடாமன்னர் குழாந் தவிர்த்த - பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியெனும் பாண்டியாதி சர்சன்' என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் குறிப்பது ஈண்டு அறியத்தக்கது.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மீது அவனது அவைக்களப்புலவர் தலை வராகிய மாங்குடிமருதனாரால் பாடப்பெற்ற மதுரைக் காஞ்சி யென்ற நூலிலுள்ள 'பல்சாலை முது குடுமித் தொல்லாணை நல்லாசிரியர் - புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் (759,61,62) என்ற அடிகளில் இவ்வேந்தன் புகழப்பட்டிருத்தல் காண்க. இதனால் சங்கச் செய் யுட்களிற் சொல்லப்பட்டுள்ள செய்திகள் பிற்காலத்துச் செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் உறுதியெய்து தல் நன்குணரத் தக்கது.
நம்முடைய முதுகுடுமியின் சிறப்பை விளக்கக் கூடிய ஐந்து பாடல்கள் புறநானூற்றிற் காணப்படுகின் றன. அவற்றைப் பாடினோர், காரிகிழார், நெட்டிமையார், நெடும்பல்லியத் தனார் என்ற புலவர்களேயாவர். அவர்க ளுடைய பாடல்களால் அறிந்து கோடற் குரியவை : இம் மன்னர் பெருமான் அக்காலத்தில் நிலவிய அரசர் பலரையும் புறங்கண்ட பெருவீரன்; வேண்டிய வேண்டி யாங்குப் புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் ஈந்த பெருங் கொடைவள்ளல்; அரசர்க்குரிய பல வேள்விகளை முடித் துப் பெருமை யெய்தியவன்; சிவபெருமானிடத்தும் பெரியோர்களிடத்தும் பேரன்புடை யோன் - என்பன. இவனை நெட்டிமையார் பாடிய பாடல்களுள் ஒன்றைக் கீழே தருகின்றோம்.
"பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறன்மாண் குடுமி
இன்னா வாகப் பிறர் மண்கொண்டு
இனிய செய்திநின் ஆர்வலர் முகத்தே" (புறம் -12)
---
[1]. தொல்காப்பியப் பாயிர உரை (நச்சினார்க்கினியம்) பக்கம் 9.
[2]. (i) 'நிலந்தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோ னும்பல்.' (மதுரைக் காஞ்சி வரி : 60-61); (ii) முன்னீர் விழவின் நெடியோன், நன்னீர்ப் பஃறுளி மணல் னும் பலவே. (புறம்-9)
[3]. சின்னமனூர்ச் செப்பேடுகள் பாண்டியனொருவன் கடல் சுவற வேலெறிந்த கதையையும் ஒரு பாண்டியனிடத்துக் கடல் அடைக்கலம் புகுந்த கதையையும் குறிக்கின்றன. கடற் பிரள யத்தால் உலகங்க ளெல்லாமழிய, ஒரு பாண்டிய அரசன் மாத் திரம் உயிர்வாழ்ந்திருந்த செய்தி வேள்விக்குடிச் செப்பேடு களில் வரையப்பெற்றுள்ளது. இம் மூன்று கதைகளும் வடிம் பலம்ப நின்ற பாண்டியனைப் பற்றியனவேயாமென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
---------- ----------------
3. கடைச்சங்க காலத்துப் பாண்டியர்கள்
பாண்டியரது தலைநகராகிய மதுரையில் விளங்கிய கடைச்சங்கம் கி.பி. மூன்றாம் நுற்றாண்டின் முதற் பகுதியில் முடிவெய்தியது என்பது ஆராய்ச்சியாளரது கொள்கையாகும். ஆகவே, கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஆட்சி புரிந்த பாண்டிய அரசர்களது வரலாறே இப்பகுதியில் எழுதப்படுகின்றது. இறையனார் களவியுற்கு உரைகண்ட தொல்லாசிரியர் கடைச் சங்கத்தைப் புரந்து வந்த பாண்டி மன்னர்கள் நாற்பத்தொன்பதின்மர் ஆவர் என்று அவ்வுரையிற் கூறியுள்ளார்[1]. சிலப்பதிகாரத்தின் உரைப்பாயிரத்திற்கு மேற்கோளாகக் காட்டப்பெற்ற 'வேங்கடங் குமரி தீம்புனற் பௌவம் என்று தொடங்கும் ஆசிரியப்பாவும் அங்ஙனமே உணர்த்துகின்றது." எனவே, கடைச் சங்க நாட்களில் அரசு செலுத்திய பாண்டிய அரசர்கள் நாற்பத் தொன்பதின்மர் ஆவர் என்பது நன்கு புலப்படுகின்றது. அன்னோர் ஆட்சிபுரிந்த காலம் ஆயிரத்துத் தொண்ணூற்றைம்பது ஆண்டுகள் என்பர் களவியலுரை கண்ட பெரியார். ஆகவே ஒவ்வொரு மன்னனது 'சராசரி' ஆட்சிக்காலம் சற்றேறக் குறைய முப்பத்தெட்டாண்டுகளாகும். கடைசி சங்ககாலத்துப் பாண்டியர் நாற்பத்தொன்பதின்மருள் சிலர் பெயர்களே நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு என்னும் நூல்களால் அறியப் படுகின்றன. அவர்களுள் பாண்டியன் முடத்திருமாறன் என்பவனே மிக்க பழைமை வாய்ந்தவன் என்பது களவியலுரையால் பெறப்படுகின்றது. எனவே, அவன் வரலாற்றை முதலில் ஆராய்வோம்.
பாண்டியன் முடத்திருமாறன் :- குமரிநாடு கடல் கோளால் அழிந்த பின்னர், குமரியாற்றிற்கும் தாம்பிர பருணியாற்றிற்கும் இடையிலுள்ள நிலப்பரப்பில் தங்கியிருந்த தமிழ் மக்களுக்குத் தலைநகராய் இருந்த கபாட புரத்தில் வீற்றிருந்து அரசாண்ட பாண்டிய அரசர் ஐம்பத்தொன்பதின்மருள் இவ்வேந்தனே இறுதியில் வாழ்ந்தவன் ஆவன். ஆகவே, இவன் இடைச்சங்கத்தின் இறுதியில் இருந்தவன் ஆதல் வேண்டும். இவன் காலத்தில் நிகழ்ந்த ஒரு கடல் கோளால் பாண்டிய நாட்டின் பெரும்பகுதியும் அதன் தலைநகராகிய கபாடபுரமும் அழிந்தொழிந்தன[3]. இக் கடல்கோளினால் எண் ணிறந்த தமிழ் நூல்கள் இறந்தன. இச்செய்தியை,
'ஏரணம் உருவம் யோகம் இசைகணக் கிரதஞ் சாலந்
தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்ன மான நூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள'
என்னும் பழைய பாடலும் உணர்த்துதல் காண்க. தமிழ்மக்கள் செய்த உயர்தவப்பயனால் எஞ்சிநின்ற நூல் தொல்காப்பியம் ஒன்றேயாகும்.
----
[1]. 'இறையனார் அகப்பொருள் உரை' (சி: வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு) பக்கம் 5.
[2]. சிலப்பதிகாரம்-பக்கங்கள் 2, 3.
[3]: இறையனார் அகப்பொருளுரை - பக்கம் 5.
--------
இக் கடல் கோளுக்குத் தப்பி யுய்ந்த பாண்டியன் முடத்திருமாறனும் செந்தமிழ்ப் புலவர்களும் சிறிது வடக்கே சென்று மணலூர் என்னும் ஒரு சிறு நகரத்தில் தங்கினார்கள். இவர்கள் சிலகாலம் அந்நதரில் தங்கியிருந்து, பின்னர் மதுரை மாநகரை யடைந்தனர். இப்பாண்டியனும் அந்நகரை வளம்படுத்தித் தனக்குரிய தலைநகராகக்கொண்டு கடைச்சங்கத்தை அங்கு நிறுவினான்[4]. பல நல்லிசைப் புலவர்கள் தமிழ் ஆராய்ச்சி செய்யத் தொடங்கிப் பற்பல அரிய செந்தமிழ் நூல்கள் இயற்றுவராயினர். இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழும் உயர்நிலை எய்தின. எனவே, கடைச்சங்கத்தை மதுரை மாநகரின்கண் நிறுவி அதனைப் போற்றி வளர்த்துவந்த பாண்டியன் முடத் திருமாறன் நம் தமிழ்த்தாயின் பொருட்டு ஆற்றிய அரும்பணி அளவிட்டு உரைக்குந் தரத்ததன்று. இம் மன்னனே தண்டமிழ்ப் புலமையிற் சிறந்த ஒன்டிறற் குரிசில் ஆவன். இவன் பாலைத்திணையையும் குறிஞ்சித் திணையையும் இன்சுவை பொருந்தப் பாடுவதில் வன்மை உடையவன். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய நற்றிணையில் இவன் பாடிய இரண்டு பாடல்கள் காணப் படுகின்றன (நற்றிணை 105; 228). இவன் மதுரைநகரை அமைத்ததையும் கடைச்சங்கத்தை அங்கே நிறுவியதை யும் பராந்தக பாண்டியனுடைய செப்பேடுகள் குறிப்பிடுகின்றன."[5]. இவனைப்பற்றிய பிற செய்திகள் இக்காலத்திற் புலப்படவில்லை.
---
[4]. இறையனார் அகப்பொருளுரை-பக்கம் 5.
[5]. “……தென்மதுராபுரஞ்செய்தும்
அங்கதனில் அருந்தமிழ் நற்சங்கம் இரீஇத் தமிழ் வளர்த்தும்''
----------
பாண்டியன் மதிவாணன் :- இவன் கடைச்சங்கத்தைப் புரந்து வந்த பாண்டிய அரசர்களுள் ஒருவனாவன். சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் இவன் கடைச்சங்கம் இரீஇய பாண்டியருள் கவியரங்கேறியவன் என்று தம் உரைப்பாயிரத்திற் கூறியுள்ளார். ஆகவே இவன் செந்தமிழ்ப்புலமையிற் சிறந்து விளங்கிய வேந்தனாவன். இவன் ஒரு நாடகத் தமிழ் நூல் இயற்றியுள்ளான். அது மதிவாணர் நாடகத் தமிழ் நூல் எனப்படும். அந்நூல், நூற்பாவாலும் வெண்பா வாலும் இயற்றப்பெற்றது என்பர். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதுவதற்கு மேற்கோளாகக் கொண்ட [6]ஐந்து இசைநாடக நூல்களுள் மதிவாணர் நாடகத் தமிழ்நூலும் ஒன்றாகும். அது முதனூலிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்தின் இலக்கணத்தை உணர்த்தும் சிறப்புடையது என்று சிலப்பதிகார உரையாளர் குறித்துள்ளார். இம்மன்னன் இயற்றிய அத்தகைய பெருமைவாய்ந்த நாடகத் தமிழ் நூல் இந்நாளிற் கிடைக்கப் பெறாதிருத்தல் பெரிதும் வருந்தத் தக்கதாகும். சிற்சில சூத்திரங்களே சிலப்பதி கார உரையிற் காணப்படுகின்றன.
பொற்கைப்பாண்டியன் : இவன் கடைச்சங்க நாளில் விளங்கிய பாண்டியருள் ஒருவன். கண்ணகி முன் தோன்றிய மதுரைமா தெய்வம் பாண்டியர்களது செங்கோற் பெருமையை அவளுக் குணர்த்துங்கால், இவன் செய்தியையும் எடுத்துரைத்துப் புகழ்ந்துள்ளது. அவ் வரலாறு அடியில் வருமாறு.
ஒருநாள், கீரந்தை என்னும் வேதியனொருவன் தன் மனைவியை மன்றத்தின்கண் இருத்தி, அரசனது செங்கோல் அவளைக் காக்கும் என்று கூறிவிட்டு, வெளியே சென்றனன். மற்றொருநாள் அவன் தன் இல்லாளுடன் மனையகத் திருக்குங்கால், பாண்டிய அரசன் ஒருவன் கதவைப் புடைத்தனன். உடனே அம்மறையோன் தன் மனைவிபால் ஐயமுற்று அவளை நோக்க, அதனை யுணர்ந்த அந்நங்கை 'முன்னொரு நாள் அரசனது செங்கோல் என்னைக் காக்கும் என்று கூறி, மன்றத்திருத்திச் சென்றீர்களே; இன்று அச் செங்கோல் காவாதோ?' என்றுரைத்தனள்.
---
[6]. இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல்.என்பன.
-----
அதனைப் புறத்தே கேட்டுக்கொண்டு நின்ற அரசன், தன் செய்கைக்குப் பெரிதும் வருந்தி, விரைவில் அரண்மனைக்குச் சென்று, அது தனக்குத் தகவன்று என்றெண்ணித் தன் செய்கைக்குத் தானே சான்றாகி, வாளால் தன் கையைக் குறைத்துக் கொண்டனன்; பிறகு பொன்னாற் பொய்க்கை யமைத்துக்கொண்டு, பாண்டியநாட்டை ஆட்சிபுரிந்து வந்தான். இது பற்றியே, இவன் பொற்கைப் பாண்டியன் என்று வழங்கப் பெற்றான்.
இது சிலப்பதிகாரம், பழமொழியாகிய இரு நூல் களாலும் அறியப்படுவது. இஃது இப்பாண்டியன் கோல் கோடாது முறைசெய்த மாட்சியை உணர்த்துகின்றது.
கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி :- இவ்வேந் தன் கடைச்சங்க நாளில் விளங்கிய பாண்டியர்களுள் ஒருவனவன். இளம்பருவத்திலேயே பேரறிவினனாக இருந்தமை பற்றி இவன் 'இளம்பெருவழுதி என்ற பெயர் பெற்றனன் போலும். ‘கடலுண் மாய்ந்த’ என்னும் அடைமொழிகளால் இவன் கடலிற் கலமிவர்ந்து சென்றபோது அங்கு மூழ்கி யிறந்திருத்தல் வேண்டுமென்பது புலப்படுகின்றது. இவன் தண்டமிழ்ப் புலமையிற் சிறந்த பெருந்தகை மன்னனாவன். இவன் இயற்றிய இரண்டு பாடல்கள் பரிபாடலிலும் புறநானூற் றிலும் உள்ளன. (பரிபாடல் 15. புறநானூறு-182) இவன் தான் இயற்றிய பரிபாடலில்[7] சிலம்பாற்றால் அழகு பெற்றுள்ள திருமாலிருஞ்சோலை மலையின் சிறப்பையும் அங்கு எழுந்தருளியிருக்கும் கண்ணபிரான் பலதேவன் ஆகிய இருவரது
ஆகிய இருவரது பெருமையையும் நன்கு விளக்கியுள்ளான்.
இனி, அக்குன்றம் திருமாலையொக்கும் என்றும், தன்னைக் கண்டோருடைய மயக்கத்தைப் போக்கும் பெருமையுடையதென்றும், ஆதலால் சென் றேனும் கண்டேனும் திசைநோக்கியேனும் அதனைக் குடும்பத்துடன் வழிபடுமின் என்றும் உலகத்தாரை நோக்கி இவ்வேந்தன் அப்பாடலில் கூறியிருத்தலும், அக் குன்றத்தின் அடியின்கண் உறைதலே தான் எய்த விரும்புவது என்று முடித்திருத்தலும் இவன் திருமா லிடத்துக் கொண்டிருந்த பேரன்பினை இனிது புலப் படுத்தா நிற்கும். இவன் புறநானூற்றில் பாடியுள்ள பொருண்மொழிக் காஞ்சி[8] இவனுடைய பேரறிவினையும் உள்ளக் கிடக்கையினையும் தெள்ளிதி னுணர்த்தும் இயல் புடையதாயிருத்தலின் அப்பாடலை ஈண்டுத் தருகின்றோம்:
----
[7]. இப்பாடற்கு இசை வகுத்தவர் மருத்துவன் நல்லச்சுத னார் என்பார்.
[8]. பொருண்மொழிக் காஞ்சி என்பது உயிருக்கு இம்மை மறுமைகளில் உறுதி தருகிற பொருளை ஒருவனுக்குக் கூறுதல்.
-----
"உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமிய ருண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலு மிலர் பிற ரஞ்சுவ தஞ்சிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுந ருண்மை யானே.[9] (புறம்-182)
பாண்டியன் அறிவுடை நம்பி :-இவன் பாண்டியர் குடியில் தோன்றிய ஒரு மன்னன் ஆவன். இவன் இரு வேறு நல்வினைகளின் பயன்களாயுள்ள அரிய கல்வியும் பெரிய செல்வமும் ஒருங்கே எய்தி அதற்கேற்றவாறு 'பேரறிவுடைய பெருங்கொடை வள்ளலாக வாழ்ந்தவன். கோப்பெருஞ்சோழற்கு உயிர்த் தோழரும் பாண்டி நாட்டினரும் பேரறிஞருமாகிய பிசிராந்தையார் இவ் வரசன் மீது பொருண்மொழிக்காஞ்சி பாடியிருத்தலின் இவன் அச்சோழன் காலத்தில் நிலவியவன் என்பது பெறப்படுகின்றது. (புறம் - 184.) இவன் பாடிய பாடல்க ளாக நற்றிணையில் ஒன்றும் குறுந்தொகையில் ஒன்றும் அகநானூற்றில் ஒன்றும் புறநானூற்றில் ஒன்றும் உள்ளன. (நற்றிணை - 15; குறுந்தொகை -230; அகம் - 28. புறம்- 188.)
----
[9]. இதன்பொருள்: உண்டேகாண், இவ்வுலகம்; இந்திரர்க் குரிய அமிழ்தம் தெய்வத்தானாதல் தவத்தானாதல் தமக்கு வந்து கூடுவதாயினும் அதனை இனிதென்று கொண்டு தனித்து உண்டலு மிலர்; யாரோடும் வெறுப்பிலர்; பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற் குத் தாமும் அஞ்சி அது தீர்த்தற்பொருட்டு மடிந்திருத்தலுமிலர்; புகழ் கிடைக்கின் தம்முடைய உயிரையுங் கொடுப்பர்; பழி யெனின் அதனான் உலகமுழுதும் பெறினும் கொள்ளார்; மனக் கவற்சியில்லார்; அப் பெற்றித்தாகிய மாட்சிமைப்பட்ட அத் தன்மையராகித் தமக்கென்று முயலாத வலிய முயற்சியையுடைய ' பிறர்பொருட்டென முயல்வார் உண்டாதலான்-என்பது
----
எனவே, இவனது செந்தமிழ்ப் புலமை அறிஞர்கள் பெரிதும் மதித்துப் போற்றற்குரிய-தாகும். இவன், மக்களாலுண்டாகும் இன்பம், இம்மை யின்பம் எல்லாவற்றினும் சிறந்ததென்றும் அத்தகைய மக்கள் இல்லாதவர்கட்கு இம்மைப்பயன் ஒரு சிறிதும் இல்லை என்றும் கூறியிருக்கும் அரிய பாடல் எல்லோரும் படித் துணரத்தக்க தொன்றாகலின், அதனைப் பின்னே காண்க.
"படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயீனும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லைத் தாம்வாழும் நாளே.”[10] (புறம்- 188.)
----
[10]. இதன் பொருள்: படைக்கப்படுஞ் செல்வம் பலவற்றை யும் படைத்துப் பலருடனே கூடவுண்ணும் உடைமை மிக்க செல்வத்தையுடையோராயினும் காலம் இடையே உண்டாகக் குறுகக்குறுக நடந்துசென்று சிறிய கையை நீட்டிக் கலத்தின்கட் கிடந்ததனைத் தரையிலேயிட்டும் கூடப்பிசைந்து தோண்டியும் வாயாற் கவ்வியும் கையால் துழாவியும் நெய்யை உடைய சோற்றை உடம்பின்கட் படச் சிதறியும் இங்ஙனம் அறிவை இன்பத்தான் மயக்கும் புதல்வரை இல்லாதார்க்குப் பயனாகிய முடிக்கப்படும் பொருளில்லை, தாம் உயிர் வாழு நாளின்கண் என்பது.
---------
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் :-இவன் நல்லிசைப் புலமை வாய்ந்த செல்வப் பாண்டியருள் ஒருவன் புறநானூற்றிலும் அகநானூற்றிலும் காணப்படும் இவ னுடைய பாடல்களும், ஒல்லையூர் தந்த என்னும் அடை மொழிகளும் இவனுடைய புலமையையும் வீரத்தையும் நன்கு விளக்கும். இவன் பெரிய போர்வீரனென்பதும், கல்வியறிவு வாய்ந்த பட்டத்தரசியைச் சிறிதும் பிரித லாற்றாப் பேரன்புடையவ னென்பதும், சிறந்த செங் கோல் வேந்தனென்பதும், வையை சூழ்ந்த வளம் மிக்க மையல் என்னும் ஊரில் வாழ்ந்த மாவன், எயில் என் னும் ஊரிலிருந்த ஆந்தை, புகழ் வாய்ந்த அந்துவஞ்சாத் தன், ஆதன் அழிசி, இயக்கன் என்பவர்களைத் தன் உயிர் நண்பர்களாகக் கொண்டு ஒழுகியவ-னென்பதும், தனக்குரிய பாண்டி நாடாளும் அரசுரிமையை எவற்றி னும் சிறந்ததாகக் கருதியிருந்தவ னென்பதும், 'மடங் கலிற் சினைஇ மடங்கா வுள்ளத்து' (புறம் - 71) என்று தொடங்கும் இவனது பாடலால் இனிது புலப்படுகின்றன.
இவனுடைய மனைவியாகிய பெருங்கோப்பெண்டு என்பாள் நல்லிசைப்புலமை வாய்ந்த மெல்லியல் நங்கை யாவள். அருங் கற்பு வாய்ந்த இவ்வம்மையின் பெருமையை உரைக்கவல்லார் யாவர்? செல்வமும் கல்வியும் ஒருங்கே அமையப்பெற்ற இவ்விருவரும் காதலனும் காதலியுமாக அன்புற்று ஆற்றிய இல்வாழ்க்கையே வாழ்க்கையாகும். அதுவே துறக்க வின்பமும் ஆகும். அறிவு வீற்றிருந்த செறிவுடை நெஞ்சினராகிய பூதப்பாண்டியனும் இவனு டைய காதலியாகிய பெருங்கோப்பெண்டும் இனிது வாழ்ந்து வரும் நாட்களில் கொடுங்கூற்றம் பூதப்பாண் டியன் யன் ஆருயிரைக் கவர்ந்து சென்றது. இந்நிலையிற் பெருங் கோப்பெண்டு எய்திய இன்னல் இத்தகைய தன்று இயம்பவும் இயலுமோ! தாய் தந்தை முதலா னாரை இழந்தோர்க்கு அம்முறை சொல்லிப் பிறரைக் காட்டி அவர்களது துயரை ஆற்றலாம் ; கணவனை இழந்தார்க்கு அங்ஙனம் காட்டுவது இல்லை யன்றோ? ஓவாத விதவை யிடும்பை உயிருள்ளவரை ஒழிவதன்றே! இவற்றை நன்குணர்ந்துள்ள பெருந்தேவி ஆற்றொணாத் துன்பத்துள் ஆழ்ந்திருக்குங்கால் அரசனுடைய உரிமைச் சுற்றத்தினர் அவனது திருமேனியைப் பெருஞ் சிறப் புடன் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று ஈமத்து ஏற்றுவா ராயினர். அதனைக் கண்ட பெருந்தேவி சிறிதும் ஆற்றாது அன்புடையாரைப் பிரிதலினும் அனலிற் புகுந்து ஆருயிர் துறத்தலே நலம் என்று துணிந்து தன் உயிர்க்காதல னோடு ஈமத்தீயிற் பாய்ந்து மாயக் கருதினாள். அச்சமயத் தில் அங்கிருந்த மதுரைப் பேராலவாயார் முதலான சான்றோர்கள் தம்மையொத்த பேரறிவுடைய வேந்தனை இழந்ததோடு அத்தகைய பேரறிவு வாய்ந்த அரசியையும் இழக்க மனம் பொறாதவர்களாய் அவ்வம்மையைத் தீப் புகாமல் விரைவில் தடைசெய்வாராயினர்.
அது கண்ட அரசன் பெருந்தேவியும் தீயின் புறத்தே நின்று கொண்டு அச்சான்றோரை நோக்கி, 'பலசான்றவீரே! பலசான்றவீரே! 'நின் தலைவனோ டிறப்ப நீ போ வென்று கூறாது அதனைத் தவிர்க என்று சொல்லி விலக்கும் பொல்லாத விசாரத்தையுடைய பல சான்றவீரே! அணிலினது வரிபோலும் வரியையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்திடப்பட்ட விதைபோன்ற நல்ல வெள்ளிய நறிய நெய் தீண்டாமல் இலையிடையே. பயின்ற கையாற் பிழிந்து கொள்ளப்பட்ட நீர்ச் சோற்றுத் திரளுடனே வெள்ளிய எள்ளரைத் விழுதுடனே புளிகூட்டி அடப்பட்ட வேளையிலை வெத வேவையுமாகிய இவை உணவாகக் கொண்டு பருக்க களாற் படுக்கப்பட்ட படுக்கையின்கண் பாயுமின்றிக் கிடக்கும் கைம்மை நோன்பால் வருந்தும் பெண்டிருள்ளேம் அல்லேம்யாம்; புறங்காட்டின்கண் உண்டாக்கப் பட்ட கரிய முருட்டால் அடுக்கப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்கு அரிதாவதாகுக; எமக்கு எம்முடைய பெரிய தோளையுடையனாகிய கொழுநன் இறந்து பட்டானாக, முகையில்லையாக வளவிய இதழ் மலர்ந்த தாமரையை யுடைய நீர்செறிந்த பெரிய பொய்கையுந் தீயும் ஒரு தன்மைத்து' என்னும் பொருள் கொண்ட ‘பல்சான் றீரே பல்சான்றீரே'[12] என்று தொடங்கும் பாடலைக் கூறித் தீயிற் பாய்ந்து உயிர் துறந்தனள். இதனால் இவ் வம்மை தன் பெருங்கற்பினால் நிகழ்த்திய அருஞ் செயல் வெளியாதல் காண்க.
----
[12]. புறம்-216.
-----
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் :- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச் சங்கநாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டியர்களுள் ஒருவனாவன். இவன் ஆட்சிக் காலத்திலேதான் காவிரிப் பூம்பட்டினத்து வணிகர்களுள் ஒருவனாகிய கோவலன் தன் மனைவியாகிய கண்ணகியுடன் வாணிகஞ் செய்யக் கருதி மதுரைக்குச் சென்றனன், அவன் அங்கு ஆயர் பாடியிலுள்ள இடைச்சியர் தலைவியாகிய மா தரியின் இல்லத்தில் தன் மனைவியை இருத்தி, அவளது சிலம் பொன்றை வாங்கிக்கொண்டு, அதனை விற்பதற்கு அக நகர்க்குட் சென்றபோது எதிரில் வந்த அரசாங்கப் பொற்கொல்லனது சூழ்ச்சியினால் கோப்பெருந்தேவியின் சிலம்பு கவர்ந்த கள்வனென்று இப்பாண்டியனால் கருதப் பட்டுக் காவலாளனால் வெட்டி வீழ்த்தப்பட்டான். இத் துன்பச் செய்தியை யுணர்ந்த கண்ணகி, தன் நாயகனை ஆராயாமல் அநீதியாகக் கொல்வித்த இவ்வரசன்பாற் சென்று தன் வழக்கை எடுத்துரைத்துத் தன் நாயக னாகிய கோவலன், கோப்பெருந்தேவியின் சிலம்பு கவர்ந்த கள்வனல்லன் என்று மெய்ப்பித்தாள். உண்மையை யுணர்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன், தான் ஒரு கற் புடைமகளின் கணவனை ஆராயாது கொல்வித்தமைக்குப் பெரிதும் கவன்று, அத்தீச் செயலை உன்னியுன்னி நெஞ் சம் நடுக்குற்றுத் தாழ்ந்த குடையனாய்த் தளர்ந்த செங்க கோலனாய்ப்
"பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்!
மன்பதை காக்கும் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது; கெடுகஎன் ஆயுள் ''
என்றுரைத்து அரசுகட்டிலில் மயங்கி வீழ்ந்து துறந்தனன். தன் கணவன் இறந்த செய்தியை யறி கோப்பொருந்தேவியும் அத்துன்பத்தை ஆற்றாது சிறிது நேரத்துக்குள் உயிர் நீத்தனள். தான் அறியாது புரிந்த ஒரு பிழைக்காகத் தன் ஆருயிரையே இவ்வரசன் போக் கிக்கொண்டன னெனில், இவனது ஆட்சிக்காலத்திற் குடி மக்கள் எல்லோரும் எத்தகைய இன்னல்களும் எய்தாது இன்புற்று வாழ்ந்திருத்தல் வேண்டுமென்று கூறுவது: சிறிதும் புனைந் துரை யாகாது.
இப்பாண்டியனுக்கு நேர்ந்த தீவினைத் திறங்களைக் கேட்ட சேர மன்னனாகிய செங்குட்டுவன் பெரிதும் வருந்தித்தன்பால் வந்திருந்த சங்கப் புலவராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரை நோக்கி, 'புலவீர்! அவன் செங்கோலினின்று தவறிய செய்தி என்னை யொத்த அரசர்க்கு எட்டு முன்னர் உயிர் துறந்தமை, தீவினையால் வளைக்கப்பட்ட கோலை உடனே செங்கோ லாக்கியது; அரசரா யுள்ளார்க்குத் தம் நாட்டிற் காலத்தில் மழை பெய்யாதாயின் அச்சம்; உயிர்கள் தவறிழைக்குமாயின் அச்சம்; கொடுங்கோற்கஞ்சிக் குடிகளைப் பாதுகாத்தற் குரிய அரசர் குலத்திற் பிறத்தல் துன்பமல்லது தொழுதக வில்லை' என்று மிகவும் இரங்கிக் கூறிய அரிய மொழிகள் ஈண்டு அறிந்து கோடற்கு உரியனவாகும்.
அன்றியும், மதுரைமாநகரம் தீப்பற்றியெரிந்த ஞான்று, கண்ணகி முன்னர்த்தோன்றிய மதுரைமா தெய்வம், நெடுஞ்செழியனது செங்கோற் சிறப்பையும் கோவலனது ஊழ்வினை உருத்துவந்து தன் பயனை நுகர் வித்ததென்னும் உண்மையினையும் விளக்கிக் கூறிய வர லாற்றைச் சிலப்பதிகாரத்திலுள்ள கட்டுரை காதையிற் பரக்கக் காணலாம். இதனாலும் இவனது செங்கோலினது மாண்பு ஒருவாறு இனிது புலனாகும்.
இனி, இவனது செங்கோற் பெருமையோடு ஒருங்கு வைத்துப் புகழ்தற்குரியனவாய் அடுத்து நிற்பன இவ னுடைய வீரமும் செந்தமிழ்ப் புலமையுமாகும். இவன் வடநாட்டிலிருந்த ஆரியமன்னர்களைப் போரிற் புறங் கண்டு புகழெய்தியவன் என்பது,
'வடவாரியர் படைகடந்து
தென்றமிழ்நா டொருங்கு காணப்
புரைதீர் கற்பிற் றேவி தன்னுடன்
அரசுகட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்'
என்னும் இளங்கோவடிகளது அருமைத் திருவாக்கினா லும், இவனது இயற்பெயருக்கு முன்னர் அமைந்துள்ள 'ஆரியப்படைகடந் த ' என்னும் அடைமொழிகளாலும் நன்கு வெளியாகின்றது.
இவன் கற்றோர்பால் மிக்க மதிப்புடையவன் என்ப தும், கல்வி கற்றலையே பெரும்பயனாகக் கருதியவன் என்பதும், இவன் பாடியுள்ள 183 ஆம் புறப்பாட்டினால் அறியப்படுகின்றன. அப்பாடல் அடியில் வருமாறு
"உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளுஞ்
சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனும் அவன்கட் படுமே."[13]
----
[13]. இதன் பொருள் : தம் ஆசிரியர்க்கு ஓர் ஊறுபாடுற்ற விடத்து அதுதீர்த்தற்கு வந்து உதவியும்,மிக்க பொருளைக்கொடுத் தும் வழிபாட்டு நிலைமையை வெறாது கற்றல்ஒருவற்கு அழகிது; அதற்கு என்னோ காரணமெனின், பிறப்பு ஒருதன்மையாகிய ஒரு வயிற்றுப் பிறந்தோருள்ளும் கல்வி விசேடத்தால் தாயும் மனம் வேறுபடும்; ஒரு குடியின்கட் பிறந்த பலருள்ளும் மூத்தோன் வருக வென்னாது அவருள் அறிவுடையோன் சென்ற நெறியே அரசனும் செல்லும்; வேறுபாடு தெரியப்பட்டநாற்குலத்துள்ளும் கீழ்க்குலத்தில் ஒருவன் கற்பின் மேற்குலத்துளொருவனும் இவன் கீழ்க்குலத்தானென்று பாராது கல்விப்பொருட்டு அவனிடத்தே சென்று வழிபடுவானாதலால் -என்பது.
------------
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன் மாறன் :-ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் உயிர் துறந்த பின்னர். கொற்கைநகரத்தில் இளவரசராயிருந்து ஆட்சிபுரிந்துவந்த வெற்றிவேற்செழியன் என்பான் பாண்டியநாட்டை அரசாளும் உரிமையை எய்தினான். சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் படிமம் அமைத் தற்கு இமயத்தினின்று கல்கொணர் வடநாட்டிற்குச் சென்றிருந்தபோது இவ்வரசிளங் குமரனுக்கு மதுரை மாநகரில் முடிசூட்டுவிழா நடைபெற்றது[14]. இவன் முடி சூடிக்கொண்ட பின்னர் நன்மாறன் என்ற வேறு பெய கருடையவனாய்த் திகழ்ந்தனன் என்று தெரிகின்றது. னது ஆட்சிக்காலத்திற் பாண்டி நாடு மழைவளமிழந்து வறுமையுற் றிருந்தது. அவ்வறுமை நீங்கிக் குடிகள் இன்புற்று வாழுமாறு இவ்வேந்தன் கண்ணகியின் பொருட்டுப் பெருவிழா ஒன்று நடத்தினன். இதனாற் கண்ணகி யின் சினம் தணியவே, நாடு நன்னிலையை எய்திற்று; குடி களும் இனிது வாழ்ந்தனர். புறநானூற்றில் இவனைப் பாடியுள்ள புலவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்பவரே யாவர். அப்பாடலால் (புறம் -59) இவனுடைய அருங்குணங்கள் பலவும் வெளியாகின்றன. இவன் சித்திரமாடத்து இறந்தனன் போலும்.
---
[14]. சிலப்பதிகாரம்-நீர்ப்படைக்காதை 127-138.
-----
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் :-இவன் கடைச்சங்கநாளில் விளங்கிய பாண்டியர்களுள் ஒருவன். இவன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனுடைய புதல்வன் என்று ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர். இவன் தந்தை சின்னாட்களே அரசு செலுத்தியமையின் இவன் இளமையிலேயே அரசு கட்டிலேறல் இன்றியமையாத தாயிற்று. இவன் ஆட்சி புரிந்துவரும் நாட்களில், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் சேரமான் யானைக்கட்செய் மாந்தரஞ் சேரலிரும்பொறையும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருகன் என்னும் வேளிர், ஐவரும் இந்நெடுஞ்செழியனை இளைஞன் என்று இகழ்ந்து கூறிப் பாண்டிநாட்டைக் கைப்பற்றக் கருதி மதுரைமா. நகரை முற்றுகையிட்டார்கள். இதனை யுணர்ந்த நெடுஞ் செழியன், பெருஞ்சினங்கொண்டு, 'புல்லிய வார்த்தை களைக் கூறிய சினம்பொருந்திய அரசரைப் பொறுத்தற் கரிய போரின்கண்ணே சிதறப்பொருது, முரசத்தோடு கூட அவரைக் கைக்கொண்டிலேனாயின், பொருந்திய எனது குடைநிழற்கண் வாழ்வோராகிய குடிமக்கள், தாங்கள் சென்றடையும் நிழற் காணாதே கொடியன் எம் மடைய வேந்தன் என்று கருதிக் கண்ணீரைப் பரப்பிப் பழிதூற்றும் கொடுங்கோலை உடையேனாகுக; உயர்ந்த தலைமையுடனே மேம்பட்ட கேள்வியையுடைய மாங்குடி மருதன் முதல்வனாக உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழும் தலைமையையுடைய புலவர் பாடாது நீங்குக எனது நிலவெல்லையை ; என்னாற் புரக்கப்படுங் கேளிர் துயரம்மிக இரக்குமவர்கட்குக் கொடாத வறுமையை யானுற என்று வஞ்சினங்கூறிப் போருக்கெழுந்து உழிஞைசூடிப் போர் புரியத்தொடகினன். இவன் மிக்க இளைஞனாயினும் சிறிதும் அஞ்சாமற் கடும்போர் புரிந்து அன்னவர் எழுவரும் புறங்காட்டி ஓடச்செய்தனன். தோல்வியுற்ற எழுவரும் ஓடிச்சென்று சோழ நாட்டிற் புகும்போது நெடுஞ்செழியன் அவர்களை விடாது பின் தொடர்ந்து சென்று தலையாலங்கானத்து மறித்துப் பெரும்போர் நடத்தி வாகைமிலைந்தனன். (புறம்-19,23)
இவன், இதனோடு நில்லாமற் பகைஞர்களை அவர்களுடைய உறையூர், வஞ்சி முதலான நகரங்கள் வரையிற் போர்ப் பறை யொலிப்பத் துரத்திச்சென்று அன்னோரின் உரிமை மகளிர் நாணமுற்று உயிர் துறக்குமாறு அவர்களைக் கொன்றனன். (புறம்-78.) வேள் எவ்வி முன்னர் ஆட்சி புரிந்ததும் இருங்கோவேண்மானுக்குரியது மாகிய மிழலைக் கூற்றத்தையும் அதற்கடுத்துள்ளதும் வேளிர் களுக்குரியதுமாகிய முத்தூர்க் கூற்றத்தையும்[15] இப்போரின் இறுதியிற் கைப்பற்றிப் பாண்டிநாட்டோடு சோத்துக்கொண்டான் (புறம்-24). இப்போர் நிகழுங் கால், இவள் மிகவும் இளைஞனா யிருந்தனன் என்பது, 'சதங்கை வாங்கப்பட்ட காலிலே ஒள்ளிய வீரக் கழலி னைச் செறித்துக் குடுமி யொழிக்கப்பட்ட சென்னிக் கண்ணே வேம்பினது
வேம்பினது ஒள்ளிய தளிரை நெடிய கொடி யாகிய உழிஞைக் கொடியோடு சூடிக் குறிய வளைகளை யொழிக்கப்பட்ட கையின் கண்னே வில்லைப் பிடித்து நெடிய தேரினது மொட்டுப் பொலிவு பெற நின்றவன் யாரோதான்? யாரேயாயினும் அவன் கண்ணி வாழ்வ தாக தாரையணிந்து ஐம்படைத்தாலி கழித்ததுமிலன்; பாலை ஒழித்து உணவும் இன்றுண்டான் ; முறை முறை யாக வெகுண்டு மேல்வந்த புதிய வீரரை மதித்ததும், அவ மதித்தும் இலன். அவரை யிறுகப் பிடித்துப் பரந்த ஆகாயத்தின்கண்ணே ஒலியெழக் கவிழ்ந்து உடலம் நிலத் தின் கண்ணே பொருந்தக் கொன்றதற்கு மகிழ்ந்ததுவும், இவ்வாறு செய்தே மென்று தன்னை மிகுத்ததுவும் அதனினும் இலன் என்னும் பொருள்கொண்ட 'கிண்கிணி களைந்த கால்' என்று தொடங்கும் இடைக்குன்றூர் கிழாரது பாடலால் தெளிவாகப் புலப்படுகின்றது, (புறம் - 77.)
---
[15]. இவை புதுக்கோட்டை நாட்டிலும் தஞ்சாவூர் ஜில்லா அறந்தாங்கித் தாலுகாவிலும் இராமநாதபுரம் ஜில்லா திரு வர்டானைத் தாலுகாவிலும் முற்காலத்திருந்த கூற்றங்களாகும்
---------
இவ்வேந்தன், இரவிற் பாசறையின்கண் போரிற் புண்பட்ட வீரர்களைப் படைத்தலைவன் முன்னே காட்டிச் செல்லத் துயில் சிறிதுமின்றித் தானே அவர்களை நேரிற் கண்டு அன்புடன் இன்சொற் கூறிப் பாராட்டுவது வழக் கம் என்பது, 'வேப்பந்தாரைத் தலையிலே கட்டின வலிய காம்பினையுடைய வேலோடே முன்செல்கின்ற சேனாதிபதி புண்பட்ட வீரரை அடைவே அடைவே காட்ட... செருக் கின குதிரைகள் கரிய சேற்றையுடைய தெருவிலே தம் மேலே வீசுந் துளிகளை யுதற் இடத்தோளினின்றும் நழுவி வீழ்ந்த அழகினையுடைய ஒலியலை இடப்பக்கத்தே யணைத்துக்கொண்டு, வாளைத் தோளிலே கோத்த தறு கண்மையுடைய வாளெடுப்பான் தோளிலே வைத்த வலக்கையையுடையவனாய்ப் புண்பட்ட வீரர்க்கு அக மலர்ச்சி தோன்ற முகம் பொருந்தி, நூலாலே சட்டத் தைக் கட்டின முத்தமாலையை யுடைய கொற்றக்குடை தவ் வென்னும் ஓசைப்பட்டு அசைந்து பரக்கின்ற துளியைக்” காக்க நள்ளென்னும் ஓசையையுடைய நடுயாமத்தும் பள்ளி கொள்ளானாய்ச் சில வீரரோடு புண்பட்டோரைப் பரிகரித்துத் திரிதலைச் செய்யும் அரசன்' என்று பொருள்படும் 'வேம்புதலை யாத்த நோன்கா ழெஃக மொடு' என்னும் நெடுநல்வாடைப் பாடற்பகுதியால் நன் கறியக் கிடக்கின்றது,
இங்ஙனம் பெருவீரனாகிய இந் நெடுஞ்செழியன் தான் ஒருவனாக நின்று பேரரசர் இருவரையும் தலையாலங்கானத்துப் போரில் வென்ற செய்தி மூன்றாம் இராசசிங்க பாண்டியனது சின்னமனூர்ச் செப்பேட்டிலும்' குறிக்கப்பெற்றுள்ளது.
இச்செய்தியைப் பராந்தக பாண்டியனின் செப்பேடு களும் குறிப்பிடுகின்றன.[16]
இனி, 'நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்' என்ற 72ஆம் புறப்பாட்டினால், இம்மன்னன் கற்றுத்துறை போய காவலன் என்பதும், கற்றோர்பாற் பேரன்பும் பெரு மதிப்பும் உடையவன் என்பதும் நன்கு விளங்குகின்றன. இவன் புலவர் பெருமக்களிடத்து எத்தகைய மதிப்பு வைத்திருந்தனன் என்பது,
'ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகவென் நிலவரை'
என்னும் புறப்பாட் டடிகளில் இவன் கூறியுள்ள உயர் மொழிகளால் ஒருவாறு புலப்படும்.
---
[16]. 'தலையாலங் கானத்திற் றன்னொக்கு மிருவேந்தரைக் கொலைவாளிற்றலை துமித்துக் குறைத்தலையின் கூத்தொழித்தும்' 2. " ஆலங்கானத் தமீர்வென்று ஞாலங்காவில் நன்கெய்தியும்"
---
பத்துப்பாட்டிலுள்ள மதுரைக் காஞ்சியும் நெடுநல் வாடையும் இவ்வேந்தன்மீது பாடப்பட்ட நூல்களேயாகும். இவ்வரிய நூல்களைப் பாடிய புலவர் பெருமக்கள் முறையே மாங்குடி மருதனாரும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாருமே யாவர்.
நெடுஞ்செழியன் போர்விருப்பு மிக்குடையவனாய்,
'ஒளிறிலைய வெகேந்தி
அரசுபட வமருழக்கி
முடித்தலை யடுப்பாகப்
புனற்குருதி யுலைக்கொளீஇத்
தொடித்தோட்டுடுப்பிற் றுழந்த வல்சியின்
அடுகளம் வேட்டு'
வாணாட்களைக் கழித்து வந்தமையின், இவன் அவைக்களப் புலவர் தலைவராகிய மாங்குடிமருதனாரென்பார் வீடடைதற் கேதுவான அறநெறியைக் கடைப்பிடித் தொழுகுமாறு இவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தல் கருதியே 'மதுரைக் காஞ்சி' என்றதோர் அரிய நூலை இயற்றியுள்ளார். இந் நூலால் இவனுடைய முன்னோரது பெருமையும் இவனுடைய செங்கோற் சிறப்பும் வீரமும் பாண்டி நாட்டின் வளமும் மதுரைமாநகரின் வனப்பும் பிறவும் இனிதுணரப்படும். இஃது எழுநூற்றெண்பத்திரண்டு அடிகளையுடையது.
‘தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற்
றொன்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந்
என்னும் மதுரைக் காஞ்சியடிகளிற் பாண்டியராக மதுரையில் வீற்றிருந்து அரசாண்ட சோமசுந்தரக் கடவுளின் வழியில் தோன்றியவன் இந்நெடுஞ்செழியன் என்று மாங்குடிமருதனார் குறித்திருப்பது ஈண்டு அறியத் தக்கது.
பாண்டியன் கானப்பேர் கடந்த உக்கிரப் பெரு வழுதி :- கடைச்சங்கத்தைப் புரந்துவந்த பாண்டிய மன்னர்களுள் இவனே இறுதியில் இருந்தவன். இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன் புதல்வன் என்று ஆராய்ச்சிளாளர் கருது இன்றனர். இவன் தன் பகைஞனாகிய வேங்கை மார்பனைப் போரில் வென்று அவனுக்குரிய கானப் பேரெயில் (காளையார் கோயில்) என்னும் ஊரைக் கைப்பற்றியவனாதலின் கானப்பே ரெயில்கடந்த உக்கிரப் பெருவழுதி என்று வழங்கப்பட்டனன். (புறம்-21.) மாரிவெண்கேர் என்னும் சேரமன்னனும் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற சோழ மன்னனும் இவ னுக்குச் சிறந்த நண்பர்களாக இருந்தனர். (புறம்-367.) இவன் சங்கப்புலவர்களோடு ஒப்பப் பாடும் ஆற்ற லுடைய பெரும் புலவனாக விளங்கியமை ஈண்டு உணரத் தக்கது. மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திர சன்மரைக் கொண்டு அகநானூறு தொகுப்பித்தோன் இவ்வேந்தனே யாவான். இவன் தலைமையிலேதான் கடைச் சங்கத்தில் திருக்குறள் அரங்கேற்றப் பெற்றது என்று ஒரு கதை வழங்குகிறது; இஃது உண்மையன்று என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. இவன் குறிஞ்சியை யும் மருதத்தையும் புனைந்து பாடுவதில் வன்மையுடை வன். இவன் பாடியனவாக நற்றிணையில் ஒரு பாடலும் அகநானூற்றில் ஒரு பாடலும் உள்ளன, (நற்றிணை-98; அகநானூறு-26.) இவன் பின்னர் காலத்திற்குப் கடைச்சங்கம் நடைபெறாமல் அழிவுற்றது என்பது கள்வியலுரையால் உணரப்-படுகின்றது. ஆனால், அச் சங்கம் அழிந்தமைக்குச் சொல்லப்படுங் காரணங்கள் உண்மை என்று தோன்றவில்லை. இவனுக்குப் பிறகு பாண்டிநாட்டில் அக்காலத்தில் ஆட்சிபுரிந்த மன்னன் யாவனென்பது இப்போது புலப்படவில்லை.
இனி, இவ்வேந்தர்களேயன்றிக் கடைச்சங்க நாளில் வேறு சில பாண்டிய மன்னர்களும் இருந்தனர் என்பது சங்கத்துச் சான்றோர் அருளிய எட்டுத்தொகை நூல் களால் அறியப்படுகின்றது, அன்னோர் கருங்கை யொள்வாட் பெரும்பெயர்வழுதி, பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி, நல்வழுதி. கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன் மாறன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி,நம்பி நெடுஞ்செழியன், குறுவழுதி என்போர். அவர்களைப் பற்றிய வரலாறுகள் நன்கு புலப்படாமையின், சிற்சில குறிப்புக்களே ஈண்டு எழுதப்படுகின்றன.
கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதி:- இவன் சோழன் கரிகாற் பெருவளத்தான் காலத்தில் இருந்த வன். அவ்வளவனுடைய மாமன் இரும்பிடர்த்தலையார் என்ற புலவராற் பாடப்பெற்றவன்; ; மிக்க வீரமும் கொடையும் உடையவன். (புறம் -3.)
பன்னாடுதந்த பாண்டியன் மாறன்வழுதி:- இவன் சிறந்த செந்தமிழ்ப்புலவன்; (குறுந்தொகை - 270) எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணையைத் தொகுப்பித்தோன் இம்மன்னனேயாவன் நற்றிணை இறுதிக்கட்டுரை.)
நல்வழுதி- இவன் வையையாற்றைச் சிறப்பிக்கும் பன் னிரண்டாம் பரிபாடலை இயற்றியவன். இப்பாடலிற் கூறப் பெற்றுள்ள புதுநீர் விழாவும் வையையின் சிறப்பும் படித்தின் புறத்தக்கன.
கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி:- இவன் வடபுல மன்னர்களைப் போரிற் புறங்கண்டு வெற்றிப் புகழை எங்கும் பரப்பிய பெருவீரன். (புறம் - 51, 52)
இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்:- இவன் வண்மையும் வீரமும் உடையவன் என்பது புலவர் தலைவராகிய நக்கீரனார் பாடிய 56 ஆம் புறப்பாட்டினால் நன்கு விளங்குகின்றது. இப்பாட்டினாற் கடைச்சங்க காலத்தில் மேனாட்டு யவனர்கள் நம் தமிழகத்தில் மது வகைகளைக் கொணர்ந்து விற்று வந்தனர் என்பது இனி துணரப்படுகின்றது.
குறுவழுதி :- இவன் அகநானூற்றிலுள்ள 150ஆம் பாடலை இயற்றிய வேந்தனாவன்.
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி:- இவன் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என் னும் புலவராற் புகழ்ந்து பாடப்பெற்றவன் ; (புறம்-58) சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனுக்குச் சிறந்த நட்பினன்.
நம்பி நெடுஞ்செழியன் :-இவன் அரசர்கட்குரிய எல்லா இன்பங்களையும் துய்த்து, வண்மை வீரம் நடு நிலைமை முதலான அருங்குணங்களெல்லாம் ஒருங்கே யமையப்பெற்றுப் பெருமையோடும் புகழோடும் வாழ்ந் தவன். இவன் இறந்தஞான்று பேரெயின் முறுவலார் என்னும் புலவர் பாடியுள்ள கையறுநிலை எத்தகையோ ருடைய மனத்தையும் உருகச்செய்யும் இயல்பு வாய்ந்த தாகும். (புறம் -239.)
இனி, கடைச்சங்கம் இரீஇய பாண்டிய மன்னர் நாற்பத்தொன்பதின்மருள் கவியரங்கேறினார் மூவர் என்று இறையனா ரகப்பொருளுரை உணர்த்துகின்றது. சங்க நூல்களை ஆராய்ந்து பார்க்குங்கால், தண்டமிழ்ப் புலமை சான்ற ஒண்டிறற் பாண்டிய மன்னர்கள் பன் னிருவர், கடைச்சங்கநாளில் இருந்து பாடியுள்ளனர் என்பது நன்கு புலப்படுகின்றது. இப் பன்னிருவரும் இயற்றியுள்ள சிறந்த செந்தமிழ்ப் பாக்கள் நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு ஆகிய ஐந்து தொகை நூல்களிலும் காணப்படுகின்றன. எனவே சங்கப்புலவர்களோடு ஒப்பப் பாடும் புலமையும் பெருமையும் வாய்ந்துள்ள இப்பன்னிரு பாண்டி மன்னர் களும் கவியரங்கேறியவர்களாதல் வேண்டுமன்றோ? அங் ஙனமாயின், கடைச்சங்கம் இரீஇய பாண்டியர்களுள் கவி யரங்கேறினார் மூவர் என்று இறையனாரகப் பொருளுரை உரைப்பது சிறிதும் பொருந்தவில்லை.
இனி, இம் மன்னர்களின் ஆட்சிக் காலங்களை வரை யறுத்துரைப்பதும் எவனுக்குப்பின் எவன் பட்டத்திற்கு வந்தனன் என்பதையும், ஒருவனுக்கு மற்றொருவன். என்ன முறையினன் என்பதையும் சங்க நூல்களைக் கொண்டு ஆராய்ந்து கூறுவதும் இயலா தவையா யுள்ளன. நுணுகி யறிந்தவற்றை ஆங்காங்குக் குறித்துள்ளோம். கடைச்சங்க காலத்தின் பிற்பகுதியில் ஆட்சிபுரிந்த பாண் டிய அரசர்களைச் சில ஆராய்ச்சியாளர் அடியில் வருமாறு முறைப்படுத்தி எழுதியுள்ளனர்.
(1) ஆரியப்படை கடந்த பாண்டியன் நேடுஞ் செழியன்.
(2) வெற்றிவேற் செழியன் என்ற சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்.
(3) தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
(4) கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி
--------------
4. பாண்டிநாட்டிற் களப்பிரர் ஆட்சி
கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியருள் வலிகுன்றிய
ஓராசன் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தபோது, களப்பிரர் மரபைச் சேர்ந்த மன்னன் ஒருவன் பாண்டிநாட்டின்மேல் படையெடுத் துச் சென்று அதனைக் கவர்ந்துகொண்டு அரசாளத் தொடங்கினன். அதனால், பாண்டியர் தொன்றுதொட்டு ஆட்சி புரிந்து வந்த தம் நாட்டை இழந்து பெருமை குறைந்து பாண்டி நாட்டில் ஓரிடத்தில் ஒடுங்கி வதிந்து வருவாராயினர். ஆகவே, அந்நாடு களப்பிரர் ஆட்சிக் குட்பட்டிருந்த காலத்தில் அங்கு உயிர் வாழ்ந்துகொண் இருந்த பாண்டியர்களைப்பற்றிய செய்திகள் இந்நாளில் தெரியவில்லை. சங்க நூல்களில் களப்பிரர் என்ற பெயர் காணப்படாமையானும் வராகமிகிரர் என்பார் தென் னாட்டவரின் வரிசையில் களப்பிரரைக் கூறாமையானும் அன்னோர் பிராகிருதம், பாளி ஆகியவற்றைத் தமக் சூரிய மொழிகளாகக்கொண்டு ஆதரித்துள்ளமையானும் அம்மரபினர் தமிழர் அல்லர் என்பதும் வடபுலத்தினின் றும் போந்த ஏதிலார் ஆவர் என்பதும் நன்கு தெளியப் படும். எனவே, களப்பிரர் தென்னிந்தியாவினரே என்னும் சில ஆராய்ச்சியாளரின் கொள்கை[1] பொருந் தாமை காண்க. அன்றியும், தமிழ்நாட்டுக் குறுநில மன்னர் குடியினராகிய முத்தரையர் என்போர் களப் பிரரேயாவர் என்று சிலர் கூறுவது[2] சிறிதும் ஏற்புடைத் தன்று.
----
[1]. பல்லவர் வரலாறு. பக். 34. [2]. Ibid, u 38.
---------
களப்பாள் என்ற சோணாட்டு ரொன்றில், முற் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரசியல் தலைவன் ஒருவன் களப்பாளன் என்று சிறப்பித்து வழங்கப்பெற் றமையால், அவன் வழியினர் களப்பாளர் எனவும், களப் பாளராயர் எனவும் குடிப்பெயர் பெற்றுப் பெருமை யோடு வாழ்ந்து வருவாராயினர். எனவே, தமிழராகிய களப்பாளரும் ஏதிலாராகிய களப்பிரரும் ஒருவரே யாவ ரென்னும் முடிவு[3] எவ்வாற்றானும் ஒத்துக் கொள்ளத் தக்க தன்று. இதுகாறும் விளக்கிய வாற்றால் களப்பிரர் தமிழர் அல்லர் என்பது தேற்றம்.
இனி, கி.பி.6, 7ஆம் நூற்றாண்டுகளி லிருந்த பல்லவ மன்னர்களாகிய சிம்மவிஷ்ணு, முதல் நரசிம்மவர்மன் என்போரும்[4], கி.பி.7,8ஆம் நூற்றாண்டுகளி லிருந்த மேலைச் சளுக்கிய வேந்தர்களாகிய முதல் விக்கிரமாதித் தன், விசயாதித்தன், இரண்டாம் விக்கிரமாதித்தன் என் போரும்[5] களப்பிரரைப் போரிற் புறங்கண்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளனர். ஆகவே, கி.பி. ஆறாம் நூற் றாண்டின் பிற்பகுதியிலே களப்பிரர்
களப்பிரர் பல்லவரால் துன் புறுத்தப்பட்டு வலிகுன்றிய நிலையை எய்தினர் எனலாம். அந்நாட்களில், பாண்டி நாட்டின் ஒருபுறத்தில் வாழ்ந்து வந்தவனும், கடைச்சங்ககாலப் பாண்டியரின் வழித் தோன்றலு மாகிய பாண்டியன் கடுங்கோன் என்பான், பேராற்றல் படைத்த பெருவீரர்களுடன் வந்து, களப்பிர அரசனைப் போரில்வென்று தன் நாட்டைக் கைப்பற்றி மதுரையம்பதியில் வீற்றிருந்து அரசாளத் தொடங்கினன்.
---
[3]. திரு. ராவ்சாகிப் M. இராகவையங்கார் அவர்கள் எழுதிய Epigraphy and Tamil Literature' என்ற ஆராய்ச்சி நூலில் கண்ட முடிவு. (The Pandyan Kingdom by K. A. Nilakantaı Sastrigal. M.A., page 49)
[4]. South Indian Inscriptions, Vol. I, P. 152; Ibid, Vol. Il,p. 356.
[5]. Indian Antiquary, Vol. VII, P. 203; Ibid. Vol, IX P. 129; Epigraphia Indica, Vol. V. p. 204.
----
இது வேள்விக்குடிச் செப்பேடுகளால் அறியப்படும் லாறாகும். இவ்வாறு பாண்டிவேந்தன் ஆட்சி மதுரைமா நகரில் மீண்டும் நிறுவப்பெற்ற காலம் கி.பி. 575 ஆம் ஆண்டா தல் வேண்டும். அன்றேல், அதற்குச் சில ஆண்டு கட்கு முன்னரும் அந்நிகழ்ச்சி நடைபெற்றிருத்தல் கூடும். ஆகவே, கி.பி.மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் பாண்டி நாட்டில் களப்பிர வேந்தர்களின் ஆட்சி நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது.
