தேனூர் சொக்கலிங்கன் எழுதிய
"சுந்தரர் உலா"

cuntarar ulA
of tEnUr cokkalingam
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தேனூர் சொக்கலிங்கன் எழுதிய
"சுந்தரர் உலா"

Source:
சுந்தரர் உலா
ஆசிரியர் தேனூர் - சொக்கலிங்கன்,
துறையூர். 1943
உரிமைப்பதிப்பு] [விலை அணா 6.
அருட்ஜோதி நிலையம்-மணி 1
--------------------


சிவமயம்.
சாற்றுக் கவிகள்
புதுவை, ஸ்ரீ சுவாமி சுத்தானந்த பாரதியார் அவர்கள் அளித்தது

(அணிந்துரை.)

கவிதை ஒரு அரிய கலை. அது உள்ளிருந்து மலர்வது. மனித மனம் புறஞ்செல்லாது, உள்ளே உள்ளத்தானை கலந்து நிற்கும் அமைதியிலேதான் உயர்ந்த அருட்கவிகள் உதிக்கும். அத்தகைய அருட்கவிகளைப் பாடிய புலவர்கள் அன்றும் இன்றும் உண்டு. அக்காலம் மாணிக்க வாசகப் பெருமான், அப்பர், சம்பந்தர், சுந்தரர், காரைக்காலம்மையார் போன்ற அருட்பாவலர் பாடப்பாட உள்ளத்தை அள்ளும் அருட்பாடல்களால் இறைவனை வழிபட்டு, நமக்கெல்லாம் தெள்ளிய திருநெறிச்சைவத்தைத் துலக்கிச் சென்றனர். பிற்காலத்திலும் அருணகிரியார், தாயுமானார், பட்டினத்தார் போன்ற அருட்பாவலர் தமிழுக்கும், சைவத்திற்கும் அரிய சொற்றொண்டு புரிந்தனர். நமது காலத்தில் அருட்சோதி வள்ளற் பெருமானார் ஒப்புயர்வற்ற தமிழ்மறைபாடி உலகிற்கெல்லாம் சுத்த சன்மார்க்க வழிதுலக்கி மறைந்தார். சேக்கிழார் பெருமான் அறிவுந் திருவும், ஆற்றலும், அருளும் உடையார். அவர் அடியார் களைப் பாடுவதே இன்பமாகக் கொண்டு, திருத்தொண்டர் வரலாறு தொகுத்தீந்தார். இன்று சேக்கிழார் இருந்திருந்தால் பின்வந்த நல்லடியார்களையும் பாடியிருப்பார்.

மேற்சொன்னவற்றிலிருந்து கவிதையின் நோக்கம் இரண்டு எனப்புலனாகிறது. ஒன்று இறைவனைப் பாடுதல், மற்றொன்று அவன் அடியாரைப் பாடுதல். இந்த இரண்டு வகைப்பாடலுக்கே நிலையான பயனுண்டு. மற்றபடி இன்றிருந்து நாளை அழியும் பொருள்களைப் பாடுதல் கவிக்கலையின் உயர்ந்த நோக்கத்திற்குச் சிறப்பாகாது.

இவ்வுண்மை பற்றியே நமது தேனூர், புலவர், திரு. சொக்கலிங்கம் பிள்ளையாரும் அடியார்களையும், அடியார் பிரானாகிய சிவபெருமானையும், அவன் துணையாகிய காமாக்ஷி யம்மையாரையும் பாடி மகிழ்ந்தார். பிள்ளையவர்கள் பாடிய சுந்தரர் உலா, 782 கலிவெண்பாக்களுடன் கூடி மிகவும் இனிமையாக அமைந்திருக்கிறது. அவர்கள் வாக்கில் ஒரு தெளிவுள்ளது. சொற்கள் பொருளுடன் ஒட்டி ஆற்றொழுக்காக செல்கின்றன. சமயவுணர்ச்சி குறைந்தொழிந்து நாத்திகமும், உலகாயதமும் தாண்டவமாடும் இந்நாட்களில்,

இந்நாட்களில், இத்தகைய பாவலர் நூல்கள் கிராமங்கள்தோறும் பரவினால் நல்ல பயனாகும். இப்புலவர் சுந்தரர் உலாவை இரவில் கிராம மக்களைக் கூட்டித் திண்ணைகளில் படித்து விளக்கினால், அது ஒரு அரிய தமிழ்ப்பணியும் சைவப் பணியுமாகும்.

இம்மாதிரியே இப்புலவர் பிற்காலம் எழுந்த திருவடியார்களை யும் இனிய எளிய விருத்தப்பாடல்களாற் சிறப்பிக்கலாம்.

தமிழுக்கு இத்தகைய பாக்தொண்டு ஆக்கமளிக்கும். தமிழர் தமிழுக்குப் பணிசெய்யும் தமிழரை எல்லா வகையிலும் போற்றி ஊக்குவார்களாக.

சுந்தரர் செய்த செந்தமி ழோங்குக! எந்தாய் வாழ்க!
---
சென்னை, திருப்புகழமிர்தம் ஆசிரியர், ஸ்ரீலஸ்ரீ கிருபானந்தவாரியார் அவர்கள்.

நேரிசை வெண்பா.
மருவாரூ ரட்டவரை மாதுழிது தேவுந்
திருவாரூர்ச் சுந்தரற்குச் செல்வத்-தெருவாரூர்
தேனூர்வாழ் சொக்கலிங்கச் செம்மல் அரியவுலா
தேனூறச் சொற்றான் சிறந்து.
-----

கவிராஜ பண்டிதர், திரு. ஜெகவீர பாண்டியர் அவர்கள்.
திருவள்ளுவர் நிலையம், மதுரை.

உலாவைப் படித்துப்பார்த்தேன்; உவகை மீக்கூர்ந்தேன். நூல் இன்பச்செவ்வி மலர்ந்து அன்பு சுரந்துள்ளது. கண்ணிகள் யாவும் சரளமாய் அமைந்திருக்கின்றன. வாணிகத்துறையிலிருந்து கொண்டு இவ்வாறு இனிய பாக்கள்புனையும் தங்கள் கவித்திறத்தைக் கண்டபோது பண்டைப்புலவர் சிலரை எண்ணி மகிழ்ந்தேன். தாங்கள் வேண்டியபடி சாற்றுக்கவி ஒன்று இத்துடன் அனுப்பியிருக்கிறேன்.

அறுசீர் ஆசிரிய விருத்தம்.
ஆரூர்ந்த செஞ்சடையார் அருளூர்ந்து சடையாருள் அடைய வந்து
நீரூர்ந்த நிலமெல்லாம் நிறைசைவம் நெடிதூர நிலவி யாண்டும்
சீரூர்ந்த சுந்தரரைச் செந்தமிழில் ஏற்றியுலா செய்து தந்தான்
ஏரூர்ந்த தேனூரன் சொக்கலிங்கன் எனும்பெயர்கொள் இனிமை யோனே.
----
துறையூர், திரு. T. M. பாலசுந்தரம் அவர்கள்.

தேனூர்வாழ் சொக்கலிங்கச் செல்வ னுளம்பூத்த
வானூர்ந்த சுந்தார்தம் வண்ணவுலா-தானூரப்
பேரின்ப நல்கும் பிறவிப் பிணியகற்றும்
வேறின்ப வேதனையை நீக்கி.

பாலுந் தெளிதேனும் பாகுமுவட் டுங்குருகும்
சேலுந் தவழ்பழனத் தேனூர்வாழ் - கோலஞ்சேர்
சொக்கலிங்க நாவலன்சொல் சுந்தானார் வந்தவுலா
பக்கலிங்கு வந்தவுடன் பார்க்க.
------

நாமக்கல், தேசீயகவி, திரு. வெ. ராமலிங்கம் பிள்ளை அவர்கள்.
வெண்பா

சொக்கலிங்கம் பிள்ளைசொன்ன சுந்தாரு லாக்கண்டு
மிக்கவின்பம் ஊறி விழைகின்றோம் -முக்கனியும்
தேனும் தெவிட்டும் தெவிட்டாத செந்தமிழின்
ஞானம் விரிப்பான் நயந்து.
-----------
துறையூர் சின்னமடம் பெருமாளையா அவர்கள்
புனைந்துரை. (சுந்தரர் துதி)
கணபதி துணை.

ஆழி மாகடன் ஞாயி றணைந்தென்
சூழி வெங்களி றூர்ந்து சுரர்தொழ
வாழி வேதண்டம் வந்தரு டம்பிரான்
றோழன் சேவடி சென்னியிற் சூடுவாம்.

அமிழ்தினுமினிய தமிழ்மொழியகத்து நல்லிசைப் புலவர் பலராலும் வகுத்தோதப்பெற்ற பிரபந்தங்கள்
தொண்ணூற் றாறெனப் பாட்டியல் பலவும் நாட்டி வலியுறுத்துகின்றன.

அவைகளுள் உலாவென்பதும் ஒரு பிரபந்தமாய் அடங்கப் பெறும். இதற்கு உலாப்புறமென்று மற்றொரு பெயருமுண்டு. "இளமைப் பருவமுற்ற தலைமகனைக் குலத்தானுங் குடிப்பிறப்பானும் மங்கலத்தானும் பரம்பரையானும் இன்னாரென்பது தோன்றக் கூறி, அணிகலன்களான் அலங்கரித்துக் கொண்டு முதன்மையெய் திய மானார் நெருங்கிய அழகியவீதியிடத்து அன்னோன் பவனிவரப் பேதை முதலிய எழு பருவ மாதரார் கண்டு தொழ உலா வருதலைக் கலி வெண்பாவால் பாடப்படுவது உலாவெனப்பெறும்."

"குழமக னைக்கலி வெண்பாக் கொண்டு
விழைதொல் குடிமுதல் விளங்க வுரைத்தாம்
கிழைபுனை நல்லா ரிவர்மணி மறுகின்
மற்றவன் பவனி வரவேழ் பருவ
முற்றமா னார்தொழப் போந்த துலாவாம்."
      இல, விள, பாட் 98

"திறந்தெரிந்த பேதை முதலெழுவர் செய்கை
மறந்தயர வந்தான் மறுகென்- றறைந்தகலி
வெண்பா வுலாவாங்" குழமகன்மேன் மேவிலவ்
வொண்பாக் குழமகனா முற்று.       வெண், பாட் 27

இவ்வுலாப்பிரபந்தம் தெய்வம்,அரசன், உபகாரிகள், ஆசாரி யன் முதலியோர்மீது பாடப்பட்டு அநேக உலாக்கள் இத்தமிழுல கில் வழங்கிவருகின்றன. அவ்வுலாக்களை யொத்தே இஃதும், சைவசமய குரவர்களில் ஒருவராய சுந்தரமூர்த்திசுவாமிகள் பேரில் பாடப்பட்ட உலாப்பிரபந்தமாகும். இதற்குப்பெயர் சுந்தார் உலா எனப்போதரும். இது சுந்தரமூர்த்தியினுடைய சரிதத்தை எளிய நடையில் அரும்பொருளமைத்து, கற்பவர் சிந்தைக்கினிய செம் மொழிகளால் ஆக்கப்பெற்றது. எழுபருவ மாதரார் சுந்தாரைப் பற்றி தோழிமாரிடம் வினாதலும் அதற்கவர் விடையும் சுந்தரரை விளிக்கும் விளிச்சொற்களும் கற்பவர்நெஞ்சங்கனியுமாறு இயற்றப் பெற்றுளது. சொல்லின்பம் நிரம்பப்பெற்றுச் சுவையூற்றங் கொண்டு (782 கண்ணிகளோடு) மிளிர்கின்றது பண்டைய புலவர் களால் பாடப்பெற்ற உலாக்கள், கற்றோர்க்கன்றி ஏனையோர்க்குப் பயன்படாதென்பது வெள்ளிடைமலை. இது அங்ஙனம் போலாது எவருங்கற்று எளிதிற் பொருளுணரும் இயல்பு வாய்ந்தது.

இவ்வின்பம் நிறைந்த சுந்தார் உலாவை ஆக்கியவர், திருச்சி ஜில்லா பெரம்பலூர் தாலூகா, தேனூர், திருவாளர். வே.செ. சொக்கலிங்கம் பிள்ளை யென்பவராவார்.

இவர் விரைவிற் கவிபாடும் சமர்த்தர்.நால்வகைப் பாக்களுந் தங்குதடையின்றிப், பேசுவது போலவே பாடி முடிப்பவர். இவ் வுலாவின் இறுதியில் வாதவூரர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர் இவர்களுக்கு முறையே மூன்று வெண்பாக்களில் மூவரும் உலாப்போந்த வரலாறுகளை அடக்கிப்பாடியுள்ளார். இவருக்கு சுந்தார்மேலுள்ள அன்பினீட்டம் இதனைப் படிப்பவர்க்கு நன்கு புலனாகும். இவர் சிலதோத்திரப் பதிகங்களும், பல தேசீய கீதங்களும் பாடியுள்ளார். இன்னும் அநேகப் பிரபந்தங்களைப்பாடி வெளியிடும் அவா மிக்குள்ளார். இன்னார் எண்ணியது ஈடேறுவான் எல்லாம் வல்ல இறைவன் திருவருள் புரிந்து துணை செய்வானாக.
-------------

முகவுரை.

"அன்பர்பணி செய்யவெனை யாளாக்கி விட்டுவிட்டா
லின்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே."
      (தாயுமானார்)
என்ற ஆன்றோர் வாக்கிற்கிணங்க அன்பரிட்டபணியைச் செய்வான் வேண்டியே எழுந்ததிச் சிறுநூல். இந்நூலாசிரியர் தனக்குத்தன் அன்பரிட்ட பணியைச் செய்து முடித்ததால் மிகவும் இறும்பூ தெய்துகின்றார். இச்"சுந்தரருலா" என்னும் பெயரிய இந்நூலைப் பாடியவர் திருச்சி ஜில்லா, பெரம்பலூர் தாலூகாவைச் சேர்ந்த தேனூர் கிராமத்திற் பிறந்த வே. செ. சொக்கலிங்கம் பிள்ளை யாவார். இவர் ஒரு வரகவி. கடல்மடை திறந்த வெள்ளம்போல் யாதொரு தடையுமின்றி மிகவும் லேசாய்ப் பாடுதலில் மிகவல்லுநர். அவர் பிறந்த ஊரின் பேருக்கொப்ப அவர் பாடல்களில் நறுந்தேன் ஊறுகின்றது. இப்புத்தகத்துக்கு முகவுரை எழுத எனக்குக் கொஞ்சமும் அருகதை யில்லையாயினும் எதோ அவர்மாட் டடியே னுக்குள்ளவன்பினால் ஏதோ எழுதிவிட்டேன். இவராலாக்கப்பட் டுள்ள பிற நூல்களாவன:-

1. தேசீய சமரச கீதம்
2. முருகூர் சிவதோத்திரத் திரட்டு
3. காமாட்சியம்மன் தோத்திர மஞ்சரி.

இவர் நந்தமிழுலகிற்கு மனமொழி மெய்களால் மிகவுமுதவி புரிந்து வருகிறார். சுந்தாருலா என்னும் இச்சிறு புத்தகமும் நந்தமிழர்க ளிடையில் மிகவும் நன்மதிப்பெய்துமென யான் திண்ணமாய் நம்புகின்றேன்.

துறையூர், 6-9-1942       காஞ்சி, ரா.தியாகராஜ பிள்ளை,
      சப்-ரிஜிஸ்தார் (ரஜாவில்)
--------------------
நிழற்படம்: தேனூர், வே.செ.சொக்கலிங்கம் பிள்ளை, துறையூர்.
-----------------------
சிவமயம்.
ஸ்ரீ சுந்தரருலா.
தெய்வ வணக்கம்.

காப்பு.
சந்திரனைச் சூடுஞ் சடாமகுடத் தார்தோழர்
சுந்தர மூர்த்தியுலா சொல்லவே - ஐந்தக்
கரத்தார் திருப்பாகக் கன்னியரு ளைந்து
கரத்தார் திருப்பாதங் காப்பு.

உமாதேவியார்.
எங்கடியா கேசர்க் கினியதிருத் தோழராஞ்
சிங்கடியார் தாதை திருவுலா-இங்கிதமாச்
செந்தமிழிற் சாற்றச் சிவகாம சுந்தரியின்
கந்தமலர்ச் சேவடிகள் காப்பு.

கலைமகள்.
நிலாப்புனையும் வேணியப்பர் நேயரா ரூரர்
உலாப்பகரக் கல்விநமக் கூட்டும் - பலாப்பழத்தில்
ஈமொய்க்கு மாறுமொய்ப்போர்க் கின்னருள்கூ ருங்கலைமின்
மாமொய்க்கு மென்றாள் மலர்.

சற்குரு.
நமதுசம யக்குரவர் நம்பியா ரூரர்
தமது திருவுலா சாற்ற - எமதிறையை
நற்குருவாய்ப் பெற்று நமச்சிவாய வாழ்கவென்ற
சற்குருவின் பொற்றாள் சரண்.

திருத்தொண்டர்.
அரவணிவார் தூதன் றறையுநலம் பெற்ற
பரவைமண வாளருலாப் பாடப்-பிரமபுரச்
செல்வர்முத லெண்ணில் திருத்தொண்டர் சேவடிகள்
நல்லதுணை யாமே நமக்கு.

ஸ்ரீ சுந்தரருலா.
நூல்
கலிவெண்பா.

1. உலக முதவி யுயிரனைத்து மாக்கி
நலனுதவிக் காத்து நசுக்கிப் - பலவாடல்

2 செய்யும் பெருமான் சிவபெருமான் றீமைகளைக்
கொய்யும் பெருமான் குறையிரப்போர் - உய்யக்கண்

3 காட்டும் பெருமான் கருங்கற் றவளைக்கூண்
ஊட்டும் பெருமானென் ஊன்றலைமேற் - சூட்டுதிருப்

4 பாதப் பெருமாட்டி பாகத்தி லேவிளங்கைம்
பூதப் பெருமான் பொதுப்பெருமான்- மேதக்கோர்

5 போற்றுதனி மூலப் பொருளைப் புராதனத்தைச்
சாற்றுபர ஞானச் சரவிளக்கை - நாற்றிக்காய்

6 எட்டுப் பொருப்பதனை யீரெட்டுக் கோணத்தைக்
கட்டுப் படாவகண்டா காரத்தை - வெட்ட

7 வெளியைச் சதானந்த வீடுதனை வீட்டுக்
களியைச் சதானந்தக் காவை -ஒளியார்

8 அருணப்ர காசத்தை யானந்தத் தேனைக்
கருணைப்ர வாகத்தைக் காணா-அருவுருவைப்

9 போக்கு வரவிலாப் புண்ணியத்தைப் புத்தேளை
நீக்கமற வெங்கு நிறைந்ததனை -மோக்கமருள்

10 முன்னவனை முன்னுக்கு முன்னானை யாவைக்கும்
பின்னவனைப் பின்னுக்குப் பின்னானைப் - பொன்னுலக

11 இந்திரனு மேனை யிமையோருந் தானவருஞ்
சுந்திரமார் பையுரகத் தோன்றலரும் - அந்திநிறத்

12 தெந்தை பெருமா னெழிலார் மவுலியின்மேற்
சுந்திரமாய் வீற்றுச் சுடர்பாப்புஞ் சந்திரனும்

13 மாவேழு பூண்ட மணித்தேரில் வீற்றிருந்து
தீவேழைச் சுற்று தினகரனும் - பூவணைமேல்

14 ஆக்குந் தொழிலுக் கதிபதியாய் வீற்றுலகைப்
பூக்குந்தொழிலாற்று புண்ணியனும் - மாக்கடலிற்

15 பையா யிரங்கொண்ட பாம்பணையின் மீதமர்ந்து
செய்யாளுந் தானுஞ் சிறப்பாயிவ்-வையகத்தைக்

16 காத்தருளுஞ் செங்கமலக் கண்ணிறையும் வாசுகியைக்
கோத்தசல மத்தாகக் கொண்டேமுன் - நீத்தமிகும்

17 ஆழி கடையுங்கா லங்கமெலா நைந்துருகி
யூழி யழல்போ லுரகேசன் - ஆழியிடை

18. கக்கால' காலமதைக் கண்டுதிரு மான்முதலோர்
மிக்கோல மிட்டுமனம் வெம்பியே-இக்கால்வந்

19 தெம்மா ருயிர்நல்கீ ரென்றுகரங் கூப்பிநின்று
பெம்மான் புகழனைத்தும் பேசியே - யம்மானின்

20 செஞ்சரணச் சேவடியைச் சிந்திக்க வாங்கெழுந்து
அஞ்சலென்று மன்னார்க் கமுதீந்து - நஞ்சயின்ற

21 கார்பூத்த கண்டக் கடவுள்தமைப் பித்தரென்று
பேர்பூத்த பாப்புனைந்த பெம்மானே - தார்பூத்த

22 செந்தமிழி னுஞ்சீர் சிறக்குமுலா பாடுதற்கு
வந்தருளீர் வன்றொண்ட மாமணியே - யிந்துநதி

23. சூடுஞ் சடாமகுடத் தோன்றலார் தோழமை கொண்
டாடும் பெரியீர் நும் மான்றபுகழ் - பாடுமதி

24 பெற்ற பெரியோர்பல் பேரிருக்கக் கல்வியிலாச்
சிற்றறிவன் பாடுவதென் செய்கைத்தோ - நற்றவத்தோர்

25 உள்ளத் திருவிளக்கா மொப்பிலான் சீர்பாடும்
வள்ள னுமதாசீர் வாதத்தால் - விள்ளுபுகழ்

26 கொண்ட பெருமிழலைக் கோக்குறும்ப ரோடுபலர்
கண்ட படிவீடு காணவே-கிண்டுமனப்

27 பேராசை யென்னைப் பிடித்திழுக்க யென்கவியைப்
பாரோர் பழிப்பரென்று பாராமல்-நீராழி

28 தன்னையோர் சிற்றெறும்பு தாண்ட நினைப்பதுபோல்
என்னையா நுஞ்சீ ரிசைக்கின்றேன்--மன்னுபகழ்

29 ஆர்நா வலந்தீவோ ராற்று நலந்திரண்டு
சீர்நாவ லூரிற் றிகழ்சடையப் - பேர் தாங்கும்

30 சைவப் பெரியார் தமக்குமிசை ஞானியர்க்குங்
கைவைப்பாய் வந்துதித்த கட்டழகர் - தைவப்பூஞ்

31 செங்கமலைக் கொப்புடைய செல்வி யிசைஞானி
யங்கமலை யாலணைத்த வாணிமுத்து - தங்கமலை

32 வில்வாங்கு கோவிடத்து மின்னொப் பிசைஞானி
சொல்வாணிக் வென் றுண்ணெகிழ்ந்த செம்பவளம்- சொல்வாணி

33 கொப்பா மிசைஞானி யுச்சி முகந்தேயென்
அப்பாவென் றார்வங்கொ ளாரமுதம் - இப்பாரில்

34 தையலரி லேசிறந்த சத்தி இசைஞானி
கையலரி லேந்துபடி கக்கமலம் -மையனகண்

35 மங்கையர்க்கு மங்கை மடமின் னிசைஞானி
கொங்கைக் குடங்குடித்த கோமேதம் - பொங்குலகோர்

36 தத்தமன்னை யென்னத் தகுசீ ரிசைஞானி
முத்தங் கொடுத்த முகமுத்தம் - இத்தலத்தோர்

37 மட்டில் மகிழ்ச்சியுற மன்னு மிசைஞானி
தொட்டிலிட்டுத் தாலாட்டுஞ் சுந்தரப்பொன் - எட்டுத்

38 திசையோர் பரவுதிருத் தெய்வீகக் கற்பார்
இசைஞானி யக்குளிடுக் கேந்தல் - இசைஞானி

39 கொங்கை யமுதூரக் கொஞ்சுந் திருவாயால்
இங்கு மொழிந்தகட லின்னமுதம் - பொங்குலகோர்

40 கண்டுவகை பூத்துக் கரங்கூப்பி நின்றுதொழ
மண்டியிட்டுட் கார்ந்த மணிவிளக்குத் - தண்டமிழில்

41 மன்னுதே வார மணக்குந் திருவாயால்
இன்மழலை யாடியபே ரின்பரசம் - பொன்மவுலித்

42 தம்பிரான் சூடத் தமிழ்பாடுஞ் செவ்வாயால்
தும்பி பறந்துவந்த சொக்கத்தேன்- அம்புவியோர்

43 கண்களிக்கப் பூமின் கலங்கச் சதங்கைகொஞ்சக்
கிண்கிணிக்கா லானடந்த கெம்பீரம் - பெண்கடிரு

44 நாயகமா நங்கையிசை ஞானி திருக்கணவர்
தூய சடையர் திருத் தோளமர்ந்தே- மாயப்ர

45 பஞ்சத்தை வென்று பரமர் திருப்பா த
கஞ்சத்தைப் போற்றுங் களங்கமிலா - நெஞ்சத்து

46 நற்றவர்கண் மேவுதிரு நாவலூர் வீதியினைச்
சுற்றிவந்த ஞானச் சுடர்விளக்கு - கற்றவர்கள்

47 போற்று சடையருளம் பூரிக்க வேசிறுதேர்
வீற்று விளையாண்ட வித்தாரம்- சாற்றுதிருப்

48 பாதச் செழுஞ்சிலம்பும் பாடகமுந் தண்டையிடும்
நாதத்தைக் கேட்டுதிரு நாவலூர்-வீதி

49 கிடுகி டெனவாடக் கிண்கிணிக்காற் கொஞ்சக்
குடுகுடென வோடிவந்த கோலம் - உடுபதியாம்

50 அம்புலியைப் பார்த்தென்னோ டாடவா வென்றழைத்து
வம்புவிளை யாட்டயின்ற வைடூர்யம்- உம்பரெலாம்

51 பார்த்துக் களிகூரப் பம்பரத்தின் பொற்றாம்பை
யீர்த்துச் சுழற்றிவிட்ட எக்களிப்பு-சீர்த்திமிகுந்

52 தேவாதி தேவராந் தேவியோர் பாகத்து
மூவா முதலயன்மான் முற்றாய-தேவரெலாஞ்

53 சந்தோடங் கொண்டாசி சாற்றத் திருக்கரத்தாற்
பந்தாடி வந்ததமிழ்ப் பண்டாரம் - ஐந்தாண்டு

54 செல்லா முனம்பள்ளி சென்று சிவனருளாற்
கல்லாது கற்ற கலாநிலையம் - அல்லாரும்

55 கண்டரே யாவர்க்குங் கர்த்தா வெனக்கண்டு
கொண்டவரைப் போற்றுங் குணசீலம்- மண்டலத்தோர்

56 எம்பிரா னென்றுசிரத் தேகரங்கொண் டேத்துவது
நம்பியா ரூரரென்ற நன்னாமம் - அம்புவியில்

57 அந்தரத்திற் பாதலத்தில் யார்க்குமிலாக் கட்டழகின்
சுந்தரத்தால் வந்தபெயர் சுந்தரராம் - சுந்தரர்தாம்

58 மால்விடையொன்றூரு மகதேவர் மாதுபங்கர்
நூல்விரிவுக் கெட்டா நுதல்விழியார் - போல்வடிவம்

59 அம்பொன்னாற் சீருறவுண் டாக்கியே யச்சிலையைச்
செம்பொன்னாற் செய்ததிருத் தேரில் வைத்தே-யும்பர் முதல்

60 நல்லார் பரவுதிரு நாவலூர் வீதியினில்
உல்லாச மாயிரத மோடுங்கால் -தொல்லுலகில்

61 தன்னுயிர்போன் மன்னுயிரைத் தாங்கிப் புவியாள
முன்னுநர சிங்க முனையரையர் - பொன்னிரதம்

62 யாருக் கெனவினவ வம்பிகைபா கற்கென்று
சீருற்ற செவ்வாய் திறந்திசைப்ப-பாருக்குள்

63 எம்போன்ற மன்ன ரிருந்தென் னிறந்தென்னே
யம்போத ரங்கத் தயன்படைப்பில் - நும்போன்ற

64 சேயைப் பயந்தவர்க்கே தெய்வீக வாழ்வுகிட்டும்
பேயைப் பயந்தவர்க்கப் பேறுண்டோ- தீயொப்பாம்

65 செக்கோல மேனிச் சிவநேசச் செல்வமே
யிக்கோலம் யார்பெற் றெடுத்ததோ - அக்கோவைக்

66 கண்டறிய லாமோயென் கண்ணே யெனவினவி
வண்டலம்பு தார்வேந்து மார்போடுங்- கொண்டணைத்து

67 உச்சி முகந்தார்வ முள்ளூர முத்தமிட்டுப்
பச்சிளங் கோவேயென் பாக்கியமே - பிச்சுலகைக்

68 காக்குமர சென்று கருதேலென் கன்மமதைப்
போக்குமருந் தாய்வந்த புண்ணியமே - நோக்கமோர்

69 மூன்றுடையா ரீன்ற முருகப் பெருமானைப்
போன்றுநட மாடும் புதுவாழ்வே - தேன்றுளிக்குந்

70 தண்ணார் மலரிதழித் தாரார் திருமார்பர்
கண்ணா யுலகையெலாங் காத்தருளும் - பண்ணவர்தம்

71 பாகத் தமர்ந்தருளும் பச்சைப் பசுங்கிளியாள்
நாகத் தாசுதரு நல்லமகள் - மேகத்தைப்

72 போலுந் திருமேனிப் பூங்கொடியாள் பொங்குமறை
காலுந் தொழுதேத்து நற்பதத்தாள் - மூல

75 முதலாகி யானை முதலெறும்பீ றாய
சதகோடி சீவனுக்குந் தாயாய்க்- குதலைமொழிப்
74 பெண்ணா ணலியென்ற பேதமிலாப் பெண்பெருமாள்

உண்ணா முலையளெனு மொண்டொடிதன்- வண்ணமுலைப்

75 பாலோடு ஞானம் பருக்கவுண்டு தேவார
நூலோதித் தீமைகளை நூறிநலம் - மேலோங்க

76 இத்தலமேல் வந்தருளி யெம்போன்ற பேர்களுய்
முத்தமிழை யாண்டருளு மூர்த்தியாங் - கொத்தலரார்

77 தண்டா மரைவயல்சூழ் சண்பையர்கோ னென்றுலகங்
கொண்டாட வந்ததிருக் கோலமே-பண்டு

78 திலக வதியார் திருநீறு சாற்றச்
சொலவரிய தீங்கிழைத்த சூலை-யுலகறியக்
79 காற்றாய்ப் பரந்தோடக் கண்டதிகை நாதர்பதம்
போற்றா விழுந்தெழுந்துள் பூரித்தே- கூற்றான

80 வாறு பகரவிறை வாக்கரசென் றேயழைக்கும்
பேறுபெற்றுத் தன்னைப் பிளப்பதாய்ச் - சீறுங்

81 களிறு பயந்தோடக் கற்றூண் கலமாய்
குளிற்றையோ னீற்றறையைக் கொண்டே -வெளிப்போந்த

82 நாவுக் கரசருட நான்மறைதே ராமுதல்வர்
பூவுக் கரசான பொன்னாட்டுக் - காவலனின்

83 பேரமைச்சாய் வீற்றுப் பெருந்துறைபுக் கெந்தையருள்
சீரமையப் பெற்றுச் சிறுநரியைப் - பேரிவுளி

84 யாக்காவோர் மூங்கை யவள்பேசு மாறருளி
வாக்கா னமச்சிவய வாழ்கவென்ற - பாக்கிளறி

85 என்போன்ற பேர்களுய்ய வென்றுதிரு வாசகநூ
லன்பார் திருவா யலர்ந்தருளி - மன்பதைகள்

86 வேட்டதெலாம் நல்கும் வியன்றில்லை யம்பலத்தார்
தீட்டதிருக் கோவையரு டேசிகரும் - மீட்டுவந்தார்

87. என்னவந்தீர் நுஞ்சீ ரிசைமினோ வென்றிரப்பப்
புன்னகைபூத் தென்சீர் புகல்கின்றேன் - என்னருமைத்

88 தந்தை சடையர் திருத் தாயா ரிசைஞானி
வந்தவர லாறீது மற்றதெலா -மெந்தையிடம்

89 போயறியி னென்றங்கு புன்முறுவல் பூத்துநின்ற
சேயதமிழ் ஞானரசச் செங்கரும்பின் - றூயமொழி

90 கேட்டவுட னேயிறையக் கிண்கிணிக்காற் செல்வரைத்தன்
றோட்டம் தேற்றிச்சந் தோடமுடன் - வேட்டபயன்

91 கிட்டுமோ கிட்டாதோ கிட்டவரு ளையாயிம்
மட்டும்யான் கொண்ட மகிழ்ச்சியெலாந் - தட்டுகெட்டுப்

92 போகாத வாறருளெம் புண்ணியா பூவையொரு
பாகாவென் றெம்மான் பதமதனை - யோகையுடன்
-
93 போற்றி நடந்துமனை புக்கங்கே வெண்ணீறு
சாற்றியசெம் பொன்மேனிச் சங்கரன்போல்,- வீற்றிருந்த

94 அண்ணல் சடைய ரடிபோற்றி யாசிபெற்றிம்
மண்ணகத்தை வாழ்விக்க வந்தவிந்த - புண்ணியத்தை,

95 யான்கொண்டு காப்பாற்ற லாமோ வடிகளென்று
தேன்கொண்ட தாரான் றெரிக்கவே - வான்கொண்ட

96 கீர்த்தி சடையர்நீ கேட்டபடி யாகினுமிம்
மூர்த்திதனை யீன்றெடுத்த மொய்ம்பனைக்கிவ்-வார்த்தையினை

97 சொற்றாசி பெற்றோஞ் சுந்தரத்தை யன்னவள்பாற்
பெற்றேக னன்றென்று பேசவே - கொற்றவனுங்

98 கேட்டவ் விசைஞானி கேழ்கிளர்தாள் போற்றியவள்
மாட்டன்னாய் நீபயந்த மாமணியைக் - கூட்டிக்கொண்

99 டென்மனையிற் சேர்த்தங் கெழிலோடு காப்பாற்றி
மன்மரபுக் கேற்ற வரிசையெலாம் - நன்மையுடன்

100 செய்ய நினைத்தேனென் சித்தங் களிகூர
வையைநீ யாசீர் வதியென்றான் - வையகமும்

101 விண்ணகமும் போற்றும் விளக்கைப் பயந்தாணின்
எண்ணம்போற் செய்யென் றிசையவே - யண்ணல்

102 மனத்தார்வம் பொங்க மகிழ்ச்சியுட னேக
கனத்தே ரெனவுலகோர் காணச்- சொனத்தேரில்

103 தூக்கிவைத்துத் தான்வாழுந் தொல்பதிக்குக் கொண்டுசென்றென்
பாக்கியமே யென்றுநலம் பாராட்டி- கோக்குலத்து

104 சேயர்க்குச் செய்யுஞ் சிறப்புசெயப் பெற்றேயிம்
மாயப்ர பஞ்சத்து மாண்பனைத்துந் - தூய

105 கலையாழி நீந்திக் களங்கமிலா நெஞ்சத்
துலையா விழுமியரா லோர்ந்துங்- கொலையார்

106 சமரவே லேந்துஞ் சகலகலா ஞானக்
குமரவேள் போலுங் குலாவித் - திமிரமிகும்

107 வேளைப் பொருவும் விறல்வெற்றி யார்தடந்தோட்
காளைப் பருவமுற்ற காளைகூர் -வாளைச்

108 செறுகட் குமரியரென் சீரழகுக் கேற்ற
தறுகட் குமரனென்று சாற்றப்- பெறுபருவங்

109 கொண்ட வழகினரர்நங் கூட்டத்தார் போற்றிநலங்
கண்ட வழகினரக் கல்லால்கீழ்- பண்டிருந்த

110 அம்மான் பதமடைந்தோர் யாவருமொன் றாய்த்திரண்டு
இம்மா நிலத்தடைந்தா ரென்னலாஞ்-செம்மேனிச்

111 சேயழகைக் கண்டநர சிங்க முனையரையர்
தாயரிசை ஞானி சடையருக்கும் - நேயமுடன்

112 சந்தனுப்பி யேநஞ் சலனத்தை மாற்றவரன்
தந்தனுப்பப் பெற்ற தவவாழ்வுக்-கிந்த

113 தருணத்தின் மன்றற் சடங்குசெய வேனும்
வருணத்தின் மின்பார்த்து வைமின் - கருணைக்

114 கடலெனுநம் மீசன் கடாட்சிக்கு மென்றே
மடலெழுதிக் கேட்க மகிழ்வாய்ச் - சடையனார்

115 பக்கப் பதியனைத்தும் பார்த்துதிருப் புத்தூரிற்
புக்கப் பதிமேவும் பொற்பினால் - மிக்கசீர்

116 சைவப் பெரியார் சடங்கவியார் மாதவமாந்
தெய்வப் பெருந்திருவைத் தேர்ந்தேயப் - பெய்வளையைப்

117 பெற்ற சடங்கவிபாற் பேசிப் பெரியோரால்
குற்றமற்ற நன்னாள் குறிப்பிட்டே - சுற்றத்தார்

118 மற்றவர்க்குந் தன்கண் மணியைச் சுவிகரித்த
கொற்றவர்க்கும் ஞானக் குருக்களுக்குங்-கற்றவரால்

119 அன்றுபுர மட்டா ரருளானம் மாரூரன்
மன்றன் முடித்தருள வந்தருண்மின்- என்று

120 திருமுகந்தான் போக்கித் திருமணத்துக் கேற்ற
பொருள்யாவுஞ் சேகரித்துப் பொற்பார்- தெருவதனைக்