இனி, பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணமும்[6] கல்லாடமும்[7] கருநாட வேந்தன் ஒருவன் பாண்டிமண்டலத்தைக் கவர்ந்து அரசாண்டனன் என் றும், அவன் காலத்தில் சைவநெறி அழியவே, சமண சம் யம் மிகச் செழித்ததென்றும். பின்னர் ஓர் இரவில் அவன் கொல்லப்பட்டான் என்றும் கூறுகின்றன. இவ் விருநூல்களுங் கூறும் கருநாடவேந்தன் களப்பிரனாகத் தான் இருத்தல் வேண்டுமென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
----
[6]. ‘கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவன்
மானப் படைமன்னன் வலிந்து நிலங்கொள்வானாய்
யானைக் குதிரைக் கருவிப்படை வீரர் திண்டேர்
சேனைக் கடலுங் கொடுதென் திசைநோக்கி வந்தான்'
'வந்துற்ற பெரும்படை மண்புதை யப்ப ரப்பிச்
சந்தப் பொதியில் தமிழ்நாடுடை மன்னன்வீரம்
சிந்திச் செருவென்று தன்னாணை செலுத்தும் ஆற்றால்
கந்தப் பொழில்சூழ் மதுராபுரி காவல் கொண்டான்.' (பெரிய.மூர்த்தி. 11, 12)
[7]. 'படைநான் குடன்று பஞ்சவன் துரந்து
மதுரை வவ்விய கருநடர் வேந்தன்
அருகர்ச் சார்ந்துநின் றரன்பணி யடைப்ப (கல். 56)
-----
பிறமொழியாளரான களப்பிரரின் படையெடுப்பும் ஆளுகையும் பாண்டிநாட்டில் பலப்பல மாறுதல்களையும் புரட்சியையும் உண்டுபண்ணி, அவை என்றும் நின்று நிலவுமாறு செய்துவிட்டன. அரசாங்க மொழி,வேறொரு மொழியாகப் போய்விடவே, நம் தாய்மொழியாகிய தமிழ் ஆதரிப்பா ரற்று வீழ்ச்சி எய்தியது. தமிழ்க்கலை, தமிழர் நாகரிகம், பிற சிறந்த பண்புகள் ஆகிய எல்லாம் சிதைந்தழிந்து போயின. தமிழ் நாட்டில் முன்னோர்களால் நிறுவப்பெற்று இடையீடின்றி நடைபெற்று வந்த அறச் செயல்கள் பலவும் அழிக்கப்பட்டுப்போயின. பௌத் தம், சமணம் ஆகிய பிற சமயங்களும் பிறமொழியில் எழுதப்பெற்ற நூல்களும் அரசாங்கத்தின் பேராதரவு பெற்று விளங்கின. இக்களப்பிரரது படையெழுச்சியினால் மதுரைமாநகரில் தமிழாராய்ச்சி செய்துகொண்டிருந்த கடைச்சங்கமும் அழிந்துபோய்விட்டமை அறியத் தக் கது. களப்பிரர் ஆட்சியால் ஏற்பட்ட தீமைகளுள் இத னினுங் கொடியது வேறில்லை என்று கூறலாம். எனவே இவர்களது ஆட்சிக்காலம் ஓர் இருண்டகாலமாகும்,
----------
5. கி. பி. 575 முதல் கி. பி. 900 வரை ஆட்சிபுரிந்த பாண்டியர்கள்
பாண்டியன் கடுங்கோன்:- இம்மன்னன் கி. பி. 575 முதல் கி.பி. 600 வரையில் ஆட்சிபுரிந்தனன் என்று தெரிகிறது. பாண்டி நாட்டைக் களப்பிரரிட மிருந்து முதலில் கைப்பற்றி மீண்டும் பாண்டியரது ஆட் சியை மதுரையில் நிலைபெறுமாறு செய்தவன் இவ்வேந் தனே யாவன். இவன் களப்பிரரைப் போரிற் புறங் கண்டு அன்னோரது ஆளுகைக் குட்பட்டிருந்த தன் நாட் டைக் கைப்பற்றி அரசு செலுத்திய வரலாற்றை வேள் விக் குடிச் செப்பேடுகள் நன்கு விளக்குகின்றன. அப் பகுதி:
'களப்ரனென்னுங் கலியரசன்
கைக்கொண்டதனை யிறக்கியபின்
படுகடன் முளைத்த பருதிபோற்
பாண்டியாதிராசன் வெளிப் பட்டு
விடுகதி ரவிரொளி விலகவீற் றிருந்து
வேலைசூழ்ந்த வியலிடத்துக்
கோவுங் குறும்பும் பாவுடன் முறுக்கிச்
செங்கோ லோச்சி வெண்குடை நீழற்
றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப்
பிறர்பா லுரிமை திறவிதி னீக்கித்
தன்பா லுரிமை நன்கனம் அமைத்த
மானம் போர்த்த தானை வேந்தன்
ஒடுங்கா மன்னர் ஒளிநக ரழித்த
கடுங்கோ னென்னுங் கதிர்வேற் றென்னன்
என்பது. இதனையே அண்மையில் கிடைத்த பராந்தக பாண்டியனின் தளவாய்புரச் செப்பேடுகள் இரண்டிடங்களில் சுருக்கமாகக் கூறுகின்றன[1]. இதனால் இவனுடைய வீரமும் புகழும் இனிது புலப்படுதல் காண்க.
இனி, தென்மதுரையின்கண் விளங்கிய முதற் சங்கத்தைப் புரந்த பாண்டியருள் இறுதியிலிருந்தவன் கடுங்கோன் என்று இறையனா ரகப்பொருளுரை உணர்த்து கின்றது. இவன் மிகப் பழையகாலத்தில் நிலவிய முதற் சங்கத்தைப் புரந்தவன்; களப்பிரரை வென்ற கடுங் கோன் கடைச்சங்கத் திறுதிக்காலத்திற்குச் சுமார் நானூறு ஆண்டுகட்குப் பின்னர் இருந்தவன். எனவே . கடுங்கோன் என்னும் பெயர்கொண்ட இவ்விருவரும் வேறுவேறு காலத்தில் வாழ்ந்த வெவ்வேறு மன்னராவர். ஆகவே, பெயரொற்றுமை ஒன்றையே கண்டு இவ்விரு வரையும் ஒருவர் என்று கூறுதல் உண்மையும் பொருத்த மும் உடைய தன்று.
மாறவர்மன் அவனி சூளாமணி :- இவன் பாண்டியன் கடுங்கோனுடைய மகன் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. இவன் கி.பி.600 முதல் 625 வரை ஆட்சிபுரிந்த பாண்டியனாவன். இவன் காலத் தில் நிகழ்ந்த செய்திகளுள் ஒன்றும் புலப்படவில்லை. இவன் காலம்முதல் பாண்டியர்கள் 'மாறவர்மன் 'சடையவர்மன்' என்ற பட்டங்களை ஒருவர்பின் ஒருவ ராக மாறிமாறிப் புனைந்து வருவா ராயினர். மாறவர்மன் என்ற பட்டத்தை முதலிற் புனைந்து வாழ்ந்தவன் இவ் வேந்தனேயாவன்.
----
[1].“கடிநாறு கவினலங்கற் களப்பாளர் குலங்களைந்தும்''
"கற்றறிந்தோர் திறல் பரவக்களப் பாளரைக் களைகட்ட
மற்றிறடோன் மாக்கடுங் கோன்"
---
இவர்களைப்போல் சோழமன்னர்களும் 'இராச கேசரி' 'பரகேசரி' என்ற பட்டங்களை ஒருவர்பின் ஒருவரர்க மாறிமாறிப் புனைந்து வந்தமை ஈண்டு அறியத் தக்கதாகும்.
செழியன் சேந்தன் :-இவன், மாறவர்மன் அவனி சூளாமணியின் புதல்வன்; சடையவர்மன் என்ற பட்டம் புனைந்து கி. பி. 625 முதல் கி. பி. 640 வரையில் பாண்டிநாட்டில் அரசாண்டவன். இவனைச் 'சிலைத் தடக்கைக் கொலைக்களிற்றுச் செழியன்' எனவும், 'மண் மகளை மறுக்கடிந்த வேந்தர் வேந்தன்' எனவும், 'செங் கோற் சேந்தன்' வேள்விக்குடிச் எனவும் செப்பேடுகள் புகழ்கின்றன. இவனது ஆட்சியின் இறுதிக் காலத்தேதான் சீனதேயத்தினனாகிய 'யுவான்சுவாங் என்பான் பல்லவர்களது தலைநகராகிய காஞ்சிக்கு வந்தனன். இவன் அந்நகரி லிருந்து பாண்டி நாட்டிற்குச் செல்லப் புறப்படுங்கால், பாண்டிமன்னன் அப்போது தான் இறந்தனன் என்றும், அந்நாட்டிற் பஞ்சம் மிகுந் திருந்தது என்றும் தனக்குக் காஞ்சியிலுள்ளவர்கள் அறி வித்த செய்திகளைத் தன் வரலாற்றுக் குறிப்பில் வரைந் துள்ளான். எனவே, கி.பி; 640 ஆம் ஆண்டில் இறந்த தாக இவனாற் குறிக்கப்பெற்ற பாண்டியன், இச்செழியன் சேந்தனேயாவன். இவனைப்பற்றிய பிற செய்திகளை யுணர்த்தும் ஆதாரங்கள் இக்காலத்துக் கிடைத்தில. இவன் காலத்துக் கல்வெட்டுக்கள் சில அண்மையில் கிடைத்துள்ளன.[2]
---
[2]. Ins 358 of 1959-60-Introduction p. 24 (மலையடிக்குறிச்சி கல்வெட்டு) Indian Archaeology a Review 1961-62; page 82. (மதுரைக் கல்வெட்டு)
---
மாறவர்மன் அரிகேசரி: செழியன் சேந்தன் இறந்த பின்னர் அவனுடைய புதல்வனாகிய அரிகேசரி என்பான் கி.பி. 640 ஆம் ஆண்டிற் பட்டம் எய்தினன். இவன் மாறவர்மன் என்றபட்டம் புனைந்தவன். இவனைச் சுந்தரபாண்டியன் எனவும், கூன்பாண்டியன் எனவும் திருவிளையாடற் புராணம் கூறாநிற்கும். இவன் முதலில் சமணமதப் பற்றுடையவனா யிருந்து அம்மதத்தைப் பெரிதும் ஆதரித்து வந்தான்; பிறகு சைவ சமய குர வருள் ஒருவராகிய திருஞான சம்பந்தமூர்த்திகளாற் சைவனாக்கப்பட்டான். இவன் முன்னிலையிற்றான் திரு ஞானசம்பந் தருக்கும் சமணமுனிவர் எண்ணாயிரவர்க்கும் அனல்வா தமும் புனல்வாதமும் நிகழ்ந்தன. இவ் னுடைய மனைவியார் மங்கையர்க்கரசி எனப்படுவர். இவ் வம்மையார் மணிமுடிச்சோழன் என்ற ஒரு சோழ மன்னன் புதல்வியார் என்று திருஞானசம்பந்தர் கூறியுள்ளார். இவர்கள் காலத்திற் பாண்டிநாட்டில் அமைச்சரா யிருந்தவர் குலச்சிறையார் என்பவர். இவர்கள் மூவரும் சைவசமயத்திற் பெரிதும் ஈடுபாடுடையவர்களாக விளங் கியவர்கள். சிவபிரானிடத்துப் பேரன்பு பூண்டொழுகிய பாண்டியன் அரிகேசரி[3], மங்கையர்க்கரசியார், குலச் சிறையார் ஆகிய இம்மூவரும் சிவனடியார் அறுபத்து மூவருட் சேர்க்கப்பெற்றுள்ளனர். இவர்கள் வரலாற்றைப் பெரிய புராணத்திற் காணலாம்.
---
[3]. இவனது சிவபக்தி இறையனாரகப் பொருளுரையிலும் புகழப்பட்டுள்ளது. (மேற்கோட் பாடல் 256,279)
---
இவ்வேந்தனது ஆட்சிக்காலத்திற் பாண்டிநாடு. உயர்நிலையை அடைந்தது. இவன், சேரர்களையும்,பர வரையும், குறுநிலமன்னர் சிலரையும் பாழி, நெல்வேலி, செந்நிலம் முதலான இடங்களில் வென்றனன் என்றும், ஒரு பகலிற் சோழர்க்குரிய உறையூரைக் கைப்பற்றின னென்றும் வேள்விக்குடிச் செப்பேடுகள் உணர்த்துகின் றன. எனவே, இவன் முதலில் சோழ மன்னனை வென்று உறையூரைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும் என்பதும், பிறகு அவ்வளவன் வேண்டிக் கொண்டவாறு அவன் மகளார் மங்கையர்க்கரசியாரை மணந்து பகைமை யொழித்து உறவும் நட்புங் கொண்டிருத்தல் வேண்டும் என்பதும் உய்த்துணரக் கிடக்கின்றன. இவன் வென் றடக்கிய பரவர் என்பார், தென்றிசைக்கண் ணிருந்த குறு கிலமன்னர் ஆவர். 'தென்பரதவர் மிடல்சாய' என்னும் 378 ஆம் புறப்பாட்டடியாலும். 'தென்பரதவர் போரேறே' என்னும் மதுரைக் காஞ்சியடியாலும் கடைச் சங்க காலத்திலும் பாண்டி நாட்டிற்குத் தெற்கே அன்னோர் இருந்தமை தெள்ளிதிற் புலனாதல் காண்க. இவன் புரிந்த இப்போர்களை இறையனாரகப் பொருளுரையிலுள்ள மேற்கோட் பாடல்களும் எடுத்தியம்புகின்றன. (பாடல்கள் 22, 106, 235, 309.) சைவசமயாசாரியருள் ஒருவ சாகிய சுந்தரமூர்த்திகளும் 'நிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறனடியார்க்கும் -அடியேன்’ என்ற திருத்தொண்டத்தொகைப் பாடற் பகுதியில் நெல்வேலிப் போரில் இவன் வெற்றியெய்திய செய்தியைக் குறித்துள்ளார். எனவே, சேரர்களும் குறு நில மன்னர்களும் இவனுக்குத் திறைசெலுத்த, இவன் வேந்தர் வேந்தனாய்ச் சிறப்புற்று வாழ்ந்தவன் என்பது நன்கு புலப்படுகின்றது.
இவனது ஆளுகையின் தொடக்கத்தில்தான் சீன தேயத்தின னாகிய 'யுவான்சுவாங்' என்பான் பாண்டி நாட்டிற்குச் சென்றனன். அவன் தன் வரலாற்றுக் குறிப் பில் 'பாண்டி நாட்டில் முத்தும் உப்பும் மிகுதியாகக் கிடைக்கின்றன; பக்கத்துத் தீவுகளிற் கிடைக்கும் மூத்துக் களும் இங்குக் கொண்டுவரப்படுகின்றன; இந்நாட்டில் வேறு விளைபொருள்கள் மிகுதியாக இல்லை. இங்கு வெப்பம் மிகுந்துள்ளது; இந்நாட்டு மக்கள் எல்லோரும் கறுத்த மேனியுடையவர்களாயும் உறுதியும் போர்வலிமையும் மிக்கவர்களாயும் இருக்கின்றனர்; இந் நாடு வாணிகத்தால் வளம்பெற்றுச் செல்வத்தாற் சிறந் துள்ளது' என்று பாண்டிநாட்டைப்பற்றித் தான் நேரில் அறிந்தவற்றை எழுதியுள்ளான். இதனால் மாறவர்மன் அரிகேசரியின் காலமாகிய கி.பி.ஏழாம் நூற்றாண்டின் இடைப் பகுதியிற் பாண்டிநாடு எத்தகைய நிலையிலிருந் தது என்பதை ஒருவாறு உணரலாம்.
இவ்வேந்தன் இரணிய கர்ப்பதானமும் துலாபார தானமும் பலப்பல செய்து பெருமையுற்றனன் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. துலாபார தானஞ் செய்தல் கடைச்சங்க காலத்திலும் வழக்கத்தி லிருந்ததென்பது சிலப்பதிகாரத்தால் அறியப்படுகிறது. (சிலப்பதிகாரம் - நீர்ப்படை, 173-176) இவனைப் போலவே, கி.பி. பத்தாம் நூற்றாண்டி னிறுதியிலும் பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நம் தமிழகத்திற் பேரரசனாக வாழ்ந்த முதலாம் இராசராச சோழன் தன் மனைவியுடன் இரணிய கர்ப்பதானமும் துலாபார தானமும் செய்தனன் என்று திருவிசலூர்க் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது.
இனி, கடைச்சங்க நாளில் விளங்கிய தலையாலங் கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனே இவனுடைய தந்தையாகிய செழியன் சேந்தன் எனவும், அக்காளில் நிலவிய இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனே இவ்
---
Pages 42 and 43 missing here
----
மிகச் சேய்மையில் மேற்குத் தொடர்ச்சிமலைக்கு மேல்பாலுள்ள தென்கன்னடம் ஜில்லாவி லிருக்கும் மங்களூரில் கொங்கு மன்னனை இவன் போரில் வென்றான் என்று கூறுவது பொருந்தவில்லை. அன்றியும், நம் கோச்சடை யன், ரணதீரன் என்ற சிறப்புப்பெயர் பெற்றமைக்குக் காரணம், ரணரசிகன் என்ற சளுக்கிய விக்கிரமாதித்த னைப் போரிற் புறங்கண்டமையே யாகும். மங்கலபுரம் என்பது திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் கொள்ளிடத் திற்கு வடகரையி லுள்ள மங்கலம் என்னும் ஊராதல் வேண்டும். ஆகவே, மேலைச்சளுக்கிய வேந்தனாகிய முதல் விக்கிரமாதித்தனையே கி.பி. 674ஆம் ஆண்டில் இவன் மங்கலபுரத்தில் போரில் வென்றனன் என்று கொள்ளு வதுதான் மிகப் பொருத்தமுடையது. அவ் விக்கிர மாதித்தன், பாண்டி வேந்தனோடு போர்புரிந்த செய்தி, அவனுடைய கேந்தூர்க் கல்வெட்டுக்களாலும்[1] உறுதி யெய்துகின்றது. இம்மன்னன் காலத்தில்தான் சைவ சமய குரவராகிய சுந்திரமூர்த்தி சுவாமிகள் சேரமான் பெருமாள் நாயனாருடன் மதுரைக்கு வந்து இம் மன்ன னாலும் இவன் மகளை மணந்து மதுரையில் தங்கியிருந்த சோழ மன்னனாலும் உபசரிக்கப்பெற்றுத் திருவாலவா யிறைவரையும் திருப்பரங்குன்றப்
திருப்பரங்குன்றப் பெருமானையும் வழி பட்டனர்[2]. ஒப்பற்ற பெரு வீரனாக நிலவிய இவ்வரசன் கி.பி. 710ஆம் ஆண்டில் விண்ணுல கடைந்தான்.
----
[1]. Epigraphia Indica. Vol. IX; No. 29,
[2]. பெரிய புராணம், கழறிற்றறிவார். 91-2. ; சுந்தரர் தேவாரம், திருப்பரங்குன்றப் பதிகம், பாட்டு 11.
----
அரிகேசரி பராங்குச மாறவர்மன்:-இவன் கோச் சடையனுடைய புதல்வன் ஆவன். இவன் தன் பாட்டன் பெயராகிய அரிகேசரி என்ற பெயருடையவன்; மாற வர்மன் என்ற பட்டம் புனைந்து அரசாண்டவன். இவனை முதலாம் இராசசிம்மன் எனவும் தேர்மாறன் எனவும் வழங்குவதுண்டு. இவன் கி.பி. 710 முதல் 765 வரை ஆட்சிபுரிந்தவன். இவன் காலத்தில் சோணாடு பல்ல வர்களது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அந்நாளில் தொண்டை மண்டலத்திற்கும் சோழமண்டலத்திற்கும் வீற்றிருந்து செங்கோல் செலுத்தியவன் நந்தி வர்மப் பல்லவமல்லன் என்பான். மாறவர்மனுக்கும் அப் பல்லவ மன்னனுக்கும் பல போர்கள் நிகழ்ந்தன. குழும்பூர், நெடுவயல், குறுமடை, மன்னிக்குறிச்சி, திருமங்கை, பூவலூர், கொடும்பாளூர், பெரியலூர் என் னும் ஊர்களில் நடைபெற்ற போர்களில் இவன் பல்லவ மன்னனையும் அவனுடைய படைத்தலைவர்களையும் தோல்வியுறச் செய்தனன் என்று தெரிகின்றது. இவ் வூர்களுட் பல, புதுக்கோட்டைப் பகுதியில் உள்ளன. எனவே, பல்லவர்கள் பாண்டி நாட்டையும் கைப்பற்றுவ தற்குத் தெற்கே பெரும்படையுடன் செல்ல, அதனை யுணர்ந்த இப் பாண்டியன் பகைஞர்களைப் பாண்டி நாட் டின் வட எல்லையிலே தோற்றோடச் செய்தனன்போலும்.
நென்மேலி, மண்ணை முதலிய இடங்களில் நிகழ்ந்த போர்களில் பாண்டியனைப் பல்லவமல்லன் வென்றனன் என்று திருமங்கையாழ்வார், கச்சிப் பரமேச்சுர விண்ணக ரப் பதிகத்திற் கூறி யிருக்கின்றனர். அச்செய்தி, நந்தி வர்மப் பல்லவமல்லனது உதயேந்திர செப்பேடுகளிலும் சொல்லப்பட்டுள்ளது[3]. ஆகவே சில இடங்களிற் பல்லவர்களும் வெற்றியடைந்திருக்கலாம்.
[3]. South Indian Inscriptions vol II. No. 74.
இவன் மழ கொங்குநாட்டைக் கைப்பற்றி அந்நாட்டு மன்னன் தனக்குக் கப்பஞ் செலுத்தி வருமாறு செய்த னன் என்றும், கங்க அரசன் மகள் பூசுந்தரியை மணந்து கொண்டனன் என்றும் வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன.
இவன் கொங்குநாட்டிற்குப் படையெடுத்துச் சென்ற போது திருப்பாண்டிக் கொடுமுடி என்னுந் திருப்பதிக் குப் போய் அங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான் திருவடிகளை வணங்கிப் பொற்குவியலும் நவமணித்திர ளும் மனமகிழ்ந்து கொடுத்தனன் என்பது வேள்விக் குடிச் செப்பேடுகளால் அறியப்படுகின்றது; இதனால் இவனது சிவபக்தியின் மாட்சி ஒருவாறு விளங்கும். இவன் தன் பாட்டனைப்போல் இரணிய கர்ப்பதானங் களும் துலாபாரதானங்களும் செய்து புகழெய்தியவன். இறையனாரகப் பொருளுரை மேற்கோட் பாடல்களும் இவன் பெருமையையும் வீரத்தையும் நன்கு புலப்படுத்தா நிற்கும்.
நெடுஞ்சடையன் பராந்தகன் :-இவன் அரிகேசரி ப்ராங்குச மாறவர்மனுக்குக்
கங்க அரசன் மகள் பூசுந்தரிபால் பிறந்த புதல்வன் ஆவன்; சடையவர்மன் என்னும் பட்டம் புனைந்து கி.பி. 765 முதல் கி. பி. 790 வரையில் ஆட்சிபுரிந்தவன், இவனுக்கு முன்னர் அரசாண்ட பாண்டிய மன்னர்களின் செப்பேடுகள் தற்போது யாண்டும் கிடைக்கவில்லை. ஆகவே இது காறும் கிடைத்துள்ளவற்றுள். இவ் வேந்தனுடைய செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் மிக்க பழைமை வாய்ந் தவையாகும். அவை, இலண்டன் பிரிட்டிஷ் பொருட்காட்சிச் சாலையிலுள்ள வேள்விக்குடிச் செப்பேடுகளும்[4] சென்னைப் பொருட்காட்சிச் சாலையிலுள்ள சீவரமங்கல செப்பேடுகளும்[5] ஆனைமலைக் கல்வெட்டுக்களுந் திருப்பரங்குன்றத்துக் கல்வெட்டுக்களுமேயாம். இவ்விரு செப் பேடுகளும் கிடைக்காமற் போயிருப்பின், கடைச்சங்க காலத் திற்குப் பிறகு பாண்டி நாட்டில் நடைபெற்ற களப்பிரர் ஆட்சியைப் பற்றிய செய்தியும், கி.பி.ஆறாம் நூற் றாண்டின் பிற்பகுதி முதல் கி. பி. எட்டாம் நூற்றாண்டு முடிய அரசாண்ட பாண்டி மன்னர்களின் வரலாறுகளும் எவரும் தெரிந்துகொள்ள இயலாதவாறு மறைந்து போயிருக்கும் என்பது திண்ணம். எனவே, பாண்டிய ரது முதற் பேரரசின் வரலாற்றை அறிந்து கோடற்கு இச்செப்பேடுகளே உறுதுணையா யிருத்தல் உணரற்பால தாம். இவற்றில் காணப்படும் செய்திகளைத் தளவாய்புரச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன.
இனி, இவற்றின் துணைகொண்டு இவ் வேந்தன் காலத்து நிகழ்ச்சிகளை ஆராய்வாம். இவன் நாற்பெரும் படையுடன் வந்தெதிர்த்த பல்லவ அரசனைக் காவிரியின் தென்கரையிலுள்ள பெண்ணாகடத்தில் நிகழ்ந்த போரில் புறங்காட்டி யோடும்படி செய்தனன் என்றும், ஆய்வேளை யும் குறும்பரையும் போரில் வென்றான் என்றும் வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன.[6]
---
[4]. இப் பராந்தகன் தன் முன்னோனான பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் அரசன் கொற்கைகிழான் நற்கொற்றனுக்கு வழங்கிய வேள்விக்குடியென்ற ஊரைக்களப்பிரர் தம் ஆட்சியிற் கவர்ந்து கொள்ளவே, அக்கொற்கை கிழான் வழியிற் றோன்றிய நற்சிங்கன் என்பான் தன்உரிமை யெடுத்துரைத்து வேண்டிக் கொண்டவாறு அவ்வூரை இவ்வேந்தன் அவனுக்கு மறுபடியும் வழங்கியதை யுணர்த்துவனவே வேள்விக்குடிச் செப்பேடுகளாம்.
[5], இவ் வேந்தன் தென்களவழிநாட்டு வேலங்குடியென்ற வூரைச் சீவரமங்கலமென்று தன் பெயராற் பிரமதேயமாக வழங்கியதைக் கூறுவனவே சீவரமங்கலச் செப்பேடுகளாம்.
[6]. Epigraphia, Vol.XVII. No 16.
----
அப்போர் நிகழ்ச்சிகள் இரண்டும் இவனது மூன்றாம் ஆட்சி யாண் டிற்கு முன்னர் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது அச் செப்பேடுகளால் அறியக் கிடக்கின்து. ஆகவே, அவை கி. பி 767 ஆம் ஆண்டிலாதல் அதற்கு முன்ன
கி.பி ராதல் நிகழ்ந்திருத்தல் வேண்டும். எனவே, பெண்ணா கடப்போரில் இவன்பால் தோல்வியுற்ற பல்லவ வேந்தன் நந்திவர்மப் பல்லவமல்லன் என்பது ஐயமின்றித் துணி யப்படும். பெண்ணாகடம் என்பது தஞ்சாவூர்க் கூற்றத்தி லுள்ளதோர் ஊர் என்று திருவிசலூர்க் கல்வெட் டொன்று உணர்த்துகின்றது[7]. ஆகவே, அப் போர் தஞ்சாவூர்க் கண்மையிலுள்ள அவ்வூரில் நிகழ்ந்ததாதல் வேண்டும்.
இவ்வேந்தன் வென்றடக்கிய ஆய்வேள் என்பான், பொதியின்மலைத் தலைவனும், கடையெழு வள்ளல்களுள் ஒருவனுமாகிய வேள் ஆயின்வழியில் தோன்றி, கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அம் மலையைச் சார்ந்து தென்கடற் பக்கத்திருந்த நாட்டை ஆட்சி புரிந்துகொண்டிருந்த ஒரு குறுநில மன்னன் ஆவன்.
இவனுடைய சீவரமங்கலச் செப்பேடுகள்[8], வெள்ளூர், விண்ணம், செழியக்குடி என்ற ஊர்களில் இவன் தன் பகைஞர்களை வென்றழித்தனன் என்றும், காவிரி யாற்றின் வடகரையிலுள்ள ஆயிரவேலி யயிரூர், புகழியூர் என்ற இடங்களில் அதியமானைப் போரிற் புறங்கண்ட னன் என்றும், அவனுக்கு உதவிபுரியும் பொருட்டுக் குடபாலும் குணபாலும் பெரும் படைகளுடன் வந்து போர்புரிந்த சேரனையும் பல்லவனையும் தன் வேற்படை யால் வென்று துரத்தினன் என்றும், தோல்வியெய்திய கொங்கர் கோமானைக் களிற்றொடும் பிடித்துக் கொணர்ந்து மதுரைமா நகரில் சிறையில் வைத்து, `அவனுக்குரிய கொங்கு நாட்டைத் தன்னடிப்படுத்தினன் என்றும்; இலங்கையைப்போல் அரணாற் சிறந்து விளங்கிய விழிஞத்தை அழித்து வேணாட்டரசனை வென்று அவனுடைய களிறும் மாவும் பெரு நிதியும் கவர்ந்துகொண்டு நாட் டையும் கைப்பற்றினன் என்றும் கூறுகின்றன[9]. வெள்ளூர் முதலான மூன்றூர்களிலும் இவனோடு பொருது தோல்வியுற்ற பகைஞர் யாவர் என்பது இப்போது புலப் படவில்லை. இவன் போரிற் புறங்கண்ட அதியமான் என்பான், சேலம் ஜில்லாவில் இந்நாளில் தர்மபுரி என்று வழங்கும் தகடூரிலிருந்து[10] கொங்கு நாட்டை ஆட்சி புரிந்தவனும் கடையெழுவள்ளல்களுள் ஒருவனுமாகிய அதியமான் நெடுமானஞ்சியின் வழியில் தோன்றி, கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்நாட்டை யாண்டு கொண்டிருந்த ஒரு குறுநில மன்னன் ஆவன்;
---
[7]. Ins. 134 of 1907.
[8]. Indian Antiquary, Vol.XXII,pp. 69-75.
[9]. விழிஞத்தில் கண்டெடுக்கப்பட்டுப் பத்மநாபபுரம் அரண்மனைப் பொருட்காட்சிச்-சாலையில் உள்ள தூண் ஒன்றின் ஒருபுறத் தில் செய்யுளில் அமைந்த கல்வெட்டு ஒன்றும் மறுபுறத்தில் உருவிய உடைவாளுடன் கூடிய ஒரு போர் வீரன் உருவமும் உள்ளன. எட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்ததாகக் கருதப்படும் அந்த வட்டெழுத்துக் கல்வெட்டு தன் தலைவனுக்காக அவ் வீரன் செஞ் சோற்றுப்பெருங் கடன் கழித்து உயிர் நீத்ததைக் கூறுகிறது. அத்தலைவன் பற்றிய விவரங்களை அக் கல்வெட்டு தெரிவிக்கவில்லை.
472 of 1958-59.
[10]. South Indian Inscriptions, Vol. VII Nos, 533 and 534,
---
தன் நாட்டை இழந்து மதுரையில் சிறையிலிருந்த கொங்குமன்னனும் அவ்வதியமானே என்பதில் ஐயமில்லை[11]. நம் நெடுஞ்சடையன் பராந்தகன் பேராற்றல் யடைத்த பெருவேந்தனாய்த் தன் பாண்டிய இராச்சி யத்தை யாண்டும் பரப்பி உயர்நிலைக்குக் கொணர்வதைக் கண்ட சேரனும் பல்லவனும் பெரிதும் அச்சமுற்று, இவன் செய்கையைத் தடைசெய்யவேண்டி, அதியமானுக்கு உதவிபுரிய வந்திருத்தல் கூடும்.
தம் படையுடன் வந்து பொருத அவ்விரு வேந்தரும் இப் பராந்தகன்பால் தோல்வியுற் றோடியிருத்தலும் இயல்பேயாம். இவனிடம் தன் நாட்டை இழந்த வேணாட்டரசன், வேள்விக்குடிச் செப்பேடுகளில் கூறப்பெற்ற ஆய்வேளாதல் வேண்டும். சேரனுக்குரிய அரணுடைப் பெருநகராய் மேலைக்கடற் கரையிலிருந்தது விழிஞமாகும். இவன் தென்றிசையில் தான் வென்ற நாடுகளைப் பாதுகாத்தற்பொருட்டும், அவற்றில் வாழ்ந்துகொண்டிருந்த குறுநில மன்னர்களைக் கண்காணித்தற் பொருட்டும், கரவந்தபுரம் என்ற நகரில் சிறந்த அகழும் மதிலுமுடைய ஒரு கோட்டை அமைத்து, அதில் பெரிய நிலைப்படையொன்று வைத் திருந்தனன். அவ்வூர் 'களக்குடிநாட்டுக் களக்குடியான கரவந்தபுரம்[12] என்று கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளது. அஃது இந்நாளில் -- திருநெல்வேலித் தாலுகாவில் உக்கிரன் கோட்டை என்னும் பெயருடன் அழிந்த நிலையி லிருத்தல் அறியத்தக்கது.[13]
[11]. கொங்கு மன்னனும் அதியமானும் வெவ்வேறு அரசர் ஆவர் என்று பேராசிரியர் K- A. நீலகண்டசாஸ்திரிகள் கூறுவது பொருத்தமுடையதன்று. (The Pandyan Kingdom, P. 62)
[12]. S. I. 1., Vol. Vil, 431.
[13]. EP. Ind., Vo!.XXIII, No45.
-----
பாண்டியர் எல்லோரும் சிவநெறியைக் கடைப் பிடித்தொழுகிய சைவர் ஆவர். இவ்வேந்தன் ஒருவனே வைணவ சமயப்பற்று மிக்குடையவனா யிருந்தனன். இவனைப் "பரம் வைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு, மணிநீண்முடி நிலமன்னவன்' என்று சீவரமங்கலச் செப் பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன. அத்தகைய நிலையை இவன் அடைந்திருந்தமைக்குக் காரணம், இவன் ஆட்சிக் காலத்தில் வைணவ சமய குரவருள் ஒருவராகிய பெரி யாழ்வார் பாண்டி நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த மையேயாம். இவன் அவ் வாழ்வாரிடத்தில் பெரிதும் ஈடுபட்டு வைணவனாக மாறியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, அப் பெரியார் இவனுக்கு ஞான குரவராக இருந்திருத்தலும் கூடும். இவன், அதியமா னது கொங்குநாட்டைக் கைப்பற்றிய பிறகு அங்குள்ள காஞ்சி[14] வாய்ப்பேரூர்க்குச் சென்று, அவ்வூரில் திருமாலுக்குக் குன்றமன்னதொரு கோயில் எடுப்பித்தா னென்று அச் செப்பேடுகள் உணர்த்துவதும் ஈண்டு அறி யத்தக்கது. அன்றியும், இவனுடைய வேள்விக்குடிச் செப்பேடுகளின் இறுதியில் வைணவ தர்ம சுலோகங்கள் வரையப்பெற்றிருத்தல், இவன் அச் சமயத்தின்பால் வைத்திருந்த பெரும் பற்றினைத் தெள்ளிதிற் புலப்படுத்தும் எனலாம்.
----
[14]. காஞ்சி என்ற ஆறு இக்காலத்தில் நொய்யல் என்று வழங்குகிறது. பேரூர் அவ்வாற்றின் கரையில் கரையில் கோயமுத்தூரிக்கு அண்மையில் உள்ளது.
----
இவனுடைய செப்பேடுகளில் இவனுக்கு அக்காலத் தில் வழங்கிய பல சிறப்புப் பெயர்கள் காணப்படுகின்றன. அவை, தென்னவானவன், சீவரன், சீமனோகரன், சினச்சோழன், புனப்பூழியன், வீதகன்மஷன், விநய விச்ருதன், விக்கிரம பாரகன், வீரபுரோகன், மருத் பலன், மானிய சாசனன், மநூபமன், மர்த்தித வீரன், கிரிஸ்திரன், கீதகின்னரன், கிருபாலயன், கிருதாப தானன், கலிப்பகை, கண்டக நிஷ்டூரன்,கார்ய தக்ஷிணன், கார்முகபார்த்தன், பண்டித வத்சலன், பரிபூர்ணன் பாப்பீரு, குணக்ராகியன், கூடநிர்ணயன் என்பனவாம். இவற்றுள், மூன்றொழிய, எஞ்சியனவெல்லாம் வட மொழிப் பெயர்கள் ஆகும். தூய தமிழ்ப் பெயர்களையும் பட்டங்களையும் உடையவர்களாக வாழ்ந்துவந்த பாண்டி மன்னர்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இத்தகைய பட்டங்களைப் பெரு விருப்புடன் புனைந்துகொண்டமை பெரிய தொருவியப்பேயாம்.
இவ் வேந்தன் காலத்திருந்த அரசியல் தலைவர் சிலர், இவன் செப்பேடுகளிலும் கல்வெட்டுக்களிலும் குறிக்கப் பெற்றுள்ளனர். அன்னோர், மாறன்காரி, மாறன் எயி னன், சாத்தன் கணபதி, ஏனாதி சாத்தஞ்சாத்தன், தீரதரன் மூர்த்தி எயினன், சங்கரன் சீதரன் என்போர். அவர்களைப்பற்றிய செய்திகளையும் ஈண்டு ஆராய்ந்து
காண்போம்.
1. மாறன் காரி:-இவன் திருநெல்வேலித் தாலுகா வில் இந்நாளில் உக்கிரன் கோட்டை என்று வழங்கும் கரவந்தபுரமாகிய களக்குடியில் மாறன் என்பவனுக்குப் புதல்வனாகத் தோன்றியவன்; காரி என்ற இயற்பெய ருடையவன் ; வைத்தியகுலத்தினன் ; மதுரகவி என்னுஞ் சிறப்புப் பெயருடையவன். நெடுஞ்சடையன் பராந்தகன் ஆட்சியின் முற்பகுதியில் முதல் அமைச்சனாக நிலவிய வன். இவன் மதுரைக்கு வடகிழக்கே
ஆறு மைல் தூரத்திலுள்ள ஆனைமலையில் திருமாலுக்கு ஒரு கற்றளி அமைத்து, அதில் நரசிங்கப்பெருமாளை, கி.பி.770 ஆம் ஆண்டில் எழுந்தருளுவித்தான். [15அன்றியும் அக்கோயிற் கண்மையில் அந்தணர்க்கு ஓர் அக்கிரகாரம் அளித் துள்ளனன். இந்நிகழ்ச்சிகளை நோக்குமிடத்து இவன் வைணவ சமயப்பற்று மிகுதியாயுடையவன் என்று தெரிகிறது. இவன் பாண்டி வேந்தனால் வழங்கப்பெற்ற மூவேந்தமங்கலப் பேரரையன் என்ற பட்டம் பெற்றவன் ஆவன். வேள்விக்குடிச் செப்பேடுகளில் இவனே ஆணத்தி. யாகக் கூறப்பெற்றுள்ளான்.
2. மாறன் எயினன்:-இவன் மாறன் காரிக்குத் தம்பியாவான்; எயினன் என்னும் இயற்பெயருடையவன்; அக்காரி இறந்த பின்னர்ப் பராந்தகனுக்கு முதல் அமைச்ச னாக இருந்தவன்; அரசனால் அளிக்கப்பெற்ற பாண்டி மங்கல விசையரையன் என்னும் பட்டம் எய்தியவன். இவன் தன் தமையன் ஆனைமலையில் எடுப்பித்த நரசிங்கப்பெருமாள் கோயிலுக்கு முகமண்டபம் ஒன்றமைத்துக் கடவுண் மங்கலஞ் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.[16] இவன் தமையன் அமைச்சனாயிருந்த நாட்களில் எடுக்கப்பெற்ற அக் கோயிலுக்குக் கடவுண் மங்கலஞ் செய்யாமல் அவன் இறந்த செய்தியை ஆனை மலைக் கல்வெட்டால் அறியலாம்.
[15]. EP. Ind., Vol. VIll. PP. 319 and 320. இவ்வானை மலைக் கல்வெட்டில் கலியுகம் ஆண்டு 3871 என்று குறிக்கப் பெற்றிருத்தல் அறியத்தக்கது. பாண்டியர் கல்வெட்டுக்களில் இதுகாறும் கிடைத்துள்ளவற்றுள், இதுவே ஆண்டு வரையப்பெற்ற பழைமையான கல்வெட்டாகும்.
[16]. Ibid, p. 320.
--------------
3. சாத்தன் கணபதி:- இவன் கரவந்தபுரத்தில் வாழ்ந்த சாத்தன் என்பவனுடைய மகன்; வைத்திய குலத்தினன்; கணபதி என்னும் இயற்பெயருடையவன்; பராந்தக பாண்டியனது ஆட்சியில் முற்பகுதியில் எல் லாப் படைகட்கும் மாசாமந்தனாக விளங்கியவன்; சாமந்த பீமன் என்று வழங்கப்பெற்றவன். இவ்வேந் தனால் வழங்கப்பெற்ற பாண்டி அமிர்தமங்கல வரையன் என்னும் பட்டமுடையவன். இவன் திருப்பரங் குன்றத்திலுள்ள கோயிலுக்குத் திருப்பணி புரிந்து அங்குள்ள திருக்குளத்தை யும் திருத்தி அறச்-செயல்களையும் ஒழுங்குபடுத்தினான் என்று அவ்வூரிலுள்ள பராந்தகனது ஆறாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டொன்று உணர்த்துகின்றது[17]. இவன் திருப்பரங்குன்றத்தில் சிவபிரானுக்குக் கோயில் அமைத்துத் தன்வேந் தனுடைய ஆறாம் ஆட்சியாண்டில் கடவுள்மங்கலஞ் செய்தான். அன்றியும், இவனுடைய மனைவி நக்கன் கொற்றி என்பாள் அவ்வூரில் துர்க்கைக்கும் சேட்டைக் கும் வெவ்வேறு கோயில் அமைத்தனள் என்பது அக் கல்வெட்டின் பிற்பகுதியால் அறியப்படுகின்றது.
---
[17]. Indian Antiqury, Vol, XXII. P. 67; S. I. I. Vol XIV No.3. ; Ins. 1439. 1951-52 Epigraphia Indica Vol XXXVI No. 15 Two Pandya Inscriptions from Tirupparankunram
---
4. ஏனாதி சாத்தஞ்சாத்தன் :-இவன் சாத்தன் கணபதியின் உடன் பிறந்தான் ஆவன்; வேள்விக்குடிச் செப்பேடுகளின் தமிழ்ப்பகுதியைப் பாடியவன்; ஏனாதி என்னும் பட்டம் பெற்றவன். ஆகவே, இவன் மாசா மந்தனுக்குக் கீழ் ஒரு படைக்குத் தலைவனா யிருந்திருத்தல் வேண்டும். பெரு வீரனான இத்தலைவன் தமிழ்ப் புலமை யுடையவனாகவு மிருந்து பாண்டி வேந்தர் பலருடைய வரலாறுகளைப் பாடி அச் சேப்பேடுகளில் சேர்த்த பெருமை வாய்ந்தவன். எனவே, அறம்புரிந்த அரச னுடைய முன்னோர்கள் வரலாற்றைச் செப்பேடுகளில் வரைந்துவைக்கும் வழக்கத்தைப் பாண்டி நாட்டில் முத லில் தோற்றுவித்தவன் இவனேயாவன்.
5. தீரதரன் மூர்த்தி எயினன்:-இவன் பராந்தகனது 17 ஆம் ஆட்சி யாண்டில் வெளியிடப்பெற்ற சீவர மங்க லச் செப்பேடுகளில்[18] ஆணத்தியாகக் குறிக்கப்பெற்ற வன். இவ் வேந்தன் ஆட்சியின் பிற்பகுதியில் பாண்டிப் படைகட்கு மாசாமந்தனாக நிலவியவன். அரசனால் அளிக் கப்பெற்ற வீரமங்கலப் பேரரையன் என்னும் பட்டம் எய்தியவன். இவனைப்பற்றிய பிற செய்திகள் புலப்பட வில்லை.
6. சங்கரன் சீதரன்:-இவன் பாண்டிய நாட்டுக் கொழுவூரின் கண் பிறந்தவன்; பராந்தகனது யானைப் படைக்குத் தலைவன்; பாண்டியனால் வழங்கப்பெற்ற பாண்டி இளங்கோமங்கலப் பேரரையன் என்னும் பட்டம் உடையவன்[19]
[18]. Ibid,pp. 69-75.
[19]. Ibid.
-----------
இரண்டாம் இராசசிம்ம பாண்டியன் :-இவன் நெடுஞ்சடையன் பராந்தகனுடைய புதல்வன்; சின்ன மனூர்ச் செப்பேடுகள் இவன் பெயரை மாத்திரங் கூறுகின்றனவே-யன்றி இவனைப்பற்றிய செய்திகளை உணர்த்த வில்லை. எனவே, இவன் ஆட்சிக்காலம் மிகச் சுருக்கமாய் இருந்திருத்தல் வேண்டும்: அன்றியும், இவன் காலத்தில் வரலாற்றில் குறிக்கத்தக்க நிகழ்ச்சிகள் இல்லாமலும் இருக்கலாம். இவன் கி. பி. 790 முதல் 792 வரை இரண்டாண்டுகள் ஆட்சிபுரிந்திருத்தல் வேண்டும் என்பது சில ஏதுக்களால் உணரக் கிடக்கின்றது. இவன் மாறவர்மன் என்ற பட்டம் புனைந்து அரசாண்டவன்.
வரகுண மகாராசன் :-இவன் இரண்டாம் இராச சிம்ம பாண்டியனுடைய மகனாவன்; சடையவர்மன் என்ற பட்டம் புனைந்து பாண்டிநாட்டில் ஆட்சி புரிந்தவன். மாறன் சடையன் என்னும் பெயரும் இவ்வேந்தனுக்கு உண்டு. இவனைக் 'கொற்றவர்கள் தொழுகழற்காற் கோவரகுண மகாராசன்' என்று சின்னமனூர்ச் செப் பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன. அதன் உண்மையை ஈண்டு ஆராய்வாம்.
வரகுண மகாராசனது ஆட்சியின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் சோழநாட்டிலுள்ள திருவியலூர்[20], திரு நெய்த்தானம்'[21] என்னும் ஊர்களிலும் ஆறு, எட்டு, பத்தாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் முறையே ஆடுதுறை[22] , கும்பகோணம்[23], செந்தலை[24]' ஆகிய ஊர்களிலும் பதி னொன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் திருச்சிராப்பள்ளி[25], திருக்கோடிகா[26], திருக்காட்டுப்பள்ளி[27] என்ற ஊர்களிலும் ஆண்டழிந்து போன கல்வெட்டொன்று திருச்சோற்றுத் துறை[28]யிலும் இருத்தலால் சோழமண்டலம் முழுவதும் இவனது ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பது புலனாகின்றது.
[20]. Ins, 17 of 1907
[21]. S. I. I., Vol V. No,608.
[22]. Ins. 364 of 1907.
[23]. Ins. 13 of 1908.
[24]. S. I. I. Vol, VI. No, 446.
[25]. Annual Report on Archaeological Survey of India for 1903-04. page 275, SII Xiv No. 10.
[26]. Ins 37 of 1931
[27]. Indian Archaeology, A review 1960-61.
[28]. Ins. 160 of 1931-
-------
இம் மன்னன் பல்லவ வேந்தனைக் கருவூரில் வென்றி கொண்ட செய்தி பராந்தக பாண்டியனுடைய ஏழாவது ஆண்டில் வெளியிடப்பட்ட செப்பேடுகளினால் அறியப்படு கின்றது[29]. அன்றியும், கி.பி.795 முதல் 846 வரையில். அர சாண்ட பல்லவ வேந்தனாகிய தந்திவர்மன் கல்வெட்டுக்கள் சோழமண்டலத்தில் காணப்படவில்லை. எனவே, அப்பல்லவ அரசனது ஆட்சியில்தான் வரகுண மகாராசன் சோழ நாட்டின்மேல் படையெடுத்து அதனைத் தன் ஆளுகைக் குள்ளாக்கி யிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது.
திருச்சிராப்பள்ளியிலுள்ள இவனது பதினோராம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டொன்று[30] இவன் வேம்பில் மதிலையழித்து நியமத்தில் தங்கியிருந்தபோது சிராப் பள்ளி இறைவர்க்குத் திருவிளக்குகள் எரிப்பதற்கு நிவந்த மாக 125 கழஞ்சு பொன் அளித்தனன் என்று கூறுவ தால் இவன் சோணாட்டின்மீது படையெடுத்து வந்து அதனைக் கைப்பற்றிய செய்தி உறுதியாதல் காண்க. வேம்பிலும் நியமமும் சோழநாட் டூர்களாகும். அவற் றுள், வேம்பில் என்பது இந்நாளில் வேப்பத்தூர் என்று வழங்குகிறது.
இனி, இவ்வேந்தனது பதினாறாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டொன்று திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள அம்பாசமுத்திரத்தி லிருக்கிறது.
---
[29]. "காடவனைக் கருவூரில் கால்கலங்கக் களிறுகைத்த கூடலர்கோன் ஸ்ரீவரகுணன்.
[30]. S.I.I. vol Xiv No. 10.
அதில் இம் மன்னன் தொண்டைமண்டலத்தில் பெண்ணை யாற்றங்கரையி லுள்ள அரசூரில் வீற்றிருந்தபோது அம்பாசமுத்திரத் துக் கோயிலுக்கு 290 பொற்காசுகள் நாள் வழிபாட் டிற்கு நிவந்தமாக வழங்கிய செய்தி சொல்லப்பட்டுள்ளது[31]. எனவே, தொண்டைமண்டலத்தின் தென்பகுதி யும் இவனது ஆளுகைக் குட்பட்டிருந்தது என்பது நன்கு வெளியாகின்றது. இவன் காலத்திலிருந்த பல்லவ வேந்த னாகிய தந்திவர்மன் என்பான் சோழ மண்டலத்தையும் தொண்டைமண்டலத்தின் தென்பகுதியையும் இழந்து, எஞ்சிய பகுதியையே ஆண்டுவந்தவனாதல் வேண்டும். ஆகவே, சோழ மண்டலத்தையும் தொண்டைமண்டலத் தையும் பாண்டிமண்டலத்தோடு சேர்த்து ஒருங்கே ஆட்சிபுரிந்த பெருமையுடையவன் வரகுண மகாராசன் என்பது இனிது புலப்படுதல் காண்க.
---
[31]. Ep. Ind. Vol. IX. No. 10 (Ins. 105 of 1905.) 2. Indian Archaeology 1960-61, A Review P 45.
இவ்வேந்தனின் பதினொன்றாம் ஆண்டுக் கல்வெட் டொன்று விடேல்விடுகு முத்தரையர் மகளார் சாத்தன் களியார் ஆயிரத்தளி மகாதேவர்க்குத் திருநந்தா விளக்கு வைத்த செய்தியைக் கூறுகிறது. இதில் குறிப்பிடப் பெற்ற விடேல்விடுகு முத்தரையன் என்பான் இம்மன்னன் காலத்திருந்த தஞ்சை யரசன் என்பது புலப்படுகின்றது.
இனி, இவ்வரசர் பெருமானது சிவபக்தியின் மாண்பு இத்தகையது என்று அளவிட்டுரைக்குந் தரத்தன்று. இவன் ஆட்சிக் காலத்திற்றான் திருவாதவூரடிகளாகிய மணிவாசகப்பெருமான் இருந்தனர் என்பது ஆராய்ச்சி யால் அறியப்படுகிறது. இவ்வடிகள் தாம் இயற்றியருளிய திருச்சிற்றம்பலக் கோவையாரில் இவ் வேந்தனை இரண்டு பாடல்களில் பாராட்டியுள்ளமை குறிப்பிடத் தக்கது. அவை,
"மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல் லாது வரகுணனுந்
தென்னவ னேத்துசிற் றம்பலத் தான் மற்றைத் தேவர்க்கெல்லா
முன்னவன் மூவலன் னாளுமற் றோர் தெய்வம் முன்னலளே" (306)
"புயலோங் கலர்சடை யேற்றவன் சிற்றம் பலம்புகழும்
மயலோங் கிருங்களி யானை வரகுணன் வெற்பின் வைத்த
கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன் கோபமுங் காட்டிவருஞ்
செயலோங் கெயிலெரி செய்தபின் இன்றோர் என்பனவாம் திருமுகமே" (327)
அன்றியும், ஒட்டுடன் பற்றின்றி உலகைத் துறந்த செல்வராகிய பட்டினத்தடிகள் தாம் பாடிய திருவிடை மருதூர் மும்மணிக்கோவையில் ஒரு பாடலில் இவன் சிவபக்தியின் மேலீட்டால் ஆற்றிய அரும்பெருந் தொண்டுக ளெல்லாவற்றையும் எடுத்துக் கூறியுள்ளனர். அவை,
"வெள்ளை நீறு மெய்யிற் கண்டு
கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும்
ஓடும் பன்னரி யூளைகேட் டரனைப்
பாடின வென்று படாம்பல வளித்தும்
குவளைப் புனலிற் றவளை யரற்ற
ஈசன் றன்னை யேத்தின வென்று
காசும் பொன்னுங் கலந்து தூவியும்
வழிபடு மொருவன் மஞ்சனத் தியற்றிய
செழுவிதை யெள்ளைத் தின்னக் கண்டு
பிடித்தலு மவனிப் பிறப்புக் கென்ன
இடித்துக் கொண்டவ னெச்சிலை நுகர்ந்தும்
மருத வட்டத் தொருதனிக் கிடந்த
தலையைக் கண்டு தலையுற வணங்கி
உம்மைப் போல வெம்மித் தலையுங்
கிடக்க வேண்டுமென் றடுத்தடுத் திரந்துங்
கோயின் முற்றத்து மீமிசைக் கிடப்ப
வாய்த்த தென்று நாய்க்கட்ட மெடுத்துங்
காம்பவிழ்ந் துதிர்ந்த கனியுருக் கண்டு
வேம்புகட் கெல்லாம் விதான மமைத்தும் வி
ரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று
புரிகுழற் றேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வகுரண தேவரும்"
என்பன.
கி. பி. பத்தாம் நூற்றாண்டில் நம் தமிழகத்தில் வாழ்ந்தவரும் சைவத் திருமுறைகளைத்
தொகுத்தவரு மாகிய நம்பியாண்டார் நம்பி என்னும் பெரியார் தாம் பாடிய கோயிற்றிருப்பண்ணியர் விருத்தத்தில்,
"பொடியேர் தருமே னிபனாகிப் பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயிற் கருவியில்லார்
அடியே படவமை யுங்கணை யென்ற வரகுணன்றன்
முடியே தருகழ லம்பலத் தாடிதன் மொய்கழலே"
என்று இவன் சிவபெருமான்பால் வைத்திருந்த பேரன் பினைப் புகழ்ந்து கூறியுள்ளார். இதனாலும் இவன் சிவ பக்தியின் மாட்சியை நன்குணரலாம்.
திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள அம்பாசமுத்திரம்[32], தளபதிசமுத்திரம்[33]", கழுகுமலை[34] ஏர்வாடி[35]' என்ற ஊர்களில் இவனது ஆட்சியின் 39, 41, 42, 43 ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. எனவே, இவன் நாற்பத்துமூன்று ஆண்டு ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, கி.பி. 792 இல் முடிசூடிய இவ் வேந்தன் கி.பி. 835 ஆம் ஆண்டில் இறைவன் திரு வடியை எய்தியிருத்தல் வேண்டும்; இவனை முதல் வரகுண பாண்டியன் என்று வரலாற் றாராய்ச்சியாளர் கூறுவர்.
---
[32]. Ins. 104 of 1905. [33]. Ins. 12 of 1928-29.
[34]. Ins. 863 of 1917. [35]. Ins.105 of 1915.
----
இனி, நெடுஞ்சடையன் பராந்தகனும் இவ் வரகுண மகாராசனும் ஒருவனா யிருத்தல் வேண்டும் என்பது சில அறிஞர்களது கொள்கை[36]. அஃது எவ்வாற்றானும் பொருந்துவதன்று. நெடுஞ்சடையன் பராந்தகன் பரம் வைணவன் என்பது அவனுடைய வேள்விக்குடிச் செப் பேடுகளாலும் சீவரமங்கலச் செப்பேடுகளாலும் உறுதி யெய்துகின்றது. வரகுண மகாராசன் பரம் சைவன் என்பது திருச்சிராப்பள்ளி, அம்பாசமுத்திரம் முதலான ஊர்களிலுள்ள கல்வெட்டுக்களாலும் மணிவாசகப்பெரு மான், பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பி ஆகிய சைவப் பெரியோர்களின் அருட்பாடல்களாலும் நன்கு அறியப்படுகின்றது.
---
[36]. The Pandyan Kingdom, PP. 40 and 41.
நெடுஞ்சடையன் பராந்தகனுடைய சிறப்புப் பெயர்கள் பலவற்றையும் எடுத்துரைக்கும் அவனுடைய செப்பேடுகள் வரகுணன் என்ற பெயரையே யாண்டும் கூற வில்லை. வரகுண பாண்டியன் கல்வெட்டுக்களில் நெடுஞ் சடையன் பராந்தகனுக்கு வழங்கிய பல சிறப்புப் பெயர்களுள் ஒன்றாவது காணப்படவில்லை. இந்நிலையில் இவ் விரு வேந்தரும் ஒருவனாதல் எங்ஙனம்?
வரகுண மகாராசனுடைய பேரன்மார் இருவரும் வரகுணன், பராந்தகன் என்ற
பெயர்களையுடையவர் களாயிருத்தல் உண்மையே. அதனால் நெடுஞ்சடையன் பராந்தகனையும் வரகுண பாண்டியனையும் ஒருவனெனக் கோடல் எவ்வாறு ஏற்புடையதாகும்? பாட்டன் பெய ரையேயன்றி முன்னோர்களின் பெயரையும் மக்கட்கு இட்டு வழங்குவது தொன்றுரெ தட்டு வரும் வழக்க மன்றோ? பேரன்மார் பலராயின் அவரெல்லோர்க்கும் பாட்டன் பெயரிடுதல் வழக்க முமன்று. ஆகவே, நெடுஞ் சடையன் பாரந்தகனும் வரகுண மகாராசனும் ஒருவராகார் என்பதும் வெவ்வேறு வேந்தரேயாவர் என்பதும் முன்னவனுக்குப் பின்னவன் பேரன் ஆவன் என்பதும் அறியற்பாலனவாம்.
சீமாறன் சீவல்லபன்:-முதல் வரகுணபாண்டியன் இறந்த பின்னர், அவன் மகனாகிய இம்மன்னன் கி. பி. 835 ஆம் ஆண்டில் முடி சூடி ஆட்சிபுரியத் தொடங்கி னான். இவனைச் சடையமாறன் என்று கூறுவர். இவன் மாறவர்மன் என்னும் பட்டம் உடையவன். இவனுக்கு ஏகவீரன், பரசக்கரகோலாகலன், அவனிப சேகரன் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. புதுக்கோட்டை நாட்டிலுள்ள சிற்றண்ணல் வாயிலில் சமணரது குகைக்கோயிலில் காணப் படும் கல்வெட்டொன்று[37], 'பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல்-ஆர்கெழு வைவேல் அவனிபசேகரன்-சீர்கெழு செங்கோல் சீவல்லபன்' என்று இவனைப் புகழ்ந்து கூறு கின்றது. இவன் வரலாறு சின்னமனூர்ச் செப்பேடுகளாலும், தளவாய்புரச் செப்பேடுகளாலும் சில கல்வெட்டுக் களாலுமே அறியப்படுகின்றது.
---
[37]. Ins.368 of 1904; சாசனத் தமிழ்க்கவி சரிதம், பக். 32.
இவ்வேந்தன், குண்ணூர், சிங்களம், விழிஞம் என்னும் இடங்களில் போர் நிகழ்த்தி வாகை சூடினன் என்றும், குடமூக்கில் வந்தெதிர்த்த கங்கர், பல்லவர், சோழர், காலிங்கர், மாகதர் ஆகிய அரசர்களை வென்று ஆற்றலோடு விளங்கினன் என்றும் சின்னமனூர்ச் செப் பேடுகள் உணர்த்துகின்றன. ஈண்டுக் குறிக்கப்பெற்ற இடங்களுள் விழிஞம் என்பது திருவனந்தபுரத்திற்குத் தெற்கே பத்து மைல் தூரத்தில் மேலைக் கடற்கரையி லுள்ள ஒரு பட்டினமாகும்[38]. எனவே, விழிஞத்துப் போரில் இவன் சேரனை வென்றிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். விழிஞத்துப் போரில் சேரமன்னன் தோல்வியுற்று உயிரிழந்திருத்தல் வேண்டுமென்பது 'விண்ணாள வில்லவற்கு விழிஞத்து விடைகொடுத்தும் என்ற தளவாய்புரச் செப்பேட்டுப் பகுதியால் அறியக் கிடக்கின்றது. சேரமன்னன் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை. குண்ணூரில் இவன் யாரோடு போர்புரிந் தான் என்பதும் தெரியவில்லை.
----
[38]. S. I. I., Vol. III. P. 13.
ஈழநாட்டில் முதல்சேனன் (கி. பி. 831-851) ஆட்சி புரிந்துகொண்டிருந்த காலத்தில் இப்பாண்டி வேந்தன் அந்நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று, பல நகரங் களைக் கொள்ளையிட்டு, புத்த விகாரங்களிலிருந்த பொற் படிமங்களையும் விலையுயர்ந்த பிற பொருள்களையும் கைப் யற்றி வந்தனன் என்றும் அதனால் சிங்களதேயம் தன் செல்வமெல்லாம் இழந்து சிறுமையுற்ற தென்றும் மகா வம்சம் என்னும் இலங்கை வரலாறு கூறுகின்றது. அந் நாட்களில், சிங்கள மன்னன் பேராற்றல் படைத்த பாண்டிப் படையோடு போர்புரிய முடியாமல் தன் நாட்டை விட்டு மலேயாவிற்கு ஓடிவிட்டான் என்றும் இளவரச னாகிய மகிந்தன் உயிர் துறந்தான் என்றும் காசபன் என்பான் போர்க்களத்தை விட்டோடிப் போயினான் என்றும் தெரிகின்றன[39]. பிறகு, இவன் தன்னைப் பணிந்து உடன்படிக்கை செய்துகொண்ட முதல் சேனனுக்கு அந் நாட்டை வழங்கினான். ஆகவே, சீவல்லபன் சிங்களத்தை வென்றானென்று சின்னமனூர்ச் செப்பேடுகள் உணர்த்து வது உண்மையாதல் காண்க[40]. இச்செய்தி இவன் புதல் வன் பராந்தக பாண்டியன் வெளியிட்ட செப்பேடுகளாலும் உறுதி யெய்துகின்றது.
----
[39]. The Pandyan Kingdom. P. 69. [40]. "குரைகடலீழங் கொண்டும்''
முதல் சேனனுக்குப் பின்னர் ஈழகாட்டில் முடி சூடிய இரண்டாம் சேனன் என்பான் (851-885) சீவல்லபனுக்குத் தாயத்தினன் என்று கூறிக்கொண்டு இவனோடு முரண்பட்டிருந்த மாய பாண்டியனைத் தன்னுடன் சேர்த்து கொண்டு பாண்டி நாட்டின்மேல் படை யெடுத்து வந்தான். நம் சீவல்லபன் அன்னோர் இரு வரையும் ஒருங்கே போரிற் புறங்கண்டு பாண்டி நாட்டை விட்டு ஓடுமாறு செய்தனன். இப் போர் நிகழ்ச்சியைப் பற்றி மகாவம்சம் கூறுவன எல்லாம் வெறும் புனைந் துரைகளேயன்றி உண்மைச்
செய்திகள் ஆகமாட்டா. எனவே, சிங்கள மன்னனுடைய பாண்டி நாட்டுப் படையெடுப்பில் வெற்றிபெற்றவன் சீவல்லபனே என்பது தேற்றம்.
இனி, இவ் வேந்தன் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த போர்களுள் இவன் பல்லவருடன் நடத்திய போர்கள் நான்காகும். அவை, ஆனூர்ப் போர், தெள்ளாற்றுப் போர், குடமூக்குப் போர், அரிசிற்கரைப் போர் என்பன. அவற்றுள் தெள்ளாற்றுப் போர்[42], பாண்டியர் ஆட்சிக்குட்பட்டிருந்த தொண்டைமண்டலத்தின் தென் பகுதியைக் கைப்பற்றும் பொருட்டுப் பல்லவ வேந்த னாகிய மூன்றாம் நந்திவர்மன் என்பான் சீவல்லபனோடு கி.பி.854 ஆம் ஆண்டில் நடத்திய போராகும். இப் போரில் நந்திவர்மன் வெற்றி எய்தினன் என்பது அவன் 'தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன்' என்று
என்று கல்வெட்டுக்களில் குறிக்கப் பட்டிருத்தலால் நன்குணரக் கிடக்கின் றது. அன்றியும், திருச்சிராப்பள்ளி ஜில்லா சென்னி வாய்க்காலிலுள்ள கல்வெட்டொன்று[43] 'தெள்ளாற் றெறிந்து ராஜ்யமுங் கொண்ட நந்திபோத்தரையர் என்று கூறுவதால், அவன் தன் தந்தை பாண்டியரிடம் இழந்த தொண்டைமண்டலத்தின் தென்பகுதியைக் கைப்பற்றியிருத்தல்வேண்டும் என்பது புலனாகின்றது. ஆகவே, தெள்ளாற்றுப் போரில் தோல்வியுற்ற சீவல்ல பன் தொண்டைநாட்டில் தன் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதியை இழந்துவிட்டமை தெள்ளிது. பல்லவ வேந்த னுக்கும் ஸ்ரீமாறனுக்கும் ஆனூர் என்னுமிடத்தில் போர் நிகழ்ந்ததென்றும் அதில் பல்லவ வேந்தன் தோல்வி யுற்றான் என்றும் தளவாய்புரச் செப்பேடுகள் கூறுகின்றன[44].
----
[42]. தெள்ளாறு என்பது வட ஆர்க்காடு ஜில்லா வந்தவாசித் தாலூகாவில் உள்ளதோர் ஊராகும். கொங்கு நாட்டில் நொய்யல் ஆற்றைச் சார்ந்துள்ள ஆணூரே ஆனூராகலாம்.
ஆனூர் - ஆணூர்-கொங்கு நாட்டில் நொய்யல் ஆற்றைச் சார்ந்துள்ளது. பெருந்தொகை பக்கம் 612
[43]. S. I. I., Vol. XII. D. No. 56
[44]. " காடவருக் கடலானூர்ப் பீடழியப் பின்னின்றும்'' பா5
சில ஆண்டுகட்குப் பிறகு குடமூக்குப் போர் நிகழ்ந்தது. குடமூக்கு என்பது இந்நாளில் கும்பகோணம் என்று வழங்கும் நகரமாகும். கும்பகோணத்திலுள்ள கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்களும் சைவ சமய குரவர்கள் திருப்பாடல்களும் அந் நகரைக் குட மூக்கு என்றே கூறுகின்றன. சீவல்லபன் தெள்ளாற் றெறிந்த நந்திவர்மனையும் அவனுக்கு உதவி புரியவந்த கங்கர், சோழர், காலிங்கர், மாகதர் ஆகியோரையும் குட மூக்குப் போரில் புறங்காட்டி ஓடும்படி செய்து தன் பெருஞ்சினத்தை ஒருவாறு தணித்துக்கொண்டான். பாண்டி வேந்தன் இப் போரில் வெற்றிபெற்ற செய்தி, தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் மகனாகிய நிருபதுங்க வர்மனுடைய வாகூர்ச் செப்பேடுகளிலும்[45], இவன் இரண்டாவது புதல்வன் பராந்தக பாண்டியன் வெளி யிட்ட தளவாய்புரச் செப்பேடுகளிலும்[46] சொல்லப்பட் டுள்ளது. இதில் குறிக்கப்பெற்ற அமர்வல்லான் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை.
பிறகு, இவனது ஆட்சியின் இறுதிக்காலத்தேதான் அரிசிற்கரைப் போர் நடைபெற்றது. இப்போர், கும்ப கோணத்திற்குத் தென்புறமாக ஓடிக் காரைக்காலுக்கு அண்மையில் கடலில் கலக்கும் அரிசிலாற்றின் கரையில் ஓர் இடத்தில் நம் சீவல்லபனுக்கும் பல்லவ அரசனாகிய நிருபதுங்கவர்மனுக்கும் நிகழ்ந்ததாகும். இதில் சொல் லப்பட்ட அரிசிலாற்றங்கரை, கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே நான்கு மைல் தூரத்தில் அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள அரிசிற் கரைப்புத்தூராயிருப்பினும் இருக்கலாம்.
இப்போரில் நிருபதுங்கவர்மன் வெற்றி எய்தவே, சீவல்லபன் தோல்வியுற்றனன். இச் செய்தி நிருபதுங்கவர்மன் வாகூர்ச் செப்பேடுகளிலும் காணப்படுகின்றது. இந்நிகழ்ச்சியினால் சோணாட்டின் வட பகுதி, பல்லவர் ஆட்சிக் குள்ளாயிற்று என்று தெரிகிறது[47].
இவன் தன்னுடைய இறுதிக்காலத்தில் சிங்களமன் னன் இரண்டாம் சேனன் (கி.பி. 851-885) பாண்டிய நாட்டின்மேல் படையெடுத்து வந்தனனென்றும் நிகழ்ந்த போரில் ஸ்ரீமாறன் தோல்வியுற்றதோடு உயிரையும் இழந்தானென்றும் வெற்றி யெய்திய சிங்களப் படைத் தலைவன் ஸ்ரீமாறனுடைய புதல்வன் வரகுணனுக்கு முடி சூட்டினான் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்[48]. 'பராந்தக பாண்டியன் செப்பேடுகள் இவன் பேராற்றல் காட் டிப் போர்புரிந்து போர்க்களத்தில் உயிர் துறந்தான் என்று கூறுகின்றன[49].
[45]. EP. Ind., Vol. XVIII, No. 2,
[46]. "குடகுட்டுவர் குணசோழர் தென் கொங்கர் வடபுலவர்,
அடலழிந்து களஞ்சேர அமர்வல்லான் மகன்பட "
[47]. லால்குடி,கண்டியூர், திருச்சின்னம்பூண்டி, திருக்கோடிகா முதலான ஊர்களில் நிருபதுங்கன் ஆட்சிக்காலத்துக் கல்வெட்டுக் கள் காணப்படுவதால் இச் செய்தி உறுதியாதல் உணர்க.
[48]. A History of South India, K. A. N. (Third Edition 1966) Page 160.
[49] " ஒளி நிலை வேலது பாயபகு... லன் உம்பால்வான் உல கணைந்தபின்"
பாண்டியர் ஆட்சிக்குட்பட்டிருந்த சோழநாட்டின் வடபகுதியிலுள்ள சில ஊர்களில் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் கல்வெட்டுக்களும் நிருபதுங்கவர்மன் கல் வெட்டுக்களும் காணப்படுவதால் சோழநாட்டில் எல்லைப் புறங்களில் பாண்டியர்க்கும் பல்லவர்க்கும் பல போர்கள் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பதும், அவற்றுள் சில வற்றில் பாண்டியரும் சிலவற்றில் பல்லவரும் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் என்பதும் உய்த்துணரக் கிடக்கின்றன. ஆகவே, சீவல்லபனுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறிக் கிடைத்துள்ளன எனலாம். எனினும் இவன் பேராற்றல் படைத்த பெருவேந்தன் என்பதில் ஐயமில்லை.
இவன் மயிலையிலிருந்த பொத்தப்பிச் சோழன் ஸ்ரீகண்டராஜன் என்பானோடு நட்புக் கொண்டிருந்தான். அவன் மகள் அக்களநிம்மடி என்பாள் இவன் அரசி யருள் ஒருத்தியாவள். அவள் புதல்வனே ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பாண்டிய நாட்டை ஆண்ட பராந்தக பாண்டியனாவன்[50]. இவன் தன் தந்தையிடம் பெற்று ஆட்சிபுரிந்துவந்த பாண்டிய இராச்சியத்தைப் பல இன் னல்களுக்கிடையில் அஞ்சாமல் காத்துவந்தமையும் இறுதியில் ஊழ்வலியால் போர்க்களத்தில் தோல்வியுற்று உயிர் துறந்தமையும் அறியத்தக்கது. இவன் கி.பி. 862 ஆம் ஆண்டில் இறந்திருத்தல் வேண்டும் என்பது ஐவர் மலையிலுள்ள ஒரு கல்வெட்டால் புலனாகின்றது[51]. இவனுடைய முதல் மகன் வரகுணவர்மன் ஆவன்.
[50]."..... மயிலையர்கோன் பொத்தப்பிக் குலச்சோழன் புகழ் தருசிரீ கண்டராசன் மத்தமா மலைவளவன் மதிமகளக் களநிம்மடி திருவயிறு கருவுயிர்த்த ஸ்ரீ பராந்தக மகாராஜன் (பராந்தக பாண்டியன் செப்பேடுகள்.)
[51]. Ins 705 of 1905.
----------
இவன் சிறப்புப்பெயரால் அவனிப சேகரமங்கலம் என்னும் ஊர் ஒன்று திருச்செந்தூர்க் கண்மையில் இருந்தது என்பது அவ்வூர்க் கல்வெட்டொன்றால் அறியப்படுகின்றது[52].
இவன் ஆட்சிக்காலத்தில் ‘அவனிப சேகரன் கோளகை' என்னும் பொற்காசு ஒன்று பாண்டி நாட்டில் நாணயமாக வழங்கியது என்று தெரிகிறது[53].
----
[52]. EP. Ind., Vol. XXI, No. 17.
[53]. Annual Report on South Indian Epigraphy for 19. 29-30, Part II. Part 4.
Indian Antiquary, Vol. XXI. P, 323.
எட்டி சாத்தன் :-இவ் வேந்தன் ஆட்சியில் நிலவிய அரசியல் அதிகாரிகளுள் எட்டிசாத்தன் என்பான். பெரும்புகழ் படைத்த தலைவன் ஆவன். இவன் சங்கப் புலவர் ஒருவர் வழியில் தோன்றியவன். இவன் சாத்தன் என்ற இயற்பெயரும் எட்டி என்னும் சிறப்புப்பெயரும் உடையவனா யிருத்தலை நோக்குமிடத்து, இவனுடைய முன்னோராகக் கூறப்படும் சங்கப்புலவர் மணிமேகலையின் ஆசிரியராகிய ய கூலவாணிகன். சாத்தனாரா யிருத்தல் கூடுமோ என்ற ஐயம் நிகழ்கின்றது. இத்தலைவன் தென் பாண்டிநாட்டில் செய்துள்ள பெருந் தொண்டுகளும் அறங்களும் பலவாகும். இவனுக்கு இருப்பைக்குடி கிழவன் என்னும் பட்டம் பாண்டி வேந்தனால் வழங்கப் பெற்றிருத்தல் அறியத்தக்கது. இவன் முதலூர், தென் வெளியங்குடி என்னும் ஊர்களில் இரு சிவன் கோயில்களும் இருப்பைக்குடியில் ஓர் அமண்பள்ளியும் அமைத்துள்ளனன். எனவே இவனது சமயப் பொறை பெரிதும் போற்றத்தக்கதாகும்.
தென் வெளியங்குடி, கும்மண மங்கலம் என்ற ஊர்களில் இவன் தன் சிறப்புப் பெயர் என்றும் நின்று நிலவுமாறு கிழவன் ஏரி என்னும் பெயருடைய இரண்டு ஏரிகள் வெட்டியுள்ளனன்.மற்றும் இவன் வெட்டியுள்ள ஏரிகளும், குளங்களும், கால்வாய்களும்
இராமநாதபுரம் ஜில்லா சாத்தூர்த் தாலுகாவிலுள்ள எருக்கங்குடிக் குன்றில் காணப்படும் அகவல் நடையில் அமைந்த கல்வெட்டொன்றில்[54] குறிக்கப்பட்டுள்ளன. இவன், பல நீர்நிலைகளால் வளம்படச் செய்த அந் நிலப்பரப்பு இருஞ்சோழநாடு என்னும் பெயருடைய தாய்ச் சிறப்புற்றிருந்தமை உணரற்பாலதாம். இத்தலைவன் சத்துருபயங்கர முத்தரையன், [55]சோழநாட்டு ஆலங்குடியைச் சேர்ந்தவன்; இவன் அரசியார் திருமாலிருஞ்சோலையிலுள்ள திருமால் கோயிலில் திருவிளக்கு வைப்பதற்கு ஆக இருபத்தைந்து ஆடுகள் வைத்துள்ளனள்.
வரகுணவர்மன் :-இவன் சீமாறன் சீவல்லபனுடைய முதல் மகன் ஆவன்; சடையவர்மன் என்னும் பட்டமுடையவன். இவனை இரண்டாம் வரகுணபாண்டி யன் என்றும் கூறுவதுண்டு. இவனது ஆட்சியில் எட்டாம் ஆண்டாகிய சகம் 792 இல் வரையப்பெற்ற கல்வெட்டொன்று[56] மதுரை ஜில்லாவிலுள்ள ஐவர்மலையில் உள்ளது. அக்கல்வெட்டு கி. பி. 870 இல் பொறிக்கப் பெற்றதாதல் வேண்டும். எனவே, இவ் வேந்தன் கி.பி. 862 ஆம் ஆண்டில் முடிசூட்டப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவனைக் 'குரைகழற்கா லரை- சிறைஞ்சக் குவலய தலந் தனதாக்கின - வரை புரையு மணிநெடுந்தோள் மன்னர்கோன் வரகுணவர்மன்’ என்று சின்னமனூர்ச் செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன. பாண்டியர்க்கும் பல்லவர்க்கும் நடைபெற்று வந்த போர்கள் இவன் ஆட்சிக்-காலத்தில்தான் ஒருவாறு முடிவுற்றன எனலாம்.
[54]. Annual Report on Soutn Indian Epigraphy for 1929-30, page 73. SII Vol XIV No. 44
[55]. SII vol XIV No 71
[56]. Ins. 705 of 1095.
----
தென்னாற்காடு ஜில்லா திருவதிகை வீரட்டானத்தி லுள்ள நிருபதுங்கவர்மனது பதினெட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றால்[57] அப்பல்லவ வேந்தனும் இவ் வரகுணபாண்டியனும் நண்பர்களா யிருந்தனர் என்று தெரிகிறது. அப்பல்லவ மன்னன் இறந்த பின்னர், அவன் மகன் அபராஜிதவர்மன் ஆட்சிபுரிந்து கொண் டிருந்த காலத்தில், நம் வரகுணவர்மனுக்குத் தன் தந்தை இழந்த சோழநாட்டையும் தொண்டைநாட்டையும் கைப்பற்றவேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. அதற்கேற்ப அக்காலத்தில் சோழநாட்டில் ஒரு பகுதியை அரசாண்டுகொண்டிருந்த விசயாலய சோழனும் முதுமை யெய்தித் தளர்ச்சி யுற்றிருந்தான். பாண்டிவேந்தனும் தன் கருத்தை நிறைவேற்றிக் கோடற்கு உரிய காலம் அதுவே என்று கருதி கி.பி. 880 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெரும்படையுடன் சோணாட்டிற் புகுந்து, அம் மண்டலத் தில் காவிரியாற்றிற்கு வடக்கேயுள்ள மண்ணி நாட்டி லிருந்த இடவை என்ற நகரைக் கைப்பற்றினான். அந் நாட்களில் இளவரசனாயிருந்த ஆதித்த சோழன் இப் பாண்டியனை எதிர்த்துப் போர்புரிந்தும் வெற்றிபெற இயலவில்லை. எனவே, இடவை நகரும் அதனைச் சூழ்ந்த நிலப்பரப்பும் வரகுணவர்மன் ஆட்சிக்குள்ளாயின.
இவன் சோணாட்டு இடவைமீது படையெடுத்த செய்தி திண்டுக்கல்லுக் கண்மை-யிலுள்ள இராமநாதபுரத்தில் காணப்படும் ஒரு கல்வெட்டால்[58] அறியப்படுகிறது. இடவை நகரில் இவன் பாட்டன் முதல் வரகுணபாண்டியன் கட்டிய பாண்டியரது அரண்மனை இருந்த காரணம் பற்றியே இவன் முதலில் அதன்மீது படையெடுத்துச் சென்று, அதனையும், அதனைச் சூழ்ந்த பகுதியையும் கைப்பற்றிக்கொண்டனன் என்க. இவ்வாறு பாண்டி வேந்தன் சோழ நாட்டில் ஒரு பகுதியைக் கைப்பற்றித் தன் ஆட்சிக்குள்ளாக்கியதை யுணர்ந்த பல்லவ மன்ன னாகிய அபராஜிதவர்மன் என்பான், சில திங்கள்களில் தன் படையைத் திரட்டிக்கொண்டு பாண்டியனை எதிர்த் துப் போர்புரிய ஆதித்த சோழனோடு புறப்பட்டான். அந்நாட்களில் கங்கநாட்டரசனாகிய முதல் பிருதிவிபதியும் தன் நண்பனாகிய அபராஜிதவர்மனுக்கு உதவிபுரிய வேண்டிப் பெரும்படையுடன் சோணாட்டிற்கு விரைந்து வந்தனன். ஆகவே, பல்லவன், சோழன், கங்கன் ஆகிய மூவரும் சேர்ந்து வரகுணவர்மனை எதிர்த்துப் பொருத னர். அப்போது இடவையிலும் அதனைச் சார்ந்த ஊர் களிலும் போர்கள் நிகழ்ந்தன.
----
[57]. S. I. I., VOI- XII, NO 71.
[58]. Ins. 690 of 1905.
இறுதியில் கும்பகோணத்திற்கு வடமேற்கே ஐந்து மைல் தூரத்தில் மண்ணியாற்றங் கரையிலுள்ள திருப்புறம்பயத்தில் கி.பி. 880 ஆம் ஆண்டில் ஒரு பெரும்போர் நடைபெற்றது. பல்லவ அரசனுக்கு உதவி புரியும் பொருட்டுத் துணைப்படையுடன் வந்து
வந்து பெரு வீரத்துடன் போர்புரிந்த கங்க மன்னனாகிய முதல் பிருதிவிபதி என்பான் இப் போரில் கொல்லப்பட்டான்[59]. எனினும், வரகுணபாண்டியன் தோல்வி யெய்திச் சோழ நாட்டில் தான் கைப்பற்றியிருந்த பகுதியை விட்டுவிட்டுப் போகும்படி நேர்ந்தது. அபராஜிதவர்மனும் ஆதித்த சோழனும் போரில் வெற்றிபெற்று வாகை சூடினர். இப் போரின் பயனாக ஆதித்த சோழனுக்குச் சோணாடு முழுமையும் ஆட்சிபுரியும் தனி உரிமை கிடைத்தது. இப் போர் நிகழ்ச்சியினால் பாண்டியரது முதற் பேரரசின் வலிமை குன்றியது ; வெற்றிபெற்ற அபராஜிதன் படைப் பெருக்கம் சுருங்கிவிட்டமையின் பல்லவரது பேரரசின் வலிமையும் குறைந்துபோயிற்று; பரகேசரி விசயாலயன் புதல்வனாகிய இராஜகேசரி ஆதித்த சோழன் தஞ்சை மாநகரில் முடிசூடி, சோழ மண்டலம் முழுமையும் ஆட்சி புரியும் பெருமை எய்தினான். சோழமண்டலத்தில் பாண்டியரது ஆட்சியும் பல்லவரது ஆட்சியும் ஒருங்கே ஒழி தற்கும், சோழரது ஆட்சி மீண்டும் நிலைபெறுதற்கும் காரணமாயிருந்த இத் திருப்புறம் பயப் பெரும் போர் தமிழக வரலாற்றில் குறித்தற்குரிய ஒரு பெரிய நிகழ்ச்சி யாகும்.
---
[59]. S. I I. Vol. II, No. 76. Verse 18.
இப்போரில் இறந்த முதல் பிருதிவிபதியின் நடு கற்கோயில் ஒன்றும், உதிரப்பட்டி என்னும் பெயருடைய நிலப்பரப்பும், கச்சியாண்டவன் கோயில் என்ற நடுகற் கோயிலும் திருப்புறம்பயத்தில் இன்றும் உள்ளன
கச்சியாண்டவன் கோயில் என்பது போரில் இறந்த ஒரு பல்லவ அரசனது நடுகல் இருந்த இடமாயிருத்தல் வேண்டும். அப்பல்லவன் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை. ஆயினும், இவையெல்லாம் முற்காலத்தில் அங்கு நடைபெற்ற பெரும்போரை இக்காலத்தினர்க்கு உணர்த்தும் அடையாளங்கள் என்பது அறியற் பாலதாம்.
இப்போர் நிகழ்ச்சிக்குப் பிறகு இவ் வேந்தன் பாண்டி நாட்டில் எத்தனை யாண்டுகள் ஆட்சிபுரிந்தனன் என்பது இப்போது புலப்படவில்லை. இவனுடைய இறு திக்காலத்தில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரில் இவன் தம்பி பராந்தகபாண்டியன் வெற்றியடைந்து தன் தமையனை அரியணையி லிருந்து நீக்கிவிட்டுத் தானே அர சாளத் தொடங்கிய செய்தி அவனுடைய செப்பேடுகள் வாயிலாக அறியப்படுகின்றது[60].
இவ்வரகுணன் திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள முருகவேள் திருவடிகளில் பெரிதும் ஈடுபாடுடையவன். இவன், அப்பெருமானுக்கு ஆண்டு முழுவதும் நாள் வழி பாடு நடத்துவதற்கு ஆயிரத்து நானூறு பொற்காசுகளை நிவந்தமாக வழங்கி அவற்றைப் பன்னிரண்டு ஊர்களுக் குப் பிரித்துக்கொடுத்து, காசு ஒன்றுக்கு ஆண்டொன் றிற்கு நெற் பொலிசை இரண்டு கலமாக அப்பன்னிரு ஊரினரும் திருச்செந்தூர்க் கோயிலுக்கு இரண்டாயிரத் தெண்ணூறு கல நெல் ஆண்டுதோறும் அளந்துவருமாறு ஏற்பாடு செய்துள்ளனன். இச்செய்தி, நாள்வழிபாட்டுத் திட்டங்களுடன் அக் கோயிலிலுள்ள ஒரு கருங்கற்பாறை யில் இவ் வரகுணபாண்டியனது பதின்மூன்றாம் ஆட்சி யாண்டில் வரையப்பட்டுள்ளது[61]. இவனைப் பற்றிய பிற செய்திகள் இப்போது தெரியவில்லை. இவன் காலத்திலிருந்த அரசியல் தலைவர்களுள் ஒருவனைப்பற்றிச் சில செய்திகள் கிடைத்துள்ளன. அவற்றை அடியிற் காண்க.
----
[60]. "...... முன்பிறந்த வேல் வேந்தனைச் செந்தாமரை மலர்ப் பழனச் செழுநிலத்தைச் செருவென்றும்".
[61]. Ep., Ind. Vol. XXI,No. 17
பராந்தகப் பள்ளிவேளான் நக்கம்புள்ளன் :- இவன் நக்கன் என்பவன் புதல்வன் ; புள்ளன் என்னும் இயற்பெயருடையவன் ; பாண்டியன் வழங்கிய பராந்த கப் பள்ளிவேளான் என்ற பட்டமுடையவன் ; வரகுண வர்மன் இடவைமீது படையெடுத்துச் சென்றபோது படைத்தலைவனா யிருந்து போரில் வெற்றிகண்டவன். இவன், திண்டுக்கல்லுக் கண்மையிலுள்ள இராமநாத புரம் என்னும் ஊரில் பொதுமக்கட்குப் பயன்படுமாறு ஒரு குளம் வெட்டுவித்தான் என்று அவ்வூர்க் கல்வெட் டொன்று உணர்த்துகின்றது[62].
---
[62]. Ins. 690 of 1905
பராந்தக பாண்டியன் :- இவன் சீமாறன் சீவல்ல பனுடைய இரண்டாம் புதல்வன் ஆவன்; சடையவர் மன் என்னும் பட்டம் புனைந்து அரசாண்டவன். இவன் கி.பி.880ஆம் ஆண்டில் அரியணை யேறியவனாதல் வேண்டும். தளவாய்புரச் செப்பேடுகள் எனப்படுபவை இம்மன்னனுடைய ஏழாவது ஆட்சி யாண்டில் வெளியிடப் பட்டவை. அவை இவனுடைய வெற்றிச் செயல்களையும் அறச் செயல்களையும் நிரல்படக் கூறுகின்றன. அப்பகுதி பின்வருமாறு :-
"கொந்தகபூம் பொழிற்குன்றையுங் குடகொங்கி னும் பொக்கரணியும் தென்மாயனுஞ் செழுவெண்கையு பாராந்தகன்னுஞ் சிலைக்கணீர்ந்த மன்மாய மாமிகுத்தவர் வஸ்துவா ஹனங்கொண்டும் ஆறுபல தான்கண்டும் அமராலையம் பலசெய்துஞ் சேறுபடு வியன்கழனித் தென் விழிஞ நகர்கொண்டுங் கொங்கினின்று தேனூரளவும் குடகொங்க ருடல்மடிய வெங்கதிர்வேல் வலங்கொண்டும் வீரதுங்கனைக் குசை கொண்டும் எண்ணிறந்த பிரமதேய மும் எண்ணிறந்த தேவதானமும் எண்ணிறந்த தடாகங் களும் இரு நிலத்தி லியற்றுவித்தும் நிலமோங்கும் புகழா லுந் நிதிவழங்கு கொடையாலும் வென்றிப்போர்த் திரு வாலும் வேல்வேந்தரில் மேம்பட்ட கதிரார்கடுஞ் சுடரிலை வேல் கலிப்பகை கண்டகோன்.'[63]
---
[63]. சேரருக்குரிய விழிஞத்தை இவன் கைப்பற்றியது இதனால் வெளியாகின்றது. இதில் கூறப்பட்டுள்ள வீரதுங்கன் யாவன் என்று இப்போது அறியக்கூடவில்லை.
----
சின்னமனூர்ச் செப்பேடுகளும் இவ் வேந்தன் கரகிரியில் உக்கிரனைப் போரில் வென்று அவனையும் அவன் களிற்றினங்களையும் கைப் பற்றிக்கொண்டான் என்றும், பெண்ணாகட நகரை அழித்தான் என்றும் கொங்கர்களைப் போரில் வென்று வாகை சூடினான் என் றும், பல தேவதானங்களும் பிரமதேயங்களும் பள்ளிச் சந்தங்களும் அளித்துப் புகழெய்தினான் என்றும் கூறு கின்றன. பாண்டியர்க்குத் திறை செலுத்தி வந்த கொங்கு நாட்டரசன் முரண்பட்ட காரணம்பற்றி இவன் கொங்கர் களோடு போர் புரிந்திருத்தல் வேண்டும். இவன் பெண்ணாகடத்தை அழித்தமைக்குக் காரணம் யாது என்பது இப்போது புலப்படவில்லை. கரகிரி என்பது கரவந்தபுரமா யிருத்தல் வேண்டும். அவ்வூர் உக்கிரன் கோட்டை என்னும் பெயருடன் தென்பாண்டி நாட்டில் திருநெல்வேலித் தாலூகாவில் இந்நாளில் உள்ளது. அவ் வூரில் நெடுஞ்சடையன் பராந்தகன் ஒரு பெருங் கோட்டை அமைத்திருந்தனன் என்பதும், அவ் வேந்த னுடைய அமைச்சர்களும் மாசாமந்தரும் பிறந்த இடம் அவ்வூரேயாம் என்பதும் பிறவும் முன்னர் விளக்கப்பட்டுள்ளன.
அவ்வூர் உக்கிரன் கோட்டை என்று வழங்கப் பெற்று வருவதற்குக் காரணம் அங்கிருந்த தலைவன் ஒருவன் உக்கிரன் என்ற பெயருடையவனா யிருந்திருத்தல் வேண்டும். அவனும் இப்பராந்தகன் ஆட்சிக்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும். அத்தலைவன் இவ்வேந்தனோடு முரணிச் சில அடாச்செயல்கள் புரிந்திருத்தல் கூடும். அதுபற்றியே, இப்பாண்டி மன்னன் அவ்வுக்கிரனோடு போர்புரிந்து அவனையும் அவன் களிற்றினங்களையும் கைப்பற்றிக்கொணர்ந் தனனா தல் வேண்டும். கரவந்தபுரம் என்னும் ஊரின் பழைய பெயர் மறைந்து அவ்வூர் உக்கிரன்கோட்டை என்று அத்தலைவன் பெயரால் பிற் காலத்தில் வழங்கப் பெற்று வருதலை நோக்குமிடத்து, தோல்வியுற்றுச் சிறைபிடிக்கப்பட்ட அத்தலைவன், பாண்டியனைப் பணிந்து மீண்டும் அக்கோட்டையைப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு தெளியப்படும். இக்காலத்தும் அவ்வூர் உக்கிரன் கோட்டை என்று வழங் கப்பட்டு வருதல் அறியத்தக்கது. அவ்வூரில் இம் மன்ன னுக்கு அரண்மனையொன்று இருந்தது என்று தெரிகிறது.
இனி, இவன் தமையன் வரகுணவர்மனும் இவனும் ஒருவனுக்குப்பின் ஒருவன் ஆட்சிபுரிந்தும் இருவரும் சடையவர்மன் என்றே பட்டம் புனைந்து கொண்டிருத் தல் குறிப்பிடத்தக்க தொன்றாம். இது, சோழமன்னர்கள் பின்பற்றிய முறைக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். அவர்களுள், உடன்பிறந்தோர் ஒருவர்பின் ஒருவர் ஆண்ட காலத்தும் இராசகேசரி, பரகேசரி என்ற பட்டங் களை மாறிமாறிப் புனைந்து கொண்டமை உணரற்பால தாம்.
இவனுக்கு வீரநாராயணன் என்ற சிறப்புப் பெயர் அந்நாளில் வழங்கியது என்று தெரிகிறது. இவனுடைய செப்பேடுகளில் இவனுக்கு அக்காலத்தில் வழங்கிய பல சிறப்புப் பெயர்கள் காணப்படுகின்றன. அவை கலிப் பகை கண்டகோன், மதுராபுர பரமேஸ்வரன்; மாநிநீ மகரகேதான்மன், வசுதாதிப வாசுதேவன், அசலாசலன், நவர்ஜ்யன், கூடற்கோன், குருசரிதன், செந்தமிழ்க் கோன், ஸ்ரீநிகேதனன் என்பனவாம். இவனுடைய பட்டத்தரசி வானவன் மாதேவி என்பாள். இவ்வரசி, சேரமன்னன் மகள்
மகள் ஆவள். திருநெல்வேலி ஜில்லாவி லுள்ள சேர்மாதேவி என்னும் நகர் இவ்வரசியின் பெய ரால் அமைக்கப் பெற்றதேயாம். பராந்தக பாண்டியற்கு இப் பட்டத்தரசியின்பால் பிறந்த புதல்வனே மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் ஆவன். கி.பி. 900 க்கு அணித்
ஆவன்.கி.பி.900 தாக இப் பராந்தகன் இறந்தனன் என்று தெரிகிறது. எனவே, சற்றேறக்குறைய இருபது ஆண்டுகள் வரையில் இவன் ஆட்சிபுரிந் தனனாதல் வேண்டும்.
---------------
6. கி.பி. 900 முதல் கி. பி. 1190 வரையில் ஆண்ட பாண்டியர்கள்
மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் :- இவ்வேந் தன் சடையவர்மன் பராந்தகனுடைய புதல்வன்; சடையன், மாறன், இராசசிகாமணி, சீகாந்தன், மந்தர கௌரவ மேரு முதலான பட்டங்களை யுடையவன்; 'எண்ணிறந்த பிரமதேயமும் எண்ணிறந்த தேவதானமும் - எண்ணி றந்த பள்ளிச் சந்தமும் எத்திசையும் இனிதியற்றிப் புகழ்பெற்றவன். இவன் கி.பி.900 த்தில் பட்டம் எய்தி யவன் ஆவன். இம்மன்னனது பதினாறாம் ஆட்சியாண்டில் வரைந்து அளிக்கப்பெற்றனவே சின்னமனூர்ச் செப்பேடுகள்[1] என்பது உணரற்பாலது. இக்காலத்தில் சின்ன மனூர் என்று வழங்கும் நற்செய்கைப் புத்தூர்க்கு மந்தர கௌரவ மங்கலம் எனப் பெயரிட்டு அதனை இவ்வரசன் ஓர் அந்தணர்க்குப் பிரமதேயமாக வழங்கிய செய்தியையும் இவ்வேந்தற்கு முன்னர்ப் பாண்டி நாட்டில் ஆட்சிபுரிந்த பாண்டிமன்னர் சிலர் வரலாறுகளையும் அத்தொல்குடி யின் பண்டைப் பெருமைகளையும் அச்செப்பேடுகள் நன்கு அறிவிப்பனவாகும். எனவே, கி.பி. எட்டு, ஒன்புதாம் நூற்றாண்டுகளில் அரசாண்ட பாண்டி வேந்தர்களின் வரலாறுகளை அறிந்து கோடற்கு அச் செப்பேடுகள் சிறந்த ஆதாரங்களாக இருப்பது வரலாற்றாராய்ச்சியாளர் பலரும் உணர்ந்ததோர் உண்மையாகும்.
[1]. South Indian Inscriptions, Vol. III, No. 206.
இவன் உலப்பிலிமங்கலத்தில் தன்னை எதிர்த்த பகைஞர்களை வென்றமையும், கொடும்பாளூர் மன்னனது பெரும்படையைப் புறங்காட்டியோடச் செய்தமையும், வஞ்சிமாநகரில் பெரும்போர் புரிந்தமையும், தஞ்சை மன்னனை வைப்பூரிலும் நாவற்பதியிலும் தோல்வியுறச் செய் தமையும் அச்செப்பேடுகளால் நன்கு அறியக்கிடக் கின்றன. அவற்றுள் உலப்பிலி மங்கலத்தில் இவனை எதிர்த்துத் தோல்வி யெய்தியவன் யாவன் என்பது இப் போது புலப்படவில்லை. இவனோடு போர் நிகழ்த்திப் புறங்காட்டி யோடிய கொடும்பாளூர் மன்னன் சோழ அரசர் குடும்பத்தோடு நெருங்கிய உறவினால் பிணிக்கப் பட்டிருந்த பூதிவிக்கிரம கேசரியாயிருத்தல் வேண்டும். வஞ்சி மாநகரில் இவனோடு பொருதவன் யாவன் என்பது தெரியவில்லை. ஒருகால், இவனுடைய தாய்ப்பாட்டனாகிய சேரமன்னனது தலைநகராகிய வஞ்சியின் மீது படை யெடுத்துவந்த ஒரு பகைவனோடு இவன் போர் புரிந்து அவனை வென்றிருத்தலும் கூடும். அப்போர் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் விளக்கக்கூடிய கருவிகள் கருவிகள் இந்நாளில் கிடைத்தில.
இனி, சோழமண்டலத்தில் கி.பி.907 இல் முடி சூடிக் கொண்ட முதற்பராந்தக சோழன், அவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், 'மதுரைகொண்ட கோப்பரகேசரி' என்று கல்வெட்டுக்களிற் குறிக்கப் பெற்றுள்ளான். இதனால் முதற்பராந்தக சோழன் கி.பி. 910 இல் இம்மூன் றாம் இராசசிம்மபாண்டியனோடு போர் புரிந்து அவனை வென்றிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலப்படுகின் றது. தோல்வியுற்ற இராசசிம்ம பாண்டியன் இலங்கை மன்னனாகிய ஐந்தாம் காசிபனைத் தனக்குத் துணைப் படை யனுப்புமாறு கேட்டுக்கொண்டனன். அவ்வேந்தனும் பாண்டியனது வேண்டுகோட்கிணங்கித் தன் படைத் தலைவன் சக்க சேனாதிபதியின்கீழ்ச் சிறந்த யானைகளும், குதிரைகளும், வீரர்களும் அடங்கிய பெரும்படை யொன்றை அனுப்பினான். இலங்கைப் படையும் பாண்டிப் படையும் ஒருங்கு சேர்ந்து முதற் பராந்தகசோழனோடு போர் புரிவதற்குப் புறப்பட்டன. வெள்ளூர் என்னுமிடத் திற் பெரும்போர் நடைபெற்றது[2]. அவ்விரு படைகளும் பராந்தகன் படையுடன் போர்புரியும் ஆற்ற லின்றிப் புறங்காட்டியோடத் தலைப்பட்டன. இராசசிம்மன் இம் முறையும் தோல்வியுற்றான். எனவே பாண்டிநாடு பராந்தக சோழனது ஆட்சிக்குள் ளாயிற்று. இது நிகழ்ந் தது கி.பி. 919 ஆம் ஆண்டாகும். இச்செய்திகளுள் சில, இரண்டாம் பிருதிவிபதியின் உதயேந்திரச் செப் பேட்டிலும் சொல்லப்பட்டுள்ளன[3]
----
[2]. S. I. I. Vol. III, No. 99. Ins. 231. of 1926. 99 குறிப்பிடப்பெற்ற வெள்ளூர் பாண்டி நாட்டின் வடவெல்லை யிலாதல் சோழநாட்டின் தென்னெல்லையிலாதல் இருந்ததோர் ஊராதல் வேண்டும்.
[3]. S. I. I. Vol. II. No. 76 Verses 9-11,
சின்னமனூர்ச் செப்பேடுகள், இராசசிம்ம பாண்டியன் தஞ்சை வேந்தனை வைப்பூரிலும் நாவற்பதியிலும் போரில் வென்றானென்று கூறுவதால் இப்பாண்டியனுக் கும் முதற்பராந்தக சோழனுக்கும் அடிக்கடி போர்கள் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது அவற்றுள் சிலவற்றில் பாண்டியனும் சிலவற்றில் சோழனும் வெற்றி பெற்றிருத் தல் வேண்டும் என்பதும், இறுதியில் வெள்ளூரில் நிகழ்ந்த போரில் இராசசிம்மன் தோல்வியுற்றுப் பராந் தகன்பால் பாண்டிநாட்டை இழக்கும்படி நேர்ந்திருத்தல் வேண்டும் என்பதும் நன்கு தெளியப்படும்.
தனக்குரிய நாட்டை இழந்த இராசசிம்ம பாண் யன் சிங்களத்திற்குச் சென்று அந்நாட்டரசனது உதவி பெறுமாறு அங்குத் தங்கியிருந்தனன்; தன் காட்டைப் பெறுவதற்கு அவ்வேந்தன் உதவாமை கண்டு அங்குத் தங்கி யிருப்பதால் ஒரு பயனும் இல்லையென்பதை நன் குணர்ந்து, தன் முன்னோர்களிடமிருந்து தனக்குக் கிடைத்துள்ள சுந்தரமுடியையும் பிற அரச சின்னங்களை யும் அம்மன்னனிடத்தில் வைத்துவிட்டு, தன் தாய் வானவன்மாதேவியின் பிறந்தகமாகிய சேரநாட்டிற்குச் சென்று அங்கு வசித்துவந்தான். பின்னர் இவனைப் பற் றிய செய்திகள் புலப்படவில்லை. ஆகவே பாண்டியரது ஆட்சி இம்மன்னன் காலத்தேதான் மிகவும் தாழ்ந்த நிலையை யடைந்து வீழ்ச்சி யெய்திற்று; பாண்டிநாடும். சோழரது ஆளுகைக்குள்ளாயிற்று. திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம் முதலான ஜில்லாக்களிலும் திருவாங்கூர் நாட்டின் சில பகுதிகளிலும் காணப்படும் முதற்பராந்தகசோழன் கல்வெட்டுக்கள் இவ்வுண்மைகளை நன்கு விளக்குங் கருவிகளாக உள்ளன.
வீரபாண்டியன் :- இவ்வேந்தன் இராசசிம்ம பாண்டியன் புதல்வன் என்பது திருநெல்வேலி ஜில்லா திருப்புடைமருதூரிலுள்ள ஒரு கல்வெட்டால் உய்த்துணரப் படுகிறது[4]. இவன் பாண்டி மார்த்தாண்டன், சோழாந்தகன் என்ற சிறப்புப் பெயர்களை யுடையவன்[5]; கி.பி. 946 முதல் 966 வரையில் பாண்டி நாட்டில் அரசாண்டவன்[6]. இவன் கல்வெட்டுக்கள் திருநெல்வேலி, இராம நாதபுரம் ஜில்லாக்களிலும் கன்னியாகுமரிப் பகுதியிலும் உள்ளன[7]. அன்றியும், இவனது ஆட்சியின் ஒன்பது பத்தாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் மதுரை ஜில்லா திருமங்கலந் தாலுகாவிலுள்ள கீழ்மாத்தூர்க் கோயிலிலும் காணப்படுகின்றன[8]. அக் கல்வெட்டுக்களை நோக்குமிடத்து, இவன் தனக்குரிய பாண்டிமண்டலத்தைச் சோழ மன்னனிடமிருந்து கைப்பற்றி ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும் என்பது வெளியாகின்றது. இவன் பாண்டிநாட்டைக் கைப்பற்றித் தன் ஆளுகைக்குட்படுத் தியது, முதற்பராந்தக சோழனது ஆட்சியின் இறுதிக் காலத்திலாதல் அவன் மகன் முதற்கண்டராதித்த சோழன் ஆட்சியின் தொடக்கத்திலாதல் நிகழ்ந்திருத் தல் வேண்டும். அந்நாட்களில் இராட்டிரகூட மன்னன் மூன்- றாங் கிருஷ்ணதேவன் என்பான் சோழ இராச்சியத்தின் மேல் படையெடுத்துவந்து அதன் வடபகுதியைக் கைப் பற்றிக் கொண்டமையால் சோழ மன்னர்கள் தம் ஆளுகையின் கீழ் வைத்துக்கொண்டிருந்த பாண்டிநாட்டைப் பாதுகாக்க முடியாத நிலையில் இருந்தனர். காலங்கருதிக் கொண்டிருந்த வீரபாண்டியனும் முடிசூடிக்கொண்டு பாண்டிநாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான்.
[4]. Ins. 122. of 1905 T. A. S., Vol. III p. 68.
[5]. Annual Report on south Indian Epigraphy for. 1932-83, part II. para:30; 1bid for 1935-36. part II. para 47.
[6]. Ep. Ind. Vol. XXV. No. 6.
[7]. T. A. S. Vol III Nos. 21-26.
[8]. Ins. Nos. 624 and 625 of 1926; $ 1. I., Vol V.. No. 304. இம்மன்னனுடைய இரண்டாவதின் எதிர் முதல் ஆண்டில் வெளியிடப் பெற்ற சிவகாசிச் செப்பேடுகள் அண்மையில் கிடைத்துள்ளன. Annual Report on Indian Epigraphy for -1960-61 P. P. 15-17.
-------------
அதற்கேற்ப, முதற் பராந்தக சோழனுக்குப் பின்னர் அரசாண்ட கண்டராதித்தன், அரிஞ்சயன் முதலான சோழ மன்னர்களின் கல்வெட்டுக்கள், மதுரை, திருநெல் வேலி, இராமநாதபுரம் ஆகிய ஜில்லாக்களில் காணப்பட வில்லை. ஆனால், வீரபாண்டியன் கல்வெட்டுக்கள் மாத் திரம் அவ்விடங்களில் உள்ளன என்பது முன்னர் விளக் கப்பட்டுள்ளது. எனவே, வீரபாண்டியன் பாண்டிநாட்டில் முடிமன்னனாக வீற்றிருந்து சோழர்க்குத் திறை செலுத் தாமல் அதனை ஆட்சி புரிந்து வந்தனனாதல் வேண்டும்.
இனி, வீரபாண்டியன் தன் கல்வெட்டுக்களில் ஆறாம் ஆட்சி ஆண்டு முதல் 'சோழன் தலைகொண்ட கோவீர பாண்டியன்[9] என்று தன்னைக் குறித்துள்ளமையின். இம் மன்னன் ஒரு சோழனைப் போரில் கொன்றிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலப்படுகிறது. வீரபாண்டிய னாற் கொல்லப்பட்டவன் அரிஞ்சயன் புதல்வனும் முதல் இராசராசசோழன் தந்தையுமாகிய சுந்தரசோழனாயிருத் தல் வேண்டுமென்று ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர்[10]. அன்னோர் கொள்கைக்குச் சில சான்றுகள் முரணாக உள்ளன. சுந்தர சோழனுக்குப் 'பொன்மாளிகைத் துஞ்சின தேவர்' என்ற பெயர் அவன் இறந்த பிறகு வழங்கியுள்ளது என்பது சில கல்வெட்டுக்களால்[11] அறியப் படுகின்றது. பொன்மாளிகை என்பது சோழ மன்ன ரது. ஆட்சிக் காலங்களில் காஞ்சிமா நகரிலிருந்த அரண்மனைகளுள் ஒன்று என்பது கலிங்கத்துப் பரணியாலும்[12]. கல்வெட்டுக்களானும்[13] நன்குணரக் கிடக்கின்றது. எனவே, சுந்தரசோழன் காஞ்சியிலிருந்த அம்மாளிகையில் இறந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது. ஆகவே, அவன் வீரபாண்டியனால் போரில் கொல்லப்பட் டான் என்று கூறுவதற்குச் சிறிதும் இடமில்லை என்க.
[9]. SI. I., Vol. V. No. 455,
[10]. சோழவமிச சரித்திரச் சுருக்கம், பக். 11.
[11]. S. I.I., Vol II. pp. 72 and 74; Ibid, Vol. V. Nos. 723 and 980.
[12]. 'அம்பொன்மேரு அதுகொல் இதுகொலென்று
ஆயிரங்கதிர் வெய்யவ னையுறுஞ்
செம்பொன் மாளிகைத் தென்குட திக்கினிற்
செய்த சித்திர மண்டபந்தன்னிலே' (க.பரணி.பா.302)
[13]. A. I. I. Voll. III, No. 143.
---
அன்றியும், கி.பி. 962 ஆம் ஆண்டில் சுந்தரசோழன் வீரபாண்டியனைச் வென்றானென்று
சேவூர் என்ற இடத்தில் போரில் ஆனைமங்கலச் செப்பேடு கூறுகின்றது[14]. சுந்தர சோழன் கல்வெட்டுக்கள் அவனை 'மதுரை கொண்டகோ இராசகேசரிவர்மன்[15] எனவும் 'பாண்டிய னைச் சுரம் இறக்கின பெருமாள் ஸ்ரீ சுந்தர சோழதேவர்[16]" எனவும் குறிப்பிடுவதால் அவன் வீரபாண்டியனைச் சேவூர்ப் போரில் வென்ற செய்தி உறுதியாதல் உணரத் தக்கது. எனவே, வீரபாண்டியன் சுந்தர சோழனைப் போரிற் கொன்றனன் என்று கூறுவது எவ்வாற்றானும் பொருத்தமுடையதன்று. ஆகவே, வீர பாண்டியனால் கொல்லப்பட்ட சோழன் யாவன் என்பது தெரியவில்லை. எனினும், அவன் சோழ அரச குமாரர்களுள் ஒருவனா யிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை.
[14]. EP. Ind., Vol XXII, No. 34. Verse 25.
[15]. S. I. I. Vol. III, Nos. 115-118.
[16]. Ep, Ind., Vol. XII. No 15; Ins. 302 of 1908.
----
இனி, சுந்தரசோழன் முதல் மகனும் முதல் இராசராசசோழன் தமையனுமாகிய ஆதித்த கரிகாலன் என்பான், வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பர கேசரி வர்மன்' என்று பல கல்வெட்டுக்களில்[17] குறிக்கப் பட்டிருத்தலால் அவன் வீரபாண்டியனைப் போரிற் கொன்றிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலனாகின்றது[18]. வீர பாண்டியன் சோழ அரசகுமாரன் ஒருவனைக் கொன்ற காரணம்பற்றி ஆதித்த கரிகாலனும் கொடும்பாளூர் மன் னன. பூதி விக்கிரமகேசரியும்[19] ஒருங்குசேர்ந்து இப் பாண்டி வேந்தனோடு போர்புரிந்து இவனைக் றிருத்தல் இந்நிகழ்ச்சி ஆதித்த கரிகாலனது இரண்டாம் ஆண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றிருத்த லால்[20] இவ்வீர பாண்டியன் கி.பி. 966ஆம் ஆண்டில் போரில் இறந்தனன் எனலாம். இவன் கல்வெட்டுக்கள் இருபதாம் ஆட்சியாண்டிற்குப்[21] பிறகு காணப்படாமை -யால் இவன் அவ்வாண்டில் இறந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.
[17].S.I.I., Vol. III. Nos. 200-204.
[18]. Ibid, No. 205, Verses 67 and 68.
[19]. Inscriptions of the Pudukkottai state No. 14.
[20]. S. I. I., Vol. III, No.199
[21]. EP. Ind., Vol. XXV. No.6.
--------
இவ் வீரபாண்டியற்குப் பின்னர், பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் ஆட்சிபுரிந்த பாண்டியர்கள் சோழர்களுக்குத் திறை செலுத்தும் சிற்றரசர்களாக இருந்தமையின் அவர்கள் வரலாற்றை அறிந்து கொள்ளுதற்குரிய கல்வெட்டுக்கள் பாண்டிநாட்டிற் கிடைக்கவில்லை. முதல் இராசராசசோழன், முதல் இராசாதிராச சோழன் முதலான சோழமன்னர்கள் கல்வெட்டுக்களில் அவர்களால் வென்றடக் கப்பட்டவர்களாகக் குறிக்கப்பெற்றுள்ள பாண்டியர் பெயர்கள் மாத்திரம் காணப்படுகின்றன. அத்தகைய பாண்டியர் வரலாற்றையும் அக் கல்வெட்டுக்களின் துணைகொண்டு தொடர்பாக அறிய இயலவில்லை. இதுகாறும் ஆராய்ந்து கண்ட சில செய்திகளே அடியில் எழுதப்பெறுவன.
அமரபுயங்கன் :- இப்பாண்டி வேந்தன் முதல் இராசராச சோழனால் வென்றடக்கப் பெற்றவன் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால்[22] அறியப்படுகின்றது. இவன் யாருடைய புதல்வன் என்பதும் எப் பட்டத்திற்கு வந்தனன் என்பதும் புலப்பட வில்லை. இராசராசசோழன் சேரநாட்டின்மேல் படை யெடுத்துச் சென்றபோது அவனை இவ்வமர புயங்கன் இடையில் தடுத்துப் போர்புரிந்தான். அக்காரணம் பற்றியே அவன் தன் திக்குவிசயத்தின்போது முதலில் இப்பாண்டியனை வென்று இவனது நாட்டையும் கைப்பற்றிக் கொண்டான். பிறகு அச் சோழமன்னன், பாண்டிநாடு சேரநாடு ஆகிய இரண்டிற்கும் இராசராச மண்டலம் என்று பெயரிட்டுத் தன் ஆட்சிக்குள்ளாக்கி னான். அது முதல், இராசராச சோழனுக்குப் பாண்டிய
[22]. S. I. I., Vol. III, No. 205. Verses 76-79.
குலாசனி என்னுஞ் சிறப்புப் பெயர் வழங்கியது. அவன் கல்வெட்டுக்களும் பாண்டிநாட்டில் யாண்டும் காணப்படுகின்றன.[23] அவன் தன் மெய்க்கீர்த்தியில் 'செழியரைத் தேசுகொள் கோவிராசகேசரிவர்மன்' என்று கூறிக் கொள்வதோடு தஞ்சைப் பெரிய கோயிற் கல்வெட்டுக்களில் ‘மலைநாட்டுச் சேரமானையும் பாண்டியர்களையும் எறிந்து[24] என்று குறித்தும் இருத்தலால் அவன் பாண் டியர் சிலரைப் போரில் வென்றிருத்தல் வேண்டும் என் பது நன்கறியக் கிடக்கின்றது. எனவே, இராசராச சோழன் காலத்தில் பாண்டியர் சிலர் இருந்தனர் என் பதும், அவர்களை அவன் வென்று அடக்கிவிட்டனன் என்பதும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளிற் கூறப் பெற்ற பாண்டியன் அமரபுயங்கன் என்பான் அன்னோர்க் குத் தலைவனா யிருத்தல் வேண்டும் என்பதும் தெள்ளிதிற் புலனாதல் காண்க.
---
[23]. Ins. 7 of 1927; Ins. 333 of 1923; Ins. 119 of 1905. Ed. Ind, Vol V., p. 46.
[24].S.I.I.,Vol, II, No. 59.
முதல் இராசராசசோழன் மகனாகிய முதல் இராசேந் திர சோழன் தன் ஆட்சியின் தொடக்கத்தில் தன் புதல் வர்களுள் ஒருவனுக்குச் 'சோழபாண்டியன்’ என்ற பட்டமளித்துப் பாண்டிநாடாகிய இராசராச மண்டலத் திற்கு அரசப்பிரதிநிதியாக மதுரையில் வீற்றிருந்து ஆண்டுவருமாறு அனுப்பினான்[25]. அவன் இங்ஙனம் செய் தமைக்குக் காரணம் தோல்வியுற்ற பாண்டியர் சிறிது. வலிமை யெய்தியவுடன் சோழர்க்குத் திறை செலுத்தாது முரண்பட்டு வந்தமையேயாம்.
சோழமன்னர்களின் பிரதிநிதிகளாகச் 'சோழபாண்டியர்' என்ற பட்டத் தோடு மதுரையிலிருந்து ஆட்சிபுரிந்தோர், முதல் இரா சந்திரசோழன் மகன் சுந்தரசோழ பாண்டியன், விக்கி ரமசோழ பாண்டியன், பராக்கிரம சோழ பாண்டியன் என்போர்.[26] அவர்கள் கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டி லும் சேரநாட்டிலும் காணப்படுகின்றன. எனவே, சோழ பாண்டியரது ஆளுகை பாண்டிநாட்டிலும் சேரநாட்டிலும் ஒருங்கே நடைபெற்றதென்பது நன்கு துணியப்படும். அந்நாடுகளில் அன்னோரது ஆட்சியும் கி. பி. 1020 முதல் 1070 வரையில் நிலைபெற்றிருந்தது என்பது அறியற்பால தாகும்.
---
[25]. S. I. I., Vol, III, No. 205. Verses 91-93.
[26]. Annual Report on Epigraphy for 1916-17, part II, Para 3.
மானாபரணன், வீர கேரளபாண்டியன், சுந்தர பாண்டியன், விக்கிரமபாண்டியன், வீரபாண்டியன் - இவர்கள், முதல் இராசாதிராசசோழன் காலத்திற் பாண்டி நாட்டிலிருந்த மன்னவர்களாவர். சோழர்களால் அனுப்பப்பெற்ற அரசப்பிரதிநிதிகளுக்கு அடங்காது உள் நாட்டிற் கலகம் விளைத்த காரணம்பற்றி இவர்களோடு இராசாதிராசசோழன் போர் நிகழ்த்துவது இன்றியமை யாததாயிற்று. அப்போரில் மானாபரண பாண்டியனும் வீரகேரள பாண்டியனும் கொல்லப்பட்டனர்; சுந்தர பாண்டியன் தோற்றோடி முல்லையூரில் ஒளிந்து கொண் டான்; விக்கிரமபாண்டியன் ஈழமண்டலத்திற்கு ஓடிவிட் டான். வீரபாண்டியன் என்பான் இராசாதிராச சோழ னால் கி.பி.1048 இல் கொல்லப்பட்டானென்று கோலார் ஜில்லாவில் மிண்டிக்கல் என்னுமிடத்திலுள்ள ஒரு கல் வெட்டு உணர்த்துகின்றது.[27]. இச் செய்தி சோழனது இராசாதிராச திருக்களர்ச் செப்பேட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது[28]. இங்குக் குறிக்கப்பெற்ற பாண்டியர் ஐவர் வர லாற்றையும் உணர்த்தக்கூடிய கருவிகள் கிடைக்கவில்லை.
சீவல்லப பாண்டியன் :- இவன் இரண்டாம் இரா சேந்திரசோழன் காலத்திலிருந்த ஒரு பாண்டி வேந்தன் ஆவன். இவன் சோழ மன்னனுக்குத் திறை செலுத்திக் 'கொண்டு பாண்டிநாட்டில் ஒரு பகுதியை ஆட்சி புரிந்து கொண்டிருந்தவனாதல் வேண்டும். கி.பி. 1054இல் இவன் பட்டத்தரசி, சோழநாட்டிலுள்ள திருவியலூர்க் கோயிலுக்குப் பல அணிகலன்கள் வழங்கிய செய்தி அவ்வூர்க் கல்வெட்டொன்றால் அறியப்படுகிறது[29].
---
[27]. Ep. Ind., Vol. IV, No. 31.
[28]. S. I. I., Vol. III, No. 208.
[29]. Ins. 46 of 1907.
பாண்டியன் வீரகேசரி :- இவன் சீவல்லப பாண் டி.யனுடைய மகன் ஆவன். இவன் வீரராசேந்திர சோழ னோடு கி.பி.1065 இல் போர் புரிந்து உயிர் துறந்தா னென்று அச்சோழமன்னன் மெய்க்கீர்த்தியால் தெரிகிறது.
சோழநாட்டில் வீரராசேந்திரசோழன் இறந்த பின்னர், அவன் புதல்வன் அதிராசேந்திரசோழன் சில திங்கள். ஆட்சிபுரிந்து கி.பி. 1070 ஆம் ஆண்டில் நோய் வாய்ப்பட்டு இறந்தனன். அக்காலத்தில் சோழமண்ட லத்தில் பட்டத்திற்குரிய சோழ அரசகுமாரன் ஒரு வனும் இல்லை. அதனால், சோழ இராச்சியம் பெருங் குழப்பத்திற் குள்ளாகி அல்லலுற்றது. அந்நாட்களில் சோழமன்னர்களின் பிரதிநிதிகளாகப் பாண்டிநாட்டி லிருந்து அரசாண்டுவந்த சோழ பாண்டியரின் ஆட்சியும் அங்கு நடைபெறாமல் ஒழிந்தது. அச்சமயத்தில் பாண் டியர் சிலர், இழந்த தம் நாட்டைக் கைப்பற்றி, கி.பி. 1081 வரையில் அமைதியாக ஆண்டுவந்தனர்.