121 கூட்டிப் புனலாற் குளிப்பாட்டிக் கோலமெங்குந்
தீட்டி யழகுபெறச் செய்துமே - வீட்டின்வாய்

122 முன்வாழை கன்னன் முதற்கமுகு தாநாட்டி
பன்மா மலர்கொண்டு பந்தரிட்டுப்-பொன்மகர

123 தோரணமெங் கெங்குந் தொடுத்துமுளைப் பலியிட்டு
பூரணநற் கும்பம் பொலிவித்தே - தாரணியில்

124 இம்மா திரிவாய்த்த தார்க்குமிது காறுமிலை
யம்மாவென் றோதி யதிசயிக்கச்-செம்மையுடன்

125 நன்கமைத்த பந்தர் நடுவின்மணத் திண்ணையிட்டு
மென்களபக் கூட்டான் மெழுகியே-மின்காலும்

126 பொன்னரிய தாரப் பொடியினாற் கோலமிட்டு
மின்னவிர்செஞ் சாந்தால் விளிம்பெழுதிப்- பன்னுகதிர்

127 நற்பவளத் தாற்கால்கள் நாட்டிமற்ற ரத்தினத்தாற்
சிற்ப வலங்காரஞ் செய்துமே - பொற்பலகை

128 யிட்ட மணவறையி லீசா னியன்முதலா
யட்டதிக்குப் பாலரையாங் காங்கமைத்து நட்ட

129 நடுவி லுலகீன்ற நாயகியோர் பாகக்
கடவுளருள் கோவுருவங் கண்டு - சுடர்வீசுங்

130 குத்து விளக்குங் குடவிளக்குச் தூண்டாநன்
முத்து விளக்கி னொடுமும்மு- கத்துவிளக்

131 கைந்து முகவிளக்கு மங்கேற்றி வைத்தழகு
சிந்த மணவறைதான் செய்தார்கள் - பந்துசனம்

132 எல்லாரும் வந்தார்க ளெந்தைநம்பி, யாரூரர்க்
கில்லா யமையப்போ மேந்திழையைப்- பல்லோரும்

133 போயழைத்து வந்தப் புனித வதியாரின்
நாயகரா கப்போகும் நம்பியாஞ் - சேயழகர்

134 தன்வாவை நோக்குந் தருணஞ் சிவசமயம்
முன்வரவிப் பால்வந்த மூர்த்தியார் - பின்வரமுன்

185 ஐயர்வரு கின்றா ரடிகள்வரு கின்றார்கஞ்
சைவர் வருகின்றார். தாரணியோ - ருய்யவந்த

136 பாலர் வருகின்றார் பத்தர் வருகின்றார்
சீலர் வருகின்றார் செஞ்சிலம்புக் - காலழகச்

137 சேயர் வருகின்றார் சிற்றடியேம் போற்றுபதக்
தூயர் வருகின்றார் தோகையுமை - நாயகர்க்குத்

138 தொண்டர் வருகின்றார் தூயதமிழ் மாமழைகால்
கொண்டல் வருகின்றார் கூறுமணி - கண்டர்பதம்

139 பூணத் தமிழ்ப்பாப் புனைவோர் வருகின்றார்
மாணப் பெரியார் வருகின்றார் - வேண்புகழ்

140 சீரூ ரணிமாடத் தென்னாவ லூர்நம்பி
யாரூரர் வந்தார்வந் தாரென்றே- கார்காலக்

141 கோடை யிடிபோலுங் கொட்டுமுழக் கார்ப்பரிக்க
ஆடவர்பெண் டீர்கண் டதிசயிக்கச் - சேடன்

142 உடனெகிழக் காண்போ ருளமருள வெட்டுத்
தடவரையெ லாந்தத் தளிக்கக் - கடலொலிபோற்

143 சின்னங்க ளார்ப்பத் திருச்சங்க நின்றூத
முன்னங்கொம் போசை முழங்கவே - பின்னின்று

144 சோமன் குடைநிழற்றச் சூரியனா ரெச்சரிக்கக்
காமன் கரத்தாற் கழல்தாங்க - பூமன்னர்

145 போற்றிப் பரவப் புலவோர்க ணின்றுபுகழ்
சாற்றிக் கரங்கூப்பித் தண்டனிடக்-காற்றனிலன்

146 வீசப் பரவைக்கு வேந்தா கியவருண ன்
வாசப் பனிநீர் வருசிக்கப் - பேசுபுகழ்

147 கின்னர கிம்புருடர் கீர்த்திவித் யாதார்கள்
பன்னரிய கீதம் பகரவே - பொன்னுலகில்

148 மன்னமரர் பூமா மழைபொழிய வேயிமையோர்
கன்னியரங் காலாத்தி காட்டவே - முன்னர்

149 முதலைவாய்ப் பட்டாதி மூலமே யென்று
கதரியே நின்று கலங்கா - மதகரியை

150 அஞ்சற்க வென்றக்க ராவைக்கொன் றாட்கொண்ட
வெஞ்சக் கரக்காத்து வித்தகரும்-கஞ்சத்தின்

151 மன்னுங் கருணை மகமேரு மாதவத்தாற்
பொன்னுலகங் காக்கும் புரந்தரனும் - இன்னும்பல்

152 விண்ணவரு மாகாய வீதியுற்று தத்தமது
கண்ணலராற் கண்டு களிக்கவே - தண்ணளி தான்

153 பொங்கிப் பெருகிப் புரண்டோடும் பன்னிரண்டு
செங்கமலம் பூத்த திருநுதலா - ருங்கடம்பக்

154 கந்தவேள் பச்சைக் கலாப ரதமீது
வந்தருளி யாசீர் வதிக்கவே -தந்தி

155 முகப்பரமர் ஞான முதற்பரமர் தொண்ட
ரகப்பரமர் காட்சி யளிக்க-இகப்பரப்பின்

156 மன்னு முயிரையெல்லா மாறாக் கருணையுடன்
தன்னுயிர்போற் காக்கத் தமதுளத்தின் - முன்னுநர

157 சிங்க முனையரையர் சேய்சிறப்பைக் கண்டேத
னங்கமெலாம் பூரித் தருகிருக்க-இங்கெளியேன்

158 பன்னுந் தமிழின் பயனாய சுந்தரரம்
பொன்னந் தவிசிட்ட பூந்தேரிற்-றன்னருமைத்

159 தந்தை சடையனார் தாம்வாழு நாவலூர்
வந்தடைந்தார் பந்தெதிரே வந்தழைக்கப் - பந்தலுக்குள்

160 புக்கார் பெரியோரைப் போற்றிப் புனலாடி
மிக்கா ருடனே விருந்துண்டு - முக்காலங்

161 கண்ட பெரியோர் கணக்காய்ந்து கல்யாண
மண்டபத்தின் மேவி மறையோதி- கண்டி

162 னதிமதுரச் சொல்லிக் கலங்காரஞ் செய்து
சதிருறுசெம் பொன்னா சனத்தில்- விதிப்படியே

163 தானங் கிருத்திச் சடங்குபல நன்கியற்றி
மேனம்பி யாரூரர் மெய்கனிந்து-தேனந்து

164 தாரசைய மாங்கல்யந் தான்பூட்டப் போம்பொழுதப்
பேரவையோர் கண்டு பிரமிக்க - நோணுகி

165 அங்கோர் நரைதிரைய ராடுடலர் கூன்கிழவர்
இங்கோர்மி னிச்சே யெனக்கடிமை - சங்கையென்னே

166 என்னடிமை தீராமு னிங்கேதுஞ் செய்யவிடே
னென்ன வறைந்தா ரெதிர்நின்றார்-முன்னின்ற

167 நம்பியா ரூரர் நகைத்தாதி சைவமகன்
அம்புவியின் மாற்றார்க் கடிமையெனில் - நம்ப

168 இடமுண்டோ சொன்மி னெனப்பே ரவையோர்
தடமே திதிலென்று சாற்றக்- கடுகடுப்பாய்

169 ஆடத் தகாமொழிநீ ராடினீ ரையரே
தேடத் தகுவழியிற் சென்மினென்றா-ரேடநின்

170 முன்னோர் கொடுத்த முறியிதுபா ரென்றையர்
சொன்னார் கொடுக்கவதைச் சுந்தரர்பெற் - றென்னோநீர்

171 பித்தரோ வென்றார் பிரித்தார் கிழித்தெறிந்தார்
சித்தரோ யென்வழக்குத் தீராமுன்- னெத்தனை நீ

172 வைதாலு முன்னைவிட மாட்டே னெனநம்பி
கைதான் பிசைந்தயிர்த்தார் கண்கலுழ்ந்தார்- வெய்துயிர்த்து

173 ஜயரே யிப்பே ரவையின்க ணும்வழக்குப்
பொய்யதாய் விட்டதெங்கு போவதெனச் - செய்ய

174 திருவெண்ணெய் நல்லூர்க்குச் செல்லலாம் நம்பின்
வருதியே லங்கிவ் வழக்குக்-கொருமுடிவு

175 கிட்டுங்கா ணென்றக் கிழவே தியர்தாந்திக்
கெட்டுங்கோ டெட்டு மெழுகடலுங் - கட்டுக்

176 கடங்கா மறையு மரிநான் முகனும்
விடங்கா லரவணைமேல் விண்டுந்- தடங்கொண்ட

177 மீதலமும் பாதலமு மேலவரு நூலவரும்
பூதலமுங் கைகூப்பிப் போற்றுதிருப் - பாதமலர்

178 பூதேவி சூடப் புறப்பட்டார் சுந்தாரம்
மாதேவ ரோடும் வழிகொண்டார்- சீதேவி

179 கண்ணென் றுலகோர் கருதநல மோங்குதிரு
வெண்ணெய்ப் பதியடைந்தே வேதியர்கள் - நண்ணுதிருக்

180 கூட்டத்தின் முன்வழக்கைக் கூறினார் கூறியதைக்
கேட்டங் கிருந்தோர் கிழவரே- நாட்டின்

181 மறையவர்க்கு மற்றோர் மறையவர்தொண் டாதன்
முறையலகா ணென்ன முதியோ- ரறைவதென்னே

182 பாரபட்ச மின்றாய்ந்து பார்த்தறமிங் கோதாமல்
ஓரபட்சஞ் சொன்னீரென் றோதிடவப் - போவையோர்

183 ஆதார மேதுமுண்டோ வையரே யென்னவிவன்
மூதாதை யோர்கொடுத்த மூலமுறி - யீ தாகும்

184 என்றார் கொடுத்தார் ரெடுத்தாய்ந்து நம்பியைநீர்
நின்றார்க் கடிமையென னீதியே- யென்றேயப்

185 பேரவையோர் பேசிப் பெரியாரை நீரிந்த
ஊரவரென் றாலிலமெங் கோதுமினென் - றாரையர்

186 நம்மனையைக் காட்டுகின்றோ நம்பின்னே வம்மினென்று
செம்மறைகள் காணாத் திருப்பாதத் - தெம்மடிகள்

187 கொன்றை மதிமறைத்த கோலத் திருவுருவில்
நன்று நடந்தருள நம்பியவர்- பின்றொடா

188 என்றாதை தாதையீ ரேழுலகுக் குந்தாதை
குன்றா வருட்டுறையாங் கோவிலுக்குட்- சென்றாரங்

189 கோடினா ராடினா ருட்புகுந்தா ரங்கொழிந்தார்
தேடினார் நம்பி திகைத்து நின்று-வாடியே

190 வந்த பெருமான் மடவா ளொருபாகத்
தெந்தையோ வோராம லேதேதோ- நிந்தித்தேன்

191 அந்தோ தமியே னறியா தவமதித்தே
னெந்தா யினிக்காண்ப தென்றென்றே - சிந்தா

192 குலமடைந்தார் சென்னிகரங் கொண்டு துதிபேசி
நிலமடந்தை மேலுடம்பை நீட்டி- யலமுறுங்காற்

193 கண்டு மலர்மேற் கடவு ளமரேசன்
விண்டு முதலோர் வியப்பவே- கொண்டறிந்து

194 சாற்றற் கரிய சதகோடி சூரியரின்
தோற்றத் தகிலமெலாந் தோத்தரித்துப் - போற்ற

195 மளமளென விண்ணோர் மலர்மாரி தூற்றப்
பளபளென வானம் பளிச்சக்- களபமுலைக்

196 கோதண்ட நன்னுதலார் கொம்போர் மருங்கிருக்கச்
சேதண்ட மேனிச் சிவபெருமான்- வே தண்டம்

197 என்னப் பெருத்தவா னேற்றி லெழுந்தருளி
என்னருமைப் பத்தா வெழுந்திரென்றார்- சொன்னதுகேட்

198 டத்தா சரண மமலா சரணமுதற்
சித்தா சரணஞ் சிறியேனைப்-பத்தனென்றாட்

199 கொண்ட பெருங்கருணைக் குன்றே சரணமென்று
தண்டனிட்ட நம்பி தனைநோக்கி - மண்டலத்தில்

200 நந்தலங்க டோறு நடந்து நறுந் தமிழில்
விந்தையுறு பாசுரங்கள் விள்ளென்ன - சந்தமிசை

201 இன்ன தெனத்தேறே னெவ்வா றிசைப்பதென்று
சொன்ன மொழிகேட்டுச் சுந்தரகேள் - முன்னமைநீ

202 பித்தரென்ற வாக்கே பெருவாக்காக் கொண்டதை முன்
வைத்தறைதி யென்று வரமளித்தே - யத்தர்சென்றார்

203 இந்தவா றீச னிவரையாட் கொண்டதினால்
வந்த திருநாமம் வன்றொண்டர் -வந்து துவலிர்

204 தல்லார் மிடற்றர்தமை யாண்ட திருவெண்ணெய்
நல்லூ ரருட்டுறைவா ணாயகர்தஞ் - சொல்லதுபோல்

205 பித்தாப் பிறைசூடிப் பெம்மானே யென்றுமிக
வித்தாரப் பாப்புனைந்த வித்தாரர்-முத்தி

206 மருத்துறையூ ரென்றிந்த மானிலத்தோர் போற்றுந்
திருத்துறையூர் புக்கானைச் சித்தத் - திருத்தி

207 மலையா ரருவியென்ற வாசகத்தை முன்வைத்
துலைவாய் மெழுகொத் துருகிக்- கலைமதியுங்

208 கள்ளா ரித்ழிநறுங் கண்ணியர வார்சடையி
னுள்ளார் தலைவா வுனைவேண்டிக்-கொள்வேன்

209 தவநெறியே யென்று தமிழ் சாற்றி நெடும் பூவிற்
சிவநெறியை நாட்டியநற் சிலர் -தவமுயலும்

210 நேயரித யத்தே நிருத்த மிடுங்கருத்தன்
மேயதலத் தாங்காங்கு மேவியரன் - றூயபதம்

211 போற்றி நறுந்தமிழிற் பொற்பார் புனைமாலை
சாற்றிநமக் தீந்துநலஞ் சார்சதுரர்-நீற்றுதவி

212 கொண்டழனேர் சூலையினைக் கொன்றங் குழவாரத்
தொண்டாசு செய்ததிருத் தொல்பதியைக் - கண்டதனில்

213 பாதமதை நாட்டப் பயந்துபுறத் தோர்மடத்திற்
காதலிறை பாற்செலுத்திக் கண்டுயிலும் - போதயன்மால்

214 இந்திரன்மற் றேனை யிமையோர்க்கு மெட்டாத
சந்திரத்தைத் தன்முடிமேற் சூட்டவெனைத் - தொந்திரவு

215 செய்பவர் நீர் யாரென்று சீற்றமுட னேவினவ
ஐய ரெமையறியா யோவெனலும் - மெய்யுணர்ந்து

216 தம்மானை யென்று தமிழலங்கல் சாற்றியுநம்
பெம்பானைப் போற்றிநலம் பெற்றபிரான் - அம்மான்

217 திருவதிகை நீங்கித் திருக்கெடிலத் தோடி
வருபுனல் லாடி மடவா - ளொருபாகர்

218 மன்னுந் திணைநகர்தென் மாணிக் குழியடைந்து
பன்னுந் தமிழ்பதிகம் பல்பாடி-முன்னின்றோர்

219 பாம்பும் புலியும் பதுங்கித் தலைமேற்கை
கூம்பும் படியாய்க் குதித்தாடுஞ் - சாம்பசிவ

220 மூர்த்தியார் ஞான முதல்வி யொருபாகர்
சீர்த்தியார் தில்லைச் சிவபெருமான் -கீர்த்தி

221 யுடனடன மாடு முயர்பதிகண் டய்யர்
நடனமதைக் காண நடந்தே -தடனடுவில்

222 அன்னம் பலவா ரணிநீ ரணிதில்லைப்
பொன்னம் பலங்கண்டு போற்றியே - முன்னின்று

223 நந்தி கடமுழக்க நான்முகவன் யாழிசைக்க
யிந்திரன்மா னின்றங் கிசைப்படிக்கக் - கந்தருவ

224 ரீட்டங்கள் சின்ன மெடுத்தூத நல்லடியார்
கூட்டங் கரந்தலைமேற் கொண்டுநிற்கத்-தோட்டுமலர்

225 மாரி யிமையோர் வருசிக்க வம்புலியுஞ்
சூரியனு நின்று சுடர்பரப்பச் - சீரிலங்கு

226 பொன்னம் பணியும் பொலிவார் நவமணியின்
சன்னம் பொதிந்த தனிப்பணியும் - மின்னல்கால்

227 நத்தோலை பூணுலக நாயகியோர் பாலிருக்கத்
தத்தோந் தரிகிடதே ததைய-தித்தோந்

228 தகதிகதோ மென்று தனிநடன மாடும்
நிகரருபொற் றாள்போற்றி நேர்நின் - றிகமகிழ

229 மென்றொங்கல் வண்டமிழில் மீட்டுங்கா லென்னருமை
வன்றொண்டா நம்மாரூர் வந்துசேர்-என்றொல்லை

230 அண்ட, முகடுகிழித் தங்கோ ரசரீரி
விண்ட பெரும்புகழார் மேதக்கோர்-பண்டுதிரு

231 வாதவூ ரெந்தைதிரு வாய்மலர்ந்த வாசகமாம்
வேதநூல் தீட்டவந்த வேதியர்பொற் -பாதமதை

232 போற்றி நடந்து செழும் பொன்னிப் புனல்படிந்தவ்
வாற்றி னிருகரையி லாதிசிவன் - வீற்றதிரு

233 வாலயங்க ளெல்லா மடைந்து தெரிசித்துக்
கோலமயி லேறுங் குமரவேள் -பாலகராய்ப்

234 பூவி லவதரித்துப் பொற்பா ருலகீன்ற
தேவி திருமுலையின் றீம்பாலுண் - டேவிரைந்து

235 தோடுடைய பாடியநந் தோன்ற லவதரித்த
பீடுடைய வீராறு பேர்கொளுமூர்-நாடிக்

236 கழுமல வண்ணகரைக் கண்டுகொண்டே னென்று
தொழுதுபதி கம்பகர்ந்த தூயர் - செழுநீர்

237 வளவயல்சூ ழாரூர்வாழ் மாந்தரெதிர் கொள்ள
வுளமகிழ்வுற்.றஞ்சலிசெய் துள்ளம் - இளகிக்

238 கரையுங் கடலுமென்று கற்பனையாய் வானுந்
தரையுங் கனிந்துருகச் சாற்றி - வரை தனுக்கொள்

239 ஐயர் மருவுதிரு வாலயத்தைச் சுற்றிவந்து
கையதனைக் கூப்பிக் கனிந்து துதி - செய்யுங்கால்

240 சுந்தரா நாமுனக்கோர் தோழரா னோமென்றே
இந்தராப் பூண்பா ரெழுந்தருளி - வந்தே

241 கலப்பற்ற வாக்காற் ககனத்தைக் கீறிச்
சொலப்பெற்ற தம்பிரான் றோழர் - புலப்பற்றை

242 யற்றவர்க்கு மேல்வீ டருளிறைவர் தங்கனவில்
சொற்றபடி யாரூரிற் சூழ்மறையோர் துற்றெழுந்து

243 பல்யாக மாற்றிப் பரவையெனும் பைங்கொடியைக்
கல்யாணஞ் செய்திடக்கொள் கட்டழகர் - நல்லோர்கள்

244 மன்னுந் திருக்"தில்லை வாழந்தணர்த' மென்ற
பொன்னுரையை நம்பரமர் போதிக்கப்-பன்னுதிருத்

245 தொண்டத் தொகைபகர்ந்து தொல்லுலகி லெம்மவர்க்குப்
பண்டைச் சரிதமருள் பாவாணர்-குண்டைக்

246 கிழவனார் வேண்டக் கிருபைக் கடலாங்
குழகனரு ணென்மலையைக் குண்டைக்-கிழவர்சொல்

247 கோளிலி யெம்பெருமான் குண்டையூர் நெற்கொணா
ஆளிலையென் றோதி யவனருளால்-வாளனகண்

248 மென்மழலை நன்மொழியாள் மின்பரவை மாளிகையில்
நென்மலையைக் கண்ட நிதிக்கிழவர் - நன்மனத்துக்

249 கோட்புலியார் நல்விருந்து கொண்டபிரான் கோட்புலிபன்
னாட்புரிந்த மாதவத்தி னற்பயனாம் -வாட்புருவ

250 நங்கை வனப்பகைக்கும் நாட்டுபுகழ் நங்கை திருத்
தங்கையாஞ் சிங்கடிக்குந் தந்தையார் - தெங்கின்

251 மடலொடிய நீள்கயத்து வாளைபாய் பண்ணைத்
தடமருவு பூம்புகலூர் தான்புக்-கடல்விடையூர்

252 முன்னவர்பொற் பாத முளரிதனைப் போற்றி செழும்
பொன்னவா கொண்டுதுயில் போழ்திறைவர் - இன்னருளால்

253 தன்னாகந் துய்க்கத் தலைக்கணையாக் கொண்டசெங்கல்
பொன்னாகப் பெற்ற புகழாளர் -நன்னாவால்

251 தம்மையே யென்றுதமிழ் சாற்றிப் புகலூர்வாழ்
நம்மையர் தாள்போற்று நாவலர்கோன் - செம்மலர்மேல்

255 முத்தைத்தன் முட்டையென்று முன்னிக் குருகோம்ப
நத்தைத் திரண்மணிகா னற்பணையில் - தத்தை தமிழ்

256 பாடுந் திருப்பனையூர் பக்கமுறுங் காலாவஞ்
சூடுந் திருச்சடிலச் சோதியார் - நாடிதிருக்

257 காட்சிதரக் கண்குளிரக் கண்டுவகை பூத்ததிரு
மாட்சிமையா மாலைபுனை மாணிக்கம் - ஆட்செயன்பர்

258 எங்கே யெவரெவ்வா றெண்ணிடுவா ரவ்விதமா
யங்கே யவர்முனம்வந் தாண்டருளும் - மங்கைபங்கர்

259 மேயதிரு வாலயம்பல் மேவியரன் சேவடியில்
தூயதிருத் தேவாரஞ் சூட்டியவர் - சேயதலத்

260 தெந்நிலமு மிந்நிலத்துக் கீடிலையென் றேபலர்சொல்
நன்னிலமுற் றங்குறையு நம்பரமர் - பொன்னடியைப்

261 போற்றி நறுந்தமிழால் பொற்பார் புனைமாலை
சாற்றியுநள் ளாறு தருமபுரம் - சேற்றுக்

262 கழனிசூழ் காரைக்கால் காரோணம் வீழி
மிழலைதிரு வாஞ்சியங்கீழ் வேளூர் - குழகனுறை

263 சிக்கல்திரு நாகை திருமலைரா யன்பதியப்
பக்கத்தி லுள்ள பதியனைத்தும் - புக்குமையாள்

264 பாகர்பதம் போற்றிப் பதிகம் பலபாடி
நாகைசட்டை நாதர் தந்த நற்பரிமேல் - ஓகையுடன்

265 வீற்றங் கடியார் விருது பராக்கியம்பிப்
போற்றத் திருவாரூர் புக்கபிரான் - கூற்றனைக்கால்

266 கொண்ட கடையூர் குடமூக் கிடைமருதூர்
கண்டியூ ராவூர் கலையநல்லூர் - அண்டர்க்கா

267 நஞ்சயின்றார் மேயதிரு நாகே சுரந்தஞ்சை
பஞ்சநதஞ் சேவித்துப் பாப்புனைந்து - விஞ்சுபுகழ்

268 ஆலம் பொழில்சேவித் தங்குதுயில் கால்கனவில்
சீலம் பொழிந்தருளுஞ் சிற்பரசிற் - கோலர்யாம்

269 மன்னுமழ பாடி மறந்தனையோ வன்றொண்டா
என்னத் துயினீத் தெழுந்திறைவர் - இன்னருளை.

270 மிக்க வியந்துபொன்னார் மேனியனே யென்றியம்பித்
தக்க பயநுகர்ந்த தண்டமிழர் -கொக்கரைகள்

271 துன்னவிரு பாலுஞ் சுடர்மணியை வீசிவரும்
பொன்னியிரு பாலுமதி பூண்சடிலர் - மன்னுதலம்

272 பல்போய்ப் பணிந்து பதிகம் பலபாடி
அல்போற் குழலி யகிலாண்ட - வல்லி

273 ஒருபாகர் யானைக் குயர்வாழ் வளித்த
கிருபா கரக்கடலக் கிள்ளி - திருவா

274 பரணத்தை மஞ்சனநீர்ப் பாத்திரத்தின் வாயில்
வரநற் கிருபைபுரி வள்ளல் - தாம் வியந்து

275 பாடிதிரு வாசிப் பதியிற் பரனிடம்பொன்
நாடியிரந் தும்பொனிறை நல்கிலரால் மோடியுடன்

276 ஈறியிவ ரல்லா திலையோ பிரானென்று
கூறி இறையருள்பொன் கொள்தனதர் - வேறிணையில்

277 பைஞ்ஞீலி யென்னும் பதிவாழ் பாம்பானாம்
மைஞ்ஞீல கண்டாடி வாழ்த்தியே - மெய்ஞ்ஞானத்

278 தேனங் கிருந்தூறுந் தேவாரம் பாடிமுன்னோர்
எனங் குடைந்தறியா வீங்கோய்கண்-டானந்தங்

279 கொண்டுதிருப் பாண்டிக் கொடுமுடியாங் கொங்கர் தலங்
கண்டுகரங் கூப்பிக் கனிந்துருகித் - தண்டமிழில்

280 மற்றுப்பற் றோதி வளமருவு பேரூரில்
சிற்றம் பலநடனஞ் சேவித்து - நற்றவர்வாழ்

281 செங்கோடு கண்டு தெரிசித்துச் சிற்பரையோர்
பங்கோன் பதம்போற்றிப் பாமாலை-யங்கோதி

282 கொங்கர் குலவுங் குளிர்நாட்டிற் கொம்பனையோர்
பங்கர் பதிபல் பணிந்தகன்றே - தெங்கின்

283 பழம்விழுந்து சாடப் பகுவாய்ப் பலாவின்
பழமுடைந்த செஞ்சாறு பாயும் - பழனமலி

284 நன்னாடு நற்பொன்னி நன்னீ ரருந்திவளர்
தென்னாடு கண்டு சிவபெருமான்-மன்னும்

285 புறம்பயத்தில் மேவியிறை பொன்னடியைப் போற்றி
அறம்பயக்கு நாயகியோ டையர்- உறையுமுது

286 குன்றுதொழப் போகுங்கால் கூடலையாற் றூர்வழியீ
தென்றுபர மேச ரெதிரழைக்கச் - சென்று

287 வடிவுடையென் றோதி வளரறமெண் ணான்கும்
படிமிசையோம் பும்பெரிய பாவை-இடமுடையார்

288 பேரா யிரம்பரவிப் பெம்மா னருள்பொன்பன்
னீரா யிரங்கொ ளிருநிதியர் - சீரார்பொன்
24
289 அத்தனையு முத்திரையிட் டாரூரிற் சேர்த்திடென்று
முத்தநதி பால்விடுத்த மூர்த்தியார் - பத்தர்

290 உடம்பூர வின்னமுத மூட்டும் பெருமான்
கடம்பூரிற் காட்சிதரக் கண்டே-யடைந்தார்

291 வினைதீர்க்கும் புள்ளிருக்கு வேளூரைப் போற்றி
நினைவார்க்குப் பேரின்ப கேருங்-கனகமணி

292 மன்றினடங் கண்டு மடித்தாடும் பாவியம்பிக்
தென்றிருவா ரூர்புகுந்து செங்கமலந் - துன்றுங்

293 கமலா லயநடுவிற் கண்டவர்கள் போற்ற
அமரர்பூ மாரிசொரிந் தார்ப்பக்- குமரியெங்கள்

294 அன்னை பரவை யகமகிழ வாற்றிலிட்ட
பொன்னை யழைத்த புலவர்பிரான்- பின்னர்

295 திருக்குருகா வூருக்குச் செல்லும் வழியில்
இருக்குமுத னான்களவைக் கெட்டார் - பெருக்கமுடன்

296 கட்டமுத மூட்டக் களைதீர வுண்டு தமக்
கிட்டவுண வோடுவந்தா ரீசரெனத் - திட்டமிட்டு

297 இத்தனையா மாற்றை யறிந்திலே னென்றியம்பி
அத்தனையே போற்று மதிசயத்தார் - பத்தி

298 புரிகழுகுக் கன்றளித்த பொற்கிரியைப் போற்றி
எரியனன்மா னேந்துகரத் தீசர்- தெருவிலிரந்

299 தூட்டுத் திருவமுதுண் டும் முதுவா யோரியென்ற
பாட்டுரைத்த கச்சூர்ப் பரிசாளர்-நாட்டிற்

300 பதிகளுக்குள் மிக்க பழங்காஞ்சி மாந்தர்
எதிரழைக்க வாங்கே யினிதுற் - றதிக்

301 நலமருளு மேகம்ப நாதர்திருப் பாத
மலாதனைப் போற்றி வணங்கி-யுலகீன்ற

302 காமாட்சி யம்மை கழல்போற்றித் தண்டமிழிற்
பாமாலை சாற்றிப் பணிந்தோங் - கோமானப்

303 பக்கத்தின் மேவும் பதியனைத்துஞ் சேவித்துத்
திக்கனைத்தும் போற்றுந் திருத்தலமாம் - நக்கர்

304 மருவுதிருக் காளத்தி மாமலைகண் டுள்ளம்
உருகிதிருப் பாசுரங்க ளோதி- வருபகலோர்

305 மூவிரண்டின் மூவா முதல்வன் பதமடைந்த
கோவிரண்டு தாள்தலைமேற் கொண்டவரைச்- சேவித்

306 தமலன் பருப்பதத்தை யங்கிருந்தே போற்றிக்
கமலவயல் சூழுமொற்றி கண்டே - விமலையொரு

307 பாகத்தி யாகர் பதம்போற்றி யன்னவர்பாற்
போகத்தை யாசித்துப் பூசுரர்கள்-யாக

308 மிகநிகழ்த்தச் சங்கிலியா மென்றிருவைப் பூவார்
மகிணிழலில் வேட்டமண வாளர்-புகழார்

309 திருவாரூர் செல்லத் திருவுளங்கொண் டொற்றிப்
பெருமானைப் போற்றிப் பிரிந்தே - வருவழியில்

310 கண்பார்வை குன்றிடவுங் கைக்கூன்று கோலொன்று
வெண்பாக்கத் தாரிடங்கொள் மேதகையார்- பண்பார்

311 புனிதவதி யாரென்றிப் பூதலத்தார் போற்றும்
வனிதா மணிக்குயர்ந்த வாழ்வு-இனிதளித்த

312 கர்த்தர் திருவாலங் காடு தொழுதுமுத்தா
முத்தியென்ற பாடன் மொழிந்துலகோர் - நத்துதிருக்

313 கச்சிப் பதிவாழ் கடவுளிடக் கண்ணருள
மெச்சிப் பதிகம் வியந்தோதி - யிச்சகமேல்

314 மெய்யர்திரு மன்றம் விளங்கா வடுதுறைவாழ்
பையாவப் பூணர் பதம்பணிந்தே - தெய்வதிருக்

315 குற்றாலங் கண்டு குளத்தாடி நோய்தீரப்
பெற்றார்வங் கொண்ட பெருந்தகையார் மற்றார்வம்

316 மீதூர மின்னுமா மேகங்க ளென்றோதி
வேதேசர் தாள்போற்று விற்பன்னர் - பூதலமேல்

317 ஒப்பேது மில்லா வுயர்திருவா ரூரடைந்து
முப்பார்வை கொண்ட முதல்வாவென்-அப்பாவென்

318 அன்னையே மீளா வடிமையுமக் கேயாளாய்
என்னவே யோதி யிறைவர்திருச்-சன்னதிமுன்

319 நின்று பெருமானே நின்சேவை காணக்கண்
ஒன்றுளது காணாதின் னொன்றுமருள் - என்றிறைஞ்ச

320 வன்மீக நாதர் வருகவென் றோழாநீ
என்மீது கொண்ட விணையிலன்பாற் - சொன்மீறி

321 கண்ணை யிழந்தாயக் கண்ணிதுபா ரென்றுவலக்
கண்ணருளப் பெற்றவருட் கண்ணழகர்-பெண்ணரசாம்

322 மங்கை பாவை மனப்பிணக்கை மாற்றிவரச்
சங்கரனைச் சந்துவிட்ட சற்சதுரர்-திங்கள்

323 வதனப் பாவைதிரு மார்பிருகப் புல்லி
மதனவிளை யாட்டயின்ற மாறர்-புதனேர்

324 கலிக்காமர் கோபக் கனலாய சூலை
வலிக்காம லங்கெழுந்த வள்ளல் - புலிக்காலர்

325 பார்க்கும் படிநடிக்கும் பாதச் செழுஞ்சிலம்பங்
கார்க்குமொலி கேட்டே யமுதருந்துந்-தீர்க்ககுண

326 வீரர் மலைநாட்டு வேந்தர்பல வேந்தர்தொழுஞ்
சோர் பெருமான் றிருத்தோழர்-சோர்

327 பெருமானுஞ் சோழர் பெருமானுந் தென்னர்
மருமானுந் தாமும் மதுரைப் - பெருமானார்

328 சிற்றடியைப் போற்றியுமத் தென்னாட்டி லீசருறை
மற்றதலம் யாவும் வணங்கினவர் - துற்றுபுகழ்

329 கானப்பேர் காளை கனவி லுரைத்ததுபோல்
ஞானப்பா நன்கிசைத்த நாவலர்கோன்-தேனப்புங்

330 கொங்கார் புறவங் குளிரிரா மேசுரம்வாழ்
கங்கா தரற்பொற் கழல்போற்றி - யங்கிருந்தே

331 கீர்த்தியார் தென்னிலங்கைக் கேதீ சுரமதனைப்
பார்த்துப் பதிகஞ்சொல் பாவாணர் -மூர்த்தியார்

332 எண்ணெண் விளையாட் டிழைத்ததிரு நாட்டைவிட்டுத்
தண்ணென் புனனாடு தானடைந்தே - புண்ணியமார்

333 பஞ்சநதங் கண்டையர் ஒலம் பகரக்கேட்
டஞ்சலித்துப் போற்று மருளாளர் - விஞ்சுபுகழ்

334 சேரர் பெருமான் றிருமுன்னர் நின்றேதம்
ஊரணுக வேண்டவதற் கொப்பியவர்-பேருலகில்

335 மாடப் புறாவினமும் வல்லூறுங் கூடியிரை
தேடப் பொதுநெறியார் செல்வமலை - நாடரெதிர்

336 வந்தழைக்கச் சென்றுதிரு வஞ்சைக் களநாதர்
சுந்தரப்பொற் றாள்துதித்த சொல்லுழவர் - மந்தரநேர்

337 வேழமேல் வெண்குடைக்கீழ் வீற்றுப்பின் வெண்கவரி
தோழர் சுழற்றிவரத் தொண்டரெலாஞ்- சூழநகர்

338 தன்னைவலஞ் செய்தரசர் தம்மா ளிகையடைந்து
பன்னலம்பெற் றங்கிருந்த பாவாணர்- பின்னர்திருத்

339 தோழர் கரிபரிதேர் தொண்டர்நிதி நல்கிமத
வேழமே லேற்றி விடையளிப்பச்-சூழடியார்

340 போற்றத் திருமுருகன் பூண்டியடைந் தப்பதியில்
வீற்றபரன் றாள்போற்றி வேடுவரால்-தோற்றபொருள்

341 மீட்டுதிருப் புக்கொளியூர் மேவி யழுகையொலி
கேட்டுமனத் தோர்ந்து கிருபையுடன்-நாட்டில்

342 உரைப்பா ருரையுகந் துள்கவல்லா ரென்றே
அரைக்கா டரவ ரருளால்-கரைக்கான்

343 முதலைதனைக் கூவி முதுகுரவர் போற்ற
மதலைதனை மீட்டளித்த வள்ளல் -ம தலையுடன்

344 பொற்பா ரவிநாசி புக்கிறைவர் தாள்போற்றி
நற்பாட னன்கிசைத்த நாவலர்கோன் - இப்பாரில்

345 அஞ்சலென்ற சொல்லு மடையாத் திருக்கதவும்
பஞ்சமற நன்னிதிகள் பர்வதம்போல் - விஞ்சுந்

346 திருவாரூர் புக்கிறைவர் செஞ்சரணம் போற்றி
பரிவாரத் தோடும் பரவை - திருவீடு

347 புக்கங் கடியர்தொழப் பூரிப் புடனிருந்தார்
சொக்கத் தமிழ்பாடுஞ் சுந்தரர்தாம் - திக்கனைத்துங்