பிறகு சோழமண்டலத்தின் அரசுரிமை எய்தி அதன் முடிமன்னனாக வீற்றிருந்து ஆட்சிபுரிந்த முதற் குலோத்துங்க சோழன் கி.பி. 1081 இல் பாண்டிநாட்டின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கு ஆண்டுகொண் டிருந்த பாண்டியர் ஐவரையும் போரில் வென்று அந்நாட்டைக் கைப்பற்றி வெற்றித் தூண்களும் நிறுவினான். அச்செய்தி, முதற் குலோத்துங்கசோழனது மெய்க் கீர்த்தியில்[30] சொல்லப்பட் டிருப்பதொடு அவன்மீது ஆசிரி யர் சயங்கொண்டார் பாடியுள்ள கலிங்கத்துப்பரணியிலும்[31] கூறப்பட்டுள்ளது. அச் சோழமன்னன்பால் தோல்வியுற்ற பாண்டியர் ஐவர் யாவர் என்பது இப் போது புலப்படவில்லை. எனினும், அவன் காலத்திலிருந்த பாண்டியர் சிலர் செய்திகளை அடியிற் காணலாம்.
சடையவர்மன் சீவல்லபன் :- இவன் முதற் குலோத்துங்க சோழன் காலத்திலிருந்த பாண்டிய அரசர்களுள் ஒருவன்[32]. இவன் மெய்க்கீர்த்தி "திருமடந்தையும் சய மடந்தையும்" என்று தொடங்குகிறது. இவன் கல் வெட்டுக்கள், திருநெல்வேலி மதுரை ஜில்லாக்களில் காணப்படுகின்றன.
----
[30]. 'தன்பெருஞ் சேனை யேவிப் பஞ்சவர், ஐவரும் பொரு தப் போர்க்களத் தஞ்சி, வெரிநளித் தோடி அரணெனப் புக்க, காடறத் துடைத்து நாடடிப் படுத்து'
- குலோத்துங்கள் I, மெய்க்கீர்த்தி
[31]. விட்ட தண்டெழ மீனவர் ஐவருங், கெட்ட கேட்டினைக் கேட்டிலை போலு நீ'
- கலிங்கத்துப்பரணி-368.
[32]. S. I. I., Vol. V. Nos. 293 and 294; 30 and 32 of 1909
மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியன்:-இவன் முதற் குலோத்துங்க சோழன் காலத்திலிருந்த பாண்டியருள் ஒருவன் என்றும், சடைய வர்மன் சீவல்லபனுக்குப் பின்னர் ஆட்சிபுரிந்தவன் என் றும் தெரிகின்றன[33]. இவன் மெய்க்கீர்த்தி, 'திருமகள் புணர' என்று தொடங்குவதாகும். விக்கிரமங்கலத்திலுள்ள இவனது இருபத்து மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றில் குலோத்துங்க சோழனது நாற்ப தாம் ஆட்சியாண்டு குறிக்கப்பட்டுள்ளமை உணரற்பால தாம்.[34]
---
[33]. A. R. E. for 1909, Para If, Part 29; A. R. E. for 1910, part II, Para 32.
[34]. Tamil and Sanskrit Inscriptions, Edited by J. Burgess and S. M. Natesa Sastri, p 13.
சடையவர்மன் பராந்தக பாண்டியன் :- இவன் குலோத்துங்க சோழன் ஆட்சியின் பிற்பகுதியிலும் அவன் மகன் விக்கிரம சோழன் ஆளுகையின் முற்பகுதியிலும் பாண்டிநாட்டிலிருந்த வேந்தன் ஆவன். இவன் பராக்கிரம பாண்டியனுக்கு எம்முறையினன் என்பது தெரியவில்லை. இவனது மெய்க்கீர்த்தி 'திருவளரச் செயம் வளரத் தென்னவர்தங் குலம் வளர[35] என்னுந் தொடக் கத்தையுடையது. அம்மெய்க்கீர்த்தி, இவன் சேர மன்னனை வென்று திறை கொண்டதையும், காந்தளூர்ச் சாலையில் கலமறுத்ததையும், விழிஞம் என்ற நகரைக் கைப் பற்றியதையும், தெலுங்க வீமனது தென் கலிங்கநாட் டைத் தன்னடிப்படுத்தியதையும், திருவனந்தபுரத்தில்
எழுந்தருளியுள்ள திருமாலுக்குப் பத்து மணிவிளக்குகள் அமைத்ததையும், கூபகத்தரசன் மகளை மணந்து கொண்டதையும், அளப்பனவும் நிறுப்பனவுமாகிய கருவி களிற் கயல் முத்திரையைப் பொறித்து அவற்றை ஒழுங்கு படுத்தியதையும் உணர்த்துகின்றது. இவன் வென்ற தெலுங்க வீமனை விக்கிரமசோழனும் வென்றானென்று அவன் மெய்க்கீர்த்தி அறிவிப்பதால் இவ்விரு வேந்தரும் சேர்ந்து அத்தென்கலிங்க மன்னனை வென்றிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். பாண்டியருடைய குலதெய்வ மாகிய கன்னி பகவதிக்கு ஆண்டுதோறும் தைப்பூசவிழா நடத்துவதற்கும் அவ்விழாவிற்கு வரும் அடியார்களை உண்பித்துப் பொருளுதவி புரிதற்கும் நிவந்தமாகப் புறத்தாய நாடு முழுவதையும் இவன் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.[36]
[35]. Travancore Archaeological, Series Vol. I, No. 3.
[36]. Travancore Archaeological Series, Vol.I, pp. 19-25,
மாறவர்மன் சீவல்லபன் :-இவன் கி.பி. 1132ஆம் ஆண்டில்[37] பட்டம்பெற்ற ஒரு பாண்டிய மன்னன் ஆவன். இவன் மேலே குறித்துள்ள சடையவர்மன் பராந்தக னுக்கு என்ன முறையினன் என்பது புலப்படவில்லை. இவன் மெய்க்கீர்த்தி 'பூமகள் சயமகள் பொலிவுடன் தழைப்ப என்று தொடங்கும்[38]. திருவாங்கூர் நாட்டை யாண்ட வீரரவிவர்மன் என்ற சேரமன்னன் இவனுக்குத் திறை செலுத்திக்கொண்டிருந்தான் என்று தெரிகிறது[39]. இப்பாண்டிவேந்தன் கல்வெட்டுக்கள் திருநெல்வேலி ஜில்லா வில் பல ஊர்களில் உள்ளன. இவன் கி.பி.1162 வரை யில் தென்பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்தமை அறியற் பாலதாகும்.
[37]. Indian Antiquary, Vol. 44, p. 255.
[38]. Travancore Archaeological Series. Vol. IV, No.28
[39]. Ep. Ind. Vol.XXV. p. 84
சடையவர்மன் குலசேகரபாண்டியன் :-இவன் மாறவர்மன் சீவல்லபனுடைய புதல்வன். கி.பி. 1162 ஆம் ஆண்டில் முடிசூட்டப்பெற்றவன். இவன் மெய்க் கீர்த்தி, 'பூதலமடந்தை’[40] என்று தொடங்குவதாகும். இவன் திருநெல்வேலியி லிருந்து பாண்டிநாட்டின் தென் பகுதியை ஆட்சிபுரிந்துகொண்டிருந்த நாட்களில், பராக் கிரமபாண்டியன் என்பான் மதுரையிலிருந்துகொண்டு பாண்டியநாட்டின் வடபகுதியை ஆண்டுவந்தனன். தாயத்தினராகிய இவ்விரு வேந்தர்க்கும் பாண்டியநாடு முழுவதையும் அரசாளும் உரிமைபற்றிப் பகைமையுண் டாயிற்று. குலசேகர பாண்டியன் மதுரைமா நகர்மீது படையெடுத்துச் சென்று அதனை முற்றுகையிட்டான். பராக்கிரம பாண்டியன் இலங்கையரசனாகிய பராக்கிரம பாகுவைத் தனக்குப் படையனுப்பி உதவிபுரியுமாறு வேண்டிக்கொண்டான். அம்மன்னனும் பராக்கிரம பாண்டியன் வேண்டுகோட்கிணங்கி, இலங்காபுரித் தண்ட நாயகன் தலைமையில் பெரும்படையொன்றை அனுப்பினான். அச் சிங்களப்படை பாண்டி நாட்டிற்கு வருவதற் குள் மதுரையை முற்றுகையிட்டிருந்த குலசேகர பாண்டியன், பராக்கிரமபாண்டியனையும் அவன் மனைவி மக்களையும் கொன்று அத்தலைநகரைக் கைப்பற்றி அங்கி ருந்துகொண்டு ஆட்சி புரிவானாயினன்.
[40]. S. I. I., Vol. V, Nos. 293 and 296.
அந் நிகழ்ச்சியை அறிந்த இலங்காபுரித் தண்டநாயகன் பெருஞ் சினங் கொண்டு, பாண்டிநாட்டை வென்று கொலையுண்ட பராக்கிரம பாண்டியனைச் சேர்ந்தோர்க்கு அளிக்கச் கருதி, அந்நாட்டிலுள்ள இராமேச்சுரம் குந்துகாலம் என்ற ஊர்களைக் கைப்பற்றினான். அங்ஙனம் பாண்டி நாட்டைச் சிறிது சிறிதாகப் பிடித்துக்கொண்டுவந்த சிங்களப் படைக்கும் குலசேகரபாண்டியன் படைக்கும் பல ஊர்களில் கடும் போர்கள் நடைபெற்றன. அப் போர்களில் குலசேகரன் படைத்தலைவர்களாகிய சுந்தர பாண்டியன், பாண்டியராசன் என்போர் தோல்வியுற்ற னர் ; மற்றொரு படைத்தலைவன் ஆளவந்தான் ஏன் போன் உயிர் துறந்தான். ஆகவே, இலங்காபுரித் தண்ட நாயகன் பெருவெற்றி எய்தினான். அதனையறிந்த குல சேகரபாண்டியன், கொங்குநாட்டிலிருந்த தன் மாமன் படைகளையும் சிதறிக்கிடந்த பராக்கிரம பாண்டியன் சேனைகளையும் தன் படைகளையும் ஒருங்கு சேர்த்துக் கொண்டு தானே இலங்காபுரித் தண்டநாயகனை எதிர்த் துப் போர் புரிவானாயினன். அப்போரிலும் இப் பாண் டியவேந்தன் தோல்வி எய்தவே, இலங்காபுரித் தண்ட நாயகன் வெற்றி பெற்று, மதுரைமாநகரைக் கைப்பற்றிக் கொலையுண்ட பராக்கிரம பாண்டியன் கடைசி மகனும் மலைநாட்டில் ஒளிந்துகொண் டிருந்தவனுமாகிய வீரபாண்டி. யனை அழைத்துப் பாண்டி நாட்டை ஆட்சிபுரிந்து வருமாறு செய்தான்.
ச்சிங்களப் படைத்தலைவன், கீழைமங்கலம், மேலைமங்கலம் முதலான ஊர்களைப் பிடித்து அவற்றைக் கண்ட தேவமழவராயன் என்பான் ஆண்டு வருமாறு அளித்தனன் ; தொண்டி, கருந்தங்குடி, திருவேகம்பம் முதலான ஊர்களைக் கைப்பற்றி அவற்றை மழவச்சக்கர வர்த்தி ஆளும்படி வழங்கினான். இவ்வாறு பாண் நாட்டுத் தலைவர் சிலர்க்கு ஆட்சியுரிமை நல்கி அன் னோரை இலங்காபுரித் தண்ட நாயகன் தன்வயப்படுத்தி வைத்திருந்த காலத்தில் குலசேகரபாண்டியன் படை திரட்டிக்கொண்டு மறுபடியும் போர்க்குத் தயாராயி னன். அந்நாட்களில் அத்தலைவர்களும் இப்பாண்டி வேந்த னோடு சேர்ந்துகொள்ளவே, எல்லோரும் சேர்ந்து வீர பாண்டியனைப் போரிற் புறங்கண்டு மதுரைமா நகரை விட்டோடும்படி செய்துவிட்டனர். அந்நிகழ்ச்சிகளை யுணர்ந்த இலங்காபுரித் தண்டநாயகன், ஈழநாட்டி லிருந்து தனக்குத் துணைப்படை அனுப்புமாறு பராக் கிரம பாகுவுக்கு ஒரு கடிதம் விடுத்தனன். அவ்வேந்தன் சகத்விசயதண்டநாயகன் தலைமையில் ஒரு பெரும்படை அனுப்பினான். சிங்களப்படைத்தலைவர் இருவரும் சேர்ந்து குலசேகரபாண்டியனைப் போரில் வென்று, தம் அரசன் ஆணையின்படி வீரபாண்டியனை மீண்டும் மதுரை யில் அரியணையேற்றி முடிசூட்டுவிழா நிகழ்த்தினர்.[41] மற்றுமொரு முறை சீவில்லிபுத்தூரில் நடைபெற்ற போரில் குலசேகரபாண்டியன் தோல்வி எய்தித் திருநெல்வேலிப் பக்கஞ்சென்று அங்குத் தங்கியிருந்தான்.
---
[41]. இலங்கைச் சரிதமாகிய மகாவம்சத்தில் 78,77 ஆம் அதிகாரங்களில் இப்போர் நிகழ்ச்சிகள் சொல்லப்பட்டிருக்கின் றன. அவற்றில் குறிக்கப் பெற்றுள்ள தமிழ்நாட்டூர்களுள் சிலவற்றை இப்போது அறிந்துகொள்ள முடிய வில்லை.
----
இவ்வாறு சிங்களவர்பாற் பன்முறை தோல்வியுற்று இன்னலுக்குள்ளாகிய குலசேகரபாண்டியன் இறுதியில் கி. பி. 1167 ஆம் ஆண்டில் சோழநாட்டிற்குச் சென்று, அப்போது ஆட்சிபுரிந்து கொண்டிருந்த இரண்டாம் A இராசாதிராசசோழனைத் தனக்கு உதவி புரியுமாறு கேட்டுக்கொண்டான். அவ்வேந்தனும் இவன் வேண்டு கோளுக்கிணங்கித் திருச்சிற்றம்பலமுடையான் பெரு மானம்பிப் பல்லவராயன் தலைமையில் பெரும்படை யொன்றை இவனுக்குதவுமாறு பாண்டிநாட்டிற்கனுப்பி னான். சோழநாட்டுப்படைக்கும் சிங்களப்படைக்கும் தொண்டி, பரசிப்பட்டினம் முதலான ஊர்களில் பெரும் போர்கள் நடைபெற்றன. அப்போர்களில் சிங்களப் படைத்தலைவர்களாகிய இலங்காபுரித் தண்டநாயகனும் சகத்விசய தண்ட நாயகனும் வெற்றி எய்தினர். பகைஞர் களாகிய சிங்களவரின் வெற்றி, அந்நாட்களில் சோழ மண்டலத்திலும் பிறநாடுகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்குப் பேரச்சத்தையும் பெருங்கலக்கத்தையும் உ ண்டுபண்ணி விட்டது என்பது காஞ்சிமா நகரையடுத்துள்ள ஆர்ப்பாக்கத்தில் காணப்படும் கல்வெட்டொன்றால்[42] அறியப்படுகிறது. எனினும், இருபடைகட்கும் பிறகு நடைபெற்ற போர்களில் இராசாதிராசசோழன் படைத் தலைவனாகிய திருச்சிற்றம்பலமுடையான் பெரு மானம்பிப் பல்லவராயன் சிங்களப்படைகளை வென்று புறங்காட்டி யோடும்படி செய்தமையோடு சிங்களப் படைத் தலைவர் இருவரையுங் கொன்று, அவர்கள் தலைகளை யாவரும் காணும் நிலையில் மதுரைக் கோட்டை வாயிலில் வைக்கும்படியும் செய்தனன்.1 அதன் பின்னர் அச்சோழர் படைத்தலைவன் மதுரையம்பதியை இக்குல சேகர பாண்டியனுக்கு அளித்து, அங்கு வீற்றிருந்து பாண்டிநாட்டை ஆட்சிபுரிந்து வருமாறு ஏற்பாடு செய்தான்[43]. இவனது ஆட்சியும் சில ஆண்டுகள் வரையில் பாண்டி நாட்டில் அமைதியாக நடைபெற்று வந்தது எனலாம்.
---
[42]. S. I. I., Vol. VI. No. 456.
[43]. Ep. Ind. Vo1, XXI. No 31. (பல்லவராயன்பேட்டைக் கல்வெட்டு)
சிங்களமன்னன் பராக்கிரம பாகு என்பான், இப் பாண்டிவேந் தனையும் இவனுக்கு உதவிபுரிந்த சோழ அரசனையும் மறுபடியும் தாக்கிப் போர்புரிய முயன்றான். அம்முயற்சி பயன்படாமற் போகவே[44] அவன் மதுரையிலிருந்து அரசாண்ட குலசேகரனைப் பாண்டி வேந்தனாக ஏற்றுக்கொண்டு நண்பனாக வைத்துக்கொள்வது நலமெனக் கருதி, இவனுக்குச் சில பரிசில்கள் அனுப்பினான். இப்பாண்டி மன்னன், இராசாதிராச சோழன் தனக்குச் செய்த உதவிகள் எல்லாவற்றையும் மறந்து, சிங்கள அரசன் அனுப்பிய பரிசில்களைப் பெற்றுக் கொண்டு அவனோடு நட்பும் மணத்தொடர்பும் கொள்ள உடன்பட்டுவிட்டான்[45]. அன்றியும், இவன் சோழ இராச்சியத்திற்கு விரோதமான காரியங்களைச் செய்யத் தொடங்கியதோடு
சோழமன்னனிடத்தில் அன்புடையவர்களாய் நிலவிய இராசராசக் கற்குடிமாராயன், இராச கம்பீர அஞ்சுகோட்டை நாடாழ்வான் முதலான பாண்டி நாட்டுப் படைத்தலைவர்களை அந்நாட்டைவிட்டு வெள்ளாற்றுக்கு[46] வடக்கே போகுமாறும் செய்தனன்; மதுரைக்கோட்டை வாயிலிலிருந்த சிங்களப் படைத தலைவர்களின் தலைகளையும் எடுத்துவிடும்படி செய்தனன். இந்நிகழ்ச்சிகளையறிந்த இராசாதிராச சோழன், தான் செய்த பேருதவிகளை மறந்து பகைஞனோடு சேர்ந்து கொண்ட குலசேகர பாண்டியனை அரியணையினின்று நீக்கி, பராக்கிரம பாண்டியன் புதல்வன் வீரபாண்டிய னுக்குப் பாண்டிநாட்டை அளிக்குமாறு தன் அமைச்சன் வேதவனமுடையான் அம்மையப்பன் அண்ணன் பல்லவராயனுக்கு ஆணையிட்டனன்.
[44]. இவ்வரலாறு யான் எழுதிய 'பிற்காலச் சோழர் சரித்திரம் இரண்டாம் பகுதி' யில் நன்கு விளக்கப்பட்டுள்ளது.
[45. Ep. Ind.Vol. XXII, No. 14. (வடதிருவாலங் காட்டுக் கல்வெட்டு)
[46]. இவ்வெள்ளாறு பாண்டிநாட்டின் வட எல்லையில் அறந் தாங்கித் தாலூகா வழியாக ஓடிக் கடலில் கலக்கும் ஓர் ஆறாகும். இவ்வாற்றின் தென்புறத்தில் பாண்டிநாடும் வடபுறத்தில் சோழ நாடும் இருத்தல் அறியத்தக்கது.
----
உடனே, அவன் மதுரைமா நகர்மீது படையெடுத்துச்சென்று மிகச் சுருங்கிய நாட்களில் குலசேகர-பாண்டியனை வென்று, வீரபாண்டியனுக்குப் பாண்டிநாட்டை யளித்து அதனை யாண்டுவருமாறு செய்தான்.[47]. எனவே, கி.பி.1168ஆம் ஆண்டில் இராசாதிராசசோழன் பேருதவியினால் பாண்டி நாட்டைப் பெற்று அரசாண்டுவந்த இக் குலசேகர பாண் டியன், கி.பி. 1175ஆம் ஆண்டில் தன்னுடைய தகாத செயல்களால் அதனை இழந்துவிட்டமை குறிப்பிடத் தக்கது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவனைப்பற்றி ஒன்றுந் தெரியவில்லை. செய்ந்நன்றி மறந்து இவன் புரிந்த அடாச் செய்கைகள் இம்மையிலேயே இவனுக்குப் பேரின்னலை விளைத்து இவனைக் கரந்துறையுமாறு செய்தமை அறியத்தக்கதாகும்.
[47]. Ep. Ind., Vol. XXII, p. 86.
சடையவர்மன் வீரபாண்டியன் :-இவன் மதுரை யில் குலசேகரபாண்டியனால் கொல்லப்பட்ட பராக்கிரம பாண்டியனுடைய மகன். இவனது மெய்க்கீர்த்தி "பூமடந்தையும் சயமடந்தையும்' என்று தொடங்கும். இவன் சிங்களப் படைத்தலைவர்களின் உதவியினால் பாண்டியநாட்டைப் பெற்றுச் சில ஆண்டுகள் ஆட்சி புரிந்து, சோழர் படையெடுப்பினால் கி.பி.1168ஆம் ஆண்டில் அதனை இழந்துவிட்டமையும், பிறகு குலசேகர பாண்டியன், சோழர்படைத் தலைவன் திருச்சிற்றம்பல முடையான் பெருமானம்பியின் உதவியால் நாடுபெற்று மீண்டும் மதுரையில் ஆட்சிபுரிந் தமையும் முன்னர் விளக்கப்பட்டுள்ளன[48]. குலசேகரபாண்டியன் இராசாதி ராசசோழனுக்குப் பகைஞனாகிப் பாண்டி நாட்டை இழந்த நாட்களில், சோழர்படைத் தலைவனாகிய வேத வன முடையான் அம்மையப்பன் அண்ணன் பல்லவ ராயன் என்பான் தன் அரசன் ஆணையின்படி இவனுக்கு அப்பாண்டி நாட்டை அளித்தனன். ஆகவே, கி.பி. 1175ஆம் ஆண்டில் இவ்வீரபாண்டியன் மறுபடியும் பாண்டிநாட்டைப் பெற்று அரசாளத் தொடங்கினான். இவனது ஆட்சியும் கி.பி. 1180 வரையில் அங்கு நடை பெற்று வந்தது எனலாம்.
---
[48]. T. A. S. Vol. II, pp. 18-20.
இவனுக்குப் பாண்டிநாட்டை வழங்கிய இரண்டாம் ஆளுகையும் சோழநாட்டில்
இராசாதிராச சோழன் கி. பி. 1178 ஆம் ஆண்டில் முடிவெய்தியது. அவனுக் குப் பிறகு மூன்றாங்குலோத்துங்க சோழன் அவ்வாண்டில் முடிசூட்டப்பெற்றான். வீரபாண்டியன், இராசாதி ராசசோழன் தனக்குப் பாண்டிநாட்டை அரசாளும் உரிமை அளித்ததை மறந்து சிங்கள மன்னனோடு சேர்ந்து கொண்டு, குலோத்துங்க சோழனோடு முரண்பட்ட நிலை யில் இருந்தனன். அந்நாட்களில் சடையவர்மன் குல சேகர பாண்டியனுடைய புதல்வன் விக்கிரமபாண்டியன் என்பான், தன் தந்தையின் நன்றிமறந்த செயலையும் அதன் பயனையும் எண்ணி எண்ணி மிகவருந்தி, இறுதி யில் மூன்றாங்குலோத்துங்க சோழன்பால் அடைக்கலம் புகுந்து, தன் நாட்டைத் தான்பெற்று அரசாளும்படி செய்தல் வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான்.[49] ஆகவே, இவ் வீரபாண்டியனோடு குலோத்துங்க சோழன் போர் தொடங்குவது இன்றியமையாததாயிற்று. எனவே கி.பி. 1180ஆம் ஆண்டில்[50] அச்சோழ மன்னன் பாண்டி நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று வீர பாண்டிய னோடு போர் புரிவானாயினன். அப்போரில் இப்பாண்டி வேந்தனுடைய புதல்வன் ஒருவன் இறந்தனன். இவனுடைய ஏழகப்படைகளும் மறவர் படைகளும் எதிர் நின்று போர்புரிய முடியாமல் புறங்காட்டி ஓடின. இவனுக்கு உதவிபுரிய வந்த ஈழநாட்டுப் படைகளும் தோல்வியுற்று இலங்கைக்கு ஓடிவிட்டன. குலோத் துங்கசோழன் பெரும்வெற்றி எய்தி, மதுரையும் அரசும் நாடுங்கொண்டு அவற்றைத் தன்பால் அடைக்கலமடைந்த விக்கிரமபாண்டியனுக்கு அளித்தனன்.[51]
---
[49].S.1.1.,Vol. V1. No.436.(திருக்கொள்ளம்பூதூர்க் கல்வெட்டு)
[50]. Ins. 190 of 1904.
[51]. S.1.1., Vol. III No. 86 and 87.
கி. பி. 1180இல் வீரபாண்டியன் தன் நாட்டை இழந்த பின்னர் மலைநாட்டிற்குச் சென்று, சேரமன்னன் உதவி பெற்று அதனை மீட்க முயன்றான்; அவன் அனுப்பிய சேரநாட்டுப் படையோடு சிதறிக்கிடந்த தன் படையை யும் சேர்த்துக்கொண்டு மதுரைமீது படையெடுத்துச் சென்றான். அதனை யறிந்த குலோத்துங்கசோழன் பெரும் படையோடு சென்று மதுரைக்குக் கிழக்கே யுள்ள நெட்டூரில் இவ் வீரபாண்டியனைத் தடுத்துப் பெரும்போர் புரிந்தான். அப்போரில் பாண்டியன் படையும் சேரன் படையும் தோல்வி எய்திச் சிதறிப் போயின. வெற்றிபெற்ற குலோத்துங்க சோழன் பாண்டி டியர்க்குரிய முடியைக் கைப்பற்றிக்கொண்டான்.[52] வீர பாண்டியன் தன் முயற்சி பயன்படாமை கண்டு பெரி தும் வருந்தித் தன் உரிமைச் சுற்றத்தினரோடு மலை நாடு சென்று சேரன்பால் அடைக்கலம் புகுந்தனன். வீரபாண்டியனுக்கு உதவிபுரிந்தமை பற்றிக் குலோத் துங்கசோழன் தனக்கு ஏதேனும் தீங்கிழைத்தல் கூடும் என்றஞ்சிய சேரமன்னன், இவனையும் இவன் மக்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு சோணாட்டிற்குச் சென்று, எல்லோரும் ஒருங்கே குலோத்துங்க சோழன் பால் அடைக்கலம் புகுந்தனர். அவன் எல்லோரையும்
[52]. S.1.1., Vol. Vll, No 797; Insciptions of the Puduk- kottai State, No 166. நெட்டூர் என்பது ஜில்லா சிவகங்கைத் தாலூகாவிலுள்ள கண்மையில் உள்ளது.
இராமநாதபுரம் இளையான்குடிக்கண்மையில் உள்ளது.
அன்புடன் ஏற்றுக்கொண்டு, அவர்களுள் வீரபாண்டிய னுக்குப் பாண்டிநாட்டில் ஒரு பகுதியும் முடியும் வழங் கினான். இவன் புதல்வர்களான வீரகேரளனுக்கும் பருதிகுலபதிக்கும் தன்பக்கம் இருந்துண்ணும் சிறப்புச் செய்தமையோடு ' இருநிதியும் பரிசட்டமும் இலங்கு மணிக்கலனும் நல்கினான்.
இந்நிகழ்ச்சிகள் எல்லாம் எப் போது நிகழ்ந்தன என்பது தெரியவில்லை. எனினும். கி. பி. 1180 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இரண்டு ஆண்டுகளில் இவை நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது திருவக்கரை, திட்டைக்குடி என்ற ஊர்களில் காணப்படும் கல் வெட்டுக்களால்[53] அறியப்படுகின்றது. பிறகு, இவ்வீர பாண்டியனைப் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. இவன் மூன்றாங் குலோத்துங்கசோழன் தனக்களித்த பாண்டி நாட்டின் ஒரு பகுதியைத் தன் இறுதிக் காலம் வரையில் ஆட்சிபுரிந்து இறந் தனனாதல் வேண்டும். தன் வாழ் நாட்களுள் பெரும்பகுதியை அல்லல் வாழ்க்கையில் நடத்திய இப்பாண்டிவேந்தன் இறுதியில் சிலகாலம் அமைதியாயிருந்து இறந்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை.
[53]. Ins. 190 of 1904; S. I.I. Vol VIII, No. 296.
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் :-இவன் சடைய’ வர்மன் குலசேகர பாண்டியனுடைய புதல்வன். மூன்றாங் குலோத்துங்க சோழன் பேருதவியினால் கி.பி. 1180ஆம் ஆண்டில் பாண்டிநாட்டைப் பெற்று இவன் ஆட்சிபுரியத் தொடங்கியமை முன்னர் விளக்கப்பட் டது. வீரபாண்டியன் சேரமன்னன் உதவிபெற்று மறு படியும் மதுரைமீது படையெடுத்துச் சென்றபோது, இவன் அச்சோழ அரசன் துணைகொண்டு தன் நாட்டைக் காத்துக் கொண்டான். இவ்வேந்தன் தன் வாணாள் முழு மையும் குலோத்துங்க சோழன்பால் பேரன்புடையனாய் ஒழுகியதோடு பாண்டிநாட்டில் சில ஆண்டுகள் அமைதி யுடன் ஆட்சிபுரிந்தும் வந்தமை குறிப்பிடத்தக்கது. இவன் கி. பி. 1190ஆம் ஆண்டில் இறந்தனன் என்று இதரிகிறது.
-----------
7. கி.பி. 1190 முதல் கி.பி. 1310 முடிய ஆட்சிபுரிந்த பாண்டியர்கள்
கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியரது ஆட்சி மீண்டும் உயர்நிலையை அடையத் தொடங்கியது. ஆயினும், அந்நாட்களில் பெருவீரனாகிய மூன்றாங் குலோத்துங்க சோழன் சோழ இராச்சியத்தில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தமையால், பாண்டிவேந்தன் அவனுக்கு அடங்கி நடத்தல் இன்றியமையாத--தாயிற்று. அவன் கி.பி. 1218 ஆம் ஆண்டில் இறந்த பின்னர், பாண்டியர் சோழச் சக்கரவர்த்திகளுக்குத் திறை செலுத்தாமல் தனியரசு புரியும் பேரரசர் ஆயினர். அதற்கேற்ப அக்காலத்தில் சோழநாட்டில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த மூன்றாம் இராசராச சோழனும் வலி குன்றிய வேந்தனாயிருந்தான். ஆகவே, பாண்டியர் பேராண்மையும் பெருவீரமு முடையவர்களாகிப் பிற நாடுகளை வென்று, பாண்டிய இராச்சியத்தை நெல்லூர் கடப்பை ஜில்லாக்கள் வரையில் வடபுலத்திற் பரப்பி, மிக்க உயர்நிலையை எய்தி வாழ்ந்த காலம் இதுவே என்று ஐயமின்றிக் கூறலாம். எனவே, இக்காலப்பகுதி பாண்டியரது இரண்டாம் பேரரசு நிலைபெற்றிருந்த சிறப்புடைய தாகும்.
இப்பகுதியில் ஆட்சிபுரிந்த பாண்டி மன்னர்களின் கல்வெட்டுக்கள் யாண்டும் மிகுதியாகக் காணப்படு அவற்றால் அவ்வேந்தர்களும் பிறரும் புரிந்த அறச்செயல்களும், வேறுபல செய்திகளும் நன்கறியப் படுகின்றன. ஆனால் அக்கல்வெட்டுக்களின் துணைக்கொண்டு, அப்பாண்டி வேந்தர்களின் தந்தைமார் உடன்பிறந்தார் முதலானோர் யாவர் என்பதை ஆராய்ந்தறிய இயலவில்லை. அவர்களுடைய செப்பேடுகளும் அச்செய்திகளை உணர்த்துவனவாயில்லை. அன்றியும், எவ்வரசனுக்குப் பின்னர் எவ்வரசன் அரசாண்டான் என்பதைத் தெளிவாக அறிந்துகொள்வதற்கும் அவை பயன்படவில்லை. ஆயினும், அக்கல்வெட்டுக்களில் காணப்படும் ஸ்ரீகோச்சடைய வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீவிக்கிரம பாண்டிய தேவற்கு யாண்டு 4ஆவது மிதுன நாயிற்றுப் பூர்வபட்சத்து நவமியும் வியாழக்கிழமையும் பெற்ற சோதிநாள்'[1], 'ஸ்ரீகோச் சடைய வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீகுல சேகர தேவற்கு யாண்டு பதின்மூன்றாவதின் எதிரா மாண்டு மீனநாயிற்று நாலாந்தியதியும் அமரபட்சத்துத் தசமியும் வியாழக்கிழமையும் பெற்ற பூராடத்து நாள்[2], 'ஸ்ரீகோமாற வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் எம்மண்டலமுங் கொண்டருளிய ஸ்ரீகுலசேகர தேவற்கு யாண்டு 217 -ஆவது தநுர்நாற்று 14-தியதியும் வெள்ளிக்கிழமையும் அமரபட்சத்து சப்தமியும் பெற்ற உத்திரநாள்[3] என்பன போன்ற காலக்குறிப்புக்கள் அவ்வேந்தர்கள் ஆட்சிபுரிந்த காலங்களை உணர்ந்து கோடற்குப் பெரிதும் பயன்படுகின்றன. அவற்றை ஆராய்ந்து அவற்றால் அறியக்கிடக்கும் ஆண்டுகள் இன்னவை என்று உலகத்திற்கு உணர்த்திய பேரறிஞர்கள், டாக்டர் கீல்ஹார்ன், எல். டி. சுவாமிக்கண்ணும் பிள்ளை, இராபர்ட்சிவெல், ஜாகோபி என்போர். அவர்களுடைய ஊக்கமும் உழைப்பும் இல்லையாயின் வரலாற் றாராய்ச்சி இருள்சூழ்ந்த நிலையில்தான் இருந்துகொண்டிருக்கும் என்பது திண்ணம்.
----
[1]. S. 1. I., Vol. V, No. 299. [2]. lbid, No. 412.
[3]. lbid, No. 426
அவர்கள் ஆராய்ந்து கண்ட ஆண்டுகளுள் சில, ஒன்றுக்கொன்று வேறுபட் டிருப்பினும், அன்னோருடைய ஒத்த முடிபுகள் வரலாற் றாராய்ச்சிக்குப் பெருந்துணையா யிருத்தல் மறக்கற்பால தன்று. இக்காலப் பகுதியில் பாண்டிய இராச்சியத்தில் வெவ்வேறு இடங்களில் பாண்டி மன்னர் பலர் ஒரே சமயத்தில் அரசாண்டுள்ளனர். அவர்கள் பேரரசர் போல் தம் பெயர்களால் கல்வெட்டுக்களும் வரைந்துள்ளனர். எனினும், அவர்களுள் ஒருவன் வழியினரே தலைமை பூண்டு அரசர்க்கரசராக இருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம். அன்றியும், ஒரே பெயருடைய பாண்டி வேந்தர் பலர் இக்காலப் பகுதியில் இருந்துள்ளனர். அன்னோரைப் பற்றி ஆராய்ந்து உண்மையான் வரலாற்றை உணர்ந்து கொள்வதும் அத்துணை எளிதாக இல்லை. படி எடுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் எல்லாம் அச்சிடப்பட்டு வெளிவந்தாலன்றி இத்தகைய ஐயங் களும் குழப்பங்களும் நீங்கமாட்டா என்பது ஒருதலை.
முதல் சடையவர்மன் குலசேகர பாண்டியன்:- இவன் கி.பி.1190 இல் முடிசூட்டப்பெற்று, கி.பி. 1218 வரையில் மதுரையம்பதியிலிருந்து பாண்டி நாட்டை ஆட்சி புரிந்தவன். இவன் மூன்றாங் குலோத்துங்க சோழனது பேராதரவிற்குள்ளாகி, அவன் அளித்த பாண்டி நாட்டைப் பெற்று, அங்கு அரசாண்டு கொண்டிருந்த மாறவர்மன் விக்கிரம
மாறவர்மன் விக்கிரம பாண்டியனுடைய புதல்வன் ஆவன். இவன் மெய்க்கீர்த்தி 'பூவின்கிழத்தி'[4] என்று தொடங்கும். அஃது இவனைப் புகழ்ந்து கூறுகின்றதேயன்றி இவன் வரலாற்றை விளக்குவதா யில்லை. இவன் கல்வெட்டுக்கள், மதுரை, திருநெல்வேலி, இராம நாதபுரம் ஆகிய ஜில்லாக்களில் காணப்படுவதால் இவனது ஆட்சி பாண்டிநாடு ஆட்சி பாண்டிநாடு முழுமையும் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்று ஐயமின்றிக் கூறலாம்.
---
[4]. S. I. 1. Vol. V, Nos. 302, 412 and 415.
இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில், சோழ இராச்சியத்தில் சக்கரவர்த்தியாக விருந்து அரசாண்ட மூன்றாங் குலோத்துங்க சோழன், கொங்குநாட்டுக் கருவூரைக் கைப்பற்றி அங்குச் சோழ கேரளன் என்ற பெயருடன் விசயமா முடிசூடிய பின்னர், பாண்டியரும் தனக்குத் திறை செலுத்தி வருவதால் மதுரைமாநகரில் வீரா பிடேகம் செய்துகொள்ள வேண்டுமென்று கருதினான். அந்நாட்களில் இக்குலசேகர பாண்டியன் அதற்குடன் படாமல் அச்சோழ மன்னனோடு வெளிப்படையாகப் பகைமை கொள்ளவுந் தொடங்கி விட்டான். இவன் தந்தை விக்கிரம பாண்டியனுக்குத் தான் நாடும் அரசும் வழங்கி, உள்நாட்டில் குழப்பத்தை ஒழித்து, அமைதி நிலவுமாறு செய்ததை இவன் முற்றிலும் மறந்து, தனக்கு முரண்பட்டு நிற்றலை உணர்ந்த குலோத்துங்க சோழன், பெருஞ்சினங் கொண்டு பாண்டி நாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான். குலசேகர பாண்டியன் தன் மறப்படை ஏழகப்படைகளுடன் வந்து அவனை எதிர்த்துப் போர்புரிந்தான் மட்டியூர்[5], கழிக்கோட்டை என்ற ஊர்களில் பெரும் போர்கள் நடைபெற்றன[6]. பாண்டிப்படைகள் பேரழிவிற்குள்ளாகிப் புறங்காட்டி ஓடிவிடவே, குலசேகர பாண்டியன் தோல்வியுற்றுத் தன் உரிமைச் சுற்றத்தினருடன் மதுரையை விட்டு வேறிடஞ் சென்று
ஒளிந்துகொள்ளும்படி நேர்ந்தது.
[5]. மட்டியூர் என்பது இராமநாதபுரம் ஜில்லா திருப்பத்தூர்த் தாலுகாவில் சதுர்வேதி-மங்கலம் என்ற பெயருடன் இக்காலததில் இருத்தல் அறியத்தக்கது. (Ins. 289 of 1927-28)
[6]. Inscriptions of the Pudukkottai State, No 166.
----
குலோத்துங்க சோழன் தன் படையுடன் அந்நகருக்குள் புகுந்து அரண்மனையில் சில மண்டபங்களை இடித்தும் சிலவற்றை அழித்தும், தன் பெருஞ்சினத்தை ஒருவாறு தணித்துக் கொண்டான். பிறகு, அவ்வேந்தன், தான் எண்ணியவாறு அத்தலைநகரில் 'சோழ பாண்டியன் 'திரிபுவன வீரதேவன்' என்னும் பட்டங்களுடன் வீராபிடேகஞ் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிகள் கி.பி. 1202ஆம் ஆண்டிலாதல்[7] அதற்கு முன்னராதல் நடைபெற்றிருத்தல் வேண்டும். சோழமன்னன், தான் வென்று கைப்பற்றிய பாண்டி நாட்டைச் சில ஆண்டுகளுக்குப்பிறகு இக்குல சேகர பாண்டியனுக்கே அளித்துவிட்டன னென்று தெரிகிறது. குலோத்துங்க சோழனது ஆட்சியின் 39, 40 ஆம் ஆண்டுகளில் வரையப்பெற்ற கல்வெட்டுக்கள் பாண்டிநாட்டில் காணப்படுவதால் இப்பாண்டி வேந்தன் அவனுக்குக் கீழ்ப்படிந்து அந்நாட்டை ஆட்சிபுரிந்து'' வந்தனனாதல் வேண்டும். எனவே, கி.பி. 1218 ஆம் ஆண்டுவரையில் இவன் சுயேச்சையாகத் தனியரசு செலுத்த இயலாத நிலையில் இருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம்.
----
[7]. Ins. 554 of 1904.. திருவாரூரில் காணப்படும் மூன்றாங் குலோத்துங்க சோழனது 34 ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டில்” அவன் மதுரையில் புனைந்துகொண்டதிரிபுவன வீரதேவன் என்ற சிறப்புப் பெயர் வரையப்பெற்றிருத்தலால் இவ்வாண்டு உறுதி" எய்துகின்றது.
----
இம்மன்னன் தன் தலைநகராகிய மதுரையம்பதியிலிருந்த சிங்காதனங்களை மழவராயன்[8], காலிங்கராயன்[9] என்னும் பெயர்களால் வழங்கிவந்தனன் என்பது இவன் கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.
இவ்வேந்தன் தன்னுடைய ஆட்சியின் இருபத்தைந்தாம் ஆண்டில் சில பழைய ஊர்களை ஒன்றாகச் சேர்த்து, இராசகம்பீரச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயருடன் 1030 அந்தணர்களுக்குப் பிரமதேயமாகவும் திருப்பூவணத்திறைவர்க்குத் தேவதானமாகவும் அளித்துள்ளமையால்[10], இவனுக்கு இராசகம்பீரன் என்னும் சிறப்புப் பெயர் அந்நாளில் வழங்கியிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது. இவனது இருபத்தெட் டாம் ஆட்சியாண்டிற்குப் பிறகு இவன் கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்படாமையால், இவன் கி. பி. 1218 ஆம் ஆண்டில் இறந்தனனாதல் வேண்டும். இவன் இறப் பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மாற வர்மன் சுந்தரபாண்டியன் என்பான் இளவரசுப்பட்டம் கட்டப்பெற்றான் என்று தெரிகிறது.
[8]. Ins.550 of 1916 [9]. In. 540 of 1916. S. I. I., Vol. V, No. 302.
[10]. EP. Ind, Vol. XXV, No. 11.
----
சயங்கொண்ட சோழ சோழ சீவல்லபன் :- இவன் குல சேகர பாண்டியனுடைய ஆட்சியில் சிறப்புற்று விளங்கிய அரசியல் அதிகாரியாவன்;[11] . இவன் பாண்டி மண்டலத்தின் உள்நாடுகளுள் ஒன்றாகிய களவழி நாட்டின் தலைமை அதிகாரியா யிருந்தமைபற்றிக் களவழி நாடாள்வான் என்னும் பட்டம் பெற்றவன். இராம நாதபுரம் ஜில்லாவிலுள்ள குலசேகர பாண்டியன் கல் வெட்டுக்களில் இவனைப்பற்றிய செய்திகள் காணப்-படுகின்றன.
முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் :- இவன் கி.பி. 1216 முதல் கி.பி. 1238 முடிய மதுரைமாநகரில் முடிமன்னனாக வீற்றிருந்து பாண்டிநாட்டை ஆட்சி புரிந்தவன்[12]; மாறவர்மன் என்ற பட்டமுடையவன்; தன்னுடைய ஆற்றலாலும் வீரத்தாலும் பாண்டிய இராச்சியத்தை நன்னிலைக்குக் கொணர்ந்து பேரரசு நிறு விய பெருந்தகை வேந்தன். இவனுக்கு முன் அரசாண்ட சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பான் தன் ஆட்சிக்காலத்திலேயே இவ்வரசகுமாரனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டியிருத்தலை நோக்குமிடத்து, இவன் அவனுடைய புதல்வன் அல்லது தம்பியாயிருத்தல் வேண்டும் என்று கருதற்கு இடமுளது. ஆனால் ஒருதலையாகத் துணிவதற்குத் தக்க சான்றுகள் கிடைக்க வில்லை. குலசேகரபாண்டியன் தன் தந்தை விக்கிரம பாண்டியனைப் பெரியதேவர் என்று கல்வெட்டுக்களில் குறித்திருப்பதுபோல் இச் சுந்தரபாண்டியனும் தன் கல்வெட்டில் குறித்துள்ளமையாலும்[13] இவ்விரு பாண்டி வேந்தரும் அழகப்பெருமாள் என்ற தலைவன் ஒருவனைத் தம் மைத்துனன் என்று கல்வெட்டுக்களில் கூறியுள்ளமையாலும்[14] இவ்விருவரும் உடன்பிறந்த சகோதரர்களாவே இருத்தல் வேண்டும் என்றும், எனவே, சுந்தரபாண்டியன் குலசேகரபாண்டியனுக்குத் தம்பி யாவன் என்றும் ஆராய்ச்சியில் வல்ல அறிஞர்கள் கருதுகின்றனர்"[15].
[11]. Ins. 313 of 1923. [12]. Ep. Ind., Vol. VIII. Appendix 11, p. 24
[13]. Ins. Nos. 83 of 1927 and 47 of 1926..
[14]. Ins. 298 of 1927-28; 1ns, 84 of 1916; 1ns. 183 of 1935-36.
[15]. Annual Report on South Indian Epigraphy for 1926-27, part 1l. para 41 1bid. for, 1927 -23, part il para 17.
---------
தமிழ் மன்னர்கள் தமக்குமுன் அரசாண்ட வர்களைப் பெரியதேவர் எனவும், பெரிய நாயனார் எனவும், பெரிய பெருமாள் எனவும் பொதுவாகக் கூறிக் கொள்ளும் வழக்கம் பண்டைக் காலத்திலிருந்தது என் பது கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. ஆகவே, முதலில் எடுத்துக் காட்டப்பெற்ற காரணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதா யில்லை. எனினும், இரண்டாம் கார ணம் ஓரளவு வலி யுடையதா யிருத்தலால் அதனை எளி தாகத் தள்ளிவிட இயலவில்லை. ஆதலால், சுந்தர பாண்டியன் குலசேகர பாண்டியனுக்குத் தம்பியாகவும் இருத்தல் கூடும். பாண்டியர்களின் கல்வெட்டுக்கள் எல்லாம் வெளிவந்தால் இத்தகைய ஐயங்கள் நீங்கலாம்.
திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரந் தாலூகா விலுள்ள திருவாலீசுவரத்திற் காணப்படும் கல்வெட்டொன்றாலும்[16] இராமநாதபுரம் ஜில்லா திருப்புத்தூரிலுள்ள கல்வெட்டொன்றாலும்[17] இப்பாண்டி வேந்தன் புரட்டாசித் திங்கள் அவிட்ட நாளில் பிறந்தவன் என்பது நன்கு புலனாகின்றது. இவனது மெய்க்கீர்த்தி 'பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும் புயத் திருப்ப’[18] என்று தொடங்குவதாகும். அஃது இனிய செந்தமிழ் நடையில் அமைந்த நீண்ட மெய்க்கீர்த்தியாகும். அதனால் இம்மன்னன் காலத்து நிகழ்ச்சிகள் பலவற்றை அறிந்துகொள்ளலாம். அதன் துணை கொண்டு இவன் காலத்துப் போர் நிகழ்ச்சிகளை ஆராய்வாம்.
----
[16]. Ins. 340 of 1916. [17]. las- 183 of 1935-35.
[18]. S. I. I., Vol. V, No. 431. செந்தமிழ் - தொகுதி XII. பக். 446-50.
இவ்வரசன் ஆட்சிக்காலத்தில் சோழ இராச்சியத் தில் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து அரசாண்டவன் மூன்றாங் குலோத்துங்கசோழன் மகன் மூன்றாம் இராச ராசசோழன் ஆவன். அச் சோழமன்னன் தன் நாட்டைக் காத்தற்கேற்ற ஆற்றலும் ஆண்மையும் அற்றவ னாயிருந்தான். அதனையறிந்த இச் சுந்தரபாண்டியன், சோழநாட்டின்மேல் படையெடுத்துச் சென்று, தன் வெற்றிப்புக்கழை யாண்டும் பரப்ப வேண்டும் என்று கருதினான். அதற்கேற்ப, இவன் முன்னோர்களாகிய பாண்டி வேந்தர்கள் பல ஆண்டுகளாகச் சோழர்க்குத் திறை செலுத்திக்கொண்டு குறுநில மன்னராக வாழ்ந்து வந்தமையும், இவன் இளமைப்பருவத்தில் மூன்றாங் குலோத்துங்கசோழன் பாண்டிநாட்டின்மேல் படை யெடுத்து அங்குப் பல அழிவு வேலைகள் நிகழ்த்திச் சென்றமையும் இவன் உள்ளத்தை உறுத்திக்கொண் டிருந்தன. இந்நிலையில், தன் முன்னோர்கள் பாண்டி நாட்டை ஆட்சிபுரியும் உரிமையை இராசராசசோழன் முன்னோர்களது பேருதவியினால் பெற்றனர் என்பதையும் இவன் அறவே மறந்தொழிந்தான்.
ஆகவே, சோழ நாட்டின்மேல் படையெடுப்பதற்கு இப்பாண்டி மன்னன் தக்க காலத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான் என் பது தெள்ளிது. பேராற்றல் படைத்த பெரு வீரனாகிய மூன்றாங் குலோத்துங்கசோழனும் கி. பி. 1218 ஆம் ஆண்டில் சோணாட்டில் இறந்துவிடவே, காலங்கருதிக் கொண்டிருந்த சுந்தரபாண்டியன் சில திங்கள்களில் பெரும்படையைத் திரட்டிக்கொண்டு கி. பி. 1219 இல் அந்நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று மூன்றாம் இராசராசசோழனைப் போரில் வென்று
போரில் வென்று அந்நாட்டைக் கைப்பற்றிக்கொண்டான். இப்படையெழுச்சியில் சோழ ரின் பழைய தலைநகராகிய உறையூரும் தஞ்சாவூரும் பாண்டிநாட்டுப் போர்வீரர்களால் கொளுத்தப்பட்டுப் போயின. பல மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும்
மணிமண்டபங்களும் ஆடரங்குகளும் இடிக்கப்பட்டு நீர்நிலைகளும் அழிக்கப் பெற்றன. முற்காலத்தில் சோழன் கரிகாற்பெருவளத்தான் என்பான் தன்மீது பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர்க்குப் பரிசிலாக வழங்கியிருந்த பதினாறு கால் மண்டபம் ஒன்றுதான் சோழநாட்டில் இடிக்கப் படாமல் விடப்பட்ட-தென்றும் பிற எல்லாம் அழிக்கப் பட்டுவிட்டன என்றும் திருவெள்ளறையில் செய்யுளாக வுள்ள சுந்தரபாண்டியன் கல்வெட்டொன்று[19] கூறுகின்றது.
----
[19]. 'வெறியார் தளவத் தொடைச்செய மாறன் வெகுண்ட தொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டி லரமியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன் செய் பட்டினப் பாலைக்கன்று
நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே.'
திருவெள்ளறைக் கல்வெட்டு (செந்தமிழ்-தொகுதி 41 பக். 215)
கல்வெட்டில் காணப்படும் இப்பாடலில் கூறப்பெற்ற கண்ணன் என்பார், சோழன் கரிகாற்பெருவளத்தான்மீது பட்டி னப்பாலை என்ற நூலை இயற்றியுள்ள கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் பெருமானேயாவர். இப் புலவர்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் வழங்கி அந்நூலைத் திருமா வளவன் பெற்றுக்கொண்ட செய்தி கலிங்கத்துப் பரணியால் அறியக்கிடக்கின்றது. எனவெ, இப் பெருந் தொகையோடு நூல் அரங்கேற்றப்பெற்ற பதினாறுகால் மண்டபத்தையும் அவ்வரசர் பெருமான் இக்கவிஞர் கோமானுக்கு வழங்கினன் போலும்.
----
இதனால் இப்பாண்டி வேந்தன் படையெடுப்பில் சோணாடு எத்தகைய அழிவிற்குள்ளாயிற்று என்பதை நன்கறியலாம். போரில் தோல்வியெய்திய இராசராச சோழன் தன் உரிமைச் சுற்றத்தினருடன் தலைநகரை விட்டு நீங்கி வேறிடஞ் சென்றனன். வாகைசூடிய சுந்தர பாண்டியன், சோழர்க்கு இரண்டாந் தலைநகராக நிலவிய பழையாறை[20] நகர்க்குச் சென்று, அங்கு ஆயிரத்தளி அரண்மனையில் சோழரது முடிசூட்டுவிழா நிகழும் மண்டபத்தில் வீராபிடேகஞ் செய்துகொண்டான். பிறகு இவ்வேந்தன் தில்லையம்பதிக்குச் சென்று பொன்னம்பல வாணரை வணங்கி மகிழ்கூர்ந்தான்
---
[20]. இவ்வூர், கும்பகோணத்திற்கு மேற்புறத்திலுள்ள தாரா சுரம் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே ஒன்றரை மைல் தூரத்தில் உள்ளது. இதனைச் சூழ்ந்துள்ள முழையூர், பட்டீச் சுரம், திருச்சத்திமுற்றம், சோழமாளிகை, திருமேற்றளி, கோபி நாத பெருமாள் கோயில், ஆரியப்படையூர், புதுப்படையூர், பம்பைப்படையூர், மணப்படையூர், அரிச்சந்திரபுரம், தாராசுரம் நாதன்கோயில் ஆகிய ஊர்களையும் தன்னகத்துக்கொண்டு. முற் காலத்தில் பெரிய நகரமாக விளங்கியது
செந்தமிழ் 43ஆம் தொகுதி 4,5 ஆம் பகுதிகளில் யான் எழுதியுள்ள பழையாறை நகர் என்னுங் கட்டுரையில்: இந் நகரைப்பற்றிய வரலாற்றைக் காணலாம்.
---
பின்னர், இப்பாண்டி மன்னன் தன் நாட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது பொன்னமராவதியிலிருந்த தன்னுடைய அரண்மனையில் சில நாட்கள் வரையில் தங்கி யிருந்தான்; அந்நாட்களில் நாட்டை இழந்த இராசராச சோழனை அழைப்பித்து, தனக்கு ஆண்டுதோறும் கப் பஞ் செலுத்திக்கொண்டு சோணாட்டை ஆட்சிபுரிந்து வருமாறு ஆணையிட்டு அந்நாட்டை வழங்கினான். இராச ராசசோழனும் தன் நாட்டிறகுச் சென்று முன்போல் ஆட்சிபுரிந்து வருவானாயினன்.
இனி, சுந்தரபாண்டியனது ஆட்சியின் முன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள், இவனைச் 'சோணாடு கொண் உருளிய சுந்தரபாண்டியதேவர்'[21] எனவும் 'சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியதேவர்'[22] எனவும் கூறுவதால், இவன் இராசராசசோழனைப் போரில் வென்று சோழநாட்டைக் கைப்பற்றியமை, பிறகு
பிறகு அந்நாட்டை அவனுக்கு வழங்கியமை ஆகிய இருநிகழ்ச்சிகளும் கி.பி. 1219ஆம் ஆண்டில் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என் பது தெள்ளிது.
---
[21]. Ins 358 of 1916. [22]. Ins. 322 of 1927-28.
இச்செய்திகள் எல்லாவற்றையும்,
"பனிமலர்த் தாமரை திசைமுகன் படைத்த
மனுநெறிய தழைப் மணிமுடி சூடிப்
பொன்னிசூழ் நாட்டிற் புலியாணை போயகலக்
கன்னிசூழ் நாட்டிற் கயலாணை கைவளர
வெஞ்சின விவுளியும் வேழமும் பரப்பித்
தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திக்
காவியு நீலமும் நின்று கவினிழப்ப
வாவியு மாறு மணிநீர் நலனழித்துக்
கூடமு மாமதிலுங் கோபுரமு மாடரங்கும்
மாடமு மாளிகையும் மண்டபமும் பலவிடித்துத்
தொழுதுவந் தடையா நிருபர்தந் தோகையர்
அழுத கண்ணீ ராறு பரப்பிக்
கழுதைகொண் டுழுது கவடி வித்திச்
செம்பியனைச் சினமிரியப் பொருதுசுரம் புகவோட்டிப்
பைம்பொன் முடிபறித்துப் பாணருக்குக் கொடுத்தருளிப்
பாடருஞ் சிறப்பிற் பருதி வான்றோய்
ஆடகப் புரிசை ஆயிரத் தளியிற்
சோழ வளவன் அபிஷேக மண்டபத்து
வீராபி ஷேகஞ் செய்து புகழ்விரித்து
நாளும் பரராசர் நாமத் தலைபிடுங்கி
மீளுந் தறுகண் மதயானை மேற்கொண்டு
நீராழி வைய முழுதும் பொதுவொழித்துக்
கூராழியுஞ் செய்ய தோளுமே கொண்டுபோய்
ஐயப் படாத வருமறைதே ரந்தணர்வாழ்
தெய்வப் புலியூர்த் திருவெல்லை யுட்புக்குப்
பொன்னம் பலம்பொலிய ஆடுவார் பூவையுடன்
மன்னுந் திருமேனி கண்டு மனங்களித்துக்
கோல மலர்மே லயனுங் குளிர் துழாய்
மாலு மறியா மலர்ச்சே வடிவணங்கி
வாங்குசிறை யன்னந் துயிலொழிய வண்டெழுப்பும்
பூங்கமல வாவிசூழ் பொன்னம ராவதியில்
ஒத்துலகந் தாங்கு முயர்மேருவைக் கொணர்ந்து
வைத்தனைய சோதி மணிமண்ட பத்திருந்து
சோலை மலிபழனச் சோணாடுந் தானிழந்த
மாலை முடியுந் தரவருக வென்றழைப்ப
மானநிலை குலைய வாள்நகரிக் கப்புறத்துப்
போன வளவ னுரிமை யொடும்புகுந்து
பெற்ற புதல்வனைநின் பேரென்று முன்காட்டி
வெற்றி யரியணைக்கீழ் வீழ்ந்து தொழுதிரப்பத்
தானோடி முன்னிகழ்ந்த தன்மையெலாங் கையகலத்
தானோதகம் பண்ணித் தண்டார் முடியுடனே வி
ட்ட புகலிடந்தன் மாளிகைக் குத்திரிய
விட்டப்படிக் கென்று மிதுபிடிபா டாகவென
பொங்குதிரை ஞாலத்துப் பூபாலர் தோள் விளங்குஞ்
செங்கயல் கொண்டூன்றுந் திருமுகமும் பண்டிழந்த
சோளபதி யென்னு நாமமுந் தொன்னகரும்
மீள வழங்கி விடைகொடுத்து விட்டருளி "
என்னும் இவனது மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதியினால் நன்கு உணரலாம்.
இப்பாண்டிவேந்தன் தான் கைப்பற்றிய சோழ நாட்டைச் சில திங்கள்களுக்குள் இராசராச சோழனுக்கு அளித்துவிட்டமைக்குக் காரணம், போசள மன்னனாகிய இரண்டாம் வல்லாளதேவனும் அவன் மகன் வீரநரசிம்ம னும் அச்சோழ அரசனுக்குப் பல்வகையாலும் உதவி புரிய வந்தமையேயாம். அன்னோர் உதவியும் முயற்சியும் இல்லையாயின் இவ்வாறு சுந்தரபாண்டியன் சோழ நாட்டை அவனுக்குத் திரும்பக் கொடுத்திருக்கமாட் டான் என்பது தேற்றம். இச் செய்தியை உருத்திரப் பட்டர் இயற்றிய சகநாதவிசயம் என்ற கன்னட நூலா லும் அப்போசள அரசர்களின் கல்வெட்டுக்களாலும் நன்குணரலாம்.