348 கொண்டுதொழு மாரூர் கொடிமாட வீதியினிற்
கண்டு தொழுதுலகோர் காட்சிபெறத் - தொண்டரினம்

திருச்சாந்து.
349 போற்ற மதிமகரம் பூசத் திருநாளில்
ஏற்றிரதத் தோர்நா ளிவுளியின்மேல் - வீற்றோர்

350 பொழுதொருநாள் வேழம் புருடரத மூன்று
பொழுதொருநாள் பூந்தேரோர் போழ்து - செழுந்தாளப்

351 பல்லக்கில் வீற்றுப் பவனிபோந் தொன்பதெனும்
நல்ல திருநாளில் ஞாயிறுமேற் -கெல்லை

352 அடையப் பசுங்கழைவில் லங்கசவே ளங்கைப்
படையைப் பொருதழிக்கும் பண்பார் - தடநெடுங்கண்

353 மின்பரவை யோடமளி வீற்றனங்கப் போராடி
யின்பநுகர்ந் தானந்த வின்றுயில்கொண்-டன்பர்திருப்

354 பள்ளியெழுச்சி பகரத் துயினீத்துக்
கிள்ளி யனபாயன் கீர்த்தியார் - வள்ளல்

355 காத்தால் திருத்தயிலக் காப்பணியப் பெற்று
தரத்தா லுயர்வேப்பந் தாரான் - கரத்தால் தன்

356 தென்பொதிய நல்குந் திருச்சந் தனக்காப்பும்
பொன் பொலிபல் காப்புமிட்டுப் போற்றவே -யன்பார்

357 திருத்தக்க தோழராஞ் சேரர்பிரான் வாச
மருத்துநீ ரேழ்நதியின் மாநீர் - பொருத்தமுடன்

358 ஒன்றொன்றாய் நன்றாட்ட வாடி யுவகையுடன்
அன்றொருநாள் நாகைசட்டை யப்பர்தமக் - கென்றளித்த

359 வெண்பட் டரைக்கணிந்து வில்வெட்டில் வெண்டாளப்
பண்பிட்ட குப்பாயம் பார்த்தணிந்தே - கண்பொதிந்த

360 நெற்றிக் கடவுள் நெடுமாட வாரூரிற்
கற்றிற் குயிரளித்த கண்ணாளர் - புற்றிடங்கொள்

361 அத்த ரளித்தவிழை யாயிரம்பொன் பெற்றவுயர்
உத்தரியந் தோண்மே லுலவவிட்டு - முத்தின்

362 ஒளியார் திருவெண்ணீ றொண்ணுதலிற் பூண்டு
தெளிவார் நறுந்திலகந் தீட்டிக் - களிகொளன்பர்

363 காட்டு நறும்புகையுங் கற்பூ ரமுமேன்றங்
கூட்டு மமுதடைக்கா யுண்டுவந்தே - கோட்டாசை

364 அம்பொற் சிலைவளைத்த வாடகமன் றாரளித்த
செம்பொற் சிலம்பு திருத்தியிட்டே - யிம்பர்

365 துரையாங் கடம்பவனச் சொக்களித்த பைம்பொன்
அரைஞா ணரையிலணிந் தான்றோர்-உரையாடும்

366 சொற்கடக மாமதுரைச் சோமசுந்த ரேசாருள்

367 தன்மீ திரங்கையர் தந்தருவ ரத்தினத்தாம்
மின்மோ திரங்கை விரற்கணிந்தே - நன் ைமதிகழ்

368 மாயூர மேயவிறை வன்கொடுத்த மாணிக்கக்
கேயூரம் வாகு கிரிக்கணிந்தே - தாயாய்முன்

369 வந்தடியாள் தன்கருப்ப வாதனைத்தீர்த் தாண்டவிறை
தந்தநவ ரத்ன சரப்பளிபூண் - டிந்திரனும்

370 விண்ணவரு மண்ணவரு மிக்கோருந் தக்கோரும்
பண்ணவகும் போற்றும் பழமலைவா - ழண்ணலருள்

371 முத்துச் சரமு முழுவயிரப் பொற்பதக்கக்
கொத்துச் சரப்பளியுங் கொண்டணிந்தே - பத்தியுடன்

372 மண்டலம்போற் றேகம்ப வாணரருள் மாமகர
குண்டலமு மேன்முருகுங் கொண்டணிந்தே - யண்டர்புகழ்

373 ஆணிக் கனகசபை யாரளித்த வொப்புயர்வில்
மாணிக்க க்ரீட மகிழ்ந்தணிந்தே - பூணணிகள்

374 அத்தனையும் பூண்டுபத காணிக்கை யாமிதெனப்
பத்தரிடு பூண்கள் பலவணிந்தே - நெற்றியினில்

375 சேரர்பிரான் கிள்ளி செழியனிவர் தங்கரத்தால்
வீரபட்டம் பூண்டு விரைமலரின் - ஆரவடம்

376 பூண்டு சடையர்திருப் பொன்னங் கழல்போற்றி
யாண்டுமிசை ஞானிக் கஃதாற்றி - நீண்ட

377 புகழாரூ ரம்மான் புனைமலர்த்தாள் போற்றி
மகள்சிங் கடிவணங்க வாழ்த்தி -யகமகிழ்கால்

378 செம்பொற் பவளத்தாற் செய்த திருத்தேரில்
அம்பொற் றவிசிட் டலங்கரித்தே - வெம்பரிகள்
379 எண்ணிரண்டு பூட்டி யிடபக் கொடியதனை
விண்ணிரண்டு சாணளவின் மேனாட்டி - வெண்ணிறத்த
31
380 · பூச்சக் கரக்கவிகை தாங்கப் புனனாடன்
மாச்சக் கரமதனை மாச்செண்டால் -ஒச்சியகோ

381 வெண்சா மரஞ்சுழற்ற மேல்விருதோ டாலவட்டம்
விண்சா ணளவில் விளங்கவிட்டே - எண்சாரும்

382 சாரதியாய் வீற்றுச் சவுக்குகரத் தேதாங்கி
சீரதிகம் வாய்ந்த திருத்தோழர்-தோதனை

383 கொண்டுதிரு முன்னர் நிறுத்தக் குளிர்கண்ணால்
கண்டுவகை பூத்துக் கனிவோடும் - வண்டலம்பு

384 தாரசைய முத்துச் சாந்தா வடமசையப்
பாரசையப் பொன்னம் பதந்தூக்கித் - தேரதனில்

385 இட்டா ரெழிலா யமர்ந்தா ரிமையவர்கள்
மட்டார் மலர்மா மழைபொழிந்தார்-பட்டார்

386 இடையாள் பரவை யிசைஞானி யம்மை
சடையர் முனையரையர் தாமும் -புடைசூழக்

387 கோதின் மிழலைக் குறும்பர் கலிக்காமர்
பூதியணி கோட்புலியும் புத்திரியும் - ஓதுசிவ

388 பத்தர் பலரும் பரிந்து புகழ்பேசி
தத்த மிரதந் தமிலேறச் - சுத்தத்

389 தமிழ்தேர் புலவர்குழாந் தண்டிகைக ளேறி
யமிழ்தார் மதுரகவி யாங்கே - குமுறிவரத்

390 தொண்டர்விரு தெச்சரிக்கை சொல்லித் துதிபாடிக்
கொண்டிரண்டு பாலுங் குழுமிவா - அண்டங்

வாத்தியம்.
391 கிடுகிடுக்கக் கட்செவிகள் கேட்டு வெருவித்
துடிதுடிக்கத் தக்கை துடுமை - படகம்

392 கரடிகைநி சாளமிடக் கையுடுக்கை பம்பை
முரசு குடமுழா மொந்தை - விரசுசெய

393 பேரிகைத டாரி பெரும்பறைமற் றேனைவித்
தூரியங்க ளார்ப்பத் தொடுகடலின் - பேரொலியில்

394 நாகசுரந் தாரை நலமார் மகரயாழ்
காகள மங் கொம்பு களினீட்டம் - சீகரமார்

395 பொன்னங் குழல்தம் புருநல் வலம்புரிபல்
சின்னங்க ளார்ப்பச் சிவபுகழாம் - பன்னு தமிழ்

396 நன்று பகர்ந்து நமப்பார்வ தீபதே
என்று மரகரா வென்றுபலர் - துன்றிவரப்

பவனி.
397 பொன்னிரதந் தெய்வதிருப் பூசைசெயப் பெற்றெழிலாய்
நன்னிமித்த நோக்கி நடக்குங்கால் - என்னையொரு

398 வாசகத்தா லாட்கொண்ட மன்னுபுகழ் மாணிக்க
வாசகரும் பொங்குதமிழ் வாழவந்த- பூசுரரும்

399 என்னப்ப னென்றே யிறைவர் திருவாக்கால்
பன்னத் தவம்புரிந்த பண்டிதரும் - அன்னை தமக்

400 கில்லா முழுமுதல்வ ரென்னம்மே யென்றழைக்க
நல்லாற்றிப் பேறுபெற்ற நாயகியும் - இல்லாடன்

401 சூளா லிளமை துறந்திறைவர் தாள்போற்றி
மீளாப் பதமடைந்த மேலோரும் - வாளால் தன்

402 செல்வ மகவைச் செகுத்துப் பொடித்தரற்கு
நல்ல விருந்திட்ட நல்லோரும் -கல்லிதென்று

403 தன்றலையைக் கொய்து தலைவன் றனையறிந்து
பொன்றலைகொள் புத்தர்குலப் புண்ணியனும் -நின்றே தன்

404 கண்ணைப் பிடுங்கிக் கடவுள்திருக் கண்ணிலிட்டு
வண்ணப் பதமடைந்த மாதவரும் - பண்ணன்மொழி

405 மெல்லிதனைக் கோரும் விமலர்க் கதையளித்து
யெல்லையில்சீர் பெற்ற வியற்பகையும் - நல்லமகள்

406 கற்றைதனைக் கொய்து கடவுள்கழல் மீதுவைத்து
சிற்றம் பலவரடி சேர்ந்தோரும் - கற்றவர்கள்

407 போற்றுந் திருநாளைப் போ வாரும் புண்ணியத்தால்
ஆற்று மணலிலிங்க மாக்கியே - போற்றிடுங்கால்

408 கண்டித்த தாதை கழலதனைக் கைத்தண்டால்
துண்டித்து வீடுபெற்ற தூயவரும் - பண்டானைப்

409 போற்றியு நேசித்தும் பூசித்தும் பொங்குபுகழ்
சாற்றியுஞ் சாற்றுந் தவமிழைத்தும் - ஏற்றமூர்

410 அத்தனடி நீழ லடைந்தங்கு வாழ்சீவன்
முத்தரா மெண்ணற்ற முன்னோரும் - பத்திபுரி

411 தொண்டர்க் கிரங்குமிளந் தோகையோர் பங்குடைய
கண்டங் கரிய கரும்பதுவும் - தொண்டருக்கு

412 முந்தருளு வேழ முகமுடைய முன்னவரும்
கந்தரும்பல் பூத கணத்தவரும் -நந்தி

413 கணத்தவருந் தேவ கணத்தவரு மேக
வணத்த கருணை மலையும் - மணத்தமலர்

414 மேலவரும் விண்ணவர்க்கு மேலவரு மட்டதிக்குப்
பாலகரு மெண்ணரிய பண்ணவரும் -நீலநிறச்

415 சுந்தரியும் பொன்னிகலைச் சுந்தரியு - மேனையரும்
தந்த மரபிரதந் தாங்கடவி - யந்தரத்தில்

416 புக்கருளித் தெய்வப் புதுமா மலரின்மழை
மிக்கருளி நல்லாசி விள்ளவே - தக்கபுகழ்

417 சோர்பிரான் றூண்டுந் திருத்தேரில் நம்பியா
ரூரர் பவனிவா லோர்ந்துதிரு -வாரூர்வாழ்

418 மக்க ளவரவர்தாம் மன்னுமனை சுத்திபண்ணி
தக்க வலங்காரந் தானிறுவி - பக்கமெங்கும்

419 பூரண கும்பம் பொலிவித்து மாமகர
தோரண மெங்கெங்குந் தூக்கியே - சீரிணங்கு

420 கன்னல் கதலி கமுகழகாய் நாட்டிசிவ
சின்னமங்கு நாட்டிச் சிவபுகழாம் - பன்னு தமிழ்

421 பாடி மகிழ்ந்து பணிந்து பரவிக்கொண்
டாடி யெதிர்கொள்ள வங்கிரதம் - ஒடிடுங்கால்

422 சீரூ ரணிமாடச் செல்வபுரி சீவபுரி
நீரூர் மருதம் நிறைந்தபுரி - பேருலகில்

423 முன்கமலை நோன்பு முயன்றுநலம் பெற்றபுரி
தென்கமலை யென்றியம்பு தீர்த்தபுரி - நன்குதினம்

424 பத்திபுரி தொண்டர் பரவும் புரிசீவன்
முத்திபுரி வன்மீக மூர்த்திபுரி - சத்தியநன்

425 னீதி விளங்குபுரி நீண்டபுகழ் கொண்டபுரி
வீதி விடங்கர் விளங்குபுரி - ஆதி

426 மனுநீதி கண்ட வளவபுரி யென்றே
யனுதினம்யாம் போற்றுதிரு வாரூர்-தனின்மேவும்

427 மக்களுமெண் ணேழ்தேச மானிடரு மாதவத்தான்
மிக்கவரு யாரு விரைந்தங்கே - புக்கு

428 கருக்கொண்மூப் போலுங் கவிழ்ந்தே திரண்டு
நெருக்குதலாற் சேட னெளிந்து - வெருக்கொள்ளக்

429 கூடி மகிழ்ந்துதிருக் கூத்தாடிக் கோதில் புகழ்
பாடி விடையூர் பரமனே - நாடி

சின்னம்.
430 வலியத் தடுத்தாண்ட வன்றொண்டர் வந்தார்.
மலைசிலைகொண் டார்தோழர் வந்தார் - உலகறியச்

431 செங்கலினைப் பொன்னாக்குஞ் செந்நாப் புலவர்வந்தார்
மங்கையிசை ஞானி மதலைவந்தார்-எங்கள்

432 சடையர் புரிமா தவக்கொழுந்து வந்தார்
குடகா விரியின் குளிர்நீர் - மடைபாயுக்

433 தண்டலைசூழ் கோளிலியெந் தத்துவர்பொற் றாள்போற்றிக்
குண்டையூர் நெற்குவைகொள் கோவந்தார் - தெண்டிரை

434 ஆற்றிலிட்ட பொற்குவையை யாரூர்க் குளத்தானைப் [யார்
போற்றி யெடுத்த புலவர்வந்தார் - சேற்றுத்

435 தடமுதலை யுண்ட தனையனைமீட் டீன்ற
மடவரல்பா லீந்தகோ வந்தார்-புடவிதொழும்

436 மங்கை பாவை மகிழுமண வாளர் வந்தார்
சங்கிலிதோள் சேருஞ் சதுரர்வந்தார் - பொங்குபுகழ்

437 சோர்பிரான் றோழர்வந்தார் சிங்கடியின் றாதைவந்தார்
ஆரர்பிரான் போற்று மடிகள்வந்தார்-மேருவை முன்

438 செண்டா லடித்தோன் றிருமைந்தன் போற்றிதினங்
கொண்டாடும் பொற்பாதக் கோவந்தார்-கண்டுமொழி

439 மங்கைபா கத்து மகதேவை நள்ளிருளில்
நங்கைபாற் றூதுவிட்ட நம்பிவந்தார் - பொங்குபுகழ்

440 சுந்தர மூர்த்திவந்தார் சொல்லே அழவர்வந்தார்.
செந்தமிழுக் கார்வமருள் சீலர்வந்தார் - அந்தமில்சீர்

441 நாவலூ ரையர்வந்தார் நம்பியா ரூரர்வந்தார்
மூவர்கோ வைப்பாடு மூர்த்திவந்தார் - ஒவில்சீர்

442 நங்கள் பெருமாட்டி நாகமருள் சீமாட்டி
கொங்கை யமுதூட்டிக் கோதாட்டப் - பொங்கு தமிழ்

443. வாழச் சிவசமயம் வையகத்தி லெங்கெங்குஞ்
சூழப் பிறந்த சுடர்க்கொழுந்து - மாழ்கடலிற்

444 கற்றூண் மரக்கலமாய்க் கொண்டு கரையேறப்
பெற்றார்வங் கொண்ட பெருந்தகையுஞ் சொற்ற

445 திருமுறையா றோடு திகழுமே ழென்று
வருமுறையோ தும்புலவர் வந்தார் - பெருமைசால்

446 சைவசம யக்குரவர் தாம்வந்தார் வந்தாரென்
றைவகைய சின்னங்க ளங்கொலிப்பத் - தெய்வமலர்க்

குழாங்கள்.
447 கண்ண னுலகக் கனிமொழியா ருங்கமலத்
தண்ண லுலகத் தரம்பையரும் - விண்ணுலகக்

448 கன்னியருங் கிம்புருடக் காந்தையரும் நாகரிளம்
பன்னியருஞ் சித்தரிளம் பாங்கியரும் - கின்னரர்தம்

449 மெல்லியரும் பண்ணவர்த மின்னாருங் கந்தருவச்
செல்வியரும் ருத்திரர்தந் தேவியருங் - கொல்லயினேர்

450 கூர விழியாருங் கூங்குயில்போல் தேன்மழலை
ஈர மொழியாரு மின்னிரச - மார்கருப்பு

451 வின்னேர் நுதலாரு மின்னே ரிடையாரும்
அன்னே ரளகத் தழகினருந் - தென்னையிளம்

452 பிஞ்சைப் பொருவும் பெருத்த தனத்தினரும்
பஞ்சைப் பொருவும் பதத்தினருங்-கஞ்சதடத்

453 தன்ன நடையினரு மாடுங் கலாபமயில்
என்னவிளஞ் சாயலின ரெல்லாரும் - பன்னிறத்த

454 தண்ணம் புனலார் தடங்கடல்சூ ழம்புவியின்
வண்ண மகளிர் வடிவெய்திப் - பெண்ணையிடங்

455 கொண்டார் திருத்தோழர் கோலத் திருவுலா
கண்டார்வங் கொள்ளக் கனிவோடுங் -கொண்ட

456 கலைகளைந்து வண்ணக் கலையணிந்து பொற்பார்
முலைமலையை வாரான் முடுக்கிச்-சிலைநேர்

457 திருப்புருவத் திற்றிலகந் தீட்டிமத வேளின்
கருப்புவில்லிற் பூட்டுங் கணைநேர் - நெருப்பவிழிக்

458 கஞ்சனங்கள் தீட்டி யணிபணிய லாமணிந்து
கஞ்சனையிற் றம்மழகைக் கண்டெழுந்தே - மஞ்சுவரக்