பாண்டி நாட்டில் இச் சுந்தரபாண்டியன் அரசாண்டு கொண்டிருந்த காலத்தில் கொங்கு நாட்டு வேந்தர்களுக் குள் பகைமை யுண்டாயிற்று. அதனால், பல இன்னல் களுக்குள்ளாகிய வட கொங்கு மன்னன் நம் சுந்தர பாண்டியன்பால் அடைக்கலம் புகுந்து தனக்கு உதவி புரியுமாறு வேண்டிக்கொண்டான். பிறகு தென்கொங்கு மன்னனும் தன் பெரும் படையுடன் வந்து இப்பாண்டி யனை வணங்கவே, இவன் இருவரையும் அன்புடன் வர வேற்று, சில நாட்களுக்குப் பின்னர் அன்னோரை அச் சுறுத்தித் தன் முடிபினை ஏற்றுக்கொள்ளும்படி செய்து அவர்கள் முரண்பாட்டை ஒழித்தனன். இந்நிகழ்ச்சிகளை விரிவாக அறிய இயலவில்லை. எனினும், கொங்கு வேந்தர் கட்கும் பாண்டியர்கட்கும் பன்னிரண்டாம் நூற்றாண் டின் பிற்பகுதியிலும் பதின் மூன்றாம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் உறவும் நட்பும் நிலைபெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது[23].
இனி, சில ஆண்டுகட்குப் பிறகு இப் பாண்டி வேந்த னுக்கும் மூன்றாம் இராசராச சோழனுக்கும் முரண்பாடு தோன்றியது. அதற்குக் காரணம் அச் சோழமன்னன் இவனுக்குத் திறை கொடுக்காமல் மறுத்தமையேயாம். அதுபற்றிச் சினங்கொண்ட சுந்தர பாண்டியன் கி.பி. 1231ஆம் ஆண்டில் சோழ நாட்டின்மேல் மீண்டும் படையெடுத்துச் சென்று இராசராச சோழனோடு பெரும் போர் புரிந்து வெற்றியெய்தினான். தோல்வியுற்ற சோழ மன்னன் தன் நாட்டை இழந்து உரிமைச் சுற்றத்தின ருடன் வடபுலஞ் சென்றபோது வடஆர்க்காடு சில்லா வந்தவாசித் தாலுகாவி லுள்ள தெள்ளாறு என்ற ஊரில் பல்லவர்குலக் குறுநில மன்னனாகிய முதற் கோப் பெருஞ்சிங்கனால் பிடிக்கப்பெற்றுச் சேந்தமங்கலத்தி லிருந்த கோட்டையில் சிறையில் வைக்கப் பட்டான்.[24]
[23]. Ins. 33t6 of 1927-28; S. I. I., Vol. V. No. 421; Ins. 672 of 1916.
[24]. Ep. Ind., Vol. XXIII, No. 27; The Vailur Inscription of Kopperunjinga I.
வாகைமாலை சூடிய சுந்தரபாண்டியன், சோழர்க்குரிய இரண்டாம் தலைநகராகிய முடிகொண்ட சோழபுரத்திற்குச் [25] அங்கு வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்துகொண்டான். இவனது பதினைந்தாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக்களுள் சில, "சோணாடு வழங்கியரு ளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்,[26] எனவும் அவ்வாண்டில்
வரையப்பெற்ற வேறு சில கல்வெட்டுக்கள் "சோணாடுகொண்டு முடிகொண்ட சோழபுரத்து வீராபி ஷேகமும் விசயாபிஷேகமும் பண்ணியருளிய வீர சுந்தர பாண்டிய தேவர்,'[27] எனவும் கூறுவதை நோக்குமிடத்து, இப் பாண்டியனது இரண்டாம் படையெழுச்சி, இவனது பதினைந்தாம் ஆட்சி யாண்டின் பிற்பகுதியில்தான் நிகழ்ந் திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிதிற் புல னாகின் றது. இவனது மெய்க் கீர்த்தியில் இவன் இரண்டாம் முறை சோழ நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று நிகழ்த்திய வீரச்செயல்கள் எல்லாம் குறிக்கப்பட்டிருக்கின்றன. இவன் கல்வெட்டுக்கள் தஞ்சாவூர், திருச் சிராப்பள்ளி சில்லாக்களிலும் புதுக்கோட்டை நாட்டிலும் காணப்படுகின்றமையின்,
இவை இவனது ஆட்சிக் குட்பட்டிருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கறியக் கிடக்கின்றது.
----
[25]. முடிகொண்ட சோழபுரம் என்பது பழையாறை நகரே யாம் (Ins 271 of 1927.) இந்நகரில் சோழர்களது அரண்மனை நிலைபெற்றிருந்த இடம் இந்நாளில் சோழமாளிகை என்னும் தனியூராக இருக்கின்றது.
[26]. Inscription of Pudukkottai State, Nos, 293 and 296.
[27]. Ibid, Nos. 292, 297 and 298.
கி.பி. 1232இல் போசள மன்னனாகிய வீர நரசிம்மன் என்பான் பெரும்படையுடன் சென்று, கோப்பெருஞ் சிங்கனைப் போரிற் புறங்கண்டு இராசராச சோழனைச் சிறைமீட்டான்[28]. அன்றியும் அவன் காவிரியாற்றங்கரையி லுள்ள மகேந்திர மங்கலத்தில் சுந்தரபாண்டியனைப் போரில் வென்று,[29] இவன் கைப்பற்றி யிருந்த சோழநாட்டை இராச ராச சோழனுக்கு அளித்தனன். சோழ நாட்டில் நிகழ்ந்த போரொன்றில் போசள வீரசிம்மன் பால் சுந்தரபாண்டியன் தோல்வியுற்று அவனுக்குத் திறை செலுத்தினான் என்று கத்திய கர்ணாமிர்தம் என்னும் கன்னட நூல் கூறுவதும் அதனை உறுதிப் படுத்துதல் அறியற்பாலதாம். ஆகவே, இப் பாண்டிவேந் தன் ஆட்சிக்காலத்தில் சில ஆண்டுகள் வரையில் சோணாடு இவனுக்கு உட்பட்டிருந்தது எனலாம்.[30]
இனி, இவ்வரசனுடைய பட்டத்தரசி உலகமுழுதுடை யாள் என்று வழங்கப்பெற்றனள் என்பது இவன் கல்வெட் டுக்களால் அறியப்படுகிறது. இவன் அவைக்களப் புலவராக விளங்கியவர் காரணை விழுப்பரையர் என்பார். இஃது இராமநாதபுரம் சில்லா திருப்புத்தூர்த் தாலுக்காவிலுள்ள பெருச்சிக் கோயிலில் காணப்படும் கல்வெட்டொன்றால்[31] புலப்படுகின்றது.
[28]. Ep. Ind., Vol. VII.pp. 167-78.
[29]. The Colas, Second edition, (1955)pp. 424-425.
[30]. இச் சுந்தரபாண்டியன் நிகழ்த்திய முதல் படையெழுச் சியில் மூன்றாங் குலோத்துங்க சோழன் தோல்வி யெய்தினன் என்று கூறுவர் சிலர். அது தவறு என்பதும் அவ்வேந்தன் இவன் படையெழுச்சிக்கு முன்னரே இறந்தனன் என்பதும் இவனு டைய இரண்டு படையெழுச்சிகளிலும் தோல்வியுற்றவன் மூன் றாம் இராசராச சோழனே என்பதும் யான் எழுதியுள்ள 'பிற்காலச் சோழர் சரித்திரம்' இரண்டாம் பகுதியில் விளக்கப் பட்டுள்ளன.
[31]. Ins. 75 of 1924
-----
இவ்வேந்தன் காலத்தில் நிலவிய அரசியல் தலைவர் களுள் சோழன் உய்யநின்றாடு-வானான குருகுலத்தரையன், கண்டன் உதயஞ்செய்தான் காங்கேயன், திருக்கானப் பேருடையான் மழவச் சக்கரவர்த்தி என்போர் குறிப்பிடத் தக்கவராவர். அவர்களைப்பற்றிய சில செய்திகளை அடியிற் காண்க.
1. சோழன் உய்ய நின்றாடுவானான குருகுலத்தரையன் :-இவன் சுந்தர பாண்டியனிடத்தில் அமைச்சனாக விளங்கிய பெருமையுடையவன்; தடங்கண்ணிச் சிற்றூரில் பிறந்து வளர்ந்தவன் ; இராமநாதபுரம் சில்லா திருத்தங் காலிலுள்ள திருமால் கோயிலையும் சிவன் கோயிலையும் கி.பி. 1232 இல் கற்றளிகளாக எடுப்பித்தவன்[32]; அன்றியும் திருமால் கோயிலில் சுந்தரபாண்டியன் சந்தி என்ற வழி பாடு நாள்தோறும் நடைபெறும் பொருட்டு இவன் தென் னவன் சிற்றூர் என்ற ஊர் ஒன்றை இறையிலியாக அளித் திருத்தல் அறியத்தக்கது. இவன் அரசனால் வழங்கப் பெற்ற குருகுலத்தரையன் என்னும் பட்டம் பெற்றவன் ஆவன்.
---
[32]. Ins. Dos, 554 and 575 of 1922 A. R. E. for 1923 part II paras 49 and 50.
2. கண்டன் உதயஞ்செய்தான் உதயஞ்செய்தான் காங்கேயன் :- இவன் சுந்தர பாண்டியனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவன் ; தேனாற்றுப் போக்கிலுள்ள நியமம் என்ற ஊரில் பிறந்தவன்; [33] சிறு பெருச்சியூர்க் கொடிக்கொண்டான் பெரியான் ஆதிச்சதேவன் என்ற புலவன் பாடிய பிள்ளைத்தமிழ் பெற்றவன். அது காங்கேயன் பிள்ளைத்தமிழ் எனப்படும். அதற்குப் பரிசிலாகக் காத்தனேரி என்ற ஊரில் அப்புல வர்க்கு இவன் இறையிலி நிலம் வழங்கியிருத்தல் குறிப் பிடத்தக்கதாகும்[34].
3. திருக்கானப் பேருடையான் மழவச்சக்கர வர்த்தி :- இவன் சுந்தர பாண்டியனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவன்; இந்நாளில் காளையார்கோயில் என்று வழங்கும் திருக்கானப்பேர் நகரில் வாழ்ந்தவன்; மழவர் மாணிக்கம் என்று மக்களால் பாராட்டப்பெற்ற சிறப்புடையவன். இவனுக்குக் குருவாக விளங்கியவர் கவிராயர் ஈசுவரசிவ உடையார் என்பவர். இவருக்குக் காணிக்கையாக இவன் நிலம் அளித்துள்ள செய்தி ஒரு கல்வெட்டால் அறியப்படுகின்றது[35]. இவன் அரசனால் அளிக்கப்பெற்ற மழவச்சக்கரவர்த்தி என்னும் பட்டம் பெற் றவன் ஆவன்.
---
[33]. Ins. 26 of 1926. [34]. Ins. e5 of 1924.
[35]. Ins. 47. of 1924; A. R. E. for 1924, part II. para 29.
இரண்டாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் :- இவன் முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் இளவரசுப் பட்டம் கட்டப்பெற்று, அவன் இறந்தபிறகு சில திங்கள் ஆட்சிபுரிந்து இறந்தனன். சுந்தர பாண்டியனுக்குப் பிறகு இவன் அரசாண்ட செய்தி திருத்தங்காலிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது[36]. எனினும், அவனுக்கு இவன் என்னமுறையினன் என்பது தெரியவில்லை.இவன் மெய்க்கீர்த்தி 'பூதல வனிதை`[37] என்று தொடங்குவதாகும். இவனைப்பற்றிய பிறசெய்திகள் இப்போது புலப் படவில்லை.
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் :- இவன் இரண்டாம் சடையவர்மன் குலசேகரபாண்டியனுக்குப் பின்னர், கி.பி. 1239 இல் முடிசூட்டப்பெற்று, கி.பி. 1251 வரையில் அரசாண்டவன். இவன் மெய்க் கீர்த்தி, 'பூமலர்த்திருவும் பொருசய மடந்தையும்' என்று தொடங்குகின்றது. இஃது[38] இவனைப் புகழ்ந்து கூறு கிறதேயன்றி இவன் வரலாற்றை உணர்த்தக் கூடியதா யில்லை. இவ்வேந்தனுக்குப் போசள மன்னனாகிய வீரசோ மேச்சுரனும் கொங்குச் சோழனாகிய விக்கிரம சோழனும் முறையே மாமனாகவும் மைத்துனனாகவும் இருந்தனர் என் பது இவன் கல்வெட்டுக்களால்[39] அறியப்படுகின்றது. எனவே, அன்னோர் உறவும் நட்பும் இவன் ஆட்சிக்குப் பெரும் துணையா யிருந்தமை உணரற்பாலதாம்.
---
[36]. A. R. E. for 1923, part II pnra 51, Ins. of 1922.
[37]. S. I. I. Tol. V, Nos, 301 and 428.
[38]. Ibid. No. 421. [39]. S. I. I., Vol. V, Nos. and 421.
இவன் காலத்தில் சோணாட்டில் அரசாண்டவன் மூன்றாம் இராசேந்திர சோழன் ஆவன். அவன் பாண்டி நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று இப்பாண்டியனைப் போரில் வென்று இவன் நாட்டையும் கைப்பற்றிக் கொண்டான்[40]. அந்நாட்களில் இராசேந்திர சோழனோடுபோர்புரிந்து அவனை வென்று இவன் பாண்டிநாட்டை முன்போல் ஆட்சி புரிந்து வரும்படி உதவி புரிந்தவன் போசள மன்னனாகிய வீரசோமேச்சுரனேயாவன்.
இவ்வுண்மையை, அப் போசள வேந்தன் தன்னைப் 'பாண்டியகுல சம்ரட்சகன்”[41] எனவும், 'இராசேந்திரனைப் போரில் வென்றவன்'[42] எனவும் தன் கல்வெட்டுக்களில் கூறிக்கொள்வதால் நன்குணரலாம். அதற்கேற்ப, இவ்விரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் போசளரின் ஆதிக்கமும் செல்வாக்கும் பாண்டி நாட்டில் மிகுந்திருந்தன என்பதை அந்நாட்டில் காணப் படும் சில கல்வெட்டுக்களால்[43] அறிந்து கொள்ளலாம்.
இனி, இவன் தன் தலைநகராகிய மதுரையிலிருந்த சிங்கா தனங்களுக்கு மழவராயன், பல்லவராயன் என்னும் பெயர்கள் வைத்திருந்தனன் என்பது கல்வெட்டுக்களால்[44] அறியப்படுகின்றது. இவனுடைய பட்டத்தரசி உலக முழு துடையாள் என்னுஞ் சிறப்புப் பெயருடையவள் என்று தெரிகிறது.
-----
[40]. Ibid. Vol. IV. No. 511. [41]. Ep. Car., Vol, V. Ak. 125.
[42]. Ibid. No, 123.
[43]. S. I. I., Vol. V. Nos. 427 and 448; Inscriptions of the Pudukkottai State, Nos. 340 and 341. திருமெய்யத்தி லுள்ள இவ்விரு கல்வெட்டுக்களாலும் பாண்டிநாட்டில் அப் பகுதி, போசள வீரசோமேச்சுரன் ஆட்சிக்குட்பட்டிருந்தது. என்று தெரிகிறது.
[44]. S. I. I., Vol. V. Nos. 446 and 421.
முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் :- இவன் கி. பி. 1251 ஆம் ஆண்டில் முடிசூட்டப்பெற்று, இரண் டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறந்த பிறகு பாண்டி. நாட்டை ஆட்சிபுரிந்தவன்; சித்திரைத் திங்கள் மூலநாளிற் பிறந்தவன்;[45] எடுப்பும் இணையுமற்ற பெருவீரன்; பாண் டிய இராச்சியத்தை யாண்டும் பரப்பி மிக்க உயர்நிலைக்குக் கொணர்ந்த பெருவேந்தன். இவன் கல்வெட்டுக்கள் வடக்கேயுள்ள நெல்லூர் கடப்பை சில்லாக்கள் முதல் தெற்கேயுள்ள குமரிமுனை வரையில் பரவியுள்ள பெருநிலப் பரப்பில் எங்கும் காணப்படுகின்றன. எனவே, நம் தமி ழகத்திலும் அதற்கப்பாலும் வாழ்ந்த அரசர்பலர் இவனைப் பணிந்து திறை செலுத்த இவன் வேந்தர் வேந்தனாய் வீற்றிருந்து செங்கோல் செலுத்தியவனாதல் வேண்டும். அதுபற்றியே, 'எம்மண்டலமுங் கொண்டருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்' என்று இவன் வழங்கப் பெற்றனன். இவன் மெய்க்கீர்த்தி‘பூமலர்வளர் திகழ்திருமகள் புகழாகம் புணர்ந் திருப்ப[46] என்று தொடங்குகின்றது. சிறந்த இம்மெய்க் கீர்த்தி இவனுடைய வீரச்செயல்களையும் இவன் வென்ற நாடுகளையும் செய்த திருப்பணிகளையும் கூறுவதால் இவன் வரலாற்றை ஆராய்வதற்கு இது பெரிதும் பயன்படுவதா கும் திருவரங்கத்தில் வடமொழிச் சுலோகங்களில் வரையப் பெற்றுள்ள இவன் கல்வெட்டொன்று[47], இவனுடைய அறச்செயல்களையும் வீரச்செயல்களையும் நன்கு விளக்குகின்றது.
"சமஸ்த ஜகதாதார சேர்மகுலதிலக என்று தொடங்கும் இவன் கல்வெட்டுக்களில்[48] இவனுடைய வீரச்செயல்களும் சிறப்புப் பெயர்களும் குறிக்கப் பட்டிருத்தல் அறியத்தக்கது. இவன் புரிந்த திருப்பணி களையும் அறங்களையும் விளக்கும் சில செந்தமிழ்ப் பாக்கள் சிதம்பரம் திருப்புட்குழி முதலான ஊர்களிலுள்ள கோயில் களில் பொறிக்கப்பட்டுள்ளன[49]. இவற்றை யெல்லாம் துணையாகக் கொண்டு இவன் ஆட்சியில் நிகழ்ந்தவற்றை ஆராய்வாம்.
---
[45]. Ins. 28 of 1937-38. [46]. S. I. I., Vol. V. No. 459.
[47]. Bp. Ind, Vol. 111, No. 2.
[48]. S. I. I., Vol. V11; Nos. 429 and 446; 1bid, Vol, V11. No. 436.
[49]. S. 1. 1., Vol. 1V. Nos, 618-620.
இவ்வேந்தன் முதலில் சேரநாட்டின்மேல் படை யெடுத்துச்சென்து சேரமன்னனோடு போர் புரிவானாயி னன்; அவன் இவனை எதிர்த்துப் போர்புரியும் ஆற்றலின் றிப் புறங்காட்டியோடவே, மலைநாட்டைக் கைப்பற்றித் தன் ஆட்சிக்குள்ளாக்கினான். இவன் காலத்தில் சேரநாட்டில் அரசாண்ட வீர ரவி உதயமார்த்தாண்ட வர்மன் என் பவனே இவன்பால் தோல்வியுற்ற சேரமன்னனாக இருத்தல் கூடும்.[50] தக்க சான்றுகள் கிடைக்காமையால் ஒருதலையாகத் துணிதற் கியலவில்லை.
பிறகு, இவன் சோழ அரசனை வென்று, தனக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தி வருமாறு செய்தான். இவன் காலத்தில் சோழமண்டலத்தில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தவன் மூன்றாம் இராசராச சோழன் மகனாகிய மூன்றாம் இராசேந்திர சோழன் ஆவன். அவன் ஆற்றலும் வீரமும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவனெனினும் நற்காலமும் ஆகூழும் இன்மையின் இத்தகைய நிலையை மடைந்து சிறுமையுற்றனன் எனலாம். அவனோடு சோழர் ஆட்சியும் சோணாட்டில் முடிவெய்தியது. அவன் இறந்த பின்னர், சோழமண்டலம் பாண்டியர் ஆளுகைக்குட்பட்டுப் போயினமை குறிப்பிடத்தக்க தொன்றாம்.
--
[50]. Annual Report on South Indian Epigraphy for 1926-27, page 92.
பின்னர், இப் பாண்டியமன்னன் போசளரைத் தாக்கி அன்னோர் ஆட்சிக்குட்பட்டிருந்த சோணாட்டுப் பகுதியைத் தன்னடிப்படுத்த எண்ணினான்; அதனை நிறைவேற்றும்
பொருட்டுப் பெரும் படையுடன் சென்று அப் போசளர்க்குரிய நகர மாகத் திருச்சிராப்பள்ளிப் பக்கத்திலிருந்த கண்ணனூர்க் கொப்பத்தை[51] முற்றுகை யிட்டான். அங்கு நடைபெற்ற பெரும் போரில் போசளத் தண்டநாயகன் சிங்கணன் முதலானோரும் மற்றும் போசள வீரர் பலரும் கொல்லப்பட்டனர். போசளரும் மூன்றாம்
ராசராச சோழன் காலமுதல் தமக்குரியதாக வைத்திருந்த கண்ணனூர்க் கொப்பத்தை இழந்து விட்டனர்.
அந்நாட்களில் ஆட்சிபுரிந்த போசளமன்னன் வீர சிம்மன் மகனாகிய வீரசோமேச்சான் ஆவன். திருவரங் கத்திலுள்ள சுந்தரபாண்டியனது வடமொழிக் கல்வெட்டு[52], இவன் கர்நாடகதேயத்துச் சோமனை விண் ணுலகிற்கு அனுப்பினன் என்று கூறுகின்றது.
----
[51]. கண்ணனூர் என்பது இக்காலத்தில் சமயபுரம் என்னும் பெயருடன் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே ஏழுமைலில் உள்ளது. அங்குப் போசளேச்சுரம் என்ற சிவன் கோயிலும் இடிந்த கோட் டையும் இருத்தலை இன்றும் காணலாம்.
[52]. Ep. Ind. Vol. III, No. 2.
--
அதில் சொல்லப்பட்ட சோமன், போசள வீரசோமேச்சுரனாக இருப்பினும் இருக்கலாம். அதனை உறுதிப்படுத்தற்குரிய ஆதாரங்கள் இப்போது கிடைக்கவில்லை. கண்ணனூர்க் கொப்பத்தில் நடைபெற்ற போரில் சேமன் என்பவன் ஒருவன் புறத்தே நண்பன் போலிருந்து உட்பகை, கொண்டிருந்தானென்றும் சுந்தரபாண்டியன் அவனைக் கொன்று சினந்தணிந்தானென்றும் இவன் மெய்க்கீர்த்தி உணர்த்துகின்றது[53]. இவ் வரலாறும் புலப்படவில்லை. வடஆர்க்காடு சில்லா திருப்பாற்கடலில் வரையப்பெற் றுள்ள இவனது பதினான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றால்[54] இப்போர் நிகழ்ச்சிக்குப் பிறகு கண்ண னூர்க்கொப்பம் இவன் ஆளுகைக் குட்பட்டிருந்தது என் பது நன்கறியக் கிடக்கின்றது.
--
[53]. ‘நட்பதுபோ லுட்பகையாய் நின்ற- சேமனைக்கொன்று சினந்தணிந் தருளி'—(மெய்க்கீர்த்தி)
[54]. Ins. 702 of 1904.
----
இனி, இப் பாண்டி வேந்தனுக்குக் களிறுகளைத் திறையாகக் கொடுத்த கருநாடராசன் வீரசோமேச்சுரன் மகன் வீரராமநாதனாக இருத்தல் வேண்டும். ஆகவே, அவன் சுந்தரபாண்டியனுக்குக் கப்பஞ் செலுத்திக் கொண்டு சோணாட்டில் ஒரு பகுதியை ஆண்டுவந்தனன் போலும்.
பிறகு இச் சுந்தரபாண்டியன் இலங்கை யரசனை வென்று, அவன்பால் யானைகளையும் பலவகை மணிகளையும் கப்பமாகப் பெற்றான். அதன் பின்னர், இவ்வேந்தன் பல்லவ மன்னனாகிய கோப்பெருஞ்சிங்கன் அனுப்பிய திறைப்பொருளை ஏற்றுக்கொள்ளாமல் அவனது தலை நகராகிய சேந்தமங்கலஞ்[55] சென்று அதனை முற்றுகை யிட்டுக் கைப்பற்றியதோடு அவனுடைய யானை குதிரை களையும் பிற செல்வங்களையும் கவர்ந்துகொண்டான். பிறகு அவற்றையெல்லாம் அவனுக்கே யளித்து அவனைத் மன்னனாக்கித் தன் ஆணைக்கடங்கி நடக்கும் குறுநில திரும்பினான். இப் போர்கள் எல்லாம் இவனது ஆட்சி யின் ஏழாம் ஆண்டாகிய கி. பி. 1258 க்கு முன்னர் நிகழ்ந்தவையாதல் வேண்டும்.[56] ஆனால் எவ்வெவ்வாண்டில் ஒவ்வொன்றும் நடைபெற்றது என்பது இப்போது புலப்படவில்லை.
பின்னர், இவ் வேந்தன் வாணர்களுடைய மகத நாட்டையும், கொங்கு மன்னர்களின் கொங்கு நாட்டை யும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குள் ளாக்கினான்." மகத நாடு எனப்படுவது சேலம் சில்லாவின் கீழ்ப்பகுதியும் தென்னார்க்காடு சில்லாவின் மேற்பகுதியும் தன்னகத்துக் கொண்டு முற்காலத்தில் நிலவிய ஓர் உள்நாடாகும். இப்போது ஆறகளூர் என்று வழங்கும் ஆறகழூரே அதன் தலைநகராகும். அந்நாட்டை அரசாண்டவர்கள் வாணகோவரையர் எனவும், வாணாதிராசர் எனவும் வழங்கப்பெற்ற குறுநிலமன்னர் ஆவர்.
---
[55]. சேந்தமங்கலம் என்பது தென்னார்க்காடு சில்லாவில் திருநாவலூர்க் கண்மையில் உள்ளது.
[56]. S. I. I., Vol. V, No. 459.
[57].Ins.340 of 1913; S. I. I., Vol. IV.INos. 619 and 625.
பிறகு, நம் சுந்தரபாண்டியன் தெலுங்கச் சோழனா கிய விசயகண்ட கோபாலனைப் போரிற் கொன்று அவன் ஆட்சிக் குட்பட்டிருந்த காஞ்சிமா நகரைக் கைப்பற்றி னான்; அதன் பின்னர் வடபுலஞ் சென்று காகதீய மன்ன னாகிய கணபதி என்பவனைப் போரில் வென்று, நெல் லூ ரைக் கைப்பற்றி அந்நகரில் வீராபிடேகஞ் செய்து கொண்டான்[58]. விசயகண்ட கோபாலன் தம்பியர் வந்து வணங்கவே, அவர்கட்குரிய நாட்டை யளித்து ஆண்டு தோறும் தனக்குக் கப்பஞ் செலுத்திக்கொண்டு அர சாண்டு வருமாறு பணித்தனன்.[59]
இங்ஙனம் பல நாடுகளை வென்று தன்னடிப் படுத் தித் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி முடிமன்னனா விளங்கிய சுந்தரபாண்டியன், மகாராசாதிராச ஸ்ரீபர மேசுவரன், எம்மண்டலமுங் கொண்டருளியவன், எல்லாந் தலையான பெருமாள் என்ற பட்டங்களைப் புனைந்து கொண்டு ஆட்சிபுரிந்து வந்தனன் என்பது நம் தமிழகத்தில் ஆங்காங்குக் காணப்படும் இவன் கல்வெட்டுக்களால் நன்கு புலனாகின்றது.
----
[58]. Ins. 361 of 1913; S. I. I., Vol. IV Nos. 624 and 631.
[59]. ' வாக்கியல் செந்தமிழ்ச் சுந்தர பாண்டியன் வாளமரில்
வீக்கிய வன்கழற் கண்டகோ பாலனை விண்ணுலகிற்
போக்கிய பின் பவன் தம்பியர் போற்றப் புரந்தரசில்
ஆக்கிய வார்த்தை பதினா லுலகமு மாகியதே.'
(செந்தமிழ் - தொகுதி IV, பக்கம் 493)
இவ்வரசர் பெருமான், சைவர்களுக்கும் வைணவர் கட்கும் கோயில் என்னும் பெயருடன் சிறந்து விளங்கும் தில்லையம்பதியிலும் திருவரங்கத்திலும் செய்துள்ள திருப்பணிகள் பலவாகும். முதலில் இவன் தில்லையம்பலத் தில் எழுந்தருளியுள்ள இறைவனை வணங்கிப் பல துலா பாரதானங்கள்[60] செய்தமையோடு அப்பெருமான் திருக் கோயிலைப் பொன் வேய்ந்துஞ் சிறப்பித்தனன்[61]. அக்கோயிலிலுள்ள மேலைக் கோபுரம் சுந்தர பாண்டியன் கோபுரம் என்னும் பெயரால் முற்காலத்தில் வழங்கப் பெற்று வந்தது என்பது கல்வெட்டுக்களால் அறியப்படு கின்றது[62]. எனவே, அக் கோபுரத்தைக் கட்டியவன் இச் சுந்தரபாண்டியனே யாவன்.[63]
---
[60]. 'சினவரிக் கிம்புரி வெண்பிறைக் கோட்டிகல் வெங் கடுங்கட், சினமத வெங்கரிச் சுந்தரத் தென்னவன் தில்லை மன்றில் வனசத் திருவுடன் செஞ்சொற் றிருவை மணந்த தொக்குங், கனகத் துலையுடன் முத்தத் துலையிற் கலந்ததுவே' (S. I. I, Vol. IV, No. 620)
[61].S.I.I.,Vol. IV, Nos. 628, 629 and 630.
[62]. Ibid, No. 624.
[63]. மதுரையில் கீழைக்கோபுரம் அமைத்தவனும் இவனே. Nos. 286 of 1941-42, அவனிவேந்தராமன் திருக்கோபுரம் என்னும் பெயருடையது. 285 of 1942.
பெருந்தொகை, பா. .908.
-----------------
தில்லைத் திருக்கோயில்
சுந்தர பாண்டியன் கோபுரம் (முகப்புத் தோற்றம்) பக்கம் 132
தில்லைத் திருக்கோயில்
சுந்தர பாண்டியன் கோபுரம் (பின்புறத் தோற்றம்) பக்கம் 133
------------
பின்னர், இவ்வேந்தன் திருவரங்கத்திற்குச் சென்று திருமாலை வணங்கிக் கோயிலையும் பொன்வேய்ந்து அங்கு முடிசூடிக் கொண்டமையோடு பல துலாபார தானங் களும செய்தான். திருவரங்கத்தில் இவன் செய்த திருப் பணிகளும் விட்ட நிவந்தங்களும் அளித்த அணிகலன் களும் பலவாகும். அவற்றையெல்லாம் அக்கோயிலில் வரையப்பெற்றுள்ள ஒரு பெரிய வடமொழிக் கல்வெட்டிலும்[64], கோயிலொழுகு என்ற வைணவ நூலிலும் விளக்கமாகக் காணலாம்.
இங்ஙனம் தில்லையிலும் திருவரங்கத்திலுமுள்ள திருக்கோயில்களைப் பொன்-வேய்ந்தமைபற்றி இவன் 'கோயில் பொன்வேய்ந்த பெருமாள்' என்று வழங்கப் பெற்றனன். கோயில் பொன்வேய்ந்த பெருமாள் என னும் பெயருடன் திருவரங்கப் பெருங்கோயிலிலும்[65] பிற இடங்களிலும்[66] படிமங்கள் அமைப்பித்து, அவற்றிற்குத் திங்கள்தோறும் தன் பிறந்த நாளாகிய மூலத்தன்று திருவிழாக்கள் நடத்திவருமாறு இவன் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாம்.
இவன், தான் பிறந்த சித்திரைத் திங்கள் மூலநாளில் திருவானைக்காத் திருக்கோயிலில் 'சேரனை வென்றான் திருநாள்' என்னுந் திருவிழாவொன்று ஆண்டுதோறும் நிகழ்த்துவதற்கு (முட்டைபாடி, வீரதொங்கபுரம், பாகன்குடி) ஆகிய மூன்று ஊர்களை நிவந்தமாக அளித்துள்ளமையால்[67] இவனுக்குச் சேரனை வென்றான் என்ற சிறப்புப்பெயர் ஒன்று அந்நாளில் வழங்கியுள்ளது என்று தெரிகிறது.
-----
[64]. Ed. Ind, Vol. III. pp 7-17, [65]. Ins. 6 of 1936-37.
[66]. Ins. 150 of 1904; Ins. 531 of 1920. [67]. Ins. 23 of 1937-38.
---
தெலுங்கச்சோழனாகிய கண்டகோபாலனைப் போரில்வென்று காஞ்சிமாநகரைக் கைப்பற்றிய காரணம்பற்றி இவன் 'காஞ்சீபுரவரா தீசுவரன்' 'காஞ்சீபுரங்கொண்டான்' என்னும் பட்டங்கள் பெற்றனன் என்பது அறியற்பாலதாகும்[68]. அன்றியும், இவன் பல நாடுகளை வென்று எல்லாவற்றிற் கும் தலைவனாக விளங்கியமைபற்றி 'எல்லாந் தலையான பெருமாள்' என்னுஞ் சிறப்புப்பெயர் ஒன்றும் எய்தி யுள்ளனன்[69]. இவன் ஆட்சிக்காலத்தில் வழங்கிய நாணயம் "எல்லாந் தலையானான்' என்ற பெயருடையதா யிருந்தமை உணரற்பாலது.
----
[68]. சுந்தரபாண்டியன் காஞ்சியிலும் வீராபிடேகம் செய்து கொண்டான் என்று திருப்புட்குழியிலுள்ள இவனது வட மொழிக் கல்வெட்டொன்று கூறுகின்றது.
(செந்தமிழ் - தொகுதி IV, பக் 513
[69]. S. I. I., Vol VIII, No. 359
---
இவ்வேந்தன் பாண்டிய இராச்சியத்தை யாண்டும் பரப்பித் தன் ஆணை எங்குஞ் செல்லுமாறு கி. பி. 1271 வரையில் ஆட்சி புரிந்து இறைவன் திருவடியை யடைந் தான். இவன் தான் இறப்பதற்கு மூன்று ஆண்டுகட்கு முன்னரே முதல் மாறவர்மன் குலசேகரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி ஆட்சியுரிமை நல்கினான் அதனை நோக்குமிடத்து, அவ்வரசகுமாரன் இவனுடைய புதல்வனா யிருத்தல் வேண்டும் என்று கருதற்கிடமுளது.
செங்கற்பட்டு சில்லா காஞ்சீபுரந் தாலூகாவிலுள்ள திருப்புட்குழித் திருமால் கோயிலில் நம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்மீது பண்டைப் புலவர் ஒருவர் பாடிய வாழ்த்துப்பா ஒன்று வரையப் பெற்றுள்ளது[70]. அது,
“வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்
வாழ்க மண்டலம் யாவையுங் கொண்டவன்
வாழ்க சுந்தர மன்னவன் தென்னனே”
என்பதாம்.
இனி, இவ்வேந்தன் காலத்தில் நிலவிய பிற பாண்டி மன்னர்கள், சடையவர்மன் வீரபாண்டியன்[71] சடையவர் மன் விக்கிரம பாண்டியன் என்போர்.[72] இவர்கள் சுந்தர பாண்டியனுக்கு என்ன முறையினர் என்பது தெரியவில்லை; ஒருகால் உடன் பிறந்தோராக இருப்பினும் இருக்கலாம். இவர்களைப்பற்றிய சில செய்திகளை அடியிற் காண்க.
--
[70]. Ibid, Vol. VI, No. 455
[71]. The Pandyan Kingdom. pp. 175-78.
[72]. S. I. I., Vol, VII No. 761-
---
சடையவர்மன் வீரபாண்டியன் :-இவன் முதல் சடையவர்மன். சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1253 முதல் 1268 வரையில் சோழநாடு நடுநாடு தொண்டை நாடுகளில் பிரதிநிதியாயிருந்து அரசாண்ட வன். இவன் மெய்க்கீர்த்திகளுள் 'திருமகள் வளர்’[73] என்று தொடங்குவது மிகப் பெரியது; 'கொங்கீழங் கொண்டு கொடுவடுகு கோடழித்து''[74] என்று தொடங்குவது மிகச் சிறிய தொன்றாம்.
[73]. Inscriptions of the Pudukkottai State No. 366.
[74]. 'கோச்சடையவர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள், கொங்கீழங்கொண்டு கொடுவடுகு கோடழித்துக் - கங்கை யிரு கரையுங் காவிரியுங் கைக்கொண்டு-திங்கள் அரவமுஞ் செழு மலர்த் தாருடன் - பொங்குபுனற் செஞ்சடையோன் பொற் புலியூர் வீற்றிருந்து - காடவன் திறையிடக் கண்டினிதிருந்து- வீராபிஷேகமும், விஜயாபிஷேகமும் பண்ணியருளிய ஸ்ரீ வீர பாண்டிய தேவர்க்கு யாண்டு.' (Ibid, Nos. 370 and 372)
அவை, இம் மன்னன் கொங்குநாடு, ஈழநாடு, தெலுங்கச் சோழனாகிய விசயகண்ட கோபாலன் நாடு, சோழநாடு இவற்றை வென்றதையும் பல்லவ அரசனாகிய இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனிடம் திறை கொண்டதையும், தில்லைமாநகரில் வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்து கொண்டதையும் உணர்த்துகின்றன. இவன் மெய்க்கீர்த்திகளில் இவனால் வெல்லப்பட்ட வராகச் சொல்லப்பட்டுள்ள கொடுவடுகும் வல்லானும் முறையே தெலுங்கச் சோழனாகிய விசயகண்ட கோபாலனும் பல்லவ அரசனாகிய இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனும் ஆவர் என்பது அறியற்பாலதாகும். இவன் தில்லைமா நகரிலுள்ள திருக்கோயிலில் சிவகாமக்கோட்டத்திற்குத் தென்புறமும் சிவகங்கைக்கு மேற்புறமுமுள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் கி.பி. 1267ஆம் ஆண்டில் வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்துகொண்டமைபற்றி அம் மண்டபம் வீரபாண்டியன் திருமண்டபம் என்னும் பெயர் எய்துவதா யிற்று. அம் மண்டபத்தின் முன்புறத்தில் அப்பெயர் வரையப் பெற்றிருத்தலை இன்றுங் காணலாம்.[75]
---
[75]. Ins. 616 of 1929-30. தில்லையிலுள்ள நூற்றுக்கால் மண்டபம், விக்கிரம சோழனுடைய படைத்தலைவருள் ஒருவ னாகிய மணவிற் கூத்தன் காலிங்கராயனால் கட்டப்பெற்றதாகும். அதிலுள்ள பன்னிரண்டு தூண்களில் விக்கிரமசோழன் திரு மண்டபம் என்று வரையப்பட்டிருத்தல் அறியற்பாலது. பிறகு அது வீரபாண்டியன் திருமண்டபம் என்ற பெயர் எய்தியது.
---
இனி, 'திருமகள் வளர்' என்று தொடங்கும் மெய்க் கீர்த்தியில் இவன் ஈழநாட்டில் போர் புரிந்து அந்காட் டரசருள் ஒருவனைக் கொன்று மற்றொருவனுக்கு முடிசூட்டியதும் திருக்கோணமலை, திரிகூடகிரி என்பவற்றில் கயற்கொடி பொறித்ததும் சோழ-மன்னனோடு காவிக்களம் என்ற ஊரில் போர் செய்ததும் சொல்லப்பட்டிருக்கின் றன. அவற்றைத் தெளிவாக விளக்கக்கூடிய வேறு ஆதாரங்கள் இதுகாறுங் கிடைக்கவில்லை.
இவன் நிகழ்த்திய போர்களுள் பல, சடையவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுக்களிலும் குறிக்கப்பட்டுள் ளன. எனவே, முடி மன்னனாகிய சுந்தரபாண்டியனது ஆணையின்படி வீரபாண்டியன் படைத்தலைமை பூண்டு அப் போர்களைப் புரிந்திருத்தல் வேண்டும் என்று கொள்வதே பொருத்தமுடையதாகும்.
இச் சடையவர்மன் வீரபாண்டியனது ஆட்சியின் இருபத்து மூன்றாம் ஆண்டு முடியவுள்ள பல கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை நாட்டிலும் இருபத்தெட்டாம் ஆண்டுக் கல்வெட்டொன்று திருநெல்வேலி சில்லாவிலுள்ள கல்லி டைக் குறிச்சியிலும் இருத்தலால்[76] இவ்வேந்தன் கி.பி. 1281 வரையில் உயிர் வாழ்ந்திருந்தனனாதல் வேண்டும்.
சடையவர்மன் விக்கிரம பாண்டியன் :- இவன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலிருந்து ஒரு பாண்டிமன்னன் ஆவன். இவன் கல்வெட்டுக்கள் அச்சிறு பாக்கம், திருப்புட்குழி, திருமாணிகுழி, திருக்கோவலூர் முதலான ஊர்களில்[77] காணப்படு-கின்றமையின் இவன் தொண்டைமண்டலத்திலும் நடுநாட்டிலும் சில ஆண்டுகள் அரசப்பிரதிநிதியாயிருந் திருத்தல்வேண்டும் என்பது நன்கு வெளியாகின்றது; தில்லைத் திருக்கோயிலில் வரையப் பெற் றுள்ள சில பாடல்கள் இவன் புரிந்த போர்களையும், அடைந்த வெற்றிகளையும் எடுத்துக் கூறுகின்றன[78]. அவற்றை நோக்குமிடத்துச் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் நடைபெற்ற போர்களுள் சிலவற்றை இவன் படைத்தலைமை வகித்து நேரில் நடத்தியிருத்தல் வேண்டும். என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. இவனுக்குப் புவனேக வீரன் என்னும் சிறப்புப்பெயர் ஒன்று அந்நாளில் வழங்கியது என்பது சில கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது[79]. இவன் கல்வெட்டுக்கள் கி.பி. 1249 முதல் கி.பி. 1258 வரையில் கிடைக்கின்றன. இவனைப் பற்றிய பிற செய்திகள் இப்போது புலப்படவில்லை.
---
[76]. Ins, 117 of 1907 [77]. S. I. I., Vol VII. Nos. 459, 55, 793 and 128.
[78]. Ins. Nos 336, 353, and 365 of 1913.
[79]. S. I. I, Vol, IV, No. 228.
“ஏந்து மருவி யிரவி புரவியின்முன்
பூந்துவலை வீசும் பொதியிலே - காந்துசின
வேணா டனை வென்ற விக்கிரம பாண்டியன் மெய்ப்
பூணாரம் பூண்டான் பொருப்பு.'
'புயலுந் தருவும் பொருகைப் புவனேக வீரபுனல்
வயலுந் தரளந் தருகொற்கை காவல் வாரணப்போர் மு
யலுங் கணபதி மொய்த்தசெஞ் சோதி முகத்திரண்டு
கயலுண் டெனுமது வோமுனி வாறிய காரணமே.
(சீதம்பரச் சாசனங்கள் - செந்தமிழ் - தொகுதி IV, பக்கங்கள், 493-94.)
சிதம்பரத்திற்கு அண்மையில் புவனகிரி என இக்காலத்தில் வழங்கும் ஊர் இவன் பெயரால் அமைக்கப்பெற்றதாகும், புவனேக வீரன்பட்டினம் என்னும் பெயரே பிற்காலத்தில் புவனகிரி என மருவி வழங்கலாயிற்று.
முதல் மாறவர்மன் குலசேகரபாண்டியன் :- இவன் கி.பி. 1268 முதல் கி.பி. 1311 வரையில் அரசாண்டவன். இவனைக் 'கொல்லங்கொண்ட பாண்டியன்’[80] எனவும், 'புவனேகவீரன்’[81] எனவும் வழங்குவர். 'தேர்போல்' என்று தொடங்கும் இவனது மெய்க்கீர்த்தி இவனது வரலாற்றை யறிதற்குச் சிறிதும் பயன்படாததாக இருக்கின்றது.
இவன் ஆட்சிக்காலத்தில் பாண்டிய இராச்சியம் செழிப்புற்று உயர்நிலையிலிருந்தது. இவன் அரசாண்ட காலத்தில் 'இத்தாலிய' நாட்டு 'வெனிசு' நகரத்தானாகிய 'மார்க்கபோலோ' என்பவன் பாண்டிநாட்டில் பல நகரங் களைச் சுற்றிப்பார்த்து இவனது ஆளுகையைப் பெரிதும் புகழ்ந்து தன் நூலில் எழுதியுள்ளான். அவன், பாண்டி நாட்டிற்குத் தான் சென்றபோது அங்குப் பாண்டியர் ஐவர் ஆண்டு வந்தனர் என்றும், அவர்களுள் குலசேகர பாண்டி யனே மூத்தவன் என்றும், அவன் தன் தலைநகரில் பெரும் பொருள் சேர்த்து வைத்திருந்தான் என்றும், அவனது உரிமைச் சுற்றத்தினர் சிறந்த அணிகலன்களைப் பூண்டு கொள்வது வழக்கம் என்றும், அவன் தன் இராச்சியத்தில் நடுவுநிலைமையுடன் செங்கோல் செலுத்தி வந்தான் என்றும் வாணிபஞ் செய்வோரிடத்தும், பிற நாட்டு மக்களிடத்தும் அவன் பேரன்புடன் நடந்து வந்தமையின் அன்னோர் அவனது பாண்டி நாட்டிற்குப் போதற்குப் பெரிதும் விரும்பினர் என்றும் தன் குறிப்பில் வரைந்திருக்கின்றான்[82].
[80]. Annual Report on South Indian Epigraphy for 1926-27, page 90, Ins. 120 of 1907.
[81]. Ins. Nos. 260 and 263 of 1917.
[82]. Foreign Notices of South India, p, 179.
----
அந்நாட்களில், பாண்டிநாட்டிற்கு வந்த மகமதியனாகிய 'வாசப்' என்பானும் இவ்வேந்தனாட்சியை அங்ஙனமே புகழ்ந்துரைத்ததோடு இவன் தலைநகரில் ஆயிரத்திருநூறு கோடிப் பொன்னும் முத்துக்களும் வைத்திருந்தான் என் றும் குறித்துள்ளான். இவன் காலத்துப் போர் நிகழ்ச்சிகள், இவன் ஈழநாட் டின்மீது படையெடுத்ததும், சேரநாட்டிலுள்ள கொல்லத்தைக் கைப்பற்றியதுமேயாம்.
குலசேகரபாண்டியனும் இவன் தம்பிமார்களும் தம் படைத்தலைவர்களுள் மிகச் சிறந்தவனாகிய ஆரியச் சக்கர வர்த்தியின் தலைமையில் ஒரு பெரும்படையை ஈழநாட்டிற்கு அனுப்பினர். அப்படைத்தலைவன் அந்நாட்டில் பல பகுதி களைப் பேரழிவிற்குள்ளாக்கி, நகரங்களைக் கொள்ளையிட்டுச் சுபகிரி என்னும் நகரிலிருந்த பெருங்கோட்டையையும் கைப் பற்றினான். இறுதியில் அந்நாட்டில் கிடைத்த பெரும் பொருளையும் புத்ததேவரது மாண்பு வாய்ந்த பல்லையும் கைப்பற்றிக்கொண்டு வெற்றியுடன் பாண்டி நாட்டிற்குத் திரும்பினான்.[83] பாண்டியரோடு போர்புரிந்து அப்பல்லைப் பெறுதற்கு இயலாத நிலையிலிருந்த ஈழநரட்டுமன்னன் மூன் றாம் பராக்கிரமபாகு என்பான், நம் குலசேகரபாண்டியனைப் பணிந்து நட்புரிமை கொண்டு அதனைப் பெற்றுச் சென்றனன்.[84] இச்செய்திகளெல்லாம் இலங்கைச் சரிதமாகிய மகாவம்சத்திலும் சொல்லப்பட்டுள்ளன. இவை கி.பி. 1284ஆம் ஆண்டிற்கு முன்னர் நிகழ்ந்தவையாதல் வேண்டும்.
---
[83]. The Pandyan Kingdom, PP, 184 and 135. முதல் புவனைகபாகுவின் ஆட்சியின் இறுதிக்காலத்தில்தான் ஆரியச் சக்கரவர்த்தி ஈழநாட்டின்மேல் படையெடுத்துச் சென்றான் என்று தெரிகிறது.
[84]. நான்காம் பராக்கிரமபாகு புத்ததேவரது பல்லிற்கு ஈழத்தில் ஒரு கோயில் அமைத்தமை அறியத்தக்கது.
----
இக்குலசேகர பாண்டியன் கி. பி. 1274இல் சேர நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று கொல்லத்தை வென்று அதனைக் கைப்பற்றிக்கொண்டான்[85]. அது பற்றியே, இவ்வேந்தன் 'கொல்லங்கொண்ட பாண்டி யன்' என்னும் பட்டம் எய்துவானாயினன்.
இனி, திருநெல்வேலி சில்லா சேரமாதேவியி லுள்ள இம்மன்னனது இருபதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று,[86] இவன், மலைநாடு, சோழநாடு, இருகொங்கு நாடுகள், ஈழநாடு, தொண்டைநாடு என்பவற்றை வென்ற னன் என்று கூறுகின்றது. அவற்றுள் பல, முதல் சடையவர்மன் வீரபாண்டியனாலும் முன்னரே வென்று பாண்டி இராச்சியத்திற்கு உட்படுத்தப் பெற்றனவாகும். எனவே, இம்மாறவர்மன் குலசேகரபாண்டியன் தன் ஆட்சிக்காலத்தில் அந்நாடுகளில் நடைபெற்ற சில உள் நாட்டுக் குழப்பங்களையும் கலகங்களையும் அடக்கி அமைதி யுண்டு பண்ணி முன் போலவே அந்நாடுகள் தனக்குக் கப்பஞ் செலுத்திவருமாறு செய்திருத்தல் வேண்டும். அந் நிகழ்ச்சிகளையே சேரமாதேவிக் கல்வெட்டு அவ்வாறு கூறுகின்றது என்பது உணரற்பாலதாம்.
[85]. A. R. E. For 1926-27, part II, para 42.
[86]. Ins. 698 of 1916.
----------
சோழநாடு, நடுநாடு, தொண்டை நாடுகளிலுள்ள பல ஊர்களில் இவன் கல்வெட்டுக்கள் காணப்படுகின் றன. ஆகவே, அந்நாடுகள் எல்லாம் இவன் ஆட்சிக்குட் பட்டிருந்தன என்பது தேற்றம். அன்றியும், இவனுக்கு அன்றியும்,இவனுக்கு முன் அரசாண்ட முதற் சடையவர்மன் சுந்தர பாண்டிய னது ஆளுகையில் பாண்டியர் பேரரசின் கீழ் அடங்கி யிருந்த எல்லா நாடுகளும் இவனுடைய ஆட்சிக் காலத்தி லும் அங்ஙனமே இருந்தன என்பதில் ஐயமில்லை. எனவே சடையவர்மன் சுந்தரபாண்டியனைப்போல் இம்மாறவர்ம னும் 'எம்மண்டலமுங் கொண்டருளிய ஸ்ரீ குலசேகர பாண்டியன்' என்று வழங்கப்பெற்று வந்தமை[87] சாலப் பொருந்துமெனலாம். இவன் தன் பேரரசிற்குட்பட்டி ருந்த நாடுகள் எல்லாம் அமைதியாக விருத்தல் வேண் டித் தன் தம்பிமார்களை ஆங்காங்கு அரசப் பிரதிநிதிகளா யிருந்து வருமாறு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத் தக்க தாகும்.
[87]. Ins. 526, of 1926; Ins 79 of 1927; S. I. I. Vol VIII Nos. 393 and 396.
---
இவ்வேந்தர் பெருமான், சேரன் சோழன் போச ளன் முதலான அரசர்களைப் போரில் வென்று, அன் னோர் நாடுகளிலிருந்து கைப்பற்றிக் கொணர்ந்த பொருளைக்கொண்டு திருநெல்வேலித் திருக்கோயிலில் ஒரு திருச்சுற்று மாளிகை எடுப்பித்தான் என்று அங்கு வரையப்பெற்றுள்ள கல்வெட்டொன்று கூறுகின்றது[88]. இதனால் இவன் நெல்லையப்பரிடம் பேரன்புடையனாயிருந் தனன் என்பது நன்கு புலனாதல் காண்க.
இனி, நம் குலசேகரபாண்டியன் காலத்தில் அரசப் பிரதிநிதிகளாக இருந்தவர்கள், சடையவர்மன் சுந்தர பாண்டியன், மாறவர்மன் விக்கிரமபாண்டியன், மாறவர் மன் வீரபாண்டியன் என்போர். அவர்களைப் பற்றிய வரலாறுகள் நன்கு புலப்படவில்லை. எனினும், ஆங்காங் குக் காணப்படும் அவர்களுடைய கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கும் சில செய்திளே ஈண்டு எழுதப்படுகின்றன.
சடையவர்மன் சுந்தரபாண்டியன் :- இவன் மாற வர்மன் குலசேகர பாண்டியனுக்கு என்ன முறையினன் என்பது தெரியவில்லை. இவன் கி. பி. 1276 முதல் 1293
து வரையில் கொங்குநாட்டில் அரசப் பிரதிநிதியா யிருந்து ஆட்சி புரிந்தவன். வனுக்குத் தலைநகராயிருந்தது கொங்குநாட்டுக் கருவூராகும்[89]. இவன் கல்வெட்டுக்கள் சேலம், கடப்பை, தென்னார்க்காடு சில்லாக்களில் காணப்படுகின்றன.
[88]. Ins. 29 of 1927.
[89]. The Pandyan Kingdom. p. 184.
மாறவர்மன் விக்கிரமபாண்டியன் :- இவன் மாற வர்மன் குலசேகர பாண்டியனுக்குத் தம்பியாவன். இச்செய்தி திருவெண்ணெய் நல்லூரிலுள்ள ஒரு கல்வெட்டால்[90] அறியப்படுகின்றது. இவன் தைத்திங்கள் அத்தநாளில் பிறந்தவன்[91]. இவன் கல்வெட்டுக்கள் செங் கற்பட்டு, தென்னார்க்காடு சில்லாக்களில் மிகு தியாகக் காணப்படுகின்றன. எனவே, மாறவர்மன் குலசேகரன் ஆட்சிக் காலத்தில், இவன் நடுநாடு தொண்டை நாடு களில் அரசப் பிரதிநிதியாயிருந்தவன் ஆவன். கி.பி. 1268 முதல் 1281 வரையில் அரசாண்டவன் என்று தெரிகிறது. இவன் கல்வெட்டுக்களில் 'திருமகள் ஜயமகள்[92] எனவும், 'திருமலர்மாது' எனவும் தொடங் கும் இரண்டு மெய்க்கீர்த்திகள் உள்ளன. இவன் சிவன் கோயில்களிலும் திருமால் கோட்டங்களிலும் அமண் பள்ளியிலும் இராசாக்கள் நாயன் என்னும் பெயரால் நாள் வழிபாடும் திருவிழாவும் நடத்துவதற்கு[93] இறையிலி நிலங்கள் யாண்டும் அளித்திருத்தலை நோக்குங்கால், இவனுக்கு இராசாக்கள் நாயன் என்ற சிறப்புப்பெயர் ஒன்று அந்நாளில் வழங்கியிருத்தல் வேண்டும் என்பது நன்கறியக் கிடக்கின்றது.[94] அன்றியும், இவன் புறச் சமயங்களையும் பெரிதும் மதித்து ஆதரித்து வந்தனன் என்பது வெளியாதல் காண்க.
[90]. Ins. 462 of 1921.
[91]. இவன் தென்னார்க்காடு சில்லாவில் திருநறுங்கொண் டையிலுள்ள நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி என்னும் அமண் பள்ளியில், தான் பிறந்த தைத்திங்கள் அத்தநாளில் இரா சாக்கணாயன் திருநாள் நடத்துவதற்கு இறையிலி நிலம் அளித் திருத்தலால் இதனை நன்கறியலாம். (S. I. I. Vol VII. No. 1014)
[92]. Ins. Nos. 539 and 704 of 1916,
[93]. S. I. I, Vol. VII No. 795, 916, 1018 and 1023.
[94]. மூன்றாம் குலோத்துங்க சோழன் இராசாகணாயன் என்னுஞ் சிறப்புப் பெயருடையவன் என்றும், எனவே, அவன் தைத்திங்கள் அத்தநாளில் பிறந்தவன் என்றும் 'மூன்றாம் குலோத் துங்க சோழன்' என்ற நூலின் ஆசிரியர் எழுதியிருப்பதற்குக் கல்வெட்டுக்களில் சிறிதும் ஆதாரமின்மை அறியத்தக்கது.
மாறவர்மன் வீரபாண்டியன் :-இவன் கல்வெட்டுக் கள் தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள சிதம்பரம், எறும்பூர், திருவயீந்திரபுரம் என்னும் ஊர்களில் உள்ளன[95]; எனவே, இவன் அப்பகுதியில் அரசப் பிரதிநிதியாயிருந்திருத்தல். வேண்டும் என்பது திண்ணம். இவன் ஆட்சிக் காலமும் இவனைப் பற்றிய பிற செய்திகளும் தெரியவில்லை.
மதிதுங்கன் தனிநின்று வென்ற பெருமாளாகிய ஆரியச் சக்கரவர்த்தி:- இவன் மாறவர்மன் குலசேகர பாண்டியனிடத்தில் அமைச்சனாகவும் படைத் தலைவனாகவும் விளங்கியவன் ; ஈழநாட்டின்மேல் படையெடுத்துச் சென்று அதனைக் கைப்பற்றிப் பெரு வெற்றியுடன் திரும்பியவன் ; தனிநின்று வென்ற பெருமாள் என்னும் பட்டம் பெற்றவன்; பாண்டி மண்டலத்துச் செவ்விருக்கை நாட்டுச் சக்கரவர்த்தி நல்லூரினன்[96] மதிதுங்கன் என்பது இவனது இயற்பெயர் போலும்.
---
[95]. Ins. No. 269, 279, 320 and 386 of 1913; S. I. I. Vol. VII Nos. 768 and 769.
[96]. A. R. E. For 1936-37, part, II, Para 40. UIT-10
குலசேகர மாவலிவாணராயன் :-கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாவலிவாணாதிராயன் என்னும் பட்டமுடைய சில அரசியல் தலைவர்கள் பாண்டி நாட்டில் இருந்தனர். அவர்களுள், பிள்ளை குலசேகர மாவலி வாணராயன் என்பான் இவ்வேந்தன் காலத்தில் இருந்தவன். புதுக்கோட்டை நாட்டிலுள்ள கோனாடு
இவன் மேற்பார்வையில் இருந்தது என்று தெரிகிறது. இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள கேரள சிங்கவளநாடும் வாணாதிராயன் என்ற தலைவன் ஒருவன் கண்காணிப்பில் அமைந்திருந்தமை அறியத் தக்கது.[97]
[97]. The Pandyan Kingdom p. 187.
பாண்டி வேந்தரிடம் படைத்தலைவர்களாக நிலவிய இவ்வாணாதிராயர்கள் அன்னோர் அயலார் படையெழுச்சி யினால் ஆற்றலிழந்து இன்னல் எய்திய காலத்தில் பாண்டி நாட்டில் தாம் சுயேச்சையாகத் தனியரசு புரியத் தொடங்கி யமையோடு பாண்டியர் திருநெல்வேலி ஜில்லாவிற்குச் சென்று அங்குக் குறுநிலமன்னர் நிலையில் இருந்து வருமாறு செய்தும் விட்டனர்: எனவே, பாண்டியர் பேரரசின் வீழ்ச்சிக்கு இம்மாவலி வாணராயர்களின் அடாத செயலே காரணமாகும்.
இனி, குலசேகர பாண்டியற்குச் சுந்தர பாண்டியன் வீரபாண்டியன் என்ற புதல்வர் இருவர் இருந்தனர். அவர்களுள் சுந்தரபாண்டியன் பட்டத்தரசியின் மகன்; வீரபாண்டியன் வேறு மனைவியின் புதல்வன். அவ்விரு வருள் வீரபாண்டியன் ஆண்மையும் வீரமுமுடையவனாயிருந் தனன். தனக்குப் பிறகு பாண்டிய இராச்சியத்தை நன்கு பாதுகாத்து ஆட்சி புரியவல்லவன் வீரபாண்டியனே என்று கருதிக் குலசேகரபாண்டியன் அவனுக்கு கி.பி.1296 இல் இளவரசுப் பட்டங் கட்டினான்[98]. சுந்தரபாண்டியன் தன் தந்தையின் செயலை வெறுத்து, கி.பி.1310 ஆம் ஆண்டில் அவனைக் கொன்று சில வீரர்களின் துணை கொண்டு மதுரைமா நகரில் அரியணை ஏறினான். இளவரசனா யிருந்த வீரபாண்டியன் தலைநகரை விட்டு ஓடிவிட்டான். குலசேகர பாண்டியன் தன் மகனால் கொல்லப்பட்ட செய்தி, கல்வெட்டுக்களில் காணப்படவில்லை. மகமதிய ஆசிரியனாகிய 'வாசப்' என்பவன் வரைந்துள்ள குறிப்பால் அறியப்படுகின்றது.[99]
---
[98]. Ins. 430 of 1921.
[99]. Wassaf in Elliot and Dowson, Vol. III. pp. 53 and 54.
-------------
8.. கி.பி.1310 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆட்சிபுரிந்த பாண்டியர்கள்
மிகச் சீரிய நிலையிலிருந்த பாண்டிய இராச்சியம், கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் தாழ்ந்த நிலையை அடையத் தொடங்கிற்று. மாறவர்மன் குல சேகர பாண்டியன் புதல்வர் இருவரும் தம்முட் பகை கொண்டு போர்புரிந்து கொண்டிருந்தமையின் உள்நாட்டிற் குழப்பம் மிகுந்தது. அலாவுடீன் கில்ஜியின் படைத் தலைவன் மாலிக் காபூர் என்பான் அதனை யுணர்ந்து பாண்டி நாட்டின்மீது படையெடுத்துச் சென்று, பல நகரங்களைக் கொள்ளையிட்டுப் பெரும் பொருள் திரட்டிச் சென்றனன். பாண்டி மன்னர்கள் தம் நாட்டைக் காப் பாற்றிக் கொள்ளுதற்கேற்ற ஆற்றலின்றி அயலாரது படையெழுச்சியினால் அளவிலாத் துன்பத்திற்காளா யிருந் தமை அன்னோர்க்குத் திறை செலுத்திவந்த குறுநில மன்னரும் கலகஞ்செய்து சுயேச்சை அடைதற்கு ஏது வாயிற்று. ஆகவே, கி.பி. பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே பாண்டிவேந்தர்களின் பெருமையும் குறையத் தொடங்கியது எனலாம்.
சடையவர்மன் சுந்தர பாண்டியன், சடையவர்மன் வீரபாண்டியன் ஆகிய இருவரும் மாறவர்மன் குலசேகர பாண்டியன் புதல்வர்கள் என்பதும், இவர்களுள் சடைய வர்மன் சுந்தரபாண்டியன், தன் மாற்றாந்தாயின் மகனும் தன்னிலும் இளைஞனுமாகிய வீரபாண்டியனுக்குத் தன் தந்தை ஆட்சியுரிமை நல்கினமைபற்றித் தந்தையை வெறுத்துக் கொலை புரிந்து கி.பி. 1310 ஆம் ஆண்டில் அரியணை ஏறினான் என்பதும் முன்னர் உணர்த்தப் பட்டன. மகமதிய ஆசிரியனாகிய 'வாசப்' என்பான் இச்செய்திகளைக் கூறியுள்ளனன்.[1] வேறு சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும், மற்றொரு மகமதிய ஆசிரியனாகிய 'அமீர்குசுரு' என்பான், இளவரசர்களாகிய இவ் விருவரும் பெரும் பகை கொண்டு தமக்குள் போர் புரிந்து கொண்டிருந்தனர் என்று குறித்துள்ளனன்[2]." ஆயினும் இவ்விரு வேந்தர்களது ஆட்சியும் பாண்டிய நாட்டில் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது இவர்கள் கல்வெட்டுக்களால் நன்கு புலப்படுகின்றது. வர்மன், வீரபாண்டியன் கி. பி. 1296 முதல் 1342ஆ ம் ஆண்டுவரை ஆட்சி புரிந்தனன் என்று கல்வெட்டுக் களால் தெரிகிறது. சடையவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுக்கள், இவன் கி.பி. 1303 முதல் 1319 முடிய அரசாண்டனன் என்று உணர்த்துகின்றன. இம்மன்னர் இருவரும் நிகழ்த்திய போரைப் பற்றிய செய்திகளைத் தெளிவாக இந்நாளில் அறிதற்கியலவில்லை. ஆயினும், இவ்விருவரும் பாண்டி நாட்டில் வெவ்வேறிடங்களில் இருந்து ஒரே காலத்தில் ஆட்சி புரிந்திருத்தல் வேண்டு மென்பதிற் சிறிதும் ஐயமில்லை. மறுபடியும் இவ்விருவர்க் கும் நிகழ்ந்த போரில் தோல்வியுற்ற சுந்தர பாண்டியன் அலாவுடீன் கில்ஜியின் படைத் தலைவனான மாலிக்கா பூரைத் தென்னாட்டின் மீது படையெடுத்துவருமாறு அழைத்தமை குறிப்பிடத்தக்க தொன்றாம்[3].
---
[1]. Elliot and Dowson, Vol. III, pp. 53 and 54. [2]. Ibid, p. 88.
[3]. முன்னாள் இராசராசன் சுந்தர பாண்டிய தேவர் துலுக்க ருடன் வந்த நாளிலே ஒக்கூருடையாரும் இவர் தம்பிமாரும் அனை வரும் அடியாரும். செத்துங் கெட்டும்போய் அலைந்து ஊரும் வெள்ளத்தாலும் கலகத்தாலும் பாழாயிருக்கிற அளவிலே " (SII. Vol. VIII. No. 247.) எனவருங் கல்வெட்டுப் பகுதி இச் செய்தியை வலியுறுத்தல் காண்க.
-----
இது கி.பி. 1310ஆம் ஆண்டின் இறுதியில் நிகழ்ந்ததென்று மகமதிய சரித்திர ஆசிரியனாகிய 'வாசப்' கூறியுள்ளான். இப் படை யெழுச்சியைப் பற்றிய செய்திகளை 'அமீர்குசுரு' என்பவன் எழுதியுள்ள குறிப்புக்களால் ஒருவாறு உணர லாம். அந்நாளிற் பாண்டிநாடு மகமதிய வீரர்களால் கொள்ளையிடப்பெற்றமையின் அது தன் செல்வத்தை யும் சிறப்பையும் இழந்து வறுமை யெய்தியது; நாட்டில் அமைதியாக வாழ்ந்து வந்த மக்களெல்லோரும் தம் வாழ்நாளில் என்றும் கண்டறியாத பல்வகை இன்னல் களுக்குள்ளாயினர்; அறநிலையங்களும் கோயில்களும் அழி வுற்றன. சயாவுடீன் பார்னி என்ற மற்றொரு சரித்தி ராசிரியன், குலசேகர பாண்டியன் புதல்வர் இருவருடைய செல்வங்களையும் மாலிக்காபூர் கொள்ளைகொண்டு வெற்றி யுடன் டில்லிமா நகருக்குத் திரும்பிச் சென்றானென்று குறித்துள்ளனன்.[4] இவற்றால் பாண்டிநாடு அந்நாளில் எத்தகைய துன்ப நிலையில் இருந்தது என்பதை எளிதில் உணரலாம்.
பாண்டி மன்னர் நிலைமையினையும் உள்நாட்டில் நேர்ந்த குழப்பங்களையும் நன்குணர்ந்த சேர மன்னன் இரவிவர்மன் குலசேகரன் என்பான் பாண்டிய இராச்சிய. யத்தின்மீது படையெடுத்துச் சென்று சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனன். அவன் கல்வெட்டுக்கள் திருவரங்கம், காஞ்சி, பூந்தமல்லி என்னும் ஊர்களிற் காணப்படுகின்றன.[5] அக்கல்வெட்டுக்களில் வீரபாண்டியனையும் சுந்தர பாண்டியனையும் அவன் வென்ற செய்தி குறிக்கப்பெற்றுளது.
---
[4]. பாண்டியர் இருவருக்கும் உரிய 612 யானை களும் 20,000 குதிரைகளும், 96,000 மணங்கு பொன்னும் முத்துக்களும், அணி கலங்களும் அடங்கிய பல பெட்டிகளும் ஆகிய இவற்றை மாலிக்காபூர் கொள்ளையடித்துச் சென்றான் என்று பார்னி கூறி யுள்ளமை யறியத்தக்கது.(Elliot and Dowson, Vol, III, p. 204:)
[5]. Ins. Nos, 33 and 34 of 1911.
·-----
இந்நிலையில், பாண்டிய இராச்சியத் தில் நிலவிய குறுநில மன்னர்களும் திறைமறுத்துத் தனியரசு புரியத் தொடங்கினார்கள். அங்ஙனம் சுயேச்சை யாகத் தம் நாட்டை ஆட்சிபுரியத் தொடங்கியவர்கள் தொண்டைமண்டலத்துப் படைவீட்டு இராச்சியத்துச் சம்புவராயர்களும்[6] பாண்டிய நாட்டிலிருந்த வாணாதி ராயர்களும் ஆவர். ஆகவே, குலசேகர பாண்டியனாட்சி யில் மிகச் சிறந்த நிலையிலிருந்த பாண்டிய இராச்சியம் அவன் புதல்வர்கள் ஆளுகையிற் பலவகையிலும் தாழ் வுற்றமை உணரற்பாலது.
வீரபாண்டியன் ஆட்சியின் பிற்பகுதியில் தலைநகராகிய மதுரையை மகமதியத் தலைவன் ஜலாலுடீன் அசன்ஷா என்பவன் கைப்பற்றினான். அவன் டில்லிமா நகரிலிருந்து மகமதுபின் துக்ளக் என்னும் அரசனால் தென்னாட்டிற்கு அனுப்பப் பட்டவன். அவன் பாண்டிய அரசனை வென்று நாட்டைக் கவர்ந்து கொண்டதோடு டில்லிமன்னன் பிரதிநிதியாக மதுரையிலிருந்து அரசாளவும் தொடங்கினான். சில நாட்களுக்குப் பின்னர், அவன் டில்லிவேந்தனுடைய தொடர்பை முழுவதும் ஒழித்து விட்டு மதுரையில் அரசு செலுத்திவந்தான். பாண்டி நாட்டில் மகமதியரது ஆளுகை கி.பி.1330ஆம் ஆண் டிற் கணித்தாகத் தொடங்கி, கி.பி. 1378 வரையில் தடை பெற்றது.
[6]. தமிழ்ப் பொழிலிரண்டாந்துணரில் (பக்கம் 142-150) யானெழுதியுள்ள 'சம்புவராய மன்னர்' என்ற கட்டுரையால் இவர்கள் வரலாற்றை அறியலாம்.
---
ஜலாலுடீனுக்குப் பிறகு அங்கு அரசாண்ட மகமதியத் தலைவர்கள் அலாவுடீன் உடான்ஜி, குட்புடீன், கியாசுடீன், நாசிருடீன், அடில்ஷா, பக்ரு டீன் முபாரக்ஷா, அலாவுடீன் சிக்கந்தர்ஷா என்போர்.[7] அவர்களுள் சிலர், தம் பேரால் நாணயங்களும் வெளியிட் டுள்ளனர். அவர்கள் ஆளுகையைக் குறிக்கும் இரண்டு கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை நாட்டிலுள்ள இராங்கியம், பனையூர் என்ற ஊர்களில் உள்ளன.[8] அவர்கள் காலங்களில் உள்நாட்டிற் கலகங்கள் மிகுந்திருந்த மையின், மக்களெல்லோரும் அல்லல் வாழ்க்கையுடை யோரா யிருந்தனர்.[9] அப்போது பல திருக்கோயில்கள் கொள்ளையிடப்பெற்று நாள் வழிபாடும் ஆண்டு விழாவும் இன்றிப் பல ஆண்டுகள் மூடப்பட்டிருந்தன என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன[10]. சமயக் கொள்கை பற்றிப் பொதுமக்கள் பலவகைத் துன்பங்களுக்கும் ஆளாயினர் என்பது மகமதிய சரித்திர ஆசிரியனாகிய இபின் படூடா (Ibin Batuta) வின் குறிப்புக்களால் தெரிகிறது.[11]
[7]. See South India and her Muhammadan Invaders by Dr. S. Krishnaswamy Aiyangar.
[8]. Inscriptions of the Pudukkottai State, Nos. 669 and 670.
[9]. Ibid, Nos. 454 and 669.
[10], Inscription No 322 of 927; Ins. Nos. 119 and. 120 of 1908; S. I. I., Vol, VIII, No. 750.
[11]. Foreign Notices of South India, pp. 277 and 729.
---------
மகம்மதியரது ஆட்சிக்காலத்தில் பாண்டி நாட்டில் பாண்டிய அரசர் சிலர் இருந்தனர். அவர்கள், மாறவர்மன் குலசேகரபாண்டியன் (1314-1346) சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (1815-1847) இவர்களுள் சடையவர்மன் பராக்கிரமன் மதுரையில் ஒன்பது நிலைமேலைக் கோபுரத்தைக் கி.பி. 1323-ல் கட்டினான்[12]. மாறவர்மன் வீர பாண்டியன் (1334-1380.) மாறவர்மன் பராக்கிரம பாண்டி யன் (1335-1352) என்போர்[13] இவர்கள் கல்வெட்டுக்கள் பாண்டிநாட்டிற் பல இடங்களிற் காணப்படுகின்றன. ஆனால், அந்நாட்டில் எவ்வெவ்வூர்களிலிருந்து எவ்வெப் பகுதிகளை இவர்கள் ஆண்டுவந்தனர் என்பது புலப்பட வில்லை. இவர்கள் தம் நாட்டில் நடைபெற்று வந்த அயலாரது கொடிய ஆட்சியையும், அதனால் மக்கள் எய்திய எல்லையற்ற துன்பங்களையும் ஒழித்தற்கு முயன்றும் இருக்கலாம். அம்முயற்சி பயன்படவில்லை போலும். அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுழைத்த போசள மன்ன னாகிய மூன்றாம் வீரவல்லாள தேவனும் ஊழ்வலியால் வெற்றி பெறாது போர்க்களத்தில் உயிர் துறந்தான்[14].
அந்நிகழ்ச்சிகளைக் கேள்வியுற்ற விசயநகர வேந்தனா கிய குமார கம்பண்ணன் பெரும்படையைத் திரட்டிக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்தான். அவன் படை யெடுத்து வந்தது, மதுரைமா நகரில் நிலைபெற்றிருந்த மகமதியராட்சியை ஒழித்து, மக்களையும் சமயங்களையும் பாதுகாத்தற்கே யாகும்[15]. குமாரகம்பண்ணனது தென்னாட் டுப் படை யெழுச்சி கி.பி. 1363ஆம் ஆண்டிற்கு முன் னர் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அப்படையெழுச்சியைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் தமிழ்நாட்டிற் சில ஊர்களில் உள்ளன.
---
[12]. கோயில் மாநகர், பக்கம் 114
[13] The Pandyan Kingdom, pp. 245 and 246
[14]. Mysore Gazetteer Vol, II, part II, page. 1405.
[15]. குமாரகம்பண்ணன் மனைவி கங்காதேவி யென்பாள் தன் கணவனது வெற்றி குறித்து எழுதிய 'மதுராவிஜயம்' என்ற வ்ட மொழி நூலில் அம் மன்னன் மதுரையின்மேற் படையெடுத்து வந்தமைக்குக் காரணமாக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றாள்:-
'ஒருநாள் இரவு குமாரகம்பண்ணன் கனவில் ஒரு தெய்வப் பெண் தோன்றிப் பாண்டி நாட்டில் துலுக்கர் ஆட்சியினால் மக்கள் அடையும் பெருந் துன்பத்தையும் திருக்கோயில்கள் இடிக்கப்படுவதனையும் வைதிக சமய வொழுக்கங்கள் இழிவுபடுத்தப்படுவ தனையும் எடுத்துக்கூறித் தன் கையிலுள்ள வாளினை அம்மன்னன் கையிற் கொடுத்து, இது சிவபெருமானுக்கு விசுவகர்மாவினால் கொடுக்கப்பெற்றது; இவ்வாளினைச் சிவபெருமான் பாண்டியர்க் குக் கொடுத்தார்; இதனை எடுத்துப் போர்புரியும் வன்மை பாண்டியர்க்கு இல்லாது போகவே அகத்திய முனிவர் இதனை என்னிடந் தந்து உன் கையிற் கொடுக்கும்படி கூறினார்; ஆகவே இவ்வாளினால் துலுக்கரை வென்று பாண்டி நாட்டு மக்களைக் காத்து நலஞ்செய்வாயாக' என்று சொல்லி மறைந்தது" என்பது அந்நிகழ்ச்சியாகும்.
-----
விசயநகரவேந்தனது படையெழுச்சியினால் தென்னாட்டில் மகமதியராட்சி ஒருவாறு நிலைகுலைந்தது. எனலாம். ஆயினும், அவர்கள் ஆட்சி கி. பி. 1378 வரை யில் மிக்க தளர்ச்சியுற்ற நிலையிலாதல் அங்கு நடை பெற்றிருத்தல் வேண்டும் என்பது அந்நாட்டிற் கிடைத் துள்ள சில மகமதிய நாணயங்களால் வெளியாகின்றது. மகமதியர்களை வென்ற விசயநகரமன்னன் பாண்டியர் களுள் எவ்வரசனிடத்தில் அந்நாட்டை ஒப்பித்துச் சென்றான் என்பது புலப்படவில்லை. ஆயினும், அவன் பாண்டியர்க்கு உற்றுழி உதவுமாறும், அறநிலையங்களைப் பாதுகாத்து வருமாறும் சில தலைவர்களைப் பாண்டி நாட்டில் ஆங்காங்கு அமர்த்திச் சென்றனன். அத்தலைவர் களும் பாண்டிய இராச்சியத்தைக் கைப்பற்றிக்கொண்டு தாமே அரசாள வேண்டுமென்ற எண்ணத்துடன் காலங் கருதிக்கொண்டிருந்தனர். பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், பதினைந்தாம் நூற்றாண்டிலும் பாண்டிய அரசர்கள் கல்வெட்டுக்கள் மதுரை ஜில்லாவிற் காணப்பட வில்லை. திருநெல்வேலி ஜில்லாவில் மாத்திரம் இவர்கள் கல்வெட்டுக்கள் உள்ளன. ஆகவே, பதினான்காம் நூற்றாண் டின் பிற்பகுதியில் இவர்கள் தம் தலைநகராகிய மதுரையை யும், அதனைச் சூழ்ந்துள்ள நாட்டையும் இழந்து திருநெல் வேலி ஜில்லாவிற்குச் சென்று தங்கியிருந்தனராதல் வேண்டும்.
இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள ஸ்ரீ வில்லிபுத்தூரில் கி.பி.1453ஆம் கி.பி. 1453 ஆம் ஆண்டில் வரையப்பெற்றுள்ள ஒரு கல்வெட்டு, 'மகாபலி, வாணதரையர் சீர்மையான மதுரைமண்டலம்' என்று கூறுகின்றது[16]. அன்றியும், பாண்டியர்க்குத் திறை செலுத்திவந்த குறுநில மன்னர்களான மாவலிவாணாதிராயர்கள் தம்மை 'மதுராபுரி நாயகன்' எனவும், 'பாண்டிய குலாந்தகன்' எனவும், கி.பி. 1483 இல் சிறப்பித்துக் கூறிக்கொள்வதைப் புதுக் கோட்டை நாட்டில் நெக்கோணம் என்ற ஊரிலுள்ள ஒரு கல்வெட்டில்[17] காணலாம்: ஆகவே, பதினைந்தாம் நூற்றாண்டில் மதுரையிலிருந்து அரசு செலுத்தியவர்கள் வாணாதிராயர்கள் என்பது நன்கு வெளியாகின்றது.
[16]. Travancore Archaeological Series, Vol, I, page 46 ; Ins. 577 of 1926.
[17]. Inscriptions of The Puddkkottai State, No. 672
பாண்டியர்கள் மிக்க தளர்ச்சியெய்தியிருந்த நாட்களில் வாணாதிராயர்கள் இவர்களைப் போரில் வென்று மதுரை யைக் கைப்பற்றிக்கொண்டதோடு, அதனைச் சூழ்ந்துள்ள நாட்டைத் தாமே சுயேச்சையாக ஆட்சி புரியவும் தொடங்கினர். அவர்கள் 'பாண்டிய குலாந்தகன்' என்று தம்மைச் சிறப்பித்துக் கூறிக்கொள்வது ஒன்றே பாண்டியரிடத்து அன்னோர் கொண்டிருந்த பெரும் பகைமையை நன்கு விளக்கா நிற்கும். அன்றியும், புதுக் கோட்டை நாட்டில் குடுமியான் மலையிலுள்ள இரண்டு கல்வெட்டுக்கள், பாண்டியர்கள் வாணாதிராயர்களிடம் தோல்வியுற்று வேற்றிடம் சென்றனர் என்பதை வலியுறுத்துகின்றன.[18] மதுரைமாநகரைவிட்டு நீங்கிய. பாண்டியர்கள் தென்பாண்டிநாட்டை அடைந்து அங்கு அரசுசெலுத்தி வந்தனரென்பது பல கல்வெட்டுக்களாற் புலப்படுகின்றது. இவர்கள் ஆளுகையும் அங்குப் பதி னேழாம் நூற்றாண்டின் இறுதிவரையில் நடைபெற்றமை அறியற்பாலதாகும்.
----
[18]. மால்விட்ட படைதுரந்து வடுகெறிந்த
மகதேசன் வடிவேல் வாங்கக்
கால்விட்ட கதிர்முடிமே லிந்திரனைப்
புடைத்ததுமுன் கடல்போய் வற்ற
வேல்விட்ட தொருதிறலு முகிலிட்ட
தனிவிலங்கும் வெற்பி லேறச்
சேல்விட்ட பெருவலியு மாங்கேவிட்
டுடனடந்தான் தென்னர் கோவே.
--- (Inscriptions of the Pudukkottai State, No. 653.)
இழைத்த படியிதுவோ வெங்கணா வென்றென்
றழைத்த வழுகுர லேயால் - தழைத்தகுடை
மன்னவர்கோன் வாணன் வடிவேலால் தோற்றுடைந்த
தென்னவர்கோன் போன திசை. (Ibid No.678)
----------------
9. தென்பாண்டிநாட்டில் ஆட்சிபுரிந்த பிற்காலப் பாண்டியர்கள்
கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரையில் தென் பாண்டி நாட்டிற் பாண்டிய அரசர் சிலர் ஆட்சி புரிந்துள்ள னர். அவர்கள் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் அன் னோர் பெயர்களை உணர்த்துமளவி லுள்ளனவேயன்றி வரலாற்றுண்மைகளை விளக்கக்கூடியனவாக இல்லை. அவர்கள் தலைநகர் யாது என்பதும் நன்கு தெரியவில்லை. ஆயினும், கொற்கை, தென்காசி, கரிவலம்வந்தநல்லூர் ஆகிய ஊர்கள் அவர்கள் தலைநகரங்களாக இருந்திருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரப்படுகின்றது.
பதினான்காம் நூற்றாண்டின் இறுதியிலும் பதினைந் தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தென்பாண்டி நாட்டில் அரசு செலுத்திய பாண்டியர்களுள், பராக்கிரம பாண்டியன் என்ற பெயருடையார் மூவர் இருந்தனர்[1]. அம்மூவருள் கி.பி.1387இல் திருக்குற்றாலத்தில் திருப் பணி புரிந்தவன் ஒருவன்; கி.பி.1384 முதல் 1415 வரை யில் அரசாண்டவன் மற்றொருவன்; கி. பி. 1401 முதல் 1434 வரையில் ஆட்சி புரிந்தவன் மற்றையோன். அன்றி யும், அக்காலப் பகுதியில் சடையவர்மன் குலசேகர பாண்டியன், சடையவர்மன் விக்கிரமபாண்டியன் என்ற வேறிரண்டு மன்னரும் இருந்தமை அறியத்தக்கது. இவர்களுள், குலசேகரபாண்டியன் கி. பி. 1395இல் பட்டம் பெற்றவன். இவன் கல்வெட்டொன்று கரிவலம்வந்த நல்லூரில் உள்ளது. அஃது இவ்வேந்தனது ஆணைத் திருமுகமாகும்.[2] விக்கிரமபாண்டியன் கி.பி. 1401 முதல் 1422 வரையில் அரசு செலுத்தியவன். இவன் கல்வெட் டுக்கள் திருக்குற்றாலத்திலும் திருப்புத்தூரிலும் உள்ளன[3]. இவர்கள் எல்லோரும் தென்பாண்டி நாட்டில் எவ்வெவ்விடங்களிலிருந்து எவ்வெப்பகுதிகளை ஆட்சி புரிந்தனர் என்பது புலப்படவில்லை.
[1]. The Pandyan Kingdom, pp. 246 and 248.
[2]. Travancore Archaeological Series, Vol. I. Page 45.
[3]. The Pandyan Kingdom p. 248.
----
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் :-பிற் காலப்பாண்டியர்களுள் இவ்வேந்தன் மிகுந்த பெருமை வாய்ந்தவனாவன். இவன் கி.பி. 1411 முதல் 1463 வரை யில் அரசாண்டவன்; செந்தமிழ்ப் புலமையும் வட மொழிப் பயிற்சியும் உடையவன். இவனைப் பொன்னின் பெருமாள்[4] எனவும், மானகவசன் எனவும் அந்நாளில் வழங்கியுள்ளனர். தென்காசிக் கோயிலிலுள்ள 'பூமிசை வனிதை நாவினிற் பொலிய' என்று தொடங்கும் மெய்க் கீர்த்தி[5] இவன் போர்ச்செயல்களையும் திருப்பணிகளையும் குணச்சிறப்பையும் நன்கு விளக்குகின்றது.
இம்மன்னன், சங்கரநயினார்கோயில், திருக்குற்றா லம், முதலைக்குளம், வீரகேரளம்-புதூர் முதலான ஊர்களில் தன் பகைஞரைப் போரில் வென்று புகழெய்தினான் என்று இவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது. இவன் திருக்குற்றாலப் போரில் சேரனை வென்றான் என்பது, தளவாய் அக்கிரகாரச் செப்பேடுகளால் வெளியாகின்றது.[6]
---
[4]. Travancore Archaeological Series, Vol. I, p. 97.
[5]. Ibid, p. 91.
[6]. T. A. S., Vol. I. pp. 126 and 133.
இவன் விந்தனூர்[7] முதலான ஐந்து ஊர்களில் அகரங்கள் அமைத்து அந்தணர்களுக்கு அளித்தமையும், திருக்குற்றாலம் திருப்புடைமருதூர் இவற்றிலுள்ள சிவாலயங்களில் மண்டபங்கள் அமைத்தமையும், திருநெல்வேலியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு அர்த்தயாம வழிபாட்டிற்கு நிபந்தங்கள் விட்டமையும் இவன் மெய்க்கீர்த்தியால் அறியப்படுஞ் செய்திகளாம்.
இற்றைநாளிலும் காண்போர் கண்களைக் கவரும் சிற்ப நுட்பமும் வனப்பும் வாய்ந்த தென்காசிப் பெருங் கோயிலை இவ்வேந்தன் எடுப்பித்தது இவனது சிவபத்தி யின் மாண்பினை இனிது புலப்படுத்தாநிற்கும். இவ் வாலயத்திற்கு நாள்வழிபாட்டிற்கும் ஆண்டுவிழாவிற்கும் தேவதான இறையிலியாகப் பல ஊர்கள் இவ்வரசனால் அளிக்கப்பெற்றுள்ளன[8]. சிவபெருமான் ஒருநாள் இவ் வரசன் கனவில் தோன்றி வடகாசியிலுள்ள தம் திருக் கோயில் அழிவுற்ற நிலையிலிருத்தல் பற்றிச் சித்திராநதி யின் வடகரையில் தென்காசியும் அதில் ஓர் ஆலயமும் அமைக்குமாறு கூறியருளியதே, இதனை இவன் கட்டுவித் தமைக்குக் காரணமாகும். இச் செய்தி, தென்காசிக் கோயிற் கோபுரத்தின் முன்னர் நிற்கும் ஒரு கற்றூணில் வரையப்பட்டுள்ளது.[9]
[7]. செங்கோட்டைத் தாலுகாவிலுள்ள இவ்விந்தனூர்க்குப் பராக்கிரம பாண்டியச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் முற் காலத்தில் இருந்தமை உணரத்தக்கது.
[8]. Travancore Archaeological Series, Vol. I; pp. 91, 92, 93 and 101.
[9]. T. A. S., Vol. I, pp. 99 and 100.
இக் கோயிலின் திருப்பணி முடிவு பெறுதற்குப் பதினேழாண்டுகள் ஆயின என்பது அக்கல் வெட்டால் தெரிகிறது. ஆனால் இவன் தொடங்கிய ஒன்பது நிலைக் கோபுரத் திருப்பணி மாத்திரம் இவ னாட்சியில் முடிவெய்தவில்லை. இவ்வாலயத்தில் எழுந் தருளி யுள்ள இறைவன்பால் இவன் கொண்டிருந்த பக்தி அள விட்டு உரைக்கத்தக்கதன்று. எத்தகைய குறைகளு மின்றி இக்கோயிலைப் பாதுகாத்து வருமாறு சிவனடி யார்களையும் தன் வழித்தோன்றல்களையும் இம்மன்னன் வேண்டிக்கொண்டிருப்பது குறிப்பிடற்பாலதாகும். அவ் வேண்டுகோளும் சில செந்தமிழ்ப் பாடல்களாக உள் ளது. கன்னெஞ்ச முடையாரையும் உருக்கும் இயல் புடையனவும், எந்நிலையினரையும் பிணிக்குந் தன்மை வாய்ந்தனவும் ஆகிய அப்பாடல்கள் இவ்வரசன் இயற்றி யனவே யாகும். அவற்றைத் தென்காசிக் கோயிற் கோபுரத்தில் இன்றும் காணலாம்.[10] இப்பெருங்கோயிலில் பிற்காலப் பாண்டியர்கள் எல்லோருக்கும் முடி சூட்டுவிழா நடைபெற்று வந்தமை உணரற்பாலதாகும்.
---
[10]. "மனத்தால் வகுக்கவு மெட்டாத கோயில் வகுக்க முன்னின்
றெனைத்தான் பணிகொண்ட நாதன்றென் காசியை யென்றுமண்மேல்
நினைத்தா தரஞ்செய்து தங்காவல் பூண்ட நிருபர்பதந்
தனைத்தாழ்ந் திறைஞ்சித் தலைமீ தியானுந் தரித்தனனே.'"
2. ஆரா யினுமிந்தத் தென்காசி மேவும்பொன் னாலயத்து
வாராத தோர்குற்றம் வந்தாலப் போதங்கு வந்ததனை
நேராக வேயொழித் துப்புரப் பார்களை நீதியுடன்
பாரா ரறியப் பணிந்தேன் பராக்ரம பாண்டியனே.
3.. சேலே றியவயற் றென்காசி யாலயந் தெய்வச்செய
லாலே சமைந்ததிங் கென்செய லல்ல வதனையின்ன
மேலே விரிவுசெய் தேபுரப் பாரடி வீழ்ந்தவர்தம்
பாலேவல் செய்து பணிவன் பராக்ரம பாண்டியனே.
4. சாத்திரம் பார்த்திங் கியான்கண்ட பூசைகள் தாம்நடத்தி
யேத்தியன் பால்விசுவ நாதன் பொற் கோயிலென் றும்புரக்க
பார்த்திபன் கொற்கைப் பராக்ரம மாறன் பரிவுடனங்
கோத்திரந் தன்னிலுள் ளார்க்கு மடைக்கலங் கூறினனே.'
Travancore Archacological Series, Vol. I, pp 96 and 97.
----
இவன் தன் ஆட்சியில் விசுவநாதப்பேரேரி என்ற பெயருடைய ஏரி ஒன்று வெட்டு-வித்திருப்பது குடிகளது நலத்தின்பொருட்டு இவன் புரிந்த அரிய செயல்களுள்
ஒன்றாகும்.[11] சிவபத்தியிலும் செங்கோன் முறையிலும் சிறந்து விளங்கிய இவ்வேந்தன் கி. பி. 1463இல் விண்ணுலகடைந்தான்.
----
[11]. (i) 'நாம் நவமாகக்கண்ட விசுவநாதப் பேரேரிக்குப் பெரு நான்கெல்லையாவது'
- Travancore Archaeological Series Vol. I page 51.
(ii). இவ் வேந்தன் வானுலகெய்தியஞான்று ஒரு புலவர் பாடிய பாடல் தென்காசிக் கோயிலிற் பொறிக்கப்பெற் றுள்ளது. அஃது அடியில் வருமாறு:
கோதற்ற பத்தி யறுபத்து மூவர்தங் கூட்டத்திலோ
தீதற்ற வெள்ளிச் சிலம்பகத் தோசெம்பொ னம்ப லத்தோ
வேதத் திலொசிவ லேகத் திலோவிசுவ நாதனிரு
பாதத் திலோசென்று புக்கான் பராக்ரம பாண்டியனே.
--- Travancore Archeological Series, Vol. 1 page 97. பா .- 11
சடையவர்மன் குலசேகரபாண்டியன் :- பராக்கிரம பாண்டியன் தம்பியாகிய இவ்வரசன் கி. பி. 1429 முதல் 1473 வரையில் ஆட்சி புரிந்தவன். எனவே, இவன் தன் தமையனுடன் சேர்ந்து தென்பாண்டி நாட்டை அரசாண்டவனாதல் வேண்டும். பராக்கிரம பாண்டியன் காலத்தில் தொடங்கப்பெற்று முடிவு பெறாம லிருந்த ஒன்பதுநிலைக் கோபுரத் திருப்பணியை இவன் முடித்தமை அறிதற்குரியதாகும்.[12]
அழகன் பெருமாள் பாரக்கிரம பாண்டியன் :- இவன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் புதல்வன்; கி. பி. 1473 முதல் 1506 வரையில் அரசு செலுத்திய வன். இவன் காலத்தில் பராக்கிரம பாண்டியனான குல சேகர தேவன் என்ற வேறொரு மன்னன் இருந்தனன் என்பது சில கல்வெட்டுக்களாற் புலப்படுகின்றது.[13] அவன் கல்வெட்டுக்கள் கி.பி.1479 முதல் 1499 வரை யில் உள்ளன. அவன் யாவன் என்பது தெரியவில்லை.
இனி, அபிராம பராக்கிரம பாண்டியன், ஆகவரா மன் என்ற உடன் பிறப்பினர் இருவர் இருந்தமை, புதுக்கோட்டைச் செப்பேடுகளால் அறியப்படுகின்றது[14]. இவர்களைப்-பற்றிய செய்திகள் கிடைத்தில.
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் :- இவன் ஆகவராமன் புதல்வன்; கி. பி. 1534 முதல் 1543 வரையில் அரசாண்டவன். இவனுக்கு 'இறந்தகால மெடுத்தவன்'[15], 'பாண்டியராச்சிய தாபனாசாரியன்'[16] என்ற பட்டங்களுமுண்டு. இவன் காலத்தில் திருவாங் கூர் இராச்சியத்திலிருந்த உதயமார்த்தாண்ட வர்மன் என்ற சேரமன்னன் ஒருவன், தென் பாண்டி நாட்டைக் கைப்பற்றிக்கொண்டான்.
[12]. Ibid, page 103. [13]. Ibid, p. 60.
[14]. Ibid, p. 83. [15]. Travancore Archacological Series, Vol I page 47.
[16]. Ibid, p. 54.
-----
அச்சேரன் கல்வெட்டுக்கள் பிரமதேசம், சேரமாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு
ஆகிய ஊர்களில் உள்ளன. ஆகவே, இப்பகுதி என்பது அவனது ஆளுகைக்கு உட்பட்டிருந்தது திண்ணம். தன் நாட்டை இழந்த சீவல்லபபாண்டியன், விசயநகரவேந்தனாகிய அச்சுததேவராயனிடம் முறை யிடவே, அவனும் பெரும்படையோடு தென்னாட்டிற்கு வந்து உதயமார்த்தாண்டவர்மனைப் போரில் வென்று அவன் கைப்பற்றியிருந்த தென்பாண்டிநாட்டைப் பிடுங் கிப் பாண்டியர்க்குக் கொடுத்தனன்[17]. விசயநகரவேந் தன் இங்ஙனம் விரைந்து செய்தமைக்கு மற்றொரு காரண மும் உண்டு. அது, சேரமன்னன் சில ஆண்டுகள் அவனுக்குக் கப்பஞ் செலுத்தாதிருந்தமையேயாம்.
அச்சுததேவராயன் இத்தகைய அரிய உதவி புரிந்தமை பற்றிச் சீவல்லபன் தன் மகளை அவனுக்கு மணஞ் செய்துகொடுத்து மகிழ்ச்சியுற்றான்.[18] இந்நிகழ்ச்சி யினால் பாண்டியர் குலத்திற்குப பழைய பெருமையும் சிறப்பும் மீண்டும் உண்டாகுமாறு தான் செய்து விட்டதாக எண்ணி 'இறந்தகாலமெடுத்தவன்', ‘பாண்டியராச்சியதாபனாசாரியன்' என்ற பட்டங்களை இவன் புனைந்து கொண்டனன்போலும்.
[17]. Ibid, 55. [18]. Ibid, p. 56.
சடையவர்மன் பராக்கிரம குலசேகரபாண்டியன் :- இவன் அபிராம பராக்கிரம-பாண்டியனுடைய முதற் புதல்வன். இவனுடைய கல்வெட்டுக்கள் கி.பி. 1543 முதல் 1552 வரையில் உள்ளன. இவனைப்பற்றி யாதும் தெரியவல்லை.
நெல்வேலிமாறன் :-இவன் அபிராம பராக்கிரம பாண்டியனுடைய இரண்டாவது புதல்வன்; கி. பி. 1553 முதல் 1564 வரையில் ஆட்சிபுரிந்தவன். இவனுக்கு விரபாண்டியன், குலசேகரபாண்டியன், பொன்னின் பாண்டியன், தர்மப்பெருமான், அழகன் பெருமாள் என்ற வேறு பெயர்களுமுண்டு. இவன் புலவர்கள் . பாடிய வீரவெண்பாமாலை கொண்டவன் என்று தென் காசியிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.[19]
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் :-இவன் நெல்வேலிமாறன் முதல் மகன் ; கி. பி. 1564 முதல் 1604 வரையில் அரசுசெலுத்தியவன். இவனை அழகன் சீவலவேள் எனவும் வழங்குவர். தன் தந்தையாகிய நெல்வேலிமாறனை நினைவுகூர் தற்பொருட்டுத் தென்காசி யில் குலசேகரமுடையாராலயம் ஒன்றை இவன் எடுப் பித்திருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.[20] இதன் அண்மையில் இவன் எடுப்பித்த விண்ணகரம் ஒன்றும் உளது. இவன் செந்தமிழ்ப் புலமையிற் சிறந்து விளங் கியவன் என்பது இவன் பாடியுள்ள சில தமிழ் நூல்களாற் புலப்படுகின்றது.
வடமொழியில் ஹர்ஷன் இயற்றியுள்ள நைஷதம் என்ற நூலை இவன் தமிழில் மொழிபெயர்த்துப் பாடி யுள்ளான். இது நைடதம் என்று வழங்கப்படுகிறது. அந்நூலை மொழிபெயர்த்தற்கு இவனுக்கு உதவிபுரிந்தவர் நைஷதம் இராமகிருஷ்ணர் என்ற வடமொழிப் புலவர் ஆவர்[21]. இவ்வேந்தன் பாடியுள்ள பிறநூல்கள் கூர்மபுராணம் வாயுசங்கிதை காசிகாண்டம் இலிங்க புராணம் நறுந்தொகை என்பன. இவன் சிவபெருமா னிடத்தில் மிகுந்த ஈடுபாடுடையவனாக ஒழுகிவந்தனன் என்பது இவன் இயற்றியுள்ள சைவபுராணங்களால் நன்கு விளங்கும்.
---
[19]. T. A. S., Vol. I. No. VII.
[20]. Travancore Archaeological Series, Vol. I, page 50.
[21]. Ibid. p. 85.
---
வரதுங்கராம பாண்டியன் :-இவன் பராக்கிரம குலசேகரபாண்டியனுடைய இரண்டாவது மகன்; கி.பி. 1588இல் முடிசூட்டப்பெற்றவன். அபிராமசுந்த ரேசுவரன் எனவும், வீரபாண்டியன் எனவும் செப்பேடுகளில் இவன் குறிக்கப்பெற்றிருத்தல் உணரத் தக்கது[22]. அதிவீரராமபாண்டியனாட்சிக் காலத்தில் தென்பாண்டி நாட்டிற் சில பகுதிகளைக் கரிவலம்வந்தநல்லூரிலிருந்து இவன் அரசாண்டவனாதல் வேண்டும் என்பது குறிப்புக்களால் அறியப்படுகின்றது[23]. இவன் வில்லவனை வென்றானென்றும் வல்லமெறிந்தானென்றும் தென்காசியிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது[24]. இவனால் வென்றடக்கப்பெற்ற சேரமன்னன் யாவன் என்ப தும், வல்லத்தில் இவன் யாருடன் போர்புரிந்தான் என்பதும் புலப்படவில்லை.
-----
[22]. Ibid, pp. 115 and 133.
[23]. T. A. S.Vol. I. p. 125.
[24]. பற்றலர்மண் கொள்ளும் பணிந்தார்க் கரசளிக்குங்
கொற்ற முயர்க்குமறங் கூறுமே -விற்றடந்தோள்
வில்லவனை வென்றுகொண்ட வீரமா றன்செழியன்
வல்லமெறிந் தானேந்து வாள்.
திருநெல்வேலி சில்லாவிலுள்ள தென்காசியில் வாழ்ந்த கலியன் கவிராயர் என்பவர் வரதுங்கராமபண்டியன் முடிசூட்டு விழாவில் நாண்மங்கலமும், குடைமங்கலமும், வாண்மங்கலமும் பாடி அரசனைப் பாராட்டியுள்ளனர். அவற்றுள் இப்பாடல் வாண்மங்கலமாகும். 'கல்வெட்டுக்களால் அறியப்படும் சில தமிழ்ப்புலவர்கள்' என்ற எனது கட்டுரையில் இவற்றைக் காணலாம்.(செந்தமிழ்த் தொகுதி 29,பக்கங்கள் 291-296)
---------
அதிவீரராமபாண்டியனைப்போல் இவ்வேந்தனும் தழிழ் மொழியில் பெரும்புலமை படைத்தவன் என்பது இவன் இயற்றியுள்ள தமிழ்நூல்களால் நன்கு துணியப் படும். அவை, பிரமோத்தரகாண்டம், கருவைக் கலித் துறையந்தாதி, கருவைப் பதிற்றுப்-பத்தந்தாதி, கருவை வெண்பா அந்தாதி என்பன.[25] இவனும் சிவபெருமானிடத்து ஒப்பற்ற பத்தியுடையவனாயிருந்தனன் என்பது இவனியற்றிய நூல்களால் இனிது புலனாகும்.
அதிவீரராமபாண்டியற்குச் சுவாமிதேவரும் வர துங்கராம பாண்டியற்கு வேம்பற்றூர் ஈசான முனிவரும் ஞானாசிரியர்களாக இருந்திருத்தல் வேண்டும் என்பது இவர்கள் தம் நூல்களிற் கூறியுள்ள குருவணக்கங்களாற் பெறப்படுகின்றது.
வரகுணராம குலசேகர பாண்டியன் :-கி. பி. 1613இல் முடிசூட்டப்பெற்ற இவ்வேந்தன் முன்னவர் களுக்கு யாது முறையுடையான் என்பது தெரியவில்லை. இவன் வேத-விதிப்படி வேள்வி புரிந்தவன். இதுபற்றியே இவன் குலசேகரசோமாசியார்
என்று வழங்கப்பெற் றமை குறித்தற்குரியதாகும்[[26]கி. பி. 1748 இல் இருந்த மற்றொரு பாண்டியன் இவனைப்போலவே வரகுணராம் பாண்டிய குலசேகர தேவதீட்சிதர் என்று தன்னைச் சிறப்பித்துக்கொண்டமை ஈண்டு உணரற்பாலது. ஆகவே, பிற்காலப் பாண்டியர்களுள் சிலர் சோமாசி யார், தீட்சிதர் என்ற பட்டங்கள் புனைந்துகொண்டு அவற்றால் தம்மைப் பெருமை படுத்திக்கொள்ள விரும்பி னர் என்பது வெளியாதல் காண்க.
---
[25]. இவ்வந்தாதிகள் அதிவீரராமபாண்டியனால் பாட்ப் பெற்றவை என்பர். அது தவறாகும்.
[26]. Travancore Arehaeological Series, Vol. I, page 418.
----
இக்காலப் பகுதியில் வாழ்ந்த பாண்டியர்களுள் பெரும்பாலோர் விசயநகரவேந்தர்கட்குக் கப்பஞ் செலுத்திவந்த குறுநிலமன்னரேயாவர். இங்ஙனம் குறு நிலமன்னராயிருந்த பாண்டியர் இறுதியில் ஜமீன்தார் நிலையை எய்தித் தென்பாண்டி நாட்டில் ஓர் ஊரில் இருந்து வருவாராயினர்.
நம் தமிழகத்தின் தென்பகுதி தம் பெயரால் என் றும் நின்று நிலவுமாறு சரித்திர காலத்திற்கு முன் தொடங்கி பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை யில் அங்கு ஆட்சிபுரிந்துவந்த தமிழ்வேந்தர்களான பாண்டியர்கள் தம் நாட்டை இழந்து சிறுமையுற்றுச் சீர்குலைந்தமை காலவேறுபாட்டினால் நிகழ்ந்த மாறுதலே யாம். ஆயினும், அவர்களுடைய மாரியன்ன வரையா வண்மையால் வெளிவந்துள்ள எடுப்பும் இணையுமற்ற தமிழ்நூல்கள் நம்மனோர் பண்டைப் பெருமையினை எந் நாட்டினர்க்கும் அறிவுறுத்தும் அரும்பெரு நிதியமாக வும் அறிவுச்சுடர் கொளுத்தி நமது அகவிருள் போக் கும் செஞ்ஞாயிறாகவும் அமைந்து அன்னோரை நினைஷ கூர்தற்கு ஏற்ற கருவிகளாக நிலைபெற்றிருப்பது மகிழ்தற்குரியதாகும்.
-----------
10. பாண்டியர் அரசியல்
இனி, பாண்டியர் அரசியல் முறைகளை விளக்குவாம். பழைய தமிழ்நூல்களாலும், கல்வெட்டுகளாலும், செப்பேடுகளாலும் அறியப்படும் அரசியல் முறைகள் எல்லாம் நம் தமிழகத்தில் முற்காலத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் மூவேந்தர்க்கும் உரியனவேயாகும். ஆயினும், அம்முறைகள் பாண்டியர்க்கும் உரியனவா யிருத்தல்பற்றி அவற்றை ஈண்டு ஆராய்ந்து சுருங்கிய முறையில் விளக்குதல் பொருத்தமுடைத்து.
1. பாண்டிமண்டலத்தின் உட்பிரிவுகள் :-பாண்டி வேந்தர்கள் தம் ஆணைசெல்லுமாறு தொன்றுதொட்டு ஆட்சிபுரிந்துவந்த பாண்டி மண்டலம் என்பது மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய மூன்று சில்லாக் களையும் புதுக்கோட்டை நாட்டில் வெள்ளாற்றுக்குத் தெற்கிலுள்ள பகுதியும் தன்னகத்துக்கொண்டு விளங்கிய நிலப்பரப்பாகும். இது, பரந்த நிலப்பரப் பினையுடையதாயிருத்தலின், இவ்விடத்தும் ஆட்சி நன்கு நடைபெறுமாறு பல நாடுகளாக முற்காலத்தில் பிரிக்கப் பட்டிருந்தது. கடைச்சங்க நாளிலும் இம்முறை வழக் கத்தில் இருந்தது என்று தெரிகிறது. இதனை,
'முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர்' (புறம் - 110)
எனவும்,
‘ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே' (புறம்-242.)
எனவும் வரும் புறப்பாட்டடிகளாலும் இரணியமுட்டத்துப்[1] பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் தொடர்மொழியாலு மறியலாம். பிற்காலங்களில் சில நாடு கள் கூற்றங்கள் என்ற பெயரோடு வழங்கப்பெற்று வந் தன என்பது ஈண்டு உணரற்பாலது. ஒல்லையூர்நாடு கி.பி. பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில் ஒல்லையூர்க் கூற்றம் என்று வழங்கப்பெற்று வந்தமை இதற்கோர் எடுத்துக்காட்டாகும். இச்செய்தி மேலே காட்டியுள்ள 242ஆம் புறப்பாட்டாலும், புதுக்கோட்டை நாட்டி லுள்ள கல்வெட்டுக்களாலும் உறுதியெய்துகின்றது[2].
---
[1]. இரணியமுட்ட நாட்டிலுள்ள பெருங்குன்றூர் என்பது, இதன் பொருளாகும்.
[2]. Inscriptions of the Pudukkottai State, Nos. 382, 386, 387 and 399.
இரணியமுட்டநாடு, புறப்பறளை நாடு, பாகனூர்க் கூற்றம், களக்குடிநாடு, தென் பறம்பு நாடு, வட பறம்பு நாடு, பொங்கலூர் நாடு, தென்கல்லக நாடு, செவ் விருக்கை நாடு, பூங்குடிநாடு, தும்பூர்க்கூற்றம், கீரனூர் நாடு, களாந்திருக்கை நாடு, அளநாடு, துறையூர் நாடு, வெண்பைக்குடி நாடு, நெச்சுர நாடு, சூரன்குடி நாடு, ஆசூர் நாடு, ஆண்மா நாடு, கீழ்க்களக்கூற்றம், கீழ் வேம்ப நாடு, மேல்வேம்ப நாடு, தென்வாரி நாடு, வட வாரி நாடு, குறுமாறை நாடு, குறுமலை நாடு, முள்ளி நாடு, திருவழுதி நாடு, முரப்பு நாடு, தென்களவழி நாடு, வானவன் நாடு, குடநாடு, ஆரி நாடு, திருமல்லி நாடு, கரு நிலக்குடி நாடு, கானப்பேர்க்கூற்றம், அடலையூர் நாடு, திருமலை நாடு, கொழுவூர்க்கூற்றம், தாழையூர் நாடு, முத் தூர்க்கூற்றம், கீழ்ச்செம்பி நாடு, செம்பி நாடு, வடதலைச் செம்பி நாடு, வெண்புல நாடு, பருத்திக்குடி நாடு, புறமலை நாடு, துருமா நாடு, மிழலைக்கூற்றம், இடைக்குள நாடு, கோட்டூர்நாடு என்பன முற்காலத்தில் பாண்டிமண்டலத் திலிருந்த உள்நாடுகள் ஆகும்.
சில நாடுகளையும் கூற்றங்களையும் தன்னகத்துக் கொண்டு விளங்கிய பெருநிலப்பரப்பு வளநாடு என்று வழங்கப்பட்டு வந்தது. இத்தகைய வளநாடுகள் பாண்டி மண்டலத்தில் கி.பி. ஒன்பது பத்தாம் நூற்றாண்டு களிலும் பிற்காலங்களிலும் இருந்தன என்று தெரிகிறது.[3] அவை, மதுரோதயவளநாடு, வரகுணவளநாடு, கேரள சிங்கவளநாடு, திருவழுதிவளநாடு, சீவல்லப வளநாடு, பராந்தகவளநாடு, அமித குணவளநாடு என்பனவாம்.
---
[3]. Epigraphia Indica, Vol. XXI, Ins. No. 17.
நாடுகளின் பெயர்களுக்கும் வளநாடுகளின் பெயர் களுக்குமுள்ள வேறுபாடு ஆராய்தற்குரியது. நாடுகளின் பெயர்கள் எல்லாம் ஊர்களின் அடியாகப் பிறந்தன என்பது உணரற்பாலது. கூற்றங்களின் பெயர்களும் அத்தகையவே. ஆனால், பாண்டியர்களின் இயற்பெயர் களும் சிறப்புப்பெயர்களுமே வளநாடுகளின் பெயர்களாக அமைந்திருப்பது அறியத்தக்கது. சோழ மண்டலத்திலிருந்த வளநாடுகளின் பெயர்களும் இவ்வாறே சோழ மன்னர்களின் இயற்பெயர்களாகவும் சிறப்புப்பெயர்களாகவும் இருத்தல் ஈண்டு உணர்ந்து கொள்ளுதற்கு உரியதாகும்.
இனி, நாடுகளும் கூற்றங்களும் இக்காலத்துள்ள தாலூக்காக்களுக்கு ஒப்பானவை என்றும், வளநாடுகள் சில்லாக்கள் போன்றவை என்றும், மண்டலம்
மாகாணத்திற்குச் சமமானது என்றும் கொள்ளல் வேண்டும். 'பாண்டிமண்டலத்து மதுரோதய வள் நாட்டுத் தென்கல்லகநாட்டுப் பராக்கிரம பாண்டியபுரம்' என்பதால், இவை அந்நாளில் வழங்கிவந்த முறை நன்கு புலனாகும். ஆயினும், வளநாட்டைப் பொருட் படுத்தாமல் நாட்டை மாத்திரம் குறித்துவிட்டு ஊரை வரைவது பாண்டி மண்டலத்தில் பெரு வழக்காக இருந்தது என்பது அப்பக்கங்களில் காணப்படும் கல் வெட்டுக்களால் வெளியாகின்றது[4]. ஆனால், சோழமண்டலத்தில், முதல் இராசராசசோழன் காலமுதல் வளநாடுகளைத் தவறாமல் குறித்துவிட்டுத்தான் நாடுகளையும் ஊர்களையும் எழுதிவந்தனர்.[5]
---
[4]. S. I. I. Vol. V. Nos. 293, 296, 300, 301 and 332.
[5]. Ibid, Nos. 456, 637, 640, 641, 976, 980 and 986.
----------
II. அரசனும் இளவரசனும் :- இங்ஙனம் வகுக்கப் பெற்றிருந்த பாண்டி மண்டலத்திற்குப் பாண்டிய அரசனே தலைவன் ஆவான். அரசியலில் தலைமை வகித்து எவற்றிற்கும் பொறுப்புடையவனாய் நீதி தவறாது செங்கோல் செலுத்துங் கடமை இவ்வேந்தனுக்கு உரியதாகும். பாண்டி வேந்தர்கள் தமக்குப் பின்னர்ப் பட்டத்திற்கு உரியவர்களாயுள்ள தம் புதல்வர்க்கு இளவரசுப் பட்டங்கட்டி அவர்களை அரசியல் முறை களில் பழக்குவது வழக்கம். சில சமயங்களில் இவர் கள் தம் தம்பியரையும் இத்துறைகளில் பழக்கி வருவது. உண்டு. தென்பாண்டி நாட்டிலுள்ள கொற்கை, பாண்டியரது முதன்மை வாய்ந்த துறைமுகப் பட்டினமா யிருந்தமையின் இளவரசர்கள் அந்நகரத்தில் தங்கியிருப்பது வழக்கமாயிருந்தது.
இவ்வுண்மையை ஆசி யப்படைகடந்த நெடுஞ்செழியன் ஊழ்வினையாற் கண்ணகிக்கு இடர்விளைத்து உயிர் துறந்த பின்னர், கொற்கையிலிருந் த இளவரசனாகிய வெற்றிவேற்செழி யன் மதுரைமாநகரத்திற்குச் சென்று முடிசூட்டிக் கொண்டான் என்று ஆசிரியர் இளங்கோவடிகள் சிலப் பதிகாரத்தில் கூறியுள்ள ஓர் அரிய செய்தியினால் நன்கு உணரலாம்.[6] கி.பி. 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் பாண்டி மன்னர் ஐவர் ஒரே சமயத்தில் பாண்டி மண்டலத்தில் ஆட்சி புரிந்தனர் என்பது கலிங்கத்துப் பரணியாலும் சில கல்வெட்டுக்களாலும் அறியப்படுகின்றது[7]. இன்னோர் அம்மண்டலத்தை ஐந்து பகுதி களாக பிரித்துக்கொண்டு ஆண்டுவந்தனர்போலும்.
[6]. சிலப்பதிகாரம் - உரை பெறு கட்டுரை; ௸ -நீர்ப்படைக்காதை, வரிகள் 126-138.
[7]. கலிங்கத்துபரணி - தாழிசை 368. ; S.I.I.Vol.III. Nos. 70, 71 and 72.
-----
III. அரசியல் அதிகாரிகள் :-பாண்டியரது ஆளு கையில் பல்வகைத் துறைகளிலும் தலைவர்களாக அமர்ந்து ஆட்சியை நன்கு நடைபெறச் செய்தவர்கள் அமைச்சர், படைத்தலைவர், அரையர், நாடுவகை செய் வோர், வரியிலார், புரவுவரித்திணைக்-களத்தார், திருமுகம் எழுதுபவர் முதலானோர் ஆவர். இவர்களுள், அரைய ரெனப்படுவோர் உள்நாட்டிற்குத் தலைவர்களாக விளங்கிய நாட்டதிகாரிகள்; இவர்கள் தம் நாட்டைச் சுற்றிப் பார்த்து, குடிகளின் நலன்கள், அறநிலையங்கள், நியாயம் வழங்குமுறை முதலானவற்றைக் கண்காணித்துக் காத்து வருவது வழக்கம். நாடு வகை செய்வோர், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஊர்களைக் கூறுபட அளப்பவர்கள். வரியிலார், ஊர்கள்தோறும் எல்லா வரியாலும் அரசாங்கத்திற்கு வரவேண்டிய தொகைக்குக் கணக்கு வைத்திருப்பவர்கள். புரவுவரித் திணைக்களத்தார், இக் காலத்திலுள்ள 'ரெவினியூ போர்டு' போன்ற ஒரு கழகத்தினர் ஆவர். இக்கழகத்திற்குத் தலைவர் புரவு வரித் திணைக்கள நாயகம் என்று வழங்கப்பெறுவர். திருமுகம் எழுதுபவர் என்போர் அரசனது ஆணையைத் ஒருவாய்க் கேள்வியால் உணர்ந்து ஓலையில் வரைந்து ஊர்ச்சபைகளுக்கும் பிற அதிகாரிகளுக்கும் முறைப் படி அனுப்புவோர். சோழமண்டலத்தில் இவர்களைத் திருமந்திர ஓலை எனவும் திருமந்திர ஓலைநாயகம் எனவும் வழங்குவர்.
ஆங்கிலேயர் ஆட்சியில் அரசாங்க அதிகாரிகளுள் சிறந்தோர்க்கு அவர்கள் ஆற்றலையும் அரசியல் ஊழியத் தையும் பாராட்டி, 'ராவ்பஹதூர்' 'திவான்பஹதூர்' 'சர்' மு.தலான பட்டங்கள் அளித்து அவர்களை மகிழ்வித் தமைபோல, பாண்டி வேந்தரும் தம அரசியல் அதிகாரி களுக்குப் பல பட்டங்கள். வழங்கி அவர்களைப் பாராட்டி யுள்ளனர் என்பது ஈண்டு உணரத்தக்கது. அங்ஙனம் அளிக்கப்பெற்ற பட்டங்கள், அரையன், பேரரையன், விசையரையன், தென்னவன் பிரமராயன், தென்னவன் தமிழவேள்,காவிதி, ஏனாதி,பஞ்சவன்மாராயன், பாண் டிய மூவேந்த வேளான், செழியதரையன், பாண்டி விழுப்பரையன், தென்னவ தரையன், பாண்டிப் பல்லவ தரையன், தொண்டைமான், பாண்டியக் கொங்கராயன், மாதவராயன், வத்தராயன், குருகுலராயன், காலிங்க ராயன் முதலியனவாகும்.
காவிதி, ஏனாதி[8] முதலான பட்டங்களைப் பெற்ற அதிகாரிகளுக்குப் பொற்பூவும், மோதிரமும், இறையிலி நிலமும் அளிப்பது பண்டை வழக்கம். எனவே, காவிதிப்பட்டம் பெற்றவன் ஒருவன் எய்துவன காவிதிப் பூவும் காவிதி மோதிரமும் காவிதிப் புரவுமாம்[9].
---
[8]. ஏனாதிமோதிரம் - இறையனார் அகம். சூத், 2, உரை.