459 கண்ட மயில்களெனக் காமரதங் கண்டுவகை
கொண்ட விளங்குயிலின் கூட்டமென - வண்டுபடி

460 வேரிக் கயத்தறலின் மீதலையைப் பார்த்துமனம்
பூரிக்கும் நல்லெகினப் புட்களெனச்-சீராவில்

461 திவருந் தென்ற லுவப்பாற் செழுங்கனியைக்
கோதிவிழை யாடுகிளிக் கூட்டமெனத் - தாதிவருங்

462 காவிற் புதரசையக் கண்டுகளித் தங்குமிங்குந்
தாவித் திரிமான் றளங்களென - மாவேழ்கொள்

463 தேரின் வரவறிந்த செந்தா மரைமலரைச்
சாரி வருமளியின் சங்கமெனத் -தூரதனைப்

464 பற்றிவருந் தெய்வப் பலவி னறுங்கனியைத்
துற்றிவந்து மொய்ப்போர் தொகுதியெனக் - கற்றைமதி

465 தன்னை வளைப்பதற்குத் தாரகையெ லாமெழுந்த
தென்னலா நீர்மையினி லெம்பெருமான் - மன்னுதிரு

466 வாலயத்தி லவ்வா லயத்தளத்தி லத்தளமேற்
கோல மருவுதிருக் கோபுரத்தில் -ஞாலத்தார்

467 மாடத்தின் மாட மதின்மேன் மதிற்சுவரிற்
கூடத்திற் கூடக் கொடுங்காலிற் - கோடைநிழற்

468 பந்தல்களிற் பந்தற் பசுங்காலிற் பந்தரின்மேல்
விந்தைகளில் விந்தை வெளிப்புறத்தில் - மந்தை

469 தெருவிற் றெருநடுவிற் றிண்ணைகளிற் றிண்ணைக்
கருகி லணியா டாங்கிற் - றிருவாரும்

470 கொட்டகையிற் கொட்டகைமேற் கூரைகளிற் கூரைபொற
நட்ட நெடுங்காலில் நற்கான்மே -லிட்டநெடும்

471 விட்டமேல் விட்டத்தின் மேற்காலிற் காலிநிறை
பட்டிகளிற் பட்டிப் பரணிகளில் - மட்டாரும்

472 பூந்தருவில் வானிற் பொலிமகர தோரணத்தில்
மந்தருவிற் பல்லவத்தில் மற்றிடத்திற் - போந்து

473 நெருக்கமாய் வீற்றிருந்தும் நின்றிருந்தும் கண்டோர்
வெருக்கொளுமா றெங்கெங்கு மேவி - யருக்கன்றேர்

474 என்னக் கழறிற் றறிவார் கடாவவரும்
பொன்னந்தேர் வீற்றுவரும் பொற்சுடரின் -மின்னலிடைப்

குழாமகளிர் கூற்று.
475 பட்டுருகு வாரும் பழிச்சிப் பணிவாரும்
கட்டுரைகள் பேசிக் கனிவாரு - மட்டில்லாப்

476 பூரிப் படைவாரும் பொன்னிரத மேன்மலரை
வாரிப் பொழிந்து மகிழ்வாரும் - ஊரிவரும்

477 தேரைப்பா ரென்பாரும் தேரூருஞ் சேவகரின்
சீரைப்பா ரென்று தெரிப்பாரும்-வீரக்

478 கழலைப்பா ரென்பாருங் காமர்பூந் தாமத்
தழகைப்பா ரென்றுமகிழ் வாரும் - தழல்காலும்

479 பூணைப்பா ரென்பாரும் பூண்பொலியுஞ் செம்மேனி
மாணைப்பா ரென்று மகிழ்வாரும் - ஆணழகர்

480 நோக்கைப்பா ரென்பாரும் நோக்கி லருளொழுகும்
போக்கைப்பா ரென்று புகழ்வாரும் - மாக்கவிஞர்

481 பக்கத் தமர்ந்த பரவையைப்பா ரென்பாரும்
இக்கலியி லாரிவர்க்கீ டென்பாரும் - மிக்கவா

482 னந்த மடைவாரும் ஞாலத் திதுகாறும்
இந்தவிழா வுக்கிணையே தென்பாரும் - கந்தமலர்ப்

483 பந்தெறிவா ரும்மதனைப் பற்றிப் பிடிப்பாரும்
நந்தெறிந்து பற்றி நகைப்பாரும்-உந்தி பறந்

484 தோடி நடிப்பாரு மோங்குந் தமிழ்ப்பாடல்
பாடி நடனம் பயில்வாரும்-சேடிகாள்

485 அல்வார் மிடற்றற் கபிடேகத் தேனிதனை
யெல்லாருங் கண்ணா லினி தருந்தீர் -சொல்லாரும்

486 ஆலால சுந்தரரென் றண்டபுவ னம்போற்றுங்
கோலா கலரிவரைக் கும்பிடீர்-மாலாதி

487 தேவர்தொழுந் தேவர் திருத்தோழ ராமிவரை
யாவருங்கண் டின்ப மடைந்திடீர் - பூவுலகிற்

488 சைவ சமயந் தழைக்கப் பிறந்த விவர்
மெய்வழியை யெல்லீரு மேற்கொளீர் - உய்வகையை

489 ஞாலத்தாற் கூட்டி நறுந்தமிழைக் காக்கவந்த
சீலத்தா சென்றிவரைத் தேர்ந்திடீர்- வேலொத்த

490 கண்ணீ ரிவர்நங் கலிதீர்க்க வந்தவரென்
றெண்ணீ ரிரைஞ்சிடீ ரென்றோதிப்-பண்ணீர

491 மென்மழலைச் சொல்லியர்கள் மென்கருப்பு வில்லேந்து
மன்மதனுக் காளாய் மருண்டேதம் - நன்மனதைக்

492 கொள்ளை கொளவோவிக் கோலத் துடனேயிவ்
வள்ளலிங்கு வந்த வரத்தென்பார் - பிள்ளைமதி

493 சூடு மரனார்தந் தோழ ரிவர்கம்மை
நாடுவரோ வென்பார்தம் நாயகியி - னூடலற

494 நஞ்சிவனைத் தூதேவும் நாடகத்தா ரோவிந்த
வஞ்சியர்தம் பாலிரங்கு வாரென்பார்-நஞ்சுண்டு

495 வானோர்க் கமுதீந்த வள்ளலார் தோழரிவர்க்
கேனோ கருணை யிராதென்பார்-மானோக்கி

496 யாமப் பரவைக் கணியாம் புயம்நமது.
தாமப் புயமுறிலென் தப்பென்பார் - மாமுதலை

497 உண்ட மகவுக் குயிரளித்த வள்ளனமைக்
கண்டிரங்கா தென்னே கணக்கென்பார் - தொண்டரிடப்

498 பிள்ளைப் புலால்வேட்ட பேயாண்டி தோழற்கு
வள்ளன்மை யெற்றால் வருமென்பார் - விள்ளடியார்

499 கண்களையப் பார்த்திருந்த கன்னெஞ்சர் தோழருளம்
பெண்களையோ நாடுமென்று பேசுவார் பண்கமழும்

500 தண்ணமுத மென்மொழியாள் சங்கிலிசே ரம்புயரம்
வண்ணமுலைக் கேனோ வராதென்பார்- பெண்ணென்றாற்

501 பேயிரங்கு மென்றுலகம் பேசுதே நம்பாலிச்
சேயிரங்கா தென்னே செருக்கென்பார்-ஆயிழையீர்

502 கட்டுக் கடங்காக் கடுங்கா தலைமூட்டி
விட்டுக் கடாவிரத வேகமதை - மட்டுப்

503 படுத்தலாம் வம்மினென்று பல்லோருங் கூடிக்
கடுத்தவுரை யாடிக் கலுழ்வார்- அடுத்தாலும்

504 கள்வரிவர் நம்மைக் கவனியார் போலுமென்று
விள்வர் தணியா விரகத்தால் - உள்ளந்

505 துடிப்பா ருடுத்தகலை சோரவதைக் கையாற்
பிடிப்பா ரிவரிலொரு பேதை - நொடிப்போழ்தில்

பேதை.
506 ஈரேழுலகை யினிதுவலஞ் செய்தவர் நேர்
போரே றுகளணுகாப் பூங்கலபம் - தாராரும்

507 மார்பிளைஞர் பூணா மருக்கொழுந்தா மக்குமார்
கூர்விழிகள் நாடாக் குறுந்தாளம் - சூர் தடிந்த

508 சேயிற் றிகழ்குமரர் தீண்டா வரும்பன்னார்
வாயிற் பிறவாத மாணிக்கம்- சேயருளப்

509 பூவி லணுகாப் புதுவண் டிளைஞர்களின்
நாவி லணுகா நவநீதம் - காவிலுலாம்

510 பூங்குயிலும் யாழும் புதுக்குழலும் நாணமுறத்
தீங்குதலை யாடுந் திருவாயாள் - ஒங்குநிலைக்

511 கண்ணாடி முன்னாடிக் கண்டு தனைப்பழித்தோர்
பெண்ணாடி னாளென்று பேதலிக்குங் - கண்ணாள் விண்

512 அம்புலியை யாடற் கழைத்துவர வில்லையென்று
வெம்பியதைச் சீறி விழுமுளத்தாள் - நம்பரமர்

513 நெற்றி விழியதனா னீறா னவன்கரத்திற்
பற்றி வளையாத பைங்கரும்பு - தெற்றிமிசை

514 வீற்று மகரந்தம் வீசிவருந் தென்றலிளங்
காற்று நுகர்ந்து களிகூர்வாள்- சாற்றுமரப்

515 பொம்மைக்கு நீராட்டிப் பொட்டிட்டுப் பட்டுடுத்திச்
செம்மையுறு சிங்காரஞ் செய்தேந்தி - விம்முமுலை

516 இல்லையெனக் கிப்பாவைக் கார்பால் கொடுப்பரென்று
சொல்லி மனதுமிகச் சோகிப்பாள் - நல்லுணவு

517 தத்தைக்கும் பூவைக்கும் தானூட்டி யேயவைவிள்
புத்துரைகேட் டுள்ளம் புளகிப்பாள் - சித்திரத்திற்

518 கண்ட பெரும்பூனை கைக்கிளியைத் தாவியதாய்
விண்டன்னை யாரிடம்போய் விம்முவாள் - கொண்டு தனைக்

519 காவற் புரிதாயர் காரளக மேற்சுரும்பை
நாவற் பழமென்று நத்துவாள் - ஆவலுடன்

520 சேடியர்கள் தம்மோடுஞ் சேர்ந்தாடி நின்று குதித்
தோடி விளையாட் டுவந்திடுவாள் - நாடிமணற்

521 சிற்றி லமைத்துத் திருவாயில் வைத்ததனைச்
சுற்றி விரற்கோலஞ் சோடிப்பாள் - துற்றுமணற்

522 சோறாக்கி நல்ல சுவைக்கறியீ தென்றுபல
கூறாக்கி நல்விருந்து கூப்பிடுவாள் - ஏறூரும்

523 வள்ள லடியார்தம் மாசின் மனம்போலும்
கள்ள மணுகாக் கருத்தினாள் - தெள்ளுதமிழ்ப்

524 பாப்புலவர் போற்றும் பதமுருக வேளே தன்
காப்புக் கடவுளென்று கைகுவிப்பாள் — மாப்பிளையும்

525 அன்ன குமரனே யாதற் கிரவுபகல்
பன்னித் தவமுயலும் பான்மையினாள் - தன்னைநேர்

526 சேடியர்க டம்மோடுந் தேவாரப் பாசுரங்கள்
பாடிக்கோ லாட்டம் பயிலுங்கால் - ஒடிவரும்

527 பொன்னந்தேர் முன்னர் பொலிமுரசின் பேரொலியுஞ்
சின்னங்க ளார்ப்புஞ் செவிமடுத்தே - யன்னைமார்

528 கண்ணே மணியேயெங் கான்முளையாய் வந்தவிளம்
பெண்ணேவா வென்றழைக்கப் பின்றொடர்ந்தே-விண்ணுலகு

529 தன்னை யளாவிவருந் தங்கத் திருத்தேரின்
முன்ன ணுகி முகமலர்ந்தே- சென்னிகாங்

530 கொண்டு பவனிவருங் கோவைக் குளிர்கண்ணால்
கண்டு குழைந்தடங்காக் காதலுடன்- தெண்டனிட்டே

531 இத்தேரில் யாரிவரிங் கேன் வந்தா ரென்றுமிக
வித்தாரத் தோடு வினவவே - கைத்தாயார்

532 நம்பியா ரூார் நமதுகுரு நாதரிவர்
தம்பிரான் றோழர் தடுமாறும் - அம்புவியோர்

533 மீட்சிபெறச் சைவம் விளங்கற் கெழுந்தருளிக்
காட்சிதர வந்த கருணாக-டாட்சமி தாம்

534 ஓராயென் றன்னைமாகரோதவென்னோ டாடுதற்குத்
தாரீ ரிவரையெனத் தாயார்மார்-யாராலுந்

535 தேடற் கரிய சிவபெருமான் றோழரைநீ
யாடற் கழைப்ப தழகலகாண்-பேடை

536 மயிலே யெமதருமை மாமகளே தெய்வக்
குயிலே யெனத்தாயார் கூற-அயிலேயும்

537 கண்ணிற் றிருமணிகள் காலக் கலுழ்ந்தவர் பூண்
தண்ணுற்ற தார்வாங்கித் தாருமென - வண்ணமலர்ப்

538 பூவையே கோகிலமே பொற்கிளியே சித்திரப்பொற்
பாவையே யாம்பெற்ற பாக்கியமே - தேவரெலாந்

539 தேடுந்தா ணோகத் திருத்தூ தனுப்புமிவர்
சூடுந்தார் கிட்டாதெஞ் சோபனமே- ஏடாரும்

540 செம்பதுமந் தூவித் தினமுந் தொழுவாயேல்
தம்பிரான் றோழர்பதம் சாரலாங்- கொம்பே

541 கவலற்க யாம்பெற்ற கண்மணியே நீநற்
றவமுயலா யென்றார்வஞ் சாற்றி - யுவகையுற

542 நற்றாயர் தேற்றிமனை நன்கடைந்தார் சுந்தரரூர்
பொற்றோவ் வீதிவிட்டுப் போன தப்பால் - மற்றோர்மின்

பெதும்பை.
543 கோக்குமர ரின்றைக்கோ நாளைக்கோ கொங்கரும்பிப்
பூக்குமல ரென்னப் பொலிபெதும்பை - நோக்கமோர்

544 மூன்றுடையார் பெற்ற முருகவே ளங்கரத்தில்
தோன்றுவே லன்ன சுடர்விழியாள் -தேன்றுருவும்

545 வண்டு பலகூடி வாய்விட் டிசைபாடிக்
கொண்டு குலவிடவுங் கொண்டலினங் - கண்டுபயங்

546 கொள்ளும் படிகருத்த கூந்தலாள் நல்லறிஞர்
விள்ளுந் தமிழிசையை வென்காணுங் - கிள்ளை

547 மொழியாள் செழுந்தாள மூரலாள் மூன்று
விழியா ரடிநீழல் மேவும் - வழிநோக்கும்

548 சிட்டர்களி னங்கைச் சிவலிங்கம் போற்சிறிது
முட்டிவரு மொக்கு முலையினாள் - கிட்டி வரும்

549 கோக்குமார் தம்மீட்டங் கோதண்ட மோவிதென்று
நோக்கிவெருக் கொள்ளும் நூதலினாள் - பூக்கணைகொள்

550 கன்னற் சிலைமாரன் கட்கடங்கா ளானாலும்
பன்னற் கிளவரசி பக்குவத்தாள்-முன்னர்

551 நரிப்பரிகொள் ளையர் நவிலென்னச் சாழல்
தெரித்தமட மானைநிகர் செல்வி - திருத்தரளப்

552 பல்லக்கி லூரும் பரசமயக் கோளரிமுன்
பல்லக்கி னாலிழைத்த பாவையனாள் - நல்லநெடு

553 மாட மிசை தவழு மஞ்சழகைக் கண்டுநடம்
ஆடவிசை கொள்ளு மழகுமயில் - ஓடிவருந்

554 தென்ற லுலவுதிருத் தெற்றிமே னன்கமர்ந்து
மன்றனுகர்ந் துள்ள மகிழ்பூவை - குன்ற நேர்

555 தோளாருங் காளையர்கள் சொல்லனங்க வேள்சரிதங்
கேளா தவள்போலக் கேட்டுணர்வாள் - நீளுலகில்

556 இன்ன தினிய திதுகொடிய தென்றுணரத்
தன்னை யுணருந் தறுவாயாள் - மின்னார்கொள்

557 நாண மடமச்சம் நல்லபயிர்ப் பென்னுமிவை
காணுந் தரஞ்சிறிது கைவந்தாள் - ஆணிக்

558 கனகக் கழங்குங் கதிரார் மணியின்
இனநற் கழங்கு மெடுத்தே - தன தருமைச்

559 சேடியர்கள் தம்மோடுஞ் சிங்கார மண்டபத்திற்
கூடியிருந் தாடிக் குளிர்மதியஞ்- சூடுமுடி

560 யத்த னெழுதவெமை யாளுடையார் வாய்மலர்ந்த
புத்தமுதப் பத்திரசம் பொங்கியெழ - முத்தி

561 தருவா சகமென்று தாரணியோர் போற்றுந்
திருவா சகமென்ற தேனைச் - சுருதி

562 வழியாழின் மீட்டி மனங்குழைந்து பாடும்
பொழுதடிக ளாரூரும் பொற்றேர்- கெழுமிவரக்

563 கண்டணுகி யன்னையருங் கண்ணனைய தோழியருந்
தெண்டனிடத் தெண்டனிட்டுச் சென்னிகரங் - கொண்டு

564பவனி வருவார்தம் பாதாதி கேசம்
உவகையுடன் கண்டுகனிந் தோர்பால் - சிவகாமி

565 என்ன விருக்கு மிளங்கொடியாள் யாரோவென்
றன்னை யரைவினவ வன்னையர்கள். -மின்னே

566 பரமசிவ வல்லி பணிப்பாங்கி யாணங்
குரவ ரிவர்மகிழுங் கொம்பாம்- பரவையென

567 என்னையுமவ் வாறே யிவர்பா லிருத்திடுமின்
அன்னையரே யென்றா ளதுசமயம் - மன்னுபுகழ்

568 சோர்பிரான் சாரதியஞ் செய்யநலம் பெய்துவரும்
தோகலப் பின்னடந்து தேவரீர்-பேருலகோர்

569 கண்டுதொழு தேமகிழக் காட்சிதர வந்தீர்யான்
கண்டுதொழு முன்போங் கணக்கென்னே - தொண்டரிடும்

570 பூந்தார் புனையவுலாப் போந்தீர் தமியாளென்
பூந்தார் புனையாமற் போவதுமேன் - வேந்தாமிச்