[9].(a) நன்னூல் 158ஆம் சூத்திரம் - மயிலைநாதர் உரை.; (b) தொல்காப்பியம் - பொருளதிகாரம் - 30 ஆம் சூத்திரம் - நச்சினார்க்கினியர் உரை.
IV. அரசிறை :-அக்காலத்தில் குடிகள் தம் அரசர்க்கு நிலவரி செலுத்தி வந்தனர். இந்நிலவரி விளையும் நெல்லின் ஒரு பகுதியாகவாதல் பொன்னுங் காசுமாக வாதல் செலுத்தப்பட்டு வந்தது. இதனை ஊர்ச்சபையார் குடிகளிடத்திலிருந்து ஆண்டுதோறும் வாங்கி அரசனது தலைநகரிலுள்ள அரசாங்கப் பொருள் நிலையத்திற்கு அனுப்பி வந்தனர்.
இனி, நிலவரியேயன்றித் தறியிறை, செக்கிறை, தட்டார்ப்பாட்டம், இடைவரி, சான்றுவரி, பாடி காவல், மனையிறை, உல்கு முதலான வரிகளும இருந்துள்ளன. ஒவ்வொரு தொழிலின் பெயரையுஞ் சுட்டி வரிப் பெயர் குறிக்கப்பட்டிருத்தலின் வரிப் பெயர்கள் மிகுந்து காணப்படுகின்றனவேயன்றி வேறில்லை. இந்நாளில் தொழில்வரி என்ற பொதுப் பெயரால் எல்லாத் தொழி லாளரிடத்தும் வரி வாங்கப்படுகிறது. எனவே, இற்றை நாளிலுள்ள தொழில்வரி ஒன்றே, எல்லாத் தொழில் களின்மேலும் விதிக்கப்பட்டுள்ள வரிகளைத் தன்னகத்து அடக்கிக்கொண்டு நிற்றல் அறியத்தக்கது.
இறை, பாட்டம் என்பன வரியை யுணர்த்தும் மொழிகள். தட்டார்ப் பாட்டம் என்பது கம்மாளர்கள் செலுத்திவந்த வரியாம். பாடிக்காவல் என்ற வரி நாடு காவல் எனவும் வழங்கப்பட்டுள்ளது. இஃது ஊர்களைச் காத்தற்கு வாங்கிய வரியாகும். மனையிறை, குடியிருப்பு மனைக்கு வாங்கியதொரு வரி என்க. உல்கு என்பது சுங்க வரியாகும். கலத்தினும் காலினும் வரும் பண்டங் கட்கு வாங்கப்பெற்ற வரி சுங்க வரியாகும்.
V. நிலஅளவு :- ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஊர் களை முறையாக அளந்தாலன்றி அங்கு விளைநிலங்கள் எவ்வளவு உள்ளன வென்பதும், குடிகளிடத்திலிருந்து அரசாங்கத்திற்கு நிலவரி எவ்வளவு வரவேண்டும் என் யதும் நன்கு புலப்படமாட்டா. ஆதலால், பாண்டி மண்டலம் முழுமையும் அக்காலத்தில் அளக்கப்பட்டுள்ளது. அதனை அளந்த அதிகாரிகள் நாடுவகை செய் வோர் என்று வழங்கப்பெற்றனர் என்பது முன்னரே விளக்கப்பட்டது. நிலம் அளந்த கோல் சுந்தரபாண்டி யன் கோல் என்ற பெயருடையது.[10] இஃது இருபத்து நான்கடிக் கோலாகும். அன்றியும், குடிதாங்கிக்கோல் முதலான பிற கோல்களும் அந்நாளில் இருந்துள்ளன[11]. கிலங்கள் எல்லாம் குழி, மா, வேலி என்ற முறையில் அளக்கப்பட்டன[12]. நிலத்தை அளந்து எல்லைகள், தெரியும்படி அவ்விடங்களில் கற்கள் நடுவது வழக்கம் என் பல கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. அக்கற் களைப் புள்ளடிக்கற்கள் என்று வழங்கியுள்ளனர். சிவாலயங்களுக்கு விடப்பட்ட இறையிலி நிலங்களுக்கும் திருமால் கோயில்களுக்கு விடப்பட்ட இறையிலி நிலங்களுக்கும் முறையே திரிசூலக்கல்லும் திருவாழிக்கல்லும் எல்லைக்கற்களாக நடுவது அக்காலத்து வழக்கமாகும்.[13] நிலங்கள் நீர்நிலம், புன்செய், நத்தம், தோட்டம் என்று வகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள், நீர்நிலம் என்பது நன்செய் ஆகும்.
[10].. S. I. I. Vol. Nos. 446 and 448..
[11]. Inscriptions of the Pudukkottai State, No, 305.
[12]. S. I. I., Vol. V, Nos. 301, 421, 432 and 440.
[13], Inscriptions of the Pudukkottai State Nos. 340 and 341.
VI. இறையிலி :- பாண்டியரது ஆட்சிக் காலங் களில் சிவன் கோயில்களுக்கு இறையிலியாக அளிக்கப் பட்ட நிலம் தேவதானம் எனவும், திருமால் கோயில் களுக்கு அளிக்கப்பெற்றது திருவிடையாட்டம் எனவும், சைன பௌத்த கோயில்களுக்கு விடப்பெற்றது பள்ளிச்சந்தம் எனவும், பார்ப்பனர்களுக்கு அளிக்கப் பெற்றது பிரமதேயம் பட்டவிருத்தி எனவும், மடங்களுக்கு விடப்பட்டது மடப்புறம் எனவும், புலவர்கட்கு அளிக்கப்பட்டது புலவர் முற்றூட்டு எனவும், சோதிடர்கட்கு அளிக்கப்பெற்றது கணி முற்றூட்டு எனவும் வழங்கப்பட்டன[14].
[14]. S. 1. 1., Vol. 111, pp. 454-458; 1bid, Vol, V. No. 301.
VII. அளவைகள் :-பாண்டி நாட்டில் எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் ஆகிய நான்கு வகைப்பட்ட அளவைகளும் அக்காலத்தில் வழக்கிலிருந்தன. இவற்றுள், எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும். பொன், வெள்ளி முதலான உயர்ந்த பொருள்கள் கழஞ்சு, காணம் என்னும் நிறைகற்களாலும், சர்க்கரை, காய் கறிகள், புளி முதலான பொருள்கள் துலாம், பலம் என்னும் நிறைகற்களாலும் நிறுக்கப்பட்டு வந்தன. அந்நாளில் சேர், வீசை, மணங்கு என்பவற்றால் நிறுக் கும் வழக்கமின்மை ஈண்டு அறியற்பாலது.
நெல், அரிசி, உப்பு, நெய், பால், தயிர்,மிளகு,சீர கம், கடுகு முதலியன செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி என்னும் முகக்குங் கருவிகளால் அளக்கப் பட்டன.
எடுத்தல் அளவை :-
10 காணம் = 1 கழஞ்சு 100 பலம் = 1 துலாம்
முகத்தல் அளவை;-
5 செவிடு=1 ஆழாக்கு; 2 ஆழாக்கு = 1 உழக்கு; 2 உழக்கு = 1 உரி; 2 உரி = 1 நாழி
6 நாழி = 1 குறுணி[15]; 15 குறுணி = 1 கலம் [16]
[15]. S. I. I., V. Nos.737 and 749.
[16]. Epigraphia Indica Vol. XXI, No. 17. (page 105.)
VIII. நாணயங்கள் :-பாண்டிவேந்தர்கள் ஆட்சிக் காலங்களில் பொன்னாலும் செம்பாலும் செய்யப் பெற்ற காசுகள் வழங்கிவந்தன. அவற்றுட் சில, இக் காலத்தும் சிற்சில இடங்களில் கிடைக்கின்றன. கடைச் சங்க நாளில் வழங்கிவந்த காசுகளைப் பற்றிய செய்திகள் இப்போது புலப்படவில்லை; பழைய பாண்டிய நாணயங் கள் சதுர வடிவமாக இருந்தன என்றும், அவைகளில் ஒரு பக்கத்தில் யானை வடிவம் பொறிக்கப்பட்டிருந்த தென்றும் திரு. ஸி. ஜே. பிரவுன் தாம் எழுதிய 'இந்திய நாணயங்கள்’ என்ற நூலில் கூறியிருப்பது நம்பத்தக்கதாயில்லை.[17]
பொதுவாக நோக்குமிடத்து, பாண்டிய மன்னர்களின் சிறப்புப் பெயர்களே அன்னோர் ஆட்சிக்காலங்களில் வழங்கிய நாணயங்களின் பெயர்களாக இருந்தன என்பது பல நாணயங்களாலும் கல்வெட்டுக்களாலும் அறியப்படுகின்றது. கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் அரசாண்டவ னும் முதல் வரகுண பாண்டியன் புதல்வனும் ஆகிய சீமாறன் சீவல்லபன் காலத்தில் வழங்கிய நாணயம் அவனிப சேகரன் கோளகை”[18] என்ற பெயருடையதா யிருந்ததென்று தெரிகிறது. இவ்வேந்தனுக்கு அவனிப சேகரன் என்னும் சிறப்புப் பெயர் ஒன்று உண்டு என்பது புதுக்கோட்டை நாட்டில் சிற்றண்ணல்வாயில் என்ற ஊரிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.[19]
முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் 'சோணாடு கொண்டான் என்ற நாணயமும், முதல் முடிசூடிய சடையவர்மன் சுந்தரபாண்டியன்
சுந்தரபாண்டியன் காலத்தில் 'எல்லாந் தலையானான்' என்ற நாணயமும், கி.பி.1253. இல் சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தில் 'வாளால் வழி திறந்தான் குளிகை"[20] என்ற பணமும், தியனவாக வெளியிடப்பெற்று வழங்கிவந்தன[21]. இப் பெயர்கள் எல்லாம் பாண்டி வேந்தர்களின் சிறப்புப் பெயர்களாக இருப்பது அறியத்தக்கது.
[17]. The Coins of India by Mr. C. J. Brown, page 62.
[18]. A, R. E. for 1929-30, Part II., Para 4; Indian Antiquary, Vol. XXI. p. 323.
[19]. Inscription No. 368 of 1904; Annual Report on South Indian Epigraphy for 1905, Page 55.
[20]. புதுக்கோட்டை நாட்டுக் கல்வெட்டுக்கள் நெ.439,440.
[21]. Mysore Gazetteer Vol. II, pp. 1260 and 1272.
அந்நாளில் வழங்கிய காசு ஒரு கழஞ்சு எடையுள்ள தாக இருந்தது. அக்காசின் ஒரு பக்கத்தில் விதானத் தின்கீழ் அமைந்த இரு கயல்களின் வடிவங்களும் மற் றொரு பக்கத்தில் அதனை வெளியிட்ட வேந்தன் பெயரும் மிளிர்வதைக் காணலாம்.
பத்துப்பொன் கொண்டது ஒரு காசு என்பது இரண்டாம் வரகுண பாண்டியனது
திருச்செந்தூர்க் கல்வெட்டால் நன்கு உணரப்படும்[22]. பத்துக் காணம் கொண்டது ஒரு கழஞ்சு என்பது முன்னரே விளக்கப் பட்டது. எனவே, ஒரு பொன் ஒரு காணம் எடையுள்ளது என்பது வெளியாதல் காண்க. ஒரு காணம் நான்கு குன்றி எடையுடையது.
இனி, 'கையிலொன்றும் காணமில்லைக் கழலடி தொழுதுய்யி னல்லால்'"[23] என்னும் சுந்தாமூர்த்தி சுவாமி கள் திருவாக்கிலும், 'ஈசன் றன்னை யேத்தின வென்று- காசும் பொன்னுங் கலந்து தூவியும்'[24] என்னும் பட்டினத்தடிகள் திருவாக்கிலும், ஏருடைய விழுக் கழஞ்சிற்-சீருடைய விழைபெற்றிசினே *[25] என்னும் புறப்பாட்டடிகளிலும் காணம், கழஞ்சு, காசு, பொன் என்பவை பயின்று வருதல் காண்க.
[22]. Epigrapha Indica, Vol. XXI. No. 17.
[23]. திருவோணகாந்தன்றளிப் பதிகம், பா.1.
[24]. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, பா.28,வரிகள் 39, 40.
[25]. புறம்.11.
IX. கிராமசபை ;-பாண்டியாது ஆட்சிக் காலங்களில் ஊர்தோறும் கிராமசபை யிருந்தது.
இச் சபையினரே அங்கு நடைபெற வேண்டிய எல்லாவற்றையும் நிறைவேற்றி வந்தனர். சுருங்கச் சொல்லுமிடத்து, அந் நாளில் கிராம ஆட்சி முழுமையும் இச்சபையாரால்தான் நடத்தப்பட்டு வந்தது எனலாம். இச்சபையின் உறுப்பினர் எல்லோரும் பொதுமக்களால் குடவோலை வாயிலாகத் தேர்த்தெடுக்கப் பெற்றவர் ஆவர். சிற்றூர் கள் சிலவற்றை ஒன்றாகச் சேர்த்து அங்கும் கிராமசபை அமைத்து வந்தனர்.
நிலமும் சொந்தமனையும் கல்வியறிவும் உடையவர் களாய் அறநெறி வழாது நடப்பவர்களே சபையின் உறுப்பினராதற்கு உரிமையுடையவர் ஆவர்.
கிராமசபையில் சில உட்கழகங்களும் இருந்தன. அவை, சம்வற்சர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் என்பன. நியாயம் வழங்குவதும், அறநிலையங்களைக் கண்காணிப் பதும் சம்வற்சரவாரியரது கடமையாகும். நீர் நிலைகளைப் யாதுகாத்துப் பயன்படச் செய்தல் ஏரிவாரியரது கடமையாகும். நிலங்களைப் பற்றிய எல்லாவற்றையும் கண்காணிப்பது தோட்டவாரியரது கடமையாகும். நாணய ஆராய்ச்சி பொன்வாரியர்க்குரியது. பஞ்சவார வாரியர் எனபோர் அரசனுக்குக் குடிகள் செலுத்த வேண்டிய நிலவரியையும் பிறவரிகளையும் வாங்கி அரசாங் கப் பொருள் நிலையத்திற்கு அனுப்புபவர் ஆவர். கிராம சபையின் உறுப்பினரைப் பெருமக்கள் எனவும், ஆளுங் கணத்தார் எனவுங் கூறுவர். இவர்கள் ஏதேனுங் குற்றம்பற்றி இடையில் விலக்கப்பட்டாலன்றி ஓராண்டு முடிய எவ்வகை ஊதியமும் பெறாமல் தம் வேலைகளைச் - செய்தற்கு உரிமை உடையவராவர். இவர்கள் கூடித் தம் கடமைகளை நிறைவேற்றுதற்கு ஊர்தோறும் பொது மன்றங்கள் இருந்தன. சில ஊர்களில் திருக்கோயில் மண்டபங்களை இன்னோர் தம் கருமங்களைப் புரிவதற்குப் பயன்படுத்திக்கொள்வதும் உண்டு.
சபையின் உறுப்பினரைக் குடவோலை வாயிலாகத் தெரிந்தெடுக்கும் முறைகள் தொண்டை மண்டலத்தில் உத்தரமேரூரிலுள்ள ஒரு கல்வெட்டில் விளக்கமாகவும் விரிவாகவும் வரையப்பட்டுள்ளன. அவை முதற் பராந்தக சோழனது ஆணையின்படி கி.பி. 921 இல் பொறிக்கப்பெற்றன. அம்முறைகளே நம் தமிழகம் முழுவதும் பரவியிருந்தவை என்பதிற் சிறிதும் ஐய மில்லை. ஆயினும், சில இடங்களில் ஊர் நிலைமைக் கேற்ற வாறு சிற்சில விதிகளை மாற்றியும் இன்றியமையாத வற்றைச் சேர்த்தும் உள்ளனர் என்பது சில ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களால் தெரிகிறது. எனவே, அரசாங்க அதிகாரிகளின் முன்னிலையில் ஊர்ச்சபையார் கிராம ஆட்சிக்கு உரிய புதிய விதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தமை புலனாதல் அறிக.
திருநெல்வேலியிலிருந்து சங்கரநயினார் கோயிலுக் குச் செல்லும் பெருவழியில் ஒன்பது மைல் தூரத்தி லுள்ள மானூரில் காணப்படும் ஒரு கல்வெட்டு, கிராம சபையில் உறுப்பினராதற்கு உரியவர்களின் மிகக் குறைந்த தகுதிகள் யாவை என்பதை விளக்குகின்றது [26]. இது மிக்க பழைமைவாய்ந்த கல்வெட்டாகும். எனவே, பாண்டி மண்டலத்தில் கிராமசபையின் உறுப்பினரைத் தெரிந்தெடுத்தற்குக் கையாண்ட முறைகள் தமிழகத்தி லுள்ள பிற மண்டலங்களிலும் வழங்கி வந்தவைகளே என்பது தெளிவாதல் காண்க.
இனி, கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய மதுரை மருதனிளநாகனார் என்பார், 'கயிறுபிணிக் குழிசி யோலை கொண்மார்-பொறிகண்டழிக்கு மாவணமாக்களின்[27]
என்று அகப்பாட்டில் கூறியிருத்தலின் அந்நாளிலும் குடவோலை எடுக்கும் வழக்குண்மை உணர்க.
[26]. Epigraphia Indica, Vol. XXII, page 5,
[27]. அகம்.77
X. ஆவணக்களரி :-அந்நாளில் ஒவ்வோர் ஊரி லும் எழுதப்பட்ட ஆவணங்களைக் காப்பிட ஆவணக் களரியும் (Registration Office) இருந்தது[28]. பாண்டி மண்டலத்திலிருந்த ஆவணக்களரிகளைச் சில ஊர்களில் ஆவணக்களம் என்றும் வழங்கியுள்ளனர். நிலத்தை விற்போரும் வாங்குவோரும் ஆவணத்துடன் அங்குச் சென்று, நிலத்தின் பரப்பையும் விலையையும் நான்கெல்லை யையும் தெரிவித்துத் தம் உடன்பாட்டிற்கும் உறுதி மொழி கூறி, ஆவணம் காப்பிடப்பெற்ற பின்னர்த் திரும்புவது வழக்கமாகும். இவ்வாவணம் என்றும் பயன் படக்கூடியதாயிருப்பின் அவ்வூரிலுள்ள கோயிற் சுவரில் பொறித்து வைக்குமாறு செய்வர்.
[28]. S.I.I., Vol. V. No. 303; Inscriptions of the Pudukkottai State. Nos. 401, 408 and 487.
XI. படை :- பாண்டிய அரசர்கள் பால் யானைப் படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை ஆகிய நான்கும் அக்காலத்தில் இருந்தன என்று தெரிகிறது. கொற்கை, தொண்டி முதலான கடற்றுறைப் பட்டினங் களில் ஆண்டுதோறும் பதினாயிரம் குதிரைகள் வந்திறங் கின என்று 'வாசப்' என்னும் ஆசிரியன் கூறியுள்ளமை யாலும், 'மார்க்கப்போலோ' என்பான் பாண்டியர்கள் குதிரைகள் வாங்குவதில் பெரும் பொருளைச் செலவிட்டு வந்தனர் என்று குறித்துள்ளமையாலும் பாண்டியர்களிடத்தில் சிறந்த குதிரைப்படை அந்நாளில் இருந்தது என்பது நன்கு அறியக்கிடக்கின்றது.
அன்றியும், வாட் போரில் வல்ல வீரர்களடங்கிய பெரிய காலாட்படைகளும் இருந்தன. 'பெரும் படையோம்' என்று கையெழுத் திட்ட சில குழுவினர் பாண்டி மண்டலத்தில் கோயில்களுக்கு நிபந்தங்கள் விட்டிருப்பது உணரற்பாலது. 'முனையெதிர் மோகர்' 'தென்னவன் ஆபத்துதவிகள் என்னும் படைகளும் பாண்டியர்பால் இருந்தமை கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. பாண்டியரது தலை நகராகிய மதுரையில் உரோமாபுரிப் போர்வீரர்கள் கோட்டை வாயிலைக் காத்துவந்த செய்தி, 'கடிமதில் வாயிற் காவலிற் சிறந்த - அடல்வாள் யவனர்' என்று சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது[29]. எனவே, கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் மேனாட்டினரான உரோமாபுரி வீரர்கள் தமிழ் வேந்தரான பாண்டியரது படைகளில் போர் வீரர்களாக இருந்து வேலைபார்த்து வந்தனர் என்பது வெளியாதல் காண்க.
[29]. சிலப்பதிகாரம், ஊர்காண்காதை - வரிகள் 66-67. 3.
XII. வாணிகமும் கைத்தொழிலும் :- பாண்டி நாட்டில் முற்காலத்தில் வாணிகம் செழிப்புற்றிருந்தது என்பதற்கு மதுரை, கொற்கை முதலான நகரங்களிலும் அவற்றிற்கு அண்மையிலும் கிடைத்துள்ள அளவற்ற உரோமாபுரி நாணயங்களே சான்று பகரும். உள்நாட் டில் பண்டங்களை ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குக் கொண்டுபோய் விற்பதற்குப் பேருதவியா யிருப்பன அந்நாட்டிலுள்ள பல பெருவழிகளேயாகும். அத்தகைய பெருவழிகள் பாண்டிநாட்டில் யாண்டும் இருந்தன. வணிகர் பண்டங்களை ஏற்றிச் செல்லுவதற்குக் கோவேறு கழுதைகளும் வண்டிகளும் பெரிதும் பயன்பட்டன. இடை யில் களவு நிகழாதவாறு இன்றியமையாத இடங்களில் காவற்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. வணிகர்களும் பெருங்கூட்டமாகச் செல்வது வழக்கம்.
செல்வது வழக்கம். அக்கூட்டத் திற்கு வாணிகச் சாத்து என்பது பெயராகும். வணிகருள் சிறந்தோர்க்கு 'எட்டி' என்ற பட்டமும் தமிழ் வேந்தரால் வழங்கப்பெற்று வந்தது
பாண்டிநாட்டில் கொற்கைப் பெருந்துறைக்கருகில் கடலில் முத்துக்களும் சங்குகளும் மிகுதியாகக் கிடைத்து வந்தன. கொற்கை முத்துக்கள் உலகில் எங்கும் பெற வியலாத அத்துணைச் சிறப்பு உடையனவாம். இவற்றின் பெருமையினை,
'மறப்போர்ப் பாண்டிய ரறத்திற் காக்கும்
கொற்கையம் பெருந்துறை முத்து' (அகம்.27)
எனவும்,
'வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன்
புகழ்மலி சிறப்பிற் கொற்கை முன்றுறை
யவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து' (அகம்.201)
எனவும் வரும் அகநானூற்றுப் பாடல்களாலும் நன் குணரலாம். அன்றியும், மதுரைக்காஞ்சி[30], சிறுபாணாற் றுப்படை[31], சிலப்பதிகாரம்[32]' ஆகிய நூல்களிலும் இவற் றின் சிறப்பைக் காணலாம். இம்முத்துக்களால் பாண் டிய அரசர்கட்கு ஆண்டுதோறும் பெரும்பொருள் கிடைத்து வந்தது.
[30]. மதுரைக் காஞ்சி, வரிகள் 135-138.
[31]. சிறுபாணாற்றுப்படை, வரிகள் 51-52.
[32]. சிலப்பதிகாரம், ஊர்காண்காதை - வரி 80.
முத்துக்குளித்தல், சங்கறுத்து வளையல்செய்தல், உப்பு விளைவித்தல், நூல்நூற்றல், ஆடைநெய்தல் ஆகிய தொழில்கள் பாண்டிநாட்டில் நடைபெற்றுவந்தன. மதுரை மாநகரில், நுண்ணிய பருத்தி நூலினாலும் எலி மயிரினாலும் பட்டு நூலினாலும் அந்நாளில் ஆடைகள் நெய்யப்பட்டுவந்தன என்பது சிலப்பதிகாரத்தால் அறியப் படுகின்றது[33].
இவற்றால், பண்டைக்காலத்தில் பாண்டிநாட்டார் நெய்தல் தொழிலில் சிறந்து விளங்கினர் என்பது நன்கு விளங்கும்.
முத்துக்களும் பல்வகை ஆடைகளும் மேனாடு களுக்கு அனுப்பப்பெற்றன. மேனாடுகளிலிருந்து குதிரைகளும்[34], மதுவகைகளும்[35] கண்ணாடிச் சாமான்களும் கொற்கைப்பெருந்துறையில் வந்திறங்கின. அன்றியும், கீழ்நாடுகளிலிருந்து கர்ப்பூரம் முதலான பொருள்களும் அங்கு வந்திறங்கின. உள்நாட்டு வாணிகமும் புறநாட்டு வாணிகமும் செழித்திருந்தமையின், பாண்டிவேந்தர்க் குச் சுங்க வரியினால் ஆண்டுதோறும் மிகுந்த பொருள் கிடைத்துவந்தமை அறியற்பாலது.
---
[33]. 'நூலினு மயிரினும் நுழைநூற் பட்டிரினும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்
(சிலப். ஊர் காண்காதை, வரிகள் 205-207.)
[34]. மதுரைக் காஞ்சி, வரிகள் 321-323. [35]. புறம் 56.
---
கப்பல்கள் கடலில் திசை தடுமாறாமல் துறைமுகப் பட்டினங்களுக்கு வந்துசேருமாறு கொற்கை, தொண்டி முதலான கடற்கரைப் பட்டினங்களில் கலங்கரை விளக் கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வாணிகத்தின்பொருட்டு வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த யவனரும்[36] சோனகரும்[37] பாண்டிநாட்டு மக்களோடு வேறுபாடின்றி இனிது வாழ்ந்து வந்தனர். எனவே, பாண்டிநாடு பழைய காலத்தில் கைத்தொழிலிலும் வாணிகத்திலும் சிறந்து விளங்கியமை காண்க.
[36]. கிரேக்கரும் உரோமரும் சங்க நூல்களில் யவனர் என்று வழங்கப்பட்டுள்ளனர்.
[37]. சோனகர் என்பார் அராபியர் ஆவர்.
XIII. கல்வி :- பாண்டி வேந்தர்கள் சிறந்ததமிழ்ப் புலமை வாய்ந்தவர்கள் என்பது சங்கத்துச் சான்றோர் தொகுத்துள்ள தொகை நூல்களால் நன்கு துணியப் படும். 'ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் - மூத்தோன் வருக வென்னா தவருள் - அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்' என்பது பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்று. மக்கட்குக் கல்வி இன்றியமை யாதது என்னும் உண்மையை எவ்வளவு தெளிவாக இவ்வேந்தன் விளக்கியுள்ளான் என்பது ஈண்டு அறியத் தக்கது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டி யன் நெடுஞ்செழியன் ஒருமுறை வஞ்சினங்கூற நேர்ந்த போது, 'உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப் பிற் புலவர் பாடாது வரைகவென் நிலவரை' என் றுரைத்துள்ளமை இவன் புலவர் பெருமக்கள்பால் எத் துணை மதிப்பு வைத்திருந்தான் என்பதை இனிது விளக்குகின்றது. அறிஞர் பெருமான்களான இத்தகைய அரசர்கள் ஆட்சிபுரிந்த நாட்டில் கல்வி பரவியிருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. புலவர் பெருமக்கள் பால் இவர்கள் காட்டிய அன்பும் ஆதாவும் அளவிட் டுரைக்கத் தக்கனவல்ல.
கடைச்சங்க காலத்தில் சமயம், குலம், தொழில் இவற்றில் எவ்வித வேறுபாடுமின்றி ஆண்பாலரும் பெண்பாலரும் கல்வி கற்றுச் சிறந்த புலமை எய்தி யிருந்தனர் என்பது சங்க நூல்களால் பெறப்படுகின்றது.
முதல், இடை, கடை ஆகிய மூன்று தமிழ்ச் சங்கங் களும் பாண்டியர்களால் ஆதரிக்கப்பட்டு, நடைபெற்று வந்தன. முதற் சங்கத்தையும் இடைச் சங்கத்தையும் பற்றி ஆராய்ச்சியாளர்களுக்குள் கருத்து வேறுபாடும் ஐயமும் நிகழினும், கடைச் சங்கத்தைப்பற்றி ஐயுறவு ஏற் படுவதற்குச் சிறிதும் இடமில்லை. இஃது எவ்வாறாயினும், பண்டைக் காலத்தில் மதுரைமா நகரில் தமிழ்ச்சங்கம் ஒன்று இருந்தது என்பதும், அது தமிழ்மொழி வளர்ச்சி யில் ஈடுபட்டு உழைத்துவந்தது என்பதும் உண்மைச் செய்திகளேயாம்.
'பாண்டிய நின் நாட்டுடைத்து நல்ல தமிழ்'[38] என் னும் ஔவைப்பிராட்டியார் திருவாக்கும், 'வீயாத் தமி ழுடையான் - பல்வேற் கடற்றானைப் பாண்டியன்[39 என்னும் பழம்பாடற் பகுதியும், 'தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின் - மகிழ்நனை மறுகின் மதுரை'[40] என்னும் இடை கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் கூற்றும், 'தமிழ்வையைத் தண்ணம்புனல்''[41] என்னும் பரிபாடற் பகுதியும் தமிழ் மொழி பாண்டிநாட்டில் முற்காலத்தில் எய்தியிருந்த உயர் நிலையை நன்கு விளக்குதல் காண்க. அன்றியும்,புலவர் பெருமான்களாகிய இளங்கோவடிகளும்[42] சேக்கிழாரும்[43], கம்பரும்[44] பாண்டி நாட்டையே செந்தமிழ்நாடு என்று தம் அரிய நூல்களில் குறித்திருப்பது உணரற்பாலது. தமிழ்மொழிக்கு இருபெருங் கண்களாகவுள்ள தொல் காப்பியமும் திருக்குறளும் பாண்டியர் தலைமையில் அரங் கேற்றப்பெற்ற பெருநூல்கள் என்பது கற்றோர் யாவரும் அறிந்ததேயாகும். எனவே, அந்நாளில் நம் தமிழ்த் தாய்க்குத் தொண்டு புரிந்து பெருமையுற்றது பாண்டி மண்டலம் என்று கூறுவது சிறிதும் புனைந்துரையன்று
[38]. பத்துப்பாட்டு - நச்சினார்க்கினியர் உரை (மூன்றாம். பதிப்பு) பக்கம் 60.
[39]. யாப்பருங்கலவிருத்தி, பக்கம் 229.
[40]. சிறுபாணாற்றுப்படை, வரிகள் 66-67.
[41]. பரிபாடல் - பாடல் 6, வரி 60.
[42]. சிலப்பதிகாரம்-நாடுகாண் காதை, வரி 58.
[43]. பெரியபுராணம்-திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், பாடல்கள் 400, 421; மூர்த்திநாயனார் புராணம் 12, 13.
[44]. கம்பராமாயணம் - நாடவிட்ட படலம்.
இனி, தொடக்கக் கல்வி நாட்டில் பரவுவதற்குப் பாண்டியர்கள் புரிந்தன யாவை என்பது புலப்படவில்லை. ஆயினும், ஊர்தோறும் இளைஞர்கள் கல்வி கற்பதற்குப் பள்ளிக் கூடங்கள் இருந்தன. அவற்றை நிறுவி நடத்தி வந்த ஆசிரியன்மார் பாலாசிரியர் எனவும், கணக்காயர் எனவும், வழங்கப்பெற்று வந்தனர் என்பது சங்கநூல்க ளாலும் பல கல்வெட்டுக்களாலும் அறியப்படுகின்றது. இளைஞர்கட்குக் கல்வி கற்பித்துவந்த அந்தப் பாலாசிரி யரும் கணக்காயரும் இயற்றிய பாடல்கள் அகநானூறு, புறநானூறு, நற்றிணை முதலான சங்க நூல்களில் காணப் படுகின்றன. எனவே, அக்காலத்தில் இளஞ்சிறார்க்கு எழுத்தறிவித்த ஆசிரியன்மாரும் சிறந்த புலவர்களாக இருந்தனர் என்பது தேற்றம்.
பாண்டிய அரசர்களும் மற்றையோரும் குலவேறு பாடு கருதாமல் கற்றவர்கள் எல்லோரையும் ஒருங்கே பாராட்டி மதித்துவந்தமையோடு அன்னோர்க்குப் பொரு ளுதவி புரிந்தும் வந்தனர். முற்காலத்தில் நாட்டில் கல்வி பரவியிருந்தமைக்குக் காரணம் இதுவே யாகும்.
XIV. சமயநிலையும் கோயில்களும் :-பாண்டியர் கோயில்களும்:-பாண்டியர் எல்லாரும் சைவர். பாண்டிநாட்டை உமாதேவியார் மீனாட்சியம்மை என்ற பெயருடன் ஆட்சிபுரிந்தனர் என்பதும் சிவபெருமான் அவ்வம்மையாரை மணந்து சோமசுந்தர பாண்டியர் என்னும் பெயருடன் அந் நாட்டை அரசாண்டனர் என்பதும் புராணச்செய்திக ளாகும். பாண்டிநாட்டு மக்களுள் பெரும் பகுதியினர் சைவசமயத்தினர்; ஏனையோர் வைணவராகவும் சமண ராகவும் பௌத்தராகவும் இருந்தனர். பாண்டிநாட்டூர் களில் சிவாலயங்களும் விண்ணகரங்களும் அருகன் கோட்டங்களும் புத்தப் பள்ளிகளும் இருந்தன. பாண்டியரும் சமயப் பொறுமையுடையவராய் எல்லா மதத்தினரையும் ஆதரித்து அவர்கள் கோயில்களுக்கு நிபந்தங்கள் விட்டுள்ளனர். எனவே, சங்ககாலத்தில் சமயச் சண்டைகளும் அவற்றால் மக்களுக்குள் உணர்ச்சி வேறுபாடுகளும் நிகழவில்லை என்பது தெள்ளிது. ஆயினும், பிற்காலங்களில் சில இடங்களில் சமயப்பூசல்கள். நேர்ந்துள்ளன என்பது யாவரும் அறிந்ததே. ஒவ்வொரு சமயத்தினரும் தம் தம் சமயத்தினை யாண்டும் பரப்ப வேண்டும் என்றெண்ணி முயன்று வந்தமையே சமயப் பூசல்களுக்குக் காரணமாகும்.
சிவாலயங்களிலும் விண்ணகரங்களிலும் திங்கள் தோறும் முழுமதி நாட்களில்
நாட்களில் திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. அரசர்களும் தலைவர்களும் தாம் பிறந்த நாட்களில் விழாக்கள் நடத்துவதற்கு இறையிலி நிலங் களும் பொருளும் அளித்துள்ளனர். அன்றியும், தேவாரப்பதிகங்களையும் திருவாய்மொழியையும் சைவ வைணவ ஆலயங்களில் நாள்தோறும் இன்னிசையுடன் ஓதுவதற்கு அன்னோரால் நிபந்தங்கள் விடப்பட்டிருந் தன இசை, நடனம், கூத்து முதலான கலைகளின் வளர்ச்சிக்கும் கோயில்கள் அக்காலத்தில் பெரிதும் உதவிபுரிந்து வந்தன என்பதற்குப் பல சான்றுகள் உள் ளன. 'ஊரானோர் தேவகுலம்' என்பதற்கேற்பப் பாண்டி நாட்டில் பல செங்கற் கோயில்களையும் கற்றளிகளையும் வேந்தரும் பிறரும் எடுப்பித்து வந்தமையின், சிற்பம் ஓவியம் இவற்றில் வல்லவர்களும், செப்புத் திருமேனி களும் கற்படிமங்களும் அமைப்பவர்களும் அணிகலன்கள் செய்பவர்களும் நன்கு ஆதரிக்கப்பட்டனர். எனவே, இக் கலைகளும் ஆலயங்களால் வளர்ச்சியுற்று வந்தன எனலாம் சிற்றண்ணல் வாயில், ஆனைமலை,திருப்பரங்குன்றம், கழுகு மலை முதலிய இடங்களில் இடைக்காலப் பாண்டியர் காலத்துக் கோயில்கள் உள்ளன.
அந்நாளில் அன்பர் பலர் ஆலயங்களுக்குப் பெரும் பொருள் அளித்துவந்தமையின் அவை செல்வநிலையில் சிறந்து விளங்கின. ஆதலால், இக்காலத்துள்ள ஐக்கிய சங்கங்கள் போல் கோயில்களும் பொதுமக்களுக்குக் கடன் கொடுத்து உற்றுழி உதவி வந்தன. அவ்வாறு கொடுக் கப்பெற்ற கடன் தொகைகளுக்குப் பலிசையாகக் கோயில் களுக்கு வேண்டப்படும் பண்டங்கள் வாங்கப் பெற்று வந்தன.
நாள்தோறும் உச்சியம்போதில் அடியார்களுக்குக் கோயில்களில் அன்னம் அளிப்பது வழக்கம். சில ஆலயங்களில் புத்தகசாலைகள் இருந்தன[45]. அவற்றைப் பாதுகாத்தற்குப் பொதுமக்கள் பொருளுதவி புரிந் துள்ளனர் என்பது சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.
கோயிற் காரியங்களைச் சில ஊர்களில் அரசாங்க அதிகாரிகளும், வேறு சில ஊர்களில் ஊர்ச்சபையினரும் கடத்திவந்தனர் என்று தெரிகின்றது. அரசர்களும் பிற அரசியல் தலைவர்களும் நாட்டைச் சுற்றிப்பார்த்து வருங் கால், கோயில்களும் மற்ற அறநிலையங்களும் திட்டப்படி டத்தப்பெற்று வருகின்றனவா என்று கண்காணித்து வந்தனர். தவறுகளும் ஊழல்களும் காணப்படின் கண் ணோட்டமின்றித் தக்க தண்டனை விதிப்பது உண்டு.
கோயில்தோறும் காணப்படும் எண்ணிறந்த கல் வெட்டுக்கள் நம் நாட்டின் வரலாற்றை எழுதுவதற்கு ஏற்ற கருவிகளாக அமைந்திருக்கின்றன. கோயிலைப் புதுப்பிக்க விரும்புவோர் முதலில் அரசாங்க உத்தரவு பெற்று, கல்வெட்டுக்களைப் படியெடுத்து வைத்துக் கொண்டு, திருப்பணி முடிந்தபின்னர், அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களில் அவற்றை மீண்டும் எழுதுவித் தல் வேண்டுமென்பது அரசரது ஆணையாகும்.
[45]. Ins. 695 of 1916; Ins. 277 of 1913.
XV. சில பழைய வழக்கங்கள் :- அரசர்கள் தாம் முடிசூடும் நாளில் இறை தவிர்த்தமையும், தம் சிங்கா தனங்களுக்கு மழவராயன், காலிங்கராயன், முனைய தரையன், பல்லவராயன் எனப் பெயரிட்டு வழங்கியமை யும், அரசர்கள் உத்தரவு பிறப்பிக்கும்போது இன்ன விடத்தில் இன்ன காரியம் செய்துகொண்டிருந்தபோது இவ்வாணை பிறந்ததென்று திருமுகங்களில் வரைந் தனுப் புவதும், அரசர்கள் தம் பிறந்த நாள் விழாக்கள் ஆண்டு தோறும் கோயில்களில் நடைபெறுமாறு பொருளும் நிலமும் அளித்து வந்தமையும், போரில் இறந்த வீரர் களின் மனைவி மக்கட்கு உதிரப்பட்டி என்னும் பெயரால் இறையிலி நிலங்கள் வழங்கி அன்னோரை ஆதரித்து வந் தமையும் பாண்டியர் ஆட்சியிற் கண்ட பழைய வழக்கங்களாகும்.
பாண்டியர் வரலாறு முற்றும்
---------------------
சேர்க்கை 1
பாண்டிய மன்னர்களின் செப்பேடுகளும் மெய்க்கீர்த்திகளும்
1. நெடுஞ்சடையன் பராந்தகன் வேள்விக்குடிச் செப்பேடுகள்
கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குழாந்தவிர்த்த
பல்யாகமுதுகுடுமிப் பெருவழுதியெனும்
பாண்டியாதி ராசனால்
நாகமா மலர்ச்சோலை நளிர்சினைமிசை வண்டலம்பும்
பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச்
சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் பிழையாத
கொற்கைகிழா னற்கொற்றன்
கொண்டேவேள்வி முற்றுவிக்கக்
கள்வியந்த ணாளர்முன்பு கேட்கவென் றெடுத்துரைத்து
வேள்விச்சாலை முன்புநின்று வேள்விக்குடியென் றப்பகியைச்
சீரோடு திருவளரச் செய்தார்வேந்த னப்பொழுதே
நீரோட்ட்டிக் கொடுத்தமையா னீடுபுக்தி துய்த்த பின்
அளவரிய வதிராசரை யகல நீக்கி யகலிடத்தைக்
களப்பாரெனுங் கலியரைசன்
கைக்கொண்டதனை யிறக்கியபின்
படுகடன் முளைத்த பருதிபோற்
பாண்டியாதிராசன் வெளிப்பட்டு
விடுகதி ரவிரொளி விலகவீற் றிருந்து
வேலைசூழ்ந்த வியலிடத்துக்
கோவுங் குறும்பும் பாவுடன் முருக்கிச்
செங்கோ லோச்சி வெண்குடை நீழற்
றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப்
பிறர்பா லுரிமை திறவிதி னீக்கித்
தன்பா லுரிமை நன்கன மமைத்த
மானம் போர்த்த தானை வேந்தன்
ஒடுங்கா மன்ன ரொளிநக ரழித்த
கடுங்கோ னென்னுங் கதிர்வேற் றென்னன்
மற்றவற்கு மகனாகி மகீதலம் பொது நீக்கி
மலர்மங்கையொடு மணனயர்ந்த
அற்றமில் பரவைத்தானை யாதிராச னவனிசூளாமணி
எத்திறத்து மிகலழிக்கு மத்தயானை மாறவர்மன்
மற்றவர்க்கு, மருவினியவொரு
மகனாகி மண்மகளை மறுக்கடிந்து
விக்கிரமத்தின் வெளிப்பட்டு
விலங்கல் வெல்பொறி வேந்தர் வேந்தன்
சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச்
செழியன் வானவன் செங்கோற் சேந்தன்
மற்றவற் குப்பழிப் பின்றிவழித் தோன்றி
உதயகிரி மத்தியத் துருசுடர் போலத்
தெற்றென்று திசைநடுங்க மற்றவன் வெளிப்பட்டுச்
சூழியானை செலவுந்திப் பாழிவா யமர்கடந்தும்
வில்வேலிக் கடற்றானையை நெல்வேலிச் செருவென்றும்
விரவிவந் தடையாத பரவரைப் பாழ்படுத்தும்
அறுகாலினம் புடைதிளைக்குங்
குறுநாட்டவர் குலங்கெடுத்தும்
கைந்நலத்த களிறுந்திச் நெந்நிலத்துச் செருவென்றும்
பாரளவுந் தனிச்செங்கோற் கேரளனைப் பலமுறையும்
உரிமைச் சுற்றமு மாவும் யானையும்
புரிசை ம(i)மதிற் புலியூ ரப்பகல்
நாழிகை யிறவாமைக் கோழியுள் வென்றுகொண்டும்
வேலாழியும் வியபரம்பு
மேலாமைசென் றெறிந்தழித்தும்
இரணியகர்ப்பமுந் துலாபாரமுங்
தரணிமிசைப் பலசெய்தும்
அந்தணர்க்கு மரசர்க்கும் வந்தணை கென் றீத்தளித்த
மகரிகையணி மணிநெடுமுடி
அரிகேசரி யசமசமன் சிரீமாறவர்மன்
மற்றவற்கு மகனாகிக் கொற்றவேல் வலனேந்திப்
பொருதூருங் கடற்றானையை மருதூருண் மாண்பழித்
தாய்வேளை யகப்பட வேயென்னாமை யெறிந்தழித்துச்
செங்கோட்டும் புதான்கோட்டுஞ்
செருவென்றவர் சினந்தவிர்த்துக்
கொங்கலரு நறும்பொழில்வாய்க் குயிலோடு மயிலகவும்
மங்கலபுரமெனு மாநகருண் மாரதரை யெறிந்தழித்
தறைகடல் வளாகம் பொதுமொழி யகற்றிச்
சிலையும் புலியுங் கயலுஞ் சென்று
நிலையமை நெடுவரை யிடவயிற் கிடாஅய்
மண்ணினி தாண்ட தண்ணளிச் செங்கோற்
றென்ன வானவன் செம்பியன் சோழன்
மன்னர் மன்னன் மதுரகரு நாடகன்
கொன்னவின்ற நெடுஞ்சுடர்வேற்
கொங்கர்கோமான் கோச்சடையன்
மற்றவர்க்குப் புத்திரனாய் மண்மகளது பொருட்டாக
மத்தயானை செலவுந்தி மானவேல் வலனேந்திக்
கடுவிசையா லெதிர்ந்தவரை நெடுவயல்வாய் நிகரழித்துக்
கருவடைந்த மனத்தவரைக்
குறுமடைவாய்க் கூர்ப்பழித்து
மன்னிகுறிச்சியுந் திருமங்கையு
முன்னின்றவர் முரணழித்து
மேவலோர் கடற்றானையோ
டேற்றெதிர்ந்தவரைப் பூவலூர்ப் புறங்கண்டும்
கொடும்புரிசை நெடுங்கிடங்கிற் கொடும்பா ளூர்க்கூடார்
கடும்புரியுங் கருங்களிறுங் கதிர்வேலிற் கைக்கொண்டும்.
செழும்புரவிப் பல்லவனைக் குழும்பூருட் டேசழிய
எண்ணிறந்த மால்களிறு மிவுளிகளும் பலகவர்ந்தும்
தரியலராய்த் தனித்தவரைப் பெரியலூர்ப் பீடழித்தும்
பூவிரியும் பொழிற்சோலைக் காவிரியைக் கடந்திட்
டழகமைந்த வார்சிலையின்
மழகொங்க மடிப்படுத்தும்
ஈண்டொளிய மணியிமைக்கு
மெழிலமைந்த நெடும்புரிசைப்
பாண்டிக்கொடுமுடி சென்றெய்திப்
பசுபதியது பதுமபாதம் பணிந்தேத்திக்
கனகராசியுங் கதிர்மணியு மனமகிழக் கொடுத்திட்டுங்
கொங்கரவ நறுங்கண்ணிக்
கங்கராசனொடு சம்பந்தஞ்செய்தும்
எண்ணிறந்தன கோசகசிரமு
மிரணியகர்ப்பமுந் துலாபாரமும்
மண்ணின்மிசைப் பலசெய்து
மறைநாவினார் குறைதீர்த்துங்
கூடல் வஞ்சி கோழியென்னு மாடமாமதில் புதுக்கியும்
அறைகடல் வளாகங் குறையா தாண்ட
மன்னர் மன்னவன் றென்னவர் மருகன்
மான வெண்குடை மான்றேர் மாறன்
மற்றவற்கு மகனாகி மாலுருவின் வெளிப்பட்டு
மூன்று கொற்ற முரசுட னியம்பக்
குளிர்வெண்குடை மண்காப்ப
பூமகளும் புலமகளு நாமகளு நலனேத்தக்
கலியரசன் வலிதளரப் பொலிவினொடு
வீற்றிருந்து கருங்கட லுடுத்த பெருங்கண் ஞாலத்து
நாற்பெரும் படையும் பாற்படப் பரப்பிக்
கருதாதுவந் தெதிர்மலைந்த காடவனைக் காடடையப்
பூவிரியும் புனற்கழனிக் காவிரியின் றென்கரைமேற்
றண்ணாக மலர்ச்சோலைப் பெண்ணாகடத் தமர்வென்றும்
தீவாய வயிலேந்தித் திளைத்தெதிரே வந்திறுத்த
ஆய்வேளையுங் குறும்பரையு மடலமரு ளழித்தோட்டிக்
காட்டுக்குறும்பு சென்றடைய
நாட்டுக்குறும்பிற் செருவென்றும்
அறைகடல் வளாக மொருமொழிக் கொளீஇய
சிலைமலி தடக்கைத் தென்ன வானவன்
அவனே, சிரீவரன் சிரீமனோகரன்
சினச்சோழியன் புனப்பூழியன்
வீதகன்மஷன் விநயவிச்சுருதன்
விக்ரமபாரகன் வீரபுரோகன்
மருத்பலன் மான்யசாசனன் மனூபமன் மர்த்திதவீரன்
கிரஸ்திரன் கீதகிந்நரன் கிருபாலயன்
கிருதாபதானன் கலிப்பகை கண்டகநிஷ்டூரன்
கார்யதக்ஷிணன் கார்முக பார்த்தன்
பராந்தகன் பண்டிதவத்ஸலன் பரிபூரணன் பாப்பீரு
குரையுறு கடற்படைத்தானைக்
குணக்கிராகியன்கூட நிர்ணயன்
நிறையுறுமலர் மணிநீண்முடி
நேரியர்கோ னெடுஞ்சடையன்
மற்றவன்றன் ராஜ்யவற்சரம் மூன்றாவது
---------------
2. நெடுஞ்சடையன் பராந்தகன் சீவரமங்கலச் செப்பேடுகள்
அன்ன னாகிய வலர்கதிர் நெடுவேற்
றென்னன் வானவன் செம்பியன் வடவரை
இருங்கய லாணை யொருங்குட னடாஅய்
ஒலிகெழு முந்நீ ருலகமுழு தளிக்கும்
வலிகெழு திணிதோண் மன்னவர் பெருமான்
தென்னல ராடி தேம்புனற் குறட்டிப்
பொன் மலர்ப் புறவில் வெள்ளூர் விண்ணஞ்
செழியக் குடியென் றிவிற்றுட் டெவ்வர்
அழியக் கொடுஞ்சிலை யன்றுகால் வளைத்தும்
மாயிரும் பெரும்புனற் காவிரி வடகரை
ஆயிர வேலி யயிரூர் தன்னிலும்
புகழி யூரிலுந் திகழ்வே லதியனை
ஓடுபுறங் கண்டவ னொலியுடை மணித்தேர்
ஆட; வெம்மா வவையுடன் கவர்ந்தும்
பல்லவனுங் கேரளனு:மாங்கவற்குப் பாங்காகிப்
பல்படையொடு பார்ஞெளியப்
பவ்வமெனப் பரந்தெழுந்து
குடபாலுங் குணபாலு மணுகவந்து விட்டிருப்ப
வெல்படையொடு மேற்சென் றங்
கிருவரையு மிருபாலு மிடரெய்தப் படைவிடுத்துக்
குடகொங்கத் தடன் மன்னனைக்
கொல்களிற்றோடுங் கொண்டுபோந்து
கொடியணிமணி நெடுமாடக் கூடன்மதி லகத்துவைத்தும்
கங்கபூமி யதனளவுங் கடிமுரசுதன் பெயரறையக்
கொங்கபூமியடிப்படுத்துக் கொடுஞ்சிலைப்பூட் டிழிவித்துப்
பூஞ்சோலை யணிபுறவிற் காஞ்சிவாய்ப்பே ரூர்புக்குத்
திருமாலுக் கமர்ந்துறையக்
குன்ற மன்னதோர் கோயி லாக்கியும்
ஆழிமுந்நீ ரகழாக வகல்வானத் தகடுரிஞ்சும்
பாழி நீண்மதில் பரந்தோங்கிப் பகலவனு மகலவோடும்
அணியிலங்கையி னரணிதாகி
மணியிலங்கு நெடுமாட மதில்விழிஞம் மதுவழியக்
கொற்றவேலை யுறைநீக்கி
வெற்றத்தானை வேண்மன்னனை
வென்றழித்தவன் விழுநிதியோடு
குன்றமன்ன கொலைக்களிறுங்
கூந்தன் மாவுங் குலதனமு நன்னாடு மவைகொண்டும்
அரவிந்த முகத்திளையவ ரரிநெடுங்க ணம்புகளாற்
பொரமைந்தர் புலம்பெய்தும் பொன்மாட நெடுவீதிக்
கரவந்தபுரம் பொலிவெய்தக்
கண்ணகன்றதோர் கல்லகழோடு
விசும்புதோய்ந்து முகிறுஞ்சலி
னசும்பறாதவகன் சென்னி
நெடுமதிலை வடிவமைத்தும்
ஏவமாதி விக்கிரமங்க ளெத்துணையோ பலசெய்து
மணிமாடக் கூடல்புக்கு மலர்மகளொடு வீற்றிருந்து
மனுதர்சித மார்க்கத்தினார் குருசரிதங் கொண்டாடிக்
கண்டகசோதனை தான்செய்து கடன்ஞால முழுதளிக்கும்
பாண்டிய நாதன் பண்டித வத்ஸலன்
வீரபுரோகன் விக்கிரம பாரகன்
பராந்தகன் பரம வைஷ்ணவன் றானாகி
நின்றிலங்கு மணிநீண்முடி
நிலமன்னவ நெடுஞ்சடையற்கு
ராஜ்யவர்ஷம் - பதினேழாவது
-------------
3. சடைய வர்மன் -பராந்தக பாண்டியன் செப்பேடுகள்
ஓங்குதிரை வியன்பரப்பில் உததிஆ லயமாகத்
தேங்கமழு மலர் நெடுங்கட் டிசைமகளிர் மெய்காப்ப
விண்ணென்பெய ரேயணிய மேகதாலி விதானத்தின்
றண்ணிழற்கீழ் ஸஹஸ்ரபண மணிகிரணம் விளக்கிமைப்ப
புஜங்கமபுரஸ் ஸரபோகி என்னும் பொங் கணைமீய்மிசைப் 5
பயந்தருதும் புருநாரதர் பனுவனரப் பிசைசெவிஉறப்
ளொடுபூமகள் பாதஸ்பர் ஸனை செய்யக்
கண்படுத்த கார்வண்ணன் றிண்படைமால் ஸ்ரீபூபதி
ஆதிபுருஷன் அமரநாயகன் அழகமைநாபி மண்டலத்துச்
சோதிமர கத்துளைத்தாட் சுடர்பொற்றா மரைமலர்மிசை 10
விளைவுறுகளங் கமணியின்மேன் மிளிர்ந்திலங்கு சடைமுடி
டள வியன்ற கமண்டலுவோ டக்ஷமாலை ஒடுதோன்றின
சதுர்ப்புஜந் சதுர்வ் வக்த்ந்சதுர்வ் வேதிசதுர்த்வயாக்ஷந்
மதுக்கமழ்மலர்க் கமலயோனி மனந்தந்த மாமுனிஅத்ரி
அருமரவிற் பலகாலந் தவஞ்செய்வுழி அவன்கண்ணி 15
லிருள்பருகும் பெருஞ்சோதி
இந்துகிரணந் வெளிப்பட்டனன்
மற்றவற்கு மகனாகிய மனுநீள்முடிப் புதனுக்கு
கற்றைச்செங் கதிர்க்கடவுள் வழிவந்த கழல்வேந்தன்
ஏந்தெழிற்றோ இளள்னொருநா ளீசனது சாபமெய்தி
பூந்தளவ மணிமுறுவற் பொன்னாகிய பொன்வயிற்றுள் 20
போர்வேந்தர் தலைபனிப்ப வந்துதோன்றிய புரூரவர்ப்பின்
பார்வேந்த ரெனைப்பலரும் பார்காவல் பூண்டுய்த்தபின்
திசையானையின் கும்பகூடத் துலவியசெழு மகரக்குலம்
விசையொடுவிண் மீன்னொடுபோர்
மிக்கெழுந்த கடற்றிரைகள்
சென்றுதன்சே வடிப்பணிய அன்றுநின்ற ஒருவன் பின் 25
விஞ்சத்தின் விக்ஞாப்ணை
யும்பெறலரு நகுஷன்மதனிலாசமும்
வஞ்சத்தொழில் வாதாபி சீராவியு மஹோததிகளின்
சுருங்காத பெருந்தன்மையும் சுகேதுசுதை சுந்தரதையு
மொருங்குமுன்ன மடிநண்ண திருமேனி உயுதலத்தோன்
மடலவிழ்ஆ மலுய்த்து மாமுனிபுரோ கிதன்னாகக் 30
கடல்கடைந் தமிர் துண்ணவுங்
கயலிணைவட வரைப்பொறித்தும்
ஹரீஹயந் தாரம்பூண்டு மவன்முடிஓடு வளை உடைத்தும்
விரிகடலைவே லின் மீட்டும் தேவாசுரச் செருவென்றும்
அகத்தியனொடு தமிழாய்ந்தும்
மிகத்திறனுடை வேந்தழித்துந்
திசவதனன்... நினுக்குச் சந்து செய்துந் தார்த்தராஷ்டிரர் 35
படைமுழுதுங் களத்தவிய பாரதத்துப் பகடோட்டியும்
மடைமிகுவேல் வாணர் அநுஜன் வசுசாப மகல்வித்தும்
….. தொன் னகரழித்தும் பரிச்சந்தம்பல கவர்ந்தும்
நாற்கடலொரு பகலாடியும் கோடிபொன் னியதிநல்கிக்
கலைக்கடலைக் கரைகண்டுபொன் பகடாயிரம் பரனுக்கீயும் 40
உரம்போந்ததிண்டோ ளரைசுககரம்
போதித்துறக்க மெய்தியும்
பொன்னிமயப் பொருப்பதனில்
தன்னிலையிற் கயலெழுதியும்
வாயல்மீ மிசைநிமிர்ந்து பலவேண்டி விருப்புற்றுங்
காயல்வாய் கடல்போலக் குலம்பலவின் கரையுயரியும்
மண்ணதிரா வகைவென்று தென்மதுரா புரஞ்செய்தும். 45
அங்கதனில் லருந்தமிழ் நற் சங்கம்இரீஇத் தமிழ்வளர்த்தும்
ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும்
கடிநாறு கவினலங்கற் களப்பாழர் குலங்களைந்தும் மு
டிசூடி முரண்மன்னர் எனைப்பலரு முனிகந்தபின்
இடையாரையும் எழில்பேணவைக் கூட்டியினிய வெல் [கொடி எடுத்த 50
குடைவேந்தர் திருக்குலத்துக் கோமன்னர் பலரொழிந்தபின்
காடவனைக் கருவூரில் கால்கலங்கக் களிறுகைத்த
கூடலர்கோன் ஸ்ரீவரகுணன் குறைகழற்கோச் சடையற்குச்
சேயாகி வெளிப்பட்ட செங்கண்மால் ஸ்ரீவல்லபன்
மேய்போயந் தோளியர்கள் வித்யாதர ஹிரண்யகர்ப்ப 55
குண்ணவலமாவென்றுங் குரைகடலீழங் கொண்டும்
விண்ணுள வில்லவற்கு விழிஞத்து விடைகொடுத்தும்
காடவருக் கடலானூர்ப் பீடழியப் பின்னின்றுங்
குடகுட்டுவர் குணசோழர் தென்கொங்கர் வடபுலவர்
அடலழிந்து களஞ்சேர அமர்வல்லான் மகன்படத்தன் 60
களிறொன்று வண்குடையதைக் கதி... காட்டியமபுர சீலன்
ஒளிறலைவே லதுபாய பகு... என் உம்பர்வான் உலகணைந்தபின்
மற்றவற்கு மகனுகிய கொற்றவனங் கோவரகுணன்
பிள்ளைபிறை சடைக்கணிந்த விடையேறி எம்பெருமானை
உள்ளத்தி லினிதிருவி உலகங்காக் கின்றநாளில் 65
அரவரைசன் பல்லூழி ஆயிரமா யிருந்தலையால்
பெரிதரிதின் பொறுக்கின்ற பெரும்போஹமண் மகளைத்தன்
தொடித்தோளில் லெளிதுதாங்கிய தொண்டியர்கோன் றுளக்கில்லீ
யடிப்படைமா னாபரணன் திருமருகன் மயிலையர்கோன்
பொத்தப்பிக் குலச்சோழன் புகழ்தருசிரீ கண்டராசன் 70
மத்தமா மலைவலவன் மதிமகளக் களநீம்மடி
திருவயிறு கருவுயிர்த்த ஸ்ரீபராந்தக மஹராஜன்
விரைநாமத்தேர் வீரகர்ணன் முன்பிறந்து வேல்வேந்தனைச்
செந்தாமரை மலர்ப்பழனச் செழுநிலத்தைச் செருவென்றுங்
கொந்தகபூம் பொழிற்குன்றையுங் குடகொங்கினும் பொக் கரணியும் 75
தென்மாயனுஞ் செழுவெண்கையு பராந்தகன்னுஞ் சிலைக் கணீர்ந்த
மன்மாய மாமிகுத்தவர் வஸ்துவா ஹனங்கொண்டும்.
ஆறுபல தான்கண்டும் அமராலையம் பலசெய்துஞ்
சேறுபடு வியன்கழனித் தென்விழிஞ நகர்கொண்டுங்
கொங்கினின்று தேனூரளவுல் குடகொங்க ரூடல்மடிய 80
வெங்கதிர்வேல் வலங்கொண்டும் வீரதுங்களைக் குசைகொண்டும்
எண்ணிறந்த பிரமதேயமும் எண்ணிறந்த தேவதானமும்
எண்ணிறந்த தடாகங்களும் இருநிலத்தி லியற்றுவித்தும்
நிலமோங்கும் புகழாலுந் நிதிவழங்கு கொடையாலும்
வென்றிப்போர்த் திருவாலும் வேல்வேந்தரில் மேம்பட்ட 85
கதிரார் கடுஞ் சுடரிலைவேல் கலிப்பகை கண்டகோள் (கண்டன்
மதுராபுர பரமேஸ்வரன் மாநிநீமகர கேதநன்மன்.
செங்கோல்யாண்டு ஆறவதின் மேல்நின்ற தொடர்யாண்டில்
பொன்சிறுகா மணிமாடப் புரந்தரனது நகர்போன்ற
களக்குடிநா டதனிற்படும் களக்குடிவீற் றிருந்தருன 90
ஆசிநா டதனிற்படும் பிரமதேய மகன் கிடக்கைத்
தேசமலிதிரு மங்கலமிது பண்டுபெரு நலனுட்
படுவதனைப் பாங்கமைந்த குடிகளது காராண்மை
யொடெழுந்த முதுகொப்பர்க் கொடைமுந்து கிடந்ததனைக்
கற்றறிந்தோர் திறல்பரவக் களப்பாழரைக் கனைகட்ட 95
மற்றீரடோண் மாக்கடுங்கோன் மானப்பேர்த் தளியகோன்
ஒன்றுமொழிந் திரண்டோம்பி ஒருமுத்தீ யுள்பட்டு
நன்றுநான் மறைபேணி ஐய்வேள்வி நலம்படுத்து
அறுதொழிற்கள் மேம்பட்டு மறைஓர்பந் நிருவர்க்குக்
காராண்மை மீயாட்சி உள்ளடங்கக் கண்டமைத்துச் 100
செப்பேடுசெய்து தடுத்தருனினன் தேர்வேந்தநின் குலமுதல்வன்
மைப்படுகண் மடமகளிர் மணவேளமனு ஸமானன்
வழுவாத செங்கோனடவி மண்மகட்கொரு கோவாகிக்
கழுதூரில் சித்திசெய்த கடிக்கூட னகர்காவலன்
சோமாசி குறிச்சியிது தோல்லைமேற்படி கிடந்ததனை 105
ஸோமபான மநோசுத்தராகிய காடகசோம் யாஜியார்க்கு
யாகபோக மதுவாக எழிற்செப்பேட் டொடுகுடுத்தனன்
ஆகிய இவ் ஓரிரண்டின் செப்பேடு மறக்கேட்டில்
இழந்துபோ யினவென்றும் ஏதமில்சோமாசி குறிச்சிச்
செழுந்தரைய நிலத்துப்படும் நிலத்தைக் கடன் றிருக்கைய 110
கீழ்வன மணிதருபெரு நான்கெல்லை இட்டுக்கொண்டு
மற்றதனை மதுரகர நல்லூரென்று பேரிட்டுக்
குடிநிலனா கக்கொண்ட நிலமதுவும் அவ... கூடி
நிலனாகேய்ந் தவிரயிது தொண்டுசோ மாசிகுறிச்சி
மேலைபுரவேற்ப பெ(று)வதென்றும் சொல்லியவூ [ரிரண்டுந் தம்மி 115
லெல்லைகலந்து கிடக்குமாதலில் ஒன்றாக வுதவுமென்றும்
வாசநாள் மலர்கமழ்பொழில் லாசிநாட்டுள்... மாகிய
கருவமைந்த கனகமாளிகைத் திருமங்கல நகர்த்தோன்ற
சோமாசிகுறிச்சில் என்னுங் காமர்வண் பதிகாவலன்
வடிவமைவான கோத்திரத்து பௌதாயந சூத்திரத்துக் 120
குடியினனாக வெளிப்பட்டு குணகணங்கட் கிடமாகி
மறைநான்கின் துறைபோகிய மாயானமவி பட்டற்குச்
சிறுவனாகிய பெருந்தகைஓன் திசைமுகன்வெளிப் தர்ம்ம வத்சலன் (பட்டனையன்
மாயநாராயணபட்டர் மஹாபந்நி வயிறுயிர்த்த 125
சேயான திருத்தகைஓன் ஸ்ரீ நாராயணங் கேசவன்
கல்விக்கடல் கரைகண்டு மக்ஷத்தியான மதமுணர்ந்து
சொல்வித்தகந் தனதாக்கி சத்சீலா சாரனாகி
மீனவன் வீரநாரணற்கு விஸ்வாச குணங்கட்
கான தன்மையை னாதலில்லருளறிந்துவிண் ணப்பஞ்செய் 130
மதுரதர நாணு எனும் வளம்பதிசோ மாசிகுறிச்சி-
அதன்மேலே புரவேற்றி ஆங்கதுந்திரு மங்கலமும்
உடன்கூடப் பிடிசூழ்வித் துலகறியக் குடுத்தருளினன்
வடங்கூடு முலைமகளிர் மன்மதவேள் மனுசரிதன்
மற்றிதனுக் காணத்தி வண்டமிழ்க் கோன் திக்கி 135
பொற்றடம்பூண் மணிமார்பன் பொழிற்புல்லூ ரெழிற் [பூசுரன்
செய்யுந்து புனற்செறுவிற் செங்கழுநீர் மலர்படுகர்
வைகுந்த வளநாடன் வத்ஸகோத்ர சூடாமணி
ஹரிசரண கமலசேகரன் ஆயிரத்தஞ் துற்றுவன்
திருமகிழி ளையனக்கன் திசைநிறை பெரும் புகழாளன் 140
அவன்தலம் புகழுநிதி அவனாசூர் குலதிலகன்
தாதலர்பூம் பொழிறழுவிச் சாலிவிளை வயல்வளத்தால்
மேதகுபுகழ் பேண்வுணாட்டு பெருநலூர் வெள்ளி எனப் பெயரிய
திருந்துபதிக் குடித்தலைவன் தென்னவன் திரு வருள்சூடிய
பெருநலூர் வெள்ளி கிழவனாகிய பெருந்தகைசெந் தனு [கிழவன் 145
நலமலிசீர் நடுவுநிலை நன்குநா யகனாகவும்
அலர்கமழும் பொனலளித்து நாட்டுக்கக் கிரமாகிய
முகில்தோய பொழில்முசுக்குறிச்சி முற்கூடிப்பினோர் [கார்முளைய
அகனிலத்தோர் புகழளத்து நாட்டுக்கோன் னருந்தமிழின்
பாத்தொகுதெருள் பயன் தருவோன் கொடைபயில்கற் பக (சீலன் 150
சாத்தம்படர் தெனப்பெயரிய தக்கோன் மிக்கோங்கு
கார்வயல்சூழ் களாத்திருக்கைப் பேரரண்சூழ் பெருங்காக் [கூர்த்
தலைவனாகிய குலக்குரிசில் தகுதேய மாணிக்கம் .
கலைபயில் கிழவகோனும் கணக்கு நருமேஷ்யில் கணக்கராக
மாசில்வான் குடித்தோன்றிய ஆசிநாட்டு நாட்டாரும் 155
மச்சிறுபரமன்னுவந்த நெச்சுரநாட்டாரும்
உடனாகிநின் றெல்லைகாட்டப் பிடிசூழ்ந்த பெருநான் [கெல்லை கீழெல்லை
புனல்புவனி புத்தேள்மா ருதம்கனல் இருசுடர் எஐமானன்
ஆகியதிற லஷ்டமூர்த்தி அமரர்க்கு மறிவரிஒன்
வேகவெள் விடைபாரதி பீஷ்மலோ சனன்மகிழ்ந்து (ங்) 160
(கோல்) பெய்வான் றிருவிருப்பூர் முழிநின்று தென்கிழக்கு [நோக்கிப்
போயின வெள்ளாற்றுக்கும் ஆயினபெரு நலூர்ச் சிறைக்[கும்
பன்கள்ளி முரம்புக்கும் வண்ணத்தார் வளாகத்தின்
நன்குயர்பரம் பீட்டுக்கும் நலமிகுகள் ளிக்குறிச்சி
மேலைக்கள்ளி முரம்புக்கும் மேற்குநடை யாட்டிகுளத்தில் 165
சாலநீர் கோளுக்கும் இக்குளத் தின்தென் கொம்பின்
மறுவாக்கும் பாங்கமைவடு பாறைக்கும் பயந்தருகுடிநடை
ஏரி ஓங்கியனை குளத்தகம்பா
ல்லையொழுகிய வனபெருப்புக்கும்.
இப்பெருப்பை ஊடறுத்துச் செவ்வடு செழுங்கிழக்கு நோக்கி 170
வாரிக்கொள்ளிக் கேய்போயின வழியதற்கும் வயல்மலிந்த
வாரிக்கொள்ளிக் குளத்தினீர் கோளுக்கும் அடிகுழிக்கும். [மேக்கும்
தென்னெல்லை
திருமரு நிலப்பாறைக்கும் செஞ்சாலி விளைகழனி
ஏரியனை வடகடைக்கொம்பிற்கும் ஒழுகுகள்ளி முரம்புக்கும் 175
நீருடை அறைய்ச்சுனைக்கும் ஊருடையான் குழித்தென் (கடைக் கொம்புக்கும்
நெடுமதிறகற் றாழ்வுக்கும் நீர்மாற்றுத்திடலுக்கும்
கடிகமழ்பூந் தார்க்கணத்தார் குழிக்கும் வடக்கு
மேலெல்லை
கூற்றன்குழி மீகுழியேய் போயினபடு காலுக்கும் 180
போற்றரு மாருத மாணிக் குளத்துக்கரைப் பெருப்புக்கும்-
நாடறிநங் கையார் குழியின்மீய் குழியேய்
காடதேரிக்கேய் போயின வழிக்கு மேதமில்
லெறிச்சில் வழிக்கும் எழிலமை நெச்சுறநாட்
டோலைகுளத் தெல்லைக்கும் கிழக்குமன் வடவெல்லை 185
வளமிக்க மருத(ம)லி இள நெச்சுறத் தெல்லைக்கும்
வெள்ளாற்றுக்கும் தெற்கு
இவ்விசைத்த பெருநான்கெல்லை உண்ணிலமொன் றொழி யோமல்
காராண்மை மீயாட்சி உள்ளடங்கக் கண்டமைத்துச் 190
சீர்சான்ற திசையனைத்தின் னெல்லைவாய்க் கன்னாட்டித்
தருமங்களி னொன்றுபயில் திருமங்கலத்துச் சபையார்க்கும்
தொல்லைவண் சோமாசிகுறிச்சி மல்லன்மா மறையோர்க்கும்
பிரமதேய ஸ்திதி வழாவகைய்ப் ப்ருதுவின் கண்ணிலை [பெறுத்து
தர்ம்மகர்ம்மப ராயணானாகிய தராபதி கொடுத்தருளிப்பின் 195
ஈண்டிய பெரும்புகழேயுஞ் சாண்டில்ய கோத்திரத்து
எண்ணார்புகழ் ஏகசந்தி காத்யாயன கோத்திரத்து
வரிவண்டு மது நுகர்பொழிற் சிரீவல்லப மங்கலத்து
செப்பரிய செழுஞ்செல்வ்த் துப்பமவிரால் மேதக்க
கலையில் கணஸ்வாமிபட்டற்கு தற்பெரு மாமதலை 200
உலவுசீர்த்தி யோகேஸ்வர பட்டற்கு விசிஷ்டனாகிய
திருவடிச் சோமாசியென்னுஞ் சீர்மறையோன் மகள்பயந்த
திருமருசீர்ச் சிரீமாதவன் ஸ்ரீமாதவ சரணேஸ்வரன்
வேதவேதாங்களும் விவிதாசாரமும் தன்னொடுபிற
ரோதிக்கேட்டு தரப்பெய்த நீரைக்காமா சால்யனாகி 205
பெருந்தகைப் பிரமதேயமிதற்கு பிரஸஸ்தி செய்தோற்கு
திருந்தியநன் பெருவயக்கலும் செழும்புநற் பருத்தி (வயக்கலும்
இவ்வயல்களில் கிணறிரண்டும் அக்கிணற்றால் விளைநிலனும்
மற்றவ்வூர் மாசபை ஓர்பெற்றபரிசேய் கொடுத்தபின்
சீரியசெழும் பணிஇதற்குச் செப்பேடு வாசகத்தை 210
ஆரியம்விராய்த் தமிழ்தொடுத்த மதிஓற்கும் அதுஎழுதிய
கற்பமைந்த கதலத்துவரச் சிற்ப மார்த்தாண்டற்கும்
மண்ணெங்கும் நிறைந்தவான் புகழ் கண்ணங்கீரன் [வயக்கல்
திருஉலகு நற்சிங்க குளவளால் மரிவியசோ
மாசிவயக்கல்லென்னும் வயல்களிற் கிணறுகள்ளொரு [மூன்றும் 215
எக்காலமும் மன்னுக்கிணற்றில் விளைவயலனைத்தும் [இறையிலியாகவும்
சொல்லிய இக்கிணறு மூன் றின்னிடைக் கிடந்ததொன் [னிலமுழுவதும்
இல்லவளா லதுவாகவும் எழின்மிக்க தோட்டமாகவும்
பால்லெருமை பெருவராலுகள் புனற்பதி இதனிற்
கோல்லுரிமையிற் செம்பாகமும் மஹாசபை குறிப்பொடு [கொடுத்துப் 220
பகல்செய்யும் பருதிஞாயிறும் இரவுச்செய்யும் பனிமதிஉம்
அகல்ஞாலமும் உளவளவும் செப்பேடு செய்துகொடுத் [தருளினன்
மணிநீழ் முடி மன்பணிகழல் வசுதாதிய வாசுதேவன்
அணிநீள வுய்த்த ஹிதாகனி அசலாசலன் நவர்ஜ்யன்
கொந்தலர்தார் கோச்சடையன் கூடற்கோன் குருசரிதன் 225
செந்தமிழ்க்கோன் ஸ்ரீநிகேதனன் ஸ்ரீபராந்தகன் மகராஜன்
தேர்மிகுமாக் கடற்றானைத் தென்னவர்கோன் றிருவருளாற்
சீர்மிகு செப்பேட்டுக்குச் செந்தமிழ்பாத் தொடைசெய்தோன்
க்ர்தஉகமெனும் ஊழிக்கண் அவிர்சடை முடிஅரன் வேண்ட
நற்பரசு நிர்ம்மித்தவ னளிர்சடைமே லலங்கல்பெற்ற 230
மாமுனிவன் வழிவந்தோன் பாமரு பண்டிதராசன்
பொன்வரன்றி மணிவரன்றி அகில்வாள்றிக்கரை பொருபுனற்
றென்வைய்கை வளநாடன் செழுங்குண்டூர் நகர்த்தோன்றல்
பாண்டித்தமி ழாபரண னென்னும்பல சிறப்புப் பெய ரெய்திய
பாண்டிமாராயப் பெருங் கொல்லனாகிய சிரீவல்லபன் 235
தென்னவர்தந் திறலாணைச் சிலைஒடுபுலி கயலிணைமன்
பொன்னிமையச் சிமையத்து விறற்கருவியிற் றைக்குக்
தொழில்செய்து வந்தவபின் னோன்செயல்பல பயின்றோர் [முன்னோன்
திருமலி சாசன மிதற்குச் செழுந்தமிழ்பா டினோனற்றை
கிருபசேகரப் பெருங்கொல்லன் நீள்புகழ் நக்கனெழுத்து 240
--------------
4. மூன்றாம் இராசசிங்க பாண்டியன் சின்னமனூர்ச் செப்பேடுகள்
திருவொடுந் தெள்ளமிர்தத்தொடுஞ்
செங்கதிரொளிக் கௌஸ்துபத்தொடும்
அருவிமத களிறொன்றொடுந்
தோன்றியர னவிர்சடைமுடி
வீற்றிருந்த வெண்டிங்கள் முதலாக வெளிப்பட்டது
காற்றிசையோர் புகழ்தர நானிலத்தி னிலைபெற்றது
பாரத்துவா சாதிகளால் நேராக ஸ்துதிக்கப்பட்டது
விரவலர்க்கரியது மீனத்வயாஸனத்தது
பொருவருஞ்சீ ரகத்தியனைப் புரோகிதனாகப்பெற்றது
ஊழியூழி தோறுமுள்ளது நின்றவொருவனை யுடையது
வாழியர் பாண்டியர் திருக்குலமிதினில் வந்துதோன்றி
வானவெல்லை வரைத்தாண்டும்
வளை கடல்கடைந் தமிர்தங்கொண்டும்
நானிலத்தோர் விஸ்மயப்பட நாற்கடலொரு பகலாடியும்
மங்கிலொளி மணிமுடியொடு சங்கவெள் வளை தரித்தும்
நிலவுலகம் வலஞ்செய்தும் நிகரில்வென்றி யமரர்க்குப்
பலமுறையுந் தூதுய்த்தும் பாகசாஸன னாரம்வவ்வியுஞ்
செம்மணிப்பூணொடுந்தோன்றித்
தென்றமிழின் கரைகண்டும்
வெம்முனைவே லொன்றுவிட்டும்
விரைவரவிற் கடன் மீட்டும்
பூழியனெனப் பெயரெய்தியும்
போர்க்குன் றாயிரம் வீசியும்
பாழியம்பா யலினிமிர்ந்தும்
பஞ்சவனெனப் பெயர்நிறீஇயும்
வளமதுரை நகர்கண்டும் மற்றதற்கு மதில்வகுத்தும்
உளமிக்க மதியதனா லொண்டமிழும் வடமொழியும்
பழுதறத்தா னாராய்ந்து பண்டிதரின் மேந்தோன்றியும்
மாரதர்மலை களத்தவியப் பாரதத்திற் பகடோட்டியும்
விசயனை வசுசாபநீக்கியும் வேந்தழியச் சுரம்போக்கியும்
வசையில்மாக் கயல்புலிசிலை
வடவரைநெற் றியில் வரைந்தும்
தடம்பூதம் பணிகொண்டு தடாகங்கள் பலதிருத்தியும்
அடும்பசி நோய் நாடகற்றி
அம்பொற்சத் திரமுயர்த்தும்
தலையாலங் கானத்திற் றன்னெக்கு மிருவேந்தரைக்
கொலைவாளிற் றலைதுமித்துக்
குறைத்தலையின் கூத்தொழித்தும்
மகாபாரதந் தமிழ்ப்படுத்து மதுராபுரிச் சங்கம்வைத்தும்
மகாராசரும் சார்வபௌமரும்
மகீமண்டலங் காத்திகந்தபின்
வில்லவனை நெல்வேலியிலும் விரிபொழிற் சங்கரமங்கைப்
பல்லவனையும் புறங்கண்ட
பராங்குசன் பஞ்சவர் தோன்றலும்
மற்றவர்க்குப் பௌத்ரனாயின
மன்னர்பிரா னிராசசிங்கனுங்
கொற்றவர்க டொழுகழற்காற் கோவரகுண மகாராசனும்
ஆங்கவற் காத்மசனாகியவனிதலம் பொறைதாங்கித்
தேங்கமழ் பொழிற் குண்ணூரிலுஞ் சிங்களத்தும் விழிஞத்தும்
வாடாத வாகைசூடிக் கோடாதசெங் கோனடப்பக்
கொங்கலரும் பொழிற் குடமூக்கிற் போர்குறித்து
வந்தெதிர்ந்த கங்கபல்லவ சோளகாலிங்க மாகதாதிகள்
குருதிப்பெரும் புன ற்குளிப்பக்
கூர்வெங்கணை தொடை நெகிழ்த்துப்
பருதியாற்ற லொடுவிளங்கின பரசக்கிர கோலாகலனுங்
குரைகழற்கா லரைசிறைஞ்சக் குவலையதலந் தன தாக்கின
வரைபுரையு மணிநெடுந்தோள்
மன்னர்கோன் வரகுணவர்மனும்
மற்றவனுக் கிளையனான மனுசரிதன் வாட்சடையன்
பொற்றடம்பூண் சிரீபராந்தகன்
புனை மணிப்பொன் முடிசூடிக்
கைந்நிலந்தோய் கரிகுலமும் வாசிவிருந்தமுங்காலாளும்
செந்நிலத்தி னிலஞ்சேரத் திண்சிலைவாய்க் கணைசிதறியும்
கரகிரியிற் கருதாதவர் வரகரி குல நிரைவாரியும்
நிலம்பேர நகர்கடந்து நெடும்பெண்ணா கடமழித்தும்
ஆலும்போர்ப் பரியொன்றா லகன்கொங்கி லமர்கடந்தும்
தேவதானம் பலசெய்தும் பிரமதேயம் பல திருத்தியும்
காவலந்தீ வடிப்படுத்த நரபதியும் வானடைந்த பின்
வானவன்மா தேவியென்னு மலர்மடந்தை முன்பயந்த
மீனவர்கோ னிராசசிங்கன் விகடபா டலனவனே
அதிபதியா யிரந்தலையா லரிதாகப் பொறுக்கின்ற
மகிமண்டலப் பெரும்பொறைதன்
மகாபுசபலத் தாற்றாங்கி
புஜகநாயக தரணிதாரண ஹரணராஜித புஜசுந்தரனாய்
உலப்பிலிமங் கலத்தெதிர்ந்த தெவ்வருட னுகுத்தசெந்நீர்
கிலப்பெண்ணிற் கங்கராக மெனநிலப் பரணிதந்தும்
மடைப்பகர்நீர்த் தஞ்சையர்கோன் தானைவரை வைப்பூரிற்
படைப்பரிசா ரந்தந்து போகத்தன் பணைமுழக்கியுங்
காடும்பைமா நகர்நிறைந்த குரைகடற் பெருந்தானை
இடும்பையுற் றிரியத்த னிரணோதய மேற்கொண்டும்
புனற்பொன்னி வடகரையிற்
பொழில்புடைசூழ் மதில்வஞ்சி
கனற்படவிழித் தெதிர்ந்தவீரர்
கவந்தமாடக் கண்சிவந்துஞ்
சேவலுயர் கொடிக்குமர னெனச்சீறித் தென்றஞ்சை
காவலனது கரிதுரக பதாதிகள்செங் களத்த வியப்
பூம்புனனா வற்பதியில் வாம்புரவி வலங்காட்டியும்
விசயஸ்தம்பம் விசும்பணவச்
செங்கோற்றிசை விளிம்பணவக்
குசைமாவுங் கொலைக்குன்றமுங்
குருதியார முங்கொணர்ந்தும்
மகுடவர்த்தன ரடிவணங்க மகேந்திரபோக மனுபவித்த
விகடபாடலன் சிரீ காந்தன் மீநாங்கித சைளேந்திரன்
ராஜசிகா மணி தென்னன் ராஜிதகுண கணநங்கோன்
எண்ணிறந்த பிரமதேயமு மெண்ணிறந்த தேவதானமும்
எண்ணிறந்த பள்ளிச்சந்தமு மெத் திசையு மினிதியற்றி
உலப்பிலோத வொலிகடல்போ
லொருங்குமுன்னந் தானமைத்த
இராசசிங்கப் பெருங்குளக்கீழ்ச் சூழுநக ரிருந்தருளி
ராஜ்யவர்ஷ மிரண்டாவதி
னேதிர்பதினான் காம்யாண்டில் –
---------------
5. பராந்தக பாண்டியன் மெய்க்கீர்த்தி
திருவளரச் செய்ம்வளரத் தென்னவர்தங் குலம்வளர
அருமறைநான் கவைவளர வனைத்துலகுந் துயர் நீங்கத்
தென்மதுரா புரித்தோன்றித்தேவேந்திரனோடினி திருந்த
மன்னர்பிரான் வழுதியர்கோன் வடிம்பலம்ப நின்றருளி
மாக்கடலை யெறிந்தருளி மலையத்துக் கயல்பொறித்துச்
சேரலனைச் செருவில்வென்று
திறைகொண்டு வாகைசூடிக்
கூபகர்கோன் மகட்கொடுப்பக்
குலவிழிஞங் கைக்கொண்டு
கன்னிப்போர் செய்தருளிக் காந்தளூர்ச்சாலை கலமறுத்து
மன்னுபுகழ் மறையவர்த மணியம்பலத் தினிதிருந்து
ஆயிரத் தெண்ம ரவிரோதப் பணிப்பணியால்
பறைபேர்த்துக் கன்னாட்டிப் பண்டுள்ள பேர்தவிர்த்து
அளப்பனவுநிறுப்பனவுங் கயலெழுதி
யனந்தபுரத் தெம்மாற்கு
நிலவியபொன் மணிவிளக்கு நின்றெரியப் பத்தமைத்து
…………….. ……………. …………….
தைப்பூசப் பிற்றைஞான்று
வந்திருந்தா ரெல்லார்க்கு மாற்றாதே தியாகமிட
அறத்தால் விளங்கிய வாய்ந்த கேள்விப்
புறத்தாய நாடு பூமகட் களித்துத்
தெலிங்க வீமன் குளங்கொண்டு
தென்கலிங்க மடிப்படுத்துத்
திசையனைத்து முடனாண்ட சிரீபராந்தகதேவர்க்குயாண்டு
---------------
6. வீரபாண்டியன் மெய்க்கீர்த்தி
பூமடந்தையுஞ் சயமடந்தையும்
பொலிந்துதிருப் புயத்திருப்பப்
பார்முழுதுங் குடைநிழற்றப் பராக்கிரமத்தான் முடிசூடித்
தென்மது ராபுரித் திருவிளையாட் டத்திற்கண்டு
மன்னரெல்லாம் வந்திறைஞ்ச மலைநாடு கொண்டருளி
மாபா ரதம்பொருது மன்னவர்க்குத் தூதுசென்று
தேவாசுர மதுகைதரித்துத்
தேனாருமறையுங் கொண்டருளி
வடவரையிற் கயல்பொறித்து வானவர்கோ னாரம்பூண்டு
திடவாசகக் குறுமுனிபாற் செந்தமிழ்நூல் தெரிந்தருளி
செங்கோ லெங்குந் திசையுற நடாத்தி
மன்னிய வீரசிம்மா சனத்தில்
திரைலோக்யமுழு துடையாளொடும் வீற்றிருந் தருளி
மாமுதன் மதிக்குலம் விளக்கிய
கோமுதற் கொற்ற வன்மரான
திரிபுவன சக்கரவர்த்திகள் சிரீவீரபாண்டியதேவர்.
----------
7. மாறவர்மன் சுந்தரபாண்டியன் I மெய்க்கீர்த்தி
பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும் புயத்திருப்ப
நாமருவிய கலைமடந்தையுஞ் சயமடந்தையு நலஞ்சிறப்பக்
கோளார்ந்த சினப்புலியுங்
கொடுஞ்சிலையுங் குலைந்தொளிப்ப
வாளார்ந்த பொற்கிரிமேல் வரிக்கயல்கள் விளையாட
இருங்கடல் வலயத் தினிதறம் பெருகக்
கருங்கலி கடிந்து செங்கோல் நடப்ப
ஒருகுடை நீழ லிருநிலங் குளிர
மூவகைத் தமிழு முறைமையின் விளங்க
நால்வகை வேதமு நவின்றுடன் வளர
ஐவகை வேள்வியுஞ் செய்வினை யியற்ற
அறுவகைச் சமயமு மழகுடன் றிகழ
ஏழுவகைப் பாடலு மியலுடன் பரவ
எண்டிசை யளவுஞ் சக்கரஞ் செல்லக்
கொங்கணர் கலிங்கர் கோசலர் மாளுவர் சி
ங்களர் தெலுங்கர் சீனர் குச்சரர்
வில்லவர் மாகதர் விக்கலர் செம்பியர்
பல்லவர் முதலிய பார்த்திவ ரெல்லாம்
உறைவிட மருளென வொருவர்மு னொருவர்
முறைமுறை கடவதந் திறைகொணர்ந் திறைஞ்ச
இலங்கொளி மணிமுடி யிந்திரன் பூட்டிய
பொலங்கதி ரார மார்பினிற் பொலியப்
பனிமலர்த் தாமரைத் திசைமுகன் படைத்த
னுநெறி தழைப்ப மணிமுடி சூடிப்
பொன்னிசூழ் நாட்டிற் புலியாணை போயகலக்
கன்னிசூழ் நாட்டிற் கயலாணை கைவளர
வெஞ்சின விவுளியும் வேழமும் பரப்பித்
தஞ்சையு முறந்தையுஞ் செந்தழல் கொளுத்திக்
காவியு நீலமு நின்று கவினிழப்ப
வாவியு மாறு மணிநீர் நலன ழித்துக்
கூடமு மாமதிலுங் கோபுரமு மாடரங்கும்
மாடமு மாளிகையு மண்டபமும் பலவிடித்துத்
தொழுதுவந் தடையா நிருபர்தந் தோகையர்
அழுத கண்ணீ ராறு பரப்பிக்
கழுதைகொண்டுழுது கவடி வித்திச்
செம்பியனைச் சினமிரியப் பொருதுசுரம் புகவோட்டிப்
பைம்பொன் முடிபறித்துப்
பாணனுக்குக் கொடுத்தருளிப்
பாடருஞ் சிறப்பிற் பருதி வான்றோய்
ஆடகப் புரிசை யாயிரத் தளியிற்
சோழ வளவனபிஷேக மண்டபத்து
வீராபி ஷேகஞ் செய்து புகழ்விரித்து
நாளும் பரராசர் நாமத் தலைபிடுங்கி
மீளுந் தறுகண் மதயானை மேற்கொண்டு
நீராழி வைய முழுதும் பொதுவொழித்துக்
கூராழியுஞ் செய்ய தோளுமே கொண்டுபோய்
ஐயப் படாத வருமறைதே ரந்தணர் வாழ்
தெய்வப் புலியூர்த் திருவெல்லை யுட்புக்குப்
பொன்னம் பலம்பொலிய வாடுவார் பூவையுடன்
மன்னுந் திருமேனி கண்டு மனங்களித்துக்
கோல மலர்மே லயனுங் குளிர்துழாய்
மாலு மறியா மலர்ச்சே வடிவணங்கி
வாங்குசிறை யன்னந் துயிலொழிய வண்டெழுப்பும்
பூங்கமல வாவிசூழ் பொன்னம ராவதியில்
ஒத்துலகந் தாங்கு முயர்மேருவைக் கொணர்ந்து
வைத்தனைய சேர்தி மணிமண்டபத்திருந்து
சோலை மலிபழனச் சோணாடுந் தானிழந்த
மாலை முடியுந் தரவருக வென்றழைப்ப
மான நிலைகுலைய வாழ்நகரிக் கப்புறத்துப்
போன வளவ னுரிமை யொடும்புகுந்து
பெற்ற புதல்வனை நின் பேரென்று முன்காட்டி
வெற்றி யரியணைக்கீழ் வீழ்ந்து தொழுதிரப்ப
தானோடி முன்னிகழ்ந்த தன்மையெலாங் கையகலத்
தானோ தகம்பண்ணித் தண்டார் முடியுடனே
விட்ட புகலிடந்தன் மாளிகைக் குத்திரிய
விட்டபடிக்கென்று மிதுபிடிபா டாகவெனப்
பொங்குதிரை ஞாலத்துப் பூபாலர் தோள்விளங்குஞ்
செங்கயல்கொண் டூன்றுந் திருமுகமும் பண்டி ழந்த
சோள பதியென்னு நாமமுந் தொன்னகரும்
மீள வழங்கி விடைகொடுத்து விட்டருளி
ஓதக் கடற்பாரில் வேந்தர் கிளைக்குற்ற
ஏதந் தவிர்க்குங் கடவுளிவ னென்றெண்ணித்
தளையுற் றடையாதார் தண்ட லிடையிற்
கிளையுற்றன முழுதுங் கேட்டருள் என்றேத்தி
வணங்கும் வடகொங்கன் சிறைமீள வண்டின்
கணங்கொள் திருத்தோள் மாலைகழித் தெல்(லாம்)
வழங்கி அருளியபி னொருநாள் மாற்றார்
முழங்கு முரசக் கடற்றானை முன்புகுந்து
தென்கொங்சன் வந்திட்ட
தென்டனுக்கு மின்பொங்கச்
சாத்திய ஆபரணந் தக்கதென வழங்கி
ஆறாத பெருநண்பி னவன் சிறையு மீட்டுத்
திருமாலும் நான்முகனுஞ் சேவிப்பச் செங்கட்
கருமால் களிற்றில்வரு முக்கட் கடவுளென
மாட மதுரையிற் றான்போந்து புவனியிலே
கூடவிரு கொங்கரையுங் கும்பிடுகொண் டவர்தந்த
தொல்லைப் புவிக்கு மிணங்காமற் றாம்சொன்ன
எல்லைக் குணிற்ப இசைந்திட்டு மேற்கொண்
டிவனது செய்யா தொழியில் யமனுக்கு
வெவ்வேல் விருந்தாக்குது முமையென விட்டருளி
முன்னம் நமக்கு முடிவழங்குஞ் சேவடிக்கீழ்
இன்னம் வழிபடுவ மென்னாது பின்னொருநாள்
காவ லெனதுபுனல் நாடெனுங் களியால்
ஏவலெதிர் கொள்ளா திறைமறுத்த சென்னிவிடு
தூசியும் பேரணியு மொக்கச் சுருண்டொதுங்கி
வாசியும் வாரணமுந்தேரு மடற்கருங்
காலாளும் வெட்டுண்ணக் கண்டுபயங் கைக்கொண்டு
வேலா வலயத்து வீழ்ந்தவன்போய் மெய்நடுங்க
அம்பருந்து மார்த்தகடல் மண்டலிகருடல்
வெம்பருந் துண்ண அக்களத்தில்
ஆனையின் வெண்மருப்புங் கையுங்குறைத் தெங்கள்
மீனவர்க்குப் பாகுடமா மென்றுதம் வீரர்கொள
மாக முகடு தடவி மழைதடுக்குங்
காக நெடும்பந்தர்க் கவந்தத்தி னாடலுங்,
கூகையின் பாடலுங் கண்டுங் கேட்டுங்
களித்தடல் கருங்கூந்தல்
வெள்ளெயிற்றுச் செவ்வாய்ப்பொற்
சூலக்கை வல்லி பலிகொள்க என வாழ்த்தி
வென்று பகையின் மிகையொழிய வேந்தலறக்
கொன்று சினந்தணியாக் கொற்றநெடு வாள் உயற்கு
செங்குருதி நிறத்தொளி செய்து தெவ்புலத்து
வெண்கவடி வித்தி வீர முழுதெடுத்துப்
பாடும் பரணி தன் பார்வேந்தர் கேட்பிக்க
ஆடுந் திருமஞ்சன நீரில் மண்குளிர
ஆங்கவன் திணைக்கட்டணத்துக் கற்புத் தனக்கானாய்
ஓங்கு ரிமைக்குழா மொருங்கு கைக்கொண்டு
மூரிமணிப் பட்டங் கட்டி முடிசூட்டி
மார்பி லணைத்து வளவன்முதல் தேவியென்று
பேர்பெற்ற வஞ்சி முதலாய பெய்வளையார்
பொங்கு புனற்கும்ப முதலாகப் புலவர்புகழ்
மங்கலங்கள் எட்டு மணிக்கைத் தலத்தேந்திக்
கொடிகொண்ட நெற்றி நிறைகோ புரஞ்சூழ்
முடிகொண்ட சோழபுர மண்டபத்துப் புக்குத்
திசைதொறுஞ் செம்பொற் செயத்தம்பம் நாட்டி
விஜயா பிஷேகம் பண்ணியருள் செய்து
வாகைக் கதிர்வேல் வடவேந்தர் தம்பாதம்
மேகத் தளையணிய வீரக் கழலணிந்து
வீளங்கிய மணியணி வீரசிம் மாசனத்து
வளங்கெழு கவரி யிருமருங் கசைப்பக்
கடலென முழங்குங் களிநல் யானை
வடபுல வேந்தர் மணிப்புயம் பிரியா
இலகுகுழை யரிவையர் தொழுதுநின் றேத்தும்
உலகமுழு துடையாளொடும் விற்றிருந் தருளிய
கோமாற வன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள்
சோணாடு வழங்கி யருளிய ஸ்ரீசுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு-
-------------
8. மாறவர்மன் சுந்தரபாண்டியன் II மெய்க்கீர்த்தி
பூமலர்த் திருவும் பொருசய மடந்தையும்
தாமரைக் குவிமுலை சேரப்புயத் திருப்ப
வேத நாவின் வெள்ளிதட் டாமரைக்
காதன் மாது கவின்பெறத் திளைப்ப
வெண்டிரை யுடுத்த மண்டிணி கிடக்கைத்
திருநில மடந்தை யுரிமையிற் களிப்பச்
சமயமு நீதியுந் தருமமுந் தழைப்ப
இமையவர் விழாக்கொடி யிடந்தொறு மெடுப்பக்
கருங்கலிக் கனல்கெடக் கடவுள் வேதியர்
அருந்தொழில் வேள்விச் செங்கனல் வளர்ப்பச்
சுருதியுந் தமிழுந் தொல்வளங் குலவப்
பொருதிற லாழி பூதலஞ் சூழ்வர
ஒருகை யிருசெவி மும்மத நாற்கோட்
டயீரா வதமுதற் செயிர்தீர் கொற்றத்
தெண்டிசை யானை யெருத்த மேறிக்
கோசலந் துளுவங் குதிரங் குச்சரம்
போசல மகதம் பொப்பளம் புண்டரம்
கலிங்க மீழங் கடாரங் கவுடம் தெ
லிங்கஞ் சோனகஞ் சீன முதலா
விதிமுறை திகழ வெவ்வேறு வகுத்த
முதுநிலக் கிழமையின் முடிபுனை வேந்தர்க்
கொருதனி நாயக னென்றுல கேத்தத்
திருமுடி சூடிச் செங்கோ லோச்சிக்
கொற்றத் தரளக் குளிர்குடை நீழற்
கற்றைக் கவரி காவலர் வீச
மிடைகதிர் நவமணி வீரசிங் காதனத்
துடன் முடி சூடி யுயர்குலத் திருவெனப்
பங்கய மலர்க்கரங் குவித்துப் பார்த்திவர்
மங்கையர் திரண்டு வணங்குஞ் சென்னிச்
சுடரொளி மவுலிச் சூடா மணிமிசைச்
சிவந்த விணைமலர்ச் சீறடி மதுகரம்
கமலமென் றணுகு முலகமுழு
துடையாளொடு வீற்றிருந்தருளிய
மாமுதன் மதிக்குலம் விளக்கிய கோமுதற் கோமாறவன் மரான
திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீசுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு
-------------
9. சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி
பூமலர்வளர் திகழ்திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப
நாமலர்வளர் கலைவஞ்சி நலமிகுமா மனத்துறையச்
சிமையவரைத் திறன்மடந்தை திருத்தோளின் மிசைவாழ
விமையவர்கோ னன்றிட்ட வெழிலாரங் கழுத்திலங்கப்
பகிரதிபோற் றுய்யபுகழ்ப் படர்வல்லி கொழுந்தோட்டத்
திகிரிவரைக் கப்புறத்துச் செழுந்திகிரி சென்றுலவத்
தண்டரள மணிக்கவிகை தெண்டிரைசூழ் பார்நிழற்ற
வெங்கோபக் கலிகடிந்து செங்கோலெண் டிசைநடப்பச்
செம்முரசின் முகில்முழங்கச் சிலையகன்று விசும்படையத் தி
றற் புலிபோய் வன மடையக்
கயலிரண்டு நெடுஞ்சிகரக் கனவரையின் விளையாட
வொருமைமனத் திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத்
தருமறையோ ரைவேள்வி யாறங்கமுடன் சிறப்ப
வருந்தமிழு மாரியமு மறுசமயத் தறநெறியுந்
திருந்துகின்ற மனுநெறியுந் திறம்பாது தழைத்தோங்கக்
குச்சரரு மாரியரும் கோசலரும் கொங்கணரும்
வச்சிரருங் காசியரு மாகதரும் …………… ………
அருமணருஞ் சோனகரு மவந்தியரு முதலாய
விருநிலமா முடிவேந்த ரிறைஞ்சிநின்று திறைகாட்ட
வடிநெடு வாளும் வயப்பெரும் புரவியுந்
தொடிநெடுந் தோளுமே துணையெனச் சென்று
சேரனுந் தானையுஞ் செருக்களத் தொழிய
வாரசும் புலரா மலைநாடு நூறப்
பருதிமா மரபிற் பொருதிறல் மிக்க
சென்னியைத் திறைகொண்டு திண்டோள் வலியிற்
பொன்னிநாட்டுப் போசலத் தரைசர்களைப்
புரிசையி லடைத்துப் பொங்கு வீரப்புரவியுஞ்
செருவிற லாண்மைச் சிங்கணன் முதலாய
தண்டத் தலைவருந் தானையு மழிபடத் து
ண்டித் தளவில் சோரி வெங்கலுழிப்
பெரும்பிணக் குன்ற மிருங்கள னிறைத்துப்
பருந்துங் காகமும் பாறுந்(த) சையும்
அருந்தி மகிழ்ந்தாங் கமர்க்கள மெடுப்பச்
செம்பொற் குவையுந் திகழ்கதிர் மணியு
மடந்தையரா மார்பு முடன் கவர்ந் தருளி
முதுகிடு கோசளன் றன்னொடு முனையும்
அதுதவ றென்றவன் றன்னை வெற் பேற்றி
நட்பது போலுட் பகையாய் நின்ற
சேமனைக் கொன்று சினந்தணிந் தருளி
நண்ணுதல் பிறரா லெண்ணுதற் கரிய
கண்ணனூர்க் கொப்பத்தைக் கைக்கொண் டருளிப்
பொன்னி சூழ்செல் வப்புன னாட்டைக்
கன்னி நாடெனக் காத்தருள் செய்யப்
பெருவரை யரணிற் பின்னரு காக்கிய
கருநட ராசனைக் களிறு திறைகொண்டு
துலங்கொளி மணியுஞ் சூழி வேழமு
மிலங்கை காவலனை யிறைகொண் டருளி
வருதிறை மறுத்தங் கவனைப் பிடித்துக்
கருமுகில் நிகளங் காலிற் கோத்து
வேந்தர்கண் டறியா விறற்றிண் புரிசைச்
சேந்த மங்கலச் செழும்பதி முற்றிப்
பல்லவ னடுங்கப் பலபோ ராடி
நெல்விளை நாடு நெடும்பெரும் பொன்னும்
பரும யானையும் பரியு முதலிய
வரசுரிமை கைக்கொண் டரசவற் களித்துத்
தில்லையம் பலத்துத் திருநடம் பயிலுந்
தொல்லை யிறைவர் துணைகழல் வணங்கிக்
குளிர்பொழில் புடைசூழ் கோழிமானகர்
(அளி) செறி வேம்பி மலர் கலந்த
தொங்கல் வாகைத் தொடைகள் சூட்டித்
திங்களுயர் மரபு திகழவந் திருந்த
தன்னசையா னன்னிலை விசையம்பின்
எண்ணெண் கலைதே ரின் மொழிப் பாவலர்
மண்ணின்மே லூழி வாழ்கென (வாழ்)த்தக்
கண்டவர் மனமுங் கண்ணுங் களிப்ப
வெண்டிரை மகர வேலையி னெடுவரை
யாயிரம் பணைப்பணத் தனந்தன் மீமிசைப்
பாயல் கொள்ளும் பரமயோகத்
தொருபெருங் கடவு ளுவந்தினி துறையு
மிருபெருங் காவிரி யிடைநிலத் திலங்குந்
திருவரங் கம்பெருஞ் செல்வம் சிறப்பப்
பன்முறை யணிதுலா பாரமேறிப்
பொன்மலை யென்னப் பொலிந்து தோன்றவும்
பொன்வேய்ந் தருளிய செம்பொற் கோயிலுள்
வளந்திகழ் மா அ லுதைய வெற்பெனத்
திருவளர் குலமணிச் சிங்கா சனமிசை
மரகத மலையென மகிழ்ந்தினி தேறித்
தினகரோ தயமெனச் செழுங்கதிர் சொரியும்
கனகமாமுடி கவின்பெறச் சூடிப்
பாராள் வேந்த ருரிமை யரிவைய
ரிருமருங்கு நின்று விரிபெருங் கவரியின்
மந்த வாடையு மலையத் தென்றலு
மந்தளிர்க் கரங்கொண் டசைய வீச
ஒருபொழு தும்விடா துடனிருந்து மகிழும்
திருமக ளென்னத் திருத்தோள் மேவி
யொத்த முடிசூடி யுயர்பே ராணை
திக்கெட்டும் நடப்பச் செழுந்தவஞ் செய்த
இவன்போ லுலகிலே வீரன் (பலத்திர)
மதிமுகத் தவனி மாமக ளிலகு
கோடிக் காதல் முகிழ்த்துநின் றேத்தும்
உலகு முழுது முடையாளொடும் வீற்றிருந் தருளிய
சிரீகோச்சடைய வன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள்
சிரீ சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு-
----------------
10. மாறவர்மன் குலசேகர பாண்டியன் மெய்க்கீர்த்தி
தேர்போ லல்குற் றிருமகள் புணரவும்
கார்சேர் கூந்தற் கலைமகள் கலப்பவும்
பார்மகள் மனத்துப் பாங்குட னிருப்பவும்
செங்கோ னடப்பவும் வெண்குடை நிழற்றவும்
கருங்கலி முருங்கவும் பெரும்புகழ் விளங்கவும்
கானிலை செம்பியன் கடும்புலி யாளவும்
மீனம் பொன்வரை மேருவி லோங்கவும்
முத்தமிழு மனுநூலு நான்மறை முழுவதும்
எத்தவச் சமயமு மினிதுடன் விளங்கவும்
சிங்கணம் கலிங்கந் தெலிங்கஞ் சேதிபம்
கொங்கணங் குதிரம் போசளங் குச்சரம்
முறைமையி னாளு முதுநல வேந்தர்
திறைமுறை காட்டிச் சேவடி வணங்க
மன்னர் மாதர் பொன்னணி கவரி
இருபுடை மருங்கு மொருபடி யிரட்டப்
பழுதறு சிறப்பிற் செழுவை காவலன்
வீரசிங் காதனத் தோராங் கிருந்தே
யாரும் வேம்பு மணியிதழ் புடையாத்
தாருஞ் சூழ்ந்த தடமணி மகுடம்
பன்னூ றூழி தொன்னிலம் புரந்து
வாழ்கென... மகிழ்ந்துடன் சூடி
அலைமகள் முதலா மரிவையர் பரவ
உலகமுழு துடையா ளொடும் வீற்றிருந் தருளின
கோமாற வன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள்
ஸ்ரீ குலசேகர தேவர்க்கு யாண்டு –
----------
11. அரிகேசரி - பராக்கிரமபாண்டியன் மெய்க்கீர்த்தி
பூமிசை வனிதை மார்பினிற் போலிய
நாமிசைக் கலைமக ணலமுற விளங்கப்
புயவரை மீது சயமகள் புணரக்
கயலிணை யுலகின் கண்ணெனத் திகழச்
சந்திர குலத்து வந்தவதரித்து
முந்தையோர் தவத்து முளையென வளர்ந்து
தென்கலை வடகலை தெளிவுறத் தெரிந்து
மன்பதை புரக்க மணிமுடி புனைந்து
சங்கர சரண பங்கயஞ் சூடிச்
செங்கோ லோச்சி வெண்குடை நிழற்றி
வான வாரியு மன்னருள் வாரியும்
தான வாரியுந் தப்பா தளித்து
மறக்களை பறித்துநல் லறப்பயிர் விளைத்துச்
சிங்கையி லனுரையி லிராசையிற் செண்பையில்
விந்தையி லறந்தையின் முதலையில் வீரையில்
வைப்பாற்... மன்னரை வெங்கண்
டெப்பாற் றிசையு மிசைவிளக் கேற்றிப்
பதினெண் பாடைப் பார்த்திவரனை வரும்
திறையுஞ் சின்னமு முறைமுறை கொணர்ந்து
குறைபல விரந்து குரைகழ லிறைஞ்ச
அவரவர் வேண்டிய தவரவர்க் கருளி
அந்தண ரனேகர் செந்தழலோம்ப
விந்தைமுத லகர மைந்திடத் தியற்றிச்
சிவநெறி யோங்கச் சிவார்ச்சனை புரிந்து
மருதூ ரவர்க்கு மண்டப மமைத்து
முன்னொரு தூறு மூங்கில்புக் கிருந்த
சிற்பரர் தம்மைத் திருவத்த சாமத்துப்
பொற்கலத் தமுது பொலிவித் தருளிச்
சண்பக வனத்துச் சங்கரர் தமக்கு
மண்டப மமைத்து மணிமுடி சூட்டி
விழாவணி நடாத்தி விரைப்புன லாடல்
வழாவகை நடாத்தநின் மன்னருளதனால்
வற்றா வருவியும் வற்றி வற்கடம்
உற்றவிக் காலத் துறுபுன னல்கென
வேண்டியப் பொழுதே வேறிடத் தின்றிச்
சேண்டரு புனலிற் செழும்புன லாட்டி
மின்கால் வேணி விசுவநா தர்க்குத்
தென்கா சிப்பெருங் கோயில் செய்து
நல்லா கமவழி நைமித் திகமுடன்
எல்லாப் பூசையு மெக்கோ யிலினும்
பொருண்முத லனைத்தும் புரையற நடாத்தித்
திருமலி செம்பொற் சிங்கா சனமிசை
உலக முழுது முடையா ளுடனே
இலகு கருணை யிரண்டுரு வென்ன
அம்மையு மப்பனு மாயனைத் துயிர்க்கும்
இம்மைப் பயனு மறுமைக் குறுதியும்
மேம்பட நல்கி வீற்றிருந் தருளிய
ஸ்ரீ அரிகேசரி பராக்கிரம தேவர்க்கு யாண்டு.-
-------------------
மாறன் சடையனின் மானூர்க் கல்வெட்டு
(Epigraphia Indica Vol XXII pp.9-11)
1. ஸலஸிதி ஸ்ரீ கோமாறஞ்ச
2. டையர்க்குயாண்டு
3. முப்பத்தஞ்சு
4. நாள் நான்னுற்றறு
5. பத்து ஒன்பது இ
6 ந் நாள் களக்குடி
7. நாட்டு பிரமதேயம்மான
8.நிலைநல்லூர் மாஹாச
9. பையோம் பெருங்குறிசா
10. ற்றி ஸ்ரீ கோவர்த்தனத்துக்கு
11. டியிருந்து இவ்வூர் மா
12. ஹாசபையோம் குடிமன்ற
13. டுவதனுக்கு செய்த வியவள்தை
14. ய்யாவது இவ்வூர் பங்குடை
15. யார் மக்கள் சபையில் மன்
16. முடுகிறது ஒரு தர்மம உட்ப
17. ட மந்திர ப்ரா மணம் வல்லார்சு
18. ல் ரித்த ராய் இருப்பாரே ஒரு பங்
19. கினுக்கு ஒருத்தரே சபையில்
20. ம ன்படுவதாகவும் விலையும்
21. ப்ரதிக்ரஹமும் ஸ்ரீதனமும் உடை
22. யார் ஒரு தன்மம் உட்ப
23. ட மந்திர ப்ராமணம்
24. வல்லார் ஆய் சுவிரித்தராய்
25. இருப்பாரே மன்றடு
26. வதாகவும் இதன் மேற்
27. பட்டது விலையாலு
28. ம் ப்ரதிக்ரஹத்தாலும் ஸ்நிதி
29. தனத்தாலும் ஸ்ராவணை
30. புகுவார் முழு சிராவ
31. ணை அன்றி கால் சிரசவ
32. ணையும் அசைச்சீராவணை
33. யும் முக்கால் சிராவணையு
34. ம் புகவும் பணிக்கவும்
35. ம் பெருதார் ஆகவும் ப
36 ங்கு விலைக்கு கொள்ப
37. வர் ஒரு வேதம் எல்லா
38. இடமும் ஸபரிகிஷ்ட
39. ம் பரீக்ஷை தந்தார்க்கே
40. ஸ்ராவணை பணிப்பதா
41. கவும் இப்பரிசு அன்
42. றி ஸ்ராவணை புக்காரையும்
43. பின்னையும் இக்கச்
44. சத்தில் பட்டபரி
45. சே மன்றாடுவதாகல்
46. வும் இப்பரிசினு
47. ல் முழுச் சிராவனை
48. இல் லாதாரை எவ்வகை
49. ப்பட்ட வாரியழ
50. ம் ஏற்றப் பெருதார் ஆகவு
51. ம் இப்பரிசு செய்கின்
52. றாரும் அன்றென்று குத்து
53. க்கால் செய்யப் பெறாதா
54. ர் ஆகவும் குத்துக்கால் செய் வாரையும் குத்துக்கால் செய்
56. வார்க்கு உறவாயுடனி
57. ப்பாரையும் வெவ் வேற்று
58. வகை ஐய்யஞ்சுகாசு தண்
59. டங் கொண்டு பின்னையும்
60. இக்கச்சத்தில் பட்ட பரி
61. சே செய்வ்வதாகவும் இ
62. ப்பரிசு பணித்து வ்யவ
63. ஸ்தை செய்தோம் மஹாசபை
64. யோம் மஹாசபையார் ப….
வியவஸதை = தீர்மானம் முடிவு; ப்ரதிக்ரஹம் = கொடை;
மன்றாடுத்ல = சபை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுதல்;
கச்சம் = தீர்வு; குத்துக்கால் = இடையூறு.
--------------
சேர்க்கை 2
கல்வெட்டுக்களிலுள்ள பாண்டியரைப்பற்றிய சில பாடல்கள்
சடையவர்மன் சுந்தரபாண்டியன் I
1. வட்ட வெண்குடை மன்னர் தம்புகல்
கொண்டு மாமுடி கொண்டுபோர்
மாறு கொண்டெழு போசளன்றடை
கொண்டு வாணன் வனம்புகத்
தொட்ட வெம்படை வீரன்வென்றி
புனைந்த சுந்தர மாறன்முன்
சூழ விட்ட தெலுங்கர் சேனை
துணித்து வென்றவெங் களத்துமேல்
விட்ட வெம்பரி பட்ட போதெழு
சோரி வாரியை யொக்குநேர்
மேன்மி தந்த ணப்பெருந்திரள்
வெண்ணு ரைத்திர ளொக்குமுன்
பட்ட வெங்கரி யந்த வாரி
படிந்த மாமுகி லொக்கும்வீழ்
பருமணிக் குடை யங்கு வந்தெழு
பருதி மண்டில மொக்குமே.
2. காரேற்ற தண்டலைக் காவிரி நாடனைக் கானுலவுந்
தேரேற்றி விட்ட செந்தமிழ்த் தென்னவன் சென்றெதிர்ந்து
தாரேற்ற வெம்படை யாரியர் தண்டு படத்தனியே
போரேற்று நின்ற பெருவார்த்தை யின்னும் புதுவார்த்தையே.
3. பண்பட்ட மென்மொழிப் பைந்தொடி கொங்கை பரக்கவைவேற்
கண்பட்ட முத்த வடங்கண்டுங் காக்கிலன் காடவர்கோன்
எண்பட்ட சேனை யெதிர்பட் டொழுக வெழுந்தபுண்ணர்
விண்பட் டலையப் படைதொட்ட சுந்தர மீனவனே
4. மீளா வழிசெல்ல வேணாடர் தங்களை வென்றதடந்
தோளான் மதுரைமன் சுந்தரபாண்டியன் சூழ்ந்திறைஞ்சி
யாளான மன்னவர் தன்னேவல் செய்ய வவனிமுட்ட
வாளால் வழிதிறந் தான்வட வேந்தரை மார்திறந்தே.
5. கொங்க ருடல்கிழியக் குத்தியிரு கோட்டெடுத்து
வெங்க ணழலில் வெதுப்புமே - மங்கையர்கண்
சூழத்தா மம்புனையுஞ் சுந்தரத்தோண் மீனவனுக்
கீழத்தா னிட்ட விறை.
சடையவர்மன் விக்கிரமபாண்டியன்
6. சீர்கொண்ட வெள்ளாறு குருதிப் பெருக்கிற்
செவ்வாறு பட்டோ வவ்வாறு சென்றப்
போர்வென் றுணப்பேய் நடங்கண்ட தற்பின்
புலியூர் நடங்கண்ட புவனேக வீரா
பார்பண் டளந்துண்டொ ராலிற் கிடக்கும்
பச்சைப் பசுங்கொண்ட லேபற்ப நாபா
கார்கொண்ட நின்கையில் வேலுக்கு வற்றுங்
கடலல்ல வென்பேதை கண்டந்த கடலே
7. மாறுபடு மன்னவர்தங் கை பூண்ட வாளிரும்பு
வேறுமவர் கால்பூண்டு விட்டதே - சீறிமிக
வேட்டந் திரிகளிற்று விக்கிரம பாண்டியன் றன்
நாட்டங் கடைசிவந்த நாள்.
8. மீனவற்கு விக்கிரம பாண்டியற்கு வேந்தரிடும்
யானை திருவுள்ளத் தேறுமோ- தானவரை
வென்றதல்ல மேனிநிறம் வெள்ளையல்ல செங்கனகக்
குன்றதல்ல நாலல்ல கோடு.
9. வெங்கண் மதயானை விக்கிரம பாண்டியனே
பொங்கி வடதிசையிற் போகாதே-யங்கிருப்பாள்
பெண்ணென்று மீண்ட பெருமாளே பேரிசையாழ்ப்
பண்ணொன்றும் வேய்வாய் பகை.
10. அரிகே சரிமன் பராக்கிரம மாற னரனருளால்
வரிசேர் பொழிலணி தென்காசிக் கோயில் வகுத்துவலம்
புரிசேர் கடற்புவி போற்றவைத் தேனன்பு பூண்டிதனைத்
திரிசேர் விளக்கெனக் காப்பார்பொற் பாதமென் சென்னியதே
11. பூந்தண் பொழில்புடை சூழுந்தென் காசியைப் பூதலத்திற்
றாந்தங் கிளையுட னேபுரப் பார்கள்செந் தாமரையாள்
காந்தன் பராக்ரமக் கைதவன் மான கவசன்கொற்கை
வேந்தன் பணிபவ ராகியெந் நாளும் விளங்குவரே.
12. மென்காசை மாமல ரன்னமெய் யோற்கும் விரிஞ்சனுக்கும்
வன்காசு தீர்த்திடும் விச்சுவ நாதன் மகிழ்ந்திருக்கப்
பொன்காசை மெய்யென்று தேடிப்புதைக்குமிப் பூதலத்துத்
தென்காசி கண்ட பெருமாள் பராக்ரமத் தென்னவனே.
13. அணிகொண்ட விந்த வணங்குமொன் றேயடி யேற்குனக்கு
மணிகொண்ட வாசன் மணியுமொன் றேபகை மன்னரையும்
பிணிகொண்ட காரையு முந்நீரை யும்பெரும் பூதத்தையும்
பணிகொண்ட செண்பகத் தென்னா பராக்கிரம பாண்டியனே.
14. ஓங்கு நிலையொன்ப துற்றதிருக் கோபுரமும்
பாங்குபதி னொன்று பயில் தூணும் - தேங்குபுகழ்
மன்னர் பெருமான் வழுதிகண்ட தென்காசி
தன்னிலன்றி யுண்டோ தலத்து.
வீரபாண்டியன்
15. சேணுலவு வெண்டிங்கட் செல்வனெனத் தண்ணென்று
நீணிலமோ ரேழு நிழற்றுமே - பேணிவந்து
பூவேந்த ரேத்தும் புகழ்வீர பாண்டியனங்
கோவேந்தன் கொற்றக் குடை.
---
(1-5) S 1. 1. Vol. IV, Nos. 618-620) ; செந்தமிழ் தொகுதி IV, பக்கங்கள் 491-493.
(6-7) S. I. I., Vol. IV, No. 228
(8-9) செந்தமிழ் - தொகுதி IV, பக்கங்கள் 493.494.
(10-14) Travancore Archaeological Series, Vol.I, part VI, p. 97.
(15) Ibid, p.115
முற்றும்
-----------------------
சேர்க்கை 3
------------------