571 சேரர்க் குயிர்நேர் திருத்தோழ ரேயுமையான்
சேரற்கு நற்கிருபை செய்யீரோ-ஆரக்கு

572 பூண்டவருக் காட்செய்யும் புண்ணியரே யென்னை மதி
பூண்டவருக் காட்படுத்தப் போகாதோ - பாண்டியனாய்ப்

573 பூப்புரந்தார்க் காட்செய்யும் புண்ணியரே யென்னையுமப்
பூப்புரந்தார்க் காட்படுத்தப் போகாதோ- மாப்புலமை

574 கொண்டுகவி பாடிநலங் கொண்டீ ருமக்கெனையாட்
கொண்டுகவி பாடவருள் கூரீரோ-தொண்டர்க்குப்

575 பாட்டெழுதித் தந்தவர்க்காட் பட்டீரே நீரெனக்கோர்
பாட்டெழுதித் தந்தாற் படியேனோ - ஆட்டெடுத்த

576 அம்பலத்தார் தந்தோழ ரானீரே யென்னையுமவ்
வம்பலத்தார்க் காட்படுத்த லாகாதோ - கொம்பனையாள்

577 சங்கிலிசே ரம்புயத்துச் சற்குருவே நீர்பூணுஞ்
சங்கிலியே னும்மெனக்குத் தாரீரோ- திக்கணுதற்

578 பூவை பரவைநலம் பூணுவீர் போற்றிடுமிப்
பூவை பரவுநலம் பூணீரோ - தேவர்தொழுங்

579 குன்றவில்லார் தன்கிருபை கொண்டீரே யென்னையுமக்
குன்றவில்லார்க் காட்படுத்தக் கூடாதோ- வென்றுபல

580 பன்னிக் கலுழும் பசுங்கொடியைப் பாங்கியரும்
அன்னையருந் தேற்றி யகம்புகுந்தார் - பின்னொருத்தி

மங்கை
581 பூமங்கை நாமங்கை பொற்பார் சுரருலகக்
கோமங்கை போற்றுங் குலமங்கை - மாமங்கை

582 பாகப் பெருமானும் பாம்பணையா னும்மயனும்
மோகப் படுமங்கை மூவருந்தி- யாகமெனக்

583 கோரியதை நல்கிக் குணங்கொண்ட கொம்பைநிகர்
சீரியலுந் தெய்வீகச் செம்மங்கை - தாரியலுங்

584 கன்னற் றனுவைக் கரங்கொண் டுலகினருக்
குன்னற் கரியமய லூட்டுவிக்கும் - மன்னற்கு

585 வெற்றிக் கொடிநாட்ட வேயம் மதன்படைகள்
துற்றியெழுந் தேரனைய தோற்றத்தாள் - சிற்றுடுக்கை

586 தன்னடுவைக் கஞ்சத் தவிசன் றிருக்கரங்கள்
பன்னெடுநாள் செய்து பழகியபின்- இன்னடுவை

587 ஆக்கினா னோவென் நடலரிநேர் காளையர்கள்
கோக்கிக் களிகூர் நுசுப்பினாள்-பூக்குமயன்

588 அங்கை பழகற் கணிவரையிற் பன்னெடுநாள்
செங்கை பழகித் தெளிந்தேயிக் - கொங்கையினைக்

589 கண்டானோ வென்று கடகரிநேர் காளையர்கள்
கொண்டாடும் பொற்யார் குவிமுலையாள்- வண்டாடுஞ்

590 செய்ய கமலச் சிவந்த விதழொப்பாந்
துய்ய பவளத் துவர்வாயாள் - பெய்யுமழைக்

591 கண்ணா ளடற்காமன் கைவிற் புருவத்தாள்
தண்ணார் மதிநேர் தடநுதலாள்-விண்ணிற்

592 குலவு முகிலனைய கூந்தலாள் முல்லை
மலர்மொக் கெயிற்று மடமான் -உலகுபுகழ்

593 சித்தசநல் லீலை சிறிதே தெளிந்துளாள்
நித்த னடிமறவா நீர்மையாள் - முத்தமிழ்நூல்

594 கற்ற பெரியோர் கருதும் புலமையுளாள்
பெற்றவர்பால் குன்றாப் பிரேமையுளாள் - துற்றடுக்கேழ்

595 மாடத் தமைந்த மணிமண் டபமீது
கூடற் கடவுள் குதிரைமேல் - நாடறியத்

596 தோற்றிவர வெம்மடிகள் சொன்னதிரு வாசகத்திற்
சாற்றுத்திருப் பொன்னூசல் சாற்றியே - வீற்றருகில்

597 தந்நீழல் போலுலவு தாதியர்கை தொட்டாட்டப்
பொன்னூச லாடும் பொழுதிலே - நின்னூசல்

598 இப்பா லழிந்துவிடு மென்று மழிவிலாப்
பொற்பார் பதவிதரப் போந்துளோம் - நற்பாவாய்

599 என்னல்போ லாரூர ரேறிவரும் பொற்றேரின்
முன்னர்திருச் சின்ன முழங்கல்கேட்-டன்னையருந்

600 தோழியருஞ் சென்று தொழத்தொழுதா லங்காட்டி
யேழிசைய கீத மியம்பிநீர் - வாழியெனப்

601 பாடினாள் பாதம் பணிந்தாள் பரதாடம்
ஆடினா ளைய ரவயவத்தை - நாடியிரு

602 கண்ணாரக் கண்டாள் கனிந்தாள் மதனேவுந்
தண்ணார் மலர்விசிகந் தாக்கவுளம் - புண்ணாகிப்

603 பூணுங் கலைமறந்தாள் பொன்னம் பணிதுறந்தாள்
நாணந் துறந்தாள் நனவிழந்தாள் - ஆணழகர்

604 என்னையிவர் கொள்வாரோ வென்காதல் தீர்ப்பாரோ
அன்னையரே சொன்மினென்றா ளன்னையர்கள்- மின்னே

605 பரம சிவசமயம் பண்புபெற வந்த
குரவரிவர் மேற்காதல் கொள்ளேல் - அரனிடத்தாள்

606 பாங்கி பரவையெனும் பைங்கொடியுஞ் சங்கிலியாம்
பூங்குயிலும் போகிக்கும் போகமிதை - ஈங்கெவருந்

607 தீண்டற் கரிதாந் திருப்பாதஞ் சேரவெனில்
நீண்ட தபம் நீ நிகழ்த்தென்றே -ஈண்டு

608 மிகமதுர வாக்கால் விரகத்தை மாற்றி
யகம்புக்கார் புக்கா ரவர்தம் - முகநோக்கி

609 சற்றே பொறுபொறென்று சாற்றுதல் போல் சுந்தரரூர்
பொற்றோவ் வீதிவிட்டுப் போன தப்பால் - மற்றோர்மின்

மடந்தை
610 வண்டங் கொருகோடி வந்து குடிபுகுந்துக்
கொண்டங் கெழிலாய்க் குடையவே - தண்டேன்

611 அடங்குகவின் மிக்கூ ரலர்திருவிற் கோடி
மடங்குகவின் மிக்கூர் மடந்தை - படங்கொளராப்

612 பூணுஞ் சடிலப் புனிதர் திருமுடிமேற்
காணும் பிறைநேர் கவினுதலாள் - மாணிக்கப்

613 பாந்த ளணிவார் பணியார் புரமெரிக்கப்
போந்தெடுத்த வின்னேர் புருவத்தாள் - சேந்தன்

614 தடவரையும் வல்லவுணர் தாங்கிளையு மாளக்
கடவுசுடர் வேனேருங் கண்ணாள் - மடலாரும்

615 வள்ளைக் கருங்காதாள் வாய்முல்லை மெல்லரும்பாள்
தெள்ளமுத நாறுந் திருமொழியாள் -கள்ளவிழுஞ்

616 சண்பகப்பூ நாசியாள் சங்கக் கழுத்தினாள்
ஒண்பவள மன்ன வுதடுளாள் - பண்பாய

617 கச்சைப் பொருவுங் கலசக் குவிமுலையாள்
நச்சி வருமெகின நன்னடையாள்-பச்சைமயிற்

618 சாயலாள் சீதச் சலதமெனக் கூந்தலாள்
வேயனைய தோளாள் விரவுபுகழ் - நாயனார்

619 பற்றறுக்கப் பாடும் பரமர் திருக்கரங்கொள்
சிற்றுடுக்கை போலுஞ் செறியிடையாள் - நற்றவத்தார்.

260 எல்லா ரையுமோ ரிமையளவி லேமயக்குஞ்
சல்லாப மிக்க சதுரினாள் - மெல்லரம்பை

621 யன்ன தடையா ளதிபத்த ராண்டவர்க்கீ
தென்னக் கடலி லிடுவரால்-அன்ன

622 கணைக்காலா ளல்குற் கதிர்விடுமா ணிக்க
மணிப்பாம்பின் பையனாள் மாந்தர்க் - கணித்தாய

623 காமரச நன்னூற் கணிக்குந் திறமையுளாள்
தேமதுரச் செந்தமிழ்நூல் தேர்ந்துளாள் - பூமலரின்

624 ஐங்கோ னிருபனர சாட்சி புரியக்கொள்
செங்கோ னிகராய செவ்வியாள் - கொங்கார்பைந்

625 தாதகிசூ டையர் தமதுகரத் தாலெழுத
வாதவூ ரெந்தைதிரு வாய்மலர்ந்த - சீதத்

626 தமிழமுதை வையந் தனக்குத்தன் வாயாங்
குமிழியா லூட்டிநலங் கொள்வாள்- உமைபாகர்

627 பொன்னடியைச் சற்றேனும் போற்றன் மறவாத
நன்னியமம் பூண்டொழுகு நன்மனத்தாள் - மின்னணிகள்

628 பூணழகும் யாக்கைப் பொலிவழகுந் தன்னிழலிற்
காண வழக்கொழுகுங் காந்தியாள்-பேணருமைப்

629 பாங்கியரே கேண்மினான் பஞ்சணையின் மேற்படுத்துத்
தூங்குகையி லங்கொருவர் சொல்லரிதா - யோங்கிவளர்

630 பொன்மோலி யம்மான் புனைகழற்குச் செந்தமிழிற்
சொன்மாலை சாற்றிடுநஞ் சுந்தரர்போற் - றன்மார்பிற்

631 கொந்தார் மலரலங்கற் கூத்தாட நின்வதனம்
இந்தா வெனப்பேசி யென்கனவில் வந்தார்நீர்

632 யாரென்றே னார்க்குமினி யாரென்றா ரெங்கோநும்
மூரென்றே னென்னைமட லூரென்றார் - நீரெந்த

633 நாடென்றே னன்மையைநீ நாடென்றார் யாதோ நும்
பாடென்றேன் றேவாரம் பாடென்றார் - ஆடுகிறீர்

634 வாதென்றே னன்றலதொவ் வாதென்றா ராட்கொளலெப்
போதென்றே னீபுனைபைம் போதென்கிறார் - சூதோ நுஞ்

635 சொல்லென்றே னீசர்புகழ் சொல்லென்றா ரையர்மனங்
கல்லென்றேன் பல்கலைநீ கல்லென்றார்- சொல்லீரோர்

636 பண்ணென்றேன் பாரதபம் பண்ணென்றார் காட்டீரோ
கண்னென்றே னஞ்சேநங் கண்ணென்றார் - பெண்ணென்

637 கூடிரென்றே னீறாகுங் கூடிதென்கிறார்கண்விழித்தேன்[னைக்
ஒடி மறைந்தா ருளத்துளார் - ஏடியிவர்

638 யாரோ வறியே னறிந்துறைமி னென்றாணற்
சீரோ தயமே திரவியமே - காரளக

639 வல்லியே திங்கள் வதனப் பசுங்குயிலே
மெல்லியே காம விசயமே - நல்லமுதச்

640 சொல்லியே கொஞ்சஞ் சுகமே மகமேரு வில்லி
வலிந்தாண்ட மேதக்கோர் - நல்ல

641 திருநாவ லூரர் சிவதோழர் நின்பால்
வருவார்நீ கோருவதை மானே- தருவார் நீ

642 கண்ட கனவின் கணக்கிதுகா ணென்னுங்கால்
கொண்டலன கண்டாருள் கொண்டவன்-றொண்டரூர்

643 திண்டேரங் கோடிவரச் சேடியர்க ளோடணுகிக்
கண்டே தொழுது கனிந்துவகை- கொண்டு

644 கனவே நனவாகக் கைகூடி வந்த
தெனவே மகிழ்வா ளிவளை - மனவாதை

645 செய்ய வடற்காமன் செங்கரும்பு வில்வாங்கித்
தெய்வ மலர்ப்பகழி சிந்தவே-மையலாய்ச்

646 சித்தங் கலங்கித் திடுக்கிட் டிவரெனக்கோர்
முத்தங் கொடுத்தென் முலைக்குவட்டிற்-றத்திவிளை

647 யாடாரோ கட்டி யணையாரோ வென்னையிவர்
கூடாரோ வென்னதரங் கோதாரோ- ஏடாரும்

648 பூமாலை யானிவர்க்குப் பூட்டேனோ பூண்டிவரென்
மாமா லினையகற்ற மாட்டாரோ-சோமாசி

649 மாறர் தமைவாழ வைத்தா ரிவர்திருவாய்த்
தேறலெனக் கோர்சிறிது சிக்காதோ- சீறுங்

650 கலிக்காமர் சூலை களைந்தார்க்கென் காதல்
வலிக்காம லாற்றன் மலையோ-நிலம் போற்றுங்

651 கோதின் மிழலைக் குறும்பர்க்கு வாழ்வருளிக்
நாதர் கிருபையெனை நாடாதோ - ஓதருசீர்

652 சிங்கடியா ரென்னுஞ் சிவநேசச் சுந்தரிபாற்
பொங்கு மருளெனக்குப் பொங்காதோ - செங்கமலம்
52
653 மல்குந் தடமுதலை வாய்மகவை மீட்டாரென்
நல்குரவை மாற்றவுளம் நாடாரோ - சொல்லீரென்

654 சேடியரே யென்றாள் செயலற் றவள்போலும்
வாடினாள் வாடிவிழா மன்மார்பி -னோடணைத்து

655 வெண்ணீறு சாற்றி விரகந் தனைமாற்றிக்
கண்ணீர் துடைத்துக் கரத்தேந்திப் பண்ணீர

656 மென்னறுஞ்சொற் பாங்கியரின் மேவினரெம் மாவியன்னார்
பொன்னிரத மங்குவிட்டுப் போயதப்பால் - இன்னொருத்தி

அரிவை
657. அங்கமலத் தண்ண லளப்பருநாட் பல்கோடி
நங்கையரை நன்காற்றி நன்றாகச் - செங்கை

658 பழகியதன் பின்கதிர்காற் பன்மணியீட் டத்தால்
அழகியிவ ளென்றாக் கரிவை - மழவிடைமேல்

659 ஆரோ கணிக்கு மமல ரிடத்தில்வளர்
சீரோ தயமன்ன செவ்வியாள் - நீரி தழி

660 பூணந்த காரி பொடித்துலகை நூறிடுங்கால்
காணந்த காரக் கருங்குழலாள் - வாணந்தன்

661 கண்மலர்கொண் டஞ்சக் காமவற்குத் தந்தவர்
பூண் தண்மதிக்கீற் றன்ன தடநுதலாள் - உண்மையிலார்

662 நீண்ட புரம்பொடிக்க நித்தன் றிருக்கரத்திற்
பூண்டபி னாகப் புருவத்தாள் - காண்டகுசீர்

663 பைகொண்ட நாகா பரணரிடம் பாண்டவன்முன்
கைகொண்ட பாசுபதக் கண்ணினாள் - பொய்கொண்டார்

664 புக்கபுரந் தூளாகப் பொன்னசல வில்வளைத்து
நக்கனகைத் தன்ன நகையினாள் - தக்கவர் நூல்

665 ஆயும் புலவ ரறையுந் தமிழமுதந்
தோயும் பவளத் துவர்வாயாள் - சேயதமிழ்

666 கற்குமிளம் பாலர்பூங் காவனத்திற் கண்டுவக்கும்
நற்குமிளம் போதன்ன நாசியாள் - பொற்கமலம்

667 மன்னுமெழிற் கூவ மருங்கிற் கொடியின் மிளிர்
கன்னி மலரன்ன கன்னத்தாள் - முன்னர்

668 இளங்குமர வேள்சூ ரிரிய முழக்குங்
களங்கமிலா சங்கக் களத்தாள் - விளங்குபுகழ்

669 ஆனாயர் செவ்வா யிதளுந் திருக்கரமும்
மேனா ணடம்புரிந்த வேய்த்தோளாள் - தேனாருங்

670 கோங்கி னரும்பிற் குவிமுலையாள் கொங்கைசுமந்
தேங்கி நுடங்கு மிடையுடையாள் - ஒங்கிடுமிப்

671 பார்மகளைத் தாங்கும் பணிப்படமஞ் சல்குலாள்
கூர்மம் வெருவுங் குதிகாலாள் - சீர்மலியுந்

672 தென்றலிளந் தேரூருஞ் சித்தசவே ளோடுதினம்
நன்றணைந்து போக நலநுகர்வாள் - வென்றிவிறன்

673 மாறன் மகிழ மணிகண்டர் வாம்பரியி
லேறி வருமா றெமதடிகள் - கூறியநற்

674 புத்தமுதப் பத்திரசம் பொங்குதிரு வாசகப்பா
சித்தமகிழ்ந் தோதிச் சிரங்குவிப்பாள் - முத்திபுரி

675 நாத ரகிலாண்ட நாயகியோர் பங்குடையார்
பாத மறவாத பான்மையினாள் - போது தய
676 காலைப் பொழுதிற் கனகா சனமீது

வாலைப் பரமசிவ வல்லியார் - போலமர்ந்தென்
677 சேடியரே பாங்கியரே சிங்கார மாயெனுடன்
கூடிவிளை யாடுங் குமரியரே - பீடுடைய

678 நந்தாணி மின்னார்கொள் நாயகரி லேசிறந்த
சுந்தரர்யா ரோவெனவோர் தோழியெழுந்- திந்திரைநேர்

679 மின்னே யாங்கன் விருந்தே மிகுமடவார்
மன்னே மயிலே மடவனமே-பன்னக்கேள்

680 எழெட்டு தேய விறைவர்க்கு ளேசிறந்தோன்
சோழனே சாலுமெனச் சொன்னாலுஞ்-சோழர்க்குத்

681 தன்றேய மொன்றே தவிர யிவனின்னா
னென்றே பிறரறியா ரெங்கெங்கே - சென்றாலும்

632 எல்லாரும் போற்றி யெமதுகுரு நாதரென்று
சொல்லான் முழங்குமோர் தோன்றலுளார் - நல்ல

683 திருநாவ லூர்சடையர் தேவியிசை ஞானி
யருமா தவப்பயன தாகும் - பெருவாழ்வாஞ்

684 செல்வக் குமாரர் திகழ்நம்பி யாரூரார்
கல்யான சுந்தரராங் கட்டழகர்- பல்கோடி

685 காலங்க ளாகக் கடுமா தவமியற்றி
மாலுந் திசைமுகனும் வானவரும் - மேலவரும்

686 காணற் கரிய கடவுள் வலிந்தாண்ட
மாணப் பெரியார்நம் வன்றொண்டர் - ஆணழகர்

687 இந்திரலோ கத்து மெழிலாரும் பாதலத்தும்
நந்தாணி யாமிந்த ஞாலத்தும் - விந்தைமிகு

688 சந்திரலோ கத்துந் தமதழகுக் கொப்பில்லார்
சுந்தர மூர்த்தியென்று சொல்லலாம் - செந்திருவே

689 என்று பகர்ந்தா ளிவள்கேட் டுணர்ந்தெழுந்து
நின்று கனிந்து நிலைகலங்கிக் - குன்றமுலை

690 விம்மக் கடுங்காதன் மேற்கொண்டென் காதலையச்
செம்மற் கெவர்சென்று செப்புவா-ரம்மம்மா

691 என்று கலுழுங்கா - லெம்மடிக ளூர்ந்துவருங்
குன்றினைய திண்டேர் குறுகிவரச் - சென்றணுகித்

692 தாதியர்கள் தெண்டனிடத் தானுந் தொழுதடிகள்
சோதி யழகினைக்கண் சூடித்தான் -காதலித்த

693 கட்டழகர் வந்தாரென் கைப்படுவா ரிப்பாலென்
இட்டநிறை வேறுமென வெண்ணினளைக் - கிட்டிமதன்

694 ஐந்து விதப்பகழி யாய்ந்தெடுத்துச் சாடவுளம்
நொந்து தவிப்பவளை நோக்கார்போற் -சுந்தரர்தம்

695 பொற்றேர் மறுவீதி போகக் கடவுதலும்
முற்றா முலைமாது மூர்ச்சித்தாள் -நற்றாயர்

696 மற்றுப்பற் றென்னும் மணிமந் திரமோதி
நெற்றி நிறையதிரு நீறணியப் - பெற்றரிவை

697 சற்றே விரகந் தணிந்தாவி பெற்றேதன்
நற்றாய ரோடுமனை நன்கடைந்தாள் - மற்றோர்மின்

தெரிவை
698 தாமே தமக்குத் தலையாய் தமக்கிணையில்
லாமே லவரா மரனருளால் -தேமா

699 மலரிறைவ னாக்கு மடவார்கட் கெல்லாந்
திலகமெனத் தக்காள் தெரிவை - யலர்விசிகம்

700 பூண்ட கருப்புவில்லிற் பூட்டுகின்ற நாரியென
நீண்டு சுருண்ட நெறிகுழலாள் - ஈண்டுலாக்

701 கொண்டவிவர்க் காகிக் குருகாவூ ரிற்பரமர்
கண்ட தடாகக் கபோலத்தாள் - பண்டுதிரு

702 நாவரசர்க் கப்பூதி நாயனார் நாட்டியபூங்
காவனத்துக் கன்னிக் கருங்காதாள் - பாவலர்கள்

703 பாமாலை சாற்றிப் பணியும் பிரமபுரக்
கோமானார் கொண்ட குடைநுதலாள் - மாமாலாங்

704 கோபா லனையிறையாய்க் கொண்டேசி வார்ச்சனைசெய்
பூபாலன் வின்னேர் புருவத்தாள் - காபாலிக்

705 கேக்கமற வெச்சி லிறைச்சி யருத்தியாங்
கோக்கண் குடைந்தசரக் கூர்விழியாள் - நோக்கமோர்

706 மூன்றாரி மர்த்தனமன் முன்னர் குதிரையின்மேற்
றோன்றவுரை சொற்றோய் துவர்வாயாள் - ஆன்றவரும்

707 தீர்த்தர்களும் போற்றுந் திருத்தில்லை யம்பலத்'துக்
கூத்தர் புனையுங் குழைக்களத்தாள் - சீர்த்தியுலா

708 நாடுமிவர் பாடல் நவின்றுநட மாடுதற்குக்
கூடுமிரு தாளக் குவிமுலையாள் - நீடுபுகழ்

709 வேலையலை போலும் விளங்கு மடிப்புடையாள்
ஆலினிலை போலு மணிவயிற்றாள் - மூலர் தவம்

710 ஆற்றநிழல் தந்த வரசிலைநே ரல்குலாள்
ஏற்றத் திணையி லினியதமிழ் - சாற்றிவழி

711 பட்டவெம தப்பர் பசித்துவரும் பாதையினில்
கட்டமுது நல்கிக் களைதீர்த்த -சிட்டரவர்

712 வாழ்பைங் கதலி வனமாந் திருத்தலத்திற்
சூழ்பைங் கதலித் துடையினாள் - ஆழி

713 முரசவனைச் சற்றே முனிந்தூடல் காட்டிச்
சரச வுறவாடுந் தையல் - பரசுமரன்

714. மண்சுமக்க வெந்தைதிரு வாய்மலர்ந்த வாசகமாம்
பண்சுமந்த பாவின் பயநுகர்வாள்- கண்சுமந்த

715 நெற்றிக் கடவுள்பத நீழ லிறுதியினிற்
பற்றத் தவமுயலும் பான்மையாள் — இற்றைக்

716 கதிருதயங் கண்டு கடவுள்பதம் போற்றி மதுகரமார் பூங்கா வனமுற்-றதிதவள
717 பீடத்தின் மேனம் பெருமா னிடமென்ற
மாடத் தமர்கிளிபோன் மன்னியே - சேடியரை

718 நோக்கிநமர் போற்றி நுவலும் நறுந்தமிழின்
பாக்கியமே தென்னவோர் பாங்கியெழுந் - தாக்கமே

719 தேனே செழுங்கனியே தெள்ளமுதே பூங்குயிலே
மானே மயிலே வழுத்தக்கேள் -ஆனேறும்

720 மூவா முதலாநம் முக்கண்ண ருக்கணியாந்
தேவார மென்ற திருமுறைநாம் - நாவாரப்

721 பாடுதற்கு வாய்த்த பனுவ லதனையுரை
யாடியவர் மூவ ரதிலிருவர் - வீட்டைந்தார்

722 இப்பா லொருசீல ரிங்குளா ரன்னவருக்
கொப்பாவா ரிங்கிலரென் றோதவே - யப்புலவர்

723 சொன்ன பனுவற் றொகையி லொருசிறிது
பன்னுதிரென் றோதவோர் பாங்கிபணிந் - தின்னிசைகள்

724 கூட்டியே வீணைகரங் கொண்டு நரம்பில்விரல்
ஒட்டியே வெண்ணெய்நல் லூர்தமிழும் - ஆட்டெடுத்த

725 அம்பலவர் சூடு மருந்தமிழு மாரூர்வாழ்
நம்பரமர் சூடு நறுந்தமிழும் - வம்பவிழுங்

726 கொன்றை புனைவார்மன் கூடலையாற் றூர்தமிழும்
அன்று செங்கற் பொன்னா மருந்தமிழும் - நன்றுத்திகழ்

727 குண்டையூர் செந்நெற் குவைகெண்ட நற்றமிழும்
பண்டு முதலைவாய்ப் பாலனுயிர் - கண்டதுவும்

728 பாண்டிக் கொடிமுடியின் பச்சைத் தமிழுநமைத்
தூண்டுதிருத் தொண்டத் தொகைத்தமிழும் - ஈண்டெடுத்துப்

729 பாடினாள் கேட்டவள்ப் பாவலரை நொனொருகாற்
கூடிமே லின்பாலங் கொள்ளத்தான் - சேடியரே

730 தந்திரநீ ரொன்றெனக்குத் தம்மினென்றா ளவ்வளவிற்
சுந்தரர்தே ரங்குறவோர் தோழியிதோ- வந்துவிட்டார்

731 என்று பகர்ந்தா ளினிதெழுந்தா செல்லாருஞ்
சென்றுதிருத் தேரைவலஞ் செய்துமே - நின்றுகரஞ்

732 சென்னிகொண்டு சேடியர்கள் தெண்டனிடத் தெண்டனிட்டு
மென்னினைவீ டேறுமென வெண்ணினளைக் - கன்னற்

733 சிலைவேள் நறும்பகழி தேர்ந்துகரங் கொண்டு
தலைகாற் றெரியாது சாட - நிலைகலங்கி

734 சோர்வடைந்தாட் கேதொனறுஞ் சொல்லார்போற் சுந்தரர்தஞ்
தேர்கடவி மற்றோர் தெருவடைந்தார்- ஆர்வம்

735 இழந்தவளைத் தாதியர்கை யேந்திமனை சேர்த்துப்
பழங்கனிந்த தேவாரப் பாடன் - முழங்கியுயர்

736 ஞாலமொரு மூன்றும் நமசிவய வென்றேத்து
மூலமறை யோத முகமலர்ந்தாள் - மேலொருத்தி

பேரிளம்பெண்.
737 பண்கமழு மென்சொற் பயிலுங் குயிலனைய
பெண்கள் பெருமாளாம் பேரிளம்பெண் - விண்கதிராய்

738 மன்னிரவி கீழ்பால் வருமுனைந்து நாழிகையிற்
றுன்னிருளைப் போலுஞ் சுரிகுழலாள் - பன்னுகதிர்

739 நல்லுதயங் கண்டு நளிர்பைங் கதிரொடுங்கிச்
செல்லுமதி போலுந் திருமுகத்தாள் - சொல்லறிஞர்

740 எல்லாரும் புத்தமுதென் றெண்ணுதிரு வாசகநற்
சொல்லாருங் காதுகளிற் றோடுடையாள் - பல்லோரும்

741 பூசித் தணியப் பொலிவருளும் வெண்ணீறு
நேசித் தணியும் நெடுநுதலாள் - தாசற்கு

742 வீடருளு மம்மான் மிடறன்ன வஞ்சனநற்
கோடருகு தீட்டாக் குளிர்கண்ணாள் -ஆடரவும்

743 மட்டுறையுங் கொன்றை மலருமணி வார்புகழாங்
கட்டுரைகள் பேசுங் கனிவாயாள் - சிட்டர்களின்

744 பன்னியர்கள் பூணும் பவளமணி மாலையல்லாற்
பொன்னினணி பூணாத பொற்றோளாள் - துன்னுமிடை

745 யிற்று முறிந்துவிடு மென்றிரக்கங் காட்டுவபோற்
சற்றுமுகம் வாடித் தளர்முலையாள் -நற்றவத்தார்

746 பேணும் பணியே பெரும்பணியாய்க் கொண்டாற்றிப்
பூணும் பணிபூணாப் பூங்கரத்தாள் - சேணுலகோர்

747 உய்ய வமுதன் றுதவுத்தி கொள்ளலைபோற்
செய்ய மடிப்பார் திருவயிற்றாள் - பையார்

748 அரவா பரணற் கடியர் தமைப் போற்றிப்
பரவா பரணம்பூண் பாவை இரவியிளந்

749 தோற்றந் தெரிசித்துத் தூயநறு நீராடிக்
கூற்றன் வெருவுங் குரைகழலைப் - போற்றி

750 யதிதிகளுக் கன்ன மருத்தியவர் பொற்றாள்
துதிசெய்து நல்லாசி சூடி - மதிவதனச்

751 சிங்காரத் தோழியருஞ் சேடியருந் தற்சூழக்
கொங்கார் மலரார் குளிர்தருக்கள் - பொங்காவோர்

752 பூங்கா நடுவிற் பொலிவாரும் நித்திலத்தாற்
பாங்கா யமைத்தசெழும் பந்தரின்கீழ் - வேங்கையதழ்

753 பாவி யதன்மேற் பரமனிட மேவியநந்
தேவியென வீற்றுச் சிவசமயம் - பூவுலகிற்

754 பொங்கப் பிறந்த புனிதப் பெரியாராம்
மங்கை பரவை மணவாளர்-நங்கள்

755 சிவபெருமான் றோழர் சிவனடியார் சூழப்
பவனிவரு கின்ற படியா - லவரைநாம்

756 கண்டு தெரிசிக்கக் காணிக்கை யோடுபல
பண்டங் கொணர்மினெனப் பாங்கியர்கள் - கொண்டு

757 வருமளவி லெம்மடிகள் வாசிநெடுந் தேரத்
தெருவிலுறக் கண்டு சிரமேற் -கரமுகிழ்த்துப்

758 போற்றி வரிசைப் பொருள்செலுத்திக் கோலவிழி
சாற்றளவிற் காமசரந் தாக்கவதை - யாற்றவலி

759 யற்றவளாய் மூர்ச்சை யடைந்து மடையாள்போ
லுற்றவெனக் கேதொன்று மோதிலீர் - கற்றவர்கள்

760 எல்லாரும் போற்றி யினிதடையுந் தாயகமே
நல்லா ருளமேய நாயகமே - தொல்லுலகிற்

761 சைவ சமயந் தழையவந்த சற்குருவே
தெய்வ வழிகாட்டுந் தேசிகரே - பொய்யுலகில்

762 மெய்யறநூ லோதவந்த மிக்கோரே யெம்போல்வா
ருய்யவழி காட்டு மொளிவிளக்கே - மையணையுங்

763 கண்ணா ளொருபாகக் கர்த்தர் தமக்கணியாம்
பண்ணார் தமிழ்பாடும் பாவலரே - தண்ணாரும்

764 இந்தணியும் வேணி யிறையைப் பரவையிடஞ்
சந்தனுப்பி விட்ட சமர்த்தரே - செந்தேனே

765 பாலே பழமே பழத்திரச மேதமியாள்
மாலே யிசைஞானி மாமகவாங்-கோலமே

766 யாரா வமுதே யடியாள் மனமுமது
பாரா முகந்தனக்குப் பற்றுமோ - நீரார்

767 கயக்கரா வாய்மகவைக் காத்தீர் தமியாள்
மயக்கறா தென்னே மலையோ - நயக்குமெனைத்

768 தள்ளிவிட னீதியோ சார்ந்தாரை யாதரிக்கும்
வள்ளலே வன்றொண்ட மாமணியே - துள்ளுசேற்

769 கண்ணாள் பரவைமகிழ் காதலரே சங்கிலியாம்
பெண்ணாள் மகிழும் பெருந்தகையே - வெண்ணீறு

770 பூசிப் பொலியும் பொலிவே புலவர்புகழ்
பேசிப் பணியும் பிரபுவே - நேசித்த

771 சிங்கடியார் தாதையாஞ் செல்வ மகமேரே
நங்கடி யாகர்க்கோர் நண்ப்ரே - பொங்குபுகழ்

772 கொண்ட மிழலைக் குறும்பர் விருந்தேமெய்த்
தொண்டர் பாவித் தொழுந்துரையே -மண்டுபுகழ்

773 சோமாசி மாறர்தினம் சூடுஞ் சுடர்மணியே
காமாரிக் கன்புடைய கற்பகமே மாமேவுங்

774 குண்டைக் கிழார்பரவுங் கோவே தமிழ்நாட்டின்
பண்டைத் தவமாய பாக்கியமே - வண்டலம்பு

775 தண்டார்பூண் சேரர் தமதருமைத் தோழரே
கண்டார்கண் காதலிக்குங் காட்சியே - தெண்டனிடும்

776 என்பா லிரங்காத தேனோ தமியாள்நும்
மென்பாத வாழ்வு விழைந்தேநும் - முன்பானேன்

777 நும்போன்ற வர்க்கே நுதற்கண் ணவரிறைநீர்
எம்போன் றவர்கட் கிறையென்றே - நம்புமெனை

778 ஆண்டருளீ ரென்பாளை யாண்டருளா ராயெழிலார்
சேண்டடவு திண்டேர் செலக்கடவி - காண்டகுசீர்

779 மண்மடவார் நாக மடவார் வரைமடவார்
விண்மடவார் விஞ்சை வியனுலகின் - கண்மருவும்

780 மாதர் திசைமாதர் மற்றுமுளா ரெல்லாருங்
காத லடைந்து கரங்கூப்பப் - பூதலமேற்

781 சைவ சமயந் தழையத் தமிழோங்க
மெய்வளரச் சத்தியமென் மேலோங்கத் - தெய்வ

782 நலமருவு வீதிதொறும் நம்பியா ரூரர்
உலகறியப் போந்தா ருலா.

சிவமயம்.
ஸ்ரீ சுந்தாழர்த்தி சுவாமிகள் திருவடிகளே சரணம்.
--------------------

ஞான உலா.
கல்லா ரிதயமெனு நன்னாட் டிருணீங்க
சொல்லார்மெய்ஞ் ஞானச் சுடர்வீசி - மல்லார்பூங்
தேரதன்மே னன்கமர்ந்து தெய்வத் திருவாத
வூரடிகள் போந்தா ருலா.

ஞானசம்பந்தர் உலா.
பூதலமேற் சைவம் பொலியப் புகலினகர்
வீதிதொறும் பேதைமுதல் மின்னெழுவர் - காதலுறச்
சம்பந்த மூர்த்தி தாளத் திருத்தேர்மேல்
உம்பர்தொழப் போந்தா ருலா.

நாவுக்கரசர் உலா.
தொண்டாமப் பூதி தொழத்திங்க ளூர் தெருவில்
கண்டேழ் பருவமின்னார் காதலுறத் - தண்டிகைமேல்
வாக்கரசர் சைவம் வளரவே நம்மவர்கள்
ஊக்கமுறப் போந்தா ருலா.

காலம். இடம். பெயர்.
இக்கலியாண் டையா யிரத்துநாற் பான்மூன்றில்
நற்கும்ப மாதநாள் நாலாறில்-மிக்கநலஞ்
சூழ்சுந் தரருலா சொல்லிமுடித் தான்றேனூர்
வாழ்சொக்க லிங்கன் மகிழ்ந்து.
-------

உமாமகேசர் துதி.

அன்பே தமியேனென் னாருயிரே யாரமுதே
மின்பாதி சேர்பவள மேருவே - நின்பாதம்
அல்லால் துணைகாணே னத்தானின் பத்தரெனும்
நல்லாரை நான் கூட நல்கு.

இச்சைமலை வார்நாடு மின்பரச மேயொருபால்
பச்சைமலை சேர்பவளப் பர்வதமே - அச்சாவென்
றேத்தா வமர ரிடர்தீர நஞ்சயின்று
காத்தாய் கடைபோகக் கா.

கரகமலங் கூப்புவார் கைக்கனியே யோர்பால்
மரகதமா ரம்பொன் மலையே - யரகரா
யென்பா ருளங்கனிந்த யின்பரச மேயெனக்கு
நின்பாத மோன் னிலை.

சுபம் ! சுபம் !! சுபம்!!!
-----
ஜனோபகார பிரஸ்
பெரிய கடைவீதி துறையூர்.
---------------------

This file was last updated on 2 Dec. 2025
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)